Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - [email protected]


நீ கொடியானால் நான் மலராவேன்...

Status
Not open for further replies.

Subageetha Sundararajan

Sugee
Vannangal Writer
Team
Messages
130
Reaction score
39
Points
63
கொடிமலர் 10

என் முன்னே பதட்டத்துடன் அமர்ந்து கொண்டு என்னை விழி அகற்றாது பார்த்துக் கொண்டிருக்கும் சியா மீது ஏற்படும் உணர்வுகள், என்னால் புரிந்துகொள்ள முடியாமல் இல்லை. ஆனாலும், அவள் பேச வேண்டும் என்று அமைதியாய் இருக்கிறேன்.

நாங்கள் அமர்ந்து கொண்டிருப்பது கஃபே காபி டே... அவளுக்கு காபி குடிப்பது பிடித்தமான ஒன்று. நிறைய பெங்களூரு வாசிகள் காபி பிரியர்களாய் இருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டேன். நான் டீ குடிப்பதை விரும்புவேன். குடிக்கும் பானம் முதல் உணவு, பழக்கவழக்கங்கள், பொருளாதார நிலை என்று எனக்கும் அவளுக்கும் எதிலுமே பொருத்தம் என்பது இல்லை... அவள் முன்னே ஹார்ட் வடிவதில் மேலே அலங்கரிக்கப்பட்ட காபிசினோ... நான் கோல்டு காபி வாங்கிக்கொண்டேன்.
வழக்கமாய் காபீயை சூடாக கண்ணை மூடி ரசித்துக்கொண்டே பருகும் சியா இதோ தன் முன் இருக்கும் அந்த பானத்தை இன்னும் கைகளில் கூட தொடாமல் பார்த்துக்கொண்டிருக்கிறாள்.
அவள் கண்கள் யோசனை, பயம் என்று உணர்ச்சிகலவையாய். அவளை பேச வைக்கவே எனக்கு இன்னும் எனர்ஜி தேவை. ஆனால் அவளிடம் மௌனம் தவிர வேறேதும் இல்லை.

வேறு வழி இல்லாமல் என்னை நிமிர்ந்து பார்த்தவள் கண்கள் லேசாக கலங்கி பளபளத்தது.

"இப்போ எதுக்கு இந்த சீன் சியா? ஒண்ணு எஸ் சொல்லு, இல்லாட்டியும் உனக்கு வேற ஆப்ஷன் இருக்குறதா எனக்கு தோணல "

கிட்ட தட்ட மிரட்டல் தோணியில் இருந்தது என் பேச்சு.மனமோ இதென்ன விசித்திரமாய் என்று என்னை சாடியது.

"சார் புரிஞ்சுதான பேசறீங்க?"

அவளது சந்தேகம், நான் சுய நினைவுடன்தான் இருக்கிறேனா, இப்படி கேட்கிறேனா எண்டு பரீட்சை செய்தது.

ஹும்... சுய நினைவுல தான் இருக்கேன் சியா. அவளிடம் நான் திருமணத்திற்கு கேட்கிறேன். லேசில் சம்மதிப்பதாக இல்லை.
முதலில் சாதாரணமாகத்தான் ஆரம்பித்தது எங்கள் பேச்சு. தீபாவளி சமயத்தில் நான் வீட்டில் சொல்லிவிட்டு வந்ததை மீண்டும் என் ஞாபக அடுக்குகளில் இருந்து தூசி தட்டி அவள் முன்னே வைத்தேன்.

கண்டிப்பா எனக்கு கல்யாணம் பண்ணிக்கணும் என்கிற எண்ணம் வர மாட்டேங்குது சியா. இன்னும் சொல்லப்போனால் கல்யாணத்து மேல பெரிய நம்பிக்கை எல்லாம் இல்லை. கல்யாணம் பண்ணிக்கிட்டவங்க எல்லாம் சந்தோஷமா இருக்காங்களான்னு எனக்கு சந்தேகம் கூட உண்டு. பட் வீட்டுல எனக்கு கல்யாணம் பண்ணி வைக்காம விட மாட்டாங்க போல இருக்கு.

வேற யாரையும் கல்யாணம் செய்வதற்கு பதிலா, ரொம்ப வருஷமா பார்க்கிற உன்னையே கல்யாணம் பண்ணிக்கிட்டா என்னன்னு எனக்கு தோணுது. கல்யாணம் பண்ணி கொஞ்ச நாள் வாழ்ந்து பார்க்கலாம். பிடிக்கலன்னா பிரிஞ்சிடலாம்.

ஆரம்பம் முதல் நான் சொல்வதை பொறுமையாக கேட்டுக் கொண்டு வந்தவள் கடைசியில் பிரிவு என்ற வார்த்தையை கேட்டவுடன், திடுக்கிட்டு என்னை நிமிர்ந்து பார்த்தாள்.
அவள் பார்வையில் இருந்தது என்ன என்று எனக்கு தெரியும். அலுவலக சமயங்களில் கூட அவளது கள்ள பார்வையை நான் ரசித்துக் கொண்டிருப்பவன் என்று அவளுக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம். அவளை திருமணத்திற்கு சம்மதிக்க வைப்பது, கொஞ்சம் அல்ல ரொம்பவே கஷ்டம். அவள் மனதில் எனக்கான இடம் இருப்பது என்னவோ நிஜம்தான்! அதை மீறிய சில எண்ணங்களும் அவளுக்கு உண்டு. அவளை அறிந்து வைத்திருப்பதாலேயே அவளை திருமணம் செய்துக் கொள்வதில் தயக்கம் இல்லை.

இந்த சமூகத்தின் பார்வை, அதை பற்றிய தயக்கம் அவளுக்குள் இருக்கலாம். ஏன் இந்த இடத்தில் சியா இல்லாமல் வேறு ஒரு பெண்... எனது வாழ்க்கை நிலைக்கும், அந்தஸ்திற்கும் சற்றும் பொருந்தி வராதவள் இங்கு அமர்ந்திருந்தால் நிச்சயம் திருமணம் போன்ற வாழ்நாள் பந்தத்திற்கு நான் கேட்டிருக்க மாட்டேன்.

ஆரம்பத்திலிருந்து, நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் தங்கத் தட்டில் தான். எனது நிலையை புரிந்துகொள்வது கடினம்.

அவள் மெல்ல தனது கண்ணீரை உள்ளிழித்து, "உங்க வீட்ல ஒத்துக்க மாட்டாங்க ஷ்யாம். இது வீண் பிரச்சனை உண்டுபண்ணும்." அவளுக்கு விருப்பம் என்று புரிந்து கொண்டேன்.

"ஸோ, எங்க வீட்டுல ஓகே சொன்னா நீ ஒத்துப்பியா "?
அவளிடம் நிச்சயம் இதற்கு பதில் இல்லை.

லுக் சியா, உனக்கு ஒரு பிரச்சனைனு என்கிட்ட சொன்ன.. என்னால முடிஞ்சதை உனக்கு நா செய்தேன்.. இப்போ, எனக்கு ஒரு தேவைன்னு நான் வந்து உன்கிட்ட கேட்கும் போது, நீ ரொம்ப யோசிக்கிற சியா.

வெகு சமீபத்தில் தான், சியாவின் தங்கையின் திருமணம், வெகு ஆடம்பரமாக நடந்து முடிந்திருந்தது. திருமணம் முடியும் வரையில் எதுவும் பேசக்கூடாது என்று தான் நான் மௌனம் காத்தேன். ஆனால் இப்போது இது சரியான தருணம். இப்பொழுது பேசினால் அவளை சம்மதிக்க வைக்க முடியும் என்றுதான் இந்த பேச்சை ஆரம்பித்தேன்.

"சரி ஷ்யாம் நா கேக்குறதுக்கு பதில் சொல்லுங்க... பணமும் உங்களுடைய லைஃபும் ஒண்ணா... என்னைக்கு இருந்தாலும் எத்தனை வருஷம் ஆனாலும் உங்களுடைய பணத்தை நான் திருப்பி குடுக்க தான் போறேன்."இந்த கல்யாணம் அதை மாத்தாது. நம்ம கல்யாணம் கடனை அடைக்கும் குறுக்கு வழி இல்ல.
வாழ்நாள் முழுக்க இந்த உறவு கண்டினியூ பண்றது பத்தி யோசிக்காமல் பிடிக்கலன்னா பிரிஞ்சிடலாம்னு ஈஸியா சொல்றீங்க. சோ இந்த கல்யாணத்துல எந்த கமிட்மெண்டும் இல்ல காதலும் இல்லை. இப்படிப்பட்ட உறவு தேவையான நான் கேட்கிறேன். உங்கள பொறுத்த வரைக்கும் எப்படின்னு எனக்கு தெரியாது ஷ்யாம்.

கல்யாணம் அது என்னை பொறுத்த வரைக்கும் ரொம்ப புனிதமான உறவு அதுக்கு கட்டுப்படணும். அது நடக்கணும்னா ரெண்டு பேருக்குள்ள காதல், புரிதல் இருக்கணும். என்னால தோத்துப்போன கல்யாணத்தோடு வாழ்நாள் முழுக்க போராட முடியாது ஷ்யாம்."

"நம்ம கல்யாணம் தோத்து போக வழி இல்ல சியா. எனக்குள்ள வேணா காதல் இல்லாம இருக்கலாம். ஆனா என் மேல உனக்கு அது ரொம்ப இருக்குன்னு எனக்கு தெரியும். எவ்வளவு தூரம் அந்த காதல் இருக்குன்னா, லைப் முழுக்க உன்கிட்ட நான் காதலை காமிக்கலைன்னா கூட என்ன விட்டுட்டு போகணும்னு உனக்கு தோணாது."

என் வார்த்தைகளில் தாக்கத்தை தாங்க முடியாமல் உறை நிலையில் சியாவை பார்க்கும் பொழுது எனக்கு ரொம்பவும் பாவமாக இருக்கிறது. அவள் பார்வையில் இவனுக்கு நான் இவனை காதலிப்பது தெரியுமா... என்ற கேள்வி.

அவள் பார்வையை படித்தவனாக 'தெரியும். ரொம்ப நாளாவே நான் உன்னை கவனித்துக் கொண்டுதான் வரேன்.அதனால தான் இந்த கேள்வியை நான் உன்கிட்ட கேட்டேன் சியா."

என் முகத்தில் இருக்கும் புன்னகை அவளுக்கு தோன்றவில்லை. அவளிடம் விவரிக்க இயலாத இறுக்கம்.
"அப்போ, எல்லாம் தெரிஞ்சு தான் இப்படி கேக்குறீங்களா சார்?? ".
ஷ்யாம் என்ற வார்த்தை சட்டென்று சார் ஆகிப் போய்விட்டது.

நான் அமைதியாக இருக்கிறேன். அவளிடம் காதல் தோன்றுமா என்று எனக்கு நிச்சயம் இல்லை. ஆனால், அவளுடன் தான் என் வாழ்க்கையை பகிரவும், வாழவும் முடிவு செய்யும் அளவுக்கு அவளிடம் நம்பிக்கை உண்டு. எப்படி சொல்லி புரியவைக்க என்று தெரியாமல் தான் அவளுக்கு நான் கொடுத்த பணம் பற்றி பேசியதே!

"திரும்ப திரும்ப காதல் அது இதுன்னு ஒளறாதே சியா.. பி பிரக்டிகல்.

என்னை பொறுத்தவரை கல்யாணம் அது ஒரு வித ஒப்பந்தம். அண்ட் உலகத்தோட பார்வைல ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ லைசென்ஸ். தட்ஸ் இட்."

அவளுக்கு திருமணம் பற்றிய எனது கருத்துக்களை கேட்கவே பிடிக்கவில்லை.

"எல்லாமே உங்க பார்வைல சொல்றீங்க ஷ்யாம் சர்... எனக்குன்னு உணர்வுகள் இருக்கு. நான் ஒன்னும் மரம் இல்ல.. உணர்வுகளை கொன்னுட்டு உங்களோட என்னால எப்படி வாழ முடியும்?"

அவள் சொல்வது எனக்கு புரிபடவில்லை. "எதுக்கு உணர்வுகளை கொல்லனும்? நார்மல் ஹஸ்பண்ட் அண்ட் வைப் எப்படி வாழுவாங்களோ அதே போல தான் நம்ம லைப் போகும்.. அண்ட் நீ ஆபீஸ் வந்து வேலை பாரு. உன்னை விட்டா என்னோட வேலைகளை சரியா செய்ய ஆள் இல்ல " சொல்லிவிட்டு அவள் பதிலுக்காக காத்திருந்தேன்.

அவள் மீண்டும் என்னை ஆராய்ச்சி பார்வை பார்த்தாள். ஒருவேளை என்னிடம் நான் இது வரை உணராத காதலை தேடிப் பார்க்கிறாளா என்று தெரியவில்லை.

சற்றே என்னை உத்துப் பார்த்தவள் பெருமூச்சுடன், 'எனக்கு வீட்ல பேசணும். அவங்க ஒப்புக்கிட்டா கல்யாணம்' என்றாள்.

நான் அவளிடம், சம்பளம் வாங்கி உங்களுக்கு குடுத்துடறேன்னு சொல்லு. இன்னும் அவங்க இருக்க வீடும் தரேன். விஷயம் அவங்களுக்கு சாதகம்னா நிச்சயம்
ஒத்துப்பாங்க 'என்றேன்.
இது தான் அவள் வீட்டு உண்மை நிலை.அவள் இம்முறை கண்ணீரை உள்ளிழுக்க முயற்சி செய்யவில்லை. என்னிடம் இருக்கும் கர்ச்சீப் அவள் கைகளில், அவளது கண்ணீரை துடைக்கும் முயற்சியில்.

இருவரும் அன்றே பிரபலமான துணிக் கடைக்கு சென்றோம். கல்யாணம் அன்று அணிய அவளுக்கு சில பட்டுப் புடவைகள் வாங்கிவிட்டு, எங்கள் முறைப்படி அணிய அவளுக்கு லெஹங்காவிற்கு ஆர்டர் கொடுத்துவிட்டு, எனக்கும் ஆடைகள் தெரிவு செய்தோம்.

என் மனது முழுவதும் வீட்டில் எப்படி சொல்வது என்கிற யோசனை. பெண்ணிடம் இது பற்றி பேச முடியாது. வழக்கமான என் பிடிவாதம். அவள் முகத்தில் கல்யாணம் எனும் சந்தோஷமோ, நிறைவோ இல்லை.

இந்த திருமண பந்தம் என்றைக்கும் நிலைத்து நிற்கும் என்கிற நம்பிக்கை அவளுக்கு தேவைப்படுகிறது. அதை சொல்ல, அந்த நம்பிக்கையை தர முதலில் என் முடிவில் நான் தெளிவாக இருக்க வேண்டுமே!

நகைக்கடையில் அவளுக்காக நான் செய்த செலவை அவள் தடுக்கவில்லை. யாருக்கு எனும் பாவனையில் உட்கார்ந்து வேடிக்கை பார்ப்பவளை என்ன செய்வது?

நான் மாங்கல்யம் வாங்க எத்தனிக்கும் பொழுது தடுத்தவள், "அத மட்டுமாவது நல்ல நாள் பார்த்து வாங்கலாமே "என்றாள். அவள் குரலில் என்ன இருந்தது?

அவள் சொன்னதை கேட்டு, மறுக்க எனக்கு தோன்றவில்லை. ஒரு தோள் குலுக்களுடன் கிளம்பிவிட்டேன்.

என் விஷயம் சொன்னதும் மொத்த குடும்பமும் கிளம்பி வந்து இதோ, இங்கு பெங்களூரு வீட்டில்.

நீண்ட வாக்குவாதம், அம்மாவின் அழுகை, அப்பா அண்ணா சித்தப்பா என்று வீட்டு ஆண்களின் அதிரடி மிரட்டல் இவற்றை ஒரு வழியாக கடந்து திருமண ஒப்புதல் வாங்கி ஆயிற்று. என் போக்கு அவர்களுக்கு தெரியும்.

சியா வீட்டில் நான் சொன்னவற்றை அவள் அப்படியே ஒப்பிக்க, பணக்கார முதலாளியுடன் தன் மகள் திருமணம் என்று அவர்களும் ஒப்புக்கொள்ள, இரண்டு மாதங்களில் திருமணம் என்று நிச்சயம் ஆகிற்று.

அப்பாவுக்கு அதற்குள் என் மனம் மாறுமா என்று பார்க்க வேண்டும்.

சியாவை பார்த்து என் அம்மாவுக்கு ஒரு புறம் கோவம்.. என்னை மயக்கிவிட்டாள் என்று என் வீட்டு பெண்கள் அவளை பேசினாலும், சியா ஒன்றும் பதில் சொல்லவோ எதிர்த்து பேசவோ இல்லை.

அதில் என் பாட்டிக்கும் அம்மாவுக்கும் கொஞ்சம் ஆறுதல். பெண் குடும்பம் செய்ய தகுதியானவள் தான் என்று முடிவு சொல்லிவிட்டு கிளம்பி விட்டார்கள்.

ஆனால், பிறகும் கூட சியா முகத்தில் வேதனையின் சாயல் தான்.

திருமண நாள் வரை.
 

Subageetha Sundararajan

Sugee
Vannangal Writer
Team
Messages
130
Reaction score
39
Points
63
கொடிமலர் 11

திருமண நிச்சயம் முடிந்து, சியாவும் ஷ்யாமும் திருமணத்திற்கு தயாராகிவிட்டார்கள்.
நடுவில் இரண்டு முறை ராம் உடனான சந்திப்பு. ராமிற்கு இவர்களது திருமண நிச்சயதார்த்தத்திற்கு வர முடியாத நிலை. சரியாக அவன் அந்த நேரத்திற்கு மும்பை
செல்ல வேண்டிய நிர்பந்தத்தில் மாட்டிக் கொண்டான். அது மட்டும் காரணம் என்று சொல்ல முடியாது. எத்தனையோ முறை அவன் திருமணத்திற்கு கேட்டுக் கூட நந்தனா பிடி கொடுக்காமல் நழுவிக் கொண்டே இருக்கிறாள். அவள் மனதில் என்ன நினைத்திருக்கிறாள் என்பது ராமிற்கு புரியவில்லை.

இவனை தேடி தேடி ஓடி வந்து காதல் செய்த நந்தனாவை தேடி
களைத்து விட்டான் ராம்.அவளை எப்படியாவது திருமண உறவுக்குள் அழைத்து வந்துவிட அவன் மனம் துடிக்கிறது.

சமீப காலமாக அவள் சரியாக இவனுடன் பேசுவதும் இல்லை. தன் வசம் இழந்த நிலைமையில் தன்னை அவளிடம் ஒப்பு கொடுத்துவிட்டு ஏங்கி தவித்துக் கொண்டிருந்தான் அந்த காதலன்.

'அவளுக்கு தன் மீதான காதல் குறைந்து விட்டதா 'என்ற சந்தேகம் ராமின் மனதை அரிக்க தொடங்கியது. இந்த மனோநிலைமையில் மற்றவர்கள் வீட்டு சந்தோஷத்தில் கலந்து கொண்டு, முழு மனதாக அதில் ஈடுபட முடியும் என்ற நம்பிக்கை அவனுக்கு இல்லை. அதே சமயம் வீட்டில் இருந்து அழைப்பு வரவும் இதுதான் தருணம் என்று கிளம்பி விட்டான்.

அவன் வீட்டிற்கு போன சமயம், அவனது சித்தப்பா மகள் 'தான் ஒருவரை காதலிப்பதாக வந்து நிற்க' பையனின் குடும்பம் ராஜஸ்தான் மாநிலத்தில் கோலோச்சும் தொழில் குடும்பம். ராமின் குடும்பத்தை விட எவ்வளவோ மடங்கு பணக்காரர்கள்.ராஜ வம்சாவளி.இரு தரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட ராமின் வீட்டில் அவன் சித்தப்பா மகளுக்கு திருமணம் பேசி முடிக்கப்பட்டது. தங்கையின் திருமண நிச்சயம் அவன் மனதில் குதூகலத்தை ஏற்படுத்தியது. தானும் கூட எப்படியாவது சீக்கிரம் நந்தாவிடம் பேசி திருமணத்திற்கு ஏற்பாடு செய்தாக வேண்டும் என்று மனதிற்குள் குறித்து வைத்துக் கொண்டான்.

இப்பொழுது வீட்டில் சம்மதிப்பார்களா என்று பயமோ, தயக்கமோ அவனுக்குள் இல்லை. காதலிக்கிறேன் என்ற பெண் இன்று கண்ணாமூச்சி ஆடுவது தான் அவனுக்கு பயத்தை விதைத்திருந்தது. அவன் யோசிக்காமல் விட்ட ஒன்று, இன்றுவரை அவனுக்கு நந்தாவின் குடும்பம் பற்றிய பரிச்சயம் இல்லை என்பதை.

மிக
எளிதாக இவள் இல்லை என்றால் மற்றொருவள் என்று மனதால் கூட அவனால் நினைக்க முடியவில்லை. இது சரி வராது என்று தயங்கி ஓடியவன் தான் அவன். ஆனால் அவளைத் தொட்ட பிறகு, அவளுடன் கணவன் மனைவி போல் அந்தரங்க உணர்வுகளை பகிர்ந்து கொண்டவனால் மற்றொரு பெண்ணை அவனால் தன் வாழ்க்கைக்குள் நுழைய அனுமதிக்க முடியுமா என்று அவனுக்கு அவனே பலமுறை கேள்வி கேட்டுக் கொண்ட பிறகும் அவனது விடை முடியாது என்பதுதான்.

