Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


BK NOVEL மாய நிலா - Tamil Novel

Status
Not open for further replies.

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
607
Reaction score
780
Points
93
வணக்கம் 🙏🙏🙏,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டியில் கலந்துகொள்ளும் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐💐.

போட்டியின் விதிமுறைகள், காலக்கெடு மற்றும் பரிசுகள் பற்றிய விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் விபரமாக குறிப்பிடப்பட்டுள்ளது. மீண்டும் ஒருமுறை அதை படித்துப் பார்த்துவிட்டு உங்களுக்கு முழு சம்மதம் என்றால், உங்களுடைய கதையை இந்த திரியில் தொடர்ந்து பதிவிடவும்.

உங்களுடைய கதை வாசகர்களை மகிழ்விக்கும் வகையில் அமையவும் போட்டியில் நீங்கள் வெற்றிபெறவும் வாழ்த்துகிறேன்.

மனமார்ந்த வாழ்த்துக்கள் 😍😍😍

நன்றி...
- நித்யா கார்த்திகன்

 
Last edited:

Bindu sarah

Member
Vannangal Writer
Messages
59
Reaction score
54
Points
18
1 மாய நிலா

முகம் முழுவதும் தாடி, கண்களில் கருப்பு நிற கண்ணாடி, கையிலே உயர் ரக பீர், சிறிது சிறிதாக பருகிக் கொண்டு இருந்தான், அந்த கருப்பு நிற கண்ணாடியையும் தாண்டி நிலவைப்போல பளிச்சிடும் அந்த பற்களை காட்டி சிரிக்க, சொக்கித்தான் போனான் இந்த ஆறடி உருவம், போட்டு இருந்த மெல்லிய சட்டையை கழட்டி எறிந்தவன், மூன் பாத் எடுக்கத் துவங்கினான்.

சுற்றிலும் தண்ணீர், இவன் கைகளிலும் தண்ணீர், புகழ் பெற்ற அறிவியல் விஞ்ஞானி, புதியதாக கண்டுபிடிக்கும் துறையைச் சார்ந்தவன், அவன் கண்களில் பார்க்கும் அனைத்தையும் கலந்து, அவனது ஆராய்ச்சிக் கூடத்தை தினமும் பொசுக்கி அரசாங்கத்துக்கு வாரத்துக்கு ஏழு முறை செலவு வைப்பதில் வல்லவன்.....

இப்படி இருக்கும் ஒருவன் தேவையா என்று ஒருபோதும் நினைத்து இல்லை, காரணம் அவனது கண்டுபிடிப்பு, புதிதாக முளைத்த சயின்டிஸ்ட்டாக இருந்தாலும் குறுகிய காலத்தில் நிறைய புதிய கண்டுபிடிப்புகளை தந்த பெருமை அவனுக்கே சேரும், அரசாங்கம் இவன் என்ன செய்தாலும் வெளியில் அனுப்பும் நோக்கம் சிறிதும் இல்லை. ஒரே மருந்து வாடை, கெமிக்கல்ல தினமும் ஒரு பையர் அக்சிடென்ட், தினமும் ஒரே போல வாழ்க்கை போய்க்கொண்டு இருப்பது இவனுக்கு சுத்தமா பிடிக்கவில்லை, மூச்சி முட்டியது, இரண்டு மாதங்கள் லீவ் கேட்டு கேட்டு கிடைக்காத கடுப்பில், அவன் ஆய்வு செய்யும் அறைக்குள் நுழைந்தவன்,

பல வருடம் செலவழித்து, கண்டுபிடிக்க முயன்ற மருந்தை, அவன் அன்றுதான் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், எல்லா வகை நோய்க்கும் பயன்படுத்தும் ஒரே மருந்து, பல மாதம் பல ஆய்வுக் கூடத்தை எரித்து கலவரப் படுத்தி, ஒரு வழியாக கடுப்பில் கண்டு பிடித்தவன், சோதிக்கும் அறைக்கு ஊசியில் மருந்தை ஏத்திக்கொண்டு, ஊசிக்கு அதனுடைய மூடியைப் போட்டுக்கொண்டு நடந்தான், அவனது அசிஸ்டன்ட் டாக்டர் ரோஸ்,
அவன் நடைக்கு ஈடு கொடுக்க முடியாமல் பின்னாடி ஓடிவந்து கொண்டு இருந்தாள், ஐந்து அடி உயரமுள்ள அந்த டாக்டர்.

‘ஒன்னு நான் ஹையிட் ஆகனும், இல்ல இவரு குள்ளையா ஆகனும். காலையில சாப்பிட்டது எல்லாம் மொத்தமா கரஞ்சி போயிடுச்சி’ ரோஸ் புலம்பிக்கொண்டே ஓடிவந்தாள்.

அவர்கள் நுழைந்த அறையில் அனைத்து வகை நிலம், கடல் வாழ் உயிரினங்கள் அங்கும் இங்கும் ஓடித் திரிந்து கொண்டு இருந்தது, ஆபத்தான மிருகங்கள் மட்டும் அடைத்து வைக்கப்பட்டு இருந்தது.

ரோஸ் ஒருவழியா அங்கு இருக்கும் வெள்ளை எலிகள் ஒளிந்து இருக்கும் இடத்தை நோக்கி ஓடிச் சென்று ஒரு வழியாக எலியை பிடித்தாள், அதுவரை அங்கு இருக்கும் மீன்களோடு விளாடிக் கொண்டு இருந்தான் அந்த ஆறு அடி அறிவாளி டாக்டர் ருத்ரா.

அங்க இருந்த ஒரு எலியை தூக்கி ஊசி போட வசதியா ரோஸ் பிடித்துக்கொண்டு இருக்க,
திடீரென்று ருத்ராக்கு ஒரு யோசனை... அதை ரோஸ் கிட்ட சொல்லிய மறு நொடி, அவன் எலியை தூக்கி ஓரமாக விட்டவன், எலி விட்டால் போதும்னு ஓடிடுச்சி.

“டாக்டர் எவ்ளோ கஷ்டப்பட்டு பிடிச்சேன், இப்படி விட்டுட்டீங்க, இப்போ நான் திரும்ப பிடிக்கணும்”.

“அது இனி தேவை இல்ல பிடிக்க” ருத்ரா அருகில் வருவதை பார்த்த ரோஸ்க்கு புரிஞ்சிடுச்சி, “சார் வேண்டா நீங்க என்ன நினைக்கறீங்கன்னு எனக்கு புரியுது”.



அதேதான் ரோஸ் புரிஞ்சிக்கிட்டியே, ருத்ரா ரெண்டு அடி எடுத்து வைக்க, ரோஸ் அங்கும் இங்கும் ஓடி கொண்டு இருந்தாள், போகும் வழியில் அனைத்துப் பொருட்களையும் சிதரடிக்க ஓடிக்கொண்டு இருந்தாள்.


“டாக்டர் விட்டுடுங்க, நான் வீட்டுக்கு ஒரே பொண்ணு, என்ன விட்டுடுங்க, நான் ரொம்ப பாவம் புரிஞ்சிக்கோங்க”.

அங்கு இருக்கும் உபகரணங்கள், கெமிக்கல் எல்லாம் இவர்கள் ஓடிப் பிடித்து விளாடியதில் அனைத்தும் அங்கும் இங்கும் சிதறிக்கிடந்தன.

வீரா விடுவது போல தெரில, ஒரு வழியா தப்பித்து தலைமை அலுவலர்கள் அரையை நோக்கி தலை தெறிக்க ஓடினாள்.
ருத்ரா விடுவதாக இல்ல துரத்திக்கொண்டே ஓடினான்,

“சார் காப்பாத்துங்க”,


“ரோஸ் என்னாச்சி, ஏதாவது மிருகம் உன்னை துரத்துதா” அவள் பின்னாடி எட்டிப் பார்க்க ருத்ரா வேகமா நடந்துகொண்டு வந்தான்.

‘நாய விட ரொம்ப டேஞ்சர் ஆச்சே இவன்’, இவன் மனதில் நினைத்ததை ரோஸ் சொன்னாள்,

“ஐயோ சார், நாய விட கொடூரமான மிருகம் சார்”,

“என்ன ரோசா இங்க வந்துட்டியா” வில்லன் போல வாயால ஊசி முடியை கடித்து துப்பி,

“இப்படி வா வலிக்காம ஊசி போட்டுக்க போய்டுறேன், இப்படி ஓடிட்டு இருந்தா எடக்கு முடக்கா குத்திட்டா உனக்கு தான் பிரச்சனை”.

“ரெண்டு பேரும் அமைதியா இருங்க, ஒழுங்கா என்ன நடந்ததுன்னு சொல்லுங்க”,

சில நிமிடங்களுக்கு முன்பு,

எலியை ஒரு கையால் நீவி வீட்டுக்கொண்டு நின்று இருந்த ரோஸ், கையில் இருந்த எலியை பிடித்து அதன் இடத்தில் விட்டு விட்டு,

“ஏன் சார் டெஸ்ட் செய்யப் போறதில்லையா.”

“டெஸ்ட் செய்னும் ரோஸ், ஆனா ஒரு சேஞ்க்கு ஹியூமன் வச்சி அதும் பொண்ணு வச்சி டெஸ்ட் செஞ்சிட்டு, சக்ஸஸ் ஆன அப்புறம் அந்த பொண்ணு பேர வைக்கலாம்ன்னு இருக்கேன்.”

“சரிதான் சார், ஆனா யாரு ஒத்துப்பா முதல் முறையா சோதிக்க.”

“ஒத்துப்பாங்க,” அவன் பார்வையின் அர்த்தம் புரிந்து கொண்டு “சார் வேண்டா அது மட்டும் சொல்லிடாதீங்க.”

“நீதான் எனக்கு சரியான அசிஸ்டென்ட் புரிஞ்சிக்கிட்டியே, தடுப்பு மருந்துக்கு உன் பேர் வச்சிடலாம், ரோஸ் வேக்சின், பேர் எப்படி இருக்கு?”

அதுக்கு அப்புறம்தான் இந்த ஓடிப் பிடித்த விளாட்டு எல்லாம்.

“இப்போ சொல்லுங்க சார் அந்த எலியும் நானும் ஒன்னா?”

ருத்ரா எதுக்கு இப்படி செய்கிறான் என்று புரிந்து கொண்ட ராஜா, ஆறு அடி உயரம், முப்பது வயது இளம் காளை, அரசாங்கத்தின் வற்புறுதல் பேரில் இங்கு வேண்டா வெறுப்பாக பணி புரிபவர், என்ன தான் பிடிக்காத வேலை என்றாலும் பிடித்தது போல மாற்றிக்கொண்டு, அந்த பதவிக்கு ஏற்ப கடினமான இரும்பை முழுங்கியது போல சுற்றிக் கொண்டு இருக்கும் ஸ்ட்ரிக்ட் ஆபிசர், ருத்ராக்கு இரண்டு மாதம் லீவு தராத அந்த நல்ல உள்ளம் இவன் தான்.

“உனக்கு இப்போ என்ன வேணும்னு எனக்கு தெரியும், அதுக்கு நேரடியா என்ட வந்து இருக்கனும் ரோஸ் மேடம துரத்துரது ரொம்ப தப்பு”.

அவர் சொல்வதை காதில் வாங்காமல், “ஒன்னும் இல்ல, ஒரு டெஸ்ட், ஒரே ஊசி, ரோஸ் மேடமை விடுங்க” ராஜா சொன்ன ரோஸ் மேடம் மட்டும் அழுத்தி சொன்னான்.

ராஜாக்கு அந்த டாக்டர் ரோஸ் மேல ஒரு கண்ணு. பொறுப்பான டாக்டர், வேலை செய்யும் போது அவள் கவனம் ஒருமுறை கூட சிதறியது இல்லை, அது ராஜாக்கு இன்னும் வசதியா போயிடுச்சி, ராஜா நல்லா சைட் அடிக்க, ருத்ராக்கு லீவ் தராததுக்கும் ரோஸ் தான் காரணம், ருத்ராக்கு லீவு கொடுத்தால், ரோஸ்க்கும் சேர்த்துதான் லீவு குடுக்கணும், ராஜாக்கு ரோஸ்ஸ பாக்கலனா பொழுதே போகாது.

அது கொஞ்சம் லேட்டாதான் தெரிய வந்தது ருத்ராக்கு,

ரோஸ் ருத்ராவை பார்த்து பயந்து ராஜா கையை பிடித்துக்கொண்டு “சார் காப்பாத்துங்க, இனி நான் அவர்கிட்ட வேலை பாக்கமாட்டேன், மக்களுக்கு எதாவது நல்லது செய்யனும்னுதான் நான் என்னோட இயற்கை மருத்துவத்தை விட்டுட்டு இங்க வந்தேன், ஆனா இவரு என் உயிருக்கு ஆப்பு வைக்கிறார், என்னை எலியா யூஸ் செஞ்சா நான் என்ன செய்றது,” ராஜா ரோஸ் புலம்புவதை கவனிக்கவில்லை. அவள் கையையும் அவளையும் இந்த கலவரத்துலயும் சைட் அடித்துக்கொண்டு இருந்தான்.
“நீ ஒன்னும் பயப்படாத பேபி இனி என் கூடவே இரு” இதற்கு முன்பு பலமுறை ரோஸ் பேபி சொன்னான், பதற்றத்தில் ரோஸ் கவனிக்கல, இப்போதுதான் ராஜா சொன்ன பேபியை கவனித்தாள். ராஜாவின் கையை வேகமாக விட்டு ஒதுங்கி நின்றாள். வடை போச்சா என்பது போல ருத்ரா ராஜாவை பார்த்து நின்றுக்கொண்டு இருந்தான்.

“ருத்ரன் போதும் என் பொண்டாட்டியை பயம் செய்தது, உனக்கு தோணும் போது திரும்பி வந்து வேலையில் சேந்துக்கோ”, ரோஸ்க்கு அவன் சொன்ன பொண்டாட்டி வெறுப்பேத்தியது ‘என்னது பொண்டாட்டியா’. சபை நாகரிகம் கருதி அமைதியா நின்றாள்.

“தேங்க்ஸ் சார்,” ரோஸ் நிற்கும் தோரணையை பார்த்து, ‘செத்தான் சிவனாண்டி’ ராஜாவின் அறையை விட்டு வெளியே வந்த நொடி, எதையோ சாதித்த திருப்தி, சுதந்திர காற்றை சுவாசிக்க பறவை போல பறக்கத் துவங்கினான் ருத்ரா.


ரோஸ் அங்கு கிடைக்கும் அனைத்தையும் ராஜா மீது தூக்கி எரிந்து “ஏன்யா, எவ்வளவு தைரியம் இருந்தா என்னை பொண்டாட்டின்னு சொல்லுவ, இனி இது போல பேசுற வேலை வச்சிக்காத, கை கால கட்டி தூக்கிட்டு போய் சர்க்கரை தண்ணில மூக்கி, நாங்க புதுசா கண்டு பிடித்த பாய்சன் எரும்பை உடம்புல விட்டு, மாச கணக்கா எந்திரித்து நடக்க முடியாதது போல செஞ்சிடுவேன் ஜாக்கிறதை,” ரோஸ் பிளான பக்காவா விளக்கிட்டு சென்ற மறு நொடி.


“அடி ஆத்தி, உயிரோட சமாதி கட்டிடுவா போல, கிராதகி,” வாய் சொல்வது ஒன்றாக இருந்தாலும், ராஜா கண்கள் போகும் ரோஸையே ரசித்துக்கொண்டுதான் இருந்தது.
வெளியே வந்த, ருத்ரன் அவனது உயிர் நண்பனுக்கு போன் செய்தான், “டேய் இன்னும் ஆறு மாசத்துக்கு தேடாத, ரிலாக்ஸ்ஸா ஒரு ட்ரிப் போய்ட்டு வரேன்”.

“சரி நான் சொல்ற இடத்துக்குப் போய் ஒரு பார்சல் வாங்கிட்டு வா, என்னோட ஸ்பெஷல் பெயிண்டிங்”.

“சரி டா புரியுது, நான் இன்னைக்கு நைட் வாங்கிடறேன், ஆனா உன் கைக்கு வந்து சேராது, ரொம்ப லேட் ஆகும்”.

“பரவா இல்லடா, இங்க வேற எனக்கு இருக்க வேலையில், அத பத்தி யோசிக்க கூட டைம் இல்ல”.

“ரொம்ப ஸ்பெஷல்ன்னு சொல்ற, ஆனா அத விட கேஸ் முக்கியமா உனக்கு?”

ரெண்டு டெட்பாடி கிடைச்சி இருக்கு இயற்கை மரணம் போலத்தான் முதல்ல தெரிஞ்சது, அடுத்த டெத் ஆகும் போதுதான் நான் கண்டு பிடிச்சேன் இது கொலைன்னு”.

“எப்படி கண்டு பிடிச்ச? கொலை எப்படி நடந்தது”,


“முதல் கொலை பிளைட்ல கரெக்ட்டா தமிழ் நாட்டுல லேண்ட் ஆகும்போது நடந்து ஊருக்கு மூச்சி திணறி, அங்க என் கண்ணுல ஒரு கசங்கின பேப்பர் கிடைச்சது, அதுல மிஸ்டர் ஸிரோன்னு போட்டு இருந்தது, அப்போ நான் அத பெருசா கண்டுக்கல, ஆனா அடுத்த டெத்லயும் அதே போல எனக்கு பேப்பர் கிடைச்சது, எல்லாமே மூச்சி திணறி நடந்து இருக்குன்னு ரிப்போர்ட் வருது”.

“எதாவது கெமிக்கல் யூஸ் செஞ்ச சாயல் இருக்கா?”

“ரிப்போர்ட்ல இல்லனு தெரியுது,
ஒரே குழப்பமா இருக்கு, கொலை அதும் சிட்டியில முக்கிய புள்ளி மற்றும் ரொம்ப பிரபலம் கொன்னுட்டு, எல்லோர் கண்லயும் விரலை விட்டுட்டான், இன்னும் ஒன் வீக் அதுக்குள்ள ஏதும் முன்னேற்றம் இல்லனா சிபிஐக்கு போய்டும்டா வெக்கக் கேடு, அதும் அந்த சிபிஐ ஆஃபீஸ்ர் வேற பொண்ணு, சரியான கிறுக்கி டா.”

“என்னடா பெரிய ஆஃபீஸர்ன்னு சொல்ற, ஆனா கிறுக்கின்னு சொல்ற?”.


“அத ஏன் கேக்குற, அந்த கொலைகாரனைக் கண்டுபிடிச்சி லவ் செய்ய போறேன்னு சுத்திட்டு இருக்கா அந்த கிறுக்கி, அவ கைக்கு போச்சு, என் இமேஜ் டேமேஜ் ஆகிடும்டா”.

“அப்படியா இன்டெரெஸ்ட்டிங், நான் வந்ததும் மீட் செய்யனும் அந்த பொண்ணை.”


“சரி நீ சொல்றத பாத்தா அந்த 2 இயற்கை டெத் ஒன்னு போல தெரில.”

“எப்படி சொல்ற?”

சிலப்பல விஷயங்கள் அந்த மரணத்தைப் பற்றி பேசிவிட்டு,

“ரோஸ் உனக்கு ஹெல்ப் செய்வாங்க, நான் வந்த மித்தது பாத்துக்கிறேன்”.

“சரி டா சில மாசம் கழித்து பாக்கலாம்” என்று அந்த கொலைகளை பத்தி சிறிது நேரம் யோசித்துவிட்டு,

ஒரு பெரிய போட் வாடகைக்கு எடுத்துக்கொண்டு, ஆறு மாசத்துக்கு தேவையான பொருளை எடுத்துக்கொண்டு, உள்ளே கீழ் தளத்தில் உள்ள பெட்ரோல் டேங்க்ல எக்ஸ்ட்ரா எரிவாயு, நிரப்பிக்கொண்டு, ஆட்டோமேட்டிக் சர்வீஸ் ஆன் செய்துவிட்டு, சமைக்க தேவையான பொருள், போட்டுக்கும் தேவையான பொருள், உடை, தண்ணீர் குடிக்க குளிக்க மிதக்க, உயர்தர சரக்கு நிறப்பிக்கொண்டு அவன் பயணத்தை தொடர்ந்தான்.

இவன் என்ன சாதாரணமான ஆளா அவனது மொத்த பலத்தையும் வைத்து, கடலில் பயணிப்பது ஒன்னும் சாதாரணமான விஷயம் இல்லை, அது இது என்று காரணம் சொல்லி சிறைபிடிக்க வாய்ப்பு உள்ளதால், இன்டர்நேஷனல் லைசென்ஸ், சில சமையம் அனைத்து நாடுகளின் பவர் புல்லான அந்த அந்த நாட்டுக்குத் தேவையான லைசென்ஸ்ஸை தனித் தனியா வாங்கிக்கொண்டு முன்னேற்பாடுகள் அனைத்தும் செய்துவிட்டுத்தான் கிளம்பினான். பாவம் அவனுக்கு தெரியப் போவதில்லை, ஒரு மாதம் கூட அவனால் அங்கு இருக்க முடியாமல் திரும்பி வர போறான் என்று.

இப்படி ஒரு நாளுக்காகத்தான் காத்துகொண்டு இருந்தான்.

இரவு வேலை நெருங்க போட் மேல் பகுதியில் மல்லாந்து படுத்துக்கொண்டு,

இப்படி வாழ்க்கையை ரசிக்க எவ்வளவு கலவரம் செய்துவிட்டு வந்ததை நினைத்து ருத்ரன் உதட்டில் அளவுக்கு அதிகமான புன்னகை, மெல்லிய உதட்டின் இடையில் மின்னல் கீற்று பற்கள், அந்த சிரிப்பில் நிலவுக்கே வெட்கம் வந்துவிட்டது போல, மேகத்தின் பின்னால் சென்று ஒளிந்து கொண்டது அந்த நிலா பெண்.


இவ்வளவு நேரம் நிலவை பார்த்து ரசித்தவனுக்கு ஒரே ஏமாற்றம், “நிலா பேபி எங்க போன, உன்ன பொறுமையா ரசிக்கத்தான் பல போராட்டங்களுக்கு பின்பு உன்னை தேடி வந்தா, இப்படி செய்றயே,

அதுவும் உன்ன இந்த நாள், நடு கடலுக்கு அடித்து பிடித்து வந்தா, நீ இப்படி ஒளிந்து கண்ணாமூச்சி ஆடினால் என்ன அர்த்தம், “முதல்ல வெளிய வா” பாதி போதையில் நிலவை பார்த்து கத்திக்கொண்டு இருந்தான். நிலா வரமாட்டேன் என்று பிடிவாதமாக நின்று இருந்தது, கோபத்தில் ருத்ரன் கையில் இருந்த பாட்டில் அவன் பலம் கொண்டு இறுக்கிப் பிடித்த வேகத்தில் உடைந்தது, அந்த ரத்தத்தை ஒளிந்து இருந்துபார்த்த நிலா ரத்த நிலவாக மாறியது, ருத்ரவுக்கு அது தெரிய வாய்ப்பு இல்லை.

கையில் ரத்தம் சிந்துவது எந்த உணர்வும் இல்லாமல் நின்று இருந்தான், அவனது ஒரே நோக்கம் நிலவை இப்போவே பாக்கணும்.

ரத்த பௌர்ணமி நிலவை, கரு மேகம் சூழ....

நிலா மகனின் ரத்தத்தில் நிலவொளி படும் அந்த சமையம்...

மின்னலை துரத்தி இந்திரன் வரும் சமையம், இருவரின் சக்தியும் ஒன்று கலந்து ரத்தத்தில் ஊடுருவியது.

இந்த அனைத்து சக்தியும் ஒன்று சேர்ந்து கற்பனை உருவத்தில் உயிர் பெற்றால் அக்னி நிலா.....


அக்னி நிலா கீழ் தளத்தில் கண்களை திறந்த சமயம், முதலில் பார்த்த பொருள், அவள் மனதை ஈர்த்தது, அதன் மீதும் அதனை வண்ணம் தீட்டியவன் மீதும் ஒரு ஈர்ப்பு உருவாகியது, நிலா அந்த வரைந்த போட்டோ பிரேமை கையில் எடுத்துக்கொண்டு. வெளியே செல்லும் வழியை கண்டுபிடித்து வெளியே வந்தாள்.

