Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


திக் திக் நிமிடங்கள்

HoneyGeethan

Active member
Vannangal Writer
Team
Messages
175
Reaction score
169
Points
43
திக் திக் நிமிடங்கள்
அழகான அனபர்களே !
சுதாரவி நாவலஸ் மற்றும் அமிழ்தம் மின்னிதழ் நடத்திய குறு நாவல் போட்டிக்காக நான் எழுதிய கதை இது.
இப்போது திக் திக் நிமிடங்கள் நம் சகாப்தம் தளத்தில் போடப் போறேன்.
தவரதன் – அம்பரி , மாறன், கதிரவன், பொழிலனோடு வேறு தளத்தில் புது பொலிவோடு
திக் திக் நிமிடங்கள்
 

HoneyGeethan

Active member
Vannangal Writer
Team
Messages
175
Reaction score
169
Points
43
நிமிடம் : 1
அந்த அறையின் சுவர் முழுவதும் பல வித காகிதங்களால் ஒட்டப்பட்டு இருந்தது. அந்த ஒட்டப்பட்ட காகிதம் பலதரப்பட்ட நாளிதழ்களில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட துண்டுகளாக இருந்தது.
அதில் சில வரிகள் சிவப்பு மையினால் கோடிடப்பட்டு இருந்தது.
அந்த அறையின் நடுநாயகமாக போடப்பட்டிருந்த மேஜையில் பல வயர்களும் பல தரப்பட்ட போன்களின் பாகங்களும் , சிப், மற்றும் போன் சம்பந்தப்பட்ட பல பொருட்களும் சிதறி இருக்க, அதன் நடுவில் அமர்ந்து ஒருவன் அதை நோண்டிக் கொண்டிருந்தான்.
அவன் கண்களில் இருந்த தீவிரம் அவன் கைகளில் தெரிந்தது, வேகமாக எதையோ செய்தவன் சற்று நேரத்தில் அட்டகாசமாக சிரித்தான்.
“ வெற்றி ! வெற்றி ! நான் வெற்றிகரமாக முடிச்சுட்டேன்’’ என்று கூறியவன் தன் கைகளில் இருந்த போனை தன் கண்முன்னே கொண்டு வந்து அதை பழிவெறியோடு பார்த்தபடி
“ உன்னை வைத்து இந்த மானிட இனத்தையே ஒரு வழி ஆக்குகிறேன் “ என்று கூறியவன் அதனை எடுத்து தன் உதட்டில் வைத்து முத்தம் ஒன்றை வைத்தான்.
**************
எரம்பட்டி கிராமத்தில் வேட்டி சட்டை அணிந்து கொண்டு, வேட்டியை தன் காலால் தூக்கிவிட்டு தன் கைகளில் அதன் நுனியை பிடித்து வேட்டியை மடித்து கட்டி, தன் கையில் அணிந்திருந்த காப்பினை கையில் ஏத்தி விட்ட படி, மீசையை முறுக்கிவிட்டுக் கொண்டே தன் நவீன மாடல் புல்லட்டில் ஏறி அமர்ந்தான் தவரதன்.
அவன் தன் வண்டியை ஸ்டார்ட் செய்ய ஆரம்பிக்கும் போதே ஓடி வந்தான் ஒருவன்.
“ அய்யா ! பெரிய அய்யா உங்களை வீட்டுக்கு கூட்டிட்டு வரச் சொன்னாங்க” என்று மூச்சு வாங்கியபடியே அவன் சொல்ல
"டேய் ! தள்ளி போ ! நீ விட்ற மூச்சு காத்துல மின்சாரம் எடுக்கலாம் போல முதல உட்கார்ந்து உன்னை 'ராஸ்கல்' பண்ணிக்கடா" என்று ரதன் கூற
"சித்தா ! அது ரிலாக்ஸ்" என்று அருகில் ஒரு சிறுவன் சொல்ல
அதை கேட்டு கோபத்தோடு திரும்பினான் ரதன்.
"டேய் ! வாடா !என் அண்ணன் பெத்த ரத்தினமே !என்னை பிடிச்சு நடக்க பழகிட்டு என்னையே நிறுத்துவியோ நீ !"
"ஏதோ இரண்டு, மூனு வார்த்தை இங்கிலிஷ்ல படிச்சுட்டா நீ பெரிய இவனா ஆகிடுவியோ? குறை கண்டுபிடிச்சு சொல்ற" என்று கோபத்தோடு அவன் கத்த
"சித்தா ! தப்ப யார் சுட்டிக் காட்டினா என்ன ? அதுக்கு பெரிய ஆளா இருக்கனும்மா என்ன?" என்று நவின், ரதனின் அண்ணன் மகன் கூற
"என்னடா ? ஆழாக்கு ! இப்படி பெரிய மனுசன் மாறி பேசுற ! இப்படிலாம் பேசுறதுக்கு உனக்கு யார்டா சொல்லி கொடுக்குறா ?"
"உனக்கு இவ்வளவு அறிவு கிடையாதே ! ஏன்னா உன் அப்பன் லட்சணம் அப்படி . அப்புறம் உன் அம்மாக்கும் இந்த அளவு அறிவு கிடையாது . இது எல்லாம் அந்த ஊம கோட்டான் பண்ற வேலையா தான் இருக்கும்? ஊம மாதிரி இருந்துகிட்டு எல்லாரையும் மாட்டி விட அவளுக்குத் தான் நல்லா தெரியும்" என்று ரதன் கோபத்தோடு கூற
"சித்தா! தேவையில்லாம சித்திய திட்டாதீங்க ! அவங்க ஒன்னும் சொல்லித் தரல அவங்க பாவம் அப்பாவி ."
"சித்தி உங்கள மாதிரி எல்லாம் கிடையாது அமைதி. காலேஜ் எல்லாம் போய் படிச்சுட்டு இருக்காங்க. நீங்க தான் சரியா படிக்காம 10 வது பெயிலாகி , தாத்தா மில்லுல போய் வேலை பார்க்காம வெட்டியா உட்கார்ந்து இருக்கீங்க" – நவின்
"அடிங்க ! யார்டா இதை எல்லாம் உனக்குச் சொன்னா !" – ரதன்
"உன் அப்பத்தா சொல்லுச்சு சித்தா" - நவின்
"அப்பத்தா !" என்று பல்லை கடித்தவன்
"ஆமா மில்லுல உனக்கு என்னடா வேலை" – ரதன்
"சித்தி கூட கோவிலுக்கு வந்தேன் சித்தா ! அப்ப நீ வண்டியில ஏறத பார்த்து வந்தேன் .
சித்தா ! சித்தா! நானும் உன் கூட வண்டியில் வரேன்" என்று நவின் கூற
"அதெல்லாம் முடியாது ! உன் வருங்கால சித்திய தவிர வேறு யாரையும் நான் வண்டியில் ஏத்த மாட்டேன்டா" – ரதன்
"என்னது யாரையும் ஏத்த மாட்டியா ? அப்ப நேற்று வண்டியில் ஒரு அக்காவ கூட்டிட்டு போனத நான் பார்த்தேன் சித்தா ! யார் அது ?" – நவின்
'அய்யோ ! பயபுள்ள பார்த்துருச்சா ! வீட்டுல சொன்னா பிரச்சனை ஆகிடுமே இப்ப என்ன பண்றது சமாளிடா ரதன்' என்று அவன் யோசித்துக் கொண்டிருக்க
"என்ன சித்தா ! பொய் சொல்ல யோசிக்குறீயா ? எனக்கு தெரியும் நீ அவங்க கூட dating தான போன" – நவின்
"என்னது rating ஆ அப்படினா என்னடா ?" – ரதன்
"அய்யோ சித்தா ! அதுக்கு பேர் dating .அப்படினா பொண்ணு கூட பழகி பார்க்குறது" என்று நவின் கூற
"ஆமா ! இது எல்லாம் எங்கடா கத்துக்குற ?" – ரதன்
"டிவில பார்த்தேன் சித்தா ! அக்காவும், அண்ணாவும் இப்படி தான் சொன்னாங்க" – நவின்
"சரியா ! போச்சு போ ! நவினு dating அவங்க எப்படி பண்ணாங்கனு சித்தாக்கு கொஞ்சம் சொல்றீயா ! உன் 'இடியா' வச்சு சித்தா சித்திய கரெக்ட் பண்றேன்." – ரதன்
"இடியா இல்லா சித்தா அது ஐடியா. உனக்கு இங்கிலிஷ் சொல்லிக் கொடுத்தே நான் ஒரு வழியாகிடுவேன் போல" என்று நவின் அலுத்துக் கொள்ள
"சரிடா! தடியா ! பிகு பண்ணாம அந்த dating பத்தி சொல்லுடா" என்று ரதன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஒரு விளக்கமாறு பறந்து வந்து அவன் முன் விழுந்தது.
**************
அனைத்து மாவட்டங்களிலும் உள்ள காவல் நிலையத்திற்கு அன்று குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது.
அதில் சமீப காலமாக பலர் தற்கொலை செய்து இறந்து போவதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில் ஒரு வாசகம் குறிப்பிடப்பட்டுள்ளது. இறந்தவர்கள் அருகில் செல்போன் இருந்ததாகவும்
அதில் சவாலே சமாளி
இல்லையேல் நீ காலி
என்ற வாசகம் எழுதப்பட்டிருந்ததாகவும் அதில் கூறப்பட்டிருந்தது
திக் திக் தொடரும் ....
 

