Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


பிரிவின் தேடல்

dharshini chimba

Saha Writer
Team
Messages
271
Reaction score
167
Points
43
"வணக்கம் பிரெண்ட்ஸ்! பிரதிலிபில சிறுகதை போட்டிக்காக எழுதின கதையை இங்க முதலில் பதிவு செய்றேன். படிச்சிட்டு எப்படி இருக்கு உங்க கருத்துக்களை சொல்லுங்கள்."

"ஹலோ!" என்றேன் தூக்க கலக்கத்தில்.

"ஹலோ! அக்கா" என் தம்பி பிரதீஷின் குரல்.

பறந்தோடியது என் தூக்கம். என்னவோ எதுவோ என்று மணியை பார்த்தேன். விடியற்காலை நாலு என்று காட்டியது.

"பிரதீஷ்! என்னடா இந்த நேரத்துல?" என்றேன் பதட்டமாய்.

"அக்கா!" என்றான் மேலும் உள்ளே சென்ற குரலில்.

"என்னடா? எதுவும் சொல்ல மாட்ற? யாருக்காவது உடம்புக்கு முடியலையா? என்னன்னு சொல்லு?"என்று கேட்டேன் பதட்டம் சற்றும் குறையாமல் பி.பி எகிற.

"மாமா எங்க?" என்றான் மீண்டும் என் கேள்விக்கு பதில் தராமல்.


"மாமா நைட் ஷிப்ட் போய்ருக்காங்க. என்னடா இந்த நேரத்துல போன் பண்ணிருக்க? ஏதாவது முக்கியமான விஷயமா?" என்றேன் அதே திக் திக் நெஞ்சோடு.

"அக்கா பசங்களுக்கு லீவு தானே? நீ இங்க கொஞ்சம் உடனே புறப்பட்டு வரியா?' என்றான் கலக்கமாய்.

"என்னடா ஏன்?" என்றேன்.

"அக்கா.. யாருக்கிட்டயும் சொல்ல முடியலை. இந்த மூணு மாசமா நரகத்துல இருக்க மாதிரி இருக்கேன்." என்றான் பிரதீஷ்.

"என்னடா சொல்ற? எதையும் தெளிவா சொல்ல மாட்டியா?" என்றேன் கோபத்தோடு.

'பின்ன இவன் எதுவும் சொல்லாம, எனக்கில்ல இங்க பி.பி. எகிறுது?'


"அம்மா அப்பாக்கு ஒண்ணுமில்லைல்ல?" என்றேன் பயத்தோடு.

"அதெல்லாம் ஒண்ணுமில்லை" என்றான் உடனே.

"அக்கா இந்த விஷயம் போன்ல பேச முடியாது. நேர்ல நீ உடனே வா. நான் எல்லாம் சொல்றேன்" என்று வைத்துவிட்டான்.

அதோடு பறந்து போனது என் தூக்கம்.

என் கணவர் வந்தவுடன் நடந்தவற்றை கூறி பிள்ளைகளுடன் உடனே கிளம்பினேன் எனது ஊருக்கு.

நீண்ட ரயில் பயணம், ஸ்டேஷனுக்கு தம்பி எங்களை அழைக்க வந்திருந்தான்.

தாடி வைத்து, முடி வெட்டாமல், ஆள் சற்று மெலிந்து விட்டது போல் தோன்றியது.


"ஹை! மாமா மாமா" என்று பிள்ளைகள் துள்ளி ஓடினர் என் தம்பியை பார்த்த சந்தோஷத்தில்.

"ஹை! குட்டீஸ். எப்படி இருக்கீங்க ரெண்டு பேரும்?" என்று சிரித்தபடி வந்து அவர்களை தூக்கி முத்தம் கொடுத்து, தட்டா மாலை சுற்றினான்.

"எப்படிக்கா இருக்க?" என்றான் பிள்ளைகளை இறக்கிவிட்டபின், என்னிடம் இருந்த பைகளை வாங்கிக்கொண்டு.

"ஹ்ம்.. நல்லா இருக்கேன்டா. வீட்ல எல்லோரும் நல்லா இருக்காங்களா?" என்றேன் நடந்துகொண்டே.

"நல்லா இருக்காங்க" என்றான் சுரத்தே இல்லாமல்.

"மாமா நாங்க உங்ககூட நிறைய விளையாடனும்?" என்றனர் பிள்ளைகள்.

"அதுக்கென்ன? விளையாடலாம்" என்றான் என் தம்பி சிரித்து.

அவன் சிரித்தாலும் அந்த சிரிப்பு அவன் விழிகளுக்கு எட்டவில்லை என்பதை கண்டுகொண்டேன்.

வீடு செல்லும் வரை இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.

பிள்ளைகளே பேசிக்கொண்டு வர என் மனம் மட்டும் ஏகபட்ட யோசனையில் தவித்து கொண்டிருந்தது.

அப்பாவிடம் ஏதோ சொல்லி கொண்டே உள்ளே செல்ல முயன்ற அம்மா எங்களை பார்த்தவுடன் அதிர்ச்சியில் நின்றார்.

"என்னம்மா திடீர்னு? நேத்து பேசுனப்பா கூட வரேன்னு எதுவும் சொல்லலை. திடுதிடுப்புன்னு வந்து நிக்குற?" என்றார் பிள்ளைகளை அணைத்து உச்சிமுகர்ந்து.


"என்னங்க இங்க வந்து பாருங்க, யாரு வந்து இருக்கான்னு?" என்று உள்ளே அப்பா இருக்கும் அறையை நோக்கி அழைத்தார்.

"வரேன் வரேன். எதுக்கு இப்படி கத்திட்டு இருக்க?" உள்ளே இருந்து வந்த அப்பா எங்களை பார்த்தவுடன் ஆனந்தத்தில் துள்ளி.

"ஹை வாங்க! வாங்க! எப்படி இருக்கிங்க செல்லங்களா?" என்று பிள்ளைகளை தூக்கி மடியில் அமர்த்தி பேச ஆரம்பித்தார்.

"என்னம்மா எப்படி இருக்க?" என்றார் பேச்சிணூடே என்னை பார்த்து.

"நல்லா இருக்கேன் பா" என்றேன் சிரித்து.

"என்ன ஆச்சர்யமா இருக்கு? உன் வீட்டுக்காரரை விட்டுட்டு வரமாட்டியே? அவரும் நீ இல்லாம இருக்க மாட்டாரே? அனுப்பி வச்சிருக்கார். சந்தோஷம்" என்றவர் அம்மாடிவிடம் திரும்பி

"பிள்ளைகளை சாப்பிட வை" என்று என்னை பார்த்து.

"போங்கடா. ஃபிரெஷ் ஆகிட்டு சாப்பிட்டு ரெஸ்ட் எடுங்க" என்றார்.

"சரிப்பா" என்று என் அறைக்கு சென்றேன்.

பிள்ளைகள் தம்பியை விட்டு நகராமல் இருக்க, நான் பேச சரியான நேரம் பார்த்து கொண்டிருந்தேன்.

