Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


RD NOVEL போகாதடி என் பெண்ணே! - Tamil Novel

Status
Not open for further replies.

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
607
Reaction score
780
Points
93
வணக்கம்,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டியில் கலந்துகொள்ளும் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.

போட்டியின் விதிமுறைகள், காலக்கெடு மற்றும் பரிசுகள் பற்றிய விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் விபரமாக குறிப்பிடப்பட்டுள்ளது. மீண்டும் ஒருமுறை அதை படித்துப் பார்த்துவிட்டு உங்களுக்கு முழு சம்மதம் என்றால், உங்களுடைய கதையை இந்த திரியில் தொடர்ந்து பதிவிடவும்.

உங்களுடைய கதை வாசகர்களை மகிழ்விக்கும் வகையில் அமையவும் போட்டியில் நீங்கள் வெற்றிபெறவும் வாழ்த்துகிறேன்.
 

Writer X

Well-known member
Vannangal Writer
Messages
463
Reaction score
616
Points
93
வணக்கம்,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டியில் கலந்துகொள்ளும் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.

போட்டியின் விதிமுறைகள், காலக்கெடு மற்றும் பரிசுகள் பற்றிய விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் விபரமாக குறிப்பிடப்பட்டுள்ளது. மீண்டும் ஒருமுறை அதை படித்துப் பார்த்துவிட்டு உங்களுக்கு முழு சம்மதம் என்றால், உங்களுடைய கதையை இந்த திரியில் தொடர்ந்து பதிவிடவும்.

உங்களுடைய கதை வாசகர்களை மகிழ்விக்கும் வகையில் அமையவும் போட்டியில் நீங்கள் வெற்றிபெறவும் வாழ்த்துகிறேன்.
☺☺thankyou mam
 

Writer X

Well-known member
Vannangal Writer
Messages
463
Reaction score
616
Points
93
Hi மக்களே 😁😁

நான் யாரு தெரியுமா 😅😅அத அப்புறம் பாக்கலாம் முத என் வரலாறு சொல்றேன் கடந்த 4 லு வருஷத்துக்கு முன்ன நான் 11 த் படிச்சன் அப்போதான் நாவல் னா என்னனே தெரியும் ..படிச்சதும் எனக்கு தோன்னது நம்மலும் எழுதி பாக்கலாம்னு தான் .இந்த கதை ஒரு ஆழமான காதலையும் இந்த சமூகத்தில் பெண்களுக்கு நடக்கும் அவலங்களையும் பற்றியது.ஒரு 2k பொண்ணா எனக்கு எப்படிப்பட்ட சமுதாயம் அமையனும் அப்படினு இந்த கதைல நான் எழுத போறேன்.என்னோட தவற சுட்டி காட்டி நான் நல்லா எழுத என்ன உக்குவிக்கவிப்பிங்கனு நம்பறேன்🧚‍♀🧚‍♀
 

Writer X

Well-known member
Vannangal Writer
Messages
463
Reaction score
616
Points
93
டீசர்

போகாதடி என் பெண்ணே!

நாயகன் : ஆதி அதியன்
நாயகி. : ஆராதனா


"ஐ லவ் யு ஆராதனா இந்த உலகத்துல எனக்கு ரொம்ப பிடிச்சவனா அது நீதான் என் அம்மா அளவுக்கு . உன்ன கடைசி வரைக்கும் நான் நல்லா பாத்துப்பேன் "


"சார் நான் உங்கள அந்த மாதிரி நினைச்சது இல்ல ப்லீஸ் இப்படி காதல் கத்திரிக்காய்னு உளறாதிங்க எங்க வீட்டுக்கு தெரிஞ்சா வேலைக்கு அனுப்ப மாட்டாங்க"

"ஆராதனா என்ன எது சொன்னாலும் அமைதியா இருப்பேன் பிகாஸ் ஐ ஃபில் ஐயம் யுவர்ஸ் பட் நாட் மை லவ் நான் என்ன வெடல பையனா ஆதி டி தி கிரேட் இன்டஸ்ரியலிஸ்ட் ஆதி அதியன் என் லவ் உனக்கு உளறலா" உச்சகட்ட கோபத்தில் சீறினான் ஆதி

"இங்க பாருங்க சார் நீங்க பணக்காரங்களா இருக்கலாம் அதுக்காக எல்லாம் உங்கள லவ் பண்ண முடியாது உங்க கிட்ட வேலை செஞ்சா டி போட்டு பேசுவீங்களா நாட் ஃபேர் "முகத்தை சுளித்து கொண்டே அவள் பேசியது அவனுக்கு இன்னும் கோபத்தை அதிக படுத்தியது .

அவளை நெருங்கி அவள் கன்னத்தை ஆழுந்த பற்றியவன் "எத்தன ஜென்மம் பிறந்தாலும் நான் உன்ன தேடி வருவேன் நீ மட்டும் தான் என் பொண்டாட்டி அட் த சேம் டைம் நான் மட்டும் தான் உன் புருஷன் "என்றவன் மேலும் நெருங்கி ஒற்றை கையால் அவளை இடையோடு அனைத்தவன் தன் இதழ் கொண்டு அவள் இதழை மூடினான்.

####
"பொறுக்கி நாயே கைய எடுடா " ஆக்ரோஷமாக அவன் கன்னத்தில் அறைந்து இருந்தாள் ஆராதனா

####
"மச்சான் அந்த பிகர பாருடா .."

"டேய் ஆன்டிடா "

"அதுதான்டா கிக்கா இருக்கும் இரு நான் கொஞ்சம் மசாஜ் பண்ணிவிட்டு வரேன்" இளித்து கொண்டு சென்றான்

"டேய் நேக்ஸ்டு நானு "

####
"அண்ணா அண்ணா பிலீஸ் என்ன விடுங்க எனக்கு வலிக்குது பயமா இருக்கு ..அம்மா கிட்ட போகணும் அம்ம்மாஆஆ அம்மாஆ " ஈனஸ்வரத்தில் முனுகினாள் அந்த சிறுமி

"நாங்க விசாறிச்சிட்டுதாங்க இருக்கோம் குற்றவாளிய சீக்கிரம் கண்டு பிடிச்சி நீதிமன்றத்துல ஒப்படைப்போம்"தன் முன் நீட்டப்பட்ட மைகளில் பொறுமையாக சொல்லிக் கொண்டு இருந்தார் முரளி .

####
"கெட்டி மேளம் கெட்டி மேளம்" ஐயர் குரல் ஓங்கி ஒலிக்க பெண் மாங்களியம் கோர்த்த மஞ்சள் கயிறை ஆராதனாவின் சங்கு கழுத்தில் கட்டி தன் பாதி ஆக்கி கொண்டான் ஆதி அதியன்.


"ஆராதனா நான் பன்னது தப்பு தான் அதுக்காக என்ன விட்டு போய்டுவியா டி ..ஆரு ..பப்பி பிலீஸ் என்ன பாருமா " ஆதி

"இல்ல நீங்க ஏன் அப்பாவ கொள்ள பாத்துருக்கிங்க நாளைக்கு என்னையும் கொன்னுட்டு .." அவள் முடிப்பதற்குள் அவள் கன்னங்களில் தன் கைகளை பதித்திருந்தான் அதியன்

கண்கள் சிவப்பேறி பார்வையால் அவளை சுட்டேறித்தன .அவள் முழங்கையை பற்றி இழுத்தவன்
"ஏய் போடி போ அதுக்கு முன்ன என்ன கொன்னுட்டு போ உன்ன காதலிச்ச பாவத்துக்கு செத்து தொலையுறன்" உச்சஸ்துதியில் கர்ஜித்தான் ஆதி

"அத்தான் " அதிர்ந்தவள் அவன் மேலே மயங்கி சரிந்தாள்.

"மிஸஸ். ஆராதனா ஆதி அதியன் நீங்க கன்சீவா இருக்கிங்க "

"போகாதடி ஆரு எனக்கு நீ வேனும் பப்பி எழுந்திரிடி எனக்கு பயமா இருக்கு ஆரூ பப்பிமா அத்தானு சொல்லு ஆராதனா " அவள் தோள்களை பற்றி உலுக்கினாள் ஆதி

இத்துடன் டீசர் நிறைவடைந்தது
முக்கிய episode ஐ பார்க்க அடிக்கடி இங்கு வாருங்கள் 🙏🙏

டீசர் பத்தி உங்க கமெண்ட் காக ஆசையாக நான் உங்கள்

போகதடி என் பெண்ணே !
-ரைட்டர் X

Comment link
 
Last edited:

Writer X

Well-known member
Vannangal Writer
Messages
463
Reaction score
616
Points
93

பெண்ணே 1.1​

0XpDXVPMJiDDIuL3GJ9krFDX9GnCKNmZGpDF5OXylZ_iX2wS6ZvG5-3exX8bY9jOrFEudzuk8CCuYnKUFqIJJ8QPIhm54Mf8OZlmR3yOhjBk87HLBTExZh4FSRsXfl81o7p848hk

"அம்மு ஆ வாங்கிக்கோ மா ஸ்கூல் பஸ் வந்துரும்" தன் ஆறு வயது மகள் பின்னே அலைந்தாள் சாந்தினி.​

"அம்மா எனக்கு போதும்"​

"ஒரு வாய் வாங்கிட்டனா நைட் அம்மா உனக்கு பாஞ்சாலி ஆன்ட்டி கதை சொல்லுவேன்"​

"ப்ராமிஸ்" தன் பிஞ்சு கரத்தினை நீட்டி கேட்டது சிட்டு.​

"சரி ப்ராமிஸ்"​

"அப்போ அம்முக்கு ஆ... ஊட்டு" தன் குருவி வாயை திறந்து உணவு வாங்கி கொண்டாள் அந்த சிட்டு.​

