Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


மகிழ் குழலி ~ சூரிய கதிர்களும் நிலவொளியும்

Magizh Kuzhali

New member
Messages
2
Reaction score
1
Points
1
சூரிய கதிர்களும் நிலவொளியும்

“அந்த ஆதவனுக்கு நிலவுமேல் காதலாம்” இந்த வரியைப் பல பல கதைகளின் காதலை வர்ணிக்கப் பயன்பட்டவை...!!! உண்மையில் அந்த உண்மையான சூரியனுக்கு சந்திரன்மேல் காதல் இருந்தால்? அதுவே இக்கதை, ஒரு சிறிய கற்பனை முயற்ச்சி.

பிரபஞ்சம் எங்கும் கருமை கருமை கருமை. அங்காங்கே சிறு சிறு ஜொலிப்பு, உற்று பார்த்தாலே அது இமை சிமிட்டுவது போல் இருக்க ரசனையுடன் வேடிக்கை பார்த்தபடி மெல்லமாய் சுற்றி திறிந்துக்கொண்டு இருந்தாள் நிலாப்பெண். திடிரென ‘ஸ்ஷ்ஷ்ஷ்.....; என்கின்ற ஓசையுடன் ஒரு விண்கல் அவளைத் தாண்டிப் பாயப் பயந்து விழிகளை மூடிக்கொண்டாள்.


சிறிது நேரத்திலேயே அது தன்னவனை நோக்கித் தான் பாய்ந்தது என்பது உறைக்க படக்கென விழி திறந்தவள் ‘அவனுக்கு ஒன்றுமில்லையே’ என்ற பதைபதைப்புடன் நிமிர்ந்து பார்க்க அவளை விட்டு வெகுதூரத்தில் அந்த எட்டு கோள்கள் மற்றும் அதனதன் துணைகோள்களையும் தன் சக்திக் கொண்டு தன் அளுமை கீழ் இயக்கியபடி கம்பீரமாய் அவளையே வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டு இருந்தான் ஆதவன்.

அவனின் பார்வை தன்னில் பதிந்ததும் வெட்கம் மீதுற இமை தாழ்த்தி பக்கத்தில் இருக்கும் தன் தோழனான பூமியை பார்த்தாள்.

“அவரு கெத்து தெரியாம இந்தப் புள்ளை பயந்துச்சே...ஐயோ” என்று சுற்றி இருந்த கோள்கள் அவளைக் கேலி செய்ததை முறைத்துக்கொண்டு இருந்தான் பூமி.
இவர்கள் அட்டகாசத்தைக் காண சகிக்காமல் ‘உர்ர்’ என்ற முகத்துடன் அந்த இடத்தை விட்டு நகர முடியா கோவத்துடன் பார்த்துக்கொண்டு இருந்தாள் வியாழனின் துணைக்கோளான ‘கணிமா.’

“இந்தச் சூரிய குடுபத்திலேயே பெரியதான வெற்றியான துணைக்கோள் நான்தான் என்னை விட்டு அப்படி என்ன அந்த நிலாகிட்ட இருக்குனு எல்லாரும் அவள்பின் போறாங்களோ எல்லாம் அழகா இருக்கானு” தனக்குள் முணுமுணுவெனப் பேசிக்கொண்டு இருக்க யாரும் அவளைக் கண்டுக்கொண்டதாகத் தெரியவில்லை.

“உன் இரவு நேர தூக்கம் போச்சுடி.......” பூமி தன் தோழியைக் கிண்டலடித்தபடி சுற்றிக்கொண்டிருக்க பொய் கோவம் கொண்ட நிலா சற்று பலமாய் முறைக்க அவன்மேல் இருந்த கடலும் மழையும் அழுத்தம் தாங்காமல் துள்ளி குதிக்க ஆரமித்தது.

“ஹே நிலா வேண்டாம்டி என்னால நீ கோவபட்டா தாங்க முடியாது தெரியும்ல”

“சரி சரி பிழைச்சி போ” கலகலவெனச் சிரித்தபடி தன் ஆதிக்கத்தை குறைத்த நிலாவை பார்க்கப் பார்க்கப் பாசம் பொங்கியது பூமிக்கு. ‘எவ்வளவு மென்மையான குணம் கொண்டவள். அவன் நினைவு தாங்கள் சந்தித்து தோழமை கொண்ட நாள் நினைவு வந்தது.

*****************************************

இந்தச் சூரியக்குடும்பத்தில் தான் சேர்ந்து நாட்கள் நகர்ந்துக்கொண்டு இருக்க சுற்றி ஏழுபேர் பேர் இருந்தாலும் எப்போதும்போல் அந்தச் சூரியனை சுற்றிக்கொண்டு இருந்தவன்மேல் திடீரென வந்து பட்டென எவனோ ஒருவன் மோதினான் தன்னைவிட சிறியவனாய் இருந்தாலும் அவன் மோதியதில் ஆட்டம் கண்ட பூமி தலையைப் பிடித்தபடி தடுமாறி நிற்கத் தனக்கருகில் நின்றுக்கொண்டு இருந்தவளை கண்டு விழி விரித்தான். வெள்ளை வெளேரென்று லேசாய் பயந்தபடி சற்று மங்கலாய் குட்டியாய் இருந்த அதைக் கண்டு முதலில் குழம்பி போனாலும் உடனே சுதாரித்துக்கொண்டது.

“திடீர்னு நீ எங்க இருந்து வந்த?” என்று மிரட்டலாய் கேட்க நிலா திருதிருவென விழித்தாள். அவளுக்குத் தெரிந்தால் தானே சொல்ல முடியும்? அவளுக்கே தெரியாத ஒரு விஷயத்தைக் கேட்டால்? என்ன செய்வாள் பாவம் அவளும்?

