Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


BK NOVEL பீனிக்ஸ் கிளியே - Tamil Novel

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
607
Reaction score
782
Points
93
வணக்கம் 🙏🙏🙏,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டியில் கலந்துகொள்ளும் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐💐.

போட்டியின் விதிமுறைகள், காலக்கெடு மற்றும் பரிசுகள் பற்றிய விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் விபரமாக குறிப்பிடப்பட்டுள்ளது. மீண்டும் ஒருமுறை அதை படித்துப் பார்த்துவிட்டு உங்களுக்கு முழு சம்மதம் என்றால், உங்களுடைய கதையை இந்த திரியில் தொடர்ந்து பதிவிடவும்.

உங்களுடைய கதை வாசகர்களை மகிழ்விக்கும் வகையில் அமையவும் போட்டியில் நீங்கள் வெற்றிபெறவும் வாழ்த்துகிறேன்.

மனமார்ந்த வாழ்த்துக்கள் 😍😍😍

நன்றி...
- நித்யா கார்த்திகன்

 
Last edited:

Nancy mary

New member
Vannangal Writer
Messages
18
Reaction score
16
Points
3
🔥அத்தியாயம் - 1🔥

செங்கதிரவன் தன்னை ஒரு பொருட்டாய் மதிக்காமல் பரபரப்பாக பறந்திடும் மனிதர்களை அக்னி பார்வை வீசி பஷ்பமாக்க முயல,

அதனை தனது மேகமென்னும் போர்வை கொண்டு வானம் தடுத்திட,
அந்நிகழ்வு அழகிய மாலை பொழுதிற்கு சாட்சியானது.

இவ்வாறாக தங்களை சுற்றி நடக்கின்ற களேபரங்களை காண தவறிய மக்களோ, போர்களத்திற்கு நிகரான பரபரப்புடன் காட்சி தந்த மைதானத்தின் பயிற்சி விளையாட்டில் பார்வையை பதித்து கொண்டிருக்க,

அங்கே பல்வேறு விதமான போட்டிகளுக்கு பயிற்சியெடுத்து கொண்டிருந்த மாணவர்களும் தங்களின் பயிற்சியை நிறுத்திவிட்டு ஒரு குறிப்பிட்ட பயிற்சி விளையாட்டில் தங்களுடைய கண்களை பதித்திருந்தனர்.

ஆங்காங்கே குழுமியிருந்த பார்வையாளர்களின் கவனத்தையும் ஓட்டுமொத்தமாய் ஈர்த்த வளைதடி பந்தாட்ட வீராங்கனைகள் என அழைக்கபடும் ஹாக்கி வீராங்கனைகள் பந்தினை லாவகமாக கையாண்டு ஷமீராவை நோக்கி தள்ளிவிட,

அதை சரியாக தனது மட்டையை வைத்து பிடித்தவளை எதிரணியினர் சூழ்ந்துகொண்டனர்.

தன்னை சூழ்ந்த எதிரணியை பார்த்து மிதப்பாய் ஒரு புன்னகையை சிந்தியவாறே வேகமாய் மட்டையை வீச பந்து எதிரணியை ஏமாற்றி எதிர் திசையை நோக்கி பறந்தது.

அங்கு சூழ்ந்திருந்த பார்வையாளர்களின் ஆர்வத்திற்கு தீணிப் போட்ட ஷமீராவோ, எதிரணியிடம் சிக்காதவாறு ஹாக்கி மட்டையை கொண்டு பந்தை லாவகமாக கையாண்டு கோல் போடுவதற்காக பல தடைகளை தாண்டி ஓடத் துவங்கினாள்.

இதனையெல்லாம் பார்வையாளர்களுக்கு மத்தியிலிருந்தவாறு பார்த்து கொண்டிருந்த ஐஸ்வர்யாவோ உற்சாக கூக்குரலெடுத்து கத்த,
அவளின் குரலினை விட சத்தமாய் ஒலித்த ஆணின் குரலினை கேட்டு திடுக்கிட்டு
பின்னால் திரும்பி பார்த்தாள்.

அங்கே அவளின் ஆருயிர் நண்பனான கிருஷோ இப்பயிற்சி விளையாட்டை போட்டி விளையாட்டாக எண்ணி கொண்டு உற்சாகப்படுத்த,

அவனின் வசீகரிக்கும் அழகிலும் உற்சாகமளிக்கும் செயலிலும் பல பெண்கள் தங்களின் இதயத்தை தொலைத்து கொண்டிருந்தனர்.

அவனை இவ்விடத்தில் சற்றும் எதிர்பார்க்காத ஐஸ்வர்யாவோ, 'இவன் இங்க என்ன பண்றான், இங்க இவனுக்கு யாரையுமே தெரியாதே இந்தபக்கம் இவன் வந்ததும் கிடையாது அப்போ இங்க யாரை என்கரேஜ் பண்ணிட்டு இருக்கான்' எனச் சிந்தித்தவளோ,

அவன் அறியாவண்ணம் அவனிற்கு பின்னால் சென்று மெதுவாய் தோளினை சுரண்ட அதனை தட்டி விட்டு போட்டியில் முழ்கினான்.

அப்பொழுது அங்கே ஷமீராவோ லாவகமாய் பந்தினை அடித்து கோல் போட,

அதனை கண்டு தன்னையும் மீறி எழுந்து நின்று கத்தி ஆரவாரம் செய்த கிருஷை பார்த்த ஐஸ்வர்யா அவனின் தலையிலேயே வேகமாய் தட்ட,

அதில் கோபம்கொண்டு திரும்பியவனின் கண்களுக்கு காளியாய் காட்சியளித்த ஐஸ்வர்யாவை பார்த்து அதிர்ந்த கிருஷோ தன்னை சமாளித்துகொண்டு ஒரு அசட்டு புன்னகையை உதிர்த்தான்.

அதனையெல்லாம் அசட்டை செய்தவளோ அவனின் சட்டையை கொத்தாய் பிடித்துக்கொண்டு அங்கிருந்து இழுத்து சென்று சரமாரியாக கேள்வி கணைகளை தொடுத்தாள்.

"கிருஷ் நீ இங்க என்னடா பண்ற...
உன்னைய நான் இங்க எதிர்பார்க்கவே இல்லயே" எனக் கேட்க,

"அது... அதுவந்து ஐஸூ.. நா நான்..." எனக் கூற தயங்கினான்.

அதனை கேட்ட ஐஸ்வர்யாவோ, "என்னடா ஏன் வந்தனு கேட்டா ஓட்ட டேப்ரெக்கார்டு மாதிரி தேயுற என்னாச்சு?"
சரி, அதையெல்லாம் விடு இப்போ எதுக்கு நீ மீரா அக்கா ஜெயிச்சதுக்கு கத்தி ஆர்பாட்டம் பண்ற அவங்க ஜெயிச்சா நீ ஏன் சந்தோஷபடணும்" எனக் கேட்க,

"என்னாது மீரா அக்காவாஆஆஆஆ..." என அதிர்ந்த கிருஷிடம்,

"ஆமா அவங்க அக்கா தான், நம்மல விட ஒரு வயசு மூத்தவங்க நம்ம பிரண்ட் தாரா வேலை பார்க்குற கடையில தான் இவங்களும் வேலை பார்க்குறாங்க; அவளை பார்க்க போறப்போ இவங்களோடயும் பழக்கமாச்சு அதான் அவங்களை என்கரேஜ் பண்ண இங்க வந்தேன் ஆனா நீயும் இந்த வந்து ஆடிட்டு இருக்க என்னடா விஷயம்..?" எனச் சந்தேகமாய் வினவ,

அதனை கேட்டு நீண்ட பெருமூச்சை விட்ட கிருஷோ,

"அதை ஏண்டி கேட்குற நானும் போன வாரம் தாராவை பார்க்க அவ வேலை பார்த்த கடைக்கு போனேனா அப்போதான் இவளை பார்த்தேன்,

அவளோட குணமும் வாடிக்கையாளர்கள்கிட்ட முகம் சுழிக்காம பதிலளிக்கிற விதமும் என்னைய ரொம்பவே ஈர்த்திருச்சு அப்படியே அவளை பாலோ பண்ணி இங்க விளையாட வருவானு தெரிஞ்சுகிட்டு இங்கயே இம்பிரஸ் பண்ணலாம்னு பார்த்தா இப்படி மிஸ்ஸாகிருச்சே.." என நொந்துகொண்டான்.

அதனை கேட்டு சிரித்த ஐஸ்வர்யாவோ, "தம்பி, அப்படி ஏதாவது எண்ணமிருந்தா அதை இங்கயே குழிதோண்டி புதைச்சிரு; ஏன்னா அதெல்லாம் முடியாத காரியம்"

"அதெப்படி முடியாம போகும் அதெல்லாம் நான் ஈஸியா காதலிக்க வைச்சிருவேன் ஏன்னா ஐயாவோட டேலண்ட் அப்படி" எனக் காலரை தூக்கி விட்டு பெருமை பேசினான்.

"ஓ அப்படியா சார், அதையும் தான் பார்த்திடலாமே என்கூடவே வா நான் அது முடியாத விஷயம்னு உனக்கு நிருபிக்குறேன்" என அங்கிருந்து அழைத்துகொண்டு சென்றாள்.

இங்கு பயிற்சியெல்லாம் சிறப்பாய் முடிந்துவிட, அதில் தன்னுடைய முழு திறனால் அனைவரையும் கவர்ந்த ஷமீராவிடம் வந்த அவளின் பயிற்சியாளரோ,

"வெல் டண் மீரா, நீ நேசனல் லெவல் போட்டிக்கு நாளுக்கு நாள் சிறப்பா தயாராகிட்டு வர இதேமாதிரி பிராஸ்டிஸ் பண்ணேனா கண்டிப்பா ஸடேட் லெவல்ல ஜெயிச்ச மாதிரியே நேசனல்ஸ்லயும் ஜெய்ச்சிடுவ சூப்பர் மீரா" என பாராட்டினார்.

அதனை கேட்டு மெலிதாய் புன்னகைத்தவளின் தலைமுடியை கலைத்துவிட்ட கோச் அங்கிருந்து சென்றுவிட,

அப்பொழுது அங்கே ஒருவன் ஓரமாய் நின்று ஷமீராவை சைட்டடித்து கொண்டிருந்தான்.

அதனை பார்த்து முகத்தை கடுமையாக்கியவளை இயல்பாக்கும் பொருட்டு அவளிடம் பேச்சு கொடுத்த அவளின் தோழியோ,

"ஹேய் மீரா, இதான் என்னோட அண்ணே உன்னோட திறமையை பத்தி நான் என் அண்ணன்கிட்ட நிறைய சொல்லிருக்கேன் ஆனா இவன் அதையெல்லாம் நம்பவே மாட்டான்; அதான் இன்னைக்கு நேர்லயே கூட்டிட்டு வந்து நிருப்பிச்சிட்டேன் என்ன அண்ணா இப்போயாவது நான் சொல்றதை நம்புறீயா" என ஷமீராவை சைட்டடித்தவனை நோக்கி வினவ,

தங்கையின் பேச்சிற்கு ஆமென்று தலையாட்டியவனோ ஷமீராவையே விழுங்குவது போல பார்த்து வைத்தான்.

அவனின் பார்வையின் அர்த்தம் உணர்ந்தவளோ அவளின் கையுறைகளை கஷ்டபட்டு கலட்டிகொண்டிருக்க அவளின் அவஸ்தையை உணராதவனோ,

"உன்னைய பத்தி என் தங்கச்சி நிறைய சொல்லிருக்கா; அப்போ எல்லாம் நான் அதை சுத்தமா நம்பல ஆனா இப்போ கண்கூடா பார்த்தபுறம் நம்பாம இருக்கவே முடியல உண்மையாவே சூப்பரா விளையாண்டிங்க..." என பேசிகொண்டிருந்தவனின் பேச்சு மீரா தனது கையுறையை கொண்டு அடித்ததில் தடைபட்டு போனது.

"அச்சசோ சாரிங்க, நான் கிளவுஸை கலட்ட சிரமமா இருக்குனு வேகமா கலட்டுனேனா அதுல இப்படி ஆச்சு சாரி" எனக் கேட்க,

"பரவாலங்க, நோ பிராப்ளம் நீங்க சுத்தத்தை விரும்புற ஆளுனு தங்கச்சி சொல்லிருக்கா அதையும் இப்போதான் நேர்ல பார்க்குறேன் சூப்பர்ங்க" எனப் பாராட்ட,

அவனின் தங்கையோ, "அச்சசோ, என்ன மீரா பார்த்து கழட்ட மாட்டீயா அண்ணனோட கன்னம் சிவந்து போச்சே; நீ இங்கயே இருனே நான் போய் உனக்கு மருந்து எடுத்துட்டு வரேன்" என அங்கிருந்து விரைந்தாள்.

அவள் சென்றதும் அவனின் சட்டை காலரை பிடித்து முறைத்து பார்த்த மீராவோ, "உன் தங்கச்சி இருந்ததால தான் தெரியாம அடிக்குற மாதிரி அடிச்சேன் இல்லனா நல்லா நாளு சாத்து சாத்தியிருப்பேன்; என்ன தைரியமிருந்தா என்னையவே தப்பா பார்ப்ப; இனி நீ ஊர்ல எந்த பொண்ணையும் நிமிர்ந்து கூட பார்க்ககூடாது மீறி பார்த்தேனா அப்படி பார்க்குற கண்ணை நோண்டிடுவேன் ஓடுடா" எனக் கூறி காலரை விட,

அவளின் பேச்சிலேயே அதிர்ந்து நின்றவனோ இப்பொழுது மொத்தமாய் பயந்து அங்கிருந்து ஓடினான்.

அவன் ஓடுவதை பார்த்த அவனின் தங்கையோ,
"அண்ணே எங்கண்ணே போற அடிப்பட்டதுக்கு மருந்து போட்டுக்கோ" எனக் கத்த,

"ஹேய் அவருக்கு ஏதோ முக்கியமான வேலை வந்திருச்சாடி அதான் ஓடுறாரு நீ கவலைபடாத அண்ணனுக்கு சீக்கிரமே சரியாகிடும்" என மீரா சமாதானப்படுத்த அதனை கேட்ட தோழியோ அண்ணனை எண்ணி கவலைக் கொண்டபடியே ஷமீராவோடு புறப்பட்டாள்.

இது தினமும் நடக்கும் வாடிக்கை என்றறியாமல் ஓரமாய் நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்த கிருஷின் இதழிலோ அழகிய கீற்று புன்னகை ஒளிர,

அதை கண்டு அதிர்ந்த ஐஸ்வர்யாவோ, "டேய் வேணாம்டா, இதெல்லாம் உனக்கு சரிபடாது அவ உன்னைய விட மூத்தவ டா" எனக் கூற,

அதற்கு கிருஷோ, "அவ என்னைய விட மூத்தவ மட்டுமில்ல எனக்கு ஏத்தவளும் அவதான்; இவ்ளோ நாளா எனக்கேத்த தேவதையை சென்னை சிட்டி முழுக்க சுத்தி திரிஞ்சு இப்போதான் கண்டுபிடிச்சிருக்கேன் இனி இவளை காதலிக்குறது தான் என்னோட முழுநேர வேலையே..." எனக் கூற இதெல்லாம் எங்கே போய் முடியுமோ என விதியை நொந்தபடி புலம்ப துவங்கினாள் ஐஸ்வர்யா.

🔥🔥🔥🔥🔥

சென்னை கடற்கரை சாலையில் நான்கைந்து வாகனங்கள் போட்டி போட்டு சீறி பாய்ந்து பறந்து கொண்டிருக்க,

தங்களின் விருப்பமான ஸ்ட்ரீட் ரேஸின் மூலம் தங்களது உயிருக்கே சவால் விடும் விதமான பல சாகசம் புரியும் இந்த ரேஸர்களை உற்சாகபடுத்தவே அங்கு ஒரு கூட்டம் கூடியிருந்தது.

அதிலும் தங்களின் அபிமான இரு ஆட்ட நாயகர்களும் பங்கேற்கும் ரேஸானதால் அவர்களின் யார் வெற்றியாளராய் வலம் வருவார்கள் எனப் பார்க்க பேராவலோடு காத்திருந்தனர்.

பொதுவாகவே மக்கள் நடமாட்டம் குறைகின்ற வேளையில் இப்படிபட்ட ஸ்ட்ரீட் ரேஸர்களின் அட்டகாசம் அதிகபடியாக தலைதூக்குவது பல முக்கிய நகரங்களின் சகஜமான ஒன்றாகும்.

நகரங்களின் குறைந்தபட்சம் 10ல் இருந்து 15 அனுமதியில்லா ஸ்ட்ரீட் ரேஸர்களை கொண்ட குழுக்கள் இருக்கும்.

கல்லூரி பயிலும் இளைஞர்களே அதிகம் பங்கேற்கும் இவ்வகையான ரேஸிற்கு முறையாக பயிற்சியளிக்கபட்டு நன்றாக பயின்ற வாகன ஓட்டிகளே ரேஸிற்கு அனுமதிக்கபடுகின்றனர்.

ஒவ்வொரு குழுவிற்கும் தனிபட்ட‌ முறையில் முன்றெழுத்து கொண்ட குறியீடு பெயர் வழங்கப்படும்.

அதில் முதல் எழுத்து அவர்கள் எந்த ஏரியாவை சார்ந்தவர்கள் என்பதை குறிக்கும்.

பொழுதுபோக்கிற்காகவும் மக்களின் மனதில் இடம் பிடிப்பதற்காகவும் துடிக்கும் இளைஞர்களுக்கு இவ்வகையான ஸ்ட்ரீட் ரேஸ்கள் பெரிதும் உதவ,

மேலும் இதன்மூலம் பெட் மேட்ச் என வைத்து குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாயிலிருந்து பெட் கட்டியும் சம்பாதிக்கின்றனர்.

அதுப்போலவே இங்கும் ஒரு ஸ்ட்ரீட் ரேஸ் நடந்து கொண்டிருக்க,

அதில் இப்பொழுது கொடுக்கபட்ட போட்டி என்னவென்றால் பலவிதமாக சாகசங்களை செய்து கொண்டே வேகமாய் கொடுக்கபட்ட இலக்கை யார் அடைகிறார்களோ அவர்களே வெற்றியாளராய் நிர்ணயிக்கபடுவர் என கூறிட, அதற்காக ஐந்து நபர்கள் போட்டி போடுகின்றனர்.

அதிலும் தங்களின் அபிமான ரேஸர்களாக கருதப்படுகின்ற ரேண்டி மற்றும் ராக்கிக்கு மத்தியில் எவர் வெற்றியாளராய் வருவார்கள் எனப் பார்க்க பதட்டத்தோடு மிகுந்த ஆவலாக பார்வையாளர்கள் காத்திருந்தனர்.

அப்பொழுது அங்கு பார்வையாளர்களுள் ஒருவன் மட்டும் எவ்வித பதட்டமின்றி கூல்டீரிங்ஸை குடித்து கொண்டிருக்க,

அதை பார்த்த அவனின் நண்பனோ,
"டேய் துருவ், இங்க பயங்கரமா ரேஸ் போயிட்டு இருக்கு இதுல யாரு ஜெயிப்பாங்கனு எல்லாருமே பதறிட்டு இருக்கோம்; ஆனா நீ என்னனா கொஞ்சம் கூட டென்சனே இல்லாம கூலா இருக்க, உன்னோட பேவரைட் ரேஸரும் தாண்டா போட்டி போடுறாரு அவருக்காகவாவது கொஞ்சம் பதட்டத்தை காட்டலாம்ல டா" என கேட்க,

தனது நண்பனின் கேள்வியில் குறுஞ்சிரிப்பை வெளிகாட்டியவனோ, "இங்க பாரு மச்சி, என்னைய நீ மத்த நாள்ல ரேஸ் பார்க்க கூட்டிட்டு வந்திருந்தா கண்டிப்பா நீ சொல்றமாதிரி நான் பதறிருப்பேன் ஆனா என் தலைவன் ரேஸர் ராக்கி ரேஸ்ல வர இரண்டு நாளுல மட்டும் எவ்ளோ பெரிய ரேஸரா இருந்தாலும் அவனை எதிர்த்து ஜெயிக்கவே முடியாது; இதுவரைக்கு எந்த ரேஸ்லயும் தோக்காம தில்லா விளையாடி ஜெயிக்குறவன் இதுல மட்டும் தோத்திடுவானா அதான் ரிசல்ட் தெரிஞ்ச மேட்ச்சுக்கு ஏன் டென்சனாகணும்னு கூலா இருக்கேன்" எனக் கூறிட,

அதனை கேட்ட நண்பனோ, "ஹேய் மச்சி, அந்த சீனெல்லாம் போன மேட்ச் வரைக்கும் தான் இப்போ அவனை விட பெரிய ரேஸரான ரேண்டி வந்துட்டான்; இவனை தாண்டி உன் ரேஸர் ராக்கியால ஒண்ணுமே பண்ண முடியாது" எனக் கெத்தாய் கூறினான்.

அதே சமயம் ரேஸில் பைக் ஓட்டிகொண்டிருந்த ராக்கியோ வளைத்து நெளிந்து வண்டி தரையை உரசும்படி பக்கவாட்டில் சாய்ந்து ஓட்டி சாகசம் காட்டி மக்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்தான்.

பின்பு, வாகனத்தை சகஜநிலைக்கு கொண்டு வந்த மறுநொடியே வீலிங் எனப்படுகின்ற ஒன்றை சக்கரத்தின் மூலம் வாகனத்தை ஓட்டும் முறையில் முன்சக்கரத்தை உயர்த்தி பின் சக்கரத்தின் உதவியுடன் ஆக்ஸிலேட்டரை லேகமாய் முறுக்கி பயணித்தவாறே அவனுக்கு முன்னால் சென்ற ஒவ்வொரு ரேஸர்களையும் கடந்து சென்று ரேண்டியிடம் வந்தடைந்து வண்டியை சகஜமாக்கி அவனுக்கு இணையாக ஓட்ட துவங்கினான்.

திடீரென தனக்கு நிகராய் வந்து நின்றவனை அதிர்ச்சியாய் பார்த்த ரேண்டியோ ராக்கியின் வாகனத்துடன் போட்டிபோட முயல,

ரேண்டியின் அதிர்ச்சியை ஒரகண்ணால் பார்த்து ரசித்த ராக்கியோ வண்டியின் வேகத்தை கூட்டினான்.

இன்னும் இலக்கை நெருங்க சிறிது தூரமே இருக்க அதனை நோக்கி‌ ராக்கியும் ரேண்டியும் சரிக்கு சமமாய் போட்டி போட்டு கொண்டே சென்றனர்.

இதனையெல்லாம் பார்வைகளும் ஒருவனாய் பார்த்துக் கொண்டிருந்த துருவ்விற்கு திடீரென ஏற்பட்ட பரபரப்பு சூழ்நிலையை கண்டு மனதின் பயம் உண்டாக,

அப்பொழுது ரேண்டியை விட ஒரு அடி முன்னிலையில் முன்னேறிய ரேஸர் ராக்கியோ குறிப்பிட்ட இலக்கை முதல் ஆளாய் சென்றடைந்தான்.

அதே வேகத்தோடு பைக்கின் பிரேக்கை அழுத்தி பேக் வீலிங் மூலம் பின் சக்கரத்தை தூக்கிய நிலையில் வாகனத்தை நிறுத்திட ரேஸ் பார்த்துக்கொண்டிருந்த இளைஞர்களோ,

ராக்கி! ராக்கி! ராக்கி! என ஆரவாரம் செய்து உற்சாகப்படுத்தினர்.

அதைகேட்டு ரசித்தபடியே வாகனத்தை சகஜநிலைக்கு கொண்டு வந்து நிறுத்தினான் ரேஸர் ராக்கி.

கண்ணிமைக்கும் நொடியில் நடந்து முடிந்த சாகசத்தை பார்த்த துருவ்வோ பெருமூச்சு விட்டபடி ரேஸர் ராக்கியின் வெற்றியை கண்டு அகம் மகிழ்ந்து புன்னகைக்க,

அதேசமயம் ரேஸை பார்த்து அதிர்ந்த நண்பனோ, "மச்சி, இதெப்படி டா சாத்தியமாச்சு கடைசியா இருந்தவன் முதல் ஆளா வந்துட்டான் என்னால நம்பவே முடியலையே; நீ சொன்ன மாதிரியே இவன் பெஸ்ட் ரேஸர் தாண்டா; சரி வா எல்லாரும் அவன்கிட்ட ஆட்டோகிராப் வாங்குறாங்க நாமலும் போய் வாங்கலாம்" என கூறி அழைத்தான்.

