Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


பண்ணையார் தோட்டம்

Karthikeyan Jayaraman

Saha Writer
Team
Messages
112
Reaction score
53
Points
28
பரந்தாமன் சந்திரன் தீனா மூவரும் பம்ப் செட்டில் இருந்து கிளம்பினார்கள்.
மூவருமே சட்டை அணிய வில்லை

சங்கரிடம் அடி வாங்கியதில் மூவரின் சட்டை அழுக்கானது ரத்தக்கரை ஆனது .
அதனால் சட்டையை கழட்டி சங்கரரின் துணியோடு வைத்து புதைத்து விட்டார்கள் .
அதனால் மூவரும் சட்டையில்லாமல் பைக்கில் பம்புசெட்டில் இருந்து கிளம்பினார்கள் .
இனி என்ன நடக்கப் போகிறதோ என்ற மனக் குழப்பத்தோடு கிளம்பினார்கள்.

சூரியனும் மறைந்துவிட்டான்...

தோட்டத்திற்கு சென்றவர்கள் இன்னும் வரவில்லையே என்ற எதிர்பார்ப்போடு பண்ணையாரும் சாந்தியும் வழிபார்த்து நின்றிருந்தார்கள்..

நாளைக்கே கல்யாண தேதியை முடிவு செய்ய வேண்டும் என்று பண்ணையார் சொன்னார்..

ஆமாம் மாமா.... வருகிற முதல் முகூர்த்தத்திலேயே கல்யாணத்தை வச்சுக்கலாம். மாமா என்றாள் சாந்தி.

இன்னைக்கு இவனுங்க மூணு பேரும் தோட்டத்திற்கு சீக்கிரமாவே போனானுங்க ..
ஆனால் இவ்வளவு நேரம் ஆச்சு இன்னும் வரல ..
சூரியனே மறந்துவிட்டான் இதுவரைக்கும் இவனுங்க மூணு பேரும் வரலையே என்று பண்ணையார் சொன்னார்.

அவங்க வந்ததும் ... சொல்லிட்டு மாமா நாளையிலிருந்து கல்யாண வேலையை சீக்கிரமா முடிக்கணும் என்று சாந்தி சொல்லிக்கொண்டிருக்கும் போது பைக் சப்தம் கேட்டது..

சட்டையில்லாமல் மூவரும் வருவதை பார்த்த சாந்திக்கு சற்று ஆச்சரியமாக இருந்தது..

என்னங்க .....என்ன ஆச்சு உடம்பெல்லாம் ஒரே சேரு சட்டை என்ன ஆச்சு என்றாள் சாந்தி.

பைக்கை வாசலில் ஓரமாக நிறுத்திவிட்டு.. மூவரும் திரு திருவென முழித்துக் கொண்டு சாந்தியிடம் வந்தார்கள்.

காலையிலே சங்கர் காணாமல் போனவர்களை தேட போய்விட்டான் ரேகாவும சிறிது நேரம் வேலை பார்த்துவிட்டு ஊருக்குள்ளே சென்றுவட்டாள் ...
தோட்டத்தில் நிறைய வேலை இருந்தது . அதனால் நாங்க மூன்று பேரும் என்று தோட்டத்தில் வேலை செய்ததில் சட்டையெல்லாம் சேறாகி கரை பிடித்துக்கொண்டது சட்டையை கழட்டி எறிந்துவிட்டு பனியனோடு வந்து விட்டோம் என்று பரந்தாமன் சாந்தியிடம் சொல்லிவிட்டு மூவரும் தரையைப் பார்த்துக் கொண்டே உள்ளே சென்று விட்டார்கள்.

இந்த ஊரே நம்ம தோட்டத்துல தான் வேலை செய்யறாங்க .
இவனுங்க எதுக்கு பழக்கமில்லாத வேலையெல்லாம் செய்யணும் இப்படி ஒரு நாள் வேலை செஞ்சதுக்கே சட்டையை கழட்டி போட்டுட்டாங்க ...
வேலை செஞ்ச களைப்புல தலையை தொங்கப் போட்டுக் கொண்டு போகிறார்களே இவனுங்கள யாரு வேலை செய்ய சொன்னது என்றார் பண்ணையார்..

