Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

GN NOVEL தித்திப்பாய் ஓர் சாரல் - Tamil Novel

Status
Not open for further replies.

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
607
Reaction score
782
Points
93
வணக்கம் 🙏🙏🙏,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டியில் கலந்துகொள்ளும் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐💐.

போட்டியின் விதிமுறைகள், காலக்கெடு மற்றும் பரிசுகள் பற்றிய விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் விபரமாக குறிப்பிடப்பட்டுள்ளது. மீண்டும் ஒருமுறை அதை படித்துப் பார்த்துவிட்டு உங்களுக்கு முழு சம்மதம் என்றால், உங்களுடைய கதையை இந்த திரியில் தொடர்ந்து பதிவிடவும்.

உங்களுடைய கதை வாசகர்களை மகிழ்விக்கும் வகையில் அமையவும் போட்டியில் நீங்கள் வெற்றிபெறவும் வாழ்த்துகிறேன்.

மனமார்ந்த வாழ்த்துக்கள் 😍😍😍

நன்றி...
- நித்யா கார்த்திகன்

Last edited by a moderator:

Writer X

Well-known member
Vannangal Writer
Messages
463
Reaction score
616
Points
93
பகுதி - 1

மெல்ல மெல்ல சூரிய ஒளி கதிர்கள் பூமியில் படர்ந்து கதிரவன் வந்து விட்ட செய்தியை உலகிற்கு எடுத்துரைத்து கொண்டிருந்த காலை வேளை!! நான்கு திசையிலும் பச்சை தாவணி போர்த்திருந்த வயல்களுக்கு நடுவில் தன் வலிய கரத்தை தலைக்கு முற்று குடுத்தவாறு உறங்கி கொண்டிருந்த இளங்காளையின் துயில் கலையும் நேரத்தில் தென்றலான காற்றும் அவன் மேனியை தழுவி செல்ல, அதில் கண்ணை சுருக்கி நெற்றியில் காற்றுக்கு ஆடியவாறு இருந்த தன் கேசத்தை பின்னால் தள்ளியவாறு எழுந்தமர்ந்தான் நிலவன்..

கண்ணை மூடி திறந்தவன் எழுந்து நின்று தன் முறுக்கேறிய உடலை இடவலமாக வளைத்து மேனியில் மிச்சமிருந்த சோம்பலை விரட்டி அடித்தவன் தலையணைக்கருகில் இருந்த பட்டன் போனில் மணியை பார்த்து விட்டு, அருகில் இருந்த தொட்டியில் முகத்தை அலம்பி விட்டு தோளில் கிடந்த துண்டை எடுத்து முகத்தை அழுத்த துடைத்தான்..

"இசை புள்ள வர்றதுக்குள்ள நம்மளே வூட்டுக்கு போய்ரனும்" என்று மனதில் நினைத்தவாறு கயிற்று கட்டிலை தூக்கி கூரையால் வேயப்பட்டிருந்த வீட்டினுள் போட்டு விட்டு சட்டையை மாட்டியவாறு வெளியில் வந்தான்..

பச்சை பசலென இடுப்பளவிற்கு வளர்ந்திருந்த நெற்கதிர்கள் தென்றலான காற்றில் அசைந்தாடும் அழகை அள்ளி பருகியவாறு வயலை விட்டு வெளியில் வந்தவன் மரத்தடியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வண்டியை எடுத்தான்..

அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் வீட்டின் முன்பு புல்லட்டை நிறுத்தியவன் வேட்டியை தொடைவரை ஏற்றி கட்டி கொண்டு நெல்மூட்டைகளை வண்டியில் ஏற்றி கொண்டிருந்த வேலையாட்களிடம் விபரத்தை கேட்டு விட்டு உள்ளே சென்றான்..

அந்த வீட்டின் இரண்டு வாண்டுகளும் ஆளுக்கொரு தூணில் சாய்ந்து மும்மரமாக பாடப்புத்தகத்தில் தலையை புதைத்திருப்பதை முகத்தை சுருக்கி பார்த்த நிலவன், பின்பு இதுக்கு காரணம் யாரென்று தெரிந்ததும் இதழில் மலர்ந்த புன்னகையை வெளியில் காட்டி கொள்ளாமல், "ஏலே கவினு" என்றழைத்தான்..

பாடப்புத்தகத்தை முகத்தில் மறைத்தவாறு தூங்கி வழிந்திருந்த கவின் இவனின் அழைப்பில் பதறி, "சொல்லுங்க சித்தப்பா" என்று எழுந்து நின்றான்.. தன் அண்ணன் மகனின் முன்பு மண்டியிட்டு, "இது ஆரோட ஐடியா??" என்று கேட்க, கவினோ திருதிருவென கண்ணாமுழியை அங்குமிங்கும் உருட்டி கொண்டு தன் சித்தப்பாவை பாவமாக பார்க்க, நிலவனோ கவினின் கன்னத்தில் தட்டி "ஒங்களைய நானு எப்போ இன்னேரத்துக்கு படிக்க சொன்னேன்.. சாயந்திரம் வூட்டுக்கு வந்ததும் படிச்சுட்டு பொறவு தான் வெளையாட சொன்னேன்.. இம்புட்டு நேரமே எழுந்து படிக்க சொல்லல.. கண்ணை கசக்கிட்டு இருக்கறதுக்கு போய் தூங்குங்க போங்க.." என்றான் மென்புன்னகையுடன்..

இவ்வளவு நேரம் பயத்தில் விழிந்திருந்த இரண்டு வாண்டுகளும் ஆளுக்கொரு முத்தத்தை தன் சித்தப்பாவின் கன்னத்தில் பதித்து விட்டு அறைக்குள் ஓடிட, மெலிதாக முறுவலித்த இவன் மற்றவர்கள் எங்குவென்று வீட்டினுள் கண்களை சுழல விட்டான்..

யாரையும் காணாமல் "மதினி மதினி" என்று உள்நோக்கி குரல் குடுக்க, அடுக்களைக்குள் அனைவரும் காபி கலந்திருந்த நந்தினி வெளியில் எட்டி பார்த்து, "இருங்க வர்றேன் நிலவன்" என்றாள் கொஞ்சம் குரலை உயர்த்தி..

நிலவனும் தாத்தா அமரும் சாய்வு நாற்காலியில் அமர்ந்து இன்றைய வேலையை கணக்கிட்டு கொண்டிருக்க, அவனின் முன்பு சுடசுட காபியை நந்தினி நீட்ட, சிறுபுன்னகையுடன் வாங்கி கொண்டவன், "என்ன மதினி ஆரும் வூட்டுல காணோம்??" என்றிட, "நம்ம குமரேசன் மாமாவோட புள்ள பெரியவளாகிட்டானு விடியற்காலைல அஞ்சு மணிக்கே போன் வந்துச்சு.. அப்பவே அத்தையும் கமலம் அம்மாவும் கிளம்பி அங்க போய்ட்டாங்க.. மத்தவங்க இன்னும் எந்திரிக்கலனு நினைக்கறேன்.." என்ற மதினிடம் தலையசைப்பை குடுத்தவன், "கெழவியை காணோம்.." என்றான் யோசனையுடன்..

"அவங்க போறப்பவே அவங்களும் எந்திரிச்சுட்டாங்க.. மாட்டு கொட்டகைக்கு போறேனு சொல்லிட்டு போனாங்க.. நானும் காபி போட்டுட்டு அப்பறம் கூப்பிட்டுக்கலாம்னு விட்டுட்டேன்.." என்று நந்தினி கூறியதும், "நா போய் பாக்கறேன்.." என்று வெளியில் சென்றான்..

அங்கு ராமாயி கிழவி ஆட்களை வேலை வாங்கி கொண்டிருக்க, "ஏ கெழவி ஒன்னைய தான் இங்கன வர வேணாம்னு சொன்னனே??" என்று கர்ஜனையாக குரல் வந்ததும் திரும்பிய கிழவி தன் பேரனை பார்த்து, "ஏ ராசா நா என்ன சீக்கு வந்தா கிடக்கறேன் அப்டி இப்டினு வூட்டுல வேல பாத்தா தானே எனக்கு பொழுது போவும்.." என்றார் பதிலாக..

"நெதமும் ஒங்கிட்ட எம்புட்டு தடவ சொல்றே சாப்புட்டு சும்மா கிடனு.. மொதல்ல வூட்டுக்குள்ள போலாம் வா.." என்று வம்படியாக கிழவியை அழைத்து கொண்டு சென்று அமர வைத்து நந்தினியின் கையில் இருந்த காபியை வாங்கி அவரிடம் குடுத்து விட்டு அறைக்கு சென்றான்..

இவன் குளித்து விட்டு தலையை துவட்டியவாறு வெளியில் வர, சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்த தாத்தா தன் பேரனை புன்னகையுடன் பார்த்து, "ஏன்யா காபி தண்ணி குடிச்சுப்புட்டியா?? வெள்ளானைல வந்துப்புட்டயே?? அங்கன வுறக்கம் வரலயா?? நாதான் அங்கன போவ வேணாம்னு சொன்னனே??" என்றார் கண்டிப்பு கலந்த பாசத்தில்..

இதற்கு புன்னகையை மட்டும் பதிலாக தந்த நிலவன் அங்கிருந்த நோட்டை எடுத்து கணக்குவழக்குகளை பார்க்க தொடங்கினான்..

இவன் கணக்கை பார்க்கட்டும்! அதுக்குள்ள நம்ம இவனோட வீட்டை பார்த்துட்டு வந்தரலாம்!!
சாமிநாதன் - ராமாயி தம்பதியருக்கு மூன்று பிள்ளைகள்.. முதலில் கமலம்.. இவரை அவ்வூரில் இருக்கும் மருதுவிற்கு திருமணம் செய்து குடுத்தார்.. திருமணமாகி பத்து வருடம் குழந்தை இல்லாமல் அதன்பிறகே கமலம் உண்டாகி ஆறுமாதம் கடந்த நிலையில் விபத்து ஒன்றின் மூலம் மருது அவ்விடத்திலே மாண்டு விட, தன் மகளை புகுந்த வீட்டில் விட விருப்பமில்லாமல் தங்கள் வீட்டிற்கே அழைத்து வந்து விட்டார் தாத்தா.. கமலத்திற்கு ஒரே பெண் யாழிசை.. அந்த வீட்டின் செல்ல இளவரசி..

இரண்டாவது சிவநேசன்.. அவரின் மனைவி ராசாத்தி.. இவர்களுக்கு மூன்றும் மகன்கள்.. பெரியவன் தியாகு.. இரண்டாவது நிலவன்.. மூன்றாவது வெற்றி.. தியாகுவின் மனைவி தான் நந்தினி..இவர்களுக்கும் இரண்டு பிள்ளைகள்.. பெரியவன் கவின்.. இளையவள் அகிரா..

யாரிடமும் அடங்காத கட்டிளங்காளை தான் நிலவன்.. இவனையும் ஒருத்தி அடக்கி ஆளும் காலம் மிக விரைவில்!!

