Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


ம்ம்ம் ... செஞ்சுட்டா போச்சு !! - HoneyGeethan

HoneyGeethan

Active member
Vannangal Writer
Team
Messages
175
Reaction score
169
Points
43
காவிரி ஆற்றங்கரையினிலே , சோழ மன்னர்களால் ஆளப்பட்ட , பிரசித்த பெற்ற கோவில்களும், கோட்டையும் சூழ ஓங்கி நின்றது அந்த திருச்சி மாநகரம்.

அந்த மாநகரினிலே பல கட்டிடங்களும் , வீடுகளும் விரவி கிடக்க , மக்கள் கூட்டம் பெரும் திரளாக கோவில்களுக்கு சென்றும் வந்தும் கொண்டிருக்க அந்த வீதியே பரபரப்பாக காட்சியளித்தது அந்த ஒரு கட்டிடத்தைத் தவிர,

“ நிசப்தம் திருமண திட்டமிடுநர் “ என்ற பெயர் பலகையை தாங்கி நின்ற அந்த கட்டிடம் மட்டும் கேட்பாரின்றி கிடந்தது. அந்த பெயர் பலகையின் கீழ் “நிசப்தம் வருவீங்க நீங்க ! திருமணம் சேம்மமா நடத்திடுவோம் நாங்க” ! என்ற வாசகம் அதில் தாங்கி நிற்க! உள்ளே சென்று பார்த்தால் பெயர்க்கு தகுந்தது போல் அந்த இடமே நிசப்தமாக இருந்தது . நிசப்தத்தை தகர்க்கும்படி உள்ளே நுழைந்தான் அவன் அக்னி புத்திரன்.

‘பேர்ல மட்டும் தான்ங்க அக்னி இருக்கு மத்தபடி நம்மாளு டம்மி தாங்க’

‘அப்பாவ பகைச்சுட்டு நட்பு தான் துணைனு வந்துருக்கு பயபுள்ள. இதுல அவரவிட ஒரு ரூபாய் அதிகமா சம்பாதிப்பேன்னு சவால் வேறவிட்டு வந்துருக்கு பக்கி’.

இப்ப இங்க வாங்க

“டேய் கேசவா ! டேய் கேசவா! எங்கடா இருக்க ? “ என்று கத்திக் கொண்டே அக்னி அவனை தேட

“ இங்க இருக்கேன்டா ! “ என்று கூறிக் கொண்டே கேசவன் என்று அழைக்கப்படும் கேசவ மூர்த்தி கையில் பேப்பரோடும் காதின் பின்னே பென்சிலை சொருகிக் கொண்டும் , வாயில் பேனாவுடனும் ரூமில் இருந்து வந்தான்.

“ என்ன மச்சான் ! உருப்படியா ஒரு படம் வரைய விட மாட்டியா ? லட்டு மாதிரி ஒரு டிசைன் உதிச்சது அதை கெடுத்திட்டடா! என் கலை ஆர்வத்தை கெடுக்கனே வந்துருக்கடா “ என்று கேசவன் அவனை கத்த

“ ஆமா இவரு பெரிய ஓவிய நிபுணர் நாங்க disturb பண்ணலேனா அப்டியே வரைஞ்சு ஆஸ்கார்டு விருது வாங்கிடுவார். அடச்சீ ! நிப்பாட்டு உன் பீத்தல ! . சும்மா கலை ஆர்வம் ,விமலா ஆர்வம்னு பீத்தாம இங்க வா மச்சான் உன் கிட்ட ஒண்ணு சொல்லனும் “ என்று அவன் கூற,

“டேய் வாய் நீளுது ! அடக்கி வை ! இல்லை அப்புறம் பேச வாய் இருக்காது “ என்று கையை முறுக்கியபடி கேசவன் சொல்ல ,

“டேய் இப்ப என்ன சொல்லிட்டேனு இப்டி முறுக்கு பிழியுற ! நான் சொல்றத முத அமைதியா கேளுடா “ என்று அவனை கெஞ்சிவிட்டு அக்னி தொடர்ந்தான்.

“ டேய் மச்சான் நமக்கு ஒரு ஆர்டர் கிடைச்சுருக்குடா ! நல்ல பசையுள்ள பார்ட்டிடா ! வேண்டாம்னு சொல்லிடாதடா பிளிஸ் “ – அக்னி கெஞ்ச

“ you see mr. Fire எனக்குனு ஒரு தொழில் தர்மம் ! இருக்கு ! லட்சியம் இருக்கு !அதை என்னால விட முடியாது “ – கேசவன்

“டேய் நாயே இப்படி சொல்லி சொல்லியே 2 வருசம் ஓடி போச்சு. தர்மம், வெங்காயம்னு பேசி பேசியே என்னை இப்டி உட்கார வச்சுருக்கடா!”

