Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


மழையே இது காதல் தானா

Bhagya Lakshmi

Member
Vannangal Writer
Team
Messages
44
Reaction score
18
Points
8
1
மார்கழி மாத குளிரில் உரைந்து போனவனாய் படுக்கையில் சுருண்டு ஒரு புழுப்போல படுத்துக்கொண்டு இருந்த எனக்கு கடிகார அலாரம் மணி 5.30 என்பதை காட்டியவுடன்,எழுந்திருக்க மனமில்லாமல் உருண்டு பெரண்டு படுக்க ஏதோ நினைவுக்கு வந்தவனாய் சட்டென விழித்துவிட்டு கண்களை தேய்த்தபடி எழுந்தேன் ,என் ஜன்னலோர காற்று மெல்ல இதமாய் வீச அந்த குளிரையும் தாண்டி ஏனோ ஓர் புத்துயிர் பெறவே சற்று ஜன்னலின் வழியே எட்டிப்பார்த்தேன்.

ஈரத்தலையோடு ,தலையில் ஒரு டவலைக்கட்டிக்கொண்டு அரக்கு கலர் பாவடையுடன் பச்சை நிற தாவணியில் தேவதைப்போல தோற்றமளித்தாள் அந்த புதியதாக குடிவந்த ராமசந்திரனின் மகள் ஆர்த்தி. வீட்டுக்கு ஒரே செல்ல மகள்,எனினும் எல்லா வேலைகளையும் இழுத்து போட்டு செய்வது,பள்ளிக்குச் சென்று படிப்பது,என்று தனக்குள் எந்த வித களைப்புமின்றி ரங்கராட்டினம் போல் செயல்படுவாள்.

ஆர்த்தி என்ற பெயரை உச்சரிக்கும் போதே என் மனம் ஏதோ செய்கிறது ஆம் ,20 ஆண்டுகள் கடந்துவிட்டன தற்போது அவள் எங்கு இருக்கிறாள் என்பது கூட எனக்கு தெரியாது. தற்போது நான் அவளது ஆசைப்படி ஒரு கைத்தேர்ந்த மருத்துவராக இருக்கிறேன். என்ன சொன்னேன் அவளது ஆசையா? ம்ம்ம் சரிதான் அது அவளுடைய ஆசையே!

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின அந்த சமயத்தில் என்னுடைய மதிப்பெண்களை பார்த்துவிட்டு "டேய் அர்ஜுன் நீ இவ்வளவு நல்லா மார்க் வாங்கியிருக்க,எனக்கு ஒரே ஒரு ஆசை தான் நீ படிச்சு டாக்டர் ஆகணும். இதை தவிர எனக்கு உன்கிட்ட எந்த வித எதிர்பார்ப்புமில்லை டா அர்ஜுன்" என்று என்னுடைய என்னவளின் வார்த்தைகளே எனக்கு வைராகியமாய் அமைய நன்கு படித்து மருத்துவராகி விட்டேன். இன்று நான் ஒரு பிரபல மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நிபுணர்.

ஆனால்... என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை? ஹாஹா திருமணம் முடிந்து மூன்று ஆண்டுகளே வாழ்ந்தேன். அவள் சந்தேக புத்தி கொண்டவளாய், தினமும் "ஏன் மருத்துவமனையிலிருந்து லேட், ஏன் நான் போன் பண்ணா எடுக்கல" அப்படி இப்படி என்று ஏதேதோ கூறி என்னிடம் வம்பிழுப்பதை தினசரி வாடிக்கையாக கொண்ட என் மனைவிக்கு வேறு வழியின்றி விவாகரத்து தந்துவிட்டு இன்று தனிமரமாய் நின்றுக்கொண்டு இருக்கிறேன். வயது 35 ஆயிற்று. போதும் இதற்கு மேல் சொன்னால் அழுதுவிடுவேன் போலும்.

இப்படி தனிமரமாய் இருக்கும் எனக்கோ பெற்றோரின் ஆதரவும் தம்பியின் ஆதரவும் இருக்கிறது. அதுமட்டுமின்றி நான் செய்யும் தொழிலே எனக்கு மிகப்பெரிய ஆறுதல் எனவும் கூறலாம். உண்மை தானே மருத்துவம் ஒரு சேவையல்லவா.இந்த சேவையை மனமுவந்து செய்கிறேன். சரி ஏன் திடிரென ஆர்த்தியின் ஞாபகங்கள் எட்டிப்பார்த்தன ? ஒன்றும் புரியவில்லை.. ஆங் சொல்ல மறந்துவிட்டேன் இன்று அவளுடைய பிறந்தநாள்.

ஆமாங்க..அவளுடைய பிறந்தநாள் என்று கூறியவுடன் எனக்கு அந்த முதியோர் இல்லம் நியாபகத்திற்கு வருகிறது. வருடா வருடம் என்னுடைய ஆர்த்தி தன் பிறந்தநாள் அன்று அங்கு சென்று முதியோருக்கு சேவை செய்துவிட்டு தன்னால் முடிந்த ஏதோ ஒன்று சமைத்து பரிமாறிவிட்டு வீடு திரும்புவாள்.

இன்று நான் அந்த முதியோர் இல்லத்தை தேடி செல்ல இருக்கிறேன். நாங்கள் வாழ்ந்த அதே சிற்றூருக்கு என்னுடைய காரில் பயணம் செல்கிறேன். என்னுடைய பயணத்தில் நீங்களும் கலந்துக்கொள்ளலாமே!

