Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


BK NOVEL நவயுகம் - Tamil Novel

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
607
Reaction score
782
Points
93
வணக்கம் 🙏🙏🙏,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டியில் கலந்துகொள்ளும் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐💐.

போட்டியின் விதிமுறைகள், காலக்கெடு மற்றும் பரிசுகள் பற்றிய விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் விபரமாக குறிப்பிடப்பட்டுள்ளது. மீண்டும் ஒருமுறை அதை படித்துப் பார்த்துவிட்டு உங்களுக்கு முழு சம்மதம் என்றால், உங்களுடைய கதையை இந்த திரியில் தொடர்ந்து பதிவிடவும்.

உங்களுடைய கதை வாசகர்களை மகிழ்விக்கும் வகையில் அமையவும் போட்டியில் நீங்கள் வெற்றிபெறவும் வாழ்த்துகிறேன்.

மனமார்ந்த வாழ்த்துக்கள் 😍😍😍

நன்றி...
- நித்யா கார்த்திகன்

 
Last edited:

Harini

Member
Vannangal Writer
Messages
43
Reaction score
45
Points
18
175345018_10222253027813449_7792527512632797225_n.jpg




இது என் முதல் கதை.... வாய்ப்பளித்த சகாப்தத்திற்கும், எழுத ஊக்குவிக்கும் நித்யா அக்காவிற்கும் நன்றி...

நான் வியந்த எழுத்தாளர் - நம்மை போல் ஒரு சக தோழி (அக்கா) "இருள் மறைத்த நிழல்" எழுதிய அக்கா தேனுவிடம் இந்த கதை சென்று அவர்களை கண்டுபிடிக்க வேண்டும் என்பது என் ஆசை.

திங்கள் மற்றும் வெள்ளி நவயுகம் உங்களைத் தேடி வரும்...

கொலை கொஞ்சம் வன்முறை கொஞ்சம் மனதை கனக்க வைக்கும் சில சம்பவங்கள் நிறைந்த சஸ்பென்ஸ் / திரில்லர் நாவல் இந்த நவயுகம்...

உங்கள் பின்னூட்டங்களே என்னை மேலும் எழுதவைக்கும் தூண்டுகோல்... என் எழுத்து நடையை மெருகூட்ட உங்கள் கருத்துக்களை - கருத்துக்கள் திரியில் பதிவிடுங்கள். நன்றி...
 

Harini

Member
Vannangal Writer
Messages
43
Reaction score
45
Points
18
அத்தியாயம் ஒன்று

சிவப்பு

எங்கோ நாய் ஒன்று அழுது ஊளையிடும் ஒலி மட்டும் அந்த நிசப்தமான இரவின் அமைதியைக் குலைத்துக் கொண்டிருந்தது.

அந்த கட்டிடம் என்றோ தீ கைகளுக்கு இரையானது போலும், முற்றிலும் சிதிலமடைந்து பாழடைந்த பேய் பங்களா போன்ற தோற்றத்தைத் தந்தது.
மினுக் மினுக் என்று ஒளி குறைந்து எறிந்த அந்த சிவப்பு விளக்கு, இன்றோ நாளையோ உயிரை விடப்போகிறது என்று சொல்லாமல் சொல்லியது. அந்த நிலவொளியும் இந்த விளக்கொளியும் ஓர் சொல்லொன்னா திகில் கிளப்பியது.

தங்கதுரைக்கு லேசாக விழிப்புத் தட்டியது. ஒரு நிமிடம் எங்கு இருக்கிறோம் என்ன ஆயிற்று என்று பிடிபடவில்லை. எங்குப் பார்த்தாலும் இருள். உடம்பு முழுவதும் வலி, தாங்க முடியாத வலி. கை கால் மரத்துப் போய் அசைக்கக்கூட முடியாமல் பிணைக்கப்பட்டிருந்தது. கத்துவதற்கும் கதறுவதற்கும் வழி இல்லாமல் அவரது வாயில் துணி கொண்டு அடைத்திருந்தனர். அல்லது அடைத்திருந்தானோ ? அவருக்குப் பல பேர் தன்னை கடத்தியது போல நினைவில் இல்லை. அவர் காலை உடற்பயிற்சிக்குக் கடற்கரையில் காலாற நடந்தது தான் நினைவிலிருந்து.

தங்கதுரையின் அசைவு தெரிந்ததும், அந்த சிகப்பு முகமூடி, சிகப்பு அங்கி , சிகப்பு கால் சட்டை அணிந்த அந்த உருவம், உடல்மொழியில் அலட்சியம் காட்டி எழுந்து நின்றது!

இருளைக் கிழித்து வரும் அந்த உருவத்தின் உடல்மொழியே தங்கதுரைக்கு அவரது இறுதியை நிதர்சனப்படுத்தியது! இருந்தும் உம் உம் என்று முனகி அவரது சினத்தைக்காட்ட நினைத்தார்.

“ப்ச்.. இரு என்ன அவசரம்.. பொறுமை.. துணிய எடுக்கிறேன், நீ பேச வேண்டியதை எல்லாம் பேசு.. அப்புறம் உன் உயிரை எடுக்குறேன்” என்றான். அவன் குரலில் அப்படி ஒரு எள்ளல்.

முகம் முழுவதும் அவன் மூடியிருந்தாலும் அவருக்கு அவன் தன்னை துச்சமாக நினைப்பது நன்றாகவே தெரிந்தது. வேண்டும் என்றே அவருக்கு வலிக்கும் படி கழுத்தை இழுத்து அவர் வாயில் கட்டியிருந்த துணியை அவிழ்த்தான்.

இழுத்த வேகத்தில் அவருக்கு இருமல் வந்தது. அவரை பிடித்துச் சாய்வாக உட்கார வைத்தான்.

தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டவர், அந்த நிலையிலும் கர்ச்சித்தார்.

“டேய் என்ன யாருன்னு நெனச்ச? தங்கதுரை டா! மினிஸ்டர் தங்கதுரை!” இந்நேரம் உன்னைப் பிடிக்க தனிப்படை வச்சிருப்பாங்க!”

“தங்கதுரையாம் தங்கதுரை! கடையில இருக்குற பொம்மையைக் கூட பாத்து பல் இளிக்கிற பித்தளை! துருப்பிடிச்ச நாய்,” அவன் கத்தியதில் அந்த பாழடைந்த சுவர்கள் கிடுகிடுத்தது!

“நீ யாரு? யார் அனுப்பிச்ச ஆளு? எதிர்க்கட்சியா? எதுக்காக என்ன கடத்தி வச்சிருக்க…?”

“தங்கம் தங்கம்.. நான் பேசியதை ஒழுங்கா கேக்கலையா நீ? உன்ன போட்டுத் தள்ள தான் தூக்கிட்டு வந்திருக்கேன்…”
“எதுக்காக என்னை கொல்லத் துடிக்கிற? சொல்லு எதுவா இருந்தாலும் பேசி தீத்துக்கலாம்... “ அவனிடம் வளவளத்தால் எப்படியும் காவல்துறை அவரை காப்பாற்ற வந்துவிடும் என்று நம்பிக்கை வைத்தார்.

அவனோ எம்டனுக்கு எம்டனாக, “ ஐ..நல்ல இருக்கே நான் கதை சொல்லுவேனாம், நேரம் ஆகுமாம்.. போலீஸ் வந்து என்ன புடிச்சிட்டு போகுமாம்…. இவரு தப்பிச்சிருலாமாம்! மினிஸ்டர் டேய்….உன்ன மாதிரி இருக்குற எல்லா களைகளை புடுங்கிட்டு மொத்தமா நான் யாரு.. என்னனு உலகத்துக்கு சொல்லிக்கிறேன்..” என்று கூறி, ஏற்கனவே எரிந்து கருகிய அந்த இடத்தையே தங்கதுரைக்குச் சிதையாக மாற்றி அவரை உயிருடன் எரித்தான்.

அவரின் மரண ஓலம் அவன் செவியில் இனிமையான சங்கீதமாக ஒலித்தது. அங்கு எரியும் ஜ்வாலை அவன் கண்களில் எதிரொலித்து, அவன் மனதில் எரியும் நெருப்புக்குப் போட்டியாக இருந்தது!

மிகுந்த மனநிறைவுடன், அங்கிருந்து நகர்ந்தான் அவன்!