மேலே, அங்கு ருத்ரா வானத்தை பார்த்துகொண்டு, “ஏய்ய்ய் நிலா வந்துடு, எவ்ளோ நாள் ஆச்சி நம்ம ரெண்டு பேரும் சந்திச்சி, நீ இப்போ என் கண் முன்னாடி பளிச்சுனு தெரியற வரை நான் கத்திட்டுதான் இருப்பேன்,

எங்கு இருக்கோம் என்று புரியாமல், தட்டு தடுமாறி, அங்கு வந்து சேர்ந்தாள் அக்னி நிலா, ருத்ரன் கையில் சொட்டும் ரத்தத்தை பார்த்து, பதறினாள் அவளது பக்கத்தில் இருந்த துணியை கிழித்து, அவனது கைகளில் கட்டு போட்டு விட்டாள், இப்போதுதான் ரத்தம் கொஞ்சம் நின்றது.
நிலாவிடம் பேசிக்கொண்டு இருந்தவனுக்கு இப்போதுதான் யாரோ கையை பிடித்து இருப்பது தெரிய வர, “யார் இது? என் கையை பிடிக்கற அளவுக்கு தைரியம் இருக்கு இங்க” திரும்பி பார்க்கும் போது, நிலவு ஒளி அக்னி நிலா மீது பட்டு தங்கமாக ஜொலித்தாள், வாவ், அதன் பிறகு சாதாரண நிரமாகத்தான் தெரிந்தாள், ருத்ரா கண்களுக்கு.


“நான் அக்னி நிலா, இங்க எப்படி வந்தேன்னு தெரில” இன்று பிறப்பு எடுத்ததால் அவளுக்கு சில நினைவுகள் தவிர வேறு ஏதும் தோணல,

“உங்களுக்கு அடி பட்டு இருக்கு தூங்குங்க”.

அக்னி நிலா கண்கள் சிமிட்டாமல் பார்த்துக்கொண்டு இருந்தாள். அவளுக்கு எங்கோ இவனை பார்த்தது போல தெரிந்தது, அவள் பேர் தவிர ஏதும் நினைவில் இல்லை அவளுக்கு, விடியும்வரை யோசித்துக்கொண்டே இருந்தாள்.

முகத்தில் சூரியன் கடுமையாக படும்வரை ருத்ரன் தூங்கிக்கொண்டு இருந்தான், சந்திரா ருத்ரா சந்திரன் என்று எந்த நேரத்தில் பெயர் வைத்தார்களோ தெரியவில்லை வெயிலைப் பார்த்தால் சுத்தமா பிடிப்பது இல்லை,

காலை சூரியன் உதயம் மற்றும் மறையும் சமையம் மட்டுமே சந்திரனை பார்க்க முடியும், அதே போலத்தான் இவனும்.

கண்கள் கசக்கி எந்திரித்து இருந்தான், திடீரென ஒரு உருவத்தை பார்த்து “ஐயோ பேய்”,

“இல்ல, நானும் உங்கள போலத்தான், என் பேர் அக்னி நிலா”,

“அறிமுகம் எல்லாம் நல்லா இருக்கு, இங்க எப்படி வந்த, ஒரு வேலை கடல் கொள்ளைக் கூட்டத்துத் தலைவியா நீ,” என்று கேட்க.

“இல்ல, இங்க எப்படி வந்தேன், எந்திரிக்கும் போது கீழ இருந்தேன்”.

“கீழையா? நீ சொல்றது நம்பறது போல இல்லையே” ருத்ரன் கீழ் தளத்தை நோக்கி நடக்கத் துவங்கினான், உள்ளே பார்த்தால் ஒரு பெரிய ஓட்டை, வானம், வானத்தில் பறக்கும் பறவைன்னு எல்லாம் தெரிந்தது,

“இங்க எப்படி ஓட்டை வந்தது”,

கீழே சில ரத்தத் துளிகள் “போட் எடுக்கறதுக்கு முன்னாடி உள்ள வந்து இருப்பா போல, இங்கு எதுலயாவது இடித்து விழுந்து அடிப்பட்டு இருக்கும்,” அங்கு சிதறி இருக்கும் ரத்தத்தை பார்த்து அவன் யூகித்துக் கொண்டான்.
“அத விடு எப்படி உள்ள வந்த அத முதல்ல சொல்லு.”

“தெரியல.”

“எந்த ஊரு, உன் வீடு எங்க இருக்கு”.

“தெரியல” அவளுக்கு எதும் நினைவுக்கு இல்லை, அவள் பெயரைத் தவிர.

“சரி மண்டை குழம்பி போச்சி போ, டெம்ப்ரவரி மெமரி லாஸ் போல, சரி நான் சரி செஞ்சிடறேன் ஊருக்கு போய்”.

“எதுக்கு என் கையில் துணியை சுத்தி வச்சி இருக்க” ருத்ரன் காட்டியதுணியை பிரித்துக் கொண்டு இருந்தான்.

“அச்சோ அத எதுக்கு கழற்றிங்க, கையில் அடிபட்டு ரத்தம் வந்து இருந்தது, மேல பாட்டில் கூட உடைஞ்சி இருந்தது” ருத்ரா அக்னி நிலாவை விசித்திரமாக பார்த்தான்.

“கையை பாரு அடிஎதும் இல்லை,, உனக்கு மண்டைல அடிபட்டு குழம்பிட்ட” ருத்ரா அக்னி நிலாவை லூசு போல சைகை காண்பிக்க.

“நான் ஒன்னும் லூசு இல்லை, மேல ஒடஞ்ச பாட்டில் இருக்கும், இப்போது நிரூபிக்கறேன் வா” ருத்ரா கையை பிடித்து இழுத்துச் சென்றாள் அக்னி நிலா.


அங்கு போய் பார்த்தாள், ருத்ரா வைத்த இடத்தில் பாட்டில் பத்திரமா இருந்தது, நிலா முகம் மாறுவதை கவனித்தான் சந்திரன்.

“சரி விடு, எதோ கனவு கண்டு இருக்கும்” என ருத்ரன் சமாதானப் படுத்தி, கைக்கு கிடைத்ததை வைத்து பத்து நிமிடத்தில் சமைத்து நிலாவுக்கும் அவனுக்கும் எடுத்துக் கொண்டு வந்தான் ருத்ரன்.

நிலா தயங்கிக்கொண்டே அவன் கொண்டு வந்த உணவையும், ருத்ரனையும் மாற்றி மாற்றி பார்த்துக்கொண்டு இருந்தாள்.

“நான் படிச்ச டாக்டர், உன்ன எதும் செய்யாமட்டேன், நீ இன்னும் நம்பலனா இரு, இது என் போட்டோ பட்டம் பெற்றபோது எடுத்த போட்டோவைக் காட்டினான்.

“இல்ல வேண்டா, உங்கள நம்புறேன்” சாப்பாட்டை வாங்கி சாப்பிட, சாப்பிட்டு முடிக்கும் போது, ருத்ரன் பேசிக்கொண்டு, அவனது அனுபவங்கள், அவனது சொந்தக் கதை அனைத்தையும் சொல்லி சிரிக்க வைத்துக் கொண்டு இருந்தான்.

இவன் மொத்த ஆறு மாத பிளானையும் சொதப்பி வைத்தாள் அக்னி நிலா. அப்படி என்ன செய்து வைத்தாள்?



 
Last edited:

Bindu sarah

Member
Vannangal Writer
Messages
59
Reaction score
54
Points
18
2 மாய நிலா


திடீரென்று உருவாகிய அந்த ஓட்டையை அளவு எடுத்தவன் அந்தப் போட்டிலிருக்கும் ஸ்டோர் ரூம் சென்று அங்கே இருக்கும் தேவையான பொருளை எடுக்கச் சென்ற சமையம்,


“ருத்ரா எனக்கு பசிக்குது” என்றாள், கையில் இருக்கும் சாஸ்ஸை சுவைத்துக் கொண்டே…

"என்ன இந்தத் தீனி திங்குறா? ஏற்கனவே ரெண்டு முறை சாப்டாச்சு…போதும். நான் மதியத்துக்கும் சேர்த்துதான் சமைச்சேன். இப்போவே சாப்டுட்டா திரும்ப என்னால சமைக்க முடியாது"

"ப்ளீஸ் ப்ளீஸ்…நான் சமைக்கிறேன். செமப் பசி. ஏதோ ரொம்ப வருஷம் சாப்பிடாதது போலத் தோணுது எனக்கு".

"நீ ஏதோ ரத்தக் காட்டேரி பேமிலின்னு நினைக்கிறேன்", அக்னி நிலா முகம் சுருங்குவதைப் பார்த்த ருத்ராக்கு, இதயத்தைப் பாதித்தது. இதற்குப் பெயர் என்னவென்று புரியவில்லை. இனம் புரியாத பாசம்.


"சரி டேங்க்க துறந்து விட்டுடாத எல்லாத்தையும் தின்னுத் தொலை" என்று சமைத்து வைத்திருந்த மொத்த சாப்பாட்டையும் அவள் தட்டில் கவிழ்த்தி விட்டு, விட்ட வேலையைத் துவங்கினான்.
அக்னி நிலா ரசித்து ருசித்து அவனது உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.
அவன் ஒரு ஆணி கூட அடிக்கவில்லை,
ருத்ராவைப் பார்த்து "எனக்கு இன்னும் பசிக்குது," ஆணி அடித்தவன் காதில் கேட்டக, அதில் பெரிய ஆணி அவன் கையில் ஏறியது,
"ஆஆஆஆ கை போச்சி" கையை உதறியவன், ரத்தத்தைப் பார்த்தான்,
"நீ ஒழுங்காச் சொல்லு, நீ மனிசியா இல்ல ரத்தக் காட்டேரியா?" அவன் சொல்லிக்கொண்டு இருப்பதைக் காதில் வாங்காமல், ஐயோ ரத்தம், அவன் கையை எடுத்து அவள் வாயில் வைத்துக் கொண்டாள், ருத்ரன் முடிவே செஞ்சிட்டான், இவ ஏதோ மனிசி இல்லன்னு,
"ஏய்ய்ய் கைய விடு, கொஞ்ச நேரத்துல சரி ஆகிடும், ஜூஸ் குடிக்கிறது போல உறிஞ்சி என் மொத்த ரத்தத்தையும் குடிக்கப் பாக்குறியா?".


'ருத்ரா இங்கிலிஷ் பான்டசி புக் படிச்சி நீ கெட்டுப் போய்ட்ட. ஒழுங்கா நிஜத்துக்கு வா' அவன் எண்ணம் போன போக்கை விட்டுவிட்டு,

"சரி வா ஸ்னாக்ஸ் தரேன்",

"அப்போ பசிச்சிச்சு இப்போ பசிக்கல" என்றாள் அக்னி நிலா.

'ஒரு வேலை ரத்தம் குடிக்கும் பிசாசு போல' அந்த எண்ணத்தை விட்டுட்டு அக்னி நிலாவிடம் யாரிடமும் பேசாத அளவுக்குப் பேசினான்.

மிருகங்களிடம் மட்டுமே உறவு வளர்த்தவன்… முதல் முறையாக இவ்வளவு தூரம் பேசுகிறான், அவனது நண்பனுக்கு அடுத்து..
அக்னி நிலா மீது என்ன ஈர்ப்பு என்று ஒன்றும் புரியவில்லை. ஆனால் அவனுக்குப் பிடித்திருந்தது. அவளுக்கு எதுவும் பெரிதாக ஞாபகமும் இல்லை. இருந்திருந்தால், ரெண்டுப் பேரும் பேசி தனித் தனியே அவரவர் வாழ்க்கைப் பற்றிப் பேசிருப்பார்கள். அந்த வாய்ப்பில்லாமல் போக…. ருத்ரன் மட்டுமே பேசி, அவன் செய்ததுச் சொல்லி ஒரே கலாட்டா…
இரவு உணவு சாப்பிடும் பொழுது அக்னி நிலா, "உனக்குக் கைல அடிப்பட்டுப் போச்சு. வலிக்கும். வா நான் ஊட்டி விடுறேன்".


"அது சரியா போச்சு".

"எப்படிச் சரியா போகும்? இவ்ளோ சீக்கரம்".

"அது அப்படித்தான், ஒரு மருந்து கண்டுபிடிச்சேன், நானே உள்ள ஒரு கிளாஸ் ஊத்திகிட்டேன் அதான், அடிப்பட்டது உடனே சரியா போய்டும், அவ்ளோ பவர் அதுக்கு."

"அடப்பாவி அன்னைக்கு கூட அதான் சரியா போச்சா".

"ஈஈஈ ஆமா, உடஞ்சது கிளாஸ். நான் அது உடஞ்சதும் தூக்கிப் போட்டுட்டேன்" என்று ருத்ரா சிரித்தான்.

"என்ன குழப்பி விடப் பிளான் போட்டிருக்க, சரியான ஃப்ராட்",

"பிளான் இல்ல… ஆனா நீயா வந்து மாட்டிக்கிட்ட, நானும் கொஞ்சம் உன்னை வச்சி செஞ்சிட்டேன்",

"சரியான பிராட்"
இந்த இடம் ஆழம் கம்மியா இருக்கும், ஒரு தீவு பக்கம் திருப்பினான் ருத்ரன், கடல் கண்ணாடியாகத் தெரிந்தது. கலர் கலர் மீன்களைப் பார்த்துப் பிரம்மிப்பு.

"ருத்ரா எனக்கு மீன் பிடிச்சு தா. அந்தக் கோல்ட் கலர் ஒன்னு ரோஸ் கலர் ஒன்னு வேணும்",

"ஹேய் அடம் பிடிக்கக் கூடாது, அதோட இடத்துலதான் எல்லோரும் வாழனும், அதை விட்டுட்டு அடச்சி வைக்கிறது தப்பு" ருத்ரா கசந்துப் போன புன்னகையோடு சொன்னான்.

"அப்போ நீங்க கூட டெஸ்ட் செய்ய எவ்ளோ மிருகத்த கொன்னு இருப்பிங்க" அக்னி நிலா சாதாரணமாகச் சொன்னாள்.
ருத்ரன் உடல் விறைத்து நின்றது,
"அதோட வலி எனக்கு தெரியும், அதனாலதான் ரொம்ப ஆபத்தா இருக்கறத நானே குடிச்சிக்கிறேன்" ருத்ரன் அவனால் இழந்த உயிருக்கு இன்று கண்ணீர் சிந்த, பேச்சை மாற்றிவிட்டு,

"சரி உள்ள போலாம், கடலுக்கு உள்ள நான் போனது இல்ல",

"அதுலாம் முடியாது இங்கவே நின்னு பாரு, கடல் எப்பவும் ஆபத்துதான்".

"நீ கூட்டிட்டு போறயா இல்ல நான் குதிச்சிடுவேன்….” அக்னி நிலா கண் சிமிட்டும் முன்பு கப்பல் ஓரத்தில் நின்று ருத்ராவை மிரட்டிக் கொண்டிருந்தாள்.

"இவள் சரியான இம்சை. ஒழுங்கா அமைதியா இரு இல்ல அடி"

"கூட்டிட்டு போவியா? மாட்டியா? அத மட்டும் சொல்லு, தேவையில்லாம அதிகம் பேசிட்டிருக்காத புரியுதா?"
ருத்ரா சிறிது நேரம் யோசித்துவிட்டு,

"சரி உள்ளப் போலாம், என் கூடவே தான் வரனும் எதாவது வித்யாசமா இருக்குன்னு ஓடக் கூடாது புரியுதா."
அக்னி நிலா கண்கள் மின்ன சிரித்துக்கொண்டு தலையாட்ட, அதற்குள் ருத்ரன் பாதுகாப்பு உடையைக் கீழ் தளத்திலிருந்து எடுத்து வந்து, முதலில் அக்னி நிலாக்கு போட உதவி செய்து விட்டு, அவனும் போட்டுக் கொண்டு பாதுகாப்பிற்கு ஒரு கயிறுக் கட்டி இருவரும் குதிக்கத் தயாராக இருந்தார்கள்.

அக்னி நிலா முதலில் பயந்தவள், ருத்ராவை பிடித்துக்கொண்டே நடந்தாள்….
சூரியன் ஒளியால் நீல நிற கடல் பெண் தங்க நிறம் பூசிக்கொண்டாள்.
அந்தக் கடல் தாயின் வண்ண செல்வங்கள் தவழ்ந்து கொண்டிருக்க, சில வித்யாசமான செடிகளைத் தொட்டுப் பார்க்கச் சென்ற அக்னி நிலாவை பிடித்துத் தன் புறம் இழுத்தான். ‘வேண்டாம்' என்பது போல சைகை காட்ட..
அக்னி நிலா ருத்ராவை முறைத்து,

"போடா டாக்" மனதில் திட்டிக்கொண்டு,
மீன்களைப் பார்த்தவுடன் ஒரே குஷி…. கூட்டம் கூட்டமாக நீந்திப் போகும் வண்ண மீன்களைக் கையில் பிடித்து முத்தமிட்டாள், எந்த மீனை முதலில் பிடித்துக் கொஞ்சுவது என்றுதான் தெரியவில்லை. அனைத்தும் குட்டி குட்டியா அதன் உடலை வளைத்து நெளித்து, சுதந்திரமாகத் திரிந்ததைப் பார்த்தாள்.
ருத்ரா அக்னி நிலா செய்யும் அனைத்தையும் ரசித்துக்கொண்டு, அவளை அழகாகப் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தான்.
ருத்ராவிற்கு அக்னி, வளர்ந்த குழந்தையாகத் தெரிந்தாள்.
அதனை ரசித்துக்கொண்டு சுற்றி ‘ஏதாவது ஆபத்து இருக்கிறதா?’ என்று ஒரு காவலன் போல அங்கும் இங்கும் தத்தித் தத்தி ஓடும் அக்னி நிலாவைப் பாதுகாத்தான். சுற்றி ஏதோ அமானுஷ்சியம் தெரிய…. அது அக்னி நிலாவை நோக்கி வர, அதைத் தடுக்கும் முன்பு அக்னி நிலா உடம்பில் அந்தத் தங்க நிற உருவம் புகுந்து கொண்டது.

'இன்னும் ஒரு சக்தி மட்டும் தான் பாக்கி. என்னை அழித்த உங்களை அழிக்கும் வரை அடங்க மாட்டாள் இந்த அக்னி நிலா' அவளது ஆட்டத்தைத் துவங்க தயாரானாள்.


அவள் சக்தியை மூன்று பாகமாகப் பிரித்துப் பாதுகாப்பாக வைத்திருந்தார்கள். ஒன்று இயற்கை அவளுக்கு உருவம் கொடுத்தது..


ஏதோ ஒரு அசம்பாவிதம் என்று புரிந்துகொண்ட ருத்ரன், அக்னி நிலாவை நெருங்கும் முன்பு, அக்னி நிலாவால் அந்த சக்தி ஈர்க்கப்பட்டது. இன்னும் சிறிது தூரம் சென்றாள். தீவிற்கு நடுவில் சந்திரனின் அருள் பெற்ற ஒருவனால் திறக்கப்படும், அந்தப் பெட்டி மூலம் அந்த சக்தி வெளிப்படும். அந்த சந்திரன் அருள் பெற்றது வேறு யாருமில்லை… நம்ம ருத்ரன் தான்.


அந்த சக்தி வந்து அக்னி நிலாவை பக்கத்திலிருக்கும் தீவிற்குத் தூக்கிச் சென்றது. ருத்ராவால் பாதுகாப்பு உடையுடன் நீந்த முடியவில்லை, போட்டு இருக்கும் உடையின் பாரம் வேறு, அவனை வேகமாக நகர அனுமதிக்க வில்லை, அனைத்தையும் கழட்டிவிட்டு, அக்னி நிலாவை தொடர்ந்து சென்றான்,
அந்தப் பெட்டிக்கு அருகில் அக்னி நிலா மயங்கியது போலப் படுத்துக்கொண்டாள்.
ருத்ரன் பைத்தியம் பிடித்தவன் போல ஓடி வந்தான், தண்ணீர் தடத்தை வைத்து அந்த சிறு தீவுக்கு நடுவில் வந்தான். அக்னி நிலா மயங்கி இருப்பதைப் பார்த்துப் பதறினான் ருத்ரன்.


"அக்னி நீயும், என் ரூபி போல விட்டுட்டு போயிடாத எந்திரி அக்னி நிலா,... நிலா..." கன்னத்தைத் தட்ட, லேசாகத் கண்களைத் திறந்த நிலா.. தண்ணி தண்ணி என்று கேட்க,

அக்னியும் ‘சுற்றி ஏதாவது தண்ணி எடுத்துவர‌ இடம் இருக்கிறதா?’ என்று பார்க்கும் சமையம், கண்ணில் ஒரு பெட்டி தென்பட்டது. இதை எங்கோ பார்த்தது போலிருக்கு. யோசிக்கிற சமையம், இது மண்ணில் புதைந்து கொஞ்சம் வெளியே தெரிந்தப் பெட்டியை எடுத்துத் திறக்க முயன்று, தோற்றான். பக்கத்தில் இருக்கும் பறையைப் பார்த்து ஓங்கி ஒரு அடி அடிக்க, அது இரண்டாகப் பிரிந்து அதன் உள்ளே இருந்து ஒரு சிறு சக்தி சென்று அக்னி உள்ளே புகுந்து கொண்டது.


சாதாரண அக்னி நிலாவாக இருந்தவள், முழு சக்திப் பெற்றாள். அனைத்து சக்தியும் ஒன்றாகச் சேர்ந்த களைப்பில் படுத்திருந்தாள்.
அந்தப் பெட்டியைத் தூக்கிச் சென்றவன், சுற்றி தண்ணீர் இருக்கிறதா என்று ஓடினான். கண்ணில் தண்ணீர் இருக்கும் இடம் பட, வேகமாக ஓடிச் சென்றவன் அந்த உடைந்த பெட்டியிலே தண்ணீர் எடுத்து வந்து முகத்தில் தெளித்தான், அக்னி நிலா எந்திரித்து, "ருத்ரா என்ன ஆச்சி," அப்பாவியாகக் கேட்க,
'இப்போ நடந்தத சொன்னா குழம்பிடுவா. அப்புறம் நேரம் பாத்துச் சொல்லிக்கலாம்.' என்று நினைத்தவன்.."அது ஒன்னும் இல்ல, தண்ணில மூச்சி முட்டிடுச்சி உனக்கு அதான் இங்க தூக்கிட்டு வந்துட்டேன்"
அவளிடம் பேசிக்கொண்டே அவள் அணிந்து இருக்கும் கவச உடை அக்சிஜன் சிலிண்டர் எல்லாம் ருத்ரா உதவியோடு கழட்டினாள்,
சிறிது நேரம் இங்குச் சுற்றிவிட்டு , அக்னி நிலா அடுத்துச் செய்வதற்குத் திட்டம் தீட்டினாள், ருத்ராக்கு தெரியாமல்.
கப்பலுக்கு சென்ற சமையம் இருவரும் வேற வேற மனநிலையில் இருந்தனர், அவளுக்கு ரூத்தாவின் உடை கொடுக்க, அவளை முழுவதும் முழுத்திக் கொண்டது,
அவள் நின்ற கோலத்தைப் பார்த்து,
"இதுக்குத் தான் சொல்றது வளரனும்னு", அவளுக்குச் சாப்பிடக் கொஞ்சம் கொடுத்துவிட்டு, ருத்ரா சாப்பிட தோணாமல் கடலை வெறித்துக் கொண்டு பார்த்தான்.


ருத்ரா மாயம், மந்திரம் இது பற்றி எல்லாம் நம்பாதவன், முதல் முதலில் இவை அனைத்தும் பார்த்ததில், கொஞ்சம் மிரண்டுதான் போனான்,
'இனி அக்னி நிலாவை பத்திரமா பாத்துக்கனும்' என்ற எண்ணம் ருத்ராக்கு மேலோங்க அக்னி கையை இருக்கமாகப் பிடித்துக் கொண்டான்.


