Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - [email protected]


மெளனபெருவெளி - Story

Kiruba Jp

Member
Vannangal Writer
Team
Messages
34
Reaction score
36
Points
18
அத்தியாயம் 10

என்ன சொல்ல சொல்கிறான். இவன் என்னிடத்தில் எதை நான் மறைக்கிறேன் என்று நினைக்கிறான்.
துவாரகா உள்ளத்தில் பெரிய குழப்பம் தான். நடுவீதியில் நிறுத்தி இரண்டு பக்கமும் வாகனங்களில் பறந்து கொண்டு செல்கின்றார்கள் இத்தகைய சூழலில் நிறுத்தி எத்தகைய கேள்வி கேட்டு கொண்டு இருப்பவனிடத்தே நான் எதை சொல்ல.

"என்ன துவாரகா மீண்டும் சிந்தனையால் சிறையெடுக்கபட்டு விட்டீர்களா?"


நையாண்டி தனத்துடன் அவன் கேட்பதை அவளால் ரசிக்க முடியவில்லை எரிச்சல் கொள்ள தான் முடிகிறது.


"நான் எந்த உண்மையை சொல்ல வேண்டும் என்று நினைக்கிறீர்கள்."


"உங்களுக்கு தெரிந்ததை எனக்கு தெரியாததை"


மீண்டும் மீண்டும் கேட்கிறான் பாரு குற்றவாளியை நிறுத்தி தண்டனை கொடுக்கும் நீதிபதியை போலல்லவா அவனை அவனே நினைத்து கொண்டு வினாவுகிறான். மனம் பிதற்ற வெளிக்காட்டாமல் "உங்களுக்கு தெரிந்ததை என்னிடம் கண்டறிந்ததை முதலில் நீங்கள் சொல்லுங்கள் பிறகு நான் சொல்கிறேன்"இவளும் விடுவது போல இல்லை.


"அது சரி....கிளம்புங்கள்" அவளிடம் கூறியவாரு தனக்கு எதிராக வந்த ஆட்டோவை மறைத்து நிறுத்தி அதில் ஏற சொன்னான்.


"என்ன செய்யுறீங்க! எனக்கு பயமாக இருக்கிறது. நான் எப்படி வீட்டிற்கு செல்வேன்" தயங்கியவாறே நின்றவளை திடீரென கையைப்பிடித்து ஆட்டோவில் ஏற சொல்லி வற்புறுத்தினான். அவளுக்கு ஒன்றும் புரியவில்லை ஏறிக்கொண்டு அவனையே பார்த்துக் கொண்டு இருந்தாள்.


" இன்னும் இரண்டு மணி நேரம் பொறுத்து கொள்ளுங்கள்."என்றவன் ஆட்டோடிரைவரை பார்த்து "கிளம்புங்கள் அவர்கள் சொல்லும் இடத்தில் இறங்கி விடுங்கள் " ஆட்டோவை தட்டினான். ஆட்டோ டிரைவரும் காக்கி உடையை கண்டவுடன் பயபக்தியோடு தலையை தலையை நூறு முறை ஆட்டிவிட்டு வண்டியை கிளப்பினான்.மனமே இல்லாமல் வந்து கொண்டு இருந்தாள். ஆட்டோ டிராவலில் இருக்கும் போதே துவாரகாவின் மொபைல் சவுண்டை எழுப்பியது. ஸ்கீரினீல் உபேதா பெயர் பளீச்சிட்டது. அட்டன் செய்தாள் உபேதாவிடம் இருந்து ஸ்வரம் இல்லாமல் குரல் எழுந்தது.

"துவாரகா என்ன ஆகிவிட்டது நீண்ட நேரமாக டிரை செய்து கொண்டே இருக்கிறேன் நீ எடுத்தபாடில்லை. எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது."
தனக்கே என்ன செய்வது என்று புரியாமல் தான் திக்கு திசை இன்றி திரியும் பறவையை போல விழித்து கொண்டு பயணம் செய்கிறாள். இவள் என்ன அவளை ஆறுதல் படுத்துவது.