அதற்கு துருவ்வோ, "இல்லடா, நான் வரல எனக்கு ரேஸர் ராக்கியோட ஆட்டோகிராப் வேணா அவனோட சேர்த்து போட்டோ எடுக்கிற வாய்ப்பு தான் வேணும்" என கண்கள் மின்ன ஆர்வமாய் கூறினான்.

"டேய் நீ சொல்றமாதிரியான போட்டோவை உன்னால எப்பயுமே எடுக்க முடியாது டா, தன்னோட முகத்தை யாருக்குமே காட்டாம ஹெல்மெட் போட்டே சுத்துறவன் எப்படிடா உன்கூட சேர்ந்து போட்டோ எடுக்க அனுமதிப்பான்" என எரிச்சலாய் வினவ,

அதனை கேட்ட துருவ்வோ, "மச்சி, ரேஸர் ராக்கி யாருக்குமே தன்னோட முகத்தை காட்டி போட்டோ எடுக்க அனுமதிக்க மாட்டான்னு எனக்கும் தெரியும் ஆனா அவனே ஒருத்தருக்கு இந்த வாய்ப்பை தந்தா எல்லாரும் என்ன சொல்லுவாங்க,

"அவரோட தீவிர ரசிகனா இருப்பான் போல அதான் ரேஸர் ராக்கியே இப்படி ஒரு வாய்ப்பு தந்திருக்கான்னு தானே சொல்லுவாங்க; அதுதான் எனக்கும் வேணும் பேருக்கும் புகழுக்கும் ஆசைபடுற ரேஸர்களுக்கு மத்தியில தன்னோட திறமையை மட்டுமே வெளிகாட்டுறவன் டா; அவனோட அடையாளத்தை காட்டாம பேர்ல இருந்து தப்பிச்சிட்டான் காசையும் பக்கத்துல இருக்கிற அனாதை ஆசிரமத்துக்கு தந்திடுவான் இப்படிபட்ட ஒரு ரேஸரோட முகத்தை பார்த்து போட்டோ எடுக்கிறது தாண்டா உண்மையான ரசிகனுக்கு பெருமை;
அதுவரை நான் ஆட்டோகிராப்போ வாங்க மாட்டேன் அவனோட சேர்ந்து போட்டோ எடுக்கிற முயற்சிகள்ல இறங்குவேன்" என கூறியவனோ நண்பனை அழைத்துகொண்டு வீட்டிற்கு விரைய,

அங்கு தூரமாய் நின்று ரசிகர்களுக்கு ஆட்டோகிராப் போட்டுக் கொண்டிருந்த ரேஸர் ராக்கியின் இதழிலோ அழகிய கீற்று புன்னகை ஒளிர்ந்தது.

🔥🔥🔥🔥🔥

அதேசமயம் சென்னையில் மற்றொரு பகுதியில் போக்குவரத்து காவலர்கள் வாகனங்களை பாலத்தின் வழி செல்ல அனுமதிக்காமல் வேறு வழியில் செல்லுமாறு திருப்பி அனுப்பி கொண்டிருந்தனர்.

"காண்டபிள்ஸ் பத்திரியாளர்களை கொஞ்சம் ஓரமா போக சொல்லுங்க" என உரத்த குரலில் உத்தரவிட்ட சேகர் ஐபிஎஸ்ஸோ தன்னருகிலிருந்த எஸ் பியை நோக்கி திரும்பினார்.

"ஹான் ஏதோ சொல்ல வந்தீங்களே என்ன விஷயம்" எனக் கேட்க,

"சார் டெத் பாடி மேல இந்த பேப்பர் இருந்தது, இந்த பேப்பர்ல எழுதிருக்கிறதை வைச்சு தான் டெத் பாடி யாரோடதுனே எங்களுக்கு தெரிஞ்சது சார் அந்தளவுக்கு உடலை கூறுபோட்டு வெட்டிருக்காங்க ஒரு முடியை கூட நாளா வெட்டி கொடூரமா கொண்ணுருக்காங்க சார் அதுவும் கொலையானது இந்த ஏரியா இன்ஸ்பெக்டர்" எனக் கூற,

இதனை கேட்டு அதிர்ந்தவரோ, "வாட், இந்த ஏரியா இன்ஸ்பெக்டரா அவருக்கு இப்போதானே பிரமோசன் தரலாம்னு மேலிடத்துல பேசிட்டு இருந்தோம் அதுக்குள்ள இது எப்படி நடந்தது.." எனக் வினவ,

"அதுதான் சார் எங்களுக்கும் புரியல, ஒருவேளை இது அவரோட வளர்ச்சியை பிடிக்காத யாரோ ஒருத்தரோட வேலையா இருக்குமோனு தோணுது சார்"

"நோ நோ, அப்படி நடக்க வாய்ப்பே இல்ல; இவரோட வளர்ச்சியை பிடிக்காம கொலை பண்றவங்க கூலிக்கு ஆள் வைச்சு கொல்லுவாங்க அது இந்தளவுக்கு கொடூரமா இருக்க வாய்ப்பில்லை; ஆமா இதென்ன ஏதோ நம்பர் 3 னு எழுதியிருக்கு"

"ஆமா சார், இது எதுக்காகனு தெரியல இது போலிஸோட டெத் பாடினு அவங்களை பத்தின விவரத்தை எழுதி நம்பரும் போட்டிருக்காங்க இதுக்கு ஏதாவது அர்த்தம் இருக்குமா சார்"

"அப்படிதான் எனக்கும் தோணுது, ஒருவேளை இது கொலைகளுக்கான எண்ணிக்கையா கூட இருக்கலாம் இதுக்கு முன்னாடி இதேமாதிரி ஏதாவது இரண்டு கொலைகள் நடந்திருக்கலாம் அது நம்ம கவனத்துக்கு வராமலும் இருந்திருக்கலாம்; நீங்க ஒண்ணு பண்ணுங்க இதுக்கு முன்னாடி இந்தமாதிரி ஏதாவது கொலை நடந்ததா அது எந்த ஸ்டேஷனோட கண்ட்ரோலுக்கு கீழ வந்துச்சுனு விசாரிச்சு சொல்லுங்க; அப்படி ஏதாவது இருந்தா கண்டிப்பா இது சீரியல் கொலைகாரனோட வேலையா இருக்கலாம் அப்படிபட்ட ஒருத்தன் மக்களுக்கு மத்தியில வாழ்றது நல்லதில்லை; சரி, வாங்க டெத் பாடியை பார்ப்போம்" என கூறிக்கொண்டு வேக எட்டுக்கள் வைத்து முன்னேற,

அவரின் பின்னே சென்ற எஸ் பியோ, 'ஒருவேளை இவரு சொல்ற மாதிரி கொலை நடந்திருந்தா சம்மந்தபட்ட ஸடேஷன் போலிஸ்களுக்கு சிறப்பான கவனிப்பு கிடைக்குமே பாவம் யாரு மாட்ட போறாங்களோ' என பரிதவித்தபடி பின்னால் ஓடினார்.

அங்கு பிணத்தின் அருகே அதனின் நிலையை பார்த்த பலரும் வயிற்றை பிரட்டி கொண்டு வாந்தி எடுக்க சேகராலும் சில அடி தூரத்திற்கு மேல் செல்ல முடியவில்லை ஆதலால் கர்ச்சிப்பால் முகத்தை மூடியபடியே பார்த்தவரோ பிணத்தின் நிலையை கண்டு அதிர்ந்து போனார்.

"சார், சாயங்காலம் இந்தபக்கமா ஜாக்கிங் போனவரு இதை கவனிச்சு நமக்கு தகவல் சொன்னாரு இது போலிஸோட பிணம்னு தெரிஞ்சதும் மீடியாவும் வந்துட்டாங்க"

"சரி இங்க ஏதாவது ஆதாரம் கிடைச்சதா"

"இல்ல சார், இந்த பேப்பர் தான் ஒரு கவர்ல இருந்த மாதிரி கிடைச்சது; அதுலயும் எல்லாமே டைப்படிச்சு இருக்கிறதால கொலையாளியோட கையெழுத்து கூட எப்படி இருக்கும்னு தெரியல"

"அப்போ புத்திசாலியா காய் நகர்த்திருக்காங்கல எப்பயுமே போக்குவரத்துக்கு பஞ்சமில்லாத பாலத்துலயே இப்படி நடந்திருக்குனா இங்க சிசிடிவி புட்டேஜ் இருக்குமே அதுல ஏதாவது கிடைச்சதா"

"இல்ல சார் அது இரண்டு நாளா ரிப்பேரா இருக்கு" என குரல் உள்ளே போனபடி எஸ் பி கூற அவரை முறைத்த சேகரோ பெருமுச்சு விட்டார்.

"அப்போ வேற வழியே இல்ல, இதுக்கு முன்னாடி இப்படி கொலை நடந்திருக்கானு தேடுங்க; அதுல எதுவும் கிடைக்கலனா கொலை செய்யபட்ட போலிஸ் எப்படிபட்ட ஆளுனு விசாரிங்க" என கூறியபடி அவ்விடத்திலிருந்து நகர்ந்தவரை அவசரமாய் சூழ்ந்த பத்திரிக்கையாளர்களோ சரமாரியாக கேள்விகளை கேட்டனர்.

"சாரி, நீங்க கேக்குற எந்த கேள்விக்கும் எங்களால இப்போதைக்கு பதிலளிக்க முடியாது இந்த கேஸ் பத்தி இன்னும் நாங்க விசாரிக்க வேண்டியது நிறைய இருக்கு; அதுனால எங்க கடமையை செய்ய விடுங்க ப்ளிஸ்" என கூறிய சேகரோ காண்ஸ்டபிள்ஸை நோக்கி பார்வையை திருப்ப,

அவர்களோ அங்கிருந்த பத்திரிக்கையாளர்களை கடினப்பட்டு விலக்கி சேகர் ஐ பி எஸ் செல்ல வழிவகுத்தனர்.

தங்களின் கேள்வியிலிருந்து தப்பித்தவரை ஏமாற்றத்தோடு பத்திரியாளர்கள் பார்க்க அதே கூட்டத்திலிருந்த ஒரு நீல விழி கண்களோ ஏளன புன்னகையுடன் பார்த்து கொண்டிருந்தது.

பீனிக்ஸ் உயிர்த்தெழும்🔥🔥🔥


(வணக்கம் நண்பர்களே...கதையை பற்றிய உங்களது கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் சென்று பகிருங்கள் நன்றி...)

Thread பீனிக்ஸ் கிளியே - comments

Thread 'பீனிக்ஸ் கிளியே - Comments' https://www.sahaptham.com/community/threads/பீனிக்ஸ்-கிளியே-comments.412/
 

Nancy mary

New member
Vannangal Writer
Messages
18
Reaction score
16
Points
3
🔥அத்தியாயம் - 2🔥


விண்ணை எட்டும் உயரத்தில் காண்போரின் கண்ணை கவரும் வகையில் கலைநயத்துடன் நேர்த்தியாக அமைக்கப்பட்ட மாளிகை போன்ற அவ்வீட்டின் அழகை நிதானமாய் ரசிக்க இயலாதபடி வீட்டிற்குள் பெரிய போர்களமே நடைபெற்று கொண்டிருந்தது.

"என்னங்க சொன்னா கேளுங்க, இப்படிலாம் பண்ணாதீங்க எனக்கு ஒண்ணுமே வேணாம் என்னைய விடுங்க" என கெஞ்சியபடி நாற்பதைந்து வயதான பெண்மணி ஓடிக்கொண்டிருக்க,

அவரை துரத்தியபடியே சென்றவரோ, "அதேதான் லெட்சுமி நானும் சொல்றேன், வயசான காலத்துல எதுக்கு இப்படி ஓடுற ஒழுங்கா இரண்டு நிமிசம் நில்லு; திருடனுங்களையே சுலபமா பிடிக்கிற எனக்கு உன்னைய பிடிக்க எவ்ளோ நேரமாக போகுது ஒழுங்கா ஓடாம நில்லு செல்லம்" என கூறியபடியே அவரின் கணவரான சேகர் ஐ பி எஸ் துரத்தி கொண்டிருந்தார்.

"ஐ அம்மா மாட்டுனீயா, அப்பா நான் அம்மாவை பிடிச்சிட்டேன் நீங்க பொறுமையாவே வாங்க" என கூறியபடியே தனது தாயை துருவ் வழிமறித்து நிற்க,

அவரை எங்கும் நகர முடியாதபடி ரஞ்சித்தும் கிருஷும் சுற்றி வளைத்தனர்.

"ஹேய் ப்ளிஸ் விடுங்கப்பா, அம்மாவை பார்த்தா உங்களுக்கு பாவமா தெரியலையா; நீங்க பண்ற சேட்டையெல்லாம் மறைச்சு அப்பாகிட்டயிருந்து எத்தனை தடவை உங்களை காப்பாத்திருக்கேன் இப்போ பதிலுக்கு அம்மாவை காப்பாத்தக் கூடாதா" என முகத்தை சோகமாய் வைத்து கொண்டு வினவ,

"நோ பிக் மம்மி, இந்த விஷயத்தை பொறுத்தவரைக்கும் நாங்க பிக் டேடியோட கட்சி தான் அதுனால எங்க சப்போர்ட்டை எதிர்ப்பார்க்காதீங்க" என கூறிய கிருஷ் ரஞ்சித்திற்கு ஹைபை தத்தான்.

அதற்குள் அங்கு வந்த தந்தையை கண்ட மைந்தர்களோ தாயின் இரண்டு கைகளையும் கெட்டியாய் பிடித்துக்கொள்ள பின்னால் ஓடாதபடி ரஞ்சித்தும் வழிமறைத்து நின்றான்.

அதனை பயன்படுத்தி லெட்சுமியின் வாயை திறந்த சேகரோ வலுக்கட்டாயமாக இட்லியை ஊட்டிவிட,

அதனை வாங்கிய நொடி லெட்சுமியின் முகம் சோகத்தில் சுருங்கியது.

"அய்யோ ஏங்க இப்படி பண்றீங்க, உங்களோட நல்லதுக்காக தானே வார வாரம் வெள்ளிகிழமை கஷ்டபட்டு விரதமிருக்கேன்; ஆனா நீங்க என்னனா ஒவ்வொரு தடவையும் இப்படி ஏதாவது பண்ணி விரதத்தை கெடுத்திடுறீங்களே; இதுக்கு இந்த வாலுங்களும் துணையா இருக்குங்க ஏங்க நான் விரதமிருக்கிறது பூஜை பண்றதெல்லாம் உங்க நன்மைக்காக தானே அதைக்கூட புரிஞ்சிக்காம இப்படி பண்ணா என்னங்க அர்த்தம்" என கூறி சிணுங்கியவரை பார்த்து சிரித்த மகன்களை கோபமாய் முறைத்தபடியே முகத்தை திருப்பி கொண்டார்.

அதனை கண்ட சேகரோ, "இங்க பாரு லெட்சுமி மா, நீ எனக்காக இரண்டு நிமிசம் மனசார வேண்டிகிட்டாலே போதும்; அதை விட்டுட்டு விரதம் வேண்டுதல்னு நீ உடம்பை வருத்திகிட்டேனா அதை பார்த்துட்டு சும்மா இருக்க முடியுமா; நான் இப்படி ராப்பகலா உழைச்சு சம்பாதிக்கிறதே நீங்க நல்லா இருக்கணும்னு தானே அதுபுரியாம நீ விரதம் வேண்டுதல்னு உடம்பை வருத்திக்குறது எந்த வகையில நியாயம்; பசங்களை திட்டாத அவனுங்களும் உன்மேல இருக்கிற பாசத்துல தான் இப்படி பண்ணுறாங்க; சரியா, அட என்ன லெட்சுமி மா இன்னமும் முகத்தை தூக்கி வைச்சிகிட்டா என்ன அர்த்தம் எங்க கொஞ்சம் சிரி பார்ப்போம்" என கூறியபடியே தனது மனைவியின் முகத்தை கையில் ஏந்தி கொஞ்ச துவங்க,

அதை பார்த்த ரஞ்சித்தோ, "அப்பா நாங்க இன்னும் கிளம்பல அதுக்குள்ள ரொமான்ஸை ஆரம்பிச்சிட்டீங்க நாங்க போனதுக்கு அப்புறமா பொறுமையா கொஞ்சிக்கோங்க" என கூறியபடி கிருஷ்ஷையும் துருவ்வையும் இழுத்துகொண்டு கீழே இறங்கினான்.

அப்பொழுது கிருஷோ, "பிக் டேடி, பிக் மம்மியோட விரதம் இன்னும் முழுசா கலையல ஒரு நாளு இட்லியை வாய்க்குள்ள தள்ளுனா தான் கலையும் அதுனால சீக்கிரமா வந்திருங்க" என கூறியடியே ஓட்டமெடுக்க,

அதனை ஆமோதித்த சேகரோ, "அவன் சொல்றதும் சரிதான்ல, அப்போ நாம சாப்பிட போலாமா" என கூறிய மறுநொடியே தனது மனைவியை இருகைகளாலும் தூக்கி கொள்ள,

அதில் பதறிய லெட்சுமியோ, "அய்யோ என்னங்க இது, பசங்க முன்னாடி இப்படியெல்லாம் பண்றீங்களே உங்களுக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா; என்னைய இறக்கி விடுங்க ப்ளிஸ்" என கூறியபடி முகத்தை கோபமாய் வைத்து கெஞ்சினாலும் தனது கணவரின் செயலில் மனமெங்கும் மெல்லிய சாரலே வீசியது.

இதனையெல்லாம் கீழிருந்து பார்த்த ஒரு கண்களோ சந்தோஷத்திலும் வலியிலும் கலங்க,

"ஓ மை காட் ஜானு, எதுக்கு இப்போ உன் கண்ணு வேர்க்குது தூசி ஏதாவது விழுந்திருச்சா மா" என கூறிய கிருஷ் தனது அன்னையை நோக்கி வர,

அவனை அடித்த ஜானகியோ, "அதென்னடா பேர் சொல்லி கூப்பிடுற பழக்கம், அம்மானு கூப்பிட்டா குறைஞ்சா போயிடுவ; எப்போ பார்த்தாலும் ஜானு ஜானுனே கூப்பிடுற..." என கூறியபடி கண்ணை துடைத்து கொண்டு சிரித்தார்.

அதனை பார்த்த கிருஷோ தனது தாயை அணைத்தபடியே, "அட என்ன ஜானு, இந்த சின்ன விஷயத்துக்கு போய் திட்டுறீயே இதெல்லாம் கொஞ்சம் கூட நல்லாயில்ல பார்த்துக்கோ; எனக்கு இப்படி கூப்பிட தான் பிடிச்சிருக்கு இது என்னோட உரிமை இதை நீ குறை சொல்லகூடாது" என கூறிய மகனின் அன்பில் இன்பமாய் கரைந்தவரோ அவனின் உச்சியில் முத்தமிட்டு அகம் மகிழ்ந்தார்.

"அண்ணா இந்த கொடுமையை கேட்க ஆளே இல்லையா; ஒருபக்கம் பத்து கழுதை வயசாகியும் இளம் காதல் ஜோடியா வலம் வர அம்மா அப்பா இன்னொரு பக்கம் எப்பயுமே பாசத்தை பிழியுற அம்மா பிள்ளை இவனுங்களுக்கு நடுவுல மாட்டிகிட்டு நாம தான்டா கஷ்டபடுறோம்" என கூறிய துருவோ வராத கண்ணீரை துடைத்துக் கொள்ள,

அதற்கு ரஞ்சித்தோ, "ஆமா டா தம்பி, அன்பு ஒன்று தான் அனாதை போலடா" என கூறியபடி துருவ்வை கட்டிக்கொள்ள;

அதனை கேட்டபடியே கீழிறங்கிய லெட்சுமியோ கணவனின் கைசிறையிலிருந்து விடுபட்டு மகன்களின் காதினை சிறையெடுக்க அவ்விடமே சிரிப்பொலியால் நிரம்பியது.

அப்பொழுது தனது அறையிலிருந்து வெளிவந்த நட்ராஜோ, "ச்சே என்ன இது, காலங்காத்தால ஒரே சத்தமா இருக்கு இதென்ன வீடா இல்ல மீன் மார்கெட்டா இவ்ளோ சத்தம் போட்டுட்டு இருக்கீங்க; மனிசனை நிம்மதியாவே இருக்க விட மாட்டீங்க போல இதுக்கு மத்தியில நான் எப்படி சாப்பிடுறதோ, இந்தாடி எனக்கு சாப்பாடெல்லாம் ஒண்ணும் வேணாம் இன்னைக்கு முக்கியமான மீட்டிங் இருக்கிறதால நான் வர லேட்டாகும் எப்போ வருவீங்கனு போன் பண்ணி தொல்லை பண்ணாத" என கூறியபடி லேப்டாப் பேக்கை தூக்கி கொண்டு ஓடினார்.

அவரை துரத்தியபடியே ஓடிய ஜானகியோ, "என்னங்க கொஞ்சமாவது சாப்பிட்டு போங்க" என வாசல்வரை சென்றி கத்தியும் கேட்காமல் காரில் பறந்தவரை ஏக்கத்தோடு பார்த்துக்கொண்டிருக்க,

அவரை சூழ்ந்த மூன்று மைந்தர்களும், "சித்தி, இப்போ எதுக்கு நீங்க தேவையில்லாம கவலைப்படுறீங்க; சித்தப்பா இப்படி பண்றதென்ன புதுசா அழாதீங்க சித்தி" என துருவ் சமாதானப்படுத்த,

"அந்த நட்டுக்கு நட்டு கழண்டு போச்சு ஜானு, அதனால தான் இப்படியெல்லாம் பண்றாரு; நீ அதைபத்தியெல்லாம் கவலைபடாத வா நம்ம போய் சாப்பிடலாம்" எனக் கூறியபடியே கிருஷ் தனது அன்னையை வீட்டிற்குள் அழைத்து செல்ல,

அங்கே லெட்சுமியோ ஜானகியை இருக்கையில் அமர வைத்து இட்லிகளை சட்னி சாம்பாருடன் பரிமாற அதனை எடுத்து தனதன்னைக்கு ஊட்டி விட துவங்கினான் கிருஷ்.

இவ்வாறு பாசத்திற்கும் சண்டைக்கும் பெயர் பெற்ற குடும்பம் தான் சேகர் ஐ பி எஸ்ஸின் குடும்பம்.

காதல் திருமணம் புரிந்த நட்ராஜிற்கு நாளடைவில் பிஸினஸ் மேல் ஈடுபாடு ஏற்பட குடும்பத்தை மறந்து லேலை லேலையென ஓடத் துவங்க,

கணவரின் செயலில் வேதனையடைந்த ஜானகிக்கு ஆறுதலாய் பிறந்த கிருஷ்; தனது தாய்க்கு இன்றளவும் துணையாய் இருக்கிறான்.

இவர்களை தங்களது பொறுப்பில் பார்த்துக்கொள்ளும் சேகரும் தம்பி பிள்ளையை தன் பிள்ளையாக எண்ணி வளர்க்க, கணவருக்கு துணையாய் தனது இரு மகன்களான ரஞ்சித் மற்றும் துருவ்வோடு சேர்த்து கிருஷையும் தனது மகன் போல எவ்வித வேறுபாடுமின்றி பாசத்தை பொழிந்து வளர்த்த லெட்சுமி; ஜானகிக்கு உடன்பிறவா சகோதரியாகவே மாறி அன்பினை பொழிகிறார்.

தாய் தந்தை காட்டும் பாசத்தை பார்த்து வளர்ந்த ரஞ்சித்தும் துருவ்வும் கிருஷிற்கு பாசமழையை பொழிய, ஒரே நாளில் பிறந்த ஒத்த வயதுடைய துருவ்வும் கிருஷும் எதிரும் புதிருமான சண்டைகளால் அன்பினை பரிமாற; இவர்களுக்கு ஒரு வயது மூத்தவனான ரஞ்சித்தோ பாசத்தினாலே தம்பிகளின் சேட்டைகளுக்கு துணையாய் இருந்து அன்பால் காக்கிறான்.

