Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


RD NOVEL மரபணு மாற்றம் ALK +ve - Tamil Novel

Status
Not open for further replies.

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
607
Reaction score
782
Points
93
வணக்கம் 🙏🙏🙏,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டியில் கலந்துகொள்ளும் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐💐.

போட்டியின் விதிமுறைகள், காலக்கெடு மற்றும் பரிசுகள் பற்றிய விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் விபரமாக குறிப்பிடப்பட்டுள்ளது. மீண்டும் ஒருமுறை அதை படித்துப் பார்த்துவிட்டு உங்களுக்கு முழு சம்மதம் என்றால், உங்களுடைய கதையை இந்த திரியில் தொடர்ந்து பதிவிடவும்.

உங்களுடைய கதை வாசகர்களை மகிழ்விக்கும் வகையில் அமையவும் போட்டியில் நீங்கள் வெற்றிபெறவும் வாழ்த்துகிறேன்.

மனமார்ந்த வாழ்த்துக்கள் 😍😍😍

நன்றி...
- நித்யா கார்த்திகன்

 
Last edited:

sushi55

New member
Vannangal Writer
Messages
11
Reaction score
23
Points
3

2

196315263_10223991284545329_1650835950787735593_n.jpg


மரபணு மாற்றம் – ALK+ve

(கதையின் கதை)


மரபணு மாற்றம் என்பது எல்லோரும் அறிந்த ஒன்று தான். ஆனால் என் கதையில் மரபணு மாற்றம் தான் ஹீரோ- இல்லை இல்லை - வில்லன். வில்லன் என்றால் பெயர் வேண்டாமா? ஆம் – ALK+ve அதுதான் இந்த வில்லனின் பெயர்.

இந்த வில்லன் சாதாரணமானவன் இல்லை.ஒரு சினிமாவில் ஹீரோ ஒட்டிபிறந்த இரட்டையராக வருவாரே, அதேமாதிரி நம்ம வில்லனும் ஒட்டிப் பிறந்த இரட்டையர் ரூபத்தில் தான் முதல் ஸீனில் தோன்றுவான். அவன் தேர்ந்தெடுக்கும் லொகேஷன் நுரையீரல்.

நுரையீரலில் ஒரு ஓரத்தில் சாதுவாகி தோன்றி, யந்திரன் சினிமாவில் வில்லன் ரோபோ இரண்டு நான்காக, நான்கு எட்டாக பெருகுவானே, அதேமாதிரி பெருகி இடம் கொடுத்த நுரையீரலை இருக்கும் இடம் இல்லாமல் செய்து விடுவான். இவனை ஒடுக்க நடக்கும் போர் தான் இந்தக் கதை.

கதையில் ஹீரோ என்று ஒருவரையும் குறிப்பிட முடியாது. அதே மாதிரி ஹீரோயின் என்றும் கூட யாரும் கிடையாது. காதல் ஒருவேளை எட்டிப் பார்க்கலாம். பார்க்காமலும் கூட போகலாம். எதுவும் என் கையில் இல்லை.

இந்தக் கதையில் கதாபாத்திரங்களே அவரவர்கள் கதையை சொல்லுவார்கள் – நடத்துவார்கள் – அவர்களை வழி நடத்துவதும், அவர்களை அவர்கள் வழி போக விடாமல் தடுப்பதும் நம்ம ALK+ve தான். டைரக்‌ஷனையும் கையில் எடுத்துக் கொண்ட வில்லன் அவன்.

இந்த கதையைப் பொறுத்தவரை நான் செய்யப் போவது ஒரு ஒருங்கிணைப்பாளர் பணி மட்டுமே, மேலே சொன்னபடி, என் கதாபாத்திரங்கள் முக்கியமாக வில்லன் ALK+ve தான் என்னை வழி நடத்தப் போகிறார்கள்,

அவர்கள் உங்களிடம் என்ன சொல்ல விரும்புகிறார்கள் – என்ன செய்கிறார்கள் – அதற்கான காரண காரியங்கள் என்ன – இவற்றை எல்லாம் உங்களிடம் கொண்டு சேர்ப்பது ஒன்று மட்டுமே நான் செய்யப் போகும் வேலை.

அட ! இருங்கள் ! ALK+ve வாசுவின் நுரையீரலில் நுழைந்து விட்டான் என்ற செய்தி இப்பொழுது தான் கிடைத்தது. வாருங்கள் நண்பர்களே ! அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று பார்க்கலாம் வாருங்கள்.


(சுசி கிருஷ்ணமூர்த்தி)



************
 
Last edited:

sushi55

New member
Vannangal Writer
Messages
11
Reaction score
23
Points
3

மரபணு மாற்றம் ALK+ve (RD 25)

அத்தியாயம் 1

ஜானகி

அவளை அலைகள் இழுத்து செல்கின்றன. மூச்சு முட்டுகிறது. மூழ்காமலிருக்க பிரயத்தனம் செய்கிறாள் ஆனால் அந்த பயங்கர சுனாமி அலைகள் அவள் உள்ளே உள்ளே இழுக்கின்றன. “காப்பாற்றுங்க – காப்பாற்றுங்க” என்று சத்தமே வராமல் கத்தும் அவளை அலைகள் ஏதொ ஒரு இடத்தில் தள்ளுகின்றன.

எங்கிருந்தோ மணி சத்தம் கேட்கிறதே – இது ஒரு கோவில் தான்,. நான் வணக்கும் முருகன் தான் என்னைக் காப்பாற்றி தன் சன்னிதானத்தில் அழைத்துக் கொண்டான். ஏன் இந்த மணி விடாமல் அடிக்கிறது “

திடுக்கென்று விழித்துக் கொண்டாள் ஜானகி. உடம்பெல்லாம் வியர்த்துப் போய், இன்னும் அந்த அலைகள் தன்னை கடலின் உள்ளே இழுத்துச் சென்ற பய உணர்விலிருந்து வெளி வர முடியவில்லை ஜானகியால். பாதி விழிப்பும் பாதி தூக்கமுமாக இருந்த நிலையில், அந்த மணி சத்தம் அவர்கள் வீட்டு காலிங்க் பெல் ஒலி தான் என்று புரிய சில நிமிடங்களாகியது ஜானகிக்கு, "ஏதாவது கெட்டது நடக்கப் போகிறதா? ஏன் இந்த மாதிரி எல்லாம் கனவு?' என்று நினைத்துக் கொண்டே மணியை பார்த்தாள்.

“யாரோ கதவைத் தட்டறா மாதிரி சத்தம் கேட்கிறதே ? மணி 5.00 தானே ஆறது. வேலம்மா எட்டு மணிக்குத்தானே வருவா. போய் யாருன்னு கொஞ்சம் பாருங்களேன்,” நல்ல தூக்கத்தில் இருந்த ராகவன், ஜானகியின் குரல் கேட்டு எழுந்து “இந்த நேரத்திலே யாரு” ன்னு முனகிக் கொண்டே போய் கதவை திறந்தார்,

அதற்குள் புடவையை சரி செய்துகொண்டு கூடவே வந்த ஜானகி, அங்கு நின்ற வாசுவையும் பானுவையும் பார்த்து

“ வாசு! பானு ! நேத்துலேருந்து காக்கா கத்திண்டே இருந்தது, யார் வரப்போறான்னு யோஜிச்சுண்டே இருந்தேன். ரெண்டு பேரும் உள்ளே வாங்கோ – எதிலே வந்தேள்? முகமே சரியில்லையே – காஃபி தரேன். குடிச்சுட்டு கொஞ்ச நேரம் தூங்கினா சரியாயிடும்”

வாய் ஓயாம பேசிய ஜானகியைப் பார்த்து சிரித்துக் கொண்டே, ராகவன்

“ அவளையும் கொஞ்சம் பேச விடேன். கேள்வியும் நானே ! பதிலும் நானே ! இந்த பழக்கத்தை எப்போ தான் விடப் போறியோ”

வாசுவும் பானுவும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். வாசு ஜானகியிடம்

“சரி ! அம்மா ! முதல்லே காஃபி கொடு, அப்புறம் பேச வேண்டியது நிறைய இருக்கு, பால் கொஞ்சம் கூட சொல்லிடு, ராஜியும் அத்திம்பேரும் கூட இன்னும் கொஞ்ச நேரத்திலே வந்துடுவா. அவா ஃப்ளைட் 6.30 க்கு பேங்களூர் ஏயர்போர்ட் வந்து சேரணும் . நம்மாத்துக்கு வர 7.30 ஆயிடும் இல்லையாப்பா?”

என்று ராகவனிடம் கேட்க, அவரும் ஒன்றும் புரியாமல் தலை ஆட்டினார். ஜானகியும் ஒன்றுமே புரியாமல் வாசு முகத்தைப் பார்த்தாள். காஃபி கலக்கும் போதெல்லாம் அவள் மனதில் பல கேள்விகள்.

“ எதுக்கு எல்லோரும் சேர்ந்து இப்போ வரா? யாரோட பிறந்த நாளோ , கல்யாண நாளோ இந்த மாசம் கிடையாதே. ஒருவேளை பானு அம்மா அப்பா சஷ்டிஅப்த பூர்த்தி ஏதேனும் இப்போ வரதோ? ஆனா அதுக்கு ராஜியும் மாப்பிள்ளையும் ஏன் வரணும்?”

இந்த கேள்விகள் எல்லாம் மனதில் எவ்வளவு வேகமாக ஓடியதோ அதே வேகத்தில் அவள் கைகளும் வேலை செய்தன. மாப்பிள்ளை ரொம்ப நாட்களுக்கப்புறம் வரப்போவதால் பாயசமும் வடையும் கட்டாயம் செய்ய வேண்டும் என்று நினைத்துக்கொண்டு, ஒரு பாத்திரத்தில் பருப்பு ஊறப் போட்டாள். மாப்பிள்ளைக்கு பால் பாயசம் பிடிக்குமென்பதால் அதற்கு வேண்டியது எல்லாம் இருக்கிறதா என்று சரி பார்த்துக்கொண்டாள்.

அதற்குள் பானு முகம் கழுவிக் கொண்டு உள்ளே வர, அவளிடம் கலந்த காபியை ஒரு டம்ப்ளரில் ஊற்றிக் கொடுத்துக் கொண்டே “பானு ! வடைக்கு ஊறப் போட்டாச்சு. பால் பாயசம் பண்ணி விடலாம் என்று இருக்கேன். மாப்பிள்ளை ரொம்ப நாளைக்கப்புறம் ஆத்துக்கு வரார் இல்லையா? நீ பாவம் களைச்சுப் போயிருப்பே – உக்காந்து காஃபியை குடி. அதற்குள் நான் வாசுக்கும் அப்பாக்கும் காஃபி கொடுத்து விட்டு வந்துடறேன் “ என்று சொல்லிக் கொண்டே அவள் பதிலை எதிர்பாராமல் காஃபியை எடுத்துக் கொண்டு நகர்ந்தாள்.

பானு மாமியார் பேசுவதைக் கேட்டு ஒன்றுமே பேசமுடியாமல் அப்படியே திக்பிரமை பிடித்தது போல் நின்று விட்டாள். அவர்கள் எல்லோரும் சேர்ந்து வந்திருக்கும் காரணம் தெரியாமல் பாயசம் வடை என்று விமரிசையாக தயார் செய்யும் மாமியாரைப் பார்க்க பார்க்க அழுகையே வந்து விட்டது பானுவிற்கு.

“ மாமியாரிடம் இதெல்லாம் வேண்டாமென்றால் அதற்கு காரணம் கேட்பாள். என்ன பதில் சொல்லுவது? மாமியாரை தனியாக சமாளிக்க முடியாது என்பதால் தானே, நாத்தனார் ராஜியையும் அவள் கணவர் சேகரையும் வரச் சொல்லி இருக்கிறோம். இப்பொழுது என்ன செய்வது ?” இதெல்லாம் நினைத்து நினைத்து குழம்பிப்போய் நின்றாள் அவள்.

அதற்குள் காஃபி கொடுத்துவிட்டு ஜானகி வர, அவளை நேரில் பார்த்து பேசினால் நிச்சயம் அழுது விடுவோம் என்ற பயத்தில் பானு “ அம்மா ! ரொம்ப தலை வலிக்கிறது. ஒரு பத்து நிமிஷம் படுத்துண்டு எழுந்தா எல்லாம் சரியா போயிடும். நான் வந்தப்புறம் சமையலை ஆரம்பிக்கலாம். நீங்க தனியா ஒண்ணும் பண்ண வேண்டாம் “ என்று சொல்ல, ஜானகியும்

“ நானே சொல்லணுன்னு இருந்தேன். உன் முகமே சரியில்லை. போய் கொஞ்ச நேரம் படுத்துக்கோ – நான் எல்லாம் பாத்துப்பேன். கவலைப் படாதே” என்று சொல்லி விட்டு குக்கரை எடுத்தாள். அங்கே நின்றால் நிச்சயம் அழுது விடுவோம் என்ற பயத்தில் நகர்ந்து அவளும் வாசுவும் எப்பொழுதும் தங்கும் அறைக்கு வந்தாள். அங்கு வாசு கண்களில் நீர் வழிய ஏதோ யோஜனையில் இருப்பதை பார்த்து, அவன் பக்கத்தில் போய் அமர்ந்து அவன் கைகளை பற்றிக் கொண்டாள்.

வாசு அவள் கைகளை இறுகப் பற்றிக் கொண்டு “ பானு ! என்னாலே முடியலே – இந்த விஷயம் கேட்டா அம்மா அப்பா எப்படி தாங்குவா? அதை என்னாலே நினைச்சுக் கூட பார்க்க முடியலை.

அன்னிக்கு ராஜி கிட்டேயும் சேகர் கிட்டேயும் ஃபோனிலே விஷயம் சொன்ன போது ராஜியே எப்படி கதறி அழுதுட்டா? சேகரால் கொஞ்ச நேரம் பேசக்கூட முடியலை. இப்போ அம்மா அப்பாவை எப்படி சமாளிக்கப் போறோமோ, தெரியலையே – பானு “ என்று அழுகையை அடக்கிக் கொண்டே சொல்ல, பானு,

“ என்னாலேயும் நினைச்சுப் பார்க்கக் கூட முடியலை, வாசு. அதுவும் அம்மா மாப்பிள்ளை வரப் போறார்ன்னு வடை, பாயசமெல்லாம் தயார் செய்வதை பார்க்க முடியாமல் தான் இங்கே வந்தேன் “ என்று சொல்ல, வாசு,

“ஐய்யோ ! வடை பாயசம் எல்லாம் எதுக்கு பண்ணறா? நீ வேண்டாம்னு சொல்ல வேண்டியது தானே?” என்று கோபமாக கேட்க, பானு,

“ ஏன் பண்ண வேண்டாம்னு சொல்லறேன்னு அம்மா என் கிட்டே காரணம் கேட்டா, நான் என்னன்னு பதில் சொல்லுவேன்? அம்மா எவ்வளவு எதிர் பார்ப்போடு இருக்கா? அதை பாத்தா என்னாலே தாங்க முடியலை - அதனாலே தலை வலிக்கிறதுன்னு சொல்லிட்டு இங்கே வந்துட்டேன்” என்று சொல்லிக் கொண்டே அவன் கையை ஆதரவாக தடவிக் கொடுத்தாள்.

இருவரும் சிறிது நேரம் ஒன்றுமே பேசாமல் கைகளை கோர்த்துக் கொண்டு அப்படியே அமர்ந்திருந்தனர். இருவரும் ஒன்றுமே பேசிக் கொள்ளாவிட்டாலும் அவர்கள் மனதில் மட்டும் ஒரே சிந்தனைதான்.

“ அம்மா அப்பாவை எப்படி சமாதானப் படுத்துவது? ராஜியால் அம்மாவை சமாளிக்க முடியுமா? சரி !அம்மா அப்பாவை சமாளித்த பிறகு இனி வாழ்க்கை எப்படி இருக்கப் போகிறது?”

காலிங்க் பெல் சத்தம் கேட்டதும் கையில் கட்டியிருந்த வாட்சில் மணி பார்த்த வாசு “ ராஜியும் சேகருமாகத்தான் இருக்கும். வா – ஹாலுக்கு போகலாம்” என்று கூற, இருவருமாக ஹாலுக்கு வந்தனர். அவர்கள் நினைத்தபடியே, ராஜியும் சேகரும்தான் உள்ளே நுழைந்தனர்.

கையை புடவையில் துடைத்தபடியே கிச்சனிலிருந்து வெளியில் வந்த ஜானகி, அவர்களைப் பார்த்து வாயெல்லாம் பல்லாக,

“ வாங்க ! மாப்பிள்ளை ! என்ன ராஜி ! ஆதிராவையும் கூட்டிண்டு வந்திருக்கலாமே? குழந்தையைப் பார்த்து எவ்வளவு நாளாச்சு?”

என்று சொல்ல, அதற்குள் மாப்பிள்ளை சேகரை தன் பக்கத்தில் சோஃபாவில் அமர்த்திக் கொண்டார் ராகவன்.

வாசுவும் சேகரின் பக்கத்தில் அமர்ந்துக் கொள்ள, பானு போய் ராஜியின் கைகளைப் பற்றிக் கொண்டாள். அவளைப் பார்த்ததும் ராஜியின் கண்களில் அவளையே அறியாது கண்ணீர் வழிய, அதைப் பார்த்ததும், ஜானகி

“ பாவம் ! ராஜிக்கு இத்தனை நாள் மனுஷாளைப் பாக்காம இருந்தது, பாத்தவுடன் எப்படி கண் கலங்கறது பார் “ என்று சொல்ல, ராஜி தன்னை சமாளித்துக் கொண்டு,

“ ஆமாம் அம்மா ! நீங்க ரெண்டு பேரும் எப்படி இருக்கேள்? ஆதிரா விற்கு இப்ப காலாண்டு பரீட்சை இருக்கு. அதனால் என் ஓர்ப்படி கிட்டே விட்டுட்டு வந்தேன். ரெண்டு, மூணு நாள் தானே – இருந்துப்பா” என்று சொன்னாள்.

“என்ன – ரெண்டு மூணு நாள் தானா? சரி ! காஃபி கொண்டு வரேன் – முதல்லே காஃபி குடியுங்கோ – அப்புறம் பேசலாம் “ என்று சொல்லிவிட்டு நகர, அதற்குள் பானு.

“ அம்மா! நீங்க உக்காருங்கோ – நான் எல்லோருக்குமே காஃபி கொண்டு வரேன். அப்பாக்கும் செகன்ட் டோஸ் டைம் ஆயிடுத்தே” என்று சொல்லி உள்ளே போக, அவள் கூடவே ராஜியும் கிச்சனுக்குள் சென்றாள்.

உள்ளே போனவுடன், ராஜி பானுவின் கைகளைப் பிடித்துக் கொண்டு “ என்னாலேயே தாங்க முடியலையே – பானு. அம்மா அப்பா எப்படி தாங்கப் போறாளோ – பயமாக இருக்கு” என்று கண்களில் நீர் வழிந்துக் கொண்டே, சொல்ல, பானு,

“ராஜியக்கா ! நீங்களே இப்படி கலங்கிப் போயிட்டா, நாங்க என்ன செய்யறது? – உங்களாலே தான் அம்மாவை சமாதானப் படுத்த முடியும் என்று தானே, உங்களுடைய எல்லா வேலையையும் விட்டுட்டு, நீங்க இங்கே வந்திருக்கேள் – எல்லாம் சரியாகிடும். சீக்கிரம் காஃபி கொண்டு போகணும். இல்லேன்னா அம்மாவே என்ன இவ்வளவு லேட்ன்னு உள்ளே வந்துடுவா” என்று சொல்லிக் கொண்டே காஃபியை கலந்து 6 டம்ப்ளரில் எடுத்துக் கொண்டாள்.

ராஜியும் அவளுமாகச் சேர்ந்து எல்லோருக்கும் காஃபியைக் கொடுத்து விட்டு, தங்களுக்கும் எடுத்துக் கொண்டு உட்கார்ந்தார்கள். காஃபியை குடித்ததும், ஜானகி,

“ காலம்பற தோசை சாப்பிடறேளா? இல்லை நேரே சாப்பாடே சாப்பிட்டுடறேளா?” என்று கேட்டுக் கொண்டே எழுந்திருக்க, வாசு அவள் காலடியில் வந்து அமர்ந்துக் கொண்டு, அவள் கையை பிடித்துக் கொண்டு,

“ அம்மா! சமையல் அப்புறம் பாத்துக்கலாம். முதல்லே உங்க ரெண்டு பேர் கிட்டேயும் பேசணும். அதுக்குத்தான் நாங்க எல்லோரும் வந்திருக்கோம் “ என்று சொல்ல, ஜானகி ஒன்றும் புரியாமல் அவன் முகத்தை கவலையாகப் பார்த்தாள்.

யாரும் எதுவும் வெளியில் சொல்லாவிட்டாலும் கூட ஏதோ மனசுக்கு பிடிக்காத விஷயம் நடக்கப் போகிறது என்று அவள் உள்மனசுக்குத் தோன்றியது. அதனுடன் தான் விடிகாலையில் கண்ட கனவும் ஞாபகத்துக்கு வந்தது. பயத்துடன் அவள் வாசு முகத்தைப் பார்த்தாள்.

ராஜியும் வந்து ஜானகி பக்கத்தில் உட்கார்ந்து கொண்டாள். அவள் முகத்தைப் பார்த்தால் எப்போ வேணுமானாலும் அழுது விடுவாள் போல் இருக்க, வாசு சேகர் முகத்தைப் பார்த்தான். சேகரும் வாசு முகத்தைப் பார்த்து, இதற்கு மேல் விஷயம் சொல்லாமல் தள்ளிப் போட முடியாது என்று ஜானகியையும் ராகவனையும் பார்த்து,

“ அங்கிள் ! ஆன்ட்டி ! நான் இப்போ சொல்லப் போற விஷயத்தை கேட்டு நீங்க தைரியமாக இருக்கணும். ஒண்ணு முதல்லே ஞாபகம் வச்சுக்கணும் நீங்க – எல்லாத்தையும் சரி பண்ண இந்த காலத்தில் வழி இருக்கு “ என்று சொல்ல, ஜானகி அழவே தொடங்கி விட்டாள்.

“ மாப்பிள்ளை ! என்ன – எதையெல்லாமோ சொல்லி பயமுறுத்திண்டே இருக்கேள். எனக்கு ரொம்ப பயமாக இருக்கு. எதுவாக இருந்தாலும் சொல்லிடுங்கோ. யாருக்கு என்ன – இல்லை – உத்தியோகத்தில் ஏதாவது பிரச்சினையா? நீங்களே சொன்னா மாதிரி எல்லாத்தையும் சரி பண்ணிக்கலாம். என்னவாக இருந்தாலும் வாய் விட்டு பேசிடுங்கோ” என்று திணறி திணறிச் சொல்ல, ராகவனும் கவலையுடன் சேகரின் முகத்தைப் பார்த்தார்.

சேகர் , கொஞ்ச நேரம் தரையைப் பார்த்துக் கொண்டு இருந்தவன், பிறகு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு “ ஆன்ட்டி ! கொஞ்ச நாளாகவே வாசுக்கு உடம்பு சரியில்லாமல் இருந்தது. வரட்டு இருமல் போல் இருந்ததால், இருமல் மருந்து எல்லாம் சாப்பிட்டு பார்த்து விட்டு, அப்புறம் மூக்சு விடவே கஷ்டமாக இருந்ததால், ஆஸ்பத்திரியில் போய், அவர்கள் சொன்னபடி எல்லா டெஸ்டும் எடுத்து பார்த்தது.” என்று சொல்லி நிறுத்தினான்.

ஜானகி வாசுவின் தோளை பிடிச்சு “ என்னடா ? இதெல்லாம் என் கிட்டே சொல்லவே இல்லை. வரட்டு இருமலுக்கு பால்ல பனங்கல்கண்டு போட்டு குடிச்சா சரியா போயிடுமே – அதையும் மீறி பால்லே மஞ்சப் பொடி போட்டுக் குடிச்சால் கூட சரியாயிடும், பானு! நீயாவது ஃபோன்லே பேசும் பொழுது என் கிட்டே சொல்லி இருக்கலாமே” என்று சொல்ல, ஜானகி எப்ப பேசி முடிப்பாள், என்று காத்திருந்தாற் போல், சேகர்,

“ ஆன்ட்டி ! அதெல்லாம் பண்ணி பாத்துக் கேக்காம போய்த்தான் ஆஸ்பத்திரிக்குப் போய் செக் பண்ண வேண்டி வந்தது. ஸ்கேன் எல்லாம் பண்ணிப் பார்த்து 2 நாளைக்கு முன்னாடி தான் ரிஸல்ட் வந்தது ஆன்ட்டி.” என்று சொல்லி நிறுத்த, ஜானகியும் ராகவனும் அப்படியே திக் பிரமை பிடித்தாற்போல் சேகரைப் பார்த்தார்கள்.

சேகர் திரும்பவும் தொடர்ந்தான் “ ஆன்ட்டி ! அங்கிள் ! திரும்பவும் சொல்லறேன். இப்ப மருத்துவம் ரொம்ப முன்னேறி இருக்கு. அதனால் எந்த வியாதியாக இருந்தாலும் குணப்படுத்தி விடலாம். வாசுக்கு வந்திருக்கிறது கொஞ்சம் பெரிய வியாதிதான். ஆனால் குணப்படுத்தி விடலாம் என்பதை மனஸிலே வச்சுண்டு நான் சொல்லறதைக் கேக்கணும், நீங்க ரெண்டு பேரும்.

