Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


GY NOVEL மருகும் மனதின் ரகசிய அறையில் - Tamil Novel

Status
Not open for further replies.

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
607
Reaction score
780
Points
93
வணக்கம் 🙏🙏🙏,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டியில் கலந்துகொள்ளும் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐💐.

போட்டியின் விதிமுறைகள், காலக்கெடு மற்றும் பரிசுகள் பற்றிய விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் விபரமாக குறிப்பிடப்பட்டுள்ளது. மீண்டும் ஒருமுறை அதை படித்துப் பார்த்துவிட்டு உங்களுக்கு முழு சம்மதம் என்றால், உங்களுடைய கதையை இந்த திரியில் தொடர்ந்து பதிவிடவும்.

உங்களுடைய கதை வாசகர்களை மகிழ்விக்கும் வகையில் அமையவும் போட்டியில் நீங்கள் வெற்றிபெறவும் வாழ்த்துகிறேன்.

மனமார்ந்த வாழ்த்துக்கள் 😍😍😍

நன்றி...
- நித்யா கார்த்திகன்

 
Last edited:

அம்மு இளையாள்

Member
Vannangal Writer
Messages
22
Reaction score
38
Points
13
மருகும் மனதின் ரகசிய அறையில்..



முன்னோட்டம்
....




அந்த நேரம் .... மண்டப வாசலில் மங்கை ஒருத்தி வந்து கொண்டிருந்தாள். தங்க நிற முழு ஜரிகை நெய்த புடவை மற்றும் அதற்கு பொருத்தமான ரத்த நிற ரவிக்கை அணிந்து கொண்டு. முகத்தில் ஒப்பனையையே
தேவையில்லாத அளவிற்கு அழகில் மிதந்து கொண்டிருந்த வசிகர முகத்தில் சிறிது கண் மையிட்டு... வளைந்த வானவில்லுக்கு நடுவில் சிகப்பு நிற பொட்டிட்டும் வைத்திருந்தாள். உதட்டிற்கு மிதமான சாயம் பூசி இருக்க , காதில் பெரிய ஜிமிக்கி கம்மல் மற்றும் அதற்குப் பொருத்தமாக கழுத்தையொட்டியபடி வைரத்தில் ஆன ... பதக்க மாலையும் (நெக்லஸ்), அதற்கு அடுத்தபடியாக மூன்று அடுக்கு கொண்ட பெரிய ஆரமும்,

அளவான இடுப்பில் ஒட்டியானம் என உடம்பில் நகைகளால் இரண்டாம் ஆடை பொருத்திக்கொண்டு கர்வமான அலங்கரித்துடன் இருந்தாள். மேலும் கை இரண்டிலும் மருதாணியை புஜம் வரை பூசி இருக்க , பூ அலங்காரத்துக்கு என நீண்ட தலை முடி ஜடை...என்று கல்யாண பெண்ணிற்கு உரிய அனைத்து அலங்காரத்தையும் கொண்டு அன்ன நடை இட்டு மெல்ல மணவறைக்கு நுழைந்தவள் .... அங்கிருக்கும் யாரையும் கண்டுகொள்ளாமல் நேராக தேவ் பக்கத்தில் அமர்ந்தாள். ஐயர் சொல்லிக்கொண்டிருந்த மந்திரங்களை உச்சரித்துக் கொண்டு இருந்தவன்... தன் அருகில் அமர்ந்திருக்கும் வருங்கால மனைவியை காண பார்வையை திருப்ப.... அங்கே அமர்ந்திருந்தவளின் முகத்தை கண்டதும் மழை நேரத்தில் சட்டென பெரும் இடையோடு தாக்கும் மின்னலை போல் பல மடங்கு மின்னல் துடித்து வெடித்தது அவனது இதயத்தில்.















"அப்பா எதுக்காக இவ்வளவு கோபம் உங்களுக்கு . இனிமே இந்த நிறுவனத்தை நானே பாத்துக்குறேன் ன்னு சொன்னேன் தான. அவன் எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும் சரி... இனிமே என்கிட்ட அவனோட எந்த வித்தையும் செல்லாது. நீங்க தேவையில்லாம கோபப்பட்டு உடம்பை கெடுத்துக்காதீங்க. இந்த ஒப்பந்தம் போனா என்ன! அடுத்த ஒப்பந்தம் கண்டிப்பா நமக்கு தான் கிடைக்கும். என் மேல நம்பிக்கை இருந்தா இந்த பேச்ச இதோட விடுங்கள்." என அவனும் தன் தந்தையின் கோபத்தில் சிறிதும் யோசிக்காமல் அக்னி சந்திர தேவ் மேல் முதல் வன்மத்தை வளர்க்க தொடங்கினான். பின்னாளில் இந்த வன்மமே அவன் வாழ்க்கைக்கு பெரிய எதிரியாக மாறப்போவது தெரியாமல்













அவன் கையை தட்டி விட்டவள்.. "ஏய்! இன்னொரு தடவை மேல கை வச்சா அப்புறம் அவ்வளவுதான். என்ன கேட்ட ! யார் நானா? பதில் உன்கிட்டதான் இருக்கு. என்னை வெளியே அனுப்ப உனக்கு எந்த உரிமையும் இல்லை. நீ என்னை காதலித்தது உண்மை. என்னைய கல்யாணம் பண்ணிக்கிறேன் சொல்லி கழட்டி விட்டதும் உண்மை. என்னை இங்க இருந்து அனுப்புனா... உன் வீட்டு வாசலில் உட்கார்ந்து தர்ணா பண்ணுவேன். எனக்கு ஞாயம் கிடைக்கிற வரைக்கும் உன் வீட்ல இருக்க ஒருத்தரையும் சும்மா விடமாட்டேன். என்னை ஏமாத்திட்டு நீ வேற எவளுக்காது தாலி கட்டுன அப்புறம் வாழ்க்கை முழுக்க கை இல்லாம தான் இருப்ப. " என்றவள் கலைந்திருந்த முடியை சரி செய்தவாறு மணவறைக்கு சென்று மீண்டும் அமந்து கொண்டு..."சும்மா முறைச்சி கிட்டே இருக்காம... ஒழுங்கா வந்து தாலிய கட்டுற வழியை பாரு. இல்லனா மண்டபத்துக்கு மட்டும் தெரிஞ்ச விஷயம் உலகத்துக்கே தெரியவரும். ஏற்கனவே இங்க இருந்து போனவங்க உன்னை பத்தி இந்நேரம் சொல்லி இருப்பாங்க. என்னையும் வெளியே அனுப்பிட்டா இருக்க கொஞ்ச மரியாதையும் மொத்தமா போயிரும். உனக்கு வேற வழியே இல்லை." என்றாள்.









"அவன் குடும்பமே எனக்கு பெரிய எதிரி. தொழில்ல எனக்கு அடி மேல அடி கொடுத்துட்டு இப்போ அவன் மட்டும் சந்தோஷமா கல்யாணம் பண்ணி வாழலாமா. அவனோட கல்யாணம் நாளைக்கு நடக்கவே கூடாது. அப்படி மட்டும் நடந்துச்சு உன் சாவு என் கையில தான். அவன் கல்யாண மண்டபத்துல அவமானப்பட்டு நிக்கணும். அதைப் பார்த்து அந்த செல்வகுமார் நெஞ்சைப் பிடிச்சுட்டு அங்கேயே விழனும். அதற்கான வேலையை பாரு... "என்று வன்மமாக கூறிவிட்டு அலைபேசியை அணைத்தார்.







"வாங்க !வாங்க !மிஸ்டர் அக்னி சந்திர தேவ்.அதான் உங்க அம்மாவே உத்தரவை கொடுத்துட்டாங்களே. வந்து ஆம்பளையா லட்சணமாய் தாலியை கட்டுங்க." என்றவளை கடும் கோபத்தில் முறைத்துப் பார்த்தவன் ஏதோ சொல்ல வர அதற்குள் முந்திக் கொண்ட அவளோ "அட எதுக்கு இப்ப இந்த முறைப்பு. தாலி கட்ட கஷ்டமா இருந்தா சொல்லுங்க நானே உங்களுக்கு கற்றேன்."என்று கர்வம் நிறைந்த கண்ணில் கண் சிமிட்டி அவனையே வெற்றிக் களிப்போடு பார்க்க...







"அன்பினி சித்திரை! உன் வாழ்க்கையில இந்த நாள் ல மறந்துடாத. இனி உனக்கு ஒவ்வொரு நாளும் நரகமா தான் இருக்கும். என்னை பழி வாங்க வந்த உன்னை... உன்னோட உயிர் போகிற கடைசி நிமிஷம் வரைக்கும் சித்திரவதை பண்ணுவேன். எதுக்காக இவனோட வாழ்க்கையில வந்தோம்னு தினம் தினமும்.. துடிக்க போற. சிரி ..இதுதான் வாழ்க்கையில நீ சிரிக்கிற கடைசி சிரிப்பு." என்றபடி அவளின் கழுத்தில் மூன்று முடிச்சு போட்டு முடித்தவன் குங்குமத்தை கையில் எடுத்து நெற்றி வகிட்டிலும், தாலியிலும் வைத்தான்.
 
Last edited:

அம்மு இளையாள்

Member
Vannangal Writer
Messages
22
Reaction score
38
Points
13
1. மருகும் மனதின் ரகசிய அறையில்...



நின்றே வானூர்தியை பிடிக்கும் அளவிற்கு நெடுநெடு கட்டிடங்களுக்கு நடுவில் பதின்மூன்று தளங்கள் கொண்ட கண்ணாடி கட்டிடம்... வைர கற்களின் ஒளி போல அருணம்( காலை சூரியன்) உதவியால் அழகாக ... எஸ் ஆர் ஃபேலஸ் என்ற பெயர் பொறிக்கப்பட்டு மின்னிக் கொண்டிருந்தது.

கட்டிடத்தின் நுழைவாயிலில் சென்னை சாலைக்கு சற்றும் பொருந்தாத... ரோல்ஸ் ராய்ஸ் என்ற உயர் வகை ஊர்தி நிற்க, தன் முதலாளியின் வருகையை உணர்ந்த காவலாளி எழுந்து நின்று காலை வணக்கத்தை தெரிவித்துக் கொண்டே...நுழைவாயில் கதவை திறந்து விட.... உள்ளிருந்து அவருக்கு தலையசைத்தப்படி தன் வாகனத்தை கட்டிடத்தின் முன்பு நிறுத்தினான் நம் நாயகன். ஊர்தியில் இருந்து சட்டென இறங்காமல் டாஸ் ஃபோர்ட் ல் இருந்த திசு காகிதத்தை ( tissue paper) எடுத்து கைகளை துடைத்து விட்டு , அரைதிண்மக் கரைசலின் (gel) உதவியோடு காகித சுருட்டுப் ( pepper roll) போல் அடங்கி இருந்த தனது தலைமுடியை கைகளால் தொட்டு...ஒரு முறை சரிபார்த்து விட்டு, கம்பீரமாக இறங்கினான்.

இறங்கி நின்றவன் யாரையும் பார்க்காமல், மின்னல் வேகத்தில் மின்தூக்கியின் உதவியோடு... எட்டாம் தளத்தில் இருக்கும் தனது அலுவலக அறைக்கு முன் நிற்க, திரு. அக்னி சந்திர தேவ் (மேனேஜிங் டைரக்டர் இன்
ஆர் எஸ் கன்ஸ்ட்ரக்ஷன்) என்ற பெயர் பொருந்திய அறைக்குள் நுழைந்து கொண்டான்.

செல்வகுமார், ராஜேஸ்வரியின் மூத்த மகன் தான் அக்னி சந்திர தேவ். படிப்பை முடித்த கையோடு தனது தந்தையின் தொழிலை கையில் எடுத்தவன்.... நான்கு ஆண்டுகளாக தந்தைக்கு நற்பெயரை தரும் அளவிற்கு தனது நிர்வாகத் திறமையை வளர்த்திருந்தான். பெரும்பாலும் கட்டுமானம் சார்ந்த நிறுவனம் எதுவாக இருந்தாலும் இவன் பார்வைக்கு வந்து தான் மற்றவர் கைக்கு செல்லும். லாபத்தோடு சிறந்த அணுகுமுறையும் இவன் வசம் இருப்பதால்... கடந்த நான்கு ஆண்டுகளில் ஆர்எஸ் கட்டுமான நிறுவனம் உச்ச நிலையில் உள்ளது. அக்னி சந்திர தேவ் என்பவன் வேலையில் மட்டுமல்ல... நிஜத்திலும் ஓரிரு வார்த்தையில் பேச்சை முடிக்கும் குணம் கொண்டவன். தேவ்க்கு தொழிலை விட்டால் அதிக விருப்பம்... குடும்பத்தோடு இருப்பது மட்டுமே. அம்மா அப்பா தங்கை என அளவான குடும்பம். பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் காதல் திருமணம் செய்து கொண்ட.... தம்பதிளால் இன்றுவரை குடும்பம் நான்கு உறுப்பினரை மட்டுமே கொண்டுள்ளது. செல்வகுமாரு க்கு சொந்தம் என யாரும் இல்லாததால்.... காதலித்துக் கைப்பிடித்த மனைவி மட்டுமே உயிர். மனைவிக்காக உருவாக்கப்பட்டதே இந்த கட்டுமான நிறுவனம். முதலில் பல சரிவுகளை சந்தித்து அனைத்தையும் இழந்து நின்ற செல்வகுமாருக்கு உற்ற துணையாய் நின்று தேற்றியது அவரது மனைவி ராஜேஸ்வரி தான். பின் மெல்ல மெல்ல... தன் பணியினை செய்ய அக்னி சந்திர தேவ் பிறக்கும்பொழுது நல்ல நிலையில் இருந்தனர் இருவரும்.

அறையில் நுழைந்ததிலிருந்து... தன் வேலையில் மும்முறமாக இருந்த தேவ் ஞாபகம் வந்தவனாய் தனது தனிப்பட்ட உதவியாளர் ( personal assistant) ஜீவாவை அலைபேசியில் அழைத்தான். சாவகாசமாக அலுவலகத்திற்குள் அமர்ந்து எதிரில் இருக்கும் ஷாலினியை ரசித்துக்கொண்டிருந்த ஜீவா ..தேவ் அழைப்பில் பதறி மிடுக்காக நிமிர்ந்து நின்று.. "வரேன் சார்" என்று அழைப்பை துண்டிக்கும் முன் தேவ்' வின் அறையில் நின்றான்.
"ஜீவா நான் சொன்ன விஷயம் என்ன ஆச்சு ?முடிக்கச் சொல்லி ரெண்டு நாள் ஆகுது. எனக்கு இன்னைக்கு ஈவினிங் குள்ள... முடிச்சே ஆகணும். எந்த காரணத்துக்காகவும் இந்த ஒப்பந்தம் அந்த நாகராஜ் கைக்கு மட்டும் போய்டவே கூடாது." என்றவனுக்கு..
"இல்ல சார் .அவர் கைக்கு போக வாய்ப்பே இல்லை. நான் பேச வேண்டியது எல்லாத்தையும் நேத்தே பேசிட்டேன். அவங்களும் நமக்கு முடித்து தருவதா தான் சொல்லி இருக்காங்க. கண்டிப்பா இன்னைக்குள்ள நல்ல நியூஸ் வரும் சார்." என பதிலளித்தான் ஜீவா.

"நமக்கு சாதகமா பேசி இருக்காங்கன்னு சாதாரணமா இருக்காதீங்க ஜீவா. நம்ம கைக்கு கிடைக்கிற வரைக்கும்.. கவனமா இருக்கணும். அப்பா என்னை நம்பி கொடுத்திருக்காங்க. ஒருநாளும் அவங்க வருத்தப்பட்ட மாதிரி நடக்கக் கூடாது. யார்கிட்ட தோத்தாலும்.. அந்த நாகராஜ் கிட்ட மட்டும் தோற்க கூடாது." என தேவ் உறுதியாகக் கூற, "கண்டிப்பா சார். நான் திரும்பவும் பேசிப் பார்க்கிறேன்." என்றபடி அங்கிருந்து நகர்ந்தான் ஜீவா.

அலைபேசியின் தொடுதிரையில் மை மாம் என்ற பெயரோடு ராஜேஸ்வரியின் புகைப்படம் வர, முகத்தில் சிரிப்புடன் அழைப்பை ஏற்ற தேவ் "சொல்லுங்கம்மா."
"அப்பு'னு... காலையில தான் சாப்பிடாம போயிட்ட . மதியமாது வீட்டுக்கு வந்துடு. வேலை வேலைனு இருக்காதா அப்புன்னு . கொஞ்சம் உன்னையும் கவனிக்கனும். காலை நேர சாப்பாட்டை தவிர்க்காதன்னு நிறைய தடவை சொல்லிட்டேன். நீ கேக்குற மாதிரி இல்லை அப்பு'னு.
இன்னும் ஒரு வாரத்துல கல்யாணத்தை வச்சுக்கிட்டு இப்படியா பண்ணுவ. கல்யாண மாப்பிள்ளை மாதிரியே இருக்கா அப்பு'னு . உன்னோட வேலை எல்லாத்தையும் இன்னும் ரெண்டு நாள்ல முடிச்சிடு . கல்யாண மாப்பிள்ளையா லட்சணமா வீட்ல இரு அப்பு'னு. உனக்கான சடங்கு எல்லாம் செய்யணும். இந்த மாதிரி நீ வேலை வேலை னு இருந்தா அதெல்லாம் எப்போ செய்யுறது..." என்று செல்ல மகனுக்கு அன்பு கட்டளை இட்டுக் கொண்டிருந்த ராஜேஸ்வரி பேச்சில் சிரித்த ..,

அக்னி சந்திர தேவ் தான் " அம்மா போது ம்மா நிறுத்துங்க. வீட்டிலிருந்து கிளம்பும்போதும் இதையே தான சொன்னீங்க. திரும்பவும் இதையே சொல்றீங்க. என்னோட செல்ல அம்மா சொல்லி கேட்காம இருப்பேனா. கண்டிப்பா இன்னும் ரெண்டு நாள்ல என்னோட எல்லா வேலையும் முடிச்சிட்டு, உங்க செல்ல பையன் கல்யாண மாப்பிள்ளையா ஜம்முனு வீட்டுல இருப்பான் போதுமா என்றான்."

தன் மகன் தன் பேச்சுக்கு செவி சாய்த்ததை நினைத்து உள்ளுக்குள் சிரித்த ராஜேஸ்வரி... வெளியிலோ, "அப்புனு போதும் போதும் ரொம்ப அம்மாக்கு ஆசை கட்டாத. இதையே தான் ரெண்டு நாளைக்கு முன்னாடியும் சொன்ன. திரும்பவும் சொல்லாம ...செஞ்சு காட்டு. மதியம் மறக்காம சாப்பிட வீட்டுக்கு வா அப்பு'னு" என்றபடி அலைபேசியை வைக்க ,

"செல்ல அம்மா" என அவனும் அலைபேசி வைத்து விட்டு தன்னுடைய வேலையை கவனிக்க ஆரம்பித்தான்.