இவ்வாறு நட்ராஜின் அன்பினை தவிர பிறர் அன்பில் திளைத்து வாழும் ஜானகி, சேகர் லெட்சுமியின் காதலை பார்க்கும்போது மட்டும் தன் கணவனும் தன்னிடம் இவ்வாறு காதலை பொழிய மாட்டாரா என்ற ஏக்கத்துடனே விழியோரம் எட்டி பார்க்கும் கண்ணீரை சுமந்தபடி தனது வாழ்க்கையை கடத்துகிறார்.

"ஓகே மா, எங்களுக்கு காலேஜுக்கு டைமாச்சு நாங்க போயிட்டு வரோம்" என கூறியபடியே துருவ் தனது அன்னைக்கு ஒரு அன்பு முத்தத்தை பரிசளிக்க,

"சரி ஜானு, நானும் காலேஜுக்கு கிளம்புறேன் டாட்டா" என கூறிய கிருஷ் அன்னையை கட்டிகொண்டு முத்தமிட்டான்.

அப்பொழுது அவனின் சட்டை காலரை பிடித்த துருவோ, "நீ இப்படி அன்புமழை பொழிஞ்சே காலேஜுக்கு லேட் பண்ணிடுவ; அதுனால ஒழுங்கா இப்பவே என்கூட கிளம்பி வா" என கூறி இழுத்துக்கொண்டு செல்ல,

அவனின் செயலில் அதிர்ந்த கிருஷோ, "டேய் அண்ணா, இவன்கிட்டயிருந்து என்னைய காப்பாத்துடா" என அண்ணனை துணைக்கு அழைக்க,

அதனை காதில் வாங்கிக் கொள்ளாதவாறே அங்கிருந்து நழுவியவனை கண்ட கிருஷோ,

"அடேய் அண்ணா, இப்படி என்ன காப்பாத்தாம ஓடுறீயே நீ நல்லா இருப்பீயா; டேய் டேய் தயவுசெஞ்சு என் சட்டையில இருந்து கையை எடுடா, நீ இப்படி இழுத்திட்டு போறதை என் தோழிங்க யாராவது பார்த்தா என் மானமே போயிடுமே; அய்யயோ டேய் துருவ் எதிர்வீட்டு பிரியா பார்க்குறா டா என்னைய கொஞ்சம் பீரியா விடுடா" என கூறி துருவின் கையிலிருந்து சட்டையை காப்பாற்றியவனோ,

அங்கிருந்து தப்பித்து ஓட அவனை துரத்திகொண்டே துருவ்வும் செல்ல இருவரின் சட்டையையும் ஒன்றாய் பிடித்து வண்டிக்குள் தள்ளிய ரஞ்சித்தோ காலேஜை நோக்கி வண்டியை கிளப்பினான்.

இதனையெல்லாம் பார்த்து சிரித்தபடியே வெளியில் வந்த சேகரோ, "சரிமா, அப்போ நானும் கிளம்புறேன் பார்த்து இருந்துக்கோங்க" என கூறியவரோ தனது மனைவியிடம் ஜானகியை காட்டி ஏதோ கண்களாலே உணர்த்த முயல,

அதனை புரிந்து கொண்ட அவரின் தர்மபத்தினியோ 'எல்லாவற்றையும் தான் பார்த்துக்கொள்கிறேன்' என கண்களாலே உணர்த்தியதில் திருப்தியானவரோ தனது ஜீப்பை எடுத்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

🔥🔥🔥🔥🔥

"அக்கா நீ இப்படி இருப்பனு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல, இப்படியா உங்களை சுத்தி நடக்கிற தவறை கூட கண்டுக்காம இருப்பீங்க"

"ஏண்டி, காய்கறி வாங்கிட்டு வந்தவளை ஏதோ முக்கியமான விஷயம்னு கூப்பிட்டிட்டு இப்போ என்னடி சம்மந்தமே இல்லாம உளறிட்டு இருக்க; எதுவா இருந்தாலும் தெளிவா சொல்லு இல்லனா உன்னோட வேலையை பாரு வெட்டியா பேசி என் பொறுமையை சோதிக்காத" என தன்னிடம் வம்பிழுத்த பக்கத்து வீட்டுகாரியிடம் கோபமாய் பொரிந்தாள் சாந்தி.

இவரின் பெயரில் மட்டும் சாந்தி குடிகொண்டிருக்கும் ஆனால் பேச்சிலும் செயலிலும் அடாவடியே நிரந்தரமாய் சூழ்ந்திருக்கும்.

இதனாலேயே தெருவாசிகளிடம் சண்டைக்காரி என்ற பெயரோடு வலம் வருவார்
இப்பொழுது அவரிடமே சண்டையிழுக்க பக்கத்து வீட்டுகாரி முயற்சிக்கிறாள்‌.

"அக்கா, இப்போ எதுக்கு என்மேல கோபப்படுற; ஏதோ உன்மேல இருக்கிற அக்கறையில உன் புருசனோட அக்கா பொண்ணை பத்தி சில விஷயம் சொல்லலாம்னு பார்த்தேன்; அதுக்குள்ள இப்படி சொல்லிட்ட உனக்கு வேணாம்னா விடுக்கா நான் போய் என் வேலையை பார்க்குறேன்" என சரியாக தூண்டில் போட்டவளின் சூழ்ச்சி அறியாமல் வசமாய் சிக்க துணிந்தார் சாந்தி.

"அடியே நில்லுடி, இப்போ என்ன சொல்லிட்டேன்னு நீ இப்படி ஓடுற; சரி, அந்த அனாதை கழுதையை பத்தி ஏதோ சொல்லணும்னு சொன்னீயே என்ன விஷயம்" என வினவ,

"அது ஒண்ணுமில்லக்கா, நேத்து என் பையன் அவனோட பிரண்ட்டுக்கு பிறந்தநாள்னு கேக் வாங்க போனான்; அவனே நைட் பதினோரு மணிக்கு தான் போயிருக்கான் அந்த நேரத்துல அந்த கடையில உங்க வீட்டு பொண்ணு வேலை பார்த்துட்டு இருக்கா; சரி, அதைக்கூட விட்டிறலாம் ஆனா அங்க ஒரு பையன் கூட சிரிச்சு சிரிச்சு பேசிட்டு வேற இருந்தாளாம்; இப்போ காலம் வேற கெட்டு போயிருக்கு அவ வேலை பார்க்குறேன்னு போய் எவனையாவது இழுத்துட்டு போயிட்டானா நாளைக்கு இந்த தெருவுல இருக்கிறவங்க உன் வீட்டு பொண்ணு இப்படி பண்ணிட்டானு உன்னை தான தப்பா பேசுவாங்க; ஏதோ எனக்கு தோணுறதை சொல்லிட்டேன் அக்கா அப்புறம் உன் இஷ்டம்" என கூற சாந்திக்கு கோபம் சுர்ரென்று ஏறியது.

"ச்சே, அந்த அனாதை கழுதைக்கு இப்படி ஒரு நினைப்பு வேற இருக்கா; இராத்திரியும் வேலை இருக்குனு போனாலே என்னவா இருக்கும்னு யோசிச்சேன் இப்போதானே புரியுது; எப்பயும் வீட்டுக்கு தானே வருவா வந்ததும் கையை காலை உடைச்சு அடுப்புல போடுறேன்" என படபடப்பாய் பொறிய பக்கத்து வீட்டுகாரியின் நாரதர் வேலை சிறப்பாக நடந்தது.

அப்பொழுது அந்த நிகழ்வை கலைக்கும் வகையில் அங்கு ஒரு கைத்தட்டல் ஓசை கேட்க, சத்தம் வந்த திசை நோக்கி இருவரும் பார்வையை திருப்பினர்.

"சூப்பர் ஆண்ட்டி, என்னமா பேசுறீங்க நீங்க; என்னடா நேத்து உங்க பையனை நாளு அடி அடிச்சு அனுப்புனேனே அதுக்கு ஏதாவது கலாட்டா வருமேனு யோசிச்சேன்; அதை இப்படி பண்ணுவீங்கனு நினைச்சு கூட பார்க்கல நான் என்னோட வேலையை தான் பார்க்குறேன் ஆனா உங்க பையன் தான் கேக் வாங்க வரேன்னு கடையில கலாட்டா பண்ணான்; அதான் நாளு அடி போட்டேன் அதை என்னனு கேட்காம என்னைய பத்தி தப்பா பேசுறீங்களா உங்க வயசுக்கு மரியாதை தந்து சும்மா விடுறேன் அயோக்கிய பையனுக்கு வக்காளத்து வாங்காம ஒழுங்கா ஓடிருங்க" என தனது கண்ணிலேயே கணலை சுமந்தபடி இங்கு நடந்த நிகழ்வினை பார்த்த அதரா கோபமாய் மிரட்ட,

அதை கேட்டவரோ அங்கிருந்து வேகமாய் நழுவி கொண்டார்.

"அத்தை, உங்களுக்கும் ஒரு விஷயத்தை தெளிவா சொல்லிக்கிறேன்; என் அம்மா அப்பா தான் இறந்துட்டாங்க நீங்களும் மாமாவும் எனக்கான சொந்தங்களா இருக்கீங்க அப்படி இருக்கும்போது அனாதைனு ஏதாவது சொன்னீங்க நடக்குறதே வேற; இந்தாங்க என்னோட சம்பள காசு ஐயாயிரம் ரூபா இந்த காசு இனியும் வேணும்னா அமைதியா இருக்கிற வழியை பாருங்க" என மிரட்டியபடியே உள்ளே செல்ல அவளை திட்டியபடி சாந்தியும் வீட்டிற்குள் நுழைந்தார்.

இதனையெல்லாம் வேதனையோடு பார்த்தபடி காய்கறி கூடையோடு வீட்டிற்குள் வந்த கோபாலோ,

"தாரா மா, தாரா இங்க கொஞ்சம் வாயேன்" என அழைக்க மாமாவின் குரலுக்கு உடனே ஓடி வந்து விட்டாள் அதரா.

"மாமா, உங்களுக்கு எத்தனை தடவை சொல்லிருக்கேன் தேவையில்லாம அலையாதீங்கனு ஏதாவது வாங்கணும்னா என்கிட்ட சொல்லிருக்கலாம்ல உங்களுக்கு எதுக்கு மாமா சிரமம்" என கேட்க,

"அட பரவால மா, இதுல என்ன இருக்கு அப்புறம் மா" என கூறி தனது குரலை தாழ்த்திவாறே,

"இந்தா மா, இதுல ஐயாயிரம் ரூபா இருக்கு உன் செலவுக்கு வைச்சிக்கோ" என குடுக்க,

அதனை பார்த்தவளோ, "அய்யோ மாமா இதெல்லாம் எதுக்கு..." என தயங்கினாள்.

"அட என்னமா நீ, உன் அத்தையோட தொல்லை தாங்காம தான் உன்னோட தேவையை பூர்த்தி செய்யவாவது பார்ட் டைம்மா வேலைக்கு போன; ஆனா உன் அத்தை அதையும் விடாம உன் காசை வாங்கிட்டா உனக்குனு செலவுக்கு என்ன பண்ணுவ அதுக்காகவாவது இதை வைச்சிக்கோ மா" என கூறிய மாமனை கட்டிகொண்டாள் அதரா.

தனது சிறு வயதினிலே தாய் தந்தையை இழந்த அதராவை தன்னுடைய பொறுப்பில் ஏற்றுகொண்டவரோ, தன் மனைவியிடமிருந்து எழுப்பபட்ட பல்வேறு எதிர்ப்புகளையும் தாண்டி தனது மகளிற்கு செய்வதை போல அதராவின் தேவைகளையும் பூர்த்தி செய்து வளர்த்து கொண்டிருந்தார்.

இந்த நிலையில் கல்லூரி படிப்பில் அடியெடுத்து வைத்தவளோ தனது தேவையை தானே பூர்த்தி செய்ய பகுதி நேர வேலைக்கு செல்ல, அவளின் சந்தோஷத்தை விரும்பாத அத்தையோ அந்த பணத்தையும் பறித்து கொண்டிருக்கிறாள்.

இப்படியான தன் வாழ்க்கையை நினைத்து வருந்தாமல் கிடைக்கும் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வாழ்வில் உயர போராடி கொண்டிருக்கிறாள் அதரா.

தனது மாமனிடம் சொல்லி கொண்டு அதரா கல்லூரிக்கு கிளம்ப,

"அடியே, காலேஜுக்கு போனோமா வீட்டுக்கு வந்தோமானு இரு; அதைவிட்டுட்டு எங்கயாவது ஊரு சுத்துன அவ்ளோதான் வீட்டுல நிறைய வேலை இருக்கு நான் சொல்றது கேட்குதாடி" என பக்கத்து வீட்டுகாரிக்கு கேட்பது போல சாந்தி கத்த,

அதனை கேட்ட தாராவோ, "இந்த அத்தையோட பெரும் தொல்லையா இருக்கே முதல்ல இவங்களை ஏதாவது பண்ணனும்..." என திட்டியபடி கல்லூரிக்கு பயணமானாள்.

🔥🔥🔥🔥🔥

'பளார்' என விழுந்த அடியின் ஓசை அந்த பாழடைந்த குடோன் முழுக்க எதிரொழிக்க, தனது கன்னத்தில் கையை தாங்கியபடி தரையில் வீழ்ந்து கிடந்தான் விசுவாசமான அடியாள்.

"முட்டாப்பயலே, உனக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா; உன்னைய நம்பி ஒரு வேலையை குடுத்தா அதைக்கூட ஒழுங்கா பண்ணாம சொதப்பிட்டு வந்திருக்க; உன்னால நம்மாளுங்களும் மாட்டி நம்ம பொருளும் மாட்டிருக்கு வயசான கிழம் தானே இவனால நம்மல என்ன பண்ண முடியும்ற மிதப்புல இருக்கீயோ..." எனக் கூறிகொண்டு தனது ஆத்திரம் தீரும்வரை அவனை அடித்து மிதித்து கொண்டிருந்தார்.

அப்பொழுது அவரின் கரத்தை ஒரு கரம் பற்ற அதில் திரும்பி பார்த்தவரின் முன் ஒரு இளைஞன் நின்று கொண்டிருந்தான்.

"என்ன அண்ணாச்சி, இந்த சின்ன விஷயத்துக்கு போய் இவ்ளோ டென்சனாகுறீங்களே; நீங்க எதை நினைச்சும் கவலைபடாதீங்க நான் நம்ம பாஸ்கிட்ட எல்லா விஷயத்தையும் சொல்லிட்டேன் இனி எல்லாமே சரியாகிடும்" என கூற,

அதனை கேட்டு அதிர்ந்த அண்ணாச்சியோ, "அடப்பாவி செந்திலு, இப்போ எதுக்குடா நம்ம பாஸ்கிட்ட விஷயத்தை சொன்ன; இப்போ எல்லாத்துக்கும் சேர்த்து நான்தானே திட்டு வாங்கணும் எனக்குனே வருவீங்களா டா" என கத்த துவங்கினார்.

"அட சும்மா இருங்க அண்ணாச்சி, அப்படிலாம் ஒண்ணும் நடக்காது; இந்நேரம் எல்லாமே சரியாக ஆரம்பிச்சிருக்கும் பாருங்க" எனக் நம்பிக்கையளிக்க,

"அப்படியா" என ஆச்சர்யமாய் வினவினார் அண்ணாச்சி.

அதேசமயம் ஒரு காவல் நிலையத்திற்குள் ஒரு வக்கீல் தெனாவெட்டாக அமர்ந்து கொண்டிருக்க, அவரின் முன்னிருந்த இன்ஸ்பெக்டரோ குழம்பிய முகபாவத்தோடு வீற்றிருந்தார்.

"சார், இது உங்களுக்கே நியாயமா இருக்கா தங்கச்சிக்காக டப்பா நிறைய பஞ்சுமுட்டாய் வாங்கிட்டு போனவனை போதை மருந்து கடத்துனான்னு கைது பண்ணிருக்கீங்க; இது எந்த வகையில நியாயம்" என வினவ,

"சார், நாங்க பார்த்தப்போ இதுல போதை மருந்து இருந்துச்சு; அதுமட்டுமில்லாம இவனும் இதுக்கு முன்னாடி நிறைய தடவை போதை பொருள் கடத்தி அரெஸ்ட் ஆனவன் தான்; அதான் இப்பயும் அதேமாதிரி பண்ணானோனு யோசிச்சோம் ஆனா அதெப்படி பஞ்சுமுட்டாய்யா மாறிடுச்சு" என குழப்பமாய் நெற்றியை தடவிக் கொள்ள,

அதனை பார்த்த வக்கீலோ, "இன்ஸ்பெக்டர் சார், கண்ணால் காண்பதும் பொய்; காதால் கேட்பதும் பொய்; தீர விசாரிப்பதே மெய்னு சொல்லுவாங்க; அதுமாதிரி தான் ஒருகாலத்துல போதை மருந்து சப்ளை பண்ணவன் தான் ஆனா இப்போ தங்கச்சிக்காக திருந்தி மாறிருக்கான்; அப்படிபட்டவனை போய் தப்பா நினைச்சுட்டீங்களே" என தனது பேச்சு திறமையால் வக்கீல் பேசிக்கொண்டிருக்க,

இவர்களின் உரையாடலுக்கு காரணமானவனோ நடந்தவற்றை நம்ப முடியாமல் யோசித்து கொண்டிருந்தான்.

தனது கூட்டாளியுடன் கஸ்டமருக்கு தருவதற்காக போதை மருந்தை எடுத்துகொண்டு பைக்கில் விரைய,

அப்பொழுது அங்கு போலிஸ்காரர்கள் வாகனங்களை நிறுத்தி சோதனையிட அதில் கூட்டாளி தப்பித்து இவன் வசமாக மாட்டிக்கொண்டான்.

அப்பொழுது அவர்களின் அருகில் ஒரே காரில் பதிமூன்று பேர் சென்றதை காவலர்கள் விசாரித்து கொண்டிருந்தனர்.

"என்னப்பா நீங்க, பிரண்ட்டுக்கு சர்ப்பிரைஸ் குடுக்க போறதுன்னா இப்படியா இத்தனை பேரு ஓரே கார்ல போறது; இதுல உங்களுக்கு ஆச்சீடண்ட் ஆச்சுனா யாரு பொறுப்பு; ஒழுங்கா வேறொரு காரை வரவைச்சு அதுல பாதி பேர் போங்க இப்போ இப்படி பண்ணதுக்கு அபராதம் கட்டுங்க" எனக் கூற,

அக்கூட்டத்திலிருந்த ஒருவனோ தன்னிடமிருந்த தொகை மொத்ததையும் அபராதமாய் செலுத்த மற்றவர்களோ வேறொரு வாகனத்திற்கான ஏற்பாட்டினை செய்ய துவங்கினர்.

இதையெல்லாம் கவனித்தபடியே போலிஸிடமிருந்து தப்பிக்கும் வழியை பதட்டமாய் யோசித்து கொண்டிருக்க,

அப்பொழுது அங்கு திடீரென காரோட்டிகள் சிலர் போலிஸிடம் தகராறு செய்ய அவ்விடமே கலவரமானது.

அதனை பயன்படுத்தி தப்பித்துவிடலாமா என யோசிக்க துவங்கிய கணநேரத்திலே பதிமூன்று நபர்கள் கொண்ட நண்பர்கள் குழுவோ இந்த பிரச்சனையில் சிக்காதவாறு தாங்கள் ஏற்பாடு செய்த வண்டியில் ஏறுவதற்காக ஓட,

அந்த கூட்டத்திலிருந்த ஒரு கை மட்டும் போதை மருந்து கவரை எடுத்துக்கொண்டு வேறொரு கவரை அங்கு வைத்தபடி சென்றது.

தனது கண்ணிமைக்கும் நொடியில் நடந்த நிகழ்வில் ஏற்பட்ட அதிர்வலையில் இவன் நிற்க, போலிஸில் சிலரோ கலவரத்தை அடக்க; இன்னும் சிலரோ இவனை அங்கிருந்து வண்டியோடு இழுத்து செல்ல விரைந்தனர்.

இப்பொழுது இதனையெல்லாம் நினைத்தவனோ எச்சிலை விழுங்க,

இன்ஸ்பெக்டரும் சிறிது யோசனைக்கு பின்னர்,

"சரி சார், நாங்க தான் தவறுதலா அரெஸ்ட் பண்ணிட்டோம் போல; இதுல ஒரு கையெழுத்து போட சொல்லி கூட்டிட்டு போங்க" என எரிச்சலாய் உரைக்க,

அதனை கேட்டு இதழோரம் புன்னகையை ஏந்தியபடி ஸ்டைலாக எழுந்து நின்றவனோ, "சரி இனஸ்பெக்டர், இனியாவது குற்றவாளி யாரு நிரபராதி யாருனு பார்த்து அரெஸ்ட் பண்ணுங்க" என இலவச அறிவுரையை தந்தபடி அங்கிருந்து சென்றான்.

இங்கு அண்ணாச்சியை சமாளித்து கொண்டிருந்த செந்திலுடைய போன் அடிக்க,

அதை எடுத்து பேசியவனின் முகமோ பிரகாசமாய் ஒளிர்ந்தது.

"அண்ணாச்சி, நம்ம பொருள் கஸ்டருக்கு போய் சேர்ந்திருச்சு அவங்களும் முழு பணத்தையும் செட்டில் பண்ணிட்டாங்களாம்; அதுமட்டுமில்லாம இந்நேரம் நம்மாளுங்களை போலிஸே ரீலிஸ் பண்ணிருக்கும் இனி நீங்க எதைபத்தியும் கவலைபடாதீங்க; ஏய் யாருடா அங்க நம்ம அண்ணாச்சிக்கு கூல்லா ஜுஸ் கொண்டு வாங்கடா" என ஆடர் போட்டபடி,

"நீங்க ஜீஸ் குடிச்சு ரீலாக்ஸா இருங்க அண்ணாச்சி நான் இதோ வந்திடுறேன்" என கூறியபடி அங்கிருந்து நகர, அண்ணாச்சியும் தனது தலை தப்பித்தது என எண்ணியபடி அடியாட்களோடு கும்மாளமிட துவங்கினார்.

அப்பொழுது யாருமறியா வகையில் தனது போனை எடுத்துகொண்டு நகர்ந்த செந்திலோ யாருக்கோ அழைப்பு விடுத்தான்.

"பாஸ், நம்ம பொருள் பத்திரமா கஸ்டமருக்கு போயிருச்சாம் அவன் இப்போ ஏர்போர்ட்டூக்கு பிளைட் ஏற போயிருக்கானாம்; இப்போ என்ன பண்ண போறீங்க..." என வினவியவனிடம் மறுமுனையில் ஏதோ கூறப்பட,

அதனை கேட்டவனோ, "அதானே, என்கிட்ட எப்போ நீங்க முழுசா சொல்லிருக்கீங்க நீங்களே முடிச்சிட்டு சொல்லுங்க" என கூறி கொண்டு போனை அணைத்தான்.

அங்கு ஏர்போர்ட்டிலோ ஏர்போர்ட் அதிகாரிகள் ஒருவனை தீவிரமாய் பரிசோதிக்க, அதன் முடிவில் அதிகளவு போதை ஏற்றும் போதை மருந்தை கைபற்றினர்.

"சார், இது எப்படி என்கிட்ட வந்துச்சுனு எனக்கு தெரியாது என்னைய நம்புங்க" என கூறி நடித்தவனை நம்பாத அதிகாரிகளோ,

"அதையும் நாங்களே கண்டுபிடிக்குறோம்; இப்போ நாம போகலாமா" என இழுத்துகொண்டு சென்றனர்.

இங்கு காவல் நிலையத்திலிருந்து வெளியேறிய வக்கீலோ தன்னை யாரும் பார்க்காத மறைவிடத்திற்கு வந்து தான் காப்பாற்றியவனின் கன்னத்திலே பலமாய் அடித்தான்.

"இதான் உனக்கு பர்ஸ்ட் அண்ட் லாஸ்ட் வார்னிங்; இனி சொதப்புன உன்னோட தங்கச்சி அனாதையாகிடுவாளேனு யோசிக்காம ஜெயில்லயே கழி திண்ணுனு விட்டிருவோம் புரிஞ்சதா" என மிரட்ட,

"புரியுது ஸ்டீபன் அண்ணே, இனி இப்படியொரு தப்பு நடக்காது" என பயந்தவாறே கூறினான்.

