Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


மறையாதே என் கனவே

writer

Saha Writer
Team
Messages
50
Reaction score
26
Points
8
ஹாய் சகாப்தம் ரீடர்ஸ் அன் ப்ரண்ட்ஸ்😍.. இதோ என் வந்துட்டேன் அடுத்த நாவலோடு😆.. பர்ஸ்ட் நாவலிற்கு வந்த ரெஸ்பான்ஸ்ல அய்யோ நெக்ஸ்ட் இன்னும் நல்லா குடுக்கனும்-ன்னு மைன்ட் செட் ஆயிருச்சு.. ஸோ நிறையாவே டைம் எடுத்துக்கிட்டேன்..

"மறையாதே என் கனவே" உங்கள உள்ளே கூட்டிட்டுப் போகும்ன்னு நம்பறேன்💯..

லெட்ஸ் ஸ்டார்ட் இட் டுடே💫🏃‍♀
 

writer

Saha Writer
Team
Messages
50
Reaction score
26
Points
8
மறையாதே என் கனவே

அத்தியாயம்-1


விடியல்... ஆரஞ்சுப் பந்தாய் சுரியன் தன் செந்நிறக் கதிர்களோடு கிழக்குத்
திசையில் இருந்துக் காலை ஐந்தரை
மணிக்குத் தன்னை உலகிற்கு உதிர்த்துக் கொண்டு இருந்தது. இரவுப் போர்வை தன் கம்பளத்தைச் சுருட்டிக் கொண்டு இருக்க, இனிய பறவைகளின் கூக் குரல்கள் ஆங்காங்கே ஒலித்து விடியலை
இன்னும் ரம்மியமாகக் காட்டியது.

இயற்கையின் அழகு ஏகமாய்க் கொட்டிக் கிடக்க.. இளம் புல்களில் பனித்துளிகள் சிதறி வெள்ளி போல மின்னின.. சுற்றி இருந்த பசுமை அழகிலும் செழிப்பிலும்.. கதிரவன் எழும்பத் தயாராக, இருட்டும் வெளிச்சமும் விட்டும் விடாமலும் மப்பும்
மந்தாரமுமாக விடிய அழகே உருவமாய்
காட்சி அளித்துக் கொண்டு இருந்தது
தேனி மாவட்டத்தில் உத்தமபாளையம்
வட்டத்தில் உள்ள கம்பம்.

தன்னைச் சுற்றியுள்ள மூன்று
திசைகளும் மலைகளால் சூழப்பட்டு
ரம்மியமாக ஒரு பள்ளத்தில்
அமைந்துள்ளதால் கம்பம் பள்ளத்தாக்கு என்றும் அழைக்கப்படும் ஊர். கடல் மட்டத்தில் இருந்து 1282 அடி உயரத்தில் இருந்தது. மேலும் புகழ் பெற்ற முல்லை பெரியாறு, சுருளியாறு, சண்முக நதி என
வளம் சேர்க்க.. விவசாயமே பிரதானத்
தொழிலாக மக்கள் இருந்தனர்.

காலைக் கதிரவன் தன்னுடன் சிலிர்க்கும் காற்றையும் சில்லென்ற தென்றலையும் வீச.. அந்தத் திராட்சைத் தோட்டத்தின் அருகில் சிறியதாக ஒரு வீடு இருந்தது. அந்த அழகிய ஓட்டு வீட்டின் பின்னால்
இருந்த விசாலமான இடத்தில் யோகா
செய்து கொண்டிருந்தாள் கௌசிகா. ஆம் கௌசிகா தான் நம் கதையின்
கதாநாயகி.

கௌசிகா - பிரம்மன் தான் மிகவும்
சந்தோஷமாக இருந்தத் தருணத்தில்
படைத்தப் படைப்பு என்பதில்
சந்தேகமில்லை. சரஸ்வதி தேவி மீது
காதல் கொண்ட தருணத்தில்
கௌசிகாவைப் படைத்திருப்பார் என்று நினைக்கிறேன். நல்ல உயரம். சந்தன நிறத்தில் அழகான அளவான உடல் அமைப்பைக் கொண்டவள். பொதுவாக தன் வயதுப் பெண்களுடன் நிற்கும் போது ஐந்தரை அடி உயரத்தில் நல்ல உயரமாக எழிலாகத் தெரிவாள். மீன் போன்ற வடிவத்தில் சுறுசுறுப்பான விழிகள். வில் போன்ற வளைவானப் புருவங்கள். நேரான நாசி. இயற்கையாக சிவந்து காணப்பட்ட அழகான அதரங்கள்.
சங்குக் கழுத்து. மொத்தத்தில் பிரம்மன் ரசித்து ரசித்துப் படைத்த படைப்பு என்று அடித்துச் சொல்லலாம்.

தன் மீது வீசிய குளிர்த் தென்றலை
உணர்ந்த கௌசிகாவின் உடல்
ரோமங்கள் சிலிர்த்தன. தனது யோகாப் பயிற்சியை முடித்துவிட்டு எழுந்தவள் அந்த இயற்கை அன்னை அள்ளித் தந்த எழிலை ரசித்தபடி நின்றாள்.

நன்றாக மூச்சை இழுத்து அந்தக் காலை நேர மென்மையானக் காற்றைக் கௌசிகா சுவாசிக்க.. அந்தக் குளிர்க் காற்று நாசியினுள் சென்று இதயம் வரை குளிர்வித்து இதம் தருவதை அனுபவித்தபடி நின்றாள். ஏனோ இந்த இரண்டு நாட்களாக ஏதோ தன் உள்உணர்வு ஆனந்தமாகவும் படபடப்பாகவும் சுற்றுவதைக் கௌசிகா உணர்ந்தாள். அப்படி என்ன நடக்கப்போகிறது என்று யோசித்தபடி நின்றாள்.

சிறிது நேரம் நின்றுவிட்டு வீட்டிற்குள்
நுழைந்தவள் தன்னுடன் தங்கி இருக்கும் கவிதா இன்னும் இழுத்துப் போத்தித் தூங்கிக் கொண்டு இருப்பதைக் கண்டு "எப்போது தான் சீக்கிரம் எழக் கற்றுக் கொள்ளப் போகிறாளோ" என்று குறுஞ்சிரிப்பு பூத்தபடி தன் உடைகளை எடுத்துக் கொண்டு குளியல் அறைக்குள்
புகுந்துவிட்டாள்.

கௌசிகா குளித்து முடித்துவிட்டு
தலையைத் துடைத்தபடி வெளியே வர
கவிதா அப்போது தான் சோம்பலை
முறித்த படி எழுந்தாள். எழுந்து
உட்கார்ந்தவள் தன் தலையைச்
சொறிந்தபடியே "குட் மார்னிங் கௌசி"
என்று தூக்கக் கலக்கத்திலேயே
சொன்னாள்.

"குட் மார்னிங் கவி" என்று தனது நீண்ட
கூந்தலைக் காய வைக்க நின்றபடி
கவிதாவிற்கு கௌசிகா தனது காலை
வணக்கத்தைச் தெரிவித்தாள்.

"மணி என்ன?.. அச்சச்சோ ஆறே முக்கால் ஆஆஆஆ" என்று வாயைப் பிளந்த கவிதா "என்னதான் ஆலாரம் வைத்துத் தூங்கினாலும் சீக்கிரம் எழ முடிவதில்லை கௌசி.. அப்பப்பா எப்படித்தான் காலை ஐந்தரைக்கு எழுகிறாயோ" என்று சலித்தாள் கவிதா.

"அதெல்லாம் நினைத்தால் எழலாம்.
அதற்கு முதலில் நேரத்தில் தூங்க
வேண்டும். ஆளோடு கடலைப்
போட்டுவிட்டு இரண்டு மணிக்குத்
தூங்கினால் இப்படித்தான் தூங்கி
வழிவாய்" என்று கேலி செய்துச்
சிரித்தாள் கௌசிகா.

"ச்சு போ கௌசி.." என்று வெட்கத்தோடு
எழுந்து தன் வேலைகளை செய்யத்
தயாரானாள்.

கடந்த மூன்றரை வருடங்களாக
இருவருக்கும் இதே வழக்கமான
வாழ்க்கை தான். மூன்றரை வருடத்திற்கு முன் வேலைக்காகக் கௌசிகா கம்பம் வந்தபோது தான் கவிதாவும் வேலை தேடி கம்பம் வந்தது. ஊர்ப்பெரியவரான சங்கரலிங்கம் அவர்களே தன் பள்ளியில்
இருவருக்கும் ஒரு வேலையைத் தந்தார்.

கௌசிகா மூன்று முதல் ஐந்தாம்
வகுப்பிற்கு ஆங்கிலம் எடுக்க..
கவிதாவைப் பள்ளி ஆபிஸ் வேலைக்கு
நியமித்தார் சங்கரலிங்கம். வயதுப்
பெண்கள் என்பதால் இருவருக்கும் தன் திராட்சைத் தோட்டத்து அருகில் உள்ள தன் வீட்டையே தங்கிக்கொள்ளத் தந்தார்.

ஒரு ஹால், சமையல் அறை, ஒரு
படுக்கை அறை பாத்ரூம் என
தேவையான வசதிகளோடு அழகாக
இருந்தது ஓட்டு வீடு. அவர் வீடு
என்பதால் பாதுகாப்பும் கூட. இரவு
திராட்சைத் தோட்டத்திற்கு காவலிற்கு
வரும் ஆட்களுக்கு இவர்களின்
பாதுகாப்பு பற்றியும் சொல்லியே
அனுப்பப்பட்டது. அதனால் இரண்டு
பெண்களும் எந்த அனாவசியத்
தொந்திரவும் இல்லாமல் நிம்மதியாகவே இருந்தனர்.

வந்த புதிதில் இருவரும் கொஞ்சம்
ஒதுங்கியே இருந்தாலும் நாட்கள்
செல்லச் செல்ல இருவரும் நல்ல
தோழிகள் ஆயினர். காலை எழுந்தவுடன் கவிதா வீட்டு வேலைகள்.. அதாவது வீட்டைக் கூட்டிப் பெருக்கி பாத்திரம் கழுவ.. கௌசி காலை டிபன் மதிய உணவு என அனைத்தையும் தயார் செய்து விடுவாள். வார இறுதியில் வீடு துடைப்பார்கள்.. இல்லை என்றால் சினிமா என்று பொழுதுபோக்கிற்காக தேனி வரை சென்று நேரத்தைக் கழித்து
விட்டு வருவர்.

இன்றும் அதே போலக் கவிதா வீட்டைக்
கூட்ட.. கௌசிகா இட்லியை ஊத்தி
வைத்துவிட்டுக் காயை நறுக்கிக்
கொண்டு இருந்தாள். "கௌசி சொல்ல
மறந்துவிட்டேன் பார்... இந்த வார
இறுதியில் நான் ஊருக்குப் போய்
வருகிறேன்.. திங்கள் காலையில் தான்
வருவேன்" என்று முகத்தில் எந்த
உணர்ச்சியும் காட்டாமல் சொன்னாள்.

"உன் ஆள் சுரேஷைப் பிரிந்து இருக்கப்
போற கவலையா?" என்று நமட்டுச்
சிரிப்புடன் வினவ "அடப்போப்பா.. எங்கள் விஷயத்தைச் சொல்லத்தான் ஊருக்கே போகிறேன்" என்று டென்ஷனாகச் சொன்னாள்.

"ஓஓஓ... அப்போ சீக்கிரம் 'டும் டும்'ன்னு
சொல்லு" என்று சிரித்தாள் கௌசிகா.

"வீட்டில் ஒத்துக்கிட்டா சீக்கிரம்
வச்சிக்களாம்.. ஆனால் என்ன சொல்லப் போறாங்களோ தெரியல.." கூட்டி முடித்தக் குப்பைகளை முறத்தில் அள்ளிய படியேச் சொன்னாள் கவிதா.

"அதெல்லாம் ஓகே ஆயிரும்.. சுரேஷும்
நல்ல வேலையிலும் சம்பளத்திலும்
இருக்கிறார்.. அவரை மறுப்பார்களா? நீ
பேசுகிற விதத்தில் பொறுமையாக
எடுத்துச் சொல்லு" என்று கௌசிகா
அவளிற்கு தைரியம் மூட்டினாள்.
"கடவுளே அவங்க வீட்டுல ஒத்துக்க
வச்சிரு" என்று மனதினுள் கடவுளிடம்
வேண்டத் தவறவில்லை கௌசிகா.

"ஹம்ம்... நல்ல படியாக நடந்தால்
சரிதான்" என்று பாத்திரங்களைக் கழுவ ஆரம்பித்தாள் கவிதா.

அதற்குப் பிறகு இருவரும் பேசிக்
கொள்ளவில்லை.. வேலையே சரியாக
இருந்தது.. கவிதா குளித்து முடித்து
வெளியே வரவும் மது டிபனை எடுத்து
சாப்பிட வைக்கவும் சரியாக இருந்தது.
"அஹாஹா.. என்ன இட்லியும் தாக்காளிச் சட்னியுமா" என்று வாசம் பிடித்தபடி வந்து அமர்ந்தாள் கவிதா.

"ஆமாம்" என்ற கௌசி அவளிற்கும்
எடுத்து வைத்துவிட்டு தனக்கும் தட்டில்
இரண்டு இட்லிகளை வைத்தாள்.

"நீ போயிட்டா எனக்கு இரண்டு நாள் போர் அடிக்கும் கவி" என்று இட்லிகளை
மென்றபடியே கௌசி குறையாகச்
சொல்ல "அப்போ நான் கல்யாணம் ஆகிப் போயிட்டா..." என்று இழுக்க கௌசி அப்படியே இட்லியை வாயில் அடைத்தபடி உட்கார்ந்திருநதாள்.

"கௌசி சொல்றேன்னு..." என்று கவிதா
ஆரம்பிக்க அடுப்பில் வைத்து இருந்த
மதியத்திற்கான சாப்பாடு தனது
மூன்றாவது விசிலை அடிக்க.. அதான்
சமயம் என்று கௌசிகா அதை அணைக்க எழுந்து சென்று விட்டாள். "ச்ச இதுவேற ஊடால" என்று எரிச்சலுற்றாள் கவிதா.

போய் ரொம்ப நேரம் ஆகியும் கௌசி
வராததைக் கண்டக் கவிதா "கௌசி நான் எதும் பேசல... வா.. வந்து சாப்பிடு" என்று அந்தச் சிறு சமையல் அறையை நோக்கிக் குரல் கொடுக்க அமைதியாக வந்து அமர்ந்து உண்ணத் தொடங்கினாள் கௌசிகா.

இந்த மூன்று வருடங்களில் இது இரண்டு பேருக்கும் நடக்கும் ஒன்றுதான். கவிதாவைப் பற்றி சகலமும் கௌசிக்குத் தெரியும். ஆனால் கௌசியைப் பற்றி யாருக்குமே எதுவுமே தெரியாது.
சங்கரலிங்கத்திற்கு அவள் சொந்த ஊர் என்ன என்று மட்டும் தான் தெரியும். கவிதாவும் வந்த புதிதில் இன்டைரக்ட்டாக கௌசியிடம் கேட்டுக் கேட்டுப் பார்த்துவிட்டு ஒருநாள் நேராகவே கேட்டுவிட்டாள்.

"எனக்கு யாரும் இல்லை கவிதா. நான்
தனிமரம். அவ்வளவு தான் வேறு எதுவும் கேட்காதே" என்று சொல்ல அதற்கு மேல் கவிதாவும் அவளைக்
கட்டாயப்படுத்தவில்லை.

ஆனால் கௌசியின் கல்யாணத்தைப்
பற்றி கவிதா கேட்கும் போது எல்லாம்
கௌசி மறுப்பாள் "அதெல்லாம் குடும்பம் இருப்பவர்களுக்குக் கவி.. எனக்கு எதுக்கு அதெல்லாம்.." என்று
சொல்லுவாள் கௌசி.

"ஏய்ய் உன் அழகிற்கு லைன்ல நிப்பாங்க டி.. இப்போது எல்லாம் எவ்வளவு மேட்ரிமோனி இருக்கு. அதுவும் இல்லாமல் நீயும் கல்யாணம் செய்தால்.. உனக்கும் ஒரு குடும்பம் வந்துவிடும்பா" என்று கவிதா சொல்ல "எனக்கு அதிலெல்லாம் விருப்பம் இல்லை கவிதா. எனக்குக் கடைசி வரைத் தனியாக இருக்கத்தான் ஆசை" என்று முடித்துவிட்டு தன் வேலையில்
மூழ்கிவிடுவாள்.

சாப்பிட்டு விட்டுக் கவிதா மதியத்திற்குத் தேவையான உணவை இருவருக்கும் எடுத்து வைக்க கௌசி தன் சுடிதார் ஷாலிற்கு பின்னைக் குத்திக் கொண்டு வந்தாள். பின் இருவருமாக பள்ளியை அடைய மணி எட்டரை ஆகி இருந்தது. லேட் இல்லைதான். இருந்தாலும் எல்லா
ஆசிரியரும் வர ஆரம்பித்து இருந்தனர்.
சில பெரிய வகுப்பு மாணவர்களும் வந்து கொண்டு இருந்தனர்.

ஊர்ப் பெரியவரான சங்கரலிங்கம் தான் இந்தப் பள்ளியைத் தொடங்கியது. ஊரில் வளரும் அனைத்துக் குழந்தைகளுக்கும்
கல்வி அவசியம் என்பது அவரது
கொள்கையாக இருந்தது. படித்து முடித்து தன் குடும்பத்திற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று ஒவ்வொரு ஆண்டு விழாவிலும் மாணவர்களுக்கு அறிவுருத்துவார்.

மேலும் விவசாயத்திலும் மிகவும் ஈடுபாடு உடையவர். கம்பத்தில் திராட்சைத் தோட்டம்.. ஏலக்காய் எஸ்டேட் என அனைத்தையும் செய்து வந்தார். தேனியிலும் தோட்டம்.. வயல் என நிறைய செய்து வந்தார். பண்ணிரெண்டாம் வகுப்பு முடித்துத் தன் பள்ளி மாணவர்கள் அக்ரிகல்ச்சர் படிக்க வேண்டும் என்றால் முழுச் செலவையும் சந்தோஷமாக ஏற்றுக்
கொண்டு சந்தேஷமாக படிக்க வைத்தார்.

அன்று வழக்கம் போல பள்ளிக்குள்
நுழைந்த இருவரும் நேராக ஆபிஸ்
ரூமிற்குச் சென்றனர். உள்ளே நுழைந்த
இருவரையும் கண்ட ப்யூன் சாமி
படங்களைத் துடைத்தபடியே
இருவருக்கும் காலை வணக்கத்தைத்
தெரிவித்து விட்டு மீண்டும் சாமி
படங்களுக்குப் மலர்களை வைக்க
ஆரம்பித்தார்.

கௌசிகா ஆபிஸ் ரெஜிஸ்டரில் தான்
இன்று வந்ததிற்கான கையெழுத்தைப்
போட்டுக் கொண்டுத் திரும்ப சுரேஷ்
உள்ளே நுழைந்தான். வந்தவன்
கௌசியிடம் ஒரு சிரிப்பை உதிர்த்து
விட்டு நேராக கவிதாவிடம் சென்று
நேற்று இரவு கவிதாவிடம் பாதியில்
விட்டக் கடலையைத் தொடங்கினான்.
சுரேஷ் கம்பத்தைச் சேர்ந்தவன் தான்.
வந்த ஒரு மாதத்திலேயே கவிதாவிடம்
காதலைச் சொல்லி அதை செயலிலும்
உணர்த்தி அவளைச் சம்மதிக்க
வைத்தவன். எப்போதும் காதல்
வண்டுகள் தான்.

சரியாக ஒன்பது மணிக்குத் தனக்குக்
குடுத்த மூன்றாம் வகுப்பிற்குள் கௌசிகா நுழைந்தாள். 'அப்பாடா' என்று மூச்சை இழுத்து விட்டவள் சிரிப்புடன் பாடத்தை எடுக்கத் தொடங்கினாள். ஏனோ இந்த
வாண்டுகளோடு இருக்கும் போது
எல்லாம் மறந்துவிடும் கௌசிக்கு.

யாரையும் மிரட்டாமல் அதட்டாமல்
நேக்காகப் பாடத்தை மனதில் பதிய
வைத்து சாமர்த்தியமாக நல்ல
மதிப்பெண்களையும் பெற
வைத்துவிடுவாள். அதே நேரம்
ஒழுக்கத்தில் கண்டிப்பும் உண்டு.
பாடத்தை மட்டும் இல்லாமல்
மரியாதையாகப் பேசுவது, கூச்சப்
படாமல் ஒருவருக்கு பதில் பேசுவது என அனைத்தையும் கற்றுக் கொடுப்பாள்.

அன்றும் அதே போல தனது முதல்
இரண்டு வகுப்புகளை முடித்துக் கொண்டு ஆசிரியர்களுக்குக் கொடுக்கப்பட்ட தனி அறைக்கு வந்து உட்கார்ந்தாள். பள்ளிக்கு
வந்தால் கவிதாவும் கௌசிகாவும் மதிய இடைவெளியைத் தவிர மற்ற
நேரங்களில் பேசவே நேரம் இருக்காது.
கவிதா ஆபிஸ் வேலையிலேயே மூழ்கி
இருப்பாள்.. கௌசிகாவிற்கும் வகுப்பு
மற்றும் இன்சார்ஜ் வொர்க் என்று
அதிலேயே நேரம் சென்றுவிடும்.

அன்று மதியம் கவிதா சாப்பிட வர
சுரேஷும் வந்து இவர்களுடன் சேர்ந்து
கொண்டான். அவர்கள் காதலிக்க
ஆரம்பித்த நாட்களிலிருந்து இதுவும்
வழக்கமான ஒன்று தான்.

என்னதான் சுரேஷ் கௌசிகாவிடம்
நட்போடு பழகினாலும்.. அவ்வப்போது
கவிதாவை வெறுப்பேற்ற கௌசிகாவிடம் கொஞ்சம் அதிகமாகப் பேசுவான். ஆனால் எல்லை மீற மாட்டான். கௌசிகா அதை உணர்ந்தாலும் கண்டுகொள்ளாமல் சாதரணமாகவே பேசுவாள். என்னதான் சுரேஷ் கவிதாவை
வெறுப்பேற்றவே செய்தாலும் தானும்
அவனுடன் இணைந்து அவளை
சீண்டக்கூடாது என்று எண்ணினாள். அது எவ்வளவு வலியைத் தரும் என்பது கௌசிகா நன்கு அறிந்த ஒன்று. அதன் வலியை அனுபவித்தவளும் கூட.

"இன்னிக்கு ஈவ்னிங் சங்கரலிங்கம் சார் வருவார்" என்று மதிய உணவை உண்ட படி சுரேஷ் இருவரிடமும் சொன்னான்.

"என்ன ரௌன்ட்ஸா?" என்று கௌசிகா
செய்திருந்த வெண்டைக்காய்
பொறியலை கபளீகரம் செய்தபடிக்
கவிதா கேட்டாள்.

"அப்படி இருந்திருந்தால் நமக்கு முன்
கூட்டியே சொல்லி இருப்பார்கள் இல்லை" என்று கவிதாவைப் பார்த்து
யோசனையாகக் கேட்டாள் கௌசி.

இருவரையும் ஒரு முறை பார்த்துச்
சிரித்தவன் "அதான் இல்லை.. இன்னிக்கு நம்ம சங்கரலிங்கம் சாரோடப் பையன் இங்கு வருகிறார்" என்றான் சுரேஷ்.

"அவர் பையன் இங்கு வந்துதான் ஒரு
மாதம் ஆச்சே" என்று கவிதா மேலே பேச வந்தவனை பேசவிடாமல் இடையில் புகுந்தாள்.

"அட முழுசா சொல்ல விடுடி.." என்று
சலித்தவன் "அவர் பையன் வந்து ஒரு
மாதம் ஆச்சு தான்.. ஆனால் இன்று தான் மகனோடு பள்ளிக்கு வருகிறார்
சங்கரலிங்கம் சார். இனிமேல் பள்ளியை அவர் மகன் தான் பார்க்கப் போகிறார். வெளிநாட்டு வேலை போர்
அடித்துபோல.. இன்று காலை தான்
நம் ப்யூன் சொன்னார்" என்று அவன்
காலையில் ப்யூன் சொன்னதை இருப்
பெண்களிடம் அளந்து கொண்டு
இருந்தான்.

பேசியதில் நேரம் போனதும்
தெரியவில்லை உணவு காலி ஆனதும்
உணரவில்லை மூவரும். பின் சாப்பிட்டு முடித்து விட்டு அவர்வர் வேலையைப் பார்க்கச் சென்றனர்.

மதியம் வகுப்பு இல்லை என்பதால்
கௌசிகா ஆசிரியர்கள் அறையிலேயே உட்கார்ந்து இருந்தாள். சும்மா உட்காரப் பிடிக்காமல் அடுத்த மாதம் வர வேண்டிய பரிட்சைக்கு வினாத்தாள் எடுத்துக் கொண்டு இருந்தாள். திடீரென தன் இதயம் பன்மடங்காகத் துடிப்பதை
உணர்ந்தாள் கௌசிகா.

இந்த இரண்டு நாட்களாக இப்படித் தான் அவ்வப்போது இருக்கிறது.. எதனால்? என்று தன்னைத்தானே கேட்டுக்கேட்டு மூளையைக் கசக்கினாள். ஏனோ ஒரு பக்கம் ஏதோ பதட்டமாகவும் இன்னொரு பக்கம் மகிழ்ச்சியாகவும் என்று உணர்வுகள் மாறி மாறி வந்து கௌசிகாவை வேலை செய்ய விடாமல் செய்தது.

"அடடட ச்சை..." என்று ஜன்னல் பக்கம்
வந்து வெளி அழகை கொஞ்ச நேரம்
ரசிக்க எண்ணி நின்றவள் அதையும்
செய்ய முடியாமல் தவித்தாள்.

ஏன்? என்ன ஆச்சு? இந்த மூன்றரை
ஆண்டுகளில் திடீரென ஏன் இந்த மாதிரி உணர்வு என்று குழம்பிக் கொண்டு இருந்தாள். இது சரிவராது என்ன எண்ணியவள் 'பேசாமல் ஆபிஸிற்குச்சென்று கவிதாவுடன் ஏதாவது பேசியபடி அவளுக்கு உதவியாது செய்யலாம்' என்று முடிவு செய்தாள். மணி இரண்டரை ஆகி இருக்க இனித் தனக்கு எடுக்க
வகுப்பும் இல்லை பேசாமல் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு
சென்று விடலாம் என்று நினைத்தவள்
தன் பிக் ஷாப்பரை எடுத்துக் கொண்டு
கீழே வந்தாள்.

மூன்று மணிக்கு ஆபிஸ் அறைக்குள்
வந்த ப்யூன் "இன்னிக்கு எல்லாரும்
நான்கு மணிக்கு மேல் ஒரு அரை மணி
நேரம் இருக்க வேண்டும்மா..
சங்கரலிங்கம் ஐய்யா வருகிறார்" என்று அவர்களுக்கு ஏற்கனவே தெரிந்த விஷயத்தை அறிவிப்புப் போலச் சொல்லிவிட்டு, அடுத்து எல்லா
வகுப்பிற்கும் சொல்லச் சென்று விட்டார்.

மூன்றே முக்காலிற்கு அணைத்து மாணவ மாணவியர்களும் பள்ளியில் இருந்து வெளியே ஆரவாரத்துடன் ஜாலியாக நகர கௌசிகா எல்லாவற்றையும் பார்த்தபடி
நின்றிருந்தாள். பள்ளிக்குள் வரும் போது இப்படி யாராவது ஜாலியாக
வருகிறார்களா? என்று தன்னைத்தானே கேட்ட கௌசியின் மூளையிடம், கௌசியின் மனம் "அடிப்பாவி நீயும் ஒரு காலத்தில் இப்படித் தான் சென்றாய்.. ஆசிரியர் ஆனால் மறந்துவிடுமா?" என்று
கேட்கக் கௌசி சமாதானம் ஆனாள்.
ஏனோ மீண்டும் தன் மனம் வேகமாகத்
துடிப்பதைக் கௌசி உணர்ந்தாள். 'இது
என்ன இப்படித் துடிக்கிறது..' என்று
மனதிற்குள் புலம்பியவள் கவிதாவைத்
தேடிச் சென்றாள்.

பள்ளியில் ஆசிரியர்கள் மற்றும்
வேலையாட்கள் தவிர அனைவரும்
சென்று இருந்தனர். "கவிதா நான்
ரெஸ்ட்ரூம் போயிட்டு வரேன். சார்
வந்தால் நீ போ நான் வந்து விடுவேன்"
என்று ரெஸ்ட்ரூமிற்குச் சென்று முகத்தை நன்றாக குளிர்ந்த நீரில் கழுவிக் கொண்டு வந்தாள் கௌசிகா.

அவள் வரவும் ப்யூன் ஏதோ கவிதாவிடம் சொல்லிக் கொண்டு போகவும் சரியாக இருந்தது. கௌசிகா அருகில் வர "கௌசி சங்கரலிங்கம் சாரும் அவர் மகனும் வந்துட்டாங்கலாம்.. வா போலம்" என்று
கவிதா அழைக்க அவளுடன் சேர்ந்து
நடக்க ஆரம்பித்தாள் கௌசிகா.

உள்ளே நுழைந்து ஆசிரியர்களுக்கான
இருக்கையில் இருவரும் அமர சுரேஷும் வந்து கவிதாவின் அருகில் அமர்ந்தான். "சார் வந்துட்டாங்க-ன்னு சொன்னாங்க.. இன்னும் வரலையே" என்று கௌசிகா மனதில் நினைத்ததை கவிதா ஆரம்பிக்க
"ஏதோ அவரும் அவர் மகனும்
கரஸ்பாண்டன்ட் அறையில் பேச்சு"
என்று கவிதாவிடம் சுரேஷ் சொன்னது
கௌசியின் காதிலும் விழுந்தது.

சில நிமிடங்களில் அறையின் வாயிலில் காலடிச் சத்தத்தைக் கேட்டு அனைவரும் மரியாதைக்குரிய விதத்தில் எழுந்து நிற்க கௌசியும் எழுந்து நின்று திரும்பிப் பார்த்தாள். முதலில் சங்கரலிங்கம் சாரைப் பார்த்து புன்னகைத்த கௌசி அவருடன் வந்த மகனைப் பார்த்து 'திக்'
என்று இருந்தது.

"இவனா? இவன் எங்கே இங்கே? இவன்
தான் சாரோட மகனோ? கடவுளே இவன் தொல்லையை இனி இங்கேயும்
அனுபவிக்க வேண்டுமா?" என்று
கௌசியின் மனதில் ஆயிரம்
எண்ணங்கள் எழுந்தன.

கவிதா தொண்டையைச் செறும
அவளைத் திரும்பிக் கௌசி பார்க்க
"இவன் என்ன டி இங்க?" என்று கவிதா
கண்களாலேயேக் கௌசியிடம் கேட்டாள். கண்களாலேயே கவிதாவை 'எதுவும் முகத்தில் காட்டாதே' என்று அடக்க இருவரும் தன்னிலைக்குத் திரும்பினர். இருந்தாலும் இவன் எதற்கு இங்கு வந்திருக்கக் கூடும் என்று ஆயிரம் கேள்விகள் கௌசிகாவிற்கு.

யோசனையில் இருந்த கௌசியை
சங்கரலிங்கம் சாரின் குரல் கலைத்தது. வெள்ளை வேஷ்டியிலும் சந்தன நிற சட்டையிலும் சாந்த முகத்துடன் அதே சமயம் சிறிது கம்பீரமான குரலில் பேசத்
தொடங்கினார்.

"எல்லோருக்கும் மாலை வணக்கம்.
எல்லோரும் ரொம்ப நேரம்
காத்திருங்கீங்க-ன்னு நினைக்கிறேன்.
இடையூறுக்கு வருந்துகிறேன்.
திடீரென்று இந்தக் கூட்டத்தை கூட்டும் படி ஆகிவிட்டது. இனிமேல் இந்தப் பள்ளியை என் மகன் பிரபு தான் ஏற்று நடத்தப் போகிறான். இப்பள்ளியின்
கரெஸ்பாண்டன்ட் ஆகவும் இனி
பொருப்பேற்கப் போகிறான்" என்று தனது மகிழ்ச்சியான குரலில் அனைவருக்கும் அறிவித்தார்.

எல்லோரும் சங்கரலிங்கம் சார் பேசி
முடித்தவுடன் கைதட்ட கௌசியும் கடனே என்று கையைத் தட்டினாள். பிரபு தன்னை அப்பப்போ பார்ப்பதை
கௌசிகா உணர்ந்தாள்.

"இனி உங்களின் கோரிக்கை.. உங்களின் ஐடியா எல்லாவற்றையும் உங்கள் புதிய கரெஸ்பாண்டன்டிடமே தெரிவிக்கலாம். நான் வருவதைக் குறைக்கப் போவதால் எதுவும் நம் பள்ளியில் மாறப்போவது இல்லை. வழக்கம் போல எல்லாம் செயல்
படுத்தப்படும்" என்று தன் பேச்சை
முடித்தார் சங்கரலிங்கம்.

அவர் பேச்சை முடிக்க எல்லோருக்கும்
டீயும் பிஸ்கட்டும் கொண்டு வரப்பட்டது.
ப்யூன் அனைவருக்கும் எடுத்துத் தர
எல்லோரும் அவரவர் குழுவிற்குள்
பேசியபடி இருந்தனர். பின்
எல்லோரையும் தன் மகனிற்கு அறிமுகம் செய்த படி வந்து கொண்டு இருந்தார் சங்கரலிங்கம்.

கடைசியாக சுரேஷிடம் வந்தவர் "பிரபு
இது சுரேஷ்... இவங்க ரெண்டு பேரும்
கவிதா கௌசிகா.. இவங்க தான் நம்ம
திராட்சைத் தோட்டத்திற்கு பக்கத்தில்
உள்ள வீட்டில் தான் தங்கியிருக்காங்க " என்று தன் மகனிற்கு அறிமுகம் செய்து வைத்தார்.

கௌசிகாவிற்கு அவனைப் பார்த்தது
அதிர்வாக இருந்தாலும் பயமாக இல்லை. அவன் 'ஹலோ' என்றதற்கு 'ஹலோ' என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள்.

பின் எல்லோரும் அந்த மீட்டிங் முடிந்து
கிளம்ப கவிதாவும் கௌசிகாவும்
கிளம்பினர். ஆபிஸ் ரூமிலிருந்து
வெளியே வந்த இருவரும் சங்கரலிங்கம் சாரும் பிரபுவும் சுரேஷிடம் பேசிக் கொண்டு இருப்பதைக் கவனித்தனர். "சரி
போலாம்.. சுரேஷிடம் இன்று பேசுவது
கஷ்டம்தான். மழை வேறு வர மாதிரி
இருக்கு" என்று கவிதா சொல்ல
இருவரும் வெளியே வரத் திரும்பினர்.

ஆனால் பிரபுவின் பார்வை தன்னைத்
தொடர்வதை கௌசிகாவால் உணர
முடிந்தது. வேகநடையுடன் பள்ளியை
விட்டு வெளியே வந்தாள்.

கடந்த ஒரு மாதமாக பிரபு இவளைத்
தொடர்ந்து கொண்டு இருக்கிறான்.
பள்ளிக்குப் போகும் வழியில் உள்ள டீ
கடையில் கௌசி வரும் வரை நின்று.
அவள் வந்தவுடன் அவளைத் தொடர்ந்து பள்ளி வரை செல்வது என அனைத்துச் சேட்டைகளையும் செய்து கொண்டு இருந்தான்.

அவனைக் கவனித்தாலும் திரும்பிக் கூடப் பார்க்காமல் நேராக முகத்தை வைத்துச் சென்று விடுவாள். அவன் முகத்திலும் உடையிலுமே அவன் பணக்காரச் செழுமைத் தெரிந்தது. 'இப்படித் தான் சுற்றுவான்.. வேறு எதாவது பெண் கிடைத்தால், தன்னால் அவள் பின் சென்று விடுவான்' என்ன கௌசிகா எண்ணி இருந்தாள்.

ஆனால் ஒருவன் பின் தொடர்வதைக்
கவனித்தக் கவிதா "ஏய் என்னடி இவன்
டெய்லியும் பின்னாடி வந்துட்டு
இருக்கான்.. உன்னைத் தான் பாலோ
பண்றான். உனக்குத் தெரியுதா
இல்லையா" என்று கௌசிகாவிடம்
கவிதா சற்று எரிச்சலானக் குரலில்
வினவினாள்.

"தெரியும் டி... நாம திரும்பிப் பார்த்தால்
தான் இன்னும் உரிமை எடுப்பார்கள்.
அதான் அவனைச் சட்டை செய்வதே
இல்லை.. வேறு யாராவது வந்தால்
அவனாகப் போய்விடப் போகிறான்"
என்று கௌசி சொல்ல கவிதா மேலே
பேசினாள்.

"இல்லை டி.. அவன் சும்மா
விளையாட்டிற்கு உன் பின்னாடி வர
மாதிரித் தெரியல.." என்றவள் "பாரு பாருபின்னாடி எப்படி வரான்னு" என்று
பின்னால் வந்து கொண்டு
இருந்தவனைப் பார்த்தபடி கவிதா
படபடப்பான குரலில் சொல்ல தன்
தோழியின் படபடப்பைக் கண்டு
கௌசிகாவிற்கு சிரிப்பு தான் வந்தது.

ஆனால் கவிதா சொல்வதும்
கௌசிகாவை யோசிக்க வைத்தது.
மேலும் ஒருவன் பின்னாலேயே வந்து
கொண்டு இருந்தால் பார்ப்பவர்கள்
என்ன நினைப்பார்கள் என்று
யோசித்தாள் கௌசிகா. அவன் அவளிடம் பேசத் துடிப்பதும் கௌசிகாவிற்குப் புரியாமல் இல்லை.

அன்று மாலை வரும்போது நேர் ரோட்டில் இல்லாமல் குறுக்கு வழியில் தோட்டத்துப் பாதையில் புகுந்தாள் கௌசிகா. ஏதோ கேட்க வந்த கவிதாவிடம் "பேசாமல் வா...." என்று கையைப் பிடித்து இழுத்துச் சென்றாள்.

கௌசிகா நினைத்த மாதிரியே அவன்
அவர்களின் பின்னாலேயே வந்தான்.
கொஞ்ச தூரம் அந்தப் பாதையில் உள்ளே சென்ற பின்.. யாரும் இல்லை என்பதை நன்றாக அறிந்த பின்பு கௌசிகா நடப்பதை நிறுத்தி திரும்பி நின்று அவனைப் பார்த்தாள்.

அவளின் செய்கையில் அவன் மட்டும்
இல்லை கவிதாவுமே திகைத்தாள்.
"என்னடி பண்ணற கௌசி.." என்று
கௌசியின் காதின் அருகில் படபடத்து
அவளின் கையைப் பிடித்து இழுத்து "வா போலாம்" என்றாள் கவிதா.

"நீ இரு.. இன்னிக்கே இதைக் கட்
பண்ணனும்" என்ற அவளின் கையை
உருவியக் கௌசி "ஹலோ சார்.. ஹலோ.. உங்களைத்தான்.." என்று அவனைக் கூப்பிட்டாள்.

அவள் திரும்பி நின்ற பின் வேடிக்கை
பார்ப்பது போல நின்று கொண்டு
இருந்தவன் அவள் தன்னை முதலில்
கூப்பிட்டதும் திரும்பிவிடலாம் என்று
எண்ணினான். ஆனால் அவள் மீண்டும் கூப்பிட்டதும் 'சரி இதான் வாய்ப்பு' என்று அவர்கள் அருகில் சென்று நான்கு அடி இடைவெளியில் தள்ளி நின்றான்.

"வந்து என் பெயர்....." என்று அவன்
ஆரம்பிக்க கையை உயர்த்தி அவனைத் தடுத்தாள் கௌசி.

"உங்க பெயர் எல்லாம் எனக்குத் தேவை இல்லாத விஷயம் சார்" என்றவள் "எதுக்கு என்ன பாலோ பண்றீங்க" என்று வழவழ என்று பேசாமல் நேராக விஷயத்திற்கு வந்தாள்.

அவனால் எதுவும் பேச முடியவில்லை..
ஏதாவது 'என் பின்னால் சுற்ற வேண்டாம்' என்று கேட்பாள் என்று நினைத்தவன்.. நேரான பார்வையில் தைரியமான நிமிர்வுடன் அவள் தன்னைக் கேள்வி கேட்பாள் என்று அவன் கொஞ்சம் கூட எதிர்ப்பார்க்கவில்லை.

"வந்து உங்க கிட்டக் கொஞ்சம் பேசனும்" என்றான்.

"எதுக்குப் பேசனும்?.. உங்களுக்கும்
எனக்கும் என்ன சம்மந்தம் சொல்லுங்க" என்று கௌசி பிசிரில்லாத குரலில் கேட்க அவன் தடுமாறினான்.

என்ன சொல்லுவது என்று தெரியாமல்
அவன் கௌசிகாவைப் பார்க்க "எந்த
சம்பந்தமும் இல்லை அல்லவா?
இனிமேல் என் பின்னாலையும் வராதீங்க. யாராவது பார்த்தால் எங்கள் பெயர் தான் கெட்டுப்போகும்" என்ற கௌசி அவனது பதிலைக் கூட எதிர்ப்பார்காமல் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்து விட்டாள். ஆனால் அவன் சங்கரலிங்கம் சாரின் பையன் என்று அவள் எதிர்ப்பார்க்கவே இல்லை.

தன் சிந்தனைகளிலேயே உழன்று
கொண்டு வந்தவள் வீடு வந்தே சேர்ந்து
விட்டாள். கூட வந்த கவிதாவைக் கூடக்
கவனிக்கவில்லை.. அவளும் அதே
சிந்தனையில் தான் வந்திருப்பாள் போல எதுவும் பேசவில்லை.

பின் இருவரும் உடையை மாற்றி விட்டு
வர அவரவர் வேலையைப் பார்த்தனர்.
"கௌசி நம்ம பிரபு சாரைப் பற்றி என்ன நினைக்கிறாய்" என்று கேலிப்
புன்னகையுடன் கேட்டாள்.

ஆனால் கவிதாவின் கேலி கௌசிக்கு
ஒட்டவில்லை "நான் என்ன நினைக்க..
நம்ம சங்கரலிங்கம் சாரின் பையன்..
அப்புறம் நம்ம புது கரஸ்பாண்டன்ட்
அவ்வளவுதான்" என்று தோளைக்
குலுக்கினாள் கௌசிகா.

"சரி சீரியஸாக் கேட்கிறேன்.. பதில்
சொல்லு.." எனக் கேட்டாள் கவிதா.

"கேளு" என்றபடி தான் மதியம் பாதியில் விட்டு வைத்த வினாத்தாளை எடுக்க ஆரம்பித்தாள்.

"அவரு.. சும்மா ஒன்னும் நம்ம ஸ்கூலிற்கு வர மாதிரி எனக்குத் தோனல.. ஒருவேளை அவர் உன்கிட்ட ப்ரபோஸ் பண்ணா என்ன சொல்லுவ" என்று தயங்கிய படியேக் கௌசிகாவிடம் கேட்டாள்.

கவிதா கேட்ட கேள்வியில் ஒரு கணம்
வினாத்தாளில் இருந்து பார்வையை
விலக்கி அவளைப் பார்த்த கௌசி
"வேண்டாம்.. அதான் என் பதிலாக
இருக்கும்" அழுத்தம் திருத்தமாகச்
சொல்லி முடித்தாள்.

அதற்கு மேல் எதுவும் கவிதாவும்
கேட்கவில்லை.. இரு பெண்களும் அன்று இரவு உணவை முடித்துவிட்டு அவரவர் படுக்கையில் படுத்தனர். மீண்டும் அதே துடிப்பு இதயத்தில் கௌசிகாவிற்கு.. எழுந்து சென்று தண்ணீரைக் குடித்துக் கொண்டு வந்து படுத்து உறங்கிவிட்டாள் கௌசிகா.

அதே நேரம் கௌசிகாவை நினைத்த படி தனது பெட்டில் படுத்து விட்டத்தை
வெறித்துக் கொண்டு இருந்தான் பிரபு.
ஊருக்கு வந்த புதிதில் ஒரு
ஞாயிற்றுக்கிழமை சுற்றச் சென்ற போது தான் அவன் கௌசிகாவைப் பார்த்தது. அவர்கள் திராட்சைத் தோட்டத்துப் பக்கத்தில் உள்ள பெரிய தண்ணீர்த் தொட்டியின் திண்டில் அமர்ந்து தன் தோழியிடம் பேசிக் கொண்டு இருந்தவளைக் காண்கையில் அவனிற்கு அவளின் அழகு தெவிட்டவில்லை. அவளின் அழகில் தன்னைத் தொலைத்துவிட்டான் என்று தான்
சொல்ல வேணடும். பிறகு அவளைப்
பற்றி செய்திகளைச் சேகரித்துக்
கொண்டு அவளைப் பின் தொடர
ஆரம்பித்தான்.

அவளது அமைதியும், பண்பும் அவனை
மிகவும் ஈர்த்தது. அவள் 'என் பின்னால்
வர வேண்டாம்' என்று சொன்ன பிறகும்
அவனால் சும்மா இருக்க முடியவில்லை.அவளைப் பற்றி விசாரித்ததில் யாரும் உறவுகள் இருப்பதாகத் தெரியவில்லை..
அப்படி ஒரு அழகியை விடவும் மனம்
இல்லை. எப்படியாவது அவளைக்
காதலோடு கைப்பிடித்து ஆக வேண்டும் என்றுதான் பள்ளியைத் தன் பொறுப்பில் பிரபு ஏற்றது.

அவளிடம் முடிந்த அளவில் பேசிப் புரிய
வைத்து அப்பாவிடமும் பேச வேண்டும்
என்று எண்ணினான்.

ஆனால் அவனது காதலும் திட்டமும்
கௌசிகா சொல்லப்போகும் செய்தியில், கோயிலில் உடைத்த தேங்காயைப் போல சிதறப் போவதை அப்போது பிரபு அறியவில்லை.
 

writer

Saha Writer
Team
Messages
50
Reaction score
26
Points
8
அத்தியாயம்-2

அதே நாள் காலை கோயம்பத்தூரில்..
(அதாவது கௌசியின் இதயம்
காரணமில்லாமல் துடித்துக் கொண்டு
இருந்த தினம்).

அன்று காலை ஜாக்கிங் முடித்துக்
கொண்டு வீட்டிற்குத் திரும்பிய விக்னேஷ் என்று அழைக்கப்படும் விக்னேஷ்வரன் வீட்டின் முன் கிடந்த செய்தித்தாளை எடுத்துக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்தான்.

"அம்மா...." என்று குரல் கொடுத்த படி
விக்னேஷ் நுழைய சமையல் அறையில்
இருந்து வெளிப்பட்டார் அவனது அன்னை சுமதி.

"காஃபியா டீயா விக்னேஷ்?" என்று கேட்ட தாயிடம் "காஃபி மா" என்றவன்.. தனது ஷூவைக் கழட்டி வைத்துவிட்டு ஹாலில் உள்ள சோபாவில் வந்து அமர்ந்து அன்றைய செய்தித்தாளைப் படிக்க ஆரம்பித்தான்.

சில நிமிடங்களில் சுடசுட ஆவி பறக்க
காஃபியைக் கொண்டு வந்தத் தாயைப்
பார்த்தவன் "நீங்க குடிச்சாச்சா?" என்று
கேட்டபடித் தனக்குக் கொண்டு வந்தக்
காஃபியை எடுத்துப் பருக ஆரம்பித்தான்.

அருகில் இருந்த சோபாவில் அமர்ந்த
சுமதி தன் மகனையேப் பார்த்துக்
கொண்டு இருந்தார். 29 வயது என்று
சொன்னால் யார் நம்புவார்கள்.. 25
வயதுப் பையனைப் போலவே
தெரிகிறான்.. ஒரு ஆண்மகனிற்கு
உண்டான அனைத்துக் கம்பீரமும் அழகும் நிறைந்தத் தன் மகனைப் பெருமையாகப் பார்த்துக்கொ ண்டிருந்தார் சுமதி.

ஆனால் பலூன் வெடித்ததைப் போலச்
சட்டென்று அந்தப் பெருமைத்தனம்
வெடித்து அவரைச் சோகம் ஆட்கொண்டு விட்டது. எப்படி இருந்தவன் இன்று.. என்று யோசித்தார். கிட்டத்தட்ட மூன்று மூன்றரை
வருடத்திற்கு முன்னால் இருந்த சிரிப்பு..
கேலி எதுவுமே இவன் முகத்தில்
இப்போது இல்லையே.. என்னதான்
மகன் இப்போது சம்பாரித்தாலும் மகனின் இந்த நிலை கவலையையே அளித்தது சுமதிக்கு. கால்கட்டு போட்டாலாவது சரியாகும் என்று நினைத்தால் இவன் அந்தப் பேச்சே வேண்டாம் என்கிறானே. தன் சிந்தனைகளில் உழன்று கொண்டு
இருந்தவரை விக்னேஷின் குரல் கலைக்க "எ.. என்ன விக்னேஷ்.. என்னக்
கேட்டாய்" என்றுத் தன் சிந்தனைகளில்
இருந்து வெளிவந்துக் கேட்டார் சுமதி.

