Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


GN NOVEL வயல் தேவதை - Tamil Novel

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
607
Reaction score
780
Points
93
வயல் தேவதை
 

Jeyalakshmiabi

Member
Vannangal Writer
Messages
22
Reaction score
32
Points
13
வயல் தேவதை 1

எங்கு பார்த்தாலும் பசுமை... சூரியன் வெயில் தணிந்து மாலை

நேரத் தென்றல் இதமாக வீசியது; பறவைகள் எல்லாம் இரை தேடிவிட்டு கூட்டம்

கூட்டமாக தனது கூட்டிற்கு திரும்ப வானில் பறந்தபடி இருந்தன; அந்த

பறவைகள் போலவே சென்னையில் இருந்த திவ்யாவும் தனது வீட்டிற்கு வந்தாள்.

வயக்காட்டில் தண்ணீர் கட்டிக்கொண்டிருந்த திவ்யாவின் தந்தை நீண்ட நாள் கழித்து

மகளை பார்த்த மகிழ்ச்சியில் அனைத்தையும் அப்படியே போட்டுவிட்டு 'திவ்யா குட்டி...

வந்துட்டியா.... ' என ஆசையாக சொல்லிக்கொண்டே வந்தார்
அப்பா எப்படி இருக்கீங்க...? இனி கவலைப்படாதீங்க லாக்டௌன் போட்டுட்டாங்க எப்படியும் ஆபீஸ் ஓபன் பண்ண ரெண்டு மாசமாவது ஆகும் அது வரை உங்க கூட தான் இருப்பேன் என்றாள்.

பிள்ளைக்கு முகமே வாடி போச்சு பாரு... மதியம் சாப்பிட்டியா இல்லையா திவ்யா? ராதா..... ராதா.... எங்க போன இவ உனக்கு குடிக்க ஏதாவது கொண்டு வர சொல்லலாம்னு பார்த்தா ஆள காணோம் பாரேன் என புலம்பினார் திவ்யா அப்பா .

பெருமாளுக்கு திவ்யா என்றால் உசுரு அப்படியே உருகுவாரு; ஒரே பிள்ளை இல்ல அவருக்கு பாசம் அதிகம்; மகளை

விட்டா யாரும் இல்ல பெருமாளுக்கு ; திவ்யாவுக்கும் அப்பா தான் எல்லாமே அம்மா உடம்பு முடியாம திவ்யா ஸ்கூல் படிக்கும்போதே இறந்துட்டாங்க
பெருமாளுக்கு உதவியா ராதா என்கிற வேலைக்கார பொண்ணுதான் கூட

இருக்கா.

'ஐயா... ஐயா... கூப்பிட்டீங்களா?' என ராதா கேட்டாள் அவளுக்கும் கிட்டத்தட்ட

திவ்யா வயசு தான் பெருசா படிக்கவில்லை என்றாலும் வீட்டு வேலை

வயல் வேலை எல்லாம் நல்லா செய்வா

'எங்க போன இவ்வளவு நேரம்?'


ஐயா சர்க்கரை தீர்ந்து போச்சு கடைக்கு போயிட்டு வந்தேன்

'ஐ!! அம்மா எப்ப வந்தீங்க நல்லா இருக்கீங்களா காலேஜ்

எல்லாம் முடிஞ்சிடுச்சா?' என ராதா கேட்டாள்.


திவ்யா ராதாவின் காதை திருவடியே சொன்னாள் 'எத்தனை தடவை சொல்லுறது அம்மான்னு கூப்பிடாதே.... எனக்கும் உன் வயசுதான் திவ்யா நீ கூப்பிடு அப்புறம் நான் காலேஜ் முடித்து வேலைக்கு போக ஆரம்பித்து ஆறு மாசம் ஆகுது'.

'சரி இருங்க திவ்யா அம்மா நான் சூடா காபி போட்டு கொண்டு வரேன்' என்று கிளம்பினாள் ராதா.