என் அப்பன்கிட்ட பெரிய wedding planner ஆவேன்னு சவால் விட்டுட்டு வந்தேன்டா.

வீர வசனம்லாம் பேசிட்டு வீட்ட விட்டு உன்ன நம்பி வந்தேன்டா

என் ஆயாவோட பாயாவ விட்டுட்டு வந்தேன்டா ஆனா

இப்ப நாயர் கடை சாயாக்குக் கூட சிங்கி அடிக்கிறேன்டா என்று அக்னி புலம்ப கேசவன் பேசினான்.

“மச்சி புலம்பாதடா , நீ சொல்றதெல்லாம் எனக்கு புரியுது! இருந்தாலும் என் லட்சியம் என்னாகுறதுடா.?”- கேசவன்

“பரதேசி நிறுத்துடா! என்ன உன் புடலங்காய் லட்சியம்? பெரிய பட்ஜேட்ல, அழகான தம்பதிகளோட rich look ல wedding பண்ணனும் அவ்வளவுதான. அப்டி ஒரு வாய்ப்பு கிடைச்சுருச்சுடா மச்சான் “

“ பெரிய பட்ஜெட்ல பண்ணச் சொல்லி ஆபர் வந்துருக்குடா ! வா அவங்களை பார்த்து பேசலாம் என்று அக்னி கூற கேசவன் மகிழ்ச்சி அடைந்தான்.

“ டேய் செமடா “என்று அக்னியை தழுவிக் கொண்ட கேசவன்

“ எப்டிடா பிடிச்ச பார்ட்டிய ? யார்டா அது ?” – கேசவன்

“ யாராயிருந்தா என்ன ? காசு தான்டா முக்கியம் “ – அக்னி

அக்னி அப்டி சொன்னவுடன் கேசவன் அவனை முறைத்துப் பார்த்தான்.

“ நீ ஒரு மார்க்கமான ஆளு ஏதாவது அங்க என் லட்சியத்திற்கு பாதிப்பு வந்துச்சு மவனே கொன்றுவேன்டா “ என்று கேசவன் கூற

“ விட்றா ! மச்சான் தேவையில்லாதத பேசிகிட்டு ! நாம போறோம் பேசுறோம் , அட்வான்ஸ் வாங்கிட்டு வந்துட்டே இருக்கோம் சரிதானடா !” என்று அக்னி கூற ஏகமனதாக சம்மதித்தான் கேசவன்.

இருவரும் கிளம்பி ஒரு வீட்டின் முன் சென்று நின்றனர். அந்த வீட்டின் காலிங் பெல்லை அக்னி அடிக்க ஒரு 55 வயது மதிப்புடைய பெரியவர் வந்து கதவைத் திறந்தார். வேட்டி சட்டையில் முறுக்கு மீசையோடு பட்டிக்காட்டான் போல் வந்து நின்றார் அவர் . அக்னியை பார்த்ததும் ஆர்பாட்டமாக வரவேற்றார்

“ வாப்பா தீ ! இது தான் நீ சொன்ன தம்பியா ? “ என்று அவர் கேட்க அக்னி தொடர்ந்தான் .

“ ஆமா சார் !” – அக்னி

“ அடியே காத்தாயி marriage broker வந்து இருக்காரு சீக்கிரம்வா !” என்று தன் மனைவியை அழைத்தார் சிதம்பரம்

அவர் அப்டி கூறியதும் அக்னியை முறைத்தான் கேசவன் . அவன் முறைத்ததும் அக்னி கண்களால் அவனிடம் கெஞ்சினான் .

“ அப்புறம் தம்பி உங்க broker பீஸ் எவ்வளவு ?” என்று அவர் கேட்க கொதித்துவிட்டான் கேசவன்.

“ சார் நான் broker யில்லை wedding planner “ என்று அவன் கூற

“ அட என்ன தம்பி ! சரியான முட்டாபயலா இருக்கீங்க! அத தான நானும் சொல்றேன் ! நீங்க எப்படித்தான் marriage அ நடத்திக் கொடுக்க போறீங்களோ” ! என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே காத்தாயி வந்தார் .

கூரைப்புடவை கட்டி வாயில் வெத்தலையை போட்டுக் கொண்டு எச்சில் ஒழுக வந்தார் அவர்

“ என்னங்க என்னை கூப்டீங்களா ? யார் இது “ – காத்தாயி

“ ஆமாண்டி , நான் சொன்ன ஆளுக இவிங்க தான் இவன் தீ , இவன் கே7 .”சிதம்பரம்

“ என்னது இது ஒரு பேரா வச்சுருக்காங்க ?” – காத்தாயி

“ சார் அது தீ யில்லை – அக்னி , என் பெயர் கே எழுயில்லை , கேசவன்.