"எப்படி ? தொடர்ந்து அவனுக்கு மட்டும் எப்படி இதெல்லாம் கிடைக்குது. என்னோட இத்தனை வருஷ அனுபவத்துல தொடர்ந்து தோல்வியை சந்தித்ததே இல்லை. நான் எங்க யார்கிட்ட தோத்தாலும் கவலைப்பட மாட்டேன். ஆனால் அந்த செல்வகுமர் பையன் கிட்ட மட்டும் தோத்துட்டா அதைவிட அவமானம் எனக்கு வேறு எதுவுமே இல்லை ‌ . செல்வ குமரையே இந்த தொழில் ல நிலைக்க விடாம பல இடைஞ்சலை கொடுத்து ஓடவிட்டிருக்கேன். ஆனா இதுல அனுபவமே இல்லாத ஒரு சின்ன பையன் நாலு வருஷமா தொடர்ந்து எனக்கு தோல்வியை மட்டும்தான் கொடுக்கிறான். இதுக்கு மேலயும் நான் அமைதியா இருந்தா இத்தனை வருஷமா கட்டி காப்பாற்றின இந்த சாம்ராஜ்யம் ஒன்னும் இல்லாம போயிரும். என்னோட தாத்தா, அப்பா, நான் னு மூனு தலைமுறையா நிலைத்திருந்த இந்த தொழில் நாலாவது தலைமுறையா என் பையன் கிட்ட தர போறேன். என் மகன் கிட்ட தரும்பொழுது... இந்த நிறுவனம் லாபத்தோடு இருக்கணும். என் மகன் இந்த சாம்ராஜ்யத்தை ஆளனும். அதுக்கு தடையா இருக்கிறது அந்த அக்னி சந்திர தேவ் தான். எப்படியாவது இந்த ஒப்பந்தத்தை நம்ம வாங்கி ஆகணும்." என்று தன் அலுவலக பணியாளரிடம் கூறிக்கொண்டிருந்தார் நாகராஜ்.
அந்நேரம் அங்கு வந்த... நாகராஜன் மகன் விக்ரம் தன் தந்தையின் கோபத்தை புரியாது அருகிலிருக்கும் பணியாளரை பார்க்க அவரோ, "எல்லாமே அந்த அக்னி சந்திர தேவ் பற்றி தான் தம்பி. கொஞ்ச நாளைக்கு முன்னாடி அரசு சார்பாக ஒரு ஒப்பந்தம் ஒன்று வெளியிட்டு இருக்காங்க. அதை மட்டும் நம்ம வாங்கிட்டா நல்ல பேரும் கிடைக்கும் அதை விட அதிக லாபமும் நமக்கு கிடைக்கும் தம்பி. நமக்கு பெரும்பாலும் வேறு யாரும் போட்டியாக வர மாட்டாங்க அந்த அக்னி சந்திர தேவை தவிர. உளவுத்துறை சொன்ன தகவல் படி... அவனுக்கு தான் இந்த ஒப்பந்தம் போகிற நிலைமையில இருக்காம். அதான் அப்பா இவ்வளவு கோவமா இருக்காங்க. இத்தனைக்கும் அவனுக்கும் நமக்கும் ஒப்பந்தத் தொகை நூல் அளவு தான் வித்தியாசம். தொடர்ந்து ஒவ்வொரு ஒப்பந்தம் நடக்கும் பொழுதும் இதேதான் தம்பி நடக்குது. அப்படி என்ன வித்தை தான் அவன் பண்றான்னு புரியல. இத்தன வருஷமா எங்க எந்த ஒப்பந்தம் நடந்தாலும் நமக்கு தான் முதல் முன்னுரிமை கிடைக்கும். சில நேரம் பணி காரணமா நம்மளே நிறைய ஒப்பந்தத்தை வேணாம்னு நிராகரித்து இருக்கோம். அந்த மாதிரி சூழ்நிலையை கையாண்டு இருந்த நமக்கு.... அவன் வந்ததுக்கப்புறம் தலைகீழா மாறிடுச்சு. இப்போலம் ஒப்பந்தம் அவனுக்கு தான் முதல்ல போகுது. அவன் வேணான்னு நிராகரிக்கிற ஒப்பந்தத்தை நம்ம எடுத்து நடத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கோம்." என விக்ரமிற்கு கூற, தந்தையையே பார்த்திருந்த விக்ரம்... "அப்பா எதுக்காக இவ்வளவு கோபம் உங்களுக்கு . இனிமே இந்த நிறுவனத்தை நானே பாத்துக்குறேன் ன்னு சொன்னேன் தான. அவன் எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும் சரி... இனிமே என்கிட்ட அவனோட எந்த வித்தையும் செல்லாது. நீங்க தேவையில்லாம கோபப்பட்டு உடம்பை கெடுத்துக்காதீங்க. இந்த ஒப்பந்தம் போனா என்ன! அடுத்த ஒப்பந்தம் கண்டிப்பா நமக்கு தான் கிடைக்கும். என் மேல நம்பிக்கை இருந்தா இந்த பேச்ச இதோட விடுங்கள். என அவனும் தன் தந்தையின் கோபத்தில் சிறிதும் யோசிக்காமல் அக்னி சந்திர தேவ் மேல் முதல் வன்மத்தை வளர்க்க தொடங்கினான். பின்னாளில் இந்த வன்மமே அவன் வாழ்க்கைக்கு பெரிய எதிரியாக மாறப்போவது தெரியாமல்.

யாருக்கு ஒப்பந்தம் கிடைக்க கூடாது என அக்னி தேவ் நினைத்திருந்தானோ, அந்த நபரான நாகராஜனும் அவனது மகன் விக்ரமும் அக்னி தேவ் க்கு கிடைக்கக்கூடாது என்று நினைத்திருக்க.. இம்மூவரையும் வாழ்நாள் பகையாளியாய் மாற்று பொருட்டு இவர்கள் இடத்திற்கு வந்து கொண்டிருந்தாள் அன்பினி சித்திரை. நம் கதையின் கதாநாயகி
 

அம்மு இளையாள்

Member
Vannangal Writer
Messages
22
Reaction score
38
Points
13
2. மருகும் மனதின் ரகசிய அறையில்..


ஒரே நேரத்தில் இலட்சம் மக்கள் அமரும் அளவிற்கு மிகப் பிரம்மாண்ட மண்டபம் ஒன்றில் , இந்த நாள் பூக்களுக்கு பஞ்சம் என்பது போல் உலகில் உள்ள அத்தனை பூக்களையும் ஒன்று திரட்டி .... வானவில்லின் நிறத்தைப் போல் பிரம்மாண்டமாய் அலங்கரிக்க தொடங்கியிருந்தனர் வேளையாட்கள் அந்த மண்டபத்தை. ஒருபுறம் பூவால் அலங்கரிக்கப்பட்டிருக்க மறுபுறம் வண்ண வண்ண விளக்குகளால் நிலவின் தேவை இருக்காது என்பது போல் அழகாக மினு மினுக்க தொடங்கியிருந்தது.
உள்ளே மணமக்கள் வருகைக்காக காத்திருந்த அத்தனை நபர்களும் மேல்தட்டு மக்கள். ஒவ்வொருவரையும் பார்த்தாலே தெரியும்.. அவர்கள் தரையில் கால் படாத முதலாளிகள் என்று. வரும் அத்தனை நபரையும் செல்வகுமார் அன்போடு வரவேற்று கொண்டிருக்க , ராஜேஸ்வரி தன் மகனின் வரவேற்பு நிகழ்ச்சிக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் சரியாக உள்ளதா என மேற்பார்வை இட்டுக் கொண்டிருந்தார். அவ்வழியாக வந்த மகள் திவ்யா தான், "அம்மா இதெல்லாம் எதுக்கு நீங்க பாத்துட்டு இருக்கீங்க. அண்ணா'க்கு தெரிஞ்சா சத்தம் போட போறான். பேசாம வரவங்களை வரவேற்கிற வேலைய பாருங்க. இந்த ஏற்பாட்டு எல்லாத்தையும் அண்ணா உதவியாளரே பண்ணிடு வாங்க." என்றாள்.

"என்னதான் மத்தவங்க பார்த்தாலும்.. இது என்னோட மகன் கல்யாணம் . நல்ல படியா நடக்கனும்'னு ஒரு அம்மாவா நினைக்கிறது உனக்கு புரியாது திவ்யா. நானும் உன் அப்பாவும் கல்யாணம் பண்ணும் பொழுது எங்கள் இரண்டு பேரைத் தவிர கூட வேற யாரும் இல்ல. இப்ப வரைக்கும் பிள்ளைங்க உங்களைத் தவிர சொந்தம்'னு யாருமே இல்லை. என் மகனுக்கு வர மருமகள்தான் எனக்கு கிடைக்க போற புது உறவு. அவள் என் வீட்டுக்கு வரும்பொழுது எல்லாமே சரியா இருக்கணும். அது மட்டும் இல்ல உன் அண்ணாவை கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்க நம்ம எவ்ளோ கஷ்டப்பட்டோம்'னு நல்லாவே தெரியும்... தான திவி. ஏதாச்சும் சின்ன பிரச்சனை வந்தாலும்... அவன் கோபத்தை நிறுத்தி வைக்க முடியாது. அதுக்காக தான் நான் இவ்வளவு மெனக்கெட்டு பார்த்துட்டு இருக்கேன். இன்னைக்கு ஒருநாள் தானே... விடிஞ்சா கல்யாணம். அதுக்கப்புறம் எனக்கு என்ன வேலை இருக்கு திவி. நல்லபடியா என் மகனையும் மருமகளையும் கவனிக்கிறதை தவிர. நீ உன் அண்ணன் ரெடி ஆகிட்டானானு போய் பாரு." என்று அவர் தன் வேலையை கவனிக்க, திவி தான் "அம்மா மாமியாரா மிரட்டுவிங்கன்னு பார்த்தா வர மருமகளுக்கு இப்பவே கூஜா துக்குறிங்க. இப்படியே போனா என் நிலைமைதான் ரொம்ப மோசமா இருக்கும் போல...."என அவரை கேலி பேச,

அதில் தன் மகளின் காதைத் திருகிய ராஜேஸ்வரி, "என்ன திவி வாய் ரொம்ப அதிகமா இருக்கு. என் மருமகளை நான் தாங்குறேன். உனக்கு என்ன பொறாமை. உனக்கும் ஒரு மாமியார் வருவார்கள் ல அப்போ பேசிக்கிறேன் உன்னை " என்று அவளது காதை விட,

காதில் கை வைத்து தேய்த்துக்கொண்டே... "இப்பவே கட்சி மாறிட்டியா இரு'ம்மா அண்ணி வரட்டும் நாத்தனார் கொடுமையை நான் காட்டுறேன்" என்று கூறிவிட்டு ராஜேஸ்வரி முறைக்கும் முன் தன் அண்ணன் அறை நோக்கி ஓடினாள்.


அலங்கரித்த மேடையை மேலும் அலங்கரிக்க மணமக்கள் இருவரும் மேடை ஏற்றப்பட்டனர். இருவரையும் வாழ்த்த சொந்தங்கள், நண்பர்கள், தொழில் நண்பர்கள் என வரிசையாக சென்று வாழ்த்தி கொண்டிருந்தனர். வாழ்த்த வருபவர்களை மணமகள் மகிழ்ச்சியோடு நன்றி தெரிவிக்க, மணமகன் ஆன அக்னி சந்திர தேவோ, யாருக்கோ நடக்கும் வரவேற்பு நிகழ்ச்சி போல் செயற்கையான சிரிப்பை சிந்தியவாறு தலையை ஆட்டிக் கொண்டிருந்தான்.

வரவேற்பு நிகழ்ச்சி சிறப்பாக நடந்து முடிக்கப்பட மணமக்கள் இருவரும் ஓய்வெடுக்க தங்கள் அறைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சிறிது நேரத்திலே தேவ் அறைக்குள் நுழைந்த திவி.... "அண்ணா அம்மா உனக்கு சாப்பாடு கொடுத்து விட்டாங்க" என சிரிப்போடு அவன் முன் நீட்ட..."நீ எதுக்குடா எடுத்துட்டு வந்த. சொல்லியிருந்தா நானே சாப்பிட வந்திருப்பேன் இல்ல." என்று தன் தங்கையிடம் வினவ,

திவி, "அண்ணா இப்போ நீ சாதாரணமான ஆளா என்ன...! மாப்பிள்ளை ண்ணா மாப்பிள்ளை. சும்மா கெத்தா இருக்க வேண்டாமா. அதன் உனக்கு இந்த சேவகம் லா. அது மட்டும் இல்ல அண்ணா... அண்ணி வந்ததும் அவங்கள சமாளிக்கவே உனக்கு நிறைய தெம்பு வேணும் . அதுக்காக தான் இப்பவே நல்லா சாப்பிட சொல்றோம். அண்ணிக்கும் அம்மாக்கும் நடுவுல நீ மாட்டிகிட்டு முழிக்க போறத நினைக்கவே ஆனந்தமா இருக்கு அண்ணா..." என தன் உடன் பிறப்பிடம் மகிழ..

"வர வர உனக்கு வாய் அதிகமாயிடுச்சி திவி. உன் அண்ணி... அந்த மாதிரி எல்லாம் நடந்துக்க மாட்டா. அப்படியே நடந்தாலும் அதை சமாளிக்க அம்மாக்கு நல்லாவே தெரியும்." என்றான் தேவ்.

"பாருடா. இப்பவே அண்ணிக்கு எவ்வளவு சப்போட்டு'ன்னு. அப்போ எல்லாரு மாதிரியும் கல்யாணத்துக்கு அப்புறம் நீயும் அன்னிக்கு பயந்து அடிமையா வாழ போற அப்படித்தானே. உன்னோட ஒளிமயமான வருங்காலத்திற்கு என்னோட வாழ்த்துக்கள் அண்ணா." என்றவள் மேலும், "உனக்கு ஏதாச்சும் உதவி தேவைப்பட்டா மறக்காம என்ன கேளு அண்ணா. அண்ணியை சமாளிப்பது எப்படி'ன்னு உனக்கு நான் நிறைய அட்வைஸ் தரேன்." என மேலும் தன் அண்ணனை வார...

"அதெல்லாம் நடந்தா பார்த்துக்கலாம்... திவி. இப்போ இந்தா உன் வாய கொஞ்சம் மூடு" என்றபடி அவளின் வாயில் ஒரு பூரியை முழுதாக அடக்கினான் திவியின் அன்பு அண்ணன்.

ஒருபுறம் நான்கு ஜீவன்கள் ஆனந்தத்தில் மூழ்கி இருக்க... அங்கே நாகராஜோ மிகவும் கொதித்துக் கொண்டிருந்தார். அக்னி சந்திர தேவ் வின் கல்யாணத்தை நிறுத்துவதற்காக ஒரு நபரை ஏற்பாடு செய்து மண்டபத்திற்கு அனுப்பியிருந்தார். அந்த நபரோ இன்னும் நாகராஜுக்கு எந்த தகவலும் சொல்லாமல் இருக்க ஒருவேளை மாட்டிக் கொண்டானோ, அடுத்து என்ன செய்வது என யோசனையில் இருக்க, அந்த நேரம் அவர் அனுப்பி வைத்த நபர் அழைக்க ஆர்வமாக எடுத்தவர்..."என்ன நடக்குது அங்க. தகவல் சொல்ல இவ்வளவு நேரமா?" என கேட்க

"சார்! இங்க பிரச்சனை பண்ற மாதிரி ஒன்னும் நடக்கல. எல்லாமே நல்லபடியா போய்கிட்டு இருக்கு. நானும் ஏதாச்சும் பிரச்சனை பண்ண முடியுமான்னு ரொம்ப நேரமா காத்திருந்தேன் சார். ஆனா ஒன்னும் பண்ண முடியல. இப்போ வரவேற்பு நிகழ்ச்சியும் முடிஞ்சுது. காலையில கல்யாணத்தை எப்படியாவது நான் நிருத்துறேன் சார்..."என்று ரகசியமாக கூறி முடித்தார் அந்த உளவு நபர் செந்தில்.

நாகராஜ், "என்ன பண்ற செந்தில். உன்னை எதுக்காக அனுப்புனேன். அந்த வேலையை பார்க்காம எல்லாம் நல்லபடியா முடிஞ்சதுன்னு சொல்ற . இப்படித்தான் நீ சொல்லுவேன்னு எனக்கு முன்னாடியே தெரியும். அதனாலதான் உன்ன நம்பாம.. நானே ஒரு ஏற்பாடு பண்ணியிருக்கேன். நாளைக்கு சரியா தாலி கட்டுற நேரம் அங்க ஒரு பொண்ணு வருவா. நேரா அந்த அக்னி சந்திர தேவ் சட்டையை பிடிச்சு சண்டை போடுவாள். நீ அந்த நேரம் போய்... அந்த பொண்ணுகிட்ட என்ன நடந்துச்சுன்னு யாருக்கும் சந்தேகம் வராம கேளு. அவளும் அந்த அக்னி சந்திர தேவ் என்னை காதலிச்சு ஏமாற்றி கை விட்டுட்டான்னு அழுது நாடகம் போடுவாள். நீ அதைக் கேட்டுட்டு கொஞ்சம் கொஞ்சம பெரிசு பண்ணி கல்யாணத்தை நடத்த விடாம நிறுத்து. இந்த திட்டம் எந்த காரணத்துக்காகவும் சொதப்ப கூடாது.

அவன் குடும்பமே எனக்கு பெரிய எதிரி. தொழில்ல எனக்கு அடி மேல அடி கொடுத்துட்டு இப்போ அவன் மட்டும் சந்தோஷமா கல்யாணம் பண்ணி வாழலாமா.நானும் ஆரம்பத்துல இருந்து இந்த கல்யாணத்தை நிறுத்த என்ன என்னவோ பண்ணிட்டேன். ஒன்னும் நல்லபடியா நடக்கல அவனோட கல்யாணம் நாளைக்கு நடக்கவே கூடாது. அப்படி மட்டும் நடந்துச்சு உன் சாவு என் கையில் தான். அவன் கல்யாண மண்டபத்துல அவமானப்பட்டு நிக்கணும். அதைப் பார்த்து அந்த செல்வகுமார் நெஞ்சைப் பிடிச்சுட்டு அங்கேயே விழனும். அதற்கான வேலையை பாரு... " என்று வன்மமாக கூறிவிட்டு அலைபேசியை அணைத்தார்.

இவர் என்ன திட்டம் தீட்டினாலும்.. நாளைய தினம் அக்னி சந்திரனுக்கு திருமணம் நடக்கப் போவது உறுதி.

ஆனால், அத்திருமணம் தான்... நாகராஜ் நெஞ்சை இன்னும் எரியச் செய்யும் செயலாக இருக்க போகிறது. நாளைய தினம் ... ஒருத்திக்கு வெற்றியாக, ஒருவனுக்கு அவமானமாக, மற்றொருவனுக்கு தீரா பகையாக ....




அம்மு இளையாள்
 

அம்மு இளையாள்

Member
Vannangal Writer
Messages
22
Reaction score
38
Points
13
3. மருகும் மனதின் ரகசிய அறையில்...






விடியற்காலையில் சுபமுகூர்த்த நேரம் நெருங்க மண்டபமே பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. ஒருபுறம் மணமகள் வெட்கச்சிரிப்போடு தன்னை அலங்கரித்துக் கொண்டிருக்க, மறுபுறம் கதாநாயகனோ அப்பொழுதுதான் உறக்கம் கலைந்து தன்னை தயார்படுத்திக் கொண்டிருந்தான். மகனின் அறைக்குள் வந்த ராஜேஸ்வரியின் தன் மகன் தயாராக இருப்பதை அறிந்து அவன் முன் சென்றவர் கண்ணில் அன்போடு அக்னி தேவ்க்கு திஷ்டி கழித்து, "அப்புனு உன்ன இந்த மாதிரி மணக்கோலத்துல பாக்கணும்னு அம்மாக்கு எத்தனை நாள் ஆசை தெரியுமா. இன்னைக்குதான் அந்த ஆசை நிறைவேறி இருக்கு. நீ எப்பவும் இதே மாதிரி சந்தோஷமா இருக்கணும் அப்பு'னு..."என கண்ணில் நீரோடு பேசும் தாயைப் பார்த்த ...

அக்னி சந்திர தேவ் தான் , "அம்மா எதுக்காக இப்போ அழுறீங்க . உங்களோட ஆசைக்காக தான் இந்த கல்யாணமே. என் அம்மா எப்பவுமே சந்தோஷமா இருக்கணும். அதுதான் இந்த மகனோட ஆசை" என்றான்.
"அப்போ அம்மாக்காக தான் இந்த கல்யாணமா! உனக்கு என் மருமகளை பிடிக்கலையா அப்பு'னு." என மகாலட்சுமி ஏக்கமாக பார்க்க,


சிறிது நேரம் எதுவும் பேசாமல் அவரையே பார்த்து இருந்த தேவ் தன்னை பழைய நினைவுக்குள் அழைத்துச் சென்ற மனதை கட்டுப்படுத்திக் கொண்டு "அம்மா அதெல்லாம் ஒன்னும் இல்லை. நான் பிடிச்சு தான் இந்த கல்யாணத்தை பண்ணிக்கிறேன் போதுமா. இப்போ நீங்க அழாம போங்க. நான் இன்னும் முழுசா தயார் ஆகல " என்று தன் தாயை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தான் .


ஏசி மாளிகையில் சிறிதாக புகை மூட்டப்பட்ட ஹோம குண்டத்தின் அருகில் ஐயர் அமர்ந்து எதிர்கால வாழ்க்கைக்கான மந்திரங்களை ஓத..., சிறிது நேரத்தில் தேவ் அங்கு வரவழைக்கப்பட்டான். வந்தவன் சபையில் இருக்கும் அனைவருக்கும் கரம் கூப்பி வணக்கத்தை தெரிவித்தபடி, தனக்கான மண மேடையில் அமர.. ஐயர் மன மகனுக்கான மந்திரங்களை சொல்லிக் கொண்டிருந்தார். மந்திரங்கள் முழுதாக முடிந்திருக்க மணமகளை அழைத்து வரச் சொல்ல....

