Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


GY NOVEL நிந்தன் காதலின் ஸ்பரிசம் - Tamil Novel

Status
Not open for further replies.

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
607
Reaction score
780
Points
93
வணக்கம் 🙏🙏🙏,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டியில் கலந்துகொள்ளும் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐💐.

போட்டியின் விதிமுறைகள், காலக்கெடு மற்றும் பரிசுகள் பற்றிய விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் விபரமாக குறிப்பிடப்பட்டுள்ளது. மீண்டும் ஒருமுறை அதை படித்துப் பார்த்துவிட்டு உங்களுக்கு முழு சம்மதம் என்றால், உங்களுடைய கதையை இந்த திரியில் தொடர்ந்து பதிவிடவும்.

உங்களுடைய கதை வாசகர்களை மகிழ்விக்கும் வகையில் அமையவும் போட்டியில் நீங்கள் வெற்றிபெறவும் வாழ்த்துகிறேன்.

மனமார்ந்த வாழ்த்துக்கள் 😍😍😍

நன்றி...
- நித்யா கார்த்திகன்

 
Last edited:

Bharathi Nandhu 02

New member
Messages
6
Reaction score
14
Points
3
நிந்தன் காதலின் ஸ்பரிசம்

அத்தியாயம் 1

ஆகாயத்தின் நிறத்தை நகல் எடுத்துப் பரந்து விரிந்து கண்ணுக்கு எட்டிய தூரம் தண்ணீர் மட்டுமே நிரம்பி அலையெழுப்பிக் கொண்டிருக்கும் கடல் மனிதனுக்கு எப்போதும் சுவாரஸ்யமான ஒன்று தான்..அந்தி மாலைப்பொழுது என்பதற்குச் சாட்சியாகக் காலையில் இரையைத் தேடிச் சென்ற பறவைகள் தம் இருப்பிடத்திற்குத் திரும்பியது..மேகங்கள் ஒன்று சேர்ந்து சூரியனை மறைக்க முயன்றதின் வெளிச்சத்தில் பிரகாசமாக இருந்தது..மனதைக் கவர்ந்திழுக்கும் மாலைப்பொழுதில் இருநூறு அடி தூரத்தில் நின்றிருந்த பெண்,தன்னுடைய கையில் வைத்திருந்த கொடியை அசைத்ததும் அதீத இரைச்சலுடன் வீரிட்டு இரு பைக்குகளும் வேகமாகப் பறந்தது..சுற்றியிருந்த நண்பர்கள் சந்தோஷமாகக் கரகோஷம் எழுப்ப ,பைக் ஓட்டிக் கொண்டிருந்தவர்களின் செவியையும் எட்டியது..

இருபத்தி ஒன்பது வயதில் தன் உடலை மெருகேற்றி பிட்டாக வைத்திருந்தவனின் பைக் முன்னேற அவனின் நண்பர்கள்,

"ஹர்ஷா ஹர்ஷா ஹர்ஷா" என்று விடாமல் கூச்சலிட்டனர்..

ரேஸ் பற்றியே நினைத்தவனின் மனது சில நொடிகளில் தன்னவளை நினைத்து மீண்டது.. தொடர்ந்து அவளின் பேச்சுகள் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கச் சட்டென்று தடுமாறி கீழே விழுந்தான்..அதனை எதிர்பாராத அவனின் நண்பர்கள்பதற்றத்துடன் ஓடி வந்து அவனைத் தூக்கி நிறுத்த ஹெல்மெட்டின் உதவியால் ஓரளவு தப்பித்து இருந்தாலும் காலில் அடி விழ, உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்..

ஹர்ஷவர்தன்,இருபத்தி ஒன்பது வயதான இந்தியா குடிமகன்..கார் ரேஸின் மீதிருந்த ஆர்வத்தால் இரண்டு வருடமாக பிரான்ஸில் குடியேறி அதில் கலந்து கொண்டிருக்கிறான்.. தற்பொழுது இந்தியாவின் டாப் கார் ரேஸர்களில் இவனும் ஒருவன்..ஆசிய மற்றும் உலக அளவில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்று முதல் இடத்தையும் பிடித்து தாய் நாட்டிற்குப் பெருமையும் சேர்ந்துள்ளான்.. கிரிக்கெட் மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களைத் தன்வசம் இழுத்து கார் ரேஸையும் பார்க்க வைத்த பெருமையும் இவனைச் சாரும்..
உடற்பயிற்சி செய்து மெருகேற்றிய உடல் அமைப்புடன்,நிக்கோட்டின் பதியவில்லை என்பதற்கு ஆதாரமாக செந்நிற இதழ்களையும்,சிவந்த மேனியும் எளிதில் மற்றவர்களை வசியப்படுத்தும் பார்வையும்,கூர்மையான நாசியையும் கொண்டு அவனின் அழகுக்கே உரித்தான கம்பீரத்தையும் கர்வத்தையும் ஒரு சேரப் பெற்றிருந்தான்..

கார் ரேஸர் என்பதால் அவனால் பைக் ரேஸிங் செய்ய முடியாது என்று அவனின் நண்பர்கள் கேலி செய்ததால் பொறுக்க முடியாமல் தன்னால் பைக் ரேஸ் செய்ய முடியும் என்பதற்காகக் கலந்து கொண்டான்..

அவனின் பெற்றோர்கள் வெளிநாட்டிற்கும்,இந்தியாவில் பல நகரங்களுக்கும் ஆடைகளை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்து வருகின்றனர்..
சொந்தமாக ஆடைகள் தயாரிக்கும் கம்பெனியும், ஷாப்பிங் மால் காப்லக்ஸ்,எனச் செல்வத்தில் மிதக்கும் சீனிவாசன் மற்றும் சாவித்ரி தம்பதியின் ஒரே புதல்வன் தான் ஹர்ஷவர்தன்..

மெதுவாகக் கண் விழித்தவன் சுற்றிலும் பார்வையை அலச,அருகில் அவனின் நண்பனான மேக்ஸ்வெல் இருந்தான்..அவன் பிரெஞ்ச் மொழியில் நலம் விசாரிக்க இவனும் பதில் அளித்தான்.. அப்பொழுது சட்டென்று மழை வர அவனின் நண்பனிடம் சைகையில் ஜன்னலின் அருகில் அழைத்துச் செல்லும் படி வினாவ அவனும் மறுக்காமல் போனான்..

கண்ணாடியில் செய்திருந்த ஜன்னலின் மீது பட்ட மழைத்துளியை அணுஅணுவாய் இரசித்தவனின் மனது கடந்த காலத்தை நோக்கிப் பயணித்தது.. கண்களை மூடியவன் அவள் கடைசியாக அவனைப் பார்த்த அருவருப்பான பார்வையை எண்ணி மனம் வெதும்பியது.. ஏனென்றால் அவனாவது காப்பாற்றுவான் என்ற நம்பிக்கையில் அவனிடம் போராடி அடிபணிய முயன்றவள்,அவனிடம் எவ்வித பரிதாபமும் தெரியாமல் போகச் சட்டென்று அவனிடம் விலகிச் சென்றாள்..அந்நொடி முதல் அவள் தவிப்பதை அறிந்தும் காப்பாற்றாமல் போன அவனின் முட்டாள்தனத்தை எண்ணி வருந்தினான்..மழைத்துளிகள் எல்லாம் அவளின் கண்ணீரை நினைவுபடுத்த மறக்க முயன்று தோல்வியைத் தழுவினான்..

விடியற்காலை ஐந்தரை மணி என்று விடாமல் ஒலித்த அலாரத்தை தூக்கத்தில் அணைத்துவிட்டு எழுந்து வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவி விட்டு,வெளியே வந்தவளின் வருகையைப் பறவைகள் எதிர்பார்த்து அவளின் வீட்டைச் சுற்றிலும் வட்டமடித்துக் கத்த,இரசித்துக்கொண்டே அவைகளுக்கானத் தானியங்களைக் கொடுத்துவிட்டுச் சில்லென்று வீசிய காற்றையும் பொருள் படுத்தாமல் நடைப்பயிற்சியை மேற்கொண்டாள்..

அவளைக் கண்ட ஒரு பெண், "நிலா நைட் வராம பகல்ல வந்து இருக்கு..??" என நேற்று அமாவாசை என்பதால் அவளைக் கிண்டலடிக்க,

"அதுவா..நிலா ரொம்ப டல்லா இருந்தனால நைட் வரல அக்கா" என்று அவளும் பேசினாள்..

ஒரு மணி நேர நடைப்பயிற்சிக்குப் பின் வீட்டுக்கு வந்தவள் வேலைகளை முடித்து விட்டு ப்ளம்ப் நிறத்தில் சுடிதார் அணிந்து விட்டு அவளின் ஸ்கூட்டியை உயிர்ப்பித்து நேராக அவளின் ஷாப் முன்பு பார்க் செய்து விட்டுத் திறந்தாள்..

"லாவிஸ் ஹில்டன்" என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட பொட்டிக் கடை..
நிலானி இருபத்தி மூன்று வயது நிரம்பிய மங்கை..அதிகமான துடுக்குத்தனும்,குறும்பும் ஒரு சேர அமைந்த அழகு சிற்பம்..ஆனால் அதுவும் அவளுக்குப் பிடித்தவர்களிடம் மட்டுமே வெளிப்படும்..நிமிர்ந்த நடை,நேர்த்தியான பேச்சில் மற்றவர்களைக் கவர்ந்திழுக்கும் திறமையைப் பெற்றிருந்தாள்‌..பி.எஸ்ஸி பேஷன் டிசைனிங் மற்றும் பிஜி டிப்ளமோ இன் பேஷன் டிசைன் முடித்துவிட்டு தேனி மாவட்டத்தில் சிறிய அளவிலான பொட்டிக் கடை ஒன்றைக் குறிப்பாகப் பெண்களுக்கு வைத்திருக்கிறாள்..கூடவே ஆன்லைனிலும் ஆர்டர் செய்யும் வசதியுடனும் இருந்தது..

மொபைலில் பாடல்களைக் கேட்டுக்கொண்டே கடையைச் சுத்தம் செய்து விட்டு அமர்ந்தாள்..வாடிக்கையாளர் வர வர அவர்களுக்குப் பிடித்த உடைகளைத் தேர்வு செய்வதிலும்,அதனைப் பற்றி அவள் விளக்கம் தருவதிலும் நேரம் கடந்தது..

