- Messages
- 63
- Reaction score
- 71
- Points
- 33
"சாந்தாம்மா 102 ல யூரோ பேக் நிறைஞ்சிடுச்சு அதை எடுத்து ஊத்துங்க..."
"சாந்தாம்மா அந்த வீல்சேர் கொண்டுவாங்க..."
"ஆயா op ல ஒரு பேஷன்ட் வாந்தி எடுத்துடுச்சு பாருங்க போய் துடைச்சுவிடுங்க.."
"என்ன சாந்தாம்மா இதெல்லாம் ஒழுங்கா துடைக்க மாட்டீங்களா ஜன்னல்லா எவ்ளோ தூசியா இருக்கு பாருங்க.."
"ஆயா ஸ்டெச்சர் கொண்டு வா..."
"ஆயாம்மா இந்த டயப்பர் மாத்தணும் கொஞ்சம் வாங்களேன்.. "
காலை எட்டு மணிக்கு வேலைக்கு வந்தால் இரவு பணி முடிந்து போகும் வரை சாந்தாம்மாவுக்கு ஓய்வென்பதே கிடையாது. ஆள் ஆளுக்கு ஒவ்வொரு திசையில் இருந்து கூப்பிட்ட வண்ணமே இருப்பார்கள். சாந்தாம்மா அந்த மருத்தவமனையின் தூய்மை பணியாளர். எப்போதும் சாந்தாம்மா சுத்தம் செய்தபடியேதானிருப்பார்.
"என்ன சாந்தாம்மா ரொம்ப களைப்பா இருக்கீங்க காலையில சாப்டீங்களா இல்லையா..." வார்டில் பணிபுரியும் நர்ஸ் உமா கேட்டாள்.
"எங்கம்மா காலைல அடிச்சு புடிச்சு சமைச்சுட்டு ஏழேகாலுகுள்ள பஸ்சுக்கு வந்தா தான் இங்க சரியான நேரத்துக்கு வர முடியும் அந்நேரத்துக்கு எங்க சாப்பறது டிபன் பாக்ஸூல போட்டு கொண்டு வந்து இங்க சாப்பிடலாம்னா... வந்ததுல இருந்து சாந்தமா... சாந்தமா... கூப்டுகிட்டே இருக்கீங்க.." என்றார் ஆயாசமாக.
மணியை பார்த்தால் உமா கடிகாரம் 12 காட்டியது "நீங்க போய் சாப்பிட்டு வாங்க சாந்தாம்மா..." என்றாள் என்ன உமா.
"இப்பதான் அந்த 105 ல இருக்குற அம்மா வந்து கூப்பிட்டு போச்சு. போய் பார்த்துட்டு வர்றேன். ஒன்னா மத்தியானசோத்த தின்னுக்கலாம்.." என்றவாறே அறை எண் 105 க்கு சென்றார் சாந்தா.
"ஏம்மா எப்போ கூப்டேன் இப்போ வர்ற. இதான் நீங்க வேலை செய்யுற லட்சணமா. இந்த மூத்திர பை ஓட்டையாகிட்டு எல்லாம் கீழே ஊத்திட்டு கிடக்கு மனுசன் ரூமுக்குள்ள இருக்க முடியல சுத்தமா டெட்டால் போட்டு தொடச்சி விடு. அந்த சிஸ்டரை கூப்பிட்டு இதை மாத்தி விட சொல்லு. வாங்கற சம்பளத்துக்கு வேலை செய்யிங்க.." என்று அதட்டினார் கொஞ்சம் கூட இரக்கமில்லாமல்.
"இதோ வர்றேம்மா..." என்றபடியே பணியில் இருந்த உமாவிடம் கூறிவிட்டு மீண்டும் அந்த அறைக்கு வந்தவர் பையில் இருந்த சிறுநீரை எடுத்து கொட்டிவிட்டு எல்லாம் சுத்தமாக துடைத்து விட்டு சென்றார்.
உமாவும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறாள் அந்த பெண்மணி வந்ததிலிருந்து சாந்தாம்மாவை வேலை ஏவுவதும், மட்டமாக எண்ணி பேசுவதும், தரக்குறைவாக நடத்துவதுமாய் இருப்பது அவ்வப்போது அவர் கண்ணில் பட்டுக் கொண்டுதான் இருந்தது.
சிறுநீர் பையை மாற்ற அந்த அறைக்கு சென்று அதை மாற்றி விட்டார். ஓரமாக ஏதோ தீண்டத்தகாத ஒன்றை தீண்டிவிட்ட பாவத்தோடு நின்றிருந்த அந்த அம்மாவிடம் கட்டிலில் படுத்திருந்த நோயாளியை பார்த்து "இவர் உங்களுக்கு என்ன ஆகுது மா.."என்றாள்.
