Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - [email protected]


நீ கொடியானால் நான் மலராவேன்...

Status
Not open for further replies.

Subageetha Sundararajan

Sugee
Vannangal Writer
Team
Messages
130
Reaction score
39
Points
63
கொடிமலர் 20

சியாவுக்கு ஷ்யாம் எப்பொழுது வீட்டுக்கு வருவான் என்று மனம் தவித்து போனது. நேற்று மதியம் உஜ்ஜயின் கிளம்பி சென்றவன் அங்கு சேர்ந்ததும் போன் செய்ததுதான். இதோ காலை பத்து மணி ஆகிறது. அவள் அலுவலகம் கிளம்பியாக வேண்டும். அவன் குரல் கேட்காமல் செல்ல மனம் இல்லை. நாளை மாலை வந்துவிடுவான். அவன் அண்ணாவின் நகை கடையை விரிவுபடுத்தி தொழில் விரிவாக்கம் செய்யும் திட்டம். அதை எடுத்து செய்வது ஷ்யாம்தான் செய்யவேணும் என்று குடும்பம் மொத்தமும் ஷ்யாமிடம் வந்து நிற்க, இதோ ஷ்யாம் உஜ்ஜயின் சென்றுள்ளான்.

சியாவுக்கு அவனது பயணங்கள் பழக்கப் பட்டுவிட்ட பொழுதும் அவன் இல்லாமல் பெரிதும் தவித்துப் போகிறாள். தனிமை அவளை வெகுவாக தாக்கும் சமயங்கள் இவை.

அலுவலகத்தில் அவன் எவ்வளவு கடுமையாக நடந்து கொள்வானோ அவ்வளவு குளுமையான கணவன் அவன்.

அவள் பின்னாலேயே சுற்றி அவளை ஒரு மகாராணியாக உணர செய்வான். அவன் இல்லாமல் வீட்டில் இருப்பது பெரிய துயரம் அவளை பொறுத்தவரை.
இரண்டு முறை அவனுக்கு பேச முயற்சி செய்தவள் சோர்ந்து போய், கிளம்பினாள்.

நீரில்லாமல் வாடும் கொடி போல் இருந்த அவள் முகம், பதினோரு மணிக்கு கணவன் வீடியோ காலில் அழைக்கும் வரை சரியாகவில்லை.

அவள் முகம் பார்த்தவனுக்கோ, 'ஐயோ' என்று வந்தது. இது ஒவ்வொரு முறையும் நடப்பது தான். அவன் வெளியூர் பயணம் செய்யும் பொழுது அவளால் தன்னை கட்டுப் படுத்திக்கொள்ள அவளுக்கு இதுவரை இயலவில்லை என்பது அவனுக்கும் தெரியும். வெளிநாட்டு பயணம் என்றால் சொல்லவே வேண்டாம். அவன் பின்னாலேயே சுற்றுவாள். கண்களில் ஏக்கம் அப்பட்டமாய் தெரியும்.ஆனால், காதல் மட்டும் செய்து கொண்டிருந்தால் தொழிலை யார் கவனிப்பது?

அவள் உணர்வுகள் அவளது அவனுக்கு புருஷனாக புரிந்தாலும், அந்த நிறுவன அதிபராக, அன்றைய அலுவலக நடப்புகளை மட்டும் விசாரித்துவிட்டு, செய்ய வேண்டிய வேலைகள் பற்றி பேசியவன் மறந்தும் அந்தரங்க விசாரிப்புகள் வைத்துக்கொள்ளவில்லை.

'அவள் தனக்காக ஏங்குகிறாள் என்று தெரியும். ஆணாக, கணவனாக அவன் கர்வப்படும் விஷயம் இது.'

ஆனால், அவள் ஷ்யாமிடம் மட்டும் தன் கவனத்தை செலுத்துவதை அவன் விரும்பவில்லை. அவள் தன் சுயத்தை என்றும் இழக்கக்கூடாது என்பதில் அவன் தீவிரமாக இருந்தான்.

அவளை தான் காதலிப்பதை வெறும் வார்த்தைகளாலோ, நகை புடவை, பரிசுகள் போன்றவற்றாலோ புரிய வைப்பதை விட சிறந்தது அவளை அவள் வாழ்க்கையை சுயமாக வாழ வைப்பது தான் என்பதை அவன் தீவிரமாக நம்புகிறான். அதை செயல்படுத்தவும் துணிகிறான்.

முக்கியமாக தான் அவளை காதலிப்பது இப்போது அவன் உணர்வுகள் புரியவைத்து விட்டது.

சியாவுக்கு நன்றாக தெரியும்.. ஷ்யாம் தன்னிடம் நடந்து கொள்ளும் முறை, எப்படிப்பட்டது என்று. 'நான் உன்னை காதலிக்கவில்லை'என்று சொன்னவன், சியா மூச்சு திணறும் அளவிற்கு காதலில் பல்வேறு பரிணாமங்களை
நித்தமும் காட்டிக் கொண்டிருக்கிறான். தன் கணவன் மீது சியா பைத்தியம் ஆகும் அளவிற்கு, அவனது காதல் அவளை ஆட்சி செய்து கொண்டிருக்கிறது.

வன்மையான இதழ் முத்தங்களும், அதிரடியான கட்டில் யுத்தங்களும் மட்டும் கொண்டதல்ல காதல்! அது உணர்வு பூர்வமானது... மெல்ல மெல்ல ஒருவர் உயிரை ஒருவர் உறிஞ்சுவது.

இவள் மூச்சுக்காற்றில் அவனும் அவன் மூச்சுக்காற்றில்
அவளுமாக மாறச் செய்வது காதல்.. திருமணம் முடிந்த இந்த இரண்டு வருடங்களில் இதைத்தான் ஷாம்
சியாவிற்கு சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறான். இன்னும் கற்கும் மாணவியாகவே அவளும் இருக்கிறாள்.

ஷ்யாம் சியா இருவருக்கும் இடையே யான நட்பு அதுவும் கூட அபரிமிதம் தான். ஆகக்கூடி இருவரும் வாழ்ந்து கொண்டிருப்பது கதைகளில் மட்டும் படித்திருக்கும் சாத்தியம் கொண்ட கனவு வாழ்க்கை.

இரவு வீடு வந்த ஷ்யாம் வெகுவாக மனைவியை தேடினான். இரண்டு நாட்களாக பகலில் வேலையில் மூழ்கிப் போபவனுக்கு இரவு, அதன் தனிமை இம்சையாய்.

தன் கை வளைவில் முகம் புதைத்து உறங்கும் பெண்மைக்காக ஏங்கியது அவன் உடல். அவள் கூடலில் லேசாக முனகும் ஒலியை கேட்க துடித்தது மனம்.

ஒவ்வொரு முறை பிராயணம் பொழுதும் இருவரையும் ஆட்டிப் படைக்கும் உணர்வுகள் இது.

இன்னும் சியா, ஷ்யாம் அருகில் புதுமண பெண்ணுக்கான நாணம் கொண்டு மெல்லிய பதட்டத்தை பூசிக்கொண்டவளாகத்தான் அவனிடம் வருகிறாள். இது அவனுக்கான பிராத்தயேக உணர்வு, தேடல். அதை அவனும் மனதார விரும்புகிறான்.

வீட்டில் அவனை முழுவதும் ஆட்சி செய்பவள் சியா.

காதலின் உச்சத்தில் இருவரும் குழந்தை பெற்றுக்கொள்ள தயாராகிவிட்டார்கள். திருமண வாழ்க்கையின் அடுத்தகட்டம், பெற்றோர் ஆவது.

சியாவின் வயிற்றில் தன் விந்து விருட்சமாய் வளர்வதை ஆவலுடன் எதிர்பார்க்கிறான் ஷ்யாம்.

உஜ்ஜயின் சென்றால் கூட அடுத்தநாள் காலை பெங்களூரு வந்துவிடுவான்.

அவளை அலுவலகத்தில் வேலை பிழிந்து எடுக்கும் ஷ்யாம், மாலையில் அவளுடன் வெளியே கிளம்பிவிடுவான். அவளை மனதளவில் நிறைய அமைதியும் சந்தோஷமுமாக உணர வைத்தான்.

இருவரும் தனித்து உறங்கியதில்லை. விடுமுறை நாட்களில் இரவு, பகல் என்று அவர்கள் உறக்கமே இல்லை.

சியாவின் தங்கை ஊர்மிளா அமெரிக்கா சென்றவிட, அங்கேயே அவளுக்கு முதல் குழந்தை பிறந்தது. குழந்தையை பார்த்துக்கொள்ளவும் அமெரிக்க வாழ்க்கையை அனுபவிக்கவுமாக சியாவின் பெற்றோர் வருஷத்தின் ஆறு மாதங்கள் அங்கேயே சென்று விடுகிறார்கள்.

தான் கருவுற்றால் தன்னையும் பெற்றோர் இப்படி பார்த்துக்கொள் வார்களா... என்ற பயம் சியாவை
ஆட்டிப்படைக்கிறது.

ஷ்யாமுக்கு சியாவின் மனம் புரிகிறது.
"டோன்ட் ஒர்ரி சியா, என்னோட அம்மா, சித்தி ன்னு வருவாங்க..அண்ட் நாம ஆள் போட்டுக்கலாம்" எனும் கணவனை ஆதூரத்துடன் இறுக்கி அணைத்துக் கொள்கிறாள் சியா.

திருமணம் ஆகி மூன்றாம் ஆண்டு விழாவை கொண்டாடும் நாளில் சியாவின் கர்பம் உறுதி செய்யப் பட, வைரத்தால் தன் மனைவிக்கு நகைகளை வாங்கி குவித்தான் ஷ்யாம். சியாவுக்கு கணவனின் குழந்தைக்கான ஏக்கம் புரிந்தது. அவளும் ஏங்கினாள் தானே!

இருவர் மட்டுமான அவர்களின் உறவு நிலை மூன்றாவதாக ஒரு நபரை வரவேற்க தயார்.

தன் குடும்ப நகைக் கடையில் இருந்தே சியாவுக்கான நகைகளை வரவழைத்தான் ஷ்யாம். அவன் சொன்ன செய்தியை கேட்டு மொத்த குடும்பமும் உற்சாகம் கொண்டது.
சியாவுக்கு முதல் மூன்று மாதங்களில் காலை வேளைகளில் உடம்பு படுத்த, அவன் தன் அம்மா, பாட்டி என்று வீட்டு பெண்களிடம் தன் பயத்தை வெளிப்படுத்தினான். தொழிலுக்காக அடம் பிடித்து வீட்டை விட்டு வெளிவந்த ஷ்யாம் இல்லை இவன். அது அவர்களுக்கும் புரிந்தது. அவனையும் சியாவையும் இந்த நிலையில் தனியே விட மனமில்லாமல் அவர்களை பார்த்துக்கொள்ள ஷ்யாமின் அப்பா வழி பாட்டி வந்திறங்கினார்.

ஷ்யாம் அவன் குடும்பத்தில் எவ்வளவு முக்கியம் என்று உணர்ந்து கொண்டாள் சியா.

ஷ்யாமின் குழந்தையை தாங்கும் பேரனின் மனைவியை கைகளில் தாங்கினார் அந்த மூதாட்டி. காலை வீட்டில் இருக்கும் சியாவால், ஷ்யாமை பார்க்காமல் இருக்க முடியாது. மதியம் அலுவலகம் சென்று விடுவாள். ஒரு வகையில் அவளுக்கு அது மனமாற்றம் கொள்ளவும் உதவி செய்ததுதான்.

பெற்றோரிடம் தகவல் சொன்ன சியாவிடம் 'உடம்பு பாத்துக்கோ சியா'என்பதோடு நிறுத்திக் கொண்டார்கள் அவர்கள். அதிலேயே சியா புரிந்துகொண்டாள், பிரசவத்திற்கு அவர்கள் துணை செய்யப் போவதில்லை என்பதை.

என்னதான் ஷ்யாமும் அவன் குடும்பமும் அவளை தாங்கினாலும், தனக்கு ஏன் இப்படி என்ற கழிவிரக்கம் அவளுள் உண்டு. விளைவு கர்பகால ரத்த அழுத்தம், சர்க்கரை நோய்.

ஷ்யாமுக்கு அவளை எப்படி அமைதி கொள்ளச் செய்வது என்று புரியவில்லை.

சியாவின் உழைப்பும் பணமும் வேண்டும். அவளுக்கு ஒன்று எனும் பொழுது உடன் நிற்க முடியாதா என்று கோவம் கொண்டவன் அவர்களுக்கு அனுப்பும் பணத்தை அனுப்பாமல் நிறுத்தினான்.

அவர்களுடன் பிரசவம் முடியும் வரை பேச வேண்டாம் என்று சியாவிடம் சொல்லிவிட்டான்.

"அவங்ககிட்ட பேசாம எப்படி ஷ்யாம் ".. என்றவளிடம்,"எனக்கு நீயும் நம்ம குழந்தையும் முக்கியம் சியா.. இனி, அவங்க பொண்ணுங்குற நிலைமைலேந்து வெளியே வந்து நம்ம குடும்பம் பத்தி யோசி "என்றுவிட்டான்.

இரண்டு நாட்கள் பாராமுகம் காட்டியவள் மறந்தும் பெற்றோருக்கு பேச முயற்சி செய்யவில்லை.

அவளுக்கும் நிதர்சனம் புரிந்தது. குழந்தை முக்கியம், இருவருக்குமே! கணவன் மீதான கோவத்தை அவளால் இழுத்து பிடிக்கமுடியவில்லை.
**********************

ராம் கேட்ட கேள்விக்கு இரண்டு வாரங்கள் ஆகியும் நந்தாவால் பதில் சொல்ல முடியவில்லை. முடிந்தவரை பிரச்சனையை தள்ளி போட முயன்றவள் வேலை விஷயமாக தமிழ்நாடு வந்திருக்கிறாள். தள்ளிப்போட நினைக்கும் விஷயம் அவளை பாடாய் படுத்தியெடுக்கிறது. நினைவுகள் முழுவதும் ராம் பேசிய வார்த்தைகள். அவன் சொன்னதில் இருக்கும் நிஜம் அவளை சுடுகிறது. ராம் மீது கோவம் வருகிறது.

இன்னும் சொல்லப் போனால், குழந்தைக்காக ராம் வேறு பெண்ணை நாடிப் போவானா... எனும் சந்தேகம்!

போதாக்குறைக்கு ராம் சியா இருவரையும் நெருக்கமாக இணைத்து பார்த்து கோவம் கொண்டது நந்தாவின் மனம்.

ராம் அப்படிப்பட்டவன் அல்ல என்று அவள் சொல்லமாட்டாள். நந்தாவுக்கு அவளது பூர்வீகம் தெரியும். அதனாலேயே அவளால் ராமை நம்ப முடியாது.

நந்தா மீது பரிதாபம் கொள்ளவேணுமோ? என்னால் முடியாது. அவள் அப்பா செய்த விஷயம் சரி இல்லை என்றால் அதற்கு ராம் எப்படி பொறுப்பாவான்?

திரும்ப பெங்களூரு வந்தவளிடம் ராம் எதுவும் பேசவில்லை.. கேட்கவும் இல்லை. அவனது நடவடிக்கைகளில் நந்தா மீதான அலட்சியம் வெகுவாக வெளிப்பட, தன் சந்தேகம் சரிதான்!என்ற முடிவுக்கு வந்தாள் நந்தா.

ஷ்யாம் சியாவுக்கு ஐந்தாம் மாதம் வளைகாப்பு வைத்திருந்தான். குடும்பத்தாருடன், இப்போது நெருங்கிய நண்பன் ஆகிவிட்ட ராமுக்கும் மனைவியுடன் வருவதற்கு அழைப்பு விடுத்திருந்தான் ஷ்யாம்.

நந்தாவை அழைத்துக்கொண்டு... என்று நினைக்கும் பொழுது ராமுக்கு அலுப்பு தட்டியது.
'எனக்கு தான் வேறு வழி இல்லை. இவள் குணத்தை சகித்தாக வேணும். மற்றவர்கள் ஏன்? 'என்று தோன்றினாலும், இது குடும்ப விழா. அவளை விட்டு செல்ல இயலாது. அது பிரச்சனைகளுக்கு வழி செய்யும் என்று உணர்ந்தவனாய் மனைவி சஹிதமாக விழாவுக்கு சென்றான்.

வழக்கம் போல், சியாவை ஆராய்ந்த நந்தா மனம் கருவியது.

அதை தீர்த்துக்கொள்ள, "உங்க பேரென்ட்ஸ் வரலையா சியா "என்றாள் தேநொழுகும் குரலில்.

சியாவுக்கு புரிந்தது. "இல்ல நந்தா.. அவங்க என் சிஸ்டர் டெலிவரிக்காக யு எஸ் போய் இருக்காங்க." என்று பதில் சொன்னவளுக்கு நிஜமாலுமே தாளவில்லை.

அத்தனை பேர் கூடியிருக்கும் இடத்தில் தன்னை அவமானப் படுத்தும் நந்தாவின் நோக்கம்?

இதற்கு பதில் கொடுக்க நினைத்த சியா, "உங்க வளைகாப்பு எப்போ நந்தா... ஏதாவது பிளானிங் ல்ல இருக்கீங்கலா...?"

"ராம் ரெடியா இருக்கார்னு எங்களுக்கு தெரியும்... என்றவள், இல்ல ராம்... "என்று ராமையும் துணைக்கு அழைத்துக் கொண்டாள்.

இருவருக்கும் நடக்கும் பனிபோர் ஆண்கள் இருவருக்கும் புரிந்தது. ராம் நந்தாவுடன் சீக்கிரம் கிளம்பிவிட்டான். பெண்கள் பிரச்சனை அதில் தன் அந்தரங்கம் அலசப் படுவதை அவன் விரும்பவில்லை.

நந்தா மீது கோவம் என்றால் சியா மீது வருத்தம். சியாவின் வார்த்தைகளை அவன் எதிர்பார்த்திருக்க வில்லை. அதில் தன்னை வேறு துணைக்கு அழைத்ததில் இன்னும் வருத்தம்.

பதில் ஏதும் சொல்லவில்லை அவன்.

ஆனால், ராம் தன்னை விட்டு கொடுத்ததாக நந்தா எண்ணம் கொண்டாள்.

சியா, ராம் மீது உரிமை கொண்டு பேசுவதாக அவளுக்கு தோன்றியது. அவர்களது பெயர் பொருத்தம் நினைத்து வேறு வெறுப்பு கொண்டாள். அவள் யோசிப்பது அடுத்தவர் மனைவி பற்றி என்ற எண்ணமே அவளுள் இல்லை.

தனியாக ராமை சந்தித்து சியா ஷ்யாம் இருவரும் மன்னிப்பு கேட்கவும், ராம் 'லீவ் இட்' என்றுவிட்டான். ஆனால் அவன் மனதில் இது ஒரு காயம்தான்!

அதற்கு மருந்து?🥰
 

Subageetha Sundararajan

Sugee
Vannangal Writer
Team
Messages
130
Reaction score
39
Points
63
கொடிமலர் 21

தனது முழு உயரத்திற்கும் நிமிர்ந்து நின்ற ராமை பார்க்கவே நந்தாவுக்கு பயமாக இருந்தது. அவளது வார்த்தைகளை முடிக்க அவன் சம்மதிக்கப் போவது இல்லை. அது உறுதியான பிறகு, வேறு எப்படி சமாளிப்பது என்று அவளுக்குள் யோசனை.

அவள் குழந்தை பெற்றுக்கொள்ள காட்டும் தயக்கம் இப்போது ராமையும் யோசிக்க வைத்தது.

நந்தா நேரடியாக கேட்டுவிட்டாள், "நீ எதுக்கு சியாவை பார்த்து வழியற ராம்.. உனக்கு நா போதாதா...?
அவளும் எனக்கு பாடம் எடுக்க உன்ன துணைக்கு கூப்பிட்டுக்குறா. அவ புருஷன் வாய திறக்காம அவ கூடவே நிக்குறான்? என்ன நடக்குது ராம்..." நந்தா மனதில் மும்பையில் நடந்த ராமின் தங்கை திருமண நிகழ்வுகள் வந்து போக வார்த்தைகளில் வீரியம் கூடியது.

தன்னையும் சியாவையும் சேர்த்து வைத்து..? நினைக்கவே அருவறுத்துப் போனான் ராம். அவனது கோவம் எல்லை கடக்க ஆரம்பித்தது. ஆனாலும், வார்த்தைகளை விட்டறிய அவனுக்கு உடன்பாடு இல்லை.

"நீ இப்படி கூட பேசுவியா நந்தா?"
அவன் வார்த்தைகள் இதயத்தின் ஆழத்தில் இருந்து ஒலித்தது. O வருத்தம், வலி மட்டும்!

முதலில் அவன் கோவம் கொண்ட பாவத்தை பார்த்து மிரண்டவள் இப்போது சுதாரித்துக் கொண்டாள். இவனால் தன்னை என்ன செய்ய முடியும் என்று அவளின் அகம்.

"இப்போ நா எதுவும் தப்பா பேசிட்டேன்னு சொல்ல வர்றியா ராம்? "

இந்த கேள்விக்கு என்ன பதில் சொல்ல வேண்டும்...?வேண்டுமென்றே இவள் பிரச்சனை செய்கிறாள் என்று புரிந்து கொண்டான் ராம்.

சரி, இந்த பேச்சை விடு நந்தா. நா உன்கிட்ட குழந்தை பெத்துக்கணும் னு கேட்டேன். இன்னிக்கு வரை பதில் இல்ல.
நீ சரியா இருந்தா மத்தவங்க மேல சந்தேகம் வராது "

அவன் அழுத்தமாக சொன்ன வார்த்தைகள் அவளுக்குள் அச்சு பிசகாமல் தைத்தது.

