Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


நெருங்க சொல்லுதடி உன்னிடம்

dharshini chimba

Saha Writer
Team
Messages
271
Reaction score
167
Points
43
1. எதிர் பாரா திருமணம்:

“நீ யாரென்று

நான் அறியும் முன்னரே

உன் விரல்களின் தீண்டல்

என் மேனியில்...

நீ கட்டிய

தாலியின் மூலம் புலப்பட

அந்த நொடி

உணர்ந்துவிட்டேன்

என்னை காக்க

தெய்வம் தந்த தூதன் என்று...”


“என்ன நடக்கிறது?" என்று தன் மான்விழியால் மிரண்டபடி அவன் கண்களையே நேருக்கு நேராக பார்த்து கொண்டேயிருந்தாள்.

அவளின் விழிகளையே உற்று நோக்கியபடி மூன்றாவது முடிச்சியையும் போட்டு முடித்தான்.

‘யார் இவன்? என்ன செய்கிறோம் என்று தெரிந்து தான் செய்கிறானா? பிறந்ததிலிருந்தே அன்பெனும் சொல்லை கனவிலும் கேட்காத துர்பாக்கியசாலி ஆயிற்றே நான்’ அவளின் மனதில் தோன்ற விழிமூடாது அவனை நோக்கினாள்.

‘நான் மஹாலக்ஷ்மி பெயரில் மட்டும் தான். ஆனால், எல்லோர் கண்களுக்கும் அம்மாவை விழுங்கிவிட்டு வந்தவள்’ என்று தன்னை பற்றி சிந்திக்கையில்… அதனை களைத்தது அவனின் கணீரென்ற குரல்.

அவளின் கரம் பற்றி ”இந்த நிமிஷத்துலேர்ந்து இவங்க என் மனைவி" என்றவன் திரும்பி அவர்கள் இருவரையும் எரித்துவிடுவது போல் பார்த்தான்.

"இனிமேல் இவளை திட்றதுக்ககோ அடிக்கறதுக்கோ யாருக்குமே உரிமை கிடையாது… என்னை தவிர. என்னையும் மீறி அவளை கஷ்டப்படுத்தணும்னு நினைச்சிங்க...!!! அப்புறம் இருந்த இடம் தெரியாம போயிருவீங்க!!" என்று ஆட்காட்டி விரலை உயாத்தி எச்சரித்துவிட்டு அவளின் கரத்தை பற்றி மணவறையை விட்டு கீழே கூட்டிச்சென்றான்.

மஹாவோ, தன் திருமணம் யாரென்று தெரியாத ஒரு ஆடவனுடன் நடந்தது என்ற அதிர்ச்சியில் ஒருபுறம் இருக்க, நான்கு விழிகள் தன்னை கொலைவெறியுடன் பார்ப்பதை தன் விழிகளால் மிரட்சியுடன் பார்த்து கொண்டே வருபவளின் விரல்விடுத்து அவளை அணைத்தபடி கூட்டிச்சென்றான் அவளின் கணவன்.

உன்னை

காணும் நிமிடம் வரை

என் சிந்தையாலும்

ஒரு பெண்ணை

நினையேன் அன்பே!

என் விழித்திரையில்

உன்

பூமுகம் பதிந்த நொடி

என்

இதயத்தின் கதவையும்

மூடிகொண்டாய் உள்ளே சென்று...

நான் என் செய்வேன்?”


மண்டபத்தை விட்டு வெளியே வந்தவன் காரின் கதவை திறந்து, “உள்ள உக்காரு மஹா!” என்றான். அவன் கூறிய பின்னரும் அமைதியாக அவள் சிலைபோல் நிற்பதை பார்த்து மறுபடியும்.

“மஹா உள்ள போ!” என்று அவளின் கரம்பற்றி உள்ளே உட்கார வைத்தான்.

ஏற்கனவே அதிர்ச்சியில் இருந்தவள். ஷக்தி கரம் பட்டதும் நடுங்கி போனாள்.

அவளின் நிலை புரிந்தாலும் முதலில் அந்த இடத்தை விட்டு பிரச்சனை ஏதும் வருவதற்கு முன் கிளம்பவேண்டும் என்று காரை வேகமாக ஸ்டார்ட் செய்து, தான் அந்த ஊரில் தங்கி இருக்கும் வீட்டை நோக்கி செலுத்தினான்.

ஏதோ பலத்த யோசனையில் இருந்தவன் திடீரென்று, “உன்னோட சர்ட்டிபிகேட் எல்லாம் எங்க இருக்கு மஹா?” என்றான் அவளிடம் திரும்பாமல் காரை ஒட்டியபடி.

மஹாவிடம் இருந்து பதில் ஏதும் வராததால் அவள்புறம் திரும்பி பார்க்க, அவள் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை என்பதை உணர்ந்து அவள் முகத்தின் முன் தன் கரத்தை காற்றில் அசைத்தான்.

அப்பொழுதும் அசைவில்லாமல் இருக்க அவள் தோளை மென்மையாக தொட, அந்த ஸ்பரிசத்தில் பதறிப்போய் பயத்தில் பின்னே ஒடுங்கினாள் மஹா.

‘ஒரு நிமிடம் அதிர்ந்து தான் போனேன் சே! என்ன மனிதர்கள் இவர்கள்? என்ன கொடுமை செய்திருந்தால் இப்படி பயந்து நடுங்குகிறாள் இவள்? இவளிடம் எப்படி பேசுவது தெரியவில்லையே?’ என்று யோசித்தான்.

பட்டென்று வேகமாக காரின் பிரேக்கை போட, கார் குலுங்கி நின்றதில் சுயஉணர்வுக்கு வந்த மஹா அவனை அதிர்ச்சியோடு பார்த்தாள்.

அவன் தன்னையே இமைக்காமல் பார்ப்பதை பார்த்து தலைகவிழ்ந்து கொண்டாள்.

மஹாவின் செயல் அவனுக்குள் சிரிப்பை வரவழைக்க மெல்ல தன் இதழை கடித்து சிரிப்பை அடக்கியவன்.

“இங்க பாரு நம்மளுக்கு டைம் இல்ல, உன்னோட சர்ட்டிபிகேட்ஸ் எல்லாம் எங்க இருக்கு?” என்றான்.

“எல்லாம் எங்க வீட்ல தான் இருக்கு” என்றாள் மஹா மெதுவாக.

“சரி. வீட்டுக்கு வழி சொல்” என்றபடி காரை ஸ்டார்ட் செய்தான்.

வீட்டிற்குள் நுழைந்து மஹாவின் சர்ட்டிபிகேட்ஸ் அவளின் சொத்து டாக்குமெண்ட்ஸ் என்று முக்கியமான அனைத்தையும் எடுத்துக்கொண்டு, “உனக்கு ஏதாவது ரொம்ப முக்கியமா எடுக்கணும்னா எடுத்துட்டு வா!” என்றான்.

அவள் வேகமாக ஓடிச்சென்று, பின் ஒரு சின்ன பெட்டியுடன் வந்தாள். சுற்றிலும் தன் பார்வையை சுழலவிட்டவன் பின் “வா போகலாம்” என்று அவள் கையை பற்றி வேகமாக வெளியேறி காருக்குள் உட்கார வைத்து ஸ்டார்ட் செய்தான்.

தன் போன் அடிப்பதை உணர்ந்து சுரேஷ் ஞாபகம் வர வேகமாக எடுத்து “ஹலோ!” என்றான்.

“சாரி டா! இருந்த டென்ஷன்ல உன்னை கூப்பிடல. சரி நீ வீட்டுக்கு வந்துடு. நாம இப்பவே சென்னைக்கு கிளம்பறோம்” என்று போனை கட் செய்தான்.

அவன் கார் ஓடுவதில் கவனமாய் இருந்தான்.

‘யார் இவன்? என்னை எங்கே கூட்டி செல்கிறான்?’என்று அவனை பார்த்துகொண்டே இருந்தாள் மஹா.

“நீ... நீ...ங்...க யா...ரு...? எ..ன்..ன எ..து..க்..கு கல்யாணம் பண்ணீங்க?” என்று மஹா திக்கித்திணறி கேட்டாள்.

அவள் கேட்ட கேள்வியில் ஒரு நிமிடம் அவள் கண்களையே உற்று பார்த்தவன்.

பின்னர் அவளை பார்த்தபடியே “ஏன் உன்னை அவங்ககிட்டேர்ந்து காப்பாத்துனது பிடிக்கலையா? அவங்ககிட்டயே கொண்டு போய் விடட்டுமா அங்கேயே போறியா?” என்றான் சற்று கோவம் கலந்த குரலில்.

வேகமாக ‘வேண்டாம்’ என்று தலையாட்டும் அவளை பார்த்து சிரித்துக்கொண்டே, “உன்னோட வேண்டுதலை கேட்டு அந்த கடவுள் தான் உனக்காக என்னை இங்க அனுப்பி வைத்தார் போதுமா? எதை பத்தியும் யோசிக்காம அமைதியா பயப்படாம வா” என்றான்.

இன்னமும் அவள் மாந்தளிர் உடல் நடுங்கிக்கொண்டு இருப்பதை பார்த்து, ‘இவளிடம் இப்போதைக்கு பேச்சு கொடுக்ககூடாது. முதல்ல அவளாக நிதானத்துக்கு வரட்டும்’ என்று நினைத்தவன் அதற்குபிறகு அவளிடம் எதுவுமே பேசவில்லை.

திடிரென்று “ப்ளீஸ் எனக்கு ஒரே ஒரு ஹெல்ப் பன்றிங்களா?" என்று மஹா கேட்க.

தாங்கள் இருக்கும் நிலைமையிலும் அவளின் இந்த கொஞ்சலான கெஞ்சலில் சொக்கி தான் போனான் ஷக்தி.

“என்ன?" என்று ஆச்சர்யமாக மஹாவை பார்த்தான்.

“இங்க இருந்து போறதுக்கு முன்னாடி எனக்கு ஒருத்தங்களை பார்க்கணும். ப்ளீஸ்! கூட்டிட்டு போறிங்களா?” என்று பயந்த விழிகளுடன் கேட்கும் அவளை பார்த்து லேசாக சிரித்து தலையசைத்தான்.

“இங்க பாரு இந்த நிமிஷத்துலேர்ந்து உனக்கு எது வேணும்னாலும் என்கிட்டே பயப்படாம கேளு மஹா. இனி உனக்கு எல்லாமே நான் மட்டும் தான்" என்று கனிவாய் மஹாவை பார்த்தான் .

அவனை காணாமல் ‘சரி’ என்று தலையை மட்டும் அசைத்தாள் மஹா.

இன்றில் இருந்து தன் வாழ்க்கையை வசந்தமாக்க வந்தவன் என்று அறியாமல் வழக்கம் போல் பயந்து கொண்டிருந்தாள் மஹா
 

dharshini chimba

Saha Writer
Team
Messages
271
Reaction score
167
Points
43
2. சென்னை பயணம்:

அடர்ந்த மரங்கள், எண்ணில் அடங்காமல் சாலையின் இருபுறங்களிலும் வளர்ந்திருக்க, பச்சை பசேல் என்று கண்ணை கவர்ந்திழுக்கும் நிறத்தில் சிரித்து குலுங்கும் வயல் வெளிகளும் ரம்மியமாய் தோன்றி மனதை சுண்டி இழுத்தாலும் அதையெல்லாம் ரசிக்கும் மனநிலையில் இல்லாமல் மிகவும் துரிதமாக மஹாவை இந்த இடத்தில இருந்து பத்திரமாக கூட்டி சென்றுவிட வேண்டும் என்பதில் மட்டும் குறியாக செயல்பட்டான் மஹாவின் நாயகன்.

மஹா வழி சொல்ல நம்ம ஹீரோ ஷக்தி அந்த ஊரில் ஆங்காங்கே முளைத்திருந்த வீடுகளை கடந்து அவள் வீட்டின் முன் காரை நிறுத்தினான்.

“இந்த வீடு தானா?” என்றான் வீட்டின் வெளிப்புறத்தை சுற்றிபார்த்தபடி.

“ஆமாம்!” என்று குனிந்தவாறே தலையசைத்தாள் மஹா.

“சரி. நான் இங்கேயே வெயிட் பண்றேன். நீ போய் சீக்கிரமா பார்த்துட்டு சொல்ல வேண்டியதெல்லாம் சொல்லிட்டு வந்துடு” என்று தன் மொபைலை எடுத்து பார்வையிட ஆரம்பித்தான்.

சிறிது நேரம் தன் வேலையில் மூழ்கி இருந்தவன் எதேச்சையாக திரும்ப, அவள் உள்ளே போகாமல் அங்கேயே நின்றுகொண்டிருப்பதை பார்த்துவிட்டு,

“என்ன? போயிட்டு வான்னு சொன்ன அப்புறமும் இங்கயே ஏன் இவ்ளோ நேரம் நின்னுட்டு இருக்க?" என்றான் சிறிது வாஞ்சையுடன்.

