Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


GY NOVEL நரகமாகும் காதல் கணங்கள் - Tamil Novel

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
607
Reaction score
780
Points
93
வணக்கம் 🙏🙏🙏,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டியில் கலந்துகொள்ளும் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐💐.

போட்டியின் விதிமுறைகள், காலக்கெடு மற்றும் பரிசுகள் பற்றிய விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் விபரமாக குறிப்பிடப்பட்டுள்ளது. மீண்டும் ஒருமுறை அதை படித்துப் பார்த்துவிட்டு உங்களுக்கு முழு சம்மதம் என்றால், உங்களுடைய கதையை இந்த திரியில் தொடர்ந்து பதிவிடவும்.

உங்களுடைய கதை வாசகர்களை மகிழ்விக்கும் வகையில் அமையவும் போட்டியில் நீங்கள் வெற்றிபெறவும் வாழ்த்துகிறேன்.

மனமார்ந்த வாழ்த்துக்கள் 😍😍😍

நன்றி...
- நித்யா கார்த்திகன்

 
Last edited:

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
676
Reaction score
1,079
Points
93
ஹாய் மச்சீஸ்❣️

நான் உங்கள் ஷிவானி செல்வம். எல்லாரும் எப்படி இருக்கீங்க?

ஒரு மகிழ்ச்சியான செய்தி. நானும் சகாப்தம் வண்ணங்கள் 2021 நாவல் போட்டியில் கலந்து கொண்டிருக்கிறேன் ப்ரெண்ட்ஸ்.

நான் தேர்ந்தெடுத்துள்ள நிறம் சாம்பல் நிறம்.

ஆம், "Beauty and the Beast"
வகைக்குள் தான் நம் கதை வருகிறது.

நாவலின் தலைப்பு : நரகமாகும் காதல் கணங்கள்

கதையின் கரு என்னவென்று கேட்டால்.. இதோ கதையில் வரும் ஒரு வசனம் தான் கதையின் மொத்தக் கருவுமே.

//எல்லாப் பொண்ணுங்களுக்கும் தன் புருஷன் தன்னைப் புரிஞ்சிக்காதது தான் பிரச்சனையா இருக்கும். ஆனா இங்க என் புருஷன் என்னைப்பத்தி இன்ச் இன்சா புரிஞ்சி வச்சிருக்கிறது தான் எனக்குப் பிரச்சனையா இருக்கு//

இக்கதை உங்களுக்குப் பிடிக்குமென நம்புகிறேன்.

தொடர்ந்து வாசியுங்கள். தொடர்ந்து விமர்சியுங்கள்.

நன்றி❣️
 

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
676
Reaction score
1,079
Points
93

காதல் கணம் 1​


'கெட்டிமேளம்.. கெட்டிமேளம்..' என்ற மேள தாளச் சத்தங்களுக்கிடையே..

‘மாங்கல்யம் தந்துனானே
மமஜீவன ஹேதுநா
கண்டே பத்நாமி ஸுபகே
த்வம ஜீவ சரதஸ்சதம்’

என்று ஒலித்த மந்திரத்தின் பொருள் புரியாமலேயே ஷ்ரதாவின் கழுத்தில் தாலியைக் கட்டி மூன்று முடிச்சிட்டான் வீசி.

யார் இந்த ஷ்ரதா?

இயற்பெயர்: ஷ்ரதாஞ்சலி
வயது: இருபத்தைந்து
படிப்பு: பிஇ
நிறம்: பாலும் ரோஜாவும் கலப்புத் திருமணம் செய்து கொண்ட நிறம்
உயரம்: ஐந்தடி நான்கு அங்குலம்

யார் இந்த வீசி?

இயற்பெயர்: வருண் சக்கரவர்த்தி
வயது: முப்பது
படிப்பு: டிஎம்இ
நிறம்: கோதுமை நிறம்
உயரம்: ஐந்தடி பத்து அங்குலம்

மணப்பெண்ணாய் அமர்ந்திருந்த ஷ்ரதா தன் மார்பில் புரண்ட தாலிச்சரடையே ஆனந்தக் கண்ணீருடன் பார்த்துக் கொண்டிருந்தாள். பின்னே அவளுக்கு எத்தனை வருட கனவு இது!

ஷ்ரதா முதன்முதலில் வீசியைப் பார்த்தது தனது பதினைந்தாவது வயதில்.

ஆசைப்பட்ட எல்லோருக்குமே நினைத்தபடி இல்வாழ்க்கை அமைந்து விடுகிறதா என்ன!

எத்தனை வருட போராட்டங்களுக்குப் பிறகு இந்த பாக்கியம் தனக்கு கிடைத்திருக்கிறது என்று நினைத்துப் பார்த்தவளின் கண்களிலிருந்து கண்ணீர் நிற்காமல் வழிந்தது.

என்றும் தனக்கு துணையாய் நிற்கும் முருகனை மனதில் வேண்டிக்கொண்டு திரும்பி தன்னவனின் முகம் பார்த்தாள்.

சுமார் பத்தாண்டுகளுக்குப் பிறகு இப்போது தான் அவன் முகம் காண்கிறாள் ஷ்ரதா.

அப்பா! எவ்வளவு மாற்றங்கள். குழி விழும் அவன் கன்னங்கள் எங்கே? குறும்பு மின்னும் அவன் கண்கள் எங்கே?

பெருத்த ஏமாற்றமாய் இருந்தது ஷ்ரதாவிற்கு.

எப்படியோ தைரியம் வந்து, "வருண் அத்தான், நீங்க வருண் அத்தான் தானா?" என்று அவனிடமே கேட்டுவிட்டாள்.

திரும்பியவன் அவளை உஷ்ணமாய் பார்த்தானே ஒரு பார்வை.

அப்பா! கண்ணகிக்கு கசின் பிரதராய் இருப்பான் போலும். அவன் பார்வைக்கு மட்டும் சக்தி இருந்திருந்தால் மதுரை மீண்டுமொருமுறை தீக்கு இரையாகி இருந்திருக்கும்.

'இப்போ நான் என்ன கேட்டுட்டேன்னு அத்தான் இப்படி முறைக்கிறாங்க?.. ஒருவேளை அவங்களுக்கு நம்மளை ஞாபகம் இல்லையோ?' என்று தனக்குள்ளேயே புலம்பிக் கொண்டிருந்தவள், "ம்ம் எழுந்து ஹோம குண்டத்தை சுத்தி வாங்கோ!" என்ற ஐயரின் குரலில் நடப்பிற்கு வந்தாள்.

ஆஜானுபாகுவாய் எழுந்து நின்றான் வருண் சக்கரவர்த்தி.

அவனின் அங்கவஸ்திரத்தோடு அவளின் மங்களப்பட்டு முடிந்து விடப்பட்டது.

"ம்ம்! நட வருண்" என்று அவன் அக்கா மதுபாலா கூறவும் அவளை முறைத்துப் பார்த்தான் வீசி.

பின்னே அவள் தானே இந்தத் திருமணத்திற்கு மூலக்காரணம், சைடு காரணம் எல்லாம்.

"அத்தான், மெதுவா போங்க.."

முதல் முறையாய் தான் உடுத்திய பட்டுப்புடவையால் வேகமாய் நடக்க முடியாமல் அவனிடம் கெஞ்சினாள் ஷ்ரதா.

வீசிக்கு அந்தக் கெஞ்சல் ரொம்பப் பிடித்திருந்தது.

'என்கூட சமமாக் கூட நடக்க முடியல.. இதுல நீ எனக்கு சரிபாதியாடி?..' என்று கருவிக்கொண்டே வேகமாய் நடந்தான்.

ஒரு கட்டத்தில் அவன் நடைக்கு ஈடு கொடுக்க முடியாமல் ஓடத் துவங்கினாள் ஷ்ரதா.

அவள் அப்போது அவன் பின்னான தனது ஓட்டம் இப்போதே துவங்கிவிட்டது என்பதை அறிந்திருக்கவில்லை.

ஒருவழியாய் ஷ்ரதாவின் ஓட்டப்பந்தயமும் முடிவிற்கு வர, அவளின் ஓட்டத்திற்கு பரிசாய் அவள் காலில் மெட்டி அணியச் சொன்னார் ஐயர்.

தனது வெண்பஞ்சு பாதத்தை அம்மிக்கல்லின் மீது தூக்கி வைத்தாள் ஷ்ரதா. முத்துக்கள் நிறைந்த அந்த மெட்டியை அவளின் காலில் அணிவிக்கும் போது, அவளுக்கு வலிக்க வேண்டுமென்றே மெட்டியை அவ்விரலில் அழுத்தி அழுத்திப் போட்டுவிட்டான் வீசி.

வலியில் தனது கீழுதட்டை பற்களுக்கிடையில் சிறையிட்டாள் ஷ்ரதா.

நிமிர்ந்துப் பார்த்தவன் அவள் படும் வேதனையை ரசித்தான்.

அவள் பார்வை அவனிடம் ஏன் என்று கேட்டது.

அக்கேள்விக்கும் 'வலிக்குதா இன்னும் வலிக்கட்டும்' என்று அவன் விரல்களே அவளிடம் பதில் சொல்லின.

இவர்கள் இருவருக்குள்ளும் நடக்கும் இந்தத் தனிப்பட்ட சம்பாஷணையானது வெளியே யாருக்கும் கேட்கவில்லை. உண்மையில் யாரும் கேட்க பிரியப்படவில்லை.

"எல்லாம் நல்லபடியா முடிஞ்சிடுத்து.. போய் பெரியவா கால்ல விழுந்து ஆசி வாங்கிக்கோங்க" என்ற ஐயரின் வழிகாட்டலில் அவளுடன் சென்று தன் பெற்றோரின் காலில் விழுந்து வணங்கினான் வீசி.

இருவரையும் "நல்லாயிருங்கப்பா" என்று ஆசிர்வதித்துத் தூக்கிவிட்டனர் பிரகாஷ் சக்கரவர்த்தி - அபிராமி தம்பதியினர்.

அடுத்தபடியாக தன் பெற்றோரின் காலில் விழப்போனவளை கைப்பிடித்து தடுத்தவன், தனது அக்கா மதுபாலாவின் காலில் விழுந்து வணங்கச் சொன்னான்.

தன்னை அவன் இப்படி அனைவரின் முன்பும் அவமானப்படுத்தியதில் முகம் கன்றினார் ஷ்ரதாவின் தந்தை விஜயாதித்தன்.