“கேட்குறேன்ல? பதில் சொல்ல முடியாது?” பூமி உறும

நிலா பயந்தபடி பின்னே நகர முயற்ச்சித்தது பாவம் அவளால் மூணரை சதமமீற்றர் மேல் நகர முடியவில்லை. எப்போது எந்த நேரத்தில் அதைச் செய்தாளோ? இன்று வரை வருடம் ஒரு முறை மூணரை சதமமீற்றர் நகர்கிறாள். அவர்களுக்கே பயமாகத் தான் இருந்தது இப்படியே தள்ளித் தள்ளிப் போய்விடுவோமோ என்று. ஒவ்வொறு முறை அவர்களுக்குள் உண்மையாகக் கோவத்தில் மோதல் வரும்போதும் இப்படி நடந்துவிடுகிறது.

“எ...எனக்குத் தெரியலை” அழுகுரலில் அவள் கூற இரக்க குணமுள்ள பூமிக்கு உருகிவிட்டது. எனவே தன் சகாக்கள் அனைவரையும் அறிமுக படுத்தி வைத்தான்.

“உன் பெயர் என்ன?”

“தெ...தெரியலையே” பாவமாய் கூற

“ம்ம்...உனக்கு ஒரு பேரு வைக்கணுமே...என்ன பேரு வைக்கலாம்” பூமி யோசிக்க

“நிலா?” என்று கேட்டது அந்த வெள்ளை சிட்டு

“ம்ம்....நல்லாதான் இருக்கு” கிண்டலாய் கூறிய பூமி “வா உன்னை என் சகாக்களோட அறிமுக படுத்தி வைக்கிறேன். என்று அழைத்துச் சென்றான்.

அனைவரும் புதியதாய் வந்த அவளிடம் பேச ஆசைகொள்ள அப்போது தான் “ஹே....நம்ம தலைக்குச் சொல்லிட்டியா?” என்று வியாழன் கேட்க அவன் பக்கத்தில் நின்றிருந்த கணிமாவிற்க்கு வந்ததே கோவம் சுறுசுறுவென எழுந்த அத்திரத்தை அடக்கத் தெரியாமல் “இப்போ இவளைக் கவனிக்கறது தான் அவங்க வேலையா?” முகத்தில் அடித்தார் போல் கேட்க விழுந்துவிட்டது நிலாவின் முகம்.

சற்று மங்களாய் இருந்தாலும் அவள் அழகி தான். என்னமோ இருந்தது அவளிடம். மயங்கிக் கிறங்கி வைத்த கண் வாங்காமல் பார்க்கத் தூண்டினாள். அதுவே கணிமாவிற்கு பிடிக்காது போயிற்று. இன்று வரை தன்னை பார்த்த அனைவரும் இன்று நிலாவை பார்ப்பது ஏதோ தன் இடத்தை அவள் தட்டி பறித்த உணர்வு.

“ச்சு...உனக்கு என்ன தெரியும்? அவருக்குத் தெரியாம இங்க எப்படி புதுசா வந்துருக்க ஒருவர அறிமுக படுத்தாம வைத்துக்க முடியும்?” காட்டமாய் கேட்டது செவ்வாய். அவனுக்கு நிலாவை பார்த்ததுமே தலைக்குமேல் பலப் எரியும் உணர்வு. எந்நேரமும் அவளைப் பார்த்துப் பலிளித்துக்கொண்டு இருந்தான்.

“சரி சரி நான் போய் அவருக்குக் காண்பித்துட்டு வரேன்” என்று பூமி நிலாவை கூடிக்கொண்டு திரும்ப

“எனக்கு ரொம்ப பயமா இருக்கு பூமி” வரமாட்டேன் என்பதை அடம்பிடித்தபடி அவள் கூற

“இப்போ என்ன உனக்கு? இங்க எல்லார் கூடவும் நல்லா தானே பேசின? ஆதவனுக்கு தெரியாம இங்க ஒண்ணுமில்லை...புரியுதா? ஒழுங்கா வா இல்லை யாரு அவரோட சூட்டை(கோவத்தை) தாங்கறது?” சற்று பயந்தானோ? பூமி அதட்டலாய் கூறியபடி அழைத்துச் சென்றான்.

அவள் எப்படி சொல்லுவாள்? வந்த முதல் நாளே அந்தத் தல என்கிற ஆதவனை கண்டுவிட்டாள். தனக்குள் நிகழும் மாற்றம் புரியாமல் தடுமாறினாள். நடுங்கியது, குளிர்ந்தது, வெடவெடவென அடித்துக்கொண்டது. தகிக்கும் அவனைக் கண்டு அனைவரும் விலகிச் செல்ல அவளுக்கு மட்டும் அவனை அப்படியே தன்மேல் பூசிக்கொள்ளும் ஆசை வந்தது. தூரத்திலிருந்து பார்த்ததற்க்கே இப்படி. இதில் நேர் எதிரே பார்க்க வேண்டுமென்றால்?

பூமி கூடிக்கொண்டு சென்று ஆதவனின் முன் நிறுத்த “ம்ம்…இப்போ தான் சொல்லணும்னு தோணுதா?” நான் எல்லாம் அறிவேன் என்பது போல் கம்பீரமாய் அவன் கேட்க

“இல்லை ஆதவா...”

“ம்ம்...”