' அப்பா நானும் உங்க கூட கொஞ்ச நாளைக்கு விவசாயம் செய்யலாம்னு இருக்கேன் மெதுவாக இழுத்த படி சொன்னாள்'.

'திவ்யா எதுக்குமா 'இப்படி வெயில்ல வயக்காட்டுல வேலை பாக்குறதுகா நான் உன்னை கஷ்டப்பட்டு படிக்க வைத்தேன்' என்று ஆதங்கப்பட்டார் பெருமாள்.

'ஆபீஸ் மறுபடியும் ஸ்டார்ட் ஆகுற வரைக்கும் தாம்பா ப்ளீஸ் பா....' என்றாள் திவ்யா.

சாப்ட்வேர் இன்ஜினியரிங் முடித்துவிட்டு இப்போது சென்னையில் ஒரு முன்னணி மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்கிறாள் மாதம் ஐம்பதாயிரம் சம்பளம் வாங்குகிறாள் திவ்யா.

'அது குட்டிமா உனக்கு வீட்டு வேலை கூட செஞ்சு பழக்கம் இல்ல; எதுக்கு உனக்கு கஷ்டம் ' வருந்தினார் பெருமாள்.

' என்னால முடியும் பா நான் கொஞ்ச நாளைக்காவது உங்களுக்கு உதவியா இருக்கேன்' என்றாள்.

சரி என அரைகுறையாக தலையசைத்தார்

திடீரென கட்டுக்கடங்காத காலைஎட்டி பாய்ந்து கொண்டு திவ்யா முன் ஓடிவந்தது ஐயோ! ஐயோ...!! அப்பா மாடு என கண்களை இறுக்கி மூடிக் கொண்டாள் திவ்யா கண்ணை திறந்து பார்த்தால் காலைக்கு முன் அதன் கயிரை இழுத்தபடி கதிர் மீசையை முறுக்கிக்கொண்டு நின்றுகொண்டிருந்தான் .

காளையை பார்த்து கொண்டு வரதில்லையா' என பெருமாள் கேட்டார் .

'சரி விடுங்கப்பா...' என பெருமூச்சு விட்டாள்.

'திவ்யா தெரியாம காளையை விட்டுட்டேனு நினைச்சியா... இல்ல நீ பயப்படணும்னு தான் விட்டேன்' என திவ்யா காதோரம் வந்து கிசுகிசுத்தான் கதிர்

'என்ன... வேணும்னு விட்டாயா! இந்த காள மாடு மாதிரியே நீயும் திமிருபுடிச்சவன் தான் போல' என சண்டை பிடிக்க ஆரம்பித்தா திவ்யா.

என்ன பாப்பா பயந்திட்டியா உங்க மாடுதான் பாக்கதான் பயங்கரமாயிருக்கும் ஆனால் அது சாது தான் முட்டாது' என சிரித்தான்

'கதிர் சின்ன பிள்ளைல எப்படி சண்டை போட்டிங்கலோ இப்பவும் அப்படியே
சண்டை போட்டுட்டு இருக்கீங்க விளையாட்டு பிள்ளை போங்க' என சொல்லிவிட்டு தன் வேலையை பார்க்க போய் விட்டார் பெருமாள் .

பெருமாளின் தங்கச்சி பையன் கதிர் ; படித்தாலும் விவசாயம்தான் தனது மூச்சு என

இருப்பவன் நீண்ட வருடமாகவே தங்கச்சி வீட்டுடன் பேச்சுவார்த்தை இல்லாமல்

இருந்தது சிறிது காலமாக தான் பேசி சமாதானம் ஆனார்கள்.

திவ்யாமா கதிர் அண்ணாவை முன்னாடியே தெரியுமா என காபியை நீட்டிய படியே கேட்டாள் ராதா

ஆமா சார் இந்த ஊரு நாட்டாமை பெருசா தெரிஞ்சுக்கிறதுக்கு என முகத்தை சுளித்தாள் திவ்யா.