சென்னையிலிருந்து இரண்டு மணிநேரத்தில் வந்துவிடலாம் அந்த சிற்றூரிற்கு. எங்கு பார்ப்பினும் வேப்பிலை மரங்களும்,ஆங்காங்கே வேலிகாத்தான் முற்கள் செடியும் நிறைந்திருக்கும். நாங்கள் வசித்த அந்த தெருவிற்கு இன்னும் சற்று தூரத்தில் வந்தடைந்துவிடுவேன் .

இதோ நம் மாறனின் டீக்கடை, அப்போது அவருக்கு வயது 25 இருக்கும், தற்போது 45 வயதுடன் இன்னும் அதே சுருசுருப்புடன் வேலை செய்துகொண்டிருக்கிறார். காரை நிறுத்திவிட்டு அவரருகில் சென்று

"அண்ணே மாறன் அண்ணே ஒரு டீ" என்று சொல்லிவிட்டு அங்கு போடபட்டிருக்கும் பென்சில் அமர்ந்தேன். என்னை ஏற இறங்க ஒருமுறை பார்த்து விட்டு

"அர்ஜுன் தானே நீ" என்றார். நானும் ஒரு சிறுபுன்னகையுடன் அவரை பார்த்து ஆமாம் என்றவுடன் என்னை கட்டி அணைத்தபடி "எவ்வளவு வருஷம் ஆச்சு தம்பி,இப்போ தான் இந்த ஊருபக்கமே உன்னை பார்க்கிறேன். ஏன் இவ்வளவு நாளா எங்க இருந்த ? உன் அப்பா அம்மா தம்பி எல்லாம் எப்படி இருக்காங்க?" என்று வினவினார்.

பதில் கூறிவிட்டு நான் அவர் போடும் டீயிற்காக காத்துகிடக்க அப்போது தான் அந்த "ஒரு ரூபாய் அண்ணாச்சியை" பார்த்தேன்.

"அட என்ன ஆச்சரியம் முடி நரைத்திருந்தாலும் இன்னும் அதே கம்பீர நடை போட்டுக்கொண்டு நடக்கிறார்" என்று எனக்கு நானே சொல்லிவிட்டு மாறன் தந்த டீயை பருகிவிட்டு மீண்டும் காரை கிளப்பி சென்றேன்.நான் அடையும் இடம் வந்தது.

அந்த முதியோர் இல்லம் தற்போது இல்லையாம். அந்த இடத்தில் ஒரு சூப்பர் மார்க்கெட் இருப்பதை கண்டு "என்னடா இது அப்போ அந்த முதியோர் இல்லம் எங்கே போயிற்று"? என்று தெருவோரம் நடந்து செல்லும் ஒருவரை கேட்க அவரோ "தம்பி நீ ஊருக்கு புதுசா இம்புட்டு நாள் கோமாவில் எதாவது இருந்தீர்களோ" என்று என்னை நக்கலடிக்க...

"ஐயா சொல்லுங்கள்" என்றேன் மிதமான குரலில்.

"இந்த சூப்பர் மார்க்கெட் ஓனர் அந்த முதியோர் இல்லத்துக்கு சொந்தமான இடத்தை விலைக்கு வாங்கிட்டாரு. இந்த சூப்பர் மார்க்கெட் வந்தே ஏழு வருஷமாச்சு தம்பி" என்று சொல்ல..

"அது சரி, இங்க இருந்த முதியோர் இல்லம்"? என்று வினவ அவரோ ஒரு விலாசத்தை கொடுத்து அங்க மாத்திட்டாங்க என்று கூறி அனுப்ப அந்த விலாசத்தை தேடி அலைந்தேன். முடிவில் அந்த விலாசம் கண்டுபிடித்துவிட்டேன்.

உள்ளே நுழைய அங்கு முதியோரின் கூட்டமும் டி.வி சத்தமும் காதை பிளக்க அந்த அமைதியான சாலையில் அமைந்திருக்கும் அந்த முதியோர் இல்லமோ ஏதோ கடைவீதிக்கு வந்தது போல் சத்தமாக இருக்க ..முதலில் யாரை அணுகுவது என்று தெரியவில்லை.

ஒரு நாற்காலியில் அமர்ந்து ஏதோ கணக்கு பார்த்துக்கொண்டிருந்த நடுத்தர வயது பெண்மணியிடம்
"மேடம் இன்னைக்கு இங்கே அண்ணதானம் பண்ண ஆசைப்படுறன். அதற்கு பணம் செலுத்த வந்தேன்" என்று கூற அதை காதில் வாங்கியவள் "ஓ...சரி குடுங்க எவ்வளவு தர விருப்பம் படுறீங்களோ தாங்க. உங்களுக்கு என்ன மாதிரி உணவு பரிமாற ஆசையோ அதற்கு தகுந்தாற்போல் நாங்க சமைத்து போட்டுருவோம்"

"அ..அப்படினா இந்தாங்க இதுல இரண்டாயிரம் இருக்கிறது. எல்லாருக்கும் இன்று மதியத்திற்கு புலாவ் பண்ணி போட்டுடுங்க" என்றபடி பணம் செலுத்திவிட்டு அந்த முதியோர் இல்லத்தில் இருக்கும் அனைவரையும் ஒருமுறை பார்த்து வணங்கிவிட்டு செல்ல சட்டென ஒரு முதியோர் அவனது கைகளை பிடித்து.