“ரெண்டு பெரும் பயணம் செய்துவர நேரம் எடுத்துடுச்சு” என்று திக்கியபடி பூமி கூற

“சரி தான்...ஹே முன்னாடி வா” என்று ஆதவன் கூற தத்தி தத்தி தயங்கியபடி பூமியின் முன் வந்து நின்று மெதுவாய் நிமிர்ந்து ஆதவனை பார்க்க அவன் ஒற்றை இமைசிமிட்டினான். பயந்துபோன நிலா மெல்லமாய் விலகிப் போக...அதுவரை சற்று இருட்டிபோன உணர்வுடன் தன் முன்னாள் நிற்கும் நிலாவை பார்த்த பூமி மீண்டும் ஆதவனின் கதிர் படரவே தெளிவுற இருவரையும் மாறி மாறிப் பார்த்தான்.

“போ...போலாம்” நிலா மெதுவாகக் கூற

“என்ன அவசரம்” எரிந்து விழுந்தான் ஆதவன். இருவருக்கும் என்ன ஆனது என்று புரியாமல் குழம்பிய பூமி, ஒன்றை புரிந்துக்கொண்டான். நிலா பக்கத்தில் இருந்தான் ஆதவனின் ஆதிக்கம் தன்மேல் கம்மியாக உள்ளது என்பதை. ஆனாலும் எங்கே அவளைக் காயபடுத்திவிடுவனோ என்று பயமாகவும் இருக்க
“ரொம்ப நேரம் இங்கயே இருக்க முடியாது ஆதவா நாங்க கிளம்புறோமே” என்று கூற

“சரி போய் வாங்க” என்று அனுப்பிவைத்தான். ‘ச்ச்ச்சபா’ என்றானது பூமிக்கு. முழுதாக ஒருமுறை தலை சுற்றிய உணர்வு. விட்டால் பொதுமெனச் சற்று தள்ளி இருந்த நிலாவை அழைத்துக்கொண்டு நகர்ந்தான். அவளோ ஏற்கனவே என்னை விட்டால் நான் ஓடியே போய்விடுவேன் என்பதாய் விடுவிடுவென நகர்ந்தாள் அவ்விடத்தை விட்டு.

அப்போது சற்று பூமியை விட்டு விலகி இருந்த நொடி ‘கணிமா’வின் பக்கம் சென்றுவிட்டிருக்க ‘தன் முன்னால் முகம் சிவந்து படபடவெனத் துடித்துக்கொண்டு இருந்த நிலாவை பார்த்து அவளுக்கு என்ன தோன்றியதோ?

“நீ வந்தப்பவே கண்டுபிடித்தேன் இன்னைக்கு உறுதி ஆகிடுச்சு. நீ காணுறது முழு கனவு, ஆதவன் என்றைக்கும் உன்னைத் திரும்பிப் பார்க்கமாட்டான்.” அழுத்தமாய் கொடூர பார்வையுடன் கூறினாள் ‘கணிமா’.

நிலாவோ விழித்தபடி அவளையே பார்க்க “என்ன பார்க்குற? அவருக்கு இருக்க அழகென? தகிக்கும் மேனி எங்க? ஆளுமை எங்க? நீ எங்க? மங்கி போன வெள்ளை நிறத்துல குட்டியா இருக்க பார்த்தியா? அவர் பக்கத்தில் நிற்கக் கூட லாய்க்கு இல்லை போப்போ” பூமி அருகில் வந்துவிடவே படபடவெனப் பொரிந்துவிட்டு நகர்ந்துவிட்டாள்.

அவள் பேசிய பேச்சில் திகைத்து விழித்து மருண்டு நின்ற நிலாவின் மனதில் மட்டும் வைராக்கியம் தோன்றியது ‘என்றைக்கும் அவர்மேல இருக்க என்னுடைய இந்த ஈர்ப்பு யாருக்கும் தெரிய கூடாது’ உறுதிபூண்டவள் பூமியுடன் சேர்ந்து நகர அவள் முகத்தையே திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டு வந்த பூமி அவளிடம் ஏற்ப்பட்ட மாற்றத்தை உடனே புரிந்துக்கொண்டான்.

‘அவளே மறைக்க நினைக்கும்போது நாம எதுவும் யார்க்கிட்டையும் சொல்ல வேண்டாம்’. என்று நினைத்துக்கொண்டான்.

ஒன்று மட்டும் அவனுக்குப் புரிந்தது. இவளால் நம்மில் ஏதோ மாற்றம் நிகழப் போகிறது. அவள் வந்ததிலிருந்து தன் உடம்பில் இதுவரை சுளுவாய் அசைந்திடாத கடலும் மலையும் நகர்வதை உணர்ந்தான். அதுவும் கடல் படபடவென எந்நேரமும் அலை எழுப்பிக்கொண்டே இருக்கிறது. மேலும் ஆதவனுக்கும் எனக்கும் நடுவில் இவள் வந்ததும் தான் என்ன ஒரு அதிசயம். யாராலும் மறைக்க முடியாத ஆதவின் ஆதிக்கத்தையே தன்மேல் விழாமல் மறைத்துவிட்டாளே.

ஏதேதோ யோசித்தபடி அவன் வர அப்போது தான் கவனித்தான் நிலாவும் அவனுடனே வருவதை

“ஹே நீ ஏன் என்கூடவே வந்துட்டு இருக்க” அவன் கேட்க

“தெரியலை வேறு எங்கும் நகர முடியல...என்ன பண்ணுறதுன்னு தெரியலை”

மெதுவாய் முணுமுணுத்தபடி அவள் சொல்ல, அப்போது தான் அவனுக்குப் புரிந்தது, இனி தான்தான் அவளைப் பத்திரமாய் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பது. அன்றிலிருந்து இன்றுவரை நெருங்கிய தோழமையை இருவருக்குள்ளும் இருவரும் உணர்ந்தனர்.

