Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


மை ஏஞ்சல்

Messages
3
Reaction score
3
Points
3
காட்டன் சேலை கட்டிக்கொண்டு, முகத்தில் எண்ணை வடிய, தலையை படிய வாரிக் கொண்டு இருபதுகளில் ஒரு பெண்மணி அந்த அரசு உதவி பெறும் பள்ளியினுள் நுழைந்தார். அவரைக் கண்ட மாணவர்களோ, "யாருடா இது?” என்று அவர்களுக்கள் பேசிக் கொண்டனர். பள்ளி மணி ஒலிக்கவே மாணவர்கள், ஆசிரியர்கள் என அனைவரும் காலை வழிபாடிற்காக ஒருங்கிணைந்தார்கள். இறை வணக்கம் எல்லாம் முடிந்த பின் தலைமை ஆசிரியர் அந்த பெண்மணியைக் காட்டி அவர் அந்த பள்ளியில் புதிதாக வேலைக்கு சேர்ந்திருப்பதாதவும், ஒன்பதாம் வகுப்பிற்கு வகுப்பாசிரியராகவும் இருப்பார் என அறிவித்தார். அதைக் கேட்ட ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாறன், "டேய், ஒரு அம்மாஞ்சி சிக்கிடுச்சி.இனி நம்ம ராஜ்யம் தான்” என தன் நண்பர்களுக்கு கூறினான்.

அப்பெண் வகுப்புக்குள் நுழைய
மாணவர்கள் அனைவரும் எழுந்து நின்று "குட் மார்னிங் மேம்" என்றனர். அவரும் புன்னகைத்து விட்டு "குட் மார்னிங் கண்மணிகளே! எல்லாரும் சாப்டாச்சா?" என வினவினார்.
மாணவர்கள் அனைவரும் ஆம் என தலையாட்ட மாறன் மட்டும் "என்னடா இந்த மேம் கண்மணிகளே, கால்மணிகளேனு சொல்லிட்டு இருக்காங்க. நாம சாப்டலனா இவங்க சமச்சி ஊட்டி விட போறங்களா?" என கலாய்த்துக் கொண்டிருந்தான்.

"என் பேரு யாமினி. நான் தான் உங்களுக்கு இந்த ஒரு வருஷத்துக்கு வகுப்பாசிரியை. நா உங்கள தப்பு பண்ணலேனா சும்மா சும்மா திட்ட மாட்டேன், நெறய வீட்டுப்பாடம்லாம் தர மாட்டேன், நாம ஜாலியா விளையாடிட்டே படிக்கலாம். என்ன உங்களோட
தோழி மாதிரி நினைச்சிக்கோங்க. சோ நாமலாம் ப்ரெண்ட்ஸா இருக்கலாமா?" என அவர் எல்லாரையும் இயல்பாக்கும் பொருட்டு கூறினார்.மாணவர்களும் "எஸ் மேம்" என கூறினார்கள்.ஆனால் இதைக் கேட்ட மாறனோ, “மேம், எனக்கு என் ப்ரெண்ட் தான் வீட்டுப் பாடம்லாம் எழுதித் தருவான், எக்ஸாம்ல கூட பதிலாம் காமிப்பான். அப்போ இனிமேல் நீங்களும் இதலாம் செய்வீங்களா? என கேட்க வகுப்பறையே சிரித்து விட்டது. யாமினி டீச்சரோ புன்னகை மாறமால் "உன் ப்ரெண்ட் காமிப்பாங்கனு சொன்னல அதுனால உனக்கு என்ன லாபம்? எதுவுமே தெரியாம அடுத்த வருஷத்துக்கு பாஸ் பண்ணிப்போய்ட்டு, அப்புறம் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுல முழிப்ப. ஆனா உன் அருமை தோழரோ அவங்களோட வீட்டுப் பாடத்தோட உனதையும் எழுதி எழுதி நல்ல படிச்சு மார்க் வாங்கிடுவான். நீ நல்லது செய்யும் போது தட்டிக் கொடுத்து, தப்பு செய்யும் போது தட்டிக்கேக்கற நல்ல தோழியாவும், ஆசிரியையாகவும் நா எப்பவும் இருப்பேன்" என்றார்.அவர் அப்படி கூறியதும் மாறனின் முகம் சுருங்கி தனது இருக்கையில் அமர்ந்துவிட்டான்.