இரவு அனைவரும் உணவு முடித்து உறங்க செல்ல, நான் குழந்தைகளை உறங்க வைத்து பின் மாடியில் இருக்கும் என் தம்பியின் அறைக்கு சென்றேன்.

நான் வருவேன்னு தெரிஞ்சு எனக்காக தூங்காம யோசனையோடு உட்கார்ந்திருந்தான் பிரதீஷ்.

"பிரதிஷ்" என்றேன் மெதுவாய்.

"வாக்கா" என்று மெத்தையில் தள்ளி உட்கார, நானும் அவன் அருகில் உட்கார்ந்தேன்.

"என்னடா பிரதீஷ்? ஏன் இப்படி இருக்க? இப்பவாவது சொல்லு? என்னடா பிரச்சனை? உடனே கிளம்பி வான்னு சொல்லிட்ட? எனக்கு கையும் ஓடல காலும் ஓடல" என்றேன்.


"அக்கா. எப்படி சொல்றதுன்னு தெரியலை? யாருக்கிட்ட சொல்றதுன்னு தெரியலை?" என்றான் சோகமாய்.

"ஏன் மிருதா எங்க? நான் பார்க்கவே இல்ல?" என்றேன்.

"அவங்க அம்மா வீட்டுக்கு போய்ருக்கா" என்றான் பிரதீஷ் எங்கோ பார்த்து.

"என்ன பிரச்சனை உங்க ரெண்டு பேருக்கும்?" என்றேன் நேரடியாய்.

அதிர்ச்சியாய் என்னை நோக்கி "அக்கா" என்றான்.

"எதுவா இருந்தாலும் சொல்லு? " என்றேன்.

"அக்கா இந்த மூணு மாசமா அவளோட நடவடிக்கை எதுவும் சரி இல்லை" என்றான் மெதுவாய் உடைந்த குரலில்.

"ஏன்டா?" என்றேன்.

"அக்கா யாருக்கிட்டயும் சொல்ல முடியலை. அவ என்கிட்ட சாதாரணமா பேசி கூட மூணு மாசம் ஆகுது" என்றான் கண்கள் கலங்கி.

"அவளுக்கு உடம்பு முடியலையா என்ன?" என்றேன்.

"இல்ல நல்லா இருக்கா. எதாவது கேட்டா பதில் சொல்றா. இல்லன்னா நான் இங்க இருந்தா கூட அமைதியா வெளிய போய்ட்றா. முதல்ல நான்கூட மாசமா இருக்கிறதால சில மைண்ட் டிப்ரெசன் இருக்கும்னு. விட்டுட்டேன். ஆனா அதுக்கப்புறம் தான் தெரிஞ்சுது அவ என்கிட்ட இருந்து விலகறான்னு. நானும் எவ்வளவோ பேச்சு கொடுத்தேன். எதுவும் வேலைக்கு ஆகலை." என்றான் பிரதீஷ்.

"என்னடா சொல்ற?" என்றேன் கலக்கமாய்.

"நான் அவளை நெருங்கினாலே வேகமா விலகி போய்ட்றா. என் விரல்கூட இந்த மூணு மாசத்துல அவ மேல படலை. அப்பா அம்மாகிட்ட மட்டும் எந்த மாற்றமும் இல்லாம நல்லா பேசுறா. என்னை சுத்தமா ஒதுக்கி வச்சிட்டா. நானும் எவ்வளவோ பேசி பார்த்துட்டேன். என்கிட்ட முகம் கொடுத்துக்கூட பேசமாட்றா. அவ என்கிட்ட சிரித்து பேசி ரொம்ப நாள் ஆகுதுக்கா. சொல்லபோனா நாங்க இருக்கிறது என்னவோ ஒரே வீட்ல ஒரே ரூம்ல ஆனா நாங்க ரெண்டு பேரும் தனிதனியா தான் வாழறோம். எனக்கு யோசிச்சு யோசிச்சு மூளையே வேலை செய்யலை. அம்மா அப்பாகிட்ட சொல்லலாம்னா கஷ்டபடுவாங்கன்னு அமைதியா இருந்தேன். ஆனா இனி என்னால முடியாது. நாளைக்கு வர்றா. நீயே ஏதாவது பேசி பார்." என்றான் பிரதீஷ்.

"சரி டா. நா பேசுறேன். நீ அதையே நினைச்சு மனசை போட்டு குழப்பிக்காத." என்று சிறிது நேரம் பேசிவிட்டு கீழே என் அறைக்கு வந்து யோசனையில் ஆழ்ந்தேன்.


மெத்தையில் படுத்திருந்தேனே தவிர உறக்கம் வர மறுத்தது. நினைவுகள் இரண்டு வருடங்கள் பின்னோக்கி சென்றது.

திருமணமாகிய பின், வீட்டில் அத்தை இருந்ததால் குழந்தையை அவர் பார்த்து கொள்வார். இந்த ஊரிலேயே நானும் அவரும் வேலை செய்து கொண்டிருந்த நேரம், அவருக்கு வேலை அதிமாக இருக்கும் நேரத்தில் என் தம்பி வந்து என்னை அழைத்து செல்வான். அப்படி ஒரு நாள்,

"என்னடா எப்போ பாரு நீயே தனியா சிரிக்கிற? போனையே ரொம்ப நேரம் பார்த்துட்டு இருக்க? யாரையாவது லவ் பண்றியா?" என்றேன் என் வேலை முடிந்தவுடன் என்னை அழைக்க வந்த தம்பியிடம்.

"அக்கா அதெல்லாம் ஒண்ணுமில்லை" என்றான் பிரதீஷ் வேகமாக.

"நானும் உன்னை கொஞ்ச நாளா பார்த்துட்டு தான் இருக்கேன் ஆளே ஒரு மாதிரியே இருக்கியே? என்ன விஷயம் சொல்லு?" என்றேன்.

"கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் முடிச்சுட்டு வெளிய வேலைக்கு போக பிடிக்கலைன்ன. அதனால அப்பா வி.ஆர்.எஸ் வாங்கின பணத்துல சின்னதா ஒரு கம்ப்யூட்டர் ஸ்பேர் பார்ட்ஸ் சேல்ஸ் பன்ற கடைய ஆரம்பிச்ச. இப்போ அது நல்லா டெவெலப் ஆகுதுன்னு உன் ப்ரெண்ட்ஸ் சொன்னாங்க" என்றேன்.

"ஆமாக்கா. ஆரம்பிச்சப்ப இருந்ததை விட இப்போ நல்லா போயிட்டு இருக்கு." என்றான்.

"மாமாகூட அவங்க ப்ரெண்ட்ஸ் ரெண்டு பேர் கம்ப்யூட்டர் வேணும்னு சொன்னாங்க உன்கிட்ட வாங்க சொல்லிருக்கேன்னு சொன்னார்." என்றேன்.

