Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


பண்ணையார் தோட்டம்

Karthikeyan Jayaraman

Saha Writer
Team
Messages
112
Reaction score
53
Points
28
முத்தையா கடைசியாக ஊர் மக்களிடம் சொன்னது ...
என் மகன் சங்கர் நிச்சயம் ஒருநாள் வருவான் . நீங்கள் யாரும் இந்த ஊரை விட்டு போக கூடாது .
இது தான் என் விருப்பம் என்று சொல்லிவிட்டு முத்தையா இறந்துவிட்டார் ...
ஊர் மக்கள் பெரும் வேதனையில் தவித்தார்கள் ...
நமக்கு நல்லதை எடுத்துச் சொல்ல அண்ணன் முத்தையாதான் இருந்தார். இப்போது அவர் இறந்துவிட்டார் இனிமேல் இந்த ஊரை வழி நடத்துவது யார் என்று அழுதார்கள் .,
அதுமட்டும்மில்லாமல் ... இந்த ஊருக்கு ஒரு பிரச்சனை என்றால் சங்கர்தான் முதலில் தலையிட்டு தீர்த்து வைப்பான் ..
இப்போது அவனும் . அவன் மனைவியும் காணாமல் போய் விட்டார்களே என்ற வருத்தமும் ஊர்மக்களுக்கு பெரிதும் கவலையாக இருந்தது.

முத்தையாவை தனது மடியில் களத்திக்கொண்டு லட்சுமி அம்மாள் கதறிக் கதறி அழுதாள்..
என்னை மட்டும் தனியாக விட்டுவிட்டு சென்று விட்டீர்களே நான் மட்டும் எப்படி இருப்பேன் அப்பா ....என்று ரேகாவின் அம்மா கதறி கதறி அழுதார்...

அப்போது அங்கு கூடியிருந்த சிலபேர் . இந்த விஷயத்தை உடனே பண்ணையாருக்கு தெரியப்படுத்த வேண்டும் உயிருக்குயிரான நண்பன் முத்தையாவின் இறப்பை அவருக்கு தெரியப்படுத்த வேண்டும் ...
என்று முடிவு செய்து அங்கிருந்து சில பேர் பண்ணையார் வீட்டிற்கு கிளம்பினார்கள்.

பரந்தாமன் சந்திரன் தீனா மூவரும் இரவு முழுக்க தூங்காமல் இருந்ததால் அவர்களின் முகம் சோர்வாக காணப்பட்டது ..
கண்கள் சிவப்பு நிறத்தில் இருந்தது இதை பார்த்த பண்ணையாருக்கு மனசு சங்கடமாக இருந்தது இன்னைக்கு கல்யாணம் தேதியை முடிவு செய்யலாம் என்று இருந்தால் இப்படி மூவரும் சோர்வாக இருக்கிறார்களே என்று நினைத்து கவலைப்பட்டார் ..
இருந்தாலும் இன்று திருமண தேதியை முடிவு செய்ய வேண்டும். என்று நினைத்தார்

என்னப்பா இப்படி களைப்பா இருக்கீங்க இன்னைக்கு எவ்வளவு வேலை இருக்கு தெரியுமா என்றார் பண்ணையார்.

இன்னைக்கு எல்லோருக்குமே நிறைய வேலைதான் இருக்கு.என்று மனதில் நினைத்துக்கொண்டு பரந்தாமன். .,
தெரியும்அப்பா ...தம்பியின் திருமணத் தேதியை இன்னிக்கு முடிவு செய்யணும் அதுதனே என்று சோர்வுடன் சொன்னான் பரந்தாமன்.

ஆமாம்பா.... நீயும் உன் தம்பிகளும் பெண்ணோட அப்பா அம்மாவை வர சொல்லிவிட்டு வாங்க அவங்க வந்ததும் . நம்ம குடும்பத்தோடு நம்ம ஜோசியரை பார்த்து நல்ல தேதியை முடிவு செய்துவிடலாம் என்று பண்ணையார் சொன்னார்.

அப்பா ......நம் திருமணத்தை நடத்துவதற்காக ஆர்வமாக இருக்கிறார் ... ஆனால் நம் திருமணத்தை நாமே கெடுத்துக் கொண்டோமே என்று நினைத்து வருத்தப் பட்டான் சந்திரன் தீனா.