************************************************

இன்று ஏனோ நிலவு மிகவும் சோகமாய் சுற்றிக்கொண்டு இருந்தது. பூமியுடன் இன்று கூட இல்லை அவள். ஆதவனுக்கு பக்கம் பன்னிரெண்டு அளவில் நகரும் நாள். பூமியை காண முடியாது. எப்போதும் நிகழும் ஒன்று தான் என்றாலும் இன்று மிகவும் சோர்வாக இருந்தாள்.

அப்போது அந்தப் பக்கம் நகர்ந்து வந்துக்கொண்டு இருந்த கணிமா வேண்டுமென்றே இவள் புறம் நகர்ந்து வந்து “ஹே மங்கி நிலா” என்று கூப்பிட

‘ஐயோ எனக்கே ரொம்ப கஷ்டமா இருக்கு இவங்க வேற...’ என்ற நினைப்புடனே அவள்புறம் திரும்பினாள். வந்த முதல் நாள் அடுத்து யாருமில்லா சமயமெல்லாம் வந்து மங்கி மங்கி என்று கூப்பிட்டு வேருபெற்றிவிட்டு செல்வதே வழமையாக வைத்து இருந்தாள் கணிமா. ‘இன்னைக்கு என்னவோ’ சுணங்கிக்கொண்டே அமைதியாய் இருக்க

“ஹே உன்னைத்தான் என்ன என்னைப் பார்த்துட்டே எங்கேயோ கனவுக்குப் போயிட்ட?” என்று கேட்க

“என்ன விஷயம்?”

“என்ன விஷயமா? இதை நீ என்கிட்டே சொல்லவே இல்லை பார்த்தியா” என்று தன் வம்பை ஆரமித்தாள்

நிலாவுக்கு படபடப்பாய் வந்தது. எங்கே எதையாவது கண்டு பிடித்துச் சொல்லிவிடுவளோ என்று. “எ...என்ன?” மெதுவாய் கேட்க

உன் உடல் முழுமையும் தான் மங்களா இருக்குனு நினைத்தேன் பாவி, உன் கிழ் பாகம் முழுக்க கருமையை பூசிக்கிட்டு இருக்கு சொல்லவே இல்லை இனி உன்னை மங்கி நிலா கூடக் கால் கருப்பினு கூப்பிட போறேன் பாரு” கணிமா ‘லோலோ’ என்று கத்தி பேச அந்தப் பக்கம் சென்றுக்கொண்டு இருந்த ‘லோ’ இவர்கள் பக்கம் சுற்றுவதை கண்டு பதறியது நிலாவுக்கு. கணிமாவாவது பரவாயில்லை நேரடியாய் மோதுவாள். லோ உடல் முழுவதும் வன்மைத்தை தேக்கி பயம்கொள்ள செய்வாள்.

“எ…என்ன சொல்லுறிங்க அப்படியெல்லாம் ஒன்றும் இருக்காது” இவளுக்குப் பயம் பிடித்துக்கொண்டது. இது அவளுக்கே தெரியாத விடயம், இருக்கும் குழப்பமான விஷயங்களில் இதுவேற என்று தோன்றியது அவளுக்கு.

“ஹே லோ இந்தப் பக்கம் வாயேன்” என்று கணிமா அழைக்க இவர்கள் பக்கம் சுற்றிக்கொண்டு இருந்த லோ இவர்கள் அருகில் வந்தாள்.

“என்ன கணிமா” என்று கேட்க

“இவளைப் பாரு இவள் கிழ்பாகம் கருப்பா இருக்குனு சொன்னா நம்ப மாட்டேன் என்கிறா...நீயும் தானே பார்த்தாய் சொல்லு இவளுக்கு”

“அவள் சொல்லுறது உண்மை தான்” லோ கண்களாலேயே அவளை வன்மத்தால் கூறு போட்டபடி நக்கலாய் சொல்லப் பயம் பிடித்துக்கொண்டது நிலாவுக்கு.

“என்னமோ நான் பொய் சொல்லி உன்னை ஏமாற்ற முயற்சிக்கிற மாதிரி கேட்ட” விடாமல் கணிமா குத்த

“நான்...நான் போகணும் வழி விடுங்க” பயந்தபடி நிலா அங்கிருந்து நகர இருவரும் அவளைக் கண்டு கேலி பேசிச் சிரித்தனர்.

‘ஏற்கனவே நான் மங்கலாய் இருக்கிறேன், சிறிதாக இருக்கிறேன் என்று அவனுக்குச் சற்றும் பொருத்தம் இல்லாமல் இருக்கிறேன் இதில் இதுவும் சேர்ந்துக்கொண்டு...நிலா உனக்கு அதிர்ஷ்டமே இல்லையடி’ தனக்குள் புலம்பியபடி சுற்றி நடக்கும் விஷயங்களைக் கவனிக்காமல் ஆதவனுக்கு நேரெதிரே சென்று அவனையும் கடந்து போகப் பார்க்க

“நிலாக்குட்டி” என்று அழைப்பு கேட்கவே ‘யாருடா நம்மை இப்படி கூப்பிடுறது?’ என்று சுற்றி சுற்றி பார்க்கத் தன் எதிரே ஆதவனை கண்டதும் மூச்சடைத்தது அவளுக்கு.