------------------------------------------------------------------

அஞ்சலி அஞ்சலி எங்க போன.. குழந்தை அழறா பாரு என்று கத்தினான் ரகுநந்தன். அவர்கள் வீட்டு நாய் சோகமாகப் படுத்திருந்தது. வெளியே வந்து அந்த மேஜை மேல் சட்டமாகச் சட்டத்தினுள் இருக்கும் அஞ்சலியின் புகைப்படம் அவனுக்கு அவனது இன்றைய நிலையை எடுத்துக் காட்டியது!

ஆயிற்று! இன்றோடு ஒரு மாதம். அவனையும் அவன் பெண் அதிராவையும் விட்டுப் போய்விட்டாள். கூட்டி வர முடியாத தூரத்திற்குச் சென்று விட்டாள். அன்று அவள் இருந்த கோலம் நினைத்தால்... இன்றும் அவனுக்குத் தூக்கிப் போட்டது. எப்படி முடிந்தது அவளால்? என்னையும், எட்டு மாதமே ஆன குழந்தை அதிராவையும் நினைத்துப் பார்க்காமல் இப்படி ஒரு முடிவை எடுக்க? சக்தி மட்டும் இல்லை என்றால் அவர்களின் நிலை என்னவாகி இருக்கும்.

சக்தி பெயருக்கு ஏற்றார் போல் அவனுக்கு சக்தி அளித்து இந்த ஒரு மாதம் அவன் பித்தனாகாமல் காப்பவள்.

ரகு சொந்தமாக ஒரு கன்சல்டிங் நிறுவனம் வைத்திருந்தான். முக்கால்வாசி நேரம் ரகுவிற்கு வேலை வீட்டிலேயே முடிந்து விடும். அந்த கருப்பு தினத்தன்று அவனுக்கு வெளியே வேலை இருந்தது... அவனுக்குக் கையசைத்து விடை கொடுத்த மனைவி அவன் திரும்பி வந்த பொழுது அசைவில்லாமல் தூக்கில் தொங்கி இருந்தாள். அம்மா விட்டுச் சென்றது தெரியாமல் தரையில் அதிரா விளையாடிக் கொண்டிருந்தாள். வீட்டிற்கு வந்தவனுக்கு பெரும் அதிர்ச்சி… அவள் மரணத்தைப் புரிந்து கொள்ள அவகாசமின்றி, என்ன செய்வது என்று யோசிக்கும் முன்னர் அஞ்சலியின் மரணத்திற்குக் காரண கர்த்தா என்று காவல்துறை அவனைக் கைது செய்துவிட்டது! அதிராவையும் பார்த்துக் கொண்டு, அவனை நிரபராதி என நிரூபித்து, வெளிக்கொணர்ந்தது சக்தி தான்!

குழந்தை அழுவது நிற்காமல் இருக்க மாடியிலிருந்து இறங்கினான் ஷிவநந்தன். ரகுவின் தம்பி!
வந்தவன் வேகமாக அதிரா பாப்பாவைத் தூக்கி வந்து, “ அண்ணா... என்ன அண்ணா பாப்பாவை பாக்காம நீ பாட்டுக்கு மறுபடியும் உனக்குள்ள தன்னால யோசிச்சிட்டு இருக்க?”

“தேங்க்ஸ் ஷிவா” என்று சொல்லி அதிராவை வாங்கியவன், “என் அஞ்சலியைத் தான் டா நெனச்சிட்டு இருந்தேன்” என்றான். அவன் குரலிலிருந்த வலி ஷிவாவை அசைத்துப் பார்த்தது.

“அண்ணா உன் வலி எனக்கு புரியுது... என்ன பண்ணாலும் மாண்டோர் மீண்டு வருவதில்லை.. உனக்குத் தெரியாததில்லை.. அதிரா உன்ன நம்பி தான் இருக்கா..பேசாம நீ நம்ம சைக்காட்ரிஸ்ட் சக்தியை உனக்கும் கவுன்சிலிங் கொடுக்க சொல்லேன்?” என்று பாசமிகு தம்பியாக இலவச ஆலோசனை கொடுத்தான்.

ஷிவா இங்கு வந்து ஒரு வருடமே ஆகிறது..அதற்கு முன் படிப்பு ட்ரைனிங் என்று எல்லாமும் விடுதியில் கழித்தான். இந்த ஒரு வருடத்தில் அவன் அண்ணன் அண்ணி காதலைக் கண்ணால் பார்த்தவன். அவன் ஒரு வழக்கு சம்பந்தமாக டெல்லி சென்று திரும்பி வருவதற்குள் அவன் அண்ணி மரணம், அண்ணன் கைது என அனைத்தும் நடந்து முடிந்திருந்தது. தன் அண்ணி தற்கொலை செய்ததை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

“இல்ல ஷிவா. சக்தியும் ரொம்ப ஒடைஞ்சி போயிருக்கா. அவளுக்கு அஞ்சலி தான் எல்லாம்.. அஞ்சலிய விட்டா அவளுக்கு யாரும் இல்லை…” என்றான் ரகு.

“அவளுக்கு எல்லாமாக இருக்க நான் இருக்கேன், அவ தான் என்ன தள்ளியே வைக்குறா.” ஷிவா வெளியே சொல்லவில்லை. மனதில் தான் நினைத்தான். அவனுமே அவன் அண்ணி மூலம் தான் சக்தியை அணுக நினைத்தான். இப்பொழுது என்ன செய்வது என்று அவனுக்கும் புரியாத நிலை.

துப்பாக்கி மற்றும் தோட்டா வைத்தான் காதலித்தான்

என்றாலும் காக்கிச் சட்டையைத் தான் கைப்பிடித்தான்
தன் சாவைச் சட்டைப்பையில் வைத்து எங்கேயும் செல்கின்றான்…

ஷிவாவின் செல்பேசி அழைத்தது.

ஷிவா ஒரு சப்-இன்ஸ்பெக்டர்! போலீசுக்கே உரித்தான தோற்றம். ஆறடியில் கட்டுக்கோப்பானவன். அவனுக்குப் பெரிய காவல் உயரதிகாரி ஆக வேண்டும் என்று கனவு. வேட்டையாடு விளையாடு ராகவன் போல் கெத்தாக இருக்க நினைப்பவன். சினிமாவும் நிஜமும் ஒன்றல்லவே!

அவனுக்குப் பிடித்த அந்த பாடல் வரிகள் முடியும் வரை காத்திருந்து செல்பேசியை இயக்கினான். அவன் ஸ்டேஷன் கான்ஸ்டபிள் முத்தண்ணன் தான் அழைத்திருந்தார்.

“சொல்லுங்க முத்தண்ணா…. எப்ப? ஐயோ அப்படியா… இப்பவே வரேன்..” என்றான்.

“என்ன ஷிவா என்ன ஆச்சு?” என்று ரகு கேட்க…

“நேத்து ராத்திரி ஊருக்கு ஒதுக்குப்புறமா ஒரு எடத்துல தீ விபத்து. மாட்டினது யாரோ பெரிய ஆள் போல… மீடியா போறதுக்கு முன்னாடி போகணும்.. நான் வரேன் அண்ணா” என்று அவன் ராயல் என்ஃபீல்ட் வண்டியை இயக்கினான்.

அவன் வெளியேறவும் சக்தி அவளது வண்டியில் உள்ளே நுழையவும் சரியாக இருந்தது.

சக்தி எல்லா பெண்களை விடச் சற்று உயரம் அதிகம். பேரழகி என்று எதை வைத்து வரையறை செய்வது? அவள் கண்களில் போட்டிப் போடும் கருணையும் சோகமும் தைரியமும், நேர்படப் பேசும் சுபாவமும், அனைவருக்கும் உதவும் பண்பு என அவளைப் பற்றிய அனைத்தும்…. அவள் மீதுள்ள காதலால் ஷிவாவின் கண்களுக்கு அவளைப் பேரழகியாகக் காட்டியது.

