Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


நெருங்கி வந்ததோ நெஞ்சம் -1

bhagyasivakumar

New member
Messages
5
Reaction score
0
Points
1
நெருங்கி வந்ததோ நெஞ்சம்.

1


நிலவின் வெளிச்சம் மெல்ல இருளை விலக்கிக்கொண்டிருந்த வேளை அது. அனைவரும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தனர் ஆனால் நம் தீப்திக்கு ஏனோ உறக்கம் வரவில்லை. நகத்தை கடித்து துப்பிக்கொண்டே தன் மெத்தையில் அமர்ந்தபடி ஜன்னல் வழியாக பார்த்துக்கொண்டு இருந்தாள்.அவள் பார்வைக்கு எதிரே தென்படுவது வேறெதுவும் இல்லை நம் கதிர் வீடு தான்.


எப்போதும் இரவு ஒன்பது மணியளவில் வெளியே சற்று நேரம் பால்கனியில் நிற்பது கதிரின் வழக்கம். அன்று ஏனோ சீக்கிரமே படுக்கைக்கு சென்றான். மெத்தையில் சாய்ந்தனே தவிர உறக்கம் வர மறுத்தது. தன் மொபைலை ஸ்க்ரோல் செய்தபடி படுத்திருந்தான். திடிரென மெஸேஜ் பாப் அப் ஆனது. அது பபுள் பாப் அப் நோட்டிபிகேஷன்.


“கதிர் கண்டிப்பா நீ போயே ஆகனுமா” என்றிருந்தது.


“ஆமா கண்டிப்பா போய் தான் ஆகனும். பிஸியோதெரபி முடிச்சு நான் அட்டண்ட் பண்ற முதல் ட்ரெயினிங் இது. அதுவும் சென்னைல இருக்கிற மிகப்பெரிய மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல்ல தர ட்ரெயினிங் ஸோ வேற வழி இல்ல தீப்தி நான் போயே ஆகனும்” என்று ரிப்ளை செய்தான்.


உடனே ரிப்ளை பார்த்ததும் கால் செய்தாள் நம் தீப்தி.


“ஹலோ ,நீ சொல்றது வாஸ்தவம் தான் ஆனால் என்னை விட்டு நீ பிரிஞ்சி போறது இதான் முதல் தடவை அதுவும் பத்து நாள். எனக்கு எப்படி சொல்றதுன்னு தெரியலை ,பட் நான் உன்னை ரொம்ப மிஸ் பண்ணுவேன்” என்றாள் கண் கலங்கியபடி.


“அடியேய் என்னமோ என்னை கட்டிக்க போறவ மாதிரி சொல்ற. நான் ஜஸ்ட் டென் டேஸ்ல வரப்போறேன் இங்க. உனக்கு இந்த கொய்ம்பத்தூர்ல என்னை விட்டு வேற ஃப்ரெண்ட்ஸ் இல்லாத மாதிரி சொல்ற ஹாஹா” என்று சிரித்தான் கதிர்.


“உனக்கு எல்லாமே சிரிப்பா தான் இருக்கும். இதுவே நான் எங்கயாவது இரண்டு நாள் வெளிய போனால் எப்போ வருவ எப்போ வருவேன்னு கேட்டு கேட்டு நச்சரிப்ப இப்போ என்னடா னா இப்படி சொல்ற” என்றாள் தீப்தி இந்த முறை சற்று தோய்ந்த குரலில்.


“சரி எனக்கு தூக்கம் வருது தீப்தி அப்றம் பேசலாம்” என்று போனை வைத்தவன், கண்கலங்கியபடி இருந்தான், உண்மையில் அவனுக்கும் வருத்தம் தான். இது அந்த நட்பின் முதல் நீண்ட பிரிவு. இவ்வளவு நேரம் அவர்கள் இருவரும் காதலர்கள் என்று தானே நினைத்திருப்பீர்கள் உண்மையில் இல்லை,இருவரும் நல்ல நட்புடையவர்கள். ஒளிவு மறைவு எதுவும் இருக்காது இவர்களிடம், இவர்கள் நட்புக்கென்றே தனி அடையாளம் உண்டு. இதுவரை விளையாட்டாக கூட கதிர் அவளை தொட்டு பேசியதில்லை, அதே சமயம் இவர்கள் இருவரும் காதலிக்கிறார்களோ என்று நினைக்கும் அளவு நெருங்கிய சிநேகிதம் இவர்களுக்குள் இடையே உண்டு.


மறுநாள் காலை பொழுது துவங்கியது. கதிர் தன் குளியலை முடித்து தயாரிகிக் கொண்டிருந்தான் .


“அண்ணே அம்மா கூப்டாங்க சாமி கும்பிட “ என்று அவ்வீட்டின் கடைக்குட்டி கீர்த்தி வந்து அழைத்தாள்.


“இதோ வரேன்” என்று ஷர்ட் பட்டனை மாட்டியபடி அறையிலிருந்து வந்தான். சாமிக்கு தீபாராதனை காட்டிக்கொண்டு இருந்த மீனாட்சி அவனை கண்டதும்.


“வா கதிர் இந்தா கண்ல ஒத்திக்க” என்று ஆர்த்தி தட்டை நீட்டியதும் கண்களில் ஒத்தியவன்.


“மா ஆசிர்வாதம் பண்ணுங்க” என்று காலில் விழுந்தான்.


“அண்ணே நீ கால்ல விழுறதை பார்த்தா ட்ரெயினிங் போற மாதிரி தெரியவில்லை ஏதோ கல்யாணம் பண்ண போறவன் மாதிரி தெரியுது” என்று கீர்த்தி சொன்னதும் மீனாட்சி சிரித்தாள்.


“கீர்த்தி கவலையே படாதே உன்னை விரட்டி விட்டு அப்றம் தான் நான் கல்யாணம் பண்ண போறேன் ஸோ இப்போதைக்கு எனக்கு கல்யாணம் பண்ற ஐடியா இல்லை” என்றதும் மீனாட்சி குறுக்கிட்டு.