“நிலாக்குட்டி என்ன ஓடுது இந்தக் குட்டி உருவத்துகுள்ள?” கண்களில் ஏதோ காண்பித்து ஆதவன் கேட்க

‘ஐயோ நம்மகிட்ட தான் பேசுறாங்க’ ஒருபக்கம் பயம் ஒரு பக்கம் பதட்டம் ஒரு பக்கம் ஆசையென அனைத்தும் போட்டியிட அவனைப் பார்பதும் பின் திரும்பவதும்மாய் இருக்க
“என்னை நிமிர்ந்து பாரு” கட்டளையாய் ஒலித்ததோ? அவன் குரல்

“ம்ம்...” என்று இவள் காண

“நீ இங்கு வந்ததிலிருந்து எவ்வளவு மாற்றம் தெரியுமா?” என்று கேட்க

“நான் வந்ததுல இருந்தா? நான் ஒண்ணுமே பண்ணலையே” இவள் தவிப்பாய் கூறா

“உன்னைச் சுற்றி என்ன நடக்குதுன்னு பார்” சுற்றி சுற்றி பார்த்தும் ஒண்ணும் தெரியவில்லை அவளுக்கு.

“பூமி இவ்வளவு ஆர்பரிப்போட இருந்து நான் பார்த்ததே இல்லை. அந்தச் செவ்வாய்க்கு எப்போதும் உன்மேல் ஒரு பிரிக்க முடியாத ஆசை, அதோ பார் எப்போதும் நீ பெரியதா நான் பெரியதா என்று அடித்துக்கொள்ளும் லோ மற்றும் கணிமா கூட உன்னை எதிர்பதற்காகவாவது சேர்ந்துக்கொண்டு இருக்கிறது. எப்போதும் ஒருவித உயிர்ப்பை உன்கூடவே வைச்சிருக்க”

அவன் இவ்வளவு பேசி அவள் பார்த்ததே இல்லை. எப்போதும் ஓரிரு வரிகளே. என்னிடமா இவ்வளவு பேசுறாங்க? அதுவும் என்னைத் தேற்றனும்னு? அவளுக்கு நிஜமாகவே ஏதோ கனவில் இருப்பது போல் இருந்தது. மெலிதாய் சந்தோசத்தை காண்பிக்க திருப்தி பரவியது ஆதவனிடத்தில்.

“எப்பவும் சந்தோசமா இரு. எல்லார்கிட்டையும் எல்லாமும் இருக்காது ஆனா நம்மகிட்ட இருக்கறத வைத்து நாம சந்தோஷமா இருப்பதோட நம்ம சுத்தி இருக்கவங்களையும் சந்தோசமா வைத்துக்கலாம்”

“சரி...”நிலா மெலியதாய் குரல் கொடுக்க

“இப்படி மென்மையா இருந்தே என்னை என்னமோ பண்ணிட்டா…கண்டாலே நான் நானாகவே இல்லாம போயிட்டேன்...என்னடி பண்ணாய் என்னை” தனக்குள் முனகிக்கொண்டான் ஆதவன். ஆனான பட்ட அந்த அதவனையே அசைத்துப் பார்த்துவிட்டாள், நிலவுப்பெண்.

அவன் ஏதோ பேசுகிறான் தனக்குள் முனகிக்கொள்கிறான் என்று தெரிந்தாலும் என்னவென்று புரியாத நிலாவோ “என்ன சொல்லுறிங்க புரியலை...” என்று கேட்டு வைக்க

அவளை இழுத்து தன்னுள் பொத்திக்கொள்ளும் உணர்வு, ஆனால் தன் மொத்த சூரிய குடும்பமே குழம்பி சிதறி போகும் என்கிற காரணத்தால் அடக்கி வாசித்தான் அவன், தன் விதியை நொந்தபடி.

“ஒன்றுமில்லைம்மா யாரு என்ன சொன்னாலும் அதைக் கண்டுக்காத இரு...உனக்காக உன்கூட எப்பவும் நான் இருப்பேன் சரியா?” வாஞ்சனையுடன் சொல்லக் கண்கள் மின்னத் தலையாட்டினாள்.

அதன்பின் மௌனமே அங்கு ஆட்சி செய்ய அவன் விடாமல் அவளையே பார்த்துக்கொண்டு இருக்க அவளுக்குத் தான் நிலைகொள்ளவில்லை. இங்கும் அங்கும் சுழன்றபடி தவிக்க அவளின் நிலை புரிந்தவனாய் மெல்லிதாய் சிரித்து “சரி போ” என்று கூறிவிட சிட்டாய் பறந்தாள்.

‘அவன் என்கூட பேசிட்டான் பேசிட்டான் பேசிட்டான்’ சந்தோசத்தில் குதித்தபடி வளைய வர அப்போது தான் பூமியும் அவளும் ஒரே கோட்டில் வர அவனைக் கண்டு சிரித்து வைத்தாள். தனக்குள் ஏதோ நிகழும் மாற்றம் புரியாது ஒருவகையாய் உடமே பிசைவது போல் இருக்க என்னவென்று புரியாமல் சுற்றிக்கொண்டு வந்த பூமி அவளின் சிரிப்பில் கரைந்து தானும் சிரித்தான்.

“என்ன ஒரே சந்தோசமா இருக்க போல இருக்கு?”