ஷ்ரதாவிற்கு அவனின் இந்த மறுப்புக்கான காரணம் புரியவில்லை.

ஆனாலும் அவன் தமக்கையின் காலில் போய் விழுந்தாள்.

தன் காலில் வந்து விழுந்தவர்களை ஆசிர்வதித்துத் தூக்கிவிட்ட மதுபாலா, "ரொம்ப தான்க்ஸ் வருண்" என்றாள்.

ஷ்ரதா அந்த நன்றி நவிழ்தலை புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தது போலவே அவனது பெற்றோர்களும் அதனை புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தனர்.

அவன் தமக்கையிடமிருந்து விலகிய ஷ்ரதா மீண்டும் தன் பெற்றோரின் காலில் சென்று விழுந்தபோது, இம்முறை தன் பிடிவாதம் தளர்த்தி தானும் அவளோடு இணைந்து ஆசி வாங்கினான் வீசி.

அவன் தன் காலில் விழுந்தது மகிழ்ச்சியாய் இருந்தது விஜயாதித்தனுக்கு.

பாவம் அந்த மகிழ்ச்சியை ரொம்பநேரம் நீடிக்க விடாதவனாய் அவரது காலில் தனது கூர் மோதிரத்தால் கீறிவிட்டான் வீசி.

'இஷ்ஷ்' என்று காலை இழுத்தவர் நிமிர்ந்தவனை முகம் ஜிவுஜிவுக்க முறைத்துப் பார்க்க, குறும்பு மின்ன புன்னகைத்தான் வீசி.

அவனை நெருங்கியவர் மெதுவாக அவன் காதில் விஷத்தைக் கக்கினார். "உங்கக்காவுக்கு ஒரு சின்ன மிரட்டல் தான் விட்டேன்.. பயந்திட்டல்ல வீசி?.. நான் எள்ளுங்கிறதுக்குள்ள என் பையன் அருண்மொழி எண்ணெய்யா நிற்கிறான்.. இருந்தாலும் அப்படி அவன் ரத்தம் கட்டுற அளவுக்கு உங்கக்காவை அடிச்சிருக்கக்கூடாது.." என்று பொய்யாய் வருத்தப்படவும், தன் உள்ளங்கை முஷ்டியை இறுக மூடி கோபத்தை கட்டுப்படுத்தினான் வீசி.

அவரைவிட்டு நகரச் சென்றவனை தொடர்ந்து விடாமல் பிடித்து வைத்துக் கொண்டவர், "என் எதிரி ராஜ மாணிக்கத்தோட பொண்ணையேக் கட்டி எனக்கு ஆப்பு வைக்க நினைச்ச இல்ல?.. எப்படி உங்க அக்காவை வச்சே என் பொண்ணை கல்யாணம் பண்ணிக்க வச்சேன் பார்த்தியா?.. எல்லாரும் நீ பெரிய இவன்னு உன்னைப் பார்த்து பயப்படலாம் வீசி.. ஆனா, பத்து வருஷத்துக்கு முன்னாடி நீ எனக்கு எப்படியோ இப்பவும் அப்படி தான்.. ராஜ மாணிக்கம் இனி உன் பக்கம் தலைவச்சுக் கூட படுக்கமாட்டான்.. ஏன்னா நீ இப்போ என் மருமகன்.. நான் உன் மாமனார்.. கேட்கவே நல்லாயிருக்குதுல்ல?.. ஹாஹாஹா" என்று தன் தொப்பை குலுங்க குலுங்க சிரித்தார்.

சுற்றி நின்றவர்கள் அனைவரும் விஜயாதித்தன் வீசியின் காதில் ஏதோ முணுமுணுத்து சிரிப்பதைக் கண்டு, "மாமனாரும் மருமகனும் அப்படி என்ன குசுகுசுன்னு பேசிக்கிறீங்க?.. அடுத்த சம்பிரதாயம் எல்லாம் கவனிக்க வேண்டாமா?" எனவும், பக்கத்தில் தன் அன்னையின் தோளில் முகம் புதைத்து அழுதுக் கொண்டிருந்த தன் மனைவியை திரும்பிப் பார்த்த வீசிக்கு ரத்த அழுத்தம் எகிறியது.

புதிதாக திருமணமானப் பெண்களுக்கு இதுபோல் வீட்டைப் பற்றிய ஏக்கத்தில் அழுகை வருவது சகஜமே.

ஆனால், அதைப் புரியாத புரிய விரும்பாத வீசி 'என்கூட வாழ்றது உனக்கு அவ்வளவு கஷ்டமா என்ன?' என்று அதுக்கும் அவளையே வஞ்சித்தான்.

அடுத்தடுத்த நிகழ்வுகளில் அது தனக்குப் பிடித்திருக்கிறதோ இல்லையோ இவையெல்லாம் செய்வது என் கடமை என்பது போலவே தவறாமல் அனைத்தையும் செய்து முடித்தான் வருண் சக்கரவர்த்தி.

பரபரப்பான அக்கோவிலில் அனைத்து நிகழ்வுகளும் முடியப்பெற்று அனைவரும் வீடு திரும்பிய போது மதியம் மணி இரண்டாகியிருந்தது.

வீசி முன்பே திருமணம் எளிமையாய் நடந்தாலே போதுமானது என்று சொல்லிவிட்டதால் கோவிலில் தான் நடந்தது அவர்களது திருமணம்.

அப்போது ஊரைவிட்டு இவ்வளவு தொலைவில் அதுவும் அழகர்கோவில் பழமுதிர்ச்சோலையில் தான் தன் திருமணம் நடக்கவேண்டும் என்று பிடிவாதமாய் நின்ற வீசியைப் பலருக்கும் பிடிக்கவில்லை.

மதுரை ஜெயவிலாஸில் உள்ள அவன் வீட்டை அடைந்ததும் மணமக்கள் இருவரையும் சிரித்த முகமாய் ஆரத்திச் சுற்றி வரவேற்றாள் மதுபாலா.

முதல்முதலாக அவ்வீட்டிற்குள் அடி எடுத்த வைத்த ஷ்ரதாவிற்கு அவ்வீட்டின் பிரம்மாண்டம் ரொம்பவே மிரட்டியது.

அனைத்தையும் விழி விரித்துப் பார்த்துக் கொண்டிருந்தவளின் காதில் தேளாக கொட்டினான் வருண். "ம்ம் சொல்லு! இந்த ஏழையோட குடிசை எப்படியிருக்கு?.. என் அக்கா மொத மொத உங்க வீட்டுக்கு வந்தப்போ உங்க அப்பா என்ன சொன்னாரு? ம்ம்?.. உன் கனவுல கூட நீ இதையெல்லாம் பார்த்திருக்க மாட்டன்னு தானே?.. இப்போ அதே வார்த்தையை நான் அவர் பொண்ணுக்கும் சொல்லலாம் இல்ல?.."

"நீங்க எதையுமே மறக்கலையா, அத்தான்?.. அவங்க அப்போ லவ் மேரேஜ் பண்ணிக்கிட்ட கோபத்துல அப்பா அப்படி சொன்னாங்க.. மத்தபடி அப்பா ரொம்ப நல்லவங்க அத்தான்.. நீங்க இதனால தான் மொத அப்பாக் கால்ல விழமாட்டேன்னு சொன்னீங்களா?.."

"டோன்ட் கால் மீ தட் அத்தான் பொத்தான்.. எங்க வீட்டு முன்னாடி என்னங்க, ஏங்க.. என் ரூமுக்குள்ள சார்.. புரிஞ்சதா?.."

"டேய் வருண்! என்னடா சொல்லிக்கிட்டிருக்க அவ காதுல?.. வாங்க சோபாவுல வந்து உட்காருங்க ரெண்டு பேரும்.. பால் பழம் கொடுக்கணும்.." என்று அதட்டி இருவரையும் அருகருகே உட்கார வைத்தார் அபிராமி.

பின், துரிதமாய் பால் ஆற்றிக்கொண்டு வந்தவர் டம்ளரை முதலில் வீசியிடம் கொடுக்க, அதனை வாங்கியவன் ஒரே மூச்சில் முழுதாக குடித்து முடித்தான்.

தன் மகனை கையில் பிடித்திருந்தவாறே சற்றுத்தள்ளி உட்கார்ந்திருந்த மதுபாலா, அவனைப் பார்த்து, "டேய்! டேய்!" என்று அலறியபடியே, "பாதியை உன் பொண்டாட்டிக்கும் கொடுக்கணும்டா" என்றாள்.

அவளுக்குச் சட்டென்று பதிலளித்த வீசி, "என் பொண்டாட்டிக்கு பால் எல்லாம் பிடிக்காது" என்றான்.

அதில் அவனை அதிர்ந்துப் பார்த்த ஷ்ரதா, 'இவருக்கு எப்படி எனக்குப் பால் பிடிக்காதுன்னு தெரியும்?' என்று தனக்குள்ளேயே குழம்பிக் கொண்டாள்.

அவளின் அந்த மண்டைக் குடைச்சலானது அப்போது அக்கணத்திலிருந்து தான் தொடங்கியது.

sSkDjdCBmtVKbHu7xuRZPPt_zRoH4Ic_qkQOOq7JTGP38d64gSddbSg6HdUefHe3gQbmTAzmYLavCXnFX9GpYGNNginvFvWfkdEQ7BS7-LcKA56oyGpzybvn_JCOogS3-qRZ9FPY


காதல் கணம் கூடும்...


 
Last edited:

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
676
Reaction score
1,079
Points
93

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
676
Reaction score
1,079
Points
93
ப்ரெண்ட்ஸ் இது கதைத்திரி. இங்கு கருத்துப் பதிவிட வேண்டாமே.

உங்களது கருத்துக்களை நீங்கள் கருத்துத்திரியில் பதிவிட்டால் எனக்கு பதிலளிக்க கொஞ்சம் வசதியாக இருக்கும்.

மேலும் கருத்துத்திரியில் பதிவிடப்படும் சிறந்த விமர்சனத்திற்கு சகாப்தம் சார்பில் வாராவாரம் பரிசளிக்கப்பட உள்ளது ப்ரெண்ட்ஸ்.

