- Messages
- 129
- Reaction score
- 39
- Points
- 63
கொடிமலர் 30
ராமின் வாழ்க்கை ஒருவாறு அமைதியாக செல்ல தொடங்கியது. எந்த ஆராவாரமும் இல்லை... சண்டை பூசல்களும் இல்லை. காரணம் நந்தா ராம் இருவரும் பேசிக்கொள்வேதே கிடையாது.
ராம் மனதளவில் நந்தாவை வெறுக்கத் தொடங்கியிருந்தான். இருவருக்கும் இடையில் பிரச்சனைகள் தங்களால் வரவேண்டாம் என்று இரு பக்க உறவுகளும் விலகிக் கொண்டார்கள். யாரும் வீட்டிற்கு வருவதும் இல்லை. அலுவலகத்தில் சித்தி சித்தப்பா, கசின்களை பார்ப்பான். சில சமயங்களில் அப்பா வருவார். அவர் தன் தம்பி வீட்டில் தங்கிவிடுவார். அலுவலகம் சென்று பார்க்கும் பொழுதுதான் அப்பா வந்திருக்கிறார் என்பது தெரியும்.
அத்தை சென்னையில் இருந்து வந்தாலும் லீலாவதி வீட்டில் தாம் தங்குவது. ராம் குழந்தையை அழைத்து சென்று பார்த்து வருவான்.
ராமின் இன்னொரு சித்தப்பா மகளுக்கும் குழந்தை பிறந்திருக்கிறது. இவனும் தாராவுடன் போய் பார்த்து வந்தான்.
அந்த குழந்தை அனுபவிக்கும் சீராட்டல் தாராவுக்கு கிட்டவில்லை. குடும்பம் முழுவதும் அந்த குழந்தையுடன் கொஞ்சி கொண்டு இருக்க ராமுக்கு மனதில் புழுக்கம். தானும் தன் மகளும் இனி தனிதான் என்று முடிவு செய்து கொண்டான்.
அவனை பெற்றவர்கள் கூட அவனை தள்ளி நிறுத்தி வைப்பது போன்ற எண்ணம் அவனுக்குள். எல்லோரும் இப்படி என்னிடம் நடக்க நந்தா தான் காரணம் என்று தோன்றியது.
போறாத குறைக்கு முன்பு போல் ஷியாம் சியா இவனிடம் நெருங்கி பழகவில்லை. அவர்கள் மனதிலும் கணவர் மனைவி இருவரும் இப்போதுதான் ஒன்றாக வாழ தொடங்கி உள்ளார்கள். நாம் நடுவில் வேண்டாம் எனும் எண்ணம்.
முன்பெல்லாம் தொழில் விஷயம் பேச ஷ்யாம் அலுவலகத்திற்கு ராம் செல்வான்.
இப்போது எல்லாம் ஷியாம் இவனை பார்க்க வந்து விடுகிறான்.
மருத்துவமனை சம்பவத்தை மனதில் வைத்து சியா ராமை பார்ப்பதை தவிர்க்கி றாள். நந்தா தன் மனைவி பற்றி என்ன நினைத்து பேசுகிறாள் என்பது ஷ்யாமுக்கு தெரியும். அதனால் சியாவை ஷியாம் வற்புறுத்தி ஏதும் செய்யவைக்கவில்லை.
இந்த நிலையில் தாரா வின் முதலாம் பிறந்தநாள் வந்தது. ஆர்ப்பாட்டமாய் செய்ய ராமுக்கு கொள்ளை ஆசை. நந்தாவிடம் இதை பற்றி பேச, அவளுக்கு இதில் எல்லாம் விருப்பம் இல்லை என்றுவிட்டாள்.
ராமுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. ஆசையாக பெற்று வளர்க்கும் ஒரே மகள் அவள். இத்தனை பணம் இருந்தும் பிறந்தநாள் விழாவை கூட சரியாக கொண்டாட முடியவில்லை என்றால் இந்த பணத்தினால் தான் என்ன பயன்?
அவன் மனம் ஊமையாய் கதறியது.
நந்தாவை ஒதுக்கிவிட்டு இந்த விழாவை செய்ய முடியாது என்று புரிந்தவன் "அட்லீஸ்ட் வீட்டு மனுஷங்க வரைக்கும் கூப்பிட்டு, தாராவோட பர்த் டே செலிப்ரேட் பண்ணலாமே!" என்றான்.