ஒருநாள் வகுப்பறையில் யாமினி டீச்சர் "நாம எல்லாரோட வாழ்க்கையிலும் ஒரு ஏஞ்சல் இருக்காங்க.அவங்க நம்ம எல்லார் கூடயுமே இருப்பாங்க. சில நேரங்கள நம்மள மாத்துகின்ற, நமக்கு உதவி செய்ற ஆள வருவாங்க" எனக் ஏதோ கதை கூறிக் கொண்டிருக்கையில் "அந்த ஏஞ்சல் எப்போ என் வாழ்க்கைல வரப் போறாளோ?" என மாறன் ஒவ்வொரு வரிக்கும் கமெண்ட் அடித்துக் கொண்டிருந்தான்.

இவ்வாறாக நாட்கள் செல்ல செல்ல யாமினி மேம் தனது கற்பிக்கும் திறனாலும், கனிவான குணத்தாலும், மாணவர்களுடன் ஒன்றி நன்றாக பழகுவுதாலும் அனைவருக்கும்
விருப்பமான ஆசிரியையாக மாறி இருந்தார். மாறன் மட்டும் அவர் என்ன செய்தாலும் கலாய்த்துக் கொண்டே இருந்தான், சிலது யாமினி மேம்க்கு தெரிந்து பலது அவருக்கு தெரியாமல்.

காலாண்டு தேர்வு முடிந்த பின் மதிப்பெண் குறைவாக எடுத்திருந்த மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்காக மாணவர்களின் பெற்றோரையும் அழைத்திருந்தார்கள்.

மாறனின் பெற்றோரும் வந்திருந்தார்கள். அவர்கள் யாமினி டீச்சரிடம், "இவன்லாம் பாஸ் பண்ணனுவான்ற நம்பிக்கையை இல்லங்க. சரியான சேட்டை பண்ணறான். வயசு தான் 14 ஆகுது ஆனா பண்றது எல்லாம் 4 வயசு பையன் விட மோசம இருக்கு.." என ஆசிரியரிடம் புகார் பட்டியலை வாசித்துக் கொண்டிருந்தனர். யாமினி டீச்சரோ, "மாறன் நல்ல படிப்பான். இந்த வயசுல சேட்டை பண்ணாம வேற எப்போ பண்றது. ஆனா அது மத்தவங்கள பாதிக்கிற மாதிரி இருந்திச்சுனா அத நாம அவனுக்கு புரியும்படி எடுத்து சொல்லனும்.." என அவர்களுக்கு அறிவுரை கூறிவிட்டு மாறனை பார்த்து "இனிமேல் சேட்டைலாம் கம்மி பண்ணிக்கனும்.." என அவனுக்கும் அறிவுரை வழங்கினார்.