“அப்படியெல்லாம் ஒண்ணுமில்லையே” முகம் பூரிப்பில் மின்னக் கூற

“இல்லையே...முன்னவிட ரொம்ப அழகா ஆகிட்ட மாதிரி இருக்கியே வெளிச்சமா ரொம்ப பிரகாசமா இருக்கே உன் முகமே, கண்ணுலையே சந்தோஷம் மின்னுது” என்று கேட்க

“ஹாஹா உனக்குத் தான் தனியா இப்படியெல்லாம் தோணும்” அவள் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே அந்தப் பக்கம் வந்த செவ்வாய்

“அழகே பொறாமை கொள்ளும் பேரழகியே” ஜோள்ளியபடி கூற

“ஹாஹஹா.......” பலமாய் சிரித்த பூமி “ஆஆஆ” என்று ஒருபக்கம் பிடித்துக்கொண்டு கத்த

“என்னாச்சு என்னாச்சு” நிலா பதற

“ஒண்ணுமில்லைம்மா ஒண்ணும்மில்லை”

“அவனுக்கு என்ன ஆகப் போகுது...நல்லாதான் இருப்பான், மனிதர்கள் ராஜ்ஜியம் செய்யும் ஆள் ஆச்சே ரொம்ப நல்லாதான் இருப்பான்” பொறாமையாய் செவ்வாய் கூற

“போடா டேய்...அவனவனுக்கு வந்தா தான் தெரியும்” மனிதர்கள் தன் உடமில் செய்யும் கலாட்டாக்கள் புரியாமல் செவ்வாய் உளரும் உளறலைக் கேட்டுச் சொல்ல

“போறேன்டா போறேன்” நிலாவையே கண்கள் நிறைய ரசித்துக்கொண்டு அவன் நகர

“அப்புறம் நிலா எந்தளவுல இருக்கு?” பூமி கேட்க

“என்னது?” சிரிப்போடு கேட்க

“உங்க அன்பு” என்று பூமி சொல்லப் பக்கென்று ஆனது நிலவுக்கு. அவள் திருதிருவென விழிக்க

“ஹஹஹா ரொம்ப அதிராத உன்கூடவே தானே இருக்கேன் எனக்குத் தெரியாம இருக்குமா? ஆனா எனக்குக் கோவம் தான் என்கிட்டையே மறைக்கப் பார்த்தல்லை?”

“இல்லை...அப்படியெல்லாம் ஒன்றுமில்லை...அவங்க எவ்வளவோ உயரத்துல இருக்காங்க, அவங்க தகிப்புக்கும் ஆளுமைக்கும் நான் கொஞ்சம் கூடப் பொருத்தம் இல்லாதவள்” முகம் சுணங்க நிலா கூற

“இப்படின்னு அந்த லோவும் கணிமாவும் சொன்னாங்களா?” அவன் காட்டமாய் கேட்க

“ச்ச ச்ச...அவங்க தனியா சொல்ல என்ன இருக்கு உண்மைய தானே சொன்னாங்க”

“நல்லா சொன்னாங்க நீயும் கேட்டுட்டு இருந்தியா?”

“இல்லடா பூமி...எனக்கே தெரியுதே...தூரத்துல இருந்து பார்க்கத் தான்...கிட்ட பார்த்தா தானே தெரியும் அங்காங்கே பள்ளம்...மங்கின ஒளி இப்போல்லாம் தான் ஏதோ கொஞ்சம் பிரகாசமா இருக்கான் போல...அதும் என் கிழ் பாகம் முழுக்க கருமையில் நிறைந்திருக்காம்...நான் ஒண்ணும் கோள்ளில்லை...துணைக்கோள் தான்...அவரோ இந்த இடத்தின் ராஜா...அப்பாப்ப...என்னவொரு பிரகாசம்...என்னவொரு ஆளுமை...தகிக்கும் அழகும்....அசை படகூடாதுனு இல்லையே...அதான் நான் ஆசை படறேன்...கிடைக்கனும்னு பேராசை படலை”

தனக்கு தானே பேசுபவள் போல் மெதுவாய் தன் மனதை திறக்க அமைதியாய் கேட்டுக்கொண்டு இருந்தான் பூமி சிறு சிரிப்புடன். நிமிர்ந்து அவனைக் கண்டவள் அவன் சிரிப்பதை கண்டு குழம்ப, மெது மெதுவாய் விலகினான் பூமி. அதுவரை தன்மேல் படாத சூரிய வெளிச்சம் பளீரென விழவே முகம் பிரகாசிக்கப் பார்க்க, பொய் கோவமும், அன்பும், வாஞ்சனையும்மாக அதையெல்லாம் விடப் பிரபஞ்சத்தின் மொத்த காதலையும் முகத்தில் தேக்கியபடி அங்கு ஆதவன் நின்று இருந்தான்.

“இனி உங்க பாடு தல....” சிரித்தபடி பூமி விலக வெட்கம் பிடுங்கி தின்றது நிலாவை. அவள் மறைய இடம் தேடி இங்குமங்குமாய் சுற்ற எங்கும் போக முடியாமல் தன் ஆதிகத்தின் கிழ் கொண்டு வந்து இருந்தான் ஆதவன்.

“இவ்வளவு தவிப்ப மனசுல வைத்துட்டு தான் சுற்றிக்கொண்டு இருந்தாயா?” அவன் கேட்பதற்கு பதில் கூற முடியாமல் அவளிருக்க
“அடியேய்....இப்படி வெட்கம் கொண்டே என்னை வேட்க்கை கொள்ள வைக்காதே” அவன் கூற அவளுக்கு மேலும் வெட்கம் வந்தது. தூரத்திலிருந்து பார்த்த பூமி அவளைச் சுற்றி வெட்கத்தால் உண்டான வட்டத்தைக் கண்டு சிரிப்பு கொள்ள நெகிழ்வாய் பார்த்தபடி நகர்ந்துக்கொண்டு இருந்தான், ஏனோ மனம் நிறைய சந்தோஷம் இருந்தது, உடம்பில் நிகழும் மாற்றத்தைக் கவனிக்க தவறினான்.