உணவு ஊட்டி முடித்து தலை வாரிட்டு அவள் பள்ளி பையை அடுக்கி என அனைத்தையும் செய்து நிமிரும் போது மூச்சு வாங்கியது சாந்தினிக்கு.​

"அம்மு எத்தன தடவ சொல்றது. சாமி கும்பிட்டுட்டு தான் வெளியே போகனும்"​


"ம்மா எனக்கு அந்த சாமிய பாத்தா பயமா இருக்கு நான் வரமாட்டேன்" என்று மிரண்டு விழித்தாள் அவள்.​

"அப்படிலாம் சொல்ல கூடாது அம்மு. இங்க வா எந்த சாமினு அம்மா கிட்ட சொல்லு" மகளுக்கு திருநீறு வைத்தவாறே கேட்டாள் தாய்​

"ஆதோ நிறைய கை வச்ச பிளாக் சாமிமா" தன் தளிர் கரம் கொண்டு அங்கு இருந்த காளி படத்தை காட்டினாள் அவள்.​

"அவங்க காளி சாமி மா "​

"காளினா?"​

"சக்தி டா"​

"சக்தி யாரு?"​

"இதோ இங்க இருக்காங்கள பார்வதி அவங்க தான்" என்று எழில் கொஞ்சும் சாந்த சொரூபினி காமாட்சியின் படத்தை காட்டினாள் பெரியவள்.​

இரு படங்களையும் சிறிது நேரம் பார்த்தவள் "மா ஆனா இந்த படத்துல சிரிச்சிட்டு அழகா இருக்காங்க. அதுல மட்டும் ஏன் முறைச்சிட்டு இருக்காங்க?"​

"அதுவா அம்மு யாராச்சும் பெரிய தப்பு பண்ணிட்டா பார்வதிக்கு கோபம் வந்து அவங்களுக்கு தண்டன தரதுக்காக காளியா மாறிடுவாங்க அதான் கோவமா பாக்குறாங்க"​

"பெரிய தப்புனா?"​

"பெரிய தப்புனா வா ? அது நேத்து அம்மா சொல்லி தந்தனே பேட் டச் அதுதான்"​

"அப்ப நம்மள காப்பாத்த சாமி நேருல வருமா?" இமை கொட்டினாள் சின்னவள்.​

"இல்லடா நம்ம மனசுக்குள்ள வந்து நமக்கு சக்தி தருவாங்க "​

"அப்போ தப்பு நடக்கும் போது நானும் காளி சாமியா மாறி தண்டன தருவனா? பத்து கையு பெரிய யயய கண்ணு!!" தன் கைகளை விரித்து கண்களை உருட்டினாள் தக்ஷிணா.​

தன் பக்தர்களையும் குழந்தைகளையும் துரதிர்ஷ்டங்களில் இருந்தும் பாதுகாக்கும் தக்ஷிணா காளியின் மறு பிறப்பா இவள்?​

"அம்மு ஸ்கூல் பஸ் வந்துட்டு வேகமா வா" மகளை தூக்கி கொண்டாள் சாந்தினி.​

மருண்டு விழிக்கும் பார்வை கனலை ஏந்தும் போது சாம்பலாக போவது ஆண்ஆதிக்கமா? அல்ல பெண் என்ற பேதமா ? புழு பட்டாம்பூச்சியாய் சிறகடிக்கும் போது ரசிக்கும் கூட்டம் எங்கள் சிறகை பிய்த்து எறிவதை கலாச்சாரம் என்று அங்கீகரிப்பது ஏன்?

ஆக்குவதும் அவளே அழிப்பதும் அவளே சிவசக்தி.

விடியல் அறிந்து பறவைகள் இரை தேட செல்ல அதன் ஒலியை மறைத்த வாகன ஓசைகள் மனிதர்களுக்கான இன்றைய டாஸ்க்(task) அதிகாலையிலேயே ஆரம்பித்துவிட்டதை சொல்லியது. இயத்திரங்களால் இயந்திர வாழ்க்கையை நோக்கி சென்று கொண்டு இருந்தனர் மனித இயந்திரங்கள் .​

இந்த அவசர உலகத்தில் அதற்கு எதிராய் மிக பொறுமையாக தன் ஷர்ட்(shirt button) பட்டனை போட்டு கொண்டு இருந்தான் ஆதி அதியன் .​

நேவி புளு ஷர்ட்,க்ரே கலர் பான்ட், ரேமன்ட் வெயில் வாட்ச், பில்லட்டு பிளாக் ஸ்சூ என பார்மல் சூட்டில் அட்டகாசமாக இருந்தான் அதியன்.​

அவன் போடாமல் விட்ட இரண்டு பெத்தான் அவன் திண்ணிய மார்பை காட்ட புல்ஹான்டில் பிதிங்கி தெரிந்த அர்ம்ஸ் அவனை சிக்ஸ் பேக் ஹான்ட்சம் என்று சொல்லாமல் சொல்லியது. அடங்காத முடியை ஜெல்விட்டு அடக்கிவிட்டு இன்டர்காமில் அவன் தினமும் அருந்தும் ஹெல்த் மிக்ஸ்சை கொண்டு வர சொன்னவன் பைல்களில் ஆழ்ந்தான்.​

ஆதி அதியன் வசந்தகுமாரின் மூத்த மகன் இளையவன் புவி வேந்தன். ஒற்றை சகோதரியுடன் சாதாரண நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர்தான் வசந்தகுமார். அவரின் தந்தை ஏழுமலை உள்ளூரில் விளையும் தானியங்களை மொத்தமாக வாங்கி டவுனில் இருக்கும் கடைகளில் பிரித்து விற்று கொண்டு இருந்தவர். பெரிய வருமானம் இல்லை என்றாலும் நடுத்தர குடும்பத்திற்கு போதுமானதாக இருந்தது. போராடித்தான் குடிமுறைப் பொறியியல் படித்தார் வசந்தகுமார்.​

சில காலம் வேலை செய்து தொழில் கற்றவர். கிராமத்தில் உள்ள வீடு நிலம் அனைத்தையும் விற்று அதுபற்றாமல் வங்கியில் கடன் வாங்கி அதுவும் பற்றாமல் தன் தாய் பவுனுவின் இருபது சரவனையும் அடகு கடையில் வைத்துதான் பவுன் கன்ஸ்ட்ரக்ஷனை தொடங்கினார். இன்று சிட்டியில் லீடிங் கம்பேனிஸ்லில் பவுன் கன்ஸ்ரக்டார்ஸ்சும் ஒன்று. அதற்கு அவர் கொடுத்த விலை அவரது முழு இளமைக்காலம். பிஸ்னசில் கால் ஊன்றி நிற்கவே முப்பதுக்கு மேல் ஆகிவிட்டது. கடன்களை அடைத்து நிமிர்ந்து நின்று நாற்பதுகளில் தான் வெற்றி மேல் வெற்றி அடைந்தார்.​

தன் தந்தை உழைப்பில் பங்கு போட விருப்பம் இல்லாதவன் அதியன். வளர்ந்த பிறகு ஏழுமலையின் தொழிலை எடுத்தவன் மூன்றே வருடங்களில் வெளிநாட்டுக்கு தானியே ஏற்றுமதி செய்து எக்ஸ்போர்ட் பிஸ்னஸ் தொடங்கி இருந்தான். தந்தையிடம் கடன் வாங்கி தான் ஆரம்பித்து இருந்தான். அந்த கடனையும் அடைத்து அடுத்த கட்டத்துக்கு முன்னேறும் இளம் தொழிலதிபன் ஆதி அதியன்.​

"ஹலோ விஷ்ணுராம் இன்னைக்கு ஆபிஸ் முழுக்க ப்ளவர்வாஸ் ல ரோஸ் வைக்க சொல்லுங்க அண்ட் வெரி இம்பார்டன்ட் பிங் வித் வொயிட் கலர் ரோஸ்சஸ்" என சிலவற்றையும் அடுக்கி "நான் எய்ட்கு அங்க வருவேன் அதுக்குள்ள பினிஸ் பண்ணிடுங்க" கட்டளை தான் இட நினைத்தான் அவனையும் மீறி துள்ளல் வந்து விழுந்தது.​

"சார் இன்னைக்கு எந்த விஐபிக்கும் நீங்க அப்பாய்ண்ட்மெண்ட் தரலேயே " அப்பாய்ண்ட்மெண்டை சரி பார்தவாறே சொன்னான் அதியனின் பிஏவும் மேனேஜருமான விஷ்ணுராம்.​

"டோன்ட் கொஸ்டின் மீ. டூ வாட் ஐ சே "​

"ஓகே சார் பட் டுடே நியூ பிராஜக்ட்கு ஜெனரல் மேனேஜர் போஸ்ட் பிளஸ் கிண்டி பிராஞ்ச் மேனேஜர் போஸ்ட் கும் இன்டர்வியூவ் இருக்கு"​

"ஐ நோ ட் வெல் ராம்" போனை கட் செய்துவிட்டு கண்களை மூட அவன் காதுக்குள் கேட்டது அவள் குரல் "எனக்கு பிங் வித் வொயிட் ரோஸ்தான் பிடிக்கும்"​