அதை என்கிட்ட கேளு ராதா நான் சொல்லுறேன் பேஸ்புக்கில் அறிமுகமாகி நிறைய பேர் தோழர்கள் ஆகி பார்த்திருப்ப ஏன் லவ்வரா கூட இருக்காங்க ஆனா ஃபேஸ்புக் மூலமாக அறிமுகமான எதிரியை கேள்விப்பட்டு இருக்கியா மேடம் நம்ம வேண்டப்பட்ட விரோதி
தான் என சொல்லி சிரித்தான் கதிர்

கேட்கவே சுவாரசியமா இருக்கு மேல சொல்லுங்க என்றாள் ராதா

திவ்யா இருவரையும் பார்த்து முறைத்தாள்

திவ்யா மேடம் ஃபேஸ்புக்ல விட நேரில் பார்க்க கொஞ்சம் அழகா தான் இருக்கீங்க என கிண்டல் அடித்தான்

நீ கூட நேரில் பார்க்க ரொம்ப திமிரு புடிச்சவன் மாதிரிதான் இருக்க போடா என்றாள் திவ்யா

'நீங்க இங்க இருக்கீங்க திவ்யா அம்மா சென்னையில அப்புறம் எப்படி பேசாமல்

பழகாமல் எதிரியா நீங்க முட்டிக்கிட்டு இருக்கீங்க' என குழம்பினாள் ராதா

போக போக தெரியும் பாரு என சொல்லி சிரித்தான் கதிர்.

வருவாள் தேவதை
images
 
Last edited:

Jeyalakshmiabi

Member
Vannangal Writer
Messages
22
Reaction score
32
Points
13
வயல் தேவதை 2

திவ்யா பயணக்களைப்பில் இருந்தாள் 'என்ன பாப்பா....? ஜாலியா உக்காந்துட்ட மாமனுக்கு கஞ்சி ஊத்துறது' என திவ்யாவை சீண்டினான் கதிர்.

'என்னது மாமாவா...' என கதிரை முறைத்து விழுங்கினாள் திவ்யா. 'மாமா இல்ல மாட்டுக்கு கழனி தண்ணி வைக்கவில்லையா என்று கேட்டேன்; உனக்கு சரியா
கேக்கல போல; சாரி...' என மழுப்பினான்.

'நீங்க இருங்க நான் பார்த்து கொள்கிறேன்; இன்னைக்கு தான் ஊரில் இருந்து வந்து இருக்கீங்க போய் ரெஸ்ட் எடுங்க' என்றாள் ராதா.

'நீ வேற அதெல்லாம் மேடம் செய்வாங்க; என்ன மேடம் போங்க போய் கழனி தண்ணி

காட்டுங்க என்ன சவாலை மறந்துட்டீங்களா?' ஞாபகப்படுத்தினான் கதிர்.

'சவாலா... என்ன சவால்' என கேட்டாள் ராதா
'அது திவ்யா மேடம் போட்ட சவால்; என்ன அப்படியே எடுத்து வைக்கிற நீ மட்டும் நைட்டுக்கு பிரியாணி பண்ணிடு ராதான்னு நல்லா வக்கனையா கேட்கிற இல்ல; மாடு என்ன பாவம் பண்ணிச்சு திவ்யா' என்றான் கதிர்.

'மாட்டுக்கும் சேர்த்து பிரியாணி போடணுமா'

'அது எல்லாம் இல்ல கொஞ்சம் தவிடும் ஊறவச்ச பல தானியத்தையும் கழனி தண்ணில ஊத்தி கொஞ்சம் உப்பு போட்டு நல்லா கலந்து அப்புறம் அதை மாட்டுக்கு வை; அப்படியே குடிப்பேன் என்று எல்லாத்தையும் மாடு காலி செய்துவிடும்' என லெக்சர் கொடுத்தான் கதிர்.