HoneyGeethan

Active member
Vannangal Writer
Team
Messages
175
Reaction score
169
Points
43
நிமிடம் : 2
அங்கே காளி ரூபத்தில் நின்று இருந்தார் சாவித்ரி அம்மா
அட ! எடுப்பட்ட பயலே !
கழுதைக்கும் பரதேசம் குட்டிச்சுவரா நீ இருக்குறது போதாதா ? அந்த சின்னஞ்சிறுக்கு என்னத்தடா
சொல்லி கொடுத்துட்டு இருக்க !
உன்னை போல அவனையும் தறுதலையா ஆக்கப் போறியாடா ? என்று சாவித்ரி கத்த
அப்பத்தா ! நான் ஒன்னும் அவனுக்கு சொல்லிக் கொடுக்கல ,அவன் தான் எனக்கு பாடம்
சொல்லிக்குடுத்துட்டு இருக்கான் .
என் பவுடர் தெரியாம என் கிட்ட கத்திகிட்டு இருக்க நீ ! ஓவரா பேசுனே அவ்வளவுதான் ! என்று அவன்
அப்பத்தாவிடம் எகிற
சருகை கண்டு தணல் அஞ்சுமாடா ! போடா! பொசகட்ட பயலே ! என்று சாவித்ரி கூறும்பொழுதே
நவின் பேசினான்.
சித்தா ! அது பவுடர் இல்ல பவர் என்று நவின் கூற சிரிப்பு சத்தம் அருகில் கேட்டது . வேகமாக சத்தம்
வந்த திசை நோக்கி திரும்பிப் பார்த்தான் ரதன்.
அங்கே பாவாடை சட்டை தாவணியில், நெற்றியில் சிறு பொட்டு வைத்து, திருநீறு கீற்றை சிறு
கோடாக இட்டு, தலையில் மல்லிகை பூ வைத்தபடியே வந்து கொண்டிருந்தாள் அம்பரி.
அவள் வருவதை நெற்றி சுருங்கியபடியே இவன் பார்த்துக் கொண்டிருக்க
நவின் அவன் கவனத்தை திருப்பினான்.
சித்தா ! என்று நவின் அழைக்க திரும்பிய ரதன் , நவின் தலையில் லேசாக தட்டினான். அவன் அப்படி
செய்யவும் நவின் கத்த
அந்த சிறுச எதுக்குடா அடிக்குற ? என்று அப்பத்தா அதற்கும் கத்தினார்.
அப்பத்தா ! பொட்ட புள்ள முன்னாடி என்னை அசிங்கப்படுத்துறான் . அதனால லேசா தட்டினேன்.–ரதன்
டேய் ! உனக்கு தெரியாத விசயத்தை எதுக்கு பேசுவானேன்.அப்புறம் அசிங்கப்படுவானேன்!- அப்பத்தா
சும்மா இரு அப்பத்தா ! நீயும் அவனை மாதிரி அசிங்கப்படுத்துற ! நல்லா இல்ல சொல்லிட்டேன். நீ
வேணா பாரு! அப்பத்தா! நான் பின்னாடி நல்லா வருவேன் – தவரதன்
ஓண்டிக்காரன் பிழைப்பும் வண்டிக்காரன் பிழைப்பும் ஒன்றுனு சொல்வாங்க நீ முதல ஒரு இடத்துல
நில்லுடா! அப்புறம் நல்லா வரத பாக்கலாம் என்று அப்பத்தா கூற
அவர் அப்படி கூறியதும் அம்பரி சிரித்தாள். அவள் சிரித்ததும் அவளை முறைத்த ரதன்
அப்பத்தா! அவள சிரிக்க வேண்டாம்னு சொல்லு ! அப்புறம் கோவத்துல ஏதாவது பண்ணிடப் போறேன்
– ரதன்
அவன் அப்படி கூறியதும் வேகமாக தன் சிரிப்பை அடக்கிக் கொண்டாள் அம்பரி.
ஏன்டா ! அவள கத்துற . உன் வவுசு அப்படி . ஒழுங்கா படிச்சிருந்தா இப்படி சுத்திட்டு , பேசிட்டு
இருப்பியா நீ ?
கொட்டி கொட்டி அளந்தாலும் குறுணி பதக்கு ஆகாது அது மாதிரி நீ இங்கிலிஷ் பேசுனதும்
பெரியவனா ஆகிருவீயோ ?என்று கூறியவர் மேலும் தொடர்ந்தார்.
அரிசி மில்ல பார்க்கச் சொன்னா எங்கடா கிளம்பிட்ட
“ நாய்க்கு நிக்கவும் நேரமில்லை .... என்று அவர் ஏதோ கூற வர ரதன் இடையிட்டான்.
அப்பத்தா என்னை ரொம்ப மேரேஞ் பண்ற நீ ! அப்பா கூப்பிட்டு இருக்காரு அதான் அவரை பார்க்கப்
போறேன் என்று ரதன் கூற
சித்தா ! அது மேரேஞ் இல்ல டேமேஜ் என்று நவின் அவன் சொன்னதை திருத்த முயல
அடிங்க ! என் பக்கத்தில் உட்கார்ந்து வாத்தியார் மாதிரி திருத்திட்டா இருக்க ! போயிரு அந்த பக்கம்
என்று நவினை கத்தியவன்
‘பயபுள்ள பிகர் முன்னாடி அசிங்கப்படுத்துது என்று தனக்குள் முணுமுணுத்துக் கொண்டவன் தன்
பைக்கில் ஏறி அமரப் போக
சாவித்ரியம்மா அவன் முன்னாடி வந்து நின்றார் .
அய்யா ! ராசா ! . ராக்காயிக்கு உடம்பு சரியில்லாம இருக்காம்! நான் ராக்காயி வீடு வரை போய் , அவள
ஒரு எட்டு பார்த்துட்டு வந்திடுறேன். இவள கொஞ்சம் அவ வீட்டுல இறக்கி விட்டுட்டு போயா.புள்ள
தனியா போக பயப்படுது என்று அவர் கூற
அதெல்லாம் முடியாது ! இந்த வண்டியில் என் உடுப்பிய தான் ஏத்துவேன் . இவளை ஏத்த முடியாது .
நடந்து போகச் சொல்லு அப்பத்தா .இல்லை உனக்கு துணையா இருக்கச் சொல்லு . நீ மட்டும் எப்படி
தனியா வருவ . என்று அவன் கூற
அத்தான்! அது உடுப்பி இல்ல வுட்பி என்று அம்பரி கூற
அவளை முறைத்துப் பார்த்தான் ரதன்.அவன் அப்படி பார்த்ததும் அப்பத்தா முதுகுக்கு பின் ஒளிந்து
கொண்டாள் அம்பரி.
இந்தா ! கூட்டிட்டு போ ராசா ! கொஞ்ச தூரம் தான இருக்கு . என்னை பத்தி கவலையில்லையா ராசா !
ராக்காயி வீட்டுல வந்து கூப்பிட்டுக்க உன் அப்பன்கிட்ட சொல்லிட்டேன். அவன் சரினு
சொல்லிட்டான் .
இந்த புள்ள தனியா போறேன்னு சொல்லுராயா !காலம் கெட்டு கிடக்கு ராசா ! நீனா பத்திரமா
கூட்டிட்டு போய் விட்டுட்டு வந்துடுவ ! ராசா !என் தங்கம்ல! சரி சொல்லு யா என்று அவர் கொஞ்ச
ஆரம்பிக்க (இனி வேண்டாம்னு சொல்வானா நம்ம ஹீரோ சார் ) சரி என்றான்.
ஆனால் அம்பரிக்குத் தான் பயம் பிடித்துக் கொண்டது.
வேண்டாம் பாட்டி ! அப்பா போன் பண்ணா வந்துடுவாரு என்று அம்பரி தயங்கியபடியே கூற
அட ராசாத்தி ! உன் அப்பனுக்கு எதுக்கு தேவையில்லாம அலைச்சல். இவன் வெட்டியாத்தான
இருக்கான் . அப்புறம் என்ன ! இவன் கூட்டிட்டு போவான் என்று அவர் கூற
அப்பத்தா ! நான் ஒண்ணும் வெட்டியா இல்லை! மில்லை பார்த்துக்குறேன் என்று அவன் கூற
எங்க நீ பார்த்துக்குற ? எல்லாம் என் மகன் தான் பார்த்துக்குறான் ! நீ வெட்டியா உக்காந்து எந்திரிச்சுட்டு வர
“ ஆண்டி மகன் ஆண்டியானால் நேரம் அறிந்து சங்கு ஊதுவான்னு சொல்வாங்க ‘’
ஆனா எங்க ? எல்லாத்தையும் உனக்கு என் மகன் விளக்க வேண்டியிருக்கு என்று அவனை திட்டியவர்
ரதன் முறைத்ததை கண்டுகொள்ளாமல் அம்பரியிடம் திரும்பினார் .
நீ பயப்படாம போமா ! அவன நான் பார்த்துக்குறேன் . அவன் ஏதாவது வம்பு பண்ணா சொல்லு ,
அவனை உண்டு இல்லைனு! பண்ணிடுறேன் என்று அவர் கூற
இவன் முறைத்துக் கொண்டே அவளை பைக்கில் ஏறச் சொன்னான்
தயங்கி தயங்கி அவன் அருகில் பட்டும் படாமல் அவள் தள்ளி அமர ,நவினை வண்டியின் முன் அமர
வைத்த ரதன் அவன் அமர்ந்ததும் இவன் சற்று தள்ளி அமர, அவள் மேல் லேசாக உரசிக் கொண்டு
அமர்ந்தான்.
அவன் அப்படி அமர்ந்ததும் வேகமாக பின்னால் நகர்ந்தாள் அம்பரி.
அவள் அப்படி செய்ததும் இவன் பொறிய ஆரம்பித்துவிட்டான்.
“ இன்னும் கொஞ்சம் தள்ளி அமர்ந்தா ரோட்ல போய் தான் விழுவடி!”
அடச்சீ ! ஒழுங்கா உட்கார்! இவ பெரிய ரதிதேவி இவள உரச நாங்க தவம் கிடக்குறோம் . இவ மேல
உரசியதும் அம்மையார் அப்படியே கரைஞ்சிடுவா ?
ஒழுங்கா உட்காருடி முட்டக்கணி ! என் தோல்பட்டயை பிடிச்சுக்க இல்ல நான் பிரேக் போட்டா கீழ
போய் விழுந்துடுவ ,அப்புறம் உன் அக்காவுக்கு என்னால பதில் சொல்ல முடியாது என்று ரதன் கத்த
என் அக்காவ எதுவும் சொல்லாதீங்க அத்தான் என்று கொஞ்சிக் கொண்டே சொன்னாள் அம்பரி.
சரிங்க அம்பரி தேவியாரே! என்று அவளை மாதிரியே கொஞ்சிப் பேசிக் காண்பித்தான் தவரதன்
கிண்டல் பண்ணாதீங்க அத்தான் என்று அதற்கும் அம்பரி சிணுங்க
சரிடி !முட்டக்கணி !சிணுங்காதடி என்று அவளிடம் வம்பு செய்தபடியே பைக்கை அவன் ஸ்டார்ட்
செய்ய பைக்கின் வேகம் அதிகரித்ததும் அவளுக்கு பயம் பிடித்துக் கொண்டது.
அத்தான் மெதுவா போங்க என்று அம்பரி பயந்தபடியே கூற
அடியே ! வண்டியில் மெதுவா போறதுக்கு நீ பேசாம நடந்தே போகலாம். பைக்கே வேகமாக
போறதுக்குத்தான் . இவ வேற – ரதன்
எனக்கு பயமா இருக்கு அத்தான் – அம்பரி
பயமா இருக்கா ! அப்ப ஒண்ணு செய் ! என்னை கட்டிபிடிச்சு உட்கார்ந்துக்க பயம் போயிடும் – ரதன்
அவன் அப்படி கூறியதும் முட்டக்கண்ணை திறந்து இவள் பேய் முழி முழிக்க
அதை தன் முன்னால் இருந்த கண்ணாடி மூலம் பார்த்த ரதன் சிரித்துக் கொண்டே
“ ஏன்டி எது சொன்னாலும் நம்பிடுவியா ? அப்படி எல்லாம் நீ செய்ய வேண்டாம் . ஒழுங்கா உட்காரு .
மெதுவாத்தான் போவேன். நீயே பிடிச்சாலும் எனக்கு வேண்டாம்டி . உன்னை மாதிரி தயிர் சாதம்லாம்
எனக்கு வேண்டாம். உன்னை வச்சு ஊறுகாய் கூட போட முடியாதுடி .நீ சரியான கெஸ்ட் பெஃல்லோ.” – ரதன்
சித்தா! அது வேஸ்ட் பெஃல்லோ – நவின்
அவன் அப்படி சொன்னதும் அவன் தலையில் கொட்டிய ரதன்
முன்னாடி பாருடா ஆழாக்கு ! பெரியவங்க பேசும் போது எதுக்கு மூக்க நுழைக்கிற என்று அவன் கூற
அம்பரி வேகமாக “ என்னை வச்சு எப்படி ஊறுகாய் போட முடியும் ? என்று அதிமுக்கிய கேள்வியை
கேட்டாள்.
ரதன் தன் தலையில் அடித்துக் கொண்டான்.
ஏன் அத்தான் தலையில் அடிச்சுக்குறீங்க? எனக்கு பதில் சொல்லுங்க ? என்று அம்பரி கூற
வாய மூடிட்டு இப்ப நீ வரியா? இல்ல சேற்றுல தள்ளிவிட்டுட்டு போகவா ? அப்படியே உருண்டுகிட்டே
வீட்டிற்க்கு போய் சேருவ என்று அவன் கூற
அம்பரி வாயை வேகமாக மூடிக் கொண்டாள்.
_____________________________
சென்னையில் தன் வீட்டில் 20 வயது மதிப்புடைய ஒருவன் செல்லில் கேம் விளையாடிக் கொண்டு
இருந்தான். அப்போது ஒரு குறுஞ்செய்தி வர
அது அவன் கவனத்தை ஈர்த்தது. . வேகமாக அவன் அதை திறந்து பார்க்க அதில் ஒரு கோமாளி
பொம்மை ஒன்று தன் கையில் இருந்த சக்கரத்தை சுற்றி விட அது வேகமாக சுழன்றது . அதன்
சுழற்சியை பார்த்தவன் கொஞ்சம் கொஞ்சமாக அதன் போக்கிற்கு அடிமையாகிப் போனான்.
விளையாட்டை வெறி பிடித்தவன் போல் ஆடியவன் சற்று நேரத்தில் தானாக எழுந்து சென்று தன்
வீட்டின் மொட்டை மாடியின் மேலே சென்று நின்றான். நின்றவன் அடுத்த நிமிடத்தில் கொஞ்சம் கூட
தயங்காமல் கீழே குதித்தான்.
திக் திக் தொடரும்
 