"தம்பி உன் பெயர்"?என்று வினவ

"என் பெயர் அர்ஜுன்" என்றான் ஒரு சிறு புன்னகையுடன்.

"ஓ..நீ அந்த ராமசந்திரன் வீட்டுக்கு எதிர்தாப்ல இருந்த பையன் தானே? ஆளே அடையாளம் தெரியல பா. ஆமாம் என்ன விசேஷம் ? இங்க இன்னைக்கு அண்ணதானம் செய்ய வந்திருக்க"என்று கேட்க அவன் சிந்தைக்கு அவரது கேள்வி எட்டினாலும் என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை.தன்னிலை உணர்ந்தவனாய்

"ஐயா,அது வந்து இன்னைக்கு எனக்கு வேண்ட பட்டவங்களோட பிறந்தநாள் அதுக்கு தான் இந்த ஏற்பாடு எல்லாம்" என்று சொல்லி அந்த இடத்தை விட்டு நகர்ந்தான். இன்று அவசியம் இந்த முதியோர் இல்லம் தேடி வந்திருக்கணுமே. ஒருவேளை அவளிருக்கும் ஊர் இதுவல்லாது வேறு எங்கோ இருந்தால் ? அதானே அவள் தற்போது திருமணம் முடிந்து எங்கிருக்கிறாளோ. என்று மனதுக்குள் கூறிக்கொண்டு தன் காரை கிளப்பினான். காரை நகர்த்தி தன் ஊர் சென்னையை நோக்கி பயணிக்க அவனது பழைய நினைவுகளை மனதில் அலசியபடி காரை ஓட்டினான்.

அன்று வழக்கம் போல பள்ளி சீருடையில் இரட்டை ஜடை பின்னலுடன் என் தேவதை ஆர்த்தி நடந்து செல்ல வழியில் இருக்கும் ஒரு கல்லை தடுக்கி கீழ விழயிருந்தபோது லாவகமாக ஓடிச்சென்று அவளை தாங்கி பிடித்தேன். முதன்முதலில் என் கரங்கள் அவளை நெருங்கியது.அவளுக்கு என்னவோ போலாயிற்று, என் பிடியில் சிக்கியவள் என்னையே அவள் கண்கள் பார்த்துக்கொண்டிருந்தது. எனது கண்களும் அவளது முகத்தை பார்த்து அளவளாவிக்கொண்டிருந்தன.அவள் முகம்முழுவதையும் என் கண்களால் ஸ்கேன் செய்துகொண்டிருந்த தருணமும் அது.

'என்ன ஒரு அழகான கண்கள் அவளுடையது. ப்பா கருப்பு பன்னீர் திராட்சை போலவே இருந்தது.' ஹாஹா இதையெல்லாம் இன்னும் மறக்கமுடியவில்லை. முதன்முதலில் ஒரு பெண்ணின் அழகை என் கண்கள் நோட்டமிட்டன...ஐயோ வெட்கத்தில் நானும் சிவந்து தான் போனேன். என்னுடைய இந்த முதல் பார்வை அவள் மீது அம்புபோல் பாயந்துகொண்டிருக்க அங்கு தூவியது எங்கள் காதல் மழை.

...திக் திக் என்றது என்னுடைய இதயத்துடிப்பு சற்று சுதாரித்து கொண்டு அவளை நிமிர்த்தி விட்டு "இனி பார்த்து பொறுமையா நட என்றேன்"

அவளும் தலையசைத்துவிட்டு நகர்ந்தாள். முதல் நாள் வெளியே கோலம்போட்டுக்கொண்டிருந்தவளை ஜன்னல் வழியே நோட்டமிட்ட எனக்கோ மறுநாள் அவளை இவ்வளவு நெருக்கமாக பார்க்கும் பாக்யம் ஐயோ நினைத்து பார்க்கவே சந்தோஷமாக இருந்தது. இப்படியே எனது கண்கள் அவளை தினந்தோறும் தேடிக்கொண்டே தான் இருந்தது.

அப்போது எங்களுக்கு என்ன 15 வயதே நிரம்பியிருக்கும். காதல் முளைக்கும் வயது தானே இதில் நான் மட்டும் என்ன விதிவிலக்கா? அரும்பு மீசையுடன் அப்போது இருந்த தோற்றம் எல்லாமே இப்போது நினைத்தால் சிரிப்பு தான் வருகிறது.

ம்ம்ம் இதோ வந்துவிட்டது நான் வாழ்ந்த பழைய வீடு. அதே திண்ணை ஹாஹா ஆனால் என் தந்தை வயதில் ஒருவர் அமர்ந்திருக்கிறார். நான் யார் என்பது கூட அவருக்கு தெரியாது. சரி எதிரே என் ஆர்த்தி வாழ்ந்த அந்த வீட்டையும் ஒருமுறை நோட்டமிட்டேன். சிறிது மாற்றத்துடன் பல கலை வேலைபாடுகளுடன் சிறப்பாக இருந்தது.

"என் ஆர்த்தியின் குடும்பம் இங்கே வாழ வாய்ப்பு இருக்கிறதா" என்ற கோணத்தில் சற்று யோசித்தேன். "அட பைத்தியக்காரா இவ்வளவு வருஷம் ஆகியும் எப்படி இங்கேயே இருப்பாங்க"என்றது மனம் என்னை தட்டி எழுப்பியபடி நான் விழித்துக்கொண்டேன் என் பழைய காதல் நினைவுகளிலிருந்து ஆனால் இன்னும் முழுவதுமாய் தெளியவில்லை. எப்படி தெளியும் காதல் என்பதே ஓர் போதை தானே . சரி என் பயணம் உங்களுடன் தொடரும். என் காதல் பயணத்தில் நீங்களும் பயணியுங்கள்.