எப்படி சொல்வது என பயந்து கொண்டிருந்தவள் தன் கணவனின் கனிவான பேச்சால் கொஞ்சமே கொஞ்சம் பயம் நீங்க.

“இல்ல... உள்ள இருக்கறது எங்க பாட்டி தான்... எப்பவும் எனக்கு ஆதரவா இருக்குறது அவங்க மட்டும் தான்... அதான்...” என்று மென்று விழுங்கினாள்.

"அப்படியா! சரி மஹா. நீ போய் பாட்டிகிட்ட நடந்ததை சொல்லி நாங்க இப்ப கிளம்பியே ஆகணும். பிரச்சனை எல்லாம் சரி ஆகட்டும். நாங்க கண்டிப்பா வரோம்னு சொல்லிட்டு வா! நான் இங்கயே வெயிட் பண்றேன். சரியா?" என்றான் ஷக்திகரிசனத்துடன்.

அவளுக்குள் இருந்த பயம் கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கியதுடன்
"தப்பா நினைக்கலேன்னா நீங்களும உள்ள வர முடியுமா ? பாட்டி உங்கள பார்த்தா ரொம்ப சந்தோஷ படுவாங்க” என்று பயந்தபடி அவனை பார்க்காமலே கேட்டாள்.

"இதை சொல்லவா இவ்ளோ தயங்கிட்டுஇருக்க? சரி வா. உள்ள போகலாம்” என்று மஹாவுடன் உள்ளே சென்றான்.

மான்குட்டியை போல் உள்ளே துள்ளி குதித்தபடி ஓடியவள். அவன் தன்னையே பார்த்துக்கொண்டிருப்பதை உணர்ந்து நாக்கை கடித்தபடி, ”பாட்டி! பாட்டி!” என்று கூப்பிட்டபடி போனாள்.

சிறியவீடு தான். இருஅறைகள் கொண்டது. ஆனால், பொருட்கள் நேர்த்தியாக அடுக்கி வைத்து அந்த இடம்சுத்தமாக இருந்தது. உள்ளே இருந்து 65 வயது மதிக்கத்தக்க ஒரு மூதாட்டி வேகமாக வெளியே வந்தார்.

ஷக்தி எழுந்து நின்று ”வணக்கம் பாட்டி” என்று கை கூப்பினான்.

“ என் பேத்தியை இங்க இருந்து கூட்டிட்டு போய்டுப்பா. பிறந்ததுலேர்ந்தே இதுவரைக்கும் எந்த சந்தோசத்தையும் அனுபவிக்கல. நம்மளுக்கு அப்பறம் இந்த பிள்ளையை யார் பார்த்துப்பாங்களோன்னு எப்பவும் கவலையா இருக்கும். இவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை கொடுப்பான்னு அந்த கடவுளை வேண்டாத நாள் இல்லை. இனிமேல் நீ இருக்கின்ற தைரியத்துல நான் நிம்மதியா கண்ண மூடிருவேன்" என்று கண் கலங்கினார்.

"ஐயோ! பாட்டி இப்படிலாம் பேசாதீங்க. ரொம்ப நாளைக்கு நீங்க நல்லா இருக்கனும். நான் இனிமேல் மஹாவை நல்லா பார்த்துகிறேன்” என்று பாட்டியை கட்டிக்கொண்டான்.

"ரொம்ப சந்தோஷம் பா” என்று பாட்டி சொல்ல.

"சரி பாட்டி. நாங்க கிளம்புறோம்” என்றான் ஷக்தி.

"இல்ல ஒரு வாய் சாப்பிட்டு போங்கப்பா” என்றார் தவிப்பாய்.

"இல்ல பாட்டி. சாப்பிடுற நிலைமைல இல்ல! அடுத்த தடவை வரும்பொழுது கண்டிப்பா சாப்பிட்டு போறோம். சரியா?" என்றான் ஷக்தி.

"அப்பப்ப இந்த கிழவி உயிரோட இருக்க வரைக்கும் வந்து எட்டி பார்த்துட்டு போங்க” என்றாள் பாட்டி கனிவாய்.

"கண்டிப்பா பாட்டி!" என்று சிரித்தான் ஷக்தி.

"அடுத்த முறை வரும் போது ரெண்டு பேரும் சும்மா வெறும் கைய வீசிட்டு வராதீங்க” என்றவரை இருவரும் குழப்பத்தோடு பார்த்தனர்.

“எனக்கு ஒரு கொல்லுப்பேரனை கொண்டு வாங்கன்னு சொல்றேன்” என்றார் குறும்பாய்.

மஹாவை ஓரக்கண்ணால் பார்த்தவுடன் அவளும் அவனை நோக்க, இருவரின் விழிகளும் ஒருநிமிடம் இமைக்க மறந்து நோக்கினர். பின் தலையை குனிந்து கொண்டு ”சும்மா இருக்க மாட்ட பாட்டி நீ” என்ற மஹாவை.

"நான் எதுக்குடி சும்மா இருக்கனும். உங்க ரெண்டு பேர் ஜோடி பொருத்தமும் நல்லா இருக்கு. என் கண்ணே பட்டுடும்” என்று திருஷ்டி சுழித்தார்.

"சரி. கிளம்பலாம் டைம் ஆச்சு” என்று ஷக்தி மஹாவை பார்த்தான்.

"சரி” என்று தலையசைத்தாள் மஹா.

பாட்டியிடம் விடை பெற்றுக்கொண்டு அங்கிருந்து இருவரும் கிளம்பினார்கள்.

நேராக தான் இருக்கும் வீட்டிற்கு வண்டியை செலுத்தினான் ஷக்தி.

"நீ காருக்குள்ளையே இரு. அஞ்சு நிமிஷம் நான் இப்ப வந்துடறேன்” என்று காரை விட்டு இறங்கி உள்ளே செல்லாமலே ”முத்து" என்று குரல் கொடுத்தான்.

முத்து வெளியே வந்து “என்ன அண்ணா வெளிய நிக்கறீங்க? அண்ணியை கூட்டிட்டு உள்ள வாங்க” என்றான்.

"இல்ல முத்து. சுரேஷ் எங்க இன்னும் வரலையா?” என்று வீட்டின் உள்ளே பார்வையை செலுத்தியபடி கேட்க.

"வந்துட்டாரு. எல்லா திங்க்ஸும் பேக் பண்ணிட்டு இருந்தாரு. இருங்க கூப்பிடுறேன்” என்று உள்ளே சென்று எல்லோரையும் கூட்டி வந்தான்.

"ஏன் தம்பி இங்க இருக்கீங்க? அந்த புள்ளைய கூட்டிட்டு உள்ள வாங்க” என்றார் முத்துவின் அப்பா.

"இல்ல அங்கிள் இருக்கட்டும். என்னால உங்களுக்கு ஊருக்குள்ள பிரச்சனை எல்லாம் வரக்கூடாது. இருக்கட்டும். எல்லாம் நல்லபடியா முடியட்டும். நாங்க வந்து பத்து நாள் தங்கிட்டு போறோம்" என்று சுரேஷை பார்த்து, ”போலாமா?" என்று கேட்டான் ஷக்தி.

"போலாம் டா" என்ற சுரேஷ் எல்லா பேகையும் டிக்கியில் வைத்தான்.

எல்லோரிடமும் விடை பெற்று அங்கிருந்து கிளம்பினார்கள்.

சிறிதுநேரம் அமைதியாக வந்த சுரேஷ்,

"டேய் இப்ப எங்கடா போகப்போறோம் ? உங்க அப்பாக்கு மட்டும் இது தெரிஞ்சுது உங்களோடு சேர்த்து என்னையும் கொன்றுவார்" என்றான்.

"இப்ப எதுக்கு சும்மா அதையும் இதையும் சொல்லி எனனை வெறுப்பேத்துற?" என்று கோபமாக ஷக்தி கேட்க.

"அப்ப எங்க போறோம்?” என்றான் சுரேஷ் விடாமல்.

"வேற எங்க? உங்க வீட்டுக்கு தான்” என்றான் ஷக்தி அசால்டாக.

“ என்னது?” என்றான் தீயை மிதித்தது போல்.

“ என்ன என்னது? போன் கொடு! நான் ஆன்ட்டிகிட்ட பேசுறேன்" என்றான் சுரேஷை முறைத்து.

"சரி பேசு" என்று சுரேஷ் போன் செய்து கொடுத்தான்.

காரை ஓரமாக நிறுத்திவிட்டு போனை வாங்கிகொண்டு, ”ஹலோ!” என்று எல்லாவற்றையும் தனியாக பேசிவிட்டு வந்தான்.

காரை ஸ்டார்ட் செய்தவன் “ எல்லாம் பேசிட்டேன். ஆன்ட்டி ஓகே சொல்லிட்டாங்க. கொஞ்ச நாளைக்கு மஹா உங்க வீட்ல தான் இருக்க போறா. அதைவிட சேப்ட்டியான இடம் எதுவும் இல்லடா” என்றான் ஷக்தி விழிகளில் சிறிது கலக்கத்துடன்.

"பரவால்ல டா! சுபா மாதிரி இனிமே இவங்களும் என்னோட சிஸ்டர் தான். நான் பார்த்துக்கிறேன்டா” என்றான் சுரேஷ் சிரித்துகொண்டே.

"தேங்க்ஸ் டா” என்று சிரித்தான் ஷக்தி.

இவர்கள் பேசும் எதுவும் புரியாமல் ஒருவித பயம் இருந்தாலும், ‘நான் நல்ல இடத்திற்கு தான் போகிறேன்’ என்று எண்ணி நிம்மதியடைந்தாள் மஹாவை நித்திராதேவி ஆட்கொண்டு உறங்க செய்தாள்.

ஒரு வித பயம் உள்ளுக்குள் இருந்தாலும் வெளிக்காட்டாமல் வேடிக்கை பார்த்து கொண்டு வந்தான் சுரேஷ்.

மஹா பயம் குறைந்து நிம்மதியாய் உறங்குவது அவளின் முகத்தில் தெரிய தெம்பாய் வண்டியை ஒட்டிக்கொண்டு வந்தான் ஷக்தி.

நாமும் இவர்களுடன் பயணிப்போம் இவர்களின் வாழ்க்கையில் ஏற்பட போகும் சுவாரஸ்யமான நிகழ்வுகளை தெரிந்து கொள்ள...
 

dharshini chimba

Saha Writer
Team
Messages
271
Reaction score
167
Points
43
3. சுரேஷ் வீடு:

“உனக்கு

முன் பின் தெரியாதவன்.

ஆனாலும் இனி

உன் வாழ்நாளின்

இறுதி மூச்சு வரை

உடனிருக்க போகிறவன்.

என்ற உரிமையில்

உன்னிடம் கடிந்து கொள்ள

முழு உரிமையும் பெற்றவனடி நான்...”


பாதி வழியில் காரை நல்ல ஹோட்டல் ஒன்றின்முன் சாப்பிட நிறுத்திய ஷக்தி,

"மஹா நீ என்ன சாப்பிடற?" என்று கேட்க.

"இல்ல! எனக்கு எதுவும் வேண்டாம். எனக்கு தலைவலிக்கற மாதிரி இருக்கு" என்றாள் அவனை பார்க்காமல்.

"காலைலர்ந்து எதுவுமே சாப்பிடாம இருக்கறதுனால தான் தலைவலிக்குது. அதனால கொஞ்சமா ஏதாவது சாப்பிட்டுட்டு டேப்லெட் வேணா போட்டுக்க" என்றான் அக்கறையாய்.

"பிளிஸ்! எனக்கு எதுவும் வேண்டாம்” என மஹா திரும்பி கூறியதை காதில் வாங்காமல் அவளுக்கும் சேர்த்து சாப்பாடு வாங்கி வந்தான்.

"இப்ப நீ சாப்பிட்டா வீட்டுக்கு போலாம். இல்லனா மயக்கம் வந்து ஹாஸ்பிடல்க்கு தான் போகணும். பரவா இல்லையா?” என்றவுடன் எதுவும் சொல்லாமல் வாங்கி சாப்பிட்டாள்.

"தட்ஸ் குட்" என்று அவனும் சுரேஷும் சாப்பிட்டு முடித்தனர்.

"சரி ஷக்தி. எதுக்குடா இப்ப மேரேஜ் ரெஜிஸ்டர் பண்ணனும்னு சொல்ற?" சுரேஷ்.

“ எங்க அப்பாவை பத்தி உனக்கு தான் நல்லா தெரியுமில்ல? எல்லாம் ஒரு சேப்டிக்கு தான்" என்றான் ஷக்தி.

மூவரும் மதிய உணவை முடித்து கொண்டு மீண்டும் பயணத்தை தொடர்ந்தனர்.

வழிநெடுகிலும் ஷக்தியின் விழிகள் மஹாவை நோக்க, மறுபுறம் பல சிந்தனைகளில் வண்டியை ஒட்டி கொண்டிருந்தான்.

ஆனால் மஹாவோ? ஷக்தி தன்னை பார்ப்பதை உணர்ந்து அவனை ஏறெடுத்தும் பார்க்காமல் சிறிதுநேரம் வெளியே இருந்த இயற்கையை வேடிக்கை பார்த்துக்கொண்டு வந்தாள்.