தன்னைப் பார்த்தால் என்றும் நின்று கனிவோடு பேசும் ஷிவாவை ஒரு நல்ல நண்பனாக சக்திக்குப் பிடிக்கும். அவன் அதற்கு மேலும் தன்னிடம் உரிமை எதிர்பார்ப்பதும் தெரியும். இருந்தும் அவள் நிலை எண்ணி அவள் அதைக் கண்டுகொள்ளாதது போல விட்டுவிடுவாள். எங்கோ அனைவராலும் பழிக்கப்பட்டு அனாதையாக நின்றிருக்க வேண்டிய அவளை தன்னுடன் அழைத்து டாக்டருக்குப் படிக்க வைத்து, இன்று சமுதாயத்தில் ஒரு நல்ல நிலையில் அவள் இருப்பதற்கு அஞ்சலி மட்டுமே காரணம். ரகுவும் அவளைப் பிரியமாக ஒரு தங்கை போல நினைத்தான் என்றாலும், ரகு - அஞ்சலி திருமணத்திற்குப் பின் அவர்களுடன் சேர்ந்து இருக்காமல், அவள் தனியாகப் பக்கத்துத் தெருவில் குடிபெயர்ந்தாள். ஷிவா அவர்கள் வீட்டில் விடுமுறை பொழுது வந்து தங்குவான் என்பதும் அவள் தனியே செல்ல ஒரு காரணம். கண்ணில் படாதது கருத்தில் இருக்காது என்பதை நம்பி அவனை முடிந்த அளவு தவிர்த்தாள்.

ஒரு வேளை தனியே செல்லாமல் இருந்திருந்தால் அஞ்சலி இன்றும் உயிருடன் இருந்திருப்பாளோ என்று அவள் நினைக்காத நாள் இல்லை..

ஷிவாவில் ஆரம்பித்து அஞ்சலியில் நின்றது அவள் எண்ணங்கள். இப்போதெல்லாம் அவள் மனம் எதை நினைத்தாலும் அஞ்சலியின் நினைவில் முடிகிறது.

“என்ன ரகு மச்சான் உங்க தம்பி நிக்காம ஓடுறாரு... “ என்று சக்தி கேட்டாள். அந்த ஒரு வாக்கியம் முடியும் முன் அவள் பல முறை இருமிவிட்டாள்.

“மொத தண்ணிய குடி சக்தி.. என்ன உடம்பு சரி இல்லையா?” என்று கேட்ட படி அவளுக்கு அருந்த, தன் பக்கம் இருந்த தண்ணீர் குவளையை அவள் புறம் நகர்த்தினான்.

அதை வாங்கிக் குடித்தவள், அதிராவைத் தன்னிடம் வரும்படி கை நீட்டினாள். என்றும் போல் தன் பாசமிகு சித்தியிடம் தாவினாள் குழந்தை! குழந்தையின் சிரிப்பு அவள் வாடிய முகத்திலும் சிரிப்பை வர செய்தது.

“டாக்டர் தானே நீ.. மருந்து சாப்பிடக்கூடாதா ? என்று உரிமையாகக் கோபித்தவன், அவளிடம் பதில் எதிர்பார்க்காமல், “அவனுக்கு ஏதோ அவசர கேஸ் போல.. ஏதோ தீ விபத்து... அதான் காலுல சுடு தண்ணிய விட்டுட்டு போறான்…” என்று அவளிடம் விளக்கம் தந்தான் ரகு.

அவனுக்குத் தெரியும் அவள் இப்போது அவளாக இல்லை. சரியாகச் சொல்ல வேண்டும் என்றால் அஞ்சலி இறந்ததிலிருந்து அவள் தன்னைப் பற்றிச் சிந்திப்பதில்லை. பேசுவதைக் குறைத்து விட்டாள். எல்லாவற்றையும் கருத்தோடு செய்தாலும், எந்நேரமும் இலக்கற்ற சிந்தனையிலிருந்தவள் இவ்வளவு மாறியதே பெரிதாக இருந்தது.

“அப்படியா, டிவி போடுங்க மச்சான்… நியூஸ் பாப்போம்” என்றாள் சக்தி.

“மீடியா வர முன்னாடி போகணும்னு சொன்னான்… அதுக்குள்ள நியூஸ்ல வராது சக்திமா” என்றான் ரகு.

“முக்கிய செய்தி.. அமைச்சர் தங்கதுரை கடத்தப்பட்டார். இன்று காலை எட்டு மணி அளவில் நடைப் பயிற்சி மேற்கொள்ளும் போது கடத்தப்பட்டார். சென்ற மாதம் நடந்த சட்டமன்ற தேர்தலில் அவருக்கு எதிராகப் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் முருகேசனை விட ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பதும் இந்த தேர்தலே அவர் எம்.எல்.ஏ வேட்பாளராக முதல் முறை நின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது!”

“நாடு எங்க போகுதுனு தெரியல... அமைச்சருக்கே பாதுகாப்பு இல்லை... நாமெல்லாம் என்ன பண்றது….?” என்று ரகு அங்கலாய்க்க..

“போதும் அமைச்சர் என்ன அமைச்சர்.. அப்படி ஒன்னும் அவன் உத்தமன் இல்ல மச்சான்.. ப்ச்.. நமக்கு ஆயிரத்தெட்டு பிரச்சனை… இதெல்லாம் எதுக்கு.. நீங்க எப்படி இருக்கீங்க?” என்று சக்தி பேச்சை மாற்றினாள்.

“நான் எப்படி மா அஞ்சலி இல்லாம நல்லா இருக்க முடியும்? இருக்குற வரப் பொண்டாட்டி அருமை தெரியாதுன்னு சரியா தான் சொல்லியிருக்காங்க….. எப்படி தான் எல்லாத்தையும் சமாளிச்சாளோ தெரியல…அவளை இன்னும் நல்லா கவனிச்சிருக்கலாமோனு மனசு கடந்து துடிக்குது… அப்போ அப்போ அவ இல்லைன்றது மறந்து போயிடுது….”

“எனக்கும் அப்படி தான் மச்சான் இருக்கு. நான் யாருக்காக இருந்தேனோ அவ இப்போ இல்லை.. அதுக்காக அவளை மாதிரி நான் கோழை மாதிரி முடிவெடுக்க மாட்டேன்.. எங்க நான் தவறினேன்னு தெரியல… அவளை ஒழுங்கா கவனிக்கலையோன்னு குற்ற உணர்ச்சி என்ன கொல்லுது..” என்று சக்தி சொல்லும் போதே அவள் கண்ணில் நீர் நிறைந்தது… அவள் முகம் மாற்றம் பார்த்து அதுவரை சும்மா சித்தியிடம் உட்கார்ந்திருந்த அதிரா அழ ஆரம்பித்தாள்.

குழந்தையை வாங்கிய ரகு, அவளுக்குப் பிடித்த பொம்மையை காட்டியபடியே, “ஏன் சக்தி, நீ கவுன்சிலிங் கொடுத்ததும் அஞ்சலி தற்கொலை பண்ணிகிட்டான்னு தான் நீ இப்போ உன்னோட கிளினிக்கு போறதிலயா?” என்று கேட்டான்.

“அதெல்லாம் இல்ல மச்சான்… எனக்கு ஒரு பிரேக் தேவைப் பட்டது. அதனால்…” அவள் வாக்கியம் முடிப்பதற்குள்… தொலைக்காட்சி அவர்களைத் திசை திருப்பியது…

“மிக முக்கிய அறிவிப்பு.. காணாமல் போன அமைச்சர் தங்கதுரை ஒரு பாழடைந்த பங்களாவில் பாதி எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். தீயணைப்புத் துறை வீரர்கள் அவரை கண்டுபிடிக்கும் முன் இறந்து விட்டார் என்று கூறப்படுகிறது. மேலும் இது திட்டமிட்ட கொலை என்பதை நிரூபிக்கும் வண்ணம், சம்பவ இடத்தில் உள்ள சுவரில் கரி கொண்டு எழுதிய கவிதையைக் கொலைகாரன் விட்டுச் சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. அந்த சுவரின் புகைப்படத்தை இப்போது காணலாம் ...”

அந்த இடத்தின் வெளிப்புற சுவரில் மிகவும் மோசமான கிறுக்கலாக இந்த கவிதை எழுதப்பட்டிருந்தது.

“தாய்வீடு தனக்கில்லையெனத்

தீயில் விழுந்து செந்தணலாய் நிற்க….
செந்தணலில் தள்ளப்பட்ட அக்கினி குஞ்சிற்காக

எரிக்கப்பட்ட எச்சம் இவன்.”

தொலைக்காட்சி மூலம் பார்க்கும் போதே ஏதோ அமானுஷ்யமாய் தோன்றியது ரகுவிற்கு. அதைப் பார்த்த நிமிடம் அவன் உடல் சிலிர்த்தது.