மதியம் அளவில் பதினைந்து வயது உள்ள சிறுவன் கதையின் கதவைத் தட்டிவிட்டு உள்ளே வந்து, "அக்கா காபி வேணும்மா..??" என்று கேட்டவனுக்கு அவளின் கைப்பையிலிருந்து ப்ளாஷ்க்கை புன்சிரிப்புடன் எடுத்து வைத்தாள்..

"டெய்லியும் கேட்கறேனே அதுக்காகவாது கொண்டு வாடானு சொல்லலாம்ல..??" பாவமாக கேட்டவனை,

"டெய்லியும் வேணாம்னு சொல்றேன்னே அதுக்காகவாது கேட்க வேணாம்னு நினைச்சி இருக்கீயா..??"

"உங்க கிட்டப் பதில் கேட்ட கேள்வி தான் வரும்..போங்க அக்கா" என்று கோபித்துக் கொள்ள,

"சரி சரி..காபி குடிச்சிட்டு போ..அப்போவாது நல்லா போடுவீங்க..!!" என்று அவனுக்கும் கொடுத்தாள்..

காபியைப் பருகிக் கொண்டே, "நீங்க ஏன் யாரையும் லவ் பண்ணல..??"

"அதுக்கான நேரம் இல்ல டா.. ஏகப்பட்ட ஆர்டர் வந்து இருக்கு சீக்கிரமே டிசைன் பண்ணனும்" எனப் பேசிக்கொண்டே நொடிக்கு ஒருமுறை ஆன்லைனில் ஏதாவது குறுஞ்செய்தி வந்து உள்ளதா எனப் பார்த்தாள்‌..

"என்னமோ போங்க அக்கா..எந்த என்ஜாய்மென்ட்டும் இல்லாம வேலை வேலைன்னு இருக்கீங்க" என்று சலிப்பாகக் கூறியவனிடம்,

"அப்போ தான் எதிர்காலத்தில சந்தோஷமா இருக்க முடியும்" அறிவுறுத்தி விட்டு அவளுடைய வேலையைத் தொடர்ந்தாள்..

"லவ் பண்ணலைனாலும் அட்லீஸ்ட் எந்த பையனையாவது சைட் அடிச்சி இருக்கீங்களா..??" விடாமல் கேட்டவனின் கேள்வியில் நினைவுகளுக்குக் கலக்கம் ஏற்பட்டது..அதன் விளைவாகப் பதில் பேசாமல் இருந்தவளின் மீண்டும் கேட்க அவள் மறுப்பாகத் தலை அசைத்து மொபைலில் மூழ்க ஆரம்பித்தாள்..

"ச்சே..நான் சொல்ல வந்த விட்டுடேன்..நம்ம ஊருக்கு சீரியல் ஷீட்டிங் நடக்குது அக்கா..அவங்களுக்கு காஸ்ட்யூம் வேணும்னு சொன்னாங்க..சோ உங்கள பத்தி சொன்னேன்..நைட் டைம் வரேன்னு சொன்னாங்க.. அவங்களுக்கு பிடிச்சா எடுத்துக்கறேன்னாங்க" என்று அவளுக்குத் தகவல் கொடுக்க,

"என்கிட்டயும் சொல்லி இருக்காங்க டா..வரட்டும்" என்றாள் நிதானமாக..

குளிர்காலம் என்பதால் வெளிச்சம் மெல்ல மெல்ல மூழ்கி இருள் துவங்கிய சமயம்‌ ஏழு மணியைக் கடந்ததால் கடையை மூடத் தயாராக இருந்தவளைத் தடுக்கும் விதமாக,

"அக்கா வெய்ட் பண்ணுங்க..அவங்க வந்துட்டு இருக்காங்க" சொல்லிவிட்டு அவர்களைக் கூட்டிட்டு வர மீண்டும் ஓடினான்..

கடைக்கு வந்தவர்கள் மக்களின் மத்தியில் புகழ்பெற்ற ஓடிக்கொண்டிருக்கும் சீரியலில் நடிக்கும் நாயகியான நந்தினி மற்றும் அவருடன் நடிக்கும் சில நடிகைகளும் வந்திருந்தனர்..
அவர்கள் உள்ளே நுழைந்ததும் இன்முகத்துடன் வரவேற்றவளைக் கண்டு,

நந்தினி, "இந்த கடைக்கு ப்ரோமோஷன் பண்ண நீங்கத் தானே பேசுனீங்க..??"

அவள் தன்மையாக, "ஆமா மேம்..எல்லாமே நானே டிசைன் பண்ணேன்" அவர்களுக்குப் பிடிக்கும் வகையில் சேரி,ரெடிமேட் ப்ளவுஸ் அண்ட் சுடிதார் வகைகளைக் காண்பித்தாள்..

எல்லாம் பார்த்துக்கொண்டே நந்தினியின் சக நடிகையான மேகா, "வாவ்..நந்து நீ சொன்னது உண்மைதான்..எல்லா கலெக்ஷனும் சூப்பரா இருக்கு டா "
நந்தினி, "நான் கூட இவங்கள சென்னைக்கு வரச் சொன்னேன்..இவங்க தான் வர மாட்டேன்னு சொல்லிட்டாங்க" என்றதும் அனைவரும் அவளை நோக்க,

"இந்த இடம் ரொம்ப பிடிச்சிருக்கு மேம்..அதான் விட்டு வர மனசு இல்ல..உங்களுக்கு என்னென்ன வேணும்..?? என்ன டிசைன் வேணும்னு சொன்னீங்கனா அதுக்கு ஏத்த மாதிரி ரெடி பண்ணிட்டு உங்களுக்கு அனுப்பி வைக்கறேன்" அதற்கு மேலும் அதனைப் பற்றிப் பேச விடாமல் கவனத்தைத் திருப்பினாள்..

நந்தினி அவள் பேசியதில் புரிந்து கொண்டு, "சரி அதை விடுங்க..நாங்க கேட்கற டைம்க்கு ட்ரெஸ் கிடைக்குமா..??"

"கண்டிப்பா..எப்போ வேணும்னு சொல்லுங்க" உறுதியாகக் கூறியதும்,அவர்களுக்குத் தேவையான உடைகளைத் தேர்வு செய்து விட்டு அவ்விடத்தை விட்டுச் சென்றனர்..

பின் கடையைப் பூட்டி விட்டு தன்னுடைய ஸ்கூட்டியை உயிர்ப்பித்து நேராக வீட்டுக்குச் சென்றவளை செக் போஸ்ட்டில் மடக்கிய போலீஸ், "எத்தனை முறை சொல்றது ஆறு மணிக்கு அப்பறம் மேல போக அனுமதி கிடையாதுனு..சரியான நேரத்துக்கு வர மாட்டீங்களா..??" என்று கோபமாகப் பேச,

"சாரி சார்.. சீரியல் நடிகை கடைக்கு வந்து இருந்தாங்க..அவங்க டிரெஸ் செலக்ட் பண்ண லேட் ஆகிடுச்சு" என்று தன் நிலையை விளக்கிக் கூறினாள்..

அவரோ பிடிவாதமாக, "யானையும்,காட்டு எருமையும் இப்போ தான் அதிகமா நடமாடும்..இந்த டைம்ல உன்ன அனுப்ப முடியாது..நீங்க வந்த வழியில கிளம்புங்க"

"ஐயோ..!! சார் எனக்கு வீடு அங்க தான் இருக்கு..நான் எங்க போய்ட்டு தங்கறது..??" பரிதாபமாகக் கேட்டவளுக்கு பின்னிருந்து,

"எங்க வீட்டுக்கு வா போலாம்" என்றதும் திரும்பியவள் அவரைப் பார்த்து நிம்மதி பெரு மூச்சு விட்டாள்..

அவரிடம், "ப்ளீஸ் சத்யராஜ் அங்கிள்..என்னைப் போக விடுங்க..நிறைய ஆர்டர் வந்து இருக்கு..ஆன்டி செலக்ட் பண்ண சேரி கூட பாதி முடிச்சிட்டேன்" என பாவமாகக் கேட்டவளுக்கு,

"எத்தனை முறை சொல்றது டெய்லியும் இரண்டு மணி நேரம் டிராவல் பண்ணி அங்க போகணும்மா..??எங்க கூடவே இருக்கலாம்ல" என்றவருக்குப் புன்னகையைப் பதில் அளித்தாள்..

அவரோ விடாமல், "உனக்குக் கஷ்டமா இருந்தா எங்க வீட்டுக்கு மேல இருக்க ரூம்ல தங்கி வாடகை கொடுத்துட்டு எங்க கூடவே இரு டா"

"என்னோட சந்தோஷமே அங்க தான் அங்கிள்..ப்ளீஸ் என்ன கிட்ட திரும்பத் திரும்ப இத கேட்டு நீங்க ஹர்ட் ஆகாதீங்க" என்றாள் தீர்க்கமான குரலில்.,

அவருக்கு அவளின் பதில் ஒன்றும் புதிதல்ல..ஓர் நாள் மனத் திருப்திக்காகத் தனியாக ரோந்து பணிக்காக ஜீப்பில் சென்றவர் சிறிது நேரம் காற்றைச் சுவாசிக்க எண்ணி ஏழாம் கொண்டை ஊசி வளைவில் நிறுத்திவிட்டு நின்றவர் சிறிது நேரத்தில் அப்படியே மயங்கி விழுந்தார்.. அரைமணி நேரம் கழித்து அவ்வழியே வந்த நிலானி அவரைக் கண்டதும் உடனடியாக தண்ணீர் தெளித்து அவரை எழுப்பி மர நிழலில் அமர வைத்தாள்..அப்பொழுதும் அரை மயக்கத்தில் தடுமாறியவரை மெல்ல மெல்லத் தேற்றினாள்.. ஓரளவு தேறியதும் உதவிக்காக செக் போஸ்ட்டில் இருந்தவர்களை அழைத்தார்..அதன் பின் அவளிடம் நன்றி கூறி விட்டு அவர்களுடன் சென்றார்..

நிலானியை காணும் போது எல்லாம் நன்றி கூறுபவரைக் கண்டு, "அங்கிள்..நான் இல்ல என்னோட இடத்துல வேற யாரு இருந்தாலும் உதவி செஞ்சி இருப்பாங்க..சோ பார்க்கற அப்போ எல்லாம் நன்றி சொல்ல வேணாம்" என்றதும்

அவர், "சின்ன உதவினாலும் அதைச் சரியான சமயத்தில் செய்யும் போது கடல் அளவு நினைக்கனும்னு வள்ளுவர் சொல்லி இருக்காரு" என்றார் நிதானமாக.,

"ஓகே அங்கிள்..ஐ அம் நிலானி..உங்க பேர்..??"