HoneyGeethan

Active member
Vannangal Writer
Team
Messages
175
Reaction score
169
Points
43
நிமிடம் :3
அம்பரியை பைக்கில் ஏற்றிச் சென்றவன் ஒரு பெரிய வீட்டின் முன் வண்டியை நிறுத்த ,வேகமாக அதில்
இருந்து இறங்கி வீட்டிற்குள் ஓடினாள் அம்பரி .
அவள் சென்றதும் நவினிடம் திரும்பிய ரதன்
“ ஏண்டா ஆழாக்கு ! இறக்கிவிட்டவனுக்கு ஒரு நன்றி கூட சொல்லாம ஓடுறாடா உன் சித்தி ?
என்னாச்சுடா அவளுக்கு ?”– ரதன்
சித்தா! உன்னை பார்த்து பயந்து ஓடுறா சித்தி – நவின்
ஏன்டா ! நான் என்ன அவ்வளவு கெரர் ஆவா இருக்கேன் – ரதன்
அது டெரர் சித்தா ! – நவின்
அட அதத்தான்டா சொல்லிட்டு இருக்கேன் என்று அவன் இங்கு பேசிக் கொண்டிருக்க
ஒரு பெரியவர் வீட்டிற்குள்ளிருந்து வந்தார் .
நவின் செல்லம்! என்று நவினை கொஞ்சியவர் ரதனிடம் திரும்பினார்.
“ வாடா மாப்பிள்ளை ! என்ன அங்கேயே நின்னுட்ட ,வீட்டிற்குள் வந்து ஒரு கப் காபி சாப்பிட்டு போயா
!”என்று அம்பரியின் தந்தை வீரபாண்டியன் அவனை வீட்டுக்குள் கூப்பிட
இல்லை மாமா ! இருக்கட்டும்! இன்னொரு நாள் வரேன் .அப்பா மில் வேலையா கூப்பிட்டு இருக்கார்
,போகணும் மாமா என்று அவன் கூற
அட வாப்பா ! ஒரு கப் டீ குடிக்குறதுக்கு என்ன நேரம் ஆகிடப் போகுது என்று அவர் வம்படியாக
கூப்பிட, வேறு வழியில்லாமல் வண்டியில் இருந்து இறங்கி வீட்டிற்குள் சென்றான் ரதன்.
அதற்குள் நவின் ,
“தாத்தா இறக்கிவிடுங்க பாட்டிகிட்ட போறேன் “என்று அவரிடம் இருந்து இறங்கி உள்ளே ஓடினான்
அவன் உள்ளே சென்றதும் அம்பரியின் தாய் சுப்புலட்சுமி
நவீன் குட்டி! என்று
அவனை கொஞ்சினார்
பாட்டி எனக்கு சாக்லேட் கொடு என்று அவன் கேட்க
இதோ தரேன் செல்லம் என்று அவனை கொஞ்சியவர் ரதனையும் வரவேற்றார்.
“வாப்பா ! தம்பி ! இந்தா பக்கத்தில தான் இருக்குது மில் !ஆனா தம்பிய பார்க்க முடியுறதுலயே” என்று
அவர்
கூற
இல்லை அத்தை வேலை கொஞ்சம் அதிகம். என்று ரதன் கூற
இருவரும் பேசியபடியே வந்து கொண்டிருந்தனர். அப்போது எதிரில் அம்பரி வந்தாள் .
அம்பரியை பார்த்தவர் அவளிடம்
“தம்பிக்கு காபி போட்டுக் கொண்டு வாமா ! “என்று சுப்பு சொல்ல
சரி என்று தலையசைத்துவிட்டு கிட்சனுக்குள் சென்றாள் அம்பரி
ரதன் வீரபாண்டியுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தான்.
‘அவர்கள் அங்கு பேசிக் கொண்டிருக்கட்டும் நாம போய் நம்ம ரதனுடைய குடும்பத்து உறுப்பினர்கள்
பற்றி பார்த்துட்டு வரலாம் வாங்க
தவரதன் யாருக்கும் அடங்காத காளை, வாழ்க்கையை அதன் போக்கில் வாழ்ந்து ரசிப்பவர், திமிர் ,
கர்வம் பொருந்திய ஒரு ஆண்மகன்.
எல்லாம் சரிதான் ஆனா என்ன பையன் கொஞ்சம் இங்கிலிஷ் பேசுவான் . ஆனா நமளுக்கு தான் அது
புரியாது .அதுக்கு ஒரு மொழிப்பெயர்ப்பாளர் நமக்கு தேவைப்படுது.
படிப்பு பத்தாவது பெயில் அப்பாவோட அரிசிமில்ல சேர்ந்து பார்த்துக்குறார் துறை (பார்க்க மட்டும்
தான் செய்வார்) வேலையெல்லாம் பக்காவா முடிச்சு வச்சுருப்பார் ராமனாதன் ,இவன் தந்தை . சுத்து
வேலை பார்க்குறது ,லோடு சரி பார்க்குறது இந்த மாதிரி வேலைய நம்ம ஹீரோ சார் பார்த்துக்கிறார்.
கஜவல்லி இவன் தாய் அப்பாவோட சேவகி .
அப்புறம் அப்பத்தா சாவித்ரி.
கிழவி கருத்தா பேசும் ! என்ன பழமொழியா பேசி உயிரை வாங்கும் . தாத்தா பாவம் கிழவி நச்சு
தாங்காம சின்ன வயசுலயே இறந்து(80) போயிட்டார் .
அப்புறம் ஒரு அண்ணன் ,ஒரு அக்கா .
அண்ணன் ராஜீவ் நல்லா படிச்சு ஒரு அரசுப் பள்ளியில் வாத்தியாரா இருக்காரு .அண்ணி அம்பிகா,
அம்பரியின் அக்கா அவரும் படித்துவிட்டு ஒரு தனியார் பள்ளியில் வேலை பார்க்கிறார். படிப்பில்
இருவரும் கெட்டி .இவர்களுக்கு பிறந்தது நவின் . பெரிய தனியார் ஆங்கிலப் பள்ளியில் மூணாவது
படிக்கிறான். படிப்பில் கெட்டி ,பெரியவர்களுக்கு ரொம்ப செல்லம் .
தூரத்து சொந்தமான வீரபாண்டி குடும்பத்தை திருவிழாவில் சந்தித்த ராமனாதன் அம்பிகாவை
பார்த்ததும் அவளின் அமைதியில் ஈர்க்கப்பட்டு, தன் மூத்த மகனுக்கு மணமுடிக்க கேட்க வீரபாண்டியும்
சம்மதித்துவிட்டார். அடுத்து வந்த முகூர்த்ததில் இருவருக்கும் மணமுடித்து வைத்தனர் .
அம்பிகாவின் பொறுமையும் , கஜவல்லியின் அனுசரணையும் அந்த குடும்பத்தை அமைதியாக கொண்டு
செல்கின்றது.
அடுத்து ரதன் அக்கா காவ்யா அமெரிக்காவில் இருக்கிறாள்.
அவள் கணவன் பிரபல கம்பெனியில் வேலை பார்க்கிறார் . வருஷத்திற்கு ஒரு தடவை இந்தியா
வருவதோடு சரி. அவளுக்கு ஒரு பெண், யுவனா 10 வயது இருக்கும் .தாத்தா பாட்டியோடு போன் மூலம்
பேசிக் கொள்கிறாள்.
அப்புறம் நம் நாயகி அம்பரி . பயந்த சுபாவம் ,அமைதி, அதிர்ந்து ஒரு வார்த்தை பேச மாட்டாள் .
அதிலும் நம் சண்டியரை கண்டா பயம், மீசை கொஞ்சம் பெரிசா இருந்தா அம்மணி பேச பயப்படுவா .
அப்புறம் அவள் தாய் , தந்தை இது தான் இவள் குடும்பம்.
தவரதன் மில் அருகில் உள்ளது இவர்கள் வீடு . அருகில் இருப்பதால் போகும் போதும்,வரும்போதும்
பார்த்து பேசி கொள்வார்கள் இவர்கள். அனைவரும் மகிழ்ச்சியாக இருந்தனர் நம் நாயகனை தவிர .
நம் நாயகனுக்கு ரிச்சா , வொயிட் கலரா ,நுனி நாக்கில் இங்கிலிஷ் பேசுற பொண்ணு வேணும்மாம் .
அப்படி இன்னும் பொண்ணு சார் பார்க்கல ,அதுக்கு தான் சார் வெயிட்டிங் .
அவ்ளோ தாங்க இவங்க குடும்ப வரலாறு.
இப்போ இங்க வாங்க
ரதன் வீரபாண்டியோடு பேசிக் கொண்டே வெளியே வர , ஒரு கார் வந்து நின்றது.
அனைவரும் திரும்பிப் பார்க்க அதில் இருந்து இறங்கினாள் ஒரு மாடர்ன் யுவதி.
அவளை பார்த்ததும் ரதன் வாயை பிளந்தான்.
__________________________
அந்த வீட்டின் உள்ளே இருந்து வெளியே வந்தான் ஒரு இளைஞன்.
வெளியே வந்தவன் வீட்டின் பின்னால் இருந்த தோட்டத்திற்குச் சென்றான்.
அங்கு மரம் , செடி ,கொடிகளோடு தோட்டம் அழகாக வடிவமைக்கப்பட்டிருக்க அந்த செடி ,
கொடிகளை பார்த்தவன் அதன் அருகில் சென்றான்.
அருகில் சென்றவன் அந்த மரம், செடி, கொடிகளை வருடுடியபடியே பேசினான்.
என் செல்லங்களா ! எப்படி இருக்கீங்க ?என்று கூறியபடியே அதை தொட்டு ரசித்தவன்,
உங்களை எப்படித்தான் அழிக்கிறதுக்கு இந்த மனிதர்களுக்கு மனசு வருதோ ? என்று கூறியவன்
அருகில் அமர்ந்து அதற்கு தண்ணீர் விட்டபடியே கீழே இருந்த மண்ணை கையில் எடுத்து முகர்ந்து
பார்த்தான்.
“ ஆகா என்ன உன் வாசனை ! மழை பொழியும் போது வருமே உன் வாசனை அதை நுகர்வதே தனி
அழகு” என்று பேசியவன் மேலும் தொடர்ந்தான்.
“ பூமாதேவியே ! நீயும் எவ்வளவு காலம் தான் எங்களை தாங்கிக் கொண்டிருக்கிறாய் ? ஆனால்
எப்படித்தான் உன்னை குடைந்து தண்ணீரை எடுக்கிறார்களோ இந்த மனிதர்கள் ? “என்று பேசியவன்
அதை தொடர்ந்து குருவிக் கூட்டின் அருகில் சென்றான்.
அதை வருடியபடியே பேசினான்
“ சிட்டுக்குருவியே உன்னை அழித்தவர்களை நான் அழிக்க வேண்டாமா ? இதோ உனக்கான அஞ்சலி
‘’என்று ஒரு காகித துண்டினை அங்கு வைத்தான்.
அதில் ஒருவன் இறந்து கிடந்த புகைப்படம் இருந்தது .
புகைபடத்தை வைத்தவன்
உள்ளே சென்று தன் போனை உயிர்பிக்க வந்து நின்றான் கோமாளி மனிதன். . கோமாளி மனிதனை தன் கைகள் கொண்டு வருடினான் அவன்.
திக் திக் தொடரும்
 

