Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


யாரென்று தெரிகிறதா...... ? - 2

Megala Appadurai

Saha Writer
Team
Messages
52
Reaction score
64
Points
18
வணக்கம் நட்புக்களே..... எப்படி இருக்கீங்க.... சென்ற வாரம் கொடுத்த கதைச்சுருக்கத்தை உடனே நிறைய பேர் சரியா சொல்லி இருந்தீங்க ... அதில் முதலாவதாக சொன்ன ப்ரியாசக்தி அவர்கள் வெற்றியாளரா தேர்ந்தெடுக்கப் படுகிறார். அவருக்கு வெற்றி பரிசாக இந்த கீரீடமும், வாசகப்பேரிகை என்ற பட்டமும் வழங்கப் படுகிறது. வாழ்த்துகளும், பேரன்பும் ப்ரியா சக்தி.

பிதாமகன்ல்ல வர்ற சூர்யா மாதிரி கம்பெனிக்கு கட்டுபிடியாகததாலேன்னல்லாம் சொல்லமாட்டேன். இந்த கீரிடத்தை உங்கள் தலையில் சூட்டி வாசகப்பேரிகைப் பட்டம் கொடுப்பதைவிட சிறந்த பரிசு எதுவும் இல்லைன்னு நான் நினைக்கிறேன். மேலும் ஆர்வமாக கலந்துக்கொண்டு சரியான விடையை கண்டுபிடித்த எல்லா வாசகர்களுக்கும் என் வாழ்த்துகளும், நன்றிகளும்.

இந்த வாரம் யாரென்று தெரிகிறதா .... ? எதுவென்று பார்க்கலாமா....?

இது என் வாசிப்பில் நான் படித்து என் நினைவில் ஆழமாய் பதிந்து போன கதை. நீண்ட ஆண்டுகளுக்கு முன் படித்தது. ஆனால் அதன் ஆசிரியர் யாரென்று கூட மறந்துவிட்டேன் அந்த கதையை என்னால் மறக்க முடியவில்லை. மீண்டும் சமீபத்தில் அதை வாசிக்க நேர்ந்த போது அந்த எழுத்துகளும், அதன் எளிய அழகான தமிழும் என்னை ஈரத்தது.

எல்லா சமுத்திரங்களும் ஒரு துளியிலிருந்து தான் உருவாகிறது என்ற வார்த்தை என்னை வசீகரித்தது. இந்த கதையின் நாயகனே தங்களைப் பற்றி உங்களுக்கு விவரிக்கிறான்.

அவளைப் பற்றி ஊரார் சொன்னபோது நான் நம்பவில்லை. அவளைப் பார்த்த முதல் பார்வையில் அவர்கள் சொன்னது அத்தனையும் பொய்யென்று உணர்ந்தேன். ஆம் அவளை அவர்கள் சரியாய் பார்த்திருக்கவில்லை. நான் ஜமீனின் ஒற்றை வாரிசு. ஊரின் ஜமீன்களும், மிட்டாமிராசுகளும் வெள்ளையனை மறந்தாலும் என்னவளின் தாயை மறந்திருக்க மாட்டார்கள். கூத்தாட்டத்தில் பேர் பெற்றவள். சுத்துபட்டு அத்தனை ஆண்களும் அவளின் அடிமைகள். இப்பொழுது மகளை அரங்கேற்ற வந்தாள். அத்திருவிழாவிற்க்கு கூத்துகட்ட வந்த அவள் மகள் என் இதயத்தைத் திருடிச் சென்றாள்.

ஊரே ஜமீனைப் பயம் கலந்த மரியாதையுடன் பார்க்க முதன்முதலாய் எதிர்த்து கேள்வி கேட்டவள் நீ.... உன் தையரியமும், உன் அறிவும், ஆற்றலும், அழகும் வயதில் இளைஞனாய் புத்தியில் குழந்தையாய் இருந்த என்னை வெகுவாய் புரட்டிப் போட்டது. கூத்தில் வேடிக்கையாய் உன்னை முத்தமிட்டு உன்னை தொட்ட முதல் ஆண் நானென்று பறை சாற்றிக் கொண்டேன். ஆனால் என்னைத் தவிர வேறெந்த ஆண்மகனும் உன்னைத் நெருங்கக் கூட முடியாதென்று ஒவ்வொரு தருணத்திலும் நிரூபித்தாய்.

கூத்து முடிந்து நீ கிளம்பியபின் பெற்றோரும், பெரும் பணமும் பெரிதாய் படவில்லை எனக்கு நீயே என் உற்றத் துணையாய் தோன்றினாய். உன் மாமனின் வஞ்சப் பேச்சை நம்பி உன்வீட்டிற்க்காய் அத்தனை ஊழியமும் செய்தேன். உன்னைப் பார்த்துக் கொண்டு உன்னருகில் இருந்தாலே போதுமென்ற நினைப்பு. இந்த வீட்டில் உள்ள இன்னொரு ஆண்மகன் யாரென்ற ஒருவனின் கேள்விக்கு அவரே என்னை ஆளப்பிறந்தவர் நான் அவளுக்குரியவள் என்றாயே அந்த ஒற்றை வார்த்தை போதாதா உன்மீதான பெருங்காதலுக்கு.


உன் மாமனும், தாயும் செய்த சதி ஒரு புறம், கௌரவம் பார்க்கும் என் தகப்பன் ஒரு புறம், உன் இளைமையை வேட்டையாடத்துடிக்கும் வேட்டை நாய்களொருபுறமும் இருக்க வெள்ளந்தியாய் இந்த சூதை அறியாமல் போனேனே..... நான் யாரென்று தெரிகிறதா.....?​
 
Top Bottom