"அப்படியா க்கா. சரிக்கா நான் பார்த்துக்குறேன். பாப்பா எப்படி இருக்கா?" என்றான்.

"அவளுக்கென்ன நல்லா இருக்கா. எப்போ குட்டி பாப்பா வரும்னு நச்சரிக்கிறா" என்று சிரித்தேன்.

"அவளுக்கு அவ்ளோ ஆசை. எப்போ டாக்டர் டேட் கொடுத்திருக்காங்க க்கா" ஏன்றான்.

"அடுத்த மாசம் இருவத்தி எட்டு டா" என்றேன்.

"எப்போலர்ந்து லீவு போட்ற?" என்றான் பிரதீஷ்.

"அடுத்த வாரத்துல இருந்து டா" என்றேன்.

"ஓஹ் சரிக்கா. உடம்பை பார்த்துகோ" என்றான்.

"சரிடா. அம்மா உனக்கு கல்யாணம் பண்ண பொண்ணு பார்க்குறேன்னு சொன்னா இப்போ வேணாங்குறியாம். ஏன்டா?" என்றேன்.

"இப்போ எதுக்கு கா? இன்னும் ரெண்டு வருஷம் போகட்டும்." என்றான் சிரித்துக்கொண்டு.


"எத்தனை பசங்க வேலை பார்க்குறாங்க இப்போ கடைல?" என்றேன் அவன் வாயிலேயே உண்மையை சொல்ல வைக்க.

'பின்ன என் புருஷன் 'அதெல்லாம் இல்லை என் மச்சான் லவ் லா பண்ண மாட்டான்'னு பெட் கட்றாரு. எனக்கு தான் இவன் மேல சந்தேகமா இருக்கு. அதான் அவங்கிட்ட பேச்சு கொடுத்து உண்மைய வரவைக்க ட்ரை பண்றேன். அழுத்தக்காரன் ஒத்துக்க மாட்டேங்குறான். எப்படியாவது இந்த வருஷம் அவனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு அம்மா சொல்லிட்டே இருக்காங்க. பார்ப்போம் என்ன தான் நடக்குதுன்னு?'

"ஒரு அஞ்சு ஆறு பசங்க வேலை செய்றாங்க அக்கா" என்றான் முகம் மலர.

'அப்போ அவன் விரும்புற பொண்ணு அங்க தான் இருக்கு' மை மைண்ட் வாய்ஸ்.

"அப்போ அந்த பொண்ணும் உன்கிட்ட அங்க தான் வேலை செய்றாளா? அவளுக்கு தெரியுமா?" என்றேன் மெதுவாய் அவன் முகத்தை பார்த்தபடி.

உடனே முகம் கலவரமடைய, "யாரு? எந்த பொண்ணு? அப்படில்லாம் ஒண்ணுமில்லையே?" என்றான் பிரதீஷ்.

"டேய் சும்மா நடிக்காத. அதான் உன் முகமே சொல்லி கொடுத்துடுச்சே? சொல்லு அங்க தான் அந்த பொண்ணு வேலை செய்றாளா?" என்றேன் மீண்டும்.

மாட்டிக்கொண்ட திருடன் போல், "அக்கா" என்றான்.

"என்னடா நான் கேட்டதுக்கு பதிலே காணோம்" என்று சிரித்தேன்.

நீண்ட மௌனத்திற்கு பின்,

"ஆமாக்கா. அவ பேரு மிருதாலினி" என்றான் பிரதீஷ் கண்களில் அவளுக்கான அன்பு மின்ன.

"ரொம்ப அழகான பேரு. உனக்கு பிடிச்சிருந்தா அவங்க வீட்ல பேசி முடிச்சடலாம்டா. அம்மாவும் கஷ்டபட்றாங்க" என்றேன்.

"அக்கா! எதுக்கு இவ்ளோ அவசர பட்ற? நானே இப்போ தான் பேசிருக்கேன். எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க. எனக்கு பிடிச்சிருக்குன்னு தான் சொல்லிருக்கேன். அவ எந்த பதிலும் இதுவரைக்கும் சொல்லலை. ரொம்ப நல்ல பொண்ணுக்கா" என்றான் மெல்ல சிரித்து.

"அப்படியா சொல்ற? அதை நான் பேசி பார்த்து தெரிஞ்சுக்குறேன். சரி டா. ஆனா ரொம்ப நாள் எடுத்துகாத. என்னா ஏற்கனவே நீ ரொம்ப லேட் பண்ணிட்ட அம்மாவும் உனக்காக போகாத கோவில் இல்ல. என் பையனுக்கு கல்யாணம் ஆனா பொதும்னு இருக்காங்க" என்றேன்.

"சரிக்கா எனக்கு ரெண்டு மாசம் டைம் கொடுங்க." என்றான் பிரதீஷ்.

"சரிடா" என்று சிரித்தேன்.

**

வீட்டுக்குள் சென்றவுடனே, "எனக்கு நீங்க ரெண்டு பெரிய டைரி மில்க் வாங்கி தானும். அவன் நான் சொன்ன படி லவ் பண்றான்" என்றேன்.

"என்னது உன் தம்பி லவ் பண்றானா? உலக அதிசயத்துல அவனை சேர்த்துடுவாங்கன்னு எவ்ளோ நம்பிக்கையா இருந்தேன். இப்படி பணிட்டானே" என்றார் என் கணவர் போலியாய் கோபப்படுவது போல்.

"என்னது என் தம்பி கல்யாணம் ஆகாம இருந்தா உங்களுக்கு சந்தோஷமா? உங்களை.. " என்று நான் அவரை துரத்த செலவு இல்லாமலே என் அக்த்தையும் மகளும் வீட்லெயே டாம் அண்ட் ஜெர்ரி சிரித்தபடி பார்த்தனர்.

"டார்லி. இப்படி ஓடக்கூடாது டா. உன் வயத்துல என் பேபி இருக்குல்ல?" என் கணவர் கூற.

"அதனால தான் இப்போ தப்பிச்சிங்க" என்று மூச்சு வாங்க அமர்ந்தேன் என் அறையில் மெத்தையின் மேல்.

என் முன் அமர்ந்தவர் மெல்ல என் பாதங்களை எடுத்து மடி மீது வைத்து அழுத்தி விட்டார்.

"கால் வலிக்குதா?" என்றார் அன்பாய்.

"ஹ்ம் இருக்கு மாமா. என்ன பன்றது இந்த டைம்ல அப்படி தானே இருக்கும்?" என்றேன்.

"இரு வரேன்" என்று குளியலறையின் உள்ளே சென்றவர் காலியில் ஒரு வாயி அகண்ட பாத்திரத்தில் வெந்நீர் எடுத்து வந்து காலிற்கு ஒத்தடம் கொடுத்தார்.

"வேண்டாம் விடுங்க. தூங்குனா சரியா போயிடும்." என்றேன்.

"சும்மா இரு. இந்த வேலையா விட சொன்னா கேக்க மாட்ற?" என்று செல்லமாய் கடிந்து.