அப்பொழுது ஸ்டீபனின் போனில் மெசேஸிற்கான நோட்டிபிகேஷன் வர,

அதனை பார்க்க இங்கு செந்திலுக்கும் போனில் நோட்டிபிகேஷன் வந்தது.

அந்த குறுஞ்செய்தியிலோ "Plan success, நம்ம வேலை போதை பொருளை சரியா ஒப்படைக்கிறது தான்; அதை அவனுங்க பாதுக்காக்கலனா நாமளா பொறுப்பாக முடியும்..." என எழுதியிருக்க,

அதை படித்த இருவரின் இதழிலும் வெற்றி புன்னகை சூழ,

அவர்கள் இருவருமே வெவ்வேறு இடத்தில் இருந்தாலும் இருவரும் ஒன்றாக ஒரு விஷயத்தை கூறினர்.

"மாஸ்டர் மைண்ட் நீ வேற லெவல் போ..."


பீனிக்ஸ் உயிர்த்தெழும்🔥🔥🔥

(வணக்கம் நண்பர்களே... கதையை பற்றிய உங்களது கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் சென்று பதிவிடுங்கள் நன்றி...)

Thread 'பீனிக்ஸ் கிளியே - Comments' https://www.sahaptham.com/community/threads/பீனிக்ஸ்-கிளியே-comments.412/
 

Nancy mary

New member
Vannangal Writer
Messages
18
Reaction score
16
Points
3
🔥அத்தியாயம் - 3🔥

கல்லூரி நுழைவாயிலை கடந்து சென்ற வாகனத்தை வழிமறித்த வாட்ச்மேன் ஐடி கார்ட்டை வாங்கி பரிசோதிக்க,

"அங்கிள், இது நான்தான் போன வருஷம் முன்னறிவிப்பு இல்லாம முதல் நாளே போட்டோ எடுத்ததால கொஞ்சம் பர்ஸனாலிட்டி கம்மியா தெரிவேன்; அதுக்காக இது என்னோட ஐடி கார்ட் இல்லயோனு சந்தேகப்படாதீங்க" என கிருஷ் கிண்டலடித்தான்.

அதனை கேட்டு சிரித்த ரஞ்சித்தோ அவனின் தலையில் தட்டியவாறு வாகன தரிப்பிடத்தை நோக்கி வண்டியை செலுத்தினான்.

அவ்வாறு செலுத்தப்பட்ட வாகனம் தரிப்பிடத்தில் நிற்பதற்குள்ளாகவே அதிலிருந்து வேகமாய் இறங்கிய துருவ்வும் கிருஷும் பயோமெட்ரிக் வைக்க போட்டிப்போட்டு கொண்டு ஓட,

"துருவ், கிருஷ் கொஞ்சமாவது காலேஜ் பசங்க மாதிரி நடந்துக்கோங்க டா; சின்னப் பசங்க மாதிரி எப்படியுமே போட்டி போட்டுகிட்டே இருக்கீங்க" என அறிவுறுத்திய ரஞ்சித்தை பார்த்த துருவ்வோ,

"இங்க பாருடா, லைப்ல சின்ன சின்ன விஷயத்தையும் சந்தோஷமா அனுபவிக்கணும்; நாம பக்குவமாகிட்டோம்னு சொல்லி நம்மலோட சின்ன சின்ன சந்தோஷத்தை இழந்துட்டு போனா நாம வாழுற வாழ்க்கையே வேஸ்ட்டூ டா" என பேசிய துருவ்வின் பேச்சை ஆமோதிக்கும் விதமாக கிருஷ் துருவிற்கு ஹைபை தந்தான்.

தங்களுக்குள் ஆயிரம் மோதல்கள் வந்தாலும் இறுதியில் பாசமாய் இணைந்துவிடும் சகோதரர்களின் அன்பினை கண்டு பூரித்தபடியே தன்னுடைய வகுப்பை நோக்கி ரஞ்சித் செல்ல, அப்பொழுது இவர்களின் ஆரூயிர் தோழியான ஐஸ்வர்யா வருகை புரிந்தாள்.

"ஹேய் கிருஷ், இன்னைக்கு மழை பெய்ய போகுதா என்ன; சரியான டைமுக்கு காலேஜுக்கு வந்துட்டீயே"

"ஆமா, இவனாவது சரியான நேரத்துக்கு வரதாவது நான்தான் இவனோட கழுத்தை பிடிச்சு இழுத்துட்டு வந்தேன்; அதுசரி ஐஸூ எங்க உன்னோட இரட்டை சகோதரி கிளியோபாட்ரா இன்னமும் வரலயா; அவளோட கம்பேர் பண்றப்போ கிருஷே பரவால போலயே" என கூறி கேலி செய்தான்.

அதை கேட்டு ஐஸ்வர்யாவிற்கு முன்பாக பதிலளித்த கிருஷோ, "டேய், என்னை பத்தி என்ன வேணாலும் சொல்லு ஆனா என் பிரண்ட்டை பத்தி பேசாத; அவ ரொம்பவே பொறுப்பானவ தான்; அங்க பாரு எவ்ளோ பொறுப்பா சீக்கிரமே வந்து லைப்ரரியில படிச்சிட்டு வரானு பாரு" என கூற,

அதை கேட்டு அதிர்ந்த துருவ்வும் ஐஸ்வர்யாவும் தூரமாய் தெரிந்த லைப்ரரியிலிருந்து வெளிவந்த அதராவை பார்த்து உச்சக்கட்ட அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.

துருவ், கிருஷ், அதரா, ஐஸ்வர்யா நால்வருமே பள்ளியில் ஒன்பதாம் வகுப்பிலிருந்து ஒன்றாகவே பயின்றவர்கள் கிருஷும் அதராவும் நெருங்கிய நட்பாய் பழக அதராவுக்கும் துருவ்வுக்குமிடையே மோதல்களே அதிகமாய் சங்கமிக்கும்; இவர்களின் நட்பையும் சண்டையையும் நடுநிலைமையாய் கையாளும் நடுவராக ஐஸ்வர்யா இருக்க, இவர்களின் நட்பு பள்ளியை தொடர்ந்து கல்லூரியிலும் நிலைத்து பயணிக்கிறது.

"அதரா, வாட் அ சர்ப்பிரைஸ்; நீ லைப்ரரிக்கு போறீயா என்னால நம்பவே முடியலையே" என ஐஸ்வர்யா தலைசுற்றுவது போல பாவனை செய்ய அவளின் தலையில் செல்லமாய் கொட்டியவளோ,

"ஏன், நாங்க எல்லாம் லைப்ரரிக்கு போக மாட்டோமா; அங்க அப்படி என்ன தான் இருக்குனு சுத்தி பார்க்க போனேன் அப்படியே மீரா அக்கா கேட்ட புக்கும் இருக்கானு தேடி வாங்கிட்டு வரேன்" என கூற மீராவின் பெயரை கேட்டதும் கிருஷின் முகத்தில் டவுன்சன் வாட்ஸ் பல்பு எரிந்தது.

"அதானே பார்த்தேன், நான்கூட உனக்காக போயிட்டீயோ படிப்பாளி ஆகிட்டீயோனு பயந்துட்டேன்; நல்லவேளை அப்படி எந்த உலக அதிசயமும் நடக்கல" என துருவ் வம்பிழுக்க, அவனை பார்வையாலே பஸ்பமாக்க முயன்றாள் அதரா.

இவர்களின் கேலியில் நடப்பிற்கு வந்த கிருஷோ, "என்ன தாரா, மீராவுக்கு புக் வேணும்னா என்கிட்ட சொல்லலாம்ல நானே எடுத்து தந்திருப்பேன்ல நீ எதுக்கு கஷ்டபடுற..." என அக்கறையாய் வினவ,

"ஹலோ தம்பி, ஏதோ லைப்ரரி புக்லயே அறிவை வளர்க்குறவன் மாதிரி பேசுறீயே; இதுவரை லைப்ரரி எந்த பக்கமிருக்குனாவது பார்த்திருக்கீயா கடைசி நேரத்துல நோட் வாங்கி படிக்கிற ஆளு நீ பேசுறீயா..." என ஐஸ்வர்யா நக்கலடித்தாள்.

அதனை கேட்டு சிரித்தபடி ஐஸ்வர்யாவுக்கு அதராவும் துருவ்வும் ஹைபை தர,

"சரி சரி, அரசியல்ல இதெல்லாம் சகஜம் தான் இப்போ கிளாஸுக்கு டைமாச்சு போவோமா" என கேட்க அதராவும் துருவ்வும் முன்னே செல்ல,

அவர்கள் இருவரின் தோளும் உரசிக்கொண்டதில் ஒருவரை ஒருவர் முறைத்து கொண்டு இருவருக்குமிடையே நான்கு அடி இடைவெளி இருக்குமாறு தள்ளி நடந்தனர்.

அவர்களோடே செல்ல நினைத்த ஐஸ்வர்யாவை தடுத்த கிருஷோ, "ஐஸு, உன்னோட உயிர் தோழனுக்காக ஒரு உதவி செய்யுறீயா; மீராவை பத்தி உனக்கு தெரிஞ்சதை சொல்லேன் ப்ளிஸ்" என கண்களை சுருக்கி செஞ்ச,

அதனை கேட்டு சிந்திக்கும் முகபாவத்தில் யோசித்தவளோ, "எனக்கு தெரிஞ்சதை சொல்லணுமா; அதுக்கு கொஞ்சம் செலவாகுமே" என ஒற்றை புருவம் உயர்த்தினாள்.

"அம்மா பரந்தேவதையே, நீ எது கேட்டாலும் வாங்கி தரேன்; தயவுசெஞ்சு எனக்கு கொஞ்சம் உதவி பண்ணுமா" என கையெடுத்து கும்பிட,

"சரி சரி ஓவரா கெஞ்சாத, இன்னைக்கு காலேஜ் சீக்கிரமாவே முடிஞ்சிடும்ல; அதுனால மூணு மணிக்கு ஷாப்பிங் கூட்டிட்டு போய் நான் கேட்குறதை எல்லாம் வாங்கி தந்திடு; அப்புறமா அவளோட ஒட்டுமொத்த பயோடேட்டாவையும் உன்னோட கையில தந்திடுறேன்; இப்போ வா கிளாஸுக்கு டைமாச்சு" என கூறி அவனின் கரத்தை பற்றி இழுத்துகொண்டு செல்ல,

அதனை கேட்ட கிருஷோ ஷமீராவை பற்றி தெரிந்துகொள்ள போகிறோமென்ற ஆவலில் பல்வரிசை தெரிய சிரித்தபடியே வகுப்பறையை நோக்கி பயணித்தான்.

🔥🔥🔥🔥🔥

தனது நீலவிழி கண்களை கணினி திரையில் பதித்தவாறு தீவிரமாய் வேலையில் லயித்திருந்தவளின் கவனம் அவளின் அலுவலக தோழியால் தடைபட்டது.

"ஹேய் நேத்ரா, உன்னைய நம்ம எடிட்டர் உடனே பார்க்கணும்னு கூப்பிட்டாரு; ஏதோ வேலையை முடிக்க சொன்னாராமே முடிச்சிட்டீயா" என கேட்க,

"அதெல்லாம் நான் ஏற்கெனவே முடிச்சிட்டேன், ஆனா எடிட்டர் கொஞ்சம் பிஸியா இருந்தாரா அதான் அடுத்த வாரம் நடக்க போற இன்டர்வியூல கெஸ்ட்டுக்கிட்ட கேட்குறதுக்காக சில கேள்விகளை பீரிபேர் பண்ணிட்டு இருந்தேன்; சரி, நான் போய் எடிட்டரை பார்த்துட்டு வரேன்" என கூறியபடியே சில கோப்புகளோடு எடிட்டரின் அறைகதவை திறந்து கொண்டு நுழைந்தாள்.

"எஸ்கீயூஸ் மி சார், மே ஐ கம்மிங்"

"வாமா நேத்ரா நான் கேட்ட பைல் ரெடியா"

"ஆமா சார் ரெடியாச்சு இந்தாங்க.."

"சரிமா, ஆமா நேத்து ஒரு இன்ஸ்பெக்டர் கொலை செய்யபட்டாருல; அதைபத்தி நீ என்ன நினைக்கிற உனக்கு இது எதுனால நடந்திருக்கும்னு ஏதாவது ஐடியா இருக்கா"

"அதைபத்தி சொன்னா ஆயிரம் யூகங்கள் வருமே; ஆனா இப்போ எதுக்கு சம்மந்தமே இல்லாம என்கிட்ட இதைபத்தி கேட்குறீங்க சார்"

"அதெல்லாம் சம்மந்தம் இருக்குமா; நாம ஏன் இந்த கொலைக்கு பின்னணியா இருக்கிற மர்மத்தை தேடக்கூடாது; போலிஸ் சொல்றதுக்கு முன்னாடி நாம கண்டுபிடிச்சு மக்களுக்கு சொன்னா நம்ம சேனலோட டி ஆர் பியும் ஏறும்ல அதான் சொல்றேன் உனக்கு இது ஓகே வா மா"

"உங்க ஐடியா நல்லா இருக்கு சார் ஆனா எனக்கு இன்ட்ரஸ்ட் இல்ல என்னைய பொறுத்தவரை பெரிய பெரிய ஆளுங்களோட பேட்டி எடுத்து மக்களுக்கு அவங்களோட உண்மை முகத்தை வெளிச்சம் போட்டு காட்டுறது தான் பிடிச்சிருக்கு; நான் அதையே பண்றேன் சார்; நீங்க வேணா இதுக்கு வேற ஒரு டீம் ஏற்பாடு பண்ணி செஞ்சிக்கோங்களேன்"

"அட போமா, உன்னைய விட இந்த விஷயத்தை யாரால பெஸ்ட்டா பண்ண முடியும் நீ நம்ம பத்திரிக்கையில வேலை பார்க்க ஆரம்பிச்ச இரண்டு வருஷத்துல மக்கள் மத்தியில நாம எவ்ளோ பிரபலமாகிட்டோம்னு தெரியுமா‌..???
இந்தளவுக்கு டேலண்ட்டான பொண்ணான நீயே பின்வாங்குனா அப்போ மத்தவங்க என்ன பண்ணுவாங்க" என கூறியபடி நேத்ராவின் முகத்தை பார்க்க,

அவளோ தனது முடிவில் பிடிவாதமாய் இருப்பது போல எவ்வித சலனமும் இல்லாமல் இருந்தாள்‌.

"சரிமா, அப்புறம் உன்னோட இஷ்டம்; அடுத்த வாரம் நடக்க போற இன்டர்வியூவுக்கு எல்லாமே ரெடியாச்சா"

"எல்லாம் ரெடி சார், நீங்க கெஸ்ட்டை மட்டும் கூட்டிட்டு வாங்க; மத்ததை நான் பார்த்துக்கிறேன்"

"உன்கிட்ட பிடிச்சதே இந்த காண்பிடண்ஸ் தான்மா; சரி நீ போய் உன் வேலையை பாரு" என பெருமூச்சு விட்டபடியே கூற,

அதனை பார்த்து புன்முறுவலோடு வெளியேறியவளோ தனது போனை எடுத்து யாருக்கோ அழைப்பு விடுக்க, மறுபக்கம் போன் ரிங் செல்வதை கேட்டு இதழில் ஏளனச் சிரிப்பை தவழ விட்டாள் நேத்ரா.

🔥🔥🔥🔥🔥

சேகர் தனது அறையை நோக்கி வேகமாய் செல்ல அவருக்காக காத்திருந்த எஸ் பியும் அவரை தொடர்ந்து உள்ளே நுழைந்தார்.

"நான் சொன்ன மாதிரியே விசாரிச்சீங்களா, ஏதாவது தெரிஞ்சதா" என கேட்க,

"ஆமா சார், நீங்க சொன்னமாதிரியே இதுக்கு முன்னாடி இரண்டு கொலை நடந்திருக்கு; அதுல முதல் கொலையோட பிணம் சேரி பகுதியில கிடைச்சிருக்கு; பிரபல வக்கீலா இருக்கிறவரை கண்டந்துண்டமா வெட்டி போட்டிருக்காங்க ஆனா அந்த கேஸை விசாரிச்ச போலிஸ் அந்த சேரியில சில வாரத்துக்கு முன்னாடி நடந்த ஜாதி கலவரத்துல குழம்பி போயிட்டாங்க"

அதை கேட்டு தனது புருவத்தை சுருக்கிய சேகரோ, "இதுல குழம்புறதுக்கு என்ன இருக்கு, போலிஸ் எதுக்காக குழம்பணும்"

"அதுவந்து சார், இந்த சேரியில கொஞ்ச வாரத்துக்கு முன்னாடி நடந்த ஜாதி கலவரத்துல இரண்டு ஜாதிக்குமிடையே பிரச்சனையாச்சு; அதுல ஒரு ஜாதிகாரங்க எங்க ஜாதிகாரன் பெரிய ஆளுங்களா இருக்காங்க அவங்களை வரவைச்சு உங்களை காலி பண்றேன்னு பேசிகிட்டாங்க; அப்போதான் வக்கீலோட பிணமும் அங்க கிடைச்சிருக்கு இவரும் பேசுனவனோட ஜாதி தான்; அதுனால எதிர் ஜாதிகாரங்க தங்களோட ஜாதி வெறியை தீர்த்துக்க கொன்னுட்டாங்கனு கேஸை முடிச்சிட்டாங்க"

"அதேப்போல இரண்டாவது கொலையானது ஒரு இன்ஜினியர், இவன் தன்னோட பீல்டுல பெருசா வளர்ந்தததால இவனோட வளர்ச்சி பிடிக்காத எதிரிங்க கொன்னுட்டாங்களோற ஆங்கிள்ல கேஸ் நடந்திட்டு இருக்கு ஆனா இது இரண்டுமே வெவ்வேறு இடத்துல நடந்ததாலயும் பெருசா பேசபடாததாலயும் இந்த கொலைக்கான ஒற்றுமைகளை கவனிக்கல; இப்போ மூணாவது கொலையா போலிஸே இறந்ததும் தான் இந்த கொலை பேசப்பட்டு இதுக்கு முன்னாடி நடந்த கொலையும் தெரிய வந்திருக்கு" என நீண்ட உரையாய் நடந்ததை எஸ் பி கூறி முடித்தார்.

"சரி, இதுக்கு முன்னாடி நடந்த கொலைகள்ல என்ன ஒற்றுமை இருக்கு"

"சார், இந்த இரண்டு கொலையுமே ஒரே வாரத்துல நடந்திருக்கு, முதல் கொலை புதன்கிழமையும் இரண்டாவது கொலை வெள்ளிகிழமையும் நடந்திருக்கு; அதுப்போல கொலையானவங்க ஒரே மாதிரி கண்டந்துண்டமா வெட்டபட்டிருக்காங்க; இதுல இரண்டாவதா இறந்தவங்களோட பொணத்துலயும் 2னு எழுதுன பேப்பர் இருக்கு சார்"

"அப்போ முதல்ல நடந்த கொலையில இப்படி ஏதாவது பேப்பர் கிடைச்சதா"

"இல்ல சார், அவங்களுக்கு அப்படி எதுவுமே கிடைக்கல"

"இல்ல, நீங்க தப்பா யோசிக்குறீங்க கண்டிப்பா அங்கயும் ஒரு பேப்பர் இருந்திருக்கும்; அதுல கொஞ்சம் தெளிவாவும் எழுதிருக்கலாம் டெட் பாடி கிடைச்ச இடம் சேரினு தானே சொன்னீங்க"

"ஆமா சார்"

"அப்போ அங்கதான் அந்த பேப்பரை போலிஸ் மிஸ் பண்ணிருக்கணும், இந்த போலிஸ் கொலை நேத்து புதன்கிழமை நடந்திருக்குனா அடுத்த கொலை நாளைக்கு தானே நடக்கணும்; இது ஒரு சீரியல் கில்லரோட வேலையா தான் இருக்கும்; ஆமா, இவங்க மூணு பேருக்கும் ஏதாவது ஒற்றுமை இருக்கா"

"இல்ல சார், இவங்க மூணு பேருக்குமே எந்தவிதமான சம்மந்தமும் இல்ல; இந்த வக்கீல் கூட வட நாட்டவரு தன்னோட சேட்டு அண்ணனை பார்க்க சென்னை வந்து இறந்திருக்காரு" என எஸ் பி கூற,

அதை கேட்டு குழம்பிய சேகரோ, "அதெப்படி ஒரு சின்ன ஒற்றுமை கூட இல்லாம இருக்கும்; இவங்களுக்கு நடுவுல ஏதாவது ஒற்றுமையிருந்தா தானே அதைவைச்சு இந்த கொலைகள் தொடர்ந்தா அடுத்தது யாரு கொலையாவானு தெரியும்..." என யோசித்து கொண்டிருக்க அவரின் கைப்பேசி இசைத்தது.

"ஹலோ, சேகர் ஐ பி எஸ் ஹியர்"

அதில் மறுமுனையில் கூறப்பட்ட செய்தியை கேட்டு சேகர் ஐ பி எஸ் அதிர்ச்சியில் உறைந்து போனார்.

🔥🔥🔥🔥🔥

மாலை நேர பரபரப்பை தனதாக்காமல் வாடிக்கையாளர்களை உற்சாகமாக வைப்பதே தங்களது கடமை என உணர்த்தும் வகையில் பல விதமான கார்டூன் உடை அணிந்த நபர்கள் ரெஸ்ட்டாரண்ட் வாசலிலேயே குழந்தைகளை ஈர்க்க,

அதனை பார்த்த குழந்தைகளும் தங்களது பெற்றோரை அழைத்துக் கொண்டு ரெஸ்ட்டாரண்ட்டிற்குள் நுழைந்தனர்.

அங்கு நுழைவாயிலேயே குழந்தைகளை வழிமறித்த கோமாளியோ சில மேஜிக் வித்தைகளை காட்ட,

அதை கண்ட குழந்தைகளோடு பெரியவர்களும் ஆர்வமாய் உள்ளே நுழைந்தனர்‌.

வண்ண வண்ண கேக்குகள் கண்ணாடி குடுவைகளுக்குள் அழகாய் காட்சி தர,

அதில் சில கேக்குகள் கார்டூன்களை போலவும் ஹாலிவுட் மூவி கதாபாத்திரங்களை போலவும் உருவம் பதிக்கப்பட்டு தயாரிக்கபட்டிருக்க குழந்தைகளும் அவ்வகையான கேக்குகளையே அதிகம் வாங்கிட ஆவல் கொண்டனர்.

"ஹாய் குட்டீஸ், உங்களுக்கு எந்த மாதிரி சூப்பர் ஹீரோ கேக் வேணும்னு அக்காகிட்ட சொன்னா அதேமாதிரி ரெடி பண்ணி தந்திடுவேன்; எங்க வரிசையா சொல்லுங்க பார்ப்போம்" என கூறி ஷமீரா கேக்குகளை ஆடர் எடுக்க,

"எனக்கு அயர்ன் மேன் கேக் வேணும்"

"எனக்கு சோட்டா பீம் கேக் வேணும்"

"எனக்கு பவர் ரேஞ்சர்ஸ்ல ரெட் ரேஞ்சர் கேக் வேணும்..."

"எனக்கு...எனக்கு...எனக்கு" என பல குழந்தைகளை தங்களின் விருப்பமான ஹீரோக்களின் உருவம் பதித்த கேக்குகளை வாங்க ஆவலோடு கூச்சலிட,

அப்பொழுது அங்கே வந்த கோமாளியோ, "சரி சரி, குட்டீஸ் அமைதியா இருங்க; இப்போ உங்களுக்கு பிடிச்ச கேக் வேணும்னா என்கூட சேர்ந்து ஒவ்வொருத்தரா மேஜிக் பண்ணனும்; மேஜிக் பண்றவங்களுக்கு அவங்களோட விருப்பமான கேக் கிடைக்கும் டீல்லா" என அதரா கேட்க,

"ஓகே டீல்" என குழந்தைகளும் கோரஸாக கத்தினர்.

"ஓகே குட்டி பையா, முதல்ல நீங்க வாங்க" என கூறி தனது மேஜிக்கை செய்து காட்ட,

அதில் குழந்தைகள் அனைவரும் அழகாய் லயித்து போக குழந்தைகளோடு குழந்தைகளாக ஷமீராவும் அதராவும் இணைந்து கொண்டு தங்களது கவலைகளை மறக்க, சிறிது நேரத்தில் குழந்தைகளும் சிறிது சிறிதாக அங்கிருந்து கலைந்து சென்றனர்.