அரையாண்டு தேர்வு முடிந்து முழு ஆண்டு தேர்வு நடக்க ஒரு மாதத்திற்கு முன்பாக அவர்கள் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. அதில் பாட்டுப்போட்டியிலும், கைவிணை செய்தல் போட்டியிலும் மாறனின் பெயரை யாமினி டீச்சரே கொடுத்திருந்தார்.
மாறனுக்கு அதில் கலந்து கொள்ள இஷ்டமே இல்லை.அவன் இதுவரை எந்த போட்டியிலும் கலந்து கொண்டது இல்லை. யாமினி மேம் மீது கோபத்துடனே அப்போட்டிகளில் கலந்து கொண்டு பாட்டுப் போட்டியில் முதல் பரிசும் கைவிணை செய்தல் போட்டியில் இரண்டாம் பரிசும் பெற்றான்.யாமினி டீச்சர் மாறனை சிறப்பு வகுப்பில் கவனித்தபோது அவன் தேவையற்ற பொருள்களை வைத்து அழகாக கைவிணை பொருட்களைச் செய்து கொண்டிருப்பான்.மேலும் அவர் சினிமா பாட்டு மெட்டு போட்டு பாடத்தை பாடல் போல் கற்பிக்கும் போது தான் மாறனின் பாடல் திறனையும கண்டறிந்தார். அதனாலே அவர் அவனது பெயரை அவனுக்கு இஷ்டமில்லை எனினும் போட்டிக்கு கொடுத்தார்.யாமினி டீச்சரை மதிக்காது அவர்களை கலாய்த்தும் அவர் அவனுக்காக செய்தவற்றை மாறன் சிந்திக்கத் தொடங்கினான்.
ஒரு வருடம் கழித்து பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் அறிவித்தன்று மாறன் யாமினி மேமிடம் ஓடிவந்து தான் 450 மதிப்பெண்கள் பெற்று இருப்பதாக கூறினான்.அதைக் கேட்டு "வெரி குட் மாறன்" என அவனை பாராட்டினார் யாமினி டீச்சர்.
"மேம் எங்க அப்பா அம்மா கூட நான் பாஸ் பண்ண மாட்டேன்னு சொன்னப்ப நீங்க மட்டும் எப்படி கண்டிப்பா நா பாஸ் பண்ணுவானு சொன்னீங்க?" என்று வினவினான் அதற்கு அவரோ புன்னகையுடன் "உன் மேல எனக்கு நம்பிக்கை இருந்துச்சு அந்த நம்பிக்கையை நீயும் பொய்யாக்கல்ல" என்றார்.
"நீங்க அன்னிக்கு ஒரு கதை சொன்னீங்கில்ல மேம் நம்ம லைஃப்ல ஏஞ்சல் கண்டிப்பாக இருப்பாங்கன்னு, எனக்கு அந்த ஏஞ்சல் நீங்கதான். யூ ஆர் மை ஏஞ்சல் டீச்சர்" என்றான்.
"பரவாயில்லையே நான் சொன்னத கலாய்ச்சு இருந்தாலும் இவ்வளவு நாள் ஞாபகம் வச்சி இருக்கியே" என்றார் யாமினி டீச்சர் அதே புன்னகையோடு.
"அப்போ நான் உங்கள கலாய்த்தது உங்களுக்கு தெரியுமா? தெரிஞ்சும் நீங்க ஏன் என்ன தண்டிக்கல?" என வினவியனிற்கு "நான் உன்ன தண்டிக்கனும்னு நினைக்கல நீ மாறனும் தான் நினைச்சேன்" என சிரித்துக்கொண்டே கூறினார்.
மாறன் யாமினி டீச்சரை வியந்து பார்த்தான். யாமினி டீச்சர் "உனக்கு நான் எப்பவுமே கிளாஸ்ல சாப்பிட்டியானு ஏன் கேட்கிறேன் தெரியுமா?" என்றார்.
மாறனுக்கோ தான் கலாய்த்தது அனைத்தும் தெரிந்தும் டீச்சர் தம்மை தண்டிக்காமல் மாற்றியிருக்கிறாரே என்னும் வியப்பு உடனே ஆமாம் என தலையாட்டினான். "சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்.அது மாதிரி ஆரோக்கியம இருந்தால் தான் படிக்க முடியும். அதுக்காக தான் நான் எல்லாரையும் சாப்பிட்டீங்களான்னு கேட்பேன். சாப்பிடலனா நான் சாப்பிட வைக்க தான் கேட்பேன்" என்றார் யாமினி மேம்.மாணவர்களின் படிப்பில் மட்டுமல்லாது உடல் நலத்திலும் அக்கறையாக இருக்கும் யாமினி டீச்சரை நினைத்து பெருமிதத்தோடு "என் வாழ்க்கையை மாத்துனது நீங்க தான். யூ ஆர் ஏஞ்சல் ஆஃ மை லைப்" என்றான்.
 
Top Bottom