HoneyGeethan

Active member
Vannangal Writer
Team
Messages
175
Reaction score
169
Points
43
நிமிடம்: 4
தலைமை காவல் நிலையத்தின் உள்ளே நுழைந்தனர் மாறனும், கதிரவனும்.
உள்ளே சென்றவர்கள் அங்குள்ள தலைமை அதிகாரியிடம் சென்று தகவல்களைக் கேட்டு அறிந்தவர்கள் வெளியில் வந்தனர்.
மாறன் கதிரிடம் திரும்பி
“ ஏன் கதிர் இது தற்கொலை மாதிரி தெரியுதா உனக்கு ?எனக்கு என்னமோ இது கொலை மாதிரி தெரியுது . அதுமட்டுமில்லை எல்லாரும் சாகும் முன் போனை கையில் வச்சிருந்திருக்காங்க .அதனால நமக்கு இப்ப இருக்குற ஒரே க்ளூ போன் தான் , போனை செக் பண்ணி பார்த்தா நமக்கு ஏதும் க்ளு கிடைக்குமா? என்று மாறன் கூற
ஆமா மாறா! நானும் அத பத்தி தான் யோசிச்சுட்டு இருந்தேன் என்று கதிர் கூற
இருவரும் தங்களுக்கு தெரிந்த விவரங்களை பல கோணங்களில் விவாதித்தபடி ஓர் வீட்டின் முன் சென்று நின்றனர்.
அங்கு வீட்டின் உள்ளே ஒரு பெண்மணி அழுது கொண்டே இருக்க அவரிடம் சென்றனர் இருவரும் .
மாறன் கண்களால் சைகை செய்ய கதிர் பேச ஆரம்பித்தான்.
அம்மா! கொஞ்சம் அழுகையை நிறுத்திட்டு நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்றீங்களா ? – கதிர்
அந்த பெண்மணி தன் கண்களை துடைத்தபடியே சம்மதமாக தலையசைத்தார்.
அவர் அப்படி செய்ததும் கேள்வி கேட்பதற்கு தயாரானான் மாறன்
உங்க பையன் எப்படி இறந்து போனான்? சாகுறதுக்கு முன்னாடி அவன் எப்படி இருந்தான்? என்ன பண்ணிட்டு இருந்தான்? இத பத்தியெல்லாம் கொஞ்சம் எங்களுக்கு சொல்ல முடியுமா ? என்று மாறன் கேட்க .
அவர் அழுதபடியே பேசத் தொடங்கினார்.
தம்பி என் பையன் காலேஜ்ல படிக்கிறான் .எல்லா நேரமும் செல் தான் கதினு கிடப்பான். எப்பப் பாரு அதில் கேம் விளையாட்டிட்டே இருப்பான்..
இறந்து போன அன்னைக்கும் அப்படி தான் எதையோ அவன் போன்ல தீவிரமா பார்த்துட்டு இருந்தான் . எதுவும் பேசாம ஏதோ மந்திரிச்சுவிட்டவன் போல அத பார்த்துட்டு இருந்தான்..
அப்புறம் கொஞ்ச நேரத்தில் மாடி படியில் ஏறி மேலே போனான். நானும் அவன் எங்கடா போற என்று கூப்பிட காது கூட கேட்காமல் மாடியில் ஏறினான் . அவன் பின்னாடி கூப்பிட்டுட்டே நானும் போனேன். திடீர்னு மேலே ஏறி நின்றான் . அதை பார்த்து பதறிட்டு நான் பக்கத்தில் போறதுக்குள்ள அவன் கீழே குதிச்சுட்டான். தம்பி என்று வருத்ததோடு முடித்தார் அவர்.
அவர் அப்படி சொன்னதும் இருவரும் தங்களுக்குள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
கவலைபடாதீங்க மா ! என்று அவருக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டு இருவரும் வெளியே வந்தனர்.
கதிரவன் பேச ஆரம்பித்தான்.
மாறா ! கொலையாளி எல்லாரையும் தன்வசப்படுத்தி தற்கொலை செய்ய தூண்டியிருக்கான் . ஆனால் எதை வைத்து இதலாம் பண்றான்னு நமக்கு தெரியனும் என்று கதிர் கூற
ஆமா கதிர் ! ஒரு வேள போன் மூலமா இதை செய்றானோ ?என்று மாறன் கூற
இருவரும் அதை பத்தி ஆராய்ச்சி செய்து கொண்டே தன் ஆபிசிற்குச் சென்றனர்.
********
காரில் இருந்து இறங்கிய யுவதியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் ரதன். அவன் அப்படி பார்ப்பதை கண்ட அம்பரிக்கு கோபம் வந்து தன் விரல் நகத்தை கடித்து துப்பத் தொடங்கினாள்.
ரதனிடம் பேசிக் கொண்டே வந்த விரபாண்டியும் , சுப்புலெட்சுமியும் சத்தம் கேட்டு திரும்ப அங்கு மஞ்சு நிற்பதை பார்த்தனர்.
ஹேய் ! மஞ்சு ! எப்படி இருக்கடி ? எப்ப வந்த நீ ? எங்க உங்கம்மா ! என்று மஞ்சு, தன் தங்கை மகளிடம் சுப்புலெட்சுமி கேட்க
ஹாய் ! சித்தி! சித்தப்பா ! எப்படி இருக்கீங்க இரண்டு பேரும். நான் நல்லா இருக்கேன் சித்தி ! ஹாய் அம்பு பார்த்து எவ்ளோ நாளாச்சு வர வர அழகாகிட்டே போறடி ! – மஞ்சு
அம்மாவும் , அப்பாவும் பின்னாடி வருவாங்க சித்தி ! ஹாய் ! சித்தப்பா உங்க கம்பீரம் இன்னும் குறையல சித்தப்பா என்று கூறியபடியே அவர் மீசையை நீவிவிட்டாள் மஞ்சு
என்ன இங்க நின்னே பேசிட்டு பிள்ளைய வீட்டுக்குள்ள கூட்டிட்டு போடி என்று வீரபாண்டி கூற
மஞ்சுவும் சுப்புவுடன் சேர்ந்து உள்ளே சென்றுவிட்டாள். அவள் செல்வதை பார்த்த ரதன் அவள் பின்னால் செல்ல முயல
அவன் முன் வழிமறித்து நின்றாள் அம்பரி.
“ அத்தான் ! இதை மறந்துட்டீங்க ‘’என்று வண்டிச் சாவியை அவள் நீட்ட அதை வேண்டா வெறுப்பாக வாங்கியவன்,
இப்ப இதுவா முக்கியம் ! என்று கூறி எரிச்சலுடன் அதை வாங்கியவன்
ஆமா ! அம்பு ஒரு சூப்பர் பிகர் இப்ப போச்சே ! யாரது ? என்று அவன் ஆவலாக கேட்க,
தன் தாவணி முந்தானையின் ஓரத்தை கோபத்தில் வேகமாக பிடித்து திருகிய படியே
“ அது என் சித்தப்பா பொண்ணு ! மும்பையில் இருக்கிறாள் .லீவ்க்கு வந்து இருக்கா .கொஞ்ச நாள் இங்கதான் தங்கப் போறாள் அத்தான் “என்று அம்பரி சலித்துக் கொண்டே கூற ,
ஓ !வாவ் ! ப்யூட்டி இங்க தான் இருக்கப் போறாளா .ரொம்ப வசதியா போச்சு ! ஆமா ப்யூட்டி பேர் என்ன?
மஞ்சு என்று அம்பரி கூற
பேர்கூட அழகாத்தான் இருக்கு அவளை போல என்று ஜொள்ளுவிட்டபடியே ரதன் கூற
அதற்கு அம்பரி பேசுவதற்குள்
ஹாய் ! அம்பு பேபி ! யார்கூட பேசிட்டு இருக்க நீ ! என்று ரதனை பார்த்துக் கொண்டே மஞ்சு வந்தாள்.
அம்பரி வேண்டா வெறுப்பாக அவனை மஞ்சுவிடம் அறிமுகப்படுத்தி வைத்தாள் .
இவர் ராஜீவ் அத்தானோட தம்பி பேர் என்று அவள் கூறுவதற்குள் மஞ்சுவை நோக்கி கை நீட்டி இருந்தான் ரதன்.
ஹாய் ! நான் தவரதன்! என்று தன்னை அவன் அறிமுகப்படுத்திக் கொள்ள
வாட் ! த..வ..ரத..ன்னா ? ஓ சாரி ! இவ்வளவு நீளமான பெயரா! என்னால் இப்படிலாம் கூப்பிட முடியாது . நான் வேணா உங்கள தவன்னு கூப்பிடவா ? ஆமா நீங்க ! எனக்கு என்ன முறை வேணும்? என்று அவனிடம் மஞ்சு சந்தேகம் கேட்க ,
என்னை யாரும் தவன்னு கூப்பிட்டதேயில்லை! இப்படி கூப்பிடுறதும் நல்லா தான் இருக்கு. இந்த முட்டக்கண்ணி என்னை அத்தான்னு கூப்பிடுவா. நீயும் அப்படியே கூப்பிடுமா. என்னை நீ எப்படி கூப்பிட்டாலும் அது அழகாத் தான் இருக்கும் என்று ரதன் பதில் சொல்ல ,
மஞ்சு சிரித்தாள் . அவள் சிரித்தபடியே ரதனுடம் பேசுவதை பார்க்க பார்க்க அம்பரிக்கு கோபமாக வந்தது.
மஞ்சுவிடம் பேசிக் கொண்டே திரும்பிப் பார்த்த ரதன் அம்பரி நிற்பதை பார்த்து
என்ன ? என்று புருவம் உயர்த்தி கேட்க
ஒன்றுமில்லை என்று தலையசைத்துவிட்டு குனிந்து கொண்டாள் அம்பரி.
சற்று நேரம் அவளிடம் பேசிவிட்டு விடைபெற்றுச் சென்ற ரதன் தன் பைக்கை நோக்கிச் செல்ல அவன் பின்னால் சென்றாள் அம்பரி.
அத்தான் ! என்று அம்பரி கூப்பிட வியப்பாக திரும்பிப் பார்த்தான் ரதன்.
அவன் அப்படி பார்த்ததும் ஏன் அத்தான் ! அப்படி பார்க்குறீங்க ?
என்று தலையை குனிந்து கொண்டே அம்பரி சொல்ல
இல்ல !நானே வந்து பேசினா கூட பதில் சொல்ல மாட்ட , அப்படியே பேசினாலும் தரைய ஆராய்ச்சி பண்ணிட்டே பேசுவ , இன்னைக்கு என்ன நீயா வந்து பேசுற ! என்னாச்சு உனக்கு ? என்று ரதன் அவளை குறுகுறுவென பார்த்தவண்ணம் கேட்க
அவன் பார்வை வித்தியாசத்தில் அம்பரிக்கு படபடப்பாக இருந்தது. .ஆயினும் நான் நல்லாத்தான் இருக்கேன் அத்தான் என்று கீழே குனிந்த வண்ணம் பதில் சொன்னாள் அம்பரி
அவள் அப்படி கூறியதும் முதல என்னை நிமிர்ந்து பாருடி என்று அவன் குரலை உயர்த்த நிமிர்ந்து பார்த்துவிட்டு மறுபடியும் குனிந்து கொண்டாள் அம்பரி
நீ இன்னைக்கு சரியில்லை . ஆமா ! உன் முட்டக்கண் ஏன் இப்டி அலைபாயுது ? என்று ரதன் கேட்க
அப்படியெல்லாம் இல்லை அத்தான் என்று மழுப்பியவள் தன் தைரியத்தை
வரவழைத்துக் கொண்டு பேசினாள்.
அத்தான் ! அது வந்து என்று அம்பரி இழுக்க
சொல்ல வந்ததை சீக்கிரம் சொல்லி முடி ! என் அப்பன் வேற காத்துட்டு இருப்பார் . லேட்டா போறதுக்கு வேற கத்துவார். போய் அவர சமாதனப்படுத்திட்டு லோட் வேற செக் பண்ணனும் – ரதன்
அத்தான் ! நீங்க அன்னைக்கு கேட்டதுக்கு எனக்கு சம்மதம் என்று சொல்லிவிட்டு அவள் உள்ளே ஓடிவிட
ரதன் யோசனையில் நின்றான்.
ஆமா ! இவ என்ன விளையாட்டா நான் கேட்டதை உண்மைனு நம்பி ஓகே சொல்லிட்டு போறா என்று அவன் நினைத்துக் கொண்டிருக்க
விளையாட்டா சொன்னியா ? என்றது மனச்சாட்சி
இல்லை என்னை அறியாமல் அவளை பிடிச்சு தான் சொன்னேன். ஆனா அவ என் அப்பாகிட்ட அடி வாங்க வச்சுட்டா .அதனால அவ எனக்கு வேண்டாம் என்று தனக்குள் கூறிக் கொண்டவன் நினைவுகள் அவளை முதன் முதலில் சந்தித்த நாளிற்குச் சென்றது.
********
மெழுகுவர்த்தி எரிந்து கொண்டிருக்க அதன் எதிரில் அமர்ந்து இருந்தான் அவன் . எரிந்து கொண்டிருக்கும் தீயை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தவன் , தன் விரலை எரிந்து கொண்டிருக்கும் மெழுகுவர்த்தியின் உள்ளே விட்டு விரலை வலப்பக்கம் , இடப்பக்கம் ஆட்டியபடியே பேசத் தொடங்கினான்.
என்ன மாறன், கதிரவன் என்னை பத்தி துப்பு துலக்க ஆரம்பிச்சுட்டீங்க போல ! என்று பேசியவன் அருகில் இருந்த மேஜையை நோக்கிச் சென்றான். அங்கே நிறைய படங்கள் சிதறி இருக்க அதில் மாறனும் , கதிரவனும் வெவ்வேறு இடத்தில் விசாரணை செய்தபடி இருக்கும் புகைப்படம் இருந்தது. அதை ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்தவன்
என்னை பிடிக்க ஏன் இவ்வளவு கஷ்டப்படுறீங்க சார் ! நானே வந்து சரண்டர் ஆகுறேன்.
ஆனா! இப்ப இல்லை ! என் வேலை முடிந்ததும் . அதுவரைக்கும் என்னை தேட முயற்சி பண்ணாதீங்க சார் ! முயற்சி பண்ணாலும் உங்க கையில் நான் சிக்க மாட்டேன் என்று கூறியவன்
வெறிபிடித்தவன் போல் சிரித்தான்..
திக் திக் தொடரும்
 

