Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


தேடிப் பார்க்கிறேன் காற்றினிலே..

Megala Appadurai

Saha Writer
Team
Messages
52
Reaction score
64
Points
18
தேடிப்பார்க்கிறேன் காற்றினிலே.....
தேடல் 1
சேலம் அரசுமருத்துவமனையின் அவரசச் சிகிச்சை பிரவு பரப்பரப்பாய் இருந்தது அந்த ஞாயிறு மாலையில். எப்பொழுதும் மற்ற நாட்களை காட்டிலும் விடுமுறை தினங்களிலும், பண்டிகை தினங்களிலும் விபத்துக்கள் அதிகம் நடப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அன்றும் அப்படியே விபத்தால் அடிபட்டவர்களை நூற்றி எட்டு ஆம்புலன்ஸ் எடுத்து வந்தவண்ணம் இருக்க, அங்கு பணியில் இருந்த மருத்தவர்கள் பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருந்தனர்.
ஒவ்வொரு மணித்துளியும் அங்கே முக்கியமென்பதால் வினாடி நேரம் கூட வீணாக்காமல் நோயாளிகளை அங்குள்ள மருத்துவர்கள் கவனித்துக் கொண்டிருந்தனர்.

"ஆ..... வலிக்குது டாக்டரம்மா..... மெதுவா குத்துங்க ..... அய்யோ வலிக்குதே...." என்று ஒருவன் கத்த

"ஸ்ஸ்ஸ்ஸ் .... கத்தாதே.... குடிச்சிட்டு வண்டி ஓட்டி ஆக்ஸிடென்ட் பண்ணி ஒரு குழந்தை காலை ஒடச்சிருக்க..... அதோட அம்மாக்கு தலையில் அடிபட்டு ஹெட்இஞ்சுரி ஆகிருக்கு..... அவங்களுக்கு எப்படி வலிக்கும்..... அதுக்காகவே உன்னை இப்படியே செப்டிக் ஆகட்டும்ன்னு விட்றனும்..... நான் படிச்ச மருத்துவ படிப்புக்கு மரியாதை குடுத்து உனக்கு டீரீட்மெண்ட் குடுக்குறேன். பேசாம இரு......" ஆத்திரத்தில் பேசினாலும் கை மென்மையாய் அடிபட்டிருந்த அவன் நெற்றியில் தையல் போட்டு விட்டு அந்த இடத்தை சுற்றி ஸ்பிரிட் காட்டனில் துடைத்து விட்டு மருந்திட்டு கட்டு கட்டிவிட்டது.
"அங்கே போய் இன்ஜெக்ட் பண்ணிக்கோ....." என்று ஒரு சின்ன சீட்டை எழுதி அவனிட்த்தில் நீட்டினாள் ஆதினி.

"விடு ஆதினி அவனே போதையில் இருக்கான் அவன்கிட்ட பேசி என்னாகப் போகுது....." என்று சக மருத்துவரும் தோழியுமான ஜனனி கூற

"இந்த குடியால் எத்தனை குடும்பங்கள் அழியுது. இவனுங்க குடிச்சிட்டு சாகறதுமில்லாம .... எத்தனை பேரை சாகடிக்கிறானுங்க..... குடிச்சிட்டு இவனால ஒரு பச்சக்குழந்தை வலியால் துடிக்கிறது..... இவனுக்கு இன்னும் போதை தெளியல..... இவனுங்களை எல்லாம் ..... "
"ஹேய்..... கூல் ...கூல்... துறுதுறுன்னு விளையாடிட்டு, எப்பவும் சிரிச்சமுகமா, அன்பா நோயாளிய பார்க்கிற நீ இந்த மாதிரி விசயம்ன்னா லேடி ஜாக்கிஜானா மாறிடுற....... " என்ற ஜனனியிடம்
"என்ன செய்ய டிசைன் அப்படி ..... என் தாத்தா அநியாயத்தை கண்டா பொருத்துப் போகாதேன்னு சொல்லியே வளர்த்துட்டார்..... ஓகே ... ஓகே.... ஆம்புலன்ஸ் சவுண்ட் கேக்குது கெட் ரெடி ....கெட் ரெடி....
இதுதான் ஆதினி பெற்றவர்களுக்கு ஒற்றைப் பெண்ணாய் பிறந்து, செல்லமாய் வளர்ந்து , பிடிவாதமாய் மருத்துவத்துறையை தேர்ந்தெடுத்து, சேலம் மருத்துவகல்லூரியில் மருத்துவபடிப்பை முடித்துவிட்டு இப்பொழுது ஹவுஸ்சர்ஜனாய் அங்கே பணியாற்றுகிறாள்.

மருத்தவக்கல்லூரி முதல் நாளிலேயே ஜனனிக்கும், ஆதினிக்கும் நல்ல நட்பு தொடங்க இன்று உயிர் சினேகிதிகள் அவர்கள்.
ஆதினி துறுதுறுப்பான பெண். பார்த்தவுடன் பட்டென்று பிடித்துப் போகும் பேரழகியில்லை. ஆனால் நிச்சயம் ஒரு முறை திரும்பி பார்க்கவைக்கும் அடக்கமான அழகு. நேர்மையின் மறுவுருவம். அதனாலேயே அவள் தந்தை டொனேசன் கட்டி இந்தியாவின் முன்னணி மருத்துவக்கல்லூரியில் மெடிக்கல் சீட் வாங்கிதர எவ்வளவு முயன்றும், என் மதிபெண்ணிற்க்கு நம்ம ஊரிலேயே இடம் கிடைக்கும். பணம் கொடுத்து தான் படிக்கனும்ன்னா அப்படி ஒரு படிப்பே தேவையில்லை என்றவள்.

அவள் மதிபெண்ணிற்கு அரசு இட ஒதுக்கீட்டிலேயே இடம் கிடைக்க அவள் தன் சொந்த ஊரிலேயே தன் படிப்பை முடித்து இப்பொழுது ஹவுஸ்சர்ஜனாய் பணிபுரிகிறாள்.

தவறு கண்டு பொருக்காதவள், அநியாயத்தைக் கண்டாள் பொங்குபவள் சுருக்கமாய் பாரதி கண்ட புதுமைபெண்ணவள். சேலம் மாநகரின் அழகிய ஏற்காடு அவளின் ஊர். ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் அழகிய கோடைவாஸ்தலம்.

தினமும் காரில் கல்லூரிக்கு வந்து செல்பவள். அப்படி செல்லும் வழியில் தான் அவள் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அடிபட்டுக்கிடந்த செழியனைக் கண்டது. உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவனை முதலுதவி செய்து தன் காரிலியே கொண்டு வந்து மருத்துவமனையில் சேர்த்தாள்.
குற்றுயிராய் கிடந்தவனை வழியில் அவனைப் பற்றிய தகவலைத் தெரிந்து அவன் வீட்டில் சொல்ல முனகிக் கொண்டிருந்தவனை கேட்டபோது அவளுக்கு அவன் சொல்லியது "என் பே... பேர்...செ..செ... செழியன். இது .... நா... ..நா... வந்து.....கேக்....காம...... யா...ருக்..கும்‌‌.... தரக்...கூ..கூடாது..."என்றபடி அவள் கையில் ஒரு பிரேஸ்லெட்டை அணிவிக்க...... அதை தவிர செழியனைப் பற்றி ஒரு விபரமும் அவளுக்குத் தெரியவில்லை.

மருத்துவ மனையில் அனுமதித்து பதினைந்துநாளில் அவன் உடல்நிலை நன்றாய் தேறிவர........தலையில் அடிபட்டு மூளையில் அறுவை செய்திருந்ததாலும், தாடை எழும்பில் அடிபட்டு அறுவை செய்திருந்ததாலும் அவன் சுயநினைவு வரும் சிறிது நேரத்திலும் அவனால் பேச இயலாமல் போனது .

ஆனால் ஆதினி எதிர்பாராதது செழியனது மரணம்...... அது இயற்கை மரணமாய் இருக்க வாய்ப்பில்லை என்று அவள் மனம் கூறியது. ஆனால் மருத்துவ அறிக்கையோ..... தலையில் ஏற்பட்ட அடியால் மூளையில் ஏற்பட்ட இரத்தகட்டி அறுவை செய்து அதை நீக்கியிருந்தாலும் அதில் வீக்கம் ஏற்பட்டு அந்த நரம்புக்குழாய் வெடித்து மரணம் என்றிருந்தது.

அந்த மரணத்தில் ஏற்பட்ட சந்தேகத்தை தீர்க்க அவள் அந்த துறை தலைமை மருத்துவரை அனுகியபோது அவள் மிரட்டப்படவே அவள் சந்தேகம் ஊர்ஜிதமானது. ஆனாலும் அவளால் எதுவும் செய்ய முடியவில்லை.

இதை அவசரப்பட்டு முடிவெடுத்து குற்றவாளியை தப்பிக்க விடக்கூடாது. ஆதாரத்துடன் அவர்களை தண்டிக்க வேண்டும். அதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த வேளையில் அவள் கேள்விபட்ட பெயர்தான்
உதயநந்தன் ஐ. பி. எஸ்.
சேலம் மாவட்டத்தில் அவன் பதிவியேற்ற இரண்டாண்டுகளில் சட்டம் ஒழுங்கு மட்டுமல்ல... சாலை விதிகளையும் கட்டுக்குள் கொண்டு வந்திருந்தான்.
பண்ம் படைத்தவன் முதல் பதவியில் இருப்பவன் வரை தவறு செய்பவன் யாராகினும் அவனைக் கண்டால் அஞ்சி நடுங்கினர்.
அவனின் அணுகுமுறை ஒவ்வொன்றும் அதிரடியாய் இருந்தது. என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் . குற்றவாளி செய்திருப்து மன்னிக்கும் தவறாயின் அவனை மன்னித்து அவனுக்கு புது வாழ்க்கையை அமைத்து தருவான். ஆனால் அதுவே இதற்கு மன்னிப்பே கிடையாது என்று முடிவெடுத்தால் , அவன்தான் குற்றவாளி என்று ஆதாரம் கிடைத்துவிட்டால் கோர்டிற்க்கு சென்று அரசின் பணத்தை வீணாக்குவதில் விருப்மில்லாதவன். ஒற்றை புல்லெட்டில் அவன் நீதிமன்றத்தில் தீர்பெழுதிவிடுவான்.
அவனின் இந்த செய்கையை கேள்விபட்டே ஆதினி அவனை சந்தித்தாள். அதற்க்காய் தினமும் வருத்தபட்டுக் கொண்டிருக்கிறாள்.
செழியனின் மரணத்திற்கான விடையை உதயநந்தன் கண்டுபிடிப்பானா..... ?ஆதினிக்கு ஆபத்து ஏற்படுமா....?
தேடல் தொடரும்.....
 

Megala Appadurai

Saha Writer
Team
Messages
52
Reaction score
64
Points
18
தேடிப் பார்க்கிறேன் காற்றினிலே.......
அத்தியாயம் - 2
உதயநந்தன் ஐ பி எஸ். சென்னையில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தவன். இவனோடு சேர்த்து நான்கு பிள்ளைகள் இவன் பெற்றோருக்கு. இவனுக்கு ஒரு தமக்கை, இரண்டாவதாய் உதய், மூன்றாவதாய் ஒரு தங்கையும் , நான்கவதாய் ஒரு தம்பி.

சிறுவயது முதலே தான் ஒரு காவல் துறை அதிகாரி ஆகவேண்டும் என்பதே உதயனின் லட்சியமாய் இருந்தது. நேதாஜியின் பாதையே சரி என்றவன். அதனாலேயே அந்த சீருடையின் மீது காதல் கொண்டவன். நாட்டின் எல்லையில் நின்று எதிரிகளிடம் இருந்து காப்பதைப் போலவே சட்டம் ஒழுங்கை காப்பதினால் மக்களையும் நாட்டையும் காக்கமுடியும் என்று உறுதியாக நம்பினான் உதயன்.

தந்தை மெக்கானிக், தாயார் இல்லத்தரசி. படிக்கும் பொழுதே மாலையில் தந்தையின் மெக்கானிக் பட்டறையில் வேலை செய்வான். அவன் வளர வளர அது அவன் தந்தையின் தொழிலும் அவனால் வளரந்தது. அவன் படிப்பிற்க்கும் அது பெரிதும் உதவியது.

'படிச்சவரை போதும் பட்டறையிலேயே போட்டா வருமானம் வரும்ல இவன் படிச்சு போலீஸ் ஆவப் போறானா .... இவனுக்கே செலவு பண்ணா புள்ளைங்கள எப்படி கரையேத்துவ' என்று கேட்ட உறவுக்கூட்டத்தை உதயனின் தந்தை தர்மலிங்கம் "அதெல்லாம் என் பையன் பார்த்துக்குவான். அவனை பெரிய ஆபீசர் ஆக்கிட்டா போதும்....." என்று புன்னைகையுடன் கூறியதை நடத்திக் காட்டினான் உதயன்.
தான் படிக்கும் போதே பெண்ணுக்கு கல்வி முக்கியம் என்பதை உணர்ந்தவன், தன் தமக்கையையும் படிப்பை ஊக்குவித்தான்.பட்டப்படிப்பாய் அவளுக்கு பிடித்த செவிலியப்பை படிப்பை தேரந்தெடுத்தாள். படிப்பு முடிந்து வேலையில் சேர்ந்த பின்னே தான் திருமணம் என்று முடிவாய் அவன் தமக்கை கூறிவிட சென்னையின் பிரபல மருத்துவனையில் வேலைக்கு சென்ற பின் உள்ளூரிலேயே நல்ல வரனாய் பார்த்து மணம்முடித்தான்.

தானும் அரசு கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்து கடுமையான முயற்சியுடன் சிவில் சர்வீஸ் தேர்வெழுதி முதல் முயற்சியிலேயே இந்தியாவில் முதல் இருபது இடங்களுக்குள் வந்து வெற்றி பெற்று ஐ ஏ எஸ் பயிற்சி பெரும் தகுதி இருந்தும், தன் கனவான ஐபிஎஸ் பயிற்சியையே தேர்ந்தெடுத்தான். இருபத்து மூன்று வயதிலேயே இளம் ஐபிஎஸ் அதிகாரியானான்.

முதல் முப்பது இடங்களுக்குள் வந்ததால் போஸ்டிங் தன் மாநிலத்திலேயே வேண்டு கோளை ஏற்று அவனுக்கு தமிழ்நாட்டிலேயே பதவி கிடைத்தது. பயிற்ச்சி காலமாய் மூன்று ஆண்டுகள் வெவ்வேறு இடங்களில் பணிபுரிந்தவன், இரண்டு ஆண்டுக்கு முன் சேலத்தின் துணை காவல்துறை கண்காணிப்பாளராக பதவியேற்றான்.

அவன் எங்கு சென்றாலும் அங்கு தன் கண்ணில் தெரியும் குற்றங்களை களையெடுத்தவன், இரண்டு ஆண்டுகளில் சேலத்தையே தலைகீழாய் மாற்றியிருந்தான்.அவனின் அதிரடியான நடவடிக்கைகளில் குற்றச்செயலில் ஈடுபட்டோருக்கு நடுக்கத்தை உண்டு செய்தது.

வழிப்பறியில் ஈடுபட்டு ஒரு பெண்ணின் மரணத்திற்கு காரணமானவனையும், சின்னஞ்சிறுமியை கடத்தி அந்த சிறுமியை வன்புணர்வு செய்தவனையும், தயவு தாட்சண்யம் பார்க்காமல் என்கவுண்டர் செய்ததைப் பார்த்து மற்ற குற்றவாளிகளுக்கும் பயம் வந்தது. ஆனால் அவனுக்கு எதிரிகளும் அதிகமாயினர்.ஆனால் அதையெல்லாம் தூசாய் தட்டிவிட்டு தன் கடமையை சரியாய் செய்தான்.

ஒரு நாள் அவன் அலுவலகத்தில் இருக்கும் பொழுதுதான் ஆதினியை அவன் முதன் முதலாய் பார்த்தது.

"சார்... ஐ...ம் .. ஆதினி. ஆம் எ டாக்டர். நான் கவர்மெண்ட் ஆஸ்பிடல்ல ஹவுஸ்சர்ஜனா இருக்கேன். உங்ககிட்ட ஒரு கேஸ் விசயமா பேசனும்.... இது ரொம்ப ரகசியமா நீங்க விசாரிக்கனும். அதுக்காகத்தான் உங்களைப் பார்க்க வந்தேன்....." என்று கூற.

"ம் ...சொல்லுங்க...." என்று அவன் நிமிர்ந்து அமர்ந்து தன் இடது கையை தான் அமர்ந்திருந்த இருக்கையில் ஊன்றியபடியே தன் மீசையை இருபுறமும் தடிவியபடி அவளைநோக்க... அவளோ அவள் செழியனை பார்த்த நாள் முதல் அவன் இறந்ததும் அதன் பின் தனக்கு ஏற்பட்ட சந்தேகத்தையும் அதை தொடர்ந்து தான் அத்துறை தலைமைமருத்துவரை அணுகியது, அவரால் தான் மிரட்டப்பட்டது வரை ஒன்று விடாமல் கூற

அவள் கூறிய செய்தியை செவிமடுத்தவன் "சரி டீடேய்ல்ஸ் குடுத்துட்டு போங்க நான் ஸ்பெசலா இன்வெஸ்டிகேசன் ஸ்டார்ட் பண்றேன்...." என்பதோடு முடித்துக்கொள்ள

'நாம எவ்வளவு பெரிய விசயத்தை சொல்லிருக்கோம் ஒருத்தனை கொன்னுட்டாங்கன்னு சொல்றேன் இவன் சர்வ சாதாரணமா பேசுறான் திமிர்புடிச்சவன். போலீஸ்னாலே திமிரா தான் இருப்பாங்க போல.....' என்று நினைத்த ஆதினியை

"ஒகே வேற ஏதாவது தகவல் தேவைபட்டா உங்களை கான்டாக் பண்றேன். உங்க நம்பர் குடுத்திட்டு போங்க..... "என்றவன் இதற்கு மேல் பேச எதுவும் இல்லை என்பது போல் அவன் மேசையில் இருந்த கோப்புகளை பார்வையிட

வெளியே வந்த ஆதினி 'மரியாதை தெரியாதவன், என்னவோ மிசின் தட்டிவிட்ட மாதிரி பேசறான்.ஒரு உயிரோட மதிப்பு இவனுக்கு எங்கே தெரியப் போகுது. இவன்ல்லாம் எனத்த படிச்சு ஏசிபி ஆனானோ...... எல்லாம் இந்த செழியனால வந்தது...... எங்க அவன் கருவாப்பய...... 'என்று நினைத்தவள் சுற்றும் முற்றும் தேட அங்கே ஹாயாய் இவளின் காரில் சாய்ந்தபடி
"என்னையா தேடுற சொல்லிருந்தா நானும் உள்ள வந்திருப்பேன்ல..... என்னை தான் இங்கயே இருக்க சொல்லிட்டயே.... என்னாச்சு.... ? என்று இவளைப் பார்த்து கேட்டது செழியனே....

வேகமாய் அவனருகில் வந்தவள் சுற்றும் முற்றும் பார்த்தவாறே தன்னை யாரும் கவனிக்கவில்லை என்பதை உறுதி செய்துவிட்டு

"டேய்..... எதுவா இருந்தாலும் வீட்டுக்கு போய் பேசிக்கலாம். இப்படி ரோட்ல வெச்சி பேசி என் மானத்த வாங்காத உன்கூட பேசிட்டு இருப்பதைப் பார்த்து எல்லாரும் என்னை பேக்குன்னு சொல்லறதுக்கா..... நானே கடுப்புல இருக்கேன். நீ வேற கிண்டாத..... உன்னை என்னைக்கு பார்த்தேனோ அன்னைக்கே எனக்கு புடிச்சது ஏழரை .... இன்னும் என்னவெல்லாம் படப் போறேனோ தெரியல...... "என்று தன் ஆத்திரத்தை அவனிடம் காட்ட

"அப்படி ஒண்ணும் நீ எனக்காக கஷ்டப் பட வேணாம் நான் போறேன். நீ நிம்மதியா இரு ...." என்றவன் சடுதியில் மாயமாய் மறைந்துப் போனான்.

"ச்சே .... அந்த போலீஸ்காரன் மேல இருக்க கோவத்தில இவனை பேசிட்டேனே ...... பாவம் அவன்...." என்று நினைத்தவள்,

"செழியா ..... வாடா.... நான் கோவத்துல சொல்லிட்டேன். அதுக்காக பொசுக்குன்னு கோவிச்சிட்டு போய்டுவியா..... எங்கடா இருக்க..... சத்தியமா இனி இப்படி சொல்லமாட்டேன் என் செல்மில்ல.... வந்துடுடா...." என்று சுற்றிலும் தேடியவாறே அவள் அழைத்தும் அவன் வரவில்லை


நேரம் ஆக ஆக அவளின் தவிப்பு அதிகரித்தது.நீண்ட நேரம் அவள் காத்திருந்தும் அவன் வரமால் போகவே "டேய் கருவாயா.... போதுன்டா விளையாண்டது....நான் அழுதுடுவேன். ப்ளீஸ் நான் சொன்னது தப்புதான்னு சாரி கேட்கறேன்ல..... வாடா..... நீ வராம நான் இந்த இடத்த விட்டு போகமாட்டேன். இப்போ வரப்போறீயா இல்லையா நீ ..... எல்லாம் அந்த போலீஸ்காரனால வந்தது....அவன.."என்றபடி அவள் பல்லைக்கடிக்க

ஒரு கேஸ் விசயமாய் வெளியே போக வந்த உதயநந்தன் இவள் சுற்றும் முற்றும் பார்த்தபடி தனியாய் பேசிக் கொண்டிருப்பதைக் கண்டவன்.' என்ன இவ தனியா பேசிட்டு இருக்கா .... டாக்டர்ன்னு தான சொன்னா ... 'என்ற யோசித்தவன், அப்பொழுது தான் அவளை சரியாய் கவனித்தான்.


அழகான பெரியகண்கள்.அதில் அளவாய் மையிட்டு இருந்தாள். அளவான வில்லென வளைந்த புருவம்.நேரான எடுப்பான நாசி‌. அதில் ஒற்றைக்கல் மூக்குத்தி. இயற்கையாய் சிவந்திருந்த இதழ்கள். 'லிப்ஸ்டிக் போட்ருக்காளா.... இல்லையே ... இயற்கையாவே இவ உதடு இந்த கலரா...'என்று அவன் மனம் எண்ண, அவன் பார்வையோ அவளை அங்கலம் அங்குலமாய் தழுவியது.

சங்கு கழுத்து அதில் ஒரு மெல்லி தங்கச் சங்கிலி. அவன் பார்வை அதற்கு கீழே இறங்க..... 'மிஸ்டர். உதயா ...என்ன பண்ற நீ..' என்று அவன் மனசாட்சி அவன் தலையைத் தட்டியது. சட்டென தன் தலையை உலுக்கிக் கொண்டவன்.

'டேய் உதயா.... என்ன இது இத்தனை வருசமா நீ யாரையும் இப்படி பார்ததில்லையேடா .... இன்னைக்கு என்ன ஆச்சு உனக்கு...... கொஞ்ச நேரம் முன்னாடி கூட நம்மகிட்ட பேசினாளே... அப்போ எதுவும் தோணலையே.... என்று நினைக்க அப்போ அவளை எங்கேடா பார்த்த நீ முண்டம்... மீண்டும் அவன் மனசாட்சி கேள்வி கேட்க, அதை அடக்கிவிட்டு மீண்டும் அவளை நோட்டம் விட்டான்.

பெண்களுக்கே பிடித்த பிங்க நிறத்தில் சுடிதார்.இரண்டு புறமும் மார்பை மறைத்து போடப்பட்ட துப்பட்டா .... அவனின் முகத்தில் இளம் முறுவல் பூத்தது. 'என்னமோ பண்ணாறாளே என்னை..... யார் இவ .... ? யாரைத் தேடுறா ....? யார்கிட்ட பேசுறா...?என்று யோசித்தவன் அவள் அருகில் சென்று

"யாரைத் தேடறீங்க..... " என்று கேட்க

அவனது கணீர் குரலைக் கேட்டதும் தூக்கிவாறிப் போட்டது ஆதினிக்கு.

சட்டென அவள் பக்கவாட்டில் திரும்ப தன் முன் நின்றவனைப் பார்த்து பிரமித்துப் போனாள். கம்பீரமான தோற்றத்தில் அளவான கட்டுமஸ்தான உடலில், அகன்ற நெற்றி. கூர்மையான பார்வை கொண்ட விழிகள். அடர்த்தியான மீசை. அழுத்தமான உதடுகள்.காவல்துறைக்கே உண்டான கட்டிங்குடன் தலைமுடி அதுவும் அவனுக்கு கம்பீரத்தையே அளித்தது.அவள் நிமிர்ந்து பார்க்கும் உயரம்.

'இவன் என்ன இவ்வளவு விரப்பா நிக்கறான் ரோபோ மாதிரி.உட்கார்ந்திருந்ததால இவனை சரியா கவனிக்கலயே. இவனை அண்ணாந்து பார்த்து கழுத்து வலி வந்துடும் போலயே... அச்சச்சோ நாம பேசுனதை கேட்டுட்டான் போலிருக்கே இப்ப என்ன சொல்லி சமாளிக்கறது. ஆதினி சமாளி....'என்று நினைத்தவாறே....
"ஆங்.... என்ன சார்... "

"இல்ல .... யாரைத் தேடறீங்க .... யார்கிட்ட பேசிட்டு இருக்கீங்க..... "என்று அவளிடம் கேட்டபடியே அவன் விழிகள் கூர்மையாய் சுற்றுபுறத்தை ஆராய

சட்டென்று சுதாரித்தவள் தன் கையில் இருந்த கைபேசியை உயர்த்தியவாறே "போன் பேசிட்டு இருந்தேன்.பிரண்ட் பேசினா..... அவங்க சொந்தக்காரங்க வீடு இங்கதான் இருக்குன்னு சொன்னா அதுதான் பார்த்தேன்.." என்று உளரி கொட்ட

'போன் பேசிட்டு இருந்தாளா ... இல்லையே ...... இவ எதையோ மறைக்குறா.... ம் நம்மகிட்டயேவா ..... ம் ... ' என்ற யோசனையுடனே...

"ஓஓஓ இங்க எங்க .... அவங்க பேரென்ன ...ஏன்னா பக்கத்துலேன்னா எனக்கு தெரியும்‌...." என்றபடி அவளை பார்க்க

'இதென்ன வம்பா போச்சு .... இவனை யாரு இப்போ அட்ரஸ் கேட்டா ..... அடேய் கருவாயா.... ஏன்டா இப்படி பண்ற.... உன்னால நான் என்ன ஆகப்போறேனோ தெரியலையே.... இப்போ இவன் கிட்ட என்னத்தை சொல்லி தப்பிக்கிறது...' என்று நினைத்தவாறே அவனை நோக்க, அவன் பின்னே வாயை கை வைத்து பொத்தி சிரித்தவாறு நின்ற செழியனை கண்டவள்,

அவனை கண்டுவிட்ட மகிழ்ச்சி ஒருபுறமும் நம்மை இப்படி மாட்டிவிட்டுவிட்டு சிரிக்கிறானே என்ற கோபம் ஒரு புறமுமாய் அவள் சமாளிக்க,

நிமிடத்தில் அவள் முகத்தில் தெரிந்த பலவித மாற்றங்களை கண்ட உதயன், என்னாச்சு... ஏன் ..? ஏதாவது பிரச்சினையா ...? சொல்லுங்க நான் பார்த்துக்கொள்கிறேன் ...? என்று கூற

'அடப்பக்கி .... இப்போதைக்கு நீதாண்டா என் பிரச்சனையே .... என்னை உசிர வாங்குறானே..... அவ்வ்வ்வ்... நான் என்ன சொல்லி தப்பிக்க.....'

"ஹி..ஹி.... இல்லை சார் .. எனக்கு இப்போதைக்கு உங்கிட்ட சொன்ன விசயம் தான் பிரச்சினை வேற எதுவும் இல்ல..... அதை மட்டும் கொஞ்சம் பார்த்தீங்கன்னா நல்லாருக்கும் நான் வர்றேன் சார்......"என்று கூறிவிட்டு அவசர அவசரமாக அந்த இடத்தை விட்டு அவள் கிளம்ப, சத்தமில்லாமல் வந்து காரில் ஏறிக்கொண்டான் செழியன்.

அவள் கிளம்பிச் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தவன் "இவ எதையோ மறைக்கிறா.... ? என்ன பேர் சொன்னா என்று தன் ஆள்காட்டி விரலால் தன் நெற்றிப் பொட்டைத் தட்டியவன், அதே கையால் ஒரு சொடுக்கு போட்டு அனைத்து விரல்களையும் மூடி தன் ஆள்காட்டி விரலை மட்டும் அவள் சென்ற திசையை நோக்கி நீட்டியவன் "யெஸ் .... ஆதினி ...‌‌... இனி உன்னை கவனிப்பது என் வேலை முதல் வேலை.... என்றவாறே தன் பாக்கெட்டில் இருந்த குளிர்கண்ணாடியை எடுத்து கண்களுக்கு கொடுத்தான்.
ஆதினையை கண்காணிக்கமட்டும் செய்வானா இல்லை காதலிக்கவுமா.....?


தேடிப் பார்க்கிறேன் காற்றினிலே....

அத்தியாயம் 3

"ஏன்டா ... எரும .... இப்படியா செய்வ..... உன்னால அந்த போலீஸ்காரன் கிட்ட நான் பொய் சொல்லவேண்டியதா போச்சு..... அந்தாளு பார்த்த பார்வையே சரியில்லை.. என்னை சந்தேகத்தோட பார்த்த மாதிரியே இருந்தது. எல்லாம் உன்னால தான்....ஆளையும் மொகரையும் பாரு ....." என்று ஆதினி பொறிந்து கொட்ட
"ஹாஹாஹா ..... "என்று நகைத்த செழியன் , "அந்தாளு உன்னை ஒரு மார்க்கமா பார்த்தான். லுக்கெல்லாம் பலமா இருந்துச்சு. அதான் டக்குன்னு வந்துட்டேன்...." என்று அவளை கேலியாய் பார்த்தான்.

"ஆமா தானா பேசிட்டு நின்னா.... பாக்காம என்ன செய்வான். அதுவும் போலீஸ் ..... நான் வேற ஒளறி கொட்டினேன். அவனுக்கு அதுலயே சந்தேகம் வந்திருக்கும். எல்லாம் உன்னால தான்..... இனிமே இப்படி செஞ்ச உன்கிட்ட பேசவே மாட்டேன் போடா ....." என்று ஆதினி முகத்தை திருப்பிக்கொள்ள

" நீ என்கிட்ட பேசமாட்டியா.... அதான் பார்த்தேனே .... கொஞ்சம் நேரம் என்னைக் காணோம்ன்னதுமே .... உன் முகம் போன போக்க..... ஆமா நீயெல்லாம் எப்படி படிச்சு டாக்டர் ஆனயோ..... இன்னும் சின்னபுள்ளயாவே இருக்க...... நான் யார் கண்ணுக்கும் தெரியரதில்லை.... உன் கண்ணுக்கு மட்டும் தான தெரியுறேன்...... அப்புறம் உன்கிட்டேயும் பேசாம நான் என்ன செய்றது‌...." என்ற செழியன் "ஆனா அந்த போலீஸ் ஆபிசர் உன்னை பார்த்தான் நான் பார்த்தேன்.... " என்று கூற

"பார்த்தானா.... அவனா.... நான் முன்னாடி உட்கார்ந்த போதே பார்த்து பேசல ...ஒரு வார்த்தை கூட பேசாம மூஞ்சில அடிச்ச மாதிரி அவன் பைல பார்க்க ஆரம்பிச்சுட்டான். நீ என்கிட்டேர்ந்து தப்பிக்க ஏதாச்சும் சொல்லாத..... ஆனா எனக்கு ஒண்ணு மட்டும் புரியவே இல்லடா..... ஆவில்லாம் தன்னை கொன்னவங்கள பலிவாங்கும்ன்னு சொல்வாங்க..... நீ என்னடான்னா நான் யாருன்னே எனக்கு தெரியலேங்குற....... ஆவிக்கும் அம்னீசியா வரும்ன்னு உன்னைப் பார்த்து தான் டா தெரிஞ்சிக்கிட்டேன்...." என்று கூறி நகைத்தவளிடம்

"என்னை பார்த்தா உனக்கு கிண்டலா இருக்கா..... நானே ஒண்ணும் புரியாம தான உன்கூடவே சுத்திட்டு இருக்கேன். யார்ன்னு தெரிஞ்சா நானே போய் அவங்கள இன்னேரம் ஏதாச்சும் செஞ்சிருக்க மாட்டேனா.... இப்படி பேசிட்டு இருப்பேனா.... நீ தான் டாக்டர் ஆச்சே கண்டுபிடி .... எனக்கு என்னாச்சுன்னு ...."

"டேய் .... உன்கிட்ட பேசுறதயே என்னால இன்னும் நம்ப முடியல..... இதுல நீ ஏன் இப்படி இருக்கேன்னு வேற கண்டுபிடிக்கணுமா....... ஏற்கெனவே எனக்கு இருக்குற பிரச்சனை பத்தாது .இது வேறையா ..... ஆவிக்கு வைத்தியம் பார்க்க படிப்பு இருக்கான்னு தெரியலயே .... இல்லை ஏதாச்சும் சைக்யார்டிஸ்க்கிட்ட காட்டலான்னா நீ யாருக்கும் தெரிய மாட்டேங்குற ..... வேணா இப்புடி பண்லாமா ...." ஆர்வத்துடன் அவனை நோக்கினாள் ஆதினி.