பின் பயண களைப்பின் அசதியால் ஷக்தியின் மீதே சாய்ந்தே மீண்டும் உறங்கி போயிருந்தாள்.

பின்னால் உறங்கி கொண்டிருக்கும் சுரேஷை திரும்பி பார்த்து புலம்ப ஆரம்பித்தான். ‘இந்த எருமமாடு பாரு. நான் தொடர்ந்து வண்டி ஓட்டிட்டு வரேன், கொஞ்சமாச்சும் அக்கறை இருக்கா பாரு? நீ கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு. நான் ஓட்டுறேன்னு சொல்றானா பாரு? கும்பகர்ணன் மாதிரி நல்லா தூங்கிட்டு வருது’ என்று காலி தண்ணீர் பாட்டிலை எடுத்து அவன் மேல் வீசினான்.

பாட்டில் மேலே விழுந்ததில் அலறி அடித்து எழுந்து பார்த்தவன் ஷக்தி சிரிப்பதை பார்த்து, ”ஏன்டா!... நீ தானா... ஏன் இப்படி நான் தூங்கறது பிடிக்கலன்னா இப்படி தான் பண்ணுவாங்களா?" என்றான் வடிவேல் கணக்காக.

மூன்று மணி நேர பயணத்திற்கு பின் இரவு ஏழுமணிக்கு சுரேஷின் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள்.

சுரேஷின் அம்மா ரேகா அவர்களை வாசலில் நிற்க வைத்து ஆரத்தி எடுத்து உள்ளே கூட்டிச்சென்றார்.

“வாங்க அண்ணி” என்று சுபா உள்ளே அழைத்து சென்றாள்.

மஹா தங்குவதற்கென்று ஒரு ரூம் ஏற்பாடு செய்திருந்தார்கள். உள்ளே சென்ற மஹாவிற்கு உள்ளுக்குள்ளே ஒருவித படபடப்பு இருந்து கொண்டே இருந்தது.

யாரையுமே அறியாத புது இடம்... புது மனிதர்கள்... புது சூழல்... என்று எல்லாமே புதிதாக இருக்கவும், கட்டிய கணவனை பற்றியும் எதுவுமே தெரியாத நிலையில், என்ன செய்வது என்று தெரியாமல் பதட்டமாக அங்கேயே அமர்ந்திருந்தாள்.

உள்ளே வேகமாக வந்த சுதா ”அண்ணி! உங்களை கூப்பிட்றாங்க! வெளிய போகலாம் வாங்க" என்று கூட்டி சென்றாள்.

அங்கே இவர்களின் திருமணத்தை ரெஜிஸ்டர் செய்ய ரிஜிஸ்டர் ஆபீஸில் இருந்து வந்திருந்தார்கள். சான்றிதழ்கள் சரி பார்க்கப்பட்டு பின் இருவரும் கையொப்பமிட இவர்களின் திருமணம் பதிவானது.

அங்கே நடப்பதை பார்த்துக்கொண்டிருந்த சுரேஷ் ஷக்தீயை முறைத்தான்.

’ரொம்ப உஷாருடா நீ. இதுக்கு தான் ஒரு மாசத்துக்கு முன்னாடியே தெரிஞ்ச ரெஜிஸ்டறார் நம்பர் இருந்தா சொல்லுனு கேட்டியா? கேடி பய. எவ்ளோ வேலை பார்த்துருக்கான் பாரு. நானும் கூடாதானேயா இருந்தேன். இதெல்லாம் எப்போ செய்துருப்பான்?’ என்று உள்ளுக்குள் பொறுமி கொண்டிருந்தான் சுரேஷ்.

பதட்டம் குறையாத நிலையில், மறுபடியும் மஹா தனக்கு கொடுக்கபட்ட ரூமிற்குள் புகுந்து கொண்டாள்.

கையில் ஒரு புடவையுடன் வந்த சுபா, ”அண்ணி இதை கட்டிக்கோங்க. அண்ணன் இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவாரு" என்று குறும்பாய் கண்ணடித்தாள்.

“ என்ன?” என்றாள் மஹா அதிர்ச்சியாய்.

“ என்ன என்ன? உங்க கணவர் உங்கள பார்க்க வருவார் அப்டினேன். சுக்கு எதுக்கு இவ்ளோ ஷாக். சீக்கிரம் ரெடி ஆகிடுங்க" என்று சிரித்துகொண்டு வெளியேறினாள்.

காலையில் இருந்து சுற்றி திரிந்ததால் அலுப்பாக இருந்தது. அதுமட்டும் அல்லாமல், தான் கட்டியிருந்த அடர்சிவப்பு நிற பட்டுப்புடவை நீண்ட நேர பயணத்தால், முழுவதும் கசங்கி போயிருக்க, தன் தலையும் கூந்தலில் இருந்த மலர்களும் வாடி, அலங்காரம் களைந்து கற்றை கற்றையாய் துண்டு முடிகள் அங்கும் இங்கும் காற்றில் அசைந்தாடி கொண்டிருந்தன. குளித்தால் கொஞ்சம் பதட்டம் குறைந்து புத்துணர்ச்சி பெறலாம் என்று குளித்து, சுபா தந்த புடவையை கட்டிக்கொண்டு தலைவாரி சிறிய ஒப்பனை மட்டும் செய்து அமர்ந்திருந்தாள்.

கதவு திறந்து மூடும் ஓசை கேட்கவே மஹாவின் இதயதுடிப்பு வானளவு உயர ஆரம்பித்தது.

பட்டென கட்டிலில் இருந்து இறங்கி திரும்பி நின்றாள் .

இனம்புரியாத ஓர் பயம் தன் வயிற்றுக்குள் படர, பட்டாம்பூச்சிகள் ரீங்காரமிட்டு சுற்றி பறப்பதை போல் உணர்ந்தாள்.

"சோ மிஸஸ்.ஷக்தி! நீ கடவுள் கிட்ட கேட்ட மாதிரியே உன்னை அவங்ககிட்டர்ந்து காப்பாத்திட்டாரு, உனக்கு ஹாப்பியா?” என்றான் ஷக்தி மெல்ல சிரித்து.

வார்தைகள் இதழிலிருந்து வெளிவர மறந்து உள்ளுக்குள் தந்தியடிக்க, ‘ஆம்’ என்று தலையசைத்தாள்.

"இங்க பாரு கொஞ்ச நாளைக்கு நீ இங்கதான் இருக்க போற. நான் நமக்கு நடந்த கல்யாணத்தை பத்தி வீட்ல சொல்றவரைக்கும் கொஞ்சம் எனக்காக பொறுத்துக்கோ. இங்க இருக்க எல்லாருமே உன்னை ரொம்ப நல்லா பார்த்துப்பாங்க. நீ பயப்படாம இருக்கலாம். அவங்கள மீறி யாராலும் உன்னை இங்க இருந்து கூட்டிட்டு போகமுடியாது. அதுவுமில்லாம, இப்ப நீ என்னோட மனைவி. என்னை மீறி உன்னை யாரும் நெருங்கவும் முடியாது, இப்போதைக்கு இந்த வீடுதான் உனக்கு ரொம்ப பாதுகாப்பானது, புரியுதா?” என்றான் ஷக்தி கனிவான பார்வையுடன்.

‘சரி’ என்று தலையசைத்தாள் மஹா.

"நான் இவ்ளோ பேசிட்டு இருக்கேன். நீ அந்த பக்கம் திரும்பி நின்னுட்டு இருந்தா என்ன அர்த்தம்?" என்று ஷக்தி அதட்ட.

உடனே அவன்புறம் திரும்பியவள் அவனை காணமுடியாமல் வெட்கத்தால் தரையை பார்த்து கொண்டிருந்தாள்.

‘என்ன இவ? ஒன்னு திரும்பி நின்னுக்குறா இல்ல தரைய பார்க்கிறா? ஒருவேளை ஊர்ல வளர்ந்ததால் தான் இப்படி இருக்கா போல. பரவால்ல, இதுகூட நல்லா தான் இருக்கு. நம்ம வீட்டுக்கு போனப்புறம் கொஞ்ச கொஞ்சமா மாத்திக்கலாம்’ என்று நினைத்துக்கொண்டான் ஷக்தி.

மஹாவை ஷக்தி நெருங்க ஒருஅடி முன்னே எடுத்துவைக்க, அவள் உடல் பயத்தினால் நடுங்குவதை பார்த்து, அங்கேயே நின்று அவளை தலை முதல் கால் வரை மெதுவாக ரசித்தான்.

அவனின் விழிகள் தன்மீதே இருப்பதை உணர்ந்து ஒருவித பயத்துடன் உடலில் வியர்க்க துவங்கியதுடன் முதன்முறையாக ஒரு ஆடவனின் அருகாமையும் பார்வையும் தன் மேல் விழுவதை எண்ணி வெட்கத்தில் முகம் முழுவதும் தங்கத்தின் நிறத்தில் சிவந்து ஜொலிப்பதை உணர்ந்தாள்.

அவளின் வெட்கம் தன் அருகாமையினால் அவளுக்குள் ஏற்படும் ஒருவித படபடப்பு என எல்லாவற்றையும் பார்த்து உள்ளுக்குள் சிரித்துக்கொண்டாலும் தனக்குள்ளும் அதே மாற்றம் ஏற்படுவதை உணர்ந்தான் ஷக்தி.

மஹாவின் முகத்தில் தெரியும் ஒருவித பயம் வெட்கம் எல்லாம் அவளின் பால் தன்னை ஈர்ப்பதை உணர்ந்தான். இருந்தும் விடாமல்,

"அங்க தரைலயா என் முகம் இருக்கு? இங்க என் முகத்தை பாரு” என்றான் மேலும் கொஞ்சம் நெருங்கி.

‘முடியாது’ என்று அவள் தலையசைப்பதில் தன்னை காண வெட்கப்படுகிறாள் என்று புரிந்தாலும் அவன் விடுவதாய் இல்லை.

"இப்ப நீ என்ன பார்க்க போறியா இல்லையா?" என்று கேட்டுக்கொண்டே அவளிடம் ஒருஅடி முன்னேறினான்.

ஒருஅடி பின்னே எடுத்துவைத்தபடி அவன் முகத்தை பார்த்தாள்.

அவன் விழிகளில் மின்னிய ஒளி! வளர்பிறையின் முகஅழகு! என அவனை கண் கொட்டாமல் தன்னையும் மறந்து பார்த்து கொண்டே இருந்தாள் மஹா.

“ என்னை பாக்காம தரையையே பார்த்துட்டு இருந்த? இப்ப என்னடான்னா? என் முகத்தை பார்த்துகிட்டே இருக்கனும் போல இருக்கா?" என்று கண்ணடித்து கலகலவென சிரித்தான்.

அவனின் சீண்டலில் முகம் செந்தூரமாய் சிவந்தவள், திரும்பிநின்று முகத்தை இரு கைகளாலும் மூடி கொண்டாள்.

"ஓஹ்...ஓ...! ஆ...உ...ன்னா என் பொண்டாட்டிக்கு வெட்கம் அதிகமாகி அந்த பக்கம் திரும்பிக்கறதே வேலையா போச்சு" என்று சிரித்தான் ஷக்தி.

"சரி இங்க என்னை பாரு. முதல்ல நாம ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சிப்போம். எனிவே, எனக்கு உன்னை பத்தி ஓரளவு தெரியும். ஆனா, உனக்கு தான் என்னை பத்தி எதுவும் தெரியாது. தெரிந்திருக்கவும் வாய்ப்பு இல்லை" என்றான் ஷக்தி புதிராய்.

‘என்னது இவருக்கு என்னை பத்தி முன்னாடியே தெரியுமா? எப்படி?’ என்று குழப்பத்துடன் அவன் முகத்தை பார்த்தாள் மஹா.

மார்பிற்கு குறுக்கே தன் கரங்களை கட்டிக்கொண்டு அவளையே தலைசாய்த்து பார்த்து புன்னகைத்து கொண்டிருந்தான் ஷக்தி.

“ என்ன எப்படின்னு தான இப்படி பார்க்குற?" என்று கண்ணடிதான்.

அவனின் செய்கையில் தன்னை மறந்து அவனையே பார்த்துக்கொண்டிருந்தவள் அவன் கண்ணடிப்பதை பார்த்தவுடன் கீழே குனிந்து கொண்டாள்.

‘உனக்கே தெரியாமல், கடந்த ஒரு மாசமா உன்னை ரொம்ப பக்கத்துல இருந்து. ஆனா, நீ என்னை பார்க்காத தூரத்துல இருந்து பார்த்துட்டு தான் இருக்கேன்” என்று அவளையே பார்த்து கொண்டிருந்தான்.

மேலும் ”நம்மை காப்பாத்த தான் கல்யாணம் பண்ணியிருக்கார்னு நினைச்சனா? இந்த நிமிஷத்துலேர்ந்து அந்த எண்ணத்தை மாத்திக்க. உன்னை ரொம்ப பிடிச்சு போய், உன்னை மனதார விரும்பி தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்" என்றான் நிறுத்தி நிதானமாய்.