"கொஞ்சம் மூச்சு விட்டு பேசடி! நானே ஆயிரம் குழப்பத்தில் இருக்கிறேன்."


"நீயே ஆயிரம் குழப்பத்தில் இருக்கிறாயா அப்பறம் நான் எம்மாத்திரம். போச்சு...சொல்லடி...என்னடி ஆனது பெரிய நம்பிக்கையோடு கிளம்பி சென்றாயே அந்த போலிஸ் என்ன தான் சொல்கிறான்"


"சொன்னான் சுரக்காய்கு உப்பு இல்லை என்று!!"


" சரி நான் சொல்வதை கேள் துவாரகா நான் இப்போது பேருந்து நிலையத்திலிருக்கிறேன் நீயும் இங்கே வந்து விடு என் அக்கா பெங்களூருவில் இருக்கிறாள். அங்கே சென்று விடலாம்"


"எலிகளுக்கு பயந்து வீட்டை கொளுத்த சொல்றியாடி"


"அவர்கள் எல்லோரும் முதலைடி...அத்தனை எளிதாக எடை போடாதே.நீ சொல்....அப்பறம் என்ன செய்ய சொல்கிறாய்"


"நான் பார்த்து கொள்கிறேன் நீ எங்கேயும் செல்ல வேண்டாம் வீட்டிற்கு போ"


"இல்லடி.." போன் கட்டானது "ஹலோ..ஹலோ.."துவாரகா இணைப்பை துண்டித்து விட்டால். அது தெரியாமல் உபேதா கத்தி கொண்டு இருக்கிறாள்.


'இவள் போனை துண்டித்து விட்டாலே என்ன செய்வது இப்போது பஸ் ஏறுவோமா இல்லை இவளை நம்பி உயிரை பணையம் வைப்போமா அல்லா நான் என்ன செய்ய..'இப்போது உபேதா மண்டையை பிய்த்து கொண்டு நின்றாள்.​
 

Kiruba Jp

Member
Vannangal Writer
Team
Messages
34
Reaction score
36
Points
18
இடைவிடாது ஒலித்த காலிங் பெல்🤫💔

போகும் பாதையும் தெரியவில்லை அடுத்த கட்டம் என்ன என்பதும் தெரியவில்லையே என்பது போல ஆட்டோவை விட்டு அப்பார்ட்மெண்ட் வாசலில் வந்து இறங்கினாள் துவாரகா. இருள் சூழ்ந்து இருந்தது ஏதோ என்றும் இல்லாத அமைதி அப்பார்ட்மெண்டில் நிலவியது.

ஆட்டோவை விட்டு இறங்கி காசை கொடுத்து விட்டு நடந்தாள். வாசலில் வாட்ச்மேனை கூட காணவில்லை துவாரகா மனதிற்குள் இனம் புரியாத பயம் உள்ளுக்குள் ஓட. நடந்து வந்து கொண்டு இருந்தவள் எதிரே திடீரென்று தோன்றிய பெண்ணால் தூக்கி வாரி போட்டது துவாரகாவிற்கு. "விஷ்ணுமா..." பயந்து அவளது உடல் நடுக்கம் கண்டது.

"ஏய் துவாரகா என்ன இப்படி பயப்புடுற" சொல்லி சிரித்தாள் அந்த பெண்.

துவாரகா வின் உடல் நடுக்கம் இன்னும் குறையவில்லை." திணறினாள் சிரித்தாள் ஏதேதோ பேசி சமாளிக்க பார்த்தாள்."ஏதோ யோசனையில் வந்தேன் விஷ்ணுமா உங்களை பார்க்கவில்லை அதான்." ஒருவழியாக தன் பயத்தையும் பதற்றத்தையும் வெளிக்காட்டாமல் மூடி மறைத்து விட்டாள்.

"சரி துவாரகா அசோசியேஷன் மீட்டிங் எதிர் அப்பார்ட்மெண்ட்ல வா..."கையோடு அழைத்து போக தயாரானாள்.