மும்மரமாக கணக்கை பார்த்து கொண்டிருந்தவனின் கவனம் தடைப்பட்டது கொலுசோசையின் சத்தத்தில்.. மெதுவாக நிமிர்ந்த நிலவன் மாடியை பார்க்க, தாவணியை இடுப்பில் சொருகி கொண்டு கவினை துரத்தியவாறு புள்ளிமானை போல் துள்ளி ஓடிவந்த இசையை பார்த்தும் எப்போதும் இறுக்கத்தை தத்தெடுத்திருந்த இவனின் இதழில் புன்னகை மலர்ந்தது..

நிலவனை பார்த்ததும் கருவிழிகளை அங்குமிங்கும் உருட்டி கொண்டே, "ஏ மாமா இங்கன வந்தே?? நா வயலுக்கு வரலாம்னு கிளம்பிட்டேன் தெரியுமா??" என்று உம்மென்று சொன்ன இசையை முறைத்தவன் "வாய் கொழுப்பு அதிகமாகிருச்சு.. ஒருநாளு இல்ல ஒருநாளு தோலை வுருச்சு தொங்க விட்டதான் நீ சரிப்பட்டு வருவ.." என்று அவளை மிரட்ட, "ஏன்யா புள்ளய அதட்டறே??" என்று இசைக்கு பரிந்து கொண்டு வந்தார் தாத்தாவும்..

எதிர்வினை தராமல் நின்றிருந்த நிலவனின் போன் அடிக்க, எடுத்து பேசியவன் மறுமுனையில் சொன்னதை கேட்டு "நீயு அங்கயே இருடா நா பொறவு வாறேன்.." என்றான் சிறுபதட்டத்துடன்..

கீழே வந்த தியாகுவை பார்த்ததும், "ஒன்னைய நேத்தே மொளகா கணக்கை பாக்க சொல்லிருந்தேனல்ல??" என்று துண்டை தோளில் போட்டு கொண்டு நிலவன் கேட்க, "நெல்லுமூட்டையை குடோன்ல போடறதுலயே நேரம் போய்ருச்சுடா அதான் மறந்துட்டேன்.. இன்னைக்கு பாத்தறேன்.." என்றவாறு தியாகு சாப்பிட அமர, மற்றவர்களும் அமர்ந்தனர்..

"ஏ மாமா சும்மா ஏதாவது பெரிய மாமாவை சொல்லிட்டே இருக்கே??" - இசை

"என்னத்தடி நா சொன்னேன்.." - நிலவன்

"ஙேஙே எப்ப பார்த்தாலும் மொளகா கணக்கை பாரு நெல்லு மூட்டையை சரி பாருனு தான்.. அவரு என்ன உன்னைய மாதிரி தனியாளா? அவருக்கு மனைவி புள்ளக எல்லாம் இருக்காங்க??" - இசை

"நா எப்ப இல்லனு சொன்னேன்.." - நிலவன்

"பொறவு எதுக்கு எப்ப பார்த்தாலும் வேலை வேலைனு சொல்லிட்டு இருக்கே??" - இசை

"இருக்கற வேலய சொல்லி தானேடி ஆவனும்.. ரொம்ப பேசுன கன்னம் பழுத்துரும்.. கொட்டிக்கிட்டு கிளம்பற வழியை பாருடி.." என்ற நிலவன் எழுந்து கை கழுவ சென்றான்..

"ஏன்டி அவங்கள ஏதாவது சொல்லலனா உனக்கு தூக்கம் வராதா?? நிலவன் என்ன இங்க இருக்கற மலையை தூக்கி அங்க வெக்க சொன்ன மாதிரி பேசிட்டு இருக்கே?? பாக்கற ஒன்னு ரெண்டு வேலைய ஒழுங்க பாத்தா தான் என்னவாமா உன் பெரிய மாமனுக்கு?" என்று நந்தினியும் தியாகுவை குற்றம் சாட்ட, தட்டில் இருந்த தக்காளி சட்னியை ருசி பார்த்தவாறு "அதானே ஒரு வேலைய உருப்படியா செய்ய மாட்டியா மாமா நீயு??" என்று இசையும் தியாகுவை முறைத்து விட்டு செல்ல, "அடிப்பாவி அப்படியே திருப்பி பேசறா பாரு" என்று வாயில் கை வைத்தவாறு நின்றாள் நந்தினி..

இவர்களின் பேச்சுக்கு காரணமான தியாகுவோ சாப்பிடுவதே தன் தலையாய கடமை என்றவாறு மும்முரமாக உணவருந்தி கொண்டிருக்க, "இசை மட்டுமில்ல நம்ம வூடு இம்புட்டு கலகலனு இருக்காது? வெரசா நிலவனுக்கும் இசைக்கும் கண்ணாலம் பண்ண தேதியை குறிக்கனும்! இன்னும் எம்புட்டு நாளுக்கு கண்ணாலத்தை தள்ளி போடறது?" என்று தாத்தா கூறியதும் இதை ஆமோதித்த தியாகுவும், "நானும் ரொம்ப நாளா இதைய நினைச்சிட்டு தான் இருந்தேன் தாத்தா.. நிலவனுக்கு பொறவு வெற்றியும் இருக்கான்.." என்றான்..

இசை பிறந்தபோதே அவள் நிலவனுக்கு தான் என்று பெரியவர்கள் முடிவு செய்திருந்தனர்.. இசையும் தன் மாமனின் மேல் உயிரையே வைத்திருக்க, நிலவனின் மனதில் என்ன இருக்கின்றது என்பதை அவன் மட்டுமே அறிவான்..

சட்டை கையினை மடித்து விட்டவாறு வெளியில் வந்த நிலவன், "தாத்தா டவுனு வரைக்கும் போய்ட்டு வாறேன்.." என்று விட்டு சென்றவனின் முன்பு வந்த இசை, "நானும் உங்க கூடயே வர்றேன்.. என்னைய விட்டுட்டு அப்பறம் போங்க மாமா.." என்றவளை ஏகத்துக்கும் முறைத்த நிலவன், "ஒனக்கு இன்னும் நேரமிருக்குல? பொறவு உன் பெரிய மாமனை கொண்டு போய் விட சொல்லு.." என்று கூறியவன் புல்லட்டை எடுத்தான்..

மீண்டும் அவனின் முன்பு வந்த இசை, "ப்ளீஸ் ப்ளீஸ் மாமா.. நானும் உங்ககூட வர்றேன்.." என்று பாவமாக முகத்தை வைத்து கொண்டு கேட்க, அவனோ "முடியாதுடி" என்றான் மறுப்பாக..
கடுப்பான இசை,

"ரொம்பதான் பண்ற மாமா.. நான் என்ன உன்னைய கடிச்சா சாப்பட போறேன்.. நீயே கூப்பிடற வரைக்கும் நான் உன்கூட பேச மாட்டேன்.. உங்களைய கல்யாணமும் பண்ணிக்க மாட்டேன்..போங்க.." என்று முகத்தை திருப்பி கொண்டு செல்ல, இவனும் "சரிதான் போடி.. ஆளையும் ஒசரத்தையும் பாரு இதுல சவால் வேற.." என்று முணுமுணுத்தவன் கமுக்கமாய் சிரித்தவாறு கிளம்பினான்..

தித்திக்கும்..
 
Last edited:

சாய் லஷ்மி

New member
Vannangal Writer
Messages
13
Reaction score
15
Points
3

இயற்கையை பற்றிய வர்ணனை அழகு...
 
Writer X

Well-known member
Vannangal Writer
Messages
463
Reaction score
616
Points
93
பகுதி - 2

கோவத்துடன் உள்ளே சென்ற இசை மெதுவாக வெளியில் எட்டி பார்க்க, இதை கண்ணாடி வழியே பார்த்த நிலவனின் இதழ் கடையோரத்தில் குறுநகை.. கண்ணாடியை பார்த்தவாறே உதட்டுக்குள் சிரிப்பை அடக்கி, "கேடிடி நீ!" என்று நினைத்த நிலவனின் மனதில் மெல்லிய சாரல் துளிகள்..

நிலவன் சென்ற திசையை பார்த்து இசையும் "சோ ஸ்வீட்டு மாமா நீங்க" என்று நீளமாக வளர்ந்திருந்த கருங்கூந்தலை முன்னால் போட்டு ஜடையை ஆட்டியவாறு உள்ளே வந்தாள்..

இன்னும் உணவருந்தி கொண்டிருந்த தியாகுவிடம், "மாமா சீக்கிரம் சீக்கிரம் கிளம்புங்க.." என்று இசை அவசரப்படுத்த, அவனோ "ஏன் நீ உன் மாமன் கூட போகலயா???" என்றான் சாவகாசமாக..

உதட்டை பிதுக்கிய இசை, "மாமா தான் பெரிய மாமா கூட போக சொன்னாங்க.. என்னனு தெரில.." என்றிட, "அப்ப பெரிய மாமா கூடயே கெளம்பு.." என்றான் தியாகுவும்..

"அவங்க கூட போறதுக்குக்கு நான் நடந்து போன கூட சீக்கிரம் போய்ருவேன்.." என்று முறைத்திருந்த இசையின் கூற்றை கேட்டபடி வந்த சிவநேசன், "என்ன மருமவளே!! என்னைய பத்தி பெருமையா பேசற மாதிரி தெரியுது.." என்று கேட்க, இசையும் "ஆமா ஆமா மாமா உங்களைய பத்தி ரொம்பஆஆஆஆ பெருமையா சொல்லிட்டு இருக்கேன்.. இன்னும் கூட சாயந்திரம் வந்து சொல்றேன் அதுக்கு முன்னாடி என்னைய கொண்டு போய் விட சொல்லுங்க உங்க பெரிய மகனை!!" என்றாள் சலிப்புடன்..

யோசனையுடன் "ஏன்டா நிலவன் எங்கே??" என்று சிவநேசன் கேட்டதும், "மாமா டவுனுக்கு கிளம்பிட்டாங்க.. அவங்ககிட்ட என்னைய விட்டுட்டு அப்பறம் போங்கனு சொன்னா நீ பெரிய மாமன்கூட போய்க்கனு சொல்லிட்டு அவங்க அப்பவே கிளம்பிட்டாங்க.." என்று இசையும் பதிலளித்தாள்..

இவர்கள் பேசுவதை கேட்டவாறு தலைக்கு கையை முற்றுகுடுத்து அமர்ந்திருந்த தியாகுவை ஏகத்துக்கும் முறைத்த இசை, "வெற்றி மட்டும் இருந்திருந்தா இப்ப உங்க கிட்ட கெஞ்சிட்டு இருப்பனா?? எல்லாம் என் நேரம்.." என்று புலம்பியவளை பார்த்து அனைவரும் நகைக்க, தாத்தாவோ "சரி வுடு கண்ணு அவன் பொழுது சாயரத்துக்குள்ளார வந்துருவேனு சொன்னான்.. பாத்து சூதனமா போய்ட்டு வா.." என்றார் சமாதானமாக..

"மருமவளே! நான் வேணா வரட்டுமா??" என்று சிவநேசன் கேட்டதற்கு, இதற்கு பதறிய இசை "அய்யோ மாமா நீங்க போற வேகத்தை விட ஆமையே கொஞ்சம் வேகமாக போய்ரும்.. எதுக்கு வம்பு நான் தியாகு மாமா கூடயே கிளம்பறேன்" என்றவள் அனைவரிடமும் கூறி விட்டு சென்றாள்..

