Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


வண்ணங்கள் 2021 - வெற்றியாளர்கள்

Nithya Karthigan

Administrator
Staff member
Saha Writer
Messages
661
Reaction score
840
Points
93
அன்பு வாசக மற்றும் எழுத்தாள தோழமைகளுக்கு இனிய தை திருநாள் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த வருடம் உங்க எல்லோருக்கும் அனைத்து வளத்தையும், சந்தோஷத்தையும் ஆரோக்கியத்தையும் கொடுக்க வேண்டும் என்று இறைவனை வேண்டி, 2021-ல் நம் தளத்தில் நடைபெற்ற வண்ணங்கள் போட்டிக்கான முடிவை உங்கள் முன் கொண்டு வந்துள்ளேன்.

டென்ஷனா இருக்கா மக்களே! எனக்கும் தான்...! முதன் முதல்ல நடுவர் குழுவிலிருந்து வந்த ரிசல்ட்டை பிரிக்கும் போது எனக்கும் இதே டென்ஷன்... எக்ஸைட்மென்ட் எல்லாம் இருந்தது. :D

சரி, இதற்கு மேலேயும் உங்களை காத்திருக்க வைக்க வேண்டாம் என்று நினைக்கிறேன். ரிசல்ட் சொல்வதற்கு முன் சில விஷயங்களை குறிப்பிட விரும்பறேன் கண்மணிகளே!

போட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட கதைகள் பங்கெடுத்து, எழுபதுக்கும் மேற்பட்ட கதைகள் நிறைவுபெற்றுள்ளன. இதில் பங்கெடுத்து என்னோடு- சகாப்தத்தோடு இணைந்து பயணித்த அனைவருமே எனக்கு முக்கியமானவர்கள்... ஸ்பெஷலானவர்கள்... உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

போட்டியில் பங்கெடுத்து வெற்றிகரமாக கதையை முடித்த அனைவருக்குமே உங்களுடைய கதை வெற்றி பெற வேண்டும் என்கிற விருப்பமும் ஆசையும் இருக்கும். எனக்கும் இருக்கு... ஆனால் நடைமுறையில் அது சாத்தியம் இல்லை. அதனால் போட்டி அறிவிக்கும் போது குறிப்பிட்டபடி, நடுவர்களின் மதிப்பெண் மற்றும் வியூவ்ஸை அடிப்டையாகக் கொண்டு ஏழு கதைகளை தேர்ந்தெடுத்துள்ளோம்.

வெற்றிபெற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

வெற்றி பெற்ற கதைகளின் பட்டியல் கீழே

வண்ணம் நீலம்
இந்த வண்ணத்தில் தான் முடிவுற்ற கதைகள் அதிகம். முடிவெடுக்க நடுவர்களுக்கிடையே விவாதமும் அதிகம்... அப்படி கடுமையான விவாதத்தில் முட்டி மோதி வெற்றிக்கனியை எட்டிப்பிடித்த கதை...

"நீ என்பதே நான் அல்லவா"

திருமதி அகிலா வைகுண்டம் ரைட்டர்-எக்ஸ் ஆக எழுதிய கதை இது.. வாழ்த்துக்கள் அகிலா வைகுண்டம்.

பரிசு தொகை - Rs.10000/-

வண்ணம் - சாம்பல்
இந்த வண்ணத்தில் வெற்றி பெற்ற கதை செல்வி ஷிவானி செல்வம் எழுதிய...

நரகமாகும் காதல் கணங்கள்.

வாழ்த்துக்கள் ஷிவானி செல்வம்

பரிசு தொகை - Rs.10000/-

வண்ணம் - சிவப்பு
இதில் வெற்றி பெற்ற கதை திருமதி சுபகீதா எழுதிய...

சதுரங்கம்.

வாழ்த்துக்கள் சுபகீதா.

பரிசு தொகை - Rs.10000/-

வண்ணம் - பச்சை
இதில் வெற்றி பெற்ற கதை திருமதி தீபா செண்பகம் எழுதிய,


சிந்தா ஜீவநதியவள்.
வாழ்த்துக்கள் தீபா செண்பகம்

பரிசு தொகை -Rs.10000/-

வண்ணம் - கருப்பு
இதில் வெற்றிபெற்ற கதை பார்கவி முரளி எழுதிய,

புவியே காட்சி பிழையாய்.
வாழ்த்துக்கள் பார்கவி முரளி

பரிசு தொகை - Rs.10000/-

இரண்டாம் பரிசு:
சாம்பல் நிறத்தில் வத்சலா ராகவன் எழுதிய நீ அறியாயோ முகிலினமே
வாழ்த்துக்கள் வத்சலா ராகவன்

பரிசு தொகை- Rs.5000/-

மூன்றாம் பரிசு:
கருப்பு வண்ணத்தில் திருமதி மீனாட்சி அடைக்கப்பன் எழுதிய ஒழுகும் நிலவு வழியும் இரவு

வாழ்த்துக்கள் மீனாட்சி அடைக்கப்பன்
பரிசு தொகை - Rs.3000/-

குறிப்பு :
>>வெற்றி பெற்ற கதைகள் எழுத்தாளர்கள் விரும்பும் பட்சத்தில் புத்தகமாக பதிப்பித்து தரப்படும்.
>> வெற்றி பெற்ற எழுத்தாளர்கள் தொடர்பில் வரவும்.



நன்றி தோழமைகளே... அனைவருக்கும் வாழ்த்துக்கள்..
- நித்யா கார்த்திகன்.​
 
Last edited:

Latest posts

New Threads

Top Bottom