Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


GY NOVEL நாயகன் நானா? - Tamil Novel

Status
Not open for further replies.

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
607
Reaction score
782
Points
93
வணக்கம் 🙏🙏🙏,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டியில் கலந்துகொள்ளும் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐💐.

போட்டியின் விதிமுறைகள், காலக்கெடு மற்றும் பரிசுகள் பற்றிய விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் விபரமாக குறிப்பிடப்பட்டுள்ளது. மீண்டும் ஒருமுறை அதை படித்துப் பார்த்துவிட்டு உங்களுக்கு முழு சம்மதம் என்றால், உங்களுடைய கதையை இந்த திரியில் தொடர்ந்து பதிவிடவும்.

உங்களுடைய கதை வாசகர்களை மகிழ்விக்கும் வகையில் அமையவும் போட்டியில் நீங்கள் வெற்றிபெறவும் வாழ்த்துகிறேன்.

மனமார்ந்த வாழ்த்துக்கள் 😍😍😍

நன்றி...
- நித்யா கார்த்திகன்

 
Last edited:

Writer X

Well-known member
Vannangal Writer
Messages
463
Reaction score
616
Points
93
நாயகன் நானா !!!


அத்தியாயம் 1 :


எதை எதையோ தேடி ஓடிக் கொண்டிருந்த சென்னைவாசிகள் தன்னையும் ஆட்கொள்ள துவங்கிவிடுவனரோ என்ற பயத்தில் கருமேக கூட்டத்திற்க்குள் ஒளிந்துகொண்ட கதிரவன், கண்ணாம்பூச்சி விளையாடும் மழலையாய் சிறிதாய் எட்டிபார்த்தபடியும் இருக்க ....


தங்களை கலைக்க முயலும் காற்றின் வேகத்தை சிறுபிள்ளையின் செயலாய் எடுத்து அதன் செயல்களை ரசித்து கலைவதுபோல் போக்குகாட்டியபடி நின்றது கருமேக கூட்டம்.


இவர்கள் அனைவரின் விளையாட்டாலும் வெயிலும் அல்லாத மழையும் அல்லாத ஓர்வித ரசனையான பொழுதை ரசித்தபடியே அந்த ஆளில்லா சாலையில் நடந்துகொண்டிருந்தாள் மங்கை ஒருவள்.


அவளின் நிறம்கூட கார்மேகம் தான் , கார்மேகம் தனக்குள் மழைத்துளிகளை ஒளித்துவைத்திருப்பது அவளும் தன்னவன் மேலான தன் காதலை தனக்குள் பொத்திவைத்திருந்தாள் .


இன்று அவனை சந்திக்கவே தன் மென்மையான பாதங்களை எடுத்து வைத்து , பூமிக்கு வலிக்குமோ என்பது போல் மெல்ல நடந்தாள் அந்த மண்பானை வண்ண சேலைக்காரி.


அதேநேரம் அங்கிருந்து முப்பது நிமிட பயணத்தில் ஒருவன் தன் பைக்கில் வேகமாய் பறந்து கொண்டிருந்தான்.


"ஒரு மாலை இளவெயில் நேரம்
அழகான இலையுதிர் காலம்
சற்று தொலைவிலே அவள் முகம் பார்த்தேன்
அங்கே தொலைந்தவன் நானே
சற்று தொலைவிலே அவள் முகம் பார்த்தேன்
அங்கே தொலைந்தவன் நானே


அவள் அள்ளி விட்டப் பொய்கள்
நடு நடுவே கொஞ்சம் மெய்கள்
இதழோரம் சிரிப்போடு கேட்டுக் கொண்டே நின்றேன்
அவள் நின்று பேசும் ஒரு தருணம்
என் வாழ்வில் சக்கரை நிமிடம்
ஈர்க்கும் விசையை அவளிடம் கண்டேனே"


காதில் மாட்டிருந்த இயர்போனில் பாடல் ஒலிக்க , மந்தகாச புன்னகையுடன் வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தவனுக்கு நிஜமாய் பறப்பதுபோலவே எண்ணம் ...அவன் அவ்வளவு சந்தோஷத்தில் இருந்தான்.