“அதெல்லாம் இல்லை முதல்ல என் ஆசை மகனுக்கு ஒரு நல்ல பொண்ணு தேடி கல்யாணம் பண்ணிட்டு தான் கீர்த்திக்கு பண்ணுவேன்” என்றதும்.


“கரெக்ட் மா இதான் சரியான ஐடியா” இந்த முறை கீர்த்தி சிரித்தாள்.


“ஹலோ ஐடியா மணி முதல்ல நீங்க செமஸ்டர் பாஸ் பண்ற வழியை பாருங்க” என்று கதிர் கூறிவிட்டு தன் பையை எடுத்து தோளில் மாட்டினான்.


“மா அப்பா வந்ததும் சொல்லிடுங்க” என்று சொல்லிவிட்டு ஏற்கனவே புக் செய்த ஆட்டோவிற்கு காத்திருந்தான். ஆனால் இன்னும் ஆட்டோ வரவில்லை .


‘ரொம்ப நேரம் ஆயிடுச்சு இன்னும் ஆட்டோ காணுமே ‘ என்று நினைத்து கொண்டே நின்றவன் எதிரில் தன் தோழி தீப்தி ஸ்கூட்டியுடன் நிற்பதை கவனித்தான்.


‘ஒரு வேளை நம்மளை கூட்டிட்டு போக தான் நிற்கிறாளோ. ம்ம் கேட்கலாமா வேணாமா? ‘ என்று யோசித்தான். அதற்குள் அவளே நெருங்கினாள்.


“வண்டியை வச்சிட்டு நிக்கிறதை பார்த்தா தெரியலையா கதிர். உன்னை ட்ராப் பண்ண தான் நிக்கிறேன்” என்று தீப்தி முகத்தை வாட்டமாக வைத்துக்கொண்டு கூறினாள் அவள் வாட்டத்திற்கு காரணம் தெரிந்தாலும் இவன் அதை எதுவும் காட்டிக்க விரும்பவில்லை.


“இல்லை தீப்தி ஒருவேளை நீ வேற எங்கயோ போறன்னு நினைச்சேன்”என்றான்.


“இல்லை இல்லை அதெல்லாம் இல்லை சரி ஏறு போலாம்” என்று அவனை ஏற்றிக்கொண்டு பீலமேடு ஏரியாவை கடந்தாள் ரயில் நிலையம் சற்று தூரத்தில் தான் உள்ளது. வண்டியை வேகமாக செலுத்தினாள்.


“வெளியே விட்டு போயிடு தீப்தி எதுக்கு ஃப்ளாட் பாரம் டிக்கெட் எல்லாம் எடுத்து வேஸ்ட் பண்ணனும் அதனால ….” என்று ஆரம்பித்தான்.


“நீ கொஞ்சம் வாயை மூடுறீயா “


“ஐயோ நான் எதுவும் சொல்லலை சாமி” என்று வாயை திறக்காமல் அமைதியாக இருந்தான். ரயில் நிலையம் வந்ததும் வண்டியை பார்க் செய்து விட்டு தனக்கு ஃப்ளாட் பாரம் டிக்கெட் வாங்கிக்கொண்டு உள்ளே அவனுடன் வந்தாள்.


“தீப்தி….சாரி டி இனி இப்படி உன்னை விட்டு எங்கேயும் போக மாட்டேன் “ என்றான்.


“சாரி எல்லாம் எதுக்கு கேக்குற இவ்ளோ நாள் தெரியலை இரண்டு பேரும் படிப்பு அது இதுன்னு உள்ளூர்ல இருந்துட்டோம் இப்போ வேலை அது இதுன்னு வரப்ப பிரிவு தானா நெருங்குது என்ன டா செய்றது விடு பரவாயில்லை. “ என்றாள் தீப்தி.


“ஆமா தீப்தி ஆனால்….சரி எதுவும் சொல்ல விரும்பலை விடு “ என்றான். இவர்கள் இருவரும் பேசிக்கொண்டே இருக்கும்போது சென்னை செல்லும் வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் வந்தது.


“பத்ரம் டி தீப்தி, நான் ட்ரெயின் ஏறிடுறேன் நீ கிளம்பு. இன்னும் கொஞ்சம் நேரத்துல ட்ரெயின் கிளம்பிடும் “ என்றான்.


“கிளம்பட்டும் டா நான் வெயிட் பண்றேன்”


“வேணாம் நீ போ…”


“இல்லை இங்க தான் இருப்பேன்”


“ப்ளீஸ் தீப்தி”


“அழுகையா வருது டா போடா “ என்று திரும்பி நின்றாள் தீப்தி.


அவனுக்கும் சொல்ல வார்த்தை இல்லை ரயிலில் ஏறினான். தன் இருக்கையில் அமர்ந்தபடி அவளை பார்த்தான் அவள் திரும்பவே இல்லை. ரயிலும் கிளம்பியது.


தொடரும்.

2

அவனை வழியனுப்பி விட்டு வீட்டுக்கு வந்தாள் தீப்தி . என்ன செய்வதென்று தெரியாமல் ஹாலில் மாட்டி இருக்கும் ஊஞ்சலில் வந்து அமர்ந்தாள்.

“காபி குடிக்கிறியா டி “ என்றார் தாய் அகிலா.

“வேணாம் விடு” என்று வெறுப்பாய் கூறியதும் அவள் வெறுப்புக்கான காரணம் புரிந்து கொண்ட அகிலா.

“அடியேய் அவன் பொழப்புக்கு அவன் போயிருக்கான் இதுல என்ன டி உனக்கு கவலை. இங்க பாரு நீ இன்னொரு வீட்டுக்கு போக வேண்டியவ. இப்படி ப்ரண்டு ப்ரண்டுன்னு நினைச்சிட்டு இருந்த எதுவும் சரி வராது பார்த்துக்க “ என்று அகிலா கடிந்து கொண்டார்.