"சத்யராஜ்.. மனைவி பேர் சித்ரா..எனக்கு ஒரு பையன் இருக்கான் அவன் பேர் தருண்.. சென்னையில் வொர்க் பண்றான்" என மொத்த குடும்ப விவரமும் சொல்லி அறிமுகப்படுத்திக் கொண்டார்..

அதன்பின் அவ்வழியே செல்லும் போது எல்லாம் உரையாடல், யாராவது இருந்தால் சிரிப்புடன் வருகிறேன் எனத் தலை அசைத்துச் செல்வாள்..

ஒரு வழியாகப் போராடி வீட்டுக்கு வந்தவள் க்ரீன் டீ ஒன்றினை தயாரித்துக் குடித்துக்கொண்டே மொபைலில் மூழ்கினாள்..பின்பு அன்று நாட்கள் கிடைத்த வரவு மற்றும் செலவை நோட்டில் குறித்துக் கொண்டாள்..படிக்கும் காலத்தில் வாங்கிய கல்விக் கடனை அடைக்கவே போராடுகிறாள்..

பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீஸில் உள்ள பிரபலமான மருத்துவமனையில் தொடர்ந்து இரண்டு நாட்களாகக் கண்காணிப்பிலிருந்தவனை காண அவனின் பெற்றோர்கள் வந்தனர்..

அவனின் அம்மா, "ஹர்ஷா நீ மும்பைக்கு வாடா..எங்கள விட்டு ரெண்டு வருஷமா இங்கையே இருந்துட்டா‌..இனிமேலும் வேணாம் டா" என்று ஆறுதலாகச் சொல்ல,

"எனக்கு யோசிக்க டைம் வேணும்" என்றான் மெதுவாக..

அவனின் அப்பா சீனிவாசன், "என்ன டா இன்னும் யோசிக்கிற..??நாளைக்கே நீ எங்களோட வரணும்" பிடிவாதமாகச் சொல்லிவிட்டு அமர்ந்தார்..

அவரிடம், "ஏங்க..இப்போ தான்‌ அவனே வரேன்னு சொல்ல யோசிக்கறேன்னு சொல்றான்..நீங்க வேற கட்டாயப்படுத்தி அவன மறுபடியும் வரலனு சொல்ல வச்சிடாதீங்க..!! கொஞ்சம் அமைதியா இருங்க" என்றவாறு அவரிடம் கிசுகிசுத்துக் கொண்டிருக்க,அவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில்,

"நான் வரேன்..ஆனா மும்பைக்கு இல்ல,கோயம்புத்தூர்க்கு"

அவனின் அம்மாவிற்கு அவர்களுடன் மும்பைக்கு வராததை நினைத்து வருத்தமாக இருந்தாலும்,மற்றொரு பக்கம் கோயம்புத்தூரில் அவர்களுக்குச் சொந்தமான வீட்டில் தங்குவான் என்பதில் சற்று மனம் லேசாகியது..மேலும் கடந்த இரண்டு வருடங்களாக பாரீஸில் இருந்தவன் இப்பொழுதாவது வரச் சம்மதித்து இருக்கிறான் என்பதில் அவர்களுக்கும் சந்தோஷம்..கோயம்புத்தூரில் தங்கினால் வாரத்திற்கு ஒரு முறையாவது அவனைச் சென்று பார்க்க முடியும் என அனைத்தும் அவர்களுக்குச் சாதகமாக அமைவதால் அவர்களும் மறுபேச்சின்றி சம்மதித்தனர்‌‌..
அதன் பின் அவ்விடம் முழுவதும் பேரமைதி நிலவியது..

கால்கள் முற்றிலுமாக குணம் அடைந்ததும்,மாலை ஏழு மணிக்குக் கோயம்புத்தூர் செல்வதற்கான விமானத்தில் ஏறினர்..அடுத்த நாள் காலை பத்து மணி அளவில் கோயம்புத்தூர் வந்ததும் ஏற்கனவே அவர்களுக்காகக் காத்திருந்த காரில் ஏறி அங்கு உள்ள அவர்களின் வீட்டுக்குச் செல்லச் செல்ல தன்னவளின் நியாபகம் வந்து அவனை இம்சித்தது..

அவர்களிடம் ஒரு வார்த்தை கூட பேச விரும்பாதவன் போன்று நேராக வீட்டுக்குள் சென்றவனைப் பெருமூச்சுடன் பெற்றோர்கள் அவனைப் பின்தொடர்ந்து போனவர்கள்..அனைத்தும் அவனுக்கு வசதியாக உள்ளதா என்பதைப் பரிசோதித்து விட்டு அவனிடம் மும்பைக்குச் செல்வதாகக் கூறிவிட்டு மீண்டும் விமான நிலையத்தை நோக்கிப் பயணித்தனர்..

பயணத்தின் களைப்பில் கண் அயர்ந்து உறங்கியவன் திடீரென்று எழுந்து அமர்ந்தவன் குறுக்கும் நெடுக்குமாக அறையினுள் நடந்தான்..சிறிது நேரத்தில் தலையைப் பிடித்துக்கொண்டு,

"ஆஆஆஆஆ" தாங்க முடியாமல் கத்தினான்..அவனின் சத்தம் கேட்டு ஓடிவந்த வாட்ச் மேன்,

"சார் என்னாச்சி..??" பதற்றமாகக் கேட்க, அவனோ ஒன்றுமில்லை எனத் தலையசைத்துவிட்டு அப்படியே சோபாவில் அமர்ந்தான்..

அவரோ தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, "மனசுக்கு கஷ்டமா இருந்தா எங்கேயாவது வெளிய போய்ட்டு வாங்க சார்" அவனின் முகம் பார்க்காமல் பேசியவரின் கூற்றில் பதிந்த உண்மை உணர்ந்து மென்மையாக அவரைப் பார்த்துப் புன்னகைத்தான்..

அவனின் மனமும் அதனையே வற்புறுத்திக் கூற அவனும் எங்கு செல்லலாம் என்று ஆராயத் தொடங்கினான்..முதலில் மலைத்தொடர் பகுதிகளில் போக எண்ணி,அனைத்து இடங்களையும் வரிசைப்படுத்திக் கொண்டிருக்க இறுதியாக அவனின் மனம் கொல்லிமலை மற்றும் மேகமலையில் நின்றது..சிறிய தடுமாற்றத்திற்குப் பின்பு கொல்லிமலையைத் தேர்வு செய்து விட்டு அங்குச் செல்ல தேவையான உடைமைகளை எடுக்க ஆரம்பித்தான்..

பைக் ஷெட்டில் இருந்த அவனின் ராயல் என்ஃபீல்டு மீது படிந்திருந்த தூசியைத் துடைத்து விட்டு எடுத்துக் கொண்டு வர,கேட்டின் அருகில் நின்றிருந்த வாட்ச் மேனிடம், "மறுபடியும் இங்க வர ரெண்டு வாரத்துக்கு மேல ஆகும்.. யாராவது கேட்டா சொல்லிடுங்க" என்று கூறிவிட்டு அவன் யோசித்த பாதையில் புறப்பட்டுப் போகும் சமயத்தில் சட்டென்று மனம் ஆழமாக அவனை மேகமலைக்குப் போகச் சொல்லி வற்புறுத்தியதும் அவனும் அங்குச் செல்ல முடிவு எடுத்தான்.‌.

வாழ்க்கையில் எதிர்பாராத நேரத்தில் நடக்கும் திருப்பங்களை எதிர்கொள்ளும் மன தைரியம் இருவருக்கும் உள்ளதா என்பதைத் தீர்மானிக்கவே இப்பயணம் அமைகிறது..

...ஸ்பரிசம் தொடரும்...
 

Bharathi Nandhu 02

New member
Messages
6
Reaction score
14
Points
3
அத்தியாயம் 2

மேகங்கள் ஆகாயத்தில் நீர் திரள பெய்யும் மழையையும் பொருட்படுத்தாமல் ஹர்ஷவர்தனின் பைக் கோயம்புத்தூரைக் கடந்தது..தேனிக்கும் கோயம்புத்தூருக்கும் நான்கு மணி நேரம் பயணம் என்பதால் அவ்வப்போது இடைநிறுத்தி மனதைக் கட்டுக்குள் கொண்டு வந்து மீண்டும் தொடர்ந்தான்..

அவனின் முகம் கார் ரேஸ் பிரியர்களுக்குப் பரிட்சியம் என்பதால் அவ்வப்போது அவனைக் கண்ட இளைஞர்கள் அவனைச் சுற்றிக் கொண்டனர்.. அவர்களிடம் மென்மையான இதழ் பிரியாத புன்னகையுடன் விடைபெற்றான்..அதன் பின் தன் அடையாளத்தை முடிந்த அளவு மாற்றிக் கொண்டு பயணத்தைத் தொடர்ந்தான்..

தன்னவளை பிரிந்து நான்கு வருடங்கள் கடந்த நிலையில் அவளின் நினைவு மட்டும் அகலாமல் அவனுடனே இருந்தது..இடைப்பட்ட காலத்தில் தேடாமல் காலம் கடந்து அவளைத் தேடிக் கொண்டிருக்கிறான்..மனம் முழுவதும் குழப்பம் நிறைந்திருக்க,அதனை அமைதிப்படுத்த ரோட்டோரத்தில் இருந்த தேநீர்க்கடையின் முன்பு அவனின் பைக் நின்றது..

டீயை குடித்துக் கொண்டு மனதினுள், 'நான் பண்ணதுக்கு அவ மன்னிப்பாளா..??அட்லீஸ்ட் சொல்றதையாவது நம்புவாளா..??வேற யாரு கூடாவது கல்யாணம் ஆகி இருந்தா என்னப் பண்றது..??' விடாமல் கேட்டுக்கொண்டிருந்த மனதைக் கட்டுப்படுத்தி உடனே அவனுக்குத் தெரிந்த டிடெக்டிவ் ஒன்றில் அவளைப் பற்றிய தகவல்கள் கூறியதும் அவனிடம் புகைப்படம் பற்றிக் கேட்க, அவனோ வருத்தமாக இல்லை என்றான்..அவரும் முடிந்த அளவு முயற்சி செய்து கண்டுபிடித்துத் தருகிறேன் என‌ உறுதி அளித்ததும் சிறிய நிம்மதியுடன் போனை அணைத்தான்..