அந்த நேரம் .... மண்டப வாசலில் மங்கை ஒருத்தி வந்து கொண்டிருந்தாள். தங்க நிற முழு ஜரிகை நெய்த புடவை மற்றும் அதற்கு பொருத்தமாக ரத்த நிற ரவிக்கை அணிந்து கொண்டு, முகத்தில் ஒப்பனையையே தேவையில்லாத அளவிற்கு அழகில் மிதந்து கொண்டிருந்த முகத்தில் சிறிது கண் மையிட்டு... வளைந்த வானவில்லுக்கு நடுவில் சிகப்பு நிற பொட்டிட்டு, உதட்டிற்கு மிதமான சாயம் பூசி இருக்க .... காதில் பெரிய ஜிமிக்கி கம்மல் மற்றும் அதற்குப் பொருத்தமாக கழுத்தையொட்டியபடி வைரத்தில் ஆன ... பதக்க மாலையும் (நெக்லஸ்), அதற்கு அடுத்தபடியாக மூன்று அடுக்கு கொண்ட பெரிய ஆரமும்,
அளவான இடுப்பில் ஒட்டியானம் என உடம்பில் நகைகளால் பொறுத்தி கர்வமான அலங்கரித்துடன் இருந்தாள். மேலும் கை இரண்டிற்கும் மருதாணியை புஜம் வரை பூசி இருக்க , பூ அலங்காரத்துக்கு என நீண்ட தலை முடி ஜடையும் என்று கல்யாண பெண்ணிற்கு உரிய அனைத்து அலங்காரத்தையும் கொண்டு அன்ன நடை இட்டு.... மெல்ல மணவறைக்கு நுழைந்தவள் அங்கிருக்கும் யாரையும் கண்டுகொள்ளாமல் நேராக தேவ் பக்கத்தில் அமர்ந்தாள். ஐயர் சொல்லிக்கொண்டிருந்த மந்திரங்களை உச்சரித்துக் கொண்டு இருந்தவன்... தன் அருகில் அமர்ந்திருக்கும் வருங்கால மனைவியை காண பார்வையை திருப்ப.... அங்கே அமர்ந்திருந்தவளின் முகத்தை கண்டதும், மழை நேரத்தில் சட்டென பெரும் சத்தத்துடோடு தாக்கும் மின்னல் போல பல மடங்கு வீரியமான மின்னலை வெடித்தது அவனின் இதயம்.


ஏற்கனவே மணப் பெண்ணைப் போலவே அலங்கரித்து வாசல் வழியில் வந்தவளை அங்கு அமர்ந்திருந்தவர்கள் வித்தியாசமாக பார்க்க, நேராக மணமகன் பக்கத்தில் அமர்ந்ததும் பெரும் அதிர்ச்சியை கிளப்பியது அங்கிருந்தவர்களுக்கு. அதிலும் பெண் வீட்டாருக்கும் செல்வகுமார், ராஜேஸ்வரி தம்பதியருக்கும் நிலநடுக்கத்தில் நிற்பது போன்ற அதிர்வு. யாருக்கும் ஒன்றும் புரியாமல் நினைவுகளை இழந்து ஸ்தம்பித்து நிற்க, அங்கே கல்யாண மண்டபம் நிலையில்லாத நிலையில் இருந்தது.


முதலில் சூழ் நிலையிலிருந்து மீண்ட பெண் பெற்றோர் வந்தவளிடம்... "யாருமா நீ என் பொண்ணு உட்கார வேண்டிய இடத்தில நீ வந்து உட்கார்ந்து இருக்க. எந்திரிம்மா முதல்ல.." கோபமாக கட்டளையிட்டனர்.


வந்த அல்லி ராணியோ... பக்கத்தில் அமர்ந்திருந்த தன் வருங்காலத்தை ஒருமுறை பார்த்துவிட்டு, பொறுமையாக எழுந்து நின்றவாறு "இங்க பாருங்க இது ஞாயமா எனக்கு நடக்க வேண்டிய கல்யாணம். எனக்கு துரோகம் பண்ணிட்டு.. உங்க பொண்ண கல்யாணம் பண்ணிக்க பாக்குறாரு மிஸ்டர் அக்னி சந்திர தேவ். " என்று பெரும் இடியை செல்வகுமார் ராஜேஸ்வரி தம்பதியருக்கு கொடுக்க..,


"என்ன சம்பந்தி இதெல்லாம். இந்த பொண்ணு சொல்றது உண்மையா?" என்ற பெண்ணின் பெற்றோருக்கு பதிலளிக்க முடியாமல் செல்வகுமார், ராஜேஸ்வரி இருவரும் தன் மகனை பார்க்க..


"அவனோ அவள் சொன்ன வார்த்தையில் கட்டுக்கடங்காத தீப்பிழம்பு இமயமலை போல் உள்ளுக்குள் கொதித்து கொண்டு இருந்தான்.
"அவங்களை என்ன கேட்கிறீங்க. நான் ஒருத்தி இப்படி இருக்கிறது அவங்களுக்கு இப்பதான் தெரியும். என்ன காதலிச்சது இதோ இங்க உட்கார்ந்துட்டு இருக்கானே இவன் தான். கொஞ்ச நாள்ல கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொல்லிட்டு என்கூட ஊரு ஊரா சுத்திட்டு... இப்போ நான் ஊர்ல இல்லாத சமயமா பார்த்து உங்க பொண்ண கல்யாணம் பண்ணிக்க வந்திருக்கான். இவனும் நானும் அஞ்சு வருஷத்துக்கு மேல காதலிச்சிட்டு இருக்கோம். என்னை ஏமாத்திட்டு உங்க பொண்ண கல்யாணம் பண்ணா.. அங்க பாருங்க போலீஸ்காரங்க நிக்கிறாங்க. நான் வரும் போது அவங்களையும் சேர்த்து தான் கூட்டிட்டு வந்தேன். என்னை ஏமாத்திட்ட தா இதோ இவன் மேலயும் உங்க பொண்ணு மேலயும் கம்ப்ளைன்ட் கொடுத்து உள்ளே தள்ளிடுவேன்."என்றுவிட்டு சாவகாசமாக திரும்பவும் மணவறையில் பெண்ணிற்கான இடத்தில் அமர்ந்து கொண்டாள்.


அவள் சொல்லிய வார்த்தையில் பெண்ணின் பெற்றோர்கள்... செல்வகுமார் இடம் தகாத வார்த்தையில் பிரச்சனை செய்ய அந்த இடம் மொத்தமும் அக்னி சந்திர தேவ்விற்கு எதிராக திரும்பியது. மகனைப் பற்றி நன்கு தெரிந்த பெற்றோர்கள்... இதை பொய்யென நிரூபிக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தனர்.


நேரம் செல்ல செல்ல... அனைவரின் குற்ற பார்வைக்கு ஆளான தேவ் தன் பெருமை மொத்தத்தையும் இழந்து...
"போதும் நிறுத்துங்க. இதுக்கு மேல யாரும் எதுவும் பேச வேண்டாம். தப்பு பண்ணது நான். என்னை பெத்தவங்க கிட்ட கேள்வி கேட்க யாருக்கும் எந்த உரிமையும் இல்லை. இங்க நடக்குறது என் தனிப்பட்ட விஷயம். இத தப்பு சரின்னு சொல்ல உங்களுக்கு இடமில்லை." என்றவன்....
அங்கிருந்த பெண்ணின் பெற்றோர்களிடம், "மன்னிச்சிருங்க. இதுக்காக நீங்க என்ன தண்டனை கொடுத்தாலும் நான் ஏத்துக்கிறேன். உங்க பொண்ண நான் ஏமாத்தல. உங்களுக்கு என் மேல நம்பிக்கை இருந்திருந்தா இதோ இவளோட வார்த்தையை நம்பி சண்டை போட்டிருக்க மாட்டீங்க. என்னை நம்பாத உங்களுக்கு பதில் சொல்லணு'ம்னு அவசியமும் எனக்கில்லை . உங்களுக்கு உண்மை ஒரு நாள் தெரியவரும். அது வரைக்கும் உங்க பார்வைல நான் குற்றவாளியாவே இருக்கேன். " என்றான்.


"பாத்தீங்களா உங்க பையன் பேசுறதை. என்ன பையனை வளத்து வச்சிருக்கீங்க. ஒரு பெரிய பிஸ்னஸ் மேன் பையன் பண்ற வேலையா இது. எவ்வளவு பெரிய மனுஷனா இருந்துட்டு பிள்ளையை வளர்க்குறது ல இப்படி கோட்டை விட்டுட்டீங்களே. இவ்வளவு நடந்ததுக்கப்புறமும் என் பொண்ண உங்க வீட்டுக்கு அனுப்பி வைச்சா என்ன விட பெரிய முட்டாள் யாரும் இல்லை. இவ்வளவு தூரம் எங்க குடும்பத்தை கூட்டிட்டு வந்து அசிங்க படுத்திட்டிங்க. இதற்கான தண்டனை உங்களுக்கு நிச்சயம் தருவேன் .என்றவர்கள் அங்கிருந்த அனைத்து சொந்தத்தை யும் கூட்டிக்கொண்டு மண்டபத்தை விட்டு வெளியேற ஆரம்பித்தனர்.


அனைவரும் கலைந்து சென்றதும் மீதமிருந்த சொந்தங்களுக்கு மத்தியில்... எதுவும் பேச முடியாமல் செல்வகுமார் ஒரு பக்கமாக சென்று அமர்ந்து கொண்டார். இது செல்வகுமார் ராஜேஸ்வரி தம்பதியருக்கு பழைய நினைவுகளை ஞாபகப்படுத்த.... தான் செய்த செயலின் தண்டனை இதுவென வருந்தி அமைதி காத்தனர். இவர்கள் அமைதிக்கு மாறாக... அவர்களின் மகன் தான் மணவறையில் அமர்ந்திருந்த அவளின் கழுத்தை பிடித்து தரதரவென இழுத்து கீழே தள்ளி விட்டு,

"யாரடி நீ உனக்கும் எனக்கும் என்ன சம்பந்தம். எப்பவோ நடந்த விஷயத்துக்கு இப்போ பழிவாங்க வந்தியா. ச்சீ !உன்ன மாதிரி பொண்ணலாம் பார்த்தா கூட பாவம். என் அப்பா அம்மா உனக்கு என்ன பாவம் பண்ணாங்க. எதுக்காக அவங்களை இப்படி எல்லார் முன்னாடியும் அசிங்கப்படுத்தின. நல்லா ஞாபகம் வச்சுக்கோ இன்னைக்கு நீ பண்ண தப்புக்கான தண்டனைய வாழ்க்கை முழுக்க கொடுத்துகிட்டே இருப்பேன். மரியாதையா இந்த இடத்தை விட்டு போயிடு." என்றதோடு நில்லாமல் கீழே விழுந்தவளை மீண்டும் கைப்பற்றி வாசலை நோக்கி அழைத்துச் செல்ல...,


அவன் கையை தட்டி விட்டவள்.. ஏய்! இன்னொரு தடவை மேல கை வச்சா அப்புறம் அவ்வளவுதான். என்ன கேட்ட ! யார் நானா? பதில் உன்கிட்டதான் இருக்கு. என்ன வெளியே அனுப்ப உனக்கு எந்த உரிமையும் இல்லை. நீ என்னை காதலித்தது உண்மை. என்னைய கல்யாணம் பண்ணிக்கிறேன் சொல்லி கழட்டி விட்டதும் உண்மை. என்னை இங்க இருந்து அனுப்புனா... உன் வீட்டு வாசலில் உட்கார்ந்து தர்ணா பண்ணுவேன். எனக்கு ஞாயம் கிடைக்கிற வரைக்கும் உன் வீட்ல இருக்க ஒருத்தரையும் சும்மா விடமாட்டேன். என்னை ஏமாத்திட்டு நீ வேற எவளுக்காது தாலி கட்டுன அப்புறம் வாழ்க்கை முழுக்க கை இல்லாம தான் இருப்ப. " என்றவள் கலைந்திருந்த முடியை சரி செய்தவாறு மணவறைக்கு சென்று மீண்டும் அமந்து கொண்டு..."சும்மா முறைச்சி கிட்டே இருக்காம... ஒழுங்கா வந்து தாலிய கட்டுற வழியை பாரு. இல்லனா மண்டபத்துக்கு மட்டும் தெரிஞ்ச விஷயம் உலகத்துக்கே தெரியவரும். ஏற்கனவே இங்க இருந்து போனவங்க உன்னை பத்தி இந்நேரம் சொல்லியிருப்பாங்க. என்னையும் வெளியே அனுப்பிட்டா இருக்க கொஞ்ச மரியாதையும் மொத்தமா போயிரும். உனக்கு வேற வழியே இல்லை." என்றாள்.


நடப்பதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என அமர்ந்திருந்த செல்வகுமாருக்கு அருகில் சென்ற ராஜேஸ்வரி... "என்னங்க! இப்போ என்ன பண்றது இப்படி அமைதியா உட்கார்ந்து இருந்தா என்ன அர்த்தம். இந்த பொண்ணு சொல்ற எதுவும் உண்மை இல்லை'ன்னு எனக்கு நல்லாவே தெரியும்" என ஒரு தாயாய் தன் மகனுக்கு ஆதரவுக் கரம் நீட்ட..


அதை கேட்டவளோ, "என்ன சொன்னீங்க அத்தை.. உங்க பையன் என்னை காதலிக்கலையா ! நல்ல காமெடி . இதோ என் கையில இருக்க இந்த போட்டோவைப் பார்த்துட்டு அப்புறமா சொல்லுங்க. " என்று சேலையில் மறைத்து வைத்து இருந்த புகைப்படங்களை அவர்முன் வீச அதில் தேவ்வும் புதிதாக வந்தவளும் சிரித்த முகமாக கண்ணில் காதலோடு காதல் பறவைகளாய் காட்சியளிக்க... தாயின் கண்கள் அதிர்ச்சியோடு தன் மகனை நோக்கியது.

அவனும் அதை எதிர்பார்க்காததால்... மௌனமாக அவரையே பார்த்திருக்க...


"தேவ் .... போய் மண மேடையில உட்காரு. "
என்ற தாயின் வார்த்தையில் உடலில் இருக்கும் ரத்தம் மொத்தமும் உறைந்தவன் போல தன் தாயையே பார்த்திருக்க,


அண்ணனின் நிலை உணர்ந்த திவி
"அம்மா... அண்ணா அப்படி எதுவும் பண்ணி இருக்காது ம்மா. ஒரு போட்டோவ வச்சு அண்ணாவை சந்தேகப்படாத. என்ன நடந்துச்சுன்னு ஒரு வார்த்தை கேளு ம்மா." என பேசும் மகளை நிறுத்துமாறு கை அசைத்தவர்,


"இனி ஒரு வார்த்தை பேசினா உன் அம்மா உயிரோட இருக்க கடைசி நாள் இதுவா தான் இருக்கும். உன் அண்ணனை போய் உட்கார சொல்லு. ஐயரே நீங்க ஆக வேண்டியதை பாருங்கள்." என கூறிய ராஜேஸ்வரி தன் கணவன் பக்கத்தில் சென்று அமர்ந்து கொண்டார்.


வாங்க! வாங்க ! மிஸ்டர் அக்னி சந்திர தேவ். அதான் உங்க அம்மாவே உத்தரவை கொடுத்துட்டாங்களே. வந்து ஆம்பளையா லட்சணமாய் தாலியை கட்டுங்க." என்றவளை கடும் கோபத்தில் முறைத்துப் பார்த்தவன் ஏதோ சொல்ல வர அதற்குள் முந்திக் கொண்ட அவளோ "அட எதுக்கு இப்ப இந்த முறைப்பு. தாலி கட்ட கஷ்டமா இருந்தா சொல்லுங்க நானே உங்களுக்கு கற்றேன்."என்று கர்வம் நிறைந்த கண்ணில் கண் சிமிட்டி அவனையே வெற்றிக் களிப்போடு பார்க்க...


தன் நிலைமையை நொந்தவாறு அவள் அருகில் இயந்திரமாய் அமர்ந்தான். அடுத்தடுத்து சடங்குகள் செய்து விட்டு .. அய்யர் கொடுத்த மாங்கல்யத்தை கையில் வாங்கியவன் ,


"அன்பினி சித்திரை... உன் வாழ்க்கையில இந்த நாள் ல மறந்துடாத. இனி உனக்கு ஒவ்வொரு நாளும் நரகமா தான் இருக்கும். என்ன பழி வாங்க வந்த உன்னை... உன்னோட உயிர் போகுற கடைசி நிமிஷம் வரைக்கும் சித்திரவதை பண்ணுவேன். எதுக்காக இவனோட வாழ்க்கையில வந்தோம்னு தினம் தினம்.. துடிக்க போற. சிரி இதுதான் வாழ்க்கையில நீ சிரிக்கிற கடைசி சிரிப்பு." என்றபடி அவளின் கழுத்தில் மூன்று முடிச்சு போட்டு முடித்தவன் குங்குமத்தை கையில் எடுத்து நெற்றி வகிட்டிலும், தாலியிலும் வைத்தான்.
 

அம்மு இளையாள்

Member
Vannangal Writer
Messages
22
Reaction score
38
Points
13
4. மருகும் மனதின் ரகசிய அறையில்....!


தாலி கட்டி முடித்ததும் தன் அறையை நோக்கி சென்றவனைத் தடுத்த ராஜேஸ்வரி... திருமணச் சடங்குகளை முழுமையாக முடிக்க சொல்ல அவனும் வேண்டா வெறுப்பாக அனைத்தையும் செய்து முடித்தான்.

தாலி கட்டுவதற்கு முன் அதிகாரமாக பேசியவள் தாலி கட்டியதும் ஏனோ பெரும் அமைதியைக் கடைப்பிடித்து கொண்டிருந்தாள் .... அவளைப் பார்த்தவாறு அமர்ந்திருந்த செந்திலிடம் ஏதோ சைகை செய்ய, அவரும் அங்கிருந்து நகர்ந்து வெளியே வந்தவர், நாகராஜை அழைத்து இங்கு நடந்த அனைத்தையும் தெரிவித்திருந்தார்.
நேற்றிரவு முதல் சிரிப்பு சத்தத்தில் மூழ்கியிருந்த மண்டபம் இன்று முழுவதும் வார்த்தையின்றி மௌனமாக காட்சியளித்தது. மீதமிருந்த சொந்தங்களும் கடமைக்கென வாழ்த்தி விட்டு அங்கிருந்து புறப்பட ஆரம்பித்தனர்.

அன்பினி வந்ததிலிருந்து அமைதியாக இருந்த செல்வகுமார் பணியாட்கள் இடம் திரும்பி "இந்த மண்டபத்திற்கான செட்டில்மென்ட் மத்த விஷயங்கள் எல்லாத்தையும் முடிச்சுட்டு வீட்டுக்கு கிளம்புங்க. ராஜேஸ்வரியும் அவங்க ரெண்டு பேரையும் கூட்டிக்கிட்டு நீ வீட்டுக்குப் போ. நான் கொஞ்சம் கோவில் வரைக்கும் போயிட்டு வரேன்." என்றவரின் மனநிலையை புரிந்து கொண்ட ராஜேஸ்வரி செல்பவரை தடுக்காது அவரையே பார்த்திருக்க,

மண்டப வாசலிலை நோக்கி சென்றவருக்கு எதிரில் வந்து நின்ற நாகராஜ் , செல்வகுமாரின் சட்டையை பிடித்து... "ஏன்டா உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா... ரெண்டாவது தடவையா இந்த வேலையை பார்ப்ப. உன்ன மாதிரியே தாண்டா உன் பையனும். பொறுக்கி நாயே இத்தனை வயசாகியும் உன் புத்தி இன்னும் மாறலையா. உன்னால தாண்டா என் குடும்பமே இப்படி ஆகிடுச்சு. அன்னைக்கு என் குடும்ப மானத்தை வாங்குன. இன்னைக்கு என் மனத்தை வாங்கிட்ட. பிச்சக்கார நாயே உன்ன நம்பி என் வீட்டுல விட்டது எவ்ளோ பெரிய தப்புன்னு ஒவ்வொரு நாளும் உணர்ந்துட்டு இருக்கேன். உன்னாலையும் உன் பையனாலையும் என்னுடைய தொழில் ல கூட பல நஷ்டம். இவ்வளவு பண்ணியும் உன் மனசு நிம்மதி அடையலையா. எவ்வளவு தைரியம் இருந்தா என் பொண்ண கூட்டிட்டு வந்து கல்யாணம் பண்ணி வச்சிருப்ப. அதுவும் உன் பையனுக்கு.... உன்னை எல்லாம் சும்மா விட கூடாது. இன்னைக்கு உன்னை கொன்னு என் குடும்ப மானத்தை காப்பாத்தல நான் நாகராஜ் இல்லடா."என்று ஆவேசமாக செல்வகுமாரை தாக்க சென்ற நாகராஜின் கையைபிடித்து தடுத்து நிறுத்திய ராஜேஸ்வரி,

"இங்க பாரு தேவையில்லாம என் புருஷன் மேல கைய வச்ச அப்புறம் நான் அண்ணன் கூட பார்க்க மாட்டேன்."என்றவரின் வார்த்தை தான் தேவ், திவ்யா இருவருக்கும் புதிதாக இருந்தது. இதுவரை தாய் தந்தை குடும்பத்தை பற்றி எதுவுமே தெரியாமல் வளர்ந்தவர்கள் இருவரும். தன் தந்தை அனாதை என்றும்.. தாய்க்கு பெரிய சொந்தம் இல்லை என்றும் கூறியே வளர்க்கப்பட்டவர்கள். திவ்யா இன்னமும் எதுவும் புரியாமல் பார்த்திருக்க,

தொழில்முறையில் நாகராஜ் க்கும் தன் தந்தைக்கும் ஆகாது என்பதை அறிந்தவன் தான் தேவ். அது தொழிலில் சகஜமாக இருக்கும் ஒன்று என்பதால் மேற்கொண்டு ஆராயாமல் தொழில் மூலமாகவே அவரை அடக்க முயற்சித்துக் கொண்டிருந்தான்.
ராஜேஸ்வரியின் சொல்லில் நாகராஜ் தன் தாயின் அண்ணன் என புரிந்து கொண்டான். மேலும் இது அன்பினுக்கு தெரியும் என்பதை அவள் மௌனமாக பார்ப்பதை வைத்து புரிந்து கொண்டவனின் பார்வை தான் உக்கிரமாக அன்பினி சித்திரையை தீண்டியது.