"ஹிம்.. " என்று கூறியபடியே என்னவர் கால் அழுத்திவிட்ட சுகத்திலேயே.

அடுத்த மாதம் எனக்கு சுகப்ரசவத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது.

கண்ணிர்குள் வைத்து பார்த்துக்கொண்டார் என் கணவர்.

ஹிம்... என் பேர் சொல்லவே இல்லைங்க.. நான் தான் கண்மணி. என் கணவர் வேந்தன்.

***

அடுத்த வந்த மூன்று மாதங்களில் என் தம்பி அவனின் காதலை சொல்லி இருவீட்டாரும் சம்மதம் சொல்ல, அடுத்த ஆறு மாதங்கள் கழித்து திருமணம் நடந்தது.

ஒரு வருடத்திற்குபின் என் அத்தை உடல்நலம் குன்றி இறந்துவிட, அவருக்கு மாற்றல் கிடைத்து வந்துவிட்டோம். நானும் பிள்ளைகளை பார்த்துக்கொள்ள என் வேலையை விட்டுவிட்டேன்.

வாழ்க்கை இனிமையாக இருப்பதாக கேட்கும்பொழுது கூறிக்கொண்டிருந்தவன் இப்பொழுது கூறுவதை வைத்து பார்த்தால் என்ன பிரச்சனையாக இருக்குமென்று ஒன்றும் புரியாமல் குழப்பமாகவும் கவலையாகவும் இருந்தது.

மறுநாள்,

"அக்கா கொஞ்ச நாளாவே அவ சரி இல்ல" என்றான் மெதுவாக திணறி.

"என்னடா சொல்ற? என்ன பண்றா?" என்றேன்.

"என்னன்னு சொல்றதுக்கா" என்று தயங்கினான்.

"எதுவா இருந்தாலும் தயங்காம மறைக்காம சொல்றா? அப்போ தான் நான் அவகிட்ட பேச முடியும்" என்றேன்.

"அக்கா சந்தோஷமா எந்த பிரச்சனையும் இல்லாம தான் எங்க வாழ்க்கை போய்ட்டு இருந்தது. ஆனா ஒரு நாள் ரொம்ப சந்தோஷமான விஷயம் அவ கண்சிவ் ஆனதை சொன்னா. அவ்ளோ சந்தோஷம் வார்த்தையால சொல்ல முடியாது அப்படி இருந்தது." என்றான் கண்கள் கலங்க.

"அப்புறம் என்னடா? சந்தோஷமான செய்தி தான் வந்தாச்சுல்ல?" என்றேன்.

"அதுக்கப்புறமும் எல்லாமே நல்லா போய்ட்டு இருந்தது. அவ அம்மா வீட்ல இருக்கிறதை விட நம்ம வீட்ல என் கூட இருக்கிறது தான் அவளுக்கு ரொம்ப பிடிக்கும். என்னை விட்டுட்டு எங்கயுமே போகமாட்டா. நாலாவது மாச செக் அப் வரைக்கும் நான் தான் டாக்டர்கிட்ட கூட்டிட்டு போவேன். திடீர்னு ஒரு நாள் அம்மா வீட்டுக்கு போகணும்னு ஆசையா இருக்குன்னா. நான் போய்ட்டு வரலாம்னேன்." என்றான்.

"போனிங்களா?" என்று கேட்டேன்.

"போனோம். அன்னைக்கு முழுக்க அங்க தான் இருந்தோம். அவளோட அக்கா கூட ஒரு நாள் தங்கிட்டு வறேன்னு சொன்னா. நானும் இருந்துட்டு வான்னு கிளம்பிட்டேன்." என்றான்.

"இதெல்லாம் சரி. திடிர்னு என்ன ஆச்சு?" என்றேன்.

"மறுநாள் சாய்ந்திரம் நான் போய் கூட்டிட்டு வந்துட்டேன். ஆனா அங்க இருந்து வந்ததுலர்ந்து அவ நடவடிக்கை எதுவும் சரி இல்ல. எப்பவும் ரூமுக்குள்ளயே இருப்பா. யார்கிட்டயும் பேசுறதில்ல. சாப்பாடு சாப்பிட மட்டும் தான் வெளிய வருவா. அம்மா வந்து பேசினாக்கூட ஒரே வார்த்தைல பேசி அனுப்பிடுவா. அம்மா ரொம்ப கஷ்டபட ஆரம்பிச்சாங்க. நானும் ஃபர்ஸ்ட் பிரெக்னன்டா இருக்கிறதுனால மூட் அப்படி இருக்கும்னு விட்டுட்டேன். அதுக்கப்புறம் உடம்பு எதும் சரி இல்லையான்னு கூட கேட்டு பார்த்தேன்." என்றான்.

"நீயே மறுபடியும் பேசி பார்க்குறது தான? ஹாஸ்பிட்டல் செக்கப் கூட்டிட்டு போனியா?" என்றேன்.

"அக்கா நான் எனக்குள்ளயே ஒரு சில விஷயங்களை போட்டு புதைச்சு வைச்சிருக்கேன். அவள் எங்கிட்ட பேசுறதையே நிறுத்திட்டா. நான் லவ் பண்ண மிரு இல்ல அவ. ரொம்ப மாறிட்டா" என்றான் நா தழு தழுக்க.

"டேய் உன்கிட்ட சரியா பேசலைன்றத்துக்காக அப்படி சொல்லக்கூடாது." என்றேன் கடுமையாய்.

"அக்கா அதுமட்டும் வச்சி நான் அப்படி சொல்லலை. உனக்கு எப்படி புரியவைக்கிறது. அக்கா நான் அவ பக்கத்துல நின்னு அவளை பார்த்து கூட மூணு மாசம் ஆகுது. அவளை கிட்ட இருந்து பார்க்கலாம்ன்னு கிட்ட போனாகூட கூட வெளிய போய்ட்றா. நான் ரூம் உள்ள வந்தாலே அவ தூங்குற மாதிரி போய்

மெத்தையில படுத்துகுறா. தப்பி தவறி பக்கத்துல போனா எனக்கு தலை வலிக்குது உடம்பு சரி இல்லை. இதெல்லாம் சொல்லிடுவா. இவ்ளோ ஏன்? என் குழந்தை அவ வயத்துல எப்படி உதைக்கிறான்னு தொட்டு பார்க்க கூட விடமாட்றா." என்றான் பிரதீஷ் கலங்கிய கண்களுடன்.

"சரி பிரதீஷ் எல்லாம் சரி ஆகிடும்" என்றேன்.