"எப்புடி ....."
"இல்ல... இந்த மந்திரவாதி, நம்பூதரி, ஆவிகளோட பேசறது... ஆவிகள் பற்றி ஆராய்ச்சி பண்றவங்கன்னு இருக்காங்கல்ல ... அவங்ககிட்ட உன்னை பத்தி சொன்னா .... " என்று பிரகாசமாய் கண்ணை விரித்தபடி கூறிய ஆதினியிடம் ,
"நீ என்ன லூசா .... இல்ல லூசான்னு கேக்குறேன் ..... மந்தரவாதிகிட்ட போனாலும் , ஆவியோட பேசுற மீடியேட்டர் கிட்ட போனாலும் என்னை வரவழைச்சுதான கேப்பாங்க...... நான் தான் ஏற்கனவே உனக்கே தெரியுறேனே..... அப்புறம் என்ன எனக்கே தெரியாத விசயத்தை அவங்க மட்டும் எப்படி சொல்வாங்க....." என்றவனை பாவமாய் பார்த்தவள்
"ஆமால்ல ..... உனக்கே தெரியாதத அவங்க எப்படி சொல்லமுடியும்...... அய்யோ .... எனக்கு யோசிச்சு யோசிச்சு தலை வலிக்குது.... உன்னை கொன்னது யாருன்னு கண்டு பிடிச்சாதான் நீ யாருன்ற தகவலே தெரியும். என்னடா இது ..... எந்தப் பக்கம் போனாலும் இடிக்குது...... " என அலுத்துக்கொள்ள
"இடிச்சா தள்ளி நில்லு .... அதவிட்டுட்டு இடிக்குது கடிக்கிதுன்னு ....... " என்று செழியன் கூற

"காமெடி ..... பரவால்ல...... நாளைக்கு சிரிக்கிறேன்.....என்ன ...... போடாங்கு டுபுக்கு .... உன்னை...... " என்று தன்னை சுற்றிலும் ஏதாவது பொருள் உள்ளதா என்று ஆதினி தேட
"ஏய்..... கூல் .... கூல்...... நீ என்ன பண்ணு நம்ம ஜிங்லிய கூப்பிட்டு சூடா ஒரு காபி போட்டுட்டு வரச் சொல்லி குடி ..... அப்புறம் நாம அப்படியே காலற வாக்கிங் போய்ட்டு வரலாம் ........ உன் தலைவலி சரியாகிடும். " என்ற செழியனை பார்த்தவாறே

"செண்பாம்மாவ ....... நான் மட்டும் தான் ஜிங்லின்னு கூப்பிடுவேன். நீ ஏன்டா கூப்பிடுற..... வானரமே..... விட்டா என் சொத்துலயே பங்கு கேட்ப போல...... " என்று எகிறியவளை,

"ஏ...... என்ன நீ கொஞ்சம் கூட ஒரு ஆவிகிட்ட பேசுறோம்ன்ற மட்டு மரியாதை இல்லாம பேசுற..... வர வர உனக்கு கொஞ்சம் கூட என் மேல பயம் இல்லாம போச்சு ..... இரு.... இரு..... உன்னை ஏதாச்சும் பண்ணா தான் நீ அடங்குவ......" என்றவாறே அவளுக்கு முதுகு காட்டி செழியன் அமர்ந்து கொள்ள

அவனை பார்த்து புன்னகைத்தபடியே
அறையை விட்டு வெளியே வந்தவள், நேராய் சமயலறையில் நுழைய அங்கே செண்பாம்மா சமைத்துக் கொண்டிருந்தார். ஒடிசலான தேகம். வயது மூப்பின் காரணமோ சற்றே முதுகு கூன் விழுந்தார் போல் உடலமைப்பு. தன் சுங்குடி புடவையை தோள்வரை போர்த்தினார் போல் கட்டியிருந்தார். நல்ல வெளுத்த நிறம். இளமையில் மிகவும் அழகாய் இருந்திருப்பார்.

நெற்றி நிறைய திருநிர்..... கழுத்தில் ருத்தாரட்ம். கைகளில் ஒற்றை தங்க வளையல். காதுகளில் எட்டு கல் பதித்த தோடு.
மூக்கில் சற்றே பெரிய மூக்குத்திகள் இரு மூக்கிலும். ஆதினியின் குழந்தை பருவம் முதலே அவர்கள் வீட்டின் மொத்த பொறுப்பும் செண்பாம்மா தான். ஆதினிக்கு அவர் எப்பொழுதும் ஜிங்லி தான்.

தன் மகளை பார்த்துக் கொள்வது போல் ஆதினி பிறந்தது முதல் அவளுக்கு எல்லாமே செண்பாம்மாதான். அவள் தாய் தாய்பால் புகட்டுவதோடு சரி. ஆதினி வளரந்து பெரியவள் ஆன பின்பும் எல்லாவற்றிற்க்கும் செண்பாம்மாவைத்தான் அழைப்பாள் ஆதினி.செண்பாம்மா ஆதினி வீட்டிறக்கு வரும்போது முப்பது வயது இருக்கும். யாருமற்றவளாய் வந்தவரை ஆதினியின் குடும்பம் அரவணைத்துக் கொண்டது. அன்று முதல் எழுந்தது முதல் உறங்கும் வரை ஆதினிக்கு எல்லாமே செண்பாம்மா தான்.

"ஜிங்லி ...... எனக்கு சூடா காபி வேணும் ..." என்றவாறே அடுப்படியில் வேலையாய் இருந்த செண்பாம்மாவின் பின்புறமாயிருந்து அவர் தோளைக்கட்டிக் கொண்டு அவர் கன்னத்தில் ஆதினி முத்தத்தை பதிக்க

"இன்னேறத்துக்கு காபி எதுக்கு பப்ளூ ... கொஞ்ச நேரத்தில் சாப்பிடலாம். நீ இப்போ காபி சாப்பிட்டா அப்புறம் டிபன் சாப்பிட மாட்ட அதனால காபி கிடையாது போ ...." என்று விரட்டினார் செண்பாம்மா....

"அய்யோ ...... என்னை பப்ளுன்னு கூப்பிடாத ஜிங்லி ....... அவனுக்கு கேட்டுச்சு என்னை இதை வெச்சே ஓட்டுவான். என் செல்ல ஜிங்லி இல்ல ..... " என்றபடியே செண்பாம்மாவின் கன்னத்தை தன் இரு கைகளாலும் பிடித்து கொஞ்ச

"யாரு ....... அந்த ஆவிப் பயலா ..... அவன் கெடக்கான். ஏதாச்சும் ஏடாகூடமா பண்ணா என்கிட்ட சொல்லு கொள்ளிக்கட்டையை எடுத்து சொறுகிடுறேன்......." என்று கூறி செண்பாம்மாவிற்கு செழியன் இருப்பதை உணர மட்டுமே முடியும்.

ஆதினி செண்பாம்மாவிடம் எப்போதும் எதையும் மறைத்ததில்லை. பத்தாம் வகுப்பு படிக்கும் போது வந்த முதல் காதல் கடிதம் முதல் எதையும் மறைக்கமாட்டாள். செழியனை பார்த்தது முதல் அனைத்தும் செண்பாம்மாவிற்க்கு தெரியும். செழியன் ஆதினி கண்ணுக்கு தெரிந்தது முதல் அதாவது அவன் இறந்தது முதல் ஆதினியுடனே இருக்கிறான்.

ஆதினியுடன் செழியன் அவள் வீடு வந்த அன்றே செண்பாம்மா அவனை உணர்ந்து கொண்டார். ஆனால் ஆதினியோ தன் கண்முன் நடப்பதை நம்பமுடியாமலும் , நம்பாமலும் இருக்க முடியாமலும் குழப்பத்தில் இருக்க தானே குழப்பமாயிருக்கும் ஒரு விசயத்தை வீட்டில் சொல்ல விரும்பவில்லை அவள். செண்பாம்மாவிடமும் சொல்லி அவரையும் குழப்ப விரும்பவில்லை. ஆனால் செண்பாம்மாவோ ஆதினிக்கே அதிர்ச்சி கொடுத்தார்.

செண்பாம்மா வயதில் மூத்தவரே தவிர உள்ளத்தில் குழந்தை அனைத்து பொறுப்புகளையும் சிறப்பாக செய்பவர், குணத்தில் குழந்தையாய் இருப்பார் . அதுவே ஆதினியின் குடும்பத்தாருக்கு பிடித்தமாய் போய் அவர் இங்கேயே நிரந்தரமாய் தங்குவதற்க்கு காரணமாய் அமைந்தது.

சாதரணமாகவே செண்பாம்மா தெய்வ நம்பிக்கை அதிகம் உள்ளவர். அன்று ஏதோ ஒன்று தங்கள் அருகில் இருப்பதாய் தான் உணர்வதாக ஆதினியிடம் சொன்னதுமே ஆச்சரியம் தான் ஆதினிக்கு.

பிறகு அவரிடம் ஆதினி உண்மையை மறைக்கவில்லை. செழியனை பார்த்தது முதல் அவன் இறந்தவரை செண்பாம்மாவிடம் ஆதினி கூற, செண்பாம்மாவிறக்கு பயமோ, பதட்டமோ ஏற்படவில்லை. மாறாய் அவன் மீது பரிதாபமே ஏற்பட்டது அவருக்கு.

அன்று முதல் தன் கண்ணுக்கு தெரியாவிட்டாலும் செழியன் அருகில் இருந்தால் அதை உணரும் செண்பாம்மா ஆதினியின் பெற்றோர் இருக்கும் போது அமைதியுடன் இருப்பவர்.அவர்கள் சென்றவுடன் செழியனுடன் பேச ஆரம்பித்து விடுவார். ஆனால் செழியன் பேசுவது அவருக்கு கேட்காவிட்டாலும் அவனிடம் பேசிக்கொண்டே இருப்பார். அதனால் செண்பாம்மாவையும் பிடித்து போனது செழியனுக்கு.

அவரின் பேச்சைக் கேட்ட ஆதினி
"ஹா.....ஹா....ஹா....... " என்று வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரிக்க

செண்பாம்மாவின் அருகில் தன் இடுப்பில் கைவைத்து முறைத்தபடி வந்து நின்றான் செழியன்.

"என்ன வந்துட்டானா ...... பிரகஸ்பதி ..... நாஞ்சொன்னவுடனே வந்து நிப்பானே......" என்றவரிடம்

"எப்படி ஜிங்லி ..... பார்க்காமயே அவன் வந்தது தெரியுது உங்களுக்கு. இட்ஸ் அமேசிங் ஜிங்லி....." என்ற ஆதினியை

"என்னை உன் ஜிங்லி கொள்ளிக்கட்டைல சொறுகிடுவேங்குது. நீ அவங்கள பாராட்டிட்டு இருக்க ..... " என்று கோபப் பட

"ஜிங்லி சும்மா சொல்லுதுடா ...... அதெல்லாம் சொறுகுனாலும் உனக்கென்ன ஆகப் போகுது ..... " என்று ஆதினி கலாய்க்க

"ஹாங் கொள்ளைக்கட்டைய கண்டா ஆவிக்கு ஆகாதாம்ல்ல ..... அதான் .... "என்று சொன்னவனிடம்

"இந்த புரளிய எவன்டா கெளப்புனான் ......."என்று செழியனிடம் கேட்டவள் செண்பம்மாவிடம் " நீங்க சூடா ஒரு கப் காபி தருவீங்களாம். நான் அதை குடிச்சிட்டு அப்படியே ஒரு வாக் போய்ட்டு வந்து நல்லா சாப்பிடுவேணாம்....." எனறபடியே சமயலறை மேடை மீது தன் இரு கைகளையும் ஊன்றி தாவி அமர்ந்தவள்.

*ஆமா இது என்ன புது கதை கொள்ளிக்கட்டை ஆவிக்கு ஆகாதுன்னு ......" மேடை மீதிருந்த கேரட்டை எடுத்து கடித்தபடியே கேட்க

"காலைல டீவில ஒரு படம் ஓடுச்சு.... அதுல ஒரு பேய் ஒரு பொண்ணை தொரத்துது. அந்தப் பொண்ணு அப்போ எரியுற அடுப்புலேர்ந்து ஒரு கொள்ளிக்கட்டையை எடுத்து அந்த பேயக்கு முன்னால நீட்டுது . உடனே அந்த பேய் பயந்து அலறுது......." என்று பில்டப் செய்து செழியன் கூற

"டேய் ..... உண்மையான பேய் உன்னைப் பார்த்தாகூட எனக்கு பயமில்லைடா.... ஆனா நீ சொல்ற கதையை கேட்டா எனக்கு பயமாருக்குடா........" என்று தலையில் அடித்துக் கொள்ள

"எல்லாம் உன் ஜிங்லியோட உபயம் தான். காலைலேர்ந்து ஒரு சீரியல் விடல. நானும் ஜிங்லியும் உட்கார்ந்து பார்த்தோம்...... "என்று செழியன் கூற

"ஜிங்லி......." என்று ஆதினி செண்பாம்மாவை முறைக்க

'பயபுள்ள ஏதோ போட்டு குடுத்துடுச்சு போலயே......' என்று நினைத்தவாறே காபியை ஆதினி கையில் கொடுத்த

"நீ சீரியல் பார்த்து கெட்டு போறதுமில்லாம அவனையும் பார்க்க வெச்சு கெடுக்குற....... ஜிங்லி நீ..." என்றவள் காபி பருகியவாறே "ஏன்டா எரும அவங்கதான் சீரியல் சினிமான்னு பார்க்கிறாங்க உனக்கென்ன ...." என்று ஆதினி செழியனை கடிந்தக் கொள்ள

"ம்க்கூம்..... சீரியல் பார்த்து இவன் கெட்டு போகாம இருந்து மட்டும் என்னப் பண்ணப் போறான் பப்ளூ அதுவே ஆவி அது சினிமா பார்த்தா என்ன....? சீரியல் பார்த்தா என்ன ....? நானும் சும்மாதான் இருந்தேன்‌. அதான் போட்டு பார்த்துட்டு இருந்தேன். இவனும் பக்கத்துலயே ஒக்காந்திருந்தான் பப்ளூ .... ஆனா ஆவியோட சேர்ந்து சீரியல் பார்த்த ஒரே ஆளு நானா தான் இருப்பேன்...... ஏன் பப்ளு கின்னஸ் ரெக்கார்டுன்னு சொல்வாங்களே அங்க சொல்லலாமா ..... பரிசெல்லாம் குடுப்பாங்கல்ல......" என்று செண்பாம்மா கூற

குடித்துக் கொண்டிருந்த காபி புரையேறியது ஆதினிக்கு,

சட்டென் ஆதினியின் அருகில் வந்த செழியன் அவள் தலையை தட்டிவிட்டு "பார்த்து குடிக்கமாட்டியா எப்படி புரையேறுது பாரு ...... "

அதற்குள் தண்ணீருடன் வந்த செண்பாம்மா "பப்ளூ மொதல்ல இந்த தண்ணியக் குடி ..."என்று நீரை பருக வைக்க

"பப்புளூவா..... ஆமா .....இது என்ன பேரு ......"என்று செழியன் கேட்க நீரை அருந்திக் கொண்டிருந்த ஆதினிக்கு மேலும் புரைக்கேறி கண்களில் நீர்வழிய இருமிக் கொண்டிருக்க

"என்னாச்சு பப்ளூ ஏன் இப்படி இருமர....." என்று மேலும் தலையைதட்டி விட்டவாறே கேள்வி கேட்க

அவ்வளவுதான் செழியன் சிரித்த சிரிப்பிற்க்கு அளவே இல்லை "பப்ளூவா ....... ஹய்யோ ஹய்யோ...." என வடிவேலு பாணியில் சிரிக்க

"ஜிங்லி.... நான் சொன்னேன்ல பாரு அவன் கிண்டல் செஞ்சி சிரிக்கிறான்...... எல்லாம் உன்னால தான் போ நா உங்க ரெண்டு பேர்கிட்டயும் பேசமாட்டேன் போ......."என்று முறுக்கிக்கொண்டு மேடையைவிட்டு இறங்கி வெளியேற

அவள் பின்னாலேயே சென்ற செழியன் "ஏ.... பப்ளூ நில்லு ..... எங்க போற..... " என்றுஅவளை தொடர்ந்தபடி போனான்.

அதே நேரம் உதயநந்தனின் அலுவலகத்தில் "சார் என்னை விட்ருங்க சார் நான் உண்மையை சொல்லிடுறேன் சார் ..... சார்.... சார்.... நான் சத்தியமா நடந்தது ஒன்னு விடாம சொல்லிடுறேன் சார் ...... "என்று காற்றோடு ஒரு அலறல் கேட்டது.

"ம் ..... சொல்லு..... என்று மிரட்டலாய் உதயன் போட்ட சத்தத்தில் சப்த நாடியும் அடங்கி போய் பயத்திலேயே இறந்துவிடுவோம் என்று அஞ்சி நடுக்கி அவன் கிடக்க
"தேவா ..... இவன் சொல்றத ரெக்கார்ட் பண்ணுங்க....... அவன் பேச வார்த்தையில ஒரு பொய் தெரிஞ்சாலும் போட்டுடுங்க ..... வர்றத நான் ஃபேஸ் பண்ணிக்கிறேன்..... " என்று தன்னுடன் பணிபுரியும் சக அதிகாரியான தேவாவிடம் கட்டைளையிட, அந்த கம்பீரக்குரலில் நடுநடுங்கிக் கொண்டிருந்தான் அந்த விசாரனை கைதி.

தேடல் தொடரும்......
 

Megala Appadurai

Saha Writer
Team
Messages
52
Reaction score
64
Points
18
தேடிப் பார்க்கிறேன் காற்றினிலே.....
அத்தியாயம் - 4
தொலைக்காட்சி பெட்டியில் செய்தியைப் பார்த்துக் கொண்டிருந்த ஆதினியும், செழியனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள....
தொலைக்காட்சியில் உதயனின் வீடியோகாட்சி ஒளிப்பரப்பாகி கொண்டிருந்தது‌.

"கடத்தபட்ட குழந்தையை இரண்டு மணிநேரத்தில் குழந்தையை மீட்ட காவல்துறை துணைகண்காணிப்பாளர் உதயநந்தன் ஐபிஸ் . ஓடும் காரில்லிருந்து குழந்தையை முட்புதருக்குள் கடத்தல்காரர்கள் வீசியதால் பரபரப்பு. குழந்தையை காப்பாற்றி, அவர்களைத்துரத்தி பிடித்து, கடத்தல்காரர்களை முட்புதருக்குள் வீசி அடித்து, புரட்டி எடுத்த காட்சிகள். குழந்தையை மீட்டு பத்திரமாக பெற்றோர்களிடம் ஒப்படைத்தார். பொதுமக்கள் பாராட்டு......" மீண்டும் மீண்டும் அனைத்து ஊடகங்களிலும் இதே செய்தியை ஒளிபரப்பிக் கொண்டிருக்க
செண்பாம்மா இரவு சமையலை முடிந்து எல்லாவற்றையும் ஒதுங்க வைத்துவிட்டு வெளியே வந்த செண்பாம்மா "என்ன பப்ளூ .... இந்த போலீஸ்காரன் இப்புடி போட்டு பொரட்டி எடுக்குறான்...... "என்று முகவாயில் கைவைத்து அதிசயித்து கூற
"அடிக்காம என்ன பண்ணுவாங்க ..... அவனுங்க என்ன செஞ்சிருக்கானுங்க தெரியுமா ஜிங்லி.... ஒரு வயசு குழந்தைய கடத்திருக்கானுங்க பணத்துக்காக..... போலீஸ் கண்டுபிடிச்சு தொரத்தவும், குழந்தைய முள்ளுசெடில தூக்கி வீசிட்டு தப்பிச்சுட்டானுங்க ..... அதான் பொரட்டி எடுக்குது போலீஸ்..... " என்று பெருமை பொங்க கூறியவளை செழியனின் பார்வை அளந்தது.
"அட நாசமா போறவனுங்களா ..... பச்சபுள்ளைய முள்ளுலயா வீசுனானுங்க கம்மனாட்டி பசங்க..... எடுப்பட்ட பையனங்களை அங்கயே துப்பாக்கில சுடாம சும்மா அடிக்கிறான் பாரு......" செண்பாம்மா கொதித்து போய் பேச
ஆதினி அவரைச் சமாதானப்படுத்தினாள். செண்பாம்மா எப்பொழுதும் அமைதியாய் இருப்பவர் குழந்தைகளைப் பற்றிய எந்த ஒரு செய்திக்கும் உணர்ச்சிவசப்பட்டு போவார். ஆதனி குழந்தையாய் இருக்கும் போது ஒரு முறை அவள் தாயாரிடம் விட்டுவிட்டு செண்பாம்மா வீட்டு வேலைகள் பார்த்துக்கொண்டிருக்க ஆதினியின் தாயார் ஆதினியை தோட்டத்தில் விளையாடவிட்டு விட்டு புத்தகத்தில் ஆழ்ந்துவிட
தபால்காரர் வந்துவிட்டு திறந்து வைத்துவிட்டு சென்ற கேட்டின் வழியே விளையாடிக்கொண்டிருந்த ஆதினி விளையாடியவாறே வெளியே வெகு தூரம் சென்றுவிட வேலையை முடித்துவிட்டு வெளியே வந்த செண்பாம்மா ஆதினியைக் காணாமல் தேடயவர் , அப்பொழுது தான் உரைத்தது ஆதினியின் தாயாருக்கு,
அவ்வளவு தான் துடித்துப் போனார் செண்பாம்மா ..... அவர் கதறிய கதறலும் ஒரு நிமிடம் கூட தாமதிக்காது நான்கு புறமும் ஓடி ஓடி தேடி அரை மணிநேரத்தில் அழுதுகொண்டு நின்றிருந்த குழந்தையோடு வந்த செண்பாம்மா தன் மடியை விட்ட ஆதினியை இறக்கவே இல்லை.
குஞ்சை பருந்திடமிருந்து காக்கும் கோழியாய் தன் கைவளைவுக்குள் பொத்திவைத்து அரற்றிக் கொண்டிருந்தவரை யாருமே சமாதானப்படுத்த முடியவில்லை.
அன்று முதல் ஆதினிக்கு முழுமையான தாயாகிப்போனார் செண்பாம்மா.....சாதாரணமாக அமைதியாக இருக்கும் செண்பாம்மா எப்போதும் குழந்தைகளுக்கு ஏதாவது ஒன்று என்றால் துடிதுடித்துப் போய்விடுவார்.

இன்றும் அப்படியே அவர் கொதித்துக் கொண்டிருக்க ஆதினி எழுந்து அவரை சமாதானப்படுத்தினாள் "ஜிங்லி .....உனக்கு இந்த போலீஸ்காரரை பற்றி தெரியாது..... அவனுங்களை எப்படி புரட்டி எடுத்தார் பார்த்தல்ல தப்புன்னு பட்டா பட்டுனு துப்பாக்கி எடுத்து போட்டு தள்ளிடுவாராம் ..... நீ கவலைப்படாதே.... அந்த குழந்தையை பத்திரமா அவங்க அப்பா , அம்மா கிட்ட ஒப்படைச்சிட்டாங்க ..... "என்று அவரை ஆசுவாசப்படுத்தினாள்.

இதையெல்லாம் ஓரமாய் அமர்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த செழியனின் முகத்தில் லேசாய் ஒரு நம்பிக்கைக் கீற்று தோன்றியது.
************************************************

காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகம். இரவு 11 மணி "தேவா........ என்று உதயன் போட்ட சப்தத்தில் மொத்த கட்டிடமும் அதிர ,அவனின் அழைப்பிற்க்கு "சார் ....." என்று விரைப்பாய் ஒரு சல்யூட் வைத்து நின்றான் தேவா.
"தேவா..... இவனுங்களுக்கு கொடுக்குற டீரீட்மெண்ட்ல, மறுபடி அவனுங்களுக்கு தப்பு செய்யனுங்கற எண்ணம் கனவுலக் கூட வரக்கூடாது. ஆனா ஒரு எவிடென்ஸ் இருக்கக்கூடாது..... ஓகே....." என்றவனின் விழிகள் எரிமலைகுழம்பாய் கோபத்தில் சிவந்திருந்து.
"எஸ் ஸார் " என்று தேவா விரைப்பாய் செல்ல ... விடிய விடிய அவர்கள் எந்த ஜென்மத்திலும் இனி குற்றமே செய்யக்கூடாதென நினைக்க வைத்திருந்தான் உதயநந்தன் ஐபிஎஸ்.
காலை பரபரப்பாய் விசாரனை கைதிகளை கோர்ட்டில் ஆஜர் படுத்த தேவா கிளம்பிக் கொண்டிருக்க.......
விடியற்காலை ஐந்துமணிக்கு சென்று விட்டு பத்து மணிக்கு உள்ளே நுழைந்த உதயனை
பத்திரிக்கையாளர்களும் தொலைக்காட்சி ஊடகங்களும் சரமாரியாய் கேள்விக்கணைகளை தொடுத்து கொண்டிருந்தனர்.
"அது எப்படி சார் கொஞ்சம் கூட மனிதநேயம் இல்லாமல் அவங்களை காட்டுமிராண்டி போல அடித்து இருக்கீங்க அவங்க தான் குற்றவாளி என்று நிரூபிக்கப்படும் வரை அவர்களை தண்டிக்கும் உரிமை யாருக்கும் இல்லை, அப்படியிருக்க நீங்கள் முள்ளில் போட்டு புரட்டி எடுத்து எடுத்திருக்கீங்க..... அது சோசியல் மீடியாவில் வைரலாகிட்டு இருக்கு. இது சரி என்று நினைக்கிறீர்களா ...... "என்று கேள்வி எழுப்ப

எல்லோரும் ஆளுக்கொன்க்ஷறாய் கேள்விக் கேட்க எல்லோரையும் நோக்கி தன் ஒற்றைக் கைகளைத் தூக்கி அசைத்து அமைதி என்று சைகையாலையே சொல்ல அந்த இடம் நிசப்தமாகிப் போனது‌.
அந்த கேள்வியை கேட்ட நிருபர் பக்கம் தன் பார்வையைத் திருப்பியவன் "உங்க கண் முன்னாடி உங்க குழந்தையைக் கடத்திட்டுப்போய் கார்லேர்ந்து முள்புதருக்குள் தூக்கி வீசினா..... நீங்க எதுவும் செய்யாம அமைதியா அவன் குற்றவாளியா, நிரபராதியான்னு தீர்ப்பு வரும் வரை வெய்ட் பண்ணுவீங்களா......" என்று கேள்வி எழுப்ப
கேள்வி கேட்ட நிருபர் தன் கண் முன் அவன் குழந்தை வந்து போக வாயடைத்து நின்றான்.
"லுக்...... ஒரு பச்சைக் குழந்தையை நல்லபடியாக மீட்பது ஒன்று தான் எங்கள் நோக்கம். அந்த குழந்தையை முள்ளில் வீசியபோது அதற்கு எப்படி வலித்திருக்கும் என்று இப்போ அவங்களுக்கு புரிஞ்சிருக்கும் ...... இனி எவனும் தப்பு செய்ய பயப்படனும் ..... தட்ஸ் ஆல்......" என்று முடித்துக் கொண்டு விறு விறுவென தனது அலுவலகத்தில் நுழைந்தான். அவன் உள்ளே செல்ல பின்னால் இருந்து கேட்ட கேள்விகள் அவன் முதுகில் தேய்ந்து எதிரொலித்தது.

மருத்துவமனை காலைபரபரப்பை முடித்துக்கொண்டு மதியச் சோம்பலைத் தத்தெடுத்திருந்தது.
"ஏய் .... ஆதினி உண்மையிலேயே ஹீ இஸ் வெரி ஹேன்ட்சம் டீ...... சும்மா என்னா கெத்து பாரேன்..... " என்று சிலாகித்துக் கொண்டிருந்தது நம் உதயநந்தனையே....

"நீ வேற டீ..... ஹேன்ட்சம் இல்லடீ ரோபோ.... ரோபோ எப்படி நடக்குமோ அதுமாதிரி தான் இவனும் இருக்கான். விரைப்பா ..... கில்லில்ல தாமூ கேட்பாறே.... ஏன்டா கஞ்சியை உங்கப்பா சட்டைக்கு மட்டும் போடுறாறா இல்லை தினமும் உள்ள ஒரு கிளாஸ் தள்ளுறாறான்னு அது போலத்தான்டீ கேட்க்த் தோணுது....." என்று குலுங்கி குலுங்கி சிரித்தவாறே அவனைக் கலாய்த்துக் கொண்டிருக்க
"என்னடீ இப்படி சொல்ற..... ஆனாலும் உனக்கு ரொம்ப தைரியம் டீ ..... ஒரு ஐபிஎஸ் ஆபீசரை ரோபோங்குற ...."என்ற ஜனனியிடம்
"அது சாதாரண ரோபோ இல்லடீ .... ரோபோ போலீஸ்......" என்று கூறி நகைக்க ஆதினியின் கைப்பேசி அழகாய் இசைத்தது. அதில் ஒளிர்ந்த புதிய எண்ணைக் கண்டவள் யாராயிருக்கும் என்ற யோசனையுடனே அழைப்பை ஏற்க ....

" மிஸ் ஆதினி......."என்ற கம்பீரக்குரலுக்கு கட்டுப்பட்டவளாய்
"எஸ்...." என்று மறுமொழிக் கூற
"நான் உதயநந்தன்... ..." என்று முடிக்கும் முன்னரே புரிந்துவிட்டது ஆதினிக்கு
"எஸ் ஸார் சொல்லுங்க நானே உங்களை வந்து மீட் பண்ணலான்னு இருந்தேன்......" என்று இவள் கூற
"ஓஓஓ... அப்போ இன்னைக்கு ஈவ்னிங்க என்னை மீட் பண்ணமுடியுமா ..... "என்று கேட்டவனிடம்
வியரத்து விறுவிறுத்துப் போய் பதில் கூறாமல் இருந்தவளை "மிஸ் ஆதினி......
ஸ்டேசனுக்கு வேண்டாம்.... நான் சொல்ற அட்ரஸ்க்கு ஐந்து மணிக்கு வரமுடியுமா..... இல்லை நான் வரவா ...."என்று உதயன் கேட்க

ஜனனியை துணைக்கழைத்துக் கொண்டு சென்று வரலாம் என்று நினைத்தவாறே
"வேண்டாம் சார் நானே வர்றேன் ...." என்றவள் மறுமுனையில் அவன் கூறிய முகவரியை குறித்துக் கொண்டவளிடம்
"உங்க ப்ரெண்டை கூட்டிட்டு வரவேண்டாம் மிஸ்.ஆதினி நீங்க மட்டும் வாங்க வெரி கான்பிடென்சியல் ..... "என்று வைத்துவிட
'நான் நினைச்சது இவனுக்கு எப்படி தெரிஞ்சது..... 'என்று முழித்தவாறு நின்றவளை
"என்ன பப்ளு ரோபோ போலீஸ் உன்னை சந்திக்கனுன்னு சொல்றாரா ...... என்று செழியன் குறும்பு சிரிப்புடன் கேட்க
அதே சமயம் "என்னடீ யாரு போன்ல உனக்கேன் இப்படி வேர்த்து ஊத்துது..". என்று ஜனனியும் கேட்க
யாருக்கு பதில் சொல்வதென்று தெரியாமல் விழித்தவள் செழியனை எதுவும் செய்ய முடியாமல் ஜனனியிடம் அந்த " ரோபோ போலீஸ்தான்டீ ........ "என்று கூற
"அதுக்கேன்டீ பேயப் பார்த்தவளாட்டம் இப்படி பயப்படுற....." என்று சவகாசமாய் ஜனனி கேட்க

ஜனனியின் பின்புறமுள்ள இருக்கையில் அமர்ந்திருந்த செழியன் விழுந்து விழுந்து சிரிக்க

'அடேய்..... பேயை கூடவே வெச்சிக்கிட்டு கூட பயப்படலடா ..... ஆனா நீ பண்ற சேட்டை இருக்கே ....... நீ வந்துலேர்ந்து பல்பு வாங்கறதே எனக்கு பொழப்பாப் போச்சு மவனே இருடீ உனக்கிருக்கு .....' என்று மனதிற்க்குள் கூறிக்கொண்டு பெருமூச்சு விட
ஜனனியோ இவளைப் புரியாது பார்த்தாள்
உதயநத்தனின் சந்திப்பு ஆதினியை என்ன செய்யக் காத்திருக்கிறது.

தொடரும்......
 