"என் வீட்டுக்காரர் தான் .." என்றார் அலட்சியமாக அந்த பெண்மணி.
"உங்க வீட்டுக்காரர் மூத்திர வாடை உங்களுக்கே சகிக்க முடியலேன்னு தள்ளி போய் வெளிய நிக்கிறீங்க. ஆனா இங்க வேலை செய்ற சாந்தம்மா போன்ற.. என் போன்ற ஆட்கள் இது அத்தனையும் அருவருப்போடவோ, சகிச்சுக்கிட்டோ செய்யறதில்ல. ஆனா நீங்க இங்க வந்ததுல இருந்து சாந்தாம்மாவை விரட்டி, விரட்டி வேலை வாங்குறதும் தர குறைவா பேசுறதமா இருக்கீங்க. அவங்க செய்ற வேலையை ஒரு நாள் உங்களால் செய்ய முடியுமா..?"
"உங்க வீட்டுக்காரரோட மூத்திரத்தையே உங்களால சுத்தம் செய்ய முடியல, உறவே இல்லாத எத்தனையோ பேரோட கழிவுகளை, ரத்தத்தை, சிறுநீர அவர்கள் போட்ட குப்பைகளை இப்படி எல்லாத்தையும் தினமும் சுத்தம் செய்யற அவங்கள நீங்க தூக்கி வச்சு கொண்டாட வேணாம்.. ஆனா சக மனிதரா மரியாதை கொடுத்து பேசுங்க. உங்களை போல அவங்களும் மனுஷங்க தானே..? மதிச்சு நடந்துக்கோங்க. ஒரு நாள் அவங்க வேலை செய்யலன்னா இங்கே எல்லாமே நாற்றம் அடிச்சு போயிடும்..."என்றுவிட்டு தன் பணியை பார்க்க சென்றாள் உமா.
என்னவோ சத்தம் கேட்கிறது என்று எட்டிப் பார்த்த சாந்தமா உமாவிடம் "அட ஏன்மா இதெல்லாம் இன்னைக்கு நேத்தா பாக்குறோம் நான் வேலைக்கு சேர்ந்த முப்பத்தைஞ்சு வருஷமா இந்த மாதிரி பல பேரை பார்த்தாச்சு. அது பழகியும் போச்சு... என்னத்துக்கு போய் அவங்கள கேட்டுகிட்டு இருக்கே.. இது நம்மளோட வேலை தானே.. அதை நம்ம சரியா செய்யறோம். எல்லாரும் நம்மகிட்ட நல்லா நடந்துக்கணும்னு நாம எதிர்பார்க்கலாமா.." என்றார் சாந்தமா
"அப்படி இல்ல சாந்தமா. நாமளும் மனுஷங்கதாம்மா. நீங்க செய்ற வேலைய ஒரு நாள் அவங்களால செய்ய முடியுமா..? அவங்களுடைய கழிவுகளையே அவங்க மூக்கை பிடிச்சுகிட்டு தான் பார்ப்பாங்க.. அப்படி இருக்கும்போது மற்றவர்களோட கழிவுகளையும் குப்பைகளையும் ரத்தத்தையும் சுத்தம் செய்யற உங்களை அவங்க பாராட்டலேன்னாலும் பரவால்ல. நீங்களும் மனிதர்தான்னு சக மனுஷனுக்கு கொடுக்கிற மரியாதையை கொடுத்தால் போதும்..." என்றவரை
அட வுடும்மா இவிங்க மரியாதை கொடுப்பாங்கன்னா நாம செய்யறோம். நம்ம கடமையை நாம செய்யறோம். நாங்கதா படிக்காதவங்க எங்களுக்கு மரியாதை தரமாட்றாங்க... படிச்சு டாக்டருக்கு இணையா எல்லா வேலையும் செய்யுற உங்களையும் அப்படிதானே தாயி நடத்தறாங்க. இதுக்கெல்லாம் வருத்தபட்டா நாம எப்படி வேலைய பாக்கறது. கடமைய செய்யி பலனை எதிர்பார்க்காதேன்னு சும்மாவா சொன்னாங்க.." என்றார் சாந்தாம்மா.
அப்ப இந்த மாசத்துலேர்ந்து சம்பளம் வாங்காம வேலை பார்ப்போமா.." என்று உமா கூற
"ஆத்தே... பாத்தியா நா என்ன தாயி பண்ணேன் உன்ன..." என்று முகவாயில் கைவைத்து கேட்டக அதற்குள் அடுத்த குரல் ஒலிக்க தொடங்கியது
"ஆயா..." என்று யாரோ அழைக்க
"நாம்போறேஞ்சாமி..." என்றவாறே ஓடினார் சாந்தாம்மா.
அவரை பார்த்து புன்னகை புரிந்தவாறே தன் பணியை தொடர்ந்தார் உமா.