"அட ச்சீ!!! வாய மூடு யாருக்கு யார் அண்ணன். என் தங்கச்சி செத்துப் போயி பல வருஷம் ஆகுது. என்னைக்கு கல்யாண மண்டபத்திலிருந்து இதோ இங்க நிக்கிறானே இவன் கூட ஓடி வந்தாலோ அப்பவே அவ செத்துட்டா. இனி ஒரு வார்த்தை அண்ணன்'னு சொன்ன இவனோடு சேர்ந்து உன்னையும் கொன்னுடுவேன். உன்ன மாதிரி தான் உன் பையனையும் வளர்த்து வச்சிருக்க. உன் புருஷன் உன் மூலமா என் சொத்தை அடைய நினைச்சான் . அது முடியாம போச்சு... அதை இப்போ என் பொண்ணு மூலமா நிறைவேற்ற பார்க்கிறான் அயோக்கிய பையன். அதுக்கு நீயும் உன் பையனும் கூட்டா ..." என்ற நாகராஜின் வார்த்தையில் அக்னியாய் கொதித்த தேவ்.....



"யாரு நாங்க கூட்டா . நல்ல கற்பனை வளம் உங்களுக்கு. இதை தொழில் ல காட்டி இருந்தா நீங்க சொன்னீங்களே அந்த நஷ்டம் அது வந்திருக்கிறது. சரி தொழில் ல நஷ்டம் வந்துருச்சு'ன்னு எதாச்சும் காசு கேட்டா தர போறேன். அத விட்டுட்டு இப்படி பொண்ண முன்னாடி அனுப்பிட்டு பின்னாடி வந்து சண்டை போடுறீங்க. என் அப்பா பொறுக்கின்னா .. இவ்வளவு பெரிய மண்டபத்துல அத்தனை பேருக்கும் முன்னாடியும் வந்து மணவறையில் உட்கார்ந்து இல்லாத பொய்யை சொல்லி தாலி கட்டிக்கிட்ட உங்க பொண்ணு யாரு. உங்க வளர்ப்போட லட்சணம் தான் இந்த கல்யாணத்துக்கே காரணம். உங்க பொண்ண கட்டாயப்படுத்தி இங்க யாரும் தாலி கட்டல. உங்க அருமை மக தான் கட்டுனா என்னை தான் கட்டுவேன்னு அடம்பிடிச்சி எனக்கு பார்த்த பொண்ண துரத்தி விட்டுட்டு தாலி கட்டிக்கிட்டா. உங்க புத்தி தான உங்க பொண்ணுக்கும் இருக்கும். பொண்ண விட்டு என் சொத்தையும் தொழிலையும் திருட நினைச்ச மானங்கெட்ட ஜென்மம் நீங்க." என்றதும் அங்கே நின்றிருந்த விக்ரம் தேவ்வின் சட்டையை பிடிக்க,


நக்கல் பார்வையுடன் பிடித்த கையை எடுத்து விட்ட தேவ் "பணத்துக்காக பொண்ணையே அனுப்பி விட்டுட்டு...... என்னா நடிப்புடா சாமி. நீயும் அவன் பையன் தானே... அதான் தங்கச்சி பண்ண காரியத்துக்கு நாலு அரை விடாம அப்பா பின்னாடி ஒளிஞ்சிகிட்டு நிற்கிற. இந்த லட்சணத்துல ஐயாக்கு கோபம் வேற." என்றான்.

தந்தையுடன் வந்த விக்ரமிற்கு கட்டுக்கடங்காத கோபம் இருந்தது உண்மையே . ஆனால் தன் தந்தையின் வார்த்தையில் இது தொழிலையும் தாண்டி குடும்பப் பிரச்சினை என்பதை உணர்ந்தவன் அமைதியாக இருந்தான். அதையே தன் கோழைத்தனமாக எண்ணிய தேவ்வை முறைத்துக் கொண்டே அடிக்க கையை ஓங்க ,

"விக்ரம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்....."


"என் புருஷன் மேல கைய வச்ச... அப்புறம் இங்க நடக்குறதே வேற சொல்லிட்ட............" என அன்பினி கூற அதில் கடுப்பான விக்ரம் " என்ன டி என்ன நடக்கும். எல்லாமே உன்னால தான். இவன் ஒரு ஆளுன்னு இவன் பின்னாடி வந்திருக்க ‌‌.. ஆஹான்...!"



"ஒன்னும் நடக்காது. அவன் உன்னை அடிப்பான். நீ அவனை அடிப்ப. அந்த ஆக்ஷன் சீனை பார்க்கவா கஷ்டப்பட்டு இந்த கல்யாணத்தை நிறுத்தி நான் கல்யாணம் பண்ணிக் கிட்ட. இங்க பாரு யாரும் என்னை கடத்திட்டு வந்து கட்டாயக் கல்யாணம் பண்ணல. நான் அக்னியை விரும்புற. அவன இன்னொருத்திக்கு விட்டுத்தர என்னால முடியாது. அதனால தான் இந்தக் கல்யாணம். மத்தபடி என் மாமனார் பொறுக்கிம் இல்ல. என்னப்பா மானங்கெட்டவரும் இல்ல. நீ நடிக்கவும் இல்லை. புரிஞ்சுதா எல்லாருக்கும். தாலி கட்டிக்கிட்டு தனியா நின்னுட்டு இருக்க... கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாமல் சண்டை போட்டுட்டு இருக்கீங்க. கல்யாண நாள் அதுவுமா உங்க பஞ்சாயத்தை பார்க்க எனக்கு நேரமில்லை." என்றுவிட்டு வெளியில் நின்றிருந்த தேவ்வின் காரில் அமர்ந்துகொள்ள....,


தேவ் தான், "இப்போ தெரியுதா யார் பொறுக்கின்னு. பொண்ண ஆம்பளை யாவும்... இதோ இங்க நிற்கிறானே.... இந்த ஆம்பளைய பொண்ணாவும் வளத்து வச்சிருக்க நாகராஜ்." என நக்கலான சிரிப்பை சிரித்து மேலும் அவ்விருவரையும் கடுப்பேற்ற..

அருகிலிருந்த ராஜேஸ்வரி தான்..." போதும் தேவ் . வா நம்ம கிளம்பலாம். "

வீட்டிற்கு வந்த அன்பினியை யாரும் கண்டுகொள்ளவே இல்லை. அவளும் அதற்கு வருந்தவும் இல்லை. அப்படி இப்படி என இரவு வேளையும் நெருங்க அதுவரை வீட்டின் ஹாலில் அமர்ந்திருந்த அன்பினி சித்திரை அங்கிருக்கும் வேலையாட்களை அழைத்து முதலிரவுக்கு தேவையான பூ, பழங்கள் அனைத்தையும் ஏற்பாடு செய்யச் சொல்ல,


அதை கேட்டு கொண்டிருந்த ராஜேஸ்வரி தான் அன்பினியை ஏதோ அரிய வகை விஷ ஜந்துவை பார்ப்பது போல் பார்த்து வைத்தார். அப்பார்வை அவளும் உணர்ந்தாலும்..... கண்டுகொள்ளாமல் சமையலறைக்குள் நுழைந்து அங்கிருக்கும் குளிர்சாதனைப் பெட்டியில் இருந்த பாலை எடுத்து காய்ச்சி அதில் பாதாம் ,பிஸ்தா, முந்திரி, திராட்சை என கையில் கிடைத்த அனைத்தையும் சேர்த்து கொதிக்க வைத்து இரவு எடுத்து செல்வதற்காக தனியாக எடுத்துவைத்தாள்.


பின் , "திவ்யா" என சத்தமாக அழைக்க .. அக் குரலில் அறையில் இருந்து வெளியில் வந்த திவ்யாவிடம்,
"இன்னைக்கு எங்களுக்கு முதலிரவு. அதுக்காக நான் ரெடி ஆகணும். உன் ரூம் தேவைப்படுது நீ கொஞ்ச நேரம் வெளியே இரு." என்றவள் அவள் பதிலையும் எதிர்பார்க்காமல் உள்ளே சென்று கதவை தாழிட்டுக் கொண்டாள்.


திவ்யாவிடம் பேசிக் கொண்டிருந்ததை கேட்ட....தேவ், 'ஓஹோ ! மேடம்க்கு முதலிரவு கேக்குதோ...... வா ! வா! சிறப்பா கொண்டாடலாம்.' என நினைத்தவன் தன் அலுவலக அறைக்குள் நுழைந்து கொள்ள.... அவனது அறை முதலிரவுக்கு தயார் படுத்தப்பட்டது.


தன் ஒப்பனைகளை முடித்துக்கொண்டு வெளியே வந்த அன்பினி, சமையலறைக்குள் நுழைந்து தயார் படுத்தி வைத்திருந்த பாலையும் எடுத்துக் கொண்டு, நேராக ராஜேஸ்வரியிடம் சென்று ,

"அத்தை என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க. " என்றவளை அவர் கோபமாக முறைத்து பார்க்க , அதற்கெல்லாம் அஞ்சும் ரகம் நான் இல்லை என்பது போல்... அவர் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டு தன் அறையை நோக்கி நகர்ந்தாள் அன்பினி சித்திரை.


நடக்க போவதை அறிந்தும் உள்ளே சென்ற அன்பினியை வரவேற்றது என்னமோ அலங்கரித்த ஆள் இல்லாத அறை தான். 'எங்கே அவன்' என தேடியவாறு உள்ளே வந்தவளின் மேல் மாட்டு சாணம் கலந்த தண்ணீரை ஊற்றி அன்புடன் வரவேற்றான் அன்பினி சித்திரையின் கணவன் அக்னி சந்திர தேவ்.
 

அம்மு இளையாள்

Member
Vannangal Writer
Messages
22
Reaction score
38
Points
13
5. மருகும் மனதின் ரகசிய அறையில்..!


"வாங்க ! வாங்க! அன்பினி சித்திரை.... உங்களை மிகுந்த ஆத்திரத்தோடு வரவேற்கிறேன். எப்படி நம்ம வரவேற்பு மேடம் . நீ மண்டபத்துல வெறும் வாயால மட்டும் தான் வரவேற்ற நான் பாரு உனக்கு வாசனை திரவியத்தாலையே அபிஷேகம் பண்ணி வரவேற்கிறேன். எவ்ளோ நல்ல மனசுல எனக்கு . என்ன அன்பினி சித்திரை ! எவ்ளோ பாசமா வரவேற்கிற இப்படி முறைக்கிறீங்க..... எதுக்கு முறைக்கிறீங்க... ஹ்ம்ம் !!!!" என எதோ யோசிப்பது போல் நடித்தவன்..

"ஆஹான்...! கண்டுபிடிச்சிட்டேன். என்னடா இது வெறும் அபிஷேகம் மட்டும் பண்றான் புகழ்ந்து பேசலை ன்னு தானே முறைக்கீறிங்க."

நேற்றைய நாகராஜின் புதல்வியே வருக....
இன்றைய தேவ்வின் திருட்டு பொண்டாட்டியே வருக...
நாளை நடுத்தெருவில் பிச்சை எடுக்க போகும் பைத்தியக்காரியே வருக....
தன்னோட முதல் இரவுக்கு வெட்கமே இல்லாம தன்னை அலங்கரித்துக் கொண்டு இல்ல இல்ல மினிக்கி கொண்ட மேனாமினுக்கியே வருக வருக....

எப்படி நம்ம புகழ்ச்சி...அன்பினி சித்திரை. "

"ஏன் நீங்க மட்டும்தான் முதலிரவுக்கு பல்லை இளிச்சிக் கிட்டு நிற்கனுமோ... என்னோட புருஷன் கூட இருக்க தான வந்தேன்... அதுக்கு நான் எதுக்கு வெட்கப்படனும். கல்யாணம் ஆகி வீட்டுக்கு வந்த மருமகளை முதலிரவுக்கு ரெடி பண்ணி அனுப்பாத உங்க அம்மாதான் வருத்தப்படனும்..." அன்பினி.


" என் அம்மாவை பத்தி பேச உனக்கு எந்த தகுதியும் இல்லை. திருட்டுத்தனமா வந்து தாலி கட்டிக்கிட்டு உனக்கு இது ஒண்ணுதான் குறை. அத்தனை பேரும் முன்னாடியும் கொஞ்சம் கூட கூச்சமே இல்லாம தாலி கட்டிக்க வந்தவள் தான... அதான் இதுக்கும் நீயே வந்துவிடுவேன்னு விட்டுட்டாங்க போல. இருந்தாலும் சும்மா சொல்லக்கூடாது செம்மையா இந்த அறையை ரெடி பண்ணி இருக்க. இதுக்கு முன்னாடி முதல் இரவு அனுபவம் நிறையவோ......"


"அக்னீனீ...... " என்றழைத்தவளின் கழுத்தை நெருக்கியபடி சுவற்றில் சாய்த தேவ், "இன்னொரு தடவை அக்னி னு சொன்ன அவ்வளவுதான். ச்சீ!! உன்ன தொட்ட கூட பாவம் போடி..

நான் ஒன்னும் தப்பா சொல்லல.... ஃபிரண்ட்ஸ் நிறைய பேருக்கு முதலிரவுக்கு நீதான் டெக்கரேட் பண்ணியான்னு கேட்டேன். சரிய்ய்யாயா... அன்பினி சித்திரை. அப்புறம் இந்த மாதிரி வேலைய இத்தோட நிறுத்திக்க. என் அம்மா சொன்ன ஒரே காரணத்துக்காக தான் இன்னைக்கு நீ இந்த வீட்ல இருக்க." என்றவன் மெத்தையில் உறங்கச் செல்ல,

அவனையே கோபத்தோடு பார்த்திருந்தவள் தன் மேல் வரும் வாசனையை உணர்ந்து சுத்தப்படுத்த குளியலறை கதவை திறக்க ... அவளால் முடியாமல் போனது.

"மேடம்ம்ம்... கதவு திறக்காது." என தேவ் கூற, புரிந்து கொண்டவள் அறையின் வாசலுக்கு சென்று வெளியேற முற்பட்ட....

"அதுவும் திறக்காது.... இன்னிக்கி ராத்திரி முழுக்க இதோடவே இரு. இன்னிக்கு காலையில நீ பண்ணதுக்கான முதல் தண்டனை இது. வீணா ஏதாச்சும் பண்றேன்னு முயற்சி பண்ணாத. அப்புறம் பின்விளைவு இதைவிட மோசமா இருக்கும்." என்றவன் அறையின் விளக்கை அணைத்து விட்டு தூங்கச் சென்றான்.

அவனது செயலில் கோபம் இருந்தாலும்... இதை எதிர்பார்த்து தான் என்பது போல அவளும்... கதவில் சாய்ந்து அப்படியே நிற்க, தன்னையறியாமல் தூங்கியும் போனாள்.






வீட்டிற்கு வந்த நாகராஜ் ஆத்திரத்தில் வீட்டில் இருக்கும் பொருட்களை எல்லாம் ஒவ்வொன்றாக போட்டு உடைக்க.. அவரது மனைவி சாந்தி ஓடிவந்து நாகராஜ் தடுக்க,
மனைவியை ஓங்கி அடித்த நாகராஜ், "என்னடி பொண்ணு வளத்து வச்சிருக்க. என்ன தைரியம் இருந்தா அத்தனை பேரும் முன்னாடியும் என் மானத்தை வாங்கி இருப்பாள். அப்பங்காரன் நான் என்ன செத்தா போயிட்டேன். அவ கல்யாணம் பண்ணனும்'னு கேட்டு இருந்தா அடுத்த நிமிஷம் ஆயிரம் பேரை அவ முன்னாடி கொண்டு வந்து நிறுத்தி இருப்பேன். அதெல்லாம் விட்டுட்டு என்னோட துரோகி... அந்த செல்வகுமார் பையன கல்யாணம் பண்ணி இருக்காளே... அவ எனக்கு தான் பொறந்தாலான்னு சந்தேகமா இருக்கு."


"நீ என்னோட பையனானே எனக்கு சந்தேகமா இருக்கு.." என அங்கு வந்த நாகராஜ் அன்னை... "இத்தனை வருஷமா உன்கூட வாழ்ந்துட்டு இருக்க பொண்டாட்டி கிட்ட கேட்கிற கேள்வியா இது. உன் பொண்ணா இருக்க போய் தான் உனக்கு இவ்வளவு கோபம் வருது. தப்பு பண்ணவளை கேள்வி கேட்க முடியாம என் மருமக கிட்ட அதை காட்டிகிட்டு இருக்க. இத்தனை நாளா செல்லம் கொடுத்து வளர்த்து நீயா அவளா? இன்னிக்கு அவளை கேள்வி கேட்க உனக்கு எந்த உரிமையும் இல்லை. நானும் அவளும் எங்களோடு வாய தொறந்து இந்த வீட்டில பேசியே பல வருஷம் ஆகுது." என்றதுடன் நில்லாமல் மருமகளை அழைத்துக்கொண்டு அவர் அறைக்கு செல்ல,


"அப்பா! இப்ப எதுக்கு அம்மாவ திட்டிட்டு இருக்கீங்க. இது அம்மாக்கு தெரிஞ்சி நடக்க வாய்ப்பே இல்லை. உங்கள விட எனக்கு தான் அவ மேல வெறி அதிகமா இருக்கு. என் தங்கச்சி முன்னாடியே என்னை ஆம்பளையே இல்ல'ன்னு சொல்லிட்டான். இனிமே அவனுக்கு ஒவ்வொரு நாளும் நான் எப்படிப்பட்ட ஆம்பளைன்னு காட்டுறேன். நீங்க பேசாம இருங்க. நான் பார்த்துக்கிறேன்" விக்ரம்.


"அத்தை! அவரு என்ன சொல்றாரு. நம்ம அன்பினி கல்யாணம் பண்ணிட்டாளா . அதுவும் அவர் தங்கச்சி பையனையா? என்ன அத்தை நடக்குது இங்க. " சாந்தி.
"எல்லாமே நல்லபடியா தான் நடக்குது சாந்தி. அவ கல்யாணம் பண்ண போறது எனக்கு முன்னாடியே தெரியும்
சொல்லப்போனா அவளுக்கு இந்த ஐடியாவை கொடுத்ததே நான்தான்."

"அத்தை...!" என அதிர்ச்சியில் கத்திய மருமகளை அடக்கியவர் " கத்தாத சாந்தி . ஆமா எனக்கு முன்னாடியே தெரியும். அது மட்டும் இல்ல இந்த கல்யாணம் தான் இரண்டு குடும்பத்தையும் ஒன்று சேர்க்க போற ஆயுதம். உன் பொண்ணுக்கு அந்தப் பையன முன்னாடியே தெரியும் போல. அவங்களுக்குள்ள ஏதோ பிரச்சனை ஆகி பிரிந்துட்டாங்க. அவனோட கல்யாணத்தை கேள்விப்பட்டது ல இருந்து... உன் பொண்ணு ரொம்ப வருத்தப்பட்டுட்டு இருந்தா. அதனாலதான் என்ன நடந்தாலும் பரவாயில்லை'ன்னு இந்த ஐடியாவை சொன்னேன். அந்தப் பையன் என்னோட மகள் வளர்ப்பு. கண்டிப்பா தப்பானவனா இருக்க வாய்ப்பே இல்லை. நீ எதை நினைச்சும் கவலைப்படாம இரு. முக்கியமா இந்த விஷயம் உனக்கு தெரிஞ்ச மாதிரி காட்டிடாத. நாளைக்கு நம்ம ரெண்டு பேரும் ராஜேஸ்வரி வீட்டுக்கு போகலாம்."


காலையில் தன்னையறியாமல் துயில் கலைந்த அன்பினி இரவு முழுவதும் அப்படியே உறங்கியதால் கால் வலியும் கூடவே நேற்றிரவு ஊற்றிய நீர் வற்றிப் போய் உடலோடு ஒட்டி இருப்பதை உணர்ந்தவளுக்கு குமட்டிக் கொண்டு வர... வேகமாக குளியல் அறைக்குள் நுழைந்து கொண்டாள். சிறிது நேரத்தில் வெளியில் வந்தவள் அங்கே தேவ் இல்லாததை உணர்ந்து சுற்றுமுற்றும் தேட மணி பகல் பத்து என கடிகாரம் காட்டியது. 'ஓ.. புருஷன் வேலைக்கு போயாச்சோ... ' நம்மளும் ரெடி ஆகி கீழ போவோம்.