“மா…உனக்கு இந்த ஃபீலிங் எல்லாம் புரியாது போ மா” என்று முறைத்தாள் தீப்தி.

“எனக்கென்ன நீ இப்படியே இரு நான் போய் சமைக்கிற வேலையை பாக்குறேன்” என்று சென்று விட்டார் அகிலா..

அதற்குள் கால் செய்து விட்டான் கதிர்.

“ஏய் வாலு வீட்டுக்கு போய்ட்டியா. நான் பத்து நாள்ல வந்துருவேன் ஓகேவா ஒழுங்கா ஃபீல் பண்ணாம இரு ஓகேவா. ஏற்கனவே நீயும் நானும் லவ் பண்றோம்னு நம்மள சுத்தி நிறைய பேரு பேசிட்டு இருக்காங்க. இதுல நீ வேற இப்படி நடந்துக்காத ஒழுங்கா நார்மலா இரு” என்று கதிர் சொன்னதும் சிரிய புன்னகையை உதிர்த்தவள்.

“சரி சரி பார்த்து நடந்துக்குறேன். நீ பத்ரமா போய்ட்டு வா. வரும்போது எனக்கு எதாவது வாங்கிட்டு வா” என்றாள் தீப்தி.

“இதெல்லாம் நீ சொல்லவே வேணாம். அப்றம் ட்ரெயின்ல என் பக்கத்துல ஒரு குட்டி பாப்பா இருக்கு எவ்ளோ க்யூட் தெரியுமா வீடியோ கால் வரியா காட்டுறேன்” என்றான் கதிர்.

ம்ம் வரேன் என்று அவனுடன் வீடியோ கால் செய்தாள். அந்த குட்டி பாப்பா சுட்டித் தனம் அவளை வெகுவாய் கவர்ந்தது. உம்முன்னு இருந்த அவளுடைய முகம் தெளிவு ஆனது.
வீடியோ காலில் நேரத்தை கடத்தியவள் மணி 11 ஆனதை உணர்ந்தாள். ஐயோ இப்போ கீர்த்தி வேற கூப்டாளே என்று உணர்ந்து. கதிரின் தங்கை கீர்த்தியை பார்க்க அவர்கள் வீட்டிற்குள் நுழைந்தாள்.

“வா மா தீப்தி “ என்று மீனாட்சி அழைத்ததும் உள்ளே வந்தாள். அதற்குள் கீர்த்தி “வா வா தீப்தி என் ரூம்க்கு வா என்று அழைத்தாள்.

“தீப்தி…நீ தான் என் பர்ஸ்ட் க்ளைண்ட் ஸோ பேஷியல் எப்படி இருக்கப்போதுன்னு நீ தான் சொல்லனும். கண்டிப்பா நல்லா தான் பண்ணுவேன் இருந்தாலும் பயமா இருக்கு “ என்றாள் கீர்த்தி.

“ஹாஹா….ஏய் என் முகத்தை அழகாக்குறேன்னு எதையாவது பண்ணிடாத டி…” என்று புன்னகையித்தாள் நம் தீப்தி.

“அவ்ளோ பயம் எல்லாம் வேணாம் தைரியமா உக்காரு “ என்று அமரவைத்துவிட்டு தன் வேலையை துவங்கினாள். முகத்தில் க்ரீம் அப்ளை செய்து தேய்க்க ஆரம்பித்தாள் கீர்த்தி. அவள் கை பட்டதும் இருந்த கொஞ்ச நஞ்ச டென்ஷனும் போனது.

“செம்ம பேஷியல் டி கீர்த்தி. எனக்கு அவ்ளோ ரிலாக்ஸாக இருக்கு. ஆமா இந்த இன்ட்ரஸ்ட் நீ ஏன் படிப்புல காட்ட மாட்ற “ - தீப்தி.

“நீ மட்டும் படிச்சு கலெக்டராவா ஆயிட்ட அட போ தீப்தி. எனக்கு இதுல தான் ஆர்வம் அதிகமா இருக்கு “ - கீர்த்தி.

“சரி சரி உன் அப்பா கிட்ட சொல்லி ஒரு பார்லர் ஓபன் பண்ணி தர சொல்லு “ என்று சொல்லிவிட்டு கிளம்பினாள் தீப்தி.

கதிர் கீர்த்திக்கு இடையே ஒரு குழந்தை மீனாட்சிக்கு பிறந்து இறந்து போனது. அந்த வருத்தம் இன்று வரை மீனாட்சிக்கு ஆராத வடுவாய் தான் இருக்கிறது. கதிர் கல்யாணம் மீனாட்சிக்கு ஒரு மாற்றம் கொண்டு வரும் என நம்புகிறார் மீனாட்சி. கீர்த்தியின் திருமணம் தள்ளிப் போட நினைப்பதற்கு ஒரு காரணமும் இருக்கிறது. என்றிருந்தாலும் பெண் பிள்ளை இன்னொரு வீட்டுக்கு போய் தான் ஆகனும் எனவே கொஞ்ச நாள் நம்முடன் சந்தோஷமாக இருக்கட்டும் என்று எண்ணம் தான். கதிருக்கு ஒரு பிஸியோதெரபி க்ளீனிக் வைத்து கொடுத்து விட்டு வாழ்க்கை செட்டில் பண்ணிவிட வேண்டும் எனவும் நினைக்கிறார் தாய் மீனாட்சி..