“போயட்டிக் ஜஸ்டிஸ்” என்று மென்னகைப் புரிந்தாள் சக்தி.
“ சக்தி மா என்ன சொல்ற?” என்று ரகு கேட்க..
“ போயட்டிக் ஜஸ்டிஸ்னு சொல்லுவாங்களே அதுக்காக கவிதை எழுதிருக்காங்க போலன்னு சொன்னேன்…” என்றாள் சக்தி, அவள் குரலில் வருத்தம் இல்லை.
“செம்ம கொடூரமா இருக்கு நீ சிரிக்கிற? என்ன தான் அவரு மோசமான ஆளா இருந்தாலும், ஒரு உயிர் பாவம் தானே? என்று ரகு கடிந்தான்.
“சாரி மச்சான்.. ஒரு உணர்ச்சி வேகத்துல சிரிச்சிட்டேன்.” என்று வருந்தினாள் சக்தி.
என்றும் போல் இன்றும் அவள் முகம் வாடுவது பிடிக்காமல் ரகு, “ பரவாயில்ல, அதை விடு சக்திமா.. நம்ம ஷிவா கேஸ் போல…அங்க பாரு டிவில..” என்று திசை திருப்பினான்... அங்கே தொலைக்காட்சியில் திரு திரு என்று விழித்துக் கொண்டிருந்தான் அவர்களின் ஷிவநந்தன்.
 
Last edited:

Harini

Member
Vannangal Writer
Messages
43
Reaction score
45
Points
18
அடுத்த அத்தியாயம் போட கொஞ்சம் ரொம்ப நேரம் ஆகிடுச்சு... மன்னிச்சூ... 🥺🙏🙏

கேப் விட்டதால் மறுபடியும் முதல் அத்தியாயம் படித்திவிடுங்கள் என்றும், படிக்காவிட்டால் புரியாதென்றும்... இனிமேல் தினமும் அத்தியாயம் வரும் என்றும் கூறிக்கொள்கிறேன்.. ❣️

பின்னூட்டம் கொடுத்த, கொடுக்கப்போகும் அணைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி...❤️❤️❤️❤️
 

Harini

Member
Vannangal Writer
Messages
43
Reaction score
45
Points
18
அத்தியாயம் இரண்டு

கருநீலம்

சேகருக்குப் பசி வயிற்றைக் கிள்ளியது. அந்த பசியை மறக்கடிக்கும் அளவிற்குத் தாகமும் இருந்தது. இத்துடன் இரண்டு நாள் ஆனதோ... இல்லை அதற்கு மேலும் ஆனதோ.. சேகருக்கு நேரம் காலம் ஒன்றும் புரியவில்லை. அதற்குக் காரணம் அவன் இருந்த இடம். ஒரு ஆறுக்கு ஆறடி அறை அது! ஜன்னல் இல்லை. தரை, கூரை, சுவர்கள், கதவு என அனைத்தும் கருநீல நிறத்திலிருந்தன. வெளிச்சம் துளி கூட உள்ளே புக முடியாத வண்ணம் அமைக்கப்பட்டிருந்தது.

தப்பிப்பதற்கு ஒரு சிறு துவாரம் கூட இல்லாததால், தப்பிக்கும் எண்ணத்தை கை விட்டிருந்தான் சேகர்.

திடீரென்று வந்த வெளிச்சம் அவனது கண்களைக் கூசச் செய்தது. அவன் கைகள் தானாகக் கண்களை மறைத்தது. கையில் ஒரு டார்ச் லைட்டுடன் அந்த சிறிய இடத்தை மேலும் சிறிதாக வண்ணம் நுழைந்தான் அந்த நெடியவன்.

அவன் யாரென்று கேட்குமளவுக்குக் கூட சேகருக்குத் தெம்பில்லை. பசி, தாகம் ஒரு மனிதனை நன்றாகப் பலவீனப்படுத்தும். சேகரும் அந்த நிலையில் தான் இருந்தான். நிராசையாக அந்த நெடியவனைப் பார்த்தான்.

“என்ன சேகரு நான் யாருன்னு கேட்கமாட்டியா?” என்று எள்ளலுடன் கேட்டான் அவன்.

தொண்டை வறண்டு பேசச் சக்தியற்று இருந்தான். ஆனால் அவன் பேசாதிருப்பதற்கு அது காரணம் இல்லை. வந்திருப்பது யார் என்று அவனுக்குப் புரிந்தது. மறக்கக் கூடிய குரலா அது.. அவன் என்ன செய்யப் போகிறான் என்றும் தெரிந்துவிட்டது.

சேகரின் கண்ணில் தெரிந்த மரண பயம், அந்த நெடியவனுக்கு நகைச்சுவையாய் இருந்தது போலும்.. கடகடவென சிரித்தவன், “ பரவாயில்லை… உன் ஐயாக்கள் மாதிரி இல்லாம அறிவாவே இருக்கியே.. நான் யாருனு தெரிஞ்சிருச்சு போல…” என்றான்.

சேகருக்கு மிகுந்த கவலை வந்தது..என்ன நடக்கப் போகிறது என்று யூகித்தான்.. தன் உயிர் போய் விடும் என்பதை ஒத்துக்கொண்ட அந்த விசுவாசியால், அடுத்து அவனது முதலாளி இவனிடம் சிக்குவது சுத்தமாகப் பிடிக்கவில்லை.

முயன்று சிறு எச்சிலை நாக்கில் வரவிட்டு அதையே தண்ணீர் போல் விழுங்கியவன், “தம்பி ஐயா இப்ப திருந்திட்டாரு... அவரை விட்ருங்க…” என்று கை எடுத்துக் கும்பிட..

அவனோ... “ என்ன சேகர், இப்போ நீ என் காலுலல விழுந்துருக்கணும்...அது தானே சரி… ஆனா நீ உனக்காக என் காலுல விழுவனு பாத்தா செத்துப்போகப்போற உங்கொய்யாக்காக கெஞ்சுற…. நான் எவளோ கெஞ்சிருப்பேன்… விட்று விட்றுனு… நீ கேட்டியா ?”

சேகர் கண்ணில் தாரையாகக் கண்ணீர் வழிந்தது… “உங்களுக்கு நான் பண்ணது பெரும் பாதகம் தான். என்ன மன்னிச்சிருங்க..ஐயாவையும்”

“அப்புறம் மன்னிச்சு உன்ன, உங்க ஐயாவ, கொல்லாம விடனும் அப்படித்தானே?”

“நானும் என் வாழ்க்கைல என் தப்புக்கான தண்டனை அனுபவிச்சிட்டேன்… இருந்தாலும் என் உயிர் எப்படியும் நான் முன்னைச் செஞ்ச வினையால தான் போகும்னு தெரியும்…” என்று உணர்ச்சிப் பூர்வமாகச் சொல்ல…

“ஓகோ...பரவாலேயே.. தப்ப உணர்ந்திட்டிங்க… சரி சேகர்... அதனால.. நான் உன்ன இப்போ கொலை செய்ய போவதில்ல…” என்று உணர்ச்சி துடைத்த குரலில் சொன்னான்

சேகர் கண்ணில் அவன் பசியை மீறி ஒரு ஒளி தெரிந்தது. இன்று இவன் நம்மை மன்னித்து விட்டான் என்ற நிம்மதி தெரிந்தது…

அதைப் பார்த்த நெடியவன்.. சிறு புன்முறுவல் செய்து.. “சரி சேகர்.. நான் வரட்டா… அடுத்த ஜென்மம்னு ஒண்ணு இருந்த அப்போக் கூட உன்ன நான் பாக்க கூடாது” என்றான்.