வாசுக்கு லங்க் கேன்ஸர் அதாவது நுறையீரல் புற்றுநோய் ன்னு ரிஸல்ட் வந்திருக்கு. அதான் அவன் எனக்கு ஃபோன் பண்ணி, என்னையும் ராஜியையும் வரச் சொன்னான். நாம எல்லோரும் சேர்ந்து, எல்லாம் சரி பண்ணி விடலாம்” என்று சொல்ல.

ஜானகியும் ராகவனும் அவன் சொல்லுவதைக் கேட்டு. அப்படியே விக்கித்துப் போய் உட்கார்ந்து விட்டார்கள். ஒரு நிமிஷம், யாருமே எதுவும் பேசவில்லை. ஜானகி அப்படியே கதறத் தொடங்கி விட்டாள். ரெண்டு நிமிஷம் அவளை சமாதானப் படுத்தக் கூட தோன்றாமல் வாசு அவள் மடியில் தலையை வைத்து அப்படியே படுத்துக் கொண்டு விட்டான். அவன் கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது.

ராகவன் ஒன்றுமே பேசாமல், அப்படியே அவர்களைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்து கொண்டிருக்க, ராஜி கண்ணில் நீர் வழிய, ஜானகியின் தோளை தட்டிக் கொடுத்து சமாதானப் படுத்தினாள்.

பானு ஒன்றுமே பேசாமல், அப்படியே அமர்ந்திருந்தாள். எல்லோருக்குமே ஜானகியைப் பற்றித்தான் பயம். வாசுவிற்கு ஒன்று என்றால் அவளால் தாங்க முடியாது என்பது எல்லோருக்குமே தெரிந்த ஒன்றுதான்.

ஒருமுறை வாசுவிற்கு விளையாடும் பொழுது சின்னதாக நெற்றியில் அடிபட்டு, அப்பொழுது வந்த ரத்தத்தை பார்த்து ஜானகி மயங்கி விழுந்து விட, வாசுவிற்கு வைத்தியம் பார்க்க வந்த டாக்டர், முதலில் ஜானகிக்கு வைத்தியம் பார்க்க வேண்டி வந்ததை அவர்கள் சொல்லி சொல்லி சிரிப்பார்கள்.

ஜானகிக்கு ரொம்ப பூஞ்சை மனசு என்று அவர்கள் எல்லோருக்கும் தெரியும், நெற்றியில் அடிபட்டதற்கே மயக்கம் போட்டு விழுந்தவள், இந்த பெரிய இடியை எப்படி தாங்கப் போகிறாள் என்றுதான் அவர்கள் கவலை.

“இந்த பகவானுக்கு எவ்வளவு பூஜை பண்ணியிருப்பேன். கொஞ்சம் கூட இரக்கமே இல்லாமல் என் பிள்ளையை படுத்தறானே “ என்று புலம்பிய வாறே கதறி கதறி அழுத ஜானகியை எப்படி தேற்றுவது என்று அவர்களுக்குத் தெரியவில்லை.

அதுவும் ராகவனை பார்த்தாலும் அவர்களுக்கு ரொம்பக் கவலையாக இருந்தது. அவர் ஒன்றுமே பேசாமல் அப்படியே வாயடைத்துப் போய் உட்கார்ந்திருந்தது இன்னும் கவலையை தந்தது அவர்களுக்கு.

திடுமென்று அழுவதை நிறுத்தி விட்டு ஜானகி “ வாசுக்கு ஒரு கெட்ட பழக்கமும் கிடையாது. லங்க் கேன்ஸர் சிகரெட் பிடிப்பவர்களுக்குதான் வரும்னு சொல்லுவாளே? அப்ப சிகரெட் பக்கம் கூட போகாத நம்ம வாசுக்கு எப்படி வரும்? ஆஸ்பத்திரியிலே ஏதோ தப்பா சொல்லி யிருப்பா? “ என்று ஊர் உலகத்துக்கு பறை சாற்றுவது போல் உரத்த குரலில் சொல்ல, சேகர், அவளைப் பார்த்து,

“ ஆன்ட்டி ! நாங்களும் முதலில் அப்படித்தான் நினைத்தோம். அதனால் தான் டெல்லிக்கு அனுப்பி திரும்பவும் பரிசோதனை செய்ய சொன்னோம். அங்கேயும் லங்க் கேன்ஸர்ன்னு கன்ஃபர்மா சொல்லிட்டா. வாசுக்கு வந்திருக்கிறது ம்யுடேஷன் அதாவது மரபணு மாற்றத்தால் வருகிற கேன்ஸராம்.

இந்த மாதிரி மரபணு மாற்றம் சில பேர் உடலில் அதுவாகவே நடக்கும் பொழுது இந்த மாதிரி கேன்ஸர் உண்டாகிறதாம். இந்த மாதிரி கென்ஸர் சிகரெட் பிடிக்காத பெண்களுக்கு கூட நிறைய பேருக்கு வரதுன்னு கண்டு பிடிச்சிருக்கா.

இந்த மாதிரி மரபணு மாற்றத்தால் கேன்ஸர் உண்டாகிறது என்கிற விஷயமே ஒரு 20 வருடங்களுக்கு முன்புதான் உலகத்திற்கே தெரிந்ததாம். இதிலும் விதவிதமாக மாரபணு மாற்றங்கள இருக்கிறதாம். இன்னுமே ஆராய்ச்சியில் புதுசு புதுசாக நிறைய விதமான மரபணு மாற்றங்கள் கண்டு பிடிக்கப் படுகிறதாம்.

ஆனால் இதில் கெட்டதிலும் ஒரு நல்ல விஷயம் என்ன வென்றால் இந்த விதமான மரபணு மாற்ற கேன்ஸருக்கு பல விதமான மருந்துகள் கண்டு பிடித்துக் கொண்டே இருக்கிறார்களாம்.

வாசுவிற்கு செய்த பரிசோதனையில் இன்னும் ஒரு ரிஸல்ட் வர வேண்டி இருக்கிறது. அது வர இன்னும் ஒரு வாரமாகும். அந்த ரிசல்ட் ‘பாசிடிவ்’ ஆக வந்தால் வாசவிற்கு ‘கெமோ தெரபி” அவசியமிருக்காது. மருந்து, கொஞ்சம் விலை உயர்ந்ததுதான் என்றாலும், மருந்து மட்டும் சாப்பிட்டு இந்தக் கேன்ஸரை கட்டுக்குள் வைக்கலாம் என்று சொல்கிறார்கள். பார்ப்போம் அந்த ரிசல்ட் நல்லபடியாகத்தான் வரும்” என்று விடாஅமல் பேசி முடிக்க, ஜானகி,

“ என்ன செலவானால் என்ன – எல்லாத்தையும் பாத்துக்கலாம். ஆனாலும் என் பிள்ளையை பகவான் ஏன் இப்படி படுத்துகிறார்?” என்று தலையை பிடித்துக் கொண்டே, வாசுவின் மேல் அப்படியே மயங்கி சாய்ந்து விட்டாள்.

ராஜி, உடனே அவள் முகத்தில் கொஞ்சம் தண்ணீர் தெளிக்க, ஜானகி “ வாசு ! என்னடா இப்படி ஆயிடுத்து. உனக்கு வந்திருக்கிறது எனக்கு வந்திருக்கக் கூடாதா? பானு ! பாவம் ! நீ இதையெல்லாம் எப்படி தனியாக தாங்கினே?” என்று கேட்டு கதறி கதறி அழ, வாசு அப்படியே அவள் கைகளைப் பிடித்துக் கொண்டு

“ அம்மா ! நீ இப்படி அழுதா நான் என்ன பண்ணறது? என்னிக்கும் நீ தானே எனக்கு எல்லாம் சொல்லிக் கொடுத்திருக்கே – நீ தானே எனக்கு தைரியம் கொடுக்கணும். அதனாலே தானெ நானும் பானுவும் உங்களைத் தேடி வந்திருக்கோம். அம்மா ! நீ தைரியமா இருந்தா தான் நாம மேலே என்ன பண்ணறதுன்னு யோஜிக்க முடியும்?” என்று சொல்ல, அவன் சொல்வதைக் கேட்டு ஜானகி அழுகையை நிறுத்தினாலும், அவள் கண்களிலிருந்து நீர் வழிந்துக் கொண்டேதான் இருந்தது.

அதற்குள், ராஜியும் சேகரும் ராகவனிடம் போய் அவர் தோளைப் பிடித்து, தட்டிக் கொடுத்து அவரை சமாதானப் படுத்தினார்கள். அதுவரை தன் தந்தை கண்ணீர் விடுவதை என்றுமே பார்த்திராத ராஜியும் வாசுவும், ராகவன் கண்ணீர் விடுவதைப் பார்த்து துடித்தே போய்விட்டார்கள்.

கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் போல் அழுவது சமாதானம் என்று அங்கு நடந்தது. ஜானகியை சமாதானப் படுத்த சேகர் சொன்ன “புதுசா நிறைய மருந்து இருக்கிறது – ரிஸல்ட் நல்லபடியாக பாஸிடிவ் ஆக வந்து விடும் – அப்புறம் மருந்து சாப்பிட்டால் போதும் “ என்ற வார்த்தைகள் கொஞ்சம் வேலை செய்தது.

எது எப்படி இருந்தால் என்ன –வயிற்றுக்கு ஏதாவது ஆகாரம் வேண்டுமே – ஜானகி அழுது கொண்டிருக்கும் பொழுதே, பத்து நாட்களுக்கு முன் செய்தி தெரிந்ததிலிருந்து அழுது அழுது மரத்து போய் விட்ட பானு, கையில் கிடைத்ததை வைத்து காமா சோமா என்று ஏதோ சமைக்க, எல்லோரும் ஒரு கடமை போல் அதை சாப்பிட்டார்கள்

பிறகு, சேகரின் நண்பர் சொன்ன எஸ்ஸெம் ஆஸ்பத்திரிக்குப் ஃபோன் பண்ணி லங்க் கேன்ஸர் ஸ்பெஷலிஸ்ட் அபர்ணா காரந்திடம் மறுநாளைக்கு அப்பாயின்ட்மென்ட் வாங்கிக் கொண்டார்கள்.

எல்லோரும் கடமைக்காக சாப்பிடுவது, தூங்குவது என்று அலுவல்களை மேற் கொண்டாலும், அந்த வீட்டின் குதூகலமே எங்கேயோ ஓடி ஒளிந்துக் கொண்டு விட்டது போல் தான் ராஜிக்குத் தோன்றியது. அவர்கள் எல்லோரும் எப்பொழுதும் சேரும் பொழுதும், சீட்டாட்டம், கேலி கூத்து என்று வீடே அமர்க்களப் படும். நினைக்க நினைக்க அழுகையாக வந்தது ராஜிக்கு –

நாளை ஆஸ்பத்திரிக்கு சென்ற பிறகாவது ஏதாவது மாற்றம் இருக்க வேண்டுமே என்று அவள் மனம் ஏங்கியது.

மாற்றம் வருமா?

அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போமா?

{அதற்கு முன் படித்துப் பார்த்து உங்கள் மேலான லைக்ஸ்ம் கமென்ட்ஸும் கொடுத்தால் மகிழ்ச்சியாக இருக்குமே? கொடுப்பீங்களா - டியர் ஃப்ரெண்ட்ஸ்?

Friends ! A special platform has been created for offering your valuable comments. Please post your comments in this link.
https://bit.ly/3w7jiqK

Likes can be posted here and there too. 🙏🙏🙏
 
Last edited:

sushi55

New member
Vannangal Writer
Messages
11
Reaction score
23
Points
3

2
மரபணு மாற்றம் ALK+ve

அத்தியாயம் இரண்டு

வாசு

தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்த வாசு, கடைசியில் படுக்க முடியாமல் எழுந்து உட்கார்ந்தான்.

“எனக்கு ஏன் இந்த நிலைமை – யாருக்கும் நான் ஒரு கெடுதலும் செய்ததில்லை – ஒரு கெட்ட பழக்கம் கிடையாது. தினமும் வாக்கிங், சைக்கிளிங்க், அவ்வப்போது மலையேறுதல் என்று உடம்பை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கேன் – எனக்கு எப்படி இந்த வியாதி வந்தது?“ இந்த நினைவுகள் திரும்ப திரும்ப வந்து வாசுவின் தூக்கத்தைக் கெடுத்தன.

திரும்பி பக்கத்தில் படுத்திருந்த பானுவைப் பார்த்தான். அவளைப் பார்க்க பார்க்க அவன் கழிவிரக்கம் இன்னும் கூடியது என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் கழிவிரக்கம் ஒரு பக்கம் இருந்தாலும் இன்னோரு பக்கம் பானுவைப் பார்க்கும் பொழுது ஆச்சரியமாகவும் பெருமையாகவும் கூட இருந்தது. இந்த ஆச்சரியம் இன்று நேற்றல்ல பானுவை முதன்முதல் பார்த்த நாளிலிருந்து அவனுள் தொடர்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

அவன் முதன்முதல் பானுவை சந்தித்தது மும்பை தமிழ்சங்கம் நடத்திய ஒரு பட்டிமன்றத்தில் தான். அவனுக்கு பட்டிமன்றம் இதிலெல்லாம் பெரிய ஆர்வம் இல்லாவிட்டாலும் தன் தாயார் ஜானகி அந்த பட்டி மன்றத்தில் ஒரு பேச்சாளராக இருந்ததால் கூட துணைக்கு சென்றிருந்தான்.

மூன்று பெண் பேச்சாளர்கள், மூன்று ஆண் பேச்சாளர்கள் பங்கு பெற்ற அந்த பட்டிமன்றத்தில் பானு, ஜானகியின் எதிரணி பேச்சாளர். மாலை 6.00 மணிக்கு ஆரம்பிக்க இருந்த பட்டிமன்றத்தில் பங்கு கொள்ளும் அனைத்து போட்டியாளர்களும் 5.30 மணிக்கே போட்டி நடக்கும் ஹாலுக்கு வந்துவிட, பானு மட்டும் வரவில்லை. 6.00 மணிக்கு ஐந்து நிமிடம் இருக்கும் பொழுது, அவசர அவசரமாக போட்டி மேடையில் ஏறினாள் பானு.

எல்லா பெண் பேச்சாளர்களும் பட்டு அல்லது சில்க் புடவை, ஆண் பேச்சாளர்கள் வேட்டி, குர்தா என்று தமிழர்களுக்கே உரித்தான பாரம்பரிய உடையில் வந்திருக்க, பானு மட்டும் ஜீன்ஸ், டாப்ஸ் என்று மேற்கத்திய உடையில் வந்திருந்ததே வித்தியாசமாக இருந்தது.

எல்லோருக்கும் வணக்கம் சொல்லிக் கொண்டே மேடையில் தன் இருக்கையில் அமர்ந்து கொண்டதும், நடுவரையும் சபையோரையும் நோக்கி புன்னகை புரிந்ததுமே அவளை ஒரு வித்தியாசமானவளாக காட்டியது. பட்டிமன்றம் ஆரம்பித்தது. நடுவர் தன் உரையில் பானுவைப் பற்றிக் கூறும் பொழுது,

“அடுத்து பேச இருப்பவர் பானு – இவர் பெயர் ரெகார்ட் பிரகாரம் பானுபிரியா சிவராமன் என்று இருந்தாலும், இவர் தன்னை எல்லோரும் பானு என்று அழைப்பதையே விரும்புகிறார், நாமும் அப்படியே அழைப்போம். சாஃப்ட்வேர் எஞ்சினியராக வேலை பார்க்கும் இவர், தமிழிலும் மிக்க ஆர்வம் உள்ளவர். அதனாலேயே அலுவலக வேலையை முடித்துக்கொண்டு நேரே இங்கே வந்திருக்கிறார்” என்று அறிமுகப் படுத்தியவுடன், பானு எழுந்து, தன் பக்க உரையை ஆரம்பித்தாள்.

ஆரம்பமே அமர்க்களமாக இருந்தது. அன்றைய பட்டிமன்ற தலைப்பு

“ஆள் பாதி ஆடை பாதி–இந்தக் கூற்று ஏற்கக்கூடியதா இல்லையா?”

என்பதுதான். ஆடைகள் பற்றிய பட்டிமன்றம் என்பதாலேயே பெண் பேச்சாளர்கள் எல்லோருமே கொஞ்சம் அக்கறை எடுத்து உடை உடுத்திக் கொண்டு வந்திருந்தார்களோ என்று நடுவர் கூட தன் முன்னுரையில் கேலியாக பேசினார்.

பானு “ஆள் பாதி ஆடை பாதி என்ற கூற்று ஏற்கக்கூடியது இல்லை” என்ற அணியின் பேச்சாளர். அவள் முதலில் எல்லோருக்கும் வணக்கம் தெரிவித்து விட்டு, பேச ஆரம்பித்தாள்.

“ நாம் எல்லோருமே இன்று ஆடைகளுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கிறோம் – கொடுக்கவும் வேண்டும். ஆனால் நாம் உடுத்துக்கின்ற ஆடை அணிகலன்கள் நாம் செய்யும் செயலுக்கு உறுதுணையாக இருக்குமே தவிர மற்றபடி நாம் செய்யும் செயல்கள்தான் நம் பெயர் சொல்லும்.

இங்கேயே எடுத்துக் கொள்ளுங்கள். இது பட்டிமன்றம் – அதுவும் தமிழில் பேச வேண்டிய பட்டிமன்றம். இன்று வந்திருக்கும் பேச்சாளர்கள் எல்லோருமே நம் தமிழ் நாட்டு கலாசாரப்படி புடவை/வேட்டி என்று உடை உடுத்தி வந்திருக்கிறார்கள், அவர்கள் உடைகளால் சபையே களை கட்டுகிறது என்று சொன்னால் மிகையே இல்லை.

ஆனால் என் அலுவலக நிர்ப்பந்தம் காரணம் என்னால் மற்ற பேச்சாளர்கள் போல் தமிழ் நாட்டு கலாசார உடையில் வர இயலவில்லை. நேரமின்மை காரணமாக நான் என் அலுவலக உடையிலேயே உங்கள் முன் நின்று பேச வேண்டிய நிலமை. ஆனால் அதற்காக என் பேச்சுத் திறனில் எந்தக் குறைபாடும் வரப் போவதில்லை.

அதனால் தான் நான் கூறுகிறேன், “ஆள் பாதி ஆடை பாதி” என்ற கூற்று பல நேரத்தில் சரியாக இருப்பதில்லை என்று. இந்த கருத்தை என் பேக்சு முடிந்தபின் நீங்கள் அனைவருமே ஒத்துக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் நான் என் பேச்சை ஆரம்பிக்கிறேன்” என்ற முன்னுரையுடன் ஆரம்பித்த பானு அடுத்த பத்து நிமிட பேச்சில் அனைவரது மனதையும் கவர்ந்து விட்டாள் என்பது அவள், தன் பேச்சை முடித்துக் கொண்டவுடன், சபையில் இருந்த அனைவரும் எழுந்து நின்று கை தட்டியவுடன் தெரிந்தது.

பானுவின் ஆணித்திரமான பேக்சுத் திறனாலேயே அவர்கள் அணி வெற்றி பெற்றது என்று நடுவர் அவள் பெயரை குறிப்பிட்டு கூறியது கேட்டு தன் மனம் ஏன் இவ்வளவு சந்தோஷப் படுகிறது என்று வாசுவிற்கு புரியவில்லை. இத்தனைக்கும் அவன் தாயார் ஜானகி பங்கேற்ற அணி தோற்று விட்டது என்பது தெரிந்தும் தன் மனதில் தோன்றிய மகிழ்ச்சியை நினைத்து அவனுக்குள் ஒரு குற்ற உணர்ச்சி தோன்றினாலும், மனதின் மகிழ்ச்சியை அவனால் தடுக்க முடியவில்லை என்பதும் உண்மைதான்.

பட்டிமன்றம் முடிந்தபின் நடந்த டின்னரின் பொழுது வாசுவிற்கு பானுகூட பேசவும் வாய்ப்பு கிடைத்தது, அவன் தாயார் ஜானகியே வாசுவைக் கூப்பிட்டு பானுவை அவனுக்கு அறிமுகப்படுத்தி வைத்தாள். அவர்கள் இருவருமே சாஃப்ட்வேர் எஞ்சினியராக இருந்ததால் பேசுவதற்கும் பல பொதுவான விஷயங்கள் இருந்தன.

பேசியதிலிருந்து தெரிந்து கொண்டது பானு முழுக்க முழுக்க மும்பையிலேயே பிறந்து வளர்ந்த பெண். தந்தை சிவராமன் இளம் வயதிலேயே திருநெல்வேலியிலிருந்து மும்பை வந்து, கணக்காளராக ஒரு குஜராத்தி கம்பெனியில் சேர்ந்து, இன்று அந்த கம்பெனியின் ஒரு கிளையை முழுவதுமாக நிர்வாகிப்பவர். தாய் வீட்டு நிர்வாகம்.

பானு ஒரே பெண். பேரழகி என்று சொல்ல முடியாவிட்டாலும், அழகில் சேர்த்திதான். அவளைப் பார்த்தவுடன் , தனுஷ் ஒரு சினிமாவில் சொல்வதுபோல் உடனே பிடிக்காவிட்டாலும், அவளுடன் பழக பழக அவளுடைய புத்திசாலித்தனம், கம்பீரம் எல்லோரையும் கவர்ந்துவிடும்.

ஜானகிக்கு பானுவைப் பார்த்தவுடனேயே ரொம்ப பிடித்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். அதுவும் அவர்கள திருநெல்வேலி என்று தெரிந்தவுடன் இன்னும் அன்பு அதிகமாகி விட்டது. ஏனென்றால் அவர்களும் திருநெல்வேலிகாரர்கள் தான், இந்த திருநெல்வேலிக்காரர்களுக்கே ஊர்பாசம் கொஞ்சம் அதிகம் என்று தான் சொல்ல வேண்டும்.

டின்னர் முடிவதற்குள் ஜானகி பானுவின் வீட்டு விலாசம் எல்லாம் வாங்கி, அவளை விட்டே தன்னை அவர்கள் வீட்டுக்கு அழைக்கும்படி செய்து விட்டாள். அதற்கும் ஒரு காரணம் இருந்தது. ஜானகி மும்பை வந்ததே வாசுவிற்கு சமைத்துப் போடத்தான். அவளுக்கு முதலிலேயே வாசு மும்பை வேலையை ஏற்றுக் கொள்வது பிடிக்கவில்லை.

பெங்களூரிலேயே ஏற்கெனவே அவன் வேலை பார்த்துக் கொண்டு இருந்த கம்பெனியிலேயே வேலை செய்துகொண்டு, அவர்கள் கூடவே இருக்க வேண்டும் என்பதுதான் அவளுடைய விருப்பமாக இருந்தது, இந்த விஷயத்தில் அவள் கணவர் ராகவிற்கு தனியாக அபிப்ராயம் என்று ஒன்றும் இருக்கவில்லை

வாசு முதலில் பேங்களூரில் தான் ஒரு பெரிய சாஃப்ட்வேர் கம்பெனியில் இருந்தான். திடுமென்று அவன் காலேஜ் நண்பன் ரகு மும்பையில் வேலை பார்த்த சாஃப்ட்வேர் கம்பெனியில் அதிக சம்பளம், பெரிய பதவி என்று அழைப்பு வர, வாசு உடனே அதை ஏற்றுக் கொண்டு விட்டு தான் ஜானகி மற்றும் ராகவிடமே சொன்னான்.

ரகுவே மும்பையில் ஒரு அபார்ட்மென்ட் வாடகைக்கு ஏற்பாடு செய்ய, வாசு மும்பை கிளம்பிவிட்டான். முதலில் தன் சக நண்பர்கள் போல் ஹோட்டலில் சாப்பிட்டு வந்த வாசுவிற்கு, கொஞ்ச நாளிலேயே ஹோட்டல் சாப்பாடு அலுத்துவிட்டது. பிறகு இரண்டு மூன்று சமையல்காரர்கள் வைத்து வீட்டிலேயே உணவு தயார் செய்ய ஏற்பாடு செய்தும், எதுவும் சரிப்படவில்லை.

தன் மகன் சாப்பாட்டுக்கு கஷ்டப்படுவதை பொறுக்கமுடியாமல் தான் ஜானகி மும்பை வந்து வாசுவின் உணவுக் கவலையை தீர்த்தாள். ஆனால் ராகவ் ரிடையர் ஆக கொஞ்சம் மாதங்கள் இருந்ததால் அவர் பேங்களூரிலேயே இருக்க வேண்டிய நிலமை. ஜானகிக்கு மும்பையில் தன் பிள்ளைக்கு சமைத்து போடுவது மனதிற்கு திருப்தி அளித்தாலும், கணவர் தனியாக பேங்களூரில் கஷ்டப் படுவது அவளுக்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை.

இந்த நிலையில், இந்த பிரச்சினையிலிருந்து விடுபட அவளுக்குத் தோன்றிய ஒரே தீர்வு வாசுவிற்கு திருமணம் செய்து வைத்து விடுவது தான். மூத்த பெண் ராஜிக்கு 2 வருடங்களுக்கு முன்புதான் திருமணம் செய்து, அவளுக்கு முதல் பிரசவத்திற்கு செய்ய வேண்டியது எல்லாம் செய்து, அந்த பொறுப்பு முடிந்து விட்டது,

இனி வாசுவிற்கும் திருமணம் செய்து விட்டால், தங்கள் பொறுப்பு முழுவதுமாக தீர்ந்துவிடும். பிறகு பேங்களூரில் நிம்மதியாக ஓய்வு காலத்தை ஓட்டி விடலாம் என்பது அவள் எண்ணம்.