"இல்லை....இப்போ தானே வந்தேன் வீட்டிற்கு சென்று ரேப்ரஸ் ஆகிவிட்டு உடனே வருகிறேனே..."தான் டயர்டாக இருப்பதை சொல்லாமல் சொல்ல அதை புரிந்து கொண்டதை போல "சரி..சரி..நீ வா வா நான் முன்னே செல்கிறேன்"என்று சொல்லி அங்கிருந்து நகர்ந்தாள். துவாரகா லிஃப்ட் அருகே வந்தாள் அவுட்டாஃப் ஆர்டர் என்ற ஃபோர்ட் காற்றில் ஆடிக்கொண்டு இருந்தது.

"ச்ச...இது வேற தொல்லை"திட்டிக்கொண்டே படிக்கட்டுகளில் ஏற தொடங்கினாள். எத்தனை பெரிய நிசப்தம் போருக்கு பின் அமைதியை போலல்லவா இருக்கின்றது. இந்த அமைதியே பாதி பீதியை கிளப்பும் போலவே. மனம் முழுவதும் சிந்தனை வினா எழும்ப நடைபோட்டாள். ஒவ்வொரு படியாக அவள் கடக்கும் போதும் காதருகே பெரும் மூச்சு சத்தம் சீராக ஒலித்தது. அவள் தொண்டை குழிக்குள் எச்சில் இறங்கவில்லை. நடையில் வேகம் காட்டினான். விறு விறு வென்று அவள் ஏறும் அந்த மூச்சு காற்றும் இன்னும் இன்னும் அதிகமாக ஒலித்தது. தன் பிளாட்டை வந்தடைந்தவள் வேகவேகமாக தன் கைபைக்குள் கையை விட்டு துலாவினாள். சாவியை எடுத்தாள். உள்ளே நுழைந்தாள் நூலிலை இடைவெளி தான் கதவை படாரென்று சாத்தினாள்.மூச்சுக்காற்றுக்கு சொந்தமான இரண்டு உருவங்கள் கதவை படார்படாரென்று அடித்தனர்."ஏய் கதவதிற உன்னை கொன்னுடுவோம் பார்த்துக்கோ...திறடி"
ஒருவன் மற்றொருவனிடம் "டேய் தடிமாடு கதவை உடைடா வேலாவேலைக்கு திங்குறல்ல"திட்டினான்.

"அண்ணண் நானும் அதுக்கு தான் டிரை பண்ணிட்டு இருக்கேன் இருன்னே." அவனும் மாங்கு மாங்கு என்று இடித்தான். உள்ளே துவாரகா இறந்து கொண்டு இருந்தாள்.

"டேய்...டேய்... எல்லாரும் வரத்துக்குள்ள முடிச்சிட்டு கிளம்பனும். அவ கழுத்த கரக்கரன்னு அறுத்து எறிஞ்சிட்டு அந்த லேப்டாபோட போயே ஆகணும்டா." ஆவேசத்துடன் வேலைசெய்பனை அவசரபடுத்தினான்.

பயங்கர கோபத்துடன் இடிஇடியேன இடித்தான். மதம் கொண்ட யானையை போல கத்திக்கொண்டே மோதினான்.

'இப்போது என்ன செய்வது இப்போது என்ன செய்வது அய்யோ!' அச்சத்தில் துவாரகா மனது துடித்தது. 'மொபைலை எடுத்து யாரை அழைப்பது... அர்ஜீன்..அவன் உனக்கு ஏன் இந்த வேண்டாத வேலை என்பானே.ஆங்...இப்போது இதை தவிர வேறு வழியில்லை அவனை அழைத்து தான் ஆக வேண்டும்.. ' அவள் இராவணன் எண்ணை அழுத்தி காதில் வைக்க காலிங் பெல் சத்தம் அதுவும் யாரோ கைவிடாமல் அடிக்க இதயத்துடிப்பு துவாரகாவிற்கு எகிறியது.
 
Top Bottom