மீனாட்சியின் கணவர் வேலை விஷயமாக வெளியூர் சென்றுள்ளார். ஒரு ப்ரைவேட் கம்பெனி மேனஜர். அவருடைய சம்பளம் இவ்வளவு நாள் போதுமானதாக இருந்தது. இனி கதிர் சம்பாதிக்க ஆரம்பித்தால் தான் பிறகு வரும் பெரிய பெரிய செலவுகள் ஈடுசெய்ய முடியும். ஆனால் சொத்து பத்து சொல்லிக்கும் அளவுக்கு உள்ளது.
போன வருடம் கூட மீனாட்சியின் தாய் வீட்டிலிருந்து அவளுடைய பங்கும் வந்தது. அதை அப்படியே பத்து பவுன் செயின் செய்து வைத்துள்ளார் மீனாட்சி.

“இனி இது தான் நம்ம குடும்ப நகை. எனக்கு வரப்போற மருமகளுக்கு இதுல தான் தாலி சரடு பண்ணி போட போறேன் “ என்று பெருமையாக கூறுவார் மீனாட்சி..

“அது எப்படி? எனக்கு இல்லையா இந்த நகை” என்று கீர்த்தி கிண்டலாக கேட்பதும் உண்டு.

“உனக்கு உன் மாமியார் போடுவாங்க போடி” என்று மீனாட்சியும் கிண்டலாக பதிலளிப்பார். பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கும் கதிர் குடும்பம். ஆனால் அங்கு தீப்தி ஒரே மகள். அகிலாவும் தந்தை ஞானமும் தீப்தியும் தவிர வேறு யாருமில்லை. ஞானம் ஒரு உம்முனா மூஞ்சி,அகிலா எந்நேரமும் அட்வைஸ் மழை பொழியும் கேரெக்டர். அதனால் தான் அவளுக்கு கதிர் வீட்டு மேல் மரியாதையும் அன்பும் தீப்திக்கு அதிகமாக இருந்தது.

அதுவும் சின்ன வயதிலிருந்தே இருவரும் பக்கத்து பக்கத்து வீடு பாடத்தில் டவுட் கேட்பதாக இருக்கட்டும் விளையாடுவதாக இருக்கட்டும் இரண்டிலும் கதிர் மட்டும் தீப்தி ஒன்றாக இருந்தனர். ம்ம் இவர்களுக்குள் இடையே அந்த அழகான நட்பு உரு
வாக அந்த ஒரு விஷயம் காரணமாக இருந்தது.

தொடரும்
 
Last edited:

bhagyasivakumar

New member
Messages
5
Reaction score
0
Points
1
3

ரயில் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது இன்னும் சற்று நேரத்தில் கதிர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இறங்கப் போகிறான். பக்கத்தில் தன்னுடன் விளையாடிக் கொண்டு வந்திருந்த குழந்தை இடம் விடை பெற்று தன் பையை எடுத்துக்கொண்டு தயாராக இருந்தான்.

“தம்பி பத்ரமா போயிட்டு வா பா “ என்று அந்த குழந்தையின் தாய் கதிரிடம் கூறிவிட்டு தானும் பையை எடுத்துக்கொண்டு தயாராக இருந்தார்.

“அக்கா உங்களை அழைச்சிட்டு போக யார் வராங்க “ என்று கதிர் கேட்டதும்.

“என்னோட அப்பா வருவாரு “ என்று அந்த பெண்மணி கூறிவிட்டு.

“உனக்கு சென்னைல தங்குற வரைக்கும் எதாவது ஹெல்ப் வேணும்னா என்னை கான்டாக்ட் பண்ணு” என்று தன்னுடைய நம்பரை கொடுத்துவிட்டு கிளம்பினார்.

‘யாரோ ஒருத்தங்க நம்ம கிட்ட இவ்ளோ நல்லா பழகுறாங்க. உண்மை தான் சிலமணி நேரம் பயணம் பண்ண அந்த அக்காவுக்கே நம்ம கிட்ட இந்த அளவு நம்பிக்கையா பழக தோணுதே இவ்வளவு நாள் கூடவே பழகுன நம்ம தீப்திக்கு நம்ம மேலை எவ்வளவு அன்பும் எதிர்பார்ப்பும் இருக்கும். உண்மை தான் ல அவ இந்த மாதிரி ஃபீல் பண்றது. நம்ம இல்லாத நாட்களில் எப்படி இருக்க போறாளோ பாவம்’ என்று நினைத்துக்கொண்டு இறங்கினான் .

“மச்சான் வா வா உனக்கு தான் வெயிட்டிங்,நாங்க எல்லாம் நேத்தே வந்து தங்கிட்டோம் க்ரூப்பா. உனக்கு இடம் தெரியாதுன்னு இப்போ அழைச்சிட்டு போக நான் வந்துருக்கேன்” என்றான் நண்பன் ஒருவன்.

“தேங்க்ஸ் மச்சி, நான் கூட எந்த இடம் எப்படி என்னான்னு யோசிச்சிட்டே வந்தேன். இறங்கியதும் கால் பண்ணலாம்னு இருந்தேன் அதுக்குள்ள நீயே கிளம்பி வந்துட்ட . சரி எப்படி ஆட்டோவா ? எதுல போலாம்? “ என்றான் கதிர்.

“அட மெட்ரோல போயிடலாம் டா. “ என்றதும் இருவரும் மெட்ரோ ஸ்டேஷன் வந்தனர். அதற்குள் அவன் அம்மாவிடமிருந்து போன் வந்தது.

“இறங்கிட்டியா? இப்போ எங்க இருக்க”என்று கேட்டதும் தான் தற்போது மெட்ரோவில் ஏறி பயணம் செய்வதை தெரிவித்தான். அதற்குள் தீப்தியிடமிருந்து மெஸேஜ் வந்தது.

“ஹலோ ஆர் யூ தேர்”

“யெஸ்..”

“என்னடா பண்ற போய் சேர்ந்தாச்சா”

“இன்னும் இல்லை டி”

“ஓகே ஓகே ரூம் போன் உடனே பேசு”

“சரி “ என்று சொல்லிவிட்டு போனை எடுத்து பாக்கெட்டில் வைத்தான். அடுத்து இவளுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை பின் வாசலில் சென்று மலர்களை பார்த்து ரசித்துக்கொண்டு இருந்தாள். அவள் வளர்த்த மல்லிப்பூ செடி அழகாய் பூத்துக்குலுங்கியிருந்தது.

