Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Completed புத்தகம் பேசுதடி - இந்திரா செல்வம்

Meena

Saha Moderator
Staff
Messages
1,082
Reaction score
91
Points
48
1

அந்த சாம்பல் நிற கோட்டுக்கு பொருத்தமான கருப்பு நிற டையை சரி செய்தவாறு இரண்டு இரண்டு படிகளாக தன் உயர்தர ஷூவின் சத்தம் மேலிட, வேகமாக இறங்கினான் கார்த்திகேயன் சந்திரன். அப்படி இறங்கியவனின் கால்களின் வளர்த்தியை கொண்டு யூகித்தால், நிச்சயம் ஆறடிக்கு குறையாமல் இருப்பான். கைகளில் அன்றைய புதிய டிசைனில் வந்த ரோலக்ஸ் வாட்ச் மின்னியது. ரொம்பவும் குட்டையாக இல்லாமல் கச்சிதமாய் வெட்டப்பட்ட முடிக்கற்றைகள் அவன் படியிறங்கும் தாளத்திற்கேற்ப ஆட்டம் ஆடின. கையில் ஒரு கூலிங்கிளாஸ், அவன் அதை சுழற்றிக்கொண்டே வந்த ஸ்டைலை நாள் பூராவும் பார்த்துக் கொண்டே இருக்கலாம். உயர்ந்து வளர்ந்தவன் தோள்கள் பரந்துவிரிந்தன. முகத்தில் அப்படி ஒரு பணக்காரக் களை மாநிறத்துக்கும் ஒரு படி மேல் அவன் நிறம். தமிழனுக்கே உரிய மீசை இருக்கும் இடம் முழுமையாய் சவரம் செய்யப்பட்டு மழமழவென்றிருந்தது. அடர்த்தியான புருவம், கூர்மையான கண்கள், ஏதோ ஒரு ஆங்கில பாப் பாடலை முணுமுணுத்த உதடுகள் இப்படி எல்லாம் அவனுக்கு செதுக்கினாற் போலவே இருந்தது. வயது ...அவன் தோற்றத்தை பார்த்தால் நிச்சயம் இருபத்திமூன்று அல்லது இருபத்திநான்கு என்று தான் கூற வேண்டும். ஆனால் உண்மையில் அவனது வயது இருபத்தி எட்டு முடிந்து இரண்டு மாதங்கள் கடந்திருந்தது. ஒரு ஃபாரின் செண்டின் மனம் கமகமக்க டைனிங் டேபிளை அடைந்தான்.

அங்கே அவனுக்காக முன்னமே வந்து காத்திருந்தார் திருமதி உஷா சந்திரன். அவரை பார்த்ததும், "குட்மார்னிங் மாம்" என்றவன் தானும் ஒரு சேரில் அமர்ந்து தட்டை எடுத்து வைத்துக் கொண்டான்.

வேலைக்காரி தன் போக்கில் சிற்றுண்டியை பரிமாறினாள்.

"இந்த "மாம்", "கீம்" எல்லாம் அமெரிக்காவிலேயே விடுவதற்கென்ன? எத்தனை முறை கூறினாலும் உன் மண்டைக்குள் ஏற மாட்டேன் என்கிறது" என்று தன் கவலையை எண்ணிக்கை வைத்துக் கொள்ள முடியாத முறையாக கூறினார் உஷா.

லேசாக சிரித்தவன். "கேட்டுப் புளித்து விட்டது. அத்தோடு என் மண்டைக்குள் ஒன்றும் ஏறாமல் தான் எம்.டெக். இன் சாப்ட்வேர் படித்தேனாக்கும். அதுவும் அமெரிக்க யூனிவர்சிடியில் டிஸ்டிங்ஷன்" காலரை தூக்கி விட்டான்.

"இந்த பீற்றலுக்கு ஒன்றும் குறைவில்லை, அம்மா என்று கூப்பிட்டால் என்ன குறைந்துவிடுமாம்" விடாமல் கேட்டார்.

"அது சரி, குறைந்தாலும் பாதகமில்லை. அப்படி ஒன்றும் குள்ளன் ஆகி விடமாட்டேன்" குறும்பாய் சிரித்தவனை பார்த்து உஷாவும் சிரித்துவிட்டார்.

"சரியான கில்லாடி நீ எப்படி எது பேசினாலும் உன் வழிக்கு இழுத்து விடுவாய். அதில் உனக்கு நிகர் நீதான், என் தோல்வியை ஒத்துக் கொள்கிறேன். நீ சாப்பிடு உனக்கு பிடித்த இடியாப்பம்”

இடியாப்பத்தை ஆசையாக எடுத்து அருகில் இருந்த தேங்காய் துருவலையும் நாட்டு சர்க்கரையையும் தேவைக்கேற்ப அதனோடு கலந்து வாயினுள் வைக்கையில் அவன் முகம் பிரகாசித்தது..

"இத்தனை ருசியான இடியாப்பத்தை செய்வதில் உங்களுக்கு நிகர் நீங்கள் தான் மாம்" அவரை பின்பற்றி அப்படியே கூறியவன் வேகமாக சாப்பிட ஆரம்பித்தான்.

"இடியாப்பம் செய்வது பெரிய கம்ப சூத்திரம் பார், எதை புகழ்வது என்று வேண்டாம்?" அதட்டலாக கூறிவிட்டு தானும் சாப்பிட ஆரம்பித்தார்

"கம்ப சூத்திரம் தான். போன முறை மாமாவின் வீட்டில் இடியாப்பம் என்ற பெயரில் ஒன்றை போட்டார்களே கொழ கொழ வென்று ஒரே உப்பாக வாயில் வைக்க சகிக்கவில்லை. அதில் எனக்கு பிடிக்கும் என்று ஆசையாய் செய்தாளாம். அந்த ஹனி, வேறு வழியில்லாமல் தண்ணீரை குடித்து முழுங்க நான் பட்டப்பாடு அப்பாடா, இப்போது நினைத்தாலும் குமட்டுகிறது" என்றவன் வாந்தி எடுப்பது போல் நாக்கை வெளிப்புறம் நீட்டி செய்கை செய்தான்.

"தச் -- என்ன கார்த்தி இது ஆசையாக செய்து கொடுத்தததை இப்படியா விமர்சிப்பது? இது தான் நான் உனக்கு கற்றுக்கொடுத்த நாகரீகமா? தவறு கண்ணா, ஒருவர் ஆசையாக கொடுத்தால் அது கல்லாக இருந்தாலும் உண்டுவிட்டு நன்றாக இருக்கிறது என்றுதான் கூற வேண்டும்" கோபமாய் முறைத்தார் உஷா.

"ஆசை......அவள் ஆசையை கூறுங்கள், எப்போது பார்த்தாலும் அத்தான், சொத்தான் என்று! சகிக்கவில்லை. அதிலும் தொடாமல் அவளால் பேசவே முடியாது. அங்கே போகும் போதெல்லாம் அவளை ஷாப்பிங் அழைத்து செல்லவேண்டும் அவளது "ஆசையாய் செய்தேன்” என்ற வார்த்தைக்கு முழு பொருள் கடையில் என் கிரெடிட் கார்டை தேய்க்கும் போதுதான் தெரியும். இருந்தாலும் அந்த கொழ கொழ இடியாப்பத்திற்கு ரேட் மிகவும் அதிகம் என்று கூறியவன் வாய்விட்டு சிரித்தான்.

எவ்வளவு அடக்கியும் முடியாமல் சிரித்து விட்டார் உஷா. இருப்பினும் தொடர்ந்து

"நீ பிறந்து வளர்ந்தது எல்லாம் அமெரிக்காவில் தானே என்று அவள் சகஜமாக பழகியிருக்கலாம். ஏன் தொட்டு பேசுவது இப்போது தமிழகத்திலும் பரவித்தானே வருகிறது"

"அதற்காக மேலே விழுந்து இழைவதா? உங்களுடைய கண்டிப்பான வளர்ப்பினால் அப்படிப்பட்ட ஊரிலும் நான் நம் பண்பாட்டை காத்தேன். இவள் மட்டும் வேறு யாரிடமும் இதுபோல் நடந்திருந்தால் அவர் நிலை சொல்வதற்கில்லை" உதட்டை பிதுக்கினான்.

"எல்லோரிடமுமா அப்படி நடந்து கொள்வாள் நீ அவளின் அத்தை மகன் தானே முறைப்பையன் என்ற உரிமையில் இழையலாம்"

"ச்....சு......முறைப்பையன், முறைக்காத பையன் இன்னும் என்னவெல்லாம் வைத்திருக்கிறீர்களோ, அடுத்து உங்கள் பேச்சு கல்யாணத்திற்கு தான் தாவும். அதனால் நான் எஸ்கேப் ஆகிறேன், பாய் மாம், சியூ இன் த ஈவினிங்" என்று எழுந்தவன் வாஷ்பேசினில் கைகளை கழுவிக் கொண்டு வேகமாக அந்த அறையை விட்டு வெளியேறினான்.

"சரியான வாலு எப்படி ஆரம்பித்தாலும் நழுவுகிறான். ம்.. .ஹும்... இவனுக்கென்று ஒருத்தி இனிமேலா பிறக்கபோகிறாள்" ஒரு பெருமூச்சுடன் உணவை தொடர்ந்தார் உஷா சந்திரன்.

அந்த வெள்ளை நிற ஆடி காரை பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு மிடுக்கான நடையுடன் தன் அலுவலகத்தினுள் நுழைந்தான் கார்த்திகேயன் சந்திரன், அது ஒரு மூன்றடுக்கு கட்டிடம் “சுந்தர் சாப்ட்வேர் சொல்யூஷன்ஸ்" என்ற ஆங்கில எழுத்து பெரிதாய் மின்னியது. பளபளக்கும் வெளிப்புறமும் முழு ஏசி செய்யப்பட்ட உள்புறமும், அதற்கேற்ற வேலைபாடுகளும், லைட் எபெக்ட்ஸ்சும், செயற்கை செடிகளும் பார்க்க, வளர்ந்து வரும் ஐடி நிறுவனத்தின் சாயலை கொண்டிருந்தது. பெரிய பெரிய ஐடி நிறுவனங்கள் தொடக்கத்தில் இப்படி தான் இருந்திருக்கும் என்று அங்கு வந்து போகிறவர்களில் தொண்ணூறு சதவிகிதம் பேர் நினைக்கக்கூடும். எல்லாவற்றிலும் ஒரு நேர்த்தி இருந்தது.

எதிர்பட்டோரின் வணக்கங்களை ஏற்று படிகளில் ஏறி தன் அறைக்குள் சென்று அமர்ந்தான்.அவன் வருகைக்காக காத்திருந்தது போல் ஒரு பெண் அவசரமாக அறையினுள் நுழைந்தாள்.

"குட்மார்னிங் சார்"

"வெரி குட்மார்னிங் ரம்யா"

"இன்றைக்கு பத்துமணி அளவில் மலையப்பன் புரொவிஷனல் ஸ்டோருக்கு நாம் கொடுத்திருந்த சாப்ட்வேரில் ஏதோ பிரச்சனை என்று கூறியதன் அடிப்படையில் அதன் உரிமையாளர்களோடு மீட்டிங் இருக்கிறது. பிறகு லன்ச், அதற்கடுத்து நம் மணியின் பிறந்தநாள் அதை கொண்டாட ஒரு மணி நேரம், பிறகு நியு பேஷன் டிரஸ்சிங் கடைக்கு நாம் ஒரு புது சாப்ட்வேர் கொடுக்க போகிறோமே அது முடிந்துவிட்டது. ஃபைனல் லெவல் டெஸ்டிங் முடிந்துவிட்டது. அதை ஒரு முறை எப்போதும் போல் நீங்களும் டெஸ்ட் செய்துவிட்டால் லான்ச் செய்து விடலாம். அப்புறம் உங்கள் புத்தக பிரஸ் கட்டுமான பணியின் மேற்பார்வை இருக்கிறது. பிறகு ஹோம் ஸ்வீட் ஹோம் தான்" முடித்தவள் உதடு விரிய சிரித்தாள்.

அமைதியாக கேட்டவன் அவள் முடித்ததும்.

"தேங்க்யூ ரம்யா? பட் எப்படி பார்த்தாலும் ஆறு மணிக்குள் என்னை வீட்டுக்கு அனுப்பும்படி தான் செட்யூல் போடுகிறாய்! என்ன உன் பையன் அம்மா ஆறு மணிக்கு வராவிட்டால் ஹோம் வர்க் செய்ய மாட்டேன் என்று அடம்பிடிக்கிறானா?" கேலியாய் கேட்டு சிரித்தான்.

அசடு வழிய சிரித்தவள் "அதெல்லாம் இல்லை சார் நான் சொல்வதால் மட்டும் நீங்கள் சீக்கிரம் போய்விடுவீர்களா என்ன? வேலை என்று இறங்கினால் வீட்டை மறந்து விடுகிறீர்கள் அதை நினைவுப்படுத்துவதும் உங்கள் பி.ஏவான என் கடமை அல்லவா?" விடாமல் பதில் கொடுத்தாள்.

லேசாக சிரித்தவன் "அதுவும் சரிதான். அந்த புரொவிஷனல் ஸ்டோர் சாப்ட்வேரில் என்ன பிரச்சனை அதன் குறிப்பு இருக்கிறதா?" என்றவனிடம் ஒரு ஃபைலை நீட்டினாள்.

"நேற்று மாலை தான் இந்த பிரச்சனை, உடனே மீட்டிங் போடவேண்டும் என்று வற்புறுத்தினார். அதனால் தான் வேறு வழி இல்லாமல் இன்று காலையிலேயே அப்பாயின்மென்ட்டு கொடுக்கும்படி ஆயிற்று"

"ம் .... தட்ஸ் ... ஓ.கே. கஸ்டமர் இஸ் ஃபர்ஸ்ட்" என்றவன் அதற்கு பிறகு ஃபைலில் மூழ்கினான்.

அந்த மீட்டிங் முடிந்து அவன் உணவருந்தும் பொழுது மணி இரண்டாகி விட்டிருந்தது. மனதில் நிம்மதி இருந்தது. எதிர்ப்பார்த்து பயந்தது போல் அந்த கோளாறு அவர்களது சாப்ட்வேரில் இல்லை. வாங்கியவர்கள் பிரச்சனை என்று கூறியது அவர்கள் முதலில் தேவை என்று குறிப்பிட்டிருந்த ரெக்வயர்மென்ட்சில் இல்லை. அவர்கள் புதிதாக ஒன்றை எதிர்ப்பார்த்து அது கிடைக்காத இடத்தில் தேடியதற்கு சமமாகி விட்டது. ஆகவே அவர்கள் மனம் நோகாமல் புரிய வைத்து இப்போது புதிதாக வேண்டும் என்பதை கேட்டு கூடிய விரைவில் செய்து கொடுப்பதாகவும் அதற்கு இவ்வளவு செலவாகும் எனவும் பேசி முடித்து ஒரு முடிவுக்கு வருவதற்குள் ஒரு மணி நேரம் அதிகம் செலவாகி விட்டிருந்தது. உடனே அவர்கள் பேசியவற்றை ஒரு டாக்குமென்டாக டைப் செய்து இருசாராரும் அதில் கையெழுத்து போடும்படி செய்தாள் ரம்யா. அதில் இருவரும் ஒவ்வொரு நகலை எடுத்துக்கொண்டனர்.

அடுத்து பர்த்டே பார்ட்டி. கார்த்திக்கிற்கு ஒரு வழக்கம் உண்டு. அலுவலகத்தில் யாருக்கு பிறந்தநாள் என்றாலும் ஒரு கேக் மற்றும் டீ காரம் காஃபி என்று கம்பெனி செலவிலேயே கொண்டாட்டம் நிச்சயம். இதனால் பாஸ் என்று ஒதுக்கம் குறையும் எம்.டி .என்றால் பார்க்கவே முடியாது என்ற நிலையில்லாமல் அவரும் நம்முள் ஒருவர் தான் என்று உணர்ந்து குறைநிறைகளை கலந்து பேச இந்த பார்ட்டி அவனுக்கு மிகவும் உதவும். கடைநிலை ஊழியர்களிடமும் அக்கறையாய் நலம் விசாரித்து உரிமையாய் தோள் தொட்டு தட்டிக் கொடுத்து பேசுவான். ஒரு முதலாளியின் திறன் அவர் எப்படி வேலை செய்கிறார் என்பது இல்லை. அவர் மற்றவர்களிடம். திறம்பட எப்படி வேலை வாங்குகிறார் என்பது தான் அதில் கார்த்தி மாஸ்டர் டிகிரி தான். புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா?.

அப்பாவின் குணம் அப்படியே கார்த்திக்கிற்கும். எப்படிப்பட்டவராக இருந்தாலும் தட்டிக் கொடுத்து வேலை வாங்கிவிடுவார். பின்னே? தாய் நாட்டிலிருந்து தன் நண்பனோடு கூட்டணி கொண்டு வெளிநாட்டில் திறம்பட தொழில் செய்தவராயிற்றே. அப்போதே உஷாவிற்கு
அமெரிக்கா வாசம் துளியும் பிடிக்கவில்லை தான், இருப்பினும் கணவர் அந்த தொழிலில் மிகுந்த ஈடுபாடு வைத்ததால் வேறுவழியின்றி பழகிக் கொண்டார். ஆனால் எது எப்படி இருந்தாலும் வருடம் இரண்டு மாதம் தமிழ்நாட்டில் தான். அத்தோடு வீட்டில் எப்போதும் தமிழ் தான் பேச வேண்டும் என்று உறுதியான சட்டம் எவ்வளவோ முயன்றும் அம்மா,அப்பாவை மட்டும் அவன் அழைப்பது மாம், டாட் என்று தான். சந்திரனும் அவனுக்குத் துணையாய் பல விஷயங்களில் உஷாவை எதிர்ப்பார். அதில் இந்த மாம், டாட்டும் அடக்கம். திசைமாறும் பருவமான டீனேஜில் உஷா கார்த்திகேயனை மிகவும் கவனமாக கவனித்தார். தமிழ்நாட்டில் இப்படி அப்படி என்று நிறைய கூறுவார்.

அது மட்டுமில்லாமல் இயற்கையிலேயே அவனுக்கும் ஏனோ அங்கே இருக்கும் கலாச்சாரம் பிடிக்கவில்லை தான். அது ரத்தத்தில் ஊறிய பண்பு போலும். "பெயரைக் கேட்டால் அட்ரசை கொடுக்கிறார்கள் என்ன பெண்கள் இவர்கள்“ வீட்டில் புலம்புவான்.

"எனக்கு தமிழ்நாடு பெண்ணை தான் மணக்க வேண்டும் என்ற ஆசை மாம். அங்கே பாருங்கள் அழகாக தாவணி கட்டி தலைநிறைய பூ வைத்து பார்த்தால் கும்பிட தோன்றும் உங்களை போலவே ஒரு பெண்ணை தேடி எடுத்து கொண்டு வந்து என் கழுத்தில் கட்டிவிடுங்கள்" அறியா பருவத்தில் உளறுவான்.

அவன் உளறுவதை கேட்கும் போதெல்லாம் நிம்மதியாய் இருக்கும் உஷாவிற்கு.

இப்படி நாட்கள் ஓடிக்கொண்டிருக்க திடீர் என்று தான் ஒரு நாள் இதயத்தை பிடித்துக் கொண்டு சரிந்த சந்திரன் பிறகு எழுவே இல்லை.

அப்போதே அமெரிக்கா வெறுத்துவிட்டது உஷாவிற்கு. கார்த்திகேயனின் எம்.டெக் முடிந்த கையுடன் சென்னைக்கு தன் அண்ணன் உதவியோடு குடிபெயர்ந்தார். அங்கே இவர்களின் பங்கை விற்றுவிட்டுதான் இங்கே கம்பெனியை நிறுவினார்கள். கார்த்திகேயனுக்கு அம்மாவின் முதுமையை தமிழ்நாட்டில் கழிக்க வேண்டுமென்ற எண்ணம் புரிந்து இருந்தது. அவர் உறவுகள் சூழ இருப்பதை அதிகம் விரும்புபவர். அதனால் அவனும் சந்தோஷமாக தமிழ்நாட்டில் செட்டிலாகி விட்டான்.
 

Meena

Saha Moderator
Staff
Messages
1,082
Reaction score
91
Points
48
2​

அந்த காட்டன் புடவையின் மடிப்பு அடங்கவே மாட்டேன் என்று அடம் செய்து தாமரையை அழவைத்தது. நேரம் அதிகம் இல்லை. இப்போதே சற்று தாமதம் தான் இந்த ரோஜா அடித்த கூத்தில் எல்லாமே தலைகீழாகி விட்டது. இதில் புடவை வேறு என்று அவசரமாய் கொசுவம் வைத்து சொருகியவள், ஷாம்பு போட்டு அலசிய, இடைவரை நிறைந்த கூந்தலை லூசாக பின்னலிட்டு பேண்ட் போட்டாள். தோட்டத்தில் பூத்த மல்லிகையை நெருக்க கட்டிவைத்திருந்த தங்கையை உள்ளூர பாராட்டியவாறே அழகாக சூடிக்கொண்டாள். ரோஜா வண்ண புடவைக்கு ஏற்ற ரோஜா வண்ண பொட்டுவைத்துக் கொண்டு அதன் கீழ் ஒரு குங்கும கீற்றையும் வைத்து முடித்து, கையில் இருந்த சிறிய கண்ணாடியில் முகத்தை இப்படியும் அப்படியும் திருப்பிப் பார்த்து நிறைவு கொண்டவளாக மேஜை மீதிருந்த ஃபைலை எடுத்தாள். அதில் அவள் எழுதிய ஐந்து நாவல்களில் அவளுக்கு மிகவும் நன்றாக பட்ட இரண்டை ஜெராக்ஸ் எடுத்து ஸ்பைரல் பைண்டிங் செய்து கவரில் இருந்தது. தன் கைப்பையில் எல்லாவற்றையும் நிரப்பிக்கொண்டு கிளம்பினாள். வீட்டை மறக்காமல் பூட்டி சாவியை பக்கத்து வீட்டில் ஒப்படைத்து விட்டு அவசரமாக பேருந்து நிறுத்தத்திற்கு விரைந்தாள்.

'உஷா சந்திரன்' பப்ளிகேஷன்ஸ், என்ற பெயரோடு விளங்கிய அந்த கட்டிடத்தை நெருங்கும் போது மனம் தடதடத்தது தாமரைக்கு. இது தான் என் முதல் முயற்சி. இதில் வெற்றி கிடைக்குமா? இன்று ஒரு நாள் தான் அலுவலகத்தில் விடுப்பு எடுத்திருக்கிறேன். இன்றைக்குள் வேலை முடியவேண்டும்.

இது என் கனவு, லட்சியம் எல்லாம், அம்மா எப்போதும் என்னுடனே இருங்கள் நீங்கள் தூண்டிவிட்ட நெருப்பு தான். என்னுள் தீயாய் உள்ளது. எனக்கு தைரியத்தை கொடுங்கள் என மனமார வேண்டியவள் வேகமாய் ரிஷப்ஷனை அடைந்தாள்.

"குட் மார்னிங் மேடம் இங்கே நாவல்கள் எழுதி எடுத்து வரும்படி விளம்பரம் ...."

"ஓ..... அதோ அங்கே எல்லோரும் காத்திருக்கிறார்கள் பாருங்கள் நீங்களும் அமருங்கள் உள்ளே கூப்பிடுவார்கள்"

தயங்கியபடியே சென்றவளுக்கு மிகுந்த பயம் பற்றிக் கொண்டது. அங்கே இருந்தவர்கள் அனைவரும் அதி நாகரீகமாக உடை அணிந்திருந்தனர். இவள் மட்டும்தான் காட்டன் புடவையில் ஓரிருவர் புடவையில் இருந்தாலும் அவர்கள் பட்டில் இருந்தார்கள்.

ஒவ்வொருவராக உள்ளே சென்று கொண்டிருந்தார்கள். ஓர் இருக்கையின் நுனியில் தயக்கமாய் உட்கார்ந்தவள் ஃபைலை இறுக பற்றிக் கொண்டாள்.

கார்த்திகேயனின் மனநிலையோ மிகவும் மோசமாக இருந்தது. சிறு வயதிலிருந்தே அவன் அம்மாவிற்கு தமிழ் மொழிப்பற்று அதிகம். அமெரிக்காவில் இருந்தாலும் அங்கே தமிழ் நாவல்கள் கதைகள் என்று தேடி பிடித்து வாங்கி வந்து கொடுப்பார் அவனின் அப்பா. அவ்வப்போது அப்பா பேச்சில் கூறுவார் "ஏய் கார்த்திகேயா எங்கள் முதுமை காலத்தை நாங்கள் தமிழ்நாட்டில் தான் செலவழிப்போம். அப்போது உன் அம்மாவிற்கு ஒரு நூலகம் கட்டி தரலாம் என்றிருக்கிறேன்"

"அதனால் என்ன டாட் கட்டி விட்டால் போகிறது" என்று ஒத்து பாடுவான் கார்த்தி.

"அதெல்லாம் வேண்டாங்க நம் தமிழ்நாட்டில் மகளிர் படிப்பதற்கு அதிக தமிழ் நாவல்கள் வெளியிடும் ஆட்கள் இல்லை. அதனால் நாமே ஒரு நாவல் வெளியீடு ஆரம்பித்து புது எழுத்தாளர்களுக்கு ஊக்கம் கொடுக்க வேண்டுமென்பது என் ஆசை" என்று கூறும்போது அம்மாவின் கண்கள் கனவில் ஜொலிக்கும்.