"ம்ம்ம்... நான் யோசிச்சு சொல்றேன் ராம்" என்றவளுக்கு வீட்டு மனிதர்களை அழைத்து கொண்டாடுவதில் கூட விருப்பமில்லை.
ஆனால் இதற்கு மேல் ராம் இறங்கி வர மாட்டான் என்று அவளுக்கு தெரியும்.
இரண்டோர் நாட்கள் கழித்து,
"ஓகே ராம். செலிப்ரேட் பண்ணலாம். பட் கிரவுட் கூப்பிட வேண்டாம் " என்று விட்டாள்.
நெருங்கிய உறவுகளுக்கு மட்டும் அழைப்பு விடுத்தவன், ஷ்யாமிற்கு தகவலாகவே சொன்னான். "ஷியாம், தாராவுக்கு பர்ஸ்ட் பர்த்டே வருது. ஸோ, வீட்டோட செலிப்ரட் பண்ண முடிவு பண்ணியிருக்கேன். சியாகிட்டயும் சொல்லிடு ".
ராமின் நிலையில் அவனால் வேறு எதுவும் செய்ய முடியாது.
நந்தா இருக்கும் இடத்திற்கு தனது மனைவியை கூட்டிக் கொண்டு செல்ல ஷியாம்மிற்கும் விருப்பம் இல்லை தான்!
" தாரா அவ்ளோ வளந்துட்டாளா... மை லிட்டில் ஸ்வீட் கியூட் பை ". நா நிச்சயம் சியாகிட்ட சொல்லிடுறேன் ராம் " என்ற ஷ்யாமை கட்டிக்கொண்டான் ராம்.
அவனை முதுகில் ஆதாரவாய் தடவிக்கொடுத்த ஷ்யாம் உணர்த்தது ராமின் கண்ணீர் துளியை.
" டோன்ட் பி ஸில்லி ராம்.. இப்போ எதுக்கு அழறே... வி ஆல் ஆர் ஹியர்,வித் யூ மேன் ... என்றான். ராமின் கண்ணீர் மெல்ல மட்டுப் பட்டது.
ஷியாம் மனதில் இனம் புரியாத வருத்தம் மிஞ்சியது. அவனால் இந்த விஷயத்தில் செய்யக் கூடியது ஒன்றும் இல்லை.
விடை பெற்ற ராமும் மனதளவில் மிகுந்த சோர்வாக உணர்ந்தான். அவனால் காரை ஓட்ட முடியும் என்று தோன்றவில்லை.ஷ்யாமின் அலுவலகத்தில் காரை நிறுத்திவிட்டு, ஒரு வாடகை காரை வரவழைத்துக் கிளம்பினான். வீட்டின் ஜன்னல் வழியே பார்த்துகொண்டிருந்த சியா அலுவலக டிரைவர் மூலம் ராமின் காரை அலுவலகத்தில் விட்டுவர செய்தாள்.
ராமை பார்த்து பேசுவது அவளுக்கு கொஞ்சம் தயக்கமாக இருந்தது.
லீலாவதிக்கு போன் செய்தவள்,
" ஆன்டி, ராம் இங்க ஆபீஸ்ல அவரோட காரை விட்டுட்டு கேப் எடுத்துக்கிட்டு கிளம்பிட்டாரு. நா இங்க ஆபீஸ் டிரைவர்கிட்ட காரை உங்க ஆபீஸ்ல விட அனுப்பியிருக்கேன். ஐ திங்க் ராம் இஸ் நாட் இன் அ ரைட் மூட் டு டிரைவ். ஸோ, ப்ளீஸ் அவருக்காக ஒரு டிரைவர் அர்ரேன்ஜ் பண்ணுங்க " என்றுவிட்டாள். ஷ்யாம் மூலம் தாராவின் விழா பற்றி மறந்தும் கூட லீலாவதியிடம் கேட்டாள் இல்லை.
லீலாவதியும் அதைப் பற்றி எல்லாம் சியாவிடம் பேச்சு வளர்க்கவில்லை.
அவனை சேர்ந்த எல்லோருமே ராம் பற்றி கவலை கொண்டிருக்க, அவன் வாழ்வு நன்றாக அமைய வேண்டுமே என்ற எண்ணத்துடன் கொஞ்சம் நகர்ந்து இருக்க, ராமிடம் மனதிலோ எல்லோரும் நம்மை மொத்தமாக ஒதுக்கி வைத்து விட்டார்கள் என்ற எண்ணம். மனதளவில் அவன் தனிமையை உணர தொடங்கி விட்டான்.