"அதோட அவங்க அம்மா வீட்டுக்கு அடிக்கடி போய்ட்டு வர ஆரம்பிச்சா. ரெண்டு நாள், நாலு நாள், ஒரு வாரம்னு அங்கேயே தங்கிடறா.. இப்போ கூட இன்னைக்கு செக் அப் போகணும்னு தெரியும். செக் அப் முடிச்சிட்டு அப்புறம் போலாம்னு சொன்னா. நான் அம்மா வீட்டுக்கு போறேன். அங்கயே பார்த்துக்குறேன்னு சொல்லிட்டு நேத்தே கிளம்பி போய்ட்டா. அவங்க வீட்ல கேட்டா. ஏன் நான் கல்யாணம் பண்ணி போய்ட்டா இங்க வந்து தங்க கூடாதான்னு கேக்குறா?' எனக்கு என்ன பண்றதுன்னு தெரியலைக்கா. பைத்தியம் பிடிக்கிற மாதிரி இருக்கு. இந்த மூணு மாசமா அங்க தான் செக் அப் போறா" என்றான் ப்ரதீஷ் தலையை பிடித்துக்கொண்டு.

அவன் நிலை கவலையும் வருத்தமும் தர ஆறுதலாய் தலையை கோதிவிட்டு, "சரிடா. நான் இங்கே தான் நாலு நாள் இருக்க போறேன். எனக்கு மூணு நாள் டைம் கொடு. நான் என்னனு கண்டுபிடிக்கிறேன்." என்றேன் நம்பிக்கையாய்.

"சரிக்கா" என்றான் சிறு புன்னகை பூத்து.

"சார் நீ தூங்கு." என்று எழுந்தேன்.

"அக்கா" என்றான்.

"என்னப்பா?" என்றேன் மெதுவாய் திரும்பி

"அக்கா. நான் உன் மடில தலைவைச்சு தூங்காவா? நான் தூங்கி பல மாசம் ஆகுதுக்கா" என்றான் கண்களில் நீர் கோர்க்க.

"வா" என்று அவன் அருகில் சம்மணமிட்டு மெத்தையில் ஓரத்தில் அமர்ந்தேன். என் தம்பி தலை வைத்து படுத்த அடுத்த நொடி அன்னையாய் மாறி என் மனம் தலை கோத வெகு சீக்கிரத்தில் உறங்கி போனான் ப்ரதீஷ்.

மறுநாள் காலை பத்து மணி வரை உறங்கி கொண்டிருந்தவனை, "டேய்! எழுந்திரிடா. சீக்கிரம் ரெடி ஆகு டைம் ஆகுது." என்றேன்.

திடுதிப்பென்று எழுந்து அமர்ன்க்டவன் "எங்க அக்கா?' என்றான் தூக்க கலக்கத்தில்.

"என்னடா கேள்வி இது? உன் பொண்டாட்டியை பார்க்க தான்" என்றேன் சிரித்து.

"அக்கா.." என்றான் பிரதீஷ் அதிர்ச்சியாய்.

"கிளம்புன்னு சொல்றேன்ல? எல்லாரும் கிளம்பிட்டாங்க. நீ மட்டும் தான் ரெடி ஆகணும். பத்து நிமிஷம் தான் டைம் உனக்கு." என்று மாடியில் இருந்து கீழே இறங்கினேன்.

"மா! எல்லாம் எடுத்து வச்சிட்டீங்களா? போலாமா?" என்றேன்.

"போலாம். எல்லாம் ரெடி. எங்க உன் தம்பி?" என்றார் அம்மா.

"இதோ வந்துருவான்மா. நீங்க போய் கார்ல ஏறுங்க. எங்க உங்க வாண்டு பேரப்பசங்க?" என்றேன் நக்கலாய்.

"வாயி மேலையே போட்ரென் பாரு. சும்மா பிள்ளைங்களை போய் ஏதாவது சொல்லிக்கிட்டு. நீ பண்ணாக்ட சேட்டையா என் பேரப்பசங்க பண்ணிட்டாங்க?" என்றார் அம்மா.

"சரி. சரி. நான் எதுவும் சொல்லலை. எங்க அவங்க?" என்றேன் சிரித்து.

"அவங்க அப்பையே அவங்க தாத்தாவோட கார்ல எரி உக்கார்ந்துட்டாங்க. நானும் போறேன். நீயும் உன் தம்பியும் வந்து சேருங்க" என்று சென்றார்.

'இந்த பையன் ரெடி ஆனானா? இல்ல தூங்கிட்டானா?' எனக்குள் கேள்வியை கேட்டுக்கொண்டு, "டேய் பிரதீஷ்! சீக்கிரம் வாடா" என்றேன் மாடியை பார்த்து.

"இதோ வந்துட்டேன்" என்று சட்டை கையை மடித்துவிட்டுக்கொண்டு மாடியில் இருந்து இறங்கி வந்தான்.

"அக்கா. என்னக்கா இது? எப்படி திடீர்னு நாம எல்லாரும் போய் அவங்க வீட்டு முன்னாடி போய் நிக்குறது?" என்றான் கவலையாய்.

"அதெல்லாம் நான் பார்த்துக்குறேன். நீ எதுவும் தெரிஞ்ச மாதிரி காட்டிக்காத" என்றேன்.

"என்னமோ சொல்ற? சரிக்கா" என்றான் மெல்ல புன்னகைத்து.

வீட்டை பூட்டிக்கொண்டு கிளம்பிய அனைவரும் அடுத்த அரை மணி நேரத்தில் அவர்களின் வீட்டின் முன் நின்றோம்.

அவர்களின் நலம் விசாரிப்புகள் முடிய, என் கண்கள் மிருவை தேடியபடி "மிரு எங்க?" என்றேன்.

"அவ உள்ள ஆ ரூம்ல ரெடி ஆகிட்டு இருக்கா." என்றார் அவளின் அம்மா சிரித்துக்கொண்டே.

என் தம்பி மட்டும் தவிப்புடன் அவளின் அறையை நொடிக்கொரு முறை பார்த்துக்கொண்டிருபத்தை கண்டுகொண்டேன்.

"நீங்க போய் பாருங்க" என்றார்.

'நான் போய் பார்க்கிறேன்' என்று எழுந்து என் தம்பிக்கு சைகை செய்து விட்டு சென்றேன்.

உள்ளே அவளின் தோழிகளோடு சிரித்து பேசிக்கொண்டிருந்தாள் மிரு.

அவளின் தோழிகள் என்னை கண்டவுடன் வெளியே சென்றுவிட, நான் சிரித்துக்கொண்டே உள்ளே சென்றேன்.

விழிகளால் அங்குலம் அங்குலமாய் அளந்தபடி சிரித்து, "எப்படிம்மா இருக்க?" என்றேன்.

"நான் நல்லா இருக்கேன் அண்ணி. நீங்க எப்படி இருக்கீங்க? அண்ணன் பசங்க எல்லாரும் எப்படி இருக்காங்க?' என்றாள்.

உச்சரிப்புகள் வாய் வழியே வந்தாலும் அது உதட்டில் ஒட்டாமல் இருந்தது.

"ஹிம்... எல்லாரும் நல்ல இருக்காங்க. பசங்க வெளிய விளையாடிட்டு இருக்காங்க. டாக்டர்கிட்ட போனியா செக்அப்க்கு? என்ன சொன்னாங்க?" என்றேன் அவளின் முகத்தை அளந்தபடி.