அடுத்து எல்லாமே வேகவேகமாக நடந்தது, முதலில் ஜானகி பானுவின் அழைப்பை ஏற்று அவர்கள் வீட்டிற்கு செல்ல, பிறகு பானுவின் பெற்றோர் அவர்கள் வீட்டிற்கு வர என்று நெருக்கம் அதிகரித்தது. பெற்றோர்கள் சந்திப்பு ஒரு பக்கம் நடக்க, அதே சமயம் பானு வாசு சந்திப்பும் முதலில் எதேச்சையாகவும் பிறகு திட்டமிட்டும் நடந்தன.

எல்லோருக்குமே மனது பிடிக்க, அடுத்த 3 மாதங்களில் பானு வாசு திருமணம் அவர்கள் முதன்முதல் சந்தித்த தமிழ் சங்கத்திலேயே விமரிசையாக நடந்தது, திருமணம் முடிந்தபின் ஒரு மாதம் போல் மும்பையில் பானுவாசு கூட இருந்து விட்டு ஜானகி ராகவ் பேங்களூருக்கு திரும்பி விட்டார்கள்.

பானு வாசு தேன்நிலவு என்று எங்கும் செல்லவில்லை. வீடே அவர்களுக்கு சொர்க்கமாக இருந்தது, தினமும் ஆட்டமும் பாட்டமும் சின்ன சின்ன ஊடலுமாக வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக சென்றது. வாசுவிற்கு பானுவை முதன்முதல் பார்த்த பொழுது ஏற்பட்ட ஆச்சரியம் இன்றும் குறையவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

அவள் ஒன்று சொல்லிவிட்டாள் என்றால் அதற்கு மறுபேச்சு கிடையாது என்பது இன்றும் தொடர்கிறது.. அவள் கம்பீரம், அவள் முடிவு எடுக்கும் விதம் எல்லாமே வாசுவுக்கு அவள்மேல் ஒரு பெரிய மதிப்பை ஏற்படுத்தி இருந்தது என்பதுதான் உண்மை.

வாரம் ஐந்து நாட்கள் வேலை வேலை வேலை. சனி ஞாயிறு என்றால் மலையேறுதல் சைக்கிள் ரேஸ் என்று அவர்கள் நேரத்தை செலவிட்டார்கள். இருவருக்குமே உடற்பயிற்சி செய்வது, ஜாகிங்க் செய்வது, மலையேறுவது எல்லாம் ரொம்ப பிடித்தமான விஷயமாக இருந்ததால், கல்யாணமாகி நான்கு வருடங்கள் ஆன பின்பும் கூட அவர்கள் குழந்தை பெற்றுக் கொள்வதை பற்றி எதுவும் யோசிக்கவில்லை

ஜானகி விளையாட்டாக “என்னை எப்போ பாட்டி ஆக்க போகிறீர்கள்?” என்று கேட்கும்போதுகூட, வேறு ஏதாவது பேசி அந்த பேச்சையே மாற்றி விடுவார்கள். ஜானகி விடாமல் கேட்டதாலோ இல்லை அவர்களுக்கே குழந்தை இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியதாலோ என்னவோ, பானு இப்பொழுது இரண்டு மாத கர்ப்பம்.

பானு கர்ப்பம் என்று தெரிந்தவுடன், அவர்கள் வாழ்க்கையே தலைகீழாகி விட்டதோ என்கிற மாதிரி ஆகி விட்டது. தினம் நடைபயிற்சி ஒன்றைத் தவிர வேறு கடினமான உடற்பயிற்சி செய்வது நின்று விட்டது. பானு கொஞ்சம் அப்படி இப்படி அசைந்தால் கூட வாசு “பானு ! ஜாக்கிரதை – ரொம்ப அசையக் கூடாது” என்று பதறுவதைப் பார்க்க பானுவிற்கு சிரிப்பு தான் வந்தது.

பானு தாயாகப் போகும் நல்ல செய்தியை பானுவும் வாசுவும் இதுவரை யாரிடமும் சொல்லவில்லை, இன்னும் ஒரு மாதம் போகட்டும் அதன்பிறகு எல்லோரிடமும் வீட்டில் சொல்லிக் கொள்ளலாம் என்று இருவரும் கமுக்கமாக இருந்தார்கள். தாங்கள் அப்பா அம்மா ஆகப் போகிறோம் என்ற மகிழ்ச்சியை தாங்கள் மட்டும் கொஞ்ச நாள் அனுபவிக்க வேண்டும் – மூன்று மாதம் ஆனபிறகு சொல்லலாம் என்று இருந்த போழுது தான் விதி அவர்கள் வாழ்க்கையில் விளையாடியது,

ஒரு வாரம் குஜராத்திற்கு கம்பெனி வேலையாக சென்ற வாசு வரும்போது வறட்டு இருமலையும் கூட கொண்டு வந்தான். வரட்டு இருமல் தானே, அதுவாகவே சரியாகி விடும் என்று இருமல் மருந்து மற்றும் பனங்கற்கண்டு எல்லாம் எடுத்துக் கொண்டும் வரட்டு இருமல் குறைகிற வழியாக இல்லை.

இரண்டு வாரங்கள் ஆகியும் வரட்டு இருமல் குறையவில்லை. அவ்வப்போது காய்ச்சலும் வேலை செய்ய முடியாமல் தளர்வும் வர, பானு முடிவாக சொல்லி விட்டாள் – ஒரு மருத்துவமனையில் போய் எல்லா டெஸ்டும் எடுக்க வேண்டும் என்று. ‘ஒரு சின்ன வரட்டு இருமலுக்கு ஆஸ்பத்திரிக்கு போக வேண்டுமா” என்பது வாசுவின் எண்ணம்,

கடைசியில் பானுவின் பிடிவாதம் தான் ஜயித்தது. பானுவும் தன் அலுவலகத்திலிருந்து விடுப்பு எடுத்துக்கொண்டு, அவனை பிடிவாதமாக மருத்துவமனைக்கு கூட்டி சென்று எல்லா மருத்துவ பரிசோதனையும் செய்ய வைத்ததால் மட்டுமே, வாசு எல்லா டெஸ்டும் செய்து கொண்டான். இல்லாவிட்டால் இன்று நாளை என்று சால்ஜாப்பு சொல்லி பண்ணாமலே இருந்திருப்பான்.

டெஸ்ட் ரிசல்ட் இரண்டு நாளில் வரும் என்று ஆஸ்பத்திரியில் சொல்ல அவர்கள் வீட்டிற்கு வந்து விட்டார்கள். ஆனால் திடுமென்று மறுநாள் மத்தியானமே அந்த ஆஸ்பத்திரியில் இருந்து பானுவை மொபைலில் கூப்பிட்டார்கள். டெஸ்ட் ரிஸல்ட் சீக்கிரம் ரெடியாகியிருக்கும் என்று பானு நினைத்து, விவரம் கேட்க, அன்று மாலை அவர்கள் இருவரையும் ஆஸ்பத்திரி வந்து டாக்டரை நேரில் பார்க்கும்படி ஆஸ்பத்திரி ரிஸப்ஷனிஸ்ட் சொன்னது பானுவை கொஞ்சம் கவலையில் ஆழ்த்தியது,

“என்ன ஏதாவது பிரச்சனையா?” என்று பானு கேட்டதற்கு “நேரே வாருங்கள் பேசலாம்” என்று சொல்லிவிட்டார்கள். உடனே வாசுவிற்கு போன் செய்து அவனிடம் விவரம் ஒன்றும் கூறாமல், “ டெஸ்ட் ரிஸல்ட் தயாராகி விட்டதாம். இன்னிக்கு சாயங்காலமே நாம் போய் டெஸ்ட் ரிசல்ட் வாங்கிண்டு டாக்டரையும் பார்த்துவிட்டு வருவோம்” என்று பானு சொல்ல, வாசு,

“இன்னிக்கு எனக்கு முக்கிய வேலை இருக்கிறது. நாளைக்கு போகலாமே” என்று சொன்ன போதும், பானு ஏதோதோ சொல்லி அவனை ஒத்துக் கொள்ள வைத்து விட்டாள். அதேமாதிரி இருவரும் அன்று மாலையே ஆஸ்பத்திரி சென்று டாக்டரை பார்த்தார்கள். முதலில் டெஸ்ட் ரிசல்ட் வாங்கிக் கொண்டு விடலாம் என்று லேப்க்கு சென்ற பொழுது, அங்கு இருந்த செகரட்டரி,

“எல்லா ரிசல்ட்டும் டாக்டரிடம் இருக்கிறது நீங்கள் நேரில் போய் அவரைப் பார்க்கலாம்” என்று சொல்லிவிட்டாள். அவர்கள் டாக்டர் கன்ஸல்டிங்க் அறையை நெருங்கி, தங்கள் பெயரைச் சொன்னவுடன்

“டாக்டர் உங்களை உடனே உள்ளே அனுப்ப சொல்லி இருக்கிறார்” என்று அங்கு இருந்த ரிசப்ஷனிஸ்ட் சொல்லி அவர்களை உள்ளே அனுப்பினாள். டாக்டர் அவர்களை முதலில் உட்காரும்படி சொல்லிவிட்டு சிறிதுநேரம் மௌனமாக இருந்தார். பிறகு அவர்களைப் பார்த்து,

“டெஸ்ட் ரிஸல்ட் எல்லாம் பார்த்தேன். கொஞ்சம் பேச வேண்டி இருக்கிறது. அதனால்தான் உடனே உங்களை வரச் சொன்னேன். நீங்கள் இருவரும் நான் சொல்வதை தைரியமாக கேட்க வேண்டும். முதலில் ஒன்று நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

எல்லா வியாதிக்கும் இப்போது மருந்து கண்டுபிடித்து விட்டார்கள் இல்லை கண்டுபிடித்துக் கொண்டே இருக்கிறார்கள் அதனால் கவலைப்படாமல் நான் சொல்லுவதை கேளுங்கள்” என்று சொல்லிவிட்டு திரும்பவும் டெஸ்ட் ரிசல்டை ஒரு முறை பார்த்தார்.

அவர் பேசுவதைக் கேட்ட பானுவுக்கு பயத்தில் வயிற்றை கலக்க ஆரம்பித்துவிட்டது. இருந்தாலும் “இந்த நேரத்தில் நாம் தான் தைரியமாக இருக்க வேண்டும்” என்று தனக்குத்தானே மனதிற்குள் சொல்லிக்கொண்டே டாக்டரின் முகத்தை பார்த்தாள். டாக்டருக்கு கூட அவர்கள் இருவரில் அவள்தான் தைரியசாலி என்று தெரிந்ததோ என்னவோ அவரும், அவள் முகத்தை பார்த்து கொண்டு தான் பேசினார்,

“நான் ரிசல்ட் எல்லாம் பார்த்தேன். நான் சொல்லப் போவது கொஞ்சம் கஷ்டமான விஷயம் தான். ஆனால், நான் ஒரு டாக்டர் என்றா முறையில், இதை நான் உங்களுக்கு நேராக சொல்லித்தான் ஆக வேண்டியிருக்கிறது. வாசுவிற்கு வந்திருக்கிறது கொஞ்சம் பெரிய நோய் தான். அது நுரையீரல் புற்றுநோய் அதாவது லங் கேன்சர். நான் பயப்பட வேண்டாம் என்று உங்களிடம் சொல்ல மாட்டேன். சொல்லவும் கூடாது. ஆனால் ஒரு விஷயம் மட்டும் சொல்லுவேன்.

இப்பொழுது லங்க் கேன்சருக்கு புதுசு புதுசாக நிறைய மருந்து கண்டுபிடித்து இருக்கிறார்கள். கண்டுபிடித்துக் கொண்டே இருக்கிறார்கள். அதனால் நீங்கள் பாசிட்டிவாக இருந்து இதை எதிர்கொள்ள வேண்டும். அதை மட்டும் தான் என்னால் சொல்ல முடியும்” என்று சொல்லி நிறுத்தினார் பானுவும் வாசுவும் முதலில் ஒன்றுமே புரியாமல் அவர் முகத்தைப் பார்த்தார்கள். தாங்கள் ஏதாவது கனவு காண்கிறோமோ என்றுகூடத் தோன்றியது அவர்களுக்கு,

சிறிது நேரத்திற்குப் பிறகு தான் அவர் என்ன சொன்னார் என்று அவர்கள் மூளையில் எட்டியது. முதலில் அவர்களுக்கு தோன்றிய ஒரே எண்ணம் - “டாக்டர் ஏதோ தப்பாக சொல்கிறார் இல்லை டெஸ்ட் ரிசல்ட் மாறிவிட்டதோ என்னமோ” என்பதுதான். கொஞ்ச நேரம் அவர்களால் பேசக்கூட முடியவில்லை. அதன்பிறகு பானு தான் முதலில் பேசினாள். அவள் டாக்டரிடம்,

“டாக்டர் இது எப்படி சாத்தியம்? நான் கேள்வி பட்டவரை நுரையீரல் புற்றுநோய் வருவது என்றால் அவர்கள் சிகரெட் பிடிப்பவர்களாக இருக்க வேண்டும் இல்லை ஏதாவது கெமிக்கல் ஃபேக்டரியில் வேலை செய்பவர்களாக இருக்க வேண்டும் என்று சொல்வார்களே. வாசு விற்கு எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. கெமிக்கல் ஃபேக்டரியிலும் வேலை செய்யவில்லை.

அதனால் வாசுவிற்கு இந்த நோய் வருவதற்கு சாத்தியமே இல்லையே. டாக்டர்! தயவு செய்து என்னை தப்பாக நினைக்க வேண்டாம். ஒருவேளை டெஸ்ட் ரிசல்ட் ஏதாவது மாறி இருக்குமோ? என்று கேட்க டாக்டர் அவளை கழிவிரக்கத்துடன் பார்த்தார்.

“அம்மா! இதில் தப்பா நினைக்க என்ன இருக்கிறது? நான் உங்க நிலையில் இருந்தால், எனக்கும் இப்படியெல்லாம் தான் நினைக்கத் தோன்றும். ஆனால், நான் இரண்டு முறை செக் செய்து விட்டேன். தவறு ஏற்பட வாய்ப்பு இல்லை. அதுவும் தவிர நீங்க சொன்ன விஷயம் –அதுதான் - சிகரெட் பிடிப்பவர்களுக்கு மட்டும் தான் லங்க் கேன்சர் வரும் வாய்ப்பு அதிகம் என்பது.

நிறைய பேர் ஏன் பல டாக்டர்களும் கூட அப்படித்தான் இன்றும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது முழுக்க உண்மை இல்லை. கேன்ஸரில் பல வகை உண்டு. வாசுவிற்கு வந்திருப்பது ம்யூடேஷன் அதாவது மரபணு மாற்றத்தால் உண்டாகியிருக்கும் கேன்சர். உடலில் சில மரபணுக்கள் தானே மாறுகின்றன – அந்த நேரம் சிலருக்கு அது புற்றுநோயாக வெளி வருகிறது.

இந்த மாதிரி மரபணு மாற்ற கேன்ஸர் புகைப் பிடிக்காதவர்களுக்கும் வரக்கூடிய கேன்சர். இந்த வகை கேன்ஸர் பெண்களுக்கு அதிகமாக வருகிறது என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். இந்த மரபணு மாற்ற கேன்சரை பற்றி நமக்கெல்லாம் தெரியவந்தது ஒரு இருபது வருஷங்களுக்கு முன்பு தான். அதன்பின் பலவித மருந்துகளை இந்த வகை புற்று நோய்க்கு கண்டுபிடித்திருக்கிறார்கள்.

அதனால் தான் சொல்கிறேன். சரியான மருந்து கொடுத்து இந்த நோயை கட்டுக்குள் வைத்திருக்க முடியும். இதற்கு முதலில் வேண்டியது உங்களை தைரியமாக வைத்துக் கொள்ள வேண்டியதுதான்” என்று சொல்லி முடித்தார். பானு, வாசுவின் கைகளைப் பிடித்துக் கொண்டாள். வாசுவால் ஒன்றுமே பேசமுடியவில்லை. ஆனால் பானு அவன் கைகளைப் பிடித்துக் கொண்டது

“எனக்கு என் பானு இருக்கிறாள். அவள் எல்லாம் பார்த்துக் கொள்வாள்’ என்ற தைரியத்தை அவனுக்கு கொடுத்தது, அவள் கைகளை இன்னும் இறுக்க பற்றிக் கொண்டான் வாசு. அவன் கைகளில் இருந்த வியர்வை ஈரம் அவன் பயந்திருக்கிறான் என்பதை உணர்த்தியது பானுவிற்கு, முதலில் அவன் பயத்தைப் போக்குவது மிகவும் முக்கியம் என்று உணர்ந்த பானு, தன் பயத்தை மறைத்துக் கொண்டு, அவன் கைகளை தன் கையால் ஆதரவாக தடவிக் கொடுத்தாள். பிறகு டாக்டரைப் பார்த்து

“இப்போது நாங்கள் என்ன செய்ய வேண்டும் டாக்டர்? எனக்கு ஒன்றுமே புரியவில்லை – என்ன செய்வதென்றும் தெரியவில்லை” என்று சொல்ல, டாக்டர் “அம்மா எனக்கு புரிகிறது, இது அவ்வளவு சுலபமாக ஏற்றுக்கொள்ளக் கூடிய விஷயம் இல்லை என்று. ஆனாலும் இதற்கு மேல் என்ன செய்ய வேண்டும் - எப்படி எதிர்கொள்ள வேண்டும்? இதையெல்லாம் நான் பேசத்தானே வேண்டும்.

இது கடுமையான நோயாக இருந்தாலும் இன்றைய விஞ்ஞான வளர்ச்சியால் நாம் சரியானபடி மருந்து கொடுத்து இந்த நோயை கட்டுக்குள் வைத்திருக்க முடியும். இந்த நோய் வந்தவர்கள் எவ்வளவோ பேர்கள் வேலைக்குக் கூட செல்கிறார்கள். அதுவும் தவிர இன்னும் ஒரு டெஸ்ட் பண்ண வேண்டியிருக்கிறது. அதை இங்கே பண்ண முடியாது, தில்லியில் மட்டுமே இந்த டெஸ்ட் செய்ய முடியும் அதனால் அங்கே அனுப்பி இருக்கிறோம். அந்த ரிஸல்ட் வருவதற்கு 15 நாட்கள் ஆகும்,

ஆனால் இதையெல்லாம் இன்றே பேசவேண்டும் என்பது இல்லை. அதனால் நீங்கள் இருவரும் வீட்டுக்கு போய்விட்டு கொஞ்சம் மனஸை தைரியப் படுத்திக்கொண்டு வந்தால் நாளை எல்லாவற்றையும் டிஸ்கஸ் செய்யலாம். இல்லை இப்பொழுதே பேசலாம் என்றால் கூட பேசலாம்.

வேணுமென்றால் இருவரும் போய் நம்ம ஆஸ்பத்திரி கேன்டினில் ஏதாவது டிபன் சாப்பிட்டுவிட்டு வாங்க. வயிற்றில் பாரம் ஏறினால், மனஸு பாரம் குறையும் என்று சொல்வார்கள்” என்று சொல்ல, பானுவிற்கும் கொஞ்சம் வெளிக்காற்று பட்டால் நன்றாக இருக்கும் என்று தோன்ற, வாசுவையும் கூட்டிக் கொண்டு கேன்டினுக்கு சென்றாள்.

பானுவின் மனதிலும் வாசுவின் மனதிலும் ஒரே கேள்விதான் - அதுதான் - டாக்டர் என்ன சொல்லப் போகிறார் - அது மனதிற்கு கொஞ்சம் சமாதானம் கொடுக்குமா? இல்லை - இன்னும் கஷ்டம் கொடுக்குமா?

(இந்தக் கேள்விக்கு பதில் அடுத்த அத்தியாயத்தில் கிடைக்குமா?)

(தொடரும்)

**********

எனதருமை நண்பர்களே ! நீங்கள் இந்த அத்தியாயத்தை படித்துப் பார்த்து, 'லைக்ஸ்' ம் 'கமென்ட்ஸ்'ம் அள்ளித் தருவீர்கள தானே?

 
Last edited:

sushi55

New member
Vannangal Writer
Messages
11
Reaction score
23
Points
3
2

dfd2c14af3839d4752615d9466b78624.jpg

மரபணு மாற்றம் ALK+ve

அத்தியாயம் மூன்று

வாசுவும் பானுவும்

வாசுவும் பானுவும் மனதில் பெரும் குழப்பத்துடன் கேன்டீனை நோக்கி நடந்தார்கள். கேன்டீனில் அவனை உட்காரச் சொல்லிவிட்டு அவளும் எதிரே உட்கார்ந்தாள். கேன்டீன் பையன் ஆர்டர் எடுக்க வந்ததும், ஒரு பிளேட் பஜ்ஜி, இரண்டு கப் காஃபிக்கு ஆர்டர் கொடுத்தாள்.

பஜ்ஜி ஆர்டர் சாப்பிடுவதற்காக இல்லை. பஜ்ஜி வர கொஞ்சம் நேரம் ஆகும். அதற்குள் வாசுவை கொஞ்சம் இயல்பு நிலைக்கு கொண்டு வர முயற்சி செய்யலாம் என்றுதான். தலை குனிந்து கொண்டு உட்கார்ந்திருந்த வாசுவிடம், ஒரு கிளாஸ் தண்ணீரைக் கொடுத்தாள்.

அவளிடமிருந்து அதை வாங்கிய வாசு அவள் முகத்தைப் பார்த்தான். அவன் கண்களில் இருந்த பயத்தைப் பார்த்ததும், பானுவிற்கு அப்படியே அவனைக் கட்டிப் பிடித்து சமாதானம் செய்ய வேண்டும் போல் தோன்றியது. பொது இடம் என்பதால் தன்னைக் கட்டுப் படுத்திக் கொண்டு, “வாசு! வாசு!” என்றாள்.

அதைச் சொல்லும் பொழுதே அவளையும் அறியாமல் அவள் கண்களில் கண்ணீர் கட்டுக் கடங்காமல் வழிந்தது, அவள் கண்ணீரைப் பார்த்த வாசுவின் கண்களிலும் கண்ணீர். இருவரும் கொஞ்ச நேரம் ஒன்றுமே பேசாமல் தலை குனிந்து அமர்ந்திருந்தார்கள்,

அதற்குள் பஜ்ஜியும், காஃப்பியும் வர, சர்வர் போகும் வரை காத்திருந்த பானு, வாசுவின் கைகளை தன் கைகளில் எடுத்து வைத்துக் கொண்டே,

“வாசு ! பகவான் என்னிக்கும் நம்மளை கைவிட மாட்டார். டாக்டர் தான் நிறைய மருந்து இருக்கு என்கிறாரே – நாம ரெண்டு பேரும் சேர்ந்து தைரியமாக இருந்து இதை எதிர் கொள்வோம். மனசை விட்டுட்டா, அப்புறம் ஒண்ணுமே பண்ண முடியாது, வந்தது வந்தாச்சு. அதை ஓட ஓட விரட்டுவோம் .

“சரி ! ஒரு பஜ்ஜி சாப்பிடு, வாசு. எனக்குத் தெரியும் – உனக்கு என்ன தோணறதுன்னு. அது எப்படி இந்த நேரத்தில் பஜ்ஜி சாப்பிடத் தோணும்னு தானே? ஆனா –எனக்கு என்ன தோணறதுன்னா – இன்னிக்கு வேணா மனசு வருத்தமாக இருக்குன்னு பஜ்ஜி சாப்பிடாமல் இருக்கலாம். ஆனா வாழ்க்கை பூரா பஜ்ஜி சாப்பிடாம இருக்கப் போறோமா?

அதனாலே நான் என்ன சொல்றேன்னா, இந்த நிமிஷத்திலேயிருந்து இந்த நோயை தைரியமாக எதிர்கொள்ள என்னவேல்லாம் செய்ய வேண்டுமோ அதை நாம் ஆரம்பிக்கிறோம். அதற்கு முதற்படி, இந்த பஜ்ஜி சாப்பிடுவது” என்று சொல்ல, வாசு அவளைப் பார்த்து கொஞ்சமாக சிரிக்க முயற்சி செய்து தோற்றுப் போனான். ஆனால் அதற்காக பஜ்ஜி வேண்டாம் என்று சொல்லாமல் அதை சாப்பிடத் தொடங்கினான்.

பானுவும் ஒரு பஜ்ஜியை எடுத்து கடித்தாள். அதை அவளால் கொஞ்சம் கூட சாப்பிட முடியவில்லை. ஆனாலும் தான் சாப்பிடவில்லை என்றால், வாசுவிற்கு தைரியம் கொடுத்தது எல்லாம் வீணாகிவிடுமே என்று கஷ்டப் பட்டு சாப்பிட்டாள். அதே மாதிரி வாசுவும் பானு மனம் கோணக்கூடாது என்று அந்த பஜ்ஜியை கஷ்டப்பட்டு சாப்பிட்டான்,

அதன் பின்பு காஃபி வர அதை இருவரும் குடித்த பொழுது அவர்களுக்கு கொஞ்சம் தெம்பு வந்தது போல் இருந்தது. சர்வர் கொடுத்த பில்லுக்கு பணம் கொடுத்துவிட்டு வெளியே வந்த அவர்களை குளிர்ந்த காற்று வரவேற்றது. இருவரும் வெளியில் வந்தார்கள்.

உடனே டாக்டரை பார்க்க அவர்கள் இருவருக்குமே மனமும் இல்லை - தைரியமும் இல்லை. அதனால் ஆஸ்பத்திரிக்கு வெளியில் நோயாளிகளும் அவர்களுடன் வந்திருக்கும் உறவினர்களும் உட்காருவதற்காக அமைக்கப் பட்டிருந்த பார்க்கில் போய் உட்கார்ந்து கொண்டார்கள்.