என்னங்க ..... சம்பந்தி வீட்டுல தகவல் சொல்லிட்டு வரும்போது பெண்ணோட அடையாள ஜாக்கெட்டை மறக்காம வாங்கிட்டு வாங்க ...
அவளுக்கு கல்யாணத்திற்கு தேவையான துணிகளை நம்ம தான் தரணும் . அதனால மறக்காம வாங்கிட்டு வாங்க என்று சாந்தி.சொல்லிக் கொண்டிருக்கும் போதே வாசலில் பண்ணையார் ஐயா ......பண்ணையார் ஐயா .... என்று அழுது கொண்டு மக்கள் எல்லாம் வாசலில் குரல் கொடுத்தார்கள்.
எல்லோரும் பதட்டத்தில்

பண்ணையார் அய்யா என்று சொல்லிக்கொண்டு எல்லோரும் அழுவதை கேட்ட பண்ணையாருக்கு சற்று அதிர்ச்சியாக இருந்தது ...
ஊர் மக்கள் எதற்கு இப்படி அழுகிறார்கள் என்று பதட்டமாக பண்ணையாரும் சாந்தியும் ஓடிவந்தார்கள் வெளியில்.

மனவேதனையில் பரந்தாமன் ஒரு நிமிடம் கண்களை மூடிக்கொண்டான் ....
நம் எதிர்பார்த்தபடியே பிரச்சனை ஆரம்பித்து விட்டது .
இனி முடிவு எப்படி இருக்குமோ இன்று பொழுது நமக்கு எப்படி போகப் போகுதோ. அம்மா.. என்று நினைத்து கவலையில் பெரும்மூச்சு விட்டு விட்டு வாசலில் வந்து நின்றான் பதட்டத்தோடு.


பண்ணையாரை பார்த்ததும் ஊர் மக்கள் எல்லாம் அழுது கொண்டே ஐயா. எல்லாமே போச்சு இனி எங்களுக்கு ஆதரவு யாரும் இல்லையா என்று சொல்லி தலையில் அடித்துக்கொண்டு அழுதார்கள்.

புரியும்படி சொல்லுங்கப்பா எனக்கு ரொம்ப பயமாக இருக்கு என்று பண்ணையார் பதட்டமாய் கேட்டார்.


ஐயா பம்பு செட்டுல இருந்த நம்ம சங்கரும் ரேகாவும் காணாம போயிட்டாங்க ஐயா ...
அது மட்டும் இல்ல .. உங்க உயிருக்குயிரான நண்பன் முத்தையா . சங்கர் காணாமல் போன செய்தியைக் கேட்டு இறந்துவிட்டார் ஐயா என்று சொல்லி எல்லோரும் அழுதார்கள்.

பண்ணையார் மக்கள் சொன்னதை கேட்டதும் அதிர்ந்து போனார் அப்படியே நிக்க முடியாமல் தள்ளாடினார் ..

உடனே அருகில் நின்று கொண்டிருந்த பரந்தாமனின் மனைவி சாந்தி பண்ணையாரை தாங்கிப் பிடித்து உட்கார வைத்தார்.

மாமா ...அழுவாதிங்க ..மாமா நிதானமாக இருங்கள் மாமா என்று சொல்லிக்கொண்டு பண்ணையாரின் நெஞ்சை தடவி விட்ட படியே . சாதியால் அழுகை நிறுத்த முடியவில்லை ..

நம் குடும்பத்திற்கு நல்ல நேரம் வந்துவிட்டது என்று நினைத்தோமே இப்படி வேரோடு சாய்ந்து விட்டோமே என்று சொல்லிக்கொண்டே அழுதால் சாந்தி.

நடந்ததை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சந்திரனுக்கும் தீனாவுக்கும் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது அவர்களால் அப்பாவின் நிலைமையை பார்த்து தாங்க முடியவில்லை ஊர்மக்களை பார்த்து அவர்களின் மனம் நொந்து போனார்கள் இருவரும் வாய்விட்டு அழுதார்கள்.

முத்தையா என்னை விட்டு போயிட்டியா .... உன்னை இந்த நிலைமைக்கு ஆளாக்கி விட்டேனே நான் ஒரு பாவி ...
நான் ராசி இல்லாதவன் எனக்காக உன் குடும்பத்தை தொலைத்து விட்டாயே முத்தையா...
என்று சொல்லிக்கொண்டு பண்ணையார் ...தரையை தன் இரு கைகலால் தட்டிக்கொண்டு அழுதார்

பிறகு என்னை என் முத்தையா விடம் கொண்டு செல்லுங்கள் என்று தரையில் படுத்து புறண்டார் பண்ணையார் ..