Megala Appadurai

Saha Writer
Team
Messages
52
Reaction score
64
Points
18
தேடிப் பார்க்கிறேன் காற்றினிலே.....
அத்தியாயம் - 5
உதயன் சொன்ன முகவரியை நோக்கி ஆதினியின் கார் சென்றுக் கொண்டிருந்தது. ஆதினியின் வசதியை எண்ணியே அவள் வீடும் செல்லும் வழியில் சந்திப்பை ஏற்படித்தியிருப்பானோ என்ற சந்தேகம் ஆதினிக்கு எழுந்தது.
"என்ன பப்ளூ ரோபோ போலீஸை நினைச்சிட்டு இருக்க போலிருக்கு.... இப்போல்லாம் நான் கூட இருக்கிறதயே மறந்துடற ...." என்று நமட்டுச் சிரிப்புடன் கேள்வி கேட்வனை திரும்பி முறைத்த ஆதினி

"ஆஹா .... சார் அப்படியே மறக்குற மாதிரி தான் ஒன்னொனும் பண்றாரு ...... ஏன்டா டேய் உன்னால எப்ப பார்த்தாலும் யார்கிட்டயாவது மாட்டிக்கொண்டு முழிக்கிறதே என் வேலையா போச்சு. இன்னைக்காவது அடக்க ஒடுக்கமா பேசாம வர்ற.... அங்க வந்து, அந்த ரோபோ போலீஸ் முன்னாடி என் மானத்தை வாங்கி வச்ச மகனே என்ன பண்ணுவேன்னு எனக்கு தெரியாது......" என்று ஆதினி பல்லைக் கடிக்க
"அடக்க ஒடுக்கமாவா அதெல்லாம் ஆல்ரெடி என்னை அடக்கம் பண்ணி தான் இருக்குது. இன்னும் எங்க போய் அடக்கம் செய்யறது......"
என்று கூறிய செழியனைப் பார்த்தவள் என்னதான் அவன் அவள் கூடவே இருந்தாலும் அவன் உயிரோடு இல்லை என்கிற நிதர்சனம் அவள் மனதிற்குள் உறைக்க, ஒரு நொடி கலங்கிப் போனாள் அவளின் முக மாற்றத்தை கண்டவன்,
"ஹேய் சும்மா ஜோக் சொன்னேன்டா இதுக்கெல்லாம் போய் யாராவது கலங்கு வாங்கலா..... நான் செத்ததனாலதான் உன் கூட இவ்வளவு தூரம் பழக முடிஞ்சது.... நான் உயிரோட இருந்திருந்தா எனக்கு வைத்தியம் பார்த்து எப்பவோ அனுப்பி இருப்பீங்கல்ல..... இப்போ உன் கூடவே இருக்கேன் தானே.... அதை நினைச்சு ஹாப்பியா இரு...." என்று சூழ்நிலையை சகஜமாக முயன்றான் செழியன்.
"நீ செத்தது நினைச்சு உனக்கு கொஞ்சம் கூட வருத்தமாக இல்லையா டா.... நீ என்கூட இருக்கிறதா நினைச்சு எனக்கு சந்தோஷமாத்தான் இருக்கு ..... ஆனாலும் உன்னை இப்படி பார்க்கும் போது எவ்வளவு வருத்தமா இருக்கும் தெரியுமா...... " என்று ஆதினியின் முகம் சோகமாக..
"போதும் போதும்..... ரொம்ப வருத்தப்படாத..... அந்த ரோபோ போலீஸ் எதுக்கு கூப்பிட்டு இருப்பான்னு நினைக்குற நீ....." என்று பேச்சை மாற்றினான்.
"எனக்கும் தெரியலடா ...... போனாத் தெரியப் போகுது ..... ஆனா நீ கார்லயே இருக்கனும் . அன்றைக்கே அவனுக்கு முன்னாடி அசிங்கப்பட்டு போனேன். ஏதாச்சும் பண்ண ஜிங்லி சொன்ன மாதிரி கொள்ளிக்கட்டையை எடுத்து சொறுகிடுவேன் பார்த்துக்கோ ....." என்று பாதையை பார்த்து வாகனத்தை இயக்கியவாறே பேசிக்கொண்டிருக்க

"அதெல்லாம் முடியாது..... அங்க நீங்க என்ன பேசுறீங்கன்னு எனக்கு தெரியனும். அதனால நானும் உள்ள வருவேன். ஆனா எதுவும் பேசாம அமைதியா இருக்கிறேன்‌...... "என்று தாயிடம் கெஞ்சும் சேயாய் செழியன் கெஞ்ச ....சில நொடிகள் யோசித்தவள்
"சரி ஆனா அங்க எதுவும் சேட்டை செஞ்சு என்னை மாட்டி விட்டுறக்கூடாது, அதுக்கு சரின்னா ஓகே...... " என்றவளிடம்
அவன் சந்தோசமாய் தலையாட்டவும், உதயன் சொன்ன முகவரி வரவும் சரியாய் இருந்தது. காரை ஓரமாய் பார்க் செய்து விட்டு இறங்கியவள். புளூ டூத் காதில் சரியாய் பொருத்திக் கொண்டு கிளம்பினாள்.

அவளின் செய்கையைப் பார்த்து மெல்ல செழியன் சிரிக்க ," சிரிக்காதடா கொரங்கே..... உன்னாலதான் நான் இப்படி எல்லாம் செய்யவேண்டி இருக்கு. நான் பாட்டுக்கு தனியா பேசுனா லூசுன்னு நினைக்கிறாங்க.... இப்போ எப்படி நான் போன்ல பேசுறேன்னு நினைப்பாங்கல்ல......" என்று கையை ஆட்டி அவனை நோக்கி பார்த்து பேசிக்கொண்டே அந்த கட்டிடத்தின் வாயிலை நெருங்க
"ம்க்கூம் ..... ரொம்ப அறிவுதான் போ.... நீ என்னைப் பார்த்து கையை ஆட்டி ஆட்டி பேசுனா லூசுன்னு சொல்லாம ...டைட்டுன்னா சொல்வாங்க..... கேட் வந்துடுச்சு ஏதாச்சும் பேசுறதுன்னா குனிஞ்சிக்கிட்டே .... போன்ல பேசுற மாதிரி பேசு .... ம்ஹும் நீயெல்லாம் எப்படி டாக்கடர்க்கு படிச்சியோ போ......" என்று செழியன் வாற .....
"எல்லாம் என் நேரம் டா ..... " என்றவாறே அவள் அதற்கு மேல் எதுவும் பேசாமல் அங்கே இருந்த காவலாளியிடம் "ஏ எஸ் பி உதயநந்தன் வரச்சொல்லி இருந்தார்..." என்று கூறவும்.
அவர் "வாங்கம்மா நீங்க வந்தா வெய்ட் பண்ணச் சொன்னார் சார். இப்போ வந்துடுவார். நீங்க உள்ளே போங்க....." என்று அவளை உள்ளே அனுமதிக்க

புல்வெலிகளுடன் கூடிய தோட்ட அமைப்பு ஏற்காட்டின் குளுமையில் பூத்திருந்த ரோஜா செடிகள் வரிசையாய் வைக்கப்பட்டிருக்க ... அதைப் பார்த்து ரசித்த செழியன்.
"ஏன் பப்ளூ உங்க வீட்டை விட இது நல்லாருக்கு இல்ல...... எனக்கென்னவோ இந்த இடத்தைப் பாரத்ததும் நேத்து உன் ஜிங்லியும் நானும் ஒரு படம் பார்த்தோம். அதுல ம் .... அவரு பேரென்ன..... ஹான் .... எம். ஜி.ஆருன்னு சொன்னாங்க செண்பாம்மா... காஷ்மீர் ..... ப்யூட்டிபுல் .... காஷ்மீர்ன்னு பாடுவார்.... என்றபடியே அவனும் எம்.ஜி.ஆர் பாணியில் அந்த இடத்தைச் சுற்றி ஓடி ஏற்காட் ப்யூடிபுல் ..... ஏற்காட்.... ஏற்காட் ....... வொன்டர்புல் ....... ஏற்காட்..... ஏற்காட் .... ப்யூட்டிபுல் ...ஏற்காட்.... ஏற்காட்.... வொண்டர்புல் .... ஏற்காட் என்று பாடிய படி அந்த இடத்தையே ஆடி பாடிச் சுற்றி வந்து அவள் அருகில் நிற்க.....

அவள் சுற்றம் மறந்து அவனின் குரும்பில் வாய்விட்டு சிரிக்க......
அவள் சிரிப்பையே பார்த்துக் கொண்டு நின்றவன் திடீரென "பூக்களே..... சற்று ஓய்வெடுங்கள் .... அவன் வந்துவிட்டான் ...., ரோபோ போலீஸ் வந்துவிட்டான்...." என்று சம்பந்தமில்லாமல் பாட
சட்டேன்று சிரிப்பை நிறுத்திவிட்டு அவள் திரும்ப அவளுக்கு வெகு சமீபத்தில் நின்றிருந்தான் உதயநந்தன்.
அருகில் நின்றிருந்த செழியனோ "சமாளி..... சமாளி......"என்று குரல் கொடுக்க
சில நிமிடங்களில் தன்னைச் சுதாரித்துக் கொண்டவள், "ஓகே டீ நான் அப்புறம் பேசுறேன்....." என்று புளூடூத்தில் பேசுவது போல் தன் காதரோ முடியை பின்னுக்கு தள்ளி புளூடூத்தை ஆப் செய்வது போல் செய்து விட்டு " ஹாய் சார் ....." என்று தன் கையை நீட்ட
"அருகில் நின்ற செழியனோ ஆனாலும் உனக்கு ரொம்ப தைரியம் ரோபோ போலீஸ்கிட்டயே கை குடுக்குற....."என்று கவுண்டர் கொடுக்க, செழியனின் குரலில் திகைத்தவள் கை கொடுப்பதா வேண்டாமா என்ற குழம்பி நிற்கும் போதே ....

அவள் மெல்லிய கரத்தை தன் இரும்புகரத்தால் பற்றி "ஹாய் மிஸ். ஆதினி." என்று பற்றி குலுக்க .....' ஹப்பா என்ற முரட்டுத்தனம்' என்று அவள் நினைக்க ... அவனோ 'பூவைத் தொட்டது போல் இவ்வளவு மென்மையாய் இருக்கே ....... 'என்று எண்ணியவாறே விடுவித்து வாங்க உள்ளே போய் பேசலாம் என்றவன் அவளை உள்ளே அழைத்துச் சென்றான்.

வீடு உள்ளேயும் அழகாய் பராமரிக்கப்பட்டிருந்தது. வீட்டைச் சுற்றி பார்வையை அவள் ஓட விட "உட்காருங்க மிஸ். ஆதினி நான் இப்போ வர்றேன்..." என்று அவன் உள்ளே செல்ல

"ஏன் பப்ளூ நம்ம ரோபோ நிறைய லஞ்சம் வாங்குவானோ.... வீடு பெரிசா இருக்கே ....." என்று செழியன் கூற
எப்பொழுதும் உள்ளே சென்றவன் வந்துவிடக்கூடும் என்பதால் விழிகளாலேயே அவனை அடக்கியவள் அமைதியாய் அமர்ந்திருக்க .......
"யப்பா இது உலக நடிப்புடா சாமீ......." என்றவாறு அவளுக்கு எதிர் சோபாவில் அவன் அமரந்துகொண்டே ஆனாலும் இந்த ரோபோ போலீஸ் உன் வாயை இப்படிக் கட்டவேண்டாம்....." என்று சிரிக்க
அவனை பேசமுடியாமல் அவள் முறைத்துக் கொண்டிருக்கும் போதே உதயன் இரண்டு கோப்பைகளில் காபியுடன் வந்தவன் "எடுத்துக்குங்க மிஸ். ஆதினி......" என்று கூறிவிட்டு செழியன் இருந்த சோபாவில் சென்று அமர்ந்தான்.
"தேங்க்யூ சார் ...... " என்றவாறே அவள் காபியை ஒரு மிடறு விழுங்க

"ஆமா பப்ளு ஏன் இந்த போலீஸ் உன்னை மிஸ். ஆதினி , மிஸ். ஆதினின்னு அந்த மிஸ்ஸுல ஒரு அழுத்தம் கொடுத்து கூப்பிடுது..... " என்று செழியன் கேட்டுவைக்க
குடித்த காபி புரையேறியது ஆதினிக்கு .... அவள் புரையேறி இருமி தவிக்க உதயன் "என்னாச்சு மிஸ். ஆதினி...." என்றவாறே எழுந்து வந்து அவளின் தலையைத் தட்டிவிட அந்த அதிர்ச்சியில் மேலும் புரையேறியது ஆதினிக்கு.
உதயன் மளமளவென சமையலறை சென்று நீர் எடுத்து வர
அதற்குள் செழியன் அவள் அருகில் வந்து "அதிர்ச்சி மேல அதிர்ச்சியா இருக்கே பப்ளூ நிஜம்மா என் கேஸ்க்காக கூப்பிட்டானா ..... இல்ல....." என்று நிறுத்தியவனை
ஈஈஈஈ... என்று பல்லைக் கடித்துக் கொண்டு இரண்டு கைகளாலும் கழுத்தை நெறிப்பது போல் செய்ய
அதே நேரம் நீருடன் உதயன் வரவும் "மிஸ். ஆதினி ஆர் யூ ஆல்ரைட் , என்னாச்சு...." என்று கேட்பவனுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் அவன் கையில் இருந்த நீரை வாங்கிப் பருகி தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டவள்,
"நத்திங் ஸார் ..... சொல்லுங்க ...... ஏதாவது தகவல் கிடைத்ததா..... " என்று விசயத்திற்க்கு வர

நிஜம்மா ..... ஒன்னும் பிரச்சினை இல்லையே...... என்று மீண்டும் சந்தேகத்தோடு கேட்ட உதயனிடம்
"இல்லை சார் இந்த சம்பவம் நடந்ததுலேர்ந்தே இப்படித்தான்..... அந்த அதிர்ச்சிலேர்ந்து இன்னும் வெளிய வரமுடியல ஸார் ..... " என்று ஒரு வாரு சமாளிக்க
"ஓகே மிஸ் .ஆதினி நீங்க செழியனை முதன் முதலா எங்கே பார்த்தீங்க...... " என்று கேட்க
'ஏன்டா அன்னைக்கு அவ்வளவு டீட்டெய்லா சொன்னேனேடா ...... திரும்பவும் ஃபர்ஸ்ட்லேர்ந்து வர்ற ......'என்று மனதினுள் நினைத்தவள் செழியனை தான் சந்தித்த முதல் நாளை நினைவுக் கூர்ந்தாள்.
செழியனைப் பற்றி தெரிந்துக் கொண்ட உதயனின் அடுத்த அடி என்னவாயிருக்கும்.

தொடரும் ........
தேடிப் பார்க்கிறேன் காற்றினிலே.......
அத்தியாயம் - 6
"மிஸ். ஆதினி நீங்க ஏறக்கனவே சொன்ன விசயங்கள் தான். நான் எனக்கு தேவையான கேள்வியை மட்டும் கேட்கிறேன். அதுக்கு மட்டும் பதில் சொன்னா போதும். நீங்க சொல்ற பதிலை நான் ரெக்கார்ட் பண்ணிக்குறேன் ஒகே ...."என்ற உதயநந்தன் தன் கைபேசியில் ஆடியோ ரெக்கார்டரை ஆன் செய்து வைக்க
"ம் ..... ஓகே சார் கேளுங்க ...." என்ற ஆதினியிடம்
"நீங்க முதல்ல செழியனை எங்கே எப்போ பார்த்தீங்க.... மிஸ். ஆதினி" என்ற அவனின் கேள்விக்கு
"நான் என் வேலை முடிந்து அன்று என் தோழியுடன் சில புக்ஸ் வாங்கிட்டு கொஞ்சம் லேட்டா தான் சார் கிளம்பினேன். இங்க ஏற்காட்ல தான் என் வீடு. அப்படி வர்ற வழியில தான் ரோட்ல ஆக்ஸிடென்ட் ஆகி அவன் கிடப்பதைப் பார்த்தேன். நான் பார்க்கும் போது அவன் எழ முயற்சி செஞ்சுட்டு இருந்தான். என்னால ஒரு மருத்தவரா பார்த்துட்டு சும்மா போக முடியல.... முதலுதவி செய்துட்டு உடனே என் வண்டியிலயே ஆஸ்பிடல் கொண்டு வந்துட்டேன்......"என்று கூற
"நீங்க ஏன் ஆம்புலன்ஸ்க்கு போன் பண்ணாம உங்க வண்டில கொண்டு வந்தீங்க.....‌மிஸ். ஆதினி." என்று அடுத்த கேள்வியை அவன் கேட்க
"ஸார் .... அவனுக்கு தலையில் பலத்த அடி தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் அவன் உயிருக்கு ஆபத்து. ஒரு மருத்துவரா ஒரு உயிரை காப்பத்துறது என் கடமை அதைத் தான் நான் செஞ்சேன்......" என்றவளை விழிவிலகாமல் பார்த்தவாறே சோபாவில் சாய்ந்து அமர்ந்தவன் கால் மேல் கால் போட்டுத் தோரணையாய் அமர்ந்து தன் மீசையைத் தன் இடது கை விரல்களால் தடவியவன்
"ஓகே.... அங்கே நீங்க அந்த ஆளைப் பார்க்கும் போது அங்கே ஏதாவது வண்டி இருந்ததா.... இல்லை யாராவது இருந்தாங்களா .... எப்படி ஆக்ஸிடென்ட்ன்னு முடிவு செஞ்சீங்க.....?" என்று தன் கேள்வியைத் தொடர

"இல்லை சார் அங்கே அப்போ யாருமஅ இல்ல .... நான் நிறுத்தி அவனுக்கு முதலுதவி செய்யும் போதுதான் இன்னும் சிலர் வந்து உதவி செட்சாங்க... எனக்கு முதல்ல விபத்துன்னு தான் சார் தோன்றியது..... ஆனா இப்போ அப்படித் தோணலை......"என்றவளை
"ஏன்னு தெரிஞ்சுக்கலாமா......" என்றவனை நிமிர்ந்து பார்த்தவள்
"முதல்ல அவனைப் பார்த்தப்போ நான் விபத்துன்னு தான் நினைச்சேன். ஆனா அவனை பற்றிய தகவல்காக நான் அவனை கேட்க்கும் போது அவன் பேர் செழியன்னு சொல்லிட்டு இதை என் கைல மாட்டி விட்டு இதை யார் கேட்டாலும் குடுக்காதீங்க நான் திரும்ப கேட்கும் போது குடுங்கன்னு சொன்னப்போ கூட சரி தங்கமா இருக்கு தொலைஞ்சுட்டா என்ன செய்யறது அதனால அப்படி சொல்றாருன்னு நினைச்சேன். ஆனா அவன் இறந்த பின்னாடி அதுவும் ஏன் கொலை முயற்சியா இருக்கக்கூடாதுன்னு தோணுது. என்று மிக நீளமாய் பேசி முடிக்க,
அவள் பேசுவதையே கூர்ந்து கவனித்து கொண்டிருந்த உதயன் அவள் பேசுவதை கிரகித்துக் கொண்டிருந்தாலும் அவன் உள்ளம் ஆதினியை அணு அணுவாய் ரசித்துக் கொண்டிருந்தது.'என்ன பொண்ணுடா இவ ......
அவ பேசும் போது அசையும் உதடு அழகா இல்லை அவள் உச்சரிக்கும் வார்த்தைகள் அழகா ......' என்று தோன்ற

வழக்கம் போல் அவன் மனசாட்சி 'ஏன்டா வென்று ....... அவ என்ன கவிதையா சொல்லிட்டு இருக்கா வார்த்தை அழகா இருக்க..... ஒருத்தனை கொன்னுட்டாங்கன்னு அந்த பொண்ணு ஃபீல் பண்ணி சொல்லிட்டு இருக்கு இவருக்கு வார்த்தை அழகாம்ல்ல.....' என்று அவனை கழுவி ஊற்ற , அதையெல்லாம் புறம் தள்ளிவிட்டு அவளை ரசித்தவன்,
"அந்த ப்ரேஸ்லெட்டை நான் பார்க்கலாமா மிஸ். ஆதினி...." என்று அவளை கேட்க,
அவளுக்கு அதை எப்படி கழட்டுவது என்ற குழப்பம் ஆனால் கழற்றாமல் அதை அவனிடம் எப்படிக் காட்டுவது என்று அவள் மேலும் குழம்பியவாறு அவனைப் பார்த்தவள் "சார் இதைச் செழியன் என் கைல போடும் போது சொன்ன வார்த்தை இன்னும் என் காதில் ஒலிக்குது சார்..... அதான்" என்று யோசிக்க

"பரவால்லை மிஸ். ஆதினி நான் அப்படியே பார்த்துக்குறேன்......" என்று எழுந்து அவள் அருகில் வர
அவன் எழுந்தவுடன் மரியாதை நிமித்தமாய் இவளும் எழ
"பப்ளூ ...... நீ கழட்டி அவன் கைல குடு அவனை பாரத்துக்கட்டும் ..... அவன் உன்னை பார்க்குற பார்வையே சரியில்லை....... ரோபோ போலீஸ் டெரர் லுக் இப்போ வேற லுக்கா மாறுது......" என்று செழியன் அவளை எச்சரிக்க

இருந்ததால் செழியனின் வார்த்தைகளுக்கு மறுவார்த்தை கூறமுடியாதவள் , செழியன் அணிவித்ததை கழற்ற மனமில்லாமல் அவனை நோக்கி கைகளை நீட்டினாள்.

'ஏன்டா டேய் இத்தனை நாளா எத்தனை கேசை இப்படி விசாரிச்ச நீ...... அது இந்த கேஸ்ல எவ்வளவு முக்கியமான எவிடென்ஸ் ..... அதை வாங்காம நீ அப்படியே பார்க்கப் போறீயா.... நீ எதைப் பார்க்கிறேன்னு நானும் பார்க்குறேன்டீ .... 'என்று அவனை ஏகவசனத்தில் பேச
'அதையெல்லாம் பார்த்தால் காரியம் ஆகாது டா.....' என்று நினைத்தவன். மிஸ் ஆதினி உங்களுக்கு ஆட்சேபணை இல்லேன்னா உங்க கைகளைப் பிடித்து ..... ஐ மீன்.... அந்த ப்ரேஸ்லெட்டை தொட்டு பார்க்கனும் .....
அது எங்கே செய்யப்பட்டதுங்கற விலாசம் இருக்கும் அதையும் நான் ஒரு ஸ்னாப் எடுக்கனும் என்று அவன் கேட்க

"வேண்டாம் ஆது...... நீ அதை கழட்டிக் கொடு அவன்கிட்ட....." என்று செழியன் குரலை உயர்த்திக் கூற
'அப்புடி சொல்லுடி...... ஓஓஓ கையப்புடிக்கனுமா ..... அதுக்குதான் இத்தனை டிராமாவா.... நான்கூட உன்னை என்னமோன்னு நினைச்சேனேடா...... 'என்று உதயனின் மனசாட்சி அவனை கழுவி உற்ற
அவளின் " ம் "என்ற ஒற்றை எழுத்து வார்த்தையே அவனுக்கு போதுமானதாய் இருக்க அவளின் நீட்டிய கரத்தை தன் கரத்தில் ஏந்தினான் உதயநந்தன்.

பற்றிய கரந்தனை கடைசிவரை பற்றியிருப்பானா.... செழியன் அதைப் பார்த்திருப்பானா....?

தொடரும்
 

Megala Appadurai

Saha Writer
Team
Messages
52
Reaction score
64
Points
18
தேடிப் பார்க்கிறேன் காற்றினிலே.....

அத்தியாயம் -7

அவளின் கைகளைப் பற்றியதும் அவனுக்குள் சொல்லமுடியாததொரு உணர்வுகள். இத்தனை நாட்களில் யாரிடமும் தோன்றியிராததொரு புது அனுபவம். 'எத்தனை மென்மையானக் கரங்கள். இவ்வளவு மென்மையாய் இருக்குமா கரமா இல்லை மலர்ச்சரமா..... என்னமோ செய்றாளே என்னை ........ 'அவனுள் ஒரு இன்ப அவஸ்த்தையை அவன் அனுபவிக்க

'டேய்..... உன்னை பட்டிமன்றமா நடத்தச் சொன்னாங்க நீ விசாரிக்க வந்த அதை மறந்துட்டு என்னப் பண்ணிட்டு இருக்க உன்னை எல்லோரும் எவ்வளவு கெத்தா ஃபீல் பண்ணிருக்காங்க..... நீ என்னடான்னா பொம்பளபுள்ள கையைப் புடிச்சு விசாரிச்சிட்டு இருக்க.....'என்று அவன் மனசாட்சி அவனை காறித்துப்ப

டேய் ..... அடங்கு ஏதோ இப்போ தான் என் வாழ்க்கைல இப்படி ஒரு நிகழ்ச்சி நடக்குது. அது உனக்கு பொறுக்கலயா.....என்று மனசாட்சியை அடக்கிவிட்டு அவள் கைகளை தன் ஒரு கரத்தால் தாங்கி மற்றொரு கரத்தால் அந்த ப்ரெஸ்லெட்டை ஆராய்ந்தவன்,

"மிஸ். ஆதினி இதை நான் ஒரு ஸ்நாப் எடுத்துக்கறேன்..... "என்றவாறே அவள் கைகளை பற்றிய வாக்கிலேயே தன் மொபைலில் படம் எடுத்துக் கொண்டிருக்க

"ஆது..... அவனை கையை எடுக்கச் சொல்லு மொதல்ல ..... இவன் ப்ரேஸ்லெட்டை பார்க்கிற மாதிரி தெரில..... நீ அந்த ப்ரெஸ்லெட்டை கழட்டி அவன்கிட்ட குடுன்னு சொல்றேன் கேட்க மாட்டேங்குற.... "என்று செழியன் கோபத்துடன் கூற

செழியனை நிமிர்ந்து பார்த்த ஆதினி கண்களாலேயே அவனிடம் கெஞ்ச உதயனோ அவள் கைகளில் உள்ள ப்ரேஸ்லெட்டை முன்னும் பின்னுமாய் பல படங்களை எடுத்துக் கொண்டவன் .... "ஒகே மிஸ். ஆதினி நீங்க ஆஸ்பிடல்ல சேர்த்தப்போது அவனுக்கு நினைவு இருந்ததா..... ஆஸ்பிடல்ல இருக்கும் போது எப்பவாவது வேற ஏதாவது சொல்லிருக்கானா.... வேற யார்கிட்டயாவது பேசினானா .... "என்று கேட்க



"நான் பார்க்கும் போது நினைவு இருந்தது. அவனைப் பற்றி அவனிடம் கேட்டபோது தன் பேர் செழியனென்றும் இந்த பிரேஸ்லெட்டை என் கையில் போட்டு விட்டு, நான் வந்து கேட்கிறவரைக்கும் இதை யார் கிட்டையும் கொடுக்கக் கூடாதுன்னும் சொன்னான். அதுதான் அவன் பேசிய கடைசி வார்த்தை அதுக்கப்புறம் அவன் பேசல. நான் எடுத்துட்டு போகும் போது அவனுக்கு நினைவு போயிடுச்சு, அதனாலதான் இம்மீடியட்டா ஹாஸ்பிடல்ல சேர்க்கணும்னு நினைச்சு சேர்த்தேன்".



"அதற்கு பிறகு அவனுக்கு ஆபரேஷன் நடந்ததுல அவன் கோமால தான் இருந்தான். இடையில ரெண்டு மூணு தடவை நினைவு வந்த போதும் அவன் பேசவில்லை ஆனால் அவன் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் இருந்தது. கொஞ்சம் கொஞ்சமா நினைவு திரும்பியது. உடல் நிலையும் தேறியது. ஒரு சில நாட்களில் பழைய நிலைக்கு நிலைமைக்கு வந்து விடுவான் என்று தான் நான் நினைத்தேன். நான் போகும்போது அவனை செக் பண்ணிட்டு தான் எப்பவும் போவேன் , ஏன்னா நான் கொண்டுவந்து சேர்த்த பேஷண்ட் அவன் என் பொறுப்புன்னு நான் நினைச்சேன்....."

ஒரு நீண்ட பெருமூச்சை விட்டவள்
"அப்போ அவனோட உடல் நிலைமை ஸ்டேபிலா தான் இருந்தது ஆனால் மறுநாள் காலையில் நான் வந்து பார்க்கும்போது அவன் அங்க இல்ல.... மார்ச்சுவரியில் தான் இருந்தான் ....." என்று கண்கள் கலங்க கூறி முடித்தாள்.

அவள் கண்கள் கலங்குவதை கண்ட செழியன் எழுந்து வந்து அவளருகில் அமர்ந்து அவள் கைகளைப் பற்றிக் கொள்ள .......

அவள் விழிகளில் நீரைக் கண்ட உதயனின் மனதில் அவளை அணைத்து ஆறுதல் படுத்த துடித்த மனதை அடக்கிக் கொண்டு "மிஸ். ஆதினி ஆப்ட்ரால் எ பேசன்ட் ..... நீங்க ஒரு டாக்டர் எத்தனையோ கேஸ் இனிமே இதுபோல் பார்ப்பீங்க.... இதுக்கு போய் கண் கலங்குறீங்க ....." என்று சற்றே நிமிர்ந்து அமர

"உங்களை பொறுத்தவரை அவன் பேசன்ட் ஆனா எனக்கு அப்படி இல்லை சார்.... இனிமேல் இப்படி பேசாதீங்க...." என்று அவள் சிறு கசப்பான குரலில் கூற

"பார்த்து ஒரு பதினைந்து இருபது நாள் நீங்க கேர் எடுத்த பேசன்ட் தான, அதுக்கு ஏன் இவ்வளவு உணர்ச்சி வசப்படுறீங்க..... காம்டவுன் மிஸ். ஆதினி...". என்று கூறிய உதயனை

"உங்களுக்கு சொன்னா புரியாது சார்.... வேற இன்னும் ஏதாவது கேள்வி இருக்கா .... எனக்கு நேரமாகுது.... " என்றவளிடம் மேலும் சில கேள்விகளைக் கேட்டவன்

"ஒகே மிஸ். ஆதினி பர்தரா ... ஏதாவது தகவல் தேவைப்பட்டா உங்களைக் காண்டாக்ட் பண்றேன். உங்களுக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டாலும் காலைல நான் கூப்பிட்ட நம்பர்க்கு கூப்பிடுங்க....." என்றவன் அவளை நோக்கி கைகளை நீட்ட அவளும் அவன் கைப் பற்றி குலுக்கியவள்

"ஒகே சார் தேங்க்யூ ..... சீக்கிரம் நல்லத் தகவலா சொல்லுங்க....." என்றபடியே கிளம்பியவள் முன்னே செல்ல அவளைப் பின் தொடர்ந்தான் உதயன், வாயில் படியைத் தாண்டி வெளியே சென்றவள் சட்டென்று ஏதோ நினைத்தவளாய் நின்று திரும்ப

அதை எதிர்பாராது அவளின் யோசனையில் அவளைத் தொடர்ந்து வந்தவன் மீது அவள் மோதி தடுமாற சட்டென அவளை இடைப் பற்றி கீழே விழாமல் பஞ்சுப் பொதியென இருந்தவளை தன் எஃகு கைகளால் தாங்கிப் பிடித்தான். அவள் கரங்கள் அவன் தோளினை இறுகப் பற்றியிருக்க , ஒரு சில வினாடி ஸ்தம்பித்து போய் இருவிழிகளும் ஒன்றை ஒன்று கவ்விக் கொண்டது.

புடவை அணிந்திருந்தவளின் வெற்றிடையில் அவன் கரம் பதிந்திருக்க ..... அவள் உடலெங்கும் சிலிர்த்து முகம் செம்மையை தடவிக்கொள்ள, தன்னை நிதானித்துக் கொண்டவள் அவன் கரங்களைத் தன் கைகளால் பற்றி அந்த கைகளை விலக்கிவிட, ஒரு சில வினாடிகளேயானாலும் அந்த ஸ்பரிசத்தை விட்டுவிட முடியாமல் தவித்து பின் அவனும் தன் கைகளை எடுத்து அவளை விடுவித்தான்.



"என் போன் ......" என்று அவள் வார்த்தை வராமல் தடுமாற "இருங்க வர்றேன்...." என்றவாறே அவன் உள்ளே சென்று அவள் அமர்ந்திருந்த இடத்தில் அவள் மறந்துவிட்டுருந்த அவளின் கைபேசியை எடுத்தவன் ஒரு நிமிடம் தாமதித்து அதை ஆன் செய்ய அவன் எதிர் பார்த்தது போலவே அது லாக் செய்யப் படாமல் இருக்க சட்டென அதனுள் இருந்த அவளின் புகைப்படங்கள் சிலவற்றை அவன் கைபேசியில் சேமித்துக் கொண்டு அதை எடுத்து வந்து அவளிடம் கொடுத்தான்.



அவர்களை பார்த்துக்கொண்டு நின்ற செழியனுக்கோ கோபம் தலைக்கேற
"ஆது.... நீ வா ..... போலாம் ..... இவன் விசாரணைக்கு கூப்பிட்டானா இல்ல சைட் அடிக்க கூப்பிட்டானான்னு தெரியல..... "என்று கூற அவனின் குரலுக்கு கட்டுபட்டு



"ஓகே தேங்க்யூ ..... " என்றவாறே அவள் கிளம்ப அவளின் பின்னேயே சென்ற தன் மனதை கடிவாளமிட்டு நிறுத்தியவன்

"மிஸ். ஆதினி ஒன் மினிட்...." என்று நிறுத்த

"மொதல்ல அவனை மிஸ் . ஆதினி மிஸ். ஆதினிங்கறதை நிறுத்தச் சொல்லு எரிச்சலா இருக்கு..." என்று செழியன் கடுப்பாகினான்.

"ஆதினின்னு கூப்பிட்டாலே போதும் .... சொல்லுங்க சார் .... "என்று கேட்டவளிடம்

"உங்களுக்கு யார் மேலயாவது ஒரு சின்ன டவுட்டோ இல்லை ஏதாவது தகவலோ கிடைச்சா உடனே எனக்கு போன் பண்ணுங்க .... ஓகே...." என்றவனிடம் விடைப்பெற்று கிளம்பியவளை விழியெடுக்காமல் பாரத்தவன் அவளின் நினைவுகளை தன்மனதில் சேமித்தான்.

