Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


தேடிப் பார்க்கிறேன் காற்றினிலே..

Megala Appadurai

Saha Writer
Team
Messages
52
Reaction score
63
Points
18
தேடிப் பார்க்கிறேன் காற்றினிலே...

அத்தியாயம் - 23

கனத்த இடியொன்று தாக்கியது போல் உணர்ந்தான் செழியன். விண்ணென்று பின் மண்டையில் வலி தெறிக்க "அம்மா.." என்று அலறியவாறே தலையை பிடித்துக் கொண்டு மண்டியிட்டு விழுந்தவனுக்கு ரத்தம் தரையில் பரவ கண்களில் உயிரைக் தேக்கி "செழியா..." என்றவாறே கைகளை நீட்டிய ஸ்ருதியின் தோற்றம் அவனது இதயத்தில் இடியும், மின்னலும் ஒரு சேர தாக்கியதாய் உணர்ந்தான்.

செல்லமாய் வளர்த்தவள், தங்கள் வீட்டு இளவரசி, தன் சிநேகிதி, செல்லத்தங்கை வேரருந்தமரமாய் தரையில் ரத்தம் சொட்ட கிடப்பதைக் கண்டவனுக்கு தன் வலி மறந்தது. அவளருகே மண்டியிட்டவாறே விரைந்தவன் அவளை அள்ளி மடியில் கிடத்திக் கொண்டான்.

"அய்யோ ஸ்ருதி... ரத்தம் வருதே நான் என்ன செய்வேன். எப்படி உன்னைக் காப்பாத்துவேன்.." என அலறிக் துடிக்க அவனது மடியில் கிடந்தவள் தலையை மேலும் பதம் பார்க்கவென அந்த கயவன் இரும்புக்கழியை இறக்க முயல, நொடியில் சுதாரித்த செழியன், மின்னல் வேகத்தில் இறங்கிய இரும்புக்கழியை ஒரு கரத்தில் தடுத்து சுழற்றி வீச அதோடு சேர்ந்து தூர சென்று விழுந்தான் அதை பயன்படுத்தியவன்.

அதற்குள் அவர்களை நெருங்கி சுற்றி வளைத்திருந்நது அந்த கும்பல் நான்கு பேர் சேர்ந்து செழியனை ஸ்ருதியிடமிருந்து வலுகட்டாயமாய் பிரித்தெடுத்து தூர இழுத்துச் செல்ல

முன்னிலும் வேகமாய் தரையில் கிடந்தவளின் தலையை குறி பார்த்து இரும்புகழியால் தாக்கப்பட்டாள் அவள்.

"ஆ.. ஹக்..." என்ற சத்தத்தோடு கண்கள் நிலைகுத்த உடல் விழுக்கென தூக்கிப் போட சில நொடிகளில் அடங்கிப் போனாள் ஸ்ருதி.

தன் கண்முன்னே நடந்துக் கொண்டிருக்கும் கொடூரத்தை தடுக்க இயலாமல் அவளுயிர் பிரிவதைக் கண்டு துடி துடித்தவன் தன்னை பிடித்திருந்தவர்கள் மேல் தன் முழு பலத்தையும் உபயோகித்து திமிறி விடுபட முயல அவனை நோக்கி அவனைவிட முழு பலத்தோடு இறங்கியது இரும்புக்கழி. முன்தாடை கிழிந்து தொங்கி அவனின் செந்நிற ரத்தம் தரையைத் தொட்டது.

ரத்தம் வழிய தொய்ந்து விழுந்தவனின் நடுமுதுகில் அடுத்த அடியை இறக்கினான் அந்த இரக்கமற்றவன். "ஆ......." என்ற அலறல் பிரதேசம் முழுதும் எதிரொலிக்கத்தான் செய்தது. ஆனால் அதைக் கேட்கத்தான் அங்கே ஆட்கள் இல்லை.

உயிரை பிழியும் வலி செழியனின் ஒவ்வொரு பகுதியிலும் ஊடுருவ அதைவிட பெரிய வலியாய் அவன் உணர்ந்தது ஸ்ருதியை மட்டுமே. அந்நிலையிலும் அவளைக் காப்பாற்றி விட மாட்டோமா என துடித்தது அவன் இதயம். அவனது விழிகளில் மசப்பாய் உருவங்கள், ஏதேதோ குரல்கள். எதுவும் அவன் கருத்தில் பதியவில்லை. மெல்ல அவளை நோக்கி நகர முற்பட்டான். உடலை அசைக்க கூட முடியவில்லை.

'ஐய்யோ அம்மூ.. இப்படி கெடக்குறியே உனக்கென்னடி ஆச்சு, ‌அம்மா இந்த கோலத்துல நம்மள பார்த்தா உசிரையே விட்ருவாங்களே நான் என்னடி செய்வேன்..' என அவன் உள்ளம் கதறியது.

எட்டிவிடும் தூரத்தில் கிடந்தவள், ஓராயிரம் மைலுக்கு அப்பால் உள்ளது போன்றதொரு உணர்வு அவனுள். மூளையெங்கும் தெறிக்கும் வலி ஒரு புறம், இதயத்தை பிழியும் ஸ்ருதியின் தோற்றம் ஒரு புறமுமாய் அவனின் உணர்வுகளை சிறிது சிறிதாய் மங்கச் செய்துக் கொண்டிருந்தது. தன் சக்தியெல்லாம் ஒன்று திரட்டி அவன் நகர முற்பட்டதில் இரண்டடி இடைவெளியில் கிடந்தவர்களின் தூரம் ஓரடியாய் குறைந்தது.

ஏதேதோ குரல்கள் வெகு சமீபத்தில் கேட்டது. கண்களை வெகு சிரமப்பட்டு பிரித்தவன் அருகே ஸ்ருதியின் கைவிரல்கள் தென்பட அவளது கைகளை இறுகமாய் பற்றி "ஸ்ருதி.." என்றழைத்தவறே மீண்டும் முயற்சித்து அவளருகே வந்தவன் கண்டது அவளது நிலைத்திருந்த விழிகளைத் தான்.

'அவளில்லை... இவ்வுலகில் அவளில்லை... இவ்வுடலில் அவள் உயிர் இல்லை.. என் அம்மூ இல்லை..' சத்தமிடவும் திராணியற்று அவனது தலை சரிய

"இரண்டு பேரையும் தூக்கி வண்டில போடுங்கடா.. சுத்திலும் யாரும் இல்லேல்ல ஒரு எவிடென்ஸ் கெடைக்க கூடாது. அவங்க கொண்டு வந்த மொத்த பொருளையும் பொறுக்கிக்கோங்க.." என்று ஒரு குரல் உறுமியது மட்டும் லேசாய் அவன் காதுகளில் வாங்கியவாறே மயங்கிப்போனான் செழியன்.

இரண்டு பேரின் உடல்களையும் ஆளுக்கொரு புறமாய் தூக்க செழியனின் கரம் ஸ்ருதியை இறுகப் பற்றியிருந்தததைக் கண்ட ஒருவன் அவனது கைகளை வேகமாய் விலக்கிவிட பற்றியிருந்த கரத்தினில் இருந்து ப்ரேஸ்லெட் செழியனின் கரத்தோடு வந்தது. அவர்களது உடல்களை வாகனத்தில் ஏற்றியவர்கள், செழியனும் ஸ்ருதியும் வந்த வாகனத்தையும் கிளப்பிக்கொண்டு பறந்தனர் அவ்விடத்தை விட்டு.

மயங்கிய நிலையில் இருந்த செழியனின் மூளைக்குள் ஸ்ருதியின் நிலையே மீண்டும் மீண்டும் வர மெல்ல நினைவு திரும்பலானான். கண்களை மெல்ல பிரித்தவனுக்கு இருளைத் தவிர வேறொன்றும் புலப்படவில்லை. சற்று ஆசுவாசப்படுத்தி கண்களைத் திறந்து இருளை கண்களுக்கு பழக்கபடுத்த முனைந்தவனுக்கு எங்கோ ஓர் இடத்தில் வாகனம் நிறுத்தப்பட்டிருந்ததை உணரமுடிந்தது. ,ஸ்ருதி.. ஸ்ருதி எங்கே..?' என அவன் கண்கள் தேடியது. எழுவதற்காய் முனைந்த போது துளி கூட அசைய முடியாமல் தன்னுடல் கனத்து கிடந்தது கண்டு மனம் நொந்து போனான். தன் பலத்தையெல்லாம் ஒன்று திரட்டி எழுந்தவனுக்கு தன் கையில் ஏதோ ஒன்று நலுவும் நிலையில் இருப்பதை உணர்ந்து கைகளை இறுக்கிப் பிடித்து பார்க்க அந்த இருட்டிலும் அந்த கருப்பு வைரங்கள் கண்களைச் சிமிட்டியது.

ஆத்திரம், கோபம் ரௌத்திரம் என எல்லாம் கலந்த கலவையாக அவனின் விழிகள் தீயாய் தகித்தது. 'இதுக்காகவாடா என் செல்லத்த..' அதற்கு மேல் அவனால் நினைக்ககூட முடியவில்லை. அம்மூ.. என்றுஅரற்றியது அவனிதயம். கைகளில் இறுகப் பற்றிக் கொண்டான் அப்பொருளை. என்ன நடந்தது, ஏன் நடந்தது, ஒன்றும் புரியவில்லை அவனுக்கு. வெளியே என்ன நடக்கிறது என்று இருளில் தன் கண்களை செலுத்தினான். ஏதோ ஒரு பயன்படுத்தப்படாத பாழடைந்த கட்டிடத்தின் முன் இவனிருந்த வாகனம் நின்றிருந்தது. வாகனத்தினுள் ஒருவருமில்லை. சிரமப்பட்டு மறுபுறம் பார்வையை செலுத்தியவன் திடுக்கிட்டு போனான். ஸ்ருதியின் உடலை இவர்கள் இருவரும் வந்த வண்டியிலேயே ஏற்றிக் கொண்டிருந்தனர்.

'அய்யோ அம்மூ..' அவனது உடல் பரபரத்தது, எங்கே கொண்டு செல்கிறார்கள். 'முடியாது விடமாட்டேன் என் அம்மூவை நான் விடமாட்டேன்..' என்றவறே அந்த
வாகனத்தில் இருந்து வெளியேற முயற்சித்து தோற்றான். அவன் மனம் இருக்கிற கடவுள்களையெல்லாம் சபித்தது. அவன் மீதே அவனுக்கு அளவில்லா கோபம். தன் வீட்டு பெண்ணையே பாதுகாக்க தவறிய குற்றாவாளியாய் அவனிதயம் அவனை கூறாய் கிழித்தது‌.