"என்னத் தீவிரமான யோசனை.. அதுவும்
இந்தக் காலையிலேயே" என்று பேப்பரை மடித்து டீபாயில் வைத்தபடிக்
கேட்டவனிடம் என்ன சொல்லுவது
என்றுத் தெரியாமல் விழித்தார் சுமதி.
என்ன என்று சொல்லுவது இவனிடம்.
உன்னைப் பற்றியக் கவலை என்றா?
உண்மையைச் சொன்னால்.. 'எதற்கு
தேவையில்லாத விஷயத்தை நினைத்துக் குழப்பிக் கொள்கிறீர்கள்' என்று எரிந்து விழுவான் என்று யோசித்தார்.

"அம்மாமா" என்று அழைத்து அவரின்
பக்கத்தில் வந்து அமர்ந்தவன் "என்னமா
கேட்டுட்டே இருக்கேன் எதுவுமே
சொல்லமாட்டிறீங்க.. எதாவது
சொல்லனுமா" என்று அக்கறையானக்
குரலில் கேட்டான் அவரின் அருமை மகன்.

"ஒன்றுமில்லைபா.. அடுத்த வாரம்
அப்பாவிற்குத் திதி கொடுக்கனும்..
நியாபகம் இருக்கில்லையா.. அடுத்த
செவ்வாய் எந்த வேலை இருந்தாலும்
கான்சல் பண்ணிடு" என்று சொல்ல
ஹாலில் மாட்டியிருந்த தன் தந்தையின்
படத்தை ஒரு நிமிடம் நிமிர்ந்து பார்த்தான்.

சந்தன மாலைப் போடப்பட்டிருந்தப்
போட்டோ ப்ரேமில் சிரித்த முகத்துடன்
இருந்தத் தன் தந்தை செந்தில்நாதனைப் பார்க்கையில் 'சுருக்' என்று ஒரு வலி ஏற்பட்டது விக்னேஷிற்கு. கிட்டத்தட்ட மூன்று வருடத்திற்கு முன்னால் திடீரென
ஏற்பட்ட மாரடைப்பில் இறந்தவரை
நினைக்கையில் இன்னும் வேதனையாகத் தான் இருந்தது
விக்னேஷிற்கு.

தன் முகத்தில் இருந்த வேதனையை
டக்கென்று அன்னை காணாதவாறு
மறைத்தவன் "நியாபகம் இருக்கு அம்மா.
நீங்கள் சொன்ன மாதிரியே செய்துவிடலாம்" என்று எழுந்தான்.
யோசனை வந்தவனாக "அம்மா.. மாமா
எங்கே..?" என்று கேட்டான்.

"இன்னும் எழவில்லை போல.. நேற்றே
கொஞ்சம் அசதியா இருக்கு-ன்னு
சொன்னார். தூங்கிட்டு இருப்பார்.. அவரே எழுந்து வரட்டும்" என்றுவிட்டு சமையல் அறைக்குள் நுழைய... விக்னேஷும் தன் அறைக்குள் புகுந்து விட்டான்.

தன் தந்தை செந்தில்நாதன் இறந்தபின்
கண்ணைக் கட்டி விட்டதைப் போல
விக்னேஷ் உணர்ந்தான். நடந்த
சம்பவத்தில் இருந்த ஐ.டி வேலையையும்
விட்டுவிட்டான். தற்போது இயற்கை
விவசாயம் மற்றும் "விக்னேஷ்
போட்டோகிராஃபிஸ்" என்று கல்யாண
விழாக்கள் மற்றும் நிறைய
விளம்பரங்கள் எல்லாம் சிறப்பாக செய்து கொண்டு இருந்தான். முதலில்
சிரமப்பட்டாலும் இரண்டையும் விடாமல்
தன் முயற்சியையும் ஆர்வத்தையும்
இரண்டிலும் காட்டி வெற்றியைக்
கண்டான். கடந்த ஒன்றரை வருடமாகப்
பணத்திற்கு பற்றாக்குறை இல்லாமல்..
அப்பர் மிடில் கிளாஸ் வாழ்க்கையையே
வாழ்ந்து வருகின்றனர்.

குளித்து முடித்துவிட்டு வெளியே
வந்தவன் தன் தாய்மாமா வரதராஜன்
இன்னும் வராததைக் கண்டு "அம்மா
மாமா இன்னுமா தூங்கறாரு?" என்று
புருவ முடிச்சுடன் கேட்க "மணி என்ன?
எட்டு ஆச்சா... இவ்வளவு நேரம்
தூங்கமாட்டாரே.. போய் எழுப்பிப் பார்
விக்னேஷ்" என்று அன்னைக் கூற
அவரது அறைக்குச் சென்று கதவைத்
தட்டினான்.

பூட்டவில்லை தான், இருந்தாலும்
தட்டாமல் உள்ளே செல்வது அநாகரிகம்
என்று தோன்றவே "மாமா..." என்று
மீண்டும் ஒரு முறை கதவைத் தட்டிப்
பார்த்தான். பதில் இல்லாது போகவே கதவைத் திறந்து கொண்டு உள்ளே
போனான்.

அவர் இன்னும் உறங்கிக் கொண்டு
இருப்பதைக் கண்டவன் "மாமா.." என்று
மெதுவாக அழைத்தபடி அவர் அருகில்
சென்று எழுப்பினான். அவரிடம் அசைவே இல்லை. ஒரு நிமிடம் அதிர்ந்தவன் "மாமா.. மாமா.." என்று உலுக்கிப் பார்த்தான். அவரது போர்வையை விலக்கி நெஞ்சில் தலையை வைத்துப் பார்த்தவனுக்கு அவரின் இதயத் துடிப்பு சரியாக இருந்த மாதிரியேத் தெரியவில்லை.

யோசிக்காமல் அவரைக் கையில்
அள்ளியவன்... அவரைத் தூக்கிக்
கொண்டு வெளியே வர, சமையில்
அறையில் இருந்து வெளியே வந்த சுமதி "அய்ய்யோ... என்ன ஆச்சு" என்றுப் பதறி ஓடி வர "அம்மா... பேசுவதற்கு
நேரமில்லை.. போய்க் கார்ச் சாவியை
எடுத்துக் கொண்டு வாங்க.. சீக்கிரம்
ஹாஸ்பிடல் போய்விடலாம்" என்று
சொல்லிவிட்டு வேகமாகச் செயல்பட்டான் விக்னேஷ்.

அதற்குள் வீட்டையும் பூட்டிவிட்டு கார்
சாவியையும் எடுத்துக் கொண்டு சுமதி
வந்துவிட்டார். கார் காரைத் திறந்து
வரதராஜனை உள்ளே சாய்ந்தவாரு
படுக்க வைத்துவிட்டுத் தன்
அன்னையையும் பின்னே ஏறச்
சொல்லிவிட்டு முன் சீட்டிற்குச் சென்று
காரை எடுத்தான்.

அடுத்த பத்தாவது நிமிடத்தில் அந்த
ராயல் கேர் ஹாஸ்பிடல் முன்னால் கார்
நின்றது. காரை நிறுத்திவிட்டு உள்ளே
ஓடியவன் விவரம் சொல்ல
ஸ்டெரச்சருடன் வந்தவர்கள் காரில்
இருந்த வரதராஜனை ஸ்ரெச்சரில்
வைத்து உள்ளே கொண்டு சென்றனர்.

விக்னேஷ் நினைத்தது போல ஹார்ட்
அட்டாக் தான். ஐசியூ-வில் இருந்து
அவசரமாக வெளியே வந்த நர்ஸ் ஏதோ
பேப்பரில் சைன் கேட்க.. அவர்கள் கேட்ட
இடத்தில் கையெழுத்தைப் போட்டுக்
கொடுத்தான். முழுதாக ஹாஸ்பிடல்
சென்ற பின் மூன்றரை மணி நேரம் அந்த ஐசியூ-வின் முன்பு நின்றார்கள்
விக்னேஷும் சுமதியும். அந்த மூன்றரை
மணி நேரத்தில் லட்சம் எண்ணங்கள்
இருவரையும் ஆட்கொண்டது.

ஆப்ரேஷனை முடித்துக் கொண்டு
வெளியே வந்த டாக்டர் சுமதியும்
விக்னேஷும் நிற்பதையும் பார்த்துவிட்டு
"நீங்கள் தான் பேஷன்டின் உறவா?"
என்றுக் கேட்டார்.

"ஆமாம்" என்றான் விக்னேஷ். சுமதியால் பேசக் கூட முடியவில்லை. துக்கம் தொண்டையை அடைப்பது போல இருந்தது.

"சரி என்னுடைய ரூமிற்கு வாருங்கள்"
என்று அவர் சொல்ல இருவரும் அவரைத் தொடர்ந்தனர்.

உள்ளே சென்றபின் "நீங்கள்
உட்காருங்கள்.. வந்துவிடுகிறேன்"
என்றவர் அந்த அறையின் மூலையில்
இருந்த சானிடைஸர் மூலம் கையை
சுத்தம் செய்து கொண்டு வந்தார் அவர்.

வந்து அமர்ந்தவர் "நீங்கள் அவருக்கு
என்ன வேண்டும்?" என்று கேட்டார் டாக்டர்.

"அவர் என் தாய்மாமா டாக்டர். என்
அம்மாவுடைய அண்ணன்" என்று
பதிலளித்தான் விக்னேஷ்.

"வேறு யாரும் இல்லையா அவருக்கு..
அதாவது மனைவி.. பிள்ளைகள்...?"
என்று டாக்டர் கேட்க விக்னேஷின் முகம்
இறுகியது.

"இல்....." என்று விக்னேஷ் ஆரம்பிக்கும்
முன் சுமதி முந்திக்கொண்டார். "மனைவி இல்லை டாக்டர். பெண் வெளியூரில் வேலையில் இருக்கிறாள்" என்று வாயில் வந்ததைச் சுமதி அவசரமாகச் சொல்லிச் சமாளிக்க தன் அன்னையை ஓரப்பார்வையில் எரித்தான் விக்னேஷ்.

"டாக்டர்.. மாமாவிற்கு என்னப் ப்ராப்ளம்?" என்று பேச்சை மாற்றிக் கேட்டான் விக்னேஷ்.

"அவருக்கு ஹார்ட் அட்டாக் தான். எங்க
மெடிக்கல் டெர்ம்ல சொல்லனும்னா
மையோகார்டியல் இன்ஃபார்க்ஷன்
(myocardial infarction).." என்றார்.

"முன்னாடியே சிம்டம்ஸ் லா ஏதும்
காட்டுலயே டாக்டர்?" என்று தன்
சந்தேகத்தைக் கேட்டான் விக்னேஷ்.

"அவர் வயது என்ன?" என்று வினவினார்
டாக்டர்.

"55 டாக்டர்" - விக்னேஷ்.

"பொதுவா இந்தக் கேஸ்ல
வயதானவர்களுக்கு சிம்டமஸ்
அவ்வளவாக் காமிக்காது.." என்ற டாக்டர்.. "அவருக்கு சுகர் வேறு இருப்பதால் தான் பைபாஸ் சர்ஜரி பண்ண வேண்டியதாப் போயிற்று... பிரஷர் எல்லாம் அதிகமா இருக்கு.. ஹைப்பர் டென்சன் .. அவரு ஏதோ மனச் சோர்வில் இருந்திருக்கிறார்" என்று முடித்த டாக்டர் விக்னேஷையும்
சுமதியையும் மாறி மாறிப் பார்த்தார்.

"அப்படி ஏதும் அவர் எங்களிடம்
காட்டவில்லையே டாக்டர்.. நன்றாகத்
தானே இருந்தார்" என்று இறுகிய
முகத்துடன் கேட்டான் விக்னேஷ்.

"அதான் பிரச்சினையே.. அவர்
உங்களிடமெல்லாம் சொல்லாமல்
மனதில் போட்டுக் குழம்பி இந்த
நிலைமைக்குக் கொண்டு வந்துவிட்டார்"
என்றார் டாக்டர்.

ஒரு நிமிடம் நெற்றிப் பொட்டில் தன்
ஆள்காட்டி விரலை வைத்து தேய்த்த
விக்னேஷ் "சரி இப்போ எல்லாம் ஓகே
தான டாக்டர்? அதாவது உடம்புக்கு எந்தப்
பிரச்னையும் இல்லையே?" என்று சற்று
சின்னக் குரலில் டாக்டரைப் பார்த்துக்
கேட்டான். அவருக்கு ஏதாவது என்றால்
யாராலையும் தாங்க முடியாது.

"இனி இல்லை தான்.. அதாவது இதற்கு
அடுத்து நீங்கள் எல்லோரும் அவரை
வைத்திருக்கும் மனநிலையைப்
பொருத்தது" என்றார். டாக்டர் என்ன
சொல்ல வருகிறார் என்ன விக்னேஷிற்கு புரிந்துவிட்டது.

"புரியலையே டாக்டர்.." என்றார் சுமதி.

"அதாவது.. அவர் ஏதாவது மனச்சோர்வில் இருக்கிறார் என்று சொன்னேனில்லை.. அதை என்ன என்று கேட்டு சரி செய்து விடுங்கள்" என்றார் டாக்டர் கூலாக.

விக்னேஷும் சுமதியும் அமைதியாக
அமர்ந்திருக்க "இது அவருடைய
மனதிற்காக.. என்னதான் நாங்க மருந்து
மாத்திரைகள் கொடுத்தாலும்
ஒருத்தருக்கு தன் மனநிம்மதியும்
தன்னம்பிக்கையும் தான் பாதி பலத்தைச் சீக்கிரம் திருப்பித் தரும்" என்ற டாக்டர் "சரி நானும் ரவுண்ட்ஸ் போகனும்.. வேறு ஏதாவது கேட்க இருக்கிறதா?" என்று கேட்டார் இருவரிடமும்.

"இல்லை டாக்டர்" என்று விக்னேஷ் எழ
சுமதியும் எழுந்துவிட்டார்.

"ஓகே அவர கொஞ்ச நேரத்தில் மற்றொரு ரூமிற்கு மாற்றிடுவோம்.. அங்கு வரும்போது பார்க்கிறேன்" என்று அவர் நடக்க மூவரும் அந்த அறையை விட்டு வெளியே வந்தனர்.

வெளியே வர ஒரு நர்ஸ் வந்து "சார்..
ஹாஸ்பிடல் பில்.." என்று ஆரம்பிக்க
"எங்கக் கட்டணும்?" என்று கேட்டான்.

பின் பில்லைக் கட்டிவிட்டு வந்தவன்
அப்போது தான் "ச்ச... ஜீவாவிற்கு
இன்னும் சொல்லல பாரு" என்று
ஜீவாவிற்கு போனைப் போட்டான்.

போனை எடுத்த ஜீவா "ஹலோ
சொல்லுடா விக்கி" என்று ஆரம்பித்தான்.

"ஜீ... மாமாவிற்கு ஹார்ட் அட்டாக் டா..
இன்னி..." என்று விக்னேஷ்
முடிப்பதற்குள் "டேய்ய்ய்ய்ய்ய்ய் என்னடா சொல்லற.. என்ன திடீர்னு.. இப்போ எப்படி இருக்கிறார்" என்று பதட்டமான குரலில் வினவினான்.

"திடீர்னா.. பின்ன இதெல்லாம்
சொல்லிட்டா டா வரும்.. ஜீ என்ன முழுசா
பேச விடு" என்றவன் காலையில் நடந்தது முதல் ஹாஸ்பிடலில் அட்மிட் செய்தது வரை கூறினான். "இப்போ ப்ராப்ளம் இல்ல ஜீ.. நீ பொறுமையாகவே வா" என்றான்.

"சரிடா.. வருகிறேன்" என்று ஜீவா
போனை வைத்துவிட்டான்.

ஜீவா வேறு யாரும் இல்லை.. நம்
வரதராஜனுடைய முதல் தங்கை
ஜெயாவின் மகன். இரண்டாவது
தங்கை சுமதியின் மகன் தான் விக்னேஷ்.

போனை வைத்துவிட்டு தன்
அன்னையைத் தேடி வந்தான். சுமதி
அங்கு போடப்பட்டிருந்த ஒரு
இருக்கையில் அமர்ந்திருந்தார். அவர்
அருகில் சென்றவன் "ஏதாவது
சாப்பிடறீங்களா? காலையிலும்
சாப்பிடவில்லை. என்ன வேணும்-ன்னு
சொல்லுங்க வாங்கிட்டு வர்றேன்"
என்றான் அக்கறையாக.

"எனக்கு எதுவும் வேண்டாம்" என்று சுமதி சொல்ல விக்னேஷிற்கு சுல்லென்று கோபம் வந்தது.

"இப்போ வயிற்றைப் பட்டினி போட்டு
என்ன சாதிக்கப் போறீங்க" என்று
கோபமாகக் கேட்டான்.

"எதையும் இல்லை.. எனக்கு மனசு
சரியில்ல விடு விக்னேஷ்" என்று
சலித்தார் சுமதி.

"எதையும் சாப்பிடாமல் இருந்து..
மனதையும் போட்டுக் குழப்பிக்கிட்டு
இப்போ உள்ளே இருக்கிறாரே.. அவரைப் போல கை காலை நீட்டிப் படுக்கப் போறீங்களா? அவரைப் பார்த்துக் கொள்ளவாவது உங்களுக்குச் சத்து வேண்டாமா" என்று லேசாக அதட்டியவன் "நான் ஏதாவது காண்டின்ல வாங்கிட்டு வருகிறேன்.." என்று நகர "நீயும் ஏதாவது சாப்பிட்டுவிட்டு வா விக்னேஷ்" என்று
அன்னையின் குரல் கேட்டுத் திரும்பிய
விக்னேஷ் "ம்ம்" என்று விட்டு நடந்தான்.

காண்டினிற்கு வந்து தன் அம்மாவிற்கு
ஒரு செட் இட்லியும் ஒரு ஜீஸும்
சொல்லியவன், தனக்கு ஒரு காஃபியை
வாங்கிக் கொண்டு அமர்ந்தான்.

டாக்டர் சொன்னது அவன் மனதில்
ஓடியது. அவர் எதை நினைத்துக்
கலங்குகிறார் என்பதும் அவனுக்குப்
புரியாமல் இல்லை. எல்லோருக்கும்
இருக்கும் வருத்தம்.. கலக்கம் தான்.
ஆனால் விக்னேஷின் மனதில் அது
வெறுப்பாக இருந்தது. அதை வெளியே
காட்டவில்லை என்றாலும் தன் அன்னை
அறிந்து கொண்டது அவன் அறிந்ததே.
அடுத்து என்ன என்று யோசித்துக்
கொண்டு இருந்தவனை "டோக்கன் நம்பர் 101" என்ற குரலில் தன் நினைவில் இருந்து வெளியே வந்தவன், எழுந்து சென்று தன் அன்னைக்கு வாங்கியிருந்த பார்சலை எடுத்துக் கொண்டு முதல் தளத்திற்குச் சென்றான்.

அவன் அங்கு வந்து சேரவும் ஜீவா வரவும் சரியாக இருந்தது. ஜீவா.. ஜீவாவுடைய மனைவி மதி.. ஜீவாவுடைய பெற்றோர் ஜெயா சதாசிவம் (அதாவது வரதராஜனுடைய முதல் தங்கையின் குடும்பம் மொத்தமும் வந்திருந்தது) வந்துவிட்டனர்.

தன் அக்கா ஜெயாவைக் கண்ட சுமதி
கண் கலங்கி "அக்காகா... அண்ணா
அண்ணா" என்று குழந்தை போல
கண்ணீர் சிந்த ஆரம்பித்து விட்டார்.

தங்கை அழுவதைப் பார்த்து
ஜெயாவிற்கும் கண் கலங்கிவிட்டது "ஏய்
அழதேடி. எனக்கும் அழுகை வருது" என்று சொல்லச் சொல்ல ஜெயாவிற்கும்
அழுகை வந்துவிட்டது.

இருக்காதா பின்னே? சீராட்டிய
அண்ணன் இப்போது இப்படி இருப்பதைப் பார்க்க இருவருக்கும் கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தன.

ஜீவா தன் மனைவி மதியிடம் கண் ஜாடை செய்ய.. மதி சென்று "அத்தை பாருங்கள்.. சித்தப்பாவிற்கு எதுவும் இல்லை.. இன்னும் கொஞ்ச நாளில் சரி ஆயிரும்" என்று சமாதானம் செய்தவள்
"இரண்டு பேரும் உட்காருங்க" என்று
முதலில் இருவரையும் உட்கார
வைத்தாள்.

"மதி..." என்று விக்னேஷ் அழைக்க
"சொல்லுங்க விக்னேஷ்" என்றாள் மதி.

"இது அம்மாவிற்கு வாங்கி வந்தேன்..
காலையில் இருந்து சாப்பிடவில்லை..
கொஞ்சம் சாப்பிடச் சொல்லிக் குடுங்கள்" என்று மதியின் கையில் தான் வாங்கி வந்த பார்சலைத் தந்தான்.

பார்சலைத் தந்தவன் தன் அன்னையும்
பெரியன்னையும் எதிர் இருந்த
இருக்கையில் அமர ஜீவாவும்
ஜீவாவுடைய தந்தை சதாசிவமும்
விக்னேஷுடன் அமர்ந்தனர். ஜெயாவும்
சுமதியும் கொஞ்சம் சமாதானம் ஆன
பிறகு.. மதி பார்சலைத் திறந்து
சுமதிக்குச் சாப்பிடக் குடுத்தாள்.

சாப்பிட்டுவிட்டுக் கையைக்
கழுவிக்கொண்டு சுமதி வந்து அமர ஒரு
சில நிமிடங்கள் யாருமே எதையுமே
பேசவில்லை. ரொம்பவே அமைதி
காத்தனர்.

மேலும் ஐந்து நிமிடம் கழிய சதாசிவம்
தான் "என்னப்பா ஆச்சு.. டாக்டர் ஏதாவது
சொன்னாரா.. எதனால் இப்படியாம்"
என்று கேள்விகளை நிதானமாக
அடுக்கினார்.

"பெரியப்பா.." என்று ஆரம்பித்தவன்
டாக்டர் அறையில் நடந்த அனைத்தையும் அனைவரிடமும் கூறினான்.

"என்ன செய்யலாம் இப்போது.." என்று
சுமதி சின்னக் குரலில் அனைவரிடமும்
யோசனைப் போலக் கேட்டார்.

விக்னேஷ் இடுங்கின கண்களுடன் தன்
அன்னையைப் பார்த்தான். தன் அன்னை எங்கு சுற்றி எங்கே வருகிறார் என்பது அவனுக்குப் புரிந்துவிட்டது. அதாவது "தான் சொன்னால் தானே திட்டுவாய். இவர்கள் சொன்னால் என்ன சொல்லப் போகிறாய்.. கண்டிப்பாகக்
கேட்கப்போகிறாய்" என்று நினைத்து
அவர் ஆரம்பித்தார்.

ஆனால் விக்னேஷிற்குத் தான்
மிதமிஞ்சிய ஆத்திரம் பொங்கியது.
எவ்வளவு சாதுர்யமாகக் தன் அன்னை
காய் நகர்த்துகிறார் என்று அவன் உள்
உணர்வும் சொன்னது.

"அம்மா..." என்று விக்னேஷ் ஆரம்பிக்க,
அதற்குள் அவனுடைய செல்போன்
அழைத்தது.

போனின் திரையில் மாகலிங்கம் என்ற
பெயரைப் பார்த்தவன் "இதை
எப்படி மறந்தேன்" என்று நினைத்துவிட்டுப் போனை எடுத்துக்
கொண்டு அனைவரிடமும் இருந்து விலகி கொஞ்சம் தள்ளி நின்று பேசினான்.

"ஹலோ தாத்தா.. ஸாரி தாத்தா" என்று
கெஞ்சலும் கொஞ்சலுமாக விக்னேஷ்
பேசினான்.

"எதற்குப்பா ஸாரி.. அதெல்லாம் எந்தக்
காரணமும் இல்லாமல் நீ இப்படி
பண்ணியிருக்க மாட்டாய் என்று தெரியும்" என்றவர் "என்ன ஆச்சு.. இப்படி எல்லாம் போகாமல் இருக்க மாட்டாயே விக்கா" என்று கேட்டார்.

"அது இன்று காலை..." என்று
ஆரம்பித்தவன் அனைத்தையும்
கூறினான்.

"சரிப்பா.. எதற்கும் கவலைப்படாதே..
நான் நாளை வந்து வரதராஜனைப்
பார்க்கிறேன்.. நான் அந்தக் காலேஜ்
ப்ரின்சிபாலிடம் சொல்லிக் கொள்கிறேன்.. வேறு எப்போதாவது
வைத்துக் கொள்ளலாம் என்று.." என்றார்
மகாலிங்கம்.

"சரி தாத்தா" - விக்னேஷ்வரன்.

"சரிப்பா வைக்கிறேன்" - மகாலிங்கம்
தாத்தா.

"சரி தாத்தா" என்று போனை வைத்து
விட்டான் விக்னேஷ்.

போட்டோகிராபிஸ் போக விகானேஷ்
இயற்கை விவசாயமும் செய்து
வருகிறான். அவன் இயற்கை விவசாயம்
செய்து வருவது மகாலிங்கம் அய்யாவின் இடத்தில் தான். அவர் விக்னேஷிற்கு நல்ல வழிகாட்டியும் கூட. இருவருக்கும் என்னதான் வயது வித்தியாசம் நாற்பதுக்கு மேல் என்றாலும் ஏதோ வயதைக் கடந்த இனம் புரியாத நட்பு இருவருக்கும்.

விக்னேஷ் இந்த இயற்கை விவசாயத்தை நன்கு செய்ய அவனைப் பற்றி லோக்கல் பத்திரிகைகளில் வந்தது. அதனால் அவனைக் கோயம்பத்தூரில் உள்ள அரசு
விவசாயக் கல்லூரியில் மாணவர்களுக்கு எடுத்துரைக்க
வேண்டுகொள் விடுத்தார் அந்தக்
கல்லூரியின் ப்ரின்சிபால். அதுவும்
மகாலிங்கம் அய்யாவின் மூலம்.
வரதராஜனிற்கு இன்று நேர்ந்த உடல்
நலக்குறைவால் விக்னேஷினால்
அதற்குப் போக முடியவில்லை.
விக்னேஷிற்கும் தன் மாமாவிற்கு ஒன்று என்றதும் அனைத்தும் மறந்துபோயின.

போனை வைத்துவிட்டு வந்தவனுக்கு
இன்னொரு வேலை திடுமென நியாபகம் வந்தது. ஒரு நிமிடம் யோசித்தவன் "ஜீ.. ஒரு வேலை டா.. ஒரு இரண்டு மணி நேரம் இருக்கியா வந்து விடுகிறேன்" எனக் கேட்டான்.

"அதெல்லாம் நோ ப்ராப்ளம்... நீ போயிட்டு பொறுமையா வா... நாங்க எல்லாரும் இருக்கோம்.." என்று சொல்ல "விக்னேஷ் நம்ம வீட்டு வழியாகவா போற" எனக் கேட்டார் ஜெயா.

"ஆமாம் பெரியம்மா.. நம்ம
ஸ்டுடியோவிற்கு தான் போறேன்"
என்றான்.

"சரி நானும் வருகிறேன்... எல்லாருக்கும்
டிபன் செய்துவிட்டு.. உனக்கும்
அம்மாவிற்கும் மட்டும் நைட் சாப்பிட
இங்கே எடுத்து வந்துவிடலாம்" என்று
அவர் சொல்ல மதி உள்ளே புகுந்தாள்.

"அத்தை பேசாமல் நான் போகிறேன்.
நீங்கள் இங்க சின்ன அத்தை கூட
இருங்க.. அதுவும் இல்லாமல் பாப்பா
அம்மா வீட்டில் இருக்கா.. இன்னும்
கொஞ்சம் நேரத்துல எப்படியும் அழ
ஆரம்பித்து விடுவாள்.. நான் டிபன்
செய்து விக்னேஷிடமே குடுத்து
விடுகிறேன்" என்று மதி சொல்ல..
எல்லோருக்கும் அதுவே சரி என்றுபட்டது.

மதியை வீட்டில் விட்டுவிட்டு சாய்பாபா
காலனியில் உள்ள தன் ஸ்டியோவிற்கு
சென்றான் விக்னேஷ். அவன் உள்ளே
செல்ல எதோ கல்யாண ஆல்பத்தை சரி
பார்த்துக் கொண்டு இருந்த விக்ரம்
நிமிர்ந்து விக்னேஷ் வருவதைக்
கண்டான்.

"என்ன விக்ரம்... அந்தக் கல்யாண
ஆல்பம் அன் வீடியோஸ்லாம் வந்து
வாங்கிட்டு போயிட்டாங்களா" என்று
கேட்டபடி வந்து தன் இருக்கையில்
அமர்ந்தான்.

"இப்போ தான் போன் பண்ணி
சொன்னேன். ஈவ்னிங் வந்து
வாங்கிக்கறேன்-ன்னு சொல்டாங்க"
என்றபடி விக்ரம் தன் கையில் இருந்த
ஆல்பத்தை அதற்கு அழகாக வடிவமைத்த ஒரு பெட்டியில் வைத்து மூடினான்.

"ஏன் ஒரு மாதிரி இருக்க?" என்று விக்ரம்
வினவ "வரதராஜன் மாமாவிற்கு உடம்பு
சரியில்லை.. ஹாஸ்பிடல்ல அட்மிட்
பண்ணியிருக்கோம்.. அதான் அவரு
நியாபகமாகவே இருக்கு விக்ரம்"
என்றான் விக்னேஷ்.

"இப்போது பரவாயில்லையா?" என்று
விக்ரம் வினவ "ம்ம்" என்ன மட்டும் பதில்
வந்தது.

பின் இருவரும் அவரவர் வேலையில்
மூழ்கினர். போட்டோகிராஃபிஸில் சிறிய
வயதில் இருந்தே ஆர்வம் அதிகம்
இருந்ததால் தான் விக்னேஷ் இந்த
ஸ்டுடியோவை ஆரம்பித்ததே.
மகாலிங்கம் அய்யாவின் உறவுப் பையன் என்று வேலைக்கு வந்தவன் தான் விக்ரம். அவன் கல்யாண போட்டோஸ் வீடியோஸ் என்று பார்க்க விக்னேஷ் எடிட்டிங்.. ஆர்டர் பிடிப்பது என அனைத்தையும் பார்த்துக்
கொண்டான்.

அந்தந்த வேலைக்கு ஏற்ப ஆட்கள்
வைத்திருந்தான் விக்னேஷ்.

"விக்ரம் என்னடா... இன்னும் அந்த ஆள்
வரவில்லை" என்று தன் வாட்ச்சைத்
திருப்பிப் பார்த்தபடியே விக்ரமிடம்
சலித்தான் விக்னேஷ்.

"அட ஆமாம்... அந்த சொட்டையன்
அத்தனைக் கேள்வி அன்று உன்னிடம்
போனில் கேட்டப்பவே தெரியும்.."
என்றவன் "நீ வேண்டுமானால் கிளம்பு..
நான் அந்த ஆள் வந்தால் நாளை வர
சொல்கிறேன்" என்று விக்ரம் சொல்ல
விக்னேஷும் கிளம்பிவிட்டான்.

நேரம் போனதே தெரியவில்லை.. மணி
ஆறரை ஆகி இருந்தது. அப்படியே சாய்
பாபா காலனியில் இருந்து வடகோவை
ஜீவா வீட்டிற்கு வந்து சேர்ந்தான்
விக்னேஷ்.

அவன் உள்ளே வரும் போதே..
"சித்தாதா..." என்று ஓடி வந்து
ஜீவாவுடைய இரண்டரை வயதுக்
குழந்தை விக்னேஷிடம் ஒட்டி நின்றது.

"வியா பாப்பா" என்று குழந்தையைக்
கொஞ்சியபடித் தூக்கியவன்.. அந்த
அழகான குண்டுக் கன்னத்தில் ஒரு
முத்தத்தைத் தந்தான்.

'எனக்கு' என்பதைப் போலக் கன்னத்தைக் காட்டிய விக்னேஷிடம் மறுக்காமல் தன் பூவிதழால் முத்தத்தைத் தந்தாள் வியாஹா. "ஆஆஆ தாடி குத்துது சித்தா" என்று சிணுங்கியவளைப் பார்க்க விக்னேஷிற்கு சிரிப்பு வந்தது.

சமையல் அறையில் இருந்து வெளியே
வந்த மதி "ஒரு 15 நிமிஷம் விக்னேஷ்..
சப்பாத்தி ரெடி ஆயிருச்சு..குருமா மட்டும்.. உட்காருங்க" என்று குடிக்கத்
தண்ணீரைத் தந்துவிட்டு உள்ளே
சென்றுவிட்டாள் மதி.

இருபது நிமிடத்தில் ஒரு பையோடு
வெளியே வந்தவள் பையை
விக்னேஷிடம் தந்தாள். "ஒரு டீ ப்ளாஸ்-
க்கும் இருக்கு இரண்டு பேருக்கும்..
தண்ணீர் எல்லாம் வைத்திருக்கிறேன்"
என்றபடி விக்னேஷின் கையில் இருந்து
தன் மகள் வியாஹாவை வாங்கினாள்.

"ஆ..ஆ.. சித்தா நானும் உங்க கூட வரேன்" என்று கையையும் காலையும் ஆட்டிச் சிணுங்கி அழ ஆரம்பிக்க இருந்தவளை விக்னேஷ் சமாதானம் செய்தான்.

"வியா.. சித்தா இன்னிக்கு ஹாஸ்பிடல்
போறேன்.. என்னதான் வியா பாப்பா
போல்ட் கேர்ள்-னாலும் அங்க வரக்கூடாது. சித்தா நாளைக்கு வந்து உங்களை ஐஸ்கிரீம் சாப்பிட கூட்டிட்டுப் போறேன்" என்று சொல்ல "நிஜமாவா சித்தா" என்று தன் பெரிய கண்கள் விரிய கேட்டவளிடம் ஆம் என்றுவிட்டு விக்னேஷ் கிளம்பினான்.

மருத்துவமனையில் வரதராஜனை வேறு அறைக்கு மாற்றி இருந்தனர். விக்னேஷ் செல்ல டாக்டர் அங்குதான் நின்றிருந்தார். சுமதியிடம் ஏதோ பேசிக்கொண்டு இருந்தவர் விக்னேஷைப் பார்த்து புன்னகைக்க விக்னேஷும் புன்னகைத்து
வைத்தான்.

"இன்னும் ஒரு வாரம் ஹாஸ்பிடல்ல
இருக்கனும்.. நாங்க நல்ல
அப்சர்வேஷன்ல வச்சிட்டு பிரசர்-லாம்
கொஞ்சம் நார்மல் வந்த பிறகு தான்
டிஸ்சார்ஜ் செய்ய முடியும்" என்றுவிட்டு
அவர் கிளம்பிவிட்டார்.

"மாமா.. இப்போ ஒரு அரை மணி
நேரத்திற்கு முன் தான் கண் முழித்தார்.
மருந்தின் காரணத்தினால் மறுபடியும்
கண் அயர்ந்துவிட்டார்" என்று சுமதி
விக்னேஷிடம் கூறினார்.

சுமதி தன் அக்கா ஜெயாவிடம் கண்
ஜாடை காட்ட ஜெயாவும் ஏதோ
காற்றிலேயே பேசினார். விக்னேஷ்
அதைக் கவனிக்கத் தவறவில்லை.

"விக்னேஷ் ட்யூட்டி நர்ஸ் இருக்காங்க பார்.. நம்ம இவ்வளவு பேர் இங்க நிற்க
வேண்டாம்.. வா கொஞ்ச நேரம்
எல்லாரும் கீழே இருந்துவிட்டு வருவோம்" என்று அழைக்க விக்னேஷ், சுமதி, ஜெயா, சதாசிவம், ஜீவா என அனைவரும் கீழே வந்தனர்.

அந்த ஹாஸ்பிடலில் கீழே வெளியே
பெரிய புல்வெளி மரபென்ச்களுடன்
இருந்தது. அதில் போய் சதாசிவம், ஜெயா, சுமதி அமர அதன் எதிரில் இருந்த பென்ச்சில் ஜீவாவும் விக்னேஷும் அமர்ந்தனர்.

சதாசிவம் தான் ஆரம்பித்தார் "விக்னேஷ் டாக்டர் உன்னிடம் பேசியதாய் சொன்னாய் அல்லவா.. அதைப் பற்றி என்ன நினைக்கிறாய்?" என்று வினவினார்.

"நான்.. இனி அவரை நல்லா பார்த்துக்
கொள்ள வேண்டும் என்றுதான்
நினைக்கிறேன் மாமா.. இன்னும்
கொஞ்சம் நேரம் அதிகம் செலவிட
வேண்டும் என்று நினைக்கிறேன்"
என்று சட்டை மேல் பட்டனைக் கழற்றி
விட்டபடி சொன்னான்.

"அது மட்டும் போதும் என்று
நினைக்கிறாயா?" என்று ஜெயா பேச்சின் உள்ளே புகுந்தார்.

"பெரியம்மா.. ப்ளீஸ்.. என்ன எல்லாரும்
சொல்ல வர்றீங்க-ன்னு எனக்குப்
புரியாமல் இல்லை.." என்ன இறுகிய
குரலில் சொன்னவன் "அதை என்னால்
செய்ய முடியாது. அனுமதிக்கவும்
மாட்டேன்" என்றான் உறுதியான குரலில்.

"ஏன் விக்கா முடியாது" என்ற குரலில்
திரும்பியவன் மகாலிங்கம் அய்யா
நிற்பதைப் பார்த்து எழ "உட்காரு உட்காரு" என்று தோளில் தட்டியபடி வந்து விக்னேஷின் அருகில் அமர்ந்தார்.

"நீங்க என்ன தாத்தா இந்த நேரத்தில்
இங்கே?" என்று விக்னேஷ் வினவ "மணி
ஏழே முக்கால் தான்பா.. சரி ஏன்
உன்னால் ஒத்துக்க முடியாது" என்று
விஷயத்திற்கு வந்தார்.

அமைதியாக அமர்ந்திருந்தவனிடம் "இதப் பாருப்பா.. உனக்கு உன் மாமன் மேல் பாசம் அதிகம் தான். ஒத்துக்
கொள்கிறேன். ஆனால் இனி தான்
அவரை நீ இன்னும் பார்த்துக் கொள்ள
வேண்டும். பிடித்தவர்கள் கூட இருந்தால்
இன்னும் நன்றாய் இருக்கும்" என்ற
மகாலிங்கம் விக்னேஷின் முகத்தைக்
கூர்ந்து பார்த்தார்.

அவன் முகம் எந்த உணர்ச்சியும்
இல்லாமல் இருந்தது. "இன்று மாலை கூட மயக்கத்தில் அந்தப் பெண்ணின்
பெயரையே தான் உச்சரித்து இருக்கிறார் விக்கா. உன் கோபத்தினால் ஏன் அவரை
தண்டிக்கிறாய்.." என்று கேட்க "என்ன
தாத்தா தண்டனை என்று எல்லாம் பெரிய வார்த்தை எல்லாம் சொல்றீங்க"
என்றவன் "என்ன நடந்தது என்று
உங்களுக்கே தெரியும்" என்றான்
உணர்ச்சியற்ற குரலில்.

"நடந்தது எல்லாம் நடந்ததுதாகவே
இருக்கட்டும் விக்கா.. உனக்கு மட்டும்
இல்லை இங்கு இருக்க எல்லாருக்குமே
அந்தக் கோபம் இருக்கு என்று உங்கள்
எல்லோரின் முகத்தைப் பார்த்தாலே
தெரிகிறது. ஆனால் இதை செய்து தான்
ஆக வேண்டும்.. வேறு வழி இருப்பதாகத் தெரியவில்லை" என்றார்.

ஒரு சில நிமிடம் அந்த இடம் அமைதியாக இருந்தது. விக்னேஷின் கையைப் பிடித்த ஜீவா "விக்கி மாமாவிற்காக டா" என்றான்.

ஒரு பெருமூச்சுவிட்ட விக்னேஷ் "சரி.."
என்றான்.

"அப்புறம் என்ன.. எங்கே இருக்கிறாள்
என்று கண்டுபிடிக்க வேண்டும் இனி..
பேசாமல் ஏதாவது டிடெக்டிவ்
ஏஜென்சியில்...." என்று சதாசிவம் கூற

"கம்பம்" என்று ஒற்றை வார்த்தையில்
அனைவரையும் அதிரச் செய்துவிட்டு
எழுந்து சென்றான் விக்னேஷ்.

சில அடிகள் நடந்த பின்.. திரும்பித் தன்
அன்னையைத் திரும்பிப் பார்த்தவன்
"அம்மா நைட் ஒருவர் தான் ஹாஸ்பிடல்ல இருக்க வேண்டும்.. நீங்கள் இன்னிக்கு நைட் பெரியம்மா வீட்டில் தங்கிக்கங்க" என்றுவிட்டு ஜீவாவைப் பார்த்தவன் "ஜீ... இன்னும் இரண்டு நாட்களில் கம்பம் கிளம்பலாம்" என்று சொல்லிவிட்டுச் சென்றான்.

'மனசு முழுதும் வெறுப்பை வைத்துக்
கொண்டு.. அவள் இருப்பிடம் மட்டும்
எப்படிக் கண்டுபிடித்தான்? எப்போது
கண்டுபிடித்தான்? ஏன் யாரிடமும்
சொல்லவில்லை?' என்று எல்லோரின்
மனதிலும் கேள்வி எழுந்தது.
 

writer

Saha Writer
Team
Messages
50
Reaction score
26
Points
8
அத்தியாயம்-3

பிரபு வந்த அடுத்த தினம் வழக்கம் போல
கௌசி வேலைக்குப் புறப்பட்டாள்.
கவிதாதான் என்ன ஆகப்போதோ
என்றபடி சிந்தித்துக் கொண்டபடி வந்தாள். பள்ளிக்குச் செல்லும் வழியில்
ஓரக்கண்ணால் கௌசியைக்
கவனித்தாள் கவிதா.. கௌசி எப்போதும் போல நடந்து வருவதைப் பார்த்தவள் "இவளால் மட்டும் எப்படித்தான் இப்படி எதையுமே வெளியே காட்டாமல் இருக்க முடிகிறதோ" என்று தனக்குள்
முணுமுணத்தாள் கவிதா.

பள்ளியை அடைந்து ஆபீஸ் ரூமிற்குள்
நுழைந்தனர் இருவரும்.. கவிதா தன்
வேலையை கவனிக்கத் துவங்க கௌசி
ஆபீஸ் ரெஜிஸ்டரைத் தேடினாள்.
'எப்போதுமே இந்த டேபிள் மேல தான
இருக்கும்.. எங்கே காணோம்' என்று
தேடியவள் "கவிதா.. ரெஜிஸ்டர் இல்லை..
வேறு எங்காவது எடுத்து வைத்தாயா?"
என்று கௌசி கேட்க "இல்லையே கௌசி எப்போதுமே இது மேல் தான இருக்கும்" என்று கௌசிக்கு உதவ முன் வந்தாள். இருபெண்களும் சுமார் 15 நிமிடம் மாறி மாறி தேடினர்.

"நேற்று இங்க தான பார்த்தேன்" என்று
கவிதா முணுமுணுக்க.. அந்த சமயம்
கரெக்டாக உள்ளே வந்த ப்யூனிடம்
"அண்ணா இங்க இருந்த எங்க ஆபிஸ்
ரெஜிஸ்டர் எங்கே?" என்று கேட்டாள்
கவிதா.

"அட சொல்ல மறந்துட்ட பாருங்க மா...
இனிமேல் நம்ம கரஸ்பாண்டன்ட் சார்
ரூமிற்கு பக்கத்தில் உள்ள கண்ணாடி
அறையில் தான் கையெழுத்து போட
வேண்டுமாம். காலை நேரத்தில் ஆபிஸ்
ரூமில் நிறைய பேர் நிற்பது
கசகசவென்று இருக்கிறதாம். அதான்
பிரபு சார் அங்கு மாற்றிவிட்டார்" என்று
ப்யூன் இருவரிடமும் சொல்லிக் கொண்டே சாமி படங்களுக்குப் பூவை வைக்க ஆரம்பித்தார். அவர் சொன்னதைக் கேட்ட இருபெண்களும் இருவரின் முகம் பார்த்துக் கொண்டதை அவர் அறியவில்லை.

"கரஸ்பாண்டன்ட் சார் வந்துவிட்டாரா
அண்ணா?" என்ன ப்யூனிடம் கேட்டாள்
கௌசிகா.

"அதெல்லாம் ஏழரை மணிக்கே
வந்துவிட்டார் மா" என்றுவிட்டு அவர்
வெளியே சென்றுவிட்டார். கௌசியைக்
காண அவன் தினமும் காலை செய்த
ஏற்பாடு தான் அது.

அவர் சென்ற பின் கௌசியைப் பார்த்த
கவிதா "இப்போது என்ன சொல்கிறாய்..
அவர் உனக்காகத் தான் இங்கு வர
ஆரம்பித்திருக்கிறார் என்று
தெள்ளத்தெளிவாக உறுதியாகிவிட்டது"
என்று நமட்டுச் சிரிப்பு சிரித்தாள்.

சில நொடிகள் அப்படியே நின்ற கௌசி
"பார்த்துக்கலாம்" என்று கவிதாவைப்
பார்த்து சொல்லிவிட்டு "நீயும் தான்
ரெஜிஸ்டர்ல சைன் போடணும்.. வா
போலாம்" என்று சொல்ல கவிதா
வாய்விட்டுச் சிரித்தாள்.

"என்ன?" என்பது போலக் கௌசி
கவிதாவைப் பார்க்க "பயமா தனியாப்
போவதற்கு" என்று கேட்டாள் கவிதா.

"ஹலோ மேடம்.. பயந்திருந்தால் இன்று
வந்திருக்கவே மாட்டேன்.. அதுவும்
இல்லாமல் சுரேஷ் லவ்வைச் சொன்ன
அடுத்த நாள் காய்ச்சலில் படுத்த நீங்க
பேசறீங்களா மேடம்?" என்று கௌசி
நக்கலாகக் கேட்க "ஐம் சரண்டர்" என்று
கவிதா இரு கைகளையும் தூக்கினாள்.

பின் இருவரும் கரஸ்பாண்டன்ட
அறைக்குப் பக்கத்தில் உள்ள அறைக்குச் சென்றனர். கரஸ்பாண்டனட் அறையில் இருந்துப் பார்த்தால் அந்த அறை மிகவும்நன்றாகத் தெரியும். அறைக்குள் நுழையும் போது "நன்றாக
சாமர்த்தியமாக செயல் படுகிறான்" என்று மனதிற்குள் நினைத்தபடியே சென்றாள் கௌசி.

அவள் அறைக்குள் நுழையும் போதே
பிரபு தன் அறையின் சுழல் நாற்காலியில் அமர்ந்தபடி அவளை எதிர்ப் பார்த்துக் காத்திருந்தான். அவளைப் பார்த்தவன் முகத்தில் ஆயிரம் வார்ட்ஸ் பல்ப் எரிந்தது. அதுவும் இன்று உன்னிப்பாகக் கவனித்தான் கௌசிகாவை.

"ஒரு காட்டன் சுடிதாரில் சன்னமான தங்கச் சங்கிலி.. தங்கத் தோடு.. கையில் ஒரு வாட்ச்.. நெற்றியில் ஒரு கரும் பொட்டு.. இதைத் தவிர வேறு எந்த ஒப்பனையும் இல்லை.. ஆனாலும்
தேவதையாகத் தெரிகிறாளே" என்று
எண்ணினான் பிரபு.. கௌசிகாவைப்
பற்றித் இன்னும் தெரிந்து கொள்ள
ஆர்வம் எழுந்தது பிரபுவிற்கு.

அந்த சமயம் பார்த்து உள்ளே வந்த சுரேஷ் கவிதாவிடமும் கௌசிகாவிடமும் பேச்சுக் கொடுத்தான். கௌசிகா இலகுவாக சுரேஷிற்குப் பதில் அளிப்பதைக் கவனித்தான் பிரபு.. பின் மூவரும் ரெஜிஸ்டரில் கையெழுத்துப்
போட்டுவிட்டு அவரவர் வேலையைப்
பார்க்க அந்த அறையை விட்டு வெளியே
வந்தனர்.

கௌசிகா தன்னைப் பிரபு பார்ப்பதை
நன்கு உணர்ந்தாள். ஏனோ தன்னை
ஒருவன் பார்ப்பது கௌசிகாவிற்கு
மிகவும் சங்கடமாக இருந்தது. சீக்கிரம்
கையெழுத்துப் போட்டுவிட்டு வெளியே
வந்துவிடலாம் என்று கௌசி எண்ண
சுரேஷ் வேறு வந்துவிட்டான். கௌசியின் நிலையை உணர்ந்த கவிதா தான் "சரி வாங்க டைம் ஆச்சு.. சீக்கிரம் அவரவர் வேலையைப் பார்ப்போம்" என்று கௌசிக்கு உதவினாள்.

வெளியே வந்து கௌசி வகுப்பிற்குச்
செல்ல கௌசிக்கு மனம் கொஞ்சம்
லேசாயிற்று.

பிரபு ஒரு பதினைந்து நிமிடம் கழித்து
ரவுன்ட்ஸ் வந்தான். வந்தவன் கௌசி
எடுத்துக் கொண்டு இருந்த நான்காம்
வகுப்பிற்குள் வர எல்லா மாணவர்களும்
எழுந்து நின்று
"குட்ட்ட்ட்ட்மாமார்ர்ர்ர்னினிங் சாசார்ர்"
என்று கோரஸ் பாடினர். கௌசியும்
"குட்மார்னிங் சார்" என்று சொல்ல "ம்ம்
குட்மார்னிங் ஆல்" என்றவன் "நீங்க
க்ளாஸ் எடுங்க" என்றவன் கடைசியாக
இருந்த காலி பென்ஞ்சில் அமர்ந்தான்.