அப்போதே கார்த்தி தீர்மானித்துவிட்டான் அம்மாவின் பெயரில் ஒரு பப்ளிகேஷன்ஸ் ஆரம்பிக்க வேண்டும் என்று.

அதன் அடிப்படையில்தான் “உஷா" என்ற மகளிர் நாவல் ஆரம்பிக்கப்பட்டு அரசின் அனுமதி பெற்று நாவலுக்கான தேடல் ஆரம்பமானது.

முதல் நாவலின் தேடல் மட்டும் இல்லாமல் ஓர் எடிட்டரை தேடியே அந்த விளம்பரம் அளிக்கப்பட்டது. வெறும் நாவல் மட்டும் வேண்டும் என்றால் தபாலில் அனுப்பும்படி செய்திருக்கலாம்.

அதையே சாக்கிட்டு ஒரு நேர்கானலையும் முடித்து விட முடிவு செய்தான் கார்த்திக். ஆனால் திடீர் என்று உஷா வராமல் இருந்து கொண்டது தான் கார்த்திக்கு துளியும் பிடிக்கவில்லை.

அவனுக்கு நாவலை பற்றி அ ....ஆ .... இ கூட தெரியாது. இவ்வளவு ஏன் அ, ஆ, இ, ஈ------- கூட சரியாய் தெரியாது தான்.அப்படி இருக்க அவன் எப்படி நல்ல நாவலையோ? அல்லது சிறந்த எடிட்டரையோ தேர்ந்தெடுப்பது. இருப்பினும் விளம்பரத்தில் கொடுக்கப்பட்டதை மாற்றவும் முடியாதுதானே வேறுவழியின்றி அவனே எல்லோரிடமும் கேள்விகள் கேட்டான். தன் மனதிற்கு தோன்றிய ஏதோ கேள்விகளை கேட்டு சமாளித்தான் என்று தான் சொல்ல வேண்டும்.

இதுவரை வந்தவர்கள் கேள்விகளுக்கு பதில் கூறினார்களோ இல்லையோ, அப்பா அரசியல்வாதி அண்ணா பிரஸ் ரிப்போர்டர் தலைமுறை தலைமுறையாக பெரிய தொழில் அதிபர் வீட்டு வாரிசு. இப்படி சொந்த புராணம் கேட்டே அவனுக்கு புளித்துவிட்டது.

ஒரு சிலர் கதையில் அதிக அழுகை தரும் சம்பவம் இருந்தால் தான் நாவல் வெற்றி பெரும், பெண்களிடையே பிரபலம் ஆகும் என்றனர். சிலர் ரொமான்ஸ் அதிகம் இருந்தால் வியாபாரம் பிய்த்து கொள்ளும் என்றார்கள் இப்படி ஒவ்வொன்றாய் கேட்டு முடித்தவன் மிகவும் களைப்படைந்து விட்டான் ஆனால் வேறுவழியின்றி "நெக்ஸ்ட்" என்றான்.

சில நிமிடங்கள் கரைந்ததும் யாரும் உள்ளே வராததால் வாயிலை நிமிர்ந்து பார்த்தவன் சற்றே புருவம் உயர்த்தினான். ஃபைலை கெட்டியாக நெஞ்சோடு அணைத்துக்கொண்டு காட்டன் புடவையில் தயங்கி தயங்கி உள்ளே நுழைந்த தாமரையை பார்த்து ஆச்சர்யப்படாமல் அவனால் இருக்க முடியவில்லை. வந்த அத்தனை பெண்களும் நேர் நடை, தயக்கம் என்பது துளியும் இல்லாத பேச்சு, நாகரிக உடையுடுத்தி வந்து பார்த்ததில். இவள் மட்டும் முதல் பார்வையிலேயே வேறுபட்டு தெரிந்தாள்.அவள் தயக்கத்தை போக்க முயல்பவனாய்.

"வாங்க .. மிஸ் ...வந்து உட்காருங்கள்" எதிர் இருக்கையை காட்டினான்.

அவனின் சகஜ பேச்சிலும் பற்கள் தெரிய அவன் சிரித்ததிலும் தயக்கம் குறைந்து அவன் காட்டிய இருக்கையில் அமர்ந்து கொண்டாள்.

"என் பெயர் கார்த்திகேயன் சந்திரன், உஷா நாவலின் உரிமையாளர் உஷா சந்திரனின் மகன்" என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்.

"வணக்கம் சார் என் பெயர் தாமரை "

"நைஸ் நேம்...... நாவல்கள் எழுதும் பழக்கம் எப்போதிலிருந்து?"

"என் பதினொன்றாம் வகுப்பு ஆரம்பத்திலிருந்தே எழுதுகிறேன். எப்படியும் எட்டு வருஷம் குறையாமல் இருக்கும்"

"எத்தனை நாவல் எழுதி இருக்கிறீர்கள்?"

"ஐந்து"

"இதுவரை ஏதாவது ஒரு நாவல் வெளிவந்திருக்கிறதா?"

“இல்லை சார். அதற்கான முயற்சியை நான் எடுக்கவில்லை. இப்போது தற்செயலாக உங்கள் விளம்பரம் பார்த்தேன். அது எனக்கு ஒரு தூண்டுகோலாக அமைந்தது. அதற்காக நன்றி"

"ஓ... இட்ஸ் ஓகே நாவலை பற்றி உங்களின் கருத்து அதாவது ஒரு நாவல் வெற்றி பெற வேண்டும் என்றால் அது எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்?"

“நம் நாவல் மகளிர் நாவல் என்பதால் முதலில் குடும்பப்பாங்கான கதையாக இருக்க வேண்டும். கொஞ்சம் நகைச்சுவை இருந்தால் படிப்பவர்களின் மன இறுக்கம் தளரும்..கதாநாயகன் கதாநாயகியை மட்டும் மையமாக வைத்துக்கொள்ளாமல் எல்லா கதாபாத்திரத்திற்கும் ஏறக்குறைய சமமான முக்கியத்துவம் தர வேண்டும். பெண்கள் அதிகம் விரும்புவது கதாநாயகன் நாயகியின் ஊடல் அதன் பிறகு வரும் கூடலை தான். அத்தோடு வெறும் பொழுதுபோக்குக்காக மட்டும் இல்லாமல் கதையை படித்து முடித்தவர்களுக்கு ஏதேனும் ஒரு சமூக சிந்தனையாவது வலியுறுத்தப்பட வேண்டும். அது மற்ற உறவுகளிடம் பழகும் முறையாகட்டும், பெண்களை நடத்தும் முறையாகட்டும், வார்த்தைகளின் நாகரிகமாகட்டும், சமுதாய சீர்திருத்தமாகட்டும், இப்படி ஏதாவது ஒரு நல்ல கருத்து படிப்பவர்களின் மனதில் பதியவேண்டும்".

"சூப்பர்ப்"

தேங்க்யூ சார். இப்போ நான் பேசியதெல்லாம் என் சொந்த கருத்துதான் சார் அதோடு என் சக தோழிகள், நாவல் படிப்பவர்கள், இப்படி கலந்து பேசும்போது தெரிந்து கொண்ட விபரங்கள் அவ்வளவுதான். மற்றபடி நாவலுக்கு ஒரு கோட்பாடே வைக்க முடியாது.

சாவின் பிடியில் இருப்பவர் தன் இறந்த காலத்தை பற்றி யோசிப்பது போல் அமைந்திருக்கும் கதைகளும் உண்டு. இறந்த கணவனை பார்த்து, அவர்கள் வாழ்க்கையை அசைப்போடும் மனைவியின் கதைகளும் உண்டு, ஏழை படும்பாட்டை வெளிக்கொணறும் கதைகளும் உண்டு அரசியல்வாதிகளைப் பற்றிய கதைகளும் உண்டு. இப்படி எல்லாமே தனி தனி ரகங்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சுவை. ஆனால் மகளிர் அதிகம் வன்முறை பக்கம் போவதில்லை. அதாவது க்ரைம், கொலை, கொள்ளை, போன்றவை. அதே போல் சோக முடிவுகளையும் அவர்களால் ஜீரணிக்க முடிவதில்லை

என் தோழிகளில் ஒருத்தி புத்தகம் வாங்கும் பொழுதே கேட்டு விடுவாள்.. ‘இது அழுகாச்சி கதை இல்லையே' என்று. சிலர் கடையில் ஹீரோ ஹீரோயின் பிரியர மாதிரி கதை எனக்கு கொடுக்காதே என்பார்கள். ஆக நாம் எல்லாவகை ரசிகர்களையும் சந்தோஷப்படுத்த வேண்டும். அதனால் அறுசுவையும் இருக்கும் சமையல் பேர் பெரும். அது போல் நாமும் எல்லா சுவைகளும் கலந்த நாவல்களை கொடுக்க வேண்டும்" முடித்து விட்டாள்.

இத்தனை நேரம் இடைவிடாது அவள்' கூறியதை தன் நிலை மறந்து கேட்டுக் கொண்டிருந்தவன். இப்போது கைகளை தட்டி தன் பாராட்டை வெளிப்படுத்தினான்.

அவன் கை தட்டியதில் லேசாக சிவந்தவள் தன் நன்றியை தெரிவித்துக் கொண்டாள்.

"உங்கள் நாவலை கொடுத்துவிட்டுப் போங்கள் தாமரை, அதில் உங்கள் பெயர் முகவரி டெலிபோன் நம்பர் எல்லாவற்றையும் குறித்து கொடுங்கள் ஒரு வாரத்தில் நாங்கள் அழைக்கிறோம். முடிவு எதுவானாலும் அது உங்கள் வீடு தேடிவரும்" என்று கூறியவனிடம் தன் நாவல்களை ஒப்படைத்து விட்டு அங்கிருந்து அகன்றாள் தாமரை.

நல்லவேளையாக அவளே கடைசி நபராக போகவே கார்த்தியும் சாப்பாடிற்கு சென்றான்.

சாப்பாட்டில் உட்கார்ந்த கார்த்திக்கு ஏனோ தாமரையின் நினைவாகவே இருந்தது. தாமரை என்ற பெயருக்கு ஏற்ப ரோஜா நிற ஆடையில் பளிச்சென்று தான் இருந்தாள். இந்திய சிகப்பு அவள் நிறம், நீள அடர்த்தியான கூந்தல், பேசும் கருவிழிகள், மூக்கில் ஒரு சிறிய வெள்ளை கல், காதுகளில் ஜிமிக்கி. கார்த்தி அறிந்த வரையில் அவை நிச்சயமாய் தங்கமாக இருக்க முடியாது.கழுத்தில் ஒரு வெள்ளை மணிமாலை அப்படிப்பட்ட மாலையை அவன் எங்கே பார்த்திருக்கிறான்... ஆங்..ம்,, ஆம்,, ஹனியோடு காரில் செல்கையில் சிக்னலில் ஒரு பெண் “இருபது ரூபாய் தான் வாங்கிக் கொள்ளுங்கள்” என்று ஹனியை பாடாய் படுத்திவிட்டாள் அவனும் “இவ்வளவு கூறுவதால் ஒன்றை வாங்கித்தான் போடேன் ஹனி” என்றதற்கு நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டான்.

“என்ன பேச்சு இது கார்த்தி அத்தான், பிளாட்பார்மில் இருப்பவர்கள் போடுவதை நான் போட வேண்டுமா? இருபது ரூபாய் மாலை எல்லாம் போட்டால் என் அழகு என்னாவது தங்கமும் வைரமும் போட்டால் தான் அழகு. இந்த மாலை அணிந்து கொண்டால் யார் பார்ப்பார்கள். இந்த மாதிரி கிறுக்குத்தனமாக இனி ஒரு தரம் பேசாதீர்கள்” என்று மூச்சிரைக்க கத்தி கூச்சலிட்டாள்.

ஆனால் அந்த இருபது ரூபாய் மாலையிலும் தாமரை அழகாகத்தான் இருந்தாள். ஒருவேளை அவளது மாசு மரு இல்லாத துடைத்தாற் போல் இருந்த முகம் ஒரு காரணமாக இருக்குமோ? கைகளில் இரு பிளாஸ்டிக் வளையல்கள். மொத்தத்தில் ஒரு ஐம்பது ரூபாய் அணிகலன்களில் அவள் தேவதையாக தான் ஒளிர்ந்தாள். எல்லாவற்றிலும் ஒரு பிளஸ் ஆக அவள் ரோஜா இதழ்களில் தவழ்ந்து கொண்டிருந்த மங்காத புன்னகையும் அவ்வப்போது உள்ளே இருந்த அரிசிப்பல் தெரிகையில் அடடா அதுவல்லவா அவளுக்கு அளவிடமுடியாத அழகு சேர்ந்தது. ஃபேஷியலும், பிளீச்சும் செய்து இயற்கையான சருமத்தை கெடுத்து வைத்திருக்கிறாள் இந்த ஹனி என்று தான் தோன்றியது. அதே நேரம் கண்களை எட்டாத நாகரீக சிரிப்பு என்று ஒரு சிரிப்பு சிரிப்பாள். அது சிரித்தது போலவே இருக்காது. ஏதோ உதட்டை இழுத்து பிடித்து பற்களை காண்பிப்பது போல்தான் தோன்றும். ம்.. நான் ஏன் ஹனியையும் தாமரையையும் ஒப்பிட்டு பார்க்கிறேன் தலையை ஒருமுறை சிலுப்பிக் கொண்டவன் தன் சாப்பாட்டில் மனம் பதித்தான்.

அன்று நடந்த நேர்முக தேர்வின் சாராம்சத்தை அன்னையிடம் கூறி முடித்தான் கார்த்திகேயன்.

தாமரையை பற்றி சற்று அதிகமாகவே பேசப்பட்டது.பிறகு அவர்களிடம் பெற்ற நாவல்களை அம்மாவிடம் ஒப்படைத்தான்.

“எது எப்படி இருந்தாலும் இன்று என்னை அதிகம் சோதித்துவிட்டீர்கள் மாம். கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல் ஆகிவிட்டது. கேள்விகளை கேட்க நான் பட்டபாடு இருக்கிறதே அப்பப்பா! அப்போது என் முகத்தை நீங்கள் பார்த்திருக்க வேண்டும். எனக்கே சிரிப்பாக தான் இருந்தது. இருப்பினும் ஒப்பேற்றி விட்டேன். “இனி ஒரு தரம் இப்படி செய்ய வேண்டாம்” மிரட்டும் பாணியில் கூறினான்.

“நான் என்ன கண்ணா செய்யட்டும், திடும் என் அமெரிக்காவிலிருந்து உன் அப்பாவின் பார்ட்னர் இங்கு வந்துவிட்டார். அவர்களை விட்டுவிட்டு எப்படி வருவது சொல்”

“ம் சரி.. சரி.. பரவாயில்லை. இந்த நாவல்களை படித்துவிட்டு சீக்கிரம் ஒரு எடிட்டரை தேர்ந்தெடுங்கள்”

“நாவல்கள் இருக்கட்டும் இன்று நடந்த நேர்முக தேர்வில் யாரை தேர்ந்தெடுக்கலாம் என்று உன் மனதுக்கு படுகிறது”

“என் மனதிற்கா...? அய்யோ நான் வரவில்லை, ஆளை விடுங்கள். நாவல்களை பற்றி ஆரம்ப கால பாடம் கூட தெரியாத என்னிடம் இந்த கேள்வி வேண்டாமே”

“சரி.. முடிவு நான் செய்கிறேன். உனக்கு தோன்றுவதை மட்டும் கூறு. உன் அபிப்பிராயத்தை தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்”

அப்போது அவன் மனதில் தாமரையின் அழகு முகம் வந்து சென்றது. சிறிய அமைதிக்கு பின் பேசினான்.

“என் கருத்தை கேட்பதால் சொல்கிறேன். எனக்கு என்னவோ தாமரை இந்த பதவிக்கு ஏற்றவளாக இருப்பாள் என்று தான் தோன்றுகிறது”

கூறியவனை கூர்ந்து பார்த்த உஷா ”இன்று தானே அந்த பெண்ணை பார்த்தாய் அதற்குள் ஏக வசனத்தில் விளிக்க ஆரம்பித்து விட்டாய்?”

அன்னையின் பார்வை அவன் கண்களை ஊடுருவிவிட்டதை உணர்ந்தவன் சட்டென்று பேசினான்.

“என்னை விட நிச்சயம் நான்கு வயதேனும் குறைவாகத் தான் இருப்பாள். அதனால் எதார்த்தமாக கூறிவிட்டேன். இதற்கெல்லாமா விசாரணை கமிஷன்?” கேட்டு குறும்பாக சிரித்தான்.

“அதுவும் சரிதான் உன் அனுமானம் ஏறக்குறைய சரியாக இருப்பதாக தான் தோன்றுகிறது. இருப்பினும் ஒருமுறை நான் இந்த நாவல்களை வாசித்துவிட்டு இறுதி முடிவினை கூறுகிறேன் சரிதானா?” என்று முடித்தார் உஷா.

ஏனோ மனதினுள் அம்மா தேர்வும் தாமரையாக இருக்க வேண்டும் என்று தோன்றியது கார்த்திகேயனுக்கு.
 

Meena

Saha Moderator
Staff
Messages
1,082
Reaction score
91
Points
48
3

சமையலறையில் கைகள் தன் வேலையை தன்னிச்சையாக செய்ய மனம் அதில் பதியவில்லை தாமரைக்கு. கடவுளே எப்படியாவது என் நாவல் வெளிவர வேண்டும். எத்தனை ஆண்டு கனவு இது. சொல்லப்போனால் என் வாழ்வின் லட்சியமே இதுதான். எடிட்டர் வேலை கிடைக்காவிடில் பாதகமில்லை.ஆனால் என் நாவல் பிரசுரமாவதையும், அவை கடைகளில் விற்பதையும், ஆசையாக மகளிர் அதை வாங்கி படிப்பதையும் கண் குளிர காணமாட்டேனா? ஏன் இந்த ஏக்கம்? என் எழுத்தின் மீது தானே நம்பிக்கை அற்று பேசுவதா? நிச்சயம் என் நாவல் புத்தக வடிவில் வரத்தான் போகிறது. ஆசையாக நான் அதை படிக்கத்தான் போகிறேன். இப்படி சிந்தனையில் முழ்கியவளின் இமைகள் மூடப்பட்டன. சட்டென இவ்வுலகம் வந்தவள் கண்களை மூடியது யார் என்றும் கண்டுகொண்டாள்.

“ஏய் ரோஜா விடுடி என்னை” கோவமாய் வெளிவந்தது வார்த்தை

“அட கண்டுபிடித்து விட்டாயா என் செல்ல அக்கா?”

குழைவாய் பேசினாள் ரோஜா கைகளை விலக்கியவாறு,

“இந்த கொஞ்சல் எல்லாம் வேண்டாம், காலையில் என்னை என்ன பாடுபடுத்தினாய்” இடுப்பில் கைவைத்து முறைத்தாள்.

“அய்யோ இப்படி பார்வையாலே எரித்து விடுவதாக உத்தேசமா பாவம் அக்கா நான்” பயந்தவள் போல் பாவனை செய்தாள்.

“அடிக்கழுதை கிண்டலா செய்கிறாய்” கரண்டியை எடுத்துக் கொண்டு தாமரை மிரட்ட ரோஜா வேகம் பிடித்தாள் கண்மண் தெரியாமல் ஓடியதாலோ அல்லது இந்த நேரத்தில் நம் வீட்டிற்கு யாரும் வர வாய்ப்பில்லை என்று உணர்ந்தாலோ எதிர்ப்பட்டவரை கவனியாமல் மோதிவிட்டாள் ரோஜா. பின்னால் ஓடி வந்த தாமரை சுதாரித்து நின்றுவிட்டாள். அவளது உதடுகள் தாமாக “மாமா” என்று முணுமுணுத்தன.

கீழே விழுந்த ரோஜா சமாளித்து கொண்டு எழுவதை சீற்றத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார் அருணாசலம்.

“பொட்டை கழுதைகள் இப்படித்தான் கூத்தடிப்பதா?” பற்களை கடித்தார்.

இளவயது துள்ளலுடன் ரோஜா துடுக்காய் ஏதும் கூறும் முன் தாமரை முன் வந்தாள்.

“மாமா.. அது.. வந்து பால் குடிக்க மாட்டேன் என்றாள் அதான்.. வந்து.. மன்னித்துவிடுங்கள். தெரியாமல் தான் உங்கள் மேல்...” அவள் முடிக்கும் முன்.

“போதும் இந்த அசட்டுக் கதை.. நீங்கள் கூத்தடிப்பது ஒன்றும் புதிதல்லவே. எல்லாம் உன் அப்பனை கூற வேண்டும். பெண்களை வளர்க்கும் நெறி அறியாதவன்.. கிறுக்கன்”

அப்பாவிடம் சென்ற பேச்சை திசைமாற்ற முனைந்தாள் தாமரை.

“உட்காருங்கள் மாமா தண்ணீர் கொண்டு வருகிறேன்” என்றவள் தங்கையிடம் ஏதேனும் கேட்டு கிளருவாரே என்ற பயத்தில்,

“இங்கு என்ன நின்று வாய் பிளக்கிறாய் வா வந்து மாமாவிற்கு காப்பி போடு” என்றவள்

ரோஜாவின் கைகளை பிடித்து இழுக்காத குறையாக உள்ளே அழைத்துச் சென்றாள்.

“ம்... ச்.. எப்போதும் இப்படி ஏதாவது செய்து என் வாயை அடைத்து விடு, அந்த ஆளை..” பற்களை கடித்தாள் ரோஜா

“ச்... சு.. என்ன பேச்சு இது மரியாதை இல்லாமல், என்ன இருந்தாலும் பெரியவர் அவர்” அறிவுறுத்தியவாறு தண்ணீர் கொண்ட குவளையோடு கூடத்திற்கு விரைந்தாள் தாமரை.

“புடலைங்காய்” என்ற ரோஜாவின் முணுமுணுப்பு காதில் கேட்காமல் இல்லை.

தண்ணீரை கொடுத்துவிட்டு வந்தவள் “பிடித்து வைத்த பிள்ளையாராட்டும் ஏன் உட்கார்ந்திருக்கிறாய் அவருக்கு காப்பி போடுவதற்கென்ன” என்றாள்

“ம்.. அவருக்கு போட வேண்டும் என்றால் உப்பு காப்பியோ அல்லது காரப்பொடி காப்பியோ தான் போடுவேன் பரவாயில்லையானால் சொல் போடுகிறேன்” என்றபடி அடுப்பை அணுகியவளை தடுத்த தாமரை.

“அம்மா தாயே வேண்டாம் நானே போட்டுக் கொள்கிறேன். வேலை செய்யாமல் டிமிக்கி கொடுக்க இது புது காரணம் போலும்” தங்கையை செல்லமாக சீண்டி சண்டை வளித்தவாறு காப்பி போட்டு எடுத்துக் கொண்டு அருணாசலத்திடம் வந்தாள்.

காப்பியை ரசித்து ருசித்து குடித்தவர் “அப்பா ஏதேனும் என்னிடம் கொடுக்க சொல்லி கொடுத்தாரம்மா” என்ற கேள்வியை வைத்தார்.

“இ..இல்லையே மாமா.. என்ன விஷயம்”

“ஒன்றும் இல்லையம்மா போன வாரம் கை மாத்தாக ஐநூறு ரூபாய் வாங்கினார் அதான்..”

“ஓ.. அப்பா.. வந்ததும் ஞாபகப்படுத்துகிறேன் மாமா..” அவஸ்தையாய் நெளிந்தாள் தாமரை.

“ம்.. கூறுகெட்ட மனிதன் உன் அப்பன் எல்லா கடன்களையும் அடைக்க எவ்வளவு அருமையான வழியை சொல்லியும் ஏற்கமாட்டேன் என்கிறான் நீயாவது சொல்வதுதானேமா?” குரலில் குழைவு இருந்தது.

இப்போது வாய்விட்டு விடக்கூடாது என்று பொறுமை காத்தாள் தாமரை.

“இப்படி தான் உன் அப்பனும் சில சமயம் ஊமையாகி விடுகிறான்.. சரி நான் கிளம்புகிறேன், அப்பா வந்தால் நான் வந்து போனதாக அவசியம் கூறு” படிகளில் இறங்கி ரோட்டை அடைந்தார்.

“அப்பாடா ஓட்ட டேப்ரிகார்டர் போய்விட்டதா? அது போய்விட்டது தலைவலி வந்துவிட்டது என் அருமை அக்காவே ஒரு ஸ்ட்ராங் காப்பி ஒன்னு போடு” ராஜ தோரணையில் கால் மேல் கால் போட்டு சேரில் அமர்ந்த வண்ணம் ஏவல்விட்ட தங்கையை ஆசையாய் பார்த்து ரசித்தாள் தாமரை. அம்மாவின் செல்ல பெண் ரோஜா, எப்போதும் அம்மாவின் கால்களை பிடித்துக் கொண்டு தான் இருப்பாள். அம்மாவை உரசிக் கொண்டே இருப்பதில் அவளுக்கு தனி சுகம். தாமரையோ அப்பா செல்லம் இருவருக்கும் எப்போது சண்டை வந்தாலும் அது அப்பா அம்மாவின் சண்டையில் போய்தான் முடியும். என் பிள்ளையை இப்படி அடித்தாயா? என் பிள்ளையை திட்டினீர்களா? இப்படித்தான் வாக்குவாதம் வளரும். இப்படி செல்ல சண்டை சீண்டல் என்று அழகாக இருந்த குடும்பம் அம்மாவிற்கு எழும்பு புற்றுநோய் வந்ததும் தூள்தூளாய் உடைந்தது. லேசான வலி இருக்கும் போதே சிகிச்சை எடுத்திருந்தால் காப்பாற்றி இருக்கலாம் என்று தான் டாக்டர்கள் கூறினார்கள். ஆனால் காலம் கடந்து விட்டது தான் விதி. வாயு மூட்டு வலி வயதானால் எல்லோருக்கும் வரும் பிரச்சனை தான் என்று லட்சியம் செய்யாமல் விட்டதன் விளைவுதான் கடைசியில் குழந்தைகளுக்கு அம்மாவே இல்லாமல் போய்விட்டது.