செல்லும் இசையை பார்த்தவாறு சிவநேசன், "இசையை பாக்க மருதுவுக்கு தான் குடுத்து வெக்கல போல ப்பா.." என்று வருத்தமாக கூற, இந்த வருத்தம் தாத்தாவுக்கும் இருக்கதான் செய்தது.. இருந்தும் வெளியில் காட்டி கொள்ளாமல் "வுடு சிவா நடக்கறது தானே நடக்கும் சாப்புட்டு போய் பொழைப்பை பாரு.." என்று அதற்கு மேல் உணவருந்த முடியாமல் எழுந்து சென்று விட்டார் தாத்தா..

"ஏன் மாமா தாத்தா தான் இதைய நினைச்சு ரொம்ப வருத்தபடறாங்கனு தெரியுமல்ல?? இனி அவரு இதைய நினைச்சே உடம்பை வருத்திக்குவாரு.." என்று நந்தினி தன் மாமனாரை இன்னொரு மகளாக அதட்ட, எதுவும் பேசாமல் அமர்ந்தவர், "முடிலமா இசையை பாத்தாலே இப்டிதான் தோணுது.. இசையை பாக்க மருதுதான் ரொம்ப ஆர்வமா இருந்தான்.. ஆனா புள்ளயை பாக்கறதுக்கு முன்னாலே போய்ட்டான்.. அவனுக்கு அப்டி என்ன அவசோமோ???" என்று கேட்டவரின் குரலில் அப்பாட்டமாக வலி தெரிந்தது..

"விடுங்க மாமா முடிஞ்சதை பத்தி பேசி பேசியே வருத்திக்க வேணாம்.." என்று ஆறுதல்படுத்திய நந்தினி உணவை பரிமாற தொடங்க, ஏனோ சிவநேசனால் தான் உண்ண முடியாமல் போனது.. பேருக்கு சாப்பிட்டு விட்டு எழுந்து சென்றவரை நினைத்து நந்தினிக்கும் வருத்தம் மேலோங்க, "எப்பவோ நடந்ததை இன்னும் மறக்காம இப்டி பண்ணிட்டு இருக்காங்க.. ம்ம்ம்ம் இனி கடவுள் விட்ட வழி தான்" என்று பெரூமூச்சுடன் தன் குழந்தைகளை தேடி சென்றாள்..

ஊரின் எல்லையில் இருந்த மருத்துவமனையின் முன்னே தியாகு வண்டியை நிறுத்த, இறங்கிய இசை "தேங்க்ஸ் மாமா" என்றிட, "வெல்கம் மருத்துவரே.." என்று சிறிது குனிந்து கிண்டலுடன் கூறிய தியாகுவை செல்லமாக முறைத்தாள்..

தாத்தாவின் விருப்பத்துக்கு இணங்கதான் இசை மருத்துவம் படித்தது.. இருபது வருடங்களுக்கு முன்னால் யாராவதற்கு ஏதாவது என்றால் கூட முப்பது கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் டவுன் ஹாஸ்பிட்டலுக்கு தான் அழைத்து செல்ல வேண்டும்..

இங்கு பிரசவம் பார்க்க கூட மருத்துவச்சிகள் இருப்பதால் அதுவே போதுமானதாக இருந்தது.. எட்டாவது மாத இறுதியில் கர்ப்பமாக இருந்த பெண் ஒருவரை மாடு முட்டியதால் பதறி அடித்து கொண்டு டவுனில் இருக்கும் ஹாஸ்பிட்டலுக்கு அழைத்து செல்ல முயல, பாதி தூரம் சென்ற நிலையிலே அந்த பெண் இறந்து விட்டார்..

அப்போதுதான் தங்கள் ஊரிலும் மருத்துவமனை இருந்திருந்தால் இருவரையும் காப்பாற்றியிருக்கலாம் என்ற எண்ணம் தாத்தாவிற்கு வந்தது.. அதன்பின் பல போராட்டங்களுக்கு பின்பு தான் அங்கு மருத்துவமனையே எழுந்தது.. தங்கள் வீட்டிலும் யாராவது மருத்துவராக வேண்டும் என்ற தாத்தாவின் ஆசையை நிறைவேற்றியது இசை மட்டுமே.. அதனால் தான் என்னவோ தாத்தாவிற்கு இசை என்றால் கொள்ளைபிரியம்..

மற்ற மூவரில் வெற்றி மட்டுமே கல்லூரி படிப்பை நிறைவு செய்ய, தியாகுவும் நிலவனும் பத்தாம் வகுப்புடன் நின்று விட்டனர்.. சிவநேசன் கேட்டதற்கு படிக்க விருப்பமில்லை என்றிட, ஏதோ பேச வந்த சிவநேசனை தடுத்த தாத்தா அவர்கள் விருப்பத்திற்கு விட்டு விட்டனர்..

வீட்டில் மட்டுமே இசையின் குறும்புகள் அதிகம்.. மருத்துமனைக்கு வந்து விட்டால் பொறுப்பான மருத்துவராக மாறி விடுவாள்.. அதே போல் இன்றும் காத்திருந்த நோயாளிகள் அனைவரையும் பார்த்து விட்டு "ஹப்பாடா" என்று சேரில் சாய்ந்த நேரம் நர்ஸ் ஒருவர் கதவை தட்டி, "மேடம் மறுபடியும் ஒரு பேசண்ட் வந்துருங்காங்க..வர சொல்லட்டுமா??" என்று கேட்க, "ம்ம்ம்ம் வர சொல்லுங்க" என்ற இசை நேராக அமர்ந்தாள்..

கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தவனை சிறுமுறைப்புடன் பார்த்த இசை, "ஹோ நீங்கதான் அந்த பேசண்ட்டா??? வாங்க வாங்க சார் என்ன உங்க உடம்புக்கு???" என்று கேட்க, அங்கிருந்த சேரில் அமர்ந்த அந்த இளைஞனோ, "அதுவா மேடம்.. பசிச்சா சாப்பிட முடில.. தூக்கம் வந்தாலும் படுத்தா தூங்க முடில.. அப்பறம் வீட்டை விட்டு வெளில வந்தாலே கண்ணு யாரையோ தேடுது.. இதுக்கு எல்லாம் மருந்து இல்லையா???" என்று குறும்புடன் கேட்டவனை எழுந்த வேகத்தில் அடிக்க பாய்ந்திருந்தாள் இசை..

"அடேய் தங்கச்சி கிட்ட பேசற பேச்சா இது??" என்று அவன் தலையில் வலிக்கும்படி நங்கென்று கொட்டிய இசை அவனுக்கு அருகில் சேரை இழுத்து போட்டு அமர்ந்து, "வீட்டுல எல்லாரும் எப்படி இருக்காங்க??" என்று வினவ, அவள் கொட்டிய இடத்தை கையால் தேய்த்தவாறு, "நீ டாக்டர் தானே எப்ப போலீஸானே?? இப்படி கொட்டறே??" என்று பாவமாக கேட்டான் மருதுவின் தம்பி மகனான இனியன்..

"ம்ம்ம்க்கும் நான் கேட்டதை தவிர மத்த எல்லாத்துக்கும் பதில் சொல்றே??" - இசை

"அவங்களுக்கு என்னடா செமையா இருக்காங்க.. ஆத்தா தான் உன்னைய பாக்கனும்னு சொல்லிட்டே இருந்துச்சு.. ஒருநாள் அங்க வந்துட்டு போன என்ன குறைஞ்சா போவீங்க??" - இனியன்

"ப்ச் இங்க வர்றது வீட்டுக்கு போறதுனே நேரம் ஓடி போகுது.. நானு வூட்டுல இருக்கறப்ப மாமா இருக்கறது இல்ல.. அவரு இருக்கறப்ப நான் இருக்கறது இல்ல.. இதுல எப்படி அங்க வர்றது??" - இசை

"ம்ம்ம்க்கும் வந்தா உன் மாமன் கூட தான் வருவீயா?? தனியா வந்தா யாரும் கடத்திர மாட்டாங்க.." - இனியன்

"இதைய என் மாமா முன்னாடி சொல்லிதான் பாரேன்.." - இசை

"எதுக்கு என் வாயு ஒருபக்கமா போறதுக்கா??? எப்ப பார்த்தாலும் சப்பு சப்புனு அறைஞ்சுட்டு??" - இனியன்

"ஹஹஹஹஹ வர்றேன் அண்ணா.. இந்த வாரம் கடைசில.. அம்மாவையும் கூட்டிட்டு வர்றேன்.." - இசை

"உன் மாமன் எப்படி இருக்கான்??" - இனியன்

"அவங்களுக்கு என்ன சூப்பரா தான் இருக்காங்க" - இசை

"அதானே அவன்கிட்ட இருந்து மத்தவங்களைய தானே காப்பாத்தனும்" - இனியன்

"அண்ணானு பாக்கறேன் இல்ல என் மாமாவை இப்படி ஏதாவது பேசிட்டு இருந்தே விஷ ஊசி ரெடியா இருக்கு எப்படி வசதி" - இசை

"ம்ம்ம்க்கும் வர வர அண்ணானு ஒரு மட்டு மரியாதை இல்ல உனக்கு" - இனியன்

"ஹலோ தம்பி உங்களுக்கு முன்னாடி பிறந்துருக்க வேண்டியது நானு.. சோ நீ எனக்கு தம்பி தான்.." - இசை

"அப்படி பிறந்திருந்தா உன் மாமனுக்கும் நீ அக்காடி எருமை.." என்று விட்டு விழுந்து புரண்டு இனியன் சிரிக்க, "அய்யோ இவன் வேற படுத்தறானே!!" என்று இசையால் கதறதான் முடிந்தது..

டவுனுக்கு செல்வதாக கூறி விட்டு சென்ற நிலவன் ஒரு வீட்டில் தலையை பிடித்தவாறு அமர்ந்திருக்க, அவனருகில் இருந்த அவனின் நண்பன் சேகர், "மாப்ள நீ கெளம்புடா.. நா பாத்துக்கறேன்.. ஒன்னைய காணாம தேடுவாக.." என்று இங்கிருந்தால் சரி வராது என்றெண்ணி அவனை அனுப்ப முயன்றான்..

பெருமூச்சுடன் எழுந்த நிலவன் அறைக்கதவை மெதுவாக திறந்து பார்க்க, அங்கு இளம்பெண் ஒருத்தி காலை குறுக்கியவாறு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்.. அவளை கண்டதும் நிலவனின் விழிகள் ஏமாற்றத்தை தத்தெடுக்க, தலையை இடவலமாக அசைத்து தன்னை சமன்படுத்தியவன் மெதுவாக கதவை சாத்தினான்.

"இங்கனவே இருடா.. ஏதாச்சு அவசரம்னா ஒடனே போன் போடு.. நா வாறேன்.." என்று நிலவன் சாவியை எடுத்து கொண்டு கிளம்ப, தலையை அசைத்த சேகர் சென்றவனை மீண்டும் அழைக்க, என்னவென்று திரும்பினான் நிலவன்..