ஒரு இங்லிஷ் போயம்-ஐ நடத்திக்
கொண்டு இருந்தவள் விட்ட இடத்திலிருந்து அதைத் தொடங்கி நடத்தி முடித்தாள். பின் இன்னும் நாற்பது நிமிடம் இருக்க 'என்ன செய்யலாம்.." என்று யேசித்தவள் "எல்லாரும் ஃபேர் நோட் எடுங்க.. பேராகிராஃப் எழுதலாம்" என்றுவிட்டு சாக்பீசை எடுத்துக் கொண்டு
போர்ட்டு பக்கம் திரும்பி எழுத ஆரம்பித்து விட்டாள்.

எழுதி முடித்துவிட்டுத் திரும்பியவள் பிரபு இல்லாததைக் கண்டாள். "போய்விட்டான் போல" என்று மனதிற்குள் நினைத்தவள் தன் மாணவர்களைக் கவனிக்கத் தொடங்கினாள்.

வழக்கம் போல மதிய உணவு
முடித்துவிட்டு அவரவர் வேலையைப்
பார்க்கச் செல்ல சுரேஷை வந்து ப்யூன்
அழைத்தார். "தம்பி உங்களைப் பிரபு சார்
கூப்பிடுகிறார்" என்று ப்யூன் அழைத்தார்.

"சரிண்ணா.. வரேன்" என்றவன்
யோசனையுடனே பிரபுவின் அறையை
நோக்கி நடந்தான்.

"வந்த அடுத்த நாளே நம்மை ஏன்
கூப்பிடுகிறார் இவர்? நாம் அந்த அளவு
உயர் பணியிலும் இல்லையே.. பின்னே
ஏன்?" என்று யோசித்தபடியே நடந்தவன்
பிரபுவின் அறையின் முன் நின்றான்.

"எக்ஸ்க்யூஸ் மீ சார்" என்று சுரேஷ்
கதவைத் தட்ட "யெஸ் கம் இன்" என்று
பிரபுவின் குரல் கேட்டது.

கதவைத் திறந்து கொண்டு உள்ளே
சென்ற சுரேஷ் "சார் வரச்சொன்னிங்களாமே" என்று நின்றபடி சுரேஷ் கேட்டான்.

"பர்ஸ்ட் டேக் யுவர் சீட்" என்று பிரபு
தனக்கு எதிரில் இருந்த இருக்கையைக்
காட்டினான்.

சுரேஷ் உட்கார.. "ஓகே.. சுரேஷ்
உங்களிடம் சில விஷயம் கேட்க
வேண்டும்.. அதான் கூப்பிட்டேன்" என்று
பேனாவை ஆள்காட்டி விரலிற்கும் நடு
விரலுக்கும் இடையே வைத்து ஆட்டியபடி
சொன்னான் பிரபு.

"சொல்லுங்க சார்" என்றான் சுரேஷ்
தன்மையான குரலில்.. ஆனால்
உள்ளுக்குள்ளே யோசனைதான் "இவர்
நம்மிடம் என்ன கேட்கக்கூடும் என்று".

"வந்து... சுரேஷ்" என்று இழுத்தான் பிரபு.

"சொல்லுங்க சார்.. என்னைப் பற்றி
ஏதாவது கம்ப்ளைன்டா.." என்று சுரேஷ்
கேட்க "நோ.. நோ.. அதெல்லாம் இல்லை..
எனக்கு கௌசிகாவைப் பற்றிய
இன்பர்மேஷன் வேண்டும்" என்றான்
பிரபு தயங்கிய குரலில்.

பிரபுவிற்கே தயக்கம் தான். 'ஒரு
பெண்ணைப் பற்றி வந்த முதல் நாளே
கேட்டால் என்ன நினைப்பான்? அதுவும்
அவளிடம் பழகுபவன் வேறு.. வந்த
அடுத்த நாளே தன்னிடம் வேலை செய்யும் பெண்ணைப் பற்றி கேட்டகிறான் பார் என்று நினைப்பான் தான் இந்த சுரேஷ்.. இருந்தாலும் கேட்பது சரியா? என்று பிரபுவின் மனதில் பல குழப்பமான
யோசனைகள்.

பிரபு கேட்டக் கேள்வி சுரேஷிற்கும்
யோசனையைத் தந்தது. நேற்று
பிரபுவைக் கண்ட பின் கௌசிகாவும்
கவிதாவும் செய்த முகபாவனையைக்
கவனித்தான் தான். சரி மீட்டிங் முடிந்து
கேட்டுக்கொள்வோம் என்று
இருந்தவனை ஏதோ பேச வேண்டும்
என்று சங்கரலிங்கம் ஐயா கூப்பிட
அவனால் பேசமுடியவில்லை. கவிதாவும்
கிளம்பிவிட்டாள். அப்புறம் சுரேஷ் அதை
மறந்தும் விட்டான்.

"என்ன சுரேஷ்.. பதிலையே காணோம்"
என்று பிரபு வினவ யோசனையில்
இருந்த சுரேஷ் பிரபுவின் குரலில்
நடப்பிற்கு வந்தான்.

முதல் எதற்காக பிரபு கேட்கிறான் என்று
சுரேஷ் தெரிந்துகொள்ள எண்ணினான்.
"வந்து எதற்கு ஸார்..." என்று
ஆரம்பித்தவன் "நீங்கள் கௌசிகாவைப்
பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும்"
என்று தைரியமாகக் கேட்டுவிட்டான்
சுரேஷ்.

"நான் கௌசிகாவை கல்யாணம் செய்து
கொள்ள விருப்பப்படுகிறேன்" என்று
பிரபு சொன்னான்.

சுரேஷிற்கு அதிர்ச்சிதான். என்ன
சொல்வது என்றே தெரியவில்லை.
"சும்மா பொழுதுபோக்கிற்காகக்
கேட்கிறான் என்று நினைத்தால் இவன்
என்னடான்னா கல்யாணம் என்று
சொல்கிறான். கண்ணைப் பார்த்தால்
பொய் சொல்வது போலவும்
தெரியவில்லையே" என்று யோசித்த
சுரேஷ் "ஸார் இதை நீங்க அவங்ககிட்ட
தான் சொல்லனும்.. நான் என்ன இதில்
சொல்ல முடியும்" என்றான் சுரேஷ்.

"எனக்கு சில இன்பர்மேஷன் வேணும்
சுரேஷ்.. அதான் உன்னைக் கூப்பிட்டேன். கௌசிகா பள்ளியில் பழகும் இருவர் நீயும் அந்தப் பெண் கவிதாவும் தான்.. அந்தப் பெண்ணிடம் என்னால் கேட்க முடியாது.. அதான் உன்னை" என்ற பிரபு... முன்பு நடந்த சம்பவத்தை.. அதாவது கௌசிகாவை ஃபாலோ செய்தது.. கௌசிகா பிரபுவை எச்சரித்தது என அனைத்தையும் சுரேஷிடம் கூறினான்.

"ஸார்.. கௌசிகா எனக்கு ஒரு நல்ல
ப்ரண்ட்.. நீங்க கேக்கறீங்க-ன்னு
உங்ககிட்டே சொன்னா அது ரொம்ப தப்பு
ஸார்" என்றான் சுரேஷ்.

"நான் கௌசிகாவை ஏமாற்றிவிடுவேன்
என்று நினைக்கிறாயா சுரேஷ்?" என்று
நேராகப் சுரேஷைப் பார்த்துக் கேட்டான்
பிரபு.

"அதெல்லாம் இல்லை ஸார்.. உங்களைப்
பற்றித் தெரியாது தான்.. ஆனால்
சங்கரலிங்கம் ஸாரைப் பற்றித் தெரியும்.
அவர் வளர்ப்பில் சந்தேகம் இல்லை"
என்ற சுரேஷ் "ஸார் உண்மையை
சொல்ல வேண்டும் என்றால்.. எனக்கு
மட்டும் இல்லை.. கௌசிகாவின் பர்சனல் டீடெயில்ஸ் கவிதாவிற்குக் கூட
தெரியாது" என்றான் சுரேஷ்.

"கௌசிகா இங்கு வந்த அப்புறம் நடந்த
விஷயங்களையாவது சொல்லு சுரேஷ்..

கௌசிகா எப்படி என்று" என்று பிரபு
விடாமல் கேட்டான்.

சுரேஷ் சொன்னது இதுதான் "கௌசிகா
மூன்று வருடங்களுக்கு முன்னால் இங்கு
வேலை கேட்டு வந்த பெண். வந்த புதிதில் யாருடனும் அவ்வளவாக பேசவில்லை. கவிதாவிடமே இரண்டு வாரம் போன பின் தான் நன்றாக பேசினாள்.. கவிதாவின் நண்பன் நான் என்பதால் என்னிடமும் பழகுவாள். வேறு யாரிடமும் அனாவசியமாக பேச்சுக் கொடுக்க மாட்டாள். பொறுப்பான பெண்ணும் கூட. அதற்கு என்று பயப்படும் சுபாவமும் இல்லை. ஒரு தடவை பள்ளியில் வேலை செய்யும் ஆசிரியர் ஒருவன் கை வைக்க வர கையில் கிடைத்த காம்பஸ்-ஸை வைத்து தோளில் குத்தி இறக்கி விட்டாள் அவனை. .அந்த செய்தி சங்கரலிங்கம் அய்யா வரை எட்டி அந்த ஆசிரியரை பணி நீக்கம் செய்தார்.. கௌசிகா கவிதாவின் மேல் அவருக்கு மரியாதையும் உண்டு.. இப்போது வரை
பள்ளியில் எந்த கருப்புப் புள்ளியும்
இல்லை.."

"ம்ம்..." என்று ஒரு பெருமூச்சை விட்டான்
பிரபு.

"கௌசிகாவிற்கு யாரும் இல்லையா?"
என்று வினவினான் பிரபு.

"கவிதாவிடம் இல்லை என்று தான் ஸார்
சொல்லி இருக்கிறாள்" என்றான் சுரேஷ்.

"ம்ம்.. ஓகே தாங்க்ஸ் சுரேஷ்'' - பிரபு.

"ஓகே ஸார்.. நான் கிளம்பட்டுமா?" -
சுரேஷ்.

"ஓகே நீங்க கிளம்புங்க.." என்ன பிரபு
சொல்ல சுரேஷ் எழுந்துவிட்டான்.

அன்று மாலை பள்ளி முடிந்து
கௌசிகாவும் கவிதாவும் வீடு திரும்பினர். ஏனோ அன்று கௌசிகாவிற்கு மிகவும் டயர்டாக இருந்தது. முகம் கழுவி விட்டு வந்தவள் "கவிதா எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு.. நான் ஒரு... ஒரு மணி நேரம் தூங்கறேன். என்னை எழுப்பிவிடு" என்று கௌசி சொல்ல "ஏன்.. என்னாச்சு.. உடம்பு சரியில்லையா?" என்று கவிதா அக்கறையாகக் கேட்டாள்.

"இல்லை கவி... உடம்பு வலி தான்..
தூங்கினால் சரியாகிவிடும்" என்றவள்
படுக்கை அறைக்குள் புகுந்துகொண்டாள்.

கௌசிகா தூங்கச் சென்ற பின் கவிதா
வீட்டின் பின்னால் உட்கார்ந்து வேடிக்கை
பார்த்துக் கொண்டு இருந்தாள். வீட்டில்
தன் காதல் விவகாரம் பேசுவதைப் பற்றி
எண்ணிக் கொண்டு இருந்தாள் கவிதா.
தன் பக்கத்தில் வைத்திருந்த மொபைல்
திடீரென கத்தியதில் சுயநினைவிற்கு
வந்தாள்.

போனின் திரையில் அவளின் காதல்
கள்வன் சுரேஷ் தான் கூப்பிட்டிருந்தான்.
புன்னகையுடன் போனை ஆன் செய்து
காதில் வைத்தவள் "என்ன இன்னிக்கு
ஈவ்னிங்கே போன் பண்றீங்க"
குறுஞ்சிரிப்புடன் கேட்டாள்.

"சும்மாதான். என் கவிக் குட்டி என்ன
பண்ணுது-ன்னு கேட்க கூப்பிட்டேன்"
என்றான் சுரேஷ்.

"நானா.. உங்கள் மாமனார் மாமியாரிடம்
எப்படி நம் காதலைப் பற்றி பேசுவது
என்று யோசித்துக் கொண்டு இருந்தேன்" என்று நகையோடு சொன்ன கவிதாவின் குரலில் பதட்டமும் எட்டிப் பார்த்தது.

"அதெல்லாம் ஒத்துப்பாங்க-ன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு" என்று திடமான குரலில் பேசி தன் காதலிக்கு தைரியம் ஊட்டினான் சுரேஷ்.

"ம்ம்... ஆனால் நான் போன இரண்டு நாள் அப்புறம் வாங்க... எங்க வீட்டில் வந்து பேசுங்க" என்றாள் கவிதா.

"கண்டிப்பா வரேன்" என்று வாக்கு
அளித்த சுரேஷ் "உன்கிட்ட இன்னொன்னு சொல்லனும் கவி" என்றான்.

"என்ன" - கவிதா.

"பிரபு சாரை உனக்கும் கௌசிக்கும்
முன்னாடியே தெரியுமா?" என்று கேட்டான் சுரேஷ்.

"........" என்ன சொல்லுவது என்று
தெரியாமல் விழித்தாள் கவிதா.

"ஏ.... என்னடி பதிலே காணோம்.. பதில்
சொல்லு.." என்று சுரேஷ் சற்று
சலிப்பாகக் கேட்டான்.

"கவிதா சுரேஷிடம் மறைக்க
எண்ணவில்லை.. இதெல்லாம் ஒரு
விஷயம் என்று அவனிடம் சொல்ல
வேண்டுமா?" என்றே நினைத்தாள்.
அவன் கேட்டபோதே இவனிற்கு எப்படித்
தெரியும் என்று வியந்தாளே தவிர
சொல்லக் கூடாது என்று எண்ணவில்லை.

அவன் கேட்ட பிறகு நடந்த அனைத்தையும் கூறினாள்.. கிட்டத்தட்ட
பிரபு சொன்னது அனைத்தையும்
கவிதாவும் சொன்னாள்.
எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்ட சுரேஷிடம் "உங்களுக்கு எப்படித்
தெரியும்?" என்று கேட்டாள் கவிதா.

"இன்று பிரபு சார் என்னை லன்ச் அப்புறம் கூப்பிட்டார்" என்ற சுரேஷ் அங்கு நடந்த அனைத்தையும் கவிதாவிடம் கூறினான். அவன் சொல்ல சொல்ல கவிதாவிற்கு வியப்பு தான்.

"உண்மையாவே கௌசிகாவை ரொம்ப
லவ் பண்றார் ஆஆஆஆஆஆ" என்று
வியப்பை அடக்காமல் கேட்டாள்.
"மெல்லப் பேசு... கௌசிகாவிற்கு கேட்கப் போது" என்று சுரேஷ் கவிதாவை அடக்க "அவள் தூங்கிக் கொண்டு இருக்கிறாள்" என்றாள் கவிதா.

"ஆமாம் கவி... உண்மையாகவே லவ்
பண்றார் போல" என்று சுரேஷ் சொல்ல
அங்கு ஐந்து நொடி அமைதி நிலவியது.

"என்னடி எதும் பேச மாட்டீங்கற" என்று
சுரேஷ் ஆரம்பித்தான்.

"எனக்கு என்ன சொல்றது-ன்னு தெரியல" என்ற கவிதாவின் குரல் உள் வாங்கின.

"கவி... கௌசிகா-க்கு இதை விட நல்ல
வாழ்க்கை அமைவது கஷ்டம்" என்று
அழுத்தமான குரலில் சுரேஷ் சொன்னான்.

"எனக்கு அது புரியுது... ஆனால் அவகிட்ட
இந்த மூன்று வருஷமா நான் பேசிப்
பாத்திருக்கேன்.. அவ பிடி கொடுத்ததே
இல்ல சுரேஷ்" என்று தவிப்பான குரலில்
கவிதா சொன்னாள்.

"அவளுக்கு யாரும் இல்லை கவி.. நம்ம
தான் ஏதாவது பண்ணி அவ மனசை
மாத்தணும். இப்படியே அவளை
உன்னால் விட முடியுமா? சொல்லு?" என்று சுரேஷ் கேட்டான்.

"முடியாது தான்.. ஆனால் அவளின்
பிடிவாதம் பற்றி உங்களுக்குத் தெரியாது. ஆனால் அவளிடம் எல்லோரும் பேசிப் பார்க்கலாம்.. எடுத்துச் சொல்லலாம்" என்றாள் கவிதா.

"சரி.. பேசலாம்" - சுரேஷ்.

"எப்போ?" - கவிதா.

"ஹலோ கவிதா.. நான் பிரபு பேசறேன்.
நாளையே பேசிவிடலாம்" என்று பிரபு
பேச... பிரபுவின் குரலில் கவிதாவிற்குத்
தூக்கிவாரிப் போட்டது.

"சா.... சா.. சார்.." என்று திணறியவளுக்கு
சுரேஷின் மீது கோபம் வந்தது. அவனிடம் தருகிறேன் என்றாவது சொல்ல வேண்டாமா? என்று மனதில் சுரேஷைத் திட்டினாள்.

"ஒன்றும் இல்லை.. நாளை நான்கு மணி
வரை வேலை என்றே இருங்கள்.. நான்
பார்த்துக்கொள்கிறேன்" என்றான் பிரபு.

"ஓகே சார்" என்று கவிதா சொல்ல பிரபு
போனை சுரேஷிடம் தந்தான்.

"சரி நான் கூப்பிடுகிறேன்" என்று போனை வைத்துவிட்டான் சுரேஷ்.

போனை அணைத்த கவிதா... வீட்டிற்குள்
வந்து லைட்டைப் போட்டாள். மணி
ஐந்தரையைக் காட்டியது கடிகார முள்.
கௌசியை எழுப்பலாம் என்று உள்ளே
சென்றவள் அவள் நன்றாக உறங்கிக்
கொண்டிருப்பதைக் கண்டாள். சரி
பேசாமல் டீயை வைத்துவிட்டு அவளை
எழுப்பிவிடலாம் என்று எண்ணியவள்
சமையல் அறைக்கு வந்து டீயை
வைத்தாள். கவிதாவிற்கு பல
யோசனைகள் மனதில். சுரேஷ்
சொன்னதை யோசித்துப் பார்த்தாள்.
"கௌசியை அப்படியே விட இயலாது
என்பது நிச்சயம். அவளிடம் எப்படியாவது சம்மதம் வாங்க வேண்டும்" என்ற எண்ணம் பலமாக மனதில் எழுந்தது.

அதற்குள் டீ பொங்க அடுப்பை
அணைத்துவிட்டு கௌசியை
எழுப்பினாள். எழுந்தவளிடம் "வா கௌசி
டீ குடிக்கலாம்.. போய் மூஞ்சியைக்
கழுவிக்கொண்டு வா" என்று கவிதா
சொல்லிவிட்டு வெளியே வந்தாள்.

கௌசிகா வர கவிதா டீயை இரு கப்பில்
ஊற்றிக் கொண்டு ஹாலிற்கு வர..
இருவரும் உட்கார்ந்து டீயைக் குடிக்க
ஆரம்பித்தனர்.

"மணி ஆறு ஆயிடுச்சு... ரொம்ப நேரம்
தூங்கிட்டேன் பார்" என்று டீயை
உறிஞ்சியபடி கௌசி சொல்ல "நல்லா
தூக்கத்தில் இருந்த கௌசி.. அதான்
எழுப்பல" என்றாள் கவிதா.

"சரி எப்போ ஊருக்கு கிளம்பற கவி?"
என்று கௌசி கேட்க "நாளை விட்டு
அதற்கு அடுத்த நாள் காலை" என்று
கௌசிக்கு பதிலை அளித்தாள் கவிதா.

கவிதாவின் போன் அடிக்க... எழுந்து
சென்று போனை எடுத்தவள் போனின்
திரையில் சுரேஷின் எண்ணை
பார்த்தாள்.. போனை அட்டென்ட் செய்து
காதில் வைத்தவள் "சொல்லுங்க"
என்றாள் ஒற்றை வார்த்தையாக.

"கோபமா..." என்று கேட்டவன் கவிதா
பதில் பேசாததைக் கண்டு "உனக்கு
மட்டும் கௌசி ப்ரண்ட் இல்லையே..
எனக்கும் தானே.. அதான்..." என்று அவன் பேசப்பேச கவிதா குறுக்கிட்டாள்.

"ஆனால் பிரபு...." என்று ஆரம்பித்தவள்
தான் கௌசிக்கு பக்கத்தில் நின்று
பேசிக்கொண்டிருப்பதை உணர்ந்து "ஓகே எனக்கு வேலை இருக்கு... பை.. நைட் கூப்பிடுகிறேன்" என்று வைத்துவிட்டாள் கவிதா.

மறுபடியும் வந்து உட்கார்ந்தவளை
கௌசி கேள்வியாகப் பார்த்தாள். சுரேஷ் தான் கூப்பிட்டான் என்பதை அவள் பேசிய விதத்திலேயே கண்டு
கொண்டாள் கௌசி. ஆனால் ஏன்
பிரபுவின் பெயரைச் சொன்னவள்
அப்படியே நிறுத்திவிட்டாள் என்று
யோசித்தாள் கௌசிகா. கேட்கலாமா
என்று எண்ணியவள் "சரி வேண்டாம்"
சொல்லும் விஷயம் என்றால் அவளே
சொல்லுவாள் என்ன விட்டுவிட்டாள்.

வழக்கம் போல எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு.. படுக்கை அறைக்கு வந்த
இரு பெண்களும் அவரவர்
யோசனைகளில் மூழ்கி தூங்கிவிட்டனர்.

•••••

அதே நாள் கோயம்பத்தூரில்..

நேற்று இரவு தன் அன்னையை
ஜீவாவுடன் அனுப்பிய விக்னேஷ்
ஹாஸ்பிடலிலேயே தங்கிவிட்டான்.
அன்று இரவு அவனிற்கும் தூக்கம்
வரவில்லை... ஏதேதோ
யோசனைகளிலேயே இருந்தான்..
நாலரை மணிக்கே அவனுக்கு உறக்கம்
கண்களைத் தொட்டது. உட்கார்ந்த
நிலையிலேயே தூங்கிக் கொண்டு
இருந்தவனை காலையில் வந்த ஜீவாவும் சுமதியும் தான் எழுப்பினர்.

கண்களைத் திறந்தவன் கைகளால்
தலை முடியைக் கோதியவாரே அங்கு
இருந்த கடிகாரத்தைப் பார்த்தான். மணி
ஏழரை ஆகி இருந்தது. "சரி நான்
வீட்டிற்கு போய்.. குளிச்சிட்டு வரேன்"
என்று இருவரிடம் பொதுவாகச்
சொன்னவன் "அம்மா.. வீட்டு சாவி தாங்க" என்ன கேட்டான். சுமதி பையைத் திறந்து சாவியைத் தேடினார்.

"விக்கி.. நீ ரிலாக்ஸ் ஆகிட்டு வா.. நாங்க
எல்லாம் இருக்கோம்.." என்று ஜீவா
சொல்ல "ம்ம்" என்று மட்டும் சொன்னான்
விக்னேஷ்.

"இந்தா விக்னேஷ் சாவி" என்று சுமதி தர.. சாவியை வாங்கிக் கொண்டு வெளியே வந்தான் விக்னேஷ்.

காரை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு
வந்தவன்... வீட்டின் வெளி கேட்டை
திறந்து கொண்டு உள்ளே நுழைய
விக்னேஷின் மேலே வந்து தாவினான்
ப்ரௌனி.. ப்ரௌனி அவன் செல்லமாக
வளர்த்தும் நாய். லாப்ரடோர் இனத்தைச்
சேர்ந்தது. ப்ரௌன் கலரில் இருந்ததால்
ப்ரௌனி என பெயர் வைத்திருந்தது. அட இவனை மறந்தேவிட்டேன் பார் என்று நினைத்த விக்னேஷ் "ப்ரௌனினினி...." என்று அதன் கழுத்துக்குக் கீழ் தன் இரு கைகளால் அழகாகத் தடவியபடி கொஞ்சினான்.

"ங்ங்ங்ங்ங்" என்று ப்ரௌனியிடம் இருந்து சத்தம் வர "பசிக்குதாடா...." என்று அவனை நன்றாகக் கொஞ்சிவிட்டு உள்ளே சென்றவன்... அதற்கான உணவை எடுத்துக் கொண்டு வெளியே வந்து அவனது தட்டில் வைக்க புயல் வேகத்தில் காலி செய்து விட்டான்
ப்ரௌனி. பாவம் அவனும் நேற்றில்
இருந்து சாப்பிடவில்லை. அந்தப் பசியில் அவனுடைய உணவை வேகமாய்க் காலி செய்தான்.

ஒரு நாள் முழுவதும் வீட்டைப் பூட்டி
வைத்திருந்ததால் ப்ரௌனியை வாக்கிங் கூட்டிச் சென்று வந்தவன்.. அவனையும் கட்டிப் போடாமல் வெளிக் கேட்டை மட்டும் பூட்டிவிட்டு உள்ளே சென்றான். நன்றாக குளித்து முடித்து அலாரத்தை வைத்துவிட்டுக் கண்களை மூடித் தூங்கினான். ஒரு மணி நேரம் கழித்து எழுந்தவன் வீட்டில் நேற்று மீதமான உணவை எல்லாம் கொட்டிவிட்டு ஹாஸ்பிடலிற்குச் செல்லத் தயாரானான்.

ஹாஸ்பிடலை மறுபடியும் அவன் அடைய மணி ஒன்று ஆகிவிட்டது. அவன்
செல்லும் சமயம் இப்போது வரதராஜனும் கண்ணைத் திறந்திருந்தார். விக்னேஷைப் பார்த்தவர் 'இங்கு வா' என்று கை ஆட்டினார்.

அவர் அருகில் சென்று அவரின் ஒரு
கையை தன் இரு கைகளுக்குள்
வைத்தவன்.. அவரைப் பார்த்து ஒரு
புன்னகை மட்டும் வீசினான்.

"என்னால.. உனக்கு கஷ்டம் விக்னேஷ்"
என்று மிகவும் சிரமப்பட்டு பேசினார்.

"அதெல்லாம் இல்லை மாமா.. இப்படி
எல்லாம் பேசாதீங்க.. பர்ஸ்ட் நல்லா
ரெஸ்ட் எடுங்க.. ரிலாக்ஸ் ஆகுங்க
அப்புறம் பேசலாம்" என்றான்
மென்மையான குரலில்.

"ரிலாக்ஸ்சாசாசா" என்றவரின்
கண்களில் வேதனை படர்ந்தது. "எனக்கு
நிம்மதி என்றால் உன் கல்யாணத்தில்
மட்டும் தான் விக்னேஷ்.. என்னால்
தானே நீ இப்படி இருக்கிறாய்" என்று
அவர் கேட்க "அதில் மட்டும் தானா
மாமா உங்க நிம்மதி இருக்கு" என்று
தன்னையும் மீறிக் கேட்டுவிட்டான்.

தன் செயலில் தன்னையே ஒரு நிமிடம்
கடிந்து கொண்டவன் "மாமா.. எதுவாக
இருந்தாலும் நீங்க நல்லபடியா எழுந்து
வந்தால் தான் எல்லாவற்றையும் பார்க்க
முடியும்.. நம்ம எல்லாவற்றையும் அப்புறம் பேசலாம் சரியா..." என்று எழுந்தவன் "நீங்கள் மாத்திரை சாப்பிடுங்கள் மாமா.. நான் டாக்டரிடம் சிலது பேச வேண்டியது இருக்கு.. பேசிவிட்டு வரேன்" என்று சமாளித்துவிட்டு எழுந்து வெளியில்
வந்தான்.

ஜீவாவும் வெளியே வர "ஜீ நாளைக்கு
நைட் டிக்கெட் புக் பண்ணியிருக்கேன்.
ரெடியா இருடா.. இப்போ நான்
கிளம்பறேன். நான் இன்றும் நாளையும்
இங்க வரமாட்டேன். வந்தால் என்னை
மீறி யாரிடமாவது ஆத்திரத்தில்
பேசிவிடுவேன் என்று இருக்கிறது.. நீ
நாளை நேராக ஒன்பது மணிக்கு பஸ்
ஸ்டாண்ட் வந்துவிடு.. ஒன்பதரைக்கு பஸ்" என்றுவிட்டு ஜீவாவின் பதிலைக் கூட எதிர்ப்பார்க்காமல் நகர்ந்துவிட்டான்.

•••••

அடுத்த நாள் கம்பத்தில்..

அடுத்த நாள் வழக்கம் போல பள்ளி
முடிந்தவுடன் தன் உடமைகளை எடுத்துக்
கொண்டு கவிதா இருக்கும் ஆபிஸ்
அறைக்குள் நுழைந்தாள் கௌசிகா.
அவள் இன்னும் கிளம்பாததைப்
பார்த்தவள் "என்ன கவி.. இன்னும்
வேலை இருக்கா?" என்றபடி கௌசி
அங்கு இருந்த நாற்காலியில் அமர்ந்தாள்.

"ஆமாம் கௌசி.. நாளைக்கு ஊருக்குப்
போனால் எப்போது வருவேன் என்று
தெரியாது. அதான் முடிந்த அளவு இன்றே முடித்துக் கொண்டு கிளம்பலாம் என்று" என்றாள் கவிதா.

"ஓ... சரி... நான் வெயிட் பண்றேன்.. நீ
பொறுமையா முடி" என்று
உடகார்ந்துவிட்டாள் கௌசி.. ஏதாவது
உதவி வேண்டுமா என்று கௌசி கேட்க
"இல்லை கௌசி.. இது பிரபு சார் கிட்ட
காட்ட வேண்டிய பேப்பர்ஸ்" என்று கவிதா மறுத்துவிட்டாள்.

கௌசி சும்மா உட்காரப் பிடிக்காமல் தன்
போனை எடுத்து ஒரு கேமை
விளையாடிக் கொண்டு இருந்தாள். மணி நாலரை ஆனது. உள்ளே வந்த சுரேஷ் "ஹாய் கௌசி.. இங்கதான் இருக்கியா? நான் கிளம்பிட்டீங்க-ன்னு நினைத்தேன்.. உன்னை பிரபு சார் அழைத்தார்" என்றான் சாதரணமாக.

"என்னையா... எதுக்கு?" என்று கௌசி
புருவ முடிச்சுடன் வினவ "எனக்கென்ன
தெரியும்" என்று கையை விரித்தான்
சுரேஷ். எதுவுமே தெரியாதவன் போல
அவன் கௌசியிடம் சொல்லிவிட்டு
கவிதாவிடம் பேசச் சென்றான்.

சரி என்றுவிட்டு பிரபுவின் அறையை
நோக்கி நடந்தாள் கௌசிகா. 'இவனின்
தொல்லை இல்லாமல் கொஞ்சம்
நிம்மதியாக இருந்தோம்.. மறுபடியும்
ஆரம்பித்துவிட்டான் போல.. இன்று
திட்டவட்டமாக சொல்லிவிட வேண்டும்'
என்று நினைத்தபடி நடந்தவள் அவன்
அறை வாயிலில் வந்து நின்றாள்.

கதவைத் தட்டி "மே ஐ கம் இன் சார்"
என்று குரல் கொடுக்க "யெஸ் கம் இன்"
என்று பிரபுவின் குரல் கேட்டது.

உள்ளே நுழைந்த கௌசி "குட் ஈவ்னிங்
சார்.. வரச் சொன்னிங்களாமே" என்று
ஆரம்பித்தாள்.

"யெஸ்.. உட்காருங்க" என்று
இருக்கையைக் காட்டினான்.

"இல்லை சார்.. பரவாயில்லை" என்று
மறுத்தாள் கௌசி.. அதாவது
விஷயத்தை சீக்கிரம் சொல்லிமுடி நான்
கிளம்பனும் என்றபடி நின்றாள் கௌசி.

"நீங்க பர்ஸ்ட் உட்காருங்க..." என்று அவன் இருமுறை சொல்ல கௌசி உட்கார்ந்தாள்.

யாராவது வந்தால் விரட்ட வேண்டும்
என்று சுரேஷும் கவிதாவும் பிரபுவின்
அறை வாயிலின் முன்னால் கொஞ்சம்
தள்ளி நின்றனர்.

"சொல்லுங்க சார்.. என்ன விஷயம்"
என்று ஆரம்பித்தாள் கௌசி.

"நான் உன்ன லவ் பண்றேன் கௌசிகா.
உன்னைக் கல்யாணம் செய்து கொள்ள
ஆசைப்படுகிறேன்" என்று பிரபு சொல்ல
எரிமலைக் குழம்பை காதில் ஊற்றியது
போல இருந்தது கௌசிகாவிற்கு.

"சார் ப்ளீஸ்.. ஸ்கூல் விஷயமா மட்டும்
பேசுங்க.. இல்லை என்றால் நான்
கிளம்பறேன்" என்றாள் பொறுமையை
இழுத்துப் பிடித்தபடி.

"கௌசிகா.. நான் பேசுவதை காது
கொடுத்தாவது கேள்.. நான் உன்னை
ஏமாற்றிவிட மாட்டேன்" என்று கெஞ்சும்
குரலில் பிரபு கேட்டான்.

"......" - கௌசிகா.

"உனக்கு என்னிடம் எதுவும்
பிடிக்கவில்லையா சொல் கௌசிகா..
மாற்றிக்கொள்கிறேன்" என்று கேட்டான்.

"அட்ஜஸ்ட் செய்து கொள்வது தான் லவ்
மிஸ்டர்.பிரபு... நமக்காக
இன்னொருத்தரை மாற்றுவது இல்லை"
என்றாள் கௌசிகா.

"என்னை உனக்கு பிடிக்கவில்லையா?" -
பிரபு.

"எனக்கு சங்கரலிங்கம் சாரின் மகனாக
உங்களிடம் மரியாதை இருக்கிறது..
அவ்வளவே.. தயவு செய்து என்னை
நிம்மதியாக இருக்கவிடுங்கள் ப்ளீஸ்"
என்றுவிட்டு கௌசி எழுந்து வெளியே
செல்லக் கதவைத் திறந்தாள்.

"கௌசிசிசி... நில்.." என்று வந்தவன்
கௌசியின் கையைப் பிடித்துவிட்டான்.
அதற்குள் கௌசி கதவையும் திறந்து
கொண்டு பாதி வெளியே வர.. பிரபு
கையைப் பிடித்ததை வெளியே
நின்றுகொண்டிருந்த சுரேஷும்
கவிதாவும் பார்த்தனர். கௌசிகாவிற்கு புரிந்துவிட்டது.. நேற்று கவிதாவின்
போன் உறையாடல் என எல்லாம்
விளங்கிவிட்டது.

சுரேஷும் கவிதாவும் பார்த்துவிட்டதைக்
கண்ட கௌசிக்கு அவமானமும் கோபம்
தலைக்கேறியது.. "கையை விடுங்க
மிஸ்டர்.பிரபு" என்று அவனை எரித்து
விடுவதைப் போலக் கௌசி முறைக்க
அவன் கை தன்னால் கௌசியின்
கரத்தை விட்டது.

"ஒரு தடவை சொன்னாப்
புரிஞ்சிக்கோங்க.. எனக்கு திருமண
வாழ்வில் இஷ்டம் இல்லை.. இனி யாரும் இந்தப் பேச்சை எடுக்காதீர்கள்" என்று
அழுத்தமானக் குரலில் மூவரையும்
பார்த்துச் சொன்னாள்.

"கௌசி.. உன் ஒப்பனையில்லா அழகில்
நான் விழுந்தது உண்மைதான்.. ஆனால்
அதைவிட உன் அமைதி, அடக்கம்,
ஆண்களிடம் நீ தள்ளி நிற்கும் குணம் என அனைத்தையும் கண்டு தான் உன்னிடம் இன்னும் விழுந்தேன்" என்று பிரபு கௌசிக்கு விளக்கினான்.

"போதும் நிறுத்துங்க... நீங்க சொல்ற
எல்லா குணமும் என்கிட்ட இப்போ
இருக்கலாம்.. ஆனால் இதில் ஒன்று கூட
மூன்றரை வருடத்திற்கு முன்னால்
என்னிடம் இல்லை.." என்ற சொன்ன
கௌசியின் குரல் தழுதழுத்தது.

சுரேஷும் கவிதாவுமே இந்தக் குரலில்
அதிர்ச்சியுற்றனர். கௌசி முகம் இறுகி
பார்த்திருக்கிறார்கள்.. ஆனால்
கௌசியின் முகம் வாடிப் பார்த்ததில்லை.. ஆனால் இப்படியே விட முடியாதே...

"கௌசி... நீ கல்யாணம் வேண்டாம் என்று சொல்வதற்கு என்ன காரணம் என்று மட்டும் சொல்" என்று பிரபு கேட்டான்.

"......" - கௌசிகா.

"ஆமாம் கௌசி... சொல்லு... சும்மா
வேணாம் வேணாம்-ன்னு செல்லாமல்
கரெக்டான காரணத்தைச் சொல்..
இல்லையென்றால் பிரபு சாரை
கல்யாணம் பண்ணிக்கொள்.. உன்
வாழ்க்கை நல்லபடியாக அமைய
வேண்டும் என்று தான் சொல்கிறோம்
கேள்" என்றான் சுரேஷ் தன் பங்கிற்கு.

"உண்மையான காரணத்தைச்
சொன்னால் விட்டிடுவீங்க தானே".. என்று கண்களில் கண்ணீருடனும் உதட்டில் கோபத்துடனும் மூவரையும் பார்த்துக் கேட்டாள் கௌசிகா.

மூவரும் கௌசியையே கூர்ந்து அவள்
என்ன சொல்லப்போகிறாள் என்று
பார்த்தனர்.

"நான் ஒரு விடோ.. அதாவது விதவை..
புரிகிறது அல்லவா.. என்னை
விட்டுவிடுங்கள்" என்று தன் இரண்டு
கைகளால் சத்தமாக ஒரு கும்பிடு
போட்டுவிட்டு வெளியே விறுவிறுவென்று நடந்து வந்து தன் உடமைகளை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டாள்.

கௌசிகா சொல்லிவிட்டுச் சென்றதை
அடுத்து அந்த அறையில் அமைதி
நிலவியது.. மூவரும் ஆணி அடித்தார்
போல நின்றிருந்தனர். பிரபுவின் முகம்
முழுதும் வெளுத்திருந்தது.

கௌசிகா கணவனை இழந்த பெண்ணா?

அப்போது அவளுக்கு குடும்பம்
இருக்கிறதா?

ஏன் இங்கு அனாதை போல இருக்கிறாள்?

எனப் பல கேள்விகள் மூவரின் மனதிலும் எழுந்தன.
 

writer

Saha Writer
Team
Messages
50
Reaction score
26
Points
8
அத்தியாயம்-4

மூன்று வருடங்களாக தன் மனதிற்குள்
பூட்டி வைத்திருந்ததை மூவரிடமும்
சொன்னதை நினைத்துக் கூட கௌசிகா
கவலைப்படவில்லை. ஆனால் இனி
அனைவரின் பரிதாபப் பார்வையை
சகிக்க வேண்டும் என்று
எண்ணியவளுக்கு அழுகை வெடித்துக்
கொண்டு வர வேக வேகமாக நடந்து
வந்து வீட்டை அடைந்தாள். கோபத்திலும்
ஆதங்கத்திலும் சாவியை எடுத்தவள்
பூட்டில் நுழைக்கவே சிரமப்பட்டாள். 'ச்சை' என்று எரிச்சல்பட்டவள்.. ஒருவாறு
நிதானித்து கதவைத் திறந்து கொண்டு
உள்ளே சென்றாள்.

உள்ளே வந்து தன் கட்டிலில்
உட்கார்ந்தவளுக்கு அழுகை வெடித்து
கண்ணீர் சிதறியது. அவளால் மறக்கவும் முடியாத மறுக்கவும் முடியாத நினைவுகள் எல்லாம் சேர்ந்து உள்ளுக்குள் வந்து அலையாய் எழுந்து சுனாமியாய் உருவெடுத்தது.

'நினைவுகள் காயத்தைப்போல
ஆறிவிட்டது..
ஆனால் சிலருடைய நினைப்புகள்
ஆறாது வடுவாய் அழியாமல்
இருக்கும்'
என்பதை கௌசி இன்று உணர்ந்தாள்.

அவளது ஆசைகள் எல்லாம் கானல் நீராய் ஆகி அவள் தாங்க முடியாத துயரத்தை அனுபவித்ததை யார் அறிவார்? ஏன் உடன் இருந்தோரே அவளைப் புரிந்து கொள்ளவில்லையே?

பிரபு ஒப்பனையில்லா அழகு என்று
சொன்னது நியாபகம் வர கௌசியின்
உதடு ஏளனமாக தன்னால் வளைந்தது.
அவனுக்கு என்ன தெரியும்? அவளின்
அழகே அவளுக்கு எமனாகப் பாசக்
கயிரை வீசவே ஒப்பனைகளை
எல்லாம் வெறுத்து தூக்கி எறிந்தது
யாருக்குத் தெரியும்? தன் முகத்தையே
தான் சிதைக்க நினைத்துக் கொண்டதை யார் அறிவார்?

தன்னுள் இருந்த காதல் உணர்வுகள்
செத்து வெறும் காமம் தனிக்கும்
கருவியாய் தான் இருந்த நரகத்தை யார்
அறிவார்? மூன்றரை வருடங்களுக்கு
முன்னால் நடந்ததை இப்போது
நினைக்கும் போதே உடல் கூசியது
கௌசிக்கு.

தன்னைச் சுற்றி உள்ள எதையும்
உணராமல் தன்னை நினைத்து அழுது
கொண்டு இருந்தவளை வீட்டிற்குள்
இருபது நிமிடம் கழித்து வந்த கவிதா
பெட்ரூம் நிலவின் மேல் நின்றபடி
பார்த்துக் கொண்டு இருந்தாள்.

கௌசி சென்ற பின் மூவருக்குமே வாய்
கம் போட்டு ஒட்டியது போல ஆகிவிட்டது.
முதலில் கவிதா தான் அந்த அமைதியை
கலைத்தது. "சரி நான் கிளம்பறேன்"
என்று நகரப் பார்த்தவளிடம் பிரபு
பேசினான்.

"வீட்டிற்குப் போனவுடன் கௌசி என்ன
நிலையில் இருக்கிறாள் என்று
சொல்லுங்க.. அழுது கொண்டே சென்றது ஒரு மாதிரி இருக்கு" என்று பிரபு இயலாமையானக் குரலில் பேசினான்.

"ஆமாம்... போனவுடன் அங்கு உள்ள
நிலையை சொல்... கொஞ்சம் சமாதானம் செய்" என்று சுரேஷ் சொல்ல தலையை ஆட்டிவிட்டு கிளம்பினாள் கவிதா.

வரும் வழியில் தான் கவிதாவிற்கு
ஒவ்வொன்றாக தெளிவாகியது. ஒரு
தடவை ஊருக்குச் சென்று வரும் போது
அம்மன் கோயில் குங்குமத்தை வைக்க
நீட்டிய போது கௌசி குங்குமத்தை
வெறித்து நோக்கிவிட்டு "இல்லை கவிதா.. எனக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை.. தப்பாக எடுத்துக்காதே" என்று சொன்னது.

ஆனால் ஒரு தடவை எங்கையோ
இடித்துக் கொண்டவள் "முருகாகா" என்று முணுமுணுத்ததைக் கவனித்த
கவிதாவிற்கு அது முரண்பாடக இருந்தது. கோயிலிற்கும் வந்ததில்லை.. பூ ஒரு தடவை தந்தபோது கூட நயமாக மறுத்தது எல்லாம் நியாபகம் வந்தது.. எல்லாம் இதற்காகத் தானா?

ஆனால் இதை மறைத்ததிற்காகக்
கவிதாவிற்கு கோபம் வரவில்லை
கௌசியின் மேல். மாறாக அவள் இதை
மனதிற்குள்ளே வைத்து எவ்வளவு
கஷ்டப்பட்டிருப்பாள் என்று தோன்றியது.
எல்லாவற்றையும் நினைத்தபடியே
வீட்டிற்கு வந்து கௌசியைப் பார்த்தவள்
அதிர்ந்தாள். இரண்டு கைகளையும்
பெட்டில் ஊன்றியபடி காலைத் தரையில்
படும்படி வைத்து இறுகி
உட்கார்ந்திருந்தாள். ஆனால் கண்கள்
மட்டும் கண்ணீரை சிந்திக் கொண்டு
இருந்தது.

இந்த மூன்றரை வருடங்களில் கௌசி
அழுது அவள் பார்த்ததே இல்லை..
எப்போதுமே ஒரு கம்பீரமான மிடுக்குடன் இருப்பவள் இன்று அழுகும் போது பார்க்கவே சகிக்கவில்லை. இப்படி அழ வைத்துவிட்டோமே என்று குற்ற உணர்வு குத்தியது கவிதாவை.

அமைதியாக சென்று கௌசியின் எதிரில் இருந்த கட்டிலில் அமர்ந்தாள் கவிதா. அவள் வந்ததைக் கூட உணராமல் தரையை வெறித்தபடி கண்ணீரை சிந்திக் கொண்டு இருந்தாள் கௌசி.

"கௌசி" - அழைத்துப் பார்த்தாள் கவிதா.

".........." - கௌசிகா.

எழுந்து அருகில் சென்று நின்றபடியே
"கௌசி.." என்று தோளைப் பற்றினான்.

தன்னை யாரோ தொடுவதை உணர்ந்த
கௌசி நிமிர்ந்து பார்க்க கவிதா
நின்றிருந்தாள். "சாரி கவி" என்றவளின்
கண்களில் கண்ணீர் வழிந்தது.

"ச்சு எதுக்குடி சாரி.. நாங்கள் தான் உன்
நிலைமை புரியாமல் கல்யாணம் அது
இது என்று.... சாரி கௌசி" என்று முகம்
கன்ற கேட்டாள் கவிதா.

"உன்னிடம் நான் இவ்வளவு பழகி
மறைத்துவிட்டேன்.. உனக்கு என் மேல்
கோபம் இல்லையா?" என்று அவளின்
கரத்தைத் தன் இருகைகளால் பிடித்தபடிக் கேட்க "அதெல்லாம் எதுவும் இல்லை கௌசி" என்று கவிதா சொல்ல அவளின் கைகளைப் பிடித்தபடியே அவளின் கைகளின் மேல் சாய்ந்து கண்ணீர் விட்டாள் கௌசி.

அவளின் அருகில் அமர்ந்த கவிதா..
அவளை சமாதானம் செய்ய தன்
வாழ்வில் நடந்த அனைத்தையும்
கூறினாள் கௌசிகா. கணவனின் இழப்பு மட்டும் என்றுதான் என்று நினைத்த கவிதாவிற்கு கௌசி சொல்லச் சொல்ல தலை சுற்றியது. கண்களில் நீர்மணிகள் கோர்த்தன. அவளைத் தட்டித் தட்டிச் சமாதானம் செய்தவளுக்குத் தொண்டை அடைத்தது.

இப்போது அழுவதை விட இந்த மூன்றரை வருடத்தில் அவளின் 'கண்ணீரில்லா அழுகையின் சோகம் மிகவும் ஆழமானது' என்பதைப் புரிந்து கொண்டாள்.

"பேசாமல் தூங்கு கௌசி.. எதையும்
நினைக்காதே நாளை பேசலாம்.." என்று
கௌசியை தூங்க வைக்க முயற்சிக்க
யாரோ கதவைத் தட்டும் ஓசை கேட்டது.

கதவின் ஓசை கேட்ட பெண்கள் இருவரும் இந்த நேரத்தில் யார் என்பது போல இருவரின் முகத்தையும் மாறி மாறி பார்த்தனர்.

ஹாலிற்கு வந்த கௌசியும் கவிதாவும்
யோசிக்க வெளியே "கவிதா...." என்று
சுரேஷின் குரல் கேட்டது.

கவிதா போய் கதவைத் திறக்க சுரேஷும் பிரபுவும் வெளியே நின்றிருந்தனர். சுரேஷின் குரல் கேட்டவுடனே கௌசி குளியல் அறைக்குள் புகுந்துவிட்டாள். உள்ளே சென்று நன்றாக மூஞ்சியை அழுத்திக் கழுவிக் கொண்டு வெளியே வந்தாள்.

பிரபுவும் சுரேஷும் ஹாலில் தரையில்
அமர்ந்து இருந்தனர். இரு பெண்கள்
மட்டுமே என்பதால் சேர் எதுவும்
வாங்கவில்லை..

ஹாலிற்கு வந்த கௌசி இருவரையும்
"வாங்க" என்று அழைத்தாள். என்னதான்
முகத்தைக் கழுவியிருந்தாலும்
கண்களில் உள்ள சிகப்பு
காட்டிக்கொடுத்து விட்டது கௌசியின்
அழுகையை.

நால்வருக்கும் டீயை எடுத்து வந்த கவிதா அனைவருக்கும் தர, டீயை காலி செய்யும் வரை எவருமே பேசவில்லை. டீயை முடித்த பிறகும் அங்கு அமைதியே
நிலவியது.

"சாரி கௌசிகா" என்றான் பிரபு.

"....." என்ன பதில் பேசுவது என்று
தெரியாமல் அமைதியாக இருந்தாள்
கௌசி.

"உன் நிலைமை என்ன என்று தெரியாமல் இப்படி ஹர்ட் பண்ணிட்டேன். ஐம் எக்ஸ்ட்ரீம்லீ சாரி" என்றான் பிரபு.