அம்மாவின் மருத்துவ சிகிச்சைக்கே அப்பாவின் அத்தனை சேமிப்புகளும் நிலபுலன்களும் கரைந்துவிட்டது. கடைசியாக மிஞ்சியது இந்த ஒரு வீடு மட்டுமே. உலக வாழ்க்கையை பற்றி சற்று விவரம் தெரிந்த தாமரை அம்மாவின் மறைவிலிருந்து சீக்கிரம் மீண்டு விட்டாள். எல்லா சோகங்களையும் தனக்குள் புதைத்துக் கொண்டு தன் தங்கையை தேற்றுவதில் முழுகவனம் பதித்தாள். அப்பப்பா இப்போது நினைத்தாலும் உடல் சிலிர்க்கும் நாட்கள் அவை, அப்பாவும் பாதி நடைபிணம் ஆகிவிட்டார். இரவில் திடீர் என்று எழுந்து “அம்மா வேண்டும்” என்று அழ ஆரம்பிக்கும் ரோஜாவை எப்படி தேற்றுவது என்று புரியாமல் விழிப்பாள் தாமரை. எப்படி எப்படியோ அவளையும் தேற்றி அப்பாவையும் தேற்றி இடையில் கை காலை சுட்டுக் கொண்டு சமையலும் கற்று. ம்.. ஹும். எல்லாம் மறக்கப்பட வேண்டிய நாட்கள் இன்னமும் ரோஜா தாமரையை பொருத்த வரையில் குழந்தைதான்.காலையில் கூட ஜடை சரியா பின்னவில்லை என்று ரகளை செய்து அவள் நேரத்தை பாழ் பண்ணி விட்டாள். கல்லூரி முதல் ஆண்டு படிக்கிறாள் என்று தான் பேர் தன் கூந்தலை பின்ன கூட மாட்டாள். எல்லாம் அக்கா தான் செய்ய வேண்டும். இந்த நிலையில் ’திருமண பிரிவு என்ற பேச்சுக்கு இடம் இல்லாமல் போனாலும் என்றேனும் ஒரு நாள் அவள் வேலைகளை அவளே கவனித்தாகும் நிலை வரத்தானே போகிறது. மெல்ல மெல்ல அவளுக்கு இதை உணர்த்த வேண்டும். மனதிற்குள் இவ்வாறு எண்ணியவள் ஒரு பெருமூச்சொன்றை விட்டு அடுக்களைக்குள் மறைந்தாள்.

அப்பா கதிரேசன் இரவு உணவை முடிக்கும் வரை அமைதி காத்தவள். அவர் கை துடைத்த பிறகு பேச்சு கொடுத்தாள்.

“அப்பா”

“என்னம்மா”

“அருணாச்சலம் மாமா வந்திருந்தார்..”

லேசான அதிர்ச்சி அவர் முகத்தில் தோன்றி உடனே மறைந்தது.

“ஓ...”

“ம்..ஏதோ பணம்”

“நினைவிருக்கிறதும்மா. அடுத்த வாரம் கொடுத்து விடுகிறேன் என்று தொலைபேசியில் விவரம் சொல்லிவிட்டேனே எப்போது வந்தார்”

“மதியம் ரோஜா கல்லூரி விட்டு வரும் சமயம் தான்,ஒரு மூன்றரை மணி இருக்கும்”

“ம்.. நான் ஆறுமணிக்கு தான் பேசினேன்.சரி பரவாயில்லை வேறு ஏதேனும் கேட்டானா?”

அவர் எதை குறிப்பிடுகிறார் என்று தாமரைக்கு புரியாமல் இல்லை இருப்பினும் அப்பாவின் மனம் துன்பப்படக் கூடாது என்பதற்காக.

“இல்லை” என்று பொய் உரைத்தாள். அவளின் இல்லையே அவள் எதிர்பார்த்தது போல் அப்பாவின் முகத்தில் நிம்மதியை வரவழைத்தது.

“சரிமா நேரமாகிவிட்டது. நீ போய் படு சாப்பிட்டு விட்டாய் தானே”

“சாப்பிட்டேன் அப்பா”

பாத்திரங்களை ஒழித்துவிட்டு படுத்துக் கொண்டவளின் மனம் நாவலிலேயே சுழன்றது.’ இந்நேரம் படித்திருப்பார்களா? என் எழுத்து பிடித்திருக்குமா?’ இப்படி பல எண்ணங்கள் இடையில் தூங்கியும் விட்டாள்.
 

Meena

Saha Moderator
Staff
Messages
1,082
Reaction score
91
Points
48
4

“தாமரை அக்கா உங்களுக்கு ஃபோன்” பக்கத்து வீட்டு நளினியின் குரல் கேட்டு மூச்சிரைக்க ஓடி வந்தாள் தாமரை.

அவசரமாய் போனை எடுத்தவள்.

“ஹலோ...” என்றவளுக்கு மூச்சிரைத்தது

“ஹலோ நான் உஷா சந்திரன் பேசறேன்மா உஷா நாவலின் உரிமையாளர்” தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார் உஷா.

“ஆங்... சொல்லுங்க மேடம்” படபடப்பாய் பேசினாள்

“என்னம்மா ஓடி வந்து போனை எடுத்தாயா? கொஞ்சம் நிதானப்படுத்திக் கொள் நான் காத்திருக்கிறேன்” என் என்றவர் அமைதி காத்தார்.

சிலபல நெடிய மூச்சுகளை வாங்கி இதயத் துடிப்பை சீர் செய்து கொண்டாள் தாமரை.

“உன் நாவலை படித்தேன். மிகவும் அருமை இரவு ஒன்றரை மணி வரை படித்து முடித்தேன் என்றால் பாரேன் என் மகனிடம் வேறு திட்டு வாங்கிக் கொண்டேன். தூங்காமல் உடம்பை கெடுத்துக் கொள்கிறேனாம். அவனுக்கு என்ன தெரியும் நாவலை பற்றி, சில இடங்களில் அழுதே விட்டேன். உன் எழுத்தின் நடையை பார்த்தால் உன் மானசீக குரு எழுத்தாளர்,”லட்சுமி” என்று ஊகிக்கிறேன் சரியா?”

கேள்வியோடு நிறுத்திய பின்னர் தான், தான் பதில் கூற வேண்டும் என்பதே தாமரைக்கு உரைத்தது

முதல் விமர்சனம்.. அதுவும் நல்ல விமர்சனம் என் குருவையும் சரியாக ஊகித்து விட்டார்களே மிகவும் அனுபவசாலியாக தான் இருக்கனும் என்று நினைத்தவள் பேசவும் செய்தாள்.

“ஆமாம் மேடம் சரியா சொல்லிட்டீங்க. அவங்க நாவல் ஒன்னையும் விடமாட்டேன். லைப்ரரி லைப்ரரியா தேடி பிடித்து படிப்பேன். அவரின் நாவலை எடுத்து விட்டால் சுற்றுபுறத்தில் நடப்பது எதுவும் தெரியாது. அப்படி ஒரு பித்து அவர்களின் எழுத்தின் மேல்”

“ம்.. அவை உன் எழுத்தில் நன்றாகவே தெரிகிறது. உனக்கு ஒன்று தெரியுமா? நானும் உன் குருவின் பரம ரசிகை.. நாவல் எப்படிப்பட்ட தகுதிகளுடன் இருக்க வேண்டும் என்று நான் விரும்பினேனோ அதையே நீயும் கூறியதால் உன்னை எடிட்டராக நியமனம் செய்ய முடிவெடுத்திருக்கிறோம். மற்றதை பேச நாளை அலுவலகம் வருகிறாயா?

சந்தோஷத்தில் தலைகால் புரியவில்லை தாமரைக்கு.

“கேட்க வேண்டுமா மேடம் நாளை பத்து மணிக்கு உங்கள் அலுவலகத்தில் இருப்பேன்”

“சரி நாளை பார்ப்போம்” தொடர்பை துண்டித்தாள் உஷா.

எல்லையில்லா ஆனந்தம் கொண்டாள் தாமரை.


கரும்பு தின்ன கூலிவேறு, மிகவும் பிடித்த பொழுதுபோக்கு நாவல் படிப்பது அதுவே தொழிலானால் அப்பப்பா கேட்கவே இனிப்பாக இருக்கிறது. ஆனால்.. ஆனால்.. சம்பளம்.. அது... இப்போது வாங்கும் அளவு இருந்தால் தானே இந்த வயிற்றுப் பாட்டிற்கு சரிப்பட்டு வரும். இதுவே ஆஹா ஓஹா என்று இருக்கவில்லைதான். ஆனால் இதை விட குறைவு என்றால் அப்பா ஒத்துக் கொண்டாலும் மாச செலவுகளை கட்டுபடுத்த மிகவும் சிரமப்படுவார் மனதினுள்ளேயே குமைந்து மறுகுவார். கடவுளே சம்பளம் அதிகமாக எதுவும் வேண்டாம். இப்போது வாங்குவதே கிடைத்தாலும் போதும் தான். இதற்கு நீ தான் அருள் புரிய வேண்டும். மனமுருக வேண்டிக் கொண்டு அலுவலகத்தை அடைந்தாள் தாமரை.

அலுவலகயறையுள் நுழைந்த தாமரையை எதிர்கொண்டது உஷா சந்திரனும், கார்த்திகேயன் சந்திரனும் தான். லேசான முறுவலோடு இருவருக்கும் முகமுன் தெரிவித்து விட்டு எதிரில் இருந்த இருக்கையில் அமர்ந்தாள்

முதலில் உஷா தான் பேச ஆரம்பித்தார்.

“நான் தான்ம்மா உஷா சந்திரன் உன்னுடன் தொலைபேசியில் பேசியது. இது என் பிள்ளை உனக்கு தெரியுமே”

தலையசைத்து இந்த அறிமுகத்தை ஏற்றாள் தாமரை. அவள் யூகித்தது சரியே. உருவ ஒற்றுமை காட்டிக் கொடுத்துவிட்டது.. கார்த்திகேயன் அப்படியே அம்மா ஜாடையாக இருக்கிறார். இப்படி மனதில் நினைத்ததோடு மட்டும் இருந்திருக்கலாம். ஆனால் மனம் நினைப்பதை கண் சரி பார்த்ததன் வெளிப்பாடு போலும் அவள் அவனையே பார்த்து கொண்டிருந்தாள். இரு கண்களையும் சிமிட்டி அவன் குறுஞ்சிரிப்பில் தன் உணர்வுக்கு வந்தவளாக உஷாவை ஏறிட்டாள். தன் அசட்டுத்தனத்தை கண்டிருப்பாரோ என்ற அச்சத்தில், ஆனால் நல்லவேளையாக அவர் இவளது கோப்புகளில் மூழ்கி இருந்தார். திடும் என ஏதோ தோன்றியவள் போல,

“எல்லாம் சரியாக இருக்கிறது தாமரை. நீ நாளையிலிருந்து வேலைக்கு வரலாம். இங்கு உள்ள வழக்கம் எல்லாம் கற்றுக்கொள். எல்லோருடனும் கார்த்திகேயன் உன்னை அறிமுகப்படுத்தி வைப்பான். நம் நாவல் மாதாந்திர நாவல் அதனால் ஒவ்வொரு மாதத்திற்கான நாவலையும் படித்துப் பார்த்து குறைகளை நீக்கி செம்மைபடுத்தி அச்சிட்டு முடித்ததும் முதலில் புரூப் பார்த்து சரி செய்ய வேண்டும்.பிறகு ஏஜென்டுகளிடம் விநியோகம் அவர்களின் கணக்கு வழக்கு எவ்வளவு விற்கிறார்கள், எவ்வளவு திரும்ப கொடுகிறார்கள் என்று சகலத்தையும் கணினியில் பதிவு செய்து பிரிண்ட் அவுட் எடுத்து ஃபைல் செய்ய வேண்டும்.

தமிழகமெங்கும் முக்கியமான இடங்களில் எல்லாம் ஏஜென்டுகளை தொலைபேசியிலும், நேரிலுமாக ஓரளவு பிடித்து விட்டோம். இன்னும் விரிவாக்கம் நடந்து கொண்டே இருக்க வேண்டும். எல்லா பொறுப்புகளும் உன்னுடையது. பெயரளவில் தான் நான் நிர்வாகி. ஆனால் எனக்கு அதிக வயதாகிவிட்டது அதனால் நீ தான் எல்லாம் பார்க்க வேண்டும். உனக்கு நாவல்களில் அதிக ஆர்வம் உண்டு என்று நீ எழுதி இருக்கும் நாவல்களே சான்று. அதனால் இந்த பணிக்கு நீ முழுதாக தகுதியானவள்.ஏதேனும் கேட்பதாக இருந்தால் கேட்கலாம்” முடித்தார் உஷா.

“அது... அது...”

சம்பளத்தை பற்றி எப்படி கேட்பது என்று புரியாமல் தடுமாறினாள்.

உதவிக்கு வந்தான் கார்த்திகேயன்.

“அம்மா சம்பளம் பற்றி கூற மறந்துவிட்டீர்கள்”

“ஆங்.. ஆமாம் கார்த்தி மறந்தே போய்விட்டேன் பார். தாமரை நீ என்ன சம்பளம் எதிர்ப்பார்க்கிறாய்?” அப்பாடா அவர்களே கேட்டு விட்டார்கள். இருப்பினும் வார்த்தை வரவில்லை வந்து.. வந்து.. இப்போது நான் வேளை பார்க்கும் அலுவலகத்தில் ஐந்தாயிரம் சம்பளம் அதே அளவு கொடுத்தாலும் போதும்” என்றவள் அவஸ்தையாய் இருவர் முகத்தையும் பார்த்தாள். இதற்கு இவர்கள் ஒப்ப வேண்டுமே இல்லாவிட்டால் அவள் மனம் விரும்பும் வேலை அவளுக்கு இல்லை, ஏனோ இருவரும் ஒருவருக்கொருவர் பார்த்து சிரித்துக் கொண்டார்கள்.

“நாங்கள் உன் வேலைக்கு நிர்ணயம் செய்து வைத்திருப்பது பத்தாயிரம். நீயானால் ஐந்தாயிரம் போதும் என்கிறாய். அசட்டு பெண்ணாக இருக்கிறாயே!” கேட்டு சிரித்தார் உஷா.

“பத்தாயிரமா?” சந்தோஷ ஆச்சர்யம் கொண்டாள் தாமரை.

“ம்.. ஆனால் அதற்கேற்ற படி உன் வேலையும் அதிகமாகவே இருக்கும்” பீடிகையுடன் பேசினார் உஷா.

ஆஹா அதற்கென்ன கவுரவமான முறையில் உழைக்க எப்போதுமே தாமரை தயங்கியதில்லை. அத்தோடு அதிக சம்பளமும், வீட்டை, ரோஜாவை அப்பாவை இப்படி எல்லாமே இந்த பணத்தால் சரிகட்டி விடலாம். பிரச்சனைகள் குறையும். மனதில் பலதை நினைத்து சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்த தாமரையை உஷாவின் குரல் கலைத்தது.

“உன் வேலை நாவல்களில் எடிட்டிங் செய்வது மட்டும் இல்லை இங்கே பிரஸில் பத்திரிக்கைகள், போஸ்டர்கள், இத்தியாதி, இத்தியாதி என்று நிறைய வெளி ஆர்டர் எடுத்து செய்வதாக இருக்கிறோம்.ஒவ்வொன்றாக அமலுக்கு வரும். நீ பலதை நினைவு வைத்து செயல்பட வேண்டும். பம்பரமாய் சுழல வேண்டும். அதனால் சம்பளம் அதிகம் என்று நினைக்க வேண்டாம். வேலைக்கேற்ற ஊதியம் தான் தருகிறோம் சரிதானா?” என்றவரின் பார்வை கார்த்திகேயனை தொட்டு விலகியது.

எல்லா பணிகளையும் முடித்து அடுத்த வாரமே வேலைக்கான சேர்க்கை ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்று முடிவு செய்தனர். இந்த ஒரு வாரத்திற்குள் இப்போது இருக்கும் வேலையை ராஜினாமா செய்து விட்டு அதில் வரும் பணத்தை கொண்டு கொஞ்சம் துணிமணிகள் வாங்க வேண்டும்.மற்றதை அப்பாவிடம் தந்து விட வேண்டும். முதலில் அந்த அருணாசலம் மாமாவின் கடனை முடிக்க வேண்டும். மனதில் நினைத்தவள் பழைய அலுவலகம் நோக்கி சென்றாள்.

ராஜினாமா கடிதத்தை கொடுத்து விட்டு புது வேலை கிடைத்த சந்தோஷத்தை கொண்டாட கொஞ்சம் இனிப்பும், காரமும், அம்மாவின் படத்திற்கு பூவுமாக வந்த தாமரை கூடத்து சோபாவில் அமர்ந்திருந்த நபரை பார்த்து திடுக்கிட்டாள்.’இவனா?’ ‘இந்த சந்தோஷ நிலையை கெடுக்க வந்தானோ?’ நெஞ்சம் குமறியது தாமரைக்கு

ரோஜா இந்நேரம் வந்திருப்பாளே

அவனிடம் என்ன வாலாட்டினாலோ கடவுளே. வாசலில் அப்பாவின் செருப்பு இல்லாதது வீட்டில் அவர் இல்லை என்பதை உணர்த்தியது. அப்பா இல்லை என்றால் போக வேண்டியது தானே. இருந்து உயிரை வாங்குகிறது. மனதில் இப்படி பலதை நினைத்தவள். முகத்தில் எதையும் காட்டாமல் அவனை எதிர்கொண்டாள்.

“வாங்க... அப்பா இல்லையே!”

‘வெளியே போ’ என்று எப்படி கூற முடியும்

“ஹீ.. நான் உன்னை பார்க்கத்தான் வந்தேன்” வழியலாய் சிரித்தான் தனசேகரன்

‘அறுவை ஆரம்பித்துவிட்டது’ நினைத்தவள்

“அப்படியா சொல்லுங்கள்” நிதானமாக தன் தோள்பையை மேஜை மீது வைத்தபடி கேட்டாள்.

“இல்லை சும்மாதான். அப்பா... இது பற்றி பேசி இருப்பாரே உன் முடிவை கேட்கலாம்னு”

“என்ன பேசினார் எதுவும் பேசவில்லையே!” தெரியாதது போல் விழிகளை விரித்தாள்.

“ம்..ச்.. விளையாட்டு போதும்.. உன் பதிலைச் சொல்”

“ஆமாம் எனக்கு வேறு வேலை தான் ஏது? அதனால் தான் உங்களுடன் வம்பளக்கிறேன். சரி வந்தது வந்து விட்டீர்கள். இருங்கள் காபி கொண்டு வருகிறேன்” நைசாக நழுவினாள்.

அவள் எதிர்பார்த்தது போல் ரோஜா சமையலறையில் தான் இருந்தாள். சமையல் மேடைமேல் அமர்ந்து இரண்டு ஸ்லைஸ் பிரெட்டுக்குள் ஜாம் வைத்து அதை ரசித்து ருசித்து உண்டு கொண்டிருந்தாள். உள்ளே நுழைந்த தாமரையை பார்த்து புன்னகை செய்தாள். தன் சிலசெலவுகளை ஒதுக்கி இப்படி ரோஜா ஆசைப்பட்டு உண்ணும் சிலவற்றை வாங்கி வைப்பது தாமரையின் வழக்கம்.

அவற்றை அவள் ரசித்து உண்பதை பார்க்கையில் அந்த பணத்தினால் தனக்கு கிடைக்காத விஷயங்களின் சிறு கவலை கூட எங்கே செல்லும் என்று அவளுக்கே தெரியாது. இரு கால்களையும் ஆட்டிக் கொண்டே அவள் உண்ணும் அழகை சில கணங்கள் ரசித்துவிட்டு

“ஏய் ரோஜா அந்த இம்சை எப்போது வந்தது?’

“பத்து நிமிடம் இருக்கும். அங்கே இருந்தால் பார்வையாலேயே எனக்கு சுடிதார் தைக்க அளவு எடுத்து விடும். அதான் கிரேட் எஸ்கேப்” கூரியவளால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. கூட்டு சேர்ந்து நகைத்த தாமரை. பாலை எடுத்து அடுப்பில் வைத்தாள்.

“காலாட்டாதே என்று எத்தனை முறை சொல்வது”

“ஏனோ?”

“குடும்பத்திற்கு ஆகாது”

“எதற்கெடுத்தாலும் இப்படி உளருவதை விடு. காலை ஆட்டாமல் நிறுத்திவிட்டால் மட்டும் நம் குடும்ப பிரச்சனை தீர்ந்துவிடுமா?”

“பெரியவர்கள் சொல்வதைத் தான் நான் கூறினேன்”

“ஏன் எதற்கு என்று கேட்க மாட்டாயா? அப்போ அறிவு வளர்வது எப்படி?”

“வளர்ந்த வரை போதும். இருப்பினும் என் அறிவுக்கு எட்டியதை சொல்கிறேன். இப்போது நம் மர நாற்காலி இருக்கிறதே அதை பலமுறை கீழே போட்டதால் என்னவாயிற்று அதிலிருந்து ஸ்குருக்கள் கழன்று விழுந்தன தானே. அதே போல்தான் காலை ஆட்டிக் கொண்டே இருந்தால் மூட்டு இணைப்பு வலுவிழந்து அதில் உள்ள ஜவ்வு தேய்ந்து விடும். பிறகு மூட்டு வலிதான்..இத்தனையும் கூறுவதற்கு பதில் குடும்பத்திற்கு ஆகாது என்று ஒற்றை வரியில் கூறினால் போதும் என்று நினைத்தேன்”

“ம்.. அறிவாளி அக்கா இப்படி ஒழுங்காக புரியும்படி சொன்னால் கேட்காமல் போவேனா? இனி கால் ஆட்டவில்லை. சரி அந்த தொல்லை வாயில் கொஞ்சம் காப்பியை ஊற்றி அனுப்பிவை” என்றவள் தொடர்ந்து.

“அந்த டம்ளரை ஒரு தட்டில் வைத்து எடுத்து போ இல்லைன்னா காபி வாங்கும் சாக்கில் உன்னை தொட்டு பார்க்கும் எருமைமாட்டு ஜென்மம்” கூறியவளை ஆச்சரியமாக பார்த்தாள்.

இவளை பற்றி இனி கவலையே பட வேண்டாம். நம்மை விட அதி ஜாக்கிரதையாகவே இருக்கிறாள். நிம்மதியாக டம்ளரை தட்டில் வைத்து எடுத்துச் சென்றாள் தாமரை

எப்படியோ பேசி அந்த எருமைமாட்டு ஜென்மம் தனசேகரை அனுப்பி வைத்தாள் தாமரை. ஒரு பெருமூச்சுடன் சமையலை தொடர்ந்தாள். நினைவுகள் எங்கோ சென்றன. அம்மாவின் உடல்நல கோளாறின் காரணமாக அதிக மருந்து செலவு நேர்ந்த போது அவ்வப்போது பணம் கொடுத்து உதவுவார் மாமா அதை அப்பா திருப்பி தர வேண்டும் என்று அவர் கூறியதில்லை.ஆனால் அதுவே இவர்களுக்கு பெரிய சோதனையாய் வந்து முடிந்தது. தன் மகன் தனசேகருக்கு ஜாடைமாடையாக தாமரையை இரண்டாம் தாரமாக கேட்க ஆரம்பித்தார். இதில் தாமரையின் தந்தைக்கு துளியும் உடன்பாடில்லை. அதனால் சிறுக சிறுக அவரின் கடனை அடைக்க தொடங்கினார். ஆனால் திடும் என வீட்டு பட்ஜெட்டில் துண்டு விழுந்தால் வேறு வழி இன்றி அவரிடம் தான் கேட்பார். ஏனெனில் வெளியாள் யாரும் இவர் இருக்கும் நிலை அறிந்து பணம் தர முன் வரமாட்டார்கள். அப்படிப்பட்ட சமயங்களில் தான் மாமாவும் தன் கையை உயர்த்துவார்.

தாமரையை பொருத்த வரையில் இரண்டாம் மனம் புரிவதை வரவேற்பாள். விதவைக்கு வாழ்வு கொடு! என்று ஓயாமல் உரைக்கும் நாம் ஒரு மனைவியை இழந்தவருக்கு வாழ்க்கை தர முன் வரவேண்டும் என்று தான் ஆசைபடுவாள். ஆனால் அந்த தனசேகரின் மனைவிக்கு இயற்கை மரணம் ஒன்றும் ஏற்படவில்லை. இவனின் தொல்லை தாங்காமல் வீட்டின் பேனில் தூக்கு மாட்டி இறந்துவிட்டாள். அப்படிப்பட்டவனை ஏற்க தாமரைக்கு என்ன சித்தம் கலங்கிவிட்டதா? எப்படியோ நாசூக்காகப் பேசி அவனை வெளியேற்றிவிட்டாள். இந்த புது வேலையில் சேர்ந்து விட்டால் நிச்சயம் அப்பா மாமாவிடம் கையேந்தும் நிலை ஏற்படாது. அதனால் இப்படிப்பட்ட சிக்கலில் இருந்து மீண்டு விடலாம் என்று நினைக்கும் பொழுதே நிம்மதியாய் இருந்தது தாமரைக்கு.