அப்போது நான் சரியில்லை என்கிறானா இவன்? அவளது சமீப கால ஒதுக்கங்களை அவன் பொறுத்து கொள்ள வேண்டும் எதிர்பார்க்கிறாள்.
பரஸ்பரம் கணவன் மனைவி உறவில் விட்டுக் கொடுப்பதும் ஒருவர் மேல் ஒருவர் வைத்திருக்கும் பிரியத்தின் காரணமாக தாம்பத்தியத்தில் பல சமரசங்கள் செய்து கொள்வதும் இயல்புதான்! ஆனால் அந்த சமரசங்கள் ஒருவருக்கொருவர் விருப்பமாக செய்ய வேண்டியவை. ஒரு பக்கம் மனம் நிறைய காதலை வைத்துக் கொண்டு, மனைவியை மட்டும் வேண்டும் கணவன் காத்துக் கொண்டிருப்பதும், இன்னொரு பக்கம் கணவன் தன்னை இவ்வளவு நாடுகிறான் என்பதை தனக்கு
சாதகமான விஷயங்களுக்காக மனைவி பயன்படுத்திக் கொள்வதும், இயல்பான தாம்பத்திய வாழ்க்கையை கொச்சை படுத்துவதாகாதா...
இந்த விஷயம் ஆண் பெண் என்ற பாகுபாடு இல்லாமல் இரு பாலருக்குமான சமமானது.ஒரு நிலையில் வைத்து யோசிக்கப்பட வேண்டிய ஒன்று.
இங்க நந்தா செய்து கொண்டிருப்பது, தன் மேல் உயிரையே வைத்து காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவனை பழி வாங்கும் நடவடிக்கை.
ஒரு பக்கம் நிறைய பெண்கள் திருமணமே வேண்டாம் என்று சொல்வதும், சில இடங்களில் அப்பாவி ஆண்களை பழிவாங்குவதும் தற்போது நிறைய நடக்கிறது தான்!
பொதுவில் ஆண்களை மட்டும் குற்றவாளிகள் ஆக்கி பார்ப்பதை பழக்கமாக்கி விட்டுக் கொண்டோம்.

இதோ இப்போது நந்தா ராமை எப்படி நோக வைப்பேன் என்று தான் யோசிக்கிறாள். அவனது தவிப்பு மீண்டும் ஒரு காலத்தில் அவளை தகிக்க விடக்கூடும்!

சட்டென்று தன்னை சீர் செய்து கொண்டவள், "குழந்தை தானே.. பெத்துக்கணும்?
செஞ்சுடலாம். பட் அது 'தானே'கன்சீவ் ஆகணும். அண்ட் குழந்தை பிறந்த பிறகு என்னை நிர்பந்தம் செய்ய கூடாது. என்னால என் பர்சனல் ஸ்பேஸ் விட்டு தர முடியாது. நீ வளக்கறேன்னு ப்ரோமிஸ் பண்ணு.. குழந்தைக்கு ட்ரை பண்ணலாம் " அவளது வார்த்தைகளை அவனால் புரிந்து கொள்ள இயலவில்லை.

அவனை பொருத்தமட்டில் குழந்தை பிறந்தால் அதை பெற்றோர் இருவரும் சேர்ந்து வளர்க்க வேணும். வீட்டின் மூத்தவர்கள் நம்மை நல்வழிபடுத்துவார்கள்.

இவள் சொல்லும் வார்த்தைகள் அவனுக்கு புதியதாக இருந்தது.

ஆனாலும் அவன் ராமன்.. சரி என்றுவிட்டான். உலக நியதியாக குழந்தை பிறந்தால் நந்தா சரியான பாதையை புரிந்துகொண்டு குடும்ப வாழ்வில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வாள் என்ற நம்பிக்கை அவனுக்கு.

ஆனால், அவன் தன் மனைவியை இன்னும் அறிந்து கொள்ளவில்லை.

அவர்கள் பேசி மூன்று மாதத்தில் நந்தா கரு தரித்தாள்.. அதிசயம் ஒன்றும் இல்லை. முன்பு போல் விலகி போகாமல் நந்தா ராமுடன் நேரம் செலவழித்ததன் விளைவு.

விஷயம் கேட்டு ராமின் அம்மா, பாட்டி இருவரும் பெங்களூரு வந்துவிட்டார்கள். ராம் அவனை பார்க்க அவர்கள் மனம் துடித்தது. நந்தா பற்றிய யோசனைகளால், லீலாவதி வீட்டில் தங்கிக்கொண்டார்கள்.

ராமிடம் அலைபேசியில் அழைத்து, " இருவரும் எப்போதும் வீட்டில் இருப்பார்கள்... வந்து பார்க்கலாம் "என்று வீட்டின் முதியவள் கேட்கவும் நொந்தே போனான் ராம்.

அவனால் தன் அம்மாவும் பாட்டியும் இங்கே வந்து தங்காமல், தன்னிடம் அப்பொய்ன்மெண்ட் வாங்க போன் செய்திருப்பதாக அவனுக்கு கோவம்.
மனைவி மீது கோவம், வீட்டினர் மீது ஆற்றாமை, கலவையான மன நிலையில்,அவனை பற்றி கவலை கொள்வது இனி நம் பொறுப்பு இல்லை. அவனே தேடி கொண்டது, என்று ராம் வீட்டினர் விலகி இருக்க,
உனக்கு உன் வீட்டு ஆட்கள் தான் இருக்காங்களே, நா எதுக்கு உன்னை பத்தி கவலை படணும் என்ற மனப்போக்கில் நந்தாவுமாக' ராம் நிலைதான் மோசம்.


தன்னை நிலைபடுத்தி கொண்டவன், "உங்க வீட்டுக்கு வர நீங்க எதுக்கு கேக்கணும் பாட்டி " என்று கேட்டு முடிப்பதற்குள் குரல் கமறிவிட்டது.

அவன் நிலை மனதில் கஷ்டம் கொடுத்தாலும் சமாளித்து கொண்ட மூத்தவர், "இன்னிக்கு சண்டே தானே, ரெண்டு பேரும் வீட்ல இருங்க. மதியம் வரோம் "என்று வைத்துவிட்டார்.

லீலாவதியுடன் சேர்ந்து மதியம் உணவை முடித்துக் கொண்டு ராமின் பாட்டி, அம்மா, சித்தப்பா, சித்தி எல்லோரும் ராமின் வீட்டுக்கு வர, கதவை திறந்த ராமின் முகம் எவ்வளவு மலர்ச்சி கொண்டதோ, இவர்களை பார்த்த நொடியில் நந்தா முகம் கூம்பியது.

இதை கண்டுகொண்ட பெரியவர்களுக்கு சங்கடம் தான் மிச்சம்.
என்ன உறவு இது, என் மகனுடன் சிரித்து பேசி, மகிழ்ச்சியுடன் கொண்டாடும் தருணம் இது. இந்த பெண் இப்படி இருக்கிறாளே என்று ராமின் அம்மா மனம் சுணங்கியது.
வெளியே காட்டிக்கொள்ள மனதில்லாமல் சகஜமாய் பேசிவிட்டு, எப்படியோ மூன்றாம் நபர்கள் போல் பாவம் காட்டி அரை மணி நேரத்தில் கிளம்பிவிட, தன் வீட்டில் நீரை கூட அருந்தாமல் நாசூக்காய் தவிர்த்துவிட்டு கிளம்பி சென்ற தன் குடும்பத்தாரை நினைத்து ராமின் மனது அழுதது.

அடுத்த ஒரு வாரம் சித்தப்பா வீட்டில் தங்கப்போகும் அம்மா, பாட்டியை அடுத்த நாளே சென்று சந்தித் தான் ராம்.

தன்னுடன் வந்து இருக்குமாறு எவ்வளவோ கெஞ்சியும் அவர்கள் ஒப்புக் கொள்ளவில்லை.
ராமின் மனதில் துக்கம் பொங்கியது.

"நந்தாவை நல்லபடியா பார்த்துக்கோ ராம், இனி உன் பொண்டாட்டி, குழந்தை தான் உன் குடும்பம் என்று உபதேசம் வேறு."
அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள், இனி இவர்கள் குடும்பத்தில் நான் இல்லையா... என்று ராம் குழம்பினான்.
வாய் விட்டு கேட்கும் தைரியம் இல்லை. ஒருவேளை அவர்கள் அதற்கு பதில் ஆம் என்று சொன்னால், தாங்கும் திடம் அவனுக்குள் இல்லை.

தினமும் அலுவலகம் செல்லும்முன் வந்து பார்த்துவிட்டு செல்வான். அவர்கள் ஒன்றும் சொல்லவில்லை. அவன் மனம் தவிப்பது தெரியும். ஏதாவது சொல்லி கணவன் மனைவி இடையில் பிரச்சனை வந்தால் என்ன செய்வது என்று அவர்களுக்கு யோசனை.


கிளம்பும் முன் சியாவை பார்க்க வேண்டும் என்று ராமின் அம்மா விருப்பம் கொள்ள, பெண்கள் மூவரும் சியா வீட்டுக்கு சென்றார்கள்.

எட்டு மாதம் நிறைந்து, பூரண நிலவு போல் சியா. ஷ்யாம், அவனது குடும்பம் மொத்தமும் அவளை தாங்குவது பார்த்தாலே தெரிந்தது.
சியாவின் அனுசரணை, மரியாதை இவர்கள் மனதில் ஏக்கத்தை உண்டு பண்ணியது.

நம் ராம் எவ்வளவு நல்லவன்!அவனுக்கு ஏன் சியா போன்ற பெண் மனைவியாக அமையவில்லை?

வீட்டுக்கு வந்தவர்களிடம் சியா புன்னகை முகமாக அமர்ந்து பேசிய பாங்கு நந்தாவுடன் ஒப்பிட்டு பார்க்க சொன்னது.

இன்னும் இருபது நாட்கள், பிறகு எப்போது வேண்டுமானாலும் பிரசவம் ஆகவும் வாய்ப்பு உண்டு என்றார் ஷ்யாமின் அம்மா.

சியாவின் பிறந்த வீடு சரிகிடையாது என்று ராம் மூலம் அவன் வீட்டில் தெரியும்.
சட்டென்று ராமின் அம்மா தன் கையில் இருந்து வளையலை கழற்றி சியாவுக்கு அணிவித்துவிட, சியா பதட்டம் கொண்டாள்.

இதை யாருமே எதிர்பார்க்கவில்லை. அந்த வளையல் பரம்பரையாக மருமகளுக்கு மாமியார் அணிவிக்கவேண்டும். அதுவும் வளைகாப்பு அன்று.

நந்தா நடந்துகொள்ளும் முறையில் முற்றும் வெறுத்துப் போன நிலையில் இருக்கும் ராமின் அம்மாவுக்கு சியாவை பார்த்து என்ன தோன்றியதோ?

நடந்த விஷயத்தில் சியாவுக்கு ரத்த அழுத்தம் கூடியது. ஷ்யாம் மனதில் ராம் என்ன நினைப்பான் என்ற யோசனை. நல்லவேளை, அவர்களுக்கு இந்த நகை மருமகளுக்கு உரியது என்று தெரியாது. லீலாவதிக்கும், ராமின் பாட்டிக்கும் உறைநிலை என்றுதான் சொல்ல வேண்டும்.

வந்தவர்கள் ஷ்யாம் குடும்பத்துடன் மதிய உணவை முடித்தவர்கள், இன்னும் இரண்டு நாட்களில் மும்பை திரும்ப செல்வதாக சொல்லி கிளம்பினார்கள்.

அன்று மாலை, ஷாமுடன் மீட்டிங் என்று ஷ்யாம் அலுவலகம் வந்த ராம், சியாவின் கைகளில் இருக்கும் வளையலை பார்த்து மனதுக்குள் அதிர்ந்துதான் போனான். வார்த்தை எதுவும் சொல்லவில்லை என்றாலும் அவனுக்குள் மெல்லிய நடுக்கம் பரவியது.

ஷ்யாமும் ராமின் வீட்டிலிருந்து வந்தது பற்றி எதுவும் பேசிக்கொள்ளவில்லை
. இன்னும் சொல்லப் போனால் ராமுக்கு விவரங்கள் தெரிந்திருக்கும் என்று யோசித்தான்.

சியாவின் ஐந்தாம் மாதத்தின் கொண்டாட்டம் முடிந்து இப்போதுதான் இருவரும் நேரே சந்தித்துக் கொள்கிறார்கள். ஒருவித தயக்கம் ராமுக்கும் சரி, ஷ்யாம் -சியாவுக்கும் சரி.

ராம் கிளம்பும் முன் நந்து பிரக்நென்ட்டா இருக்கா.டூ மந்த்ஸ் ஆகுது என்றான் மரத்த குரலில்.
அவனுக்கு சந்தோஷமா என்றால் 'ஆம்'என்பான். நந்தா?

ராமை கட்டித்தழுவிக் கொண்டான் ஷ்யாம். தன் ஹாண்ட் பாகில் இருக்கும் சாக்லேட் எடுத்து மூன்றாக பகிர்ந்து தான் ஒன்றை வாயில் போட்ட சியா, ஷ்யாம், ராம் இருவருக்கும் கொடுத்தாள்.
ராமின் கண்களில் கண்ணீர் வழிந்தது. முதன்முறையாக அவனுக்காக குழந்தை வரப்போவதை இனிப்புடன் கொண்டாடும் தருணம். அவன் உணர்ச்சி வசப்பட்டான்.

விஷயம் ஊர்ஜிதம் ஆனபிறகு நந்தாவிடம் எந்த பிரதிபலிப்பும் இல்லையே!

ராமின் வீட்டில்... விவரிக்க இயலாது... அவன் மனம் அவ்வளவு பாடுபடுகிறது.

அடிப்படையாக திருமணமான ஆணுக்கு கிடைக்க வேண்டிய சந்தோஷங்கள் தனக்கு மறுக்கப் படுவதை அவனால் ஜீரணிக்க முடியவில்லை.

நந்தா ஏன் என் வாழ்வில் வந்தாள்.. எனக்கு வாழ்க்கை பாலைவனம் ஆக இருவரில் யார் காரணம்? நானா இல்லை அவளா?

இருவருமே தானோ?
அவனது கண்ணீர் ஷ்யாமின் தோளை நனைக்க, சியா ராமுக்கு முதுகை..
மூவருக்குமான நட்பு, இத்துடன் நிற்கும் என்று தோன்றவில்லை. 

Subageetha Sundararajan

Sugee
Vannangal Writer
Team
Messages
130
Reaction score
39
Points
63
நாங்கள் எதற்காகவும் யாருக்காகவும் நிற்கப் போவதில்லை என்ற காலம் அது ஓடிக்கொண்டே தான் இருந்தது.

ஸியாவுக்கு குறித்த காலத்திற்கு முன்னரே குழந்தை பிறப்பு நிகழ்ந்து விட்டது. ஒரு அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்திருந்தாள் அவள்.

ஷ்யாமிற்கு உண்மையில் கை கால் தரையில் பரவவில்லை. அவன் எதிர்பார்த்தி ருந்தது போலவே, குழந்தை சியாவும் ஷ்யாமும் ஒன்றாய் செய்த கலவையாய் இருந்தான். வீட்டில் இருக்கும் சமயங்களில் எல்லாம் ஷ்யாம் முழுக்க முழுக்க சியாவின் அறையில் தான்.

ஷாமின் பாட்டி கண்டிப்பாக ஷியாம் சியாவுடன் தங்கக் கூடாது என்று உத்தரவு போட்டதன் விளைவு இருவரும் வெவ்வேறு அறைகளில்.

குழந்தையை பார்த்துக் கொள்ள வீட்டோடு தங்கும்படிக்கு ஒரு பெண்ணையும் ஏற்பாடு செய்து விட்டான் ஷாம்.

அலுவலகத்தில் சியா இல்லாமல் ஒவ்வொரு நொடிப்பொழுதும் அவனுக்கு யுகம் போல் தான் தோன்றியது. அவள் திரும்பவும் வேலைக்கு சேர்வதற்கு சுமார் எட்டு மாதங்கள் வரை ஆகும் என்றாள்.
ஆனால் ஷாமின் பாட்டியோ ஒரு வருடம் வரை குழந்தையை விட்டு விட்டு எங்கேயும் செல்லக்கூடாது என்று அறிவுரை கூறிவிட்டார்.

குழந்தை பசிக்கு அழும்போதெல்லாம் அமுது புகட்டுவதில் நேரம் சென்று கொண்டிருந்தது.

தனக்கு கூட இதுபோல ஒரு வாழ்க்கை அமையும் என்று சியா அவள் கனவில் கூட நினைத்துப் பார்த்தது இல்லை.
ஆரோக்கியமான உணவு அவளுக்கு நல்ல சக்தியை புத்துணர்ச்சியை கொடுத்தது. அமைதியான வாழ்க்கை,அற்புதமான கணவன், அவர்களின் காதலை உரைப்பதாக குழந்தை.
அவளைத் தாங்கும் மாமியார் வீடு, இதைவிட சொர்க்கம் இல்லை என்று நம்ப தொடங்கி இருந்தாள் சியா.

குழந்தை பிறந்த உடனேயே சியாம் அவளது பெற்றோருக்கு தகவல் தெரிவித்து விட்டான். ஆனால் அமெரிக்காவில் இருக்கும் அவர்கள் இருவருக்கும், இளைய மகளின் குடும்பம் பெரியதாக தோன்றி விடவே, வெறும் வாழ்த்துக்களுடன் நிறுத்திக் கொண்டு விட்டார்கள்.

திரும்ப இந்தியா வரவே அவர்களுக்கு பிடிக்கவில்லை.

ஊர்மிளா அவர்களுக்கு இன்னும் இரண்டு மாதங்களுக்கு தங்குவதற்காக, ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தாள். அவளிடமிருந்து தமக்கையின் குழந்தைக்கு வாழ்த்துக்கள் இல்லை. இயல்பிலேயே பெரும் கோடீஸ்வர குடும்பத்தில் பிறந்திருக்கும் அக்குழந்தை மீதும் அவளுக்கு த்வேஷம் தான்!.

'கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது. ஆனால், சியா நிலை... ஒன்றும் சொல்ல இயலாது.'

இதைப் பற்றி எல்லாம் சியா யோசித்து கவலைப்பட கூடாது என்று ஷாமின் மொத்த குடும்பமும் அவளுக்கு தூண் போல நின்று கொண்டிருந்தது.

இதெல்லாம் அவள் அறிந்தது தான், ஏற்கனவே எதிர்பார்த்து இருந்தது தான்! அவளைப் பொறுத்தவரை இதற்கு மேல் கவலைப்படவும் ஒன்றுமே இல்லை.

இனி தன் குழந்தை தன் கணவன், தன்னைச் சேர்ந்த மக்கள் கணவனின் குடும்பம் தான்! என்ற முடிவுக்கு அவள் என்றோ வந்து விட்டிருந்தாள்.

அதுவரை 'நான் உன்னை காதலிக்கிறேன்' என்று வார்த்தையால் வெளிப்படுத்தாத ஷியாம், குழந்தை பிறந்த பிறகு அடிக்கடி அவளிடம் அந்த வார்த்தையை சொல்லிக் கொண்டிருக்கிறான். ஒவ்வொரு முறை அவனிடம் அந்த வார்த்தைகள் வெளிவரும்பொழுது, சியா புது உலகத்தில் சஞ்சரிக்கிறாள்.

இரவு அலுவலகத்தில் இருந்து ஷியாம் வருவதற்கு எவ்வளவு நேரம் ஆனாலும் அவனுக்காக காத்திருந்த உணவு பரிமாறுவதை மட்டும் சியா விடவே இல்லை. அந்த நேரத்தில் குழந்தை அழுதால் மட்டும், அதை சமாதானப்படுத்திக் கொண்டு ஷாமுக்கு உணவு பரிமாறி விடுவாள்.

ஒவ்வொரு விஷயத்திலும் ஷ்யாம் மீதான சியாவின் அக்கறை, 'காதல் என்பது இதுதான்' என்று ஷாமிற்கு புரிய வைத்துக் கொண்டே இருந்தது.

அவர்களது காதல் அடுத்த நிலையை அடைந்து விட்டது என்று கூட சொல்லலாம். ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் ப்ரியம், எப்போதும் தனது துணைக்காக யோசிக்கும் பாங்கு..

குழந்தையை கொஞ்சும் சாக்கில் ஷாம் தனது மனைவியிடமும் காதல் புரிந்து விட்டு வருவதை தனது வழக்கமாக்கி கொண்டு விட்டான்.

இருவரையும் மொத்தமாய் சுருட்டி கொள்ளும் முத்தங்கள் இப்போது சரளமாய்.
அதில் காமம் என்பது ஒரு துளி கூட இல்லை.

'உன்னை பிரிந்து இருப்பது கஷ்டமாக இருக்கிறது என்ற தாக்கத்தின் வெளிப்பாடு' இந்த முத்தங்கள்.

இன்னொரு புறம் ராம், தனது மனைவி நந்தாவை ஒழுங்காக சாப்பிட வைக்கவே பிரம்மபிரயர்த்தனம் செய்து கொண்டிருந்தான்.

முன்பு போலவே அவள் தனக்கு இஷ்டத்திற்கு பாவ் பாஜி, பானி பூரி, பிரட், போன்றவற்றை சாப்பிட்டுவிட்டு அலுவலகம் செல்வதும், முன்பைவிட அதிகமாக அலுவலக வேலைகளை இழுத்து போட்டு செய்வதும் என்று தனது பிடித்தமின்மையை வெகுவாக காண்பிக்கிறாள்.

மருந்துகள் எடுத்துக்கொள்வதோ, மருத்துவமனைக்கு செல்வதோ கிடையாது. மூன்றாம் மாதம் எப்படியோ கெஞ்சி அவளை மருத்துவரிடம் ராம் கூட்டிச் சென்றான்.

அதிகம் ஓய்வு எடுக்காமல், அதற்கும் ஒரு பிடிவாதம் பிடித்தாள் நந்தா.
மொத்தத்தில் 'கருவை கலைத்து விடு' என்று ராம் தன் வாயால் சொல்லவேண்டும் என்று அதிகம் மென கட்டாள்.