வெளியே போகலாம் என்று எழ முயன்ற சேகரைத் திரும்பக் கீழே தள்ளிய நெடியவன், “எங்க போறீங்க சேகர்? உன் வாழ்நாளுக்கும்.... அது ரெண்டு நாளோ நாலு நாளோ.. இனி இந்த ரூம் தான்.. சோறில்லாம சாவு” என்று கூறி, வேகமாக அந்த அறையை விட்டு வெளியே வந்து, கதவைப் பூட்டி, ஒரு பெரிய கதவின் நீளம் இருந்த பலகையைக் கொண்டு அந்த கதவின் மேலேயே வைத்து ஆணிக் கொண்டு அடித்தான். அவன் மனதில் அது சேகரின் சவப்பெட்டியில் அறைந்த ஆணிகளாக நினைத்து அறைந்து கொண்டிருந்தான்.
-----------------------------------------

அடுத்த நாள் காலை நோந்து நூடில்ஸாகி வீட்டினுள் நுழைந்தான் ஷிவா. மேலே அவனது அறைக்கு ஏறாமல் உள்ளே எட்டிப்பார்க்க அதிரா தொட்டிலில் அவளது நண்பர்கள் (பொம்மைகள்) சூழ தூங்கிக் கொண்டிருந்தாள். எதோ கருகும் வாடை வரவும், கண நேரம் தாமதிக்காமல் அவன் வீட்டினுள் சென்றான். அங்கே ரகு ஒரு தோசையுடன் போராடிக் கொண்டிருந்தான்.

“அண்ணா என்னது இது.. இப்படி தோசையோடு போராடிட்டு இருக்க…” என்று ஷிவா கேட்க…

“வந்திட்டியா ஷிவா.. ஏய்.. நேத்து அந்த டெத் ஸ்பாட்க்கு போய்ட்டு வந்துட்டு குளிக்காம கிட்சேன்க்கு வர… அஞ்சலி சும்மா வெளியைப் போன கூட கை கால் கழுவாம கிச்சன் உள்ள விடமாட்டா தெரியுமா..” என்று ரகு சொல்லி, கடந்த மாதங்களில் அவனது வாடிக்கையாகிப் போன கனவுலகிற்குள் செல்லப் போனான்.

அவன் எண்ணம் உணர்ந்த ஷிவா, பேச்சை மாற்றும் விதமாக, “ அட போவியா அங்க எரிஞ்ச ஸ்மெல் விட இங்க ஜாஸ்தியா இருக்கு…. ரகு…. நீங்க யாரு… என் இந்த தோசையை கொலைப் பண்ணி எரிச்சிட்டு இருக்கீங்க.. சொல்லுங்க சொல்லுங்க..” என்று பாட்ஷா பாணியில் கேட்க,

தன்னை சிரிக்கவைக்கும் தம்பி குணம் அறிந்த ரகு.. “போடா கிறுக்கு... சீக்கிரமே ஒரு குக் போடணும்… டெய்லி வெளிய ஆர்டர் பண்றோமே, எதாவது வீட்லயே பண்ணலாம்னு பாத்தா.. தேறமாட்டேங்குது… அதோட நேத்து சக்தி இனிமே பாப்பாவுக்கு நான் தான் எல்லாம் பண்ணனும்னு சொன்னா டா… அதான்..” என்று இழுக்க…

“ஓகோ.. அந்த மேடம் கைவண்ணமா… இப்போவே அவளை இங்க வர சொல்லு அண்ணா” என்றான் ஷிவா…

“என்னனு வரச் சொல்ல? ஷிவா நியாயம் கேட்க கூப்பிடுறான்னு சொல்லவா?” என்று ரகு நக்கல் செய்தான். அவனுக்குத் தெரியும், சக்தியைப் பார்த்து இவன் வழியும் வழிசல்.

“ஐயோ இந்த அண்ணன் எண்டு கார்டு போட்ருவான் போலயே” என்று நினைத்தவன்… “அட அவளை வந்து தோசை சுடச் சொல்லித் தர சொல்லு…” என்றான் ஷிவா.

“அவ நேத்திக்கே யூடூபில் பாத்துக்கங்கனு சொல்லிட்டா.. இருந்தாலும் ட்ரை பண்றேன்..” என்று சொல்லி சக்தியை வரச் சொன்னான்.

மனதினுள்.. “அவளை நேத்து பார்த்து ஹாய் கூடச் சொல்ல முடியல.. காலைல தேவி தரிசனத்துக்கு என்னலாம் பண்ண வேண்டியிருக்கு..” என்று நினைத்தான்.

“என்ன சொன்னா அண்ணா.. வராளா?” என்று ஷிவா கேட்க…

“நீ இருக்கியானு கேட்டு உன்னையும் கீழ இருக்க சொன்னா டா” என ரகு சொன்னவுடன் குதூகலிதான்..

ஒரு கூடை ஐஸை தலையில் கொட்டியது போல ஜில்லென்றேன்று இருந்தது சிவாவிற்கு. முதல் முறை அவள் அவனை பொதுவாகச் சந்தித்து உடனே நகராமல்.. அவனையும் இங்கேயே இருக்கச் சொல்லியிருக்கிறாள்… “சம்திங் சம்திங்” என்று ஷிவா தன் கற்பனையைப் பறக்க விட்டான்.

வேகமாக ரெண்டு படிகளாகத் தாவி அவள் வரும் முன் குளித்து தயாராகச் சென்றான். உடனடியாக தயார் ஆகி அவன் அறை ஜன்னல் வழியாக அவள் அவரும் வழிமேல் விழி வைத்துக் காத்திருந்தான்….

அவள் தூரத்தில் நடந்து வருவது பார்த்து, கீழே சென்றான். வேகமாகக் ஓடி, அவளுக்குக் கதவு திறந்து…”வா சக்தி… “ என்று உபசரிக்க…. அவளோ அவனை உறுத்து விழித்துக்கொண்டே உள்ளே சென்றாள்.

ஒரு காதல் பார்வை வேண்டாம்… எப்போதும் இருக்கும் சிநேகப் பார்வைக்குக் கூட பஞ்சமாகிவிட்டதில் ஷிவாவின் கற்பனை குதிரை தரை இறங்கித் தூங்கச் சென்றுவிட்டது….

அவள் பின்னே முகத்தைச் சோகமாக வைத்துக்கொண்டு சென்றான்.

“மச்சான்.. உங்களை நான் என்ன சொன்னேன்…”என்று சக்தி கேட்க…

ரகு பதில் சொல்லும் முன்னர், “தோசை சுட சொன்னிக” என்று தொங்கப்போட்ட முகத்தோடு கரகாட்டக்காரன் படம் வாழைப்பழ நகைச்சுவையில் வரும் செந்தில் போலச் சொன்னான்…

சக்தி கோவம் தலைக்கேற,”காமெடி-ஆ? அடுத்த வருஷம் சிரிக்கிறேன்” என்று அவனிடம் சொல்லி விட்டு…

“மச்சான்.. மறுபடியும் சொல்றேன்..” என்று எதோ சொல்ல ஆரம்பிக்க…

“இல்ல சக்தி.. நான் ட்ரை பண்ணேன் வரலை…இதுக்கு முன்னாடி நான் தோசை செஞ்சதில்ல”, என்று ரகு பாவமாகச் சொன்னான்..

“உங்க போலீஸ் தம்பியைப் பண்ண சொல்லுங்க.. யூடூபில இல்லாத டெமோவா நான் தர போறேன்” எனக் கேட்டபடியே இருவரையும் முறைத்தாள்.

“எனக்காவது அடுப்பு பத்த வைக்கத் தெரியும்... இவனுக்கு அது கூட தெரியாது” என்று ஷிவாவின் காலை வாரினான் ரகு…

“பத்த வச்சிட்டியே பரட்டை” என்று சக்திக்குக் கேட்காதவாறு அடிக்குரலில் ஷிவா ரகுவை கடிந்தான்.

அவள் அடுத்துப் பேசும் முன் ஷிவா, “ சக்தி பேசாம மாடி ரூம்லந்து நான் கீழ ரகு கூட ஷிஃப்ட் ஆகிறேன், நீ மேல என் ரூம்ல ஷிஃப்ட் ஆகிக்கோ…உன் வீட்டை காலி பண்ணிடலாம்.. நீயே எங்களுக்கு புவ்வா கொடுத்திரு… புண்ணியமா போகும்” என்று சொல்ல…

“கடைசிவரைக்கும் நீங்க யாரையும் டிபெண்ட பண்ணாமல் இருக்க மாட்டீங்க?” என்று சக்தி கேட்க

“சாரி சக்தி.. அவனை விடு… நெஜமாவே அஞ்சலி என்ன எதுவும் செய்யவிட்டதில்ல.. ராஜா மாதிரி வச்சிருந்தா..” என்று ரகு மறுபடியும் முதலிருந்து ஆரம்பிக்க…
ஷிவா, “ஆமா இப்போ கூஜா ஆகிட்டாரு… ஐ மீன் கூஜா குள்ள இருக்குற அலாவுதீன் பூதம் மாதிரி ஹோட்டல் சாப்பாடு சாப்பிட்டு குண்டாகிட்டாரு” எனக் கவுண்டர் கொடுத்துக்கொண்டே , மேலும் அவனைப் பழையதை யோசிக்க விடாதே எனக் கண்களால் சக்தியிடம் இறைஞ்சினான்….