சிரித்த முகம் சற்று ஒரு நொடி கலவரமடைய, "நாளைக்கு தான் போகணும் அண்ணி" என்றாள் மெதுவாக.

"ஓஹ்! அப்படியா? நானும் வரேன் நாளைக்கு என் ஃப்ரெண்ட் கூட கைநகாலஜிஸ்ட் தான் அவக்கிட்ட போலாமா ஒரு முறை?" என்றேன் அவளின் பதிலில் ஒரு சில உண்மைகள் அறிய.

"இல்லல்லா அன்னை இயவங்க நல்லா தெரிஞ்ச டாக்டர். அவங்ககிட்டையே பார்க்கலாம்" என்றாள் உடனே மறுப்பாக.

"சரிம்மா. வா நேரமாகுது. வெளிய போகலாம்" என்று வெளியே கூட்டி வந்தேன்.

"உக்காறு" அமர வைத்து, ஏழாம் மாதம் நலுங்கு வைத்து ஜாடை தைக்கும் சடங்குகள் ஆரம்பித்தேன்.

அவர்கள் வீட்டின் அக்கம் பக்கத்தினர் சொந்தங்கள் கூட்டம் இருந்தது.

என் தம்பியை பார்த்தேன் அவனின் விழிகளில் ஏக்கம் நிரம்பி வழிய மிருவை பார்த்து கொண்டிருந்தான்.

அவளையும் திரும்பி பார்த்தேன். அவளோ அவனை ஒரு முறை கூட ஏறெடுத்து பார்க்கவில்லை.

அவளின் முகத்தை நன்கு கவனித்தேன்.

அதில் தாய்மையின் ஊறல் எதுவும் இல்லை. கண்ணங்களின் செழுமை இல்லை. உடலினில் செழிப்பு இல்லை. முகத்தில் ஒலி இல்லை. முக மகிழ்வும் இல்லை. எதுவோ சரி இல்லை. என்பதை மட்டும் அறிந்து கொண்டேன்.

சுற்றி முற்றி பார்த்தேன். எல்லா அறைகளும் திறந்திருந்தன. ஆட்களும் இருந்தனர்.

"பெண்ணோட அக்கா எங்க?" என்றேன் மிருவின் சித்தியிடம்.

"அவளுக்கு பெங்களூர்ல வேலை. லீவு கிடைக்கலை வரமுடியலைன்னு சொன்னாங்க.

"ஓஹ் அப்படியா? சரி" என்று நகர்ந்தேன்.

"இங்க கிணத்தடி எங்க இருக்கு?" என்றேன் ஒரு பெண்ணிடம்.

"இப்படி போனிங்கன்னா பின்னாடி இருக்கு" என்றாள் ஒரு உறவுக்கார பெண்.

"சரிங்க நன்றி" என்று பின்னால் இருந்த கிணத்தடிக்கு சென்றேன்.

'என்னமோ இடிக்குது என்னவா இருக்கும்?' என்று யோசித்தபடி கைகளை கழுவிக்கொண்டு திரும்ப, அங்கே இருந்த அறையில் சத்தம் வர அருகில் சென்று அந்த கதவை திறந்தேன்.

திறக்க முடியவில்லை. பூட்டி இருந்தது.

'பூட்டி இருக்கு அப்புறம் எப்படி சத்தம் வருது?' என்று யோசித்து அருகிலிருந்த பெரிய கல்லை எடுத்து உடைத்தேன்.

கதவு திறந்துகொள்ள உள்ளே சென்றேன்.பழைய பொருட்கள் போட்டு வைக்கும் இடம் போல் இருந்தது.

எதுவுமே இல்ல இங்க. ஒருவேளை பூனையா இருக்கலாம் போல? என்று கூறிக்கொண்டு விலேயே செல்ல திரும்பினேன்.

சேரில் பாயால் போர்த்தி சுற்றி வைக்கபட்டிருந்த பொருள் ஆடியது.

"என்னது அது?" என்று அதன் அருகில் நெருங்க, அப்டாரென்று அது உருண்டு கீழே விழுந்தது., பாய் முழுவதும் விரிய எனக்குள் அதிர்ச்கி அலை போங்க உடம்பு சில்லிட்டது.

"மிரு.." என்று நாக்குழற வேகமாக அருகில் ஓடினேன். வாய் துணியால் அடைத்திருக்க கை காலகள் கட்டப்பட்டு பாயில் சுற்றி வைக்க பட்டிருந்தாள்.

"மிரு என்னம்மா..?" என்றேன் கட்டை வேகமாக கழற்றி.

மிரு மயக்கத்தில் இருந்ததால் எழவில்லை.

எனக்கு பகீரென்றது. இந்த இடம் பாதுகாப்பில்லை. முதல்ல இங்க இருந்து வெளியாய் போகணும் யாரும் வரத்துக்குள்ள.' என்று யோசித்து உடனே என் தம்பிக்கு போன் செய்தேன்.

"சொல்லுக்கா?" என்றான் சுரத்தே இல்லாமல்.

"எங்க இருந்தாலும் உடனே யாருக்கும் தெரியாம பின்னாடி இருக்க கிணத்தடிக்கு வா" என்று போனை கட் செய்தேன்.

சில நிமிடங்களில் வந்த அவன், அன்னை காணாமல் "அக்கா" என்று குரல் கொடுக்க.

கதவின் அருகில் நின்றிருந்தவனின் சட்டையை பிடித்து உள்ளே இழுத்து கதவை சாத்தினேன்.

"யாரு அது?" என்று அடிக்க கை ஓங்கியவன் ஒருநொடி அதிர்ந்து, "மிரு" என்று அவளிடம் ஓடினான்.

என் கண்களில் கண்ணீரே வந்து விட்டது.

"மிரு என்னாச்சி உனக்கு?" என்றான் கண்கள் கலங்கி.

தண்ணீர் தெளிக்க, ல்கங்கள் விழித்தவள் அவனை கண்டதும், "பிரதீஷ்" என்று அவனை கட்டிக்கொண்டு கதறினாள்.

"என்னடா நடக்குது இங்க? நீ இங்க இருக்க அப்போ அங்க இருக்கிறது யாரு?" என்றான் பிரதீஷ் ஒன்றும் புரியாமல்.

"அது என் தங்கை. அவளுக்கு வெளியூர்ல வேலை கிடைச்சிருச்சுன்னு சொல்லி எல்லாரையும் நம்ப வைச்சிட்டு என்னை இங்க அடைச்சி வச்சிட்டா. அவளுக்கு இங்க இருக்கவங்களும் உடந்தை. உன்கிட்ட ரொம்ப மோசமா நடந்துக்கிட்டா எனை வெறுத்துருவ. குழந்தைய சாக்கா வச்சு உன்னை கல்யாணம் பண்ணிக்கலாம்னு நினைச்சிருந்தா." என்று தேம்பினாள்.