சரி சரி விடு மாமா .....
ஏதோ அக்கறையா இன்னைக்கு வேலை செஞ்சு இருக்காங்க அவங்களை எதுக்கு திட்டுறீங்க என்று சாந்தி பண்ணையாரிடம் சொல்லிவிட்டு உள்ளே சென்றாள்.

மூன்று பேரும் ஆளுக்கொரு பாத்ரூமில் குளித்தார்கள்..

தீனாவுக்கு மனசே சரியில்லை கிணற்றில் சங்கர் ரேகாவின் வழுத்திலிருந்து வெளியே வந்துகொண்டிருந்த ..
ரத்தத்தை தொட்டுப் பார்த்து கதறி அழுததை நினைத்துக்கொண்டே பாத்ரூமில் தண்ணீர் சொட்ட சொட்ட நனைந்தபடி அழுதான்..

சிட்டுக் குருவிபோல சுறுசுறுப்பா நம்ம தோட்டத்துல பரந்து இருந்த ரேகாவை ..
இப்படி குத்தி கொடூரமாக கொலை செய்து விட்டேனே அண்ணனுக்காக என்று நினைத்து தேம்பி தேம்பி அழுதான் தீனா.

தண்ணீரை தலையில் ஊற்றிக் கொண்டு பரந்தாமன் ரத்தக்கரை எல்லாம் சுத்தம் செய்தான் அப்போது சங்கர்அடித்த அடி அவனுக்கு வலிக்கத்தோடங்கியது.

நாளை என்ன மாதிரியான நிகழ்வு நடக்கப் போகிறதோ என்று நினைத்து பரந்தாமன் குழப்பத்தோடு இருந்தான் எப்படியோ சங்கரையும் ரேகாவயும் தீர்த்துக் கட்டி விட்டோம் ..
ஆனால் இந்த கொலையால் நமக்கு ஏதாவது சாதகம் வருமா ..
இல்லை மறுபடியும் மாற்றிக் கொள்வோமா என்று நினைத்து பரந்தாமன் பயத்தோடும் குழப்பத்தோடும் குளித்தான்.

சங்கர் ரேகாவின் கழுத்தில் தாலி கட்டியதும் . உடனே எழுந்து பண்ணையாரின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கியதை சந்திரன் நினைத்துப்பார்த்தான். பாத்ரூமில் குளித்துக் கொண்டே.

கனகா குடும்பம் காணாமல் போனதால் . ஊரில் யாரும் வேலைக்கு வர மாட்டேன் என்று பிடிவாதமாக இருந்த போது ..
சங்கர் தனது நண்பர்களுடன் வந்து நம்ம தோட்டத்தை பச்சை பசுமையாக மாற்றிநானே ..
அவன் குடும்பத்தை இப்படி நாசமாக்கி விட்டோமே என்று நினைத்து சந்திரன் தேம்பித் தேம்பி அழுதான்.

இனிமேல் என்ன நடக்கப்போகிறதோ. எப்படி சமாளிக்க போறோமோ என்று நினைத்து அவனுக்கு பயம் மேலும் அதிகரித்தது.

பரந்தாமன் குளித்து விட்டு உடை மாற்றிக் கொண்டு இருந்தான் அவனது அறையில்..

சூடா காபி சாப்பிடுறீங்களா ..
இல்ல டிபன் சாப்பிடுறிங்களா என்று சாந்தி கேட்டாள்.

சாந்தி.... எனக்கு எதுவுமே வேண்டாம் . நாங்க மூன்று பேரும் தோட்டத்துல வேலை செஞ்சதில் ரொம்ப களைப்பா இருக்கோம்.
எங்க மூணு பேருக்குமே எதுவுமே வேண்டாம் ..
இப்போதைக்கு எங்களுக்கு நல்ல ஓய்வு வேண்டும் . அதனால் நீ தம்பிகளை தொந்தரவு பண்ணாத என்னையும் தொந்தரவு பண்ணாதே முதல்ல நாங்க தூங்கணும் மத்ததெல்லாம் காலையில பேசிக்கலாம் என்றான் பரந்தாமன்.