முடித்துக் கொடுக்க வேண்டிய ஆர்டர்கள் நிறைய இருந்ததால் வெகு சீக்கிரமே கிளம்பியவள் எப்பொழுதும் உதவி கேட்பவரிடம், "அண்ணா என்ன செக்போஸ்ட் வரைக்கும் கொண்டு வந்து விடுறீங்களா‌..??"

"ஏன் மா..??ஸ்கூட்டி என்னாச்சி..??"

"அதுக்கு எல்லாம் பிரச்சினை இல்ல..நைட் நான் லேட்டா கெளம்புவேன்..ஏற்கனவே லேட்டா வரனால என்ன இங்க வர விடமாட்றாங்க..அதான் நைட் பத்து மணிக்கு பஸ் வரும்ல அதுல வரேன்..இப்போ மட்டும் கொண்டு வந்து விட்டுட்டு நீங்க வந்துடுங்க" என்றதும் அவரும் உதவி செய்தார்..

அங்கிருந்து ஒரு மணி நேரம் பயணத்திற்குப் பின்பு கடைக்கு வந்ததும் வேலையில் மூழ்க ஆரம்பித்தாள்..அவ்வப்போது வந்த கஸ்டமர்களுக்கும் தேவையான மாடல்களைக் காட்டினாள்..அவளுக்கு போன் வந்ததும்,

"உங்க டிசைன் ரெடி பண்ணிட்டேன்..ஒன்பது மணிக்கு வந்து வாங்கிக்கோங்க மேடம்" என்று தகவல் தெரிவித்தாள்..

நான்கு மணி நேரம் இடைவெளி எடுத்து எடுத்து ஐந்து மணி நேரம் பயணமாக மாறியது..தேனி வந்ததும் உயர்ரக ஹோட்டல் அறையில் தங்கி இளைப்பாறிக் கொண்டிருந்தான்..உணவை அறைக்கே கொண்டு வரச் சொன்னதும்,கொண்டு வந்த நபரிடம் தேனியைப் பற்றி விசாரிக்க,

அவர், "மேகமலைக்கு போகறதுக்கு முன்னாடி கம்பம் தாண்டி இருக்கக் கூடலூர்க்குப் போங்க சார்"

அவன், "அங்க என்ன இருக்கு..??"

"கன்னியாகுமரி மாவட்டத்தில மாத்தூர் தொட்டிப்பாலம் மாதிரியே இங்கேயும் மினி தொட்டிப்பாலம் இருக்கு.. திராட்சை தோட்டம் கூடவே அருவியும் இருக்கு‌‌"

அவர் கூறியதும் ஆர்வத்துடன், "லொகேஷன் எங்க இருக்கு..??"

"தேனில இருந்து 36 கிமீ தூரத்தில இருக்கு..குறைந்தபட்சம் ஒரு மணி நேரத்தில கம்பம் போய்டலாம்..அங்கிருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் கூடலூர் இருக்கு..குமுளியும் அங்கிருந்து அரைமணி நேரத்தில் போகலாம்..அந்த இடமும் நல்லா இருக்கும்" எனத் தனக்குத் தெரிந்த தகவல்களைப் பகிர்ந்தார்..

அனைத்தையும் கேட்டு முடித்தவன் இரண்டு மணி நேரம் கழித்து அவரிடம் நன்றி சொல்லிவிட்டு கூடலூரை நோக்கிப் புறப்பட்டான்..அங்குப் போகும் வழியில் தெரிந்த திராட்சை தோட்டத்தை இரசித்து விட்டு நடக்க ஆரம்பித்தான்.. பதினெட்டாம் கால்வாய் என்றிழைக்கப்படும் மினி தொட்டிப் பாலத்தை அடைந்ததும் பனி மூட்டம் லேசாகப் பரவி இருக்க இயற்கையின் செழிப்பான பச்சை நிறத்தில் வளர்ந்திருக்கும் மரங்களுக்கு நடுவே நீர்வீழ்ச்சி அமைந்த காட்சியைக் காண நிமிர்ந்தவனின் கண்களுக்குக் குளிர்ச்சியாக இருந்தது..

அதன்பின் தொட்டியின் பக்கவாட்டில் அமைந்திருக்கும் நடைபாதையில் நடந்தவனின் மனது சற்று இதமாக இருந்தது..சுமார் நாற்பது கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் என்பதால் அவ்வளவு தூரம் செல்ல இயலாத காரணத்தால் பாதியில் நிறுத்திவிட்டு மெல்ல அதன் முனையில் ஏறி நின்றவன் ஒரே தாவில் அதனுள் குதித்து நீந்தினான்‌..உள்ளத்தில் படிந்திருந்த அழுத்தத்தை விடுவிப்பது போன்று உணர்ந்தான்..சில மணி நேரங்களுக்குப் பிறகு தொடங்கிய இடத்திற்கே வந்தவன் அவ்விடத்தை விட்டு நகர விரும்பாமல் பாலத்தையும் மலையும் மாற்றி மாற்றிப் பார்த்துவிட்டு நகர்ந்தான்..

பின்பு உத்தம பாளையம் தாண்டி இருந்த வீர பாண்டி என்னும் ஊருக்குச் சென்றவன் பாலத்திலிருந்து கீழே இறங்கி நடந்தவனின் மனதை மீண்டும் கொள்ளையடிக்கும் இடமாக முல்லை பெரியாறு அணையிலிருந்து வரும் தண்ணீர் சிறிய அருவி போன்று
இருந்தது..அவ்விடத்தில் இளைப்பாற்றி விட்டு மேகமலையை நோக்கிப் பயணிக்கும் போது மணி ஐந்து ஆக இருந்தது..அவனிடம் ஆறு மணிக்கு மேல் கீழே இறங்க அனுமதி இல்லை என்று சொல்லியே அனுப்பினார்கள்..

மலை முழுவதும் மேகங்களின் ஆட்சி என்பதால் என்னவோ மேகமலை எனப் பெயர்‌ பெற்றது..அங்குப் பசுமையான நிலப்பரப்புடன் பெரிய பெரிய மரங்களும் காணப்படுகின்றன.. சரிவுகளில் சாய்ந்த நிலையில் உள்ள தேயிலைத் தோட்டங்கள் அதன் அழகை மெருகேற்றி வருகின்றது..மேலும் உயரமான மலைகள்,ஆழமான பள்ளத்தாக்கு,அழகிய ஏரி என அனைத்தும் இயற்கையின் அழகைப் பறை சாற்றுகிறது..முப்பது கிலோமீட்டர்களுக்கு வனப்பகுதியும் இருபது கிலோமீட்டர்களுக்குத் தேயிலைத் தோட்டங்களும் அமைந்துள்ளன..கடல் மட்டத்திலிருந்து ஆயிரத்து ஐநூறு அடி உயரம் உள்ளதால் எப்பொழுதும் இதமான குளிர் சீர்தோஷனநிலை நிலவும்..

இரண்டு நாட்களாகத் தொடர்ந்திருக்கும் வேலைப்பளுவினால் நிலானியின் உடலும் உள்ளமும் சோர்ந்தது..அந்நொடி ஆழமாக உள்மூச்சு இழுத்துக்கொண்டு மீண்டும் தொடர்வாள்..நேரம் ஒன்பதை நெருங்க அவளிடம் ஆர்டர் செய்திருந்த துணிகளை வாங்க சீரியலின் கதைநாயகி வந்திருந்தார்..

நிலானி, "எவ்ளோ நாள் இங்க இருப்பீங்க..??"

நந்தினி, "ரெண்டு நாள்..ஷீட்டிங் முடிஞ்சதும் கெளம்பிடுவோம்" என்று அவள் தைத்துக் கொடுத்திருந்த ரெடிமேட் ப்ளவுஸை ஆராய்ந்தார்..

அவள் தயங்கி, "தப்பா எடுத்துக்கலைன்னா நான் ஒன்னு கேட்கலாமா..??" என்றதும்,

"தயங்காம கேளுங்க"

"என்னோட டிசைன் பார்த்துட்டு திருப்தியா இருந்தா காஸ்ட்யூம் டிசைனரா‌ வேலை கிடைக்குமா..??" என்று கேட்டவளின் குரலில் மிகுதியான தயக்கமும் தன்மானமும் இருந்தது..

உடனடியாக மறுக்காமல், "கேட்டு சொல்றேன்..ஆனால் நீங்க சென்னைல இருந்தா ரொம்பவே சுலபம்" என்றதும் அவளின் முகம் வாடியது..

அவள், "சந்தோஷம்னா என்னனு இங்க வந்த அப்பறம் தான் உணர்ந்தேன் மேடம்..மத்தவங்க கிட்டயும் ஒதுங்கி நிற்கறேன்..என்னோட சந்தோஷத்திற்கு என்னால உருவாக்கப்பட்ட சூழ்நிலை இங்க தான் மேடம்" என்றவளின் உதடுகள் இளநகை பூத்தது..

"சரிங்க உங்க விருப்பம்..உங்கள கண்டிப்பா பரிந்துரை செய்றேன்"

"இப்போதைக்கு ஒன்னு மட்டும் ரெடி பண்ணி இருக்கேன்..ஒன் வீக் டைம் கொடுங்க மத்த ஆறு ப்ளவுஸ் ரெடி பண்ணிட்டு உங்களுக்கு கொரியர் செய்யறேன்" எனக் கூறியதும் சரி என்று அவரின் முகவரியைக் கொடுத்துவிட்டு,

"எனக்கு கிடைச்சதும் பணம் அனுப்பறேன்" என்றதுக்குச் சம்மதித்தாள்..

நேரம் அதிகமாவதை உணர்ந்து சீக்கிரமே கடையைப் பூட்டிவிட்டு பேருந்து நிலையத்திற்குச் சென்றாள்‌..பசி எடுப்பதால் தண்ணீர் மட்டும் குடித்து விட்டு பேருந்தில் அமர்ந்தாள்‌..இன்று ஏதாவது புதிய ஆர்டர்கள் வந்து இருக்கிறதா என்பதைப் பார்த்து, இல்லை என்றதும் அப்படியே ஜன்னலில் சாய்ந்தாள்..

