Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


தானுரதி - என் காதலின் தேடல் நீ

Krishna Damodar Raj

New member
Messages
2
Reaction score
1
Points
1
வணக்கம் நண்பர்களே...

நான் தானுரதி... சகாப்தம் வண்ணங்கள் சிறுகதைப் போட்டிக்கு வாய்ப்பளித்து தந்த நித்யா கார்த்திகன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்...

இது என் முதல் சிறுகதை என்பதைவிட என் கன்னி முயற்சி. முதல் முறையாக முயற்சித்து உள்ளேன் படித்துவிட்டு நண்பர்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்... மீண்டும் ஒருமுறை வாய்ப்பளித்து நித்யா அக்காவிற்கு நன்றிகள்...
 

Krishna Damodar Raj

New member
Messages
2
Reaction score
1
Points
1
என் காதலின் தேடல் நீ



இளம் காலைவேலையில் அந்த அரண்மணைப் போன்ற வீட்டினுள் எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்கள் திருமாலை எழுப்ப பாடிய சுப்ரபாதம் ஒலித்துக்கொண்டிருந்தது. அதே வேளையில் அந்த வீட்டின் குட்டி ராஜகுமாரியை எழுப்ப அவளின் பாட்டி விஜயா…

"அனும்மா அனும்மா... டேய் தங்கம்ல என் ராசாத்தி எழுந்திருமா. ஸ்சூல்லுக்கு டைம் ஆகுது இன்னும் நீ சாப்பிடனும் ட்ரெஸ் பண்ணனும் எழுந்திரும்மா ஸ்கூல் பஸ் வந்துடும்…"

என்று எழுப்பிக்கொண்டிருந்தார். அதற்கு அந்த குட்டி ராஜகுமாரியோ…

" முடியாது பாட்டி உங்களுக்கு தான் தெரியும்ல நான் என் அப்பா கிட்ட தான் எல்லாம் செஞ்சிக்குவேன்னு அப்பா வரட்டும் நான் எழுந்திருக்கிறேன்…"

என்று சொன்னாள். அதற்கு பாட்டி விஜயா. “அப்படி சொல்ல கூடாதுடா…”

என்று சொல்லி மீண்டும் அழைக்க அவளும் மறுத்துக்கொண்டே இருந்தாள். ஆப்பிசுக்கு கிளம்பிய விக்ரம் படிகளில் இறங்கிக்கொண்டிருந்தான் அப்போது தன் மகளின் அறைக்கு சென்றவன் தன் மகளைப் பார்த்து…

" என்ன செல்லம் நீங்க இன்னும் கெளம்பலயா…" என்று கேட்க அதற்கு அவன் குட்டி ராஜகுமாரி…

"டாடி என்னை நீங்க ரெடி பண்ணா தான் நான் கெளம்புவேன். இல்லனா நான் ஸ்சூல்லுக்கு போகமாட்டேன்…" என்று சொன்னாள் இதைக் கேட்ட விக்ரம்.

"அவ்ளோ தானே… அதுக்கு ஏன் என் அம்முக்குட்டி சோகமா இருக்கிங்க. இதோ நானே கெளப்புறேன்…”

என்று தனக்கு இருந்த முக்கியமான மீட்டிங்கை கூட பொருட்படுத்தாமல் படுக்கையில் இருந்த தன் 04 வயது மகளை தூக்கிக்கொண்டு சென்று கிளப்பி கொண்டுவந்து டிபன் கொடுத்து, ஸ்சூல் வேனில் ஏற்றி விட்டு மீண்டும் தன் அறைக்கு சென்று வேறு உடைகளை மாற்றிக் கொண்டு கீழே இறங்கியவனை அவனுடைய அம்மா….

“ விக்ரம் சாப்டுப்போப்பா” என்றார். அதற்கு விக்ரம்…

“வேணாம்மா முக்கியமான மீட்டிங் இப்பவே லேட் ஆகிடுச்சு போனும்…”
என்றான். அதற்கு அவனுடைய அம்மா அவனைப் பார்த்து…

" உனக்கு என்ன தலையெழுத்தா நீ ஒரு போன் பன்னா போதும் உடனே அவ வந்துடுவா… வந்து அவ எல்லாத்தயும் பாத்துக்குவா நீ ஏன் தான் இப்படி இருக்கியோ. "

என்று விக்ரமைப் பார்த்து கேட்க அதற்கு விக்ரம்…

" ஏன்மா நான் நிம்மதியா இருக்குறது உங்களுக்கு பிடிக்கலயா? இப்போ தான் எதோ நிம்மதியா உணர்றேன் அதையும் அவள வரவெச்சு இருக்குற நிம்மதியையும் கெடுத்துடனும்னு பாக்குறீங்களா..”