அவன் கூடு அவனும் அவன் மகவும் என சுருங்க ஆரம்பித்தது.
விழா அன்று, இருபக்க உறவுகளாக மொத்தம் வந்திருந்தவர்களின் எண்ணிக்கை மொத்தம் நாற்பதை தாண்டவில்லை.
எல்லா ஏற்பாடுகளையும் ராம், உறவுகளின் துணை இல்லாமல், மனைவியின் சகாயமும் இல்லாமல் தானே எடுத்துச் செய்தான். யாரும் தனக்கு ஏதும் செய்ய வேண்டாம் என்று நினைக்க ஆரம்பித்து விட்டான்.
காலை குழந்தைக்கு நலுங்கு வைப்பதில் இருந்து உணவை குழந்தைக்கு ஊட்டுவது வரை எல்லாமே அவன் பொறுப்பானது.
'விழா நாள் அன்று எதுவும் ரசாபாசமாகிவிட வேண்டாம்' என்று ராமின் உறவினர்கள் விழாவின் காலையில் தான் வந்தார்கள்.
ஏன்,நந்தாவின் பெற்றோருமே ஒரு ஹோட்டலில் ரூம் புக் செய்துவிட்டார்கள்.
ராமின் வீட்டில் மூத்த உறவினர்களுக்கு இந்த குழந்தை எப்படி வளரவேண்டிய குழந்தை.. இப்படி..
என்று மனது தவித்தது.
இந்த குடும்பத்தில் மூத்த இளவரசி இந்த குட்டித் தாரகை.. எவ்வளவு சிறப்பாக கொண்டாடவேண்டிய கொண்டாட்டம் இது.. என்று எல்லோரும் நினைக்க, நந்தா எதையும் கண்டுகொள்ளாமல் இருந்தாள். வீட்டுக்கு வந்தவர்களை வா என்று அழைக்கவும் அவளுக்கு விருப்பம் இல்லை.
சியா ஏன் வரவில்லை என்று உள்ளுக்குள் யோசனை ஓடியது நந்தா மனதில்.
இவள் இப்படித்தான் என்று எல்லோரும் விட்டுவிட்டார்கள். ராம் பல்லை கடித்து பொறுமை காத்தான்.
விழா பிரச்சனை ஏதும் இல்லாமல் அமைதியாக முடிந்தது. நந்தா தான் பாட்டிற்கு சாப்பிட்டுவிட்டு தன் அறைக்குள் புகுந்து கொண்டாள்.
ராமின் பாட்டி உட்பட சாப்பிட்டுவிட்டு, சிறிது நேரம் குழந்தையை கொஞ்ச நேரம் கொஞ்சி விட்டு கிளம்பிவிட்டார்கள்.
விழா முடிந்து காண்ட்ராக்ட்டில் வேலை செய்பவர்கள் வீட்டை சுத்தம் செய்து தந்தார்கள்.
மதியம் சமையல் வேலை செய்யும் பெண் வந்தார். இப்போது அந்த பெண்ணே குழந்தையை பார்த்துகொள்ளவும் ஏற்பாடு செய்திருந்தான் ராம். ராமின் மீது மரியாதை யும், குழந்தை மீது ஆசையும் அந்த பெண்ணுக்கு உண்டு. நந்தாவும் ஏதும் ஆச்சேபிக்கவில்லை.
எப்போதும் காலை நேரம் வரும் அந்த பெண் இன்று கொஞ்சம் தாமதமாக வந்தாள்.
ராம் எதுவும் சொல்லவில்லை.
தனது அறையில் இருக்கும் சாய்நாற்காலியில் அமர்ந்தவன் குழந்தை தாராவை தன் மார்பின் மீது சாய்த்து கொண்டு கண்மூடி மோன நிலையில் இருந்தான். அவன் மனமோ எரிமலை குழம்பாய் தகிக்க அதன் உஷ்ணம் தாளாமல் கண்ணில் இருந்து கண்ணீர் வழிந்தது.
அம்மாவின் அரவணைப்பு இல்லாமல் இந்த பெண் குழந்தை எப்படி வளரும்?