இது எது பற்றியும் கவலைப்படாமல் நந்தனா தனது வேலைகளில் தன்னை முழுமனதோடு ஈடுபடுத்திக் கொண்டு விட்டாள். அவளைப் பொறுத்தவரை அவளை துரத்தும், மோசமான நிலை, குடும்பத்தில் அவளை ஒதுக்கி வைத்த அவளது பிறப்புக்கான ரகசியம், இவற்றையெல்லாம் படிக்கட்டுகள் ஆக்கி மிக உயரிய நிலையை அடைய வேண்டும் என்று ஆக்ரோஷமான போராட்ட நிலையில் அவள். அவள் மனது சரி தவறு என்பதற்கு எல்லாம் இப்பொழுது இடம் கொடுப்பதில்லை.

அதற்காக எந்த விலை கொடுப்பதற்கும் அவள் தயார் தான்! தன் காதலை பலியிடவும் அவள் தயங்க போவதில்லை. முன்பெல்லாம், ராம் அவனைப் பார்க்காத நேரம் துக்கத்தில் கலந்து கொண்டு இருந்தது. ஆனால் வேலைக்குச் சென்ற பிறகு, அவளது எண்ண ஓட்டம் முழுமையும் வேறு விதத்தில் மாறிவிட்டது. அவளது அழகை ஆராதிக்கும் சில ஆண்களுக்கு, கண் பார்வையால் தூண்டில் போடும் ஆண்களுக்கு அவள் பதிலடி கொடுப்பதற்கு பதிலாக, அந்தப் பார்வையை தனக்கு
சாதகம் ஆக்கிக் கொள்வதற்கான வழிமுறைகளை யோசிக்க ஆரம்பித்து விட்டாள். இன்றுவரை அவளை நெருங்கும் வாய்ப்பை மட்டும் அவள் யாருக்கும் தரவில்லை. ஒரு மாயக்கோட்டை அவளே போட்டிருந்தாள். அதை அவளே மீறினால்தான் உண்டு.

தனிமை நேரங்களில் எல்லாம் அவள் ராமை பற்றி ஒரு நொடியாவது சிந்தித்து இருக்க வேண்டும். ஆனால் காதல் என்ற நிலை இப்பொழுது அவளைப் பொறுத்தவரை ஈர்ப்பு என்ற நிலையில் வந்து நிற்கிறது.

ராம் தன்னை புரிந்து கொண்டு விலகி சென்று விடுவான் என்று நந்தனா நினைத்துக் கொண்டிருக்க, அந்த விடிகாலைப் பொழுது வாசலில் இருக்கும் காலிங் பெல் அவளை அழைத்தது.

இந்த நேரத்தில் யார் என்று யோசனையுடன், கனவில் பதிந்திருக்கும் கண்ணாடி வழியாக வெளியே பார்த்தவளுக்கு அதிர்ச்சி தான் இருந்தது. காரணமாக நின்று கொண்டிருந்தவன் ராம். முகம் முழுவதும் சந்தோஷத்தை பூசிக்கொண்டு வாயிலில் நிற்பவனை , என்ன என்று சொல்லி சரி செய்வது என்ற யோசனையுடனே கதவை திறந்தாள் நந்தா.

அவனை உள்ளே வருவதற்கு அனுமதி அளித்த ஒரு முகத்தில் சத்தியமாய் அவனைக் கண்டுவிட்ட சந்தோஷம் இல்லை. சிந்தனையில் அவனுடன் ஹால் வரையிலும் வந்தவள் அவனை உட்கார சொல்லிவிட்டு தனது அறைக்குச் சென்று காலை கடன்களை முடித்து விட்டு வந்தாள்.

காபி குடித்தவன்,
" இன்னிக்கு ஆபிஸ் லீவு போட முடியுமா நந்தா.. " என்று அவள் முகத்தை பார்த்தான்.

அவளுடன் இருக்க வேண்டும் தனிமையை இனிமையாக்கி கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பு அப்பட்டமாக அவன் குரலில் தெரிந்தது.

சட்டென்று முகத்தை மாற்றிக் கொண்டவள், "சாரி டார்லிங், நீ முன்னமையே சொல்லி இருந்தா லீவு ட்ரை பண்ணி இருக்கலாம். பட் இப்போ நாட் பாசிபிள். நீ ஒன்னு பண்ணு... நீ ஃப்ரெஷ் ஆயிட்டு இங்கேயே ஸ்டே பண்ணிக்கோ. ஈவினிங் மீட் பண்ணலாம் "
என்ற வள் அவசரமாக அடுக்களைக்குள் புகுந்து கொண்டாள்.
அவசரகதியில் வேலைகளை முடித்துவிட்டு அவள் அலுவலகம் கிளம்பும்போது, அவள் மீது ராமிற்கு பரிதாபம் தான் வந்தது.

" என்னோட ஆபீஸ்லே ஜாயின் பண்ணிக்கோன்னு நான் தான் சொல்றேனே!இந்த பொண்ணு ஏன் கேக்க மாட்டேங்குறா... என்று மனதிற்குள் கடிந்து கொண்டவன் வெளியில் வாய் திறந்து எதுவும் சொன்னான் இல்லை.

கொஞ்சம் கொஞ்சமாகத்தான் அவளைத் தன் வழிக்கு கொண்டுவர வேண்டும் என்று நினைத்துக் கொண்டவன், பெண் கிளம்பும் முன் அவளை கட்டி அணைத்து, இதழ் ஒற்றுதலில் மெல்ல அவளை கரைத்தான்.

அலுவலகத்திற்கு தனது காரை ஓட்டிக்கொண்டு செல்பவளுக்கு, கால்கள் நடுங்கியது .ராம் எதற்கு வந்திருக்கிறான் என்று ஓரளவு புரிந்து விட்டது. அவனுக்கு தேவையான பதிலை சொல்வதற்கு அவளால் முடியாது.
"கல்லூரி கால காதலை இவ்வளவு சீரியஸாக எடுத்துக் கொண்டு இவன் ஏன் இங்கு வந்து என்னை படுத்துகிறான் என்று நினைத்துக் கொண்டாள். "
நிஜத்தில் அவனது காதல் இப்பொழுது அவளுக்கு தேவை இருக்கவில்லை.

அவனை சுற்றுச்சுற்றி வந்து வளைத்ததும், கேரளாவில் அவர்களுக்குள் நடந்த விஷயங்களும், இறுதியாக நெற்றி உச்சியில் தேவியை சாட்சியாக வைத்து, அவன் வைத்து விட்ட குங்குமம் கூட அவள் நினைவு அடுக்குகளில் இல்லை.

எதை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறோம் என்று தெரியாமல் அவளது ஓட்டம். அவனது காதல் உண்மை தான் என்று நம்பும் அளவிற்கு மனிதர்கள் அவளிடம் பழகவில்லை.அவளை மனிதர்களை நம்பவும் அவள் சூழ்நிலை அனுமதிக்கவில்லை.

அவளைப் பொறுத்தவரை திருமணம் என்பது, வெறும் உடல்களின் கூடலுக்கான சமூக லைசென்ஸ். அது இல்லாததால் எதுவும் தவறாகி போய்விடப் போவதும் இல்லை. இது போன்ற நினைவுகள் ஏன் அவளுக்குள் புகுந்தது என்பது கேள்வியே!

தனிமை பழகி விட்டவளுக்கு ராமுடனான உறவு பாரம். இதை எப்பாடுபட்டாவது அவனுக்கு புரியவைக்கவேண்டும் என்று முடிவு செய்துக்கொண்டாள்.

ஆனால் அலுவலகத்தில், அவள் முற்றும் எதிர்பார்க்காத ஒன்று நடந்து விட்டது. அவள் செய்து கொடுத்திருந்த ப்ராஜெக்ட், சந்தையில் பெரும் வரவேற்பை பெறும் என்று அவள் நினைத்திருக்க அதுவோ படு பாதாள தோல்வி அடைந்திருந்தது. நிறுவனத்தில் அதுவரை அவளை ஆகா ஓகோ என்று புகழ்ந்து கொண்டிருந்த பலர் அவள் இருக்கும் பக்கத்திற்கு கூட
அன்று சொல்லவில்லை. அவளது டிபார்ட்மென்ட் ஹெட் அவளை கூப்பிட்டு, வேலையை ராஜினாமா செய்து விட்டு செல்லும்படி பணித்தார். அடுத்தடுத்த நிலைகளை எட்டிப் பிடிக்க வேண்டும் என்று நினைத்திருந்த பெண்ணுக்கு இது பலமான அடிதான்!
சிறிது நேரம் தனது இடத்திலேயே மௌனமாய் அமர்ந்திருந்தவள், அடுத்து என்ன என்று யோசிக்க ஆரம்பித்து விட்டாள்.

இந்தப் தோல்வியை அவளால் ஒப்புக்கொள்ள இயலவில்லை. எங்கு எது காரணமாக அமைந்திருக்கும் என்று அவளுக்கு தெரியவில்லை. ஆனால் மோசமான தோல்வி. ஜீரணிக்க முடியவில்லை.

இவ்வளவு உழைத்தும் ஏன் இப்படி என்று மறுகிய பெண்ணுக்கு தெரியவில்லை துரோகத்தின் நிறம் வேறு என்று.

நந்தநாவின் வீட்டில் இருந்தபடிக்கே லேப்டாப் வைத்துக்கொண்டு தனது வேலைகளில் மூழ்கி போனான் ராம். அவள் சமைத்து வைத்த உணவு போறவில்லை என்று ஆன்லைன் ஆர்டரில் தருவித்து உண்டுவிட்டு மீண்டும் வேலையில் மூழ்கியவனுக்கு மீண்டும் இரவு ஏழு மணிக்கு திடீரென ஞாபகம் வர பிரிட்ஜ்ல் இருப்பவற்றை வைத்து இரவு உணவுக்கு ஏற்பாடு செய்தான்.

வேலைக்கு சென்ற பெண் இன்னும் வரவில்லை. இரவு மணி ஒன்பதை நெருங்க அவளை அலைபேசியில் மீண்டும் மீண்டும் அழைத்து பார்த்து சோர்ந்தவனாக, அவளை தேடி கிளம்ப எத்தனிக்கையில் கார் பார்க்கிங்கில் அவளது வாகனம் தனது தரிப்பிடத்தில். அதன் அருகில் சென்று பார்த்தவனுக்குள் மிஞ்சிய கோவம் தான். தன்னிலை கெட்டு முழு போதையில் நந்தா. எப்படி வந்து சேர்ந்தாள் என்றே ராமுக்கு விளங்கவில்லை. ஒருவழியாக அவளை லிப்ட்டில் ஏற்றுவதற்குள் அவனுக்கு ஆயாசமாகிவிட்டது.

நந்தா இதை எப்பொழுது பழகிக்கொண்டாள் எண்டு தெரியவில்லை. என்ன ஆயிற்று இவளுக்கு என்று தவித்துப்போனான் ராம். ராம் குடும்பத்தை பொறுத்தவரை குடி, புகை போன்றவற்றை பயன்படுத்தினால் வீட்டை விட்டு தள்ளி வைக்கும் அளவுக்கு கட்டுப்பாடுகள் உண்டு. இது, இன்று இவளை இப்படி பார்க்க நேரிடும் என்று அவன் நினைக்கவில்லை.

அவளது அறைக்கு கூட்டி சென்று அவளுக்கு இரவு உடை அணிவித்தவன் சூடாக ரசம் சோறு கரைத்து வந்து அவளுக்கு புகட்டினான். அவன் செய்வது ஏதும் தெரியாத நிலையில் பெண்.

ஒரு முடிவுக்கு வந்தவனாக ஹாலில் சோஃபாவில் படுத்தவனுக்கு இரவு உறக்கம் காணாமல் போயிட்டு. எங்கே சறுக்கினேன் என்று யோசித்தவாறே இரவை கழித்தவனுக்கு தெரியாது, இது நிரந்தரம் ஆகும் ஆபாயம் உண்டு என்று.

 

Subageetha Sundararajan

Sugee
Vannangal Writer
Team
Messages
130
Reaction score
39
Points
63
கொடிமலர் 12வரும் வழி எங்கும் நந்தனாவுக்கு யோசனை தான்! அவளால் என்ன செய்ய முடியும் என்பது அவள் அளவில் புதியது. இததனை வருஷங்களில் பாடமாக படிப்பது வேறு, அதை செயல்படுத்தும் பொழுது முற்றிலும் வேறாக இருக்கும் சூழ்நிலை அவளை காயப்படுத்தியது. தோல்வி என்றதும் அத்தனை பேரும் கழன்றுகொண்டது வேறு அவளை கலவரப்படுத்தியது. தன்னால் முடியாதா என்று சுய அலசலில் ஈடுபட்டவளுக்கு தொழிலில் துரோகம் என்று ஒன்று உண்டு என்பது புரியாமல் போய்விட்டது. அவள் தயார் செய்த மார்க்கெட் மாடலை அவள் டீம்மில் உள்ள தருண் இவர்களது போட்டியாளர்களுக்கு விற்று காசாக்கிவிட்டான்.

டீம் மீட்டிங் நடக்கும் பொழுது, நல்ல பிள்ளையாய்," நாங்க ஏற்கனவே சொன்னோம் சார்,இதெல்லாம் சரி வராதுன்னு.நந்தனா தான் கேட்டுக்கல "என்று பந்தை அவள் புறமாய் தள்ளிவிட்டு தருண் தப்பித்துவிட்டான்.இதெல்லாம் அறியாத பெண்ணுக்கோ, தான் செய்தது முற்றும் தவறு என்ற எண்ணம். ஏற்கனவே,தனது வீட்டினரால் காயப்பட்டவள் மனதில் தோன்றியது இதுதான்!"எனக்கென்று ஒரு அடையாளம் என்றுமே கிடையாதா...தோல்விகள் என்னை மீண்டும் மீண்டும் கீழே தள்ளுவது ஏன்?"

ஒருவாறாக வீட்டுக்கு வர முயற்சி செய்த பெண்ணின் கண்ணில் பட்டது அந்த பார். இதற்கு முன்பே ஹைதராபாத் வந்த புதிதிலேயே அவள் பழகி விட்டாள் .முழு போதையில் தள்ளாடியவளை,அவளுடன் வேலை பார்க்கும் ஒருவன் கொணர்ந்து அவள் அடுக்கக கார்பார்க்கிங் வரை விட்டு சென்றான். அவளது நிலையை அவன் பயன்படுத்த்திக்கொள்ளாமல் இல்லை. அவனுக்கு தேவையானவை *** போதையில் தள்ளாடும் நந்தனாவிடம் தாராளமாகவே கிடைத்தது.துக்கம் என்னவென்றால் இவை எதையும் உணரும் நிலையில் பெண் இல்லை. பெண்கள் குடிப்பது தவறா என்று வாதத்தை முன் வைப்போமாயின், நிச்சயம் தவறில்லை., சில விஷயங்கள் நடந்தால் தாங்கிக்கொள்ளும் எண்ணம் இருப்பின். இவை போன்ற பல விஷயங்கள் நிகழலாம். எந்த நொடியிலும் தன்னைக் காத்துக்கொள்ள பெண்கள் சுய நினைவுடன் இருப்பது அவசியம். எல்லாம் முடிந்தபின் மன்றத்தில் வந்து போராடி என்ன பயன்?நம் கை மீறி நடக்கும் சம்பவங்களுக்கு நாம் பொறுப்பல்ல....அதில் பெண்ணின் தவறும் இல்லை. நாகரீகம் என்னும் போர்வையில் பெண்கள் டிஸ்கோதே செல்வதும் ,சிகரெட் பிடிப்பதும், மது அருந்துவதும் ,அவர்களை தவறான பாதையில் கொண்டு நிறுத்திவிடும்.அவள் காரை பார்க்கிங் ஏரியாவில் பார்த்த ராமின் மனதில் சொல்லொணா க்லேசம் . நந்தாவிடம் அவன் இதுபோன்ற ஒன்றை எதிர்பார்க்கவில்லை. அவளது ஆடையின் நிலையே சொன்னது,அவளுக்கு நடந்தது என்னவென்று. நெற்றிப்பொட்டை வேகமாக தேய்த்துவிட்டுக் கொண்டவனுக்கு,மனது ஆட்டம் காண ஆரம்பித்தது. இவளை என்ன வார்த்தை சொல்லி புரிய வைப்பது என்று தவித்தான்.அவளை காரிலிருந்து இறக்கி, லிப்ட்டில் ஏற்றி அவள் பிளாட்டில் கொண்டு சென்று விடுவதற்குள் அவனுக்கு வியர்த்துப் போயிற்று. லிப்ட்டில் அவனுடன் பயணித்த அபார்ட்மெண்ட் செக்ரெட்டரி இவர்களை பார்த்த பார்வையில் அவ்வளவு ஏளனம்!"போடா ,உங்களுக்கு வேற வேலை இல்ல .".என்று கத்தவேண்டும் போல ஒரு ரௌத்திரம்.ராமிடம்.ஆனால்,வாளா இருந்துவிட்டான் . அவன் சூழலில் இது அவனுக்கு புதியது. ஒரு அறையின் நடக்கும் விஷயங்கள் அடுத்த அறையில் .தெரியக்கூடாது என்பாள் ராமின் பாட்டி . இன்றோ..அவனுக்கு தலை குனிவாகத் தோன்ற, லிப்ட் எப்போது தளத்திற்கு அவரும் என்றாகிவிட்டது.

அடுத்தநாள் காலை....நிதானமாக பத்து மணிக்குமேல் எழுந்த நந்தாவுக்கு தலைவலி மண்டையை பிளக்க, அப்படியே படுக்கையில் உட்கார்ந்துவிட்டாள் . அவள் அருகில் இருக்கும் மேசையில்,எலும்மிச்சை சாறு வைக்கப் பட்டிருக்க, அப்போதுதான் ராம் அங்கு இருப்பதே அவளுக்கு உறைத்தது . அவளிடம் எந்த குற்ற உணர்ச்சியும் இல்லை. ராமை வெகு சாதாரணமாக எதிர்கொள்ளும் துணிவு அவளுக்கு உண்டு.

அவள் எழுந்த சப்தம் கேட்டு பத்து நிமிஷங்கள் கழித்து வந்த ராமை ஒரு புன்னகையுடன் எதிர்கொண்டாள் பெண். இந்த புன்னகைக்காகவே அவளை என்றும் விடமுடியாது என்று நினைத்த்துக்கொண்டவன்,இன்று எல்லாவற்றையும் பேசிவிட எண்ணம் கொண்டான்.

ஜூஸை குடித்தவளுக்குள் லேசான பதட்டம். ராம் என்ன கேட்பதற்காக இவ்வளவு மெனக்கட்டு இங்கே வந்திருக்கிறான் என்பது தெரியும்.இப்போதோ வேலையும் போய் விட்டது. இனி,ஏதாவது செய்தாக வேண்டிய நிலை. ம்ம்ம்.,ஒரு வேளை அவன் தன்னுடன் என்னை அழைத்து செல்ல தயார் என்றால்.... வேறு வழி இல்லை.கிளம்ப வேண்டியதுதான் என்று முடிவு செய்துக்க கொண்டாள் .
அவள் கண் முன்னே,அவளது செலவுகள் வரிசையாக நின்றது. வேலை கிடைத்த வேகத்தில் "வீட்டில் இனி என் செலவுகளை நானே பார்த்துக் கொள்வேன்" என்று சொல்லி ஆயிற்று. அவர்களும் இவளையும்,இவள் நிலையையும் பெரியதாக கண்டுகொள்ளவே இல்லை. கையில் இருக்கும் பணம் கொண்டு ஒரு மாதம் சமாளிக்கலாம்.அதற்குள் வேலை கிடைக்காவிட்டால்,என்ற கேள்வியே அவளை மிரட்டியது.

இத்தனை குழப்பத்திலும்,அவளை முழுதாக விரும்பும் அவள் கணவன் ராம் ஞாபகம் அவளுக்கு வரவில்லை. அவனிடம் கேக்கலாம் என்றோ,அவன் தனக்காக எதுவும் செய்வான் என்றோ அவளுக்குத் தோன்றவே இல்லை.அதாவது ,அவள் வட்டத்தில் ராம் இல்லை. இது போன்ற நிலையில் ராம் மட்டும் அவளை இவ்வளவு சீரியஸாக காதலித்து என்ன பிரயோஜனம்?பத்து நிமிஷங்கள் கழித்து,அவள் சுதாரித்துக்கொள்ள நேரம் கொடுத்து உள்ளே வந்தவனுக்கு அவள் இன்னும் பல் கூட துலக்காமல் மீண்டும் கட்டிலில் சாய்ந்து அமர்ந்திருந்த நிலை ஆச்சர்யமாகவும் எரிச்சலாகவும் இருந்தது. அவன் மனம் தடுக்க முடியாமல் தன அம்மா பாட்டி இருவரையும் நோக்கி பிரயாணப்பட்டது. நினைவு தெரிந்த நாள் முதல் அவன் வீட்டுப் பெண்கள் விடிகாலையில் எழுந்து வீட்டு வேலைகளை கவனித்துவிட்டு சாமியறையில் விளக்கேற்றி பூசைகள் செய்துவிட்டு வீட்டு ஆண்களுடன் அலுவலகம் சென்று மதியம் வரை நிர்வாக விஷயங்களை கவனிப்பார்கள். கடந்த பத்து வருஷங்களாகத்தான் தாத்தாவும் பாட்டியும் நிர்வாகத்தில் இருந்து விலகிக்கொண்டார்கள் . ஏன் , அவன் அத்தை,சித்தி எல்லோருக்கும் நிறுவனத்தில் பங்கும் உண்டு, நிறுவன அலுவல்களை கவனிக்கவும் செய்வார்கள்.வீட்டு நிர்வாகம் மட்டும் தெரிந்தால் போறாது என்பாள் பாட்டி .ஆனால்,இங்கோ நந்தனா நடந்துகொள்ளும் விதமே வேறாக. ராமுக்குத்தான் எப்படி தன்னை சமாளித்துக்கொள்வது என்று புரியவே இல்லை. வீட்டு நினைப்பில்தான் நந்தனாவை தன அலுவலகத்தில் சேரச் சொல்லி அவன் கேட்டதே!