HoneyGeethan

Active member
Vannangal Writer
Team
Messages
175
Reaction score
169
Points
43
நிமிடம் : 5
மாறா ! இங்கே பாரு ! சவாலே சமாளின்ற வாசகத்திற்குக் கீழே ஒரு கையெழுத்து இருக்கு அதை விரிவு படுத்து என்று கதிரவன் கூற
அதை விரிவுபடுத்திய மாறன் கதிரிடம்
கதிர் ! இதில் தமிழ் பித்தன்னு போட்டு இருக்கு .அந்த பெயர்ல இருக்கிற ஆள விசாரிச்சா எதாவது க்ளு கிடைக்கும்னு நினைக்கிறேன் – மாறன்
நீ சொல்வதும் சரி தான் மாறா ! என்று கூறியவன் போனில் சில பேரோடு பேசியவன் சற்று நேரம் கழித்து போனை யோசனையோடு வைத்தான். .
என்னாச்சு கதிர் !- மாறா
மாறா ! தமிழ் பித்தன்ற பெயர்ல இருந்த எழுத்தாளர் இறந்து போயி இரண்டு வருஷமாகுதுனு சொல்றாங்க –கதிரவன்
அப்ப இங்க அவர் பெயர்ல இதையெல்லாம் செய்றது யாராக இருக்கும் என்று மாறன் கேட்க குழப்பத்தில் நின்றனர் இருவரும்
___________________________________
ரதன் தன் அண்ணன் ராஜீவ் திருமணத்திற்கு வந்த பெண்களை தன் நண்பர்களுடன் அமர்ந்து சைட் அடித்துக் கொண்டிருக்க அதில் ஒரு பெண்ணை மட்டும் ரசித்து பார்த்துக் கொண்டிருந்தான் ரதன். அதை பார்த்த அவன் நண்பன் அவனை உலுக்கினான்.
என்ன நண்பா ! அவளையே பார்த்துட்டு இருக்க அவளைப் பிடிச்சு இருக்கா !
அதெல்லாம் இல்லை ! என் லட்சியம் பற்றித் தான் உனக்கு தெரியுமே ! அதுக்கு இவ ஒத்து வர மாட்டா ! சும்மா பார்த்தேன்டா என்று ரதன் கூற
என்னது சும்மா பார்த்தியா ! அததான் நண்பா நீயும் பல வருஷமா சொல்லிட்டு இருக்க , ஒரு பொண்ணு கூடவும் பேசி ,அவளை கரெக்ட் பண்ண மாதிரி தெரியலடா என்று அவன் நண்பனில் ஒருவன் ரதனை கேலி செய்தான்.
அதை கேட்டு சிரித்த மற்றொரு நண்பன்
ஏன் மச்சான் ? பொண்ணுகிட்ட பேச பயமா? என்று அவன் கேலி செய்ய
நீங்க நினைக்கிற மாதிரிலாம் இல்லைடா – ரதன்
அதை கேட்டு அவர்கள் சிரிக்க
இப்ப பார்க்குறீங்களாடா ! நான் ஒரு பொண்ணுகிட்ட பேசி காட்டுறேன் என்று ரதன் கூற
அப்படியா செய் நண்பா ! பார்க்கலாம்! என்று அவர்களும் சிரித்துக் கொண்டே சொல்ல ,வேகமாக தன் பார்வையை சுழலவிட்டான் ரதன். அப்போது அவன் பார்வையில் வந்து விழுந்தாள் அம்பரி.
அவளை பார்த்த ரதன் அவள் அருகில் செல்ல ,எதிரில் வந்தவனை பார்க்காமல் அவனை கடந்து செல்ல முயன்றவளை ரதன் தடுத்தான்.
ஹாய் ! ப்யூட்டி ! என்று அவன் அழைக்க திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்த அம்பரி மீசையை முறுக்கியபடியே நின்ற ரதனை பார்த்ததும் திகைத்தாள். அவன் தன்னிடம் பேச முற்படவும் விலகி செல்ல அவள் முயல ,ரதன் அவளை இடைமறித்தான் .
உங்ககிட்ட ஒன்னு சொல்லனும் . நீங்க இந்த உடையில் ரொம்ப அழகா இருக்கீங்க என்று கூறிவிட்டு அவன் சென்றுவிட இவள் விழித்துக் கொண்டு நின்றாள்.
சென்றவன் நண்பர்களிடம்
எப்படி நான் பொண்ணுகிட்ட பேச மாட்டேன்னு சொன்னீங்க? . இப்ப பேசிட்டேன் பார்த்தீங்களாடா? – ரதன்
டேய் ! இரண்டு வார்த்தை பேசினதுக்கே சார் ரொம்ப பண்றார்டா என்று ஒருவன் கூற
உடனே மற்றவர்களும் சேர்ந்து சிரித்தனர்.
டேய் ! என்னடா ரொம்ப பண்றீங்க ? அந்த பொண்ணை கரெக்ட் பண்ணி காமிக்கவாடா என்று ரதன் சவால் விட
அவர்களும் அதற்கு தலையாட்டினர். அதன் விளைவாய் .ரதன்
அந்த திருமணம் மண்டபம் முழுவதும் அவள் பின்னால் சுற்றி திரிந்தும், , சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுதெல்லாம் அவளிடம் பேசியும் அவளை
தன் பால் ஈர்க்க முயன்றான்.
அவன் பின்னால் வருவதை பார்த்த அம்பரி அவனிடம்
இங்க பாருங்க ! இப்படிலாம் என் பின்னால் சுற்றினா நான் பெரியவங்ககிட்ட சொல்லிடுவேன்! என்று அவள் மிரட்ட
ஏய் ! என்ன சொல்லிடுவியா நீ! அப்படியே சொன்னாலும் என்கிட்ட இருந்து தப்பிச்சுடுவியா நீ ! எப்படியும் உன் அக்காவ பார்க்க நீ என் வீட்டுக்கு வந்து தான் ஆகனும்! அத ஞாபகம் வச்சுக்க என்று ரதன் இங்கு இவளை மிரட்டுக் கொண்டிருக்க
அவன் மிரட்டுவதையும் அதற்கு அம்பரி அவனை பயத்தோடு பார்த்துக் கொண்டிருப்பதையும்
தூரத்தில் இருந்து ராமனாதன் பார்த்துக் கொண்டிருந்தார்.
அதன் பின் அவன் கண்ணில் படாமல் அவள் ஒதுங்க முற்பட அதை கவனித்த ரதன்
அவள் ஏதோ பொருளை எடுக்க ரூமிற்குள் செல்ல அதை பார்த்த ரதன் அவள் பின்னால் சென்றான் . பொருளை எடுத்துவிட்டு திரும்பிய அம்பரி ரதனை பார்த்ததும் கத்த முயல வேகமாக அவள் வாயை தன் கை கொண்டு மூடினான்
கத்தாதடி ! யாராவது வந்துடப் போறாங்க ! அப்புறம் இப்படி தனியா ரூம்ல நம்ம இரண்டு பேரும் சேர்ந்து இருக்குறத பார்த்தாங்கனா அவ்வளவு தான் – ரதன்
ஏன் என்ன பண்ணுவாங்க என்று அம்பரி பயத்தோடு கேட்க,
உனக்கும் எனக்கும் திருமணம் செஞ்சு வைப்பாங்க. எனக்கு ஒண்ணும் பிரச்சனை இல்லைப்பா நான் ஒகே சொல்லிடுவேன் . உனக்கு எப்படி ? என்னை கட்டிக்கிறியா? என்று அவன் விளையாட்டாக கேட்க , அதை கேட்ட அம்பரிக்கு பயத்தில் வேர்த்துக் கொட்டியது.
அவள் பயத்தை ரசித்தவன் மேலும் முன்னேறிஅவள் அருகில் வர , அம்பரி பயத்தில் கண்ணீர் வழிய வேகமாக அவனை தள்ளிவிட்டு அங்கிருந்து ஓடினாள் .
அவள் ஓடியதைப் பார்த்தவன் ஏய் நில்லுடி ! நான் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன் என்று அவன் கத்த
அதை கவனிக்காமல் ஓடியவள் ராமனாதன் மேல் இடித்து கொண்டு நின்றாள். அவர் ஏதோ அவளிடம் கேட்பதும் , இவள் சொல்வதுமாக இருக்க
இதை தூரத்தில் இருந்து பார்த்த ரதன்
அய்யோ! போச்சு ! என்னை போட்டுக் கொடுக்குறா போலயே! நீ செத்தடா ரதன் என்று அவன் நினைத்துக் கொண்டிருக்க ,உள்ளே நுழைந்தார் அவர்.
அவன் அருகில் வந்தவர் அவன் சூதாரிப்பதற்குள் அவனை அறைந்திருந்தார்.
அறைந்தவர் அவனிடம் “ தனியா இருக்குற ஒரு பொண்ணுகிட்ட என்னடா பேச்சு வேண்டிகிடக்கு ? அவ பின்னாடியே சுற்றிட்டு இருக்க . உன்னை திரும்ப அவ பின்னாடி பார்த்தேன் அவ்வளவு தான் . . எனக்குனு இருக்குற மரியாதையா கெடுத்துடாதடா! ‘’ என்று கூறிவிட்டு அவர் செல்ல
ரதன் கோபத்தில் நின்றான். அவன் அம்பரி தன்னை பற்றி தன் தந்தையிடம் சொல்லி அடிக்க வைத்ததாக நினைத்தவன். அன்றிலிருந்து அவளை தவிர்த்தான்.
ஆனால் அதற்கு நேர்மாறாக அம்பரி அவன் தன் பின்னால் சுற்றி, செய்த செயல்களை எல்லாம் ரசிக்க ஆரம்பித்திருந்தாள்.
அன்று அவன் மணம் புரிய கேட்டதும் வேகமாக ஓடி வந்தவள் ராமனாதனை இடித்துக் கொண்டு நிற்க
அவர் என்னாச்சு ? ஏன்மா இப்படி ஓடி வர ? யாராவது எதாவது சொன்னாங்களா ?என்று அவர் கேட்டதற்கு எதையோ சொல்லி மழுப்பியவள் ரதனை பற்றி மட்டும் வாய் திறக்கவில்லை .
ராமனாதன் இவர்களை முதல் நாளில் இருந்து கவனித்ததை அறியாத ரதன் , அவர் அடித்தது அவளால் தான் என்று அவள் மேல் கோபத்தை வளர்த்துக் கொண்டான் .
அவள் மேல் கோபத்தில் இருந்தவன் மஞ்சு வந்ததும் அம்பரியின் பார்வை மஞ்சுவின் மீது பொறாமையில் படிவதை பார்த்து, அவளிடம் வேண்டுமென்றே பேசி அவள் பின்னால் சுற்ற ஆரம்பித்தான்.
அதை பொறுக்க முடியாத அம்பரி அவனிடம் திருமணத்திற்கு சம்மதம் சொல்லிச் சென்றாள் .
கோபத்தில் இருக்கும் ரதன் கோபம் தணிந்து அம்பரியை ஏற்பானா? இல்லை தன் கனவுப் பெண்ணான மஞ்சுவின் பின் செல்வானா ?
விடை விரைவில்
திக் திக் தொடரும்
 