ஆனால் என்ன ஆனாலும் கருவை கலைப்பதில் ராமுக்கு உடன்பாடு இல்லை. அவன் அதை பத்தி பேசப்போவதும் இல்லை. அவள் எவ்வளவு பிடிவாதக்காரியாக நடந்து கொண்டாலும், ராம் அவ்வளவு சீக்கிரம் தோற்பதற்கு தயாராக இல்லை.

முதல் ஐந்து மாதங்களுக்கு தன்னை எப்படி எப்படியோ துன்புறுத்திக் கொண்டு நந்தா, இதற்கு மேல் கருவை கலைப்பதற்கு வாய்ப்பு கிடையாது என்று தன்னை தானே தேற்றிக்கொண்டு மருத்துவரிடம் செல்வதும் மருந்துகள் உட்கொள்வதும் ஆரம்பித்து விட்டாள்.
ஆனால் அதற்குள் அவளது உடல்நலம் வெகுவாக பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தது.
சர்க்கரை நோயும் ரத்த அழுத்தமும் கூடி போயிருந்தது.

கட்டாய ஓய்வில் இருக்க வேண்டிய நிலையில் தள்ளப்பட்டாள் நந்தா.

அதற்கும் நந்தாவிற்கு ராம் மீதும் தன் வயிற்றில் இருக்கும் குழந்தையின் மீதும் தான் கோபம்.

வெளியிலேயே வராத அந்த குழந்தையின் மீது கூட வன்மத்தை வளர்த்துக் கொண்டாள்.

கால் வீக்கங்களும் சேர்ந்து கொள்ள, அலுவலகத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. வாந்தி வேறு அவளை பாடாய்படுத்தியது.

அலுவலகம் சென்று கொண்டிருந்தவரை, அவ்வளவாக அவளுக்கு உடல் படுத்தல் இல்லை. அதற்கும் சேர்த்து வைத்து இப்பொழுது அனுபவப்பட்டு கொண்டிருக்கிறாள்.

நிறைய முறை ராம் கேட்டு பார்த்து விட்டான், 'என் வீட்டிலிருந்து யாரையாவது வரச் சொல்லவா என்று...'
அதற்கு தீர்மானமாக மறுத்து விட்டாள் நந்தா.
சமையலுக்கு ஒரு ஆளை ஏற்பாடு செய்து வேளா வேளைக்கு அவளை பார்த்துக் கொள்வதற்கும், அவளுக்கு உணவு கொடுப்பதற்கும் என்று தன்னால் ஆன எல்லாவற்றையும் பார்த்து பார்த்து செய்தான் ராம்.

அவனை அலுவலகத்திலும் லீலாவதியோ அவனது சித்தப்பாவோ அதிகம் நிர்பந்தப் படுத்தவில்லை. பெரும்பாலும் தன் மனைவியுடனே நேரத்தை கழித்தான் ராம்.

ராமுக்கு இன்று வரை புரியாத விஷயம் இவ்வளவு பணம் என்னிடம் இருக்கிறது. ஆனாலும் கூட இந்த பெண் ஏன் இப்படி நடந்து கொள்கிறாள். இவள் போக்க முன்னுக்குப் பின் முரணாக வேற இருக்கிறது பேச்சு நடவடிக்கை எல்லாமே என்னை வேறாளாக்கி காட்டுகிறது.

இவளுக்கு என்னிடமிருந்து என்ன வேண்டும்,எதை எதிர்பார்க்கிறாள்?
இத்தனை இருந்தும் எதையுமே உபயோகப் படுத்தியதில்லை.
அலுவலகம் சென்று கொண்டிருந்தவரை மாதா மாதம் தனது செலவிற்கான பணத்தை கொடுத்துவிடுவாள்.

இப்பொழுது கூட அவள் வேலையை விட்டு விடவில்லை.பிரேக்கின் சர்வீஸில் தான் இருக்கிறாள்.
அலுவலகம் போக வேண்டிய நிர்ப்பந்தம் என்ன?
அப்படியே செல்வதாக இருந்தாலும் தங்கள் அலுவலகமே இருக்கும் பொழுது வேறு ஒரு இடத்தில் இவ்வளவு கஷ்டப்பட வேண்டிய அவசியம் தான் என்ன?

ஆரம்பத்தில் இருந்து நந்தா அவனை பொறுத்தவரை புரியாத புதிராக தான் இருக்கிறாள்.

அவளை குழந்தை விஷயத்திற்கு நிர்பந்தம் படுத்தி இருக்க கூடாதோ என்று அவனுக்கு வருத்தம் தான்!

ஆனால் இந்த உறவு இப்படியே சென்று விடுமோ அல்லது பிரிந்து விடக்கூடிய சூழ்நிலை உண்டாகி விடுமோ என்ற பயந்து தான் அவன் குழந்தைக்காக அவ்வளவு போராடியது.

அவள் குழந்தை இடம் காட்டும் அலட்சியம் அவனுக்கு வலிக்கிறது.
"என் விந்தை சுமப்பது அவளுக்கு அவ்வளவு பிடிக்கவில்லையா" என்று அவன் வருத்தப்படாத நாள் என்று ஒன்று கூட இல்லை.

வழக்கம்போலவே நந்தா அவன் உணர்வுகளை படிக்க முயற்சி செய்யவில்லை. அதற்கு மதிப்பு அவளிடம் கிடையாது. அவள் ஏன் இப்படி இருக்கிறாள் என்பது பற்றி அவளுக்கே தெளிவு இல்லாத பொழுது அவள் எப்படி தன்னை மாற்றிக் கொள்ள முடியும்?

மொத்தமாக சொல்லப்போனால் அவசரமாக என்றோ செய்த தவறுக்காக தனக்குத்தானே தண்டனை கொடுத்து கொண்டு விட்டான் ராம் என்று தான் நான் நினைக்கிறேன்.

இங்கு பிரச்சனை என்ன என்றால் ராம் தனக்கு மட்டும் தண்டனை கொடுத்துக் கொள்ளவில்லை. மாறாக, அவன் வெகு ஆசையாக பூமிக்கு வரவேற்க காத்திருக்கும் அவனது குழந்தைக்கும் தண்டனை கொடுத்து விட்டான்.
நந்தா போன்ற ஒருத்திக்கு குழந்தை பிறப்பது என்பது அவ்வளவு அதிசயமானது ஒன்றும் கிடையாது.
அவள் வாழ்க்கை என்று நினைத்திருக்கும் பக்கங்களே வேறு.

எத்தனை ஆன பின்னும் கூட அவள் ராமை திருமணம் செய்து கொள் என்று கேட்கவே இல்லை. நடந்தவற்றை வெளியே சொல்லி விடுவேன் என்று மிரட்டவில்லை.
ராம் வீட்டில் போய் எந்த சச்சரவுகளிலும் ஈடுபடவில்லை.

அவர்களுக்குள் நடந்த எல்லாவற்றையுமே அவள் மறக்கத்தான் விரும்பினாள்.

ராம் இன்னும் கூட நந்தாவை புரிந்து கொண்டு செயலாற்றி இருக்கலாம். காலம் கடந்து வரும் ஞானத்தாலோ, வருத்தங்களினாலோ யாருக்கு என்ன பயன்...

நந்தாவிற்கு எட்டு மாதங்கள் முடிந்து விட்டது. ஓரிருமுறை சியா நந்தாவிடம் பேச முயற்சிகள் செய்தாள்.

சியாவிற்கு குழந்தை பிறந்து இரண்டு மூன்று மாதங்கள் கழித்து, நந்தாவிற்கு குழந்தை மீது ஈடுபாடு வரட்டும் என்ற எண்ணத்தில் ராம், நந்தாவையும் ஷியாம் வீட்டிற்கு அழைத்துச் சென்றான் தான்!

ஆனால் அவன் எதிர்பார்த்த எந்த மாற்றங்களும் ஏற்படவில்லை. மாறாக ராம் சியாவையே பார்ப்பதாக, எண்ணிக்கொண்டாள் நந்தா.

வெகுவாக மெருகேரி காணப்பட்ட சியா மீது, தங்க விக்ரகம் போல இருக்கும் குழந்தை மீது நந்தாவுக்கு வெறுப்பு தான் ஏற்பட்டது.

ஷ்யாமும் ஷாமின் வீட்டாரும் சியாவையும் குழந்தையும் தாங்குவது வேறு விசிறி வீசியது போல் ஆகிவிட்டது.

விளைவு வீட்டிற்கு வந்து ராமுடன் சண்டை, குத்தல் பேச்சுகள், சியாவின் குழந்தை ராமுடையதா இல்லை ஷ்யாம் தான் அதுக்கு அப்பாவா.. எதுக்கு இவ்ளோ பதறுற ராம்? 'இவ்வாறான பேச்சுக்கள் ராமால் சகிக்க முடியவில்லை.

ஒருமுறை நந்தாவை அறைய போனவனை, "அப்போ நா சொல்றது நிஜம் இல்லியா.. அதான் கோவம் வருது" என்றாள்.

அடிக்க வந்தவன் 'ச்சை'என்று சென்றுவிட்டான். அவள் பேசுவது ஒருபுறம் டார்ச்சர் என்றால், இவையெல்லாம் ஷ்யாம் தம்பதி காதுங்களுக்கு செல்லாமல் இருக்கவேண்டுமே என்று தவித்து போனான்.

நந்தாவை எப்படி கையாள்வது என்று குழப்பம். மீளும் வழி புரியவில்லை. ஆனாலும் பிரிவு என்ற ஒன்றை அவன் யோசிக்கவில்லை.

குழந்தை பிறக்க இன்னும் வாரங்கள் தாம் மிச்சம்...

தவறு செய்யாமல் தண்டனை அனுபவிக்கும் நிறையபேரில் ராமும் ஒருவனாகிபோனது விதியின் சதி தானே!

 

Subageetha Sundararajan

Sugee
Vannangal Writer
Team
Messages
130
Reaction score
39
Points
63
கொடிமலர் 23

பிள்ளை பிறக்கும் நாள் நெருங்க, நந்தாவின் பிடிவாதமும் அதிகம் ஆனது.
அவளது பிள்ளைபேறு பார்க்கவென பிரணவ், மஹிமா இருவரும் வந்திருக்கிறார்கள். எப்போதும் போல் மனது ஒட்டாமல் அவர்கள் வரவில்லை. ராம் போன்ற ஒருவன் நந்தாவிடம் சிக்கியிருக்கும் கொடுமைக்கு, தங்களால் ஏதேனும் உதவி செய்ய முடிந்தால் என்ற எண்ணம் அவர்களுக்கு.

முதலில் தயங்கிய ராம், தன் அம்மாவிடம் கேட்க, "அவங்க வந்தா வேண்டாம்னு சொல்லாத ராம். உன் வைப் நம்ம வீட்ல யாரவது வந்தா ஒத்துக்க மாட்டா. வீண் சஞ்சலம். உன்னால தனியா சமாளிக்க முடியாது" என்று பெரியவளாக எடுத்துக்கூற, பிறகு அவர்களிடம் சம்மதம் சொல்லி வரவழைத்துவிட்டான்.
. சீமந்தம், வளைகாப்பு என்று எதற்கும் நந்தா அசைந்து கொடுக்கவில்லை. குழந்தை நன்றாக பிறக்கவேண்டும் என்று நந்தாவின் பெற்றோருக்கும், 'ராமை இதற்கு மேல சோதிக்காத தெய்வமே!'என்று ராமின் மொத்த குடும்பமும் பிரார்த்தனை செய்வதை தவிர வேறு மார்க்கம் இல்லை.

அந்த அளவிற்கு நந்தா, தனது நடவடிக்கைகளால் எல்லோரையும் மிரட்டி வைத்திருந்தாள். அவளைப் பொறுத்தவரையில் இதில் சரி தவறு என்று எதுவுமே இல்லை. அவளுக்கு பிடிக்காத ஒரு விஷயத்தை நிர்பந்தப்படுத்தி செய்ய வைக்கும் போது அதற்கு உண்டான எதிர் விளைவுகளையும் எல்லோரும் எதிர்பார்த்து தான் இருக்க வேண்டும் என்ற எண்ணம் அவளுக்கு. ஆனால் தாய்மைக்கு உரிய எந்த, எளிய குணங்களும் தியாக மனப்பான்மையும் அவளுக்கு வராமல் இருப்பது எனக்கு பெரிய ஆச்சரியத்தை உண்டு பண்ணி உள்ளது.

தனது வயிற்றில் வளரும் தன் குழந்தையை அவள் ஒரு நாளும் ரசிக்கவில்லை. வயிற்றில் குழந்தையின் ஒவ்வொரு அசைவுகளும் போற்றி பாதுகாக்க வேண்டிய பொக்கிஷங்களாக இருக்கும் பொழுது, அவளுக்கு இதில் எல்லாம் லயிப்பு ஏற்படாமல் இருப்பது எப்படி? படைப்பில் எத்தனையோ விதங்கள் என்றால் இதுவும் ஒன்று என்று மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. இதையெல்லாம் யாரோ ஒரு மூன்றாவது நபராக கவனித்துக் கொண்டிருக்கும் நமக்கே ஏதோ ஒரு ஒவ்வாமை உணர்வு ஏற்படும் பொழுது இவற்றையெல்லாம் நேராக அனுபவித்து கொண்டிருக்கும் ராம்,அவன் மனது அதைப் பற்றியும் நான் யோசிக்கிறேன். நிச்சயம் பரிதாபம் தான்!

கால் வீக்கம் தாங்க முடியாமல், நந்தா படுத்தும் பாடு.. ராமால் முடியும் என்றால் கண்டிப்பாக அந்த கருவை அவனை சுமந்து விடுவான். அந்த அளவிற்கு அந்த குழந்தையை அவன் விரும்புகிறான். குழந்தையை மட்டுமல்ல இன்னமும் கூட நந்தாவிற்கான அவனது காதல் அப்படியே தான் இருக்கிறது. ஒரு நல்ல குடும்ப வாழ்க்கை வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் தான் ஒவ்வொன்றையும் பொறுத்துக் கொண்டிருக்கிறான். காதல் குற்றம் பார்க்காத தான் ஆனால் அவள் படுத்தும் பாடு அவனுக்கு விரக்தியை ஏற்படுத்தியிருப்பதும் உண்மைதான்! வெகு கசப்பான உண்மை.

குழந்தை பிறப்பதற்கு அதிக நாட்கள் இல்லை என்ற நிலையில் சியா ஷாம் இருவரும் வந்து, நந்தாவை பார்த்து விட்டு சென்றார்கள்.
நந்தா விரும்பி சாப்பிடக்கூடும் என்று சியா தங்கள் வீட்டில் இருந்து சிலவற்றை தானே சமைத்து எடுத்துக் கொண்டு வந்தாள்.
ஷ்யாம் கூட கேட்டான் " அவளுக்குத்தான் உன்னை கண்டாலே பிடிக்காதே சியா, பின்னர் எதற்காக இந்த மெனக்கடல் என்று.

உண்மைதான்! நந்தாவிற்கு சியாவை கண்டாலே பிடிக்காது தான். ஆனால் ராமை தனது நண்பன் என்ற பார்வையில் பார்க்கும் சியாவிற்கு, இதைப் பற்றிய கவலைகள் எல்லாம் இல்லை. அது மட்டும் காரணம் என்று கூட சொல்ல முடியாது. தனது சொந்த தங்கை ஊர்மிளைக்கு எவ்வளவோ செய்ய வேண்டும் என்று சியா மனதில் ஆசை இருந்தது. ஆனால் அந்த சந்தர்ப்பம் சியாவுக்கு வாய்க்கவில்லை. மனதில் ஓடும் எல்லாவற்றையும் ஷாமிடம் சொல்லி விடத்தான் ஆசை. ராம் பற்றி சொல்லுவதைப் ஷாம் பெரிது படுத்த மாட்டான். ஆனால் தனது தங்கைக்கு செய்யவில்லை என்று ஏங்குவது தெரிந்தால் கண்டிப்பாக கடிந்து கொள்வான். ஒரு புன்சிரிப்புடனே எல்லாவற்றையும் சமைத்தாள்.

சாப்பிட்டு பார்த்த ஷ்யாமிற்கு மீண்டும் ஒருமுறை அவளது கைபக்குவம் நினைத்து கர்வம்.. மனைவி அவள் சமைத்து சாப்பிடுவதை முக்கியமான ஒன்றாக கருதினான் ஷ்யாம். இன்னும் சொல்லபோனால் வெளியே இப்போதெல்லாம் அதிகம் சாப்பிடுவதில்லை. பார்ட்டி என்றால் கூட கொரித்துவிட்டு வந்து வீட்டில் சாப்பிட வந்து விடுகிறான்.ஆனால் அவள் சமைத்து இவன் சாப்பிடும் காலம் நீண்டு இல்லை. அப்படி ஒரு சமயம் வரும்பொழுது...


நந்தாவிற்கு மட்டுமல்லாது வீட்டில் இருக்கும் எல்லோருக்குமாக எடுத்துக் கொண்டு வந்ததுதான் அது தவறாகிப் போயிற்று.

வழக்கம் போல், ராமு நந்தாவின் பெற்றோரும், சியாவின் சமையலை புகழ்ந்து தள்ள, நந்தாவிற்கு சாப்பிடும் எண்ணமே போய்விட்டது. நந்தாவின் பெற்றோர் எவ்வளவு வற்புறுத்தியும் ஒரு வாய் கூட அவள் அந்த உணவை சாப்பிடவில்லை. அவள் கண்களில் தெரிந்த வெறுப்பு, அது ஷியாமிற்கு நந்தா மீதான எரிச்சலை கூட்டியது தான் மிச்சம்.
அதை நந்தா
ஒளித்தெல்லாம் காண்பிக்கவில்லை.
நேரடியாக அவர்களுக்கு தெரியும் படிதான் வேண்டும் என்று நடந்து கொண்டாள்.

''எனக்கு இந்த மாதிரி புட்ஸ் பிடிக்காது.ஸோ, எனக்கு வேணாம் 'நந்தா தனது மறுப்பை தெளிவாகவே பதிவு செய்தாள்.

"கொஞ்சம் டேஸ்ட் பண்ணிப்பாரு நந்தா... "ராம் அவளிடம் கேட்க, நந்தாவின் மனதிற்குள் எரிமலை பொங்க தொடங்கி விட்டது.

வந்தவர்கள் முன்னாலேயே தனது லாவாவை காக்க தொடங்கி விட்டாள்.

"என்கிட்ட எதுக்கு கெஞ்சுற ராம். சியா சமையல் உனக்கு பிடிக்கும்னா நீ சாப்பிடு. என்னை எதுக்கு போர்ஸ் பண்ற? "
நந்தாவின் குரலில் வழிந்த நக்கல், அதில் தொணிக்கும் அர்த்தம்.. ஷ்யாமுக்கு கோபம் வந்துவிட்டது.

ராமின் முகத்திற்காக எவ்வளவு தான் பொறுத்துக் கொள்வது.. இப்போதெல்லாம் யாராவது சியாவை ஒரு வார்த்தை சொல்லிவிட்டால் கூட சியாமால் தாங்க முடியவில்லை. அப்படி இருக்கும் பொழுது நந்தா சொன்ன அர்த்தமே வேறு. எப்படி தாங்குவான்?

"ஓகே ராம் குழந்தை பிறந்தால் இன்பார்ம் பண்ணு. ஏதாவது ஹெல்ப் வேணும்னா தயங்காம கேளு. இனிமே நாங்க ரெண்டு பேரும் உன் வீட்டுக்கு வர்றது சரி இல்லன்னு நான் நினைக்கிறேன்." என்ற விட்டு தனது மனைவியையும் குழந்தையையும் அழைத்துக் கொண்டு கிளம்பி விட்டான் ஷியாம்.

வழிமுழுவதும் ராம் வாயை மூடிக்கொண்டு இருப்பது பற்றி, சியா சமைத்துக் கொண்டே வந்திருக்கக் கூடாது என்று, இறுதியாக நந்தா ஏன் இப்படி நடந்து கொள்கிறாள் பேசுகிறாள் என்று மாற்றி மாற்றி பேசி, சியாவை ஒரு வழியாக்கி கொண்டே வந்தான்.
எதற்கெடா ராமின் வீட்டிற்கு இன்று போனோம் என்ற அளவிற்கு ஸியாவிற்கு வெறுத்து விட்டது.

நந்தா என் மீது இவ்வளவு கோபப்படும் அளவுக்கு 'தான்' என்னதான் தவறு செய்தோம்!என்று எவ்வளவு யோசித்தும் சியா அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை.

என் எதிரிலேயே, சியா ராம் இருவரைப் பற்றியும் பேசுவதற்கு, நந்தாவுக்கு எவ்வளவு துணிச்சல் என்று சியாமின் மனது எரிந்தது.

ராமுக்காக கூட அவன் நந்தாவை மன்னிப்பதற்கு தயாராக இல்லை. தன் மனைவியை யாரோ ஒருவர், இழிவாக பேசும் பொழுது அதை பார்த்துக்கொண்டு அமைதியாக இருந்தால் நான் என்ன ஆண் மகன் என்று அவன் மனது அவனை உசுப்பேற்றி கொண்டே வந்தது.

நந்தாவுக்கு முதலில் குழந்தை பிறக்கட்டும். பிறகு நான் யார் என்று காட்டுகிறேன்.. என்று மனதிற்குள்ளே சொல்லிக்கொண்டான்.

நந்தா, தன் கணவன் ராமை போலவே ஷியாமும் எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு சென்று விடுவான் என்று தப்பாக எடை போட்டு விட்டாள்.

ஆனால், எது ஷ்யாம் சியா காதுகளில் விழக் கூடாது என்று ராம் வேண்டினானோ, அது அவர்கள் காதுகளுக்கு சென்றுவிட்டது.