தொடரும்.

 

Bhagya Lakshmi

Member
Vannangal Writer
Team
Messages
44
Reaction score
18
Points
8
சென்னையின் எல்லைக்குள் வந்துவிட்டேன் இன்னும் அரைமணி நேரத்தில் வீட்டுக்குள் நுழைந்துவிடுவேன். நான் வசிப்பது சென்னையில் முக்கியமான அதுவும் மிகவும் பரபரப்பான ஏரியா ,ஆம். ஓஎம் ஆரில் உள்ள ஆடம்பர அப்பார்ட்மண்ட் ஒன்றில் வசிக்கிறேன். அப்பார்ட்மண்ட் உள்ளே என் கார் நுழைந்தது.
பார்க்கிங் ஏரியாவில் காரை நிறுத்திவிட்டு வெளியே இறங்க அங்கு குடியிருக்கும் ஒருவருடைய மூன்று வயது குழந்தை பந்து போட்டு விளையாடிக்கொண்டிருந்தது .
"அங்கிள் பால் போடுங்க" என்று மழலை மொழியில் என்னை அழைக்க நானும் வந்த களைப்பை கூட மறந்தவனாய் அந்த குழந்தைக்கு பந்து போட்டு விளையாடினேன். எனது போன் ரிங் ஆக அதை எடுத்து பேசத்துவங்கி..
"மா வந்துட்டேன் இங்கே தான் பார்க்கிங்கில் இருக்கேன்" என்று கூற.
"சரி டா உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும். சீக்கிரம் மேல வா"என்று தாய் காந்திமதி கூற உடனே அந்த குழந்தையிடமிருந்து விடைபெற்று கொண்டு லிப்டில் ஏறினேன். இரண்டாவது மாடியில் இருக்கும் என்னுடைய வீட்டை நோக்கி நடக்க எனது வீட்டுக்கதவை தட்டினேன்.
"வாடா ,என்ன சார் பார்க்கிங்கிலேயே நின்னுட்டிங்க?உள்ள வா காபி போட்டு தரேன்"என்று காந்திமதி அவனை அமரசொல்லிவிட்டு சமையலறையில் காபி தயாரிக்க சென்றுவிடவே
'சொல்ல வந்த விஷயம் என்னவாக இருக்கும்' என்று யோசித்தவாறு அருகில் இருந்த டிவி ரிமோட்டை எடுத்து டிவி ஆன் செய்ய அதற்குள் தாய் காந்திமதியும் தந்தை அன்பரசனும் வந்து அமர்ந்தனர்.
"அர்ஜுன் ,அது வந்து ராகவி," என்று கையிலிருந்த காபி கோப்பையை நீட்டியவாறு என்னிடம் பேசத்துவங்க ராகவி...ராகவி என்ற பெயரே எனக்கு கோபம் வரக்காரணமானது.
"ராகவி? இப்ப அவளுக்கு என்னவாம் இப்ப எதுக்கு அவளை பற்றி பேசுறீங்க?" என்று நான் சற்று கோபத்துடன் கேட்க என் தந்தை என்னை சற்று முதுகில் தடவிக்கொடுத்து "அர்ஜுன் ராகவி எங்களை பார்க்க காலையில் வந்திருந்தாள். அவள் கையில் ஒன்றரை வயதில் ஒரு பெண்குழந்தை"என்று அப்பா சொன்னவுடன் எனக்கு ஒன்றும் புரியவில்லை..
"என்ன? ஒன்றரை வயது பெண்குழந்தையா என்ன சொல்லுறீர்கள்" என்று என் புருவத்தை உயர்த்தியப்படி பெற்றோரை நோக்கி கேள்வி எழுப்ப அவர்கள் ஆம் என்றபடி தலையசைத்தனர்.
எனக்கு ஒன்றுமே விளங்கவில்லை, ராகவி என்ற பெயரை கேட்டவுடன் கோபப்பட்ட நானோ தற்போது மேலும் இதைக்கேட்டு அதிர்ந்து போனேன்.
"அம்மா அப்படினா ராகவி என்னை டைவர்ஸ் பண்ணிட்டு போற சமயத்தில் கர்ப்பிணியாக இருந்தாலோ"என்று சந்தேகத்துடன் பார்த்தேன்.
"ஆமாம் டா அவள் உன்னை விட்டு போறப்போ மாசமாகி இருந்திருக்கா அதுகூட நமக்கு தெரியவில்லை பாரேன். அவளோடு குடும்பம் நடத்தின உனக்கு கூடவா டா தெரியல. அப்படி என்னடா பிரச்சினை உங்களுக்குள்ள ? அவளுக்கு உன்மேல இருந்த சந்தேக புத்தியை நீ நினைத்திருந்தால் மாற்றியிருக்கலாமே. ஏனடா அவசரப்பட்டு டைவர்ஸ் கொடுத்த. இப்ப பாரு உன் ரத்தம் வளர்ந்துட்டு வருது நம்ப வாரிசாக அவகிட்ட"என்று கூறி அழத்துவங்கினாள் காந்திமதி.
