Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


பெண்களின் உணர்வுகளில் ஒரு சில

dharshini chimba

Saha Writer
Team
Messages
271
Reaction score
167
Points
43
திருமண உணர்வுகள்

ஊர்மக்கள் கூடி நிற்க, கெட்டிமேளம் விண்ணை பிளக்க, படடுப்புடவை சரசரக்க தலைநிமிரா பதுமையென பெண்ணவள் வந்தமர்ந்தாள் மணவறையில்.

அக்கினியின் தனல் என்னவோ சுடவில்லை, ஆனால் அருகில் இருப்பவனின் சிறு தீண்டலில் தனலாய் திஹித்தது அவளின் மேனி.


தோழிகளின் சீண்டலோ? ஐயரின் மந்திரம் ஓதலோ? பெற்றோரின் வார்த்தைகளோ? மற்றவரின் உரையாடலோ? எதுவுமே ஏற்கவில்லை மூளையது.

மணப்பெண்ணின் நாணமோ, புது உறவுகள் சூழ நிற்கும் தயக்கமோ, அடுத்து என்ன என்ற பதட்டமோ, தன் அருகில் இருப்பவனின் முகம் நோக்காமல் கவிழ்ந்தே இருந்தது தலை.

லட்சமோ லட்சத்தி ஒன்றோ என்று அறியாமல் தொடர்கின்றது பட்டாம்பூச்சிகளின் ஊறல் அவளின் அடிவயிற்றில்.

திருமணம் என்றவுடன் தடைகள் பல வர என் மகளின் முன் முக்கியம் எதுவுமில்லை என தூணாய் நிற்கும் தந்தையை பிரியபோகும் வேதனை ஆழமாய் இதயத்தை கிழித்திட...

சில நேரங்களில் குருதி வரும் வரை சண்டையிட்டாலும் பல நேரங்களில் தங்களுக்கு நடுவில் யார் வந்தாலும் துரத்தி அடிக்கும் பாசம் மேலோங்கும், தங்கைக்கு பிடிக்கும் என்பதால் தனக்கு பிடிக்காது என கூறி வெளியே சண்டையிடுவது போல் தெரிய உண்மையில் அவளுக்காக விட்டுக்கொடுக்கும் தமையனின் விழிகள் நீர் சுரக்க, கலங்கி ஓரமாய் நிற்பதை கண்டு அவனை பிரியப்போகும் தருணம் நெருங்குவதை உணர்ந்து வலியில் துடித்திட...

"பெண்பிள்ளையென்ற பொறுப்பில்லை" என்று ஆயிரம் முறை வெளியில் நொடித்தாலும், தன் வாய் திறக்காமலே மகளின் தேவையென்ன என்பதை அறிந்து பூர்த்தி செய்யும் தாயவளை விட்டு விலகபோகும் நேரம் வந்துவிட்டதை எண்ணி மனம் கலங்கிட...

வியர்வைத்துளிகள் நெற்றியில் அரும்பு, விழிகள் இறுக மூடியிருக்க, ஒரு சொட்டு கண்ணீர் துளி வழிந்தோட, அனைவரின் ஆசியோடு திருமண பந்தத்தில் இணைக்கும் மஞ்சள் கயிரெனும் மாங்கல்யத்தை "இனி உனக்கு எல்லாமே நான் தான்" என்று செவிகளில் கிசுகிசுத்தபடி மூன்று முடிச்சிகளையும் தானே போடும் கணவனின் சொற்களில் பிடரிமயிர் நின்றது அவளுக்கு.

வந்தவர்கள் வயதானவர்கள் என அனைவரும் மனதார வாழ்த்த அனைவரையும் அறிமுக படுத்தும் படலத்தில் சற்று களைத்ததென்னவோ உண்மைதான்.

சடங்குகள் சம்பிரதாயங்கள் என எண்ணிலடங்கா முறைகளில் இரண்டு நாட்கள் நொடிகளாய் கழிந்திட, கணவனின் கரம் பற்றி பெற்றோரின் கரம் விடும் நேரம் வந்தது.


"நல்லபடியா போய்ட்டு வாடா. இனி அவங்க தான் உன் முதல் உறவுகள். எந்த ஒரு சூழ்நிலையிலும் தேவையற்ற சொற்களும் யார் வாயிலும் வராதபடி நடந்துகொள்." என்று உச்சிமுகர்ந்து விழியோரம் துளிர்க்கும் கண்ணீரை மறைக்கும் தந்தை.