"மாப்ள நா சொல்றேனு தப்பா எடுத்துக்காத.. இந்த விசயத்தை இசைகிட்ட சொல்றது தான் நல்லதுனு தோணுது.." - சேகர்

"வேணாம்டா சொன்னா அவ தாங்க மாட்டா.. நேரம் வர்றப்ப நானே அவகிட்ட சொல்லிக்கறேன்.." - நிலவன்

"எமக்கு இது தப்பா படுது மாப்ள.. எப்ப சொன்னாலும் இசை தாங்காது தான்.. அதுக்கு தான் இப்பவே சொல்ல சொல்றேன்.." - சேகர்

"நா பாத்துக்கறேன் இதைய.. நீ மனசை குழப்பிக்காத.." என்று விட்டு நகர்ந்த நிலவனின் மனதிலும் இசையை பற்றிய கவலை இருக்கதான் செய்தது..

வண்டியை எடுக்கும் சமயத்தில் நிலவனுக்கு போன் வர, மறுமுனையில் இருந்தது இவனின் தம்பி வெற்றி தான்.. புருவ முடிச்சுடன் என்னவென்று நிலவன் கேட்க, மறுமுனையில் வெற்றி கூறியதை கேட்டு, "நீ கெளம்பி வந்துரு.. நா தாத்தாகிட்ட பேசிக்கறேன்.." என்றான் சிறுயோசனையுடன்..

நிலவன் வீட்டிற்கு வந்த நேரத்தில் இனியனின் சத்தமும் இசையும் சத்தமும் வாசல் வரை கேட்க, "வந்துட்டான்டோய் எமக்கு வில்லன்.." என்று மனதினுள் நினைத்து விறைப்புடன் உள்ளே வர, இவனை பார்த்ததும், "வாங்க நிலவன் வாங்க வாங்க.. உங்களைய அன்புடன் வரவேற்பது டன் டன் டன் இனியனே.." என்று இருகை கூப்பி வரவேற்ற இனியனின் கையை சிரிப்புடன் நிலவன் அமுத்தி பிடிக்க, "ஆத்தி என்னோட விரலு.." என்று வேகமாக நிலவனிடம் இருந்து கையை உருவி கொண்டான்..

"என்ன மாமா என் அண்ணனை கொலை பண்ண பாக்கறே??" - இசை

"அய்யய்யோ அவனுக்கு தோணாதது எல்லாம் இதே யோசிச்சு குடுத்துரும் போல.." - இனியன்

"அவன் பாசமா கையை நீட்டுனான் நானும் கையை புடிச்சேன் இதுல எங்குட்டு கொலை பண்றது??" - நிலவன்

"அதுதான் அவனோட விரலை கொலை பண்ண பார்த்தீங்களா??" - இசை

"இவ ஒருத்தி.. எங்க அம்மாவும் அத்தையும்.. இம்புட்டு நேரமாவுது இன்னும் வரலயா??" - நிலவன்

"அவங்க அப்பவே வந்துட்டாங்க.. வந்துட்டு கோவிலுக்கு போறேனு போய்ருக்காங்க" - இசை

"இவுக வூட்டுல அடங்கறதே இல்ல.. சரி வா மச்சான் நம்ம அப்டியே பேசிபுட்டு வரலாம்.." என்று இனியனின் தோள் மீது கை போட்டு நிலவன் அழைத்து செல்ல, "நீ சாதாரணமா கூப்பிட்டவே வர போறேன் அதுக்கு எதுக்கு இப்டி என்னைய அமுக்கி குள்ளமாக்க பார்க்கறே??" என்ற இனியனின் வார்த்தைகள் மற்றவர்களின் செவியையும் தீண்டியது..

"அப்டிதான் மாமா அப்டிதான் இன்னும் அவனை அமுக்கி வர்றப்ப கோணி பைல போட்டு கட்டி தூக்கிட்டு வாங்க.." என்று கேலி கலந்த இசையின் வார்த்தையை கேட்டு நிலவன் சிரித்தபடி செல்ல, திரும்பிய இனியன் "எனக்கு மட்டும் எம்புட்டு பாசமான தங்கச்சி கிடைச்சுருக்கு.." என்று தலையில் அடித்து கொண்டான்..

கமலமும் ராசாத்தியும் கடவுளை தரிசித்து விட்டு கோவிலின் வெளியே போடப்பட்டிருந்த திட்டியில் அமர்ந்தனர்.. சுற்றிலும் வயல்வெளி இருப்பதால் சில்லிட்ட காற்று அவர்களை தழுவி சென்று ஒரு விதமான நிலையை அவர்களுக்கு அளிக்க, அதைய ரசித்தவாறு அமர்ந்திருந்த ராசாத்தி, "கமலம் வெரசா கண்ணாலத்தை வெச்சுப்புடலாம்னு சொன்னா ஆரும் கேட்கவே மாட்டிங்கறாக.. இன்னும் எம்புட்டு நாளுக்கு தான் தள்ளி போடறது.. நிலவனுக்கு பொறவு வெற்றியும் இருக்கானே?? என்றார் மனக்குமறல்களுடன்..

"அண்ணி அவுக கிட்ட சொல்லுவோம்.. எம்புட்டு நாளாக போவுது.. கண்ணாலத்துக்கு தேதி குறிஞ்சா மட்டும் போதும்.. இங்க கோவில்ல வெச்சு தாலியை கட்டி அழைச்சுட்டு போறது தானே.. இதுக்கு போய் இன்னும் பொலம்பிட்டே இருக்கீக??" என்று அவரை சமாதானபடுத்தும் பொருட்டு கூறியவரின் மனதில் இந்த கவலை இருக்கதான் செய்தது.. இருந்தும் மற்றவர்களிடம் பேச கமலத்திற்கு தைரியமில்லை..

"சரிதான் கெளம்புவோம்.." என்று இருவரும் எந்திரிக்க, மீண்டும் கோவிலினுள் புன்னகையுடன் காட்சியளித்த கடவுளை பார்த்து, "என் பொண்ணு வாழ்க்கை நல்லபடியா இருக்கனும் ஆத்தா.." என்று வேண்டிய கமலத்தினை பார்த்து விதி சிரிக்க, இனிதான் இசையின் வாழ்வில் புயல் வீச விதி காத்திருக்கிறதே???

தித்திக்கும்..
 
Last edited:

Writer X

Well-known member
Vannangal Writer
Messages
463
Reaction score
616
Points
93
பகுதி - 3

இனியனுடன் பொதுவான விசயங்களை பேசியவாறு நடந்திருந்த நிலவன் திடீரென்று, "தங்கச்சி எப்டி இருக்கு??" என்று மொட்டையாக கேட்க, "அகிலாக்கு என்ன தினமும் நல்லா தின்னுட்டு பெருத்து போய் தான் இருக்கா.." என்று எப்போதும் போல் வாய்துடுக்குடன் கூறிய இனியனை அடிக்க ஏதாவது கிடைக்கின்றதா?? என்று சுற்றி சுற்றி தேடினான் நிலவன்..

பதறிய இனியன், "டேய் டேய் இருடா.. என்னைய நம்பி ஒரு பொண்ணு இருக்கு" என்றிட, அவனை முறைத்தவாறு நிலவனும், "நானும் அந்த தங்கச்சியை தான் கேட்டேன்.." என்றதும், பல்லை காட்டி சமாளித்தவன் "நல்லா தான் இருக்கா.. ஆனா என்ன அவங்க வீட்டுல தான் மாப்ளை பார்க்கறேனு டார்சல் பண்றாங்களாமா?? தினமும் ஒரே புலம்பல்.." என்றான் அலுத்தவாறு..

"உம்மையும் ஒருத்தி காதலிக்கறா பாரு அதைய தான் என்னால இன்னும் நம்ப முடில.. வெரசா அவுக வூட்டுல பேச உமக்கு என்னடா??" - நிலவன்

"ப்ச் நிலவன் புரியாம பேசாத.. அகிலாவை வெச்சுக்கிட்டு நான் எப்படிடா கல்யாணம் பண்ண முடியும்" - இனியன்

"இதைய காதலிக்கறதுக்கு முன்னாலே யோசிச்சுருக்கனும்.. எம்புட்டு நாளுதான் அந்த புள்ள சமாளிக்கும்.." - நிலவன்

"அகிலாக்கு இன்னும் ஆறு மாசத்துல காலேஜ் முடியுது.. அதுக்குள்ள மாப்ளை பார்க்கலாம்னு தான் அப்பாவும் சொல்லிருக்காங்க.. அவளுக்கு பார்த்துட்டா போதும் அடுத்த நாளே நான் அவங்க வீட்டுல பேசிருவேன்.." - இனியன்

"எனக்கு இது சரியா படலடா.. ஒன்னு அவுககிட்ட மொதல்லயே உங்க காதலை சொல்லி சம்மதம் வாங்கிருக்கனும்.. இல்ல அவுக வூட்டுல மாப்ளை பாக்கறேனு சொன்னதுமாவது போய் பேசிருக்கனும்.. ரெண்டையும் பண்ணாம அகிலா கல்யாணம் முடிஞ்சதும் பேசறீனு சொல்றே? பெத்தவூக அவுக பொண்ணை என்ன நினைப்பாக??" - நிலவன்

"எனக்கு வேற வழி தெரிலடா.. அவ அழுகறதை நினைச்சு என்னால சாப்படவும் முடில தூங்கவும் முடில.. அங்க இருந்தா பைத்தியம் பிடிச்சுரும்னு தான் இங்க வந்தேன்.. நீயும் குத்தம் குறை கண்டுபிடிச்சு கடுப்பேத்தாதே.." என்று இனியன் ஏகப்போக சலித்து கொள்ள, "சரி வுடுடா வா அப்டியே நடந்துட்டு வந்தா சரியா போவும்.." என்று பேசியவாறு நடந்தனர்..

இனியனும் நிலவனும் ஒரே வயதுதான்.. பள்ளியிலும் ஒன்றாக படித்தவர்கள்.. நிலவன் படிப்பை நிறுத்தினாலும் இனியன் கல்லூரி படிப்பு வரை முடித்து விட்டு விவசாயம் தான் செய்து கொண்டிருக்கிறான்.. கல்லூரியில் நண்பர்களாக பழகிய மகாவின் மேல் நாளடைவில் காதல் வயப்பட, அவர்களின் காதல் அழகாக தான் வளர்ந்திருந்தது..

இந்த ஒரு வருடமாக தான் மகா நச்சரித்து கொண்டிருக்கிறாள் வீட்டில் பேச சொல்லி.. இவன்தான் தங்கை இருப்பதால் இன்று வரை மறுத்து அவளுடன் போராடி கொண்டிருக்கிறான்.. இவர்களின் காதலையும் விதி பிரிக்குமா?? இல்ல சேர்க்குமா?? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..