இவனின் யோசனை படிந்த முகத்தை பார்த்த நந்தாவுக்குள் விவரிக்க முடியாத எண்ணங்கள். வெளியே காண்பித்துக்கொள்ளாமல் "சொல்லு ராம்,ஏதோ கேக்கணும்னு ஹைட்ரபாத் வரைக்கும் வந்துட்டே,இன்னும் எதுவும் சொல்லலைன்னா நா என்னனு நினைக்க" என்று மெதுவே பேச்சை ஆரம்பித்தாள்."நீ,...சாரி... உனக்கு ஹாங்கோவெர் பரவாயில்லன்னா சீக்கிரம் ரெடி ஆகி வா, சாப்பிட்டு பேசலாம்" என்று முடித்துக்கொண்டவன் மேலே அங்கே நிற்கவில்லை .அவனுக்குள் அசூசையாக உணர்ந்தான். இந்த மனோ நிலையில் வார்த்தைகளை கொட்டினால் அள்ள முடியாது என்று தன்னை நிலைப்படுத்திக்கொண்டவன் பேசுவதற்கு தன்னை தயார் செய்துக்கொண்டான்.தன்னிடம் குழைந்து பேசும் ராம் இல்லை இங்கு நிற்பவன் என்று புரிந்தவளாக தன்னை வெகுவாக சீர்படுத்திக்கொண்டு வேகமாக தயாராகி வந்தாள் . சாப்பிடும் பொழுது பேச முயன்று தோற்றவள் பொறுமை பறந்து செல்ல ஆரம்பித்தது.எப்போதுமே நந்தாவுக்கு பொறுமை குறைவுதான். அவள் குணத்திற்கு நேர் எதிர்குணம் கொண்டவன் ராம். முடிந்தவரை பொறுமையாய் இருப்பவனுக்கு கோவம் எப்போதாவது வரும்.அனால்,அதை தாங்கும் சக்தி நிச்சயமாய் எதிரில் இருப்பவருக்கு இருக்காது.

மீண்டும்,நந்தா பேச்சை ஆரம்பித்தாள்.,"எஸ் ராம்,இதுக்கு மேல நீ என்ன சொல்ல போறே,உன் வாயிலேந்து முத்து எப்போ உதிரும்னு வெயிட் பண்ண என்னால முடியாது. சோ ,ப்ளீஸ்...என்றவளை உணர்ச்சியற்று பார்த்தவன் கேட்ட முதல் கேள்வி, "உனக்கு சரக்கு அடிக்கிற பழக்கம் எப்போலேந்து ?"பதில் சொல்ல அவளும் தயங்கவில்லை. இங்க வந்த பிறகு முதல்லே பார்ட்டி ல ட்ரின்க் பண்ண ஆரம்பிச்சேன். அண்ட் இப்போவெல்லாம் மனசு சரியில்லைன்னா....பட் அம் நாட் எ ரெகுலர் ட்ரிங்கர்,பிலீவ் மீ"என்று முடித்துக்கொண்டாள்."ஸோ ,உனக்கு நேத்து மனசு சரி இல்ல ரைட் ? அப்போ நா இங்க இருக்கேனே,என்கிட்ட வந்து சொல்லணும்,நா உனக்கு சப்போர்ட் பண்ணுவேன்னும் தோணல..அப்படித்தானே...""நோ ராம், ஆபீஸ்ல வேல போய் ஒரு டோவ்ன் ஸ்டேட் ல இருந்தேன். வர வழியில பார்குள்ள போய்ட்டேன்...சாரி,நீ வந்திருக்கனே எனக்கு ஞாபகம் இல்ல..." அவள் கண்கள் சொன்ன நிஜத்தில் அவன் மனது காய பட்டது.ஓகே,தென் இப்போ என்ன செய்யுறதா இருக்கே நந்தா..."""தெர்ல ராம்...இன்னொரு வேலை தேடணும் ஐ கேன் மேனேஜ் "என்றவள் முகம் இப்போது சோகத்தை காண்பிக்க , இப்போதும் அடிபட்டவன் ராம்தான்!"என் கூட பெங்களூரு வரியா ...அங்கே என்னோட ஆபீஸ் ல ஜோஇன் பண்ண இஷ்டம் இருக்கா?----ராம் ."

நந்தா எதிர்பார்த்தது அவன் திருமணம் பற்றி கேட்பான் என்று. ஆனால் இப்போது அவனுக்கு இருக்கும் அதிர்ச்சியில் திருமணம் பற்றிய யோசனை அவனுக்கு வரவில்லை.ஆனால், பெண்ணை இப்படியே விடவும் முடியாது, அவனுக்கு நேரம் தேவைப்பட்டது.
சிறிது யோசித்தவள்,"ம்ஹும்...ஓகே.வரேன்.பட் எனக்கு இடம் தேடணும்.என்னால ஹாஸ்டல் ரூம்னுலாம் இஷ்டம் இல்ல. சோ ஏதாவது அபார்ட்மெண்ட் பாக்கலாம் என்று முடித்தவளை கோபத்துடன் பார்த்தவன்,வேறு ஒன்றும் சொல்லாமல்,தான் தங்கி இருக்கும் அடுக்ககத்தில் இன்னொரு பிளாட் எடுத்துக்கொண்டான்.இருவருக்கும் அதற்குப்பின் நேரமே இல்லை.வீட்டை மாற்றவேண்டும் என்று எல்லாவற்றையும் பார்த்து பேக் செய்துகொண்டாள் நந்தா. காரில் ஏற்றி எடுத்து செல்லவேண்டியவை தவிர்த்து மற்றவற்றை பேக் செய்ய ஆட்கள் வந்தார்கள். துரித கதியில் வேலை முடிய,அன்று மாலையே அவளது பொருட்களை சுமந்த வாகனம் பெங்களூரு நோக்கி பிரயாணம் செய்ய,அடுத்த நாள் வரை ஒரு ஹோட்டல் ரூமில் தாங்கிக்கொண்டு மேற்கொண்டு செய்யவேண்டிய சில வேலைகளை ராமின் துணையுடன் நந்தா செய்து முடித்தாள் .இருவரும் டிரைவர் போட்டுக்கொண்டு காரில் பெங்களூரு செல்ல, ஹைதராபாத் வாழ்க்கையை வெறுத்தவளாக நந்தா காரில் கண்மூடி சாய்ந்து இருந்தாள் . அவள் மனதில் ஓடும் எண்ணங்களை அவளைத்தவிர வேறு யார் அறிவார்?

அவள் மனதை படிக்க முயன்று தோற்றுப்போன ராம்,தானும் கண்மூடி அமர்ந்துக் கொண்டான். இந்தப் பெண்ணை எப்படி தேற்றுவது என அவன் மனம் யோசித்துக்கொண்டிருந்தது. வழியில் நிறுத்தி உணவு வாங்கி சாப்பிட்டு ,ஹைவே யில் கார் பறந்தது. அவன் மனமும் ஏதோ ஒரு வகையில் நிம்மதியை உணர்ந்தது. அவன் கைப்பொருள் கிடைத்த அமைதி அவனுக்குள்..
 
Last edited:

Subageetha Sundararajan

Sugee
Vannangal Writer
Team
Messages
130
Reaction score
39
Points
63
ராம் நந்தா இருவரும் பெங்களூரு வந்து சேர்ந்து இன்றுடன் ஒருமாதம் ஓடிவிட்டது. முதலில் ராமுடன் அவன் வீட்டில் இரண்டு நாட்கள் தங்கிக்கொண்டு தனது பிளாட்டை சரி செய்துக்கொண்டவள் மூன்றாம் நாள் அங்கிருந்து கிளம்பிவிட்டாள். அவளது நடத்தை அவனுக்குள் கோவத்தை தூண்டியது.

"நந்தா நாம கல்யாணம் செஞ்சுக்கிட்டாச்சு உனக்கு அது ஞாபகம் இருக்கா..." ---ராம் .

கண்களை மூடி யோசித்தவள்,ம்ம்...இருக்கு ராம். நீ என்னோட நெத்தியில குங்கும் வச்சியே ,ஆனா,உங்க வீட்டுல இதை கல்யாணம்னு ஒத்துப்பாங்கன்னு நினைக்கிறியா...."?

அவள் கேள்வியில் உள்ள ஞாயம் சுட, எப்படி இருந்தாலும் என்னை பொறுத்தமட்டில் அது கல்யாணம் தான் நந்தா..என்றவனை வினோதமான பார்வை பார்த்த நந்தா ,"அப்போ ஒன்னு பண்ணு ,சீக்கிரமா நம்ம விஷயத்தை உங்க வீட்டுல சொல்லிடு. அப்புறம், நம்ம கல்யாணத்தை ரெஜிஸ்டர் பண்ணலாம். எல்லாம் சரியான பிறகு எனக்கும் வேற ஆப்ஷன் இல்ல..இங்க உன்னோட வந்து தங்கிடுவேன்"என்று சொன்னவளின் குரலில் நக்கல் வழிந்தது.

தலையை வேறுபக்கம் திருப்பிக்கொண்டான் ராம்.அவள் குத்திவிட்டு போன ஆப்ஷன் எனும் சொல் அவனிடம் கசந்த முறுவலை ஏற்படுத்தி இருந்தது.

அவளது ஒட்டாத தன்மை,ராமின் மனதில் நான் ஏன் இவளை காதலித்தேன்?இவளுக்கு என்னிடம் கொஞ்சம் கூட ஈடுபாடு இல்லையா என்று மீண்டும் தன்னை கேள்விக் கேட்டுக்கொண்டான். அவள் விலகும்பொழுது இவனுக்குள் வலித்தது.

இருவரும் காலை நடை பயிற்சி ஒன்றாக செய்வார்கள். அங்கேயே பார்க் பெஞ்சில் அமர்ந்து கொண்டு தினசரி நாளிதழ்களை படிப்பார்கள். மார்க்கெட் நிலவரம் பற்றிய விவாதிப்பு இருவருக்குள்ளும் நடக்கும். மீண்டும் தங்கள் பிளாட்டுக்கு வந்துவிடுவார்கள். மற்றபடிக்கு காதலிப்பவர்கள் என்று சத்தியம் செய்தால் கூட நம்ப இயலாது. அந்த அளவுக்கு நந்தா தன்னை அவனிடமிருந்து தூர நிறுத்திக்கொண்டாள். உண்மையை சொல்ல வேண்டும் என்றால், தொலைவில் இருக்கும் விஷயம்தான் நம்மை அதிகம் வசீகரிக்கும். அந்த விஷயம் பெண்ணுக்கு நன்றாக தெரிந்திருந்தது. ராமுக்கு அது புரியவே இல்லை.

ராமின் சித்தப்பா சித்தி இருவரும் அவனை பார்க்கவென்று அவனது இருப்பிடம் வரும் சமயம் கேட் அருகே வரும்பொழுது நந்தாவை பார்த்தார்கள். ராமுடன் ஏற்கனவே மும்பை வீட்டுக்கு நந்தா சென்ற பொழுது நண்பர் குழாமுடன் எடுத்த போட்டோவை அவன் சித்தி பார்த்திருக்கிறாள்.

அந்த ஞாபகத்தில் நந்தாவை அழைத்துப்பேசி,தனது சந்தேகத்தை ஊர்ஜிதம் செய்துக்கொள்ள அந்த பெண்மணி முயல ஈயம் பூசியது போலவும் இல்லாதது போலவுமாக ஒரு பதிலை தந்துவிட்டு சென்றுவிட்டாள் நந்தா. அவள் மனது சில கணக்குகளை போட்டதுவும் உண்மை.

ராமிடம் மேற்கொண்டு விசாரிக்க அவன் சித்திக்கு இஷ்டம் இல்லை. இந்த விஷயத்தை எப்படி கையாள்வது என்று அவர் யோசித்துக்கொண்டிருக்க,ஆண்கள் இருவரும் அலுவலக விஷயம் பேச ஆரம்பித்துவிட்டார்கள். ராமின் வீட்டிலிருந்து அவனும் அவன் சித்தப்பா சித்தியும் நேரே அலுவலகம் கிளம்பும் ஏற்பாடு.

அங்கே அலுவலகத்தில் நந்தா, வேலைக்கு விண்ணப்பித்துவிட்டு காரிடாரில் காத்திருக்க, "ஓஹ் ,இந்த பெண் வேலைக்காக இங்கே வ்ந்திருக்கிறாள் போலும்"என்று தன்னையே சமாதானம் செய்துகொண்டாள் ராமின் சித்தி. அடுத்தடுத்த சுற்றுகள் முடிந்து,கடைசியாக ராமின் சித்தியை தான் சந்திக்க வேண்டும். அவரது கீழ்தான் நந்தா பணிபுரிய வேண்டும்.

நந்தாவின் நேர்காணல் நல்லபடியாக முடிய, அவளும் வேலைக்கு சேர்ந்துவிட்டாள் . நிறைய கற்றுக்கொள்ள அவளுக்கு அங்கே வாய்ப்பு கிடைத்தது. அலுவலக சமயத்தில் ராம் அவனை பார்ப்பதே அரிது. அந்த அளவுக்கு அவனது வேலை அவனை இழுத்துக்கொள்ளும். நந்தாவும் அவனிடம் எந்த சலுகைகளும் எதிர்பார்க்கவில்லை. ராமின் சித்திக்கு தான் இருவரையும் வைத்து சந்தேகம் கொண்டது தவறு என்ற எண்ணத்திற்க்கே வந்துவிட மேற்கொண்ட குழப்பங்கள் எதுவுமில்லாமல் சென்றது நாட்கள்.

ஒருவேளை,தனது எண்ணத்தை முதலிலேயே அவர் வீட்டாருடன் பகிர்ந்து கொண்டிருக்கலாம். ஏனோ அது நிகழவில்லை.

பெங்களூரு சீதோஷ்ண நிலை நந்தாவுக்கு மேலும் மெருகூட்டியது. தினமும் காலையில் சந்திக்கும் நந்தாவை விட்டு தனியே இருப்பது ராமுக்கு விரகத்தை கூட்டியது நிஜம். இரண்டொரு முறை அவளை அலுவலகத்தில் யாருடனாவது பார்த்திருக்கிறான். அவளது சிரிப்பை கேட்டிருக்கிறான். அவள் ஏன் தன்னிடம் இணக்கமாக இல்லை என்ற கேள்விதான் அவனுக்குள் எழும் .


ஷ்யாம் சியா திருமணம் வெகு அருகில் வர, அந்த வார ஞாயிற்று கிழமை நந்தாவை அழைத்து கொண்டு ஷாப்பிங் வந்துவிட்டான் ராம். இதுவரை ஷ்யாம் சியா இருவரையும் நந்தாவுக்கு அறிமுகம் செய்ய அவனுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.ஆனால் திருமணம் என்பது பெரும் நிகழ்வு.அங்கே அழைத்து சென்றால் நந்தாவுக்கு திருமண ஆசை வரலாம் என்று ஏதோ குழப்பமான எண்ணங்கள் அவனுக்குள்.

நந்தாவுக்கு பொருத்தமாக ஆடை அணிகலன்கள் என்று ராம் வாங்கிக் கொடுக்க, அவற்றுக்கான பணத்தை தானே செலுத்தினாள் நந்தா. ராம் முகம் எரிச்சலைகாண்பித்தாலும் ,உன்கிட்ட பிரீஃயா வாங்கிக்க எனக்கு உரிமை இல்லை,அண்ட் இஷ்டமும் இல்ல ராம் என்றுவிட்டாள் நந்தா.

அவளது வார்த்தைகள் அவனை சரியாக தாக்கியது. வீட்டில் இவளை பற்றி பேசுவதற்கு முன் தங்கையின் திருமணம் முடியவேண்டும் என்று இத்தனை நாட்களாக அமைதியாக இருக்கிறான். மாப்பிள்ளை இப்போது லண்டனில் தொழிற்பயிற்சிக்காக சென்றிருப்பதால் இன்னும் திருமணம் மூன்று மாதத்த்தில் என்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.இந்த சமயம் தனது காதல் பற்றி பேசப்போக,வீட்டில் நிச்சயம் பிரச்சனையும் குழப்பமும் உண்டாகும் என்று அவன் நினைத்திருக்க,நந்தாவின் பேச்சோ அவனை எப்போதும் சீண்டி விட்டுக்கொண்டிருக்கிறது.

வழக்கம் போல் ராம் அமைதியாக இருந்துவிட்டான் . வீட்டில் பேசுவதற்கு முன் நந்தா என்ன நினைக்கிறாள் என்று தெரியவேண்டும் என முடிவு செய்துக்கொண்டான்.

ஷ்யாம் சியா திருமண நாளும் வந்தது. லீலா பேலஸ் போன்ற மற்றுமொரு பிரம்மாண்ட ஹோட்டலில் திருமணம் . ஷியாம் வீட்டு சம்பிரதாயப்படி இரவு முஹூர்த்தம் .விடிகாலை வரை திருமண நிகழ்வுகள். மணப்பெண் அலங்காரத்தில் சியாவை பார்த்து ஷ்யாமால் வேறெங்குமே பார்க்க முடியவில்லை.அவன் பார்வை அவளை விட்டு அகலாமல் நிலைத்திருக்க ,ஷ்யாமின் வீட்டில் இருப்போருக்கு புரிந்து விட்டது. ஷ்யாம் ஷியாவை எவ்வளவு விரும்புகிறான் என்று.அவன் விருப்பம்தான் பிரதானம் என்று மீண்டும் தங்களை தேற்றிக்கொண்டு சந்தோஷமாகவே திருமண நிகழ்வுகளில் தங்களை நுழைத்துக்கொண்டார்கள்.இதற்காக அவர்கள் விசேஷ முயற்சி எதுவும் செய்யவில்லை. தானாகவே அது நிகழ்ந்தது.

ஆனால், சியாவின் பெற்றோரை அவர்கள் தங்கள் அருகில் அனுமதிக்கவும் இல்லை.

மணமகன் ஷ்யாமின் இந்தப் பார்வை சியாவுக்கு புதியது.அவள் அறிந்த ஷ்யாம் இவனல்ல...தன்னிடம் கறாராக பேசி,பணம் பற்றி பயம் கொள்ளச் செய்து...திருமணம் செய்துக்கொள்ள சம்மதம் வாங்கியவன் இவனா...'இவன் பார்க்கும் பார்வை என்னுள்ளே ஏதேதோ உணர்வுகளை தூண்டுகிறது' என்று தனக்குள்ளேயே பேசிக்கொண்டாள் சியா. திருமண நிகழ்வுகளில் தன்னை வெகுவாக
பொருத்திக்
கொண்டான் ஷ்யாம். அவனது இந்த பரிமாணம் சியாவுக்கு புதிராக இருந்தது.

ஷ்யாம் மனதில் அவனும் அறியாமல் சியாவுக்கான இடம் ஸிம்ஹாசனத்துடன் தயார். இது காதல் தான் என்று அவன் இன்னும் பெயர் இடவில்லை.

சியாவின் பெற்றோருக்கு தலையில் கிரீடம் வைக்காத குறை.இவ்வளவு பெரிய ஆளை தன் மகள் எவ்வளவு எளிதாக மணந்து கொள்கிறாள் என்ற எண்ணம் அவர்களுக்குள். சியாவின் தங்கை ஊர்மிளைக்கோ காதில் புகை வராத குறை...எப்படி இவ்வளவு பெரிய இடம்...இவளை காதலித்து மணக்கிறான் என்ற பொறாமை!
தனக்காக அக்கா கடன் வாங்கியதும், தனது படிப்பை நிறுத்தி குடும்பத்தை தூக்கி நிறுத்தியதோ சத்தியமாக அவள் நினைவு அடுக்குகளில் இல்லை.

இன்னோர் நபருக்கும் சொல்லன்னா எரிச்சல். அவள் நந்தா. வெறும் திருமண சடங்குகளில் ராமுடன் வேடிக்கை பார்க்க வந்தவள். அவள் மனதில் முதல் பார்வையிலே சியா மீதான பிடித்தமின்மை. ஏன் எதற்கு என்று தெரியாத வெறுப்பு. இன்னும் சொல்லப்போனால், தன்னுடைய பொருளை பறிக்க வந்தவள் போல் பார்த்து வைத்தாள் சியாவை.