ஹாலிற்கு வந்த அன்பினியை வரவேற்றது சோபாவில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருக்கும் திவி தான்.

"திவி உன் அண்ணா ஆபீஸ் கிளம்பியாச்சா? " கேட்க,

என்ன பதில் சொல்வது என தெரியாமல் திருதிருவென திவ்யா முழிக்க,

"இப்ப என்ன கேட்டுட்ட எதுக்கு இப்படி முழிக்கிற." அன்பினி.

" அ..அது வந்துங்க... "

"நான் உனக்கு அண்ணி .அப்படியே கூப்பிடு திவி . "

இவர்களின் பேச்சு சத்தத்தைக் கேட்டுக் கொண்டிருந்த ராஜேஸ்வரி..., "திவி நீ உன்னோட ரூமுக்கு போய் ரெஸ்ட் எடு. நாளையிலிருந்து காலேஜ் இருக்குல்ல." என்றவர் அவளுக்கான காலை உணவை எடுத்து வந்து கண்ணில் படும்படி வைத்து விட்டு தன் அறைக்கு சென்றார்.

அவரின் முகம் காட்டா அக்கரையில் நெகிழ்ந்த அன்பினி ... மாமியாரின் கைப்பக்குவத்தில் பலமுறை சாப்பிட்டு இருந்தாலும் ஏனோ இன்று உரிமையாய் ருசி பார்க்க , "அத்தை..! பூரி சூப்பர். ரொம்ப நேரமா மறஞ்சு நின்னு பார்க்காதீங்க. கால் வலிக்க போகுது." என்று விட்டு மீண்டும் தீவிரமாக உண்ணத் தொடங்க, அவள் சாப்பிடுகிறாளா என மறைவாக நின்று கவனித்துக்கொண்டிருந்த ராஜேஸ்வரியோ 'எப்படி கண்டுபிடிச்சா... அப்படியே எங்க அண்ணன் மாதிரி போல.' என்னோட பையன் நிலைமை ரொம்ப பாவம்.

அலுவலகத்திற்கு வந்த தேவ் தன் வேலையில் மும்முரமாக இயங்கிக் கொண்டிருக்க.. அதைக் கலைப்பது போல் தொலைபேசி அழைப்பு வந்தது. புது நம்பராக இருப்பதால் யோசனையாக அதை எடுத்து "ஹலோ" என்க,

"என்ன புருஷா.. ! கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாம இப்படியா சொல்லாம வேலைக்கு போறது. காலையில எந்திரிச்ச உடனே குளிச்சுட்டு ஈரத்தலையோடு... அம்சமா ஒரு புடவை கட்டி கிட்டு உன்னோட காலைத் தொட்டு வணங்கி, தாலியை எடுத்து கண்ணுல ஒத்திக்கனும் ' னு நினைச்சிட்டு இருந்தா... இப்படி சொதப்பிடியே. போ புருஷா நீ ரொம்ப மோசம். " என்றவளுக்கு பதிலாக வந்தது என்னமோ அழைப்பு துண்டித்ததன் ஓசைதான். இருந்தும் மனம் தளராதவள்... அங்கு வேலை செய்யும் ஜீவாவை அழைக்க,


அவனும் புது நம்பராக இருப்பதால் எடுத்து... யார் என்ன கேட்க, " நான் உங்க எம் டி ஓட பொண்டாட்டி பேசுறேன். அவருக்கு போன் பண்ணா எடுக்கல உங்க நம்பருக்கு ஒரு வாய்ஸ் மெசேஜ் அனுப்புறேன் அதை என் புருஷனுக்கு போட்டு காட்டுங்க என்று உத்தரவிட,

நேற்று நடந்தது ஜீவாவுக்கும் தெரியும் என்பதால்... "மேடம் சார் திட்டுவாங்க." என்றவனை இடைவெட்டி " இங்க பாரு நான் சொல்ற வேலைய மட்டும் நீ செய்யலன்னா இனிமே உனக்கு அங்க வேலை இருக்காது.

பாக்குறியா..! " என்று பயமுறுத்த,
அதில் பதறிய ஜீவா "இப்பவே போறேன் மேடம்..." எனக் கூறிவிட்டு தேவ்வின் அறைக்குள் சென்றவன் ,

" சார் ..." என அழைக்க,

"என்ன ஜீவா! என்ன விஷயம் ."

"உங்களுக்கு ஒரு வாய்ஸ் மெசேஜ் வந்திருக்கு சார் ." என்றவன் தேவ்வின் பதிலைக் கூட எதிர்பார்க்காமல் போனில் இருக்கும் குரல் பதிவை ஓட விட அதில்,

மொட்டு மொட்டு மலராத மொட்டு...
கட்டு கட்டு எனை அள்ளி கட்டு..
ஒட்டு ஒட்டு இதழோடு ஒட்டு...
சிட்டு சிட்டு சீண்டாத சிட்டு....

ஆணழகா உன் அடிமை இங்கே நீ தேன் அள்ளி தூவிட வா...
தோள் இரண்டில் உன் இளங்கிளி நான்...
நீ தினம் தினம் கூடிடவா....

என்று அன்பினி அழகான தன் தேன் குரலில் பாட, அதைக்கேட்ட தேவ்வுக்கு தான் கட்டுக்கடங்காத கோபம் எழந்தது.

அதை உணர்ந்த ஜீவா தான் ...... தேவ் தன்னை அடிக்கும் முன் அங்கிருந்து ஓடி ஆரம்பித்திருந்தான்.

சில நிமிடங்கள் கடந்தும் கோபம் அடங்காமல் பற்களை கடித்துக்கொண்டு நுனி விரல்களை மேசையில் தட்டிக் கொண்டிருந்த தேவ்விற்கு சட்டென்று ஒரு எண்ணம் தோன்ற தன் வீட்டு காவலாளியை அழைத்தான்.

"அண்ணா வேகமா என் ரூமுக்கு போங்க சீக்கிரம்... சீக்கிரம்..."

காவலாளியும் முதலாளியின் வார்த்தையில் அவசரத்தை உணர்ந்து வேகமாக தேவ் அறைக்கு செல்ல,

"சார் ...! கதவு பூட்டி இருக்கு."

"வேகமா தட்டுங்க.... அண்ணா ரொம்ப அவசரம்."

தேவ்வின் வார்த்தையில் பதட்டம் கூட வேகமாக அறை கதவை தட்ட ஆரம்பித்தார் காவலாளி. அவரின் சத்தத்தில் கதவைத் திறந்த அன்பினி என்னவென கேட்க,

"அண்ணா அவ கையில மொபைலில் இருக்கா"

பதட்டமான குரலில் "இருக்கு சார்."

"அத வேகமா புடிங்கிட்டு மேல மொட்டைமாடிக்கு ஓடுங்க.‌ சீக்கிரம் சீக்கிரம்."

எதுவென யோசிக்கக்கூட நேரம் தராமல் அவரை பதட்டத்துடனே வேலை வாங்க ... தேவ்வின் சொல்படி போனை வாங்கி கொண்டு வேக வேகமாக மாடிக்கு ஓடியவர் மூச்சு வாங்கியபடி " சா....சார்ர்ர்ர்...‌வ .. வந்துட்டேன் சார்." என்க.

"சூப்பர் ண்ணா!! சூப்பர் ண்ணா!!! " என உற்சாகமாகிய தேவ் மேலும் "அதை அப்படியே கீழே தரையைப் பார்த்து தூக்கி போடுங்க." என்று தேவ் கூற,

புரியாத பதட்டத்துடன் அதை தூக்கி கீழே எறிய... அந்நேரம் காவலாளியின் செயலால் பதட்டத்துடன் அவரின் பின்னே ஓடி வந்த அன்பினி பார்வையில் சரியாக இக்காட்சி விழுந்தது.


கீழே விழுந்து நொறுங்கிய போனை பார்த்த காவலாளி, " சார் தூக்கிப் போட்டுட்டேன் சார். ஃபோன் மொத்தமா நொறுங்கிப் போச்சு. என்றுவிட்டு அதன்பின்னே பொறுமையாக "என்ன சார் ஆச்சு" என மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியபடி கேட்க,

"அது ஒண்ணும் இல்ல 'ண்ணா. அந்த ஃபோன்ல ஃபோன்'னு ... என்னை ரொம்ப வெறுப்பு ஏத்துற மாதிரி ஒரு வேலை பண்ணுச்சி. அதான் எனக்கு தொந்தரவு தர எதுவும் நல்லபடியா இருக்க கூடாதுன்னு தூக்கி போட சொன்னேன். இனி ஒன்னும் பிரச்சனை இல்ல'ண்ணா நீங்க உங்க வேலையை பாருங்க." என்றவனின் கூற்றில் ...

இன்றைய பலியாடு
அவர் தான் என்பதை தாமதமாக உணர்ந்த காவலாளி தன்னை முறைக்கும் அன்பினியை பார்க்காதவாறு அங்கிருந்து நகர,

விழுந்து நொருங்கிய ஃபோனில் அவள் சேமித்து வைத்த காதல் புகைப்படங்களும் நொறுங்கிப் போயிருக்குமோ என்ற அச்சத்தோடு அதையே பார்த்திருந்தால் அன்பினி
.



அம்மு இளையாள்.
 

அம்மு இளையாள்

Member
Vannangal Writer
Messages
22
Reaction score
38
Points
13
6. மருகும் மனதின் ரகசிய அறையில்...

சென்னையில் வசதி படைத்தவர்கள் ஓய்வெடுக்கும் உல்லாச இடமாக இருந்து வரும்... நைட் கிளப்பில் நாகராஜ் கையில் மதுக் கோப்பைகளுடன் அமர்ந்திருக்க... அவரின் அருகே கழுத்து வரை ஏறிய போதையோடு.. மாணிக்கம் அமர்ந்திருந்தார்.

எதையோ பேச வந்த இருவரும் தங்களை மறந்து வேறு உலகில் மிதந்து கொண்டிருக்க... அவர்கள் அருகில் வந்த இளைஞன் இருவரையும் முறைத்துக் கொண்டே... கொடுக்கப்பட்ட மதுவையும் வேண்டாமென்று ஒதுக்கி விட்டு மீண்டும் அவர்களை முறைக்க நிதானத்தில் இருந்த நாகராஜ் தான்,

"சூர்யா எதுக்காக இப்போ இவ்ளோ கோவம். இப்படி நடக்கும்'னு நானே எதிர்பார்க்கலை. அன்பினிய உனக்கு கல்யாணம் பண்ணி கொடுக்கணும்'னு தான் என்னோட ஆசை. அந்தக் கழுதை இப்படி பண்ணும்னு நான் எதிர்பார்க்கல."

"சும்மா காரணம் சொல்லாதீங்க அங்கிள். நான் எப்பவோ கல்யாண பேச்சை ஆரம்பிக்க சொல்லிட்டேன். நீங்கதான் இன்னும் கொஞ்ச நாள் போகட்டும் நான் அவகிட்ட பொறுமையா பேசுறேன்னு சொன்னீங்க. இப்ப பாருங்க பேசவே முடியாதபடி உங்க பொண்ணு பண்ணிட்டா. அன்பினிய கல்யாணம் பண்ணி தரேன்னு சொன்னதால தான் .. உங்க தொழிலில் நஷ்டமா இருந்தாலும் நான் பார்ட்னர்ஷிப் புக்கு சம்மதிச்சேன். பிளான் பண்ணி என்னை ஏமாற்றி இருக்கீங்க... எப்படி கோபப்படாம இருக்க முடியும். எங்க அப்பா வந்து உங்ககிட்ட ஞாயம் கேட்பாங்கன்னு பார்த்தா சேர்ந்து குடிச்சிட்டு இருக்காரு."

"சூர்யா.. உன்னை ஏமாற்றும்'னு நான் என்னைக்கும் நினைக்கல. இப்பவும் சொல்றேன் எப்படியாது அந்த பரதேசி கிட்ட இருந்து என் பொண்ணு பிரிச்சு உனக்கு கல்யாணம் பண்ணி தரேன். உனக்கு ஓகே தானே..." என தந்தை ஸ்தானத்தை மறந்து நாகராஜ் உளற,

"அங்கிள்!! அன்பினிய நான் காலேஜ் படிக்கிறது ல இருந்தே லவ் பண்ணிட்டு இருக்கேன். அவளுக்காக நான் எவ்வளவு தியாகம் பண்ணி இருக்கேன்னு எனக்கு மட்டும் தான் தெரியும். இத்தனை வருஷமா அவளுக்காக காத்துகிட்டு இருக்கேன்...
என் அன்பினி எனக்கு வேணும். அதுக்கு குறுக்க யாரு வந்தாலும் அவங்க சாவு என் கையில் தான்."

"இப்ப சொல்றேன் சூர்யா நல்லா கேட்டுக்கோ... என் பொண்ணு அன்பினி உனக்கு தான். ஒரு மூணு மாசம் டைம் கொடு.. அந்த பரதேசியை என் பொண்ணு கிட்ட இருந்து பிரித்து உனக்கு கல்யாணம் பண்ணி தரேன்."

"இல்ல அங்கிள் இனிமேல் உங்களை மட்டும் நம்ப முடியாது. நானும் கூட சேர்ந்து அவங்களை பிரிகிறேன். நான் சொல்ற மாதிரி மட்டும் நீங்க பண்ணுங்க. நாளையிலிருந்து ஆபீசுக்கு நானும் வரேன். அவன் பலமா நினைக்கிற அந்த தொழில அவன் கையிலிருந்து முதல் பிடுங்கனும். அப்புறம் தானாவே அன்பினி பிரிஞ்சிடுவாள். இல்லனா நான் பிரிய வைப்பேன்."


மறுநாள் சாந்தி தன் மாமியார் செவ்வந்தியுடன்
ராஜேஸ்வரி இல்லத்துக்கு வர...
இவர்களை எதிர்பார்க்காத ராஜேஸ்வரி ஸ்தம்பித்து நின்றார்.
அன்னையைக் கண்டு வருடங்கள் பல இருக்கும். கடைசியாக மண்டபத்தை விட்டு வெளியேறும் பொழுது தாயின் முகத்தை பார்த்ததோடு சரி..
அதன்பின் பலமுறை அன்னை செவ்வந்தியை காண முயற்சித்தாலும் நாகராஜ் அதை ஒருபோதும் அனுமதித்தது இல்லை . அண்ணன் தன் கணவருக்கு தரும் அத்தனை இடைஞ்சல்களும் தாய் செவ்வந்திக்கு தெரிந்து நடப்பதாக எண்ணிய ராஜேஸ்வரி நாட்கள் செல்ல செல்ல அவரை காணவும் விரும்பவில்லை. தன் கணவன் தன் பிள்ளைகள் என இந்த கூட்டுக்குள்ளே வாழ ஆரம்பித்திருந்தார்... கிட்டத்தட்ட முப்பது வருடங்கள் கடந்து இன்று தான் செவ்வந்தியை பார்க்கிறார்.

வந்தவரை வரவேற்க தோன்றாது அப்படியே ராஜேஸ்வரி நின்றிருக்க, அந்நேரம் கீழே இறங்கி வந்த அன்பினி தான் பாட்டியை பார்த்துவிட்டு துள்ளலோடு.... "பாட்டிடிடி.... எப்போ வந்தீங்க.
வாங்க.. ! வாங்க! உள்ள வாங்க..!! பாட்டி. அம்மா நீங்களும் வாங்க." என்று இருவரையும் வரவேற்றாலும் ஏனோ அவர்கள் உள்ளே வராமல் ராஜேஸ்வரியை பார்த்திருக்க..., அதைப் புரிந்து கொண்ட அன்பினி அமைதியாக நிற்க தொடங்கினாள்.

காலை உடற்பயிற்சி முடித்துவிட்டு வீட்டிற்கு வந்த செல்வகுமார் பார்வையில் இவர்கள் விழ , பழைய நினைவுகள் மனக்கண்ணில் ஓட்டம் எடுக்க தயங்கியவாறு அவர்களை வரவேற்க தொடங்கினார்.

ராஜேஸ்வரியும் தன் சுயம் திரும்பி " உள்ள ‌வாங்க ம்மா. வாங்க அண்ணி. என்றழைக்க , பல வருடம் கழித்து கேட்கும் மகளின் குரலில் கண்ணில் நீர் வழிய ....

"ராஜீ .... எப்படிம்மா இருக்க." கேட்க,

"நீங்களும் உங்க மகனும் கொடுத்த எல்லா தொந்தரவையும் தாங்கிக்கிட்டு இன்னும் உயிரோடதான் இருக்கேன் ம்மா. " என்றவர் சமையலறைக்குள் சென்று தேனீர் கலந்து இருவரிடமும் கொடுக்க மறுக்காமல் வாங்கிக் கொண்டனர்.

"உனக்கு அம்மா மேல கோவம் இருக்குன்னு தெரியும். ஆனா நானும் இதோ உன் அண்ணியும் உன்னை பத்தி பேசாத நாள்‌ இல்ல ராஜீ. உன் அண்ணனை பத்தி உனக்கே தெரியும். அவனை மீறி இங்க வந்தா இன்னும் பிரச்சினை பெரிசாகும். அதுக்காகவே இத்தனை வருஷமா நான் வெளியே கூட வரதை நிறுத்திட்டேன்."

"இப்போ மட்டும் எதுக்கு வந்தீங்க..." என்ற கணீர் குரலில் சாந்தி, செவ்வந்தி இருவரும் திரும்பி மேலே பார்க்க, தன் அலுவலக மடிக்கணினி பையை கையில் பிடித்துக்கொண்டு படி இறங்கிய தேவ் கேட்க,

"தேவ்..அவங்க உன்னோட அம்மாவோட அம்மா."

"அதுக்கு... என்ன பண்ணலாம் ப்பா. திடீர்னு யாரோ ஒருத்தவங்க வந்தா நீங்க உள்ள விடுவீங்களா! இத்தனை நாள் இல்லாமல் இப்போ எங்க இருந்து வந்தாங்க அம்மா. எனக்கு என் அம்மா மட்டும் தான் தெரியும். அம்மாவோட சொந்தக்காரங்க யாருமே இல்ல. அப்படித்தான் நீங்களும் எங்களை சொல்லி வளர்த்தீங்க. இப்ப புதுசா என்ன உறவு ...." என்றவனின் வார்த்தையை கேட்ட இருவரும் ராஜேஸ்வரியை பார்க்க,

அவரோ எதுவும் செல்லாமல்... அமைதியாகவே நின்றிருந்தார்.

அதுவரை பார்வையாளராக இருந்த அன்பினி... " அவங்க உங்க அம்மாவோட சொந்தக்காரங்களா வரல. என்னோட சொந்தக்காரங்க வந்திருக்காங்க. என் அம்மாவும், பாட்டியும் என்னை பார்க்க வரத தடுக்க உன்னால முடியாது அக்னி."

"ஓஹோ!! அப்படியா... அன்பினி சித்திரை. நீயே இந்த வீட்டுக்கு சொந்தக்காரி இல்ல.. இதுல உனக்கு சொந்தக்காரங்க வேற. அது எப்படி குடும்பத்துக்கே வெட்கம், மானம், சூடு , சொரணை எதுவுமே இல்லாம இருக்கீங்க. அன்னைக்கு என்னமோ மண்டபத்துல உங்க அப்பன் அந்த துள்ளு துள்ளினான். நான் சொன்ன மாதிரி பொண்ண அனுப்புற மாதிரி அனுப்பி வைச்சிட்டு முதல்ல அப்பனும், மகனும் வந்தாங்க. பின்னாடியே அம்மாவும், பாட்டியும் வராங்க . எதுக்கு இந்த வெட்டி பந்தா..... உன்னை பார்க்க யாராச்சும் வந்தா அவங்களை வாசலோட நிறுத்தி பார்த்துக்க. என் வீட்டுக்குள்ளே யாரு வரணும்னு நான் தான் முடிவு பண்ணனும்." என்றுவிட்டு அலுவலகத்திற்கு புறப்பட்டு சென்றான்.