சரி என எல்லாத்தையும் கலந்து மாட்டுக்கு வைத்தாள் திவ்யா 'என்ன தான் கதிர்

அண்ணா திவ்யா அம்மாவுக்கும் உங்களுக்கும் சண்டை' என ராதா கேட்க

சொல்ல ஆரம்பித்தான் 'உங்க வயக்காட்டுல ஹாயா நின்னுட்டு ஒரு ஒரு ஸ்டோரியை உங்க திவ்யமா பேஸ்புக்ல போஸ்ட் பண்ணி இருக்காங்க அதுல கிராமம் தான் சொர்க்கம் விவசாயம் தான் பெருசு விவசாயத்தை யாரும் விடக் கூடாது அப்படி இப்படின்னு ஓவரா போட்டிருந்தாங்க திவ்யா; அதுக்குஎக்கச்சக்க லைக் வேற; அதுக்கு நான் என்னன்னு கமெண்ட் செய்தேன் தெரியுமா... நல்லா சொல்லுவீங்க ஆனா நீங்க மட்டும் ஜாலியா ஏசி ரூம்ல வேலை பார்த்துட்டு சம்பளம் வாங்கிட்டு விவசாயம் பெருசு விவசாயத்தை விட கூடாதுன்னு சொல்லுவீங்க தைரியம் இருந்தா ஒரு மாசத்துக்கு வயக்காட்டுல மழையிலும் வெயிலிலும் இறங்கி வேலை செஞ்சு பார்த்துட்டு அப்புறம் விவசாய பெருமை பேசுங்க என விளையாட்டாக தான் சொன்னேன். அதுக்கு நெறைய லைக் கமெண்ட் தலைவா சூப்பர் பா... நல்லா சொன்னப்போ... இனிமேல் எவனும் வெறும் விவசாய பெருமை பேசி இப்படி வாயிலேயே வடை சுட மாட்டாங்க; அப்படி இப்படின்னு ஒரே கமெண்ட்ஸ் தான் போ. அப்புறம் என்ன ஆச்சுன்னா உங்க திவ்யா அம்மா சவாலை ஏத்துக்கிட்டாங்க ஒரு மாசம் நான் வயல்ல வேலைபார்க்கிறேன்னு சொல்லிட்டாங்க'

இவ்வளவு நடந்துச்சா என கன்னத்தில் கைவைத்தபடி கேட்டுக்கொண்டிருந்தாள் ராதா.

'சரி மாடு இப்போ சாணி போட்டுருச்சு ஒரே சகதியா இருக்கு போய் கட்டுத்தறியை சுத்தம் பண்ணு' என ஆர்டர் போட்டான் கதிர். அம்மா பாவம் என ராதா வருந்தினாள்.

ஸ்டாப் நான் பார்த்துகிறேன் என கையசைத்து விட்டு சாணி அள்ளச் சென்றாள் திவ்யா. 'கிளவுஸ் கிடைக்குமா இதை கையில் அள்ளுவது எப்படி?

'அம்மா பிளவுஸ் ஜாக்கெட் எதுக்குமா துணி ஏதும் மாற்ற போறீங்களா' என்றாள் ராதா

'ஆபரேஷன் பண்ண போறியா என்ன சாணி அள்ள சொன்னா சானிடைசர் கேப்ப போல; இந்தா இந்த சட்டிய பிடி கையில் அள்ளி இதுல போட்டு அங்க போய் குழியில் கொட்டு
மாட்டு சாணம் செடிக்கு எல்லாம் அமிர்தம் மாதிரி மூஞ்சை சுளிக்காதா' என்றான் கதிர்.

சரி என சாணி அள்ள தெரியாம உளப்பிக் கொண்டும் சாணியை முகத்தில் லைட்டா ஈசி கிட்டும் அள்ளினால் திவ்யா.

'இங்க பாரு சாணியை இப்படி லட்டு மாதிரி உருட்டி மெதுவா இப்படி அள்ளி
போடணும் சரியா' என செய்துக் காட்டினான் கதிர்.

