Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Completed நிழல்நிலவு - Comments

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
607
Reaction score
780
Points
93
Last edited:

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
607
Reaction score
780
Points
93
Last edited:

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
607
Reaction score
780
Points
93
ஹாய் டியர்ஸ்,

ஒருவழியாக நிழல்நிலவு முடிவுக்கு வந்துவிட்டது. இந்த கதையில் அர்ஜுன் என்னும் அபிமன்யு ஒரு உளவாளி. மிக நெருக்கமான கட்டமைப்பைக் கொண்டு செயல்பட்ட ஒரு நிழல் உலக அமைப்பை உடைக்க உளவுத்துறையிலிருந்து அனுப்பப்பட்டவன். ஏழு ஆண்டு காலம் அந்த அமைப்போடு ஒன்றி உறவாடி, ஸ்திரமான பதவியை அடைந்து, அவர்களுடைய தொழில் மற்றும் வியாபார கட்டமைப்பை காட்டிக் கொடுத்ததோடு, அந்த அமைப்பை ஒட்டுமொத்தமாக ஒழித்துக்கட்ட அதிகாரிகளுக்கு உதவியவன்.

இது சாத்தியமா, ஏழு ஆண்டு காலம் ஒரு அமைப்பில் உயர் பதவியில் இருக்க முடியுமா என்றால், நிச்சயமாக முடியும் என்பதுதான் உண்மை.

இந்திய உளவுத்துறை "ரா" அமைப்பில் 1999 முதல் 2005 வரை ஆறு ஆண்டு காலம் உயர் பதிவில் இருந்த "திவான்(தேவன்) சந்த் மாலிக்" என்னும் முப்பது வயது இளைஞன் டபுள் ஏஜெண்டாக செயல்பட்டு, உளவுத்துறை ரகசியங்களை வெளிநாடுகளுக்கு கடத்தினான் என்பது வரலாறு.

"ரா" போன்றா ஒரு நாட்டின் உளவுத்துறையிலேயே ஒருவனால் ஊடுருவ முடிகிறது என்றால், என்னதான் கட்டுக்கோப்பாக இருந்தாலும், கோர்த்தா சாதாரண மாஃபியா கேங் மட்டுமே. அதில் ஒருவனால் தாக்குப்பிடிக்க முடியாதா என்ன?

இந்த கதையில் ஆரம்பத்திலிருந்தே 'ப்ளூ ஸ்டார்' என்னும் ஒரு கேரக்டர் வந்து கொண்டே இருக்கும். அவருக்கு கோர்த்தாவில் மற்ற யாரோடும் தொடர்பு இருக்காது. சில நேரங்களில் அர்ஜுன் அவரிடம் என்னை இங்கிருந்து விடுவித்து விடுங்கள் என்று சண்டை போடுவதாக கூட சொல்லியிருப்பேன். அதுதான் வாசகர்களுக்கு நான் கொடுத்த க்ளூ. கடைசி அத்தியாயம் வரைக்கும் அந்த க்ளூவை அடிக்கடி ஹிட் செய்துக் கொண்டே தான் இருந்தேன். ஆனாலும் வாசகர்களிடமிருந்து ஒருமுறை கூட கேள்விகள் எழவில்லை. அது எனக்கு மிகவும் திருப்தியாக இருந்தது. (நானும் ரௌடிதான் மொமண்ட்)

அடுத்து, அவ்வப்போது அர்ஜுன் சிலரை, ப்ளூ ஸ்டாரிடம் அனுப்பிக் கொண்டே இருப்பதாக சொல்லியிருப்பேன். அவர்களுக்கெல்லாம் என்ன ஆனது என்ற கேள்வி எழுந்தால், அனைவரும் இப்போது கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்கள் என்று புரிந்துகொள்ளுங்கள்.

ஆர்த்தி அர்ஜுன் பற்றிய விளக்கம்.
ஆர்த்தியை கொண்டுதான் அர்ஜுன் கோர்த்தாவிற்கு அறிமுகமானான். அர்ஜுன் அவளை தன்னுடைய வேலைக்கு பயன்படுத்திக்கொள்ள மட்டுமே எண்ணியிருந்தான். ஆனால் ஆர்த்தி அவனை மிகவும் நேசித்தாள். அதன் காரணமாகவே அவர்களுக்குள் திருமணமும் நடந்தது. அவனைப் பொறுத்தவரை அது ஒரு போலி திருமணம் மட்டுமே.