"யாருடி நீ" மௌனமாக சிரித்துக் கொண்டான்.​

--------------​

"இன்றைய முக்கிய செய்திகள் பள்ளி மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் பாலியல் தொந்தரவு. பிரபல சிபிஎஸ்இ பள்ளி ஆசிரியர் கைது. அரை நிர்வாணமாக ஆன்லைன் வகுப்பில் வந்ததாக குற்றச்சாட்டு. முன்னாள் மற்றும் இந்நாள் மாணவிகள் தந்த புகாரின் பேரில் நடவடிக்கை. அவர்களுக்கு துணையாக இருந்தாக மேலும் இரண்டு ஆசிரியர்கள் மீதும் புகார். மற்ற பள்ளி ஆசிரியர்கள் மீதும் குவிந்து வரும் புகார். என்ன நடவடிக்கை எடுக்கும் பள்ளி கல்வி துறை?" எல்லா ஊடகங்களும் சுட சுட செய்தியை கக்கி கொண்டிருந்தது.​

அதை பார்த்து பச்சை பச்சையாக திட்டி கொண்டே ஹாலில் இருந்த டிவியை அணைத்தவள் "அம்மா நான் கிளம்பிட்டேன் என்னோட போன பாத்தீங்களா" கையில் இருந்த ரெசியுமை சரிபார்த்து கொண்டே கத்தினாள் அவள்.​

"ஸ்ஸ் பாப்பா கத்தாத உன் அப்பாவும் அண்ணனும் பாத்தா திட்டுவாங்க இன்டர்வியூ அதுவும் அவங்க கிட்ட பேச்சு வாங்காம போ. இந்தா உன் போன் முத அவங்க மூஞ்சில முழிக்காத எஸ்கேப் ஆகிடு " வாசலிலும் மாடியிலும் கண் வைத்தவாறே மெல்லிய குரலில் பதறினாள் துர்கா​

"என்ன மா நான் எதோ தப்பு பண்ண போறமாதிரி விரட்டுற?. நீ பதறாத பஸ்ட். நான் ஏற்கனவே ரெண்டு கம்பெனில செலக்ட் ஆகிட்டேன். இங்க சேலரி அதிகம் அதான் இதையும் ட்ரை பண்றேன் " தாயை சமாதானப் படுத்தினாள் .​

"எதுக்கு பாப்பா அலைச்சல் நீ சம்பாதிச்சு தான் நாம சாப்பிட போறோமா? உன் அப்பா அண்ணனே நல்லாதான் சம்பாதிக்கிறாங்க " மகளின் கன்னம் வருடினாள் தாய்.​

"மா பொண்ணுங்க எப்பவும் அவங்க கால்ல நிக்க கத்துக்கணும். இந்த வேலைல நான் செலக்ட் ஆகிட்டா உனக்கு பிடிச்சதெல்லாம் நான் வாங்கி தரலாம். சரி மா டைம் ஆச்சு நான் கிளம்பறேன் பஸ் பிடிக்கனும்" தன் ஹென்ட்பேக்கை மாட்டிக்கொண்டு நடையை எட்டி போட்டாள்.​

அவளையே பார்த்து இருந்த துர்காவின் கண்கள் கலங்கியது.​

வேகமாக நடந்ததால் வியர்த்து வழியவும் தண்ணீர் குடித்து ஆசுவாசம் அடைந்தவள் சுற்றும் முற்றும் பார்த்தாள். சிலர் போனிலும் பேச்சிலும் முழுகி இருக்க சில கண்கள் அவளை வெரித்தது.​

ஏற்கனவே நடந்து வியர்த்ததில் எரிச்சலில் இருந்தவள் அவர்களின் துகிலுரிக்கும் பார்வையில் மேலும் எரிச்சலடைந்து அவர்களை முறைத்தவள்.​

"ச்சை " என ஒற்றை சொல்லோடு சேலை தலைப்பால் இடுப்பை சுற்றி இழுத்து போர்த்தி கொண்டாள்.அவள் வாய் ஓயாமல் இசைத்தது ( திரும்பவும் அதே "பச்சை நிறமே பச்சை நிறமே" பாட்டுதான்.)​

பத்து நிமிடம் சென்று வந்த அரசு பஸ் பிதுங்கி வழிந்தது. ஏறினாள் ஏறியது மட்டும் தான் தெரியும் நடத்துனர் ஸ்டாப் பெயரை சொன்னபோதுதான் அடித்து பிடித்துக் கொண்டு இறங்கினாள்.​

தலை கலைந்து சேலை நலுங்கி பார்ப்பதற்கு பரிதாபமாக நின்றாள்.​

இதற்கு யாரை திட்ட முடியும்.​

வேலைக்கும் பள்ளிக்கும் செல்லும் அனைத்து பெண்களும் ஒரு நாளாவது அதை அனுபவித்து தான் ஆக வேண்டும். ஆனால் பல பெண்கள்​

"பஸ்ட் அப்படித்தான் இருக்கும்" "அப்புறம்"​

"அதுவே பழகிடும்" என்ற மந்திரத்தோடு ஒவ்வொரு நாளையும் பழகி கொள்கின்றனர்.​

my experience:​

நான் 10த் பொதுத்தேர்வு தமிழ் பரீட்சைக்கு நாலு மணிக்கெல்லாம் எழுந்து படிச்சி தலைக்கு குளிச்சி யூனிபார்மை நல்லா அயன் பண்ணி போட்டு புது ரிஃபான் லாம் வச்சு பின்னிட்டு சாமி கும்பிட்டு விபூதி லாம் பூசி டிப்டாப்பாக கிளம்பி பஸ்ஸில் ஏறினேன். என் ஊர் ஒரு கிராமம். என் பள்ளி மன்னார்குடி டவுனில் உள்ள ஒரு பிரபல கிறிஸ்தவ பெண்கள் பள்ளி. அது சுற்றுவட்டார மற்றும் கிராமத்தில் இருக்கும் பள்ளிகளுக்கு எக்ஸாம் சென்டர் அதனால் காலையில் அதிக கூட்டம் எல்லோரும் பத்தாம் வகுப்பு மாணவர்கள். அரை மணி நேர பயணம் பள்ளிவாசலில் எங்களை தள்ளிய பேருந்து நகர்ந்து விட்டது. பள்ளி முன் நான் ஒற்றை சடை அவிழ்ந்து ரிபன் கையோடும் மற்றொன்று பூ பிரிந்து தலை மயிர்கள் பிய்த்து கொண்டு வெள்ளை டாப்ஸ் கசங்கி விபூதியோடு சாந்து பொட்டும் களவாடப்பட்டு சில பல அடிகளும் மிதிகளும் வாங்கி வீங்கி அதைக்கூட பொறுத்து கொண்ட நான் கேலியாக என்னை பார்த்து சிரித்தவனை பல வண்ணங்களில் திட்டிக்கொண்டே தலைவாரி ஓசி கண்ணாடியில் சரி பார்த்து அதை தமிழ் மிஸ் பார்த்து படிக்காமல் மேக்கப்பா என்று கேட்டு பாச பார்வை பார்க்க நொந்து போய்விட்டேன் அன்றொரு நாள் .​


பெண்ணே 1.2


tTCEg7uEgnlohb7d4XAM5411gJWYfir3IBSOaKLL5r1ysbC6101pjfj4WMmgj7P0g774IPC_KpymhixHEXeQRJxTJAB6wH0cg4mJ72TQCu2zAFVjd1iuQamHt-dZKYRwqPuCZhgB=s0


எரிச்சலின் உச்சத்தில் இருந்தாள் அவள். யார் காரணம் என்று தெரிந்தால் திட்டலாம். ஆனால் திட்டாமல் விட்டால் அது அவள் இல்லையே. அவள் திட்டுவதற்கும் ஒருத்தர் உள்ளார் அவர்தான் காக்கும் கடவுள் விஷ்ணு. பாவம் அவரை தான் இவளிடம் இருந்து காக்க ஆள் இல்லை .

"கையோடு சேந்து பறக்குறதுக்கு பொண்ணுங்களுக்கு மட்டும் ரக்கை வச்சிருக்கலாம். செல்பிஸ் கடவுளே நீ. எப்போதும் அவுட்டேட்டாவே இருக்க. இங்க மாரி அங்கையும் எலக்சன் வச்சி ஆட்சிய மாத்த சொல்றேன். நீ மட்டும் நினைச்ச செகண்ட்ல சுவைங் சவைங்னு போய்ட்டு வர. நீயும் எங்க கூட பஸ்ல பிதுங்கி வந்து பாரு." இவள் திட்டியதால் அவரே முழி பிதுங்கி தான் நின்றார்.

"இரு அம்மாக்கு தெரியாம உனக்கு வைக்கிற சக்கர பொங்கல ஆட்டைய போடல நான் என் பெயரை மாத்திக்கிறேன். மிஸ்டர் விஷ்ணு பி ரெடி பார் கோவிந்தா கோ..விந்தா." இருந்த எரிச்சலில் வாய்விட்டே திட்டினாள்.

"புதுசா பண்ணபோற மாதிரி சொல்ற டெய்லியும் அதானே நடக்குது "

"ஓ மை கடவுளே!! விஷ்ணு நீயா பேசுற?"

"ஆமாம் பக்தா கொஞ்சம் திரும்பி பார்" திரும்பியவளுக்கு ஆனந்த அதிர்ச்சிதான் .

"ஹே விஷ்ணு சீனியர்... நீங்க எங்க இங்க?"

"அத நான் தான் கேட்கனும். ஆமா என்ன தனியா பேசிட்டு இருக்க? உங்க அப்பாவும் அண்ணனும் பண்ற டார்ச்சர்ல லூசாகிட்டியோனு நினைச்சன்" அவன் சிரித்தாலும் அதில் மறைமுக விசாரணையே இருந்தது.