உடனே பரந்தாமன் சந்திரன் தீணா மற்றும் அங்கு இருந்த ஊர்மக்கள் ஓடிவந்து பண்ணையாரை தூக்கிக்கொண்டு முத்தையாவின் வீட்டிற்கு அழுது கொண்டே சென்றார்கள்.


ஊரில் உள்ள எல்லோரும் முத்தையாவின்வீட்டிற்கு போய்விட்டார்கள் ..
நம்ம மட்டும்தான் போகல குருவே பாவம் முத்தையா இறந்துவிட்டார் என்று சாட்டையடி சாமியாரின் சிஷ்யன் சொன்னான்..

பாவம் முத்தையா ....இதுவரைக்கும் நம் விஷயத்தில் தலையிட்டதே கிடையாது . இருந்தாலும் அங்கு செல்ல மனசுக்கு கஷ்டமாயிருக்கு என்று சாட்டையடி செமையார் சொன்னார்.

ஊரே வருத்தமாக முத்தையாவின் வீட்டில் இருக்காங்க .. நம்ம மட்டும் இப்படி தனியா இருந்தா தப்பில்லையா குருவே என்று மற்றொரு சிஷ்யன் சொன்னான்.


இந்த ஊருக்கே சோதனைக் காலம் வரப் போகுதுன்னு ...
நம்ம சொல்லிவிட்டோம் ஏதோ பொழப்பு நடத்தலாம் ஊரை ஏமாற்றி என்று நினைத்து ..

ஆனால்இப்படி உண்மையாகவே இந்த ஊருக்கு சோதனைக் காலம் தான் வந்துவிட்டது ..
ஏனென்றால் முத்தையாவின் இறப்பு இந்த ஊருக்கே ஒரு
சோகம்தான்

அது மட்டும் இல்ல.
மூன்றாவது முறை பம்புசெட்டில் சங்கர் ரேகாவும் காணாமல் போனது இந்த ஊருக்கே ஒரு பெரிய பயத்தை ஏற்படுத்திவிட்டது.

ஏற்கனவே நம்ம செல்போன் ஒலிக்க வச்சு பேய் இருப்பது போல ஊரை பயமுறுத்திக் கொண்டிருக்கும் ... இப்போ பண்ணையாரின் பம்புசெட்டில் வேலைக்கு போனா காணாமல் போய்விடுவோம் என்ற பயம் இந்த ஊர் மக்களுக்கு உண்டாகிவிட்டது பாவம் இந்த ஊர் மக்கள் இனி எதுக்குதான் பயப்பட போகிறார்களோ என்றார் சாட்டையடி சாமியார்.

இந்த ஊருக்கே சோதனைக்காலம் வரப் போகுதுன்னு சொல்லி விட்டேன் .. அதனால் ஊரில் உள்ளவர்கள் நம்மை எரிச்சலாக பார்ப்பார்கள் ...
பார்த்தாலும் பரவாயில்லை
அடித்து ஊரை விட்டு துரத்தி விடுவார்களோ என்ற பயம்தான் சிஷ்யா. இல்லையென்றால் நம் முத்தையாவின் இறப்பில் கலந்து கொள்ளலாம் என்றார் சாட்டையடி சாமியார்.

நம்மை யாரும் ஒன்றும் சொல்ல மாட்டார்கள் குருவே ...நீங்கள் ஏன் தேவையில்லாமல் மனசை குழப்பிக்கிற . முத்தையா வீட்டிற்கு போகலாம் குருவே என்றான் சிஷ்யன்.

சரி சரி போகலாம் வாங்க ஒருவேளை நான் போகவில்லை என்றால் .. அதுவே ஊர் மக்களுக்கும் எரிச்சலாகி விடும் ஊர் பெரியவர் முத்தையா இறந்துவிட்டார் . இந்த சாட்டையடி சாமியார் வரவில்லையே என்று நினைத்து நம்மேல் கோபப்படுவார்கள் ..அதனால் என்ன நடந்தாலும் பரவாயில்லை வாங்கள் முத்தையாவின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ளலாம் என்று சாட்டையடி சாமியாரும் அவனது சிஷ்யர்களும் கிளம்பினார்கள்

முத்தையாவின் வீட்டு வாசலில் ஒரு கட்டிலைப் போட்டு முத்தையாவை அதில் படுக்க வைத்து ஒரு மாலை போட்டு ஊர் மக்கள் எல்லோரும் அழுது கொண்டிருந்தார்கள்.