உருவம் இல்லாமல் இருவரை கொன்றவளுக்கு, மீதம் உள்ள நாலுப் பேரைக் கொல்வது சாதாரணமானது. அதற்கு ருத்ராவை பயன்படுத்திக்க நினைத்தாள் அக்னி நிலா.
ருத்ரா அவள் கையை விடுவதாக இல்லை, "ருத்ரா கை வலிக்குது விட்டுத் தொலை" என்ற போதுதான் நினைவு வந்தவன் பிடியை தளர்த்தான்,
இருவரும் கடலின் அமைதியை ரசிக்க… சிறிது நேரத்தில் ஏதோ நடக்க இருப்பது புரிய, அடுத்த நொடி, ருத்ரா சுதாரிக்கும் முன்பு கடல் கொள்ளையர்கள் சூழ்ந்துக் கொண்டார்கள்.


வந்தவர்கள் இருவரையும் கத்தி முனையில் நிறுத்தி, அக்னியை அங்கிருந்த ஒருவன் கழுத்தைப் பிடிக்க…


ருத்ராக்கு எங்கிருந்து கோபம் வந்தது என்றுத் தெரியவில்லை… இயற்கையாகவே மிகவும் மென்மையான குணம் கொண்டவன். அவன் அந்த நிலவைப் போல… கண் இமைக்கும் நேரத்தில் அக்னியைப் பிடித்து அவன் பின்னால் நிறுத்திக் கொண்டான்.


"என்ன செய்ய நினைத்தாலும் என்ன செய்ங்க..அவ மேல ஒரு தூசுகூடப் படக் கூடாது" ருத்ரா விரலை நீட்டி எச்சரித்தான்.
அங்கு இருப்பவனுக்கு அவன் பேசியது புரியாவிட்டாலும் விரல் நீட்டி எச்சரித்தது கோபம் கிளப்ப, ருத்ரா நெஞ்சில் அவன் வைத்து இருந்த சிறு கத்தியை வைத்து அழுத்திக் கீறி விட்டான், அது அழுத்தமாகப் பதிந்து, வலி எடுத்தது, அவன் எடுத்துக் கொண்ட மருந்தின் வீரியம் குறைந்து விட்டது போல, அந்தக் காயம் மறையாமல் அவன் மெல்லிய சந்தன நிற சட்டை முழுக்கச் சிவப்பாக மாறியது.

 

Bindu sarah

Member
Vannangal Writer
Messages
59
Reaction score
54
Points
18
3. மாய நிலா

இவர்கள் முரட்டுத் தனமாக ருத்ராவை தாக்கியதைப் பார்த்த அக்னி நிலாக்கு உடல் நடுங்கியது... என்னதான் மனிதர்கள் எண்ணிப் பார்க்க முடியாத அளவுக்கு சக்திகள் கூட வைத்து இருந்தாலும்... இவளை வளர்த்தவர்கள் என்னவோ சாதாரண மனிதர்கள்தான். இயல்பாகவே பயந்தவள் வேறு... கோபம் வந்தால் மட்டும் ஆத்திரத்தில் கண்ணு மண்ணு தெரியாது அக்னி நிலாக்கு. ஆனால் மற்றபடி இனிமையானவள்.

அக்னி நிலா கலங்கி ருத்ராவை கட்டிக்கொண்டாள், உடலில் ஒரு அதிர்வும், பயமும் அவள் உடல் மொழியில் புரிந்த ருத்ரா.

"ஒன்னும் இல்லை அக்னி அந்த கடல் கொள்ளையர்கள் இப்போது போய்டுவாங்க, நீ பயப்படாதே...." ருத்ரா அவன் வலியை பொறுத்துக்கொண்டு அவளுக்கு சமாதானம் சொன்னான். அக்னி ருத்ரா நெஞ்சில் வழியும் ரத்தத்தை கையால் அழுத்தி பிடித்துக்கொண்டு நின்று இருந்தாள்.

ருத்ராவால் எதிர்க்கவும் முடியாது இந்த நிலையில், அவர்கள் தேவையானதை எடுத்துட்டு போட்டும் என்று அமைதியாக அக்னியை ஒரு கையால் பிடித்துக்கொண்டான், அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்த்துக்கொண்டே.

அவர்களுக்கு ஒரு வார உணவு மட்டும் வைத்து விட்டு மொத்தமாக எடுத்துச் சென்றார்கள்.

"சரியான ரத்தம் குடிக்கும் மிருகங்கள் போல இவனுங்க" ஒரு 10 பேர் வந்து இருந்தார்கள் உள்ளே, மற்றவர்கள் கப்பலைச் சுற்றி சிறு சிறு படகு மற்றும் ஆயுதத்தோடு நின்று இருந்தார்கள்.

"ருத்ரா என்ன இவங்க பார்க்க காட்டு எருமை போல இருகாங்க, ஒரு அடிக்கே நான் செத்துடுவேன் போல".

"அக்னி வாய மூடு, இவனுங்களுக்கு பேசினவே பிடிக்காது போல" அக்னி பசை ஒட்டியது போல வாயை இறுக்க மூடிக்கொண்டு நின்று இருந்தாள்.

அதில் ஒருவன் மட்டும் அக்னி நிலாவை வைத்த கண் வாங்காமல் பார்த்து இருந்தவன் அவர்கள் கிளம்பும் போது.... அக்னியை பார்த்து, "பியூட்டி புல் ஐஸ்".

அக்னி அவனை விசித்திரமா பாத்து, ஆமா இந்த கலவரத்துல இத்து ரொம்ப முக்கியம் பாரு, என்று முனுமுனுத்துக் கொண்டாள்.

அவர்கள் சென்றதும், ருத்ராக்கு அதிகம் ரத்தம் போனதால் கொஞ்சம் தலை சுற்ற பக்கத்தில் இருந்த கம்பியை பிடித்து இருந்த இடத்தில் அப்படியே அமர்ந்தான்.

அக்னி நிலா, ருத்ரா அருகில் உட்கார்ந்து ஆறுதலாக, பேசிக்கொண்டும் ரத்தத்தை சுத்தம் செய்து, அவனை படுக்க வைத்தாள்.

எச்சரிக்கைக்கு அவன் எடுத்து வந்த மருந்தை எடுத்துத் தர சொல்லி போட்டுக்கொண்டு, மருந்தின் வீரியத்தால் ருத்ரன் தூங்கிவிட்டான்.

அவன் தூங்கியதை உறுதி செய்துகொண்டு, அவனது கீறல் பட்ட இடத்தை அழுத்தி பிடித்து கண்களை மூடி ஏதோ ஒரு வார்த்தை திரும்ப திரும்ப ஜபித்து.

அவள் கை எடுத்த மறு நொடி அவனுக்கு ஏற்பட்ட காயங்கள் சிறிது சிறிதாக குணம் அடைந்தது.

ஒரு பக்கம் ஒருவள் காதலுக்காக ஏங்கியும், இன்னொரு பக்கம் ருத்ராவின் நண்பன் வசி, ரோஸ் உடன் சேர்ந்து, நடந்த இரு கொலைகளின் காரணத்தை அறிய முனையும் போது தெரிய வந்த விஷயம் அறிந்த ரோஸ் நெஞ்சில் கையை வைத்து உட்கார்ந்துட்டா.

"டாக்டர் என்னாச்சி?".

"நான் எது இருக்கக் கூடாதுன்னு நினைத்த அனைத்தும் இங்கு நடக்கிறது",

"பிளைட்டில் இறந்தவர்களின் தொண்டையில் இருந்து ஒரு வேர் கிடைத்தது, அது பழைய மருத்துவ புத்தகத்தில் இருக்கு, ஆனா அதை யாரும் நேரில் பார்த்தது இல்ல, நம்ம பார்த்து இருக்கோம் அதிர்ஷ்டம் செஞ்சவங்க, அந்த வேர் உயிரையும் கொடுக்கும் உயிரையும் எடுக்கும்".
வசீகரனை பார்த்து ரோஸ் சொல்ல.

வசீக்கு இப்போது தான் மூச்சி வந்தது, "இதுக்கான எவிடன்ஸ் வேணும்", ரோஸ் அந்த புத்தகத்தின் குறிப்பு மற்றும் அந்த வேர் சாம்பிள் எல்லாம் எடுத்து வைத்து வசீயிடம் கொடுத்துவிட்டு செல்லும் சமையம்.

"ரோஸ் நீங்களும் என் கூட வரீங்களா, கொஞ்சம் வேலை இருக்கு.. நீங்க இத பத்தி கொஞ்சம் சொன்னா சரியா இருக்கும்," வசி அவனது அலுவலகத்துக்கு கூட்டிக்கொண்டு போனான், அவனது மேல் அதிகாரியை பார்க்க.

அவன் அவர் அறைக்கு அனுமதி பெற்று உள்ளே செல்லும் சமையம், அங்கு நதியா ஒய்யாரமாக அமர்ந்து இருந்தாள், 'இவளுக்கு வேற வேலை இல்ல, போலீஸா இருந்துட்டு கொலைகாரனை காதலிக்கறேன்னு பைத்தியம் போல சுத்திட்டு இருக்கா' வசீக்கும் நதியாவை ரொம்ப பிடிக்கும், அடங்காத பெண் சிங்கம், இவளுக்கு ஒரு பேர் இருக்கு டிபார்ட்மென்ட்டில் சண்டி ராணி, சண்டைக்காரி என்று நேரம் தகுந்த போல போற்றப்படும் இருபத்து மூன்று வயது ஆகும் நதியா.

வசி அவளை ஒரு அலட்சிய பார்வை பார்த்துவிட்டு ஐ. ஜியை நோக்கி நடந்தான்,

"வாங்க வேலையை முடிச்சிட்டீங்களா, சி. பி. ஐ க்கு மாத்தி விட ஆர்டர் வந்து இருக்கு". ஐ. ஜி நதியாவை பார்த்து சொல்ல. நதியா அவளுக்கு வந்து இருந்த ஆர்டர் காப்பியை ஆட்டிக்கொண்டு இருந்தாள். அவள் செய்வதை பார்த்து ருத்ராக்கு எரிச்சல் தான் வந்தது. சாந்தியை முறைத்து விட்டு.

"சார் அவ்ளோ சீக்கரம், இந்த வசி விட்டு கொடுக்க மாட்டேன் புரியும்ன்னு இங்க சிலருக்கு தெரியும்" வசி நதியாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு, ரோஸின் உதவியோடு அவன் கண்டு பிடித்ததை சொல்ல.

"இது எல்லாம் உண்மையா? இப்படி எல்லாம் கூட நடக்குமா?" என்று அவர் அச்சர்யப் பட்டுப் போனார், இருந்தாலும் ஆதாரத்தோடு இருப்பதால் ஒன்றும் மறு பேச்சி பேசும் நிலையில் இல்லை.

"சரி வசி இந்த கேஸ் நீங்களே எடுத்துக்கோங்க" மாலை ஐந்து மணி ஆனதும், நதியா சண்டி ராணியாக மாறி, அவள் கையில் வைத்து இருந்த நியூஸ் பேப்பரை ஐ. ஜி மூஞ்சில விட்டு எரிந்தாள்.

"நதியா திஸ் இஸ் டூ மச்".

"நைனா அஞ்சி மணி ஆகி, அஞ்சி நிமிஷம் ஆச்சி".

"என்னதான் அஞ்சி மணி ஆனாலும் இது ஆபீஸ்".

"உங்க ஆபீஸ் நீங்களே வச்சிக்கோங்க வசி மாமாட்ட சொல்லி என்னையும் சேத்துக்க சொல்லுங்க இதுக்காக நான் எவ்ளோ கஷ்டப் பட்டு
இருக்கேன் தெரியுமா? எங்க ஆபீஸ்ர் காலுல மட்டும்தான் விழவில்லை" நதியா செய்யும் கிறுக்குத்தனம் அனைவர்க்கும் தெரியும், வசி நதியாவின் சொந்த அத்தை பையன், முன்னாடி பெரிய மீசையோடு கம்பிரமாக உட்காந்து இருப்பது சாட்சாத் நதியாவின் தந்தை தான்.

"பாவம் டா வசி என் பொண்ணு, இப்போதான் இந்த வயசுல யாரு மேலையோ காதல் வந்து இருக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க டா".

"நல்ல அப்பா நல்ல பொண்ணு, நீங்க தான் மாமா இவள இப்படி கெடுத்து வச்சி இருக்கீங்க, 10 நாள் என்ட விடுங்க முட்டிக்கு முட்டி தட்டி சரி செய்றேன்" ரோஸ் ஒரு புறம் இங்கு நடப்பது விளங்காமல் முழிக்க, வசி அதனை பார்த்து, இவரு மாமா, இவ அவரோட பொண்ணு நான் சொன்னேன்ல, மிஸ்டர். ஜீரோவை ஒன் சைடு லவ் செய்யறான்னு, அது இவ தான்".

ரோஸ் அதனை கேட்டு, "சூப்பர் நதியா, எனக்கும் அந்த எண்ணம் இருந்தது ஆனா என்ன நம்பி ஒருத்தன் தாடியோட சுத்துறான் அதனால லவ் செய்யல".

"செம ரோஸ் உனக்கும் எனக்கும் ஒரே டேஸ்ட் பாறேன்" இருவரும் முதல் சந்திப்பில் ராசி ஆகிட்டாங்க.

"இவ்ளோ கெஞ்சி கேக்கறதால என்கூட வேலை செய்ய ஒத்துக்கறேன்" வசி பெருந்தன்மையாக சொல்ல,

"போடா டுபுக்கு, நைனா ஆர்டர் டைப் செஞ்சி வீட்டுக்கு எடுத்துட்டு வந்துடு, நான் என் ஆளு கூட டூயட் பாட போறேன்".

வசிக்கு இது சுத்தமா பிடிக்கல, வசி குழப்பமான முகத்தை பார்த்த ரோஸ், "நீங்க நினைக்கற போல மிஸ்டர். ஜீரோ மோசம் இல்ல, அவர் செஞ்சது நல்லது தான்".

"புரியல ரோஸ்".

"நல்லவர்களை வாழ வைக்கும் கெட்டவர்களை அழிக்கும் அந்த வேர், இது தெரிந்து செயல் படும் அவன் ஜீரோ இல்லை ஹீரோ வாகத்தான் இருக்க முடியும் வசி".

அதற்கான கதை மற்றும் ஆதாரத்தை வசியிடம் காண்பித்த பிறகுதான் சாதாரண மன நிலைக்கு வந்தான். மனதில் மெச்சிக் கொண்டான், 'பிராட் புள்ள அனைத்தும் தெரிந்துதான் இவனைப் பிடித்து இருக்கும் போல' நதியாக்கு வசி கண்டு பிடிக்கும் முன்பே அனைத்து விசயமும் தெரியும், வசி நதியா அறையை அதிரடியாக அன்றே சோதித்த போது தெரிய வந்தது.

பெரிய மேப் போட்டு வைத்து இருந்தாள், ஆனா ஒன்னு மட்டும் ருத்ராக்கு புரியல, அதை பார்த்துக் கொண்டு இருக்கும் போது சாந்தி டூயட் பாடி முடித்துவிட்டு வர,
"என்னடா போலீஸ், இங்க என்ன செய்ற".

"நீ கண்டு பிடிச்சது எல்லாம் கரெக்ட் தான், ஆனா என்ன கவிதை எழுதி வச்சி இருக்க?"

"இது தூக்க தெரில, அவன் காத்தில் வந்து காற்றாய் கரைவான், படிக்கக் கூட தெரில, இந்த சிரிப்பு போலீஸ்க்கு".

"லூசு படிக்க தெரியும், இந்த இடத்துல எதுக்கு எழுதி வச்சி இருக்க, அது என்னது காத்துல கரைவானா?."

"ஆமா ஒரு எவிடென்ஸ் இல்ல, கை ரேகை, கால் தடம் ஒன்னும் கிடைக்கல இல்லை, அதான்".

"அவன் அதை அழித்து கூட இருக்கலாம்".

"டுபுக்கு போலீஸ், அளித்தத்துக்கும் அங்கு எந்த அடையாளமும் இல்லை, வா இங்க வந்து உட்காரு உனக்கு தெளிவா சொல்றேன்" சாந்தி தொண்டையை சரி செய்துகொண்டு.

"முதல் கொலை, அந்த புகழ் பெற்ற அறிவாளி தனி விமானத்தில் வந்து இருக்கார், அதும் இல்லாம பிளைட் ஓட்டின இருவரை தவிர மற்றவர்கள் பெண், அந்த மனுஷன் அப்படி இப்படி போல, தெய்வம் ஒரே குஜாலா இருந்து இருக்கார், புல்லா வீடியோ செக் செஞ்சாச்சி, பிளைட்டும் அலசியாச்சி ஒன்னும் கிடைக்கல, அந்த மிஸ்டர். ஜீரோ கசக்கிய பேப்பர் தவிர".

"இது எல்லாம் எனக்கே தெரியும் போடி".

"சரி அது விடு, சீக்கிரமா அவர கண்டு பிடிச்சி என்ன தடை வந்தாலும் எனக்கு கட்டி வைப்பேன்னு சத்தியம் பண்ணு" சாந்தி கையை நீட்டி காண்பிக்க.

"அது அப்புறம் பாத்துக்கலாம்" அவள் கையை தட்டிவிட்டு வசி கிளம்பிட்டான்.

இங்கு சாந்தி கன்னத்தில் கை வைத்துக்கொண்டு, என் மன்னவா எப்போ என்னை பார்க்க வருவாய், "சற்று முன்பு பாதியிலே விட்டு விட்டு வந்த டூயட் தொடர்ந்தாள் சாந்தி.

அங்கு கடலில், அக்னி நிலா போட்டை ஊரை பார்க்க, அக்னி சக்தியை கொண்டு திருப்பினாள்.

மயக்கத்தில் இருந்த ருத்ரா, போட் வேறு திசை போவதை, எழுந்த பின்புதான் கணித்தான்.

"அக்னி நிலா என்னாச்சி?".

"ஒன்னும் இல்ல கொஞ்சம் மயங்கிட்டிங்க, இப்போ சரியா போயிடுச்சி". ருத்ரா அடிபட்ட இடத்தை பார்த்து அதிர்ந்தான், சிறு காயம் கூட இல்லை. 'எப்படி இது சாத்தியம், அதுதான் ஏற்கனவே எடுத்து கொண்ட மருந்தின் வீரியம் குறைந்ததே இப்போ எப்படி சரியா ஆச்சி' அக்னி நிலாவை சந்தேகமாக பார்க்க.

"உனக்கு எப்படி போட் ஆப்ரேட் செய்ய தெரியும்?"

அக்னி நிலா இதனை எதிர் பார்க்கவில்லை, இவன் இப்படி கேள்வி கேட்பான் என்று.

"அது தெரில கை தானா ஏதோ செஞ்சது, ஆனா எனக்கே தெரில நான் அது எப்படி செஞ்சேன்னு" அக்னி நிலா தலையை பிடித்துக்கொண்டு அமர்ந்தாள்.

"சரி விடு மனச குழப்பிக்காத, நீ இது சம்பந்தமா படிச்சி இருப்ப".

அக்னி அதன் பிறகு எதும் பேசல, தனியா அமர்ந்து எதையோ யோசித்துக்கொண்டு இருந்தாள், ருத்ராவும் சாப்பிடும் போது மட்டும் அவளுக்கு ஊட்டி விடுவான், மத்த நேரங்களில் அவன் அவளை தொந்தரவும் செய்யவில்லை.

"அக்னி நிலா நம்ம இன்னும் ஒரு அஞ்சி நாளுல ஊருக்கு போயிடுவோம்."

அக்னி நிலா மூளை வேகமாக ஒரு திட்டம் போட்டது இன்னும் மூன்று பேரை அதற்குள் கொலை செய்ய முடிவு எடுத்தாள்.

இரண்டாம் கொலை நடந்தது பற்றி வசியிடம் ரோஸ் டிஸ்கஸ் செய்து கொண்டு இருந்தாள், பிரபல அழகியல் நிபுணர், எந்த வகையான முக அமைப்பையும் மாற்றக் கூடியதில் திறமை வாய்ந்த அந்த முப்பதுகளை இளமையாக இருக்கும் மாதவி, ஆயுர்வேத மசாஜ் மாதத்தில் இரண்டு முறை எடுத்துகொள்வது தெரிந்து அவளது கண்ணில் விடும் எண்ணெயில் அந்த வேர் துகள்கள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

"அது எப்படி கண்ணுல விடுற ஆயில், எப்படியும் அங்கு வேலை செய்றவங்க செக் செய்து இருப்பார்களே?".

"வசி, துகள்கள் இருந்தது, வேர் இருந்து இருந்தா கண்டிப்பா வேலை செய்றவங்க தூக்கி போட்டுடுவாங்க, அதனால அவங்க யூஸ் செய்த அனைத்து எண்ணெய்யிலும் இருந்து இருக்கு, ஆனா வேலை முடிந்ததும் அது மறைஞ்சி போய் இருக்கு, இத ரிப்போர்ட்ல சொல்ல முடியாது சோ, உடம்பில் இருக்கும் வேர் எடுத்து தான் சொல்ல முடியும்".

"ஏன் கண்ணுல இருந்தது மறையல".

"உடம்புக்குள் போய்டுச்சுன்னா அதோட மொத்த சக்தியும் உபயோகித்து அந்த நபரை வாழ வைக்கும், அல்லது சாகடிக்கும்.. கடைசில சக்தி அந்த வேர்க்கு இருக்காது, அதனால அங்கவே தங்கிடும்".

"ஆனா கொலை காரன் நான்தான் செஞ்சேன்னு சொல்லாம சொல்லறான், அந்த கசக்கிய பேப்பர் வைத்து".

அப்போது ருத்ராக்கு ஒரு மெயில் வந்தது, இன்னும் ஒரு வாரத்தில் சிட்டிக்கு வருவது போல.

"ருத்ரன் வர போறார்" சொன்னதும் ரோஸ் தெரிச்சி ஓடிட்டா.

"சார் இனி என்ன கூப்பிடாதீங்க" அவ்ளோதா ரோஸ் ருத்ரா செய்த காரியம் அப்படி. வசி ரோஸ் செயலை பார்த்து தூங்கச் சென்ற சமையம், நடிக்கும் ருத்ராக்கும் ஒரு செய்தி வந்தது ரெண்டு கொலை ஒரே இடத்தில்.

இப்படி மர்மமான முறையில் கொள்ளப்பட்டது யார்?



கதை உங்களுக்கு பிடித்து இருக்கிறதா இல்லையா இங்கு சொல்லுங்கள் நட்பே....

 

Bindu sarah

Member
Vannangal Writer
Messages
59
Reaction score
54
Points
18
4 மாய நிலா

வசி பாதி தூக்கத்தில், சாந்தியை அழைத்துக்கொண்டு கொலை நடந்த இடத்தை நோக்கிச் சென்றான்.

"டேய் நீ வேணும்னா போ என்ன எதுக்கு கூட்டிட்டு போற, தூக்கமா வருது" என்று வண்டி ஓட்டிக்கொண்டு இருக்கும் வசி மீது சாய்ந்து நல்லா தூங்கிட்டு வந்தாள் சாந்தி.

"நீ இப்படி சோம்பேறியா இருந்தா, மிஸ்டர். ஜீரோக்கு உன்னை சுத்தமா பிடிக்காது, சீக்கிரமா அவனை நீ கண்டு பிடிச்சி வாழ்க்கை கொடுக்கணும்ல" வசி சொன்ன அடுத்த நொடி தூக்கத்தில் இருந்தவள் டூயட் மோடுக்கு போய்ட்டா சாந்தி.

இறங்க வேண்டிய இடம் வந்ததும், "அடியே விஜய சாந்தி எந்திரி".

"நான் சா...ந்....தி.... புரியுதா இன்னும் ஒரு டைம் விஜய சாந்தின்னு சொன்ன அடிச்சி முகறைய பேத்துடுவேன் புரியுதா?". சாந்திக்கு அவ இடத்துல அவ தான் ராணி மத்தவங்க கூட ஒப்பிட்டு பேசுவது எப்பவும் பிடிக்கறதில்லை, வசியும் அவளை கூப்பிடுவதை விட போறதும் இல்லை. சாந்தியை வெறுப்பு ஏற்றுவதில் அவனுக்கு அலாதி பிரியம்.