பரந்தாமனின் முகம் குழப்பத்தோடு இருந்ததால் . சோர்வாக காணப்பட்டது..
இதைப்பார்த்த சாந்திக்கு ....
பாவம் தோட்டத்தில் நிறைய வேலை செஞ்சிருக்காங்க ....தூங்கட்டும் என்று முடிவு செய்து கொண்டு கடைசியாக ஒரு வார்த்தை சொன்னால் பரந்தாமனிடம்

என்னங்க நாளைக்கு கல்யாண வேலையை பாக்கணும் உங்களுக்கு நிறைய வேலை இருக்கு ..
அதனால காலையில கொஞ்சம் சீக்கிரமாவே எழுந்திருங்க என்று சாந்தி சொல்லிவிட்டு வெளியே வந்துவிட்டாள்..

நாளைக்கு நிறைய வேலை தான் இருக்கிறது ....ஆனால் கல்யாண வேலை இல்லை . என்று மனதில் நினைத்துக்கொண்டு பரந்தாமன் படுத்துக்கொண்டான்.

நள்ளிரவு ஆனது....

பரந்தாமனுக்கும் .சந்திரனுக்கும் தீனாவுக்கும் தூக்கமே வரவில்லை புரண்டு புரண்டு படுத்தாலும் .
சங்கர் ரேகாவை கொன்றதுதான் ஞாபகத்துக்கு வருது .
மனதில் அமைதி இலலை ..
ரத்தம் சூடேறியதல் உறக்கமில்லை கண்களை மூடினாள் கொலை செய்த ஞாபகம்தான் வருகிறது மூன்று பேருக்கும் இப்படியே நினைத்து இரவு முழுக்க அவர்களால் தூங்க முடியவில்லை.

அதிகாலை நேரம்...

பூஜை அறையில் மணி அடிக்கும் சத்தத்தை மூவரும் உணர்ந்தார்கள் உடனே நேரத்தைப் பார்த்தான் பரந்தாமன் காலை 5 மணி..

இரவு முழுக்க தூங்கவில்லை என்று நினைத்து கவலைப்பட்டார்கள் மூவரும்..

காலையிலே சாந்தியும் பண்ணையாரும் எழுந்து குளித்துவிட்டு சாமிக்கு பூஜை செய்தார்கள் . இன்று திருமண தேதியை நல்லபடியாக குறித்து விட வேண்டுமென்று நினைத்து பூஜை செய்தார்கள்.

பிறகு சாந்தி கற்பூர தீபத்தை ஒரு கையில் எடுத்துக்கொண்டு மற்றொரு கையில் மணி அடித்துக்கொண்டே ... பரந்தாமனுக்கு நெற்றியில் தீருநிரை வைத்துவிட்டு ...
பிறகு சந்திரன் அறைக்குச் சென்று அவனுக்கும் திருநீர் வைத்துவிட்டு தீனாவின் அறைக்குச் சென்று அவனுக்கும் திருநீரை வைத்துவிட்டு பிறகு பூஜையை முடித்தாள் சாந்தி..


காலை பத்து மணி இருக்கும்.....


நேத்து ரேகா இங்கு வரவே இல்லை தோட்டத்துல நிறைய வேலை இருந்திருக்கும் போல ..
என்று லட்சுமி அம்மாள் முத்தையா விடும் சொன்னார்.

ஒருவேளை சங்கர் சீக்கிரமா வந்துடு இருப்பான்.
அதனால வரவில்லையோ என்னவோ என்று முத்தையா சொன்னார்.

ஒருவேளை ரேகா மாசமா ஆயிட்டா அவளை இங்கேயே பாத்துக்கலாம் அப்பா என்றால் லட்சுமி..

ஆமாம் ....அந்த நேரத்தில் பம்புசெட்டு வேலைக்கேல்லாம் போகக்கூடாது ..
அவள் இங்கேயே இருக்கட்டும் என்று சிரித்துக்கொண்டே முத்தையா சொன்னார்..

அப்போது 20-க்கும் மேற்பட்டவர்கள் முத்தையாவை நோக்கி கத்திக்கொண்டு ஓடி வருவதை பார்த்தார்கள் முத்தையாவும் லட்சுமி அம்மாளும்...

முத்தையாவுக்கு சிறிது பதட்டம் ஆனது ... ஏன் இப்படி கத்திக்கொண்டு ஓடி வருகிறார்களே என்று நினைத்து.

முத்தையா அண்ணே ......
மோசம் போய்விட்டோம் அண்ணே ஐயோ நான் இதை எப்படி சொல்வேன் என்று ஓடி வந்தவர்களில் ஒருவர் அழுதுகொண்டே சொன்னார் மற்றவர்கள் எல்லாம் தலையில் அடித்துக் கொண்டார்கள்..