என்று தன் தாயை முறைத்தவாறு தன் காரில் ஏறி புறப்பட்டான் தன் அலுவலகத்திற்கு. அதே நேரம் மேடம் உங்களுக்கான சாப்பாடு என்று சொன்னவுடன் அதை திறந்து பார்க்கும்போது அதிலிருந்து வந்த சாம்பார் சாதத்தின் மனம் அவளுக்கு தன்னுடைய மனாளனின் ஞாபகத்தை நினைவுப்படுத்தியது. சில வருடங்களுக்கு முன்பு... அவள் தன் மனாளனோடு இருந்தப்போது….


“ ஏங்க எப்பவும் சாப்புடாம லேட்டாவே கெளம்புறீங்க… ஏன் இப்டி பண்றீங்க சரி இந்தாங்க நான் எடுத்துட்டு வந்துருக்குறேன் வாங்கிகங்க…”

என்று தன் மனாளனுக்கு ஊட்டி விட அவன் கிளம்பும் அவசரத்தில் அவளிடம் என் டை எங்க என்று கேட்க… கொஞ்சம் கூட பதட்டமே இல்லாமல்…
“ அப்போ ஒரு வாய் வாங்கிக்கோங்க சொல்றேன் என்றாள்…”

அவனும் அவளிடம் இருந்து ஒரு வாய் சாதம் வாங்கியதும்…” இப்போ சொல்லு…” என்றான்.

அவள்…” இதோ உங்க பக்கத்துலயே இருக்கு பாருங்க..”

என்றாள். இப்படியே அவன் கேட்பதை எல்லாம் எடுத்துக் கொடுத்துக் கொண்டு அவனுக்கு முழு உணவையும் ஊட்டி முடித்தாள் மிருதாளி. பின்பு விக்ரமைப் பார்த்த….

“நில்லுங்க…” என்று கூற அவனும் ஆடாமல் அசையாமல் ஒரே இடத்தில் நின்றான். இவளும் முகத்தில் நடிப்பாக கோபத்தை வைத்துக்கொண்டு…

"என்னைக்காவது சீக்கரமா எழுந்திச்சியிருக்கீங்களா…தினமும் லேட்டா எழுந்துக்க வேண்டியது அவசர அவசரமா சாப்டாம கொள்ளாம கெளம்ப வேண்டியது…"

என்று உதடுகளால் மட்டும் அவனை திட்டிக்கொண்டிருந்தாள். அப்போது அவன் அவளின் உதட்டின் மேலே தன் விரலை வைத்து…

“ இங்க பாரு பேபி என்னை பாத்துக்க நீ இருக்கும்போது எனக்கென்ன டென்சன்…”

என்று கூறிவிட்டு தன் மனைவியின் நெற்றியில் அழுத்தமாக தன் உதட்டை பதித்து முத்தமிட்டு தன் காரில் ஏறி அலுவலகத்திற்கு சென்றான் விக்ரம். இவை அனைத்தையும் நினைத்த மிருதாளினி தன் உணவை அப்படியே மூடி வைத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்….

அலுவலகத்திற்கு வந்த விக்ரம் தன்னுடைய மீட்டிங்கை வெற்றிக்கரமாக முடித்துக்கொண்டு தன்னுடைய அறைக்கு வந்து அமர்ந்தான். அப்போது..
“ விக்ரம் விக்ரம்…” என்று குரல் கொடுதுக்கொண்டே வந்தான் கௌதம் (விக்ரமின் நண்பன்). நேராக விக்ரமின் அறைக்கு வந்து அங்கு இருந்த சாரை இழுத்து அதில் அமர்ந்து…

“ விக்ரம் நீ இங்க இருக்கியா புதுசா வந்த இங்லிஷ் படத்துக்கு ரெண்டு டிக்கெட் வாங்கிருக்கேன் வாடா போகலாம்…”


என்று கௌதம் சொல்ல அதற்கு விக்ரம்… “சாரிடா இன்னைக்கு அனு ஸ்சூல்ல இருந்து சீக்கிரமா வந்துடுவா அவள இன்னைக்கு நான் பீச்சுக்கு கூட்டிட்டு போறேன்னு சொல்லிருக்கேன் அதனால என்னால வரமுடியாது நீ வேணும்னா கவிய கூட்டிட்டு போயேன்…”

என்று சொல்லிவிட்டு அலுவலகத்திலிருந்து கிளம்பினான் விக்ரம். அங்கு அமர்ந்திருந்த கௌதம்..