அவனுக்கு என்ன கூறுவது என்று தெரியவில்லை தன்னிலை மறந்தவனாய் எழுந்து அறைக்குள் புகுந்து கொண்டான்.
"ராகவி ...ராகவி என அவள் பெயரை உச்சரித்தான்" என்ன தோன்றியதோ தன் அறையில் மாட்டிவைத்திருந்த இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை உற்றுநோக்கினான். ராகவியை மறந்துவிடவில்லை முழுவதுமாக இருப்பினும் அவளை நினைக்காமல் இருந்தேனே தற்போது குழந்தை என்ற பெயரில் ஓர் உறவு தனக்குள் பாலமாக இருக்கக்கூடும் என்று நினைக்கவில்லையே! " என்றபடி நொந்துக்கொள்ள..மீண்டும் அந்த புகைப்படத்தை பார்த்தான்...
"ராகவி நீ மாசமாக இருந்த விஷயம் தெரிந்திருந்தால் இப்படி அவசரப்பட்டு விவாகரத்து கொடுத்திருக்க மாட்டேனே..நீயாச்சும் என்கிட்ட சொல்லியிருக்கலாமே...
அ..அப்படினா எனக்கு குழந்தை... ஐயோ இப்ப நான் என்ன பண்ணுவேன். என்றபடி அழத்துவங்கினான். குழந்தையின் குரலை ஒருமுறை கேட்டுவிடலாம் என்று ராகவியிற்கு போன் செய்தான்.
போனை எடுத்தவள் "ஹலோ உ இஸ் திஸ்" என்று கேட்க அவனோ தட்டுதடுமாறி "நான்.. நான் அர்ஜுன்" என்றவுடன் போனை அதிர்ந்துபோய் கீழ தவறிவிட்டவள் மலமலவென்று அழத்துவங்கினாள்.
"ஹலோ ராகவி ராகவி.." என்றான் மீண்டும் அவள் அதை எடுத்து "சொல்லுங்கள் அர்ஜுன்" என மெல்லியக்குரலில் கூற "நான் குழந்தையோட அந்த மழலை பேச்சையும் முகத்தையும் பார்க்கணும் கொஞ்சம் வீடியோ கால் வரியா என்று கேட்க"
"ஓ...அப்போ இப்பக்கூட என்மேல உங்களுக்கு எந்த கரிசனமும் இல்லையா அர்ஜுன்" என்று ராகவி ஆதங்கம் கொள்ள
"ஐயோ ப்ளீஸ் புரிஞ்சிக்க ராகவி,உனக்கும் எனக்குமான உறவு ஒரு முடிந்துப்போன அத்தியாயம். இதை மீண்டும் திரும்பி பார்க்க மனமில்லை..ஆனால் எனக்கு ,எனக்கே தெரியாமல் உன் வயிற்றில் மலர்ந்த என் செல்லத்தை நான் பார்க்கணும் ப்ளீஸ்" என்றான் சிறிது அழுகையுடன்.
அவளும் கால் செய்ய அந்த வீடியோ காலில் தன் குழந்தையின் முகத்தை முதன் முதலில் பார்த்தான். அது சிரித்துக்கொண்டே அவனை பார்த்தது .
"செல்லம்..செல்லம் நான் அப்பா டா" என்றான் தன்னை காட்டியபடி அதுவோ மழலை மொழியில் "ஊ...அ"என்று எதையோ உச்சரிக்க முயன்றது. அதைக்கேட்டு அவன் தன்னை மறந்து சிரிக்கலானான்.
"செல்லம்...."என்று மறுமுறை பேசத்துவங்கும்போது போன் ஸ்விட்ச் ஆப் ஆனது.
"சை...இந்த நேரம் பார்த்து ஸ்விட்ச் ஆப் ஆகணுமா" என்று நகத்தை கடித்தபடி தன் மெத்தையில் அமர...உள்ளே வந்த காந்திமதி "ஓய் அர்ஜுன் இங்கபாரு எதையும் மனசுல போட்டு குழப்பாத டா. உனக்கு இப்பக்கூட ஒன்றும் கெட்டுப்போகல மறுபடியும் விருப்பப்பட்டால் ராகவியோட ஒரு புது வாழ்க்கையை வாழ ஆரம்பி டா" என்றதும் அவனுக்கு வெறுப்பேரியது.
"மா..நான் வருத்தப்படுறது இப்ப ராகவிக்காக இல்லை.. என் குழந்தைக்காக..அவள் பிறந்த அந்த நொடியைக்கூட பார்க்க கொடுத்து வைக்காத பாவியாகிவிட்டேன்" என்று தாயின் மடியில் படுத்து அழத்துவங்கினான். அவன் தலையை மெல்ல வருடிய தாய் அவனுக்கு தலைக்கு வாட்டமாக தலையனையை வைத்துவிட்டு போர்வையை போர்த்தி "கொஞ்சம் நேரம் தூங்கு எழு எல்லாம் சரியாகிடும்" என்றபடி அவன் போனை எடுத்து சார்ஜ் போட்டுவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்.