எங்கள் எல்லாருடைய கதைகளையும் வாசிங்க. அந்தந்த கருத்துத்திரிகளில் போய் விமர்சனம் பண்ணுங்க. பரிசை அள்ளுங்க❣️

மறுபடியும் கேட்டுக்கிறேன் பட்டூஸ், கருத்துத்திரியில் மட்டும் கருத்திடுங்க. இங்கு கதைத்திரியில் உங்கள் பொன்னான ரியாக்சன்ஸ் மட்டும் போதும்😊.​
 

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
676
Reaction score
1,079
Points
93

காதல் கணம் 2​



'இவருக்கு எப்படி எனக்குப் பால் பிடிக்காதுன்னு தெரியும்' என்று மூளையை கசக்கிப் பிழிந்தபடியே இருந்த ஷ்ரதாவிற்கு சூரியனார் சைனிங் ஆப் செய்ததும் தெரியவில்லை. சந்திரனார் ஹாய்! ஹலோ! வெல்கம்! நான் உங்கள் அன்பு அம்புலி! என்று சொல்லி இரவு நிகழ்ச்சியை துவக்கியதும் தெரியவில்லை.

ஷ்ரதாவிற்கு பதினைந்து வயதாக இருந்தபோது தான் அவள் அண்ணன் அருண்மொழி, நான் கட்டினால் மதுபாலாவைத் தான் கட்டுவேன் என்று ஒற்றைக்காலில் நின்று வீசியின் அக்காவைத் திருமணம் செய்துகொண்டான்.

ஷ்ரதாவின் வீட்டிலிருந்த யாருக்குமே அப்போது அந்தத் திருமணத்தில் விருப்பமில்லை.

காரணம், வீசியின் வீட்டைக் காட்டிலும் ஷ்ரதாவின் வீடு ரொம்ப வசதி வாய்ந்ததாக இருந்ததே.

அந்த வன்மத்தை மனதில் வைத்து தான் முதல்நாள் திருமணமாகி வந்திருந்த தன் மருமகளை சொல் அம்புகளால் தாக்கி கூனிக்குறுகச் செய்தார் விஜயாதித்தன்.

அப்போது இருபது வயது இளங்காளையாக நின்றிருந்த வீசிக்கு அதனை கண்டு ரத்தம் கொதித்தது.

கோபத்தில், "அக்கா, வா நம்ம நம்ம வீட்டுக்குப் போவோம்.." என்று கத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தான்.

அச்சத்தத்தில் தான் தானும் முதன்முறையாக அவனைப் பார்த்தாள் ஷ்ரதா.

"அக்கா, நம்ம எப்படி நம்ம குடும்பம் எப்படின்னு இவங்களுக்கு முன்னாடியே தெரியும் தானே?.. அப்புறம் ஏன் உன்னைக் குத்திக்காட்டி பேசுறாங்களாம்?.." என்று கேள்வியெழுப்பிக் கொண்டிருந்தவனை "சும்மாயிரு வருண்!" என்று அதட்டினார் அபிராமி.

அவரிடம், "ம்மா, நம்ம ஒண்ணும் இவங்க வீட்டுக்கு மாப்பிள்ளை கேட்டு வரல.. இவங்க தான் நம்ம வீட்டுக்கு பொண்ணுக் கேட்டு வந்தாங்க.. அப்போ நம்ம வீட்டு சூழ்நிலை என்னன்னு இவங்களுக்குத் தெரிஞ்சிருக்கும் தானே?.. அப்புறம் ஏன் இப்படி பேசுறாங்க?.. ஒருவேளை இவங்க இப்படி தான் ஒவ்வொரு விஷயத்துலயும் இவங்களோட பணத்திமிரை காட்டுவாங்கன்னா, நாம நம்ம அக்காவை நம்மளோடவே கூட்டிட்டு போயிரலாம்மா" என்று உறுதியாய் நின்றான்.

பருவ மங்கையான ஷ்ரதாவிற்கு அவனது அந்த தமக்கை மீதான பாசமும், பிடிவாதமும், கூடவே கவர்ச்சியான முகத்தில் விழுந்தக் கன்னக்குழியும் ரொம்பவேப் பிடித்திருந்தது.

கிட்டத்தட்ட ஒரு கனவு நாயகன் போலவே அவள் கண்களுக்குத் தென்பட்டான் வீசி.

அன்று அபிராமி அவனை ஒருவாறு சமாளித்து அடக்கி விட்டார்.

ஆனால், அதன் பின்னான நாட்களில் எப்போதெல்லாம் அவன் தன் தமக்கையைக் காணச் சென்றானோ, அப்போதெல்லாம் தன் தமக்கைக்கான உரிமையையும் அவ்வீட்டில் நிலைநாட்டிவிட்டேச் சென்றான்.

அவன் வந்து போகும் சமயமெல்லாம் அவனை மறைவாக நின்று நோட்டமிடுவாள் ஷ்ரதா.

நாட்கள் செல்லச்செல்ல அவன் மீதான அவளது ஈர்ப்பும் ஆர்வமும் அதிகமானது தானே தவிர, குறையவில்லை.

ஒரு கட்டத்தில் அவன் மீதான அந்த ஈர்ப்பு காதலாக பரிமாணம் எடுக்க, அவனை நேசிக்கத் தொடங்கிவிட்டாள் ஷ்ரதா.

ஆனால், அப்போது அதை அவனிடம் சொல்லத் துணியவில்லை அவள்.

இப்போது எப்படியோ அரும்பாடுபட்டு அவன் கரம் பற்றியிருக்க, அவன் என்னவோ பழசை நினைவு கூர்ந்து சுழற்றியடிக்கிறான்.

தற்போது தனக்கென ஒதுக்கப்பட்ட அறையில் கட்டிலில் உட்கார்ந்து அழுது கொண்டிருந்தாள் ஷ்ரதா.

"ஏன் இப்படி பண்றீங்கத்தான்?.. உங்களை எனக்கு ரொம்பப் பிடிக்கும்த்தான்.. தப்பு பண்ணினது அப்பா தானே? என் மேல ஏன் கோபப்படுறீங்க?.." என்று தனியாக புலம்பிக் கொண்டிருந்தாள்.

அந்நேரம் அவ்வறையின் கதவைத்தட்டி உள்ளே வந்த மதுபாலாவும், வேலைக்காரப் பெண்மணி சிட்டுவும் இரவு சடங்கிற்காக அவளை ஆயத்தப்படுத்த, தனக்குள்ளான சோகத்தை மறைத்துக்கொண்டே அவர்களுக்கு உடன்பட்டாள் ஷ்ரதா.

இரவில் தன் தமக்கையின் கைவண்ணத்தில் அப்சரஸாக மெருகேறி நின்றிருந்தவளை நெருங்கிய வீசி, "பிடிச்சிருக்கா?" என்றான்.

அவன் தன்னைத்தான் கேட்கிறான் என நினைத்துக்கொண்டு, 'ம்ம்' என்று தலையாட்டியவள், "முன்னாடியே உங்களை எனக்கு ரொம்பப் பிடிக்கும்த்தான்" என்றாள்.

அவளின் அப்பதிலில் வயிற்றைப் பிடித்துக்கொண்டு சிரித்த வீசி, "நான் பிடிச்சிருக்கான்னு கேட்டது இந்த ரூமை.. என்னை இல்ல.. ஒருவேளை உனக்கு என்னை பிடிக்கலைனாலும் வேற வழியில்ல.. நீ என்கூட தான் வாழ்ந்தாகணும்.. மாத்த முடியாது.. சொல்லு! இங்கயிருக்கிற பொருட்களை எல்லாம் இதுக்கு முன்னாடி நீ எங்கயாவது பார்த்திருக்கியா?.." என்று தன் புருவங்களை ஏற்றி இறக்கினான்.

அவனை புலிக்கூண்டில் சிக்கிய மான் போல் மருண்டு பார்த்துக் கொண்டிருந்தாள் ஷ்ரதா.

பின், அவனே பதில் கூறிக் கொண்டான். "ம்ஹீம், பார்த்திருக்கவே முடியாது.. எல்லாம் உனக்காகவே ஃபாரின்ல இருந்து ஸ்பெஷலா இம்போர்ட் பண்ணினது.. உங்கப்பாவை பார்க்கும் போது சொல்லு என் பெட்ரூமே மியூசியம் மாதிரி இருக்கும்னு"

ஷ்ரதாவிற்கு அவன் தன் அப்பாவை பற்றின பேச்சை விடவே மாட்டானா என்றிருந்தது.

அவன் திடீரென உற்சாகமானவன் போல், "அட! இன்னைக்கு நமக்கு ஃபர்ஸ்ட் நைட் இல்ல.. ம்ம்? நீ கூட அழகாத்தான் இருக்க.. இப்போ நான் என்னப் பண்ணனும் ஷ்ரதா?.." என்றான்.

ஷ்ரதா முந்தானையை திருகியவாறே அவனை பயந்தபடி பார்த்திருந்தாள்.

"சொல்லு? இப்போ நான் என்ன பண்ணனும்?.." மீண்டும் கிசுகிசுப்பாய் கேட்டவனைப் பார்த்து, இரண்டடி பின் வாங்கினாள் அவள்.

"ஹான்! ஞாபகம் வந்திருச்சி.." என்றவாறே அவன் அவளை நெருங்க.. ஷ்ரதா அவனை பயந்து பார்த்தபடியே பின்னால் சென்று சுவற்றில் முட்டி நின்றாள்.

அவளை நெருங்கி அவள் தப்பிக்க முடியாதபடி அவளுக்கு தன் கைகளால் அணையிட்டவன், இதழ் நோக்கிக் குனிந்தான்.

ஷ்ரதா முகத்தைத் திருப்பிக்கொள்ள... நெருங்கியவனது கூரிய மூக்கு அவள் பட்டுக் கன்னத்துள் புதைந்தது.

தொடர்ந்து அவளது வாசனையை தன் நாசிக்குள் நிரப்பியவன், "பயமா இருக்கா ஷ்ரதா?" என்று காதோரம் முணுமுணுத்தான்.

நெஞ்சு விம்மி விரிய பெரிய பெரிய மூச்சுகளாய் விட்ட ஷ்ரதாவிற்கு வார்த்தையே வெளிவரவில்லை.

"ப்ளீஸ் ஷ்ரதா, இந்த பியூட்டி அண்ட் த பீஸ்ட் எஃபேக்ட் எல்லாம் கொடுக்காத.. என்னைப் பார்த்தா என்ன மிருகம் மாதிரியா இருக்கு?.."