ஒவ்வொரு பயணியாக ஏறியதும் பத்து பதினைந்துக்குப் பேருந்து கிளம்பியது..இரவு நேரம் என்றாலும் முழுப் பவுர்ணமியின் வெளிச்சத்தில் இயற்கையின் செழிப்பை இரசிக்க முயன்றாலும் வேகமாக வீசிய குளிர்காற்று அவளின் உடலை நடுங்க வைத்தது..அவற்றையும் மீறி தன் இருப்பிடத்தை அடையும் நேரத்தைக் கணக்கிட்டு அரைமணி நேரம் அங்கு செல்வதற்கு முன்பாக அலாரம் வைத்துத் துயில் கொண்டாள்..

மனதினுள், 'எது நடந்தாலும் பார்த்துக்கலாம்..பி ஸ்ட்ராங்' தனக்குத் தானே அறிவுறுத்திக் கொண்டாள்..

அவளுக்கு நிம்மதியான வாழ்க்கை வேண்டுமென்றால் இவ்விடத்தை விட்டுச் சென்றால் கிடைக்காது..ஆனால் வாழ்க்கையை அடுத்த கட்டத்துக்கு முன்னேற்றம் காண வேண்டும் என்றால் கண்டிப்பாக இவ்விடத்தை விட்டு அகன்று வேறொரு இடத்திற்குப் போக வேண்டும்..

ஹர்ஷவர்தன் குளிரையும் பொருட்படுத்தாமல் டீ எஸ்டேட் முன்பு நின்று இருபதாவது முறையாகப் பார்வையைச் சுழல விட்டான்‌‌..திடீரென்று கேட்ட சலசலப்பு சத்தத்தில் நினைவு வந்தவனாக அங்கிருந்து கிளம்பினான்..

நேராக அங்கிருந்த ரெசார்ட் ஒன்றில் சிரமப்பட்டு புக் செய்து போனான்..ஏனெனில் அங்கு முன்பதிவு செய்தால் மட்டுமே அனுமதி கிடைக்கும்.. அறையினுள் வசதிகளும் பெரியதாக இல்லை என்றாலும் வேறு வழியின்றி தங்கினான்..அடுத்த நாள் காலை எங்குச் செல்லலாம் என்று குறித்துக் கொண்டு கூகிள் மேப்பில் லொக்கேஷனை தேட அதுவோ சிக்னல் இல்லாததால் தெளிவாகவே காட்டவில்லை.. அந்நேரத்தில் அதற்காக வெளியே செல்ல மனமில்லாமல் அப்படியே தூங்கி விட்டான்..

காலையில் தாமதமாக எழுந்தான் அங்கிருந்த கேன்டீனுக்கு சென்று உணவு அருந்தியவன் அங்கிருந்தவரிடம்,

"சிக்னல் கிடைக்கலையே..!! என்னப் பண்றது..??"

"பி.எஸ்.என்.எல் சிம் மட்டும் தான் க்ளியரா கிடைக்கும்..நீங்கப் போகப் போக வழி கேளுங்க" என்றார்..

இரண்டு நாட்களாக மேகமலையைச் சுற்றியவன் திரும்ப அறைக்கு வந்தபோது அவனிடம், "சார் ரெண்டு நாள் முடிஞ்சி போச்சு..நேத்தே ஈவ்னிங் கிளம்பிடுங்கனு நான் சொன்னேன்..இந்த டைம்ல வந்தா என்ன அர்த்தம் சார்..??" எனச் சத்தமிட,

"இன்னைக்கும் பணம் கொடுக்கறேன்..நாளைக்கு காலையில கிளம்பிடுவேன்" என்றான் அடக்கப்பட்ட ஆத்திர குரலில்,

"உங்க ரூம்ல வேற ஒருத்தர் வந்துட்டாங்க..நைட் தங்க பணம் கொடுத்துட்டு ரூம்க்கு போங்க" என்றதும் அவனின் கோபம் அதிகமானது..

வேகமாக அறைக்குச் சென்று தன்னுடைய உடைமைகளை எடுத்துக்கொண்டு விறுவிறுவென்று கீழே இறங்கிவிட்டான்..யாரும் அவனின் முன் குரல் உயர்த்தினால் அவனுக்குப் பிடிக்காது என்பதாலே சொல்ல முயன்ற விஷயத்தை சாதாரணமாகக் கூறுவார்கள்.. அப்படிப் பட்டவனின் முன்பு குரல் உயர்த்தியும் பொறுமையாக இருந்தவன் வேறொருவன் அறையில் தங்க வைத்துள்ளனர்‌‌ என்றதும் அவ்விடமே வேண்டாம் என முடிவு செய்து விட்டான்..

இங்கு வருவதற்குக் கையிலிருந்த சில ஆயிரம் மட்டுமே எடுத்து வந்திருந்தான்..அவனின் செலவுகளுக்கும் அதிலேயே செலுத்தினான்..மேகமலை போனதும் அங்குப் பணம் எடுத்துக்கொள்ளலாம் என இருந்தவனுக்கு அங்கு ஏடிஎம் வசதி இல்லை என்று தெரியவில்லை..அது போல் சிக்னலின் காரணத்தால் கூகுள் பேவிலும் பணத்தைக் கொடுக்க முடியவில்லை..அவன் யாரு என்று சொன்னால் கூட தங்க அனுமதிக்கலாம் ஆனால் அதில் அவனுக்கு விருப்பமில்லை..

யாருமற்ற சாலையில் பதினொன்று மணிக்கு மேல் பயணித்தவனின் கண்கள் மேகமலையில் தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்பவர்களின் வசிப்பிடம் நிறைந்த வீடுகளைக் கண்டதும் அவர்களிடம் போகலாம் என பைக்கில் உள்ளே நுழைந்தான்..

கையில் கட்டியிருந்த கடிகாரத்தில் மணியை பார்த்து விட்டு யாராவது முழித்து இருப்பார்களா என தெருத்தெருவாக நின்று பார்க்க,அதற்கேற்ற அறிகுறி இல்லை என்றதும் சோர்ந்தான்..கீழே இறங்கலாம் என முயன்றாலும் அது வீண் தான் ஏனென்றால் பலமுறை எச்சரித்து தான் அவனை அனுப்பி வைத்தனர்..

தன் நிலையை எண்ணி அவனுக்கே கோபமாக வந்தது..என்ன நடந்தாலும் பரவாயில்லை என்று கீழே இறங்க முடிவு செய்து திரும்பியவனின் கண்ணாடியில் சில அடி தூரத்தில் ஒரு வீடு மட்டுமே இருக்க அறையில் போடப்பட்டிருந்தத ட்யூப் லைட்லிருந்து வந்த ஒளி சிறிய அளவில் அவனின் கண்ணாடியில் பட,அதனைக் கவனித்தாலும் உதவி செய்ய மாட்டார்கள் அவனும் கெஞ்சிக் கேட்கத் தயாராக இல்லை என்பதால் அங்கிருக்கும் பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் வந்ததும் மீண்டும் அதனை காண,மனம் அங்குச் செல்ல வேண்டும் என துடித்தது..

ஏன் என்று புரியாமல் அந்த வீட்டையே பார்த்தவனுக்கு அங்குச் செல்லாமல் இங்கிருந்து சென்றாலும் மனம் கேட்காது என்று எண்ணி அவ்வீட்டை நோக்கிச் சென்றான்..

வீட்டின் அருகில் பைக் நிறுத்த,அதன் சத்தத்தில் யாரென்று பார்க்க நினைத்தாலும் தன்னை நாடி யாரு வருவார்கள் என்பதால் நிலானி தன்னுடைய வேலையைத் தொடர்ந்தாள்..

அவனுக்கோ இந்நேரத்தில் உதவி கேட்க மனமில்லை என்றாலும் அவனின் உள்ளம் கேட்டே ஆக வேண்டும் என்பதில் உறுதியாக இருக்க மெல்ல பைக்கிலிருந்து இறங்கி அவ்வீட்டின் கதவின் முன்பு நின்றவன் தட்டாமல் யோசித்தான்..

இம்முறை ஷுவின் சத்தமும் கேட்க அவளுக்கு உள்ளத்தில் பயம் கூடியது..அவளை மேலும் அதிர வைக்கும் வகையில் அவளின் வீட்டுக் கதவு தட்டும் ஓசை கேட்டதும் மனம் திடுக்கிட்டது‌‌..

மெல்ல உள்வாங்கிய குரலில், "யாரு..??" என்று கேட்பதற்கும் மறுபடியும் கதவு தட்டுவதற்கும் சரியாக இருந்தது‌..எனவே அவளின் குரலை அவனால் கேட்க முடியவில்லை.‌.

கதவு திறக்கப்படவில்லை என்றதும் அவன் பின் வாங்கி திரும்பியவன்,அமைதியான அவ்விடத்தில் அவளின் காலடி ஓசை கேட்டதும் அப்படியே நின்றான்..சில நொடிகளில் கதவு திறக்கும் ஓசையோடு, "யாரு நீங்க..??" என்ற குரல் கேட்டதும் தான் தாமதம் சட்டென்று திரும்பியவனின் விழிகள் ஆச்சிரியத்தையும் அதிர்ச்சியையும் ஒரு சேரக் கண்டது..

அவளுக்கோ திடீரென்று ஏற்பட்ட அதிர்ச்சியில் தடுமாறியவள் கீழே விழாமல் இருக்க அருகிலிருந்த கதவைத் தாங்கிப் பிடித்தாள்..

தொலைந்த வாழ்க்கை மறுபடியும் அவர்களுக்கான வாய்ப்பைக் கொடுக்க காப்பாற்றுவார்களா..?? இல்லையா..?? என்பதை அவர்கள் தீர்மானிக்கும் காலம் வந்துவிட்டது..

.. ஸ்பரிசம் தொடரும்..
 

Bharathi Nandhu 02

New member
Messages
6
Reaction score
14
Points
3
அத்தியாயம் 3

நிசப்தமான இரவில் ஒருவரின் பார்வை மற்றொருவரைத் தழுவி இருந்தாலும் இருவரும் வெவ்வேறு மனநிலையில் இருந்தனர்..

அதில் முதலில் தன்னை மீட்டெடுத்தவள், "யாரு நீங்க..??"