ராம் மனதில் புழுக்கம், அவஸ்த்தை, நந்தா மீதான அருவருப்பு. அடுத்து என்ன, எப்படி என்று தவித்தான். இந்த நிலையில் நந்தாவை கண்டித்து பயனில்லை என்று தன்னை சமன் செய்துகொண்டான்.
ஷ்யாம் சியாவை பார்க்க அவனுக்கு தயக்கம் வந்துவிட்டது.

ஷ்யாமுக்கு மன்னிப்பு கேட்டும், தான் அவர்கள் இருவரையும் சந்திக்க விரும்புவதாகவும், ஆனால் இப்போது வேண்டாம். கொஞ்ச நாள் ஆகட்டும், என்றும் ஒரு வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்பி விட்டு, கட்டிலில் கண்ணை மூடி படுத்து விட்டான்.

தனது அறையில் கணவன் படுத்திருப்பதை பார்த்த நந்தா ஒரு அலட்சியப் புன்னகையுடன், தன்னாரைக்குள் நுழைந்து கொண்டாள். எதையோ சாதித்து விட்ட உணர்வு அவளுக்கும்.

நடுவில் நந்தா தனது பெற்றோருடன் இரண்டு முறை சண்டை வேறு போட்டு,. அவர்களின் துணை தனக்கு அவசியம் இல்லை, அவர்கள் தாராளமாக ஊருக்கே சென்று விடலாம் என்று வாதிட்டாள்.

அவர்களுக்கு அங்கு இருப்பதற்கே பிடிக்கவில்லை.
ஆனால், மாப்பிள்ளை ராமின் முகத்திற்காக எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டார்கள். ராமின் சித்தி சித்தப்பா நந்தாவை பார்க்க வேண்டி வந்தபோது, அவர்களிடம் முகம் கொடுத்து கூட நந்தா பேசவில்லை.
லீலாவதி கேட்டு விட்டார், " இந்த மாதிரி ஒரு பொண்ண உன்னுடைய லைஃப் பார்ட்னரா எப்படி செலக்ட் பண்ண ராம்?" ஊர் உலகத்துல உனக்கு வேற பொண்ணே கிடைக்கலையா... "

ராமிற்கு யாரோ முகத்தில் அறைந்த உணர்வு. அவன் மனதில் ஏதோ ஒன்று, மடிந்து கொண்டிருக்கிறது. அவன் மனதின் காயங்கள் அது எவ்வளவு ஆழம் என்று அவனுக்குத்தான் தெரியும். இதே நிலை தொடர்ந்தால் அவன் இன்று இல்லாவிட்டாலும் என்றாவது ஒரு நாள் மனநிலை மருத்துவரை அணுக வேண்டிய சாத்தியக்கூறுகள் அதிகம்!

மதியம் கிளம்பும்போது இருந்த மனநிலையில் சியா ஷ்யாம் இருவரும் இல்லை. இருவருக்கும் சாப்பிட கூட பிடிக்கவில்லை.
ஸியா இப்போது தாய்ப்பால் கொடுத்துக் கொண்டிருப்பதால், பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ சாப்பிட்டே ஆக வேண்டும்.

ஷியாம் "எனக்கு சாப்பாடு வேண்டாம்" என்று மறுக்க, அவனையே பார்த்துக் கொண்டு அவன் அருகில் அமர்ந்து விட்டாள் சியா. குழந்தை தனது பாட்டியுடன் விளையாடிக் கொண்டிருந்தது.

தன் அருகில் அமர்ந்துகொண்டிருக்கும் மனைவியின் கைகளை பற்றியவன் தன்னை
நிதானபடுத்திக் கொள்ள வெகுவாக சிரமப்பட்டான்.

நந்தா பற்றி தெரிந்தும் ராமுக்காக அங்கே போய்... ப்ச்..பட்ட பிறகு யோசித்து என்ன செய்ய?

மனதை வருத்திய அழுத்தம், சியா என்ன நினைக்கிறாள் என்று வேறு ஷ்யாமால் ஊகிக்க முடியவில்லை.

சியா, புதியதாக பிறந்திருக்கும் குழந்தை இவர்கள் இருவரையும் யோசித்து சாப்பிட சென்றான்.

சியா இன்னும் பத்திய சாப்பாடுதான். நேரம் கழித்து சாப்பிட்டால் உப்பசம் வரும் என்று அவளை திட்டிவிட்டு அவளை முதலில் சாப்பிட சொன்னான் ஷ்யாம்.." இன்னிக்கு என்னோட சாப்பிடுங்க "என்றவள் தன் தட்டிலிருந்து அவனுக்கு ஊட்டிக்கொண்டே அவளும் சாப்பிட்டாள்.
அவர்கள் காதல் பரிமாற்றம் இன்று உணவு வழியே!


 

Subageetha Sundararajan

Sugee
Vannangal Writer
Team
Messages
130
Reaction score
39
Points
63
கொடிமலர் 24

நந்தா சுற்றி இருக்கும் எல்லோரையும் ஒருவழியாக்கிக் கொண்டிருந்தாள். "இன்னும் ஒரு வாரத்தில் வந்து மருத்துவமனையில் அட்மிட் ஆகிடுங்க நந்தா"என்று பெண் மருத்துவர் சொல்லி அனுப்பி வைத்தார்.

ஆனால் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு இரண்டு நாட்கள் ஆன பிறகும் அவளுக்கு வலி வரவில்லை.

ராம்தான் மருத்துவரிடம் பேசி இந்த ஏற்பாடு செய்ய வைத்தான். இரண்டு வாரங்களுக்கு முன்பே அவளை மருத்துவ கண்காணிப்பில் வைக்க வேண்டிய சூழ்நிலை அவனுக்கு.

சரியான உணவு, வேளைக்கு மருந்து என்று இல்லாமல் தன் இஷ்டத்திற்கு இத்தனை நாட்கள் அவள் நடந்து கொண்ட முறைக்கு, ராம் மனதில் பயம்.

நந்தா யார் சொல்லியும் கேட்பவள் கிடையாது. வீட்டில் யாரையும் மதித்து அவள் நடக்கபோவதும் இல்லை.
இதனால் தான் ராம் நந்தாவுக்கு தெரியாமல் இந்த ஏற்பாடு செய்தான்.

மருத்துவமனையில் மூன்றாம் நாள் நந்தா தனது முகத்தை காண்பிக்க ஆரம்பித்து விட்டாள்.

"நாட்சுரல் பெயின் வரல டாக்டர். ஸோ, சி கேஸ் போய்டலாம். எனக்கு இதுக்கு மேல பொறுமை இல்ல ".. இப்படி சொல்லும் நந்தா வை ஆச்சர்யம் கலந்து பார்த்தார் மருத்துவர்.

ராம் செய்த ஏற்பாடு எதற்கு என்று அவருக்கு புரிந்தது.

"இன்னும் நாள் இருக்கு நந்தா, சேபர் சைடுல அட்மிட் ஆகியிருக்கீங்க. கொஞ்சம் வெயிட் பண்ணி பாக்கணும். வயத்துல இருக்கும் ஒவ்வொரு நாளும் குழந்தைக்கு நல்லது. அமைதியா இருங்க.. நிறைய நல்ல மியூசிக் கேளுங்க. நல்லா சாப்பிடுங்க..தூங்கி எந்திரிங்க.. நர்சோட வாக்கிங் போங்க...
குழந்தை தானே சரியான நேரத்துல பிறக்கும் " சிரித்துக்கொண்டே சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார்.

அத்துடன் மறைமுகமாக நந்தாவை இவற்றை செய்யவும் நிர்பந்தித்தார்.

வயதில், அனுபவத்தில் மூத்தவரான அவரை யாராலும் கேள்வி கேட்க முடியாது. லீலாவதியுடன் பி யு சி வரை படித்த நெருங்கிய தோழியும் கூட.

லீலாவதி வழியாக நந்தா பற்றி அறிந்து கொண்டவர், நந்தாவின் அலட்சிய போக்கை பார்த்து அவருக்கு அதிர்ச்சி தான்!

ர"ாம், உன்னோட வைப் பிரக்நன்சிய சீரியஸ்ஸா எடுத்துக்க மாட்டேங்குறா"என்று சொன்னவரிடம் ஐந்தாம் மாதமே பேசி ராம் செய்த ஏற்பாடுத்தான் இது.
அவனுக்கு வேறு வழி தெரியவில்லை.

மஹிமா, பிரணவ் இருவருக்கும் ஹாஸ்பிடல் செல்லும் வேலை இல்லை. ராம் தினமும் சென்று பார்த்து வருவதுதான்!

ராமிடம் ஆஸ்பத்திரியில் வைத்து வாக்குவாதத்தில் இறங்க தொடங்கினாள் நந்தா.

ஒருமுறை காலை நேரம் அவளது மருத்துவர் வரும் நேரம் ராமிடம் நந்தா கத்திக்கொண்டிருந்தாள்.

ராம் முன்னால் எதுவும் பேசாவிட்டாலும், அன்று மதியம் ஓபி பார்த்துவிட்டு, நந்தாவை கூட்டிக்கொண்டு வர பணித்தார் மருத்துவர்.

பாருங்க நந்தா, "சி கேஸ் போனா, உங்களுக்கு தான் கஷ்டம். அந்த ஸ்கார் வயத்துல லைப் லோங் இருக்கும்."

"முடிஞ்ச வரை வெயிட் பண்ணி நச்சுரல் டெலிவரி பாத்தா அப்போ பெயின் இருந்தாலும் உங்களுக்கு நல்லது. யோசிச்சு சொல்லுங்க... இன்னும் டென் டேஸ் இருக்கு ட்யு டேட் ஆக..."
என்று சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டார் அந்த மருத்துவர்.

நாளைக்கு வந்த நந்தாவிற்கு மனதெல்லாம் ஒரே குழப்பம். இன்னும் பத்து நாளைக்கு இதை வயித்துல வெச்சிட்டு சுத்தணுமா... அவளுக்கு எரிச்சல் மண்டியது.

எந்த முடிவிற்கும் வர இயலாதவளாக, இரண்டு மூன்று நாட்கள் கழித்து யோசிக்கலாம் என்று விட்டுவிட்டாள்.

இதுபோல அமைதியாய் ஒரு இடத்தில் இருப்பது, அவளுக்கு வித்தியாசமாய் இருந்தது. ஒரு பக்கம் இந்த வாழ்க்கை பிடித்திருந்தாலும், எப்பொழுதும் பிஸியாகவே இருந்து பழக்கப்பட்டவளுக்கு ஓரிடத்தில் அடைத்து வைக்கப்பட்டது போல் இருப்பது ஒரு வித ஒவ்வாமையை கொடுத்தது.

ஏற்கனவே, தேவையில்லாத பிடிவாத குணங்கள். அத்துடன் இப்போது ஹார்மோன் மாற்றங்கள். அவளை கையாள்வது,அவளது குடும்பத்தினருக்கு மட்டுமல்ல... அங்கே மருத்துவமனையில் அவளைப் பார்த்துக் கொள்ளும் எல்லோருக்குமே சவாலாகத்தான் இருந்தது. அது எவ்வளவு தூரம் என்றால், அங்கே இருக்கும் நர்சுகள், ராம் மருத்துவமனைக்கு வரும் போதெல்லாம் ஒருவித பரிதாப பார்வை பார்க்கும் அளவிற்கு.
அவ்வளவு தூரம் எல்லோரையும் ஆட்டி வைத்தாள் அவள்.
ராமிற்கு, மருத்துவர் தெரிந்தவர் என்பதாலும் அவனிடம் மருத்துவமனை வசூலிக்கும் தொகையாலும் இன்றுவரை எல்லாம் சரியாக போய்க் கொண்டிருக்கிறது. இல்லாவிட்டால் என்றோ நந்தாவின் நிலை மோசமாகி இருக்கக்கூடும்.

மூன்று நாட்கள் கழித்து மருத்துவர் காலையில் அவளை பார்க்க வரும் பொழுது," சி 'கேஸ் வேண்டாம் டாக்டர். நாம வெயிட் பண்ணுவோம், என்ற தலையை குனிந்த வாறே சொல்லி முடித்தாள் நந்தா. அவளது குரலே பிடித்தமின்மையை வெகுவாக காண்பித்தது. ஆனால் இதற்கெல்லாம் அசர்பவராக இல்லை மருத்துவர்.

நந்தாவின் அதிர்ஷ்டம், அவள் சொல்லி இரண்டோரு நாட்களில், லேபர் பெய்னும் அவளுக்கு வந்துவிட்டது. ஒருவேளை அவளது உணர்வுகளும், தன்னை வயிற்றுக்குள் வைத்துக் கொள்ள அம்மாவுக்கு பிடிக்கவில்லை என்றும் அந்த குழந்தைக்கு தெரிந்திருக்குமோ?

வலி எடுத்த எட்டு மணி நேரத்தில், ராமின் மகள் இந்த பூமிக்குள் தனது காலடி எடுத்து வைத்தாள். குழந்தை வழக்கத்திற்கு மாறாக, எடை குறைவாக பிறந்தது.

திரும்பவும் ஆரம்பித்தது பிரச்சனைகள்.குழந்தை ஒரு சில மணி நேரங்களிலேயே, நந்தா விற்கும் ஜுரம் வந்துவிட்டது.
ஒருபுறம் குழந்தை மருத்துவர்கள் கண்காணிப்பில், இன்னொரு புறம், நந்தா.

காய்ச்சல் குறைந்த பிறகு,மருத்துவர்கள் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க அறிவுறுத்த 'முடியவே முடியாது 'என்று தீர்மானமாக மறுத்து விட்டாள் நந்தா.

குழந்தைக்கு தாய்ப்பால் கொடு என்று ராம் வந்து எவ்வளவோ கெஞ்சிய போதும் அது எதுவும் எடுபடவில்லை.

மருத்துவர், "நீ தாய்ப்பால் கொடுக்கவில்லை என்றால் உனக்கு பிரஸ்ட் கேன்சர் வரதுக்கு சான்ஸ் இருக்கு. நீ கொடுத்தாய் என்றால் குழந்தைக்கு நல்லது ஆச்சு, உனக்கும்தான் " என்ற நிதர்சனத்தை எடுத்துச் சொல்லிவிட்டு செல்ல, ஒருவராக குழந்தைக்கு பால் கொடுக்கவும் சம்மதித்தாள்.

மகிமா பிரணவ் இருவராலும், நந்தாவை சமாளிக்கவே முடியவில்லை. ராமின் வீட்டில் இருந்து குழந்தையை பார்க்க இதுவரை யாரும் வரவில்லை. ராம் தான் யாரும் இப்பொழுது வர வேண்டாம் என்று சொல்லிவிட்டான். குழந்தையை எப்பொழுது வீட்டுக்கு அழைத்து வருகிறோமோ அப்பொழுது பார்த்தால் போதும் என்று அவன் சொல்லி விடவே, குழந்தையின் உடல் நலம் கருதி யாரும் வரவில்லை. அத்துடன், நந்தாவை பார்க்க வேண்டும் என்று ஹாஸ்பிடல் சென்றால் கூட நந்தா எப்படி நடந்து கொள்வாள், ஏதேனும் ரசாபாசம் ஆகிவிட்டால்? எல்லோரும் ரொம்பவே பயந்தார்கள்.

எல்லோரும் இருந்தும் கூட, இந்த நிலையில் தனித்து விடப்பட்டான் ராம். ராமின் அம்மாவுக்கும் பாட்டிக்கும் பேத்தியை பார்க்கும் ஆவல் மனம் நிறைய உண்டு. இன்னும் சொல்லப்போனால் ராமின் பாட்டிக்கு தனது கொள்ளு பேத்தி மீது ஆசை அதிகம். ஆனால் எதுவும் செய்ய இயலாத நிலையில், குழந்தையின் நன்மைக்காக பிரார்த்தனை செய்வதை தவிர அந்த குடும்பத்திற்கு வேறு வழி இல்லை.

விஷயம் கேள்விப்பட்ட சியா ஷ்யாம் இருவரும், நந்தாவை பார்க்க செல்லவில்லை. ஆனால் மருத்துவமனை வளாகத்தில், ராமை சந்தித்தார்கள்.

ராமின் நிலை கண்டு ஷ்யாம் சியாவின் முகம் பார்த்து முடிஞ்ச நேரம் சியா வந்து உன்னை பார்ப்பா ராம். எது வேணும்னாலும் என்கிட்டயும் சியா கிட்டயும் கண்டிப்பா கேளு. நாங்க இருக்கோம் உன்கூட "என்றான்..
சியா ராமின் கைகளை பிடித்து கொண்டு,"ஆமா ராம்... எதுக்கும் யோசிச்சு கவலை படாதே!"என்று கணவன் சொன்னதை வழிமொழிந்து விட்டு அங்கிருந்து இருவரும் கிளம்பினார்கள்.

காரில் வரும்போது ஷியாம் "சியாவிடம், முடிஞ்சா நந்தா ஹாஸ்பிடல்ல இருக்கிறவரைக்கும் டெய்லி ராம் கூட கொஞ்ச நேரம் டைம் ஸ்பென்ட் பண்ணு சியா. நானும் வேலை குறைவா இருக்கும் பொழுது உன்கூட வரேன்."
"ஹான்.. வரும்போது ஏதாவது புட் எடுத்துட்டு வா அவனுக்கு... என்றான். "
அவன் குரலில் ராம் மீதான கரிசனம் தெரிந்தது.

சரி என்று தலையாட்டினாள் சியா. அவள் மனதில் ர'ாம் இவ்வளவு நல்லவன்.. அவனுக்கு மனைவி அவனை புரிந்து கொண்டு நடப்பவளாக வந்திருக்கக் கூடாதா... 'என்று தான் தோன்றியது.

ஷியாம் சொன்னபடிக்கு, அடுத்த பத்து நாட்களுக்கும் தினமும் ராமை பார்ப்பதற்காக ஹாஸ்பிடல் சென்று வந்தாள். ஒரு சில சமயங்களில் ஷ்யாமும் அவளுடன் இணைந்து கொண்டான்.

மஹிமா பிரணவ் இருவரையும் கூட சில சமயங்களில், சியா சந்தித்தாள். மஹிமா மூலம் குழந்தையின் நிலை அறிந்த சியா அவளுக்கு மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியது.

இதுவரை குழந்தை பற்றி, சியா நேரடியாக ராமிடம் பேசியது இல்லை.

குழந்தைக்கு, நந்தா சரியாக தாய்ப்பால் கொடுப்பதில்லை என்று, அறிந்து கொண்டவளுக்கு இயல்பாகவே இருக்கும் தாய்மை உணர்வு அந்த குழந்தையை தான் எடுத்து பால் புகட்டினால் என்ன என்று தோன்றச் செய்தது.
தான் நினைப்பது தெரிந்தால் கூட பிரச்சனையாகக் கூடும் என்று தன்னை கட்டுப்படுத்த முயற்சி செய்தாள்.

மகிமாவிடம், தன் உணர்வுகளை அவள் பகிர்ந்து கொள்ளவில்லை.
ஆனால் இயற்கை? வீட்டில் சியாவின் பிள்ளை பசியில் அழுகிறானோ இல்லை இவளின் தாய்மை உணர்வு எதுவோ , இங்கு இவளுக்கு பால் சுரக்க ஆரம்பித்துவிட்டது.

மருத்துவமனையில் இருந்து ஷ்யாமின் வீடு பத்து நிமிடம்தான். சியா வீட்டுக்கு அவசரமாக கிளம்ப, அதற்குள் அவள் ஆடை நனைய ஆரம்பித்துவிட்டது.

இவள் நிலை கண்ட மகிமா அங்கு இருக்கும் நர்சிடம் சொல்ல, நர்ஸ் உடனே "இங்க 'தாய்பால் வங்கி ' இருக்கு. ட்ரை பண்றீங்களா "என்று கேட்டார்.
ஒரு நொடி யோசித்த சியா, மஹிமாவிடம் "உங்க பேத்திக்கு எடுத்து விடவா" என்று கேட்டுவிட்டாள்.

மஹிமாவுக்கு என்ன சொல்வது என்று புரியவில்லை. அவர் தயங்க, நர்ஸ் உடனே சரி வெயிட் பண்ணுங்க என்று நந்தாவின் குழந்தையை அறையில் இருந்து கொண்டுவந்து கொடுத்தார். நந்தா நடக்கும் விஷயங்கள் தெரியாது ஆழ்ந்த உறக்கத்தில்.

நந்தா குழந்தையிடம் நடந்து கொள்ளும் முறை அவருக்கும் தெரியும்தானே...

மஹிமா ஒன்றும் சொல்லவில்லை. சியா அருகில் வந்ததும் பாலின் வாசம் குழந்தை அதனையும் ஈர்த்ததோ!
சியா குழந்தை அவளை அணைக்க, பாலுக்காக குழந்தை அவள் அமுத குடத்தை முட்டியது.

குழந்தை பசியாறும் அந்த நொடி மஹிமா, சியா இருவரின் கண்களிலும் கண்ணீர்.

சியா வீட்டில், ஷ்யாமின் பாட்டியிடம், சியா கொடுத்து சென்ற தாய்பால் போதலில் அவள் மகன் பசியாறிக் கொண்டிருக்கிறான்.

சில சமயங்களில் எது எப்படி நடக்கும் என்று சொல்ல முடியாது.
இவையெல்லாம் ராம் ஷ்யாம் நந்தா மூவருக்கும் தெரிந்தால் என்ன நடக்கும்...?
 

Subageetha Sundararajan

Sugee
Vannangal Writer
Team
Messages
130
Reaction score
39
Points
63
கொடிமலர் 25

இப்போது அப்போது இன்று போக்குக் காட்டி ஒரு வழியாக நந்தாவும், ராமின் பெண்ணரசியும் ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்தார்கள்.

