Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


யட்சகன்! ராட்சஷனாக! - 2

HoneyGeethan

Active member
Vannangal Writer
Team
Messages
175
Reaction score
169
Points
43
அழகான அன்பர்களே!

என் இரண்டாவது கதை "யட்சகன்! ராட்சஷனாக!" கதையின் இரண்டாம் பாகம்....
இப்போ டீசர்..
கூடிய சீக்கிரம் எபி போடுறேன்..
படிச்சுட்டு எப்பிடி இருக்குன்னு சொல்லுங்க ஃப்ரெண்ட்ஸ்....

டீசர்:
மனுநிதா கையில் யட்சனின் புகைபடத்தை வைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். நிதா வருந்துவதை பார்த்த பவ்யா மனுவின் தோள்களை தொட்டு தன் பக்கமாக திருப்பினார். .
“ டாலிமா ! இன்னும் எத்தனை காலம் தான் இப்படி அவரை நினைச்சுட்டே ஒன்னும் செய்யாம சும்மாவே இருக்கப் போற, வா வந்து சாப்பிட்டு, சாம் கூட வெளிய போய்ட்டு வா ! – பவ்யா
பவ்யா அப்படி கேட்டதும் தன் கண்களை துடைத்துக் கொண்ட நிதா
அவர் திரும்பி வர முடியாத இடத்திற்குப் போயிட்டார்னு உங்களுக்கு எப்படிமா நான் சொல்வேன் ! என்று மனதுக்குள் நினைத்தவள் வெளியே அமைதியாக இருந்தாள்.
*******
என்னங்க ! என்று சாமை பார்த்து நிதா ஆசையாக அழைத்தாள். நிதா
அடிப்பாவி ! உனக்கு என்னடி பாவம் பண்ணேன் ஒரு பெண்ணை பார்த்தது குத்தமா ! அதுக்கு ஆப்பு வச்சுட்டியே ! நீ நல்லா வருவ ! என்று சாம் தனக்குள் முனங்கிக் கொண்டான்.
****
அந்த மதிய வேளையில் வெயிலின் உக்கிரம் சாமால் தாங்க முடியவில்லை வேர்த்து கொட்டியது. வழிந்த தன் வேர்வையை துடைத்துக் கொண்டே வந்தவன் மேல் வந்து மோதினாள் பெண்ணவள்.
அவள் மோதிய வேகத்தில் இருவரும் தலையில் உருள ஆரம்பிக்க சாம் சுதாரிப்பதற்குள் அந்த பெண் எழுந்து கொண்டாள். சாம் கோபத்தோடு எழுந்து நிற்க அவன் எதிரில் தன் கைகளை தட்டி தூசியை உதறினாள் சவிதா
பிரசாத் அந்த பெட்டின் அருகில் செல்ல வேகமாக அவர் கைகளை பிடித்தது அந்த உருவம் .
அந்த பிடிப்பில் தான் எவ்வளவு வேகம் ! தன்னை காத்துக் கொள்ள துடிப்பவன் போல் அவன் அவர் கைகளை பற்ற பிரசாத் பேசினார்
நான் தான்டா ! என்று பிரசாத் சொன்னதும் அவரது கைகளை விட்டான் அவன். அவன்விட்டதும் அவனது அருகில் வந்து அமர்ந்த பிரசாத்
*******
அந்த பெண் அழுவதை பார்த்த வீரபாண்டியனுக்கு கோபம் தலைகேற.
டேய் மருது ! கொண்டு வாங்கடா அதை என்று அவர் கத்த வெள்ளை துணியால் மூடப்பட்ட தட்டை ஏந்திக் கொண்டு வந்தான் மருது.
வீரபாண்டி மருதுவை அழைத்ததும் அங்கு நின்றிருந்தவனின் தாய் வீரபாண்டியின் காலில் விழுந்து கதறினார்.
அய்யா ! வேண்டாங்கய்யா ! விட்டுங்க அவனை ! இனி எந்த பெண்ணையும் திரும்பிக் கூட பார்க்க மாட்டான்யா ! இந்த ஒரு தடவை மன்னிச்சிடுங்கய்யா ! என்று அந்த தாய் அழுது கரைய, அதை பார்த்த வீரபாண்டி சற்றும் அசையாமல் கல்லாக அமர்ந்து இருந்தார் .
. மருது கையில் இருந்த தட்டை வாங்கிய வீரபாண்டி அங்கு குற்றவாளியாக நின்றவன் கைகளில் கொடுத்தார். .
அவன் பச்சை நிற சட்டையும் பச்சை நிற கால் சட்டையும் அணிந்து இருக்க அவன் கைகள் சங்கிலியால் கட்டப்பட்டிருந்தது.
 

HoneyGeethan

Active member
Vannangal Writer
Team
Messages
175
Reaction score
169
Points
43
யட்சகன் : 1
வெள்ளை நிற பஞ்சு போன்ற மேகக் கூட்டங்களின் மத்தியில், அதை குத்திக் கிழிக்கும் கூர்வாளாக அதனுள் புகுந்து சென்று கொண்டிருந்தது அந்த வானுர்தி.
அந்த வானுர்தி செல்ல செல்ல அது விட்ட புகையானது அந்த வானமதில் தன் வெள்ளை தடத்தினை பதித்துக் கொண்டே சென்றது. வெள்ளையும் சிவப்பு நிறமும் கலந்த வண்ணத்தில் இருக்கும் அந்த வானுர்தி பல பயணிகளை தாங்கிக் கொண்டு செல்ல, அதனுள் பயணப்பட்ட பயணிகளில் சிலர் பாடல்களை கேட்டுக் கொண்டும், சிலர் அருகில் அமர்ந்தவர்களிடம் கதை பேசிக் கொண்டும், சிலர் வந்து போகும் விமானப் பணிப் பெண்களிடம் சாப்பிடுவதற்கும், குடிப்பதற்கும் கேட்டுக் கொண்டும் இப்படியாக விமானத்திற்குள் ஒவ்வொருவரும் பரபரப்பாக இருக்க அந்த மூன்று பேர் மட்டும் அமைதியின் உருவமாக அமர்ந்திருந்தனர்.
அவர்கள் நம் பவ்யா, மனுநிதா, சாம்.
சாம் மற்றும் பவ்யா நிதாவின் நிலையைக் கண்டு வருத்தத்தோடு அமர்ந்து இருந்தனர் என்றால், இருவரையும் வருத்தத்தில் முக்குளிக்க வைத்த மனுநிதாவோ யட்சனின் நினைவுகளோடு கண்கள் கலங்க பவ்யாவிற்கு தெரியாமல் கையில் யட்சனின் புகைபடத்தையும் அந்த டாலரையும் தன் பையில் இருந்த எடுத்து பார்த்துக் கொண்டே தன் பயணத்தை தொடர்ந்தாள். அவனின் முகத்தை பார்த்ததும் கண்களில் கண்ணீர் துளிகள் துளிர்த்தது. நிதா வருந்துவதை பார்த்த பவ்யா மனுவின் தோள்களை தொட்டு தன் பக்கமாக திருப்பினார்.
“டாலிமா! இன்னும் எவ்வளவு நேரம் இப்படி மாப்பிள்ளை படத்தை பார்த்து வருத்தப்பட்டுட்டே இருக்கப் போற! மாப்பிள்ளை வேலை விசயமா தான வெளிநாடு போயிருக்கிறார். நீ தான அடம்பிடிச்சி இந்தியாக்கு கிளம்பின. அவர் தான் வேலை முடிஞ்சதும் உன்ன வந்து கூட்டிட்டு போவார்ன்னு சொன்னியே! இப்போ எதுக்கு அழுதுக்கிட்டு இருக்க... அவர்க்கு நீ போன் பண்ணி பேசுனியா இல்லையா? அவர் எப்ப வருவார்னு கேட்டீயா மா! நான் வேணா மாப்பிள்ளைகிட்ட உன் நிலையை எடுத்துச் சொல்லி சீக்கிரம் வரச் சொல்லவா?" – பவ்யா.
பவ்யா அப்படி கேட்டதும் தன் கண்களை துடைத்துக் கொண்ட நிதா 'அவர் திரும்பி வர முடியாத இடத்திற்குப் போயிட்டார்னு உங்களுக்கு எப்படிமா நான் சொல்வேன்!' என்று மனதுக்குள் நினைத்தவள் வெளியே அமைதியாக இருந்தாள்.
அவள் அமைதியாக இருக்க பவ்யா தொடர்ந்து பேசினார். "மனு! அவர் எப்ப வருவார்னு இப்போ போன் போட்டு கேட்போமா? இப்போ ட்ராவல் பண்ணும்போது முடியாதே! இப்படி சரியா சாப்பிடாம நீ பாட்டுக்க அழுதுகிட்டே இருந்தா உடம்பு என்ன ஆகும்! அப்புறம் அவர் வந்து உன்னை நாங்க சரியா கவனிக்கலைனு குறை சொல்வார் டா!" – பவ்யா.
அதற்கு நிதா சிரிப்பென்றை உதிர்க்க, "இன்னும் ஒரு மாதத்தில் அவர் வரலைனா! நானே அவர்க்கு போன் போட்டு எப்ப வருவீங்கனு கேட்பேன்" என்று பவ்யா கண்டிப்புடன் சொல்ல நிதா அதிர்ந்துவிட்டாள்.
பவ்யா போன் செய்து பேசினால் ஒரு வேளை யட்சனை பற்றிய உண்மைகள் அவர்க்கு தெரிந்துவிடும் என்று பயந்த நிதா தான் இயல்பாக இருக்க முடிவு செய்தாள்.
"சாரி ம்மா! இனி நான் அழமாட்டேன்! நீங்க சொல்ற மாதிரி நடந்துக்குறேன்" என்று நிதா சொல்ல பவ்யாவின் முகத்தில் சிரிப்பு மலர்ந்தது.
"உண்மையாவா மனுமா?" – பவ்யா.
"ஆமாமா! எனக்காக இல்லைனாலும் பரவாயில்லை உங்களுக்காகவாவது நான் சந்தோசமாக இருக்கேன்மா. என் அம்மா கூட இத்தன வருஷமா வாழாத வாழ்க்கையை இப்ப நான் சேர்த்து வாழப் போறேன் ம்மா! உங்க கிட்ட செல்லம் கொஞ்சனும்! உங்க கிட்ட சேட்டை பண்ணி திட்டு வாங்கனும்! உங்க மடியில் படுத்துக்கணும்! நீங்க என்ன குளிக்க வைக்கணும்! உங்க கூட கோவிலுக்கு போகணும்! இந்திய உணவுகளை நீங்க சமைச்சு அதை உங்க கையால ஊட்டிவிடனும் அதை நான் ரசிச்சு சாப்பிடணும்! எல்லாத்துக்கும் மேலே டோலுவும் நானும் உங்க கூட படுக்க சண்டை போடுவோம்ல அது மாதிரி சண்டை போடணும்..." என்று சொல்லிக் கொண்டே வந்த மனு பாதியில் நிறுத்திவிட்டாள்.
அவளது அமைதியை கண்ட பவ்யா, "டோலுவ! நீ இன்னும் மறக்கலையா நிதா! ஆனா அவன் இப்ப எங்க இருக்கானு தெரியல! எங்கப் போனான்னும் தெரியலமா! அவனை நான் ரொம்ப மிஸ் பண்றேன் மனு!" – பவ்யா.
"ஆமாம்! ம்மா நானும் அவனை ரொம்ப மிஸ் பண்றேன்! என்று நிதா சொல்ல அவளது முகவாட்டத்தை பார்த்த பவ்யா வேகமாக அவளை திசை திருப்பும் பொருட்டு சுற்றும் முற்றும் திரும்பிப் பார்க்க அவர் கண்களில் சாம் தென்பட்டான். அங்கு சாம் தன் எதிரில் அமர்ந்து இருந்த பெண்ணை சைட் அடித்து கொண்டிருந்தான். அதை பார்த்த பவ்யா வேகமாக "மனுமா! அங்க பாரு நம்ம சாம் ஒரு பெண்ணை சைட் அடிச்சிட்டு இருக்கான்".
அவர் சொன்னதும் வேகமாக திரும்பிப் பார்த்த நிதா அங்கு சாம் எதிரில் அமர்ந்து இருந்த பெண்ணை ரசித்துக் கொண்டிருப்பதை பார்த்த நிதா சிர்ப்பபொன்றை உதிர்த்துவிட்டு குறும்பு மேலிட, "என்னங்க!" என்று சாமை பார்த்து நிதா ஆசையாக அழைத்தாள்.
நிதா அப்படி அழைத்ததும் சாம் சுற்றி முற்றி பார்த்துவிட்டு, 'இவ யாருகிட்ட பேசிட்டு இருக்கா? ம்ப்ச்! வேற யாராவதா இருக்கும்!' என்று தனக்குள் சொல்லிக் கொண்டு தன் சைட் அடிக்கும் வேலையை தொடர நிதா அவனை விடவில்லை திரும்பவும் சாமை கூப்பிட்டாள்.
அவன் அவளை கண்டுகொள்ளாமல் தன் வேலையை தொடர, அதை கண்டு கடுப்பான நிதா "சாம் அத்தான்! உங்களைத் தான் கூப்பிடுறேன்! அங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க? அந்த பெண்ணை சைட் அடித்தது போதும். கொஞ்சம் உங்க பொண்டாட்டியையும் பாருங்க" என்று நிதா சொல்ல சாம் திருதிருவென முழித்தான்.
'எதே சாம்.... அத்தானா??? என்னத்தான் இவ இவ்வளவு நேரம் கூப்பிடுறாளா? என்னா...து. பொண்டாட்டியா? எனக்கு இன்னும் ஒரு தடவை கூட கல்யாணம் ஆகலையே.. இதில் எங்கிருந்து இவ பொண்டாட்டியானா' என்று தன் தலையை சொறிந்து கொண்டே நிதாவை பார்த்தான் சாம்.
'என்னாச்சு இவளுக்கு? தன் கணவனை நெனச்சு ஓவரா பீல் பண்ணி இவளுக்கு மரகழண்டு போச்சா? என்ன? என்று சற்று நேரம் யோசித்த சாம் அப்போது தான் அருகில் இருந்த பெண்ணை கவனித்தான். அவள் நிதாவையும் சாமையும் மாறி மாறி பார்க்க அப்போது தான் நிதாவின் விளையாட்டு சாமிற்கு புரிந்தது.
அதை புரிந்து கொண்டவன் தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டான் 'அடிப்பாவி! உனக்கு என்னடி பாவம் பண்ணேன் ஒரு பெண்ணை பார்த்தது குத்தமா! அதுக்கும் ஆப்பு வச்சுட்டியே! நீ நல்லா வருவ! ம்..ம்..ம்... சாமா இந்த ஜென்மத்துல உனக்கு திருமண யோகம் இல்லை போலடா! அதும் இவ கூட இருந்த அவ்ளோதான்.. நீ உனக்கானவளை எப்ப பார்த்து.. அவளை நீ எப்ப கல்யாணம் பண்ணி... ம்..ம்..ம்.. உனக்கு கல்யாணம் நடக்குறதுலாம் டவுட்றா! சாமா!' என்று சாம் தன் நிலையைக் கண்டு பெருமூச்சு விட்டபடியே தனக்குள் கூறிக் கொள்ள அவனைப் பார்த்த மனுவும், பவ்யாவும் சிரித்தனர்.
அவர்களது சிரிப்பை பார்த்த சாம் நிதாவிடம் திரும்பி, "அம்மா! தாயே! பொண்டாட்டி அவர்களே! புருசனையே கண்காணிக்காம கொஞ்சம் வேற வேலையும் பாருங்க!"
"வேற வேலை இல்லையே புருஷன் அவர்களே!" – நிதா.
"தங்களுக்கு டைம் பாஸ் பண்ண நான் தான் கிடைச்சேனா! அத்தமா நீங்களும் இவ கூட சேர்ந்துட்டீங்க பார்த்தீங்களா?" – சாம்.
"ஆமாங்க! உங்கள விட்டா எனக்கு வேற என்னங்க தெரியும்!" – நிதா.
"திரும்பவும் ங்க போட்டு பேசி என்னை காண்டாக்காதே பேப்ஸ்! கொஞ்சம் உன் விளையாட்ட நிறுத்துறீயா?" – சாம்'
"முடியாதுங்க" – நிதா.
இப்படியே சாமை வம்பிழுத்துக் கொண்டே நிதா பயணம் செய்ய, அவர்கள் இருவரையும் கண்ட பவ்யா நிம்மதியடைந்தார்.
நிதா பவ்யாவிற்காக தனக்குள்ளிருந்து வெளியில் வர முயற்சி செய்தபடியே பயணம் செய்து கொண்டிருக்க அந்த விமானம் இந்திய எல்லைக்குள் புகுந்து தமிழகத்தின் மதுரை விமானநிலயத்தை அடைந்து தன் பயணத்தை நிறுத்தியது.
விமானத்தில் இறங்கிய மூவரும் அடுத்து தான் செல்ல இருக்கும் பயணத்தை பற்றி திட்டமிட ஆரம்பித்தனர்.
சாம் கார் புக் பண்ண முடிவு செய்ய நிதா அவனை தடுத்தாள்.
"நோ! சாம்! எனக்கு பஸ்சில் பயணம் செய்யணும்னு ஆசையா இருக்கு!" – நிதா.
"என்னது பஸ் பயணமா? நோ! வே! பேப்ஸ்! மக்கள் கூட்டத்தோட என்னால பயணம் செய்ய முடியாது "– சாம்.
"சாம் நிதா ஆசைப்படுறாடா!" – பவ்யா.
"முடியாது அத்தமா! எனக்கு பஸ்ல போய் பழக்கமில்லை" – சாம்.
"நான் மட்டும் போயிருக்கேனா என்ன? அதான் போய் பார்க்க ஆசைப்படுறேன்" – நிதா.
"நோ பேப்ஸ்! நோஓஓஓ..." – சாம்.
"எஸ்ஸ்ஸ்.... ப்ளீஸ் சாம்! கார் வேண்டாம். ப்ளீஸ் ப்ளீஸ்" என்று நிதா அடம்பிடித்து கெஞ்ச பவ்யா இருவரில் நடுவில் பேசினார்'
"சாம்! அவளுக்கு கொஞ்சம் சேஞ்ச் வேணும்! அவ போக்குல விடு" – பவ்யா
அதை அடுத்து சாம் மறுபேச்சின்றி பஸ் பிரயாணத்திற்கு சம்மதம் தெரிவித்தான்.
மூவரும் கொடைக்கானல் மலையில் உள்ள ஒரு கிராமத்திற்கு பஸ்சில் தன் பயணத்தை ஆரம்பித்தனர்.
மனு ஆசையோடு ஒவ்வொரு இடத்தையும் புதுமை கலந்த பூரிப்போடு பார்த்துக் கொண்டு வர சாம் பஸ்சில் ஏறும் திருமணமாகாத பெண்களை ஒரு வித எதிர்ப்பார்ப்போடு பார்த்துக் கொண்டு வந்தான்.
இங்கு சாம் அவளுக்கானவளை தேடிக் கொண்டே வர அங்கு...
சாமின் அவளோ ??
ஒருவனை விளக்கமாற்றை தூக்கிக் கொண்டு கோபத்தோடு துரத்தி ஓடிக் கொண்டிருந்தாள் அவள் சவிதாராணி.
சாந்தமான சாமிற்கும் கோபத்தின் சத்குருவான சவிதாவிற்கும் பொருந்துமா?
மனுவிற்கு யட்சனின் ஏக்கம் தீருமா?
மனுவின் ஏக்கத்தை யட்சகன் அவன் தீர்க்க வருவானா?
அவன் திரும்பி வந்தால் நிதாவின் நிலை என்ன?
 