'எனது உறவுகள் இப்படி மாறிப் போன பிறகு, தனியாக இவளை நான் எப்படி வளர்க்கப் போகிறேன்' என்ற கேள்வி அவனை பூதாகாரமாய் மிரட்டியது.
இந்த குழந்தையை பூமிக்கு கொண்டுவந்தது இவளை துன்பப்படுத்தவா.. என்று மறுகினான்.
எவ்வளவு பணம் இருந்து என்ன... ராம் போன்ற மென்மையான குணம் கொண்டு நல்ல குடும்ப சூழ்நிலையில் வளர்பவனின் மனம் இப்படித்தானே இருக்கும்?
காசை விட்டெறிந்து வேலை சாதிக்க அவன் பயிற்றுவிக்கப் படவில்லை. அதுதான் இங்கு தவறாகி போயிற்றோ?
குழந்தையும் அவனும் எப்போது தூங்கினார்கள் என்று தெரியாது. சமையல் செய்யும் பெண் இரவு உணவை தயார் செய்ய சமையல் அறைக்குள் புகுந்து கொண்டார்.
நந்தா ராமின் அறையை எட்டிப் பார்த்தவள் ஒரு தோள் குலுக்கலுடன் தன் கார் சாவியை எடுத்துக் கொண்டு வெளியே கிளம்பிச் சென்றாள்.
மாலை ஆறு மணி சுமாருக்கு வெளியே வந்தவன் குழந்தைக்கு ஆகாரம் தருமாறு வேலை செய்யும் பெண்ணிடம் சொல்லிவிட்டு,' நந்தா எங்கே' என்றான்.
அவள் வெளியே சென்றிருக்கிறாள் என்பதை அறிந்தும் அவனுக்கு ஒன்றும் தோன்றவில்லை.
அவனுக்கு ஒரு ஆறுதல் சமீப காலமாக, நந்தா வீட்டில இருக்கும் பொழுது குழந்தையை கொஞ்சம் கவனித்துக் கொள்கிறாள்.
முன்பு அளவுக்கு மோசமில்லை.
எதையோ யோசித்தவாறே, டிவி பார்த்துக்கொண்டிருந்தான்.
வேலை செய்யும் பெண் இரவு தாமதமாகிறது என்று கிளம்பிவிட்டாள். குழந்தை தொட்டிலில் விளையாடிகொண்டிருந்தது.
இரவு உணவை முடித்துவிட்டு குழந்தை அருகிலேயே தனது லேப்டாப் சகிதமாக அமர்ந்துவிட்டான் ராம். வெகு நேரம் விளையாடிய குழந்தை தூங்கிவிட, லேசாக சோம்பல் முறித்தவன், நேரத்தை பார்க்க அது இரவு பண்ணிரண்டை காட்டியது.
திட்டுகிட்டவன் நந்தாவின் எண்ணுக்கு மீண்டும் மீண்டும் அழைத்து சோர்ந்துதான் போனான். அவள் எடுக்கவில்லை.
என்ன செய்யலாம் என்று அவன் யோசித்து கொண்டிருக்க வாயில் அழைப்பு மணி ஒலித்தது.
அவசரமாக திறந்தவன் கண்ட காட்சி இதுதான்...
லேடி பவுன்சர்கள் இருவர் நந்தாவை அழைத்து வந்திருந்தார்கள்... அளவுக்கு அதிகமாய் குடித்திருந்தாள். அவளால் தன் நிலையில் நிற்க கூட முடியவில்லை.
ராம் மனதில் மீண்டும் ஒரு கேள்வி.. இந்த கல்யாணம் செய்து கொண்டதால் எனக்கு கிடைத்தது என்ன...
அந்த பெண்களின் துணையுடன் நந்தாவை அவள் அறையில் விட்டவனுக்கு தூக்கம் தொலைந்து போனது.
நந்தா ஆழ்ந்த உறக்கத்தில் ...
சிதறி கிடக்கும் சித்திர புதிர் போல் ஆனது அவன் வாழ்க்கை...
இன்னும் சியா ஷ்யாம் வாழ்க்கை எதையெல்லாம் கொடுக்க காத்திருக்கிறது?
நடுக்கத்தில் கொடியும், அதில் பூக்க காத்திருக்கும் மலருமாக.. நீ. கொடியானால்... நான் மலர் ஆவேன்!