அளவில்லா கோபம் ஆக்ரோசத்தைத் தர அந்த ஆக்ரோசம் அவனுடலுக்கு வலுவைக் தந்தது. வாகனத்தை விட்டு அவன் இறங்குவதற்குள் ஸ்ருதியின் உடலை இவர்களின் வாகனத்தில் ஏற்றிவிட்டு இருவர் அதில் ஏறிக் கொள்ள அந்த வாகனம் கிளம்பியது.

தன் வழு மொத்தத்தையும் கூட்டி வாகனத்தின் பின்னே ஓட ஆரம்பித்தான் செழியன். வாகனத்தை துரத்திக்கொண்டு பலகீனமாய் ஒடும் அவன் அந்த கயவர்களுக்கு ஒரு பொருட்டாய் தெரியவில்லை.

"என்னடா அடிச்ச அடில போய்டான்னு நினைச்சா எந்திருச்சு ஓடுற அளவுக்கு விட்ருக்கீங்க.." என்ற குரல் அவனுக்கு மிகப் பரிட்சயமானதாய் பட்டது. ஆனால் அதையெல்லாம் நின்று கவனிக்கும் நிலையில் அவன் இல்லையே, என்ன செய்வான் பாவம்.

அவர்களுடைய வாகனம் கிளைச்சாலையை விட்டு நெடுஞ்சாலையை அடைந்து சீறிப்பாய்ந்து வேகமெடுத்து பறந்து வெளிச்சப் புள்ளியாய் மறைந்து போனது. பின் தொடர்ந்த செழியனின் "அம்மு.." என்ற கதறல் காற்றோடு கரைந்து போனது.

தட்டுத்தடுமாறி நெடுஞ்சாலையை அடைந்து அவன் பார்த்தபோது அவன் பார்த்ததெல்லாம் சுற்றிலும் வெறும் நிசத்தை இருட்டை மட்டுமே.

மாண்டு விட்டதாய் நினைத்தவன் மீண்டும் எழுந்து நடந்து வந்ததை சகிக்க முடியாதவர்கள் உயிர் இழந்து வெறும் கூடாய் சதைப் பிண்டமாய் நடந்துகொண்டிருந்த செழியனை மேலும் குற்றுயிரும் குலையுயிருமாய் ஆகும்வரை தனது தாக்குதலை நிகழ்த்தினர்.

தன்னை தற்காத்துக் கொள்ளவோ இல்லை எதிர்த்து போராடவும் எந்த ஒரு முயற்சியையும் செழியன் செய்யவில்லை அவன் உயிர் ஸ்ருதியோடே போய்விட்டிருந்தது. நினைவு தெரிந்த நாள் முதலாய் விரல் பற்றி நடந்து ஒன்றாய் அமர்ந்து, ஒன்றாய் உண்டு, ஒன்றாய் படித்து, ஒன்றாய் உலகமெல்லாம் சுற்றியர்கள், இன்று அவளை மட்டும் தனியே அனுப்ப அவனது மனம் விரும்பவில்லை.

தூரத்தில் வாகனம் வரும் வெளிச்சப் புள்ளிகள் தெரியவே கூட்டத்தில் இருந்த ஒருவன் "அவனை அப்படியே நடுரோட்டில் போடுங்கடா இந்நேரத்துக்கு இந்த மலைப் பாதையில் வேகமாக வர வண்டி மோதி இருக்கிற கொஞ்ச உசுரும் போகட்டும். அப்போதான் இது விபத்தா இருக்கும்.." என்ற குரலின் ஆணைக்கேற்ப அவனை அப்படியே நடுரோட்டில் விட்டு விட்டு கிளம்பினார்கள் அவர்கள்.

வந்த ஒன்றிரண்டு வாகனங்கள் அவனை கடந்து சென்று இருக்க அதன் பிறகு நீண்ட நேரம் கழித்தே ஆதினயின் கண்ணில் பட்டான் செழியன்.

தேடல் தொடரும்....
 

Megala Appadurai

Saha Writer
Team
Messages
52
Reaction score
63
Points
18
தேடிப் பார்க்கிறேன் காற்றினிலே...

அத்தியாயம் - 24

உதயன் மிகவும் பரபரப்பாய் செயல்பட ஆரம்பித்திருந்தான். தேவாவிடமிருந்து வந்த செய்தியும், ஆதினியின் மூலமாய் அவனறிந்த செழியனின் கடைசி நிமிடங்களும் அவனுக்கு வேண்டிய தகவல்களை தந்திருந்தது.

சுப்ரமணியத்திடமோ, தனசேகரனிடமோ செழியனைப் பற்றிய உண்மையைக் கூறுவதில் ஆதினிக்கும் விருப்பமில்லை. அவர் ஒர் அதிகாரி பேய், பிசாசு, ஆவி, ஆன்மா இதில் எல்லாம் நம்பிக்கையற்றவர். அவ்வளவு ஏன் செழியனைப் பற்றி அறியும் அந்நொடி வரைக்கும் அவனுமே இதை நம்பவில்லையே. அவனே நேரடியாக உணர்ந்த பின்னர் தானே நம்பினான். மேலும் அவனொரு ஐபிஎஸ் அதிகாரி. ஆதாரமில்லாமல் எதையும் கூறிவிட முடியாது.

செழியன் இறந்துவிட்டது சட்டபடி மருத்துவமனை சான்று உள்ளது. ஆனால் அது விபத்தால் ஏற்பட்ட மரணமல்ல என்று உதயன் ஆதாரப்பூர்வமாய் நிரூபிக்க வேண்டும். அதேபோல் ஸ்ருதியின் உடல் கிடைக்காத வரையில் அவள் இறந்துவிட்டதாய் அவள் பெற்றோரிடம் எதுவும் அவன் கூறிவிட முடியாது. போலீஸ் மூளை துரிதமாய் வேலை செய்ய ஆரம்பித்தது.

இந்த நேரத்தில் சுப்ரமணியத்திற்கும், அவரது மனைவி அன்னத்திற்கும் ஆதினியின் துணை அவசியம் என்பதை நன்கு உணர்ந்தவன், தனசேகரனிடம் தனக்கு கிடைத்திருக்கும் ஆதாரங்களையும், தகவல்களையும் அவரிடம் கூறி ஆதினியின் உயிருக்கு ஆபத்து இருப்பதையும் அறிவுறித்தி அவர்களின் பாதுகாப்பிற்கு தக்க ஏற்பாடுகளை செய்துவிட்டு, தான் ஆற்றவேண்டிய கடமைக்காய் கிளம்பினான்.

கிளம்பும் முன் ஆதினியிடம் விடைபெற நினைத்து அவளை அணுக அதற்குள் அவளாகவே அவனின் அறைக் கதவைத் தட்டிவிட்டு உள்ளே நுழைந்தாள்.

"செழியன் உங்களோட வரவிரும்புறான் நந்து.." என்று கூறியவளை தன் புருவத்தை உயர்த்தி யோசனையோடு பார்த்தான் உதயன்.

அவனின் எண்ண ஓட்டத்தை படித்தவளாய் "எனக்கு இங்க தனசேகர் அங்கிளோட பாதுகாப்பு இருக்கும் போது பயப்பட வேண்டாம் நந்து. அதுவுமில்லாம நீங்க வரும் வரை நான் இந்த வாசலைத் தாண்டி எங்கேயும் போகமாட்டேன். இத்தனை காவலை மீறி இங்கே யாரும் நுழைய வாய்ப்பில்லை நந்து. செழியன் உன்னோடு வரட்டும்." என அவளே முடிவாய் கூற அதற்கு மேல் உதயன் தடுக்கவில்லை.

அவளின் கைகளை லேசாய் பற்றி "கவனம் டா... செண்ம்பாம்மாவை பத்திரமா பாத்துக்கோ.. அப்புறம் என நிறுத்தியவனை

"ரெண்டு அம்மாவையும் நான் பத்திரமா பாத்துக்குவேன் நந்து.." என்ற அவளின் தீர்க்கமான வார்த்தைகளில் சற்றே இருந்த சஞ்சலமும் தெளிய விரைவாய் கிளம்பினான்.

இத்தனை நாட்களாய் கண்ணாமூச்சி காட்டிக் கொண்டிருந்த முடிச்சுகள் எல்லாம் ஒவ்வொன்றாய் அவிழ்வது தெள்ளத் தெளிவாய் தெரிந்தது உதயனுக்கு. ஒவ்வொரு காய்களும் திட்டமிட்டு தெளிவாய் நகர்த்தப்பட்டு இருப்பத புரிந்தது. ஆனால் எப்பேர்ப்பட்ட கொலையாளியும் ஏதேனும் ஒரு இடத்தில் தன் தடயத்தை விட்டிருப்பான் என்ற விதிகளின்படியே இதிலும் உதயனுக்கு கிடைத்த தடயங்கள் குற்றவாளிகளை இனம் காட்டியது.

எதேச்சையாக சுப்பிரமணியத்தின் வருகையும், செழியனின் வாழ்க்கையாய் ஆதினி கூறிய அனைத்தையும் கேட்டவன், ஒரு காவல்துறை அதிகாரியாய் அவனின் மூளைக்குள் எழுந்த சந்தேக காரணிகளை ஒவ்வொன்றாய் அவ்வப்போது தன் கைபேசியில் தேவாவிற்கு அனுப்பி கட்டளை பிறப்பித்து கொண்டிருக்க, அன்றைய பொழுது முடிவதற்குள்ளாகவே உதயனின் குழு அவனுக்குத் தேவையான ஆதாரங்கள் அத்தனையும் திரட்டி இருந்தது. அதன் அடிப்படையிலேயே உதயன் கிளம்பி இருந்தான்.

தன் யூகம் சரியானால் நாளை பொழுது முடிவதற்குள் இத்தனை நாட்கள் நடந்த ஆட்டத்திற்கு ஒரு முடிவு கிட்டிவிடும் என்று நம்பிக்கையுடன் தன் உயர் அதிகாரிகளிடம் உத்தரவு பெற்று ஆந்திர மாநிலம் கடப்பா வை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தான் உதயன். உடன் அவனின் குழுவினரோடு செழியனும் பயணித்துக் கொண்டிருந்தான்.

செழியனின் எண்ணங்களில் திரும்பத் திரும்ப குரல் ஒலித்துக்கொண்டே இருந்தது குரலை கேட்க, கேட்க ஆத்திரத்தில் அவன் கண்கள் கனலை கக்கிக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில் மட்டும் அவனை யாரேனும் பார்த்திருந்தால் அவர்களுக்கு நிச்சயம் இதயம் நின்றிருக்கும். அவ்வளவு ரௌத்திமாய் இருந்தான் அவன்.