கொஞ்ச நேரம் பேசாமல் இருந்த வாசு திடுமென்று கதறி கதறி அழத் தொடங்கினான். பானு பயந்தே போய் விட்டாள். “என்ன ஆச்சு வாசு! எங்கேயாவது வலிக்கிறதா? வாயைத் திறந்து சொல்லேன்” என்று அவனை அப்படியே கட்டிப் பிடித்துக் கொண்டு கேட்டாள். அந்த நிமிடம் கதறி அழும் வாசு மட்டுமே அவள் கண்ணுக்கு தெரிந்தான். “பொது இடமாச்சே – எல்லோரும் பார்ப்பார்களே” என்ற ஒரு நினைப்பும் அவளுக்கு வரவில்லை.

வாசு அப்படியே அவள் மேல் சாய்ந்துக் கொண்டு “பானு ! பானு ! நான் நம்ம குழந்தையைக் கூட பார்க்காம போய் விடுவேனா? எனக்கு மட்டும் ஏன் இந்த கஷ்டம்” என்று திக்கித் திணறி சொல்ல. பானு, அவன் முதுகைத் தடவிக் கொண்டே,

“வாசு! அதெப்படி நடக்கும்? நீ கட்டாயம் குழந்தையை எடுத்து கொஞ்சப் போறே – குழந்தையை ஸ்கூல் கொண்டு விடப்போறே – நீ இப்படி உடைஞ்சு போனா, வந்திருக்கிற வியாதியை நாம் எப்படி ஜெயிக்கிறது? எல்லாத்தையும் உன்னோட பானு கிட்டே விட்டுடு –நாம இப்ப முகத்தை கழுவிண்டு, டாக்டரைப் போய் பார்க்கலாம். அப்புறம் நிறைய முடிவு எடுக்க வேண்டி இருக்கிறது – ரெண்டு பேரும் சேர்ந்து எல்லாத்தையும் பாத்துக்கலாம். போகலாம் - வா”

என்று சொல்ல, இருவரும் கை கோர்த்துக் கொண்டு டாக்டரைப் பார்க்க சென்றார்கள். இருவர் மனதிலும் டாக்டர் என்ன சொல்லப் போகிறாரோ என்ற குழப்பமும், பயமும் இருந்தாலும், இருவர் கைகளும் கோர்த்துக் கொண்டபொழுது, எதையும் எதிர்கொள்ளலாம் என்ற தைரியமும் அவர்கள் மனதில் வந்தது.

அவர்கள் திரும்பவும் டாக்டர் ரூமுக்குள் நுழைந்தார்கள். கன்சல்டிங்க் நேரம் முடிந்து விட்டாலும் டாக்டர் அவர்களுக்காக காத்திருந்தார். அவருக்கே இந்த இளம் ஜோடிகளை பார்த்த உடன் மனதிற்கு கொஞ்சம் கஷ்டம் ஆகிவிட்டது போல் தோன்றியது. அதுவும் பானுவை பார்த்தவுடன், அதுவும் அவள் தன் கணவரின் நிலைமையை அழகாக தைரியமாக கையாண்ட விதம் அவருக்கு அவள் மேல் ஒரு பாசத்தை உண்டாக்கி விட்டது என்பதுதான் உண்மை.

டாக்டர் அவர்களைப் பார்த்து உட்காரும்படி கூறிவிட்டு “என்ன ஏதாவது சாப்பிட்டீர்களா? வயிற்றில் பசி இருந்தால் எதையும் சரியாக யோஜித்து முடிவு எடுக்க முடியாது. அதனால்தான் எந்த விஷயத்துக்கும் முடிவு எடுக்கும் முன் கொஞ்சம் சாப்பிட்டு விடவேண்டும் என்று நாங்கள் சொல்வது வழக்கம். சரி இப்போது நாம் கொஞ்சம் பேசலாம்” என்று சொல்லிவிட்டு அவர்களை நோக்கி சின்னதாக ஒரு புன்னகை புரிந்தார்.

பானுவும் வாசுவும் ஒன்றும் பேசாமல் அவரை பார்த்தார்கள். டாக்டர் அவர்களைப் பார்த்து “முதலில் உங்களைப் பற்றி கொஞ்சம் கூறுங்கள். நீங்கள் என்ன செய்கிறீர்கள் – இனிமேல் என்ன செய்யப் போகிறீர்கள் என்ற விவரங்கள் தெரிந்து கொண்டால் மேலே பேசுவதற்கு உதவியாக இருக்கும்” என்று சொல்லிவிட்டு பானுவை பார்த்தார். பானு மாத்திரம்தான் பதில் சொல்லும் நிலைமையில் இருப்பது அவருக்கு தெரிந்து விட்டது போலும்.

பானு அவரைப்பார்த்து தங்கள் வேலை விவரம் எல்லாம் கூறினாள். மேலும் அவள் கூறியது “டாக்டர் நாங்கள் என்ன செய்ய வேண்டும் - என்ன செய்யப்போகிறோம் – இது எதைப்பற்றியும் இன்னும் யோசிக்கவில்லை. யோசிப்பதற்கு மனசில் இன்னும் தைரியம் வரவில்லை.

அதுவும் தவிர நிறைய விவரம் இன்னும் எங்களுக்கு புரியவில்லை அதனால் தான் இன்றே உங்களிடம் பேசி விடுவோம் என்று நாங்கள் இங்கு திரும்பி வந்தோம். பாவம் எங்களால் இன்று நீங்கள் வீட்டுக்கு செல்ல தாமதம் ஆகிவிட்டது, இல்லையா?” என்று கேட்க, டாக்டர் சின்னதாக சிரித்துவிட்டு,

“அம்மா இதெல்லாம் பெரிய தாமதம் இல்லை நான் சில சமயம் இதைவிட நிறைய நேரம் நோயாளிகளை பார்த்துவிட்டு செல்வது வழக்கம் தான். நீங்கள் சொல்லுவது சரிதான், இந்த நோய் பற்றி முழுக்க தெரிந்து கொள்ளாமல் நீங்கள் எந்த முடிவும் எடுக்க முடியாது தான். சரி ! நாம் இந்த நோய் பற்றி கொஞ்சம் பேசலாம்.

முதலில் ஒன்றை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். வாசுவிற்கு வந்திருப்பது மிகவும் கடுமையான நோய் தான். ஏனென்றால் நோய் முற்றிய பிறகுதான் இந்த நோய் வந்திருப்பதே நமக்கு தெரிய வரும். முக்கால்வாசியும் நோயின் மூன்றாவது அல்லது நான்காவது ஸ்டேஜில் தான் இந்த நோய் வெளியே தெரியும். அந்த ஸ்டேஜில் அதை குணப்படுத்துவது கொஞ்சம் கடினமாகிவிடும்,

இதை நான் உங்களை பயமுறுத்த சொல்லவில்லை. ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே டாக்டர் என்ற முறையில் இதை கூறுகிறேன். முன்பெல்லாம் லங் கேன்சர் என்றாலே ஒரு வருடம் இரண்டு வருடம் தான் வாழ்க்கை என்று டாக்டர்கள் முதற்கொண்டு நினைத்தார்கள் ஆனால் இப்பொழுது மருந்துகள் பல வந்துவிட்டதால் நிலைமை கொஞ்சம் மாறி இருக்கிறது.

அதுவும் வாசுவுக்கு வந்திருக்கும் மரபணு மாற்ற லங் கேன்சருக்கு கீமோதெரபி ரேடியேஷன் இதெல்லாம் இல்லாமலேயே மருந்து மட்டும் உட்கொண்டு கேன்சரை கட்டுப்படுத்த முடியும் என்ற நிலைமை இருக்கிறது. அதனால் கெட்டதிலும் ஒரு சின்ன நல்லது இருக்கிறது என்று எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அதற்காக நோயின் கடுமை இருக்காது என்று சொல்ல முடியாது.

ஏனென்றால் மரபணு மாற்ற கேன்சருக்கு என்று தயார் செய்யப்பட்ட மருந்துகள் மிகவும் வீரியம் வாய்ந்தவை. அதனால் அவற்றின் பக்க விளைவுகளும் அதிகம் தான். மாத்திரை உட்கொள்ள ஆரம்பித்த முதல் சிறு தினங்களுக்கு, வயிற்று வலி, உடல் பலவீனம், வாந்தி, கால் வீக்கம். பயங்கர உடல்வலி, வாந்தி பேதி எது வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் போகப்போக மருந்து உடம்புக்கு ஒத்துப்போக ஆரம்பித்தவுடன் பக்கவிளைவுகள் கொஞ்சம் குறையலாம் இருந்தாலும் வாழும் வாழ்க்கை கொஞ்சம் மாறத்தான் செய்யும்.

அதனால் தான் நான் எப்பொழுது என் நோயாளிகளுக்கு எப்பொழுதும் சொல்லும் யோஜனையை உங்களுக்கும் சொல்லுகிறேன். முதலில் நீங்கள் கலந்து பேசி முடிவு செய்ய வேண்டியது எந்த ஊரில் மருத்துவம் செய்து கொள்ள போகிறீர்கள் என்பதுதான்.

ஏனென்றால் மாத்திரை உட்கொள்வதால் வரும் பக்க விளைவுகள் சில சமயம் அதிகமாக இருக்கலாம் அந்த நேரம் வாசுவின் கூட ஒத்தாசைக்கு ஒரு ஆள் இருக்க வேண்டி வரலாம். வாசு தன் காரியாலய வேலையை இனிமேலும் செய்ய முடியும். இருந்தாலும் பழைய அளவு செய்ய முடியுமா என்பது மாத்திரை எப்படி வேலை செய்கிறது என்பதைப் பொறுத்து தான் இருக்கும்.

மாத்திரை மூலம் நோயை கட்டுக்குள் வைத்திருக்க முடியும். ஆனால் சில நேரங்களில் இந்த மாத்திரைகள் வேலை செய்யாமல் போகலாம். மாத்திரை வேலை செய்கிறதா நோய் கட்டுக்குள் இருக்கிறதா என்பதை பார்க்க இரண்டு மாதம் மூன்று மாதத்துக்கு ஒரு முறை சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ, ரத்த பரிசோதனை, எக்ஸ்ரே எல்லாம் எடுத்து பார்க்க வேண்டி வரும்.

இதை எல்லாம் யோசித்து எந்த இடத்தில் இருந்தால் எல்லா விஷயத்திற்கும் சௌகரியம் என்று யோஜித்து பார்த்து முடிவு செய்து கொள்ள வேண்டும் அதுவும் தவிர இந்த மாத்திரைகள் மிக மிக விலை உயர்ந்தவை. அதற்கான நிதி நிலைமை பற்றியும் யோஜித்துக் கொள்ள வேண்டும்.

நான் சொன்ன விவரம் கேட்டு நீங்க ரெண்டு பேரும் பயந்து விடக் கூடாது. ஏனென்றால் இந்த மாத்திரைகள் விலை உயர்ந்தவையாக இருந்தாலும் கூட, எல்லா நேரமும் இதை பணம் கொடுத்து வாங்க வேண்டியிருக்காது. நோயாளிகளின் நிதிநிலைமை மற்றும் மாத்திரிகைகளின் அதிக விலையை மனதில் கொண்டு, மாத்திரை உருவாக்கும் கம்பெனிகள் பல நல திட்டங்களை அமல் படுத்தியிருக்கிறார்கள்.

ஒரு சில மருந்து கம்பெனிகள் , ஒரு மாதத்திற்கு வேண்டிய மாத்திரைகள் வாங்கினால், மறு மாதம் அது இலவசமாக கிடைக்கும்படியான திட்டம் அறிவித்திறார்கள். இன்னும் சில கம்பெனிகள் , மாத்திரைகள் 6 மாதத்திற்கு வாங்கினால், அதன் பிறகு இலவசம் என்ற திட்டம் வைத்திருக்கிறார்கள். .

ஆனால் இந்த விவரமெல்லாம் பல நோயாளிகளுக்கு தெரிய வருவதில்லை – ஏன் பல டாக்டர்களுக்கே மாத்திரைகள் பற்றிய நிறைய விவரங்கள் தெரிவதில்லை என்பதால் அவர்கள் இன்னும் பல நோயாளிகளுக்கு கீமோதெரபியே சிபாரிசு செய்கிறார்கள். அதனால் விவரம் தெரிந்த நல்ல டாக்டரை தேர்ந்தெடுத்துப் போவது அவசியம்” என்று சொல்லி தன் உரையை முடித்தார்.

பானுவும் வாசுவும் எல்லாவற்றையும் கூர்ந்து கேட்டார்கள் நடுவில் ஒன்றும் பேசாமல் எல்லாவற்றையும் கேட்டதில் அவர்களுக்கும் வாசுவுக்கு வந்திருக்கும் நோய் பற்றி கொஞ்சம் விவரங்கள் புரிந்தன. பானு டாக்டரை பார்த்து,

“டாக்டர்! இந்த விஷயத்தில் நாங்கள் என்னுடைய பெற்றோர் இவருடைய பெற்றோர் மற்றும் எங்க நாத்தனார் அவங்க கணவர் எல்லோரிடமும் பேசித்தான் முடிவு எடுக்க முடியும். அதற்கு முதலில் இந்த விஷயத்தை அவர்களுக்கு சொல்ல வேண்டும். அதுதான் ரொம்ப கஷ்டமான விஷயம்.

அவர்களை எப்படி சமாதானப்படுத்துவோம் என்பதுதான் இப்பொழுது எங்களுடைய முதல் கவலை. இருந்தாலும் டாக்டர் நீங்கள் இவ்வளவு விவரங்கள் பொறுமையாக எடுத்துச் சொன்னதற்கு ரொம்ப நன்றி. உங்களிடம் பேசியது எங்களுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருக்கு.

ஏதாவது ஒரு வழி கிடைக்கும் என்று எங்களுக்கு கொஞ்சம் நம்பிக்கை வந்திருக்கிறது. ரொம்ப தேங்க்ஸ் டாக்டர். நாங்கள் பெரியவர்களிடம் கலந்து பேசி விட்டு, நாளையோ இல்லை அதற்கு அடுத்த நாளோ, உங்களுக்கு விவரம் சொல்லுகிறோம்" என்று சொல்ல, டாக்டர்,

"பெற்றோர்களிடம் இந்த விஷயம் பற்றி சொல்லுவது கொஞ்சம் கஷ்டம் தான். . ஆனால் செய்து தானே தீர வேண்டும்? நான் என்ன சொல்ல முடியும்? எல்லாம் நல்லபடியாக நடக்கும். இப்போது வீடு சென்று ஏதாவது நல்லபடியாக சாப்பிடுங்கள்.

சரி! இப்போது கிளம்புங்கள். நேரம் ஆகிவிட்டது. மனசை தைரியமாக வைத்துக் கொள்வது ரொம்ப முக்கியம். அது ஒன்றுதான் உங்கள் வியாதியை கட்டுக்குள் வைக்க உதவும்” என்று சொல்லிவிட்டு எழுந்தார்.

பானுவும் வாசுவும் அவருடன் கூடவே எழுந்து அவருக்குநன்றி சொல்லிவிட்டு கிளம்பினார்கள். பார்க்கிங்கில் நிறுத்தியிருந்த கார் பக்கம் வரும்வரை, அவர்கள் எதுவுமே பேசவில்லை. அவரவர்கள் எண்ணங்களில் மூழ்கியிருந்தார்கள்.

கார் அருகில் வந்தவுடன் பானு வாசுவிடம் தானே கார் ஓட்டுவதாக சொன்னாள். ஆனால் வாசு ஒத்துக் கொள்ளவில்லை. தானே கார் ஓட்டிக் கொண்டு வரப்போவதாக சொல்லி அவள் கையில் இருந்த சாவியை வாங்கிக்கொண்டு உள்ளே டிரைவர் சீட்டில் அமர்ந்து விட்டான்.

பானுவிற்கும் இதில் திருப்தி தான். ஏனென்றால் கார் ஓட்டுவதாக அவன் பிடிவாதம் பிடித்தது அவன் சகஜ நிலைக்கு திரும்புகிறான் என்பதை அவளுக்கு காட்டியது. “சரி” என்று சொல்லிவிட்டு பானு பக்கத்தில் உட்கார்ந்து கொண்டதும் வாசு காரை கிளப்பினான்.

நேரே வீட்டை நோக்கி காரை ஓட்டாமல் அவர்கள் எப்பொழுதும் போகும் சரஸ்வதி நிவாஸ் ஹோட்டலுக்கு போய் காரை நிறுத்தினான், பானு ஹோட்டல் எதற்கு என்பது போல் அவனை பார்க்க, வாசு,

“இன்னிக்குத்தான் நாம் சமைக்கவே இல்லையே, பானு! இப்போது ரொம்ப நேரம் ஆகிவிட்டது, ஏற்கெனவே நீ ரொம்ப டயர்டா இருக்கே .இனிமே வீட்டில் போய் சமைத்துக் கொண்டிருக்க வேண்டாம் என்பதால் தான் இங்கே ஹோட்டலுக்கு வண்டியை திருப்பிவிட்டேன். . இங்கேயே இன்னிக்கு சாப்பிட்டுவிட்டு போய்விடுவோம்” என்று சொல்ல, பானு பாசத்துடன் வாசுவை பார்த்து அவன் கையுடன் தன் கையை கோர்த்துக் கொண்டாள்.

இருவரும் ஹோட்டலில் நுழைந்து அவர்கள் எப்போதும் உட்காரும் கார்னர் டேபிளில் உட்கார்ந்தார்கள். அங்கே அவர்களுக்கு மிகவும் பரிச்சயமான சர்வர் முத்துவே இருந்ததை பார்த்தவுடன், அவனைப் பார்த்து கையசைத்தார்கள். அவனும் அவர்களைப் பார்த்து மகிழ்ச்சியுடன் அவர்கள் டேபிள் பக்கம் வந்தான்.

எப்பொழுதும் போல் சாம்பார் வடை, முறுகல் ரவா தோசை, காஃபி என்று ஆர்டர் செய்துவிட்டு வாசு பானுவை பார்த்து. “முதலில் சாப்பிடுவோம். பிறகு என்ன செய்யலாம் என்று யோஜிப்போம்” என்று சொல்ல பானுவுக்கு ஒரே ஆச்சரியம். ஒரு மணிநேரம் முன்பு கதறி கதறி அழுத வாசுவா இப்படி ஒன்றுமே நடக்காதது போல் உபசாரம் செய்கிறான் என்பதுதான் அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.

முத்து அவர்களுக்காக ஸ்பெஷலாக, நறுக்கிய வெங்காயம் தூவிய சாம்பார் வடையும் முறுகலான ரவா தோசையும் கொண்டுவர அதை அவர்கள் ரசித்து சாப்பிட்டார்கள். தங்களால் எப்படி இப்படி சாப்பிட முடிகிறது என்று அவர்களுக்கே ஆச்சரியமாக இருந்தது.

ஆனால் உண்மை என்னவென்றால், செய்தி கேட்டவுடன் ஏற்பட்ட அதிர்ச்சியிலிருந்து பானுவும் வாசுவும் கொஞ்சம் மீண்டு விட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். அதற்கு டாக்டரின் ஆதரவான பேச்சும் ஒரு காரணம் என்பதும் மறுக்க முடியாத ஒரு உண்மை.

அதுவும் தவிர மதிய உணவிற்குப் பிறகு அவர்கள் மருத்துவ மனை கேன்டீனில் ஒரு பஜ்ஜியும் காஃபியும் மட்டுமே சாப்பிட்டிருந்ததால், அவர்களுக்கு பயங்கர பசி. எது வந்தாலும் இனி ஏற்றுக் கொள்ளத்தானே வேண்டும் என்ற விரக்தி மனப்பான்மை ஒரு பக்கம் இருந்தாலும், அழுது கதறுவதால் எந்தப் பலனும் ஏற்படப்போவதில்லை என்பதும் அவர்களுக்குத் புரிந்து விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

சாப்பிட்டு முடித்தபின் முத்து அருமையான டிகாக்க்ஷன் தூக்கலான பில்டர் காபி கொண்டுவர அதையும் ரசித்து குடித்தார்கள். பிறகு முத்துவிற்கு எப்போதையும் விட அதிகமாக டிப்ஸ் கொடுத்துவிட்டு வெளியே வந்தார்கள். காரில் ஏறி வீடு வரும்வரை அவர்கள் இருவருடையே மௌனமே நிலவியது.

வீடு வந்த பிறகு உடை மாற்றிக் கொண்டு இருவரும் பால்கனியில் வந்து அமர்ந்தார்கள். சிறிது நேரம் என்ன பேசுவது என்று தெரியாமல் மௌனமாக இருக்க, பின் வாசு தான் முதலில் வாய் திறந்தான்.

“பானு! முதலில் எனக்கு ரொம்ப பயமாகத்தான் இருந்தது. ஏன் இன்னும் கூட இந்த நோய் எனக்கு வந்திருக்கிறது என்பதை என்னால் நம்பக் கூட முடியவில்லை. இருந்தாலும் என்ன செய்வது? எதையும் ஏற்றுக் கொள்ளத்தானே வேண்டும். சரி ! நமக்கு நேரம் ரொம்ப குறைவு. அடுத்து என்ன பண்ண வேண்டும் என்பதை பேசி முடிவெடுக்க வேண்டும்.

ரொம்ப கஷ்டமான விஷயம் என்னவென்றால் அம்மா அப்பாவிடம் எப்படி சொல்வது என்பது தான். ஆனால் சொல்லித்தானே ஆகவேண்டும்? என்ன செய்யலாம் - நீ சொல்லு” என்று கேட்க பானு இரண்டு நிமிடம் ஒன்றுமே பேசவில்லை. பிறகு வாசுவிடம் இன்னும் நெருங்கி அமர்ந்தாள். அவன் கையை எடுத்து தன் கைகளில் வைத்துக்கொண்டு,

“வாசு! நீ சொல்வது ரொம்ப சரி, நமக்கு நேரம் ரொம்பக் குறைவாகத்தான் இருக்கிறது. அதனால் நாம் இருவரும் சேர்ந்து என்ன செய்வது என்று முடிவு செய்வோம். டாக்டர் சொன்னதைத் தான் கேட்டோமே? நோயைக் கட்டுப்படுத்த மருந்துகள் இருக்கு, நாம் இருவரும் சேர்ந்து எல்லாவற்றையும் தைரியமாக எதிர் கொள்வோம்.

எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் அம்மா அப்பாவிடம் பேசுவதற்கு முன் ராஜி அக்கா அத்திம்பேரிடம் இந்த விஷயத்தை சொல்லுவோம். அத்திம்பேர் எதையும் யோசித்து செய்பவர். அதுவும் தவிர அவருக்கு நிறைய விஷயம் தெரியும். அதனால் முதலில் அவரிடம் சொன்னால் அம்மா அப்பாவை எப்படி சமாளிப்பது என்று அவரே வழி சொல்வார்.

அவர்களால் வர முடியுமென்றால், ராஜி அக்காவையும் அத்திம்பேரையும் பெங்களூர் வர சொல்லுவோம். அவர்கள் வந்தால், அம்மா அப்பாவை சமாளிப்பது கொஞ்சம் சுலபமாக இருக்கும் என்று எனக்குத் தோன்றுகிறது.

நாளைக்கு எங்க வீட்டிற்கு போய் எங்க அப்பா அம்மாவிடம் இந்த விஷயத்தை சொல்லுவோம். எங்க அம்மா கொஞ்சம் தைரியசாலி. அப்பாதான் நொறுங்கிப் போய் விடுவார். இருந்தாலும் நீ சொன்ன மாதிரி எப்படியும் சொல்லத்தானே வேண்டும்?

சரி! இப்போது மணி எட்டரைதான் ஆகிறது. அத்திம்பேர் 10 மணிக்கு மேல் தான் தூங்குவார். அதனால் அவரை மொபைலில் கூப்பிட்டு முதலில் விஷயத்தை சொல்லுவோம். அவர் என்ன சொல்கிறார் என்பதை பொறுத்து, அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்வோம். என்ன சொல்கிறாய்?” என்று கேட்க வாசு சரி என்று தலை அசைத்தான்,

அப்புறம் அத்திம்பேர் இடம் யார் முதலில் பேசுவது என்று யோசித்து கடைசியில் பானுவே பேசுவது என்று முடிவு செய்தார்கள். அத்திம்பேரை மொபைலில் கூப்பிட்டு பானு விஷயம் சொன்னபொழுது , முதலில் அவரால் பேசக் கூட முடியவில்லை.

அப்புறம் சமாளித்துக் கொண்டு முழு விவரம் சொல்லும்படி கேட்டார், பானு டாக்டர் சொன்ன எல்லா விஷயங்களையும் விவரமாக கூறினாள். அவர் முழுவதும் கேட்ட பிறகு, ராஜியிடம் விவரம் சொல்லி மொபைலை கொடுத்தார்.

ராஜியால் பேசக் கூட முடியவில்லை. “வாசு ! வாசு! பகவான் என்னடா இப்படி சோதிக்கிறார் “ என்று திரும்ப திரும்ப அனத்திக் கொண்டே இருந்தாள். பிறகு அவர்கள் ஓரளவு சமாதானம் அடைந்த பிறகு, வாசு அவர்கள் இருவரையும் பேங்களூர் வரமுடியுமா என்று கேட்க அவர்கள் மறுபேக்சு பேசாமல் ஒத்துக் கொண்டார்கள்.