HoneyGeethan

Active member
Vannangal Writer
Team
Messages
175
Reaction score
169
Points
43
யட்சகன் : 2
நாடு முழுவதும் டிஜிட்டல் முறையாக மாறிப் போய் கொண்டிருக்க அந்த கிராமம் மட்டும் மாறாமல் பழைய கட்டுப்பாட்டோடு இருந்தது. திருமணமாகாத பெண்கள் பாவாடை தாவணியோடும் , ஆண்கள் வேட்டி சட்டைகளோடும், திருமணம் ஆன பெண்கள் சேலை அணிந்தும் மண் மணம் மாறாமல் இருந்தனர்.
மண் மணம் மாறாமல் இயற்கையோடான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த கிராமத்தில் இருக்கும் தெருக்களில் வளைந்து ஓடி வந்து கொண்டிருந்தான் ஒருவன். அவன் ஓடி வந்த வேகத்தை பார்த்தால் அவன் யாருக்கோ பயந்து ஓடி வருவது போல் இருந்தது. அவன் பின்னால் திரும்பி பார்த்தால் பெண்கள் சிலர் ஓடி வர அவர்களுக்கு தலைமை தாங்கியாக அவர்களுக்கு முன்னால் ஓடி வந்து கொண்டிருந்தாள் சவிதாராணி.
சவிதா தன் பாவாடையை தூக்கிக் சொறுகிக் கொண்டு அவனை துறத்திக் கொண்டு வர, அவளிடம் சிக்காமல் ஓட முயன்றவன் இறுதியில் முட்டுச் சந்தில் வந்து அவளிடம் மாட்டிக் கொண்டான். வேறு எங்கும் செல்வதற்கு வழியில்லாமல் அவன் தவித்தபடியே நிற்க அவன் அருகில் வந்த சவிதா அவனை ஓங்கி அறைந்தாள். .
அவள் அறைந்ததும் மற்ற பெண்களும் அவனை அடிக்க வர அவன் வேகமாக "அய்யோ! வேண்டாம் என்னை விட்டுங்க! இனி எந்தப் பெண்ணையும் பார்க்க கூட மாட்டேன்" என்று அவன் கெஞ்ச ஆரம்பித்து விட்டான்.
அதை கேட்ட சவிதா அவர்களை தடுத்துவிட்டு அவன் பக்கம் திரும்ப அவன் பயத்தில் "இனி இப்படி செய்ய மாட்டேன்! தெரியாமல் அந்த பெண் மேல கைப்பட்டிருச்சு! அதுக்கு ஏன் இப்படி பண்றீங்க" என்று அவன் கெஞ்ச சவிதா அவனது சட்டையை பிடித்துவிட்டாள்.
"தெரியாமா கைப்பட்டிருச்சா! அது எப்படிபடும்! உன்னை மாதிரி சின்ன பிள்ளைகிட்ட தப்பா உரசுரவன் மனுசனே இல்லை மிருகம்! நீ செய்த வேலைக்கு உன்னை..." என்று அவன் கழுத்தில் கை வைக்க முயல அவன் வேகமாக சவிதா அருகில் நின்று இருந்த அந்த பதினோரு வயதான அந்த சிறுமியை பார்த்து அவன் கெஞ்ச ஆரம்பித்துவிட்டான்.
"பாப்பா! என்னை மன்னிச்சுடுமா! கூட்ட நெரிசலில் உன் மேல தெரியாமா கைப்பட்டிருச்சு! அதுக்கு என்னைப் போய் இவ்வளவு தூரம் துறத்திட்டு வரா! ப்ளீஸ் என்னை விடச் சொல்லுமா!" என்று அவன் அந்த சிறுமியிடம் மன்னிப்பு வேண்ட, அதை பார்த்த அந்த சிறுமி சவிதாவிடம் திரும்பினாள்.
"அக்கா! விட்ருக்கா பாவம்! அவர் கை தெரியாம என் மேல பட்டிருச்சு அதுக்கு போய் நீ இவ்வளவு பண்ணக் கூடாது! விட்ருக்கா!" என்று அந்த சிறுமி சொல்ல சவிதா கோபமானாள்.
"நீ சும்மா இரு! கை தெரியாம பட்டதுக்கா அவ்ளோ சத்தமா கத்துன. அதெல்லாம் உனக்கு எதுவும் தெரியாது. அவன் பொய் சொல்றான். இவனை மாதிரி ஆளுங்க பஸ்ல இடிக்கிறதுக்குனே வராங்க." என்று அந்த சிறுமியை அடக்கினாள் சவிதா .
அப்போது அவள் பின்னால் இருந்த பெண்களில் ஒருத்தி "சவிதா! விடு! அதான் அடிச்சுட்டேல! தெரியாம செஞ்சுட்டான்! இந்த ஒரு தடவை அவனை மன்னிச்சு விட்றலாம்! இனி அவன் எதாவது செய்தா அய்யாகிட்ட சொல்லலாம்! பார்த்தா பாவமா இருக்கு! விடு அவனை" என்று கூட இருந்த பெண்களும் சொன்னார்கள்.
சற்று நேரம் யோசித்த சவிதா அவனிடம் திரும்பி "பார்த்தியாடா! உன்னை மன்னிக்க சொல்லி சொல்லுது அந்த பிள்ளை. அப்படி இருக்குற அந்த பச்சை மண்ணை போய் உரசிப் பார்க்குற நீயெல்லாம்... இன்னும் கொஞ்ச நேரம் நீ இங்கிருந்த உன்னை கொன்றுவன் ஓடிப்போடா நாயே" என்று சவிதா கத்த அவன் பயத்தில் அலறி அடித்துக் கொண்டு ஓடினான்.
அவன் ஓடியதும் சவிதா அந்த சிறுமியிடம் திரும்பி, “இனி எவனாவது பஸ்ல இடிச்சா சொல்லு. நான் பார்த்துக்குறேன்“ என்று அந்த சிறுமியிடம் கூறியபடியே சவிதா நடந்து வர, அவள் அருகில் வந்தான் ஒருவன்.
"ஏய் சவிதா! நீ இங்கேயா இருக்க. உன்னை எங்கேல்லாம் தேடுறது. கண்ணப்பர் அங்க உன்னை தேடிட்டு இருக்கார். சீக்கிரம் போய் என்னனு கேளு. போ" என்று ஒருவன் சொல்ல சவிதா வேகமாக தன் வீட்டை நோக்கி ஓடினாள்.
ஓடியவள் தன் வீட்டிற்கு சென்று மூச்சு வாங்க கண்ணப்பர் என்று சொல்லப்படும் ஒரு வயதானவர் முன் நின்றாள். அவர் தன் மூக்கு கண்ணாடி வழியாக அவளை பார்த்துவிட்டு நிமிர்ந்து தன் கண்ணாடியை சரியாக வைத்துவிட்டு சவிதாவை பார்த்துக் கொண்டே பேசினார்.
"அம்மா ராணி வந்துட்டியா!" – கண்ணப்பர்.
"ஆமா தாத்தா! என்ன விசயமா என்னை கூப்பிட்டு விட்ட நீ!" - சவிதா.
"பெரியய்யா வீட்டுக்கு ஆள் வராங்க. அந்த வீட்டை சுத்தம் பண்ணி வைக்க சொல்லி அய்யா சொன்னார்மா" என்று அவர் சொன்னது தான் தாமதம் வேகமாக அவர் இட்ட பணியை செய்ய அந்த பெரியய்யா வீட்டிற்கு சென்றுவிட்டாள் சவிதா. ஆனால் அதை அறியாத கண்ணப்பர் பின்னால் திரும்பியபடியே பேச்சை தொடர்ந்தார்.
"பெரியய்யா வீட்டுக்கு வரவங்க கூட உன் மாமன்..." என்று அவர் சொல்லியபடியே திரும்ப அந்த இடம் வெற்றிடமாக இருந்தது. அதை பார்த்த கண்ணப்பர் தனக்குள் சிரித்தபடியே 'விளையாட்டுப் பிள்ளையம்மா நீ! அதுக்குள்ள போய்ட்டீயா' என்று தனக்குள் சொல்லிக் கொண்ட கண்ணப்பர் முகத்தில் வருத்தம் இழையோடியது.
'ம்ம்ம் உன் அம்மா இருந்து இருந்தால் நல்லா இருந்திருக்கும். உன்னை பெத்து என் கையில் குடுத்துட்டு அவ பாட்டுக்க போய் சேர்ந்துட்டா. உன் அப்பன் இரண்டாவது கல்யாணம் பண்ணி உன்னை என்கிட்ட குடுத்துட்டு அவ பின்னாடியே போயிட்டான். சரி உன் மாமன்காரனாவது உன்னை பார்த்துக்கிடுவான்னு பார்த்தா அவன் படிக்குற காலத்தில் கிருஸ்துவ பெண்ணை காதலிச்சு அவளை கூட்டிட்டு லண்டன் போய் செட்டில் ஆகிட்டான். எனக்கும் வயசு வேற ஆகிட்டு போகுது. உன்னை எவன் கையிலாவது ஒப்படைச்சுட்டா என் கடமை முடிஞ்சிரும்னு பார்த்தா! நீ இங்க இருக்குறவனை எல்லாம் அடிக்க வெளக்கமாற தூக்கிட்டு திரியுற! உன்னை பார்த்தாலே அவன் அவன் பயந்து ஓடுறான். இதில் எப்படி உனக்கு நான் கல்யாணம் பண்ணி வைக்கிறது' என்று தனக்குள் பேசிக் கொண்டவர் இறுதியில் 'எவன் வந்து உன்கிட்ட மாட்டிக்க போறான்னு தெரியலமா சவிதா! ஆள் வளர்ந்த அளவுக்கு உனக்கு அறிவு வளர்ல! ம்ம்ம் எப்ப நீ உன் விளையாட்டு தனத்தை விட போறீயோ தெரியல!' என்று அவர் தனக்குள் புலம்பிக் கொண்டார்.
பலவிதமான மரங்கள், செடிகள், கொடிகள் என வழி நெடுகிலும் இருபக்கமும் காட்சியளிக்க , போகும் பாதைகள் குண்டும், குழியுமாக இருக்க பஸ்சின் கூட்ட நெரிசல் அந்த பாதைகளின் மேடு பள்ளங்களில் வண்டி செல்லும் போது ஏற்படும் குலுக்கல் என தன் கிராமத்தை நோக்கி பயணம் செய்து கொண்டிருந்த மனுவிற்கு அந்த பஸ் பயணம் புதுமையாக இருந்தது என்றால், சாமிற்கு எரிச்சலாக இருந்தது. எப்படா இந்த பயணம் முடியும் என்று சாம் தவித்துக் கொண்டிருக்க ஒரு வழியாக அந்த நீண்ட பயணம் ஒரு முடிவுக்கு வந்தது.
அந்த கிராமத்தின் எல்லையில் வந்து நின்றது அந்த பேருந்து. பேருந்து நின்றதும் அதில் இருந்து இறங்கிய சாம் தன் முதுகை பிடித்தபடியே மனுவை பார்த்து முறைத்தான்.
"இப்ப உனக்கு சந்தோசமா! அய்யோ என் முதுகு... டிரைவர் வண்டி ஓட்றானா இல்லை உருட்றானா! ச்ச்ச்சப்பா முடியலை. நானே பாதி சீட்டில் உட்கார்ந்து இருக்கேன். இதுல அந்தம்மா வேற பிள்ளைய வேற கைல குடுத்துருச்சு. ச்ச்ச்சூ மா. இனி பஸ்சில போகணும்ன்னு சொன்ன அவ்ளோ தான்" என்று சாம் நிதாவை மிரட்ட நிதா சிரித்தாள்.
"என்ன சாம்? இந்த பேருந்து பயணத்தில நிறைய தெரிஞ்சுக்கிட்ட போல, பாஷை கூட மாறிடுச்சு! உன் பீட்டர் இங்கிலிஷ் எங்க போச்சு!" – நிதா.
"ம்ம்ம் இரயில் பிடிச்சு லண்டனுக்கு போச்சு! ஜஸ்ட் ஸ்டாப் இட்! நிதா கார் வாடகை எடுத்து வந்துருக்கலாம். இந்த இடிபாடு தேவையா நமக்கு" என்று சாம் வழி நெடுக நிதாவை திட்டித் தீர்த்து கொண்டே நடந்து வர நிதா அதை கேட்டு சிரித்துக் கொண்டே வந்தாள்.
"சாம்! நீ என்னவேனா சொல்லு இந்த பயணம் எனக்கு வித்தியாசமா இருந்துச்சு! தெரியுமா? இந்த நெரிசல், மேடு, பள்ளங்கள், எதார்த்தமான மக்கள். இது எல்லாம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு சாம்!" – நிதா.
"உனக்கு கிறுக்கு தான் பிடிச்சிருக்கு" என்று அவளை திட்டியபடியே நடந்து வந்த சாம் வேர்வை துளிகளால் நனைந்திருந்தான்.
அந்த மதிய வேளையில் பஸ் பயண சூடு சாமால் தாங்க முடியவில்லை . ஏசியில் வாழ்ந்த அவனது உடல் அந்த வெப்பத்தைக்கூட தாக்குப் பிடிக்க முடியாமல் வியர்த்துக் கொட்டியது. வழிந்த தன் வியர்வையை துடைத்துக் கொண்டே வந்தவன் மேல் வந்து மோதினாள் பெண்ணவள்.
அவள் மோதிய வேகத்தில் இருவரும் தரையில் விழுந்தனர். சாம் சுதாரிப்பதற்குள் அந்த பெண் எழுந்து கொண்டாள். சாம் கோபத்தோடு எழுந்து நிற்க அவன் எதிரில் தன் கைகளை தட்டி தூசியை உதறினாள் சவிதா.
 