அந்த நிம்மதியோடு வீட்டில் புது வேலை கிடைத்த சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டாள்.

ஆனால் பருந்தின் கண்களில் அகப்பட்டால் மீள்வது எப்படி? விதி சிரித்தது

¥¥¥¥¥¥¥

வேலைக்கு சேர்ந்து இன்றோடு மூன்று மாதம் முடிவடைந்துவிட்டது. ஆனால் தாமரைதான் இன்னும் கற்றுக்கொண்டே இருக்கிறாள். ஒரு நாவலை ஒரே நாளில் மூச்சை பிடித்து படித்து முடித்திருக்கிறாள். அதை பெரிய சாதனையாகவும் எண்ணுவாள். ஆனால் அந்த நாவலை தயார் செய்வது தான் எத்தனை பெரிய சாதனை. அவள் எண்ணியது போல் சுலபமாக இல்லை தான். ஆனால் பிடித்த வேலை செய்ய மனமும் உடலும் என்றுமே சோர்ந்து போவதில்லை. பலமுறை தவறுகள் செய்துவிட்டு விழித்தவளை உஷாவின் அழகான அணுகுமுறை தெளிவுப்படுத்தியது.

தவறை சுட்டிக்காட்டவும், திருத்தவும் தனி திறமை வேண்டும் என்பதை உஷாவிடம் தான் படித்தாள் தாமரை.

நாவல்களை பற்றி நிறைய கற்றுக் கொண்டாள் தாமரை. எல்லாவற்றையும் தெளிவாக கற்றுக் கொடுத்தான் கார்த்திகேயன். முதலில் எழுதப்பட்டு தபாலில் வரும் கதைகள். அவைதான் நாவலின் உயிர். அதை ஸ்க்ரிப்ட் என்று கூறுவார்கள். பிறகு டிடிபி அதாவது எழுத்துகள் அச்சுக்களாக டைப் செய்யப்படுவது, பிறகு தான் எடிட்டிங், எழுத்துப் பிழைகள் மற்றும் சமுதாயத்தை மாசுப்படுத்தும் விதமான வரிகள், வன்முறையை தூண்டும் எழுத்துகள், கொச்சை வசனங்கள் இப்படி பலவிதமானவைகளை திருத்தி எடுப்பதே எடிட்டிங். பிறகு ஃபுரூப் ரீடிங். எழுத்துப் பிழைகள் நீக்கம். சொற்தொடரின் தொடர்பு அறாமல் பார்ப்பது.

இப்படிப்பட்ட விஷயங்கள் ஃபுரூப் ரீடிங்கில் அடக்கம்.

அடுத்த கட்டம் கம்ப்யூட்டரில் டைப் செய்த எழுத்துகளை சிடிபி பிளேட்டில் ஏற்றிய பிறகு வேப் மிஷினில் அந்த பிளேட்டுகளை ஏற்றி ரில் என்று கூறப்படும் பேப்பரில் பாரங்களாக பிரிண்ட் செய்யும் பணி. அதன் பிறகு பாரங்களை பைண்டிங் செய்வது மேல் அட்டை மற்றும் பாரங்களை கம்போஸிங் செய்து அவற்றை ஒன்றாக பின் அடித்து, மூன்று பக்கங்களில் வெட்டி புத்தக வடிவமாக தயாரிப்பது.

ஒவ்வொரு நாவலின் அட்டைப்படமும் தனியாக தயாரிக்கப்படுகிறது. தேவைக்கேற்ற படங்களை தேவைக்கேற்ற பேக்ரவுண்டில் பொருத்தி அதை வண்ணப்படமாக அச்சிட்டு புத்தகத்தில் இணைப்பது. இப்பொழுது தான் ஒரு முழு நாவல் முடிவடைகிறது.

இதில் முழு நாவல் என்றும் மெகா நாவல் என்றும் பிரிவுகள் உண்டு. நூறு பக்கங்கள் கொண்ட நாவல் முழு நாவலாகவும் அதற்கு மேல் இருந்தால் மெகா நாவலாகவும் குறிப்பிடப்படுகிறது.இப்படி நாவல்களின் இரண்டு அடுக்குகளை முறைப்படி மூச்சுமுட்ட கற்றுக் கொண்டாள் தாமரை. அதற்காக உஷாவும், கார்த்திகேயனும் அவளை பாராட்டவும் செய்தனர். ஏனோ தாமரைக்கு அவளது பழைய முதலாளியின் நினைவு வந்தது. உஷாவுக்கும் அவருக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது என்று நினைத்துக் கொண்டாள்.

பழைய வேலையில் இருந்த முதலாளியை நினைக்கையில் சிரிப்புத்தான் வந்தது. எதற்கெடுத்தாலும் எரிந்து விழுவார். ஒரு சிறு தவறு செய்தாலும் அன்று முழுவதும் சொல் அர்ச்சனை தான். அப்போது தாமரைக்கு வரும் கோபத்திற்கு இந்த ஆளை வெறுப்பேற்றவே அதிக தவறு செய்ய வேண்டும் என்று நினைப்பாள். ஆனால் உஷாவின் பாங்கு தனியாக இருந்தது.

ஒருமுறை ஒரு நாவலின் திருமண அத்தியாயத்தை கம்ப்யூட்டரில் டைப் செய்து கொண்டிருந்தாள். அப்போது ‘தாலி’ என்ற வார்த்தைக்கு பதிலாக ‘காலி’ என்று டைப் செய்துவிட்டாள்.

அன்றைய முடிவில் அதை சரி பார்த்த உஷாவோ விழுந்து விழுந்து சிரித்தார். ஒன்றும் ஓடவில்லை தாமரைக்கு. பொதுவாக தான் படிக்கும் வரிகளுக்கு ஏற்ப முக உணர்வுகளை காட்டுவது உஷாவின் வழக்கம். அன்று தாமரை டைப் செய்தது ஒரு துக்கமான காட்சி திருமண மண்டபத்தில் இறுதி கட்டத்தில் திருமணம் நின்ற காட்சி. இதற்கு நியாயமாக பார்த்தால் உஷாவின் கண்கள் கலங்கி இருக்க வேண்டும் அல்லது சோகமாகவாவது இருக்க வேண்டும். ஏனெனில் அதில் இருந்த வசனங்கள் அப்படி. ஆனால் நேர்விரோதமாக அவர் சிரிப்பதை பார்த்த தாமரைக்கு ஒன்றும் விளங்கவில்லை. ஒருவாறு சிரித்து முடித்தவர். தாமரையை அருகில் அழைத்து ‘காலி’யை சுட்டிக் காட்டினார். அப்போது தான் தாமரைக்கு தன் தவறு புரிந்தது. உள்ளம் பதறியது ஆனால் உஷாவோ, “சரியாக தான் அடித்திருக்கிறாய் தாலி கட்டினால் அனைவரும் காலி என்று. இலைமறை காய்மறையாக கூறிவிட்டாய் போ ’அருமை’ கூறியவர் அடக்கமாட்டாமல் மீண்டும் சிரித்தார்.

“ஆனால் நமக்கு தெரிந்ததை நம்மோடு வைத்துக் கொள்வோம். நம் வாசகர்கள் என்னை போலவே அடக்க முடியாமல் சிரித்து விடுவார்கள். அது இந்த சோக காட்சியையே கெடுத்துவிடும். அதனால் இதை நான் மாற்றிவிடுகிறேன்” என்று அழகாய் கூறியவர் தாமரையின் தவறை உணர்த்தி விட்டார். அவளின் மனம் துளியும் நோகாமல் என்பது தான் பிளஸ்.

தாயை போல் பிள்ளை என்பதை அப்படியே மெய்ப்பித்தது கார்த்திகேயனின் குணம். எப்பொழுதுமே சிரிப்பும் கும்மாளமுமாகவே காட்சி தரும் பிரஸ். ஆனால் வேலை மட்டும் அதன் போக்கில் சீராக நடக்கும். தாயிடமும், மகனிடமும் நிறைய கற்றுக் கொண்டாள் தாமரை. அனைத்து தட்டு மக்களிடமும் அவர்களுக்கு ஏற்றாற்போல் பழகுவது தான் கார்த்திகேயனின் தனி சிறப்பு எனலாம். ஏஜென்டுகளிடம் எப்பொழுதும் கலகலப்புடன் தான் பேசுவான் அவன். ஏதேனும் ஒரு சிறு புத்தக கடையை பார்த்தாலும் இறங்கி சென்று அந்த கடையில் உஷா நாவல் இருக்கிறதா என்று ஆராய்வான். இல்லாவிடில் அந்த ஏரியா ஏஜென்டிடம்,

“அந்த கடையிலும் ரெண்டு புத்தகம் போடுங்கண்ணே போகுதான்னு பார்ப்போம்” என்று குழைவாய் பேசி தங்கள் நாவல் பெரும்பாலும் அனைத்து புத்தக கடையிலும் கிடைக்குமாறு செய்து விடுவான். புத்தகங்களை ஏற்றிச் செல்ல வரும் ஆட்டோகாரர்களையும் விடமாட்டான். அவர்களுடனும் நட்போடு பழகுவான். அப்போது அவன் பேசும் தமிழுக்கும் அவன் உபயோகப்படுத்தும் வார்த்தைகளுக்கும் இவளுடனான அவன் பேச்சுக்குமே அதிக வேறுபாடு இருக்கும்.

ஆனால் புதிய நாவல் எழுத எடுத்து வருவோரிடம் தேவைகேற்றார் போல் மட்டும் தான் பேசுவான். பால் நாவல்கள் எழுதியவர்கள் வந்தாலும் தன் பேச்சை மாற்றமாட்டான். எப்படி யார் நாவல் கொண்டு வந்தாலும் எடிட்டிங் முடிந்த பிறகு கூப்பிடுகிறோம் என்று கூறி அனுப்பிவிடுவான். எந்த காரணம் கொண்டும் உஷா நாவலின் தரம் குறைந்து விடக்கூடாது என்பதில் இருக்கும் உறுதி மட்டும் அவனிடம் ஒருக்காலும் மாறாது. இப்படி ஒரு திடம் இருப்பதால்தான் அத்தனை பெரிய ஐடி கம்பெனியின் எம்.டியாக இருக்கிறானோ? என்று பலமுறை யோசித்திருக்கிறாள் தாமரை.

இப்படி நாட்கள் சுகமாகவே நகர்ந்தது. மெல்ல மெல்ல அருணாச்சலத்தின் கடன்களும் அடைக்கப்பட்டன.
 

Meena

Saha Moderator
Staff
Messages
1,082
Reaction score
91
Points
48
5

அன்று ரெஜிஸ்டர் தபாலில் வந்த ஒரு நாவலை படித்துக் கொண்டிருந்தாள் தாமரை. எழுதி அனுப்பியவரின் பெயர் வசுமதி. மிகவும் குடும்பப்பாங்காக சென்ற கதையுள் காதல் நுழைந்ததும் ஏற்படும் விறுவிறுப்பு மிகவும் விறுவிறுப்பாகவே எழுதபட்டிருந்தது. தனது மாலை சிற்றுண்டியை கூட மறந்து விட்டு மிகவும் ஆர்வமாக படித்துக் கொண்டிருந்தாள். நிறைய எதிர்ப்புக்கள் வென்று கடைசி காட்சியில் இருவரும் ஒன்று சேரும் தருணத்தை ரசித்துப் படித்துக் கொண்டிருந்தாள். காதல் வென்று விட்ட சந்தோஷத்தில் திளைக்கும் இருவரின் உரையாடலை படித்த போது முகம் தானாக சிவந்துவிட்டது. தாமரைக்கு இதழோரம் வெட்க சிரிப்பு தான்.

அப்போது அறையினுள் நுழைந்த கார்த்திகேயன், தாமரையின் நிலையை கண்டு ஸ்தம்பித்து நின்றுவிட்டான். புத்தகத்தில் மனம் புதைத்தவளின் முகம் ஒன்றும் புதைந்து விடவில்லை அவளின் சிவந்த கன்னங்கள் சுழித்து சிரித்த வண்ணம் இருந்த உதடுகள் அப்படி அவள் என்னதான் படிக்கிறாள் என்று அறிந்து கொள்ளும் ஆவலை அவனுக்கு ஏற்படுத்தியது. அத்தோடு தாமரை இப்போது இன்னும் அழகாக காணப்பட்டாள்.

அவன் நின்றிருப்பதை அவள் இன்னும் உணரவில்லை என்பதை அறிந்தவன் தன் ஷு சத்தமிட அவளை நெருங்கினான்.ஷுக்களின் சத்தம் தாமரையை சுய உணர்விற்கு கொண்டு வந்தது. நிமிர்ந்து கார்த்திகேயனை பார்த்தவள் சட்டென்று புத்தகத்தை போட்டுவிட்டு வேகமாக வெளியேறிவிட்டாள். அவளின் இந்த செய்கையின் பொருள் புரியவில்லை கார்த்திகேயனுக்கு. ஆனால் அதற்கு இந்த நாவல் ஒரு காரணமாக இருக்கலாம் என்று நினைத்தவன் அந்த ஸ்பைரல் பைண்டிங் செய்த நாவலை எடுத்துக் கொண்டான்.

எப்பொழுதும் சுந்தர் சாப்ட்வேர் சொல்யூசன்ஸ் வேலை முடிந்ததும் ‘உஷா சந்திரன் பப்ளிகேஷனுக்கு’ வருவது கார்த்திகேயனின் வழக்கம். அம்மா வராத நாட்களில் தாமரையை பார்த்து அன்று நடந்த முக்கிய விஷயங்களை சேகரித்துக் கொண்டு செல்வான். அன்றும் அதே போல் தான் தாமரையை பார்க்க அவள் அறைக்கு வந்தான்.ஆனால் தாமரை தான் நேரம் காலம் தெரியாமல் நாவல் உலகத்தினுள் இருந்தாளே. அதனால் அவன் வரும் நேரம் என்று துளியும் நினைக்கவில்லை. அதோடு அவள் மூழ்கி படித்துக் கொண்டிருந்தது ஒரு முதலிரவு காட்சி என்பதால் தோன்றிய வெட்கம் வர அங்கே அந்த மனநிலையில் ஒரு ஆண் மகனை பார்த்ததும் அவளால் எதுவும் பேச முடியவில்லை. அந்த இடம் விட்டு போனால் போதும் என்றே தோன்றியது. அதனால் தான் வேகமாக வெளியேறினாள். வெளிவந்தவள் உணவு உண்ணும் அறையில் நுழைந்ததும் அவள் செய்த தவறை உணர்ந்து விட்டாள். என்ன ஒரு அசட்டுத்தனம் செய்து விட்டேன். கார்த்திகேயன் அவளைப் பற்றி என்ன நினைப்பான். அதோடு அந்த புத்தகத்தை எடுத்து படித்துவிட்டால்.. நான் எதற்காக இப்படி அசட்டுத்தனம் செய்தேன் என்று புரிந்துவிடும். கடவுளே... இதை விட கேவலம் வேறு என்ன இருக்கிறது. இப்போது எப்படி அவன் முகத்தில் விழிப்பாள்.

ஆங்.. அவருக்கு அதிகம் தமிழ் படிக்க தெரியாது என்று உஷா மேடம் கூறியது நல்லவேளையாய் நினைவு வந்தது. மனதில் இருந்த இறுக்கம் தளர்ந்தது முகம் கழுவிக் கொண்டு அலுவலகயறையுள் நுழைந்தாள். அவள் எதிர்பார்த்தது போல் அவன் அங்கே தான் இருந்தான். ஆனால் இவள் வாய் திறக்கும் முன் அவன் பேசினான். “வாங்க தாமரை உங்களுக்காக தான் காத்திருக்கிறேன்.இந்த மாத நாவல்களின் ரிட்டன் வந்துவிட்டதா? அதற்கான ஃபைலை பார்க்க வேண்டும்”

அவன் வெளிவிஷயம் பேசாமல் வேலையில் மூழ்கியது தாமரைக்கு நிம்மதியை கொடுத்தது. அதே சமயம் இங்கீதம் தெரிந்த ஜென்டில்மேன் என்ற பட்டமும் கார்த்திகேயனுக்கு கிடைத்தது.

●●●●●●●

மேஜை விளக்கை எரியவிட்ட கார்த்திகேயன் மேஜையின் மீதிருந்த அந்த புத்தகத்தை பார்த்தான். இதில் அப்படி என்ன இருக்கிறது தாமரை வெட்கப்படும் அளவிற்கு, கடைசி பக்கங்களை தாமரை படித்துக் கொண்டிருந்தது நினைவு வந்தது. குத்து மதிப்பாக பக்கங்களை ஊகித்தான். எழுத்து கூட்டி படிக்க முயன்றான். முதன் முறையாக தன்னால் தமிழ் மொழியை சரளமாக முறையாக வாசிக்க முடியவில்லையே என்று நினைத்து வருந்தினான். ஒரு அரை மணி நேர கடும் போரட்டத்திற்குப் பிறகு அந்த இருபக்கங்களை படித்து முடித்தவன் சில வரிகளுக்கு பொருள் புரியாமல் மறுபடியும் படித்தான். முடித்ததும் அவன் இதழ்களிலும் புன்னகை தவழ்ந்தது. அம்மா அடிக்கடி நாவல்கள் பற்றி இவனிடம் பேசுவதுண்டு.

ஆம்... பின் அமெரிக்காவில் தமிழ்நாவல்கள் பற்றி கலந்துரையாட வேறு யார் இருக்கிறார்கள். அதனால் கடனே என்று கார்த்திகேயனும் கேட்டு கொள்வான். ஆனால் அம்மா அப்போது கூறியது இன்று மனதில் எழுந்தது.

தமிழ் நாவல்களில் தான் அந்தரங்க விஷயங்களை இலைமறை காய்மறையாக கூறுவார்கள். அதை படிக்கும் பொழுது கிடைக்கும் சுகமே சுகம் தான். ஆசிரியரின் புத்திசாலித்தனம் இப்படிப்பட்ட விஷயங்களில் புலப்பட்டு விடும். படிப்பவர்கள் சிறுவராக இருந்தால் அவர்களுக்கு புரிவது வேறுபொருள். அதுவே பெரியவர்களாக இருந்தால் அவர்களுக்கு வேறாய் தோன்றும்” இப்படி இன்னும் நிறைய பேசுவார்.

அம்மாவின் பேச்சு நூறு சதவிகிதம் உண்மை என்பதை உணர்ந்தான் கார்த்திகேயன். அமெரிக்காவில் எல்லா விஷயமும் எந்தவித் மறைவும் இல்லாமல் தெள்ளத் தெளிவாக இருக்கும் திறந்த புத்தகம் போன்று ஆனால் நம் நாட்டில் தான் எத்தனை மறைவுகள் அதற்குள் எத்தனை மகிழ்ச்சிகள்.

ஒரு முதலிரவு காட்சியையும் அதில் கணவன் மனைவி உரையாடலையும் இத்தனை அழகாக அதே நேரம் அருவருப்பு தோன்றாத வண்ணம் எழுதிய ஆசிரியருக்கு உண்மையான பாராட்டை தெரிவிக்க வேண்டும். அதாவது அடுத்த மாத உஷா நாவலில் இடம் பெற போவது இந்த நாவலே என்று முடிவு செய்தான். தாமரையின் முடிவும் அதுவாகவே இருக்கும் என்றும் நம்பினான்.

●●●●●●

காலை சிற்றுண்டியின் போது கார்த்திகேயனை சந்தித்த உஷா.

“கார்த்தி இன்று மாலை சீக்கிரம் வர முடியுமா?” என்றார். இட்லிகளை தட்டில் வைத்துக் கொண்டே

“என்னம்மா விசேஷம்!”

“மாமா அழைத்திருக்கிறார்”

“என்னவாம்?”

“எனக்கு மட்டும் எப்படி தெரியும். போனால் தெரிந்து விடபோகிறது?”

“நான் வரவில்லை நீங்கள் போய் வாருங்கள்”

“ம்.. ச்.. இதுதானே கூடாது என்பது. பெரியவர் இருவரையும் ஏதோ முக்கியமான விஷயம் பேச வேண்டும் என்று அழைக்கும் பொழுது நிராகரிப்பது சரி அல்ல”

“அம்மா வேலை அதிகமாக இருக்கிறது, இன்னொரு நாள் போகலாமே?” கெஞ்சினான்.

அவனை உற்று பார்த்தவர்.

“இன்று பப்ளிகேஷனுக்கு போகாமல் இருந்தால் நேரம் கிடைக்கும் என்று நம்புகிறேன்”

சட்டென்று சாப்பிடுவதை நிறுத்திவிட்டு அன்னையை பார்த்தான். அவர் இதழோரம் புன்னகை மிளிர்ந்தது.

சுதாரித்தான்.

“என்னம்மா நீங்கள்! உரிமையாளர் நீங்கள் தான் என்றாலும் கணக்கு வழக்குகளை நான் தானே பார்க்க வேண்டும்” கோர்வையாய் ஏதோ கூறினான்,

“கணக்கு வழக்கு பார்ப்பதற்கு நாவலை படித்து தான் ஆக வேண்டும் என்று ஏதேனும் சட்டம் பிறப்பித்திருக்கிறார்களா என்ன? பாரேன் எனக்கு இது தெரியாமல் போய்விட்டது” பொய்யாய் அதிசயப்பட்டார்.

புரியாதவனாய் “நாவலா? நானா? என்னம்மா விளையாடுகிறீர்கள் எனக்கு தான் தமிழ் சரியாக படிக்க வராதே” தப்பித்து விடலாம் என்று நம்பினான்.

“ஓ படிக்க தெரியாமல் தான் இந்த நாவல் உன் ஸ்டடி டேபிளில் இருந்ததா?” கூறியவரின் கைகளில் அதே ஸ்பைரல் பைண்டிங் செய்த புத்தகம்.

என்ன பேசுவதென்று புரியாமல் கார்த்திகேயன் விழிக்க “படம் பார்க்க எடுத்து வந்தேன் என்று மறுபடி ஒரு பொய்யை சொல்லி மாட்டிக் கொள்ளாதே. இது புதிதாக எழுதி வந்த பேப்பர். இதில் படம் இருக்காது” தக்க சான்றுடன் கூறிய பிறகு பாவம் கார்த்திகேயனால் என்ன செய்ய முடியும். தன் தோல்வியை ஒப்பக் கொண்டது போல் மௌனமாக உண்டான். அவனின் மௌனம் பிடிக்காத உஷா.

பரவாயில்லை என் மகன் புதிதாக இரண்டு விஷயம் கற்றுக் கொண்டான் என்பதில் எனக்கு மகிழ்ச்சி தான் கூறியவரை புரியாமல் பார்த்தான்.

“ஒன்று புத்தகம் படிப்பது, மற்றொன்று பொய் உரைப்பது இரண்டாவதில் இன்னும் தேர்ச்சி தேவை இப்படி முகத்தை வைத்துக் கொண்டால் சுலபமாக உன் வாய்மொழி பொய் என்று எதிராளிக்கு தெரிந்துவிடும். ஜாக்கிரதை விழிகளை விரித்து மிரட்டினார் உஷா”

அதை பார்த்த கார்த்திகேயனுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. உஷாவும் அவனோடு கலந்து கொண்டார்.

அந்த மாத நாவலின் ஃபுரூப்பும் இடையில் இடம் பெரும் படங்களும் தயாராக இருந்தன. நாவலை ஒருமுறை முழுமையாக படித்து விட்டு இரண்டு மூன்று திருத்தங்களை செய்த தாமரை படங்களை கவரில் இருந்து எடுக்கும் பொழுதே உஷாவும் கார்த்திகேயனும் வந்துவிட்டனர். அவசரமாய் எழுந்து “வணக்கம் மேடம், வணக்கம் சார்” என்றாள். பதில் வணக்கம் கூறினார்கள். இருக்கையில் அமர்ந்தவுடன் தாமரை பேசினாள் “இந்த மாத நாவலின் ஃபுரூப்பை படித்து சில திருத்தங்கள் செய்துவிட்டேன்,எப்பொழுதும் போல் நீங்களும் ஒருமுறை படித்து விட்டால் அச்சில் ஏற்றி விடலாம். அத்தோடு இந்த படங்கள் இப்போது தான் வந்தன. அதையும் தேர்ந்தெடுத்து விடலாம்” என்றவள் புகைப்படத்தை உஷாவின் முன் பரப்பினாள். அதே சமயம் அவளும் ஆராய்ந்தாள். ஒரு நிமிடம் படங்களை பார்த்த பின்பு உஷாவும் தாமரையும் அர்த்தம் பொதித்த பார்வை பார்த்துக் கொண்டனர். கார்த்திகேயனுக்கு ஒன்றும் புரியவில்லை. இருப்பினும் அவனும் படங்களை பார்த்தான். அழகாகவே இருந்தன.

“ மேடம்..” ஆரம்பித்த தாமரையை நிறுத்தினார் உஷா.

இதை வரைந்த கபிலனை அழைத்து வா?”

வேகமாக வெளியேறியவள் சில நிமிடங்களில் கபிலனுடன் வந்து விட்டாள்.

பவ்யமாய் கைக்கட்டி நின்றார் கபிலன். அவர் உட்கார நாற்காலியை காட்டிவிட்டு தொடர்ந்தார் உஷா.