"எப்டி இருந்த விக்ரம் இன்னைக்கு இப்டி ஆகிட்டானே.”

என்று தன் மனதில் ஒரு நினைவை நினைத்துப் பார்த்தான். நினைவுகள் பின்நோக்கி சென்றது... விக்ரம் கௌதமை பார்த்து…

"ஏன்டா கௌதம் பொன்னு பாக்க வந்துருக்கியே இது கவி க்கு தெரியுமா…"

என்று கேட்க அதற்கு கௌதம்…

“ நான் சைட் அடிச்சாளே என் கண்ணு ரெண்டையும் நோண்டிடுவா… இதுல பொன்னு பாக்கற பேருல சைட் அடிக்கப் போறது மட்டும் தெரிஞ்சிது என்ன கொலப்பண்ணிடுவாடா மச்சான்…"

“ டேய் சும்மா சொல்லாதடா கவிய பத்தி எனக்கு தெரியாதா அவ அமைதியான டைப்டா…”

என்று விக்ரம் சொல்ல அதற்கு கௌதம்…

"அப்டியா மச்சான் இரு உனக்கு இப்பவே நிருபிக்கிறேன்…”

என்று சொல்லி தன் மொபைலை எடுத்து அதில் வாட்ஸ் ஆப் செயலியை திறந்து விக்ரமிடம்…

“ மச்சான் இப்போ இருக்குற என் வாட்ஸ் ஆப் டிபியை நான் மாத்தி ஒரு அழகான பொண்ணு போட்டோவ வெக்குறேன் என்ன நடக்குதுனு நீயே பாரு…”

என்று சொல்லிவிட்டு டிபியை மாற்றினான். எண்ணி இரண்டே நிமிடத்தில் அவனுடைய மொபைலுக்கு ஒரு அழைப்பு வந்தது அதை எடுத்து விக்ரமிடம் காட்டி…

“ பாத்தியா எவ்ளோ ஸ்பீடா இருக்கான்னு.”

என்று விக்ரமிடம் சொல்லிவிட்டு அழைப்பை எடுத்து…” ஹலோ…” என்றான். அவ்வளவு தான் எதிர் முனையில் இருந்து ****** இப்படி பட்ட வார்தைகள் வந்து இறுதியாக…

“ உனக்கு நான் அமைஞ்சதே அதிகம் இதுல சாருக்கு இன்னொன்னு கேக்குதா. ஒழுங்கு மரியாதையா இன்னும் ரெண்டு நிமிஷத்துல அந்த போட்டோவ எடுத்துட்டு வேற ஏதாவது போட்டோவ வைக்கற இல்ல மவனே கொலவிழும்… "

என்று கூறி அழைப்பை துண்டித்தாள் கவி. உடனே டிபியை மாற்றிவிட்டு இவை அனைத்தையும் அருகில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த விக்ரமிடம்…

“ இப்ப சொல்லு மச்சான் என்ன நடக்கும்னு.” என்று கேட்டான் கௌதம்…அதற்கு விக்ரம் கண்டிப்பா.

"மார் துங்கா மர்கயா சாலா தான்.." என்றான். உடனே விக்ரம் கௌதமைப் பார்த்து.

"அப்ப ஏண்டா பொண்ணு பாக்க வர்ற…”

என்று கேட்க அதற்கு கௌதம்…

"எங்கடா என் அம்மா தொல்ல தாங்க முடியலடா அதான் கெளம்பி வந்துட்டேன்…”

என்றான்.அதற்கு விக்ரம்…

“ அப்போ பொண்ணு பாத்ததும் புடிச்சிருக்கானு கேப்பாங்களே அதுக்கு என்ன சொல்லுவ…”

என்று கேட்க அதற்கு கௌதம்.
“ சாரி சிஸ்டர் ஐம் அல்ரெடி இன் லவ்னு சொல்லிட்டு வந்துடுவேன். அம்மா மனசும் கஷ்டப்படாது என் கவியும் என்ன விட்டு போக மாட்டா…”

என்று சொல்ல இருவரும் சிரித்துக்கொண்டே சென்றார்கள். உடனே கௌதம் விக்ரமைப் பார்த்து.