விடக்கூடாது.. விடவே கூடாது. என் அம்முவை கொன்றவனை உயிரோடு விடக்கூடாது. சட்டம் நின்று கொள்ளும் நான் இன்றே கொள்வேன். பட்டுப் பூச்சியாய் பறந்து திரிந்தவளை, அழகான அந்த அனிச்ச மலரை பிய்த்தெறிய எப்படி மனம் வந்தது அந்த அரக்கர்களுக்கு. எந்த உயிருக்கும் சிறிதுகூட தீங்கிழைக்காத அந்த பச்சை குருத்து பறிகொடுத்தவர்கள் பழிவாங்கியே தீரவேண்டும் என்று செழியனின் மனம் கங்கணம் கட்டியது.

இத்தனை வருடங்களாய் நினைவில் கூட வந்திராத தாயின் முகமும் அவள் வேதனையும் தன் இழப்பை கூட அவனை வருத்தமில்லை சுருதி மரணம் மட்டுமே அவனுக்கு வெறுப்பாய் இருந்தது அதற்கு காரணமானவர்களை இனம் கண்டு அதை பற்றி அவனிடம் மறந்தும் கூறிவிடவில்லை.

இன்று முழுவதுமான அத்தனை போராட்டங்களுக்கு இடையேயும் அவ்வப்போது உதயன் செய்தி அனுப்புவதும், தொலைபேசியில் பேசுவதுமாய் இருந்ததும், மாலை வந்த அழைப்பில் அவன் புருவம் சுருக்கி அவன் யோசித்ததே அவனுக்கு ஏதோ முக்கிய தகவல்கள் இருக்கக்கூடும் என்று செழியனுக்கு தோன்றியது.

எப்படியாகினும் ஸ்ருதிக்கு என்ன நேர்ந்தது என அவன் நேரடியாய் கண்டிருந்தாலும் லட்சத்தில் ஒரு வாய்ப்பாய் அவள் பிழைத்திருந்தால் என்ற எண்ணமும் அவன் மனதில் தோன்றாமல் இல்லை.

சினிமாவில் கதைகளில் வருவது போல் எல்லாம் நினைத்து உடனே ஆவிகள் ஊர்விட்டு ஊர் போகும் போகும் நாடு விட்டு நாடு போகும். அப்படி போக முடியாதா.... அடுத்த என்ன நடந்ததென்று காண முடியாதா.. எல்லாமே வெறும் கட்டுக்கதைகள் என்று அவன் மீது அவனுக்கே வெறுப்பாய் இருந்தது ஒரு கால் அப்படி செய்ய முடித்திருந்தால் இந்நிலை தோன்றியிருக்காது. இத்தனை நாட்களில் அவர்களை துவம்சம் செய்திருக்க மாட்டேனா..! அன்னம் அம்மாவை இந்நிலையில் விட்டிருப்பேனா என்று உள்ளுக்குள் அவன் மனம் குமைந்து கொண்டு இருந்தது.

திடீரென செண்பாம்மாவின் நினைவு தோன்றியது. 'என்னை விட்டுச்சென்றவர் அப்படியே இருந்திருந்தால் கூட அந்த துன்பத்தோடு போயிருக்குமே.. இப்பொழுது பெற்ற மகனை ஒரே அடியாய் இழந்துவிட்டு தவிக்கும் நிலை ஏற்பட்டிருக்காது..' என்று தன்னைப் பெற்ற தாய்க்காய் வருந்தியது அவனது மனம்.

வன்மம் மேலும் மேலும் கூடியது செழியனுக்கு. என் கண் முன் என்று அவர்களை காண்கிறேனோ அன்றே அவர்களின் வாழ்க்கையின் கடைசி நாள் என்பதை ஆனித்தரமாக மனதில் குறித்துக் கொண்டான்.

செழியனின் நிலை இவ்வாறு இருக்க உதயனின் சிந்தனை முழுக்க செண்பாம்மாவே நிறைந்திருந்திருந்தார். ஏனோ அவரைக் கண்ட முதல் கணமே அவனுள் தோன்றிய அன்பு ஆதினியை அவர் பொத்திப் பொத்திப் பாதுகாக்கும் விதத்திலேயே அவருள் ஏற்பட்ட பேரிழப்பு ஒன்று அவரை இவ்வாறு நடக்க வைக்கிறது என்று அனுமானித்து இருந்தான். ஆனால் அவரின் வாழ்க்கையே அவருக்கு மிகப்பெரிய இழப்பு தான் என்பதை கேட்டபின் அவனால் நிம்மதியாக இருக்க முடியவில்லை.

ஒற்றைப் பிள்ளை எங்கிருந்தாலும் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணி இருந்திருப்பார், ஆனால் வளர்ந்த பிள்ளை தன் முன்னே ஆவியாய் அலைவதை எந்த தாயால் தாங்கிக்கொள்ள முடியும்.

செழியனுக்கு நேர்ந்ததையும், ஸ்ருதிக்கு நடந்ததையும் ஆதினியின் வாய் மொழி கேட்டே பரிதவித்து போனேனே.. நேரில் பார்த்த செழியனின் நிலை எப்படி இருந்திருக்கும். அவன் பார்த்து பார்த்து வளர்த்த அவன் தங்கை அவன் கண் முன்னே அடித்துக் கொல்லப்படும் போது அதை தடுக்க இயலாமல் போவதைவிட என்ன கொடுமை இருந்துவிட முடியும் அவன் வாழ்நாளில். இதையெல்லாம் எண்ணும்போதே இதற்கு காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி வீணாய் நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிப்பதை காட்டிலும் தன் நியாயப்படி அவர்களுக்கான தண்டனை கொடுப்பது என்று தீர்மானித்திருந்தான் உதயன்.

ஆதினியின் நிலைதான் அங்கே திண்டாட்டம் ஆகியது செண்பாம்மாவையும் தேற்ற முடியாமல் அன்னத்தையும் சமாதானப்படுத்த முடியாமல் தடுமாறிப் போனாள். தனசேகரனும் அவரது மனைவியும் அன்னத்தையும், சுப்பிரமணியத்தையும் கண்ணும் கருத்துமாய் கவனித்துக்கொள்ள ஆதினி கொஞ்சம் ஆசுவாசமாய் செண்பாம்மவை தேற்ற முயற்சித்தாள்.

வெறித்த பார்வையோடு, வற்றிய கண்களுடன் அவர் அமர்ந்திருக்க அவர் என் கைகளைப் பற்றி அவர் மடியில் தலை வைத்து அவள் படுத்தவுடனேயே அவரின் கரம் தன்னிச்சையாய் ஆதினியின் தலையை வருட ஆரம்பித்தது.

ஆதினிக்கு கண்ணைப் கரித்துக் கொண்டு வந்தது செழியனை பிரிந்து இத்தனை நாட்கள் இவர் அனுபவித்த துயர் போதாதென்று அவனை ஒரேடியாக இழந்து நிற்கும் படிச் செய்து விட்ட விதியை எண்ணி கண்ணீர் விட்டாள் ஆதீனி. அவளின் கண்ணீர் துளிகள் செண்பாம்மாவின் மடியை நனைக்க சட்டென அவளின் முகவாய் பற்றி திருப்பியவர் பதறிப்போனார்.

ஆதினியை அவர் கையில் ஏந்திய கரம் தொட்டு இன்று வரை அவளை உயிராய் எண்ணி வளர்த்தவர் ஆயிற்றே அவருக்கு அவளுக்கு ஒன்று எனில் துடித்துப் போகும் உள்ளம் இன்றும் அப்படியே துடித்தது

"பப்லு என்னடா தங்கம் என்ன ஆச்சு.." என்றவர் ஆதினி தன்னை நினைத்தே கண்ணீர் விடுகிறாள் என தோன்றிட "தோ பாருடா நான் நல்லாருக்கேன் பாரு எனக்கு என்ன ராசாத்தி மாதிரி நீ இருக்கும்போது, உன்ன கண்ணுக்கு கண்ணாக இத்தனை வருஷம் பாத்திரமாய் பார்த்த மாதிரி இனியும் உன்னை பார்த்துட்டே என் மிச்ச காலத்தையும் ஓட்டிடுவேன்டா....என அவளின் கண்களை துடைத்தவர் அவளையும் எழுப்பி நானும் எழுந்து கொண்டவருக்கு ஒரு தாயாய் மகளின் வாடிய முகத்தை கண்டவர்.

"அச்சோ நீ ஒண்ணுமே சாப்பிடலை செல்லம். இரு நான் என்ன டிபன் இருக்குன்னு பார்த்து எடுத்துட்டு வரேன்.." என்றவரிடம்

"தலை வலிக்குது ஜிங்கிளி எனக்கு உன் கையால ஒரு காபி தாயேன்.." என கேட்ட ஆதினியிடம் வாஞ்சையாய் முகத்தை வருடி

"ஒரே நிமிசத்துல போட்டுட்டு வரேன் டா.." என சமையலறைக்குச் சென்றவரை பார்த்து மனம் கணக்க கண்களை துடைத்துக் கொண்டாள்.

இனிமேலும் இவர் உயிர் உள்ள வரை அவரின் மகளாய் கடைசி வரை பார்த்துக் கொள்ள வேண்டும் எனக்காக மட்டும் இல்லாமல் செழியனுக்காகவும் என்று எண்ணிக்கொண்டாள்.

பொழுது புலரும் போது உதயனின் குழு ஆந்திர மாநிலம் கடப்பாவில் இருந்தது ஏற்கனவே அங்கு உள்ள உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது. அவர்கள் தேடி வந்த இடம் ஓர் தனியார் கிரானைட் கல் குவாரி. கடந்த சில ஆண்டுகளாய் குவாரியில் கற்கள் எடுப்பது நிறுத்தபட்டு உபயோகிக்கபடாமல் இருந்தது.

குவாரியின் ஒவ்வொரு முலைமுடுக்கையும் சல்லடையாய் துளைத்துக் கொண்டிருந்தது காவல்துறை. மோப்பநாய்களின் குரைப்புச் சத்தம் அந்த பிரதேசத்தில் எதிரொலித்துக் கொண்டிருந்தது.

நான்கு மணிநேரத் தேடுதலுக்கு பின் இத்தனைக்குமான விடையாய் ஸ்ருதி கிடைத்தாள் பிணமாய்.

தேடல் தொடரும்..
 

Megala Appadurai

Saha Writer
Team
Messages
52
Reaction score
63
Points
18


தேடிப்பார்க்கிறேன் காற்றினிலே.......

அத்தியாயம் 25

மனிதனின் வாழ்க்கை தான் எத்தனை விந்தையானது. பிறப்புக்கும், இறப்புக்கும் நடுவில் உள்ள சில காலங்களில் ஏனிந்த மனிதர்களுக்கு இத்தனை குரூரங்களும், வன்மங்களும். அழகான இப்பிரபஞ்சத்தில் ஓர் உயிர் ஜனிக்க எத்தனை எத்தனை உயிர் அணுக்கள் இறந்து போகின்றன. இலட்சம் அணுக்களை வென்றே ஓர் அணு உருவாகி கருவாகிறது. தாயின் கருவறையில் பேரதிசியங்கள் பலவற்றை நடத்தியே இப்புவியை பார்க்கிறது ஓர் உயிர். அப்பேர்ப்பட்ட உயிர் எவ்வளவு விலை மதிப்பில்லாதது.