HoneyGeethan

Active member
Vannangal Writer
Team
Messages
175
Reaction score
169
Points
43
யட்சகன் : 3
பவ்யா நீண்ட வருடம் கழித்து லண்டனில் இருந்து தன்னை பார்க்க வரப் போகும் செய்தியைக் கேட்டதில் இருந்து சந்தோஷத்திலும் ஆரவாரத்திலும் அந்த பழமை வாய்ந்த பிரமாண்ட கட்டிடத்தை புதுப்பித்து நவீன யுகத்திற்கு ஏற்றார் போல் அழகாக வடிவமைத்திருந்த கட்டிடத்தை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார் வீரபாண்டி.
வீரபாண்டி அந்த கிராமத்தின் ஊர்தலைவராக பல வருடமாக இருந்து வருகிறார். இத்தனை வருடங்கள் கழித்தும் அந்த ஊரில் பெரும் மதிப்போடும் செல்வாக்கோடும் இன்னும் மக்கள் நலனில் அதிக அக்கறை கொண்டும் பொதுநலன் ஆற்றி வருகிறார். அந்த ஊருக்கு பாத்தியப்பட்ட அனைத்தையும் அவர் தான் நிர்வகிக்கிறார். ஊரில் நடக்கும் பிரச்சனைகளாகட்டும் , திருவிழா ஆகட்டும் அங்கு அவர் தலைமையில் தான் நடந்தேறுகிறது.
வீரபாண்டியின் சந்தோஷமோ தன் மகள் பவ்யாவிடம் இருந்தது. தன் மகள் எப்போது வருவாள் என்று வீட்டு வாசலைப் பார்த்த வண்ணம் மகளின் வரவிற்காக இங்கு அவர் காத்துக் கொண்டிருந்தார். ஆனால் பவ்யாவோ அங்கு ஊரின் எல்லையில் சாம் மற்றும் சவிதாவை சுவாரசியமாக பார்த்துக் கொண்டிருந்தார். நிதாவோ சவிதாவின் பேச்சை ரசித்துக் கொண்டிருந்தாள்.
சவிதா தன்னை தள்ளிவிட்டதை தொடர்ந்து கோபத்தோடு எழுந்த சாம் தன் உடையை குனிந்து பார்த்தான். உடை முழுவதும் புழுதியும் மண்ணுமாக இருக்க, தன் இந்த நிலைக்கு காரணமானவளை கொல்லும் வேகத்துடன் அவளை நோக்கி திரும்பினான். ஆனால் அவளோ அவனை சிறிதும் கண்டு கொள்ளாமல் எதிர் திசையில் பார்த்துக் கொண்டிருந்தாள். எதிர் திசையில் பார்த்துக் கொண்டிருந்தவள் முகம் சட்டென்று பிரகாசமாக வேகமாக அந்த திசையை நோக்கி ஓட எத்தனித்தவளை தடுத்தான் சாம்.
"ஹலோ மேடம்! எக்ஸ்யூஸ் மீ! நீ பாட்டுக்க வந்த! என்னை இடிச்சு கீழே தள்ளிவிட்டுட்டு நீ பாட்டுக்க ஓட போனா என்ன அர்த்தம்?" – சாம்.
"ம்ம்ம்... எனக்கு வேலை இருக்குன்னு அர்த்தம்" – சவிதா.
"ஓய் நில்லு! என்னை இடிச்சு கீழே தள்ளிவிட்டதுக்கு மரியாதைக்காகவாவது ஒரு சாரி சொல்லணும்னு உனக்கு தெரியாது! உங்க ஊரில் இந்த சாரி எல்லாம் சொல்ல மாட்டிங்களா?" - சாம்.
அதை கேட்டு சாமின் எதிரில் வந்து நின்ற சவிதா அவனை மேலும் கீழும் பார்த்துவிட்டு, "ம்ம்ம் சாரி தான சொல்லிட்டா போச்சு!" என்றவள் அவனை மறுபடியும் கீழே தள்ளினாள். தன்னைப் பிடித்து கீழே தள்ளுவாள் என்று எதிர்பார்க்காத சாம் கீழே விழுந்தபடி அவளை அதிர்ச்சியோடு பார்க்க அவனுக்கு நேராக இடுப்பில் கை வைத்து முறைத்த படியே நின்றாள்.
"ம்ம்ம் எங்க ஊரில் தெரியாமா தள்ளிவிட்டாதான் சாரி கேட்பாங்க? தெரிஞ்சே இடிக்கணும்னு வரவங்ககிட்ட சாரி கேட்க மாட்டாங்க" – சவிதா.
"ஹேய் யூ! எடக்கு நாட்டான்! நீ என்ன சொல்ற நான் உன்னை வேணும்னே இடிச்சேன்னா சொல்ற! ஆர் யூ கிரேஸி!" – சாம்.
"கிரேஸா! ம்ம்ம் அது எங்க பக்கத்து வீட்டு நாய்! அதை எதுக்கு நீ கேட்குற இப்ப?" – சவிதா.
"யூ ! இடி.." 'இடியட்' என்று சொல்லி திட்ட வந்தவன் வேகமாக அதை வாய்க்குள் முழுங்கிக் கொண்டே "அது கிரேஸ் இல்லை கிரேஸி! நான் உன்னை கிறுக்கா பிடிச்சிருக்குனு திட்டுறேன்! எடக்கு நாட்டான்!" – சாம்.
"ஓ.. ஹோ! அப்ப அந்த நாய்க்கு கிறுக்குனா பேர் வச்சிருக்காங்க! முதல அந்த நாய்க்கு பேரை மாத்த சொல்லணும்" – சவிதா.
"யூ..! யூ..! உன்னை.. என்ன நக்கலா பண்ற!" என்று திரும்ப எழுந்தவன் "நீ என்னை வேணும்னே இடிக்குறவனு சொல்றியா?" திரும்ப முதலிலிருந்து ஆரம்பித்தான் சாம்.
"ஆமா! இதில் என்ன சந்தேகம் உனக்கு? இங்க என் முன்னாடி நீ மட்டும் தான இருக்க! உன்னை தான் சொல்றேன்! இவ்வளவு பெரிய உருவம் வரது உனக்கு கண்ணுக்கு தெரியலயோ? உன்னால என் பஸ் போச்சு?" என்று அவனிடம் குறைபட்டவள் அவனை கத்திவிட்டு எதிரில் வந்த மாட்டுவண்டியை நிறுத்த சென்றுவிட்டாள், அவளிடம் பேச முனைந்த சாம் அவள் சென்று அந்த மாட்டு வண்டியை நிறுத்துவதை பார்த்துவிட்டு "டிஸ்கஸ்டிங்!" என்று வாய்க்குள் முணுமுணுக்க ஒரு மூதாட்டி அவர்களை கடந்து சென்றார். அவரை பார்த்த சவிதா வேகமாக வா என்று கை காண்பிக்க அவர் வேகமாக சவிதா அருகில் சென்றதும் அவரை அந்த வண்டியில் அமர வைத்துவிட்டு சவிதா திரும்பி வந்து கொண்டிருந்தாள்.
சவிதாவை பார்த்த பவ்யா அவளை தடுத்து நிறுத்தினார். அவர்க்கு சவிதாவின் முகம் நெருங்கிய உறவை ஞாபகப்படுத்த அவளிடம் அவளது தந்தை தாய் பற்றி விசாரித்தார்.
"ஏன்மா? உன்னை எங்கோ பார்த்த மாதிரி இருக்கே? யார்மா நீ?" – பவ்யா.
"நானா? நான் சவிதாராணி!" – சவிதா.
"ம்ம்ம் சண்டிராணினு வச்சிருக்கணும்! அதான் கரெக்டா இருக்கும்" என்று சாம் இங்கு முணுமுணுத்துக் கொண்டான்.
"நீங்க யாரு? ஊருக்கு புதுசா?" – சவிதா.
"ம்ம்ம் பழசா இருந்தா மட்டும் என்ன செய்யப் போற?" – சாம்.
"நா உன்ன கேட்டனா?" என்று சாமிடம் கூறிவிட்டு, பவ்யாவிடம், "நீங்க சொல்லுங்க ம்மா உங்களுக்கும் இந்த ஊருக்கும் சம்பந்தம் இல்லாத,மாதிரி இருக்கே!" – சவிதா.
"சம்பந்தம் இருந்தா மட்டும் என்ன செய்யப் போற" – என்று சாம் மறுபடியும் இங்கு முணுமுணுக்க
"எங்க போறிங்க?" என்று சாமை எடை போட்டபடி சவிதா கேட்க பவ்யா சிரித்தார்.
"அடேய்யப்பா! நான் கேட்ட கேள்விக்கு பதிலா! எத்தனை கேள்வி கேட்டுட்ட நீ! எங்களுக்கும் கொஞ்சம் பதில் சொல்ல டைம் கொடுமா!" என்று பவ்யா சொல்லிச் சிரிக்க
"எங்க குலம் கோத்திரம் சொன்னா தான் அம்மா நீங்க உங்க பூர்வீகத்தை சொல்வீங்களா" என்று நிதா கேட்கவும் சவிதா சிரித்தாள்.
"அப்படி எல்லாம் இல்லை ம்மா! காலம் கெட்டுக் கெடக்குது இல்லையா! அதான் இப்படி!" என்று சவிதாவும் கூறிவிட்டு அவர்களுடன் பேசியபடியே நடந்து வந்தாள்.
சாமுடன் மல்லு கட்டி நிற்கும் அந்த பெண்ணை சுவாரசியமாக பார்த்துக் கொண்டிருந்த நிதா பவ்யா பேசியதும் தானும் இணைந்து கொண்டாள்
"ஹாய்! நான் மனுநிதா! இது எங்கம்மா பவ்யா! நாங்க லண்டனில் இருந்து வருகிறேம்" என்று நிதா சொன்னது தான் தாமதம் சவிதா பரபரப்பானாள்
"ஹேய் நீங்க தான் பவ்யாவா? நீங்க அய்யாவோட பொண்ணு தான! உங்களை கூட்டிட்டு போகத்தான் நான் இங்க வந்ததே! நடுவில் அந்த பாட்டிக்கு உதவி செய்ய வேண்டிய சூழ்நிலை வந்துருச்சு! என்னை மன்னிச்சிடுங்க! வாங்க வீட்டுக்கு போகலாம்" என்று சவிதா அவர்களை வீட்டிற்கு அழைக்க நிதாவும், பவ்யாவும் அவளுடன் சேர்ந்து பேசியபடியே நடக்க ஆரம்பித்துவிட்டனர். அப்போது சாம் சவிதாவை கைதட்டி அழைத்தான்.
மூவரும் அவனை பார்க்க,
"ஹலோ! என்ன நீங்க பாட்டுக்க போறீங்க? இந்த லக்கேஜை எல்லாம் யார் எடுப்பா?" – சாம்.
"ம்ம்ம் யார் எடுப்பான்னு கேட்டா என்ன அர்த்தம்? அவங்க துணைக்கு வந்த நீ தான் அதை எடுக்கணும்! வேலைக்காரனுக்கு ரொம்ப தான்மா இடம் கொடுக்கிறீங்க பவ்யா ம்மா!" என்று சவிதா சொல்லிவிட்டு திரும்ப சாம் அதிர்ந்தான்.
அதை கேட்ட நிதாவும் திகைத்த முகத்துடன் நிற்க, பவ்யாவோ வேகமாக "அய்யோ! சவிதா! அவன் வேலைக்காரன் இல்லம்மா! என் அண்ணன் பையன் பேர் சாம்!"
"என்னது வேலைக்காரன் இல்லையா? பார்த்தா அப்படி தெரியலையே! வேலைக்காரன்னு அடிச்சி சொல்லுற மாதிரி பத்து அம்சம் நல்லா பொருந்தி இருக்கு அவர்க்கு" – சவிதா.
"ஓய்! என்ன விட்டா ஓவரா பேசுற! நான் வேலைக்காரனா? என்னப் பார்த்தா அப்படித் தெரியுதோ?" – சாம்.
"ஆமாம்" என்று சவிதா சொல்ல சாம் கோபத்தில் இருக்க.
பவ்யா சவிதாவிடம் "தப்புமா சாமை நீ ரொம்ப தான் கிண்டல் பண்ற!" என்று பவ்யா சவிதாவை கண்டிக்க அதன்பின் சவிதா அமைதியாகிவிட்டாள்.
நிதாவும், பவ்யாவும் சாமிடம் இருந்து லக்கேஜை வாங்க முனைய அவர்களை தடுத்தான் சாம்.
"பரவாயில்லை அத்தம்மா! உங்களால் இந்த வெயிட்டை தூக்க முடியாது! நீங்க கையில் வச்சுறுக்கிறதை மட்டும் தூக்கிட்டு வாங்க! நிதா நீ இந்த ட்ராலியை மட்டும் தள்ளிட்டு வா" என்று சொல்லி அவர்களை தடுத்தவன் தானே மற்ற லக்கேஜ்களை தூக்கிக் கொண்டு வந்தான்.
அதை பார்த்த சவிதா, "இதை தான் நான் முதலிலிருந்து இருந்து சொன்னேன்! அப்ப குதிச்சுட்டு.. இப்ப நான் சொன்னத அதுவே செய்யிது.." என்று சவிதா வாய்க்குள் முணுமுணுத்தவாறு முன்னே நடக்க,
அதை கேட்ட சாம் சொடக்கிட்டு, "ஹேய் நில்லு! நீ இப்ப என்ன சொன்ன? திரும்ப சொல்லு"
சாமிடம் திரும்பிய சவிதா, "ம்ம்ம் கை தட்டி கூப்பிடுறதை விட்டுட்டு பேர் சொல்லி கூப்பிட பழகிக்கோங்கனு சொன்னேன்!" என்று சொல்ல
அதை கேட்ட சாம் முறைத்தபடி "உன்னை..."
பவ்யா சாமிடம், "போதும் ப்பா! உங்க சண்டையை கொஞ்சம் நிறுத்துறீங்களா"
"சவிதா! என் சாம் ரொம்ப நல்லவன். நீ ரொம்ப தான் என் சாம் கிட்ட வம்பு பண்ற! – நிதா.
அதற்கு "ஓ..." என்று சொல்லிவிட்டு மேலே சவிதா நடக்க ஆரம்பிக்க, சாம் வேறு வழியில்லாமல் லக்கேஜை தூக்கியபடி நடந்தான்.
பவ்யாவும், நிதாவும் சாமை பாவமாக பார்த்தபடியே அவனிடம் இருந்த லக்கேஜை வாங்க முனைய சாம் அவர்களை தடுத்துவிட்டு தானே அனைத்தையும் தூக்கிக் கொண்டு வந்தான்.
சிறிது தூரம் சென்றவுடன் சாமிடம் வந்த சவிதா, "குடுங்க நா ஒரு பையை தூக்கிட்டு வர்றேன்"
"வேண்டாம்மா! அப்புறம் அதுக்கு எதாவது என் கிட்ட சண்ட பிடிப்ப!" - சாம்.
"அய்யோ பாவமேன்னு கேட்டா.. ரொம்பத்தான் போய்யா!" - சவிதா.
"சரி சரி ரொம்ப கெஞ்சி கேட்குற" - சாம்.
"ஏதே! கெஞ்சி கேட்டேனா?" - சவிதா.
"ஆரம்பிச்சிடிங்களா?" - பவ்யா.
"இல்ல ம்மா" - சவிதா.
"இல்ல அத்தம்மா! இந்தா இந்த பேக்கை முதுகுல மாட்டிக்கோ, இத கையில பிடிச்சு உருட்டிட்டு வா!" என்று இரண்டை அவளிடம் கொடுத்துவிட்டு மீதி இருந்த பெரிய இரண்டை சாம் தூக்கி வந்தான்.
சவிதா அந்த பிரம்மாண்ட வீட்டின் முன் சென்று மற்றவர்கள் முன்னேற முடியாமல் தன் இரு கைகளை விரித்து நிற்க அவளை பின்பற்றி வந்த பவ்யாவும் சிறு சிரிப்புடன் நின்றார். நிதா அந்த கட்டிடத்தை பிரம்மிப்புடன் பார்த்தவாறு நின்றாள்.
சாம் மூச்சுவாங்க தான் கொண்டு வந்த பைகளை கீழே வைத்தவன் அங்கிருந்த திண்ணையில் அமர்ந்தான். அங்கு சென்றதும் சவிதா யாரையோ கத்தி அழைத்தாள்.
அதை கேட்ட சாம் தன் காதுகளை தேய்த்து விட்டுக் கொண்டே, "ச்சூ இவ என்ன இப்படி கத்துறா! இவ கத்தியே என் ரெண்டு ஸ்பீக்கரும் அவுட் ஆகிடும் போல" என்று சாம் சொல்ல சவிதா அவனை முறைத்துவிட்டு வீட்டுக்குள் சென்றாள்.
வீட்டுக்குள் சென்றவள், “அய்யா அவங்க வந்துட்டாங்க” என்று சவிதா யாரிடமோ பேசுவது இங்கு வெளியே அமர்ந்து இருந்த மூவருக்கும் கேட்க அடுத்த நிமிடம் ஆர்த்தி தட்டுடன் ஒரு பெண்மணி வந்தார்.
அவர் அனைவருக்கும் திருஷ்டி சுற்ற ஒரு வயதான மனிதர் வெளியில் வந்தார். அவரைப் பார்த்ததும் "அப்பா!" என்று அழைத்தபடி அவரை கட்டிக் கொண்டு அழுதார் பவ்யா. அந்த பெரியவர் கண்களிலும் கண்ணீர் துளிகள் உதிர்த்தது. இருவரும் இப்படி அழுது கொண்டிருக்க அவர்களை கலைத்தது ஒரு குரல்.
"அய்யா சின்னம்மா ரொம்ப நாள் கழிச்சு வந்துருக்காங்க. எதுக்கு கண் கலங்கிட்டு வீட்டுக்குள்ளே கூட்டிட்டு போங்கய்யா!" என்று கண்ணப்பர் சொல்ல அவரது குரலை அடுத்து திரும்பிப் பார்த்தாள் பவ்யா.
அங்கு அவர்கள் வீட்டு கணக்குப்பிள்ளை கண்ணப்பர் நின்று இருந்தார். அவரைப் பார்த்ததும் வேகமாக அவரது காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினாள் பவ்யா. அதை கண்ட அவர் வேகமாக பவ்யாவை தடுத்தார்.
"ஏன்மா? என் காலில் போய் விழுந்துக்கிட்டு.. உன் நல்ல குணத்துக்கு நீ நல்லா இருப்பமா" என்று அவர் வாழ்த்த நிதாவிடம் திரும்பினார் பவ்யா.
"அப்பா! இது நிதா! என் பொண்ணு." – பவ்யா.
"ஓ! மனுக்குட்டியா? எவ்ளோ வளர்ந்துட்டா? அப்படியே அவள் அப்.." என்று ஆரம்பித்த வீரபாண்டி பாதியில் நிறுத்திக் கொண்டார். அதை கேட்ட பவ்யாவும் வருத்தமடைந்தார்.
இதை கண்ட கண்ணப்பர் பவ்யாவை மாற்றும் விதமாக சாமை பார்த்து "இது யார்ன்னு சொல்லவே இல்லையேமா?" என்று கண்ணப்பர் சாமை சுட்டிக் காட்டி கேட்க
"இவன் சாமுவேல். இவன்..." என்று பவ்யா சொல்வதற்குள் அவரது காலில் விழுந்து வணங்கினான் சாம்.
"பிளஸ் மீ கிராண்ட்பா!" என்று சாம் சொல்ல பவ்யாவை கண்ணப்பர் புரியாமல் பார்த்தார்.
"இவன் தான் மனோகர் அண்ணன் பையன். அண்ணா வேலையெல்லாம் முடிச்சிட்டு வரேன்னு சொல்லி இருக்கார்." என்று பவ்யா சொல்ல கண்ணப்பர் திகைத்துவிட்டார்.
தன் மகனின் பிள்ளையை பார்த்த சந்தோசம் அவர் கண்களில் தெரிய அவர் கண்களில் கண்ணீர் வடிந்தது. தன் மூக்கு கண்ணாடியை சரி செய்து திரும்பவும் அணிந்து கொண்டே தன் பேரனை பார்த்தார் கண்ணப்பர்.
அவனை நெட்டி முறித்தவர், "டேய் பேராண்டி! எப்படிடா இருக்கா? உன் அப்பன் எங்க ந்னு இருக்கடா" – கண்ணப்பர்.
"யா ரியலி கிராண்ட்ப்பா" – சாம்.
"என்னடா ரியலி! கிராண்ட்னு சொல்லிகிட்டு! நல்லா தமிழ்ல தாத்தானு கூப்பிடுறா பேராண்டி" என்று கூறி அவர் சாம்மின் கன்னத்தில் இடித்தார்.
அதற்கு வேகமாக "ஓகே தாத்தா" என்று தன் கன்னத்தை தேய்த்தபடியே கூறினான் சாம்.
அப்போது ஏதோ ஞாபகம் வந்தவராய் பவ்யா கண்ணப்பரிடம் திரும்பி, "ஆமா இது யார் ன்னு நீங்க சொல்லலயே!" என்று சவிதாவை பார்த்து பவ்யா கேட்க
"இவ என் பொண்ணு நாச்சியா மகள்மா பேர்.." – கண்ணப்பர்.
"சவிதாராணி" – நிதா.
"என்னது! நாச்சியா பொண்ணா!" என்று பவ்யா வியக்க கண்ணப்பர் சாமிடம் திரும்பினார் .
"டேய் பேராண்டி, இவ உன் அத்தை பொண்ணுடா. உனக்கு முறைப் பொண்ணு. உனக்கு ஞாபகம் இருக்கா?" என்று கண்ணப்பர் கேட்டது தான் தாமதம் சாம் "ஓ! நோ!" என்று பயத்தில் கத்தினான். அதை கண்டு முறைத்தாள் சவிதா.
ஒருவழியாக குசலங்கள் விசாரித்து அனைவரும் வீட்டுக்குள் வர வீட்டின் ஹாலில் மாட்டியிருந்த போட்டாவை கண்டு நின்றார் பவ்யா. பவ்யாவை தொடர்ந்து தன் பார்வையை பதித்த நிதாவின் கண்களில் சோகம் தொற்றிக் கொண்டது .
அந்த புகைபடத்தில் வீரபாண்டி அமர்ந்து இருக்க அவருக்கு இரு பக்கங்களிலும் பவ்யா மற்றும் தரங்கிணி நின்று இருந்தனர். வீரபாண்டியின் காலில் அமர்ந்து இருந்தனர் சிறுவயது யவன் மற்றும் மனுநிதா.
 