அதை அறியாதவளா அவள்."ப்ச் இப்போலாம் ரொம்ப இல்ல விஷ்ணு"

"அப்போ டார்ச்சர் பண்றாங்கனு சொல்லு"

"வேற பேசுங்க விஷ்ணு" முகம் வாடிபோய் நின்றாள் அவள்.

"சாரி மைலி நானே பழச நியாபக படித்திட்டேன்."

"மறக்குற விசியமா அது... நீங்கலாம் இல்லனா நான் என்ன ஆகியிருப்பேன்னு தெரியாது" உள்ளே போன குரலில் சொன்னாள். அன்றைய நிகழ்வை எண்ணும் போதே அவமானமாக உணர்ந்தாள்.

"ஆனா இப்ப எல்லாத்தையும் எதிர்த்து நிக்க கத்துகிட்டேன்" வார்த்தைகள் மிக அழுத்தமாக வந்து விழுந்தன ஒரு நிமிர்வு தெரிந்தது.

அன்று இருந்தவள் இவள் இல்லை வாழ்க்கை பயணத்தின் சுவடுகள் கடுமை காட்டும் அவள் முகத்திலும் தீர்க்கமாக பார்க்கும் விழிகளிலும் நன்ங்கு தெரிந்தது.

"நீ ரொம்ப மாறிட்ட மைலி" அவளை ஆழ்ந்து பார்தான். முதிர்ந்த புன்னகையே பதிலாக தந்தாள் அவள்.

அதை பார்த்தவனுக்கு பழைய மைலியின் சிரிப்பு நினைவில் தோன்றியது சலைங்கை கூட்டங்கள் சிதறி விழுந்து எழுப்பும் சங்கீதம் போன்று இனிமையாக மறக்க முடியத ஒன்றல்லவா.

"நான் இங்க ஒரு கம்பெனிக்கு இன்டெர்வியூக்கு வந்தேன் விஷ்ணு"

"அப்படியா? இங்க தான் என் ஆபிஸ்சும் இருக்கு. எந்த கம்பெனி?"

"ஹில்ஸ்"

"ஹே வாவ் எங்க கம்பெனிக்கு தான் இன்டர்வியூக்கு வந்தியா வெல்கம் மைலி நான் அங்க தான் மேனேஜரா இருக்கேன்." அவள் கையை பற்றி குலுக்கி குதுகலித்தான்.

"விஷ்ணு நான் இன்டர்வியூக்கு தான் வந்தேன் "

"உன்ன பத்தி தெரியாதா? யுனிவர்சிட்டி டாப்பர். நான் ரெண்டு நாள் லீவ் சோ அப்ளிகேஷன்லாம்
பாக்கல இல்லனா அப்போவே தெரிஞ்சிருந்துருக்கும்."

அப்போது பென்ஸ் சிஎல்எஸ் ரூபி பிளக் கலர் கார் இவர்களை கடந்துதான் போனது. அதை விஷ்ணு கவனிக்க தவறினான் ஆனால் ஊள்ளிருந்தவன் இவர்களை பார்த்து கொண்டு தான் சென்றான். அந்த கார் நேராக ஹில்ஸ் செவன் என்ற பெயர் பொரிக்க பட்ட கட்டிடத்தில் நுழைந்தது. டிரைவர் கார் கதவை திறந்து விட அலட்சியமாக இறங்கி உள்ளே நடக்க தொடங்கினான் அதியன்.

விஷ்ணுவின் போனுக்கு அழைப்பு வர "சரி வா மைலி உள்ள போலாம்.
எம்.டி வந்துட்டாரு போல" அவளையும் உள்ளே அழைத்து சென்றான்.

உள்ளே சென்றவளுக்கு ஆச்சரியம் எங்கு பார்த்தாலும் வெயிட் அண்ட் பிங் காமினேஷனில் ரோஸ்கள் ப்ளூகலர் ரிப்பன்கலால் அழகாக முடிச்சிட்டு ஆங்காங்கே பிளவர்வாஸ்களில் சிரித்துக்கொண்டு இருந்தன. விழி விரித்து அதை பார்த்தாள் அவள்.

"என்ன மைலி இங்கயே நின்னுட்ட? வா"

"ஹே விஷ்ணு இங்க இருக்க எல்லாம் எனக்கு ரொம்ப பிடிச்சது. யாரோ எனக்காக பாத்து பாத்து செஞ்ச மாதிரி இருக்கு" பரவசமாக அவள் சொல்வதை கனிவாக பார்த்தான் அவன்.

"தெரியல மைலி ஆனா யாரோ இம்பார்ட்டன் பர்சன் இங்க வர போறாங்க போல மார்னிங் சார் கால் பண்ணி இதெல்லாம் பண்ண சொன்னாங்க" பேசிக்கொண்டே நடந்தனர் இருவரும்.


"நல்ல டேஸ்ட் உங்க எம்டிக்கு கண்டிப்பா அவரோட கேள்பிரன்டா தான் இருக்கும்"

"எனக்கும் அதான் தோனிச்சு பிகாஸ் எப்பையும் இல்லாம ரொம்ப ஹாப்பியா பேசினார். சரி நமக்கு எதுக்கு நீ இங்க வெயிட் பண்ணு உள்ள நேம் கூப்பிடுவாங்க நான் வரேன்."

"விஷ்ணு எனக்கு டச் அப் பண்ணனும் டிராவல் பண்ணதுல மோசமா ஆகிட்டேன் வாஷ் ரூம்??"

"ரைட் சைடு போ அங்க வாஷ்ரூம் மிரர்லாம் இருக்கும்"

"சரி விஷ்ணு யு கேரியான்"

"ஓகே பாய்" என்றவன் சென்றுவிட்டான்.

அதியனுக்கு வந்த கோபத்தில் போனை தூக்கி வீச அது சோபாவின்மீது போய் விழுந்தது.

"ச்ச இவள என்னதான் பண்றது? என்னை டென்ஷன் பன்றதே பொழப்பா வச்சிருக்கா யார்கிட்டயாச்சும் இளிச்சிட்டு" பல்லை நரநரவென்று கடித்துக்கொண்டு இருந்தான்.

"மே ஐ கம் இன் சார்?" விஷ்ணு

"கம் இன்"

"இன்டர்வியூக்கு எல்லாம் அரேஜ் பண்ணி முடிச்சாச்சு சார் நீங்க ரெடினா சார்ப்பா 10க்கு ஸ்டார்ட் பண்ணிடலாம் சார்"

"ஐ நோ மேன். நான் மெமரிலாஸ் பேசன்ட் இல்ல திருப்ப திருப்ப எத்தன டைம் சொல்லுவிங்க?" அவனை முறைத்த ஆதிஅதியன் ஒருவாறு வறுத்து தாளித்த பின்னே வெளியே அனுப்பினான்.

வெளியில் வந்ததும் இவ்வளவு நேரம் இழுத்து வைத்திருந்த மூச்சை விட்டு "பைத்தியமா இவன்? நல்லாதானய்யா பேசிட்டு இருந்தான்" மனதில் புலம்பி கொண்டே சென்றான் விஷ்ணுராம்.

புடவையை சரி செய்து தலையை ஒழுங்குபடுத்தி வந்து உட்கார்ந்தாள் அவள்.

அப்போது அங்கு வந்த ஒரு பெண் "சார் உங்களை கூப்பிட்டாங்க கம் வித் மி" முறைத்தவாறே சொன்னவள் "யார்?" என்று கேட்கும் முன்னே நடக்க ஆரம்பித்து இருந்தாள். அவளை அழைத்து சென்று ஒரு கதவை தட்டி உள்ள விட்டுச்சென்றாள்.

"உங்க கேபினா இது?"

க்ரேகலர் பிலேசர் அணிந்து கையில் ஒரு ரோஜா பூங்கொத்தை நீட்டிய ஆதிஅதியன் "டூ யூ லைக் டு பி மை லவ் பவி" என்று தன்முன் இருந்த கண்ணாடியை பார்த்து சொன்னவன் மயக்கும் புன்னகை ஒன்றை உதிர்த்தான். அவன் எதிரில் இருந்த கண்ணாடியில் அவள் உருவம் தோன்றி சிரிக்க திகைத்து நின்றவன் கையில் இருந்த பூங்கொத்து கனநேரத்தில பரிக்கபட்டது திரும்பியவன் பல்லைக் கடித்தான்.

"இன்னும் பெட்ரா ட்ரை பண்ணிருக்கலாம் அண்ணா" பூவை முகர்ந்து கொண்டே சொன்னான் புவி... புவி வேந்தன்.

"நீ இங்க என்ன பண்ற? ஆபீஸ் போகலயா?" அவன் கையில் இருந்த பூங்கொத்தை பரித்தான் அதியன்.

"எல்லாம் உன் ஆளை பாக்கதான். இங்க வந்துட்டாங்களாமே? அதான் ஒரு ஹாய் சொல்ல வந்தேன் பேசி ரொம்ப நாள் ஆச்சு. ம்ம் டெக்ரேஷன்லாம் பிரமாதம்."

"ஹே உனக்கு தான் இன்டர்வியூ பண்ண பிடிக்கும்தானே. இன்னைக்கு நீ இன்டர்வியூ பண்ணு புவி. எனக்கு இப்போ இன்ட்ரஸ்ட் இல்ல. நீ கேட்ட மாடல்ல பைக் வாங்கி தரேன்"

"ஓகே அதி ஆனா இன்னைக்கு எனக்கு ட்ரீட் வேணும்" செல்லிவிட்டு கண்ணடித்தான் புவி.


"டேய் முதல்ல வெளியே போடா நானே அவளை வீட்டுக்கு கூட்டிட்டு வரேன் அப்படியே வைக்கிறேன்" புவியை விரட்டினான் அவன்.