எத்துனை முனைந்தாலும் செழியனால் ஸ்ருதியின் இழப்பை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. எப்படியாவது அவள் உயிர்பிழைத்திருக்க கூடாதாவென ஏங்கியவன் அவளின் காரோடு சேர்த்து சிதைந்து அழுகிய சடலத்தைக் கண்ட போது அவன் கதறிய கதறல் யாருக்குமே கேட்காமல் காற்றோடு கலந்து காணாமலே போனது.

அந்த குவாரியின் வெட்டப்பட்ட குழியில் நிறைந்திருந்த நீருக்குள் இருந்து ஸ்ருதியின் உடலும் உடமைகளும் மீட்கப்பட்டன. உடல் அவ்வூரின் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காய் கொண்டு செல்லப்பட்டது‌. அவளுடைய கார் மற்றும் அவர்கள் காணாமல் போன போது கொண்டு சென்ற பொருட்கள், உடைகள், பைகள், கிரிடிட் கார்ட், ஏடிஎம் கார்ட், மற்றும் அவர்களின் செல்போன்களை வைத்தும் அது ஸ்ரூதியின் உடல்தானென காவல்துறையால் உறுதிசெய்யபட்டு சிவசுப்ரமணியத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

அன்னத்தின் நிலைமை மேலும் மோசமாக ஆதினியும், செண்பாம்மாவும் அவர்களோடு காரைக்குடிக்கு சென்றனர். ஆதினி அன்னத்தை மருத்துவமனையில் கண்ணுங் கருத்துமாய் பார்த்துக்கொள்ள செண்பாம்மா தன் மகன் வளர்ந்த இடத்தை ஒவ்வொரு அங்குலமாய் தடவி தன் மகனை உணர்வுகளில் நிரப்பிக்கொண்டிருந்தார்.

குற்றவாளிகளை ஆதாரத்தோடு உதயன் கைது செய்த போது சிவசுப்ரமணியத்தோடு சேர்த்து அவ்வூரே அதிர்ந்து தான் போனது.

சொந்த தங்கையை கொன்ற அண்ணன்கள்.... சொத்திற்காக வெறிச் செயல்.....

ஸ்ருதிக்கும் செழியனுக்கும் காதலா...? அதனால் இக்கொலை நிகழ்ந்ததா...?

ஸ்ருதி செழியனால் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டார் அதனாலேயே ஸ்ருதியின் சகோதரர்கள் செழினை கொலை செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஸ்ருதியின் உடல் கண்டெடுக்க பட்டதில் இருந்து இப்படி பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சியின் தலைப்பு செய்திகளில் அவர்களே முதன்மை செய்தி ஆகினர். அவர்களின் டீஆர்பி ரேட்டிங்கிற்காக ஒவ்வொரு மீடியாவும் ஒவ்வொரு கதைகளைக் கட்டியது. எல்லாவற்றிற்கும் முற்றுப்புள்ளியாய் உதயனின் செய்தியாளர்கள் சந்திப்பு அமைந்தது.

"பர்ஸ்ட் திங் உங்க யூகங்களுக்கு செய்தி போடறதை விட்டுட்டு உண்மையான தகவலை மக்களிடம் கொண்டு செல்ல முயற்சி செய்ங்க. எப்போ வியாபார நோக்கத்துக்காக செய்தி போடறதை விட்டுட்டு உண்மையான நிலவரத்தை சொல்றீங்களோ அன்னைக்கு தான் மக்களுக்கு உங்க மேல மதிப்பு கூடும்.." என்றவனை இடைமறித்த ஒரு மூத்த பத்திரிக்கையாளர்

"அப்போ நாங்க எழுதுரதுதெல்லாம் உண்மையே இல்லேங்கறீங்களா ..." என்ற கேள்விக்கு

"எது சார் உண்மை ஸ்ருதி செழியனால் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டார் அதனாலேயே ஸ்ருதியின் சகோதரர்கள் செழினை கொலை செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்படின்னு உங்க பத்திரிக்கைல போட்டீங்களே அதுவா ..?

"பத்திரிக்கை மீடியாவுக்குன்னு ஒரு நேர்மையும் தர்மமும் இருக்கு சார் இங்க அந்த நேர்மையை எத்தனை பேர் கடைபிடிக்கிறீங்கன்னு தெரியல. செய்தியோட உண்மைத்தன்மையை ஆராயாம உங்க இஷ்டத்துக்கு செய்தி வெளியிடுவாங்களா.." என்ற அவனின் கேள்வியால் உரைத்த நியாயத்திற்கும் ஆக்ரோஷமான கோபத்திற்கும் முன் எவருக்கும் கேள்வி எழுப்பும் திராணி இல்லாது போயிற்று.

"இப்போ உங்களோட கேள்விகளை நீங்க கேட்கலாம்.." என்றான் உதயன்.

"ஸார் செழியன் ஸ்ருதி கொலை கேஸ்ல அவங்க பிரதர்ஸ் தான் அக்யூஸ்டுனு எப்படி தெரிந்தது.." என்ற நிருபரின் கேள்விக்கு

"அசோக்குமார், கிஷோர்குமாரோட செல்போன் சிக்னல் தான் காட்டி குடுத்தது. ஸ்ருதி, செழியன் ஏற்காடு வந்த அன்றைக்கு மதுரைல இருந்ததா இவங்க கொடுத்த பொய்யான வாக்குமூலம் அதை உறிதி செய்யதது. மத்த டீடெய்ல்ஸ் எல்லாம் உங்களுக்கு தேவா தருவாரு. யூ கேரி ஆன்.." என்றபடி உதயன் மீசையை முறுக்கியபடி கம்பீரமாய் நடந்தான்.


சிலநாட்களுக்கு முன்....

பெண்கள் குழந்தைகளுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிக்கு என்றுமே மரணம் மட்டுமே தண்டனை என்பது உதயனின் எழுதப்படாத சட்டம்.


உடன் பிறக்கவில்லை என்றாலும் தன்னோடு உடன் வளர்ந்த தங்கையை ஈவு இரக்கமின்றி கொன்று அவர்களை சட்டத்தின் வசம் ஒப்படைத்து நீதிமன்றத்தின் பொன்னான நேரத்தை வீணாக்க விரும்பாத செழியன்,

ஸ்ருதிக்கான நீதியை என்கவுன்டரின் மூலம் உதயன் கொடுக்க எண்ணியிருக்க, செழியனோ தான் வளர்ந்த வீட்டில் உறவுகள் முன்னிலையில் அவர்களை கொள்ள விரும்பாமல் அவர்களை வெளியே கொண்டு வரும் நேரத்திற்காய் காத்திருந்தான். இருவரின் நோக்கமும் ஒன்றே ஆனால் செயல் படுத்துவோர் யார்?


ஸ்ருதி இறுதி நிமிடத்தில் துடித்தது செழியனின் கண் முன்னே வந்து சென்றது அவர்கள் துடிக்க வேண்டும் உயிர்மூச்சிற்காய் அணு அணுவாய் துடிக்க வேண்டும் தாங்கள் செய்தது எவ்வளவு பெரிய தவறு என்று அவர்கள் நினைத்து நினைத்து துடிதுடித்து இறக்க வேண்டும் என முடிவெடுத்தான். ஆனால் ஸ்ருதியின் உடல் ஊருக்கு வருவதை அறிந்ததுமே குற்றவாளிகள் இருவரும் தப்பியிருந்தனர்.


அவர்களை தப்பவைத்து தன் வளையத்திற்குள் உதயன் கொண்டு வந்ததை அவர்கள் இருவரும் அறிந்திருக்கவில்லை. ஏற்கனவே இவர்களின் கூட்டாளியான மணியரசு கைது செய்யப்பட்டிருப்பதை அவர்கள் இருவரும் அறிந்திருக்கவில்லை.

உதயனின் செயல்பாடுகளை கண்ட செழியன் இவன் நிச்சயமாய் குற்றவாளிகளை உயிருடன் விடப்போவதில்லை என்பதை உணர்ந்தே இருந்தான் ஆனால் அவர்கள் இருவரும் தன்னால் மட்டுமே தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாய் இருந்தான். அதற்காய் ஆதினியை நாடினான்.

மருத்துவமனையில் அன்னத்திற்கு துணையாய் இருந்த ஆதினியிடம் போய் நின்றவனை பார்த்து அதிர்ந்தாள் ஆதினி. இங்கு எப்படி அவனுடன் அவள் பேச முடியும் என யோசிக்கும் முன்னரே "ஆதி நீ எதுவும் பேசாத ரியாக்ட் பண்ணாத நான் பேசுவதை மட்டும் கேட்டுக்கோ.." என்று அவளின் கையை பற்றி அவன் கூறிய போது அவளுக்கு கண்கலங்கி போனது.

"ஸ்ருதியை கொன்னவங்களுக்கு நான் தான் தண்டனை தரனும். அதுவும் ஏன்டா இவங்களை கொன்னோம்னு அவங்க துடிதுடித்து சாகனும். ஆனா நந்து அவங்களை டார்கட் பண்றான். நீதான் அவங்ககிட்ட பேசணும். எனக்காக என் அம்முகாக இதை நீ செஞ்சே ஆகணும் என அவன் கூற, அவன் கேட்பது நியாயம் என்றே ஆதினிக்கு தோண்றியது.

சரியென அவள் தலையசைக்க "ப்ளீஸ் ஆதினி அவனுக்கு போன்போட்டு சொல்லு, அவங்களை நந்து எதுவும் செய்யும் முன்னாடி ப்ளீஸ் சொல்லு .."என்று அவன் கெஞ்சிக் கொண்டிருக்கையிலேயே அங்கே மணியரசுவின் மூலமாக குற்றவாளிகள் இருவரையும் தன் வளையத்திற்குள் கொண்டு வந்திருந்தான் உதயன்.


செழியனின் அவசரத்தையும் துடிதுடிப்பும் கண்டவள் மளமளவென மருத்துவமனையின் தனிமையான பகுதிக்கு வந்தவள் தன் கைபேசியால் உதயனை அழைத்தாள்.

"உங்களை அரஸ்ட் செய்ய வராங்க உடனே நான் சொல்ற இடத்துக்கு பாதுகாப்பா போய் இருங்க சீக்கிரமா நா வந்து சேர்ந்தேக்கறேன்னு உதயனின் கஸ்டடியில் இருக்கும் மணியரசுவை முகவரியோடு தேவா சொல்ல வைக்க, தங்களது கூட்டாளியின் வார்த்தையை உண்மையென எண்ணிய இருவரும் மணியரசு கொடுத்த முகவரிக்கு வந்து சேர்ந்தனர். ஏற்கனவே உதயனின் டீம் அங்கே அவர்களுக்காய் காத்திருந்தது.