“நீங்கள் இந்த நாவலை முழுவதும் படித்த பிறகு தானே படம் வரைய ஆரம்பித்தீர்கள்?’ கேள்வியாய் நோக்கினார்.

“ஆமாங்கம்மா?”

“ஓ அப்போது உங்களால் இதில் குறையேதும் காண முடியாது தான். தாமரை.. உனக்கு ஏதேனும் தோன்றுகிறதா?”

“மேடம்.. அது... இந்த நாவலின் தொடக்கத்தில் கதாநாயகியின் இன்ராடக்ஷ்னில் அவள் தலைக்குளிந்து, குளித்த கூந்தலை துவட்டி நுனி முடிச்சிட்டு அதில் மல்லிகை சரம் வைத்து சுவாமியை வழிபட்டு பிறகு தான் காப்பியை எடுத்துக் கொண்டு கணவனிடம் செல்கிறாள். ஆனால் இந்த படத்தில் தலையில் துண்டு கட்டிக் கொண்டு கணவனிடம் காப்பி நீட்டுவது போல் வரையப்பட்டிருக்கிறது?”

அவளை பாராட்டுவது போல் பார்த்த உஷா. கபிலனிடம் இப்போது புரிந்ததா? எதிலுமே ஒரு தொடர்ச்சி வேண்டும். வரிகளில் இருப்பது படத்தில் வந்தால் தான் அந்த படத்திற்கே மதிப்பு லேசான கண்டிப்பு இருந்தது.

“என்னை மன்னிச்சிக்கங்கம்மா தெரியாமல் செய்துவிட்டேன். கூந்தலில் நுனி முடிச்சிட்டு மல்லிகை சரம் வைத்திருப்பது போல வரைந்து விடுகிறேன்” படங்களை சேகரித்து கவரில் இட்டுக் கொண்டார்.

“கபிலன் சார் அதோடு சுவாமி கும்பிட்டதன் அடையாளமாக வகுட்டில் குங்குமமும், நெற்றியில் திருநீரும் இருப்பது போல் பார்த்துக் கொள்ளுங்கள் அப்புறம் இந்த கதாநாயகனுக்கு மீசையே இல்லை. பாருங்கள் ஏதோ வடநாட்டுக்காரன் போல் தெரிகிறான். அதனால் அழகான அடர்த்தியான மீசை வரைந்து விடுங்கள்” என்று கூறி கபிலனை அனுப்பிவிட்டு திரும்பினார் உஷா.

“ஏன் தாமரை மீசை இல்லை என்றால் கம்பீரம் இல்லை என்று பொருளா?”

உஷாவின் குரல் ஏதோ ஒரு உட்கருத்தோடு ஒலித்தது.

“இதில் என்ன உங்களுக்கு சந்தேகம் மேடம்” என்றவளின் பார்வை தற்செயலாக கார்த்திகேயனின் முகம் பார்த்து பின்பு அசையவே இல்லை. ‘அய்யய்யோ மாட்டிக் கொண்டோமே இவருக்கும் மீசை இல்லையே உஷா மேடம் என்னை பற்றி என்ன நினைப்பார்கள் எத்தனை நேரம் இப்படி விழித்தாளோ’

“என்னம்மா பதில் பாதியில் நின்றுவிட்டது” என்ற உஷாவின் குரல் அவளை எழுப்பியது

“அது.. அது.. வந்து.. என் தனிப்பட்ட கருத்து தான் மேடம் மீசை இருந்தால் கம்பீரம் என்று. அய்யோ அதை விடுங்களேன் ஏதோ உளறிவிட்டேன். அதற்காக மீசை இல்லாதவர்கள் அழகில்லை என்று அர்த்தமாகி விடுமா?” நிஜமாகவே உளறிவிட்டாள் தான்.

“மீசை இல்லாதவர்கள் அழகில்லை என்று நாங்கள் எப்போது அர்த்தம் கொண்டோம்” கார்த்திகேயனை பார்த்து சிரித்துக் கொண்டே தாமரையை மடக்கினார் உஷா.

சட்டென்று நுனிநாக்கை கடித்துக் கொண்டாள் தாமரை.

“ஆங்... மேடம்.. கபிலன் சாரிடம் இன்னும் சிலவற்றை பேச வேண்டும்.. நீங்கள் இருங்கள் டீ அனுப்புகிறேன்” பதிலை எதிர்பார்க்காமல் வெளியேறினாள். தப்பித்தோம் பிழைத்தோம் என்ற ரீதியில் குறுகுறுக்கும் கார்த்திகேயனின் பார்வை அவளை பின் தொடர்ந்தது.
 

Meena

Saha Moderator
Staff
Messages
1,082
Reaction score
91
Points
48
6

“ஹாய் அத்தான் உங்களுக்காக எத்தனை நேரம் காத்திருப்பது” வாசலிலேயே இழைய தொடங்கிவிட்ட ஹனியை என்னம்மா செய்வது என்று கேட்பது போல உஷாவை பார்த்தான் கார்த்திகேயன்

அது உன் சாமர்த்தியம் என்ற ரீதியில் முன்னே நடந்து வீட்டினுள் சென்றார் உஷா.

“அத்தான் நேற்று இந்த ரேர் கலர் நெயில் பாலீஸ் வாங்கினேன், விலை ரூ 200 தெரியுமா? நன்றாக இருக்கிறதா?” முகத்திற்கு நேரே பெரிய நகங்களை காண்பித்ததும் பயந்துவிட்டான் கார்த்திகேயன். அந்த நகங்களில் அடர் நீல சாயம் வேறு சகிக்கவில்லை. ஆனால் அதை கூற முடியாதே!..

“ம்.. பரவாயில்லை தான் ஆனால் நீ ஏதாவது பேய்படம் நடிக்க சென்று விடலாம். இப்படியா நகங்களை வளர்ப்பது?” தான் நினைத்ததை கேட்டும் விட்டான்.

“அய்யோ அத்தான் சம ஜோக், இது தான் ஃபேஷன், இப்போது நகம் இல்லாமலோ அல்லது உடைக்கேற்ற பாலிஸ் இல்லாமல் போனாலோ நம்மை பட்டிகாடு என்று எண்ணிவிடுவார்கள். சரி வாங்க உங்களுக்காக ஸ்பெஷலாக செய்திருக்கிறேன்” அவன் கைபிடித்து உரிமையாய் உள்ளே இழுத்துக் கொண்டு போனாள்.

ஏனோ அந்த கொடுமையான இடியாப்பமே அவன் நினைவிற்கு வந்தது. அத்தோடு தாமரையின் ஒட்ட வெட்டப்பட்ட நகங்களும் ஒரு மூலையில் எழாமல் இல்லை.

முகமன்களும் விருந்தும் முடித்த உடன் எல்லோரும் ஹாலில் உட்கார்ந்தனர். அப்பொழுதும் கார்த்திகேயனை உரசிக் கொண்டு தான் அமர்ந்தாள் ஹனி. முதலில் உஷா தான் ஆரம்பித்தார்.

“என்ன அண்ணா ஏதோ முக்கியமாய் பேச வேண்டும் என்றாயே?”

“ம்...” குரலை செருமியவர் தன் மனைவியை பார்த்துவிட்டு தன் மகளிடம் திரும்பினார்.

“ஹனி அத்தானை கூப்பிட்டுக் கொண்டு தோட்டத்தை சுற்றி காட்டம்மா புதிதாக நிறைய ரோஜா செடிகள் வைத்தாயே!”

“ஆமாம் அத்தான் வாங்களேன் அத்தனையும் ஹைப்பிரீட் ரோஜாக்கள்” அவன் கை பற்றி எழுப்பி தள்ளாத குறையாய் அழைத்துப் போனாள். போகும் பொழுது தன் தாயை சில வினாடி வெறித்த பிறகே வெளியேறினான் கார்த்திகேயன். மனம் ஹனி காட்டிய ரோஜாக்களின் மீது செல்ல மறுத்தது உள்ளே என்ன பேசுகிறார்கள். அதில் அவன் தலை உருளுமா? அவர்கள் என்ன பேசக்கூடும் என்பதை அவன் ஓரளவு யூகித்து தான் வைத்திருக்கிறான். அந்த யூகம் சரியா? இப்படி பல குழப்பங்கள் அவன் மனதில். ஆனால் அவன் நினைவை கலைத்தது ஹனியின் குரல்.

“அத்தான் பணத்தோடு பணம் சேர்ந்தால் எத்தனை செழிப்பாக இருக்கும் வாழ்க்கை. அதே போல் தான் தரமான ரோஜாசெடியை தரமான மற்றொரு ரோஜா செடியோடு சேர்த்தால் தான் இந்த ஹைப்பிரிட் ரோஜா கிடைக்கும். அப்போது தான் அழகான மலர்கள் கிடைக்கும்” இரு பொருள்பட பேசிய ஹனியை உற்றுப் பார்த்தவன்.

அதை ஏன் ஹனி பணத்தோடு பணம் என்று சொல்கிறாய். குணத்தோடு குணம் சேர்ந்தால் பிறக்கும் சந்ததி நல்ல குணத்தோடு அமையும் அல்லவா? இப்போது இருக்கும் நிலையை பார்த்தால் குணமான சந்ததி தான் தமிழ்நாட்டுக்கு தேவைபடுகிறது என்பது என் கருத்து” அவனும் இருபொருள் பட பேசினான். லேசாக முகவாட்டத்துடன் வேறு தலைப்புக்குள் புகுந்தாள் ஹனி.

ஒரு அரைமணி நேரம் சென்று வீட்டு வேலைக்காரன் இவர்களை நோக்கி வந்தான்

“ஐயா உங்களை மட்டும் கூப்பிடுகிறார் கார்த்திகேயன் சார்.

அம்மா நீங்க தோட்டத்திலேயே இருப்பீங்களாம்”

ஹனியின் முகத்தை பார்த்த கார்த்திகேயனுக்கு பாவமாக இருந்தது. அப்படியே சுருங்கிவிட்டது அவள் முகம். வேலையாளுடன் உள்ளே சென்றான். இவனை விட்டு விட்டு வேலையாள் பின் கட்டிற்குள் சென்று மறைந்தான்.

“இப்படி உட்கார் கார்த்திகேயன்” அருகில் இருந்த சோபாவை காட்டினார் மாமா அன்பரசன். அவனோ அம்மாவின் அருகில் சென்று அமர்ந்து கொண்டான். ஏமாற்றத்தை மறைத்து “சொல்லுமா உஷா நீ சொன்னால் உன் பிள்ளை கேட்பான்” என்றார் கவலையாய். “என்னம்மா விஷயம்” கேட்டவனின் பார்வையில் ஆயிரம் அர்த்தங்களை உணர்ந்து கொண்டார் உஷா.

“கண்ணா.... மாமா நம்மிடம் ஒரு கோரிக்கை வைத்துள்ளார். இதில் என் சம்மதத்தை விட உன் சம்மதம் தான் முக்கியம் அதனால் தான் உன்னை அழைத்து வர சொன்னேன்” பேச்சை இடைமறித்தார் அன்பரசன்.

“என்ன உஷா உனக்கு விருப்பம் என்றால் கார்த்திகேயன் அதை மறுக்கவா போகிறான்?”

“அப்படி இல்லை அண்ணா, என் விருப்பத்திற்கு மதிப்பு கொடுக்கும் குணம் உள்ளவன் தான் கார்த்திகேயன் அதே போல் அவன் விருப்பத்திற்கு நானும் மதிப்பு கொடுக்க வேண்டும் அல்லவா? அவன் விருப்பம் தெரிவித்து விட்டால் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை” பேசிய அம்மாவையும், மாமாவையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தவன் பொறுமை இழந்தான்

“இப்போது என்ன தான் அம்மா பிரச்சனை சொன்னால் தானே தெரியும்?”

“சொல்கிறேன் கண்ணா! மாமா உன்னை அவர் மருமகனாக்க ஆசைபடுகிறார்” ஒரு வினாடி இடைவெளி விட்டவர் அவன் அதிர்ச்சியை அப்புறப்படுத்தி விட்டு தொடர்ந்தார்.

“மாமாவின் ஆசை நியாயமானது இப்படி கேட்க அவருக்கு எல்லா உரிமையும் இருக்கிறது. அத்தோடு ஹனி உனது முறைப்பெண் நல்ல பெண், படித்த பெண், அழகான பெண். ஆனால் அவள் வாழப்போவது உன்னோடு தான் என்பதால் இதில் சம்மதம் கூற நான் யார்? நீ யோசித்து முடிவை சொல். இப்போதே சொல்ல வேண்டும் என்று இல்லை நிதானமாக யோசித்து சொல். ஏனெனில் நம் உறவில் விரிசல் விழுவது எனக்கு மன வருத்தத்தை தரும். ஆனால் முடிவு எதுவானாலும் அதை எல்லோரும் ஏற்கிறோம் சரிதானா அண்ணா” என்று பார்த்தார்

வேறு வழியின்றி தலை அசைத்தார் அன்பரசன்.

தான் யூகித்தது நூறு சதவிகிதம் சரியே என்றுணர்ந்தான் கார்த்திகேயன். ஆனால் ஏனோ முடிவை தள்ளிப்போட அவள் மனம் ஒப்பவில்லை. அதோடு மாமாவை காயப்படுத்தவும் விருப்பமில்லை.மனதில் பலவற்றை நினைத்தவன் தன் எதிரில் இருப்போர் அனைவரும் தன் பதிலை எதிர் நோக்குவதை உணர்ந்து பேச்சை ஆரம்பித்தான்.

“மாமா.. என் அம்மாவிற்கு நீங்கள் மட்டுமே உறவு, அதேபோல் என் தாய் வழி உறவு என்று நான் கூறிக் கொள்ள இருப்பதும் நீங்கள் தான். என் தாய் மாமா என்ற உறவு என்றும் நீடித்திருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அதனால் என்னை மருமகனாக்கும் எண்ணத்தை விட்டுவிடுங்கள்” பேசியவன் மாமாவை ஏறிட்டான்.

“காரணம்” முகம் இறுக்கமடைந்தது அன்பரசனுக்கு.

“நிறைய காரணம் முதல் காரணம் நீங்கள் என் நெருங்கிய உறவு. நெருங்கிய உறவில் திருமணம் செய்தால் சந்ததி வீணாகும் என்பது நிருபிக்கப்பட்ட உண்மை. என் குலத்திலும் சரி உங்கள் குலத்திலும் சரி நானும், ஹனியும் தான் அதனால் எங்களோடு உங்கள் குலம் நின்றுவிடக்கூடாது. இரண்டாவது சிறு வயதிலிருந்தே விளையாடி மகிழ்ந்த நாங்கள் மணப்பதை தவறாகவே நான் கருதுகிறேன். இன்றும் ஹனி எனக்கு குழந்தையாக தான் தெரிகிறாள். எனக்கும் அவளுக்கும் ஏழு வயது வித்தியாசம் வேறு. மூன்றாவது எனக்கு தேவை ஹனியை போல் ஒரு அல்ட்ரா மாடர்ன் பெண் அல்ல. தமிழ் மணம் வீசும் பெண்ணை தான், என் மனைவியாக கற்பனை செய்து வைத்திருக்கிறேன். நான்காவது சொந்தத்தில் பெண் எடுத்து நிறைய சொந்தங்கள் விடுபட்டு போயிருக்கிறது. அந்த நிலை உங்களுக்கும் அம்மாவிற்கும் ஏற்படக் கூடாது என்பதே என் எண்ணம்” எப்போதும் போல் நீளமான பேச்சை முடித்தவன் உஷாவை பார்த்தான். அவர் முகத்தில் நிம்மதி படர்ந்ததை அவனால் உணர முடிந்தது.

சிறிது நேரம் அங்கே நிசப்தம் குடிக்கொண்டது. “அப்போ இதுதான் உன் முடிவா?” மௌனத்தை கலைத்தார் அன்பரசன் ஆம் என்பது போல் தலை அசைத்தான் கார்த்திகேயன்.

“உன் முடிவு” என்று உஷாவையும் கேட்டார்.

“என் முடிவு என்ன அண்ணா, வாழப் போவது அவன் தானே. அவனே கூறும் போது நாம் மதிப்பு கொடுப்பது தானே முறை”

“ஓ.. கே..” என்றவரின் குரலில் ஜீவனே இல்லை. இப்போது அவர் மனைவி சந்திரா வாய் திறந்தார்.

“எங்கள் ஹனி நாங்கள் கூறினால் மறுபேச்சு பேசாமல் சம்மதிப்பாள். நாங்கள் அவளை அப்படியே வளர்த்திருக்கிறோம்” பணிவாய் கூறுவது போல் ஊசி ஏற்றினாள்.

கோவத்தில் முகம் சிவந்துவிட்டது கார்த்திகேயனுக்கு அவன் கரம் தொட்டு அமைதிப்படுத்திய உஷா.

“இதில் என்ன அண்ணி தவறு. என் பேச்சிற்காக என் பிள்ளை தன் வாழ்க்கையை பலி கொடுப்பதை நான் விரும்பவில்லை. எப்போதுமே அவன் விருப்பத்தை ஊக்குவித்து தான் வளர்த்தேன். அதனால் அவன் ஒன்றும் சோடை போகவில்லை. அவன் ஏதேனும் முடிவெடுத்தால் அதில் இருக்கும் நியாயம் ஏற்றுக்கொள்ளதக்கதாய் இருக்கும். அவன் தான் நாலு காரணம் கூறினானே”

“அது சும்மா கண்துடைப்பு” விடாது பேசினார் சந்திரா.

“எங்களுக்கு உங்கள் மேல் தனிப்பட்ட பகை இல்லையே உங்களுக்கு கண் துடைப்பாக பட்டால் அதற்கு நாங்கள் காரணம் இல்லை”

“அ...” பேச முயன்ற மனைவியை அடக்கினார் அன்பரசன். “இந்த பேச்சு இத்தோடு போதும் இனி பேசினால் உறவுக்குள் சிக்கல்” முடித்தவர் இருவரையும் வழி அனுப்பி வைத்தார்.

காரில் ஏறியவுடன் கார்த்திகேயனின் முதல் கேள்வி இதுவாகவே இருந்தது.

“அம்மா,, என் முடிவு? உங்களுக்கு வருத்தம் ஒன்றும் இல்லையே?”

அவன் முகம் பார்த்து புன்னகை செய்தவர்.

“உன் முடிவை என்று நான் மறுத்திருக்கிறேன். அண்ணாவின் கோபத்தை தான் சகிக்க முடியவில்லை. ஆனால் எல்லாம் விரைவில் சரியாகிவிடும்”

மனதில் நிம்மதி படர்ந்தது கார்த்திகேயனுக்கு.

ஆனால் ஹனியின் மனமோ கொதித்துக் கொண்டிருந்தது. தன்னை கார்த்திகேயன் நிராகரித்து விட்டான் என்ற உண்மையே அவளை கொன்றது. எப்படி அவன் நிராகரிக்கலாம். அவனை மணம் முடித்தால் சமுதாயத்தில் நல்ல இடம் கிடைக்கும். ராணி போல் வாழலாம் என்று அவள் நினைப்பு எல்லாம் குழிதோண்டி மூடப்பட்டுவிட்டது. உள்ளம் குமுறியது. அத்தையின் வீடும் பெரியது. அதில் வேலையாளும் அதிகம் அதெல்லாம் விட கார்த்திகேயனின் அருகில் நிற்பதே பெருமை அல்லவா? அவன் கை கோர்த்து உலகமெல்லாம் சுற்றி வருவது போல என் மனம் எத்தனை கற்பனைகள் செய்து வைத்திருந்தது. எல்லாம் இனி இல்லை என்றே ஆகிவிட்டதா?... இல்லை என்று அம்மா அலெக்ஸாண்டர் கதையை உதாரணம் சொன்னாள். அதோடு முதல் முயற்சியில் தோற்றவர்களுக்கு அரியர்ஸ் என்று ஒன்று இருக்கிறதே எதற்கு. அதனால் நாமும் ஒரு முயற்சியோடு ஏன் தோல்வியை ஒப்ப வேண்டும். அடிமேல் அடி வைத்தால் அம்மியும் நகராதா? இங்கே அண்ணன் தங்கை என்ற பாசம் இருக்கிறதே அதை வைத்து ஏதேனும் செய்ய முடிகிறதா என்று பார்ப்போம் என்றாள். கொஞ்சம் நிம்மதி அடைந்த இதயம் உடனே வேறு யோசனைக்கு தாவியது.

ஒருவேளை.. ஒரு.. வேளை கார்த்திகேயன் வேறு யாரையேனும் காதலித்தால்.. நினைவே அவளை அதிர வைத்தது. அவள் மனநிலையை தாயிடம் கொட்டினாள். சற்று நேரம் யோசித்தவள். ‘ அப்படி எதுவும் என்றால் கொஞ்சம் சிரமம் தான். ஆனால் முடியாதது எதுவும் இல்லை இன்றே அவனை கண்காணிக்க ஆள் ஏற்பாடு செய்கிறேன்’ என்ற அம்மாவின் வார்த்தைகளில் நம்பிக்கை பெற்றாள் ஹனி.
 

Meena

Saha Moderator
Staff
Messages
1,082
Reaction score
91
Points
48
7

ஒரு வாரமாக கார்த்திகேயன் பப்ளிகேஷன் பக்கம் வரவேயில்லை. காரணம் தெரியாது குழம்பினாள் தாமரை. ஒரு வேளை உடம்புக்கு முடியவில்லையோ? நினைத்தவள் உடனே மாற்றினாள். இல்லை இல்லை அப்படி இராது அவருக்கு உடம்பு சரியில்லை என்றால் உஷா மேடமும் வரமாட்டார்கள் தானே. ஆனால் அவர் தான் தினமும் தவறாமல் வந்து விடுகிறாரே வேறு என்ன காரணமாக இருக்கும். இப்படி யோசித்தவளுக்கு சட்டென்று ஒன்று தோன்றியது. அவர் வருகைக்காக நான் ஏன் இத்தனை ஏங்குகிறேன். ஒரு வேளை அவரின் நகைச்சுவை பேச்சும், குறும்பு செயல்களும் கேட்டுக் கொண்டிருந்தால் வேலை பார்க்கும் பழுவே தெரியாமல் நேரம் விரைந்தோடும் என்பதாக இருக்கலாம். அல்லது அவனுடன் பேசினால் நிறைய உலக நடப்பை அறிந்து கொள்ளலாம் என்பதாக கூட இருக்கும். அப்படி என்றால் உஷா மேடம் நகைச்சுவையாக பேசவில்லையா? அல்லது அவரின் பொது அறிவு போதவில்லையா? என்று அவளை சாடியது அவளின் உள்மனம். நிஜம்தான் உஷா மேடம் நகைச்சுவை உணர்வும், பொது அறிவும் நிரம்பியவர் தான் சொல்லப் போனால் கார்த்திகேயனின் இந்த குணத்தின் ஆணி வேரே உஷா மேடம் தான்.

ஆக அவனிடம் வேறு ஏதோ.. என்று யோசித்தவள் அதற்கு மேல் யோசிக்க ஆசைபடாமல் ஒன்றும் இல்லை என்று அந்த சிந்தனைக்கு ஒரு முடிவு கட்டிவிட்டாள்.

மதிய உணவை முடித்து விட்டு தாமரை கபிலனின் அறையை கடந்து செல்கையில் நின்று விட்டாள்.

அவரின் வண்ண படங்கள் அவளை உள்ளே அழைத்தன. தானாய் உள்ளே சென்றவளின் ஆர்வம் உணர்த்து பார்த்தவர் ஆசையாய் “வா பாப்பா” என்று வரவேற்றார். சிரிப்புடன் அதை ஏற்றாள் தாமரை. கண்கள் அவரின் கை வண்ணத்தில் இறங்கியது. கதையின் போக்கையும் அவரின் சித்திரத்தையும் ஒப்பிட்டு பார்த்து மகிழ்ந்தாள். ஒரு நாவலில் பொருத்தமான நல்ல வண்ணப்படம் இடம் பெற்றால் அந்த நாவலின் சுவை கூடும். ஆசையாக ரசித்தவள் கடைசி சித்திரத்தில் புருவம் சுருக்கினாள்.

“என்ன கண்ணு ஏதாவது தப்பு செய்துவிட்டேனா?” லேசான படபடப்புடன் கேட்டார் கபிலன்.

சற்று நேரம் அமைதியாக பார்த்தவள் ஏதோ தோன்ற.

“சார்... இந்த நாவலின் கதாநாயகி மற்றவர்களை போல் சுடிதாரோ மார்டர்ன் டிரெஸ்சோ போடுவதில்லை. எப்போதும் பாவாடை தாவணி தான். நாயகனை கவர்ந்த சில விஷயங்களில் இது முக்கியமானது. ஆனால் இந்த படத்தில் மட்டும் ஏன் சுடிதார் உடுப்பு வரைந்தீர்கள்?” அவள் கேட்டதும் அவரும் உணர்ந்துவிட்டார் போலும்.

“அட ஆமாம் கண்ணு. நான் தான் முதல் மூணு படத்துல புடவை, தாவணின்னு இருக்கே ஒரு சேஞ்சுக்கு சுடிதார் வரையலாமுன்னு நினைச்சு வரைஞ்சேன். அந்த பாவாடை தாவணி மட்டும் அணிவாள் என்ற வரி என் மனதில் பதியவே இல்லை பாரேன். சரி கண்ணு.