பின்னே இருக்காதா அவன் பார்க்க போவது அவனின் காதலியை அல்லவா !!! சிறுவயது முதலே இருவருக்குமான முடிச்சி பெரியவர்களால் போடா் பட்டிருந்தாலும் ,மனம் முழுக்க இருவருக்குமே மற்றவர் மேல் காதல் இருந்தாலும் அதை இன்று வரை வாய் திறந்து சொன்னது இல்லை.இன்று தான் அவள் அவனிடம் முக்கியமான ஒன்றை சொல்ல வேண்டுமென அழைத்திருக்கிறாள் . அதற்காக தான் அவன் இப்பொழுது பறந்து கொண்டிருப்பது.


அவன் அங்கு வர எடுத்துக்கொண்ட முப்பது நிமிடங்களில் அவள் இருந்த பகுதியின் நுழைவில் மூன்று இருசக்கர வாகனங்கள் கடந்திருந்தன. மூன்று வாகனத்திலும் இளம்வயது ஆண் ஒருவரே வண்டியை தனியாய் ஓட்டிச் சென்றனர்.


முப்பது நிமிடங்களுக்கு பிறகு நான்காவதாய் இவன் அந்த பகுதிக்குள் நுழைந்தான்.மூன்று நான்கு சந்துகளை கடந்து கண்கள் மின்ன ஆர்வத்துடன் வந்தவனுக்கு வழியில் யாரோ ஒரு பெண் அடிபட்டு விழுந்திருப்பது தெரிந்தது. பதட்டத்துடன் வண்டியை நிறுத்தி அருகில் ஓடியவன் அதிர்ச்சியில் தொப்பென கீழே அமர்ந்தான்.


அவன் யாருக்காக வளர்ந்தது முதல் காத்திருக்கிறானோ ...யாரை பார்த்தால் கடவுளை கண்டு வரம்பெற்றதாய் உணர்வானோ ...யாரின் வார்த்தைக்காய் கண்களில் கனவோடு பறந்து வந்தானோ அவள் தான் உடுத்திருந்த சேலை முழுதும் அவளின் உடலிலிருந்து வெளியேறிய இரத்தம் தோய்ந்து திறந்த வாயுடன் அலங்கோலமாய் கிடந்தாள்.


அவளின் உடலில் எங்கு காயம் ஏற்பட்டிருக்கிறது என கண்டுபிடிக்கமுடியாதபடி அவளின் மண்பானை வண்ண சேலை முழுவதும் இரத்தம் தன் நிறத்தை பரப்பியிருந்தது.


அவளை அந்நிலையில் பார்த்தவனுக்கு கதறகூட குரல் வராமல் , கண்கள் விரிய , நடுங்கும் தன் வலது கரத்தால் அவளின் தலையை கோதினான்.


"கட் கட் கட் " .....என்ற குரலை அடுத்து அவனை சுற்றிலும் "பட்பட்பட் " என கரவொலி எழுந்தது.


"வாவ் !!!செம்ம சார் ....வார்த்தைகளே தேவை இல்லாம முகத்துலயே அவ்வளவு பீலிங்ஸ் காட்டிட்டிங்க சார் " என இயக்குனர் அவனின் அருகில் வந்து பாராட்டினார்.


அவரின் பாராட்டை சிறிய புன்னகையுடன் ஏற்றவன்," இன்னிக்கு அவ்வளவு தானா? இல்லை வேற எதாவது சீன் எடுக்கிறதுனா கூட சரிதான் " எந்தவித பந்தாவும் இல்லாமல் கேட்டவனை எப்பவும் போல் இப்பவும் ," என்ன மேக்டா இவன் " என்பது போல் பார்த்தான் இமையவன் , அவன் தான் அந்த படத்தின் இயக்குனர்.