குற்றவாளியாய் சந்தேகப்படும் நபர்களுக்கு உதயன் என்றும் நண்பனே ஆனால் அவர்கள் குற்றவாளிகள் என ஊர்ஜி்தமான பின்னரே அவர்களை நெருங்குவான் உதயன்.
ஏற்கனவே மணியரசு கூறியது பொய்யென அறிந்தவன். அவனின் அனைத்து தொடர்புகளையும் ஆராய்ந்ததில் அவனோடு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாய் அசோக்குமார் கிஷோர் குமார் இருவரும் பல சமூக குற்றங்களுக்கு துணை போனது தெரியவந்தது. ஸ்ருதி செழியன் ஏற்காடு வந்த அன்று நண்பனின் திருமணத்திற்கு மதுரை செல்வதாக அவர்களின் காவல்துறையின் வாக்குமூலத்தில் இருந்தது அதுவே அவர்களுக்கும் ஸ்ருதி, செழியன் கொலைக்கும் சம்பந்தம் உண்டென உதயனின் போலீஸ் மூளை துப்பு துலக்க ஆரம்பித்தது.


சுப்பிரமணியத்தை பார்த்த அன்றே ஸ்ருதி உட்பட அனைவரது எண்களை பெற்ற உதயன் அதை ஆராய கடைசியாக அது பயன்பாட்டில் இருந்த இடத்தை வைத்தே கடப்பாவில் தனது தேடுதல் வேட்டையை ஆரம்பித்தான் ஆனால் அதற்கு முன்னதாக ஸ்ருதி செழியன் இருவரது கைப்பேசியின் அலைவரிசை காட்டப்பட்ட எல்லைக்குள்ளேயே குற்றவாளிகள் இருவரது எண்ணின் சிக்னலும் மணியரசு மற்றும் அவன் கூட்டாளிகள் கைப்பேசியின் சிக்னலும் காட்டவே உதயனின் சந்தேகம் உறுதியாயிற்று.


காரைக்குடி காவல் துறை அறிக்கையில் அவர்கள் மதுரையில் இருந்ததாய் கூறியிருக்க ஏற்காட்டில் அவர்களது கைப்பேசி சிக்னல் எப்படி வரமுடியும் என அந்தப் பகுதி காவல்துறை விசாரித்து இருந்தால் கேஸ் முடிந்து இருக்குமே என்று துணுக்குற்ற உதயன் தேவாவிடம் விசாரிக்கச் சொல்ல விசாரணையை கிடப்பில் போட வென்றே அந்தப் பகுதி காவல் அதிகாரிக்கு பணம் கைமாறி இருந்தது உறுதியானது.

பாலில் நஞ்சு கலப்பது போல் ஓரிரு சுயநலமிக்க அதிகாரிகளாலேயே ஒட்டுமொத்த காவல்துறையும் அவமதிக்கப்படுவதை வெறுத்தவன் இது மேலும் என்னை ஏமாற்றியது அப்படி கைமாறபட்ட பணம் மணியரசன் மூலமாய் என்பதை அறிந்தவன் தனது பாணியில் மீண்டும் மணியரசு புரட்டி எடுக்க உண்மை வெளியே வந்தது ஆம் ஸ்ருதி செழியன் பெயரில் உள்ள சொத்துகாய் அவர்களை கொலை கொலை செய்துவிட்டு அவர்கள் இருவரும் ஊரைவிட்டு ஓடி விட்டதாய் கதை கட்டி இருந்தனர் அவர்களின் சொந்த உறவுகள்.

கொலையாளிகளின் இன்னார் என்று அறிந்த போது தான் சுப்பிரமணியதிர்க்கும் அன்னத்திற்கும் பேரதிர்ச்சியாய் இருந்தது. சொத்திற்காக சொந்தம் என்றும் பாராமல் அவர்கள் செய்த கொடுஞ் செயலால் கிட்டத்தட்ட ஓராண்டுக்கும் மேலாக தாங்கள் தவித்த போதும் கூட எந்தவித குற்றவுணர்வும் இன்றி தங்களோடு இருந்தவர்களா தங்கள் பிள்ளைகளை கொன்றது என்று திரும்பத் திரும்ப அன்னம் கேட்டபோது செழியனின் உள்ளம் கொதித்துப் போனது.

ஸ்ருதியும், செழியனையும் கொன்றது வேறு யாருமில்லை சுப்பிரமணியத்தின் உடன்பிறந்த தம்பி மக்களான அசோக்குமார், கிஷோர்குமார். சொத்தை பிரித்து அனுப்பிவிட்டபின் ஊதாரித்தனமான செலவு, புதிய தொழில், ஆடம்பரம் என சில வருடத்திலேயே கடனாளிகள் ஆகினர்.

"ஆரம்பம் முதலே பிள்ளை இல்லா சொத்து வரும்னு நினைச்சா இப்போ ஒன்னு பொறந்ததும் இல்லாம எங்கிருந்தோ ஒன்னை கூட்டிட்டு வேற வந்துட்டாங்க.." என்று வார்த்தைக்கு வார்த்தை பிள்ளை பருவத்திலேயே பெற்றவள் ஏற்றிய நஞ்சு வளரும் பருவத்தில் ஸ்ருதி செழியன் மீது தானாக வன்மமாய் மாறியது.

தாங்கள் கடனாளிகளாகி இருக்கும்போது இவர்கள் வெளிநாடுகளில் சுற்றிக் கொண்டிருப்பது அவர்கள் மேல் மேலும் வன்மத்தை ஏற்படுத்தியது. எப்படியாவது இந்த சொத்தை அடைந்துவிட வேண்டும் என்ற வெறியும் அவர்களின் கூடா நட்பும் அந்த இரு உயிர்களை இரக்கமின்றி கொல்லத் துணிந்து.

வெளிநாட்டில் வைத்து கொன்றால் தங்கள் மீது சந்தேகம் வராது என முயற்சிக்க அதிர்ஷ்டவசமாய் அதில் உயிர் தப்பினாள் ஸ்ருதி. மூன்று முறை முயற்சித்தும் திட்டம் தோல்வியை தழுவ இம்முறை நேரடியாக அவர்களே களத்தில் இறங்கினர். மணியரசின் உதவியுடன் ஏற்காட்டில் ஸ்ருதியையும், செழியனையும் கொன்று சடலத்தை மறைத்து விட்டு அவர்கள் இருவரும் ஓடி போனதாய் கதை கட்டினார்கள்.

செழியன் தப்பி ஓட ஆதினி காப்பாற்றியது அவர்கள் எதிர்பாராதது. எங்கே தங்களை பற்றிய உண்மை செழியனுக்கு ஏதும் தெரிந்து அதை ஆதினியிடம் கூறி இருப்பானோ என்ற சந்தேகத்திலேயே செழியனை கொன்ற பின்பு ஆதினியை கொல்ல முயற்சித்தார்கள்‌ ஆனால் இதில் ஆதினிமூலம் உதயனின் வருகை அவர்கள் எதிர்பாராதது.


தேடல் தொடரும்....
 

Megala Appadurai

Saha Writer
Team
Messages
52
Reaction score
63
Points
18
அத்தியாயம் - 26

உயிர் பயம் என்னவென்பதை அவ்விருவரும் அன்றுதான் உணர்ந்தனர் கண்களில் சிறிது கூட இரக்கம் இல்லாமல் நின்றிருந்த உதயனை கண்ட மாத்திரத்திலேயே அவர்கள் கண்களில் மரண பயம் தொற்றிக் கொண்டது பயத்தில் உதடுகள் உலர்ந்து உமிழ்நீர் சுரப்பிகள் தன் வேலையை நிறுத்தம் செய்ய துவங்கியிருந்தது அச்சத்தில் பின் அடைந்தவர்களை நோக்கி ஒவ்வோர் அடியாய் முன்வைத்துக் கொண்டிருந்தான் உதயன்.
ஆதினியின் அழைப்புகள் எதனையும் உதயன் ஏற்கவில்லை தவிப்போடு உதயனுக்கு அவள் மீண்டும் மீண்டும் முயல வழக்கம் போல அவனது கைபேசி சைலன்ட் மோடுக்கு சென்றிருந்தது. அவனின் எடுக்கப்படாத அழைப்புகள் அவளுக்கு விபரீதத்தை உணர்த்தியது. தேடிய கண்களுக்கு செழியன் அகப்படவில்லை அவர்களை தேடி அவன் சென்றிருப்பார் என யூகிக்க வேண்டியதில்லை.


"இங்க பாருங்க சார் எங்க மேல குற்றம் இருந்தா எங்களை ஸ்டேஷன் கூட்டிட்டு போய் விசாரிங்க கோர்ட்டுல ப்ரொடியூஸ் பண்ணுங்க.. அதை விட்டுவிட்டு இப்படி இங்க எதுக்கு கூட்டிட்டு வந்திருக்கீங்க.." என அவர்கள் மிரட்சியோடு கேட்க.

"கோர்ட்ல ப்ரொடியூஸ் பண்றதுனா உங்க வீட்டிலேயே அரெஸ்ட் பண்ணி இருப்பேனேடா.. அதுக்கு எதுக்கு உனக்கு தூண்டிலை போட்டு இங்க வர வச்சிருக்கேன்.." என பிஸ்டலால் தன் தாடையை சொரிந்தவாறு கேட்டவனை இருவரும் அதிர்ச்சியோடு நோக்கினர்.


அவன் என்ன சொல்கிறான் என்பதை அவர்கள் உணர முடியவில்லை தங்களை வெறுமனே மிரட்டுகிறான் என்றே அதுவரை எண்ணி இருந்தவர்களுக்கு அவன் வெறுமனே வாய் வார்த்தைக்கு விளையாடுகிறவனல்ல என்பது விளங்கியது.