HoneyGeethan

Active member
Vannangal Writer
Team
Messages
175
Reaction score
169
Points
43
நிமிடம் :6
அன்று ரதன் மஞ்சுவை பார்க்க அம்பரி வீட்டிற்கு வர ,ஹால் யாருமின்றி இருந்தது . அப்போது மாடியில் பேச்சு சத்தம் கேட்க அங்குச் சென்றான்.
அங்கு அம்பரி மஞ்சுவிடம் பேசிக் கொண்டிருந்தாள் .
மஞ்சு ! ரதன் அத்தானை நீ தொட்டு பேசுறது எனக்கு பிடிக்கல ! மரியாதையா நீ தள்ளி நின்னு பேசுற, இல்லை கொன்றுவேன்டி! – அம்பரி
ஏன்? நான் அவர்கிட்ட பேசுனா , பழகினா உனக்கு ஏன் இப்படி கோபம் வருது – மஞ்சு
நான் அவரை காதலிக்குறேன் . அதனால் அவரை நீ தொட்டுப் பேசுறது எனக்கு பிடிக்கல – அம்பரி
அட லூசாக்கா நீ ! நீ லவ் பண்ண அவர் தான் உனக்கு கிடைச்சாரா ? உன் அழகும் , படிப்பும் எங்கே ? அவர் எங்கே ? – மஞ்சு
ஸ்டாப் இட் மஞ்சு ! லவ் பண்ண படிப்பு, அழகு தேவையில்ல நம்பிக்கை தான் வேணும். அவர் என்னை நல்லா பார்த்துக்குவார்னு எனக்கு நம்பிக்கை இருக்கு ! – அம்பரி
அடியே ! அவங்க வீட்டு ஆளே அவர மதிக்க மாட்றாங்க ! சண்டியர் மாதிரி திரியுறார் ! அவர போய் எப்படித்தான் காதலிக்கிற நீ ? – மஞ்சு
அப்படி சொல்லாதடி ! அவர் பார்க்கத்தான் அப்படி தெரியுறார் . ஆனா எந்த பொண்ணைகிட்டயும் அவர் தப்பான பார்வை பார்த்தோ , பேசியோ நான் பார்க்கலடி !
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு திறமை இருக்கு அவர்க்குள்ளும் ஒரு திறமை இருக்கும் ..கண்டிப்பா அது ஒரு நாள் வெளி வரும். அப்ப எல்லோரும் அவரை மதிப்பாங்கடி என்று அம்பரி சொல்ல
ஆனாலும் உனக்கு அவர் மேல் இவ்வளவு நம்பிக்கை இருக்கக் கூடாதுடி என்று மஞ்சு சொல்லிச் சிரிக்க
அதை கேட்ட ரதன் வந்த சுவடே தெரியாமல் வீட்டிற்குச் சென்றான்.
சென்றவன் தன் ரூமில் அமர்ந்து அம்பரி சொன்னதை அசை போட்டு கொண்டிருக்க நவின் உள்ளே வந்து டிவியை ஆன் செய்தான். அப்போது செய்திகள் ஓடிக் கொண்டிருந்தது.
அதில் எச்சரிக்கை ! எச்சரிக்கை ! கேம் விளையாடி பல பேர் தற்கொலை செய்து கொள்வதாகவும் , அந்த கேம்மில் கோமாளி மனிதன் வருவதாகவும் சொல்லப்படுகிறது. யாரும் அவன் சூழ்ச்சியில் விழாமல் தங்களை பார்த்துக் கொள்ளுமாறு காவல் துறை எச்சரிக்கை செய்கிறது” என்று அதில் கூற அதை கேட்ட ரதன் யோசனையோடு தன் போனை உயிர்பித்தான். அப்போது அதில் கேம் விளையாடுமாறு குறுந்தகவல் வந்திருந்தது . அதை பார்த்தவன் ஒரு முடிவோடு துணிந்து அதனை திறக்க வந்து நின்றான் கோமாளி மனிதன்.
**************************
மாறனும் , கதிரவனும் தமிழ் பித்தன் வீட்டிற்குச் சென்றனர். அங்கு ஒவ்வொரு இடமாக ஆராய அவர்கள் கண்களில் விழுந்தது அந்த கடிதம்
அந்த கடிதத்தில் தமிழ் பித்தனுக்கு பொழிழன் எழுதியிருந்தான்.
''அய்யா! எங்களை எடுத்து வளர்த்து , படிக்க வச்சு எங்களுக்கு பல உதவிகளை செஞ்சு இருக்கீங்க .அதுக்கு நன்றிக்கடனா உங்களுடைய சமுதாய சீர்திருத்த கருத்துகளுக்கு செயல் வடிவம் நாங்க .
கொடுக்கப் போறோம் .
நம் நாட்டின் வளமையும், பண்பாடும் சீர்கெட்டுப் போயிருக்கு அதை களையெடுக்கப் போறோம் .
மக்கள் எல்லாம இயந்திரத்தனமா மாறிட்டு இருக்காங்க
அதனால அந்த இயந்திரத்தை கொண்டே அவங்களுக்கு ஒரு பாடம் கற்பிக்கப் போறோம் “ என்று கூறி அது முடிக்கப் பட்டிருக்க
அதை வைத்தவர்கள் அருகில் உள்ள படத்தைப் பார்த்தனர்.
அதில் தமிழ் பித்தனோடு சேர்ந்து ஆறு பேர் நின்று இருந்தனர் .
அந்த புகைப்படத்தை கையில் எடுத்து பார்த்துக் கொண்டிருந்தனர் மாறனும், கதிரும்
அப்போது ஒரு சிறுவன் அவர்களிடம் ஒரு சீட்டை கொடுத்துவிட்டுச் சென்றான்.
அதை இருவரும் பிரித்துப் பார்க்க
‘’அதில் என்னை பிடிக்க இந்த க்ளூ பத்தாது ஆபிசர் சார் ! தேவையில்லாம கஷ்டப்படாதீங்க ! என் வேலை முடிந்ததும் நானே உங்க முன்னாடி வருவேன் . முடிந்தால் அந்த கேம்மை தடுத்து நிறுத்த வழி பாருங்க சார்” என்று அதில் எழுதி இருந்தது.
அதை படித்து முடித்த கதிர் மாறனிடம்
அவனுக்கு நம்ம மூவ் எல்லாம் தெரிஞ்சுருக்கு மாறா – கதிர்
ஆமாம் கதிர் ! இனி நாம பார்த்து தான் மூவ் பண்ணனும் என்று இவர்கள் இங்கு பேசிக் கொண்டிருக்க அவர்களை தூரத்தில் நின்று பார்த்துக் கொண்டிருந்தான் ஒருவன்.
திக் திக் தொடரும்
 

HoneyGeethan

Active member
Vannangal Writer
Team
Messages
175
Reaction score
169
Points
43
நிமிடம் : 7
ரதன் கேம்மின் உள்ளே செல்ல அவன் முன் வந்து நின்றான் கோமாளி மனிதன்.. அவன் தன் கையில் வைத்திருந்த சக்கரத்தை சுழற்ற அதனை கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் ரதன். அதைப் பார்க்க , பார்க்க அவன் அந்த கோமாளி மனிதனின் பேச்சை கேட்க ஆரம்பித்தான்.
வருக ! வருக !.மானிடா! உன்னை விளையாட்டு உலகத்திற்கு வரவேற்கிறேன் !
கேம்ம ஆரம்பிக்கலாமா ! ஆனா அதுக்கு முன்னாடி இந்த கேம்முடைய விதிமுறைகளைப் பார் மானிடா ! என்று கூறிய கோமாளி மனிதன் தன் கையசைக்க ரதன் முன் தோன்றியது ஒரு திரை. அந்த திரையில் விதிமுறைகள் வரிசையாக வரத் தொடங்கியது. .
1, ஒவ்வொரு கட்டத்திற்கும் ஒரு லைஃப் டைம் விகிதம் 5 கட்டத்தை கடக்க உனக்கு 5 லைஃப் டைம் கொடுக்கப்படும். ஒரு கட்டத்தில் லைஃப் டைம் உபயோகப்படுத்தவில்லை என்றாலும் அந்த லைஃப் டைம்மை அடுத்த கட்டத்திற்கு உபயோகப்படுத்த முடியாது.
2, ஒவ்வொரு கட்டத்தையும் கடக்க உனக்காக கொடுக்கப்பட்ட டைம் லிமிட் 60 நிமிடங்கள்
3, விளையாட்டை ஆரம்பிச்சா இடையில் நிறுத்தக் கூடாது.
என்று அந்த. திரையில் தெரிய, அதை ரதன் பார்த்துக் கொண்டிருந்தான்.
என்ன மானிடா ! பார்த்துட்டியா ! விளையாட நீ ரெடியா ? இல்லையா ?
விளையாட நீ ரெடினா அந்த ஓகே பட்டன அழுத்து என்று கோமாளி மனிதன் கூற
ரதன் சற்றும் யோசிக்காமல் ஓகே பட்டனை அழுத்தினான்.அவன் அப்படி செய்ததும் அட்டகாசமாக சிரித்த அந்த கோமாளி மனிதன்
செய் அல்லது செத்துமடி ! மானிடா !
இப்போ உன் முன்னாடி தோன்றும் அனைத்தும் நிஜம். நீ பார்க்கும் அனைத்தும் நிஜம் . நீ தான் எல்லாத்தையும் தாண்டி வரப் போற ! உன்னை காப்பாத்திக்கப் போற ! என்று அவன் ரதன் கண்களைப் பார்த்துக் கூற , ரதன் அதற்குச் சம்மதமாக தலையசைத்தான்.
அடுத்த கட்டத்திற்கு வந்தால் மீண்டும் சந்திக்கலாம் என்று கூறிவிட்டு அந்த கோமாளி மனிதன் மறைந்துவிட,
அவன் மறைந்ததும் ரதனின் முன் பட்டன்கள் தோன்றியது . அதில் மேலே, கீழே, வலப்பக்கம் , இடப்பக்கம் செல்வதற்கான குறியீடுகள் மற்றும் ஓடுவது, தாவுவதற்கான பட்டன்கள் அவன் முன் இருந்தது. அதை பார்த்த ரதன் பட்டனை அழுத்திய வண்ணம் முன்னால் செல்ல, அவன் முன் ஒரு பெரிய கதவு தோன்றியது.
கதவு தானாக திறக்க அதன் உள்ளே சென்றான் ரதன்.. அந்த இடம் முழுவதும் இருட்டாக இருக்க., ரதன் நடந்து செல்ல முற்பட .
என்னைக் காப்பாற்றுங்க ! என்று ஒரு பெண்ணின் அலறல் சத்தம் கேட்டது. அதை கேட்ட ரதன் , அந்த ஓசை கேட்ட இடம் நோக்கிச் சென்றான். அப்போது வெளிச்சம் திடீரென்று வர , அந்த இடத்தை சுற்றிப் பார்த்தான் ரதன்.
அங்கு வழியெங்கும் பொருட்கள் சிதறிக் கிடந்தது. அதை பார்த்து நடந்து கொண்டிருந்த ரதன் முன் வேகமாக ஓடினான் ஒருவன். அவன் யாரென்று ரதன் திரும்பி பார்க்க அங்கு யாரும் தென்படவில்லை.
குழம்பியவாறே நடந்து சென்ற ரதன் ,ஒரு ரூமின் முன் நிற்க கதவு தானாகத் திறந்தது.
அங்கு சென்றவன் அதிர்ச்சியடைந்தான். அங்கு சுவர் எல்லாம் ரத்தக் கறைகளாக இருக்க நிமிர்ந்து பார்த்த ரதன் திடுக்கிட்டான். அங்கு ஒருவன் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தான். அதை பார்த்த ரதனிற்கு பயத்தில் மூச்சு வாங்கியது. ரதன் இப்படி நிற்க ,மறுபடியும் அலறல் சத்தம் கேட்டது.
என்னை காப்பாற்றுங்க ! என்னை கொலை செய்ய வராங்க என்று ஒரு பெண் குரல் கேட்க, சத்தம் வந்த திசை நோக்கி ஓடினான் ரதன். அங்கு கையில் கத்தியோடு ஒரு பெண்ணை துரத்திக் கொண்டிருந்தான் ஒருவன் .
ரதன் அவனை பிடிக்க முன்னால் ஒரு அடி எடுத்து வைக்க அவன் நின்றிருந்த இடத்தை தவிர ,சுற்றி உள்ள அனைத்தும் கீழே சென்றது.
இவன் மட்டும் தனித்து மேலே நிற்க ,அவனை நோக்கி எரிந்து கொண்டிருக்கும் நிலையில் பல மண்டை ஓடுகள் வட்டமடித்தது. அது வாய் திறக்க நெருப்பாக கீழே விழுந்தது . நெருப்பு ரதனை நோக்கி வர அதில் இருந்து தப்பிக்க ,வலப்பக்கம் ஒரு அடி வைத்தவன் தடுமாற கீழே பார்த்தான் ரதன்.
அங்கு நெருப்பு குழம்பாக இருந்தது . பயத்தில் தடுமாறியவன் கால்கள் அந்தரத்தில் மிதக்க வேகமாக அருகில் தொங்கிக் கொண்டிருந்த கயரை பிடித்தான். அதை பிடித்து நின்ற ரதன் அப்போது தான் கவனித்தான்.
தான் ஒரு சதுரத்தின் மேல் நின்று கொண்டிருக்க ,அவனை சுற்றி பொருள் எதுமின்றி இருந்தது. அவன் சற்று நகர்ந்தாலும் கீழே நெருப்புக் குழம்பில் விழுவது நிச்சயம் என்று தெரிந்தது. கீழே எரிந்து கொண்டிருக்கும் நெருப்பை பயத்தோடு ரதன் பார்த்துக் கொண்டிருக்க ஒரு ஒலி கேட்டது.
மானிடா ! நெருப்பு ! பார்த்து ! . அவர்கள் தாக்குதலில் இருந்து தப்பித்து வெளியே வா ! அந்த பெண்ணை வேறு காப்பாற்ற வேண்டும் . அங்கு நிமிடம் ஆரம்பிச்சாச்சு ! சீக்கிரம் மானிடா! என்று அந்த ஒலி கூற ரதன் மந்திரிச்சு விட்டவன் போல் தாக்குதலுக்கு தயாரானான்.
அந்த மண்டை ஓடுகள் அவனை நோக்கி நெருப்பை கக்க , ரதன் குனிந்து, நிமிர்ந்து, அமர்ந்து அதன் தாக்குதலை சமாளிக்க , ஒரு கட்டத்தில் அவனை நோக்கி வந்த நெருப்பை சமாளிக்க முடியாமல் சற்று நகர்ந்தவன் கீழே விழ , கடைசி நொடியில் சதுரத்தின் விளிம்பை பிடித்தவன் மேலே நோக்கி வர முயற்சி செய்து கொண்டிருந்தான்.
அப்போது சட்டென்று அவன் பிடித்திருந்த சதுரம் நகர்ந்து மேல் நோக்கிச் சென்று நின்றது. அது நின்றதும் ரதன் அந்த இடத்தை பார்க்க நெருப்பு எதுவுமின்றி அமைதியாக இருந்தது. ரதன் குழப்பமாக பார்த்துக் கொண்டிருக்கும் போதே அவன் கால்களில் ஏதோ ஊற, கீழே குனிந்து பார்த்த ரதன் அதிர்ந்தான் .
அங்கு கைகள் பல அவனை சுற்றி வட்டமடித்துக் கொண்டிருந்தது. அது அவனை பிடிக்க முயல , அதை பார்த்த ரதன் பயத்தில் வேகமாக ஓட, அருகில் சத்தம் கேட்டது . சத்தம் வந்த திசையை நிமிர்ந்து பார்த்த ரதன் பதட்டமானான்..
மேலிருந்து ஒரு இரும்பு குண்டு அவனை நோக்கி வந்து கொண்டிருந்தது.அவன் அந்த இரும்பு குண்டில் இருந்து விலக , அது அவனை பிடிக்க வந்து கொண்டிருந்த ஒரு கையின் மேல் விழந்து, கை நசுங்கி ரத்தம் தெறித்தது.
அதை பார்த்து ரதன் வேகமாக ஓட, இரும்பு குண்டில் இருந்து தப்பித்த சில கைகள் மீண்டும் அவனை நோக்கி வந்து கொண்டிருந்தது. மேலே பார்த்தபடியே ஓடிக் கொண்டிருந்த ரதனை நோக்கி வலப்பக்கத்தில் இருந்து இரும்பு குண்டு வர சட்டென்று குனிந்தான் ரதன். அது அடுத்து வந்த சில கைகளின் மேல் விழுந்து ரத்தம் தெறித்தது.
இப்படி இரும்பு குண்டையும், கைகளையும் பார்த்து ஓடிக் கொண்டிருந்த ரதன் அப்போது தான் கவனித்தான் நிமிடம் 10 ஆக இருந்தது. இதில் இருந்து தப்பிக்கும் வழியை சுற்றிமுற்றி பார்க்க ஒரு கதவு மேலிருந்து கீழ் நோக்கி வந்து கொண்டிருந்தது .
வேகமாக கதவினை நோக்கி ஓடியவன் எதிரே ஒரு தலையில்லாத மனிதன் கத்தியோடு அவனை நோக்கி வந்து கொண்டிருந்தான். அவனிடம் இருந்து தப்பிக்க வேகமாக அவனை தாக்கிய ரதன் இரும்பு குண்டு அவனை நோக்கி வருவதை பார்த்தவன் சட்டென்று அமர , இரும்பு குண்டு அந்த மனிதனின் தலையை வெட்டிச் சென்றது.
அந்த மனிதன் கீழே விழ, கதவு மூடும் தருவாயில் இருந்தது. வேகமாக ஓடிச் சென்றவன் கடைசி நொடியில் அதன் கதவின் அடியில் புகுந்து அந்த பக்கம் சென்றான் ரதன்.
அவன் அந்த பக்கம் சென்று நின்றதும் அவன் முன் கோமாளி மனிதன் தோன்றினான். அவனை ரதன் பயத்தோடு பார்த்துக் கொண்டிருக்க
முதல் கட்டத்தை வெற்றிகரமாக கடந்து விட்டாய் மானிடா ? என்று அந்த கோமாளி மனிதன் கூறிக் கொண்டே தன் கையில் இருந்த கத்திக் கொண்டு தன் கால்களை வெட்டிக் கொண்டான்.வெட்டிக் கொண்டவன் சற்று நேரத்தில் மறைந்தான்.
***************************
முதல் கட்டத்தை ரதன் கடந்ததை பார்த்த பொழிலன் வெறி பிடித்தவன் போல் எல்லா பொருட்களையும் தூக்கி எறிந்தான்.
விட மாட்டேன் ! உன்னை ஜெயிக்கவிட மாட்டேன்டா என்று கூறியவன் போனை எடுத்துக் கொண்டு ரூமை நோக்கிச் சென்றான்.
திக் திக் தொடரும்
 