ஒரு முறை நந்தாவின் கண்களை நேர்கோட்டில் பார்த்த சியாவின் முகத்தில் குழப்பம்.. இந்த பெண் என்னை ஏன் இப்படி பார்க்கிறாள் என்று யோசித்தவளுக்கு ஒன்றும் புரியவில்லை.

ராம் சியா -ஷ்யாம் திருமணத்தை ரசித்து பார்க்க, நந்தாவுக்கோ அவன் சியாவை ரசிப்பதாக தோன்றியது.

இந்த பெண் இவ்வளவு அழகாகப் பிறந்து தொலைத்திருக்க வேண்டாம். அத்தனை ஆண்களும் அவளையே பார்க்கிறார்கள். என்ன மாதிரி வளர்ப்போ என்று சியாவை மனதில் திட்டினாள்.

கிளம்பும் முன் சியாவின் பின்புலம் பற்றி தகவல் சேகரித்தவளுக்கு, சியாவை பார்த்து இளக்காரமும் சேர்ந்து கொண்டது.

விடை பெரும்பொழுது, ஷ்யாமிடம் சொல்லிகொண்டவள் சியாவை திரும்பிக் கூட பார்க்கவில்லை.

ஷ்யாம், சியாவிடம் கேட்டான், "உனக்கும் ராம் கூட வந்த பொண்ணுக்கும் ஏதாவது மிஸ் அண்டர்ஸ்டாண்டிங் வந்துடுச்சா "என்று...

சற்றே விழித்தவள் "நா அந்த பொண்ணை இன்னிக்கு தான் பர்ஸ்ட் டைம் பாக்குறேன் ".. என்றவளுக்கு குரல் உள்ளே போய்விட்டது.
ஆறுதலாக அவளை தோளில் அணைத்துக்கொண்டான் ஷ்யாம். சியா மனதிற்கு இதமாக இருந்தது.

தங்கள் திருமண உறவில் காதல் கண்டிப்பாய் மலரும் என்ற நம்பிக்கை அவளுக்கு வந்துவிட்டது. அவளை தோழமையாய் அணைத்திருந்த ஷ்யாம் மனதில் கள்ளுர ஆரம்பித்தது. புரியாமலே அதை சந்தோஷமாக ஏற்றுக்கொண்டான் ஷ்யாம்.


திரும்ப காரில் வரும் பொழுது நந்தாவிடம் துளியும் சிரிப்பு இல்லை. ராம் அதை கண்டுகொள்வதாகவும் இல்லை. சியாவை நந்தா பார்த்து வைத்த பார்வை முதல் திரும்ப கிளம்பும் பொழுது நந்தா நடந்து கொண்ட முறை வரை ராம் கவனித்திருந்தான். அங்கே வைத்து நந்தாவிடம் பேச அவனுக்கு விருப்பம் இல்லை. சியாவின் முக மாறுதல் வரை பார்த்தவனுக்கு கோவம் எல்லை கடந்தது. வார்த்தைகளை கொட்ட வேண்டாம். முதலில் அமைதி படுத்திக்கொண்டு பேசலாம் என்றுதான் இந்த மௌனம்.

தன்னை என்ன என்று கூட கேட்காமல் வரும் ராம் மீது நந்தாவுக்கு வெறுத்து போனது.

சியா மீது ராமுக்கு நாட்டம் இருப்பது போல் அவளுக்கு ஏன் தோன்றியது? மனதில் சியாராம் என்று சொல்லி பார்த்துக்கொண்ட நந்தாவுக்கு காந்தியது. சியா திருமணம் ஆனவள் என்பதை மறந்தவளுக்குள் வெறி ஏறியது.

ராமை காதலால் அல்ல.. திருமண உறவால் தன்னுடன் இறுக்கி வைக்க முடிவு செய்தவள் அதற்காக எப்படி அவனிடம் ஆரம்பிப்பது என்று யோசிக்க... இவளுடன் எப்படி எனக்கு காதல் ஏற்பட்டது என்ற சிந்தனை மேகங்களுடன் ராம் காரை ஓட்டிக் கொண்டிருந்தான்.

போகும்போது இருந்த மனோனிலை இருவருக்கும் இல்லை. பொருந்தா திருமணம் இருவரையும் எப்படி மாற்றபோகிறதோ...

சியாவிடம் ஷ்யாம் எப்போது காதலை சொல்வானோ?...

 

Subageetha Sundararajan

Sugee
Vannangal Writer
Team
Messages
130
Reaction score
39
Points
63
கொடிமலர் 14

தங்களது அடுக்ககம் வந்து சேர்ந்ததும் கார் பார்க்கிங் சென்று தனது காரை தரிப்பிடத்தில் விட்டவன் ஸ்ட்யரீங் மீது சாய்ந்து விட்டான் ராம். மனம் முழுவதும் அன்றைய நாளின் திருமண நிகழ்வுகள் ஆக்கிரமிப்பு செய்ய, நந்தா பற்றி அவனால் எந்த முடிவும் எடுக்க முடியவில்லை.

நந்தா தனது குடும்பம் பற்றி எதுவும் பகரவில்லை எனினும் அவனுக்குள் ஒரு ஊகம் உண்டு.
ஆனால், இவ்வளவு வருஷங்களில் அவன் பார்க்காத நந்தாவின் இந்த முகம்... அது அவன் சற்றும் எதிர்பார்க்காதது. இவ்வளவு தூரம் தரம் தாழ்ந்து நடந்து கொள்ள முடியுமா?

சியாவின் முகம் ஒருசில முறை அவன் கண்முன் வந்துசெல்ல இமைகளை மூடி திறந்து தன்னை சுதாரித்துக் கொண்டான். அவனால் இதிலிருந்து வெளியே வரமுடியவில்லை..

சியா மீது நந்தாவிற்கு என்ன கோபம் என்று கூட ராமால் புரிந்து கொள்ள முடியவில்லை

ஒருவழியாக காரிலிருந்து வெளியே வந்தவன் தனது அறைக்கு செல்ல பிடிக்காது வாசலில் இருக்கும் பார்க் சென்று அமர்ந்து கொண்டான். அவனுக்கு தனிமை அத்துடன் கூடிய அமைதி தேவை பட்டது. தனிமை கிடைத்தது அன்றி அவன் நினைக்கும் அமைதி கிடைக்கவில்லை.

இன்னொரு புறம் இன்று காலை தினசரி பத்திரிகைகளில் வந்திருந்த ஷ்யாம் சியா திருமண புகைப்படத்தில், அருகருகே ஜோடியாய் நின்று கொண்டிருந்த ராம் நந்தா புகைப்படமும் வெளிவர அடுத்தடுத்த நாட்களில் நாளிதழ்களின் பேசும் பொருளாக ஆனது ராம்- நந்தா ஜோடி.

ஒன்றுமே தெரியாதது போல, வெகு அமைதியாக இருந்தாள் நந்தா. அவள் இந்த விஷயத்தை எப்படி ஆரம்பிப்பது என்று தனக்குள் யோசித்துக் கொண்டிருந்தது போக, இப்பொழுது விதி தானாகவே இடம் கொடுத்து விட்டது.
ராமுக்கு தனது மீதான கோபம் அவளுக்குத் தெரியும். இரண்டு மூன்று நாட்களாக அவனது பாரா முகத்தை ஒரு அலட்சிய பாவனையுடன் தான் கடந்து கொண்டிருக்கிறாள் நந்தா. இந்த நிலையில் பத்திரிகைகள் அவர்களது உறவுக்கு கட்டியம் கூறிக் கொண்டிருக்க, ராமின் வீட்டிலோ இந்த பிரச்சனை பூதாகரமாக வெடித்தது.
ராமின் சித்தியும் சித்தப்பாவும் நேரடியாகவே, ராமிடம் இது பற்றி கேட்டு விடலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது, நந்தாவிடம் எதற்க்கும் ஒரு முறை பேசிப் பார்க்கலாம் என்று தோன்றி விடவே, ராமன் சித்தி அந்த பொறுப்பை தனது ஆக்கிக் கொண்டாள்.

அந்த வார இறுதியில், ஒரு பிரபலமான ஹோட்டலில் நந்தாவுடனான சந்திப்பு!

நிச்சயம் அந்த சந்திப்பு, சந்தோஷத்தை தரவில்லை. நந்தா தன்னைப் பற்றி பெருமையாக பேசிக் கொண்டு அழைத்து விட தன் குடும்பத்தை பற்றி ஒரு வார்த்தை சொல்லவும் அவள் விருப்பப்படவில்லை.
அவளது பேச்சு தோரணையில் ராமை வளைத்து விட்டோம் என்று அகங்காரம் அதிகமாகவே தெரிந்தது.

பத்திரிகைகள் வரை இந்த விவகாரம் பரவி விட்டது என்ற மமதையில் அவள் பேசிக் கொண்டிருக்க, ராமின் சித்தியோ ஒரு வார்த்தை கூட, நந்தாவை மட்டம் செய்து பேசவில்லை. இன்னும் சொல்லப்போனால் நந்தாவை பேசவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

ராமின் குடும்பத்திற்கு, நந்தா தங்கள் குடும்பத்திற்கு ஏற்றவளா... என்றும் முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும். ராமின் விருப்பத்திற்கு மட்டும் செவி சாய்க்க முடியாது.

பேச்சு முடியும் தருவாயில் தான் நந்தா கண்டு கொண்டாள், தனக்கு எதிரில் அமர்ந்திருக்கும் பெண்மணி, தன்னை மட்டும் பேசவிட்டு அமைதியாக இருக்கிறாள் என்று.

சற்று நேரம் குடும்ப விஷயங்களுக்கு பிறகு, இருவரும் அமைதியாக உணவு அருந்தி விட்டு தங்கள் இருப்பிடத்திற்கு செல்வதற்கு ஆயத்தம் செய்து கொண்டார்கள்.

அலுவலக ரீதியில் நந்தாவிற்கு, ராமின் சித்தியை நன்கு உணர்ந்தவள். இப்போதும், குடும்பத்திற்கு வர இருக்கும் மருமகளிடமும் கூட அதே தோரணையை காட்டுவதாக எண்ணி கொண்டாள்.

ராமின் சித்தி லீலாவதியை பொருத்தமட்டில், அவர்கள் நந்தாவை புரிந்து கொண்டு விட்டார்கள். அலுவலகத்தை பொருத்தமட்டில் அவள் மிகச் சிறந்த திறமை சாலி. அதே திறமையை குடும்ப உறவுகளில் காட்டினால்?

அன்று இரவு மும்பைக்கு பேசும்போது லீலாவதி தனது மனதில் இருப்பதை கொஞ்சம் கூட தயக்கம் இல்லாமல் எதையும் ஒழிது மறைவு இல்லாமல் எல்லாவற்றையும் சொல்லிவிட்டார்.
ராமி ன் சித்தப்பாவிற்கு அதை எண்ணம் தான்!

ஆனாலும், ராமின் சித்தப்பாவை பொறுத்தவரை, வெறும் ஒரு சில நிகழ்வுகளை மட்டும் வைத்துக் கொண்டு அந்த பெண்ணை ஒதுக்குவதை விட,அவளைப் பற்றி இன்னும் தெரிந்து கொண்டால் மேல்.. அதற்கு தங்கள் அலுவலகத்திற்காக வேலை செய்யும் துப்பறியும் நிறுவனத்தை நாடினால் சரியாக இருக்கும் என்று யோசனை சொன்னார்.

அவர் சொன்ன யோசனை சரியாக தோன்றியதால் மொத்த குடும்பமும் அடுத்த கட்ட விஷயங்களுக்கு முனைய தொடங்கியது.

இன்னொரு புறம், ராமின் சித்தப்பா அவனிடம், பத்திரிக்கை செய்திகளுக்கு அவன் விளக்கம் தேவை என்று கொஞ்சம் அழுத்தம் கொடுத்து கேட்டுவிட்டார். அவனிடமிருந்து கிடைத்தது முழு மௌனம் தான். ஏற்கனவே இந்த உறவுக்குள் இருக்கும் பல சிக்கல்களை எண்ணி தவித்துக் கொண்டிருக்கும் அவனுக்கு மனமோ ' ஆம், இல்லை' என்று எந்த பதிலையும் தெளிவாக தர இயலாமல் தவித்தது.

அவளை விட்டு விட முடியாது என்ற ஒரு பக்கமும், வாழ்நாள் முழுவதும் பிரச்சனைகளில் கழிப்பதை விட இப்பொழுதே விட்டுவிட்டால் பரவாயில்லை என்று இன்னொரு புறமும் தர்க்கம் செய்து கொண்டிருந்தது அவனது மூளை. காதல் கொண்ட மனமோ, அப்போது நடந்தவற்றிர்க் கெல்லாம் யார் பொறுப்பு எடுத்துக் கொள்வது... காதல் என்று சொல்லி அவளை ஏமாற்ற பார்க்கிறாயா... என்று அவனிடமே கேள்வி கேட்டது.

ஜெயித்தது மனம் தான்!
"எஸ், சித்தப்பா.. அவளை நான் காதலிக்கிறேன்.. அப் கோர்ஸ் கல்யாணம் செஞ்சிக்க வீட்ல பேச வைட்டிங் "என்று வராத புன்னகையை இழுத்து பிடித்த புன்னகை முகமாக பேச முயன்றான்.
அவனது முயற்சியை புரிந்து கொண்ட
பெரியவரும், எஸ் டியர் உங்க சித்தி அவகிட்ட பேசி பாத்தா. பட் லீலாவ பொறுத்த வரைக்கும் அந்த பொண்ணு உனக்கு சரி இல்லை.
அவரது மொழி கேட்ட ராம் உடல் இறுகியது.

குரல் வெளியே வராமல்,"தென், வாட் யூ ஹேவ் டிசைடேட் " என்றவனை ஒரு பாவப்பார்வை பார்த்துவிட்டு, "ம்ஹும், நாட் யட். உன்னையும் யோசிக்கணுமே... சோ வி தாட்..என்று அவர் சிறிது இடைவெளி விட,

"வாட் சித்து.. ப்ளீஸ் டெல் மீ.."என்றான் படபடப்புடன் ராம்.
அவனது இந்த பதட்டம் பெரியவருக்கு புதியது. எப்பேர்பட்ட நிலைமையிலும் தன்னை இழக்காதவன் தனது காதலுக்காக துடிப்பதை பார்த்து அவருக்கு கஷ்டமாக இருந்தது.

"நோ மை பாய்... ஜஸ்ட் அவளோட பாக்ரௌண்ட் பத்தி உன்கிட்ட கேட்டு தெரிஞ்சுக்கலாம்னு நினைச்சேன். நமது டிடெக்டிவ் ஏஜென்சி வச்சும் விசாரிக்க யோசிக்கிறோம். எல்லாம் சரியா வந்தா உன் தங்கச்சி கல்யாணத்துக்கு பிறகு உன்னோட கல்யாணம் நடக்கலாம். அதர்வைஸ்... என்று நிறுத்திவிட்டார் தனது வாக்கியத்தை முடிக்காமலே!"

ராம் தனக்கு அவளைப் பற்றிய விஷயங்கள் எதுவும் தெரியாது என்று சொல்வதற்கு கூச்ச பட்டவனாக " நோ சித்தப்பா என்கிட்ட கேட்காதீங்க நீங்க விசாரிங்க...என்று விட்டான். "

அவனது மனதில் என்ன ஓடுகிறது என்று புரிந்து கொள்ள முடியாமல் அவனை நேர்கொண்ட பார்வை பார்த்தவருக்கு, அவன் மனதின் ஓட்டம் புரியவில்லை.

ஒரு பெரு மூச்சு விட்டவராக, "ஓகே... நொவ் ஐ அம் லிவிங். வில் மீட் டுமாரோ "
என்று விடை பெற்று விட்டார்.

இருவருக்கும் நடந்த உரையாடலை மட்டும் வைத்து அவனால் எந்த முடிவிற்கும் வர முடியவில்லை. சித்தி என்ன சொல்லி இருப்பாள் என்று அவனுக்கு தெரியும். சமீப காலமாக அவனுக்கே உறுத்தும் விஷயம் இவ்வளவு வருடம் அனுபவம் மிகுந்த சித்திக்கு புரிவது கடினமில்லை.

எப்படி ஆயினும் அவளை விட முடியாது என்று மனதில் தீர்மானித்தவனாக, வீட்டில் இருந்து தனது மடிக்கணினியை உயிர்பித்து அலுவலக பணிகளை கவனிக்கலானான்.
மனதிற்குள் பத்திரிகைகள் மீது அவனுக்கு கோபம் கோபமாய் வந்தது. அடுத்தவர்களின் அந்தரங்கத்திற்குள் நுழைந்து அவர்களைப் பற்றி பேசுவதும் அவர்களைப் பற்றி புரளி பரப்புவதற்கான இவர்களுக்கு இந்த அதிகாரத்தை யார் கொடுத்தது?
புல்ஷிட் என்று மனதிற்குள்ளேயே திட்டிக் கொண்டான்.
இந்த நேரத்தில் பத்திரிகைகளுக்கு எதிராக ஒரு வார்த்தை கூட பேச முடியாது.
அதேசமயம் அவர்களது விஷயத்திற்கு நுழைவதையும் அவனால் அனுமதிக்க முடியாது.

ஒரு பக்கம் ராமின் தங்கையுடைய திருமண வேலைகள் ஜருவராக ஓடிக்கொண்டிருக்க இன்னொரு புறம் ராமிற்கான நந்தா பற்றிய குடும்ப விஷயங்கள் சேகரிக்கவும் அவர்கள் தாமதிக்கவில்லை.

அந்தப் பெண்ணை வீட்டின், பெண்களுக்கு நிச்சயம் பிடிக்காது தான்!அதே சமயம் மகனின் விருப்பத்தை ஒதுக்கி தள்ளவும் அவர்களுக்கு விருப்பமில்லை. தங்கள் கணிப்பு படி இல்லாமல் பெண் நல்ல குணாவதியாக இருக்கலாம்.வெறும் சந்திப்புகளோ, அலுவலகத்தில் அவள் நடக்கும் விதமோ மட்டும் அவளை அறிந்து கொள்ள போறாது.

ஒருவேளை அந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டால் தன் மகன் சந்தோஷமாக வாழ்வான் என்றால் அதற்காக அவர்கள் அந்த திருமணத்தை ஒப்புக்கொள்ள தயாராக தான் இருக்கிறார்கள். அதே சமயம்,அவனது விருப்பத்திற்காக மட்டும் பார்த்துக் கொண்டு, தவறாக இந்த திருமணத்தை முடித்து வைத்துவிட்டு தன்மகன் ஆயுள் கைதியாய் கஷ்டப்படுவதையும் அவர்கள் நிச்சயம் விரும்பவில்லை.

மொத்தத்தில் சொல்ல வேண்டுமென்றால் தங்களது விருப்ப வெறுப்புகளை ஒதுக்கி வைத்து விட்டு தான் நந்தா பற்றிய விஷயங்களை சேகரிக்க தொடங்கினார்கள்.

ஆனால் விதி வலியது. நந்தா பற்றி கிடைத்த அவர்களுக்கான விவரம் ஒன்றுமே நன்றாக இல்லை. நந்தாவின் உயரம் படிப்பு, அறிவு, திறமை, அழகு , என்று இவையெல்லாம் எவ்வளவு நன்றாக இருக்கிறதோ அவ்வளவு தூரம் அவரது பின்புலம் இவர்கள் யோசித்த அளவிற்கு இல்லை. இன்னும் சொல்லப்போனால் அறிந்து கொண்ட விவரங்கள் அவர்களுக்கு அதிர்ச்சியை தான் கொடுத்தது.

அப்படி என்ன விவரத்தை அவர்கள் தெரிந்து கொண்டிருப்பார்கள்?
சரி...ஆனால் இந்த விவரங்கள் மட்டும் ராம் நந்தா இருவருக்குமான பந்தத்தை முடிவு செய்துவிடுமா...?

இன்னார்க்கு இன்னார் என்று எழுதி வைத்தான் இறைவன் அன்று!

 

Subageetha Sundararajan

Sugee
Vannangal Writer
Team
Messages
130
Reaction score
39
Points
63
கொடிமலர் 15

லீலாவுடன் பேசும்போது 'தன்னை ராம் தீவிரமாக காதலிப்பதாக கூறிய நந்தா மறந்தும் தான் அவனை விரும்புவதாக சொல்லவில்லை. அது பெரிய அளவில் லீலாவை யோசிக்க வைத்தது. ஒரு விதத்தில் இதுவும் நந்தாவின் வெற்றி தான். தாங்கள் இருவரும் பேசியது பற்றிய விஷயங்கள் நிச்சயம் ராமின் காதுக்கு போகாது. அந்த தைரியம் அவளுக்கு.
லீலாவிடம் ஒருவாறான எண்ணத்தை உருவக படுத்த ஏதுவாக!


இவை எதுவும் தெரியாமல் ராம் நந்தா பற்றிய சிந்தனைகளை ஓரமாக வைத்து விட்டு தீவிரமாக வேலையில் தன்னை ஆழ்த்திக் கொண்டான்.

நந்தா தினமும் வழமை போல் வேலைக்கு வருகிறாள். எப்போதும் அலுவலக தளத்தில் இருவரும் பேசிக்கொள்வது கிடையாதே!