.....
மாலை சூரியன் அஸ்தமிக்கும் நேரம் ,மெல்ல போர்வையை விலக்கி எழுந்தான் அர்ஜுன். சார்ஜில் இருந்த போனை எடுத்தப்படி அதை பார்த்துக்கொண்டு முற்றத்தில் இருக்கும் சோப்பாவில் வந்து அமர்ந்தான்.
அவனுடைய தம்பி அகில் அலுவலக வேலையை முடித்துக்கொண்டு வந்தான். வந்தவனோ "என்ன அர்ஜுன் ,எங்கயோ நம்ம இருந்த பழைய இடத்துக்கு போனியாமே எப்படி இருந்தது. " என்று வினவ அப்போது தான் ஆர்த்தியின் பிறந்தநாள் காரணமாக முதியோர் இல்லம் சென்றது நினைவுக்கு வர..
"ஏ..ஆமாம் அகில் சூப்பர். நம்ம இருந்த வீடு எல்லாம் அப்படியே ஏதோ ஒருசில மாற்றத்தோடு நல்லாருக்கு. ஆனால் பழைய ஆளுங்க யாரும் அங்க இருக்கிற மாதிரி எதுவும் தெரியல" என்று கூற..
"ஓ...ஓ...ஓ நீ அப்படி வர..ம்ம்ம் புரியுது புரியுது ஆர்த்தி அக்காவை தானே தேடி போன?" என்று நக்கலடிக்க..."அடப்பாவி இப்படி கோர்த்து விடுறியே டா" என்று தன் நெற்றியில் அடித்துக்கொண்டு சிரிக்க..மாலை நேர சிற்றுண்டியை எடுத்துக்கொண்டு தாய் காந்திமதி வந்து நீட்டினாள்.
"வாவ் கிச்சிடி" என்றபடியே அகில் எடுக்க..
"டேய் கையை கழுவு..அப்றம் வந்து சாப்பிடு " என்று அர்ஜுன் கட்டளையிட "ஐயோ இவன்வேற எப்பபாரு " என்று முனவிக்கொண்டே கையை அலம்பிட்டு வந்து அமர்ந்தான் . இருவருமாக அமர்ந்து கிச்சிடியை வாயில் திணித்துக்கொண்டிருக்க...
"அர்ஜுன் ,இந்த மாதிரி கிச்சடி நான் ஒருவாட்டி சாப்பிட்ட மாதிரி ஞாபகம் இருக்கிறது என்று கூற"
"ஏன் எங்க சாப்பிட்ட ?" என்று புருவத்தை உயர்த்த..
"ராகவி அண்ணி பண்ணியிருக்காங்க ஒருவாட்டி செம்ம" என்று பாராட்ட அவனுக்கோ காண்டாகி "டேய் சனியனே இப்ப ஏன் நீ அவளை பத்தி பேசிட்டு இருக்கிற" என்று கடிந்து கொள்ள...
"சரி சரி பேசல ஆமாம் ஆர்த்தி அக்காவை பற்றி பேசுறப்ப முகத்தில் ஆயிரம் வாட்ஸ் எரிந்தது அது ஏன் ராகவி அண்ணி பற்றி பேசுறப்ப முகத்தில் கோபம் வருது"என்று வினவ..உர்ருன்னு தட்டை நகர்த்திவிட்டு எழுந்தான்.
இதை கண்ட காந்திமதியோ "நம்ப பையனுக்கு ராகவி மேல வெறுப்பு இன்னும் போகலையோ..எப்படி இவனை ராகவியோடு சேர்த்து வைக்கிறது " என்று யோசிக்க அதற்கு அகில் "வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை" என்று நக்கலடிக்க
அதை கண்ட தாயோ "டேய் என் வேதனை உனக்கு விளையாட்டா போச்சா? ராகவியிற்கும் அர்ஜுனுக்கும் பிறந்த குழந்தை கண்முன்னே நிக்கிறப்ப எப்படி டா அந்த வாரிசை ஏத்துக்காம இருக்க முடியும்? ராகவி முக்கியமில்லை என்றாலும் அந்த குழந்தை நம்ப வாரிசு ஆச்சே எப்படியாச்சும் சேர்த்து வைக்கனும் இரண்டு பேரையும் வழி சொல்லுடா அகில்" என்று தாய் கேட்க...
"மா நான் ஒன்னு சொல்லவா?"
"சொல்லு அகில்"எனக்கூற
"ஏற்கனவே படிச்ச நாவல் எடுத்து படிக்க தோன்றும் நினைக்கிற?"என்று கேட்க அவரோ "ஏன் படிக்கலாமே நம்ப மனசுக்கு அந்த கதை பிடிச்சிருந்தா என்று கூற" அவனோ சிரித்துவிட்டு
"அப்படி பார்த்தால் அர்ஜுனை பொறுத்தவரை ராகவி ஒரு பிடிக்காத கதை" அது மறுபடியும் சேக்குறது ரொம்ப கஷ்டம். போய் வேலையை பாருமா என்று சொல்லி விட்டு அவன் அறையை நோக்கி நடந்தான்.
தொடரும்
 