நல்லவேளை அவுட்லைன் போடும் போதே சொல்லிட்ட இல்லாட்டி அம்மா என்னைப் பத்தி என்ன நினைப்பாங்க. செய்த தப்பையே திரும்ப திரும்ப செய்தால் மன்னிப்பு கிடைப்பதும் சிரமம் தானே” தன்னிரக்கம் கொண்டு அவர் ஏதேதோ பேச இடைமறித்தாள் தாமரை.

“என்ன சார் நீங்கள் இது ஒரு தவறா? வயதான காலத்தில் நீங்கள் மறதியால் இதை செய்திருக்கிறீர்கள். தெரிந்து செய்தால் தான் குற்றம். உங்கள் கைகளில் கலைமகள் தாண்டவமாடுகிறாள். இந்த மாதிரி பிரச்சனை இனி வராமல் இருக்க என்ன செய்யலாம்...” யோசித்தவள்.

“சரி இனி நீங்கள் வரைய போகும் சித்திரத்தை என்னிடம் வார்த்தையால் விவரித்து விடுங்கள் அல்லது இது போல் ஒரு அவுட்லைன் மட்டும் போட்டு எனக்கு காட்டுங்கள். அதிக சிரமம் எடுத்து முடித்த பின் தவறானால் எல்லோருக்கும் நேர விரயம்தானே” என்ற யோசனையை தாமரை கூறியவுடன் சந்தோஷமாக ஒப்புக் கொண்டார் கபிலன். அவர் முகத்தில் சந்தோஷ சாயல்.

நடந்த அனைத்தையும் தாமரையை தேடிக் கொண்டு வந்த உஷா சந்திரனின் காதுகளில் தெளிவாக விழுந்தன. லேசான புன்முறுவலுடன் தன் அறைக்கு சென்று அமர்ந்தார்.

கதவை லேசாக தட்டி விட்டு உள்ளே நுழைந்தால் தாமரை. அவளை இன்முகத்தோடு வரவேற்றார் உஷா.

“வா தாமரை உட்கார்”

நாற்காலியில் அமர்ந்தவள்.

“என்ன விஷயம் மேடம் அவசரமாக கூப்பிட்டீங்கன்னு ப்யூன் ரமணி சொன்னார்.

“ம்.. முக்கியம் தான்” என்றவர் தன் கை பையில் ஆராய்ந்து ரிப்பன் கட்டிய ஒரு டப்பாவை அவளிடம் நீட்டினார். அது ஜிகினா தாளினால் அலங்கரிக்கப்பட்டு கண்ணை பறித்தது.

பரிசு என்று தெரிந்து விட்டது. ஆனால் எதற்கு என்று குழம்பினாள் தாமரை. மகிழ்ச்சியையும், குழப்பத்தையும் அவள் முகத்தில் படித்த உஷா..

முதலில் இதை பெற்றுக் கொள் தாமரை இப்படி நீட்டிக் கொண்டே இருந்தால் என் கை வலிக்க ஆரம்பித்து விடும் வயதான எலும்புகள் அல்லவா?” சின்ன சிரிப்புடன் அவர் கூற அவளும் சிரித்துக் கொண்டே அதை பெற்றுக் கொண்டார்.

“இது...?”

“பார்த்தால் தெரியவில்லை பரிசு”

“அது தெரிகிறது மேடம் ஆனால் எதற்கு என்று தான் தெரியவில்லை”

“அதில் உள்ள காகிதம் சொல்லும்”

அவசரமாக இப்படியும் அப்படியும் புரட்டி காகிதத்தை தேடினாள். ஒரு பக்கத்தில் வாழ்த்து அட்டை ஒட்டப்பட்டிருப்பது தெரிந்தது ஆர்வமாக ஆராய்ந்தாள்.

“உன் திறமைக்கு எங்கள் சின்ன அன்பளிப்பு’

கார்த்திகேயன் & உஷா சந்திரன்

இந்த வாக்கியங்களை பார்க்கும் பொழுதே புரிந்து விட்டது இது கார்த்திகேயனின் கையெழுத்து என்று. ஏதோ அவனையே பார்த்தது போல் மகிழ்ச்சி அவள் இதயத்தில் பொங்கி வழிந்தது. அவள் கட்டுப்படுத்த முயன்றும் முடியவில்லை உஷாவின் குரல் அவளை எழுப்பியது.

“என்ன தாமரை. ஒரு கட்டுரையை அந்த சின்ன தாளில் எழுதி’விட்டானா என்ன. நான் பார்க்கும் போது இரண்டு வரி தானே இருந்தது. அதை படிக்கவா இத்தனை நேரம்” அவர் பேச்சில் குறும்பு ஒளிந்திருப்பது புரியவே தாமரையின் முகம் சட்டென்று சிவந்துவிட்டது.

“சரி சரி இப்படி பார்த்துக் கொண்டே இருந்தால் எப்படி உள்ளே என்ன என்று பிரித்து பார்க்க கூடாதா நான் ஆவலாக இருக்கிறேன். தடியன் என்னிடம் கூட காட்டவில்லை” சந்தோஷமாக குறைப்பட்டார்.

“தடியனா? கார்த்திகேயனா? எப்படி அவரால் சொல்ல முடிந்தது. இவர் முதுமையிலும் பெண்மைக்கே உரிய சற்று குறைந்த வளர்த்தியும், ஒல்லியுமாக இருக்கிறார். கார்த்திகேயனோ ஆண்மைக்கே உரிய கம்பீரத்துடன் தன் உயரத்திற்கேற்ற உடம்புடன் இருக்கிறார். அவரை பார்த்து தடியன் என்று கூறுவது தவறு தானே. ஒரு வேளை மேடமே அவரோடு ஒப்பிட்டு பார்க்கையில் அப்படி தோன்றுமோ? இப்படி அவள் மூளை யோசித்துக் கொண்டிருக்க கைகள் தாமாக இயந்திர கதியாய் பேப்பரை பிரித்தன.

“அட.. செல்போன்” உஷாவின் குரலில் தான் இவ்வுலகம் வந்தாள் தாமரை.

ஆம் நிஜம் தான். அவள் கையில் இருந்த பெட்டி செல்போனிற்குரியது தான் அவசரமாக திறந்து உள்ளிருந்த போனை எடுத்தாள். அவள் கைகள் நடுங்கியது. கருப்பு நிற நோக்கியா போன் அவள் உள்ளங்கையில் சிரித்தது.

அதையே வெறித்த வண்ணம் இருந்தாள் தாமரை.

“டிரிங் டிரிங்.. உஷாவின் செல்போன் அழைத்தது”

திரையை பார்த்தவர் “அவன் தான்” என்றபடி காதுக்கு கொடுத்தார்.

மனம் குறுகுறுத்தது இருப்பினும் அம்மா பிள்ளை பேச்சை ஓட்டுக் கேட்பது பிழை அல்லவா என்று எழுந்தவளை உஷா சைகையால் தடுத்து அமர செய்தார்.

“கொடுத்து விட்டேன்”

“நான் பார்க்கவில்லை, தாமரையிடம் கொடுத்து விட்டேன் அவ்வளவுதான். வேண்டுமானால் தாமரையை கூப்பிடுகிறேன் கேட்டுக் கொள்” என்றவர் தாமரையை பார்த்து கண் சிமிட்டி சிரித்தார். அவளுக்கோ சங்கோஜமாக இருந்தது. ஆனால் இவர்கள் இருவரும் பழகிக் கொள்வது நண்பர்கள் பழகுவதை போல் கேட்கவும், பார்க்கவும் இனிமையாகவே இருக்கிறது. அம்மா பையன் போல் தோன்றவே இல்லை. ஆனால் இவரிடம்? இப்படி கூடவா ஒரு தொழிலாளியிடம் அன்னியோன்யமாக பழகுவார்கள்? பிறகு இல்லாமலா இரண்டு தொழில்களை நடத்த முடிகிறது.. இதெல்லாம் தான் வெற்றியின் ரகசியமாக இருக்கும். இவர்களோடு பழகும் போது முதலாளி என்ற பயமோ பாகுபாடோ தெரியவில்லை. தோழமையே மேலோங்குகிறது. இவர்களுக்காக நிறைய உழைக்க வேண்டும் என மனம் துள்ளி குதிக்கிறது. அவள் யோசித்துக் கொண்டிருக்கையிலேயே அவள் கையில் ஏதோ குறுகுறுத்தது. செல்போன் தான். இப்போது அதில் வெளிச்சம் படர்ந்திருக்கிறது. வைப்பிரேசன் மோடில் இருந்ததால் அது அதிர்ந்து கொண்டே இருந்தது.

செல்போனையே வெறித்தாள் தாமரை.

“நினைத்தேன் உன்னை அழைப்பான் என்று இந்த பச்சை பட்டனை அழுத்திவிட்டு பேசு” என்றவர் ‘ரமணி, ரமணி’ என்று அழைத்துக் கொண்டே வெளியே சென்றார்.

உள்ளம் தடதடவென அடித்துக் கொண்டது. காரணம் புரியவில்லை.

நடுங்கிய விரல்களில் பச்சை பட்டனை அழுத்திவிட்டு காதுக்கு கொடுத்தாள்.

“ஹாய் தாமரை எப்படி இருக்கீங்க” உற்சாகமாக வந்தது கார்த்திகேயனின் குரல்.

“ம்..” அதற்கு மேல் அவளால் பேச இயலவில்லை”

“என்னாச்சு குரலையே காணும். தொண்டை கட்டி விட்டதா?”

“இ.. இல்லை.. வந்து ரொம்ப நன்றி. ஆனால் என் வேலையே செய்ததற்கு பரிசு தேவையில்லை தான்”

“தன்னடக்கம் தேவைதான்”

“இதில் தன்னடக்கம் எங்கு வந்தது எனக்கு பிடித்த வேலை அதிக சம்பளம். இதுவே போதாதா. பரிசு எல்லாம் அதிகப்படிதான்”

“சரி.. உனக்கு பரிசாக பார்க்க விருப்பம் இல்லை என்றால் உனக்கு கொடுக்கப்படும் பேப்பர் பென்சில் போல் இதுவும் ஒன்று என நினைத்துக் கொள். இந்த மாத இதழில் அம்மாவின் செல்நம்பர் போடும் இடத்தில இந்த எண்ணை தான் போடப் போகிறேன். அதனால் இனி புத்தகம் சம்பந்தமான பிரச்சனைகள் அனைத்தும் உன் தலையில் தான். ஆகையால் இந்த செல்போன் உனக்கு பரிசா? அல்லது பழுவா? என்று யோசித்துக் கொள்”

ஏனோ பரிசு இல்லை என்பது போல அவன் கூறியது உறுத்தினாலும் இந்த அதிகப்படி வேலையும் பிடித்து விட்டது. தாமரைக்கு சந்தோஷமாக ஒத்துக் கொண்டாள்

ரமணியிடம் பேசிவிட்டு வந்தவர்

“உனக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் தாமரை. என் மகனிடம் அத்தனை சீக்கிரத்தில் நல்ல பெயர் எடுக்க முடியாது. அவன் உனக்கு ஊக்கம் அளிக்கிறான் என்றால் நிச்சயம் உன் திறமைக்கு கிடைத்த வெற்றிதான். அதை என் காதுகளாலேயே சற்றுமுன் நீ கபிலனோடு பேசுவதை கேட்டேனே. என் வேலை என் பொறுப்பு உன் வேலை உன் பொறுப்பு என்று விடாமல் எந்த பிரச்சனையாக இருந்தாலும் அதை களைய முன் வரும் உன்னை நான் வாழ்த்த ஆசைப்படுகிறேன். என் ஆசி என்றும் உனக்கு உண்டு” என்று தாமரையின் சிரசில் கை வைத்தது தான் தாமதம். அவர் தோளில் புதைந்து அழுதாள் தாமரை.

உஷாவிற்கு ஒன்றும் புரியவில்லை பாராட்டிற்கு யாராவது இப்படி அழுவார்களா? தவறாக எதுவும் பேசவில்லையே!

“தாமரை.. தாமரை.. என்ன இது.. எதற்கு அழுகிறாய்?” தலையை ஆதரவாய் கோதினார்.

“அம்மா.. என் அம்மா நினைவு வந்துவிட்டது மேடம் நீங்கள் ஆசி கூறியது என் தாயே ஆசிர்வதித்தது போல் தோன்றியது. கட்டுப்படுத்த முடியவில்லை மன்னித்து விடுங்கள்” தன் ஈரவிழிகள் படபடக்க விலகி நின்றாள். உஷாவும் சில வினாடி அமைதியுற்றார். பிறகு

“அட அசட்டுப் பெண்ணே., இதற்கெல்லாமா அழுவார்கள். வேண்டுமானால் இனி இந்த மேடமை விட்டு விடு. வாய் நிறைய அம்மா என்று அழை. எனக்கு எப்போதும் பெண் குழந்தை இல்லை என்ற குறை உண்டு. எனக்கு வரப்போகும் மருமகள் என்னை அத்தை என்று அழைக்காமல் அம்மா என்று அழைக்க வேண்டும் என்றே ஆசைப்பட்டேன். அதற்குள் என்னை அம்மா என்று அழைக்க நீ கிடைத்தாயே சந்தோஷம் எனக்கு” அவர் கண்களும் கலங்கியது.

●●●●●●

வீட்டில் தந்தை தங்கையிடம் தன் பரிசையும் பாராட்டையும் பகிர்ந்து கொண்டாள் தாமரை. அதில் வேறு இன்னமும் ஆனந்தப்பட்டாள். மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டால் இரட்டிப்பாகும் என்ற வாய்மொழி பொய்க்குமோ?

ரோஜா அந்த செல்போனையே வைத்த கண் வாங்காமல் பார்த்தாள். “அக்கா அக்கா ஒரே ஒரு நாள் நான் இதை கல்லூரிக்கு எடுத்து போகவா? என் தோழிகளுக்கு எல்லாம் இந்த நம்பரை தந்து விடுகிறேன். அப்போது தான் அவர்களிடம் குறுஞ்செய்தி அனுப்பி விளையாட முடியும். அக்கா அக்கா” ஆர்வமும் குழைவுமாக பேசிய தங்கையை பார்க்கையில் பாவமாக இருந்தது.

“அட என்ன ரோஜாமா! இது என் ஆபீஸ் போன் என் சொந்த உபயோகத்திற்கு இல்லை. உனக்கு என்ன, செல்போன் தானே! இந்த மாதத்தோடு அருணாச்சலம் மாமாவிடம் வாங்கிய கடன் அடைக்கப்பட்டுவிடும். அப்புறம் என்ன செலவு நமக்கு உன் விருப்பப்படி ஒரு அழகான செல்போன் சந்தோஷமா?” ரோஜாவின் மூக்கை இப்படியும் அப்படியும் ஆட்டி தாமரை உரைக்க அவளுக்கோ அளவில்லா மகிழ்ச்சி ”அக்கான்னா அக்கா தான்” துள்ளி குதித்து தாமரையின் கன்னத்தில் இதழ் பதித்தவள் வேகமாக பின்கட்டில் ஓடி மறைந்தாள்.

அவள் சிட்டாய் பறப்பதை சந்தோஷம் பொங்க பார்த்தாள் தாமரை.

“தாமரை” என்ற அப்பாவின் பலகீன குரல் அழைக்கவும் சட்டென திரும்பினாள்.

“என்ன அப்பா ஏதாவது வேண்டுமா?’ அவசரமாய் விசாரித்தாள்

“வந்து.. அது..” பேச முடியாமல் மென்று விழுங்கினார்.

அவர் அருகில் வந்து நின்றவள் கரிசனமாய் அவர் தோள் பற்றினாள் “ என்ன அப்பா? எதுவாக இருந்தாலும் கூறுங்கள்”

“இந்த மாதத்துடன் அருணாச்சலத்தின் எல்லா கடன்களும் முடிந்துவிடும். போன முறை நான் பணம் கொடுக்க சென்ற போதே தனசேகரின் மறுமணம் பற்றி பேச்சை எடுத்தான் நானும் மழுப்பலாய் முடியாது என்று பொருள்பட பேசிவிட்டு தான் வந்தேன். ஆனால் அப்போது தனசேகரன் வேறு அங்கே இருந்து தொலைத்து விட்டான்”

“என்ன மாமா! பணம் வந்ததும் எங்களை மறந்து விட்டீர்களா? ஏறி வந்த ஏணியை எட்டி உதைத்து விட பார்க்கிறீர்கள் என்று ஆத்திரமாய் கேட்டான். என்னால் தான் அவன் குரோதம் கக்கும் விழியை பார்க்க முடியவில்லை பயந்தே போய்விட்டேன். எதற்கும் நீ கொஞ்சம் ஜாக்கிரதையாக இரும்மா எனக்கு என்னவோ மனம் பதறுகிறது” வியர்த்த நெற்றியை துண்டால் துடைத்துக் கொண்டார்.

“ம்.. ச்.. என்ன அப்பா இது குழந்தைபோல் அந்த சுண்டைக்காய் பயலுக்கெல்லாமா பயப்படுவார்கள்? எனக்கு ஒன்றும் ஆகிவிடாது. தைரியமாக இருங்கள்” அவரை சமாதானம் செய்து படுக்கையில் படுக்க வைத்தாள்.

அவளுக்கும் எரிச்சலாய் தான் இருந்தது. கடன் அடைத்து விட்டால் பிரச்சனை ஒழிந்தது என்று பார்த்தால் தேவையில்லாமல் கிளறிக்கொண்டு இருக்கிறார்கள். அறிவு வேண்டாம். அந்த மூர்க்கனிடம் ஒரு சிறு பெண்ணை பலியிடுகிறோமே என்று? மாமா மனசாட்சியே இல்லாதவரா? ஏதேதோ நினைத்தவள் உறங்கிப் போனாள்.
 

Meena

Saha Moderator
Staff
Messages
1,082
Reaction score
91
Points
48
8

அச்சிடப்பட்டு வந்த புத்தகத்தை எடுத்து புரட்டிக் கொண்டிருந்தாள் தாமரை. புத்தகத்தை வெட்டிய விதம் சரியா? பக்கங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வருகிறதா? இரண்டு மூன்று பேப்பர்கள் ஒட்டிக் கொண்டு இருக்கின்றதா? கோணல் மானலாய் அச்சிடப்படவில்லையே? என்று பல கோணங்களில் தவறை யூகித்து அது இல்லாமல் இருக்கிறதா என்பதை சரி பார்த்துக் கொண்டிருந்தாள். கடைசி பக்கங்களை புரட்டியவள் பழைய நினைவில் சிரித்து கொண்டாள். அந்த ஸ்கிரிப்டை உஷா மேடத்திடம் காட்டும் போது என்னவெல்லாம் பேசினான்? மனம் அந்த நாளை அசைப்போட்டது.

ரொம்ப நேரமாக தாமரை எதையோ தேடுவதை கவனித்த கார்த்திகேயன்.

“என்ன தேடுறீங்க” என்றான்.

“அது.. நேத்திக்கு நான் படித்த ஸ்கிரிப்டை காணும் மேடம்கிட்ட இருக்கும்மான்னு தேடறேன் பதில் கூறியவள் அவனை பாராமல் தேடலை தொடர்ந்தாள்.

“அது இந்த ஸ்கிரிப்ட்டா பாருங்க?”

சட்டென திரும்பியவள் அந்த நீல நிற ஸ்பைரல் பைண்டிங் போட்ட ஸ்கிரிப்ட்டை பார்த்ததும் முகம் மலர்ந்தாள்.

“ஆமாம் சார்.. இதுதான் எங்கே இருந்தது?” பேசியவள் ஸ்கிரிப்ட்டை வாங்கி அது சரிதானா என்று பார்த்துக் கொண்டாள்.

“என் பேகில்தான்” அலட்சியமாய் கூறினான்.

“என்ன?” நம்பாமல் விழித்தாள்.

“ம்.. ஓவர் நைட்ல மூணு பேஜ் படிச்சுட்டேன்” பெருமையுடன் அவன் கூற சட்டென சிரித்துவிட்டாள் தாமரை.

என்னவோ ஓவர் நைட்டில் புத்தகத்தையே முடித்துவிட்டது போல் பீற்றலை பார் என்று யோசித்தவள். உடனே! ‘ச்சே ..பாவம் அவருக்கு தமிழ் தெரியாதே’

“கிளைமாக்ஸ் படிக்கவே நைட் ஃபுல்லா தேவைப்பட்டது. தமிழ் தெரியலையேன்னு ரொம்ப வருத்தப்பட்டது. நேத்து தான்” நிஜமாக வருந்தினான்.

என்ன கிளைமேக்சா? படித்தால் ஆரம்பம் தானே படிக்க வேண்டும். நேராக யாராவது கிளைமாக்ஸை படிப்பார்களா? புரியாமல் அவனை கேள்வியோடு பார்த்தாள்.

“ம்.. புரியுது அவசரமாக அந்த கிளைமாக்ஸை மட்டும் படித்தது ஏன் என்று தெரியவில்லையா? நேற்று...” முடிக்காமல் அவளை குறுகுறுத்தான்



அவளுக்கு புரிந்துவிட்டது அவன் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் தலை கவிழ்ந்தாள். முகத்தில் படர்ந்த செம்மையை எவ்வளவு முயன்றும் கட்டுபடுத்த முடியாமல் தோற்றாள்.

சட்டென கார்த்திகேயன் எழுந்தான், அதை நாற்காலியின் சத்தத்தை வைத்து அவளும் உணர்ந்தாள். ஆனால் என்ன நினைத்தானோ! மறுபடியும் அமர்ந்து விட்டான். எதற்கு எழுந்தான்? எதற்கு அமர்ந்தான் என்பதை ஆராய்ச்சி செய்தவருக்கு மனம் எங்கெங்கோ தறிகெட்டு ஓடியது.

சூழ்நிலையை சரியாக்கவோ என்னவோ அவனே பேசினான்.

“அடுத்த மாத இதழில் இந்த நாவல் தான் அச்சிடப்படப் போகிறது என்பதை உன் கன்னங்களின் செம்மை சொல்கிறது தாமரை. நான் படித்தது சரிதானா?” கேள்வியாய் பேசியவனுக்கு பதில் கூற முடியவில்லை தாமரைக்கு.

இன்னதென்று சொல்ல முடியாத உணர்வு வார்த்தை எழவில்லை. இருப்பினும் மிகுந்த போராட்டத்திற்கு பிறகு.

“அதை மேடமிடம் தான் சொல்ல வேண்டும். முடிவு அவர் கையில்” எப்படியோ பேசிவிட்டாள்

“உன் முடிவு என்னவோ?” இரு பொருள் தொனிக்க அவன் பேசியது அவளை என்னவோ செய்தது

“அது..” அவள் ஏதோ கூற முயலும் முன் கதவு தட்டப்பட்ட பின் உள்ளே பிரவேசித்தார் உஷா சந்திரன்.

“இது என்ன அம்மா புது பழக்கம் கதவை தட்டிவிட்டு வருவது, இது உங்கள் ரூம் தானே” சமாளித்துக் கொண்டு பேசியவன் கார்த்திகேயன் தான்.

“ஏன் நீயும் தான் இங்கு முக்கிய பதவியில் இருக்கிறாய் பைனான்ஷியர் அல்லவா அதற்கு கொடுத்த மரியாதையாய் வைத்துக் கொள்” புன்சிரிப்புடன் பதிலளித்தவர் அவன் காதோரம் குனிந்து மேஜையில் எதையோ தேடும் பாவனையில் “தாமரையை என்ன செய்தாய், அவள் முகம் இப்படி சிவக்கும் அளவுக்கு” கூறியவரின் குறும்பு புன்னகையை பார்த்தவனால் சிரிப்பை அடக்க முடியவில்லை தான். இருப்பினும் பேச்சை மாற்ற முடிவு செய்தவன்.

“நானும் தாமரையும்...” சில விநாடி நிறுத்திவிட்டு அவளை பார்த்தான்.

மருண்ட விழிகளோடு மிரட்சியாய் விழித்துக்’ கொண்டிருந்தவளை பார்க்க பாவமாக இருந்தது.

“அடுத்த மாதத்து ஸ்கிரிப்ட்டை பற்றி பேசிக் கொண்டிருந்தோம்” முடித்ததும் தாமரையின் முகத்தில் நிம்மதியை கண்டான்.

“முடிவெடுத்து விட்டீர்களா?”

“தாமரை உங்களை கை’ காட்டிவிட்டார்கள்”

“இதில் என்ன இருக்கிறது நீங்கள் முடிவெடுத்தால் சரியாக தான் இருக்கும் உன் அபிப்பிராயம் என்ன தாமரை?” அப்பாவியாய் கேட்பது போல் கேட்டது அவர் குரலில் நன்றாகவே தெரிந்தது.

இருவரும் இரட்டை அர்த்தத்தில் பேசுகிறார்களா அல்லது நான் தான் ஏதோ மயக்கத்தில் கண்டதை நினைக்கிறேனா? ஒரே குழப்பமாக இருந்தது தாமரைக்கு.

“இந்த ஸ்கிரிப்ட் மிகவும் நன்றாக இருக்கிறது மேடம். ஒரு எடிட்டர் என்ற முறையில் இந்த ஸ்கிரிப்டை நாம் இந்த நாவலை அச்சிட்டால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது. நல்ல நாவலுக்கான எல்லா தகுதிகளும் இருக்கின்றன” வேண்டுமென்றே ஸ்கிரிப்ட் என்ற வார்த்தையிலும், எடிட்டர் நாவல் என்ற வார்த்தையிலும் அழுத்தம் கொடுத்தாள்.