எல்லோரும் அழுவதை பார்த்த முத்தையாவுக்கும் லட்சுமி அம்மாளும் பதறிப்போய் என்ன ஆச்சு சொல்லுங்க என்று லட்சுமி அம்மாள் அழுதுகொண்டே கேட்டார்..

நாங்கள் என்ன சொல்வோம் அண்ணே ....உன்னால தாங்க முடியுமா அண்ணே...

முத்தையாவுக்கு நெஞ்சு பட பட படவென அடிக்க ஆரம்பித்தது .. ஏதோ ஒரு பெரிய விபரீதம் நடந்துவிட்டது என்பதை உணர்ந்தார்..

ஐயா என்ன சொல்றீங்க...
நீங்க சொல்றத பார்த்தா எனக்கு ரொம்ப பயமா இருக்கு ஐயா .,.. என்ன நடந்தது சொல்லுங்க என்று லட்சுமி அம்மாள் கதறினள்.

பம்புசெட்டில் வேலைக்கு போன சங்கரும் ரேகாவும் காணவில்லை அண்ணா .....
என்று சொல்லிக்கொண்டே எல்லோரும் அழுதார்கள்.

முத்தையாவின் மனம் சுக்கு நூறாக உடைந்தது ...கண்ணிமைக்காமல் அப்படியே சிலையாக கீழே உட்கார்ந்துகொண்டார்..

ஐயையோ.... என் மகளையும்
என் மருமகனையும் காணவில்லையா ......
நல்லா பாத்தீங்களா ஐயா ...
நீங்கள் சொல்றது உண்மையா என்று அழுது கொண்டே தரையில் புரண்டாள் லட்சுமி..

ஊரே ஒன்று கூடி விட்டது....

முத்தையாவின் இதயம் வேகமாக துடித்தது....

வாய்விட்டு அழுதால் கூட ...
மூச்சு நின்று விடும் என்பதை உணர்ந்தார் முத்தையா... கண்களில் கண்ணீர் கொட்டியது...
மகனையும் மருமகளையும் நாமே தொலைத்து விட்டோமே ....
நம் பிடிவாதத்தால்தான் அவர்கள் பம்பு செட்டுக்கு வேலைக்கு சென்றார்கள் ...
நாமே நம் மகனின் வாழ்க்கையை வீணாக்கி விட்டோமே ...
என்று நினைத்து அதிர்ந்துபோனார் முத்தையா...
மன வலியால் துடித்தார்...

என் மகளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை ஏற்படுத்திவிட்டு இப்படி நாமே வீணாக்கி விட்டோமே என்று முத்தையாவின் காலைப் பிடித்துக்கொண்டு...
லட்சுமி அம்மாள் கதறிக் கதறி அழுதாள்.

இனி யாரும் பண்ணையார் தோட்டத்துக்கு வேலைக்கு போகக்கூடாது ..
இப்படியே ஒவ்வொரு குடும்பமாக காணாமல் போய்க்கொண்டு இருந்தால் இந்த ஊரோடு நிலைமை என்ன ஆகும் ....
என்று கூட்டத்தில் ஒருவர் சொன்னார்...

ஊர் மக்களின் பேச்சு முத்தையாவின் காதில் விழுந்தது.....
ஒரே ஒரு மகனை பறி கொடுத்து விட்டோமே. இனி அவன் திரும்பி வருவானா .......அவனில்லாமல் நம்மால் இருக்க முடியுமா என்பதை நினைத்து ..மன வலியால் துடித்துக்கொண்டே இருந்தார் முத்தையா... வாய்விட்டு அழுதால் கூட மூச்சு நின்றுவிடும் என்பதை உணர்ந்த படியே அவர் உயிரை கையில் பிடித்துக் கொண்டு இருந்தார்..

அன்று நான் சொல்லும்போது எல்லோரும் விளையாட்டாக எடுத்துக்கொண்டீர்கள் .
முதல்ல காணாமல் போனவர்கள் கண்டுபிடித்தவுடன் பிறகு பம்புசெட் வேலைக்கு போகலாம் என்று சொன்னேன் ...
ஆனால் முதலில் வேலைதான் முக்கியம் அதுக்கப்புறம் ..
காணாமல் போனவர்களை தேடலாம் என்று எல்லோரும் முடிவு செஞ்சீங்க ...
ஆனால் இன்னிக்கு என்ன நடந்தது இப்படி பட்ட ஒரு வேலை நமக்கு தேவையா ...
அதைவிட இந்த உரை விட்டு எங்கேயாவது போய்விடலாம் என்று ஒரு தொழிலாளி அழுதபடி சொன்னார்..