அவளின் பேச்சில் அதிர்ந்தவன், "நிலா என்ன தெரியலையா..??" என்றதும்,

"தெரியாம தானே கேட்கறேன்" என்றாள் சற்றே அதிகாரமாக,

"ஏன் இப்படி பண்ற..??" என்றவனை அதற்கு மேல் பேச விடாமல் கதவை அடைத்தாள்..

"கதவ திறக்கற வரைக்கும் இந்த இடத்தை விட்டு நகர மாட்டேன்" எனச் சத்தமாகக் கூறினான்..

அந்த சத்தத்தைப் பொறுக்க முடியாமல் கதவைத் திறந்து, "அர்த்த ராத்திரியில தனியா இருக்க பொண்ணு வீட்டுக்கு வந்து கலாட்டா பண்றீங்களா..?? இங்கிருந்து இப்போ போகல எல்லாரையும் சத்தம் போட்டு எழுப்பி விட்டுறுவேன்" என்று தன் பங்கிற்குச் சண்டையிட,

"கத்து டி" என‌‌ உள்ளே நுழைய முயன்றவனின் நெஞ்சினில் கை வைத்து வெளியே தள்ளி விட்டாள்..

"நிலானி ப்ளீஸ்..!!" என்று கெஞ்ச,

"முதல்ல கெளம்பு" என்றவளின்‌ வார்த்தைகள் ஒருமைக்கு மாறியது..

வீட்டுக்குள் நுழைந்தவள் பின்னே சொல்வதைத் கேட்காமல் வலுக்கட்டாயமாக உள்ளே சென்றதும் அவளின் கோபம் அதிகமானது..அவள் பேச வரும் முன்பே கை நீட்டித் தடுத்தவன்,

"இந்த டைம்ல கீழ இறங்க பர்மிஷன் கிடையாது..ரெசார்ட்லையும் எனக்கு இடம் இல்ல..பைக்ல வந்தேன்..ரொம்ப குளிர் வேற,சோ ஒரு நாள் மட்டும் தங்கிக்கறேன்"

"முடியா.." சொல்ல வருபவளைச் சொல்ல விடாமல்,

"முடியாதுனு சொன்ன வெளிய தான் படுத்துப்பேன்..குளிர் ஒத்துக்காது எனக்கு ஏதாவது ஆனா நீ தான் பார்த்துக்கணும்" என்றதும்,

"ச்சே..தலையெழுத்து" எனத் திட்டிவிட்டு இடையில் நிறுத்திய வேலையைத் தொடர்ந்தாள்..

அவனின் கண்கள் அந்த வீட்டைச் சுற்றிலும் நோட்டமிட ஆரம்பித்தது..சிறிய அளவிலான வீட்டில் ஒருவர் மட்டுமே நிற்கக் கூடிய அளவில் சமையலறையும் அதன் பக்கத்தில் இரண்டு பேர் படுக்கும் அளவுக்கு அறையும்,அதே அளவில் இரண்டு அறைகளுக்கும் எதிராக ஹாலும் இருந்தது..

முதலில் சமையலறைக்குள் செல்ல அங்கே நூடுல்ஸ்,ராகி மாவு, ஓட்ஸ்,கோதுமை என ஒரு வாரத்திற்குத் தேவையான பொருட்கள் இருந்தது..பின் படுக்கை அறைக்குச் சென்றதும் அங்குக் கட்டில் இல்லாமல் மெத்தை மட்டுமே இருந்தது.. தலையணைகள் மட்டும் நான்கு இருந்தது..

"ரெஸ்ட் ரூம் போகணும்..எங்க இருக்கு..??" என்றவனுக்கு வெளியில் உள்ளது எனப் பேசாமல் சைகை செய்தாள்..

வீட்டின் பின்புறத்தில் அமைந்திருக்க, அதற்கு சில அடிகள் தொலைவில் சிறிய அளவிலான காய்கறிகள் தோட்டமும் இருந்தது..அதில் தக்காளி,மிளகாய், கத்திரிக்காய்,அவரைக்காய்,புதினா,கொத்தமல்லித் தழைகள் எனச் சொற்ப அளவில் நிறைந்திருந்தது..
எல்லாவற்றையும் பார்த்துவிட்டு
வீட்டுக்குள் வந்ததும்,

"ரொம்ப பசிக்குது டி..சாப்பாடு இருக்கா..??" என்று கேட்டதும் அவள் செய்த வேலையை முடித்துவிட்டு அவனுக்காக நூடுல்ஸ் தயார் செய்து கொடுத்தாள்..

அவள் எம்பிராய்டிங் செய்ததைப் பார்த்து, "இது எல்லாமே நீ பண்ணீயா..??சூப்பரா இருக்கு" என்றதுக்கும் அவளிடம் பதில் இல்லை..

அந்நேரம் அவளுக்கு மொபைலில் கால் வர,அதனை எடுத்தவள் மறுபக்கம் பேசியதைக் கேட்டதும் கட் பண்ணாள்..விடாமல் அந்நம்பர் மீண்டும் போன் செய்ய,

"ஒழுங்கா ஆர்டர்‌ பண்றதுன்னா மெசேஜ் மட்டும் பண்ணு..தேவையில்லாம கால் பண்ண உன் நம்பரும் நீ பேசுனதையும் இன்ஸ்டகிராம்ல போஸ்ட் பண்ணி அசிங்கப்படுத்திடுவேன்" ஹர்ஷாவின் மீதிருந்த ஆத்திரம் அந்நபரின் மீது திரும்ப மறைமுகமாக இவனையும் சேர்த்து எச்சரிக்கை செய்தாள்..

"என்ன பண்ண..?? எப்படி இருக்க..??எப்போ இங்க வந்த..??" என்று கேட்டவனைப் பார்வையாலே எரித்தாள்..

"நான் எப்படி போன உங்களுக்கு என்ன..??காலையில முதல்ல கிளம்பற வேலையை பாருங்க" என அவள் படுக்கும் இடத்திற்குச் சென்றாள்..

அடக்கப்பட்ட கோபம்,வன்மம், எரிச்சல்,எதிர்பாராது நடந்த அவனின் வருகை என ஒட்டுமொத்தமாக அவளின் மனதைக் குழப்பமாக,ஆத்திரமாக மாற்றி வைத்ததும் நித்திரையைத் தொலைத்திருந்தாள்..

ஹர்ஷா அவன் கொண்டு வந்த பெட்சீட் தரையில் விரித்துப் படுத்ததும் மற்றொரு பெட்சீட் இல்லாமல் குளிரில் உடல் நடுக்கம் கண்டது..அவளைப் பார்க்க நிமிர்ந்தவன் அவளும் தூக்கமின்றி தவிப்பதை உணர்ந்தான்..அதற்கான காரணத்தையும் அவன்‌ அறிந்திருந்தான்..காரணமே இவன் தான் என்பதால் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை..எதார்த்தமாக அவன் கவனிப்பதைப் பார்த்ததும் சட்டென்று எழுந்து திரைச்சீலையால் அவ்வறையை மறைத்தாள்‌..

குளிரின் வீரியத்தால் தூங்க முடியாமல் தவிர்த்தவன் தன் உடல் முழுவதும் படுத்திருந்த பெட்சீட்டால் கவர் செய்து அவளிடம், "நிலா ரொம்ப குளிர்ரா இருக்கு டா..எக்ஸ்ட்ரா பெட்சீட் இருந்தா கொடு" என்றவனுக்கு இல்லை எனப் பதில் அளித்தாள்..

"பெட்ல ஓரமாக நான் படுத்துக்கட்டுமா..??" என்றவனைத் தீயாக முறைத்தவள்,

"உள்ள விட்டதே அதிகம்..வேறு எதாவது பேசுனா வெளிய தான் படுக்கணும்" என்ற கடைசி வார்த்தைகளில் அழுத்தம் கொடுக்க அவனோ மீண்டும் ஹாலுக்கு வந்துவிட்டான்..

இவனின் நினைப்பை மறந்து மிகுதியான உடற்சோர்வினால் நெடுநேரம் கழித்து மெல்ல மெல்ல துயில் கொண்டாள்..ஏழு மணி அளவில் அலாரம் அடிக்க எழ முயன்றவளை விடாமல் வலிமையான இரு கரங்கள் அணைத்திருந்திருந்து..அதனுள் விடுபடத் துள்ளியவளின் உடல் உந்துதலில் முழித்தவனைத் தள்ளி விட்டு எழுந்தவள்,

"எதுக்கு இங்க வந்து படுத்த..??" மொத்த கோபத்தையும் திரட்டி கத்திக் கேட்க,

"ஷ்ஷ்ஷ்..அமைதியா இரு டி" என்று வாயில் கை வைத்தவனின் கரங்களைத் தட்டி விட்டாள்..

அவன், "ரொம்ப குளிர்னு சொன்னேன்..நீ தான் இரக்கமே இல்லாம படுக்கச் சொன்ன,குளிர் தாங்க முடியாம உள்ள வரும்போது நீ தூங்கிட்டு இருந்த, உன்கிட்ட கேட்ட கண்டிப்பா வேணாம்னு சொல்லுவேன்னு நானே படுத்துகிட்டேன்"

"பக்கத்தில வந்தது மட்டுமில்லாமல காரணம் வேற..!!இந்த நிமிஷமே இங்கிருந்து கெளம்புங்க" என்றவளிடம்,

தீர்க்கமான பார்வையில், "முடியாது" என்றதும் அவளின் ஆத்திரம் பன்மடங்கு உயர்ந்தது..

"இந்த டைம்ல கத்துனா உங்க மானம் தான் போகும்..ஒழுங்கா போய்டுங்க" என்று எச்சரிக்க,

"நம்ம வாழ்க்கையை ஆரம்பிக்க செகண்ட் சான்ஸ் கிடைச்சிருக்கு..அதை வீணாக்க விரும்பல..எங்க வேணும்னாலும் சொல்லு,கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணு..இனிமேலும் உன்ன இழக்க நான் தயாரா இல்ல"அவனின் முடிவில் அதாவது தன் குறிக்கோளில் எவ்வித மாற்றமுமின்றி தன்னம்பிக்கை நிறைந்திருந்தது..

ஒரு விதமான வலியுடன் கூடிய முறுவலுடன் அவளின் கடைக்குச் செல்ல தயாராக இருந்தாள்..தெளிவற்ற மனநிலையில் இருந்தவள் அதன் பின் அவனிடம் எவ்வித சண்டைக்கும் பேச்சுக்கும் இடம் கொடுக்காமல் போனாள்..