"ப்ளீஸ்த்தான் தள்ளி நில்லுங்க.."

"ப்ச்! முன்னாடியே நான் உன்கிட்ட என்ன சொன்னேன்?.. இந்த அத்தான் பொத்தான் எல்லாம் போடாதன்னு சொன்னேனா இல்லையா? இம்ம்?" என்று உறுமினான் அவன்.

அவள் தலை பயத்தில் ஆமென ஆடியது.

"ம்ம்ம்.. இனி மறக்கக்கூடாது.. நீ இப்போ எல்லாத்துக்கும் ரெடி தானே ஷ்ரதா?.." என்று கண்ணைச் சிமிட்டினான்.

ஷ்ரதா 'இல்லை' என்று தலையசைத்து முகத்தைத் திருப்பினாள்.

"என்கிட்ட இப்படி முகத்தைத் திருப்புறது இதுவே கடைசி தடவையா இருக்கட்டும் ஷ்ரதா.." என்றபடியே, அவள் முகவாயைப் பிடித்து வலுக்கட்டாயமாய் தன்னை நோக்கித் திருப்பியவன், "என்ன ஷ்ரதா இன்னைக்கு நமக்கு முதலிரவு.. இந்த ரூமுக்குள்ள இது தான் நடக்கும்னு உனக்கு முன்னாடியே தெரியும் தானே?.. அப்புறம் ஏன் இப்படி அழுது சீன் க்ரியேட் பண்ணிக்கிட்டு இருக்க?.. கமோன் ஷ்ரதா, வா நம்ம நம்மோட ஃபர்ஸ்ட்நைட்டை ஸ்டார்ட் பண்ணலாம்" என்று நகர மறுத்தவளை வம்படியாய் கட்டில் நோக்கி நடத்திச் சென்றான்.

பின், அவளை மெத்தையில் அமர்த்தி சிறிதுநேரம் தள்ளி நின்றபடியே அளவெடுத்தான். முகத்தை மூடி தேம்பி தேம்பி அழுது கொண்டிருந்தாள் ஷ்ரதா.

'உனக்கு இன்னைக்கான கோட்டாவை யூஸ் பண்ணியாச்சு ஷ்ரதா' என்று மனதிற்குள் சொன்னவன், அவளை நெருங்காமல் மெத்தையில் தள்ளிப்போய் படுத்துக்கொண்டான்.

அவனிடம் எந்த அனக்கமும் இல்லை எனவும் தன் முகத்திலிருந்து கைகளை கீழிறக்கிய ஷ்ரதா, தன் பக்கத்தில் கண்மூடி படுத்துக்கிடந்தவனை அதிசயமாய் பார்த்தாள்.

அவன் வதனம் ரொம்பவே ஈர்த்தது அவளை. முத்தமிடவும் தோன்றியது.

'ஏன் அத்தான்? ஏன் இப்படியெல்லாம் பண்றீங்க?' என்று மானசீகமாய் கேட்டுக்கொண்டிருந்தவளை, "ஒழுங்காப் படு.. இல்ல ஃபர்ஸ்ட் நைட் கொண்டாடிருவேன்.." என்று மிரட்டியவன் திரும்பிப் படுத்துக்கொண்டான்.

வேகமாய் படுக்கையில் சாய்ந்தவள் கண்களை இறுக மூடிக்கொண்டாள்.

புது இடம் என்பதால் கொஞ்சம் திசை தெரியாமல் தடுமாறிப்போன தூக்கப்பறவை, சிறிது நேரத்திற்குப் பின்பே அடையாளம் கண்டு அவள் விழிக்கூட்டை வந்தடைந்தது.

மறுநாள் காலையில் சீக்கிரமே விழித்து விட்ட ஷ்ரதா, குளித்துக் கிளம்பி கீழே வந்தாள்.

வந்தவளை அபிராமி, "என்ன ஷ்ரதா?.. நேரமே எழுந்திரிச்சிட்ட?.. இப்போ வருண் ஜிம் போயிருப்பானே?" எனவும், "ஆமா அத்தை" என்றாள் அவள்.

எப்போதும் போல் வீட்டில் வேலைப்பார்க்கும் சிட்டுவிடம் அவனுக்கு காபியை கொடுத்தனுப்பினார் அபிராமி.

ஆனால், அவனோ, "ஷ்ரதா எங்கே? அவளை வரச்சொல்லு" என்று சிட்டுவை காபியுடன் திருப்பி அனுப்பி விட்டான்.

இதை கேள்விப்பட்ட அபிராமிக்கு ஒருபக்கம் அவர்கள் வாழ்க்கை துலங்கிவிட்டது என்று உவகையாய் இருந்தாலும், இன்னொரு பக்கம் இதென்ன காபியை திருப்பியனுப்பும் அளவிற்கு பிடிவாதம் அவனுக்கு என்று கோபம் வந்தது.

ஷ்ரதாவிடம் திரும்பி, "நீ போக வேண்டாம் ஷ்ரதா.. அவன் என்ன பண்றான்னு தான் நாமளும் பார்க்கலாமே.. சின்ன வயசுலயிருந்தே ரொம்ப வீம்புக்காரன் அவன்.. அப்படியே எங்க அப்பா மாதிரி.." என்றுவிட்டு ஹாலிலேயே அவளை உட்காரவைத்து செய்தித்தாள் பார்க்கச் சொன்னார்.

ஒரு மணி நேரத்திலேயே பிரகாஷ் சக்கரவர்த்தி, மதுபாலா என ஒவ்வொருவராய் ஹாலுக்கு வர, அனைவருக்கும் புன்னகை கலந்த தலையசைப்பையே சம்பிரதாயமாய் வழங்கி உபசரித்தாள் ஷ்ரதா.

வீசியின் தந்தை பிரகாஷ் சக்கரவர்த்தி செய்திச்சானலை இயக்கி 'தொடர்ந்து இணைந்திருங்கள்' என்று சொல்லும் வரை பார்த்தவர் பின், ஷ்ரதாவிடம் திரும்பி, "என்னம்மா மருமகளே! காபி சாப்பிட்டியா? உன் மாமியார் காபி சகிக்கிற மாதிரி இருந்ததா? இல்ல கசக்கிற மாதிரி இருந்ததா?.." என்று சிரித்துக்கொண்டே வினவவும், "ரொம்ப நல்லாயிருந்தது மாமா" என்று முறுவலித்தாள் அவள்.

பிரகாஷ் சக்கரவர்த்தி.. அவரின் முன்னோர்கள் அவருக்கென விட்டுவைத்துச் சென்றது இதோ அவரின் பெயரின் பின்னே படையெடுத்து வரும் இந்த சக்கரவர்த்தி எனும் குடும்பப்பெயரை மட்டும் தான்.

பத்து வருடங்களுக்கு முன்பு ஒரு வெள்ளிக்கடையில் கணக்கெழுதிக்கொண்டு மாதம் எட்டாயிரம் மட்டுமே சம்பளமாக வாங்கிக் கொண்டிருந்தவர், மகன் புண்ணியத்தில் தற்போது ஆவணிமூலவீதியில் ஒரு வெள்ளி நகைக்கடையையே வைத்து நிர்வகிக்கும் அளவிற்கு உயர்ந்திருக்கிறார்.

அவர் அவளிடம் சுவாரசியமாய் பேசிக்கொண்டிருந்துவிட்டு நகைக்கடை செல்ல கிளம்பிய நேரத்தில் தனித்து விடப்பட்ட ஷ்ரதா, பாட்டுச் சானல்களையே மாற்றி மாற்றி வைத்து பார்த்துக்கொண்டிருந்தாள்.

நேரம் ஆக ஆக உள்ளுக்குள் உதறலெடுத்தது அவளுக்கு. உள்ளங்கை வியர்த்து பயப்பந்து ஒன்று வேறு தொண்டைக்கும் வயிற்றுக்குமாய் உருண்டுக் கொண்டிருந்தது.

கிட்டத்தட்ட ஒன்றரை மணிநேரம் என்னாகுமோ என்ற கற்பனையிலேயே அவளை தவிக்கவிட்ட வீசி, ஒரு கையை தன் ராயல் ப்ளூ பேண்டிற்குள் விட்டபடியே மற்றொரு கையில் லேப்டாப் அடங்கிய பையுடன் கீழே வந்தான்.

வந்தவன் தன்னை அலங்க மலங்க பார்த்திருப்பவளின் அருகில் வந்து அமர்ந்து, காபி கொண்டு வந்து கொடுத்த தன் அன்னைக்கு கேட்கும்படியாகவே அவளிடம், "கூப்பிட்டா மேடம் வர மாட்டீங்களோ?" என்றான்.

"அது அத்தை தான்.." என்றவள் தயங்கும் வேளையில்,

"ஆமாடா, நான் தான் போகவேணாம்னு சொன்னேன்.. ஏன்டா காபியை திருப்பி அனுப்பின?.. உனக்கு என்ன அவ்ளோ வீம்பு?.." என்று காரமாய் வினவினார் அபிராமி.

சற்றுதூரத்தில் டைனிங் டேபிளில் இட்லியை சட்டினியில் தோய்த்துக் கொண்டிருந்த தன் தந்தையைப் பார்த்தவன், "தினம் அப்பாவுக்கு நீங்க தானே காபி தர்றீங்க?.. எனக்கு மட்டும் இவ கொடுக்கக்கூடாதா?" என்றான்.

"கொடுக்கலாம்.. கொடுக்க அவளே விருப்பப்பட்டா.." என்றார் அபிராமி.

"ஏன்? ஏன்? ஏன் அவ விருப்பப்படமாட்டா?.. ஷ்ரதா உனக்கு காபி கொண்டுவர விருப்பம் தானே?" என்று கேட்டவனின் தொனியில் ஆமென்று சொல்லு எனும் உத்தரவு புதைந்திருந்தது.

"எப்படி விருப்பம் இல்லாமப் போகும்?" என்று தானும் தன் பங்கிற்கு வீசியுடன் சேர்ந்துக்கொண்டாள் மதுபாலா.

அபிராமியை மண்ணை கவ்வச்செய்யும் விதமாய் விருப்பம் தான் என்று தலையாட்டினாள் ஷ்ரதா.