"ஏசிபி சார் சும்மா மிரட்ட பார்க்கிறீங்களா எங்களோட பலம் என்னான்னு உங்களுக்கு தெரியல நீங்க சந்தேகத்தின் பேர்ல அரஸ்ட் பண்ணினா கூட அத ப்ரூப் பண்ணனும் சார்.." என்று தங்களது பயத்தை மறைத்துக் கொண்டு ஒருவன் கூற

"உங்களோட பலமா...? யார் அந்த மணியரசு வா...? அவன் இப்போ என்ன நிலைமைல இருக்கான்னு நீங்க பாக்கணுமா...? என்ற உதயன், "தேவா..." என கர்ஜிக்க

தேவா தனது கைபேசியை உயிர்ப்பித்து அதில் ஒரு வீடியோவை ஓட விட்டான்.
உடலெங்கும் காயங்களோடு தலைகீழாக கட்டி தொங்கவிடப்பட்ட நிலையில் ரத்தம் ஒழுக தொங்கிக்கொண்டிருந்த மணியரசுவை கண்டு இருவரும் மேலும் பயத்தில் உறைந்து போனார்கள் என்னடா உங்களோட பலம் தலைகீழா தொங்குது போல... என்ன சொன்னீங்க சந்தேகத்தின் பேர்ல அரஸ்ட் பண்றதா இந்த உதயன் குற்றவாளிகளை தவிர எவரையும் அரஸ்ட் பண்ண மாட்டான் டா உங்களோட மொத்த கிரைம்மும் ஆதாரத்தோடு என்கிட்ட இருக்கு சொல்லவா?

"நாலு வருஷம் முன்னாடி இங்க இருக்கிற லோக்கல் செயின் ஸ்னாட்ச்சர் மூலமா உனக்கு மணியரசு அறிமுகம். அவனோடு சேர்ந்து இல்லிகலா திருட்டு நகைகளை வாங்கினது, சிலைக்கடத்தல் புராதன பொருட்கள் கடத்தல்னு ஆரம்பித்து இங்கிருந்து நீ கைகாட்டிவிட்டு கடத்தப்பட்ட பொண்ணுங்க லிஸ்ட் வரைக்கும் என்கிட்ட இருக்கு.." என்று உதயனின் பார்வை உக்கிரம் ஆவதைக் கண்டு அவர்களுக்கு வேர்த்து வழிந்தது.

"இந்த நாலு வருஷத்துல உங்களால் இங்கே இருந்து கடத்தப்பட்ட பொண்ணுங்க பதினொன்று அதுல இரண்டு பொண்ணுங்க மர்டர் ஆகிருக்கு. மற்ற ஒன்பது பேரும் மும்பைக்கும், கொல்கத்தாவிற்கு கடத்தப்பட்டு இருக்காங்க. இதோட உங்க குற்றம் முடியலையே.." என்றவாரே அவர்களை நெருங்கிய உதயன் அவர்களில் ஒருவனது தாடையை தன் பிஸ்டலால் நிரடி அதன் அடியில் வைத்தவாரே

"ஒரே வீட்ல ஒன்னா வளர்ந்த சொந்த தங்கையவே சொத்துக்காக ஆட்களை விட்டு கொலை முயற்சி பண்ணீங்க.. அதுல அவள் தப்பிக்கவும் நீங்களே நேரடியா களத்துல இறங்கீட்டீங்க அம் ஐ ரைட்.." என கர்ஜித்தான்.

துப்பாக்கி தன் தாடையின் அடியில் அழுத்திக்கொண்டிருக்க எச்சில் கூட விழுங்க முடியாமல் விதிர்விதிர்த்து நின்றான் கிஷோர். அவன் தாடையில் அழுத்திய பிஸ்டலை விடுவித்தவன் "மதுரைக்கு போறதா வீட்ல கதை கட்டிட்டு அவங்களுக்கு முன்னாடி கிளம்பி ஏற்காட்டில மணியரசோட வெயிட் பண்ணீங்க ரெண்டு பேரையும் கொன்று புதைத்துவிட்டு, பாடி டிஸ்போஸ் பண்ணிட்டு ரெண்டு பேரும் ஊரைவிட்டு ஓடிட்டாங்கனு கதை கட்டுவது உங்க பிளான் ஆம் ஐ ரைட்.." என்றபடியே அடுத்தவனின் மூக்கின் அடியில் பட்டென பிஸ்டலை வைக்க அவனுக்கு இதயம் தாறுமாறாய் எகிற தொடங்கியது.

"என்ன தேவா நான் ஏதாவது மிஸ் பண்ணிட்டேன்னா.." என கேட்ட உதயனுக்கு

"நோ சார்.." என்ற விரைப்பான பதில் தேவாவிடமிருந்து வந்தது.

"எப்படிடா உங்களுக்கு பொண்ணுங்களை பணத்துக்காக என்ன வேணா செய்யலாம்னு தோணிச்சு.. உன்கூட குழந்தைலேர்ந்து விளையாண்டு அண்ணன்னு கூப்பிட்ட ஒரு பொண்ணை அடிச்சு கொண்ணுருக்கீங்க.. தப்பிச்ச செழியனையும் ஹாஸ்பிட்டல்ல ஆள் வச்சு மர்டர் பண்ணி அதை மறைச்சுருகீங்க.. செழியன் ஏதாவது சொல்லியிருப்பான்னு ஆதினியையும் கொலை முயற்சி செஞ்சீங்க பார்த்தியா அங்கதான் நீங்க முதல்ல மாட்னீங்க... "

"பொண்ணுங்கள தப்பா பார்த்தாலே அவன் கைகளை எடுத்துடுவேன் இத்தனை பொண்ணுங்களோட வாழ்க்கையை அழித்து மூணு பொண்ணுங்களோட சாவுக்குக் காரணமாகி உயிருக்கு போராடிய செழியனையும் கொன்ன உங்களை சும்மா விடுவேன்னு நினைச்சிங்களா.." என்றவாறே சில அடிகள் எடுத்து வைத்தான்‌.

"தேவா.." உதயனின் கர்ஜனை அந்த பகுதி எங்கும் எதிரொலித்தது.

"ரெடி சார்..." என்று தேவா உட்பட மேலும் இருவரும் தங்களது துப்பாக்கிகளை அவர்களை நோக்கி நீட்டினர்.

இவன் தங்களை சட்டத்தின் வசம் ஒப்படைக்கப் போவதில்லை, என்கவுண்டரில் தங்களை கொல்லப் போகிறான் என அவர்களுக்கு புரிபட ஆரம்பித்தது. "ஓடிடு.." என தன் சகோதரனை தள்ளியபடியே தலைதெறிக்க அவர்கள் ஓட ஆரம்பிக்க உதயனின் பிஸ்டல் அவர்களை நோக்கி குறி பார்த்தது.
பிஸ்டலிருந்து விசை அழுத்தப்பட்ட வினாடி தன் கைகள் வேகமாய் தள்ளிவிடப்பட உதயனின் துப்பாக்கி குண்டுகள் திசைமாறி வெடித்தது. கணநேரத்தில் உணர்ந்தான் இது செழியனின் வேலை என. அதே நேரம் ஓடிக் கொண்டிருந்த இருவரின் கால்கள் இழுக்கப்பட்டு தரையில் குப்புற விழ குதிரை வேகத்தில் அவர்கள் தரதரவென சில நூறு அடிகள் தரையில் இழுக்கப்பட்டு கொண்டிருந்தனர்.
சூழ்நிலை என்னவென உணரும் முன்னரே இருவரின் கால்களை பிடித்து உடல்களும் பம்பரமாய் சுழற்றபட்டு எரிய இருவரும் மூலைக்கொருவராய் தூக்கி எறியப்பட்டு இருந்தனர்.
தேவாவும் மற்ற இருவரும் அதிர்ச்சியில் உறைந்து "சார்..." என்று அவர்களை செல்ல எத்தனிக்க, "வெயிட்..." என உதயன் கூறியபோது மீண்டும் அவனது அலைபேசி அலறியது.
திசைக்கொன்றாய் விழுந்தவர்கள் சுதாரித்து எழும் முன் ஒருவர் இன்னொருவரை தாக்குவது போல் ஒருவன் இன்னொருவன் மீது பாய்ந்து சென்று விழந்து நிலைகுலைந்து மிரண்டு போயினர் இருவரும்.
அவனது பேன்ட் பாக்கெட்டில் இருந்த கைபேசி மீண்டும உறுமத் தொடங்க இதையெல்லாம் பார்த்தவாரே அலறிய கைபேசியை உயிர்ப்பித்தான் உதயன் "நந்து.‌‌.. ஆர் யூ தேர்... ப்ளீஸ் நந்து நான் சொல்றதை ஒரு நிமிஷம் கேட்கிறாயா... நந்து இருக்கீங்களா..." என இடைவிடாமல் படபடத்தவளிடம்,

"செழியன் எதுவும் சொன்னானா.." என்ற ஒற்றை வார்த்தையில் அவளது முழு தவிப்பையும் அடக்கினான் நந்து. ப்ளீஸ்... நீங்க எதுவும் பண்ண வேணாம் அவங்களை கோர்ட்ல ப்ரொடியூஸ் பண்ணி தண்டனை வாங்கித் தாங்க. ஸ்ருதி செழியனை கொன்றவர்களை சமூகத்துக்கு முன்னாடி அடையாளம் காட்டனும் நந்து. ஒரேடியா அவங்க செத்து அவங்களை நல்லவங்களா ஆக்கிவிடக்கூடாது நந்து. ஆயுசுக்கும் அவங்க செஞ்சதை நெனச்சு நெனச்சு உறுத்தனும் நந்து. இது செழியனோட விருப்பம்.." என கூறியவளுக்கு மறுமொழி உறைக்காது சில நிமிடங்கள் அவன் மௌனம் காத்தான்.

"நந்து செழியனுக்காக வேணாம் எனக்காக நந்து ப்ளீஸ்.." என அவள் குரல் உடைவதை கேட்டு அவன் இரும்பு உள்ளம் இன்னும் இருகியது.

"அவன் உயிரோடு அவங்களை விட்டா அரெஸ்ட் பண்றேன்.." என சொல்லி அழைப்பை துண்டித்து இருந்தான்.
தங்களுக்கு என்ன நேர்கிறது என்பதை அவர்கள் உணரவே இடம் கொடாது அவர்களை துவம்சம் செய்து கொண்டிருந்தான் செழியன்.
தேவாவும் மற்ற இருவரும் ஏதும் புரியாமல் விழித்துக் கொண்டிருந்தனர்.

"நாம் எது இல்லைன்னு நினைக்கிறோமோ.. அது சில நேரங்களில் நம்மை விட சக்தி வாய்ந்ததா இருக்குது பார்த்தியா தேவா..." என பூடகமாக பேசிய உதயனிடம்,

"ஸ்பிரிட்டா சார்..." யோசனையோடு கேள்வியை முன்வைத்தான் தேவா.
"எஸ்.. செழியன்... இளஞ்செழியன்...‌" என்றவனை விட்டுவிட்டு சுழன்றிருந்த சூறாவளியில் சிக்கி சிதறுண்டுவராய் பந்தாடப் பட்டுக்கொண்டிருக்கும் குற்றவாளிகளை பார்த்து திகைத்து நின்றனர் மற்றவர்கள்.
நையப்புடை என்ற சொல் ஒன்று உண்டு ரத்தம் வராமல் ஒரு சின்ன காயம் கூட ஏற்படாமல் அவர்களின் ஒவ்வொரு எலும்புகளும் நொறுங்கும் விதமாய் உயிர் ஒன்றை மட்டும் விட்டுவிட்டு துவம்சம் செய்வது. அப்படித்தான் அவர்களைச் செய்திருந்தான் செழியன். அவன் பிரளயம் ஓயும் மட்டும் காத்திருந்த உதயன் விழுந்துகிடந்த அவர்களை அள்ளிக்கொண்டு தான் வர வேண்டி இருந்தது.