இமையவன் "இல்லை " என தலையசைத்த அடுத்த நொடி தன் கேரவனை நோக்கி நடந்தவன் , பத்துநிமிடங்களில் அங்கிருந்து கிளம்பிவிட்டான்.


அவன் "மாசிலான்" ,இந்த படத்தின் கதாநாயகன் மற்றும் இன்றைய தமிழ் சினிமா உலகின் முன்னனி நட்சத்திரம். ஆனால் அதற்கான எந்த பந்தாவும் இல்லாமல் அனைவரிடமும் இயல்பாய் பழகுவதால் தொழில்முறையில் அவனுக்கு நல்ல பெயர் உண்டு.


அடுத்த இரண்டுமணி நேரத்தில் , சென்னை அடையாரின் "தக்ஷன் ஓட்டல்"-னுள் தலையில் கேப்புடனும் , முகத்தில் மாஸ்க்குடனும் அமர்ந்திருந்தான் மாசிலான் .


அவன் வந்து பத்து நிமிடங்கள் கடந்திருக்க , தான் சந்திக்க வந்தவர்களை இன்னும் காணாததால் , போனை நோண்டிக் கொண்டிருந்தாலும் யாராவது தன்னை உற்று கவனிக்கிறார்களா என சுற்றிலும் பார்வையை அலையவிட்டபடி அமர்ந்திருந்தான்.


அமர்ந்திரிந்தவனின் தோளில் பட்டென பலமாய் அடித்தது ஓர் கரம்.
" ச்சு...ஆஆ" என சத்தமிட்டபடி எழுந்தவன் , அடித்தவனை பார்த்தபின் ஓர் முறைப்புடன் அமைதியாய் மீண்டும் அமர்ந்தான்.


"என்ன சார் ஹீரோ ஆன உடனே பெரிய ஆளாகிட்டிங்களோ ??ஒரு சின்ன தட்டுக்கே இப்படி முறைக்கிறீங்க ??" என பதிலுக்கு முறைத்தபடியே எதிரில் அமர்ந்தான் நற்செல்வன்.


"டேய் !! அவனை ஏன்டா இப்போ வம்பிழுக்குற ? அவன் என்னிக்குடா ஹீரோனு சீனை போட்டிரிக்கான். நம்பனு இல்லை யார்கிட்டையும் அப்படி நடந்துக்கமாட்டானே " என மாசிலானுக்கு ஆதரவாய் பேசியபடி அவர்களுடன் அமர்ந்தான் இமையவன்.


"ஆமா ஆமா....சார் ரொம்ப நல்லவரு , வல்லவரு தான். அதான் அவரை பார்க்க கூட நம்ப முன்னாடியே கேட்டு அனுமதி வாங்கிட்டு வரணும் " என மீண்டும் நொடித்துக் கொண்டான் நற்செல்வன்.


"இமை !!! ஒழுங்கா அவனை வாயை மூட சொல்லுடா , வந்ததும் வராததுமாய் திருடனை வெளுக்குற கையால என் முதுகை பஞ்சராக்கிட்டு பேசுறான் பாரு பேச்சு ...என்னவோ நான் பார்க்கவரமாட்டேன்னு சொன்னாப்ல பேசுறான் . சாரும் தான் ஏதோ விஜபி கேஸ்னு சீரியஸா சுத்திட்டுருந்தான் " என்று இத்தனை நேரம் அமைதியாய் இருந்த மாசிலான் பதிலுக்கு பொறிந்து விட்டான்.


"ஹீஹீ ...!! சரிசரி விடுடா ...எங்க நம்ப மூணு பேர்க்கும் ஜில்லுனு ஜூஸு சொல்லு பார்ப்போம்" நற்செல்வம் சமாதானத்திற்க்கு வர இப்பொழுது முறுக்குவது மாசிலான் ஆனான்.