"அவங்களை" என்று கொலை வெறியோடு எழுந்தவனை தடுத்தது அவளின் குரல்.

"பிளீஸ் பிரதீஷ். என்னை இங்க இருந்து கூட்டிட்டு போய்டு" என்றாள் மிரு.

"இருடா அவ சொல்றது கரெக்ட். முதல்ல மிருவை யாருக்கும் தெரியாம நம்ம கார்ல உக்கார வை" என்றேன்.

"அக்கா இவ்ளோ பண்ணிருக்காங்க அவங்களை சும்மா விட சொல்றியா?' என்றான் கோபமாய்.

"அதுக்கு தான் சொல்றேன். மிருவுக்கு எதுவும் ஆக கூடாது. நான் சொன்ன மாதிரி செஞ்சுட்டு வா. இல்லல்ல நீ அங்கயே இவக்கூடயே இரு. நான் என்ன பண்ணணும்னு சொல்றேன்" என்றேன்.

"சரி" என்று கூறியபடி மிருவை தூக்கி கொண்டு கவனமாக வெளியேறினான்.

அவர்கள் காரில் உட்கார்ந்தார்கள் என்பதை பார்த்தபின் அவனுக்கே ஃபோன் செய்தேன்.

"ஏன் எதுக்குன்னு கேட்காத. உடனே பக்கத்துல இருக்க கோவிலுக்கு போய்டுங்க. காரை மட்டும் ட்ரைவரோட இங்க அனுப்பு. நான் சொல்ற வரைக்கும். மத்ததை இங்க வரக்கூடாது. நான் பார்த்துக்குறேன்." என்றேன்.

"அக்கா. உன்னால தனியா முடியுமா?" என்றான் கவலையாய்.

"நான் பார்த்துக்குறேன். நீ மிருகூட இரு" என்று வைத்துவிட்டு அடுத்து செய்ய வேண்டிய வேலைகளை முடித்து சாதாரணமாய் உள்ளே சென்றேன்.

அமைதியாய் நின்று அங்கு நடப்பவைகளை பார்த்து கொண்டிருந்தேன்.

அரை மணி நேரம் கடந்திருக்க, வந்திருந்த சொந்தங்கள் ஒவ்வொருவராக கிளம்ப கடைசியில் எங்கள் இரண்டு குடும்பங்களும் மட்டும் இருந்தது.

"பிரதிஷ் எங்கம்மா? ரொம்ப நேரமா காணலையே?" என்றார் அம்மா.

"அவனுக்கு ரொம்ப அவசர வேலை ஒரு மணி நேரத்துல வந்துருவெண்ணு சொல்லிட்டு போய்ருக்கான்மா. வந்துருவான்" என்றேன் சமாளிக்கும் விதமாக.

"அப்படியா சரிம்மா. என்ன புள்ளையோ? இங்க அவன் பொண்டாட்டிக்கு தானே ஜடை தைக்கிறாங்க அவன் கூட இருக்கணும்ல?' என்றார் முணுமுணுப்பாய்.

"அம்மா. சும்மா புலம்பிட்டே இருக்காதிங்க. அவனுக்கு ரொம்ப அவசர் வேலை அவனே எதிர் பார்க்காம வந்துருச்சு. வந்துருவான்." என்றேன் சற்று கோபமாய்.

"என்னமோ போங்க" என்று முகத்தை திருப்பி கொண்டார் என் அம்மா.

.திடீரென்று, காவல் உடையில் உள்ளே நுழைந்த ஒருவர், "யாரும்மா இங்க நளினி?" என்றார் விரைப்பாக.

"என் பொண்ணு தாங்க" என்று முன்னே வந்து நின்றார் மிருவின் அப்பா.

"எங்க அவங்க?" என்றார் காவல் அதிகாரி.

"ஏன் ஸார்? அவ இங்க இல்ல பெங்களூர்ல வேலை செய்றா. எதுக்கு கேக்குறிங்க?" என்றார் மாமா.

"அவங்க மேல கம்ப்லைன்ட் வந்துருக்கு. அவங்களை விசாரிக்கணும்" என்றார் போலீஸ்.

உடனே நளினியின் முகம் கலவரம் அடைந்தது.

"அவ மேல எதுக்கு கம்ப்ளைண்ட்? யார் கொடுத்தது?" என்றார் மாமா.

"அவங்க வேலை செய்ற கம்பனில இருந்து. அவங்க ஆபிஸ்ல பத்து லட்சம் திருடிட்டு இங்க வந்துருக்கிறதா எங்களுக்கு புகார் வந்துருக்கு. அது சம்பந்தமா அவங்களை விசாரிக்கணும். உள்ளே வச்சிக்கிட்டே இல்லன்னு சொல்லகூடாது. கூப்பிடுங்க" என்றார் போலீஸ்.

"அவ இங்க உண்மையாவே இல்லைங்க" என்றார் என் அப்பா.

"ஓஹ்! அப்போ நீங்க என் கூட வாங்க. உங்க பொண்ணு வந்தப்புறம் தான் உங்களை விடமுடியும். அதுவரைக்கும் நீங்க ஸ்டேஷன்ல தான் இருக்கணும்" என்றார் போலீஸ்.

"அவர் எந்த தப்பும் பண்ணலையே அவர் ஏன் வரணும்?" என்றாள் மிருவாய் நடித்து கொண்டிருந்த நளினி.

"நீங்க யாரு?" என்றார் போலீஸ்.

"நான் மிருநாலினி. நளினியோட தங்கை." என்றாள்.

"இங்க பாரும்மா நீ யாரா வேணா இருந்துட்டு போ. நளினி மேல வந்துருக்க கம்ப்ளைண்ட் சாதாரண கேஸ் கிடையாது. போர்ஜெரி. போர்டோன்டி கேஸ். இங்க பாருங்க நீங்க மட்டும் வரிங்களா? இல்லை உங்க குடும்பம் மொத்தமும் தூக்கி உள்ள வைக்கவா?" என்றார் போலீஸ் கடுமையாய்.

"நீங்க அவரை அரெஸ்ட் பண்ண முடியாது. ஏன்னா நலினி எந்த தப்பும் பண்ணலை." என்றாள் மிரு (நளினி).

"அது உனக்கு எப்படி தெரியும்? உன்கிட்ட போன்ல சொன்னாளா? " என்றார் போலீஸ்.

"இல்ல.. அது வந்து.." என்று திணற.

"என்ன எதுக்கு இப்போ திணற்ற?" என்றார் முறைப்பாய்.

"ஏன்னா நான் தான் நளினி. நான் எதுவும் பணம் எடுத்துட்டு வரலை. யாரோ என் மேல பொய்யா கம்ப்லைண்ட் கொடுத்திருக்காங்க." என்றாள் நளினி.

"இப்போ தான் கொஞ்ச நேறதுக்கு முன்னாடி. நீ நளினியோட அக்கான்னு சொன்ன? யாருக்கிட்ட ஏமாத்த பார்க்கிற?" என்றார் அதட்டலாய்.