"மச்சான் நீ சொல்லு உனக்கு இது போல கிராமத்துப் பொண்ணு ஓகே வா."

என்று கேட்க அதற்கு விக்ரம் கௌதமைப் பார்த்து…

“ ஐய கிராமத்துப் பொண்ணா அவங்களாம் தலய குனிஞ்சி காபிய குடுத்து புடிச்சிருக்கான்னு கேட்டா வெக்கப்பட்டு ரூம் உள்ள போயிட்டு ரெண்டு நாள் கழிச்சு மூனு நாள் கழிச்சி சொல்றோம்னு சொல்லுவாங்கடா... அதெல்லாம் நமக்கு செட் ஆகாதுடா.”

என்று விக்ரம் கூற கௌதம் உடனே...

“ ஆமாடா மச்சான் நீ சொல்றது நூற்றுக்கு நூறு உண்மடா...”

என்று சொல்ல விக்ரம் கௌதமைப் பார்த்து “ பொண்ணு என்னடா படிச்சிருக்காம்...”

என்று கேட்டான் அதற்கு கௌதம். “அக்ரிகல்சர்ல ஏதோ ரிசர்ச் பண்றான்னு சொன்னாங்கப்பா.நான் எதப் பத்தியும் கண்டுக்கல...”

என்று சொன்னவுடன் விக்ரம்...

“ ஓ! அப்படியா அப்ப கண்டிப்பா கிராமத்து பட்டிக்காடு தான் வெக்கம் நாணம் என்று இருப்பாங்க...சரி விடு இப்ப என்ன நீ ஓகே வா சொல்லப்போற...”

என்று பேசிக்கொண்டே பெண்ணின் வீட்டை அடைந்தனர். பெண்ணின் வீட்டினுள் சென்றதும் பெண்ணை அலங்கரித்து கொண்டிருந்த பெண்ணின் தோழிகள் அறையின் வாசலில் நின்று எட்டி எட்டி பார்த்து கொண்டிருந்தனர். அப்போது பெண்ணின் தந்தை அருகில் இருந்த ஒருவரிடம்...

“ அண்ணன் இவரு தான் மாப்ள...”

என்று அறிமுகப்படுத்த அவரும் உடனே.
“ ஆ.. ஆ.. வாங்க வாங்க வாங்க உக்காருங்க தம்பி...”

என்று சொல்லிவிட்டு தம்பி காபி குடிக்கிறீங்களா என்று கேட்க அதற்கு கௌதம்...

“ இல்லிங்க எல்லாரும் வந்துடட்டும்.”என்று கூறினான். அப்போது அங்குமிங்குமாக பெண்கள் மாப்பிள்ளையைப் பார்த்து சிரித்துக் கொண்டே சென்றனர். அவனும் லேசாக சிரித்து வைத்தான். சிறிது நேரத்திர்கெல்லாம் அனைவரும் வந்துவிட...

“ பொண்ண வரசொல்லுங்களே பார்க்கலாம்.”

என்று சொல்ல குனிந்த தலை நிமிராமல் கைகளில் ஒரு தட்டில் காபியை ஏந்திக் கொண்டு வந்தாள் மிருதாளினி..
அவளின் தந்தை...

“ அம்மா நல்லா பாத்துக்கோமா இவர்தான் மாப்பிள்ளை.” என்று சொல்ல கையில் வைதிருந்த காபியை மாப்பிளைக்கு கொடுத்துவிட்டு, தலையை லேசாக நிமிர்த்தி மாப்பிள்ளையை பார்த்துவிட்டு தன் தந்தையிடம்...

“ அப்ப இவருப்பா...” என்று அருகில் அமர்திருந்த விக்ரமை யாரென்று கேட்க அவளது தந்தை இவரா இவரு மாப்பிள்ளையோட நண்பர்மா என்று சொன்னார். உடனே மிருதாளினி அவ்விடத்திலேயே அச்சச்சோ என்று கூறி கௌதமைப் பார்த்து...