சரி என தலையை அசைத்தவாறு அள்ளினாள் திவ்யா. 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பால குமாரி' என திவ்யாவை ஓரக்கண்ணால் பார்த்தபடி பாடினான் கதிர்.
எதையும் காதில் போட்டுக்கொள்ளாமல் வேலையில் மட்டும் கவனம் செலுத்தினாள் திவ்யா.
images


'என்ன காளையா... கவலைப்படாதே நாளைக்கு உனக்கு ஒரு சர்ப்ரைஸ் உனக்கு
துணையா ஒரு பசுமாடு வரப்போகுது எத்தனை நாளைக்கு நீயும் என்ன மாதிரி மொரட்டு சிங்கிள் ஆகவே இருப்ப எனக்கு எப்ப தான் ஜோடி சேருமோ தெரியல' என திவ்யாவைப் பார்த்து பெருமூச்சு விட்ட படி கூறினான் கதிர்.

இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் 'ஹாய்... கவின் எப்ப வந்த' என கவினை பார்த்து கேட்டாள் திவ்யா.

'என்ன கையெல்லாம் அழுக்கா இருக்கு இதெல்லாம் செய்ய வீட்டில வேலை ஆள் இருக்காங்க இல்ல அப்புறம் எதுக்கு கஷ்டப்படுற' என்றான் கவின்.

'யாரை பார்த்து வேலைக்காரன் என்று சொல்லுற நான் இந்த வீட்டு மாப்பிள்ளை தெரியுமா!!' என்றான் கதிர்.

என்ன நீ மாப்பிள்ளையா... என நக்கலாக சிரித்தான் கவின்.

இரு நான் கைகழுவிவிட்டு வரேன் உன் கிட்ட நிறைய பேச வேண்டி இருக்கு என சிரித்த முகமாக கவினிடம் பேசினாள் திவ்யா.

எவன் இவன் பார்த்ததே இல்லையே என கேட்டான் கதிர்.

'பக்கத்து தோட்டக்காரர் பழனி இருக்கார் இல்ல அவரோட பையன் தூரத்து உறவு முறை தான்; கவின் பட்டணத்தில் வேலை பார்ப்பவர் லீவுக்கு ஊருக்கு வந்திருக்கிறார்' என கூறினாள் ராதா.

பார்க்கப்போனால் நம்ம கதைக்கு இவன்தான் வில்லனா வருவான் போல என சிந்தனையில் ஆழ்ந்தான் கதிர்
தேவதை வருவாள்
 
Last edited:

Jeyalakshmiabi

Member
Vannangal Writer
Messages
22
Reaction score
32
Points
13
வயல் தேவதை 3
ராதா காலையில் வாசலுக்கு சாணி தெளித்து கொண்டிருந்தாள்.
சொன்ன மாதிரியே ஒரு பசுமாட்டை பிடித்து வந்திருந்தான் கதிர்.

' பெருமாள் மாமா இல்லையா பால் கறக்கின்ற பசு மாடு ஒன்னு கேட்டாங்க கொண்டு வந்திருக்கேன்' என ராதாவிடம் கதிர் விசாரித்தான் .

'இன்னைக்கு வயலில் பயிறு நடுகிறார்கள் இல்ல அதான் ஐயா வயலுக்கு சீக்கிரமா போய் இருக்கார்'.

'உங்க திவ்யாமா என்ன செய்யறாங்க?'
'தூங்குறாங்க'
'மணி ஏழாவது இன்னும் என்ன தூக்கம்... இரு வரேன்' என வேகமாக திவ்யா அறைக்கு
சென்றான் கதிர்.

திவ்யா நன்றாக ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள்.' தூங்கும் போது
கூட கொள்ளை அழகு... இவளை கட்ட போறவன் கொடுத்து வச்சவன்' என
தனக்குள் பேசிக் கொண்டான் கதிர்.