“என்னடி நீ இங்கதான் இருக்கியா நானே உன் கிட்ட சொல்லனும்னு நினைச்சேன் இந்த மல்லிப்பூ எல்லாம் கொஞ்சம் பறிச்சு கட்டி வை” என்று தாய் அகிலா கூறியதும்.

“சரி மா இன்னைக்கு என்ன திடீர்னு ? பொதுவா வெள்ளிக்கிழமை பூ பறிக்கவே விட மாட்டியே செடியில் தொடவே விட மாட்டியே இன்னைக்கு என்னமா மல்லிப்பூ பரிச்சு கட்டி வைக்க சொல்ற”

“வீட்டுக்கு உங்க அத்தை வரப்போறாங்க டி அதுக்கு தான்”

“எந்த அத்தை”

“உனக்கு இருக்கிறது எத்தனை அத்தை ஒரே அத்தை தான் சாந்தி அத்தை அவன் தான் வராங்க”என்றார் அகிலா.

“என்னது சாந்தி அத்தையா?”என்று ஷாக் ஆனாள் நம் தீப்தி.

‘இவன் எதுக்கு இப்படி ஷாக் ஆகுற’என்று நினைத்தவாறு சமையலறை சென்றார் அகிலா.

‘ஐயோ இந்த சாந்தி அத்தை வேற சும்மா இருக்காது எப்ப பாரு என் பையனை கட்டிக்க என் பையன கட்டிக்கோன்னு டார்ச்சர் பண்ணுமே. ‘ என்று நினைத்துக்கொண்டு பூக்களை பறித்தாள்.

அவளுடைய தந்தையின் அக்கா தான் சாந்தி. சாந்தியின் மூத்த மகன் ராஜேஷ் தற்போது பில்டிங் கான்ட்ராக்டராக இருக்கிறான். தற்போது மும்மரமாக தீப்தியை அவனுக்கு கட்டி வைக்க செயல்படுகிறார் சாந்தி. சாந்தி வருவதை தெரிந்து கொண்ட ஞானம் அக்காவுக்கு பிடிக்குமென வரும் வழியில் ஜாங்கிரி வாங்கிட்டு வந்தார்.

“அக்கா வாங்க வாங்க” - ஞானம்.

“என்ன ஞானம். வீட்டு பக்கமே காணோமே. ஒரு எட்டு வந்தா தான் என்ன”

“அட எங்க அக்கா என் வேலை தான் உனக்கு தெரியுமே . ஸ்கூல் சவாரி அடிக்கிற வேலை அந்த டைம்க்கு காலைல சாயந்தரம்னு கரெக்டா போய்டனும். வரதுக்கு டைம் எங்க இருக்கு” என்றார் ஞானம்.

சாந்தியின் பார்வையை அங்கும் இங்கும் தேடியது அவர் தேடுவது வேறு யாருமில்லை நம் கதாநாயகி தீப்தியை தான்.

“ஆமா எங்க என் மருமவ “

“அடியேய் தீப்தி அத்தை கூப்பிடுறாங்க வா”

“இதோ வரேன்”- தீப்தி.

முனவிக் கொண்டே ஆளுக்கு வந்து நின்றாள்.

“என்ன அகிலா உன் பொண்ணுக்கு நீ சரியா சமைச்சு போடுறியா இல்லையா எப்படி மெலிந்து போய் இருக்கா பாரு” என்றார் சாந்தி. தன் மருமகள் மீது அக்கறை உள்ளவளாய்.

“இல்லைங்க அண்ணி அவ தான் சரியாகவே சாப்பிடுறது இல்லை”.

“சரி சரி என் வீட்டுக்கு வரட்டும் அப்றம் பாரு அவளை எப்படி ஆக்கிடுறேன்னு”என்று சிரித்தார் அத்தை சாந்தி.

“சாந்தி அத்தை நான் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கனும் உள்ள போட்டுமா” என்றதும்.

“சரி சரி நீ போ மா” என்று அத்தை அனுப்பி வைத்தார்.

“ராஜேஷ் இப்போ பில்டிங் காண்ட்ராக்டர் என்று கேள்விப்பட்டேன் “என்று அகிலா ஆரம்பித்தாள்.

“ம்ம் ஆமா ஆமா இப்போ கூட ஒரு ஆபிஸ் பில்டிங் கட்டுறதுக்கு காண்ட்ராக்ட் எடுத்துருக்கான். நல்ல திறமையான வேலை ஆட்களை வச்சிருக்கான். கை நிறைய சம்பாதிக்கிறான்” என்றார் சாந்தி.

‘எப்படியோ என் பொண்ணு அந்த வீட்ல போய் சந்தோஷமா இருந்தா சரி அது போதும் எனக்கு ‘ என்று நினைத்தவாறு காபி போட உள்ளே சென்றாள் அகிலா.

“அப்றம் அக்கா இரண்டாதவன் விக்னேஷ் என்ன பண்றான்” - ஞானம்.

“அவன் காலேஜ் முடிச்சிட்டான் ஏதோ இன்டர்ஷிப் போய்ட்டு இருக்கான்” - சாந்தி.

“எப்படியோ ஞானம் இரண்டாதவனுக்கு கவலை இல்லை கிளி மாதிரி ஒரு பொண்ணு என் வீட்டுக்காரக்கு தூரத்து உறவுல ஒரு பொண்ணு இருக்கு ரெடியா. அது இப்ப தான் ப்ளஸ் டூ படிக்குது. விக்னேஷ் வேலை செட்டில் ஆகுறதுக்கும் அந்த பொண்ணு படிப்பு முடிக்கிறதுக்கும் சரியா தான் இருக்கும். ஆமா நீ என்ன சொல்ற நம்ம தீப்தியை…..” என்று இழுக்கவும் ஞானம் புரிந்து கொண்டு.