இருவரும் சண்டை போட்டுக் கொண்டாலும், ஒருவர் மீது ஒருவர் உயிர். இதுக்காக கல்யாணம் செய்து கொள்ளச் சொல்லி வீட்டில் கேட்க, இருவரின் பதிலும் ஒன்றாக இருந்தது.

"யாராவது பிரண்ட கல்யாணம் செஞ்சிப்பாங்களா, செஞ்சி கிட்டாலும் அவங்களுக்குள்ள லவ் இருந்து இருக்கும், எனக்கு உள்ள ஒருத்தனை கற்பனை செய்து உயிர் கொடுத்து வச்சி இருக்கேன் அவனை தான் கட்டிப்பேன்" இது சாந்தியின் பதில்.

வசி ஒரே வரியில் முடித்துக் கொண்டான், "எனக்கு லவர் இருக்கு".

அந்த லவர் எங்க இருக்குன்னு கேட்டா வசியிடம் பதில் இல்லை, அவளை பார்த்த மறு நொடி என் மனைவியா இந்த வீட்ல இருப்பா போதுமா."

இந்த ரெண்டு அறிவாளியை, பெற்றவர்கள் தான் கடுப்பில் கடுகாக பொரிந்தார்கள். அதன் பிறகு திருமணம் பற்றி பேசினாலும் பிடி கொடுத்து பேசவில்லை இருவரும், முகம் கூட பார்த்ததில்லை. ஒரு முறை சந்தித்து இருக்கிறார்கள்... அப்போது இருந்து காதல்.

ஆனால் இந்த சாந்தி அது கூட இல்ல, ஒரு கொலைகாரனை காதலித்துக் கொண்டு இருக்கிறாள், அடிக்கடி சாந்தி வீட்டில் இருப்பவர்கள், அவள் மனதை மாற்ற,

"அந்த கொலைகாரன் காட்டு எருமை போல கருப்பா, அகோர முகத்தோடு வந்து உன் முன்னாடி நிற்கும் சமயம் தெரியும் உன் விளையாட்டு, எங்கு சென்று விபரீதமாக முடியப் போகுது" என்று சாந்தி அன்னை இதை சொல்லி சொல்லி சாந்தியை வெறுப்பு ஏற்றுவது வழக்கம்.

"அவன் ராஜ குமரன் போல பட்டு உடுத்தி, என்னை தூக்கி போக வருவான்" அன்று இருந்து அடிக்கடி டூயட் போவது இவளது வழக்கமானது.

இவர்கள் இருவரும் சென்ற இடம்.... ஒரே கூட்டமும் கும்பலுமாக இருந்தது, ஆறு மாதத்துக்கு முன்புதான் இந்த இடத்தை அரசாங்கம் கைப்பற்றியது.

பழங்கால பொருள் ஒன்று தோட்ட வேலை செய்யும்போது கிடைத்ததால், இன்னும் தோண்டினால் எதாவது கிடைக்கும் என்று அவர்கள் ஆராய்ச்சி செய்தது போல ஒரு பழங்கால நகரம் புதைந்து இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது, இரவும் பகலும் இங்கு வேலை நடந்துகொண்டும், ஆட்கள் நடமாடிக்கொண்டும் இருப்பார்கள். அப்போ எப்படி இது நடந்தது, என்று அங்கு இருக்கும் அனைவருக்கும் இதுதான் குழப்பமே.

சாந்தி கொலை செய்யப்பட்டவனை சோதிக்கும் போது, அதே துண்டு காகிதம், இங்கும் இருந்தது. மிஸ்டர். ஜீரோ அதனை யாருக்கும் தெரியாமல் எடுத்து சாந்தி பாக்கெட்டில் மறைத்து வைத்துக் கொண்டாள். சாந்திக்கு அந்த கொலைகாரனை ஜெயிலுக்கு அனுப்ப கொஞ்சமும் விருப்பம் இல்லை. காதலன் ஆச்சே எப்படி விடுவாள்.

வசி அங்கு விசாரிக்கத் துவங்கினான்.

"அங்கு இறந்து கிடப்பவர்கள்... யாரு டீடெயில்ஸ் சொல்லுங்க".

"இவங்க டெல்லியில் இருந்து ஒரு மணி நேரத்துக்கு முன்னாடிதான் வந்தாங்க, பல ஆயிரம் வருடங்களுக்கு முன் ஏதோ ஒரு வேர பதப்படுத்தி வைத்து இருந்தார்கள் ஒரு பெட்டியில், அதனை நாங்க கண்டு பிடித்தோம் அதை ஆபீஸர் கிட்ட ரிப்போர்ட் செய்ய, அதனை சோதனை செய்ய வரவைக்கப்பட்ட உயர் அதிகாரி இந்த இருவரும்.

"அவரப் பத்தி இன்னும் சொல்லுங்க".

"அவர் நிறைய அவார்ட் வாங்கி இருகாங்க, அகழ்வாராய்ச்சி சம்பந்தமாக, அதும் இல்லாம நிறைய பொருளுக்கு கரெக்ட் ஆன விளக்கம் ஆதாரத்தோட நிரூபிச்சி இருக்கார்".

வசி இங்கு பேசிட்டு இருக்கும் போது ஒரு பெண் கருப்பு துணியால் முகத்தை மறைத்து, வேகமாக போவதை பார்த்து.

பக்கம் இருக்கும் போலீஸ் கிட்ட, "இவர விசாரிங்க நான் வரேன்".

அந்த கருப்பு நிற உடை அணிந்த பெண்ணை துரத்திக் கொண்டு போனான் வசி, இவன் துரத்தி வருவது தெரிந்து அவளும் வேகம் எடுத்தாள், அவள் கையை ஏதோ சுழற்றி தெரு விளக்குகள் அனைத்தும் அணையச் செய்தாள். வசி அந்த இருட்டிலும் துரத்திக் கொண்டு போனான், வேறு வழி சென்று அவள் முன் வந்து நின்றான்.

அந்த பெண் முகம் இருட்டில் தெரியவில்லை, அவள் ஓடக் கூடாது என்று எண்ணியவன் அவள் கையை பிடித்துக்கொண்டு "யாரு நீ... எதுக்கு என்னைப் பார்த்ததும் ஓடுற".

வசிக்கும் ஏதோ வித்யாசமான உணர்வு, "இதுக்கு முன்னாடி நம்ம பார்த்து இருக்கோம் சொல்லு, யாரு நீ..?" அவன் கேட்டுக்கொண்டு இருக்கும் போது சட்டென்று வசி சட்டையை இழுத்து ஒரு மெல்லிய முத்தம் கொடுத்துவிட்டு மாயமாக மறைந்தாள் மயக்கும் பாவை.

வசி அதிர்ந்த அந்த ஒரு நொடி போதுமாக இருந்தது அந்த இடத்தை விட்டு அவள் போவதற்கு.

"இவ நான் அன்னைக்கு பாத்த பொண்ணு, அன்னைக்கு கைல ரத்த வெள்ளத்தில் இருந்தாள், அன்றும் இப்படிதான் சாகும் தருவாயில் முத்தமிட்டாள். அப்போ நான் தேடி கொண்டு இருப்பவள் இவள்தான், மாயமாக மறைந்தவளை அங்கும் இங்கும் தேடி களைத்து.

அங்கு வரும் போது வசிக்கு ஏதேதோ தோன்றியது, அவளுடன் வாழனும் என்ற எண்ணம் மேலோங்கியது. இவன் அவளது காதல் தேவதையை நினைத்துக்கொண்டு வரும் சமையம், சாந்தி அனைத்து வேலைகளையும் முடித்து விட்டு.

"இந்த கொலைக்கும் வேர் தான் காரணம் என்று சொன்னாள், ஆனா மிஸ்டர். ஜீரோ செய்யல ஏதோ ஒரு பொண்ணு செஞ்சி இருக்கா, கழுத்தை நெரித்து சாக அடிக்கப் பட்டு இருக்கான்.... அதும் பெரிய வேர் நெரித்தது போல தடம் இருக்கு ஆனா வேர் அங்கு இருப்பதற்கு எந்த அடையாளமும் இல்லை. ஒரு முடி கிடைத்து இருக்கு, டெஸ்ட்க்கு அனுப்பி வச்சி இருக்கேன்,

மொத்தம் ரெண்டு கொலை ஒன்று ஆட்கள் நடமாடும் இடத்தில் இன்னும் ஒன்றும் அதே இடத்தில் தான் நடந்து இருக்கு, ஆன யாரோ இழுத்துட்டு போய் வேறு இடத்தில் போட்டு இருக்காங்க.

ரெண்டு இடத்துலயும் ஒரு பெண்ணின் முடி கிடைத்து இருக்கு. ஒருவன் கழுத்தில், மற்றொண்டு இழுத்து செல்ல பட்டவனின் கையில்.

வசிக்கு ஒரு வேலை நம்ம இன்னைக்கு பார்த்த பொண்ணு செஞ்சி இருப்பாளோ, எப்படியாக இருந்தாலும் என் வாழ்க்கை அவளோடுதான்.

இவ்ளோ நாள் சாந்தியை கிண்டல் செய்துகொண்டு இருந்தவனுக்கு இப்போது தான் புரிந்தது, அந்த காதல் கிறுக்கின் மகிமை.

இருவரின் நிலையும் ஒன்று தான். தெரியாத, புரியாத இரு நிழல்களை காதலித்துக் கொண்டு இருக்கிறார்கள், இவர்கள் இருவரும் காதலில் ஜெயிக்க வாய்ப்பு இருக்கா? அவர்கள் துணையை மீண்டும் சந்திப்பார்களா என்று விதிக்கு தான் தெரியும்.

கேஸ் பற்றி அனைத்து முடிச்சிகளும் அவிழ்கப்பட்டது, ஒன்றைத் தவிர, யார் அந்த கொலையாளி? ஆணா, பெண்ணா? அல்லது எதாவது அமானுசியமா? இது புரியாமல் இங்கு தத்தலித்துக் கொண்டு இருக்கிறார்கள். மேல் இடத்தில் இருந்து பிரஷர் வேறு இருவருக்கும். விலகவும் சொல்லியாச்சு முடியாது என்று பிடிவாதத்தோடு இருவரும் நின்று இருந்தார்கள்.

அக்னி நிலா, ருத்ரா இருவரும் மௌனமாக இருப்பது ஏதோ போல இருக்க, அக்னி நிலா ருத்ரனிடம் "எனக்கு கொஞ்ச கொஞ்சம் ஏதோ ஞாபகம் இருக்கு, எனக்கு அடி பட்டு இருக்கும் போது ஒருத்தர் என்னை கட்டிப் பிடித்து அழுதுகொண்டு இருந்தார், நானும் கண் மூடும் முன்பு அவருக்கு முத்தம் கொடுத்தேன்" திடீர்ன்னு ஞாபகம் வந்ததை ருத்ராவிடம் சொல்ல.

ருத்ரா சந்தோசமாக "இனி கொஞ்சம் கொஞ்சமா சரியா போய்டும் கவலைப்படாதே, சிட்டி போய்ட்டு ட்ரீட் மென்ட் பாத்து உன்ன சரி ஆக்கி உன்னோட காதலன் கிட்ட சேத்து வச்சிடறேன்" அக்னி நிலா வெட்கத்தில் சிரித்தாள்.

அக்னியின் வெட்கத்தை பார்த்த ருத்ரா, அவளை சீண்டி சிரிக்க வைத்துக் கொண்டும் மிச்சம் இருந்த பொருள் கொண்டு ருத்ரா சமைக்க, அக்னி நிலா சாப்பிட. அக்னி ருத்ராவை முழு நேர சமையல் காரனாகவே மாற்றி விட்டாள்.

"உனக்கு என்ன வேணும் அக்னி நிலா".

"எனக்கு உன் கூடவே இருக்கனும் எப்பவும், அது போதும்".

ருத்ரா அக்னி நிலா சொன்ன மறு நொடி வாரி அனைத்து அவளது உச்சியில் முத்தம் கொடுத்தான்.

அக்னி நிலா முகத்தை அவனை நோக்கி.

"இங்க கொடு" என்று நெத்தியை காட்ட. ருத்ராக்கு ரூபி நினைவுக்கு வந்தால்.

இரு சொட்டு கண்ணீரோடு, ருத்ரா ரூபியை நினைத்து அக்னி நிலாக்கு நெற்றியில் மொத்த அன்பையும் திரட்டி முத்தமிட,

"உனக்கு நெத்தியில முத்தம் கூட கொடுக்க தெரில எச்சை செஞ்சிட்ட" அவனது சட்டையில் நெற்றியை அழுத்தி துடைத்தாள்.

"என் கியூட்டி....." அக்னி நிலா குண்டு கன்னத்தை பிடித்து இழுத்துக் கொஞ்ச.

"நீ எனக்கு சோறு போட்டு கிள்ளி வச்சா, சாப்பிட்டது காணாம போய்டும், போ நீ கிள்ளி வச்சதால எனக்கு திரும்ப பசிக்குது, வா வந்து திரும்ப எதாவது சமைச்சி கொடு" ருத்ரன் சட்டையை பிடித்து இழுத்துக் கொண்டு சமைக்கும் பகுதியில் தள்ளி விட்டுட்டு அக்னி நிலா அந்த கிட்சன்க்கு எஜமானி அம்மா போல மேற்பார்வையிடத் துவங்கினாள்.

"ருத்ரா சமைத்துக்கொண்டே உனக்கு என்ன வேண்டும், நியூ இயர்க்கு" அக்னி நிலா யோசித்துவிட்டு.

"தேவைப்படும் போது கேட்டு வாங்கிக்கிறேன் ருத்ரா".

"சரி டா குட்டி...".

"அங்க போனதும் நீ என்ன செய்ய போற ருத்ரா?"

"லேப்க்கு போய்டுவேன், அப்புறம் என் பிரண்டு ஒருத்தன் இருக்கான், என் உயிர் அவன், அவனுக்கு ஏதோ ஒரு கேஸ் கொடைச்சல் கொடுக்குதாம் அதுக்கு ஹெல்ப் செய்யனும், பர்மிஸ்ஸன் எப்படியும் இந்த நேரம் வாங்கியிருப்பான்".

"அப்போ நான் உன் வீட்ல தனியா இருக்கணுமா," அக்னி நிலா கோபித்துக்கொண்டு ஒரு மூலையில் சென்று உட்கார்ந்து கொண்டாள்.

ருத்ரன் அவள் கோபத்தில் நடக்கும் போது அழுத்தி கால் வைத்து போட்டை அதிர வைத்து கொண்டு இருந்தாள், "சரியான அடம்".

சமைத்ததை எடுத்துக் கொண்டு போய் கொடுக்க "எனக்கு ஒன்னும் வேண்டா போ" அவள் சொல்வதை காதில் வாங்காமல் ருத்ரா ஊட்டி விட துவங்கினான்.

அதே சிடு சிடு முகத்தோடு அக்னி நிலா சமத்தாக சாப்பிட்டுக் கொண்டு இருக்க.

"கோவம் போச்சா அக்னி நிலா குட்டிக்கு".

"இல்லை" என்றாள் முகத்தை ஒரு முழம் தூக்கி வைத்துக் கொண்டு.

ருத்ரா அவளுக்கு ஊட்டி விட்ட கழுவாத கையை வைத்து, மூக்கில் ஒரு கோடு போட்டு.

"நம்ம ரெண்டு பேர் மூக்கும் நீளமா இருக்கு இல்ல".

"அதை வாயால சொன்னா பத்தாதா, எச்சை கையில் மூக்கை அசிங்கப் படுத்துற." ருத்ரா சட்டையில் துடைத்துட்டு ஓடிட்டா,

"நீ இப்படியே என் சட்டையை அழுக்கு பண்ணிட்டு இரு, ஒரு நாள் இல்ல ஒரு நாள் உன்னை துணி துவைக்க வைத்து வச்சி செய்றேன் பாரு".

"அதையும் பாப்போம் போடா..." இப்படியே இருவருக்கும் நெருக்கம் அதிகரித்துக் கொண்டே போனது, பெயர் தான் இந்த உறவுக்கு வைக்க தெரியல இருவருக்கும்.

சாந்தி வசி மண்டையை பிச்சிகிட்டு இன்னும் பைத்தியம் தான் ஆகலை. இந்த நாலு கொலை கேஸ் நிற்க விடாமல் இருவரையும் சுழற்றிப் போட்டது.

இவர்கள் சிட்டியை நோக்கி பயணத்தை துடங்க, அங்கு உலகமே கொண்டாடிக் கொண்டு இருந்தது புதிய வருடத்தை.



மாயா மாயம் செய்ய வருவாள்....
 

Bindu sarah

Member
Vannangal Writer
Messages
59
Reaction score
54
Points
18
5 மாய நிலா

அங்கு கடலில் இருவர் சிற்றி திறிய... இங்கு நிலத்தில் ஒருவளின் காதல் பயணம்...

மயக்கும் இரவு பொழுது கண் கவரும் வண்ண விளக்குகள் அங்கும் இங்கும் கூட்டம் கூட்டமாக மக்கள் சுற்றி திரிந்தார்கள்

சிட்டி நடுவில்.... நியூ இயர் கொண்டாட்டங்கள் கோளாகலமாகத் துவங்கியது.

"டேய் உன்ன டிவோர்ஸ் பண்ணப் போறேன்டா..." என்றாள் நடு ரோட்டில் உச்சகட்ட சத்தத்தோடு, அந்த சமயம் அங்குச் சென்ற அனைவரும் இவளை வித்யாசமாகப் பார்த்துக்கொண்டு இருந்தார்கள். அவள் உடுத்தி இருந்த உடைக்கும் அவள் போடும் சத்தத்திற்கும் சிறிதும் பொருத்தம் இல்லாமல் நின்றிருந்தாள்...

கருப்புக் கலர் புடவைக் கட்டி, மேக்கப்பே இல்லாமல் அந்த சிக்னலில் ஜொலித்தாள்.. அழகு ஓவியமாக...

சற்று நேரம் தேடிக் கண்டுபிடித்து அவளது மொபைலை எடுத்து 'மியாவ்' என்று சேவ் செய்து வைத்திருந்த எண்ணிற்கு அழைத்தாள்.

சில வினாடிகள் கழித்து போனை எடுத்த அந்த நபர்... "ஷைலு எங்க இருக்க?" என்று கேட்ட அடுத்த நொடி...

"டேய்ய்ய்! நான் உன்ன டிவோர்ஸ் செய்யப் போறேன்டா. கல்யாணம் ஆகி ஒரு வருஷத்த முழுங்குன சரி.. ஏதோ பிசினஸ் செய்றன்னு உன்னவிட்டு வச்சா, எவடா அவ எலியா எலியா அவக்கூட ஒரசிட்டு போட்டோ எடுத்தது மட்டும் இல்லாம... எவ்ளோ தைரியமிருந்தா இன்ஸ்டால போட்டோ வேறப் போடுவ!!".

பேசிக்கொண்டே போனவளை நிறுத்தி "குடிச்சிருக்கியா?" என்றான் கடுமையாக .

"ஆமா நீ எப்படிக் கண்டுபிடிச்ச?? ஆமாடா அப்படித்தான் குடிப்பேன் உனக்கு என்ன" என்று போனை வச்சிட்டு.

'எலியா எலியா... மை பெஸ்ட்டி' என்று டேக் செய்யப்பட்ட போட்டோவைப் பார்த்து வெறிவந்த ஷைலு... போனை அங்கேயே போட்டுவிட்டு... 2 மிதி மிதித்துவிட்டுக் கொஞ்சம் தூரம் நடந்தாள்.

அங்கு அமைதியாக ஒரு கும்பல் உட்கார்ந்து இருக்க, அவர்கள் அருகில் சென்று நின்று..

"இங்க என்ன கூட்டம், நியூஇயர் செலிப்ரேட் செய்யாம" என்று வழியப் போய்ப் பேசினாள் ஷைலு.

"அதெல்லாம் எங்களுக்குப் பிடிக்காது கா... மீட் பண்ணனும்னுத் தோனுச்சி அதான் இங்க உட்காந்து, வேடிக்கப் பாக்கறோம்" என்றான் அதில் ஒருவன்.

'நானும் வரேன்டா வேடிக்க பாக்க' என்று அங்கு அமர்ந்திருந்த ஒரு பொண்ணுப் பக்கத்தில் போய் உட்காந்தாள் ஷைலு.

"ஹே நீ லவ் செஞ்சிருக்கியாடி?" என்று கேட்டாள் ஷைலு, பக்கத்தில் இருந்த பெண்ணிடம்.

"இல்ல கா இனிதான், தேடிட்டு இருக்கேன், எதாவது நல்ல பையனா இருந்தாச் சொல்லு" என்றாள் அந்தப் பொண்ணு.

"ஏன்? உனக்கு நல்ல பையன்தான் வேணுமா? ஆனா இருக்கறதுலயே மோசமான ஒரு பையனதான் லவ் பண்ணேன் தெரியுமா?" என்றாள் ஷைலு அனைவரையும் பார்த்து.

"அக்கா ஏதோ நல்லா அடி வாங்கிருக்கப் போல....." என்றான் ஒருவன்.

"பலமா டா.... நல்ல வலி, அதான் போய்க் கொஞ்ச ரவுண்டு ஏத்திட்டு வந்தேன், அந்த நாயைத் திட்ட" என்றாள் ஷைலு .

அதில் துருதுருவென ஒரு பெண்... "அக்கா! எத்தனை ரவுண்டு, 1.2.3.4...." என்று கையைக் காட்டிக்கொண்டே போனாள்.

"என்னக்கா பாக்க குடும்பக் குத்துவிளக்கு மாதிரி இருக்கீங்க, செமயா அடிக்கிறீங்க தூள்... சூப்பர் கா" என்றாள்.

"எனக்கென்ன ஆசையா, இப்படி இருக்கனும்னு? அவனுக்குப் பிடிக்கும்ன்னு நா சாப்டுறத கூடக் குறைச்சிட்டேன் டா... முன்னாடி 65 கிலோ இருந்தேன் தெரியுமா, இப்போ வெறும் 45 தான்டா இருக்கேன்" என்று புலம்ப ஆரம்பித்தாள் ஷைலு.

"அக்கா நீ ரொம்பப் பாவம்தான்.... அவ்ளோ லவ்வா மாமா மேல?"

உட்காந்து பேசிக்கொண்டு இருந்தவள், எந்திரித்துக் கையை அகலமாக விரித்து.... "இவ்ளோ, இவ்ளோ, இவ்ளோ.... இன்னும் இன்னும் அதிகமா லவ்வு" என்றாள் ஷைலு கண்களில் காதல் பொங்க.

"அக்கா அப்போ ஸ்டார்ட் பண்ணு உன்னோட ஸ்டோரிய" என்று அங்கு இருந்த கும்பல் கூச்சல் போட.

"எப்படி இருப்பான் தெரியுமா?", என்று ஆரம்பித்தவள்.... "ஜம்முனு ராஜாக் கணக்கா இருப்பான். செம ஹேண்ஸம், டேலன்ட் எல்லாம் என்னவே முடியாது, பிரண்டுனா உயிரக்கூடக் கொடுப்பான். ஸ்வீட் அண்டு சாக்லேட் பாய் மத்தவங்களுக்கு மட்டும்" என்றாள் உற்சாகமாக ஆரம்பித்தவள் சோகமாக முடித்தாள்.

"மத்தவங்கள விடு. உன்னப்பத்திச் சொல்லு, உன்ட எப்படி மாமா நடந்துக்குவாரு?" என்று ஆர்வத்தில் அனைவரும் ஒருசேரக் கேட்க.

"சரியான பிக் சைஸ் மியாவ், எப்போ பாரு மொறச்சிட்டே இருப்பான், நான் ஆசையா ஐ லவ் யூ சொன்னா.... அவன் என்ன சொன்னான் தெரியுமா?"

"என்ன சொன்னாங்க கா?" கோரஸாகக் கூறினர்.

"ஐ லவ் மை பேமிலி" ன்னு சொன்னான்".

"அச்சோ அப்புறம் என்னாச்சி".... என்றனர் அனைவரும்.