திவ்யா... திவ்யா... எழுப்பினான் கதிர் 'ராதா போய் காபி கொண்டு வா' என சொல்லிக்கொண்டே போர்வையை தலை வரை இழுத்துப் போர்த்தி தூங்கினாள் திவ்யா.' நான் ராதா இல்லை கதிர்... கதிர்... வந்திருக்கேன் ' .போர்வையை விலக்கிப் பார்த்த திவ்யா 'நீ எதுக்கு இங்க வந்த என்றாள்.
'
நல்லா இருக்குஉங்க வயல்ல பயிர் நடறாங்க சீக்கிரம் வா.. நீதான் சாமி கும்பிட்டு
தொடங்கி வைக்கணும் நான் முன்னாடி போறேன் பத்து நிமிஷத்தில் ரெடி ஆகி வர
சரியா'

ஓகே என தூக்க கலக்கத்துடன் எழுந்து அமர்ந்தாள் திவ்யா.

திவ்யா வயலுக்கு வந்தடைந்தாள். பல வகையான பறவைகளின் சத்தம் கீச்.. கீச்...

கூ ...குக்கு ..ஒரு இன்னிசைமெட்டு போல இருந்தது. கதிர் இரண்டு காளை
மாடுகளை வைத்துக் கொண்டு வயலை ஓட்டிக் கொண்டிருந்தான். மாநிறம், உழைத்து உரமேறிய தோள்கள் தினமும் உடற் பயிற்சி செய்வோருக்கு கூட இவ்வளவு கட்டான
உடலமைப்பு இருக்காது. ஆணழகன் மிஸ்டர் தமிழ்நாடு போட்டியில் கலந்து கொண்டால் வின் பண்ணிடுவான் போல என திவ்யா மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்.

'திவ்யா நேரமா எழுந்துட்டியா... காபி குடிச்சியாமா..' என பாசமாக விசாரிக்க ஆரம்பித்தார் அப்பா.

'ஆமா டிராக்டர் வச்சு வயலில் உழுது பிறகும் ஏன்பா மாட்டை வைத்து உழவு செய்றீங்க?' என கேட்டாள்.

'கடைசியா மாட்டை வெச்சு உழுதாதான் வயல் சமமாக இருக்கும் இதை பறம்பு அடிக்கறதுனு என்று சொல்லுவாங்க'என்றார் பெருமாள்.

மாட்டை ஓரம்கட்டிய கதிர் 'என்ன திவ்யா மேடம்வயலில் இறங்குங்க எல்லோரும் உங்களுக்குத்தான் வெயிட்' என்றான்.

மெதுவாக வயலில் இறங்கினாள்; புதிதாக சேற்றில் அவ்வளவு லாவகமாக இறங்கி நடக்க முடியவில்லை.

திவ்யா கடவுளை வேண்டி விட்டு பயிர் நடுவதை தொடங்கி வைத்தாள்; கூட நான்கு
கூலி வேலை பெண்களும் பயிர் நட்டனர். ஐயா.. உங்க பொண்ணு பட்டணத்தில்
படித்திருந்தாலும் நல்லா பயிறு நடவு செய்யுறாங்க'என கூலிக்கார பெண் கூறினாள்.
'அது மட்டுமா திவ்யா இந்த வரிசை முழுவதும் நடுவாங்க' என அவளை வசமாக மாட்டி விட்டான் கதிர்.

திவ்யா எப்படியோ கஷ்டப்பட்டு ஒரு வரிசையை நட்டு விட்டாள்'. போதுமா புதுசா சேத்துல நிறைய நேரம் நின்னு சளி பிடிச்சிடாபோகுது நீ வீட்டுக்குப் போ' என்றார் பெருமாள்.

மணி மதியம் மூன்றிற்கும் இருக்கும் பெருமாள் எவ்வளவு சொல்லியும் காட்டு பக்கம் இருக்க காளியம்மன் கோவிலுக்கு செல்வேன் என அடம் பிடித்தாள் திவ்யா.