அவன் பேசியதில் அதிர்ச்சியடைந்து சட்டென தலை உயர்த்தி அவன் விழிகளையே நோக்கி, “ என்ன?" என்று அதிர்ச்சி கலந்த ஆச்சர்யதோடு வாய் விட்டே கேட்டாள்.
 

dharshini chimba

Saha Writer
Team
Messages
271
Reaction score
167
Points
43
4. சக்தி

என்ன என்ன? நான் சொன்னது உனக்கு தெளிவா கேக்கலையா? உன்னை பத்தி எனக்கு தெரியும். உனக்கு தான் என்னைபத்தி தெரியாதுன்னு சொன்னேன். இப்பவாவது புரிஞ்சுதா?" என்றான் குறும்புடன் கூடிய புன்முறுவலுடன்.

"தெளிந்த நீரில் தெரியும்

பிறைநிலா போல்...

சுடர்விட்டு பிரகாசிக்கும்

அவனின் முகம்

என்னையும் அறியாமல்...

என் மனதை ஒரேடியாக

அவன் பால் ஈர்க்கிறதே"


என்று அவன் முகத்தையே கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள் மஹா.

கண்ணை பறிக்கும் அழகான மலரின் தேனை பருகுவதுபோல் ஒருவரின் விழியை இன்னொருவர் பருக அங்கே இருவரின் விழிகளும் பேசிக்கொண்டன பல மொழிகளை மெளனமாக.

"உன் விழிகளில் விழுந்து நான் எழுகிறேன்... மறுபடி..." ஷக்தியின் போன் அடிக்க. இருவரும் ஒருநிமிடம் தங்கள் நினைவுகளில் இருந்து தடுமாறினாலும் அவள் முகத்திலிருந்து தன் விழிகளை அகற்றாமல் காதில் போனை வைத்து பேசிக்கொண்டிருந்தான்.

அவனின் கூரிய விழிகள் தன்னை அம்பாய் துளைத்தெடுப்பதை தாங்கமுடியாமல் மஹாவின் விழிகள் தானாக தரையை நோக்கின.

அவளை பார்த்துக்கொண்டே, "ஹாய்! மாம்" என்று தன் அம்மாவிடம் பேசினான்.

“ எங்க இருக்க? ஊர்லருந்து வந்தா நேரா வீட்டுக்கு வரணும்னு தெரியாதா?" ஷக்தியின் அம்மா எதிர்முனையில் கேட்க.

"சாரி! சாரி! கொஞ்சம் பிஸி. அதான், இன்பார்ம் பண்ணல" என்றான் மஹாவை பார்த்து.

“ எப்போ தான் வருவ?" என்றார் கடுகடுத்த குரலில்.

"இன்னும் டவெண்ட்டி மினிட்ஸ்ல ஐ வில் பி தேர் மா” என்றான் கூலாக.

"சரி. வீட்டுக்கு சீக்கிரம் வாடா" என்று சிரித்தார்..

"லவ் யூ மாம்” என்றவுடன் மஹாவின் முகம் தானாக தன்னை நோக்குவதையும் கோவைப்பழத்தின் நிறம்கொண்டு அவளின் முகம் கனிந்திருப்பதையும கவனித்து கொண்டுதான் இருந்தான்.

"ஓகே பை!" என போனை கட் செய்தபடியே அவளை நோக்காமல்.

“என்ன இவன்? கல்யாணம் மட்டும் செஞ்சு கூட்டிகிட்டு வந்துட்டான். ஆனா, வீட்ல இருக்கறவங்கள பத்தி எதுவும் சொல்லலையேன்னு தானே நினைக்கிற?” என்று கேட்டான்.

அவளும் ‘ஆம் இல்லை’ என்று இருபக்கமும் தலையாட்டினாள்.

"நீ ரெண்டு பக்கத்துலயயம் தலையாட்றத பார்த்தா எனக்கு சிரிப்பு வருது. நானே சொல்றேன். எனக்கு அம்மா அப்பா அண்ட் ஒரே தங்கச்சி இருக்காங்க. கூடிய சீக்கிரம் நீயும் நம்ம வீட்ல ஒரு ஆளா சேர்ந்துடுவ. சரியா? அதுவரைக்கும் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ" என்றான் பார்வையால் கெஞ்சியபடி.

“சுரேஷ் வீட்ல இருக்க எல்லோரும் ரொம்ப நல்லவங்க. நீ பயப்படாம இங்க இரு. உன் வீடு மாதிரி இங்க இருக்கலாம், ஆன்ட்டி உன்னை தன் மகளா பார்த்துப்பாங்க." என்றான் அவளை சமாதானப்படுத்தும் விதமாக.

"காலம் முழுக்க உன் கூட தான் இருக்க போறேன். அப்போ, ரொம்ப பொறுமையா என் முகத்தை பார்த்துட்டு இருக்கலாம். இப்படி என்னை நீ வச்ச கண்ணு வாங்காம பாத்துட்டு இருந்தா என்ன அர்த்தம்? இப்ப நான் போகணும் போகட்டுமா? இல்லை இங்கேயே உன்கூட இருக்கட்டுமா?" என்றவுடன் புது இடத்தில தனியே இருக்க வேண்டும் என்று பயந்தாலும் தன் கணவனின் வார்த்தைகளால் அவனை காணமுடியாமல் இதழ்களை கடித்தபடி தலை கவிழ்ந்தாள்.

“என் முகம் நோக்க

உன் உள்ளம் விரும்பினாலும்

என் விழி கதிரை காண

உன் இதயத்திற்கு தைரியமில்லையோ?”


“உன்னை இப்படி புது இடத்துல விட்டுட்டு போறதுக்கு கஷ்டமா தான் இருக்கு. இப்ப நான் போகணும். அம்மா.. அதான் உங்க அத்தை இன்னும் வரலன்னு திட்ட ஆரம்பிச்சிட்டாங்க. நான் அவங்க முன்னாடி போய் நிக்கறவரைக்கும் நிறுத்தமாட்டாங்க" என்றவுடன் அவள் முகம் வாடுவதை பார்த்து.


"தினமும் கண்டிப்பா நான் வரேன். ஒன்னும் பயப்பட வேண்டாம். இவங்க எல்லாரும் உன்னை நல்லா பார்த்துப்பாங்க. நம்ம வீட்ல நான் நம்ம கல்யாணத்த பத்தி சொல்றவரைக்கும் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ” என்று அவளை பார்த்தான்.

‘சரி’ என்று தலையாட்டியதை பார்த்து நிம்மதி பெருமூச்சுவிட்டு அங்கிருந்து கிளம்பினான்.

"அண்ணா! நாளைக்கு கரெக்டா வந்துருடா. அண்ணி இங்க இருக்காங்க அதை ஞாபகம் வச்சுக்க" என்றான் சுரேஷ்.

அவனை திரும்பி பார்த்து முறைக்கும் ஷக்தியை பார்த்து,

“ஷக்தி! இனி இவள் உன்னோட சொத்து. நீ தான் நல்லா பார்த்துக்கணும். இங்க நாங்க நல்லா பார்த்துப்போம். ஆனாலும், நீ அப்படியே விடாம சீக்கிரமே வீட்ல எப்படியாவது சொல்ல ட்ரை பண்ணனும். ரொம்பநாள் ரெண்டுபேரும் தனியா இருக்கக்கூடாது புரியுதா?" சுரேஷின் அம்மா கூறுவதை தலையசைத்து கேட்டுக்கொண்டான் ஷக்தி.

“சரிங்க ஆன்ட்டி. நான் கண்டிப்பா சீக்கிரமா சொல்ல ட்ரை பண்றேன். நான் நாளைக்கு வரேன்" என்று சுரேஷ் பக்கம் திரும்பி, ”ரொம்ப பயந்து போயிருக்கா. கொஞ்சம் பார்த்துக்கோங்கடா, சுபாவ கூடயே இருக்க சொல்லு" என கிசுகிசுத்தவனை பார்த்து ”சரி" என்று சிரித்தான் சுரேஷ்.

வெளியே வந்து காரை எடுத்தவனின் சிந்தனையில் தன்னை பற்றியும் தன் குடும்பத்தை பற்றியும் எண்ணங்கள் ஓடின.

ஷக்தி!

‘நான் ஷக்தி மாதவன், மாதவன் என்னோட அப்பா. எங்க மேல உயிரையே வச்சிருக்கார். ஆனா, வெளிய காட்டமாட்டார். அதனால, எங்களுக்கு அவர் எப்பவும் ஹிட்லர் தான்.

அம்மா சிவஷக்தி. அம்மா மேல இருந்த அளவுகடந்த அன்பாலே எனக்கு ஷக்தின்னு பேர் வச்சார் எங்க அப்பா. எங்க வீட்டோட ஆணிவேர் அம்மா தான், அவங்க சொல்றத மீறி அப்பா எதுவும் செய்ய மாட்டார்.

எனக்கு ஒரே ஒரு தங்கச்சி நிலா. வாலுன்னா வாலு.. ஒண்ணா நம்பர் வாலு பயங்கர சுட்டி.

அப்பறம் நான் தான் ஷக்தி. அப்பாக்கு நான் என்ஜினீயர் ஆகணும்னு ஆசை. ஆனா, எனக்கு எம்.பி.ஏ தான் படிப்பேன்னு படிச்சேன். எனக்கு பிடிச்சதை தான் செய்வேன். ஏன்? அவர் சொல்றத செய்யணுமன்னு அவர் எது சொல்றாரோ அதுக்கு ஆப்போசிட்தான் எப்பவும் செய்வேன்.

பிகாஸ் ஐ லவ் மை டாட். பட் அவருக்காக எனக்கு பிடிச்சதை விட்டுக்கொடுக்க முடியாது அப்டின்றத்துல மட்டும் உறுதியா இருப்பேன்.

சோ, வீட்ல எனக்கும் அப்பாக்கும் எப்பவும் கோல்டுவார் போயிட்டே இருக்கும். அம்மா தான் காம்ப்ரமைஸ் பண்ணுவாங்க.

இப்ப என் கல்யாணமும் அதுமாதிரியே எனக்கு பிடிச்ச பொண்ணோட நடந்துருச்சுனு தெரிஞ்சுது, அவ்ளோதான் என்னை என்ன செய்வார்னு தெரியாது’ என்ற யோசனையில் வீடு வந்து சேர்ந்தான்.

வீட்டிற்குள் நுழைந்து பிரிட்ஜில் ஐஸ்வாட்டரை சில்லென குடித்தவனின் கண்கள் தானாக அவன் அன்னையை தேடியது.

உள்ளே இருந்து வந்த அம்மாவை பார்த்ததும் முதல்முறையாக தான் செய்த தவறு உறைக்க, அம்மாவின் கண்களை நேருக்கு நேர் பார்ப்பதை தவிர்த்து வேறெங்கோ பார்த்தபடி, ”அம்மா! நீங்க இன்னும் தூங்கலையா?” என்றான்.

"இல்லடா! நீ வராம எப்படி தூங்குவேன்? வாப்பா சாப்பிடுவே.” என்று வாஞ்சையுடன் கூறிய அன்னையிடம்,

"இல்லம்மா நான் சாப்பிட்டேன். நீங்க போய் தூங்குங்க, எனக்கும் ரொம்ப சோர்வா இருக்கு." என்று மழுப்பலான பதிலை கூறிவிட்டு வேகமாக அங்கிருந்து தன் ரூமிற்குள் சென்று தாழிட்டுக் கொண்டான்.
 

dharshini chimba

Saha Writer
Team
Messages
271
Reaction score
167
Points
43
5.புது வீடு

என்ன தான் விரும்பிய பெண்ணை கை பிடித்தாலும், பெற்றோரின் ஆசியில்லாமல் அவர்களுக்கு சொல்லாமல் திருமணம் செய்துகொண்டது அவனின் நெஞ்சத்தில் பெரிய குற்ற உணர்வை மலைபோல் உருவெடுத்து ஆட்டிவைத்தது.

அம்மாவிடம் மழுப்பிவிட்டு கதவை தாழிட்டு உள்ளே வந்தவன், குளித்தால் நன்றாக இருக்கும் போல் தோன்றவே ஷவரை திறந்து குளிர்ந்த நீரில் தன் முழு மேனியும் நனைத்தபடி நின்றிருந்தான்.

வெகுநேரம் கழித்து வெளியே வந்து தலையைகூட துவட்டாமல் இரவு உடையில் கட்டிலில் விழுந்தவன் விழிமூடி இன்று நடந்தவைகளை மனதில் அசை போட ஆரம்பித்தான்.

‘இதுவரைக்கும் எந்த பெண்ணையும் மனதால் கூட நினைச்சதில்லையே? இவள் எப்படி இவ்வளவு எளிதில் எனக்குள் வந்து வாசம் செய்கிறாள்’ என்று தன்னை பற்றியே நினைத்து சிரிக்க.