“ அக்கா இது நம்ம ஏற்கனவே எடுத்த
முடிவு தானே. அது படி கண்டிப்பா அடுத்த வருஷம் பண்ணிடலாம் “ என்றார் ஞானம்.


தொடரும்.
 

bhagyasivakumar

New member
Messages
5
Reaction score
0
Points
1
4.

கதிர் தன் சக நண்பர்கள் உடன் ட்ரைனிங் அட்டென்ட் செய்ய முதல் நாள் வந்தான். அங்கு அவர்கள் முன்பு நின்று கொண்டிருந்த ட்ரெயினர் ஒரு மிகப்பெரிய சிபியோதெரபிஸ்ட் அது மட்டும் இல்லாமல் ஒரு பெரிய நிறுவனத்தின் துணைத் தலைவரும் கூட. மற்றும் அந்த மருத்துவமனையில் பணிபுரியும் மற்ற மருத்துவர்களும் மாணவர்கள் முன்பு நின்று கொண்டிருந்தனர்.

“குட் மார்னிங் கைஸ் “ என்று ஆரம்பித்ததும் எல்லோருக்கும் ஒரே ஆச்சரியம். என்னடா இது ஏதோ ப்ரண்டை வெல்கம் பண்ற மாதிரி நம்மள வெல்கம் பண்றாங்க என்று வியந்தனர்.

“என்ன ஆச்சு எல்லாரும் ஆச்சரியமா பாக்குறீங்க ? ட்ரெயின் எடுக்க வந்த நீங்களும் பிஸியோதெரபிஸ்ட் தான் எனக்கு எக்ஸ்பீரியன்ஸ் இருக்கு உங்களுக்கு இல்லை அவ்வளவு தான் வித்யாசம் மற்றபடி உங்களை ஸ்டூடண்ட் கேண்டிடேஸ்ன்னு சொல்லி குறைத்து எடை போடை எல்லாம் மனசு இல்லை. “ என்று அந்த ட்ரெயினர் சொல்லும்போது மனசுக்கு அவ்வளவு நிறைவாக இருந்தது அனைவருக்கும்.

‘ஏதோ இப்பவே கிளினிக்க ஆரம்பிச்சிட்ட மாதிரி மனசு அவ்வளவு சந்தோஷமா இருக்கு என்று நினைத்துக் கொண்டான் கதிர்’ படித்த படிப்புக்கு ஏத்த அங்கிகாரம் கிடைத்தால் தானே அவ்வளவு கஷ்டப்பட்டு படித்ததற்கு பெருமை. அன்று முதல் நாள் ட்ரெயினிங் முடிந்ததும் ஓய்வு எடுக்க அறைக்கு வந்தான். நண்பர்கள் அனைவரும் ஒரே அறையில் தங்கிக் கொண்டனர்.

“மச்சி வரிங்களா டா பீச் போய்ட்டு வரலாம்” என்றான் நண்பன் ஆகாஷ்.

“பீச் ல அப்படி என்னடா இருக்கு” - கதிர்.

“அடப்பாவி டேய் சென்னை வந்தாலே எல்லாரும் ஆசைப்பட்டு கேட்கிறது பீச்ச பார்க்கணும்னு தான் ஆனா நீ என்னடா நா பீச்சு எதுக்குன்னு கேக்குற” - ஆகாஷ்.

“அப்படி இல்ல மச்சான் பீச் எல்லாம் ஒன்னு ஃபேமிலியோட போனும் இல்லனா லவ்வரோட போனோம் இல்ல புதுசா கல்யாணம் ஆனவங்க போறது ஓகே நம்ம போய் அங்க என்னடா பண்றது சினிமாக்கு ஆச்சும்போலாம் வாங்கடா” என்று அழைத்தான் கதிர்.

“ஆமா கதை சொல்றதும் நல்ல முடிவா தான் இருக்கு பேசாம சினிமாக்கு போனா தான் என்ன?” என்றான் நண்பன் ஒருவன்.

“இல்லை மச்சி பீச்சுக்கு போறோம் நான் முடிவு பண்ணிட்டேன்” என்றான் ஆகாஷ்.

“இந்த ஆகாஷ சொன்னா கேட்க மாட்டான் சரி வாங்கடா அங்கே போகலாம்” என்றான் கதிர்.

மூவரும் கிளம்பி பஸ் பிடித்து பீச் வந்து அடைந்தனர். அவர்கள் தங்குமிடத்திலிருந்து ஒரு ரெண்டு ஸ்டாப் தூரம் தான் அது. சிலு சிலுன்னு காத்து முகத்தில் பட்டதும் எதுக்குடா பீச்சு வந்தோம் என்று நினைத்த கதிருக்கு சுகமா இருக்குடா என்று நினைக்க தோன்றியது.

‘நல்லாருக்கே இந்த ஃபீல் இதுக்கு தான் ஆகாஷ் இவ்ளோ அடம் பிடித்து இங்க அழைச்சிட்டு வந்தானா நல்லது தான் ‘ என்று நினைத்துக்கொண்டு அருகில் இருக்கும் பஜ்சஜி கடையை நோட்டமிட்டான். வாவ் செம்மயா இருக்கும் போலருக்கு வாங்கிடுவோம் என்று தன் சட்டை பையில் இருந்த நூறு ரூபாய் எடுத்து மற்ற நண்பர்களுக்கும் சேர்த்து பஜ்ஜி வாங்கினான்.

“ எக்ஸ்கியூஸ் மீ எனக்கு இல்லையா பஜ்ஜி” என்றது ஒரு பெண்ணின் குரல் நன்கு பரிட்சயமான குரல் தான் அது. ஆனால் திரும்பி பார்க்கலாமா வேண்டாமா என்பது போல் மெதுவாக தலையை திருப்பினான்.