இந்த சில நாட்களில் நடந்தது அவ்வளவுன், திரும்ப சினிமா போல நினைவில் வர, வாசு தலையை அசைத்து அந்த நினைவுகளிலிருந்து விடுபட்டான். இன்னும் ஓன்றும் அவனுக்கு சரியாகப் புரிந்தது.

அதுதான் ராஜியும் சேகரும் வந்ததால் மட்டுமே தன் தாயாரையும் தகப்பனாரையும் சமாளிக்க முடிந்தது என்பதுதான். “ சரி! அம்மா அப்பாவை எப்படியே சமாளிச்சாச்சு” என்று தன்னை சமாதானப் படுத்திக் கொண்ட வாசு உட்கார்ந்த வாக்கிலேயே தன் மொபைலை எடுத்து மணி பார்த்தான். மணி 5.30 என்று காண்பித்தது.

மொபைல் வெளிச்சம் கண்ணில் பட விழித்துக் கொண்ட பானு, “என்ன – தூங்காமல் உட்கார்ந்து என்ன யோஜனை?" என்று கேட்டுக்கொண்டே அவளும் எழுந்து வாசுவை நெருங்கி அமர்ந்தாள்.

“வாசு ! இன்னிக்கு நமக்கு பேங்களூர் டாக்டர் அப்பாயின்ட்மென்ட் இருக்கு, காலம்பற டிபன் சாப்பிட்டுவிட்டு கிளம்புவோம் அத்திம்பேரும் நம்ம கூட வருவார் என்று நினைக்கிறேன். நல்ல டாக்டரா இருந்து அவர் சொல்லும் மருந்தில் நோய் கட்டுக்குள் வர வேண்டும்” என்று சொல்லி கண்களை மூடி பிரார்த்தனை செய்தாள்,

அவள் பிரார்த்தனை பலிக்குமா? பொறுத்திருந்து அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.


(தொடரும்)

***************

நட்பூஸ்களே! என் கதாபாத்திரங்கள் உங்கள் 'லைக்'ஸ் மற்றும் 'கமென்ட்ஸ்' க்கு காத்துக் கொண்டிருக்கிறார்கள்,

 
Last edited:

sushi55

New member
Vannangal Writer
Messages
11
Reaction score
23
Points
3

2

மரபணு மாற்றம் ALK+ve

(அத்தியாயம் நான்கு)

*******

03d83bdcb0a3a9ec72d47d9d4d9379d7.jpg

மரபணு மாற்றம் ALK+ve

அத்தியாயம் நான்கு

*************
Dr.அபர்ணா கரந்த்

“. நல்ல டாக்டரா இருந்து அவர் சொல்லும் மருந்தில் நோய் கட்டுக்குள் வர வேண்டும்” என்று சொல்லி கண்களை மூடி பானு செய்த பிரார்த்தனையைக் கேட்ட வாசு அவளைப் பார்த்து சிரித்தான். பானு அவனை பொய்க் கோபத்துடன் பார்த்து,

“இப்ப எதுக்கு இந்த சிரிப்பு?” என்றுக் கேட்க, வாசு,

“கடவுள் பாவம்னு நினைச்சு சிரிச்சேன், இந்த மாதிரி தினம் தினம் எவ்வளவு பிரார்த்தனை வந்துண்டு இருக்கும்? எத்தனைன்னு நினைவு வச்சுப்பார்? அதுவும் இந்த வியாதி கட்டுக்குள் வரணும்னு வேண்டிக்கறதுக்கு மேலே, டாக்டர் வேறே நல்ல டாக்டரா இருக்கணும்னு எக்ஸ்டிரா பிரார்த்தனை வேறே?”

வாசுவின் வார்த்தைகளுக்கு பானு பதில் சொல்லுமுன், அவள் மொபைல் மணி அடித்தது. மொபைலை எடுத்து யார் என்று பார்த்த பானு, வாசுவைப் பார்த்து,

“எங்கப்பா தான் – எதுக்கு இவ்வளவு காலம்பற கூப்பிடறார்ன்னு தெரியலையே – சரி ! நான் பேசிட்டு வரேன். அதுக்குள்ளே நீ போய் பல் தேய்ச்சு தயாராகு. நானும் பல் தேய்ச்சபிறகு உனக்கு காஃப்பி தரேன்” என்று சொல்லிக் கொண்டே, மொபைலை ஆன் செய்து,

“அப்பா! குட் மார்னிங்க் ! என்ன விஷயம்?” என்று கேட்டாள். மறுமுனையில் அவள் தந்தை,

“பானும்மா ! ராத்திரி நீங்க ரெண்டு பேரும் தூங்கினேளா? எனக்கும் அம்மாக்கும் தூக்கமே இல்லை. மனசு கிடந்து அல்லாடறது. எங்களுக்கே இப்படி இருந்தா வாசுவோட அம்மா அப்பா வாசு விஷயம் தெரிஞ்சவுடன், எப்படி இதையெல்லாம் தாங்குவாந்னு ரொம்பக் கவலையா இருந்தது, அதனால்தான் காலையிலேயே போன் பண்ணினேன். அவா எப்படி இருக்கா?” என்று கேட்க, பானு,

“அப்பா! வாசுவை பற்றிய விவரம் கேட்டவுடன் எங்க மாமியார் அப்படியே நிலைகுலைந்து போய் விட்டார். மாமனார் ஒண்ணுமே பேசவில்லை. நல்லவேளையா எங்க நாத்தனார் ராஜியும் அத்திம்பேரும் தில்லியில் இருந்து வந்ததால் கொஞ்சம் சமாளிக்க முடிந்தது. இன்னமும் மாமனார் மாமியார் அழுது கொண்டேதான் இருக்கா” என்று சொல்ல, மறுமுனையில் அவள் தந்தை.

“எங்களால் புரிந்துகொள்ள முடிகிறது, பானு ! என்ன பண்ண முடியும் ? சொல்லு - சரி நல்ல டாக்டர் செலக்ட் பண்ணியாச்சா? எப்ப போய் பார்க்க போறேள்? என்று கேட்டதற்கு கேட்டதற்கு, பானு,

“அப்பா ! அத்திம்பேருக்கு நிறைய டாக்டர் தெரியும். அவர் சொன்னபடி இங்கே ரொம்ப பிரசித்தமான எஸ்ஸெம் ஹாஸ்பிடல் லங்க் கன்சர் ஸ்பெஷலிஸ்ட் டாக்டர் அபர்ணா கரன்திடம் அப்பாயின்மென்ட் வாங்கியாச்சு. இன்னைக்கு பத்து மணி போல ஆஸ்பத்திரி போகப்போறோம். போயிட்டு வந்த பிறகு உங்களுக்கு ஃபோன் பண்ணி விவரம் சொல்லறேன். நீங்க கவலைப்படாதீங்க”

இதைக் கேட்ட பானுவின் அப்பா, “சரி ! பானு ! ஆஸ்பத்திரி போயிட்டு வந்த பிறகு எனக்கு ஃபோன் பண்ணு. ஆல் த பெஸ்ட். இப்ப நான் கால் கட் பண்றேன்” என்று சொல்லவும் பானு வாசுவை பார்த்து “அப்பாதான் ஆஸ்பத்திரி டாக்டர் பற்றி விவரம் கேட்டார்” என்று சொல்ல, வாசு தலையாட்டிவிட்டு எழுந்து பல் தேய்க்க சென்றான். பானுவும் பல் தேய்த்து முகம் கழுவிக் கொண்டு சமையலறைக்குச் சென்றாள்.

பானு சமையல் அறையில் நுழையும் போது, அங்கே ஜானகி காஃபி போட்டுக் கொண்டிருந்தாள். ஜானகி முகத்தை பார்த்தாலே, அவள் இரவு முழுவதும் தூங்கவில்லை என்பது நன்றாகத் தெரிந்தது. கண்ணெல்லாம் இடுங்கி, ஏதோ ஒரே நாளில் பத்து வயது அதிகமாகி விட்டது போன்ற தோற்றத்தில் இருந்தாள்.

பார்க்கவே மனசு ரொம்ப கஷ்டமாக இருந்தது பானுவுக்கு. “பாவம் ! இந்த வயதில் இந்த மாதிரி ஒரு நிலைமை வந்திருக்க வேண்டாம்” என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள் பானு. ஆனால் அவளுக்குத் தெரியும் - தன் மாமியார் ஜானகி எதுவாக இருந்தாலும் சமாளித்து விடுவாள் என்று,

“எந்த கஷ்டம் வந்தாலும் அதை சமாளிக்க எங்கம்மா ஏதாவது ஒரு வழி கண்டுபிடித்து விடுவாள். அம்மா மட்டும் இல்லை என்றால் எங்க அப்பா ரொம்ப திண்டாடிப் போயிடுவார்” என்று அடிக்கடி வாசு ஜானகி பற்றி புகழ்ந்து பேசுவது அவள் ஞாபகத்திற்கு வந்தது.

ஜானகி பானுவை பார்த்தவுடன் சிரிக்க முயற்சி செய்து தோற்றுப் போனாள். பிறகு பானுவை பார்த்து “எழுந்தாச்சா ரெண்டு பேரும்? காபி குடிக்கிறேளா?” என்று கேட்க, பானு சரி என்று தலையாட்டினாள். இரண்டு பேருக்கும் காப்பி கலந்து அதை பானு கையில் கொடுத்துவிட்டு, ஜானகி தனக்கும் ஒரு டம்ளரில் காபி கலந்து எடுத்துக்கொண்டாள்.

பானு ஜானகியைப் பார்த்து “அம்மா! நீங்க காபி குடிங்க. நான் இந்தக் காபியை வாசுவுக்கு கொடுத்துவிட்டு வந்து பிரேக்ஃபாஸ்ட் டிபன் செய்கிறேன். நீங்க கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கோங்கோ. ராத்திரி தூங்கவே இல்லையா? முகமே சரியா இல்லையே” என்று கேட்க, ஜானகி ஒன்றும் பேசாமல் காபி குடிக்க ஆரம்பித்தாள்.

பானு காபி டம்ளரை எடுத்துக் கொண்டு தங்கள் ரூமிற்கு. சென்றாள். அங்கு சேகரும் ராஜியும் கூட வாசு கூட பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து, கையில் இருந்த 2 டம்ப்ளர் காபியை சேகருக்கும் வாசுவிற்கும் கொடுத்தாள். ராஜியைப் பார்த்து

“நன்னா தூங்கினேளா? இதோ போய் நம்ம ரெண்டு பேருக்கும் காஃபி கொண்டு வரேன். நீங்க எல்லோரும் இங்கே இருக்கேள்ன்னு தெரிஞ்சிருந்தா ஒரேயடியாக கொண்டு வந்திருப்பேன்” என்று பானு சொல்லிக் கொண்டே இருக்கும் பொழுதே ராகவனும் ஜானகியும் இன்னும் காஃபி டம்ப்ளர்களுடன் நுழைந்தார்கள்.

பானுவிற்கும் ராஜிக்கும் காஃபி கொடுத்த ஜானகி ராகவனிடமும் ஒரு டம்ப்ளரைக் கொடுத்து விட்டு கட்டிலில் வாசு பக்கத்தில் அமர்ந்துக் கொண்டாள். அவள் கை அவள் அறியாமலே வாசுவின் முதுகைத் தடவிக் கொடுக்க ஆரம்பித்தது. வாசு அப்படியே அவள் தோள் மேல் கையைப் போட்டுக் கொண்டான். இருவரும் ஒன்றுமே பேசவில்லை என்றாலும்கூட அந்த நேரம் அப்படி இருப்பது அவர்களுக்கு கொஞ்சம் ஆறுதலைத் தந்தது என்பது இருவருக்குமே புரிந்தது.

ராகவன் முந்தைய நாள் இரவு கொஞ்சம் கூட தூங்கவில்லை என்பது அவர் முகத்தைப் பார்த்தாலே தெரிந்தது. ராகவன் சேகரை பார்த்து,

“இன்னிக்கு டாக்டர் அப்பாயிண்ட்மெண்ட் இருக்கே - எத்தனை மணிக்கு கிளம்பணும்? என்று கேட்க, சேகர்,

“ஒரு ஒன்பது - ஒன்பதரை மணி வாக்கில் கிளம்பினால் போதும். பத்து மணிக்குள் ஆஸ்பத்திரி போய்விடலாம்” என்று சொன்னார். வாசு, ராகவனை பார்த்து,

“அப்பா! ஆஸ்பத்திரியில் எவ்வளவு நேரம் ஆகுமோ தெரியாது. அதனால் நீங்கள் வீட்டிலேயே இருங்கள். நான், பானு சேகர் மூன்று பேரும் இன்னைக்கு போய்ட்டு வந்துடறோம். அங்கே உட்கார வசதி எல்லாம் எப்படி இருக்குமோ தெரியாது. நாங்க ஆஸ்பத்திரியிலிருந்து அப்பப்ப போன் பண்ணி விவரம் சொல்லறோம்” என்று சொல்ல, ஜானகியும் ராஜியும்

“வாசு சொல்வதுதான் சரி, நீங்க ராத்திரி கூட சரியா தூங்கலை. அதனால ஆஸ்பத்திரி அலைச்சல் இன்னிக்கி வேண்டாம்” என்று சொல்ல ராகவனும் அரைமனதாக ஒத்துக்கொண்டார். காஃபி குடித்தபிறகு அவரவர் ஆஸ்பத்திரி கிளம்பத் தயாராக, பானுவும் ராஜியும் சமையலறைக்கு வந்து ப்ரேக்பாஸ்ட்க்கு இட்லியும் சட்னியும் தயார் செய்தார்கள்.

பிறகு பானுவும் குளித்து தயாராக, பானு, வாசு சேகர் மூன்று பேரும் பிரேக்ஃபாஸ்ட்க்கு உட்கார, ராஜியும் ஜானகியும் பரிமாறினார்கள். பிரேக்ஃபாஸ்ட் முடிந்தபிறகு, ஜானகி, அவர்கள் வீட்டு வழக்கப்படி, பூஜை அறையில் எல்லோரையும் நிற்கவைத்து கடவுளை கும்பிட்டு சுவாமி படத்தின் முன் ஒரு அஞ்சு ரூபாய் வைத்து,

“பகவானே எல்லாம் நல்லபடியா நடக்கணும். நீ தான் வாசுவிற்கு பெரிசா ஒண்ணுமில்லாமல் காப்பாத்தணும்” என்று வேண்டிக் கொண்டே கற்பூரம் காட்டினாள். அதன்பிறகு ராகவனும் ஜானகியும் வாசுவிற்கும் பானுவிற்கும் விபூதி இட்டு விட்டார்கள். சேகரும் ராஜியும் கூட தங்கள் முகத்தைக் காட்ட, அவர்களுக்கும் விபூதி இட்டு விட்டார்கள்.

அதன்பின், வாசு, பானு , சேகர் மூன்றுபேரும் வாசுவின் மருத்துவ ரிப்போர்ட் எல்லாம் எடுத்துக்கொண்டு ஹாஸ்பிடல் கிள்ம்பினார்கள். காரில் சேகர் டிரைவர் பக்கத்தில் உட்கார்ந்து கொள்ள, பானுவும் வாசுவும் பின் சீட்டில் உட்கார்ந்து கொண்டார்கள் மூன்று பேரும் ஒன்றும் பேசிக் கொள்ளாவிட்டாலும், அவர்கள் மனம் பூரா

“நல்லது நடக்க வேண்டும். டாக்டர் நல்ல வார்த்தை சொல்ல வேண்டும்”

என்பது ஒன்றே சிந்தனையாக இருந்தது. பானு வாசுவின் கையை பிடித்துக்கொண்டு, மனதிற்குள் கந்த சஷ்டி கவசம் விடாமல் சொல்லிக்கொண்டே வந்தாள்.

கார் ஆஸ்பத்திரி முன் வாயிலில் போய் நின்றது. எஸ்ஸெம் ஆஸ்பிட்டல் பார்க்கும்போது ஒரு பிரம்மாண்டமான பைவ் ஸ்டார் ஹோட்டல் போல் தெரிந்தது. முன் வாயிலில் ஸ்கேனிங் முடிந்தவுடன் அவர்கள் அங்கே இருந்த ரிசப்ஷனுக்கு சென்றார்கள்.

ரிஸப்ஷனில் இருந்த பெண்மணி நல்ல விலை உயர்ந்த யூனிஃபார்ம் புடவையுடன் அவர்களை நோக்கிப் புன்னகைத்து குட்மார்னிங் என்றாள். Dr. அபர்ணா கரந்த் பெயரைச் சொல்லி, அவருடன் தங்களுக்கு அப்பாயின்ட்மென்ட் இருப்பதாகச் சொல்ல, ரிசப்ஷனிஸ்ட் கொஞ்சம் கூட புன்னகை மாறாமல், அவர்களை முதல் மாடிக்கு செல்லுமாறும், அங்கு சென்றவுடன் முதலில் அங்கிருந்த கவுண்டரில் ரெஜிஸ்ட்ரேஷன் பண்ணிக் கொள்ளும்படியும் சொன்னாள்.

அது முடிந்தபின் Dr. அபர்ணா கரந்த் கன்சல்டிங் கேபினுக்கு செல்லலாம் என்றும் கூறினாள். அவர்களுடன் பேசிய முழு நேரமும், கொஞ்சம் கூட புன்னகை மாறாமல் இருக்கும் அந்தப் பெண்மணியை பார்க்கும் பொழுது, சேகருக்கு அந்தப் பெண்மணி புன்னகையை தன்னுடைய உதட்டில் அப்படியே தைத்துப் போட்டுக் கொண்டு வந்து இருப்பாளோ என்று கூட தோன்றியது.

அவர்கள் மூவரும் படியேறி முதல் மாடிக்கு சென்றார்கள். முதல் மாடி நெருங்கிய உடனேயே கண்ணெதிரே பெரிதாக ரெஜிஸ்ட்ரேஷன் என்ற போர்டுடன் கவுன்டர் தெரிந்தது. அங்கு கிட்டத்தட்ட இருபது பேர் போல் லைனில் நின்றுக் கொண்டிருந்தார்கள்.

சேகர் வாசுவையும் பானுவையும் அங்கிருந்த இருக்கையில் அமருமாறு கூறி, தான் போய் ரெஜிஸ்ட்ரேஷன் வேலைகளை முடித்துக் கொண்டு வருவதாகவும் சொன்னபோது, வாசு அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை.

தானும் சேகர் கூட வருவதாக கூற, பானு மட்டும் போய் ஒரு இருக்கையில் அமர்ந்து கொண்டாள். தன் மாமனார் ராகவனை ஆஸ்பத்திரிக்கு வரவேண்டாம் என்று சொன்னது எவ்வளவு நல்ல விஷயம் என்று அங்கு இருந்த கூட்டத்தைப் பார்த்ததும் தோன்றியது பானுவிற்கு.

ஏனென்றால், அந்த பெரிய ஹாலில் எங்கு பார்த்தாலும் மனித தலைகள் தான் தெரிந்தன. சில நர்சுகள் யூனிபார்மில் அங்குமிங்குமாக வேகமாக ஓடிக்கொண்டிருக்க, நிறைய நோயாளிகள் மற்றும் அவர்கள் கூட வந்திருக்கும் குடும்ப நபர்கள் என பாதி பேருக்கு உட்காரக் கூட இடம் இல்லாமல் ஒரே கூட்டம்.

பானு, அங்கு இருந்தவர்களைப் பார்த்ததில் அவளை ஆச்சரியப்பட் வைத்த ஒரு விஷயம் என்னவென்றால், மாஸ்க்குடன் இருந்த நோயாளிகள் ஆகட்டும் இல்லை அவர்களுடன் வந்த குடும்பத்தினர் ஆகட்டும், எல்லோருமே நன்றாக உடை அணிந்து ஏதோ காரியாலயத்தில் வேலை செய்பவர் தோற்றத்தில் தெரிந்தார்கள். இந்த ஆஸ்பத்திரிக்கு வருவதற்கு முன், பானு,

“இந்த மாதிரி கேன்சர் சிகிச்சைக்கு வருபவர்கள் முகத்தில் ஒரு சோகம் தெரியும் - ஆடை அணிகளில் அவ்வளவாக ஆர்வம் காட்ட மாட்டார்கள்”

என்ற நினைப்பில் தான் இருந்தாள். ஆனால் இங்கோ எல்லோரும் ஏதோ டீ பார்ட்டிக்கு வந்தவர்கள் போல் நன்றாக உடை அணிந்தும் சிரித்துப் பேசிக் கொண்டும் இருப்பதைப் பார்த்து பானுவின் ஆச்சரியம் மேலும் மேலும் அதிகரித்தது.

அந்த ஹாலில் இருந்தவர்களில் சிலர் தலையில் முடி இல்லாமல் இருந்தார்கள். அவர்களுக்கு ரேடியேஷனோ இல்லை கீமோதெரபியோ நடந்திருக்க வேண்டும் என்று ஊகித்துக் கொண்டாள் பானு. ஆனால் அவர்களும் ரொம்ப இயல்பாக எல்லோரிடமும் பேசிக் கொண்டும் சிரித்துக் கொண்டும் இருந்தது தான் பானுவிற்கு இன்னும் ஆச்சரியத்தைக் கொடுத்தது.

அதுவும் தவிர நிறைய நோயாளிகளுக்கு ஒருவரை ஒருவர் பழக்கம் போலும். அவர்கள் ஒருவரை ஒருவர் விஜாரித்துக் கொள்வதும், கேலி செய்து கொள்வதும் பானுவிற்கு ஒரு பக்கம் ஆச்சரியமாக இருந்தாலும், மற்றொரு பக்கம் மனதிற்கு சமாதானமாகவும் கொஞ்சம் மகிழ்ச்சியாகவும் கூட இருந்தது.

“நாம் நினைத்த அளவு அவ்வளவு பயப்பட வேண்டிய நோய் இல்லை போல” என்று கூட அந்த நிமிடம் பானுவிற்குத் தோன்றியது. கிட்டத்தட்ட அரைமணி நேரம் போல் நின்று, பின் ரெஜிஸ்ட்ரேஷன் முடித்துக்கொண்டு வாசுவும் சேகரும் வந்தார்கள்.

பானு தனியாக இவ்வளவு நேரம் என்ன பண்ணிக் கொண்டு இருப்பாளோ என்ற கவலையில் அவர்கள் இருக்க, பானுவோ நேரம் போனதே தெரியாமல் அந்த அரை மணி நேரத்தை மிக சுவாரசியமாக ஓட்டியிருந்தாள் என்பது அவர்களுக்கு தெரியவில்லை.

பிறகு மூவருமாக Dr.அபர்ணா கரந்த் கன்சல்டிங் அறைக்குச் சென்றார்கள். அங்கும் யூனிஃபார்மும் புன்னகையும் அணிந்த ரிஸப்ஷன் பெண்மணி இருக்க, அவளிடம் தங்கள் பெயரை சொல்லி, தாங்கள் அப்பாயின்மென்ட் வாங்கி இருப்பதையும் சொல்ல அந்தப் ரிஸப்ஷனிஸ்ட்,

“உங்களுக்கு முன் நான்கு பேர் இருக்கிறார்கள். உங்கள் நம்பர் 5. டாக்டர் இப்பொழுது வந்துவிடுவார். அவர் வந்தபின் உங்கள் நம்பர் பிரகாரம் நீங்கள் உள்ளே செல்லலாம்” என்று விவரமாக சொல்லி, டோக்கனும் கொடுத்தாள். எப்படியும் கட்டாயம் இரண்டு மணி நேரமாவது ஆகும் என்று அவர்களுக்குத் தோன்றியது.

அதனால், அவர்கள் முதலில் டீ குடித்து வரலாம் என்று கேண்டீனுக்கு சென்றார்கள். அங்கும் ஒரே கூட்டம். எப்படியோ அடித்து பிடித்து சேகர், அவர்களுக்கு ஒரு டேபிளை பிடித்து விட்டான். வாசு போய் மூன்று ‘டீ’ க்கான கூப்பன் வாங்க, பணம் கட்ட, கவுண்டருக்கு சென்றான். சேகர், பானுவைப் பார்த்து,

“ரொம்ப நேரம் ஆகிவிட்டதே ! நல்ல வேளையாக அப்பாவைக் கூட்டி வரவில்லை” என்று சொல்ல, பானு,

“ஆமாம் ! நேரம் ரொம்ப ஆகிவிட்டதுதான். ஆனாலும் ஆஸ்பத்திரியில் கூட்டம் குறைந்ததாகத் தெரியவில்லை. ஆனால் ஒன்று பார்த்தீர்களா? நோயாளிகள் கூட இங்கே ஓரளவு மகிழ்ச்சியாக எல்லோருடனும் பேசிக் கொண்டு இருக்கிறார்கள். இதையெல்லாம் பார்க்கும்போது, மனசுக்கு கொஞ்சம் இதமாக இருக்கிறது. பயம் கொஞ்சம் குறைந்து நம்பிக்கை வருகிறது போல் இருக்கிறது” என்று சொன்னாள்.

அதைக் கேட்டு சிரித்த சேகர், “ஆமாம் ! நானும் பார்த்தேன். இந்த எஸ்ஸெம் ஹாஸ்பிட்டல் கேன்ஸர் சிகிச்சைக்கு ரொம்ப பேர் பெற்ற ஹாஸ்பிட்டல். அதனால் தான் இவ்வளவு கூட்டம். இந்த நோயாளிகள் ஒருவருடன் ஒருவர், தெரிந்தவர்கள் போல் பேசிக் கொள்வதைப் பார்த்தால், அவர்கள் எல்லாம் அடிக்கடி வரும் நோயாளிகள் போல தோன்றுகிறது.