'அட நம்ப கதிர் வாரான் ... உங்களுக்கு துணையா கதிரை அனுப்புறேன்' என பெருமாள் கூறினார்.

திவ்யாவை பார்த்ததும் கதிர் அப்படியே உறைந்து போய் விட்டான் கோவிலுக்கு செல்வதால் திவ்யா புடவை அணிந்திருந்தாள் சிவப்பு நிற புடவை ஜிமிக்கி தோடு அவளுக்கு எடுப்பாக இருந்தது பார்க்க தேவதை மாதிரி இருந்தாள்.

என்ன மாமா ஏதாவது விசேஷமா

' காட்டு பக்கம் இருக்கிற காளியம்மன் கோயிலுக்கு இன்னைக்கே

போகணும்னு திவ்யா அடம்பிடிக்கிறாள்; எனக்கு வேற வயல்ல வேலை செஞ்ச களைப்பு

ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது; இவர்கள் கூட துணைக்கு

போய்ட்டு வரியாப்பா' என்றார்'.

'கரும்பு தின்ன கூலி வேண்டுமா' என முணுமுணுத்தான்

'நல்லவேளை அந்தப் பட்டணத்து பூதம் வரல' என கதிர் சந்தோசப்பட்டான்

'பட்டணத்து பூதமா... யாரு அண்ணா அது?' என யோசித்தாள் ராதா.

'அதான் நேத்து ஒருத்தன் வெள்ளையா கூலிங் கிளாஸ் எல்லாம்

போட்டுட்டு கோமாளி மாதிரி வந்தானே கவின் அவன் தான்' கடுப்பானான் கதிர்.

'உனக்கு நூறு ஆயுசு கவின்...வா...என வரவேற்றாள் திவ்யா.
.
திவ்யா,ராதா,கவின்,கதிர் நாலுபேரும் கோவிலுக்கு கிளம்பினர் ஆள்

நடமாட்டம் இல்லாத இடமாக இருந்தது; மரங்கள் அடர்ந்து இருந்தது; காளியம்மன்

கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு முடித்தனர்.'தாகமா இருக்கு ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியலனு' திவ்யா அமர்ந்துவிட்டாள். சரி இங்கேயே இருங்க பக்கத்துல ஒரு நீரோடை இருக்கு நான் போய் தண்ணி கொண்டு வாரேன்' என்றான் கதிர்.

' நான் திவ்யாவிற்கு துணையாய் இங்கேயே இருக்கேன்' என நழுவினான் கவின். நான் துணைக்கு வரேன் என ராதா கதிருடன் தண்ணி எடுக்க சென்று விட்டாள்.

காட்டிற்குள் தனியாக இருப்பது திவ்யாவுக்கு பயமாக இருந்தது திடீரென்று ஒரு பைத்தியம் திவ்யாவின் முன் குதித்து 'என்ன முனியம்மா.. இத்தனை நாளா எங்க போன நல்லா இருக்கியா..?' என சிரித்தான். பற்கள் எல்லாம் கருப்பா கரையா இருந்தது;
அவன் ஆடைகள் கிழிந்து இருந்தது; தலைமுடி சடை பிடித்து இருந்தது.

'என்னை ஒன்றும் செய்யாதே' என அலறினாள் திவ்யா. கொஞ்சம் எட்டி நின்று
பயந்தபடியே கவின் போடா.. போடா... என அந்த பைத்தியக்காரனை விரட்ட முயற்சி செய்தான்.

'என் பொண்டாட்டிய விட்டுட்டு தள்ளிப்போடா...' என்ன முனியம்மா என்ன

மறந்துட்டியா' என திவ்யா அருகில் வந்தான் பைத்தியக்காரன்; என்ன செய்வது என்று

தெரியாமல் பதறிய திவ்யா' என்னை ஏதும்செஞ்சிடாதே என கண்ணீருடன் கதறினாள்.

வருவாள் தேவதை....
 