குழந்தை பிறந்து வீடு வந்து சேர்வதற்கு இருபது நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. பேபி ஜான்டிஸ் குழந்தைக்கு வரவே, குழந்தை மருத்துவமனையின் கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டிருந்தாள்.

நந்தாவின் உடல்நிலை, குழந்தை பிறந்த நான்கய்ந்து நாட்களிலேயே நன்றாக தேறி விட்டது. ஆனாலும் குழந்தைக்காக தான் அவளும் மருத்துவமனையில் இருக்க வேண்டியதாகி விட்டது. இதில் நந்தாவின் கோபம் அதிகமானது தான் மிச்சம்.
வயிற்றில் குழந்தை இருந்தபோது வந்திருந்த சர்க்கரை நோய் இப்போது இல்லை.

நந்தாவின் அம்மா மகிமா எவ்வளவு எடுத்துக் கூறியும் 'பத்தியம் எல்லாம் சாப்பிட முடியாது' என்று மறுத்துவிட்டு மனதிற்கு பிடித்தவற்றை சாப்பிட தொடங்கி விட்டாள் நந்தா.

மருத்துவமனையில் வீட்டினர் யாராலும் அவளை கட்டுப்படுத்த முடியவில்லை. மருத்துவமனையில் இருந்து நிர்வாகம் கொடுக்கும் சாப்பாடுதான் அங்கு அட்மிட் ஆனவர்களுக்கு. ஆகையால், அதுவே பத்திய சாப்பாடுதான் என்று விட்டு விட்டார்கள்.

வீட்டிற்கு சென்றால் இன்னும் எவ்வளவு பாடுபடுத்துவாளோ என்று நினைத்தாலே ராமுக்கும், நந்தாவின் பெற்றோருக்கும் வயிற்றில் புளி கரைத்தது.

வீட்டில் யார் சொல்வதையும் கேட்பதாக இல்லை நந்தா.
இஷ்டத்திற்கு சாப்பிட்ட உணவு செரிமானம் ஆகாமல் ஒரு நாள் வயிற்றில் பிரச்சனை காட்டியது.
அஜீரண கோளாரில் துவண்டவளுக்கு, தான் சாப்பிட சாப்பாடின் வீரியம் என்று புரியவில்லை. குழந்தை மீதும் ராம் மீதும் கட்டுக்குள் அடங்காத ஆத்திரம் வந்தது.

பால் கொடுக்க
மறுத்தாள். உடல் உபாதை அத்துடன் பாலும் கட்டிக்கொண்டது. மஹிமாவுக்கும் ராமுக்கும் போதும் என்றானது.

தினமும் வேண்டியதை ஸ்விக்கியில் ஆர்டர் செய்து வாங்கி சாப்பிட்டதின் விளைவு.
ராம் இவளுக்கு சொல்லி புரியவைக்க முடியாது என்று விட்டுவிட்டான். இன்று நந்தாவுடன் ராமும் மஹிமாவும் கூட சேர்ந்து குழந்தையும் அனுபவிக்கிறார்கள்.

பிரணவ் ஊருக்கு கிளம்பி செல்ல மஹிமா மட்டும் நந்தாவுடன் இருந்தார். விட்டு செல்ல அவருக்கு மனம் இல்லை.

மஹிமாவை நந்தா அதிகம் கண்டுகொள்ளவில்லை.மஹிமா இதை பெரியதாக எண்ண வில்லை. ராம் அவனது நடத்தை அவரை நிறுத்தி வைத்தது.

ராமின் பாட்டி,தாத்தா அம்மா அப்பா,சித்தப்பா குடும்பம் அத்தை குடும்பம் என்று மாறி மாறி குழந்தையை பார்க்கவும் கொண்டாடவும் ராமின் வீட்டிற்கு வர. நந்தாவுக்குள் நம் குழந்தை கொண்டாடப் படுகிறது என்ற எண்ணம் எழுவதற்கு பதில் ராம் மீதும் குழந்தை மீதும் பொறாமை கொண்டாள். தன் வீட்டில் சித்தப்பா அத்தை என்று யாரும் இங்கு வரவில்லை என்று கோவம்.

உள்ளுக்குள் புதைத்து வைத்திருக்கும் புகைச்சல்.

குழந்தைக்கு பெயர் சூட்ட நாள் குறிக்கபட்டது. குழந்தை நல மருத்துவரிடம் லீலாவதியும் ராமும் அபிப்ராயம் கேட்டு முடிவு செய்தார்கள்.

குழந்தை எடை கூடும் வரை குளித்து விட கூடாது என்று மட்டும் கூறியவர், விழாவுக்கு பிறகு குழந்தையை கூட்டிவர பணித்தார்.

ஷ்யாமின் அலுவலகம் சென்று விழா நடைபெறும் விஷயம் குறித்து ஷ்யாமுக்கு தெரிவித்தான் ராம். சியா வீட்டில் இருந்தவள் அவசரமாக அலுவலகம் வந்தாள்.
சியா அவர்கள் இருவரின் சார்பாகவும் குழந்தைக்கு இடுப்பில் அணிவிக்க வெள்ளியில் அரைஞான் கொடி, கால் கொலுசு, தங்க வளையல் என்று ஏற்கனவே வாங்கி வைத்திருந்தவள் ஷ்யாமுடன் சேர்ந்து ராமிடமே கொடுக்க, அவர்கள் விழாவுக்கு வரப் போவதில்லை என்பதை வருத்தம் மிக புரிந்து கொண்டான் ராம்.

அவன் மனம் படும் வேதனை புரிந்து ஷ்யாம் ராமை ஆரத் தழுவி கொண்டான்.
சியா அங்கிருந்து வெளியே வந்தவள். மூவருக்குள் டீ எடுத்துக்கொண்டு மீண்டும் அறைக்குள் நுழைந்தாள்.
அதற்குள் தன்னை நன்கு சுதாரித்துக் கொண்ட ராம் புன்னகை முகமாக அதை ரசித்துக் குடித்தான்.
இந்த நட்பும் புரிதலும் தான் அவனை உயிரோட்டமாக வைத்திருக்கிறது.

காரில் வரும் வழி முழுவதும் ராமுக்கு மனம் தவித்தது.
நந்தாவிடம் இவற்றை தானே வாங்கியதாக சொன்னவன், தனிமையில் "இதெல்லாம் வாங்க உனக்கு யார் சொல்லிக்கொடுத்தார்கள் " எனும் அம்மாவின் பார்வைக்கு பணிந்து. சியா வாங்கி வைத்திருந்த விஷயத்தையும், இன்று கூப்பிட போன சமயம் வீட்டிலிருந்த சியா அவசரமாக எடுத்து வந்து ஷ்யாமின் அலுவலகத்தில் இருந்த தன்னிடம் கொடுத்ததையும் சொன்னவன் பெருமூச்சு
விட்டுக்கொண்டான். அவனை புரிந்து கொண்ட அவன் அம்மாவின் மனதில் மீண்டும் தோன்றியது இதுதான்... "ராம் போன்ற ஒருவனுக்கு சியா போன்றவள் தானே மனைவியாக வாய்திருக்க வேணும்? இவனுக்கு நந்தாவை எப்படி பிடித்தது... இந்த உலகில் எவ்வளவு நல்ல பெண்கள் இருக்க, இவன் ஏன் தன் வாழ்க்கையை பாலைவனம் ஆக்கிக்கொண்டான்?"

விடை தெரியாத பல கேள்விகளை போல் இதற்கும் விடை இல்லை.
ராம், ஷ்யாம் இருவரின் வாழ்க்கையும்
அதிர்ஷ்டம் எனும் சோதனை கூடத்தில் பரீட்சையில் இருக்கிறது.

நந்தாவை மணந்து கொண்டதால் ராமின் வாழ்க்கை இப்படி உள்ளது என்றும், சியாவை மணந்து கொண்டு வாழும் ஷ்யாம் உச்ச சந்தோஷத்தில் இருக்கிறான் என்றும் எப்படி சொல்லிவிட முடியும்?

சில சமயங்களில் மனித மனமும், வாழ்க்கையின் மணமும் மாறக்கூடும்!
இதுதான் நிதர்சனம்.

விழா நாளுக்கு முதல் நாள் சியா தன் அம்மா மஹிமாவுடன் சண்டை போட்டு அவரை நோகடித்தாள். ராமின் அம்மாவும், அத்தையும் நந்தாவை அமைதிபடுத்த முனைய அவர்களிடம் மரியாதை குறைவாக பேசினாள்.

இத்தனையும் நடக்கும் வேளையில், ராமோ விழா நடக்க இருக்கும் அந்த ஐந்து நக்ஷத்திர ஹோட்டலில் ஏற்பாடுகளை பார்வையிட சென்றிருந்தான்.

அவன் திரும்ப வருவதற்குள் வீட்டில் பூகம்பம் வெடித்தது. ராமின் ராமுக்கு சித்தப்பா போன் செய்துவிட்டார்.

ராமின் அப்பா அம்மா இருவரும் சமாதானம் செய்ய முயற்சி செய்தும், மஹிமா தன் பெண்ணின் தவறுக்கு மன்னிப்பு கேட்டும் ராமின் அத்தை குடும்பம் அங்கிருந்து கிளம்பிவிட்டது.
யாராலும் தடுக்க முடியவில்லை.
தன் அறையில் வெற்றிக்களிப்பில் இருந்தாள் நந்தா.
அவளுக்குள் எதையோ சாதித்த உணர்வு.

வீட்டுக்கு வந்த ராம், மனதில் 'இவ்வளவு செய்தும் பிரயோஜனம் இல்லையே' என்ற எண்ணம் தாக்கியது.
ஏற்கனவே, அவனது உறவுகள் மெல்ல அவனை விட்டு விலகி செல்வதான உணர்வில் இருப்பவனுக்கு இந்த சம்பவம் பெரிய அடிதான்! மறுப்பதற்க்கு இல்லை.

இப்போது எல்லாம் குழந்தை அநேகமாக பசும்பால் தான் குடிக்கிறாள். ராமின் பாட்டி ஏற்பாடு இது.
நந்தா மனம் சந்தோஷத்தில் திளைக்கிறது.

அடுத்த நாள் அரைகுறை மனதுடன் எல்லோரும் விழாவுக்கு வர நந்தா நன்றாக அலங்காரம் செய்து கொண்டு வந்தாள். அவள் முகம் பொலிவுடன் இருந்தது.

விழா முடிந்து எல்லோரும் சாப்பிட்டு முடித்து, முதலில் ராமின் சித்தப்பா குடும்பம் ஹோட்டலில் இருந்தே கிளம்பிவிட, வீட்டுக்கு வந்தவுடன் ராமின் மற்ற உறவுகளும் கிளம்பிவிட்டார்கள். ராமின் அப்பா அம்மா பாட்டி மூவரும் மட்டும் ராமுடன்.

'நந்தா எப்படி நடந்து கொண்டாலும் கொள்ளு பேத்தியுடன் நான் இருக்கணும்'என்று பிடிவாதம் பிடித்தாள் மூதாட்டி.

மஹிமாவை" இவ்ளோ அவமான படுத்தின பிறகும் நீ அங்க இருக்க வேணாம்.கிளம்பு "என்றுவிட்டார் பிரணவ்.

வீட்டுக்கு வந்தவுடன் கிளம்பிவிட்டார் மஹிமா. நந்தா எதற்கும் வருத்தம் கொள்ளவில்லை.

இன்னும் சொல்லப் போனால் கிளம்பும்போது இவள் வெளியே கூட வரவில்லை. காதில் ஹெட்சட்டை வைத்துக் கொண்டு நிஜமாகவே பாட்டு கேட்டுக் கொண்டிருப்பது போல் ஒரு பாவனை!

குழந்தை இப்போதெல்லாம் அவள் அருகில் இருப்பதே இல்லை. அதை தொடுவதற்கு கூட அவளுக்கு பிடிக்கவில்லை என்பதாலோ என்னவோ, வீட்டில் இருக்கும் யாரோ ஒருவர் குழந்தையை தூக்கி வைத்துக் கொண்டு...
ராமுக்கு நினைக்கும் பொழுதே பயம் கவ்வியது.
இவர்கள் இங்கே இருக்கும் வரையில் குழந்தையை பார்த்துக் கொள்ளக்கூடும்.
இவர்கள் கிளம்பிய பிறகும் கூட நந்தா குழந்தையை பார்க்க வில்லை என்றால் குழந்தையின் நிலை என்னவாகும்?

முதன்முறையாக இந்த குழந்தையை பூமிக்கு கொண்டு வந்து பெரிய தவறிழைத்து விட்டோம் என்பதாக உணர்ந்தான்!
நந்தாவின் இந்த பொறுப்பற்ற அக்கறையற்ற தன்மை அவனை உள்ளுக்குள் நடுங்க செய்தது.
தொழிலில் எத்தனையோ விஷயங்களை சாதித்திருந்தும் கூட திருமண வாழ்க்கை என்று வரும்போது தான் தோற்று விட்டதாகவே அவனுக்கு தோன்றுகிறது.

எத்தனை நாட்கள் அம்மா பாட்டி இருவரையும் இங்கு இருக்க செய்ய முடியும்.. மும்பை வீட்டை விட்டு அவர்கள் இருவரும் இங்கு இத்தனை நாட்கள் தங்கி இருப்பதே பெரிய அதிசயம் தான்!

நந்தாவிடம் இதைப் பற்றி பேச வேண்டும் என்று மனதில் நினைத்துக் கொண்டான். குழந்தைக்கு இப்போது இரண்டு மாதங்கள் ஆகிறது. ஆனாலும் இன்னும் எடை கூடவில்லை. இன்று மருத்துவர் குழந்தையை அழைத்துக் கொண்டு, ராம் நந்தா இருவரையும் மருத்துவமனை வரச் சொல்லி இருக்கிறார். ராம் மனதிற்குள் பயப்பந்து தான்!
குழந்தையை நந்தா எப்படியும் சரியாக பார்த்துக் கொள்ள மாட்டாள் என்ற உணர்ந்த ராமின் அம்மாவும் அவர்களுடன் மருத்துவமனை செல்ல தயாரானாள்.

வழக்கமான பரிசோதனைகளை முடித்த குழந்தை நல மருத்துவர், குழந்தைக்கு தாய்ப்பாலின் தேவையை நந்தா விடம் வெகுவாக அறிவுறுத்தினார். நந்தா இதெல்லாம் அவளுக்கு கடுப்பை உண்டு பண்ணுவதாகவே அமைந்தது.
போதாத குறைக்கு, அன்றைக்கு என்று பார்த்து சியா தன் மாமியாருடன் குழந்தையை தூக்கிக் கொண்டு மருத்துவரை பார்க்க வந்திருந்தாள்.
சியாவை பார்த்த ராம், தெரிந்தவரை பார்த்தால் சிரிக்கும் அறிமுகச் சிரிப்புடன் நிறுத்திக் கொண்டான்.
ஆனால் ராமின் அம்மாவால் அவ்வாறு நிறுத்திக் கொள்ள முடியவில்லை. சியாவின் குழந்தையை பார்த்தவுடன், ஆசைப்பட்டு தூக்கி கொஞ்ச ஆரம்பித்து விட்டார்.
ராம் தனது மகளை கையில் சுமந்து கொண்டு, அந்த குழந்தையையும் ரசித்து கொண்டிருந்தான்.
இவற்றையெல்லாம், சற்று தொலைவில் இருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் நந்தா.
அவள் மனதினில் ஏனோ, சியாவின் குழந்தையை கொஞ்சும் ராம், சியாவை ரசித்துக் கொண்டிருப்பதாகவே தோன்றியது.
இது போன்ற வகையில் அவளுக்கு ஒன்றும் புதிதல்லவே!
நந்தா பார்ப்பதை, சியா கவனித்து விட்டாள். நந்தா மனதிற்குள் என்னவெல்லாம் நினைத்துக் கொண்டிருக்கிறாள் என்பது அவள் பார்வையிலே தெரிந்தது. தன்னை சுதாரித்துக் கொண்ட சியா, ராமை நோக்கி ஒரு எச்சரிக்கை பார்வை விடுக்க , அதை ராம் மட்டும் கவனிக்கவில்லை.
அசந்தர்ப்பமாய் நந்தாவும் கவனித்துவிட்டாள்.

சியா, ராம் அவன் அம்மா இருவரிடமும் ஒருவாறு விடை பெற்று
அங்கிருந்து கிளம்பினாள்.

நந்தா விடம் சென்று நேரில் நலம் விசாரிக்கும் அளவிற்கு சியா ஒன்றும் பைத்தியம் இல்லை.

நந்தாவின் மனமோ, அருகருகே நின்று கொண்டிருந்த சியா-
ராம் ஜோடி பொருத்தத்தை யோசித்து, அவர்கள் இருவர் மீதான வெறுப்பை வளர்த்துக் கொண்டிருந்தது.
சியா திருமணமானவள் என்றோ, தான் மீண்டும் மீண்டும் சியாவை சீண்டுவது தெரிந்தால், ஷாம் என்ன பண்ணுவான் என்ற பயமோ அவளுக்கு கொஞ்சம் கூட இல்லை.
தன் கணவனையும் இன்னொரு பெண்ணையும் சேர்த்து வைத்து பார்த்து மனதிற்குள் தீயை வளர்த்துக் கொண்டவளுக்கு, இருவரையும் பழி தீர்க்க வேண்டும் என்ற எண்ணம் ஓங்கியது.

"சியாவை பிறகு பார்த்துக் கொள்ளலாம். முதலில், எனது குறி ராம்தான்," என்று யோசித்தவளுக்கு, அந்த எண்ணம் உதித்து விட்டது.

அதை செயல்படுத்துவதற்கு, தகுந்த நேரத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறாள் நந்தா
. 

Subageetha Sundararajan

Sugee
Vannangal Writer
Team
Messages
130
Reaction score
39
Points
63
கொடி மலர் 26

நந்தாவை பொறுத்தவரை சரி தவறு என்றெல்லாம் பெரியதாக வரையறைகள் வைத்துக் கொள்ளவில்லை. அவள் மனதிற்கும், அவளது வாழ்க்கைக்கும் எவை எல்லாம் பொருந்தி வருகிறதோ அவையெல்லாம் சரி... பொருந்தாத மற்றவைகள் தவறு. இதில் தான் அவள் வாழ்க்கை ஓட்டிக் கொண்டிருக்கிறாள்.

இதை ஞாயத்தை தான் அவள் ராமிடமும் தன் குழந்தை இடமும் கூட கடைப்பிடிக்கிறாள்.
வீட்டில் இப்பொழுது பெரியவர்கள் யாரும் இல்லை. மூன்று மாதங்கள் வரை அந்த வீட்டில் இருந்த ராமின் வீட்டு பெரியவர்கள் மனதை தேற்றிக்கொண்டு, அவன் வீட்டில் இருந்து சென்று ஒரு வாரம் ஆகிவிட்டது.

தன் கொழுப்பை ஏத்தியை விட்டு செல்வதற்கு முன் அந்த மூதாட்டியின் கண்களில் கண்ணீர் தான்! கண்டிப்பாக நந்தா குழந்தையை சரியாக கவனிக்க போவதில்லை என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான்!

ராமிடம் பலமுறை 'வேறு வழி இல்லன்னா பேசாம, மும்பை வந்திடு குழந்தைய தூக்கிட்டு ' என்று விட்டு கிளம்பி விட்டார்கள்.

வழக்கம்போல், அவனுக்கு நந்தாவை விட்டுச் செல்ல மனம் இல்லை. அத்துடன் இன்று இல்லாவிடில் என்றேனும் ஒருநாள் ஏதாவது பேச்சுகள் கிளம்பினால் என்ன செய்ய என்ற ஒருவித குற்ற உணர்ச்சியும் அவனுக்குள் உண்டு.

சில சமயங்களில் இது போன்ற சிறு சிறு விஷயங்களுக்கு கொடுக்கும் இடம் ஆனது, வாழ்க்கையில் பெரிய பெரிய இடர்களையும் துன்பங்களையும் கணக்கு இல்லாமல் கொடுத்து விட்டு சென்றுவிடும்.

இந்த இடத்தில் ராம், தன் மரியாதை என்ன ஆகும் என்று யோசித்தான், கூடவே தன் மனைவி நந்தா பற்றி யோசித்தான். ஆனால் பிறந்திருக்கும் புது குருத்து பற்றி அவன் யோசிக்க தவறியது பற்றி இன்னும் என்ன சொல்ல முடியும்?

ராம் அவன் குழந்தை இருவருமே இன்று சூழ்நிலை கைதிகள்.

ஆரம்பத்தில் நந்தா, எல்லோரும் சென்றுவிட்ட குஷியில் குழந்தையை ஓரளவிற்கு நன்றாகவே பார்த்துக் கொண்டாள்.
ராமின் பாட்டி செய்த ஏற்பாட்டின் படி, தினமும் இரண்டு வேளைகள் பசும்பால் பாட்டிலில் வீட்டிற்கு வந்துவிடும்.
வீட்டில் சமையலுக்கு ராமின் அம்மா, ஒரு நடுத்தர வயதான பெண்மணியை வேலைக்கு வைத்து விட்டு சென்றாள். அந்த பெண்மணி காலை மாலை ராமின் வீட்டுக்கு வந்து ஏதாவது சமையல் செய்து விட்டு செல்வாள்.
ராம் சைவ உணவு சாப்பிடுவதை விரும்புபவன். அசைவம் அவனுக்கு பிடிக்காது.அதற்கு நேர்மாரானவள் நந்தா.
தினமும் வீட்டில் ஊர்வன, பறப்பன, நடப்பன என்று வித்யாசம் இல்லாமல் எல்லா வகை அசைவ உணவுகளையும் சமையல்கார அம்மாவிடம் செய்ய சொல்லி சாப்பிட்டாள் நந்தா.
வீட்டுக்குள் நுழைந்தாலே அசைவ உணவின் வாசனை தான்!
இப்போதெல்லாம் ராம் வீட்டில் சாப்பிடுவதில்லை. லீலாவதி தன் வீட்டில் இருந்து காலை மாலை இருவேளைகளிலும் ராமுக்கும் சேர்த்தே உணவு எடுத்து வருவதை வழக்கமாக்கி கொண்டு விட்டார்கள்.
இரவு வரும்போது ஆபீஸ் கேன்டீனிலேயே எதையாவது சாப்பிட்டு விட்டு வந்து விடுவான்.