“ சாரி சாரி ப்ரதர் நான் உங்க ப்ரண்ட்டு தான் மாப்பிளனு நெனச்சு பிக்ஸ் ஆயிட்டேன்.இவர்னா எனக்கு ஓகே. இவர பாத்த ஒடன எனக்கு பிடிச்சுப்போச்சு...”

என்று விக்ரமைப் பார்த்து.
“ நீங்க என்ன சொல்றீங்க...”

என்று பட படவென பேசி தள்ளினாள் நம் கதாநாயகி. இதை கேட்ட நம் கதாநாயகன் விக்ரமோ சற்று நேரம் என்ன நடந்தது என்று யோசித்தவாரு தன் நண்பனைப் பார்த்தான். கௌதம் அதிர்சியில் தன் திறந்த வாயைப் மூடாமல் அமர்ந்திருந்தான் உடனே விக்ரம் மிருதாளினியிடம்...

“ஒரு செல்பி எடுத்துக்கலாமா என் அம்மாவுக்கு அனுப்ப...”

என்று கேட்க அவளும். “ஓகே...” என்றதும் இருவரும் ஒருவர் மேல் ஒருவர் சாய்ந்துக் கொண்டு செல்பி எடுத்தனர்...

அதை விக்ரம் அவனுடைய அம்மாவிற்கு அனுப்பி அவர்களுக்கு கால் செய்து அம்மா உனக்கு உன்னோட வருங்கால மருமக போட்டோ அனுப்பிவெச்சிருக்கேன் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு... நீயும் அப்பாவும் பாக்கணும்னு தான் அனுப்புனேன் நல்லா இருக்காளா இல்லையானு கேக்குறத்துக்கு இல்ல... நீ தானே சொல்லுவ எனக்கு புடிச்சிருந்தா உனக்கு புடிச்ச மாதிரின்னு...”

என்று சொல்லிவிட்டு அழைப்பை அனைத்தான் விக்ரம்.

இவர்களுடைய அதிரடியான திருமணம் முழுக்க முழுக்க காதலாகவே மலர்ந்தது. திருமணம் முடிந்து ஒரு ஆண்டுகள் ஆகி ஒரு அழகான பெண் குழந்தையை ஈன்றெடுத்தாள் மிருதாளினி… அப்போது ஒரு நாள் விக்ரம் அலுவலகத்திலிருந்து வீட்டிற்குள் வந்து சோபாவில் அம்ர்ந்து தன் ஷூக்களை கழற்றியப்படி…” மிருதா காபி…” என்று குரல் கொடுக்க.

சமையலறையிலிருந்து மிருதாளினியும் “இதோ போட்டுக்கிட்டு இருக்கேன்…”

என்று சொல்ல இவன் உடனே சோபாவில் இருந்து எழுந்து சமயலறைக்குச் சென்று கதவுகளில் சாய்ந்தப்படி…

“ மிருதா என்ன வீட்ல அப்பா அம்மா இல்லாத மாதிரியிருக்கு…”

என்று கேட்க அதற்கு அவள்.” என்னங்க மறந்துடீங்களா இன்னிக்கு மாமாவோட நண்பர் மகனுக்கு கல்யாணம்ல அதான் அத்தையும் மாமாவும் அந்த கல்யாணத்துக்கு போயிருக்காங்க…”

என்று சொன்னவுடன் உடனே. c அப்ப குழந்தை…” என்றதும் அவ மேல தூங்குறா என்றாள். அப்படியா என்று சொன்னப்படியே அவளை பின்புறமாக கட்டி அனைத்த விக்ரம்…
“ ம்.. ம்... “

என்று காபியின் மனத்தை வைத்தே "செம காபி" என்று சொல்லிவிட்டு…

“ ஆமா பொண்டாட்டி நான் வந்துடேன்னு உனக்கு எப்படி தெரியும் கரக்டா மாமனுக்கு காபி போட்டுகிட்டு இருக்க…”

என்று கேட்க அதற்கு அவள்…” உங்க கார் சத்தம் கேட்டதும் எப்படியும் நீங்க உள்ள வந்து காபி கேப்பிங்கனு தெரியும் அதான் ரெடியா போட்டுகிட்டு இருக்கேன்…”

என்று சொன்னதும் சரி வா போலாம் என்று தன் மனைவியை தூக்கிக்கொள்ள அவளோ…

“ என்னங்க என்ன பண்றீங்க…”

என்று கேட்க… “ வா சொல்றேன்.”
என்றபடி அவ்விடத்தைவிட்டு நகர…

“ அவள் ஏங்க ஏங்க…”