HoneyGeethan

Active member
Vannangal Writer
Team
Messages
175
Reaction score
169
Points
43
யட்சகன் : 4
அனைவரின் வீட்டின் சுகம், துக்கங்களை தீர்த்த வீரபாண்டியால் தன் குடும்பத்தை காப்பாற்ற இயலாது போயிற்று. வீரபாண்டியும் அந்த புகைபடத்தை பார்த்தவாறு நிற்க, பவ்யா அந்த புகைபடத்தை பார்த்ததும் அதன் அருகில் சென்று அதை தொட்டு பார்த்தபடியே
"அப்பா! எப்படி இருந்த நம் குடும்பம் இப்படி ஆகிடுச்சே ப்பா!" என்று சொல்லி கண்ணீர் வடித்தார். அதை கேட்டு பவ்யாவின் அருகில் வந்த வீரபாண்டி அவளது தோளைத் தொட்டு தன் பக்கம் திருப்பினார்.
"நடந்து முடிந்ததை பேசி என்னாகப் போகுதுமா! போனவ திரும்பி வந்துடவா போகுறா?" – வீரபாண்டி.
"அப்பா! எங்க போனா ப்பா தரங்கிணி? அவ ஏன் இன்னும் நம்மளை பார்க்க வரலை?" – பவ்யா.
"தெரியலையே மா! அவ எங்க இருக்கா? எப்படி இருக்கா? இதுவரைக்கும் ஒன்றும் தெரியலையே! அவ உயிரோடு இருக்கனும்னு நான் கடவுளை வேண்டிக்கிட்டு இருக்கேன். ஆனால் வருஷங்கள் கூட கூட அந்த நம்பிக்கையும் குறைச்சுக்கிட்டே இருக்குமா." – வீரபாண்டி.
அதை கேட்டு பவ்யா மேலும் கண்ணீர் சிந்த அதை பார்த்த நிதா பவ்யா அழுவதை தாங்கிக் கொள்ள முடியாமல், "அம்மா! சித்தி சீக்கிரம் வந்துடுவாங்க. அழாதீங்கமா" என்று அவரை சமாதானப்படுத்தி அருகில் இருந்த ரூமிற்குள் அழைத்துச் சென்றாள் .
சாமும் நடப்பது என்னவென்று புரியாமல் நிதாவை பின்பற்றி ரூமிற்குள் சென்றான். வீரபாண்டியும் கலங்குவதை பொறுக்க முடியாத கண்ணப்பர் அவரை சமாதானப்படுத்த அவர் அருகில் சென்றார்
"அய்யா! தரங்கிணி பாப்பா சீக்கிரம் வந்துடுவாங்கய்யா! கவலைபடாதீங்க. நீங்க கவலைப்பட்டா பவ்யாவும் கவலைபடுது பாருங்க!" என்று அவர் சொல்ல, தன் கண்களை துடைத்துக் கொண்ட வீரபாண்டி அவரிடம் திரும்பினார்.
"ம்ம்ம் சந்தோசமா கலகலப்பா இருந்த குடும்பம் இப்படி ஆகிடுச்சு கண்ணா! யார் கண் திருஷ்டி பட்டதுனு தெரியலடா! அந்த திருச்செந்தூர் முருகனுக்கு ஏதும் குறை வச்சிருக்கோமானு தெரியலடா! அடுத்த மாதம் வரவிருக்கும் தைப்பூசத்துக்கு முருகனுக்கு சிறப்பா எதாவது செய்யணும்டா" என்று வீரபாண்டி சொல்ல அதற்கு கண்ணப்பர் சம்மதமாக தலையசைத்தார்.
"கண்ணா அடுத்த வாரம் வரப்போகும் ஊர்திருவிழாவை சிறப்பாக நடத்த ஏற்பாடு செஞ்சுடு. என் மகளும், பேத்தியும் கலந்துக்க போறாங்க. அதை கொண்டாடும் விதமா இந்த திருவிழா இருக்கணும்" என்று வீரபாண்டி சொல்ல
கண்ணப்பர் "அப்படியே செஞ்சுடலாம் அய்யா!" என்று சொல்லிவிட்டு அதற்கான ஏற்பாடுகளை கவனிக்கச் சென்றார்.
கண்ணப்பர் சென்றதும் புகைபடத்தைப் பார்த்தவாறு இருகில் இருந்த சாய்வு நாற்காலியில் அமர்ந்தார் வீரபாண்டி.
வீரபாண்டிக்கு இரு மகள்கள் பவ்யா மற்றும் தரங்கிணி. வீரபாண்டியின் மனைவி தரங்கிணி பிறந்த சில மாதங்களில் ஜன்னி கண்டு இறந்துவிட அதன்பின் வீரபாண்டி மறுமணம் செய்யாமல் தனியாக பவ்யா மற்றும் தரங்கிணியை வளர்த்தார்.
அந்த ஊரில் வீரபாண்டியின் செல்வாக்கை கண்டு பொறாமைப்படாமல் நல்ல நட்பு பாராட்டினார் வெங்கி. வெங்கியின் குணம் வீரபாண்டியையும் ஈர்க்க வீரபாண்டியும் நட்பு கொண்டார். பெரியவர்களின் நட்புணர்வு சிறியவர்களுக்கு வரவில்லை அந்தோ பரிதாபம்!
வீரபாண்டியரின் செல்வாக்கு தன் தந்தைக்கு கிட்டவில்லை என்ற ஏக்கம் காழ்புணர்ச்சியாக மாறி வைத்தியநாதனுக்கு அவர் மேல் பகையை விதைத்தது. ஆகையால் அவரை வெறுத்தார் வைத்தியநாதன்.
இருப்பினும் பவ்யாவை பார்த்ததும் பிடித்துப் போக தன் தந்தையிடம் சொன்னார் வைத்தி. வெங்கி வீரபாண்டியிடம் பவ்யாவை தன் மகனுக்கு மணம் செய்து வைக்க கேட்க வீரபாண்டியும் பவ்யாவை வைத்தியநாதனுக்கு திருமணம் செய்து வைத்தார். ஆயினும் வீரபாண்டிக்கு ஏதோ ஒரு நெருடல் இருந்து கொண்டே இருந்தது.
முதலில் அழகாக சென்ற அவர்களது திருமண வாழ்க்கை வைத்தியின் தம்பியால் இடையூறு ஏற்பட்டு இறுதியில் முறிந்து போனது. பவ்யாவை எண்ணி கலக்கம் கொண்ட வீரபாண்டியனுக்கு தரங்கிணி திடீரென்று காணாமல் போனது அவரது தலையில் இடியாக வந்து இறங்கியது.
தரங்கிணி, பவ்யாவின் தங்கை. இவ்வளவு காலமாக அவள் எங்கு சென்றாள் என்பது புதிராகவே இருந்தது. இப்படி கவலைப்பட்டுக் கொண்டிருந்த வீரபாண்டியின் நினைவுகள் இறுதியில் யவனிடம் வந்து நின்றது.
"யவன் எங்கடா இருக்க? நீ இல்லாமல் வீடு வீடா இல்லைடா? தரங்கிணி கூடவே சுத்துவியேடா இப்ப அவ இல்லைனு நீயும் போயிட்டீயா? எங்கடா இருக்க?" என்று வீரபாண்டி நடந்ததை நினைத்து கண்ணீர் வடித்து அழுதார்.
**
அந்த ஊரின் எல்லையில் வந்து நின்றது ஒரு கார் . அதில் இருந்து இறங்கினான் அவன். வெள்ளை நிற சட்டை, கருப்பு நிற பேண்ட் அணிந்து முகத்தில் கோபத்தோடு வெறி பிடித்தவன் போல் நின்றான் அவன். அவனைப் பார்த்ததும் அனைவரும் கண்டுகொள்ளாமல் போக அது அவனை மேலும் கோபப்படுத்தியது . அவன் காரில் இருந்து இறங்கியதும் அவனை பின்பற்றி இறங்கினான் அவனது நண்பன் சுகவனன்.
"நீ இவ்வளவு நாள் இந்த ஊரில் இல்லாததுனால பல மாற்றம் அடைச்சிருச்சுடா! முதல்லயாவது நம்ம மேல நல்ல மதிப்பு இருந்துச்சு! இப்ப அதுவும் இல்ல. எல்லாரும் அவரைத் தான் தூக்கி வச்சு கொண்டாடுறாங்க!" – சுகவனன்.
அவன் அப்படி சொன்னதும் தன் சட்டை பாக்கெட்டில் இருந்த சிகரெட்டை எடுத்து வாயில் வைத்த அந்த புதியவன் சிகரெட்டை பற்ற வைத்தபடியே, "இனி நான் வந்துட்டேன்ல டா! இனி பாரு! ஊரில் இருக்கும் எல்லாரும் இனி எப்படி சந்தோசமா இருக்குறாங்கனு பார்க்குறேன்டா!" என்று கூறியபடியே புகையை இழுத்து வெளியேவிட்டான் அவன் வைத்தியநாதனின் தம்பியான சோமநாதன்.
**
பிரசாத் அந்த பெட்டின் அருகில் செல்ல வேகமாக அவர் கைகளை பிடித்தது அந்த உருவம். அந்த பிடியில் தான் எவ்வளவு வேகம்! தன்னை காத்துக் கொள்ள துடிப்பவன் போல் அவன் அவர் கைகளை பற்ற" பிரசாத் பேசினார்
"நான் தான்டா!" என்று பிரசாத் சொன்னதும் அவரது கைகளை விட்டான் அவன். அவன் விட்டதும் அவனது அருகில் வந்து அமர்ந்த பிரசாத். அவன் முகத்தில் இருக்கும் கட்டுக்களை பிரித்தார். பிரித்தவர் "உனக்கான தவம் முடிஞ்சிருச்சு டா! நீ நினைச்சதை சாதிச்சுட்ட டா! நீ இப்ப கொஞ்சம் மாறி இருக்க! ஆனால் இது முழுமையா உனக்கு கிடைக்காது டா ! ஒவ்வொரு அமாவாசை இரவுகளையும் நீ கஷ்டப்பட்டு தாண்டித்தான் ஆகணும்! அதை சரியா நீ செய்யலைனா! இவ்வளவு நாள் நீ கஷ்டப்பட்டது வீணாகி போயிடும்! அதனால் கவனமா இரு!" என்று பிரசாத் சொல்ல அதற்கு அந்த உருவம் சம்மதமாக தலை அசைத்தது.
"நீ சகஜமாக எங்களை மாதிரி மாற முழுவதும் முடியாது, ஆனாலும் முயற்சி செய்!" என்று கூறிய் பிரசாத்.
"உனக்கான முதல் சோதனை ஆரம்பிச்சிருச்சுடா!" என்று கூறியபடியே பிரசாத் சன்னல் கதவினை திறக்க சூரிய ஒளி அவன் முகத்தில் வந்து மோதியது. சூரிய ஒளி அவன் முகத்தில் பட்டதும் கண்கள் கூசியது அவனுக்கு. சூரியனின் ஒளிக்கற்றைகள் அவனது உடம்பில் ஏதோ செய்ய திணறியபடியே கண் விழித்தான் அவன் யவன்.
யவனின் கண்கள் யாரையோ தேட உதடுகள் முயன்று அந்த பேரை முணுமுணுத்தது.
"டாலுமா! இதோ உன் யவன் அத்தானா நான் மாறிட்டு இருக்கேன்! விரைவில் உன்னை சந்திக்க வரேன்" என்று அவன் சொல்ல, தூக்கத்தில் இருந்து வீறிட்டு எழுந்தாள் மனுநிதா.
தூக்கத்தில் இருந்து கண்விழித்த நிதாவிற்கு பயத்தில் வேர்வைமுத்துக்கள் உதிர்த்தது. வேகமாக அருகில் திரும்பிப் பார்க்க பவ்யா நன்றாக தூங்கிக் கொண்டிருந்தார். அவரது தூக்கம் கலையாமல் இருக்க மெதுவாக எழுந்த நிதா வெளியில் வந்தாள். அங்கு பால்கனி மாதிரி அமைக்கப்பட்டிருக்க அதில் நின்று நிலவை நிதா பார்த்துக் கொண்டிருக்க அவளது நினைவுகள் பின்னோக்கி சென்றது.
இங்கு யவனும் தன் கைகளில் வைத்திருந்த புகைப்படத்தை பார்த்துக் கொண்டிருந்தான்.
அதில் தரங்கிணி, நிதா மற்றும் பவ்யா நின்று இருப்பதை பார்த்த யவனுக்கு தன் சிறுவயது ஞாபகங்கள் உலா வந்தன.
நிதா மற்றும் யவன் வாழ்க்கையை மாற்றிய நினைவுகள் அலையாக வர, அதில் பாவாடை தாவணி அணிந்து முகத்தில் குழந்தை தனம் மாறாமல் அழகு சிலையாக வந்து நின்றாள் தரங்கிணி.
 