‘என் வாழ்க்கையிலேயே இரண்டு பெண்கள் தான் எனக்கு முக்கியமானவங்கன்னு நினைச்சேன். ஆனா, இப்போ அது தப்பு. மஹா, என் வாழ்க்கைக்குள்ள வருவான்னு கனவுல கூட நினைச்சதில்ல.

அவளை பார்த்த முதல் நிமிஷம் இவள் தான் எனக்காக பிறந்தவள்ன்னு தோணிச்சு. ஆனா அவளோட சோகமான பயந்து நடுங்கிய முகமும் உடலும் என்னை ரொம்ப குழப்பமடைய செஞ்சாலும் அதனாலதான் அவளை எனக்கு பிடிக்க ஆரம்பிச்சது’ என்று தான் எண்ணங்களில் சுழன்று கொண்டிருந்தவனை கலைக்கும்படி ஷக்தியின் போன் அடித்ததால் நினைவிலிருந்து மீண்டவன் கண்களை திறக்காமலே யார் என்று தெரியும் என்பதால், ”சொல்லுடா எரும! இந்த நேரத்துல ஏன்டா போன பண்ண? என்ன வேணும்?” என்றான்.

“ என்ன பண்ற அண்ணா?” என்ற சுரேஷின் குரலில் கடுப்பானவன்.

"டேய் இது என்ன புதுசா? நீ என்னை விட மூணு மாசம் தான சின்னவன். என்னை எதுக்குடா அண்ணான்னு கூப்பிட்டு உயிரை எடுக்குற?” என கோவத்தில் கத்தினான்.

"டேய்! என் காது செவிடாக போகுது, ஏன்டா இப்படி கத்துற?”. என்று தன் காதை தேய்த்து கொண்டு பின் தொடர்ந்தான் சுரேஷ்.

“உன்னைலாம் அண்ணான்னு கூப்பிடணும்னு எனக்கு என்ன ஆசையா? எல்லாம் என் தலையெழுத்து. எங்க அம்மா உன்னை பேர் சொல்லி கூப்பிட்டேன்னு ஒரு மணிநேரம் உக்காரவச்சு கிளாஸ் எடுத்துட்டாங்க. உனக்கு கல்யாணம் ஆகிடுச்சு இனிமேல் அண்ணி வந்துட்டாங்க அண்ணான்னு தான் கூப்பிடணுமாம்" சுரேஷ் பாவமாய் கூறினான்.

சுரேஷ் கூறியதை கேட்டு கலகலவென ஷக்தி சிரிக்க, ”சிரிடா! நல்லா சிரி!” என்றான் கோவமாக.

"தூங்கிட்டியா?” என்றான் சுரேஷ்.

"இல்ல! கிரிக்கெட் விளையாடிட்டு இருக்கேன்! தூங்கிட்டு இருந்தவனை எழுப்பிட்டு தூங்கறியான்னு கேக்கற பக்கி" என்றான் ஷக்தி.

"இல்லடா அண்ணா. இன்னைக்கு தான் கல்யாணம் ஆச்சு. உன் முதல் வெட்டிங் நைட்ல்ல. அதான் சும்மா என்ன பண்றேன்னு தெரிஞ்சிக்கலாம்னு கேட்டேன்" என்றான் சுரேஷ் ஷக்தியை வம்பிழுக்க.

"வாயமூடு! அறிவுகெட்ட முண்டம், எனக்கு தூக்கம் வருது வைடா போனை" என்று உள்ளுக்குள் சிரித்தபடி போனை கட் செய்தவன்.

சுரேஷ் கூறியதை நினைத்து சிரித்துக்கொண்டே, ‘நானே கல்யாணமான முதல்நாளே, என் மனைவியை அங்க விட்டுட்டு வந்து தனியா இருக்கேன். இந்த எருமைக்கு எவ்ளோ கொழுப்பு இருந்தா என்னை போன் பண்ணி கிண்டல் பண்ணுவான்? இப்பயே அவனை நேர்ல போய் ரெண்டு சாத்து சாத்தனும் போல இருக்கு’ திட்டியபடி களைப்பில் உறங்கிப்போனான் ஷக்தி.

சுரேஷின் வீடு..

மஹா தன் அறையில் சற்று பயம் கலந்த நிம்மதியில் தனக்குள்ளே பேசிகொண்டிருந்தாள்.

‘ஒரே நாளில் என் வாழ்க்கையே மாறிடுச்சே! எனக்கு இவங்கள யாரையுமே யாருன்னு தெரியாது. ஆனா இன்னைக்கு ரொம்ப நல்லவங்ககிட்ட தான் வந்து சேர்ந்துருக்கேன்.

பிள்ளயாரப்பா! உனக்கு ரொம்ப நன்றி. நீ தான் என்னை இவங்ககிட்ட கொண்டு வந்து சேர்த்திருக்க.

நேத்து வரைக்கும் அந்த பாவிங்க கிட்ட மாட்டிகிட்டு இருந்தேன். கடவுள் மாதிரி வந்து என்னை காப்பாத்திட்டாரு.

ஆனா, இவர் யாரு? என்னை எதுக்கு கல்யாணம் பண்ணார்? என்னை எப்படி தெரியும்?’ யோசித்து யோசித்து மஹாவுக்கு தலைவலிக்க ஆரம்பித்தது. தலையை பிடித்தபடி தரையில் அமர்ந்தாள்.

திடிரென்று கதவு திறக்கும் ஓசைவர திரும்பி பார்த்த மஹா, அங்கே சுபா சிரித்தபடி நின்றிருந்தாள்.

“ என்ன அண்ணி? கல்யாணம் ஆன முதல்நாள் இப்படி தனியா தூங்க வேண்டியதா போயிடுச்சேன்னு கவலைப்படறீங்களா?" என்று குறும்பாய் கண்ணடித்தாள்.

"இல்ல! இல்ல! அப்படி எல்லாம் இல்ல, தலைவலிக்கிற மாதிரி இருக்கு” என்றாள் மஹா.

"இருங்க அண்ணி. நான் தைலம் போட்டு விடறேன்" என்று தைலத்தை எடுத்து வந்தவள் போட்டு விடாமல் உதட்டை சுழித்து, ”அண்ணி! நானே போட்டு விடவா? இல்ல, அண்ணாவுக்கு போன் பண்ணி வரச்சொல்லவா?" என்று சிரித்தாள்.

அவளின் பேச்சை கேட்டு முகம் சிவந்தவள்.

”ஐயோ சுபா! நீ ஒன்னும் போட வேணாம். நானே போட்டுகிறேன் போ" என்று மஹா தைலத்தை வாங்க போனாள்.

"இல்ல அண்ணி! சும்மா விளையாட்டுக்கு தான் சொன்னேன், இருங்க போட்டு விடறேன், ஆங்! அண்ணி சொல்ல மறந்துட்டேன். இந்த கஃப்போர்டுல உங்களுக்காக வாங்கன டிரஸ் எல்லாம் வச்சிருக்கேன்" என்று தைலத்தை நெற்றியில் தடவி விட்டபின், இருவரும் கட்டிலில் படுத்து உறங்கினர்.

காலை பொழுது விடிந்ததும் சோம்பல் முறித்து எழுந்த மஹா மணியை பார்க்க, மணி ஆறுகாட்டியது. சின்ன குளியல் முடித்து.

பூஜையறைக்கு சென்று விளக்கேற்றி காயத்ரி மந்திரம் கூறியபின் அடுக்களைக்கு சென்றாள்

அங்கே சுபாவின் அம்மா சமையல் செய்துகொண்டிருந்தார்.

கொலுசு சத்தம் கேட்டு திரும்பி பார்த்து புன்னகைத்துக்கொண்டே, “ என்னம்மா தூக்கம் வரலையா?.” என்றார்.

"இல்ல! நான் எப்பவும் காலைல சீக்கிரமா எந்திரிச்சிருவேன்" என்றாள் லேசாக நெளிந்தபடி.

"காபி சாபிடறியா?" என்றார்.

"இல்ல! காபி டி குடிச்சி பழக்கமில்லை, நான்... உங்கள... அம்மான்னு கூப்பிடவா?” என்றாள் தயங்கியபடி மஹா.
 

dharshini chimba

Saha Writer
Team
Messages
271
Reaction score
167
Points
43
6. புது மணப்பெண்

“நீ என்னை அம்மான்னு தாராளமா கூப்பிடலாம்" என்று சிரித்தபடி அவளை அருகில் அழைத்தார்.

“ரொம்ப தேங்க்ஸ் மா!" என்று அவரை கட்டிக்கொண்டு அழுதாள் மஹா.

"இங்க பாருடா! இதுக்கு முன்னாடி நீ எவ்ளோ வேணா கஷ்ட பட்ருக்கலாம். ஆனால், இனி உன் வாழ்க்கையே நீ நினைச்சி பார்க்காத அளவுக்கு சந்தோஷமா மாறபோகுது. என்கூட வா" என்று பூஜையறைக்குள் கூட்டி சென்று தீபம் ஏற்றிவழிபட்டு அவர் கையால் குங்குமம் எடுத்து மஹாவின் நெற்றி வகிட்டில் வைத்துவிட்டார்.

"இங்க பாருடா. இன்னைலருந்து நீ வெறும் மஹா கிடையாது. திருமதி.மஹாஷக்தி புரியுதா? இந்த குங்குமம் என்னைக்கும் உன் நெத்தில இருக்கனும் சரியா?” என்றார்.

"சரிம்மா" என்று அவரை கட்டிக்கொண்டாள்.

"உங்க ஜோடி பொருத்தம் மாதிரி பேர் பொருத்தமும் ரொம்ப நல்லாருக்கு. மஹா ஷக்தி உண்மையாவே நீங்க ரெண்டு பேரும் சேர்ந்திருந்தா மஹாஷக்தி தான்" என்று சிரித்தார்.

"போங்கம்மா!” என்று சிரித்தபடி முகத்தை மூடிக்கொண்டாள்.

"அடி ஆத்தி! என்னடா கொடும இது? உன் ஷக்தியை பார்த்து வெட்கப்படு. என்னை பார்த்து இல்ல" என்று மேலும் அவளை சீண்டி வெட்கத்தில் அவளின் முக அழகை ரசித்தார்.

"அண்ணி” என்று குரல் கேட்ட திசை திரும்பினாள். சுரேஷ் சிரித்த முகத்துடன் நின்று கொண்டிருந்தான்.

"அண்ணி நீங்க எதுவும் சங்கடமா பீல் பண்ணாதீங்க, இனி, இது தான் உங்க வீடு. நாங்க தான் உங்க சொந்தங்கள். எந்த தயக்கமும் இல்லாமல் ஃபிரியா இருங்க” என்றான் சுரேஷ்.

"சரி" என்று சிரித்துக்கொண்டே தலையாட்டினாள்.

"ஹலோ! சொல்லுங்க ப்ரோ?” என்றான் சுரேஷ்.

"சுரேஷ்! மஹா எப்படி இருக்கா? இன்னும் டென்ஷனா தான் இருக்காளா?" என்று ஷக்தி சற்று வருத்தமாய் கேட்க.

"அண்ணி நல்லா இருக்காங்க.நீங்க கவலையே படாதீங்க நாங்க பார்த்துகறோம்".

"சரிடா நான் ஆபீஸ்க்கு கிளம்பறேன். நீயும் வந்துரு" ஷக்தி.

"சரி! ஒன்றை மட்டும் மறக்காதடா அண்ணா! என் அண்ணி இங்க உனக்காக காத்திட்டு இருக்காங்க. அதனால, உன் தலையை இந்தப்பக்கம் வந்து காட்டிட்டு போடா" சுரேஷ்.

"சரி டா! நான் மூணு மணிக்கு வரேன் போதுமா?” என்று ஷக்தி சிரிக்க.

"ஓகே! ஓகே!” என்று போனை வைத்தவன்.

"அண்ணி!அண்ணன் மூணு மணிக்கு வரேன்னார் உங்களை பார்க்கணுமாம்" என்று அவளை பார்த்து சிரித்தபடி சுரேஷ் சொல்ல.

ஷக்தியின் பெயரை கேட்டவுடன் அவளின்முகம் வெட்கத்தில் சிவப்பதை பார்த்து சிரித்து கொண்டிருந்தனர் சுபாவும் சுரேஷும்.

"டேய்! உங்களுக்கு வேற வேல இல்ல? காலங்க்கார்த்தல எதுக்குடா அவளை கிண்டல் பண்றிங்க? போங்கடா” என்று திட்டியவரை அணைத்தபடி.

"சரிம்மா. எனக்கு ரொம்ப பசிக்குதும்மா” என்றான்.

"போய் முதல்ல குளிச்சி ரெடியாகிட்டு வா" என்று சமையல் அறைக்குள் சென்றார்.

எல்லோரும் தயாராகி வந்தவுடன் காலை உணவு அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டார்கள்.

"சுபா! நான் சொன்னது புரிஞ்சுதா? கரெக்டா செஞ்சுடு" என்று மஹாவை பார்த்து”சுபா கூட போம்மா".

“சரி” என்று தலைஆட்டி சுபாவுடன் சென்றாள்.