செழியனின் இறப்புக்கான மர்மத்தின் முடிச்சை அவிழ்ப்பானா.....?
இல்லை ஆதினியுடன் காதல் முடிச்சிடுவானா.....?





தேடிப் பார்க்கிறேன் காற்றினிலே......

அத்தியாயம் - 8 , 9 ,10 ,11.

"அவன் ரோபோ போலீஸா இல்ல ரோமியோ போலீஸா..... அவன் தான் கேட்குறான்னா நீயும் கைய குடுத்துட்டு நிக்குற.... அதை கழட்டி குடுக்க வேண்டியதுதான ..." என்று கோபமாய் செழியன் கேட்க ....

"நீ போட்டுவிட்டது டா எனக்கு கழட்ட மனசில்ல நீ போடும் போது என்கிட்ட சொன்னது இன்னும் என்காதுல கேட்டுட்டே இருக்கு செழியா ..... அவன் சாதாரணமா தான் பிடிச்சான் நீதான் ஓவரா கோபப் படுற...." என்று கூறி ஆதினியிடம்

"ஓ.... அவன் சாதாரணமா தான் பிடிச்சானா... நீயெல்லாம் என்ன டாக்டர் .... ஒருத்தன் தொடுறதுல இருக்குற வித்தியாசம் கூடவா தெரியல...." என்று கடுக்கடுத்தவனை

"இப்போ நீ ஏன் இவ்வளவு கோபப்படுற ..... அவன் இதைப் பார்த்தா க்ளு கிடைக்குன்னு தான பார்த்தான், நீ ஏன் இப்படி பேசுற போடா .... அவனை பார்த்ததுலேர்ந்தே நீ இப்படிதான் பேசிட்டு இருக்க ...." என்று இவள் முகத்தை திருப்பிக் கொள்ள

"அப்படியா அப்ப சரி இனிமே நான் எதுவும் பேசல .... நீ எப்படி வேணும்னாலும் இரு நான் ஏன் உன்னைக் கேட்கப் போறேன்......" என்றவன் அடுத்த வந்த மூன்று நாட்களாய் ஆதினியிடம் பேசவே இல்லை. முதல் நாள் முழுவதும் அவள் கண்ணில் படாமல் மறைந்திருந்தவன், அவள் அவனைக்காணாது ஏங்கித் தவிக்க அவள் கண்முன் தோன்றினான். அவளும் போடாவென விட்டுப் பிடிக்க செழியன் முறைத்துக் கொண்டே திரிய ஆதினி பொறுமையை இழந்தாள்.

"டேய்... ப்ளீஸ்டா .... என் செல்லமில்ல.... என் புஜ்ஜுல்ல இங்க பாருடா ..... நான் தான் சாரி கேட்டேன்ல்ல மூணுநாளா இப்படி என்கிட்ட பேசாம இருக்க.... எத்தனை தடவை சாரி கேட்டேன்..... ஜிங்லி நீயாச்சும் சொல்லு அவன்கிட்ட ....." என்று செண்பாம்மாவை துணைக்களைக்க

"அவன் கெடக்குறான் லூசுப்பய.... நீ வா பப்ளூ நான் உனக்கு சூடா நவரத்னகுருமாவும் சப்பாத்தியும் போட்டிருக்கேன் வந்து சாப்பிடு வா ..... " என்று அவர் ஆதினியை அழைக்க

"எனக்கு ஒண்ணும் வேண்டாம் .... நீங்களே சாப்பிடுங்க நான் கெளம்புறேன். ஜனனி வெய்ட் பண்ணுவா..... நீ பேசமாட்டதான .... நானும் உங்கூட பேசமாட்டேன் போ..... என் பின்னாடி வந்த .... பேயோட்டுற சாமியாரைக் கூட்டிட்டு வந்து உன்னை ஓட்டிடுவேன்...... " என்று கண்களில் நீர் துளிர்க்க செழினிடம் கூறிவிட்டு கிளம்பிச்செல்ல

செண்பாம்மாவிற்க்கு செழியன் மேல் அளவுகடந்த கோபம் வர "அடேய்... எடுபட்டப் பயலே..... ஏன்டா பப்ளூக்கிட்ட பேசமாட்டேங்குற.... இன்னைக்கு புல்லா உனக்கு டீவி போடமாட்டேன் போ.... போய் பக்கத்து வீட்டுல ஒரு கெழவன் எப்பப்பாரு ஒரு ஓட்ட ரேடியோவ வெச்சிட்டு உக்கார்ந்திருப்பான் அதை கேளு ......" என்று தானாய் பேசிக்கொண்டிருக்க ,



செழியன் ஒன்றுமே கூறாமல் அமைதியாய் அமர்ந்திருந்தவன் ஆதினியின் கார் புறப்படும் சத்தம் கேட்டதும் சட்டென்று அவ்விடம் விட்டு அகல.... அவன் இல்லா வெறுமையை உணர்ந்த செண்பாம்மா

"போய்ட்டானா...... அவ இல்லாம ஒரு நிமிசம் நிக்கறதில்ல இதுல தொரைக்கு கோபம் வேற...." என்று தனக்கு தானே பேசிக் கொண்டே தன் வேலையைத் தொடர்ந்தார்.

ஆதினிக்கு மருத்துவமனை சென்று ஜனனியைப் பார்க்கும் வரை கவலையோடு செல்ல "ஹாய் டா என்னாச்சு .... முகம் டல்லா இருக்கு ...... ஏன் ரோபோ கால் பண்லேன்னு வருத்தமா ..... ? என்று சூழ்நிலை புரியாமல் கேட்டு வைக்க

"அடியேய்.... உன் வாய் இருக்கே உன் வாய் எப்போ எதைப் பேசனும்ன்னு தெரியாதா பக்கி..." என்றபடியே அவளை உள்ளே அழைத்துச்செல்ல

"ஹேய் என்னடீ நாம தான இருக்கோம் இப்போ என்ன உன் பிரச்சினை.... வர வர உன் போக்கே சரியில்ல மொதல்ல உன்னை ஒரு சைக்யாட்ரிஸ்கிட்ட காட்டனும் டூ மச்சா பண்ற ..... " என்ற ஜனனிக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை ஆதினிக்கு ஏனெனில் ஆதினி செழியனின் தற்போதைய நிலையைப் பற்றி எதுவும் தன் தோழியிடம் கூறியிருக்கவில்லை.

எதையும் மறைக்காமல் பகிர்ந்து கொள்ளும் உயிர்த் தோழியுடன் இதை மறைத்துதான் வைத்திருந்தாள். செழியன் இறந்த வரை மட்டுமே ஜனனிக்கு தெரியும். அதற்கு பின் செழியன் தன் கண்ணுக்கு தெரிந்ததை ஜனனிக்கு சொல்லவில்லை ஆதினி. முதலில் தானே நம்பாத ஒரு விசயத்தை எப்படி சொல்வது என்ற தயக்கம். அதன் பின் இதைச் சொன்னால் தன்னை நம்புவார்களா என்ற தயக்கமே ஆதினி இதை மறைக்க காரணம்.

மதியம் வரை நிமிரக்கூட முடியாமல் வேலை அவளை ஆக்கரமிக்க செழியனை மறந்துப் போனாள். அந்த சமயங்களில் செழியன் அவளைத் தொந்தரவு செய்வதில்லை. உணவு நேரம் தாண்டி வெகு நேரம் கழித்தே ஆதினி கேஸை முடிக்க, ஜனனிக்கோ பசிப் பொறுக்க முடியவில்லை. ஆதினி எழுந்து வரவும்



"வாடி பிசாசே..... பசி உயிர் போகுது ......" என்று கடுப்பாய் கூற அப்பொழுதான் தான் உணவையும் எடுக்காது வந்தது நினைவு வந்தது ஆதினிக்கு

"சாரி டா நான் லஞ்ச் எடுத்துட்டு வரல .... இன்னைக்கு வெளியே போய் சாப்பிடவும் முடியாது நான் கேட்டீன் போய் ஏதாவது வாங்கிட்டு வர்றேன் நீ சாப்பிட்டு இரு ..." என்றுவிட்டு ஆதினி கிளம்ப

இவளுக்கு என்னாச்சு என நினைத்தவாறு "இருடீ நானும் வர்றேன்......"
என அவளை வேக எட்டுக்கள் வைத்து அவளை எட்டி பிடித்தவள் "ஹேய் என்னாச்சு நீ காலைலேர்ந்தே சரியில்ல எப்பவும் ஒன்னாதான போவோம்..... இன்னைக்கு நீ மட்டும் போறேன்ங்குற லேட்டானா பரவால்ல... வா வெளியே ஹோட்டல்ல சாப்பிட்டு வரலாம்..... " என்றவாறே ஆதினியை இழுத்துக்கொண்டு ஹோட்டலுக்குள் நுழைந்து இருவருக்குமாய் உணவை ஆர்டர் செய்துவிட்டு காத்திருக்க ..... அப்போது தான் கவனித்தாள் ஜனனி ஏதோ சரியில்லை என்று உணர்ந்தவள்,

"ஆதினி.... உன்கிட்ட உதயநந்தன் சாரோட நம்பர் இருக்கா ..... " என்று கேட்க

"ஏன் டா இருக்கு என்னாச்சு..." எனும் போதே அவள் கைபேசியை வாங்கியவள் அதில் அவனது எண்களை தேட ரோபோ நண்டு என்று அவனது புகைப்படத்துடன் பதிவு செய்திருந்ததை பார்த்தவள் அந்த சிரிப்பு வந்தது ஜனனிக்கு, மெலிதாய் புன்னைக்த்தவாறே அந்த எண்ணை அழைக்க சில நொடிகளுக்கு பின் அழைப்பு எடுக்கப்பட்டு கம்பீரக் குரலால் "சொல்லுங்க ஆதினி..... " என்றவனிடம்

" சார் நான் ஆதினி ஃப்ரெண்ட் ஜனனி பேசுறேன் சார் ..... ரெண்டு நாளா ஆதினியை ஒரு ஆள் ஃபாலோ பண்றானோன்னு எனக்கு சந்தேகமா இருக்கு சார். நேத்துலேர்ந்து அவ பின்னாடி அவளைக் கண்காணிக்கிற மாதிரி தோணுது..... காலைலயும் அவளை கண்காணிச்சான்.... இப்பவும் நாங்க சாப்பிட ஹோட்டல் வந்திருக்கோம்.... இங்கேயும் வந்திருக்கான்.... ஆனா இப்போ கூட இன்னும் ரெண்டு பேர் இருக்காங்க சார்.... எனக்கென்னவோ பயமா இருக்கு......" என்றவளிடம்

"டோன்ட் வொரி மிஸ்‌ . ஜனினி ஏற்கனவே ஆதினியை எங்க டிபார்ட்மெண்ட் ஆளுங்க ஃபாலோ பண்றாங்க...... அவங்க பார்த்துப்பாங்க .... நான் ஏற்கனவே இன்ஸ்ட்ரெக்சன் குடுத்துட்டேன்.... நீங்க இன்னும் ஒரு ஆப்நவர் வெளியே வரவேண்டாம் ..... ஆதினியைப் பார்த்துக்கோங்க ...." என்றவன் "ஜனனி ஆதினிக்கிட்ட மொபைல கொடுங்க ...." என்று கட்டளையிட

ஜனனி கைபேசியை ஆதினியிடம் கொடுக்க ஜனனியின் பேச்சை கேட்டு பதட்டத்தில் இருந்த ஆதினி கைபேசியை வாங்கி "ஹலோ... " என்று கூறியதும்

"ஆதினி ..... நீங்க பயப்பட வேண்டாம்..... என் ஆளுங்க உனக்கு பாதுகாப்பா இருக்காங்க நான் பக்கத்துல தான் இருக்கேன். அவங்களை என் டீம் ஆல்ரெடி ரவுண்ட் அப் பண்ணிட்டாங்க ... சோ நீங்க பயப்படாம இருங்க .... பத்து நிமிசத்துல நான் அங்க இருப்பேன் பீ கேர் ஃபுல்...."என்று உதயனின் மொழிக்கு " ம் " என்ற ஒற்றை வார்த்தையை மட்டும் பதிலாய் கொடுத்துவிட்டு கைபேசியை வைத்தவளுக்கு வியர்த்து வடிந்தது. மனம் செழியனைத் தேடியது. அவனைக் காணவில்லை.

உணவை உணவகப் பணியாளர் வைத்துவிட்டுப் போக அந்த உணவு உள்ளே இறங்கவில்லை இருவருக்குமே.... பெயருக்காய் இருவரும் அதைக் உண்டுக கொண்டிருக்க சட்டென்று ஆதினியின் கை இழுக்கப்பட்டு சிறிது அடுத்த டேபிளில் மோதி நிற்க அவள் அமர்ந்திருந்த நாற்காலியில் பட்டு நாற்காலிக்கு பின் இருந்த கண்ணாடித் தடுப்பு துப்பாக்கி குண்டால் சிலீரென்ற சத்ததுடன் உடைந்து நொறுங்கியது.



அதே வினாடி ஆக்ரோசத்துடன் செழியன் ஆதினியின் கைகொண்டே அவர்கள் அமர்ந்திருந்த மேசைக்கு பின் மேசையில் ஆதினிக்கு எதிர்புறமாய் துப்பாக்கியுடன் இருந்தவனை பதம் பார்த்தான். ஆதினியின் இருகைகளையும் பிடித்து அவனை மாற்றி மாற்றி தாக்க..... ஆதினியின் பூங்கரம், செழியனின் இரும்புகரத்தின் பலத்தோடு அவனை அடித்து, நிலைகுலைய வைத்து நொடியில் துப்பாக்கியை ஆதினியின் கைக்கு கொண்டு வந்திருந்தான்.

தூபபாக்கி இருப்பதென்னவோ ஆதினியின் கையில் தான் ஆனால் அதை பற்றியிருந்து செழியன். துப்பாக்கிச் சத்தத்திலும், அதன் பின் நடந்த ஆதினியின் அதிரடி நடவடிக்கையிலும் ஜனனி ஸ்தம்பித்து போய் எழுந்த நிற்க... சுற்றியிருந்த மக்கள் செய்வதிறியாமல் திகைத்து நிற்க அதற்கு முன்னரே வெளியே இருந்த மூவரை சுற்றி வளைத்திருந்தது போலிஸ், மேலும் நாலைந்து போலீஸ் துப்பாக்கியுடன் தேவாவின் தலைமையில் ஆதினியைத் தாண்டி ஆதினியை கொல்ல முற்பட்டவனின் தலையை டேபிளில் வைத்து அழுத்தி அவன் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் தேவா.

அதற்குள் மற்ற காவலர்கள் அவன் கைகளில் விலங்கை மாட்டியிருக்க...... மிக வேகமான எட்டுக்களுடன் உள்ளே நுழைந்த உதயன் "கார்ட்ஸ் க்ரொவ்ட க்ளியர் பண்ணுங்க ரவுண்ட் அப் திஸ் ப்ளேஸ் இமீடியட்லி ..... " என கர்ஜித்தவாறே பரபரப்பாய் ஆதினையை நெறுங்கியவன் வந்த வேகத்தில் அவள் தோள் மீது கையை வைத்து "ஆர் யூ ஆல் ரைட் ....." தன் பேண்டிலிருந்து கைகுட்டையை எடுத்து அவள் கைகளில் இருந்த கைத்துப்பாக்கியை வாங்க...... இதை எதையும் கவனிக்கும் மனநிலையில் ஆதினி இல்லை.

சில நிமிடங்களில் நடந்து முடிந்த செயல் அத்தனையும் செழியனால் செய்யப்பட்டிருக்க...
பார்பவர்களுக்கு அது ஆதினி செய்ததாய் தோன்றியது. ஜனனியும் நடந்த நிகழ்வுகளை நம்ப முடியாமல் உறைந்து போய் நின்றிருக்க..... செழியன் ஆத்திரத்தோடு அனைத்தையும் பார்த்துக் கொண்டு ஆதினியின் கரம் பற்றி நின்றிருந்தான்.

அதிர்ந்து போய் உடல் நடுங்க நின்றிருந்தவளை ஆது உட்கார் என்று செழியன் உசுப்ப கர கரவென ஆதினியின் கண்களில் இருந்து கண்ணீர் வழிய செழியனை ஏறிட அதே நேரம் ப்ளீஸ் கண்ட்ரோல் யுவர் செல்ஃப் ஆதினி .... என்றபடியே அங்கிருந்த தண்ணிரை எடுத்து ஆதினிக்கு கொடுத்த உதயன் "தேவா டேக் ஹிம் அவே.... " என்று உறும தேவா அவன் சட்டையை கொத்தோடு பற்றி காவல் வாகனத்திற்க்கு இழுத்துச் சென்றான்.

"ஆதினி ப்ளீஸ் உக்காருங்க.... ஜனனி நீங்களும் உக்காருங்க கொஞ்சம் ரிலாக்ஸ்ட் ஆகுங்க ப்ளீஸ் ..... " என்றவாறே அவன் சுற்றிலும் நோட்டம் விட அந்த இடத்தில் இருந்தவர்கள் வெளியே குழுமியிருக்க வெளியே வந்து அவர்களை பார்த்த உதயன் அதில் ஒரு சிலரை மட்டும் இரண்டொரு வார்த்தை விசாரித்து விட்டு அவர்களின் தகவல்களை பெற்றுக் கொண்டு அனுப்புமாறு மற்றொரு காவலருக்கு உத்தரவிட்ட உதயன், உணவக உரிமையாளரிடம் வந்தவன் "சீசி டீவி கேமரா புட்டேஜ் நான் பார்க்கனும்..... ஒரு அரைமணி நேரத்தில் இங்க வருவேன்...... ஹோட்டலுக்கு இன்ஸ்யூர் பண்ணிருக்கீங்களா..." என்ற கேட்டவனிடம்

அவர் தயக்கத்துடன் இல்லையென தலையாட்ட ... ஓகே நான் திரும்ப வந்து சொல்ற வரைக்கும் இங்கேருந்து யாரும் வெளியே போகக் கூடாது ஓகே ... " என்றவன் மேலும் காவலர்களை அழைத்து அங்கே பொறுப்பை ஒப்படைத்து விட்டு ஆதினியை நெருங்கிய உதயன் "ஆதினி கம் லெட்ஸ் கோ....." என்று கூறியது காதில் விழமால் அவள் அப்படியே அமர்ந்திருக்க செழியனால் அவளின் கோலத்தை தாங்க முடியாமல்



"ஆது .... ஒண்ணுமில்லடா ... நான் கூடவே இருக்கேன்டா .... உனக்கும் ஓன்னும் ஆக விடமாட்டேன்டா..... என்று அவளின் பற்றியிருந்த கரங்களை அழுத்தம் கொடுக்க உதயனை ஒட்டியே செழியனும் நின்றிருக்க நிமர்ந்தவள் செழியனின் முகத்தில் தெரிந்த ஆத்திரமும் கோபமும் தனக்காய் தெரிந்த அக்கறையும் , பாசமும் தெரிய,

அருகில் இருந்த உதயனின் முகத்திலும் இம்மியும் குறையாமல் ஆக்ரோசமும், அவளை அள்ளி அணைத்து ஆறுதல் சொல்லமுடியாமல் உள்ள தன் பொறுப்பையும் வெறுத்து அவளை கண்களால் இறைஞ்சியபடி நிற்பவனைக் கண்டு குழம்பிப் போனாள் ஆதினி. அவனின் பரிதவிப்பிற்க்கான அர்த்தம் என்ன புரியாமல் குழம்பிவளை "ஆதினி .." என்று அவள் தோள்பற்றி "எழுந்துருங்க ..."என்று அவள் கைப்பற்றி எழுப்ப குழம்பிப் போனான் செழியன்.

செழியன் ஆதினியின் பற்றிய கையை விடவே இல்லை. ஜனனியையும், ஆதினியையும் தன்னுடைய வாகனத்தில் ஏறச்சொல்ல , தயங்கி நின்ற ஜனனியை பயப்படாம "ஏறுமா கண்டிப்பா ஸ்டேசன்க்கு போகல .... "என்றதும் இருப் பெண்களும் ஏறி அமர, முன்னிருக்கையில் உதயன் ஏறி அமர்ந்து குவாட்டர்ஸ்க்கு விடுங்க.... அப்படியே வழியில ஏதாவது பேக்ரி இருந்தா நிறுத்தி நீங்களே மூணு காபி வாங்கிட்டு வந்துடுங்க... என்று டிரைவரிடம் கூற

அவர் ஓகே சார் என்றவாரே அவர் வாகனத்தை இயக்க அது வேகமெடுத்து. ஆதினியின் கையை பற்றி ஜனனி சமாதானப்படுத்திக் கொண்டிருக்க, செழியன் உதயனையே பார்த்துக் கொண்டிருந்தான், உதயனோ முன்னிருந்த கண்ணாடிவழியே ஆதினியையே பார்த்துக் கொண்டிருக்க அதை பார்த்த செழியனுக்கு இவன் என்ன நினைச்சிட்டு இருக்கான் என்று ஆத்திரமாய் வந்தது.

அடுத்த பத்தாவது நிமிடத்தில் வாகனம் ஒரு ஓரமாய் நிறுத்தப்பட்டு டிரைவர் இறங்கிச் செல்ல இறுக்கையின் மிது கைகளை வைத்து பின்னே திரும்பி உதயன் ஆதினியை நோக்க, அவளோ கண்ணை மூடி சீட்டில் சாய்ந்து தளர்வாய் அமர்ந்திருந்தாள். சில நிமிடங்களில் காபி கப்புகளுடன் வர அதை வாங்கி ஜனனியிடம் ஒன்றைக் கொடுத்துவிட்டு மற்றோன்றை ஆதினியிடம் நீட்டியவாறே "ஆதினி......" என்ற குரல் கொடுக்க, அவன் குரலில் விழித்தவளிடம் சூடா இதை குடி .... கொஞ்சம் பெட்டரா ஃபீல் பண்ணுவ .... என்று அவளிடம் கொடுக்க

ஒன்றும் பேசாமல் காஃபி கப்பை பெற்றுக் கொண்டவள் அவனை நிமிரந்து பார்க்க குடி என்று கண்களாலேயே அவன் சொன்ன சேதி ஆதினிக்கு மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியது. தலையைக் குனிந்து கொண்டு அவள் காபியை அருந்த அவனும் ஒன்றை வாங்கி அருந்திவிட்டு அவர்களிடமும் காலி கப்புகளை வாங்கி அருகில் இருந்த குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு சற்றே ஆசுவாசமடைந்தவனைப் பார்த்து வியந்து நின்றான் செழியன்.

டிரைவர் வந்து மீண்டும் அடுத்த ஐந்து நிமடங்களில் போலீஸ் குவாட்டஸ்க்குள் நுழைந்து வாகனைத்தை நிறுத்த எல்லோரும் கிழே இறங்க "அண்ணே நீங்க சாப்பிடறதுன்னா சாப்பிட்டு வாங்க ஒரு இருபது நிமிசத்துல கிளம்பலாம்....." என்று அவரை அனுப்பியவன் ,

வாங்க ..... என்றவாறே அவர்களோடு நடக்க அந்த அடுக்குமாடி குடியிருப்பில் மூன்றாவது தளத்திற்க்கு அழைத்து சென்றான் ஒரு மாடியில் எட்டு வீடுகள் இருந்தது. அதே போல் ஒவ்வொரு தளமும் இருக்க மூன்றாவது தளத்தில் இருந்த முதல் பிளாட்டை தன்னிடமிருந்த சாவியைக் கொண்டு திறந்தவனின் பின்னே செழியனோடு சேர்த்து மூவரும் நுழைந்தனர்.‌

இரண்டு படுக்கையறையுடன் கூடிய வீட்டில் யாரும் இருப்பதாய் தெரியவில்லை. அமைதியாய் இருந்தது. மூன்று பேர் அமரக்கூடிய பிரம்பினால் ஆன இருக்கையை காட்டி உட்க்காருங்க என்றபடியே உள்ளே சென்றவன் கையில் நீருடன் வந்தான். அவர்களிடம் அதைக் கொடுத்து விட்டு மற்றொரு தனி இருக்கையில் அமர்ந்தவன்.

ஆதினி உனக்கு ப்ரொடக்சனை அதிகப்படுத்தனும் நான் சொல்ற வரைக்கும் நீ ஹாஸ்பிடல் லீவ் போட்டுட்டு என் பாதுகாப்பில இருக்கனும். இதை நான் வேற எங்கயும் வெச்சு சொல்லமுடியாது‌. அதனாலதான் இங்கே கூட்டிட்டு வநந்தேன். உன் பேரண்ட்ஸ்க்கு வேணும்னா நான் இன்பார்ம் பண்றேன் பட் உன்னை ப்ரொக்டக் பண்ண வேண்டியது என் கடமை. நீ புரிஞ்சுக்குவைன்னு நினைக்கிறேன் என்றவன் ஆதினியின் முகத்தையே பார்த்திருக்க அவளோ ஜனனியை ஏறெடுத்துப் பார்த்தாள்.

"அவங்களுக்கு ஆபத்து இல்ல...... அவங்களை நான் ட்ராப் பண்ணிடுறேன். ஆனா ஜனனி நீங்களும் ஆதினி எங்கேன்னு கேட்டா அவங்க தாத்தாவுக்கு உடம்பு சரியில்லை அதனால் திடீர்ன்னு கிளம்பி போனா அப்படீன்னு சொல்லிடுங்க....." என்று கூற , ஆதினிக்கு குழப்பமாய் இருந்தது. ஆனால் செழியனுக்கு அது சரியென்றே பட்டது.

"ஆது..... ஓகே சொல்லுடா..... நான் உன் கூட இருக்கிற வரை உன்னை யாரும் தொடமுடியாது. ஆனால் அது யாருன்னு தெரியனும். அதுக்கு இவர் சொல்றதைக் கேட்டா தான் நடக்கும் ....." சரின்னு சொல்லு என்று அவளிடம் கூற

ஜனனியும் அதையே கூறினாள் "நீ சார் சொல்ற மாதிரி அவர் பாதுகாப்ல இரு கொஞ்ச நாளைக்கு .... " என்றவளிடம்

"அப்பா அம்மாவைக் கூட சமாளிச்சிடலாம். ஆனா செண்பாம்மாவை எப்படி சமாளிக்கிறது..... அவங்க என்னை விட்டுட்டு இருக்க மாட்டாங்கன்னு உனக்கு தெரியாதா ஜனனி ..... "என்று ஆதினி கேள்வி எழுப்ப

"அவங்ககிட்ட ஏதாவது சொல்லி சமாளிக்கலாம் வேற வழி இல்ல என்று ஆதினியின் கையை ஆறுதலாய்ப் பற்றினாள்.

"ஆதினி .... ஒரு நிமிஷம் நான் உங்ககிட்ட தனியா பேசனும் ப்ளீஸ்..... "என்று கேட்டுவிட்டு உதயன் எழுந்து கொள்ள

ஜனனி 'போ ' என்று ஆதினிக்கு கண்களால் சைகை செய்தாள். செழியனோ திருதிருத்தபடி நின்றிருந்தான். அவனை வரக்கூடாதென ஆதினி கண்களாலேயே மொழிய அவன் வருவேனென்று அடம் பிடித்தான். அவனை உறுத்து விழித்து பேசாமல் இங்கேயே இரு என்று மீண்டும் விழியாலே மொழிந்துவிட்டு ஆதினி உதயனின் பின்னே சென்றாள்.

இது செழியனுக்கும், ஆதினிக்கும் அடிக்கடி நடப்பது தான் அவள் வரக்கூடாதென்றுவிட்டால் அங்கே செல்லமாட்டான் செழியன். ஏற்கெனவே உதயனால் மூன்று நாட்கள் செழயன் பேசாமல் இருந்து ஆதினிக்கு வருத்தத்தைத் தந்தது. அதனாலேயே இப்போது தனித்து பேசவேண்டும் என்று உதயன் கேட்டவுடன் செழியனை வரவேண்டாமென கூறினாள்.

இரண்டு அறைகளில் ஒன்றை திறக்க ஆதினி உள்ளே சென்றாள். உதயனும் பின்னே செல்ல கதவை அடைத்தவன் ஒரே எட்டில் அவளை அணுகியவன் அவள் கைகள் இரண்டையும் பற்றிக் கொண்டு ஆதினி ப்ளீஸ் என்னை தப்பா நினைச்சுக்காதே.... என்றவன் அதற்க்கு மேல் தாங்க மாட்டாதவனாய் அவளை இழுத்து அணைத்தவன் அவள் எலும்பே நொறுங்கிவிடும் போலிருந்தது அவனின் அணைப்பு, அதிர்ந்து போய் செய்வதறியாது ஆதினி நிற்க உனக்கு ஒன்னும் ஆக விடமாட்டேன் கண்ணம்மா .... என்றவன்,

அவள் முகத்தினை இரு கைகளாலும் பற்றியவன் "உன்னை முதல்ல பார்த்த அன்றே நான் என்னை பறிக்கொடுத்துட்டேன். நம் இரண்டாவது சந்திப்பின் போது அது உறுதியாச்சு.... ஆனா உன் உயிருக்கு ஒரு ஆபத்துன்னுதும் என் மனம் பட்ட வேதனை .... இனி நீ இல்லாம என் வாழ்க்கையே இல்லேன்னு புரிஞ்சிக்கிட்டேன் கண்ணம்மா ..... நீ என்ன நினைச்சாலும் சரி உன்னை யாருக்கும் என்னால விட்டுக்கொடுக்க முடியாது டீ....." என்று அவன் கூற திகைத்து நின்றாள் ஆதினி.

அதிலும் அவனின் கடைசி வரிகள் அவளின் காதில் மறுபடி மறுபடி ஒலித்தது. "கண்ணம்மா ப்ளீஸ் டீ..... என் தவிப்பை புரிஞ்சுக்கோ ...." என்று அவன் மீண்டும் அணைக்க அவனின் இறுக்கமான அணைப்பில் மூச்சு திணறியது ஆதினிக்கு.

தடுக்க மாட்டாதவளாய் கல்லாய் சமைந்து நின்றவளை சில நிமிட நேரத்தில் விடுவித்தவன் "சாரி ஐம் வெரி சாரி.... உனக்கு பிடிச்சிருக்கா , பிடிக்கலையா என்று கேட்க கூட எனக்கு சந்தர்ப்பம் இல்லாமல் போச்சு..... சத்தியமா உனக்கு பிடிக்கலைன்னா நீ தாராளமா சொல்லலாம், நான் உன்னை தொந்தரவு பண்ணமாட்டேன் ஆனால் இப்போ உனக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டியது என்னோட கடமை புரிஞ்சுக்கோ நான் இப்போ ஸ்டேஷனுக்கு போயே ஆகணும் நான் போகும்போது ஜனனியை ட்ராப் பண்ணிடுறேன். நீ இங்க தனியாதான் இருக்கனும். எவ்வளவு சீக்கிரம் வர முடியுமோ அவ்வளவு சீக்கிரம் நான் வந்துறேன். டோரை நான் வெளிய பூட்டிட்டு போறேன் இங்க உனக்கு சேப்ஃபா இருக்கும் எந்த பயமும் இல்ல......இவ்னிங் வந்து நான் உன்னை உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்.... " என்று அவள் பதிலை எதிர்பாராமல் மளமளவென கதவை திறந்து கொண்டு வெளியே வந்தான் உதயன்.

சில நிமிடங்கள் பிடித்தது ஆதினி சமாளித்துக் கொள்ள அதன் பின் சில நிமிடங்களில் ஜனனியுடன் கிளம்பியவன் அவளை வேறொரு காரிலீ ஆஸ்பிடலுக்கு அனுப்பிவிட்டு அவன் தன் அலுவலகம் வந்து சேர்ந்தான்.

உதயனின் கண்கள் ஆத்திரத்தில் கனன்றுக் கொண்டிருக்க அவனின் கைகளில் அகப்பட்டவன் கண்களிலோ மரணபீதி தெரிந்தது.

"சொல்லு எதுக்காக அந்த பொண்ண கொல்ல முயற்சி பண்ண ..... இன்னும் ரெண்டு நிமிசம் தான் டைம் .... அதுக்குள்ள நீயா சொல்லனும் ..... இல்ல நானா வரவழைப்பேன்.. "என்றவாறே அவனின் வளைத்துப் பிடித்திருந்த கைகளை மேலும் முறுக்க வலி பொறுக்க முடியாமல் அவன் அலறியவாறே

"சார் நான் எந்த தப்பும் பண்ணல சார் நீங்க சொல்ற பொண்ணு யாருன்னே எனக்குத் தெரியாது சார் என்னை விட்டுங்க ..... நீங்க தப்பா புரிஞ்சிக்கிட்டீங்க சார்... " ‌என்று அவன் கதறியவாறே பதிலலிக்க

"எனக்கு பொய் பேசுறவங்களை கண்டாலேப் பிடிக்காது..... என்கிட்டயே நீ பொய் பேசுற ...." என்றவனை அவன் லத்தி பலமாய் பதம் பார்க்க

உதயனின் ருத்தரத்தில் தேவா ஆடிப்போனான்.

உதயனின் கோபம் ஆதினியைக் காக்குமா....?
ஆதினியின் காதல் உதயனுக்கு கிடைக்குமா....?
 

Megala Appadurai

Saha Writer
Team
Messages
52
Reaction score
64
Points
18
தேடிப் பார்க்கிறேன் காற்றறினிலே....