'பாம்பு திங்கும் ஊருக்கு போனால் நடு கண்டம் நமக்கு என்று பந்தியில் அமர்ந்துவிட வேண்டும்' என்று ஒரு வழக்கு உண்டு. இல்லை என்றால் நாம் தனித்து தெரிவோம். அப்படி தனித்து தெரிந்துவிட்டால் தனக்கு சங்கு ஊத வேண்டியதுதான் என்று அர்ஜுனுக்கு நன்றாகவே தெரியும் என்பதால் தான் அவன் அந்த திருமணத்தை செய்துக் கொண்டான். செய்துக் கொண்ட திருமணத்திற்கு உண்மையாகவும் இருந்தான். இல்லையென்றால் சங்கு... சந்தேகமே எழ விடக் கூடாதல்லவா!

எது எப்படி இருந்தாலும் குழந்தை அவனுடைய பிளானில் இல்லவே இல்லை. கண்டிப்பாக ஆர்த்தி கர்பமாகிவிடக் கூடாது என்று கவனமாகத்தான் இருந்தான். ஆனால் நடப்பதெல்லாம் அவனுடைய கட்டுப்பாட்டுக்குள் மட்டுமே இருக்குமா என்ன?

ஆர்த்தி கர்பம் தரித்தது அவன் எதிர்பாராத ஒன்று. அதன்பிறகுதான் அவன் மனநிலையில் சலனம் ஏற்பட துவங்கியது. பிரச்சனைகள் முடிந்த பிறகு ஆர்த்தியிடம் கலந்து பேசி முடிவெடுத்துக்கொள்ளலாம் என்றுதான் எண்ணியிருந்தான். குழந்தையை கைவிடும் எண்ணம் இல்லை. ஆர்த்தியின் மீது அதீத காதலொன்றும் இல்லை என்றாலும் நடந்துவிட்ட அந்த திருமணத்தை உண்மையாக்கிக்கொள்ளும் எண்ணம் இருந்தது. அதிலும் மண் விழுந்தார் போல் ஆர்த்தி நிறைமாத கர்ப்பிணியாக போய் சேர்ந்துவிட்டாள். அதுவும் அவன் மரணத்தை தனதாக்கிக் கொண்டு.

அந்த குற்ற உணர்ச்சியும் கோபமும் அவனுக்குள் இருந்தது. கூடவே ஆர்த்தியின் மீது காதலும் உண்டானது. தான் ஒரு இன்டெலிஜென்ஸ் ஏஜென்ட் என்கிற உண்மையையும் தாண்டி அவனுக்குள் பர்சனலான வெஞ்சன்ஸ் பகவான் மீது உண்டானது. அதற்கு பிறகு நடந்தது எல்லாம் கதையில் விளக்கமாக படித்திருப்பீர்கள்.

அவன் ஆரம்பத்தில் ஆர்த்தியை வைத்து எப்படி சுக்லாவிடம் நெருங்கினானோ, அதே போல் மிருதுளாவை வைத்து பகவானிடம் நெருங்கிவிடலாம் என்பதுதான் அவனுடைய பிளான். ஆனால் மனம் இல்லாத மனிதன் இல்லை. அவனும் மனிதன் தானே? ஏழு முழு ஆண்டுகளில் அவனுடைய மனித குணமும் வெளிப்பட்டது. அது வெளிப்படவில்லை என்றால் இந்த கதையில் காதலே இல்லை... காதல் இல்லையென்றால் என்னை பொறுத்தவரை அது கதையே இல்லை. வெறும் கட்டுரைதான்... கட்டுரை படிக்க சுவாரஸ்யமாக இருக்காதல்லவா? எனவே ஆங்காங்கே ஏதேனும் லாஜிக்கல் மிஸ்டேக்ஸ் இருந்தால் அதை ஒதுக்கிவிட்டு கதையோட்டத்தை அனுபவியுங்கள்.