ஒரு நொடி தான் மாட்டி கொண்டதை உணர்ந்த நளினி அனைவரையும் ஒரு நொடி திரும்பி பார்த்தாள்.

"ஆமா. நான் தான் நளினி. என் அக்கா எங்கயோ யாருக்கு சொல்லாம் ஓடி போயிட்டா. அதான் எல்லாரும் கஷ்டபடுவாங்களேன்னு இப்படி நடிச்சேன்." என்றாள் நளினி நாகூசாமல்.

"ரொம்ப நன்றி அண்ணா. இதுக்கு மேல நாங்க பேசிக்கிறோம். நீங்க கிளம்புங்க" என்றேன் நான் அவரின் அருகில் சென்று.

"என்னம்மா இதுக்கெல்லாம் நன்றி சொல்லிக்கிட்டு. உன் புருஷன் என் ஃப்ரெண்ட்மா. நீயும் என் தங்கச்சி. நீ ஹெல்ப் கேட்டு நான் பண்ணாம் இருப்பேனா? ஆனா இவ ரொம்ப பெரிய தப்பு பண்ணிருக்கா. இவ மேல கேஸ் கொடுத்தா உள்ள தள்ளி முட்டிக்கு முட்டி தட்டிருவேன்." என்று நளினியை முறைத்தார்.

"வேணாம்ண்ணா. எனக்கு உங்க உதவி வேணும்னா உங்களை கூப்பிட்றேன்" என்றேன்.

"சரிம்மா. அப்போ நான் கிளம்புறேன்." என்று மற்றவர்களிடம் திரும்பியவர்.

"நான் உண்மையான போலீஸ் தான். என்ன நடந்ததுன்னு தங்கச்சி சொல்லுவாங்க. இனி இது மாதிரி நடந்துகாம பார்த்துகோங்க." என்று கிளம்பினார்.

"என்னம்மா இதெல்லாம்?" என்றார் என் அப்பா.

"அப்பா! " என்று ஆரம்பித்து நடந்த அணைத்தையும் கூறி முடித்தேன்.

பிரதீஷும் மிருவை கூ.ட்டி கொண்டு உள்ளே நுழைந்தான்.

"அம்மாடி மிரு" என்று மிருவின் அம்மா அவளிடம் நெருங்க, பிரதிஷ் அவளை தனக்கு பின்னால் மறைத்தான்.

"யாருமே என் மிருகிட்ட வரணும்னு நினைக்காதிங்க. நீங்க ஒழுங்கா பார்த்துப்பிங்கன்னு தானே ஒரே ஒரு நாள் விட்டுட்டு போனேன். அதுக்குள்ள என் வாழ்க்கையே அழிக்க பார்த்துட்டா உங்க இன்னொரு பொண்ணு. இந்த கொஞ்ச நாள்ல என்னை சித்த பிரம்மை பிடிக்கிற அளவுக்கு கொண்டு வந்து விட்டுட்டா. அவளுக்கு நான் என்ன பாவம் பண்ணேன். என் மிரு தான் என்ன பாவம் பண்ணா?" என்றான் பிரதீஷ் மிகவும் கோபமாய்.

"ஏன்டி இப்படி பண்ண?" என்று மிருவின் அம்மா நளினியின் கண்ணாகளில் மாற்றி மாற்றி அறைய, கன்னத்தை பிடித்துக்கொண்டு அமைதியாக இருந்தாளே தவிர ஒரு சொட்டு கண்ணீர் கூட வரவில்லை.

"அவ ஏன் இபாப்டி பன்னான்னு எனக்கு தெரிஞ்சாகனும். இல்ல இப்போவே போன அதே இன்ஸ்பெக்டர் கிட்ட கம்ப்லைண்ட் பண்ணிடுவேன். இப்போ கூட உங்க ரெண்டு பேர் முகத்துக்காக தான் இவளை விட்ருக்கேன்." என்று நளினியை முறைத்தான்.

"ஆமா! நான் தான் அவளை கடத்தி வச்சேன். பிறந்ததிலர்ந்தே எல்லாமே அவளுக்கு தானா? நான் அவளைவிட பத்து நிமிஷம் மட்டும் தான் சின்னவ. ஆனா எல்லோருமே அவளை மட்டும் எந்த நேரமும் தலைல தூக்கி வச்சி ஆடினாங்க. அப்போ ஆரம்பிச்சது இந்த வெறுப்பு. அவளுக்கே தெரியாம பாசமா பேசியே அவகிட்ட இருக்க எனக்கு பிடிச்ச எல்லாத்தையுமே வாங்கிக்கிட்டேன்.

பொருளுங்களையே விடாத நான். இவ்ளோ அழகான என் மாமாவை விடுவேனா என்ன? அதான் அவளுக்கு தெரியாம அவளை கடத்தினேன். ஆனா இவ கண்டுபிடிச்சிட்டா. அதான் இவ இடத்துக்கு நான் மாறிட்டா எப்படி இருக்கும்னு யோசிச்சு பார்த்தேன். அவளா மாறினேன்.

மாமாவை பார்க்கும்போதெல்லாம் மனசுக்குள்ள அப்படியே ராக்கெட் பறக்கும். முதல்ல இவளா மாறினேன். அப்புறம் அவர்கிட்ட மிரு இருந்து விலகுற மாதிரி நடிச்சேன். அதனால இங்கயே இருந்தேன். இவளையும் வேற இடத்துல தான் வச்சிருந்தேன். சரி இன்னைக்கு தான் இங்க கொண்டு வந்தேன். என் கெட்ட நேரம் மாட்டிக்கிட்டேன்.

இதைவச்சி என்னவஓ பிளான் பண்ணி வச்சிருந்தேன். கடைசில மாமாகூட சந்தோஷமா வாழணும்னு கனவு கண்டு வச்சிருந்தேன், ஆனா எல்லாமே பொடி ஆகிடுச்சு. " என்றாள் நளினி.

அவளின் அருகே மெதுவாய் வந்த பிரதீஷ் ஓங்கி ஒரு அரை விட்டான்.

"இனி இந்த வீட்டுக்கு எப்போவும் என் பொண்டாட்டி வரமாட்டா. உங்களுக்கு வேணும்னா என் வீட்டுக்கு வந்து பார்துடு போங்க. நீங்க அவளை பெத்த்வங்க உங்களுக்கு தெரியலை எந்த வித்யாசமும்? வா மிரு" என்று அவளை கூட்டி சென்றான்.

அனைவரும் அவனின் பின்னே அமைதியாய் சென்றோம்.

பின்னர் அந்த அதிர்ச்சியில் இருந்து மிரு மீண்டு வர மிகவும் கடினமாக இருந்தது. பிரதீஷ் அவளை கண்ணுக்குள் வைத்து பார்த்துக்கொண்டான். அவர்களுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இப்பொழுது அவர்களின் வாழ்க்கை இனிமையாக செல்கிறது.​
 
Top Bottom