HoneyGeethan

Active member
Vannangal Writer
Team
Messages
175
Reaction score
169
Points
43
நிமிடம்: 8
மாறன், கதிரவன் முன் பொழிழன் மற்றும் அவன் நண்பர்களைப் பற்றிய செய்திகள் அடங்கிய பைல் இருந்தது. அதில் அவர்கள் தமிழ் பித்தன் என்பவரால் எடுத்து வளர்க்கப்பட்டவர்களாக குறிப்பு இருந்தது. அதில் ஒவ்வொருவரும் தகவல் தொழில்நுட்பம், புலனாய்வு , சைக்காலஜி , கம்பியூட்டரில் வல்லவர்களாக , போனில் கைதேர்ந்தவர்களாக இருந்தனர்,
அதனை பார்த்த மாறன் கதிரிடம் திரும்பி
அவங்க இருக்குற இடம் தெரிஞ்சா தான் நாம் ஏதாவது செய்ய முடியும் அத எப்படி கண்டுபிடிக்கிறது கதிர் ? – மாறன்
அதைவிட முக்கியம் அந்த கேம்மை நிறுத்தனும் மாறா- கதிரவன்
எப்படி நிறுத்தப் போறோம் கதிர் ? – மாறா
இவர்கள் இங்கு பேசிக் கொண்டிருக்க இவர்களை தேடி ஒருவன் வந்தான்.
சார் ! நீங்க சொன்ன மாதிரி அந்த கேம்மை ஸ்டாப் பண்ண முடியாது சார் ! கேம் முடிஞ்சா தான் நிறுத்த முடியும்!என்று அவன் கூற
ஓ ! அப்படியா ! கேசவ் என்று சற்று நேரம் யோசித்துவிட்டு கதிர் அவனிடம்
அந்த கேம்ம டிசைன் பண்ணது யார் ! இதில் யார் ! யார் ! சம்பந்தப்பட்டு இருக்காங்கனு கண்டுபிடிக்க முடியுமானு கொஞ்சம் பார்த்து சொல்ல முடியுமா கேசவ் ? -கதிர்
ஓ ! ஓகே சார் ! இதோ பார்த்துச் சொல்றேன் என்று கூறியவன் சற்று நேரம் கழித்து வந்து ஒருவனின் பெயரைச் சொல்ல
மாறன் அந்த பெயரில் இருப்பவனை தேடி கண்டிபிடித்து ஒருவனின் விலாசத்தை கூறினான்.
. ஆனால் அதைக் கேட்ட கதிர் யோசனையோடு அமர்ந்து இருந்தான். அதைப் பார்த்த மாறன் கதிரிடம் திரும்பினான்.

என்னாச்சு கதிர்! என்ன யோசிச்சுட்டு இருக்க ! வா அந்த விலாசத்திற்கு போகலாம் ? – மாறன்
அதில்லை மாறா ! இவ்வளவு ஈசியா அவன் நமளுக்கு தகவல் கொடுக்க மாட்டான். அவனுக்கு நம்ம மூவ் தெரியும் பட்சத்தில் இது சாத்தியமில்லை – கதிர்
கதிர் ! தமிழ் பித்தன் இறந்த சான்றிதழ் கிடைச்சதுல அத வச்சு ஏதாவது க்ளு கிடைக்குதான்னு பார்க்கலாமா? என்று மாறன் சொல்ல
கதிருக்கும் அது சரியென்று பட சம்மதமாக தலையசைத்தான்.
இருவரும் அந்த இறந்த சான்றிதழ் வழங்கப்பட்ட இடத்திற்குச் சென்று ஆதாரத்தை திரட்ட முடிவெடுத்தனர் .ஆனால் யாருக்கும் தெரியாமல்.
பிணவறை அதிகாரி மாறன், கதிரிடம் வந்து ஒரு விலாசத்தை கொடுத்தான்.
சார் ! இந்த முகவரி தான் ஒரிஜினல் சான்றிதழில் இருக்கு . என்று கொடுத்துவிட்டு அவன் செல்ல, அந்த முகவரியை அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே மாறனுக்கு போன் கால் வந்தது ,வேகமாக அதை எடுத்தவன் அதில் கூறப்பட்ட செய்தி கேட்டு கதிரிடம் திரும்பினான்.
அவன் மாட்டிக்கிட்டான் கதிர் வா! போகலாம் ! என்று மாறன் கூற இருவரும் தன் அலுவலகம் நோக்கிச் சென்றனர்.
*****************
கதவில் நின்று தன்னை ஆசுவாசப்படுத்துக் கொண்ட ரதன் அப்போது தான் கவனித்தான். தான் வேறு ஒரு இடத்தில் இருப்பதை . அந்த இடத்தை சுற்றிப் பார்த்தவனின் விழி தெறித்தது.
அங்கு தரையில் பல மனித உறுப்புகளின் பாகங்கள் தனித்தனியாக சிதறிக் கிடந்தன. அதை பார்த்தவன் என்ன செய்வதென்று புரியாமல் நிற்க, நிமிர்ந்து பார்த்தவன் மேலும் அதிர்ந்தான். அங்கு ஒரு கையில்லாத ஒருவன் தன் கால்கள் கொண்டு சுவரில் ஏறிக் கொண்டிருந்தான்.
ரதன் தன் நிலை மறந்து நிற்க அவனுக்கு சற்று தூரம் தள்ளி ஒரு கதவு திறந்தது.
அதை அவன் பார்த்துக் கொண்டிருக்க ஒரு ஒலி அவனிடம் பேசியது.
உன்னுடைய அடுத்த கட்டம் தயார் நிலையில் உள்ளது. வென்று வா ! மானிடா என்று அது கூறிவிட்டு மறைய
ரதன் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அந்த இடம் தலைகீழாக மாறியது . அவன் நிமிர்ந்து பார்க்க கைகள் ,கால்கள் , இதயம் , கண் எல்லாம் மேலே தொங்கிக் கொண்டிருக்க அது ஒவ்வொன்றும் ஒவ்வொரு இன்ச்சாக அவனை நோக்கி இறங்கிவந்து கொண்டிருந்தது.
கீழே பார்க்க தரை முழுவதும் கருப்பு வெள்ளையாக சதுரக் கட்டங்கள் தோன்றியது.
ரதன் பயத்தோடு முதல் சதுரக் கட்டத்தில் அடி எடுத்து வைக்க அடுத்த கட்டம் உள்ளுக்குள் சென்று ஒரு செடி மேலே வந்தது . அவன் அதை பயத்தோடு பார்த்துக் கொண்டிருக்கும் போதே மேலிருந்து அவனை நோக்கி கண் வந்தது . கண்ணில் இருந்து தப்பிக்க அவன் நகர , கண் அந்த செடியில் விழுந்தது. கண் விழுந்ததும் அந்தச் செடி வேகமாக அந்த கண்ணை உள்ளுக்குள் இழுக்க, .கண் நசுங்கிய வண்ணம் உள்ளுக்குள் சென்றது.
கண்ணை விழுங்கிய செடி திரும்பவும் மறைந்தது. அது மறைந்ததும் அந்த சதுரக் கட்டத்தை கடந்தான் ரதன். அடுத்த சதுரக் கட்டத்தில் அவன் அடி எடுத்து வைக்க அவன் முன் வந்து நின்றது பாம்பு .பாம்புகள் அங்கும் இங்கும் படம் எடுத்துக் கொண்டு நிற்க , மீதமிருந்த கட்டத்தில் செடி மறைந்து, வெளிவந்த வண்ணம் இருக்க, . நடுவில் உள்ள வெள்ளை கட்டம் மட்டுமே எதுவுமின்றி இருந்தது.
இதில் மேலிருந்து மனித உறுப்புகள் வேறு அவனை நோக்கி வந்து கொண்டிருந்தது.
ரதன் இதை எப்படி கடப்பது என்று புரியாமல் விழித்துக் கொண்டு நின்றான். நிமிடங்கள் வேறு கடந்து சென்று கொண்டிருந்தது.