வயல்வெளிகளை நோட்டமிட்டவாறு நடந்திருந்த இனியன், "ஆமா வெற்றி எங்க?? அவனை நா பாக்கவே இல்லையே??" என்று கேட்க, சிறிது நேரம் மௌனத்தை பதிலாக தந்த நிலவன், "சின்ன அத்தையை பாக்க போய்ருக்கான்.." என்றான் வயலில் விழிகளை பதித்தவாறு..

நிலவனின் பதிலில் இனியனுக்கு மயக்கம் வராதது தான் குறை.. "டேய் புரிஞ்சுதான் அவன் அங்க போய்ருக்கானா?? வீட்டுல தெரிஞ்சா என்னவாகறதுடா??" என்று பதறி போய் கேட்க, "ப்ச் எமக்கும் வேற வழி தெரிலடா.." என்று சோர்ந்து போய் கூறிய நிலவனின் வார்த்தையில் ஏதோ இருப்பதை உணர்ந்த இனியன் இதற்கு மேல் அவனை வற்புறுத்த வேணாம் என்று அமைதியாகி விட்டான்..

பொழுது சாயும் முன் வீட்டிற்கு வந்த வெற்றி நேராக தமையனை தேடி வர, அவனை கண்டதும், "இப்பதான் வந்தீயாடா? போய் குளிச்சுப்புட்டு சாப்புடு.." என்றிட, "அது இருக்கட்டும் அண்ணே.. சரோஜா அத்தையை பாக்க பாவமா இருந்துச்சு அண்ணே.. எமக்கு கூட அவுக கிட்ட போய் பேசலாம்னு இருந்துச்சு ஆனா ஏதோ ஒன்னு தடுக்குது அண்ணே.. நீயே வூட்டுல இதைய பத்தி தாத்தாகிட்ட பேசு அண்ணே.." என்றான் வருந்திய குரலில்..

"நானு பாத்துக்கறேன்டா.." என்று தமையனிடம் கூறியவனால் எப்படி தாத்தாவிடம் பேசுவது என்று எண்ணமே அவனை அலைக்கழிக்க, தாத்தாவை விட கமலம் அத்தை தான் இதை எப்படி எடுத்து கொள்வார் என்று நினைத்தபோது சிறுபதட்டம் அவனுள்ளும்..

வெற்றியை கண்டதும், "ஹே வெறி வெறி எப்ப வந்தே??" என்று சந்தோசத்தில் இசை அவனிடம் ஓடி வர, அவளை பார்த்ததும் இவ்வளவு நேரம் இருந்த கவலை அனைத்தும் காற்றாக மறந்து, "இப்பதான் பசை.. வந்ததும் உன் மாமனை சைட் அடிச்சுட்டு வர்றேன்.. தம்பி ஊருக்கு போய்ருக்கானே அவன் சாப்பிட்டானா இல்லையானு கொஞ்சம் கூட வருத்தமில்லாம இப்படி தின்னு தின்னு ஒரு சுத்து சுத்துருக்கான்.. இது எல்லாம் என்னனு கேட்க மாட்டியோ??" என்றான் குறும்பு கலந்த புன்னகையுடன்..

இடுப்பில் கை வைத்து அவனை முறைத்தவள் "அப்படியா?? அப்ப வா மாமாகிட்டயே கேட்போம்.." என்றழைக்க, "அய்யோ ஆத்தி அவன்கிட்ட அடி வாங்க எனக்கு தெம்பில்ல.. நான் ஓடிட்டேன்.." என்று நிற்காமல் சென்ற வெற்றியை பார்த்து புன்னகைத்தாள் இசை..

இசையை விட ஒரு வயது சிறியவன் தான் வெற்றி.. அவன் பிறந்த போது இசை ஒரு வயதில் இருக்க, அவனை அனைவரும் வெற்றி வெற்றி என்றழைப்பதை பார்த்து சிறிது பேச தொடங்கிய பின்பு இசையும் வெறி வெறி என்று அழைத்து கன்னங்குழி விழுக சிரித்தவாறு சிவநேசனின் பின்னால் வெக்கத்தில் மறைத்து கொள்வாள்..

வளர்ந்த பின்பும் வெற்றி இசையிடமே எந்நேரமும் வம்பிழுக்க, இசையும் அவனின் பெயரை வெறியாகவே மாற்றி விட, சிணுங்கிய வெற்றியும் இசையை பசையாக்கி விட்டான்.. இவர்கள் வளர வளர சண்டைகளும் குறும்புகளுமே சேர்ந்து வளர, சில நேரங்கள் இருவரின் சண்டைகளை தீர்த்து வைக்க நிலவன் வர வேண்டியதாக இருக்கும்.. எத்தனை சண்டைகள் இட்டாலும் இசைக்கு என்றுமே உற்றத்தோழன் வெற்றி தான்..

நந்தினியுடன் அமர்ந்து பேசி கொண்டிருந்த இனியனை பார்த்ததும் "மச்சான்" என்று ஓடி வந்த வெற்றி அவனின் மடியிலே அமர்ந்து அணைத்து கொள்ள, "அடேய் பைத்தியமே! எந்திரிடா.." என்று அவனை தள்ளி விட்ட இனியன் பின்னால் நகர்ந்து கொண்டான்..

"என்ன மச்சான் எம்புட்டு பாசமா உன்னைய கட்டிபிடிச்சா இப்படி தள்ளி விடறே??" - வெற்றி

"இதுக்கு பேரு பாயாசமா?? கொன்றுவேன்.." - இனியன்

"அண்ணே இவன் வேற என்னத்துக்கோ அடி போடறான் பார்த்துக்கங்க.." - நந்தினி

இதை கேட்டதும் திருதிருவென விழித்த வெற்றி "அப்படி எல்லாம் எதுவுமே இல்ல அண்ணி.." என்றான் சமாளிப்பாக..

"பொறவு என்னத்துக்கு கொழுந்தனாரே இப்படி ஆடு திருடுனவன் மாதிரி முழிக்கறீக??" - நந்தினி

"அதானே என்னத்துக்குடா அடி போடறே?? என்கிட்ட பத்து பைசா கூட இல்ல.." - இனியன்

"பத்து பைசா என்ன மச்சான் உமக்கு நானு பத்து லட்சம் கூட எழுதி தர்றேன்.." - வெற்றி

"சித்தப்பு மொதல்ல நா குடுத்த கணக்கை எழுதி குடுங்க.." என்று கவின் சொன்னதை கேட்டு மற்றவர்கள் பக்கென்று சிரிக்க, "அடேய் குள்ள கத்திரிக்கா ஒன்னைய இன்னும் குள்ளமாக்காம விட மாட்டேன்டா.." என்று அவனை பிடிக்க போக, கவினோ அவனுக்கு இடுப்பை ஆட்டி பலிப்பு காட்டி விட்டு பட்டாம்பூச்சியாக பறந்து ஓடினான்..

"ச்சை இந்த வூட்டுல ஒரு சின்ன புள்ள கூட நம்மளைய மதிக்க மாட்டிங்குது.. அம்புட்டும் வெசம் வெசம்.." என்று வறுத்தெடுத்த வெற்றி, "ஆமா மச்சான் வூட்டுல எல்லாரும் எப்படி இருக்காங்க.." என்று கேட்டதும், அவனை பார்த்த நந்தினி "இதைய எதுக்கு நீங்க கேட்கறீங்க.." என்றாள் சந்தேகத்துடன்..

"அண்ணி இது எல்லாம் டூமச்.." - வெற்றி

"நீ எதுக்குடா அவங்களைய கேட்கறே??" - இனியன்

"வூட்டுல இருக்கறவங்களைய கேட்காம பொறவு கொட்டகைல இருக்கற ஆடு, மாடைய கேட்க முடியும்.." - வெற்றி

"அதைய கேட்டா கூட காரணமிருக்கு.. வூட்டுல இருக்கறவங்களை என்ன காரணத்துக்கு கேட்கறீக??" - நந்தினி

"அய்யோ ராமா! உங்களைய எல்லாம் வெச்சுக்கிட்டு.. மாமா பையனாச்சேனு கேட்டா அதுக்கு இம்புட்டு கேள்வி கேட்கறீக? எல்லாம் என் நேரம்.." என்று கடுப்புடன் எழுந்த வெற்றியிடம், "அதுக்கு நீயு சாதாரணமா கேட்டுருக்கனும் கொழுந்தனாரே!! இத்தனை பெர்பாமன்ஸ் பண்ணனும்னு அவசியமில்ல.. பேசாம நேராவே அகிலா எப்டி இருக்கானு கேட்டுருக்கலாம்.." என்று நந்தினி கலாய்த்தவாறு சிரிக்க, "அய்யய்யோ கண்டு பிடிச்சுட்டாங்களே!!" என்று வெற்றி அகடு வழிந்து சிரிப்பை உதிர்த்தான்..

இதற்கு மேல் இங்கு நின்றால் தன் மானம் கப்பலேறி விடும் என்றுணர்ந்து "எமக்கு சலுப்பா இருக்கு தூங்க போறேன்.." என்றவன் அவர்கள் பதிலை எதிர்பாராமல் ஓடி விட, இருவரும் புன்னகைத்து கொண்டனர்..

இரவு உணவு முடிந்து அனைவரிடமும் பேசலாம் என்று நிலவன் காத்திருக்க, தாத்தாவும் சிவநேசனும் சரியில்லாததை பார்த்து அமைதியாக சென்று விட்டான்..

அன்று பௌர்ணமி நிலவு வானில் பிரகாசமாக மின்னி கொண்டிருக்க, திரைசீலையை விலக்கி அதனை ரசித்து கொண்டிருந்த இசையின் மனமோ நிலையில்லாமல் தவிர்த்தது.. ஒரு கையில் மருதுவின் புகைப்படமும் மறுகையில் நிலவனின் புகைப்படமும் இருக்க, இரண்டையும் மாறி மாறி பார்த்தவள் மீண்டும் நிலவை வெறிக்க தொடங்கினாள்..

"அப்பா ஏன்பா என்னைய விட்டு போனீங்க.. எனக்கும் உங்க கூட இருக்கனும்னு ஆசையா இருக்குபா.. எல்லாரும் அவங்க அப்பா கூட வர்றப்ப எனக்கும் அவ்ளோ ஆசையா இருக்கும்.. இவ்ளோ சீக்கிரம் எங்களைய விட்டுட்டு ஏன்பா போனீங்க.. இங்க எத்தனை பேரு இருந்தாலும் சில நேரம் மனசு உங்களைய தான் தேடுதுபா.. ரியலி மிஸ் யூ பா.. இப்ப எல்லாம் நிலவன் மாமாவும் என்னைய விட்டு விலகி போற மாதிரியே இருக்கு.. உங்க கூட வாழதான் எனக்கு குடுத்து வெக்கல.. நிலவன் மாமாவாவது என்கூடயே இருக்கனும்பா.." என்று மனதில் நினைத்தபோதே அவளின் விழிகளும் கண்ணீரை சிந்த, வெகுநேரம் கழித்தே உறக்கத்தை தழுவினாள் பெண்ணவள்..

காலையில் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்த தாத்தாவிடம் வந்த நிலவன், எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாமல், "தாத்தா" என்று தயக்கத்துடன் அழைக்க, அவரும் "சொல்லு ராசா" என்றார் புன்னகையுடன்..