அதில் தன் அன்னையை வெற்றிக் களிப்புடன் பார்த்த வீசி, "ரொம்ப அவ விருப்பத்துக்கே முக்கியத்துவம் கொடுக்கிற மாதிரி நடிக்காதீங்கம்மா.. மொத அவக்கிட்டப் பேசி அவளுக்கு என்ன பிடிக்கும் பிடிக்காதுன்னு தெரிஞ்சிக்கங்க.. பாருங்க அவளுக்கு மல்லிப்பூவே பிடிக்காது.. நீங்க கொடுத்தீங்களேன்னு ஒரு பண்டலையே தலையில தூக்கி வச்சிருக்கா.. மொத அதையெடுக்க சொல்லுங்க.." என்று சொல்லிவிட்டு டைனிங் டேபிள் நோக்கிச் சென்றுவிட்டான்.

அவனுக்குப் பரிமாறுமாறு மதுபாலாவை ஏவிய அபிராமி ஷ்ரதாவை நெருங்கி, "உனக்கு மல்லிப்பூ பிடிக்காதா ஷ்ரதா?" என்று கேட்க, ஏற்கனவே அதிர்ச்சியில் உறைந்துப் போயிருந்த ஷ்ரதா ஆமென தலையை மட்டும் மேலும் கீழுமாய் ஆட்டினாள்.

Fz3HHq8CIieNAdwkr4xBx8WqKN9HH7UuHTgluF5MDMWzBY3Ir1CjdEvJ5CcAYDWujfW7dZ5fMeBlRYmFrNVJEe_bdNNgzvG92ZQLDCZIwlyP5gd-7hHjBgRPVTxnJy2ENSsNBB8n


காதல் கணம் கூடும்...​
 
Last edited:

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
676
Reaction score
1,079
Points
93

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
676
Reaction score
1,079
Points
93

காதல் கணம் 3​



மதியம் சாப்பிட்டு முடித்துவிட்டு தான் தனது வீட்டிலிருந்து கொண்டு வந்த பெட்டியைத் திறந்து, அலமாரியில் உடைகளை அடுக்கி வைத்துக் கொண்டிருந்தாள் ஷ்ரதா.

உடன் அவளுக்கு மதுபாலாவும் அபிராமியும் உதவிக் கொண்டிருந்தார்கள்.

அப்போது ஷ்ரதாவின் செல்போன் ஒலியெழுப்ப, எடுத்துப் பேசியவளின் கைகள் நடுங்கியது. குரலும் தயங்கியபடியே வெளிவந்தது. "ம்ம், சொல்லுங்க"

தயக்கத்திற்கு காரணம்?

ஆம், அந்த நல்லவன் தான்.

"அக்கா அம்மா பக்கத்துல இருக்காங்களா?.."

"ம்ம் ஆமாங்க, கொடுக்கவா?.." என்று கேட்டுவிட்டு, அவன் பதிலை எதிர்பாராமலே, "அண்ணி, அவங்க பேசுறாங்க" என்று தன் கையில் கனத்தவனை மதுபாலாவிடம் கொடுத்துவிட்டாள் ஷ்ரதா.

அவளின் இந்த செயலில் எதிர்புறம் நறநறவென்று பல்லைக் கடித்தான் வீசி.

ஏற்கனவே அவன் அவனது அக்காவின் மீது கோபத்தில் இருக்கிறான். இதில் இவள் வேறு இப்படி செய்தால்?

போனில் பதட்டமாக, "என்ன வருண்?" என்று கேட்ட அக்காவிடம், "அது.. காலையில பாத்ரூம் டேப்பை சரியா மூடினேனான்னு சந்தேகம்.. அதான் போன் பண்ணினேன்.. அவ என்னடான்னா உன்கிட்ட கொடுத்திட்டா.." என்று வாய்க்கு வந்ததை உளறினான்.

பொறுப்பாய் அவள் குளியலறை சென்று பார்த்து, "பார்த்துட்டேன் டா.. எல்லாம் சரியா தான் இருக்கு.." என்று உறுதி செய்தாள்.

"ஓஹ்" என்றவனின் ஏமாற்ற முகத்தை எட்டிப்பார்க்க வழியில்லாதவள் பின், போனை தனது பிள்ளைகளிடம் கொடுத்துவிட, அஸ்வினும் அனன்யாவும் ஐஸ், கேக், சாக்லேட், பிஸ்கட் என்ற உலகப்புகழ் பதார்த்த பதங்களுக்கிடையே ஆயிரம் மாமா போட்டனர்.

அவன் அவர்களிடம், "ம்ம்.. ம்ம்.. வாங்கிட்டு வரேன்.. ஆனா ஒரு கன்டிஷன்.. இப்போ நீங்க உங்க அத்தையை தனியா பால்கனிக்கு கூட்டிட்டுப்போய் அவங்கக்கிட்ட போனைக் கொடுக்குறீங்க.." எனவும் அந்த பொல்லாத விஷமிகளும் ஷ்ரதாவை தனியே இழுத்துச்சென்று, "மாமா பேசுறாங்க" என்று போனை நீட்டினர்.

ஷ்ரதா ஏதோ தீர்த்தம் போல் பவ்யமாய் அதனை வாங்கியவள் மெதுவாய் காதில் வைத்தாள். "ஹேய் லூசு.. அக்கா அம்மா இருக்காங்களான்னு கேட்டா உடனே போனை தூக்கிட்டுப் போய் அவங்கக்கிட்ட கொடுத்திருவியா?.. கொஞ்சம் அவங்க முன்னாடி அன்னியோன்யமா இருக்கிற மாதிரி காட்டிக்கலாம்னு போன் போட்டா வேண்டாவெறுப்பா நடந்துக்கிற?" என்று காச்சு மூச்சென்று கத்திவிட்டான்.

ஷ்ரதா அவனிடம், "இல்லங்க.. அப்படியெல்லாம் இல்லங்க.." என்று கந்தசஷ்டி கவசம் போல் சொன்னதையே திருப்பி திருப்பி உருப்போட்டுக் கொண்டிருந்தாள்.

"என்ன இல்லைங்க.." வல்லென விழுந்தான் அவன்.

"என்ன ஷ்ரதா இன்னுமா வருண் பேசிக்கிட்டு இருக்கான்?.." அவனுக்கு அவன் அக்கா குரல் தெளிவாய் கேட்டது.

"மொத சிரிச்ச மாதிரி மூஞ்சை வை.. என்ன சிரிக்கிறியா?"

"ஆமாங்க"

"இப்போ அய்யோ நான் மாட்டேன், அண்ணி பக்கத்துல இருக்காங்கன்னு சொல்லி வெட்கப்பட்டபடியே போனை வை.."

"அது.."

"அது இல்ல.. அய்யோன்னு ஆரம்பிக்கணும்.."

ஷ்ரதாவும் அவன் சொன்னபடியே செய்தாள். அழைப்பு துண்டிக்கப்பட்டதும் தான் ஷ்ரதாவிற்குள் அந்த கேள்விப்பூவே பூத்தது. "இவருக்கு எப்படி என் போன் நம்பர் தெரியும்?"

***************

மாலையில் வீசிக்கு அழைப்பு விடுத்த அபிராமி, "டேய் வருண் எங்கயிருக்க?.." என்றார்.

சொன்னான் அவன்.

"அப்போ இன்னும் நீ கிளம்பவே இல்லையா?.. நாங்கல்லாம் எப்பவோ புறப்பட்டாச்சு.. உனக்காகத் தான் காத்திருக்கோம்.. எங்கேயா?.. அடப்பாவி இன்னைக்கு மீனாட்சி அம்மன் கோவிலுக்கு குடும்பத்தோடப் போய் ஒரு அர்ச்சனைப் பண்ணிட்டு வரலாம்னு சொன்னேனேடா! மறந்துட்டியா?.. சரி, சரி சீக்கிரம் கிளம்பி வா.." என்றவர், "வேலை டென்ஷன்ல மறந்துட்டானாம்" என்றார் தன்னை பார்த்திருந்த ஷ்ரதாவிடம்.

'ம்க்கும், இவ்ளோ டென்ஷன்லயும் மதியம் என்னை போன் போட்டு திட்ட மட்டும் மறக்க மாட்டாராம்..' என்று மனதிற்குள் நொடித்துக் கொண்டாள் ஷ்ரதா.

காரில் வந்து இறங்கியவுடன் வேகமாக வீட்டிற்குள் நுழைந்தவன் சோபாவில் தன் அம்மா அக்காவுடன் அமர்ந்திருந்தவளைப் பார்த்து, "ஷ்ரதா மேல வா!" என்றபடியே தனதறைக்குச் சென்றான்.

ஷ்ரதாவும் சிங்கத்தின் குகைக்குள் நுழையும் சிறுமுயல் போலவே பம்மியபடி அவனது அறைக்குள் நுழைந்தாள்.

அங்கு வீசி மேல்சட்டை இல்லாமல் தன் அலமாரியைப்போட்டு குடைந்துக் கொண்டிருந்தான்.

பின், அதிலிருந்து ஒரு ஊதா நிற சட்டையையும், அதே நிறத்தில் கரையிட்ட வேட்டியையும் எடுத்தவனாக திரும்பி அவளைப் பார்த்தான்.

பச்சைப் பட்டில் சித்திரமாக நின்றிருந்தவள் வெற்றுடம்பாக நின்றிருப்பவனை நிமிர்ந்துப் பார்க்க முடியாமல் தலைகுனிந்திருந்தாள்.

நல்ல ரசனையும் காதலும் உள்ள கணவனாக இருப்பின் இவ்விடத்தில் அவள் முகம் ஓலையாகவும் அவன் உதடு எழுத்தாணியாகவும் மாறியிருந்திருக்கும்.

எங்கே! இந்த வீசி தான் கடுவன் பூனையின் கேரக்டரை கடன் வாங்கி வந்திருப்பவனாயிற்றே.

அரை நிமிடம் தான் அவளைப் பார்த்தான் அவன். நேரே அவளது அலமாரிக்குச் சென்று அதே ஊதா நிறத்தில் உடையைத் தேடினான்.

அவன் கையில் வாகாய் லெஹங்கா ஒன்று சிக்கவும், எடுத்து மெத்தையில் போட்டான். "ம்ம் ஃபாஸ்ட்! அந்தப் புடவையை உருவி வீசிட்டு இந்த ட்ரெஸைப் போட்டுக்கோ" என்றான்.