ஆனாலும், லீலாவும் ராமின் சித்தப்பாவும் இருவரையும் கண்காணித்தார்கள். விஞ்சியது குழப்பம் மட்டும்!

இதைத்தான் நந்தா எதிர்பார்த்தாள். லீலாவின் இவள் மீதான பிடித்தம் எவ்வளவு தூரம் என்பதும் அன்றைய பேச்சின் முடிவில் தெரிந்துவிட்டது.
மீதம் உள்ள குடும்ப உறுப்பினர்கள் அவ்வளவு தூரம் பச்சை கொடி காட்டுவார்கள் என்று நம்ப முடியாது. ராமையும் அவன் மீதான பிடியையும் விட... ம்ஹும் இப்போதைக்கு ஆகாத விஷயம். எனில் மீதம் இருப்பது ஒரே வழி அது?
********************
ஷ்யாம் தன்னுடைய உணர்வுகளை காட்டத் தெரியாமல் சியாவிடம் தவித்தான். அவளின் அருகில் செல்லவும் அவனுக்குள் தயக்கம். பகல் பொழுது முழுவதும் உறவுகள் புடை சூழ அவர்கள் பக்க சாம்பிரதாயங்களில் புது மனைவியுடன் திளைத்தவனுக்கு இரவில் அவளுடன் தனிமையில் என்பது புதுவிதமாக தாக்கியது. பெயரிடா உணர்வு. அவனுக்கு அது பிடித்தும் இருந்தது.

சியா மனதில் ஷ்யாம் மனது போல் இன்றி வேறு வகையான அலைக்கழிப்பு. மனதிற்கு பிடித்த காதலன்... அவனுடனான இந்த திருமண உறவு. அவளுக்கு சந்தோஷமா என்றால் நிச்சயம் அவளிடம் பதில் இல்லை. "காதல் இல்லை, ஆனால் திருமண உறவில் இணைவோம், நீ என்னிடம் கடன் வாங்கி இருக்கிறாய் பணத்தை திரும்ப தா... இல்லை என்றால் " அவன் வாக்யத்தை அன்று முடித்திருக்கவில்லை.. இன்று அவனுடைய மனைவியாய் மங்கள நாண் அணிந்து, அவன் உச்சியில் இட்ட குங்குமம் வைத்துக்கொண்டு. அவளுக்கு அவனுடனான இந்த உறவில் கிடைக்கும் பலன் என்ன?
'என்ன என்னிடம் எதிர்பார்க்கிறே ஷ்யாம்' என்கிட்ட கணவன் ங்கிற உரிமை எடுத்துப்பியா '.. மனதில் அவளிடம் ஆயிரம் கேள்விகள் உண்டு அவனிடம் கேட்க.

மனைவியா உன்கிட்ட நடந்து கொள்ள எதிர்பாக்கறியா ஷ்யாம்? அப்போ எனக்கு உண்டான மரியாதை அண்ட் உரிமை.. அதுவும் உன்கிட்ட..
அதையும் குடுப்பியா நீ ?
நடந்த கல்யாணம் உண்மை கல்யாணம் என்னை பொறுத்தவரை..நீ என்ன யோசிக்கிறே, இது பொம்மை கல்யாணம் இல்லையே?"

திருமணம் என்றதும் தோன்றாத பயம் இப்போது அவளை மறைந்து நின்று தாக்கும் எதிரியாய் கூறு போட, யாரிடமும் சொல்ல திராணி அற்று மவுனம் காத்தாள்.

அவள் திருமணம் முடிந்த பிறகும் வேலைக்கு போய் மாதா மாதம் சம்பளம் வரும் என்றதும் அவளது பெற்றவர்கள் வாயை மூடிக்கொண்டு இந்த திருமண நாளை எதிர்பார்த்ததும், ஆரவா ரித்ததும் நெஞ்சுக்குள் கசந்தது என்றால் அதை சரியாக புரிந்து வைத்திருக்கும், அதைக்கொண்டு காரியம் சாதிக்கும் கணவனின் சாதுர்யம் அடிவரை அவளை எரித்தது . சில சமயங்களில் அதீத புரிதல் சங்கடம் தான்.
"ஸோ, இங்க பணம் தான் எல்லாமே இல்லீயா... அது தானே இங்கே இவ்ளோ பிளே பண்ணுது. நா இங்கே உன் பக்கத்துல உன் வைப் னு நிக்க காரணம்?"

'ம்ஹுன்.. பட் ஐ ஹவ் அ டவுட் நீ உன்னோட வட்டத்துல தேடாம என்ன எதுக்கு சுஸ் பண்ணே.? எனிதிங் பிஹைன்ட் ' அவள் மனம் எல்லாவற்றையும் ஆராய்ச்சி பார்வையில் யோசித்தது. விடை சொல்ல வேண்டியவனுக்கு இவள் கேள்விகள் போய் சேரவே இல்லை. வெறும் கடனுக்காக தன்னை அவன் திருமண உறவுக்குள் இழுத்து வர வேண்டிய கட்டாயம் என்ன என்ற யோசனை அவன் திருமண உறவுக்கு கேட்ட அன்றில் இருந்து அவளை இம்சிக்கிறது.

இதோ இன்று இருவருக்குமான முதல் இரவு. தனது வீட்டில் தான் என்றுவிட்டான் ஷ்யாம். அவன் அலுவலகத்துடன் சேர்ந்த அவனது பங்களா விழாக்கோலம் பூண்டு புது மணப்பெண்ணாய் நாணி நிற்க, சியாவோ கலக்கம் சுமந்து கொண்டு அடுத்த கட்டத்தை நோக்கி மணப்பெண் அலங்காரத்துடன்.

வீட்டு வாசலில் படியில் வைக்கப் பட்டிருந்த அரிசியை காலால் உதைத்து உள்ளே வந்தவளுக்காக ஒரு தாம்பாலத்தில் சிவப்பு நீர் வைக்க பட்டிருக்க அதை கால்களால்
தோய்து வீட்டிற்குள் அடி எடுத்து வைத்தவளை கண் கொட்டாமல் பார்த்து கொண்டிருந்தான் மணமகன்.
சாம்பிராதாயங்கள் முடிந்த பிறகு, ஒரு வழியாக இரவு உணவுக்கு இருவரையும் அருகருகே அமர்த்தி வைக்க ஷ்யாம் மற்றவர்கள் செய்யும் கேலிகளை ரசித்து கொண்டே சியாவை பார்வையால் கபாலளீ கரம் செய்தான். ஷ்யாமின் மாமன் மகன்ஷ்யாமை சியாவுக்கு ஊட்டி விட சொல்ல அதில் முழுவதும் சிவந்தாள் சியா.

ஷ்யாம் இனிப்பை மட்டும் இல்லாமல் தனது தங்க தட்டில் வைத்திருக்கும் எல்லா
பதார்த்தங்களையும் அவளுக்கு ஊட்டிவிட அங்கிருந்து ஓடி விடும் நிலையில் பெண். அவளது முகம் சொல்லும் சேதிகளை படித்தவனுக்கு மனதுள் உற்சாகம். சுற்றி இருப்போரின் ஆர்ப்பரிப்பும்,
ஆரவாரமும் அருகில் முழு ஒளியுடன் சியாவும் அவனுக்குள் தான் இவளது கணவன். எனக்கு திருமணம் ஆகி எனக்கே எனக்காய் ஒருத்தி என்ற எண்ணத்தை அவன் மனதில் ஆழ பதித்ததில் உடல் சிலிர்த்தது.

ஆனால், அவன் சியாவை காதலிக்கிறானா என்றால் அதற்கு அவனிடம் விடை இல்லை. இவனது உணர்வுகளை படிக்க முடிந்த வீட்டு பெரியவர்கள் உணர்ந்தது இவனுக்கு சியா மீதான பிடித்தம், காதல், விட்டு கொடுக்க முடியாத உரிமையுணர்வு. சியாவை திருமணம் செய்தால் மகன் நிச்சயம் சந்தோஷமாக வாழ்வான் என்ற நம்பிக்கை, அதனால் தான் அந்தஸ்து பணம் என்று பார்க்க நிறைய இருந்தாலும் அவற்றை தூர நிறுத்தி இந்த திருமணத்தை நடத்தினார்கள். ஆனால், இவற்றை ஷ்யாம் புரிந்து கொள்ளாதது தான் அதிசயம்.

சிறுபெண்ணாய் முதல் வேலை என்று தயக்கமும், அதை மீறிய தனது தகுதிகள் மீது கொண்ட அபார நம்பிக்கையுமாய் இன்டெர்வியூ வந்த அந்த பெண்ணை அன்றே தன்னுடன் வைத்திருக்க ஆசை பட்டுத்தான் அவளுக்கு வேலை கொடுத்தான் ஷ்யாம்.

அவள் வீடு செல்லும் நேரம் தவிர தன்னுடனேயே கூட்டிக்கொண்டு வேலை தளங்களுக்கு செல்வான்.

அவள் கலங்கி நின்ற நேரங்களில் நல்ல தோழனாய் தாங்கியிருக்கிறான்.

இந்த நொடி வரை அவளை திருமணம் செய்துகொள்ள ஏன் முடிவு செய்தான்.. அவளைத்தான் தன் வாழ்க்கை துணையாக்க ஏன் பிடிவாதம் கொண்டான் என்பதெல்லாம் அவனுக்கே புரியாத புதிர்!

அவனை பொறுத்தவரை சியா அவனுடன் வேண்டும் பண தேவைக்காக அவள் போராடுவதும், அழுவதும் கூடாது! இன்னும் சொன்னால், அவள் அழவே கூடாது! அவனுடன் இருக்கும் பொழுது அவளுக்காக எல்லாவற்றையும் அவன் பார்த்துக் கொள்வான். இவை மட்டுந்தான் அவன் மனதில்.

அவளை மிரட்டி சம்மதிக்க வைத்தது பற்றிய கவலைகளோ, சியா இந்த திருமண உறவை எப்படி கொண்டு செல்வாள் என்பது பற்றி எல்லாம் அவனுக்கு அக்கறை இல்லை.

இருவருக்குமான அந்த நாளின் இரவின் தனிமை கிடைத்தது. பெண்ணுக்குள் பதட்டம். சூழ்நிலை கையால்வதில் திணறல்.

அறைக்குள் உட்கார்ந்தி ருந்த ஷ்யாமுக்கு, உள்ளே அழைத்து விடப் பட்ட பெண்ணை புரிந்தது.
இப்போது இதற்கு எல்லாம் அவனை பொறுத்தவரை அவசரம் இல்லை. அவன் விரும்பியது இந்த சியா தன்னுடன் இருக்க வேண்டும் என்று மட்டும்!

" வா.. சியா. போய் ட்ரெஸ் சேங்ச் பண்ணிட்டு சீக்கிரம் தூங்கு. மார்னிங் சீக்கிரம் கிளம்பணும். நம்ம ***ப்ராஜெக்ட் பினிஷிங் ஸ்டேஜ் ல இருக்கு.. என்று சொன்னவன் ஏற்கனவே நைட் சூட்டில் தான் இருந்தான். விந்தையான பார்வையை அவன்மீது வீசிவிட்டு தனது நைட் பாண்ட் சகிதமாக குளியல் அறையில் நுழைந்தவளுக்கு என்ன எதிர்பாத்தேன் நான் என்று தோன்றியது.

வெளியே வந்தவள் கண்டது லேப்டாப் சகிதமான தனது கணவனை மட்டும். அவனிடம் ஆராய்ச்சி பார்வை பார்த்தவளின் காதல் மனம் வழக்கம் போல் அவனை ரசிக்க தொடங்கிவிட்டது. அவளது கள்ள பார்வைகளை ஏற்கனவே அறிந்தவனுக்கு மனதில் உல்லாசம் பொங்க, அவளிடம் ஒரு பார்வை வைத்துக்கொண்டே வேலையை தொடர்ந்தான்! அவளது ரசிக பார்வை அவன் உணர்வுகளை எழுப்ப, இவள் என் மனைவி. அடுத்த கட்டம் நோக்கி பிராயணம் செய்தால் தவறா? என்ற ஹோர்மோன் கேட்ட கேள்வியில் திட்டுக்கிட்டு போனவன், சட்டென சுதாரித்துக் கொண்டு, எழுந்துவிட்டான்.

நின்று கொண்டிருந்தவளின் அருகே சென்று, அவள் கைகளில் இருந்த துணிகளை வாங்கி அருகே இருந்த துணி துவைக்கும் கூடைக்குள் போட்டவன் "இதை இங்கே போடணும் "என்றுவிட்டு, அவள் கன்னத்தை தட்டிவிட்டு, ஒரு குட் நைட்டுடன் உறங்க சென்று விட்டான்.

அவள் அருகில் வந்து படுத்தவளுக்கு அருகாமை ஒருவித நிம்மதியை தர, வெகு காலத்திற்கு பிறகு ஆழ்ந்த தூக்கம்!

காலையில் சியா எழும் பொழுது இருவரும் ஒருவருக்கொருவர் தலையணை ஆகிப் போயிருந்தார்கள். கூச்சம் உந்தி தள்ள, ஷ்யாம் எழுவதற்குள் அவசரமாக எழுந்து அவள் குளியலறைக்குள் புகுந்து கொள்ள, ஷ்யாம் அவளை பார்த்துக்கொண்டு மௌன சிரிப்பில் குலுங்குவதை கவனிக்க மறந்து போனாள்.

விடிகாலையில் வழக்கம்போல் எழுந்தவனுக்கு மனைவியின் தூக்கம் அவள் மீது இரக்கம் கொள்ள வைத்தது. அவள் நிலை புரிந்தவனால், அவளை நகர்த்திவிட்டு தூக்கம் கலைக்க விருப்பம் இல்லை.

அவன் மீது ஒற்றை காலை போட்டுகொண்டு, அவன் கழுத்தின் அடியில் தனது வலது கையை வைத்து, இடது கரத்தால் அவனை இழுத்து அணைத்திருந்தாள் சியா. சுகமான தூக்கம் என்று மனதிற்குள் நினைத்தவன் அவளை அணைத்துக் கொண்டவன் எப்போது மீண்டும் தூங்கினான் என்றே தெரியாது.

சியாவின் அசைவில் எழுந்தவன் கண்டது அவளது பதட்டமும் அத்துடன் கூடிய வெட்கமும் தான்.

அவன் வாழ்வில் வசந்தம் வீசுவதை உணர்ந்தவனுக்கு, அவர்களது உறவை அடுத்த கட்டம் நோக்கி அழைத்து செல்ல உத்வேகம் வந்தது.
இப்படியே நாட்களை தள்ள முடியாது. அவள் வேண்டும், உரிமையாக அவளுடன் உறவு வேண்டும்!

அவள் வருவதற்காக காத்திருந்தவனுக்கு மீண்டும் தூக்கத்தில் கண்கள் மூடிகொண்டது.

திருமண நாளுக்காக அவனும் நிறைய இரவுகள் தூங்காமல் காத்திருந்தான். சியா திருமணத்தை நிறுத்தாமல் இருக்க வேண்டுமே என்று பயந்தான். இதை எல்லாம் சியா சீக்கிரம் புரிந்துகொள்வாள்.

ஷ்யாமும் தனது சியா மீதான உடன்பாடு காதல் தான் என்று உணர்வான்.
 
Last edited:

Subageetha Sundararajan

Sugee
Vannangal Writer
Team
Messages
130
Reaction score
39
Points
63
கொடிமலர் 16


சியாவுடானான நாட்கள் ஷ்யாம் மனதில் உற்சாகம் கொடுத்தது என்றால், ஷ்யாம் தனது கணவன் என்ற எண்ணமே சியாவுக்குள் மென் தென்றலாய் வீசியது. இந்த திருமண உறவு எப்படி ஏற்படுத்த பட்டிருந்தாலும், அவன் அவள் விருப்பம் கொண்ட காதலன். அவளுக்குள் அவன்மீதான காதல் தவிர வெறுப்பு இல்லை. அவனை வெறுக்கவோ, கோவத்தை இழுத்து பிடிக்கும் மனமும் அவளுக்கு இல்லை.

இருவரும் கையில் இருக்கும் ப்ராஜெக்ட் வேலையை யோசித்து ஹனிமூன் என்று எங்கும் போகவில்லை.

இருவருக்குள்ளும் கண்ணாமூச்சி ஆட்டம் வேறு. ஷ்யாம் இவளை மனைவியாக கண்டுகொள்ளாது போலவும், இவள் தன் கோவத்தை தொடர்வது போலவுமான இந்த ஆட்டத்தில் இருவருமாக எங்கு செல்ல?

ஆனால் இருவருக்கும் இது பிடித்திருக்கிறது. இந்த கணங்களை ரசிக்கிறார்கள்.
கர்நாடக மாநிலத்தின் உணவு வகைகளுடன் தமிழக உணவு முறைகளையும் சமைத்து அவனை உணவு பிரியனாக்கி வைத்திருந்தாள் அவன் மனைவி.
அவனுக்கான பிரத்யேக சமையல் நிபுணர் வீட்டில் உண்டுதான். அவர் உஜ்ஜயினில் அவன் வீட்டில் இருந்து அனுப்பப்பட்டவர்.

அவருக்கு இங்கு சமைக்கப்படும் உணவு வகைகளை பயிற்சி கொடுத்தவள் அவர்களது உணவு வகைகளையும் சமைக்க கற்றுக்கொண்டாள்.

"மேடம் நீங்க ஆபீஸ் வேலைய விட்டு சமையல் அறையில் இருந்தா என்னோட வேலைய யாரு கவனிப்பாங்க "? என்று ஷ்யாம் கடுப்பாகி கேட்ட பொழுதும் அவளிடம் சிரிப்பு மட்டும்!

அவன் தன்னை கவனிக்கிறானா என்ற தயக்கம் மீற, அவளுக்குள் படபடப்பு. புதுபெண்ணுக்குரிய நாணம். அதை கணவனுக்கு மறைக்க அவள் செய்த முயற்சிகள் கூட படுதோல்வியில் முடிய அவளது அவன் மீதான நேசம் அவன் மூக்கை கூட துளைத்து இதயம் நோக்கி பாய்ந்ததோ?
அலுவலக கட்டிடம் அவன் வீட்டுடன் இணைந்தது என்பது மறந்தவனாக, வெகு தொலைவில் செல்ல வேண்டியவன் போல் இருந்தது அவன் பாவனை. திருமணம் முடிந்து தன்னை பொறுத்திக் கொள்ள நேரம் வேண்டி பெண் ஒருவாரம் விடுமுறை எடுத்துக்கொண்டு வீட்டில் இருக்க, அவளை விட்டு அலுவலகம் செல்ல பிடிக்காதவனாய் அலப்பறைகளை கூட்டினான் ஆரம்ப நாட்களில். அதற்கு பிறகு மறந்தும் அவளுக்கு விடுப்பு கொடுத்தான் இல்லை.

ஆனால், வெறும் அலுவலக விஷயங்கள் சார்ந்த உறவு மட்டும் இருவருக்கும் போதுமானதாக இல்லை.

ஆரம்ப நாட்களிலே ஷ்யாம் தன்னை உணர்ந்து கொண்டிருந்தால் இப்போது நிலைமை வேறாகி இருக்கும். ஆனால், அவன் இன்னமும் அவள் மீதான விருப்பம் காதல் வகை சேர்ந்தது என்று உணரவில்லை.

அவர்களுக்கான பிரத்யேக நேரம் வெகு குறைவு. இருவரும் தங்கள் மனதை இன்னும் எத்தனை நாட்களுக்கு மறைத்து வைக்க வேண்டும் அதற்கான அவசியமும் இல்லை. ஆனாலும், மனம் திறக்கப்படாமல் மணம் வீசும் உறவு அங்கு மொட்டு விட்டுத்தான் இருக்கிறது.

தன் பிறந்த வீடு என்பது சியா அவளுக்கு எங்கோ வெகு அடியில் ஞாபக அடுக்கில் போய்விட்டிருந்தது. ஒன்று ஷ்யாம் அவளை வேறு யோசிக்க விடாமல் அவனை மட்டும் நினைக்கும் அளவுக்கு ஆக்ரமித்திருந்தான். இரண்டாவது அலுவலக ரீதியில் அவளை அக்டோபஸ் போலே வளைத்து வைத்திருந்தான் ஷ்யாம். மொத்தத்தில் அவள் நாட்களில் ஷ்யாம், மற்றும் அவன் சம்மந்த பட்ட விஷயங்கள் தவிர வேறில்லை.
அது தவிர அங்கு அவளை ஆவலுடன் வரவேற்கும் பெற்றோர்? அதுவே அவளுக்கு அங்கே போகும் எண்ணத்தை குறைத்திருந்தது.

ஆனால், அந்த மாத சம்பளம் அதை தானே நேராக கொண்டுபோய் அப்பா அம்மாவிடம் கொடுத்துவிட்டு நேரம் செலவழிக்க பெண் நினைத்திருக்க, ஷ்யாம் அவள் சம்பளத்தில் ஒரு பகுதியை கடனுக்காக பிடித்தவன், தானே யோசித்து வைத்திருக்கும் ஒரு தொகையை அவள் பெற்றோருக்கும் ஜிபே வழியாக அனுப்பிவிட்டு மீதம் இருக்கும் பணத்தை அவள் வங்கிக்கணக்குக்கு அனுப்பி இருந்தான்.வங்கியின்
நோட்டிபிகேஷன் மொபைலில் வர அதை பார்த்தவள் அதிர்ந்துதான் போனாள்.