"அட லவ்வர்ஸே தேவலாம் போல...இவனுங்க தொல்லை பெருந்தொல்லையா இருக்கு ..ஒருவேளை இவனுங்க இரண்டு பேரும் அவனுங்களோ " என சத்தமாய் முணங்கிய இமையவனை மாசிலானும் ,நற்செல்வனும் இணைந்து மொத்தினர் .


நற்செல்வனும் , இமையவனும் பள்ளிகால நண்பர்களாய் இருக்க , விதி அவர்களில் ஒருவனாய் மாசிலானையும் இணைத்தது ஒரு துர்சம்பவத்தின் மூலம்.


இதில் நற்செல்வன் , "யுபிஎஸ்சி" -யில் தேர்வாகி திருச்சியில் வேலை பார்த்தவன் , ஆறு மாதங்களுக்கு முன்தான் மந்திரி ஒருவரின் கேஸ்ஸிற்க்காய் சென்னைக்கு மாற்றலாகி வந்திருந்தான்.


இமையவன் , பிறந்தவுடனே தாயையும் பத்து வயதில் தந்தையையும் இழந்து மாமாவின் கவனிப்பில் வளர்ந்தவன் . பள்ளியில் கிடைத்த நற்செல்வனின் நட்பை கெட்டியாய் பிடித்துக்கொண்டு வெற்றிகரமாய் படிப்பை முடித்தவன் , அவனின் மாமாவை தொடர்ந்து சினிமா துறையில் கால்பதித்தான். தற்பொழுது முன்னனி இயக்குனர்களில் ஒருவனாய் இருக்கிறான்.


மாசிலான் , பெரிய குடும்பத்து பையன் அவனின் தந்தையின் பெயர் சொன்னால் தமிழ்நாட்டில் அவரை தெரியாதவர் யாரும் இருக்க மாட்டார்கள் . தொழில் துறையில் பட்டம்பெற்ற மாசிலான் ஒருவருடம் தந்தையின் தொழிலை வெற்றிகரமாய் நடத்தினான். ஆனால் யாரும் எதிர்பாராமல் அவன் வாழ்வு சினிமா பக்கம் சென்றதில் ,இப்பொழுது தமிழ்நாட்டின் நட்சத்திரமாய் ஜொலித்துக் கொண்டிருக்கிறான் .


நீண்ட நாட்களுக்கு பின் ஒன்றாய் சந்தித்த நண்பர்கள் மூவரும் மனம்விட்டு பேசி சிரிக்க , இரண்டு மணிநேரம் சிட்டாய் பறந்தது.


பேசியது போதாது என்றாலும் கிளம்பவேண்டுமே என்பது போல் கடமைக்காய் எழுந்தவர்களில் நற்செல்வனுக்கு அழைப்பு வர , அவன் முன் செல்ல இமையவனும் , மாசிலானும் சற்று பின்னால் வந்தனர்.


"வேலைலாம் ஓவர்லடா ...அப்போ அப்படியே வாயேன் வீட்டுக்கு ..அம்மா கூட உன்னை பார்க்கனும்னு சொல்லிட்டே இருக்காங்க " என்றான் மாசிலான் இமையவனிடம்.


"நீவேற டா ...இப்போவரை நம்ப இரண்டு பேரும் தொழில்முறை இல்லாம நண்பர்கள்னு யாருக்கும் தெரியாது.அதும் இந்த பத்திரிக்கைக் காரனுங்களுக்கு தெரிஞ்சுது நம்ப இரண்டு பேரை வச்சி அவனுங்க சம்பாதிக்க என்னஎன்னவோ எழுதுவானுங்க. படம் முடியட்டும் அடுத்து நம்ப வீட்ல தான் ஒரு மாசம் செட்டில்....நீ அம்மாட்ட சொல்லிடு நானும் பேசுறேன் " என்றான் இமையவன்.