"சரி சரி போறேன் எனக்கு புவிங்கற பேர் போதும் கரடி பட்டம் வாங்க விரும்பல ஆல் த பெஸ்ட் பார் யுவர் ட்ரை" சொல்லி கொண்டே சென்றான் .

"டேய் கத்தாம போடா" என்றவனின் முகத்தில் இருந்தது வெட்கமா? பதட்டமா ?சந்தோஷமா? குழப்பமா?

அவன் போன் அடிக்க அவன் தந்தைதான் அட்டன் செய்ய அவர் கூறியதைகேட்டு கோபமாக போனை போட்டு உடைத்தான்.
______

"ஆமா மைலி இந்தா உன் ஃபயில் நானே கையில் எடுத்துட்டு வந்துட்டேன். நானும் இன்டர்வியூ எடுப்பேன் சோ அங்க வந்தா தேவையில்லாத பிரச்சனைவரும் அதான் உன்ன கூப்பிட்டுவிட்டேன்" விஷ்ணு

"ஒகே விஷ்ணு அப்பறம் பாக்கலாம்"

"ஆல் தி பெஸ்ட் மைலி" என மெல்ல சிரித்துவிட்டு சென்றாள்.

"ஹலோ விஷ்ணு இன்னைக்கு இன்டர்வியூ புவி பண்ணுவான் ஐ ஹாவ் சம் அதர் ஒர்க்ஸ்" ஆபிஸ் போனில் அழைத்த அதியன் "ஓகே சார்" என்ற உடனே கட் செய்து விட்டான்.

பாதி பெயர் முடிந்திருக்க இம்முறை இவள் பெயர் வந்தது. உள்ளே விஷ்ணு முதலில் அமர்ந்திருக்க புவி எம்.டி சீட்டில் அமர்ந்திருந்தான் அவன் அருகில் ஒரு பெண் அமர்ந்திருந்தாள்.

"டேக் யுவர் சீட்" கையை நீட்டினான் புவி. தன் பைலை அவனிடம் கொடுத்தாள் அவள்.

"வாட்ஸ் யுவர் நேம்?" அந்த பெண்.

"ஆராதனா ராகவன்" அவள் சொல்லி முடிக்கவும் சரியாக கதவை திறந்து கொண்டு வந்தான் ஆதிஅதியன்.

அனைவரும் எழுந்து நிற்க அவர்களை அமர சொன்னவன் ஒரு இருக்கையில் அமர்ந்து இன்டர்வியூவை கவனிக்கலானான். இன்டர்வியூ முடிந்ததும் அவளை வெளியில் காத்திருக்க சொன்னான் புவி. ஆராதனா வெளியில் சென்றவுடன் ஆதிஅதியனும் எழுந்து நின்றான்.

"வேறவேலை இருக்குனு சொன்ன?" கேள்வியாக பார்தான் புவிவேந்தன். அவனை ஒரு பார்வை மட்டுமே பாத்த அதியன் கண்ணாடி கதவை திறந்து கொண்டு சென்றுவிட்டான். தோளை குலுக்கிய புவி next என்ற ஒற்றை சொல்லோடு வேலையில் ஆழ்ந்தான்.

வெளியே வந்த ஆராதனா டீ குடித்தால் பரவாயில்லை என்று தோன்ற கேண்டீன் நோக்கி செல்ல
"பவி" என்று யாரோ சத்தமாக அழைக்கவும் திரும்பி பார்த்தாள். அவளை நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்தான் அதியன்.

"இவர்" அவள் பார்த்து கொண்டு இருக்கும் போதே அவள் அருகில் வந்தவன் அவளை தாண்டி சென்று அங்கு நின்ற ஒரு பெண்ணை அணைத்துக் கொண்டான். அவர்களை பார்த்து முகத்தை சுளித்தவள் ஒரு அன்னிய பார்வையுடன் நகர்ந்துவிட்டாள்

 
Last edited:

Writer X

Well-known member
Vannangal Writer
Messages
463
Reaction score
616
Points
93

பெண்ணே- 2


அவர்கள் என்னவோ தோழோடுதான் அனைத்து கொண்டனர். மேலைநாட்டு பழக்கம் இப்படி அனைத்து கொள்வதுதான் இன்றைய நாகரிகமாம். அதை பார்த்த ஆராதனாக்குதான் அவர்கள் கொஞ்சிக் கொள்வதுபோல் தெரிந்தது.

"என்ன ஜென்மங்களோ பப்ளிக்காகட்டி புடிச்சிட்டு நிக்குதுங்க" திட்டிக்கொண்டே சென்றாள்.

"கோவமா இருக்கியா ஆதி?" அவன் கழுத்தை கட்டிக்கொண்டு தோளில் தொங்கினாள் பவித்ரா. அவள் பூசியிருந்த பர்ஃப்யூம் வாசனை அவன் நாசிவழி சென்று அடிவயிற்றில் காலிங்பெல் அழுத்த அவளை அணைப்பிலிருந்து விடுவித்தவன் இரண்டடி பின்னே நகர்ந்து நின்று கொண்டான்.

"ஆமா பட் இப்போ இல்ல" என்றவனது கண்கள் ஆராதனா செல்வதை தான் பார்த்தது.

"தேங்க்யூ ஆதி. ஆமா என்ன உன் ஆபீஸ்ல ஒரே ரோசா இருக்கு? யாருக்காக?"

"உனக்கு தான் பிடிச்சிருக்கா?"

"பிடிக்கல" கொஞ்சம் கூட யோசிக்காமல் சொன்னாள். அதியனின் முகம் சுருங்கி விட்டது… "ஏன்?"

"எனக்கு பிளவர்ஸ் சே பிடிக்காது. அதுவும் ரோஸ் smell கேவலமா இருக்கும்"

"உன் பர்ஃபியூம் விடவா மோசம்?" முனுமுனுத்தான் அவன்.

"என்ன ஆதி கேட்ட?"

"அது உன் பர்ஃபியூம் நல்ல வாசம்னு சொன்னேன்"

"நல்லாருக்குல? பார்க் அவன்யூ"

"ஆமா ஆமா ரொம்ப... நல்லாருக்கு" பல்லை கடித்துக்கொண்டு சிரித்தான்.

அவனுக்கு இதுபோல் பேசுவது புதிது. மனதில் இருப்பதை பேச நினைப்பவன். பெண்ணோ ஆண்ணோ பிடிக்கவில்லை என்றால் ஒரு பார்வையில் எட்டநிறுத்தி விடுவான்.

பவித்ரா அதியனுக்காக வசந்தகுமார் பார்த்து வைத்திருக்கும் பெண். அவளை அவர் தேர்தேடுத்தற்கான காரணம் நவநாகரீக மங்கை, அழகானவள். மிகவும் முக்கியமான தகுதி பணம் அது அவளிடம் நிறைய இருந்தது. அதைதான் இன்று அவர் அவனிடம் சொல்ல கோபத்தில் போனை தூக்கி வீசினான்.

அவனால் அவளுடன் ஒத்து போக முடியவில்லை. அவளை அவமான படுத்தவும் அவனால் முடியாது. மனைவிக்கும் சமமாக மரியாதை குடுக்க நினைப்பவன். பெண்களை மதிக்கவேண்டும் என்பது அவன் தாத்தா சிறு வயதிலே போதித்தது. மனைவியை சரிக்குசமமாய் மரியாதையாய் நடத்தவேண்டும் என்பது அவரது வாழ்க்கையை பார்த்து அதியன் தானாய் கற்றது. அதையும்மீறி சிலசமயம் கடுமையாக அவளிடம் பேசிவிடுவான். அவளுடனான அவன் வாழ்க்கை காதலாக இருக்காது என்பதை உணர்ந்தே இருந்தான். கடமையாக வாழ்வது வாழ்க்கையே இல்லை என்பதை வாழ்ந்து பார்த்தவர்கள் தான் அறிவர். அந்த வாழ்க்கை ருசிப்பதில்லை.

"பேசாம இவள பிடிக்கலனு அப்பாகிட்ட சொல்லிடலாமா? ஒரு நிமிஷம் கூட இவளோட இருக்க பிடிக்கல இதுல எப்படி வாழ்க்க முழுக்க?"

"ச்ச இவள்னு இல்ல எனக்கு யாரையும் பிடிக்காது மேரேஜ் அப்பறம் சரியாகிடும் பொறுமையா இருடா அதியா" அவனுக்கே அவன் சமாதானம் படுத்திக்கொண்டான்.

அதியனுக்கு எப்போதும் பெண்களிடத்தில் ஈர்ப்பு இருந்தில்லை. அவன் தந்தையை போல அவனுக்கும் பிஸ்னஸ்சே பிரதானம். இத்தனை காலம் தோன்றாத விருப்பம் இனியும் தோன்றாது என்றுதான் பவித்ராவுக்கு தலையை ஆட்டினான். அன்றிலிருந்து இன்று வரை அவளை ஏற்க பலபல முயற்சிகள் செய்து பார்த்துவிட்டான் பலன் என்வோ பூஜ்ஜியம்தான். தன் வருங்கால மனைவி என்று எத்தனை உருப்போட்டாலும் மனம் அதை ஏற்க சண்டித்தனம் செய்தது.

பெருமூச்சு விட்டவாறே நினைவுக்கு வந்தவன் பார்த்தது ஆராதனாவைதான் .

"வா ஆதி போகலாம்" பவித்ரா அவன் கையை பிடித்து இழுக்க அவன் அவளை தான் பார்த்துக் கொண்டு இருந்தான். அவளும் இவர்களை தான் பார்த்துக் கொண்டு வந்தாள்.