"ஒங்ககிட்ட கொஞ்சம் பேசனும்.." என்று சொல்லும்போதே மற்றவர்களும் வர, அனைவரின் முன்பு சொல்வது தான் சரியென்று எண்ணி, மூச்சை இழுத்து விட்டு அனைவரையும் பார்த்தான்..

"நா சொல்றதை முழுசா கேட்டுப்புட்டு பொறவு பேசுங்க.. சரோஜா அத்தை.." என்று நிலவன் தொடங்கும் முன்னே, "அவளை பத்தி பேச வேணாம்யா அவளை எப்பவோ தலை முழுகிட்டோமே.." என்று பாட்டி தடுக்க, "ப்ச் கெழவி என்னைய பேச வுடு.." என்றான் சலிப்புடன்..

"அவளை பத்தி பேசறதுனா எதுவும் சொல்லவே வேணாம்யா.. போய் பொழைப்பை பாரு.." - சிவநேசன்

"அப்பா நீங்களுமா??" - நிலவன்

"ஆமாயா.. அவ வூட்டுக்காரனால தான் என்ற அக்கா வாழ வேண்டிய வயசுல வாழ்க்கையை தொலைச்சுட்டு இம்புட்டு வருசம் விதவையா நிக்கறாக.. வேணாம்யா அவுக சாவகாசமே!!" - சிவநேசன்

"அய்யா ராசா நீ என்னத்த சொன்னாலும் நாங்க கேட்கறோம்.. இது மட்டும் வேணாம்யா.." - தாத்தா

"தாத்தா என்னைய முழுசா பேச வுடுங்க.. பொறவு ஏ சொல்லலனு எமக்கு குற்றவுணர்ச்சி வர கூடாது.. அதுக்காகவாவது நா சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளுங்க.." - நிலவன்

"தாத்தா மாமா தான் இம்புட்டு சொல்றாங்கல்ல?? என்னனு கேட்போமே!!" என்று இசையின் வார்த்தைக்கு யாரும் மறுபேச்சு பேசாமல் அமைதியாக நின்றனர்..

"பக்கத்து ஊருல இருக்கற பரமு அத்தையை பாத்துருக்கான்.. அதுவும் ஆஸ்பத்திரில.. அத்தைக்கு ஒடம்பு சுகமில்லாம ஒரு வாரத்துக்கு மேல அங்கன தான் இருக்கறதா நர்ஸ் சொல்லிருக்காக.. என்னதான் அவுக நம்ம மேல கோவமா இருந்தாலும் பரமு என்கிட்ட நாலு நாளுக்கு முன்னாலே சொன்னான்.. அது நிசமா?? பொய்யானு தெரியாம பேச கூடாதுனு தான் வெற்றியை போய பாத்துட்டு வோ சொன்னேன்.." என்றதும் அனைவரின் பார்வையும் வெற்றியின் மேல் திரும்ப, "அய்யய்யோ இந்த முரட்டு பீஸூ நம்மளையும் போட்டு குடுத்துருச்சே!!" என்ற உள்ளுக்குள் நினைத்தவாறு தலையை குனிந்து கொண்டான்..

"பரமு சொன்னது அத்தைக்கு சுகமில்லனு தான்.. அங்கன போய் அவுகளைய பத்தி வெற்றி விசாரிச்சப்ப மாமா இறந்து ஆறெழு வருசமாகிருச்சுனும் பொட்டப்புள்ளயை வெச்சுக்கிட்டு தனியா இருக்கற பயத்துல அத்தைக்கு ப்ரஸ்ஸர் ஏறி மயங்கி விழுகறதுமா இருக்காக.. தனக்கு அப்பறம் தன் பொண்ணுக்கு யாருமில்லனு நினைச்சு நினைச்சு ஒடம்பை வருத்திக்கறாக.."

"நீங்க அத்தைக்காக பாக்க வேணாம் ஒங்க பேத்திக்காக பாருங்க.. அவுக பொண்ணுக்கு கண்ணாலம் பண்ற வரைக்கும் இங்கன இருக்கட்டும்.. அதுக்கு பொறவு எப்பவும் போல அவுக மெட்ராஸூக்கே போய்ரட்டும்.. எமக்கு கேட்டதுல இருந்து ராவுல தூக்கம் வர மாட்டிங்குது தாத்தா.. என்னதான் மாமா தப்பு பண்ணிருந்தாலும் அதுக்காக இவுகளைய தண்டிக்கறது தப்புனு தோணுது.." என்று நிலவன் பிரச்சனையை கூறி முடித்தும் யாரும் எதுவும் பேசாமல் நின்றிருந்தனர்..

அனைவரின் அமைதியையும் கலைத்த இசை, "தாத்தா நான் சொல்றேனு தப்பா நினைச்சுக்காதீங்க.. மாமா சொல்றது எனக்கும் சரினு தோணுது தாத்தா.. மாமா பண்ணுன தப்புக்கு அத்தையும் உங்க பேத்தியும் என்ன பண்ணுவாங்க.. அவங்களைய இங்கயே வர சொல்லுங்க.. அதுல எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்ல.. நாங்க அதைய அப்பவே மறந்துட்டோம்.." என்றவள் தன் அன்னையை அர்த்தமாக ஒரு பார்வை பார்த்தாள்..

"எப்பவோ நடந்து முடிச்சதை இன்னும் எம்புட்டு நாளுக்கு நெனைச்சுட்டு அவுகளைய தள்ளி வெக்கறது?? சரோஜாக்காக வேணாம் அவ மவளுக்காக இங்கனயே வர சொல்லுங்க அதுல எமக்கு சந்தோசம் தான்.." - கமலம்

"ஆமாபா நானு கூட இம்புட்டு நாளா அவுக நல்லாதான் இருக்காகனு நெனைச்சுப்புட்டு இருந்தேன்.. பொட்டபுள்ளயை வெச்சுக்கிட்டு நெருப்பை மடில கட்டிக்கிட்டு அழுகனுமே?? அவ மவளுக்கு கண்ணாலம் முடியற வரைக்கும் இங்கன இருக்கட்டும் அதுக்கு பொறவு வேற முடிவு எடுத்துக்கலாம்.." - சிவநேசன்

"அந்த பொசக்கெட்ட சிறுக்கி நம்மளைய மறந்துப்புட்டு இருக்காறப்புல நம்மளும் இனி இருக்க முடியுமா?? அவுளுக்கு பொறவு அவ மவளுக்கு ஆரும் வேணாமா?? அவுளுக்காக வர சொல்லல.. என்ற பேத்திக்காக வர சொல்றேன்.." - ராமாயி

"எமக்கும் இதுதான் சரினு தோணுதுங்க மாமா.. என்னதான் இருந்தாலும் சரோஜாவும் இந்த வூட்டு பொண்ணு தானே.." - ராசாத்தி

"ப்ளீஸ் தாத்தா சரினு சொல்லுங்க.. இப்ப வீம்பு பார்க்கற நேரமில்ல.. அவங்க அப்படி செஞ்சாங்கனு நம்மளும் அப்படி செய்யறது தான் தப்புனு நீங்க சொல்லி குடுத்துருக்கீங்க.. அந்த தப்பை நீங்களே செய்யலாமா?? முடிஞ்சதை பத்தியே நினைச்சு இனி நடக்க போறதை கெடுக்க வேணாமே.." என்று இசை அவரை வற்புறுத்த, எதுவும் பேசாமல் எழுந்த தாத்தாவும் அங்கிருந்த துண்டை எடுத்து தோளில் போட்டு விட்டு அனைவரையும் பார்த்தார்..

"ம்ம்ம்ம் வர சொல்லுங்க.." என்று மட்டும் கூறியவர் சென்று விட, இந்தளவுக்கு அவர் இறங்கி வந்ததே பெரிது என்று மற்ற அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்..

"அத்தை இதுல ஒங்களுக்கு எந்த சங்கடமும் இல்லயே.." என்று சிறு தயக்கத்துடன் நிலவன் வினவ, புன்னகைத்த கமலம், "அவ எமக்கும் தங்கச்சிதானு நா மறக்கல.." என்றார் சிறுதுளி நீருடன்..

இதை எதையும் கவனிக்காமல் இசை மட்டும் ஏதோ ஒரு யோசனையில் இருக்க, "இசை நீவு கெளம்பலயா??" என்று கேட்ட நிலவனின் குரலில் சட்டென்று நிகழ் காலத்திற்கு வந்தவள் "இன்னும் கொஞ்சம் நேரமிருக்கு மாமா" என்றிட, ஏனோ அவளிடம் எப்போதும் இருக்கும் துள்ளல் காணாமல் போயிருந்தது..

சிறிது நேரத்தில் கிளம்பி வந்த இசையிடம் "போலாமா??" என்று நிலவன் கேட்க, "இல்ல மாமா நான் இனியன் அண்ணா கூட போய்க்கறேன்.." என்றாள் மறுப்பாக..

"ஏ இசை என்ன ஆச்சு?? ஒடம்பு ஏதாவது சரியில்லயா??" - நிலவன்

"அது எல்லாம் எதுவுமில்ல மாமா.. அண்ணா தான் அங்க வர்றேனு நேத்தே சொன்னாங்க அதான்.. உங்களுக்கு வேலை இருக்குமல்ல?? நீங்க கிளம்புங்க.." - இசை

"எமக்கு என்ன வேலை கிடக்கு.. எப்பவும் ஒன்னைய நா தானே கொண்டு போய் வுடுவேன்.." - நிலவன்

"இன்னைக்கு தான் இனியன் அண்ணா இருக்காங்களே அதான்.." - இசை

"ஏ இசை நேத்து கூட்டிட்டு போக மாட்டேனு சொன்னதுக்கு கோவமா?? நா வெளையாட்டுக்கு தான் சொன்னேன்.. சரி நானே கூப்பிடறேன் வா போலாம்.." - நிலவன்

"அய்யோ மாமா அது எல்லாம் எதுவுமில்ல.. அதையை அப்பவே மறந்துட்டேன்.." - இசை

"பொறவு என்னதான்டி ஒன் பிரச்சனை??" - நிலவன்

"டேய் அவதான் என்கூட வர்றேனு சொல்றாளே போய் வேலைய பாரு.. நானும் என் தங்கச்சியை பத்ரமா தான் கூட்டிட்டு போவேன்.." என்ற இனியன், "வாடா போலாம்.." என்று இசையை அழைத்து கொண்டு செல்ல, நிலவனுக்கு குழப்பமாக இருந்தது இசைக்கு என்னவென்று புரியாமல்!!!

வண்டியை ஓரமாக நிறுத்திய இனியன் நேரடியாகவே, "இசை என்னடா ஆச்சு?? நீ காலைல இருந்தே சரியில்லனு எனக்கும் தெரியுது.. நிலவன் ஏதாவது சொன்னானா?? இல்ல வேற யாராவது ஏதாவது சொன்னாங்களா??" என்று கேட்டது தான் தாமதம் இவ்வளவு நேரம் கட்டுபடுத்தி வைத்திருந்த கண்ணீர் அவளையும் அறியாமல் வெளியில் வந்து விட, முகத்தை மூடி கொண்டு தேம்பி தேம்பி அழுக தொடங்கினாள் யாழிசை..