“ஓ.. அப்படியா அப்போது ஏது தடை, தாமரையே முடிவை கூறிவிட்டார்களே” என்றவனை விழிவிரித்து முறைத்தாள்.

“இந்த நாவலை தான் கூறுகிறேன். இதற்கு ஏன் இந்த முறை முறைக்கிறாய், சாரி முறைக்கிறீர்கள்” உதட்டை கடித்து சிரித்தான்.

“அட நீ ஏன்டா சாரி எல்லாம் கேட்டுகிட்டு தாமரை உன்னை விட சின்ன பெண் தானே ஒருமையிலேயே அழைக்கலாம்.. உனக்கொன்றும் ஆட்சேபனை இல்லையே தாமரை?” என்றார் உஷா.

இல்லை என்பது போல் தலை அசைத்தாள். மறுக்கமுடியாதபடி ஒரு விஷயத்தை கூறுவதற்கு அம்மா மகன் ஒருவருக்கொருவர் சற்றும் சளைத்தவர் இல்லை. ஏன் அதனால் மட்டும் தான் ஒத்துக் கொண்டாயா? அவன் ஒருமையில் அழைத்தால் நெருக்கம் அதிகரிப்பது போல் உன் உள்ளம் சிலிர்க்கிறது தானே? உள்மனம் கேட்ட கேள்வியை அப்புறப்படுத்திவிட்டு நடப்புக்கு வந்தாள்.

கடைசியில் ஒரு மனதாய் அந்த நாவல் பிரசுரமாவது உறுதியாயிற்று.

“ம்..ஹும்” அன்று தான் அவனை கடைசியாக பார்த்தது ஒரு மாதம் ஓடிவிட்டது. அந்த ஸ்கிரிப்டும் இப்போது புத்தகமாக அச்சாகி அவள் கைகளில் இருக்கிறது. ஆனால் கார்த்திகேயனை தான் காணவில்லை.

இன்று எப்படியாவது உஷா மேடத்திடம் விவரத்தை சேகரித்து விட வேண்டும். உறுதியோடு உஷாவின் வரவுக்காக காத்திருந்தாள்.

“மேடம் இந்த மாதம் நமது நாவலின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க வேண்டும் என நினைக்கிறேன். மார்க்கெட்டில் நம் நாவலின் பெயர் நன்றாக பிரபலமாகிவிட்டதாம். அதனால் புத்தகம் போடப்பட்ட ஒரு வாரத்திலேயே எல்லாம் விற்றுவிடுகிறதாம். இதனால் பல வாடிக்கையாளர்களுக்கு ஏமாற்றம் தானே. அதனால் இந்த மாதம் நாம் எண்ணிக்கையை கூட்டுவது தான் நல்லது. இதில் உங்களின் இறுதி முடிவு வேண்டும்” ஆர்வமாக பேசி முடித்தாள் தாமரை.

அவளின் ஆர்வத்தை ரசித்த உஷா

“ம்... செய்யலாமே என்னிடமும் நம் ஏஜென்டுகள் இதுப்பற்றி பேசினார்கள். நான் ஒரு முறை கார்த்தியிடம் பேசி விட்டு முடிவை சொல்கிறேன் சரிதானா?”

கார்த்தி என்ற பெயரைக் கேட்டதும் உள்ளம் மகிழ்ந்தது தாமரைக்கு கேட்க உதடுகள் துடித்தன. ஆனால் இன்னமும் தொழில் பேச்சு வார்த்தை முடியாததால் தன் நாவை அடக்கிக் கொண்டாள்.

“போன மாத ரிட்டன் கணக்குகள் இந்த பைலில் இருக்கிறது மேடம் நீங்கள் சரி பார்த்து விடுங்கள். அப்புறம் எலெக்ட்ரிசிட்டி பில் கட்டியாகிவிட்டது அதற்கான ரெசிபிட், போன் பில்லும் கட்டியாகிவிட்டது எல்லா ரெசிப்ட்டுகளிலும் கையெழுத்து போட்டுவிட்டால் நான் பைல் செய்து விடுவேன்” கூறிக்கொண்டே உஷா கையெழுத்திட வேகமாக எல்லாம் எடுத்துக் கொடுத்தாள். அவற்றை சரி பார்த்து கையெழுத்திட்டார் உஷா.

“ஆங்.. மேடம் நேற்று ஒரு போன் வந்தது நமது வாசகர் ஒருவர் தான் மதுரையிலிருந்து கால் பண்ணி இருந்தார்கள். நம் நாவலின் தரம் மிகவும் நன்றாக இருக்கிறதாம்.கதைகள் எல்லாம் மணிமணியாக இருக்கிறதாம். இதன் உரிமையாளருக்கு என் வாழ்த்துகளை கூறிவிடுங்கள் என்று ஒரே பாராட்டு மழை தான் ரொம்பவும் சந்தோஷமாக இருந்தது. மாதம் எல்லாம் உழைத்து இறுதியாக வாங்கும் சம்பளத்தில் கூட இத்தனை சந்தோஷம் கிடைத்ததில்லை” பரவசமாக பேசினாள் தாமரை.

“சந்தோஷம் தாமரை, நிஜமாகவே ஒரு ஆசிரியருக்கு விமர்சனங்கள் தான் உண்மையான சந்தோஷம். பாராட்டுக்கு ஏங்காத மனமும் உண்டோ? ஆனால் இப்போதெல்லாம் விமர்சனங்கள் குறைந்து விட்டன தாமரை. முன்பு நான் படிக்கும் பொழுது என் பள்ளித் தோழியின் தந்தையும் ஒரு பத்திரிக்கையாளர் தான். அவரின் அலுவலக தபால்பெட்டி எப்படி நிறைந்து வழியும் தெரியுமா? ஏன் நானே நிறைய கடிதம் எழுதி இருக்கிறேன். சில சமயம் அவற்றிற்கு பதில்களும் வரும். இப்போதோ படிப்பவர்களே குறைந்து விட்டார்கள் தாமரை. அதில் எனக்கு அதிக வருத்தம் தான். டிவியிலும், கம்ப்யூட்டரிலும் தான் இப்போது பொழுது போகிறதே தவிர புத்தகம் படிப்பதை யாரும் ஒரு பொழுது போக்காகவே கருதுவதில்லை. எல்லாம் காலத்தின் மாற்றம் என்ன செய்ய நாமும் காலத்துடன் சேர்ந்து மாறத்தான் வேண்டும்” ஒரு பெருமூச்சுடன் முடித்தார் உஷா.

ஏனோ தாமரைக்கும் கவலையாகத்தான் இருந்தது. அவளும் எத்தனையோ நாவல்கள் படித்திருக்கிறாள். ஆனால் எதற்கும் பாராட்டி விமர்சனம் எழுதியதில்லை. ஒரு சின்ன பாராட்டு ஒரு படைப்பாளியை சந்தோஷப்படுத்தி இன்னமும் சிறந்த படைப்புகளை உருவாக்க உதவும் என்றால் நிச்சயம் இனி விமர்சனங்களை எழுதி அனுப்ப வேண்டும். மூன்று மணி நேரம் வேறு ஒரு உலகில் நம்மை பிரவேசிக்க வைக்கும் எழுத்தாளருக்கு ஒரு இரண்டு நிமிட சந்தோசத்தையேனும் கொடுக்க வேணும் என்று மனதில் உறுதி எடுத்துக் கொண்டாள்.

அலுவலக சம்பந்தமான பேச்சு வார்த்தைகள் முடிந்தவுடன் கிளம்பத் தயாரானார் உஷா. இது தான் சமயம் என்று மெல்ல பேச்சை வளர்த்தாள் தாமரை.

“தனியாகவா மேடம் போகிறீர்கள்?” இந்த ஒரு மாத காலமாய் நடப்பதை இன்று தான் நடப்பது போல் புதிதாக கேட்டாள்.

“ம்.. ஆமாம் ஏன் கேட்கிறாய்?”

“இல்லை கார்த்திகேயன் சார் இத்தனை பொறுப்பில்லாமல் இருப்பார் என்று நான் நினைக்கவில்லை” பொய்யாய் கவலைப்பட்டாள்.

“அப்படி என்ன அம்மா கண்டுவிட்டாய்” சுவாரஸ்யம் தோன்ற எடுத்த கைபையை மேஜையில் வைத்துவிட்டு இருக்கையில் அமர்ந்தார் உஷா.

“இப்படி வயதானவர்களை தனியே அலைய விடுகிறோமே என்ற எண்ணம் வேண்டாம். முன்பு போல் வந்து அழைத்து சென்றால் அது தான் நல்ல மகனுக்கான பண்பு”

ஒரு வழியாய் ஜன்னலையும் உஷாவையும் மாறி மாறி பார்த்து தான் பேச நினைத்ததை பேசிவிட்டாள்.

கண் பார்த்து பேசாத பேச்சு கள்ளப் பேச்சு என்று இத்தனை வருட அனுபவத்தில் உஷாவிற்கு தெரியாதா என்ன?

“அதை ஏன் அம்மா கேட்கிறாய் இப்போதெல்லாம் அவன் சிரிப்பதே இல்லை. எப்போது பார்த்தாலும் படித்துக் கொண்டே இருக்கிறான். இதில் எனக்கே பெரிய ஆச்சர்யம் என்னவென்றால் நமது அபிமான எழுத்தாளரான லட்சுமியின் புத்தகங்களை வீட்டில் உள்ள புத்தக அறையையே புரட்டி போட்டு கண்டுபிடித்து படிக்கிறான்.. இவனுக்கு சந்தேகங்கள் வேறு ஏகத்துக்கு வருகிறது. அதை தெளிவாக்க என்னிடம் தான் வருகிறான். அவனா தமிழ் நாவல்கள் படிப்பது என்று எனக்கே ஆச்சர்யம் என்றால் பாரேன்”

இமைக்க முடியாமல் விழிவிரித்து தன் ஆச்சர்யத்தை வெளிப்படுத்தினாள் தாமரை.

“கார்த்திகேயன் சாரா? நாவலா? சுத்தமாக நம்ப முடியவில்லை மேடம்”

“அட நீ வேறு என்னாலேயும் தான் நம்பமுடியவில்லை என்னையே கிள்ளிப் பார்த்த பின்பு தான் நம்புகிறேன். இந்த ஒரு மாதத்தில் முக சவரன் கூட செய்யாமல் லட்சுமியின் நாவல்கள் ஐந்து முடித்துவிட்டான் என்றால் பாரேன்!.

“ஐந்து நாவலா?” நிஜமாகவே அவளால் நம்பமுடியவில்லை.

“ம்.. ஆனால் இப்போது அவனைப் பார்த்தால் அடையாளமே கண்டுபிடிக்க முடியாது முடிகளுக்கிடையில் முகத்தை தேடத்தான் வேண்டும்”

பதில் கூற முடியாமல் யோசனையில் ஆழ்ந்தாள் தாமரை.

அவளின் இந்த நிலையை கண்டு தன் கைப்பையை எடுத்துக் கொண்டார் உஷா.

“ஓகே தாமரை நேரமாகி விட்டது கிளம்புறேன்”

தலையை மட்டுமே சரி என்பது போல் அசைக்க முடிந்தது தாமரையால் கதவு திறந்து மூடும் சப்தத்தில் உஷா சென்று விட்டதை உணர்ந்தாள். விவரம் சேகரிக்கலாம் என்று பார்த்தால் இன்னும் குழப்பமே அதிகரித்துவிட்டது. தலையை இருகைகளால் தாங்கியபடி மேஜையில் கவிழ்ந்தாள் தாமரை.
 

Meena

Saha Moderator
Staff
Messages
1,082
Reaction score
91
Points
48
9

வீட்டிற்குள் நுழைந்த உஷா வேலைக்காரப் பெண்ணிடம் கார்த்திகேயனை ஹாலிற்கு தான் வரச் சொன்னதாக சொல்லி அனுப்பிவிட்டு முகம் கழுவ தன் அறைக்குள் நுழைந்தார்.

பிரஷ் ஆகி வருவதற்குள் சோபாவில் சாய்வாக சாய்ந்து கொண்டு அந்த 60 இன்ச் எல்.சி.டி டிவியில் சானல்களை மாற்றி மாற்றி பார்த்துக் கொண்டிருந்தான். மனம் ஒன்றிலும் லயிக்கவில்லை. அர்த்தத்தோடு அவனை ஒருமுறை பார்த்தவர் அவனருகில் சென்று அமர்ந்து அவன் முடி கோதினார்.

“என்ன அம்மா கூப்பிட்டிருந்தீர்களா?” சமீபகாலமாய் அவன் “மாம்” யை விட்டு விட்டு அம்மா வென்றழைப்பது இனிமையாய் இருந்தது.

“ஆமாம் கார்த்தி...” அவர் ஏதோ பேச வாய் எடுக்குமுன் வேலைக்காரி காப்பி டிபனுடன் அவர்களை அணுகினாள்.

“ஆங்.. முதலில் காபி குடித்துவிட்டு பிறகு பேசுவோம்” அவனிடம் ஒரு கோப்பையை நீட்டி விட்டு தானும் ஒன்றை எடுத்துக் கொண்டார். முடித்ததும் அவரே தொடர்ந்தார்

“இப்பொழுதெல்லாம் நீ பப்ளிகேஷன் பக்கம் வருவதே இல்லையே?” அவன் கண்களை ஊடுருவி காரணத்தை கிரகிக்க விரும்பினார்.

உடனே அவன் முகத்தில் பரவசம் தெரிந்தது.

“எல்லாம் ஒரு சின்ன சர்ப்ரைஸ்குக்காக தான்”

“அது என்ன அப்பா சஸ்பென்சா?”

“ஆமாம் சஸ்பென்ஸ் தான்”

“ம்ஹும்.... நீ ஈஸியா சொல்லிவிட்டாய் அங்கு அந்த தாமரை பொண்ணு என்னை துளைத்து எடுக்கிறாளே?” ஓரக்கண்ணால் அவன் முக உணர்ச்சியை பார்த்து சிரித்துக் கொண்டார்.

“என்ன? தாமரை என்னைப் பற்றி விசாரித்தாளா?” விழிகள் விரித்து அதிசயித்தான்.

“பின்னே பொய் சொல்கிறேனோ?”

“அப்படி இல்லை.. சரி விடுங்கள் என்னம்மா கேட்டாள்”

“அது சஸ்பென்ஸ்” அவன் வார்த்தையால் அவனையே மடக்கினார்.

“அம்..ம்...மா..”

உரிமையாய் கோவப்பட்டு முறைத்தான்.

அதே சமயம் உஷாவின் கை பேசி சத்தமிட்டது.

கைப்பையில் இருந்த கைப்பேசியை எடுத்து பார்த்தவர்.

“உன் சர்ப்ரைஸ் தான் பேசுகிறது. நூறு வயசு தான் போ, இந்தா நீயே பேசு அவளுக்கு ஒரு ஷாக் டிரீட்மெண்ட்” குறும்பாய் சிரித்தவர் கார்த்திகேயனின் கையில் செல்லை திணித்தார்.

ஆவலாக காதுக்கு கொடுத்தவன் முகமே மாறிவிட்டது. அவன் முக மாறுதல்களை கண்ட உஷா அவன் தோள் பற்றி ”என்ன” என்பது போல் சைகை காட்டினார்.

அவன் ஸ்பீக்கரை ஆன் செய்தான்.

“வேண்டாம் தனசேகர் நீ செய்வது மட்டும் அப்பாவிற்கு தெரிந்தால் அவ்வளவுத்தான்” தாமரையின் குரல்.

“அந்தக் கிழவனால் என்னத்தை கிழித்து விட முடியும்” கரகரப்பான ஆண் குரல் சற்று தெளிவில்லாமல்.

“ச்..சி அப்பாவிற்கு உடம்பு சரியில்லை என்று அவசரமாக அழைத்து இப்படி கடத்தும் அளவு நீ அயோக்கியனா?”

“ஹா ஹா.. ஹா.. அயோக்கியன் என்ற உண்மை தெரிந்ததால்தான் அந்த சனியன் தூக்கில் தொங்கியது”

“இப்போது காரை நிறுத்த போகிறாயா அல்லது கதவை திறந்து வெளியே குதிக்கட்டுமா?”

“குதியேன் ஒரு எலும்பு கூட மிஞ்சாது 80 கி.மீ. வேகத்தில் பறக்கிறேன் இது ஓஎம்ஆர் சாலை ஒரு நாய் கூட வந்து உன்னை முகர்ந்து பார்க்காது”

ஏதோ கூற வந்த உஷாவை பேசவேண்டாம் என்பது போல் வாய்மேல் விரல் வைத்து எச்சரித்தவன் மீண்டும் சம்பவத்தை தொடர்ந்து கேட்டு கொண்டே எழுந்தான் உஷாவையும் தன்னுடன் வருமாறு சைகை செய்தவன் காரினுள் ஏறி விரைந்தான்.

“உன் நோக்கம் நிச்சயம் நிறைவேறாது”

“என்ன தற்கொலை செய்து கொள்வாயா பரவாயில்லை எனக்கு கிடைக்காதது யாருக்கும் கிடைக்க கூடாது”.

“அசிங்கமாய் இல்லை உனக்கு.. ஆங் இது காரப்பாக்கம் தானே”

“என்ன வழிப்பாதையை கூறிக்கொண்டே வருகிறாய்?”

“மறுபடியும் கெஞ்சிகேட்டுக் கொள்கிறேன் என்னை வீட்டில் விட்டுவிடு”

“அதற்காகவா ஒரு வாடகை காரை பிடித்து உன்னை அழைத்து வந்தேன். அது எப்படி உன் அப்பன் கடன் வாங்கும் போதே பேச்சுவார்த்தையாக சொன்னது தானே. பணம் வந்தவுடன் உங்க நாய் புத்தியை காமிச்சிட்டிங்களே”

“ச்சி.. வாயை மூடு உன் அப்பா தான் கண்டதையும் கற்பனை செய்து கொண்டு உளறுகிறார். நானோ என் அப்பாவோ என்றைக்காவது வாக்கு கொடுத்தோமா?” பேசிக் கொண்டே வண்டி செல்லும் பாதையை நன்றாக கவனித்தாள்.

இந்த விநாயகர் கோவிலில் வீற்றிருக்கும் அந்த விநாயகர் உன்னை சும்மாவிடமாட்டார். நீ வலது பக்கம் திரும்பினால் மட்டும் விட்டு விடுவாரா. இந்த தெருவிலேயே ஒரே வீடு தானே இருக்கிறது. என்ன ‘ராமநிவாஸா” ப.எண். 13/4 பு.எண்.23 திடீர் தெருவா யாருடைய வீடு இந்த வீடு. பச்சை பெயின்ட் சகிக்கவில்லை. என்னை ஏன் இங்கே கூட்டி வந்தாய். மறுபடியும் கூறுகிறேன் உன் எண்ணம் ஈடேராது நான் கும்பிடும் அந்த முருகபெருமான் என்னை கைவிடமாட்டார். அவர் தாய் பார்வதி தேவியும் தான் ஜாக்கிரதை என் பலம் குறைந்து நான் உயிரைவிடும் நேரம் நெருங்குவதற்குள் எப்படியும் ஏதேனும் ஒரு ரூபத்தில் வந்து என்னை காப்பாத்துவார்கள்”

“அட.. சீ.. வாயை மூடு ஏசி காரினுள் ஏன் இந்த கத்து கத்துகிறாய் என் காதே செவிடாகிவிடும் போல பயத்தால் பிதற்றுவதற்கும் ஓரளவு உண்டு. இறங்கித் தொலை இல்லை அதற்கும் நான் தான் இழுத்து செல்ல வேண்டுமா?”

“எங்கே ஓடப்பார்க்கிறாய் நில்லு அதோ பார் வாட்ச்மேன் தவிர இந்த வனாந்திரத்தில் யாருமில்லை. நீ கூச்சல் போடுவதெல்லாம் வேஸ்ட், இந்த பேகை வேறு ஏன் சுமக்கிறாய் தூக்கி காரில் வீசு”

“வேண்டாம் வேண்டாம் விடு என்னை..” தாமரையின் குரல் பலவீனமாகி பிறகு சுத்தமாக கேட்கவில்லை.

“ச்சே ராஸ்கல்” ஸ்டியரிங்கில் ஓங்கி அடித்தான் கார்த்திகேயன்.

“சீக்கிரம் ஓட்டுப்பா? இதோ அவள் கூறிய காரப்பாக்கம் வந்து விட்டது” அவசரப்படுத்தினார் உஷா

நாலு சுவற்றுக்குள் அடைப்பட்ட தாமரை வியர்க்க விறுவிறுக்க நின்றிருந்தாள்.

“ச்சே என்ன ஒரு மூட மதி என்னுடைய அப்பா அத்தனை தூரம் கூறியும் விழிப்புணர்வு இல்லாமல் இருந்துவிட்டேனே.

அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக், அருணாச்சலம் மாமாதான். ஹாஸ்பிட்டலில் சேர்த்திருக்கார். தாமரை தாமரை என்று தான் முணங்குகிறார் என்று இந்த தடிமாடு தனசேகரன் கூறியதை பாசம் நம்பவைத்து காரில் ஏறவைத்து விட்டது. கார் வழிமாறி செல்வது உரைக்கவே தான் அவள் அவனை கேள்வி கேட்டாள்’

“எந்த ஹாஸ்பிட்டல் ஏன் இத்தனை தூரம்”

“எல்லாம் காரணமாதான்”

“என்ன?” சந்தேகம் தலைதூக்கியது.

“ஹா ஹாஹா.. வேறு என்ன இன்று சாந்தி முகூர்த்தத்துக்கு உகந்த நாள் என்று ஜோசியர் கூறிவிட்டார் அதான்”

“என்ன..” ஒரு நிமிடம் பூமியே சுற்றியது.

“என்னிடமா கண்ணாமூச்சி ஆடுகிறாய் என் கண்ணில் பட்டுவிட்டால் தப்பமுடியுமா?”

அவனின் கர்வம் அவளை அச்சப்படுத்தியது சர்வமும் நடுங்கியது.

“தாமரை நிதானம்.. இப்போது படபடப்போ அழுகையோ கூடாது. இப்போது தேவை எப்படி இவனிடமிருந்து தப்பிப்பது என்று தான். அழுகை எந்த தீர்வையும் காட்டாது. மனதை மேலும் பலகீனபடுத்தும், காரைவிட்டு குதித்து விட்டால்?

ச்சே... நேரே சொர்க்கம் தான்! அப்பா இதற்காகவா கஷ்டப்பட்டு ஆளாக்கினர்? வேறு... நகங்களை கொண்டு புராண்டி இவனை கார் ஒட்டவிடாமல் செய்யலாம். அவன் ஓங்கி அறைந்தால் மயக்கம் நிச்சயம். கறியும், மீனும் தின்று எருமை மாடு போல் அல்லவா உடம்பை ஏற்றி இருக்கிறான். மயங்கி விட்டால் தப்பிப்பது எப்படி பயத்தில் தோள் பையை கட்டியாக பிடித்தவளுக்கு. அப்போது தட்டுப்பட்டது கைப்பேசி. நல்லவேளையாக, அவள் பின் இருக்கையில் ஏறிக் கொண்டாள் சத்தமாக பிதற்றி அழுவது போல் பாவனை செய்து இடையில் எப்படியோ கைபேசியை எடுத்து உஷாவின் செல்லுக்கு தொடர்பு கொண்டாள். அவர்களுக்கு குறிப்பு கொடுப்பது போல் வழியை ஒருவாறு கூறியும் விட்டாள். அவர் எடுத்திருப்பாரா? அதை கேட்டிருப்பாரா? இல்லை நான் வேறு யாருடனோ பேசுகிறேன் என்று நினைத்து உடனே அணைத்திருப்பாரா அதற்குள் போனை பிடுங்கிக் கொண்டான். இந்த சண்டாளன் நினைக்க நினைக்க உடல் நடுங்கியது கடவுளே காப்பாற்று.

கதவை தடார் என்று திறந்து கொண்டு இப்படியும் அப்படியும் ஆடிக்கொண்டு உள்ளே வந்தான் தனசேகரன். அவன் நெருங்குவதற்குள் அவன் அடித்த மதுவின் மனம் முந்திக்கொண்டு அடிவயிற்றை குமட்டியது. தாமரைக்கு, மூக்கை பொத்திக் கொண்டாள்.

“வா.. டீ குழைவாய் பேசியவனுக்கு நடக்கவே முடியவில்லை. இங்கும் அங்கும் அலசினாள் கையில் பிடிக்கும் படியாய் ஒரு பொருளும் இல்லை. கிட்டே வந்தால் எட்டி உதைக்கும் நோக்கத்தோடு தான் தயாராக இருந்தாள்.

அங்கு போடபட்டிருந்த கட்டிலையே அரைமணி நேரமாக சுற்றிக் கொண்டிருந்தாள். அவன் கையில் அகப்பட்டு விடக்கூடாது என்பதை மட்டுமே குறிக்கோளாக வைத்தவள் அவள் கால் மேஜை மீது மோதி ரத்தம் கசிந்து கொண்டிருந்ததையோ? ஷெல்பில் இடித்து நெற்றியில் ரத்தம் வடிந்ததையோ பொருட்படுத்தவில்லை. ஆனால் சோர்வு நன்றாகவே தெரிந்தது. ஓட்டத்தின் வேகம் குறைந்துவிட்டது, மனம் தளர்ந்து விட்டது. முடிந்தது கதை. கடைசியில் இவன் கையிலா?