அவ்வாறு செல்லும் குழந்தைகளையே வாசலிலிருந்து பார்த்த அதராவோ, "எனக்கும் பேரண்ட்ஸ் இருந்திருந்தா நானும் இந்த குழந்தைங்க மாதிரியே சந்தோஷமா இருந்துருப்பேன்ல அக்கா; இப்போ எல்லாருமே இருந்தும் அனாதை மாதிரி உணருறேன்"

"ஹே லூசு, என்ன பேச்சு பேசுற; உனக்காக எத்தனை பேர் துணையா இருக்கோம் ஆனா நீ என்னனா இது எதையுமே உணராம டக்குனு அனாதைனு சொல்லிட்ட; அப்போ உன்னைய பொறுத்தவரை நான் யாரோ தான்ல"

"அய்யோ அக்கா, நான் அப்படி ஒண்ணும் சொல்லல நான் சின்னவயசுல அப்பா அம்மா இல்லாம பாசம் காட்ட ஆளில்லாம தவிச்சப்போ நீதான் எனக்கு துணையா இருந்து பாசம் காட்டுன; அதுக்காக எத்தனையோ தடவை உங்க அம்மாகிட்ட திட்டு வாங்கியும் உன் பாசத்துல குறைவில்லாம பார்த்துகிட்ட; இப்படி எனக்காக எப்பயுமே துணையா இருக்கிற உன்னைய நான் யாரோவா பார்ப்பேனா; ஏதோ ஒரு சோகத்துல பீலிங்குல பேசிட்டேன் அதுக்கு போய் கோசிக்குறீயே அக்கா எங்க எனக்காக கொஞ்சம் சிரி பீளிஸ்"

"போடி, அதெல்லாம் சிரிக்க முடியாது நான் உன்மேல கோபமா இருக்கேன் போ"

"ஹய்யோ என் பூஜ்ஜிக்கால அம்முலு அக்கால பீளிஸ் கொஞ்சம் சிரிக்கா கொஞ்சமா சிரி" எனக் கூறி கிச்சுகிச்சு மூட்ட,

அதில் நெளிந்தபடியே சிரித்தவளோ அதராவை ஆதுரத்துடன் அணைத்துகொண்டாள்.

இவையனைத்தையும் அந்த ரெஸ்டாரண்ட் வாசலில் நின்றபடி ரசித்து பார்த்த இரு ஜோடி கண்களோ ஆனந்த கூத்தாடியது.

பீனிக்ஸ் உயிர்தெழும்🔥🔥🔥

(வணக்கம் நண்பர்களே... கதையை பற்றிய உங்களது கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் சென்று பதிவிடுங்கள் நன்றி...)

Thread 'பீனிக்ஸ் கிளியே - Comments' https://www.sahaptham.com/community/threads/பீனிக்ஸ்-கிளியே-comments.412/
 
Last edited:

Nancy mary

New member
Vannangal Writer
Messages
18
Reaction score
16
Points
3
🔥அத்தியாயம் - 4🔥

"சார் உங்களுக்கு கொலைகாரன் தந்த தகவல் உண்மையா இல்ல நம்மல ஏமாத்துறதுக்கான நாடகமா..???
எனக்கென்னமோ இங்க எந்த கொலையும் நடக்க வாய்ப்பில்லனு தான் தோணுது இங்க யாருமே சந்தேகப்படுற மாதிரி இல்லயே..." என எஸ்பி புளுடூத்தின் வழியாக சேகர் ஐபிஎஸ்ஸிடம் தனது சந்தேகத்தை ரகசியமாய் கூறினான்.

"உங்க குழப்பமும் சரிதான் ஆனா எனக்கென்னமோ அவன் சொன்னது உண்மையா இருக்கும்னு தோணுது ஏன்னா எனக்கு வந்த போன் காலோட சிக்னல் கடைசியா பேங்க்கு பக்கத்துல தான் காட்டுச்சு அதைவைச்சு பார்த்தா இந்த பேங்க்ல தான் கொலை நடக்க வாய்ப்பிருக்கு; நம்ம எதுக்கும் பேங்க் டைம் முடியுறவரை கொஞ்சம் வெயிட் பண்ணிவோம் அதுவரை கஸ்டமர் மாதிரி பணத்தை வித்டிராவல் பண்ணுங்க டீம் மெம்பர்ஸ் நீங்களும் அலார்ட்டா இருங்க" என பணம் செலுத்தும் படிவத்தை நிரப்பியபடி சேகர் அங்கிருந்த அனைவருக்கும் கட்டளைகளை பிறப்பிக்க,

அதனை கேட்ட மற்ற காவல்துறை அதிகாரிகளும் மக்களோடு மக்களாய் மப்டியில் இருந்தபடியே தங்களது சந்தேக வளையத்திற்குள் எவரேனும் குற்றவாளியாய் சிக்குவார்களா என நாலாபுறமும் பார்வையை சுழற்றியபடி எஸ்ரே கண்களால் கண்காணிக்க,

அங்கே வங்கி மேலாளரின் உதவியோடு சில முக்கிய வங்கி அதிகாரிகளுக்கும் இவர்களின் ஆபரேசனை சேகர் ஐபிஎஸ் கூறியபடியால் நடக்க போகும் சூழ்நிலைக்கு தகுந்தாற்போல அவர்களும் தயாராகி கொண்டனர்.

அதேப்போல பேங்கிற்கு வெளியே யாருக்கும் சந்தேகம் வராதபடி இரண்டு காவலர்கள் மப்டியில் நிற்க அவர்களை எதிரிலிருந்த டீக்கடையில் அமர்ந்தவாறு ஒருவன் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தான்.

அப்பொழுது அந்த போலிஸிடம் வந்த ஒரு சிறுவன் பிச்சை கேட்க,

அதில் ஆத்திரமடைந்த காவலரோ அவனை விரட்டியடிக்க அவன்மேல் இரக்கபட்ட மற்றொரு காவலரோ தனது பாக்கெட்டிலிருந்து சில சில்லறைகளை எடுத்து கொடுத்தார்.

இந்நிகழ்வுகளுக்கு மத்தியில் அங்கே தனது காரை பார்க் செய்த வயதானவரோ அவர்களை கடந்து பேங்கிற்குள் நுழைய,
அவருடனே பேக் மாட்டிய ஜர்கின் அணிந்த நபரும் உள்ளே சென்றார்.

வங்கிக்குள் நுழைந்த வயதானவரோ தனது அக்கவுண்டின் குளறுபடி ஏற்பட்டதாக வங்கி அதிகாரிகளிடம் விசாரிக்க,

அவரின் வங்கி கணக்கை சோதனை செய்த அதிகாரியோ, "உங்க அக்கவுண்ட்ல எந்த பிராப்ளமும் இல்ல சார் எல்லாமே சரியா இருக்கு" என கூறியதில் வெகுவாக குழம்பியவாறே அங்கிருந்து புறப்பட,

அவரை பின்தொடர்ந்து அவரின் நண்பரென யோசிக்கும் விதமாக ஜர்கின் அணிந்து நபரும் உடன் சென்றார்.

இவ்விருவரின் மேலும் போலிஸ்ஸின் சந்தேகக்கண்ணும் பதியாமல் போக, அது ஜர்கின் அணிந்த நபருக்கு கூடுதல் வசதியானது.

அந்த வங்கியை விட்டு வெளியேறிய ஜர்கின் அணிந்தவரோ தனது போனில் யாருக்கோ மிஸ்டூகால் தந்து கட் செய்ய,

அந்த அழைப்பிற்கு சொந்தகாரனோ தனது கையிலிருந்த டீக்கிளாஸை எதிரில் டீக்குடித்து கொண்டிருந்த பேங்க் வாட்ச்மேனின் தலையிலேயே வீசியெறிய,

அந்த சூட்டில் அலறி துடித்தவனின் சத்தம் பேங்கிற்கு வெளியே நின்றிருந்த போலிஸாருக்கும் தெளிவாய் கேட்டதில் தங்களது பணியை மறந்து சத்தம் வந்த திசை நோக்கி ஓட அவ்விடமே சிறிது நேரத்தில் கலவரமானது.

இதனை சாதகமாக பயன்படுத்திய ஜர்கின் நபரோ தனது பேக்கிலிருந்து ஒரு கோமாளி மாஸ்க்கை எடுத்து முகத்தில் அணிந்து கொண்டு தங்களை வேறு எவரும் கண்காணிக்காதவாறு வயதானவரின் வாயை பின்புறமிருந்து பொத்தியபடி பேங்க்கிற்கு ஓரமாய் அமைந்த மாடிபடியை நோக்கி இழுத்து செல்ல,

அக்கரங்களிலிருந்து விடுபட முடியாமல் திணறிய வயதானவரோ ஜர்கின் நபர் இழுத்த இழுப்பிற்கு சென்றார்.

வங்கியின் மாடிக்கு சென்றதும் அவ்வயதானவரை விடுவிக்க அக்கரங்களிலிருந்து விடுபட்டவரோ மூச்சு வாங்கியபடி, "ஏய் யாருடா நீ, எதுக்கு என்னைய இப்படி இழுத்திட்டு வந்திருக்க நான் இப்போவே போலிஸூக்கு போன் பண்றேன் பாரு" என கூறியபடி போனை எடுத்து டயல் செய்ய,

அதை வேகமாக பிடுங்கிய ஜர்கின் நபரோ அதே வேகத்தோடு வயதானவரின் மூக்கில் குத்த மூக்கிலிருந்து ரத்தம் பீறிட்டு வெளியேறியது.

இங்கு வங்கியினுள்ளே பொறுமையிழந்த எஸ்பியோ, "சார் மணி நாலு ஆகப் போகுது இன்னும் நாம சந்தேகப்படுற மாதிரி யாருமே வரல; எனக்கென்னமோ நமக்கு தப்பான தகவல் தான் வந்திருக்குமோனு தோணுது நாம வீணா டைம் வேஸ்ட் பண்றோம் சார்..." எனக் கூற, அதனை கேட்ட சேகரும் நிதானமாய் யோசிக்க துவங்கினார்.

அப்பொழுது வங்கியின் வாசற்கதவு ஒருவரால் திறக்கப்பட அவ்வழியாக வெளியே நடக்கும் கலவர சத்தமும் எங்கிருந்தோ யாரோ அலறும் சத்தமும் கேட்க சத்தம் வந்த திசை நோக்கி அனைவரும் வேகமாய் வெளியேறினர்.

அங்கே வங்கிக்கு எதிரிலிருந்த டீக்கடையிலும் அலறல் சத்தத்தை கேட்டு அனைவரும் ஸ்தம்பித்து நிற்க,

அதை பயன்படுத்திய சண்டை மூட்டிய இளைஞனோ அவ்விடத்திலிருந்து தப்பிச் செல்ல அங்கிருந்த இரு காவலர்களும் சத்தம் கேட்ட வங்கியை நோக்கி ஓடி வந்தனர்.

அதேசமயம் வங்கியின் மாடியிருந்து ஒரு நபர் கைகள் கட்டப்பட்ட நிலையில் கத்தியபடி கீழே விழுக அவரின் மேலே மாடியிலிருந்து எய்த அம்புகள் சரமாரியாக தாக்கியது.

அத்துணை அம்புகளின் தாக்கத்தால் தனது உடலில் பல்வேறு பகுதியிலும் அம்புகள் சொறுக்கபட்ட நிலையில் மகாபாரத பிஷ்மர் அம்பு படுக்கையில் வீழ்ந்ததை போல தரையில் வீழ,

அந்நிகழ்வை பார்த்தபடியே பேங்க்கிலிருந்து வெளியேறிய சேகர் மாடியை பார்த்தார்.

அங்கே ஜர்கின் அணிந்து முகத்தை கோமாளி மாஸ்க்கால் மறைத்தபடி அம்புடன் நின்றவனோ கண்ணிமைக்கும் நொடியில் கீழே வீழ்ந்திருந்தவனின் நோக்கி தனது கடைசி அம்பை விட,

அது அவனின் வாயை கிழித்துக்கொண்டு பின் மண்டையை பிளந்தபடி தரையின் பதிய அந்த அம்பிலேயே தனது இன்னுயிரை துறந்தார்.

இதனை பார்த்து அதிர்ந்த சேகர் நொடியும் தாமதிக்காது ஜர்கின் அணிந்த நபரை பிடிக்க மாடியை நோக்கி ஓட,

அந்நபரோ அந்த மாடியை விட்டு பக்கத்திலிருந்த மாடிக்கு தாவி சென்று திரும்பி பார்க்க சேகர் மாடிக்கு ஓடி வருவதை கண்டு அங்கிருந்து ஒவ்வொரு மாடியாய் தாவி குதித்து ஒரு கட்டத்திற்கு மேல் மறைந்தே போக வங்கியின் மாடிக்கு வந்த சேகரோ இதனை கண்டு ஏமாற்றம் அடைந்தார்.

அதேசமயம் இந்நிகழ்வுகளையெல்லாம் வங்கிக்கு அருகிலிருந்த பத்திரிக்கை அலுவலகத்தினர் வீடியோவாய் பதிவு செய்திட,

அதை கண்ட சேகரோ இனி ஊடகத்துறையினர் வாய்க்கு அவலாக போகும் காவல்துறையின் நிலையை நினைத்து பெருமூச்சு விட்டார்.

🔥🔥🔥🔥🔥

"ச்சே எப்போ பார்த்தாலும் டார்கெட்டூ டார்கெட்டூனு நம்ம உயிரை வாங்குறதையே குறியா வைச்சிருக்கானுங்க; உங்களுக்கு டார்கெட் வேணும்னா நீங்களும் வேலை பார்க்கலாம்ல எதுக்குடா தேவையில்லாம எங்களை மட்டும் இதை செய் அதை செய்னு சொல்லி உயிரை வாங்குறீங்க" என தனது மேனேஜரிடம் போனில் காரசாரமாக பேச,

அதற்கு மேனேஜரோ, "மிஸ்டர்.சலீம் இப்போ என் போன் நல்லா கேட்குது தெரியாதனமா கோல்ட்டுல போட்டேன் போல ஆமா நீங்க ஏதோ உயிரை வாங்குறதா பேசுனீங்களே என்ன விஷயம் சலீம்" எனக் கூற,

அதை கேட்டு உடனே சுதாரித்தவனோ, "சார், அது ஒண்ணுமில்ல சார்; உங்க போன் கம்பெனிகாரன் உங்க செல்போன்ல கோளாறு பண்ணி உங்க உயிரை வாங்குறான்ல; அதைதான் சொன்னேன் வேற ஒண்ணும் இல்ல.." என‌க் எதையோ கூறி சமாளித்தான்.

"ஓகே மிஸ்டர்.சலீம் உங்க டார்கெட்டை சீக்கிரமா முடிக்க பாருங்க; நம்ம கம்பெனியே உங்களை நம்பி தான் இருக்கு பெஸ்ட் ஆப் லக்"

"ஓகே சார், ஸயூர் சார்; சீ யூ டேக் கேர்" என கூறி வேகமாய் அழைப்பை துண்டித்தவனோ,

"ஊப்ப்ப் ஹப்பாடா, சனியன் ஒழிஞ்சான் எனக்குனே வரானுங்க பாரு; முதல்ல உனக்கொரு முடிவை கட்டுறேன்டா..." என ஆவேசமாய் போனை பார்த்து கத்திய சலீமை யாரோ ஒருவர் வேகமாய் இடிக்க,

அதில் நிலைதடுமாறி பின்பு சுதாரித்தவனோ இடித்தவரை திட்ட வாயெடுக்க அப்பொழுது அங்கிருந்த நபரை கண்டு வெகுவாய் குழம்பி போனான்.

"ஹேய் நேத்ரா, நீயென்ன இங்க பேங்க் பக்கமிருந்து ஓடிட்டு இருக்க; என்னடி ஆச்சு ஏதாவது பிரச்சனையா..." எனக் கேட்டவனின் பார்த்து மூச்சு வாங்கிய நேத்ராவோ,

"ச்சே ச்சே அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்ல மாமா; இங்க என்னோட பிரண்ட்ஸ் கூட வெளில வந்தேன் அதுல ஒருத்தியை சும்மா விளையாட்டுக்கு வெறுபேத்துனேனா அதுக்கு கோபபட்டவ என்னைய துரத்திட்டு வந்தா அதான் அவகிட்டயிருந்து தப்பிக்க ஓடி வரேன்; ஆமா கொஞ்சநாளா உன்னைய பார்க்கவே முடியலையே அவ்ளோ பிஸியாகிட்டீயா மாமா உன் பிரண்ட் ஸ்டீபன்கிட்ட கூட உன்னைய பத்தி விசாரிச்சேனே அதைபத்தி ஏதாவது சொன்னானா..."

"அடிங்கு அப்படியே அறைஞ்சேனா பல்லெல்லாம் தனியா வந்திரும்; யாரை பார்த்து மாமா ஓமானு கொஞ்சுட்டு இருக்க மீடியால வேலை பார்க்குற மாதிரியா நடந்துக்குற ஏதோ கிராமத்து பொண்ணு மாதிரி என் பின்னாடியே சுத்திட்டு இருக்க; இல்ல நான் தெரியாம தான் கேட்குறேன் உனக்கெல்லாம் வேற வேலையே இல்லயா..."

"இல்லயே மாமா இந்த ஜென்மத்துல உன்னைய கரெக்ட் பண்றது தான் என் முழு நேர வேலையே மத்தபடி மீடியா எல்லாமே சும்மா பார்மாலிட்டிக்கு தான்; நீ ஓகே சொன்னா போதும் உனக்காக நான் என்ன வேணாலும் பண்ணுவேனே.." எனக் கூறி கண்ணடித்தவளை கோபமாய் முறைத்தவனோ,

"ஓ மேடம் என்ன வேணாலும் செய்வீயா; அப்படினா நேரா போய் கீழ்பாக்கத்துல அட்மிட் ஆகிடு உன் தொல்லை இல்லாம நானாவது கொஞ்சம் நிம்மதியா இருப்பேன்; இங்கபாரு இதான் உனக்கு பர்ஸ்ட் அண்ட் லாஸ்ட் வார்னிங் இனி மாமா ஓமானு என்கிட்ட வந்த அப்புறம் நான் மனிசனா இருக்க மாட்டேன் பார்த்துக்கோ" எனக் கூறிக்கொண்டு செல்ல,

அவனின் கூற்றில் வருந்தி தலைகுனிந்தவளோ பின்பு செல்லும் அவனை பார்த்தபடி குறுஞ்சிரிப்பை உதிர்த்தாள்.

'மாமா உன் கோபம் ரொம்பவே நியாயமானது தான் ஆனா ஒருநாள் நான் யாருனு உனக்கு தெரிய வரும்போது ஏண்டா என்னைய வெறுத்தோம்னு பீல் பண்ணுவ அப்போ உன்னைய நீயே வெறுத்தா கூட ஆச்சர்யபடுறதுக்கு இல்ல ஆனா அப்படி ஒரு விஷயம் நடக்குறப்போ நானே உனக்கு துணையா இருப்பேன் அதுக்கு முன்னாடி எனக்கு சில கடமைகள் பாக்கி இருக்கு அதை முடிச்சிட்டு மொத்தமா உனக்கே உனக்கானவளா வரேன் அதுவரை இப்படி சின்ன சின்னதா டார்சர் தரேன்' என எண்ணியபடி கூலிங்கிளாஸை அணிந்தவளோ அங்கிருந்து புறப்பட்டு சென்றாள்.

இங்கு நேத்ராவோடு உரையாடலை முடித்து கடந்து சென்ற சலீமின் முன்னால் ஒரு பைக் வேகமாய் வந்த நிற்க அதை கண்டு முதலில் அரண்டவனோ பின்பு சுதாரித்துக்கொண்டு நிதானமடைந்தான்.

"ஹேய் லூசு, இப்படியா வேகமா வந்து பயமுறுத்துவ ஒரு நிமிசம் பயந்தே போயிட்டேன் தெரியுமா; ஆமா என்ன ரேஸர் ராக்கியோட காத்து இந்தபக்கமா வீசுது இன்னைக்கு நீ ரேஸ்ல கலந்துக்கிற நாள் கூட இல்லையே அப்புறம் எதுக்காக இங்க வந்திருக்கீங்க சார்ர்ர்ர்..." என கோபமாய் ஆரம்பித்து நக்கலாய் முடிக்க,

அதனை கேட்ட ரேஸர் ராக்கியோ ஹெல்மெட்டிற்குள் புன்னகையை பதுக்கியபடி பின்னால் ஏறுமாறு தலையசைத்தார்‌.

"அதானே, எப்பயும் நாம கேட்ட கேள்விக்கு பதிலே வராதே; இது புரியாம கேள்வி கேட்டு மொக்க வாங்குறதே நம்ம பொழப்பா போச்சு" என புலம்பியபடி பின்னால் ஏற வாகனம் அங்கிருந்து சீறி பாய்ந்து புறப்பட்டது.

அந்த வாகனத்தின் பின்பக்கமாய் அமர்ந்திருந்த சலீமோ இன்னமும் முறைத்தபடியே வர அதனை பார்த்து சிரித்த ராக்கியோ, "சரிடா, உன் கேள்விக்கு நான் பதில் சொல்றேன் நீ முகத்தை இப்படி தூக்கி வைக்காத பார்க்க சகிக்கல; இன்னைக்கு ரேஸ் போகலாம்னு தோணுச்சு அதான் ராக்கியோட அச்சிஷ்ட்டண்ட்டான சலீமை தேடி ஓடி வந்துட்டேன் போதுமா"

"ஏதே இன்னைக்கு ரேஸ் போக போறீயா; ஏன் திடீர்னு பிளான் சேன்ஞ் பண்ணிட்ட வழக்கமா நீ ரேஸ்ல கலந்துக்குற நாள் இது இல்லையே ஏதாவது பணத்தேவை வந்திருச்சா" எனக் கேட்ட சலீமின் கேள்விக்கு வழக்கம்போல புன்னகையையே பதிலாய் அளிக்க,

அதேசமயம் சலீமின் போனும் இசைத்து அவனுடைய விசாரணையை தடை செய்தது.

"ஹலோ சொல்லுங்க அண்ணே, ஏதாவது முக்கியமான விஷயமா" எனக் கேட்டவனோ மறுமுனையில் கூறப்பட்ட செய்தியை கேட்டு அதிர்ந்து போனான்.

"என்னனே சொல்றீங்க, நம்ம பேச்சிக்கா இப்படி ஆச்சு அண்ணாச்சியும் வந்திருக்காரா அப்போ எல்லாமே சரியாகிடும்னே நீ கவலைபடாத" என பேசியவனின் போனை வாங்கிய ராக்கியோ "சலீம் எங்கூட முக்கியமா ஒரு வேலையா வந்துட்டு இருக்கான் அதுனால அவனை தொந்தரவு பண்ணாதீங்க; அங்க நிலமை கைமீறி போச்சுனா சொல்லுங்க நாங்க உடனே வந்திடுறோம்" எனக் கூறி எதிர்முனையில் பேசியவனுக்கு பேச வாய்ப்பளிக்காது போனை கட் செய்து சலீமிடம் தர,

அதை பெற்றுக்கொண்ட சலீமோ, "இங்க பாரு ராக்கி நீ பண்றது கொஞ்சம் கூட சரியில்ல, நம்ம பேச்சிக்கு ஒரு பிரச்சனைனு வரும்போது நாமளே அங்க இல்லனா நல்லா இருக்குமா முதல்ல நீ வண்டியை திருப்பு; நமக்கு இப்போ ரேஸை விட பேச்சி வாழ்க்கை தான் முக்கியம்"

"இல்லடா, எனக்கு இப்போ ரேஸ் தான் முக்கியம் அங்க பிரச்சனை கைமீறி போச்சுனா நாம போகலாம்; இப்போ அமைதியா வா" எனக் கூறிய ராக்கியோ பைக்கின் ஆக்ஸிலேட்டரை முறுக்கி வேகமெடுக்க,

அதை கண்டு கோபமான சலீமோ, "நீ எப்போயிருந்து இவ்ளோ சுயநலவாதியா மாறினனு புரியல ராக்கி; இதெல்லாம் கொஞ்சம் கூட நல்லாயில்ல என்னமோ பண்ணுங்க இதுக்கு மேல என்ன சொல்றது ஒண்ணும் தெரியல" எனக் விரக்தியாய் கூற,

அவனை பைக்கின் சைடு மிரர் வழியாக பார்த்து மன்னிப்பு கேட்ட ராக்கியோ தனது மனநிலையை வெளிக்காட்டும் பொருட்டு வாகனத்தின் வேகத்தை அதிகரிக்க அந்த வாகனமும் இவ்விருவரின் மனநிலைக்கேற்ப நிலையில்லாமல் பறந்து சென்றது.