"டேய் கோரஸ்ஸ நிறுத்துங்கடா எனக்கு ஃப்லோ வரல"...

"சரி கா நீ சொல்லு"... அனைவரும் வாய் மீது விரலை வைத்து அமைதியானார்கள்.

"சரி பேமிலி தான் பிடிக்கும்ன்னு சொல்லிட்டேனே... இவனக் கரெக்ட் செய்றது ரொம்பக் கஷ்டம், பேமிலிக்குள்ளப் போய்டலாம்ன்னு பிளான் செஞ்சி, என் அப்பா முன்னாடிப் போய் நின்னா... அவரே ஒரு நல்ல ஆபர் குடுத்தாரு... ஆனா அது எனக்கு ஒரு யூஸ்ஸும் இல்ல"

"அப்படி என்னக்கா ஆபர்?" என்றான் அந்தக் கூட்டத்தில் ஒருவன் ஆர்வமாக.

"அப்பா நான் உங்கக்கிட்டப் பேசனும்..." என்று ஷைலு தைரியத்தை வரவழைத்துக்கொண்டு பேசத் தொடங்கினாள்.

அவள் ஆரம்பித்ததைப் பார்த்த ஷைலுவின் அப்பா... "அதுக்கு முன்னாடி நான் உன்டப் பேசனும்" என்று அவர் பாட்டுக்குப் பேச ஆரம்பித்தார் .

"நீ என்ன பண்ற நாளைக்கு நம்ம கிருஷ்ணன் அங்கிள் ஆபீஸ்க்குப் போற... கொஞ்ச மாசம் பிசினஸ் பத்தி கிருஷ்ணன் அங்கிள் அவங்க பையன்டக் கத்துக்கிட்டு வந்து, நம்ம கம்பெனிய பாத்துக்குற".

'கண்ணா லட்டு தின்ன ஆசையா???? அதும் ரெண்டு லட்டு!!!!' என்று யோசித்து 'செம சந்தோசம் ஐயா... யாருக்குத்தான் லவ் பண்றப் பையன் கூட நாள் முழுக்க இருக்கப் பிடிக்காது? செம்ம ஹாப்பி ஷைலு.' என்று மனதிற்குள் குஷியானவள், "சரி பா நான் இன்னைக்கே போறேன்" என்று துள்ளிக் குதித்துக்கொண்டு வந்தாள்.

அந்த சந்தோசம் கொஞ்ச நேரம் கூட நீடிக்கல. 'ஐயோ அறிவுக் கெட்ட ஷைலு , பேமிலிதான்டி முக்கியம், அத பர்ஷ்டு கரெக்ட் செய்னும் அதைவிட்டுட்டு இப்படி வந்து அப்பா வச்சப் பொறியில மாட்டிகிட்டியே...! சரின்னு வேற சொல்லிட்டோம். இப்போ போய்ப் போலன்னு சொன்னா, கடிச்சிக் கொதறிடுவாரே!' என்று சற்று முன்பு தான் செய்த முட்டாள்தனத்தை நினைத்து ஷைலு தன்னைத்தானே திட்டிக்கொண்டு இருந்தாள்.

"சரி எப்படியும் கிருஷ்ணன் அங்கிள் வருவாரு அவரக் கரெக்ட் செஞ்சா போதும் கல்யாணம் செஞ்சி, அவன உரிமையா லவ் டார்ச்சர் செய்லாம்" ன்னு ஷைலு போட்டக் கணக்கு மொத்தமா தப்பாப் போயிடுச்சி, ஆபீஸ் போன அப்புறம்தான் ஷைலுக்குத் தெரிஞ்சது.

மொத்தப் பொறுப்பையும் நம்ம ஹீரோட்டக் குடுத்துட்டு டாடி எஸ்கேப்னு, இதுல ஒரே நல்ல விஷயம், இன்னைக்குக் கிருஷ்ணா அங்கிள் வந்து இருக்கார், ஷைலுவ வெல்கம் பண்ண. சோகமாக உள்ளே நுழைந்த ஷைலுவைப் பார்த்த, இவளது ஆருயிர் நண்பன் மனோ.

"வாங்க ஜூலியட் வாங்க, ரோமியோவத் தேடி வந்துட்டீங்க போல" என்று நக்கலாக வரவேற்றான் மனோ.

"போடா டேய் அப்படியே வந்துட்டாலும், உன் பிரண்டு எப்படியும் பூனை மாதிரி என்ட சீறத்தான் போறான்", என்று சலித்துக்கொண்டே பேச.

ரொம்ப நேரம் மனோ சவுண்டுக் கேக்காம இருக்க, 'என்ன இவன் அமைதியா இருக்கான்' என்று யோசித்தவள் நிமிர்ந்து மனோவைப் பார்க்க, அங்கு அவன் இருந்தாள் தானே.

"எங்கப் போனான் மனோ? டேய்ய்ய்ய் எங்க டா இருக்க....?" என்று திரும்பியவளின் முன்னாள் கைகளைக் கட்டிக்கொண்டு ஷைலுவை முறைத்து, நின்றிருந்தான் ஆகாஷ்.

ஆகாஷைப் பார்த்த ஷைலு, விழிகளை விரித்து ஆச்சர்யமாகப் பார்த்துக்கொண்டிருந்தாள், எவ்ளோ டைம் பார்த்தாலும், சலிக்காத முகம், 'ஐயோ இவனா, எப்போ வந்தான்னுத் தெரியலயே, சொன்னது எல்லாம் கேட்டுட்டானா' என்று ஆகாஷ் முகத்தை ஆராய்ச்சி செய்ய. எப்போவும் ஒரே போல மூஞ்ச வச்சி இருந்தனா எப்படித்தான் கண்டு பிடிக்கிறதாம், என்று அவனைத் திட்டித் தீர்த்தாள் மனதில்.

"இங்க என்ன பண்ற...?" என்றான் ஆகாஷ் மிரட்டும் குரலில்.

"அது கிருஷ்ணன் அங்கிள, பார்க்க வந்தேன்" என்றாள் ஷைலு.

"பாக்க வந்தா பாக்க வேண்டியதுதானே இங்க என்ன வேடிக்கப் பாத்துட்டிருக்க?"

"சரி மியாவ் ...." நாக்கைக் கடித்துக்கொண்டு, 'அய்யோ'ன்னு தலையில அடித்துக்கொண்டு.. "சரி ஆகாஷ்" என்றவள் விட்டால் போதும் என்று கிருஷ்ணாவைத் தேடிப் போனாள் ஷைலு.

அவள் பேசுவதைப் பார்த்து, அந்தக் கடுமையான முகத்துல சிரிப்பு வரத்தான் செய்தது ஆகாஷ்க்கு.... "என்ன டிசைன் டிசைனா இம்ச பண்ணப் பிளான் போடறதுக்கே பொறந்து இருப்பா போலப் பிசாசு" என்று போகும் ஷைலுவைப் பார்த்துச் சிரித்துக்கொண்டு நின்றிருந்தான்.

"மனோ இங்க வா" என்றான், மறைந்திருக்கும் மனோவைக் கூப்பிட, அவனும் தலையைச் சொரிந்து கொண்டே வந்தான் .

"இங்க என்னடா பண்றா அவ?" என்றான் ஆகாஷ், ஷைலு வந்ததன் நோக்கத்தைத் தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில்..

"அதுவா டா? ஒரு ஆறு மாசம், உனக்கு அசிஸ்டன்ட்டா இருக்க அவ அப்பா அனுப்பி வச்சிருக்காருடா" என்று ஆகாஷின் தலையின்மீதுப் பெரிய இடியை இறக்கினான் மனோ.

"ஐயயோ!!! என்னாது????? அசிஸ்டன்ட்டா?!!!!! மனோ! என்ன காப்பாத்து.... அவளைக் கூட வச்சிட்டு வேலைப் பாக்கிறது, ரொம்பக் கஷ்டம்டா. உனக்கே தெரியும்ல? என்ன படிக்கக்கூட விடாம காலேஜ்ல எவ்ளோ டார்ச்சர் செஞ்சான்னு" என்ற ஆகாஷின் முகத்தில் பதட்டம் தெரிந்தது.

"டேய்ய்!! எல்லோரும் லவ் பண்றப் பொண்ணுக் கூட இருக்கனும்ன்னு தானடா நினைப்பாங்க? நீ என்னடா வித்யாசமா நடந்துகிற?" என்றான் ஆகாஷ் மனதைப் படித்த மனோ.

"உனக்கு எப்படிடா தெரியும்!!" என்றான் ஆகாஷ் மனோவைப் பார்த்து அதிர்ச்சியாக.

"அதான் வழியுதே!! அவ கூட இருக்குற வர அவளைப் பாத்தாலே, எரிந்து விழுறது.... அவப் போன அப்புறம் ஏக்கமாப் பார்க்க வேண்டியது.... காலேஜ்ல மூக்காவாசிப் பேருக்குத் தெரியும் நீ அவள லவ் பண்றன்னு".

"டேய்ய் அவட்ட சொல்லிடாதடா, ஒரு ரெண்டு வருஷம் போகட்டும், கொஞ்ச சிக்கல் இருக்கு அதெல்லாம் சரி செஞ்சிட்டு நானே அவகிட்ட சொல்லிக் கல்யாணம் செஞ்சிக்கிறேன்" என்றான் ஆகாஷ் காதல் போங்க.

"ஆகாஷ், பாவம் டா அவ.. ஜஸ்ட் சொல்லிடு இல்லாட்டி அவ இருக்குற ஸ்பீடுக்கு சீக்ரம் கல்யாணம் செஞ்சிப்பா" என்று மனோ கூற...

"அதுலாம் நான் பாத்துக்கிறேன் மனோ, அப்படி என்ன பண்ணிடுவா என்ன மீறி அவ?" என்றான் ஆகாஷ் தனது முடியை தன் கைகளால் கோதியப்படியே..

அவள் கல்யாணம் செய்யும் பிளானை இன்றே துடங்கிவிட்டாள் ஷைலு, அவளின் மாமனாரிடம்.

இது தெரியாத ஆகாஷ், அப்போது இருக்கும் அலுவலகப் பிரிச்சனையை அவிழ்க்க முடிவு செய்து கொண்டுடிருந்தான்.

கிருஷ்ணனை நோக்கிச் சென்ற ஷைலு, அவளது வேலையைத் தொடங்கினாள். கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தவள், பேச்சை நிறுத்தி ஏதோ சோகமா மூஞ்ச வச்சிட்டு திடீர்ன்னு அமைதி ஆயிட்டா. அதைப் பார்த்த கிருஷ்ணன்.

"ஷைலு என்னாச்சி?" என்றார்.

அப்போதுதான் கனவுலகத்தில் இருந்து வெளியே வந்தது போல நடித்தவள் "சொல்லுங்க அங்கிள்" என்றாள்.

"என்னாச்சி திடீர்னு சைலன்ட் ஆயிட்ட?" என்றார் கிருஷ்ணன்.

"அங்கிள் ஒன்னுக் கேட்டாத் தப்பா நினைச்சிக்க மாட்டிங்களே?" என்று தயங்கித் தயங்கிக் கேட்டாள் .

"இந்த அங்கிள்கிட்ட என்ன தயக்கம்?" என்றார் அவர்.

"நா உங்களை மாமான்னு கூப்பிடலாமா?" என்றாள் ஆர்வமாக கிருஷ்ணாவின் முகத்தைப் பார்த்து.

"இங்கிலிஷ்ல அங்கிள்ன்னுக் கூப்பிட்றத தமிழ்ல மாமான்னுக் கூப்பிட எதுக்கு இவ்ளோ யோசிக்கிற" என்று அவர் அறிவாளித்தனமாகப் பதில் சொன்னதாக நினைத்துச் சிரித்தார்.

'இவரு பையனுக்கு மேல டியூப்லைட்டா இருக்காரே!' ஷைலு கோபத்தை அடக்கி தன்னை சமநிலைப் படுத்திக்கொண்டு.

"அப்போ உங்க வைஃப்ப அத்தைன்னுக் கூப்பிடனும், லைப் முழுக்க" என்றாள்.

"நான் மாமான்னா அவ உனக்கு அத்தைதான், தாராலமாக் கூப்பிட்டுக்கோ மா" என்றார்.

'இவரை.... மாமான்னு பாக்குறேன்..... இல்லன்னா, உன்ன கொல்லப் போறேன்' என்று அவர் கழுத்தை நெரித்துவிடும் அளவிற்குக் கடுப்பானாள் ஷைலு. "குடும்பமே என்ன சாவடிக்கணும்ன்னு தான் பொறந்தீங்க" என்று சலித்துக் கொண்டாள் ஷைலு.

"அய்யோ! என்னம்மா? எதுக்குக் கோபப்படுற? அதான் கூப்பிட்டுக்கோன்னு சொல்லிட்டேன்ல" எஎன்றார் கிருஷ்ணன் தன் கழுத்தைப் பாதுகாப்பாகப் பிடித்துக்கொண்டு.

"லூசா மாமா நீ? இது கூடவா உனக்குப் புரியல?",

"புரியற போல. என்னனு சொல்லு மா" என்றார் அவர் வெள்ளந்தியாக..

"உங்க பையனை நான் புருஷன்னு சொல்லுனும்" என்றாள் அதிரடியாக .

அவரோ "அதுக்கு என்னமா கூப்டுக்கோ..!!" சொல்லி முடித்து ... தன் வாயிலே கை வைத்துக் கொண்டார்.

'ஹப்பா... இப்போவாவது புரிஞ்சதே!' என்று நினைத்து, கிருஷ்ணன் முகத்தைப் பார்த்தாள்.

கொஞ்ச நேரம் கழிச்சி அவரது ஷாக்கான மனநிலை கொறஞ்சதும், "இத நீ அவன்கிட்ட தானம்மா சொல்லணும்" என்று வினவ...

"சொல்லிட்டேன் அங்கிள். நா ஐ லவ் யூ ன்னு சொன்னா, அவன் ஐ லவ் மை பேமிலின்னு சொல்லுறான்" என்று ஆரம்பித்தவள் நடந்த அனைத்தும் சொல்லி முடிச்சிட்டு, அவருடைய ஜூஸ்ஸும் சேர்த்துக் குடித்து விட்டாள், களைப்பில்.

"என்ன மா என் புள்ளயா இருந்துட்டு, இவ்ளோ தெண்டமா இருக்கான்." என்று சலித்துக்கொண்டார் கிருஷ்ணன்.

"உங்களை விட மோசம் அவ்ளோதா வித்யாசம்" என்று கிருஷ்ணனுக்கு ஒரு பஞ்ச் கொடுத்தா.

"சரி விடுமா, உங்க வயசுப் பசங்க பேசிக்கிற கோட் வேர்டு லாம் எனக்கு எப்படி மா தெரியும்?" என்றார் அவர் சிரித்துக் கொண்டே.

"எது!!! இது கோட் வேர்டா? வேணா அங்கிள். ஏற்கனவே உங்க பையன் செஞ்சதுல காண்டுல இருக்கேன், இதுல நீங்கவேற" என்றாள் ஷைலு சலித்துக் கொண்டு.

"சரி. என்ன பண்லாம்னு சொல்லு மா நீயே.." என்றார் அவர்.

"எப்படியாவது கல்யாணம் செஞ்சி வச்சிடுங்க, அந்த மாடு நீங்க சொன்னா கேப்பான்" என்றாள் ஷைலு.

"யாருமா? அவனா? அவனும் அவன் அம்மாவும் என்ன ஒரு ஆளாவே மதிக்குறதே இல்ல" தன் தலையில் கைவைத்துக்கொண்டார் கிருஷ்ணன்.

"உங்களால எதுமே முடியாதா... என்ன மாமா பண்றது" என்றாள் சோர்வாக. சிறிது நேரம் யோசித்த கிருஷ்ணன்.

"ஒன்னுப் பண்ணு மா. நீ அவன பாலோவ் செய்றதுக்கு உன் அத்தைய பாலோவ் செய். அத்தையக் கரெக்ட் செஞ்சிடு.. அவ எது சொன்னாலும் ஆகாஷ் கேப்பான்" என்றார்.

ஷைலு கண்கள் மின்ன, "அப்படியா அங்கிள்?? அவங்க சொல்லியும் கேக்கலான என்ன செய்றது?"

"அவ நிறைய ட்ரிக்ஸ் வச்சி இருப்பா மா. அவன சம்மதிக்க வைக்க", என்றார் கிருஷ்ணன் சிரித்துக்கொண்டே.

"சரி மாமா.." என்று தன் அத்தைப் பற்றிக் கொஞ்சம் டீட்டைல்ஸ் கேட்டு பிளான் போட்டுக் கொண்டிருந்தார்கள் இருவரும்.

ஆகாஷ் வேகமாக தன் அப்பாவைப் பார்க்க வந்தான்... சிறிது நேரம் வேலை செய்துகொண்டிருக்கும் போது தான் நினைவுக்கு வந்தது. ஷைலுவின் ஆட்டத்தைப் பற்றி... 'அப்பாவை பிரைன் வாஷ் செஞ்சிடுவாளோ?' என்று பதறி அடித்துக்கொண்டு ஓடி வந்தான்.

இருவரும் பிளான் போட்டு முடிச்சி "நாளைல இருந்து ஸ்டார்ட் பண்றேன் மாமா" என்றாள்.

'என்ன இவ புதுசா, மாமான்னு லாம் கூப்பிடறா? சரி இல்லையே' என்று நினைத்தவன், "என்ன திடீர்ன்னு மாமான்னு சொல்ற என்ன விஷயம்?" என்றவாறு ஒரு சேரை இழுத்துப் போட்டுக் கொண்டு உட்கார்ந்தான் அவன்.

"அது வந்து.... அங்கிள் மாமாலாம் ஒன்னுதான? நாங்க தமிழ வளர்க்கப் போறோம்" என்று ஷைலு கேவலமாக சமாளித்தது ஆகாஷ்க்குத் தெரிந்தது.

"சரி ஏதோ பண்ணுங்க, அப்பா ஷைலு அப்பா போன் செஞ்சி இருந்தாரு, அவரு அடங்காத பொண்ண அடக்கி அனுப்பணுமாம் ஒரு ஆறு மாசத்துல,"

"யாரு நான் அடங்காதவளா, பாருங்க மாமா உங்க புள்ளய" என்று குற்றப்பத்திரிக்கை வாசித்தாள்.

"டேய்ய் அப்படியெல்லாம் சொல்லாத , குழந்தை மூஞ்சியப் பாரு சுருங்கிடுச்சி".

"சுருங்கிட்டாளா 4 கிலோ ஏறி இருக்கா, காலேஜ்ல மெயிண்டைன் பண்ணா, காலேஜ் முடிஞ்சதும், நல்லா அத்தைய டார்ச்சர் செஞ்சி தின்னுட்டே இருந்திருக்கா".

'அடப்பாவி! இன்னும் குறைக்கணும்னா நான் பட்னியா தான் டா இருக்கனும்'. மனதிற்குள் எண்ணிக்கொண்டாள் ஷைலு.

"மாமா நா என்ன மாடலாவா போகப் போறேன்? ஒல்லியா ஆகி, ஹவுஸ் வைப்க்கு இந்த வெயிட் போதும்ன்னு சொல்லுங்க மாமா".

"மருமக சொல்றதும் சரி தான்டா மகனே". என்று ஷைலுக்கு ஆதரவாக பேசிய கிருஷ்ணனின் வார்த்தைகளைக் கேட்டு அதிர்ச்சியானான் ஆகாஷ்.

"என்னது மருமகளா? நைனா உன் பேச்சே சரி இல்ல... பாத்துக்கோ". அதுக்கப்புறம் கிருஷ்ணன் வாயைத் தொறந்தால் தான.

"ஷைலு வா பைல்ஸ் பாக்கணும்" என்றான் ஆகாஷ் .

"நீ போய்ப் பாருடா, நான் டையார்ட் ஆயிட்டேன் அங்கிள்ட்ட பேசிப் பேசி" என்று சேர்ல நன்றாக சாய்ந்து உட்கார்ந்தாள் .

ஆகாஷ் விடுவானா "ஷைலு காதை பிடித்துக்கொண்டு அவனது அலுவலுக அறைக்குக் கூட்டிக்கொண்டு போனான்.

இங்கு கிருஷ்ணன் "பையன் போக்கே சரி இல்லையே" என்று நினைத்துக் கொண்டிருந்தார்.

'எப்படிப் பைலை பார்ப்பது?' என்று சொல்லிக் கொடுத்து இவன் டையர்டு ஆனது தான் மிச்சம். ஒரு லைன் பாக்க 100 டவுட் கேட்டாள்...

ஆகாஷ் தீவிரமாக வேலைச் செய்துகொண்டிருக்க, திடீர்ன்னு "என்ன இவ சத்தத்தைக் காணோம்?" என்று யோசித்தவன் திரும்பி சோபாவில் அமர்ந்து இருக்கும் ஷைலுவைப் பார்க்க, அவளோ உட்காந்தவாறு நல்லாத் தூங்கிட்டாள்...

"இவளை, இந்தாடி ஷைலு எந்திரிடி என்று கன்னத்தைத் தட்டி, கண்களை மூடி இருந்தவள், ஆகாஷை நெருங்கி அமர்ந்து அவன் மீது சாய்ந்துப் படுத்துத் தூங்க ஆரம்பித்தாள்.

கொஞ்சம் நேரம் கழித்துக் கிருஷ்ணா வர, இவங்க ரெண்டுப் பேரைப் பார்த்து.... "இதுக்கு பேர்தான்

'ஐ லவ் பேமிலியா' மகனே?" என்று நினைத்த கிருஷ்ணன் போட்டோ எடுத்து ஆகாஷ் அம்மாக்கு அனுப்பிவைத்தார் .

ஆகாஷின் அம்மாவோ கொஞ்சம் இல்ல, நிறையவே ஒழுக்கம் பார்ப்பவர். அப்படிப்பட்டவர், ஆகாஷ் ஷைலுவின் போட்டோவைக் கண்டு சும்மா இருப்பாரா?

'ஆகாஷ் எப்போ வீட்டுக்கு வருவான்? பேய் ஓட்டலாம்...' என்று காத்துக்கொண்டிருந்தார் ஆகாஷின் தாயார்.
 

Bindu sarah

Member
Vannangal Writer
Messages
59
Reaction score
54
Points
18

6.மாய நிலா

ஷைலு இன்னும் நெருங்கி அவன் மீது சாய.. 'ஐயோ இவ வேற நேரம் காலம் புரியாம, இப்படி இருந்தா, நா எப்படி டி கண்ட்ரோலா இருக்குறது ராட்சசி' என்று புலம்பிக் கொண்டு இருந்தான்.

அவள் துக்கத்தில் ஏதோ பேச, ஆகாஷ் காதுக்கு சரியா கேட்கல சற்று குனிந்து கேட்டான் "மியாவ்.... ஐ லவ் யூ, வான்ட் டூ கிஸ் யூ, வான்ட் டூ ஹக் யூ... ஏன்டா தூரமா போற", என்று பேசிக்கொண்டு இருந்தவள் ஆகாஷை மொத்தமாக சாய்த்து பக்கத்துல படுத்துட்டா.

'அவ பேசுனதும், அடிஆத்தி விட்டா கனவுல குடும்பமே நடத்திடுவா போல' அதிர்ச்சில இருந்தவனை மொத்தமா சாச்சி மேல படுத்துட்டா, 'இவ வேற, ஷாக் மேல ஷாக் கொடுக்குறாளே' என்று ஆகாஷால் புலம்பத்தான் முடிந்தது.

"ஐயோ ஏதேதோ ஹார்மோன்ஸ் எக்குத்தப்பா வேகமாக வேலைசெய்யுதே, ஷைலு எந்திரி டி, புரிஞ்சிக்கோ எந்திரி' அவனும் தட்டி, கிள்ளி ஏதேதோ செஞ்சும் எந்திரிகல.

"ஆபத்துக்கு பாவம் இல்ல தள்ளி விட்டுடலாம்" என்று நினைத்தவன், அவள் முகத்தை பார்த்து என்ன நினைத்தானோ, அவன் மேலே இருதவளை கீழே தள்ளி முத்தமிடத் தொடங்கினான். மூச்சி மூட்டும்வரை தொடர்ந்தது அந்த இனிமையான போர்.