"இல்லை பரவாயில்லை.. தெரியாமல்
தானே..." என்றவள் "எல்லாத்தையும்
மறந்திடுங்க" என்று அழுத்தமாகச்
சொன்னாள் கௌசி.

"ஆனால் கௌசி... நீ மனசு மாறினால்
நான்... " என்று பிரபு ஆரம்பிக்க
"வேண்டாம் பிரபு.. எனக்கு
கல்யாணத்தில் வெறுப்பு.. என்னை
நினைத்துக் கொண்டு உங்க
வாழ்க்கையை வீணாக்கிறாதீங்க.. நம்ம
நல்ல நண்பர்களாக வேண்டுமானால்
இருக்கலாம்" என்று முடித்தாள் கௌசி.

அதற்கு பிறகு நால்வரும் அதைப் பற்றி
எதுவும் பேசவில்லை.. பின் நால்வரும்
ஏதேதோ பேசினர்.. கௌசி தலையை
மட்டும் ஆட்டிக் கொண்டு இயல்பாக
நடந்து கொண்டு இருந்தாள்.

ஒரு அரை மணி நேரம் பேசிவிட்டு
சுரேஷும் பிரபுவும் கிளம்பினர்.
அவர்களை அனுப்பிவிட்டு உள்ளே வர
இருபெண்களுக்குமே பசி வயிற்றைக்
கிள்ளியது. இரு மேக்கி பாக்கெட்டை
உடைத்து கவிதா மேக்கி செய்ய கௌசி
வீட்டின் பின்னால் நிற்கிறேன் என்று
நின்றிருந்தாள்.

பின் இரு பெண்களும் சாப்பிட்டுவிட்டு
படுக்கைக்குச் சென்றனர். இருவரும்
அவரவர் கட்டிலில் படுக்க கௌசி
கவிதாவிற்கு முதுகு காட்டி
படுத்திருந்தாள். தன்னைப் பார்த்துக்
கொண்டே சங்கடப்படுவாள் என்றே
கண்ணை மூடித் திரும்பிப்படுத்திருந்தாள் கௌசி.

எவ்வளவு கட்டுப்படுத்தியும் மனம்
பழசையே நினைக்கச் சொல்லியது.
மூளை வேண்டாம் என்று சொல்ல
கடைசியில் கௌசியின் மனமே
வென்றது.

மூன்றரை வருடங்களுக்கு முன்...

சென்னையில் அடையாரில் உள்ள தனது வீட்டில் நன்றாக உறங்கிக்
கொண்டிருந்தாள் கௌசிகா.. மணி
காலை ஐந்தரை ஆகியிருந்தது. சூரியன்
உதித்தும் உதிக்காமலும் நிலாவிடம்
எப்போது அனுமதி தருவாய் என்பது
போல பாதி மட்டும் வானில்
தூக்கக்கலகத்தில் தொங்கிக் கொண்டிருந்தது.

நேற்று ப்ரண்ட்ஸோடு சுற்றிவிட்டு வந்த
கௌசி உடை மாற்ற மனமில்லாமல் அதே பென்சில் ஃபிட் ஜீன்ஸ் பேண்ட் மற்றும் பார்மல் சர்ட் உடனே தூங்கிக்
கொண்டிருந்தாள். இப்போது இருப்பதை
விட மூன்று மடங்கு அழகு. எந்தக்
கஷ்டத்தையும் பார்க்காமல் ஜாலியாக
நண்பர்களோடு சுற்றும் வயது. எந்தத்
துன்பமும் இல்லாமல் எந்த மன
அழுத்தமும் இல்லாமல் பளிச்சென்று
இருந்தாள். சிற்பம் தான்.

கௌசிகா எழுவதற்கான ஐந்தே முக்கால் அலாரம் அடிக்க.. அவளது கைகளால் கண்ணை மூடிக்கொண்டே போனைக் கைகளால் தேடினாள். போனைத் தேடி அலைந்து கொண்டிருந்த கையை திடீரென ஒரு கரம் பிடித்தது. அவள் சுதாரித்து எழுவதற்குள் அவளின் போர்வையை வைத்தே சுற்றி அவளை அமுத்திப் பிடித்தன இரண்டு பேர்.

அரண்டு கத்தப் போனவளை ஒரு கரம்
வாயை அமுக்கியபடி தலையைப்
பிடித்துத் தூக்க வேறு யாரோ காலை
இறுக்கமாகப் பற்றித் தூக்கினர்.
அவளை அப்படியே தூக்கிக் கொண்டு
போக கௌசியால் எதுவும்
செய்யமுடியவில்லை. நெளியக் கூட
முடியாத படி பிடித்திருந்தனர்.

ஒரு ஐந்து நிமிடத்திற்குப் பிறகு அவர்கள் அவளைக் கீழே இறக்கிவிட பரபரவென்று பெட்ஷீட்டை கலைத்து வெளியே வர "ஹாஹாப்பிபிபி பர்த்டேடேடே டி கௌசிக் பையாயாயாயா" என்று அவளின்
தலையில் இரண்டு பக்கெட்தண்ணீர்
ஊற்றினர் அந்த இரண்டு பேர்.

"ஏய்ய்ய்ய்......" என்று முதலில் கத்தியவள் பின் பயன் இல்லை என்று தெரிந்து
கால்களை மடக்கி முகத்தைக் கைகளால் மூடியபடி தன் மேல் தண்ணீர் ஊற்ற ஊற்ற அமர்ந்துவிட்டாள்.

முழுதாக நனைந்தவள் கண்ணைத்
திறக்க அவளது அத்தை பசங்களான
விக்னேஷும் ஜீவாவும் நின்றிருந்தனர்.
இருவரின் முகத்திலும் அவளின் மேல்
தண்ணீர் ஊற்றியதில் அவ்வளவு
சந்தோஷம். "டேய்ய்ய்ய்ய் உங்களை.."
என்று பல்லைக் கடித்தபடி எழுந்தவளிடம் "ஹே... நில்லு கௌசிக் பையா.. இதற்கே இப்படியா.. இன்னும் இருக்கு" என்று விக்னேஷ் சொல்ல கரெக்டாக ஜீவாவின் உடன் பிறந்த தங்கை சந்தியா ஒரு பக்கெட்டுடன் மாடி ஏறி வந்தாள். அதுவும் "மாட்னியா?" என்ற பார்வையோடு.

சந்தியாவிடம் சென்று பக்கெட்டை
வாங்கிய விக்னேஷ் அப்படியே மாடியின்
க்ரில் கதவிற்குப் பூட்டு போட்டுவிட்டு
சாவியை தன் ட்ராக் பாண்ட் பாக்கெட்டில்
வைத்தான். திரும்பிப் பார்த்தவன்
கேலிப்பார்வையோடு ஜீவா அருகில்
சென்று பக்கெட்டை காண்பிக்க ஜீவாவும் கௌசிகாவைப் பார்த்து உதட்டைப் பிதுக்கிச் சிரித்தான்.

"ஏய் என்னடி சந்தியா நீயும் இவனுங்க
கூட சேர்ந்துட்டயா?" என்று தன்னை விட
இரண்டு வயது சின்னப்பெண்ணான
சந்தியாவை மிரட்டியவள் தன் அத்தைப்
பசங்களிடம் திரும்பி "டேய்ய்ய்ய்ய்ய்ய
வேண்டாம் உங்க பர்த்டேவும் வரும்..
அப்புறம் அவ்வளோதான்" என்று மிரட்ட
"அதை அப்போ பார்த்துக்கலாம் கௌசிக்" என்று கலர் தண்ணீர் நிரம்பிய பலூனை கௌசியின் மேலே வீசினான் விக்னேஷ்.

ஓடப் பார்த்தவளை பாய்ந்து சென்று
பிடித்தவன் அவள் முகத்தில்
எதையெதையோ பூசினான். உடன்
சேர்ந்து ஜீவாவும் சந்தியாவும் தங்கள்
வேலைகளைக் காட்டினர். மூவரும்
சேர்ந்து ஒரு வழி பண்ணிவிட்டனர்
கௌசிகாவை. கடைசியில் விக்னேஷ்
கண்ணடிக்க மூவரும் சேர்ந்து கிச்சுகிச்சு
மூட்ட ஆரம்பித்து விட்டனர்.
"அய்ய்ய்யோயோ... ஏய்ய்ய்ய்" என்ற
கௌசி பக்கத்து வீட்டிற்கு கேட்கும்
அளவிற்குச் சிரித்தாள். சின்ன வயதில்
இருந்தே எவ்வளவு கோபமாக
இருந்தாலும் இதைத் தான் அனைவரும்
கௌசியிடம் கையாளுவர். ஏனென்றால்
இதைச் செய்தாள் அவளால் எதுவுமே
செய்ய முடியாது. கெக்கபுக்கே என்று
சிரித்து விழுந்தே விடுவாள்.

சிரித்து சிரித்து கண்களில் தண்ணியே
வந்துவிட்டது கௌசிக்கு. அப்படியே
அந்தத் தரையிலேயே படுத்தவள் சிறிது
நேரம் அப்படியே கிடந்தாள். சர்ட்டில்
ஆங்காங்கே கலர் சாயம் வேறு பல்லைக்
காட்டியது. விக்னேஷ், ஜீவா, சந்தியா
மூவரும் ஒரு ஓரமாக அப்படியே மூச்சு
வாங்க உட்கார்ந்திருந்தனர்.

பிறகு எழுந்தவள் எதையோ
தேடிக்கொண்டு தண்ணீர் டாங்கிற்கு
அருகில் சென்றாள் கௌசிகா. அதற்கு
அருகில் இருந்த பைப்பில் ஒரு ஹோசை
சொருகியவள் பைப்பைத் திறந்து
மூவரின் மேலும் தண்ணீரை அடிக்க
ஆரம்பித்துவிட்டாள். "யேயேயேயேயே...
ரௌடி நிறுத்துடி..." என்று விக்னேஷ்
கத்த "இவ எந்திரிச்சு தேடும் போதே
நினைச்சேன் டா.. ஏதாவது
பண்ணுவான்னு" என்று ஜீவாவும் கத்த
கௌசி எதையுமே காதில் வாங்கிக்
கொள்ளவில்லை.

முழுதாக மூவரும் நனைந்த பின்னே
தண்ணி டாப்பை க்ளோஸ் செய்தாள்.
"அச்சச்சோ என்ன மூணு பேரும் இப்படி
தொப்பலா நலஞ்சுடிங்க.. என்ன மழையா பெய்ததா?" என்று அப்பாவியாக முகத்தை வைத்து நக்கலான சிரிப்புடன் வானத்தை
நோட்டம் விட்டபடிக் கேட்டாள் கௌசி.

"ஆமாம்.. வருணபகவான் லீவ்ல
போயிட்டாருன்னு அவரு தம்பி கௌசிக்
பகவான் வேலை" என்று சொல்லி
கௌசியின் கழுத்தை தன் கரத்தால்
சுற்றி லாக் செய்தவன் அவளை 'நங் நங்'
என்று கொட்டினான் விக்னேஷ்.

பின் நால்வரும் கீழே இறங்க
விக்னேஷும் கௌசியும் சண்டையிட்ட
படியே கீழே வந்தனர். கீழே வர "இனிய
பிறந்தநாள் வாழ்த்துக்கள் கௌசிமா"
என்று தன் மகளை வாழ்த்தியபடி வந்த
வரதராஜன் தன் மகளின் கோலத்தைக்
கண்டு சிரித்தார். சட்டையிலும்
ஆங்காங்கே கலர், ஸ்டைலாக நடு முதுகு
வரை வெட்டப்பட்டிருந்த தலை முடியிலும்
ஆங்காங்கே கலர்பொடி பல்லைக்
காட்டியது "ஜீன்ஸ்ம் சட்டையும் அம்பேல்
தான்.. இனி போட முடியாது" என்று
நினைத்தவரிடம் "தாங்க்ஸ் அப்பா..
ஆனால் என்ன நீங்களும் சிரிக்கறீங்க?"
என்று உதட்டைச் சுழித்துக் கேட்டவளிடம்
"போய் நீயே கண்ணாடியில் பாருமா"
என்று சொல்லிவிட்டு சமையல்
அறைக்குள் புகுந்துவிட்டார் அவர்.

உள்ளே தன் அறைக்குள் புகுந்து
கண்ணாடியில் பார்த்தவள் பயந்தே
விட்டாள். முகம் முழுதும் கரி அப்பியது
போல இருந்தது. பின்னால் வந்து நின்ற
விக்னேஷ் "எப்படி... செம அழகா
மாத்துனேனா உன்ன" என்று சிரித்தவன்
"எங்க அப்படியே ஒரு போஸ் குடு..
போட்டோ எடுத்து அப்படியே வீட்டு
முன்னாடி திருஷ்டி கழிக்க மாட்டிவிடலாம்" என்று போனை எடுத்து போட்டு எடுக்க வந்தவனை தடுத்துச் சண்டையிட ஜீவாவும் சந்தியாவும் உள்ளே வந்தனர்.

"கௌசி எல்லாரும் செல்பி எடுக்கலாம்.."
என்று சந்தியா சொல்ல.. நால்வரும்
நெருக்கி நின்றபடி நின்று செல்பியை
எடுத்தனர். "இன்னும் ஒன்னுனுனு" என்று கௌசி கேட்க விக்னேஷ் முறைத்தான்.

"ப்ளீஸ் விக்கா.. ஒன்னே ஒன்னு.. பர்த்டே
பேபில நானு" என்று கண்களைச் சிமிட்டி
தன் இரு கைகளையும் தன் கன்னத்தில்
வைத்தபடிக் கேட்க "சரியான செல்பி
பைத்தியம்" என்று முணுமுணுத்தபடியே
செல்பியை எடுத்தான்.
சொல்லப்போனால் அந்தக் கடைசி
போட்டோ தான் இயல்பாகவும்
அருமையாகவும் வந்தது.

போட்டோவை எடுத்துமுடித்த பின் "நம்ம
நாலு பேரு இருக்க வாட்ஸ்அப் க்ரூப்-ல
அனுப்பீரு" என்றவளிடம் "சரிடா கௌசிக்" என்று விக்னேஷ் சொல்ல தன்
முழங்கையால் அவனை இடித்தாள்.

"எத்தனை தடவை சொல்றது.. அப்படி
கூப்பிடாதே என்று.. எப்போ பார்த்தாலும்
பாய் நேம் வச்சு கூப்டுட்டு" என்று
முறைத்தவளை "அதற்குப் பெண் மாதிரி
இருக்க வேண்டும் கௌசிக். நீதான்
முழுதாக பையன் போலவே திரிகிறாயே" என்று விக்னேஷ் மேலும் அவளை வம்பிழுக்க "டேய் டேய் ஆரம்பிக்காதீங்க.. கௌசி இங்க பாரு.. எட்டு மணிக்கு படை எல்லாம் வந்திடும்.. சீக்கிரம் குளிச்சுட்டு ரெடி ஆகிடு.. நாங்களும் போய் கிளம்பி வருகிறோம்" என்று ஜீவா சொல்லச் சொல்ல தஞ்சாவூர் பொம்மை போல தலை ஆட்டினாள் கௌசி.

"சரியான வாலு டி நீ" என்று அவள் தலை
மேல் கை வைத்து தலையைச் சுத்திய
ஜீவா "இன்னையோட இருபத்திரண்டு
ஆயிருச்சு.. அதாவது நியாபகம்
இருக்கட்டும்" என்று சொன்னான்.

பின் வரதராஜனிடமும் மூவரும் கிளம்ப
விக்னேஷ் ஒரு பெட்டியை அவளிடம்
நீட்டினான். ஜீவா ஒரு சிரிய பேக்கைக்
கொடுத்தான். சந்தியா இன்னொரு குட்டி
கிப்டை தந்தாள்.

"என்னடா இவ்ளோ தர்றீங்க" என்று
சிரித்தபடி பிரிக்க அவளின் கையை
தட்டிவிட்ட விக்னேஷ் "பரக்காவட்டி..
குளிச்சிட்டு வந்து பிரி.. கையெல்லாம்
கலர்-ஆ இருக்கு பாரு" என்று
சொல்லிவிட்டு கிளம்ப மூவரையும்
வழியனுப்பி விட்டு உள்ளே நுழைந்தவள்
தன் அறைக் கதவைப் பூட்டிவிட்டு உடனே
குளிக்கச் சென்றுவிட்டாள்.

குளித்துவிட்டு தலைக்கு உடலுக்கும்
துண்டைக் கட்டிக்கொண்டு வந்தவள்
உடனே வந்து விக்னேஷ் குடுத்த ட்ரெஸ்
பெட்டியைப் பிரித்தாள். பெட்டியைப்
பிரித்தவளின் உதடு தன்னால் சிரிப்பில்
விரிந்தது. அவளுக்கு பிடித்த அடர்
மஞ்சள் கலரில் ஒரு ஃபுல் லென்த் மேக்ஸி ட்ரெஸ் இருந்தது. எடுத்து கையில் பிரித்து அதன் வேலைப்பாடை ரசித்தாள். 'V' நெக்கில் ஆங்காங்கே கோல்டிலும் ரோஸ் கலரிலும் டிசைன் வைத்து அழகாக இருந்த உடையை ரசித்த கௌசியின் உதடுகள் தானாக "விக்கா" என்று முணுமுணுத்தது.

ட்ரெஸை அணிந்தவள் கண்ணாடியில்
பார்க்க அது அவளது உடம்பை சிக்கென
பற்றி இருந்தது. ஏனோ விக்னேஷ்
கௌசிக் என்று கூப்பிடுவது எரிச்சல்
பட்டாலும் அதை மனது விரும்பத்தான்
செய்தது. அவள் தைரியமாக வெளியே
சுற்றுவது.. தப்பைக் கண்டால்
சண்டைக்குப் போவது.. எப்போதுமே
ஜீன்ஸ் சர்ட்டில் திரிவதாலேயே இந்தப்
பெயரை வைத்திருந்தான் அவன்.

அடுத்து ஜீவா குடுத்த கிப்ட்-ஐப் பிரித்தாள். அவள் உடைக்கு ஏற்ற செயின், ஸ்டட், பாங்கில்ஸ் என அனைத்தையும் இருக்க விக்னேஷ் தந்த மேக்ஸிக்கு கரெட்டாக கட்சிதமாக வாங்கியிருந்தான். மதியுடன் சென்று வாங்கியிருப்பான் என்று நினைத்தவள் அடுத்து சந்தியா குடுத்த கிப்ட்-ஐப் பிரித்தாள். அவளுக்குப் பிடித்த மேக்(mac) நியூட் ஷேட் லிப்ஸ்டிக் இருந்தது. எல்லாவற்றையும்
பிரித்தவளின் முகம் "ஈஈஈஈஈஈஈஈஈஈ"
என்று ஆகியது.

ட்ரெஸிங் டேபிளின் முன்னாடி
அமர்ந்தவள் தலையைத் துவட்டி ஃபிஷ்
ப்ரெயிட் (fish braid) போட்டு அடுத்து
ஃபேஸ் க்ரீம், காம்பக்ட் பவுடர், ஐ லைனர்,
மஸ்காரா, காஜல், சந்தியா குடுத்த
லிப்ஸ்டிக் என அனைத்தையும் முகத்தில்
லைட் மேக்கப்பாக அப்ளை செய்துவிட்டு
நெற்றியின் நடுவில் ஒரு அழகான கல்
பொட்டை வைத்தாள். பின் ஜீவா
குடுத்ததை எல்லாம் அணிந்துவிட்டு
வெளியே வந்தாள்.

சமையல் அறையில் இருந்த தன்
தந்தையின் பின்னால் சென்று நின்றவள் "மிஸ்டர்.வரதராஜன்" என்று அழைக்க அவர் சாதரணமாகத் திரும்பினார்.

"எப்படி இருக்கு... அழகா இருக்கேனா?"
என்று வரிசைப் பற்கள் தெரியச்
சிரித்தவளிடம் "அப்படியே உன் அம்மா
மாதிரியே இருக்க டா" என்று தன் மகளின் நெற்றியை வருடினார்.

"என்ன ஸ்பெஷல் பா" என்று வாசனைப்
பிடித்தபடி அடுப்பருகில் வந்தவள் அங்கு
உள்ள எல்லாவற்றையும் திறந்து
பார்த்தாள். எல்லாமே அவளுக்குப் பிடித்த அயிட்டங்கள். காலை கேசரி.. பூரி மசால்.. வடை என தயார் செய்து வைத்திருந்தார் வரதராஜன்.

"சூப்பரேரே.... எல்லாமே புடிச்சது" என்று
தன் தந்தையை பிடித்து உலுக்கினாள்
கௌசி.

"டேய் டேய்... பாப்பா.. அப்பாக்கு வயது
ஆயிருச்சு.. இப்படிலாம் உலுக்குனா
மயக்கம் வந்திரும்" என்று தலையை
சிலுப்பியபடிச் சொன்னவரை "நோநோ..
யூ ஆர் ஆல்வேஸ் யங் அப்பா" என்று தன்
அப்பாவின் மீசையை முறுக்கி விட்டவள்
ஒரு வடையை மட்டும் எடுத்துக் கொண்டு வந்து டி.வியைப் போட்டு அமர்ந்து விட்டாள்.

பிறகு வரதராஜனும் போய் குளித்துவிட்டு வர அதற்குள் அன்னையின் படத்தை பூக்களால் அலங்கரித்தாள் கௌசி. கோமதி - அதாவது வரதராஜனின் மனைவி கௌசிகாவின் தாய். கௌசியைப் போல கோமதி என்று சொல்லுவதை விட கோமதியைப் போலத்தான் கௌசிகா என்றே சொல்ல வேண்டும். அப்படியே தன் அன்னையை உரித்து வைத்திருந்தாள் கௌசிகா.

இருவரும் கோமதியின் படத்தின் முன்பு
நின்று கும்பிட்டனர். பிறகு சாமி படத்தின் முன்பு சாமி கும்பிட்டுவிட்டு திருநீறை எடுத்து பட்டையாக தன் நெற்றியில் தீட்டினாள் கௌசி. இது எப்போதுமே இருக்கும் பழக்கம். என்னதான் மாடர்னாக இருந்தாலும் எப்போதும் காலையில் சாமி கும்பிட்டு பட்டை தீட்டும் பழக்கம் மட்டும் கூடவே வரும் ஒன்று கௌசிக்கு.

பிறகு எட்டரை மணி அளவில் ஜீவாவின்
குடும்பமும் விக்னேஷின் குடும்பமும்
வந்து சேர்ந்தது. ஜீவாவின் அம்மா அப்பா - ஜெயா சதாசிவம் தம்பதி. ஜீவாவின் தங்கை சந்தியா. விக்னேஷின் அம்மா அப்பா - சுமதி செந்தில்நாதன்.

எல்லாரும் வந்து சேர எட்டே முக்காலிற்கு
மதியும் வந்து சேர்ந்தாள் (அதாங்க நம்ம
ஜீவாவின் காதலி).. "ஹேஹே மதி.. வா
வா" என்று போய் அவளைக் கட்டிக்
கொண்டாள் கௌசிகா.

"இப்படியே வழியிலேயே கட்டிப்பிடித்தால் அவள் எப்படி உள்ளே வருவாள்" என்று ஜீவா கேட்க "பொறாமையா இருக்கா ஜீ" என்று காதில் கிசுகிசுக்க ஜீவா கௌசியின் காதைப் பிடித்துத் திருகினான்.

மதி தன் வாழ்த்துக்களைத்
தெரிவித்தவள் தான் வாங்கி கிப்ட்-ஆக
ஒரு பெரிய்யயய டைரியைத் தந்தாள்.
தங்க நிற மஞ்சளில் சுமார் 800
பக்கங்களைக் கொண்டிருந்தது. அதை
யாரும் படிக்க முடியாத மாதிரி ஒரு
அதற்குத் தகுந்த பாக்சில் வைத்து லாக்
வசதி போன்ற அமைப்போடு இருந்தது.
மதிக்குத் தெரியும் கௌசி பிடித்த
விஷயங்களை ஏதாவதில் எழுதுபவள்
என்று. அதை மறைத்து மறைத்து
வைப்பாள் என்றும் எல்லோரும்
அறிந்ததே. அதனால் தான் மதி இதை
வாங்கித் தந்ததே.

"தாங்க்ஸ் மதி" என்றவள் டைரியை
பத்திரமாக உள்ளே வைத்துவிட்டு
வந்தாள் கௌசி.

அவள் வருவதற்குள் கேக்கை
வைத்திருந்தனர் எல்லோரும். "எப்போமே ஈவ்னிங் தானே வெட்டுவீங்க.. இன்னிக்கு மார்னிங்கேவா" என்றபடி கேக்கின்
அருகில் வந்தவள் தன் தந்தையை
நோக்கினாள். மகளின் பார்வையைப்
புரிந்து அருகில் வரதராஜன் வர தன்
தந்தையின் கையோடு தன் கரத்தைச்
சேர்த்து கேக்கை வெட்டினாள் கௌசிகா. இது சிறு வயது முதலே இருக்கும் ஒரு பழக்கம் கௌசிக்கு. தந்தையுடன் சேர்ந்து கேக் வெட்டுவது தான் அவளுக்குத் திருப்தி.

கேக்கை வெட்டித் தன் தந்தைக்கு முதல்
ஊட்டியவள் அடுத்து விக்னேஷிற்கு
ஊட்டினாள். அடுத்து அத்தை மாமா
சந்தியா மதி ஜீவா என
ஒவ்வொருவருக்கும் தன் கையிலேயே
கேக்கை ஊட்டினாள் கௌசிகா. அடுத்து
அனைவரும் காலை உணவுக்கு அமர
ஜெயாவும் சுமதியும் பரிமாறினர்.

பின் அனைவரும் சாப்பிட்டு விட்டு வர
விக்னேஷ் ஒரு அழகான ரவுன்ட் ஷேப்
கூடையுடன் உள்ளே வந்தான்.
கௌசியின் முன் நின்றவன் "இது நானும் மாமாவும் (வரதராஜனும்) உனக்குக் கொடுக்கும் கிப்ட் டி.." என்று அவள் முன் வைத்தான்.

ஒரு அழகான கூடையில் வெள்ளைத்
துணி போட்டு மூடியிருந்ததை திறந்தாள். உள்ளே ஒரு அழகான் ப்ரௌன் கலர் நாய்க்குட்டி உறங்கிக் கொண்டிருந்து. பிறந்து ஐந்து நாள் தான் இருக்கும் போல. அழகான லாப்ரடோர் வகையைச் சேர்ந்தது அது. கூடையோடு சேர்த்து தூக்கி மடியில் வைத்தவள் தன் கையில் எடுத்து கொஞ்சு கொஞ்சு என்று கொஞ்சிவிட்டாள். அவளின்
கொஞ்சலைத் தாங்காமல் நாய்க்குட்டி
சிணுங்கவே ஆரம்பித்துவிட்டது. அதன்
சிணுங்களைக் கண்டவள் "ஓகே ஓகே"
என்று தலையை நீவிக் கொடுத்தாள்.

"என்ன பேர் வக்கப் பொற கௌசி" என்று
விக்னேஷின் தந்தை செந்தில்நாதன்
கேட்டார்.

"இவன் ப்ரௌன் கலர்-ல.. ஸோ ஹீ இஸ்
ப்ரௌனி.. ப்ரௌனி தான் இவன் பெயர்
மாமா" என்று அதன் காதில் மூன்று
முறை சொன்னவள் ப்ரௌனியைக்
கொஞ்சினாள்.

"யேய் போதும் விடு.. அது அழுதுறும்"
என்று ஜீவா சொல்ல சமையல் ரூமிற்குச்
சென்று ஒரு குட்டி கப்பில் பாலை எடுத்து
வந்து ப்ரௌனிக்குக் கொடுத்தாள்.

"சரி எல்லாரும் கிளம்புங்க" ஜீவாவின்
தந்தை சதாசிவம் சொல்ல எல்லோரும்
கிளம்பினர். நாய்க்குட்டியை தன்
அறையில் பத்திரமாக வைத்து வந்தாள்
கௌசி.

அன்று ஞாயிறு என்பதால் ஃபுல் ப்ளான்
போட்டிருந்தனர் எல்லோரும். மதியம்
ஜெயா அத்தை வீட்டில் சாப்பாடு. அப்புறம் சினிமா.. பீச்.. நைட் டின்னருக்கு
செந்தில்நாதனும் சதாசிவமும் ஒரு
ரெஸ்டாரண்ட்டில் டேபிள் புக்
செய்திருந்தனர்.

எல்லா ப்ளானையும் நன்றாக
முடித்துவிட்டு ஏழரை மணி அளவில் தன்
மாமாக்கள் புக் செய்திருந்த அடையார்
தக்சினில் அமரிந்திருந்தனர் அனைவரும். தன் முன் வைத்திருந்த அனைத்து ஐயிட்டங்களையும் வெட்டியவள் வேண்டுமென்றே விக்னேஷ் ஆர்டர் செய்த குலோப் ஜாமூன் உடன் வைத்திருந்த ஐஸ் க்ரீமை எடுத்து சாப்பிட ஆரம்பித்தாள்.

அவன் அவளை ஒற்றைப் புருவத்தை
உயர்த்திப் பார்க்க "ஏன்டா முறைக்கற..
என்ன ஆச்சு.. ஓ ஐஸ்கிரீம் நீ அர்டர்
பண்ணதா.. ச்சு ச்சு தெரியாம
எடுத்துட்டேன்.. முறைக்காதடா.. பர்த்டே
பேபில நான்.. பில் வரக்குள்ள
இன்னொன்றை வாங்கிக்கோ டா" என்று
வெறுப்பேற்றியவளைப் பார்க்கையில்
சிரிப்பு தான் வந்தது அவனுக்கு.
ஐஸ்கிரீம் சாப்பிட்டபடியே தன் அருகில்
அமர்ந்திருந்தவனை ஓரக்கண்ணால்
பார்த்தாள் கௌசி. வெள்ளை சர்ட்டில்..
ப்ளூ ஜீன்ஸிலும் அதிலும் முழங்கை வரை கையை ஸ்லீவை மடித்திருந்தான்.
அலைஅலையான கேசம் ஏசிக்கு நேர்
எதிரில் உட்கார்ந்திருந்ததால் லைட்டாக
ஆட கூர் மூக்குடன் புன்னகைத்தபடி
அமர்ந்து அழகாகக் காட்சியளித்தவனைக் காணத் தெவிட்டவில்லை கௌசிக்கு.

பின் சாப்பிட்டு விட்டு எழுந்தவள் கை
கழுவும் இடத்திற்குச் சென்று கையைக்
கழுவ அங்கு இரு பெண்கள் பேசுவது
நன்றாகக் கேட்டது. அதாவது கை கழுவும் இடத்திற்கு முன்னால்.

"ஹே.. அந்த வைட் சர்ட் தான சொல்ற..
செம ஹாட் அன்ட் ஹேண்ட்சம் டி.. நீ
போய் பேசி நம்பர் வாங்கேன்" என்று
பஞ்சுமிட்டாய் டாப் போட்டிருந்தவள்
பேசினாள்.

"சூப்பரா தாண்டி இருக்கான்.. ஆனால்
இவ்வளவு அழகாக இருப்பவனுக்கு
லவ்வர் இல்லாமலா இருப்பாள்?" என்று
ஒருத்தி யோசனையாய்க் கேட்க அந்த
பஞ்சுமிட்டாய் மறுபடியும் பேசினாள்.

"இருந்தா நமக்கென்ன வந்தது.. அவ
என்ன சண்டைக்கே வரப்போறா" என்று
பதிலளிக்க "ஆமாம் டி சண்டைக்கு தான்
வரப்போறேன்" என்றபடி அவர்களின்
பின்னால் நின்றபடி குரல் கொடுத்தாள்.
அவர்கள் யாரைப் பற்றி பேசுகிறார்கள்
என்று நன்றாகப் புரிந்தது
கௌசிகாவிற்கு.

ஒரு நிமிடம் இருவருக்கும் திக் என்று
இருந்தது. அவன் அருகில் கௌசி
உட்கார்ந்திருந்ததை கவனித்த பெண்கள் கௌசி கைகழுவும் இடத்திற்கு உள்ளே வந்ததைக் கவனிக்கவில்லை.

ஒரு நிமிடம் சுதாரித்துக் கொண்ட
பஞ்சுமிட்டாய் "யாருன்னு
தெரியாதவங்களை இப்படித்தான்
மரியாதை இல்லாமல் டி போடுவீர்களா"
என்று பேச்சை வேறு திசைக்குத்
திருப்பினாள்.

"ஓஓ... அப்படியா.. உங்க அட்வைஸிற்கு
ரொம்ப நன்றி மிஸ்.பஞ்சுமிட்டாய்.
அடுத்தவனுக்கு ஆள் இருந்தால் கூட பேசி கடலைப் போடும் நினைக்கும் உனக்கு இந்த மரியாதைப் போதும் என்று நினைத்தேன்" என்று கைகளைக்
கட்டியபடி அவளிற்கு பதிலளிக்க அந்தப்
பெண்களின் முகம் கன்றிவிட்டது.

அவள் ஏதோ பேச வர கூட இருந்தவள்
அவளைத் தடுத்து "சாரி மேடம்" என்று
சொல்லிவிட்டு அவளை இழுத்துக்
கொண்டு சென்றாள்.

பின் அனைவரும் சாப்பிட்டு முடிக்க
சதாசிவமும் செந்தில்நாதனும் பில்லைக்
கட்டினர். அத்தை மாமா எல்லாம் ஒரு
காரில் புறப்பட, விக்னேஷ்.. ஜீவா..
மதி..கௌசி..வரதராஜன் எல்லாம் ஒரு
காரில் புறப்பட்டனர். பின்னர் மதியை
ஹாஸ்டலில் விட்டுவிட்டு.. கடைசியாக
வரதராஜனையும் கௌசியையும் வீட்டில்
இறக்கிவிட்டு விக்னேஷும் ஜுவாவும்
கிளம்பினர்.

அங்கு ஹோட்டலில் தன்னை அந்த ஒரு
ஜோடிக் கண்கள் கவனித்ததைக் கௌசி
அறியாமல் ஜாலியாக வீட்டினுள்
சென்றாள்.

விதி யாரை விட்டது?
 

writer

Saha Writer
Team
Messages
50
Reaction score
26
Points
8
அத்தியாயம்-5

வீட்டிற்குள் வைப்பரேட்டர் மோடிலேயே
ஆடிக்கொண்டு நுழைந்த கௌசி "அப்பா
மாத்திரை போட்டிங்களா இன்னிக்கு சுகர்-க்கு" என்று தன் தந்தையை நோக்கிக் கேட்டாள்.

அவர் திருதிருவென்று விழிப்பதிலேயே
அவர் மாத்திரை போடவில்லை என்று
புரிந்து கொண்டவள் "மிஸ்டர்.வரதராஜன் உங்களுக்கு என்ன சின்னக் குழந்தைன்னு நினைப்பா?
ஒவ்வொன்னையும் நியாபகப்படுத்திக்
கொண்டே இருக்கனுமா" என்று தன்
தந்தையை ஒரு புருவத்தைத் தூக்கி
மிரட்டியவள் உள்ளே சென்று
மாத்திரையை எடுத்து வந்து கொடுத்து
தண்ணீரையும் தந்தாள்.

மாத்திரையைப் போட்டுவிட்டு சிரித்தபடி
டம்ளரை தந்தவரிடம் "என்ன அப்படி ஒரு
சிரிப்பு ?" என்று புரியாமல் கேட்டவளிடம்
"அது ஒன்றுமில்லை மா.. அப்பாவை
மட்டும் இப்படி மிரட்டுகிறாயே..
கல்யாணம் ஆகி மாப்பிள்ளை வீட்டிக்கு
போயிட்டா அங்கு இப்படி யாரை மிரட்ட
முடியும் சொல்லு? ஒரு வேளை அப்படி
ஒரு அப்பாவி கிடைத்தால் பாவம் தான்.
அதை நினைத்தேன் சிரித்தேன்" என்று
வரதராஜன் கேலி செய்ய "போங்கப்பா
இந்தக் கல்யாணத்திற்கு எல்லாம் என்ன
அவசரம்.. இப்போதைக்கு நோ சான்ஸ்"
என்றாள் கௌசிகா.

"அச்சச்சோ நாய்க்குட்டியை மறந்துட்டேன் பாருங்க" என்று நியாபகம் வந்தவளாக ரூமிற்குள் ஓடியவள் அந்தக் கூடைக்குள் அமைதியாக எட்டிப் பார்த்தாள். அழகாகத் தூங்கிக்கொண்டிருந்தது
ப்ரௌனி. சமையல் அறைக்குள்
நுழைந்தவள் பாலைக் காய்ச்சி பிரிட்ஜில் இருந்த மில்க் பிக்கிஸ் மூன்றை எடுத்து பாலில் நன்றாக கலந்து கரைத்தாள். பின் பாலை ஆற வைத்தவள் வீட்டில் இருந்த ஒரு பழைய ஃபீடிங் பாட்டிலைத் தேடி எடுத்து அதில் பாலை ஊற்றிக் கொண்டு அவள் அறைக்கு எடுத்துச் சென்றாள்.

ப்ரௌனியை எடுத்து தன் மடியில்
வைத்தவள் அதற்கு ஃபீடிங் பாட்டிலை
வாயில் வைத்து பாலைப் புகட்டினாள்.
அழகாக வயிறு முட்டக் குடித்துவிட்டு
"ங்ங்" என்று அவளின் மடியில் படுத்து
உறங்கிய ப்ரௌனியைக் கண்டு
சிரித்தவள் அதை மீண்டும்
கூடைக்குள்ளேயே வைத்து ஹாலில்
கொண்டு சோபாவின் ஓரத்தில்
வைத்து ஒரு சின்ன டர்க்கி கர்ச்சிஃபால்
போர்த்திவிட்டாள்.

"அப்பா நான் போய் தூங்கறேன்
நீங்களும் தூங்குங்கள்" என்றுவிட்டுத்
தன் அறைக்குள் புகுந்துவிட்டாள்.

அறைக்குள் நுழைந்தவளுக்கு ஒரே
கசகசவென்று இருந்தது. ஒரு டவலை
எடுத்துக் கொண்டு நன்றாக
குளித்துவிட்டு டவலை மட்டும் உடம்பில்
சுற்றிவிட்டு வெளியே வர கௌசிகாவின் செல்போன் சிணுங்கியது.

எடுத்து போனைப் பார்த்தாள்.. திரையில் "விக்கா" என்ற பெயரோடு.. பெயருக்கு பின்னால் அவனது போட்டோ அழகாகக் காட்சியளித்தது.

போனை அட்டன்ட் செய்து காதில்
வைத்தவள் "ஹலோ மிஸ்.கௌசிகா
ஹியர்.. சொல்லுங்க என்ன வேணும்"
என்று பெட்டில் கட்டின துண்டோடு
அமர்ந்தபடிக் கேட்டாள்.

"ஏய்ய்ய் ரௌடி.." என்றவன் "சரி உன்கிட்ட ஒன்னு கேக்கனும்" என்று விக்னேஷ் கேட்க கேட்க..

"கேளு" - கௌசிகாவின் நக்கலான
குரலில்.

"ஹோட்டல்ல ஏண்டி அந்தப்
பொண்ணுங்கள மிரட்டிட்டு இருந்த?" -
விக்னேஷ்.

"நானா.." - அப்பாவித்தனமான குரலோடு
கௌசிகா.

"ப்ராடு.. நான் பார்த்தேன்.. சொல்லு ஏன்
மிரட்டீட்டு இருந்த" என்று விடாமல்
கேட்டான்.

"என்னைப் பார்த்தால் மிரட்டுகிற
பொண்ணு மாதிரியா இருக்கு..
பேசுனேன் தான்.. ஆனால் அட்வைஸ்
குடுத்திட்டு இருந்தேன்" என்று சிரிப்பை
அடக்கியபடி சொன்னாள்.

"என்னங்க மேடம் அட்வைஸ் அப்படிக்
குடுத்தீங்க" - கேலியான குரலோடு
விக்னேஷ்.

"அதுவா.. அங்க ஒரு வைட் சர்ட் போட்ட
ஒரு பையனை கரெக்ட் செய்ய ட்ரைப்
பண்ணீட்டு இருந்தாங்க.. நான் போய்..
இங்க பாருங்கம்மா அந்தப் பையன்
நல்லவன் இல்லை.. சரியான ப்ளே பாய்..
பத்து பொண்ணுங்களை இதுவரை
ஏமாற்றி இருக்கிறான். அதுவும்
இல்லாமல் அவனிற்கு சொறியாசிஸ்
இருக்கு.. அப்புறம்.." என்று சொல்லிக்
கொண்டே போனவளை விக்னேஷின்
குரல் தடுத்தது.

"ஏய்..ஏய்.. ஏண்டி இப்டி பண்ற.. நான்
உனக்கு என்னடி பாவம் பண்ணேன்..
நல்லது பண்ணலனாலும் பரவாயில்லை.. கெட்டதாது பண்ணாம இரேன்" என்றவனிடம் "நான் உண்மையைத் தானே சொன்னேன் விக்கா" என்று உதட்டைக் பிதுக்கிக் கேட்க அவனிற்கு கோபம் எட்டிப் பார்த்தது.

"ஏண்டி.. என்ன எவ பாத்தா உனக்கு
என்னடி" - விக்னேஷ்.

"என்னடா இப்படி கேட்டுட்ட.. என் அத்தை
பையன்.. கல்யாணம் வரை உன்னைக்
காக்க வேண்டியது இந்த முறைப்
பெண்ணின் கடமையல்லவா.. சொல்லு"
என்று போலியாய் அழுவது போல பிகு
செய்தாள் கௌசி.

"சொப்ப்ப்ப்பாபாபாபா" என்று பெருமூச்சு விட்டவன் "ஏய் வந்தன்னு வெய்.. அவ்வளவு தான்" என்று விக்னேஷ் சொல்ல தான் உட்கார்ந்திருக்கும் அழகை ஒரு தடம் பார்த்தவளுக்குச் சிரிப்பு வந்தது.

"போய் தூங்குடா.. எனக்குத் தூக்கம்
வருது.. டு நாட் டிஸ்டர்ப்" என்றபடி
போனை கௌசி வைக்க, அந்தப்பக்கம்
விக்னேஷ் ராட்சசி என்று லேசான
முறுவலுடன் முணுமுணுத்தபடி போனை
வைத்தான்.

போனை வைத்துவிட்டு தனது
கப்போர்டை திறந்து நைட் ட்ரெஸை
எடுத்தவள்.. ட்ரெஸை உடுத்திக் கொண்டு மதி குடுத்த டைரியைப் பிரித்தபடி தன் ரைட்டிங் டேபிள் முன்னாள் அமர்ந்தாள். தான் இது வரை எழுதி வைத்திருந்த பழைய கவிதைகள் எல்லாவற்றையும் கட் செய்து அதில் பெவி-ஸ்டிக் போட்டு ஒட்டினாள்.

பிறகு இன்று நடந்ததை எழுத
நினைத்தவளுக்கு அவளது விக்காவின்
முகம் முன்னால் வந்து நின்றது.

ஆமாம் அவள் விக்காவைக்
காதலிக்கிறாள்.. எப்போதிலிருந்து
என்றுத் தெரியவில்லை ஆனால் அவளது விக்கா-வுடன் பேசாமல்.. இல்லை இல்லை.. வம்பிழுக்காமல் ஒரு நாள் கூட அவளால் இருக்க முடியாது. ஆனால் இதுநாள்வரை யாருக்கும் தெரியாது. ஏன் விக்னேஷிற்கே தெரியாது. சொல்லத் தைரியம் இல்லாமல் இல்லை, ஏனோ அவனிடம் மறைத்து.... மறைந்து காதலிப்பதில் அவ்வளவு சுகம் அவளுக்கு. இப்படியே நாட்களும் செல்லுகிறது.

'இயல்பாய் இருக்கிறேன்
உன் முன்னால்
ஆனால்
இரவிற்கும் பகலிற்கும்
இடையே உள்ள
நேரத்தையெல்லாம்
ஆக்கிரமிக்கின்றன
உன் நினைவுகள்டா..

கொஞ்சம்
நிதானமாகவே
சேமித்துக்கொண்டிருக்கிறேன்
என் காதலை
ஏனென்றால்
மொத்தமாகக் கொட்டி
என் காதலின் போதையில்
உன்னைத்
தள்ளாடவைப்பதற்கு..
என் பேனாவின்
திசை
நோக்கிச் செல்லும்
எழுத்துக்கள் போல
என்னையும் அழைத்துச் செல்
என்பதே
தீராத ஆசை'

என்று டைரியில் தன் பேனாவால்
எழுதி முடித்தாள். தன் கையால் அதற்கு
ஒரு முத்தத்தைத் தந்தவள் மூடி
வைத்துவிட்டு அப்படியே சென்று
படுக்கையில் விழுந்தாள். அன்றைய
நாளை ஒரு தரம் முழுதாக நினைத்தவள்
அப்படியே உறங்கியும் போனாள்.

வரதராஜனிற்கு சொந்த ஊர் சென்னை
தான். அம்மா, அப்பா, இரண்டு
தங்கைகளோடு அழகானக் குடும்பம்
வரதராஜனுடையது. வரதராஜனின்
பெற்றோரிடம் அவ்வளவு வசதி இல்லை
என்றாலும் பிள்ளைகளுக்கு கல்வி
முக்கியம் என்று தன்னுடைய மூன்று
பிள்ளைகளையும் ஒரே பள்ளியில்
சேர்த்து படிக்க வைத்தார் வரதராஜனின்
தந்தை. வரதராஜனின் மூத்த தங்கை
ஜெயா. இரண்டாவது தங்கை சுமதி.
நன்றாகப் படித்து முடித்து வேலையில்
சேர்ந்தார் வரதராஜன். குடும்பமே
மகிழ்ச்சியில் நீந்தினர்.

ஆனால் அந்த சந்தோஷம் அவர்களுக்கு
நிலைக்கவில்லை. அடுத்த ஆறு
மாதத்தில் வரதராஜனின் தந்தை
மாரடைப்பால் இறந்தார். அவர் இறந்த
சோகத்திலேயே அடுத்த ஆறு மாதத்தில்
வரதராஜனின் தாயும் இறந்துவிட்டார்.
தாய் தந்தையை அடுத்தடுந்து இழந்ததில் மூன்று பிள்ளைகளும் கலங்கி நின்றனர். அப்போது ஜெயா பத்தாவது.. சுமதி எட்டாவது.

தந்தை வாங்கிய கடன் வேறு அவர்களை
தொந்திரவு செய்தது. வயசுப் பெண்கள்
இருக்கும் இடத்திற்கு கடன்காரர்கள்
வருவது அவ்வளவு சரியாகப் படவில்லை வரதராஜனிற்கு. ஆகவே தன் தந்தை வைத்துப் போயிருந்த ஒரே நிலத்தை விற்றவர் கடனை எல்லாம் செட்டில் செய்தார். கையில் கொஞ்சம் கூட நிற்கவில்லை.

அதற்குள் தங்கைகளை வேறு தேற்றும்
பொறுப்பு. தங்கைகளைத் தேற்றி
பள்ளிக்கு அனுப்பினார். அதற்குள்
ஸ்கூல் ஃபீஸ்.. வீட்டுப் பொருட்கள் என்று
வர திணறிப்போனார் வரதராஜன்.
சம்பளத்தை அன்னையின் கையிலே
குடுத்துப் பழக்கப்பட்டவரால் எப்படி
சிக்கனமாய் செலவு செய்வது என்று
தெரியவில்லை. பின்பு தங்கைகளை
தன்னுடன் அமர்த்தி மாதாமாதம் வாங்கும் மளிகை சாமான் லிஸ்ட் என்று பட்டியல் போட்டார்.

பின் அதிலிருந்து ஜெயா
தேவையில்லாதவற்றை (அதாவது தன் அம்மா வாங்குவதைப் பார்த்துப் பழகி
இருந்ததால்) கழிக்கச் சொன்னாள். பின்
ஒருவாறு சமாளித்தனர் மூவரும்.

வரதராஜன் அயராது உழைத்து ஆபிஸில் பதவி உயர்வை வாங்கினார். அப்படியே ஐந்து வருடங்கள் கடந்தன. அதற்குள் ஜெயாவும் தன் கல்லூரிப் படிப்பை முடித்தாள். சுமதி கல்லூரி முதலாம் ஆண்டு சென்று கொண்டு இருந்தாள்.வரதராஜன் ஜெயாவிற்கு மாப்பிள்ளை பார்க்க ஜெயா மறுத்தாள்.

"ஏன் ஜெயா.. கல்யாணம் வேண்டாம்-
ன்னு சொல்ற" என்று கேட்டவரிடம்
"அண்ணா நான் போயிட்டா சுமதியும்
நீங்களும் தனியாக இருப்பீங்க.. இன்னும் இரண்டு வருடம் போகட்டும்.. சுமதியோடு சேர்த்து எனக்கும் கல்யாணத்தை வைத்து விடுங்கள்" என்று சொன்னார் ஜெயா.

நல்லவேளை காதல் அது இது என்று
இருக்குமோ என்று நினைத்தவர் நிம்மதி
அடைந்தார் வரதராஜன். அவருக்கும்
கொஞ்சம் கையில் பணம் கம்மியாக
இருப்பது போலத் தோன்றியது. போற
இடத்தில் நன்றாக வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டவர் அதற்குப் பிறகு எதுவும் பேசவில்லை.

அடுத்த இரண்டரை வருடத்தில் நன்றாக
உழைத்து கல்யாணத்திற்கு சேர்த்தியவர் இரண்டு மாத இடைவெளியில் ஜெயாவின் கல்யாணத்தையும் சுமதியின்
கல்யாணத்தையும் வைத்தார். நல்ல
நேரமோ என்னமோ நல்ல குடும்பமாக
சென்னையிலேயே அமைந்தனர் இரு
பெண்களுக்கும். அம்மாவின் நகை
இவரின் சேமிப்பு என இரண்டு
பெண்களுக்கும் ஆளுக்கு முப்பது பவுன்
போட்டார்.