🔥🔥🔥🔥🔥

சென்னை மாநகரில் தங்களை சுற்றி நடக்கும் கலவரங்களை சிறிதும் உணராத கிருஷும் ஜஸ்வர்யாவும் ரெஸ்டாரண்ட்டில் அரட்டையடிக்க வருகை தர அங்கே தங்களின் கண்களுக்கு பரிசான பாசமழையில் இதமாய் நனைந்தனர்.

"வாவ் வாட் அ பியூட்டிபுல் சீன், என்னோட செல்லா குட்டியும் தோஸ்தும் எந்தளவுக்கு கொஞ்சல்ஸ் பண்ணுதுங்கல சோ கியூட்" என சிலாகித்த கிருஷின் காதில் ரகசியமாய் அணுகுண்டை இறக்கினாள் ஐஸ்வர்யா.

"நீ இங்க மீரா அக்காவை சைட்டடிக்க வந்திருக்கனு அவங்களுக்கு தெரிஞ்சா பாசமழை இல்ல அடைமழையே சிறப்பா பெய்யும்; என்ன அவங்ககிட்ட உண்மையை சொல்லவா" என நக்கலடித்தவளின் கூற்றில் அதிர்ந்தவனோ,

"அடிப்பாவி நீ கேட்டதுக்காக திங்குறதுல இருந்து மூஞ்சில பூசுறது வரை எல்லாத்தையும் வாங்கி கொட்டுனா என் காதல்ல ஒரு லாரி மண்ணள்ளி கொட்ட பிளான் போடுறீயே; நீ அவகிட்ட தாராளமா சொல்லிக்கோ ஆனா அதுக்கு முன்னாடி அவளை பத்தி என்கிட்ட சொல்லு வா" என அவளை இழுத்துகொண்டு அங்கிருந்த டேபிளில் சென்று அமர,

அங்கும் தனக்கு தேவையானதை ஆர்டர் செய்து பில்லை கிருஷின் தலையில் கட்டி திருப்தியடைந்தாள் ஐஸ்வர்யா.

அதேசமயம் இங்கு பாசமழையில் திளைத்தவர்களின் நிலையை கலைக்கும் பொருட்டு சமையலறையிலிருந்து பதறியடித்து வந்தவனோ அதிர்ச்சியான செய்தியை இடியாய் தலையில் இறக்க,

அதை கேட்டு அதிர்ந்த ஷமீராவோ அவனுடன் வேகமாய் சமையலறைக்கு ஓட அதராவோ நமட்டு சிரிப்பு சிரித்தபடி அவர்களை பின்தொடர்ந்து சென்றாள்.

அங்கே சமையலறையில் சாக்லேட் கேக்கிற்கு பதிலாக கருகி போன கேக்கினால் மேஜையை அலங்கரித்திருக்க,

அதனை வைத்த கண் எடுக்காமல் கன்னத்தில் கைவைத்து பார்த்து கொண்டிருந்தவனின் தலையில் தட்டிய ஷமீராவோ,

"ஏண்டா லூசு, உனக்கொரு விஷயம் வரலனா சும்மா விட வேண்டியது எதுக்கு தேவையில்லாம டிரை பண்ணி சொதப்பிட்டு இருக்க; லாஸ்ட் டைம் ஓனர் என்ன சொன்னாரு இனிமே பொருட்கனை வேஸ்ட் பண்ணா வேலையை விட்டு தூக்கிடுவேன்னு மிரட்டுனாருல; அதை கேட்டும் சொதப்பிருக்கீயே உனக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா..." என திட்ட துவங்கிட,

அவளின் பேச்சை கேட்டு அரண்டவனோ, "அட மீராக்கா நீங்க வேற நானே அதை யோசிச்சதால தான் பயத்துல சொதப்பிருக்கேன் இதுல நீங்களும் அதையே நியாபகபடுத்தி பீதியை கிளப்புறீங்களே இப்போ நான் என்ன பண்ணனு தெரியலையே" என வருந்தி கண்ணீர் சிந்த,

அதை கண்ட ஷமீராவும் உடன் வருந்த துவங்க, அதராவோ அங்கிருந்த பொருட்களை எடுத்து கேக் செய்ய துவங்கினாள்.

"ஹேய் தாரா, என்ன பண்ற நீ; ஆல்ரெடி இவன் வேஸ்ட் பண்ண கேக்கையே என்ன பண்ணனு தெரியாம இருக்கோம் இதுல நீயும் கேக் செஞ்சு வேஸ்ட் பண்ண போறீயா; அட நான் சொல்லிகிட்டே இருக்கேன் நீ கேக் செஞ்சிட்டே இருக்க ஸடாப் இட் தாரா" என கத்திய மீராவிடம்,

"மீரா அக்கா என்னைய நம்புங்க; என்னால பாஸ்ட்டா அதேசமயம் சொதப்பாம கேக் செய்ய முடியும்; இங்க வெளில கஸ்டமர்ஸ் வெயிட் பண்ணிட்டு இருக்காங்க இப்போ நாம தாமதபடுத்துற ஒவ்வொரு நிமிசமும் ஓனருக்கு விஷயம் தெரிய வாய்ப்புகள் அதிகம்; கொஞ்சம் என்னைய வேலை செய்ய விடுங்க கா பீளிஸ்" என கெஞ்சியவளோ மாவினை எடுத்து கேக் செய்ய துவங்கினாள்.

அவளின் கேக் செய்யும் நுணுக்கத்தையும் வேகத்தையும் பார்த்து ஷமீராவும் மற்றவர்களும் பிரமிக்க, அதையெல்லாம் கருத்தில் கொள்ளாத தாராவோ தயாரித்த கேக்கை ஓவனில் வைத்தாள்.

அந்த கேக் நன்றாக தயாரானதும் அதை ஓவனிலிருந்து எடுத்து கீரிமினால் நேர்த்தியாக அலங்கரித்தவளோ ஷமீராவிடம் கேக்கை தந்துவிட்டு புன்னகைத்தபடி கருகி போன கேக்கை எடுத்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டாள்.

அதேசமயம் அந்த ரெஸ்டாரண்டில் அமர்ந்திருந்த கிருஷோ, "ஐஸ்ஸூ இந்நேரம் உனக்கொரு லவ்வர் இருந்திருந்தா உனக்கு என்ன எல்லாம் வாங்கி தருவானோ அதெல்லாம் வாங்கி தந்திருக்கேன்; இத்தனையும் வாங்கிட்டு அமுக்குனி மாதிரி கேக் சாப்பிடுறீயே இது உனக்கே நியாயமா இருக்கா; ஒழுங்கு மரியாதையா மீராவை பத்தி சொல்லு இல்லனா இதையெல்லாம் குடு நானே போய் ரிட்டண்ன் பண்ணி என் காசை வாங்கிக்கிறேன்" என கூறி ஐஸ்வர்யாவிற்கு வாங்கி தந்ததை பறிக்க முயல,

அதனை தடுத்த ஐஸ்வர்யாவோ, "என்னை நிம்மதியா கேக் கூட சாப்பிட விடமாட்டீயா சரி சரி முறைக்காத மீரா அக்காவை பத்தி எல்லாமே சொல்லிடுறேன்" என கூறியவளிடம்,

"நீ முதல்ல எனக்கு டீடெயிலை சொல்லு; அப்புறம் ஒரு கேக் என்ன ஒராயிரம் கேக் வாங்கி தரேன் எங்க சொல்லு பார்ப்போம்" என ஆர்வமாய் அவள் கூறப்போகும் தகவலை கேட்க தயாரானான் கிருஷ்.

"நீ எல்லா காசையும் எனக்கே செலவழிச்சு காலி பண்ணிராத; உன்னோட காதலுக்கு நிறையவே செலவழிக்கணும் அதுக்கும் கொஞ்சம் மிச்சம் வை உன்னோட ஆளு மீராவை பத்தி சொல்லணும்னா..."

"ஹேய் ஹேய் நிறுத்து, இப்போ என்ன சொன்ன திரும்ப சொல்லு" என கண்கள் மின்ன ஆர்வத்துடன் கிருஷ் கேட்க,

"அதெல்லாம் திரும்ப சொல்ல முடியாது; இப்போ உனக்கு தகவல் வேணுமா வேணாமா" என மிரட்டியவளிடம்,

"சரி சரி இதை அப்புறமா சொல்லு இப்போ முதல்ல தகவலை சொல்லு" என பதறிபடி கூறியவனின் கூற்றிற்கு இணங்க ஷமீராவை பற்றி கூற துவங்கினாள்.

"மீரா அக்கா பத்தி சொல்லணும்னா அவங்க மெடிக்கல் காலேஜ்ல மூணாவது வருஷம் படிச்சிட்டு இருக்காங்க; அவங்களோட பேரண்ன்ஸ் இரண்டு பேருமே பிஸினஸ் பிஸினஸ்னே போயிடுறதால தனிமையா உணர்றவங்க ஸ்கூல் படிக்கும்போதே ஹாஸ்டல்ல தங்கி படிக்க ஆரம்பிச்சிட்டாங்க ஹாக்கில ரொம்பவே ஆர்வம் அதிகம் ஸடேட் லெவல்ல ஜெயிச்சிருக்காங்க தெரியுமா; சனிக்கிழமையானா மறக்காம கோயிலுக்கு போயிடுவாங்க இதையெல்லாம் தாண்டி அவங்க கோபமாகுற விஷயமே யாராவது பசங்க சைட் அடிக்கிறது தான் உடனே எதையும் யோசிக்காம சப்புனு அறைஞ்சிடுவாங்க; அவங்களுக்கு அவங்களோட லட்சியம் ரொம்ப முக்கியம் யாரையும் எதிர்பார்க்காம சுதந்திரமா இருப்பாங்க இவ்ளோதான்பா எனக்கு தெரியும்" எனக் கூறியவளோ நீண்ட சொற்பொழிவாற்றி களைப்படைந்தது போல அருகிருந்த ஜூஸ் பாட்டிலிருந்து ஜூஸை எடுத்து குடிக்க துவங்கினாள்.

அதேசமயம் ஐஸ்வர்யா கூறிய தகவல்களை எல்லாம் ஆச்சர்யமாய் கேட்டுக்கொண்டிருந்த கிருஷோ, "வாவ், அப்போ என் ஆளும் என்னைய மாதிரி சூழல்ல வளர்ந்தவ தானா; அதுசரி அவளை நெருங்க ஏதாவது வழி இருக்கா"

"அதுக்கு ஒரே ஒரு வழி தான் இருக்கு அவங்களை கரெக்ட் பண்ணனும்னா அவங்களோட பிரண்ட்ஸை கரெக்ட் பண்ணனுமே" என குறும்பாய் கூற,

அதை கேட்டு அதிர்ந்தவனோ, "எதே பிரண்ட்ஸை கரெக்ட் பண்ணனுமா என்னடி சொல்ற..."

"ஆமா டா, அவங்களோட பிரண்ட்ஸுக்கு பிடிச்சதெல்லாம் வாங்கி தந்து உன் டீம்ல சேர்த்துகிட்டா; அவங்களே மீரா அக்காவை பிரைன் வாஷ் பண்ணிடுவாங்க என்ன ஒண்ணு அதுக்கு கொஞ்சம் செலவாகும்" என கூற அதற்கான செலவுகளையும் தனது கையிருப்பையும் ஒப்பிட்டு பார்த்து அதிர்ந்தவனோ தன்னிலையை எண்ணி மயங்கி சரிந்தான்.

"அடப்பாவி இதுக்கே மயங்கிட்டீயா; இதுல நீயெல்லாம் எப்படி மீரா அக்காவை மயக்குவீயோ" என‌ கூறி கிண்டலடிக்க,

அதேசமயம் இங்கு அதராவோ கேஷ் கவுண்டரில் அமர்ந்திருந்த தனது முதலாளியின் முன்னால் வந்து கருகி போன கேக்கை வைத்தபடி பேசத் துவங்கினாள்.

"சார் நான் கஸ்டமர்ஸூக்கு கேக் ரெடியாச்சானு பார்க்க கிச்சன் பக்கமா போனேன் அங்க யாருமில்லாததால லேட்டாகுதுனு நானே கேக் செய்ய டிரை பண்ணேன் ஆனா எதிர்பாராதவிதமா கேக்கு தீஞ்சு போயிடுச்சு; என்னைய மன்னிச்சிருங்க சார் இனி இப்படி பண்ண மாட்டேன்" என கூறி வருத்ததோடு மன்னிப்பு கேட்க,

அதில் கோபமான முதலாளியோ அனைவரின் முன்னிலையிலும் அதராவை திட்டி தீர்க்க துவங்கினார்.

"உனக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா, உன்னைய இதையெல்லாம் செய்ய சொல்லி யாரு சொன்ன உனக்கு குடுத்த வேலையை மட்டும் பார்க்க வேண்டியது தானே; ஏன் இப்படி தேவையில்லாததை செஞ்சு உயிரை வாங்குற..." என இன்னும் அதிகமாய் திட்டிக்கொண்டிருக்க,

தன் முதலாளியின் பேச்சை அதரா அமைதியாய் கேட்டுகொண்டிருக்க அப்பொழுது முதலாளியின் டேபிளின் மீது சில பண நோட்டுகளை கிருஷ் கோபமாக வைத்தான்.

அதை பார்த்து அதிர்ந்த முதலாளியிடம், "என்ன சார் பார்க்குறீங்க, உங்களோட வேஸ்ட்டா போன பொருளுக்கான நஷ்ட ஈடா இதை வைச்சிக்கோங்க பத்தலனா இன்னும் கூட கேளுங்க தரேன் ஆனால் என் பிரண்ட்டை இப்படி அவமானபடுத்துறதை என்னால பார்த்துட்டு சும்மா இருக்க முடியாது; அவளுக்கு இருக்கிற திறமைக்கு இதுமாதிரி ஒண்ணு இல்ல ஆயிரம் ரெஸ்டாரண்ட்டை திறப்பா அப்படிபட்ட திறமைசாலியை சின்ன தப்புக்காக இந்தளவுக்கு திட்டுறது தப்பு சார்" என பேசிக்கொண்டே போக,

அவனை தடுத்த அதராவோ முதலாளியிடம் மன்னிப்பு கேட்டு அங்கிருந்து அவனை அழைத்துக்கொண்டு சென்றாள்.

"கிருஷ் இப்போ எதுக்கு நீ தேவையில்லாம இவ்ளோ கோபபடுற; நான் செஞ்ச தப்புக்கு தானே திட்டுனாங்க,

"எது நீ செஞ்ச தப்பா, எங்க என்மேல சத்தியம் பண்ணி சொல்லு இது நீ செஞ்ச கேக் தான்னு; யாரோ செஞ்சதுக்கு நீ பழி ஏற்க வந்திருப்ப அதுக்காக இப்படி திட்டு வாங்கிட்டு இருக்க, எனக்கு உன்னைய பத்தி தெரியாதா உன்னைய யாராவது திட்டுனா என்னால பார்த்துட்டு சும்மா இருக்க முடியாது; அது உன் முதலாளியாவே இருந்தாலும் நான் இப்படிதான் கேள்வி கேட்பேன்" என கூறியவனின் நட்பை எண்ணி பெருமிதம் அடைந்தாள் அதரா.

"நீ என்மேல வைச்சிருக்கிற பாசமெல்லாம் புரியுது டா ஆனா நீ எதுக்காக இங்க வந்த என்னை பார்க்கவா இல்ல வேற ஏதாவது விஷயம் இருக்கா..." எனக் கேட்க,

"அது வந்து தாரா நான்..." என தயங்கியவனை காப்பாத்தவே ஜஸ்வர்யா அங்கு வந்து சேர்ந்தாள்.

"ஹாய் தாரா நானும் கிருஷூம் பக்கத்துல ஷாப்பிங்காக வந்தோம், அப்படியே உங்க ரெஸ்டாரண்ட் கேக் நல்லா இருக்குமே சாப்பிட வந்தோம் அப்போதான் உன் பஞ்சாயத்து நடந்துச்சு அதை பார்த்து கிருஷூம் பொங்கிட்டான் அப்படிதானடா" என கூறி கிருஷை நக்கலாய் பார்க்க,

அதனை கேட்ட கிருஷ் எல்லா பக்கமும் தலையை ஆட்டி சமாளிக்க,

அவர்களை சந்தேகமாய் பார்த்த அதராவோ, "அப்படியா இதையெல்லாம் நம்புறமாதிரி இல்லையே, ஏதோ கூட்டு களவாணித்தனம் பண்ணுறீங்கனு மட்டும் தெளிவா தெரியுது ஒருநாள் கண்டுபிடிக்கிறப்போ இருக்கு; சரி எனக்கு முக்கியமான வேலை இருக்கு நான் கிளம்புறேன் நீங்களும் பத்திரமா வீட்டுக்கு போங்க" எனக் கூறியபடி செல்ல,

அவள் சென்றதை உறுதிபடுத்துக்கொண்ட கிருஷோ, "நல்லவேளை ஐஸ்ஸு, சரியான டைம்ல வந்து என்னைய காப்பாத்திட்ட; இங்க நான் சைட் அடிக்க தான் வந்தேன்னு தெரிஞ்சிருந்தா கண்டிப்பா இவளே என் காதலுக்கு சமாதி கட்டிருப்பா இனி இப்படி என்னைய அடிக்கடி காப்பாத்து; ஆமா ஐஸ்ஸூ ஏதோ செலவு பண்ணனும்னு சொன்னீயே அது என்ன விஷயம் அதைபத்தி கொஞ்சம் டீடெயிலா சொல்லு..." என கேட்டப்படி ஐஸ்வர்யாவை அழைத்துக்கொண்டு செல்ல,

அந்த ரெஸ்டாரண்ட் வாசலில் நின்றவாறு செல்லும் அவர்களையே சுவாரஸ்யமாய் பார்த்து கொண்டிருந்தாள் ஷமீரா.

பீனிக்ஸ் உயிர்த்தெழும்🔥🔥🔥

(வணக்கம் நண்பர்களே... கதையை பற்றிய உங்களது கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் சென்று பதிவிடுங்கள் நன்றி...)

Thread 'பீனிக்ஸ் கிளியே - Comments' https://www.sahaptham.com/community/threads/பீனிக்ஸ்-கிளியே-comments.412/
 

Nancy mary

New member
Vannangal Writer
Messages
18
Reaction score
16
Points
3
🔥அத்தியாயம் - 5🔥

"யோவ் ஏட்டு, இங்க என்னய்யா நடக்குது; இப்போ எதுக்கு ஸடேஷன் முன்னாடி இத்தனை பேரு கூடிருக்காங்க என்ன பிரச்சனையாம்"

"இவங்க எல்லாருமே அண்ணாச்சியோட ஏரியா பசங்க சார், அவங்க ஏரியால ஏதாவது பிரச்சனைனா இப்படிதான் ஒட்டுமொத்தமா கூடுவாங்க; இவங்களை கண்ட்ரோல் பண்ணவே முடியாது"

"இதை சொல்றதுக்கா நீ போலிஸ் யூனிபார்ம் போட்டிருக்க, இப்போ நீங்க என்ன பண்ணுவீங்களோ தெரியாது இன்னும் பத்தே நிமிசத்துல இந்த கூட்டத்தை எல்லாம் கிளியர் பண்ணிடணும் போங்க" என இன்ஸ்பெக்டரின் உத்தரவிற்கு செவிசாய்ந்தவாறே கான்ஸ்டபிள்ஸ் லத்தியை எடுத்துக்கொண்டு ஓட,

அதனை பார்த்த அண்ணாச்சியின் ஆட்களில் ஒருவனோ, "சார், நீங்க எங்களை உள்ள தூக்கி போட்டாலும் எங்களுக்கு கவலையில்ல; எங்க ஏரியா பொண்ணுகிட்டயே பிரச்சனை பண்ணிருக்கான் அவனை நாங்க சும்மா விடணுமா" என கேட்க அவனின் கால்லயே லத்தியை வைத்து காண்ஸ்டபிள்ஸ் அடிக்க அந்த இடமே சிறிது நேரத்தில் கலவரமானது.

இந்த கலவரத்திற்கு மத்தியில் போலிஸ் ஸடேஷனின் பின்பக்கம் வழியாக சுவரேறி குதித்த செந்திலோ ஸடேஷனுக்குள் வேகமாய் நுழைந்தான்.

"வாடா செந்தில், அண்ணாச்சி ரொம்ப நேரமா உன்னை தான் தேடிட்டு இருந்தாரு; எங்க போயிருந்த நீ"

"ஒரு சின்ன வேலை விஷயமா போயிட்டேனே, ஆமா இங்க என்ன பிரச்சனைனே பசங்க வேற ஏதேதோ சொல்றானுங்க அவங்ளோட கோபத்தை பார்த்தா ஸடேஷனைனே இரண்டாக்கிவாங்க போலயே" எனப் பேசிக்கொண்டிருக்க,

அப்பொழுது இவர்களின் பேச்சையும் மீறி ஒலித்த அண்ணாச்சியின் குரலில் சட்டென இருவரும் அமைதியாகினர்.

"இதான் நீங்க மக்களை பாதுகாக்குற லட்சணமா சார், அப்பாவி பொண்ணை காதல்ற பேர் ஏமாத்தி பிள்ளையை குடுத்திருக்கான்; அவனை நாலடி அடிச்சு இந்த பொண்ணோட சேர்த்து வைக்காம இப்படி பேசுறீங்க"

"யோவ், இதுல நாங்க என்னய்யா பண்ண முடியும் சம்மந்தபட்ட எம் பி பையனே இந்த பொண்ணு யாருண்ணே தெரியாதுனு சொல்றப்போ எங்களால என்ன ஆக்ஷன் எடுக்க முடியும்; அதுமட்டுமில்லாம நீங்க இந்த ஏரியால கட்டபஞ்சாயத்துல இருந்து ரவுடிஷம் வரை எல்லாமே பண்றவரு; இப்போ நாங்க நினைச்சா எம் பி பையன் மேல தப்பா புகார் தரீங்கனு சொல்லி உங்களை உள்ளதூக்கி போட்டு முட்டிக்கு முட்டி தட்ட முடியும் என்ன பண்ணவா" என மிரட்ட,

அதில் கோபம் கொண்ட அண்ணாச்சியின் ஆட்கள் சத்தம் போட அவர்களின் சத்தத்தையும் தாண்டி ஒலித்த பேச்சியின் கதறலில் அமைதியாகினர்.

"ஐயா விடுங்கய்யா, எனக்காக எல்லாம் நீங்க யாருகிட்டயும் கெஞ்சாதீங்க; இதுக்காக தான் பணக்காரனான இவனை விட்டு விலகி விலகி போனேன் ஆனா ஏதேதோ பேசி என்னைய நம்பவைச்சு ஏமாத்திட்டான்; இப்போகூட டி என் ஏ டெஸ்ட்னு நிறைய பண்ணி குழந்தைக்கு அப்பா இவன்தான் கண்டுபிடிக்கலாமாம் ஆனா இவன் அங்கயும் தன்னோட பணபலத்தால எல்லாத்தையும் மாத்திடுவான்; நீங்களே பார்த்தீங்கல கொஞ்சநேரத்துக்கு முன்னாடி நமக்கு சாதகமா பேசுன இன்ஸ்பெக்டரே எம் பியை பார்த்ததும் மாறிட்டாரு; இதுல ரிப்போர்ட் மாற எவ்ளோ நேரமாகும் அதுனால என்னைய விடுங்கய்யா ஏதாவது ஒரு ஆத்துலயோ குளத்துலயோ விழுந்து செத்திடுறேன்.." எனக் கூறி தனது அண்ணனின் தோளில் சாய்ந்த பேச்சி தேம்பி தேம்பி அழுக, அண்ணவனோ தங்கையின் நிலையையும் தனது கையாளாகாத தனத்தையும் எண்ணி வெகுவாக வருந்தினான்.