"இல்லத்தான்.. ச்ச! இல்லங்க.. அத்தை தான் மொத மொத கல்யாணமாகி கோவிலுக்குப் போறீங்க, புடவை கட்டினா தான் லக்ஷ்மிகரமா இருக்கும்னு இந்தப்புடவையை கட்டி விட்டாங்க.."

"ஏன் இந்த அலமாரியில புடவையை நீ கீழ கடைசி ராக்ல வச்சிருக்க?"

"அது எனக்கு புடவை கட்டப் பிடிக்காதனால கீழ…."

"ம்ம், அப்புறம் ஏன் அந்த ட்ரெஸை போடணும்?.. இதை போட்டுக்கோ.."

"இல்ல, அத்தை மனசு கஷ்டப்படும்"

ஏதோ அடிப்பது போல் நொடியில் அவளை நெருங்கியவன், "இங்கப்பாரு! மொத எனக்கு இந்த மாதிரி என்னை எதிர்த்துப் பேசுறது பிடிக்காது.. நான் சொன்னா செய்யணும்.. தட்ஸ் இட்!.. உங்க அத்தை மனசு கஷ்டப்படும்னு புடவையை அவுக்க கஷ்டமா இருந்ததுன்னா நான் வேணும்னா ஹெல்ப் பண்ணட்டுமா?" என்றான் விஷமமாக கைகளைத் தேய்த்தபடி.

"இல்லை" என்று வேகமாய் தலையாட்டினாள் ஷ்ரதா.

"அப்போ நான் சொன்னதை செய்!" என்றுவிட்டு கிளம்புவதில் அவசரம் காட்டினான் அவன்.

வீசி கிளம்பி கண்ணாடி முன்னே நின்று சார்லியை தன் உடம்பில் பீய்ச்சிக் கொண்டிருந்தபோதே, இன்னொரு கதவைத் திறந்துகொண்டு உள்ளே வந்தாள் ஷ்ரதா.

அவனுக்கு அவளைப் பார்க்கவெல்லாம் நேரமில்லை. கிளம்பியதும் அவளது கையைப்பிடித்து கீழே இழுத்து வந்துவிட்டான்.

அவர்களையும் அவர்களது உடைகளையும் பார்த்த மதுபாலா, அபிராமியிடம் 'பாருங்கம்மா' என்று கண்களால் சமிக்ஞை செய்ய, அவர் மனநிறைவான புன்னகையை வெளிப்படுத்தினார்.

மதுபாலாவின் குழந்தைகள் இருவரும், "ஈஈ அத்தையும் மாமாவும் ஒரே கலர் ட்ரெஸ்" என்று குதூகலித்தனர்.

கோவிலுக்கு என்றதும் புத்துணர்ச்சி வந்து ஒட்டிக்கொண்டது ஷ்ரதாவின் முகத்தில்.

காரில் முன் இருக்கையில் அவனருகில் அமர்ந்திருந்தவள், கண்ணாடி வழியே வேடிக்கைப் பார்த்துக்கொண்டே வந்தாள்.

பின்னிருக்கைகளில் பிரகாஷ் சக்கரவர்த்தி, அபிராமி, மதுபாலா மற்றும் அவளின் குழந்தைகள் என அனைவரும் அமர்ந்திருக்க, கார் ஜெட்டாக பறந்தது.

வாகன நெருக்கடி அதிகமான சாலையான தெற்குவாசல் வழியாக அந்த எம்ஜி க்ளஸ்டர் கார் சென்று கொண்டிருந்தபோது, பைக்கில் இளைஞன் ஒருவன் இடையில் வந்து மோதினான். அவனை காது கொடுத்து கேட்க முடியாத அளவிற்கு கெட்ட வார்த்தைகளால் அர்ச்சித்தான் வீசி.

காதுகளை இருகைகளாலும் இறுக மூடிக்கொண்ட ஷ்ரதா, "வருண் அத்தான் நீங்க இப்படியெல்லாம் பேசுவீங்களா?" என்று மானசீகமாக கேட்டுக்கொண்டாள். அவளுக்கெங்கே தெரியப்போகிறது அவன் இதற்கு மேலும் பேசுவானென்று!

அபிராமி, "வண்டியில குழந்தைங்க எல்லாம் இருக்காங்க வருண்.. என்னப் பேச்சு பேசற?.." என்று திட்டினார்.

முகத்தைத் தீவிரமாகவே வைத்திருந்தவன் கோவிலுக்குள் செல்லும் தெருவிற்கு முன்னமே புது மண்டபத்தருகில் வண்டியை நிறுத்திவிட்டு, அனைவரையும் இறங்கச்சொன்னான்.

அனைவரும் ஜனசந்தடி மிக்க அந்த பகுதியைக் கடந்து கோவிலுக்குள் நுழைந்தனர். உள்ளே கோவிலின் இருபுறமும் வளையல் கடை, வழிபாட்டுப் பொருட்கள் கடை, பூக்கடை, சாமி படங்கள் கடை, ஜோசியம் பார்த்தல் என வரிசையாக வைத்து ஜீவனம் நடத்திக் கொண்டிருந்தார்கள்.

நுழைவிலேயே அர்ச்சனைக்குத் தேவையான பொருட்களை வாங்கிய அபிராமி, மதுபாலாவிற்கு மல்லிகைப்பூ வாங்கி கொடுத்துவிட்டு, "உனக்கு என்ன பூ பிடிக்கும் ஷ்ரதா?" என்றார்.

"ரோஸ் வாங்கிக் கொடுங்க காதுல வச்சிக்குவா" என்று கேலி செய்தான் வீசி.

"போடா.." என்றவர் அவன் கூறியபடியே ரோஜாப்பூ வாங்கிக் கொடுத்தார். வாங்கி கையில் வைத்தபடியே வந்தாள் ஷ்ரதா.

அப்போது வளையல் கடையிலிருந்து ஒருவர் எழுந்து ஓடிவந்து, "வாங்க பாப்பா.. நீங்க மட்டும் தான் வந்திருக்கீங்களா?.. அப்பா வரலையா?" என்று அவளிடம் குலசம் விசாரிக்க, "இல்ல வரலை" என்று சொல்லியபடியே திரும்பியவள், அங்கு ருத்ரமூர்த்தியாய் நின்று கொண்டிருந்தவனைப் பார்த்ததுமே, "சாமி கும்பிட்டுட்டு வரேன்" என்று சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டாள்.

அவள் உள்ளே செல்ல செல்ல விஜயாதித்தனை தெரிந்த ஒவ்வொருவராய் வந்து நலம் விசாரிக்க, தப்பி வந்தால் போதும் எனும்படியாக அனைவரிடமும் ஒரு வரி பதிலிலேயே நழுவிவிட்டாள் ஷ்ரதா.

இவற்றையெல்லாம் சகித்துக் கொண்ட வீசிக்கு அவள் அடுத்ததாக செய்த ஒரு காரியத்தை தான் சகிக்கவே முடியவில்லை.

அவர்கள் தாமரைக்குளத்தை அடைந்தபோது எதிரில் வந்த ஒரு குடும்பத்தைப் பார்த்ததும், "ஷிவாத்தான்.." என்று ஓடினாள் ஷ்ரதா.

ஓடிச்சென்றதில் பாவாடை தடுக்கி விழப்போனவளை தாங்கிப் பிடித்தவனைக்கண்டு தூணில் தன் கையைக் குத்திக்கொண்டான் வீசி.

சிவனேஸ்வரன்... விஜயாதித்தனின் தங்கை மகன். பெங்களூரில் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தவன் எப்போது மதுரை வந்தான் என்று அவளுக்கேத் தெரியாது.

ஏதோ குடும்ப பிரச்சனையால் கடந்த நான்கு வருடமாகவே அத்தையும் மாமாவும் தன் குடும்பத்துடன் பேசுவதில்லை என்பது மட்டும் தெரிந்திருந்தாலும், ப்ளஸ்டூ தேர்வில் மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் பெற்றதும் அதனை முதலில் தன்னிடம் ஓடிவந்து கூறியவனை அவளால் மறக்க முடியுமா என்ன?

இப்போது அவளது ஷிவா அத்தானைப் பார்த்ததும் ஆர்வத்தை அடக்க முடியவில்லை அவளால். தன் தோள்களில் அவன் கரங்கள் இருக்கும் சுரணையே இல்லாமல், "அத்தான் எப்படி இருக்கீங்க?.. எப்போ மதுரை வந்தீங்க?.. ஆளே மாறிட்டீங்க!" என்று அவனிடம் உற்சாகமாகக் கேட்டுக் கொண்டிருந்தாள்.

சிவனேஸ்வரனும் அவ்வப்போது வீசியைப் பார்த்தபடியே பதிலளித்துக் கொண்டிருந்தான்.

சிவனேஸ்வரனிடம் பேசிவிட்டு பக்கத்தில் தனது அத்தை மாமாவிடம் திரும்பியவள், "அத்தை, மாமா, எப்படி இருக்கீங்க?" என்று நலம் விசாரித்தாள். இருவரும் பதிலேதும் சொல்லாமல் முகத்தை திருப்பிக் கொண்டனர்.

தன் அத்தையின் கையில் இருந்த தட்டில் நான்கு மூலைகளிலும் சந்தனம் வைக்கப்பட்டிருந்த திருமண பத்திரிக்கைகளைப் பார்த்தவள், "ஹை! அத்தானுக்கு கல்யாணமா?.. அத்தான், சொல்லவே இல்ல?.. எங்களையெல்லாம் மறந்துட்டீங்களாத்தான்?.. உங்க கல்யாணத்துக்கு வரமுடியுமோ என்னவோ தெரியல.. ம்ம் இந்தாங்க இதை என் கல்யாணப்பரிசா வச்சிக்கங்க.." என்று தன் கையிலிருந்த மோதிரத்தை கழற்றி அவன் சுண்டு விரலில் போட்டுவிட்டாள். உடன் தன் கையிலிருந்த ரோஜா மொட்டையும் அவனிடம் தாரை வார்த்தாள்.

அவளின் அச்செயலில் தீங்கங்குகளுக்கு நிகராக கண்கள் சிவந்தபடி நின்றிருந்தான் வீசி.

சிவனேஸ்வரனின் குடும்பம் தன்னைக் கடந்து சென்ற பின், "வா வருண், கற்ப கிரகம் போவோம்" என்ற தன் தாயிடம், "நான் வரல.. நீங்க போங்க" என்று பிடிவாதமாய் சொல்லிவிட்டு தாமரைக்குளத்தின் படிகளிலேயே நின்றுவிட்டான் வீசி.