Bhagya Lakshmi

Member
Vannangal Writer
Team
Messages
44
Reaction score
18
Points
8
அத்தியாயம் -3
அகில் சொன்னதை கேட்டுவிட்டு இனி ராகவியோடு தன் மகன் அர்ஜூனை சேர்த்து வைக்க இயலாது என்று முடிவு செய்துகொண்ட தாய் காந்திமதி டைனிங் டேபிளில் இருக்கும் அழுக்கு பாத்திரங்களை எடுத்து கொண்டு சமையலறைக்குள் நுழைந்தாள்.
தனக்கு ஒரு குழந்தை உள்ளது என்பதை நினைத்து நினைத்து வருந்திக்கொண்டிருந்த அர்ஜுன்,ராகவியை இனி ஏற்றுக்கொள்ளவும் முடியாது, ஒரேடியாக நிராகரிக்கவும் முடியாது. ஏனெனில் ராகவி என் மூலம் உருவான கருவை சுமந்து பெற்றெடுத்து அதை வளர்த்துக்கொண்டிருப்பவள். எப்படி அவள் மீது இருக்கும் கோபத்தை குழந்தை மீது காட்டி அதை நிராகரிக்க முடியும்?அப்படி நிராகரித்தால் என் மனசாட்சி ஒப்புக்கொள்ளுமா ?அதுவும் அதுவோ பெண்குழந்தை..அப்பாவின் பாசத்திற்காக ஏங்குமே!
எத்தனையோ முறை அபியும் நானும் படம் பார்த்து நானும் கண்கலங்கியதுண்டு. இன்று எனக்கு ஓர் பெண்குழந்தை, பிரகாஷ் ராஜ் போல அன்பை பொழிந்திட எனக்கே எனக்கான வாய்ப்பு. அந்த வாய்ப்பை நான் ஏன் தவிர்க்க வேண்டும். ராகவிக்காக இல்லாமல் என் குழந்தைக்காக நான்....
இல்லை இல்லை முடிந்துப்போன அத்தியாயத்தை மீண்டும் புரட்டி பார்க்க வேண்டாம். மறுபடியும் ராகவியிடம் சேர்வது சரியாக வராது. ஒரு மருத்துவராக இருக்கும் என்னை மருத்துவமனையிலிருந்து தாமதமாக வருவதை கூட ஏன் எதற்கு என்று கேட்டு என்னை நச்சரித்தவை எல்லாம் நான் இன்னும் மறக்கவில்லை,மன்னிப்பது மனித குணம் என்பார்கள் ஆனால் அப்படி மன்னித்தாலும் அதையெல்லாம் மறக்கவா முடியும்.
இப்படி மனதில் புலம்பிக்கொண்டு புரண்டு படுத்தவனுக்கோ கைபேசியிலிருந்து ஒரு குறுஞ்செய்தி மணி ஒலிக்க..அதை எடுத்து பார்த்தவனுக்கோ ஆச்சரியம்...
"இன்னைக்கு வந்து அன்னதானம் செய்துவிட்டு போனதற்கு நன்றி" என்ற குறுஞ்செய்தி பார்த்தவுடன்
'யார் அனுப்பியிருப்பாங்க' என்று யோசித்தவாறு தன் கைப்பேசியை சுழற்றிக்கொண்டிருக்க சரி...அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசுவோம் என அவனது கை பரபரவென அந்த எண்ணை தொடர்பு கொள்ள எண்களை அழுத்த ...ரிங் தருவதற்கு முன் எதையோ சிந்தித்தவனாய்....
'இல்லை. .வேண்டாம் இதை இப்படியே விட்ருவோம்' என்றபடி தன் கைபேசியை வைத்துவிட்டு தன் அறையிலிருந்து முற்றத்திற்கு வந்தான்.
"அகில் என்னடா அமைதியாக உக்கார்ந்துட்டு இருக்க..." என்று அர்ஜுன் கேள்வி எழுப்ப அவனோ சோபாவில் சாய்ந்தபடி "ம்ம்ம் போர் அடிக்குது டா அர்ஜுன் "என்று தன் கைகளை சோம்பல் முறிக்க தன் தம்பியின் அருகில் அமர்ந்தவன்.
"டேய் அகில் வா அப்படினா நம்ப வழக்கமா போற அந்த பார்க்குக்கு போவோம்" என்று கூப்பிட உடனே எழுந்து அகில் தன் உடையை மாற்றிக்கொண்டு வந்தவன் "வா அர்ஜுன் போலாம்" என்று அழைத்துக்கொண்டு தங்களது அப்பார்ட்மண்ட் விட்டு வெளியே வந்தனர்.
அவர்கள் செல்ல நினைக்கும் அந்த பூங்கா வீட்டிலிருந்து வெளியே வந்தாள் சற்று நூறடி தூரத்தில் தான் எனவே நடந்தே...இருவரும் சென்றனர். எப்போதும் ஜகஜோதியாக காட்சியளிக்கும் அந்த பூங்காவோ அன்று வெறுச்சோடி இருக்க அகிலும் அர்ஜுனும் உள்ளே சென்று தங்களது பார்வையை அங்கும் இங்கும் அலையவிட அங்கு ஒரு பெஞ்சில் அவள் அமர்ந்திருந்தாள்.
"அண்ணன் அங்கே பாரேன்" என்றவனை ஏறிட்டு பார்த்தவன்.
"என்னடா அர்ஜுன் என்று பெயர் வைத்து கூப்பிடுவ இப்ப என்னடா அண்ணே னு " என்றுரைக்க அவனோ "அய்யோ இப்ப அதுவா முக்கியம்.வா யாருன்னு போய் பார்ப்போம்" என்றபடி இருவரும் நடக்க...
அங்கிருப்பது வேறுயாருமல்ல நம் கதாநாயகன் அர்ஜுனின் முதல் மனைவி ராகவி.