எப்பொழுதும் உதவி கேட்கும் அந்நபரிடம் சென்றவள், "அண்ணா போகலாமா..??" என்று கேட்டதும் சரி என்றார்..

அவனைக் கடந்து சென்றவளைக் கண்டும் ஏதும் பேசமால் அந்நபரிடம் உதவி கேட்டதை அவள் அறியாத வண்ணம் தன் ஓரப் பார்வையில் கவனித்துக் கொண்டிருந்தான்..அவர்கள் சென்ற சில நிமிடங்களில் அவளறியாத வகையில் தொடர்ந்து, மறைந்து மறைந்து போக ஒருவழியாக அவளின் கடையைக் கண்டதும் பிரமித்தான்..

அவன் உள்ளே வந்த சமயம் கடையினுள் யாரும் இன்றி அவள் மட்டுமே இருக்க அவனைக் கண்டு எரிச்சல் அடைந்தாள்..அப்பார்வை அவனை எவ்விதத்திலும் பாதிக்கவில்லை என்பதற்கு அடையாளமாக அவனின் இதழோரம் மென்னகை பூத்தது.. காலையிலிருந்து குழப்பமாக, வெறுமையாக இருந்தவளுக்கு அவன் பின்தொடர்ந்து வருவான் என்று சிந்தனைகள் ஓடவில்லை..

தன்னுடைய சன் க்ளாஸை கழட்டியவன் கடையை நோட்டமிட்டு, "வாவ்.. கலெக்ஷன் சூப்பரா இருக்கு..நம்ம கம்பெனிக்கு உன்னோட பங்களிப்பு அதிகமாகவே இருக்கப் போகுது.. கஸ்டமர்களுக்கு திருப்தி தர மாதிரியும் இருக்கு" என்றான் ஒவ்வொன்றாகப் பார்த்துக்கொண்டு இருந்தவனின் கண்களில் தெரிந்த லைட் எல்லோ வித் பிங்க் கான்ட்ராஸ்ட் ப்ளவுஸில் அமைந்திருந்த சேலையை எடுத்துவன், "இதை பேக் பண்ணிடு" என்றவன் அடுத்த கலெக்ஷனை காணச் சென்றான்..

திடீரென்று யோசனை தோன்றியதாக, "நம்ம கடைக்கு நானே ப்ரமோஷன் பண்றேன் டி" என இன்ஸ்டாகிராமில் லைவ் ஆப்சனை ஆன் செய்யும் முன்,

"உங்க தயவுல தான் வாழணும்னு சொல்றீங்களா..??" என்றதும் அவனின் முகம் சட்டென இறுகியது..லைவ் ஆப்சனை அணைத்து விட்டு,

"ஏன் அப்படி சொல்ற..??"

"நீங்க ப்ரமோஷன் பண்ணா தான் இந்த கடைக்கு பப்ளிசிட்டி கிடைக்கும்னா அது எனக்குத் தேவையில்லை" என்றாள் இறுகிய குரலில்,

அதே நேரம் கடைக்குள் வாடிக்கையாளர்கள் வரவும் அவர்கள் கேட்பதை எடுத்துக் காட்ட,அதிலிருந்த ஒரு பெண் அவனிடம் சென்று,

"நீங்க கார் ரேஸர் ஹர்ஷா தானே..??" என்று கேட்டதும் அங்கிருந்த அனைவரின் பார்வையும் இவனின் மீது படிந்தது..

அப்பெண்ணோ மிகுதியான உற்சாகத்தில் கேட்டதும் மறுக்காமல் ஆம் என்றான்..உடனே சந்தோஷமாக அவனின் அனுமதியுடன் சில புகைப்படங்களை எடுத்து விட்டு எதுவும் வாங்கமால் சென்றனர்..

நிலானி அவனிடம், "இங்கிருந்து கெளம்புங்க..உங்கள பார்த்துட்டு நிறைய பேர் வந்தா இங்க வாங்கறவங்களையும் விட மாட்டாங்க" என்றதும் அவனும் சென்றான்..

தன் அடையாளத்தை மாற்றிக்கொண்டு வீட்டிற்குத் தேவையான பொருட்கள், காய்கறிகள் மற்றும் ஸ்னாக்ஸ் வகைகள் என மொத்தமாக வாங்கிக்கொண்டு வீட்டுக்குச் சென்றான்..ஐந்து மணியளவில் அவளின் கடைக்குச் சென்று அவளை அழைக்க,அவளோ இரவு பதினொன்று ஆகும் எனக் கூறி அவனைப் போக வைத்தாள்..

எப்பொழுதும் கிளம்பும் பேருந்தில் ஏறி அமர்ந்தவளின் அருகில் அவனும் உட்கார்ந்தான்..அவனை நகரச் சொன்னாலும் கேட்க மாட்டேன் என்ற ரீதியில் அமைதியாக இருந்தாள்..வீட்டுக்குள் நுழைந்ததும்,

"எதுக்கு டி இவ்ளோ கஷ்டப்பட்டு இங்க வர..??"

"அது என்னோட விருப்பம்" எனச் சாப்பாடு தயார் செய்யச் சென்றாள்..

"நான் வாங்கிட்டு வந்துட்டேன்..வா சாப்பிடலாம்" எனச் சமையல் செய்ய விடாமல் வற்புறுத்தி அமர வைத்தான்..

அவள் ஏளனப் புன்னகையுடன், "இதுல உங்க கிட்ட மயங்கற மாதிரி மருந்து ஏதும் கலந்து இருக்கீங்களா‌..??"

"என்ன டி லூசு மாதிரி பேசற..!! இப்படியெல்லாம் இருக்கா..??" என்று அவளிடம் வாதாட,

"நானாவது கேட்டேன்..நீங்கச் செஞ்சி இருக்கீங்களே..!! அப்போ யாரு லூசு..!!" என்றதும் அவளைப் பார்க்க,

"எல்லாருக்கும் ஒரு வீக்னஸ் இருக்கும்..என்னோட பேரன்ஸ் அந்த விஷயத்தில அதிகமாக நம்புவாங்க..அதான்" என்று பேச்சை நிறுத்த,

"ஓ..!!அதான் என்னோட வாழ்க்கையை அழிச்சிட்டீங்க..!!" என்றவளின் குரலில் வெறுமையே அதிகமாக இருந்தது..அவன் பேசாமல் இருக்க,

அவள், "சாப்பாட்டுக்கு மத்த திங்க்ஸ் வாங்க எவ்ளோ ஆச்சு..??"

"கம்மி தான்‌ சாப்பிடு" என்றதும் அவள் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு அவனைக் கூர்ந்து நோக்கினாள்..நீ சொன்னால் தான் சாப்பிடுவேன் என்ற பிடிவாதம் அவளின் பார்வையிலிருந்தது..

அவனும் இம்முறை மறைக்காமல், "ஐயாயிரம்"

"இங்க தங்கினது,நைட் அண்ட் மார்னிங் சாப்பாடு, எல்லாத்தையும் விடக் குளிருக்கு இதமாக நைட் ஹக் பண்ணிட்டு தூங்குனதுக்கு எல்லாம் இரண்டாயிரம் லெஸ் பண்ணிட்டு மீதி காசு தரேன்" என்றதும் அவனின் முகம் கோபத்தில் சிவந்தது..

அவள் விடாமல், "இது அதிகம்னு நினைக்காதீங்க..!!ஒரு நைட்டுக்கு ஆயிரம் தானே எடுத்துக்கறேன்..அதுவும் இல்லாம தூங்கினப் பிறகு என்கிட்ட எந்த எதிர்ப்பும் வந்து இருக்காது..என்னோட உடம்புல உங்க கையும் எங்கெல்லாமோ பட்டு இருக்கும்..அதுக்கு எல்லாம் காசு கேட்கல..ஜெஸ்ட் ஹக் பண்ணதுக்கு மட்டும் தான்" என்று சாப்பிட்டுக் கொண்டு பேச, அவனோ நிமிராமல் அவன் ஆசையாக அணைத்துக் கொண்டதை விலை பேசியதும் அவனின் கோபம் அதிகமானது..

"என்மேல எனக்குத் தன்னம்பிக்கை அதிகம்..ஆயிரம் ரூபாய்க்குக் கூட வொர்த் இல்லாமையா இருப்பேன்" என்றதும் தான் தாமதம் அவள் சாப்பிட்டுக்கொண்டிருந்த சாப்பாட்டை வேகமாகத் தட்டி விட்டான்..

அவளோ பொறுமையாக, "சாப்பாடு அருமை உங்களுக்கு தெரியல போல..!!இந்த ஒருவேளை சாப்பாட்டுக்கு ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கேன்..சரி ஓகே இத விடுங்க..காசு வேணுமா இல்லை மூணு நாள் ஹக் பண்ணி தூங்குறீங்களா..??"

"நிலா இதுக்கு மேல பேசாத..!!" என்றான் அடக்க முடியாத சினத்துடன்,

"பணம் என்கிட்ட இல்லை..சோ ஹக் பண்ணிக்கோங்க..நானே உங்கள ஹக் பண்ணிட்டு தூங்கறேன்..திரும்பவும் சொல்றேன் எங்க வேணும்னாலும் கை வச்சிக்கோங்க..அதுக்கெல்லாம் காசு கேட்க மாட்டேன்" என மகிழ்ச்சியான சிரிப்போடு அவனின் கரங்களை எடுத்து அவளின் இடையில் வைத்து அணைக்க முயன்றவளைத் தள்ளி விட்டான்..

"ம்ப்ச் என்னப்பா பிரச்சினை..!! பணம் அதிகம்னு தோணுதா..சரி ஐநூறு ரூபாய்க்கு குறைச்சிக்கறேன்..இப்போ வரியா..??" என்றதும் கட்டுக்குள் இருந்த கோபம் கட்டவிழ்ந்து அவளின் குரல்வளையைப் பிடித்தவன்,

"இன்னொரு முறை இப்படிச் சொன்ன..!!" என்று மிரட்டிவிட்டு கையை எடுக்க,

"அச்சோ சாரி..உங்களுக்கு முதல் முறைனால கூச்சப்படுறீங்க..எனக்கு இது பழகிடுச்சி..மத்தவங்கள கம்பேர் பண்ணும் போது நீங்க பராவல்ல..!!அவனுங்க கிட்ட ஹக் மட்டும் பண்ணுங்கடானு சொன்னா என்னனென்மே பண்ணுவாங்க..நான் தான் அவங்கள தூங்க வைக்கறதுக்குள்ள ஒரு வழி ஆகிடுவேன்..அவங்க கிட்ட ஆயிரம் ரூபாய் கேட்டா இரண்டாயிரமா தருவாங்க..ஆனா நீங்க தான் ஆயிரம் ரூபாய்க்கே சலிச்சுக்கிறீங்க..!!இதுல நான் வேற டிஸ்கவுண்ட் கொடுத்தும் என்னை மிரட்டுறீங்க..!!நீங்க முதல்ல கெளம்புங்க..கடையிலும் சரி இங்கையும் சரி என்னோட வியாபாரத்தை கெடுக்கறீங்க..!!!" நீண்ட புன்னகை முகமாக இறுதியில் சலிப்பாகக் கூறியவளைக் கண்டதும் சினத்துடன் வெளியே சென்றான்..