“இப்டி உட்காருங்க அண்ணி!" என்று ரூமினுள் சென்றவுடன் கூறிவிட்டு வெளியே சென்று கையில் ஒரு புது பையுடன் வந்தாள்.

அந்த பையில் இருந்த எல்லா பொருட்களையும் வெளியே எடுத்து வைத்தாள்.

கரும்பச்சை நிறத்தில் இரண்டு டஜன் வளையல்களை மஹாவிடம் எடுத்து ”அண்ணி! உங்க தங்க வளையல்களை கழட்டி நடுவுல கண்ணாடி வளையல்களையும் சேர்த்து போட்டுக்கோங்க”.

“ எதுக்கு இதெல்லாம்...?" என்று மஹா கேட்க.

"அண்ணி! நீங்க புது கல்யாண பொண்ணு பார்க்க ஜொலிக்கனும். அப்போதான், எங்க அண்ணா உங்கள பார்த்தா ..." என்று முடிக்காமல் கண்ணடிக்க.

"போதும்! சுபா நான் போட்டுகிறேன்" என்ற மஹா.

கைநிறைய வளையல்கள் காலில் முத்துக்கள் வைத்த கொலுசு, கரும் பச்சை நிறத்தில் பட்டுப்புடவை, காதுகளுக்கு அழகான ஜிமிக்கி என எல்லாவற்றையும் கொடுத்து போட்டுக்கசொன்னாள்.

"இன்னும் உங்களுக்கு இருபது நிமிஷம் தான் டைம் போய்ட்டு முகம் நிறைய மஞ்சள் பூசி குளிச்சிட்டு இது எல்லாத்தையும் போட்டுட்டு வாங்க இன்னும் கொஞ்ச வேலை எனக்கு பாக்கி இருக்கு லேட்டா ஆனா அம்மா திட்டுவாங்க அண்ணா வரங்கள்ல” என்று வெளியே சென்றாள்.

குளித்துவிட்டு சுபா கொடுத்த அனைத்தையும் போட்டு கொண்டாள்.

உள்ளே வந்த சுபா, ஒரு நிமிடம் மஹாவை விழிகள் விரிய பார்த்து அசந்து தான் நின்றாள். பின் மஹாவிடம் நெருங்கி தழைய பின்னி தலைநிறைய மல்லிகை பூ சூட்டினாள்.

மெல்லிய மேக்கப் போட்டுவிட்டாள்.

"சுபா! நான் இதெல்லாம் போட்டதில்லை. ப்ளீஸ்! எனக்கு எதுவும் வேண்டாம்”.

"அண்ணி, நீங்க எதுவுமே பேசக்கூடாது. அண்ணா! இன்னைக்கு உங்கள வெளிய கூட்டிட்டு போறாங்க. அதனால, நீங்க புது கல்யாண பொண்ணு மாதிரி இருக்கணும்னு அம்மா ஆர்டர்” என்று சிரித்தாள்.

கழுத்தில் சிறிய ஆரம் ஒன்றை போட்டுவிட்டாள்.

"ம்ம் பினிஷ்! ஒண்ணே ஒன்னு மட்டும் பாக்கி” என்று குங்குமம் எடுத்து மஹாவின் நெற்றி வகிட்டிலும், நெற்றியிலும் வைத்துவிட்டு”யு ஆர் லுக்கிங் கார்ஜியஸ். அண்ணன் இன்னைக்கு நிச்சயம் உங்கள சும்மா விட மாட்டார்" என்று அவளை வம்பிழுக்க.

"சுபா ப்ளீஸ்! நிறுத்து போதும்” என்று குங்குமம் போல் சிவந்தமுகத்தை கைகளால் மூடியபடி திரும்பி நின்றுகொண்டாள்.

"ஐயோ!அண்ணன் கிட்டகாட்டவேண்டிய வெட்கத்தையெல்லாம் என்கிட்டே காட்றிங்களே?அண்ணி ப்ளீஸ் ஒரே ஒரு முத்தம் மட்டும் கொடுத்துகிறேன்" என்று கன்னத்தில் முத்தம் ஒன்றை கொடுத்து ஓடிவிட்டாள்.

சுபாவின் இந்த செயலால் சற்று அதிர்ந்தாலும் பின் அவளின் வெகுளித்தனத்தை நினைத்து சிரித்தாள்.

"அவர் வருகிறாரா? இன்று அவரிடம் என்னை பற்றிய எல்லா கேள்விக்கும் பதில் தெரிந்துகொண்டே ஆகவேண்டும். ஆனாலும் நான் எப்படி தனியாக ... அவருடன் வெளியே செல்வது? அவனின் பார்வை என் உடலிலும் மனத்திலும் அறியாத தீயை மூட்டுகிறதே? அவன் முகத்தை கண்டாலே நான் என் வசம் இல்லாமல் வார்த்தைக்கூட வர மாட்டேன் என்கிறதே? பிள்ளையாரப்பா! நீ தான் எனக்கு ஹெல்ப் பண்ணனும்." என்று வேண்டிக்கொண்டு அமர்ந்திருந்தாள்.

கார் சத்தம் ஷக்தி வந்துவிட்டதை உணர்தியதால் தன் உடல் நடுங்குவதை அவளால் உணரமுடிந்தது.

"ஆன்ட்டி! எல்லாம் ஓகே தான..." என்ற ஷக்தியை பார்த்து சிரித்தவர்.

"நீ அவளுக்காக வாங்கின எல்லாத்தையும் போட வச்சிருக்கேன். நீயே அதை ஆசையா அவளுக்கு கொடுத்துருக்கலாம்ல?”.

"இல்ல ஆன்ட்டி அவள் என்னை பார்த்து பயப்படறா. இப்போதைக்கு, நான்கொடுத்தா வாங்கமாட்டான்னு தான் உங்ககிட்டகொடுத்து கொடுக்க சொன்னேன்" என்று ஷக்தி லேசாக சிரிக்க.

"சரி கண்ணா!மஹா வெயிட் பண்றா நீ போ" என்றாள்.

சிறிது நேரம் கழித்து, ரூம் கதவை திறந்து கொண்டு ஷக்தி உள்ளே வருவது தெரிந்தது.

குனிந்த தலை நிமிராமல் இருந்ததால் அவனின் கோவம் அவளுக்கு தெரியவில்லை.

"போலாம் வா" என்று மட்டும் கூறிவிட்டு வெளியே நடந்தான்.

“ என்ன? குரலில் ஒரு மாற்றம் தெரிகிறதே? என்னவாக இருக்கும்?” என்று கவலையுடன் யோசித்தபடி வெளியே நடந்தாள்.

"ஆன்ட்டி! நாங்க போயிட்டு வந்துடுறோம்".

"சரி ஷக்தி கண்ணா! நான் சொன்னது ஞாபகத்துல இருக்குல்ல?”.

"இருக்கு ஆன்ட்டி. நான் பார்த்துக்கறேன்”.

"சரி! நீ காருக்கு போ! நான் மஹாவை அனுப்பி வெக்கிறேன்" என்றவளை சரி என்று தலை ஆட்டிவிட்டு வெளியே சென்றான்.

"மஹா! இங்க வாம்மா" என்று அருகில் அழைத்தார்.

"சொல்லுங்கம்மா" என்று அவர் பக்கத்தில் போய் நின்றவள் கையை பிடித்து,

" மஹா நடக்கறது எல்லாமே நல்லதுக்கு தான், இனிமேல் நீ ஷக்தியை பார்த்துப்பயப்படக்கூடாது. அவன் உன்னோட புருஷன். உன் வாழ்க்கையில ரொம்ப முக்கியமான ஒருத்தனா மாறிட்டான். எல்லாரையும் எதிர்த்து உன்னை கல்யாணம் பண்ணிருக்கான். உனக்குன்னு ஒரு அடையாளம் கொடுத்துருக்கான். அவன் மனச புரிஞ்சி நடந்துக்க. இனி, அவனோட சுகதுக்கங்களில் உனக்கு பெரிய பங்கு இருக்கு. புரிஞ்சி நடந்துக்கம்மா” என்று வாஞ்சையுடன் அவள் தலைகோதி நெற்றியில் முத்தமிட்டாள்.

"சரி! ஷக்தி கார்ல வெயிட் பண்றான் போயிட்டு வா" என்று அனுப்பி வைத்தார்.
 

dharshini chimba

Saha Writer
Team
Messages
271
Reaction score
167
Points
43
7. மஹாவின் கதை

உறக்கம் வராமல் புரண்டு படுத்து கொண்டிருந்த ஷக்தி அவனுடைய பையில் இருந்து ஏதோ எடுக்க போய் மஹா வீட்டிலிருந்து எடுத்து வந்த எல்லா டாக்குமெண்ட்ஸும் இருந்தது, அதை எடுத்து படித்து பார்த்தவனுக்கு கோவம் தலைக்கேறியது.

விடிந்ததும் ஆபிஸ் சென்றுவிட்டு பின் நேராக சுரேஷின் வீட்டிற்கு வந்துவிட்டான்.

மஹா வெளியே வருவதை பார்த்த ஷக்தி காரின் கதவை அவளுக்காக திறந்துவிட்டு தானும் காரில் ஏறி அமர்ந்துகொண்டான்.

மஹா ஏறி அமரும்வரை காத்திருந்த ஷக்தி, எதுவம் பேசாமல் காரை ஸ்டார்ட் செய்து வேகமாக ஓட்டினான்.

சுரேஷ் வீட்டிலிருந்து கிளம்பி இருபது நிமிடங்கள் ஆகியும் ஷக்தி எதுவும் பேசாதது மட்டும் அல்ல மஹாவின் முகத்தை பார்க்க கூட திரும்பவில்லை.

ஒரு சிறு சிரிப்பு கூட இல்லாததால் லேசான பயம் துளிர்விட்டது மஹாவுக்கு.

காரை நிறுத்தாமல் வேகமாக ஒட்டிக்கொண்டிருந்த ஷக்தி திடிரென்று பிரேக் போட்டு காரை நிறுத்தி கீழே இறங்கி நின்றான்.

“வெளிய இறங்கி வா" என்றான்.

மஹா மெதுவாக கீழே இறங்கி நின்றாள்.

சில நிமிடங்கள் மெளனமாக கழிந்தது கண்களை மூடி அமைதியாக நின்ற ஷக்தி பெருமூச்சொன்றை விட்டு, ”மஹா! நீ என்ன படிச்சிருக்க?" என்றான் கோபமாக ஓரக்கண்ணால் அவளை பார்த்தபடி.

பதிலேதும் வராததால் ”உன்னை தான் கேக்கறேன் என்ன படிச்சி்ருக்க?" என்றான் மீண்டும்.

"பி...இ...கம்ப்யூட்டர்... சயின்ஸ்” என்றாள் அவனை பார்த்தபடி.

கோபத்தில் எரிமலையாய் வெடித்தான்.

"பி.இ படிச்சிருக்க அதுவும் யூனிவர்சிட்டி ரேங்க் ஹோல்டர் வெட்கமால்ல உனக்கு? ச்சே இவ்ளோ படிச்சிருக்க உன்னோட விருப்பமில்லாம உன்னை கட்டாயப்படுத்தி அன்னைக்கு கல்யாணமேடைல உட்கார வச்சாங்களே, உனக்கு வாயில்ல எனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டமில்லனு சொல்ல வேண்டியது தான.

இந்த ஒரு மாசமா நீ அவங்கள பார்த்து எவ்ளோ பயந்தன்னு நான் என் கண்ணால பார்த்தேன். கொஞ்ச நாளே அப்டினா இத்தனை வருஷமா சின்ன வயசுலேர்ந்து உன்னை எவ்ளோ கஷ்டபடுத்திருப்பாங்க” என்றவனின் குரல் கரகரத்தது.

“அனுதாபப்படறீங்களா?" என்றாள் மஹா அடக்கிய சோகத்தோடு.

“கண்டிப்பா இல்ல, கோபப்படறேன் இப்ப நீ என்னுடயவள், ஆனா உன்னை எப்படி கல்யாணம் பண்ணேன் தெரியுமா?" என்று அனல் தெறிக்கும் பார்வையை அவளிடம் வீசினான்.

“உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தாலும் உனக்கு கல்யாணம்ன உடனே என்னால தாங்கமுடியல. உனக்கு பிடிச்சிருக்கும் அதனால விலகிடலாம்னு நினைச்சேன், அப்புறம் உனக்கு விருப்பமில்லனு தெரிஞ்சப்புறம் எப்படியும் உன்னை என்னுடையவள் ஆக்கணும்னு தான் நான் அங்கு வந்தேன்”

அவனே முழுவதும் சொல்லட்டும் என்று அமைதியாக இருந்தாள்.

"உன்னை முதல் முதலா அந்த பிள்ளையார் கோவில்ல தான் பார்த்தேன்.

அப்ப நீ என்ன பண்ணிக்கிட்டு இருந்த தெரியுமா? சின்ன குழந்தை மாதிரி பிள்ளயார்கிட்ட சண்டை போட்டுட்டு இருந்த".