எனக்கு ஒன்று ரொம்பப் பிடித்தது. அதுதான் எந்த நோயாளி முகத்திலும் கொஞ்சம் கூட பயமோ சோகமோ இல்லை என்பதுதான். நம்ம வாசுவிற்கும் நல்ல மருந்து கிடைத்து சீக்கிரமே இந்த நோய் கட்டுக்குள் வந்து விடும் என்ற நம்பிக்கை எனக்கு வந்து விட்டது” என்று சேகர் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே, வாசு கூப்பன் வாங்கிக் கொண்டு வந்து விட்டான்.

வாசுவின் முகத்தைப் பார்த்தாலே ரொம்ப சோர்ந்து போய் விட்டான் போல் தோன்றியது. அவன் உட்கார்ந்தவுடன், ஒரு சர்வர் வந்து அவர்களிடமிருந்து கூப்பனை வாங்கிக் கொண்டு, டீ கோப்பைகளை அவர்கள் டேபிளின் மேல் வைத்தான். வாசு டீ கூப்பன் வாங்க பட்ட கஷ்டத்தை பார்த்த அவர்களுக்கு அந்த டீ ரொம்பவே ருசியாக இருந்தது என்பதைச் சொல்ல தேவையே இல்லை.

அதன்பிறகு திரும்பவும் டாக்டர் கன்சல்டிங் ரூமுக்கே வந்து கிடைத்த இடத்தில் அமர்ந்து கொண்டார்கள். டாக்டரும் அதற்குள் வந்துவிட்டதாக செய்தி தெரிய, மனதில் கொஞ்சம் நிம்மதி வந்தது அவர்களுக்கு.

முதல் நோயாளி உள்ளே சென்று, வெளியே வர கிட்டத்தட்ட 25 நிமிடங்கள் ஆகிவிட்டது. அடுத்து இரண்டு நோயாளிகளும் 15 – 20 நிமிடங்களில் கன்ஸல்டேஷன் முடிந்து வெளியே வந்தார்கள். நான்காவது நோயாளி ஒரு நடுத்தர வயது பெண்மணி. அவர் கணவர் போல் ஒருவர் கூட இருந்தார்.

இருவரும் உள்ளே சென்று, கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் ஆன பிறகு வெளியே வந்தார்கள். தங்கள் முறை வந்து விட்டது என்ற நிம்மதியில், இவர்கள் எழுந்திருக்க, ரிசப்ஷன் பெண்மணி இவர்களை உள்ளே செல்லுமாறு கூறினாள்.

அவர்கள் மூவரும் உள்ளே நுழைந்ததும், Dr. அபர்ணா கரந்த் அவர்களை உட்காரும்படி சொல்லி விட்டு, அவர்கள் கொடுத்த வாசுவின் மெடிகல் ரெக்கார்டுகளைப் படிக்க ஆரம்பித்தாள்.

பானுவின் நினைப்பெல்லாம், “டாக்டர் நல்ல வார்த்தை சொல்ல வேண்டும். வாசுவின் வியாதி கட்டுக்குள் அடங்க வேண்டும்” என்பது மட்டுமாகத் தான் இருந்தது. இருந்தாலும் இந்த நினைப்பையும் மீறி, அவள் கண்கள் டாக்டரின் உருவத்தை ஆராய ஆரம்பித்தன.

பானுவிற்கு Dr. அபர்ணா கரந்தை பார்த்ததும் ஒரே ஆச்சரியம். ஏனென்றால் அவள் Dr, அபர்ணா கரந்த் பெயரை கேட்டதும், சினிமாவில் வரும் டாக்டரைப் போல், கொஞ்சம் உயரமான, தாட்டியான, தலையில் கொண்டை, மொறு மொறுவென காட்டன் சாரி, அதைவிட மொறுமொறுப்பான முகம் என்று உருவகப்படுத்தி இருந்தாள்.

ஆனால் நேரில் பார்க்கும் Dr. அபர்ணா கரந்தோ, முப்பது வயது கூட மதிக்க முடியாத, கன்னடத்து சிகப்பு அழகியாகத் தெரிந்தாள். அழகான மேக்கப் இல்லாத முகத்தோடு, எளிமையான பிளெயின் சில்க் புடவையில் மிகவும் அழகாக காட்சி அளித்தாள்.

வெளியில் அவளை பார்ப்பவர்கள் யாரும், சத்தியம் செய்தால் கூட அவளை டாக்டர் என்று நம்ப மாட்டார்கள் போல் தெரிந்தாள். அவள் சிரித்த முகமும், அவள் சிரிக்கும் பொழுது கன்னத்தில் விழும் குழியும், கண்களில் தெரியும் பாசமும் தான் நோயாளிகளுக்கு அவள் மேல் இவ்வளவு நம்பிக்கை கொடுக்கிறது என்று நினைத்துக் கொண்டாள் பானு.

டாகடர் மாத்திரம் அழகு இல்லை - அவர் வேலை செய்யும் அறையும் அழகுதான் என்பது போல் இருந்தது டாக்டரின் கன்ஸல்டிங்க் அறை. அந்த அறை ஒரு பெரிய கார்ப்பரேட் எக்ஸிக்யூட்டிவ் வேலை செய்யும் அறை போல் மிகவும் வசதியாகவும், மிகவும் கலைநயத்துடனும் அலங்கரிக்கப் பட்டு இருந்தது.

டாக்டர் உட்கார ஒரு பெரிய எக்ஸிக்யூடிவ் சேர். அதன் எதிரே கிளாஸ் டாப் போடப்பட்ட டேபிள். நோயாளியை டாக்டர் முதல் பரிசோதனை செய்ய வசதியாக டாக்டரின் வலது பக்கத்தில் ஒரு ஸ்டூல். அது தவிர நான்கைந்து கனமான சேர்கள். ஒரு ஓரத்தில் நோயாளியை முழு பரிசோதனை செய்ய நீளமான ஒரு பரிசோதனை டேபிள். அதன் கீழே நோயாளிகள் கால் வைத்து ஏற ஒரு சின்ன ஸ்டூல்.

பக்கத்திலேயே ஒரு வாஷ் பேசின் மற்றும் தேவைப்படும் சில மருத்துவ உபகரணங்கள் என்று அழகாக இருந்தது. அது மட்டும் இல்லை - அங்கு டாக்டர் தலைக்குப் பின்னால் ஒரு 3D புத்தர் சிலை பதிக்கப்பட்டிருந்தது. அந்த புத்தர் சிலை ரொம்ப வித்தியாசமான சிலையாகவும் கண்ணைக் கவரும் கலை நுணுக்கம் நிறைந்ததாகவும் இருந்தது.

அந்த புத்தர் சிலையின் சிறப்பு என்னவென்றால் நாம் எங்கு திரும்பினாலும் அந்தப் பக்கம் புத்தரின் கண்கள் திரும்பி, நம்மை பார்ப்பது போல் அமைந்திருந்தது. அதுவும் புத்தரின் அந்த கண்களில் இருந்த கருணை பார்ப்பவர்களுக்கு மிகவும் அமைதியை கொடுப்பது போல் அமைக்கப் பட்டிருந்தது.

“எவ்வளவு அழகாக இந்த அறையை நோயாளிக்கு அமைதி கொடுக்கும்படி அமைத்திருக்கிறார்கள்?” என்று பானு வியந்து கொண்டிருக்கும் பொழுது டாக்டரின்,

“எஸ் ! எஸ் ! டெல் மீ” என்ற குரல் அவளை இந்த உலகிற்கு கொண்டு வந்தது. சேகர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட உடன் டாக்டர்,

“ஓ! நீங்க தானா? டாக்டர் தாமஸ் உங்களை பற்றி ரொம்ப சொன்னார்” என்று கூறிவிட்டு வாசுவை பார்த்து,

“ஹலோ ! வாசு எப்படி இருக்கீங்க? என்று கேட்க, வாசு, “ “டாக்டர் ! அதை நீங்கதான் சொல்லணும்” என்று சொல்லி சிரித்தான். டாக்டரும் சிரித்துவிட்டு,

“சரி ! ரிப்போர்ட் எல்லாம் பார்த்தேன். இன்னும் ஒரு ரிப்போர்ட் வரவேண்டியிருக்கே – அது வந்தால்தான் நாம் சரியான ட்ரீட்மென்ட் ஆரம்பிக்க முடியும்” என்று சொல்ல, பானு டாக்டரை பார்த்து,

“அந்த ரிப்போர்ட் எதைப்பற்றி டாக்டர்? ஏன் அது வந்த பிறகு தான் ட்ரீட்மென்ட் ஆரம்பிக்க முடியும் என்று சொல்றீங்க?” என்று கேட்க, டாக்டர்,

“நான் சொல்லுவது கொஞ்சம் டெக்னிக்கலாக இருந்தாலும், நீங்க கட்டாயம் மரபணு மாற்றம் பற்றிக் கொஞ்சம் தெரிந்துக் கொள்ள வேண்டியது மிக அவசியம். மரபணு மாற்றம் என்று ஒரே வார்த்தையில் கூறினாலும், அதிலும் பல வகைகளைக் கண்டு பிடித்திருக்கிறார்கள். ஒவ்வொரு வகைக்கும் கொடுக்க வேண்டிய மருந்து மாத்திரைகளும் வித்தியாசப் படும்.

இப்போ வரவேண்டிய டெஸ்ட் ரிபோர்ட் வந்தவுடன் எந்த வகை மரபணு மாற்றம் என்று தெரிய வரும். அப்பொழுது அதற்கு தகுந்தாற்போல் மருந்து தேர்ந்தெடுக்க ஏதுவாக இருக்கும் என்பதால் தான் அந்த ரிபோர்ட் வரும்வரை காத்திருப்போம் என்று சொன்னேன்.” என்று சொல்லி விட்டு, பானுவைப் பார்த்து ,

“மேடம் ! நீங்க உங்க கடவுள் கிட்டே டெஸ்ட் ரிஸல்ட் ‘ALK+ve’ ஆக வரணும் என்று வேண்டிக் கொள்ளுங்க” என்று சொல்ல, வாசு,

“டாக்டர் ! அது என்ன ‘ALK+ve?” என்று ஆர்வமாகக் கேட்டான்.

(நாமும் தானே ‘ALK+ve?” பற்றி அறிய ஆவலாக இருக்கிறோம். அடுத்த அத்தியாயத்தில் அறிந்து கொள்ளலாமா?)

(ஐந்தாம் அத்தியாயத்தில் தொடரும்)

**********
Friends ! will you post your likes here and comments in the comments window?
 

sushi55

New member
Vannangal Writer
Messages
11
Reaction score
23
Points
3
மரபணு மாற்றம் ALK+ve
அத்தியாயம் ஐந்து
***********


2

மரபணு மாற்றம் ALK+ve​

அத்தியாயம் ஐந்து​

**********

அடுத்து ஒரு நல்ல செய்தி

“டாக்டர் ! அது என்ன ‘ALK+ve?” என்று ஆர்வமாகக் கேட்ட வாசுவை கொஞ்ச நேரம் மௌனமாகப் பார்த்த டாக்டர் அபர்ணா கரந்த், பிறகு அவர்களை நோக்கி,

“மரபணு மாற்றம் பற்றி மும்பை Dr. மராதே நிறைய கூறியிருப்பார். ஆனால் அதில் உள்ள வகைகள் பற்றி அவர் உங்களிடம் சொன்னாரா என்று தெரியவில்லை. நாம் இப்போது பேசப்போவது மரபணு மாற்றத்தால் வரும் லங்க் கேன்சர் அதாவது நுரையீரல் புற்றுநோய் பற்றி மட்டும்தான்.

மரபணு மாற்றத்தில் பல வகைகளை விஞ்ஞானிகள் கண்டு பிடித்திருக்கிறார்கள். அதற்கு வித விதமான மருந்துகளும் கண்டு பிடித்திருக்கிறார்கள். இன்னும் கண்டு பிடித்துக்கொண்டும் இருக்கிறார்கள். அதில் ஒரு வகைதான் ALK+ve.

வாசுவிற்கு மரபணு மாற்றத்தால் உண்டானது தான் இந்த லங்க் கேன்சர் என்று தெரிந்து விட்டது. ஆனால் அந்த மரபணு மாற்றம் எந்த வகை என்று தெரிந்துக் கொள்ளத்தான் தில்லி அனுப்பியிருக்கிறார்கள். முன்பெல்லாம் இந்த மாதிரி பரிசோதனை வெளிநாட்டில் மட்டுமே செய்ய முடிந்தது. நல்ல வேளையாக இப்பொழுது இந்த டெஸ்ட் இந்தியாவில் தில்லியிலும் செய்கிறார்கள்.

ஏன் நான் ALK+ve வகைக்கு உங்களை வேண்டிக் கொள்ளச் சொன்னேன் என்றால், ALK+ve வகைக்கு , முதலாவது கிட்டத்தட்ட 6 மருந்துகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இரண்டாவது, இந்த வகை கேன்ஸருக்கு மருந்து வேலை செய்யும் வெற்றி விகிதம் கொஞ்சம் அதிகம் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.

அதற்காக இந்த ALK+ve வகை கேன்ஸரினால் பாதிப்பு இருக்காது என்றோ முழுவதும் குணமாக்கக் கூடியது என்றோ சொல்ல முடியாது. இப்பொழுது இருக்கும் மரபணு மாற்றக் கேன்ஸரில், ALK+ve கொஞ்சம் பரவாயில்லையான கேன்ஸர் என்று சொல்லலாம். அதாவது நாம் சினிமாவில் சொல்லுவோமே ‘உத்தம வில்லன்’ என்று. அது மாதிரி தான் இந்த ALK+ve.

சரி ! நானும் தில்லி லேப்க்கு பேசி டெஸ்ட் ரிபோர்ட் ஒரு காப்பி எனக்கும் மெயில் பண்ணச் சொல்கிறேன். லேப்பில் எப்பொழுதுமே ரிஸல்ட் வரும் நாளை கொஞ்சம் கூட்டித்தான் சொல்லுவார்கள். ஏனென்றால் சில நேரங்களில் டெஸ்ட் ரிஸல்ட் கொஞ்சம் சந்தேகமாக இருக்கும் நிலையில் திரும்ப பண்ண வேண்டி வரும்.

அதனால் இன்னும் இரண்டு மூன்று நாளில் டெஸ்ட் ரிஸல்ட் வந்து விடும் என்று நினைக்கிறேன். ரிஸல்ட் வந்தவுடன் உடனே நாம் ட்ரீட்மென்ட் முடிவு செய்யலாம். எல்லாம் சரி செய்து விடலாம். அதனால் நீங்க கொஞ்சம் ரிலாக்ஸ்டாக இருக்கணும். எல்லாம் நல்லபடியாக முடியும். இப்ப நீங்க கிளம்பலாம். நாம் ரெண்டு மூணு நாள்ளே சந்திப்போம் என்று நினைக்கிறேன்” என்று விவரமாக சொல்லி முடித்தாள்.

பானு மனதில் நினைத்துக் கொண்டாள் . “இந்த டாக்டருக்குத்தான் எவ்வளவு பொறுமை? ஒவ்வொரு விஷயத்தையும் என்ன அழகாக புரியும்படி சொல்லுகிறாள்?” என்று. அதன் பிறகு அவர்கள் நன்றி சொல்லி விட்டு வீடு வந்து சேர்ந்தார்கள்.

வீடு வந்து சேர்ந்தவுடன் அங்கு ஆவலுடன் காத்திருந்த ஜானகி, ராஜி மற்றும் ராகவனுக்கு ஆஸ்பத்திரியில் டாக்டர் சொன்ன எல்லா விவரங்களும் சொன்னார்கள. அதைக் கேட்ட ஜானகி உடனே “பகவானே ! நீதான் காப்பாத்தணும். நல்ல ரிசல்ட் வரணும். அந்த ஏஎல்கே வோ என்னவோ, அந்த ரிஸ்ல்ட் வரணும். அதுக்கு நீதான் அருள் புரிய வேண்டும்” என்று உரக்க வேண்டிக் கொண்டாள். எல்லோர் மனதிலும் அதே எண்ணம்தான்,

பிறகு எல்லோரும் சாப்பிட்டுவிட்டு, அவரவர் அறைக்குச் சென்று, கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொண்டார்கள். தங்கள் அறையை அடைந்தவுடன் வாசு பானுவிடம் ,

“பானு ! என்னோட விஷயம் அம்மா அப்பா கிட்ட சொல்லியாச்சு. இப்ப இந்த டாக்டர் கிட்டே போய்விட்டு வந்த பிறகு, மனசு கொஞ்சம் நிம்மதியாக இருக்கு. அதனாலே நம்ம நல்ல விஷயமும் அம்மா அப்பா கிட்டே சொல்லிடலாமா? ரொம்ப நாள் பொறுத்து சொன்னா ஏன் முன்னாடியே சொல்லலைன்னு வருத்தப் படுவா? இன்னிக்கு சொல்லிடுவோமா?” என்று கேட்க, பானு

“ஆமாம் வாசு ! கட்டாயம் சொல்லிடணும். இல்லாட்டா வருத்தப் படுவா. இன்னிக்கி ராத்திரி நாம எல்லோரிடமும் சொல்லி விடுவோம். ராஜி அக்காவும் அத்திம்பேரும் இருக்கும்போதே சொல்வதுதான் நல்லது” என்றாள்.

அதன் பிறகு இருவருமே கொஞ்ச நேரம் தூங்கினார்கள். டாக்டர் அபர்ணா கரந்திடம் பேசிய பிறகு வாசு பானு இருவருக்குமே மனதில் கொஞ்சம் நிம்மதி வந்தது போலிருந்தது. எதையும் எதிர்கொள்ள முடியும் அதுவும் தவிர மருந்து சாப்பிட்டு நோயை கட்டுக்குள் கொண்டுவந்து விடலாம் என்ற நம்பிக்கை மனதில் தோன்ற, “எல்லாவற்றையும் ஒரு கை பார்ப்போம்” என்ற தைரியமும் தோன்றியது அவர்களுக்கு.

அன்று இரவு அனைவரும் சாப்பிட்ட பிறகு. டிராயிங் ரூமில் வந்து அமர்ந்தார்கள். அப்பொழுது வாசு கையில் ஒரு ஸ்வீட் டப்பாவுடன் வந்து ஜானகி கையில் கொடுத்தான், ஜானகி ஒன்றும் புரியாமல் அவன் முகத்தைப் பார்க்க, வாசு, பானுவை பார்த்து சிரித்துவிட்டு,

“அம்மா! அப்பா ! காலம்பர உங்களுக்கு ஒரு கலவர செய்தி கொடுத்தோம். இப்போ ஒரு குட் நியூஸ் உங்களுக்கு சொல்லப் போறோம். அம்மா ! அப்பா ! நீங்க ரெண்டு பேரும் தாத்தா-பாட்டி ஆகப்போறேள். ராஜி - சேகர் அத்தை அத்திம்பேர் ஆகப் போறேள்” என்று சொல்லி நிறுத்த, ஜானகிக்கு முதலில் ஒன்றுமே புரியவில்லை. . பிறகு புரிந்தவுடன், வாயெல்லாம் பல்லாக பானுவைக் கட்டிப் பிடித்து பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டாள்.

ஆனால், அந்த நேரம் ஜானகிக்கும், ராகவனுக்கும் , பேரக்குழந்தை வரவு கேட்டு சந்தோசப் படுவதா இல்லை வாசுவின் நோயை நினைத்து கவலைப்படுவதா என்று ஒரு நிமிஷம் குழப்பமாகக் கூட இருந்தது. பிறகு சமாளித்துக் கொண்டார்கள். ராஜியும் வந்து பானுவின் கைகளை பற்றிக்கொண்டு “ காங்கிராட்ஸ் ! பானு ! என்று வாழ்த்து சொன்னாள். சேகரும் ராகவனும் தங்கள் பங்கிற்கு, வாசுவின் கைகளை பிடித்து குலுக்கி வாழ்த்து சொன்னார்கள். அந்தநேரம் அவர்கள் எல்லோருமே வாசுவின் நோயைப் பற்றிக் கூட மறந்து விட்டு, வீட்டுக்கு புது வரவு வரும் மகிழ்ச்சியை அனுபவித்தார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

ஜானகி பானுவிடம் “எத்தனை மாசம் ஆச்சு, பானு?” என்று கேட்க, பானு, “அம்மா ! ரெண்டு மாசம் முடிந்தது. ஒரு வாரம் முன்பு தான் டாக்டர் கன்ஃபார்ம் செய்தார். உடனே உங்களுக்கு சொல்ல வேண்டுமென்று நினைக்கையில், உங்க பிள்ளைக்கு உடம்பு சரியில்லாமல் போக, ஆஸ்பத்திரியில் டெஸ்ட் எல்லாம் பண்ண வேண்டி வந்து விட்டது.

இன்னிக்கு காலம்பற எல்லோருமே கொஞ்சம் கவலையில் இருந்ததால் சொல்லவில்லை. இப்போ இந்த டாக்டரிடம் பேசிய பிறகு, மனசு கொஞ்சம் நிம்மதியாக இருக்கு. அதனால் இப்போ சொல்லிடுவோம்னு நினைச்சு சொல்லிட்டோம். ராஜி அக்காவும் அத்திம்பேரும் இருப்பது இன்னும் சந்தோஷமாக இருக்கு. ஆனால் வாசு எங்கிருந்து ஸ்வீட கொண்டு வந்தார் என்று தான் எனக்கு புரியவில்லை” என்று சொன்னாள். வாசு,

“நீங்க எல்லோரும் சாயங்காலம் கிச்சனில் இருக்கும் போது, அப்பாவிடம் “ஒரு வாக் போயிட்டு வரேன்”ன்னு சொல்லிட்டு போய் வாங்கி வந்தேன். ஸ்வீட் ந்யூஸ் கொடுக்கும் போது “ஸ்வீட் எடு – கொண்டாடு” பண்ண வேண்டாமா?” என்று சொல்லி விட்டு சிரித்தான்.

அதன் பிறகு பானுவும் வாசுவும், ஜானகி ராகவனை நிற்க வைத்து நமஸ்காரம் செய்தார்கள். ஜானகியே, பானுவின் அம்மாவை மொபைலில் கூப்பிட்டு, அவர்கள் தாத்தா பாட்டி ஆகப் போகும் சந்தோஷ செய்தியை, சொல்ல, அங்கேயும் மகிழ்ச்சிதான். ஏற்கெனவே, பானு Dr. அபர்ணா கரந்த் தங்களுக்கு சொன்ன விவரங்களை, தந்தைக்கு ஃபோன் பண்ணி சொல்லி விட்டதால், அவர்களும் கொஞ்சம் நிம்மதியாக இருந்தார்கள்.

குழந்தையை தனியாக விட்டு விட்டு வந்ததாலும், இனிமேல் தில்லியிலிருந்து ரிஸல்ட் வரும்வரை வேறு ஒன்றும் வேலை இல்லை என்பதாலும், ராஜியும் சேகரும் மறுநாள் தங்கள் வீட்டிற்கு திரும்பிச் சென்று விட்டார்கள். எப்பொழுது அவசியமானாலும் தாங்கள் திரும்ப வருவதாக சொன்னதால், ஜானகியாலும் ராகவனாலும் மறுப்பு சொல்ல முடியவில்லை.

அடுத்து வந்த இரண்டு மூன்று நாட்களில் ஜானகி பானுவிற்கு பிடித்தது என்ன என்றுக் கேட்டு, அதை பண்ணிக் கொடுப்பதில் செலவிட்டாள். யாரும் வாய் விட்டு வெளியில் சொல்ல வில்லை என்றாலும், எல்லோர் மனதிலும் ஒரே ஒரு எண்ணம் தான். டெஸ்ட் ரிஸல்ட் ALK+ve ஆக வர வேண்டுமே என்பது தான்.

ஜானகி பார்த்து பார்த்து பானுவிற்கு வேண்டியதை செய்தாலும், மனதிற்குள் பானகத்துரும்பு போல் வாசுவிற்கு இந்த நோய் வராமல் இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்குமே என்ற நினைப்பு அப்பப்ப வந்து வாட்டியது என்னவோ உண்மைதான்.

Dr. அபர்ணா கரந்தை பார்த்து விட்டு வந்தவுடனேயே, வாசு மும்பை டாக்டர் Dr. மராதே க்கு ஃபோன் பண்ணி, Dr. அபர்ணா கரந்தை கன்ஸல்ட் பண்ணினது பற்றி விவரம் சொல்லி விட்டான். Dr. மராதே, Dr. அபர்ணா கரந்திடம் அப்பாயின்ட்மென்ட் கிடைத்தது, வாசுவின் நல்ல நேரம் என்று சொல்லி, டெஸ்ட் ரிஸல்ட் காப்பி, Dr. அபர்ணா கரந்துக்கும் மெயிலில் வந்து விடும் என்றும் சொல்லி, எல்லாம் நல்ல படியாக முடியும் என்றும் வாழ்த்தியது வாசுவிற்கு கொஞ்சம் பாஸிடிவ் எனர்ஜி கொடுத்தது என்பதை மறுக்க முடியாது.

மூன்று நாட்கள் ஆகிவிட்டது. இன்று கட்டாயம் ரிசல்ட் வந்து விடும் என்ற நினைப்போடேயே காலையில் எழுந்தான் வாசு. அவன் எண்ணப்படியே காலை 10.00 மணி வாக்கில் Dr. அபர்ணா கரந்த் ரிஸப்ஷனிஸ்ட் மொபைலில் கூப்பிட்டு, ரிஸல்ட் வந்து விட்டது என்றும், Dr. அபர்ணா கரந்தை 1.00 மணிக்கு வந்து பார்க்கும்படியும் சொன்னாள்.