செல்வகுமார் தான் , " மேடம்! தப்பா நினைச்சுக்காதீங்க.. அவனுக்கு கொஞ்சம் கோவம் அதான் இப்படி பேசிட்டு போறான். நடந்ததை ‌எடுத்து சொல்லி நான் புரிய வைக்கீறேன் மேடம். நீங்க தப்பா நினைக்காம இனி அடிக்கடி வீட்டுக்கு வாங்க..." என்று செவ்வந்தியிடம் கூற,

"மாப்பிள்ளை எதுக்காக இன்னும் இந்த மேடம். உங்களை என் மருமகனா ஏத்துகிட்டு பல வருஷம் ஆகுது. என்ன அதை வெளியே சொல்லிக்க முடியல. என் பேரன் கேட்டது ல எந்த தப்பும் இல்ல. அவன் கோபம் நியாயமானது தான. பாட்டி, அத்தை ,மாமா னு இத்தனை சொந்தம் இருந்தும் தனியா தான வளர்ந்து இருக்காங்க. போகப் போக எல்லாம் சரியாகிடும். நாகராஜ் மேலே இருக்க கோபத்தை.. அன்பினி மேல காட்டாதீங்க மாப்பிள்ளை. என் பேரன் எவ்ளோ நல்லவனோ அதே அளவுக்கு என் பேத்தியும் நல்லவள். இந்த கல்யாணம் ஏன் நடந்துச்சுன்னு.. போகப்போக உங்களுக்கே புரியும். அதுவரைக்கும் என் பேத்தியை நல்லா பாத்துக்கோங்க மாப்பிள்ளை. என்றவர் அங்கிருந்து கிளம்ப தயாராக,

"என்ன அதுக்குள்ள கிளம்பிட்டீங்க. உங்க பேத்தியும் மகளையும் பார்த்து பேசிட்டு, சாப்பிட்டுட்டு பொறுமையா கிளம்புங்க. "என்று செல்வகுமார் சொல்ல,

"இருக்கட்டும் மாப்பிள்ளை . இனி தினமும் இங்க வர தான போறேன். பொறுமையா பேசிக்கலாம். எதுவும் சட்டுன்னு மாறாதே."

நகராஜ், மாணிக்கம் ,சூர்யா மூவரும் அலுவலகத்தில் கூடியிருக்க அங்கு வந்த விக்ரமோ, "என்ன ஒரு அதிசயம் இன்னைக்கு நாலு பேரும் ஒரே இடத்துல இருக்கோம். அதுவும் சூர்யா ஆபிஸ் பக்கமே வரமாட்டான். இன்னிக்கு அவனும் வந்திருக்கான் என்ன சூர்யா என்ன விஷயம்." கேட்க,

" இப்ப வர வேண்டிய கட்டாயம் விக்ரம். உன் தங்கச்சியை கல்யாணம் பண்ணி தரேன்னு உங்க அப்பா சொன்னாரு. இப்ப என்னடான்னா அன்பினி அந்த தேவ்வை கல்யாணம் பண்ணிக்கிட்டாள். அதான் உன் அப்பா கிட்ட நியாயம் கேட்க வந்திருக்கோம்."என்ற சூர்யாவின் வார்த்தையில் தன் தந்தையை பார்த்த விக்ரம்,

"அப்பா இது என்ன புது கதை. சூர்யா சொல்றது உண்மையா. ஒரு மூணு நாளாவே தொடர்ந்து அதிர்ச்சியான விஷயமாவே என் காதுல விழுது. இன்னும் என்னென்ன விஷயம் மறைச்சு வச்சிருக்கீங்க ப்பா." என்று ஆதங்கமாக கேட்க,

"இல்ல விக்ரம் உன்கிட்ட மறைக்கனும்னு ஒன்னும் இல்ல. அன்பினி கொஞ்ச நாள் ஃப்ரீயா இருக்கட்டும்'னு நினைச்சு விட்டேன். கடைசியில் அது இங்க கொண்டு வந்துவிடும்'னு
நினைக்கல. சூர்யா அன்பினியை விரும்புவதா சொன்னான்." நாகராஜ்.

"அது இருக்கட்டும் ப்பா. இத்தனை நாளா செல்வகுமார் பத்தி ஏன் சொல்லாம இருந்தீங்க."என்று கேட்கும் மகனுக்கு ...,

"சொல்ற அளவுக்கு அந்த நாய்க்கு அவ்வளவு தகுதி இல்லை விக்ரம். அவன் ஒரு அனாதை. காலேஜ் படிக்கும்போது பழக்கமாகி... இதே ஆபீஸ்ல தான் வேலைக்கு சேர்ந்தான். நன்றி கெட்ட நாயி ... ராஜேஸ்வரிக்கு கல்யாண நடக்கிற அன்னைக்கு அவளை மிரட்டி கூப்பிட்டுட்டு ஓடி போய்ட்டான். அன்னைக்கு நான் பட்ட அவமானத்தை இப்ப நினைச்சா கூட ஆத்திரமா வருது விக்ரம். ஆனாலும் அவனை என்னால ஒண்ணும் பண்ண முடியல." என்று அடிபட்ட பாம்பாய் நாகராஜ் சொல்ல,

"அப்பா அது எப்படி அவர் கூப்பிட்டா உங்க தங்கச்சி போவாங்க. அவங்களும் விரும்பி இருக்குறதால‌ தான கல்யாணம் பண்ணி இருக்காங்க. அன்னைக்கு அந்த மண்டபத்துல கூட அவங்க ஹஸ்பண்ட்டை விட்டுக் கொடுக்காம தான பேசினாங்க. இதுல மிரட்டி எப்படி கல்யாணம் பண்ண முடியும்..."என விக்ரம் ஞாயமான கேள்வியை எழுப்ப அதைக் கேட்டுக் கொண்டிருந்த மாணிக்கம் சூர்யாவின் காதில்,

"சூர்யா.. இவன் என்னடா இவ்வளவு ஞாயமா கேள்வி கேட்கிறான். இப்படியே போனா அவங்க பக்கம் இருக்க நியாயத்தைலாம் கண்டுபிடிச்சு பிரிந்த சொந்தத்தை சேர்த்து வைச்சிடுவான் போல. இப்படியே போச்சுன்னா... ராஜேஸ்வரியை நம்பி நான் ஏமாந்த மாதிரி... அன்பினியை நம்பி நீயும் ஏமாந்து நிக்க போற. விக்ரம் நம்ம பக்கம் இருந்தா மட்டும் தான் நம்ம நினைச்சது நடக்கும். எப்படியாவது இவனை அந்த தேவ் பக்கம் திருப்பி விடனும். அப்போதான் நம்ம காரியம் சாதிக்க முடியும்." எனக்கு கூற,

"உண்மை தான் பா... இனியும் அமைதியா இருந்தா ரெண்டு குடும்பமும் சேர்ந்து நமக்கு ஜிலேபி கொடுத்துடுவாங்க. இப்ப பாருங்க..." என்றவன் விக்ரமிடம்,

"விக்ரம்! எப்பவோ நடந்த கல்யாணத்தை பத்தி இப்ப எதுக்கு ஆராய்ச்சி. உன் தங்கச்சி இப்ப பண்ணிக் கிட்ட கல்யாணம் அவ ஆசைப்பட்டு பண்ணல. அந்த தேவ் இருக்கானே அவன் தான் உன் தங்கச்சியை ஏமாத்திட்டான்." என்றவனின் நயவஞ்சக சூழ்ச்சியில் விழ தயாரான விக்ரம்,

"என்ன சொல்ற சூர்யா. என் தங்கச்சிக்கும் அவனுக்கும் அப்படி என்ன நடந்துச்சு."
"நானும் அன்பினியும் படிச்ச அதே காலேஜ்ல தான் அந்த தேவ்வும் படிச்சான். அங்க உன் தங்கச்சிய காதலிக்கிற மாதிரி... நடிச்சு ஒட்டுமொத்த காலேஜ் முன்னாடியும் அவமானப்படுத்தினான். அந்த அவமானத்துல தான் உன் தங்கச்சி அவனை பழிவாங்க கல்யாணம் பண்ணி இருக்காள். ஆசைப்பட்டு பண்ணிக்கல.... உன் தங்கச்சிக்கு நடந்த அநியாயத்தை பத்தி பேசாம யாரையோ பத்தி பேசிட்டு இருக்க." என்ற சூர்யாவின் வார்த்தையில் தேவ்வியின் மீது வன்மை மரத்தை... நீரூற்றி வளர்க்க ஆரம்பித்திருந்தான்.

"என்ன சொல்ற சூர்யா! உண்மையாவா......அவன் என் தங்கச்சிய ஏமாற்றினானா. இத இத்தனை நாளா எதுக்கு என்கிட்ட சொல்லல. என் தங்கச்சியை ஏமாத்திட்டு அன்னைக்கு அந்த மண்டபத்தில் என்னம்மா பேசினான் தெரியுமா. நான் ஆம்பளை இல்லையா பொண்ணு மாதிரி அமைதியா நிக்கிறன்னு அசிங்கப்படுத்துனான். ஏற்கனவே தொழில்ல அவனால நிறைய பிரச்சனை. இதுல என் அப்பாவையும் என்னையும் அசிங்கப்படுத்தி இருக்கான். இந்த ரெண்டு காரணத்துக்காகவே அவனை சாகுற வரைக்கும் பழி வாங்கணும். "

"உன்கிட்ட பொய் சொல்லி எனக்கு என்ன வரபோகுது விக்ரம். அன்பினி தான் இத யார்கிட்டயும் சொல்ல வேண்டாம்'னு சத்தியம் வாங்கிட்டாள்."

"சூர்யா... என் தங்கச்சி அவனை பழிவாங்க தான் கல்யாணம் பண்ணி இருக்குறது உண்மை'னா .... அதுல இனிமே என் பங்கும் இருக்கும். ஒவ்வொரு நாளும் அந்த தேவ் துடிக்கனும். என்னை ஆம்பள மாதிரி இல்ல'ன்னு சொன்னான் ல ... அந்த வார்த்தைக்காகவே வாழ்க்கை முழுக்க என் முகத்தை நிமிர்ந்து பார்க்க முடியாதபடி பண்ணனும். முதல்ல இந்த தொழில்ல அவனுக்கு அடிமேல் அடி தரணும்" என்றவன் தன் தந்தையிடம் சென்று,

"அப்பா.. போன வாரம் ஏதோ ஒரு கான்ட்ராக்ட் அந்த தேவ்க்கு கிடைக்கிற மாதிரி இருக்குன்னு சொன்னீங்க ல . எனக்கு அதோட டீடைல்ஸ் மொத்தமும் கொடுங்க. அது தான் அந்த தேவ்விக்கு நான் கொடுக்கப் போற முதல் அடி. இனி அவனா நானான்னு பார்க்கலாம் ." என்றவளின் வார்த்தையில் குஷியாகிய சூர்யா,

"சூப்பர் விக்ரம்.
இனிமே உன் கூட நான் இருக்கேன். எந்த உதவியா இருந்தாலும் செய்ய தயாரா இருக்கேன். நம்ம ரெண்டு பேரோட குறிக்கோள் அந்த தேவ்வை அழிக்கணும். அன்பினியை அங்கிருந்து வெளிய வர வைக்கணும். இந்த சபதத்து ல நம்ம நிச்சயமா ஜெயிக்கணும்." என்றான் மனதில் வன்மத்தோடு .


எஸ் ஆர் பேலஸில் நுழைந்த அன்பினி... ஃபோனில் ஜீவாவை அழைக்க, அவனோ நேற்று நடந்த நிகழ்வில் அழைப்பை ஏற்காமல் போனையே பார்த்துக் கொண்டிருக்க,

"ஏன்டா ஜிவா போன் பண்ணா எடுக்கணும். இப்படியே பார்த்துட்டு இருக்க கூடாது."என்ற அன்பினியின் குரலில்.... வெடுக்கென அலறி எழுந்து நிற்க,

"பதறாத பதறாத.... இப்போ உன்னை ஒன்னும் பண்ண மாட்டேன். ஆனா இதுவே கடைசியா இருக்கணும். இனி ஒரு தடவ நான் போன் பண்ணி எடுக்காம மட்டும் இருந்து பாரு...."
"எ... என்ன... மேடடடம்ம்ம்... என்ன பண்ணுவீங்க."

"ஆஹான்! என்ன பண்ணுவன்னுனா கேட்குற.. அதோ அங்க இருக்காளே ஷாலினி.... அவ வீட்ல பேசி நானே என்னோட தலைமையில ஒரு கல்யாணத்தை பண்ணி வைச்சிடுவேன். உனக்கே தெரியும் உன்னோட பாஸ் கல்யாணத்தையே நிறுத்துன ஆள் நானு. அவ கல்யாணத்தை நடத்த மாட்டானா என்ன." என அன்பினி அழகாக ஜீவாவை மிரட்ட,

"மேடம் இன்னைல இருந்து நான் உங்களுக்கு விசுவாசி. நீங்க சொல்றத மட்டும் தான் நான் செய்வேன். இனிமே எனக்கு பாஸ் நீங்க தான். இப்ப சொல்லுங்க.. உங்க அடிமை நான் என்ன பண்ணனும்." என்ற ஜீவாவின் பேச்சில் சிரிக்க தொடங்கிய அன்பினி..,

"நல்லா வருவ ஜீவா நீ. இன்னைக்கி இங்க ஒரு சம்பவம் நடக்கப் போகுது. அது நடக்கிற வரைக்கும் நீ உன்னோட பாஸ் ரூம்குள்ள வரவே கூடாது. வேற யாரையும் வர விடவும் கூடாது சரியா.." என்றவள் தேவ்வின் அறை நோக்கி செல்ல,

ஜீவாவின் மனசாட்சி தான் அவனிடம் கேள்வி கேட்டது 'நீ என்ன வேலை பாக்குறன்னு தெரியுமா' என்று.

தேவ்வின் அறைக்கும் நுழைந்தவள்... "க்கும்... க்கும்" என்று குரலில் கணைப்பை கூட்டி தன் வரவை தெரிவிக்க,
தலை நிமிராமல் தன் வேலையில் கவனம் செலுத்தியவாறு ..., "எதுக்காக இங்க வந்த."

.........

"அன்பினி சித்திரை சண்ட போடுற மூடுல நான் இல்ல. எனக்கு நிறைய வேலை இருக்கு. நல்ல படியா சொல்ற இங்கேருந்து போயிடு ‌. என்னை கோபப்படுத்தி பார்க்காத அது உனக்கு நல்லது இல்ல."

"நான் உன்னை கோபப்படுத்த ஒன்னும் வரல. சாப்பாடு கொண்டு வந்திருக்கேன்."என்றவளின் வார்த்தையில் தலையை நிமிர்த்திய தேவ்,

"நீ யாருடி எனக்கு சாப்பாடு எடுத்துட்டு வர."

"ஒரு காலத்துல நீ யாரா இருந்து எனக்கு சாப்பாடு எடுத்துட்டு வந்தியோ அதுதான் இப்போ எனக்கும்." என்ற அன்பினி வார்த்தையில் டேபிளில் இருந்த பேப்பர் வெயிட்டை அவள்மீது தூக்கி அடித்தவன்...
"ஜீவாவா..."என்றழைக்க அவனும் தன் விதியை நொந்தபடி உள்ளே செல்றான்.


"யாரைக் கேட்டு என் ரூம் குள்ள இவளை விட்ட . இனிமே இப்படி நடந்தா உனக்கு இங்க வேலை கிடையாது. என்றுவிட்டு அன்பினியிடம்,
"உனக்கு அவ்வளவு தான் மரியாதை. கொண்டு வந்ததை எடுத்துட்டு ஓடிரு."

"ப்ச்! அக்னி சாப்பாட்ட வீணாக்கக்கூடாது."

"அப்போ நீயே தின்னு தொலை..."

"புருஷன் பேச்சுக்கு மறு வார்த்தை ஏது...... " என்றவள் தேவ்வின் அருகில் அமர்ந்து வாழை இலையை விரித்தவள் கொண்டு வந்த உணவு மொத்தத்தையும் இலையை மறைக்கும் அளவிற்கு ஒவ்வொன்றாக அடுக்கி அழகாக சாப்பிடவும் ஆரம்பித்தாள்.

காலையில் இருந்து சாப்பிடாமல் இருந்த தேவ்... பசியில் வேலைப் பார்த்துக் கொண்டிருக்க.... அருகில் இருந்து வரும் பிரியாணி, கோழிக்கறி குழம்பு வாசனை தொந்தரவு செய்ய ஆரம்பித்தது. அவன் மனதை அறிந்தவள் போல் "அக்னி டேஸ்ட் எப்படி இருக்கு. சூப்பரா இருக்குல்ல..."என்றவளை முறைக்க,

அங்கு நின்றிருந்த ஜீவா தான்..., "மேடம் சாப்பிடுறது நீங்க ..டேஸ்ட் எப்படி இருக்குன்னு சார்கிட்ட கேக்குறீங்க..."

"அதுவா ஜிவா... உங்க சார் என் மனசுல தான இருக்காரு. அப்போ நான் சாப்பிடற சாப்பாடு அவரை தாண்டி தான் என் வயிற்றுக்குள்ளேயே போகும். அதான் பேஸ்ட் எப்படி இருக்குனு கேட்டேன்." என அன்பினி அம்சமாக பதிலளிக்க,

தன்னை முறைத்துக் கொண்டிருக்கும் தேவ்வியின் பார்வையை அப்போது தான் உணர்ந்த ஜிவா " சாரி சார்..."
என்று நடையை கட்டினான்.

ஜீவா சென்றதும் ஏனோ இருவருக்கும் பழைய நாட்கள் நினைவு வர..... அன்பினி முகத்தில் சிரிப்பும் , தேவ்வின் முகத்தில் எரிமலை வெடிப்பும்.... சிதற ஆரம்பித்திருந்தது.



அம்மு இளையாள்.
 

அம்மு இளையாள்

Member
Vannangal Writer
Messages
22
Reaction score
38
Points
13
7. மருகும் மனதின் ரகசிய அறையில்.....!


உணவுகளால் மறைக்கப்பட்ட இலையை கண்டுபிடித்த பெருமை அன்பினியையே சேரும் என்பதைப்போல் இலையில் உள்ளதை அழகாக வழித்து உண்டவள்....' ஓஓவ்வ்வ்" என ஏப்பம் விட்ட படி "முடிஞ்சது. வந்த வேலை முடிஞ்சது........" என்றவள் மீதி வார்த்தையை சொல்லும் முன் அவசரமாக உள்ளே வந்த ஜீவா,


" சார்! டெண்டருக்கு ரெடி பண்ணி வச்சிருந்த போல்டர் இப்ப காணோம் சார் . அது மட்டும் இல்ல ஆபீஸ்ல உள்ள எல்லா சிஸ்டமும் எரர் ஆகியிருக்கு சார். " என்றதும் பதறிய தேவ்,
"ஜீவா அது எப்படி ஒரே நேரத்துல எல்லா சிஸ்டமும் எரர் ஆகும். டாக்குமெண்ட் போல்டர் காணோம்'னா என்ன அர்த்தம்...
லேப்டாப் ல
இருந்த போல்டர் எப்படி காணாம போகும். அது என்ன குழந்தையா தவழ்ந்து போக..."

"சார்!! எனக்கும் ஒண்ணும் புரியல சார். இவ்ளோ நேரம் நல்லா இருந்த சிஸ்டம் டக்குன்னு ஒரே நேரத்துல எரர் காட்டுது. ஏதாவது நெட்வொர்க் பிரச்சனையா இருக்கும்'னு செக் பண்ணி பார்த்தேன் சார். எல்லாமே சரியா இருக்கு. டாக்குமெண்ட் போல்டர்.. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கூட நான்தான் எடிட் பண்ணிட்டு இருந்தேன் சார். எப்படி போச்சுன்னு சத்தியமா தெரியல சார்..." என பாவமாக கூற,


"அறிவு இருக்கா இல்லையா ஜீவா. இந்த டெண்டர் எவ்வளவு முக்கியம்'னு சொல்லியிருந்தேன்னா இல்லையா? இவ்வளவு சாதாரண வந்து சொல்ற. சரி ! அந்த டாக்குமெண்ட்டை வேற எங்கேயாவது சேவ் பண்ணி வச்சீங்களா?" என்ற தேவ்விற்கு இல்லை என்று பதில் வர......,

கடுங்கோபத்தில்.... அங்கிருக்கும் பொருட்களை எல்லாம் உடைக்க ஆரம்பித்தான் தேவ்.


அங்கு ஒருவன் கடுங்கோபத்தில் பொருட்களை உடைத்து கொண்டிருக்க, எனக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல்,
"ஜீவா சார்.. நான் வந்த வேலை முடிஞ்சுது கிளம்பட்டுமா." என்ற அன்பினி ஜீவாவிற்கு கை அசைத்தவாறு அறையில் இருந்து வெளியேறி மின்தூக்கி இருக்கும் இடம் நோக்கி நகர,


அது வரை கோபத்தில் கத்தி கொண்டிருந்தவனின் மூளையில் சட்டென மின்னல் அடிக்க..., வேகமாக அன்பினை நோக்கி ஓடத் தொடங்கினான்.
அவன் வரும் நேரம் மின்தூக்கி வந்துவிட உள்ளே சென்ற அன்பினி தரை தளத்திற்கு செல்ல பொத்தானை அழுத்த.... இரு கதவுகளும் ஒன்றாக இணையும் நேரம் தேவ்வின் கால்களால் தடைபட்டு மீண்டும் திறந்து கொண்டன. அவன் வருகையை அவளும் எதிர்பார்த்ததைப் போல் கைகளை கட்டிக் கொண்டு அவனையே பார்த்து இருக்க,


"ஏய் !!! என்ன டி பண்ண... எதுக்காக இன்னிக்கு இங்க வந்த. இப்போ நடந்ததற்கு நீதான காரணம்... என்னடி கேட்டுகிட்டே இருக்க திமிரா பாத்துட்டு இருக்க...."என்ற தேவ் கோபத்தில் அவளை அடிக்க கையை ஓங்க..,


"உனக்கு உன்னோட டாக்குமெண்ட் வேணாம்'னா தாராளமா என்ன அடிக்கலாம் அக்னி." என்றவளின் வார்த்தையில் கொதித்த தேவ் அவளை அடிப்பதற்கு பதிலாக மின்தூக்கியின் சுவற்றில் ஓங்கி நான்கு முறை குத்த அது அதிர்ந்து அடங்கியது.