************************



சில ஆண்டுகளுக்குப் பிறகு.....

ஆம் சில ஆண்டுகளுக்குப் பிறகே தான்... நீதிமன்றங்கள் ஒரு போதும் உடனே குற்றவாளிகளை தண்டித்து விடுவதில்லை. ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம் ஒரு நிரபராதி கூட தண்டிக்கபடக்கூடாது என்ற கூற்றின் படி குற்றவாளிகள் தப்பித்துக் கொண்டுதான் இருந்தனர்.

உதயனின் பெருமுயற்சியால் குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை என்று தீர்ப்பு வழங்கியது நீதிமன்றம். அவர்களுக்காய் மேல்முறையீடு செய்ய அவர்களின் தகப்பனே முயற்சிக்காத போதும் தங்களுக்கென எதுவுமே இல்லாதபோது பல் பிடுங்கப்பட்ட பாம்பாய் செய்வதற்கு ஏதுமின்றி ஜாமீனில் கூட வெளியே வர முடியாமல் சிறையிலேயே அவர்களின் வாழ்க்கை கழிக்க நேர்ந்ததே அவர்களின் பேராசை காண பரிசு.

ஒரு மனிதனுக்கான மிகப்பெரிய தண்டனையே அவன் எல்லோராலும் நிராகரிக்கப் படுவதே. ஸ்ருதி செழியனின் மரணத்திற்கு இவர்கள் தான் காரணம் என்பதை அறிந்த அவர்களது மனைவி மக்களே அவர்களை வெறுத்து ஒதுக்கினர். அவர்களின் தகப்பனை மீறி தன் மகன்களை கண்ணால் கூட காண முடியாது போனது அவர்களின் தாய்க்கு. தவறான தன் வளர்ப்பிற்கான தண்டனை என்று துடித்தாள் அவர்களின் தாயார்.


இதுவெல்லாம் கூட அவர்கள் பொறுத்துக் கொண்டனர். ஆனால் ஒவ்வொரு நிமிடமும் செழியன் தங்களை என்ன செய்வானோ என்ற அச்சத்திலேயே அவர்களின் ஒவ்வொரு மணித்துளியும் கழிந்தது. அவர்கள் இருவரும் நிம்மதியாய் உறங்கி நான்கு வருடங்களுக்கு மேல் ஆகி இருந்தது. உணவில்லாமல் கூட ஒரு மனிதன் இருந்து விடலாம் ஆனால் உறக்கம் இல்லாமல் ஒரு மனிதன் இருந்தால் நாளடைவில் பெரும் மனச்சிதைவு நோய்க்கு ஆளாக நேரிடும்.

தண்டனை என்பது மனிதன் தன் குற்றத்தை உணர்ந்து திருந்துவதற்காக ஏற்படுத்தப்பட்டது. ஆனால் குற்றவாளிகள் திருந்தினாலும் அவர்களால் ஏற்படுத்தப்பட்ட குற்றம் குற்றம் தானே. இழப்பு தானே. எதைக் கொண்டும் அதை ஈடு செய்ய இயலாதே.


செழியன் அவர்களை படுத்திய பாட்டில் மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் இருவரும்.
ஆனால் செழியன் அவர்கள் உண்ணும் நேரம் அவர்களை எதுவும் செயமாடடான் ஏனெனில் அவர்கள் உணவு உண்டு தெம்பாக இருந்தால் தானே அவர்களுக்கான தண்டனை நிறைவேற்ற முடியும் என்பதே அவன் எண்ணம்.

உணவு உண்கிற கிற நேரம் செழியன் தங்களை எதுவும் செய்வதில்லை என்பதாலேயே நன்றாக உண்டு காலம் கடத்துவார்கள் இருவரும்‌. அதனாலேயே உடல்நிலையில் அவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. அவர்கள் அலறுவதையும் அவர்களின் விநோத நடவடிக்கையும் வைத்து மனநல மருத்துவமனைக்கு பரிந்துரை செய்ய, அங்கேயோ அவர்கள் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் ஆரோக்கியமாக உள்ளதாக கூறி திருப்பி அனுப்பப்பட்டனர்.

அவர்களின் குற்றத்தின் தண்டனையாய் விக்ரமாதித்தனின் வேதாளமாய் அவர்களையே தொடர்ந்தான் செழியன். எங்களை மன்னிச்சுருடா செழியா என தினமும் அவர்கள் மன்றாடுவதை கேட்கும் போதெல்லாம் ஸ்ருதியின் இறுதி நிமிடங்கள் அவன் கண்முன் வந்து மன்னிக்காதே என அவள் உரைப்பதாய் செழியனுக்கு தோன்றும். மனசீகமாய் அவளுக்கு பதிலுரைப்பான் அவர்களை தண்டித்தபடியே....

**********************************
அன்னத்திற்கு தன்னுடைய இரு பிள்ளைகளின் இழப்பு. செண்பகவல்லி கோ எங்கேயேனும் தன் மகன் இருப்பான் என்ற ஒற்றை நம்பிக்கையும் தகர்ந்து போனது பேரிழப்பு.
ஆதினியும் உதயனும் அவர்களின் இழப்புகளை ஈடு செய்ய முயன்றனர்.‌ ஆதினியை ஸ்ருதியாய் கண்டனர் சுப்பிரமணியமும் அன்னமும். எப்பொழுதும் போல் ஆதினி ஒன்றே தன் பற்றாய் மாறிப்போனது செண்பகவல்லிக்கு.
ஆனால் செழியனின் இடத்தை மட்டும் உதயனால் பிடிக்க இயலவில்லை. அதை உதயனுமே இயல்பாய் ஏற்றுக்கொண்டான். இந்த நான்கு வருடத்தில் உதயனுக்கு மூன்று இடமாறுதல் ஆதினி உதயனை மணந்துகொண்டு இரட்டை குழந்தைகளுக்கு தாயாகி அதை வளர்க்கும் பொறுப்பை அன்னத்திடமும், செண்பகவல்லி இடமும் விட்டுவிட்டு மருத்துவ மேற்படிப்பு படிக்க வெளிநாடு சென்றுவிட அடுத்த இடமாறுதல் உதயனுக்கு தூத்துக்குடி மாவட்டத்திற்கு என்ற உத்தரவு வந்திருந்தது.


தூத்துக்குடி மாவட்டத்தில் பதவி ஏற்கும் முன் தன் காதல் மனைவியை காதலித்து விட்டு வரலாம் என பறந்திரூந்தான் உதயன்.
அந்த இரண்டு சுட்டிகளை கவனிப்பதிலேயே இரண்டு தாய் உள்ளங்கள் தங்களது இழப்புகளை மறந்து மழலையோடு மழலையாய் மாறிப் போயினர்.

"அடச் செல்லகுட்டிகளா .... என்னடா பாட்டிம்மாங்களை இந்த பாடு படுத்தறீங்க.." என்றபடியே செண்பாம்மா பின்னே ஓடினார்.

"என்னால ஓட முடியல செண்பா…." என்று தொய்ந்து அமர்ந்தார் அன்னம்.

"போக்கிரிகளா இங்க பாருங்க ஆச்சி உக்காந்துட்டாங்க..." என்றதும்

"அச்சச்சோ ஆச்சிக்கு கால் வலிக்கா..." என்றபடியே அதுவரை குறும்புத்தனத்தோடு போக்குக் காட்டிக் கொண்டிருந்த இரண்டு மழலைகளும் ஓடி வந்து அன்னத்தை முற்றுகையிட அன்னத்திற்கும் செண்பாம்மாவிற்கும் உள்ளம் குளிர்ந்து போனது.

"செம்பாச்சி.. ..அன்னாச்சிக்கு கால்வலிக்கி அம்மாக்கு ப்போன் போட்தா.." என தன் மழலைக் குரலில் வினவினான் ஆதினி உதயனின் மகன் ஆதித்ய செழியன்.

"வோணாதா .." அம்மா பிசியா ஆ இர்ப்பா அப்பாக்கு கூப்தலா ... என கூறியவள் ஸ்ருதி வெண்பா இருவரும் இரட்டைப் பிள்ளைகள்.

இவர்கள் தங்கள் மழலை மொழியில் கூறிக்கொண்டிருக்கும் போதே உதயனும், ஆதினியும் ஸ்கைப்பில் வர

ம்மா அன்னா ஆச்சிக்கு கால் வலிக்கு.. நீ வா என ஆதித்யசெழியனும்,

"ப்பா அம்மா ஆனா ... நீ வாப்பா.." என ஸ்ருதி வெண்பாவும் மாற்றி மாற்றி கூற இவர்களின் மழலை மொழியில் லயித்து இருவரையும் வாரி அணைத்து மகிழ அவர்களின் முகத்தில் தெரிந்த எல்லையற்ற மகிழ்ச்சியே ஆதினிக்கு நிறைவாய் இருந்தது. சிறிது நேரம் உரையாடி விட்டு லேப்டாப்பை அணைத்தவளின் கண்கள் கலங்கி இருந்தது.
இன்றும் ஆதினி அதே கேள்வியைத்தான் திரும்ப கேட்டாள். நான்கு வருடங்களாய் உதயனிடம் கேட்கும் அதே கேள்வி

"செழியன் இனி வரவே மாட்டானா நந்து..." கலங்கி நின்ற மனைவியை ஆதுரமாய் அணைத்து நெற்றியில் முத்தமிட்டவன்


அதான் நம்ம பசங்க பிறந்தப்பவே சொன்னியே இவன் என் செழியன்னு, அவன் அவன் கடமையை நிறைவேற்றி விட்டான். நம்ம சந்தோசமான வாழ்க்கைக்கு இடையூறா இருக்க கூடாதுன்னு போய்ட்டான். அவன் போனதா ஏன் நினைக்கிற நாம சுவாசிக்கிற காத்துல அவன் எப்பவும் இருப்பான். காற்றை உணரமுடியும் ஆனா தொடமுடியாதில்ல.... காற்றா கரைஞ்சு நம்மோடவே இருப்பான்.." என்றவன் மார்போடு ஒன்றிப்போனாள்.


அருவமாய் உடலை ஸ்பரிசித்து மெய்யில் உணரவைத்து காற்றாய் நீக்கமற எங்கும் அவனே நிறைந்திருப்பதாய் உணர்ந்தாள் அவள்.