ஷைலு சிணுங்கவும் அவளை நொடி நேரத்தில் திருப்பிப் போட்டு சோபாவில் சாய்த்து படுக்க வைத்தான். ஷைலு மூச்சி வாங்கியபடி எந்திரித்து உட்காந்தா. அவளுக்கு தெளிந்தத பாத்துட்டு வேகமா சட்டையை சரி செஞ்சிட்டு, அவன் சேர்ல போய் சமத்தா உட்காந்துட்டான்.

மூச்சி வாங்கியபடி இருந்த ஷைலு, இப்போ ஆகாஷ் கிஸ் பண்ணது போல இருந்ததே, சுத்தி பார்த்தாள், ஆகாஷ் சமத்தா உட்காந்து வேலை பாத்துட்டு இருந்தான். ஷைலு அவள் தலையை அடித்துக் கொண்டு,

"ச்சை கனவா, கனவுல கூட இவன் தொல்லை தாங்கல" என்று ஏதோ நினைத்து சிரித்துக்கொண்டு இருந்தாள்.

அவளது செய்கையை பார்த்த ஆகாஷ், 'தப்பு பண்றோம், பாவம் பைத்தியம் மாதிரி சுத்திட்டு இருக்கா, நம்ம ஓவரா பண்றோம்' என்று நினைத்த ஆகாஷ் ஷைலுக்கு ஆதரவாக.

'ஆகாஷ் இனி அவ பக்கம் போகாத, டேஞ்சர் கொஞ்ச நேரத்துல அவளைபத்தி நினைக்க வச்சிட்டா, கண்ட்ரோல் டா' என்று மனதை சமநிலை படுத்தி.

"போ வீட்டுக்கு, ஆபீஸ் டைம் முடிஞ்சிடுச்சி," என்றான் ஆகாஷ்.

மந்திரித்து விட்ட கோழி போல தலையை ஆட்டிவிட்டு வீட்டுக்கு போய்ட்டா ஷைலு.

இங்க வீட்டில், அகிலா பக்கத்துல கிருஷ்ணன் அமைதியா உட்கார்ந்து இருந்தார்.

"யோவ்வ் அறிவு இருக்கா உனக்கு, புள்ள அப்படி இருக்கிறத பாத்துட்டு நாலு மொத்து மொத்தாம போட்டோ எடுத்து எனக்கு அனுப்பி இருக்க, விவஸ்த்தை கெட்ட மனுஷன்" என்று பொரிந்து தள்ளினார் கிருஷ்ணாவை.

"சரி, நா போட்டோ அனுப்பலன்னு வை, நான் வந்து சொன்னா நீ நம்பி இருப்பியா என்ன" என்றார்.

அகிலா இல்லை என்பது போல தலை ஆட்ட, "அதான் போட்டோ எடுத்தேன், அப்புறம் என்ன கேட்ட நாலு மொத்து மொத்தினா நீ சும்மா விடுவியா, என்புள்ளைய ஏன்டா அடிச்சனு, என் சட்டைய பிடிச்சி கேள்வி கேக்கமாட்ட நீ" என்றார் கிருஷ்ணன்.

அதுக்கும் அகிலா தலையை ஆட்ட..

"நல்லா மண்டைய மண்டைய ஆட்டு, நல்ல அம்மா நல்ல புள்ள" என்று கிருஷ்ணன் திட்ட.

"சும்மா என்னவே திட்டுறீங்க புள்ளய ஒழுங்கா வளர்க்கத் தெரில அப்படியே பேச வந்துட்டீங்க" என்று அனைத்து தப்பையும் கணவன் மீது போட்டார் அகிலா.

"ஆமாடி நல்ல பேர் எடுத்தா உன் புள்ள, கெட்ட பேர் எடுத்தா என் புள்ளையா? நல்லா இருக்குடி உன் லாஜிக்" என்றார் கிருஷ்ணன்.

"உங்களை போலத்தான் இருப்பான் உங்க புள்ள, பொண்ணுப்பாக்க வந்த அன்னைக்கே கிஸ் கொடுத்த ஆளுதான நீங்க" என்று கிருஷ்ணனனை அகிலா முறைக்க.

"இப்போ எதுக்கு நீ பழசை லா எடுக்கிற'' என்றார் கிருஷ்ணன் சிரித்துக்கொண்டே.

"டேய்ய் சிரிக்காதடா, உன்னால நா கொஞ்ச நஞ்சமா சங்கடப் பட்டேன், நீ பண்ண காரியத்தை பாத்த எங்க வீட்ல ஒரே வாரத்துல கல்யாணம் செஞ்சி கொடுத்துட்டாங்க, என் சுதந்திரம் அன்னைக்கே போயிடுச்சி" என்று ஆகிலா சலித்துக்கொள்ள.

"எது சுதந்திரம் உனக்கு போச்சா, எனக்குத்தான் போச்சி போடி, அகிலா ஒன்னு குடேன் இப்போ" என்று ரொமான்டிக் லுக் கிருஷ்ணன் விட.

"அப்பா மகன் ரெண்டு பேருக்கும் செருப்படி விழும் கொஞ்ச நேரம் இருங்க, இருக்கு ரெண்டு பேருக்கும்" என்று அகிலா பேச்சை மாற்றினார்.
'நல்லா பேச்சை மாற்ற, ஏதோ எனக்கு முன்னப்பின்ன குடுக்காதது போல' என்று நினைத்துக்கொண்டர் கிருஷ்ணா.

"ஹெய் கோவப்பட்டு காரியத்தை கெடுக்காத, அந்த பொண்ணு ரொம்ப நல்லப் பொண்ணு, இதான் சான்ஸ் ரெண்டு பேருக்கும் கல்யாணம் செஞ்சி வச்சிடலாம், இந்த போட்டோவ வச்சி புரியுதா." காலைல ஷைலு சொன்னது எல்லாம் அகிலாட்ட கிருஷ்ணன் சொல்ல.

"ஏங்க என் புள்ள அப்படியா சொன்னான்" என்று கண்கள் மின்ன.

"நீ வேற அவன் பிசினஸ்ல இருக்க ப்ராப்லம் சரிசெஞ்சிட்டு கல்யாணம் செஞ்சிக்கலாம்னு பிளான் போட்டு இருக்கான், அவன் பிரண்ட கேட்ட அப்போ சொன்னான்".

"ஆமா என் புள்ள ஒரு நல்லது சொல்லிற கூடாது, ஒடனே ஆராய்ச்சி செய்யவேண்டியது" என்று கிருஷ்ணனை செல்லமாக கிள்ளிவைக்க.

ஆகாஷ் வண்டி சத்தம் கேட்கவும் "சரி சரி ஒழுங்கா உங்க அப்பா பண்ண மாதிரி ஒரு வாரத்துல கல்யாணம் செஞ்சி வச்சிடலாம், இல்லனா உன் பையன் நழுவிடுவான்".

"சரிங்க", கோவமாக மூஞ்சை வச்சிக்கிட்டு அகிலா தயாரானார்.

ஆகாஷ் வந்ததும் அம்மா என்று சிறுபிள்ளை போல ஓடிவந்து பக்கத்துல உட்காந்து கட்டிக்கொண்டான். அகிலா பாசமாக பேச வர, கிருஷ்ணா அகிலாவை பார்த்துவிட்டு 'இவளுக்கு நடிக்க கூட தெரில' வலிக்காம அகிலாவுக்கு ஒரு கொட்டு வைத்தார்.

"என்னங்க" என்றாள் மெதுவாக.
ட்ராமா ஸ்டார்ட் பண்ணுடி என்று சைகை செய்து நினைவு படுத்த, அகிலா ஆரம்பித்தார்.

அகிலா ஆகாஷின் கையை தட்டிவிட்டார்.

"என்னாச்சி மா கிருஷ்ணா எதாவது சேட்டை செஞ்சி உங்களை கோபப் படுத்திட்டாரா" என்றான் அம்மா முகத்தை பார்த்துக் கொண்டு.

'ஆவுனா எல்லா பிரச்சனைக்கும் நான்தான் காரணம்னு அம்மா புள்ள பேசவேண்டியது' என்று நினைத்த கிருஷ்ணா, நடக்க போகும் ட்ராமாவை பார்க்க ஆர்வமாக இருவரையும் பார்த்தார்.

"உனக்கு ஒழுக்கத்தை பத்தி சொல்லிக்குடுத்தனா இல்லையா டா?"

"நிறைய சொல்லிக்குடுத்து இருக்கீங்க, இப்படி எதுக்கு கேக்குறீங்க".

"அப்போ எதுக்குடா பட்டப் பகல்ல அதும் ஆபீஸ்ல ஒரு பொண்ண கட்டிப்பிடிச்சிட்டு உட்காந்து இருக்க" என்று திட்டினார்.

ஆகாஷ் முழிக்கிறான் 'எப்படி இவங்களுக்கு தெரிஞ்சது, ஒருவேலை ஸ்பை வச்சி இருக்காங்களா' என்று நினைத்தவன், அம்மாவை சமாளிக்க ஆரம்பித்தான்.

"அம்மா, அது என் பிரண்டு மா'' என்றான் பாவமாக மூஞ்சை வச்சிட்டு.

"எப்படி எப்படி பிரண்டா, அடிவாங்காத யாருடா அவ".

"மா நீ நினைக்கிறது போல எல்லாம் இல்ல, கிளோஸ் பிரண்டு மா அவ".

"அதுக்குன்னு இவ்ளோ கிளோஸ்ஸா" கிருஷ்ணன் காலையில் அனுப்பி வைத்த போட்டோவை காமிக்க.

"போட்டோ நல்லா இருக்கே யார் எடுத்தது மா" என்றான் ஆகாஷ் சாதாரணமாக.

அகிலா முறைக்க, நல்லா வாய குடுத்து மாட்டிக்கிட்டானே, என்ன சொல்ல'.

அகிலாக்கு கோபம் வர "இருக்கும் இருக்கும் நல்லாத்தான் இருக்கும் உனக்கு, இன்னும் ரெண்டு நாளுல எங்கேஜ்மண்ட், ரெடி ஆகிக்கோ கூப்பிடனும்னு நினைக்கிறவங்கள கூப்புட்டுக்கோ, ரெடி ஆகு" என்று கோபமாக பேசிவிட்டு கிருஷ்ணனை பார்த்து கண்ணடிக்க. ஆகாஷ்க்கு தெரியாமல் கிருஷ்ணன் சூப்பர் சொல்ல. அழகான ட்ராமா சிறப்பாக முடிந்தது.

"நீங்க என்ன கிருஷ்ணா பாக்கிற, போ காப்பி போட்டு எனக்கு எடுத்து வா" என்று சொல்லிவிட்டு அகிலா கோவமாக ரூம்க்கு போய்ட்டார்.

ஆகாஷ் கிருஷ்ணாவை பாவமாக பார்க்க.

"என்ன டா மகனே?" என்றார் சிரிப்பை அடக்கிக் கொண்டு.

"அப்பா, அம்மாவை கொஞ்சம் சமாதானப் படுத்துங்க, இப்போ எனக்கு கல்யாணம் வேண்டாம்" என்றான் ஆகாஷ்.

"இப்போ மட்டும் உனக்கு அப்பா கண்ணுக்கு தெரியுதா மகனே" என்றார்.

"அப்பா ப்ளீஸ் பா சரக்கு அடிக்க கூட்டிட்டு போறேன்" என்று பேரம் பேசினான்..

"சரி சரி, நைட் பேசுறேன் அம்மாட்ட போதுமா".

"தேங்க்ஸ் நைனா" ஆகாஷ் கன்னத்தில் எச்சி செய்துவிட்டு போனான்.

"அட ச்சை அம்மாக்கும் மகனுக்கும் வேற வேலை இல்ல, கிஸ் கூட கொடுக்க தெரில எச்ச செஞ்சிட்டு போது பாரு எரும மாடு" என்றார் கிருஷ்ணன்.

அகிலா உள்ள இருந்து, "என்ன அங்க சத்தம்" என்றார்.

"காப்பி போட்டுட்டு இருக்கேன் மா" என்றார் கிருஷ்ணன் .

"எல்லாம் என் நிலைமை இவங்க ரெண்டு பேர்ட மாட்டிகிட்டேன்'' என்றார்.

ஆகாஷ் நகம் கடித்துக்கொண்டு உட்கார்ந்து இருந்தான், நைட் எப்போ வரும்னு. நைட் சரி செஞ்சிடலாம்னு சாப்பிட போனா அங்க ஒரு கூட்டமே டைனிங் ஹால்ல உட்காந்து பேசிட்டு இருக்காங்க.

ஆகாஷ் ஷாக்ல பாத்துட்டு நின்னுட்டான்.

அகிலா ஷைலு அப்பாக்கு அதை அனுப்பிவச்சிட்டாரு, சும்மா இருப்பாரா பழனி அடி பின்னிட்டார் ஒரு அடிக்கே சுருண்டுட்டா. அப்போதான் அகிலாவும் கிருஷ்ணனும் போன் செஞ்சி ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வச்சிடலாம்னு பேசவும், பழனிக்கு அப்போதான் கோபம் குறைஞ்சது. எங்கேஜ்மண்ட் பத்தி பேச அகிலா இரவு உணவுக்கு வர சொல்லிட்டாங்க.

ஆகாஷ் ஷாக் குறையாம வரான், ஷைலு குடும்பமே உட்காந்து இருக்கு, ஷைலு மட்டும் கீழ பாத்துட்டு உட்காந்து இருக்கா.

'இவளுக்கு என்ன, சோகமா இருக்கா, பண்றதுலாம் பண்ணிட்டு உட்காந்து இருக்கிறத பாரு எருமை மாடு', மொறச்சிட்டே காலியான சேர்ல போய் உட்கார்ந்தான் ஆகாஷ்.

ஷைலு டாடி கொஞ்சம் ஜாலியாதான் பேசுவார், இன்னைக்கு பாத்து சைலன்ட்டா இருக்கவும் 'என்னாச்சி இவருக்கு, நம்ம மேல கோபமா இருக்காரோனு' யோசிச்சிட்டு இருக்கான்.

ஷைலு ஒரு முறை கூட நிமிரவில்லை, இவளுக்கு என்னாச்சின்னு ஆகாஷ் பார்க்க.

ஷைலு அப்பா பழனி "சாரி தம்பி" சொல்லிட்டு சாப்பிட ஆரம்பிக்கிறார்.

'இவர் என்ன சம்பந்தம் இல்லாம சாரி சொல்றாரு. பண்றத பண்ணிட்டு நல்லவ மாதிரி இருக்கா இவ, தனியா சிக்கும்போது இருக்குடி உனக்கு'.

எல்லோரும் சாப்டுட்டு எந்திரிச்சி போய் ஹால்ல இருக்காங்க, ஷைலு இன்னும் சரியா சாப்பிடவும் இல்ல எந்திரிக்கவும் இல்ல' என்னாச்சி இப்படி இருக்க மாட்டாளே'.

ஆகாஷ் எந்திரிச்சி போய்ட்ட அப்புறம் ஷைலு எந்திரிச்சி, கிட்சன்ல பிலேட் வைக்க போக".

ஷைலு போவதை பாத்த ஆகாஷ் கோவமாக பின் தொடர்ந்தான் 'இப்போ இருக்கு உனக்கு, தனியா மாட்னியா'

"ஷைலு எதுக்கு இப்படி செஞ்ச,"

"நான் எதுமே பண்ணல ஆகாஷ்". குரலே சரி இல்ல ஷைலுக்கு, அவ பேச்சில எப்போவும் ஒரு துள்ளல் இருக்கும், அது எங்க போச்சினு தெரில.

"எதுமே பண்ணலனு என்ன பாத்து சொல்லு," என்று மூஞ்ச நிமிர்த்தி பார்த்தான்.

நாலு விரல் அவள் கன்னத்தில் பதிந்து இருந்தது, ஆகாஷ் ஒரு அளவுக்கு யூகித்து விட்டான் அந்த போட்டோ பாத்து இருப்பார், போல பழனி அங்கிள்.

"யார் அடிச்சா,"

"யாரும் அடிக்கல" என்றாள் ஷைலு சற்று விசும்பிக் கொண்டு.

கையை பிடித்து இழுத்துட்டு போய், அங்கிள் இதெல்லாம் சரி இல்ல, நானும் தான் தப்பு செஞ்சேன் நீங்க என்ன அடிச்சி இருந்தா கூட நான் பொறுத்து இருப்பேன், அப்புறம் ஷைலுவ அடிக்கிற வேலைலாம் வேணா, லவ் பண்றவங்க ஹக் பண்றது ஒன்னும் கொலை குத்தம் இல்லனு" ஆகாஷ் பாட்டுக்கு கோவமா பேசிட்டு போனான், அவன் பிளான் செஞ்சி வச்சதை எல்லாம் மறந்து. ஷைலுக்கு ஒன்னு நடந்தது, ஆகாஷ் பொங்கிட்டான்.

ஷைலுக்கு ஷாக் 'அப்போ அப்போ... ஆகாஷ் என்ன லவ் பண்றான், அதுகூட தெரியாத முதல்ல இருந்து இருக்கேனேன்னு,' யோசிச்சிட்டே வானத்துல பாரக்குறா ஷைலு, ஆகாஷ பார்க்க.

ஷைலு பாக்கிறத பாத்த ஆகாஷ் "என்னடி அப்படி பாக்குற" என்றான்.

"என்ன லவ் செஞ்சயா நீ" என்றாள் ஆச்சரியமாக.

"ஐயோ ஒளறிட்டோமே" ஆகாஷ் முழிக்க.

ஆகாஷ் பேசினதை பார்த்து வாய் அடச்சி போய் இருந்த எல்லோரும், ''அப்புறம் என்ன மாப்பிள்ளைக்கு பிடிச்சி இருக்கு, ரெண்டு நாள்ல எங்கேஜ்மண்ட் அடுத்த மாசம் கல்யாணம்" என்று சொல்ல எல்லோருக்கும் சந்தோசம்.

ஆகாஷ் ஷைலு கைய பிடிச்சி அவன இழுத்துட்டு போறா அவன் ரூம்க்கு.

"ஹெய் ஆகாஷ் ஏன்டா முன்னாடியே சொல்லலை, நான் எவ்ளோ தவிச்சேன் தெரியுமா, ஆகாஷை கட்டிப்பிடிக்க போனாள்.

அவளை தடுத்த ஆகாஷ் "நீ என் பிரண்டு, என்னால உனக்கு கெட்டது நடக்க வேணான்னுதான் நான் அப்படி சொன்னேன், புரியுதா".

ஷைலுக்கு புஸ்னு போயிடுது "அவ்ளோதானா" என்றாள் ஷைலு சோகமாக .

"அவ்ளோதான் டி" என்றான் ஷைலு கண்களை பார்த்துக்கொண்டு.

'ஐயோ பப்பி பேஸ் வச்சி கொல்றாளே, ஆகாஷ் கண்ட்ரோல், எப்படியும் கல்யாணம் கான்பார்ம் இப்படியே இவள விட்டா இன்னும் டிஸ்டர்ப் செய்வா, ஒரு வருஷம் வர ஜாக்கிறதையா இருக்கனும்னு' யோசிச்சிட்டு இருக்கான்.

"ஆகாஷ் என் மேல லவ்வே வராதா உனக்கு" என்றாள் பாவமாக ஷைலு.

''ஷைலு, எனக்கு அந்த மைண்ட் செட் இல்ல டா, ஒன் இயர் டைம் குடுப்பியா எனக்கு, எனக்கு உன்ன பிடிக்கும், ஆனா அது லவ்னு எனக்கு தெரில, என் செல்ல ராட்சசிடி நீ" என்றான்.

"பிரண்டா ஆவது நினைச்சியே அதுவரை சந்தோசம்டா" என்று சோகமாக அந்த அறையை விட்டு வெளியே போகும்போது. ஆகாஷ் ஷைலு, கையை பிடித்து இழுத்து அவளுக்கு அடி விழுந்த கன்னத்தில் மெதுவாக முத்தம் கொடுக்க, மெதுவா ஆரம்பிச்சவன் அழுத்தமா கொடுக்க.

"டேய்ய் வலிக்குதுடா விடு, பிரண்டுன்னு சொல்றது, முத்தம் குடுப்பான் கட்டிப்பிடிப்பான், போடா, உன்னால் எனக்கு மண்டை குழம்புது" என்று ஷைலு புலம்பிவிட்டுச் சென்றாள்.

ரெண்டு நாள் ஆகாஷ் ஷைலு கூட ஷாப்பிங்க்கு போக பிளான் போட்டுட்டான், என்னதான் இருந்தாலும் லவ்வர் ஆச்சே, எங்கேஜ்மண்ட சும்மா ஏனோதானோன்னு நடக்க விட்டுடுவானா என்ன நம்ம ஆகாஷ்.

அவளுக்கு எல்லாமே பெஸ்டா பிடிச்சதை வாங்கனும்னு யோசிச்சிட்டே படுத்தான். ஏதோ பாரம் குறைந்தது போல பீல் ஆகாஷ்க்கு.




மாயா மாயம் செய்ய வருவாள்...
 

Bindu sarah

Member
Vannangal Writer
Messages
59
Reaction score
54
Points
18
7. மாய நிலா

ஷாப்பிங் எல்லாம் ஷைலு எதிர் பார்க்காத அளவுக்கு இருந்தது.

சரி எல்லாம் முடிச்சிட்டு. ஏழுமணி ஆக, "லேட்டா ஆயிடுச்சு ஒன்னா சாப்டுட்டே போய்டுலாம்" னு ஷைலு சொல்ல.

சரின்னு ஒரு ஹோட்டல் போனாங்க. ஷைலுக்கு என்னதான் ஆகாஷ் நாள் முழுவதும் கூடவே இருந்தாலும், இன்னும் இன்னும் அவன் கூட இருக்கனும்னு எண்ணம் இருந்தது.

சாப்பாடு ஆர்டர் செய்ய ஆகாஷ் வாயை திறக்கவும், "ஆகாஷ் மொதல்ல ஜூஸ் குடிக்கலாம் அப்புறம் ஆர்டர் செஞ்சிக்கலாம்".

"சரி சாப்பிட டைம் இன்னும் இருக்கு ஆகாஷ், சொல்லி ரெண்டு பேருக்கும் வேற வேற ஜூஸ் ஆர்டர் செய்றான்.

'ஜூஸ் வர ஒரு பத்து நிமிஷம் ஆகும், அது வர நம்ம ஆள சைட் அடிக்கலாம்' ன்னு நினச்ச ஷைலு சிறப்பாக வேலைய ஸ்டார்ட் செஞ்சா.

"அல்மோஸ்ட் எல்லா பிரச்சனையும் சரி ஆகிடுச்சி, ஆனா யார் இத செய்றானு தான் ஆகாஷ்க்கு தெரியலை, அவன் தீவிரமா யார்ட்டயோ பேசிட்டு இருக்கான், சைலு இங்க ஆகாஷையே சைட் அடிச்சிட்டு இருக்கா.

"எனக்கு யார்னு தெரிஞ்சே ஆகனும், எப்படிலாம் எனக்கு ஆட்டம் காமிச்சிட்டான், இவன் செய்த செயலில், பேட் நேம் தான் கிடைத்தது... நிம்மதியா எனக்கு பிடிச்சவங்க கூட, பேமிலினு யார் கூடவும் டைம் ஸ்பென்ட் செய்ய முடியாம நான் தவிச்சத, அவனும் அனுபவிக்கனும். ஏதோ பிசினஸ்க்காக செய்றான்னா விட்டு இருப்பேன், அவன் வேறு ஏதோ எதிர் பாக்குறான்.

"முதல்ல அவன கண்டு பிடிங்க அவன் நமக்கு ரொம்ப பக்கத்துல தான் இருக்கான்" நடுல ஷைலு ஆகாஷையே பாத்துட்டு இருக்கிறத பாத்த ஆகாஷ், "என்ன" என்றான் சைகையில்.

ஷைலு அவளது உதட்டை குவித்து, உம்மா ஒன்னு நச்சுனு கொடுக்க. அதை பார்த்த ஆகாஷ், தீவிரமா பேசிக்கொண்டு இருந்ததையே மறந்து.