“ஏய் நீயா? நீ எப்படி டி இங்க வந்த “

“ஏன் நாங்க எல்லாம் வரக்கூடாதா”என்றாள் தீப்தி.

“வரலாம் ஆனால், எதுக்காக இங்க வந்த ? எப்படி வந்த ? ஒன்னுமே புரியல.”என்றான் கதிர்.

“என்ன மச்சி சர்ப்ரைஸா” என்றான் ஆகாஷ்.

“டேய் நீ சொல்றதா பார்த்தா தீப்தி வருவான்னு உனக்கு தெரியுமா “ என்றான்.

“எல்லாம் தெரியும்டா அவங்களை இங்க வர வச்சதே நான் தான்” என்றான் ஆகாஷ்.

“அடேய் இந்த வேலை எல்லாம் வேற பாக்குறியா நீ”

“சும்மா இருடா நீ பாட்டுக்கு கிளம்பி வந்துட்ட அவங்க பாவம் என்னை விட்டு பிரிஞ்சு எடுக்க முடியாம இந்த அணைக்கும் உனக்கு போன் பண்ணிட்டே இருப்பாங்க அதுக்கு பேசாம அவங்களே இங்க வந்துடலாம் இல்ல…அதுக்கு தான்” என்றான் ஆகாஷ்.

“தனியா வா வந்த “ என்று தீப்தியை பார்த்து கேட்டான் கதிர்.

“இல்லை இல்லை என் கூட என் ப்ரண்டு வந்துருக்கா “ என்றாள் தீப்தி.

“அது சரி இங்க எங்க தங்கி இருக்கீங்க”
என்றான் கதிர்.

“என் ப்ரண்டு வீட்ல தான். அவளோட வீடே இங்க சென்னைல இருக்கு வரப்போக இங்க தங்க சரி அதெல்லாம் விடு. நான் வந்ததுல உனக்கு சந்தோஷமே இல்லையா கேள்வி மட்டும் கேட்டுட்டே இருக்க” என்றாள் தீப்தி.

“அப்படியெல்லாம் இல்ல தீப்தி எப்படி? எனக்கு நீ வந்தது ரொம்ப சந்தோஷம் தான் ஆனா உன்னோட பாதுகாப்பும் எனக்கு முக்கியம். நீ தனியா வந்தியோ என்னமோன்னு பயந்தேன் வேற ஒன்னுமில்லை. சொல்லிருந்தா நானே வரும்போது அழைச்சிட்டு வந்துருப்பேன்ல “என்றான் கதிர்.

“சரி விடு கதிர் வா கொஞ்ச நேரம் உட்காரலாம்” என்றாள் தீப்தி. இருவரும் ச
ற்று நடந்து போய் மணல் பரப்பில் அமர்ந்தனர்.

தொடரும்.
 

bhagyasivakumar

New member
Messages
5
Reaction score
0
Points
1
5

கதிருக்கும் தீப்திக்கும் என்ன பேசுவது என்று தெரியவில்லை. இருவரும் சற்று நேரம் கடலையே வெறுத்து நோக்கினர். என்ன ஆச்சு? இவ ஏன் சொல்லாம கொள்ளாம வந்துட்டா இவ பாட்டுக்கு என்னை விட்டு பிரிய அவ்ளோ மனசு இல்லையா? என்று யோசித்தபடி இருந்தான் கதிர்.

“என்ன கதிர் எதையோ ரொம்ப யோசிக்கிற போலருக்கு?”என்றாள் தீப்தி.

“ஒன்னுமில்லை தீப்தி ஆமா உங்க வீட்ல எப்படி அனுமதிச்சாங்க. ப்ரண்டுன்னு சொன்னதுனால விட்டாங்களோ அப்ப கூட உங்க அம்மா ரொம்ப ஸ்ட்ரீட் ஆச்சே”

“ஆமா ஸ்ட்ரிட் தான் என்ன பண்றது எனக்கு உன்னை பார்க்கனும் போல இருந்துச்சு அதான் எப்படியோ வந்துட்டேன். சரி உனக்கு பிடிக்கலைன்னு சொல்லு நான் வேணும்னா இப்பவே கிளம்பி போயிடுறேன்”என்றாள் தீப்தி.

“அட இப்படி புசுக்கு பொசுக்குன்னு கிளம்புறேன்னு சொல்லாத சரி அதெல்லாம் இருக்கட்டும். நான் பர்ஸ்னலா கேக்குறேன். உனக்கு ஏன் என் மேல அவ்ளோ பிரியம் “என்றான் கதிர்.

“ஒருத்தர் மேல பிரியம் வைக்கிறதுக்கு காரணம் வேணுமா என்ன சின்ன வயசுல இருந்தே நம்ம ஒண்ணா பழகுறோம் அது என்னமோ தெரியல உன் கூட இருந்து பழகிடுச்சது திடீர்னு நீ கொஞ்ச நாள் வெளியூர் வந்தவுடனே ஒரு மாதிரி கஷ்டமா இருக்கு அதான் வந்துட்டேன்” என்றாள் தீப்தி.

“கரெக்ட் தான். ஆனால் வெளில இருந்து பாக்குறவங்க நீயும் நானும் ஏதோ இணை பிரியாத காதலர்கள்னு தானே நினைப்பாங்க நம்ம பண்றது எல்லாம் பார்த்தா.” என்றான் கதிர்.

“யாரு எப்படி வேணாலும் நினைச்சுட்டு போகட்டும் கதிர், ஆனால் எனக்கு இந்த ஃபீல் எல்லாம் ரொம்ப பிடிச்சிருக்கு. ஒருவேளை இதுக்கு பேரு காதல்னு சொன்னாலும் எனக்கு எதுவும் பெருசா வருத்தம் கிடையாது. எனக்கு ஒரே ஒரு ஆசை தான்,உன்னை விட்டு பிரியாம கடைசி வரை ஒன்றாகவே இருக்கனும்”என்றபடி கதிரின் கையைப் பிடித்துக் கொண்டாள் தீப்தி.