அத்தியாயம் - 12

உதயன் திருமிபி வர இரவு ஒன்பது மணிக்கு மேல் ஆனது...ஆதினியை அழைத்து அவன் சொல்லியிருக்க குளிர்சாதனப் பெட்டியில் இருந்த பிரட்டையும், முட்டையும் வைத்து ப்ரெட் ஆம்லேட் செய்து சாப்பிட்டு விட்டு செழியனுடன் தீவிர யோசனையில் இருந்தாள் ஆதினி.

"ஆது..... ரோபோ போலீஸ் சொல்ற மாதிரி உன் பாதுகாப்பு எனக்கு ரொம்ப முக்கியம்.... எனக்காக உன் உயிருக்கு ஆபத்து வரும்போது நான் பார்த்துட்டு இருக்க முடியாது...." என்னு கவலைப் பட்ட செழியனை சாமாதானப் படுத்தினாள் ஆதினி.

ஆதினி கூட அந்த அதிர்ச்சியில் இருந்து சிறிது மீண்டு விட்டாள்... ஆனால் செழியனால் அதை ஜீரணிக்கவே முடியவில்லை.... உதயன் சென்றதிலிருந்து இப்படியே புலம்பிக் கொண்டு இருந்தவனை என்ன சமாதானம் செய்தும் அவன் சமாதானம் ஆகவில்லை.

உதயனோடு ஆதினி செல்வதாய் உறுதி அளித்த பின்னரே அவன் மனம் சமாதானம் அடைந்தது. அவளை காப்பது தான் பொறுப்பு என்று ஆதினியிடம் கூறினான். செண்பாம்மாவையும் அவளோடு அழைத்துச் செல்ல உதயனிடம் பேசும்படி வற்புறுத்தினான். ஏனெனில் அவன் பார்த்த இந்த சிறிது நாட்களிலேயே செண்பாம்மா ஆதினியை விட்டு பிரிந்து இருந்ததில்லை..... அவள் வர சிறிது நேரம் தாமதம் ஆனாலும் கலங்கிப் போய் வாசலிலேயே காத்திருப்பார்.... அதனால் உதயனிடம் பேசி அவரையும் அவளோடு அழைத்து செல்ல அனுமதிக்கும் படி கேட்க முடிவு செய்தனர் இருவரும்.

உதயன் வரும் போதே ஆதினிக்கும் அவனுக்குமாய் உணவு வாங்கி வர... அவன் ஐந்தே நிமிடத்தில் குளித்து உடைமாற்றி விரைவாய் ஒரு கருப்பு ட்ராக் பேண்டும் இளமஞ்சள் நிற டீசர்டுமாய் வந்தவனை கண்டு ஒருகணம் இமைக்க மறந்து நோக்கினாள்.

அவளின் அவளின் பார்வையை கண்டுகொண்டவன் லேசான புன்முறுவலுடன் "சாப்பிடலாமா நேரம் ஆச்சு .... கிளம்பனும்....." என்று கேட்க.... அதுவரை அவனை வாயைப்பிளந்து பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு சூழ்நிலை உரைக்க சட்டென தலையை குனிந்தபடி எழுந்து சென்று சமையலறையிலிருந்து தட்டும் தண்ணீர் எடுத்து வரும் சாக்கில் சமயலறைக்குள் புகுந்து தன்னை சமனப்படுத்தி கொண்டாள்.

உதயனை பார்த்தாலே ஏனோ எரிச்சல் வருகிறது என்று செழியன் பால்கனி கைப்பிடி சுவற்றில் உட்கார்ந்து வெளியுலகை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததால் இவர்களின் நடவடிக்கை அவனுக்கு தெரியவில்லை.

விரைவாய் உணவை முடித்துக்கொண்டு அவளையும் அழைத்துக்கொண்டு கீழே இறங்கியவன் சுற்றிலும் பார்வையைச் செலுத்திக் கொண்டே அவளை பின்புற வழியாக வெளியே அழைத்து வந்தவன், அங்கு நின்றிருந்த மாருதி ஸ்விப்ட் காரில் அவளை ஏறச்சொன்னவன் சுற்றும் முற்றும் கவனித்தவாறே யாரும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு காரைக் கிளப்பினான்.

தன்னிடமிருந்த கைபேசியை ஆதியிடம் கொடுத்தவன் "இதிலிருந்து வீட்டுக்கு போன் செஞ்சு உங்களுக்கு தேவையான டிரஸ் எடுத்துட்டு.... நான் சொல்ற இடத்துல அவங்கள வந்து வெயிட் பண்ணச் சொல்லுங்க.... நம்ம போகும்போது வாங்கிட்டு போயிடலாம்.... இப்போ நீ வீட்டுக்கு போறது அவ்வளவு பாதுகாப்பில்ல....." என்று காரை வேகமாய் செலுத்தியபடியே பாதையில் இருந்து பார்வையை எடுக்காமலே அவளிடம் கூற....

அவர்கள் கிளம்பும் போது அவர்களுடன் பயணமான செழியன் ஆதினியிடம் "ஆது செண்பாம்மாவையும் கூட்டிட்டு போகலாம்னு கேளு...... அவங்க உன் கூட இருக்கணும்னு சொல்லு...." என்று அவன் எடுத்துக் கொடுக்க

"சார் செண்பாம்மா என்னை விட்டுட்டு இருக்க மாட்டாங்க.... அவங்க எனக்கு என் அம்மாவவிட முக்கியம் .... சோ.... அவங்களையும் என்னோட கூட்டிட்டு போகணும்.... எங்க அப்பா, அம்மா கூட என்னை விட்டுட்டு இருப்பாங்க... ஆனா செண்பாம்மா என்னை விட்டு இருக்கவே மாட்டாங்க ஆஸ்பிடல்ல இருந்து நான் போறதுக்கு கொஞ்சம் லேட்டானாவே துடித்து போய் விடுவாங்க.... இப்போ கூட இவ்வளவு நேரம் வாசலில் நின்னு எனக்கா காத்துக்கிட்டிருப்பாங்க.... அதனால அவங்களயும் சேர்த்து கூட கூட்டிட்டு போலாம்..... அவங்களை விட்டு என்னாலும் இருக்க முடியாது....." என்று அவனை கெஞ்சலாய் கேட்வளை ஒரு நொடி திரும்பி பார்த்தவன்
சில நிமிட யோசனைக்குப் பின்

"சரி என் போன்லேர்ந்து அவங்களுக்கு கூப்பிட்டு ஒரு வாரத்திற்கு தேவையானதை எடுத்திட்டு ரெடியா இருக்கச் சொல்லு..... திரும்ப போன் செய்யும் போது வீட்டில் இருந்து கொஞ்சம் தள்ளி ஏதாவது ஒரு இடத்துக்கு வரச்சொல்லு .....நாம போய் பிக்அப் பண்ணிக்கலாம்.... " என்று கூற....

ஆதினி உதயனின் கைபேசியில் இருந்து செண்பாம்மாவை அழைத்து தாங்கள் சில நாட்கள் வெளியே தங்கவேண்டும் என்றும், தாத்தாவுக்கு உடல்நிலை சரியில்லை அதனால் செல்கிறோம் எனக் கூறிவிட்டு தான் திரும்ப அழைக்கும் பொழுது புறப்பட்டு இரண்டு தெரு தாண்டியுள்ள விநாயகர் கோவில் அருகே நிற்கும்படியும்.... வெளியே யாருக்கும் எங்கே போகிறோம் எனத் தெரியக்கூடாது மிக அவசரம்... வரும் போது தங்களுக்கு தேவையான உடைகளை எடுத்துக் கொண்டு வரும்படி பக்குவமாய் கூறி வைத்துவிட்டாள் ஆதினி.

செண்பாம்மாவிற்க்கு ஒன்றும் புரியவில்லை..... ஆனால் ஆதினியின் குரலிலிருந்தே அவளுக்கு ஏதோ பிரச்சினை இருப்பது போல் பட, மளமளவென ஆதினிக்கும் தனக்கும் தேவையான உடைகளை எடுத்துக்கொண்டு காத்திருக்க அடுத்த அரைமணியில் திரும்ப ஆதினி அழைத்ததும் , ஆதினி சொன்னபடியே வாட்ச்மேனிடமும், அருகில் உள்ள வீட்டினரிடமும் சொல்லிவிட்டு விரைந்து ஆதினி கூறிய கோயில் அருகே வரவும், அதற்கு முன்னரே அங்கு சற்றுத் தொலைவில் காத்திருந்த உதயனின் கார் செண்பாம்மாவை ஏற்றிக் கொண்டு பறந்தது.

காரில் ஏறியதும் செண்பாம்மா ஆதினியின் கையை ஆறுதலாய் பற்றிக்கொள்ள.... சுருக்கமாய் நடந்ததை அவரிடம் அவள் கூற பதறிப் போனார் அவர்

எப்படியும் அவர் பதறிப்போவார் என்று உணரந்த உதயன் " நீங்க பயப்பட வேண்டாம்மா .... ஆதினிக்கு எந்த ஆபத்தும் நெருங்காம பார்த்துக்க வேண்டியது என் பொருப்பு....." என்று கூறியனைப் பார்த்தவர் அவளுக்கு எந்த வித ஆபத்தையும் நெருங்க விடமாட்டேன் என்பது போல் அவளை நெறுங்கி அவளின் கையை இறுகத் தன்னோடு கோர்த்துக் கொண்டு முகம் இறுக அமைதியாய் இருந்தார்.

செண்பாம்மாவின் கவலையை உணர்ந்த செழியன் "ஆது செண்பாம்மா ரொம்ப கவலைப்படுறாங்க பாரு நீ ஏன் சொன்ன..... அவங்களை சமாதானப்படுத்து..." என்று கூறிவன் அவர்களை யாராவது தொடர்கிறார்களா என்று கண்காணிக்க

"ஜிங்லி .... நீங்க என் கூட இருக்கும் வரைக்கும் எனக்கொன்னும் ஆகாது .... கவலைப்படாம வாங்க..." என்று ஆதரவாய் அவர் மேல் தலைசாய்த்துக் கொண்டாள்.

ஏற்காட்டின் மலைக்கிராமங்ளுக்கு நடுவில் அந்த இருட்டில் கார் மிதமான நவேகத்தில் பயணித்தது ஒரு மணிநேர பயணத்திற்க்கு பின் ஒரு மலைக்கிராமத்தில் புகுந்தது. கருகும்மென்ற இருட்டு..... அங்கொன்றும் இங்கொன்றுமாய் ஏதோ ஒரு வெளிச்சப் புள்ளியாய் விளக்கின் ஒளி. மரங்களடர்ந்த பாதையில் பயணித்து ஒரு எஸ்டேட்டினுல் கார் புகுந்தது.

அடர்ந்த இருளில் எந்த இடமென்றே தெரியவில்லை ஆதினிக்கு ஆனால் ஏற்காட்டிலேயே ஒரு மலைக்கிராமம் என்பது மட்டும் நன்றாய் புரிந்தது.

எஸ்டேட்டின் உள் சிறிது தூரம் சென்று ஒரு வீட்டின் முன் காரை நிறுத்தினான் உதயன்‌. அதுவரையிலும் யாரும் ஒரு வார்த்தை பேசவில்லை‌.

காரின் சத்தம் கேட்டு அந்த வீட்டின் விளக்குகள் ஒளிர்விட்டன. அனைவரும் இறங்க.... சுற்றிலும் பார்வையை உதயன் பார்வையை செலுத்திக் கொண்டிருக்க... அதே நேரம் வீட்டின் கதவு திறக்கபட்டு ஒருவர் வெளியே வந்தார்

ஆறடி உயரத்தில் ஆஜானுபாகுவான உடலுடன் நாற்பது வயது மதிக்கதக்க தோற்றத்தில் முறுக்கிவிடப்பட்ட மீசையுடன் கம்பீரமாய் நிற்க "ஹாய் அங்கிள்..… " என உதயன் சினேகமாய் புன்னகைக்க

"ஹாய் யங் மேன் ..... வா... வா... வா..... இப்போதாது வந்தயே நீ...." என்று தன் கம்பீர மீசையைத் தடவியவாறே "வாங்கம்மா.... " என்று ஆதினியையும் செண்பாம்மாவையும் வரவேற்றார்.

"வா ஆதினி ..... வாங்கம்மா..... " என் இருவரையும் அழைத்துக்கொண்டு உதயன் உள்ளே செல்ல ...... அந்த இடத்தில் இப்படி ஒரு வீட்டை எதிர் பார்க்கவில்லை ஆதினி..... முன்னிருந்த வரவேற்பறைதாண்டி ஹாலுக்கு அழைத்துச் சென்றவன், அந்த வீட்டின் உரிமையாளனாய் "உட்காருங்க...." என்று பொதுவாய் உநசரித்துவிட்டு "ஆன்ட்டிக்கு இப்போ பரவாயில்லையா அங்கிள்..." என்று கேள்வி எழுப்ப

"ஷீ இஸ் பைன் மேன்.... " என்றவர் "பலராமா....." என்று குரல் கொடுக்க உள்ளே இருந்து மூன்று டம்ளர்களில் பாலும் வாழைப்பழங்களும் அடங்கிய டிரேயுடன் ஒருவர் வந்தார். தனசேகரன் எப்போதும் உணவு விசயத்தில் சரியாக இருப்பார்.

"நீங்க மாறவே இல்ல அங்கிள்.... என்று சிரித்தபடியே கூறியவனைப் பார்த்து ஆதினி கண்கள் இமைக்க மறந்தன...

ஒரு ஆணின் சிரிப்பு இவ்வளவு வசீகரமாய் இருக்குமா என்ன ...... பளீரென்ற பல்வரிசையே.... அவனுக்கு எந்த கெட்டப்பழக்கங்களும் இல்லை என பறைசாற்ற ..... இமைமுட மறந்தவளை தன் புருவத்தினாலையே என்னவென்று அவன் வினவ ஒன்றுமில்லையென தலையசைத்தவளிடம்
டம்ளரை எடுத்து கொடுத்தவன் , செண்பாம்மாவிடமும் கொடுத்துவிட்டு தானும் ஒன்றை எடுத்துக் கொண்டவன், பழத்தையும் அவ்வாறே கொடுத்துவிட்டு தானும் உண்டு விட்டு பாலைக் குடித்து முடித்தான்.

புன்னையுடன் அவர்கள் அருந்தி முடிக்கும் வரை அமைதியாய் இருந்தவர் ஆதினியை நோக்கி "நான் ரிட்டயர்ட் ஐபிஎஸ் ஆபிசர் தனசேகரன். உதயா ட்ரைனிங் ப்ரியட்ல எனக்கு அறிமுகம்....! அப்போ இருந்து மை பேவரெட் மேன்....." என்றவர்,

"மற்றதெல்லாம் காலைல பேசலாம் ..... இது உங்க வீடு மாதிரிம்மா.... மேல உங்களுக்கு ரூம் ரெடி பண்ணிருக்கு போய் தூங்குங்க... எதுவா இருந்தாலும் காலைல பேசலாம் ‌..... என்று ஆதினியிடம் கூறியவர்,

"மை மேன் ..... உன் ரூம் அப்படியே இருக்கு..... பக்கத்து ரூம் அவங்களுக்கு அவங்க ரூமை காட்டிட்டு, நீயும் போய் தூங்கு காலைல பேசிக்கலாம்..." என்று முடித்துக்கொண்டு எழுந்து கொள்ள....

"ஒகே அங்கிள் குட் நைட்..... ஏற்கனவே ரொம்ப லேட் நீங்க போய் தூங்குங்க....." என்றவன் அவர்களையும் அழைத்துக் கொண்டு மாடிக்கு வந்தவன் இரண்டாவது அறைக் கதவை திறந்து விட்டு இது தான் உங்க ரூம்....என்றவன் " நீங்க ரெஸ்ட் எடுங்க ... " என்றவன்

"ஆதினி ஒரு நிமிசம் உங்க போன் எடுத்துட்டு வர்றீங்களா..." என்று தன் அறைக் கதவை திறக்க

"நீங்க உள்ளே போங்கம்மா ..... நான் வர்றேன்.... "என்று செழியனுக்கும் சேர்த்துக் கூற செண்பாம்மாவுடன் உதயனை முறைத்தவாறே அறைக்குள் சென்றான் செழியன்.

தன் அறைக்குள் நுழைந்தவன் பின்னே ஆதினியும் உள்ளே வர, ஆட்டோமெடிக் கதவு தானாய் பூட்டிக் கொண்டது.

"உட்கார் ஆதினி .... " என்று அவன் கட்டிலைக் காட்ட அந்த அறையை நோட்டம் விட்டவாறே அதில் அமர்ந்தவள் கையில் இருந்த கைபேசியே வாங்கியவன் அதில் இருந்த சிம்கார்டை எடுத்து விட்டு அவன் பாக்கெட்டில் இருந்து ஒன்றை எடுத்து போட்டு அவளிடம் கொடுத்தவன்..... அவளின் சிம்கார்டை பத்திரமாய் தன் பாக்கெட்டில் வைத்துக் கொண்டவன்.

"ஆதினி .... " என்றழைக்க

அவனின் அழைப்பில் இருந்த மாறுபாட்டை உணர்ந்தவள் சட்டென எழுந்து கொள்ள

"நான் சொன்னதை யோசிச்சியா ஆதினி ...." என்றவனை

"இதில் யோசிக்க ஒண்ணுமில்ல..... நான் போறேன் .... செண்பாம்மா திட்டுவாங்க...." என்று வெளியேறப் போனவளின் குறுக்கே கையைக் கட்டிக் கொண்டு நின்றவன்,

"இல்ல.... நீ பொய் சொல்ற.... எனக்கு பொய் பேசினா பிடிக்காது..... "என்று உதயனின் விழிகள் அவளையே உற்று நோக்க அவளோ அவனின் பார்வை வீச்சைத் தாங்க முடியாமல் தலையைத் தாழ்த்திக் கொண்டாள்....

"உண்மையாவே என்னை உனக்கு பிடிக்கலயா ஆதினி.... ஆனா உன் கண்கள் ரெண்டும் என்னை பார்க்கும் போது காதல் மொழி பேசுதே..... அது பொய் சொல்லுதா.... இல்ல நீ பொய் சொல்றீயா..... "என்றவனின் கேள்விக்கு

"நீங்களா ஏதாவது கற்பனை பண்ணிட்டா அதுக்கு நான் பொறுப்பில்லை.... எனக்கு அப்படி எந்த எண்ணமும் இல்ல.... "என்று வெடுக்கென கூறியவளை

"அப்போ இதுக்கென்ன அர்த்தம்...." என அவள் கைபேசியைப் பிடுங்கி அவள் கேலரியில் இருந்த அவன் படத்தை எடுத்த காட்டியவன்.... அதை அருகில் இருந்த படுக்கையில் வீசிவிட்டு.... "இதைவிட நீ என்னை விரும்புறேன்னு நிரூபிக்க இன்னொரு ஆதாரம் காட்டுறேன்.... வா...." என்றவன் சட்டென அவள் இடையை தன் வலிமையான கரங்கொண்டு சேர்த்து வளைத்தவன்..... அவளின் கூந்தலில் தன் கை நுழைத்து அவளின் இதழ்களை வன்மையாய் சிறைப்படிக்க ....

அவனின் இந்த செய்கையை எதிர்பார்த்திராத ஆதினி அவனைத் தடுக்க முயன்று அவனின் முதல் முற்றுகையில் கொஞ்சம் கொஞ்சமாய் மூழ்கிப் போனாள்.

அவன் பெண்ணவளின் இதயத்தை வெல்வானா..... இல்லை எதிரியை வெல்வானா..... ?

தொடரும்......



தேடிப்பார்க்கிறேன் காற்றினிலே,.....

அத்தியாயம் 13

அவனின் ஆழ்ந்த முத்தத்தில் பெண்ணவள் நெகிழ்ந்து கிடக்க.... தன் மீதான காதல் இல்லாமல் இது சாத்தியமில்லை என்று உணர்ந்தவன் அவளின் மீதான காதலில் மேலும், மேலும் அவளின் இதழை சிறையெடுத்தான்.

அங்கே அந்த ஆண்மகனின் காதல் முத்தம் செய்த மாயத்தில் கட்டுண்டு நெகிழ்ந்திருதவள் அவனின் முரட்டுத்தனமான முன்னேற்றத்தின் வலியில் அவளது பெண்மை விழித்துக் கொண்டது.

சட்டென கண்களைத் திறந்தவள், தானும் அவன் மார்ப்பில் கைவைத்து அவனோடு ஒன்றிப் போயிருந்தது உரைக்க மிக அருகாமையில் அவனது முகத்தைக் கண்டவளுக்கு இவ்வளவு நேரமாய் தான் இருந்த நிலையை எண்ணி வெட்கம் வர அவனிடமிருந்து விலக முற்பட்டு அவன் மார்பில் கைவைத்து அவனை உதற....

பூபோன்ற கைகளினால் அவனின் எஃகுப் பிடியைத் தளர்த்த இயலவில்லை. அவளின் முயற்சியைக் கண்டு அவனாய் அவளிதழை விடுத்தானேயொழிய அவளை விடுவிக்கவில்லை.

அவன் தன்னைக் கண்டுக் கொண்டதை நினைத்து வெட்கப்பட்டவள் "ப்ளீஸ் விடுங்க..... நான் போகனும்.... செண்பாம்மா தேடுவாங்க.... "என்றாள்.

அவனின் பிடியை விலக்காமல் அவள் முகவடிவை கண்களால் அளந்தவன் "நான் நிரூபிச்சிட்டேன். பதில் சொல்லிட்டுப் போ.... " என்று மேலும் அவன் பிடி இறுகியது

"பாதுகாப்பு குடுக்குறேன்னு கூட்டிட்டு வந்த பொண்ணுகிட்ட இப்படி நடந்துக்குறதுதா.... எல்லோருக்கும் இப்படித்தான் பாதுகாப்பு குடுப்பீங்களா......." என்ற அவளின் கேள்வியில் இருந்த கிண்டலை ரசித்தவன்.

"எல்லோருக்கும் இப்படி பாதுகாப்பு கொடுக்கமுடியுமா..... என் தேவதைக்கு மட்டும் தான் குடுக்க முடியும்..... இப்போ சொல்லு.. என்னை பிடிக்கலயா....? என்று அவள் முகத்தை நிமிர்த்தி அவள் விழி பார்த்து நேராய் கேட்டான்.

அவன் விழிகளைக் கண்டவள் இத்தனை நாட்கள் அவள் பார்த்த ஐபிஎஸ் உதயனுக்கும் இன்று காதலில் கசிந்துருகி நிற்கும் உதயனுக்கும் உள்ள வேறுபாடு தெரிய "பிடிக்கலேன்னு சொன்னா என்ன செய்றதா உத்தேசம்....." என்று அவனைப் பார்த்து கேட்வளை

'ஹாஹாஹா..... என வாய்விட்டு அவன் சிரிக்க ..... 'டேய் இப்படி சிரிக்காத டா.... நீ சிரிக்காதப்பவே உன்னை பார்க்னும்ன்னு தோணுது .... இப்படி சிரிச்சு என்னை இன்னும் கவுத்துடுவ போலிருக்கே.....' என மனதுக்குள் நினைத்தவள்

அவன் பிடியை தளர்த்தாமல் அவளையேப் பார்த்துக் கொண்டிருக்க.... அவள் மேனி அவன் மேல் உரசிக்கொண்டிருக்க அவஸ்த்தையாய் உணர்ந்தாள் அவள்.

"எனக்கு தெரியல..... இது சரிவருமான்னு..... எங்க அப்பா, அம்மா, தாத்தா.... முக்கியமா செண்பாம்மா இவங்க சம்மதமில்லாம நான் எதுவும் முடிவெடுக்க முடியாது....." என தலைக்குனிந்து நின்றவளை

"நான் கேட்டது என்னை உனக்கு பிடிச்சிருக்கான்னு மட்டுந்தான்..... ஆனா நீ அதையும் தாண்டி யோசிச்சிருக்கும் போதே என் மேல உனக்கு காதல் இருக்குன்னு கன்பார்ம் ஆகிடுச்சு....." என்று நமட்டு சிரிப்பு சிரித்தவனைக் கண்டு தன் உதட்டைக் கடித்துக்கொள்ள

"அது என்ன பாவம் பண்ணிச்சு அதைக் கடிக்கிற....." என்றவாறே தன் பெருவிரலால் அவள் பற்களில் கடிப்பட்டுக் கொண்டிருந்த உதட்டை விடுவித்து தன் விரல்லால் மெல்ல வருடியவன்...

"நீ .... ஏன் யோசிக்கிறேன்னு எனக்கு புரியுது டா..... ஆனா என்னை என்னாலக் கண்ட்ரோல் பண்ணிக்க முடியல..... இத்தனை வருசத்துல எனக்கு யார்மேலயும் இப்படி ஒரு எண்ணம் வந்ததில்லை...... உன்னை பார்த்ததில் இருந்தே எனக்குள் ஒரு சலனம்... ஆனா உனக்கு ஆபத்துன்னு தெரிஞ்சதும் என் மனசு துடிச்சத் துடிப்பு இருக்கே..... இனி ஜென்மத்துக்கும் அந்த நிலை வரக்கூடாது டா..."என்று சற்றே நிதானித்தவன்...

"அப்போ தான் புரிஞ்சது உன்னை நான் விரும்புவது...... உனக்கும் என்னை பிடிச்சிருக்குன்னு என் உள்ளுணர்வு சொல்லிச்சு.... அதனால் தான் உன் அனுமதி இல்லாமலே உன்னை கிஸ் பண்ணேன்...... ஸாரிடா..... " என்று அவன் கேட்கும் போதே அவனுக்கு மன்னிப்பு கேட்டு பழக்கமில்லை என்பதும் அவள் மீது அவன் வைத்திருக்கும் காதலும் புரிய....

அவன் கண்களை நேருக்கு நேராய் பார்த்தவள் "எனக்கு கொஞ்சம் டைம் வேணும்....... நான் யோசிக்கனும். இப்போ இருக்கிற சூழ்நிலைல என்னால இதை யோசிக்க முடியாது...." என்றவள் அவனை ஆழ்ந்து நோக்கியவாறு "ஆனா உங்கள எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு..... அதுக்கு மேல வேற எதுவும் இப்போதைக்கு என்னால சொல்ல முடியாது ப்ளீஸ் கொஞ்ச நாளைக்கு இந்த பேச்சு வேண்டாமே...... " என்று கூற

அவள் தன்னை பிடித்திருக்கிறது என்று சொன்னதே அவனுக்கு போதுமானதாய் இருந்தது..... "எனக்கு இது போதும் இனி உன்னை நான் டிஸ்டர்ப் பண்ண மாட்டேன் தனசேகரன் அங்கிள் உன்னை பாத்துக்குவாரு.... ஆனாலும் வெளியே எங்கேயும் அவர் கிட்ட சொல்லாம நீ போக வேண்டாம்..... அடிக்கடி நான் உன்ன வந்த பாத்துக்குறேன்...... என்னோட நம்பர்ல இருந்து வந்தா மட்டும் நீ போன எடு..... வேறு யாருக்கும் நீ காண்டாக்ட் பண்ண வேண்டாம் கொஞ்ச நாள் மட்டும் தான்..... அதுவரைக்கும் ஜாக்கிரதையா இருக்கணும்....." என்றவாறே அவள் முகத்தை தன் இரு கைகளாலும் பற்றி அவள் நெற்றியில் தன் முத்திரையை பதித்துவிட்டு விடுவித்தான்.

அவள் முகம் வெட்கத்தில் சிவந்திருப்தைக் கண்டவன் அந்த சிவந்த கன்னத்தில் மீண்டும் தன் இதழைப் பதிக்க ..... அவள் பாடு மேலும் திண்டாட்டமாயிற்று.

நிமிர்ந்து அவளால் அவனைக் காணவும் முடியாது அவனிடமிருந்து விலகி ஓடவும் முடியாது சிறைபட்டு நின்றவளின் கையில் அவள் கைபேசியை எடுத்துக் கொடுத்துவிட்டு "போ...." என்று அவன் கூற....

விட்டால் போதுமென்று விழுந்தடித்துக் கொண்டு கதவை திறந்து ஓடியவளைக் கண்டு சிரித்தவாறே அவன் கட்டிலில் விழுந்தான்‌‌.

வெளியே வந்தவள் சற்றே நின்று தன்னைச் சமனப்படுத்திக் கொண்டு தங்களுக்கென ஒதுக்கப்பட்ட அறைக்குள் செல்ல அவளின் குறுக்கே வந்து அவளையே உற்றுப் பார்த்தான் செழியன்.

அவளோ தன்னை மறைக்க படாதபாடு பட்டாள் 'அய்யோ.... டேய்..... உனக்கு பயந்துதான் நான் அந்த ரோபோகிட்ட பேசாம வந்தேன் பயபுள்ள வந்தும் வராததுமா குறுகுறுன்னு பாக்குதே.... அங்க அந்த ரோபோ போலீஸ் திடீர்ன்னு லவ்வுங்குறான்.... இவன் என்னடான்னா அவன்கிட்ட பேசுனாலே முறைக்கிறான்..... என்னதான்டா பண்ணுவேன்.... ஏன்டா ரெண்டு பேரும் எப்போ பாரு என்னை மைண்ட் வாய்ஸ்லயே பேசவெக்கறீங்க...' என்று எண்ணியபடியே 'என்ன....?' என்பது போல் செழியனை ஒரு பார்வை பார்க்க....

அதற்குள் செண்பாம்மா..... ஆதினியை வந்து அணைத்துக் கொண்டு .... "பப்ளூ ..... நீ சொன்னதும் எனக்கு கையும் ஓடல காலும் ஓடல..... அப்பா, அம்மாவுக்கு போன் பண்ணி பேசு வீட்டுக்கு போன் பண்ணுவாங்க....."என்று ஆதங்கப்பட

"ஜிங்லி..... நீங்க பயப்படுற மாதிரி ஒன்னும் நடக்காது.... அப்பாவுக்கு நந்து சார் போன் பண்றேன்னு சொன்னார்..... என்னை யாருக்கும் போன் வேணான்னு சொல்லிருக்காரு... ஜிங்லி...." என்றவளை....

"என்னது நந்து....சாரா ..... "என்று அவளை செழியன் மடக்க

"ஆத்தீ .... இவன் வேற... சிஐடி மாதிரி நோண்டி நோண்டி கேட்பான்....' வேற என்ன மைண்ட் வாய்ஸ்தான்...

"ம் உதயநந்தன் தான் ..... போ .... போய் எங்காயவது போய் சுத்திட்டு காலைல வா எனக்கு தூக்கம் வருது ..... நான் டிரஸ் மாத்தனும்...." என்றதும்

"சரி நான் போறேன்.... ஆனா வர வர உன் நடவடிக்கை சரியில்ல...." என்று முகத்தை தொங்கவைத்தபடியே செழியன் வெளியே சென்றான். இது தான் செழியன் ஆதினி ஒரு கண் அசைவால் வரவேண்டாம் என்றால் வரமாட்டான். அவள் சொல் அவனுக்கு வேதம். அதனாலேயே அவள் கவலைப் பட்டாள்.

செழியன் ஆதினி கண்களுக்கு தெரிவது அவள் உயிர் தோழி ஜனனிக்கு கூட தெரியாது. உதயனை கண்ட நாள் முதலாய் அவள் மனதும் சலனப் பட்டிருந்ததும் உண்மையே... ஆனால் அதைவிட செழியன் அவளுக்கு முக்கியமாய் பட்டான்.

அவனுடைய இறப்புக்கு நியாயம் சேர்க்க வேண்டும் என்பதில் ஆதினி உறுதியாய் இருந்தாள். உதயனின் காதலைவிட செழியனின் அன்பு அவளுக்கு விலைமத்திப்பில்லாதது. அதை எதற்காகவும் அவள் விட்டுக்கொடுக்க மாட்டாள்.

அவள் பெற்றோரையும், அவள் தாத்தாவையும் மீறி அவளால் காதல் ஒன்றை நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை. ஆனால் அவனை தான் விரும்புவதை அவனின் ஒற்றை முத்தத்தில் நிரூபித்து விட்டானே. ச்சே.... என்ன நினைத்திருப்பான்....யோசனையோடே தன் உடைகளை எடுத்துக் கொண்டு குளியலறைக்கு சென்றாள்.

அவனை நினைத்து வெக்கத்தில் சிவந்த கன்னங்களையும் தன் உதடுகளையும் தொட்டுப் பார்த்தவள், அவன் முத்தமிட்டது மீண்டும் நினைவு வர .... 'பார்க்க டெரர் பீஸா இருந்துட்டு...... பக்கா ரொமான்ஸ் பீஸா இருக்கானே.... இவனிடம் இருந்து கொஞ்சம் தள்ளியே இருக்கனும். முதல்ல செழியன் கேஸ் முடியட்டும் அதுவரைக்கும் இந்த நந்து பக்கம் தலைவெச்சுப் படுக்ககூடாது.'

'இவன் நந்து இல்ல நண்டு..... பார்த்தப்போ இருந்து நண்டு மாதிரி என் மண்டைக்குள்ளும், மனசுக்குள்ளும் குடைஞ்சுட்டே இருக்கான்....' என்று அலைமோதிய தனது எண்ணங்களுக்கு ஒரு கடிவாளததைப் போட்டுவிட்டு குளித்துவிட்டு வந்தவள் அவனை எண்ணியபடியே உறங்கிப் போனாள்.

அடுத்த அறையில் உதயனின் மனது இறக்கையில்லாமல் பறந்துகொண்டிருந்தது. அதே நேரம் அவளை கொல்ல முயற்சித்தவர்களின் மீது தீராத வன்மம் ஏற்பட்டது.