படார் என்ற கதவின் சத்தம் அவளை உயிர்தெழ வைத்தது. கார்த்திகேயனையும் உஷாவையும் பார்த்த மாத்திரத்தில் ஒரு பாக்கெட் குளுக்கோஸை ஒரு டம்ளர் தண்ணீரில் கொட்டி குடித்தது போல் இருந்தது. நான்கே எட்டில்,

“அம்மா” என்ற அலறலுடன் உஷாவின் தோள்களில் புதைந்தாள்.

ஒரு முறை ஏற இறங்க அளவெடுத்தான் கார்த்திகேயன் அவள் நெற்றியில் வழிந்த ரத்தத்தை பார்த்ததும் சினம் கொழுந்து விட்டெரிந்தது. அவ்வளவு தான் தனசேகரனை புரட்டி எடுத்துவிட்டான்.

“நீங்கள்...” அதற்கு மேல் பேச முடியாத அளவு அடிப்பட்டிருந்தான்.

“நாங்கள் எப்படி வந்தோம் என்று தெரிய வேண்டுமாடா தெருநாயே! நீ வாட்ச்மேனுக்கு பத்தாயிரம் கொடுத்து இந்த வீட்டை வாடகை எடுத்து விட்டாய் நாங்கள் இருபதாயிரம் கொடுத்து வேறு சாவிக்கொத்தை வாங்கி விட்டோம் இங்கேயே கிடந்து செத்து தொலை”

கடைசியாக ஒரு மிதி மிதித்து விட்டு காருக்கு திரும்பினான்.

அதற்கு முன்னமே தாமரையும், உஷாவும் காருக்குள் அமர்ந்திருந்தனர். உஷாவின் மடியில் தலை வைத்து கதறிக் கொண்டிருந்தாள் தாமரை. அவள் அழுகை அவனை கலங்கடித்தது. சற்றே கோவமும் வந்தது இது தானே பெண்களின் பலகீனம். முகத்தை கடுமையாக வைத்துக்கொண்டான்

“இப்போது என்ன நடந்துவிட்டதென்று இப்படி ஒரு அழுகை? அது தான் சரியான நேரத்தில் வந்துவிட்டோமே”

அவன் அதட்டலுக்கு கட்டுபட்டவள் போல அழுகையை நிறுத்திக் கொண்டாள். லேசான விசும்பல் மட்டும் நீடித்தது. காரை அவன் அடித்து விரட்டியது போல் தான் சத்தத்துடன் கிளம்பியது. மூடி இருந்த கேட்டை திறந்து விட்ட வாட்ச்மேன் ஒரு சல்யூட்டையும் வைத்தான்.

“கொடுத்த இருபதாயிரத்துக்கு இந்த’ சல்யூட்டும் சேரும் போல” நிலைமையை சகஜமாக்க கிண்டல் பேசினார் உஷா.

“என்ன? இருபதாயிரமா?.. அவ்வளவு பணமா? என்னை காப்பாற்றவா...? இதை நான் எப்படி அடைப்பேன் வேண்டுமானால் அடுத்த மாதம் என் சம்பளத்திலிருந்து ஐந்தாயிரம் பிடித்துக் கொள்ளுங்கள் நான்கு மாதத்தில் தீர்ந்துவிடும்” பேசியபடியே முன் டிரைவர் சீட்டின் மேல் இருந்த கண்ணாடியில் கார்த்திகேயனின் முகம் பார்த்தவள் பேச்சை நிறுத்தினாள்.

கோவத்தினால் சிவந்து விரிந்து விழிகள் கடுகடுத்த முகம், முடிச்சிட்ட புருவம் பார்க்கவே பயமாக இருந்தது தாமரைக்கு.

உஷாவோ, “என்ன பேச்சு தாமரை கேவலம் பணமா நமக்குள் இருக்கிறது? இதில் நீ கணக்கு போடும் படி எதுவும் இல்லை”

பேசியவர் தாமரையின் விழி சென்ற வழி பார்த்தார் கார்த்திகேயனின் விழிகளுக்கு அவை வழிகாட்டின

அவன் முறைக்க, இவள் விழிக்க, இனி தன் பேச்சு இங்கே அதிகப்படி என்பதை உணர்ந்து அமைதி அடைந்தார்.
 

Meena

Saha Moderator
Staff
Messages
1,082
Reaction score
91
Points
48
10

நெற்றியிலும். கால் முட்டியிலும் வெள்ளை கட்டுகளுடன் சோபாவில் சாய்ந்திருந்தாள் தாமரை. கையில் ஒரு கோப்பை சாத்துக்குடிச்சாரு/ அவள் எத்தனை மறுத்தும் உஷா விடாபிடியாய் தன் வீட்டிற்கு தாமரையை அழைத்து வந்துவிட்டார்.

“இந்த காயங்களுடன் சென்றால் அப்பா பயந்து விடுவார். அவருக்கு தகவல் சொல்லிவிட்டேன். நீ வர தாமதமாகும் என்று உன் அப்பாவிடம் நடந்தை எல்லாம் சொல்ல வேண்டாம். ரொம்பவும் வருத்தபடுவார். ஆபிசில் தவறி விழுந்ததாக கூறிவிடு சரிதானா?” இப்படி மூச்சு விடாமல் பேசும்போது மறுத்து பேசுவது எப்படி அப்படி அவர் விட்டாலும் கார்த்திகேயன் விட்டுவிடுவானா என்ன கார் அவன் கட்டுப்பாட்டில்தானே. அவள் பின்னிருந்து கத்த கத்த கொஞ்சமும் லட்சியம் செய்யாமல் தன் வீடு நோக்கி விரைந்தவன் தானே.

கார் ஹாரன் சத்தம் கேட்டு திறந்த பெரிய கேட்டிற்கு பின் இப்படி ஒரு மாளிகையை அவள் கற்பனை கூட செய்யவில்லை. ஒரு நிமிடம் கார் தார் ரோட்டில் சென்று பின் தான் போர்ட்டிகோவில் நின்றது. மூவரும் இறங்கியவுடன் டிரைவர் உடுப்பில் இருந்தவர் பவ்யமாக வந்து கார்த்திகேயனிடம் சாவி பெற்று காரை கிளப்பிக் கொண்டு பின்புறம் சென்றுவிட்டான். ஷெட் பின்புறம் போலும் என்று நினைத்துக் கொண்டாள். அந்த ரோட்டின் ஒருபுறம் நீச்சல் குளம் மறுபுறம் செடி கொடிகள் டீ டேபிள் எல்லாம் இருந்தது. வீட்டின் கதவே மிகவும் பிரம்மாண்டமாகவும் நுண்ணிய வேலைப்பாடுகளுடனும் அழகாய் காட்சியளித்தது. போர்ட்டிகோவின் நறுமணம் நாசியை நிறைத்தது. ஹாலில் பிரம்மாண்டமான சோபாக்கள், பூ அலங்காரங்கள், திரைச்சீலைகள், புகைப்படங்கள் எல்லாம் அழகாக பரமாரிக்கப்பட்டிருந்தன. அந்த ஹாலின் பாதி அளவு தான் தாமரையின் முழுவீடே! உள்ளேயே படிகள் வைத்து முதல் தளத்திற்கு சென்றது அங்கும் சில அறைகள் தென்பட்டது. பார்க்க பார்க்க உள்ளுக்குள் ஏதோ ஒன்று உடைவது போல் உணர்ந்தாள் தாமரை, இவ்வளவு பணக்கார கார்த்திகேயன் என்னுடன் எப்படி சகஜமாக பழகுகிறார். அவர் அமெரிக்க முறையை கையாள்கிறாரோ? அப்படியானால் தான் நினைத்தது எல்லாம் பகல் கனவுதானா? அவர் எல்லோரிடமும் பழகுவது போல் தான் இயல்பாய் பழகியிருக்கிறார். தப்பு நிச்சயம் என்மேல் தான். ஏனோ அழுகை வந்தது கார்த்திகேயனின் பாராமுகமும் தான் அதை நிருப்பிக்கிறதே. அமைதியாய் உஷாவின் முதலுதவிக்கு ஒத்துழைத்தாள். கூடவே இருந்து கேட்பதை எல்லாம் எடுத்துக் கொடுத்தவன். உள்ளே சென்று சில நிமிடங்களில் கையில் பழச்சாருடன் வந்தான். அவளிடம் நேரே கொடுக்காமல் உஷாவிடம் கொடுத்துவிட்டு சென்று விட்டான்.

கோபம்தான் நல்ல கோபம் ஏன் என்று தான் தாமரைக்கு விளங்கவில்லை. அடியின் வலியை விட அவனின் பாராமுகம் தந்த வலி அதிகமாய் பட்டது

“அம்மா நான் தாமரையை அவள் வீட்டிலேயே விடுகிறேன். அப்போது தான் அவள் அப்பாவிற்கு நிம்மதியாய் இருக்கும்”

பேண்ட் பாக்கெட்டினுள் கைகளை நுழைத்தவாறு வந்தவன் அதற்குள் வேறு உடைக்கு மாறி இருந்தான்.

“சரி கார்த்தி நானே சொல்லனும்னு இருந்தேன்”

“மேடம் நீங்களும் வாங்களேன் என் வீட்டுக்கு”

ஏதோ கேட்க வேண்டுமே என்று கேட்டுத் தொலைத்துவிட்டாள் அதன் பலன்.

மறுபடியும் கார்த்திகேயனின் சுட்டெரிக்கும் பார்வைக்கு ஆளானாள்.

ஏனோ உஷா வர மறுத்துவிட்டார். மிகவும் அசதியாக இருக்கிறது என்று அவர் கூறும் போது என்ன செய்ய முடியும் ஏனோ தாமரைக்கு கார்த்திகேயனுடன் தனியே செல்ல பயமாக தான் இருந்தது. அவனின் அளவுக்கதிகமான கோபம் தான் அவளை பயம் கொள்ளச் செய்தது. உஷாவோ அவளின் பயந்த முகத்தை பார்த்து வேறு அர்த்தம் கற்பித்துக் கொண்டார்.

“பயப்படாதே தாமரை அப்பா எதுவும் சொல்லமாட்டார். அதுதான் கார்த்திகேயன் உடன் வருகிறானே!”

பாவம் அவருக்கு எப்படி தெரியும் அவளின் பயமே கார்த்திகேயன் தான் என்று.

கார் தாறுமாறாக ஓடிக் கொண்டிருந்தது. அத்தனை வேகத்திலும் சரியாகவே ஓட்டினான். நிச்சயம் அதை பாராட்டி தான் ஆக வேண்டும்.

அவனை பார்ப்பதை தவிர்க்க வெளியே வேடிக்கை பார்த்தாள். கவனம் அதில் இல்லைதான். அவனின் கோபத்தின் காரணம் என்னவாக இருக்கும் என்று மனம் பலவாறு யோசித்து குழம்பியது.

பதினைந்து நிமிட அமைதி ஓர் யுக அமைதிபோல் தோன்றியது. நெஞ்சம் வெடித்து விடும் போல் இருந்தது தாமரைக்கு போதாக்குறைக்கு அவனின் அடிக்கடி சடன்பிரக்குகளும் வெடுக் வெடுக் என கீரையே உடைத்துவிடும் திருப்புகளும் அவளை மேலும் பயப்பட வைத்தது. இனி தாங்காது என்று உணர்ந்தவள் தன் தன்மானத்தையும் விட்டுப் பேசினாள்.

“என்... என்... மேல்.. ஏதேனும் கோபமா?” முடிப்பதற்குள் நான்கு முறை திக்கி திணறிவிட்டாள்.

மறுபடியும் அவள்புறம் ஒரு அனல் கக்கும் பார்வையை வீசியவன். வண்டியை ஓரத்தில் வெட்டி நிறுத்தினான். அவள் புறம் நன்றாக திரும்பி அமர்ந்து.

“என்ன.. கேட்டாய்?” கடித்த பற்களின் ஊடே வார்த்தைகள் சிதறியது.

“....”

“கோபம்.. உன் மீதுதான் இதில் உனக்கு சந்தேகம் வேறா? எப்படி ஒரு ஆபத்தில் சிக்க இருந்தாய். கொஞ்சம் நாங்கள் வர தாமதமாகி இருந்தால்? அல்லது நீ தொடர்பு கொண்ட போது அம்மா கவனிக்காமல் இருந்திருந்தால்?”

அவன் நரம்புகள் துடிப்பது போல் விறைப்பாய் இருந்தன.

“அறிவு சுத்த மட்டுதான். அந்த அயோக்கியனின் முகமே கூறுகிறதே அவனின் குணத்தை பற்றி அவனை நம்பி எப்படி ஏறினாய்?” ஸ்டியரிங்கில் ஓங்கி ஒரு குத்து குத்தினான்.

அவள் வாங்க வேண்டியது பாவம் ஸ்டியரிங் வாங்கியது.

“அப்பாவிற்கு.. உடம்பு சரியில்லை என்று?”

“மண்ணாங்கட்டி”

“இல்லை மிகவும் பயந்து விட்டேன். யோசிக்க முடியவில்லை. தப்புத்தான் மன்னித்துவிடுங்கள்” அழுகை கலந்து ஒலித்த குரலில் மனம் இறங்கினான் கார்த்திகேயன்.

“சரி விடு ஏதோ கொஞ்சம் மூளை இருந்தால் போன் மூலம் தகவல் தெரிவித்து விட்டாய் எல்லாம் நல்லபடியாக முடிந்தது” இளகிய அவன் முகம் உடனே கருத்தது.

“பிறகு என்ன சொன்னாய் உன் சம்பளத்தில் கழித்துக் கொள்ளவா?

நமக்குள் இருப்பது வெறும் சம்பளம் கொடுக்கும் முதலாளி தொழிலாளி உறவுதானா?”

“...” இல்லை என்று சொல்ல ஆசை தான். ஆனால் வாய் வரவில்லை.

“உன் மௌனத்தின் பொருள் விளங்கவில்லை இருப்பினும் என் கருத்தை நான் கூறுகிறேன். வெறும் தொழில்முறை உறவாக நான் கருதவில்லை. சரி போகலாமா? நேரமாகிவிட்டது உன் அப்பா கவலைப்படுவார்”

தலை மட்டும் அசைத்தாள் இன்னமும் அவன் நேரடியாக எதுவும் கூறவில்லையே எப்படி புரிந்து கொள்வது.

சில நிமிட இடைவேளைக்கு பின் அவனே பேசினான்.

“படிப்பது கீதை போதிப்பது குரானா?” என்ற அவனின் புரியாத கேள்விக்கு பதிலளிக்க தெரியாமல் விழிவிரித்தாள்.

“என்ன புரியவில்லையா?” இன்று நீ நடந்து கொண்டதற்கும் நீ படிக்கும் லட்சுமியின் நாவலுக்கும் கொஞ்சமும் ஒட்டவில்லை.

பேசியவன் காரின் பாக்சை திறந்து ஒரு புத்தகத்தை எடுத்து வெளியே வைத்தான்.

“நேசம் நெஞ்சோடு” என்ற தலைப்பை பார்த்ததும் ஆவலானாள் தாமரை. அந்த நாவலை அவள் இருமுறை படித்தவளாயிற்றே. இதில் அவன் அதை குறிப்பிடுகிறான் என்று நினைத்தவள். அதன் கதையையும் அதில் வரும் சம்பவங்களையும் ஒன்றன்பின் ஒன்றாக நினைத்து பார்த்தாள். சில நிமிட யோசனைக்கு பின் முகம் சிவந்து விட்டது தாமரைக்கு. காரணம் அந்த நாவலின் கிளைமாக்ஸ் அப்படி. இறுதி காட்சியில் கதாநாயகியை கடத்திக் கொண்டு செல்லும் கும்பலிடமிருந்து தப்பிக்க பாடாய் படும் தருணத்தில் கதாநாயகன் வந்துவிடுவான்.அவனை பார்த்த அடுத்த நிமிடம் அவன் நெஞ்சில் தஞ்சமடைவாள் கதாநாயகி ஒருவேளை அதைத்தான் குறிப்பிடுகிறானோ? எதுவும் தெளிவாக இல்லையே யோசித்தவள் அவனை ஓரக்கண்ணால் பார்த்தாள்.

“ம்.. ஹும்.. அந்த கொடுப்பினைதான் எனக்கு இல்லையே எத்தனை ஆவலாக வந்தேன் தெரியுமா? படித்தால் மட்டும் போதுமா? அதன்படி நடக்க வேண்டாமா? சுத்த போங்கு தான்” சலித்துக் கொண்டான்.

இதழ்கடையில் இளநகை மலர்ந்தது தாமரைக்கு.

“ஆனால் ஒன்று சொல்லியே ஆகவேண்டும் தாமரை உன் குரு லட்சுமி அவர்களின் கையில் இருப்பது பேனா அல்ல மந்திரக்கோல். ஒவ்வொரு எழுத்திலும் நம்மை வசியம் செய்யும் மந்திரக்கோல்தான். அத்தனையும் உணர்வுப்பூர்வமான எழுத்துகள் சிம்பிளி சூப்பர்ப்” மனதிலிருந்து பேசுகிறான் என்று அவன் கண்களே சொல்லியது.

“உண்மைதான் அதனால்தானே அவர்களின் எழுத்தின் மேல் வாசகர்கள் பைத்தியக்காரர்களாக இருக்கிறார்கள்”

“ம்.. அதுவும் சரிதான். ஆனால் எனக்கு சில விஷயங்கள் முரணாகவே பட்டன”

“அப்படியா? என்னவென்று சொன்னால் அது முரணாக இருக்கிறதா என்று நானும் யோசிப்பேன்”

“ஓ.. அதற்கென்ன சொன்னால் போகிறது. நான் படித்த புத்தகங்களை வைத்து மட்டும்தான் நான் பேசுகிறேன் சரிதானா?

கதையின் விறுவிறுப்பில் எந்த பிரச்சனையும் இல்லை.ஆனால் அது என்ன நடுநடுவில் பழமொழி என்ற பெயரில் குழப்பங்கள்”

“பழமொழியில் என்ன சார் குழப்பம்”

“சொல்கிறேன்.. அது என்ன உள்ளங்கை நெல்லிக்கனி, ஏன் உள்ளங்கையில் பூசணிக்காயை வைத்தால் கூட தான் தெளிவாக தெரியப் போகிறது. அதோடு காலத்திற்கேற்ப உள்ளங்கை சீஸ் பால்ஸ், உள்ளங்கை ப்ரெஞ்ச்பிரை என்று மாற்றினால் நன்றாக இருக்கும்” இப்படி சிரிக்காமல் கூறுபவனை பார்க்கையில் அடக்கமாட்டாமல் சிரிப்பு வந்தது தாமரைக்கு. வயிற்றை பிடித்துக் கொண்டு சிரித்தவள்.

“ம்.. அப்படியும் மாற்றலாம் தான். ஆனால் அதற்கு நீங்கள் ஒரு கதை எழுத வேண்டும். அதில் இதெல்லாம் புதுமையாக செய்து பார்க்கலாம்.. என்ன தயாரா?”

“எ...என்ன.. கதையா? நானா? வேண்டாம் வேண்டாம் தமிழ் மக்கள் பாவம்”

“தெரிந்தால் சரி, ம்.. வேறு என்ன முரண் இருக்கிறது”

“ஆ.. ஆங்... ம்.. அது என்ன ஏழைக்கேற்ற எள்ளுருண்டை?ஒன்று தெரியுமா? நேற்று தான் ரிலையன்ஸ் ஃபிரஸ்சில் விசாரித்தேன். ஒரு எள்ளுருண்டை பாக்கெட் 120 ரூபாயாம் அது எப்படி ஏழைக்கு ஏற்றதாக இருக்கும். ஏழைக்கேற்ற பிசா என்று மாற்றிவிடலாம். அதுதான் இருபது ரூபாயிலிருந்து கிடைக்கிறது. இவர் உபயோகிக்கும் பழமொழி எல்லாம் அந்த காலத்திற்குதான் பொருந்தும் இப்போது இருக்கும் நிலைமைக்கேற்ப மாற்றினால் எத்தனை உயிரோட்டமாய் இருக்கும். அவனின் கேள்விக்கு சில நிமிட மௌனம் தான் விடையாய் கிடைத்தது. பிறகு தான் தாமரை பேசத் தொடங்கினாள்.

“அது அப்படி அல்ல சார், சில பழமொழிகள் நாம் மறக்கக் கூடாது அதை பாடப்புத்தகத்தில் படித்தால் மண்டைக்குள் ஏறுவதில்லை அதனால் இப்படி கதை புத்தகங்களில் வசனத்துடன் வசனமாக சேர்த்தால் அது மூளைக்குள் அழகாக ஏறிவிடும் சரிதானா?”

“உன் குருவாயிற்றே எப்படி விட்டுக் கொடுப்பாய் சரி அதைவிடு. நான் படித்த ஆறு கதைகளின் கருவும் ஒன்று மட்டும்தான். கதாநாயகன் நாயகி சண்டையில் ஆரம்பம் காதலில் முடிவு அல்லது எதிர்பாராத திருமணம் பிறகு மெல்லமலரும் காதல், அல்லது திருமணம்,முறிவு பிறகு ஒரு மறுமலர்ச்சி காதல். இப்படி எல்லாம் ஒன்று போல் இருவருக்கும் இடையிலான மோதல் காதல் அவ்வளவே. இறுதியில் முடிவிலும் எந்த மாற்றமும் இல்லை சுபம் தான்”

“ஆங்.. நீங்கள் சொல்வது உண்மைதான் ஒத்துக் கொள்கிறேன். கரு ஒன்று தான் முடிவும் ஒன்று தான். நீங்கள் படித்த கதைகள் ஏதேனும் ஒன்றிற்கு உங்களால் ஆன்டி கிளைமாக்ஸ் கொடுக்க முடியுமா? அதாவது கதாநாயகன் நாயகி பிரிவது அல்லது இறப்பது போல்... ம்.. சொல்லுங்கள் முடியுமா?”

இதே கேள்வியை அவன் தாமரையை பார்ப்பதற்கு முன்பு யாரேனும் கேட்டிருந்தால் நிச்சயமாய் அவன் பதில் குதர்க்கமாக தான் இருக்கும். ஆனால் இப்போது? அவன் மனம் முழுமையும் காதலால், அன்பினால் நிரம்பி வழிகிறதே அவன் எப்படி சோகமான முடிவை ஏற்பான், முடியாது தான். உலகில் உள்ள அத்தனை காதலும் வெற்றி அடைய வேண்டும் என்பது தான் அவனது ஆசை.

“எ..என்ன பதிலையே காணோம் உங்கள் மௌனம் உங்களின் பேச்சை தவறு என்று ஒத்துக்கொள்கிறது. சரியா? இதுதான் நமது மனம். யாரும் கவலையை அனுபவிக்க நம் மனம் ஒத்துக் கொள்வதில்லை. எல்லோரின் மகிழ்ச்சியையே அது எதிர்பார்கிறது. அதை நிறைவேற்றி வைப்பதே ஒரு எழுத்தாளரின் கடமை. அதை தான் என் குரு லட்சுமியும் செய்கிறார். விளக்கம் போதுமா?”

விழிவிரித்து அவளின் விளக்கத்தை கேட்டவன்,

“ஆ.. ஆங்.. இப்போதுதான் புரிகிறது உங்கள் லட்சுமி எழுதுவது நூற்றுக்கு நூறு உண்மையே”

“இப்போதாவது புரிந்தால் சரி” பெருமித பார்வையை வீசினாள் தாமரை

“ஆமாம்.. ஆமாம் பெண்களிடம் பேசி ஜெயித்த ஆண்மகன் எண்ணிக்கை மிகவும் குறைவு என்று அவர் எழுதியது எத்தனை உண்மை”

சிரிப்பை அடக்கி பொய்யாய் ஆச்சர்யப்பட்டான்.

ஆனால் தாமரையால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

அவள் சிரித்து முடிக்கும் வரை காத்திருந்தவன் சிறு மௌனத்திற்கு பின் பேசத் தொடங்கினான்.

“பார்வதி தேவிக்கு கோடான கோடி நன்றி தெரிவித்து விட்டாய். உன் முருகப்பெருமானுக்கு நன்றி கிடைக்காதா?” குறும்பாய் அவளை பார்த்தான்.

“...”

கண்டுபிடித்துவிட்டான். அவள் எதை நினைத்து அப்படி கூறினாலோ அப்படியே கண்டு கொண்டான். முகம் சிவந்துவிட்டது.

“வந்து ரொம்பவும்... நன்றி சார் நீங்கள் வேகமாக இருந்ததால்..” அதற்கு மேல் அவளால் பேச முடியவில்லை. காரணம் அவள் வலது கையை கார்த்திகேயனின் இடது கை அழுத்தமாக பற்றி இருந்தது.புரியாமல் அவன் முகம் பார்த்தாள்.அவன் தாபத்தோடு அவளை பார்த்துக் கொண்டிருந்தான். பற்றிய கையை உதட்டருகே அவன் எடுத்துச் செல்லவும். இதுதான் நடக்கப் போகிறது என்றுணர்ந்தவளாய் அவசரமாக கையை உதறி விடுத்துக் கொண்டாள்.

ஏமாற்றமாய் அவளை பார்த்தவன்,

“உன் முருகனுக்கு இந்த உரிமை கூட இல்லையா?” ஏக்கம் தெரிந்தது.

“வந்து.. இப்..இப்போது இல்லை”

“புரியவில்லை”

“தயவு செய்து என்னை வேறு எதுவும் கேட்காதீர்கள் அதோ வீடு வந்து விட்டது மூன்றாவது வீடுதான்” பேச்சை மாற்றினாள்.

ஒரு பெருமூச்சுடன் வண்டியை நிறுத்தினான்.
 
Top Bottom