அதே சமயம், அவள் 'அம்மாவும் பணம் வந்தது 'என்று இவளுக்கு போன் செய்ய, மீண்டும் தனக்குள் நொறுங்கியது பெண் மனம்.

நன்றாக இருக்கிறாயா... என்று ஒரு வார்த்தை அதற்கா பஞ்சம்? என்று அவள் மனம் தவித்தது. பெற்றோரை பார்க்க தனக்கு உள்ள ஆர்வம் போல் அவர்களுக்கு கொஞ்சமும் இல்லையா.. என்ற
கழிவிறக்கம் அவளை அழ சொன்னது.
இன்னொரு புறம், ஷ்யாம் அக்கௌன்ட்ஸ் டிபார்ட்மென்ட் ல சொல்லி தானே இதெல்லாம் செஞ்சிருப்பாரு.. ஸோ என்னோட பர்சனல் விஷயம் இப்போ பரவி இருக்கும்தானே... என்று யோசித்தவளுக்கு அடுத்து என்ன என்று புரியவில்லை.

அவனிடம் முன்பானால் நேராக சென்று சண்டை போட்டிருப்பாள்.
இப்போது அவளை கட்டிப்போட்டது தயக்கம்.

மனதில் குமைந்தவள், அவனிடம் எதுவும் கேட்கவில்லை. கேட்டிருந்தால் அவர்களது முதல் சண்டையை தவிர்த்திருக்கலாம்.

ஆம், முதல் சண்டை தான்.. அதுவரை அலுவலக ரீதியில் சென்று கொண்டிருக்கும் உறவு இன்று புது பரிமாணம் கொண்டு.

வீட்டில் அவள் வாயே திறக்காமல் அவனிடம் மௌன யுத்தம் செய்ய, அவளது யுத்த உக்தி சரியாக தாக்கிய இடம் அவன் இதயம்.

அலுவலக நடப்புகளில் சாதாரணமாக எதையும் காட்டிக்கொள்ளாமல் நடக்கும் பெண் வீட்டிற்கு சென்றவுடன், மௌனத்தை கையில் எடுத்துக்கொள்ள அதுநாள் வரையில் புரியாத அவளது இருப்பு அவனுக்கு உறைக்க தொடங்கியது.

வீட்டிலும் அவள் அவனது அந்தரங்க காரியதரிசி ஆகிப்போய் வாரங்கள் கடந்த நிலையில் அவனுக்கான எந்த விஷயத்தையும் விட்டுத்தராதவள் அவனிடம் பேச மட்டும் கஞ்சத்தனம் செய்தாள்.

மேலும் ஒருவாரம் பொறுத்தவனுக்கு, தனிமை புரிய, "இப்போ எதுக்கு இப்படி பிஹேவ் பண்றா.. என் மேல் என்ன ப்ரோப்லேம் "என்று யோசிக்க தொடங்கி தலைவலி தான் மிச்சம்.

அவளாக ஒன்றும் சொல்ல போவதில்லை என்று புரிந்தவனுக்கு அவளிடம் கேட்க ஈகோ இல்லை. ஆனால் தயக்கம்.

அதை உடைக்க வழி தெரியாமல் திணறியவனுக்கு வழிதான் தெரியவில்லை.
போன் செய்து தன் அண்ணனிடம் "அவளுக்கு எம்மேல கோவம் பையா.. பட் என்ன விஷயம் சொல்ல மாட்டேங்குறா.. ஐ டோன்ட் க்நொவ் ஹௌ டு ஹண்டில்.. ஏதாவது
சஃஜெஸ்ட் பண்ணு "என்று உதவி கேட்கும் அளவுக்கு நொந்து போய் இருந்தவன் அண்ணன் சொல்படி அவளுக்காக அழகான காஞ்சி பட்டில் ஒரு புடவையுடன் வீட்டில் அவளை எதிர்கொண்டான்.

அதை அவள் கையில் தொட்டு கூட பார்க்கவில்லை. "நல்லா இருக்கு "என்றுவிட்டு சென்றுவிட்டாள்.
நேராக அவள் முன் சென்றவன் "வாட்ஸ் யுர் ப்ரோப்லேம் பேபி... என்னோட பஸ்ட் கிப்ட் இந்த புடவை. பட் நீ அதை கண்டுக்கல?
அண்ட் பாஸ்ட் டென் டேஸ்சா என்கிட்ட பேசவும் ல்ல..

அவளிடம் வார்த்தைகள் இல்லை.

"ஏதாவது சொல்லு.. என்ன விஷயம்?கேட்டவனது குரலில் இருந்த உணர்வை அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை.
ஆனால், அந்த பாவம் அவளை அவன் பால் ஈர்த்தது நிஜம்.

"ம்ம்ம்.. ஒண்ணும் பெருசா இல்லை பாஸ். ஜஸ்ட்... அண்ட் ஹும்.. நமக்குள்ள பேச என்ன இருக்கு?"

இப்படி பதில் வரும் என்று யோசிக்காதவன், இப்போது நிஜமாக யோசித்தான். ஆம், இருவருக்குள்ளும் பேச என்ன இருக்கிறது?

அதே சமயம் அவள் சொன்னதில் இருந்த ஏளனம்? ஓஹ் மை காட்.

"தென், என்னவோ உன் மனசுல ஓடுது சியா. என்னனு சொன்னா சரி செய்ய பாக்கலாம். இந்த மாதிரி அமைதி.. நோ, எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. புரிஞ்சுக்கோ சியா."

பெண் மனதில் இரு எண்ணங்கள். ஏன் நான் மட்டும் தான் புரிஞ்சுக்கணுமா.. என்றும் இவ்வளவு தூரம் இறங்கி வந்து பேசும் அளவுக்கு என் மவுனம் இவனுக்கு முக்கியமானதா என்றும். அவளால் சரியான முடிவுக்கு வர இயலவில்லை.

ம்ம்ம்.. பேசணும். கண்டிப்பா பேசணும். பட் இப்போது இல்ல. ஷால் வி கோ ஃபார் அ டின்னெர் ம்? என்றவளின் முதல் அழைப்பு வெளியே செல்ல. அவளையும் அறியாமல் வந்த வார்த்தைகள்.

அவளுக்கு அவனுடன் வெளியே செல்ல பிடிக்கும். அது அவனுக்கு தெரியும்.
லேசாக உள்ளுக்குள் சிரித்து கொண்டவன் கார் சாவியை எடுத்துக்கொண்டு கிளம்பி விட்டான். அவளிடமிருந்து ஏதாவது வார்த்தைகள் வரக்கூடும் என்று நினைத்தவனுக்கு விஞ்சியது ஏமாற்றம் மட்டும் தான்!

அவள் சியா.. அழுத்தம் நிறைந்தவள் என்பது ஷ்யாமுக்கு தெளிவாக புரிந்தது. எதையும் வாய் திறந்து சொன்னாள் இல்லை.


அவளை எப்படி எதிர்த்துகொள்வது என்றே தெரியாமல் திணறினான் ஷ்யாம். சியா வேலைக்கு சேர்ந்த பொழுது ஷ்யாம் தொழில் பெங்களூருவில் தொடங்கி ஒன்றிரண்டு வருஷங்கள் இருக்கும்.
எப்போது எப்படி நடந்து கொள்வான் என்று சொல்ல இயலாது. சியா அவனை புரிந்து கொள்ள முடியாமல் திணறியதும், இப்போது அவளை முழுவதும் புரிந்து கொள்ள இயலாது அவன் திணறுவதும் அவனுக்குள் வந்து போனது.

சியாவிடம் அன்று இருந்த பொறுமை இன்று இல்லை. ஷியாம் நிலைமை சொல்லவே வேண்டாம்.

இரவு வீடு திரும்பியதும், தான் இவ்வளவு நாட்களாக இழுத்து பிடித்த பொறுமை எல்லாம் எல்லை கடந்த நிலையில் சியாவின் கைகளை இழுத்து பிடித்து,
"என்ன விஷயம் சியா.. ரொம்ப சோதிக்கிறே, இதுக்கு மேல என்னால வெயிட் பண்ண முடியாது என்றவனை வினோதமாக பார்த்த சியாவுக்கு சட்டென்று சிரிப்பு வந்து விட்டது. அவன் சொன்னதின் இன்னோர் அர்த்தம் அவனுக்கு புரியவில்லை. புரிந்தவளுக்கோ சிரிப்புடன், 'இதே வார்த்தைகளை ஷியாம் காதலோடு சொல்லியிருந்தால்'
என்று தோன்றாமலும் இல்லை. இந்த நிலையில் அவளால் தவிப்பை அடக்க முடியவில்லை.
திருமண வாழ்க்கை அது தொடர்பான எதிர்பார்ப்புகள், சலனங்கள் அவளுக்குள் உண்டு. அவள் ஒன்றும்
சன்யாசினி இல்லை. ஆனால், காதல் இன்றி தொடங்கும் பெரும்பாலான இந்திய திருமணங்களை விட இவர்கள் உறவு வித்யாசம்... அவன் இவளை ஒரு வகையில் மிரட்டி.. ப்ச் அதற்குமேல் யோசிக்க முடியாது என தோன்றவே, அவனது கண்களை நேருக்கு நேர் பார்த்தாள். அவள் பார்வை சொன்ன செய்திகளை படிக்க முயன்று தோற்றான் ஷ்யாம்.

"சொல்லு சியா, நீ என்ன யோசிக்கிற.. நீ சொன்னா சார்ட் அவுட் பண்ண முயற்சி செய்யலாம். நீ இப்படி பேசாம இருந்தா ப்ரோப்லேம் அப்படியே தான் இருக்கும் "

ஆமாம். அவன் சொல்வது நிஜம். எவ்வளவு நாட்கள் இப்படி இருக்க முடியும்? அப்படியே வாயை மூடிக்கொண்டு இருந்து பிரச்சனை நீர்த்து போகலாம். மாதம் தோறும் இதுவே தொடர்ந்தால்?

"நீங்க இந்த மாசம் என் சம்பளம் பிடிச்சிட்டு, அம்மாவுக்கும் அனுப்பினீங்க "

ம்ம்ம்.. அதுல என்ன தப்பு? புரியல சியா.

"தப்பில்ல? பட் நீங்க என்கிட்ட சொல்லி இருக்கணும். சம்பளம் பிடிக்கிறது.. இட்ஸ் ஓகே.. அம்மாவுக்கு நேரே போய் பணம் குடுத்துட்டு பாத்துட்டு வர நினச்சேன். "

"அண்ட், அக்கௌன்ட்ஸ் டிபார்ட்மென்ட் வழியா தானே இவ்வளவும் பண்ணி இருப்பீங்க? "

அவள் கேள்வியை உள்வாங்கியவன், பெரியதாக சிரிக்க தொடங்கிவிட்டான்.

அவன் சிரிப்பு புரியாது சியா அவனை குழப்பதுடன் பார்த்தாள்.
"லுக் சியா, இத நீ ஏற்கனவே எங்கிட்ட கேட்டிருக்கலாம்."

"நீ ஸ்பெஷலிஸ்ட் இல்ல.. என்னோட பி ஏ.பட் உனக்கு ஆபிஸ் அக்கௌன்ட்ஸ் ல இனி சம்பளம் குடுக்க முடியாது. நா உன்னை பாக்குறது,உன்னோட செலவுகளை பாக்குறது,உன்னோட பார்ரென்ட்ஸ் அவங்கள பார்த்துக்கறது இதெல்லாம் என்னோட ரெஸ்பான்சிபிலிட்டி. அதை செஞ்சேன். நீ இப்படி யோசிப்பன்னு நினைக்கல.
ம்ம்ம்...
இன்னும் எவ்வளவோ செய்ய ஆசைதான். ஆனா அதுக்கு உன்னோட அனுமதி வேணும் "

அவன் கேட்டதின் அர்த்தம்.. எப்படி எடுத்து கொள்வது என்று புரியாது அவனை பார்த்தவளின் அருகே வந்தவன், பி. ஏ வுக்கு அர்த்தம் தெரியுமா... என்று அவள் காதுமடலில் உரசியப்படி கேட்டவனின் உடல் மொழி புரிந்தவளின் இதயம் துடிப்பது நெருங்கி நின்றவனின் காதுகளிலும் கேட்டது.

நா வறள, அவனுக்கு பதில் சொல்ல முடியாமல் பெண் தவிக்க, அவளை இன்னும் சோதிக்காமல், குட் நைட் சொல்லிவிட்டு தூங்க சென்று விட்டான்.

அவன் அருகே உடை மாற்றிக்கொண்டு வந்து படுத்தவளுக்கு உறக்கம் வரவில்லை. அவன் கணவனாக தனது தேவையை சொல்லி விட்டான். தன் கடமை என்று அவன் சொன்னதன் அர்த்தம், என்னை மனைவியாக பார்க்க தொடங்கியது தானே!

கணவனாக அவன் கடமை என்றால் மனைவியிடம் அவனுக்கு உரிமையும் உண்டுதானே!

அதை அவன் எடுத்துக்கொள்ள கேட்கிறான்.. பின்னும் ஏன் மறுக்க வேண்டும்?
அவனாக இன்னும் தன் உரிமையை நிலை நிறுத்த முனையவில்லை.. என்னிடம் உறவு வேண்டி நிற்பவனிடம் எதற்கு மறுக்க வேண்டும்?

காதல் என்னிடம் உள்ளது.. அவனுக்கும் என் மீது காதல் வரும். என்னை இப்போது உணர தொடங்கிவிட்டான்... முழுமையாக உணர செய்ய வேண்டும் என்று நினைத்து கொண்டே அவளும் உறங்க முயற்சி செய்தாள்.

ஷ்யாம் காலை எழும் பொழுது, அருகே அவன் கண்டது காஃபி கப்புடன் சிரித்துக்கொண்டே நிற்கும் அவன் மனைவி முகமே! அவளது புன்னகை அவனையும் தொற்ற, எழுந்து குளியல் அறை நோக்கி சென்றான்.
.
 

Subageetha Sundararajan

Sugee
Vannangal Writer
Team
Messages
130
Reaction score
39
Points
63
கொடிமலர் 17
சியா ஷியாம் வாழ்க்கை காதலை ஒப்புக்கொள்ள போராட்டம் என்றால், இன்னொரு பக்கம் ராம் நந்தாவை எண்ணி குமுறல் கொண்டான்.

அவள் தன் சித்தியிடம் ராம் என்பவன் நான் கையில் வைத்து விளையாடும் பொம்மை என்பதை போல் தோற்றம் உண்டு பண்ணியிருக்கிறாள். காதல் என்பது ஒருவருக்கு ஒருவராக இருக்க வேண்டுமே தவிர ஒருவரின் அடிமையாக இன்னொருவர் அல்ல.

இதை தவிர உனக்கு வேறு வழி இல்லை என்பது போல் அவளது சமீப கால நடவெடிக்கைகள். ராமின் உணர்வுகள் காயப்பட்டு போனது நிஜம்!

நந்தா பற்றி சேகரிக்க பட்ட தகவல்களில் ஒன்று கூட ராமின் குடும்பத்திற்கு உவப்பாக இருக்கவில்லை.

நந்தாவின் அம்மா நந்தாவின் அப்பாவுக்கு தாலி கட்டாத மனைவி.. அவர்கள் வீட்டில் வேலை செய்த பெண்மணி, அந்த வீட்டு எஜமானி ஆக போட்ட திட்டம் நந்தா.

வெகு காலமாக குழந்தை பிறக்காமல் போக, ட்ரீட்மென்ட் எடுத்து கொண்டிருந்த பிரணவ் அவர் தான் நந்தாவின் தந்தை, அவரது மனைவி மஹிமா வெகுவாக சோர்ந்துதான் போனார்கள். பிரணவ் அவருக்கு இரண்டாவது திருமண உறவை ஏற்படுத்த அவர் குடும்பம் முயற்சி செய்ய, மன விரக்தி தாளாமல் மஹிமா தன் அம்மா வீட்டுக்கு பயணம்.

பிரணவின் தனிமையை அவர்கள் வீட்டில் வேலை செய்யும் யசோதா சரியான தருணத்தில் பயன்படுத்தி கொண்டாள். ஏற்கனவே திருமண உறவில் கணவன் ஓடி விட யசோதா அவளது பேராசைக்கு விலை?

பிரணவ் தன் சுயம் இழக்க போதுமான தருணம் தானே வாய்த்தது.வீட்டில் எல்லோரும் திருமண நிகழ்வு ஒன்றுக்கு சென்றிருக்க, மனைவி இல்லாமல் போக இஷ்டம் இல்லாத பிரணவ் வீட்டில் தங்கிவிட்டார்.

என்ன, எப்படி நடந்தது என்ற விளக்கம் தேவை படாமல். யசோதா கர்பம் தரிக்க, திரும்ப வந்த மஹிமா நீர்த்து போனாள்.
வீட்டில் உள்ளவர்கள் யசோதாவின் கர்பத்தை ஆதரிக்க மஹிமாவால் தன் கணவன் பங்கிட பட்டுள்ளதை ஏற்க முடியவில்லை. ஒரு வகையில் மஹிமா தன் கணவனால் ஓரம் கட்ட பட்ட நிலை. குழந்தை என்ற ஒரு விஷயத்தை நடுவில் வைத்து பிரணவிடம் யசோதா முன்னேற, மஹிமா தன் நிலை இழந்து தவித்து தருணங்கள்.

ஒரு வழியாக, பிள்ளை பேறு முடிந்து யசோதா வீட்டிற்கு வரவும், வீட்டில் உள்ளோர் அவளை மீண்டும் வீட்டில் வேலை செய்ய கேட்கவும் பொங்கிவிட்டாள் யசோதா.

இந்த பிழைப்பிற்கா குழந்தை பெற்றாள்? உரிமை கொடுக்க முடியாது என்று பிரணவ் தீர்மானமாக சொல்லி விடவும் நடந்தவை எல்லாம் அப்போது தான் புரிய ஆரம்பித்தது மஹிமா யசோதா இருவருக்கும்.

ஆம், குடும்பம் மொத்தமும் சேர்ந்து நின்றது பிரணவின் வாரிசுக்காக! அது பூமியில் வந்தாயிற்று. இனி, யசோதா அவர்களுக்கு தேவை இல்லை.
நினைத்தது நடக்கவில்லை. இனி அங்கிருக்க யசோதா பைத்தியம் இல்லை.அவளுக்கு இளமை அத்துடன் கூடிய அழகு இருக்கும் பொழுது மீண்டும் வேலைக்காரியாக வேலை புரிய வேண்டிய நிர்பந்தம் என்ன?

ஒரு முடிவெடிடுத்த யசோதா ஒரு பெரும் தொகையை பெற்றுக்கொண்டு சென்றுவிட்டாள்.
மஹிமா பிரணவ் அந்த குழந்தையை பிரியமாக தான் வளர்த்து வந்தார்கள். ஆனால், சில விஷயங்கள் அந்த சிறுமியை யசோதாவின் மகள் இவள் என்று காட்டிக்கொடுத்தது... முக்கியமாக வாயை திறக்காமல் சாதிக்கும் குணமும், பேராசையும்.

ஒரு முறை பத்து வயது நந்தா, அவளது அத்தை மகளை விளையாட்டு பெயரில் மொட்டை மாடியில் இருந்த இருட்டு அறையில் அடைத்து வைத்து விட்டு, தனக்கு சிறியவள் இருக்கும் இடம் தெரியாது என்று சாதிக்க,. எப்படியோ கடைசியாக மூர்ச்சை நிலையில் கண்டுபிடிக்க பட்டாள் குழந்தை!

நினைவு திரும்பிய குழந்தை எல்லாவற்றையும் சொல்லிவிட, அந்த நொடியில் இருந்து வீட்டில் வேண்டாத ஒன்றாகி போனாள் நந்தா.

அவளுக்கு வீட்டுப் பெண்ணுக்கு உரிய அனைத்தும் கிடைத்தாலும் பாசமோ, உரிமையோ மறுக்க பட்டது.

ஏற்கனவே உள்ளூர தனக்கு பிறக்கவில்லை நந்தா என்ற எண்ணம் மஹிமாவுக்கு உண்டு. வெளியே காண்பிக்க மாட்டாள். பிரணவ் பொறுத்தவரை யசோதா அவளுடனான உறவும், அதில் பிறந்த இப்படிபட்ட பெண்ணும் உச்சம் பெற்ற தவறு ஆகிப்போயிற்று. விளைவு பெற்றோரின் கவனிப்பு கிடைக்கவில்லை. அவளின் குணங்களை சரி செய்ய ஆள் இல்லை.ஆம், இன்று வரை அவள் குணம் மாறவில்லை. அதில் அவள் தவறு எதுவும் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை.
நந்தாவின் அம்மா யசோதா வேறு ஒரு வயது முதிர்ந்தவரை திருமணம் செய்து கொண்டு அதன் மூலம் மூன்று குழந்தைகள். பெரும் சொத்து.. எந்த குறைவும் இல்லாத வாழ்க்கை.
ஒரு விதத்தில் பழி வாங்க பட்டது நந்தாவின் வாழ்க்கை.