அவளும் இதற்கு மேல் அஞ்சலி பற்றி மனதை உழற்றிக் கொள்ளக்கூடாது என முடிவெடுத்திருந்ததால், அவனுடன் ஒத்துப் போனாள்..

“சரி.. ரெண்டு பேரும் இங்கேயே இருங்க…நான் செய்யுறத ஒழுங்கா கண்ணக் கொண்டு பாருங்க..” என்று தன் புடவை தலைப்பை இடுப்பில் சொருகி, தோசை சுட ஆரம்பித்தாள்…

“எப்படி சக்திமா நீ அழகா வட்ட வட்டமா தோசை சுடுற? எனக்கு மட்டும் பயோலாஜி அமீபா மாதிரி வந்திச்சுச்சு… அதுவும் திருப்ப வரல…” என்று பாவமாக ரகு கேட்டான்.

“தோசைக் கல்லு ரொம்ப சுடவும் கூடாது, கல்ல அடுப்புல வைத்ததுமே தோசை மாவை விடக் கூடாது..மிதமான சூடுல இருக்கணும்... அப்போ தான் நாம இழுத்த இழுப்புக்கு வந்து, ரவுண்டா வரும்” என்று தோசை பாடம் எடுத்தவள், “ இப்படி வட்டமா தோசைப் போடறத விசித்திரமா பாக்குறீங்க.. உங்கள சொல்லி குத்தமில்ல… உங்க அம்மா, அக்கா, தங்கை, மனைவின்னு எல்லாரும் உங்களை தாங்குறதால தான் இப்படி.. சும்மாவா சொன்னாங்க.. புருஷன் போய் பொண்டாட்டி இருந்துருவா… பொண்டாட்டி போய் புருஷனால இருக்க முடியாதுன்னு… எல்லாம் வாய்க்கு வக்கணையா சாப்பாடு போட்டு.. எல்லாம் எடுத்து செய்ய ஆள் இல்லாம தான் அல்லாடுறாங்க…சாப்பாடு வாழ்க்கைல அடிப்படை தேவை.. சோ எல்லாருக்கும் சமைக்க தெரிஞ்சிருக்கணும்... நீங்க தான் கத்துக்கணும்” என்று வாழ்க்கை பாடம் எடுத்தாள்.

அவள் கொடுத்த தோசையை ஏதோ பொக்கிஷம் போல ஏந்தி வந்த ஷிவா, முதல் வாய் பிட்டு வைப்பதற்குள், அவன் கைப்பேசி அலறியது…

“துப்பாக்கி மற்றும் தோட்டா வை”

இந்த முறை உடனேயே போனை எடுத்து காதில் வைத்தவன்… “சொல்லுங்க முத்தண்ணா” என்றான்.

“தம்பி நீ உடனே கிளம்பி கமிஷனர் ஆபீஸ் வா..” என்று மறுமுனையில் முத்து சொல்ல …

“என்ன ஆச்சி அண்ணா? ஜஸ்ட் சாப்பிட உக்காந்தேன்...இப்போ தானே டியூட்டி முடிச்சு வந்தேன்…” எனக் கேட்க?

“என்ன பா விஷயமே தெரியாதா? போ போ டிவில நியூஸ் பாரு, பாத்துட்டு,சாப்பிட்டு, வேகமா வா..” என்று சொன்னார்..

போனை வைத்தவன், தொலைக்காட்சியை உயிர்ப்பிக்க.. அது முக்கியச் செய்திக்கான இசையை ஒலித்துக்கொண்டிருந்தது…

“சென்னை புறநகர்ப் பகுதியில் ஒரு பிணம் அழுகும் நிலையில் கிடைத்திருக்கிறது.. பக்கத்துத் தெருவில் நடந்து போவோருக்குத் துர்நாற்றம் வீசியதால், காவல் துறையிடம் வந்த புகாரின் பெயரில் சோதனையிட்ட போது, ஒரு சிறிய அறையில் ஒருவர் அடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அமைச்சர் தங்கதுரை கொலை வழக்கு போலவே, இந்த இடத்திலும் ஒரு கவிதை கிடைத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கு எழுதியிருந்த கவிதையைத் திரையில் காணலாம்..”

அவனே வேண்டுமென

அவள் நீர்கூட அருந்தாதிருக்கத்
தான் வருந்தினாள் பெற்றவள்…
உற்றவள் துணையோடு பட்டினியிட்ட

பட்டினத்தானுக்குப் பசியே மிச்சம்


திரையில் ஒளிர்ந்த கவிதையைப் பார்த்த ஷிவா திடுக்கிட்டான்… நிலைமையின் தீவிரம் உணர்ந்து சாப்பிடாமல் எழுந்து சென்றான். அவன் சென்ற திசை நோக்கிப் பார்த்துக்கொண்டிருந்தாள் சக்தி!
 
Last edited:

Harini

Member
Vannangal Writer
Messages
43
Reaction score
45
Points
18

அத்தியாயம் மூன்று


மஞ்சள்


தமிழ் மாறன்… மாறன் தான் அவர் பெயர். அவர் ஒரு தமிழ் வாத்தியார்… அதனால் தமிழ் மாறன் என்று அனைவரும் அவரை கூப்பிட அதுவே அவர் பெயரானது.

இவனுக்கும் மட்டும் எங்கிருந்துதான் இப்படி சிறிய அறைகள் கிடைக்கும் என்று தெரியவில்லை… தமிழ் மாறனை ஒரு சிறிய அறையில் அடைத்திருந்தான். அந்த அறையில் எதுவுமே இல்லை… ஒரே ஒரு காற்றுப் பதனாக்கி (ஏர் கண்டிஷனர்) மட்டும் அதனுடைய கீழ் வெப்பமான 16 டிகிரி செல்சியஸில் இயங்கிக்கொண்டிருந்தது. அதை நிறுத்த வழி ஏதும் இல்லாமல் இருந்தது.

இந்த குளிரில் வேர்க்குமா? மாறனுக்கு வேர்த்தது… பயத்தால். யாரோ ஒருவன் தன்னை ஒரு கோணிப் பையில் அடக்கி இந்த அறையில் போட்டுவிட்டிருக்கிறான்.

தன்னை கடத்துவதால் என்ன லாபம்..? தான் ஒரு சாதாரண தமிழ் வாத்தியார்.. என்று எண்ணமிட்டுக் கொண்டிருக்கும் போதே… கத்தி வைத்து அந்த கோணிப்பையை அறுத்து அவரை விடுவித்தான், நெடியவன்.

பைக்குள் இருந்ததால் கண் இருட்டிக்கொண்டு வர, தன்னிலை அவர் அடையும் முன்…

“என்ன வாத்தி..தப்பு தப்பு… தமிழ் வாத்தி.. சௌக்கியமா?” என்று அவன் நக்கலாகக் கேட்க..

கை கால் பிணைக்கப்பட்டிருந்த நிலையிலும், “என்ன கடத்தி உனக்கு என்னப்பா லாபம்..என்கிட்ட பணம் எதுவும் இல்லையே..” என்று மிகவும் சாந்தமாகவே மாறன் பதில் சொன்னார்…

“பணம் மட்டுமா இல்லை ? குணம் இல்லை, நல்ல மனம் இல்லை…, எதுகை மோனை சரியா இருக்கா வாத்தி? என்று கேட்க..

“ சரி தான்.. ஆனா…” என்று மாறன் இழுக்க..

“ஆனா ஆவன்னா அப்னா டைமுன்னா.. இது பழிவாங்கல் நேரம் வாத்தி” என்றான்.