"இதுக்கு தான் கல்யாணம் பண்ணி என் வீட்டுக்குள்ள வந்துயா டி.. உனக்கும், எனக்கும் இருந்த உறவு முடிந்து போய் பல வருஷம் ஆகுது. இன்னமும் பழிவாங்க துடிக்கிறியே அவ்ளோ வேஷமா டி நீ. இப்ப மட்டும் எனக்கு டெண்டர் டாகுமெண்ட் கைக்கு வரல அப்புறம் மனுசனா இருக்க மாட்ட அன்பு "
கோபத்தில் இருந்தவன் தன்னையும் அறியாமல் பல வருடங்கள் கழித்து "அன்பு" என்றழைக்க, அடுத்த நொடி அவனை இறுக்கி அணைத்து இருந்தால் அன்பினி . அணைப்பு முத்தங்களாக மாறி நீண்டுகொண்டே செல்ல..., அதில் தேவ் தான் அசையாது நின்றிருந்தான். அவன் நிலையை உணராதவள் முத்தத்தை உதட்டில் ஒட்டாமல் ஒட்டி எடுத்து,

"அக்னி நீ என்னை இன்னும் மறக்கல . உன் மனசுல இன்னும் நான் தான இருக்கேன். அப்புறம் எதுக்குடா இன்னொருத்தியை கல்யாணம் பண்ணிக்க போன...." என்றதும் தான் தாமதம் அசையாது நின்றிருந்தவன் கழுத்தை சுற்றி இருந்த அவள் கைகளை பிடித்து கீழே தள்ளினான்.


"இனி ஒரு வார்த்தை பேசின உடம்புல உயிர் இருக்காது. உனக்கு பத்து நிமிஷம் டைம் தரேன். அதுக்குள்ள இங்கு நடந்த பிரச்சினையை சரி பண்ணிட்டு கிளம்பிக் கிட்டே இரு. தேவையில்லாம ஏதாவது பேசி என்ன மிருகம் ஆக்காத . எப்பவுமே இதே பொறுமையோட இருக்க மாட்டேன் அன்பினி சித்திரை."


அவன் வார்த்தையில்... கலங்கி இருந்த கண்களை துடைத்துக் கொண்டு் எழுந்து நின்றவள், "பத்து நிமிஷம் என்ன அக்னி.. அஞ்சு நிமிஷத்துல சரி பண்ணி தரேன். ஆனா எனக்கு நீ என்ன பண்ணுவ."

"அதானே உன் புத்தி என்னைக்கும் மாறாது. உனக்கு காரியம் இல்லாம எதுவும் பண்ண மாட்டியே. என்ன பண்ணனும்."என்றான் பல்லைக் கடித்துக் கொண்டு.

"அது ஒண்ணும் இல்ல அக்னி.. நேத்து என்னோட போன நீ உடைச்சிட்ட. இப்ப பாரு நான் இந்த டப்பா ஃபோனை யூஸ் பண்ண வேண்டியதா இருக்கு. அதனால ஈவ்னிங் என்னோட கடைக்கு வந்து அழகா ஒரு ஃபோனை செலக்ட் பண்ணி தரணும். அவ்ளோதான் சிம்பிள்."


"அறிவு இருக்காடி உனக்கு. ஒரு ஃபோன் காக இவ்வளவு பண்ணி இருக்க. மரியாதையா சொல்றேன் சரி பண்ணி குடுத்துட்டு வீட்டுக்கு போ. தேவையில்லாம என்கிட்ட அடிவாங்கி சாகாத."


அவனின் வார்த்தைக்கு அசராது அவள் அங்கேயே நிற்க... அங்கு வந்த ஜீவா தான், "சார் இப்பவே மணி மூணு.. அஞ்சு மணிக்கெல்லாம் டாக்குமெண்ட் ரெடி பண்ணி ஆகணும்." என்பதை நினைவு படுத்த,

எண்ணையில் சூடுபட்ட தேகமாய் எரிச்சலில் நொந்தவன் சூழ்நிலை உணர்ந்து, "கடைக்கு போலாம்...."என்றதும் அன்பினி யாருக்கோ போனில் தகவல் சொல்ல, அடுத்த நிமிடம் அவளால் ஏற்படுத்தப்பட்ட சிக்கல் சரியாக தொடங்கியது.
அதை உணர்ந்து தேவ்
அங்கிருந்து நடையைக் கட்ட,


ஜீவா தான், "மேடம் எப்ப வந்து இந்த வேலையை பார்த்தீங்க . இப்போ யாருக்கு போன் போடுறீங்க. இது எப்படி நடந்தது ஒண்ணுமே புரியல. கொஞ்சம் தெளிவா சொல்லுங்களேன். உங்களுக்கு புண்ணியமா போகும்."


"அது ஒண்ணும் இல்ல ஜீவா. என்னோட ஃப்ரெண்டு தான் இந்த வேலைய பண்ணி கொடுத்தது. அவனுக்கு இந்த மாதிரி சாஃப்ட்வேர் பிளாக் பண்றது எல்லாம் நல்லாவே தெரியும். அவன் இப்போ உங்க ஆபீஸ் எமர்ஜென்சி ரூம்ல தான் இருக்கான். இந்த வேலை நடக்க ஒரு அரை மணி நேரம் ஆகும்'னு சொன்னான். கேமரா வேற அங்கங்க இருக்கா . வேலை நடக்குற வரைக்கும் அக்னி கண்ணுல மாட்டக் கூடாதுன்னு தான் அவனை எங்கேயும் நகர விடாம சாப்பாட்டு நாடகத்துல உட்கார வைச்சேன். உங்க எம் டி யும் என்னைய பார்த்துகிட்டே கேமராவை பார்க்காம விட்டுட்டாங்க. அவ்வளவு தான்" என்றவள் அங்கிருந்து நகர,
ஜீவா தான் வாயை பிளந்து கொண்டு நின்றிருந்தான்.


"விக்ரம் இந்தா நீ கேட்ட எல்லா டீடைல்ஸ்ம் இதுல இருக்கு. அதுமட்டுமல்ல டெண்டர் விடுற அந்த ஆளுங்கள பத்தின டீடெயில்ஸ்ம் இதுல இருக்கு." நாகராஜ்.


"அப்பா இது வரைக்கும்... நீங்க டெண்டருக்கு ரெடி பண்ண டாக்குமெண்ட் டீடெயில்ஸ் வேணும். என விக்ரம் கேட்க,


"அது எதுக்கு விக்ரம்...." சூர்யா.

"வேணும் சூர்யா. சில நேரம்.. எதிர்ல நிக்குற ஆளு மேல இருக்க பயத்தாலேயே சரியா நம்ம வேலையே செய்யாம இருப்போம். எங்கடா தப்பு நடந்துச்சுன்னு யோசிப்போமே தவிர நம்ம கிட்ட என்ன தப்பு இருக்கு'னு யோசிக்க மாட்டோம். டெண்டர் விஷயத்துல ஒரு தடவை நடந்த பரவால்ல. தொடர்ந்து ஒரே மாதிரி நடந்தா அதுல தப்பு நம்ம கிட்டையும் இருக்குன்னு அர்த்தம் சூர்யா."என்ற தன் மகனை மெச்சுதலாக பார்த்த நாகராஜ் பக்கத்தில் இருந்த மாணிக்கதிடம்,


"பாத்தியா மாணிக்கம் என் மகன் எவ்வளவு புத்திசாலியா இருக்கான்னு . இனிமே பாரு அந்த தேவ்வுக்கு அழிவு காலம் தான்." என்க ,


"அங்கிள்!! இனிமே என்ன இனிமே... அந்த தேவ்வுக்கு அழிவு காலம் ஆரம்பிச்சுடுச்சு."என சூர்யா பேசிக் கொண்டிருக்கும் நேரம் அவர்களின் அறைக்கதவை தட்ட , அனுமதி கிடைத்ததும் உள்ளே வந்த நபரை விக்ரமை தவிர மூவருக்கும் யார் என தெரியாது முழித்தனர்.


விக்ரம் தான், "வாங்க சுரேஷ்... உட்காருங்க. உங்களுக்காக தான் இவ்வளவு நேரம் வெயிட் பண்ணிட்டு இருந்தேன்." என்றவனிடம் யார் என சூர்யா கேட்க,

"இவர் பேரு சுரேஷ். தேவ் ஆபீஸ் ல மேனேஜரா வொர்க் பண்ணிட்டு இருக்காரு. இனிமே நமக்காக அங்க வொர்க் பண்ண போற." என்ற விக்ரமின் எண்ணத்தை அறிந்த மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு சத்தமாக சிரிக்க ஆரம்பித்தனர்.


"சார்..! நீங்க எனக்கு பணம் கொடுத்து உதவி செஞ்சதால தான் நான் இந்த வேலைய முடிச்சு கொடுக்கிறேன்னு ஒத்துக்கிட்டேன் சாங. இது மட்டும் அந்த தேவ்வுக்கு தெரிஞ்சா அவ்வளவு தான் சார். கொடுத்த வேலையை சரியா செய்யாம போனாலே அந்த பேச்சு பேசுவான். "


"அட என்ன சுரேஷ் நீங்க.. அந்த தேவ்லாம் ஒரு ஆளு. அவனுக்கு நீங்க பயந்துட்டு இருக்கீங்க. என்னோட மச்சா விக்ரம் இத கூட யோசிக்காமையா உங்களை இங்க வர சொல்லி இருப்பான். பொறுமையா அவன் திட்டத்தை கேட்டுட்டு அப்புறம் பேசுங்க." சூர்யா.

சூர்யாவின் வார்த்தையில்.. தைரியம் கூட.."சொல்லுங்க விக்ரம் சார் நான் இப்போ என்ன பண்ணனும்."

"ஒண்ணும் இல்ல சுரேஷ்.. அந்த தேவா டெண்டருக்கு டாக்குமெண்ட் ரெடி பண்ணி வைச்சிருப்பான். அத நான் சொல்றபடி மாத்தி அனுப்பிட்டா போதும்."

"சார் அத இந்நேரம் அனுப்பி இருப்பாங்களே சார்."

"தெரியும் சுரேஷ். அவங்க பண்ண மெயில டெலிட் பண்ணிட்டு. நான் சொல்ற மாதிரி ஒரு கான்ட்ராக்ட் டாக்குமெண்ட் ரெடி பண்ணி திரும்பவும் மெயில் பண்ணி விடுங்க. நீங்க பண்ற டாக்குமெண்ட் தான் அவங்களுக்கு போய் சேரும். அங்க நம்ம ஆளு ஒருத்தங்க இருக்காங்க.. அவங்க பார்த்துப்பாங்க. ஏற்கனவே தேவ் ஒரு மெயில அனுப்பு இருக்கான். சோ, உங்க மேல டவுட் வராது. அப்படியே வந்தாலும்... என்ன பண்ணிட முடியும் அவனால. வேலையை விட்டு மட்டும்தான் அனுப்புவான். நீங்க எப்ப வேணா இந்த ஆபீஸ்க்கு வரலாம் உங்களுக்கான வேலை ரெடியா இருக்கும். "


"சரிங்க சார் நீங்க சொன்ன மாதிரி மெயில் பண்ணி வைக்கிறேன்." என்றவன் அங்கிருந்து செல்ல,



"விக்ரம் இந்த பிளான பத்தி என்கிட்ட சொல்லவே இல்ல... காண்ட்ராக்ட் ஆளுங்க கிட்டயும் ஏற்கனவே பேசி வச்சுட்ட போல. " என்ற சூர்யாவுக்கு,

"சில விஷயங்கள்லாம் சொல்றதை விட செய்ய நல்லா இருக்கும் சூர்யா. இது தேவ்வுக்காக நான் எடுத்து வைக்கிற முதல் அடி. இதுல நிச்சயமா வெற்றி கிடைக்கனும்‌. அதே நேரம் இந்த தோல்வி தான் தேவ் வாழ்க்கையை மாற்ற போற... அச்சாணியாய் இருக்கணும். அடுத்த தடவை எந்த டெண்டர் வந்தாலும்... இந்தத் தோல்வியை யோசிச்சே அவன் தப்பு பண்ணனும். அடிமேல் அடி கொடுத்தா.... அவன் வாய் திமிரா பேசாதுல சூர்யா. அந்த தேவ் வாய் பேசாம தலைகுனிந்து நிற்கனும் . அதுக்காக தான் இவ்ளோ வேலையும்."


"ராஜி.. இன்னைக்கு உன்னை பார்க்க வந்தவங்க கிட்ட பேசாம இருந்தது நியாயமா... அவங்க மேல கோபப்பட்டு என்ன ஆகப்போகுது. நம்ம மேலயும் தப்பு இருக்கு தான ராஜி. ஒரு அம்மாவா இன்னிக்கு நீ என்ன நிலைமையில இருக்கியோ அதே நிலைமையில தான் அன்னைக்கு உன்னோட அம்மாவும் இருந்தாங்க. இத்தனை வருஷம் உன்னை பாக்காம இருந்ததற்கான காரணமும் சொல்லிட்டாங்க. இதுக்கு மேலயும் கோபத்தை பிடித்து வைச்சிட்டு இருக்கிறது நல்லா இல்ல ராஜி." என்ற தன் கணவருக்கு,


"இல்லங்க.. அவங்களா அவமானப்படுத்த நான் பேசாம இல்லை. என் அண்ணன் நம்ம கல்யாணம் பண்ண ஒரே காரணத்துக்காக எவ்வளவு டார்ச்சர் கொடுத்தாரு. அவரால எத்தனை கஷ்டம், அசிங்கம், அவமானம்... அது எல்லாத்தையும் தாண்டி இன்னைக்கு இந்த நிலைமையில இருக்க எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்போம். இதெல்லாம் எங்க அம்மாவுக்கு தெரியாமையா நடந்திருக்கும். சொல்லுங்க... தெரிஞ்சும் அவங்க எதுக்காக அமைதியா இருந்தாங்க."


"இல்ல அத்தை பாட்டிக்கு எதுவும் தெரியாது." இவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த அன்பினி கூற, அவளைக் கண்டதும் அங்கிருந்து ஏழ ஆரம்பித்தார் ராஜேஸ்வரி.


"அத்தை ஒரு நிமிஷம். உங்களுக்கு என் மேல கோவம் இருக்குன்னு தெரியும். ஆனா நான் சொல்ற இந்த விஷயத்தை மட்டும் கேட்டுக்கோங்க. பாட்டிக்கும், அம்மாவுக்கும் எதுவும் தெரியாது. பாட்டி நிறைய நாள் உங்கள நினைச்சு அழுது இருக்காங்க. உங்களை பழிவாங்க இந்த கல்யாணம் இல்லை. என் அக்னியை யாருக்கும் விட்டுக் கொடுக்க மனசில்லாம நடந்த கல்யாணம். பிரிஞ்சு இருக்க ரெண்டு குடும்பத்தை சேர்க்க நடந்த கல்யாணம். உங்க மகனுக்கு நான் செஞ்ச துரோகத்துக்கு .... வாழ்க்கை முழுக்க அன்பை மன்னிப்பா கேட்டு.. வாங்கனும்'னு நடந்த கல்யாணம்.
பாட்டி கிட்ட நீங்க பேசாம இருந்ததுக்கு ரொம்ப வருத்தப்பட்டு அழுதுட்டு இருக்காங்க. உங்க கோவத்தை மறந்துட்டு ஒரு தடவை பாட்டி கிட்ட பேசி பாருங்கள். அப்போதான் உங்களுக்கு எது உண்மை 'னு புரியும். " என்றவள் அவர்களுக்கு யோசிக்க நேரம் கொடுத்து தன் அறைக்கு சென்றாள்.


"இங்கப்பாரு ராஜி. எனக்கும் இந்த பொண்ணு மேல கோவம் இருக்கிறது உண்மை. நாகராஜ் பொண்ணுன்னு தெரிஞ்சதும் ரொம்ப கோவம் வந்துச்சு. ஆனா, இந்த பொண்ணு நடவடிக்கையில எனக்கு எந்த தப்பும் தெரியல. இத்தனை வருஷம் வராத உன் அம்மாவும் , அண்ணியும் வந்து இருக்காங்களே அது ஒண்ணு போதாதா இந்த பொண்ண நம்ப. பழசு எல்லாத்தையும் விடு ராஜி. தப்பு பண்ணாத மனுஷங்களை இல்ல. உன் மகனுக்கும் இந்த பொண்ணுக்கும் ஏற்கனவே பழக்கம் இருக்கு போல. இது அவங்க ரெண்டு பேர் பேசி தீர்க்க வேண்டிய விஷயம். நம்ம மருமக அன்பினி தான். அவளை ஏத்திக்கிட்டு வாழ பழகு."


"புரியுதுங்க... எனக்கும் அம்மா இங்க இருந்து போனதும் ரொம்ப வருத்தமா இருந்துச்சு. ஆனா தேவ்வை நினைச்சா தான் ரொம்ப பயமா இருக்குங்க. பாத்தீங்க ல காலையில எவ்ளோ கோவமா பேசிட்டு போனான்னு. அவனோட கோபத்தை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. அம்மாவை ஏதாச்சு சொல்லிட்டா வந்த உறவும் இனிமே வராம போய்டும். அதுக்காக தான் தூரமாகவே இருந்துக்கலாம்'னு நினைக்கிறேன். "


கல்லூரியை முடித்து விட்டு வீட்டுக்கு வந்த திவ்யா.., இவர்களின் பேச்சுக்களை வாசலில் நின்று கேட்க.. தன் அண்ணனிடம் இதைப்பற்றி பேச வேண்டும் என முடிவெடுத்தாள்.


அம்மு இளையாள்
.
 

அம்மு இளையாள்

Member
Vannangal Writer
Messages
22
Reaction score
38
Points
13
8..மருகும் மனதின் ரகசிய அறையில்...!



வீட்டிற்கு வந்த தேவ் நேராக தன் அறைக்கு செல்ல, அங்கே.. அவனுக்காகவே தயாராக காத்திருந்தாள் அன்பினி. அவளிடம் பத்து நிமிடம் டைம் கேட்டவன் குளியலறைக்குள் சென்று, சொன்னது போல் தயார் ஆகி வர... நடப்பதை நம்ப முடியாத அன்பினி அவனையே பார்த்திருத்தாள்

"நீ பண்ண வேலையால எனக்கு ரொம்ப தலைவலி. ஒரே ஒரு காபி மட்டும் குடிச்சிட்டு கிளம்பலாமா " கேட்க,

எதையும் யோசிக்காத அன்பினி
."நீ இங்கையே இரு அக்னி. நான் காஃபி எடுத்துட்டு வரேன்." என்றவள் சிறிது நேரத்திலே காஃபியோடு வர, அதை வாங்கி குடுத்தவன் அவளுடன் புறப்பட்டு சென்றான்.

காரில் மிதமான காதல் பாடல்கள் ஒலிக்க, மித வேகத்தில் காரை தேவ் இயக்கி கொண்டுவர, இந்தப் பயணம் இனிமையானதாக இருந்தது அன்பினுக்கு. அன்பினி கனவுகளில் ஒன்று திரும்பவும்... தேவ்வுடன் இம்மாதிரியான பயணங்கள் தான். அவள் வாழ்வில் இனி இல்லை என்று நினைத்த ஒன்று இப்போது நடப்பதால்... தன்னையே அறியாமல் ரசனையான பார்வையை தேவ் மீது செலுத்த, அதை அவன் உணர்ந்தாலும் வெளிக்காட்டாமல் சாலையில் கவனமானான். பார்வை நீண்டு கொண்டே செல்ல.... தேவ் தான்,

"இப்ப எதுக்கு என்னையே பாத்துட்டு வர."
"அக்னி.. இந்த மாதிரி எவ்வளவு நாளாச்சு . நம்ம ரெண்டு பேர் ஒண்ணா டிராவல் பண்ணி. இது இப்படியே போனா எவ்ளோ நல்லா இருக்கும். அன்பும் அக்னியும் மட்டும்..."

"தரலமா போலாம். ஆனா அக்னி செத்து ஏழு வருஷம் ஆச்சு. இனிமே நீ போகணும்'னா செத்த பிணத்தோட தான் போகனும். அது கூட உனக்கு பிரச்சனையா இருக்காது. யார் இருந்தா என்ன செத்தா என்ன. உனக்கு உன்னோட ஆசை, உன்னோட பழி வாங்குகிற புத்தி, உன்னுடைய ஈகோ மட்டும் போதும். " தேவ்வின் பேச்சில் மனம் வருந்திய அன்பினி மேற்கொண்டு வாதம் வளர்க்காமல் அமைதியாக அமர்ந்து கொண்டாள்.