அவனுக்கு முன் வெள்ளை கட்டம் z வடிவத்தில் வடிவமைக்கப் பட்டு இருக்க அவன் அதை தாண்ட வேண்டுமானால் இடைப்பட்ட தடைகளை தாண்ட வேண்டும். வேகமாக அருகில் இருந்த வெள்ளை கட்டம் நோக்கி செடி மறைந்ததும் தாவி முதல் சதுரக் கட்டத்தை தாண்டினான். அடுத்த சதுரக் கட்டத்தில் தாண்ட வேண்டிமானால் பாம்பை தாண்ட வேண்டும். என்ன செய்வதென்று புரியாமல் அவன் நிற்க இதயம் அவனை நோக்கி வந்து கொண்டிருந்தது.வேகமாக பாம்பினை நோக்கி அவன் நகர அவன் கடைசி நொடியில் அருகில் இருந்த கட்டம் நோக்கி குதித்தான்.இதயம் அந்த பாம்பின் மேல் விழு, வேகமாக பாம்பு அதை விழுங்கியது. விழுங்கிய பாம்பு சற்று நேரத்தில் வெடித்து சிதறியது.
அடுத்த கட்டத்திற்கு அவன் முன்னேற செடி முளைத்தது. அது மறைய அவன் காத்திருக்க அது மறையாமல் நிமிடம் கரைந்து கொண்டிருந்தது.30 நிமிடம் எஞ்சி இருக்க வேறு வழியில்லாமல் அதனை தாண்ட அவன் முற்பட ,செடி அவனை உள்ளுக்குள் விழுங்கியது .அது விழுங்கியதும்
சற்று நேரத்தில் வெளியில் வந்து விழுந்தவன் முன் திரையில் லைப் டைம் 3 என்று காண்பித்தது.
அப்போது ஒரு ஒலி கேட்டது.
மானிடா ! இந்த கட்டத்தில் நீ உபயோகப்படுத்த வேண்டிய லைப் டைம் முடிஞ்சிருச்சு. நிமிடங்கள் வேறு கரைந்து கொண்டிருக்கிறது. சீக்கிரம் மானிடா! என்று அது கூறிவிட்டு செல்ல
ரதன் வேகமாக நிமிடம் பார்த்தான். நிமிடம் 10 என்று காண்பித்தது.
அவன் நின்ற இடத்தை பார்க்க அவன் ஆரம்பித்த இடத்தில் வந்து நின்றான். அதை பார்த்தவன் ஒரு முடிவோடு தன் கண்மூடி திறந்தவன் ஓட ஆரம்பித்தான்.
அவனை நோக்கி வந்து கொண்டிருந்த உறுப்பிகளை ஒவ்வொன்றாக பிடித்தவன் அதை செடியின் மீதும், பாம்பின் மீதும் எரிந்த படியே அவன் ஓட , செடிகளும் , பாம்புகளும் அதை விழுங்கி வெடித்துச் சிதறியது.
அனைத்தையும் கடந்தவன் கடைசி கட்டத்தில் நின்று கொண்டிருந்த ராட்சஸ பாம்பினை கண்டு தயங்கினான் . நிமிடங்கள் 2 என்று காண்பிக்க . தப்பும் மார்க்கமின்றி தயங்கியவன் கால்களை பிடித்தது பாம்பு.அவனுக்கும் கதவிற்கும் உள்ள இடிவெளியை பார்த்தவன் பாம்போடு அந்த கதவினை நோக்கி தாவ , அவன் கதவினை தொட்டதும் கதவு வேகமாக மூடப்பட , பாம்பின் தலை கதவின் இடையில் சிக்கிக் கொண்டு அதன் தலை துண்டிக்கப்பட்டது.
வேக மூச்சுகள் எடுத்து தன்னை நிலைபடுத்தியவன் முன் தோன்றினான் கோமாளி மனிதன் .
ரதன் அவனை பார்த்துக் கொண்டிருக்கும் போதே , அவன் தன் கைகளில் வைத்திருந்த கத்தி கொண்டு தன் கண்களை குத்திக் கிழிக்க அதை பார்த்த ரதன் தன் கண்களை பயத்தில் மூடிக் கொண்டான்.

திக் திக் தொடரும்
 

HoneyGeethan

Active member
Vannangal Writer
Team
Messages
175
Reaction score
169
Points
43
நிமிடம் : 9
மாறன் , கதிர் முன் கைகள் கட்டப்பட்ட நிலையில் அமர்த்தப்பட்டிருந்தான் ஒருவன். அவன் அருகில் சென்ற கதிர்.
யார்டா ! எங்களை உளவு பார்க்க உன்னை அனுப்பினது ! எங்கடா இருக்கான் அவன் ? சொல்றியா இல்லை? என்று கதிர் மிரட்டியபடியே கைகளை முறுக்க வேகமாக பயத்தில் அனைத்தையும் சொன்னான் அவன்.
அவன் சொன்னதும் அவனிடம் கதிர்
நாங்க விசாரிச்சது யாருக்கும் தெரியக்கூடாது ! குறிப்பா உன்னை அனுப்பியவனுக்கு ! நாங்க சொல்ற மாதிரி அவன்கிட்ட சொன்னா போதும் ! என்று கூறிய கதிர் மாறனிடம் திரும்பினான்.
மாறா ! அந்த location ஐ கண்டுபிடிச்சுட்டியா ? வா ! போகலாம் என்று கூறியவர்கள் அந்த வீட்டிற்குச் சென்றனர்.
அந்த வீட்டின் எதிர்புறம் நின்று அந்த வீட்டை இவர்கள் கவனித்துக் கொண்டிருக்க
அந்த வீட்டின் உள்ளே இருந்து வெளியில் வந்தான் ஒருவன். அவன் வெளியில் சென்றுவிட , இவர்கள் அந்த வீட்டின் உள்ளே நுழைந்தனர்.
உள்ளே சென்றவர்கள் கணினியை பார்க்க மாறா கணினியில் விவரங்களை தேடிக் கொண்டிருக்க ,. கதிர் வீட்டின் மற்ற இடத்தைத் தேடிக் கொண்டிருந்தான். இவர்கள் இங்கு தேடிக் கொண்டிருக்க அவர்கள் முன் வந்து நின்றான் வெளியில் சென்றவன்..
என்ன சார் ! தேடிட்டு இருக்கீங்களா ! நீங்க என்ன தேடினாலும் அவனை உங்களால் பிடிக்க முடியாது என்று அவன் கூற ,
மாறனும் , கதிரும் அவனை பிடிக்க முயல அருகில் நெருங்க முற்பட மயங்கிச் சரிந்தான் அவன்.
மாறன் அவன் அருகில் சென்று பார்க்க அவன் உயிர் பிரிந்திருந்தது
****************
ரதன் அடுத்த கட்டத்திற்குச் செல்ல அவன் முன் தோன்றியது காடுகளும், மலைகளும் .
காடுகளில் அடர்ந்த மரங்கள் ராட்சஸ தோரனை கொடுக்க நடந்து சென்றவன் முன் தோன்றியது ஒரு தடுப்பு . தடுப்பின் பின்னே என்ன மறைந்து இருக்கிறது என்று தெரியாமல் மிரட்சியாக அவன் பார்த்துக் கொண்டிருக்க
ஒரு ஒலி பேசியது. மானிடா ! அடுத்த கட்டம் கடக்க தயாரா இருக்கிறாயா நீ ! இதோ உன் நிமிடம் ஆரம்பிக்கிறது. என்று கூறிவிட்டு அது மறைந்ததும் நிமிடம் ஆரம்பமானது.
ரதன் பார்த்துக் கொண்டிருந்த தடுப்பு நீங்கியது. அதில் இருந்து மான் தலை கொண்டு சிங்க உடம்பை பெற்று பின்னால் சிறகுகள் என்று வித்தியாசமான அமைப்புடைய ஒரு விலங்கு வெளியில் வந்தது.
அதை பயத்தோடு பார்த்தவன் ஓட்டத்திற்கு தயாராக அந்த விலங்கும் அவனை பிடிக்க தயாரானது. அவன் கடக்கும் பாதைகள் அனைத்தும் புதர்கள் மண்டிக் கிடந்தது. சில இடத்தில் அடர்த்தியாகவும் , சில இடத்தில் கம்மியாகவும் புதர்கள் இருக்க ரதன் அதனுள் புகுந்து ஓடினான்.
ரதன் புதர்கள் அதிகமான இடத்தில் புகுந்து ஓட , அவனுக்கு மூச்சு திணறியது.மூச்சை பிடித்துக் கொண்டு ஓடியவன் புதர் கம்மியாக இருக்கும் இடத்திற்கு வந்ததும் மூச்சை விட்டான். இப்படி மூச்சை இழுக்கவும் ,தம்பிடிப்பதும், மூச்சைவிடுவதுமாக ரதன் ஓடிக் கொண்டிருக்க நாலுகால் பாய்ச்சலில் துரத்தியது அந்த விலங்கு. அதில் இருந்து தப்பிக்க அவன் ஓட ,ஒவ்வொரு மரமாக தாவி வந்து கொண்டிருந்தது அந்த மிருகம்.
அவனை பிடிக்க அந்த மிருகம் பறந்து வந்து அவன் தலையை பிடிக்க முயல வேகமாக குனிந்தான் ரதன். அவனை குறி வைத்த அந்த மிருகம் அருகில் சென்று விழுக , அங்கு புதைகுழி உருவாகியது. அது அந்த மிருகத்தை உள்ளுக்குள் இழுத்தது. ரதன் அந்த மிருகம் அதன் உள்ளே செல்வதை பயத்தோடு பார்த்துக் கொண்டிருந்தான்.
அவன் முன் புதைகுழியாக இருக்க ரதன் என்ன செய்வதென்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்க அவன் அருகில் மரத்தின் வேர்கள் வேறு அவனை பிடிக்க முயன்றது . அதிலிருந்து தப்பிக்க ரதன் வேகமாக தொங்கிக் கொண்டிருந்த மரத்தின் விழுதுகளை பிடித்து தொங்கியபடியே மரம் மரமாக தாவி அந்த புதைகுழியை கடந்து அந்த பக்கம் சென்று நின்றான். புதைகுழியை கடந்தவன் சுற்றிப் பார்க்க ஒரு மரத்தில் இருந்து கதவு திறந்தது. அதன் உள்ளே செல்ல அவன் முற்பட அவன் முன் பல வீரர்கள் தோன்றினர். ரதன் வீரர்கள் சூழ்ந்து நிற்க அவன் முன் கத்தி போன்ற அமைப்பு தோன்றியது. வேகமாக அதை பிடித்தவன் அவர்களை கத்தி கொண்டு தாக்கியபடியே நிமிர்ந்து பார்க்க நிமிடம் 10 ஆகயிருந்தது. கத்தியை சுழற்றியவன் கதவு மூட ஆரம்பிக்கவும் வேகமாக அந்த வீரர்களின் மேல் ஏறி குதித்து அந்த கதவை அடைந்து அதில் புகுந்து கொண்டான் ரதன்.
அந்த கட்டத்தை தாண்டியதும் ரதன் முன் தோன்றினான். கோமாளி மனிதன்.
சபாஷ் மானிடா ! வெற்றிகரமாக 3 கட்டங்களை தாண்டிட்ட என்று கூறியபடியே அவன் கத்திக் கொண்டு தன் கைகளை வெட்டிக் கொண்டான்.
வெட்டிக் கொண்டவன் சற்று நேரத்தில் மறைந்துவிட ரதன் முன் தோன்றியது கதவு.
************
இங்கு பொழிழன் கண்களில் கண்ணீரோடு தன் நண்பனின் புகைப்படத்தை வைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.
என்னை காப்பாற்ற நீ ஏன்டா சாகணும் .என்று கூறியபடியே அந்த படத்தை குத்தியவன் வெறி பிடித்தவன் போல் பேசினான்.
உன் நிலைமைக்கு காரணமானவங்களை நான் சும்மா விடப்போவதில்லை நண்பா என்று கூறிய பொழில் ஒரு கண்ணாடி குடுவையை கையில் எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தான்..
திக் திக் தொடரும்
 
Top Bottom