வாசு, ரிஸப்ஷனிஸ்டிடம், ரிஸல்ட் என்ன வந்திருக்கு என்று கேட்டதற்கு, அவள் தனக்கு தெரியாதென்றும், டாக்டர் அதை பற்றி விவரம் சொல்லுவார் என்றும் சொல்லி விட, வாசுவை விட ஜானகிக்கு படபடப்பு அதிகமாகி விட்டது.

“பகவானே ! நல்ல ரிசல்ட் வர வச்சுடு. என் குழந்தையைக் காப்பாத்து” என்று விடாமல் பிரார்த்தனை செய்ய ஆரம்பித்து விட்டாள். அதுவும் தவிர நோட்டில் ராமஜெயம் வர எழுத ஆரம்பித்து விட்டாள், எப்பொழுது மனதில் கவலை வந்தாலும் ராமஜெயம் எழுதுவது அவள் வழக்கம் என்பது வீட்டில் எல்லோருக்குமே தெரியும்.

வாசுவெளியில் காட்டிக் கொள்ளாவிட்டாலும், அவனுக்கும் உள்ளூர டென்ஷன் தான். அந்த நேரம், கடிகாரத்தின் முட்கள் ஆமை போல் செல்வது போல் தோன்றியது அவனுக்கு. பானு மட்டுமே எப்பொழுதும் போல் தன் வேலையை செய்து கொண்டு இருந்தாள்.

12.00 மணி அடித்ததும், ஜானகி எப்பொழுதும் போல் ஸ்வாமி படத்தின் அடியில் ₹.5/- வைத்து “எல்லாம் நல்லபடியாக நடக்கணும், பகவானே !” என்று வேண்டிக் கொண்டு விபூதி இட்டு வாசுவையும் பானுவையும் அனுப்பி வைத்தாள், இந்த முறையும் ராகவன் அவர்கள் கூட வருவேன் என்று கிளம்பியபோது, அடுத்த முறை வரலாம் என்று சொல்லி நிறுத்தி விட்டார்கள்.

காரில் வாசுவும் பானுவும் பின் சீட்டில் அமர்ந்து கொண்டார்கள். இன்று டென்ஷன் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது போல் தோன்ற, உடனே பானு இன்னும் மும்மரமாக கந்தசஷ்டிகவசம் மனதில் சொல்லிக்கொண்டே வந்தாள். வாசுவிற்கும் படபடப்பு அதிகமாக இருக்கிறது என்பது அவன் கையைப் பிடித்த போது பானுவிற்கு நன்றாக தெரிந்தது. டாக்டரை பார்க்கும் வரை, இந்த படபடப்பு நிச்சயமாக இருக்கும் என்பது இருவருக்கும் புரிந்து தான் இருந்தது, அன்று என்னமோ கார் மிகவும் மெதுவாக ஊர்வது போல் அவர்களுக்குத் தோன்றியது.

அவர்கள் பொறுமையை முழுவதுமாக சோதித்து விட்டு, கடைசியாக கார் ஆஸ்பத்திரி முன் வாயிலில் போய் நின்றது. டிரைவரை பார்க் பண்ணும்படி சொல்லிவிட்டு பானுவும் வாசுவும் இறங்கி உள்ளே சென்றார்கள். ஸ்கேனிங் எல்லாம் முடிந்து. அவசர அவசரமாக Dr. அபர்ணா கரந்த் கன்சல்டிங் ரூமுக்கு சென்றார்கள். அவர்கள் எண்ணம், அவர்களைப் பார்த்தவுடன் ரிஸப்ஷனிஸ்ட் அவர்களை உள்ளே அனுப்பி விடுவாள் என்று.

ஆனால், அங்கு முன்பு பார்த்த அதே ரிசப்ஷனிஸ்ட் அதே புன்னகையுடன் அவர்களை வரவேற்றாள். அவர்களுக்கு முன் 2 பேஷண்ட்கள் காத்திருப்பதாகக் கூறி, அவர்களுக்கு மூன்றாம் நம்பர் டோக்கன் கொடுத்தாள். டாக்டரை உடனே பார்த்துவிடலாம் என்ற நம்பிக்கையுடன் வந்த வாசுவிற்கும பானுவிற்கும் ஏமாற்றமாகிவிட்டது. சரி என்று ஒரு இருக்கையில் போய் அமர்ந்து கொண்டார்கள்.

டாக்டர் ரவுண்ட்ஸ் போயிருப்பதாகவும் அவர் வந்தபின் பேஷண்ட் களைப் பார்ப்பார் என்றும் ரிசப்ஷனிஸ்ட் கூறினார். வாசுவிற்கு பொறுமை போய் விட்டது. ஒரு மணிக்கு அப்பாயின்ட்மென்ட் கொடுத்து விட்டு, ஒரு மணியை தாண்டியும் ரவுண்ட்ஸில் இருக்கும் டாக்டர் அபர்ணா கரந்த் பற்றி நினைக்க நினைக்க, ரொம்ப கோபமாக வந்தது வாசுவுக்கு. ஆனால் அந்த நேரம் ஒன்றும் பண்ண முடியாது என்பதால் வாயைப் பொத்திக்கொண்டு பொறுமையாக காத்திருந்தான்.

15 நிமிடம் போல் பொறுமையாக உட்கார்ந்திருந்த வாசு, பொறுமை இழந்து. திரும்பவும் ரிசப்ஷனிஸ்டிடம் தன்னுடைய டெஸ்ட் ரிசல்ட் பற்றி அவளுக்கு ஏதாவது தெரியுமா என்று கேட்டான். புன்னகை கொஞ்சம் கூட மாறாமல் அந்த ரிசப்ஷனிஸ்ட் எல்லாமே டாக்டருக்கு தான் தெரியும், தனக்கு ஒன்றும் தெரியாது என்று கைவிரித்து விட்டாள்.

அதற்குள் டாக்டர் ரவுண்ட்ஸ் முடித்துவிட்டு மறு வாயில் வழியாக ரூமுக்கு போய்விட்டாள் என்று ரிசப்ஷனிஸ்ட் சொல்லி முதல் ஃபேஷன் டை உள்ளே அனுப்பி வைத்தார். கிட்டத்தட்ட அரை மணி நேரம் உள்ளே இருந்த அந்த பேஷன்ட் வெளியே வந்ததும் இரண்டாவது பேஷன்ட் உள்ளே நுழைந்தார் கணவனும் மனைவியுமான அவர்களில் யார் பேஷன்ட் என்று தெரியவில்லை வாசுவிற்கு. அவர்கள் உள்ளே சென்று கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் வாசுவின் பொறுமையை சோதித்து விட்டு வெளியே வந்தார்கள்.

சரி ! தங்கள் முறை வந்தாகிவிட்டது என்று வாசுவும் பானுவும் தங்கள் இருக்கையிலிருந்து எழுந்தார்கள். அந்த நேரம் பார்த்து டாக்டர் தன் அறையை விட்டு, அவசரமாக வெளியே வந்தாள். எழுந்து நின்ற வாசு பானுவைப் பார்த்து கையை அசைத்துவிட்டு, தன் ரிஸப்ஷனிஸ்டிடம் ஏதோ சொல்லி விட்டு அவசரமாக வெளியே சென்றாள். ரிசப்ஷனிஸ்ட், கொஞ்சம் சங்கடமான முகத்துடன் அவர்களைப் பார்த்து,

“டாக்டர், ஒரு எமர்ஜென்சி கேஸ் பார்க்க செல்ல வேண்டி இருக்கிறது. அவர் வர கொஞ்சம் நேரம் ஆகும். அதனால் நீங்க வேணா போய் ஏதாவது சாப்பிட்டு விட்டு வாருங்கள்” என்று சொல்ல, பானு வாசுவின் முகத்தைப் பார்த்தாள்.

வாசு முகத்தில் ஆத்திரம் கொப்பளித்ததைப் பார்த்து, இன்னும் கொஞ்சம் நேரம் அங்கே இருந்தால், அவன் கோபத்தில் ஏதாவது சொல்லி விடக்கூடும் என்று நினைத்து, அவனிடம், “வாங்க ! இங்கே உட்கார்ந்திருப்பதற்கு கேன்டின் போய் விட்டு வரலாம்” என்று சொல்ல, வாசுவும் “சரி ! போகலாம்” என்று தலை ஆட்ட, இருவரும் ஆஸ்பத்திரி கேண்டீனுக்கு வந்தார்கள்.

அவர்கள் இருவருக்குமே பெரிதாக பசி என்று ஒன்றும் இல்லாவிட்டாலும். காத்திருந்து காத்திருந்து, அலுத்துப் போய்விட்டதால்தான் கேண்டீனுக்கு வந்தார்கள். நல்ல வேளையாக இவர்களுக்கு ஒரு காலி டேபிள் கிடைத்தது.

அங்கு இருந்த மெனு கார்டை பார்த்து இருவரும் வடை, காஃபி சாப்பிடலாம் என்று முடிவு செய்தார்கள். வாசு, தான் போய் பணம் கட்டி கூப்பன் வாங்கி வருவதாக சொல்லி கேஷ் கவுன்டருக்கு சென்று விட்டான். கூப்பன் எடுத்தப் பிறகு, வாசு அதைக் காட்டி டிஃபன் கவுண்டரிலிருந்து இருவருக்குமான வடை வாங்கிண்டு வந்தான்.

காபி அவர்கள் டேபிளுக்கே வந்துவிடும் என்று கவுண்டரில் சொன்னார்கள் என்று வாசு பானுவிடம் சொன்னான். அதன் பிறகு இருவரும் வடை சுமாராக இருந்தாலும் கூட, அதை சாப்பிட்டுவிட்டு காபி குடித்தார்கள். விலை அதிகம், சுவை குறைவு என்பது எல்லா ஆஸ்பத்திரி கேண்டீனுக்கும் உள்ளதுதான் என்பது அவர்கள் இருவருக்குமே தெரிந்ததுதான் என்பதால் வாய் பேசாமல் சாப்பிட்டு விட்டு, திரும்பவும் மேலே கன்சல்டிங் ரூமுக்கு வந்தார்கள்.

அவர்கள் வரவும் டாக்டர் வரவும் சரியாக இருந்தது. டாக்டர் உள்ளே போய் அமர்ந்து கொண்டதும், ரிஸப்ஷனிஸ்ட் கை காட்ட, அவர்கள் உள்ளே நுழைந்தார்கள். அவர்களைப் பார்த்ததும் டாக்டர் அபர்ணா கரந்த் உட்காரும்படி சைகையில் சீட்டைக் காட்டினாள். அவர்கள் உட்கார்ந்ததும், டாக்டர்,

“ரொம்ப சாரி ! இன்னிக்கு ரவுண்ட்ஸ் ரொம்ப லேட் ஆகிவிட்டது. அதன்பிறகு ஒரு எமர்ஜென்சி கேஸ் வந்துவிட்டது. என்னுடைய பேஷன்ட் ஒருவருக்கு வலிப்பு வந்து நிலைமை மிகவும் மோசமாகி விட்டது. இப்பொழுது தான் இன்ஜெக்க்ஷன் கொடுத்து சரி செய்துவிட்டு வருகிறேன்” என்று சொன்னாள். வாசு, வாய் வார்த்தையாக,

“அதனால் என்ன? பரவாயில்லை டாக்டர் ! எமர்ஜென்சி என்றால் நீங்கள் போகத்தானே வேண்டும்? “ என்று சொல்லும் பொழுதே, மனதிற்குள்,

“நாங்க பட்ட கஷ்டம் உங்களுக்கு எப்படி தெரியும், டாக்டர்? காத்திருப்பது எவ்வளவு கஷ்டம் என்பது இன்று எனக்கு நன்றாகப் புரிந்தது” என்று சொல்லிக் கொண்டான். Dr. அபர்ணா அங்கே மேஜைமேல் இருந்த ஃபைல்களில் இருந்து வாசுவின் ஃபைலை எடுத்துப் படித்தாள். பிறகு அவர்களைப் பார்த்து சிரித்துக்கொண்டே,

“கங்கிராட்ஸ் ! உங்களுடைய ரிசல்ட் வந்திருக்கிறது. நம்ம எல்லோர் விருப்பப்படி ALK+ve என்றுதான் வந்திருக்கிறது. இனி நாம் ட்ரீட்மென்ட் ஆரம்பிக்கலாம் ” என்று சொல்ல, வாசுவிற்கும் பானுவிற்கும். அந்த நேரம் இருந்த பயத்தில் Dr. அபர்ணா என்ன சொல்கிறாள் என்று கூட புரியவில்லை.

டாக்டர் இரண்டாவது முறை “என்ன நீங்கள் வேண்டிக்கொண்ட ALK+ve ரிசல்ட் வந்திருக்கிறது. இப்போ சந்தோஷம் தானே? “ என்று கேட்டார். வாசுவிற்கு பானுவிற்கும் சந்தோஷத்தில் என்ன பேசுவது என்று கூட தெரியவில்லை.

டாக்டரிடம் திரும்ப திரும்ப “தேங்க்ஸ் டாக்டர் ! தேங்க்ஸ் டாக்டர் !” என்று இரண்டு மூன்று முறை கூறி விட்டார்கள். அவர்கள் கொஞ்சம் தன் நிலைக்கு வரும் வரை காத்திருந்த டாக்டர் பிறகு அவர்களிடம் டிரீட்மென்ட் பற்றி பேச ஆரம்பித்தாள். டாக்டர் அவர்களிடம்,

“ வாசு ! பானு ! நான் அன்றும் சொன்னேன் – இன்றும் சொல்லுகிறேன். மரபணு மாற்ற கேன்சரில் ALK+ve வகை ஒரு உத்தம வில்லன் போல. அதனால் நாம் ஜாக்கிரதையாக இருக்க வே’ண்டியது மிக அவசியம்.

லங்க் கேன்சருக்கும் மற்ற வகை கேன்சருக்கும் என்ன வித்தியாசம் என்றால், மற்ற வகை கேன்சர்கள் ஆரம்பிக்கும் பொழுதே அறிகுறிகள் தெரிய ஆரம்பித்து விடும். ஆனால் லங்க் கேன்சர் அறிகுறிகள் நிறைய நேரங்களில் மூன்றாவது அல்லது நான்காவது ஸ்டேஜிலே தான் வெளியே தெரியும்.

நம் உடலில் நுரையீரல் அதாவது லங்க்ஸ் ரத்தத்தை சுத்தம் செய்யும் வேலையை செய்கிறது. நம் உடலின் பல பகுதிகளுக்கு ரத்தம் பம்ப் செய்யப் படுவதால், நுரையீரலில் கேன்சர் வந்தால், ரத்தம் மூலம் அந்த கேன்சர் செல்கள் மற்ற உடல் பகுதிக்கு பரவும் வாய்ப்பு மிக அதிகம்.

அதனாலேயே லங்க் கேன்சருக்கு மருந்து கண்டுபிடித்த விஞ்ஞானிகள், இந்த கேன்சர் செல்கள் ரத்தம் மூலம் உடலின் மற்ற பாகங்களுக்கு பரவுவதை தடுப்பதற்கு ஏற்ப மருந்துகள் தயாரிக்க முயற்சி செய்கிறார்கள். ஆனால் எல்லா நேரமும் முயற்சி பலிப்பதில்லை.

மருந்து நன்றாக வேலை செய்வது போல் இருக்கும். திடுமென்று CT ஸ்கேன் எடுத்துப் பார்த்தால் கேன்ஸர் பரவியிருப்பது தெரிய வரும். அதனாலேயே நாங்கள் மூன்று மாதத்திற்கு ஒரு முறை ஸ்கேனும் , MRI டெஸ்டும் பண்ண சொல்கிறோம்.

முதலில் வாசுவிற்கு Crizotinib (க்ரைஸொடினிப்) என்ற மாத்திரை எழுதிக் கொடுக்கிறேன். இந்த மாத்திரை நிறைய ALK+ve நோயாளிகளுக்கு வெற்றிகரமாக செயல் படுகிறது. இந்த மாத்திரை மருத்துக் கடைகளில் கிடைக்காது. மருந்து உற்பத்தி செய்யும் கம்பெனிகள் சில ஏஜென்ட்களை நியமித்து உள்ளார்கள். பெங்களூர் ஏஜென்ட் விவரம் எல்லாம் என் ரிஸப்ஷனிஸ்ட் உங்களுக்கு தருவாள். எல்லாம் நல்லபடியாக நடக்கும்” என்று தன் பெரிய லெக்சரை முடித்தாள். பானு டாக்டரைப் பார்த்து,

“மருந்து மற்ற செலவுகள் எல்லாம் எவ்வளவு ஆகும்? ஒரு தோராயமாக தெரிந்துகொண்டால் அதற்கு வேண்டிய ஏற்பாடுகள் பண்ண உதவியாக இருக்கும்” என்று கேட்க டாக்டர் அவர்கள் இருவரையும் கொஞ்சம் தயக்கத்துடன் பார்த்து, சொன்ன விவரங்கள் வாசுவையையும் பானுவையையும் மிகவும் பயப்பட வைத்து விட்டது என்பது உண்மை. அவர்களை ஒரு நிமிடம். “இவ்வளவு செலவை எப்படி சமாளிக்கப் போகிறோம்?” என்று கவலைப் பட வைத்ததும் உண்மைதான்.

அப்படி அவர்களை கவலைப்பட வைத்த விவரங்கள் என்ன என்பதை டாக்டர் அபர்ணா மூலமே அத்தியாயம் 6 இல் தெரிந்துக் கொள்ளலாமே!)


*************
 
Last edited:

sushi55

New member
Vannangal Writer
Messages
11
Reaction score
23
Points
3
2​

மரபணு மாற்றம் ALK+ve

அத்தியாயம் ஆறு​


மரபணு மாற்றம் ALK+ve​

அத்தியாயம் ஆறு​

************​

பணப்பிரச்சினைக்கு வழி


பானு, டாக்டர் அபர்ணாவைப் பார்த்து “மருந்து மற்ற செலவுகள் எல்லாம் எவ்வளவு ஆகும்?” என்று கேட்டவுடன், டாக்டர் அபர்ணா, அவர்களை கொஞ்சம் தயக்கத்துடன் பார்த்து,

“நான் உங்களை பயமுறுத்துவதற்காக இதைச் சொல்லவில்லை. ஆனால் இந்த வகை மரபணு மாற்றத்தினால் உண்டாகும் கேன்ஸருக்கான மருந்துகள் எல்லாமே விலை உயர்ந்தவை. அப்படியும் விஷயம் தெரிந்தவர்கள் இந்த வகை மருந்துகளையே எடுத்துக் கொள்ள விரும்புகிறார்கள். ஏனென்றால் இந்த மருந்து எடுத்துக் கொள்ளும் பொழுது கீமோ தெரபி பண்ண வேண்டிய அவசியம் மிகவும் குறைவு.

அதனால் உடலுக்கு பாதிப்பும் மிக குறைவு. இந்த மாத்திரை எடுத்துக் கொண்ட பலரால் வாழக்கையை ஓரளவு இயல்பாக வாழ முடிகிறது. நிறைய பேரால் வேலைக்கும் செல்ல முடிகிறது. இல்லை வீட்டிலிருந்தே வேலை செய்ய முடிகிறது.

இப்பொழுது நான் எழுதிக் கொடுத்துள்ள crizotinib மருந்து ஒரு மாதத்திற்கு வேண்டிய மாத்திரைகள் கிட்டத்தட்ட 60 ஆயிரத்திலிருந்து 70 ஆயிரம் வரை விலையில் கிடைக்கும். மற்ற மாத்திரைகளும் இதைவிட விலை உயர்ந்தவை தான். அதுவும் தவிர இந்த மாத்திரைகளுக்கு இன்சூயரன்ஸ் காப்பீடும் கிடைப்பதில்லை. அதனால் வசதி இல்லாத நோயாளிகள் கீமோதெரப்பியையே நாடுகிறார்கள்.

ஆனால் இப்பொழுது இந்த நிலைமை கொஞ்சம் . கொஞ்சமாக மாறி வருகிறது. . நிறைய நோயாளிகளும் சேவை நிருவனங்களும் எடுத்த கடும் முயற்சிகளின் பலனாக, பல மருந்துக் கம்பெனிகள் இப்பொழுது வித விதமான் “நோயாளிகள் உதவி திட்டங்களை” அறிவித்திருக்கிறார்கள்.

உதாரணத்திற்கு,. உங்களுக்கு நான் எழுதிக் கொடுத்திருக்கும் crizotinib மாத்திரைக்கு கூட ஒரு நலத் திட்டம் இருக்கிறது, அது என்னவென்றால் , இந்த மருந்து முதல் 6 மாதம் பணம் கொடுத்து வாங்கிய பிறகு, வாங்கியதற்கான, ஆதாரம் காண்பித்தால், அதற்கப்புறம் வாங்கும் crizotinib மாத்திரைகள் எல்லாமே இலவசம் என்று ஒரு நலத் திட்டம் இருக்கிறது.

இது பல நோயாளிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கிறது. ஆனால் எல்லோருக்கும் இந்த திட்டம் உதவிகரமாக இருக்கிறது எப்படி என்றால் crizotinib மாத்திரை சிலருக்கு பல மாதங்களுக்கு நோயைக் கட்டுப் படுத்துகிறது. அப்படி பட்டவர்களுக்கு இந்த நலத் திட்டம் உபயோகமாக இருக்கும். ஆனால் சிலருக்கு இந்த மாத்திரை இரண்டு மூன்று மாதங்களுக்கு மேல் வேலை செய்வதில்லை. அப்படிப் பட்டவர்களுக்கு இந்தத் திட்டத்தால் ஒரு பயனும் இல்லை.

பார்ப்போம் ! வாசுவிற்கு crizotinib மாத்திரை எப்படி வேலை செய்கிறது என்று. கவலைப் படாமல் இருங்கள். Crizotinib மாத்திரை வேலை செய்யவில்லை என்றாலும், மேலும் 5 வகை மாத்திரைகள் ALK+ve வகை லங்க் கேன்சருக்கு கைவசம் இருக்கிறது. எல்லா மாத்திரைகளுக்கும் ஏதாவது ஒரு நலத் திட்டம் இருக்கிறது. அதனால் நிம்மதியாக இருங்க” என்று சொல்லி விட்டு மணியை அடித்து ரிஸப்ஷனிஸ்டை கூப்பிட்டு வாசுவின் ஃபைலையும், crizotinib மருந்து சீட்டையும் கொடுத்து, விவரம் சொல்லும்படி கூறினாள்.

வாசுவும், பானுவும் டாக்டருக்கு நன்றி சொல்லிவிட்டு வெளியே வந்தார்கள். ரிஸப்ஷனிஸ்ட், அவர்களிடம் ஒரு டைப் அடித்த பேப்பரைக் கொடுத்தாள். அதில் ஏஜென்ட் பெயர், விலாசம், மொபைல் நம்பர் எல்லாம் இருந்தது. ரிஸப்ஷனிஸ்ட் தன்னுடைய மொபைல் நம்பரையும் கொடுத்து, வேறு ஏதாவது விவரம் தேவை என்றால் தன்னை அழைக்கும்படியும் டிரேட்மார்க் புன்னகையுடன் கூறினாள்.

அவளுக்கு நன்றி சொல்லிவிட்டு வேளியே வந்த வாசுவிற்கும் பானுவிற்கும் மனதில் ஒரே நினைப்புதான். “எப்படி இவ்வளவு விலையுயர்ந்த மருந்துகளை வாங்கப் போகிறோம்? – அது தவிர அவ்வப்போது செய்யவேண்டிய டெஸ்ட் சிலவுகளை எப்படி சமாளிக்கப் போகிறோம்?” என்பதுதான்.

“சரி யோஜித்து ஏதாவது பண்ணலாம்” என்று முடிவு செய்துவிட்டு, முதலில் ஜானகியை மொபைலில் கூப்பிட்டு ALK+ve ரிஸல்ட் வந்துள்ள நல்ல செய்தியை சொன்னார்கள். ராகவனிடமும் பேசினார்கள். ராகவன் ஜானகி இருவருக்கும் ஒரே சந்தோஷம் தான். ஜானகி விடாமல் “பகவான் காப்பாத்திட்டார்” என்று சொல்லிக் கொண்டே இருக்க, வாசுவும் பானுவும் கொஞ்ச நேரத்தில் தாங்கள் வருவதாகக் கூறி மொபைலை கட் பண்ணினார்கள்.

பிறகு கார் டிரைவரைக் கூப்பிட்டு, காரை முன் வாயிலுக்கு கொண்டு வரச் சொன்னார்கள். டிரைவர் வருவதற்குள் பானு வாசுவிடம் “வாசு ! நாம் ஏதாவது ஹோட்டலுக்குப் போய் கொஞ்சம் பேசலாமா? நிறைய விஷயம் இன்னிக்கு நடந்திருக்கு. நாம் கொஞ்சம் அதைப் பத்தி பேசி ஒரு முடிவுக்கு வரணும். எல்லாவற்றையும் அம்மா அப்பா முன்னாடி பேசினா அவா அனாவசியமாக கவலைப் படுவா. ஆனால் அது எல்லாத்துக்கும்

முன்னாடி அத்திம்பேருக்கும் ராஜிக்கும் இந்த விஷயம் சொல்லணும்” என்று சொல்ல, வாசுவிற்கும் அது சரியாகப் பட்டது..

அதற்குள் காரை டிரைவர் கொண்டு வர, அதில் ஏறி, டிரைவரை ஒரு பெரிய ஹோட்டல் பெயரை சொல்லி, அங்கே கொண்டு விடச் சொன்னார்கள். ஹோட்டல் வந்தவுடன், டிரைவர் கையில் ஒரு ₹ 100/- கொடுத்து அவருக்கு வேணும் என்பதை சாப்பிட சொல்லிவிட்டு, அவர்கள் ஹோட்டலில் நுழைந்து காலியாக இருந்த ஒரு கார்னர் டேபிளில் போய் அமர்ந்துக் கொண்டார்கள்.