"அப்புறம் மனோ சாப்பிட்டயா, ஆபீஸ்ல இப்போ என்ன வேல பாக்கிற" னு சம்பந்தம் இல்லாம பேச, கடைசில் மனோ.

"எங்க ஷைலு கூட இருக்கியா?" னு கேட்டுட்டான்.

"ஆமா டா இம்ச பண்றா, போன் கூட நிம்மதியா பேச விடமாட்டான்றா", என்றான் ஆகாஷ் மெதுவாக.

"டேய்ய், குழந்தை பாவம், அவன கண்டு பிடிச்சிக்கிறேன், நீ அவளை பாரு மேடம் இப்போ தான் அவ்ளோ ஹாப்பியா இருக்காங்க, பேசும்போதே அவ்ளோ எனர்ஜி தெரியுமா, நீ ப்ராப்லம்ல சிக்கி லைப்பை விட்டுடாத" ன்னு ஆகாஷ்க்கு மனோ அட்வைஸ் செய்து முடித்துக்கொண்டு, அவனே போன வைத்துவிட்டான்.

"ஏய்ய்ய்.. என்னடி பண்ற பப்ளிக்ல" என்றான் ஷைலுவை முறைத்துக்கொண்டே.

ஷைலு சுத்தி சுத்தி பார்த்துவிட்டு, "இங்க யாருடா இருக்காங்க, டேய்ய் நம்ம மட்டும் தான் இருக்கோம் பிரைவேட் கேபின் டா, பிஸி மேன்'' என்றாள் சாதாரணமாக.

"அதுக்குனு இப்படியா பண்ணுவ" என்றான்.

ஷைலு "எப்படி பண்ணேன்" என்றாள் ஆகாஷை மயங்கி பார்த்து கன்னத்தில் கை வைத்து வெளிப்படையாவே சைட் அடிச்சிட்டு இருந்தா.

'இவள திருத்த முடியாது' என்று ஆகாஷ் போனில் எதோ பார்க்க ஆரம்பித்தான்.

"ஆகாஷ் ஒன்னு கேக்கட்டா?" என்றாள் ஷைலு.

'ஏதோ வில்லங்கமா கேட்க போறா, ஆகாஷ் சிக்காத' என்று நினைத்தவன். போன் ஐ பாத்துட்டே "என்ன" என்றான்.

"போன் வச்சிட்டு கேளு சொல்றேன்" என்றாள் ஷைலு.

"இப்போ என்னதான் உனக்கு பிரச்சனை" என்று டென்ஷன் ஆகி போனை பாக்கெட்ல போட்டுட்டு நிமிரவும் ஜூஸ் வரவும் சரியா இருந்தது.

ஆகாஷ் ஜூஸ் எடுத்து ஒரு முழுங்கு குடிக்கும்போது.

''இப்போ கேக்கவா?" என்றால்
ஷைலுக்கு டவுட் வந்ததை கேட்டுட்டா, "டேய்ய் உண்மையா சொல்லு, என்ன லவ் பண்றயா இல்லை பரிதாபப் பட்டு.. கல்யாணம் பத்தி யோசிச்சியா..." என்றால் கண்கள் மின்ன ஷைலு.

உள்ளே போனா ஜூஸ் மொத்தமா தூப்பிட்டேன், இரும்பிக் கொண்டு வந்தவனின் அருகில் வந்து தலையை தட்டிவிட்டாள் ஷைலு.

அவ கைய தட்டி விட்டுட்டு, "வேற நினைப்பே இருக்காதாடி உனக்கு".

"இல்ல ஆகாஷ், உன் நினைப்பு மட்டும்தான் எனக்கு எப்பவும் அதான் ஏன்னு தெரில" என்றாள் பாவமாக.

"நம்ம பேச வேண்டியது நிறைய இருக்கு ஷைலு, சாப்டுட்டே பேசலாமா" என்றான்.

"நான் இத சொன்னதுக்கு அப்புறமும், நீ என்ன கல்யாணம் செஞ்சிக்க இப்படி துடிக்க மாட்ட ஷைலு".

'என்ன இவன் கல்யாணத்த நிறுத்த பிளான் போட்டுட்டானா!!!'

"ஆகாஷ் அப்படிலாம் இல்ல டா, ஐ லவ் யூ அவ்ளோதா, அதுக்கு எதுவுமே தேவை இல்ல டா" என்றாள்.

"வாட் அபௌட் கேரக்டர் ஷைலு".

ஷைலு புரியாமல் பார்க்க, ஆகாஷ் தொடர்ந்தான் "கேரக்டர் நா ஒருத்தனுக்கு ஒருத்தி அது போல" என்றான்.

"எனக்கு நம்பிக்கை இருக்கு ஆகாஷ், என்ன கல்யாணம் செஞ்ச அப்புறம், உனக்கு யாரையும் நினைக்கக் கூட தோனாது" என்றாள் அவ்வளவு நம்பிக்கையோடு.

"கல்யாணத்துக்கு முன்னாடினா, நான் அப்படி இருந்து இருந்தா?" என்றான் ஆகாஷ்.

"நான் நம்ப மாட்டேன்" என்றாள் .

ஆகாஷ் கைல இருந்த போனை எடுத்து சில போட்டோ கட்டினான். "இப்பவும் நம்ப மாட்டியா" என்றான்.

அந்த போட்டோவில் ஆகாஷ் ஒரு வேலைக்கார பொண்ணை ஆக்ரோஷமாக முத்தம் இடுவதைப் போல இருந்தது, எல்லாம் செட் பண்ணது போல இருந்தது அந்த போட்டோவில். ஆகாஷின் பாதி முகம் மட்டும் தெரிந்து இருந்தது. ஆனால் பழகியவர்கள் நன்றாக கண்டு கொள்லாமல் இது ஆகாஷ் தான் என்றனர்.

"இல்ல என்றாள்" ஷைலு.

ஆச்சர்யமாக பார்த்தான் ஆகாஷ், "ஷைலு இது லைப் மேட்டர், விளையாட்டு இல்ல".

"இல்ல ஆகாஷ் இது நீ இல்ல", என்றாள்.

"வாட் நான் தான் டி இது அதுகூட கண்ணு, தெரிலயா".

"உனக்கு தான் தெரில, இது நீ இல்ல" என்றாள் ஷைலு அதிர்ந்து.

"எப்படி சொல்ற நான் இல்லனு?"

"உன் ஷோல்டர்ல மச்சம் இல்ல" என்றாள்.

அப்போதுதான் ஆகாஷ் அந்த போட்டோவை உத்து பார்த்தான் 'ஆமா, இத நான் எப்படி கவனிக்காம விட்டேன்'. அதை யோசித்து இருந்தவனுக்கு மின்னல் வெட்டியது, ஷைலுவை வேகமாக திரும்பி பார்த்தான்.

"அது சரி உனக்கு எப்படி தெரியும் எனக்கு இங்க மச்சம் இல்லனு" என்று ஆகாஷ் ஷைலுவை பார்க்க.

"ஐயோ மாட்டிக்கிட்டோமே"

"ஆதி நீ திட்டக்கூடாது சத்யம் பண்ணு" என்று ஷைலு ஆகாஷிடம் கையை நீட்டினாள்.

ஆகாஷும் வேண்டா வெறுப்பா சத்தியம் பண்ணான்.

"அன்னைக்கு உன்ன தேடி உன் ரூம்க்கு வந்தனா, நீ குளிக்க...." ஷைலு சொல்லி முடிகிறதுக்குள்ள ஆகாஷ் ஷாக் ஆகி.

"என்னது குளிக்கும்போது பாத்தியா!!!!" என்றான் விழிகளை விரித்து.

"நீ வேற டா, இல்ல" என்றாள் சோகமாக, இப்போதுதான் ஆகாஷ்க்கு மூச்சி ஒழுங்காக வந்தது.

"அப்புறம் எப்படி டி உனக்கு தெரியும்" ஆகாஷ் கேட்ட மறு நிமிடம்,

ஷைலு முகம் செவ்வானமாக சிவந்தது, அவள் முக சிவப்பு ஆகாஷை கவர்ந்து இழுக்க, ஷைலுவை நெருங்கி வந்தான். ஷைலு வெக்கத்தோடு விலகி ஓட, ஆகாஷை அவள் பார்வை, வெக்கம்‍, அவள் உடல் மொழி அனைத்தும் கவர்ந்து இழுக்க. ஆகாஷின் வேகத்தால் ஷைலுவை ஐந்து நிமிடத்தில் பிடிச்சி இழுத்துட்டான். மறைவான இடத்துக்கு ஆகாஷ் ஷைலுவை இழுத்துட்டு போய், அவளின் முக சிவப்பு அவனை சுண்டி இழுக்க..... ஆகாஷ் முத்தமிட நெருங்க.

"அப்புறம் என்னாச்சி மாமா கிஸ் குடுத்துட்டாரா, என்று அங்க இருந்த கூட்டம் ஷைலுவை பார்த்து கத்தவும். நிகழ் காலத்துக்கு வந்தாள் ஷைலு.
அந்த கூட்டம் கத்தவும், அங்கு மனோ வரவும் சரியாக இருந்தது.

"ஷைலு வா போலாம்" னு ஆறு அடில ஒருவன் வந்து கூப்பிட,.. அங்க இருந்தவர்கள். அக்கா இதான் மாமாவா..? என்று எல்லோரும் கத்த....

"இல்ல டா நான் சொன்னேன்ல என்னோட பிரண்டு மனோ," இவன் தான் என்று சொன்னால் ஷைலு. அப்போதான் வெடித்த அனைத்தும் திரும்ப ஒன்று சேர்ந்தது அவளுக்கு.

ஷைலு அவன் கையை விலக்கிவிட்டு "அவனை நெருங்கி வந்த அப்புறம்" சொல்லிட்டு இருக்கும் போதே, எப்படியும் கிஸ் அடிச்சத எல்லாம் எப்படி இவ, இப்படி பப்ளிக்கா சொல்ல வருதோன்னு‍, யோசிச்ச மனோ...

"சாரி கைஸ், அப்புறம் பாக்கலாம்" சொல்லி ஷைலுவை இழுத்துட்டு போக.

அங்கு இருந்த ஒருவன், "அக்கா கதைய பாதிலையே விட்டுட்டு போறீங்க" என்றார்கள்.

"அவ தெளிவு இல்லாம எதாவது பேசுவா, அவ நார்மலா இருக்கும் போது வாங்க, ஒரு மாசத்தில் ஒரு பங்ஷன் இருக்கு வீட்ல அதுக்கு வாங்க" னு சொல்லி மனோ அங்க இருக்க ஒரு பொண்ணுட்ட இன்விடேஷன் கார்ல இருந்து எடுத்து கொடுக்கிறான்.

அவர்கள் சென்ற திசையை எல்லோரும் சோகமாக பார்க்க, "ஐயோ கதை இன்ட்ரெஸ்ட்டிங்ல வந்து அக்கா விட்டுட்டு போய்ட்டாங்களே" எல்லோரும் புலம்ப.

மனோ ஏதோ யோசனையிலே வர.....

ஷைலு ஏதோ உலறிக்கொண்டே வந்தாள், அவள் உலறுவதை அவளுக்கு தெரியாமல் வீடியோ எடுத்தவன் அவளை இறக்கி விட்டுட்டு, ஷையிலுவின் மியாவ்க்கு சென்ட் செய்து விட்டு மனோ அவனது வீட்டை நோக்கி சென்றான்.


மனோ விட்டுச் சென்ற, அரைமணி நேரத்தில் வந்தான் ஆகாஷ், ஷைலுவை பார்க்க வந்த சமயம். கருப்பு கலர் புடவைல வெள்ள ரோஜாவை போல ஜொலித்தாள். ஆகாஷ் கைகள் பரபரத்தது ஷைலுவை வாரி அணைக்க.
ஷைலு போதையில் திரும்பி படுக்க மொத்தமாக ஒரு பக்க புடவை விலகியது.

ஆகாஷ் கண்ட்ரோல் மிஸ் ஆகி நெருங்கும் நேரத்தில். ஷைலு எந்திரித்து, கண்களை மூடி மூடி திறந்து ஆகாஷை பார்த்து, வந்துட்டியா "ஆகாஷ், சாரீ நல்லா இருக்கா எனக்கு", என்று தன்னை சிறு பிள்ளை போல சுத்திக் காட்டினால் அவனிடம்.... சிறிது நேரம் தலையை ஆட்டிக்கொண்டே நடந்து, நான் டிரஸ் மாத்திக்கவா, "காண்ட் பிரீத்" ஒரே இறுக்கமா இருக்கு" என்று புலம்பியவள். ஆகாஷை அவள் உயரத்துக்கு கீழே இழுத்து, முத்தம் கொடுக்க ஆரம்பித்தாள்.

ஆகாஷ்க்கு உடல் முழுவதும் மின்சாரம் பாய. ஒரு வருட பிரிவு மொத்தமா அவளை அடித்துச் செல்லும் உணர்வு வர. இரண்டு அடி முன்னாடி எடுத்து வைத்தான். சைலு அவளது நைட் டிரஸ் எடுத்துட்டு, டிரஸ் சேஞ்சிங் ரூம் உள்ள போய்ட்டா. ஆகாஷ் இனி கால்கள் அவனையும் மீறி ஷைலுவை தொடர்ந்தது.

புடவையை மொத்தமாக கழட்டி தூக்கி பின்பக்கமாக எறிந்தாள், அந்த புடவை கரெக்ட்டா ஆகாஷ் மூஞ்சில விழுந்தது, "அவ்வ்வ் ட்ரிங்க்ஸ் பன்னிட்டு தான் ஒளறிட்டு இருக்காளா, அதுக்கு தான் மனோ கூப்பிட்டானா" என்று ஆன்லைன் சென்று பார்த்தான் ஒரு வீடியோ "இத அப்புறம் பாத்துக்கலாம், இவளுக்கு தலைக்கு தண்ணீ ஊத்தனும்" என்று நினைத்து ஷைலு முன்பு இருந்த இடத்துல இல்ல எங்க போய்ட்டா, என்று தேடிக் கொண்டு சென்றான், சத்தம் வரும் திசையை நோக்கி.

 

Bindu sarah

Member
Vannangal Writer
Messages
59
Reaction score
54
Points
18
8. மாய நிலா

ஹூக் பின்னாடி வைத்து இருந்தது, "ச்சை இது வேற எட்ட மாட்டேங்குது" புலம்பிட்டே ஹூக் கழட்டிவிடத் தொடங்கினாள். அவளது வெற்று முதுகைப் பார்த்த ஆகாஷ், அப்படியே அவுட் ஆயிட்டான்.

முடியாமல் போகவும் "சை இத தெச்சவன் கைல கிடைக்கட்டும் சாவடிக்கிறேன்னு" திட்டித் தீர்த்தாள்.

ஆகாஷ் அவளை ரசித்துக்கொண்டு நின்றிருந்தான்.

அதை பார்த்த ஆகாஷ்க்கு ஒரு டவுட் 'கலட்ட முடில எப்படி இத போட்டு இருப்பா?' என்று யோசித்த ஆகாஷ், நெருங்கிச் சென்று அவளுக்கு உதவி செய்யத் துடங்கினான்.

"போடும் போது யார்டி போட்டு விட்டா இதை" என்றான் ஆகாஷ் பொறாமை பட்டுக்கொண்டே.

"சமையல் செய்ற அம்மா போட்டு விட்டாங்க" என்றாள் ஷைலு.

"இனி நான் தான் போட்டுவிடுவேன் புரியுதா" என்றவன் இரண்டு ஹூக்கை கழட்டி விட்டான்.

ஆகாஷின் குரல் கேட்கவும், ஷைலு சட்டென்று திரும்பிவிட்டாள் "ஆகாஷ் என்ன செய்ர" என்று பதறி விலகி, அவளின் இரு கைகளால் உடம்பை மறைத்தாள்.

"ஷைலு....." என்று மோகம் கலந்த பார்வை பார்க்க, "ஆகாஷ் ஏன் இப்படி பார்த்து வைக்கற.. அதுலாம் தப்பு" என்று விலகினாள் ஷைலு.

'ஹேய் நான் உன் புருஷன்டி" என்றான் புன்னகையில்.

"இப்போதான் தெரியுதா, புருஷன்னு ஒரு வருஷமா ஒரு டைம் தான்டா, என்னை பாக்க வந்து இருக்க, அதாவது ஞாபகம் இருக்கா" என்றாள் ஷைலு கோபமாக.

ஆகாஷ் நெருங்க....

"நோ ஆகாஷ்..... நோ நோ" என்று விலக நினைத்து, அவன் அணைக்க வரும் கரங்களை விளக்கி விட்டாள். இருவர் கைகளுக்கு இடையில் ஒரு போர்க்களமே நடந்தது, பக்கம் இருந்த ஷவரை தட்டி விட அது ஆன் ஆகி, இருவரையும் நனைத்தது.

ஆகாஷ் சிரித்துக்கொண்டே ஷைலுவை நெருங்க. இந்த முறை ஆகாஷை நெருங்கினாள் ஷைலு. இவள் நெருங்கி வர அவன் விலகினான், "அவ்ளோ சீக்ரம் இந்த ஆகாஷ் உன்ட சிக்கமாட்டான்" என்று.

திடீர்ன்னு ஒரு சத்தம், ஷைலு வெளியே எட்டி பார்க்க, இங்கு ஆகாஷ்.. அவன் வந்த சுவடை மறைத்து வேறு அறையில் சிறிது நேரம் இருந்து விட்டு வந்தான்.
ஷைலு குளித்து விட்டு வெளியே வந்து பாத்தா, எப்பவும் நடக்கறதுதானே, ஆகாஷ் அவளோடு சீண்டி விளையாடுவது, கனவில் அவள் குடும்பம் நடத்திக்கொண்டு இருக்கா, நிஜத்துக்கும், கற்பனைக்கும் வித்யாசம் தெரியல ஷைலுக்கு.

குளித்ததும் தெளிந்த போதை, கொஞ்ச நேரத்தில் அதிகரித்தது. படுத்துட்டா ஷைலு சோர்வாக.

ஷைலு டார்க் கலர் நைட் டிரஸ்ஸில் தேவலோக பெண்ணாக மிண்ணினாள்.

ஷைலுக்கு குளித்தும் போதை தெளியல, பேன் ஆன் செய்து விட்டு படுத்துக்கொண்டு ஏதேதோ உளறிக் கொண்டு இருந்தாள் ஷைலு.

ஆகாஷ் அரை போதையில் இருக்கா போல, என்று அவளை இன்னும் குழப்பி விட நினைத்தான், அவன் சொன்ன டைம் இன்று முடிந்தது அதனாலதான் தேடி வந்தான், ஷைலுவின் செல்ல மியாவ்.

தேடி வந்தவன் சும்மா இருப்பானா, ஷைலு நினைத்ததை இந்த நிமிஷத்துல இருந்து கொடுக்கத் தொடங்கினான். ஷைலுவை நெருங்கி படுத்தவன், "டெய்லி டார்ச்சர் செய்ற டா, டையார்ட் ஆய்டுறேன்" என்று அந்தரங்கமாக பேச. ஆகாஷ் மனம் துடிதுடித்தது. நமக்காக ஒரு பொண்ணு இவ்ளோ துடிச்சி இருக்கா அவளை விட்டுட்டு நம்ம ஒரு வருஷம் முழுசா அவளை தவிக்க விட்டுட்டோமே என்று ஆகாஷ் கண்கள் சற்று கலங்கியது, அதை மறைத்துக் கொண்டு.

"ஷைலு உன்ன விட்டு இனி போக மாட்டேன்டி" என்று சொன்னவன் ஷைலுவை காற்று போகாத அளவுக்கு கட்டி அணைத்தான்.

ஷைலு போதும் போதும் என்ற அளவுக்கு முத்தம் கொடுத்தான், ஆரம்பித்தது ஆகாஷ் இருந்தாலும் முத்தத்தை தொடர்ந்தது என்னவோ ஷைலு தான்.... ஷைலு ஆகாஷை விட்டு சற்று விலகி.

ஆகாஷ்க்கு வடை போச்சே நிலைமை "எங்கடி போற பக்கம் வா" என்று இழுத்தான் ஷைலுவை.

"டேய்ய் இன்னைக்கு நீ என்ன பக்கம் இருக்கிறது உண்மை போலவே இருக்குடா மியாவ்" என்று ஷைலு ஆகாஷை நெருங்கி முத்தமிட.

இருவரும் இவர்கள் தடுத்து வைத்து இருந்த இல்லறம் நல்லரமாக, ஒருவர் உடல்மட்டும் இல்லாமல் மனமும் சேர்ந்து சஞ்சலித்தது. ஆகாஷ்க்கு "இனி இவள தனியா விடக்கூடாது, எங்க போனாலும் பெட் அனிமல் தூக்கிட்டு போர மாதிரி சுருட்டி தூக்கிட்டு போய்டனும்" என்று, களைப்பில் கண்களை மூட.

அங்கு மனோக்கு ஒரு கார் வந்தது, லைட்டா குடிச்சனால தெளிவான நிலைல இருந்தான் மனோ, "சார் அவன் தப்பிச்சிட்டான்" என்றதும் ஆகாஷ்க்கு அழைத்தான்.

அவன் நினைத்தது யாருக்கோ பொறுக்கல, ஆகாஷ் எண்ணிற்கு மனோ அழைத்தான், ஆகாஷ்க்கு போன் வந்தது. "ஆகாஷ் அவன் தப்பிச்சிட்டான், அவன் அடுத்த மாசம் அதே இடத்துக்கு வருவான்னு நியூஸ் கிடைச்சி இருக்கு" என்றதும், ஆகாஷ் போனை வைத்துவிட்டான்.

இன்னும் ஒரு மாசம் பிடிக்கும் அவனை பக்கம் நெருங்கிட்டான் ஆனா மிஸ் ஆயிட்டான் இதுல ஒரு நல்ல விஷயம் என்னன்னா அவனுக்கு ஆகாஷ்.. பின் தொடர்ந்தது தெரியலை.

ஷைலுவை பிரிய மனம் இல்லாமல் ஆகாஷ் அவளை விட்டு விலகினான்.

"ஆகாஷ் எங்க போற, இன்னும் கொஞ்ச நேரம் என்கூடவே இருடா" என்றவள் ஆகாஷை கட்டிக்கொண்டாள்.
ஆகாஷ் அவள் தூங்கும் வரை அணைத்துக்கொண்டு, இனிமையாய் கண்கள் மூடி ரசித்துக்கொண்டு இருந்தான்.

ஷைலு தூக்கத்தில், விலகியதும். ஆகாஷ் முன்பு செய்தது போல எல்லா தடயங்களையும் அளித்து விட்டு, செல்ல நினைத்தவன் அனைத்தையும் விட்டுவிட்டு சென்றான்.

ஆகாஷ்க்கு மனசே பொறுக்கல, "ஏன் எனக்கு மட்டும் இப்படி, என் முகம் இன்னொருத்தனுக்கு ஏன் இருக்கனும், அது எப்பவும் எனக்கு ஆபத்து தான், அவன் நல்லவனா இருந்து இருந்தா, விட்டு வச்சி இருக்கலாம், அவன் என்ன வச்சி செய்றான்" ஒன்றும் புரியல ஆகாஷ்க்கு.

அடுத்த நாள் காலைல எழுந்த ஷைலுக்கு உடம்பு முடியலை... ஒடம்புல நல்ல வலி எந்திரிக்க கூட முடில, நைட் தலையை துவட்டாமல் படுத்ததுல பீவர்ன்னு ஒரு வாரம் வச்சி செஞ்சிடுச்சி. உடம்பு சரி ஆகிட்டு பார்த்தா ஆகாஷ் வாட்ச் இருந்தது, அதை பார்த்து கொண்டே.. ஒரு வாரம் முன்பு நடந்ததை யோசித்துக்கொண்டு இருந்தாள்.

எந்திரிச்சவள், எல்லாம் கனவா சைய், அப்போ ஏன் உடம்பு வலிக்குது என்று தொட்டுப் பாத்தா பீவர். அதனால்தான் வலிக்குதா ஒடம்பு எந்திரிக்க கூட முடியலையே என்று உட்காந்து இருந்தாள்.