பண்ணையாரை தூக்கி வந்த ஊர்மக்கள் முத்தையாவின் அருகில் இறக்கி விட்டார்கள்.


முத்தையாவின் முகத்தை தன் முகத்தோடு இனைத்துக்கொண்டு பண்ணையார் கதறிக் கதறி அழுதார் ..

என்னை மட்டும் தனியாக விட்டுவிட்டு போயிட்டியே முத்தையா இனி எனக்கு ஆறுதல் யார் சொல்லுவாங்க என் குடும்பத்திற்கு யார் தைரியம் சொல்லுவாங்க நீதானே என் குடும்பத்திற்கு ஓயாமல் பாடுபட்ட .
அதனால் உன் குடும்பமே நாசமாகி விட்டதே இப்படி உன் தீயாகத்திற்கு நான் என்ன செய்யப் போகிறேன் முத்தையா ...
என் குலதெய்வமே நீதானடா இப்படி என்னை தனிய தவிக்க விட்டு விட்டாயே என்று உருக்கமாக பண்ணையார் அழுது கொண்டே இருந்தார்.

தனது நண்பன் மேல் எவ்வளவு பாசம் பண்ணையாருக்கு .
இப்படி குலுங்கி குலுங்கி அழுகிறார் என்று நினைத்து ஊர் மக்கள் எல்லோரும் பண்ணையாரை பார்த்துக்கொண்டும் முத்தையா வை பார்த்துக்கொண்டும் அழுதார்கள்.


இரண்டு குடும்பத்தை கெடுத்து விட்டோம்.. ஒரு குடும்பத்தை அழித்து விட்டோம் .
அதனால் இப்போது இந்த ஊரே சோகத்தில் அழுகிறார்கள் .
நம் குடிப்பழக்கத்தினால் செய்த தவறு இப்படி எல்லோரையுமே துன்புறுத்தி விட்டோமே என்று நினைத்து சந்திரனும் தீணாவும் முத்தையாவின் காலை பிடித்துக்கொண்டு அழுதார்கள்

எங்களை மன்னித்துவிடு பெரியவரே ...நீங்கள் தெய்வம் ஆகி விட்டீர்கள் நிச்சயம் எங்களுக்கு நீங்களாவது தண்டனை கொடுங்கள் .
என்று நினைத்துக்கொண்டு முத்தையாவின் கால்களை பிடித்துக் கொண்டு அழுதார்கள் அப்போது பரந்தாமன் மௌனமாக நின்றுகொண்டு .
தம்பிகள் உண்மையாகவே அழுகிறார்கள என்று சந்தேகப் பார்வை பார்த்தான் பரந்தாமன்.

பிறகு பண்ணையாரை சாந்தி சமாதானம் செய்து . சற்று தூரமாக அமரவைத்தாள் முத்தையாவின் முகத்தை பார்த்துக்கொண்டே இருந்தாள் அழுது கொண்டே இருப்பார் என்று நினைத்து.


சாட்டையடி சாமியாரும் .. இரண்டு சிஷ்யர்களும் முத்தையாவின் வீட்டிற்கு வந்து உண்மையாகவே கவலையில் நின்றார்கள்.

அப்போது கூட்டத்தில் ஒருவர் தேம்பித் தேம்பி அழுதுகொண்டே சாட்டையடி சாமியாரிடம் வந்து .. சாமி நீங்க சொன்னபடியே இந்த ஊருக்கு சோதனை வந்துரிச்சு சாமி என்று அழுதார்.

அடப்பாவி ....இன்னும் யாரும் வந்து எதுவுமே கேட்கலையே என்று நினைத்தேன் வந்துட்டியா ..

நான் போட்ட கணக்கு வேற நடந்தது வேற ..

சோதனைக்காலம் வரப்போகுதுன்னு சொல்லிட்டு கரும்புத் தோட்டத்துக்கு தீ வைத்து விடலாம் என்று நானும் என் சிஷ்யனும் பிளான் பண்ணோம் ஆனால் அதுக்கு முன்னாடியே இப்படி இந்த ஊருக்கு சோதனை காலம் வந்துடிச்சு .
நான் என்ன பண்ணுவேன் இருந்தாலும் என் கணக்கு சரியா போச்சு ..