அவன் அங்கே நின்றிருந்தால் அவளின் பேச்சு எல்லை கடந்து இருக்கும் என்பதை அறிந்து வெளியேறினான்..அவன் சென்றதும் நிறைவான புன்னகையுடன் அவளின் மெத்தையில் படுத்து கண் அயர்ந்தாள்..

அவனைக் கண்ட பொழுதிலிருந்து உள்ளுக்குள் இருந்த மிகுதியான ஆத்திரம் அவளை உடலளவிலும் மனதளவிலும் வலுவை இழக்கச் செய்தது..எனவே முதலில் அவளின் கோபத்தைக் கட்டுப்படுத்த எடுத்துக்கொண்ட ஆயுதமே அவள் தான்..அதற்காகவே தன்னையே இழிவுபடுத்தும் நோக்கில் தீவிரமாக இருந்தாள்..தன் வாழ்க்கையை பற்றி நினைக்க,அவளுக்கே வெறுப்பாக இருந்தது..

கோபமாக வெளியே வந்தவனின் மனதை முழுவதும் அவளின் வார்த்தைகளே ஆக்கிரமித்திருந்தது..அவளைச் சமாதானம் செய்து அழைத்துக்கொண்டு போகலாம் என‌ நினைத்திருந்தவனுக்கு அவளின் பேச்சில் கடந்த காலத்தை மறக்கவில்லை என்பது அப்பட்டமாகத் தெரிந்ததும் சோர்வடைந்தான்..
தங்கள் வாழ்க்கையை எண்ணி யோசனையில் மூழ்க அந்நேரம் அவளின் வீட்டை நோக்கி கைக்குழந்தையுடன் வந்தவர்களைப் பார்க்க,இவனைக் கண்டு மென்னகையுடன் கடந்து கதவைத் தட்டினார்கள்..

"நிலா" என்று கதவைத் தட்ட,அவரின் குரல் கேட்டு உடனே அவள் கதவைத் திறக்க,

"உள்ள வாங்க முரளி அண்ணா,அக்கா நீங்களும் வாங்க" என்று அழைத்துக்கொண்டு போக,இவனும் உள்ளே சென்றான்..

"என்னக்கா இந்த நேரத்துல.??"

"நாளைக்குப் பையனுக்கு மொட்டை அடிக்க பழனி போறோம்..அதான் சொல்லிட்டு போகலாம்னு வந்தோம்"

அவரின் மனைவி, "நீயும் வரலாம்ல..??"

"இல்லக்கா..நிறைய ஆர்டர் வந்து இருக்கு..பென்டிங் முடிச்சிட்டு கொரியர் பண்ணுனும்..அப்பறம் நான் ஆர்டர் பண்ணது எல்லாம் வேற மாநிலத்திலிருந்து இங்க வரணும்..சோ என்னால எங்கேயும் போக முடியாது கா..நீங்கப் பத்திரமாக போய்ட்டு வாங்க" என்று தன் நிலையை விளக்கிக் கூற அவர்களும் சரி என்றனர்..

"இவரு யார் மா..??" என்று ஹர்ஷாவை நோக்கி கை நீட்ட,

"அவரு வீட்டில தான் அண்ணா வேலை செஞ்சேன்" என்றதும் அகன்ற கோபம் மீண்டும் வந்தது..

"நாளைக்கு முடிஞ்சா தேயிலை பறிக்க போ மா" என்றார் பணிவாக.,

"ஒன்னும் பிரச்சினை இல்ல..பத்து மணிக்கு மேல தான் கடைக்கு போகணும்..நான் போறேன்" என்று சம்மதித்தாள்..

அவர்களும் சிறிது நேரம் பேசி விட்டு தங்களது வீட்டுக்குச் சென்றவர்களைப் பாதி வழியில் மடக்கி நிலாவை பற்றி விசாரிக்க அவர்களுக்குத் தெரிந்த,அவள் கூறிய தகவல்களைப் பகிர்ந்தனர்..அவர் கூறியதை நினைத்துக்கொண்டு நடந்தவனின் நினைவில்,

அவன், "நிலாவ உங்களுக்கு எவ்ளோ நாளா தெரியும்..அவ குடும்பத்தைப் பத்தி ஏதாவது தெரியுமா..??"

முரளி, "நாங்க வந்த இரண்டு நாள் கழித்து நிலா வந்துட்டாங்க..அந்த பொண்ணுக்கு யாரும் இல்லைனு சொன்னாங்க" என்று சொல்லி முடித்ததும் குழந்தை அழ,அவனிடம் விடைபெற்றுச் சென்றனர்..

நேராக அவளிடம் வந்தவன் அவளின் கரத்தை அழுத்தமாகப் பிடித்து, "உனக்கு யாரும் இல்லையா..??"

"ஆமா..இதுல என்ன சந்தேகம்..!! யாராவது இருந்தா இப்படி ஊர் ஊரா சுத்திட்டு இருப்பேன்னா சார்" என்றவள் "சார்" வார்த்தையை அழுத்தமாக உச்சரித்தாள்..

"நம்ம வீட்டுக்கு போலாம் வா..உன்னை ரொம்ப நல்லா பார்த்துக்கறேன்" என்றான் மிகத் தீவிரமான தெளிவான குரலில்,

"ஸப்பா..!!சீக்கிரமே போங்க..ஆனால் என்ன எதிர்பார்க்கிறது ரொம்பவே தப்பு..!!" தோள்களைக் குலுக்கி விட்டுச் சென்றாள்..

சரியாக ஐந்து நாட்கள் கழித்து அவள் குளித்துவிட்டு உள்ளே வர,ஹர்ஷாவும் அவளின் எதிரில் வந்தவனின் கையில் இரண்டு கப் பழச்சாறு இருக்க,

அவளிடம் ஒன்றை நீட்டியவன், "நான் கெளம்பறேன்..அதுக்கான ட்ரீட்" என்றதும் வெற்றிப் புன்னகையுடன் அவளும் அதனை வாங்கிப் பருக ஆரம்பித்தாள்..

அவள் வேறு உடை மாற்ற உள்ளே நுழைய இம்முறை அவனின் இதழோரம் இளநகை நீண்டது..சரியாக பத்து நிமிடங்களில் அவளுக்குத் தலை சுற்றல் எடுத்ததும் மெத்தையில் அப்படியே மயங்கி விட்டாள்..

அவளருகில் அமர்ந்தவன், "சாரி டி..எனக்கு வேற வழி தெரியல" என்று நெற்றியில் முத்தமிட்டு அவன் அழைத்திருந்த காருக்காக காத்திருந்தான்.. டிரைவர் வந்ததும் குறுஞ்செய்தி வர அவளைத் தூக்கிக் கொண்டு செல்லும் வழியில் எதிராக வந்தவர்கள் எல்லாம் என்னவென்று கேட்க காய்ச்சல் அதிகமானதால் மயங்கி விட்டாள் என்றதும் அவளுக்காகப் பரிதாபப்பட்டனர்..

ஐந்து நாட்களாக அவளோடு அவன் இருந்ததால் அவனின் மீதும் எவருக்கும் சந்தேகம் வரவில்லை..அது மட்டுமல்லாமல் அவள் அதிகமாக வேலை செய்து உடலை வருத்திக் கொள்பவள் எனச் சிலருக்குத் தெரியும் என்பதால் அவர்களும் மற்றவர்களுக்கு அவளின் நிலையைப் புரிய வைக்க, அவனுக்கு இன்னும் எளிதாகிப் போனது..முரளியும் குடும்பத்தோடு பழனிக்கு போனவர்கள் இன்னும் வீடு திரும்பவில்லை..

அவளை காரில் அமர வைத்து விட்டு வீட்டுக்குச் சென்று அங்கிருந்த அனைத்தும் பேக் செய்துக் கொண்டு வந்ததும், காரை பின் தொடர்ந்து இவனும் சென்றான்..

மறுபக்கம் கடையிலிருந்த அனைத்தும் வாகனத்தில் ஏற்றப்பட்டு கோயம்புத்தூரை நோக்கிச் சென்றது.. ஏற்கனவே ஹர்ஷா கடைக்கான வாடகை மற்றும் வீட்டுக்கான வாடகை கொடுத்து விட்டான் என்பதால் யாரும் கேள்வியும் கேட்கவில்லை..அவ்வப்பொழுது முழிப்பு தட்டாமல் இருக்க பழச்சாற்றில் மயக்க மருந்தை கலந்து இருமுறை கொடுத்தான்..

அவனின் செயல்பாடுகளால் உள்ளத்தில் கலக்கம் இருந்தாலும் இதை விட்டால் வேறு வழி இல்லை என்பதால் அதனையே செய்தான்..மாலை ஆறு மணிக்கு வீட்டுக்குள் வந்ததும் அவளுக்கு ஏற்கனவே தயாராகி இருந்த அறையில் அவளைப் படுக்க வைத்துவிட்டு ஹாலில் அமர்ந்திருந்தான்.. அவளின் கடையிலிருந்த துணிகளும் ஓர் அறையில் அடுக்கி வைக்கப்பட்டது..

ஹாலில் அவள் விழிப்பதற்காகக் காத்திருந்தவன்,நெடுநேரம் ஆனதால் அவளின் அறைக்குள் சென்று அருகில் அமர்ந்து கொண்டான்..அவள் எழுந்ததும் நடக்கும் விபரீதங்களை எண்ணியவன் சற்று பயந்தும் போனான்..

...ஸ்பரிசம் தொடரும்..
 
Status
Not open for further replies.
Top Bottom