ஷாப்பிங் மாலுக்கு முன்னால் காரை நிறுத்திய தேவ், "உன்னோட பர்ச்சேஸ் முடியை எவ்ளோ நேரம் ஆகும் . "

"எதுக்கு அக்னி கேக்குற." என்றவள் எதிரில் இருப்பவனின் முறைப்பை உணர்ந்து, "ஒரு மணி நேரம் ஆகும்." என்றாள்.

"சரி நீ ஷாப்பிங் பண்ணிட்டு இரு. அரை மணி நேரத்துல நான் வந்துடுவேன்."என்றவன் அங்கிருந்து புறப்பட,

தோள் இரண்டையும் குலுக்கி 'என்னமோ பண்ணு' என்ற பாவத்துடன் அவளும் ஷாப்பிங் மாலுக்குள் நுழைந்து கொண்டாள்.



சூர்யா,"விக்ரம்! அந்த சுரேஷ் நீ சொன்ன மாதிரி கரெக்டா பண்ணிட்டானா. கேட்டியா? இங்க பேசும்போதே அவன் முகம் சரியில்லை. பயத்துல ஏதாச்சும் சொதப்பி வைச்சிருக்க போறான்." கேட்க,

"கேட்டுட்டேன் சூர்யா. அந்த தேவ் ஆறு மணிபோல ஆபீஸ்ல இருந்து கிளம்பிட்டான் போல. சுரேஷ் ஏழு மணிக்கு அந்த மெயிலை மாற்றி அனுப்பி இருக்கான். இனி மத்ததெல்லாம் அந்தக் கான்ட்ராக்ட் கம்பெனில நம்ம செட் பண்ணி இருக்க ஆள் பார்த்துப்பான். கவலைப்பட வேண்டியதில்லை."என்ற விக்ரமுக்கு,

" இல்ல விக்ரம் . இதுல அவன் தோத்துட்டா.... அத அங்க இருக்க அன்பினி கிட்ட தான் அவன் காட்டுவான். அது மட்டுமில்லாம முன்ன விட இன்னும் வேகமா நம்மள பழிவாங்க ஆரம்பிச்சிடுவான். ஒருவேளை நாம போட்ட இந்த பிளான் சொதப்பிட்டா இன்னும் அந்த தேவ்வுக்கு கொழுப்பு கூடிடும். அவனுக்கு தொழில்ல மட்டுமில்ல சொந்த வாழ்க்கையிலும் நம்ம அடி கொடுக்கணும். ரெண்டு பக்கமும் நம்ம குடுக்குற பிரஷர் ல அவனுடைய மூளை யோசிக்கக்கூட தயங்கனும். அதான் என்ன பண்ணலாம்னு யோசிக்கிறேன் விக்ரம்ம்ம்.." என மெதுவாக தேன் கலந்த விஷ பேச்சை விக்ரம் மனதில் ஓட விட....,

சூர்யாவின் வார்த்தைகளில் மயங்கிய விக்ரம்... தேவின் வாழ்வில் புயலை உருவாக்க வழி தேடிக் கொண்டிருக்க, சிறிது நேரம் அவன் சிந்தனையை கலைக்காமல் மனதினுள் சிரித்துக் கொண்டிருந்த சூர்யா மெல்ல.., "விக்ரம் எனக்கு ஒரு ஐடியா."
யோசனையில் இருந்தவன்.. நிகழ்வுக்கு வந்து "என்னவென" கேட்க,

"அந்த தேவ்வுக்கு ஒரு தங்கச்சி இருக்கா. நம்ம வீட்டு பொண்ண எப்படி அவன் டார்ச்சர் பண்ணி கல்யாணம் பண்ணானோ அதே மாதிரி அவன் வீட்டு பொண்ணுக்கும் நம்ம டார்ச்சர் பண்ணனும். அப்போதான் அவன் பண்ண தப்பு அவனுக்கு புரியும்." என்றவனின் பேச்சை மறுக்கும் விதமாக விக்ரம் முகபாவனை காட்ட, அதை புரிந்து கொண்ட விக்ரம் அவனை பேச விடாது, "அது மட்டும் இல்ல . நம்ம வீட்டு பொண்ணு அன்பினியை அவன் அவ்ளோ சாதாரணமா விடமாட்டான். இன்னிக்கு கூட உன் அம்மாவும், பாட்டியும் அன்பினியை பார்க்க வீட்டுக்கு போயிருக்காங்க. அவங்கள உள்ளேயே விடாம.. வாசல்ல நிக்க வச்சு அனுப்பி இருக்கான். இத நம்ம டிரைவர் தான் என்கிட்ட சொன்னான். தெரிஞ்சி இவ்வளவு கொடுமை நடக்குது தெரியாம அன்பினியை என்னென்ன கொடுமை பண்றானோ விக்ரம்."

"அம்மாவும், பாட்டியும் அங்கு போனது உண்மையா... சூர்யா. அவங்க எதுக்கு அங்க போகணும்... " என ஆத்திரமாக கேட்க,

"நீயும் அங்கிளும் அன்பினிய விட்ட மாதிரி ஆன்ட்டியால முடியாது விக்ரம் புரிஞ்சிக்க. என்ன இருந்தாலும் ஒரு அம்மாக்கு தன்னோட பொண்ணு எப்படி வாழுறான்னு பார்க்க ஆசை இருக்கும் . இப்போ நமக்கு அது முக்கியம். இதையே வளரவிட்டா..... நாளைக்கு உன் தங்கச்சி உனக்கு இல்ல ." என்றவனின் வார்த்தையில் இருக்கும் தீவிரத்தை உணர்ந்த விக்ரம்,

"நீ சொல்றது சரிதான் சூர்யா. என்ன இருந்தாலும் அன்பினி என்னோட தங்கச்சி. அவ அங்க கஷ்டப்படும்போது என்னால மட்டும் எப்படி சந்தோஷமா இருக்க முடியும். இந்த வீட்டில செல்லமா வளர்ந்த பொண்ணு. என் தங்கச்சி கஷ்டப்படும் போது அவன் தங்கச்சிய கஷ்டப்படுத்துறது ல தப்பே இல்லை."

சொன்னது போலவே அரை மணி நேரத்தில் வந்துவிட்ட தேவ் , போன் செய்து "எப்ப முடியும்" என அன்பினியே கேட்க,
அவளோ, "முடிஞ்சிருச்சி பில் போட லைன்ல நின்னுட்டு இருக்கேன்" என்று கூற ... சீக்கிரம் வர சொல்லிவிட்டு போனை அணைத்து விட்டான்.

நீண்ட வரிசையில் நின்றவள் தன் முறை வந்ததும்... பணத்தை செலுத்த பர்சில் இருக்கும் கிரெடிட் கார்ட் எடுக்க , அது பர்ஸில் இல்லை. பதறிவள் மற்றொரு கார்ட்டை தேட அதுவும் இல்லாமல் போனது. அங்கிருக்கும் சேல்ஸ்மேன் மணி ஆவதை உணர்த்த..., தனக்கு அடுத்தாக நிற்பவரை பணம் செலுத்த அனுப்பி விட்டு தனியாக வந்து நின்று மீண்டும் தன் பர்ஸை சோதித்து பார்க்க, அப்போதும் அவள் கைகளுக்கு கிடைக்கவில்லை. கார்ட் கையில் இருப்பதால் எப்போதும் பணம் வைத்துக்கொள்ளும் பழக்கம் இல்லை அன்பினுக்கு. ஐபோன் வாங்க வந்தவள்... இது ஒரு பன்னாட்டு பொருளகமாக இருப்பதால் ஃபோனோடு சேர்த்து தனக்குத் தேவையான ஆடைகளையும், ஒப்பனை பொருட்களையும் வாங்கி குவித்து விட்டால் இரு லட்சத்தை தொடும் அளவிற்கு. அவளையே பார்த்துக் கொண்டிருந்த சேல்ஸ்மேன் பணத்தை கட்டச் சொல்லி மீண்டும் ஞாபகப்படுத்த..., சிறிது நேரம் யோசித்தவள், கிரெடிட் கார்ட் காரில் இருப்பதாக சொல்லி விட்டு நேராக தேவ்விடம் வந்து , "அக்னி.. கிரேடிட் கார்ட் பர்ஸ்ல தான் வைச்சிருந்த இப்போ எங்கன்னு தெரியல. உன்னோட கார்டு கொடு நான் வீட்டுக்கு வந்ததும் அமௌன்ட் கொடுக்கிறேன்." என்றவளுக்கு மறுப்பேதும் தெரிவிக்காமல் தன் கார்டை கொடுக்க,

"பொண்டாட்டி கேட்டதும் குடுத்துட்ட சோ ஸ்வீட் புருஷா... டா அக்னி நீ." என்றுவிட்டு உற்சாகமாக பணம் செலுத்த சென்றாள்.

அவள் சென்றதும் மௌனமாக சிரித்தவன் கண்களை மூடி இருக்கையில் சாய... நினைவுகள் அரை மணி நேரத்திற்கு முன்பாக சென்றது.
வீட்டிலிருந்து கிளம்பும்போதே அன்பினியிடம் வேண்டுமென்றே தலை வலிக்குது என்று சொன்னவன் அவள் காஃபி எடுத்து வர வெளியில் சென்றதும் .. அவளுடைய பர்ஸில் இருந்த கிரேடிட் கார்ட், டெபிட் கார்டுகள் அத்தனையும் எடுத்தவன் அமைதியாக இருந்து கொள்ள... அவளை இறக்கி விட்டதும் நேராக சென்றது நாகராஜ் வீட்டிற்கு தான்.

வந்தவன் யாரையும் கண்டுகொள்ளாமல் சோபாவில் அமர.. தேவ்வை கண்ட சாந்தி தான் வீட்டில் இருக்கும் அனைவரையும் அழைத்து இருந்தார். அதிகாரத் தோரணையாக அமர்ந்திருந்த தேவ்வை கண்ட நாகராஜ் கொதித்தெழ.. "போதும் போதும் ரொம்ப ஓவரா நடிக்காதீங்க நாகராஜ். நீ என் பொண்ணே இல்ல'ன்னு சொல்லிட்டு... அவ கையில இந்த கார்ட்லாம் எதுக்கு கொடுத்து விட்டீங்க. எதுக்கு இந்த இரட்டை வேஷம். குடும்பத்தோட சேர்ந்து சினிமால நடிக்க போங்க. நல்லா கல்லா கட்டும்." என்றவனிடம் சண்டைக்கு பாய வந்த விக்ரமை தடுத்த செவ்வந்தி, "விக்ரம் என்ன இருந்தாலும் அவரு நம்ம வீட்டு மாப்பிள்ளை. அவர அடிக்க கை ஓங்குறது தப்பு. தன்னோட பொண்டாட்டிக்கு எதுவா இருந்தாலும் தன்னுடைய காசுல செய்யணும்னு நினைக்கிறாரு. இதுல தப்பு ஒன்னும் இல்லையே. இனி அன்பினி அவரோட சொத்து." என்றவர் தேவ்விடம், "இதெல்லாம் அவ இங்க இருந்து போகும்போது எடுத்துட்டு போனது பா. நாங்க எதுவும் கொடுத்து விடல. நீ அதெல்லாம் இங்க வெச்சிட்டு உன் பொண்டாட்டிக்கு என்ன பண்ணனுமோ அதை உன் காசுல பண்ணு."

"இந்த வீட்டிலேயே உங்களுக்கு மட்டும்தான் கொஞ்சம் அறிவு இருக்கு. ஆனா, ஒரு சின்ன திருத்தம் அவ என்னோட பொண்டாட்டி இல்ல. என் பின்னாடி ஓடி வந்தவள். அவளுக்காக என் காச செலவு பண்ண மாட்டேன். வேணும்'னா மூணு வேளை சோறு போட்டு வீட்ல.............. போனா போகுதுன்னு தண்டமா வளர்க்கிறேன்‌." என்றவன் அங்கிருக்கும் சூர்யாவை ஒரு பார்வை பார்த்தவாறு புறப்பட்டான்.

ஏற்கனவே சூர்யாவின் வார்த்தையில் சிக்கியிருந்த விக்ரம் இப்போது தேவ்வியின் வார்த்தையில் முழுவதுமாக தன் நிலை மறந்து அவனை பழி வாங்கும் கைப்பாவையாக மாறி போனான்.


பணம் செலுத்த சென்ற அன்பினி தேவ்வின் கிரெடிட் கார்ட் டை கொடுக்க , அதை வாங்கிய சேல்ஸ்மேன் சில நொடியிலே "மேடம் கார்ட் டிக்லைன்னு வருது." என கூற, உடனே தேவ்வுக்கு அழைத்தாள்.

அவள் உள்ளே சென்றதும் அழைப்பாள் என்று அறிந்த தேவ் ஜீவாவிற்கு கால் செய்து லைனில் இருக்கும்படி உத்தரவிட்டு இருக்க..., போன் செய்து கொண்டிருக்கும் அன்பினிக்கு கால் வெயிட்டிங்கில் வரத் தொடங்கியயது.


பலமுறை முயற்சித்தும் தொடர்ந்து கால் எடுக்கப் படாமல் இருக்க... நேரமும் அரை மணியை கடந்தது. அங்கிருக்கும் வாடிக்கையாளர் முதல் விற்பனையாளர்கள் வரை எல்லோரும் அன்பினியவே பார்த்திருக்க... அவளுக்குத்தான் மனதில் சொல்லமுடியாத நிலை.

பணம் செலுத்தும் இடத்தில் வேலை பார்க்கும் நபர்.. அன்பினியிடம், "மேடம்.. பேமெண்ட் பண்றீங்களா இல்லையா.. ரொம்ப நேரமா உங்க பொருளாம் டேபிள் மேலேயே இருக்கு. சேல்ஸ் மேனேஜர் வேற இரண்டு தடவைக்கு மேல வந்து கேட்டாரு." என்றவருக்கு பதில் சொல்ல முடியாமல் கடைசியாக ஒருமுறை தேவ்விற்கு அழைக்க,
இந்தமுறை அழைப்பை ஏற்றான்.

"அக்னி போன் பண்ணா எவ்வளவு நேரமா வெயிட்டிங் ல போகுது. ஒரு நிமிஷம் எடுத்து பேசினா என்ன. இங்க நீ கொடுத்த கார்ட் ல பேமெண்ட் பண்ண முடியல. கொஞ்சம் மேல வரியா...." என்றவளின் வார்த்தையில் முதல் முறை அவமான சாயல் இருப்பதாக உணர்ந்த தேவ்,

"இரு நான் வர்றேன்."என்றுவிட்டு போனில் இருக்கும் கேமில் கவனம் செலுத்த,

அன்பினி தான் தன்னையே பார்த்துக் கொண்டிருக்கும் பணியாளரிடம் பத்து நிமிடம் டைம் கேட்டு இருந்தாள். அவள் கேட்ட நேரமும் சென்றிருக்க தேவ் தான் வந்தபாடில்லை. அப்படி இப்படி என ஒரு மணி நேரம் கழிந்து இருக்க... மீண்டுமொருமுறை அவனிற்கு அழைத்த அன்பினுக்கு,

"அச்சோ. மேல வர சொன்ன' ல மறந்தே போயிட்டேன் அன்பினி சித்திரை. போன்ல ஒரு புது கேம் விளையாட ஆரம்பச்சனா அப்படியே ஆர்வமாகி நீ சொன்ன விஷயத்தை மறந்தே போயிட்டேன். நான் ரொம்ப ஸ்வீட் புருஷன் தான. வேணும்'னா இப்ப வரவா அன்பினி சித்திரை."என்றவனின் வார்த்தையில் கண்ணில் நீர் கோர்க்க இவை அனைத்தும் தேவ் வேலை என்பதை புரிந்து கொண்டாள். காட்சி பொருளாக மாறியவள்..வாழ்வில் பார்க்காத அவமானத்தை உணர ஆரம்பித்தாள். எதுவும் பேசாமல் அவனது அழைப்பை துண்டித்து, அங்கு இருப்பவரிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு பொருட்களை வேண்டாம் என மறுக்க.. அவர்களோ அவளை ஒரு புழுவைப் பார்ப்பது போல் பார்த்து வைத்தனர். அதை உணர்ந்து மேலும் கூனிக்குறுகியவள் யாரையும் பார்க்காமல் வெளியேற ..., "அன்பினி" என்ற அழைப்பில் நின்றாள்.

"என்னம்மா என்ன ஆச்சு.இங்க நடந்தத நானும் பார்த்துட்டுதான் இருந்தேன். காசு எடுத்துட்டு வரலையா. நகராஜ் பொண்ணுக்கு இந்த நிலைமையா. நான் வேணும்'னா உனக்கு காசு தரவா. என்றவரை நிமிர்ந்து பார்த்தவள் கண்டு கொண்டால் அன்று மண்டபத்திலிருந்து வெளியேற்றிய மணமகளின் தந்தை காமராஜ் என்று. அவரின் பார்வையில் இருக்கும் கேலியை உணர்ந்தவளால் எதுவும் பேச முடியாமல் போக,

"அன்னைக்கு என் பொண்ண அவமானப்படுத்தி அனுப்புன. இன்னைக்கு பாரு.... இப்படி யாரு என்னன்னு தெரியாத மாச சம்பளத்துக்கு வேலை பார்க்கிறவங்க முன்னாடி அசிங்கப்பட்டு நிற்கிற. இதைப் பார்க்க என் மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு." என்றவருக்கு பதில் சொல்லும் நிலைமையில் இல்லாத அன்பினி மௌனமாக அவரை கடந்து கார் நிற்கும் இடத்திற்கு வந்தவள்... கதவைத் திறந்து உள்ளே அமர்ந்தவாறு "போலாம் " என தலைகவிழ்ந்து கூற,

"என்ன அன்பினி சித்திரை... நிறைய பொருள் வாங்கிட்டு வரீங்க போல. இப்படி தூக்க முடியாம தூக்கிட்டு வரீங்க. சொல்லி இருந்தா நான் உதவிக்கு வந்து இருப்பேனே ." தேவ் பேச்சில் இருக்கும் நக்கலை அறிந்தும் எதுவும் பேசாமல் அமைதியாக அமர்ந்திருந்தாள்.

"இதுதான் உனக்கு கடைசி. இன்னொரு தடவை என் வழியில நீ வந்த... இதைவிட மோசமான அவமானத்தை பார்க்க வேண்டிவரும். காலேஜ்ல பார்த்த அந்த அக்னி நான் இல்ல. இப்ப பாத்துட்டு இருக்க தேவ் உனக்கு அடங்கிப் போறவனும் இல்ல. என் வாழ்க்கையில எப்படி வந்தியோ அதே மாதிரி திரும்பி போயிடு. இல்லனா தினம் தினம் இந்த அவமானத்தை தான் நீ பார்க்கணும்.

தேவ்வின் வார்த்தை ஒவ்வொன்றும் கசப்பாய் அவள் நெஞ்சினில் இறங்க.. ஆரம்பித்தது. நினைவுகளோ, 'அன்பு... உன்னை விட்டு எப்பவும் போக மாட்டேன். உன்ன யாருக்காகவும், எதுக்காகவும் எந்த மாதிரி சூழ்நிலை வந்தாலும் விட்டுத்தரவும் மாட்டேன். என் மனசுல உனக்கான இடம் ரொம்ப பெருசு அன்பு. என் வாழ்க்கையில் வந்த முதல் பொண்ணு நீ தான். எப்பவும் என் வாழ்க்கையை விட்டு அனுப்ப மாட்டேன். நீ ஆசைப்பட்ட அத்தனையும் வாங்கி தருவேன் அன்பு. உன்னை ஒரு நாளும் அழ விட மாட்டேன் டி. கல்யாணத்துக்கு அப்புறமும் நீ எனக்கு குழந்தைதான். எவ்ளோ வயசு ஆனாலும் நம்ம ரெண்டு பேருக்கும் நடுவுல வேற யாரும் வர கூடாது அன்பு. இப்பலாம் உன்ன பிரிஞ்சி இருக்கவே முடியல. காலேஜ் முடிஞ்சதும் வீட்ல சொல்லி ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாம்.' என பல்வேறு தருணங்களில் தேவ் பேசிய வசனங்களே மனதில் ஓடிக் கொண்டிருக்க.... எப்பேர்பட்ட அன்பை இழந்து விட்டோமே என்ற குற்ற உணர்ச்சி அவளை ஆட்கொள்ள ஆரம்பித்தது.

அவள் மௌனத்தில் மகிழ்ந்த தேவ்க்கு கிளம்பும் போது இருந்த இறுக்கம் மாறி.... மனதில் சொல்ல முடியாத நிம்மதி பிறந்தது. அது அவன் இயக்கும் மகிழுந்து வேகத்திலேயே தெரிய ஆரம்பித்தது அன்பினி சித்திரைக்கு.

அம்மு இளையாள்.











 
Status
Not open for further replies.
Top Bottom