“ என்ன எழவு பேரோ வாய்க்குள்ள நுழைய மாட்டிங்கிது . அத விடு தம்பி சீலை, ரவிக்கை துணி , சாப்பாடு எல்லாம் உன் பொறுப்பு, நல்லா வாழை இலையெல்லாம் பதார்த்தத்தால நிறைஞ்சிருக்கனும் “ என்று அவர் கூறிக் கொண்டே போக எழுந்துவிட்டான் கேசவன் .

“ சார் நான் யாருனு தெரியாம, என் range தெரியாம பேசிட்டு இருக்கீங்க! நீங்க வேற ஆளப் பாருங்க! நான் வரேன் ! என்று சொல்லிவிட்டு கோபத்தோடு கேசவன் வெளியே செல்ல அவனை தொடர்ந்தான் அக்னி

“டேய்! டேய் ! நில்லுடா ! நான் சொல்றத கேட்டுட்டு போ மச்சான் “ – அக்னி

“ பின்னாடி வந்தா கொன்றுவேன்டா ! எங்க வந்து என்னை கோர்த்துவிட்டுருக்க ! உன்னை! “ – கேசவன்

“ டேய் இது பசையுள்ள பார்ட்டிடா கொஞ்சம் adjust பண்ணிட்டு போயிட்டா பணம் பார்க்கலாம்டா 1 லட்சம்டா “ – அக்னி

“ டேய் சரியான காட்டாங்கடா , முட்டா பசங்கடா ! எப்டி இவிங்ககிட்ட வேலை பார்க்க முடியும் “ – கேசவன்

“ டேய் பிளிஸ்டா ” ! என்று அவனை கெஞ்சி சம்மதிக்க வைத்தான் அக்னி.

இருவரும் உள்ளே வர சிதம்பரம் பேசினார் .

“ என்ன பயலுகளா என்ன முடிவு பண்ணியிருக்கீங்க ? இந்தா பாரு தம்பி கோபம்லா பட்டா தொழில் பண்ண முடியாது . என்ன தீ ? நான் வேற யாரையாவது பார்த்துக்கவா?” – சிதம்பரம்

“ அய்யோ வேண்டாம் சார் ! நாங்களே பண்றோம் “ – அக்னி

“ சரி தம்பி நாளைக்கு சீலை துணி எடுக்க போறோம் வந்துருங்க “ – என்று அவர் சொல்ல

“ செஞ்சுட்டா போச்சு” சார் ! – அக்னி

“ சாப்பாடு காரசாரமா இருக்கணும் பயலுகளா “ – சிதம்பரம்

“ செஞ்சுட்டா போச்சு” சார் ! – அக்னி

“ தோரணமெல்லாம் மண்டபம் முழுசா நிரஞ்சிருக்கனும் “ – சிதம்பரம்

“ செஞ்சுட்டா போச்சு” சார் ! – அக்னி

“ பொண்ணு மாப்பிள்ளைய தார தப்பட்டை சத்தம் காத கிழிக்க வரவேற்கணும் “ – சிதம்பரம்

“ செஞ்சுட்டா போச்சு” சார் ! – அக்னி

இந்த கல்யாணத்தை சிறப்பா செஞ்சுட்டீங்க உங்களுக்கு சொன்ன தொகையோட ஒரு ரூபா சேர்த்து போட்டு தரேன் . சரி தானடா தீ! – சிதம்பரம் .

“ ரொம்ப பெரிய மனசுதாங்க சார் உங்களுக்கு ! ஆனா பாருங்க அந்த ஒரு ரூபா எங்களுக்கு பெரிய ரூபானால அத நீங்களே வச்சுக்கோங்க சார் ! “ என்று கேசவன் கடுப்புடன் கூற

“ என்ன தம்பி பொழைக்க தெரியாத ஆளா இருக்கீங்க ! எப்டி பொழைக்கனும்னு தம்பிய பார்த்து கத்துக்கோங்க . விவரமான பய பின்னாடி நல்லா வருவான் “ என்று கூறியபடி தன் மீசையை முறுக்கி விட்டுக் கொண்டே சென்றார் அவர்

அவர் சென்றதும் அக்னியை எட்டி மிதித்தான் கேசவன்

“ இந்த ஆள் ஒரு ஆள்னு இங்க கூட்டிட்டு வந்ததும் இல்லாம் , அந்த ஆள் சொல்றதுக்கேல்லாம் ““ செஞ்சுட்டா போச்சு” னு சொல்ற .