அந்த ஹோட்டலுக்கு பலமுறை அவர்கள் வந்ததுண்டு. உள்ளே நுழைந்ததும் மிதமான ஏசி மற்றும் மனதுக்கு இதம் தரும் நறுமணம் என்று அந்த ஹோட்டலில் அவர்களுக்குப் பிடித்த விஷயங்கள் நிறைய உண்டு. அதுவும் தவிர அங்கே கிடைக்கும் சுவையான சிற்றுண்டிகளும் வயிற்றிற்கு ஊறு விளைவிக்காது என்பதால் பெங்களூருக்கு வரும் போதெல்லாம் அவர்கள் இங்கே வருவதுண்டு.

அவர்கள் உட்கார்ந்தவுடன் ஒரு சர்வர் வந்து ஸ்டீல் டம்ப்ளர்களில் தண்ணீர் வைத்து விட்டு, “என்ன சாப்பிடுகிறீர்கள்” என்று கேட்க, அவர்கள் மெனு கார்டை பார்த்து இரண்டு பிளேட் மைசூர் போண்டா ஆர்டர் செய்தார்கள். அது வந்தவுடன் முதலில் சிறிது சாப்பிட்டு விட்டு பானு வாசுவை பார்த்து,

“நல்லவேளையாக ரிசல்ட் நல்லபடியாக வந்துவிட்டது. இனிமேல் என்ன செய்ய வேண்டும் என்பதை நாம் இருவரும் முதலில் முடிவு செய்து கொள்ள வேண்டும்” என்று சொல்ல வாசு சரி என்பது போல் தலையாட்டினான். பானு திரும்பவும் அவனைப் பார்த்து,

“மருந்து விலை அதிகம் என்றாலும் இந்த நலத்திட்டங்கள் நமக்கு உதவியாக இருக்கும் என்று தான் தோன்றுகிறது” என்று சொல்ல வாசு கொஞ்ச நேரம் மௌனமாக இருந்தான். பிறகு பானுவைப் பார்த்து

“இவ்வளவு செலவு செய்து மாத்திரை எடுத்துக்கொள்ள வேண்டுமா, பானு? பேசாமல் கீமோதெரபி பண்ணிக்கொண்டு விடலாமே - அதற்கு இன்ஷூரன்ஸ் காப்பீடு கூட கிடைக்கும் என்று டாக்டர் சொன்னாங்களே” என்று சொல்ல, பானு அவனை கோபமாக பார்த்தாள். அப்புறம் அவனைப் பார்த்து,

“வாசு! இப்போதைக்கு நம்மிடம் பணம் இருக்கிறது. நாம் இவ்வளவு நாள் வேலை செய்ததில் வங்கியில் சேமிப்பு இருக்கிறது. நாம் வீடு வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தோம். அதற்கு இன்னும் கொஞ்சநாள் காத்திருப்போம். அந்தப் பணத்தை மருந்து மற்றும் டெஸ்ட் இதற்கெல்லாம் எப்படி சரியாக செலவு செய்வது என்பதை யோஜிக்கணும். அம்மா அப்பா எதிரில் பண விஷயம் எல்லாம் பேசினால் அவங்க அனாவசியமாகக் கவலைப் படுவாங்க. அதனால் நாம ரெண்டு பேரும் தனியாகப் பேசி முடிவு எடுக்கலாம்னு தான் ஹோட்டலுக்கு போகலாம்னு சொன்னேன்” என்று சொல்ல, வாசு,

“எல்லா பணத்தையும் செலவு செய்துவிட்டால் அப்புறம் என்ன பண்ணுவது? என்னாலும் எவ்வளவு நாள் வேலை செய்ய முடியும் என்பது தெரியாது. நமக்கு குழந்தை பிறக்கப்போகிறது. அதன் பிறகு உன்னால் வேலை செய்ய முடியுமா என்பதையும் யோசிக்க வேண்டும்” என்று கூறினான்.

அதற்குள் சர்வர் காபி கோப்பையை கொண்டு வைக்க அவர்கள் மெதுவாக காபி குடித்தார்கள். இருவர் மனதிலும் என்ன பண்ணுவது என்று யோசனைதான். பில் கட்டி விட்டு, அவர்கள் இருவரும் வெளியே வந்து கார் நிறுத்தியிருக்கும் இடத்திற்குச் சென்றார்கள்.

டிரைவரும் அதற்குள் வந்துவிட, காரை நேரே லால் பாக் பார்க் பக்கம் போகக் சொன்னாள் பானு. லால்பாக் பார்க் வந்தவுடன், டிரைவரை எங்கேயாவது பார்க் செய்யும்படி சொல்லிவிட்டு, அவர்கள் இருவரும் உள்ளே சென்றார்கள். ஒரு ஓரமாக காற்று நன்றாக வரும் இடமாக பார்த்து, ஒரு பெஞ்சில் அமர்ந்து கொண்டார்கள். பானு வாசுவின் கையை பிடித்துக் கொண்டாள். இருவரும் கொஞ்ச நேரம் பேசிக் கொள்ளவில்லை. பிறகு பானு, வாசுவிடம்,

“குழந்தை பிறந்தால் நான் ஏன் வீட்டில் இருக்க வேண்டும். வாசு? குழந்தை பிறந்து ஆறு மாதங்களுக்கு சம்பளத்துடன் லீவ் உண்டு. அதன் பிறகு என் அம்மா இருக்கா. உங்கள் அம்மா இருக்கா. இருவரில் யாராவது குழந்தையைப் பார்த்துக் கொள்வார்கள். நான் என்னவானாலும் என் வேலையை விடுவதாக இல்லை,. பணம் நமக்கு ரொம்ப முக்கியம், அதனால் வேலைக்கு போய்க் கொண்டேதான் இருப்பேன்” என்று சொன்னாள்.

வாசு தன் சட்டை பாக்கெட்டிலிருந்து ஒரு சின்ன நோட் புக்கை எடுத்து. அதில் கொஞ்ச நேரம் ஏதோதோ அடித்து திருத்தி எழுதினான். அதன் பிறகு, பானுவிடம் அதை காண்பித்து,

“தற்போது நம்மிடம் இருக்கும் சேமிப்பு, முதலீடு எல்லாம் சேர்த்து கிட்டத்தட்ட 20 லட்சத்திற்கு வரும். நான் வேலைக்கு செல்ல முடியும் என்று வைத்துக் கொண்டால், நம்முடைய மாத சேமிப்பு என்று ஒருவர் சம்பளத்தை சேமிக்கலாம். ஒருவேளை முன்ன மாதிரி வேலை செய்ய முடியவில்லை என்றாலும் வீட்டிலிருந்தே ஏதாவது கன்ஸல்டன்ஸி வேலை பண்ண முடியும் என்று நினைக்கிறேன் “ என்று அவன் பேசும்பொழுது, பானு நடுவில் ஏதோ பேச முயல,

“இதோ பாரு ! பானு ! எல்லாத்தையும் நாம யோஜிக்கத்தான் வேண்டும். அதற்காக இப்பவே என்னாலே வேலை பண்ண முடியாமப் போயிடும்னு சொல்லலை. ஒருவேளை அப்படி ஆனா என்ன பண்ணறதுன்னு கூட நாம யோஜிச்சு வச்சுக்கணும்னு தான் நான் சொல்லறேன். ரெண்டு விதமான நிலைமைக்கும் நாம் தயாராக இருக்கணும் என்பதால் தான் நான் இவ்வளவு பேசறேன்.” என்று சொல்ல, பானு சிரித்துக் கொண்டே தலை ஆட்டினாள். வாசு,

“பானு ! நான் எவ்வளவு சீரியஸா பேசறேன். நீ சிரிக்கிறயே” என்று கோபமாக சொல்ல, பானு.

“ஐய்யோ! இல்லே - வாசு ! நீ பழைய மாதிரி எல்லா முடிவுகளையும் எடுப்பதைப் பார்த்து சந்தோஷத்தில் தான் சிரித்தேன். சரி ! நீ மேலே சொல்லு” என்று திரும்பவும் சிரித்துக் கொண்டே சொன்னாள். வாசு,

“பானு ! இந்த நோய் பற்றி நமக்கு அதிகம் தெரியாதென்றாலும் இது அவ்வளவு சிக்கிரம் குணமாகக் கூடிய நோய் இல்லை என்பது நம் இருவருக்குமே தெரியும். அதனால் ஒருவேளை என்னால் வேலைக்குப் போக முடியவில்லை என்றாலும் உன் சம்பளத்தில் ஒரு 20% சேமிக்க முடியும். இதை யெல்லாம் வைத்து பார்த்தால் நமக்கு இரண்டு வருடம் மருந்து வாங்க கையில் பணம் இருக்கும், அதன் பிறகு என்ன பண்ணுவது என்று அப்புறம் யோஜிப்போம்.,

இதில் நமக்கு சாதகமான விஷயம் என்ன வென்றால் , இந்த மருந்துகளுக்கு பல நலத் திட்டங்கள் இருப்பதுதான். டாக்டர் சொன்னது போல், இப்பொழுது எழுதிக் கொடுத்திருக்கும் மருந்துக்கு 6 மாதம் போல் பணம் கட்டினால் போதும். பிறகு இலவசம்தான். ஒருவேளை இந்த மருந்து சரியாக வேலை செய்யவில்லை என்றாலும் வேறு மருந்துக்கும் இது மாதிரி ஏதாவது நல்ல திட்டம் இருக்கும் என்று டாக்டர் சொல்லியிருக்காங்க. அதனால் இந்தப் பணம் வைத்து ரெண்டு வருடத்திற்கு மேலும் ஓட்ட முடியும் என்று நினைக்கிறேன். .

நாம் அம்மா அப்பாவிடம் என்ன சொல்வது என்பதைத்தான் யோசிக்க வேண்டும். ஆனால் சேகரிடம் எல்லா விஷயத்தையும் சொல்லி விடுவது நல்லது என்று நான் நினைக்கிறேன். ஏதாவது உதவி வேண்டுமென்றாலும் அவர் அரேஞ்ச் செய்து கொடுப்பார்” என்று சொல்லி அவள் முகத்தை பார்த்தான்.

பானுவிற்கு பழைய வாசு அதாவது எதையும் யோசித்துப் பார்த்து முடிவெடுக்கும் வாசு திரும்பி வந்து விட்டான் என்பது மனசுக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது, பிறகு அவர்கள் இருவரும் வாசுவின் அம்மா அப்பாவிடம் என்ன சொல்ல வேண்டும், எதை சொல்ல வேண்டாம் என்பதைப்பற்றி பேசி முடிவு செய்தார்கள்.

பண விஷயம் பற்றியோ இல்லை மருந்து விலை பற்றியோ அதிகம் பேச வேண்டாம் என்று முடிவு செய்தார்கள். பிறகு அங்கேயிருந்து தாங்கள் எப்போதும் செல்லும் அனுமார் கோவிலுக்கு போய்விட்டு, நேரே வீடு வந்தார்கள். வீட்டில் ஜானகி பண்ணியிருந்த கேசரியை, அவள் மனம் கோணக்கூடாதே என்று கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு, பிறகு இருவரும் உடை மாற்றிக் கொண்டு வந்தார்கள்.

அதற்குள் ஜானகி காஃபி தயார் செய்துவிட, நான்கு பேரும் சேர்ந்து காஃபி அருந்தினார்கள். ராகவன் வாசுவிடம், “டாக்டர் என்ன மருந்து எழுதிக் கொடுத்திருக்கிறார் எப்போது சாப்பிடவேண்டும்? என்ன சொல்லியிருக்கிறார்?” என்று கேட்க வாசு அவளிடம், டாக்டர் சொல்லிய விவரம் எல்லாம் கூறினான். மருந்து விலை பற்றி மட்டும் சொல்லவில்லை.

அதன் பிறகு வாசு அந்த மருந்து கம்பெனி ஏஜென்ட்க்கு போன் பண்ணி. Dr. அபர்ணா கரந்த் crizotinib மாத்திரை எழுதிக் கொடுத்திருப்பது பற்றிய விவரம் சொல்லி, அந்த மாத்திரை வேண்டும் என்று சொன்னான். அந்த ஏஜென்ட் வாசுவுடைய ஆதார் கார்ட், வீட்டு அட்ரஸ் மற்றும் டாக்டருடைய ப்ரிஸ்க்ரிப்ஷன் எல்லாவற்றையும் ஸ்கேன் செய்து தனக்கு அனுப்பும்படி கூறினார்.

அதை சரி பார்த்த பிறகு, எவ்வளவு பணம், மற்றும் பேங்க் அக்கௌன்ட் விவரங்கள் அனுப்புவதாகவும், அதன்பிறகு அவர்கள் பணம் ட்ரான்ஸ்பர் செய்யலாம் என்றும் கூறினான். பணம் கிடைத்தவுடன் மறுநாள் அவர்கள் வீட்டிற்கே மருந்து வந்து சேரும் என்றும் சொல்ல, வாசு உடனேயே. ஏஜென்ட் கேட்ட எல்லா டாக்குமென்ட்களையும் ஸ்கேன் செய்து அனுப்பினான்,

அரை மணி நேரத்தில், அந்த ஏஜென்ட் 61 ஆயிரம் ரூபா தன்னுடைய பேங்க் அக்கவுண்டுக்கு ட்ரான்ஸ்ஃபர் செய்யும்படி கூற. வாசு உடனே ₹.61000/- ட்ரான்ஸ்பர் செய்தான். மறுநாளே crizotinib மாத்திரை வீட்டிற்கு வந்து சேர்ந்து விட்டது. +

ஒரு சின்ன பாட்டில் மாத்திரைக்கு 61000/- ரூபாயா என்று மனதில் தோன்றினாலும், அந்த மாத்திரையால் தான் தன் நோயைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்பது வாசுவிற்கு தெரிந்து தான் இருந்தது. மாத்திரை வந்ததும் பாட்டிலை சுவாமி கிட்ட வைத்து ஜானகி ஒரு சின்ன பூஜை செய்து “இந்த மாத்திரை நல்லபடியா என்னுடைய குழந்தையை குணப் படுத்தணும்” என்று வேண்டிக் கொண்டு முதல் மாத்திரையை எடுத்து வாசு கையில் கொடுத்தாள்.

காலையில் ஒரு மாத்திரை ராத்திரி ஒரு மாத்திரை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று டாக்டர் சொல்லியிருந்தாள். அதுவும் எக்காரணம் கொண்டு மாத்திரை போடுவதை நிறுத்தக்கூடாது என்றும் சொல்லியிருந்தாள்.. மருந்துடன் கூட வந்த மருந்து பற்றிய விவரங்கள் அடங்கிய காகிதத்தில் அந்த மாத்திரையைப் போட்டுக் கொண்டால் வரும் பக்க விளைவுகளைப் பற்றி விவரமாக கூறப் பட்டிருந்தது,

அதன் பிரகாரம், அந்த மாத்திரை உட்கொண்டால் கடுமையான வயிற்றுவலி, கை கால் வலி, லூஸ்மோஷன், தலைவலி, கண்பார்வை குறைவு போன்ற பக்கவிளைவுகள் இருக்கலாம் என்று குறிப்பிடப் பட்டிருந்தது.

முதல் மாத்திரை போட்டுக் கொண்டு கொஞ்ச நேரம் தூங்கினான் வாசு. அதன் பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக வயிற்று வலி அதிகரித்தது, அவனால் தாங்க முடியாமல் போனதும், பானு உடனே Dr. அபர்ணா கரந்திற்கு போன் செய்தாள். டாக்டர், அதைப்பற்றி கவலைப்பட வேண்டாம் என்றும் கொஞ்சம் குளிர்ந்த பால் குடிக்கும் படியும் சொன்னாள். அதே மாதிரி குளிர்ந்த பால் குடித்தவுடன் கொஞ்சம் வயிற்று வலி குறைந்தது. ஆனால் வாசு மிகவும் களைப்படைந்து விட்டான்.

திரும்பவும் இரவு மாத்திரை சாப்பிட்டவுடன், கால் கை வலிக்க ஆரம்பித்தது. தாங்க முடியாமல் அம்மா அப்பா என்று வாசு கத்த ஆரம்பித்து விட, பானு கண்களில் நீர் வழிய, அவன் காலுக்கு தைலம் எல்லாம் தடவி விட்டாள். அதன் பிறகு கொஞ்சம் வலி குறைந்து தூங்கினான்.

இதையெல்லாம் பார்த்து ஜானகி நிலைகுலைந்து போய்விட்டாள். என் குழுந்தைக்கு ஏன் இந்தக் கஷ்டம் என்று அழத் தொடங்கி விட்டாள். பானு தான் அவளை சமாதானப் படுத்தினாள். முதல் கொஞ்ச நாட்களுக்கு இப்படித்தான் இருக்கும் என்றும் அதன் பிறகு மாத்திரை பழகி விட்டால், எல்லாம் சரியாகிவிடும் என்று டாக்டர் நிச்சயமாக சொல்லி யிருக்கிறாள் என்று சொன்னதும் தான், ஜானகி கொஞ்சம் சமாதானம் ஆனாள்.

அடுத்து வந்த இரண்டு மூன்று நாட்களும் இதே மாதிரி பக்க விளைவுகள் தொடர்ந்து, வாசு இந்த மருந்தே வேண்டாம் என்கிற நிலைக்கு வந்து விட்டான். பானுதான் அவனுக்கு ஆறுதல் சொல்லி அவனை தேற்றினாள். நல்ல வேளையாக நான்கைந்து நாட்களில் பக்க விளைவுகள் குறைந்தாலும், வாசுவிற்கு உடல் களைப்பு மட்டும் குறையவே இல்லை.

ஆனால் அதற்குள் அவர்கள் இருவரும் எடுத்திருந்த 10 நாள் விடுப்பு முடிந்து, இரண்டு ரெண்டு பேருக்கும் காரியாலயம் செல்ல வேண்டிய கட்டாயம். ஜானகி அவர்களை இன்னும் கொஞ்ச நாள் விடுப்பு எடுத்து தங்கும்படி கூறினாள் ஆனால் இப்போது உடம்பு முடியும்போது காரியாலயம் சென்று வேலை செய்து விட்டால், பிறகு வேண்டும்போது லீவு எடுக்க முடியும் என்று வாசு சொல்ல, அவர்கள் இருவரும் மும்பை புறப்பட்டு சென்றார்கள்.

விமானப் பயணதின் போது கூட வாசு மிகவும் களைப்பாக காணப்பட்டான். அவன் உணவு ரொம்பக் குறைந்துவிட்டது. மாத்திரை பழகி விட்டாலும் கூட, வாய்க்கு எதுவுமே பிடிக்கவில்லை வாசுவிற்கு. பானுவும் ஜானகியும் முடிந்தமட்டும் விதவிதமாக அவனுக்குப் பிடித்தது எல்லாம் பண்ணிக் கொடுத்தார்கள். இருந்தாலும் எதுவுமே வாசுவிற்கு பிடிக்கவில்லை.

இருவரும் மும்பை சென்றவுடன் வீட்டை சுத்தம் செய்து சமையல் பண்ணி சாப்பிட்டார்கள் மறுநாளிலிருந்து காரியாலயம் செல்ல வேண்டும். மருந்து காலையில் எடுத்துக் கொண்டால் ஒரு மணி நேரம் எந்த வேலையும் செய்ய முடியாமல் ஆகிவிடுவதால், மதியம் உணவுக்குப் பின் மாத்திரை எடுத்துக் கொள்வது என்று இருவரும் பேசி முடிவு செய்தார்கள்.

இருந்தாலும் காரியாலயத்தில் வேலை பண்ணுவது வாசுவிற்கு கொஞ்சம் கடினமாகவே இருந்தது. வாசுவிற்கு உடலளவில் நிறைய வேதனைகள் இருந்தாலும், அதை அவன் அதிகம் வெளியில் காட்டாமல் இயல்பாக இருப்பது போலவே இருந்தான். ஆனால் பானுவுக்கு மட்டும் அவனுடைய வலி நன்றாக புரிந்தது

இந்த நிலையில் பானுவிற்கும் மசக்கை ஆரம்பித்து வாந்தி அது இது என்று அவளாலும் அதிகம் வேலை பண்ண முடியவில்லை. தானே சமைத்து சாப்பிடுவது அவளுக்கு சாப்பிடப் பிடிக்காமல் போய், மிகவும் களைத்துப் போய் விட்டாள்.

அதனால், பானுவின் அம்மா அப்பா சொன்னதின் பேரில் இருவரும் பானுவின் அம்மா வீட்டிற்கு போய் கொஞ்ச நாள் தங்கி இருந்தார்கள். ஒரு மாதம் முடிய 5 நாள்கள் இருக்கும்போதே திரும்பவும் அடுத்த மாதத்திற்கு உரிய மருந்தை வரவழைத்தான் வாசு. இப்படி அப்படி என்று மூன்று மாதங்கள் சென்றுவிட்டனர் அடுத்த சிடி ஸ்கேன் எடுக்க வேண்டிய நாள் வந்துவிட்டது.

பானுவும் வாசுவுடன் கூட, சிடி ஸ்கேன் எடுக்க பெங்களூர் செல்வதாக இருந்தது. ஆனால் திடுமென்று அவளுக்கு காரியாலயத்தில் முக்கியமான வேலை வந்துவிட, வாசு மட்டும் தனியாக கிளம்பி விமானத்தில் பெங்களூர் வந்து சேர்ந்தான். விமான நிலையத்துக்கு ராகவனும் ஜானகியும் கார் கொண்டு வந்து அவனை வீட்டுக்கு அழைத்து வந்தார்கள்.

விமான நிலையத்திலிருந்து வீடு வந்து சேர ஒரு மணி நேரம் ஆனதால் வாசு மிகவும் சோர்ந்து போய் விட்டான். வந்தவுடன் உடனே போய் படுக்கையில் படுத்துக்கொண்டு விட்டான். ஜானகி அவனுக்கு காஃபி கலந்து கொடுத்தாள். எப்போது காஃபி கொடுத்தாலும் மிகவும் விரும்பிக் குடிக்கும் வாசு. அன்று காப்பி வேண்டாம் என்று சொல்லிவிட்டதைப் பார்த்து ஜானகி மனம் கலங்கிப் போய் விட்டாள்.

ஜானகிக்கு வாசுவைப் பார்க்க பார்க்க அழுகைதான் வந்தது. ஏனென்றால் இந்த மூன்று மாதத்தில் வாசு கிட்டத்தட்ட 8 கிலோ குறைந்து மிகவும் களைப்பாக காணப்பட்டதுதான். இந்த விஷயத்தில் மேற்கொண்டு என்ன செய்து, வாசுவை பழைய நிலைக்கு எப்படி கொண்டு வருவது என்று அவளுக்குப் புரியாமல் மிகவும் குழம்பினாள்.

“பகவான் நம்மை ஏன் இப்படி சோதிக்கிறார்?” என்று ராகவனிடம் கேட்டபொழுது ராகவனிடம் அதற்கு சரியான பதில் இல்லை .ஆனாலும் ராகவன் அவளிடம்

“நாமே இப்படி கலங்கிப் போனால் அவன் என்ன செய்வான், ஜானு? நாம்தான் அவனுக்கு தைரியம் கொடுக்க வேண்டும். அதனால் அவன் முன்னால் அழாமல் , முகத்தை சரியாக வைத்துக் கொள். எல்லாம் சரியாகிவிடும்” என்று சொல்லி தேற்றினார். மறுநாள் டாக்டரிடம் பேசி அன்று மாலையே சிடி ஸ்கேன் செய்யப்பட்டது கூடவே எம்ஆர்ஐயும் செய்யப்பட்டது, அதற்கே கிட்டத்தட்ட ₹. 15000/- ஆகிவிட்டது. ராஜவைத்தியமாக இருக்கிறதே என்று புலம்பினாள் ஜானகி, மருந்து விலை தெரிந்தால் அவள் என்ன சொல்லுவாளோ என்று நினைத்து மனதிற்குள் சிரித்துக் கொண்டான் வாசு.

மறுநாள் காலை 11.00 மணிக்கு மேல் ஸ்கேன் ரிப்போர்ட் கிடைக்கும் என்று சொன்னதால், அந்த நேரத்திற்கு, Dr. அபர்ணா கரந்திடம் ஒரு அப்பாயின்ட்மென்ட் வாங்கிக் கொண்டான் வாசு. அன்று இரவு வாசுவிற்கு தூக்கமே வரவில்லை. மறுநாள் ஸ்கேன் மற்றும் MRI ரிப்போர்ட் நல்லதாக வரவேண்டுமே என்ற கவலை அவனுக்கு. பானுவிற்கும் மும்பையில் அதே கவலைதான்.

மருந்து சாப்பிட்டு இருக்கிறோம். அதனால் நுரையீரல் கேன்சர் நிச்சயமாக கட்டுக்குள் வந்து இருக்கும் என்று அவர்கள் எல்லோருமே நம்பினார்கள். ஆனால் ரிஸல்ட் வரும்வரை கவலை குறையாது என்பதும் உண்மைதானே. அதுவும் தவிர “நாம் ஒன்று நினைக்க தெய்வம் வேறொன்று நினைக்கும்” என்பது கூட உண்மைதானே ?

சீடி ஸ்கேன் ரிஸல்ட் அத்தியாயம் ஏழில் பார்ப்போம்.


*************
 
Status
Not open for further replies.
Top Bottom