யோசனையோடு உறங்கி எழுந்தவன் ஆதினி எழும் முன்பே தனசேகரனிடம் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டான். உதயன் எழுந்து கிளம்பியதையும் அவன் கிளம்பும் வரை ஆதினிக்காக அவள் அறையை பார்த்தவாறே அலைமோதியதையும் செழியன் கவனித்துக் கொண்டிருந்தான்.

சிறிது நேரம் தனசேகரனிடம் பேசிக் கொண்டே கிளம்புவதை தாமதப் படுத்தியவன், அதற்கு மேல் தாமதிக்காமல் அவளைப் பார்க்க முடியாத ஏக்கத்திலேயே கிளம்பிச் சென்றான்.

இவன் எதுக்கு இப்படி பார்த்துட்டு போறான். இவன் பார்வையே சரியில்லை..... ஆதினிக்காக பார்க்க வேண்டியதா இருக்கு..... என்று அவளுக்காய் காத்திருந்தான்.

இரவில் தாமதமாய் தூங்கியதால் தாமதமாய் ஆதினி எழ அவளுக்கு முன் எழுந்து குளித்து முடித்து அவள் எழுவதற்க்காய் காத்திருந்தார் செண்பாம்மா. அவருக்கு இது புதிய இடம். சாதாரணமாய் எங்கேயும் செல்லாமல் ஆதினியின் வீடும் ஆதினியுமே சொர்க்கம் என்று வாழ்பவர் செண்பாம்மா.....

புதிய இடம், புதிய மனிதர்கள் என்ன செய்வதென்று புரியாமல் ஆதினி எழுவதற்க்காய் காத்திருந்தார்.

உறக்கம் களைந்து எழுந்தவள் சோம்பல் முறித்தவாறே.... "ஜிங்லி காபி என குரல் கொடுக்க...." திருதிருவென விழித்தபடி திகைத்து நின்ற செண்பாம்மாவை கண்ட ஆதினி

"ஏன் ஜிங்லி இப்படி ஜெர்க் ஆகுற..... என்னாச்சு...." என்றவாறே எழுந்த போதுதான் தான் இருக்கும் இடம் உறைக்க "அய்யோ..... நாம இங்க இருக்கோம்ல .... நான் மறந்துட்டேன் ஜிங்லி சாரி இதோ ஒரு பத்து நிமிடத்தில் குளிச்சிட்டு வந்துடுறேன்...." என்று தன் உடைகளை எடுத்துக் கொண்டு குளியலறைக்கு ஒடினாள் ஆதினி.

"அச்சோ இந்த நண்டு பையன் என்ன நினைப்பான்... இவ்வளவு நேரம் தூங்கிருக்கியேடி ஆதினி..... இந்த ஜிங்லியாச்சும் எழுப்பாது... சாவகாசமா எழுந்து குளிச்சிட்டு உட்கார்ந்து இருக்கு ...." என வாய்விட்டு புலம்பியவள் மளமளவென தன் காலைக் கடன்களைமுடித்துக் கொண்டு வெளியே வந்தாள்.

அவசரமாய் நெற்றியில் ஒரு பொட்டை மட்டும் ஒட்டிக் கொண்டு தலைக்கு குளித்திருந்த கூந்தலை பரவலாய் விட்டு சிறிதாய் இருபுறமும் முடிக்கற்றைகளை எடுத்து ஒரு கிளிப்பில் அடக்கிக் கொண்டு செண்பாம்மாவையும் அழைத்துக்கொண்டு வெளியே வந்தவள் அவன் அறையைப் பார்க்க அது மூடியிருந்தது.

'ஒரு வேளை நண்டும் இன்னும் தூங்குதோ....' என யோசித்தபடியே கீழே வர ... தனசேகரன் சோபாவில் அமர்ந்தபடி பேப்பர் படித்துக்கொண்டிருக்கசோபாவின் மேல் பகுதியில் ஏறி அமர்ந்துகொண்டு செழியனும் அந்த பேப்பரை பார்த்து கொண்டிருக்க அந்த காட்சியை கண்ட அவனுக்கு சிரிப்பு வந்துவிட்டது. வந்த சிரிப்பை உள்ளுக்குள் அடக்கி கொண்டு கீழே இறங்கி வந்தவள் "குட்மார்னிங் அங்கிள்..." என்று கூற

"குட்மார்னிங் டியர்.... வா..வா... வந்து உட்காரு ...." என்றவர் செண்பாம்மாவின் கூச்சத்தை உணர்ந்து "இது உங்க வீடா நினைச்சுக்கோங்க...." என்றவர் "அமரா.... " என்று அழைக்க

சில நொடிகளில் பலராமன் கையில் காபி கோப்பகள் அடங்கி ட்ரேயுடன் வர கூடவே அமரா... என்று அழைக்கபட்ட அமராவதியும் வந்தார்.

காபியை எடுத்து இருவர் கைகளிலும் கொடுத்த அமரவதி "அழகா இருக்கேம்மா உன் பேரென்ன..... "என்று ஆதினியிடம் கேட்க

"ஆதினி..... ஆன்ட்டி.... " என்று பதில் அளித்தவளை பார்த்து புன்னகைத்தவறை



இவங்க தான் இந்த வீட்டின் அரசி ..... என எஜமானி.... திருமதி.அமராவதி தனசேகரன்.... என்று தன் மனைவியை அறிமுகப்படுத்தினார் தனசேகரன்.

செண்பாம்மாவின் நிலையை உணர்ந்த அமராவதி "ஒன்னும் கூச்சப்படாதீங்க அவங்க பேசிட்டு இருக்கட்டும் வாங்க நாம உள்ள போகலாம்.... என செண்பாம்மாவின் கையை அன்பாய் பற்றி அழைத்துச் சென்றார்.

அவரின் அந்த செய்கையை செண்பாம்மாவிற்கு மிகவும் பிடித்துப்போக ஆதியிடம் ஒரு சின்ன தலையசைப்புடன் அமராவதி உடன் உள்ளே சென்றார்.

நடப்பதை எல்லாம் வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருந்தான் செழியன்.

எங்கே போயிருப்பான் இந்த நண்டு ஆளைக் காணோம் ஒரு வேளை கிளம்பிட்டான் போல என்று நினைத்தபடியே அமைதியாய் அமர்ந்து காபி அருந்திக் கொண்டிருந்த ஆதினி "என்ன மேன்..... போன வேகத்தில் திரும்பி வந்துட்ட...." என்ற தனசேகரனின் குரலுக்கு திடுக்கிட்டு நிமிர்ந்து பார்க்க.....

"இல்ல அங்கிள் மொபைல மிஸ் பண்ணிட்டு போயிட்டேன் அதான்.‌..." என்றபடியே ஆதினியை நோக்க

அவனின் பார்வையை கண்டு கொண்ட தனசேகரன் "மொபைல மட்டும்தான் மிஸ் பண்ணியா....." என்று பூடகமாக கேட்டவாரே ஹாஹாஹாவென சப்தமாய் சிரிக்க தர்மசங்கடமாகப் போனது ஆதினிக்கு...

"இருங்க அங்கிள் வர்றேன்...." என்றபடியே இரண்டிரண்டு படிகளாக தாவி அவன் மாடிக்கு செல்ல ஆதியின் மனமும் அவன் பின்னாலேயே தாவிச் சென்றது.

மாடிக்கு அறைக்குச் சென்றவள் தன் பாக்கெட்டில் இருந்த கைபேசியை எடுத்து கையில் வைத்துக் கொண்டு "ஐயோ இவளை பார்கிறதுக்கு என்ன எல்லாம் பொய் சொல்ல வேண்டி இருக்கு...." என தன்னைத்தானே தலையில் அடித்துக் கொண்டு மீண்டும் கீழே இறங்கியவன்..

அழகான வெண்மையில் ஆகாய நிற பூக்கள் அங்கங்கே இருக்க அழகிய சுடிதாருடன், விரித்து விட்ட கூந்தலை, நெற்றியில் ஒற்றை சிறிய பொட்டைத் தவிர எந்த ஒப்பனையும் இல்லாமல் புதிதாய் பூத்த ரோஜாவாய் அமர்ந்திருந்த அவளின் அழகை அள்ளிப் பருகியபடியே நிதானமாய் இறங்கி வந்தான்.

"என்ன மேன் காபிக்கூட குடிக்காம ஆன்டியக்கூட பாரக்காம ஒடுன..... இப்போ மிஸ் பண்ணிட்டேன்னு வந்து நிக்குற....." என்று அவனை மீண்டும் வாற

செழியனுக்கு ஆத்திரமாய் வந்தது "இந்தாளு...எதுக்கு தேவையில்லாம லூசு மாதிரி பேசிட்டு இருக்கான்..." என்று முனகிக் கொண்டே எழுந்து வந்து ஆதினியின் அருகில் வந்து அமர்ந்து கொண்டாள் செழியன்.

பார்வையாலேயே உதயன் ஆதினியிடம் மௌன பாஷை பேசிக்கொண்டிருக்க அவனைக் கண்டவளுக்கு முன்தினம் நடந்தது நினைவில் வந்து மருதாணி இல்லாமலேயே அவள் கன்னத்தைச் சிவக்கவைத்துக் கொண்டிருந்து.

அவளின் முகச் சிவப்பையும் தடுமாற்றத்தையும் உணர்ந்து உதயன் உள்ளுக்குள்ளேயே சிரித்துக்கொண்டவன்

"அதெல்லாம் ஒன்னும் இல்லை அங்கிள்.... நான் கிளம்புறேன்..." என்றவன் மிஸ் ஆதினி என் கூட கொஞ்சம் வாங்க என்று "பை..... அங்கிள்..." என்ற தனசேகரன் விடைபெற்றுக் கொண்டு வெளியேறினான் .

'அச்சச்சோ இவன் வேற கூப்பிடுறானே.... இந்த செழியன் வேற இருக்கான்‌. இவனுங்க ரெண்டு பேருக்கும் நடுவுல மாட்டிகிட்டு பேய் முழிக்கிறதா இருக்கு...... அவன்தான் பேயி ..... அவனே கூலா உட்கார்ந்து இருக்கான்.... நான்தான் இப்படி கிடந்து அவஸ்தைப் படுகிறேன்...' என வழக்கம் போல் அவள் மனதில் பேசிக் கொண்டே அவன் பின்னால் செல்ல .... செழியனும் அவர்களை பின் தொடர்ந்தான்.

வெளியே வந்தவள் ஏற்காட்டின் காலை குளுமையில் அந்த வீட்டின் வாயிலில் அமர்ந்திருந்த பெரிய தோட்டத்தில் அழகழகான மலர்களுக்கிடையே எஃகு சிலையை வைத்தார் போல் கம்பீரமாய் நின்றிருந்த அவனின் தோற்றத்தில் மெய் மறந்து போனாள் ....அவனின் ஒவ்வொரு செய்கையும் அவளை ஏதோ செய்தது.

அருகில் வந்தவள் சற்று எட்ட நின்று "ம்..... "என்று குரல் கொடுக்க அவள் வருவதையே விழியிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தவன்

"நான் இன்னும் இரண்டு, மூன்று நாள் இங்க வர முடியாது..... நீ இங்கே பயமில்லாமல் இருக்கலாம் உன்னோட நம்பருக்கு நான் கால் பண்றேன் ஏதாவது பேசணும்னு என்னோட பர்சனல் நம்பருக்கு கூப்பிடு...." என்றவன் "வேற ஏதாவது சொல்லனுமா என்கிட்ட....." என்று கேட்க

"அப்பா கிட்ட பேசணும் அவருக்கு தெரியப்படுத்தனும்....." என்று என்று கூறியவாறே அருகிலிருந்த மலர் செடிகளின் மீது கைகளை முன்னும் பின்னுமாய் வருடிக் கொண்டிருந்தாள்.

"நான் நேற்றே அவர் கிட்ட கூப்பிட்டு பேசிட்டேன்..... உன் ப்ரெண்ட் ஜனனிக்கிட்ட தான் அவருடைய நம்பர் வாங்கி பேசினேன். இரு அவர்கிட்ட பேசலாம்...." என்றவன் அவன் தந்தைக்கு அழைத்து சில வார்த்தைகள் பேசிவிட்டு அவளிடம் கொடுக்க ..... அவளும் சிறிது நேரம் பேசிவிட்டு மீண்டும் கைபேசியை அவனிடம் கொடுத்தவள்‌

"அப்பா பேசனுமாம்..." என்றதும் மீண்டும் அதை வாங்கி சற்றே தள்ளி நடந்தவாறே பேசிவிட்டு வைத்தவன் அவன் அருகில் வந்து சரி நான் கிளம்பறேன் பார்த்துக்கோ.... அந்த பூக்கள் செய்த பாக்கியம் கூட இந்த உதயா செய்யலையா ..." என்றவன் அவளை விட்டு பிரிய மனமில்லாதவனாய் தன் தலையைக் கோதித் தன்னைக் கட்டுப் படுத்திக்கொண்டு அவளிடம் இருந்து விடைப்பெற்று கிளம்பினான்.

அவன் செல்வதைப் பார்த்துக் கொண்டே அவள் அருகில் வந்த செழியன் "இவன் ரொம்ப ஓவரா போறான் ஆது ..... இவன் பாதுகாப்பு குடுப்பான்னு பார்த்தா இவன்கிட்டேர்ந்து உன்னை பாதுகாக்கறதே என் வேலையா இருக்கு ..... ரோபோ போலீஸ் இப்போ ரோமியோ போலீஸ் ஆகிடுச்சு .... பக்கிபய .... ஏதாச்சும் ஆபீசர் மாதிரியா நடந்துக்குறான் எப்போ பார்த்தாலும் கிலோ கணக்குல ஜொல்லு விட்டுட்டு திரியுறான்.... பார்த்தாலே ஆத்திரம் ஆத்திரமா வருது..... இவரு பெரிய ரொமான்ஸ் ஹீரோன்னு நினைப்பு .... "என ஆத்திரத்தில் பல்லைக் கடிக்க

அவனின் கோபத்தைக் கண்டு விழுந்து விழுந்து சிரித்தாள் ஆதினி ... "ஏன்டா.... அவன் பார்க்கறதுக்கு நீ ஏன் இவ்வளவு கோபப்படுற .... எனக்கொன்னும் அப்படித் தெரியல ..... நீ தேவையில்லாம சந்தேகப்படுற ....." என்று உதயனுக்கு பரிந்து பேசியவளைக் கண்டு அவளை உற்று நோக்கியவன்

"எனகென்னமோ ..... நீ ஓவரா அவனுக்கு சப்போர்ட் பண்றதைப் பார்த்தா அவனை நீயும் சைட் அடிக்கிறீயோன்னு தோணுது ..... அவன் என்ன என்னைவிடவா அழகா இருக்கான் .... "என்று செழியன் பொறாமையில் வார்த்தைகளை கொட்ட

அவனின் கேள்வியைக் கேட்டு அவளின் சிரிப்பு மேலும் அதிகமாகியது.....

தொடரும்......
 

Megala Appadurai

Saha Writer
Team
Messages
52
Reaction score
64
Points
18
அத்தியாயம் -14
ஆதினி உதயனோடு தனசேகரன் வீட்டிற்கு வந்து நான்கு நாட்கள் கடந்து விட்டிருந்தது தனசேகரனின் கண்டிப்பு கலந்த பாசமும், அவரின் மனைவி அமராவதியின் அளவுகடந்த பிரியமும் ஆதினிக்கு மிகவும் பிடித்துப் போனது.
முதலில் தடுமாறிய செண்பாம்மா அமராவதியின் சகஜமான பேச்சில் அந்த வீட்டில் அவரும் சகஜமாகிப் போனார். ஆதினியை கவனித்துக் கொள்வதைத் தவிர வேறு எந்த வித வேலையும் செய்யக் கூடாதென்று தனசேகரன் கட்டளையிட்டாலும் செண்பாம்மாவால் அமைதியாயிருக்க முடியாமல் அவ்வப்போது ஏதாவது செய்து தனசேகரனிடம் மாட்டிக் கொண்டு விழிப்பது ஆதினிக்கு சிரிப்பாயிருந்தது.
அந்த வீட்டையும், அதை ஒட்டிய எஸ்டேட்டையும் சுற்றி வந்தனர் ஆதினியும், செழியனும். தனசேகரனின் கண்டிப்பும், அவரின் விரைப்பும் அவனுக்கு உதயனை நினைவூட்ட அவரைப் போலவே அவரின் செய்கையைத் அவர் அருகிலேயே நின்றுக் கொண்டு செழியன் செய்வது வாடிக்கையானது. பல நேரங்களில் ஆதினி தனசெகரனுடன் இருக்கும் போதே அவ்வாறு செழியன் செய்ய ஆதினியின் பாடு திண்டாட்டமாகிப் போகும்.
அன்றும் அப்படித்தான் அவர் காலையில் வீட்டின் முன்னிருந்த தோட்டத்தில் நடைப் பயிற்சி மேற்கொண்டிருக்க.... விரைப்பாக அவர் நடந்து கொண்டிருக்க அவரைப் போலவே அவர் அருகிலேயே விரைப்பாய் நடந்து வந்த செழியனைக் கண்ட ஆதினிக்கு சிரிப்பை அடக்குவது கடினமாகிப் போனது.
அவள் சிரிப்பை அடக்க முயல்வதைக் கண்ட தனசேகரன் "என்னம்மா..... என்னைப் பார்த்து அப்படி ஒரு சிரிப்பு .... ? என்று கேட்க ஆதினி பதில் சொல்ல முடியாமல் தடுமாறினாள். செழியனை பார்த்து முறைத்தவாறே
"இல்ல அங்கிள்... நீங்க இந்த வயசுலேயும் உடம்பை எவ்வளவு கட்டுக் கோப்பா வெச்சிருக்கீங்க... அதனால தான் அமரா ஆன்ட்டீ உங்களையே சுத்தி வர்றாங்க...." என்று ஒருவாறு சமாளிக்க
"ஹாஹாஹா... "என இடியாய் சிரித்தவாறே.... "நாட்டீ கேர்ள்.... உங்க ஆன்ட்டீ என்னை சுத்தறதை விட அவளைத்தான் நான் சுத்தி சுத்தி வர்றங்கறது தான் உண்மை..." என்று கூற
"ஆமா.... பெருசு பெரிய தங்கப்பதக்கம் சிவாஜி கணேசன் அந்த அம்மா கே ஆர் விஜயா இதுங்க இரண்டும் இன்னும் லவ்ஸ்ஸு பண்ணிட்டு இருக்கிறதைப் பாறேன்...." என்று செழியன் அவரை கேலி செய்து சிரித்தவனைஒரேப் பார்வையில் அவனை அடக்கிய ஆதினி
"உண்மையிலேயே ஆன்ட்டியும் நீங்களும் ரொம்ப கொடுத்து வெச்சவங்க அங்கிள். எத்தனை பேருக்கு இது மாதிரி புரிதலான துணை கிடைக்கும்....." என்று அவள் புன்முறுவல் பூத்தவளை
"உனக்கும் இதே மாதிரி மாப்பிள்ளை கிடைப்பான் கவலைப்படாத ..." என்று அவர் விசமமாய் கூற ஆதினிக்கு வெட்த்தில் முகம் சிவந்தது.
"போங்க அங்கிள்..." என்றவாறே அவள் ஓடிவிட தனசேகரன் தன் நடைப்பயிற்ச்சியைத் தொடர்ந்தார்.
"இப்போ இந்த பெரிசு என்ன சொல்லிச்சுன்னு இவ உள்ள ஓடுறா... ஆது வர வர உன் போக்கே சரியில்ல..... உன்னை கவனிக்கனும்.... அடேய் ரோபோ நீ எங்க வாழ்க்கைல வந்ததுலேர்ந்து ஆது சரியில்லடா.... இருடீ உனக்கொரு நாளைக்கு இருக்கு...." என்று தனக்குத்தானே பேசிக்கொண்டே தனசேகரனைத் தொடர்ந்தான்.
ஆதினி நேராய் தன் அறைக்குச் சென்றவள் அந்த அறையில் இருந்த பால்கனியை அடைந்தாள். இப்பொழுதெல்லாம் தன் தனிமையை இங்கேதான் கழிக்கிறாள் ஆதினி.
பால்கனியில் இருந்து பார்த்தால் ஏற்காட்டின் பச்சைபசேலென்ற அழகு கண்ணுக்கு விருந்தளிக்கும் அந்த வீட்டை ஒட்டி உள்ள எஸ்டேட்டும் ஏற்காட்டின் அடர்ந்த மரங்களும், பறவைகளின் சப்தமும் அவளின் ஏகாந்த தனிமைக்கு ஏதுவாய் இருந்தது.
சற்றே பெரிய அந்த பால்கனியில் வைக்கப்பட்டிருந்த போன்சாய் வகை மரங்களும், வண்ண வண்ண ரோஜாக்களுமாய் அந்த இடத்தை ரம்யமாக்கியது. ரம்மியமான அந்த வேளையை உதயனின் நினைவு மேலும் ரம்யமாக்கியது.
உதயன் சென்றதில் இருந்தே அவனை நினைத்துக் கொண்டு அவனுடன் அவள் இருந்த தருணங்களை எண்ணி மனதினுள் மகிழ்ந்தபடி இந்த மலர்களுடனும் செடி கொடிகளும் பொழுதை கழிப்பது அவளுக்கு சுகமான அனுபவமாய் இருந்தது அவனை நினைக்கையிலேயே வெட்கத்தில் முகம் சிவப்பது கண்ட ஆதினி "என்னை ஏதோ செஞ்சுட்ட டா நீ..." என்று மானசீகமாய் அவனுடன் உரையாடிக்கொண்டிருப்பது வழக்கமாய் போயிற்று.
நான்கு நாட்கள் நான்கு யுகமாய் கழிந்தது அவளுக்கு செழியன் உடன் வழக்கம் போல் அவள் விளையாடிக் கொண்டிருந்தாலும் தானாய் அவள் மனம் உதயனை நாடுவதை அவளால் தடுக்க இயலவில்லை இதுதான் காதல் என்பதா....?
இப்பொழுது கூட தனசேகரன் கூறிய வார்த்தைகளை கேட்டதும் அவள் கண்முன் கம்பீரமான உதயனின் தோற்றமே தோன்றியது அதனாலேயே அவள் வெட்கிச் சிவந்து போனாள். அவன் வரவிற்காய் அவள் மனம் ஏங்கியது.
*******************************
"தேவா..... ஆர் யூ ஸ்யூர்....." என்று தீவிர யோசனையோடு தன் ஒற்றைப் புருவத்தை உயர்த்தி தேவாவைப் பார்த்து உதயநந்தன் கேள்வி கேட்க
"இப்ப கிடைச்சிருக்க இந்த தகவல் நூறு பர்சண்ட் உண்மை சார்.... இதுல ஒரு பர்சண்ட் கூட டவுட் இல்ல...." என்றவாறே தன் கையில் இருந்த லேப்டாப்பை உதயனின் மேஜை மீது வைத்து அதை உயிர்பித்து சில தகவல்களைக் காட்ட காட்ட உதயன் மிகத் தீவிரமாய் அதை பார்த்துக் கொண்டிருந்தான்.
"அப்போ இதுக்காகத்தான் கொலை நடந்திருக்கும்ன்னு சொல்றியா தேவா......" என்று தேவாவைத் திரும்ப கேட்க ....
"அது கன்பார்மா தெரியல சார் ஆனா.... ஆதினி கொலை முயற்சி கண்டிப்பா இதுக்காகதான்ங்கறது என் யூகம்.... ஏன்னா.... "என்று அவன் கூறிய தகவலில் உதயனின் முகத்தில் பலவித உணர்வுக் குவியல்கள்.
'ஆதினி...... உன்னை இதிலிருந்து எப்படியும் காப்பாற்றனும்..... ஒவ்வொரு நொடியும் ஆபத்து உன்னை நெருங்கிட்டு இருக்கு......' என்று நினைத்த உதயனுக்கு தெரியவில்லை ஆபத்து அவள் அருகே வந்துவிட்டதென்று
"தேவா... நீ சொல்றது.... ? என மறுபடியும் கேட்ட உதயனிடம்
"எஸ் சார் உண்மைதான். நான் விசாரிச்சதுல இதுல எதுவும் பொய்யில்ல.... வீடியோ அண்ட் போட்டோ ஆதாரங்களும் இருக்கு. இது உண்மைன்னா நிச்சயமா செழியனும் இதற்காக தான் கொலை செய்யப்பட்டிருக்கனுன்னு நான் நினைக்கிறேன் சார்.
உதயனின் விழிகளில் குழப்ப ரேகை..... "தேவா ..... கேஸ் போற போக்கப் பார்த்தா இது சாதாரணமான ஆளுங்க ஈடுபட்ட மாதிரி தெரியல..... செழியன் கொலையில் நாம எதிர்பார்த்ததை விட மர்மங்கள் நிறைய இருக்கு. ஆதினியிடம் ஏதாவது செழியன் சொல்லியிருக்கலாம்ன்னு நினைச்சு அவளை கொல்ல முயற்சி செஞ்சி இருப்பாங்கன்னு நான் நினைச்சேன் பட் இப்போ நீ சொல்வதை பார்த்தா கேஸோட ட்ராக்கே மாறுது. ஆதினிக்கு அதிக பாதுகாப்பு தேவை..... என்று தன் மீசையை தன் இடக்கரத்தால் ஒற்றை விரலில் மேலேற்றியபடி
"நம்ம கஸ்டடில எடுத்த அவனுங்களுக்கு ட்ரீட்மென்ட் பத்தலேன்னு நினைக்கிறேன். நீ என்ன நினைக்கிற தேவா..." என்று சிறுத்தையின் சிற்றத்துடன் கேட்டவனிடம்.
"நோ .... சார் உங்க ட்ரீட்மெண்ட்ல அவனுங்க சொன்னதெல்லாம் உண்மைதான் சார். அவனுங்களை ஏவியவனை ஸ்மெல் பண்ணியாச்சு சார். அவன் நம்பரை டேரேஸ் பண்ணதுல பெங்களூர்லேர்ந்து வந்துட்டு இருக்கான் சார். அவன் ரீச்சாக இன்னும் இரண்டு மணிநேரம் ஆகும். நீங்க சொன்னா வர்ற வழியிலயே தூக்கிடலாம்..." என்று கூற
"வெல்.... குட்ஜாப் தேவா....." என்றவன் அடுத்த அரைமணிநேரத்தில் வருபவனை வழியிலேயே கைது செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் துரிதகதியில் எடுத்திருந்தான்.
பெங்களூர் சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அவன் சேலம் எல்லையை தொட்ட பத்தாவது நிமிடம் உதயனால் கைது செய்யப்பட்டான். கைது செய்யப்பட்டவன் தன்னை ஸ்டேசனுக்கு கொண்டு செல்வார்கள் என எதிர்பார்த்திருக்க .... உதயனோ வழியிலேயே வண்டியே வேறு திசையில் திருப்பினான்.
"யோவ் ஏசி.... நான் யாருன்னு உனக்கு சரியா தெரியல.... என்கிட்ட மோதினா என்னாகும்ன்னு உனக்கு காட்றேன்ய்யா.... கைது பண்ணா ஸ்டேசன்க்கு கொண்டு போ..... உன் கண்ணாமூச்சி ஆட்டத்தை எங்கிட்ட காட்டாத .... " என்று ஆத்திரப்பட்டவனுக்கு வயது முப்பத்தைந்துக்கு மேல் நாற்பதிற்க்குள் இருக்கும். பார்த்தால் படித்தவனாக, கண்ணியவானாய் தெரிந்தான். ஆனால் அவன் செய்து கொண்டிருக்கும் நிழலுலக வேலைகளை தெரிந்து கொண்டபின் இவனை காவல் நிலையம் கொண்டு சென்றால் என்னாகும் என்பதை நன்கு அறிவான் உதயன்.
அதற்காகவே அவனை கைது செய்யும் முன்னரே உதயன் இந்த கைது நடவடிக்கையை ரகசியமாய் செய்ய முடிவெடுத்திருந்தான்.
உதயன் கண்ணசைக்க வாகனத்திற்கு உள்ளேயே அவனின் கைகள் பின்புறமாக கட்டப்பட்டு, கண்களை துணிக்கொண்டு கட்ட முற்பட, அவனோ கண்களை கட்டவிடாமல் திமிர உதயனின் பிஸ்டல் அவன் நெற்றிப்பொட்டை நெருக்கியது.
பிஸ்டலின் பிடியில் அவன் சற்றே அடங்க அவன் கண்கள் கட்டப்பட்டு ஊரின் ஒதுக்குபுறமான ஆளரவமற்ற பகுதிகளில் பலநிமிடங்கள் பயணித்து பாழடைந்த ஒரு பழைய வீட்டின் முன் நின்றது. வாகனம் வந்து நிற்கும் போதே மறைவிலிருந்து நான்கு காவல்துறை அதிகாரிகள் சீருடையின்றி சாதாரண உடையில் வெளிப்பட்டனர்.
அவனைக் குண்டுக்கட்டாய் இறக்கி அந்த வீட்டினுள் கொண்டு செல்ல , உதயன் எச்சரிக்கையாய் சுற்றிலும் தன் பார்வையை வீசினான். அங்கிருந்த அதிகாரிகள் ஒருவர்
"பக்காவா இருக்கு சார்...." என்றபடியே உதயன் இடம் ஒரு கோப்பை நீக்கிவிட்டு விரைப்பாய் சல்யூட் ஒன்று வைத்து நின்றார்.
சில நொடிகள் அந்தக் கோப்பை புரட்டி பார்த்த அவனது விழிகள் கூர்மையானது "வெரிகுட் ஐசக்.... மிகக் குறைவான நேரத்தில் நிறைய இன்பர்மேஷன் கேதர் பண்ணியிருக்கீங்க.... இந்த சின்சியாரிட்டிக்காகத் தான் உங்ககிட்ட இந்த வேலையை நான் ஒப்படைக்கிறது...." என்று ஐசக் என்று அழைக்கப்பட்டவரின் தோளில் தட்டிக் கொடுத்தான் உதயநந்தன்.
"ஹி இஸ் வெரி டேஞ்சரஸ் பெல்லோ சார். ஊருக்கு ஒரு பேர் வெச்சுட்டு அங்கங்க கண்துடைப்புக்காக ஒரு தொழிலையும் ஏற்படுத்திவிட்டு எல்லா சமூக விரோத செயல்களிலும் ஈடுபடுவது தான் இவனோட வழக்கமே....
"ம் ..... அப்போ மீன் வலையில சிக்கிடுச்சுன்னு சொல்றீங்க..... இல்லையா ஐசக்..." என்று உதயன் கேட்க
"இல்ல சார் மீன் இல்ல சுறாவே மாட்டிருக்கு சார்....." எனறு கூறியவனை பார்த்து மெலிதாய் புன்னகைத்த உதயன்
"அப்போ சுனாமியா மாறி சுறாவை அடிச்சு துவம்சம் செஞ்சிடவேண்டியதுதான் ..... என்ன சொல்றீங்க ஐசக்...."
"எக்ஸாட்லி சார்....." என்று விரைப்பு மாறாமல் உதயனின் கூற்றை வழிமொழிந்தான் ஐசக்.
"அப்போ நம்ம வேலையை ஆரம்பிக்க வேண்டியதுதான்..." என்று விசமமாய் உதடு சிரிக்க உடல் அதற்கு நேர் மாறாய் விரைத்து நிமிர்ந்து கண்களில் தீவிரம் கூடி, அவன் நரம்புகள் விடைத்து முறுக்கியது.
ஆதினியை கொல்ல முயன்றவன் என்றபோதே அவன் கிடைத்த மாத்திரத்திலேயே அவனை உதயனின் துப்பாக்கி பதம் பார்த்திருக்கும். ஆனால் அவனின் பின்னனியில் யார் இருக்கிறார்கள். ஆதினியை கொல்லும் அளவிற்கு என்ன விரோதம் இருக்கமுடியும். செழியனின் கொலையும், ஆதினி கொலை முயற்சியும் எதற்காக என்ற அவிழ்க்கப்படாத முடுச்சுக்களை அவிழ்க்க நினைத்தே அவனை உயிரோடு விட்டிருந்தான் உதயன்‌.
ஆதினிக்கு நேரவிருக்கும் ஆபத்திலிருந்து தப்பிப்பாளா....?
உதயனின் காதல் அவளை காக்குமா....?
 

Megala Appadurai

Saha Writer
Team
Messages
52
Reaction score
64
Points
18
தேடிப் பார்க்கிறேன் காற்றினிலே



அத்தியாயம்-15



இரவு முழுவதும் இடியும், மின்னலுமாய் பேய்மழை பொழிந்திருக்க, விடிய ஆரம்பித்த அந்த நேரத்திலும் நிசப்தத்தைக் கிழித்துக்கொண்டு கோட்டான் தன் கர்ணகொடுரமான குரலால் அலறியது அந்த இளங்காலை நேரத்திலும் அச்சத்தை ஏற்படுத்தியது. இருளை விரட்ட போராடி அதில் வென்று கதிரவன் மெல்ல எட்டி பார்க்க ஆரம்பித்திருந்தான்.

அந்த வீட்டின் ஒர் அறையில் அவன் தலைகிழாய் கட்டித் தொங்கவிடப்பட்டிருக்க அவன் உதடு கிழிந்து உமிழ்நீரோடு அவனது ரத்தமும் கலந்து வழிந்து ஊற்றிக் கொண்டிருந்தது. அரைக்கண்கள் சொருகிய நிலையில் அவன் அரற்றிக் கொண்டிருக்க எதிரே தன் இரையை விரட்டிப்பிடித்து கடித்துக் குதறிக் தன் வேட்டை முடிந்தும் ஆக்ரோசம் குறையாத வேங்கையாய் அமர்ந்திருந்தான் உதயன்.