ஆமா என்னமோ நீ பின்னாடி நல்லா வருவேனு அந்த ஆள் சொல்லிட்டு போறான் . இப்ப நான் அடிக்கிற அடில நீ பின்னாடி விழப் போறப் பாரு “ என்று அவன் அக்னியை அடிக்க

“ டேய் விட்றா ! அந்த ஆள் சொல்லிட்டு போனா அதுக்கு நான் என்ன செய்வேன் ! மச்சி கல்யாணம் முடியுற வரை கொஞ்சம் பொறுமையா இரு இவனுங்கள நான் பார்த்துக்குறேன் “ என்று அவன் கெஞ்ச அவனை விட்டான் கேசவன்

சேலை வாங்குறதுல இருந்து ,சாப்பாடு ,பந்தல் னு எல்லாத்தையும் கேசவனும் , அக்னியும் செய்யுறதுக்குள்ள இரண்டு பேருக்கும் போதும் போதும்னு ஆகிருச்சு.

ஒரு வழியா திருமண நாளும் வந்தது

இதோ மேடையில் எல்லாத்தையும் சரி பார்த்துட்டு இருந்தான் கேசவன் .

அவன் அருகில் அக்னி செல்ல “ ஏன் மச்சான் இன்னும் பொண்ணு ,மாப்பிள்ளையை நான் பார்க்கல! ஏன் மச்சான் இன்னும் அவங்கள கண்ல காண்பிக்கல .? “

அது வந்து டா அது .... என்று திணறினான் அக்னி

“ அது கல்யாணம் முடியுற வரை அவங்க வெளிய வர மாட்டாங்கடா அது இவங்க வழக்கம்” என்று அக்னி பதட்டத்தோடு கூற

கேசவன் குழம்பினான்

.” ஏன் மச்சி ! இவ்வளவு tension ஆகுற ! நாம நம் லட்சியத்தின் முதல் படி ஏறிட்டோம் , முதல் கல்யாணத்தை வெற்றிகரமா முடிச்சிட்டோம் . இனி பாரு இதை வைச்சு எவ்வளவு வெற்றி வாய்ப்புகள் நமக்கு குவியப் போகுதுனு “ என்று கேசவன் பெருமையாக கூற முயன்று சிரித்தான் அக்னி .

“ டேய் இந்த spray அடிச்சா stage நல்லா மணக்கும் ல மச்சான் “ என்று கேசவன் அக்னியிடம் இங்கு கேட்டுக் கொண்டிருக்க அக்னி பதில் சொல்வதற்குள் சிதம்பரம் பேச்சு சத்தம் கேட்டு திரும்பினர் இருவரும்

அங்கு அவர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தார்.

“ சும்மா சொல்லக் கூடாது சிதம்பரம் உன் தாய் – தகப்பன் 60ஆவது திருமண நாள பெரிய அளவுல பண்ணிட்டீயே அவ்வளவு பாசமா அவங்க மேல” – சுப்பு

“ அட அதில்லை சுப்பு நமக்கு சனி பெயர்ச்சி நடக்குதாம் அதுவும் விரய சனினு ஏதோ சொன்னாங்க கைலயிருக்கிற காசு விரையம் ஆகுமாம்ல அதான் கழுத இதுல விரையம் ஆகட்டும்னு போட்டேன் . ராஜ தந்திரம்ல “என்று தன் மீசையை நீவி விட்டுக் கொண்டார் சிதம்பரம்

இதை கேட்ட கேசவன் கோபத்தோடு திரும்பிப் பார்க்க அக்னி தூரத்தில் ஓடிக்கொண்டிருந்தான். இவன் அவனை கத்திக் கொண்டே துரத்தினான்.

“ டேய் நில்லுடா! நாயே ! Youth க்கு திருமணம் செய்யனும்னு நினைச்சா இவங்களுக்கு பண்ண வச்சுட்டியேடா,இதுல அந்த ஆள் பேச்சு வேற , என் லட்சியத்தையே பாலாக்கிட்டியேடா ! “ !நில்லுடா உன்னை இன்னைக்கு கொல்லாம விட மாட்டேன். அந்த ஆள் கேட்டதுக்கு எல்லாம் செஞ்சுட்டா போச்சுனு சொன்னேலடா ! நான் இப்ப ஒண்ண வச்சு செய்றேன்டா “ என்று கேசவன் அவனை துரத்திக் கொண்டு ஓட , அவன் சிட்டாக பறந்துவிட்டான் ..

அக்னி ஆவியாகி போய் ரொம்ப நேரம் ஆச்சுபா தம்பி அவன் இனி உன்கிட்ட சிக்க மாட்டான். .

சரிங்க அக்னி போயாச்சு அப்டியே நாமளும் கிளம்பலாம் வாங்க

அடுத்து வேறோரு களத்தில் மீண்டும் சந்திப்போம்

நன்றி
 
Top Bottom