HoneyGeethan

Active member
Vannangal Writer
Team
Messages
175
Reaction score
169
Points
43
யட்சகன் : 5
கொடைக்கானல் மலையில் திண்டுக்கல் மாவட்டத்தின் கீழ் வரும் ஒரு கிராமம். அந்த கிராமம் குறைந்த மக்கள் தொகையோடு காணப்பட்டது. அன்று அந்த கிராம தெருக்கள் மக்கள் யாருமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. அந்த கிராமத்தில் வாழும் மக்கள் அனைவரும் அந்த ஆலமரத்தை சூழ்ந்து நின்று கொண்டிருக்க அந்த ஆலமரத்தின் அடியில் தன் மீசையை முறுக்கியபடியே அமர்ந்து இருந்தார் வீரபாண்டி.
அவர் எதிரில் கைகளை கட்டியபடி ஒருவன் நின்று இருக்க அவனுக்கு எதிரில் ஒரு பெண் அழுது கொண்டிருந்தாள். அந்த பெண் அழுவதை பார்த்த வீரபாண்டியனுக்கு கோபம் தலைகேற.
"டேய் மருது! கொண்டு வாங்கடா அதை.." என்று அவர் கத்த வெள்ளை துணியால் மூடப்பட்ட தட்டை ஏந்திக் கொண்டு வந்தான் மருது.
வீரபாண்டி மருதுவை அழைத்ததும் அங்கு நின்றிருந்தவனின் தாய் வீரபாண்டியின் காலில் விழுந்து கதறினார். "அய்யா! வேண்டாங்கய்யா விட்டுங்கய்யா அவனை! இனி எந்த பெண்ணையும் திரும்பிக் கூட பார்க்க மாட்டான்யா! இந்த ஒரு தடவை மன்னிச்சிடுங்கய்யா!" என்று அந்த தாய் அழுது கரைய, அதை பார்த்த வீரபாண்டி மனம் சற்று இளகினாலும், அதை வெளிக்காட்டாமல் அசையாமல் கல்லாக அமர்ந்து இருந்தார்
அவர் அசையவில்லை என்று தெரிந்ததும் அந்த தாய் எழுந்து தன் கண்களை துடைத்துக் கொண்டு தன் வாயில் கை வைத்து தன் அழுகையை அடக்கிக் கொண்டார். அதனை பார்த்த வீரபாண்டி வாய் திறந்தார்.
"சரசு! இந்த கிராமத்து வழக்கப்படி பெண்ணை தெய்வத்துக்கு சமமாக மதிக்கணும்! நடத்தணும் அது இங்கே எழுதப்படாத சட்டம். இப்படியாக நாமெல்லாம் மதிக்கும் பெண்ணை தப்பான பார்வை பார்த்தாலே இங்கு தண்டனை உண்டு. ஆனால் உன் பையன் அந்த பெண்ணை தொடனும்ன்னு நினைச்சிருக்கான். இதை அப்படியேவிட்டா.. இதை மத்தவனும் பண்ணுவான். ஆகையால அவனுக்கு கொடுக்கப் போகும் தண்டணையைப் பார்த்து இனி எவனும் இந்த கிராமத்தில் தப்பு செய்ய பயப்படணும்" என்று கூறிவிட்டு அவர் எழ, மருது அவரின் அருகில் வந்தான்.
மருது கையில் இருந்த தட்டை வாங்கிய வீரபாண்டி அங்கு குற்றவாளியாக நின்றவன் கைகளில் கொடுத்தான். அதை வாங்கிக் கொண்டு குற்றம் சாற்றப்பட்டவன் எதிரில் இருந்த குடிசைக்கு சென்றான். சற்று நேரத்தில் வெளியே வந்தவனை பார்த்த ஊர்மக்கள் தங்களுக்குள் கிசுகிசுத்தனர்.
அவன் பச்சை நிற சட்டையும் பச்சை நிற கால் சட்டையும் அணிந்து இருக்க அவன் கைகள் சங்கிலியால் கட்டப்பட்டிருந்தது. மருது அவனை இழுத்துக் கொண்டு வர அவனை அந்த ஆலமரத்தின் கீழ் நிறுத்தினான் மருது.
"இப்படி பண்ணிட்டுயேடா!" என்று அவன் தாய் தலையில் அடித்து அழுதார் .
அதனை அடுத்து ஊர்மக்களிடம் திரும்பியவர், " இனி 48 நாட்கள் இவனுக்கு இங்கு தான் இந்த மரத்தடி தான் வசிப்பிடம்! இவனுக்கு பசிச்சா இந்த ஊர்ல இருக்கும் வீட்டில் தினமும் ஒரு வீடு என்ற கணக்கில் இந்த ஈயத்தட்டினை ஏந்திச் சென்று வாங்க வேண்டும்! குடிக்க தண்ணீர் வேண்டுமானால் ஊருக்கு வெளியில் இருக்கும் கிணற்றில் அவனாக போய் இறைத்து குடிக்க வேண்டும்! மற்ற நேரங்களில் நம்ம ஊர் கோவில், தெருக்களை சுத்தம் செய்யனும். இங்க இருக்கும் செடி அனைத்தயும் நட்டு தினமும் கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து ஊற்ற வேண்டும். இவனுக்கு எக்காரணம் கொண்டும் இந்த ஊர்மக்கள் உதவக்கூடாது! அப்படி அவர்கள் உதவினால் அவர்களுக்கும் இந்த நிலைதான்!" என்று வீரபாண்டி கூறி முடிக்க கூட்டத்தில் உள்ள மக்கள் அதை ஏற்று தலையசைத்தனர்.
குற்றவாளியாக நிற்க வைக்கப்பட்டிருந்த அவனை பார்த்து கண்ணீர் வடித்த அவன் தாய் அந்த இடத்தைவிட்டு அழுது கொண்டே சென்றார். வீரபாண்டியின் தீர்ப்பை தூரத்தில் நின்று பார்த்துக் கொண்டிருந்தான் 5 வயது சிறுவன். மக்கள் கலைந்து செல்லவும் வீரபாண்டியும் போக முயற்சிக்க அவர் எதிரில் வந்த சிறுவன் அழுது கொண்டே .
“அய்யா! இதே மாதிரி எங்கப்பாவிற்கும் தண்டனை கொடுத்து இருந்தா எங்கம்மாவை விட்டு எங்கப்பா போயிருக்க மாட்டார்! நானும் அனாதையா ஆகியிருக்க மாட்டேன்!" என்று அந்த சிறுவன் திக்கி திணறி மழலை மொழியில் கூற வீரபாண்டி திகைத்தார்.
அந்த சிறுவனை அருகில் அழைத்தவர், "யாரப்பா! நீ புதுசா இருக்க! எந்த ஊர் நீ!" - வீரபாண்டி.
அதற்கு அழுது கொண்டே பதில் சொன்னான் அந்த சிறுவன். "நான் வேற ஊர் அய்யா! என் அப்பா என் அம்மாவை விட்டுட்டு போயிட்டார். அம்மாவும் செத்து போயிட்டாங்க! சாப்பிட்டு ஐந்து நாளாச்சு பசிக்குதுயா" என்று அவன் சொல்ல வீரபாண்டிக்கு பாவமாக இருந்தது. வேகமாக அவனை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார் .
வீட்டிற்குச் சென்றவர், "அம்மா! தரங்கிணி! கொஞ்சம் சாப்பாடு எடுத்துட்டு வந்து இந்த புள்ளைக்கு போடுமா!" என்று அவர் கூற தாவணியில் தங்கத்தாரகையாக ஓடி வந்தாள் தரங்கிணி. அவர் பின்னே பவ்யா வர 1 வயது சிறுமியாக அவர் கைகளில் இருந்தாள் மனுநிதா.
"இதோ ப்பா!" என்று தரங்கிணி உள்ளே சென்று சாப்பாடு எடுக்கப் போக
பவ்யா அவரிடம் "யார்ப்பா இது?"
"தெரியலமா! யாரு எவருன்னு? இப்ப யாரும் இல்லாம அனாதையா இருக்கான் போல! அதான் இங்க கூட்டிட்டு வந்தேன்" – வீரபாண்டி.
"ஓ!" என்று கூறிய பவ்யா அவனை பாவமாக பார்த்து அவனிடம் திரும்பி "தம்பி உன் பேர் என்ன?" – பவ்யா
"தெரியலக்கா! எல்லாரும் அனாதை பயலே! நாயே! இப்படி தான் என்ன கூப்பிடுவாங்க" – யவன்.
அதை கேட்ட பவ்யாவிற்கு பாவமாக இருக்க "இங்கே உன்னை யாரும் அப்படிலாம் கூப்பிடமாட்டாங்க தம்பி! உனக்கு முதல பேர் வைக்கணும்"
"நீயே அவனுக்கு ஒரு பேர் வைம்மா" – வீரபாண்டி.
"ம்ம்ம்" சற்று நேரம் யோசித்த பவ்யா, "ம்ம்ம் கண்டுபிடிச்சுட்டேன் யவன்! இது தான் உன் பேர் எப்படி இருக்கு?" – பவ்யா
"என்னது எமனா? என்ன பேர் மா? "– வீரபாண்டி.
"அய்யோ அப்பா! அது எமன் இல்லை யவன்! அழகன் அப்பிடின்னு அர்த்தம். பாருங்க பையன் முகம் எவ்ளோ களையா இருக்குன்னு" – பவ்யா.
"என்ன எழவு பேரோ வாய்க்குள் நுழைய மாட்டிங்குது! நான் அவனை ராசானு கூப்பிட்டுக்குறேன்" – வீரபாண்டி .
"சரி அப்படியே கூப்பிடுங்க. ராஜா மாறிதான் இருக்கான்" - பவ்யா சிரித்தபடி கூறினார்.
இங்கு இவர்கள் பேசிக் கொண்டிருக்க அங்கு கையில் சாப்பாட்டோடு வந்தாள் தரங்கிணி. தரங்கிணி சாப்பாட்டை யவனிடம் கொடுக்க, அதை வாங்கிய யவன் வேகமாக அதை உண்டான். அதை பார்த்த அனைவருக்கும் பாவமாக இருந்தது. அவன் சாப்பிட்டு முடித்ததும் வீரபாண்டி பேச ஆரம்பித்தார்.
"ராசா! இனிமேல் நீ எங்க கூடவே இருக்கலாம்! இதோ உனக்கு இரண்டு அக்கா இருக்காங்க ! இதோ உன் கூட விளையாட மனு குட்டி இருக்கு! இனி பாப்பா, அக்கா எல்லாரையும் நீ பத்திரமா பார்த்துக்கணும் ராசா! நான் சொல்றது சரிதானா ய்யா... என்ன? எங்க கூட இருக்கியா?" என்று அவர் சொல்ல
அவர் சொன்ன எல்லாரையும் நீ தான் பார்த்துக்கணும் என்ற வாக்கியம் அந்த சிறு வயது சிறுவனான யவன் மனதில் ஆழமாக பதிந்துவிட்டது. அன்றில் இருந்து எல்லோரையும் கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்ள ஆரம்பித்தான் யவன்.
தரங்கிணி திருமண வயதில் இருந்தாள். ஆயினும் அவள் வெகுளியாக அப்பாவியாக இருந்தாள்.
பவ்யா வார இறுதியில் வீரபாண்டி வீட்டிற்கு வந்துவிடுவாள். குட்டி மனுவை யவனுக்கு பிடித்துவிட அவளை தூக்கிக் கொண்டே அழைந்தான். அன்று யவனும் நிதாவும் விளையாடிக் கொண்டிருக்க வேகமாக யவன் நிதாவை பயமுறுத்த பல்லி போன்ற பொம்மையை தூக்கி நிதா மேல் வீச நிதா பயத்தில் கத்தினாள்
"அம்மாச்சி! அம்மாச்சி!" என்று நிதா கத்த அதை கண்ட யவன் சிரித்தான்.
"ஏய் டோலு! எல்லாரும் அம்மா.. அம்மா ன்னு கத்துவாங்க! நீ என்ன அம்மாச்சி அம்மாச்சி ன்னு கத்துற!" என்று யவன் கேட்க
அங்கே வந்த பவ்யா சிரித்துக் கொண்டே பதில் சொன்னார் "அது வேற ஒண்ணுமில்லை யவா. நிதாவுக்கு சின்ன வயசில் இரண்டு வார்த்தை பிரிச்சு பேசத் தெரியாது. அம்மா பூச்சினு சொல்றதுக்கு பதிலா ஒரு எழுத்தை விட்டுவிட்டு அம்மாச்சி ன்னு சொல்றா! வேற ஒன்றுமில்லை" என்று பவ்யா கூற அதை பிடித்துக் கொண்ட யவன் அதன்பின் நிதாவிடம் அதே மாதிரியே பேச ஆரம்பித்தான். இருவருக்குமான பாஷையாக மாறியது அது.
இப்படியே யவனுடைய வாழ்க்கை பயணம் நன்றாக சென்றது. அவன் வருவதற்கு முன்பு வரை. அவன் சோமநாதன், வைத்தியநாதனின் தம்பி. அவன் அருகில் இருந்த கல்லுரியில் தங்கி படித்துக் கொண்டிருந்தான். ஊர் திருவிழாவை ஒட்டி லமி அவனை அழைக்க வேண்டா வெறுப்பாக வந்தான்.
அன்று கோவிலுக்கு செல்ல வேண்டி தரங்கிணி தயாராகி கொண்டிருக்க அவள் அறையின் உள்ளே வந்தான் யவன். யவன் உள்ளே வந்ததை பார்த்த தரங்கிணி
"வாடா! நெடுமரம் எங்கடா போயிருந்த! இவ்ளோ நேரம் ஆளை காணோம்!" – தரங்கிணி
"பாடம் படிச்சிட்டு இருந்தேன் க்கா!" என்று கூறியவன் அவள் அருகில் வந்து அருகில் இருந்த வளைகளை அவள் கையில் அடுக்கினான்.
அவன் வளையல்களை அடுக்கியதும் தன் கரங்கள் இரண்டையும் அவனது கண் முன் ஆட்டி காண்பித்த தரங்கிணி "நல்லா இருக்காடா" என்று கைகளை ஆட்டி காண்பிக்க யவன் அவளை சிரிப்போடு பார்த்துக் கொண்டிருந்தான்.
அப்போது வீரபாண்டி, "அம்மா! தரங்கிணி ரெடி ஆகிட்டியா?"
"ம்ம்ம் ரெடி ஆகிட்டேன் ப்பா" என்று கூறியபடியே தரங்கிணி அவர் அருகில் வர,
"வா ம்மா போகலாம்!" – வீரபாண்டி.
"நீங்க எங்க வர்றீங்க! அதான் என் தம்பி இருக்கான்ல அவன் என்னை பார்த்துக்குவான் ப்பா! நாங்களா போயிட்டு வந்துடுறோம்! நீங்க வயலுக்கு போங்க" – தரங்கிணி.
"சரிம்மா! பார்த்து போய்ட்டு வாங்க!" என்று கூறிவிட்டு அவர் சென்றுவிட
தரங்கிணி யவன் கையை பிடித்துக் கொண்டு கோவில் நோக்கிச் சென்றாள். தரங்கிணி தெருவில் செல்வதை தன் வீட்டின் மாடியில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தான் சோமநாதன்.
அவளைப் பார்த்ததும் அவன் கண்கள் பளபளக்க வேகமாக அவன் பின்னால் சென்றவன். கோவிலில் அவள் படிநிலையில் நின்று இருப்பதை பார்த்து அவள் பின்னால் யாருக்கும் தெரியாமல் சென்று அவளை பின்னால் இருந்து தள்ளினான்.
நீச்சல் தெரியாத தரங்கிணி நீரில் தத்தளிக்க அதை பார்த்த சோமநாதன்.' ம்ம்ம் நல்ல வாய்ப்பு கிடைச்சிருச்சு! நல்லா யூஸ் பண்ணிக்கடா சோமு' என்று நினைத்துக் கொண்டே அவளை காப்பாற்ற நீரில் குதிக்க ஆயத்தமாக அவனுக்கு முதல் நீரில் குதித்து இருந்தான் யவன்.
நீச்சல் தெரியாத யவன் தரங்கிணியை காப்பாற்ற தவிக்க இதை பார்த்த சிலர் வேகமாக நீரில் குதித்து இருவரையும் கரை சேர்த்தனர். நீண்ட போராட்டத்திற்கு பிறகு கண் விழித்தான் யவன்.
 

HoneyGeethan

Active member
Vannangal Writer
Team
Messages
175
Reaction score
169
Points
43
யட்சகன் : 6
யவன் கண்விழித்ததும் அவன் எதிரில் வந்து நின்றார் வீரபாண்டி. "அய்யா ராசா! கண் முழிச்சிட்டுயா? ஏன்யா இப்படி நீச்சல் தெரியாம குளத்துல குதிச்ச" – வீரபாண்டி.
"அக்கா விழுந்துட்டாங்க! அதனால் அவங்களை காப்பாத்த குதிச்சேப்பா" – யவன்.
"நீச்சல் தெரியாம இப்படி குதிச்சு உனக்கு எதாவது ஆகியிருந்தா நாங்க என்ன பண்றதுயா? அப்புறம் எங்களுக்கு துணையா யார் இருப்பா?" – வீரபாண்டி.
"இனிமேல் அப்படி செய்ய மாட்டேன்ப்பா" என்று யவன் கூற வீரபாண்டி அவன் தலையை தடவியபடியே அவனை குளத்தின் கரையின் அருகில் இருந்து எழுப்ப, அப்போது யவன் அருகில் பார்க்க தரங்கிணி பயத்தோடு அமர்ந்தபடியே நடுங்கிக் கொண்டு இருந்தாள்.
அவள் அருகில் சென்ற யவன், "அக்கா...!" என்று சொன்னது தான் தாமதம் யவனை அணைத்துக் கொண்டு நடுங்கினாள் தரங்கிணி.
"பயப்படாத க்கா! அதான் நான் இருக்கேன்ல நான் இருக்கும் வரை உனக்கு எதுவும் ஆக விடமாட்டேன் க்கா!" என்று யவன் அவளுக்கு தைரியம் சொல்ல அவள் மெல்ல மெல்ல பழைய நிலைக்கு திரும்பினாள்.
மூவரும் வீட்டிற்குச் செல்ல அங்கு பவ்யா அமர்ந்து இருந்தாள்.தரங்கிணியைப் பார்த்ததும் அவள் அருகில் வந்தவள் "என்னாச்சு ப்பா! தரங்கிணிக்கு ஏதோ ஆபத்துன்னு கேள்விப்பட்டேன்"
"ஒன்றும் இல்லை மா கால் தவறி தண்ணில விழுந்துட்டா மத்தபடி வேற ஒன்றுமில்லை" – வீரபாண்டி.
இப்படியாக அந்த நாள் பொழுது ஒரு வித இறுக்கத்தில் போக அன்று பவ்யா அங்கேயே தங்கிவிட்டார்.
சில நாட்கள் சென்றது.
வைத்தி வேலை விசயமாக லண்டன் செல்வதாக தீர்மாணிக்கப்பட அவர் போகும் முன் பவ்யாவை அவள் வீட்டில் விட்டு விட்டுச் சென்றார். மனுவை பார்த்துக் கொள்ளும் யவன் அவளிடம் கண்டிப்போடும், பாசத்தோடும், குறும்போடும் நடந்து கொண்டான்.
அன்று பவ்யா, மனு மற்றும் யவன் வெளியே செல்ல கிளம்ப மனு தன் பட்டு பாவாடையை கட்டத் தெரியாமல் அதை பிடித்துக் கொண்டே வந்து யவனிடம் வந்தாள்.
"டோலு! இதை கட்டிவிடு" என்று அவள் சொல்ல யவன் அவள் அருகில் வந்து அவளுக்கு கட்டிவிட்டபடியே "டாலிமா! என்ன அத்தான் ன்னு கூப்பிடு" என்று சொல்ல மனு "முடியாது!போ!" என்று மறுத்து ஓடினாள்.
இவனும் "ப்ளீஸ் மனுமா!" என்று சொல்லிக் கொண்டே அவளை துரத்திக் கொண்டு ஓட அப்போது வீரபாண்டி குளிப்பதற்காக சுடுதண்ணீர் காய வைத்து அதை எடுத்து வந்து கொண்டிருந்த வேலைகாரன் மருதுவை மனு இடித்துவிட்டு ஓட அது பின்னால் வந்த யவன் மீது கொட்டியது.
முதுகில் சுடுதண்ணீர் கொதிக்க கொதிக்க ஊற்றப்பட்ட யவன் "அம்மாஆஆஆ!" என்று அலறியது அந்த வீடு முழுவதும் எதிரொலித்தது. அதை கேட்ட அனைவரும் அங்கு கூட, வீரபாண்டி வண்டி பிடித்து அவனை ஹாஸ்பிட்டலுக்கு அழைத்துச் சென்றார். முதுகு முழுவதும் கொப்பளங்களாக இருக்க அவனுக்கு மருத்துவம் பார்க்க ஆரம்பித்தனர். யவன் இங்கு வலியில் கத்த பவ்யாவின் தோளில் சாய்ந்து அழுது கொண்டிருந்தாள் மனு.
முதுகில் ஏற்பட்ட காயத்தினால் சரியாக படுக்கக்கூட முடியாமல் யவன் படும் அவஸ்தையை பார்க்க முடியாத சிறு வயது மனு அவன் அருகில் அமர்ந்து அவனது நெற்றியில் விபூதியிட்டபடி முருகா சரணம்! என்று அவள் சொல்லி, அவன் முதுகின் அருகில் அமர்ந்த மனு, தன் வாய் கொண்டு அவன் காயத்தில் ஊத திரும்பிப் பார்த்தான் யவன். அவனது காயத்திற்கு அழுதபடி தன் சின்ன உதடுகளால் ஊதியதைப் புன்சிரிப்போடு பார்த்துக் கொண்டிருந்தவன் அவள் கண்களை துடைத்துவிட்டபடியே "எனக்கு ஒன்றும் இல்லை அழாத டாலிமா" என்றான்.
"என்னால தான உனக்கு இப்படி ஆச்சு யவன் அத்தான்" – நிதா.
"இல்லை இல்லை... அப்படிலாம் இல்லைடா!" – யவன்.
"இல்லை நீ பொய் சொல்ற நான் நம்ப மாட்டேன். ரொம்ப வலிக்குதா!" – நிதா.
"இல்லைமா" – யவன்.
"அப்ப உனக்கு என் மேல் கோபம் இல்லையா?" – நிதா.
"இல்லைமா! நீ தெரியாம தான தட்டிவிட்ட யாராவது வேணும்னு செய்வாங்களா?" – யவன்.
"ம்ம்ம் சாரி யவன் அத்தான்" என்று கூறிய நிதா தன் கை மறைவில் இருந்து ஒன்றை எடுத்து அவனிடம் நீட்டினாள்.
அதை பார்த்தவன் அவளை கேள்வியாக பார்க்க "நேற்று கடைக்கு போகும் போது தாத்தா எனக்கு இதை வாங்கி கொடுத்தார். இனி இது உனக்கு தான். இதை வாங்கிக்க அத்தான்" என்று மனு சொல்ல யவனும் அவள் கையில் இருந்த பொம்மை கடிகாரத்தை வாங்கினான்.
"இனி நாம திக் பிரண்ட்ஸ் ஓகே வா? நீ சொல்றபடி நான் கேட்குறேன்" என்று மனு சொல்ல சம்மதமாக தலையசைத்தான் யவன்.
இவர்கள் பேச்சினை சுவாரசியமாக பார்த்துக் கொண்டிருந்தனர் பெரியவர்கள்.
தரங்கிணி அன்று கோவிலில் ஏற்பட்ட அனுபவத்தினால வெளியில் செல்லவே பயந்தாள். தரங்கிணியின் பயத்தை பார்த்த பவ்யா, பயத்தை போக்க என்று அவளை கூட்டிக் கொண்டு சந்தைக்குச் சென்றாள்.
பவ்யா, தரங்கிணி, நிதா மற்றும் யவன் நால்வரும் செல்ல அங்கு ஒரு போட்டோ ஸ்டூடியோ இருக்க அங்கு சென்று போட்டோ எடுத்துக் கொண்டனர் நால்வரும். நால்வரையும் விதம் விதமாக போட்டோ எடுத்தவன் பவ்யாவிடம் ஒரு போட்டோவை நீட்டினான்.
"இது அன்று அய்யா வீட்டில் எடுத்ததுங்க" என்று அவன் கொடுக்க அதில் வீரபாண்டியுடன் தாங்கள் இருந்த புகைபடம் இருந்தது. அதை வாங்கிய பவ்யா, இன்று எடுத்த போட்டோவை வந்து வாங்கிக் கொள்வதாக சொல்லிவிட்டுச் சென்றார். வெளியில் வந்தவர்கள் வளையல், பொட்டு வாங்கிக் கொண்டிருக்க யவன் தூரத்தில் ஒரு பெண்ணிடம் அனைவரும் கை காட்டிக் கொண்டிருப்பதை பார்த்து அங்கு சென்றான்
அங்கு அனைவரும் கைகளில் பச்சை குத்திக் கொண்டிருக்க அதை பார்த்தவன் தன் கைகளை நீட்டினான். அதை பார்த்த அந்த பெண் "சின்ன பையனா இருக்க தம்பி ரொம்ப வலிக்கும். உன்னால தாங்க முடியாது" என்று கூற அதை கேட்ட யவன்"இல்லை நான் தாங்கிக்குவேன்" என்று அந்த பெண்ணிடம் கூறினான்.
"அடி யாத்தி உன்கிட்ட வம்பா போச்சே! ம்ம் சரி பேரை சொல்லு" என்று அவள் கேட்க அவன் டாலி என்று கூறினான். அவனுக்கு பச்சை குத்தும் போது வலித்தாலும் அதை பொறுத்துக் கொண்டான்.
அவன் பச்சை குத்தியதும் பவ்யாவும், தரங்கிணியும் அருகில் வரவும் சரியாக இருந்தது. அவனது கையை பார்த்த பவ்யா அவனை கன்னத்தில் அறைந்தார். "அறிவு இருக்கா உனக்கு. பார் எப்படி ரத்தம் கட்டிப் போய் இருக்கு. உடம்பு வேற சுட ஆரம்பிக்குது" என்று அவர் யவனை திட்ட அதை பார்த்த நிதா அழுதாள்.
"அத்தான அடிக்காதீங்க, ம்மா. சொல்லுங்க சித்தி..." - நிதா.
"அக்கா..." - தரங்கினி பவ்யாவின் கையைப் பிடித்தாள்.
"நீ சும்மா இருடி.. அவன கொஞ்சி கொஞ்சி தா கெடுத்து வச்சிருக்க" - பவ்யா.
"அம்மா அத்தான அடிச்ச.. நா அப்பாகிட்ட உன்ன சொல்லிக்குடுத்து அடிக்க சொல்லுவேன்" - நிதா.
"இவ ஒருத்தி சும்மா இருடி.. ரொம்ப தான்... உன் அத்தான நா ஒன்னும் சொல்லல போதுமா?" - பவ்யா.
"அப்பறம் ஏன் அத்தான திட்டுற" - நிதா.
"ஆமா க்கா... யவன திட்டாத" - தரங்கினி.
"அவன் கையப் பாரு. பச்சை குத்துற வயசா அவனுக்கு" - பவ்யா.
"வலிக்குதா யவன் அத்தான்" - நிதா.
"இல்ல டாலுமா... எனக்கு வலிக்கலக்கா" - யவன்.
"நீ என்னைக்கு தான் திருந்தப் போறீயோ? வா போய் மருந்து போடலாம்" - பவ்யா.
யவனை மருத்துவமணை அழைத்துச் சென்று அவனுக்கு காய்ச்சலுக்கும், கையில் காயத்திற்கும் மருந்திட்ட பிறகே வீட்டிற்கு கூட்டி வந்தார் பவ்யா. ஆயினும் அவன் கைகள் சரியாக நாள் பிடித்தது.
யவன் அருகில் வந்த நிதா அந்த எழுத்துக்களை தடவியபடியே "வலிக்குதா யவன் அத்தான்" என்று கேட்க 'ஆம்' என்று தலையசைத்தான் யவன். வேகமாக நிதா அதை தடவிவிட்டபடியே அந்த இடத்தை ஊதிவிட்டாள்.
வீரபாண்டியும் யவனை திட்ட தவறவில்லை. அனைவரும் அவர்கள் வேலையைப் பார்க்கச் செல்ல, நிதா மட்டும் தினமும் அவன் கைகளை வருடி அதை ஊதிவிட்டபடியே இருந்தாள்.
போட்டோ கடையில் இருந்து வாங்கிட்டு வந்த புகைபடம் வீட்டின் நடுவில் தொங்கவிடப்பட்டு திருஷ்டி சுற்றப்பட்டது. இப்படி அமைதியாக சந்தோஷமாக சென்ற அவர்கள் வாழ்வில் புயல் அடித்தது.
 