ஷைலு ஆகாஷ்க்கு மெசேஜ் செய்தால் ஒரு வருஷம் முடிஞ்சிடுச்சி ஆகாஷ் என்றாள் அந்த நிலையிலும்.

சோ வாட்? என்றான் ஆகாஷ்.

இந்த ரிப்லையை கேட்ட ஷைலு, இனி இவனுக்கு போன் மெசேஜ் ஏதும் பண்ணக் கூடாது என்று பிளாக்ல போட்டுட்டா ஷைலு.

கோவமா போன தூக்கி போட்டவள்... இப்போது தான் கவனித்தால் ஆகாஷ் பர்சை.. "அட பாவி கனவு இல்லையா, ஒரு நாள் மாட்டுவ அப்போ இருக்கு உனக்கு".

அவனும் பிஸி அதுக்கு அப்புறம், அவளுக்கு போன் செஞ்சி இருந்தாதான தெரிஞ்சி இருக்கும், அவ பிளாக்ல போட்டது.

மூணு வாரம் ஆகாஷ் களத்துல இறங்கிட்டான், அவன தேடறதுக்கு.

ஆகாஷ்க்கு ஒரே குழப்பம் 'இவன் ஏதோ அப் நார்மலா இருக்கானோன்னு, அவனோடசெயல் பேசுறது எதுமே சரி இல்ல, என்னவா இருக்கும்' னு யோசிச்சிட்டு பின்னாடி போறான்.

ஒரு பொண்ணு அவன தேடி வரா, 'இந்த பொண்ண முதல்ல தூக்கனும்' னு சொல்லவும், ஆகாஷ் வைத்த ஆளுங்க கரெக்ட்டா அந்த பொண்ணை தூக்கிட்டாங்க.

அந்த பொண்ணுட்ட, ஆள் வைத்தும் விவரம் சேகரிக்க முடியல, மூணு வரமாவா வாய திறக்கல அந்த பொண்ணு. அவனோட லவ்வரா தான் இருக்கும் என்று முடிவு செஞ்சிட்டான் ஆகாஷ்.

ஆகாஷ் செம டென்ஷன் ஆயிட்டான், அந்த பொண்ணு எப்படி கேட்டும் பதில் சொல்லலை.

ஆகாஷ் வீட்ல இருக்கவங்க, ஒரு பார்ட்டிக்கு வந்தே ஆகனும்னு பேமிலில இருக்குறவங்க சொல்லிட்டாங்க, ஆனா ஆகாஷ்க்கு முடியல, இந்த பொண்ணுட்ட எப்படியும் நான் விஷயத்தை வாங்கிடுவேன்னு வெறியோடு இருந்தான்.

ஆகாஷ் அம்மா அப்பா அவன் வருவான்னு நம்பிக்கையே இல்ல.

அந்த விழா நடக்கும் நாளும் வந்தது.

ஷைலு கோல்டன் கலர் டிரஸ்சில் தேவதையா ஜொலித்தாள், இன்னைக்காவது அவன் வருவான் என்று நினைத்து ஒன்னு ஒன்னும் பார்த்து பார்த்து செய்தால்.

வெளியே வந்தவள் மனோவைத்தான் பார்த்தால் முதலில், எங்க அவன் என்பது போல சைகை செய்ய, மனோ வரலனு தலையை ஆட்ட, அப்போவே பியூஸ் போயிடுச்சி சைலு. பார்ட்டியில் கலந்துக்க மனசும் வரவில்லை.

அமைதியா ஒரு இடத்துல கடலை பார்த்து உட்கார்ந்தாள், சிறிது நேரத்தில் ஒரு கூட்டம் கூடியது ஷைலுவை சுத்தி.

"அக்கா வந்துட்டோம், விட்ட கதையை ஆரம்பிங்க" என்றனர் அனைவரும். ஒரே சத்தமா இருக்குனு காதை மூடிக் கொண்டாள் ஷைலு.

"என்ன கதை, யார் நீங்க எல்லோரும்" என்று ஷைலு சொல்லி மூடிக்கும் போது, மனோ அங்கு வந்தான்.

"அவளுக்கு கொஞ்சம் மறந்துடும் ட்ரிங்கிஷ் சாப்பிட்டா," என்றான் மனோ.

"என்ன எனக்கு ஒன்னும் புரியல" என்றாள் ஷைலு.

சுருக்கமாக சொல்லி முடித்தார்கள் அன்று நடந்தது, அதுக்காக அப்புறம் என்ன என்று அனைவரும் ஆர்வமாக கேட்க .

"ஒன்னும் நடக்கல டா, கூட்டிட்டு போய் வீட்ல விட்டாங்க".

"அக்கா இவ்ளோ மொக்கையா சொன்னா, எப்படி நல்லா இருக்கும், அன்னைக்கு நீங்க எப்படி சொன்னீங்க தெரியுமா" என்று ஒருவன் வீடியோவை காமிக்க.

நானா இப்படி பேசினேன் என்று ஷைலு ஷாக் ஆயிட்டா, "ஹேய் அன்னைக்கு ஏதோ சரக்கு அடிச்சிட்டு ஒளறிட்டு இருக்கேன், அதே டோன்ல வேணுமா, நான் என்ன செய்ய" என்று ஷைலு கன்னத்தில் கை வைக்க.

அங்கு ஒருவன் வேகமாக ஓடி வந்து, அக்கா இப்போ ப்லொவ் வரும் பாருங்க என்று ஒரு புல் சரக்க ஆட்டையை போட்டுட்டு வந்தான் பார்ட்டில இருந்து, "இது போதுமா கா" என்று கொடுக்க, ஷைலு சிறிது யோசித்துவிட்டு அடிக்கத் துடங்கினாள். இன்னும் இன்னும் இன்னும்னு எல்லாத்தையும் குடிக்க.

மனோ ஷைலு கையை பிடித்து "போதும்டி".

"உனக்காக டா மனோ, போதும் எனக்கு வேணாடா" என்று குடிப்பதை நிறுத்தி விட்டாள்.

"எங்கடா விட்டேன் கடைசியா" என்று கேட்க அனைவரையும் பார்த்துக் கொண்டே.

"அதான் கா ஹோட்டல் கிளோஸா வந்து..... பேக்". என்றனர், அனைவரும் சத்தம் போட.

ஷைலு பேச ஆரம்பித்தாள், "நடுல யாராவது பேசுனீங்க நா தூங்கிடுவேன், அப்புறம் கதை சொல்லவே மாட்டேன், புரியுதா" என்று அவள் விரலை நீட்டி எச்சரிக்க. அனைவரும் வாய் மேல் கை வைத்தார்கள்.

"நெருங்கி வந்தான்டா இவன் கிஸ் கொடுக்க மாட்டான், நாமே நம்ம முதல் கிஸ் கொடுக்கலாம்னு நெருங்குனா, 'பாவி பையன்' நூல் இடைவேளையில் அவனோட பிக் சைஸ் சுண்டு விரலை வச்சிட்டேன் இடையில்.

"இதுலாம் தப்பு கல்யாணத்துக்கு அப்புறம்ன்னு டயலாக் பேசிட்டு சாப்பாடு கூட வாங்கி தராம வீட்ல இறக்கி விட்டுட்டான் டா, எனக்கு எப்படி வலிச்சி இருக்கும்".

"ரெண்டு நாள்ல எங்கேஜ்மெண்ட் ரெக்கை இல்லாத குறைத்தான், அடுத்து ஒரு வாரத்துல கல்யாணம் செஞ்சி வச்சிடலாம்ன்னு சொல்ல. பாவி பையன் ஒரு மாசம் தள்ளி வச்சிட்டான், சரி அவன் கூடத்தான ஆபீஸ் இருப்போம்ன்னு கத்துற மனச சமாதானம் செஞ்சிட்டு போனா.... ரெண்டு வாரம் எங்கு போய் தொலைஞ்சான்னு தெரில.

அப்புறம் வந்தான் எல்லோருக்கும் குட் நியூஸ் ப்ராபிட் பிச்சிகிச்சு நாளைக்கு நம்ம ட்ரிப் போறோம்னு சொல்லிட்டு வீட்டுக்கு போய்ட்டான், அப்போதுக் கூட ஒரு வார்த்தை என்ட பேசல அந்த வீணா போனவன்.

கோவத்துல கார் எடுத்துட்டு பெட்ரோல் மூடிரவரை போய்ட்டேன்டா, தேடட்டும் அப்புறம் அவனுக்கு மெசேஜ் செஞ்சிட்டு, கார்லாக் செஞ்சிட்டு நான் தூங்க ஆரமிச்சிட்டேன்.
 

Bindu sarah

Member
Vannangal Writer
Messages
59
Reaction score
54
Points
18
9. மாய நிலா

மெசேஜ் பாத்த ஆகாஷ்க்கு செம டென்ஷன் அந்த இடத்துல வேற அதிகம் ஆக்சிடென்ட் ஆகும், "இவளுக்கும் அறிவுக்கும் சம்பந்தமே இல்ல வீனா போனவ.." வழி முழுக்க வாய்விட்டு அவளை திட்டிட்டே போனான் ஆகாஷ், அவன் டிரைவர கூப்பிட்டுக்கிட்டு.

நல்ல வேலை ஷைலு லாக் செய்து பாட்டு கேட்டுட்டு படுத்து இருந்தாள். ஷைலுவ பார்த்ததும் தான் ஆகாஷ்க்கு மூச்சி ஒழுங்கா வந்தது. "இவளுக்கு திமிரு பிடிச்சி போச்சி ராட்சசி" திட்டிட்டே கார் கண்ணாடியைதட்ட, ஹெட் செட்டின் சேவையால் வெளியே அவன் தட்டிய அந்த சத்தம் அவளுக்கு கேட்கல. ஷைலுக்கு ஆகாஷ் போன் செய்ய, கட் செஞ்சி விடறா கண்களை மூடிக்கொண்டே, ஆகாஷ்க்கு கோவம் வந்து மெசேஜ் செய்தான்.

"ஷைலு ஐ வாண்ட் டு கிஸ் யூ" மெசேஜ் அனுப்பின மறு நொடி. இவள எப்படி சமாளிக்கனும்னு ஆகாஷ்க்கு தான் பலவருஷமா ட்ரைனிங் இருக்கே.

"எப்போ டா தர இப்போவே வேணும், ஐ வாண்ட் இமீடியட் கிஸ்" னு மெசேஜ் செய்யவும். மெசேஜ் வந்த மறு நொடி இன்னொரு மெசேஜ் ஆகாஷ்க்கு வருது,

"சீக்கிரமா வா லொகேஷன் ஷேர் செஞ்சிட்டேன்" னு ஷைலு மெசேஜ் அனுப்பினாள். ஆகாஷ் அங்க நின்னுட்டு மொறச்சிட்டு இருக்கிறத ஷைலு கவனிக்ல. 'இதுக்கு எல்லாம் விவரம் இருக்கு, ஆனா எங்க போனும் வரனும்னு விவரம் இல்ல'.

"கார் கதவை திறந்துவிடு இப்பவே தரேன்" ஆகாஷ் மெசேஜ் பார்த்துட்டு.

'அதுக்குள்ள இவன் வந்துட்டானா?', டோர் வேகமா திறந்தாள். ஆகாஷ் கிஸ் பண்ண நெருங்க.

"ஷைலு கார்க்கு போய்டுலாம்", ஷைலு வேகமா அவன் வந்த காரில் போய் எறிட்டா.

ஆகாஷ் டிரைவர்ட, "கேனில் இருக்க பெட்ரோல் எடுத்துட்டு வீட்டுக்கு போய்டுங்க" சொல்லிட்டு ஆகாஷ் கார்க்கு போய்ட்டா. அடுத்த செகண்ட், ஷைலு கிஸ் பண்ண நெருங்க ஆகாஷ் பலார்னு ஒரு அடி விட்டான்... அவளுக்கு பொறி கலங்கிவிட்டது.

ஷைலு அப்போ மூஞ்ச திருப்புனவதான், இறங்கும் வரை ஆகாஷ பார்க்கல. ஷையலுக்கு ஒரே அசிங்கமா போயிடுச்சி, 'என்ன இவ்ளோ ஆலயற பொண்ணுன்னு நினைச்சிட்டான், முதல்ல இந்த கல்யாணத்த நிறுத்தர வேலையதான் பார்க்கனும். கார் நிக்கவும் ஏதோ நினைச்சிட்டு, இறங்கி அவ ரூம்க்கு போய்ட்டா.

ஆகாஷ் காரை பார்க் செஞ்சிட்டு ஷைலு வீட்டுக்குள்ள வரான். "மாமா, ஷைலுவிடம் கொஞ்சம் பேசனும்" அனுமதி வாங்கிட்டு ஷைலு ரூம்க்கு போறான் ஆகாஷ்.

ஷைலு ஏதோ வித்யாசமா நடந்து கொள்வது போல ஆகாஷ்க்கு தெரிந்தது 'அடிச்சதுக்கு கோவம் போல' னு ஷைலு பெட்ல தலையை சாய்த்து கீழ உட்காந்து இருக்கா.

ஆகாஷ் பக்கம் போய் உட்கார்ந்தான், ஷைலு அசைய கூட இல்ல.

ஆகாஷ்க்கு ஏதோ போல ஆயிடுது, என்ன செய்றதுனு ஒன்னும் புரியல ஆகாஷ்க்கு.

ஷைலுவை அவன் தோளில் சாய்த்துக் கொண்டான், விலகவும் இல்லை அதை ஏற்கவும் இல்லை, ஒரு மாதிரி அவ ஒடம்பு விரைச்சிக்குது, ஆகாஷ்க்கு என்ன செய்றதுன்னு தெரில.

"ஷைலு என்னாச்சி மா? குட்டிமா இங்க பாரு டா".

"வேண்டா ஆகாஷ், நான் உனக்கு வேண்டா என்னால உனக்கு தொல்லை தான், என் காதல் ஒன் சைடாவே இருந்துட்டு போது, நான் உனக்கு வேணா ஆகாஷ்", ஏதேதோ பேசிட்டே தூங்கிட்டா.

ஆகாஷ் அவ கிஸ் பண்ண வந்ததுக்கு அடிக்கல, அவ பாட்டுக்கு எங்கயோ போயிட்டு, வந்து பெட்ரோல் தீர்ந்து போச்சின்னு சொன்னா, கோவம் வரவும் என்ன இவ எதும் புரிஞ்சிக்காம, என்ன இவ குழந்தை மாதிரி பண்றா.

ஆகாஷ் ட்ரிப் ஏற்பாடு செய்ததே அவளுக்காகத்தான், ஒன்னா டைம் ஸ்பென்ட் செய்யலனாலும் ரெண்டு பேரும் சும்மா பார்த்துட்டாவது இருக்கலாம்னு தான்.

ஷைலு தூங்கி எழுற வரை ஆகாஷ் அங்கவே உட்கார்ந்து இருந்தான்.

ஷைலு அம்மா மட்டும் ஆகாஷ்க்கு எதாவது வேணுமான்னு ரெண்டு முறை வந்து ஸ்னாக்ஸ், ஜூஸ்னு கொடுத்துட்டு போனாங்க. ஆகாஷும் மெதுவா ஸ்னாக்ஸ் சாப்டுட்டு, ஜூஸ் குடிச்சிட்டு உட்காந்து இருந்தான்.

ஷைலு ரொம்ப சோகமா ஆகிட்டா தூக்கம் வந்துடும், அவளுக்கு சின்ன வயசுல இருந்து. மூணு மணிநேரம் கழிச்சி ஷைலு எந்திரிக்கும் போது ஆகாஷ் கன்னத்தை கை வச்சி ஷைலுவை பாத்துட்டே இருக்கறத பாத்துட்டு. ஷைலுக்கு ஒரு மாதிரி ஆயிடுச்சி. ஆகாஷ் அவளை இப்படி பாத்துட்டு இருக்கிறது.

கையில் கண் ரெண்டும் தேய்த்துக்கொண்டு "இன்னும் கிளம்பலையா ஆகாஷ்?".
"நீ தூங்கிறப்போ அழகா இருக்க ஷைலு", ஆகாஷ் கேட்ட கேள்விக்கு சம்மந்தம் இல்லாத பதில் சொன்னாலும், சைலுக்கு கொஞ்ச மணிநேரம் முன்னாடி நடந்ததுக்கு ஆறுதலா இருந்தது.

ஷைலு கொஞ்ச நேரம் அமைதியா இருந்துட்டு, "ஆகாஷ் கல்யாணத்த நிறுத்திடலாம்?" என்றாள்.

ஆகாஷ்க்கு ஷாக், 'என்னாச்சி எதுக்கு அழுகை' புரியாம அவளை பார்க்க.

'ஆகாஷ் என்னோட எதிர்பார்ப்பு ஜாஸ்தி அது உன்னால முடியாது" னு ஷைலு சொன்ன மறுநோடி.

ஆகாஷ் ஷைலு மூகத்தை அவன் கைகளால் பிடித்துக்கொண்டன், "எனக்கு நீ மட்டும் தான்டி இந்த லைப்ல வைப், என் பொண்டாட்டி எனக்காக ஒரு வருஷம் வெயிட் செய்வான்னு நினைத்து விலகி இருந்தேன், ஆனா அவ என்ன புரிஞ்சிக்கல,"

"அப்படி இல்ல ஆகாஷ்"

"கொஞ்சம் வெயிட் பண்ணு குட்டிமா, அதுக்கு அப்புறம் நம்ம லைப் வேற லெவல்ல இருக்கும், நீ நினைசத்து பார்க்காத அளவுக்கு".

"இல்ல ஆகாஷ், ப்ளீஸ் விட்டுடு, எனக்கு உன்ன நினைச்சிட்டு இருந்த அப்போ, நே நோ சொன்ன அப்போ கூட ஹர்ட் ஆகல, ஆனா இப்போ என்னால் முடியல. நான் பைத்தியம் மாதிரி ஏதேதோ செய்றேன், இனி மொத்தமா என்கூடவே வச்சுக்கனும்னு" ஷைலு பாவமா ஆகாஷை பார்க்க.

ஒன் இயர், இந்த ஒன் சைடு லவ் ஓட எனக்காக காத்து இருக்க மாட்டியா ஷைலு, கல்யாணம் வேண்டா அது இதுலாம் பேசாத, எனக்கு சொல்லு ஒன் இயர் ஷைலு, அப்புறம் எப்பவும் உன்ன பிரியமாட்டேன், எனக்கு உன்மேல ஒரு பீலிங் இருக்கு அது லவ்வானு நானும் தெரிஞ்சிக்கனும்ல ஷைலு.

"சொல்லு ஷைலு?" ஆகாஷ் ஷைலுவை பார்த்து உட்கார்ந்து இருந்தான். அவளின் பதிலை எதிர் பார்த்து.

ஷைலு ரொம்ப நேரம் அமைதியாவே இருந்தா.

"ஆகாஷ்க்காக, ஒன் ஒன் சைடு லவர்க்கு டைம் குடுக்காம இப்படி செஞ்சா எப்படி ஷைலு?" ஆகாஷ் சோகமா மூஞ்ச வைத்துக்கொண்டு சொல்ல. ஷைலு அவ நினைச்சது தான் சரி வரும்னு அதுலயே இருந்தா.

"நம்ம ஒன் இயர் கழிச்சி கல்யாணம் வச்சிக்கலாம் ஆகாஷ், உனக்காக நான் வாழ்கை புல்லா காத்து இருப்பேன் ஆனா, என்னால முடியும்னு தோணல, எனக்கு பயமா இருக்கு உன்ன நான் வெறுக்க வச்சிடுவேன்னு".

"ப்ளீஸ் ஷைலு, கல்யாணம் செஞ்சிக்கலாம், நம்ம தனியா போய்டுலாம், ஒன் இயர் உன்ன யாரும் டிஸ்டர்ப் செய்யமாட்டாங்க. நம்ம லைப் ஸ்டார்ட் செஞ்ச அப்புறம் நம்ம வீட்ல ஒன்னா இருக்கலாம், எனக்காக ப்ளீஸ் ஷைலு."

ஷைலு ரொம்ப நேரமா யோசிச்சிட்டு, "ஆனா இந்த கல்யாணம் செட் ஆகும்னு எனக்கு தோணல ஆகாஷ், நான் பைத்தியம் மாதிரி செய்றேன் அதுலாம் கல்யாணம் பிக்ஸ் ஆனா அப்போ இருந்து தான்".

"நான் இன்னைக்கு உன்ன நெருங்கனும்னு நினைக்கல ஆனா இப்போ நான் ஏதேதோ செய்றேன்," ஆகாஷ் ஷைலு கெஞ்சி கொஞ்சி எது செஞ்சும் சரி வரல, கோவமா வருது ஆகாஷ்க்கு, அவன் எதுக்கு அடிச்சான்னு சொல்ல ஆரம்பிக்கவும் தான் ஷைலு அமைதியா ஆனா.

"இங்க பாரு, நீ என்ன நெருங்குனன்னு நான் உன்ன அடிக்கல, பதறிட்டேன் டி, உனக்கு எதாவது ஆகி இருந்தா என் நிலைமையை யோசிச்சியா? நீ இல்லாம நான் எப்படி இருப்பேன், யோசிக்காம காட்டுல போய் நின்னுட்டு பெட்ரோல் இல்லன்னு சொன்னா நான் எப்படி டி".

"அட இதுக்கு தான் அடிச்சியா நான்கூட கிஸ் பண்ண வந்ததுக்குத்தான் அடிச்சன்னு ரொம்ப கஷ்ட பட்டுட்டேன்," ஷைலு இப்போ நார்மலா பேசவும் தான் ஆகாஷ்க்கு தெம்பே வந்தது.

ஷைலு ட்ரிப்க்கு அப்புறம் நம்ம கல்யாணம் தான், அதுக்கு நம்ம ஒன்னா ஷாப்பிங் போய் உனக்கு தேவையானது எல்லாம் நான் தான் பாத்துப்பேன் புரியுதா. ஷைலுக்கு ஒரே ஹாப்பி.

ப்ரெசென்ட்ல, ஷைலுக்கு கொஞ்சம் போதை ஏறிடுச்சு, வாமிட் எடுக்க ஆரமிச்சிட்டு கொஞ்சம் டையர்டா மனோ மேல சாஞ்சிட்டு பேஸ் வாஷ் செஞ்சிட்டு வந்து உட்கார.

அங்க இருக்குற குரூப், அப்புறம் என்னக்கா ஹாப்பி எண்டிங் தான.

"அட நீங்க வேற டா, அவன் கடைசியா அப்போதான் படமா பேசுனான் அடுத்த நாளே அவன் வேலைய காட்டிட்டான். நானும் ஒரு முடிவோட இருந்துட்டேன், புருஷன பாத்தாதானே இப்படி ஆகுது, ஆகாஷ் சொன்னது போல ஒன் சைடு லவ்வராவே பாத்துக்கலாம்னு முடிவு செஞ்சிட்டேன்".

"அப்புறம் கதைக்கு வா" என்றனர் அனைவரும்.

"டேய்ய் ஒருத்தி நொந்து நூடுல்ஸ், ஆகுறது கேக்க உங்களுக்கு அவ்ளோ சந்தோசமாடா" என்று சொல்லிவிட்டு ஷைலு ஆரம்பித்தாள்.

ட்ரிப்க்கு ஒரு நல்ல இடம் செலக்ட் செஞ்சி ஒரு வழியா வண்டில ஏறி கிளம்பிட்டோம்.

ஆகாஷ் பின்னாடி உட்கார்ந்து இருக்க, ஆளாளுக்கு அவங்க அவங்க ஜோடியோட உட்காந்து இருந்தாங்க. பாவம் ஷைலு பக்கம் உட்கார கூட ஆளு இல்ல, இந்த மனோ உட்காருவான்னு பாத்தா அவன் டிரைவர் பக்கம் உட்காந்து மொக்க போட்டுட்டே வந்தான். பொறுத்து பார்த்த ஷைலு கோபமா உட்கார்ந்து இருந்தாள்.
 
Status
Not open for further replies.
Top Bottom