“நீ நினைக்கிற மாதிரி ஆள் நான் இல்லை…” என்று மாறன் சொல்ல…

“நான் என்ன நெனச்சேன்னு உனக்கு எப்படித் தெரியும் மாறா… நீ மறந்துட்டா..... நீ பண்ணது எல்லாம் இல்லைன்னு மாறிடுமா மாறா.. நீ என்ன பண்ற நாம யாருக்கு என்ன பண்ணோம்னு பொறுமையா இந்த ரூம்ல யோசிக்கிற…

சாகிறதுக்கு முன்னாடி நான் யாருன்னு ஞாபகம் வந்தா நலம். இல்லாட்டியும் உன் சாவு எனக்கு நலம் தான். வரட்டா…” என்று சொல்லி அந்த அறையைப் பூட்டிவிட்டுச் சென்றான்.

நேரம் ஆக ஆகக் குளிர் அதிகமாகி மாறனின் சாதா உடல் வெப்பநிலை குறைந்து கொண்டே வந்தது.. அபாயமாக அது குறைந்ததும் ஹைபோதெர்மியாவால் (அதி வேகமாக உடல் வெப்பம் குறைதல்) அவர் உள் உறுப்புகள் செயல் இழக்க ஆரம்பித்து, அங்கேயே தன் உயிர் நீத்தார் மாறன்.

-----------------------------------------------

கமிஷ்னர் அலுவலகம் சென்ற ஷிவா, நேராக அவர்கள் மீட்டிங் அறையிற்குச் சென்றான். அங்கே இவனுக்கு முன்னால் ஒரு மூன்று பேர் கமிஷ்னர் தியாகுவிடம் பேசிக்கொண்டிருந்தனர்.. உள்ளே சென்ற ஷிவா கமிஷ்னர்க்கு வேகமாக ஒரு சல்யூட் செய்து, மற்றவர்கள் யார் என்று வேகமாக அளவிட்டான்.

“வாங்க ஷிவா.. யு ஆர் ஹியர் அட் தி ரைட் டைம்” என்று சொன்னவர், நேராக விஷயத்திற்கு வந்தார்..

“உங்க எல்லாருக்கும் ஒருத்தரயொருத்தர் முன்னாடியே தெரியும்னு நம்புறேன். கம்மிங் டு தி பாயிண்ட்…நீங்க நாலு பேர் தான் மினிஸ்டர் தங்கதுரை கேச ஹண்டில் பண்ண போறீங்க… அசிஸ்டன்ட் கமிஷ்னர் சர்வேஸ்வரன், கேச லீட் பண்ணுவாரு. மினிஸ்டர் டெத் கேஸ்னு ஸ்பெஷல் டீம் போடலாம்னு நெனச்சேன்… இப்போ கேஸ் வேற டிரெக்ஷன்ல போகுது… லூக்ஸ் லைக் எ சீரியல் கில்லர்... சர்வேஷ் உங்க டீம் தான் தி பெஸ்ட் இந்த மாதிரி கேஸ்ல.. சோ.. சீக்கிரமே கொலையாளியை கண்டுபிடிப்பிங்கன்னு நெனைக்கிறேன். ஆல் தி பெஸ்ட். யு மே கோ.”

சர்வேஷ் கோபக்காரன். கோபம் இருக்கும் இடத்தில் தான் குணம் இருக்கும் என்பதை நொடிக்கொரு முறை நிரூபிப்பவன். பார்த்தாலே இவன் தான் டா போலீஸ் என்பது போல் ஜிம்மால் முறுக்கேறி, முகத்தில் கடினத்தன்மையுடன் இருப்பவன். இவனுக்குக் கீழ் வேலை பார்ப்பது தானாகப் பாறை மேல் முட்டிக்கொள்வது போல என்று போலீஸ் வட்டாரத்தில் அனைவர்க்கும் தெரியும்.. அதற்கு விதிவிலக்கு அவன் கூடவே சதா இருக்கும் சதா என்று அழைக்கப்படும் சதானந்தன் மற்றும் மைக்கேல்.
சதானந்தன் பெயர்க்கு ஏற்றார் போல் சிரித்த முகமாக இருப்பவன். சர்வேஷின் உக்கிரத்திற்குப் பயந்தவர்கள் அனைவரும் அவனிடம் கூறவேண்டியதை சதாவிடம் கூறி தான் தப்பித்துக்கொள்வார்கள். மைக்கேல், டோன்ட் கேர் ஆடிட்டுட் என்று சொல்லப்படும் எது வந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் ரகம். சர்வேஷ் நினைப்பதை முடிக்கும் நல்ல நண்பன் மைக்கேல்.

இப்போது இந்த மூவர் கூட்டணியில் ஷிவாவை கமிஷ்னர் சேர்த்து விட்டிருக்கிறார். ஷிவா இது என்னடா புது சிக்கல் என நினைத்துக்கொண்டு அவர்கள் பின்னால் சென்றான். சர்வேஷ் வேகமா அங்கிருந்து செல்ல அவன் பின்னே சதாவும் மைக்கேலும் சென்றனர். இவனிடம் கூறாமல் அவர்கள் எழுந்து சென்றதால், அவர்களை ஓட்டமும் நடையுமாய் ஷிவா பின் தொடர்ந்தான்.

சதா மைக்கேலிடம், “ என்ன மைக் இந்த கமிஷ்னர் ஒரு டம்மி பீஸ நம்ம டெர்ரர் பீஸோட கோர்த்து விட்டுருக்காரு…?”

“அவன் டம்மியா இல்லையானு உனக்கு பாத்ததும் தெரிஞ்சிரிச்சாக்கும்… ஒரே நாள்…” என்று மைக்கேல் சொல்ல ஆரம்பிக்க… அந்த ஒரே நாள் என்பதை மட்டும் காதில் வாங்கிய ஷிவா…

“என்ன சார் ஓஹோன்னு வாழ்க்கையா?” என்று கேட்டான்..

இவர்கள் இருவரும் புரியாமல் பார்க்க… “இல்ல… ஒரே நாள்னு சொன்னிங்களே.. அதன் ஒரே நாள் ஓஹோன்னு வாழ்க்கையான்னு கேட்டேன்…”என்று ஷிவா விளக்கினான்.

சதா மைக்கேலை நான் சொல்லல என்பது போல் பார்த்தான். அவர்கள் சர்வேஷின் அறைக்குள் வந்ததும், சர்வேஷ் ஷிவாவை பார்த்து, “இந்த கேஸ் முடியரவர நீங்க உங்க ஸ்டேஷன் போக வேணாம். இங்கேயே ரிப்போர்ட் பண்ணுங்க. சரி நீங்க மினிஸ்டர் டெத் இன்வெஸ்டிகேஷன் ப்ராக்ரஸ் டீடெயில்ஸ் சொல்லுங்க..” என்று சொல்ல..

அவன் வேகத்தைப் பார்த்த பிரமித்த ஷிவா.. “ஸ்பாட்ல பெரிசா எந்த தடயமும் இல்லை சார். எல்லாமே எரிஞ்சி இருந்தது.. ஃபிங்கர் ப்ரின்ட் எதுவும் இல்ல. ஷூ மார்க்ஸ் இருந்தது. அது வச்சி எதாவது பண்ண முடியுமானு லேப்க்கு அனுப்பிருக்கோம்.”

சர்வேஷ், “ஓகே. காட் இட். எனக்கு ரெண்டு ஸ்பாட்ல எடுத்த போட்டோஸ் எல்லாம் வேணும். மைக் யு நொவ் தி ட்ரில்..” என்று சொல்ல

ஷிவா சதாவின் காதை கடித்தான், “என்ன ட்ரில் சார்? நாங்கலாம் ஆறு மாசம் ஒரு தடவத் தான் ட்ரில்ல கலந்துக்குவோம்” என்று சொல்ல, இவன் நிஜமாகவே லூசா இல்ல லூசு மாதிரி நடிக்கிறானா என்று சதா குழம்பினான்.

மைக் எப்போதும் போல், “எல்லாம் ரெடி சர்வேஷ் .. நாம போர்டு போற்றலாம்” என்று சொல்ல.. இவர்களின் வேகத்தைப் பார்த்து அந்த நாளில் இரண்டாவது முறையாக ஷிவா வாயைப் பிளந்தான்.

புதிதாக வந்தவனிடம் தன் பெருமையைக் காட்ட, “எப்படி” என்று காலரை மைக் ஷிவாவிடம் தூக்க, ஷிவாவோ சத்தமாக, “கூடவே இருந்தியே செவ்வாழ நீ கொஞ்சம் சொல்லக் கூடாதா” என்க சர்வேஷ் கடுப்பானான்.