சில சமயங்களில், ஷ்யாமின் அலுவலகம் செல்லும் பொழுது, ஷியாம் ராம் இருவருக்கும் சேர்த்து சியா உணவு சமைத்துக் கொண்டு வந்து தருவாள்.
இன்னும் சியா, முழு நேரமும் அலுவலகம் வருவதில்லை.

வீட்டிலிருந்தே ஷாம் செய்து கொடுக்கச் சொல்லும் வேலைகளை செய்து விடுவாள். தினமும் ஓர் இருமுறை அலுவலகம் வந்து ஷ்யாமை பார்த்து விட்டு செல்வாள்.
தனக்கு அலுவலகத்தில் இல்லாவிட்டால், ஷ்யாம் பலமுறை சியாவிற்கு போன் செய்வதும், காபி சாப்பிட என்று நான்கு முறை வீட்டுக்கு வந்துவிடுவதையும் பார்த்த ஷ்யாமின் பாட்டிதான் நீயே அவனுக்கு போய் பாத்திட்டு வந்துடு என்று கிண்டலாக சொல்லிவிட, சியாவுக்கு தான் வெட்கமாகி போயிற்று.

முன்பெல்லாம் கண்டிப்பின் மொத்த உருவமாக இருந்த அதே ஷ்யாம் தான், இன்று மனைவி முகம் பாராமல் தவித்து போகிறான். காலம் எப்படி எல்லாவற்றையும் மாற்றி விடுகிறது.. காதல் இதுதான் என்று உணராமலேயே, அவன் தன் காதலை மனைவி மீது கொட்டுவதும், அவன் காதலிக்கிறான் என்று முழுமையாக உணர்ந்து கொண்டவள், தன் வாயாலே அதை உனக்குச் சொல்லாமல், மனதார அனுபவிப்பதும்.. ம்ம்ம் இது ஒரு பரம சுகம்.

இது போன்ற ஒரு காதலை தான் ராம் தன் வாழ்க்கையில் எதிர்பார்க்கிறான். சியா வை பார்த்த நொடியில், ஷ்யாம் அவனது கண்களில் மீளும் ஒளிகீற்று.. அதை அப்படியே தனக்குள் உள்வாங்கிக் கொள்ளும், சியாவின் உணர்வுகள்..இதை எத்தனை முறை ராம் பார்த்திருக்கிறான்..
அவனைப் பொறுத்தவரை இந்த காட்சி தெவிட்டாத கவிதை! அவன் ரசிக்கும் பல விஷயங்களில் ஒன்று ஷ்யாம் -சியா.

அவனுக்குள் அந்த சமயங்களில் நிச்சயம் தோன்றும், சியாம்சியா மீது வைத்திருக்கும் காதலுக்கு குறைந்ததல்ல நான் நந்தா மீது வைத்திருக்கும் காதல்!
அதற்கு ஏன் அவளிடம் இருந்து எந்த பிரதிபலிப்பும் இல்லை?
எந்த இடத்தில் நான் தவற விட்டேன்?
இந்த கேள்விக்கு காலம் வாழ்வதற்கும் அவனுக்கு எந்த விடையும் கிடைக்கப் போவதில்லை. தெரிந்துதான் மீண்டும் மீண்டும் இதே கேள்வியை அவன் தனக்குள் கேட்டுக்கொள்கிறான்.

தன் காதல் தோற்ற வலி அவனுக்கு.
ஷியாம்- சியா குழந்தை கிருஷ்ணாவுக்கு முதலாம் ஆண்டு பிறந்தநாள் விழா கொண்டாட அவர்கள் வீட்டில் முடிவு செய்யப்பட, ராமுக்கும் அழைப்பு விடுக்கப் பட்டது.

ராம் மனதில் நந்தாவிடம் சொல்லி அவளையும் குழந்தை தாராவையும் எப்படி கூட்டிக்கொண்டு வருவது என்ற குழப்பம். அத்துடன் நந்தாவை கூப்பிட்டுக் கொண்டு விழாவுக்கு செல்ல மனதுள் சங்கடம்.

ஒருவழியாக ராம், ஷ்யாமின் வீட்டு விழா பற்றிய விஷயங்களை சொல்லிவிட்டு நந்தா முகத்தை பார்க்க, அவள் முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை.

" நீயும் குழந்தையும் வரணும் நந்தா " என்றவனை வித்தியாசமாக பார்த்த அவன் மனைவி ...
" என்ன கண்டிப்பா கூட்டிட்டு வர சொல்லி சியா சொன்னாளா " என்ற நக்கலான இரட்டை அர்த்தம் கொண்டு கேள்வி ஒன்றைக் கேட்டு வைத்தாள்.

இந்தக் கேள்வியின் சற்றும் எதிர்பார்க்காத ராமிற்கு முதலில் ஏற்பட்ட உணர்வு நந்தா மீதான அருவருப்பு.
மீண்டும் மீண்டும் அந்த பெண்ணுடன் தன்னை இணைத்து பேசுவதில் இவள் இன்பம் காணுவது,அவனால் சற்று கூட ஜீரணம் செய்து கொள்ள முடியவில்லை.
" ச்சீ.. உனக்கு என்ன ஏதாவது ஃ போபியா வா... கல்யாணம் ஆன பொண்ணோட எப்ப பார்த்தாலும் என்னை சேர்த்து வச்சு பேசுற?
ஏதாவது யோசிச்சு தான் பேசுறியா.. நான் உன்னுடைய ஹஸ்பண்டுன்னு ஞாபகம் இருக்கா, எங்க ரெண்டு பேரையும் சேர்த்து வச்சு பேசுறதுக்கு உனக்கு மனசு கஷ்டமா இல்லை.."
"வாட் எவர், இந்த மாதிரி வார்த்தைகளை கேக்குறதுக்கு எனக்கு ரொம்ப சங்கடமா இருக்கு. இன்ஃபக்ட் இப்போஎல்லாம் நான் எதுக்காக உன்னை தேர்ந்தெடுத்து, உன் சம்மதம் கஷ்டப்பட்டு வாங்கி கல்யாணம் செஞ்சுக்கிட்டேன்னு இதுவரைக்கும் எனக்கு புரியல."
"ஐ அம் வெரி டையர்ட். எதையும் புரிஞ்சுக்கிற சக்தியே உனக்கு இல்லையா... இல்லை யாரையும் மரியாதையாக நடத்தனுங்குற எண்ணம் இல்லையா.. " என்று மனதிற்குள் நினைத்தவன் நந்தாவிடம் எந்த பதிலும் சொல்ல பிடிக்காதவனாக தன் அறைக்குள் நுழைந்து கொண்டான்.

அவனது அமைதி தன் மீதான உதாசீனமாக புரிந்து கொண்ட நந்தா, பழிவாங்குவதற்கு தேர்ந்தெடுத்த இடம் குழந்தை.
நந்தா அறையில் குழந்தை பசியில்
வீறிட்டு அழ, சற்று மழை கண்டு கொள்ளாது தனது லேப்டாப்பில் மூழ்கி விட்டாள் நந்தா.

நேரமாக ஆக குழந்தையின் அழுகுரல் பெரியதாவதை கேட்டு, தனது அறையில் இருந்து வெளிவந்த ராம், குழந்தைக்கு ஆகா ரம் கொடுக்காமல் வேறு ஏதோ செய்து கொண்டிருக்கும் நந்தாவை பார்த்து கோவம் கொண்டான். ஆனால் இப்பொழுதும் அவனுக்கு பேசுவதற்கு எதுவும் இல்லை.
நேராக அடுக்களைக்குள் நுழைந்தவன், அன்று மதியம் ஹாஸ்பிடலின் தாய்ப்பால் வங்கியில் இருந்து வாங்கி வந்து குளிர்சாதனப்பெட் டியில் வைத்திருந்த பாலை, லேசாக வெந்நீரில் வைத்து, மிதமான சூட்டில், குழந்தைக்கு புகட்டினான். பசியாறிய பிறகு குழந்தையை தனது தோளில் போட்டு லேசாக முதுகை நீவி கொடுத்தவனுக்கு கண்கள் கலங்கி இருந்தது.
அவன் மனதில், ஐந்தறிவு உயிரினங்கள் கூட தங்களது குட்டிக்கு பால் கொடுப்பதை முன்னிலைப்படுத்தி வாழும் நிலையில், தான் பெற்ற மகவு இப்படி அழும்போதும் கண்டுகொள்ளாமல் இருக்கும் இவள் மனது எவ்வளவு கடினமான அரக்கிக்கு கூட இருக்காது என்று புலம்பியது.

இப்போதெல்லாம் வெளியே சென்று விட்டு வரும்போது, சியா சொன்னபடிக்கு தாய்ப்பால் வங்கியில் இருந்து தாய்ப்பால் வாங்கி வந்து ஒரு நாளைக்கு ஒரு முறையாவது குழந்தைக்கு கொடுத்து விடுவதை வழக்கமாக்கி கொண்டு விட்டான் ராம்.
நந்தா தன் இஷ்டப்படிக்கு எல்லாவற்றையும் சாப்பிடுவதால், என்றாவது ஒரு நாள் அவள் பால் புகட்டினால் கூட, அது குழந்தைக்கு ஒவ்வாமையை தர, அவளுக்கும் இஷ்டம் இல்லாத நிலையில் நந்தா பால் தருவதை நிறுத்தி விட்டாள்.
ஏற்கனவே ஆரோக்கியக் குறைவுடன் பிறந்து இருக்கும் குழந்தை.. தாய்ப்பால் கண்டிப்பாக தேவை எனும் பொழுது, ராமால் செய்ய முடிந்தது இதுதான்!

நல்ல வேளையாக இதற்காவது குழந்தைக்கு கொடுப்பினை இருக்கிறதே..என்று ராம் தனது மனதை தேற்றிக்கொண்டு விட்டான்.
இவ்வளவு நிகழ்ந்த பொழுதும் நந்தாவை மாற்றி விடலாம் என்ற எண்ணம் அவனுக்கு மனதில் ஒரு மூலையில் இருந்து கொண்டு தான் இருக்கிறது.
அவள் மீதான காதல் அவள் மீதான வெறுப்பு இரண்டிற்கும் நடுவில் ஊசலாடும் அவன் மனது.
இருவரையும் சேர்க்கும் பாலமாக குழந்தை இருக்கும் என்றுதான் அவன் நினைத்திருக்கிறான். ஆனால் நந்தா தனது குழந்தை இடம் நடந்து கொள்ளும் முறையானது, அவளது சுய ரூபத்தை ராமுக்கு தோல் உரித்து காட்டும் இந்த நிலையில், குழந்தை இந்த உறவுக்கு பாலமாக இருக்கப் போகிறதா.. இல்லை குழந்தையின் காரணமாகவே இருவரும் பிரிந்து விடும் சாத்தியம் இருக்கிறதா என்பதை காலம் தான் நிர்ணயம் செய்யும்.

ராம் போன்ற மென்மையான மனது உடையவனுக்கு நந்தா நடந்து கொள்ளும் முறை சற்றும் சரிபட போவதில்லை.

இத்தனை நடந்து கொண்டிருக்கும் பொழுதும், ராம் தனது குழந்தையை, கையாளும் விதத்தை நந்தா ஏதோ ஒரு நாடகத்தை பார்க்கும் பாவனையில் நின்று கொண்டிருந்தாள்.

ராமின் மனதில் கோபம் தான்! ஆனால் அந்த கோபத்திற்கு வார்த்தை வடிவம் கொடுத்து, நிலைமையை இது மோசமாக்கிக் கொள்வதற்கு அவன் விரும்பவில்லை. எப்பொழுதும் அமைதியாகவே சந்தோஷ சூழ்நிலையில் வளர்ந்திருந்த ராம், இப்பொழுதெல்லாம் அதிகமாக கலங்குகிறான், அவன் மனதில் பயம் வந்து விட்டது. 'தான் வளர்ந்த சூழ்நிலைக்கு நேர் எதிரான சூழ்நிலையை தன் குழந்தை தாராவுக்கு,''தான் உருவாக்கி விடுவோமா?'
அது எந்த காலத்திலும் நடக்கக் கூடாது என்பதற்காகவே, முடிந்தவரை பொறுமையாக விஷயங்களை கையாள பார்க்கிறான்.

ஒரு பக்கம் மட்டும் முயற்சி செய்து, பயன் ஏதும் இருக்க கூடுமா...

 

Subageetha Sundararajan

Sugee
Vannangal Writer
Team
Messages
130
Reaction score
39
Points
63
கொடிமலர் 27

நந்தா வர மறுத்த பின்னர், அவளிடம் கெஞ்ச பிடிக்காது தானே தாராவை தயார் செய்து, கூடவே லீலாவதிக்கும் போன் செய்துவிட்டான் ராம்.
அவன் சித்தி சித்தப்பா கீழே கார் பார்க்கிங் ஏரியாவில் காத்திருக்க இவன் நந்தாவை சட்டை செய்யாமல் கிளம்பிவிட்டான்.

நந்தா மனதில் ஏமாற்றம் ஒருபுறம், ராம் மீதான கோவம் மறுபுறம்.' தான் வரவில்லை 'என்று சொன்ன ஒரு இடத்திற்கு கணவன் எப்படி செல்லலாம்,அதுவும் தன் குடும்பத்தார் துணை கொண்டு, நான்கு மாதங்களே ஆன குழந்தை அதனையும் அழைத்து செல்லும் தைரியம்.. எப்படி முடியும் என்று உள்ளுக்குள் புழுங்கல்.

மனதில் தோன்றும் எதிர்மறை எண்ணங்கள் வலுப்பெறும் பொழுது, அதன் தாக்குதல் எதிர்பார்க்க முடியாத அளவிற்கு தீவிரமாக இருக்கும்.

நந்தாவும் என்ன செய்யப் போகிறாள் என்பது விடை தெரியா கேள்விதான்!

அவள் மனதில் கோபத் தீ பற்றி எரிகிறது. எப்படியும் பழிவாங்கியே தீருவது என்று முடிவு செய்துவிட்டால், உறவு பற்றி எல்லாம் யோசிப்பதற்கு மனது இடம் தரப்போவதில்லை. அவளைப் பொறுத்தவரை கணவன் ராம்
குழந்தை தாரா இருவருமே வேண்டாதவர்கள் தான்!

அலுவலகத்தில் தான் விடுப்பை முடித்துக் கொண்டு, மீண்டும் வேலையில் சேர்வதற்கு தயாராக இருப்பதாக மெயில் ஒன்றை அனுப்பி விட்டு, அவர்களது பதிலுக்காக காத்திருக்க தொடங்கினாள் நந்தா.

அத்துடன் சேர்த்து அதே அலுவலகத்தில் வேலை செய்யும், முக்கியமான பதவிகளில் இருப்பவர்களை தொடர்பு கொண்டு தனது முயற்சியின் விடையை துரிதப்படுத்த
எத்தனித்தாள்.
அன்றைய நாள் அவளுக்கு அப்படித்தான் சென்றது.

அவளது முயற்சி பலன் அளித்தது என்று தான் சொல்ல வேண்டும்.

நாளை முதலே வேலையை தொடர்வது என்றாலும் சரிதான் என்ற பதில் வந்தது. ஆனாலும் பெரிய பிரச்சனை குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு அலுவலகம் செல்வதற்கு ராம் இப்போதைக்கு ஒப்புக்கொள்ள மாட்டான்.

வீட்டுக்குள்ளேயே இருப்பது அவளுக்கு அசுயையைக் கூட்டியது.
வெளியில் யாருடனும் பேசி பழகுவதற்கும் அவளுக்கு விருப்பம் இல்லை. யாராவது சிரித்தால் கூட அவளுக்கு எரிச்சல் தான் வரும்.

சில சமயங்களில் யாராவது இரண்டு மூன்று பேர் ஒன்றாக கூடி பேசும் சமயங்களில் தன்னை பற்றி தான் பேசுகிறார்களோ என்ற எண்ணத்தில் அவர்களை முறைத்துக் கொண்டே இருப்பாள்.

இதைப் பற்றி எல்லாம் அவள் சிந்தித்ததே இல்லை .'தான் எதை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம்?'
'தன் மனதில் தோன்றும் எண்ணங்கள் சரியானவை தானா..'என்றெல்லாம் அவள் பரிட்சார்தமாக கூட சுய பரிட்சை செய்து கொள்ளவில்லை.

பல்லாண்டு காலமாக அவள் அனுபவித்து வரும் தனிமை, சுயமாக உருப்பெற்ற இன்று விருட்சமாய் வளர்ந்து நிற்கும் பொறாமை, இவை இரண்டும் அவளை எல்லாவற்றிலிருந்தும் ஒதுங்கி நிற்க செய்கிறது .பிறர் மீது எப்பொழுதும் சந்தேகம் கொள்ள செய்கிறது.

இதோ இப்போது கூட ராமிடம் தனது பிரச்சனை பற்றி வாய் திறந்து பேசி இருந்தால் அவன் ஏதேனும் ஒரு ஏற்பாடு செய்து கொடுத்திருப்பான் தான்.
அது அவளுக்கு மிகப்பெரிய அளவில் மனதிற்கு இதத்தை அளித்திருக்க கூடும்.

கணவன் என்று அவனை தன்னை நோக்கி ஒரு எட்டு எடுத்து வைக்க கூட அனுமதிக்கவில்லை. இப்போது குழந்தை பிறந்த பிறகுதான் தனக்கான செலவு பணத்தை அவனிடம் கொடுப்பதில்லை.
தாரா பிறக்கும் வரை, மாதாமாதம் சம்பளப் பணத்தில் இருந்து ஒரு தொகையை கணவனிடம் தனக்கான செலவு என்று கொடுத்துக் கொண்டிருந்தவள் தான்.

பல சமயங்களில் நெருங்கிய உறவுகளுக்குள் அதிலும் கணவன் மனைவி எனும் நுட்பமான உறவுக்குள் பணம் வருவது என்றுமே பிரச்சினை தான்!

வொர்கிங் ஃப்ரம் ஹோம் வாங்கிக் கொண்டு வீட்டிலிருந்து வேலை செய்வதற்கு ஆயத்தப்படுத்திக் கொண்டாள் பெண். அவளை தடுப்பதற்கு ராமிடம் காரணம் எதுவும் இல்லை என்று ஆணித்தரமாக தனக்குத்தானே கூறிக் கொண்டவளுக்கு, குழந்தை பற்றிய எண்ணம் மீண்டும் தலை தூக்கியது.

என்னதான் வீட்டிலிருந்தே வேலைகளை பார்த்துக்கொள்வது என்று முடிவு செய்து விட்டாலும் கூட குழந்தையையும் சேர்த்து பார்த்துக் கொள்வது சர்க்கஸ் தான்! அவளைப் பொருத்தமட்டில்.

நிமிஷத்தில் முடிவெடுத்தவளாக, குழந்தையை பார்த்துக்கொள்ள உதவியாளரை தேடினாள்.

விழாவிற்கு சென்றிருக்கும் நான் இரவு வருவதற்குள் எல்லாவற்றையும் செய்து முடித்து விட வேண்டும் என்ற வேகம் அவளிடம்.
உதவியாளரை தேர்ந்தெடுக்க என்னென்ன தகுதிகள் இருந்திருக்க வேண்டும் என்று நந்தாவுக்கு தெரியவில்லை.

ஏதோ ஒரு சர்வீஸ் நிலையத்தை அணுகி, குழந்தையை பார்த்துக் கொள்ள ஆள் வேண்டும் என்று அவர்கள் கேட்ட சம்பளத்தை கொடுக்க ஒப்புக்கொண்டு, ஒரு பெண்ணை தேர்ந்தெடுத்து விட்டாள்.

அந்தப் பெண்ணைப் பற்றிய எந்த விபரங்களும் தெரிந்து கொள்ள நந்தா விழை யவில்லை.


எப்படியும் தான் வீட்டில் தானே இருக்க போகிறோம்! என்ற எண்ணமும் கூட சேர்ந்தது.

விழாவில் தாரா, ராம் லீலாவதி, மூவருக்கும் பலமான வரவேற்பு. அதிலும் குட்டி தாராவை கையில் இருந்து இறக்குவதற்கே ஸியாவிற்கு பிடிக்கவில்லை. அந்த குழந்தையின் மீதான பாசமும் பரிதாபமும் சியாவிடம் அவளது தாய்மை உணர்வை அந்தக் குழந்தையின் பால் பிரவாகம் எடுக்கச் செய்தது.

கொஞ்ச நேரம் குழந்தையை கொஞ்சியவள், கிருஷ்ணாவின் பிறந்தநாள் ஏற்பாடுகளை கவனிக்க வேண்டும் என்று சென்று விட்டாள்.

குட்டி க்ருஷ்ணனுக்கும், தன்னை விட சிறியதாக , குட்டி குட்டி கை கால்களுடன் பால் நிறத்தில், ரோஜா போல் இருக்கும் குழந்தையை கண்டவுடன் தானும் குழந்தை தான் என்று மறந்துதான் போயிற்று!

அப்பொழுதுதான் வாய் கூட்டி வார்த்தைகளை கோர்க்க, பழகி இருந்த குட்டிகிருஷ்ணன் சொல்லிக் கொடுப்பது போல் பா..ப்பா... என்றும் பலமுறை சொல்லிப் பார்த்துக் கொண்டான்.
தாராவை மீண்டும் மீண்டும் தொட்டுப் பார்த்தான். அவனுக்கு தாரா பெரிய அதிசயமாக தெரிந்தாள்.
ஷியாம் கையில் க்ருஷ்ணனை தூக்கி வைத்துக் கொண்டிருக்க அவன் கையில் இருந்து வேகமாக ராம் மற்றும் தாராவை நோக்கி பாய்ந்தான் கிருஷ்ணா.