என்று மனதில் நினைத்துக்கொண்டு ..... கவலைப்படாதே ...நண்பா விரைவில் சரியாகிவிடும் என்று வந்தவரின் தோளைத் தட்டிக் கொடுத்து சமாதானம் சொன்னார் சாட்டையடி சாமியார்.

சிறிது நேரம் கண்களை மூடியபடி முத்தையா ...முத்தையா ...என்று புலம்பிக் கொண்டிருந்த பண்ணையார்.
பிறகு கண் திறந்து பார்த்தார் அப்போது முத்தையாவின் வீட்டுத் திண்ணை மீது அவரின் தடிக்கொம்பு இருப்பதை பார்த்தார் பண்ணையார் ..
மீண்டும் அவருக்கு கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது என்னேரமும் இந்த தடிக்கும் கொம்பை கையில் வைத்துக்கொண்டு இருப்பயே முத்தையா ..இப்போ இந்தக் கொம்பு தனியார் கிடைக்குதே என்று சொல்லிக்கொண்டே பொறுமையாக எழுந்து முத்தையா வீண் தடிக்கொம்பை எடுத்துக்கொண்டு
தன் கன்னத்தில் அணைத்துக் கொண்டு திண்ணை மீது படுத்துக் கொண்டார் பண்ணையார். முத்தையா ...முத்தையா ...என்று புலம்பியபடி.

பாவம் பண்ணையார் ..நன்றாக அழட்டும் அப்போதுதான் அவர் மனவலி குறையும் .
என்று நினைத்து அங்கிருந்தவர்கள் அவரை யாரும் தொந்தரவு செய்யவில்லை.

நம்ம சங்கரை கொலை செய்தது ஊர்மக்கள் கண்டுபிடிக்கவில்லை அவன் காணாமல் போய்விட்டான் என்று எல்லோரும் நம்பி விட்டார்கள் பரவாயில்லை நமக்கு கெட்டதிலும் ஒரு நல்லது என்று நினைத்துக் கொண்டு மௌனமாக முகத்தை வைத்தபடி நின்றிருந்தான் பரந்தாமன்.

மாலைப்பொழது ஆனது...

ஐயா நேரமாச்சு இறுதி சடங்கை ஆரம்பிச்சுடலாம் பண்ணையாரை கேட்டு சொல்லுங்கள் என்று .. மூன்று பெரியவர்கள் பரந்தாமனிடம் சொன்னார்கள்.

சரி என்று சொல்லிவிட்டு பரந்தாமன் மெதுவாக சென்று திண்ணையில் படுத்துக் கொண்டிருந்த தனது அப்பாவிடம் சொன்னான்.

அப்பா ....நேரமாச்சு இறுதிச்சடங்கை ஆரம்பிக்கலாம் என்று பெரியவங்க கேட்கிறாங்க ஆரம்பிக்கலாமா அப்பா என்றான் பரந்தாமன்.

தடிக்கொம்பை பிடித்துக்கொண்டு கட்டியணத்தபடி திரும்பிப் படுத்துக் கொண்டிருந்த பண்ணையார் எதுவுமே பதில் சொல்லாமல் இருந்தார்.

மறுபடியும் பரந்தாமன் சற்று சத்தமாக சொன்னான் ...
நேரமாச்சு இறுதிச்சடங்கை ஆரம்பிக்கலாமா அப்பா என்றான்.

அப்போதும் அவர் பதில் ஏதும் சொல்லவில்லை .

பிறகு பரந்தாமன் தனது தந்தையின் தோலை பிடித்து திருப்பினான் அப்போதுஅதிர்ந்து போனான் பரந்தாமன்.

பண்ணையார் தடிக்கொம்பை கட்டியணைத்தபடி இறந்து கிடப்பதை பார்த்து...

இவ்வளவு நேரம் அழுகாமல் இருந்த பரந்தாமன் . தனது தந்தை இறந்துவிட்டார் என்பதை உணர்ந்த உடன் . அவன் கம்பீரக் குரலில் அப்பா என்று கத்தி அழுதான்.

அங்கு கூடியிருந்தவர்கள் மீண்டும் ஒரு முறை அதிர்ச்சியில் அமைதியாகி விட்டார்கள் பண்ணையார் இறந்துவிட்டாரா என்ற அதிர்ச்சியில்....


தொடரும்.....
 
Top Bottom