அருவருப்பில் சுருங்கி இருந்த அவள் முகத்தைப் பார்த்தவன் தன் கையை பவித்ராவிடம் இருந்து விலக்கிக் கொண்டான். அவனுக்கே அவனை நினைத்து ஆச்சரியமே.

"இப்போலாம் பொண்ணுங்க ஆம்பளைங்க கைய பிடிச்சு இழுக்க ஆரம்பிச்சிட்டாங்க போல?" அவள் தலையில் அடித்துக்கொள்ளாத குறையாக முனுமுனுத்துக் கொண்டு சென்றது அவன் காதில் நன்றாக விழுந்தது. அவளே அறியாமல் பொறாமை கொண்டாள்.

அதியனுக்கு சிரிப்பு பீரிட்டது.

"அப்போ சீக்கிரம் சட்டத்தை மாத்தி எழுத சொல்லனும். இப்போலாம் பசங்களுக்கு பாதுகாப்பே இல்லை." அவளுக்கு கேட்க வேண்டும் என்றே சத்தமாக சொன்னான். அவனே அறியாமல் அவளை சீன்டினான்.

"என்ன சொல்றான் இவன்?" என்று பவித்ரா புரியாமல் பார்க்க படக்கென்று திரும்பி பார்த்தாள் ஆராதனா.

அவனும் அவளை ஆழ்ந்து பார்க்க அவள் முகத்தில் அதிர்ச்சி ரேகைகள் ஓடியதை கண்டான்.

"அய்யய்யோ நம்ம சொன்னதை கேட்டான் போலேயே" என்று அதிர்ந்தவள் "என்ன பண்ணிடுவான்?" என்ற அலச்சிய்த்தோடு திரும்பி நடந்தாள்.

ஆராதனாவின் முகத்தில் தெரிந்த பாவனைகளை ரசித்து கொண்டு இருந்தான் அதியன். அவனை வித்தியாசமாக பார்த்த பவித்ரா அவனை இழுத்துக்கொண்டு போனாள்.

கடைசி படியில் அவன் இறங்கும் முன் அந்த ஹாலை திரும்பி பார்த்தான் சரியாக ஆராதனாவும் திரும்பி பார்த்தாள்.

இருவருக்கும் ஏதோ உணர முடியாத மெல்லிய உணர்வு.ஒருவர் பார்வையில் மற்றொருவர் தடுமாறினர்.

உணர்வுகளை ஒற்றை வார்த்தையில் அடக்கிட முடியுமா? அதன் தவிப்பை வார்தைகள் விலக்கிடுமா? இதற்கு பதில் தான் காதல் என்றான் கிருக்கன்.


"என்ன எஸ் பி சார் நீங்க கேட்காத transfer கிடச்சிட்டுபோல?" கேட்டவாறே கதவை திறந்து கொண்டு வந்தவர் பாலா.

"பர்மிசன் கேட்டுட்டு உள்ள வரமாட்டிங்களா? இது என்ன உங்க வீடுனு நினைச்சிங்களா? எஸ் பி ஆபிஸ் நியாபகத்துல வச்சுக்கோங்க" சுள்ளென்று காய்ந்தான் விமலன்.

"நானும் என் வீடுனு நினைக்கலையே. ஏன் நீங்க நினைச்சிங்களா?"

"ஏய்ய் என்னோட ஆபிஸ்குள்ள வந்து என்னையே நக்கல் பண்றியா? முரளி… உடனே உள்ளே வாங்க" ஒற்றை விரல் நீட்டி மிரட்டியவன் வாயிலை நோக்கி கத்தினான்.

அவன் கத்தியதில் அடித்து பிடித்து கொண்டு வந்தார் எடி.எஸ்.பி முரளி.

"எதுக்கு விமலன் இவ்வளவு சூடா இருக்கீங்க? நாளைலேர்ந்து இது உங்க ஆபிஸ் இல்ல. என்கிட்ட பகச்சிக்கிட்டா என்ன நடக்கும்னு தெரிஞ்சிகோங்க. உங்க ஐ.பி.எஸ் அ மதிச்சி டிரான்ஸ்பரோடு விடுரேன். என்றார் ஒரு மிரட்டும் பார்வையோடு. அதை கண்டு தலையில் அடித்துக்கொண்டார் முரளி.

"இன்னைக்கு இந்த ஆபீஸ் ல நான்தான் எஸ்.பி மறக்க வேண்டாம். என்ன சொன்ன நீ? என்னை transfer பண்ணவச்சியா? குட் காமெடி பாலா ஹா ஹா" நக்கலாக சிரித்தான் விமலன்.

புரியாமல் பார்தார் அவர்.

"எனக்கு கிடைச்சதுக்கு பேரு புரமோஷன். இனிமே நான் sp இல்ல AIG லா அண்ட் ஆர்டர். அட் த சேம் டைம் ஒருத்தி தானா கேட்டு இங்க transfer வாங்கிட்டு வரா. டூ யூ நோ பாலா? அவள யாராலையும் எதுவும் பண்ண முடியாது. அவ லிஸ்டுல வந்துராத." பிரமிப்புடன் சொன்னான் அவன்.

"பணம் பத்தும் செய்யும் எஸ்.பி"

"அய்யோ பாலா... நீ சொல்லாத
பதினொன்னையூம் அவ சேர்த்து செய்வா"

"என்ன எனக்கு பயம் காட்டுறிங்களா? படத்துலவர டயலாக்கை சொன்னா நான் பயந்துருவேனா? ஒரு பொம்பள என்ன பண்ணிடுவா?"

"ஹே வெளிய போடா ராஸ்கல். பொம்பளனு கேவலமா பேசுற. அவகிட்ட இந்த டயலாக்லாம் விட்ராத. அப்பறம் நான் சொன்னது படத்துல வருதா இல்ல நேர்ல வரதானு நீயே தெரிஞ்சிப்ப. முரளி இந்த ஆள வெளியே தள்ளுங்க" எழுந்து நின்று கர்ஜித்தான் விமலன்.

"யார் வந்தாலும் பாத்துக்கிறேன்டா" சவால் விட்டு கொண்டே திரும்பி நடந்தார் பாலா.

அவரை சொடகிட்டு கூப்பிட்டவன் "ஈசியா நினைக்காத. அவ பொண்ணே இல்ல. She is a devil. பீ கேர் புல்" எச்சரித்தான். அவனை முறைத்தவர் கதவை திறந்து கொண்டு சென்றார்.

"சாரி sir நான் சொல்ல சொல்ல கேட்காம வந்துட்டாரு" சங்கடமாக சொன்னார் முரளி

"பாலா சில விச்சியத்துல நல்லவர்தான் முரளி கொஞ்சம் பணதிமிர் அதிகம்"

"கொஞ்சமா ?அதிகமா?" புரியாமல் விழித்தார் அவர்.

"இருக்க கூடாத அளவு. பட் இனிமே கம்மியாகும் "

"எப்படி சார்?"

"அத புது எஸ்.பி வந்து சொல்லுவாங்க" மெலிதாக சிரித்தான் அவன்.

"sir யார் அந்த மேடம்? இவ்வளவு சஸ்பென்ஸா வச்சிரிக்கிங்க."

"முரளி இன்னைக்கு பார்டிக்கு மறக்காம வாங்க நீங்களே தெரிஞ்சிப்பிங்க"

"வந்துரேன் சார். அவங்க உங்க friend ஆ சார்?"

"என்னது friend ஆஆ என்னோட தங்கச்சி முரளி. ரோம்ப கோபம் வரும். அப்புறம் ஒரு request முரளி"

"சொல்லுங்க சார்"

"அவளுக்கு எதாச்சும் problem வந்த என்கிட்ட இன்பார்ம் பண்ணிடுங்க. முக்கியமா அவளுக்கு தெரிய வேண்டாம்."

"கண்டிப்பா சார். ஆனாலும் நீங்க உங்க தங்கச்சியே டேவில்னு சொல்லிட்டிங்களே. அவங்களுக்கு தெரிஞ்சா வருத்தபடமாட்டாங்க?"

"அவள பத்தி தெரியாம பேசுரிங்க. பிடிக்கலனா சினியர் யாரையும் மதிக்கவேமாட்டா அப்பாவுக்காக அததெல்லாம் பொருத்துப்பாங்க. அவ பாக்ஸிங்கல கோல்ட் மேடல்லாம் வாங்கிருக்கா. 22 வயசுலே ஐ..பி.எஸ் பாஸ் பண்ணி எ.எஸ்.பியா ஜாயின் பண்ணா ரெண்டே வருசத்துல எஸ்.பி. அங்க அவ ஆட்டம் தாங்க முடியாம அவ கேட்வுடனே டரன்ஸ்பர் பண்ணிட்டாங்க." சிரித்துக்கொண்டே சொன்னான் அவன். அதில் அவளை நினைத்து அவன் பெருமையாக சொன்னது போலதான் தெரிந்தது முரளிக்கு.

_COmGqIxw0Zo0b7IcpiYUTWHDqznAqzdMwHJz5gVwfWsjs_HYLErR0kkje44rVocmHTf0XPs0SEDk_s5H5Fsa2IU6-Udrv2nKJwU3_uX1OKmoRG7g0ZvSVjBCIEJjBey2rH7VjI_=s0


"என்ன விஷ்ணு நீங்க எல்லாருக்கும் ஈசியா கேட்டிங்க ஏன் அந்த பொண்ணு ஆராதனாக்கு மட்டும் கஷ்டமா கேட்டிங்க?" இன்டர்வியூ முடிவினை சரிபார்த்துக்கொண்டே கேட்டான் புவி.