முதலில் ஜெயா கல்யாணம்.. அடுத்து
சுமதி கல்யாணம் என்று அடுத்தடுந்து
கல்யாணம் நன்றாகவே முடிந்தது.
ஜெயாவின் கணவர் சதாசிவம்.
சுமதியின் கணவன் செந்தில்நாதன்.
இரண்டு தங்கைகளின் பிரிவு
சோகத்தைத் தந்தாலும் அவர்கள் நன்றாக இருக்கிறார்கள் என்பதே அவருக்கு பெரிய நிம்மதி. அவ்வப்போது அவர்கள் இவரைப் பார்க்க வருவது வழக்கம். இல்லையென்றால் இவர் பார்த்து வருவார்.

அடுத்து வந்த ஒரு வருடத்தில் அதே
இரண்டு மாத இடைவெளியில் ஜெயா
ஜீவாவையும் சுமதி விக்னேஷையும்
பெற்றெடுத்தனர். தான் தாய்மாமா
ஆகிவிட்ட பெருமை அவரிடம் அன்று
அதிகமாகத் தெரிந்தது. தாய்மாமன் சீரை எந்தக் குறையும் இல்லாமல் செய்தார் வரதராஜன். செந்தில்நாதனிற்கும் சதாசிவத்திற்கும் வரதராஜனின் மேல் நல்ல மரியாதை உண்டு. "வேறு எவனாவதாக இருந்திருந்தால் தங்கைகளின் படிப்பை நிறுத்தி வேலைக்கு அனுப்பி கையாலாகாத ஒருவனிடம் தள்ளியிருப்பான். ஆனால் இவரோ எந்தக் குறையும் இல்லாமல் படிக்க வைத்து நகையையும் சேர்த்தி நல்ல இடத்தில் கட்டிக் கொடுத்திருக்கிறாரே" என்று ஒரு நாள் செந்தில்நாதனும் சதாசிவமுமே பேசிக்கொண்டனர்.

அடுத்த மூன்று வருடத்தில்
செந்தில்நாதனும் சதாசிவமும் உறவில்
ஒரு பெண்ணைப் பார்த்து வரதராஜனிற்கு மணம் முடித்து
வைத்தனர். முதலில் கல்யாணம்
வேண்டாம் என்றவர் கோமதியைக்
கண்டவுடன் தலை ஆட்டி விட்டார். கோமதி அழகில் மட்டுமல்ல குணத்திலும் தங்கம் தான். முதலில் அண்ணி எப்படியோ என்ன பயந்த ஜெயாவுக்கும் சுமதிக்கும் "அப்பாடா" என்று இருந்தது.

அடுத்து ஒரு வருடத்தில் ரோஜாப் பூவே
தோற்றுவிடும் அளவிற்கு ஒரு
குழந்தையைப் பெற்றுத் தந்துவிட்டு
இறைவனிடம் சேர்ந்துவிட்டார் கோமதி.
வரதராஜன் தான் உடைந்துபோனார்.
வாழ்க்கையில் முதல் தடவையாக
கதறினார். அப்பா அம்மா இறந்தபோது
கூட கண்ணீர் விட்டாரே தவிர இந்த
அளவு அழவில்லை. வாழ்ந்த இந்த ஒரு
வருட வாழ்க்கையில் ஒரு சின்ன சண்டை கூட போட்டதில்லை. தாயும் தாரமுமாக இருந்து.. இந்த ஒரு வருடம் மனைவியுடன் வாழ்ந்த நாட்களை மறக்கவே முடியாது வரதராஜனால்.

அவருக்கு அதற்குப் பிறகு கிடைத்த ஒரே
ஆறுதல் கௌசிகா மட்டும் தான்.
குழந்தையை கவனித்துக் கொள்ள
வரதராஜன் மிகவும் சிரமப்பட ஜெயாவும்
சுமதியும் கௌசியை அவர்கள் வீட்டில்
அவர் வேலைக்குச் செல்லும் போது
சுமதியிடம் கௌசிகாவைக்
கொடுத்துவிட்டுப் போய்விடுவார்.
சுமதியின் வீடும் ஜெயாவின் வீடும் பக்கம் பக்கம் என்பதால் ஜெயாவும் எல்லோரும் காலை சென்ற பிறகு தங்கையின் வீட்டிற்கு வந்து அண்ணனின் மகளைப் பார்த்துக்கொள்வார்.

மற்ற குழந்தைகளைப் போலக் கௌசிகா அழுததே கிடையாது. பசி வந்தால் மட்டுமே அழுகை. அவளைப் பார்த்துக் கொள்வதும் யாருக்குமே சிரமமாக இருக்கவில்லை.

ஜீவாவும் விக்னேஷும் அப்போது தான்
நான்கு வயது என்பதால் கௌசிகாவை
ஆச்சரியமாகப் பார்த்தனர்.
குழந்தையாகத் தொட்டிலில்
படுத்திருக்கும் அவளைக் காண
இருவருக்குமே குஷி தான். ஜீவா..
"கௌசியை கையில் வாங்குவேன்"
என்று அடம்பிடிக்க அவ்வப்போது சுமதி
அவனை உட்கார வைத்து அவனது
மடியில் வைப்பார். விக்னேஷைக்
கேட்டால் வேண்டாம் என்று விடுவான்.
ஆனால் கௌசியின் மேலே அவன்
கண்கள் இருக்கும். தலையில்
அடர்த்தியான முடியுடன் முட்டைக்
கண்களை உருட்டிக் கொண்டு கை
கால்களை உதறி அந்தச் ரோஜா
இதழ்களை விரித்துச் சிரிக்கையில் வாயைத் திறந்து அவளைப் பார்த்துக்
கொண்டு இருப்பான் விக்னேஷ்.

அழுதுகொண்டு இருந்தால் கூட
விக்னேஷைக் கண்டால் அழுகை
அடங்கிவிடும் பிஞ்சுக் குழந்தையாக
இருக்கும் போதே. பின் கௌசிகா தவழ
ஆரம்பிக்க யாராலும் சமாளிக்க
முடியவில்லை. ஒரு நாள் வேலை
விஷயமாக வரதராஜன் வெளியில்
சென்று விட அன்று கௌசிகாவை சுமதி
வீட்டிலேயே வைத்திருந்தார். அடுத்த நாள் காலை(ஞாயிற்றுக்கிழமை) தவழ்ந்து கொண்டே சென்ற கௌசி நன்றாக தூங்கிக் கொண்டிருந்த விக்னேஷின் அருகில் உடகார்ந்தாள். ஜீவாவும் விடுமுறை என்பதால் சுமதி வீட்டிலேயே இவர்களுடன் இருந்தான். அப்போது தான் எழுந்து தூக்கக் கலக்கத்தில் உட்கார்ந்திருந்த ஜீவா.. கௌசி விக்னேஷின் அருகில்
உட்கார்ந்திருந்ததைக் கண்டான். ஒரு
நொடி தாமதிக்காமல் அவனின் உட்சி
முடியை அப்படியே இரண்டு பிஞ்சுக்
கையால் பிடித்துவிட்டாள்.

முடியைப் பிடித்து இழுத்த வலியில்
விக்னேஷ் கத்த ஆரம்பிக்க சுமதியும்
செந்தில்நாதனும் படுக்கை அறைக்குள்
ஓடி வந்தனர். அதற்குள் ஜீவா கௌசியின் கையை விக்னேஷின் தலையில் இருந்து எடுத்துவிட தூக்கத்தில் இருந்தவன் எழுந்து உட்கார்ந்து உச்சந் தலையைப் பிடித்தபடி கண்களில் நீருடன் சிணுங்க ஆரம்பித்தான். உள்ளே வந்த சுமதியும்
செந்தில்நாதனும் ஜீவா விவரம் சொல்ல
சிரிப்பை அடக்கியபடி விக்னேஷை
சமாதானம் செய்தனர்.

"வி.. விக்..விக்கா".. "விக்க்காகா.." என்று
விக்னேஷை முதல்முதலாக தன் மழலைக் குரலால் அழைத்தாள் கௌசிகா. அவள் முதல் உச்சரித்த வார்த்தையும் "விக்கா" தான். எல்லோரும் கண் விரிய கௌசியைப் பார்க்க.. அழுது கொண்டிருந்த விக்னேஷின் அழுகையும் அப்படியே நின்று வாயைத் திறந்து "பேபே..." என்று கௌசியைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

செந்தில்நாதன் தான் கௌசியைத்
தூக்கிக் கொஞ்ச ஆரம்பித்துவிட்டார்.
அதிலிருந்து எதற்கெடுத்தாலும் "விக்கா"
"விக்கா" தான். அவளின் சுட்டித்தனத்தால்அனைவருக்கும் ப்ரியமாகிப் போனாள். ஆனால் வளர வளர தான் சேட்டை குறும்பு எல்லாம் அதிகமாகிவிட்டது. ஆனால் அடுத்தவர் மூஞ்சி சுளிக்கும் படியான குறும்பு இல்லை.. சிறு வயதில் இருந்தே
பசங்களுடன் இருப்பதால் இயல்பாக
வந்த ஒன்று.

தன் மனைவியையே உரித்து
வைத்திருந்த மகளையும் அவளது
சேட்டைகளையும் காணக்காண
வரதராஜனும் கொஞ்சம் சோகத்தில்
இருந்து வெளியே வந்தார்.

பள்ளி சேரும் வயது வந்தவுடன்
விக்னேஷ் ஜீவா படிக்கும் பள்ளியிலேயே மகளை சேர்த்துவிட்டார் வரதராஜன். பள்ளி முடிந்து விக்னேஷ் ஜீவா உடனே பள்ளியில் இருந்து வருபவள் தன் தந்தை வரும்வரை சுமதி அத்தை வீட்டிலேயே தங்கி விடுவாள்.

ஜீவா, விக்னேஷ், கௌசிகா மூவரும்
நல்ல நெருக்கம். வயது வித்தியாசம்
இருந்தாலும் பசங்கள் இருவரையும்
செய்வதைக் கண்டு நானும் அதையே
செய்வேன் என்று குளறுபடி செய்வாள்.
அவள் செய்தது தப்பாகி விட்டால்
அவ்வளவு தான் அதுவும் அவளை
விக்னேஷும் ஜீவாவும் கிண்டல் செய்து
விட்டால் அவ்வளவு தான். இருவரையும்
அடித்து வைத்து விடுவாள். அதுவும்
சின்ன வயதில் இருந்தே கிடைப்பது
விக்னேஷின் உச்சி முடிதான். என்னதான் சண்டையிட்டுக் கொண்டாலும் மூவரும் பிரிந்ததே இல்லை.

சின்ன வயசில் இருந்தே காலை
நேரத்தில் எழும் பழக்கம் இருந்ததால் தன் தந்தையுடன் எழுந்து ஏதாவது
உதவுகிறேன் என்று ஆரம்பித்து
விடுவாள். தந்தையிடம் தினமும் நடக்கும் அனைத்தையும் சொன்ன படியே அவரின் மேல் படுத்து சொல்லச் சொல்லப் பாதியில் உறங்கிவிடுவாள்.

கௌசிக்கு நான்கு வயது இருக்கும்
போது சந்தியா பிறந்தாள் ஜெயாவிற்கு.

அப்படியே நாட்கள் செல்ல கௌசி 13
வயது பதிமூன்று ஆனது. விக்னேஷ்
ஜீவாவின் வயது 17.. 12ஆம் வகுப்பு
படித்துக் கொண்டிருந்தனர். 12ஆம்
வகுப்பு என்பதால் மாலை ஆறு மணிக்கு
வீட்டிற்கு வந்தவன் யாரும் வீட்டில்
இல்லாததைக் கண்டு வீட்டிற்குள்
தேடினான். ஒரு வேளை கோவிலிற்குச்
சென்றிருப்பார்கள் என்று நினைத்தவன்
உடையை மாற்றிக் கொண்டு மீண்டும்
ஹாலிற்கு வர கௌசிகா அங்கிருந்த
சோபாவில் உட்கார்ந்திருந்தாள்.

"ஏய் இங்க தான் இருக்கியா? எங்கிருந்த? அம்மா எங்கடி? என்றபடி சோபாவில் வந்து உட்கார்ந்து டி.வி யைப் போட்டான். "நான் பாத்ரூமில் இருந்தேன்" என்றவள் "அத்தை கோயிலுக்கு போயிருக்காங்க" என்று தரையைப் பார்த்தபடியே பதில் வந்தது.

"என்ன இவ இவ்வளவு அமைதியா
உட்கார்ந்திருக்கா" என்று நினைத்தவன்
அவளை உற்று கவனித்தான். மஞ்சள் நிற ப்ராக் முட்டியின் கீழ் வரைப் போட்டு..
கைகளைக் வயிறிற்குக் குறுக்காகக்
கட்டிக்கொண்டு ஏதோ யோசித்தபடி..
எட்டுக்கால் பூச்சி போல உடல்வாகுடன்
தரையைப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.

"ஏய் என்ன ஆச்சு.. ஏன் இப்படி
உட்கார்ந்திருக்க.. என்ன ஃபெயில்
ஆயிட்டயா எதாச்சு சப்ஜெக்ட்ல" என்று
கேலியாகக் கேட்டுப் பார்த்தான்.
அவளிடம் பதிலில்லை. அவள் ஏதோ தீவர யோசனையில் மூழ்கி இருந்தாள்.

"கௌசி.. இங்க பாரு டி.. என்ன ஆச்சு"
என்று அவளது தாடையைக்
கன்னத்தோடு பிடித்துத் திருப்பிக்
கேட்டான்.

அவளைப் பார்த்தவன்.. அவள் ஏதோ
பயமாகவும் பதட்டமாகவும் இருப்பது
போலத் தெரிந்தது. "விக்கா.. நா.. நான்..
பெரிய பொண்ணு ஆயிட்டேன் டா..
அதாவது ஏஜ் அட்டனட் பண்ணிட்டேன் டா" என்று மூச்சுவாங்க உதடு நடுங்க அவள் சொல்ல விக்னேஷ் "பேபே..." வென விழித்தான்.

அவனுக்கு என்ன என்றுத் தெரியாமல்
இல்லை. ஆனால் இப்போது என்ன
செய்வது என்று தான் தெரியவில்லை.
ஏனோ அவளை விட பதட்டமாக இருந்தது. தன் அம்மாவிற்குக் வீட்டு போனில் இருந்து கூப்பிட்டுப் பார்த்தான்.. சுமதி எடுக்கவில்லை. அடுத்து ஜீவாவின் வீட்டிற்கு போன் போட ஜெயா தான் எடுத்தார்.

"பெரியம்மா.." என்றவனுக்கு குரல்
உள்ளே சென்றது.

"என்னடா விக்னேஷ்.. என்ன ஆச்சு.. ஏன்
குரல் ஒரு மாதிரி இருக்கு" என்று ஜெயா
கேட்க விஷயத்தைச் சொன்னான்.

"சரி நான் பத்து நிமிடத்தில் வரேன்"
என்று போனை வைத்தவர் அடுத்து பத்து நிமிடத்தில் வந்தார். அவர் வந்த அடுத்த சில நொடிகளிலேயே சுமதியும் வர உறுதியாகிவிட்டது. உடனே தன்
அண்ணனுக்குப் போன் செய்து
தங்கைகள் விவரம் சொல்ல அவர்
பூரித்துப் போனார். பின் எல்லா சீர்களும்
நன்றாகவே செய்யப்பட்டது. அதற்குப்
பிறகு இரண்டு மாதம் மட்டுமே
கௌசியை சுமதி, ஜெயாவால் அடக்கி
வைக்க முடிந்தது.. மறுபடியும் ஆட்டம்
பாட்டம் சேட்டை தான்.

இப்போது மட்டும் இல்லை பள்ளியில்
இருந்தே எந்தப் பெண்ணையும்
விக்னேஷிடம் பேசவிடமாட்டாள் கௌசி.
ஒரு தடவை விக்னேஷுடன் படிக்கும்
பெண் கௌசியிடம் வந்து ஒரு லவ்
லெட்டரை வந்து தந்து "இதை நீ
விக்னேஷிடம் தந்து விடேன்" என்று
சொல்ல "ஏய்.. இந்தா.. அப்படியே
ஓடிப்போயிடு" என்ன அவள் கையில்
கௌசி லெட்டரைத் திணிக்க அந்தப்
பெண் கௌசியை முறைத்தாள்.

"நீ இல்லையென்றால் எனக்கு வேறு
யாரும் கிடைக்க மாட்டார்களா?" என்று
முறைத்தபடி கேட்டாள்.

"சூப்பரா முறைக்கற.. வந்து உன் அப்பா
குமார் அங்கிள் தானே.. என்
அப்பாவிற்குத் தெரிந்தவர் தான்.. நான்
எங்கு சொல்ல வேண்டுமோ அங்கு
சொல்லிக் கொள்கிறேன்" என்று மிரட்ட
அவள் அவ்வளவு தான்.. ஓடியே விட்டாள்.
பாவம் அவள் கழுத்தில் மாட்டியிருந்த ஐடி கார்டு-இல் இருந்த அவள் அப்பாவின் பெயரை கௌசி பார்த்ததை அவள் அறியவில்லை. இது எல்லாம் கௌசிக்கு பள்ளி முடிந்து செல்லும் போது அதாவது பண்ணிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இடைவெளி இருந்த நேரத்தின் போது நடந்தது.

ஆனால் இந்த விஷயம் விக்னேஷின்
காதுகளில் எப்படியோ எட்டிவிட்டது.
வீட்டிற்கு வந்து அவளைக் கேட்க "ஏய்ய்
என்னடா கேள்வி கேக்கற.. அவ ஓவரா
பேசுனா.. நான் சும்மா விடணுமா" என்று
கேட்க இருவருக்கும் சண்டை வந்தது.
அதற்குள் சுமதி வந்து விசாரிக்க சின்ன
வயதில் இருந்தே எதையும் மறைக்கும்
பழக்கம் இல்லாத விக்னேஷ் தன்
அன்னையிடம் எல்லாவற்றையும் கூறி
"அம்மா.. பாரும்மா இவள.. அந்தப்
பொண்ணு சீனியர்-ன்னு கொஞ்சம் கூட
பயமில்லாம அந்தப் பொண்ண பிடிச்சு
மிரட்டி அனுப்பியிருக்கா.. பாவம் க்ளாஸ்-ல வந்து என்கிட்ட அழுது.. கௌசிய யார்கிட்டையும் சொல்ல வேணாம்-னு சொல்லீரு அப்படி கேக்கறா" என்று சொல்ல கௌசிக்கு கோபம் வந்தது.

"உனக்கு ஏண்டா அவ மேல அவ்வளவு
அக்கறை.." என்றவள் "அத்தை
பாத்தீங்களா அவன் அந்தப் பொண்ணு
பத்தி பேசறான் நோட் பண்ணுங்க" என்று சுமதியைக் குழப்பினாள்.

அதற்குள் செந்தில்நாதன் வர
இருவரையும் சமாதானம் செய்தார். இந்த மாதிரி விஷயங்களில் சண்டைகள் வருமே தவிர ஒருவருக்கொருவர் இல்லாமல் இருக்க மாட்டார்கள் ஜீவா, விக்னேஷ், கௌசிகா.. ஆனால் வெளியே காட்டிக் கொண்டதே இல்லை.

ஜீவாவின் வீடு கொஞ்சம் வசதியாகவே
இருந்தனர். விக்னேஷின் வீடும் நல்ல
மிடில் க்ளாஸ் வாழ்க்கையையே
வாழ்ந்தனர். கௌசிகாவின் வீட்டிலும்
எந்தப் பிரச்னையும் இல்லாமல் இருந்தது.

இப்படியே ஸ்கூல் என எல்லாவற்றையும்
முடித்து கௌசி கல்லூரியில் சேர்ந்தாள்.
காலேஜிலும் பண்ணாத வேலை இல்லை. ஒரு பெண்ணைத் தப்பாகப் பேசினான் என்று ஒருவனைக் க்ளாஸில் அடித்து.. பெண்கள் படிப்பிற்கு மட்டும் தான் லாயிக்கு என்று ஒருவன் சொல்ல
"வர்ரியாயாயா பைக் ரேஸ் வச்சுக்கலாம்" என்று கேட்டாள்.

"ஏய் இங்க பாருங்கடா.. ரேஸ் வராளாம்"
என்று சிரித்தான். அதாவது கௌசியின்
நண்பன் தான் அவன்.. சும்மா பேசிக்
கொண்டிருந்தவர்கள் பேச்சின் திசை
மாறி இப்படிவந்து நின்றது.

"இந்த ஹேஹேஹே லாம் வேண்டாம்..
ரேஸ் வரியா இல்லையா?" என்று கேட்க
ஒரு சண்டே காலை 5.40 மணிக்கு ecr
ரோட்டில் வைத்திருந்தனர். கௌசியிடம்
பைக் எல்லாம் இல்லாததால் க்ளாஸில்
உள்ள ஒரு பையன் பைக்கையே
வாங்கினாள்.

ரேஸ் நீலாங்கரையில் ஆரம்பித்து
முட்டுக்காடு வரை என்று முடிவு பண்ணி
வைத்திருந்தனர். ஒரு சிலர் தவிர மிச்ச
பத்து பேரும் முட்டுக்காடில்
நின்றிருந்தனர். ரேஸ் ஆரம்பிக்க
வண்டியை இருவரும் கிளம்ப ரேஸ்
பைக்கிற்கே உண்டான சத்தத்தோடு அந்த அதிகாலையில் பைக் கிளம்பியது.
விஜிபி தாண்டி பனையூர் வரை
கௌசியால் தன் நண்பனை முந்த
முடியவில்லை.

விக்கா பைக் ஓட்ட சொல்லிக் கொடுக்கும் போது சொன்னதை நியாபகத்திற்குக் கொண்டு வந்தாள் கௌசி. கியரை டவுன் செய்தவள் ஆக்சலரேட்டரைக் குடுத்து சைட் எடுத்து ஓவர் டேக் செய்துவிட்டாள். ஓவர் டேக் செய்த சந்தோஷத்தில் இன்னும் ஸ்பீட் எடுக்க முட்டுக்காடை முதலில் அடைந்தாள்.

முதலில் யாருக்குமே கௌசி முதல்
வருவாள் என்று தோன்றவில்லை. சும்மா வாய் அடுக்கிறாள் என்று தான்
நினைத்தார்கள். முதலில் வந்தது கூட
அவள் இல்லை என்றுதான் நினைத்தனர். காரணம் ஒரே மாதிரி ரேஸ் சூட் அன்ட் ஹெல்மெட் அணிந்திருந்தனர். ஹெல்மெட்டை கழட்டிவிட்டு இறங்கி வந்து "ஹே பர்ஸட் பர்ஸ்ட்" என்று ஆட எல்லோரும் அவளுடன் சேர்ந்து ஆட இரண்டாவதாக வந்த கவின் (பைக் ரேஸ்-இல் உடன் வந்தவன்) சேர்ந்து ஆடினான்.

அவள் ஆடிவிட்டுத் திரும்ப அப்படியே
நின்றுவிட்டாள். விக்னேஷும் ஜீவாவும்
ஆப்போசிட் ரோட்டில் நின்று இவர்கள்
அடித்தக் கூத்தைத் தான் பார்த்துக்
கொண்டிருந்தனர். அவ்வளவு தான்
அப்படியே நின்றுவிட்டாள். "போச்சு
மாட்டுனோம்" என்று முணுமுணுத்தவள்
ஹெல்மெட்.. ரேஸ் ஜாக்கெட்டை எல்லாம் கழற்றி தன் நண்பர்களிடம் தந்துவிட்டு ரோட்டைக் க்ராஸ் செய்து அவர்களின் அருகில் சென்றாள்.

அப்போது விக்னேஷும் ஜீவாவும் ஐடி
கம்பெனியில் வேலைக்கு சேர்ந்து ஒரு
வருடம் ஆகியிருந்தது. சும்மா காலை ஒரு ரௌன்ட் போறோம் என்று வீட்டில்
சொல்லி வந்த இருவரும் முட்டுக்காட்டின்
பாலத்தில் நின்றுவிட்டனர். பைக் வரும்
சத்தத்தில் எதேச்சையாகத் திரும்பிய
இருவரும் ஹெல்மெட்டைக் கழட்டிய
பின்பு தான் அது கௌசிகா என்றே
கவனித்தனர். அவர்கள் அருகில்
கௌசிகா செல்ல அவர்கள் இருவரும்
திருட்டு முழி முழித்தனர். "திட்டுவாங்கப்
போகிறோம்" என்று நினைத்து வந்தவள்
இவர்கள் இருவரும் முழிப்பதைப் பார்த்து "என்ன இவனுக முழியே சரி இல்லை.." என்று புருவத்தைச் சுருக்கியபடி அருகில் சென்று நிற்க இருவரும் கையைக் கோர்த்து இடைவெளி விடாமல் ஒட்டி நின்றனர்.

"என்னடா.. என்ன மறைக்கறீங்க?" என்று
கௌசி கேட்டுக் கொண்டே அருகில் வர
இனி மறைக்க முடியாது என்று நினைத்த இருவரும் நகர அங்கு ஒரு பெண் நிற்பதைப் பார்த்த கௌசிகாவின் கண்கள் வெளியே தெறித்துவிடும் அளவிற்கு விரிந்தது.

"யாருடா இந்தப் பொண்ணு?" என்று
கேட்க இருவருடன் சேர்ந்து அந்தப்
பெண்ணும் விழித்தாள்.

"கௌசி.. கௌசி.. யார்கிட்டையும்
சொல்லிவிடாதே டி.. இது நான் லவ்
பண்ற பொண்ணு.." என்று ஜீவா
கிட்டத்தட்ட கெஞ்சத் துவங்க "என்னது
லவ் பண்றையா. என்கிட்ட சொல்லவே
இல்ல.. மறைச்சுட்டல ஜீ?" என்று
கேட்டவள் முகத்தைத் திருப்பிக்
கொண்டாள்.

"நான் இன்னிக்கு தாண்டி ப்ரபோஸே
பண்றேன். இன்னிக்கு இவ பர்த்டே.. இவ
ஓகே சொன்னால் அப்புறம் சொல்லலாம்
என்று நினைத்தேன்" என்று ஜீவா
கௌசியை சமாதானம் செய்ய..
விக்னேஷ் ஜீவாவின் கையை
அழுத்தியதை ஜீவா கவனிக்கவில்லை.

"இவனிடம் மட்டும் சொல்லி கூட்டிட்டு
வந்திருக்க.. ஆனா என்ன மட்டும்
விட்டுட்டேல" என்று விக்னேஷைக்
கைகாட்டி ஜீவாவிடம் சண்டையிட்டாள்
கௌசிகா. ஜீவா பேசாமல் நின்றான்.

"ப்ரபோஸ் பண்ணிட்டையா?" என்று
கௌசி கேட்க அப்போதுதான் தான்
இன்னும் அவளைப் ப்ரபோஸ்
செய்யவில்லை.. கௌசி வந்த
அவசரத்தில் அவளிடம் எல்லாவற்றையும் உளறிவிட்டதை.

ஒரு நிமிடம் நாக்கைக் கடித்துக் கொண்டு திரும்பியவன் மதியைப் பார்த்தான். மதி இடுப்பில் கை வைத்தபடி "இதற்குதான் கூட்டிட்டு வந்தீங்களா?" என்று முறைத்தபடிக் கேட்டாள்.

காரைத் திறந்து ஒரு கிப்டை எடுத்தவன்
அவள் முன் ஒரு காலை மடித்து அமரந்து
மதியின் ஒரு கையைப் பிடித்து "மதி.. ஐ
லவ் யூ.. I want to marry you.. Will you marry
me?" என்று நடு ரோட்டில் கேட்க மதியின்
முகம் சிவந்து விட்டது.

"ப்ளீஸ் ப்ளீஸ் ஜீவா.. கெட் அப்.." என்று
இன்னொரு கையைப் பிடித்து
எழுப்பினாள் மதி.

அவள் எதுவும் பேசவில்லை.. ஆனால்
உதடுகள் வெட்கத்தில் சிரித்தபடி
இருந்தது. "ஓகே வா?" என்று ஜீவா கேட்க.. தலையை ஆட்டினாள் மதி.

"ஹேஹே சூப்பர் ஜீ மாமா கமிட்
ஆயிட்டான்" என்று விக்னேஷும்
கௌசிகாவும் குதிக்க ஜீவாவிற்கு
அப்போது தான் அவர்கள் இரண்டு பேரும் அங்கு இருப்பதையே நியாபகம் வர "அய்யோயோ இனி இத வச்சே
ஓட்டப்போறாங்களே" என்று சொல்லிச்
சிரித்தான் ஜீவா.

"மதி இவ தான் கௌசிகா.. ஆனா இனி
கௌசிக்" என்று விக்னேஷ் ஆரம்பிக்க
"வாட் கௌசிக் ஆஆஆ?" என்று கேட்டாள்
கௌசிகா. அந்தப் பெயர் இங்கு இருந்து தான் ஆரம்பித்தது.

"ஆமாம் நீ பைக்ல இருந்து
இறங்குனப்பவே முடிவு பண்ணிட்டேன்..
இனிமேல் நீ பையன் தான்.. பொண்ணு
இல்ல" என்று விக்னேஷ் சொல்ல
அவனை இடித்தவள் "இவங்க சொல்றது
எல்லாம் கேட்காதீங்க" என்று மதியிடம்
பேசினாள்.

பின் நால்வரும் காரில் ஏறி அவரவர்
இடத்திற்கு வந்து சேர்ந்தனர்.

டக்கென்று இடித்த இடியில் நிகழ்விற்கு
வந்த கௌசிகா தன் கண்களிலும்
கன்னத்திலும் கண்ணீர் கரையை
உணர்ந்தாள். திரும்பிக் கவிதாவைப்
பார்த்தாள்.. நன்றாக உறங்கிக்
கொண்டிருந்தாள். மெதுவாக எழுந்து
வந்து எப்போதும் பூட்டியிருக்கும் தன்
ட்ராளியைத் திறந்தவள் அந்த டைரியை
எடுத்தாள். ஆம் மதி அவளது 22வது
பிறந்த நாளன்று எழுதிய டைரி.

டைரியை எடுத்துக் கொண்டு வெளியே
வந்தவள் மூன்றரை வருடத்திற்குப் பிறகு ஒரு கவிதையை அதில் கண்ணீருடன் எழுதினாள்.

'பகலினில் வெளிச்சமாய்
இரவினில் தென்றலாய்
தனிமையில் இனிமையாய்
கஷ்டத்தில் கண்ணீராய்
தேயாத பிறையாய்
உன் நினைவுகள் ஒளிர
வளர்பிறையாய்
உன் காதல் என்னுள்
வளர்கிறது'
என்று எழுதி முடித்தாள்.

வெளியே பெய்து கொண்டிருந்த
மழையைப் பார்த்தவள் டைரியைத்
திறந்து முதலில் எழுதி வைத்திருந்த
கவிதையைப் படித்தாள்.

அவளின் முதல் கவிதை.. விக்னேஷ்
கல்லூரி சேர்ந்த புதிதில் அவனை
ரொம்பவும் மிஸ் செய்த போது எழுதியது.

'என் வாழ்க்கை என்னும் கவிதையில்
நீயோ ஓர் உயிர் எழுத்து'


இரண்டாவது கவிதை.. அவனிற்குத்
தெரியாமல் அவனை சைட் அடிக்கும்
போது எழுதியது.

'மறைந்து நின்று தன் காதலனை
பார்க்கும் ஒவ்வொரு பெண்ணின்
முகத்திலும் பார்த்துக்கொள்ளலாம்
அவளது வெட்கத்தை'


மூன்றாவது கவிதை.. ஒருமுறை
காற்றடித்த போது மாடியில் ஜீவா
விக்னேஷுடன் நின்று பேசிக்
கொண்டிருந்த போது

'காற்றிடம் ஒவ்வொரு முறையும்
தோற்றுத்தான் போகிறேன்
உன் கூந்தலை அதுகலைத்து
விட்டுச் செல்லும்போது
உன்னுடைய தோற்றத்தில்
'

நான்காவது கவிதை.. ஒரு நாள்
வரதராஜன் வேலை விஷயமாக
வெளியே சென்றபோது கௌசிக்கு
காய்ச்சல் வந்து படுத்தாள். அப்போது
விக்னேஷ் தன்னைப் பார்த்துக்
கொண்டபோது எழுதியது

'ஆயிரம் எழுத்துக்களால்
உன் அன்பை
அலங்கரித்தாலும்
நீ காட்டும் அன்பையும்
பாதுகாப்பையும்
பாதிதான் வெளிப்படுத்தும்
என் கவிதைகள்'


"கௌசி..." என்று கவிதாவின் குரல் கேட்க டக்கென்று டைரியை ட்ரெஸிற்குள் ஒளித்துவிட்டாள் கௌசி.

"என்னடி இங்க உட்கார்ந்துட்டு இருக்க?"
என்று கண்களைத் தேய்த்தபடி வந்தாள்
கவிதா.

"தூக்கம் வரல டி" - கௌசிகா.

"உள்ள வா.. மழைச் சாரல்ல உட்காராதே.." என்று கவிதா உள்ளே கூப்பிட "நான் தண்ணி குடிச்சிட்டு வரேன். நீ போய் படு" என்று கௌசி சொல்லிவிட்டு டைரி கீழே விழாதவண்ணம் எழுந்து உள்ளே
வந்தாள்.

உள்ளே வந்து படுத்தவளுக்கு மீண்டும்
பழைய நினைவுகள் வந்து சுனாமியாய்
எழுந்தது.
 

writer

Saha Writer
Team
Messages
50
Reaction score
26
Points
8
அத்தியாயம்-6

தன் பிறந்த நாளிற்கு அடுத்த நாள் காலை
எழுந்தவள் வழக்கம் போலத் தன்
அப்பாவிற்கு உதவி செய்கிறேன் என்று
தன் தந்தையை முடிந்த அளவு டிஸ்டர்ப்
செய்தவள் குளிக்கிறேன் என்று
சென்றுவிட்டாள். கௌசி படிப்பை முடிக்க
வரதராஜனும் ரியர்ட் ஆகிவிட்டார்.

குளித்து முடித்து ரெடி ஆகி ஜீன்ஸிலும்
கேசுவல் சர்டிலும் வந்தவள் சாப்பிட்டு
முடித்துவிட்டு "அப்பா நான் கிளம்பறேன்
ப்ரௌனியைப் பார்த்துக்கங்க.. நீங்களும் மறக்காம சாப்பிட்டுக்கங்க.. அப்புறம்
மாத்திரை போட்டுக்கங்க" என்று
ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு
ஓ.எம்.ஆர்-இல் உள்ள தான் வேலை
செய்யும் ஐடி கம்பெனிக்குக்
கிளம்பிவிட்டாள்.

ஜீவா, மதி வேலை செய்யும் இடத்தில்
தான் வேலையில் இருந்தாள் கௌசிகா.
மதியின் டீமும் கூட. முதலில்
அவர்களுடன் வேலையில் இருந்த
விக்னேஷ் பின் இரண்டு வருடம் கழித்து
அதே ஓ.எம்.ஆர்-இல் வேறு இடத்தில்
வேலை கிடைக்க அங்கே சேர்ந்துவிட்டான்.

ஒன்பது மணி அளவில் ஆபிஸிற்குள்
நுழைந்தவள் மதியும் ஜீவாவும்
பேசிக்கொண்டிருப்பதைக் கண்டு
அவர்களின் அருகே சென்றாள். "என்ன
காலங்காத்தலையே கடலையா?" என்று
கேட்டுச் சிரித்தவள் மதியின் கண்கள்
சிவந்திருப்பதைக் கண்டாள்.

"ஏய் மதி என்னாச்சு? ஏன் டல்லா
இருக்க?" என்று விசாரிக்க அவளால்
பதிலே பேசமுடியவில்லை.

ஜீவாதான் ஆரம்பித்தான். "நேற்று
மதியின் அம்மா பரமேஸ்வரி மதியைப்
பார்க்க சொல்லமல்கொள்ளாமல்
சென்னை வந்திருக்கிறார். ஹாஸ்டலிற்கு
வந்தவரிடம் ரூம் மேட் என்ன சொல்லுவது
என்று தெரியாமல் அவள் வேலை
விசயமாக ஆபிஸ் வரை போயிருக்கிறாள்
என்று சொல்லிவிட்டாள்.

ஞாயிற்றுக்கிழமை ஆபிஸா என்று
யோசித்துவிட்டு பரமேஸ்வரி மதிக்குப்
போன் போட்டார்.

மதி போனை எடுக்க "ஹலோ" என்றார்
பரமேஸ்வரி.

"ஹலோ அம்மா" என்றாள் மதி.

"என்ன பண்ற மதி.. சாப்பிட்டயா? எங்க இருக்க?" - பரமேஸ்வரி.

"நான் சாப்பிட்ட மா.. நான் ரூமில் தான்
இருக்கிறேன்" என்றவள் "அம்மா ஒரு
சின்ன வேலை அப்புறமாக கூப்பட்றேன்"
என்று வைத்தவள் கூப்பிடவே இல்லை.
போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டாள்.
அவளது ரூம் மேட்டினாலும் அவளுக்கு
இன்பார்ம் பண்ண முடியவில்லை.

மதியை இறக்கிவிட்டு நேற்று மற்றவர்கள்
கிளம்ப யாருக்கும் தெரியாவண்ணம் தன்
உதட்டைக் குவித்து ஜீவாவிற்கு ஒரு
முத்தத்தைத் தூரத்தில் இருந்து தர
அவளது ரூமில் மறைந்து நின்று
அனைத்தையும் பார்த்துக் கொண்டு
இருந்தார் பரமேஸ்வரி.

ரூமிற்குச் சென்ற மதி தன் அன்னையைக்
கண்டு அப்படியே நின்றுவிட்டாள்.
அவளின் அம்மா அவளை எரித்துவிடுவது
போல பார்த்துக் கொண்டு இருக்க
"அம்மா எ... எ.. எப்போ வந்தீங்க?" என்று
தடுமாற்றத்துடன் கேட்டவள் தன் தாயின்
முகத்தைத் தவிர்த்து உடை மாற்றுவதற்கு
போவது போல குளியல் அறைக்குள் புகப்
பார்த்தவளை இழுத்து வைத்து நான்கு
அறை விட்டார். "யாருடி அவன் யாரு
அவன்?..கீழே நடந்த அனைத்தையும் நான்
பார்த்துக் கொண்டு தான் இருந்தேன்"
என்று கையைப் பிடித்து அழுத்தி
ஆங்காரமாகக் கத்தினார்.

நல்லவேளை அவளின் ரூம் மேட் பக்கத்து
அறைக்கு ஏஸ்கேப் ஆகிவிட்டாள்.

பதில் பேசாமல் இருந்தவளை இன்னும்
ஒரு அறைந்து தள்ளினார். "நாளைக்கு நீ
வேலைக்குப் போக வேண்டாம்.
என்னுடன் கோயம்பத்தூர் கிளம்பு" என்று
அவர் கட்டளையிட "அம்மா.." என்று
விசும்பியவளை "என்ன?" என்று கேட்டார்
பரமேஸ்வரி.

"அம்மா நாளை ஒரு நாள் மட்டும் ஆபிஸ்
போயே ஆக வேண்டும்.. ஒரு
முக்கியமான ப்ராஜெக்ட் இருக்கு" என்று
மதி சொல்ல "ஏன் நாளை அப்படியே ஓடப்
ப்ளான் போடுகிறாயா?" என்று கேட்க
மதியால் அவளின் முகச் சுழிப்பை
மறைக்க முடியவில்லை.

"அம்மா.. அவர் என்னுடன் காலேஜில்
படிச்சவர்.. ஆபிஸ் மூலியமாக ஏற்பட்ட
பழக்கம் இல்லை" என்று பொய்யைச்
சொன்னாள் மதி.

"சரி நீ போ.. ஆனால் நாளை மதியம் உன்
அப்பா வந்துவிடுவார். நாளை நைட்டே
நாம் கோயம்பத்தூர் கிளம்பறோம்.
வரட்டும் அந்த மனுஷன் உன்னை படிப்பு
முடிந்தவுடன் கல்யாணம் பண்ணிக்
கொடுத்திடலாம் என்று அடச்சுக்கிட்டனே..
கேட்டாரா.. அந்த சனியன் புடிச்ச
வேளைக்கு நாளையே முழுக்கு
போட்டுவிட்டு வந்துவிடு" என்று
பரமேஸ்வரி ரௌத்திரமாகப் பேச
தலையை மட்டும் ஆட்டி வைத்தாள் மதி.

அத்தனையையும் கேட்டு முடித்த
கௌசிக்கு என்னவோ போல ஆகிவிட்டது.
நம் பிறந்த நாளிற்கு வந்து தானே
இவளுக்கு இப்படி ஆகிவிட்டது என்று
நினைத்த கௌசி "சாரி மதி.. என் பர்த்டே-
க்கு வந்து தானே உனக்கு இந்த
நிலைமை" - சங்கடத்துடன் பேசினாள்
கௌசி.

"சீச்சீ.. அதெல்லாம் இல்லை கௌசி..
எப்படியும் இன்னும் இரண்டு மாதத்தில்
நானே சொல்லலாம் என்று இருந்தேன்..
அதற்குள் தானாகத் தெரிந்துவிட்டது
அவ்வளவு தான்" என்று கௌசியைச்
சமாதானம் செய்தாள்.

ஆபிஸில் எல்லோரும் வர ஆரம்பிக்க "சரி
இன்னிக்கு மதியம் லீவ் போட்டுட்டு
இரண்டு பேரும் வாங்க பேசிக்கலாம்"
என்று ஜீவா இரண்டு பேரையும் அனுப்பி
வைத்தான்.

மணி ஒன்று ஆக ஜீவாவிற்காக வெயிட்
பண்ணிக்கொண்டு இருந்தனர் மதியும்
கௌசியும். ஜீவாவிடம் இருந்து கௌசிக்கு மெசேஜ் வந்தது "கௌசி நான்
வர டைம் இன்னும் ஒன் ஹார் ஆகும்..
நீங்க போய் சாப்பிடுங்க.. நான் வரேன்"
என்று அனுப்பியிருந்தான் ஜீவா.

"மதி ஜீ மெசேஜ் அனுப்பி இருக்கான்"
என்று மெசேஜைக் காண்பித்தாள்.

"எனக்கு வேண்டாம் கௌசி.. பசியில்லை" - மதி.

"எனக்கு பசிக்குது.. அட்லீஸ்ட் கம்பெனி
தாயேன்" என்று கௌசி கேட்க "சரி
அங்கையாவது போய்
உட்கார்ந்திருக்கலாம்" என்று நினைத்து கௌசியுடன் சென்றாள் மதி.

ஆனால் கேன்டீனிற்கு சென்று மதிக்கும்
வாங்கிக் கொண்டு வந்து கௌசி
டேயிளில் வைக்க "கௌசி ப்ளீஸ்..
என்னாலா இந்த நிலையில் சாப்பிட
முடியவில்லை" என்றாள் மதி.

"அதேதான் நானும் சொல்றேன். இதே
நிலையில் இருந்தேனா இன்னிக்கு
ஈவ்னிங்குள்ளே மயக்கம் போட்டிடுவ..
தயவு செய்து சாப்பிடு" என்று கௌசி
சொல்ல மதி கொஞ்சம் சாப்பிட
ஆரம்பித்தாள்.

அதற்குள் ஆபிஸில் அவர்கள் டீமில்
இருக்கும் சௌமியா அவர்கள் எதிரில்
இன்னொருத்தியுடன் வந்து உட்கார்ந்தாள்.
கௌசிகாவிற்கு எரிச்சல் வந்தாலும்
அவளிடம் காட்டாமல் அமைதியாக தன்
உணவை உண்டு கொண்டு இருந்தாள்.
மதியுமே அவளிடம் வாயைக் கொடுக்க
மனமில்லாமல் அமைதியாக சாப்பிட
அந்த அமைதியைக் கலைப்பதற்கு
என்றே வந்த சௌமியா ஆரம்பித்தாள்.

"ஏய் உனக்கு ஒன்னு தெரியுமா டி" என்று
பக்கத்தில் இருந்தவளிடம் ஆரம்பித்தாள்.

என்ன என்று அவள் கேட்க "இப்போலாம் லவ் அது இதுன்னு கண்டபடி சுத்துறாங்க..
அதெல்லாம் கல்யாணத்தில் முடியுமா?"
என்று கேட்டாள் கூட இருந்தவளிடம்.

மதிக்கும் கௌசிக்கும் புரிந்துவிட்டது.
நேற்று கௌசி பிறந்தநாளிற்கு எடுத்த
போட்டோவை ஃபேஸ்புக்-இல் அப்லோட்
செய்ததைப் பார்த்து வயிறு
எரிந்திருக்கிறாள். அதான் இங்க வந்து
அந்த எபக்டை கொட்டுகிறாள் என்று.
காரணம் அவள் ஜீவாவை ஒரு தலையாக
வந்த புதிதில் காதலிக்க அதற்குள்
ஜீவாவும் மதியும் ஒன்று சேர்ந்தது.

"என்ன டி சம்மந்தமே இல்லாம பேசற?"
என்று சௌமியாவின் பக்கத்தில்
இருந்தவள் கேட்க "இல்லை டி நாட்டில்
நடப்பதைத் தான் சொல்றேன்" என்று
அவளையும் பேச்சிற்குள் இழுக்கச்
செய்தாள் சௌமியா.

"ஆமாம் டி மோசமா போயிட்டு இருக்கு"
என்று அவள் சலிக்க "என்ன மாதிரி
சொல்ற?" என்று சௌமியா துருவ
"அதான் நன்றாக சுற்றிவிட்டு செய்யக்
கூடாத வேலை எல்லாம் செய்துவிட்டு
பிரண்ட்ஸ்-ன்னு சொல்லிக்கறாங்க"
என்று அவள் பொதுவாக சொல்ல
சொமியாவிற்கு எதிர்ப்பார்த்து கிடைக்க
வாயெல்லாம் பல்லாகி விட்டது.

"ஆமாம் அதுவும் இந்த அப்பாவி மாதிரி
முகத்தை வைத்துத்தான் சில பெண்கள்
ஏமாற்றுகிறார்கள்" என்றவள் "இல்லை
மதி?" என்று மதியிடம் திரும்பிக் கேட்டாள்.
வேறு ஏதாவது சமயமாக இருந்திருந்தால்
மதி திருப்பிக் கொடுத்திருப்பாள்.
ஆனால் இப்போது அவள் இருக்கும்
மனநிலைக்கு எதுவும் பேசமுடியவில்லை.

"ம்ம்" என்று மட்டும் தன் சிந்தனையை
வேறு எங்கோ வைத்துக்கொண்டு தலை
ஆட்டினாள்.

"அதுவும் உங்களை மாதிரி மதி" என்று
முணுமுணுக்க கௌசிக்கு அது நன்றாகக்
கேட்டது.

அவள் எப்படியும் நம்மிடம் வாயைக்
கொடுத்து மாட்டுவாள் என்று நினைத்த
கௌசி அமைதியாக இருந்தாள்.
அதேபோல நடந்தது.

"அதுவும் நம் கௌசிகாவைப் போல
எல்லாம் தெரிந்தவராக இருந்தாள்,
அவ்வளவு தான் லவ் பண்ண ஆரம்பித்த
அப்புறம் எதற்கு வேண்டுமானாலும்
துணிவார்கள்" என்று சொல்ல "வாடி
மாட்டுனியா.. பத்து பேருடன் கடலை
போடும் நீ பேசுறியா" என்று நினைத்த
கௌசி சிரித்த முகத்துடனே
ஆரம்பித்தாள்.

"சௌமியா.. நீ சொல்றது உண்மைதான்.
நான் எல்லாம் தெரிந்தவள்தான்" என்ற
கௌசி "அதுவும் உன் பாஷையில் பேச
வேண்டும் என்றால் நான் அப்பாவி அல்ல
தான்" என்று அவளின் தேவையில்லாத
பேச்சைக் குத்திக் காட்டினாள் கௌசி.

மேலும் "உனக்கு ஒன்னு தெரியுமா
சௌமியா. எல்லாம் தெரிந்தவர்கள் தான்
எது தப்பு எது சரி என்று
நடந்துகொள்வார்கள். அதாவது
அவர்களுக்கு ஒரு கன்ட்ரோல்..
கட்டுப்பாடு இருக்கும். ஆனால் பாவம்
உன்னை மாதிரி வாயில் விரல்
வைத்தால் கூடக் கடிக்கத் தெரியாத
உண்மையான அப்பாவி தான் சீக்கிரம்
மயக்கத்தில் விழுந்து விடுவார்கள்
சௌமி" என்று சொல்ல அவளின் முகம்
கறுத்து சிறுத்துவிட்டது. "பாத்து இரு
சௌமியா.. நீ ஏற்கனவே பத்து பேருடன்
பேசுவதாகப் பரவுகிறது" என்று
உன்னைப் பற்றி எனக்குத் தெரியும் என்று சொல்லாமல் சொல்ல அவள்
முகத்தில் ரத்த ஓட்டமே நின்றுவிட்டது.

அதற்குள் ஜீவா இவர்களைத் தேடி
கேன்டீன் வர இருவரும் எழுந்தனர். "பை
சௌமியா .. Have a nice day" என்று
கௌசி சொல்ல அதைக் கேட்கும்
உணர்வில கூட அவளில்லை.