மஹாவின் நினைவில் ”பிள்ளையாரப்பா நான் என்ன சொன்னேன்? அவங்க நினைக்கறது எதுவும் நடக்க கூடாதுன்னு சொன்னா நீ எனக்கு பிரெண்டா? இல்ல அவங்களுக்கா? எல்லாமே அவங்களுக்கு சாதகாமாவுதே” என்று கூப்பியா இருகரங்களையும் இறக்காமல் மூடிய விழிகளில் ஒன்றை திறந்து பார்த்து மறுபடியும் பேசினாள்.

"அந்த நிமிஷம் என் மனசுல புகுந்திட்ட, அதுக்கப்புறம் ஒவ்வொரு நாளும் நான் உன்னை பார்க்க கோவிலுக்கு வந்துருவேன்.

ஒவ்வொரு நாளும் நீயும் பிள்ளையார்கிட்ட வந்து க்யூட்டா சண்டை போடுவ. ஐ லவ் இட்"

"ஒரு நாள் நீ வந்து சண்டை போடாம அழுத. அப்போ என் மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது. அப்ப நீ, எனக்கு இந்த உலகத்துல ஆறுதலா ஒருத்தர்கூட அனுப்பமாட்டியா? சின்ன வயதுலேர்ந்து எனக்கு கஷ்டத்தை தவிர வேற என்ன கொடுத்திருக்க? ஞாபகம் வச்சுக்க அந்த பாவி மட்டும் என் கழுத்துல தாலி கட்டினான், நான் அந்த நிமிடம் உயிர விட்ருவேன்”னு அழுதுட்டு போய்ட்டடீ. அப்போதான் முடிவு பண்ணேன். உன் கழுத்துல நான் தான் தாலி கட்டணும்னு”.

“என்ன? இதெல்லாம் எப்படி எனக்கு தெரியும்னு தானே யோசிக்கிற? இதோ உன் டைரி நீ மறந்து வச்சிட்டு போய்ட்ட. அப்போ அது என்கைல கிடைச்சது. அதை படிச்சதுக்கப்புறம் உன்னை பத்தி ஓரளவு தெரிஞ்சது. கல்யாண மண்டபத்துல நீ மேடை ஏறிட்ட, உனக்கு என்னை தெரிஞ்சுருந்தா உன் கை புடிச்சி கூட்டிட்டு போயிருப்பேன். ஆனா, மை பேட் லக் உனக்கு என்னை தெரியாது, அதனால அமைதியாயிருந்தேன். நீ திடிர்னு மயக்கம் போட்டுட்ட கடவுள் எனக்கு கொடுத்த சான்சா நினைச்சு உன்கிட்ட ஓடி வந்தேன்.”

ஒன்றும் புரியாமல் அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

"உன்னை அவங்ககிட்டேர்ந்து காப்பாத்துனம்னு... மட்டும தோணுச்சு... அதனால.. நான்... நீ கன்சிவ் ஆகியிருக்க அதுவும் என்னாலன்னு பொய் சொல்லி உன் கழுத்துல தாலி கட்டிட்டேன்." என்றான் வேறு எங்கோ பார்த்தபடி.

சற்றுநேரம் அமைதியாக நின்ற ஷக்தி திரும்ப, அவன் எதிரில் வந்து நின்ற மஹா ஷக்தியின் சட்டைகாலரை பிடித்து, ”இவ்ளோ ஆசையும் அக்கறையும் வச்சிருக்க நீங்க ஏன் என்கிட்ட சொல்லி முதல்லயே கூட்டிட்டு போகல? இத்தனை வருஷமா அவுங்ககிட்ட நான் எவ்ளோ கஷ்டப்பட்டேன். நீங்க ஏன் என்னை காப்பாத்த வரல?" என்றாள்.

"நான் பிறந்தப்பவே எங்க அம்மா இறந்துட்டாங்க. அதனால எல்லாரும் அம்மாவை முழுங்கிட்டு வந்துருக்கானு என்னை திட்டினாங்க, அப்பா கூட வேற ஒரு கல்யாணம் பண்ணிகிட்டார். எங்க சித்தி என்னை அடிக்காத நாளே கிடையாது, ஒரு வேளை சாப்பாடு கூட ஒழுங்கா தரமாட்டாங்க, இவங்கள பத்தி தெரிஞ்ச எங்க தாத்தா ஒர் உயில் எழுதினார், அதனாலதான் நான் இவ்ளோ படிக்க முடிஞ்சுது. அதோடு ..." என்று மஹா நிறுத்த.
 

dharshini chimba

Saha Writer
Team
Messages
271
Reaction score
167
Points
43
8. உயில்!

“என்னோட சாபமா என்னனு தெரியல. எங்க சித்திக்கு குழந்தை பிறக்கவே இல்ல. எங்க தாத்தாக்கு என்னை ரொம்ப புடிக்கும். அவர் தான் எனக்கு எப்பவும் ஆறுதலா இருப்பார். என் கையால சாப்பாடு கொடுத்தா தான் சாப்பிடுவார். அப்பாவும் குடிச்சி குடிச்சி உடம்பு முடியாம இறந்துட்டார். எங்க தாத்தா எனக்கு எல்லாம் சொல்லிக்கொடுத்தார். எங்க ஊர்லயே நாங்க பெரிய குடும்பம். ஊற சுத்தி நிறைய சொத்து இருந்தது, அதுக்கு ஒரே வாரிசு நான் தான். அதை அனுபவிக்க ஆசைப்பட்டு என்னை கொன்னுட்டாங்கன்னா என்ன பண்றது? அதனால தாத்தா ஒரு பிளான் பண்ணி உயில் எழுதி வச்சிட்டார். அதுல நிறைய கண்டிஷன்ஸ் இருந்தது.

  1. எனக்கோ என் உயிருக்கோ ஏதாவது ஆச்சுனாஅடுத்த நிமிஷம் அந்த சொத்து முழுதும் என் பேர்ல தாத்தா அப்ப ஆரம்பிச்சிருந்த குழந்தைகள் இல்லத்துக்கு போய்டும்.
2 .என் பேத்தி படிப்புல ரொம்ப கெட்டிகாரி. அதனால. அவள் விருப்பதுக்கு கண்டிப்பா படிச்சி ஏதாவது பட்டம் வாங்கியே ஆகணும். அதுவும், அவளுக்கு புடிச்ச படிப்பு தான் படிக்கணும்.

  1. அவளுக்கு தேவையான வெளி உலக அடிப்படை உரிமை கண்டிப்பா இருக்கனும். அதாவது ரேஷன்கார்டு, வோட்டர்ஐ டி, ஆதார்கார்டு, பாஸ்போர்ட் இப்படி எல்லாம்.
  2. பதினெட்டு வயசுலேர்ந்து இருபத்தி மூணு வயசுக்குல கல்யாணம் நடக்கணும்.
  3. என் பேத்திக்கு கல்யாணம் ஆகி அவ புருஷனுக்கும் இந்த சொத்து சேராது. அவங்க மகிழ்ச்சியா இருந்ததுக்கு அடையாளமா பிறந்த குழந்தைக்கு பதினெட்டு வயசு முடிஞ்சதுக்கு அப்புறம் தான் இந்த சொத்து முழுக்க் கொள்ளுபேரன் பேர்ல மாறும். இதுக்கு நடுவுல இந்த சொத்த என் பேத்தி அனுபவிக்கலாம், ஆனா யார் பேருக்கும் விக்கவோ மாத்தி எழுதி தரவோ முடியாது. இந்த எல்லா சொத் என் பேத்தியோ அவளை சார்ந்தவங்கள அனுபவிக்க முடியுமே தவிர விக்கமுடியாது. அதுவும் என் கொள்ளு பேரனுக்கு பதினெட்டு வயசுக்கு அப்புறம் அவனுக்கு கல்யாணமாகி பிறக்கப்போற குழந்தைக்கு தான் விக்கிரதுக்குஎல்லா உரிமையும் இருக்கு அதுவும் அவன் மேஜர் ஆனப்புறம்."
"இது தான் எங்க தாத்தா எனக்காக எழுதி வச்ச உயில்.

கொஞ்ச நாள்ல எனக்கு பத்து வயசு இருக்கும்போது தாத்தாவும்உடம்பு முடியாம இறந்துட்டார்.

அதுவரைக்கும் இந்த உயிலைபத்தி யாருக்குமே தெரியாது. தாத்தா இறந்த மூணாவது நாள் நிலத்தை விக்க ஏற்பாடு பண்ணாங்க, அப்ப தான் தாத்தா இது மாதிரி உயில் எழுதி வச்சிருக்கார்ன்றதும் அதுல நிறைய சிக்கல் இருக்கறதும் தெரிஞ்சுது .

அதனால எங்க சித்தி என் மேல பாசமா இருக்க மாதிரி வீட்டுக்கு வெளியே நடந்துக்கிட்டாங்க, ஆனா வீட்டுக்குள்ள வந்தவுடனே பண்ணாத கொடுமையே இல்ல. ஒரு சில விஷயங்கள் வெளிய சொல்ல முடியாத அளவுக்கு கொடுமையா இருக்கும். நான் சின்ன பொண்ணுறதால இந்த உயில்பத்தி எதுவும் தெரியாது.

எனக்கு பதினெட்டு வயசாகும்போது தான் எனக்கு இந்த உயில் பத்தின விஷயம் தெரியும் .தெரிஞ்சும் என்ன? எனக்கு காசுமேல ஆசை இல்ல என்கிட்ட யாராவது அன்பா நடந்துக்க மாடங்களான்னு எவ்ளோ நாள் ஏங்கி இருக்கேன்” எனறு வாய் விட்டு மண்ணில் சரிந்து சாலை என்றும் பாராமல் கதறி அழுதாள்.
 

dharshini chimba

Saha Writer
Team
Messages
271
Reaction score
167
Points
43
9. ஃபிளாஷ்பேக்

அவளை அள்ளி அணைத்திட கைகள் துடித்தாலும் அவள் மனதில் இருக்கும் பாரத்தை முழுதாய் இறக்கட்டும் என்று அமைதியாய் நின்றான்.

சிறிதுநேரம் அழுதவள் ”ஸ்கூல் முடிச்சிட்டேன், பிளஸ் டூல நான் தான் எங்க மாவட்டத்திலேயே முதல் மார்க்”.

"அந்த ஊரே என்னை தலைல தூக்கி வச்சி கொண்டாடினாங்க. ஆனா, நான் முதல் மார்க் வங்கனதுக்கு எங்க சித்தி கொடுத்த பரிசு ..." என மெளனமாக இருந்தவள் எழுந்து ஷக்தியின் கையை பற்றி காருக்குள் உட்காரவைத்து தானும் அமர்ந்தாள்.

இரண்டு நொடி கண்களை மூடி அமைதியாக இருந்தவள். பெருமூச்சொன்றை விட்டபடி இடது காலில் தன் சேலையை சற்று தூக்க அவளின் கெண்டைக்காலில் பெரியதொரு தழும்பு.

பார்த்து அதிர்ந்து விட்டான் ஷக்தி. ”என்னதிது இவ்வளவு பெரிய காயம்?” என்றான்.

அவனின் துடிப்பில் ஒரு நிமிடம் சந்தோச பட்டு பின் ”எங்க சித்தி எனக்கு கொடுத்த பரிசு. அடுப்பில் எரிந்து கொண்டிருந்த விறகை எடுத்து சூடு வைத்துவிட்டார்" என்று அழுதாள்.

இத்தனையும் மீறி வக்கீல் வந்து என்னிடம் ”மஹா! தாத்தா உன்னை நீ விருப்பப்பட்ட படிப்பு நல்லா படிக்கச் சொல்லிருக்காரு. நீ என்னம்மா படிக்க போறேன்னு?” கேட்டாரு.

நான் உடனே சித்தியை பார்க்க ‘படிக்கச் மாட்டேன் என்று சொல்’ என்று தலையாட்டினார்கள், ஆனாலும் நான் படிக்கவேண்டும் என்ற ஆசையினால் “பி.இ படிக்கச் போறேன் அங்கிள்” என்றேன்.

"சரிம்மா” என்று என்னை உடனே கூட்டி சென்று இன்ஜினியரிங் காலேஜில் சேர்க்க ஏற்பாடு செய்தார்.

"வீட்டிற்கு வந்தவுடன் என் சித்தி கை வலிக்கும் வரை அடித்து விட்டு என்னை ஒரு இருட்டறையில் இரண்டு நாள் பட்டினியாக அடைந்துவிட்டார்” என்று தேம்பினாள்.

"அந்த இருட்டு அரை ..." என்று அவள் சொல்லும் போதே கண்களில் தெரிந்த பயம் ஷக்தியை கட்டிக்கொண்டாள். அவளை சமாதான படுத்த அவளின் முதுகை ஆதரவாய் தடவி விட்டான்.

சிறிதுநேரம் கழித்து தான் அவனிடம் இதுக்கும் நிலை உணர்ந்து வேகமாக அவனிடம் இருந்து பிரிந்தவள்” என்னை மன்னிச்சிடுங்க நான் ...".