"நான் ஈசியா கேட்டா அவங்க வேலையே வேண்டாம்னு போய்டுவாங்க அதான் கஷ்டமா கேட்டேன் சார்" மிக பவ்வியமாக சொன்னான் அவன்.

ஏன் என்பது போல திரும்பி பார்த்தான் புவி.

" Aradhana is my junior சரர்." அவன் கண்களில் எரித்த பல்பே வெறும் ஜூனியர் மட்டும் இல்லை என்பதை அப்பட்டமாக காட்டியது.

"junior மட்டும் தானா…?" கோப்பை மூடி வைத்துவிட்டு திரும்பி பார்தான்.

"கொஞ்சம் special சார்" தயக்கமாக பார்த்தான் விஷ்ணு.

"அப்போ உங்களுக்கு தான் இது happy news"

"sir அப்ப ஆராதனா…?"

"அவங்க தான் கிண்டி பிரான்சுக்கு மேனேஜர்" என எழுந்துக் கொண்டான் புவி.

"இத அண்ணாகிட்ட காமிச்சிட்டு சைன் வாங்கி எல்லாருக்கும் ஆர்டர் அனுப்பிருங்க." அவன் கையில் கோப்பை தினித்துவிட்டு கதவை திறந்துக்கொண்டு வெளியில் வந்தவனது அழைப்பேசி சினுங்க அதை அட்டன் செய்தவன் "சாரி இன்னைக்கு வீட்டுக்கு ஒரு கெஸ்ட் வராங்க சோ என்னால வரமுடியாது" பேசி கொண்டு சென்றான் புவி.
_______

"அம்மா மாஆஆ" கத்தி கொண்டே உள்ளே சென்றாள் ஆராதனா. கிச்சனில் இருந்து எட்டி பார்த்தார் துர்கா.

உள்ளே ஓடி வந்தவள் சந்தோசமாக துர்காவை கட்டி கொண்டாள். அவள் தலையை வருடிவிட்டு "என்ன பாப்பா?" என்றார்.

"அம்மா உங்க பொண்ணு இனிமே மேனேஜர் ம்மா. சம்பளம் எவ்வளவு தெரியுமா? உன் பையனை விட 20000 அதிகம். இனிமே எப்படி நம்மள திட்டுறாங்கனு பாக்குறேன்" கண்கள் ஒளிர துர்காவின் கைகளை பிடித்துக் கொண்டு குதித்தாள் ஆராதனா.

திக்கென்று இருந்து துர்காவுக்கு.

"பாப்பா உன் சம்பளம் பத்தி மட்டும் உன் அண்ணனுக்கு தெரிஞ்சது உன்ன வேலைக்கு போக விடமாட்டான். நீ அதிக சம்பளம் வாங்கினா அவனுக்கு அசிங்கம்னு அப்பா கிட்ட சொல்லி பிரச்சனை பண்ணுவான் மா. உன் அப்பாவும் அவனுக்குத்தான் சப்போர்ட் பண்ணுவார்" பாவமாக பார்த்தார் துர்கா.

"ஏன் மா ஆம்பளைங்கள விட பொண்ணுங்க நிறைய சம்பாதிச்சா அசிங்கம்னு சொல்றாங்க?" முகம் வாடினால் அவள்.

"என்னதான் பொண்ணுங்க சுகந்திரமா இருந்தாலும் இன்னும் இது ஆண்களுக்கான உலகம்தான் பாப்பா. இந்தியானு இல்லை எல்லா இடத்திலும் இது தான் நிதர்சனம் பாப்பா"

"இது மாறவே மாறாதா மா?"

"தானா எதுவும் மாறாது பாப்பா. நம்மதான் மாத்தணும்"

அதற்குள் கதவு திறக்கும் சத்தம் கேட்க இருவரும் எட்டி பார்த்தனர். ராகவன்தான் வந்துக்கொண்டு இருந்தார். அவரை பார்த்தவுடன் இருவரும் அமைதி ஆகிவிட்டனர்.

அவர்கள் அமைதியானதை பார்த்த ராகவன் மிதப்பாக வந்து சோபாவில் அமர்ந்தார். அவர்கள் அமைதியை அவருக்கான பயம் என்று தவறாக நினைத்தார். அது மாரியாதை என்று கூட சொல்ல முடியாத செயல் என்று யார் எடுத்து சொல்வது. இது அதித பெண்களிடம் இருக்கும் சகிப்புத்தன்மை. பல குடும்பங்கள் இன்றும் குடுபங்களாகவே இருப்பதற்கான மேடை இரகசியம் சகிப்புதன்மை.

"என்ன ரெண்டு பேரும் ஏதோ பேசிட்டு இருந்திங்க?" மிடுக்காக கேட்டார் ராகவன்.

"சும்மாதன்ங்க… பேசிட்டு இருந்தோம்"

"பொம்பளைங்க சேர்ந்தாலே எதாச்சும் புரனிதானே பேசுவிங்க?"

"ஆமா நாங்க புரனி பேசுரோம் இவர் மட்டும் இந்தியாவ வல்லரசாக்க கூட்டம் போட்டு கூவுறாங்க. இவங்கள பத்தி நமக்கு தெரியாதா?" மனதில் நொடித்து கொண்டாள் ஆராதனா.

பல விசயங்களில் ஒதிங்கி போனாலும் சிலவற்றிருக்கு நறுக்குக்கென்று குட்டுவைக்காவிட்டால் அவளுக்கு அன்று தூக்கம் ஏது.

"ஏன் ப்பா.. ரகு அங்கிள் நேத்துதானே நம்ம பக்கத்து வீட்டு ரம்யா யாரையோ லவ் பண்றானு சொன்னார். அந்த பையனோட அவள பாத்ததா வேற சொன்னாரே" குற்றி காட்டினாள்.

அவர் அவளை முறைத்து பார்க்க. இன்னும் இருக்கு என்பது போல ஒரு பார்வையோடு "அது ரம்யா தம்பியாம் சித்தி பையனாம் இன்டர்வியூக்கு வந்துருக்கான் அதான் பர்சேஸ் போயிருக்காங்க. அவங்கள பார்த்துதான் ரகு அங்கிள் உருஃபுள்ளா புரனி பேசிட்டு இருந்தார். இன்னைக்கு அவரு பையன் ஏதோ இரண்டு பொண்ணுங்க கிட்ட லவ் பண்றனு ஏமாத்தி காசு வாங்கி பிரச்சனை ஆகிட்டாம். வர வழிலே அவரை பார்த்தேன். போலீஸ் ஸ்டேஷன் போகனுமாம் அதான் அங்கிள் உங்கள தேடி வந்தார். நான் தான் எங்க அப்பா அங்க எல்லாம் வர மாட்டாங்க அது கவுரவ குறைச்சல்னு நினைப்பாங்க சாரி அங்கிள்னு சொல்லிட்டேன். அடுத்தவங்கள பார்த்த நேரத்துல அவரு பையன கவணிச்சிருந்தா இதெல்லாம் நடந்திருக்காது. புரனி பேசுரதே வேலை" முகமும் குரலும் என்னவோ அப்பாவியாக தான் இருந்தது ஆனால் அவள் கண்களில் தெரிந்த நக்கலில் வாயை மூடிக் கொண்டார் ராகவன்.

அவளை எதுவும் செய்ய முடியாமல்
"துர்கா வந்தோனே காஃபி தரமாட்டியா?" என மனைவியை அதட்டினார்.

"கொண்டுவரேன்" அவசரமாக கிட்சனில் நுழைந்தார் அவர் ஒரு ஏளன சிரிப்புடன் உள்ளே சென்றுவிட்டாள் ஆராதனா.
_______

தன் எதிரே எரிந்து கொண்டு இருந்த மெழுகுவர்தியை பார்த்து கொண்டு இருந்தான் அதியன். அது ஒரு 5 star hotel.

அவன் மட்டும் தான் அங்கு இருந்தான் அவன் நினைவு முழுக்க ஆராதனாவை சுற்றிதான். ஏன் என்றே தெரியாமல் அவளை நினைத்தான். அந்த ஹாலில் மெல்லிய சத்ததுடன் ஒரு இசை ஒலித்துகொண்டு இருந்தது. அந்த இடத்தை சுற்றி மெழுகுவர்தியில் இருந்து கமழ்ந்த அரோமா ஒரு மாய உலகையே உருவாக்கி கொண்டு இருந்தது. கழுத்தில் இருத்த செயினில் இருந்த வித்தியாசமான டாலரை பிடித்து இழுத்து கெண்டே திவிரமாக ஆராய்ச்சி செய்துகொண்டு இருந்தான்.

இதற்க்கு முன்பே இருமுறை அவளை பார்த்திருக்கிறான். அவளும் அவனை பார்த்திருக்கிறாள். இரண்டு முறையும் சொல்லேன்னா ஒரு உணர்வு அவனுக்குள். அன்று அதை அவன் ஆராயவில்லை இன்று அதனை அப்படியே விட முடியவில்லை. தான் மனக்கவிருக்கும் பெண் அருகில் இருக்கும் போது மனம் ஆராதனாவை நாடியதை அவன் உணர்ந்தே இருந்தான். அது உண்மை என்றால் பவித்ராவை விட்டுவிலகவும் அவனுக்கு தயக்கம் இல்லை.