உதயன் அந்த அறையினுள் பிரவேசித்த கணம் முதலாய் அவனின் ரௌத்திரத்தில் தேவாவும், ஐசக்குமே அதிர்ச்சியில் நடுங்கித் தான் போனார்கள்.

அவன் கண்கள் சினத்திலும், உறங்கா இரவிலும் கோவைபழமாய் சிவந்திருக்க அவனின் கை முஷ்டியில் ரத்தம் அங்கங்கே திட்டுதிட்டாய் உறைந்திருந்தது. அவனை அடிக்கும் போது அவனது பற்கள் பட்டு உதயனின் கைகளிலும் காயங்கள் ஆழமாய் இருந்ததே இவனின் அடி எவ்வாறு இருந்திருக்கும் என ஊர்ஜிதப்படுத்தியது தேவாவிற்கு. அவன் முகத்திலும், உடலிலும் கூட ரத்தம் தெறித்திருந்தது.

உதயனை பொருத்தவரை உண்மையைச் சொல் என்று கேட்டெல்லாம் குற்றவாளிகளை அவன் விசாரிப்பதில்லை. ஒருவன் குற்றவாளி என்று ஊர்ஜிதமாய் தெரிந்த பின்னரே உதயன் அவனை நெருங்குவான். அப்படி அவன் கைது செய்த குற்றவாளிகள் அவனின் ரௌத்திரத்தை கண்டு தங்கள் வாழ்நாளில் இனி ஒரு முறை எந்தவித குற்றமும் செய்துவிடக் கூடாது என்று முடிவு எடுத்த பின்னரே அவனிடம் உண்மையை கூறுவார்கள். அப்படியொரு முடிவை எடுக்கவைத்துவிடுவான் இவன்.

தங்கள் வாழ்நாளின் மிக மிக மோசமான தருணமாய் அவர்களுக்கு அந்நாளைக் காட்டிவிடுவான் உதயன். கொலைக் குற்றங்களுக்கு மன்னிப்பே இல்லை என்பதே உதயனின் கொள்கை. அப்படி ஒரு உயிரை கொன்றவனை அவன் உயிர் எவ்வளவு மதிக்கதக்கதென்று காட்டிவிடுவான்.

இன்றும் அப்படித்தான் நிகழ்ந்துகொண்டிருந்தது. துளிக்கூட சப்தம் வெளியே வராத வண்ணம் வாய் இறுக கட்டி இருக்க, கைகள் பின்னால் கட்டப்பட்ட நிலையில் தலைகீழாய் தொங்க விடப்பட்டிருந்தான் அவன்.

"அவனை அவிழ்த்து விடு தேவா.... இனி அவன் சொல்ற ஒவ்வொரு வார்த்தையிலும் உண்மையைத் தவிர வேற எதுவும் இருக்கக்கூடாது. அவன் பொய் சொன்னான்னு அவன் கண் காட்டுச்சு மறுபடி என் ட்ரீட்மெண்டை அவன் பார்க்க வேண்டியிருக்கும். ம்...க்விக்..." என்றவன் இவனோட ரத்தக் கறையை நான் கழுவிட்டு வர்றதுக்குள்ள இவன் வாய் திறக்கனும் ....." என்று உறுமிவிட்டு வெளியேற

பல மணிநேரங்களாய் உதயனின் ருத்திரதாண்டவத்தில் உயிர் மட்டும் ஊசலாடிக் கொண்டிருந்தவனை கீழே இறக்கி இருக்கையில் அமர வைத்து தண்ணீர் மட்டும் கொடுக்கப்பட்டது.

காயமே இல்லாமல் மரண அடி அடிக்க உதயனால் மட்டுமே முடியும். தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு ஒரு சிறிய துண்டால் முகத்தைத் துடைத்தவாறே உள்ளே நுழைந்தவன் நாற்காலியில் அமர்ந்து கைகளை உயர்த்தி சோம்பல் முறித்து ' ம் சொல்லு..' என்பதைப் போல் அவனைப் பார்க்க அவன் கூறுவதை தன் கையிலுள்ள ஹேண்டிக்கேமில் பதிய வைத்துக் கொண்டிருந்தான் தேவா.

விடிய விடிய உதயன் கவனித்த கவனிப்பில் உட்காரக்கூட முடியாமல் துவண்டு கிடந்தவன் மெல்ல தலையுயர்த்தி "சா...சார் எ.. என்னோட தொழில் என்னான்னு உங்களுக்கு தெரிஞ்சிருக்கும். பழம்பெருமை வாய்ந்த பொருட்கள், சிலைகள், அரிய வகை நகைகள்ன்னு தேடி கண்டுபிடிச்சு அதை அதிக லாபத்திற்க்கு விக்கறதுதான் என்னோட பிஸினெஸ்...." என்றவனுக்கு மூச்சிரைத்து உட்காரவே முடியாமல் சோர்ந்து போயிருந்தவன் சிறிது இடைவெளி எடுத்து மீண்டும் பேசத் துவங்க

உதயன் தன் காலை தூக்கி மற்றொரு காலில் போட்டு தன்வலதுகையில் தாடையை தாங்கியவாறே அவனை பார்த்தான்.

"அந்த பொண்ணு கைல போட்ருக்க ப்ரேஸ்லெட் பிளாக் டைமண்ட் சார். அதுவும் அறியவகை அது. ஏற்கனவே இது போல பிளாக்டைமண்ட் ஜுவல்லரி உலகத்தில் எங்கிருந்தாலும் வேணுன்னு தேடிட்டு இருக்கவங்க இருக்காங்க. அது கெடைச்சா கோடி கணக்குல பிஸினஸ் முடியும் சார் அதான் ஆளைவிட்டு நகையை மட்டும் திருடிட்டு வாங்கடான்னு ஆள் அனுப்பினா அவனுங்க சொதப்பிட்டானுங்க சார்...." என்று நிறுத்த

"தேவா.... இவன் சொல்றதுல இருபந்தைந்து சதவிகிதம் மட்டுமே உண்மை இருக்கு மீதி எழுபதைந்து சதவீதம் வராதுன்னு நினைக்கிறேன். நீ என்ன நினைக்கிற...." என்று தேவாவைப் பார்த்து கேட்க

'எவ்வளவு சரியா கணிக்கிறார்' என்று உதயனை எண்ணி வியந்தவாறே "எஸ் ஸார்.... உங்க கணிப்பு பொய்யாகாது சார்.... " என்று உதயனைப் பார்த்தவாறே விரைப்பாய் தேவா கூறினான்.

"உன்னோட ஹிஸ்ட்ரிய நான் சொல்லட்டா.... உன் சொந்த ஊரு திண்டுக்கல். நீ பத்து வயசா இருக்கும் போதே பொழப்புக்காக இங்க செட்டில் ஆன குடும்பம் உன்னோடது. உன் அப்பா அம்மா வெச்ச பேரு சுப்பிரமணியம். நீயா உனக்கு வெச்சிட்ட பேரு மணியரசு. நீ கலை பொருட்கள், அரிய பொருட்கள்ங்கற பேர்ல நீ செய்யுற கடத்தல் பிசினஸ்லேர்ந்து, நேத்து நீ பெங்களூர்ல போய் யாரை மீட் பண்ணேங்ற வரைக்கும் தெரியும். உனக்கு தேவை ப்ரேஸ்லெட்னா.. அதை திருடிட்டு போயிருக்கலாம். அதைவிட்டுட்டு அவளை கொல்ல வேண்டிய அவசியம் இல்லை....." என்று கூறியபடி சினத்தில் கை நரம்புகள் முறுக்கேற உதயன் அவனை ஒட்டி தன் நாற்காலியை இழுத்துப் போட்டவன் ,

அவனை கூர்ந்து நோக்கி "உன் கண்ணுல பொய் தெரியுதுடா..... என்னை யார்ன்னு நினைச்சே உதயன்டா....." என்று உருமியவன் எட்டி ஒர் உதைவிட மணியரசு அமர்ந்திருந்த நாற்காலியோட நிலைகுலைந்து கவிழ்ந்து விழுந்திருந்தான். உதைத்த வேகத்தில் ரௌத்திரனாய் எழுந்து வந்த உதயன்

அவனை தோள்பற்றி சர்வசாதாரணமாய் அவனை பற்றி தூக்கி சுவற்றோடு சுவறாக மோதி நிறுத்தி, அவன் வாயில் தன் பிஸ்டலை சொருகியவன் "உன் வாயிலேர்ந்து உண்மை வரலேன்னா இப்பவே இதுல இருக்க புல்லட் உன் தொண்டைக் குழியை பதம் பார்க்கும்..." என்று கர்ஜித்தவன் வெறுமனே வாயால் மிரட்டவில்லை என்று மணியரசு வுக்கு நன்றாகவே புரிந்தது இவனை தவறாகக் கணித்து விட்டோம் என உணர்ந்தான் அவன். பயத்தில் உடல் நடுங்க, வியர்த்து கொட்டி, இதயம் எக்குத்தாப்பாய் துடிக்க ஆரம்பித்தது.... 'சொல்லி விடுகிறேன் ...' என கண்கள் கெஞ்ச அவன் தலையை ஆட்ட, வாயினுள் இருந்த பிஸ்டல் பகுதி அவன் மேலன்னத்தில் முட்டி கிழித்தது.

அவன்கண்கள் கெஞ்சியதில் பிஸ்டலை வெளியே எடுத்த உதயன், தேவாவிற்கு சைகை காட்ட அங்கு வேறு ஒரு நாற்காலி போடப்பட்டு அதில் மணியரசு அமர வைக்கப்பட்டான். உட்காரும் சில மணித்துளி இடைவெளிலேயே இவனிடம் இருந்து அவ்வளவு எளிதில்தப்பிக்க முடியாது இனியும் மறைப்பதில் புண்ணியம் இல்லை என்றுணர்ந்த மணியரசு உண்மையை கூற ஆரம்பித்தான். அவன் கூறுவதை நின்ற நிலையிலேயே பிஸ்டலால் தன் தாடையைத் தடவியவாறு கேட்டுக்கொண்டிருந்த உதயனின் கண்களில் அவன் கூற, கூற ரௌத்திரம் தாண்டவமாடியது.

"நீ சொன்னதுல ஒரு வார்த்தை பொய்யின்னு தெரிந்தாலும் இந்த இடத்தை விட்டு நீ உயிரோட போக முடியாது..." என்றவன் தேவாவிடம் கண்களை காட்டி அந்த அறையை விட்டு வெளியேற, சற்று நேரத்தில் மணியரசுவிற்க்கு உணவு கொடுக்கப்பட்ட மீண்டும் அவனை நாற்காலியோடு பிணைத்து சர்வ ஜாக்கிரதையாய் காவலில் வைக்கப்பட்டான்.

அதுவரை அடிபட்ட புலியின் கோபத்தோடு வெளியே நடந்து கொண்டிருந்த உதயன் "தேவா அந்த நம்பரை டிரேஸ் பண்ணுங்க, அவன் சொன்ன பேங்க் டீடைல் செக் பண்ணுங்க... ஆதினி செழியனை பார்த்த தேதியில் இருந்து இப்போ வரை இவனோட போன் டேட்டா பேஸ், இவனை யார்..? யார்...? சந்தித்தார்கள்..? இவன் யாரையெல்லாம் சந்தித்தான்...? அப்படிங்கற மொத்த விவரமும் எனக்கு வேணும் நான் இப்போ கிளம்புறேன். நான் வர்ற வரைக்கும் இவனை கேர்ஃபுல்லா ஹேண்டில் பண்ணுங்க ஓகே..." என்று உதயனின் வார்த்தைகளுக்கு தேவாவின் சல்யூடே 'நீங்கள் சொன்னதை செய்து முடிப்பேன்..' என்றிருக்க, அடுத்த அரைமணியில் உதயனின் வாகனம் ஏற்காடு சாலையில் சீறிப் பாய்ந்தது.

‌ ******************

"ஆது நீ பண்றது எதுவும் சரி இல்லை நானும் இங்கே வந்ததுலேர்ந்து பார்க்கிறேன், எப்பவும் எதையோ யோசிச்சிட்டு இருக்கே.... இல்ல ரூமுக்குள்ள போய் கதவைச் சாத்திக்கிற.. முன்ன மாதிரி நீ என்கிட்ட பேசுறதே இல்லை.." என்று செழியன் கோபித்துக் கொள்ள

அவனை சமாதானப்படுத்த அவளால் இயலவில்லை. என்னவென்று சொல்வாள் அவள். இங்கு வந்த நாள் முதலாய் 'உதயனே என் மனதில் நிறைந்து இருக்கிறான்...' என எப்படி சொல்வாள் அவனிடம், அவனின் குரலிலும் முகத்திலும் தெரிந்த வருத்தத்தைக் கண்டவள்,

"சாரி டா எனக்கு ரொம்ப குழப்பமா இருக்கு, அதனாலதான் இயல்பா என்னால இருக்க முடியல டா.. ப்ளீஸ் டா... இனிமே இப்படி பண்ணமாட்டேன்.." என அவன் கையைப் பிடித்து சமாதானப்படுத்த முயல

அவன் மேலும் முறுக்கிக் கொண்டு மறுபுறம் திரும்பி அமர்ந்து கொள்ள "டேய் கருவாயா ரொம்ப தான் பிகு பண்ணாதே, நானே எப்படா நம்ம வீட்டுக்கு போவோம், உன் கூட நிம்மதியா பேசலாம்னு இருக்கு. இதுல நீ வேற ரொம்பத்தான் முறுக்கிக்கிற. லூசா டா நீ... நான் உன்கிட்ட பேசுறதை பார்த்தால் என்ன லூசுன்னு சொல்ல மாட்டாங்க ஏற்கனவே நீ செய்ற சேட்டைல அங்கிள் முன்னாடியே சிரிச்சு வெச்சு மாட்டிக்கிறேன். இதுல இவரு கிட்ட பேசலைன்னு சீன் போடறான்.... போடா...." என்று விட்டு அவள் விறுவிறுவென நடக்க ஆரம்பித்தாள்.

"அச்சச்சோ வேதாளம் முருங்கை மரம் ஏறிய மாதிரி இவ திரும்பவும் ரூமுக்குள்ள போய் கதவை சாத்திக்கிட்டா நாம அந்த கஞ்சிசட்டைய நாள் முழுக்க பார்த்துட்டு இருக்கணும்...." என்று வாய் விட்டு புலம்பியவன் அவள் முன் தன் இரு கைகளையும் நீட்டி குறுக்கே நின்று "சரி, சரி, சமாதானம்.. சமாதானம்..." என்றபடி தன் காதை பிடித்து தோப்புக்கரணம் போட்டவனை கண்டு ஆதினியின் முகத்தில் புன்முறுவல் பூத்தது.

"அப்பாடி..... என்ன நீ ... நான்தான் கோவிச்சிக்கணும் அப்படியே உல்ட்டாவா நீ கோவிச்சிக்கிற.... சேர்க்கை சரியில்லை...." என்றவன் "ஆமா எங்க ஜிங்லி...." என்று கேட்டவனை முறைத்தவள்

"ஏய்..... ஜிங்கிலின்னு நான் மட்டும்தான் கூப்பிடுவேன் நீ கூப்பிடாத.... அவங்க ஆன்டியோட நல்லா செட்டாகிட்டாங்க டா " என்று இருவரும் பேசியவாறே அந்த வீட்டை ஒட்டியுள்ள எஸ்டேட் பகுதிக்குள் நுழைந்தனர்.

சிறிது தூரம் ஏதோ யோசனையுடனேயே செழியன் நடந்து வர அவனது முகமாற்றத்தை கண்டவள், "என்னாச்சுடா இவ்ளோ நேரம் உன்கிட்ட பேசலேன்னு கோபப்பட்டுட்டு இருந்த... இப்போ நீ பேசாம வர்ற...." என்று கேள்வி எழுப்ப

ஆதினியை உற்று நோக்கியவன் "ஆது.... இப்போ என்னை தொட்டு உன்னால உணர முடியுதா..." என்று சந்தேகமாய் கேட்டவனை

"என்னடா திடீர்னு இப்படி கேக்குற என்னால உணர முடிந்ததால் தானேஅன்னைக்கே ஆறுதலா உன்கை பிடிச்சுட்டு, உன் தோளில் சாய்ந்தேன். என் கையை பிடிச்சு நீ அந்த ரெஸ்டாரன்டில் அவனுங்கள அடிச்ச..... அப்புறம் என்ன....? என்கிற என்ற அவளின் கேள்விக்கு பதிலளிக்காமல்

"ஆது உன் கையை நான் பிடிச்சிக்கவா...." என்று ஏக்கமாய் கேட்க

தாயில்லாச் சவலை பிள்ளையாய் அவனது குரல் அவனின் ஏக்கத்தை உணர்த்த "என்னடா ஆச்சு...." என்றபடியே இறுக அவன் கைப் பற்றியவள்,

"செழியா.... நீ உயிரோட இல்லை நீ ஒரு ஆவி, அமானுஷ்யம்ன்னல்லாம் நான் எப்பவும் நினைச்சதில்லடா.... என் நண்பனா... என் உற்ற தோழனாத்தான் பார்க்கிறேன். உன் மனசை காயப்படுத்திட்டேனாடா.... என்னை மன்னிச்சிக்கோ டா...." என்று அவன் கரத்தினில் தன் மற்றொரு கரத்தினையும் வைத்து ஆதரவாய் பற்றி அவன் முகத்தையே பார்த்திருக்க செழியனின் கண்கள் கலங்கியது போல் தோன்றியது அவளுக்கு. 'உதயனை நினைத்து இவனை தவிர்த்துவிட்டேனா...?' என்று அவள் மனம் குற்ற உணர்வில் தத்தளித்தது.

செழியனோ "இல்லடா ..... என்னவோ எனக்குள்ள ஏதோ உணர்வுகள் அழுத்துது. என்னான்னு புரியல.... உன் கையைப் பிடிச்சிட்டு உன்னோட இருக்கனுன்னு தோனுது....." என்றவன் கூட உணரவில்லை அது அவனுக்கான எச்சரிக்கை மணி என்பதை.....

எச்சரிக்கை செழியனுக்கா ...? ஆதினிக்கா....?
ஆதினி காப்பாற்றப்படுவாளா....?
 

