Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


பார்க்கும் விழி நான் உனக்கு - ரமணிசந்திரன்

Gowsalya.m

New member
Messages
8
Reaction score
5
Points
3
நாவல்: பார்க்கும் விழி நான் உனக்கு
ஆசிரியர்: ரமணிசந்திரன்
நாயகன்: தனசேகரன்
நாயகி: மாதவி

தனசேகரன் ஒரு தனியார் நிறுவனத்தில் விற்பனைத் துறையில் பணிபுரிகிறார். அவரது புகைப்படத்தை பார்த்தவுடன், மாதவி அவரை திருமணம் செய்ய முடிவு செய்கிறாள், அவளது தாயார் தனசேகரனின் வேலையை விரும்பவில்லை. ஆனாலும், திருமணத்திற்கு பிறகு, தனசேகரனும் மாதவியும் மிகவும் சிறப்பாக தங்கள் வாழ்க்கையை நடத்துகிறார்கள்.

தனசேகரன் வேலை காரணமாக வெளியூர் பயணங்களில் இருக்கும்போது, மாதவி தனிமை உணர்வில் மிகவும் சோகமாக இருக்கிறாள். கணவனிடம் கொண்டுள்ள பேரன்பினால், அவனை பிரிந்திருக்கும் நாட்களில் தன்னை கவனிக்கவே மறந்துவிடுகிறாள். சங்ககாலத்தில் தலைவனை பிரிந்த தலைவி பசலை நோயால் பாதிக்கப்படுவது போல் மாதவியும் பாதிக்கப்படுகிறாள். தனசேகரனும், மாதவியின் நிலையை நினைத்து கவலைப்படுகிறான். ஆனாலும் அவனால் தொழில் தொடர்பான பயணங்களை தவிர்க்க முடியவில்லை.

தனசேகரன் இல்லாத நாட்களில்,மாதவி தாய் வீட்டிற்கும் போக வேண்டாம் என மாதவி பிடிவாதமாக இருக்கிறாள். காரணம் அவளது தாயார் தனசேகரனைப் பற்றி தவறாக பேசுவதை அவள் விரும்பவில்லை.

மாதவியின் கவலையை மாற்றுவதற்காக, தனசேகரன் அவளை ஓவியங்கள் வரையச் சொல்கிறான். இந்த ஓவியம் வரையும் செயல், சுகிர்தாவை மீண்டும் மாதவியின் வாழ்க்கையில் கொண்டு வருகிறது. சுகிர்தா ஒரு பொல்லாத பெண்; தனசேகரனும் மாதவியும் வாழும் சந்தோஷமான வாழ்க்கையைப் பார்த்து பொறாமை படுகிறாள்.

சுகிர்தா கூறிய பொய் காரணமாக, தனசேகரனும் மாதவியும் இடையே கருத்துவேறுபாடு ஏற்படுகிறது. அது கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து, அவர்கள் விவாகரத்து செய்யும் முடிவை எடுக்கிறார்கள்.

தனசேகரன் மாதவியுடன் இணையவே விரும்புகிறான். ஆனால் சுகிர்தா கூறிய பொய்களை நம்பி மாதவி தனசேகரனை வெறுக்கிறாள்.

இறுதியில், சுகிர்தாவின் உண்மை வெளிவர, மாதவி தனசேகரனிடம் தன் தவறுகளுக்காக மன்னிப்புக் கேட்கிறாள். பின்னர் அவர்கள் மகிழ்ச்சியுடன் வாழ்கிறார்கள். அப்போது தான் தனசேகரன் மாதவியிடம் கூறுகிறான்: "பார்க்கும் விழி நான் உனக்கு".
 

New Threads

Top Bottom