HoneyGeethan

Active member
Vannangal Writer
Team
Messages
175
Reaction score
169
Points
43
யட்சகன் : 7
வைத்தியநாதன் லண்டன் நோக்கிச் சென்றதும் அதுவரை வெங்கி மற்றும் லமி முன் அமைதியாக இருந்த சோமநாதன் தன் குள்ளநரி வேலையை ஆரம்பித்தான்.
சோமநாதன் படிப்பதாக சொல்லிக் கொண்டு கல்லூரிக்குச் செல்லாமல் தன் நண்பனுடன் சேர்ந்து ஊருக்கு சற்று தள்ளி இருந்த இடத்தில் கஞ்சா வியாபாரம் செய்து கொண்டிருந்தான். எங்கே தான் போலிசில் மாட்டிவிடுவோம் என்று அஞ்சி வைத்தியநாதனாக தன்னை காட்டிக் கொண்டான்.
இது தவிர பெண் விசயத்தில் மோசமான சோமநாதன் அந்த ஒதுக்குபுறமான வீட்டில் பல பெண்களை அழைத்து வந்து கூத்தடித்துக் கொண்டிருந்தான். இவனை பற்றிய விசயங்கள் வெளியே தெரியாமல் இருக்கும்படி பார்த்துக் கொண்டான். அப்படி அவன் விசயங்கள் யாருக்காவது தெரிந்தால் அவர்களை உருதெரியாமல் அழித்தான்.
இப்படியாக சென்று கொண்டிருந்த அவன் கண்களில் பட்டாள் தரங்கிணி. வைத்தியநாதன் – பவ்யா திருமணத்தின் போது அவளை பார்த்த சோமு அவள் மேல் ஆசை கொண்டு அவளிடம் பேசி அவளை கவர முயல அதற்கு தரங்கிணி இடம் கொடுக்கவில்லை.
இயல்பிலேயே பயந்த சுபாவமான தரங்கிணி ஆண்களை கண்டு பயந்து தள்ளி சென்றாள். வேறு வழியில்லாமல் தரங்கிணியை மடக்க நல்லவன் வேடம் புனைய யோசித்த சோம்நாதன்.
அதற்குத்தான் அன்று அவளை குளத்தில் தள்ளி விட்டான். சோமு அவளை காப்பாற்றுவதற்குள் யவன் குளத்தில் குதித்து கத்த ஆரம்பிக்க அந்த வேலையை செய்ய முடியவில்லை. அதன்பின் பல சந்தர்ப்பங்களை உருவாக்கி அவளை கவர எண்ணினாலும் தரங்கிணி வீட்டை விட்டு வெளியில் வந்தால் தானே. அவள் வரவே இல்லை.
இப்படியாக சோமநாத்திடம் தப்பித்துக் கொண்டிருந்த தரங்கிணியை திருவிழாவின் மூலமாக விதி அவனிடம் இழுத்து வந்தது .
*****
நான்கு, ஐந்து பேர் சேர்ந்து யவனை அடக்கிக் கொண்டு இருந்தனர். அதை பார்த்து தரங்கிணி, பவ்யா, மற்றும் நிதா சிரித்துக் கொண்டு இருந்தனர்.
அன்று யவனுக்கு மொட்டை அடித்துக் கொண்டு இருந்தனர். தன் தலையை யாரையும் தொட அனுமதிக்காத, விரும்பாத யவன் எல்லாரையும் தள்ளிவிட்டுக் கொண்டிருந்தான். அவனை பிடித்து மொட்டை அடிப்பதற்குள் அங்கிருந்த அனைவருக்கும் போதும் போதும் என்றாகிவிட்டது.
அவனை மொட்டை தலையில் பார்த்த நிதா விழுந்து விழுந்து சிரித்தாள். அவள் சிரிப்பதை பார்த்த யவன் கோபமாக அந்த இடத்தைவிட்டு அகன்றான்.
ஆயினும் அவன் பின்னால் சென்ற நிதா
"டண்டணக்கா குண்டணக்கா
குண்டனுக்கு இருக்கு தண்டணக்கா
டண்டணக்கா மண்டணக்கா
குண்டன் மண்டை இப்ப மொட்ட ணக்கா"
அதை கேட்ட யவன் கோபத்தோடு அவளிடம் திரும்பினான்.
அவள் சிரிப்பதை பார்த்தவன் வேகமாக அதை சொன்னான்.
"வாடி என் குள்ளக்கா
நீ ஆயிட்ட பூசணிக்கா
கீழே விழுந்த சிண்டுக்கா
உடைஞ்சு போச்சு உன் மண்டைக்கா
இனி என்கிட்ட வச்சுக்காத வம்பக்கா
அப்புறம் ஆயிடுவ பேரிக்கா"
என்று யவன் நிதாவை சொன்னதும் இருவரும் மணலில் கட்டி உருள பெரியவர்கள் சிறுவர்களிடம் விரைந்தனர்.
யவனின் மேல் அமர்ந்து அவன் தலைமுடியை பிடித்து ஆட்டிய நிதா "ஏன்டா நான் பேரிக்காயா டா"
"ஆமாடி ! நீ பேரிக்கா தான்" – யவன்.
"போடா குண்டா! உன்ன போய் அத்தான் கூப்பிட்டேன் பாரு போடா" – நிதா.
"நான் குண்டா! சரிதான் போடி பேரிக்கா!" – யவன்.
"நான் பேரிக்கானா! நீ குண்டா தான் டா" – நிதா.
இங்கு பவ்யா மற்றும் வீரபாண்டி இருவரையும் விலக்க முற்பட இங்கு தரங்கிணி யவனைக் குளிப்பாட்ட தண்ணீர் கொண்டு வர கோவிலில் உள்ள கிணற்றடிக்குச் சென்றாள். அங்கு அவள் மோந்து கொண்டிருக்க வேகமாக அவள் அருகில் சென்றான் சோம்நாத்.
அவள் திரும்பியதும் வேண்டுமென்றே அவள் அருகில் நிற்க திடீரென்று ஒரு ஆண்மகனை அருகில் பார்த்த தரங்கிணி தடுமாறினாள். வேகமாக அவளை பிடித்து நிறுத்திய சோம்நாத் "நான் உங்களை காதலிக்குறேன் சொல்லி பல நாள் ஆகிருச்சு! நீங்க இன்னும் என் கேள்விக்கு பதில் சொல்லலைங்க"
காதல் என்ற வார்த்தை கேட்டு விதிர்விதிர்த்துப் போன தரங்கிணி "வழி விடுங்க போகணும்" என்று சொல்ல
அதை கேட்ட சோம்நாத் அவளிடம் "நாளைக்கு உங்க பதிலுக்காக நான் ஊருக்கு வடக்கே கொஞ்ச தூரம் தள்ளி இருக்கும் அய்யணார் போவிலில் காத்துக்கிட்டு இருப்பேன்! நீங்க கண்டிப்பா நாளைக்கு அங்க வரணும்! உங்க பதிலை சொல்லணும். அப்படி சொல்லலைனா நான் என்னையே அழிச்சுக்குவேன்." என்று சோம்நாத் சொல்லிவிட்டுச் செல்ல இங்கு தரங்கிணி செல்லும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவன் இப்படி சொல்லிச் சென்றதில் இருந்து தரங்கிணிக்கு ஒன்றும் ஓடவில்லை. நிதாவும், யவனும் சண்டை போட்டு முடித்ததும் வீரபாண்டி இருவரையும் விலக்கிவிட்டு இருவரையும் பார்த்து "அய்யா ராசா! அது சின்ன புள்ளை அது தெரியாமா சொல்லிருச்சு! அதுக்கு போய் நீ சண்டை போடலாமாயா! நீ தான்யா அவளுக்கு சொல்லித் தரணும்!" – வீரபாண்டி.
அதை கேட்ட யவன் அமைதியாக அமர்ந்தான்.
"ம்ம்ம் நாங்க சொன்னா கேட்கல ப்பா நீங்க சொன்னா உடனே கேட்டுக்குறான்" – பவ்யா.
"ம்ம்ம் ஆமாம் ம்மா பய பாசக்காரன். அவன்கிட்ட அன்பா பேசி தான் பணிய வைக்க முடியும்" – வீரபாண்டி.
"ஓ!" என்று கூறிவிட்டு பவ்யா வேகமாக "அப்பா! தரங்கிணி எங்கே"
"இங்க தான்மா இருப்பா. போய் பார்" – வீரபாண்டி.
"தரங்கிணி! தரங்கிணி!" என்று பவ்யா அழைத்ததை கேட்டு வேகமாக பவ்யாவை நோக்கி வந்தாள் தரங்கிணி.
"எங்கடி போய்ட்ட..." – பவ்யா.
"அது வந்து... க்கா" – தரங்கிணி.
"தண்ணி இறைக்க போயிருந்தியா! சரி வா! தண்ணியை அதுல ஊற்று யவனை குளிக்க வைக்கணும்" என்று பவ்யா கூற தரங்கிணி பவ்யா சொன்னதை வேகமாக செய்தாள்.
"என்ன ஆச்சுடி உனக்கு? ஏன் ஒரு மாதிரி இருக்க?" – பவ்யா.
"அப்படி எல்லாம் இல்லை க்கா" – தரங்கிணி.
"இல்லை என்னவோ இருக்கு! சொல்லுடி.." என்று பவ்யா அவளை கேள்வி கேட்க.
"அம்மா பவ்யா! சாமி கும்பிட நேரம் ஆச்சு! சீக்கிரம் எல்லாத்தையும் ரெடி பண்ணு" என்று வீரபாண்டி கூற பவ்யா அங்கிருந்து சென்றார்.
அவர் சென்றதும் வேகமாக மூச்சுவிட்ட தரங்கிணி 'தப்பிச்சேன்' என்று கூறிவிட்டு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள்.
அதன்பின் அனைவரும் அந்த கோவிலில் சாமி கும்பிட யவனும் நிதாவும் முறைத்துக் கொண்டு நின்றனர். அப்போது நிதா அந்த கோவிலில் கட்டி வைத்த மணியை அடிக்க முயல அவளுக்கு எட்டவில்லை. அவள் எக்கி எக்கி அதை அடிக்க முயல அதை பார்த்த யவன் சிரித்துக் கொண்டே அவள் அருகில் சென்று அவளை தூக்கி அவளுக்கு மணி அடிக்க வைத்தான்.
மறுநாள் சோம்நாத் சொன்னதையே நினைத்தபடி தரங்கிணி பாலை காய்ச்சிக் கொண்டிருக்க அங்கு வந்த யவன் அவளை அழைத்தான்.
"அக்கா! அங்க பாரு. பால் பொங்குது" என்று அவன் அழைத்து உலுக்கியதும் தான் சுற்றுப்புறம் உரைத்தது.
வேகமாக அடுப்பை அணைத்தவள் தன் விரல்களால் அந்த பாத்திரத்தை தூக்க முயல யவன் அவளை தடுத்தான் "அக்கா! என்ன பண்ற பாத்திரம் சுடும். வெறும் கையால தொடாதே" என்று அவன் கூற தரங்கிணி திகைத்தாள்.
"என்னாச்சுக்கா உனக்கு! ஏன் இப்படிலாம் பண்ணிட்டு இருக்க?" – யவன்.
"அது ஒன்றும் இல்லைடா" – தரங்கிணி.
"ஏன் நேற்றுல இருந்து ஒரு மாதிரி இருக்க நீ?" – யவன்.
"அப்படி எல்லாம் இல்லைடா" – தரங்கிணி.
"இல்லை நீ பொய் சொல்ற. உனக்கு என்னவோ ஆச்சு" – யவன்.
"அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. போய் வேலையை பார்" என்று சொல்லிய தரங்கிணி அன்று இரவு முழுவதும் யோசித்துவிட்டு மறுநாள் விடியலுக்காக காத்திருந்தாள்.
விடிந்ததும் வேகமாக சோம்நாத் நேற்று வரச் சொன்ன ஊருக்கு வெளியே இருந்த கோவிலுக்குச் செல்ல, போகும் போது அவளை பிடித்துக் கொண்டான் யவன்.
"அக்கா எங்க போற தனியா?" – யவன்.
"கோவிலுக்கு போறேன் டா" – தரங்கிணி.
"இரு நானும் வரேன்" – யவன்.
"வேண்டாம் டா நீ இரு.. நான் போயிட்டு வந்துடுவேன்" – தரங்கிணி.
"முடியாதுஉனக்கு காவலுக்கு நான் வந்தே தீர்வேன்" என்று யவன் அடம்பிடிக்க வேறு வழியில்லாமல் தரங்கிணி அவனையும் அழைத்துச் சென்றாள்.
அங்கு சோமநாதன் அவளுக்காக காத்துக் கொண்டிருந்தான். அவனுக்கு தெரியும் தரங்கிணி பற்றி கண்டிப்பாக அவள் தன்னை தேடி வருவாள் என்று அவன் திட்டமிட்டதை போலவே தரங்கிணி அவனை தேடி வந்தாள். தன் எண்ணம் நிறைவேறப் போகின்றது என்ற சந்தோசத்தோடு அவன் தரங்கிணி அருகில் செல்ல அவன் பின்னால் யவன் வருவதை பார்த்து எரிச்சல் அடைந்தான் சோம்நாத்.
யவன் அருகில் இருப்பதால் அவளிடம் சாதாரணமாக பேசி அவன் தன் காதலை சொல்ல தரங்கிணியும் அவன் காதலை ஏற்றுக் கொண்டாள்.
வீட்டிற்கு வரும் வழியில் யவன் அவளை முறைத்தபடியே வந்தான். அதை பார்த்து சிரித்த தரங்கிணி "என்னடா ஆச்சு! ஏன் முறைக்கிற?"
"எதுக்கு இப்படி யாருக்கும் தெரியாமல் அந்த ஆளை போய் பாக்குற, அவர் உன் கிட்ட என்ன சொன்னார்?" – யவன்.
"அவர் என்னை கல்யாணம் பண்ணிக்க கேட்டார் டா" – தரங்கிணி.
"அவர் நம்ம வைத்தி மாமா தம்பி தான" - யவன்
"ஆமா டா" என்றாள் தரங்கினி வெட்கத்துடன்.
"உன்ன கல்யாணம் பண்ணனும்னா அய்யா கிட்ட கேட்க வேண்டியது தான. எதுக்கு இப்படி தனியா வரணும், உன் கிட்ட கேட்கனும்.. எனக்கு பிடிக்கல" – யவன்.
"அய்யா கல்யாணத்திற்கு சம்மதிக்க மாட்டாரோ ன்னு பயமாம்டா" – தரங்கிணி.
"இல்லை க்கா நீ தப்பு பண்ற. அய்யாக்கு தெரியாம எதுவும் பண்ணாதே. அந்த ஆளை பார்த்தா எனக்கு சரியா தெரியல?" – யவன்.
"போடா பெரிய மனுஷா" - தரங்கினி.
"அக்கா சொன்னா கேளு" - யவன்.
"நீ சின்ன பையன் உனக்கு எதுவும் தெரியாது பேசாம இரு" என்று தரங்கிணி அவனை அடக்கிவிட்டாள். இப்படியாக அவர்கள் சந்திப்பு தொடர்ந்தது.
"இருடா! அக்கா மாமா கிட்ட பேசிட்டு வந்துடுறேன்" – தரங்கிணி.
ஆனால் யவன் அவளை போகவிடாமல் தடுத்தான்."வேண்டாம் க்கா. அவர் பார்வை சரி இல்லை க்கா அவர்கிட்ட போகத க்கா. வா வீட்டுக்கு போகலாம். இது அய்யாவுக்கு தெரிஞ்சது பெரிய பிரச்சனை ஆகிடும் க்கா. வா போகலாம்" - யவன்.
"இல்லைடா அவர் என்னை காதலிக்கிறார். அவர் நேற்று நான் வரலை ன்னு என் மேல் கோபமா இருக்கார். அக்கா போய் சமாதானப்படுத்திட்டு வறேன். நீ இங்கேயே இரு" – தரங்கிணி
"அக்கா! அவர் எதுக்கு உன்னை திருட்டுத்தனமா பார்க்க வரனும். அய்யாக்கு தெரிந்தா அவ்ளோ தான். வா போகலாம்" என்று யவன் எவ்வளவோ எடுத்து சொல்லியும் அதை கேட்காமல் சென்றாள் தரங்கிணி.
இப்படியாக தொடர்ந்த அவர்களின் சந்திப்பு வீரபாண்டியின் காதுகளுக்குச் சென்றது. தரங்கிணி சோம்நாத்தை காதலிப்பதை அறிந்து கொண்ட வீரபாண்டி சோம்நாத்தை தனியாக பார்த்து பேச அவன் இருப்பிடம் சென்றார்.
அப்போது யவன் சாப்பிட்டு கொண்டிருக்க அருகில் இருந்த நிதாவும் சாப்பிட்டுக் கொண்டே புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தாள். அப்போது அவளது தலையில் ஒங்கிக் கொட்டினான் யவன்
"சாப்பிடும் போது படிக்காத டாலிமா" - யவன்.
"போ டோலு! நான் அப்படி தான் படிப்பேன்" – நிதா.
அப்படியே அவள் சாப்பிட ஆரம்பிக்க அவளது கையில் அடித்தான் யவன். "சாப்பிடும் போது முழு விரலையும் வாய்க்குள் விட்டுச் சாப்பிடாதனு உனக்கு எத்தனை தடவை சொல்றது"
"போ!" என்று கூறியவன் எழுத்து கூட்டி படித்தாள்.
'ஆத்யாவன அவமே அந்தூ அவனன்' என்று அவள் படிக்க யவன் விழுந்து விழுந்து சிரித்தான்'
"அது 'ஆதியானவன் அவனே அந்தமானவன்'" – யவன்.
"எனக்கு தெரியும் நீ ஒன்றும் சொல்ல தேவையில்லை டோலு?" – நிதா.
மேலும் 'அக்கம் நீயே அலிவு நீயே' என்று நிதா படிக்க, புத்தகத்தை எட்டிப் பார்த்து "அது ஆக்கமும் நீயே அழிவும் நீயே" என்று அவன் சரியாக படித்துக் காட்டினான்.
அப்போது வேகமாக வெளியே செல்ல முயன்ற வீரபாண்டியை பிடித்துக் கொண்டாள் நிதா.
"தாத்தா! இருங்க நானும் வறேன்" – நிதா.
"வேண்டாம்டா! தாத்தா முக்கியமாக ஒரு இடத்திற்கு போக வேண்டி இருக்கு. போயிட்டு வந்துடுறேன்" என்று கூறிவிட்டு அவர் செல்ல நிதா அழுது கொண்டே இருந்தாள்
அப்போது அவளது கைகளில் ஒன்றை திணித்தான் யவன். அது டாலரோடு பொறுத்தப்பட்ட வாட்ச். அது வீரபாண்டி தனக்கு கொடுத்தது. அந்த டாலரை நிதாவிடம் கொடுத்தான் யவன். அந்த டாலரை அவளிடம் கொடுத்தவன் அதை திறந்து பார்க்கச் சொல்ல அந்த டாலர் சத்தம் கொடுத்தபடியே திறந்தது. உள்ளே ஒரு பக்கம் நிதாவும் யவனும் நிற்கும் புகைப்படம் இருக்க மற்றொன்றில் கடிகாரம் ஓடிக் கொண்டிருந்தது. அதை பார்த்த நிதா தன் அழுகையை நிறுத்தி அதை வைத்து விளையாட ஆரம்பித்தாள்.
சோம்நாத்தை சந்திக்க சென்ற வீரபாண்டி அவன் தன் வீட்டில் இருந்து வெளியே செல்ல அவன் காரில் ஏறுவதற்குள் அவனை பிடிக்க முயல அவன் அருகில் செல்ல அவர் காதில் விழுந்தது அது.
"ஹ்ம்ம்ம் இதோ வந்துட்டு இருக்கேன்டா. பொண்ணு ரெடியா?" – சோம்நாத்.
அதை கேட்ட அவர் அதிர்ச்சியாக அவனை பின் தொடர்ந்தார். அவன் ஊருக்கு ஒதுக்குபுறத்தில் இருக்கும் அந்த இடம் நோக்கி செல்ல அங்கு ஒரு பெண் கட்டப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ந்த சோம்நாத் அந்த பெண்ணின் அருகில் செல்வதற்குள் அவள் ஓட ஆரம்பித்தாள். அவள் ஊரின் ஊள்ளே செல்லும் பாதையை அடைந்ததும் சோம்நாத் பதறினான்.
"டேய்! அவ என்னை பத்தி ஏதும் சொல்லிடாமடா" என்று அவன் சொல்ல அவனது ஆட்கள் அவளை பிடிப்பதற்குள் வீரபாண்டி பேசினார்.
"விடுங்கடா அவளை" – வீரபாண்டி.
வீரபாண்டி இங்கு வருவார் என்று எதிர்பார்க்காத சோம்நாத் திகைத்து போய் நிற்க அதற்குள் சத்தம் கேட்டு ஊர்மக்கள் கூடினர். பஞ்சாயத்து கூட்டப்பட்டு மரத்தின் அடியில் நிறுத்தப்பட்டான் சோம்நாத். வெங்கியும் – லமியும் அதிர்ச்சியாக நிற்க வீரபாண்டி பேச ஆரம்பித்தார்.
ஒரு பெண்ணை துரத்திய கெடுக்க முயன்ற குற்றத்திற்காக சோம்நாத்திற்கு தண்டனை வழங்கப்படுகிறது என்று அவர் கூற மருது வேகமாக அந்த தட்டோடு அவன் அருகில் வர லமி கத்தினார்.
"இல்லை.. நான் நம்பமாட்டேன். என் பையன் அப்படி கிடையாது. நீங்க தப்பு பண்ணுறீங்க" – லமி.
"நீ கொஞ்சம் அமைதியா இருமா. நான் பேசிக்குறேன்" என்று கூறிய வெங்கி வீரபாண்டியிடம் திரும்பி, "சம்பந்தி என் பையன் நீங்க நினைக்கிற மாதிரிலாம் கிடையாது. அவன் ரொம்ப அமைதியானவன். அவன் அப்பிடில்லாம் பண்றவன் கிடையாது. எங்கேயோ தப்பு நடந்திருக்கு"
"இல்ல! வெங்கி கண்ணால பார்த்த சாட்சி இருக்கு. அதனால தான் இங்க கூடி இருக்கோம்" – வீரபாண்டி.
"அப்படி யார் என் பையன் தப்பு பண்ணதை பார்த்தது" – லமி.
"நான் தான் அந்த சாட்சி" என்று அவர் சொல்ல வெங்கி மற்றும் லமி திகைத்துவிட்டனர்.
அதன்பின் லமி ஏதோ சொல்ல வர வெங்கி அவரை தடுத்தார். அதன்பின் தண்டனைகள் நிறைவேற்ற அவன் கையில் அந்த தட்டு கொடுக்கப்பட அதை ஏந்திச் சென்ற மருது சோம்நாத் முன் நிற்க அதற்கு "முடியாது" என்று மறுத்தான் சோம்நாத்.
"அப்போ வேற தண்டனை" என்று வீரபாண்டி மருதுவை பார்க்க, அவன் அருகில் உள்ள ஒரு வீட்ற்குள் சென்று சிறிது நேரம் கழித்து திரும்பினான்.
அவர் "ம்ம்ம் நடக்கட்டும்" என்று சொல்ல சோம்நாதை நோக்கி கையில் பழுக்க காய்ச்சிய கம்பி கொண்டு சென்ற மருது அவன் கை, கால்களில் சூடு வைக்க "ஆ" என்று அலறினான் சோம்நாத். அந்த ஒலி அந்த இடம் முழுவதும் எதிரொலித்தது..
அதை பார்த்த யவன் வருத்தத்தோடு தன் அக்காவை பார்க்க அவள் கண்களில் கண்ணீர் வழிந்தது.
 