என்னதான் இமையவனின் மாமா தயாரிப்பாளர் என்றாலும் , இவன் இயக்குனராய் சினிமா துறையில் நுழைந்தவுடனே இவனை தேடி வாய்ப்புகள் வரவில்லை. பெரும் முயற்சி பின் கிடைத்த முதல் படமும் தோல்வி தான். அதன் பின் எடுத்த இரண்டு படங்கள் சுமாராய் ஓட , அப்பொழுது தான் மாசிலான் இத்துறையில் நுழைந்தான்.


அவனும் இயக்குனராய் ஆக எண்ணியே இதில் நுழைந்தாலும் ,தோல்வியில் துவண்டிருந்த நண்பனுக்கு இயக்குதலின் நுண்ணியங்களை கற்பித்தான். அவனின் முதல் படத்தின் கதை அவனே எழுதியது தான் , ஆனால் அதை அவன் இமையவனிடம் கொடுத்து அதில் சிலதை மாற்றி இயக்குனராய் இமையவனின் பெயரையே போட வைத்து தானே கதாநாயகனாய் நடித்து கொடுத்தான் .


அப்படம் தான் இமையவனின் தொழிலில் திருப்புமுனையாய் அமைந்தது. அடுத்தடுத்து மூன்று நான்கு படங்கள் ஹிட்டாக , தற்போதைய முன்னனி இயக்குனராய் வலம் வருபவனின் தொழில் முறை ஆசான் மாசிலான் தான். இயக்குனராய் சினிமாவில் நுழைய நினைத்தவனை விதி கதாநாயகனாய் மாற்ற அதை தொடர்ந்து அவனுக்கு வந்த வாய்ப்புகளும் அவனுக்கு நட்சத்திர அந்தஸ்தை பெற்று தந்தது.


இயக்குனர் -கதாநாயகனாய் மக்களுக்கு அறிமுகம் ஆனவர்கள் அதையே இன்று வரை தொடர , அவர்கள் தனிபட்ட வாழ்வும் ,நட்பும் இன்னும் எந்த பத்திரிக்கைகாரர்கள் கண்ணிலும் கருத்திலும் படவில்லை.


பேசியபடி வந்தவர்கள் நற்செல்வன் திடீரென நின்றதில் அவன் மேலே மோதினர்.


"ஏய் என்னடா ?? உன் முகம் ஏன் இப்படி இருக்கு " உணர்ச்சிகளை துடைத்து இறுக்கமாய் நின்ற நற்செல்வனை முதலில் கவனித்து கேட்டது இமையவன் தான்.


" வேளச்சேரி ஸ்டேஷன்ல இருந்து தகவல் வந்திருக்கு , நடிகை "நைநிகா"-வை யாரோ கொலை பண்ணிட்டாங்க..அது அப்படியே நம்ப வான்மதி கேஸ் மாதிரி இருக்குனு எஸ்ஐ சொல்றாரு " என செய்தியை ஒப்பித்தவனின் பார்வை அசையாமல் மாசிலானையே பார்த்தது.


வான்மதி என்னும் பெயரில் இமையவன் அதிர, மாசிலானின் முகமே நொடியில் மாறிவிட்டது. கைகளை இறுக்கி , அழுகையை அடக்கியதில் கண்ணெல்லாம் சிவந்து நற்செல்வனின் முகத்தையே பார்த்தபடி நின்றான்.


ஒருநிமிடத்திற்க்கு மேல் நண்பனின் அந்நிலையை சகிக்க முடியாத நற்செல்வன் , அவனை தன்னுடன் அணைத்துக் கொள்ள மாசிலானின் கண்ணீர் அவனின் முதுகில் படர்ந்தது.


மாசிலானின் மேல் மட்டுமே கவனத்தை வைத்திருந்த நற்செல்வன் , இமையவனின் முகமாற்றத்தை கவனிக்காமல் விட்டுவிட்டான் விதி மீண்டும் விளையாட ஆரம்பித்ததை அறியாமல் .....


- தொடரும்
 
Status
Not open for further replies.
Top Bottom