"இவ்வளவு தூரம் வந்திட்டு இப்படி செய்றானே" என்று சலித்துக் கொண்ட அபிராமி மற்றவர்களை அழைத்துக்கொண்டு மீனாட்சி அம்மனை தரிசிக்கச் சென்றுவிட்டார்.

செல்லும்போது வீசியை திரும்பிப் பார்த்துக்கொண்டே சென்றாள் ஷ்ரதா.

அவனும் அவளையே தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

vul9vh6oMUMVZsI25pTu5_rO_sGZ2lWkqdrfxUnzn7hMBDwH1BrsAQ3qANfNwcy7nWBoPWEEMRx0GJzgKVF5uXmokocr-lFF67QjqlgoeHi8zaae7BeXT1IsFSaIGxJqZHK3wLKN


காதல் கணம் கூடும்...​
 
Last edited:

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
676
Reaction score
1,079
Points
93
உங்களது விமர்சனங்கள் வரவேற்கப் படுகின்றன ப்ரெண்ட்ஸ்.

கருத்து சொல்லுங்க. பரிசு வெல்லுங்க❣️

கருத்துத்திரி,
பரிசு பெற என்னைத் தொடவும்❤️
 
Last edited:

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
676
Reaction score
1,079
Points
93

காதல் கணம் 4​




வீட்டிற்கு வந்து இரண்டு மணி நேரமாகி விட்டது. இன்னமும் தன் முகத்தை தூக்கிவைத்துக்கொண்டு தான் அவனுக்கு தட்டில் சப்பாத்தியை வைத்தார் அபிராமி.

எட்டு வருடங்களுக்கு முன்னாலிருந்த வீசி என்றால் இந்நேரம் தாஜா செய்து தன் அன்னையை பேச வைத்திருப்பான்.

இப்போதிருப்பவன் தான் பாறையாகிற்றே.. இறுகி உட்கார்ந்திருந்தான்.

ஷ்ரதா வேறு அபிராமிக்கு உதவுகிறேன் பேர்வழியென்று ஜல் ஜல்லென்று அவனைக் கடந்தும் வந்தும் சென்று கொண்டிருந்தாள்.

திடீரென அவளது மணிக்கட்டைப் பிடித்து நிறுத்தியவன், டைனிங் டேபிளிலிருந்த குருமாவைப் பார்த்து, "பரிமாறு" என்றான்.

முறைப்படி இப்போது ஷ்ரதா அவனது தட்டில் குருமா பாத்திரத்தையே பதறி கவிழ்த்திருக்க வேண்டும். ஆனால், அவளது கைகள் அதைச் செய்ய ஒத்துழைக்கவில்லை.

கீழே கால்கள் அவன் கட்ஷூவிற்கடியில் சிக்குண்டிருக்கும் போது மூளை எப்படி வேறொரு கட்டளையைப் பிறப்பிக்கும்?

அவளது காலை முதலில் அப்பிடியிலிருந்து காப்பாற்றிக்கொள்ள சொல்லித்தானே உத்தரவுப் பிறப்பிக்கும்!

அப்படியும் மீறி குருமாவை அவன் தட்டில் ஒரு கரண்டி ஊற்றியவள், தன் கண்ணீரையும் ஒரு சொட்டு அவன் தட்டில் விட்டவளாய் குனிந்து அவன் காதருகே, "ப்ளீஸ்ங்க வலிக்குதுங்க" என்றாள்.

"அவனைப் பார்த்ததும் ஷிவா அத்தான்னு இந்த கால் தானே முதல் எட்டு எடுத்து வச்சது?"

தட்டிலிருந்த சப்பாத்தியிடம் கேட்டுக் கொண்டிருந்தான் அவன்.

"ப்ளீஸ்ங்க.. ரொம்ப வலிக்குதுங்க.."

"ஷ்ரதா, அஸ்வினுக்கு தண்ணியெடுத்துக் கொடும்மா.." நேரம் தெரியாமல் வேலை ஏவினார் அபிராமி.

"ப்ளீஸ்ங்க.."

விட்டான் அவன். மெதுவாக நகர்ந்துப்போய் தண்ணீரை குட்டிப்பையனின் தட்டருகே நகர்த்தி வைத்தவள், பக்கத்திலிருந்த நாற்காலியிலேயே கால்வலியில் உட்கார்ந்துவிட்டாள்.

"என்ன ஷ்ரதா பசிச்சிருச்சா?.. அதான் உன்னை நான் முன்னாடியே உட்கார சொன்னேன்.. இரு நான் வர்றேன்" என்று தானே அவளுக்கு பரிமாறினார் அபிராமி.

அவளுக்கு சப்பாத்தி வைத்து குருமா வைக்கச் சென்றவரை, "ம்மா! ம்மா! வேணாம் அவளுக்கு உரைக்கும்.. நம்ம வீட்டு குருமா அவளுக்கு ஒத்துக்காது.." என்று தடுத்தான் வீசி.

"ஷ்ரதா என்னமோ சின்னக் குழந்தை மாதிரி தான்டா நீ பேசுறது இருக்கு.. ஏன்மா ஷ்ரதா ஒரே நாள்ல உன்னைப்பத்தி என்னவெல்லாம் சொல்லி வச்ச இவன்கிட்ட.. இப்படி நாடிப் பிடிக்கிறான்.. ம்ம் நீ குடுத்து வச்சவ.. உன் புருஷன் இப்படி ஒரே நாள்ல புட்டுப்புட்டு வைக்கிறான்.. எனக்குந்தான் இருக்காரே! போய் கடைலயிருந்து ஒரு கொலுசு கொண்டு வரச் சொல்லு.. என் ரெண்டு காலையும் உள்ள விடுற அளவுக்கு எடுத்துட்டு வருவாரு.." என்று சொல்லவும், முயன்று சிரித்தாள் ஷ்ரதா.

வீசி சாப்பிட்டு முடித்தவன், வெளியே புல்வெளியில் உலாவ சென்றுவிட, அவனுக்குப் பின்னால் வந்து நின்று, "வருண்" என்றழைத்தாள் மதுபாலா.

திரும்பியவன் பேசாமல் நின்றான்.

"ப்ளீஸ் வருண்.. என்கிட்ட முன்ன மாதிரி பேசுடா.. என்னால நீ இப்படி இருக்கிறதை தாங்கிக்கிற முடியலைடா.. ஏய்! காலுக்குள்ள வந்து விளையாடாதீங்க.. தள்ளிப்போய் விளையாடுங்க.." என்று தன் குழந்தைகளை தள்ளி அனுப்பி வைத்தவள் மீண்டும் தன் தம்பியிடம் மன்றாடலைத் தொடர்ந்தாள்.

"நாளைக்கு இவங்க அப்பா இங்க வந்து எங்களை வீட்டுக்கு கூட்டிட்டுப் போறதா சொல்லியிருக்காரு.. நீ இப்படி இருந்தா என்னால அங்க நிம்மதியாவே இருக்க முடியாதுடா.." என்று சொல்லி அழுதாள்.

"அக்கா, ஏன் இப்படி அழற?.. அம்மா பார்த்திடப் போறாங்க.. கண்ணைத்துடை.."

"சாரிடா வருண்.. என்னை நினைச்சா எனக்கே வெறுப்பா இருக்குடா.. என் சுயநலத்துக்காக உன்னை பலிகடாவாக்கிட்டேன்.. அம்மா அப்பா ஷ்ரதாவை ஏத்துக்கிட்டாங்க.. எனக்கு தான் மனசே கேட்க மாட்டேங்குதுடா.."

"அக்கா, நீ இப்போ ஃபீல் பண்ண வேண்டிய அவசியமே இல்ல.. அதேமாதிரி எனக்கு இப்போ உன் மேல கோபமும் இல்ல.. என் கோபமெல்லாம் உன் புருஷன் மேலயும் அவரை ஆட்டி வைக்கிற உன் மாமனார் மேலயும் தான்.. முன்னாடி உன்மேல நான் கோபப்பட்டதுக்கு கூட காரணம் நீ உன் புருஷனுக்கு டைவர்ஸ் கொடுக்க மறுத்தது தான்.."

"என்னடா பண்றது என்னால அவர் என்ன செஞ்சாலும் வெறுக்க முடியலையே.. நான் கல்யாணம் ஆகி ரெண்டு வருஷம் குழந்தை இல்லாம இருந்தப்ப சுத்தியிருந்தவங்க எல்லாம் என்னைப்பத்தி அவர்கிட்ட என்னென்ன சொன்னாங்க தெரியுமா?.. ஆனா அவர் அதையெல்லாம் கண்டுக்கவே இல்ல.. ஒரு ஸ்டேஜ்ல நானே வெறுத்துப்போய் அவர்கிட்ட ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கோங்க, நான் எங்க அம்மா வீட்டுல போய் இருந்துக்கிறேன்னேன்.. என்னை கைநீட்டி அடிச்சிட்டு ஒரு வாரம் என்கூட பேசவே இல்ல தெரியுமா.. அப்படி எல்லாம் இருந்தவரு இப்ப தான்டா அவர் அப்பாக்கூட சேர்ந்துக்கிட்டு என்னென்னமோ பண்றாரு.."

"நீ மனசில எதையும் போட்டு குழப்பிக்காத.. மறுபடியும் ஏதாவது செஞ்சாருன்னா, அவரு தங்கச்சி இங்க இருக்கிறதை ஞாபகப்படுத்து.."

"டேய்! ஷ்ரதா ரொம்ப நல்லப் பொண்ணுடா.."

"அதுக்காக அவளுக்கு கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடத்தச் சொல்றியா?.. நீ அங்கேயிருக்கிற வரைக்கும் தான் இவ இங்க இருப்பா.."

"என்னடா நீ அவக்கூட சந்தோசமா இருக்கன்னு நினைச்சா இப்படியெல்லாம் பேசுற.."

"சந்தோசமாத்தான் இருக்கோம்.. ஆனா, அந்த சந்தோசம் நிரந்தரமாகுறது அவர் கையில தான் இருக்குன்னு சொல்லி வை.."

இன்னும் புரியாதபடியே தன் தம்பியைப் பார்த்திருந்த மதுபாலா தன் குழந்தைகளின் அழைப்பில் அவர்களை நோக்கிச் சென்றாள்.