பின் ஜீவாவுடன் இறங்கி கீழே வர "ஜீ
எங்க போறோம்" என்று கௌசிகா கேட்க
"நாம எப்பவும் போகும் கஃபே காபி டே
தான்" என்று ஜீவா சொன்னான்.

"சரி நீ மதியைக் கூட்டிக்கொண்டு
போ..நான் ஸ்கூட்டியில் வரேன்.. ஈவ்னிங்
அப்படியே போயிடுவேன்" என்று
நாகரிகமாக அவர்களுக்குத் தனிமை
அளித்து ஸ்கூட்டியை எடுக்கப் போனாள்
கௌசி.

யாரோ தன்னைக கண்காணிப்பதைப்
போல உணர்ந்தவள் திரும்பிப் பார்த்தாள்.
சுற்றியும் கண்களைச் சுழல விட்டவள்
'ஏதோ ப்ரம்மை' என்று நினைத்துவிட்டுத்
திரும்பி ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்து காபி
ஷாப்பை அடைந்து உள்ளே போக ஜீவா
மதியுடன் விக்னேஷும் அமர்ந்திருந்தான்.
சென்று விக்னேஷின் பக்கத்தில்
அமர்ந்தவள் எதுவும் பேசவில்லை.

"பேசாமல் நீ இப்போது அம்மாவுடன்
ஊருக்குப் போ மதி. நான் நாளைக்கே
வந்து பேசறேன்" என்று ஜீவா
பொறுமையாகப் பேச ஆரம்பித்தான்.

"இல்லை ஜீவா.. இல்லை.. நான்
போகமாட்டேன். போனால் என் அம்மா
ஏதாவது பண்ணி நம்மைப்
பிரித்துவிடுவார்கள்.. எனக்கு அவரைப்
பற்றி நன்றாகத் தெரியும்.. ப்ளீஸ்
புரிஞ்சிக்கோங்க.. என்னை போக மட்டும்
சொல்லாதீங்க" என்று ஜீவாவின்
தோளில் சாய்ந்து அழ அவனால் எதுவும்
பேசமுடியவில்லை.

கௌசிக்கு மதி அழுவதைப் பார்க்க
கஷ்டமாக இருந்தது. விக்னேஷும் ஏதோ
யோசனையில் இருந்தான்.

"சரி மதி.. நீ போக வேண்டாம் விடு.. தயவு
செய்து அழதே" என்று சமாதானம்
செய்துகொண்டிருந்தான் ஜீவா.

"ஜீ.. ஒரு டவுட்" - விக்னேஷ் ஜீவாவை
அழைத்தான்.

"என்ன விக்கி" - ஜீவா.

"மதி அப்பா.. இந்நேரம் வந்திருப்பார்
இல்லை" என்று கேட்டான் விக்னேஷ்.

"ம்ம் வந்திருப்பார்" என்றான் ஜீவா.

"மதி.. உன் அப்பா நீ சொன்னா
கேட்பாரா?" என்று மதியைப் பார்த்துக்
கேட்டான் விக்னேஷ்.

"ம்ம் கேட்பார்.. ஆனால் அம்மா இருந்தால்
அப்பாவிடம் பேசவே விடமாட்டார்"
என்றாள் மதி கண்ணைத் துடைத்தபடியே.

"ஓகே.. ஜீ இங்க பாரு.. மதி சொல்றதப்
பாத்தா மதியோட அம்மா கொஞ்சம்
டாமினன்ட் கேரக்டர் மாதிரி தெரியுது..
அவங்க முன்னாடி மதி அப்பாகிட்ட
பேசுனா நம்மையும் பேசவிடாம
அவரையும் குழப்பிடுவாங்க.. ஸோ நாம
அவருகிட்டத் தனியாதான் பேசனும்..
அவர்கிட்ட நம்மள பேச முடியாம
தடுக்கத்தான் முடியுமே தவிர அவரு
முடிவாகச் சொன்னல் மதி அம்மாவால்
எதுவும் பேச முடியாது" என்ற விக்னேஷ்
"மதி உன் அப்பா நம்பரைத் தா.. அவர்
பெயர் என்ன?" என்று கேட்டு வாங்கி
அவரின் எண்ணிற்கு டயல் செய்தான்.

அவர் போனை எடுத்து "ஹலோ" என்ன
சொன்னார்.

"ஹலோ.. இது முருகானந்தம் சார்
தானே?" என்று கேட்டான் விக்னேஷ்.

"ஆமாம்.. நீங்க?" - முருகானந்தம்.

"சார்.. நாங்க கொரியர்-ல இருந்து
பேசறோம்.. மதி முருகானந்தம் பெயரில்
ஒரு பார்சல் வந்திருக்கு.. அவங்களுக்கு
போன் பண்ணோம்.. ஏதோ வேலையாக
இருப்பதால் அவங்க ஹாஸ்டல் அட்ரஸ்
தந்து உங்ககிட்ட தர சொல்லீருக்காங்க..
நான் ஒரு பத்து நிமிடத்தில் அங்கு
வந்துவிடுவேன்.. நீங்க வந்து
வாங்கிக்கோங்க சார்" என்று தன்
தாடையில் ஒரு கையை வைத்தபடி
பேசியவன் அவர் சொல்லும் பதிலிற்காக
காத்திருந்தான்.

"சரிப்பா.. வா" என்று வைத்துவிட்டார்.

சரியாக பத்து நிமிடத்தில் கொஞ்சம்
தூரம் தள்ளி ஹாஸ்டலின் முன்னால்
ஜீவாவின் கார் நின்றிருந்தது. விக்னேஷ்
காரின் முன் சீட்டில் அமர்ந்திருக்க ஜீவா,
மதி, கௌசி எல்லாம் பின் சீட்டில்
உட்கார்ந்திருந்தனர்.

எல்லோருக்குமே கொஞ்சம் பயம் தான்..
மதியின் அப்பாவிற்கு பதில் மதியின்
அம்மா வந்துவிட்டால்?

ஆனால் நல்லவேளையாக
முருகானந்தமே வந்தார். மதி அவரைக்
கைகாட்ட போனை எடுத்து அவருக்குப்
போன் செய்த விக்னேஷ் "சார்
வந்துட்டேன்.. நீங்க எங்க இருக்கீங்க?
என்ன கலர் ட்ரெஸ்" என்று கேட்டான்.

"நான் வெள்ளை சட்டை.. ப்ரௌன்
பாண்ட்.. கண்ணாடி போட்டிருக்கேன்"
என்று விவரம் சொன்னார் அவர்.

"சார் நான் உங்களைப் பார்த்துட்டேன்..
உங்க ரைட் சைட் ஒரு வைட் காருக்கு
பின்னாடி தான் நிற்கிறேன்.. வந்து
பார்சலை வாங்கிகங்க" என்று சொல்லிக்
கட் செய்து விட்டான்.

முருகானந்தம் பக்கத்தில் வரவர காரில்
இருந்து இறங்கிய ஐந்து பேரும் அவரைப்
பார்க்க.. தன் மகளைப் பார்த்த
முருகானந்தம் அவளிடம் ஏதோ பேச வர..
அவர்கள் அதற்குக் கூட விடவில்லை.

அவரைப் பின் சீட்டில் போட்டு உள்ளே
தள்ளி வலது பக்கம் மதி இடது பக்கம்
ஜீவா உட்கார.. விக்னேஷும்
கௌசிகாவும் முன் உட்கார விக்னேஷ்
காரை எடுத்தான்.

அவருக்கு ஒன்றுமே புரியவில்லை. தன்
மகளைப் பார்த்து "என்னமா நடக்குது?"
என்று கேட்க "ஒரு நிமிடம் பா" என்றாள்
மதி. பின் கொஞ்ச தூரம் சென்ற பின் ஒரு
அமைதியான இடத்தில் காரை
நிறுத்தினான் விக்னேஷ்.

பின் விக்னேஷும் கௌசியும் பாதி
திரும்பிப் பின்னால் பார்த்தபடி
உட்கார்ந்தனர்.

"அப்பா.. நான் இவரைத் தான் லவ்
பண்றேன்பா.. ரொம்ப நல்லவர் பா..
என்ன இவருக்கே கல்யாணம் பண்ணி
வச்சிருங்க பா" என்று கண்ணீருடன் ஜீவாவைக் கைகாட்ட "ஹாய்... மாம...
சார்" என்றான் ஜீவா.

"சார்.. நான் உங்க பொண்ண ரொம்ப லவ்
பண்றேன். அவளும் தான். உங்க
பொண்ண நல்லா பார்த்துப்பேன் சார்..
நீங்க நம்பி உங்க பொண்ணை எனக்குக்
கல்யாணம் பண்ணித் தரலாம்" என்று
ஜீவா அவர் திட்டுவதற்கு முன் அவசர
அவசரமாகப் பேசி முடித்தான். அவர்
ஏதோ பேச ஆரம்பிக்கும் முன் விக்னேஷ்
உள்ளே புகுந்தான்.

"ஆமாம் அங்கிள்.. எங்க ஃபேமிலில
எல்லாருக்குமே முன்னாடியே தெரியும்..
நீங்க ஒத்துக்கிட்டா அடுத்த
முகூர்த்தத்தில் கல்யாணத்தை
முடித்துவிடலாம். ஜீவாவும் நல்ல
பையன்தான்.." விக்னேஷும் அவசர
அவசரமாகப் பேசிமுடித்தான்.

"அய்யோ நாம மட்டும் என்ன ஏதும்
சொல்லாம இருக்கோம்" என்று நினைத்த
கௌசி "ஆமாம் பெரியப்பா எங்க அத்தை
மாமா எல்லாம் மதியை நல்லாப்
பாத்துப்பாங்க.. நீங்க எதுக்கும்
கவலைப்பட வேண்டாம்.. மதியை கட்டின
புடவையோடு அனுப்பினால் போதும்"
என்று முடிக்க.. எல்லோரும் மதி உட்பட
"ஏய் இது ஓவர் டயலாக் கம்மி பண்ணு" என்ற பார்வைப் பார்க்க "அதில்லை
பெரியப்பா.. எங்க ஜீவா ரொம்ப நல்ல
பையன்.. எந்தப் பிரச்னையும் வராது..
அன்ட் நீங்க மதி ஆசைப்பட்ட
எல்லாவற்றையும்
நிறைவேற்றுவீர்களாமே...
பெரியம்மாவிற்கு இதில் சுத்தமாக
விருப்பம் இல்லையாம். நீங்கள் தான்
அவரை சமாதானம் செய்து
கல்யாணத்திற்கு சம்மதிக்க வைக்க
வேண்டும். நீங்கள் நினைத்தால்
கண்டிப்பாக முடியும் பெரியப்பா.. நீங்க
சொல்லி பெரியம்மா கேட்காமல்
இருப்பாங்களா.. உங்க பெரிய மீசையை
வைத்து கொஞ்சம் மிரட்டுனாவே
பயந்திருவாங்க... ப்ளீஸ் பெரியப்பா"
என்று தன் பாதி திரும்பிய உடம்பையும்
தலையையும் சீட்டில் சாய்த்த வண்ணம்
பேசியவளைக் கண்டு முறுவலித்தார்
முருகானந்தம்.

ஏனோ ஜீவா விக்னேஷின் சார்,
அங்கிளுக்கு நடுவில் இந்த பெரியப்பா
முருகானந்தத்தை ஈர்த்துவிட்டது. நேற்று
மனைவி போன் செய்து ஒப்பாரி வைத்த
போது "சரி பையன் நல்லவன் என்றால்
கல்யாணம் செய்து வைத்துவிடலாம்"
என்று நினைத்து தான் சென்னை வந்தது
அவர். ஆனால் இவர்கள் செய்த இந்த
சந்திப்பும் பேச்சும் அவருக்கு சிரிப்புடன்
அவர்களின் மேல் நல்ல எண்ணம் தான்
வந்தது.

"உன் பெயர் என்னமா?" என்று
கௌசியைப் பார்த்துக் கேட்டார்
முருகானந்தம்.

"கௌசிகா பெரியப்பா" என்றாள்.

"சரி என் பெண்ணின்
விருப்பத்திற்காகவும் நீ பேசியதற்காகவும்
நான் உன் பெரியம்மாவிடம் கேட்கிறேன்"
என்று அவர் சொல்ல "அப்படினா
உங்களுக்குச் சம்மதமா?" என்று நான்கு
பேரும் ஒரு சேர வினவ "ஆமாம்" என்றார்
முருகானந்தம்.

விக்னேஷும் ஜீவாவும் "என்னடா நம்ம
பேசுனதுக்கு ஒரு ரியாக்ஷனும் இல்ல"
என்பதைப் போலப் பார்த்துக்
கொண்டனர்.

"தாங்க்ஸ் பா" என்று தன் தந்தையை மதி
கட்டிக்கொள்ள ஜீவா, விக்னேஷ், கௌசி
மூவரும் ஹைபை அடித்துக் கொண்டனர்.

பின் பரமேஸ்விரயைத் திருமணத்திற்கு
ஒத்துக்க வைத்து நிச்சயதார்த்தத்தை ஒரு
கோயிலில் எளிமையான முறையில்
முடித்தனர். இரண்டு மாதத்தில்
கல்யாணம் என்பதால் எல்லோரும்
கல்யாண வேலையில் மூழ்கிவிட கௌசி
தனிமையாக உணர்ந்தாள்.

அவ்வப்போது விக்னேஷிற்கு கால்
செய்தாலும் பிசி என்று வந்தது.
ஜீவாவையும் மதியையும் டிஸ்டர்ப்
செய்யவும் கௌசிக்கு மனமில்லை.
அவ்வப்போது ஆபிஸில் பேசுவதோடு சரி.
அடுத்து ஒருவாரம் கழித்து ஆபிஸ்
முடிந்து கிளம்பியவள் விக்னேஷ் வேலை
செய்யும் கம்பெனி அருகில் வண்டியை
நிறுத்தி தன் தந்தைக்கு சுகர் டாப்ளட்ஸ்
வாங்கிக் கொண்டு இருந்தாள்.
திடீரென ஏதோ தோன்றத் திரும்பிப்
பார்த்தவள் விக்னேஷ் போலவே ஒருவன்
ஒரு பெண்ணோடு போவது போல
இருந்தது. சீக்கிரம் பணத்தைக் கொடுத்து
விட்டு மாத்திரையை வாங்கிக் கொண்டு
பணத்தின் மிச்சத்தைக் கூட வாங்காமல்
ஓடியவளால் யாரையும் கண்டுபிடிக்க
முடியவில்லை.

விக்னேஷிற்கு போனைப் போட்டவள்
"விக்கா எங்க இருக்க?" என்று கேட்டாள்
கௌசிகா.

"நான் இந்த நேரத்தில் எங்கு இருப்பேன்..
ஆபிஸ் தான் டி.. ஏன் என்ன விஷயம்?"
என்று அவன் வினவ "ஒன்றுமில்லை.. நீ
வேலையை முடித்துக் கொண்டு கால்
செய்" என்று வேலை நேரத்தில் டிஸ்டர்ப்
செய்யப் பிடிக்காதவள் போனை
வைத்துவிட்டாள். அப்புறம் இரவு ஆகியும்
அவன் கூப்பிடவில்லை. கௌசியைத்
தனிமை மிகவும் வாட்டி எடுத்தது.

அன்று இரவு டைரியை எடுத்தவள் ஒரு
கவிதையை எழுதினாள்.
'என் தேடல் நீ
என் காதல் நீ
என் மௌனத்தின் பின் உள்ள
காரணம் நீ
என் கவிதையில் மறைந்துள்ள
பொருள் நீ
என்று நான் அறிவேன்
நீ எப்போது அறிவாய்?'
என்று எழுதியவள் அந்த எழுத்துகளை
பார்த்துக் கொண்டே உட்கார்ந்திருந்தாள்
கௌசிகா. அவனிடம் தன் காதலை
சொல்லிவிடலாமா என்று இருந்தது
அவளுக்கு.. "ஆனால் எப்போது?" என்று
நினைத்தவள் "சரி ஜீவா கல்யாணம்
முடியட்டும்" என்று விட்டுவிட்டாள்.
டேபிளில் தலை வைத்து யோசித்துக்
கொண்டு இருந்தவள் டைரியின்
பக்கத்திலேயே படுத்து உறங்கிவிட்டாள்.

அடுத்த நாள் ஞாயிறு என்பதால்
காலையில் எட்டு மணிக்கு எழுந்தவள்
ப்ரௌனிக்கு ஆர்டர் செய்த மரத்தில் ஆன
ஒரு பெரிய வீடு முந்தைய நாள் பார்சலில்
வந்ததைப் பிரித்தாள். ப்ரௌனி
பெரிதானாலும் அது யூஸ் ஆகும் என்று
நினைத்தவள் அதை எடுத்துக் கொண்டு
வெளியில் வந்தவள் தன் வீட்டின்
முன்னால் உள்ள சிறிய குளிர் மண்
இடத்தில் அதை வைத்துவிட்டு
ப்ரௌனிக்குத் தேவையான
எல்லாவற்றையும் அதில் உள்ளேயும்
வெளியேயும் வைத்துக் கொண்டிருந்தாள்.

கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டுத்
திரும்பியவள் 'விக்கா' நின்றிருப்பதைப்
பார்த்தாள். ஒரு உணர்ச்சியற்ற
பார்வையை அவன் மேல் வீசியவள்
மீண்டும் திரும்பித் தன் வேலையைச்
செய்ய ஆரம்பித்து விட்டாள்.

ஸ்கை ப்ளூ டீ சர்ட் 3/4th மஞ்சள் நைட்
பாண்ட் போட்டு தூக்கிக் கட்டியிருந்த
கொண்டையுடன் மண் எல்லாம் கை
காலில் அப்ப வேலை செய்து
கொண்டிருந்தவளைப் பார்க்கையில்
அவனுக்குச் சிரிப்பு வந்தது. "கௌசி"
என்று அழைத்தான். இருமுறை
அழைத்தும் பலன் இல்லாமல் போனது.

"கௌசிக்" என்று கடைசியாக அவன்
கௌசியை அழைக்க கையில் கிடைத்த
கல் ஒன்றை அவன் மேல் எறிய அது
நூல்அளவில் அவன் மண்டையை பதம்
பார்க்காமல் மிஸ் ஆனாது. நேராக
எந்திரித்து வந்தவள் அவனது உச்சி
முடியைப் பிடித்துவிட்டாள்.

"உனக்கு என்னலாம் நியாபகம் இருக்கா?..
என்கிட்ட நீங்க எல்லாரும் பேசி எவ்வளவு
நாள் ஆச்சுத் தெரியுமா? நீ என் போன்
கூட இப்போலாம் அட்டண்ட் பண்றது
இல்ல" என்று தலையைப் பிடித்து ஆட்டி
அவனைக் கேட்டவளின் குரல் உடைந்தது.

"ஹே.. ஸாரி ஸாரி... ஆஆ வலிக்குது டி.."
என்று அலறியவன் "அதுக்கு தான் உன்ன
வெளில கூட்டிட்டு போலாம்-ன்னு
வந்திருக்கேன் டி. ஜீவாவும் மதியும் அங்கு
நம்ம கூட ஜாயின் ஆயிருவாங்க" என்று
சொல்லியபடியே அவளின் கையை தன்
தலையில் இருந்து எடுத்தவன் அவளைப்
பார்க்க "நீங்க கூப்ட உடனே மட்டும் நான்
வரணுமா.. முடியாது போடா" என்று
முறைத்துவிட்டு உள்ளே சென்றுவிட்டாள்
கௌசிகா.

கௌசியைக் கெஞ்சிக் கூத்தாடி
சமாதானம் செய்து எக்ஸ்பிரஸ் அவென்யூ
-விற்கு எப்படியோ தன்னடைய பைக்கில்
கூட்டிவந்தான் விக்னேஷ்.

மேலே அவர்கள் ஃபுட் கோட்டிற்குச் செல்ல
ஜீவாவும் மதியும் முன்னாடியே வந்து
அமர்ந்திருந்தனர். அவர்களுடன் சென்று
விக்னேஷும் கௌசியும் அமர கௌசி
'உர்' என்ற முகத்துடன் அமர்ந்திருந்தாள்.
பின் ஜீவாவும் மதியும் காரணம் கேட்க
எச்சாக சிலுப்பிக் கொண்டவள்
பதில்பேசவில்லை.

"அது ஒன்றுமில்லை.. கௌசிக்கு கோபம்
வந்திருச்சு நம்ம மேல" என்று இன்று
காலை வீட்டில் நடந்ததை எல்லாம்
சொன்னான் விக்னேஷ்.

"அட அவ்வளவு தானா?" என்று கேட்ட
ஜீவா "என்னடா விக்கி கௌசியை எப்படி
சமாதானம் செய்வது என்று
மறந்துவிட்டாயா?" என்று கேட்டு ஜீவா எழ
மதியும் ஜீவாவுடன் எழுந்து தன் அருகில்
வர விக்னேஷ் எழுந்தான். மூவரும்
தன்னைச் சுற்றி நிற்கு அவர்கள் என்னப்
பண்ணப்போறார்கள் என்று
புரிந்துவிட்டது.

நொடியும் தாமதிக்காமல் மூவரும்
'கிச்சுகிச்சு' மூட்ட கௌசியால் சிரிப்பைக்
கட்டுப்படுத்த முடியவில்லை. அந்த ஃபுட்
கோர்ட்டில் இருந்த எவரையும்
கண்டுகொள்ளவில்லை நான்கு பேரும்.
பின் கௌசி சமாதானம் ஆக ஃபுட்
கோர்ட்டில் நான்கு பேரும்
கொறித்துவிட்டு ஷாப்பிங்கை
ஆரம்பித்தனர். கல்யாணத்திற்குப் பிறகு
சும்மா எங்காவது சொந்தக்காரங்க
வீட்டுக்குச் சென்றால் வேண்டும் என சில
சேலைகளைப் பார்த்தாள் மதி.

"ஏண்டி கௌசிக்.. நீ இந்த சேலை எல்லாம்
ட்ரைப் பண்ணி பொண்ணா மாற ட்ரைப்
பண்ணலாம்ல" என்று அங்கிருந்த சேரில்
உட்கார்ந்தபடி விக்னேஷ் கிண்டல் செய்ய
"அய்யயோ போடா.. என் சீர் அன்னிக்கு
நான் கட்டியதே போதும். தட்டி தட்டி விடும்.
நடக்கவும் தெரியாது எனக்கு" என்றாள்
கௌசி.

"அட இப்போ பழகுனா தான புருஷன்
வீட்டுக்குப் போன அப்புறம் கட்ட முடியும்"
என்று விக்னேஷ் சிரிக்க "கல்யாணம்
ஆன சேலை கட்டணுமா.. அதெல்லாம்
முடியாது" என்று பதில் கொடுத்தாள்
கௌசிகா.

"கல்யாணம் ஆன அப்புறம் இதை உன்
புருஷன் கிட்ட சொல்லு பார்ப்போம்"
என்று சவால் போல சொல்ல "அதானே
பண்றேன்" என்று மனதிற்குள்
நினைத்தபடி நின்றாள்.

"சரி வா.. நான் உனக்கு சாரி வாங்கித் தரேன்" என்று டிசைனர் சாரீஸ் இருந்த
பக்கம் அவளை இழுத்துக் கொண்டு
சென்றான் விக்னேஷ்.

கௌசிக்கு சாரி எடுத்தே பழக்கம்
இல்லை.. விக்னேஷே அவளது தங்க
நிறத்திற்குப் பொருத்தமான ஆரஞ்ச்
மஞ்சள் கலந்த ஒரு டிசைனர் சில்க்
சாரியை எடுத்துத் தந்தான். எல்லாம்
முடிந்து நான்கு பேரும் வெளியே
வரும்போது ஏதோ உறுத்த கௌசி
திரும்பித் திரும்பிப் பார்த்தபடியே
வந்தாள்.

ஜீவாவும் மதியும் ஒரு ஜீவாவிற்கு ஷூ வாங்க ஒரு கடைக்குள் போக..
அதேசமயம் விக்னேஷிற்கும் போன் வர
அவன் "ஆபிஸ்போன்" என்று ஒரு
ஓரத்தில் போய் நின்று பேச
ஆரம்பித்தான். 'கௌசியும் நீங்க போங்க
நாங்க வரோம்' என்று 2nd ப்ளோரில்
நின்று வேடிக்கை பார்த்தபடி
நின்றிருந்தாள் கௌசி.

'ஏன் கொஞ்ச நாளாக யாரோ பாலோ
பண்ற மாதிரியே இருக்கு' என்று
யோசித்துக் கொண்டு நின்றிருந்தவள்
"ஹாய் கௌசிகா" என்ற குரலில்
திரும்பினாள்.

யார் எனத் திரும்பிப பார்த்தவள் அவள்
பின் நின்றிருந்தவனை அவளுக்கு யார்
எனத் தெரியவில்லை.

"யார் நீங்க..?" - கௌசிகா.

"உங்களுக்கு என்னைத் தெரியாது..
ஆனால் எனக்கு உங்களைத் தெரியும்"
என்று அவன் பேச "சரி தெரிஞ்சிக்கோங்க
பை" என்று நகரப் பார்த்தவளை அவன்
குரல் தடுத்தது.

"ப்ளீஸ் கௌசிகா நில்லுங்க.. நான்
சொல்றத ஒரு நிமிடம் கேளுங்களேன்"
என்று அவன் கெஞ்ச கௌசிகா நின்றாள்.
"என்ன சொல்லுங்க.. எனக்கு டைம்
ஆச்சு?" என்று கடுமையாக குரலில்
சொன்னாள் கௌசிகா.

"கௌசிகா எனக்கு.. நான் உங்களை
இரண்டு மாசமா லவ் பண்றேன்.. நான்
உங்க ஆபிஸ் கீழ இருக்க பர்ஸட் ப்ளோர்
தான் இருக்கேன்" என்று சொல்ல
கௌசிகா அவனது பேச்சில் குறுக்கே
புகுந்தாள்.

"ஸீ.. நீங்க யாருனே எனக்குத் தெரியாது.
எனக்கு லவ்ல லாம் இன்ட்ரஸட் இல்ல..
Don't waste your time.. இனி என்
பின்னாடி நீங்க வராதீங்க" என்று
சொல்லிவிட்டு கௌசிகா நகரப் பார்க்க
அவன் கௌசிகாவின் கையைப்
பிடித்துவிட்டான்.

"கௌசிகா. ப்ளீஸ்.. ப்ளீஸ்" என்று அவன்
கெஞ்ச "இப்போ நீங்க கைய
விடலைன்னா அவ்வளவு தான்.. Please
take off your hands" என்று சொல்லச்
சொல்ல விக்னேஷ் வந்துவிட்டான்.

முதலில் பிரண்டிடம் பேசுகிறாள் என்று
நினைத்த விக்னேஷ் அவன் கையைப்
பிடிப்பதைக் கண்டதும் ஆத்திரத்தின்
உச்சிக்கே சென்றான். வேக நடையுடன்
வந்தவன் கௌசிகாவின் கரத்தைப் பற்றியிருந்த அவனின் கையை எடுத்து
முறுக்க கௌசிகா பயந்துவிட்டாள்.

"டேய் விக்கா.. என்ன பண்ற நீ..
தயவுசெய்து விடு.. எல்லாரும்
பாக்கறாங்க" என்று கௌசிகா
விக்னேஷின் தோளைப் பிடித்து
இழுத்தாள். ஆனால் விக்னேஷின்
கையோ இரும்பென அவனின் கையைப்
பிடித்திருந்தது.

"விக்கா" என்று அவனைப் பிடித்து உலுக்க
"வாயமூடு கௌசி" என்று அடிக்குரளில்
உறுமினான்.

அதற்குள் ஷூ கடையில் இருந்து
வெளியே வந்த ஜீவாவும் மதியும்
நடந்துகொண்டிருப்பதைப் பார்த்து
கௌசியுடன் சேர்ந்து விக்னேஷைப்
பிடித்து இழுத்தனர். ஆனால் ஆடாமல்
அசையாமல் அவனின் கையை
பிடித்திருக்க அவன் வலி தாங்க
முடியாமல் நின்றிருந்தான்.

இரண்டு நிமிடப் போரட்டத்திற்குப் பிறகு
அவனின் கையை விட்ட விக்னேஷ் "இனி
உன்னை கௌசி பின்னால் பார்த்தேன்..
நீ அவ்வளவு தான்" என்று கர்ஜித்தான்.
அவனை அந்த இடத்தில் இருந்து இழுத்து
வர போதும்போதும் என்று ஆகிவிட்டது மூவருக்கும்.

"டேய் என்னடா ஆச்சு?" என்று ஜீவா கேட்க
"என்னைக் கேட்காதே.. இவளைக் கேள்"
என்று கோபத்தைக் காட்டினான். கௌசி
தலை குனிந்தபடியே நடந்ததைச் சொல்லி
முடித்தாள்.

"அறிவிருக்கா டி.. எவனே தெரியாதவன்
கூட பேசிட்டு நிப்பையா?" என்று
விக்னேஷ் திட்ட "ஏய் சும்மா சும்மா
என்னத் திட்டாதே.. அவன் பர்ஸ்ட் டீசன்ட்-
ஆ தான் பேசிட்டு இருந்தான்.. அவன்
கையைப் பிடிப்பான் என்று எனக்குத்
தெரியுமா சொல்லு.. அவன் நம்ம கம்பெனி பர்ஸ்ட ப்ளோரில் இருப்பதாகச்
சொன்னதால் தான் மரியாதைக்காக
நின்றேன்" என்று சண்டையிட்டாள்.

"டேய் இரண்டு பேரும் நிறுத்துங்க" என்று
ஜீவா சொல்ல ஒரு இடத்தில்
உட்காருவதற்கான போடப்பட்ட பெஞ்சில்
நால்வரும் உட்கார்ந்தனர்.

பிறகு இரண்டு பேருக்கும் கொஞ்சம்
கோபம் அடங்க "என்ன விக்னேஷ்
இதற்கே இப்படி டென்ஷன் ஆகிடீங்க..
ஆபிஸ்-ல டெய்லியும் இரண்டு ப்ரபோசல்
வந்துட்டு இருக்கு நம்ம கௌசிக்கு" என்று
சிரித்தாள்.

"எது நம்ம் கௌசிக்-கு அவ்வளவு
ப்ரபோசல் ஆஆஆ" என்று கௌசியின்
தோளில் கையைப் போட்டவன் "என்னடா
கௌசிக் அவ்வளவு அழகா நீ" என்று
கேட்டான் விக்னேஷ்.

"உன்ன மாதிரி ஆள் கண்களுக்கு என்
அழகெல்லாம் தெரியாது" என்று
கண்களைச் படத்தில் வருவதைப் போலச்
சிமிட்டிக் காண்பிக்க அவளை ஜீவாவும்
விக்னேஷும் ஒருசேரக் கொட்டினர்.

பிறகு ஜீவாவும் மதியும் கிளம்ப
விக்னேஷும் கௌசியும் பைக்
பார்க்கிற்கு வந்து சேர்ந்தனர். விக்னேஷ்
பைக்கை எடுக்கப் போக 'இவன்
இத்தனை நாள் பின்னாடி சுற்றியது தான்
உறுத்தியது போல' என்று நினைத்துக்
கொண்டவள் பைக்கை எடுத்துக்
கொண்டு விக்னேஷ் வர அவனுடன் ஏறி
வீட்டிற்குப் புறப்பட்டாள்.

ஆனால் அவளது யூகம் சரிதானா?

இன்றும் தன்னை நோட்டம் விட்டக்
கண்களை ஏன் கௌசியால்
கண்டுகொள்ள முடியவில்லை? விதியா?

விதிதான்.

நாட்கள் செல்லச் செல்ல ஜீவா மதியின்
திருமண நாளும் வந்தது. ஜீவா மதியின்
கழுத்தில் மூன்று முடிச்சிட்டு தாலியைக்
கட்டி சுற்றி இருப்போரின்
ஆசிர்வாதத்தோடு ஆஃபிசியலாக
மதியைத் தன் மனைவி ஆக்கிக்
கொண்டான் ஜீவா.
காதலித்தவர்களையே கைபிடித்த
பெருமிதம் இருவரின் முகத்திலும்
நன்றாகத் தெரிந்தது.

கல்யாணத்திற்கு வந்த யாரோ ஒருவர்
வரதராஜன் "அடுத்த கல்யாணம் உங்கள்
வீட்டில் தானா?" என்று கேட்க தன் தந்தை
தலை ஆட்டுவதைப் பார்த்தாள்.

ஆனால் கௌசிக்கு தான் முகம்
வாடிவிட்டது. 'விக்னேஷ் இப்போது
எல்லாம் வேலை வேலை என்று தனக்கு
நேரம் ஒதுக்குவதில்லை.. போன்
பண்ணாலும் எடுப்பதில்லை என்று.
நேரில் பார்க்கும் போதும் லேப்டாப்
போனுடன் உட்கார்ந்திருக்கிறான்.
இவனிடம் எப்போது சொல்லுவது?'
என்று கௌசியின் மனம் பரபரத்தது.

'போதாக்குறைக்கு இந்த மதியின்
அண்ணன் சுதாகரன் வேறு பின்னால்
ஜொள் விட்டுக் கொண்டு சுத்துகிறான்.
அவன் விடும் ஜொள்ளில் எல்லாரும்
கல்யாண மண்டபத்தில் இருந்து நீந்திக்
கொண்டுதான் போக வேண்டும் போல.
ஜீவா மதி முகத்திற்காகப் பொறுத்துக்
கொண்டு இருந்தாள் கௌசிகா. இல்லை
என்றால் மண்டையை உடைத்திருப்பாள்"
என்று எரிச்சலை எல்லாம் அடக்கிக்
கொண்டு இருந்தவள் "நடுவில் இந்த
விக்கா வேறு இப்படி பண்றான்' என்று
நொந்து கொண்டாள்.

போகட்டும் இந்த வாரம் அவனிடம்
சொல்லிவிட வேண்டும் என்று
மனதிற்குள் நினைத்தாள்.

ஆனால் எல்லாம் மாறி தன் வாழ்வே
தலைகீழாகப் போய் எல்லோரின்
நிம்மதியும் அழியப் போவதை அன்று
கௌசிகா மட்டும் இல்லை எவரும்
அறியவில்லை.
 

writer

Saha Writer
Team
Messages
50
Reaction score
26
Points
8
அத்தியாயம்-7

நடந்தவற்றை நினைத்துக் கொண்டிருந்த கௌசிகா எப்போது உறங்கினாள் என்று அவளுக்கே தெரியவில்லை. காலையில் அவள் எழும் போது காலை எட்டு. கவிதாவே எழுந்து குளித்து முடித்து ரெடியாகிக் கொண்டிருந்தாள். டக்கென்று கௌசிகா எழ "கௌசி ஏன் இவ்வளவு
பதட்டம்?" என்று வினவ "ஸ்கூல்-க்கு டைம் ஆச்சு கவி.. பாரு இப்பவே மணி எட்டு.. நீயாவது எழுப்பியிருக்கலாம் இல்ல?" என்று கௌசி ஆதங்கப்பட "உன் கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவு இல்லையா கௌசி.. இன்னிக்கு சனிக்கிழமை.. எந்தக் காலத்தில் நம்ம ஸ்கூல் சனிக்கிழமை வச்சிருக்காங்க" என்று கவிதா பேச கௌசிகா "ச்சே
மறந்துட்டேன் பார்" பொறுமையாக
எழுந்து அனைத்து வேலைகளையும்
செய்ய ஆரம்பித்தாள்.

"கௌசி எனக்கு காலை உணவு மட்டும்
செய்.. மதியம் வேண்டாம்" என்று கவிதா
சொல்ல கேள்வியாய்ப் பார்த்தாள்
கௌசிகா.

"ஏன் மதியம் வேண்டாம்?" - கௌசிகா.

"என்ன கௌசி.. எல்லாத்தையும்
மறந்துட்ட.. நான் தான் ஊருக்குக்
கிளம்பறேன் என்று சொன்னேன்ல"
என்று கவிதா நியாபகப் படுத்தினாள்.

"அட ஆமாம்ல.. பஸ் தானே?" என்று
கேட்டாள் கௌசி.

"ஆமாம்" என்று பெருமூச்சு விட்டாள்
கவிதா.

"நீ எப்படியும் வீடு போய் சேர ஈவ்னிங்
ஆயிரும் கவி.. நான் ஒரு டிபன் பாக்சில்
மதிய சாப்பாட்டைப் போட்டுத் தரேன்.
இன்னிக்கு உனக்கு புடிச்ச லெமன் ரைஸ் அண்ட் உருளைக்கிழங்கு வறுவல்" என்று எண்ணையில் கடுகைப் போட்டபடியே பேசியவளிடம் "ம்ம்" என்றுவிட்டு கௌசியை உற்றுக் கவனித்தாள் கவிதா.

'கல்யாணம் ஆனப் பெண் என்றால்
ஒருவன் நம்ப மாட்டான். 26 வயது
என்றாலும் நம்பவே முடியாது. இப்படி
அழகும் குணமும் நிறைந்த பெண்ணின்
வாழ்வு இப்படியே ஆக வேண்டும்.
இவளிற்காக அத்தனை பேர் இருந்தும்
இங்கு இப்படி அனாதை போல
வாழ்கிறாளே கடவுளே..' என்று
வருந்தினாள் கவிதா.

'மாதத்தில் ஒரு முறை அப்பா அம்மாவைப் பார்த்துவரும் நமக்கே மனது கஷ்டமாக இருக்கும்.. இவளும் அதே கஷ்டத்தைத் தானே யாரிடமும் சொல்ல முடியாமல் அனுபவித்திருப்பாள். ஒருமுறை கூட
மூஞ்சியைக் காட்டியதில்லை..
கோபப்பட்டால் முறைப்பளே தவிர
அப்பவே எல்லாவற்றையும்
மறந்துவிடுவாள்...' என்று நினைத்துக்
கொண்டே போனவளை கௌசியின்
குரல் நடப்பிற்கு கொண்டு வந்தது.

"என்ன கவி நின்னுட்டே சுரேஷ் கூட டூயட்-ஆ" என்று கேட்டாள் கௌசி.

"அதில்லை கௌசி. ஒரு ஐடியா அதான்'
என்றாள் சமையல் அறையின் சுவற்றில்
சாய்ந்தபடி.

"என்ன ஐடியா" - கௌசி. கௌசி கவிதா
வீட்டில் பேசும் ஐடியாவைப் பற்றிப்
பேசுகிறாள் என்று எண்ணினாள்.

"மாதம் ஒரு முறை வீட்டிற்கு போய்வரும்
எனக்கே அப்பப்போ கஷ்டமாக இருக்கு..
நீ மூன்றரை வருஷம் ஆச்சு. ஒருதடவை
போய் உன் அப்பாவையாது பார்த்து
வாயேன் கௌசி" என்று கவிதா
பேசினாள்.

"வேண்டவே வேண்டாம் கவிதா..
என்னைப் பார்த்தால் அவர்களும்
கஷ்டப்பட்டு நானும் கஷ்டப்படும்படி
ஆகிவிடும். அதற்கு மேல் எல்லோருடைய பரிதாபமானப் பார்வையை சந்திக்க நேரிடும்.. அது இன்னும்.. எ.. என்னை.. அது நரகம் தெரியுமா கவிதா.. அது நம் மூளையைக் கூட மங்கச் செய்துவிடும்.. அதனால் தான் சொல்றேன் வேண்டாம் என்று" என்று தான் அனுபவித்ததை
நினைத்தபடிச் சொன்னாள் கௌசி.

கௌசியைப் பார்க்க பரிதாபமாகத் தான் இருந்தது கவிதாவிற்கு. ஏனென்றால் கவிதா ஊருக்குச் சென்றாலே உன்னை ரொம்ப மிஸ் பண்ணினேன் இரண்டு நாளில் என்ன சொல்லுவாள்.. அப்படி இருக்க அவள் அப்பா? மற்றும்..." என்று யோசித்தாள் கவிதா.

"பேசாமல் கௌசி நீயும் என்னுடன்
ஊருக்கு வாயேன்.." என்று கவிதா
அழைக்க கௌசி மறுத்தாள்.

"கவிதா.. நீ கல்யாண விஷயம்
பேசப்போற.. நான் இருந்தால் உங்க
எல்லாருக்கும் ப்ரீயா இருக்காது.
முக்கியமாக ஒரு மாதிரி சங்கடமாக
இருக்கும்" என்று அழுத்தமாகக் கூறி
மறுத்தாள் கௌசிகா.

ஒன்பது மணி அளவில் கவிதா ரெடியாகி இருக்க சுரேஷ் வந்தான். எப்போதும் போல வழக்கமான சிரிப்பை உதிர்த்தவன் "என்ன கௌசி.. கவி எங்கே?" என்று கண்களை சுழலவிட்டபடிக் கேட்டான்.

"அவ பாத்ரூமில் இருக்கா.. நீங்க
உட்காருங்க வந்திருவா" என்று கௌசி
சொல்ல நாகரீகமாக வீட்டின் முன்னால்
உள்ள திண்ணையில் சென்று
அமர்ந்தான்.

கவி வர சுரேஷ் வந்திருக்கிறார் என்று
சொல்லிவிட்டு சமையல் அறைக்குள்
சென்றாள் கௌசி. கவி படுக்கை
அறைக்குச் சென்று தன் பையை எடுத்துக் கொண்டு வர.. கௌசி அவளிற்கு எடுத்து வைத்திருந்த டிபன் பாக்ஸை எடுத்துக் கொண்டு வந்தாள்.

பெண்கள் இருவரும் வெளியே வர
சுரேஷ் எழுந்தான். கவிதாவின் முகத்தில் இருந்த பயத்தைக் கண்டவன் அவளின் கையை பிடித்து "பயமே இல்லாமல் போ கவி.. நான் இருக்கேன். என்னனாலும் எனக்கு மெசேஜ் பண்ணு" என்று தைரியம் மூட்டினான் அவளது அன்புக் காதலன்.

தலையை ஆட்டியவள் கௌசியைப்
பார்க்க "அதான் உன் ஆள் சொல்றார்-ல..
ஜாலியா கிளம்பு" என்று சிரித்தாள்
கௌசி.

"இந்தச் சிரிப்பிற்குப் பின் எத்தனை
வலிகள்?" என்று நினைத்தவள்
கௌசியிடமும் தலையை மட்டுமே
ஆட்டினாள்.

"நானே உன்னை பஸ்ஸில்
ஏற்றிவிடுகிறேன் வா" என்று சுரேஷ்
சொல்ல... கவி சுரேஷுடன் பைக்கில்
புறப்பட்டாள்.

"ஏன் கவி ஒரு மாதிரியாவே இருக்க?"
என்று பைக்கில் கூட வருபவளின் முகமே சரியில்லாது இருக்க சுரேஷ் கேட்டான்.

"அது...." என்று ஆரம்பித்தவள்
கௌசியின் வாழ்வில் நடந்த
அனைத்தையும் கூறி முடித்தாள். சுரேஷ்
எதுவும் பேசாமல் இருப்பதைக் கண்டவள் "என்ன எதுவுமே சொல்லாம வர்றீங்க?" என்று அவனின் தோளில் தட்டியபடிக் கேட்டாள்.

"எனக்கு என்ன சொல்றது-ன்னு தெரியல.. ஆனா எப்டி டி இவ்வளவு வேதனையை உள்ள வச்சிட்டு இத்தனை நாள் சிரிச்சிட்டு இருந்தாள் கௌசி?" என்று வெளிப்படையாக தன் வியப்பைக் காட்டினான்.

"அதுதான்.. எனக்கு நேற்று கேட்டதில்
இருந்து மனசே சரியில்லை..
சொல்லக்கூடாது தான் ஆனால் அந்த
இடத்தில் வேறு பெண் இருந்திருந்தால்
தன் குடும்ப மானமாவது ஒன்றாவது
என்று நினைத்திருப்பாள்.. ஆனால்
கௌசி எப்படித் தாங்கினாள் என்று
தெரியவில்லை" என்று வருந்தினாள்
கவிதா.

"எல்லாம் அந்தப் பையன் மேல் இருந்த
லவ்வாலும் அவள் அப்பாவின் மேல்
இருந்த அன்பாலும்" என்று சுரேஷ்
சொன்னான்.

உண்மைதானே? அந்த இரண்டையும்
முன் வைத்து கோரிக்கை வைத்தால்
எந்தப் பெண்ணும் கரைந்து விடுவாள்.

கவியை அனுப்பி வைத்து விட்டு உள்ளே
வந்த கௌசிக்கு ராத்திரி சரியாத்
தூங்காததாலும் அழுததாலும் தூக்கம்
தூக்கமாக வந்தது. கண்கள் எரிச்சலாக
இருப்பதைப் போலவும் உணர்ந்தாள்.
படுக்கையில் வந்து உட்கார்ந்தவள்
தலையணையை படுப்பதற்கு தோதாக
நகர்த்த நேற்று இரவு தலையணை
அடியில் வைத்த டைரியைக் கண்டாள்.

ஒரு வறண்ட முறுவலுடன் அதை
எடுத்தவள் நேற்று விட்ட இடத்தில்
இருந்து சில கவிதைகளைப் படித்தாள்.
ஐந்தாவது கவிதையில் இருந்து படித்தாள்.

ஐந்தாவது கவிதை. தானே 5.5 அடி
இருப்பவள் விக்னேஷின் பக்கத்தில்
நின்றாள் அவனை நிமிர்ந்து தான்
பார்ப்பாள். அப்போது எழுதியது..

'ஒருவரின்
கையளவுதான் இதயம்
என்று
அறிவியல் சொல்லுகிறது.
பிறகு எப்படி
ஆறடி ஆகிய
நீ
உள்ளே சென்றாய்?

ஆறாவது கவிதை.. இது விக்னேஷுடன்
அவ்வப்போது பகல் கனவில் இருக்கும்
போது எழுதியது..

'உன்னிடம் இருக்க நினைக்கும்
நிமிடத்தை
நினைத்துப் பார்த்து வெட்கப்பட
வைத்தாய்
உன்னவளாய் நான்
என்னவனாய் நீ
கனவுகளில் வாழும்போது'

ஏழாவது கவிதை.. ரொம்ப
வருடங்களுக்குப் பிறகு ஜீவாவின்
கல்யாணத்தில் பட்டுப் புடவை கட்டி
வந்தபோது.. அன்று விக்னேஷைப்
பார்க்கும் போது தன்னையறியாமல்
வெட்கப்பட போது எழுதியது

'காரணம் தெரியவில்லை
உன்னைப் பார்க்கும்போது தான்
என் நாணத்தையும்
பெண்மையையும்
நான் உணர்கிறேன்'

பிறகு அடுத்தடுத்து சில கவிதைகளைப்
படித்தாள் கௌசிகா.

பிறகு அந்தக் கவிதை.. இது தான் கௌசி
கடைசியாக மகிழ்ச்சியுடன் எழுதிய
கவிதை.. இதுதான் தான் முறுவலுடன்
எழுதும் கடைசிக் கவிதை என்று
கௌசிக்கு அப்போது தெரியவில்லை.

'காதல்
அன்பு
பாசம்
எல்லாம் வெறும் வார்த்தைகளாய்
இருந்தன
நீ மனதில் புகுந்து
பொருள்தரும் வரை'

அதற்கு அடுத்த பக்கத்தில் இருக்க
கவிதைகளை அவள் படிக்கக் கூட
விரும்பவில்லை.. டைரியை மூடி இரண்டு கைகளாலும் நெஞ்சின் மேல் டைரியை வைத்தவளின் கண்கள் கண்ணீரை சிந்தின. அழுகையை அடக்க நினைத்து கண்களை மூடியவளால் அழுகாமல் இருக்க முடியவில்லை. கண்ணீர் கன்னங்களில் வழிந்து வந்து கைகளில் விழுந்தன.

அப்படியே பெட்டில் சாய்ந்தவள் குலுங்கி
அழுக ஆரம்பித்துவிட்டாள். அவளின்
உதடுகள் அழுகையில் துடித்தன. சிறிது
நேரம் கழித்து டைரியை பெட்டின்
மேலேயே வைத்துவிட்டு அப்படியே
கட்டிலில் இருந்து இறங்கி கட்டிலின் கீழே உள்ள ட்ராளியை வெளியே இழுத்தாள் கௌசி.

ட்ராளியைத் திறந்தவள் அவளின் பழைய மொபைல் போனை எடுத்தாள். சார்ஜ் இல்லாமல் இருந்த போனிற்குச் சார்ஜைப் போட்டு உயிர்ப்பித்து கட்டிலில்
உட்கார்ந்தபடியே அதை ஆன் செய்தாள். தந்தையிடம் இருந்து மிஸ்ட் கால் வந்திருந்தது ஐந்து நாட்களுக்கு முன்னாள். இது மூன்றரை ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கும்
ஒன்றுதான். அவள் கம்பம்
வந்ததிலிருந்து அவர் கூப்பிடுவார்.
போன் சுவிட்ச் ஆப் என்றே வரும். கவிதா
ஊருக்குப் போகும் போது போனை
எடுத்து கௌசி பார்க்கும் போது எல்லாம்
தந்தையின் மிஸ்ட் கால் இருக்கும். பின்
எப்போதாவது மதி அல்லது ஜீவாவின்
மிஸ்ட் கால்.

எல்லாவற்றையும் பார்த்து விட்டு மூன்று
வருடங்களுக்கு முன்னால் எடுத்த தன்
பிறந்தநாள் போட்டோவைப் பார்த்தாள்.
விக்னேஷின் கௌசிகாவின் தோளில்
கைப்போட்டிருக்க.. சந்தியா ஜீவாவிற்கு
இடம் வேண்டும் என்று கௌசிகாவை
நெருக்க கௌசிகா சந்தியா மேல் ஒரு
கையைப் போட்டு இன்னொரு கையை
விக்னேஷின் கையைச் சுற்றிப்
பிடித்திருந்தாள்.