தித்திக்கும்..
 
Writer X

Well-known member
Vannangal Writer
Messages
463
Reaction score
616
Points
93
பகுதி - 4

இசையின் அழுகையில் பதறி போன இனியன் தான், "இசைமா ஏன்டா?? எதுக்கு இப்படி அழுகறே??" என்று ஆறுதலாக கேட்டவனின் வார்த்தையில் அழுகை சிறிது மட்டு பட்டதும் கண்ணை துடைத்து கொண்டாள்..

"அண்ணா என் மாமா என்னைய விட்டு போய்ருவாங்களா??" - இசை

"ஹே லூசு அப்டினு யாரு சொன்னா??" - இனியன்

"மாமா என்னைய விட்டு விலகற மாதிரியே இருக்கு அண்ணா.." - இசை

"அடேய் உன் மாமாவும் உன் பின்னாடி தானே சுத்தறான்.. இதுல எப்படி உன்னைய விட்டு போவான்.." - இனியன்

மறுத்த தலையசைத்த இசை, "இல்ல அண்ணா இப்ப எல்லாம் மாமா என்னைய கண்டுக்கறது இல்ல.. அப்பா கூட தான் இருக்க முடியாம போய்ருச்சு மாமா கூடயாவது நான் இருக்கனும் அண்ணா.. இல்ல நானும் அப்பா கிட்டயே போய்ருவேன்.." என்று தேம்பியவாறு கூறியவளை அதட்டி மிரட்டி சமாதானபடுத்தியவன் மருத்துவமனையில் விட்டு விட்டு நிலவனை தேடி சென்றான்..

தோட்டத்தில் இருந்த நிலவனிடம் சென்றவன் நேரடியாகவே, "மாப்ள உனக்கு இசையை புடிச்சுருக்கா??" என்று இனியன் கேட்டு விட, அவன் கேள்வியில் உள்ளுக்குள் திகைப்புற்ற நிலவன், "ஏன்டா அவளை புடிக்காம என்ன??" என்றான் பொதுவாக..

"உனக்கு இசையை கல்யாணம் பண்ற ஐடியா இல்லனா அவகிட்ட முன்னாடியே சொல்லிரு.. உன்மேல பிறந்ததுல இருந்து ஆசையை வளர்த்துட்டு இருக்கா.. கடைசில அவ காயப்பட்டு நிற்கறதை என்னால மட்டுமில்ல வேற யாராலயும் பாக்க முடியாது.. நீங்க என்னதான் உள்ளங்கைல வெச்சு தாங்குனாலும் அவங்க அப்பாவை நினைச்சு வருத்தப்பட்டுட்டு தான் இருக்கா.. இப்ப கூட அப்பா கூடதான் வாழ குடுத்து வெக்கல மாமா கூடயாவது வாழனும் இல்லனு நானும் அப்பா கிட்டயே போய்ருவேனு சொல்றா!.."

"என்னதான் அவ விளையாட்டு பிள்ளையா இருந்தாலும் உன்மேல உயிரை வெச்சு உன்கூட வாழ்றதுக்காக காத்துட்டு இருக்காடா.. உன் மனசுல என்ன இருக்குனு எனக்கு தெரில.. ஆனா ஒன்னு இசை மேல உனக்கு எந்த ஈர்ப்பும் இல்லனா அவ கிட்ட நேரடியாவே சொல்லிரு.. கண்டிப்பா அவங்க அம்மாக்காக இப்ப இருந்தே தன்னைய கொஞ்சம் கொஞ்சமா மாத்திக்குவா.. முடிவு உன் கையில் தான்.." என்று தான் பேச வேண்டியதை பேசிவிட்டு இனியன் அகன்று விட, நிலவனின் மனதில் பலவிதமான எண்ணங்கள் ஓடி மறைந்தது..

"என்ன பசை இருந்தும் வீடே அமைதியா இருக்கு.." என்று தீவிர யோசனையில் வெற்றி இசையை தேடி கொண்டு அவள் அறைக்கு சென்றான்..

"ஹோய் பசை பசை.." - வெற்றி

"வாடா என்ன இந்த பக்கம்.." - இசை

"என்ன அதிசயம் நீ அமைதியா இருக்கே.. ஏதாவது பேய் பிடிச்சுருச்சா??" - வெற்றி

"என் கூடயே ஒரு பேய் இருக்கறப்ப எப்படிடா வெறி இன்னொரு பேய் பிடிக்கும்.." - இசை

"யூ மீன்.. யூ கால்.. மீ திவில்.." - வெற்றி

"எஸ் அப்கோர்ஸ் மேன்!!" - இசை

"எனக்கு எம்புட்டு பெருமையா இருக்கு தெரியுமா?? என் வாழ்க்கைல எதையுமே நான் சாதிக்கலனு வருத்தப்பட்டேன்.. இப்பதான் நிம்மதியா இருக்கு" - வெற்றி

"இப்ப மட்டும் என்னத்த சாதிச்சு கிழிச்சே??" - இசை

"என் மாமா பொண்ணுகிட்ட பேய் நெருங்க விடாம தடுக்கறதே எம்புட்டு பெரிய வேலை தெரியுமா?? ஒரு பேய் இன்னொரு பேய் கிட்ட தான் நட்பு பாராட்ட வருமாமா?? நான்தான் உன்கிட்ட வர்ற பேயை எல்லாம் வர வேணாம்னு இரவுபகல் பாராம சொல்லி தடுத்துட்டு இருக்கேனாக்கும்.." என்ற வெற்றியை தலையணையை கொண்டு முடிந்த வரைக்கும் அடித்தவள், "மொக்கை காமெடி பண்ணி கழுத்தறுக்காம கிளம்புடா.." என்றாள் தலையில் அடித்து கொண்டு..

இசையின் முகத்தில் எப்போதும் குடியிருக்கும் புன்னகை காணாமல் போயிருந்ததை அறைக்குள் நுழைந்ததுமே வெற்றியும் கண்டு கொண்டான்.. அவளை சகஜமாக்கும் பொருட்டில் தான் வெற்றி வம்பிழுக்க, அப்போதும் அப்படியே இருந்தவளை புருவ முடிச்சு மேலேற நோக்கியவனின் மனதில் சட்டென்று ஒரு எண்ணம் எழுந்தது..

"அப்ப ஒரு குட் நியூஸ் சொல்லலாம்னு வந்தேன் சொல்ல வேணாமா?? சரி நான் போறேன்.." என்று வேண்டுமென்றே வெற்றி எந்திரிக்க, 'அதான் இவ்ளோ தூரம் வந்துட்டியே சொல்ல வந்ததை சொல்லிட்டு போறது.." என்று இசை இழுக்க, "இப்படி கேட்டா எல்லாம் சொல்ல முடியாது" என்றான் பிடிவாதமாக..

அவனின் கையை பிடித்து "இதைய காலா நினைச்சு கேட்கறேன் என்னனு சொல்லு தெய்வமே!" என்று இசை கெஞ்ச, சிறிது சமாதானமாகியவன் போன்று "இன்னைக்கு நைட் ஊரை சுத்த போலாம்னு தான் சொல்ல வந்தேன்.. போய்ட்டு வந்து ஒரு மாசத்துக்கு மேல ஆகுதுல்ல?? இன்னைக்கு போறோம் நாளைக்கு தோப்புக்கரணம் போடறோம்.." என்று பழக்க தோஷத்தில் கூறி விட, பத்ரகாளியாக மாறிய இசை அங்கிருந்த பூச்சாடியை எடுப்பதற்குள் வெற்றி வெளியில் ஓடி விட, இவளும் முகத்தை உம்மென்று வைத்தபடி அவனை தேடி சென்றாள்..

வெற்றியை கண்டதும் "இங்க வாடா" என்றழைக்க, அவனோ "முடியாது பசை" என்று மறுக்க, "அடிக்க எல்லாம் மாட்டேன் வா" என்றாள் சமாதானமாக..

"உண்மையா அடிக்க மாட்டியல்ல??" - வெற்றி

"அதைய அப்பறம் முடிவு பண்ணிக்கலாம்.. உண்மையா தான் சொல்றீயா??" - இசை

"நா போன வாரமே போலாம்னு தான் நினைச்சேன் அதுக்குள்ள உன் ஆளுதான் நாயை விரட்டற மாதிரி என்னைய மெட்ராஸுக்கு விரட்டி விட்டுருச்சே!!" - வெற்றி

"ம்ம்ம்க்கும் மாமாவை பத்தி ஏதாவது சொல்லலனா உனக்கு தூக்கமே வராதே.." - இசை

"உள்ளதை உள்ளபடி சொல்லிதான் எனக்கு பழக்கம்.. நா எல்லாம் அரிச்சந்திரனுக்கு பேரானாக்கும்.." - வெற்றி

"ஹோ அப்படியா?? அப்ப அகிலா நம்பரு நீ எதுக்கு வெச்சுருக்கே??" - இசை

இதை கேட்டதும் சமாளிப்பாய் பல்லை காட்டிய வெற்றி, "அடேய் ஒரு திருட்டுதனத்தை உருப்படியா பண்ணி விடுங்கடா.. எப்படிதான் இதுகளுக்கு தெரியுதோ??" என்று நொந்தான் மனதினுள்..

சிரிப்பை அடக்கியவாறு, "மிஸ்டர். அரிச்சந்திரன் பேரன் என்ன பதிலை காணோம்.." என்று இசை கேட்க, இதற்கு மேல் இவளிடம் பேசினால் அவ்வளவு தான் என்றுணர்ந்து, "அது யாரு பசை?? நானு மீசைக்காரர் சாமிநாதனோட பேரன் தான் தாயி ஆளை விடு.." என்று சரணடைந்து விட்டான் அவளிடமே..

இரவில் அனைவரும் உறங்கிய பின்பும் நான்கு விழிகள் மட்டும் சுழலும் மின்விசிறியை பார்த்தவாறு முழித்திருந்தது அது வேறு யாருமில்ல நம்ம இசையும் வெற்றியும் தான்..

"எல்லாரும் தூங்கிருப்பாங்க தானே.. கிளம்பலாமா??" - இசை

"இரு பசை உன் மாமன் அவ்ளோ சீக்கிரம் தூங்க மாட்டான்.. அவன் மட்டும் பார்த்தா அவ்ளோதான்.." - வெற்றி

"பார்த்தா தோப்புக்கரணம் போட சொல்லுவாங்கனு பயமோ??" - இசை

"இருக்காதா பின்னே?? உனக்கு என்ன எவ்ளோ தின்னும் உடம்பு ஒட்டாம கிடக்கு உக்காந்து உக்காந்து எந்திரிச்சரலாம் ஆனா நானு அப்படியா??" - வெற்றி

"இதுக்கு தான் சொல்றேன் அளவா தின்னுனு கேட்டா தானே??" - இசை

'ச்சை இதுக சாப்பிடறதை எல்லாம் கண்ணு வெச்சிட்டு இருக்குதுக.." - வெற்றி

வெற்றியின் புலம்பலில் வாய்விட்டு இசை சிரிக்க, "இரு பசை நா மெதுவா போய் பாத்துட்டு வர்றேன் அதுக்கு அப்பறம் போலாம்.." என்று மெதுவாக அறை கதவை திறந்து கொண்டு சென்றான்..