இன்னொரு முக்கியமான விஷயம், மாஃபியா உலகம் எனக்கு சற்றும் சம்மந்தம் இல்லாதது. அதை பற்றி எழுத வேண்டும் என்றல் என்னுடைய கற்பனை மட்டும் போதாது. ரிசர்ச் தேவை... ரெஃபரன்ஸ் தேவை... கதையில் சொல்லப்பட்ட சில ஆப்பரேஷன்ஸ் நிஜ மாபியாக்கள் மற்றும் உளவுத்துறை சம்மந்தப்பட்ட புத்தகங்கள், டாக்குமென்டரிஸிலிருந்து ரெபரென்ஸ் எடுத்து நம் கதைக்கு தகுந்தாற் போல் மாற்றியிருக்கிறேன். இல்லையென்றால் கதை கண்றாவியாகத்தான் இருந்திருக்கும்.



முடிவு:
கதையின் முடிவு சிலருக்கு உவப்பானதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் இந்த கதையை இப்படித்தான் முடிக்க முடியும். மாறாக அவர்கள் சேர்ந்து சந்தோஷமாக வாழ்வது போல் காட்டினால் நிச்சயம் அபத்தமாகத்தான் இருக்கும். தன் பெற்றோரின் மரணத்துக்கு காரணமானவனுடன் எந்த பெண்ணும் வாழ விரும்ப மாட்டாள். அவளால் முடியாது... அது நம் அனைவருக்குமே தெரியும். அப்படி இருக்கும் போது கதைதானே என்று ஹாப்பி எண்டிங் கொடுக்க வேண்டும் என்கிற ஒரே காரணத்திற்காக இவ்வளவு நாள் கஷ்ட்டப்பட்டு எழுதிய கதையை கடைசியில் சொதப்ப எனக்கு மனமில்லை.



ஆனால் வாழ்க்கை இப்படியே போய்விடாது. இன்னொரு காலகட்டத்தில், இன்னொரு சந்தர்ப்பத்தில் அவர்கள் சந்திக்கலாம். அப்படி சந்திக்கும் போது அவர்களுக்கிடையே நடக்கும் சம்பவங்கள் நிகழ்வுகள் அவர்களுக்குள் மனமாற்றத்தை கொண்டு வரலாம். அதை இந்த கதையின் அடுத்த பாகமாக எழுத எண்ணியிருக்கிறேன். அது முழுக்க முழுக்க லவ் அண்ட் லவ் ஒன்லி கதையாக அமையும். நோ மோர் வயலன்ஸ்...

சரி, வேறு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் கேளுங்கள் விளக்கம் கொடுக்கிறேன்.



கடைசியா ஒரு முக்கியமான விஷயம்.... ஸ்பெஷலான விஷயமும் கூட...

ஆரம்பத்திலிருந்தே இந்த கதையை விடாமல் தொடர்ந்து கொண்டிருக்கும் என்னுடைய அன்பு வாசகர்களுக்கு கோடி நன்றிகள். என்னுடைய ப்ளஸ் அண்ட் மைனஸை ஏற்றுக் கொண்டு என்னோடு பயணித்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது. ஸ்டோரி லேட் அப்டேட் வரும் போதெல்லாம் கோபப்பட்டாலும் கூடவே இருந்தீங்க. கமெண்ட்ல கேட்டு கேட்டே என்ன எழுத வச்சீங்க... அந்த கமெண்ட்ஸ் எல்லாம் இல்லைன்னா இன்னும் லேட் பண்ணியிருப்பேன். சோ இந்த கதை வெற்றிகரமா முடிஞ்சதுல என்னுடைய வாசகர்களான உங்களுக்கு நிறைய பங்கு இருக்கு.... சோ திரும்பவும் நன்றி...

வழக்கம் போல இந்திரா கடைசி வரைக்கும் எபிஸோட் படிச்சு கரெக்ஷன் பார்த்துகிட்டே இருந்தாங்க. தேங்க்ஸ் எல்லாம் சொல்ல மாட்டேன்... ஆனா அவங்க இல்லைன்னா இந்த கதை முடிஞ்சிருக்காதுன்னு மட்டும் சொல்லிக்கிறேன்...

அப்புறம் என்ன ஃபிரண்ட்ஸ், கதை எப்படி இருந்தது? பிடிச்சிருந்ததா? அடுத்த பார்ட் எழுதுவோமா இல்ல இதோட நிறுத்திக்குவோமா? எதுவா இருந்தாலும் ரெண்டு வார்த்தை சொல்லிட்டு போங்க...
அப்புறம் அந்த லைக் பட்டன் பாவம் ரொம்ப நாளா சும்மாவே இருக்கு... அதையும் அப்படியே அழுத்திவிட்டுட்டு போங்க...