HoneyGeethan

Active member
Vannangal Writer
Team
Messages
175
Reaction score
169
Points
43
யட்சகன் : 8
யவன் போன் சத்தம் கேட்டு தன் நினைவில் இருந்து கலைந்தான். போனை எடுத்துக் கொண்டு கீழே வந்த யவன் அங்கு பூங்குன்றன் புகைபடத்தை பார்த்து கண் கலங்கி நின்றான் புகைபடத்தில் மாலைக்குள் சிரித்தார் பூங்குன்றன்.
அன்று தூக்கம் வராமல் பால்கனியில் நின்று கொண்டிருந்த நிதாகண்களில் தூரத்தில் ஒருவர் காய்ந்த மரச் சருகுகளை எரித்துக் கொண்டிருந்தது தெரிந்தது. அதை பார்த்ததும் நிதாவிற்கு யட்சனின் முதுகில் தான் ஏற்படுத்திய தழும்பு நினைவிற்கு வந்தது. அதனோடு தொடர்புடைய எல்லாம் விசயங்களும் ஞாபகம் வந்தது.
முதுகில் ஏற்பட்ட காயத்தினால் யவன் படும் அவஸ்தையை பார்க்க முடியாத சிறு வயது மனு அவன் அருகில் அமர்ந்து அவனது நெற்றியில் விபூதியிட்டபடி முருகா சரணம் என்று அவள் சொல்லியது, அவனது காயத்திற்கு தன் சின்ன உதடுகளால் ஊதியது என்று அனைத்தையும் புன்சிரிப்போடு நினைத்துக் கொண்டிருந்தாள்.
அதை நினைத்துப்பார்த்துக் கொண்டிருந்த மனுவின் அருகில் வந்து நின்றான் சாம். "என்ன பேப்ஸ்! இந்நேரத்தில் இங்க எதுக்கு நின்னுட்டு இருக்க! உன் ராட்சஸன் ஞாபகமா"
"இல்லை சாம் என் டோலு ஞாபகம்." – மனு.
"என்னது டோலுவா? அது யாருமா? எனக்கு தெரியாமா!" – சாம்.
"என் யவன் அத்தான்! கீழே போட்டாவில் பார்த்தாலே அவர்தான் என் யவன் அத்தான்" – மனு.
"ஓ! ஆமா இப்ப அவர் எங்க இருக்கார்? நீ சொல்லு பேப்ஸ் எங்க இருந்தாலும் கூட்டிட்டு வரேன்" – சாம்.
"உன்னால முடியாது சாம்" – மனு.
"ஏன்? அப்படி எங்க இருக்கார்? கூட்டிட்டு வர முடியாத இடம் எதுமா அது?" – சாம்.
அதற்கு மனு மேலே கைக்காட்ட சாம் புரியாமல் பார்த்தான்.
"நீ என்ன சொல்ற பேப்ஸ்?" – சாம்.
"அவர் செத்து போயிட்டார்" – மனு .
"வாட்! யூ மீன் .... நீ அவரையா மீன் பண்ற" – சாம்.
"ஆமா! சாம் யட்சன் தான் யவன்! யவன் தான் யட்சன்" – மனு.
"வாட்! இது எப்படி சாத்தியம்! எனக்கு குழப்பமா இருக்கு பேப்ஸ்" – சாம்.
"எனக்கும் தான் சாம்! ஆனா இதுக்கெல்லாம் பதில் சொல்லாமலே அவர் போயிட்டார்" – மனு.
"அப்ப தாத்தா கிட்ட சொல்ல வேண்டிதான பேப்ஸ் அவர் உயிரோடு இல்லைனு? ஏன் மறைக்கிற?" – சாம்.
"வேண்டாம் சாம்! அவர் காணாமப் போனதாகவே இருக்கட்டும்" என்று கூறிவிட்டு மனு உள்ளே சென்று விட சாம் அவளது நிலையைக் கண்டு வருத்ததோடு நின்றான்.
அப்போது வீரபாண்டியின் வீட்டின் பின்பக்கம் இருக்கும் கெஸ்ட் கவுஸ் திண்ணையில் சவிதா படுத்துக் கிடந்தாள். அதை பால்கனியில் இருந்து பார்த்த சாம் வேகமாக அவளது அருகில் விரைய சத்தம் கேட்டு திரும்பி பார்த்த சவிதா சாமை கண்டதும் சட்டென எழுந்து நின்றாள். சாம் அருகில் வர பின்னால் சென்றாள் சவிதா. அதை கண்ட சாம் பொங்கிவிட்டான்.
"ஏய்! இப்ப நான் என்ன பண்ண போறேன்னு இப்படி பின்னாடி போற நீ! ஓ ரேப் பண்ணப் போறேன்னு பயப்படுறீயா? அது எல்லாம் செய்ற அளவுக்கு ஓர்த்தான பீஸ் இல்லை நீ!" என்று சாம் கூற அவனை முறைத்தாள் சவிதா.
"என் பக்கத்தில் வராமல் தள்ளி நின்று பேசுங்க" – சவிதா.
"ஏன்? நான் இவ்வளவு சொல்லியும் இன்னும் என்ன இப்படி பண்ணிட்டு இருக்க! தாத்தா உனக்குன்னு உள்ளே ரூம் கொடுத்திருக்கார்ல அப்புறம் ஏன் இப்படி வெளியே கிடந்து கஷ்டப்படுற" என்று சொல்லியபடியே சாம் அருகில் வர சவிதாவின் பொறுமை காற்றோடு போயிற்று
"நான் வீட்டுக்கு தூரம் உள்ளே வரக்கூடாது" – சவிதா
"என்னது தூரமா! அதோ இருக்கு வீடு! தூரம்னு பொய்யா சொல்ற! நீ வா முதல உள்ளே போகலாம்"- சாம்.
அதை கேட்டு தலையில் அடித்துக் கொண்ட சவிதா "அய்யோ! நான் தலைக்குளிச்சிருக்கேன்! வரக்கூடாது"
"என்னது தலைக்கு குளிச்சிருக்கியா? நான் கூடத்தான் தலைக்கு குளிச்சிருக்கேன். அப்ப நானும் வீட்டுக்குள்ள போகக் கூடாதா! அப்ப சரி நானும் உன் கூட இங்கயே தங்கிக்கிறேன்" என்று சாம் சொல்ல
சாமின் பேச்சுகளை பொறுக்க முடியாத சவிதா "யோவ்! நான் பொண்ணாகிட்டேன்டா.. என்னை புரிஞ்சிக்க"
"ஏன் இத்தனை நாள் ஆம்பிளையாகவா இருந்த! இப்ப பொண்ணாகுறதுக்கு" என்று சாம் கூற சவிதா அவனிடம் என்ன சொல்வதென்று தெரியாமல் விழித்தாள்.
அப்போது இவர்கள் பேச்சு சத்தம் கேட்டு வெளியில் வந்த கண்ணப்பர்.
சவிதா படும் பாட்டை பார்த்து சிரித்துக் கொண்டே "அடே! பேராண்டி! இது பொண்ணுக சமாச்சாரம் உனக்கு புரியாது! வா என் கூட" என்று அவர் சொல்ல அப்போது தான் சாமிற்கு உரைத்தது. தன் தலையில் தானே அடித்துக் கொண்டவன் சிரித்தபடியே அவருடன் உள்ளே செல்ல இங்கு சவிதா அவஸ்தையில் நெளிந்தாள்.
*****
தன் முன்னால் வைக்கப்பட்ட உணவையும் பிரசாத்தையும் மாறி மாறி பார்த்தான் யவன். அவனது மனதில் ஓடிக் கொண்டிருப்பதை அவன் பார்வையிலே புரிந்து கொண்ட பிரசாத் அவன் தோள்களை தட்டிக் கொடுத்தபடியே பேசத் தொடங்கினார்.
"நீ இது மாதிரி உணவு சாப்பிட பழகித்தான் ஆகணும் யவன். நீ என்னதான் மனிதனா மாற முயற்சி செய்தாலும் உனக்குள்ள ரத்தங்களை மாற்றி புது ரத்தமாக மாற்றி பல வழிகள் செய்தாலும் உன்னால முழுமனிதனா ஆக முடியாது யவன் . ஆனா நீ ராட்சஸனா மாறாம மனிதனாக வாழும்படி சில யுத்திகள் செய்து நாம் அந்த மிருகத்தனத்தை கன்ட்ரோல் செய்யலாம். அது உனக்கு கஷ்டம்னாலும் நீ கொஞ்சம் கொஞ்சமாக முயற்சி செய்யதான் வேணும் யவன்! அதுமட்டுமல்ல இந்த மாதிரி உணவுகள் உன் உடம்பில் பல மாறுதல்களை உண்டாக்கினாலும் அதை நீ சமாளித்து சாப்பிட்டுத்தான் ஆகணும்" - பிரசாத்.
அவர் அப்படி கூறியதும் அவரையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தான் யவன். அதன்பின் தன் தொண்டையை செறுமியபடியே பேசத் தொடங்கினான்.
"ஏன் எனக்காக இதை எல்லாம் செய்றீங்க மிஸ்டர் பிரசாத்?" – யவன்.
"ம்ம்ம் நன்றிக்கடன்னு வச்சுக்க யவன்! நான் தெரிந்தோ தெரியாமலோ பெரிய தப்பு பண்ணி அது உன் வாழ்க்கையையே கேள்விக் குறியா ஆக்கிடுச்சு! அதை நான் தானே சரி செய்ய வேண்டும். அதைத்தான் நான் இப்ப செய்றேன் யவன். தட்ஸ் ஆல். ரொம்ப எதையும் யோசிக்காத மை சன்" – பிரசாத்.
"சாரி! இது தெரியாமா உங்களை நான் ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்" – யவன்.
"இட்ஸ் ஓகே! மை சன்! நான் தெரியாம செய்த பிழையால நீ என் மகனாகி பல விளைவுகளை சந்திச்சுட்ட. பொய்யானாலும் நீ என் மகன்னு நினைச்சு தான் இந்த வேலையேல்லாம் செய்றேன். வினய் தான் என் பேச்ச கேட்காம என்னைவிட்டு போயிட்டான். உன்னையும் என்னால விடமுடியாது மை சன்" என்று கூறிய பிரசாத் தன்னை தேற்றிக் கொண்டு யவனிடம் திரும்பினார்.
"எப்ப இந்தியா போற?" – பிரசாத்.
பிரசாத் அப்படி கேட்டதை தொடர்ந்து யவன் முகத்தில் கோபம் தெறித்தது. "சீக்கிரம் போகணும் டேட்! அவனை இன்னும் நான் விட்டு வச்சிருக்கிறது எனக்கு என் மேலயே கோபம் வருது" என்று யவன் பழிவெறியோடு கூற
பிரசாத் அவனிடம் வந்தார்.
"எதையும் யோசிச்சு செய்ப்பா" என்று கூறிவிட்டு பிரசாத் வெளியேற யவன் ஒரு முடிவோடு இந்தியா செல்ல திட்டமிட்டான்.
யவனின் ரூமை விட்டு வெளியே வந்த பிரசாத் போனை எடுத்து மைக்கேல்க்கு அழைத்தார்.
மைக்கேல் நீ சொன்ன மாதிரி யவனை மனிதனாக்க மாற்ற முயற்சி ஆரம்பிச்சாச்சு! 3 மாதமா அவனும் எல்லாத்தையும் கரெக்டா ஃபாலோ பண்ணறான். வேற என்ன செய்யணும்?" – பிரசாத்.
"இனி தான் ரொம்ப கவனமா இருக்கணும் பிரசாத்! அவனை நாம மனிதனா உருவக படுத்தினாலும் அவன் மனிதன் இல்ல. அவனுக்குள்ள இருக்குற ராட்சஷன் வெளியே வரவே கூடாது. அவன் வெளியே வந்தா அப்புறம் அவனுக்குள்ள மனிதனுகுள்ள வீரியம் குறைஞ்சு. ராட்சஷனுக்கு இருக்குற வீரியம் அதிகமா மாறிடும்" – மைக்கேல்.
"அவனுக்குள்ள இருக்குற ராட்சஷன் எப்படி வெளிய வராம பார்த்துக்கறது" – பிரசாத்.
"அவன் கோபப்படக்கூடாது பிரசாத்! முக்கியமாக அவன் அமாவாசை, பெளர்ணமி இரவுகளில் வெளியே வரக் கூடாது" – மைக்கேல்.
மைக்கேல் அப்படி சொன்னதும் பிரசாத் யோசனையாக போனை வைத்தார்.
 