என்று சொல்ல. “ இப்ப என்னடி…”

என்றான் விக்ரம் அதற்கு. “ உங்க காபி..” என்றதும் சிரித்தப்படியே… “ ஆமால.” என்ற விக்ரமை பார்த்து. “ ஐய தொடச்சிகங்க அசடு வடியுது…”

என்று கூறி… “ கொஞ்சம் பின்னாடி போங்க.” என்றாள் மிருதா. அவனும் ஒரு இரண்டடி பின்னே வந்ததும் காபி கோப்பையை எடுத்துக்கொண்டு ஆ.. இப்போ போகலாம் என்றாள்…

அவன் அவளை தூக்கிக்கொண்டு நகர அவள் அவனை பார்த்து… “ எங்கங்க போறோம்…”

என்று தொனதொனவென கேட்டுக்கொண்டே இருந்தாள். அவன் அமைதியாக அவளை தோட்டத்திற்கு தூக்கிவந்து அவளிடம்… “ அங்க பாரு.” என்றான். அவளும் என்ன? என்றபடி தன் தலையை திருப்பிப் பார்க்க ஒரு அழகான ஊஞ்சலை வாங்கிக் கொண்டுவந்து அங்கு வைத்திருந்தான்.

அதை பார்த்த அவளுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை விக்ரம் மிருதாவை அப்படியே கொண்டுப்போய் அந்த ஊஞ்சலில் அமர்த்தி அவளை ஆட்டிவிட்டு அவள் மகிழ்வதை கண்டு இவனும் மகிழ்ந்தான். பிறகு இருவரும் அதில் ஒன்றாக ஊஞ்சலில் அமர்ந்து எடுத்து வந்த ஒரு கோப்பை காபியை இருவரும் மாற்றி மாற்றி குடித்தனர்.

இப்படியே அவர்களுடைய திருமண வாழ்க்கை சென்று கொண்டிருக்க கூடாதா?
ஏன் தான் அந்த நாள் வந்ததோ? என்று நினைத்தப்படியே அங்கிருந்து கிளம்பினான் கௌதம்.

மறுநாள் விடியல் புதுடெல்லியில்...

புதுடெல்லிக்கு நம் நாட்டின் அனைத்து மாநிலங்களிருந்தும் விவசாய கல்லூரி மாணவர்களும், ஆசிரியர்களும், ஆராய்ச்சியாளர்களும் வந்திருக்க அதுமட்டுமில்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் ஆராய்ச்சியாளர்கள் வந்திருந்தனர் இன்னும் சொல்லப்போனால் சில மாநில முதல்வர்களும் குறிப்பாக நம் தமிழ்நாட்டின் முதல்வரும் அங்கு வருகை தந்திருந்தார்.

“என்னடா அப்படி என்ன இங்கு நடக்க போகுது என்று தானே யோசிக்கிறீங்க சொல்றேன்.

இந்தியாவில் சர்க்கரை நோயால் ஒரு ஆண்டுக்கு சுமார் பத்து லட்சம் பேர் பாதிக்கப்படுகிறார்கள். இதை அறவே குணப்படுத்த அரசாங்கமும் தன்னால் இயன்ற முயற்சிகளை எடுத்துக் கொண்டுதான் இருக்கிறது… அதாவது மருந்து, மாத்திரை என இலவசமாகவும் மலிவாகவும் கொடுத்தாலும் இவை என்னவோ கட்டுப்படுத்துக்கின்றனவே தவிர அறவே குணப்படுத்துவதில்லை. இது இந்தியாவால் மட்டுமல்ல ஒட்டுமொத்த உலக நாடுகளாளும் தான்.




ஆனால் இன்று நம் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் மருத்துவர் அதை சாத்தியமாக்கியிருக்கிறார்…”

என்று சொல்லி. “ அவர்தான் டாக்டர். மிருதாளினி…”
என்று அந்த மாபெரும் அரங்கத்தில் கூறி…

“ அவருக்கு இந்த மாபெரும் விருதை வழங்குவதற்கு நம் நாட்டின் விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அமைச்சர் அவர்களை அழைக்கிறோம்…”

என்று கூற மிருதாளினி அந்த விருதை அமைச்சரின் கைகளால் பெற்றுக்கொண்டு..