YouTubeல ஆடியோ நாவல் போட்டுக்கிட்டு இருக்கோம். பார்த்து பண்ணுங்க... சப்ஸ்க்ரிப்ஷன் கம்மியா இருக்குன்னு நாவல் ரீட் பண்ணற அம்மணி நிறுத்திட்டாங்கன்னா ஹெட் செட் மாட்டிகிட்டு கதை கேட்டுகிட்டே வேலை செய்ய முடியாது... லிங்க் கீழ கொடுக்கறேன்... Subscribe பட்டனை அழுத்திட்டு போங்க... நாவல்ஸ் நோட்டிபிகேஷன் வரும்....



https://www.youtube.com/channel/UCWGiZ6KIcVCSk9QyFOXR71A



ஹாப்பியா... சேஃபா இருங்க... மீண்டும் சந்திப்போம்... :D:D:D



நட்புடன்
நித்யா கார்த்திகன்​
 
Messages
81
Reaction score
60
Points
18
நிழல் நிலவு ப்ளூபர்ஸ்🥰🥰🥰

நிழல் நிலவு பயணம் ஒரு அழகான பயணம்.

வீட்டு வேலைகள்ள இருந்து நித்யாவ கதை எழுத கூட்டிட்டு வர்றது ரொம்பகஷ்டமான சவாலா இருந்தது 😲😲😲😰😰😰.



இந்த கதைல எனக்கு பிடிச்ச கேரக்டர் டேவிட் தான், நிறைய டைம் - உனக்குஅர்ஜுன் வேண்டாம் மிருதுளா, டேவிட்டை கல்யாணம்பண்ணிக்கோன்னுதான் சொல்ல தோணுச்சு, பட் அதுக்கு டைரக்டர்ஒத்துக்கணுமே🤩🤩🤩



மிருதுளாவும் அர்ஜுனும் தனிமையை அதிகம் கழித்த அந்த தனி வீட்டுக்குபின்னாடி ஒரு பெரிய மரம் இருக்குமேஉங்களுக்கு நியாபகம் இருக்கா? அதைக்கூட அர்ஜுன் ஆவேசமா வெட்டிக்கிட்டு இருப்பானே, அதுல ஒருஅழகானஉவமை ஒளிஞ்சிருக்கு, அந்த மரம்தான் கோர்த்தா, அதனை வேரோடு வெட்டிச்சாய்க்கும் வேலைதான் அர்ஜுனுக்கு, அப்படி வெட்டும் போது அப்பப்போமிருதுளா வந்துடுவா, எங்கே அவன்வெட்டிக்கிட்டிருக்குற மரத்துலேந்துஎதாவது கிளை ஒடிஞ்சு அவ மேல விழுந்து காயம் படுமோன்னு பயந்துஅவளைஅங்கேயிருந்து விரட்டுவான். கோர்த்தா வேரோடு அழியனும் ஆனால் மிருதுளாபாதிக்கப்படக் கூடாது. இது எனக்கு மிகவும் பிடிச்ச உவமை. நித்யா Conclusion la சொல்லாம விட்டுட்டாங்க, பட் எனக்கு பிடிச்சதநான் சொல்லாம விடமாட்டேன். 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️



அதே போல் இன்னொரு சீன். அந்த தனி வீட்டு பெட்ரூம்ல முதல் முறையாஅர்ஜுன் உள்ள போய் கதவை லாக்பண்ணுவான் அப்போ டேவிட் வெளியேஇருப்பான், உள்ளே அர்ஜுனுக்கும் மிருதுளாவிற்கும் பெரிய போரேநடக்கும்அதைப் பத்தி மட்டும்தான் நித்யா எழுதியிருந்தாங்க, பட் என்நினைப்பெல்லாம் வெளியே இருக்கும்டேவிட்டை பற்றிதான், அந்த சிறு வீட்டில்ரூமிற்குள் நடக்கும் பேச்சு வார்த்தை நிச்சயம் வெளியே கேட்கும்தானே. “நித்யா! இதெல்லாம் கேக்கற டேவிட் எவ்ளோ பாவம் நித்யா, அவன்உண்மையா லவ் பண்ற பொண்ணுநித்யா உள்ள வேற ஒருத்தனோட, அவனுக்குவலிக்காதான்னு” சொல்லும் போத எனக்கு வலிச்சது. என்வலியை புரிஞ்சிகிட்டநித்யா “சரி அவன் தானே உங்க பிரச்சனை, அர்ஜுன் உள்ள போனதைபார்த்தவிரக்தியில அவனை வாக்கிங் அனுப்பிடலாம்னு” அசால்ட்டாசொல்லிட்டாங்க. இது போல் பல அழகானநியாபகங்கள், பசுமையாய் மனதில்நினைக்கும் பொழுதே உதடுகள் விரிகின்றன