"பரவால்ல அப்புறம்” என்றவனை பாராமல்.

"அதுக்கப்புறம் என்னை எவ்ளோ கொடுமை படுத்தினாலும் பரவால்ல படிக்கணும்னு மட்டும் முடிவு பண்ணிட்டேன். காலேஜ்ம் சேர்ந்திட்டேன். ஆனா, அதுக்கப்புறம் தான் பிரச்சனையே சித்தி காலேஜ் பக்கத்துலேயே வீடு எடுத்து என் கூடயே தங்கிட்டாங்க".

"ஒவ்வொரு நாளும் எனக்கு நரகம் தான் இப்படியே நாலு வருஷம் போய் காலேஜ் படிச்சேன். தாத்தா உயில் படி சொத்தை அனுபவிக்க முடியாம தாத்தா மேல இருந்த கோபம் எல்லாம் சேர்ந்து அவங்க போட்ட பிளான் தான் என்னை அவங்க தம்பிக்கே கல்யாணம் பண்ண நினைச்சது. என்ன ஆனாலும் இதுக்கு மட்டும் ஒதுக்கவே கூடாதுன்னு முடிவு பண்ணி ..."

"சித்தி எனக்கு கல்யாணம் வேண்டாம்” என்றேன் தைரியத்தை வரவழைத்து கொண்டு.

"ஏன்? என் தம்பிக்கென்ன ராஜா மாதிரி இருக்கான்? உன்னை நான் இப்ப அனுமதி கேக்கலயே” அப்டினு என்னை அடிச்சாங்க.

"நீங்க என்னை எவ்ளோ அடிச்சாலும் நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்” என்று சொன்னேன்.

"அதுக்கு அவங்க சொன்னது...” என்று மறுபடியும் ஷக்தியின் கையை பற்றிக்கொண்டாள்.

"ஒன்னு ஊர்கூட்டி என் தம்பிக்கு கல்யாணம் பண்ணி வெப்பேன். இல்ல,உன்னை கல்யாணத்த்கு முன்னாடியே என் தம்பிக்கு தாரமாகிட்டு தாலிகட்ட வைப்பேன். என்கிட்ட இருந்து தப்பிக்கலாம்னு நினைச்ச உனக்குன்னு இருக்க அந்த கிழவியை கொன்னுடுவேன் நல்லா யோசிச்சு உன் முடிவ சொல்" என்று போய்ட்டாங்க.

"தாலி கட்றத்துக்கு முன்ன ஒருத்தன் என்னை தொடறதை என்னால ஏத்துக்க முடியல அதான் என் தலையெழுத்து இது தான்னு நினைச்சுகிட்டு ஒத்துக்கிட்டேன்”.

"சித்தியின் தம்பி நல்லவனென்றாலும் பரவாயில்லை. எல்லா கெட்ட பழக்கங்களும் தத்து எடுத்தவன். அதுமட்டும் அல்லாமல் ஏற்கனவே நிறைய பெண்களுடன் தவறான உறவு வைத்திருக்கிறான் என்று கேள்வி பட்டிருக்கிறேன். அதனால் தான் அவன் கட்டும் தாலி என் கழுத்தில் ஏறும் முன் இந்த உலகை விட்டு போகலாம் என்று கையில் விஷம் வைத்திருந்தேன். அவனை என் அருகில் பார்த்தவுடன் டென்ஷன் அதிகமாகி மயங்கிவிட எழும்போது நீங்கள் என் கழுத்தில் ..." என்று முடிக்காமல் அவனை பார்த்தாள்.

அவளின் ஒவ்வொரு வார்த்தையின் வலியையும் அவன் கண்களில் தெரிந்த கோபத்தில் தெரிந்தது.

அவளை சட்டென இழுத்து அவனோடு அணைத்து கொண்டான். ”சாரி! நான் முன்னாடியே வந்துருக்கணும்” என்று கண்கலங்கினான்.

"அவங்கள நான் சும்மா விட மாட்டேன்” என்று கோவத்தில் நரம்புகள் புடைக்க கூறினான்.

அவனின் அணைப்பு தனக்கு பாதுகாப்பை தரும் என்று நம்பினாள்
 

dharshini chimba

Saha Writer
Team
Messages
271
Reaction score
167
Points
43
10.கடல்

"நான் ஒன்னு கேட்டா தப்பா நினைக்க மாட்டிங்கல்ல?" என்று அவனை பார்க்காமல் கேட்டாள்.

அவளின் அந்த பெண்மை கலந்த கூச்சம் ஷக்திக்கு பிடித்திருந்தது அவளை அப்படி காணும் போது அவனுக்குள் இருக்கும் ஆண்மையும் அவனை ஏதோ செய்தது.

அவளிடம் மேலும் நெருங்க சொல்லி அவனை பாடாய் படுத்தியது.

‘இன்னும் அவள் கடந்த கால வாழ்க்கையில் இருந்து வெளியே வரவேண்டும் அவளாக தன்னை ஏற்கும் வரை அவளை கட்டாய படுத்தாமல் காதலிக்க போகிறேன்’ என்று தன் மனதிற்கு கடிவாளம் ஒன்றை கட்டிவிட்டால் நல்லது என்று நினைத்து கொண்டான்.

‘முதலில் இவளை நிறைய மாற்ற வேண்டி இருக்கிறது ஷக்திக்கு ஜஸ்ட் ஆப்போசிட்டா இருக்கா இந்த மஹா’ என்று நினைத்து சிரித்தான்.

"சரி வா! கிழ இறங்கு” என்றவுடன் தான் இருக்கும் இடத்தை சுற்றி பார்த்தாள்.

இருட்டிவிட்ட நேரம் அவளின் கையை பிடித்து கடலுக்கு கூட்டி சென்றான்.

"நாம பீச்சிக்கு வர போறோம்னு சொல்லி இருந்தா சுடிதார் போட்ருப்பேன்ல?" என்றவளை ஓரக்கண்ணால் பார்த்தபடி.

"இந்த புடவையும் உனக்கு அழகா தான் இருக்கு எனக்கு பிடிச்சிருக்கு. புதுசா கல்யாணமான பொண்ணுங்க புடவைல தான் ரொம்ப அழகா இருப்பாங்க. அதுக்குன்னு எனக்கு பிடிச்சிருக்கு நீ இந்த மாதிரி தான் இருக்கணும்னு என்னைக்கும் சொல்லமாட்டேன் உனக்கு எப்படி இருக்கனும்னு ஆசையோ அப்டியே இருக்கலாம் எல்லா விஷயத்துலயும்” என்றான் அழுத்தமாக.

ஒரு நொடி அவனை ஏறெடுத்து பார்த்தவள் பார்வையிலேயே நன்றியும் உறைத்தாள்.

“என்னங்க எனக்கு கடல்னா பயம். நான் வரல, நீங்க போங்க" என்ற மஹாவின் கையை இறுக்கமாக பிடித்தான்.

"நீ என்னை நம்பரையா? இல்ல..." என்று கேள்வியோடு அவளை நோக்கினான்.

"கண்டிப்பா இதுக்கு முன்னாடி எப்படியோ? ஆனா, இனி உங்கள தவற எனக்கு யாரும் இல்ல, நான் என்னைவிட உங்கள அதிகமா நம்பறேன்" என்றாள் கீழே பார்த்தபடி.

"ரொம்ப தேங்க்ஸ்!" என்றான் அவளிடம் நெருங்கியபடி.

ஷக்தியின் நெருக்கம் அவளை தடுமாற செய்தது கண்களை இறுகமூடி அவன் அருகாமையை ரசித்தாள்.

"நீ என்னை நம்பறன்னா?..." என்று தன் இரு கைகளையும் விரித்தபடி நின்றான்.

மணலையே நோக்கி கொண்டிருந்தவள் அவன் பேச்சு நின்றுவிட்டதால் நிமிர்ந்து அவனை நோக்கினாள். ‘எதுக்கு கையை நீட்டுகின்றார் என்ன? நான அவரை கட்டி பிடிக்கணுமா? என்னால முடியாது’ என்று நினைத்தவள் அவனின் சொற்கள் காதில் ரியங்காரமிட்டன. ‘நீ என்னை நம்பறன்னா? என்ன இப்படி சொல்லிட்டாரே? நான் இதுவரைக்கும் யாரையுமே அன்பாய் கூட கட்டிப்பிடித்தது இல்லையே! அதுவும் ஒரு ஆணை எப்படி ...?’ என்று யோசிக்கையில்…

"பரவால்ல உனக்கு விருப்பம் இல்லனா விட்று" என்று கூறி முடிக்கும் முன் கண்களை இறுக மூடியபடி அவனை கட்டிக்கொண்டாள்.

அவளாக வரட்டும் என்று இருந்தான் ஷக்தி.

அவளின் தயக்கத்தை போக்க தன்னிடம் அவளின் விருப்பத்தோடு வரட்டும் என்று அமைதியாக நின்றபடி காத்திருந்தான்.

அவள் மிகவும் தயங்கவும் பாவம் அவளை தொந்தரவு செய்யவேண்டாம் என்று எண்ணி, “உனக்கு விருப்பமில்லையன்றால் விட்று” என்று சொல்லி முடிப்பதற்குள் தன்னை கட்டிக்கொண்டதை நினைத்து சிரித்தபடி மென்மையாக வருடி கொடுத்தான்.

சில நிமிடங்கள் சிலையாக நின்றவர்கள் பின் ஷக்தி மஹாவின் முகத்தை நிமிர்த்தி “இதுக்கு முன்னாடி நீ பட்ட எல்லா கஷ்டத்தைம் மறந்துரு. இனி, உன் பெயர் முதல் உன் பாதம் வரை எனக்கே எனக்கு மட்டும் தான் சொந்தம்” என்று அவளின் நெற்றியில் மென்மையாய் தன் இதழ் பதித்தான்.

“பட்ட கஷ்டங்கள் எல்லாம்

கனவாய் மறந்திடு கண்ணே!

இனி!

உன் கருவிழி முதல் உன் பாதம் வரை

எனக்கு மட்டுமே சொந்தமாகும்!

அதுமட்டுமல்ல...

என் மரணம் வரை

என்

உயிரின் ஒவ்வொரு மூச்சும்

உனக்கு மட்டுமே சொந்தமாகும்!

நம் இருவரின் மூச்சும்

காற்றோடு கலக்கும் வரை

நீ என்பது நான் மட்டுமே!

அன்பே!

நான் என்பது நீ மட்டுமே!”


மஹா அவனுடைய மனைவி தான் என்றாலும் முதல்முறையாக ஒரு பெண்ணின் ஸ்பரிசம் அவனின் முதுகு தண்டு வரை சென்று சூடேற்றியது.

தன்னை அடக்க முடியாமல் அவனிடமே அவன் தோற்று கொண்டிருந்த வேளையில் மஹாவின் குரல் அவனை காப்பாற்றியது.

"ரொம்ப தேங்க்ஸ்! பிறந்தவுடனே அம்மா இறந்ததால் அம்மாவின் ஸ்பரிசமும், அப்பா என் மேல வெறுப்பா இருந்ததால அப்பாவோட ஸ்பரிசமும், கூடபிறந்தவங்க யாரும் இல்லாததால என்னை யாரும் இதுவரை கட்டி தழுவியதில்லை. நான் கண்டதெல்லாம் சித்தியின் அடியும் திட்டுகளும் தான். இவங்க எல்லோரோட அன்பையும நான் உங்க உருவத்துல பார்க்கிறேன்" என்று அழுதவளை தன்னிடம் இருந்து விலக்கி ”இது என்னோட கட்டளை நீ இனி எந்த காரணத்துக்காகவும் அழக்கூடாது” என்றான் அன்பு கட்டளையாக.

அவனிலிருந்து எழும்பும் உணர்ச்சியை அடக்கியவன்.

"வா” என்று அலையை நோக்கி அவள் கைகளை இழுத்தான்.

"இல்ல” என்று தலையாட்டியவளை விடாமல் இழுத்தான்.

அவனிடம் இருந்து விலகி கரையினில் ஓடினாள். அவளை விடாமல் துரத்திக்கொண்டு மூச்சு வாங்க ஓடிய ஷக்தி நிலைதடுமாறி விழப்போன மஹாவை பிடிக்க போய் அவனும் சேர்ந்து கீழே விழுந்தான். இருவரும் மணலில் விழுந்தனர். அவளின் நெருக்கத்தில் இருப்பது ஷக்திக்கு பிடித்திருந்தது. மஹாவின் கன்னத்தை லேசாக வருடியவன் அமைதியாக அவளையே பார்த்திருந்தான்.

“என்னை ஏதோ கேக்கணும்னு சொன்ன? என்ன அது?” என்று கேட்டான்.

"அது வந்து..." என்று இழுத்தாள்.

“என்ன என்னிடம் கேட்க தயக்கம்? உனக்கு எது வேண்டுமானாலும் என்னிடம் கேள்" என்றான்.

“எனக்கு உங்க பேரே தெரியாது. உங்களை பத்தியும் தெரியாது?” என்று மெதுவாய் இழுத்தாள்.
 
Top Bottom