“ நான் இங்கு சில வார்த்தைகள் பேசலாமா…”

என்று கேட்க அங்கிருந்த ஒருவர் மிருதாளினியை பார்த்து…

“ ப்ளீஸ் மேம்…” என்று சொல்லி அழைத்துக்கொண்டு மைக்கின் அருகில் அழைத்து வந்து மைக்கை சரிசெய்துவிட்டு சென்றார் விருது வழங்கிய அமைச்சர் தன் இருக்கையில் அமர மிருதாளினி பேச தொடங்கினாள்...

“ இங்குள்ள சிலருக்கு இந்த ஆராய்ச்சிக்காக நான் இரவும் பகலும் தூங்காமல் உழைத்தது மட்டும் தான் தெரியும்…. ஆனால் உழைத்தது நான் மட்டுமல்ல இந்த விருதும் எனக்கு மட்டுமல்ல.”

என்று கூற அங்கு அமர்ந்திருந்தவர்கள் அவளையே பார்க்க ஆம் என்று கூறி சொல்ல ஆரம்பித்தாள் மிருதாளினி..

“ எனக்கு திருமணமாகி ஒரு வருடத்திற்கு மேல் ஆனது அப்போது ஒரு நாள் நான் என் கணவரோடு என் தோழி ஒருத்தியின் திருமணத்திற்கு சென்றிருந்தேன்... அங்கு சென்றதும் என் கணவர், ஒரு அர்ஜென்ட் கால்மா நான் போயிட்டு அஞ்சு நிமிசத்துல வந்துடுறேன் என்று கூறிவிட்டு சென்றார்…

நானும் என் கல்லூரி தோழிகளுடன் சிரித்து பேசிக் கொண்டிருந்தேன். அப்போது அங்கு வந்த என்னுடைய கல்லூரி ஆசிரியர் என்னைப் பார்த்து அம்மா மிருதாளின என்றார். நானும் அவரை கண்டதும் வணங்கி நலம் விசாரித்தேன் அவரும் என்னைப் பற்றி விசாரித்தார் பிறகு அவர் என்னிடம் நீ கல்யாணத்துக்கு அப்புறம் உன் ஆராய்ச்சிய நிருத்திட்ட இல்லம்மா எல்லா பெண்களுக்கும் இப்படி தான் கல்யாணத்துக்கு முன்னாடி வரைக்கும் நான் இந்த ஆராய்ச்சி செய்வேன் அந்த ஆராய்ச்சி செய்வேன்னு சொல்லுவாங்க ஆனா கல்யாணத்துக்கு அப்புறம் ஒன்னும் பண்ணமாட்டாங்க…

யாராவது நூத்துல ஒருத்தர் தான் அப்படி இருப்பாங்க. நான் உன்ன அந்த மாதிரி தான் பாத்தேன் அதுவும் உனக்கு உலகத்துலேயே முதல் பத்து விவசாய கல்லூரியான கார்னெல் யுனிவெர்சிட்டியிலிருந்து அட்மிஷன் வந்துச்சு…. அந்த அளவுக்கு உன்னோட ஆராய்ச்சி இருந்துச்சு…”

என்று சொல்ல அதற்கு மிருதா ஆமா…
“ சார் நீங்க சொல்றது எல்லாம் சரி தான் ஆனா என் கணவரோட அன்புக்கு முன்னாடி இதெல்லாம் எனக்கு பெருசா தெரியல சார்… நான் வேணும்னா என்னோட ஆராய்ச்சி நோட்ஸ் எல்லாம் உங்களுக்கு தரேன் நீங்க அத வேற ஒரு ஸ்டூடண்ட்ட வெச்சோ இல்ல நீங்களாவோ கண்டின்யு பண்ணிக்கோங்க… என்று கூறிவிட்டு நான் அங்கிருந்து நகர்ந்தேன் அதே சமயம் எனக்கு பின்னால் நின்று கொண்டு என் கணவர் அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்ததை நான் கவனிக்கவில்லை…

நான் சென்றதும் என் கணவர் என் ஆசிரியரிடம் அனைத்தையும் கேட்டு தெரிந்து கொண்டார். அன்றிரவு நான் என் கணவர் எங்கள் குழந்தை மூவரும் படுக்கை அறையில் படுத்துக் கொண்டிருந்தப்போது என் கணவர்…”

“ மிருதா தூங்கிட்டியா என்றார்…”

“நான் இல்லங்க ஏதாச்சும் வேணுமாங்க என்று கேட்க அதற்கு அவர் என்னிடம்…”

“ நான் இன்று உன் ஆசிரியரைப் பார்த்தேன் அவரிடம் அனைத்தையும் கேட்டு தெரிந்துக் கொண்டேன் என்றார்.”