இதையெல்லாம் கேட்டு ஆத்திரமடைந்த செந்திலோ, "ஏய் பைத்தியமே, இப்போ எதுக்காக நீ சாகணும்னு பேசுற; உன்னைய இப்படி ஏமாத்துன இவன்தான் உண்மையாவே சாகணும்; நீ எதைபத்தியும் கவலைபடாத உனக்கான நீதியையும் நல்ல வாழ்க்கையும் அமைச்சு குடுக்கிறது எங்க பொறுப்பு அதை கண்டிப்பா நாங்க பண்ணுவோம்"

"டேட், அதான் நல்ல வாழ்க்கை‌ அமைச்சு குடுத்திருவாங்களாமே இதுக்கு மேல இங்க நமக்கென்ன வேலை வாங்க கிளம்பலாம்" என தனது முதுகிற்கு பின்னே கேட்ட ராகவனின் பேச்சை கேட்டு ஆத்திரமடைந்த செந்திலோ திரும்பிய வேகத்திலே அவனின் கன்னத்தில் பளாரென அறைய,

அதில் அதிர்ந்த போலிஸூம் எம்பியும்,

"டேய்"

"ஏய்" எனக் கத்த, செந்திலிடம் அடிவாங்கிய ஆத்திரத்தில் ராகவனும் அவனை முறைத்து கொண்டிருந்தான்.

"என்னடா ஆளாளுக்கு கத்துறீங்க, ஒரு பொண்ணோட வாழ்க்கையை கெடுத்துட்டு என்ன சவுண்ட் வேண்டி கிடக்கு என்ன இன்ஸ்பெக்டர் இதுக்கு நீயும் ஜால்ராவா.."

"ஏய், இப்போ எதுக்குடா என் பையனை அடிச்சு வம்பு பண்றீங்க; உங்களுக்கு தேவை பணம் தானே அதுக்கு தான இவ்ளோ டிராமா பண்றீங்க; எவ்ளோ வேணும்னு சொல்லுங்கடா இப்போவே செட்டில் பண்ணிடுறேன் அப்புறமா ஒரு பய இங்க இருக்ககூடாது சொல்லிட்டேன்" என எம் பி கத்த,

அதை கேட்டு மேலும் கதறிய பேச்சியின் கையை ஒரு ஆணின் கரம் இறுக்கமாய் பற்றிக்கொண்டு பேசத் துவங்கியது.

"டேய், நானும் வந்ததுல இருந்து பார்த்துகிட்டே இருக்கேன்; ஆளாளுக்கு ஓவரா சத்தம் போடுறீங்க பணமும் செல்வாக்கும் உங்க பக்கமிருந்தா நீதியை கூட வளைச்சிடுவீங்களா..???
இதுவரைக்கும் நீங்க பேச்சியை வார்த்தையாலே வதைச்சது போதும் இனி அவளை யாருமே கஷ்டபடுத்த நான் அனுமதிக்க மாட்டேன்" எனக் கூறியவனோ தன்னையே அதிர்ந்து விழித்த பேச்சியின் புறம் திரும்பி,

"பேச்சி, நீ நம்ம ஏரியால தினமும் தண்ணீ புடிக்க குடத்தோட என்னைய கடக்கையிலே கேலி கிண்டல் பண்ணி என்கிட்ட வம்பிழுத்து போவேல அதெல்லாம் எனக்கு ரொம்பவே பிடிக்கும்; அப்போலாம் நீதான் என் பொண்டாட்டியா வரணும்னு மனசுக்குள்ள ஆசையையெல்லாம் வளர்த்திருந்தேன் ஆனா உன் மனசுல அந்த எண்ணம் இல்லனு தெரிஞ்சதும் விலகிட்டேன்; இப்போ இந்தமாதிரி ஒரு நிலமையில என்னால உன்னைய நிர்கதியா விட்டு போக முடியாது; நான் உன்னைய உயிருக்குயிரா நேசிக்கிறேன் நீ என்னைய உடனே ஏத்துக்கணும்னு சொல்லல; உன் பதில்ல பொறுமையா சொல்லு அதுவரைக்கும் பச்சை குத்தியிருக்கிற உன் பேரை பார்த்தபடியும் உனக்காக வாங்கி வைச்சிருந்த தாலி சங்கிலியோடயும் காத்திருப்பேன்" என மென்மையாக கூறிய ஈஸ்வரனின் மேற்சட்டை பட்டன்கள் சற்று கழன்றிருக்க அதன்வழி பேச்சியென பச்சை குத்தியது தெளிவாய் காட்சியளித்தது.

அதனை பார்த்த பேச்சியின் அண்ணனோ தங்கையின் வாழ்க்கை காக்கபடுமென நம்ப அவனிடம் சென்று மன்னிப்போடு தனது ஆசையையும் கூறினான் ஈஸ்வரன்.

"என்னைய மன்னிச்சிரு டா, நண்பனா உன்கூட சுத்தி உன்னோட தங்கச்சியையே காதலிச்சு துரோகம் பண்ணிட்டேன்"

"ச்சே ச்சே, அதெல்லாம் ஒண்ணுமில்லடா; எனக்கு இது சந்தோஷமா தான் இருக்கு ஆனா என் தங்கச்சி வயித்துல இருக்கிற குழந்தை..."

"இங்க பாருடா, உன் தங்கச்சியும் சரி குழந்தையும் சரி; இனி என்னோட பொறுப்பு இப்போல இருந்து அது என் குழந்தைடா.." எனக் கூறியவனை வெறுமையான மனநிலையோடு பேச்சி பார்த்து கொண்டிருக்க,

அங்கே கூடியிருந்த அண்ணாச்சியின் ஆட்களும் செந்திலும் சந்தோஷமாய் பார்த்தனர்.

"சரிப்பா, அதான் உங்களுக்குள்ள பேசி பிரச்சனையை முடிஞ்சிட்டீங்கல இனியும் எதுக்காக இங்க நின்னு எங்க வேலைமை கெடுக்குறீங்க சட்டுபுட்டுனு இடத்தை காலி பண்ணுங்கப்பா போங்க போங்க" என இன்ஸ்பெக்டர் விரட்ட,

அதில் கோபமடைந்த செந்திலோ, "என்ன சார், எங்களை கிளம்புனு சொல்றீங்க அப்போ ஏமாத்துனவனுக்கு தண்டனை வாங்கி தர மாட்டீங்களா.."

"இங்க பாருங்க தம்பி, என் பையன் தான் தப்பு பண்ணானு உறுதியாகாதப்போ எப்படி நீங்க தண்டனையை எதிர்பார்க்கலாம்; போங்க தம்பி போய் உங்க வேலையை பாருங்க" எனக் கூறியபடி எம்.பி தனது மகனை அழைத்துகொண்டு அங்கிருந்து விரைய,

தனது தந்தையுடன் செல்லும் ராகவனோ பேச்சியை பார்த்து ஒரு ஏளன சிரிப்பு சிந்தியபடி அவர்கள் அனைவரையும் கடந்து சென்றான்.

உடனே செந்திலிடம் வந்த அண்ணாச்சியோ, "சரி விடுப்பா, நம்ம ஏரியா பொண்ணோட வாழ்க்கை சரியாச்சுல; அதுப்போதும் சரி வா போகலாம்" எனக் கூறியவரோ ஸடேஷனுக்கு வெளியே தனது ஆட்கள் எம் பியையும் அவரின் மகனையும் தாக்க போவதை கண்டு தடுத்து நிறுத்தினார்.

"டேய், அவங்களை போக விடுங்கடா; அதான் பஞ்சாயத்தே முடிஞ்சிருச்சே அப்புறம் ஏன்டா வம்பு பண்றீங்க"

"அண்ணாச்சி, நம்ம பொண்ணு வாழ்க்கையை கெடுத்துட்டு அசால்டா போவான் நாங்க சும்மா விடணுமா; இவனுக்கு இன்னைக்கு ஒரு பாடம் கத்து குடுக்காம விட மாட்டோம்" என‌ கூட்டத்தில் ஒருவன் கத்த,

அதனை ஆமோதித்த கூட்டமும், "ஆமா அண்ணாச்சி நாங்க விட மாட்டோம்" என ஒன்றாய் கத்தினர்.

"இப்போ நாம பிரச்சனை பண்ணா நம்ம பொண்ணுக்கு தாண்டா ஆபத்து வரும், கொஞ்சம் அமைதியா இருங்கடா" என தனது ஆட்களிடம் சத்தம் போட்ட அண்ணாச்சியோ எம் பியிடம் திரும்பி, "பசங்க ஏதோ கோபத்துல கத்திட்டாங்க நீங்க போங்க" என கூற, அடியாட்களும் அண்ணாச்சியின் கோபப் பார்வைக்கிணங்கி வழிவிட

எம் பியும் அவரின் மகனும் தங்களது வாகனத்தில் ஏறி அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

போலிஸ் ஸடேஷன் வாசலில் நின்றிருந்த செந்திலோ தங்களின் வாகனத்தில் ஏறிச்சென்ற ராகவனையே முறைத்து பார்த்து கொண்டிருக்க அங்கிருந்த இன்ஸ்பெக்டரோ தன்னிடமே எதிர்த்து பேசிய செந்திலுக்கு சரியான சமயத்தில் பதிலடி தரவேண்டுமென சூளுரைத்தவாறு அவனை முறைத்தபடி ஸடேஷனுக்குள் சென்றார்.

அப்பொழுது ஈஸ்வரின் கையை உதறிவிட்டு செந்திலிடம் வந்த பேச்சியோ, "அண்ணா என்னைய எங்க வீட்டுல இறக்கி விடுறீங்களா எனக் கேட்க,

அவளையே வலி நிறைந்த கண்களோடு பார்த்து கொண்டிருந்த ஈஸ்வரனை பார்த்தவனோ, சரிமா வா போகலாம்" எனக் அழைத்தவனோ தனது போனில் யாருக்கோ தொடர்பு கொண்டு சில விஷயங்களை பேசியபடி வண்டியை எடுக்க,

தனது சிந்தையை எங்கெங்கோ அலைபாய்ந்து கொண்டிருந்த பேச்சியோ ஈஸ்வரனை சிறிதும் சட்டை செய்யாமல் வாழ்க்கை காட்டும் பாதை வழி பயணிக்க துவங்கினாள்.

🔥🔥🔥🔥🔥

"துருவ், அப்பாவுக்கு என்னாச்சுடா; ஏன் இப்படி இடிவிழுந்த மாதிரி உட்கார்ந்துட்டு இருக்காரு"

"அதான்டா எனக்கும் தெரியல, அப்பா இப்படி சோர்ந்து போய் உட்கார்ந்து நான் பார்த்ததே இல்ல; என்ன பிரச்சனைனு தெரியலையே"

"நான் வேணா பிக் டேடிகிட்ட போய் என்ன பிரச்சனைனு விசாரிச்சிட்டு வரவா" என கூறி எழுந்த கிருஷை கோழி அமுக்குவதை போல பிடித்து அமர வைத்த ரஞ்சித்தும் துருவ்வும் ஒரு திசையை நோக்கி கைகாட்டி பேசத் துவங்கினர்.

"கிருஷ், பிக் டேடியை பார்த்தேயே அங்க அவரு பக்கத்துல டிவி பார்க்குற உன்னோட டேடியை பார்த்தீயா; எப்படா உன்னைய திட்டலாம்னு யோசிக்கிறவருகிட்ட வாண்டடா போய் மாட்டிக்காத; இப்போ எங்கம்மா பேச போறாங்க அவங்க பேசுறதை வைச்சே விஷயத்தை தெரிஞ்சிப்போம்" என கூறிய துருவ்வின் பேச்சும் சரியென்றுபட, பெரியம்மாவின் செயலை ஆர்வமுடன் கவனிக்க துவங்கினான்.

அங்கு ஏதேதோ யோசனையிலிருந்த சேகரிடம் வந்த லெட்சுமியோ, "என்னங்க, இந்த பாலையாவது குடிங்க வீட்டுக்கு வந்ததுல இருந்து ஒண்ணுமே சாப்பிடாம உடைஞ்சு போய் உட்கார்ந்திருக்கீங்க என்னனு கேட்டாலும் சொல்ல மாட்றீங்க எதுனாலும் என்கிட்ட சொல்லலாம்ல"

"அண்ணி, வெளில போய் சம்பாதிக்கிற ஆம்பளைங்களுக்கு ஆயிரம் டென்சன் இருக்கும் அதையெல்லாம் உங்ககிட்ட சொல்லிட்டு இருக்க முடியுமா; நீங்க போய் சமைக்கிற வேலையை பாருங்க" என கூறிய தம்பியை சேகர் முறைக்க, அதில் தனது வாயை மூடி கப்சிப்பென ஆனார்.

"அது ஒண்ணுமில்ல லெட்சுமி, வேலை விஷயமா கொஞ்சமா டிஸ்டர்ப் ஆகிட்டேன்; அவ்ளோதான் நீ ஒண்ணும் கவலைபடாத"

"ஏங்க, இத்தனை நாளா நீங்க பார்க்காத போலிஸ் வேலையா பிடிக்காத ஆக்கியூஸ்ட்டா அப்போலாம் வராத டென்சன் இப்போ எதுக்கு வருது; ஒருதடவை நான் ஒரு ஆக்கியூஸ்ட்கிட்ட மாட்டுனப்போ கூட தைரியமா கையாண்டு காப்பாத்துனீங்க; இப்போ ஏங்க சோர்ந்து போறீங்க புதுசா உருவான கொலைகாரனை பத்தின டென்சனா நானும் நியூஸ்ல பார்த்து கேள்விபட்டேன்; நீங்க கவலையேபடாதீங்க உங்களை நம்பி குடுத்த பொறுப்பை நீங்க நல்லா பண்ணுவீங்க; சீக்கிரமே கொலைகாரனை பிடிச்சு தண்டனை வாங்கி தந்திருவீங்க போன வாரம் ஸ்டண்ட்ஸூக்கு ரோல் மாடல்னு பேட்டியெல்லாம் தந்த நீங்களே இப்படி சோர்ந்து போகலாமா தைரியமா இருங்க" என ஆறுதல் கூறிய மனைவியின் பேச்சை கேட்டு புன்முறுவல் பூத்தவரோ மகன்களின் சிரிப்பு சத்தம் கேட்டு அத்திசை நோக்கி திரும்பினார்.

"அப்பா, அம்மா உங்களுக்கு சப்போர்ட் பண்றதை பார்த்தா; இன்னும் இரண்டே நாள்ல கொலைகாரனை பிடிச்சிடுவீங்க போலயே; ஆமா, அதெப்படி மா அப்பாவோட வேலையில இருக்கிற ஆபத்து தெரிஞ்சும் தைரியமா இருக்கீங்க" எனக் கேட்ட துருவ்வின் கேள்விக்கு வெட்கபட்டவரோ,

"அந்த வேலை பிடிச்சதால தான்டா உங்க அப்பாவையே எனக்கு பிடிச்சது; அப்போ எப்படி அந்த வேலையை வெறுப்பேன்; உங்கப்பா போலிஸ் வேலையை நேசிக்குறது போல நானும் நேசிக்கிறேன்" என கூறி கணவனை காதலோடு பார்க்க அதை கண்ட இளையவர்களோ 'ஓ' என கூக்குரலிட்டனர்‌.

அதனை களைக்கும் விதமாக தொண்டையை செறுமிய சேகரோ, "சரி, அதெல்லாம் போகட்டும் துருவ் நீ ஏதோ ரேஸிங் நடக்குற இடத்துக்கு போறீயாமே; சில பேர் உன்னைய அங்க பார்த்ததா சொல்றாங்க உண்மையா" எனக் கேட்க,

"அது வந்துப்பா" என தயங்கியபடி அன்னையை பார்த்து ஜாடை காட்டியவனை அதட்டியவரோ,

"அங்க என்னடா பார்க்குற உண்மையானு சொல்லு"

"அட என்னங்க நீங்க, அவனுக்கு படிக்கிற வேலையே தலைக்கு மேல இருக்கு இதுல எங்கயிருந்து அங்க எல்லாம் போவான் அவனே எப்ப பார்த்தாலும் புக்கும் கையுமா சுத்திகிட்டு இருக்கான்; அவனை போய் சந்தேகபடுறீங்களே உங்ககிட்ட சொன்னவங்க வேற யாரையோ பார்த்துட்டு தப்பா சொல்லிருப்பாங்க; அது நம்ம பையனா இருக்காதுங்க"

"எனக்கும் இவன் படிப்பை தாண்டி எதுவுமே பண்ண மாட்டான்னு தெரியும் லெட்சுமி, ஆனாலும் சிலர் ரொம்பவே உறுதியா சொன்னாங்க அதான் கேட்டேன்"

"இங்க பாருங்க உங்களுக்கு நம்ம பசங்களை நினைச்சு எந்தவிதமான கவலையும் வேணா ஒருவேளை இவனுங்க ஏதாவது தப்பு பண்ணா நானே இவங்களை உங்ககிட்ட பிடிச்சு தரேன் சரியா" எனக் கூறிய தாயை புத்திரர்கள் மூவரும் மிரண்டு போய் பார்க்க,

அதில் குறுநகை பூத்த சேகரோ, அப்பொழுது டிவியில் ஓளிபரப்பான செய்தியை கேட்டு ஆடிப் போனார்.

"எம் பி மதுசூதனனின் மகன் ராகவன் அவரது வீட்டிலேயே மர்ம நபரால் கொலையான சம்பவம் மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது;
இதைபற்றி விசாரித்த போலிஸார் துண்டு துண்டாய் வெட்டபட்ட உடலை பார்த்து இது புதிதாய் உதித்த கொலைகாரனின் செயல் எனவும் அவனின் சாதூர்யமான நகர்வுகளை கண்ட மக்கள் மாஸ்டர் மைண்ட் என அழைக்க, அதற்கேற்றவாறு சமீபகாலமாய் தொடர்ந்து இந்நபரின் கொலைகள் அரங்கேறுவதால் இவன் சீரியல் கொலைகாரனாய் இருக்கலாமெனவும் யூகிக்கபடுகிறது..." என செய்தி ஓட,

அதனை கேட்டு அதிர்ந்த சேகரோ தனது கைப்பேசியை எடுத்து பார்க்க, அது செயலிழந்திருந்து அணைந்திருப்பது தெரிந்து அதை சார்ஜ் போட்டவாறு அங்கிருந்து துரிதமாய் கிளம்ப துவங்க,

அதேசமயம் தொலைகாட்சியில் ஒளிபரப்பான செய்தியை பார்த்து கொண்டிருந்த துருவ்வோ "யாருடா அந்த மாஸ்டர் மைண்ட், எனக்கே அவனை பார்க்கணும் போல இருக்கே" என உச்சகட்ட வியப்படைந்து அதிசயமாய் கூறிட,

எம் பி மதுசூதனனின் வீட்டிற்கு வெளியே நடக்கும் கலவரத்தை பார்த்து கொண்டிருந்த உருவமோ ஏளனமாய் புன்னகைத்தது.

பீனிக்ஸ் உயிர்த்தெழும்🔥🔥🔥

(வணக்கம் நண்பர்களே... கதையை பற்றிய உங்களது கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் சென்று பதிவிடுங்கள் நன்றி...)

Thread 'பீனிக்ஸ் கிளியே - Comments' https://www.sahaptham.com/community/threads/பீனிக்ஸ்-கிளியே-comments.412/
 

Nancy mary

New member
Vannangal Writer
Messages
18
Reaction score
16
Points
3
🔥அத்தியாயம் - 6🔥

தனது வீல் சேரை இங்கும் அங்கும் நகர்த்தியபடி வாசலுக்கும் ஹாலுக்குமிடையே பதட்டமாய் அலைந்து கொண்டிருந்த சரவணனை மகளின் மழலைக்குரல் நடப்பிற்கு கொண்டு வந்தது.

"அப்பா, எனக்கு இந்த கணக்கு புரியலப்பா; நீ கொஞ்சம் சொல்லி தரீயா" என்ற மகளின் குரல் கேட்டு அதுவரை இருந்த இறுக்கமான மனநிலை தளர்ந்து மகளை கவனிக்க துவங்கினாள்.

"குட்டிமா, உனக்கு இந்த கூட்டல் கணக்கு எப்படி செய்யணும்னு இப்போதானே சொல்லி தந்தேன்; அதுக்குள்ள என்ன புரியாம போச்சு" எனக் கூறி மகளின் அருகே தனது வீல் சேரை நகர்த்தி வந்து பார்த்தவனோ,

அங்கே கணக்கு போடப்படாமல் புத்தகத்திலுள்ள கேள்வி மட்டுமே எழுதப்பட்டிருக்க,

அதை கண்டு முறைத்தவனின் கோபத்தை தனது முத்துப்பல் சிரிப்பாலே சிதறடிக்க முயன்றாள்.

"சரியான வாலு, கணக்கு தெரியலனு சொல்லியே எல்லா கணக்கையும் என் தலையில கட்டுறீயா; உனக்கு இந்த கணக்கு புரியலனாலும் பரவால; நீ பண்ணு அப்பா உன் பக்கத்துல இருந்து சொல்லி தரேன்" எனக் கூறியவனோ அருகிலிருந்த நோட்டை கம்பு போல பயன்படுத்தி மிரட்ட,

அதனை கண்டு உதட்டை பிதுக்கியவளோ பென்சிலை வைத்து நோட்டில் எழுதியிருந்த ஒன்று என்ற எண்ணிற்கு மேலயே மறுபடியும் எழுத துவங்கினாள்.

அப்பொழுது வீட்டு வாசலில் யாரோ கேட்டை திறந்து கொண்டு நுழையும் சத்தம் கேட்க,
அதுவரை மகளின் செயல்களை ரசித்து கொண்டிருந்தவனின் முகம் கல்லாய் இறுக துவங்கியது.

இவனின் மனநிலை மாற்றத்தை அறியாமல் வீட்டிற்குள் நுழைந்த சரவணனின் மனைவியோ அங்கே தங்களது மகள் வீட்டு பாடம் செய்வதை கண்டு வேலை செய்த சோர்வு நீங்கி புன்னகைத்தாள்.

"ஹாய் செல்லம், ஹோம் வொர்க் பண்றீங்களா; இருங்க அம்மா உங்களுக்கு ஸ்நாக்ஸ் செஞ்சு தரேன்" எனக் கூறி கிளம்பியவளின் நடையை சரவணனின் கோபக்குரல் தடுத்து நிறுத்தியது.

"நீ சமைக்க வேண்டிய அவசியமில்லை, நானே பாப்பாவுக்கு ஸ்நாக்ஸ் செஞ்சு தந்து நைட் சாப்பாடும் ரெடி பண்ணிட்டேன்; ஆமா இதான் நீ ஆபிஸ்ல இருந்து வர நேரமா; இவ்ளோ நேரம் அப்படி என்ன தலைபோற வேலை பார்த்துட்டு இருந்த போன் அடிச்சாலும் எடுக்க மாட்டேங்குற; உனக்கு நான் எத்தனை தடவை சொல்லிருக்கேன் இப்படியெல்லாம் லேட்டா வராதனு என் பேச்சை கேட்க கூடாதுனு முடிவோட இருக்கீயா" என கூறிய சரவணன் தனது அக்கறையான அன்பை கோபமாய் வெளிப்படுத்த,

அதை உணர்ந்து மென்னகை பூத்தவளோ கணவனை சமாதானபடுத்த துவங்கினாள்.