ராம் நிச்சயம் இவ்விதமான வரவேற்பை எதிர்பார்த்திருக்கவில்லை. அவன் ஆறடி உயரமும் சிலிர்த்து அடங்கியது.

குழந்தைகள் எப்போதும் மனதில் தீயவற்றை நினைத்துக் கொண்டு, மற்றவர்களின் மனங்களைக் குத்திக் கிழிப்பதில்லை. அவர்களுடன் நேரம் கழிப்பது, அதில் கிடைக்கும் சந்தோஷம் நிச்சயம் எத்தனை ஆயிரம் கோடிகள் குவித்தாலும் கிடைக்காது. இதை நன்கு புரிந்து கொண்டவன் ராம்.
கிருஷ்ணன்,தாரா. இன்று இரண்டு தேவதைகள் அவனது நேரத்தை கொள்ளை கொண்டு அவனை ஸ்வீகரித்துக் கொள்ள காத்திருக்கிறார்கள்.

சியா வந்து தாராவை வாங்கிக் கொள்ள, ஷாம் கையில் இருந்து குழந்தை கிருஷ்ணா, ராமின் தோள்களில் மாறி விட்டான். போதாக்குறைக்கு சியாவை வேறு அருகில் அழைத்து, ராமிடம் தாராவையும் தூக்கிக் கொள்ள வேண்டும் என்று அழுகை வேறு.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டே நின்று கொண்டிருக்கும் லீலாவதியின் மனதிற்குள், ராமிற்கு நல்லபடியாக வாழ்க்கை அமைந்திருந்தால் இந்த இடத்தில் அவனும் அவனும் மனைவியுமாக குழந்தையை அழைத்துக் கொண்டு வந்திருப்பார்கள்.
ராமின் மனம் இன்னும் எவ்வளவு சந்தோஷப்பட்டிருக்கும்... என்ற ஒரு ஏக்கப் பெருமூச்சு வெளிப்பட்டது என்னவோ நிஜம் தான்!

ராமின் மனதில் ஒரு பக்கம் மனைவி வராதது ஏதோ நெருடல் தான் என்றாலும் கூட, இந்த பரிபூரண நிம்மதியையும் சந்தோஷத்தையும் நந்தா பக்கத்தில் இருந்து நிச்சயம் அனுபவிக்க முடியாது என்று உணர்ந்தே இருந்தான்.
இன்னும் சொல்லப்போனால் மனைவி அருகில் இல்லாததாலோ என்னவோ அவனது தோற்றப்பொலிவு கூடி இருந்தது.

இப்பொழுதெல்லாம் நந்தா தன்னுடன் வரவில்லை என்பதை அவன் பெரிதாக கருதுவது இல்லை, மாறாக அதில் கிடக்கும் சுகத்தை அனுபவிக்க பழகியிருந்தான்.
இதுபோன்ற எண்ணங்கள் கணவனாக அவன் மனதில் இருப்பது சரியா தவறா என்பதை அவன் நிலையில் இருந்து பார்த்தால் தான் நமக்கு புரியும்.

குழந்தையை எவ்வளவு கருத்துடன் பார்த்துக் கொள்ளும் ஒரு ஆண் மகனுக்கு மனைவியை பார்த்துக் கொள்வதில் என்ன சுமை?
மனைவி என்ற சொல்லையே சுமையாக்கி விட்டாள் அவன் மனையாள். பிராமின் பக்கம் ஒரு தவறும் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை.

அனேகமாக இந்த விழாவில் அவன் இருக்கும் சந்தோசம் தான் இன்னும் சில காலத்திற்கு அவன் வைத்துக்கொண்டு
ஓட்டியாக வேண்டும்.

இதற்கு மேல், ராம் சந்தோஷமாக இருப்பதையோ விழாக்களில் கலந்து கொள்வதையோ மகளை கூட்டிக் கொண்டு வெளியே செல்வதையோ நிச்சயம் நந்தா அனுமதிக்க போவதே இல்லை.
இன்றாவது ராம் நிம்மதியாக இருந்து
செல்லட்டும்.

விழா ஆரம்பித்த உடன் ஷியாம் சியா இருவரும் குழந்தையுடன், மேடையில் ஐயர் வளர்த்து வைத்திருக்கும் ஹோமத்தின் முன், அமர்ந்து கொண்டார்கள். ஷியாமின் பார்வை வேற எங்குமே செல்லவில்லை. அவன் மனம் முழுவதும் அவன் மனைவி குழந்தை மட்டுமே!

ஹோம புகையில் குழந்தை அழ, சியாவால் குழந்தையை சமாதானப்படுத்தவே முடியவில்லை.

கொஞ்ச நேரம் அழுத குழந்தை, சியாவின் மார்பை முட்ட தொடங்கிவிட்டது.
இதைப் பார்த்து,சிரித்த ஷ்யாமின் அம்மா சியாவையும் குழந்தையையும் உள்ளறைக்கு கூட்டிச் செல்ல, அங்கு பசியாறிய குழந்தை அப்படியே தூங்கி விட்டான்.
மீண்டும் குழந்தையுடன் விழா நடக்கும் இடத்திற்கு வந்துவிட்டாள் சியா.

லீலாவதி மனதிற்குள் அவ்வளவு ஆச்சரியம்! இந்த சியா எவ்வளவு தூரம், எளிமையான குடும்பத்துபெண்ணாக இருந்தாலும் புகுந்த வீட்டினர் இவ்வளவு எவ்வளவு தாங்குகிறார்கள்? அப்படி என்றால் பெண்ணின் இயல்பு எவ்வளவு நல்லதாக இருக்க வேண்டும் ?
"சியாம் நிச்சயம் கொடுத்து வைத்தவன் தான் ".
புகுந்த வீட்டை அனுசரித்து செல்லும் பெண்கள், மருமகளை அரவணைத்துச் செல்லும் மனப்பாங்குடன் கூடிய பெற்றோர் வாய்ப்பது நிச்சயம் பூர்வ ஜென்ம புண்ணியம் தான்!

ஷ்யாம் நிச்சயம் நிறைய புண்ணியம் செய்து இருக்கிறான் என மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்.

சில சமயங்களில் மனதிற்குள் நினைக்கும் எண்ணங்கள் நல்லவையாக இருந்தால் கூட அவை கண் திருஷ்டி பட்டது போல் ஆகிவிடுகிறது.

ஷியாம் வாழ்க்கையிலும் பெரிய சூறாவளி எப்பொழுது உள்ளே வரலாம் என்று காத்துக் கொண்டிருக்கிறது.

தன் உயிருக்கு மேலாக விரும்பும் மனைவி, தன் காதலின் காரணமாகவே தன்னை விட்டு செல்லக்கூடும்... என்று அவன் நிச்சயம் நினைக்கவில்லை.

காதல் என்னவெல்லாம் செய்யும்... எவ்வளவு தூரம் தான் காதலிக்கும் நபருக்காக தன்னை மாறச் செய்யும் என்றெல்லாம் இதுவரைக்கும் அவனுக்கு தெரியாது.

என்னை பொருத்தவரை ஷியாம் நிச்சயம் ஒரு காதல் தீவிரவாதி.. அது எப்படி என்று போகப்போக நீங்களும் கூட தெரிந்து கொள்வீர்கள்.

ஒரு வழியாக, மதிய உணவு முடிந்து எல்லோரும் கிளம்புவதற்கு மாலை 5 மணிக்கு மேல் ஆகிவிட்டது.
நான்கு மாதமே ஆன குழந்தை தாராவை சியா மட்டுமல்ல.. ஷ்யாமின் மொத்த குடும்பமும் தாங்கியது.

விழாவில் குழந்தையை எப்படி வைத்துக்கொண்டு சமாளிக்க போகிறோம் என்று யோசித்துக் கொண்டிருந்த ராம் மனதில் ஷ்யாமும் அவன் குடும்பமும் இன்னும் ஒரு படி உயர்ந்துவிட்டது.

அத்துடன் இன்னொரு கவலையும் சேர்ந்து கொண்டது.. "தன் குழந்தை தாராவிற்கும் முதலாம் ஆண்டு விழா சிறப்பாக கொண்டாட வேண்டுமே! அதற்கு நந்தா ஒத்துழைப்பாளா.."
இதே கேள்வி எனக்குள்ளும் இருக்கிறது.


 

Subageetha Sundararajan

Sugee
Vannangal Writer
Team
Messages
130
Reaction score
39
Points
63
கொடிமலர் 28
விழா முடிந்து வீடு திரும்பிய ராமின் மனதில் ஆயிரம் எண்ணங்கள். கீழேயே லீலாவதி 'நான் கிளம்புகிறேன்' என்று சொல்லிவிட்டு கிளம்பி விட்டாள்.

முன்பெல்லாம் வீட்டினர் நடந்து கொள்ளும் முறை அவன் மனதில் முள் போல் தைத்துக் கொண்டிருந்தது.
இப்போதெல்லாம் நந்தாவின் நடத்தையில் அவர்கள் அவமானம் கொள்ளாமல்' செல்வதே பரவாயில்லை' என்ற எண்ணத்திற்கு வந்து விட்டான்.

மாடியில் நந்தா வழக்கம் போல் தனது அறைக்குள் லேப்டாப்பில் தலையை புதைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள்.
'தான் திரும்பவும் வேலையில் சேர்வது பற்றி ராமிடம் எப்படி ஆரம்பிப்பது' என்று யோசனை அவள் மூளைக்குள் புகுந்து கொண்டு, அவளைப் படுத்தி எடுத்தது.

ராமிடம் சொல்வதற்கு அவளுக்கு தயக்கமும் பயமும் கண்டிப்பாக கிடையாது.
'ஸ்டார்டிங் பிராப்ளம்' என்று சொல்வோமே! அந்த நிலைதான்.

இரவு உணவு சமைக்கப்பட்டு டைனிங் டேபிள் மேல் எடுத்து வைக்கப்பட்டு இருந்தது.

தாராவிற்கு பாலை கலக்கி கொடுத்து விட்டு, அவளுக்கு நாப்கின் மாற்றி, வேறு உடை மாற்றி, தூங்க வைப்பது என்று ராமின் வேலைகள் நீண்டு கொண்டு சென்றது.
குழந்தையை கவனிப்பதில் அவனுக்கு எந்த சிரம மும் இருக்கவில்லை.

அவனை பொறுத்தவரை தாரா, அவன் வாழும் இருண்ட வாழ்விற்கு ஒளியேற்ற வந்திருக்கும் நட்சத்திரம். அவளைக் கொண்டாட ராம் காத்திருக்கிறான்.

ராம் குழந்தையை கவனிப்பதை ஒருவித பொறாமையுடன் கவனித்துக் கொண்டிருந்த நந்தாவின் மனதிற்குள் அவளையும் அறியாமல், ஒரு கோபம் வெளிப்பட்டது.
குழந்தையை 'தான் கவனிக்கவில்லை 'என்ற ஆற்றாமையா, இல்லை ராம் கவனிப்பது பொறாமையா..என்று ஆராய்ச்சியை நான் உங்கள் பக்கம் தள்ளி விடுகிறேன்.

குழந்தை தூங்கிய பிறகு நிதானமாக, சாப்பாட்டு மேசையின் மேல் உள்ள பதார்த்தங்களை தனது தட்டிற்கு பரிமாறிக் கொண்டவன், தட்டை கையில் வைத்துக்கொண்டு டிவி முன் அமர்ந்து கொண்டான்.

முன்பெல்லாம், அவன் வெறும் செய்தி சேனல்கள் மட்டும் தான் பார்த்துக் கொண்டிருப்பான். இப்போதெல்லாம் அதிகமாக இசை நிகழ்ச்சிகளை பார்க்கிறான். அத்துடன் இணைந்து பாடத் தொடங்குகிறான். ஏதோ ஒரு வகையில் தன் மன அழுத்தம் குறைவதை உணர ஆரம்பித்து விட்டான்.

இது சியா அவனுக்கு கற்றுக் கொடுத்ததுதான் இந்த உபாயம்.
இப்போது எல்லாம் ஏதோ ஒரு வகையில் அவன் வாழ்க்கையில் சியா இருக்கிறாள்.
ராமின் நாட்களில் சியாவின் வார்த்தைகளுக்கு அதிக மதிப்பு உண்டு.
ஷியாம் சியா இருவரும் தனக்கு எப்போதும்'நன்மை விரும்பிகள்தான்' என்று தீர்மானமாக நம்பத் தொடங்கி விட்டான் ராம்.

இவன் சாப்பிட்டு முடிக்கும் வரை, எப்படியோ தனது வார்த்தைகளை உள்ளேயே நிறுத்தி வைத்திருந்த நந்தா, ஒரு வழியாக தனது திருவாய் மலர்ந்து அருளினாள்.
" ராம், நான் திருப்பி ஆபீஸ்ல ரீ ஜாயின் பண்றதுக்கு தயாராகிட்டேன் "..

'அவள் என்ன சொல்கிறாள்' என்று ஒரு கணம் தயங்கிய ராம், அவள் வார்த்தைகளை உள்வாங்கிக் கொண்டான்.

"ஸோ... என்ன செய்யணும் ' என்று கேள்வி கேட்டது அவன் பார்வை.

அவன் கண்கள் குழந்தை உறங்கிக் கொண்டிருக்கும் தொட்டில் மீது செல்ல..
அவன் பார்வையின் அர்த்தத்தை புரிந்து கொண்டவளாக,
" குழந்தைய பாத்துக்க பேபி சிட்டர் ஏற்பாடு பண்ணிட்டேன் ராம். அவங்க நாளையில் இருந்து வந்துருவாங்க."

"அண்ட் இப்போதைக்கு நான் ஒர்க்கிங் ப்ரம் ஹோம் வாங்கி இருக்கேன் "

அவள் வார்த்தைகளை அவனால் ஜீரணிக்க முடியவில்லை.
'குழந்தை பிறந்த பிறகு முழுமூச்சாக அவள் குழந்தையை கவனிக்க வேண்டும். குறைந்தபட்சம் குழந்தையின் மூன்று வயது வரை ' என்று ராம் யோசித்தது உண்டு.

ஆனால் அவளை பிடித்து வைக்க முடியாது என்று புரிந்தவன்,"ஓஹ்.. என்றவன்,தென் ஓகே, பட் நமக்கு குழந்தை முக்கியம், நந்தா. அது எப்பவும் ஞாபகத்துல இருக்கட்டும். " என்று முணுமுணுத்து விட்டு, தனது அறை நோக்கி சென்றான்.

நடப்பவற்றை என்ன செய்ய முடியும் என்ற கேள்வி அவனை வண்டாய் குடைந்தது.
நந்தா இவ்வளவு சீக்கிரத்தில், வேலைக்கு போவது பற்றி முடிவு செய்வாள் என்று அவன் எதிர்பார்த்து இருக்கவில்லை.
அவன் வீட்டிலும் பெண்கள், குடும்பத் தொழிலில் ஈடுபடுவது தான்!

அதில் எல்லாம் அவனுக்கு சுணக்கம் கிடையாது. நான்கு மாத குழந்தையை விட்டு விட்டு செல்வது, அவனைப் பொறுத்தவரை புதிய விஷயம்.

அவன் அம்மா,சித்தி,அத்தை என்று எல்லோருமே குழந்தைக்கு விவரம் தெரியும் வரை, தொழில் என்பது அவர்களை பொறுத்த வரை மூன்றாம் பட்சமே.

ராம், பள்ளிக்கு கிளம்பிய பிறகு அலுவலகம் சென்று கொண்டிருந்த அவனது அம்மா, மாலை 5 மணிக்கு வீட்டுக்கு வருவாள். அதுவரை பாட்டி அவனுடன்.

இது போன்றதொரு சூழ்நிலையில் வளர்ந்த ராமிற்கு, நான்கே மாதங்கள் ஆன கைக்குழந்தையை, அதுவும் படாத பாடு பட்டு காப்பாற்றிய குழந்தையை இவ்வாறு மூன்றாம் நபராக வேலைக்கு வரும் ஒரு பெண்ணிடம் விட்டுச் செல்வது அவ்வளவு உவப்பானதாக இருக்கவில்லை.

அவனுக்கும் தெரியும் இந்திய பெண்களின் பலர், குடும்ப சூழ்நிலையின் காரணமாக பிறந்த குழந்தையை வீட்டில் யாரிடமாவது விட்டு விட்டு வேலைக்கு மனதே இல்லாமல் சென்று திரும்பும் அவல நிலையில் துன்பப்படுகிறார்கள் என்று.
அது போன்ற பெண்களுக்கு, அவன் மனதில் அனுதாபமும் இரக்கமும் உண்டு.

இன்னும் சொல்லப் போனால் அவர்களது அலுவலகத்தில் பேறு கால விடுப்பு, சம்பளத்துடன் ஆறு மாதங்கள். மேற்கொண்டு விடுப்பை நீட்டிக்க விரும்பினால் ஆறு மாதங்கள் வரை நீட்டிக்கலாம். ஆனால் நிர்வாகம் அந்த ஆறு மாதங்களுக்கு சம்பளம் தராது.

ஆனால், பணத்திற்கு ஒரு குறைவும் இல்லாத நந்தா குழந்தையை விட்டுவிட்டு இப்பொழுது வேலை செய்ய வேண்டும் என்று அடம் பிடிப்பது எதற்காக?
கொஞ்சம் வருஷங்களுக்காவது அவள் தனது நேரத்தை குழந்தைக்காக செலவிட்டால் என்னதான் குறைந்து போய்விடும்?

இல்லை... நாந்தாவின் தகுதிக்கு மீண்டும் வேறு வேலை தான் கிடைக்காதா...
நந்தா ஏன் இவ்வாறான முடிவுகளை எடுக்கிறாள் என்று புரியாமல் தவித்து நின்றான் ராம்.

ராம் வீட்டில் இருக்கும் பொழுது வேலைக்கு வந்த பெண் குழந்தையை நன்றாகவே பார்த்துக் கொண்டாள். முதலில் வெறும் 8 மணி நேரத்திற்கு மட்டும் என்று நியமிக்கப்பட்டிருந்த அந்த பெண்ணை, நந்தா நாள் முழுவதும் வீட்டில் தங்கி குழந்தையை பார்த்துக் கொள்ளும்படிக்கு மாற்றிவிட்டாள்.

ராம் அவனது தொழில் பளு அவனை இரவு வீட்டிற்கு தாமதமாக வரச் செய்தது.
நந்தா ஒருமுறை தனது அலுவலகத்திற்கு வேலையை தொடங்கி விட்டாள் என்றால், நடுவில் உணவு இடைவேளையின் போது எழுந்து வருவதுடன் சரி. அதற்கு மேல் குழந்தையை எட்டிக் கூட பார்க்க அவள் விரும்பவில்லை.

வேலை செய்யும் பெண் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறாள் என்ற எண்ணம் தாயான நந்தாவிற்கும் இல்லை... தொழிலதிபனாக அதிக நேரத்தை செலவாழிக்கும் ராமிற்கும் இல்லை.
ராம் சூழ்நிலை கைதி ஆனான்.
நந்தா விரும்பியே சிக்கிக்கொண்டாள்.
ஆரம்ப நாட்களில், வேலையில் மட்டும் ஈடுபட்டுக் கொண்டிருந்த குழந்தையை பார்த்துக் கொள்ளும் பெண்மணி, பின்னர் மெதுவாக வீட்டு விஷயங்களில் தலையிட தொடங்கினாள்.

நந்தாவிடம் அலுவலகத்திற்கு ஏன் செல்லவில்லை என்று மெதுவாக அவள் மனதில் விஷத்தை விதைத்தாள்.
" புள்ளைய பார்த்துக்க நான் தான் இருக்கேன் இல்லம்மா... நீங்க நித்தமும் வேலைக்கு போகக்கூடாது... என்று நந்தாவிற்கு நல்லது செய்வது போல் பேச தொடங்க, ஏற்கனவே இது பற்றிய சிந்தனைகளில் இருந்த நந்தாவிற்கு, அந்த பேபி சிட்டரிடம் நம்பிக்கை பிறக்க அடுத்த மாதத்தில் இருந்து அலுவலகம் வருவதாக மெயில் அனுப்பி வைத்தாள்.

இது பற்றி ராமிடம் பேச வேண்டும் என்ற எண்ணம் அவளுக்கு ஏனோ வரவில்லை. இது அவளைப் பொருத்தவரை வழக்கம் தானே!

ஒரு வழியாக நந்தா வேலைக்கு அலுவலகம் செல்லும் நாளும் வந்தது. அவள் காலையில் கிளம்பும்போது கவனித்த ராம், அது பற்றி கேட்க போக வழக்கம்போல் அவளது எடுத்தெறிந்த பேச்சு..

வேலை செய்யும் பெண்ணின் முன்னால் இது போன்ற வார்த்தைகளை கேட்க பிடிக்காமல், ராம் மௌனமானான்.
அவன் மனதிலும் எப்படியும் இந்த பெண் நன்றாக தானே குழந்தையை பார்த்துக் கொள்கிறாள் என்ற எண்ணம் வந்துவிட்டது.

'என்னாலும்தான் என் குழந்தையை சரியாக கவனிக்க முடியவில்லை'என்று மனைவிக்காகவும் வக்காலத்து வாங்கியது அவன் மனம்.
எப்படியோ தன்னைத் தானே சமாதானம் படுத்திக் கொண்டு அலுவலகம் கிளம்பிச் சென்றான்.
நாட்கள் மாதங்கள் ஆக நந்தா ராம் இருவரும் குழந்தை பராமரிப்பாள ரிடம் நிம்மதியாக குழந்தையை விட்டுவிட்டு அலுவலகத்தில் ஐக்கியம் ஆனார்கள்.