Megala Appadurai

Saha Writer
Team
Messages
52
Reaction score
64
Points
18
அத்தியாயம் - 16
உதயனின் ஆத்திரம் இன்னும் அடங்கியப்பாடில்லை.... அவனது வாகனம் சாலையில் சீறிப்பாய்ந்துக் கொண்டிருந்தது. இரவின் மழையில் ஏற்காட்டின் மரங்கள் நனைந்து குளித்திருந்தன... சாலைகள் கழுவிவிட்டது போல பளிச்சென்றிருக்க, காற்றில் இன்னுமும் ஈரப்பதம் இருந்தது. சிலுசிலுவென்ற காற்று முகத்தில் உரசி ஆதினியை நினைவுபடுத்தியது அவனுக்கு.
'என்ன செய்துக் கொண்டிருப்பாள் அவள். நான் அவளை நினைத்துக் கொண்டிருப்பதைப் போலவே அவளும் என்னையே நினைத்துக் கொண்டிருப்பாளா....?' அவளைப் பிரிந்திருந்த இந்த ஐந்து நாட்களிலேயே அவளைப் பிரிந்திருப்பது இனி சாத்தியமில்லை என்று முற்றிலுமாய் உணர்ந்திருந்தான் உதயன்.
எந்த திசையில் இருந்து ஆபத்து வரும் என்பது தெரியாமல் அவளை எப்படிக் காப்பது என அவன் மீதே அவனுக்கு கோபம் வந்தது. மணியரசு கூறியதை அவன் முற்றிலுமாய் நம்பவில்லை. இல்லை.... இன்னும் ஏதோ ஒன்று இருக்கிறதென்று அவன் மனம் கூப்பாடு போட்டது.
'ஆதினி இன்னும் இங்கு இருப்பது சரியா...?' என்ற கேள்வி அவன் மனதை குடைந்தெடுத்தது. கல் எந்த திசையில் வருகிறது என்று தெரிந்தால் மட்டுமே அதை எறிந்தவர்களை கண்டுகொள்ள முடியும். ஆதினி இங்கே இருப்பதால் அவளுக்கு யார் மூலமாய் ஆபத்து வருமென்று அறிவது இயலாதென்று நினைத்தவன் மனதினுள் ஒரு முடிவு எடுத்தபடி ஒரு நீண்ட பெருமூச்சு விட்டு ஒரு கையால் ஸ்டேரிங்கை பிடித்தவாறே மறுகையால் தன் தலையை கோதிக் கொண்டு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டான்.
சில நிமிடங்களில் தனசேகரனின் எஸ்டேட்டை அவன் அடைந்த போது ஆதினி அங்கு இல்லை. தனசேகரன் வெளியே சென்றிருக்க, வீடு முழுக்க ஆதினியை தேடியவன் அவளைக் காணாது தவித்துப் போனான்.
செண்பாம்மாவை தேடி வந்தவன் ஆதினியை விசாரிக்க "வெளியே தோட்டத்தில் தான் இருந்தா தம்பி..." என்றவாரே அவர் தந்த காபியை கூட அருந்தாமல் அவளை தேடி விரைந்தவனின் தவிப்பைக் கண்டு செண்பாம்மாவிற்கு ஏதோ புரிபட்டார் போல் தோன்றியது. சின்ன புன்முறுவலுடன் அவர் தனசேகரனின் மனைவியோடு மதிய சமையலுக்கான வேலையில் இறங்கிவிட
அவளைத்தேடி தோட்டத்திற்கு வந்தவன் அங்கேயும் அவள் எங்கும் இல்லாததால் மேலும் தவித்துப் போனான். வெளியே அவள் செல்ல வில்லை என்பதை காவலர்கள் மூலம் அறிந்தவன், தோட்டத் தொழிலாளர்களை விசாரித்ததில் அவள் எஸ்டேட்டினுள் செல்வதை கண்டதாகக் கூற, அவளைத் தேடி எஸ்டேட்டினுள் நுழைந்தான்.
கண்கள் அவளைத் தேடிக் கொண்டிருக்க, அவனது மூளையும், மனமும் அவனை எச்சரித்துக் கொண்டே இருந்தது. சுற்றிலும் சந்தேகப்படும்படி யாராவது தெரிகிறார்களா என்று நோட்டமிட்டவாறே ஆதினியைத் தேடிக் கொண்டிருந்தவனின் கை தன்னியல்பாய் துப்பாக்கியை தொட்டு மீண்டது.
நேரம் செல்லச் செல்ல அவளுக்கு அவளுக்கு ஏதேனும் நேர்ந்திருக்குமோவென முதல் முறையாய் அஞ்சினான். அதுவே அவனுள் பெருங்கோபத்தை ஏற்படுத்தியது. ஷிட் என்று தன் முஷ்டியை இறுக்கி காற்றினில் குத்தியவன் அங்கிருந்த தோட்டத் தொழிலிலாளர்களை சுற்றிலும் தேடச் சொல்லி முடுக்க....
தனக்காய் ஒருவன் உள்ளம் பதைபதைக்க தேடிக்கொண்டிருக்கிறான் என்பதை அறியாமலே செழியனுடன் வெகு தூரம் வந்திருந்தாள் ஆதினி. உதயனின் நினைவின் அலைகழிப்பிலும், எப்பொழுதும் ஆட்கள் கண்காணிப்பில் அவனுடன் பேசமுடியாமலும் தவித்திருந்தவள் எஸ்டேட்டின் தனிமையில் பழையபடி அவனின் குறும்பிலும், அருகாமையிலும் தன்னை மறந்து அவனிடம் உரையாடியபடியே எஸ்டேட்டின் அடுத்த எல்லையை தொட்டுவிட்டிருந்தாள். அது ஏற்காட்டின் பிரதான சாலையை தொட்டிருந்தது.
அந்த எஸ்டேட்டின் அடுத்த எல்லையானது செழியனை அவள் எங்கே கண்டாளோ அவ்விடத்திற்கு சிறிது தொலைவே இருந்தது. தான் எங்கு வந்திருக்கிறோம் என்பதை உணர்ந்தவள் செழியனை முதன் முதலாய் கண்ட இடத்திற்க்கு வெகு அருகில் இருக்கிறோம் என்பதை உணர்ந்த உடனேயே அவளுக்கு உடலெல்லாம் வியர்த்து உள்ளமும், உடலும் நடுங்க ஆரம்பித்தது.
அவள் ஓர் மருத்தவரென்றாலும் அவளால் தன் உணர்வுகளை கட்டுப்படுத்த இயலவில்லை. தன்னால் காப்பற்றபட்டவன் தன் உயிரிழந்து தன்னை அழித்தவர் யாரென்று கூட அறிய முடியா நிலையில் இருப்பது ஏற்கனவே அவளை ஒவ்வொரு நாளும் வருத்திக் கொண்டிருந்த விசயம்.
இந்த இடத்தில் இருந்தானென்றால் நிச்சயம் இங்கு எங்கோ ஓர் இடத்தில் தானே அசம்பாவிதம் நேர்ந்திருக்கும் சற்றே தேடிப் பார்த்தால் என்ன என்ற எண்ணம் அவளுள் தோன்றியது.
அதேநேரத்தில் செழியனின் நிலையில் ஏகபட்ட மாற்றங்கள். கிளம்பியதிலிருந்து தன் கையைப் பற்றியபடியே வந்தவனின் கைகள் திடீரென ஐஸ்கட்டியாய் குளிர்வதை உணர்ந்து தன்னிலையடைந்தவள் அவனை நோக்க சாலையின் எதிரே தூரத்தில் தெரிந்த ஒர் பாழைடைந்த கட்டிடத்தை வெறித்த அவன் கண்கள் ரத்தமென சிவந்து அவன் முகம் ஆத்திரமும் ஆவேசமுமாய் மாறியிருப்பதைக் கண்டாள்.
உறைந்து விரைத்துவிடும் போலிருந்த தன் கைகளை விடுவித்தவாறே "செழியா என்னாச்சுடா..." என்று அவனை உலுக்க அவனோ இதுவரை அவனிருந்த இயல்பிலேயே இல்லை.... அவனது பார்வை அந்த கட்டிடத்திலேயே வெறித்திருந்தது.
என்னவாயிற்று இவனுக்கு என்றபடியே "செழியா..." என்று அவனை மீண்டும் அழைக்க
அந்த குரலை ஒட்டியே "ஆதினி...." என்ற உதயனின் குரல் அவளை எட்டியது. செழியன் அதே நிலையில் நிற்க உதயனின் குரலில் இருந்த கோபமும், உக்கிரமும் அவன் அழைத்த தொணியிலேயை தெரிந்தது. அப்பொழுது தான் அவளின் முட்டாள்தனத்தை உணர்ந்தாள் அவள்.
தன் உயிருக்கு ஆபத்தென்று தன்னைக் காக்க அவன் இங்கே அழைத்து வந்து பாதுகாப்பாய் வைத்திருக்க அந்த பாதுகாப்பையும் அவனுடைய எச்சரிக்கையையும் மீறி தான் இவ்வளவு தூரம் வந்தது எவ்வளவு தவறென்று உணர்ந்தாள்.
அதற்குள் அவன் அவளை நெருங்கியிருக்க அதே நேரம் செழியன் சட்டென்று மறைந்திருந்தான். வேகமான எட்டுக்களில் ஆதினையை அடைந்தவன் அவளது தோள்பற்றி அவளை ஆராய்ந்து அவளுக்கு எந்த ஆபத்துமில்லை என்று உணர்ந்த பின்பே அவனால் நிம்மதி பெருமூச்சு விடமுடிந்தது.
அதே நேரம் அவள் ஏன் இவ்வளவு தொலைவு வந்தாளென்ற கேள்வி எழ சுற்றிலும் நோட்டமிட்டவாறே அவள் கையைபற்றி இழுத்தவறே அந்த இடத்தை விட்டு எஸ்டேட்டினுள் விரைந்தான் . ஆதினிக்கோ செழியனை காணோமென்ற பதட்டம், இத்தனை நாள் இல்லாமல் இப்பொழுது என்னவாயிற்று அவனுக்கு என்று ஒரு புறம், உதயனின் பிடியிலேயே அவனது கோபத்தை உணர்ந்தவள் அவனுக்கென்ன பதில் சொல்வதென்ற குழப்பமொரு புறமுமாய் தவித்தவாறே அவன் இழுத்த இழுப்பிற்கு செல்ல சற்று தூரம் தள்ளி அவளை அழைத்து வந்து நிறுத்தியவன்
"உனக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா .... எவ்வளவு ஆபத்து உன்னை சுற்றி இருக்குன்னு தெரிஞ்சும் இவ்வளவு தூரம் யார் துணையும் இல்லாம யார்கிட்டேயும் சொல்லாம எதுக்கு வந்த...." என்று வார்த்தைகளை மென்று துப்ப
அவனிடம் என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் அவள் விழிக்க அதுவரை ஆத்திரத்தோடு இருந்தவன் சட்டென்று அவளை இறுக அணைத்திருந்தான். அவனது அணைப்பிலேயே அவளுக்கு புரிந்துப் போனது அவன் எவ்வளவு பரிதவித்திருப்பான் என்று.
அவள் சங்கடமாய் தன்னை விலக்கிக் கொள்ள முனைய, அதை உணர்ந்தவன் அவளை விடுவித்து தன் தலையைக் கோதி தன்னை சமனபடுத்திக் கொண்டான் உதயன். அவனை பார்க்க முடியவில்லையே என்ற வருத்தத்தில் இருந்தவள் இப்பொழுது அவனைப் நிமிர்ந்து கூட பார்க்க முடியாமல் தவித்துப் போனாள்.
அவள் விலகி நடக்க ஆரம்பிக்க அவளை இரண்டெட்டில் அணுகி அவள் கைபற்றி "இன்னும் என்கிட்ட ஏதோ மறைக்கிற ..... என் மனசைத் தெளிவா சொன்ன பிறகும் ஏன் இப்படி தயங்குறேன்னு நான் தெரிஞ்சுக்கலாமா...."
நின்று அவன் கண்களைப் பார்த்தவள் நேரடியாகவே விசயத்திற்கு வந்தாள் "என்னால இப்போ வேற எதையுமே யோசிக்க முடியல.... செழியனுக்கு என்ன ஆச்சு ... யார் அவனைக் கொன்னாங்கன்னு தெரியாம.... உங்க லவ்வ அக்செப்ட் பண்ணிட்டு உங்க கூட டூயட் பாடச் சொல்றீங்களா....." என்று கேட்டவளைப் பார்த்து உதயனுக்கு சுல்லென்ற கோபம் வந்தது.
தான் விரும்பும் பெண் இவள்.... அவளும் தன்னை விரும்புகிறாள். ஆனால் யாரோ இறந்து போன ஒருவனுக்காய் என் மனதைக் காயப்படுத்துகிறாளே என்ற கோபம். இறப்பு என்பது ஒரு காவல் துறை அதிகாரியாய் சாதரணமாய் அவன் பார்த்து பழகி தினமும் கடந்து செல்லும் விசயமாக இருந்தது உதயனுக்கு . ஆனால் ஆதினிக்கு ஒர் உயிரை காப்பதென்பது எவ்வளவு பெரிய செயல் .... அப்படி காப்பற்றபட்ட உயிர் அநியாயமாய் போய்விட்டதே என்ற ஆதங்கம். பின்பு செழியன் அவளோட பழக ஆரம்பித்த நாள் முதல் இப்படி ஒரு மனிதனை கொன்றுவிட்டார்களே என்ற கோபமும், அதற்கு காரணமானவர்களை தண்டித்தே ஆகவேண்டுமென்ற வைராக்கியமும் அவளுள் விருட்சமாய் வளர்ந்திருந்தது.
ஆதினியின் வார்த்தை உதயனைக் காயப்படுத்த அவளை பற்றியிருந்த கைகளை விடுவித்தவன். "ஓஓஓஓ.... அப்போ என் காதலை விட.. உன் காதலை விட.... இந்த கேஸ் உனக்கு ரொம்ப முக்கியம் இல்லையா.... என்றவன் இங்கே உன் பாதுகாப்பிற்காக உன்னை நான் விட்டுட்டு போனதா எனக்கு நியாபகம். நீ அங்கிள்கிட்டேயும் சொல்லாம அவங்க யார்கிட்டேயும் சொல்லாம வெளியே வந்திருக்க ..... இனிமே நீ இங்கே இருக்க வேண்டாம் கிளம்பு உன்னை உன் வீட்ல விட்டுவிடுகிறேன்..... "என்றவன் வேகமாய் செல்ல
ஆதினிக்கு அவன் இங்கே இருக்க வேண்டாம் கிளம்பு என்றதை விட அவனின் கோபம் அவளை அதிகமாய் காயப்படுத்தியது. 'என்ன சொல்லிட்டோம்ன்னு இப்படி கோபத்துல போறான்..... இவனுங்க ரெண்டு பேராலயும் எப்பவும் நமக்கு இம்சை தான்... ' என்று நினைத்தவாறே அவனை பின்தொடர்ந்தவள் செழியனுக்கு என்ன நேர்ந்ததோ என்ற கவலை ஒரு புறம் அவளை வாட்டத் தொடங்கியது.
கோபத்தில் சென்றவன் ஆதினிக்கு முன்பே வீடு வந்து ஆதினியை அழைத்துச் செல்வதாய் வீட்டிலும் அறிவித்துவிட்டு அவர்களுடைய பொருட்களை எடுத்துக் கொள்ளுமாறு செண்பாம்மாவையும் துரிதப்படுத்தினான்.
அவன் வந்த பொழுது கண்ட முகத்திற்கும் இப்பொழுது காணும் முகத்திற்கும் உள்ள வேறுபாடினை உணர்ந்த செண்பாம்மாவிற்கு 'இந்த பொண்ணு என்ன செய்தாளோ...' என்ற கேள்வி மனதைக் குடைந்தது.
ஆதினி வரும் போது எதுவும் பேசாமல் அவர் தங்களது உடமைகளை எடுத்து வைத்துக் கொண்டிருக்க, அவனோ தன் அறைக்கு சென்று கதவை அடைத்திருந்தான்.
"பப்ளூ ...என்னடா ஆச்சு அந்த புள்ள உன்னைக் காணோம்ன்னு எவ்வளவு பதறிப்போய் வந்தது. இப்போ இவ்வளவு கோவமா கெளம்பச் சொல்லுது.... நீ ஏதாவது சொன்னயா...." என்று கேள்வியெழுப்ப ...
அவருக்கு என்ன பதில் கூறுவதென ஆதினிக்கு புரியவில்லை... "இல்லம்மா... அவர் பேச்சைக் கேட்காம நான் எஸ்டேட் கடைசிவரை போய்ட்டேன். அதுதான் கோபம் நான் போய் பார்த்து பேசிட்டு வர்றேன்.... நீங்க எடுத்து வைங்க..." என்றபடியே அவனது அறை நோக்கிச் சென்றாள்.
மூடியிருந்த கதவை அவள் தட்ட "திறந்து தான் இருக்கு..." என்று உள்ளேயிருந்து அவனது கம்பீரக் குரல் கோபமாய் ஒலித்தது.
அவள் கதவை திறந்து உள்ளே நுழைய அவனோ களைப்பில் அப்படி குறுக்காக காலை கிழே விட்டபடி படுத்து தன் நெற்றியின் மீது கைகளை வைத்தபடி கண்ணைமூடி படுத்திருக்க அந்நிலையில் அவனைப் பார்த்தவளுக்கோ மனதைப் பிசைந்தது. தான் கேட்டது அவனை இவ்வளவு தூரம் பாதிக்குமா என்று நினைத்தவள் அவன் அருகே வர அந்த தானியங்கி கதவு அதன் வேலையை கச்சிதமாய் செய்திருந்தது.
கதவு சாத்தப்பட்ட சப்தத்தில் தன் கண்களை மறைத்திருந்த கையை சற்றே விலக்கிப் பார்த்தவன் ஆதினியைக் கண்டதும் திரும்பவும் அதே நிலையை தொடர .... அந்த அலட்சியம் ஆதினியை காயப்படுத்தியது.
'இவன் சொல்வதெற்கெல்லாம் ஆடவேண்டுமென நினைக்கிறானா... இவனோடு பேசினாலும் என் உள்ளத்தை மறைக்க முடியாது. இவன் இப்படி பாரா முகமாய் இருப்பதைப் பார்க்கவும் முடியவில்லையே...' எனத் தன்னைத் தானே நொந்து கொண்டாள் ஆதினி.
அவனிடம் பேசியே ஆகவேண்டுமென முடிவெடுத்தவள் மெல்லிய குரலில் "சாரி .... நான் சொன்னதை நீங்க தப்பா புரிஞ்சிக்கிட்டீங்க... என்று கூற சட்டென எழுந்து அமர்ந் உதயன்
"எந்த விதத்துல யோசித்தாலும் நீ சொன்னதுக்கான அர்த்தம் ஒன்னே ஒன்னு தான். இதுக்கு மேல நான் இத பத்தி பேச விரும்பல... இன்னும் அரை மணி நேரத்துல கிளம்ப தயாராகு...." என்றவன் அத்துடன் பேச்சு முடிந்து விட்டது என்பதை போல் அவ்விடத்தை விட்டு நகர முற்பட்டவனை
"நான் உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும் ... "என்றவளை நிமிர்ந்து அவளை கண்ணோடு கண் நோக்கியவன்
"இன்னும் சொல்ல என்ன இருக்கு.." என்று வலிமிகுந்த வார்த்தைகளை கொட்டினான்.
"ப்ளீஸ் தயவுசெய்து இதை பத்தி நம்ம பேச வேண்டாம் இப்போ நான் பேசுற விஷயம் கேஸ் பற்றியது...." என்றவளை தன் ஒற்றைப் புருவத்தைத் தூக்கி 'என்ன...?' என்பது போல் பார்க்க
"இல்ல இப்போ என்ன என்னை நீங்க கூட்டிட்டு வந்த இடத்தில் இருந்த கொஞ்ச தூரத்தில் தான் நான் முதன்முதலா செழியனைப் பார்த்தது. அப்போ அந்த சுற்று வட்டார பகுதியில் தானே எங்கேயோ அவனுக்கு அசம்பாவிதம் ஏற்பட்டு இருக்கும்.. நாம அந்த இடத்துக்கு போய் பார்க்கலாமா...?" என ஆதங்கத்துடன் கேட்க
ஏற்கனவே கோபத்தில் இருந்தவன் "இந்த விஷயங்கள் எல்லாம் இந்த போலீஸ் மூளை யோசிக்காதுன்னு நினைச்சியா.... அவனை நீ எங்க இருந்து பார்த்தயோ அதில் இருந்து இரண்டு மைல் சுற்றளவில் உள்ள எல்லா இடத்தையும் சர்ச் பண்ணியாச்சு நோ எவிடென்ஸ் .... அப்படியே பார்க்கணும்னு நினைச்சாலும் அதை போலீஸ் பார்த்துக்கோ நீ பார்க்கணும் அவசியமில்லை..." என்று கறராய் பதில் கூறினான்.
முகத்தில் அடித்தது போல் பேசுபவனை பார்த்த ஆதினிக்கு ஆத்திரமாய் வந்தது "நான் என்ன சொல்ல வரேங்கறதையே புரிஞ்சுக்காம நீங்க பேசுறீங்க... உங்க கோபத்தில் கொஞ்சம் கூட நியாயம் இல்லை..." என பட்டென பேசியவளை உற்று நோக்கியவன்‌.
"நீ என் கிட்ட கம்ப்ளைன்ட் பண்ணி இருக்க... என்ன செய்யனும்னு டிபார்ட்மெண்டிக்கு தெரியும். இல்ல நீயே டிடெக்டிவ் வேலை பார்க்கிறதுன்னா இங்கே எனக்கு வேலை இல்லை....." என்று ஆத்திரப்பட்ட அவனை பார்த்து அவளது சினம் மேலும் அதிகரிக்க
"அப்படியா.... ஓகே.... இனி நீங்க உங்க வழியிலப் பாருங்க நான் என் வழியில பார்த்துக்கறேன்..." என்று நகர்ந்தவளை தன் இரும்புக்கரம் கொண்டு முரட்டுத்தனமாய் பற்றி தன்னருகே நிறுத்தியவனின் கண்கள் கோவைபழமென சிவந்து தீப்பிழம்பைக் கக்கியது....
"உனக்கு வேண்டிய போது உன்னோடு வர நானென்ன உன் காதலனா.... இல்லை உன் வீட்டுக் காவலனா.... உதயநந்தன் ஐ. பி. எஸ் டீ...." என்றவன் "நீ எது செய்வதாக இருந்தாலும் உன் வீட்டில் விட்ட பிறகு செய்துக்கோ....." என்ற அவன் பிடியைத் தளர்த்த
அவனது கோபம் ஒருபுறமும், செழியனின் நிலை ஒரு புறமுமாய் அவளை ஆத்திரத்தின் எல்லைக்கே கொண்டு சென்று "அய்யோ.,.. நான் சொல்ல வர்றதை என்னான்னு தான் கொஞ்சம் கேளுங்களேன் ..... செழியன் என்னோடதான் இருக்கான்..." என்றாள் தன்னிலையிழந்து
"வாட்... கம்மெகெய்ன் ... என்ன என்ன சொன்ன..." என்று அவள் தோள் பற்றி உலுக்க அப்பொழுதுதான் ஆத்திரத்தில் தான் உளறிவிட்டதை அறிந்தவள் இனிமேலும் மறைத்து ஆகப்போவது ஒன்றுமில்லை... செழியனின் நிலையை அறிந்தாலவது தனக்கு உதவுவான் என நினைத்தவள் செழியன் இறந்த அன்று முதல் இன்று வரை அவளோட அவன் இருப்பதையும் தன் கண்களுக்கு மட்டுமே அவன் தெரிவதையும் ஒன்று விடாமல் கூற
அதுவரை பொறுமையாய் கேட்டவன் "என்ன விட்டலாச்சார்ய்யா படம் பார்த்தியா ...." என்றவனை என்ன சொல்லி நம்பவைப்பதென அவளுக்கு புரியவில்லை.
"நான் சொல்றது அத்தனையும் நிஜம் வேணும்ன்னா என் கூட வாங்க, நாம அந்த இடத்துக்கு போவோம். அங்கே நிச்சயம் செழியன் இருப்பான். அவனை உங்களுக்கு உணரவைக்கிறேன்...." என்று பேசிக்கொண்டே போனவளை அவனின் ஆக்ரோசமான குரல் இடையிட்டது
"ஏய் என்னை என்ன முட்டாள்ன்னு நினைச்சுட்டியா..... என்னைப் பார்க்கனுங்கறதுக்காக எத்தனை பேர் அப்பாய்ண்ட்மெடன்ட்காக வெயிட் பண்றாங்கன்னு தெரியுமா.....இப்பவும் உனக்காக என் வேலையெல்லாம் விட்டுட்டு உனக்காக வந்திருக்கேன் நீ உன்னோட இந்த பைத்தியக்காரத்தனமான பேச்சை நிறுத்த போறியா இல்லையா...... நீ எங்கேயும் வரவேண்டிய அவசியமில்லை. தேவைப்பட்டா நான் போய் சர்ச் பண்ணுவேன். அதுக்காக இல்லாத கட்டுக் கதையெல்லாம் சொல்லாத ..." என்று கர்ஜித்தவனின் குரல் அந்த இடமெங்கும் எதிரொலித்தது
அவனது நம்மிக்கையில்லா பேச்சு அவளை மேலும் ஆத்திரமூட்டியது.
"நீங்க நம்பலேங்கறதுக்காக நான் சொல்ற விசயம் பொய்யாகிடாது மிஸ்டர் உதயநந்தன் .... உண்மைய எல்லோரும் உணருகிற காலம் வரும் ....உங்கள நம்பி நான் இந்த விசயத்தை ஆரம்பிக்கல.... என் மனசாட்சிக்கு சரின்னு பட்டதை நான் செய்றேன்.... நீங்க இல்லேன்னாலும் நான் நெனச்சதை நடத்திமுடிப்பேன்....அதுக்கு உங்க அனுமதி எனக்கு தேவையில்லை..... "அவள் வார்த்தையை முடிக்கும் முன் அவள் கழுத்தை தன் வலிமையான கரங்களால் பற்றியவன் அவளை அருகில் இருந்த சுவற்றில் மோதி அவளை அந்தரத்தில் நிறுத்தியிருந்தான்.
உதயநந்தனின் இந்த செய்கையை சற்றும் எதிர்பார்த்திராத ஆதினி அதிர்ச்சியில் உறைந்து மூச்சுக்காற்றுக்கு தவிக்க....
அந்த அறையின் சன்னல் படீரென்று காற்றில் அடித்து திறக்க ..... திறந்திருந்திருந்த கதவுகள் ஏதோ சூறாவளி காற்றில் சிக்கியது போல் படபடவென்று அடித்துக்கொள்ள..... அங்கிருந்த டிரெஸ்ஸிங் டேபில் அருகில் இருந்த சிறிய நாற்காலி சர சரவென நகர்ந்து ஆதினியின் காலடியில் வந்து நிற்க..... அவனின் பிடி தானாக தளர..... அதிர்ந்து நின்றான் உதயநந்தன்.
அவன் பிடி விடுபடவும் தளர்ந்து அந்த நாற்காலியில் தொப்பென அமர்ந்தாள ஆதினி.
மேஜை மீதிருந்த கண்ணாடி டம்ளரில் அருகில் இருந்த ஜக்கிலிருந்து தானாக நீர் நிரப்பி டம்ளர் தானாக அவளை நோக்கி வந்து அவளின் வாயருகே சென்று புகட்டியது.....
அவசர அவசரமாக நீரை பருகியவள் .... தலையை டம்ளருக்கு மேல் உயர்த்தி "செழியா..... " என்று கண்ணிர் விட்டாள். அவள் விழிகளிலிருந்து கண்ணீர் நிற்காமல் வர அவள் அணிந்திருந்த புடவை தலைப்பு தானாக உயர்ந்து அவள் கண்ணீரைத் துடைத்தது.
சேலம் மாநகரமே கண்டு நடுங்கும் உதயநந்தன் ஐபிஎஸ் இந்த காட்சியை கண்டு நம்பமுடியாமல் அதிர்ந்து போய் நின்றான்.
ஆதினி மூச்சு வாங்க கண்ணில் நீர் வர அமர்ந்திருக்க.... "உன்மேல கைவெக்க அவனுக்கு எவ்வளவு தைரியம் இருக்கனும்...." என்று கண்ணில் கோபம் கொப்பளிக்க ஆக்ரோசமாய் கூறிய செழியன் உதயனின் கழுத்தைப் பிடித்து அந்தரத்தில் நிறுத்தியிருந்தான்.
ஏற்கனவே நடந்த நிகழ்வில் குழம்பிப் போயிருந்த உதயநந்தன் திடீரென தன் குரல்வளை நெறிக்கப்பட்டு தான் அந்தரத்தில் தூக்கி நிறுத்தப்பட, மூச்சுக் காற்றுக்கு தவித்து கண்ணுக்குத் தெரியாத எதிரியை தாக்கமுடியாமல் தடுமாறி விழிபிதுங்க.....
"செழி.... செழியா.... வேண்டாம்டா.... விடு ... "என்று அலறியவாறே தடுமாறி எழுந்து சென்று அவனைத் தடுக்க
காற்றோடு பேசிக் கெஞ்சி போராடிக் கொண்டிருப்பவளைக் கண்ட உதயனுக்கு ஒன்றும் புரியவில்லை. மேலும் அவன் குரல்வளை அழுந்த நெறித்ததில் அவன் கண்கள் பிதுங்க அவன் கால்களை அந்தரத்தில் காற்றில் உதைத்துக் கொண்டிருந்தான்.
"உன் மேல கைவெச்சு உன் கழுத்தை நெறிச்சவனை என்னை வேடிக்கைப் பார்க்கச் சொல்றீயா ..... அவனை.... என்று பல்லைக் கடித்தவனை கைப்பற்றி
"ப்ளீஸ்டா வேண்டாம்டா .... செழியா.... எனக்காக... டா... விடுடா.... என்று ஆதினி கெஞ்ச
செழியனின் கோபம் கொஞ்சம் கூட குறையவே இல்லை.... அவன் பிடி தளராததைக் கண்ட ஆதினி
"செழியா .... இப்போ அவரை விடப் போறீயா இல்லையா...." என்று வேகமாய் அவனை உலுக்கி கூச்சலிட
அவளின் செய்கையில் வெறுப்புடன் தன் பிடியைத் தளர்த்தி உதயனை உதறினான். செழியன் உதறியதில் தடுமாறி சுவற்றில் மோதி கீழே விழுந்த அடுத்த கணம் உதயநந்தன் சுதாரித்து தன் கழுத்தை இருபுறமும் நொடித்துக் கொண்டு எழ
"நந்து ...." என ஒடி வந்து அவனை இறுக அணைத்துக் கொண்டாள் ஆதினி.
ஆதினியின் நிலையை இருவரும் உணர்வார்களா....?
செழியனின் ஆத்திரம் உதயனுக்கு தீங்கை விழைவிக்குமா....?
தொடரும்......
 

Megala Appadurai

Saha Writer
Team
Messages
52
Reaction score
64
Points
18
அத்தியாயம் - 17

"நந்து...." என்று அலறியவாறே ஓடிவந்து அவனை அணைத்தபடி அவனுக்கு ஏதேனும் நேர்ந்து விட்டதோவென அவன் கழுத்தையும் அவன் தோள்களையும் தொட்டுத் தடவி ஆராய்ந்தவளைக் கண்டு நடப்புக்கு திரும்பியவனுக்கு அப்பொழுது தான் உறைத்தது அவள் நந்து என்று அழைத்ததும். ஓடி வந்து அவனை அணைத்துக் கொண்டதும். அதிர்ச்சியையும் மீறிய புன்னகை ஒன்று அவன் இதழில் படர்ந்தது.
உதயனாள் நடந்து முடிந்த நிகழ்வுகளில் இருந்து இன்னும் முழுதாய் வெளியே வரமுடியவில்லை. பொதுவாகவே அமானுஷ்ய சக்திகளின் மீது அவனுக்கு நம்பிக்கை இருந்ததில்லை அதனாலேயே ஆதினி செழியனை பற்றி கூறும் போது அவன் நம்பிக்கை இல்லாமல் அவள் மீது கோபப்பட்டான்.
தான் தாக்கப்பட்டு கீழே தூக்கி எறியப்பட்டதும் கட்டுக்கடங்காத ஆத்திரத்துடன் எழுந்தவன் ஆதினி "நந்து" என்று கதறியபடி தன்னிலை மறந்து அவனை அணைத்து அவனுக்கு என்ன நேர்ந்ததோ என்று அவனை ஆராய்ந்த போது அவளது காதல் மனம் அவனுக்குப் புரிந்துவிட அவன் கோபம் தென்றல் காற்றில் பறந்த பஞ்சாய் பறந்து விட்டிருந்தது.
தன்னைவிட செழியனுக்கு என்ன நேர்ந்தது என்று அறிந்து கொள்வதே முக்கியம் என்றே அவனை தவிர்க்கிறாள் என்று ஆதினியின் மீது உதயனக்கு கோபம் இருந்தது ஆனால் உதயனுக்கு ஓர் ஆபத்து என்றவுடன் அவள் துடித்த துடிப்பு அவளின் காதலை அவனுக்கு உணர்த்தியது. கோபத்தையும் மீறி அவன் முகத்தில் புன்னகை அரும்பி இருந்தது.
செழியனும் ஆத்திரத்தில் உச்சியில் இருந்தான். ஆதினியை துன்பப்படுத்தியவனை துவம்சம் செய்துவிடும் ஆக்ரோஷத்தில் இருந்தான். ஆனால் அவளோ அவனுக்கு என்ன நேர்ந்ததென்று பரிதவித்து போனதை கண்டு திகைத்துப் போனான் செழியன்.
சில நாட்களாகவே ஆதினியின் நடவடிக்கைகளில் சில மாற்றங்களைக் கண்டு இருந்த செழியனுக்கு இது காதல் என்று நன்றாகவே புரிந்து போனது. ஏற்கனவே தனக்காக அவள் படும் பாட்டை கண்டு உள்ளம் நொந்து போயிருந்தான் செழியன். அவனுக்கு ஆதினியின் மனது நன்றாகவே புரிந்து போனது. தன்னை காயப்படுத்தியவனைக் கூட காயப்படுத்திப் பார்க்க நினைத்திராத மனம் காதலில் மட்டுமே சாத்தியம்.
உதயனை ஆராய்ந்து அவனுக்கு ஏதும் நிகழவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டே நீண்ட பெருமூச்சுடன் அவனை விட்டு செழியனிடம் வந்தவள் "ஏன்டா இப்படி செஞ்ச... எதுக்காக இப்படி செஞ்ச..." என்று அவனை பிடித்து உலுக்கினாள்.
"பின்ன உன்னை காயப்படுத்தி கஷ்டப்படுத்தியவனை சும்மா விட சொல்றியா, இனிமே ஒரு நிமிஷம் கூட இங்க இருக்கக் கூடாது கெளம்பு நீ, நாம நம்ம வீட்டுக்கு போகலாம்" என கோபத்தோடு ஆதினிடம் கட்டளையிட்டான் செழியன்.
"செழியா... அவரால எனக்கு எதுவும் ஆகாதுடா..." என்று கூறி கண்ணீர் மல்க நின்றவள்,
"ம் போலாம்... ஆனா இனிமே உன்னால அவருக்கு எதுவும் ஆச்சு என்னை நீ பார்க்க முடியாது அதை நீயும் தெரிஞ்சிக்கோ..." என்று அழுத்தம் திருத்தமாய் கூறியவளை கண்டு மற்ற இருவரும் அதிர்ச்சி கலந்த ஆச்சர்யத்தோடு நோக்க
"அது அவன் நடந்துக்கறதை பொறுத்து இருக்கு இப்போ நீ கெளம்பு" என்று அவன் விடாப்பிடியாய் கூற
"அதுக்கு முன்ன நீ எங்க போனேன்னு சொல்லு அந்த இடத்துக்கு போனதும் உன் முகம் மாறிப்போச்சு... என்னாச்சு உனக்கு... நாம வேணும்னா அந்த இடத்துக்கு போய் பார்க்கலான்னு அவர்கிட்ட பேசிட்டிருந்தேன். அதனால்தான் அவர் கோபப்பட்டார். நீ எதுவும் நினைச்சிட்டு அவர் மேல கோபப்படாதே டா... " என்று தயங்கித் தயங்கி உதயனைப் பார்த்தவாறே செழியனிடம் அவள் பேச
"எதுவா இருந்தாலும் இங்கேருந்து கெளம்பு முன்ன..." என்று குறையாத கோபத்தோடு செழியன் கூறயனின் வார்த்தைகளை தட்டமுடியாமல் உதயனைப் பார்த்தவாறே வெளியேற முயன்றாள் ஆதினி.
உதயனுக்கோ அவள் கையை அசைத்து எதிரில் நிற்கும் ஒருவரிடம் பேசுவது போல் பேசுவதை கண்டு அதிர்ச்சியடைந்திருந்தான். அவன் மனம் அதை ஏற்றுக்கொள்ள மறுத்தது. ஆனாலும் உண்மை அதுதானென பொட்டில் அறைந்தது போல் காட்டிவிட்டானே செழியன். ஆதினியிடம் கோபப்பட்டு தான் நடந்து கொண்ட முறைக்கு வருந்தியவன் ஆதினி தன்னைப் பார்த்துக்கொண்டே வெளியே செல்லவதைக் கண்டு
"ப்ளீஸ் டீ வெய்ட்," என்றவன் ஆதினியின் எதிரே பார்த்தவாறு பேச ஆரம்பித்தான்.
"செழியன்... நீங்க இங்கேதான் இருக்கீங்கன்னு எனக்கு தெரியுது, ஆனா உங்களை என்னால பார்க்கமுடியல... இந்த விசயத்தை நம்பவும் முடியல... நம்பாம இருக்கவும் முடியல. என்னால உங்களை பார்க்க முடியலேன்னாலும் உங்களால என்னை பார்க்க முடியும். நான் சொல்வதை கேட்க முடியும்."
"ஆதினி என்னையும், என் காதலையும் விட எப்பவும் உங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்ததால்
வந்த பிரச்சினை தான் இது."
"இவ உயிருக்கு ஆபத்துன்னு நான் பதறிப் போய் தேடிட்டு இருக்கேன். அந்த நேரத்திலும் இவ உங்களைப் பற்றியே யோசிக்கிறா... பேசுறா... அதனால தான் எனக்கு கோபம் வந்துடுச்சு உங்களுக்கு புரியும்ன்னு நினைக்கிறேன்..." என்று தன்னிலையை செழியனுக்கு விளக்கும் சாக்கில் ஆதினிக்கும் புரியவைக்க முயன்றான்.
செழியன் பெருமிதத்தோடு ஆதினியை நோக்க அவளோ வருத்தத்தோடு உதயனைப் பார்த்துக் கொண்டிருந்தாள். உதயனைவிட அவள் தன்னை பெரிதாக மதிக்கிறாள் என்ற செய்தியே அவனுக்கு பெருமகிழ்ச்சியாக இருந்தது. உதயனின் உணர்வுகளையும் அவனால் புரிந்து கொள்ள முடிந்தது.
தனக்காக ஏற்கனவே ஆதினி படும்பாட்டால் அவனையே வெறுத்தவன், இன்று அவனுக்காக தன்னுடைய காதலையே அவள் துச்சமாக மதிக்கிறாள் என்று எண்ணும் போது அவனுக்கு அந்த நிலைக்காக மகிழ்வதா வருந்துவதா என்று புரியவில்லை. என்றானாலும் தன்னால் அவளோடு இறுதிவரை பயணிக்க முடியாதென்பது அவன் உணர்ந்தே இருந்தான். அவளுக்காக உதயன் பரிதவிப்பதையும் உணர்ந்தான். உதயனின் மீதான கோபம் குறைந்தது செழியனுக்கு.
ஆதினியோ உதயனைப் பார்த்துவிட்டு திரும்ப செழியனை நோக்க அங்கே பெருமிதத்துடன் அவன் அவளை நோக்கி கையை நீட்ட "செழியா..." என்றவாறே ஆவலோடு கண்கள் கலங்க அவனது கரங்களைப் பற்றிக் கொண்டாள்.
"நான்தான் கேட்டேனே ஆது இவன் வந்ததுலேர்ந்தே நீ சரியில்லேன்னு... அது சரியாப் போச்சு பார்த்தியா... ரோபோ போலீஸா இருந்தாலும் உன்னை லவ் பண்றதுல ரோமியோ போலீஸா மாறிட்டான். ஆனா உனக்கும் அவனை பிடிச்சிருக்கு தானே ஆது..? அப்புறம் ஏன் அவனை ஒதுக்கிட்டு எனக்காக பார்த்த" என்று செழியன் கேள்வியெழுப்ப
ஒரு நிமிடம் உதயனை உற்று நோக்கியவள் இருவருக்குமான பதிலாய் "நந்து மேல எனக்கு லவ் இருக்கிறது உண்மைதான்டா... ஆனா அதே சமயம் உன்னை இந்த நிலைமையில விட்டுட்டு நான் மட்டும் சந்தோசமா இருக்கிறது எனக்கு குற்ற உணர்வா இருந்தது. உனக்கான நியாயம் கிடைக்காம நான் பாட்டுக்கு காதல் கத்தரிக்கான்னு போக எனக்கு விருப்பமில்ல"
"உன்னை ஒவ்வொரு நிமிசமும் பார்க்க பார்க்க நீ எப்படி வாழ்ந்திருக்க வேண்டியவன், ஏன் கொன்னாங்க...? எதுக்காக கொன்னாங்கன்னு துடிச்சுப் போறேன். எங்கே என் காதலை ஒத்துகிட்டா என் மேல உள்ள காதலால் உன் கேஸ்ல்ல வேகம் குறைஞ்சிடுமோன்னு பயந்தேன். அதனாலயே என் காதலை மறைத்தேன்" என்றவாறே உதயனை ஏறிட்டு பார்க்க அவனது முகத்தில் பலவித கலவையான உணர்வுகள்.
அவளது மனம் செழியனுக்கு தெள்ளத் தெளிவாய் புரிந்தது இருதலைக் கொள்ளி எறும்பாய் அவள் தவிப்பதை விரும்பாதவன் அவள் பற்றியிருந்த கைகள் இறுக்கியபடியே தன் மற்றொரு கரத்தையும் அவள் கரத்தின் மீது வைத்து
"எனக்கு நீ கிடைத்ததே பெரிய விஷயம் ஆது... நம் உணர்வை யாராலும் புரிஞ்சுக்க முடியாது. உதயன் நிச்சயமா உனக்கு ஒரு நல்ல துணையாய் இருப்பான். அவன் லவ்வை அக்சப்ட் பண்ணிக்கோ." நீ குற்றவுணர்வில் இருக்கேன்னு சொல்லி கடைசியில் என்ன குற்றவாளியாக்கிடாதே" என்று செழியன் கூற
இவர்களுக்கு இடையேயான உரையாடலில் ஆதினியின் பேச்சை மட்டும் கேட்டுவிட்டு உதயன் மகிழ்ந்திருந்த்லும் மற்றொரு புறம் செழியன் என்ன சொல்லியிருப்பான் என்ற கேள்வியும் எழுந்தது.
அதையெல்லாம் விட தன்னை காதலித்துக் கொண்டே தன்னை தவிக்கவிட்டவளை என்ன செய்யலாம் என அவனின் காதல் கொண்ட மனம் யோசிக்க ஆரம்பித்தது.
"இல்லடா இந்த கேஸ் முடியட்டும் அதுவரை நாங்க வெயிட் பண்ணுறோம்" என்றவளிடம்
"லூசா நீ அதுக்கும் இதுக்கும் முடிச்சு போடாத... நீ இப்படி செய்யற மாதிரி இருந்தா இனி உன் முன்னாடியே நான் வரப்போவதில்லை. ஏற்கனவே என்னால உன் உயிருக்கு ஆபத்துன்னு தவிச்சுகிட்டு இருக்கேன். இதுல இது வேறயா..?
"எப்பவும் உன்னோட நான் இருக்கணும்னு நீ நினைச்சா எனக்காக செய்யறேன்னு உன் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கிக்காத அது எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கல புரியுதா..." என கோபப்பட்டவனிடம்
"ம்" என்ற ஒற்றை வார்த்தையில் பதில் அளித்து விட்டு அவள் முகத்தை திருப்பிக்கொள்ள அவளது முகம் மாறுதல்களை கண்ட உதயன் அதற்கு மேல் அடக்க மாட்டாமல்
"செழியா ப்ளீஸ்... இதுக்கு மேல என்னால இவளை விட்டு ஒரு நிமிடம் கூட இருக்க முடியாது... ஒரு பத்து நிமிஷம் எனக்காக வெளியே இரேன்" என்று அவனை காற்றில் தேடியபடி கேட்க
செழியனுக்கோ சிரிப்பை அடக்கமுடியவில்லை "உன்னை அடக்கவும் ஆள் வந்தாச்சு பாரேன். என்ன பேச்சு பேசுவ, இவன் பேசும்போது மட்டும் உன் வாய் அடங்கிப்போகுது. அட்றா... அட்றா... ஆது இனி நீயாச்சு... அவனாச்சு... நான் வெளியே இருக்கேன். இனி இந்த ரூம் பக்கமே வரமாட்டேன்..." என்றவன் அந்த அறையை விட்டு வெளியேறினான்.
"டேய்... டேய்... போகாதடா..." என்ற ஆதனியின் முகம் சென்ற போக்கிலேயே செழியன் சென்று விட்டதை அறிந்த உதயன் அவளின் விரல் பற்றி தன்னை நோக்கி இழுக்க, அதுவரை இருந்த இறுக்கம் மறைந்து அவளுள் நாணம் புகுந்து கொண்டது.
தன் முகச் சிவப்பைத் தலையை கவிழ்ந்து மறைத்துக் கொண்டு நின்றவளை அவளின் விரல் பற்றி அவனிழுக்க, அவன் மேல் பூஞ்சாரலாய் மோதி நின்றவளை இடையோடு சேர்த்து இறுக்கினான். நாணம் கொண்ட பெண்ணவளின் முகத்தை தன் விரல் கொண்டு நிமிர்த்த, முகம் நிமிர்ந்ததேயன்றி அவள் விழிகள் மலரவில்லை. அவை நிலம் பார்த்து இருந்தன.
தன் காதல் தெரியாமலேயே தன்னை ஆட்டிப் படைத்தவன் இப்பொழுது தன்னுடைய காதல் தெரிந்தபின் என்ன செய்வானோ என்ற பெண்மையின் நாணமும் அச்சமும் அவளிடம் மேலோங்கி இருந்தது.
அவளின் கழுத்தில் அவனது விரல் ஸ்பரிசம் நடுக்கமாய் படருவதை உணர்ந்து அவனை கண் திறந்துப் பார்க்க... அவனது முகம் இறுகி கிடந்தது.
"சாரிடி கோபத்துல..." என்று வார்த்தை வராமல் அவன் நிறுத்தும் முன் அவள் கைகள் அவன் வாயை பொத்தியது.
"ம்ஹும்" என்பது போல் அவள் தலையசைக்க பொத்திய அவளின் மென்மையான உள்ளங் கைகளுக்குள் தன் இதழைப் பதித்தான் அவன்.
முரட்டுத்தனமான அவனிதழ் பட்டதில் அவள் கைகள் குறுகுறுக்க பட்டென தன் அவள் கைகளை விலக்கிக் கொண்டவள் அவனை நேராய் காணமுடியாமல் நிலம் நோக்க...
தன் கைத்தடம் பதிந்த அவளது கழுத்து வளைவில் மென்மையாய் அவனிதழ் கொண்டு மருந்திட்டு கம்பீர ஆண்மகன் பெண்ணவள் மீது கொண்ட காதலில் கசிந்துருக... பெண்ணவளோ அவனது காதலில் முற்றிலுமாய் தன்னைத் தொலைத்தாள்.
தன் காதல் கைகூடிவிட்ட களிப்பில் அவன் அவளை வெகுவாய் நாட... முதல் பிரிவும், ஊடலும் அவளையுமே அவனைத் தேடச் செய்தது. இத்தனை நாட்கள் அவனிடம் மறைத்து வைத்த காதல் யாவையும் அவனிடத்தில் கொட்டிவிடத் துடித்தாளாவள். அவனின் கரைகாண காதலில் கரைந்து, அவன் கைகளில் இளகி, அவனது முரட்டுத்தனத்தில் துவண்டு அவனது கம்பீரமான பரந்த மார்பில் ஒன்றிப்போனாள்.
இவர்களின் காதல் கைகூடுமா...?
செழியனின் நிலை என்னவோ...?
தொடரும்...
 
Top Bottom