"அட என்னங்க நீங்க, இந்த சின்ன விஷயத்துக்கு போய் கோபப்படலாமா; எனக்கு ஆபிஸ்ல கொஞ்சம் வொர்க் இருந்தது போனும் சார்ஜ் இல்லாம ஆப் ஆகிருச்சு; அதான் உங்ககிட்ட சொல்ல முடியல நீங்க எதுக்கு வேலையில்லாம கவலைபடுறீங்க பைக் ரேஸர் சரவணனோட பொண்டாட்டிக்கு ஆபத்து வந்திடுமா இல்ல அப்படி ஆபத்து வரதுக்கு தான் நீங்க அனுமதிப்பீங்களா" என நம்பிக்கையாய் கூறி தனது தலையை கோதிவிடும் மனைவியை பரிவாய் பார்த்தவனோ,

"அதுனால தான்டி எல்லாத்தையும் இழந்தேன்" என கூறி தனது காலை பார்த்தவனின் எண்ணத்திலோ தனக்கு துரோகம் இழைத்தவர்களால் எங்கே மனைவிக்கும் நீங்கு நிகழ்ந்துவிடுமோ என்ற ஐயமே அதிகமாய் ஆட்கொண்டிருக்க,

அவனின் சிந்தனையை கலைக்கும் பொருட்டு சரவணனின் கையை பிடித்து ஆறுதல்படுத்தியவளோ,

"பாப்பா, நீங்க ஹோம் வொர்க் முடிச்சிட்டீங்கனா ரூம்ல போய் பொம்மையை வைச்சு விளையாடுங்க போங்க போங்க" எனக் கூறிய தாயின் பேச்சை கேட்டு வீட்டு பாடத்திலிருந்து தப்பித்தால் போதுமென நினைத்த மழலையோ அங்கிருந்து வேகமாய் ரூமிற்குள் ஓடி மறைந்து விட்டாள்.

அதை புன்னகையோடு பார்த்தபடி கணவனிடம் திரும்பியவளோ, "என்னங்க நீங்க, பாப்பா முன்னாடி வருத்தபடுறீங்க அவ என்ன நினைப்பானு யோசிச்சீங்களா; நம்ம வாழ்க்கையில நடந்ததை மாத்த முடியாதுங்க ஆனா அதையே நினைச்சு வாழ்க்கையை இழக்கலாமா..???

"எப்படி கீதா நமக்கு நடந்ததை எல்லாம் மறக்க சொல்ற, ரேஸிங் தான் முக்கியம்னு அதுலயே முழ்கிருந்தேன் உன்னோட காதலால கூட என்னோட வெறியை தணிக்க முடியல அதுக்கான பலன் தான் இது; சூழ்ச்சியாலயும் வஞ்சகத்தாலயும் வீழ்த்தபட்டு இப்போ இந்த நிலையில இருக்கேன்; நல்லபடியா போயிட்டிருந்த நம்ம வாழ்க்கை இப்படி மாறுனதுக்கு நான்தானே காரணம்; நல்ல வேலையும் இழந்து மகளோட ஓடி விளையாடுற வயசுல நடக்க கூட முடியாம நரக வேதனை அனுபவிக்கிறேன் மா" என கூறி கண்ணீர் சிந்தியவனோ மனைவியை கட்டிக்கொண்டு கதற துவங்கினான்.

"என்னங்க ப்ளிஸ், இப்படி கவலைபடாதீங்க நம்ம வாழ்க்கை ஒருநாள் நல்லபடியா மாறும்; அதுவரை நீங்க இப்படி சோர்ந்து போகாதீங்க நான் இருக்கேன்ங்க சரியா" என ஆறுதல் கூறியவளுக்கோ தனது பணியை நினைத்து கஷ்டமாக இருந்தது.

தனது வேலைக்கான சரியான ஊதியம் இல்லை; அது தாமதமாய் தருவதாக மேலிடத்தில் புகாரளித்தும் பலனில்லை; இதையெல்லாம் கணவனிடம் சொன்னால் தாங்கி கொள்ள மாட்டானென்ற வருத்தத்தில் உடைந்து போனாள்.

அப்பொழுது அவ்வீட்டு வாசலில் வண்டி சத்தம் கேட்க, அதை கேட்டு வெளியே சென்று பார்த்தவளுக்கு அங்கு பைக்கில் வேகமாய் மறைந்த தலை மட்டுமே தெரிய,

அதை கண்டு புன்முறுவல் பூத்தவளோ அவளின் காலை உரசிய டப்பாவை எடுத்துகொண்டு வீட்டிற்குள் நுழைந்தான்.

"என்னங்க இந்த பையன் அடங்கவே மாட்டானா..???
இங்க பாருங்க எப்பயுமே கவர் கவரா குடுப்பான் இப்போ டப்பாவை அனுப்பிருக்கான்" என கூறி டப்பாவை திறந்தவளின் கண்கள் கண்ணீரால் பனித்தது.

"நமக்கு என்ன தேவையோ அதை தெரிஞ்சுகிட்டு உதவுறதுல ராக்கி பி எச் டியே முடிச்சிருக்கான் கீதா; இந்த தடவை டப்பா வருதுனா கண்டிப்பா நம்மலோட தேவைகள் அதிகம் தானே" என மனைவியின் நிலையை சரியாய் யூகித்து விட,

"ஆமாங்க, எப்பயும் அவன் ஜெயிச்ச பணத்துல பாதியை மட்டும் தருவான் ஆனா இந்த தடவை காய்கறியும் புது வேலைக்கான அப்பாயிண்ட்மெண்ட் ஆடரையும் சேர்த்து தந்திருக்காங்க" என கூறியவளோ கணவன் தன் நிலையை கண்டுக்கொண்டதை சிந்திக்க தவறினாள்.

"அப்போ வேலையில ஏதோ பிரச்சனைல; என்கிட்ட கூட சொல்லல என்னால ஒண்ணும் பண்ண முடியாதுனு தான சொல்லாம விட்டுட்ட..." என கேட்ட சரவணனின் கேள்வியை வைத்தே நிலவரத்தை யூகித்து கொண்டவளோ,

"அச்சோ, அப்படிலாம் இல்லங்க உங்களுக்கு ஏன் கஷ்டம்னு தான் சொல்லல சரி அதை விடுங்க; அதான் இப்போ எல்லாமே ரேஸர் ராக்கி சரிபண்ணிட்டானே; ஆமாங்க, அந்த தம்பி ஏன் ஒரு தடவை கூட நம்ம வீட்டுக்குள்ள வர மாட்டேங்குது உங்களுக்கு ஏதாவது தெரியுமா..???

"ராக்கி யாருகூடவும் உறவாட விருப்ப மாட்டான் கீதா; உதவி மட்டும் பண்ணிட்டு போயிடுவான்; நம்மல மாதிரி இன்னும் நிறைய பேருக்கு உதவுறதா பேசிக்கிறாங்க ஆனா யாருமே அவனோட அடையாளத்தை பார்த்தது இல்ல"

"அப்படியா, அப்போ நீங்களுமே பார்த்ததில்லையா" என கேட்ட மனைவியின் கேள்விக்கு பதிலளிக்காமல் சரவணனின் சிந்தனை வேறெங்கோ பயணிக்க,

கணவனின் எண்ணத்தை மாற்றிய திருப்தியோடு ராக்கி தந்து சென்ற பொருட்களை சமையலறையில் அடுக்கி வைக்க கிளம்பினாள் கீதா.

ஆனால் தனது எண்ணத்தில் வேறெங்கோ பயணித்த சரவணோ, "ரேஸர் ராக்கியை என் வாழ்க்கையில மறக்கவே முடியாது கீதா" என உணர்ச்சி ததும்ப கூறிட,

அவனின் விழியிலிருந்து நீர்த்துளி கசிந்து வழிந்தது.

🔥🔥🔥🔥🔥

"ப்ளிஸ், எங்க நிலமையை கொஞ்சம் புரிஞ்சிக்கோங்க; எங்களுக்கே கேஸோட நிலவரம் என்னனு தெரியல நான் போய் செக் பண்ணிட்டு உங்களுக்கு தகவல் தரேன்; இப்போ எங்க டூயூட்டியை பார்க்க விடுங்க" என கேட்ட சேகர் ஐ பி எஸ்ஸை நகரவிடாமல் தடுத்த ஊடகத்துறையோ,

"சார், இன்னைக்கு ஒருநாள்லயே இரண்டு மர்டர் நடந்திருக்கு ஆனா அது சம்மந்தமா போலிஸ் எந்தவிதமான ஆக்ஷனும் எடுக்கிற மாதிரி எங்களுக்கு தெரியல; அதுமட்டுமில்லாம சாயங்காலம் மர்டர் நடந்தப்போ நீங்களும் ஸ்பாட்ல இருந்ததா NM நீயூஸ் டிவி ஆதாரத்தோட நிருபிச்சிருக்காங்க; அப்போ காவல்துறை அலட்சியமா நடந்திருக்கா அதனால தான் தொடர் கொலைகள் நடக்குதா"

"இங்க பாருங்க, எங்க டிபாட்மெண்ட் இந்த கேஸ்ல முடிஞ்சளவுக்கு முயற்சியெடுத்துட்டு தான் இருக்கு; இங்க நடக்குற கொலைகளை எல்லாம் விசாரிச்சு சீக்கிரமே நடவடிக்கை எடுத்திடுவோம்; அதுக்கு முன்னாடி எங்க வேலையை செய்ய விடுங்க ப்ளிஸ்" என கூறியவரோ மற்ற காவலர்களை பார்த்து கண்ணசைக்க,

அவர்களோ பத்திரியாளர்களை அப்புறப்படுத்தி சேகர் செல்வதற்கு வழியை ஏற்படுத்தினர்.

அவர்களை தாண்டி எம் பியின் வீட்டிற்குள் நுழைந்தவரை மகனை இழந்த தாயின் வேதனைக்குரலே வரவேற்றது.

"என் மகனை பொத்தி பொத்தி வளர்த்ததெல்லாம் எவனோ ஒரு கொலைகாரனுக்கு தாரை வார்க்க தானா... கடவுளே உனக்கு கண் இல்லையா; உன் சக்தியும் என் தாய்பாசமும் உண்மைனா என் மகனை இந்த நிலமைக்கு ஆளாக்குனவனை மொத்தமா அழிச்சிடு அவனை சும்மா விடாத..." எனக் கூறி அருகிலிருந்த சோபாவில் தலைசாய்த்து அழுதுக்கொண்டிருக்க,

அக்காட்சியை வேதனையோடு பார்த்த சேகரை நோக்கி வந்த வக்கீல் பாலாவோ,

"பாவம்டா, ரொம்ப நேரமா அழுதுட்டே இருந்து இப்போதான் கொஞ்சம் அமைதியாகுறாங்க; மகனை இழந்த வேதனை இருக்க தானே செய்யும்; ஆமா, உன் போனுக்கு என்னாச்சு போன் பண்ணா ஸ்விட்ச் ஆப்னு வருது; நீ வரலனதும் உனக்கு தெரிஞ்ச சில பேரு எனக்கு போனடிச்சு கூப்பிடுறாங்க; உனக்கு நண்பனா இருக்கிற ஒரே காரணத்துக்காக இன்னும் நான் எவ்ளோ கஷ்டத்தை அனுப்பவிக்கணுமோ" என சலித்தவனை கண்டு புன்னகைத்த சேகரோ,

"சாரிடா பாலா, போன் ஆப் ஆனதை கவனிக்கவே இல்ல ஆனா இப்போ நீ சொன்னதை கேட்டபிறகு காலையில வரைக்கும் கவனிக்காம இருந்திருக்கலாமோ தோணுது என்னோட நண்பனா நீயே கேஸை முடிச்சிருப்பேல" என கூறி நக்கலடிக்க,

அதில் கோபம் கொண்டவரோ, "எனக்கு வக்கீலாவே பல கேஸூ பென்டிங்ல இருக்கு; இதுல இதை வேற இழுத்து போட்டுக்கணுமா என்னால முடியாதுப்பா" எனக் கூறிய நண்பனிடம் கேலியை விடுத்து கடமையை கவனிக்க துவங்கினார் சேகர்.

"சரிடா, பாரன்சிக் ஆபிஸர்ஸ் வர சொன்னேனே அவங்க வந்துட்டாங்களா; ஏதாவது எவிடண்ட்ஸ் கிடைச்சிருக்கா" என கேட்டபடியே மாடிக்கு செல்ல

அவருடனே மேலே படியேறிய பாலாவோ, "அவங்க இப்போதாண்டா வந்து தேடிட்டு இருக்காங்க ஏதாவது கிடைக்குதானு பார்க்கலாம்; சரி நான் இங்க வந்ததே உன்கிட்ட ஒரு உதவி கேக்குறதுக்கு தான்; நீ கேள்விபட்டீயா இன்னைக்கு சாயங்காலம் ஒரு பொண்ணை ரேப் பண்ணி கொன்னுட்டாங்க அதுக்கு காரணம் எம் பி நாகலிங்கத்தோட பையன்னு பரபரப்பா பேசுனாங்களே அந்த கேஸை நீ கேண்டில் பண்ண முடியுமா"

"ம்ம்ம், நீ சொன்ன கேஸை கேள்விபட்டேன் டா ஆனா இந்த சீரியல் கில்லரே பெரிய சவாலா இருக்கான்; இதுல அந்த கேஸை எப்படி கவனிக்கிறது என்னால முடியாதுனு தோணுது டா"

"டேய் ப்ளிஸ்டா, நண்பனுக்காக இந்த உதவியை கூட பண்ண மாட்டீயா; இதுல எனக்கு தெரிஞ்ச லாயர் சத்யமூர்த்தியை கூட வாதாட சொல்லிட்டேன்; நீ போலிஸா எம் பி பையனை கைது பண்ணி சட்டத்துக்கு முன்னாடி ஒப்படைச்சாலே போதும்டா; அந்த பொண்ணுக்கு எப்படியாவது நீதி கிடைக்கணும் எனக்கென்னமோ அதுதான் ரொம்ப சவாலான விஷயமா இருக்கும்னு தோணுது; அதான் உன்கிட்ட உதவி கேட்குறேன் ப்ளிஸ்டா எனக்காக செய்டா" என கெஞ்சிய நண்பனின் முகத்தை பார்த்து சிரித்தவரோ,

"சரிடா, நீ இவ்ளோ கேக்குறதால பண்றேன்; சரி வா முதல்ல இந்த கேஸை பத்தி பார்க்கலாம்" என கூறியபடி ராகவனின் அறைக்குள் நுழைய,

அவர்களை தடுக்கும்விதமான ராகவனின் உடலிலிருந்து வெளியேறிய உதிரமோ சொட்டு சொட்டாய் போர்வையிலிருந்து விழுந்து வாசல்வரை வந்திருந்தது.

அங்கே கட்டிலிருந்த ராகவனின் உடல் பல துண்டுகளாக கூறுபோடபட்டு எது எந்தெந்த பாகமென அடையாளம் காணமுடியாதபடி இருக்க, இப்படிபட்ட அனுபவத்தை இதுவரை அனுபவித்திராத பாலாவோ வெடவெடத்து நடுங்கியபடி அங்கிருந்து கிளம்ப துவங்கினார்.

"சரிடா, நீ வேலையை பாரு என் பொண்ணு ஜஸ்வர்யா வீட்டுல எனக்காக வெயிட் பண்ணுவா; நான் போயிட்டு வரேன்" என கூறியபடி அங்கிருந்து வேகமாய் ஓட,

அதனை பார்த்து சிரித்த சேகரின் முன்னால் வந்த பாரன்சிக் அதிகாரியோ, "சார், இங்க சரக்கு பாட்டில் சிதறிகிடக்கிறதை பார்த்தா விக்டிம் நல்லா சரகடிச்சு சுயநினைவை இழந்த நேரத்துல தான் கொலை நடந்திருக்கணும்; விக்டிம்மை கொன்னுட்டு கொலையாளி வேகமா தப்பிகிறப்போ சில மிஸ்டேக்ஸ் பண்ணிட்டான் அதான் நமக்கு ரொம்ப பெரிய பிளஸ் பாயிண்ட்டா அமைஞ்சிருக்கு; இங்க பாருங்க சார் கொலையாளியோட தலைமுடியும் ஜன்னலோரமா ஒரு கட்டவிரல் ரேகையும் கிடைச்சிருக்கு; இதைவைச்சு இந்த கொலை பண்ணது யாருனு நம்மலால கண்டுப்பிடிச்சிட முடியும்னு நினைக்கிறேன்; அதுமட்டுமில்லாம டெத் பாடி மேல இந்த கவரும் இருந்துச்சு" என கூறி தர,

அந்த கவரில் இருந்த பேப்பரில் 5 என எழுதிய நம்பரை கண்டவரின் நெற்றியிலோ குழப்ப ரேகைகள் படர்ந்தது.

உடனே தன்னை சகஜமாக்கி கொண்டவரோ, "சரி, இந்த எவிடண்ஸ் வைச்சு குற்றவாளி யாருனு தேடலாம்; ஆமா எம் பி மதுசூதனன் எங்க நான் வரும்போது அவரு இங்க இல்லையே எங்க போயிட்டாரு"

"அவரு நாங்க வந்தப்போ இங்கதான் சார் இருந்தாரு; அப்புறமா அவரோட பையன் சாவுக்கு காரணமானவங்களுக்கு தண்டனை வாங்கி தரேன்னு உடனே வக்கீலை பார்க்க கிளம்பிட்டாரு சார்; இப்போதான் கொஞ்சநேரத்துக்கு முன்னாடி வெளில பேட்டி குடுத்துட்டு இருந்தாரு"

"ஓகே, அப்போ நான் அவரை அப்புறமா விசாரணை பண்ணிக்கிறேன் யூ கேரி ஆன்" என கூறி அந்த பேப்பரை பார்த்தபடியே படியிறங்கியவரோ,

'மாஸ்டர் மைண்ட் நம்மல குழப்புறதுக்காகவே இப்படி பண்றானா எந்தவிதமா எவிடண்ஸையும் விடாம கொலை பண்றவன் இப்போ மட்டும் எப்படி எவிடண்ஸ் தந்துட்டு போறான்; இதைவைச்சு பார்த்தா இனி உடனே ஒரு கொலை பண்ணுறதா பிளான் பண்ணிருக்கணும்; அதுல நம்ம கவனம் திரும்பிடகூடாதுனு நம்மல திசை திருப்ப இப்படி பண்ணிருக்கணும் ஆனா அப்படி பார்த்தாலும் அவன் யாரை கொல்லுறானே கெஸ் பண்ண முடியாதே அப்போ இதுக்காக இல்லனா வேற எதுக்காக இப்படி குழப்புறான் ஒண்ணுமே புரியலயே; எதுவா இருந்தாலும் சரி அவனை சீக்கிரமே கண்டுபிடிச்சாகணும்' என எண்ணியபடி வேகமாய் அவ்விடத்திருந்து வெளியேறினார்.


🔥🔥🔥🔥🔥

"என் பையனோட சாவுக்கு காரணம் ரவுடி அண்ணாச்சி தான், அவனுக்கும் என் பையனுக்கும் தான் கடைசியா பிரச்சனை வந்துச்சு; அவன்தான் இப்படி பண்ணிருக்கணும் அவனை நான் பழிவாங்காம விட மாட்டேன்" என பேட்டியளித்த மதுசூதனனின் பேட்டியை ஒரு பாழடைந்த குடோனில் இருந்துக்கொண்டு யூடியூப்பில் பார்த்தவனோ குளூரமாய் புன்னகைத்தான்.

அவனின் எண்ணத்திலோ பேச்சிக்கு செய்த அநியாயத்திற்கு நியாயம் வழங்கியதாய் தோன்றியது.

ஆம்!

காவல் நிலையத்தில் பேச்சிக்காக பேசிய செந்திலின் பேச்சு எடுபடாமல் போக அதில் கோபங்கொண்டவனோ ராகவனை தண்டிக்க மாஸ்டர் மைண்டின் உதவியை நாட,

அடுத்த இரண்டு மணி நேரத்தில் ராகவன் அவன் வீட்டில் பிணமாய் மாறியிருந்தான்.

இதையெல்லாம் சித்தித்து கொண்டிருந்த செந்திலின் எண்ணத்தை ஸ்டீபனின் குரல் கலைத்து விட்டது.

"மாஸ்டர், இந்த எம்.பியோட பேச்சை கேட்டீயா; ஏதோ உத்தமபுத்திரனை பெத்திருக்க மாதிரி ஓவரா கொதிக்குறான்ல; அன்னைக்கு நம்மாளு மணியை போதை வழக்குல போலிஸ்ல மாட்டாம காப்பாத்துனேன்ல அவனோட தங்கச்சியை தான் இவனோட உத்தமபுத்திரன் காதலிச்சு ஏமாத்திருக்கான்; இப்படிபட்ட அயோக்கியனுக்கு எப்படியெல்லாம் பொங்குறான்னு பாரேன்" எனக் கூற,

அவனின் பேச்சை கவனிக்காத மாஸ்டர் மைண்ட்டோ குடோன் வாசலில் நின்றபடி ஒற்றை கையை சுவற்றில் வைத்துக்கொண்டு ராகவனை கொன்றதற்கான உண்மையான காரணத்தை அலச துவங்கினான்.

அதை கவனித்த செந்திலோ, "மாஸ்டர், அப்படி என்ன பலமா யோசனை பண்றீங்க ஒருவேளை அடுத்து யாரை எப்போ எப்படி கொல்லலாம்னு பிளான் போடுறீங்களோ" என நக்கலாய் கேட்டு புன்னகைக்க,

அக்குரலில் சுயம் பெற்று ஆமென்று கூறிய மாஸ்டர் மைண்டின் பதிலை கேட்டு செந்திலோடு சிரித்து கொண்டிருந்த ஸ்டீபனும் பேச்சற்று போனான்.

உடனே தங்களை சகஜ நிலைக்கு மீட்டவர்களோ, "மாஸ்டர், இப்போதான் தொடர்ந்து இரண்டு கொலை பண்ணிருக்கோம்; அதுக்குள்ள அடுத்த கொலையா இப்படி சளைக்காம கொல்லுறீங்களே உங்களுக்கு பயமே இல்லையா" என கூறிய செந்திலின் கேள்வியையே ஸ்டீபனின் விழிகளும் தாங்கி நிற்க,

அவர்களை கவனித்த மாஸ்டர் மைண்ட்டோ, "என் பயத்தை மறந்தே பல வருஷமாச்சு டா" எனக் கூறி பெருமூச்சுவிட்டவனோ மேலும் பேசத் துவங்கினான்‌.

"என்னோட இந்த பயணத்துல இன்னும் பல பேருக்கு மரணத்தை பரிசளிக்கணும்னு முடிவோட இருக்கேன்டா, அதுக்கு முன்னாடி போலிஸ் மேல மக்களுக்கு இருந்த நம்பிக்கையை குறைக்க தான் போலிஸ்ல ஆரம்பிச்சு இன்னைக்கு நடந்த இரண்டு கொலை வரைக்கும் வரிசையா பண்ணேன்; இனிமே நம்ம ஆரம்பிச்ச முறையிலேயே வாரத்துல இரண்டு பேரை கொல்லலாம்" எனக் கூற,

அதில் மேலும் அதிர்ந்த ஸ்டீபனோ, "மாஸ்டர், நாம அப்படி கொலை பண்ணா குறிப்பிட்ட நாள்ல தான் கொல்லுவோம்னு போலிஸ் யூகிச்சு அந்த சமயத்துல மட்டுமே அலார்ட்டா இருந்து நம்மல பிடிக்க மாட்டாங்களா..???

"அவங்க அப்படி அலார்ட்டா இருக்கணும் அதுக்காக தான் நான் இப்படி பண்ண போறேன்; இப்போவே மக்களுக்கும் மீடியாவுக்கு போலிஸ் மேல நம்பிக்கை போச்சு இனியும் அந்த நம்பிக்கையை நாம தகர்த்துகிட்டே இருக்கணும்; மாஸ்டர் மைண்ட் யாருனு போலிஸூக்கு நிகரா மக்களையும் தேட வைக்கணும் அப்போதான் நான் நினைச்சது சரியா நடக்கும்; ஆல்ரெடி பேங்க் கொலையில போலிஸூக்கு பெரிய எவிடண்ஸ் தந்துட்டேன் இனி இந்த நாட்கணக்கையும் பாலோ பண்ணிட்டா சேகர் ஐ பி எஸ்ஸூக்கும் எனக்குமான ஆட்டம் விறுவிறுப்பா சுடுபிடிக்க துவங்கிடும்" எனக் கண்கள் மின்ன கூறியவனை ஸ்டீபனும் செந்திலும் அதிர்ச்சி கலந்த ஆச்சர்யத்தோடு பார்க்க துவங்கினர்.

பீனிக்ஸ் உயிர்தெழும்🔥🔥🔥

(வணக்கம் நண்பர்களே... கதையை பற்றிய உங்களது கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் சென்று பதிவிடுங்கள் நன்றி...)

Thread 'பீனிக்ஸ் கிளியே - Comments' https://www.sahaptham.com/community/threads/பீனிக்ஸ்-கிளியே-comments.412/
 
Top Bottom