அந்த போட்டோவை விரல்களால்
வருடியவளின் மனம் "கஷ்டம் என்றால்
என்னவென்றே தெரியாத வாழ்க்கை.."
என்று வேதனையுற்றது.

பின் போனையும் டைரியையும்
ட்ராளியினுள் வைத்துவிட்டு பெட்டில்
படுத்தாள். நேற்று இரவு சரியாகத்
தூங்காத காரணத்தினால் சீக்கரமே
அவளின் கண்களைத் தூக்கம் வந்து
அணைத்தது. எத்தனை நேரம்
தூங்கினோம் என்றே தெரியாத அளவு
தூங்கிவிட்டாள் கௌசிகா.

கௌசிகா எழ மணி மூன்று ஆகிவிட்டது.
மெதுவாக எழுந்தவளுக்கு மிகவும்
சோம்பேறித் தனமாக இருந்தது.
எழுந்தவள் நேராக பாத்ரூமிற்குள் புகுந்து குளித்துக் கொண்டு ஒரு துண்டைக் கட்டிக் கொண்டு வந்து நின்றாள். வந்து மரபீரோவின் முன்னால் நின்றவளுக்கு தன் உடலில் தெரிந்த அனைத்தும் பழைய வாழ்க்கையை நினைவு படுத்தின. கௌசியால் அதை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. டக்கென்று ஒரு காட்டன் புடவையை அணிந்து கொண்டு ரூமிலிருந்து வெளியே வந்தவள் மணியைப் பார்த்தாள்.

மணி மூன்றரை ஆகியிருந்தது. தட்டில்
சாப்பாட்டைப் போட்டுக் கொண்டு
உட்கார்ந்தவளின் இதயம் மிகவும்
வேகமாகத் துடிப்பதை உணர்ந்தாள். "சே.. என்ன இது" என்று நினைத்தவள்
தண்ணீரைக் குடித்துக் கொண்டு வந்து
மீண்டும் உட்கார்ந்து உண்டு முடித்தாள்.

சாப்பிட்டு முடித்துவிட்டு எழுந்தவள்
வீட்டை எல்லாம் சுத்தப்படுத்திப்
பாத்திரங்களை எல்லாம் கழுவி முடிக்க
மணி நான்கே முக்கால் ஆகிவிட்டது.
அடுத்துத் துவைக்கலாம் என்று வீட்டின்
பின் பக்கம் சென்று ஊற வைத்த
துணிகளைத் துவைக்க ஆரம்பித்தாள்
கௌசிகா.

மாலை வெயில் லேசான இதத்துடன்
கூடிய காற்றோடு அடித்துக் கொண்டிருந்தது. பக்கத்தில் இருந்த
தொட்டியில் தண்ணீரை எடுத்து
வைத்தபடியே துவைக்கும் கல்லில் ஏதோ யோசனையுடனே துவைத்துக் கொண்டு இருந்தாள்.

"கௌசிகா" என்று சுரேஷின் குரல்
கேட்டது.

".........." - என்ன சுரேஷின் குரல் போல
இருக்கு என்று யோசித்தாள் கௌசிகா
தன் யோசனையில் இருந்து வெளியே
வந்தபடி.

"கௌசிகா" - மறுபடியும் சுரேஷின் குரல் முன் கதவைத் தட்டியபடிக் கேட்டது.

"ஆங்.. சுரேஷ்.. பின்னாடி துவச்சிட்டு
இருக்கேன்.. வரேன் இருங்க" - என்று
குரல் கொடுத்தபடி.. கௌசிகா தூக்கிக்
கட்டியிருந்த சேலையை கீழே இழுத்து
சரி செய்துவிட்டு தொட்டியில் கொஞ்சம்
தண்ணீர் எடுத்து கையைக் கழுவிக்
கொண்டு திரும்ப சங்கரலிங்கம் ஸார்,
சுரேஷ், பிரபு என்று மூவரும் பின்பக்கம்
லைனாக வந்தனர்.

மூவரையும் ஒன்றாகப் பார்த்தவள்
"வாங்க ஸார்.. என்ன இவ்வளவு தூரம்..
சொல்லியிருந்தாள் நானே..." என்று பேசிக் கொண்டிருந்தவளின் குரல்
அடுத்து வந்த ஜீவாவைக் காண
அப்படியே நின்றது.

எதோ பேச வந்தவள் அடுத்து வந்த
விக்னேஷைப் பார்த்து அப்படியே
நின்றாள். விக்னேஷைப் பார்க்க
விக்னேஷ் கௌசியைத் தான் வீட்டின்
பின் கதவின் நிலவின் மீது சாய்ந்தபடி
நின்று வெற்றுப் பார்வையுடன் பார்த்துக்
கொண்டு இருந்தான் விக்னேஷ்.
அவனது பார்வைக்கு என்ன அர்த்தம்
என்று கௌசிகாவால் யூகிக்க
முடியவில்லை. ஏனென்றால் அது
இன்றுவரை கௌசிகா விக்னேஷிடம் காணாத பார்வை.

ஏற்கனவே கருகருவென்று இருந்த
வானம் பேரிடியை இடிக்க மூச்சடைத்து
நின்றிருந்த கௌசியால் பேசவே
முடியவில்லை. கண்களில் நீர்கோர்த்து
மூச்சுதான் வாங்கியது. ஏதோ பேச
வாயைத் திறக்க நினைத்தவளால்
முடியவில்லை. கைகால்கள் நெஞ்சம்
எல்லாம் படபடக்க தன் முன் நின்றிருந்த
விக்னேஷின் உருவம் மங்கலாகத்
தெரிந்து "விக்கா" என்று
முணுமுணுத்தபடியே மயங்கிச் சரிந்தாள் கௌசிகா.

கவிதாவை தேனி பஸ் ஸ்டாண்டில்
இறக்கி விட்டு பஸ் வரும்வரை சிறிது
நேரம் இருவரும் பேசிக்கொண்டு
நின்றிருந்தனர். அவரவர் வீட்டில் எப்படிச்
சொல்லலாம் என்று இருவரும்
அடுத்தவரிடம் பேசிக் காண்பித்தனர்.

"ஸார்.." என்று யாரோ கூப்பிட சுரேஷ்
திரும்பினான். யாரோ இருவர் இரண்டு
துணி மட்டும் வைக்கும் அளவான
ட்ரேவல் பாக்கோடு நின்றிருந்தனர்.

"சொல்லுங்க?" - சுரேஷ்.

"சார்.. இங்க அடுத்த கம்பம் பஸ் எப்போ
வரும்?" என்று கேட்டான் விக்னேஷ்.

"அடுத்த பஸ் வர ஒரு மணி நேரம் ஆகும்..
இங்க தான் வந்து நிக்கும்" என்று சுரேஷ்
சொல்ல "ஓகே சார். தேங்க்ஸ்" என்றபடி
இருவரும் உட்கார்ந்தனர்.

பின் கவிதாவை பஸ் ஏற்றிவிட்டு சுரேஷ்
தன் பைக்கை எடுக்கப் போக அந்த
அட்ரஸ் கேட்ட இருவரும்
உட்கார்ந்திருப்பதைக் கண்டான். ஏதோ
அவர்களுக்கு உதவ வேண்டும் என்று
தோன்றியது சுரேஷிற்கு.

அவர்களிடம் சென்றவன் "சார்
உங்களுக்கு அவசரம் என்றால்
என்னுடனே வாங்களேன்.. நானும் கம்பம் தான் போறேன்.. வாங்க நீங்க எங்க இறங்கனுமோ அங்க இறக்கி விடறேன்" என்று சொல்ல விக்னேஷும் ஜீவாவும் சுரேஷுடன் பைக்கில் ஏறினர்.

பைக்கில் செல்லும் போது சுரேஷ்
தன்னை அறிமுகம் செய்து கொள்ள ஜீவா "நான் ஜீவா.. இவன் விக்னேஷ்" என்று தங்களை அறிமுகம் செய்ய சுரேஷ் சடன் ப்ரேக் போட்டான்.

அவன் ப்ரேக் போட்ட வேகத்தில் ஜீவாவும் விக்னேஷும் சுரேஷ் மேல் விழ ஒருபக்கம் சாய இருந்த வண்டியை ஒருவாறு சமாளித்து நிறுத்தினான் சுரேஷ். "என்னாச்சு சுரேஷ் சார்.. என்னாச்சு?" என்று ஜீவா வினவ "ஒன்றுமில்லை ஏதோ நடுவில் போன மாதிரி இருந்தது.. அதுதான்" என்று அவர்களைச் சமாளித்தான்.

மீண்டும் வண்டியை கிளப்பியவன்
அடுத்த கேள்வியை ஜீவாவிடம் வீசினான் "எந்த ஊர் சார் நீங்க?" என்று கேட்டான்.

"கோயம்பத்தூர்" - ஜீவா.

"சொந்த ஊரே அதுதானா?" - சுரேஷ்.

"சொந்த ஊர் சென்னை சுரேஷ் சார்" -
ஜீவா.

"சார் எல்லாம் வேண்டாம்.. சுரேஷ் என்றே
சொல்லுங்க" - என்றான் சுரேஷ்.

"நீங்க யார் வீட்டுக்கு போகனும்?" - சுரேஷ்.

"அவர் பெயர் என்ன விக்னேஷ்?" என்று
ஜீவா விக்னேஷைக் கேட்டான்.

"யாரோ ஊர் பெரியவர் சங்கரலிங்கம்" -
என்று பார்வையை எங்கோ பதித்தபடி
விக்னேஷ் சொன்னான்.

"ஓ அவரா.. எனக்குத் தெரிந்தவர்தான்..
நான் அவர் வீட்டிலேயே இறக்கி
விடுகிறேன் உங்களை" என்றான் சுரேஷ்.

ஜீவாவுடன் ஏதேதோ பேசியபடி வந்த
சுரேஷ் விக்னேஷைக் கவனித்துக்
கொண்டு தான் வந்தான்.. ஏதோ ஆழ்ந்த
சிந்தனையிலேயே இருந்தான் அவன்.
முகம் ஏதோ இறுக்கமாகக் காணப்பட்டது.

பின் சங்கரலிங்கம் சாரின் வீட்டின் முன்
சென்று பைக்கை நிறுத்த அவரின்
மனைவி ஏதோ வேலையாளை ஏவியபடி
வந்தார். சுரேஷைப் பார்த்தவர் அவனிடம் நலம் விசாரித்து விட்டு "இவர்கள் யார்?" ஊருக்குப் புதுசா?" என்று கேட்க "ஐயாவைப் பார்க்க வந்து
இருக்கிறார்கள்" என்று பதிலளித்தான்
சுரேஷ்.

"அவர் தோட்டம் வரை ஏதோ கணக்குப்
பார்க்க போயிருக்கிறார்.. நீங்க
உட்காருங்க வந்திடுவார்" என்று உட்காரச் சொல்லிவிட்டு உள்ளே சென்றார்.

"நாம் அங்கே சென்று அவரைப் பார்க்க
முடியாதா?" என்று வினவினான்
விக்னேஷ்.

"சும்மா என்றால் போயிருக்கலாம்.
ஆனால் கணக்கு விவரங்களை பார்க்கும் போது போக முடியாது" என்று சுரேஷ் சொல்ல வேறு வழியின்றி உட்கார்ந்தனர் விக்னேஷும் ஜீவாவும்.

பின் காபி பலகாரம் என வேண்டாம்
வேண்டாம் என்று சொல்லச் சொல்ல
கொண்டு வரப்பட்டது. பின் சங்கரலிங்கம் ஐயா வர மூன்று மணி ஆகிவிட்டது. பிரபுவும் உடன் வந்திருந்தான்.

அவர் உள்ளே சென்று அவர்களிடம்
பேசட்டும் என்று எண்ணிய சுரேஷ்
பிரபுவைத் தனியே அழைத்து கவிதா
தன்னிடம் சொன்ன அனைத்தையும்
மேலாக மட்டும் சொன்னான்.
பின் பிரபுவும் சுரேஷ் வீட்டிற்குள் செல்ல
சங்கரலிங்கம் குரல் நன்றாகவே கேட்டது. "எனக்கு ஊர் மட்டும் தான் தம்பி
தெரிந்தது. ரொம்பவும் வாடிய முகத்துடன் வந்து வேலை கேட்ட பெண்ணிடம் வேலை இல்லை என்று சொல்ல மனமில்லை.. அதான் வேலையும் கொடுத்து என் தோட்டத்து வீட்டிலேயே பாதுகாப்பாக இன்னொரு பெண்ணுடன் தங்க வைத்தேன். ஆனால் நீங்கள் சொல்லுவதை எல்லாம் கேட்டால் ஏதோ சினிமாக் கதை மாதிரி இருக்கு எனக்கு. இப்படி ஒரு குணமாக பெண்ணிற்கு.." என்று அவர் பேசிக்கொண்டிருக்க சுரேஷும் பிரபுவும் உள்ளே வந்தனர்.

"இதோ இவன் தான் என் மகன்.. பிரபு.. நம் கௌசிகா வேலை செய்யும் பள்ளியில் தான் கரஸ்பாண்டன்ட்-ஆக இருக்கிறான். இது சுரேஷ்.. அங்கே ஆசிரியராக இருக்கிறான்.. நம் கௌசியின் பிரண்ட்-உம் கூட" என்றவர் சுரேஷிடம் "இவர்கள் கௌசிகாவின் உறவினர்கள்" என்றார் சங்கரலிங்கம்.

"தெரியும் ஐயா" - என்றான் சுரேஷ்.

பிரபுவைத் தவிர எல்லோரும்
கேள்வியாய் சுரேஷைப் பார்க்க
"அதாவது நேற்று தான் தெரிந்தது"
என்றான் சின்னக்குரலில்.

பின் பிரபு காரை எடுக்க ஜீவா, விக்னேஷ், சங்கரலிங்கம், சுரேஷ் என்று
கௌசியைப் பார்க்க கிளம்பினர்.
ஜீவாவிற்கு மூன்று வருடங்களுக்குப்
பிறகு கௌசியை காணப் போகும்
சந்தோஷம் அதற்கும் மேல் ஏதோ பதட்டம்.

ஜீவா திரும்பி விக்னேஷைப் பார்க்க
அவன் ஏதோ கடப்பாரையை விழுங்கியது போல முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாமல் உட்கார்ந்திருந்தான். ஆனால் கௌசி தங்களைப் பார்த்து மயங்கி விழுவாள் என்று ஜீவா மட்டுமில்லை யாரும் எதிர்ப்பார்க்கவில்லை.

மயங்கிச் சரிந்த கௌசியை டக்கென்று
சுரேஷ் தாங்க ஜீவாவும் வந்து கௌசியை விழாமல் பிடித்துவிட்டான்.

பின் அவள் அறைக்குக் கொண்டு வந்து
அவளைப் படுக்க வைக்க சுரேஷ்
சமையல் அறைக்குள் சென்று தண்ணீர்
டம்ளரை எடுத்து வந்து ஜீவா கையில்
தந்தான். ஜீவா தண்ணீரைத் தெளிக்க
கௌசிகாவின் மயக்கம் தெளிந்தது.
விக்னேஷ் ஃபேனைப் போட்டு அந்த
சுவிட்ச் பாக்ஸ் பக்கத்திலேயே சுவற்றில்
சாய்ந்து நின்று கைகளை மார்புக்குக்
குறுக்காகக் கட்டி கௌசியையே
பார்த்தபடி நின்றான்.

எழுந்து உட்கார்ந்த கௌசி தலையைப்
பிடித்துக் கொண்டு உட்கார சங்கரலிங்கம் அய்யா அவர்கள் மூவருக்கும் தனிமை அளிக்க எண்ணி பிரபு மற்றும் சுரேஷுடன் மூவரிடமும் சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டார்.

சுமார் அரைமணி நேரம் அமைதியே
நிலவியது அந்த அறையில். விக்னேஷ்
அந்த சுவிட்ச் பாக்ஸ் அருகிலேயே நிற்க
கௌசிகா பெட்டில் அப்படியே
உட்கார்நதிருக்க ஜீவா எதிரில் இருந்த
கவிதாவின் கட்டிலில் உடகார்ந்திருந்தான்.

"எவ்வளவு நேரம் இப்படியே இருக்கப்
போறதா உத்தேசம்?" என்று விக்னேஷ்
கடுமையானக் குரலில் ஜீவாவைப்
பார்த்துக் கேட்டான்.

"விக்னேஷ்.." என்ன கௌசி அழைக்க
வந்ததைப் பார்த்தும் பார்க்காதது போலத் திரும்பிவிட்டான் விக்னேஷ்.

"ஜீ நம்ம எதுக்கு வந்தோம்.. இப்படி சும்மா உட்காரவா? நாளைக்கு நைட் நம்ம கிளம்பனும்.. எல்லாம் சொல்லிவிடு" என்று சொல்லிவிட்டு கௌசியின் முகத்தைக் கூடத் திரும்பிப் பார்க்காமல் வெளியே நகர்ந்துவிட்டான் விக்னேஷ்.

"என்ன சொல்றான் ஜீ அவன்" என்றாள்
கௌசிகா புரியாமல்.

அவளிடம் இப்போதே எதையும் சொல்ல
அவனுக்கு மனமில்லை. "அது
ஒன்றுமில்லை கௌசி" என்றவன் "நீ
எப்படி இருக்க கௌசி?" என்று பேச்சை
மாற்றினான்.

"நல்லாயிருக்கேன் ஜீ" என்று அவள் வாய் மட்டும் தான் அப்படிச் சொன்னது.
ஆனால் அவள் எப்படி இருப்பாள் என்று
ஜீவாவிற்குத் தெரியாதா?

"மதி எப்படி இருக்கிறாள்? வீட்டில்
எல்லோரும் எப்படி இருக்கிறார்கள்?
அப்பா.." என்று ஆரம்பித்தவளின் குரல்
அப்படியே உள்ளே சென்றது. அவளால்
எதுவும் பேச முடியவில்லை. உதட்டைக்
கடித்து உட்கார்ந்திருந்தாள்.

"எல்லாரும் நல்லா இருக்காங்க கௌசி.."
என்று அவளுக்கு இதமான பதிலையே
அளித்தான்.

"பையனா பொண்ணா ஜீ?" என்று
விசாரித்தாள் கௌசிகா.

"பொண்ணு கௌசி.. பெயர் வியாஹா..
இரண்டரை வயதாச்சு" என்றபடி போனை எடுத்தவன் தன் குழந்தையின்
போட்டோவைக் கௌசியிடம்
காண்பித்தான்.

போட்டோவைப் பார்த்தவள் "அச்சோடா..
ஸோ க்யூட் ஜீ. அப்படியே உன்னே மாதிரி
இருக்கா பாப்பா" என்றாள் போட்டோவை
ரசித்தபடி.

"க்யூட் தான்.. ஆனால் சேட்டை தான்
ஜாஸ்தி.. அதில் நீயும் அவளும் சமமாக
தராசில் நிற்பீர்கள்" என்று ஜீவா
கைகளைப் பின்னால் ஊன்றியபடி
சொல்ல கௌசிகா ஒரு வெற்றுச்
சிரிப்பை மட்டுமே உதிர்த்தாள்.

"ஜீ.. ஏதாவது சாப்டிங்களா இரண்டு
பேரும்" என்று அவசர அவசரமாக
எழுந்தாள்.

"கௌசி... அதெல்லாம் அவர்கள்
வீட்டிலேயே வேண்டாம் வேண்டாம் என்று சொல்ல நல்ல கவனிப்பு.. லேட்டாவே பண்ணு" என்று சொல்ல கௌசி எழுந்தாள்.

இரண்டு பேரும் பேசியபடியே வீட்டின்
பின்பக்கம் சென்றனர். ஏதோ நெடி வர
திரும்பிய கௌசி விக்னேஷ் சிகரெட்
குடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து
அதிர்ந்தாள். இவளைப் பார்த்தவன் ஒரு
வெற்றுப் பார்வையுடன் சிகரெட்டுடன்
வேறு பக்கம் சென்றுவிட்டான்.

"இவனுக்கு இது என்ன புது பழக்கம் ஜீ"
என்று முகத்தை அதிர்ச்சி மாறாமல்
வைத்துக கேட்டாள் கௌசிகா.
அவ்வப்போது காலேஜ் சேர்ந்ததில்
இருந்து விக்னேஷும் ஜீவாவும்
எப்போதாவது ட்ரிங்க்ஸ் சாப்பிடுவாங்க
என்று தெரியும். அதுவும் இரண்டு
மாதத்திற்கு ஒருமுறை என்று இருக்கும்.
ஆனால் சிகரெட்டின் நெடியே விக்னேஷிற்கு ஆகாது. யாராவது
பிடித்துக் கொண்டிருந்தால் கூட நகர்ந்து
விடுவான். அப்படி இருப்பவன்...? என்று
கௌசியின் மூளையில் பல கேள்விகள்
போட்டி போட்டுக் கொண்டு வந்தன.

"அது இப்போது கொஞ்ச நாளாகத் தான்.. எப்போதாவது டென்ஷனாக இருக்கும் போது" என்று ஜீவா சமாளித்தான்.

பின் ஜீவா தண்ணீர் தொட்டி அருகே
உள்ள ஒரு திண்டின் மேல் அமரந்தான்.
கௌசி துவைத்த துணிகளை அலசிக்
கொண்டிருக்க அவளிடம் உட்கார்ந்த
படியே பேசிக் கொண்டிருந்தான் ஜீவா.
துணிகளை எல்லாம் அலசிவிட்டு
வேர்த்து விறுவிறுத்து நிமிர்ந்து
நின்றவளிடம் "இந்தக் கஷ்டம்லாம்
உனக்குத் தேவைதானா கௌசி?" என்று
சங்கடப்பட்டுக் கேட்டான் ஜீவா.

"எதை கஷ்டம்-ன்னு சொல்ற ஜீ?" - ஒரு
வெற்றுப் புன்னகையோடு கௌசிகா.

"நீ இங்க வந்து இப்படிக் கஷ்டப்பட்டு...
பாரு இந்த மாதிரி வேலை எல்லாம்
உன்னை மாமா செய்ய விட்டிருக்கிறாரா? எனக்கே பார்க்க ஒரு மாதிரி கஷ்டமா இருக்கு கௌசி" - ஜீவா ஆதங்கமானக் குரலில்.

"என் வேலையை நானே செய்கிறேன்.
அவ்வளவு தான் ஜீ. இதில் கஷ்டம் என்று
எதுவும் இல்லை" என்று பேச்சை முடித்த
கௌசி துணிகளைக் காய வைக்க..
அருகில் கட்டப்பட்டிருந்த கம்பிகளின்
அருகில் சென்றாள்.

"கௌசி நான் காயப்போடுறேன் தா"
என்று ஜீ அருகில் வர "வேண்டாம் ஜீ..
நானே செய்து கொள்கிறேன்" என்று
கௌசிகா மறுக்க ஜீவா முறைத்தான்.

"சரி சரி.. எனக்கு அங்கு பக்கெட்டில்
இருக்க ஒவ்வொரு துணியையும் எடுத்து வந்து தா" என்று சொன்னாள் கௌசிகா.
ஏதேதோ பேசியபடி இருவரும் வீட்டிற்குள் வர மணி ஏழு ஆகிவிட்டது.

விக்னேஷ் காலை நீட்டிப் போட்டு
சுவற்றில் சாய்ந்தபடி லேப்டாப்பை
நோண்டிக் கோண்டிருந்தான். உள்ளே
வந்த இருவரையும் கண்டுகொள்ளாமல்
அவன் வேலையிலேயே
மூழ்கியிருந்ததான் விக்னேஷ். பின்
ஜீவாவை அழைத்து ஏதோ பேசிக்
கொண்டிருந்தவன் கௌசி என்று ஒருத்தி அங்கு இருப்பதையே கண்டு
கொள்ளாமல் இருந்தான். ஜீவா
விக்னேஷின் அருகில் அமர அவர்களுக்கு எதிரில் இருந்த சுவரில்
சாய்ந்தபடி வெங்காயத்தை உரித்துக்
கொண்டிருந்தாள் கௌசிகா.

கௌசிக்கு அவன் தன்னைத் தவிர்ப்பது
கஷ்டமாக இருந்தாலும் "இது என்ன
புதிதா?" பல்லைக் கடித்து சகித்தாள்.
ஜீவாதான் மிகவும் சங்கடமாக
உணர்ந்தான். வந்ததில் இருந்து
விக்னேஷ் கௌசியிடம் பேசப்
பிடிக்காதவன் போல நடப்பதில் அவள்
முகம் வாடுவதை அவ்வப்போது
கவனித்துக் கொண்டுதான் இருந்தான்.

"ஜீ இதைப் பாரு" என்று விக்னேஷ்
அழைக்க அந்த லேப்டாப்பின் ஸ்கீர்ன்-ஐப்பார்த்தான் ஜீவா.

அந்த ஸ்கீரீனில் மைக்ரோசாஃப்ட் வோர்டில் ஏதோ டைப் செய்திருக்க அதை ஜீவா படித்தான். "அவளிடம்
சொல்லிவிட்டாயா?" என்று டைப்
அடித்திருந்தான் விக்னேஷ்.

"இல்லை" என்று ஜீவா தலையாட்ட
விக்னேஷ் முறைத்துத் தள்ளினான்.

"இப்போது பேசு.." என்று விக்னேஷ்
மறுபடியும் டைப் அடிக்க "பாவம் டா" என்று அவன் காதருகில் பேசினான் ஜீவா.

அவ்வளவு தூரம் விக்னேஷிற்கு கோபம்
வந்துவிட்டது. "இப்போது நீ பேசவில்லை
என்றால் நான் கிளம்பிவிடுவேன்" என்று
லேப்டாப்பை மூடிவைத்துவிட்டு
கோபமாகப் பல்லைக் கடித்தபடி
பேசினான்.

அவனது திடீர்க் குரலில் நிமிர்ந்த கௌசி இருவரையும் மாறி மாறிப் பார்த்தாள். ஜீவா சரியென்று ஆரம்பித்தான். "கௌசி நாளைக்கு நைட் நீ எங்களுடன் கிளம்ப வேண்டும்.. நிரந்தரமாக.. உன் பெட்டிகளை எல்லாம் எடுத்து ரெடியாக வைத்துவிடு" என்றான் அழுத்தமான குரலில் ஜீவா சொல்லி முடித்தான்.

"முடியாது.. நான் எங்கேயும் வர மாட்டேன்" என்று கையில் இருந்த கத்தியை வெறித்தபடி பதில் சொன்னாள் கௌசிகா.

அவளது பதிலில் ஜீவாவிற்கு
எரிச்சலுற்றாலும் அடக்கிக் கொண்டான்.
ஆனால் விக்னேஷோ கை முஷ்டிகள்
இறுக கௌசியை ஆத்திரமாக கண்கள்
கோபத்தில் சிவப்பேறி பளபளக்க
நோக்கிக் கொண்டிருந்தான்.

விக்னேஷின் பார்வை தன்னைத்
துளைப்பதை உணர்ந்தாள் கௌசிகா.
 

writer

Saha Writer
Team
Messages
50
Reaction score
26
Points
8
அத்தியாயம்-8

அனல் பறக்கும் பார்வையோடு தன்னை
நோக்கிக் கொண்டிருந்தவனை கௌசிகா நிமிர்ந்தும் பார்க்கவில்லை. ஜீவாவிற்குத்தன் அருகில் உட்கார்ந்திருந்த விக்னேஷின் உஷ்ண மூச்சை உணர முடிந்தது. உள்ளங்கையை இறுக மூடிக் தன் கோபத்தை அடக்கிக் கொண்டிருந்தவனை கவனித்தவன்
கௌசிகாவிடம் பேச ஆரம்பித்தான்.

"ஏன் கௌசி.. வருவதற்கு என்ன?" ஜீவா
சற்று கோபமான குரலில் வினவினான்.

"வேண்டாம் என்றால் வேண்டாம் ஜீ.. நான் வந்தால் எனக்கு பழைய நினைவுகள் மீண்டும் எழும்.. அதுவும் இல்லாமல் நான் வந்து என்ன செய்யப் போகிறேன்?"என்று கத்தியையும் வெங்காயத்தையும் எடுத்துக் கொண்டு சமையல் அறைக்குள் புகுந்தாள் கௌசிகா.

ஆனால் விக்னேஷ் விடவில்லை. தானும்
எழுந்து ஜீவாவை எழுப்பி "போ அவளிடம் போய் பேசி சம்மதிக்க வை" என்று மிரட்டியபடி சைகை காட்டி அனுப்பினான்.

சமையல் அறைக்குள் புகுந்த ஜீவா
சமையல் மேடையின் அருகில் நின்றான். விக்னேஷ் சமையல் அறை
வாயிலிலேயே நின்றான். கௌசிகா
அவர்கள் வந்ததைப் பார்த்தும் சமையல்
வேலையில் குறியாய் இருந்தாள்.

"கௌசி நீ வந்து தான் ஆகவேண்டும்"
என்றான் ஜீவா கட்டளையிடுவது போல.
ஆனால் இந்த மாதிரி குரலுக்கு அவள்
பயப்படவும் தணியவும் மாட்டாள். அது
அவளுடன் இருந்த எல்லோருக்கும்
தெரியும்.

"முடியாது ஜீவா" - கௌசிகா
பிடிவாதமானக் குரலில்.

"உனக்கு என்னதான் பிரச்சினை கௌசி. எங்களுடன் வருவதற்கு என்ன? ஏன் இப்படிப் பிடிவாதம் பிடிக்கறே?" -
ஜீவாவிற்கும் கோபம் ஏறியது.

"எனக்கு அங்கு வரவே பயமா இருக்கு
ஜீ. அங்கு வந்தால் பழைய நியாபகம்
எல்லாம் வந்து மீண்டும் என்னைப்
போட்டு அமுக்கிவிடும்" என்று உதட்டைக்
கடித்தபடி சொன்னாள் கௌசி.

"இப்போது யாருமே சென்னையில்
இல்லை கௌசிகா. எல்லோருமே
கோயம்பத்தூர் மாறிவிட்டோம்" என்று
ஜீவா சொல்ல கௌசியிடம் "ம்ம்" என்று
தக்காளியை நறுக்கியபடியே பதில்
வந்தது.

"நீ ம்ம்-ன்னு சொல்லவா நான் பேசிக்
கொண்டிருக்கேன்?" என்று ஜீவா அவள்
தக்காளி நறுக்கிக் கொண்டிருந்த
கத்தியைப் பிடுங்கினான்.

"என்ன சொல்லணும்-ன்னு எதிர்ப்பாக்கற ஜீ" - என்று தட்டில் இருந்த தக்காளிளை வெறித்த படியே கௌசி கேட்டாள். அவளுக்கு மூச்சு வாங்கியது. கோபத்தில் அல்ல பதட்டத்தில்.

"நீ நாளைக்கு எங்களோடு வரணும்
கௌசி" - ஜீவா அழுத்தமானக் குரலில்.

"சும்மா சும்மா அதையே சொல்லாதே ஜீ..
நான் இங்கு இருந்தால் கூட நிம்மதியாக
இருப்பேன். அங்கே வந்தால் என்
நிம்மதியும் போய் உங்கள் நிம்மதியும்
போய்விடும்" என்று எரிச்சலானக் குரலில் கூறினாள்.

"நிம்மதி போக அப்படி என்ன நடக்க
போது கௌசி.. அதான் நாங்கள்
எல்லோரும் இருக்கோம்-ல கௌசி..
அப்புறம் என்ன?" - ஜீவா விடமால்
அவளிடம் வாதடினான்.

சமையல் அறை வாயிலில் சாய்ந்து
நின்றிருந்த விக்னேஷை ஒரு நிமிடம்
பார்த்தவள் "ஆமா நல்லா இருந்தீங்க
எல்லாரும்.. அவரவர் வாழ்க்கை என்று
வந்த பிறகு யாரும்
கண்டுகொள்ளவில்லை.. அனுபவித்த
எனக்குத் தான் தெரியும் எவ்வளவு வலி
என்று" என்றவளுக்கு கண்ணீர் வர வேறு புறம் திரும்பி இருவரிடமும் கண்ணீரை மறைத்தாள்.

கௌசி எதைச் சொல்லுகிறாள் என்று
விக்னேஷிற்குப் புரியாமல் இல்லை.
முகம் இறுகி பாறை போல ஆக பல்லைக் கடித்துக் கொண்டு நின்றான்.

"கௌசி... அதெல்லாம் சந்தர்ப்ப
சூழ்நிலையால் நடந்தது. அவன்
அப்போது கனடா-ல இருந்தான்.. நான்
கம்பெனி விஷயமாக சுற்றிக்
கொண்டிருந்தேன். அதெல்லாம்
இப்போது எதற்கு கௌசி?" என்றவன்
கௌசியின் முதுகு அழுகையில்
குலுங்குவதைக் காண்கையில் "சரி
எங்கள் மீது தவறு தான்.. அழாதே" என்று
ஜீவா அவளை சமாதானம் செய்தபடி
அருகில் சென்றான். விக்னேஷ் சுவற்றில் ஒரு காலை மடக்கி சாய்ந்து கையைக் கட்டியபடி நின்றிருந்தான்.

"அதான் ஜீ சொல்றேன்.. அப்போது நடந்த எதையும் என்னால் மறக்க முடியாது. அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டு இருப்போம்.. நீங்க நாளைக்கு கிளம்புங்க.. நான் வரல" என்றாள் கௌசி கண்ணீர் சிந்தியபடி.

அதுவரை அமைதி காத்த விக்னேஷ்
வெடித்தான். "ஜீ உன்ன பேச்சு வார்த்தை
நடத்த சொல்லல நான். நாளைக்கு
கிளம்பி தயாராக இருக்கச் சொல்லு..
அவ்வளவு தான்" என்றான் இடுங்கிய
கண்களுடன் கௌசிகாவைப் பார்த்தபடி.

"நான் எங்க இருக்கணும்-ன்னு எனக்குத்
தெரியும்.. நீ முடிவு பண்ணாதே" என்று
விக்னேஷைப் பார்த்து வெடுக்கென
பதில் சொன்னாள். ஏற்கனவே விக்னேஷ் அவளை சட்டையே செய்யாமல் இருந்ததில் கோபமும் வருத்தமுமாக இருந்தவள் விக்னேஷ் ஆர்டர் போடுவது போல பேசவும் கோபம் பொங்கியது.

"ஏதோ இவள் எடுத்த முடிவு எல்லாம்
சரியாக இருந்த மாதிரி பேசுகிறாள்.. இவ இங்க ஓடி வந்து மட்டும் என்னத்த
சாதிச்சுட்டா.." என்று காய்ந்தவனிடம்
கௌசிகா பாய்ந்தாள்.

"ஆமா நான் எதுவும் சாதிக்கல தான்..
ஆனா கொஞ்சம் நிம்மதியா இருந்தேன்"
என்று கோபத்தில் கண்களில் கண்ணீர்
வந்து மூக்கு விடைக்கச் சொன்னாள்
கௌசிகா.

"வாயை கொஞ்சம் அடக்கச் சொல் ஜீ..
ஏதோ எல்லோரும் இவள கொடுமை
பண்ண மாதிரி பேசறா" என்றான்
ஜீவாவைப் பார்த்து விக்னேஷ்.

"அப்போது நீங்கள் எல்லோரும் எனக்கு
எடுத்த முடிவுகள் எல்லாம் நன்றாகவா
இருந்தது? என் முடிவைப் பற்றிச் சொல்ற" என்று எதிர்க்கேள்வி விக்னேஷைப் பார்த்துக் கேட்டாள் கௌசி.

"கௌசி ப்ளீஸ் பழசையே பேசாதே" என்று சலித்தான் ஜீவா.

"சலிப்பாக இருக்கா ஜீ நான் பேசறது. என் இடத்தில் இருந்து பார்த்திருந்தால்
தெரிந்திருக்கும் ஜீ. நீ விக்னேஷ் எல்லாம் அவரவர் வாழ்க்கை என்று
போய்விட்டீர்கள்.. ஆனால் நானல்லவா
அந்தக் கொடுமையை அனுபவித்தது.
உங்கள் யாருக்கும் எதுவும் தெரியாது..
யார்யாரோ எல்லாம்..." என்று
ஆரம்பித்தவள் எதுவும் பேசாமல்
கண்களை இறுக மூடிக் கண்ணீர்
விட்டாள்.

அவளின் கண்ணீரைக் கண்டதில்
ஜீவாவின் மனம் இளகத் தான் செய்தது.
ஆனால் விக்னேஷிற்கு இல்லை.
ஏனெனில் அவளை விட்டுவிட்டுச் செல்ல
முடியாதே... இதை விட்டால் அடுத்த
சான்ஸ் அமையவே அமையாது.

"கௌசி நீ இல்லாமல் நாங்கள் எல்லாம்
சந்தோஷமாக வாழ்ந்து
கொண்டிருக்கிறோம் என்று நினைக்காதே.. நாங்கள் யாரும்
முழுமையான சந்தோஷத்தில் இல்லை..
ஒவ்வொரு நல்ல தருணத்திலும் உன்னை ரொம்ப மிஸ் பண்ணியிருக்கோம் கௌசி. நீ என்னடா-ன்னா அங்க வந்தா நிம்மதியே போயிரும்-ன்னு சொல்லறயே" என்று ஜீவா ஆதங்கத்துடன் பேச கௌசி
அப்படியே நிற்பதைக் கண்டு "அட்லீஸ்ட் நீ ஒரு தடவை வந்துவிட்டுப் போ" என்று
ஜீவா ஆரம்பிக்க "ஜீ..." என்று விக்னேஷ்
அதட்டினான்.

"எதற்காக இங்கே வந்தோம் என்பதை
மறந்துவிட்டாயா" என்றவன் "இவளை
நிரந்தரமாகக் கூட்டிவருகிறோம் என்று
அங்கு சொல்லிவிட்டு வந்தது இவளின்
கண்ணீரைக் கண்டதும் மறந்துவிட்டதா"
என்று ஜீவாவிற்கு கோயம்பத்தூரில்
உள்ள நிலைமையை நினைவூட்டினான்
விக்னேஷ்.

"நான் அங்க வந்தால் ஸ்டெரஸ் தாங்காம செத்திருவேன் ஜீ" என்று தன் இரண்டு கைகளாலும் தலையைப் பிடித்தபடிக் கெஞ்சும் குரலில் கௌசிகா
மன்றாடினாள்.

அவள் பேசியதைக் கேட்ட இருவருக்குமே
திகைப்பு.. ஏன் இந்த அளவிற்கு
பிடிவாதம் பிடிக்கிறாள் இவள்? இவள்
இப்படி சொல் பேச்சு கேட்காதவளும்
அல்லவே? என்று இருவரின் மனதிலும்
கேள்வி எழுந்தது.

டக்கென்று சுதாரித்த விக்னேஷ் "சரி ஜீ..
இவள் வரவேண்டாம்.. இங்கேயே கிடந்து
நிம்மதியாக வாழட்டும்.. ஆனால் அங்கு
உயிரைக் கையில் பிடித்துக்
கொண்டிருக்கும் ஜீவன் கண்டிப்பாகச்
சீக்கிரம் உயிரை விட்டுவிடும். அப்போது
மொத்தமாக வந்துவிடட்டும்" பல்லைக்
கடித்தபடி பேசியவன் கௌசியை நேராக
அப்போது தான் பார்த்தான்.. இரண்டு
நொடிப் பார்த்தவன் "சரியான
சுயநலவாதி" என்று பற்களுக்கு
இடையில் வார்த்தைகளைத் துப்பியவன் விறுவிறுவென்று சென்றுவிட்டான்.

அவன் தன்னை சுயநலவாதி என்று
சொல்ல கௌசிகாவிற்கு மனம் அடித்தது.. "நானா விக்கா சுயநலவாதி.. உங்கள் அனைவரின் சந்தோஷத்திற்காக உன்னை விட்டுக்கொடுத்து என் நிம்மதி சந்தோஷம் என அனைத்தையும் விட்டுக்
கொடுத்தேனே.. அதற்கு நீ பேசும் பேச்சு
இதுதானா.. எவ்வளவு எளிதாய்
சொல்லிவிட்டுப் போகிறாய்.. நான்
அடைந்த வலி யாருக்கும் சொல்லாமல்
போனதால் தானே சுயநலவாதி ஆகிப்
போனேன்.." என்று கண்ணீர் சிந்திய படி
நின்றவள் அப்போது தான் அவனது
பேச்சு நினைவு வந்தது..

உயிருக்கு போராடும் ஜீவனா? யார் அது?
ஒரு நிமிடம் அவனது பேச்சை
நினைவிற்கு கொண்டு வந்து திகைத்து
நின்றவள் ஜீவாவிடம் திரும்பி "என்ன ஜீ
சொல்றான் அவன்.. யாருக்கு என்ன?"
என்று அதிர்ச்சியைத் தாங்கிய
விழிகளுடன் கேட்டாள் கௌசிகா.

"கௌசி மாமா..." என்று ஆரம்பித்தவன்
வரதராஜனிற்கு நெஞ்சுவலி வந்தது..
சர்ஜரி செய்தது.. அதற்கான டாக்டர்
சொன்ன காரணம்.. என்று கடைசி மூன்று நாட்களாக நடந்தததை எல்லாம் சொல்லி முடித்தான்.

எல்லாவற்றையும் கேட்டவள் "அப்பா.."
என்று வாய்பொத்தி அப்படியே தரையில்
மடிந்து உட்கார்ந்து அழுக ஆரம்பித்து
விட்டாள். தன்னை சிறுவயதில் இருந்தே
ஒரு குறையும் இல்லாமல்
வளர்த்தவருக்கு இப்படியா ஆக
வேண்டும் என்று கௌசிகாவின் மனம்
விம்மியது. எப்படி எல்லாம் பாசத்தைக்
கொட்டி வளர்த்தார்.. நெஞ்சு வலி வரும்
அளவிற்கு காரணம் ஆகிவிட்டேனே..
என்று நினைத்தவளுக்கு கண்ணீர்
நிற்கவில்லை. மூச்சுக் கூட விடாமல்
அழுதவளைக் கண்ட ஜீவாவிற்கு என்ன
செய்வது என்றே தெரியவில்லை.
என்னதான் கௌசி முறைப்பெண்
என்றாலும் அவன் அவளை அப்படிப்
பார்த்ததே இல்லை. எப்போதும் நல்ல
தோழியாக.. சகோதரியாகவே பார்த்தான். சின்ன வயதில் இருந்து அவளை மடியில் தூக்கி சிரிக்க வைத்துப் பார்த்தவனுக்கு அவள் இப்படி அழுவதைக் காணச் சகிக்கவில்லை.

அவள் அருகில் சென்று இரண்டு
கால்களையும் மண்டியிட்டு தரையில்
அமர்ந்தவன் "கௌசி.. இங்க பாரு.."
என்று அவளின் கையைப் பற்றினான்.
ஆனால் ஒன்றும் பிரயோஜனம் இல்லை.
அதிகாம அழ ஆரம்பித்துவிட்டாள்.

ஜீவாவின் தோளில் தன் நெற்றியை
வைத்துச் தலை சாய்த்தவள் "எ...எ..
என்னால்.. என்னால தானே ஜீ எல்லாம்..
அப்பாவிற்கு இப்படி ஆயிடுச்சு" என்று
அழுகையில் குரல் வெளியே வராமல்
தொண்டைக் குழியில் சிக்கி சிக்கி
வந்தது.

"கௌசி.. பர்ஸ்ட் அழாதே.. மாமாவிற்கு
சுகரும் அதிகம்.. அதனால் கூட
வந்திருக்கலாம்.. சும்மா நீயாக கற்பனைப் பண்ணிக்காதே" என்று அவளைத் தேற்ற முயன்றான்.

"ஆனால் மன அழுத்தம் என்று டாக்டர்
சொன்னதா சொன்னல்ல நீ.. அது
என்னாலதானே?" என்று சமாதானம்
ஆகதவளாய்க் கேட்டாள் கௌசிகா.

கேவிக் கொண்டு அழுபவளை எப்படி
சமாதானம் செய்வது என்று
தெரியவில்லை ஜீவாவிற்கு. "ஆமாம்
கௌசி உன்னால் தான் மன அழுத்தம்"
என்று அழுத்தமானக் குரலில் ஜீவா
சொல்ல கௌசி மேலும் உதடுகள்
துடித்தன.

"ஆனால் நீ வந்தால் எல்லாம் போய்விடும் கௌசி" - அமைதியான தெளிவான குரலில் ஜீவா.

கௌசி அவனை நிமிர்ந்து பார்க்க
"சூழ்நிலை எல்லாவற்றையும்
மாற்றிவிட்டது கௌசி.. நாம
நினைத்தாலும் அதை மாற்ற முடியாது..
ஆனால் மாற ட்ரை செய்யலாம் கௌசி..
நீ எங்க கூட கிளம்பி வா கௌசி.. ப்ளீஸ்"
என்றான் அவளை நேராகப் பார்த்து.

"சரி ஜீ" என்று கண்களைத் துடைத்தபடி
கௌசிகா தலையை ஆட்டினாள். ஜீவா
சொன்னதற்காக அவள் சரி என்று
சொல்லவில்லை. அவளிற்கு அவள்
அப்பா முக்கியம். சின்ன வயதில் இருந்து அதட்டியது கூட இல்லை. ஒரு வேலை கூட வாங்கியது இல்லை.. தானாக சென்று அவரை தொந்தரவு செய்து ஆட்டம் கட்டுவாள்.. அதற்கும் சிரிப்புதான்.. அப்படிப் பட்டவர் கடைசியாக ஏதோ ஒரு சூழ்நிலையில் எடுத்த முடிவில் இப்படித் தனியாகத் தவிக்க விட்டு வந்துவிட்டோமே என்று கௌசியின் மனம் அவளை குத்தியது.
"சரி கௌசி.. எந்திரி.. எந்திரிச்சு
முகத்தைக் கழுவு.. பாரு அழுதா
நல்லாவே இல்ல.." என்று ஜீவா சொல்ல
கண்களைத் முந்தானையால்
துடைத்தவள் எழுந்து சென்று
மூகத்தைக் கழுவினாள்.

முஞ்சியைக் கழுவிக்கொண்டு வர ஜீவா
தன் போனை கௌசியிடம் கையில் தந்து "மதி பேசனுமாம்" என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டான். கௌசி ஏதோ சங்கடமாக உணர்ந்தாள். எந்த மூஞ்சியை வைத்துக் கொண்டு பேசுவது என்று இருந்தது.

"ஹலோ...." என்று எப்படியோ
பேசிவிட்டாள் கௌசிகா.

"கௌசி...." என்ற மதிக்கு தொண்டை
அடைத்தது.

இருவருக்குமே கண்களில் நீர்க்
கோர்த்தது. என்னதான் அன்னியமாக
இருந்து உறவானாலும் இருவரின் நட்பும்
அதற்கு ஒரு படி மேல்தான். இருவரும்
ஒருவருக்கொருவர் எதையுமே மறைத்தது இல்லை.. கௌசி விக்னேஷைக் காதலித்ததைத் தவிர.. கௌசி வீட்டைவிட்டு கிளம்பிய அன்று அந்தக் குடும்பத்தில் ஒருத்தியாகவே
கலங்கிப்போனாள் மதி. வியாஹா
அப்போது கருவில் இரண்டரை மாதம்.
குழந்தையை வயிற்றில் வைத்துக்
கொண்டு கௌசியைப் பற்றி நினைத்து.. தனிமையிலும் ஜீவாவிடம் வருந்திப் பேசியதால் என்னவோ வியாஹா சில சமயம் வாலுத்தனம் பண்ணும் போது அப்படியே கௌசியின் அச்சாக இருப்பாள். கௌசி இல்லை என்றாலும் வியாஹாவின் சேட்டையில்
எல்லோருக்கும் கௌசியின் நியாபகம்
வந்து வாட்டியது என்னமோ
உண்மைதான்.

"கௌசி கேட்டகுதா" - மதி இன்னும் அதே
குரலில்.

அதற்குள் படுக்கை அறைக்குள் நுழைந்து பெட்டில் உட்கார்ந்தவளுக்கு மதியின் குரல் கண்ணீரை வர வைத்தது.

"கேட்குது மதி.. எப்படி இருக்க?" -
கௌசிகா.

"நல்லாயிருக்கேன் கௌசி... நீ?" என்று
வினவினாள். அதற்குப் பிறகு
இருவருக்கும் என்ன பேசுவது என்று
தெரியவில்லை.

"எல்லோ... எல்லோரும் எப்படி
இருக்காங்க மதி..?" என்று திக்கித் திக்கிக் கேட்டாள் கௌசி.

"ம்ம்.. ஆல் குட்.. நீ இங்க வரன்னு ஜீவா
சொன்னாரு.. ரொம்ப சந்தோஷமா
இருக்கு கௌசி.. We missed you these
days" என்று பேசிய மதிக்கும் சரி கேட்டுக்
கொண்டிருந்த கௌசிக்கும் சரி
கண்களில் இருந்து நீர் வழிந்தது.

பிறகு இருவரும் சுமார் பத்து நிமிடம் தான் பேசினர். மதியிடம் பேசி முடித்துவிட்டு கண்ணைத் துடைத்துக் கொண்டு கௌசி பெட்ரூமில் இருந்து வெளியே வர, ஜீவா விக்னேஷுடன் உள்ளே நுழைந்தான்.

ஜீவாவிடம் போனைத் தந்தவள் "ஒரு half
an hour ஜீ.. சீக்கரம் டிபன் ரெடி
பண்ணிறேன்.." என்று கௌசிகா சொல்ல விக்னேஷிடம் இருந்து "உச்" என்று வந்தது.