ஆனாலும்,கூட்டுகுடும்பமாக வாழும் ராமின் குடும்பத்திற்கு நந்தா பற்றிய தகவல்கள் சற்றும் பொருத்தம் இல்லை. ராம் அவனை எப்படி வழிக்கு கொண்டு வருவது என்று அவன் குடும்பம் குழம்பி தவிக்க, வாய்ப்பு என்னவோ நந்தாவுக்கு சாதகமாய் இருப்பதுதான் விதியோ?

இரண்டு நாட்களாக நந்தாவை காலை பயிற்சி சமயம் பார்க்காத ராம் முதலில் கண்டுகொள்ளாமல் விட்டான். மூன்றாம் நாள் அவனால் அலட்சியமாக இருக்க முடியவில்லை. அலுவலகத்தில் அவள் விடுப்பில் இருப்பதாக சொல்லவும் அவனால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. அவள் வீட்டிற்கு செல்லும் முன் அண்டர் கிரௌண்ட் கார் பார்க்கிங்ல் அவள் கார் நின்று கொண்டிருந்தது.

பொறுமை இழந்து நேரே அவள் வீட்டிற்கு சென்று பார்த்தால் வீடு பூட்டியிருக்க அவனுள் பயம்.. என்னவாயிற்று நந்தாவுக்கு?

தன் அலட்சியத்தை நொந்துகொண்டு வீடு சேர்ந்தவன் நிதானம் இழந்து சோஃபாவில் அமர்ந்து கொண்டு தனது அலைபேசியில் உள்ள மெசேஜ்களை பார்த்தான்.

ஆம், அவளது மெசஜ் ஒன்றும் அங்கு இருந்தது.

அவள் பெங்களூரு வின் பிரபல மருத்துவமனையில் நோயாளியாக சேர்ந்து இன்றுடன் மூன்றாம் நாள்.

வைரல் பிவேர் என்று சென்றவள் அங்கு சேரவேண்டிய அளவில் ஜுரம்.
யாரும் இல்லாத நிலையில் மருத்துவ மனையில் இவளுக்கென்று தனியாக நர்ஸ் ஒருவருக்கு ஏற்பாடு செய்து விட்டார்கள். அந்த பெண் அனுப்பியிருந்த தகவல் தான் ராம் படித்தது.

அவனுக்கு சர்வமும் ஆட்டம் கண்டது. நந்தாவின் யாருமற்ற நிலை அவனை வேறு எதுவும் யோசிக்க விடாமல் துரத்த மருத்துவ மனைக்கு சென்றவன், நந்தாவின் நிலை கண்டு இன்னும் உருகி போனான். கணவன் என்று தான் இருந்தும்.. இதென்ன என்று சூழ்நிலையை அறவே வெறுத்தான்.

அந்த நிமிஷம் அவனுக்கு அவளைப் பற்றிய எந்த விஷயமும் பெரியதாக தெரியவில்லை. அவன் நினைவுகள் முழுவதும் நந்தா ஆக்ரமித்திருந்தாள். அவளின் தவறுகள் எதையும் அவன் பெரியதாக பார்க்கவில்லை.

ஒரு வார மருத்துமனை வாசம், அதன் பின்னர் நேரே பெண் சென்றது ராமின் வீட்டுக்கு தான்!

அதற்குள் விஷயம் ராமின் வீட்டுக்கு தெரிய வர, இந்த பெண்ணே விருப்பம் கொண்டால் ஒழிய ராம் இவளை விட மாட்டான் என்று புரிந்தவர்கள் விவரங்களை கையில் வைத்துக்கொண்டு என்ன செய்ய?
ஆனாலும் ராமின் அப்பா அவற்றை பத்திரமாக வைத்தார்.. ஏதோ சரி இல்லை என்று அவரின் உள்ளுணர்வு கூற,
அதற்குள் ராம் நந்தாவை பதிவு திருமணம் செய்து கொண்டாதாக போனில் சொன்னான்.

பெயருக்கு ஒரு
ரிஸப்ஷன்... மும்பையிலும் பெங்களூருவிலும் உள்ள தொழில் துறை நட்புக்களுக்கு.

சியா ஷாம் தம்பதிக்கு இந்த திருமணம் அதிர்ச்சி.. சியா மனதில் ராமுக்கு நந்தா மனைவியா என்ற கழிவிறக்கம் தோன்றியது.

முன்பே தன் திருமண நிகழ்வில் நந்தாவின் போக்கு சியாவை மிரட்டி இருக்க இனி, ராமுடன் பேச்சே கூடாது என்று முடிவு செய்தாள் சியா. அவளுக்கு ராம் மற்றும் அவர்கள் நிறுவனத்துடனான தொழில் தொடர்பு பற்றி சந்தேகம் வந்தது.
ஷியாம் இவை பற்றி யோசிக்கவில்லை.

இன்னும் ராமின் தங்கை திருமணம் நடக்க இருக்கும் நிலையில் ராமின் குடும்பம் அமைதி இன்றி தவித்தது.

திருமணம் முடிந்து ஒரு மாதத்தில் அலுவலகத்தில் ராமின் சித்தியின் கீழே இனி தன்னால் வேலை செய்ய முடியாது. அது உறவு நிலையை மோசமாக்கும் என்றுவிட்டு நந்தா வேறு வேலை தேடிக்கொண்டாள். அவள் சொல்வது சரிதான் என்று நினைத்து ராம் எதுவும் சொல்லவில்லை. அதுவே. அவன் வீட்டு பெரியவர்கள் முன் அவன் மீதான நம்பிக்கை நிலைமையை இன்னும் மோசமாக்க,

வீட்டை பற்றி அதிகம் யோசிக்கவிடாமல் நந்தா அவனை மோக கடலில் மூழ்க வைத்தாள். இரவுகள் இருவருக்கும் வஞ்சகம் செய்யாமல் துணை நின்றது.

அலுவலகம் கிளம்பும் சமயம் நந்தா ஆளே வேறாகி விடுவாள். இரவின் தாக்கமே அவளிடம் இருக்காது.

இவள் என்ன இயந்திரமா என்று ராமுக்கு தோன்றும்தான்! அன்றைய இரவில் அதுவும் மறந்துவிடும்.

கிட்டத்தட்ட ஒருமாதத்தில் அவனை செக்ஸ் அடிமை ஆக்கிவைத்திருந்தாள் நந்தா. அவனால் அலுவலகம் சென்ற பிறகு கூட வேலையில் மனதை செலுத்த முடியவில்லை.

என்ன ஆகி போனது எனக்கு என்று தவித்தான் ராம். "ஹனிமூன் போலாமா ஹனி "---ராம்

"நாமோ இங்க தனியா தானே இருக்கோம் ராம், அண்ட் நியூ ஆபீஸ்.. ஸோ இப்போ லீவு போட முடியாது பேபி "---இப்படி தெளிவாக சொல்லிவிடும் நந்தா.

இரவின் வெளிச்சத்தில் காமத்தை வஞ்சனை இன்றி வெளிப்படுத்தும் நந்தாவின் கண்கள் பகலில் காதலை இன்று வரை வெளிப்படுத்தியதில்லை.. ராமுக்கு அவளின் மனோ நிலை புரியவில்லை.

வரும் மாதங்களில் குடும்பம் செய்ய தனது பங்கு என்று நந்தா ஒரு தொகை கொடுக்க ஆரம்பித்த பொழுது ராம் குழம்பினான்.

உன்னோட செலவு என்னோட உரிமை நந்தா.. ப்ளீஸ் புரிஞ்சுக்க... நாம கப்பில்.. நா உன்னோட ஹஸ்பண்ட்.. அவன் எவ்வளவு கெஞ்சியும் நந்தா பணம் தருவதை வாங்காம விட்டா நா தனியா பிளாட் எடுத்துக்கறேன் ராம் என்றுவிட்டாள்.

மீண்டும் அவள் என்ன சொல்கிறாள் என்று புரியாது தேங்கி நின்றான் ராம்!

இப்போதெல்லாம் ராமின் சித்தப்பா சித்தி ராமை தேடி வீட்டுக்கு வருவது இல்லை. அவன் அம்மா பாட்டி என்று அவனிடம் அரட்டை அடிக்க போன் செய்வது இல்லை.

அப்பா மெயில் மூலம் பேசுவதுதான்! தங்கை, தம்பி அத்தை என்று பழக்கப்பட்டவனுக்கு தனிமை தாக்கியதில் வியப்பு என்ன?

திருமண உறவு ஆரம்பித்து ஆறு மாதங்களில் அவன் வாழ்க்கை சுவை மறந்தது!

அலுவலகம் மட்டும் வாழ்க்கை என்று இரவுகளில் கூட ராமை தள்ளி நிறுத்தி வேடிக்கை பார்த்தாள் நந்தா!

 

Subageetha Sundararajan

Sugee
Vannangal Writer
Team
Messages
130
Reaction score
39
Points
63
கொடிமலர் 18

திருமணம் முடிந்தே விட்டதா? கேட்கவே கடினமாக இருந்த ராமின் திருமண உறவு அவனது வீட்டினருக்கும் பழகி விட்டது.. அவர்கள் எதிர்பார்த்த ராமின் தங்கை திருமண விழா மும்பை மாநகரின் மிகப்பெரிய ஹோட்டல் ஒன்றில் ஏற்பாடு செய்ய பட்டிருக்க உற்சாகமாய் ராம் அதில் கலந்து கொண்டான். தங்கையை கொண்டாடும் மனநிலையில் ராம் இருக்க அப்படியே அதற்கு எதிரான மன கொதிப்பில் இருந்தாள் நந்தா.

தன் திருமணம் பற்றி யோசித்தவளுக்கு தனக்கு மீண்டும் பெரும் அநீதி இழைக்கப் பட்டதாக உணர்ந்தது நிச்சயம் விந்தை!

ஏதோ ஒரு உணர்வு அவளை
ஆட்டிப்படைத்தது. அவளால் ஏற்கனவே இந்த குடும்பத்துடன் ஒன்ற முடியாத நிலைமை.. ராம் ரொம்ப நாட்கள் கழித்து தனது மொத்த குடும்பத்தை சந்திக்கும் போது ஏற்படும் உற்சாகம்!

தன்னை குடும்பம் ஒதுக்கி விட்டதே!. என்ற அழைக்கழிப்பில் இருந்தவனுக்கு சந்தோஷம் கொள்ளவில்லை. கூட்டு குடும்ப அமைப்பில் இருந்தவனுக்கு தனியாக மனைவியுடன் தனிக்குடித்தனம் என்றாலும் யாரும் வர போக இல்லாததும், மனைவி தன் வீட்டினருடன் ஒன்றாததும் அவனுக்குள் வருத்தம் உண்டு.

ஆனால், வாழ்க்கை முழுவதும் நம்முடன் பிராயணம் செய்யும் மனைவி மனம் பார்க்க வேண்டும் என்று தன்னையும் சுருக்கி கொண்டான்.

அவனை முழுவதும் புரிந்து வைத்திருக்கும் மனைவி அவனை சமாதானம் செய்யவோ, உறவுகளை இணைக்கவோ விருப்பம் கொள்ளவில்லை. தனக்கு கிடைக்காதது அடுத்தவருக்கு கிடைக்கவில்லை என்றால் அதனால் என்ன என்று மனோப்பாவத்தில் இருக்கும் பெண்ணுக்கு கணவனது சந்தோஷம் எரியும் தீயில் நெய் வார்த்தது போலானது.

தான் தனியாக விடப்பட்டது போல் உணர்ந்தவளுக்கு அங்கே இருக்க பிடிக்கவில்லை. திரும்ப பெங்களூரு தனியாக செல்லவும் முடியாது!

யோசித்தவள் தனது அலுவலக வேலை என்று ஹோட்டல் அறையில் முடங்கி கொண்டாள்.

மிக அழகாக தன்னை அலங்காரம் செய்து கொண்டு, "நீங்க கூப்பிடுங்க ராம், அப்போ வந்து நா நிக்கறேன்.. எப்படியும் உங்க என்டயர் பேமிலி அங்கே இருக்கு. ஸோ நீங்க என்னை மிஸ் பண்ண மாட்டிங்க!"என்று சுகர் கோட்டிங் கொண்டு சிரித்தபடியே பேசுபவளை என்ன சொல்ல முடியும்?

தன் தங்கையை நந்தா பார்த்த பார்வை... அது சியாவை முதன் முதலில் நந்தா பார்த்த அதே பார்வை! "முழுவதும் நான் உன்னை வெறுக்கிறேன்" என்ற பாவனை நிச்சயம் அந்த பார்வையிலே உண்டு.

ராம் உள்ளூற நொறுங்கி போனான்.. என்ன மாதிரி பெண் இந்த நந்தா? என் தங்கையிடம் இவளுக்கு என்ன வெறுப்பு என்று யோசித்தவன் அவள் அறையில் இருப்பதே பரவாயில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டான். மேற்கொண்டு அவளை எந்த நிர்பந்தமும் செய்து கூட்டிப்போக அவனுக்கு விருப்பம் இல்லை.
நந்தா மனதுள் கோவம் கனன்றது. தன்னை கொஞ்சி கெஞ்சி அவன் கூப்பிடுவான் என்று யோசனை அவளுக்கு இருந்தது. அவனது இந்த பாரா முகம் அவளுக்கு அதிர்ச்சி. எப்படியும் அங்கே இருப்பவர்கள், திருமண நிகழ்ச்சிக்கு வருபவர்கள் மனைவி பற்றி கேட்பார்கள். அப்போது வருவான் கூப்பிட.. என்று நினைத்து தன் அலுவலக வேலைகளை அவள் பார்க்க, முஹூர்த்தம் முடிந்து சாப்பிட அழைக்க தான் அவன் வந்தான். அதுவும் சாப்பிட்டு விட்டு. அவனுக்கு மனைவி மீதான கோவத்தை அவன் காட்டிய விதம் இது. அவனை குறை சொல்ல எனக்கு மனதில்லை. வெகு காலமாய் பல்வேறு விஷயங்களில் அவன் விட்டு கொடுப்பது எனக்கு தெரியும். 'அன்புடன் அந்தரங்கம் கூட அவளுக்கு வேண்டும் என்று தோன்றினால் தான்!'என்னும் பொழுது அவன் செய்வதில் இவளும் குற்றம் கண்டுபிடிக்க கூடாது.

திருமணம் முடிந்து ஒருவாரம் கழித்து தான் ரிசெப்ஷன் என்று முடிவானதால், ராம் குடும்ப உறுப்பினராக அங்கேயே மும்பை வீட்டில் தங்கிவிட்டான். அங்கிருந்து அலுவலகம் கவனித்து கொண்டான்.

அலுவலகம் செல்ல வேண்டும் .மீண்டும் வருகிறேன் என்று நந்தா கிளம்பிவிட்டாள். வேறு யாரும் தடுக்கவில்லை. ராம் ஆனவரை கெஞ்சி பார்த்தான். பிறகு 'உன்னிஷ்டம்'என்று விட்டான்.

வெறும் குடும்ப உறவுகள் மட்டும் கல்யாண நிகழ்வுக்கு வந்திருக்க, ரிசெப்ஷனுக்கோ அவர்களது குடும்ப உறவுகளுடன் தொழில் வட்டார தொடர்புகள், அரசியல் தொடர்புகள் என்று பிரம்மாண்டமாக இருந்தது.

நந்தாவின் அப்பா அம்மாவும் அழைக்க பட்டிருந்தார்கள். இதை நந்தா எதிர்பார்க்கவில்லை.

முதலில் அதிர்ச்சி காட்டியவள் பின்னர்"நீங்கள் ஒதுக்கினால் என்ன? எவ்வளவு பெரிய வீட்டில் மருமகள் நான் " என்று கர்வம் காட்டினாள். அவர்களிடம் சென்று கூட அவள் பேசவில்லை.

அவளுக்கும் சேர்த்து ராம்தான் தன் மாமியார் மாமனாரை கவனித்து கொண்டான். அதுவும் தூரத்தில் இருந்து அவன் அப்பா கவனித்து சொன்ன பிறகு.

பிரணவ் மஹிமா இருவருக்கும் மகள் நடந்து கொள்ளும் விதம் அவமானமாக உணர்ந்தாலும், ராம் அவனது பண்பு அவர்களை சந்தோஷமாக உணர செய்தது. கூடவே அவன் மீதான பார்த்தாபமும் தான்.

இவ்வளவு நல்ல பையனாக தெரிகிறான் பின்னர் ஏன் நந்தாவை... என்று யோசித்தார்கள்.
நந்தா எதையும் கண்டுகொள்ளாமல் இருந்ததுதான் ராமை கிளறியது.

ஒரு இடத்தில் அமர்ந்து வேடிக்கை பார்த்தவள் கொஞ்ச நேரம் கழித்து உணவருந்திவிட்டு தங்கள் அறைக்கு சென்றுவிட்டாள்.

வீட்டினர் எடுத்துக்கொண்ட புகைப்படம் எதிலும் நந்தா இல்லை. ஜோடியாக குடும்பம் முழுவதும் நின்றிருக்க ராம் தனியாக நின்றான். புகைப்படம் எடுக்கும் சமயம் ராமின் அம்மா சியாவையும் அழைக்க அவளும் குடும்ப உறுப்பினர் ஆகிப்போனாள்.

ஷ்யாம் தொழில் சம்மந்தமாக இரண்டு மாதங்களுக்கு லண்டன் சென்றிருக்க சியா மட்டும் வந்திருந்தாள். அவளை பற்றி ஏற்கனவே ராமின் சித்தி லீலாவுக்கு தெரியும். இன்னும் சொல்ல போனால் லீலாவுக்கு பிடித்த பெண் சியா. எளிதாக ராம் குடும்பத்துடன் ஒன்றிபோனாள்.

தொழில் அரசியல் வட்டாரத்தில் சமீபகாலமாக சியாவையும் அநேகருக்கு தெரிந்திருக்க ராமுடன் வந்தவர்களை வரவேற்பதும், அவர்களுடன் பேசிக்கொண்டு இருப்பதும் சியாவுக்கு கஷ்டமாக இல்லை. பேச்சும் அநேகமாக அவர்கள் தொழில் சம்மந்தப்பட்டதாக இருந்தது. ஷ்யாம் பற்றிய விசாரிப்புகள் வேறு.

தன் அறையில் இருந்து வரவேற்பு நிகழ்ச்சியை டிவியில் பார்த்துக்கொண்டு இருந்த நந்தாவுக்குள் காந்தியது!

ஆனாலும், வெளியே வந்து பொறுப்புகளை எடுத்து கொள்ள அவள் விருப்பம் கொள்ளவில்லை. மாறாக சியா மீதான வன்மம் வளர்ந்தது. அவளையும் அறியாமல் ராம் சியா இருவரையும் சேர்த்து வைத்து பார்த்து கோவம் கொண்டாள்.

இதெல்லாம் என்ன என்று தோன்றும். ஆனால் விசித்திரங்கள் கொண்ட மனித மனம் எப்போதும் நிதானமாய் இருப்பதில்லை. சற்றே அதிகமாக உணர்வைலைகள் எழும்பினால் அவர்கள் மன நோயாளிகள் என்கிறோம்.

இப்போது தன் நிலை கெட்டு நடந்து கொள்ளும் நந்தா எப்படி பட்டவள்?நீங்கள் தான் சொல்ல வேணும்.

பொறாமை, எரிச்சல் கோவம் கையாலாகா நிலை, கணவன் மீது, அவன் குடும்பம் மீது, சம்மந்தம் இல்லாத சியா மீது, என்று அவள் வெறுப்பு உணர்வுகளை எல்லோர் மீதும் ஆதிக்கம் செலுத்த அனுமதித்து தனியாகத் தான் இருப்பேன் என்று அடம் பிடிப்பவளை என்ன சொல்ல முடியும்?

மறுநாள் சியா கிளம்பிவிட, அதே விமானத்தில் இரண்டு இருக்கைகள் தள்ளி அமர்ந்து இருப்பவள் சாட்சாத் நம் நந்தா தான்!

ராம் இரண்டு நாட்கள் கழித்து வருவதாக சொல்லிவிட நந்தா கிளம்பிவிட்டாள். ஒரு நாள் கூட ராம் குடும்பத்துடன் இருக்க அவர்கள் வீட்டுக்கு செல்ல விருப்பம் கொள்ளவில்லை நந்தா. ராமும் வற்புறுத்தி அழைக்கவில்லை.

உண்மையில் நந்தாவின் இந்த நாடகங்கள் அவனுக்கு அலுத்துவிட்டது.

என்ன ஆனாலும் பெங்களூரு போய் பார்த்துக்கொள்ளலாம் என்று அவனும் விட்டுவிட்டான்.

ஏன்? நந்தா இப்படி நடந்து கொள்ள அவசியம் என்ன?
ஏனென்றால், ராம் தன் குடும்பத்துடன் இருப்பது பிடிக்கவில்லை. அவன் என்னை மட்டும் தான் உறவாக நினைக்க வேண்டும். அதை விட்டு இன்னும் சொந்தங்கள் அவர்களுடன் நேரம் செலவு செய்தால் அது நந்தாவுக்கு பிடிக்கவில்லை.

இப்போது' அவர்கள் உனக்கும் உறவுதானே என்று கேட்டால், 'இல்லை 'என்பதுதான் அவளது பதில். இதுதான் நந்தாவின் குணம்.