ஒரு முறை வேதா இம்போட்ஸ் அண்ட் எக்ஸ்போட்ஸ் கம்பேனி எம்.டியை பார்க சென்ற போது தன்னிடம் வாலாட்டிய மேனேஜரை கன்னம் மாற்றி கன்னம் பழுக்க அனைவர் முன்னிலையில் அறைந்துக்கொண்டு இருந்தாள். அங்குதான் ஆராதனாவை முதல்முறை பார்த்தான். அன்று அவளை பார்த்தகோலம் இன்றும் கண்ணில் வந்து நின்றது. இதழ் ஓரத்தில் ஒரு புன்னகை உதித்தது அவனுக்கு. எழுத்து பார்க்கிங் நோக்கி சென்றான்.

காரில் எரியவன் தன் கழுத்தில் இருத்த டாலரில் உள்ள பட்டனை அழுத்தி ஆஃப் செய்தவன் தன் மொபைலில் பதிவாகி இருந்த அன்றைய தின நிகழ்வை ஒட விட்டான்.

அது அதியனிடம் உள்ள பழக்கம் எப்போதோ ஆரபித்தது. அவன் கழுத்தில் அணிந்திருந்த செயினில் ஒரு மினி கேமராவை டாலராக மாட்டிருந்தான் அதனுடன் மைக்ரோ போனும். அவன் பார்க்கும் பேசும் அனைத்தும் அவன் போனில் பதிவாகி இருக்கும். அதனை காரில் செல்லும் போது கேட்பது அவனுக்கு பழக்கம். அனைத்தையும் மேமரிகாடுகளில் பதிந்து நாள் குறிப்போடு வைத்திருப்பான். இது யாருக்குமே தெரியாதது.

இன்று காலையில் நடந்ததில் இருந்து அதில் ஒடியது அப்போதுதான் கவணித்தான் அவன் கோபம் டென்சன் எல்லாம் ஆராதனாவை பார்த்த பிறகு தான்.
பவித்ரா வரமுடியவில்லை என்று சொன்னதால் தான் என்று நினைத்து இருந்தான். ஆனால் ஆராதனாவை விஷ்ணுவுடன் பார்த்துதான் அதற்தக்கு காரணமோ என்று இப்போது தோன்றியது.

"ஆராதனா... ஆரா... ஆரு" மெதுவாக சொல்லி பார்த்தான். காற்றில் மிதப்பது போல் தொன்றியது.

இப்போதும் அவன் அதை காதல் என்று நினைக்கவில்லை ஆராதனா மீது ஒரு crush…என்று மட்டுமே நினைத்தான். அதை அடுத்தகட்டத்துக்கு நகர்த்த அவளுடன் பழக நினைத்தான்.

பவித்ராவை வேண்டாம் என்ற முடிவுக்கே வந்துவிட்டான் அதை உறுதி படுத்துவது போல அந்த காணோளி ஒடியது. அதில் பவித்தரா அதியனை விட வசதியான இளைஞன் ஒருவனுடன் மிக நெருக்கமாக இழைந்துக் கொண்டு இருந்தாள். அதியனின் செயின் கழண்டு விட அதை டேபிலில் வைத்துவிட்டு அவன் கைகழுவ சென்றநேரம் அது நடந்திருந்தது. அதை பார்த்து ஏளனமாக சிரித்தவன் வீடியோவை ஆஃப் பண்ணிவிட்டு புவிக்கு அழைத்தான்.

"ஹலோ அதி எப்போ வருவிங்க?" போனை எடுத்தவுடன் எதிர் முனையில் கத்தினான் அவன்.

"நான் தனியாதான் வருவேன் புவி"

"பவித்ரா எங்க? இன்னைக்கு டின்னர்னு சொன்ன? அப்பா அம்மா தாத்தா லாம் வெயிட் பண்றாங்க"

"அவ வரமாட்ட... நான் வரேன் நம்ம சேர்ந்து சாப்பிடலாம்"

"ஹோஒஒ எதாச்சும் ஒர்க்கா?"

"ப்ச் ஆமா"

"சரி இன்னோர் நாள் இன்வைட் பண்ணிக்கலாம்.. நீ சீக்கிரமா வா"

"நோ இனிமே அவ வரவேண்டாம்"

"என்ன அதி எதாச்சும் சன்டையா? அவசரபடாத அப்பறம் பேசிக்கலாம்."

"இனிமே பேச ஒன்னும் இல்ல. நான் முடிவு பண்ணிட்டேன் புவி" ஒரு நிமிடம் இருவரிடமும் அமைதி நிலவியது.

"சரி அதி நீ என்ன பண்ணாலும் சரியாதான் இருக்கும் என் சப்போர்ட் உனக்குதான். அப்பா கிட்ட பேசிக்கலாம் நீ வா"

"தங்க்ஸ் டா புவி"

"ஒகே ப்ரோ எல்லாரும் வெய்டிங்"

"ஒகே சியு" போனை வைத்தவன் சாலையில் கலந்தான்.
______

செடிகள் மரங்கள் என தங்க நிற சீரியல் பல்புகள் மினுக்க தோட்டத்தில் ஆங்காங்கே வட்ட மேஜைபோட்டு உணவு வகைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. எல்லோரும் தங்கள் குடும்பங்களுடன் வந்திருந்தனர். சிலர் ரெட் வொயின் கேப்பையுடன் நிற்க சிலர் குளிர்பானத்தை ஏந்தி சலசலத்துக் கொண்டு இருந்தனர். குழந்தைகள் துள்ளி குதித்து விளையாட அவர்களுக்கு இணையாக முயல் குட்டிகளும் ஓடி கொண்டு இருந்தது. அங்கு இருந்தவர்களில் பாதிபேர் காவல் துறை உயரதிகாரிகள் அரசியல் வாதிகள் மற்றவர்கள் பிஸ்னஸ் பிபுள்ஸ் இளைஞர்கள் அனைவரும் ராஜா வீட்டு கண்ணு குட்டிகள் என ஆடம்பர விருந்துகான அத்தனையும் இருந்தது.

அது ஒரு பார்ட்டி நடக்குமிடம். மெல்லிய இசை அவ்விடத்தை நிரப்பி கொண்டு இருந்தது. அனைத்தையும் பாத்து கொண்டு நடந்தார் முரளி.

"யாரு வீடு பா இது? ரெம்ப பெருசா இருக்கு" அந்த பங்களாவை விரல் நீட்டி காண்பித்து கேட்டாள் முரளியின் 7 வயது மகள்.

"இது home minister வீடு டி." தன் தங்கைக்கு பதில் சொன்னான் 12 வயது ரித்திக்.

அதற்குள் அவர்களை பார்த்த விமலன் வரவேற்று பரஸ்பர விசாரிப்பிற்க்கு பின் நகர்ந்தான்.

முரளியின் கண்கள் அந்த எஸ்.பி மேடம் யார்? என்பதை தான் தேடியது. அவரை காக்கவைக்காமல் விமலன் மைக்கை பற்றி பேச ஆரம்பித்தான்.

அவன் ஆரம்பிக்கும் போதே அவன் அருகில் முட்டி வரை மட்டும் உள்ள பேபி பிங் கவுன்அணிந்த பெண் ஒருத்தி வந்து நின்றாள் அவள் காலில் வொயிட் கலர் பாயின்ட் ஹீல்சும் கழுத்தில் இருந்து முழுகை வைத்து இடுப்பிற்க்கு மேலே நின்று போன வொயிட்கலர் லெதர் கிளிட்டர் ஓவர்கோட்டை அணிந்து இருந்ததாள். இடைவரை இருக்க வேண்டிய முடியை சுருட்டி முதுகில் அடக்கிய சீகை அலங்காரம். அதிகம் மேக்கப் இல்லாத முகம். மொத்ததில் பார்பதற்கு பார்பி டால் போல இருந்தாள். பவ்வியமான அழகு.

"வெல்க்கம் ஆல் நான் இன்வைட் பண்ணதை மதிச்சு என் சிஸ்டர்ரோட பிறந்தநாள் விருந்துக்கு வந்தற்க்கு என்னோட நன்றி. அப்பாக்கு ஒரு இம்பாடன்ட் மீட்டிங் அதுனால அவர் கலந்துக்க முடியல ரியலி சாரி பார் தட்."

"சாருக்கு எத்தன தங்கச்சி? ஒருத்தவங்க ரொம்ப சாது போல? இவ்வளவு அமைதியா இருக்காங்க. எங்க அந்த பொண்ண காணும்?" சுற்று முற்றும் தேடியவருக்கு ஏமாற்றமே விமலன் சொல்லிய ஒப்புமையோடு அவர் கண்ணுக்கு ஒரு பெண்ணும் தட்டுபடவில்லை.

"தீ கம்" அந்த பார்பி பெண்ணை அழைத்து அவளை தோளோடு அனைத்தவன்

"உங்கள்ல பாதிபேருக்கு என் சிஸ்டர் யார்னு தெரியாது. அவ இப்போதான் தமிழ்நாட்டுக்கே வந்துருக்கா. ஒகே லெட் மீ இன்ரோடியூஸ் மை டியர் சிஸ்டர் தீ. தக்ஷினா முத்துவேல் ஐ.பி.எஸ் Sp in crime against women and children special wing"

நிமர்ந்து பார்த்தாள் அவள். கண்களில் ஒரு அலட்சியம். கூடவே பிறந்தது போன்ற ஒரு திமிர். வராதசிரிப்பபை வம்படியாக ஒட்டவைத்தது போன்ற ஒரு பாவனை. இப்போது அவர் கண்ணுக்கு முழுவதும் வேறாக தெரிந்தாள் தக்ஷினா.

"அவங்கதான் இவங்களா? இல்ல இவங்கதான் அவுங்களா?" எப்பொழுதும் போல குழம்பியது நம் முரளியேதான்.

.




போகாதடி என் பெண்ணே!💝

By Naney than
 
Last edited:
Status
Not open for further replies.
Top Bottom