இரவு நேரத்தில் வெளியில் செல்லவே கூடாது என்று நிலவன் கட்டளையிட்டிருக்க, இரவு நேரத்தில் தான் இசைக்கு ஊரை சுற்றிவர மிகவும் பிடிக்கும்.. எந்த விதமான இடைஞ்சலும் இல்லாமல் சில்லென்று வீசும் காற்றை சுவாசித்தவாறு ஊரை வலம் வருவது ஒரு புதுவித உணர்வை தோற்று விற்கும் அவளுள்..

திருட்டுதனத்திற்கு எப்போதும் வெற்றியை தான் வற்புறுத்தி அழைத்து செல்வாள் இசை.. முதலில் வர மறுத்தவனும் இரவின் ஆளுமையில் மயங்கி மாதத்திற்கு ஒருமுறை கிளம்பி விடுவான்.. இது நிலவனின் காதிற்கு சென்று விட்டால் எரித்து விடுபவன் போல் முறைத்து இருவரையும் ஐநூறு தோப்புக்கரணம் போட கூறுவான்..

அடிக்காமல் விட்டானே என்று சந்தோசத்தில் தோப்புக்கரணம் போட்டு விட்டு இருவரும் ஓடி விடுவார்கள்.. நிலவன் கூறும் அனைத்தையும் கேட்பவர்கள் இதைய மட்டும் காது குடுத்து கேட்பதே இல்ல..

மீண்டும் அறை கதவை திறந்த வெற்றி சைகையிலே இசையிடம் வா என்றழைக்க, மெதுவாக இருவரும் வெளியில் வந்த நேரம் அவர்களுக்கு முன்னே வண்டியில் சாய்ந்தவாறு நிலவன் நின்றிருக்க, "அய்யய்யோ மாட்டிட்டோமோ??" என்ற பயத்தில் இசையின் பின்னே வெற்றி மறைத்து கொண்டான்..

தொண்டையை கணைத்த நிலவன், "இது எப்புடி தெரியுமா இருக்கு எறும்புக்கு பின்னாலே யானை ஒளியறாப்புல இருக்கு.." என்று கர்ஜனையாக குரல் வந்ததும் வெற்றி உள்ளே ஓடி விட, "துரோகி" என்ற இசையின் வார்த்தை காற்றில் கலந்தது..

"மாமா நா இல்ல அவன்தான்.." என்று உதட்டை பிதுக்கியவாறு கூறிய இசையின் செயலில் அழுத்தமான உதட்டை பிரித்து சிறு புன்னகையை சிந்தியவன், "வா இசை நம்ம அப்டியே கொஞ்ச தூரம் நடந்துப்புட்டு வரலாம்.." என்றழைக்க, இசைக்கு தான் இது கனவா?? நிஜமா?? என புரியாமல் பே வென்று அவனை பார்த்தாள்..

அவளின் முன் சொடுக்கிட்ட நிலவன் சைகையிலே என்னவென்று வினவ, தன்னிலைக்கு வந்த இசையும் ஒன்னுமில்ல என்று தலையசைத்து அவனுடன் இணைந்து நடந்தாள்..

பேருந்து நிறுத்தத்தில் போடபட்டிருந்த பென்ஞ்சில் இருவரும் அமர்ந்து எதுவும் பேச தோணாமல் இரவின் அழகை கண்மூடி ரசிக்க, முதலில் மௌனத்தை கலைத்தது நிலவன் தான்..

"சரோஜா அத்தை இங்க வர்றது உமக்கு புடிக்கலயாடி??" - நிலவன்

"என்ன மாமா லூசு மாதிரி கேள்வி கேட்கறே?? அவங்க வர்றது பிடிக்கலனா நா எதுக்கு தாத்தா கிட்ட அவங்களுக்காக பேசிருக்க போறேன்.." - இசை

"பொறவு என்னதான்டி ஒன் பிரச்சனை?? அதுல இருந்து நீ சரியில்லயே?? உமக்கு புடிக்காத எதையும் நா செய்ய மாட்டேன்டி.." - நிலவன்

"அவங்க வர்றது எல்லாம் எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல.." - இசை

"பொறவு ஆராவது ஏதாவது சொன்னாகளா??" - நிலவன்

இல்லையென்று மறுத்து தலையசைத்த இசை, "நீங்க என்னைய விட்டு விலகி போற மாதிரியே இருக்கு மாமா.. என்னைய விட்டு போய்ருவீங்களா???" என்று வார்த்தை வராமல் கேட்ட பெண்ணவளின் குரலில் இருந்த வலியை உணர்ந்தவனால் என்னவென்று பிரித்தறிய முடியாத உணர்வுகள் அலைகழிக்க, தலையை உலுக்கி தன்னை சமன்படுத்தி கொண்டு இசையை பார்த்தான்..

"என்னடி இது சின்ன புள்ள மாதிரி.. நா எதுக்கு உம்மைய விட்டுப்புட்டு போவ போறேன்.. எப்பவும் உன்ற கூடயே தான் இருப்பேன்.. எத்தனை பேரு வந்தாலும் என்ற இசை மட்டும் தான் எப்பவும் மொதல்ல.. எம்மைய நம்பற தானே??" என்று தவிப்புடன் கேட்ட நிலவனிடம், "உன்னைய மட்டும் தான் மாமா எப்பவும் நம்புவேன்.." என்றாள் கண்ணீருடன்..

இருவரின் மனமும் வெவ்வேறு நினைவுகளில் இருந்தாலும் ஆளில்லாத இடமும், மேனியை தழுவி செல்லும் குளுமையான காற்றும், வானத்தில் பளிச்சென்று ஒளி வீசி கொண்டிருந்த பால் நிலாவும் அவர்களுக்கு ஒருவித சிலிர்ப்பை தோற்றுவிக்க தவறவில்லை..

அப்படியே இசை நிலவனின் தோள் மீது சாய்து அந்த இரவை இன்னும் அழகாக்கி தன்னுக்குள் புதைத்து கொள்ள முயல, நிலவனும் அப்படியே சாய்ந்து கண் மூடினான்.. இந்த இரவு அப்படியே நீண்டு விடாதா என்ற ஏக்கம் பெண்ணவளுள் எழுந்ததும் கருமணிகளை சிறிது பிரித்து தன் மாமனை பார்த்தாள்..

அவனோ எந்தவித சலனமுமின்றி இயற்கையின் நடுவில் நித்திர தேவியிடம் சரணடைந்திருக்க, அந்த நிலையிலும் தன் கையை அவனுடன் கோர்த்து இறுக்கமாக பிடித்திருப்பதை பார்த்து மெலிதாக சிரித்து கொண்டவளுக்கு சிறு வெக்கம்..

இப்படியே சில மணிதுளிகள் கடந்து விட, கண்ணை தேய்த்தவாறு எழுந்த நிலவன் தாங்கள் இருக்கும் இடத்தை பார்த்து தன்னை தானே திட்டி கொண்டு இசையை பார்க்க, முதலில் எப்படி இருந்தாளோ இன்னும் அப்படியே அமர்ந்திருந்தாள்..

சிறிது கண்ணயர்ந்த இசைக்கும் திடீரென்று முழிப்பு வந்து விட, நிமிர்ந்து நிலவனை நோக்கினாள்.. அவன் முழித்திருப்பதை உணர்ந்ததும் சட்டென்று அவனிடம் இருந்து விலகி அமர்ந்தவள் "சாரி மாமா" என்றாள் தயக்கத்துடன்..

அவனோ அதை காதில் வாங்காதவன் போன்று, "போலாமாடி.. இம்புட்டு நேரம் இங்கனயே இருந்துப்புட்டோம்.." என்றான் உடம்பை இடவலமாக அசைத்தவாறு..

அதன்பின் இசையின் மனது தெளிவடைந்து விட்டதால் எப்போதும் போன்று சுற்றி கொண்டிருக்க, இன்று சரோஜா வருவதாக இருந்தது.. தாத்தா சம்மதம் கூறியதுமே சிவநேசன் நிலவனிடம் போன் செய்து அவர்களை வர சொல்ல, அவனோ முடியாது என்றான் அழுத்தமாக..

வேறு வழியில்லாமல் சிவநேசனே அவர்களிடம் பேசி இங்கு வர கூற, தன் அண்ணன் பேசி விட்டான் என்ற மகிழ்ச்சியில் சரோஜாவுக்கு சந்தோசத்தில் பேச்சே வராமல் வர மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்த தன் மகளை அழைத்து கொண்டு அடுத்த இரண்டு நாட்களிலே கிளம்பி விட்டார்..

"என்ன இசை கெளம்பிட்டியா?? அவுக வந்ததும் கெளம்பறது.." - ராசாத்தி

"இல்ல அத்தை அங்க எனக்காக நிறையா பேரு காத்துட்டு இருப்பாங்களே?? அவங்க வந்து இங்கதானே இருக்க போறாங்க.. மெதுவா பார்த்துக்கலாம்.." - இசை

"இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவாகடி இருந்துப்புட்டு தான் போறது.." - கமலம்

"அம்மா புரியாம பேசாத.. அவங்க என்ன போருக்கு போய்ட்டா வர்றாங்க ஆரத்தி கரைச்சு வெச்சு இத்தனை பேரு காத்திருக்கே??" - இசை

"வுடுங்கடி என்ற பேத்திக்கு எம்புட்டு பேரு காத்திருப்பாக.. நீவு போடி தங்கம்.." என்று ராமாயி அந்த பேச்சுக்கு முற்றுபுள்ளி வைத்து விட, புன்சிரிப்புடன் அவரை அணைத்த இசை கிளம்பி விட்டாள்..

மண் சாலையில் சிறிது புழுதியை கிளப்பி கொண்டு வந்த கார் சட்டென்று நிற்க, அதிலிருந்து இறங்கினாள் அவள்!

காளையர்களின் கடைக்கண்ணில் அடங்காத திமிருக்காரி.. மொத்த திமிரையும் குத்தகைக்கு எடுத்தது போன்று தான் நினைத்ததை நடத்தி முடிக்கும் வீம்புக்காரி.. அவளின் கருமணிகளை மறைத்திருந்த சன்கிளாசை கலட்டியதும் அவளின் விழிகள் அந்த ஊரை அளந்தெடுக்க, மேனியை தழுவி சென்ற இளங்காற்றை கண்மூடி சுவாசித்தவள், "மாம் செம ப்ளேஸ்!" என்றாள் சரோஜாவின் ஒரே மகள் ருத்ரா..

தித்திக்கும்..

கருத்துக்களை பகிர்ந்து கொள்ள..

Thread 'தித்திப்பாய் ஓர் சாரல்!! - Comments' https://www.sahaptham.com/community/threads/தித்திப்பாய்-ஓர்-சாரல்-comments.594/
 
Last edited:
Status
Not open for further replies.
Top Bottom