உயிரை இழுத்துப் பிடித்து இருக்கும் முத்தையாவுக்கு ஊர்மக்களின் பேச்சு மேளும் மனதை பாதித்தது நாம் சிறு வயதில் இருந்தே பண்ணையார் உடன் இணைந்து பண்ணையாரின் தோட்டத்தை செழிப்பாக பார்த்துக் கொண்டோம் பண்ணையார் தோட்டம் அழிந்து விடக்கூடாது என்பதற்காக .
தன் மகனை வேலைக்கு அனுப்பினோம் ...
ஆனால் ..
நம் மகன் திரும்பி வருவானா பண்ணையார் தோட்டம் மறுபடியும் வளருமா என்ற சந்தேகம் முத்தையாவின் மனதை மேலும் பாதித்தது.

சங்கரும் ரேகாவும் சந்தோசமாக காதலித்தைதயும் .
பிறகு திருமணம் செய்துகொண்டு சந்தோசமாக வாழ்ந்ததையும் நினைத்துப் பார்த்து ஊர் மக்கள் கவலையில் அழுதார்கள் .. இப்படிப்பட்ட நல்லவர்களுக்கு கடவுள் அவர்களுக்கு தண்டனை கொடுத்துவிட்டார்... ஒரு பாவமும் அறியாத சின்ன சிறுசுகளை.
இப்படி தவிக்க விட்டுட்டாரு ...
பாவம் அவர்களுக்கு என்ன ஆச்சு என்று தெரியாமல் ஊர் மக்கள் அழுதார்கள்..

முத்தையாவுக்கு இதயம் துடிப்பு மேலும் அதிகரித்தது..
முத்தையாவால் வலி தாங்க முடியவில்லை .. உடனே கை
கள்களை உதைக்க ஆரம்பித்துவிட்டார்.

இதைப் பார்த்ததும் இலட்சுமி அம்மாளுக்கு மேலும் அதிர்ச்சியாக இருந்தது ...
அவளின் காதறல் அதிகமானது..

ஊர் மக்களுக்கு முத்தையாவின் நிலைமை பார்த்ததும் மேலும் கவலை ஆனது ..
அப்போது எல்லோரும் முத்தையா வை சுற்றி நின்று அழுதார்கள்.

வலியால் துடித்துக்கொண்டே முத்தையா தனது வலது கையை நீட்டினார் ஊர் மக்களிடம்..

அப்போது அங்கு இருந்த பெரியவர்கள் முத்தையாவின் கைகளை பிடித்துக்கொண்டார்கள் அண்ணே ...அண்ணே... என்று அழுதபடி.

. முத்தையா வலியால் துடித்தபடி சொன்னார் ....
நீங்கள் யா ...யா ..யாரும் இந்த ஊ...ஊ., ஊரைவட்டு போகக்கூடாது நிச்சயம் என் மகன் ச ..ச..சா..சங்கர் வருவான் யாரும் கவலைப்பட வேண்டாம் .
நீங்கள் எல்லோரும் ஏ ...எ..என் மீது மரியாதை இருந்தாள் பண்ணையார் தோட்டத்திற்கு வேலைக்கு செல்ல வேண்டும் இதுதான் எ....எ...எ...என்னோட கடைசி ஆசை இதை நீங்கள் கண்டிப்பா நிறைவேத்தனும் இல்லை என்றால் என்று சொல்லும்போதே முத்தையாவின் உயிர் பிரிந்தது.

ஊர் மக்கள் அனைவரும் அதிர்ச்சியில் ஒரு நிமிடம் அமைதியாகி விட்டார்கள் முத்தையாவின் முகத்தை பார்த்தபடி.

பிறகு எல்லோரும் தலையில் அடித்துக்கொண்டு அழுதார்கள் .
இந்த ஊரே அனாதையாகி விட்டாதே. என்று கத்திக்கொண்டே அழுதார்கள்.



தொடரும்.....
 
Top Bottom