பின், "போங்க! போய் தூங்குங்க!" என்று அதட்டியபடியே அவர்களை தன்னறைக்கு விரட்டிச் சென்றாள்.

சிறிதுநேரம் அங்குமிங்குமாக உலாத்திய வீசி அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தவனாக வீட்டிற்குள் நுழைந்தான்.

அனைவரும் சென்ற பின்னும் தான் மட்டும் எழுந்து செல்ல முடியாமல் அப்படியே உட்கார்ந்திருந்தாள் ஷ்ரதா. அபிராமியும் கைவேலையாக சமையலறைக்குள் இருந்தார்.

ஒருவழியாய் இடது காலை மட்டுமே ஊன்றி ஊன்றி படிக்கட்டு வரை வந்து விட்டவள், அதன் பின் இருபது படிக்கட்டுகளையும் கடந்து எப்படித் தங்களது அறைக்குச் செல்வதென்று ஆயாசமாய் பார்த்திருக்க, சட்டென்று அவள் கால்கள் அந்தரத்தில் மிதந்தன.

அலேக்காய் தூக்கிய அந்த முரட்டு கைகளுக்குச் சொந்தமானவனின் நெஞ்சானது அவள் உதட்டருகில் இருக்க, நிமிர்ந்து பார்த்துவிட்டு பொங்கி வந்த அழுகையில் அவன் மார்பை நனைத்தாள் ஷ்ரதா. அது கால்வலியினால் மட்டும் வந்த அழுகை அன்று.

வேட்டியை முன்பே தயாராய் ஏற்றி மடித்துக் கட்டியிருந்தவன், இருபது படிகட்டுகளையும் ஏதோ பூக்கூடையை சுமந்து செல்வது போல் அனாயசமாக தாவி கடந்து சென்றான். முடிவில் அவளை தங்கள் அறையில் கட்டிலில் இறக்கிவிட்டு, அவள் பாவாடையை லேசாக கணுக்கால் அளவில் உயர்த்தி, அந்த வலது காலின் விரல்களைப் பார்த்தான்.

தரையுடன் மல்யுத்தம் நடத்தியிருந்த சுண்டுவிரல் மட்டும் நைந்து தோல் உரிந்து வீரனாய் ஒரு சொட்டு ரத்தம் சிந்தியிருந்தது.

நேரே மேசையின் டிராயரை இழுத்து முதலுதவிப் பெட்டியை எடுத்து வந்தவன் சேதாரமான கால் விரலில் டின்க்சரை அழுத்தி வைத்தபடியே, "இனி அவனை எங்கேயாவது பார்த்தா ஓடுவியா?" என்றான்.

ஒருநொடி அவ்விரலே துண்டானது போல் துடிதுடித்துப்போன ஷ்ரதா, பெட்ஷீட்டை கசக்கிப் பிடித்து, "ஆஆ மாட்டேன்" என்று கத்தினாள்.

"ம்ம்.." என்று ஒரு உறுமு உறுமியவன், இன்னும் உனக்கான விசாரணை முடியவில்லை என்பது போல், "நிச்சயத்தப்போ நான் உனக்கு போட்ட மோதிரம் எங்க?" என்றான்.

சிறுவயதிலிருந்தே இதுபோல் செயின், மோதிரம், வளையல் என்று மற்றவர்களுக்கு கழற்றிக் கொடுப்பது அவளுக்கு வழக்கம் தான்.

ஆனால், அவள் அப்பா ஒருமுறை கூட இதுபோல் தானம் தர்மம் வைத்துவிட்டு வருபவளிடம் ஏன் என்று கேள்வி கேட்டதில்லை.

ஆனால், இப்போது இவன்….

வீசி அனைத்தையும் பார்த்துவிட்டே இதுபோல் எங்கே என்று கேட்டது ஒருபுறம் எரிச்சலாக இருந்தாலும் மறுபுறம் பதில் சொல்லாமல் இவன் விடமாட்டான் என்கிற பயத்தில், "ஷிவா அத்தானுக்கு கழட்டி கொடுத்துட்டேன்" என்றாள், பஞ்சு வைத்து பிளாஸ்திரி ஒட்டப்பட்ட தனது கால்விரலை பார்த்துக்கொண்டே.

"பதில் சொல்லும்போது என் முகத்தைப் பார்த்து பேசனும்.."

சட்டென்று நிமிர்ந்தவள், "ஷிவா அத்தானுக்கு கழட்டிக் கொடுத்துட்டேன்.. நாளைக்கு அப்பாக்கிட்ட அந்த மோதிரத்துக்கான அமௌண்ட் என்னன்னு கேட்டு வாங்கிக் கொடுத்திடுறேன்.." என்று முடிக்கக்கூட இல்லை, அவர்கள் மெத்தைக்கு நேர் எதிரே சுவற்றில் மாட்டப்பட்டிருந்த முப்பத்திரண்டு இன்ச் எல்இடி டீவியை தரையில் தூக்கிப்போட்டு நொறுக்கியிருந்தான் வீசி.

அவள் பயத்தில் தன் முழங்காலிலேயே முகம் புதைத்திருப்பதைப் பார்த்து, "என்ன சொன்ன? மறுபடியும் சொல்லு?" என்று கர்ஜித்தான்.

சப்தநாடியும் அடங்கி ஒடுங்கிப்போய் அவனைப் பார்த்திருந்தாள் ஷ்ரதா.

திடீரென வெறிப்பிடித்தவன் போல் வேகமாக அவளை நெருங்கியவன், அடித்துவிடுவானோ என்று பின்னோக்கி சாய்ந்தவளின் முகத்தை நெருங்கி, முகமோடு முகம் சேர ஒரு இன்ச் இடைவெளியே இருந்த சமயத்தில், "நீ இப்போ ஷ்ரதாஞ்சலி விஜயாதித்தன் இல்ல.. ஷ்ரதாஞ்சலி வருண் சக்கரவர்த்தி.. அடிக்கடி நீ இதை மறந்து போயிடுற.. மறக்க முடியாதபடி ஏதாவது கொடுக்கவா?.." என்றான்.

ரொம்ப நேரம் பின்னால் சாய்ந்தபடியே இருக்க முடியவில்லை அவளால். பேலன்ஸ் தவறி தலையணையிலேயே விழுந்தாள்.

"ம்ம் கொடுக்கவா?.."

"வேண்டாங்க.. இனி நான் அப்படி யாருக்கும் எதுவும் கழட்டி கொடுக்கமாட்டேன்.."

"இல்லையே.. இன்னும் எனக்கான பதில் வரலையே.."

இன்னும் சற்று முன்னோக்கி குனிந்தான் அவன்.

"என்ன?.. என்ன பதில்?.." திக்கித் திணறினாள் அவள்.

"உங்களை கேட்காம யாருக்கும் எதுவும் கழட்டி கொடுக்கமாட்டேன்னு இல்ல வார்த்தைக் கோர்வை இருக்கணும்.."

"இனி.. உங்களை.. உங்களை.. கேட்காம.. யாருக்கும்.. எதுவும்.. எதுவும்.. கழட்டி.. கொடுக்கமாட்டேன்.."

"ம்ம்ம்" என்றவன் அப்படியே தாவிக் குதித்து அவளுக்கு மறுபுறம் வந்து படுத்துக்கொள்ள, அப்பாடா என்று பெருமூச்சுவிட்டு கண்ணை மூடித்திறந்த ஷ்ரதாவிற்கு மீண்டும் அவன் முகம் நெருக்கத்தில் தெரிந்தது.

"அதென்ன கோவிலுக்குள்ள எல்லாம் உங்கப்பனை எங்கன்னு கேட்கிறாங்க?.. நீயும் அப்பா என்கூட வரலைன்னு பால்வாடி பாப்பா மாதிரி சொல்லிக்கிட்டு இருக்க.. நான் என் புருஷன் கூட வந்திருக்கேன்னு தைரியமா சொல்லத் தெரியாது?"

"சா.. சா.. சாரிங்க.."

"ஒழுங்கா பேச கத்துக்கோ.. இல்ல ரொம்ப வருத்தப்படுவ.." என்று எச்சரித்துவிட்டு மீண்டும் தான் படுத்தவிடத்திலேயே போய் படுத்துக்கொண்டான் வீசி.

'ஒரு சமயம் என்னை புரிஞ்சி வச்சிருக்கிற மாதிரி நடந்துக்கிறீங்க.. இன்னொரு சமயம் என்னை வெறுக்கிற மாதிரி நடந்துக்கிறீங்க.. ரெண்டுல எது அத்தான் நிஜம்?..' என்று எப்போதும் போல் தனக்குள்ளேயே கேட்டு அரற்றிக்கொண்டே உறங்கிவிட்டாள் ஷ்ரதா.

x8v4Zkz01SngEQm6B0vs6Rv4oxdcTf72CxDr5XlP-yzYkSRBXmpHkoZnxTbtq1TMA_rZE6beVvMU7WSgiWmriEYGeGJGUtrzvTTZIUsAP3lccEtPBLPwHAc2H-8Yr0r_8HoWguQV


காலையில் எழுந்த ஷ்ரதா தனது காயம் பட்ட விரலைப் பார்த்தாள். நேற்று இருந்த அளவிற்கான வலி இப்போது இல்லை. காலை கீழே ஊன்ற முடிந்தது.

வழக்கம் போல் குளித்துக் கிளம்பி சல்வாருடன் கீழே வந்தாள்.

நேற்றுபோல் தொலைக்காட்சியிலேயே நேரத்தை செலவிட்டு தப்பிக்கலாம் என்றால் அவள் தான் காபி கொண்டு வந்து கொடுக்க எனக்கு சம்மதம் என்று சாசனம் எழுதிக் கொடுத்திருக்கிறாளே.

தூண்டிலில் சிக்கிய மீனாய் தப்பிக்க வழியின்றி காபிகப்புடன் இதுவரை தான் நுழைந்தேயிராத அந்த உடற்பயிற்சி கூட பிராந்தியத்திற்குள் நுழைந்தாள் ஷ்ரதா.

காதல் கணம் கூடும்...


உங்களது விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன ப்ரெண்ட்ஸ்😊

கருத்து சொல்லுங்க. பரிசு வெல்லுங்க❣️

கருத்துத்திரி,
https://www.sahaptham.com/community/threads/நரகமாகும்-காதல்-கணங்கள்-comments.470/
 
Last edited:
Top Bottom