“ உடனே நான் ஓ அவங்க ஏதாச்சும் சொல்லிருப்பாங்க நீங்க அதெல்லாம் யோசிக்காதீங்க என்றேன்.”

“ அவர் உடனே இல்ல மிருதா நீ போணும் போயி உன் படிப்பையும் ஆராய்ச்சியையும் முடிக்கனும்…” என்று சொன்னார் அதற்கு.

“ நான் என்னங்க என்ன சொல்றீங்க உங்களயும் குழந்தையையும் விட்டுட்டு போய் என்னால படிக்க முடியாது. அப்படியே போனாலும் உங்க நெனப்பாவேதான் இருப்பேன்..” என்றதற்கு.

“ இல்ல நீ போய் தான் ஆகனும்…”
என்று அவர் சொல்ல.

“ என்னங்க சொல்றீங்க…” என்று கேட்டதற்கு.

“ அது மட்டுமில்ல நீ போய் உன் படிப்பையும் ஆராய்சியையும் முடிக்கிற வரைக்கும் உனக்கு எங்கள் நினைப்பே வரக்கூடாது நீ உன் லட்சியத்த அடயரவரைக்கும் நானும் உனக்கு போன் பண்ணமாட்டேன். நீயும் எங்களுக்கு போன் பண்ணக்கூடாது…”

என்று சொல்லிவிட்டு. “ நாளைக்கு நீ கெளம்புற அதுக்கான எல்லா ஏற்பாட்டையும் நான் உன் ஆசிரியர்கிட்ட சொல்லி செஞ்சிட்டேன்… சோ நாளைக்கு நீ கெளம்புற நீ எப்போ உன் லட்சியத்தை அடஞ்சிட்டன்னு எனக்கு தெரியுதோ அன்னைக்கு உன் முன்னாடி நான் வந்து நிப்பேன்…”

என்று சொல்லி என்னை அனுப்பிவைத்தார்.

“எனவே இந்த விருது என்னை மட்டுமே சார்ந்ததல்ல…”

என்று கூறி முடித்தாள். மறுநாள் காலை அவளுக்கு ஃப்லைட் என்றிருந்த நிலையில் இன்றெ அவள் தற்போதைய ஃப்லைட்டில் வீட்டிற்கு சென்று தன் கணவனையும் குழந்தையையும் பார்க்க வேண்டும் என்று நிகழ்ச்சி முடிந்ததும் வெளியே வந்தாள்…

அங்கு அவளுடைய கணவன் நின்றிருந்தான். அதைப் பார்த்த மிருதாளினி ஓடிச் சென்று தன் கணவனை கட்டி அனைத்துக் கொண்டாள் .அவனும் அவளை கட்டி அனைத்து கொள்ள அப்போது மிருதா விக்ரமைப் பார்த்து நம்ம பொண்ணு என்று கேட்க...

காரின் கதவை திறந்து அனுவை தூக்கி மிருதாவிடம் கொடுத்த விக்ரம்...

“ அனு அம்மா...” என்று மிருதாவை காட்ட அனு... “அம்மா...” என்று தன் அன்னையை கட்டி அனைத்துக்கொண்டாள். அரங்கத்திலிருந்து வெளியே வந்தவர்கள் அனைவரும் இவர்களைப் பார்த்து கைத்தட்ட பத்திரிகையாளர்களும் சூழ்ந்து போட்டோ எடுத்தனர்...

நான் சேய் ஆனேன்
நீ தாயானாய்...

நான் தாரம் ஆகினேன்
நீ என் தாகம் ஆகினாய்..

நான் தோல்வி என்றேன்
என்னை வெற்றிக்கு கொண்டு சென்றாய்...

மொத்தத்தில் நான் காதல் ஆகினேன்
நீ என் காதலின் தேடல் ஆகினாய்...!!!




முற்றும்

நன்றி
தானுரதி.
 

Marish98

New member
Messages
12
Reaction score
6
Points
3
தனுரதி சகோ அருமையான கதை, naa kuda avangalukku sanda vanthu than pirinjitanganu ninejen, but final reason reveal super
 
Top Bottom