"ராகவி" என்று பெயரை உச்சரித்தான் அர்ஜுன்.
திரும்பியவள் "அர்ஜுன் சாரி நான் உங்களுக்கு தொந்தரவு குடுப்பதற்காக வந்தேனு நினைக்காதிங்க ,என் வீடும் இங்கே தான் பக்கத்தில் இருக்கிறது. நான் அப்பா அம்மாக்கூட தான் இருக்கிறேன். ஏதோ மனசு சரியில்லை அதான் இங்கே வந்து உக்கார்ந்துட்டு இருக்கேன்" என்று தன் மனதில் இருக்கும் பாரத்தை மறைத்தவளாய் ஏதோ கூற அதை கேட்ட அர்ஜுன்
"அதற்கு இப்படி யாருமில்லாத நேரத்தில் தனியாகவா உக்காருவ. எதாவது பிரச்சினை என்றால் என்ன பண்ணுவ. போ எழுந்து வீட்டுக்கு போ..கு..குழந்தையை பாரு ..அப்றம் நம்ப குழந்தை பேரு" என்று கேட்க அவனை நோக்கி பார்வையை செலுத்தியவள் "குழந்தை பேரு அருவி" என்றாள்.
"அருவி" ? என்றான் பெயரை உச்சரித்தப்படி.
"ம்ம்ம் உங்கள் பெயரில் பாதியும் என் பெயரில் பாதியும் சேர்த்து வைத்த பெயர் அது" என்றாள் சற்று உணர்வுபொங்க..
அங்கு ஏதோ அவனை தடுத்தது. ராகவி என்று எதையோ சொல்ல எத்தனித்தான் அதற்குள் அவள் "சரி நான் கிளம்புறன் " என்றபடி நகர....தூரத்தில் சென்று கொண்டிருக்கும் அவளை உற்று நோக்கியவன்.
"அகில்....அவ அவ எதுவும் சொல்லாமலே போறாளே டா" என்றான் குரல் தழுத்தப்படி.
"அர்ஜுன் இங்கே பாரு ,உன்கிட்ட அவங்களுக்கு எதிர்நோக்கி பேச இன்னும் தைரியம் வரல. சரி நீயாச்சும் எதாவது பேசியிருக்கலாமே ஏன் பேசல இதுவே உன் முன்னாள் காதலி ஆர்த்தியாக இருந்தால் இந்நேரம் எவ்வளவு ஃபீலிங்க்ஸ் கொட்டியிருப்ப...இப்ப வரைக்கும் நீ ராகவி அண்ணியை மனசாற ஏத்துக்கல அதான் நீ இப்படி ரியாக்ட் பண்ற...ஓகே வா கொஞ்சம் நேரம் காத்தாற நடந்துட்டே பேசுவோம்." என்றழைக்க தம்பியின் பேச்சில் சற்று எல்லாமே மறக்க செய்தான்.
......
சுற்றி இருக்கும் மரம் செடி கொடியை கண்டவனாய் அந்த நாள் ஞாபகத்தை அசைப்போட துவங்கினான். ஒருமுறை ஆர்த்தியுடன் பூங்காவில் வலம் வந்தது நினைவுக்கு வந்தது. ஆம் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிந்த நாட்கள் அது தாங்கள் படிக்கும் பள்ளியின் எதிரே ஓர் சிறிய பூங்கா...அந்த பூங்காவிற்கு அங்கு படிக்கும் மாணவர்கள் தவிர யாரும் அவ்வளவு செல்ல வாய்ப்பில்லை.
கையில் இருந்த கேள்வித்தாளுடன் இருவரும் உள்ளே செல்ல... அங்கு இருந்த சகமாணவர்களுடன் உரையாடிவிட்டு இருவரும் அங்கிருந்த மரத்தடியில் அமர்ந்தனர். என்ன பேசுவது என்று கூட அவர்களுக்கு தோன்றவில்லை...இதுவரை மனதில் இருந்த காதலை சொல்லிவிடலாமே என்று எத்தனித்தான் அர்ஜுன்.
"ஆர்த்தி.. அது வந்து உன்கிட்ட"என்று தடுமாறி எதையோ சொல்ல...
"ப்ரண்டு கிட்ட என்ன தயக்கம்.. அட தைரியமா சொல்லேன் டா" என்றுரைக்க...
"ப்ரண்டா அப்படினா நம்ம..மேல காதல் பற்றிய சிந்தனை எதுவுமில்லையோ அவசரப்பட்டு காதலை சொல்லி ஒரு நல்ல நட்பை கெடுத்துக்க போறோம் என்று நினைத்து அந்த விஷயத்தை அத்தோடு விட்டுவிட.."
"ஏய் அர்ஜுன் என்ன சொல்லு?" என்று அவனை உலுக்க சற்று தெளிந்தவனாய் "ஒன்னுமில்லை சரி வா போலாம் "என்று அவளை அழைத்துக்கொண்டு வெளியே வர...
"ச்சி.. நல்ல சேன்ஸ மிஸ் பண்ணிட்டோமோ " என்று ஒருபக்கம் யோசித்தாலும் மறுபக்கம் "இந்த நட்பாவது தொடருட்டும்" என்ற மன அமைதியுடன் வீட்டுக்கு வந்த அந்த நினைவுகள் எட்டிப்பார்த்தது.
"ஆர்த்தி"....நீங்கா இடம்பிடித்துவிட்டாளோ என்னவோ எங்கு இருப்பினும் அவளுடைய நினைவுகள் எட்டிப்பார்க்கின்றன. இந்த நினைவுகளை எல்லாம் அவ்வளவு எளிதில் மறக்க முடியுமா அட முதல் காதலை யார் தான் மறக்க கூடும். எது எப்படியோ அவள் எங்கு இருந்தாலும் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணியவாறு அகிலுடன் பூங்காவிலிருந்து வெளியே வந்தான்.
தொடரும்.
 
Top Bottom