“தீப்தி நீ சொல்றதெல்லாம் சரிதான் ஆனால் நாளைக்கு உனக்கும் கல்யாணம் காட்சி என்று நடக்கும்போது நம்ம ரெண்டு பேரும் இதே போல நண்பர்களா இருக்கிறது சாத்தியம் இல்லை” என்று நிறுத்தினான்.

“ஏன் கல்யாணம் ஆன அப்புறமாகவும் ஆண் பெண்ணை இரண்டு பேரும் பிரண்ட்ஸா இருக்குறது இல்லையா என்ன?” இன்று கேள்வியாய் எழுப்பினாள் தீப்தி.

“சரி உனக்கு கல்யாணம் ஆகி , உன் புருஷன் நம்ம ப்ரண்ட்ஷிப்க்கு ஒத்துக்குறாங்கன்னே இருக்கட்டும் ஆனா எனக்கு கல்யாணம் ஆனபிறகு என் மனைவி ஒத்துக்கலைன்னா என்ன பண்றது? பொண்ணுங்களோட பொசசிவ் எப்படி இருக்கும்னு உனக்கே தெரியும் தானே தீப்தி என்றான் கதிர்.

“நீ சொல்றது சரிதான் கதிர் ஆனா எதார்த்தம் தாண்டி சுயநலமாக யோசிக்கிறப்ப எனக்கு நம்ம ப்ரண்ட்ஷிப் முக்கியம்னு தோணுது” என்றாள்.

இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே தீப்தியின் கைபேசி மணி முதலில் எடுக்க வேண்டாம் என்று முடிவு எடுத்தவள் ஃபோனை அணைத்துவிட்டு அவனிடம் மீண்டும் பேசத் தொடங்கினால் ஆனால் அவனோ “ தீப்தி முதல்ல எடுத்து பேசு ஒருவேளை ஏதாவது முக்கியமான காலா கூட இருக்கலாம் இல்ல எப்பவுமே கால் வந்தா அவாய்ட் பண்ணவே கூடாது ஓகேவா எடுத்து பேசு” என்றான்.

அவன் சொன்ன பிறகு தான் போனை எடுத்து டயல் செய்து பேசினாள். ரொம்ப பரிச்சயமான குரல் என்றாலும் அவளுக்கு சற்று வெறுப்பாக தான் இருந்தது பேசுவதற்கு.
“ஹலோ சொல்லுங்க யார் இது” என்று ஆரம்பித்தாள்.

“என்ன தெரியலையா உனக்கு தீப்தி நான் தான் ராஜேஷ்” என்றான் எதிர்முனையில்.

“ஓ….நீங்களா சரி சொல்லுங்க “

“இல்ல எங்க அம்மா நம்ம ரெண்டு பேரும் கல்யாணம்…இல்லை இல்லை ஒன்னுமில்லை விடு”என்றான் ராஜேஷ்.

அவன் எதைப் பற்றி பேச நினைக்கிறான் என்பது அவளுக்கு நன்றாகவே புரிந்தது.

“ராஜேஷ் உங்க அம்மா நம்ம கல்யாணம் பத்தி பேசினதை தானே கேக்குறீங்க “

“ஆமாம்” என்றவன் அதற்கு மேல் எதுவும் கூறாமல் அமைதியாக இருந்தான்.

“ஹலோ இருக்கீங்களா என்ற மீண்டும் குரல் கொடுத்தாள் தீப்தி.

“இருக்கேன் இருக்கேன். ஆமா தீப்தி உனக்கு இந்த கல்யாணத்துல விருப்பமா?” என்றான் ராஜேஷ்.

இந்த முறை இவ்வளவு மௌனமாக இருந்தாள் என்ன பதில் சொல்வது என்று கூட அவளுக்கு தெரியவில்லை.

“எனக்கு….. எனக்கு கல்யாணம் பத்தி பெருசா கனவு எதுவும் கிடையாது ஆனால் ஒரே ஒரு கண்டிஷன் தான்” என்றாள்.

“அப்படி என்ன கண்டிஷன் ஒருவேளை மேற்கொண்டு ஏதாவது படிக்கணும்னு ஆசைப்படுறியா இல்ல உங்க அப்பா அம்மாவை நம்ப கூடவே வச்சுக்கணும்னு ஆசைப்படுறியா எதுனாலும் சரி பரவாயில்லை” என்றான் ராஜேஷ்.

‘அடடா இவ்வளவு நல்லவனா இருக்காங்க நம்மள அந்த அளவுக்கு புடிச்சிருக்கு போல இருக்கு எந்த கண்டிஷன்னாலும் ஓகேங்குற மாதிரி சொல்றாரு ஆனா நான் சொல்ல போற கண்டிஷனுக்கு ஒத்துப்பாரா தெரியலையே’ என்ற மனதுக்குள் கூறிக் கொண்டிருந்தாள் தீப்தி.

“தீப்தி சொல்லு” என்றான் ராஜேஷ்.

“அது அது வந்து….சரி நான் நேர்ல நேசிக்கிறேன் பை” என்று சொல்லிவிட்டு போனை வைத்தாள்.

“லுக் கதிர்,ராஜேஷ் என் மேல அவ்ளோ பிரியமா இருக்காரு அவரை கல்யாணம் பண்ணா லைஃப் நல்லாருக்கும் தோணுது ஆனால் அதே சமயம் அதை விட ஒரு படி அதிகமா நீ எனக்கு முக்கியம்னு தோணுது எனக்கு என்ன பண்றதுன்னு சத்தியமா தெரியலை “ என்றாள் தீப்தி
.

இது வெறும் நட்பா இல்லை காதலா பார்ப்போம்.

தொடரும்.
 
Top Bottom