“என்னங்க...” நிலா.
“என்னங்க...” ஆதவன்.
“எப்...எப்படி தெரியும்?”
“எ…என்னது...எப்…எப்படி தெரியும்?”
“ச்சு...சொல்லுங்க” என்று சிணுங்க
“ப்பா...சிணுங்கியே கொல்லாதடி...நம்ம ரெண்டு பேர் மட்டுமே தனியா போயிடலாமானு இருக்கு...ஆனா நீ இல்லனா பூமி இல்ல நான் இல்லைனா இந்தக் குடும்பமே இல்லாம போயடும்மேனு கட்டுபாடா இருக்கேன்”
“ம்ம்....சரி…” உடனே அவள் உடன்பட
“மக்கு…மக்கு.....” அவன் செல்லமாய் கொஞ்சிக்கொண்டான்.
“ப்ச்...என்ன?” அவள் பொய் கோவம் கொள்ள
“ஐயோடா உனக்குக் கோவம்லாம் படத் தெரியுமா? அந்த லோ மற்றும் கணிமாகிட்ட அழுதுவடிஞ்சிட்டு இருந்த?” என்று கேட்கத் திகைப்பாய் அவள் அவனையே பார்க்க
“என்ன பாக்குற? இங்க ஒரு அணுவும் எனக்குத் தெரியாம நகராது...அவங்ககிட்ட கோவபடுவனு பார்த்தா அமைதியா வர...சரின்னு தான் அன்றைக்கு கட்டுப்பாட்டையும் மீறி நானே உன்னைக் கூப்பிட்டு பேசினேன்...அதுல என்னையும் அறியாம என் உடலின் தகிப்பு உன்மேல் விழ ஆரமிச்சிடுச்சு” அந்தத் தகிக்கும் ஆதவனுக்கு வெட்கம் வருமா? வெட்கபட்டடான் அவனும்...மஞ்சளும் சிகப்புமாய் தகிப்பவன் முழுதாகச் சிகப்பு நிறத்தைப் பூசியது போல் இருக்க அவனைக் கண்டு அவள் பிரம்மித்தாள்.

அவனிடம் பேசிவிட்டு வந்ததிலிருந்து அனைவரும் தான் மேலும் மேலும் அழகு கூடிவிட்டதாய் சொன்னதை நினைத்துப் பார்த்தாள். “ஒ...உங்களால தானா?”

“ம்ம்...ஆமா...உன் அழகும் மெருகு கூடிக்கொண்டே போனது உன்னில் அன்பை உணர்ந்தாலும் என்னால எதுவும் செய்ய முடியலை விலகி விலகிப் போனே அதான் பூமிக்கிட்ட சொன்னேன்...அவன் சரியா காரியத்தை முடித்துட்டான்.” அவன் சொல்லிச் சிரிக்க அவளும் அதில் இணைதுக்கொண்டாள். இருவரும் மகிழ்வாய் வலம் வந்தனர்.

அவர்களைக் கண்டு மகிழ்தவர்கள் மகிழ்ந்துக்கொண்டே இருக்க, வன்மமும் பொறாமையும் கொண்டவர்கள் பொறாமை பட்டுக்கொண்டே இருந்தனர். முடிவில்லா உறவாய் இருவரும். காதால் என்ற வார்த்தையைப் பரிமாறிக்கொள்ளவில்லை நேரடியாய் அதை உணரவில்லை. ஆனால் அவர்களின் அக்கறையும் பாசமும் அன்பும் பகிர்வும் இருவரையும் இணைத்தது. அனைவரும் கவனிக்க தவறியது...பூமியினுள் நிகழும் மாற்றங்கள். ஏன் அவனே கூடக் கவனிக்கவில்லை இருக்க இருக்க மோசமாகிக்கொண்டே போகவே தான் உணர்ந்தான். அதன்பின் நிலா தான் உணர்ந்தாள்.

“என்னாச்சு உனக்குப் பூமி? நீ முன்ன மாதிரியே இல்லையே?” என்று கேட்டுக்கொண்டே அவனைப் பரிசோதிக்க, துணைக்கு ஆதவனிடமும் புகாரிட அது இன்னுமும் மோசமாய் முடிந்தது. அவனுள் பூகம்பத்தையும், சுனாமியையும், தீப்பிடிப்பையும் அதிகரித்தது இன்னுமும் என்னென்னமோ இயற்க்கை சீற்றத்தை அனுபவித்தான் அது ஒரு அளவிற்கு அவனுள் நிகழும் மாற்றங்களை நிறுத்தியது.

“என்னாச்சு என்னோட பூமிக்கு...” நிலா கண்ணீருடன் கத்த ஆதவன் பொறுமையாய் ஆராய்ந்தான். “இவனுள் இருக்கும் விசித்திர மான அணுக்கள் அதாவது மனிதர்கள் தான் இவனைக் கொஞ்சம் கொஞ்சமா அறிச்சிட்டு இருக்காங்க” என்று கூறியதும் சூரிய குடும்பத்தில் இருந்த அனைவருக்குமே அதிர்ச்சி. சந்தோசமாய் வலம் வரும் பூமியின் இப்போது நிலை காண பதறியது அனைவருக்கும்.