முற்றும்.
 

IyerLalitha

New member
Messages
18
Reaction score
16
Points
3
தேடிப்பார்க்கிறேன் காற்றினிலே.....
தேடல் 1
சேலம் அரசுமருத்துவமனையின் அவரசச் சிகிச்சை பிரவு பரப்பரப்பாய் இருந்தது அந்த ஞாயிறு மாலையில். எப்பொழுதும் மற்ற நாட்களை காட்டிலும் விடுமுறை தினங்களிலும், பண்டிகை தினங்களிலும் விபத்துக்கள் அதிகம் நடப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அன்றும் அப்படியே விபத்தால் அடிபட்டவர்களை நூற்றி எட்டு ஆம்புலன்ஸ் எடுத்து வந்தவண்ணம் இருக்க, அங்கு பணியில் இருந்த மருத்தவர்கள் பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருந்தனர்.
ஒவ்வொரு மணித்துளியும் அங்கே முக்கியமென்பதால் வினாடி நேரம் கூட வீணாக்காமல் நோயாளிகளை அங்குள்ள மருத்துவர்கள் கவனித்துக் கொண்டிருந்தனர்.

"ஆ..... வலிக்குது டாக்டரம்மா..... மெதுவா குத்துங்க ..... அய்யோ வலிக்குதே...." என்று ஒருவன் கத்த

"ஸ்ஸ்ஸ்ஸ் .... கத்தாதே.... குடிச்சிட்டு வண்டி ஓட்டி ஆக்ஸிடென்ட் பண்ணி ஒரு குழந்தை காலை ஒடச்சிருக்க..... அதோட அம்மாக்கு தலையில் அடிபட்டு ஹெட்இஞ்சுரி ஆகிருக்கு..... அவங்களுக்கு எப்படி வலிக்கும்..... அதுக்காகவே உன்னை இப்படியே செப்டிக் ஆகட்டும்ன்னு விட்றனும்..... நான் படிச்ச மருத்துவ படிப்புக்கு மரியாதை குடுத்து உனக்கு டீரீட்மெண்ட் குடுக்குறேன். பேசாம இரு......" ஆத்திரத்தில் பேசினாலும் கை மென்மையாய் அடிபட்டிருந்த அவன் நெற்றியில் தையல் போட்டு விட்டு அந்த இடத்தை சுற்றி ஸ்பிரிட் காட்டனில் துடைத்து விட்டு மருந்திட்டு கட்டு கட்டிவிட்டது.
"அங்கே போய் இன்ஜெக்ட் பண்ணிக்கோ....." என்று ஒரு சின்ன சீட்டை எழுதி அவனிட்த்தில் நீட்டினாள் ஆதினி.

"விடு ஆதினி அவனே போதையில் இருக்கான் அவன்கிட்ட பேசி என்னாகப் போகுது....." என்று சக மருத்துவரும் தோழியுமான ஜனனி கூற

"இந்த குடியால் எத்தனை குடும்பங்கள் அழியுது. இவனுங்க குடிச்சிட்டு சாகறதுமில்லாம .... எத்தனை பேரை சாகடிக்கிறானுங்க..... குடிச்சிட்டு இவனால ஒரு பச்சக்குழந்தை வலியால் துடிக்கிறது..... இவனுக்கு இன்னும் போதை தெளியல..... இவனுங்களை எல்லாம் ..... "
"ஹேய்..... கூல் ...கூல்... துறுதுறுன்னு விளையாடிட்டு, எப்பவும் சிரிச்சமுகமா, அன்பா நோயாளிய பார்க்கிற நீ இந்த மாதிரி விசயம்ன்னா லேடி ஜாக்கிஜானா மாறிடுற....... " என்ற ஜனனியிடம்
"என்ன செய்ய டிசைன் அப்படி ..... என் தாத்தா அநியாயத்தை கண்டா பொருத்துப் போகாதேன்னு சொல்லியே வளர்த்துட்டார்..... ஓகே ... ஓகே.... ஆம்புலன்ஸ் சவுண்ட் கேக்குது கெட் ரெடி ....கெட் ரெடி....
இதுதான் ஆதினி பெற்றவர்களுக்கு ஒற்றைப் பெண்ணாய் பிறந்து, செல்லமாய் வளர்ந்து , பிடிவாதமாய் மருத்துவத்துறையை தேர்ந்தெடுத்து, சேலம் மருத்துவகல்லூரியில் மருத்துவபடிப்பை முடித்துவிட்டு இப்பொழுது ஹவுஸ்சர்ஜனாய் அங்கே பணியாற்றுகிறாள்.

மருத்தவக்கல்லூரி முதல் நாளிலேயே ஜனனிக்கும், ஆதினிக்கும் நல்ல நட்பு தொடங்க இன்று உயிர் சினேகிதிகள் அவர்கள்.
ஆதினி துறுதுறுப்பான பெண். பார்த்தவுடன் பட்டென்று பிடித்துப் போகும் பேரழகியில்லை. ஆனால் நிச்சயம் ஒரு முறை திரும்பி பார்க்கவைக்கும் அடக்கமான அழகு. நேர்மையின் மறுவுருவம். அதனாலேயே அவள் தந்தை டொனேசன் கட்டி இந்தியாவின் முன்னணி மருத்துவக்கல்லூரியில் மெடிக்கல் சீட் வாங்கிதர எவ்வளவு முயன்றும், என் மதிபெண்ணிற்க்கு நம்ம ஊரிலேயே இடம் கிடைக்கும். பணம் கொடுத்து தான் படிக்கனும்ன்னா அப்படி ஒரு படிப்பே தேவையில்லை என்றவள்.

அவள் மதிபெண்ணிற்கு அரசு இட ஒதுக்கீட்டிலேயே இடம் கிடைக்க அவள் தன் சொந்த ஊரிலேயே தன் படிப்பை முடித்து இப்பொழுது ஹவுஸ்சர்ஜனாய் பணிபுரிகிறாள்.

தவறு கண்டு பொருக்காதவள், அநியாயத்தைக் கண்டாள் பொங்குபவள் சுருக்கமாய் பாரதி கண்ட புதுமைபெண்ணவள். சேலம் மாநகரின் அழகிய ஏற்காடு அவளின் ஊர். ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் அழகிய கோடைவாஸ்தலம்.

தினமும் காரில் கல்லூரிக்கு வந்து செல்பவள். அப்படி செல்லும் வழியில் தான் அவள் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அடிபட்டுக்கிடந்த செழியனைக் கண்டது. உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவனை முதலுதவி செய்து தன் காரிலியே கொண்டு வந்து மருத்துவமனையில் சேர்த்தாள்.
குற்றுயிராய் கிடந்தவனை வழியில் அவனைப் பற்றிய தகவலைத் தெரிந்து அவன் வீட்டில் சொல்ல முனகிக் கொண்டிருந்தவனை கேட்டபோது அவளுக்கு அவன் சொல்லியது "என் பே... பேர்...செ..செ... செழியன். இது .... நா... ..நா... வந்து.....கேக்....காம...... யா...ருக்..கும்‌‌.... தரக்...கூ..கூடாது..."என்றபடி அவள் கையில் ஒரு பிரேஸ்லெட்டை அணிவிக்க...... அதை தவிர செழியனைப் பற்றி ஒரு விபரமும் அவளுக்குத் தெரியவில்லை.

மருத்துவ மனையில் அனுமதித்து பதினைந்துநாளில் அவன் உடல்நிலை நன்றாய் தேறிவர........தலையில் அடிபட்டு மூளையில் அறுவை செய்திருந்ததாலும், தாடை எழும்பில் அடிபட்டு அறுவை செய்திருந்ததாலும் அவன் சுயநினைவு வரும் சிறிது நேரத்திலும் அவனால் பேச இயலாமல் போனது .

ஆனால் ஆதினி எதிர்பாராதது செழியனது மரணம்...... அது இயற்கை மரணமாய் இருக்க வாய்ப்பில்லை என்று அவள் மனம் கூறியது. ஆனால் மருத்துவ அறிக்கையோ..... தலையில் ஏற்பட்ட அடியால் மூளையில் ஏற்பட்ட இரத்தகட்டி அறுவை செய்து அதை நீக்கியிருந்தாலும் அதில் வீக்கம் ஏற்பட்டு அந்த நரம்புக்குழாய் வெடித்து மரணம் என்றிருந்தது.

அந்த மரணத்தில் ஏற்பட்ட சந்தேகத்தை தீர்க்க அவள் அந்த துறை தலைமை மருத்துவரை அனுகியபோது அவள் மிரட்டப்படவே அவள் சந்தேகம் ஊர்ஜிதமானது. ஆனாலும் அவளால் எதுவும் செய்ய முடியவில்லை.

இதை அவசரப்பட்டு முடிவெடுத்து குற்றவாளியை தப்பிக்க விடக்கூடாது. ஆதாரத்துடன் அவர்களை தண்டிக்க வேண்டும். அதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த வேளையில் அவள் கேள்விபட்ட பெயர்தான்
உதயநந்தன் ஐ. பி. எஸ்.
சேலம் மாவட்டத்தில் அவன் பதிவியேற்ற இரண்டாண்டுகளில் சட்டம் ஒழுங்கு மட்டுமல்ல... சாலை விதிகளையும் கட்டுக்குள் கொண்டு வந்திருந்தான்.
பண்ம் படைத்தவன் முதல் பதவியில் இருப்பவன் வரை தவறு செய்பவன் யாராகினும் அவனைக் கண்டால் அஞ்சி நடுங்கினர்.
அவனின் அணுகுமுறை ஒவ்வொன்றும் அதிரடியாய் இருந்தது. என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் . குற்றவாளி செய்திருப்து மன்னிக்கும் தவறாயின் அவனை மன்னித்து அவனுக்கு புது வாழ்க்கையை அமைத்து தருவான். ஆனால் அதுவே இதற்கு மன்னிப்பே கிடையாது என்று முடிவெடுத்தால் , அவன்தான் குற்றவாளி என்று ஆதாரம் கிடைத்துவிட்டால் கோர்டிற்க்கு சென்று அரசின் பணத்தை வீணாக்குவதில் விருப்மில்லாதவன். ஒற்றை புல்லெட்டில் அவன் நீதிமன்றத்தில் தீர்பெழுதிவிடுவான்.
அவனின் இந்த செய்கையை கேள்விபட்டே ஆதினி அவனை சந்தித்தாள். அதற்க்காய் தினமும் வருத்தபட்டுக் கொண்டிருக்கிறாள்.
செழியனின் மரணத்திற்கான விடையை உதயநந்தன் கண்டுபிடிப்பானா..... ?ஆதினிக்கு ஆபத்து ஏற்படுமா....?
தேடல் தொடரும்.....
Sema story
 
Top Bottom