HoneyGeethan

Active member
Vannangal Writer
Team
Messages
175
Reaction score
169
Points
43
யட்சகன் : 9
வீட்டில் அமர்ந்து இருந்த பவ்யா நிதா சோகமாக அமர்ந்து இருப்பதை பார்த்து அவள் அருகில் வந்தார்.
"டாலுமா! எவ்வளவு நேரம் தான் இப்படி வீட்டிலேயே அடஞ்சி கிடப்ப.. வா! நாம வெளியே போயிட்டு வரலாம்" – பவ்யா.
"இல்லம்மா நான் வரல.. நீங்க போயிட்டு வாங்க" – நிதா.
"தனியா போறதுக்கு பயந்து தான் உன்னை கூப்பிட்டேன். நீ வரலைனா நான் எப்படி போறது?" – பவ்யா.
"என்னது பயமா உங்களுக்கா? ஜோக் பண்ணாதீங்க ம்மா? அந்த தடியன கூட்டிட்டு போங்க. உங்களை நல்லபடியா கூட்டிட்டு போய் கொண்டு வந்துவிடுவான்" – நிதா.
"யார் அவனா? அவன கூட்டிட்டு போனா ஒரு பொண்ணை பார்த்தா பாதியிலேயே என்னை கழட்டிவிட்டு போயிடுவான்! அவனலாம் நம்பி எங்கையும் போக முடியாது" – பவ்யா.
"அத்தை இதெல்லாம் ஓவர்! நான் எப்ப அப்படிலாம் செஞ்சேன். பொய் சொன்னாலும் பொருந்த சொல்லனும்" – சாம்.
சாம் அப்படி கூறியதும் அவனை பார்த்து பவ்யா கண் ஜாடை செய்ய அதை புரிந்து கொள்ள முடியாத சாம்
"என்ன சொல்றீங்க அத்தை? எனக்கு ஒன்னும் புரியலை. எதுவா இருந்தாலும் நேரா சொல்லுங்க.. நான் சார்ப் வேகமாக புரிஞ்சிக்குவேன்" – சாம்
அதை கேட்டு பவ்யா தலையில் அடித்துக் கொள்ள, நிதா சாம்மிடம் சிரித்துக் கொண்டே "அட லூசு சாம்! அம்மா என் மூட ஆஃப சேஞ்ச் பண்ண என்னை வெளியில் கூப்பிட்டாங்க. நான் வர மாட்டேன்னு சொல்லி உன்னை கூட்டிட்டு போகச் சொன்னேன். அம்மா என்னை வெளியில் கிளப்ப உன்னை வராதன்னு சைகை செஞ்சா நீ.." என்று கூறி சிரித்தாள்.
"சாம் அசிங்கப்பட்டியே டா" – என்று சாம் சொல்ல
பவ்யா அவன் தலையில் ஒரு கொட்டு கொட்டிவிட்டு "தத்திடா நீ! இதுல நீ சார்ப்பா! உன்னை எல்லாம் வச்சு ஒரு கொலை கூட பண்ண முடியாதுடா“ என்றார்.
"என்னது கொலையா! என்னை விட்டுறுங்க! அத்தை" என்று சாம் அலற
நிதா சிரித்துக் கொண்டே பவ்யாவோடு வெளியே செல்ல சம்மதிக்க, இருவரும் கிளம்பி செல்வதை ஒரு சிரிப்போடு பார்த்துக் கொண்டிருந்தான் சாம்.
பவ்யாவும் , நிதாவும் வெளியே சென்றவுடன் சாம் ஹாலில் இருந்து பேப்பர் படித்துக் கொண்டிருக்க அவன் மட்டும் வீட்டில் இருப்பது போர் அடித்தது. ஆகையால் அவன் என்ன செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்க கண்ணப்பர் அவன் அருகில் வந்து அமர்ந்தார்.
"என்னடா பேராண்டி! நீ மட்டும் தனியா உட்கார்ந்து பேப்பரை படிச்சிட்டு இருக்க பவ்யாவும் நிதாவும் எங்கே?" – கண்ணப்பர்.
"அவங்க வெளியில் கோவிலுக்கு போயிருக்காங்க தாத்தா. எனக்கும் போர் அடிக்குது. அந்த கோவில் எங்க இருக்குனு சொல்லுங்க நானும் போய்ட்டு வர்றேன்" – சாம்.
"அதுவா பேராண்டி! வலக்கை பக்கமா ஒரு 100 அடி போனா ஒரு சாவடி வரும். அதுல இருந்து இடக்கைப் பக்கம் ஒரு 10 அடி, அடுத்து வலதுகை பக்கமா திரும்புனா ஒரு மசூதி வரும். அங்க இருந்து அப்படியே நேரா போனா..." என்று அவர் சொல்லிக் கொண்டே போக, சாம் அவரை நிறுத்தினான்.
"ஸ்டாப்! வழி கேட்டா! ஊர்ல இருக்குற சந்து, பொந்தலாம் சொல்வீங்க போல. நானே கேட்டு போய்கிறேன். நீங்க அந்த கோவில் பேர மட்டும் சொல்லுங்க. இருக்கவே இருக்கு கூகுல் மேப்" – சாம்.
அவர்கள் பேசியதைக் கேட்ட படி வீட்டிற்குள் வந்த வீரபாண்டி "என்ன மேப்பா? எது டோரா பூஜ்ஜிய கூட்டிட்டு போகுமே அந்த மேப்பா. பார்த்து சூதானமா டோரா கூட போ அப்புறம் குள்ளநரி வந்து திருடிட்டு போயிடும்." என்று சொல்லிச் சிரித்தபடியே அங்கு இருந்த சாய்வு நாற்காலியில் அமர்ந்தார்.
"கண்ணய்யா! ஊர் கோவில்க்கு வந்த நன்கொடை நோட்ட எடுத்துட்டு வா. கணக்கு பாக்கனும்" என்று அவர் சொல்ல கண்ணப்பர் உள்ளே விரைந்தார் .
இங்கு சாம் அவர் சொன்ன பதிலில் திகைத்து நின்றான்.
"என்னது டோரா மேப்பும் கூகுல் மேப்பும் ஒன்னா? அடேய் கூகுல் ஆண்டவா! உனக்கு வந்த சோதனைய பார்த்தியா? ம்ம்ம் பெருசு என்னை எப்படி கிண்டல் பண்ணுதுன்னு பார்! ம்ம்ம் உன்னை வந்து வச்சுக்குறேன் தாத்தா" என்று சொல்லிக் கொண்டே அவன் அந்த கோவிலை தேடிச் சென்றான்.
மேப்பை அவன் ஆன் செய்ய போன் ஆப் ஆனது. அதை பார்த்து எரிச்சலுற்றவன் சார்ஜ் போடாத தன் முட்டாள்தனத்தை நொந்தபடி எதிரில் வருவரிடம் வழி கேட்க அவரும் கண்ணப்பர் சொல்லியபடியே சொல்லிச் சென்றார்.
அதை கேட்ட சாம் "இந்த ஊரில் எவனும் ஈசியா வழி சொல்ல மாட்டான் போல” என்று தனக்குள் சொல்லியபடியே சென்ற சாம் காதுகளில் ஒரு பொண்ணின் சிரிப்பு சத்தம் கேட்க அங்கு தூரத்தில் சவிதா போய் கொண்டு இருந்தாள்.
அவளை பார்த்தவன் 'அட நம்ம பார்ட்டி ம்ம்ம்... இவ கிட்ட கேட்டு அப்படியே போவிலுக்கு போக வேண்டியது தான்' என்று அவள் பின்னால் சென்றவன் சற்று நேரத்தில் அவள் காணாமல் போனதை அடுத்து சுற்றி முற்றி பார்த்தான்.
'எங்க அவ? இங்க தான இருந்தா? அதுக்குள்ள எங்க போயிட்டா?' என்று தேடியவன் சத்தம் கேட்க நிமிர்ந்து பார்த்தான். நிமிர்ந்து பார்த்தவன் வாயை பிளந்து கொண்டு நின்றான். அங்கு சவிதா மரத்தில் ஏறி மாம்பழம் பறித்துக் கொண்டிருந்தாள். அதை பார்த்தவன் அவளிடம் கத்தினான்.
"ஏய்! அங்க என்ன பண்ற?" – சாம்.
சத்தம் கேட்டு கீழே பார்த்த நிதா சாம்மை பார்த்ததும் 'ம்ம்ம் நீயா?' என்று நினைத்தவள் அவனிடம் "ம்ம்ம் வரவு செலவு கணக்கு பாக்குறேன்" என்றாள்.
"ம்ம்ம் என்ன நக்கலா?" – சாம்.
"பின்ன நீ கேட்ட புத்திசாலிதனமான கேள்விக்கு இப்படித்தான் பதில் சொல்வாங்க! மரத்தில் ஏறி என்ன பண்ணுவாங்க?" – சவிதா.
"நீ எதுக்கு இப்படி திருட்டுதனமா ஏறி பறிச்சிட்டு இருக்க? கேட்டா கொடுக்க போறாங்க?" – சாம்.
"திருட்டு மாங்காய் தான் ருசிக்கும். உனக்கு எங்க தெரிய போகுது. காஞ்சு போன ரொட்டி சாப்பிடுறவன். நீ போ அந்த பக்கம். தோப்பை காவல்காக்குறவன் பார்த்தா அவ்வளவு தான்" – சவிதா.
"ஓ! அப்படியா! ரொம்ப நல்லதா போச்சு. இருடி உன்னை மாட்டி விடுறேன்" என்று கூறிய சாம் கத்தி காவல்காரனை கூப்பிட சவிதா வேகமாக அங்கிருந்து குதித்தாள்.
"என்ன என்னை மாட்டிவிடப் பாக்குறீயா?" – சவிதா.
"ஆமாம்டி?" – சாம்.
"எங்க பார்க்கலாம் யார் யாரை மாட்டிவிடுறாங்கன்னு" என்று சவிதா சொல்லிக் கொண்டி இருக்கும் போதே அந்த தோப்பின் காவல்காரன் வந்துவிட்டான்.
"யார்டா! அது தோப்புல மாங்காயை பறிக்குறது" – காவல்காரன்.
காவல்காரன் வருவதை பார்த்துதான் தாமதம் வேகமாக தன் கையில் இருந்த மாம்பழங்களை சாமின் கையில் வைத்து "இவர் தான்! நான் இல்லை" என்று சவிதா கூற, கோபமாக அவளை பார்க்க அவள் 'சமாளிடா' என்பது போல் அவனை எதிர்பார்வை பார்த்தாள்.
காவல்காரன் அருகில் வந்து சாமை திட்டத்தொடங்க சவிதா அவரிடம் திரும்பினாள்.
"வேணாயா? ஊருக்கு புதுசு. விவரம் தெரியாமா தப்பு பண்ணிட்டார். உங்க தோப்பு மாம்பழம் ருசி அப்படி. அதுக்காக கை, கால கட்டி தோலை எல்லாம் உருச்சிடாதீங்க" – சவிதா.
"ஏன்டா உனக்கு எவ்வளவு தைரியம். உனக்கு அந்த பொண்ணு சொன்னமாதிரி செஞ்சாதான்டா இனி இந்தப்பக்கம் வரமாட்ட! டேய் மூக்கா! இவனை பிடிச்சு கட்டுங்கடா" என்று அவர் சொல்ல சாம் அவரின் மீசையை பார்த்து பயந்து சவிதா காதை கடித்தான்.
"ஏய்! காப்பாத்துடி! பயமா இருக்குடி" – சாம்.
"அப்படி வா வழிக்கு. நான் செய்ற மாதிரி செய் தப்பிச்சிடலாம்" என்று சவிதா கூறியபடியே தன் தாவணியை இழுத்துச் சொறுக சாம் தலையில் அடித்தபடியே தன் பேண்டை சுருட்டினான்.
தன் வலையலை அவள் ஏற்றிவிட, அவள் செய்த மாதிரி செய்ய சாம் தன் கைகளை பார்க்க சாம் சுதாரிப்பதற்குள் ஓடத் தொடங்கினாள் சவிதா.
"அடியே! இப்படி மாட்டிவிட்டு ஓடாதடி. இதுக்குதான் இவ்வளவு பில்டப் பண்ணியா. இவன்கிட்ட தனியாவிட்டு போகதடி" என்று கத்தியபடியே சாமும் அவளை பின் தொடர்ந்து ஓடினான்.
இருவரும் ஒரு இடத்தில் மூச்சு வாங்க நிற்க சாம் அவளை பார்த்து முறைத்தான். அதை கண்டு கொள்ளாமல் சவிதா அவன் கையில் இருந்த மாங்காயை பிடுங்கி தின்று கொண்டிருந்தாள் .
*****
பவ்யா மற்றும் நிதா கோவிலுக்கு செல்ல கோவிலில் பிரகாரம் சுற்றி கொண்டு வந்த நிதாவின் பார்வையில் விழுந்தது அந்த காட்சி.
அங்கு ஒரு சிறுமிக்கு மொட்டை அடித்து கொண்டிருந்தனர். அதை பார்த்த நிதாவிற்கு தான் அந்த சிறுமியின் இடத்தில் யவன் இருந்த மாதிரியான காட்சிகள் தோன்றியது.
அன்று யவனுக்கு மொட்டை அடித்ததும், யாரும் இல்லாத அவனுக்கு தாயாக இருந்து பவ்யா அனைத்தும் செய்ததும், அவனது தலையை பார்த்த நிதா பாட்டு பாடி கிண்டல் பண்ணியதும் இருவரும் படுத்து உருண்டு சண்டையிட்டதும் ஞாபகம் வர அதை நினைத்து பார்த்த நிதா சிரித்துக் கொண்டிருக்க அவளை உலுக்கினார் பவ்யா.
"நிதா என்னாச்சு? ஏன் சிரிச்சிட்டு இருக்க? வா போகலாம்" என்று பவ்யா கூற நிதாவும் அவரை பின் தொடர்ந்து சென்றாள். அங்கு சென்றவர்கள் கோவில் மணி ஓசை கேட்க சட்டென்று திரும்பிப் பார்த்தாள் நிதா.
அங்கு கோவிலின் சன்னதியில் கட்டப்பட்டிருந்த அந்த பெரிய மணி நிதாவை கவர சிறுவயதில் அவளை தூக்கி யவன் மணியடிக்க வைத்தது நினைவு வர அதன் அருகில் சென்று அதை அடிக்க முயன்ற நிதாவின் காதுகளில் அந்த குரல் கேட்டது.
'நான் வேணா தூக்கிவிடவா டாலுமா?' என்று குரல் கேட்டது தான் தாமதம் "டோலு!" என்று கூறியபடியே நிதா திரும்பிப் பார்க்க அந்த இடம் வெற்றிடமாக இருந்தது.
அதனை அடுத்து ஒரு பெருமூச்சுவிட்டபடி நிதா பவ்யா அருகில் செல்ல அங்கு நின்றிருந்தவனை பார்த்து அதிர்ச்சியுற்றாள்.
அங்கு கோவிலின் வெளியில் பவ்யாவிடம் பேசிக் கொண்டிருந்தான் யவன்.
 
Top Bottom