“இருக்க மரங்களை எல்லாம் அழிச்சிட்டு வராங்க...உருவான மீதி அணுக்கள் (உயிரினங்கள்)எல்லாத்தையும் அழித்துக்கொண்டே வராங்க...கண்ட கண்ட நோய்களைப் பரப்பிக் கிருமிகளை அதிகமாக்கிட்டே போறாங்க “அவர்களின் பேராசையான நோய் தான் இதுக்கெல்லாம் காரணம்”

“ஐயோ....உங்களோட ஆதிக்கத்தை கொஞ்சம் குறைத்துக்க கூடாதா?” நிலா கெஞ்ச

“நான் செய்ய எதுவுமேயில்லை என்னை அடக்கினால் இந்தக் குடும்பதிற்க்கே ஆபத்தாய் போய் முடியும் அதற்க்கு தான் அதனதற்கு என்று பாதுக்காப்பு வளையங்கள் இருக்கிறது. அந்தப் பாதுகாப்பு வளையத்தைத் தான் இவன் உடம்பில் இருக்கும் கிருமி அதாவது பேராசை கொண்ட மனித அணுக்கள் அழிச்சிட்டு வராங்க” அனைவருக்கும் பொதுவாய் ஆதவன் கூற

“இப்படியே போச்சுனா இவனோட நிலைமை?” வியாழன் கவலைகொள்ள

“வேற வழியே இல்லை இவன் அணுக்கள் உணரனும்...இப்படியே அழிச்சிட்டே போனா நம்ம வாழும் பூமி இருக்காது என்பது...அந்தந்த கோள்கள்ல அந்தந்த அளவு வாயுக்கள், அந்த அளவு நீர், நெருப்பு இப்படின்னு தான் பிரிச்சி கொடுத்துருக்காங்க அதை மாற்றனும்னு நினைத்து ஏதேதோ பண்ணிட்டு இருக்காங்க இந்த மனிதர்கள் அவர்ங்களா அடங்கணும் இல்லை மொத்தமா அடங்கிப் போவாங்க” ஆருடம் போல் ஆதவன் கூறிக்கொண்டு இருக்க

“இல்லை...என் மக்கள் என்னைக்கும் எனக்குத் தீங்கு செய்யமாட்டாங்க அவங்க உணருவாங்க இது அவங்க தெரியாம அறியாம செய்துட்டு இருக்காங்க” பூமி கதற அனைவர் கண்களும் கலங்கியது.

“இப்போதைக்கு சில சிகிச்சைகள் மற்றும் எச்சரிக்கைகள் விட்டுப் பாக்கலாம்” என்று ஆதவன் கூற அனைவரும் அதை ஆமோதித்தனர். அதன்படி இயற்க்கை சீற்றங்களை அதிகரித்துவிட்டனர், சூரியன் எந்தவித அடக்கமும் இல்லாமல் முழுதாகத் தன் ஆதிக்கத்தை செலுத்தினான்...பூமி தளர்ந்தாலும் தன்னுள் இருக்கும் ஜீவராசிக்களுக்காகத் தாங்கி நின்றது.

மனிதர்கள் சிறிது சிறிதாக மாற ஆரமித்தனர் ஆனாலும் சுயநலதிற்க்காய் செயல்படும் மனிதர்களின் ஆட்டம் நிற்கவில்லை...கடைசியாக மனித இனத்தை அழித்துவிடலாம் என்று முடிவுச் செய்தவர்கள் அங்காங்கே இருக்கும் காடுகளை எரித்தும் பனிமலைகளை உருக்கியும் என்று சிகிச்சையைத் தீவிரமாக்க கடைசியாக இதையெல்லாம் தெரிந்துக்கொண்ட பூமி “நிறுத்துங்கள்......” என்று கத்திவிட்டது.

அவனின் ஒலி அந்தப் பிரபஞ்சம் எங்கும் ஒலிக்க அவனின் மேல் தாங்கள் கொண்ட ஆதிக்கத்தை சிறிது சிறிதாகக் குறைக்க ஆரமித்தனர்.

“வேண்டாம்...என் மக்கள்...கண்டிப்பாக மாறுவாங்க...எனக்கு நம்பிக்கை இருக்கு. அப்படி இல்லைனா அவங்களோட அழிவை அவர்களே தேடிக்கட்டும் நாம எதுவும் பண்ண வேண்டாம்...விட்டுட்டுங்க” பூமி சொல்ல அனைவருக்கும் என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

அதுவரை பூமிக்காய் அமைதியாய் இருந்த நிலா “ஆமாம் வேண்டாம் இப்படி வேண்டாம் பூமி இல்லைனா நானும் இல்லை தான் ஆனாலும் இப்படியொரு அழிவைக் கொடுக்க வேண்டாம்” என்று கூற அனைவரும் எதுவும் சொல்ல முடியாமல் விலகிச் செல்ல

“நீங்கச் செய்தது சரியா தவறா என்று தெரியலை ஆனா இனிமேல் கண்டிப்பா மனிதர்கள் புரிஞ்சி உணர்ந்து தங்கள் வாழ்வை காப்பாற்றி தனக்கு வாழ்வு கொடுத்த பூமியையும் கண்டிப்பா காப்பாத்துவாங்க” தானும் நம்பிக்கை வைத்தவனை ஆதவன் சொல்லத் தத்தம் வேலைகளான சுழற்சியைப் பார்க்க சென்றனர். ஒருபக்கம் சிலர் ஆபத்தான விஷயங்களை மேற்கொண்டு இருந்தாலும் மறுபக்கம் பூமி, நிலா, ஆதவன் வைத்த நம்பிக்கை படி சிலர் தங்களையும் காப்பாற்றி பூமியையும் காப்பாற்ற ஆரமித்தனர். ஆம், நிலபகுதியில் மக்கள் மரங்களை நட்டு, செயற்க்கை தவிர்த்து இயற்கையின் பின் சென்றனர், நீர்நிலையைக் காப்பாற்ற ஆரமித்தனர், கொஞ்சம் கொஞ்சமாகத் திருந்தும் மக்களைக் கண்டு பிரபஞ்சமும் திருப்திக்கொண்டது.

சந்தோச சிரிப்பில் நட்பும் காதலும் இயங்கும் சூரிய குடுபத்தின் நிம்மதியை கண்டபடி நாமும் அதனுள் அடங்கி இயற்கை வழி வாழ்வோம்.

நன்றி...!!!
மகிழ் குழலி
 

Latest posts

New Threads

Top Bottom