“வாட்? கேஸ் போர்டு போட்டுட்டு இருக்கோம் என்ன பேசிட்டு இருக்கீங்க” என்று சர்வேஷ் கர்ச்சிக்க ஷிவாவிற்கு சர்வமும் ஒடுங்கியது.

சர்வேஷ் தான் செய்து கொண்டிருந்த வேலையைத் திரும்பச் செய்ய ஆரம்பித்தான். அங்கு மாட்டப்பட்டிருந்த போர்டில், மைக் கொடுத்த போட்டோஸ், பேப்பர் கட்டிங்ஸ் எல்லாவற்றையும் மேக்னெட் வைத்து வரிசைப் படுத்தினான். செய்து கொண்டிருக்கும் போதே, “ஷிவா நீங்க என்ன பண்றீங்க இந்த ரெண்டு கவிதை இருக்கிற போட்டோவை ஹாண்ட் ரைட்டிங் அனலிஸ்ட் கிட்டக் கொடுத்து, எதாவது க்ளூ கிடைக்குதானு பாருங்க. சதா நீ போய் இந்த செகண்ட் கேஸ்ல செத்தது யாரு, அவனுக்கும் மினிஸ்டர்க்கும் எதாவது தொடர்பு இருக்கா, அவன் என்ன பண்ணிட்டு இருந்தான்ற டீடெயில்ஸ் கலெக்ட் பண்ணு. மைக் நாம ரெண்டுபேரும் ஸ்போட்க்கு திரும்ப போகலாம், எனக்கு நம்மகிட்ட இருக்கிற போட்டோஸ் வச்சி பெரிசா எதுவும் பிடிபடல.. நாம திரும்ப இங்க ஒன் ஹவர்ல மீட் பண்ணலாம்.” என்று சொல்லி வேகமாக வெளியேறினான்.

முதலில் தங்கதுரை கொலை நடந்த இடத்திற்குச் சென்றனர். கொலை நடந்ததற்குச் சாட்சியாக அங்கே சுண்ணாம்பு கொண்டு ஆங்காங்கே வரையப்பட்டிருந்த கோடுகளும் , தங்கதுரை உடல் இருந்த இடத்தைச் சுற்றி வரைந்த தடமும் இருந்தன...

வெளியே வந்த சர்வேஷ் அந்த கவிதையைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

“செம்ம பிளானிங் போல…” என்று மைக்கேல் கூற, தன் மோன நிலை தடைப்பட்டு, “ஹான்? என்ன மைக்..?” என்று வினவினான்…

“இல்ல செம பிளானிங்.. ஒரு பிஸி ரோடு.. அங்க சி சி டிவி இருக்கு... அத்தனை மக்கள் போக வர இருக்கறதால அங்க சந்தேகம் படறமாதிரி எதுவும் கிடைக்கல… இங்க உள் ரோட்டுல ஆள் நடமாட்டமே இல்லை…” என்று மைக் சொல்ல..

“ ரைட். ஆமா...பக்கா பிளானிங்.. எரிகிற கட்டை வர பிளான் பண்ணி இருக்காங்க.... கண்டிப்பா மினிஸ்டர் சாகுறத பாத்துட்டே போயிருக்கணும்…” என்று சர்வேஷ் அவனை ஆமோதித்துப் பேசினான்..

“எப்படி அப்படி சொல்ற சர்வேஷ்…? அவன் எஸ்கேப் ஆகியிருக்க மாட்டானா?” என்று மைக் கேட்க…

“இல்ல... என் இன்ஸ்டிங்க்ட் என்ன சொல்லுதுன்னா… எதோ மோட்டிவ்.. கரெக்டா சொல்லனும்னா பழி வாங்கத் தான் பண்ணியிருக்கணும்..... பாக்கலாம்..” என்று சொல்லி அவர்கள் அடுத்த இடத்திற்குச் சென்றனர்.

“வெரி சேம் பட்டர்ன்… ஒரு தடயமும் இல்லை..” என்று சர்வேஷ் சொல்ல, அந்த இடத்தை சுத்தி பார்த்தனர். அந்த அறையைச் சுற்றிச் சுற்றி பார்த்துக்கொண்டிருந்தனர்.

“ஹ்ம்ம்.. எப்படி இப்படி தோணும்… எரிக்கலாம், பட்டினி போட்டுக் கொல்லலாம் வித விதமா அந்நியன் படம் பார்த்து கும்பிபாகம் பண்ணறாங்க? என்று அங்கலாய்த்தான் மைக்…

“ஹீரோயிசம் மாதிரி இல்ல.. இது அறிவை வெச்சு பழி வாங்கிருக்காங்க, என்ன ரொம்ப டிஸ்டர்ப் பண்றது இந்த கவிதைகள் தான்… போகலாம்...” என்று சர்வேஷ் சொல்ல… அவர்கள் இருவரும் அவர்கள் ஜீப்பில் மறுபடியும் தங்கள் ஆபீஸ் நோக்கிச் சென்றனர்…
அங்கே சதாவும், ஷிவாவும் அவர்களுக்காகக் காத்திருந்தனர்.

புயல் போல் வந்த சர்வேஷ், “சதா எனி லக்? அவங்க எதாவது தெரிஞ்சவங்களா?” என்று கேட்க…

சதாவோ, “அவன் பேரு சேகர்.. அவன் இப்போ ஒரு அப்பார்ட்மெண்ட்ல நைட் ஷிஃப்ட் செக்யூரிட்டி.. அவன் ஏஜென்சில கொடுத்த மத்த டீடெயில்ஸ் எல்லாமே பொய்...நான் விசாரிக்க சொல்லிருக்கேன்” என்று சொன்னான்…

சர்வேஷ் ஷிவாவை பார்க்க, ஷிவா ஒன்றும் சொல்லாமல் அவனைப் பிரமிப்பாகப் பார்த்துக் கொண்டிருந்தான். சதா அவன் கையை தன் புறங்கையால் தட்டி நிஜ உலகிற்குக் கொண்டுவந்தான்.

“சார், ரெண்டு ஹாண்ட் ரைட்டிங் மேட்ச் ஆகுது.. ஒரே ஆள் தான்னு ஊர்ஜிதமாகிடுச்சு...அது தவிர அது ஒரு ஆண் ஸ்ட்ரோக்ஸ்னு சொல்லிட்டாங்க… சோ, கில்லர் இஸ் அ கய்” என்று சொன்னான்.

“பார்டா, எக்ஸ்ட்ராவா கேட்காத விஷயமெலாம் கண்டுபிடிச்சிருக்கீங்க…” என்று சதா சிவாவின் காதில் கடிக்க… அதே அடிக்குரலில் ஷிவாவோ, “அப்புறம் கபாலி வணக்கம் வைக்கலன்னு சொல்ல கூடாதில்ல… மிலிட்ரி ரொம்ப கோவக்காரருன்னு காலைலயே தெரிஞ்சிகிட்டேன்…” என்றான். சதாவிற்கு ஷிவாவை பிடிக்க ஆரம்பித்திருந்தது.

அப்போது அவர்கள் இருந்த அறையின் தொலைப்பேசி அலற, அதை எடுத்த மைக், பேய் அறைந்தது போல் ஸ்தம்பித்து நின்றான்…

சர்வேஷ் என்ன என்று கேட்க வாய் திறக்கும் முன்… “அடுத்த கொலை…. “ என்றான் மைக்.

அவர்கள் செல்ல ஆயத்தம் ஆகா, ஷிவா தன் பைக் நோக்கிச் சென்றான்.

சதா அவனைத் தடுத்து, “எல்லாரும் ஜீப்ல போயிரலாம்” என்று சொல்லி அவனைக் கூட்டிச் சென்றான்.

அவர்கள் அந்த கொலை நடந்த இடத்திற்குச் சென்றவுடன் அவர்களை வரவேற்றது இந்த கவிதையும் மஞ்சள் நிறத்தில் உறைந்த நிலையிலிருந்த ஒரு பிணமும் தான்…

“அசுரனோ பித்தனோ சித்தனோ - இவனே

ஆம்பனோ இணைவனோ துணைவனோ என
வெதணம் பாராமல் தவமிருக்க...
அதற்கு அர்த்தம் கற்பிப்பவன் அனர்த்தமாக

உயிர் உறைதல் காண்.”
 
Last edited:
Top Bottom