கௌசிகாவிற்கு கோபம் வந்துவிட்டது.
"இப்போ உனக்கு என்ன பிரச்சினை..
என்னிடம் பேச புடிக்கலனா விட்டிடு டா..
சும்மா இந்த உச் கொட்றது எல்லாம்
வேண்டாம்" என்று கௌசிகா முறைத்தபடி பேச விக்னேஷ் எகிறினான்.

"இந்த டா போட்டு பேசறதுலாம் என்கிட்ட
வேண்டாம்-ன்னு சொல்லு ஜீ.. இவளுக்கு
எல்லாம் எதற்கு இவ்வளவு கோபம்
வருகிறது" என்று எகத்தாளமாகக்
கேட்டான். ஜீவாவும் கௌசிகாவும்
புரியாமல் நிற்க விக்னேஷ் "ஓடி
வந்தவளுக்கு கோபம் வேறு" என்று
கோபமாக அழுத்தமானக் குரலில்
சொன்னான்.

கௌசிகா பொறுமையை இழந்தாள். "ஜீ... போதும் அவன நிறுத்த சொல்லு.." என்று கௌசிகா குரலை உயர்த்த
"உண்மையைச் சொன்னால் கோபம் வேற வருதா?" என்றான் விக்னேஷ் விடாமல்.

"எல்லாம் மாமாவிற்காகப் பார்க்க
வேண்டியதாக இருக்கிறது" என்று
விக்னேஷ் முணுமுணுக்க கௌசிக்கு
அழுகை வந்துவிடுவது போல இருந்தது.
இவனுக்கு ஏன் நம் மேல் இவ்வளவு
கோபம்? இவனிற்கு நல்லது தானே
செய்துவிட்டு வந்தேன்? ஏன் இப்படி
வெறுப்பாகவே பார்க்கிறான்? குத்தல்
பேச்சுகள் வேறு.. அவள் பார்த்த
விக்னேஷ் இவன் அல்லவே.. இப்போது
ஆளே வேறு மாதிரித் தெரிகிறானே..
பேச்சும் வெறுப்பின் அலைகளாக
வருகின்றன.. என்று பல எண்ணங்கள்
கௌசிகாவிற்கு.

"இவ்வளவு வெறுப்பில் இருப்பவன்
என்னை ஏன் கூட்டிப்போக வந்தாய்?
ஜீவாவை மட்டும் அனுப்பி வைத்திருக்க
வேண்டியதுதானே? உன்னை யார் வர
சொன்னது " என்று அழுகையை
அடக்கியபடி கண்ணீர் வெளியே வராமல் சிரமப்பட்டு சிவந்த விழிகளுடன் கௌசிகா கேட்டாள்.

"நானாக ஒன்றும் வரவில்லை.. அப்படி
ஏதாவது தேவையில்லாத கற்பனையை
ஏற்றி வைத்துக் கொள்ளாதே.. இதோ
இவனிலிருந்து எல்லோரும் என்கிட்ட
கேட்டாங்க.. அதுவும் இல்லாமல்
மாமாவிற்காக மட்டும் தான் வந்தேன்.
இல்லையென்றால் அப்படியே
தொலையட்டும் என்று விட்டிருப்பேன்"
என்று விக்னேஷ் தன் நாக்கை தேள்
போல வைத்துக் கொட்டினான்
கௌசிகாவை.

அவ்வளவு தான் கௌசிகாவிற்கு
கண்களில் இருந்து கண்ணீர் பொங்கி
வர சமையல் அறைக்குள் புகுந்து
விட்டாள். ஜீவா விக்னேஷின் கையை
பிடித்து இழுத்துக் கொண்டு வீட்டின்
பின்னால் கூட்டிச் சென்றான்.

"என்னடா விக்கி.. என்னாச்சு உனக்கு...
ஏன் இப்படி பேசற.. எல்லோருக்கும் தான்
அவள் மேல் கோபம் இருக்கு.. ஆனால்
என்ன இருந்தாலும் அவ நம்ம கூட
வளர்ந்தவ டா.. அவ எவ்ளோ பெரியவ
ஆனாலும் நம்ம கௌசி தான் விக்கி..
இப்படி திட்டற அவளை" என்று
கடுமையானக் குரலில் கேட்டவன்
"அதுவும் இல்லாம நீ ஏன் இப்படி பேசற..
அவ உனக்கு அப்படி என்ன பண்ணிட்டா
சொல்லு.. எனக்கு தெரிஞ்சு அவ
வரும்போதும் கூட உனக்கு நல்லது
பண்ணிட்டு தான் வந்தா.. ஆனா உன்
விதி அதில் வேறு மாதிரி இருந்துவிட்டது. அதுக்கு இவ மேல கோபப்பட்டு என்ன பண்ண முடியும்" என்று ஜீவா பேசப்பேச விக்னேஷின் முகம் கறுத்தது. அதுவும் உன் விதி விளையாடிவிட்டது என்று சொல்லும் போது அந்தக் கருமம் வேறு கண் முன்னாடி நிழலாடியது.

"அவ அழறதைப் பார்த்தா பாவமா இருக்கு டா.. அதான் கொஞ்சம் கத்திப் பேசிட்டேன்.. ஸாரிடா விக்கி" என்றுவிட்டு ஜீவா உள்ளே செல்லத் திரும்பினான்.

"ஜீ..." என்று அழைத்தான் விக்னேஷ்.
"ஸாரிடா.." என்ற விக்னேஷிற்கு தன்
போக்கு அவனுக்கே புரியவில்லை.

"சரி வாடா.. உள்ளே போலாம்" - ஜீவா.

"நீ போடா நான் வரேன்" - என்றவன்
அப்படியே அங்கு தண்ணீர் தொட்டியின்
திண்டில் ஏறி அமர்ந்தான்.

விக்னேஷின் பேச்சுக்கள் தாங்காமல்
சமையல் அறைக்குள் நுழைந்தவள்
கண்ணீர் விட்டபடியே சமையலை செய்து கொண்டு இருந்தாள். அவன் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் மனதில் குத்தியது கௌசிகாவிற்கு. ஏற்கனவே தன்னால் தான் தந்தைக்கு இப்படி என்ற குற்ற உணர்வில் இருந்தவள் விக்னேஷ் பேசிய வார்த்தைகள் வேறு மனதை அறுப்பது போல இருந்தது.

தன்னிடம் எப்படி இருந்தவன்.. இப்போது
அதில் ஒரு சதவீதம் கூட இல்லையே..
"ஓடி வந்தவள்" என்று அவன் அழுத்தமும்
வெறுப்புமாக குற்றம் சாட்டும்
பார்வையில் சொன்னது கண் முன்
நின்றது.

"நான் எதற்காக வீட்டை விட்டு வெளியே
வந்தேன் என்று தெரியாமல் இப்படி
என்னை வதைக்கிறானே?" என்று
நினைத்துக் கண்ணீர் விட்டவள் ஜீவா
உள்ளே நுழைவதைக் கண்டு கண்களை
அவசரமாகத் துடைத்தாள்.

"இங்க வேர்க்குது பாரு ஜீ.. நீ வேணும்னா ஹால்-ல உட்காரு.." என்றாள் கரகரத்த குரலுடன் கௌசிகா.

"........." - ஜீவா.

"பசிக்குதா ஜீ... இன்னும் ஒரு 15 மினிட்ஸ்
தான்.." என்று பம்பரமாய்ச் சுற்றி வேலை செய்தவளைப் பார்க்க ஜீவாவிற்கு
புதியாய் இருந்தது.

"இதே பழைய கௌசியாய்
இருந்திருந்தால் அவனைப் போட்டு
புரட்டியிருப்பாள்.. ஆனால் இன்று அவன்
பேசியதற்கு உட்கார்ந்து அழுகிறாளே..
விதி இப்படி மாற்றிவிடுமா ஒரு
பெண்ணை?" என்று கௌசியைப் பற்றி
யோசித்துக் கொண்டிருந்தவன் இப்போது விக்னேஷைப் பற்றி சிந்தித்தான்.

"அப்படி இவள் மீது என்னதான் கோபம்
அவனுக்கு.. ஏன் இவ்வளவு வெறுப்பு..
வம்பிற்கு இழுத்து சண்டை செய்வானே
தவிர அவ்வளவு சீக்கிரம் அவனும்
திட்டமாட்டன் யாரையும் அவளைத்
திட்டவும் விடமாட்டான். அப்படி
இருந்தவனுக்கு இப்போ என்ன?" என்று
சமையல் அறையின் சுவற்றில்
சாய்ந்து மேலே பார்த்தபடியே யோசித்துக் கொண்டிருந்தான்.

"ஜீ சமையல் ஆச்சு... போய் கையைக்
கழுவிட்டு வா.." என்று அடுப்பில் இருந்த
வடச்சட்டியை எடுத்தபடியே கௌசி
சொல்ல "ம்ம்" என்றான் ஜீவா.

"அப்படியே அவனையும் வரச்சொல்லு" -
என்று சிரத்தை இல்லாதக் குரலில்
சொன்னாள் கௌசி.

வெளியே வந்தவன் தொட்டியின் திண்டில் காலைத் தொங்கப் போட்டு இரு பக்கமும் கையை ஊன்றி புருவ முடிச்சிடன் உட்கார்ந்த விக்னேஷை அழைத்துக் கொண்டு உள்ளே வந்தான்.

உள்ளே இருவரும் நுழைய கௌசிகா
மூவருக்கும் தட்டில் சேமியாவையும் இட்லி உப்புமாவையும் வைத்துக்
கொண்டிருந்தாள். வந்து அமைதியாக
அமர்ந்த இருவருக்கும் தட்டில் தேங்காய்
சட்னியை வைத்து முடிக்க மூவரும் ஒரு
பேச்சு பேசாமல் உண்டு முடித்தனர்.

சாப்பிட்டுவிட்டு எழுந்த கௌசி
பாத்திரங்களை கழுவ ஆரம்பித்தாள்.
"கௌசி எவ்ளோ வேலை செய்வ.. குடு
நான் செய்றேன்" என்று கையில் சோப்பு
நுரையுடன் இருந்த நாரை வாங்க
வந்தான் ஜீவா.

"ஏஏஏஏ.. நோ.." என்று கையை இழுத்துக்
கொண்டவள் "எல்லாம் டெய்லியும் நான்
செய்றது தான் ஜீ.. நீ பேசாமப் போய்
ரெஸ்ட் எடு.. நேத்து பஸ்-ல சரியா
தூங்கிருக்க மாட்ட நீ.. நாளைக்கு
வேண்டுமானால் பேக்கிங்-க்கு ஹெல்ப்
பண்ணு" என்று பாத்திரத்தை
கழுவியபடியே சொன்னாள் கௌசிகா.

"நல்லாப் பேசக் கத்துக்கிட்டே கௌசி.."
என்று கிண்டல் செய்தான் ஜீவா.

பின் வேலையை முடித்துக் கொண்டு
வந்தவள் ஜீவாவிற்கும் விக்னேஷிற்கும்
பாயை விரித்தாள் கௌசிகா. பாயை
விரித்து தலையணை போர்வை
எல்லாவற்றையும் எடுத்துப் போட்டவள்
ஜீவாவிடம் திரும்பி "ஜீ... எல்லாம்
போட்டுட்டேன்.. எக்ஸ்ட்ரா ஃபேன்
வேணும்னா டேபிள் ஃபேன்
போட்டுக்கங்க.. தண்ணீர் இங்கையே ஒரு ஜக்குல வச்சுட்டேன்.." என்றவள்
விக்னேஷை ஓரக்கண்ணால்
பார்த்துவிட்டு "அப்புறம் நைட்
வெளியிலகீது போயிராதீங்க.. பனி
ஓவரா இருக்கும்.." என்றுவிட்டு தனக்கும்
ஒரு தண்ணீர் பாட்டிலை எடுத்துக்
கொண்டு அறைக்குள் புகுந்துவிட்டாள்.

உள்ளே வந்தவள் சத்தம் வராதவாறு
அவளுடைய டைரி இருந்த மஞ்சள்
ட்ராலியை ஒருமுறை ஓப்பன் செய்து
பார்த்தாள். உள்ளே டைரியையும் சில
சார்ட் பேப்பரையும் பார்த்தவள் அதன்
மேல் பத்திரமாகக் காட்டன் துணியைப்
போட்டு மூடியவள் அந்த ட்ராலியை
எடுத்துத் தனியாக வைத்தாள்.

வந்து பெட்டில் படுத்தவளுக்கு அசதியாக இருந்தாலும் தூக்கம் வரவில்லை. "இதற்குத் தானா இந்த இரண்டு நாட்களாக அடித்துக் கொண்டே
இருந்தாய்?" என்று இதயத்தின் மேல் கை வைத்துக் கேட்டாள்.

வெளியில் படுத்திருந்த விக்னேஷ்,
ஜீவாவிற்கும் தூக்கம் வரவில்லை.
அவர்களுக்கும் பல சிந்தனைகள். கௌசி அவ்வளவு சீக்கிரம் அழாத பெண்.. இப்படி சண்டை வருவதற்கெல்லாம் அழுகிறாளே.." என்ன நினைத்த ஜீவாவிற்கு "பின் இவன் பேசியதற்கு யாராக இருந்தாலும் அழத்தானே செய்வார்கள்" என்று தன் மனதில் எழுந்த கேள்விக்கு அவனே பதில் சொல்லிக் கொண்டு இருந்தான்.

கழுத்தைத் திருப்பி விக்னேஷைப் பார்க்க அவனோ விட்டத்தை வெறித்துக்
கொண்டு இருந்தான். "விக்கி..." என்று
அழைத்தான்.

"ம்ம்" - விக்னேஷ்.

"தூங்கிட்டயா?" - ஜீவா.

"இல்ல.. சொல்லு" - விக்னேஷ்
விட்டத்தை வெறித்த படியே.

"நீயும் அப்படியே ஒரு கல்யாணத்தைப்
பண்ணிக்கலாம்ல டா" என்றவன் "உன்
பிரச்சினையும் முடிஞ்சா எல்லாரும்
ஹாப்பி ஆயிருவாங்க டா" என்றான்
ஜீவா விக்னேஷிற்கு மட்டும் கேட்கும்
குரலில்.

"இப்போ உன்ன அறைர அறைல உள்ள
இருக்கவ எந்திரிச்சு வெளில வந்திருவா-
ன்னு எனக்கு தோணுது டா ஜீ" -
விக்னேஷ்.

"போங்கடா.. எப்படியோ போங்க..
எனக்கென்ன.. சொன்னேன் பாரு வந்து"
என்று முதுகைக் காட்டித் திரும்பிப் படுக்க "ஏய் என்ன பிகர் மாதிரி திருப்பிக்கறே" என நக்கலாய்க் கேட்டு விக்னேஷ் சிரிக்க ஜீவா "பாரு கல்யாணமே ஆகாம இருந்து கடைசில என்ன பாத்தே நீ பிகர்-ன்னு சொல்ற.. நீ எதுக்கு தள்ளியே படுறா சாமி" என்று ஜீவா சொல்ல விக்னேஷ் அவன் முதுகிலேயே உதைத்தான்.

அன்று இரவு மூவருக்குமே அவரவர்
பழைய நினைவுகள் நியாபகம் வந்தன.
அந்த இரவில்... இரவில் உலவும்
நிலவைப் போல அவரவர் நினைவுகளில் உலவ ஆரம்பித்தனர் மூவரும்.
 

writer

Saha Writer
Team
Messages
50
Reaction score
26
Points
8
அத்தியாயம்-9

ஜீவாவும் மதியும் கல்யாணம் முடிந்த
கையோடு தேனிலவிற்கு ஏழு நாட்கள்
கிளம்ப எல்லோரும் அவரவர் வேலையில் மூழ்கினர்.

ஹனிமூனிற்குச் சென்ற ஜீவாவும் மதியும் அவர்கள் வேலையில் மூழ்கினர்
(ஹீஹீஹீ). சொல்லப்போனால்
வெளியில் சுற்றியதே கம்மி தான்.. மிச்ச
நேரம் போக அறையிலேயே காதல்
வண்டுகளாய் இருந்தனர்.

"ஜீவா..." - மதி.

"ம்ம்" - அவளின் கூந்தலில் விளையாடிய படியே ஜீவா.

"உங்கிட்ட ஒன்னு சொல்லணும்.." - மதி.

"ம்ம்" - அவன் வேலையில் அவன்
மும்முரமாக இருந்தான்.

"இப்படி பண்ணிட்டு இருந்தா நான் எப்படி சொல்ல முடியும்.. இரண்டு நிமிடம் கை காலை வச்சிட்டு சும்மா இருக்க
முடியாதா?" என்று அவனிடம் இருந்து
தள்ளி உட்கார்ந்தபடிக் கேட்டாள்.

"ஏய்ய்ய்ய்... ஹனிமூன் வந்துட்டு இன்னும் பேசனும்-னு சொல்றியே டி.. லவ் பண்ணப்போ பேசுனது எல்லாம் பத்தாதா .. அநியாயம் பண்ணாதேடி" என்று முகத்தைப் பாவமாக வைத்துக்
கெஞ்சினான் ஜீவா.

சிரிப்பை அடக்கிய மதி "சரிசரி இரண்டே
நிமிடம் ஜீ... ப்ளீஸ்" என்று உதட்டைப்
பிதுக்கிக் கேட்டாள்.

"சரி... சொல்லு.. சீக்கிரம்" என்று
பரந்தான் ஜீவா.

"நம்ம கௌசியை நோட் பண்ணீங்களா
இந்த ஒரு மாசமா?" என்று கேட்டாள் மதி.

"ஏன் அவளுக்கு என்ன டி" என்று புருவ
முடிச்சுடன் ஜீவா எதிர்க்கேள்வி கேட்டான்.

"அவ ஒரு மாதிரி இருக்கா ஜீவா..
கொஞ்சம் டல்லா.. நான் அவள ஒன் மன்த்-ஆ நோட் பண்ணிட்டு தான் இருக்கேன்" என்று சொன்ன மதியின் முகமுமே குழப்பத்தில் இருந்தது.

"அது நம்மலாம் கூட இல்லைல.. அதான்
அப்படி இருந்திருப்பா.." என்றான்
அவளின் விரல்களைப் பற்றியபடி.

"இல்ல ஜீவா.. அவ அந்த அளவிற்கு
சில்லி கேரக்டர் இல்ல.. அவளுக்குத்
தெரியாதா நமக்கு எங்கேஜ்மேன்ட்
ஆயிருக்கு அதனால பிஸியா இருப்போம்-ன்னு" என்றாள்.

"சரி நீ என்ன தான் சொல்ல வர.." என்று
சற்று பொறுமை இழந்தபடிக் கேட்டான்
ஜீவா.

"எனக்கு என்னமோ கௌசி யாரையோ
லவ் பண்றானு தோணுது ஜீவா" என்றுத்
தன் மனதில் நினைத்ததை மறைக்காமல் ஜீவாவிடம் சொன்னாள் மதி.

இந்த சந்தேகம் ரொம்ப நாளாக இருந்த
ஒன்று மதிக்கு.. எதையும் மறைக்கும்
பழக்கம் இல்லாத கௌசிகா.. தான்
எழுதும் கவிதையை மட்டும் மறைப்பாள்
அனைவரிடமும்.. எவ்வளவு கெஞ்சிக்
கேட்டாலும் காண்பிக்கவே மாட்டாள்.
அப்படி இருக்க ஒருநாள் மதி அவள் ஒரு
துண்டுப் பேப்பரில் எழுதி வைத்த ஒரு
கவிதையைப் படித்துவிட்டாள்.
அதிலிருந்து இருந்த சந்தேகம் தான்.
அப்போதே சொல்லியிருந்தால்
"பொசசிவ்னால கௌசிகாவைப்
பிடிக்காமல் தான் இப்படி சொல்லுகிறாள்" என்று ஜீவா எண்ணியிருப்பான் என்று தான் கல்யாணத்திற்குப் பிறகு அதுவும்
கௌசி மிகவும் டல்லாகத் திரியவே
ஜீவாவிடம் கொண்டு சென்றாள்.

"எதை வச்சு சொல்ற அவ லவ் பண்றானு" என்று ஜீவா கேட்க "அது.. அது.. எனக்கு அவ ஆக்டிவிட்டீஸ் பாத்தாலே தெரியுது ஜீவா" என்றாள்.. அவனிடம் அந்தக் கவிதையைப் பற்றி மூச்சு விடவில்லை.

"அவ அப்படி எல்லாம் இருந்திருந்தால்
எங்களிடம் சொல்லியிருப்பாள் டி..
எதையும் மறைக்க மாட்டாள்" என்றான்
அழுத்தமானக் குரலில்.

"ஆனால் நீங்களும் விக்னேஷும் மட்டும்
சிலதை மறைக்கறீர்கள் இல்லை?" என்று பட்டென்று கேட்டுவிட்டாள்.

"எதை சொல்ற நீ" - ஜீவா அவள்
கண்களைப் பார்க்காமல் தலையணையை கையில் எடுத்தபடிக்
கேட்டான்.

"போதும் ஜீவா... எனக்கு எல்லாம்
தெரியும்.. கௌசிக்குத் தெரிந்தால் எப்படி வருத்தப்படுவாள் தெரியுமா? நானே ஒரு மாதிரி தான் ஆயிட்டேன்" என்று எண்ணையில் போட்ட கடுகு போலப் வெடித்தாள் மதி.

"மறைக்கனும் இல்ல மதி.. இப்போ உங்க
எல்லாருக்கும் சொல்ல வேணாம்னு
இருந்தோம்" என்றான் ஜீவா.

"ஊருக்குப் போன அப்புறம் கௌசிக்கு
ஆவது இப்போது சொல்லிருங்க"
என்றாள்.

"சரிடி.. "என்றான் ஜீவா தன் மனைவியை
அணைத்தபடி.

"இதுல மட்டும் விவரமா இருங்க..." என்று
சிரித்தவள் தன் கணவனின் அணைப்பை ஏற்று அவனுடன் இணைந்தாள்.

கல்யாணத்திற்காக கௌசி எடுத்த
லீவோடு சேர்த்து மதியின் வேலையும்
அவள் தலையிலேயே விழுந்தது. மாலை
வீடு வந்து சேரவே ஏழு மணி ஆனது.
அலுப்பின் காரணமால் அவளால்
விக்னேஷிடம் பேசக் கூட முடியவில்லை.. பேசலாம் என்று நினைத்தவள் அவனிற்கும் லீவ் எடுத்திருந்ததால் அதே வொர்க் ஸ்டெரஸ் இருக்கும் என்று விட்டுவிட்டாள்.

அன்று காலை ஆபிஸிற்கு கிளம்பிக்
கொண்டு இருந்தவள் போன் அடிக்க
எடுத்து காதில் வைத்து "ஹலோ" என்று
வாட்சைக் கட்டியபடியே பேசினாள்
கௌசி.

"ஐ லவ் யூ" என்று ஒருவனின் குரல்
கேட்டது.. கூடவே ஒரு கேவலமான
சிரிப்புடன்.

"எக்ஸ்க்யூஸ் மீ" - கௌசிகா.

"ஐ லவ் யூ பேபி" - என்றவன்
போனிலேயே கௌசிக்கு முத்தத்தைத்
தந்தான்.

அவன் செய்கை அருவெறுப்பைத் தர
"இனி போன் பண்ணினா செருப்பால
அடிப்பேன் டா நாயே" என்று கோபமாகச்
சொன்னவள் போனைக் கட் செய்து அந்த நம்பரை ப்ளாக் செய்தாள்.

வழக்கம் போல ஆபிஸிற்குச்
சென்றவளுக்கு ஏற்கனவே நிறைய
வேலைகளை முடித்து வைத்திருந்ததால்
கொஞ்சம் வேலை அன்று கம்மியாக
இருந்தது. ரொம்பவே போர் அடிக்க
இயந்திரமாக வேலைகளைச் செய்து
கொண்டிருந்தாள். ஏதோ யோசனையில்
கைகள் தானாக வேலை செய்ய
பதினொரு மணி அளவில் மதியிடம்
இருந்து கால் வந்தது கௌசிகாவிற்கு.

போனை எடுத்துக் காதில் வைத்தவள்
"அப்புறம் புதுப் பொண்ணே.. எப்படி
இருக்க? ஒரு வாரமா போனே இல்ல..
ஒரே ஜாலி தான் போல" என்று
கேலியைக் கௌசி ஆரம்பித்தாள்.

"கலாய்க்காத கௌசி.. ப்ளீஸ்" என்று
மதியின் வெட்கக் குரல் வந்தது.

"ஆஹாஹா.. வெட்கம்லா வருதே.. உன்ன வெட்கப்பட வச்ச ஜீ மாமா கிட்ட போனைக் கொடு" என்றாள் கௌசி.

"ம்ம்" என்றவள் இரண்டு நொடிக்குப்
பிறகு "கௌசி.. அவரு உன்கிட்ட பேச
மாட்டாராம்.. ஆள விடுறா சாமின்னு
ஓடிட்டார்" என்று சிரித்தாள் மதி.

"இருக்கட்டும் இருக்கட்டும்" என்ற கௌசி.. "எப்போ சென்னை ரிடர்ன் மதி?" என்று கேட்டாள்.

"நாங்க வந்துட்டோம் கௌசி.. இன்னிக்கு
மார்னிங் 7க்கு.." என்றாள் மதி.

"ஹம்ம்.. அப்போ நான் ஈவ்னிங் மீட்
பண்ணலாமா? உங்களோட அவர்கிட்ட
கேட்டு சொல்லுங்க" என்று கௌசிகா
மறுபடியும் ஆரம்பித்தாள்.

"உகூம்... வந்தால் நீ கலாய்ப்ப" என்று மதி சிணுங்க "அதுக்குன்னு நான் கிண்டல் பண்ண மாட்டேன் வா-ன்னு லாம் சொல்ல மாட்டேன்.. நீங்க வரீங்க.. இல்லைனா நான் அங்க வந்துட்டு நைட் அங்கையே உன் கூடையே இருந்துப்பேன்" என்று கௌசி மிரட்டினாள்.

"எங்க கௌசி மீட் பண்ணலாம்?" என்று
பவ்யமானக் குரல் வந்தது மதியிடம்
இருந்து.

"ஹாஹாஹா.. தட்ஸ் மை கைய்ஸ்" என்று கிளுகிளுத்தவள் "ஈவ்னிங் 5"00 க்ளாக்.. பெசன்ட் நகர் பீச் கே.எப்.சி" என்றாள் கௌசிகா.

"ஓகே டன்" என்று மதி சொல்ல இருவரும்
போனை வைத்தனர்.

போன் காலை கட் செய்த கௌசிகா
விக்னேஷிற்கு போனைப் போட்டாள். ரிங் போக அவன் கட் செய்தான். மீண்டும் இரு முறை முயற்சி செய்ய கட் செய்து விட்டான். பிறகு லன்ச் டைமில் கால் செய்ய போனை எடுத்தவன் "என்னடி" என்று எரிச்சலானக் குரலில் பேசினான்.

"இப்போ எதுக்கு சலிச்சுக்கற.. இப்போ
உனக்கு லன்ச் டைம் தானே?" என்று
கௌசிகா கேட்க விக்னேஷ்
தடுமாறினான்.

"சரி என்ன விஷயம் சொல்லு.." என்று
அவசர அவசரமாகப் பேசினான்.

"ஈவ்னிங் பெஸ்ஸி பீச் பக்கத்துல இருக்க
கே.எப்.சி வந்திடு.. மதியும் ஜீயும்
வந்தாச்சு.. எல்லோரும் மீட் பண்ணலாம்"
என்றவளிடம் "எப்போ பாரு சுத்திக்கிட்டே
இருப்பாயா டி.. வீட்டுல அடக்க ஒடுக்கமா
இருக்க மாட்டியா?" என்று எரிச்சல்
பட்டான்.

"அசிங்கமா திட்டிடுவேன்டா உன்ன..
பாத்து பத்து நாள் கிட்ட ஆகப் போது..
பாக்கலாம்னு கூப்ட சலிச்சுகற.. நீ
ஒன்னும் வர வேண்டாம்.. நாங்க மூன்று
பேர் மட்டும் பாத்துக்கறோம்" போனைக்
கட் செய்தவள் அரை சாப்பாட்டாலேயே
எழுந்து விட்டாள்.

கையைக் கழுவிக்கொண்டு வந்து
போனைப் பார்க்க அதற்குள் மூன்று
மிஸ்டு கால் வந்திருந்தது விக்னேஷிடம்
இருந்து. அவனிற்கு திருப்பி போனைப்
போட "ஹலோ" என்றான் விக்னேஷ்.

"ம்ம்" - கௌசிகா.

"கோவமா டி" - விக்னேஷ்
யோசனையானக் குரலில்.

"பின்ன வரதா.. ஏதோ நான் எப்போமே
ஊர் சுத்தற மாதிரி பேசற.. அதுவும் நான்
வெளில சுத்தறதே உங்க கூடத்தான்..
நான் என்னமோ டெய்லியும் சுத்தற
மாதிரி பேசற" என்று தன் மனதில்
இருந்ததை அப்படியே சொல்லி முடித்தாள்.

"ஸாரி டி.. கொஞ்சம் டென்சன் அதான்" -
விக்னேஷ்.

"ம்ம்" - கௌசிகா.

"சரி நான் ஈவ்னிங் வரேன்.. உனக்கு ஒரு
சர்ப்ரைஸ்-உம் வச்சிருக்கேன்" என்று
கௌசியின் ஆர்வத்தைத் தூண்டினான்
விக்னேஷ்.

"என்ன சர்ப்ரைஸ் டா விக்கா" என்று
ஆர்வமானக் குரலில் கேட்டாள்.

"அது நேர்ல தெரிஞ்சுப்ப நீ.." என்றவன்
"பட் கௌசி நோ மட்டும் சொல்லிடாத டி"
என்றான் கெஞ்சும் குரலில்.

"........" - கௌசிக்குப் பேசவே வரவில்லை.. ஏனோ 1000வாட்ஸ் மின்சாரம் தாக்கியது போல உணர்ந்தாள்.

"கௌசி இருக்கியா?" - விக்னேஷின்
குரல்.

"ம்ம்.. என்னன்னு மட்டும் சொல்லேன்" -
என்று அவளுக்கே எட்டாதக் குரலில்
கேட்டாள்.

"நம்ம கல்யாணத்தைப் பத்திதான் டி" -
என்று விக்னேஷ் சொல்ல கௌசிக்கு
மயக்கம் போட்டு விழாதக் குறை தான்.
"என்னடி பேசவே மாட்டிற" என்று
விக்னேஷின் குரல் வந்தது.

"இருக்கேன்டா.. சரி ஈவ்னிங் பேசலாம்"
என்று போனை அணைத்துவிட்டாள்.

போனை அணைத்த கௌசிக்கு தன்
இதயத் துடிப்பை நன்றாகவே உணர
முடிந்தது.. தன்னால் அரும்பும் சிரிப்பை
அடக்கவே முடியவில்லை அவளால்.
இதமான காற்றில் பறக்கும் பஞ்சைப்
போல அவளின் இதயம் பறந்து
கொண்டிருந்தது.

சந்தோஷத்திலும் ஆவலிலும்
வேலைகளை எல்லாம் சீக்கிரமாக
முடித்தவள் மணியைப் பார்த்தாள்.. மணி
மூன்றரை தான் ஆகி இருந்தது. பேசாமல் இப்போதே கிளம்பிப் போய்
மதியிடமாவது பேசிக் கொண்டு
இருப்போமா? என்று நினைத்து கொண்டு கிளம்பியவள் அவளின் போன் என்னை எடு என்று சிணுங்க போனை எடுத்துப் பார்த்தாள்.. வரதராஜன் தான் கூப்பிட்டிருந்தார்.

போனை எடுத்துக் காதில் வைத்தவள்
"சொல்லுங்க அப்பா" என்றாள்.

"பாப்பா எப்போது வீட்டுக்கு வருவே?"
எனக் கேட்டார் வரதராஜன்.

"ஏம்ப்பா... வேலை முடிஞ்சுச்சு.. எதாவது
வாங்கிட்டு வரணுமா?" என்றாள் தன்
ஹேண்ட்பாக்கில் எல்லாவற்றையும்
எடுத்து வைத்தபடி.

"இல்லமா.. ஒரு முக்கியமான விஷயம்..
வீட்டிற்கு வரையா?" என்றார் அவர்.
"இப்போவேவா அப்பா?" என்றாள் புருவ
முடிச்சுடன்.

"ஆமாண்டா" - வரதராஜன் சற்று
அழுத்தமாக.

"சரி வரேன் பா" என்று போனை
அணைத்தவள் தன் வேலைகளை
எல்லாம் டீம் லீடரிடம் காண்பித்து விட்டு
ஹேண்ட்பாக்கை எடுத்துக் கொண்டு
கிளம்பினாள்.

போகும் வழியிலேயே மனதிற்குள்
கணக்குப் போட்டபடி கௌசிகா
சென்றாள். அப்பாவிடம் பேசிவிட்டுக்
கிளம்பினால் ஐந்து ஐந்தேகால்-க்கு
எல்லாம் போய்விடலாம் என்று
நினைத்தபடியே வீடு வந்து சேர்ந்தாள்.

வீடு வந்து சேர்ந்தவள் ஸ்கூட்டியை
நிறுத்திவிட்டு உள்ளே நுழைய "ஏன்
பாப்பா ஸ்கூட்டியை உள்ள
நிறுத்தலையா?" என்று வெளியில்
நிறுத்தியிருந்த ஸ்கூட்டியைப்
பார்த்தபடிக் கேட்டார் வரதராஜன்.

"இல்லப்பா.. ஈவ்னிங் மதி, ஜீ, விக்கா
எல்லாரையும் பாக்க போகணும்.. நீங்க
கூப்டிங்களா.. அதான் வந்தேன்" என்று
பதில் அளித்தவள் ஃபேனிற்கு அடியில்
சோபாவில் வந்து உட்கார்ந்தாள்.

அருகில் வந்து அமர்ந்த வரதராஜன்
"பாப்பா உன்கிட்ட ஒன்னு சொல்லனும்
டா" என்று அவளை பார்த்துச்
சொன்னவரின் கண்களில் ஏதோ ஆசை.

"சொல்லுங்கப்பா.. அதுக்குத்தானே
வந்தேன்.. என்ன விஷயம்?" என்று
அவரின் கைகளைப் பற்றியபடிச்
சொன்னாள் கௌசி.

"உனக்குக் கல்யாணம் பண்ணலாம்-ன்னு முடிவு பண்ணிட்டேன் டா.. நம்ம பேமிலி ப்ரண்ட் தான்.. நம்ம ஜீவா கல்யாணத்தில் பார்த்து கல்யாணம் செய்தால் உன்னை தான் செய்வேன் என்று இருக்கிறானாம் அந்தப் பையன்" என்றார் வரதராஜன் மெல்ல மெல்ல.

"முடிவே செஞ்சுட்டீங்களா அப்பா?" என்று
அவரைப் பற்றிய இருந்த கைகளை
எடுத்தபடி கேட்டாள் கௌசிகா. அவளின்
நினைப்பு எல்லாம் இப்போது மதியம்
விக்காவுடன் பேசியதில் நின்றது.

"என்ன கௌசிமா... உன்னைக்
கேட்காமல் எப்படி முடிவு செய்வேன்
சொல்லு.. உன்னிடம் பேசிவிட்டு சொல்கிறேன் என்று சொல்லிவிட்டேன்"
என்று மகள் தன்னைத் தவறாகப்
புரிந்துகொண்டாளோ சற்று
வருத்தமானக் குரலில் கேட்க அப்போது
தான் கௌசிக்கு மூச்சு விட முடிந்தது.

"......." - எதுவும் பேசாமல்
உட்கார்ந்திருந்தாள்.

"உனக்கு விருப்பம் இல்லையா மா?"
என்று கேட்டார் வரதராஜன்.

"நான் நைட் சொல்றனே ப்பா.
ப்ளீஸ்" என்று அவரின் முகத்தை நேராகப் பார்த்து கண்களை சுருக்கிக் கேட்டாள் கௌசிகா.

"ப்ளீஸ் லாம் எதுக்கு பாப்பா அப்பாகிட்டா.. நான் உன்னைக் கட்டாயப்படுத்த மாட்டேன். ஆனால் நீ உனக்கு நல்ல முடிவை தான் எடுப்ப-ன்னு எனக்குத் தெரியும்" என்றார் கௌசியின் தலையை வருடியபடி.

"ம்ம் ப்பா" என்று புன்னகை சிந்தியவள்
"சரிப்பா நான் கிளம்பறேன்.. அவர்களைப் பார்த்துட்டு வரேன்" என்றபடி எழுந்தவள் ஸ்கூட்டியை நோக்கிச் சென்றாள்.

ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு பெசன்ட்நகர் பீச்சை நோக்கி வண்டியை
செலுத்தியவள் தன் யோசனைகளிலேயே இருந்தாள். இன்று விக்காவிடம் சொல்லிவிடலாம் அவனும் அதே யோசனையில் தான் இருக்கான் போல. அவன்கிட்டு இன்னிக்குப் பேசிட்டு இன்னிக்கே அப்பாக்கிட்ட சொல்லிடனும்" என்று நினைத்தவள் "எவனோ ஒருவன் என்னைத் தான் கல்யாணம் பண்ணுவேன் என்று சொன்னால் அவனைக் கல்யாணம் பண்ணுமா.. ஒரு பெண்ணின் சம்மதம் இல்லாமல் எப்படி நடக்கும்" என்று மனதிற்குள் அந்த முகம் தெரியாத ஒருவனை மனதினுள் திட்டிக் கொண்டு வந்தவள் கே.எப்.சி இல் வந்து வண்டியை நிறுத்தினாள்.

வண்டியை நிறுத்திப் பூட்டிவிட்டு உள்ளே
நுழைந்தவள் தன் கூட்டம் வந்திருக்கிறதா என்று பார்த்தாள். எல்லா டேபிளிலும் தேடியவள் கடைசியாக ஒரு மூலையில் இருந்த டேபிளில் ஜீவாவும் மதியும் உட்கார்ந்தது பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தாள். அவர்களின் முதுகு மட்டுமே தெரிந்தது.

"அட ராமா.. இதுக இன்னும் இந்தக்
கடலை போடறத நிறுத்தலையா" என்று
தலையில் அடித்தவள் அவர்களை
நோக்கிச் சென்றாள்.

அவர்களின் பின்னால் நின்றவள்
தொண்டையைச் செருமி "ம்கூம்.. நான்
ஒருத்தி வந்துட்டேன் டா.. நான் வந்தது
கூடத் தெரியாமல் நல்ல வருத்துட்டு
இருக்கீங்க" என்று கௌசி குரல்
கொடுக்க இருவரும் சுதாரித்து தங்கள்
உலகில் இருந்து வெளியே வந்தனர்.

"அப்புறம்... எங்கே அவன் இன்னும்
வரலையா?" என்று கேட்டபடி தன்
ஹேண்ட் பாக்கை கழற்றிவிட்டு மதியின்
அருகில் அமர்ந்தாள் கௌசிகா.

"அவன் வருவான் கௌசி.. நம்ம ஆர்டர்
பண்ணலாம்.. அவன் வந்து ஜாயின் பண்ணிப்பான்.." என்று ஜீவா சொல்ல
"ஹே.. என்னடா.. அவனும் வரட்டுமே"
என்று கௌசி சொல்ல மதி இடையில்
புகுந்தாள்.

"இல்ல கௌசி.. விக்னேஷ் வருவதற்கு 20 மினிட்ஸ் ஆகுமாம்.. நம்மல ஆர்டர்
பண்ண சொல்டாரு" என்று மதி சொல்ல
"ம்ம் சரி ஓகே" என்றவள் தனக்கு என்ன
வேண்டும் என்று சொன்னாள்.

மதியிடமும் என்ன வேண்டும் என்று
கேட்டுக்கொண்டு போனவன் ஆர்டர்
செய்துவிட்டு வந்து அமர்ந்தான். சரியாக
5 நிமிடத்திற்குப் பிறகு விக்கா
வந்துட்டான் என்று பாதி திரும்பிய
கழுத்தோடு ஜீவா entrance-ஐ பார்த்துச்
சொல்ல மதியும் திரும்பி விக்னேஷைப்
பார்த்தாள். கௌசிகா திரும்பவில்லை..
ஏனோ மதியம் பேசியதில் இருந்து
அவனைப் பார்க்க கூச்சமாக இருந்தது
கௌசிக்கு. அவன் வரட்டும் என்று
திரும்பாமல் உட்கார்ந்திருந்தாள்.

அவன் பக்கத்தில் வருவதை உணர
உணர ஏனோ புன்னகை தழுவியது
அவளது உதடுகளில். தலையைக்
குனிந்து கொண்டு அமர்ந்தவள்
விக்னேஷின் கால்களோடு இன்னொரு கால் வந்து எதிரில் விக்னேஷின்
பக்கத்தில் அமர்வதையும் கவனித்தாள்.

புருவ முடிச்சுடன் நிமிர்ந்து பார்த்த
கௌசிக்கு கண்கள் வெளியே
வந்துவிடுமோ என்ற அளவிற்கு விரிந்தது.காரணம் ஏழு வருடங்களுக்கு முன் பார்த்தவள் அவள் முன் அதுவும்
விக்காவின் பக்கத்தில் அமர்ந்திருந்தாள். ஏதோ நெருடலாக உணர்ந்தாள் கௌசிகா.

"இவங்க நான்சி தானே?" என்று
வெளியே வராத குரலில் கேட்டாள்
கௌசிகா.

ஆமாம் அது நான்சி தான். பள்ளியில்
கௌசிகாவிடம் விக்னேஷிற்கு காதல்
கடிதம் எழுதி தந்து வாங்கிக் கட்டியவள்.

"ஆமாம் கௌசி" - விக்னேஷ் நான்சியின்
கைகளைப் பற்றியபடி. கௌசிக்கு
அதைப் பார்க்கப் பார்க்க இதயத் துடிப்பு
தொட்டியில் இருந்து விழுந்த மீனைப்
போலத் துடித்தது.

கௌசியின் முகமாறுதலைக் கண்ட மதி
ஜீவாவை முறைத்து "நான்தான்
சொன்னேன்-ல" என்று முறைத்தாள்.
"வந்து கௌசி.. நம்ம விக்கியும்
நான்சியும் லவ் பண்றாங்க கொஞ்ச
நாளா.. உன்கிட்ட சொல்லத் தான்
கூட்டிட்டு வந்திருக்கான்" என்று ஜீவா
கௌசியிடம் உளறிக் கொட்ட கௌசிக்கு
தன் தலையில் யாரோ தன் தலையில்
சம்மட்டியால் அடித்துக் கீழே தள்ளியது
போல ஆனது.

கோபம்.. அழுகை என முகத்தில் எந்த வித அதிர்ச்சியும் காட்டாமல்
உட்கார்ந்திருந்தாள் கௌசிகா.
விக்னேஷ் நான்சியின் கையைப்
பிடித்தது வேறு அவளை குத்திக்
கிழித்தது."கௌசி..." என்று விக்னேஷ் கூப்பிட அதை உணராமல் உட்கார்ந்திருந்தாள் கௌசிகா.

மதி உலுக்க இயல்பிற்கு வந்தவள்..
"கௌசி உன்கிட்ட மறைக்கனும்-ன்னு
இல்லடி.. அப்புறம் சொல்லிக்கலாம்-ன்னு விட்டுட்டோம்.. உன்கிட்ட எதுவும் மறச்சது இல்லைதான்.. ஆனா.." என்று விக்னேஷ் பேசிக்கொண்டு இருக்க நான்சி நடுவில் புகுந்தாள் "சாரி கௌசிகா.. ஆக்சுவலி இவரு இன்னிக்குக் கூட வேண்டாம் என்று தான் சொன்னார்.. அப்புறம் இவரு
இன்னிக்கு என் ப்ளாட்-ல இருந்தப்போ
தான் உங்க அப்பா போன் பண்ணினார்.
உங்க கல்யாண விஷயம் பற்றிப் பேச.. அதனால் தான் எல்லோரின்
கல்யாணத்தைப் பற்றி பேசலாம்-ன்னு
இன்றே இவரிடம் சொல்லிட்டேன்" என்று
நான்சி விக்னேஷின் தோளில் கையைப்
வைத்தபடி சொல்ல கௌசிக்கு
"என்னுடன் ப்ளாட்டில் இருந்தான்" என்று
சொன்னது தான் காதில் நச்சூரம் போல
கேட்டுக்கொண்டே இருந்தது.

"அப்போ என்கிட்ட பொய் சொன்னையா
விக்கா.. இவளிற்காகவா என்னிடம்
எரிச்சலாகப் பேசினாய்" என்று
மனதினுள் நினைத்தவளுக்கு கண்ணீர்
வரவா என்று எட்டிப்பார்த்தது. மேலும்
நான்சி உரிமை உள்ளவள் போல
விக்னேஷின் தோளில் வைத்திருந்த கை கௌசிகாவைக் கொன்றது. இதைத்
தான் நம் கல்யாணம் என்று சேர்த்திச்
சொன்னாயா? என்று நினைத்தவளுக்கு
தான் எவ்வளவு பெரிய பைத்தியம் என்று தோன்றியது..

எழுந்து நின்றவள் "எனக்கு ஒரு
முக்கியமான வேலை இருக்கு..
மறந்துட்டே வந்துட்டேன்..நான்
கிளம்பறேன். நீங்க எல்லாரு என்ஜாய்
பண்ணுங்க நான் நெக்ஸ்ட் டைம் ஜாயின் பண்ணிக்கிறேன்" என்றுத் தன் ஹேண்ட் பாக்கை எடுத்தபடிச் சொல்லியவள் நான்சியுடன் சேர்த்து அனைவருக்கும் "பை" சொல்லிவிட்டுக் நடந்தாள்.

அவள் கடை என்ட்ரன்ஸ் வரைக்கும்
செல்வதைப் பார்த்த விக்னேஷிற்கு
அவள் முதுகு அழுகையில் குலுங்குவது
மட்டும் தெரிந்தது. அவள் பொய்
சொல்லிவிட்டுப் போகிறாள் என்றும்
தெரிந்தது. கௌசிகாவின் டீம் லீடர்
அங்கு முதலில் வேலையில் இருந்த
போது பழக்கமான விக்னேஷின் ப்ரண்ட்
தான். அவள் கிளம்பிவிட்டாளா என்று
கேட்டுக்கொண்டே நான்சி ப்ளாட்டில்
இருந்து கிளம்பினான்.

அதற்குள் ஆர்டர் செய்த உணவு வர
அவள் சாப்பிடாமல் செல்கிறாளே என்று
இருந்தது. பசி தாங்காதவள் கௌசிகா.
எழுந்து மூவரையும் பார்த்து "நீங்க
உட்காருங்க நான் டூ மினிட்ஸ்
வந்திடறேன்.." என்று ஓடி வெளியே வந்து கௌசியை டூ வீலர் பார்க்கிங்கில்
தேடினான். அதற்குள் அவள் வண்டியைக் கிளப்பிக்கொண்டு செல்வது மட்டும் தெரிந்தது அவனுக்கு.

உள்ள வந்து தன் புருவ முடிச்சைத்
தட்டியபடி உட்கார்ந்திருந்தான் விக்னேஷ்.தன் தோளைத் தொட்ட நான்சியிடம் முழுக் கோபத்தையும் காட்டினான். "உன்னை யார் உன் வீட்டில் இருந்ததை எல்லாம் சொல்லச் சொன்னது" என்று அவளிடம் சீறினான்.

"ஏன் உண்மையைத் தானே சொன்னேன்" என்று முகத்தை அப்பாவி போல வைத்துச் சொன்னாள்.

"அதுக்கு-ன்னு இப்போ உன் அம்மா
அப்பா கிட்டக் கூட சொல்லீருவியா
உண்மை-ன்னு?" என்று விக்னேஷ் கேட்க
வாயை மூடிக்கொண்டாள் நான்சி.

"யாரு மேலையும் கோபப்பட முடியாது..
எல்லாம் முன்னாடியே அவகிட்ட சொல்லிருக்கனும்.. மறைத்தது உங்க
தப்பு" என்றாள் மதி.. கௌசி அழுது
கொண்டு போனதில் மதிக்கு மிகவும்
வருத்தமாக இருந்தது. அதுவும் இந்த
நான்சியின் கண்டதிலிருந்து அவளைப்
பிடிக்கவில்லை மதிக்கு.. அந்தக்
கோபத்தில் விக்னேஷிடம் சொல்லியே
விட்டாள்.

ஒரு நிமிடம் யோசித்த விக்னேஷ் "சரி
கிளம்பலாம்.. நான்சி நான் உனக்கு கேப்
புக் பண்றேன் நீ அதுல போ.. நான்
கொஞ்சம் மாமா வீட்டு வரைக்கும்
போகனும்" என்றவன் தன் மொபைலை
எடுத்து கேப்-ஐ புக் செய்தான்.
நான்சியை கேப்-இல் ஏற்றிவிட மழை
பெய்யத் துவங்கியது.

"விக்கி பேசாம எங்க கூட கார்ல வந்திரு..
பைக் அப்புறம் வந்து எடுத்துக்கலாம்..
மழை வேற வருது" என்று ஜீவா சொல்ல
"இல்லடா வேணாம்.. அங்க போய் லேட்
ஆயிருச்சுனா ரிஸ்க்..நான் இதுலையே
வரேன்" என்று சொல்லியபடி அங்கு
நிறுத்தியிந்த தன் பைக்கில் ஏறி
அமர்ந்தான்.

விக்னேஷ் பைக்கை எடுக்க ஜீவாயும்
மதியும் காரில் கௌசியைப் பார்க்க
அடையாரை நோக்கிப் புறப்பட்டனர்.
 
Top Bottom