"அக்கா பத்திரம் போன உடனே எங்களுக்கு போன் பண்ணு" என்று கண்ணீருடன் நிற்கும் உடன் பிறவா தங்கை தம்பிகள்.

"பாப்பா! தினமும் இல்லன்னாலும் ரெண்டு நாளைக்கு ஒரு முறையாவது போன் பண்ணுடா. என்கிட்ட சண்டை போன்ற மாதிரி மச்சான்கிட்டயும் சண்டை போட்டுட்டு இருக்காத. இனி நிறைய பொறுப்புகள் இருக்கு உனக்கு. அதுக்கு ஏத்தாப்புல நடந்துக்கோடா" என்று கட்டியணைத்து உச்சிமுகர்ந்து விழிநீர் சுரக்க வழியனுப்பும் தமையன்.

இறுதியில் நான் குடியிருந்த கோவிலாக நிற்கும் தன் தாய்.

"போறது புது இடம்டா. எல்லாருக்கும் புடிச்க மாதிரி நடுந்துக்க முயச்சி பண்ணு. எடுத்ததுக்கெல்லாம் மூஞ்ச தூக்கீ வச்சிக்கிக்கூடாது. அது உன் புகுந்த வீடு. இன்பமோ துன்பமோ எல்லாரையும் அனுசரிச்சு போ. என்ன வாக்குவாதம் இருந்தாலும் உங்க வீட்டுக்காரர்கிட்ட விட்டுக்கொடுத்து போடா. அம்மா தினமும் போன் பன்றேன்" என்று அடக்க முடியாமல் அழும் மெல்லிய இதயம் கொண்ட அம்மா.

இவர்களின் பேச்சில் கரைந்து அவளும் விழிகளில் நீரோடு நிர்க்க.

"அப்போ! கிளம்புறோம் மாமா, அத்தை டைம் ஆகுது ட்ரைன்க்கு" என்று அவளின் கரத்தை ஆறுதலாய் அழுத்தும் கணவனை நோக்கினாள்.

'நானிருக்கிறேன். எல்லாம் சரியாகிடும்' என்று விழிகளை மூடி திறந்து ஆறுதல் கூறினான்.

"மாப்பிள்ளை! சின்ன பொண்ணு ஏதாவது தப்பு பண்ணா எடுத்து சொல்லுங்க புரிஞ்சுப்பா. திட்டிறாதிங்க" என்று கூறும் தந்தையின் பின் அதே வார்த்தைகளை விழிகளால் பேசி நிற்கும் தாயும் தமையனும்.

அவர்களை கண்டு லேசாக புன்னகை பூத்தவன், "நீங்க யாரும் கவலை படாதீங்க. நான் பார்த்துக்கிறேன்" என்று ஆறுதல் கூறி கிளம்பி ரயில் நிலையம் செல்லும் வழிநெடுகிலும் இருவரின் இதயங்கள் மட்டுமே பேசி கொண்டு வந்தன.

ரயில் நிலையம்,

தங்கள் ரயில் பெட்டியை கண்டு கொண்ட பின் ஏறி அமர்ந்தனர். பிறந்த வீட்டை பிரிவது, சொந்தங்களை பிரிவது, புது உறவு, புது பயணம் என்று மனம் மகிழ்ச்சியிலும் துன்பமுமாய் மாறி மாறி சுழன்று கொண்டிருக்க, விழிகள் மூடி சாய்ந்தவளின் நிலை அறிந்தவன் மெல்ல அவளின் இடக்கரத்தில் தன் வலக்கரத்தை வருடி இறுக பற்றினான்.

திடிரென்ற தொடுதலின் மின்சார தாக்கத்தில் விழி திறந்தவள் அவனையும் கரங்களையும் பார்க்க, "உனக்கு கஷ்டமா தான் இருக்கும். ஆனா இனி என் வாழ்க்கையோட இறுதி மூச்கு வரை உன்கூட தான் இருப்பேன். உனக்கு என்ன வேணும்னாலும் தயங்காம சொல்லு, கேளு நான் இருக்கேன். இனி நீ நான் வேற வேற இல்ல புரியுதா?" என்று அவளின் விரல்களில் மென்மையாய் இதழ்களை பதித்தான்.

அவன் வார்தைகள் சிறு தெம்பூட்ட தன்னவன் தோளில் சாய்ந்து தான் புது வாழ்க்கை நோக்கி பயணத்கை தொடங்கினாள்.

மகளாய் பிறக்கும் ஒவ்வொரு அவளுக்கும் இக்கதை சமர்ப்பணம்..

உங்கள் தர்ஷினிசிம்பா.​
 
Top Bottom