🥰🥰😊😊

But my favourite Davidku குண்டு பட்டுடிச்சு.. me very very sad regarding this..😭😭😭



Davidஅ காப்பாத்த தான் நித்யா எவ்வளவோ ட்ரை பண்ணினாங்க, But Mirudhula சொதப்பிட்டா. டேவிட்மாதிரியே, தான் கொல்ல வேண்டாம்னு நினைச்சஆட்களை ப்ளூ ஸ்டார் கிட்ட அனுப்பதான் ட்ரைபண்ணுவான், அதுலமிஸ்ஸானது சுஜித்தும், டேவிட்டும் தான்.



முக்கியமான episode எல்லாம் மூன்று காப்பி வரும், First rough copy second Semi-final copy and last தான் final copy வரும். Time pass ku படிக்கிற எனக்கே three times வரும்னா, அவங்க எத்தனை தடவை படிச்சிருப்பாங்க?🤔🤔🤔. சரியா வரவரைக்கும் விடவே மாட்டாங்க, I think that “Spirit” is the Success of the Story.



First first nithya இந்த கதையை சொல்லும் போது இருந்த feela 75% தான் storyla வந்திருக்கு. அவங்கசொன்னது அப்படியே எழுதியிருந்தா இந்த story வேறலெவல்ல இருந்திருக்கும். But கடைசில கொஞ்சம்cutshort பண்ணிட்டாங்க.. due to number of episodes. Nithya story writings விட கதை சொன்னா செமையாஇருக்கும்.. ♥️♥️♥️lots of love for giving me that feel Nithya..



நிழல் நிலவு கதை முடிஞ்சது ஏதோ ஒரு பெரிய படம் எடுத்து முடிச்ச ஃபீல் தான்கொடுக்குது. அதுல work பண்றCo-Staff எவ்ளோ happya feel பண்ணுவாங்களோஅதே feel தான் எனக்கும், so so so happy for நிழல் நிலவுConclusion.

Friendship Apart. இப்போ ஒரு ரீடரா சொல்றேன் இப்படி ஒரு கதை களம் எடுத்ததேபெரிய சவால், அதுலயும்ஆக்ஷன் சீக்வன்ஸ் அப்படியே Screen la பார்க்கறமாதிரியே இருக்கும். ஏதோ நமக்கு முன்னாடி புல்லட்ஸ்பறக்கற மாதிரிஇருக்கும். Chancea இல்ல, Romance பத்தி எல்லாம் சொல்லவே வேண்டாம். நீங்கஎப்பவுமேசொல்வீங்களே hatred Romance, அந்த ஃபீல் தான். எதிரியோடபொண்ணுங்கற வெறுப்பு ஆனா காதல். கதையோட முடிவும் எதார்த்தம். அடுத்த part எப்போ வரும்னு ஒரு எதிர்பார்ப்பு.



பி.கு.: நிழல் நிலவு எல்லா எபிசோடும் நான் தான் first படிச்சேன்னு தனிசந்தோஷம் எப்பவும் உண்டு.



Lots of Love and wishes to you Nithya

Super nithya....😍😍😍😍 கடைசீ வரைக்கும் suspense maintain செஞ்சு முடிச்சதுக்கு

இப்படி ஒரு அழகான கதையை எழுதியதற்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்

ஒரு episode la கூட போர் அடிக்கவே இல்ல...

That tooo last episode திக் திக் திக் தான்

Lots of pain

lots of love



Iyya NaN than first NaN than first comment

💃💃💃💃💃
 
Top Bottom