நடுவில் ராமின் அம்மா இரண்டு முறை வந்து பார்த்து சென்றாள். ஆனால் தங்கவில்லை. ராமும் கேட்கவில்லை.

சற்றே பெரியவளாகி இருந்தாள். பால் சதை போட்டு தூக்கி கொஞ்சி கொண்டே இருக்கலாம் என்பதான தோற்றம். இப்போது ஆறு மாசங்கள் ஆகிறது குழந்தைக்கு.

ராமின் அம்மா இரண்டு முறை வந்திருந்த பொழுதும், வீட்டு மனிதர்கள் யாரும் பார்த்துக் கொள்ளாமல் குழந்தையை விட்டு வைத்திருப்பது சரி இல்லை என்று தொலைபேசியில் அழைத்து ராமுக்கு சொன்னாள்.
ஆனால் குழந்தையை பார்த்துக் கொள்பவள் நன்றாக பார்த்துக் கொள்வதாக சொல்லி முடித்து விட்டான் ராம்.

இருந்தாலும் அம்மா சொன்ன வார்த்தைகள் அவனுக்குள் முள் சொருகியது போல ஒரு அவஸ்தையை கொடுத்துக் கொண்டிருந்தது.

இது பற்றி ஷியாமிடம் பேசிகொண்டிருந்த பொழுது ராமின் அம்மா சொல்வது சரிதான் என்றான் அவன்.

ஒன்பது மாத குழந்தை தாராவுக்கு உடம்பு கொதித்தது. அன்று ராம் வீட்டிற்கு வருவதற்கு இரவு 11 மணி ஆகிவிட்டது. அதன் பிறகு வெகு நேரம் ஆகியும் கூட அவன் மனைவி வந்திருக்கவில்லை.

வீட்டிற்குள் நுழைந்த உடனே ஏதோ ஒரு வித்தியாசமான அமைதி. தன் வழக்கம் போல் கை, கால்களை கிளம்பி கொண்டு குழந்தையை பார்க்கச் சென்ற உனக்கு குழந்தையின் உடல் நிலையை பார்த்து மயக்கம் வராத குறை தான்.

காலையில் நன்றாக இருந்த குழந்தைக்கு இப்பொழுது திடீரென
சுரம் ஏன் வந்தது என்று அவனுக்கும் புரியவில்லை.

குழந்தையை பார்த்துக் கொள்ளும் பேபி சிட்டர் நின்றிருந்த நிலை அவனுக்குள் சந்தேகத்தை கிளப்பியது. ஆனாலும் அது பற்றி அவன் ஒன்றும் பேசவில்லை. குழந்தையை தூக்கிக் கொள்ளுமாறு அவன் அந்தப் பெண்மணியை பணிக்க, குழந்தை அவளிடம் செல்லாமல் ராமை இறுக்கிக் கொண்டு வீறிட்டு கதறியது.

ஒருவாறாக மருத்துவ மனையில் குழந்தையை அனுமதித்து, பரிசோதித்த பொழுது குழந்தையின் உடம்பில் அங்கங்கே அடிபட்ட தடங்கள். தொடை போன்ற இடங்களில் ரத்தம் கட்டி இருந்தது.
இதைப் பார்த்த ராமின் மனதில் சொல்ல முடியாத வேதனை.

என்னவென்று சொல்லி யாரிடம் ஆறுதல் தேட முடியும்? பச்சை குழந்தை வாய் திறந்து சொல்ல முடியாத நிலை... ஒருவேளை குழந்தைக்கு ஏதாவது ஆகி இருந்தால்... அந்த எண்ணமே ராமை உலுக்கியது.

முகத்தில் எதையுமே காண்பித்துக் கொள்ளவில்லை. லீலாவதியை அவசரமாக மருத்துவமனைக்கு வரச் சொன்னவன் தனக்கு கொஞ்சம் வேலை இருப்பதாக சொல்லிவிட்டு தன் வீட்டுக்கு வந்தான்.

நடப்பவை எதுவுமே புரியாமல் தன்னை மறந்து உறக்க நிலையில் இருந்தாள் நந்தா.

இதை கண்ட ராமுக்குள் கோபம் பொங்கியது. ச்சே.. என்ன பெண் இவள் ' என்று மனதிற்குள் திட்டிக் கொண்டவன், வீட்டில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமராவின் பதிவுகளை தனது லேப்டாப்பில் ஓட்டி பார்க்கத் தொடங்கினான்.

குழந்தையை அந்தப் பெண் சரியாக உணவு சாப்பிடாமல் விளையாடிக் கொண்டிருந்ததற்காக உள்ளிருக்கும் கரண்டியை வைத்து தாறுமாறாக அடித்து வைத்திருந்தாள்.

நேராக போலீஸ் ஸ்டேஷன் சென்றவன், அந்தப் பெண்ணின் மீது ஒரு புகாரை பதிவு செய்தான்.
அவனுக்கு மனம் ஆறவில்லை. தன் குழந்தையின் நிலையை இவ்வளவு மோசமாக வைத்திருக்கிறோம் என்ற குற்ற உணர்ச்சி.

திரும்பவும் மருத்துவமனைக்குச் சென்றவன், அறிந்து கொண்டது பேபி சிட்டர் வெகு நேரமாக ஆள் காணவில்லை என்பதுதான்!
 

Subageetha Sundararajan

Sugee
Vannangal Writer
Team
Messages
130
Reaction score
39
Points
63
கொடிமலர் 29

புதியதாக கட்டிக் கொண்டிருக்கும் கட்டிடத்தை பார்வையிடுவதற்கு என்று சியாம் அகமதாபாத் சென்றிருந்தான்.
யாரிடம் தோள் சாய்ந்து அழுவது என்று புரியாமல் ராம் ஷ்யாமி ற்கு அழைக்க, உடனடியாக அங்கிருந்து வர முடியாத நிலைமையில், ஷாம் தனது மனைவி ஸியாவிற்கு அழைத்து விஷயத்தை சொன்னான். என்ன செய்வது என்று புரியாத சியா தூங்கிக் கொண்டிருந்த ஷ்யாமின் சித்தியை எழுப்பி விஷயத்தை பகர, இரவு 10 மணிக்கு மேல் என்ன செய்வது என்று குழம்பியவர்கள், காலையில் சியாவும் ஷ்யாமின் பாட்டியும் குழந்தை கிருஷ்ணாவை அழைத்துக் கொண்டு ராமின் குழந்தை தாராவை பார்த்து சொல்வதாக முடிவானது. இரவு முழுவதும் சியாவால் தூங்க முடியவில்லை.

ராமை பற்றி அவளுக்கு தெரியும். ராம் படும் அவஸ்தைகளும் அவளுக்கு நன்றாகவே தெரியும். இந்த நிலையில் ஷாம் இங்கு இருந்திருந்தால் எவ்வளவோ நன்றாக இருந்திருக்கும்.
இரவு இத்தனை மணிக்கு மேல் என்னால் போய் நண்பன் அவனுடன் மருத்துவ மனையில் இருக்க முடியாது. அவன் மனம் எவ்வளவு பாடுபடும் என்று மருகினாள் பெண்.

ஷியாம் சொன்னவைகள் அவள் காதில் மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டிருந்தது.இரவு குட்டி க்ருஷ்ணனை அணைத்துக்கொண்டாள். ஆனாலும் மனம் சமாதானம் அடையவில்லை. தாராவை நினைத்து சியாவின் மனதில் பதட்டம் மிகுந்தது.

அவளுக்கு ராம் மீதும், நந்தா மீதும் அளவு கடந்து கோபம்.
'இவர்களால் சரியாக குழந்தையை வளர்க்க முடியாது என்றால் எதற்காக பெற்று கொள்கிறார்கள்' என்று அவளால் நினையாது இருக்க முடியவில்லை.
இன்னொருவர் வாழ்க்கையில் தான் இவ்வாறு எல்லாம் நினைப்பது தவறு என்பது தெரியும் தான்.
ஆனால் தாராவிற்கு பாலூட்டிய பாசம், அவளை இவ்வாறு யோசிக்க வைத்தது. ஒரே ஒரு முறை,
தாராவிற்கு பால் புகட்டிய பாசத்தில் குழந்தையைப் பற்றி சியாவால் யோசிக்க முடியும் என்றால் குழந்தையைப் பெற்றவ ளுக்கு எவ்வளவு யோசனை இருந்திருக்க வேண்டும்?
கணவன் மீது ஈடுபாடு இல்லாமல் இருந்தால் கூட பெற்ற குழந்தையின் மீது பாசம் இல்லாமல் எப்படி போகும்?
தார்மீக அடிப்படையில் யோசித்தால் கூட பெற்ற குழந்தையின் மீது அம்மாவிற்கு பாசம் இல்லை என்றால் யாராலும் நம்ப முடியாது.

ஆனாலும் உலகின் பல்வேறு இடங்களிலும் இவையெல்லாம் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
தான் பெற்ற பச்சை பிள்ளையை குப்பைத்தொட்டியிலோ அனாதை விடுதி வாயிலில் விட்டு விட்டு தன் வாழ்க்கையை பார்த்துக் கொண்டு செல்லும் அம்மாக்களுக்கும் நந்தாவிற்கும் எந்த வேறுபாடும் கிடையாது.

நந்தா பிறந்த போது அவளது அம்மாவும் குழந்தை வேண்டாம் என்று நந்தாவை விட்டுவிட்டு தான் சென்றாள்.

இன்று நந்தா வீட்டில் உறங்கிக் கொண்டிருக்க குழந்தை தாரா நீங்க மருத்துவமனையில் அவதிப்பட்டு கொண்டிருக்கிறது.

இவ்வாறான மனநிலைமையில் இருப்பது நந்தா செய்த பாவமா இல்லை.. குழந்தை தாரா பெற்று வந்த வரமா என்று
குழம்புகிறேன்.

மறுநாள் காலையில், திட்டமிட்டபடி சியா மருத்துவமனைக்குச் சென்றாள். குழந்தை அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்க, கண்ணாடி கதவு வழியை பார்த்துக் கொண்டிருந்த சியாவின் கண்களில் அவளையும் அறியாமல் கண்ணீர் வழிந்தது.

இதைப் பார்த்த ராம் தான் பதட்டம் ஆகி விட்டான். ராமிற்கு ஆறுதல் சொல்ல வந்த சியாவின் நிலையை கண்டு ராம் அவளுக்கு ஆறுதல் சொல்லும் நிலை.
இரவே சித்தி லீலாவதியையும், சித்தப்பாவையும் கட்டாயப்படுத்தி வீட்டிற்கு அனுப்பி விட்டான். இன்னும் கொஞ்ச நேரத்தில் அவர்கள் இருவரும் வந்து விடுவார்கள் தான்.
கிருஷ்ணா பாலுக்காக அழ, சியாவின் சங்கடம் உணர்ந்து ராம் அவளை வீட்டிற்கு செல்ல பணிக்க, அவள் மறுத்து விட்டாள்.

குழந்தையை வெகு நேரம் மருத்துவமனையில் வைத்திருக்க முடியாமல், ஷாமின் பாட்டி குழந்தை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு கிளம்ப, மருத்துவமனையில் குழந்தைக்கு பாலூட்ட என்று அமைக்கப்பட்டிருந்த அறையில் கிருஷ்ணாவிற்கு பால் புகட்டி விட்டு அனுப்பி வைத்தாள்.

ஷியாமின் பாட்டியின் மனதில், நல்லவேளை தன் வீட்டு மருமகள் யாருமே நந்தா போன்று இல்லை என்று ஆசுவாசம்.

லீலாவதி வந்தவுடன், தன் வீட்டிற்கு வந்து விடுவதாக சியா பாட்டியிடம் மறக்காமல் சொல்லி அனுப்பினாள்.

காலையில் சமையல் செய்ய வரும் பெண்மணியிடம் இருந்து குழந்தையின் நிலைமையை அறிந்து கொண்ட நந்தாவிற்கு கொஞ்சம் குற்ற உணர்ச்சி தான்!

இவ்வாறெல்லாம் நடக்கும் என்று அவள் எதிர்பார்த்து இருக்கவில்லை. தான் தினமும் அலுவலகம் செல்ல ஆரம்பித்தது தவறு என்ற எண்ணம் அவளுக்குள் வந்தது. கொஞ்ச காலம் பொறுத்து குழந்தை சற்றே வளர்ந்த பிறகு ஏதாவது டே கேர் சென்டரில் விட்டுவிட்டு சென்று இருக்கலாம் என்று தோன்றாமல் இல்லை.

இப்போது தோன்றி என்ன பயன் என்று யோசித்தவாறே, குழந்தையை பார்க்க என்று மருத்துவமனைக்கு கிளம்பினாள். ஆனாலும்,அவளுக்கு விடுப்பு எடுக்க தோன்றவில்லை. மருத்துவமனையில் குழந்தையின் நிலைமையை பார்த்து, விடுப்பு எடுப்பதை பற்றியோ இல்லை..அங்கிருந்தே வேலை செய்வதை பற்றியும் யோசிக்கலாம் என்ற எண்ணத்தில் அலுவலகத்தின் லேப்டாப்பை கையில் எடுத்துக் கொண்டு மருத்துவமனைக்கு கிளம்பும் நந்தாவை ஒருவித ஏளன பார்வை பார்த்து வைத்தாள் சமையல் செய்யும் பெண்.

ஆனால் அதையெல்லாம் கண்டு கொள்பவன் இல்லையே நம் நந்தா.

மருத்துவமனையில் சிியாவும் ராமும் அருகருகே அமர்ந்திருக்க, நந்தாவின் மனதிற்குள் காந்தியது.

" எனக்கு சொல்வதற்கு முன்னால், சியாவிற்கு சொல்வது என்றால் ராம்-சியா இருவருக்குமான உறவுமுறை எவ்வளவு தீவிரமாக இருக்கிறது "
என்று யோசித்தாள் நந்தா.

குழந்தை அவசர பிரிவில் இருந்து அறைக்கு மாற்றப்பட்டு விட்டிருந்தாள். வி ஐ பி ரூம் அவர்களுக்கு கொடுக்க பட்டிருக்க, படுக்கையில் உறங்கும் குழந்தையை ஒரு பார்வை பார்த்துவிட்டு தனது லேப்டாப்பை வெளியே எடுத்து வேலை செய்ய ஆரம்பித்து விட்டாள் நந்தா.

ராமிற்கு கோபம் வந்துவிட்டது. " இப்போதான் விஷயம் தெரிஞ்சதா நாந்தா.. "என்றான் கோவத்தை உள்ளடக்கிய குரலில்.

நந்தா வேலை செய்து கொண்டு இவனை ஒரு பார்வை பார்த்தவள்... "ஆமா இப்ப தான் தெரிஞ்சது..அதுவும் சமயல்காரம்மா சொல்லி "
"நீ சொல்லல" என்றாள் குற்றம் சாட்டும் பாணியில்.

கணவன் மனைவி பேசும் இடத்தில் தான் இருக்க வேண்டாம் என்று எண்ணிய சியா அங்கிருந்த நகர போக, நந்தாவிற்கு கோவம் தலைக்கேறியது.

" பட் ராம் உன்னோட காதலிக்கு பஸ்டே சொல்லிட்ட போல இருக்கு. உங்க ரொமான்ஸ் இங்கயும் கண்டினியூ பண்றீங்களா..என்ன? அண்ட் ஷியாம் அவன் எங்கே போனான்?
உங்க ரெண்டு பேரையும் ஜோடி சேர்த்து வச்சிட்டி.. இல்ல.. இந்த கொடுமையை பாக்க முடியாம... "என்று வார்த்தைகளில் கட்டுப்பாடு இல்லாது பேசத் தொடங்கினாள்.

மருத்துவமனையில் இவ்வாறான ஒரு மோசமான சூழ்நிலையை ராம் கண்டிப்பாக எதிர்பார்த்து இருக்கவில்லை. சியா எவ்வளவோ முயன்றும் கண்ணீர் அவள் சொல்லை கேட்காமல் கன்னத்தில் இறங்கியது. அங்கே படுத்துக்கொண்டு இருந்த குழந்தையின் தலையை கோதிவிட்டு எதுவுமே பேசாமல் சியா அந்த இடத்தை விட்டு கிளம்பி விட்டாள்.

அவளை எப்படி சமாதானப்படுத்துவது என்று தெரியாமல் அவள் பின்னாலையே ராம் ஓடினான். அப்போதுதான் வந்த லீலாவதி, சியாவின் முகத்தைப் பார்த்து அவள் பின்னாடியே சென்றாள்.

லீலாவதி இடம் எல்லாவற்றையும் சொன்ன ராம், முதன்முறையாக "நான் இந்த கல்யாணத்தை பண்ணிக்கிட்டு இருக்க கூடாது சித்தி "என்றான் மனம் திறந்து.

அவன் வார்த்தைகளை கேட்ட சியா சிலை போல ஸ்தம்பித்து நின்றாள். லீலாவதிக்கும் சங்கடம் ஆயிற்று.

ராமின் தோளைத் தொட்ட லீலாவதி "கொஞ்சம் அடக்கி கொள் ராம். இது பொது இடம்" என்று ஞாபகப் படுத்த இவ்வளவு நாட்களும் அடக்கி வைத்திருந்த துக்கத்தை இன்று அடக்க முடியாமல் பிரயர்த்தனம் செய்தான் அவன்.
ஒரு வழியாக சியாவும் லீலாவதியும் அவனை சமாதானம் செய்ய, சியாவின் காலில் விழாத குறைகள் அவளை சமாதானம் செய்து அனுப்பி வைத்தான் ராம். ஷாமின் காதுகளுக்கு இது எப்பொழுதும் செல்லக்கூடாது என்று சியா ராமிடம் தீர்மானமாக சொல்லிவிட்டு சென்றாள்.

ராமின் வீட்டில் இருந்து அவன் பெற்றோர் வந்து விட்டார்கள். கூடவே விஷயம் கேள்விப்பட்டு நந்தாவின் பெற்றோர்களும் வந்தார்கள்.

நந்தா தன் பேச்சுகளுக்கு மன்னிப்பு கேட்பதாகவும் இல்லை அவளுக்கு இதை பற்றிய வருத்தமும் இல்லை.

ஒரு வழியாக மூன்று நாள் மருத்துவமனை வாசத்திற்கு பிறகு குழந்தை வீட்டிற்கு வந்தாள். மறந்தும் சியா ராமிற்கு ஃபோன் செய்யவில்லை. தேவையான விஷயங்களை லீலாவதி இடமோ வீட்டில் உள்ள மற்ற யாரிடமும் கேட்டு தெரிந்து கொண்டாள். குழந்தை நன்றாக இருக்கிறாள் என்பதை தவிர சியா வேண்டுவது வேறு ஒன்றும் இல்லை.

ஷியாம் ஊரில் இருந்து வந்தவுடன் குழந்தையை பார்க்கச் செல்லலாம் என்றதற்க்கு, " அவங்க மொத்த ஃபேமிலியும் வந்திருக்காங்க ஷியாம். சோ நாம கொஞ்ச நாள் கழிச்சு போலாம் " என்று முடித்து விட்டாள்.

பொதுவாக இது போல பேசுபவள் அல்ல சியா. அதனால் மேற்கொண்டு சியாமும் அவளை வற்புறுத்தவில்லை.

அந்த விஷயம் அத்தோடு முடிந்து விட்டது.
அதேசமயம், ராமின் வீட்டில் உள்ள எல்லோரும் குழந்தை கொஞ்சம் பெரியவள் ஆகும் வரை நந்தா வேலைக்கு செல்ல வேண்டாம் என்று வற்புறுத்த.. நந்தா மனதிற்குள் எரிமலை வெடித்தது.

வேலையை விடவே முடியாது என்று சண்டை போட்டாள் நந்தா.

ஒருவேளை, கொஞ்சம் இதமாக வேறொரு சமயம் பார்த்து சொல்லி இருந்தால் அவள் கேட்டிருக்கலாம். ஏற்கனவே குழந்தையை இப்படிப்பட்ட கஷ்டத்தை அனுபவிப்பதற்கு தானும் ஒரு காரணம் என்ற மனோ நிலையில் இருப்பவள் தான்!

ஆனால் வீட்டில் உள்ள எல்லோரும் சேர்ந்து வற்புறுத்தும் பொழுது அவளது குணம் மாறிவிட்டது.

கடைசியாக, நந்தா கொஞ்ச காலத்திற்கு வீட்டில் இருந்தே வேலை செய்வது என்று முடிவாகியது.

நந்தா வேலை செய்யும் அலுவலகத்தில் ஒப்புக்கொள்ளவில்லை என்றாலும் கூட தங்கள் அலுவலகத்திலேயே வேலை செய்யலாம் என்று, ராமின் அப்பா முடிவு செய்துவிட்டார்.

அதிகம் வாயை திறந்து பேச மாட்டார் ராமின் அப்பா. அதனாலயே நந்தாவால் வேறு வார்த்தைகள் எதையும் விட முடியவில்லை.

ஆனாலும், அவள் மனதிற்குள் திரும்பவும் ராமின் அலுவலகத்தில் வேலை செய்வது பற்றி சந்தேகம்தான்!

தான் தற்போது வேலை செய்யும் நிறுவனத்திற்கு ஒர்க்கிங் ஃப்ரம் ஹோம் ஃபார் டு இயர்ஸ் " கேட்டு மெயில் அனுப்பினாள்.

நந்தாவின் பின்புலம் தெரிந்ததனாலேயே அவர்களது அலுவலகத்தில் ஒப்புக்கொண்டு விட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும். இல்லை.. இதில் ராமின் பங்கு உள்ளது என்றும் கூட சொல்லலாம்.

எது எப்படியோ அவர்கள் வாழ்வில் பிரச்சனைகள் இரண்டு வருடத்திற்கு தள்ளிப் போய்விட்டது. ஒருவேளை நந்தா மனம் மாறி ராமுடன் வாழவும் கூட தொடங்கலாம். யார் அறிவார்?

 
Status
Not open for further replies.
Top Bottom