விமானத்தில் இருந்து இறங்கி சியா நந்தா இருவரும் ஏர்போர்ட்டில் அருகருகே சந்தித்து கொள்ள அப்போதும், நந்தா சியாவை அறிந்த புன்னகை கூட சிந்தவில்லை. சியா முதலில் ஆச்சர்யம் கொண்டாள். ஆனால் சுதாரித்துக் கொண்டவள், தானும் பேச்சை வளர்க்க விரும்பவில்லை. அவளுடன் பேசினால் வீண் பிரச்சனை என்று உள்ளுணர்வு உந்த வேகமாக வெளியே வந்துவிட்டாள் சியா. அவளுக்காக அவர்களது வாகனம் காத்து கொண்டிருக்க, அதில் ஏறி அமர்ந்த சியாவை, வளாகத்தில் கேப் வர காத்துக்கொண்டிருந்த நந்தா வெறுப்புடன் பார்த்தாள்.

தனக்காக இப்படி ராம் எந்த ஏற்பாடுகளும் செய்யவில்லை என்று தோன்ற, மனதுக்குள் அந்தஸ்தில் பல படிகள் தாழ இருந்த சியாவுக்கு இப்படி பட்ட வாழ்க்கை.. ஷ்யாம் ஏன் இவளை திருமணம் செய்து கொண்டான் என்று வறுத்து எடுத்தாள்.
ராம் வேறு இவளிடம் வழிகிறான் என்று மீண்டும் சியா மீது கோவம். வரவேற்பு சமயம் இருவரும் ஒன்றாக இருந்ததும் புகைப்படம் எடுக்கும் பொழுது அவள் ராமின் அருகே நின்று கொண்டு புகைப்படம் எடுத்துக்கொண்டதும் அவளது எண்ணங்களுக்கு விசிறி வீசியது. சியாவின் ஜொலிப்பு அவளை என்னென்னவோ யோசிக்க வைத்தது.

மொத்தத்தில் அவள் அவளாக இல்லை.
திரும்வி வந்த ராமிடம் நந்தா பேசவில்லை. அவள் கோவம் அடங்க நேரம் தேவை என்று அவனும் எதுவும் பேசவில்லை.
இருவரும் ஒரே வீட்டில் அன்னியர்களாய்.

ராம் நிலை "கல்யாணம் ஆகியும் பிரம்மச்சாரி" என்றாகியது. வெறுத்துப் போனான் ராம். நந்தா வேலை என்று வெளியூர்களுக்கு அதிகம் செல்ல தொடங்கினாள்.

ராமுக்கு தனிமையை பரிசளிக்கத் தொடங்கினாள். எத்தனை உறவுகள் இருந்து என்ன?

அவன் மனம் மனைவி, அவள் அருகாமையை தேடியது. திருமணம் முடிந்த ஆணாக அவன் உணர்வுகள் வடிகால் இன்றி தவித்தது.

ஊரில் இருக்கும் பொழுதும், அவனை தவிர்த்து வேடிக்கை பார்த்தாள் நந்தா.

கிட்டதட்ட, "வேறு யாருமே வேணாம். நீ மட்டும் போதும் ப்ளீஸ் என்று இறங்கினான் ராம்."

வேறு பெண்களிடம் போக அவன் மனம், வளர்ப்பு அவனை அனுமதிக்காது என்று புரிந்து நந்தா முன்வைத்த காரியங்கள் அவளுக்கு இப்போது வெற்றிதான்!
அவனுக்கு காம உணர்வுகளுக்கு மட்டும் பெண் வேண்டாம். அன்பும் நேசமும் கொண்ட உடன் வரும் மனைவி வேண்டும். அதனால் தான் அவளிடம் தன்னை ஒப்பு கொடுக்கிறான்.

இதை வேறு விதமாக எடுத்துகொண்டாள் பெண்.
விளைவு, குழந்தை பெற அவளுக்கு பிடிக்காமல் போயிற்று. போதா குறைக்கு ஆன் சைட் போக குழந்தை பெரிய தடையும் கூட என்று யோசித்தவள், ராமின் பெரும் பணம் பற்றி நிச்சயம் யோசிக்கவில்லை. அவளுக்கு அவனது பணம், தொழில் எதுவும் பெரிய விஷயம் இல்லை.

அவன் பணம் முன்னிட்டு அவள் அவனை மணக்கவும் இல்லை.

அவள் தேடுவது வேறு எதையோ!

 

Subageetha Sundararajan

Sugee
Vannangal Writer
Team
Messages
130
Reaction score
39
Points
63
கொடிமலர் 19

நந்தாவை தன் கைக்குள் வைத்துக்கொள்ள ராமுக்கு எந்த வழியும் தெரியவில்லை.

"நந்தா, ப்ளீஸ் கொஞ்சம் என்னோடையும் இரேன்.
அவன் மனம் கெஞ்சியது. ஆனால் வார்த்தைகளை கோர்த்து அவளிடம் பேசத்'தான் அவனுக்கு பிடிக்கவில்லை. காதல் என்ற ஒன்று தன்னிடம் மட்டும் தான் இருக்கிறதோ, அவளிடம் தன்னைப் பற்றிய எண்ணங்களை இல்லையோ'என்ற நினைப்பே அவனுக்கு கசந்தது. வேற என்ன சொல்ல.. இந்த திருமணம் மொத்தமுமே தோல்வி தானா என்ற எண்ணம். ஒரு பக்கம் இது போன்ற எண்ண ஆக்கிரமிப்பு, மற்றொருபுறம் அவள் மீதான காதல்!
மீட்சியே இல்லாத நரகமா இது என்று கூட யோசித்தான். அவள் அடிக்கடி வெளிநாடு சென்று வருவதும் வெளியூர்களுக்கு சென்று விடுவதுமாக ஒரு கண்ணாமூச்சி ஆட்டம் ஆடிக் கொண்டிருக்க தனது திருமண வாழ்க்கை மீதான நம்பிக்கை அவனிடம் குறைய ஆரம்பித்து இருக்கிறது.
இதற்கெல்லாம் தீர்வாக, அவன் யோசித்தது தங்கள் இருவரின் பிரிவுக்கும் வழி இல்லாது பாலமாக "ஒரு குழந்தை பிறந்தால்"...
இந்த எண்ணம் தோன்றியதிலிருந்து அவன் வெகுவாக தன் மனைவியின் வரவை எதிர்பார்த்து தொடங்கி விட்டான்.
இரவு கண்ட நேரங்களுக்கு வருவதும், வந்த பின் தனக்கென்று ஒதுக்கப்பட்டிருக்கும் அறைக்குள் புகுந்து கொள்வதுமாக இருந்த நந்தா சற்றும் ராமை தன் அருகில் சேர்த்துக் கொள்வதற்கு முயலவில்லை.

ஒரே வீட்டில் தனித்தனி தீவுகள் போல இருவரும், இருவருக்குள்ளும் ஆட்சி செய்தது மௌனம் மட்டும் தான்!

எப்படியோ ஒரு ஞாயிற்றுக்கிழமையில் நந்தாவை வீட்டில் பிடிக்க முடிந்தது ராமால்.
திருமண வாழ்க்கை பொருத்தவரை இது போன்ற நடவடிக்கைகள் கண்டிப்பாய் துரதிருஷ்டமே! தேவையில்லாமல் இது போன்ற ஒரு இடியாப்பச்சிக்கலில் மாட்டிக் கொண்டு விட்டான் ராம்.

அவனால் தன் அந்தரங்கத்தை பற்றி தன் அப்பா, சித்தப்பா, யாரிடமும் கூட பேச முடியவில்லை... இல்லை இல்லை முயற்சி கூட செய்யவில்லை. 'ஜென்ட்ஸ் டாக் ' என்ற ஒன்றைப் பற்றி அவன் மறந்து போயிருந்தான். சில சமயங்களில் விண்டு சொல்ல முடியாவிட்டாலும் மேலெழுந்த வாரியாகவாவது நெருங்கியவர்கள் யாரிடமாவது சொல்லும் பொழுது தீர்வுகள் கிடைக்கக்கூடும். ஆனால் இங்கு அதுவும் இல்லை. ராமை பொருத்தவரை ஏற்கனவே தன் வீட்டாரருக்கு நந்தாவை சுத்தமாக பிடிக்காது.
இந்த விஷயங்கள் பற்றி பேசும்போது நிலைமையை அது மேலும் மோசமடைய செய்யுமோ என்ற பயம் அவனுக்கும்.
தனியாகவே எல்லாவற்றையும் சமாளித்து தீர்வு காண வேண்டிய மோசமான நிலையில் அவன்.

ராம் போன்ற மென்மையான மனம் படைத்தவர்களுக்கு குடும்ப சூழ்நிலையை வெகுவாக ரசிப்பவர்களுக்கு, நந்தா போன்ற ஒருத்தி மனைவியாக வாய்த்தது கண்டிப்பாக அவனது தலைவிதி தான்!

'ஊழிவினை என்று சொல்லலாமா?

முதலில் வெகு சாதாரணமாக ஆரம்பித்த ராம் நந்தா இருவருக்குமான பேச்சு குழந்தை என்று ஆரம்பித்தவுடன் நந்தாவின் நடவடிக்கையை முற்றிலும் மாறிவிட்டது. அவளைப் பொறுத்தவரை குழந்தை பிறப்பு என்பது அவள் வாழ்க்கையை முற்றிலும் மாற்றி விடக் கூடியது. அவளுக்கென்று தனியாக எதிர்காலம்என்று ஒன்று. அவள் சாதிக்க வேண்டும் என்று நினைத்திருக்கும் விஷயங்கள் ஏராளம்! செல்ல வேண்டிய தூரம் அதிகம்!

வெகு தீர்க்கமாக சொன்னாள் நந்தா.
" பாரு ராம், நானா உன்ன தேடி வரவில்லை. நீயா தான் சுத்தி சுத்தி வந்த.
காலேஜ் முடிஞ்ச உடனே நான் என் பாதையை தேடிட்டு போயாச்சு. உன்கிட்ட நான் வந்து என்னை கல்யாணம் பண்ணிக்கோன்னு கேட்கல அண்ட் நீ என்னை ஏமாத்திட்டன்னு உன்னை நான் குற்றம் சும்மதல.

நீ தான் ஹைதராபாத் வந்த.. நம்ம கல்யாணத்த பத்தி பேசின.
எனக்கு தெரிஞ்சு எந்த இடத்துலயும் நம்ம கல்யாணம் வாழ்க்கை பத்தி நான் உன்கிட்ட பேசல. இது எல்லாம் நீயா எடுத்த முடிவு.எனக்கு பிடிச்சிருந்ததுனால ஒத்துக்கிட்டேன்.
இதுக்கு மேல குழந்தை பெத்துக்கறது பத்தி பேசி என்னை எரிச்சல்
மூட்டாதே!"

"குழந்தை பெத்துக்கிட்டு அதுக்கு ஆயா வேலை செய்ய எனக்கு இஷ்டம் இல்லை. என்னோட சைட்ல இருந்து எனக்கு ஹெல்ப் பண்ண ஆள் கிடையாது. உங்க வீட்ல இருக்கிறவங்களும் எனக்கு எந்த ஹெல்ப்பும் பண்ண தயாரா இல்லை. அதுவும் எனக்கு தெரியும்.

இப்படி எல்லா விதத்திலும் பிரச்சினை இருக்குற ஒரு விஷயத்தை செய்ய எனக்கு இஷ்டம் இல்ல.
என்னை போர்ஸ் பண்ணாத ராம். "

அவள் சொன்ன ஒவ்வொரு விஷயத்தையும் வரிசையாக கேட்டுக் கொண்டே வந்த ராமுக்கு அதிர்ச்சி உச்சமாக இருந்தது. இவ்வாறான வார்த்தைகளை அவன் நந்தாவிடம் சத்தியமாக எதிர்பார்த்து இருக்கவில்லை. அவனுக்கு மேற்கொண்டு என்ன பேசுவது என்று கூட யோசிக்க இயலவில்லை. உறை நிலையில் அமர்ந்திருந்தவனை சிறிதும் சட்டை செய்யவில்லை நந்தா. நான் பேச வேண்டியதை பேசி ஆயிற்று எழுந்து செல்கிறேன் என்று எழுந்தவளை, ஒருவராக தன்னை சுதாரித்துக் கொண்டு மீண்டும் அமர சொன்னான் ராம்.

" நான் இன்னும் பேசி முடிக்கவே இல்ல நந்தா. இத்தனை நேரம் நீ பேசினத நான் கேட்டேன. இப்ப என்னுடைய பேச்சையும் நீ கேட்கணும் "
அவன் குரலில் இருந்த ஏதோ ஒன்று அவளை மீண்டும் சோபாவில் அமரசெய்தது.

அவள் கண்களை உற்றுப் பார்த்தவாறே, " படிக்கும்போது ஆரம்பத்துல உன் பின்னாடி நான் சுத்திவந்ததாக எனக்கு ஞாபகம் இல்ல. நீ தான் என்னை இம்ப்ரெஸ் பண்ண ட்ரை பண்ணனு தோணுது.அத கொஞ்சம் விளக்கி சொல்ல முடியுமா? "
அவன் கேள்விகளை லேசாக அதிர்ந்தாள் நந்தா.

அவன் சொல்வது உண்மைதானே! விலகி விலகிச் சென்றவனை துரத்தி துரத்தி சென்று காதல் சொல்லி அவனை சிக்க வைக்க அவள் எடுத்துக் கொண்ட முயற்சிகள் தான் எத்தனை?

எவ்வளவு முயன்றும் சிறிதும் தன்னை கண்டு கொள்ளவே இல்லையே இவன் என்று தனிமையில் பொருமிய நாட்கள் தான் எத்தனை!

தன் பின்னால் அவனை சுற்ற வைத்து,அதன் பின்னாடி அவனை எல்லை மீற வைத்து, குற்ற உணர்ச்சி கொள்ள செய்து... இறுதியில் அவன் தன் நெற்றியில் குங்குமம் வைக்கும் அளவிற்கு கொண்டுவந்து நிறுத்த அவள் பட்ட பாடுகள் தான் எத்தனை!

சற்றென்று அவள் நினைவடுக்குகளில் கல்லூரி நாட்கள் வந்து போக, மௌனி ஆகிப்போனாள் நந்தா!

ஹைதராபாத் நாட்கள் பற்றி மட்டும் பேசியவளுக்கு கோழிக்கொடு நாட்கள் கசப்பாய் ஞாபகம் வந்தது.

இப்போது நந்தா மீண்டும் யோசித்தாள்.எதற்காக இவனை தன் வலையில் விழ செய்தேன்?காதல் என்ற மாய உலகில் அவனை சிக்க வைத்தேன்?

அவளுக்கு அது பற்றி எல்லாம் சற்றும் ஞாபகத்திற்கு வரவில்லை. அவளைப் பொறுத்த மட்டில் கல்லூரியில் ஹீரோவாக சுற்றும் ஒருவனை தன் பின்னால் சுற்ற வைப்பது பெருமைக்குரிய விஷயமாக இருந்திருக்க வேண்டும். கூடவே அவனது அழகு என்னை ஈர்த்திருக்க வேண்டும்.

ஆனால் எனக்கு சுத்தமாக இப்பொழுது அவனிடம் லயிப்பு இல்லை.ஈர்ப்பும் கூட கல்லூரி நாட்கள் போல் நிச்சயம் இல்லை.

திருமணமாகி எத்தனை மாதங்களுக்கு பிறகு இதை எப்படி அவனிடம் சொல்லி புரிய வைப்பது என்று மருண்டாள் நந்தா.

"ப்ச்.. சொன்னா புரிஞ்சுக்கோ ராம்.. என்னால குழந்தை எல்லாம் பெத்துக்க முடியாது."

அவன் கேட்ட கேள்விக்கு தன்னிடம் பதில் இல்லை என்று மீண்டும் குழந்தை இடம் வந்து நின்றாள் பெண்.

ராமின் முகத்தில் ஒரு கசந்த முறுவல்.

"என்ன பண்ணா குழந்தை பெத்துக்க ஒத்துப்ப நந்தா?"

"ம்ஹும்.. என்ன சொன்னாலும் என்னோட பதில் நோ மட்டும் தான் ராம்."

"அப்போ இந்த உறவை தக்க வச்சிக்க உனக்கு இஷ்டமே இல்லையா நந்தா.. நீ ஆசையா கல்யாணம் பண்ணிக்கிட்ட இந்த ராம் உனக்கு வேண்டாமா? "

ராமின் வார்த்தைகள் அவளை அசைத்தது.

"தென்... என்ன சொல்ல வர ராம்..குழந்தை பெத்துக்கலைன்னா நம்ம உறவு செல்லாதுன்னு சொல்றியா..?"
ராம் சற்றும் அசைந்து கொடுக்கவில்லை. எந்த பதிலும் கூட சொல்லவில்லை.

அவளையே சற்று நேரம் பார்த்துக் கொண்டிருந்தவன்,
" டேக் யுவர் டைம் நந்தா. டு டேஸ்ல எனக்கு என்னோட பதில் வேணும். நீ பேசின பேச்சுக்கு இந்த உறவு தொடரவேண்டுமா..அப்படின்னு நான் டிசைட் பண்ண வேண்டிய நேரம் வந்துடுச்சு. ஸோ பால் இஸ் இன் யுவர் கோர்ட் "என்றவன் அங்கே தாமதிக்கவில்லை.

தனது அறைக்குள் சென்றவனுக்கோ அவளது வார்த்தைகள் ஒவ்வொன்றும் சவுக்கடி போல் வலித்தது.

என்ன வாழ்க்கை இது என்று மனம் புழுங்கியது. எதனால் இப்படி? நான் நேர்மையாக இருந்தது தவறா என்று கேள்வி கேட்டுக்கொண்டான். அவனிடம் விடை இல்லை.

அவளை கெஞ்சி, மிரட்டி குழந்தை பெற்றுக்கொள்ள அவசியம் என்ன என்று யோசித்தவன் மனம் இந்த திருமண உறவை உடைய விடக்கூடாது அதற்குத்தான் என்று சமாதானம் சொன்னது.

ஆண்களில் மென்மையான குணம் கொண்டவர்கள், பெண்களில் வன்மையாக குணம் உடையவர்கள் உண்டு என்று மீண்டும் புரிந்து கொள்கிறேன்.

இந்த சமூகம் பலதரப் பட்ட மனிதர்களுடன் குணங்களும்
வெவ்வேறாக தன்னுள் அடக்கி வித்யாசமான விளையாட்டு விளையாடிக் கொண்டிருக்கிறது.

பணம், இளமை, அழகு, படிப்பு, ஆண்மை, நற்குடி பிறப்பு,தொழில் நிர்வாகத் திறமை என்று எதிலும் அவனிடம் குறை இல்லை. ஆனாலும் அவன் நிலைமை இன்று கடினம்.. இணையிடம் காதலுக்காக தழைந்து செல்வது அவனுக்கு அவமானமாக இல்லை. ஆனால், அவள் உன்னிடம் எனக்கு காதலே இல்லை என்றது?

தலை கனக்க, உடல் பாரமாக உணர்ந்தான் ராம். இந்த நாள் கனவாக இருக்க அவன் மனம் இறைந்தது.

ஆனால் அவனுக்காக எழுதப்பட்ட எழுத்துக்கு சற்றும் இரக்கம் இல்லையே!

திங்கள் கிழமை வழக்கம் போல் விடிய முதல் நாள் நடந்த எதையும் யோசிக்காமல் சாதாரணமாக தன்னை காட்டிக்கொண்டான் ராம்.

நந்தாவுக்குள் நண்டு குடைந்தது. அவனை ஆராய்ச்சி பார்வை பார்த்தாள். ராம் அவளை கண்டுகொள்ளாமல் அலுவலகம் கிளம்பிவிட்டான்.

'தான் நேற்று பேசியது அதிகம்தான். கொஞ்சம் விட்டுப்பிடித்திருக்க வேண்டும் 'என்று தனக்குள் சொல்லிக்கொண்டாள். இப்போதும் அவன் எப்படி உணர்ந்திருப்பான் என்பது பற்றி அவளுக்கு அக்கறை இல்லை.

குழந்தை பெற்றுக்கொள்ள அவளால் முடியாது. அவளுக்கு அதற்கு நேரம் ஒதுக்க இயலாது. அதே சமயம் ராம் அவன் வேண்டும்.

காதல் இல்லை என்று அவள் சொல்ல மாட்டாள் குறைந்து விட்டது என்று வேண்டுமானால் ஒப்புக்கொள்வாள்.

எப்படி சமாளிப்பது என்று யோசித்தவள் அலுவலகம் வரவில்லை என்று மெயில் அனுப்பிவிட்டு அவர்கள் அடுக்கக வளாகத்தில் இருக்கும் திரை அரங்கம் சென்றாள்.

யோசிக்க அவளுக்கு அவகாசம் தேவை. அங்கேயே உணவை முடித்துக்கொண்டு அறைக்குள் வந்து முடங்கியவள் தன்னையும் அறியாமல் ராம் அவனது நினைவுகளுடன் தூங்கிப் போனாள். நிம்மதியான தூக்கம்.. இது ராம் எனும் தனி மனிதன் ஒரு நல்ல கணவனாய், கனவானாய் அவளுக்கு அளித்திருக்கும் பரிசு. இதை தக்க வைத்து கொள்வது அவள் கைகளில்!
 
Status
Not open for further replies.
Top Bottom