Jeyalakshmiabi

Member
Vannangal Writer
Messages
22
Reaction score
32
Points
13
வயல் தேவதை 4

சூரியனின் வெயில் தாக்கம் தணிந்து மாலைப்பொழுது மலர ஆரம்பித்தது.
கதிரும் ராதாவும் நீரோடையில் இருந்து தண்ணீர் எடுத்துக் கொண்டு காளியம்மன் கோவிலுக்கு அருகில் வந்து கொண்டிருந்தனர்.

'அண்ணா... நம்ம திவ்யா அம்மா அலறும் சத்தம் கேட்குது ஏதோ பிரச்சனை போல வாங்க சீக்கிரம் போய் பார்க்கலாம்' என பதறினான் ராதா. 'என்னவா இருக்கும் அந்த பட்டணத்து பூதம் கவின் ஏதாவது ஏடாகூடமா பிரச்சனை செய்திருப்பானோ' என சொல்லிக்கிட்டே வேகமாக கோவிலை வந்தடைந்தான் கதிர்.

கதிரை பார்த்த மறுகணமே அம்மாவை விட்டுப் பிரிந்த சிறுபிள்ளை போல அழுதுகொண்டே கதிரை வந்து அணைத்துக் கொண்டாள் திவ்யா. கதிருக்கு ஏதோ ஒரு புதுவித உணர்வு தோன்றியது ஒரு நிமிடம் அப்படியே உறைந்து போய் விட்டான். கதிர்...கதிர்...என அழுகுரல் கேட்கவே நினைவு திரும்பிய அவன் 'ஒன்னும் இல்லை ஏன் அழுவுற பயப்படாதே நான் தான் வந்துட்டேன் இல்ல' என அவள் தலையை வருடி சமாதானம் செய்தான்.

திவ்யா அழுதுகொண்டே அந்த பைத்தியக்காரனை பார்த்து கை நீட்டினாள்.
யாரு அது என அருகில் போய் பார்த்தான்; 'கந்தசாமி அண்ணே நீங்களா...? எப்படி இருக்கீங்க ஏன் இப்ப வீட்டு பக்கம் வாறதில்லை' என பாசமாக அந்த பைத்தியத்தை பார்த்து விசாரித்தான்.

' கதிர் நீ மட்டும் தான் கோயிலுக்கு வந்து இருக்கேன்னு பார்த்தா உன் பைத்தியக்கார அண்ணனையும் கூட்டிட்டு வந்திருக்கியே இவன் முனியம்மா முனியம்மானு கூப்பிட்டு கிட்டே என் பக்கத்தில் வந்து பயமுறுத்துகிறான்' என கோபமாக திட்டினாள் திவ்யா.

இவர் முதல்ல யாருன்னு தெரியுமா என்றான் .'இவரு பெரிய சுதந்திர போராட்ட தியாகியா நான் தெரிஞ்சுக்கிறதுக்கு' என கடுப்பானாள்.

'இவரு ஒரு காலத்துல இந்த ஊரு பஞ்சாயத்து தலைவராக இருந்தவர்; என் அப்பா ஏன் உங்க அப்பா பெருமாள் மாமா கூட இவர் வயல்ல தான் கூலி வேலை செஞ்சிட்டு இருந்தாங்களாம்.அவர் மனைவி முனியம்மா செத்த பின்னாடி இவர் இப்படி ஆகிட்டாரு இவருக்கு ரெண்டு பசங்க இருக்காங்க அவங்க இருக்கிற சொத்தை எல்லாம் வித்துட்டு இவரை அம்போன்னு விட்டுட்டு பாரின்ல போய் செட்டில் ஆகிட்டாங்க; ஊருல யாராவது பாவம் பார்த்து அப்பப்ப ஏதாவது சாப்பிடக் கொடுப்பார்கள்' என வருத்தமாக
கூறினான் கதிர்.

எதுவும் நடக்காதது போல பின்னாடி போய் பயந்து ஒளிந்து இருந்த கவின் பெரிய வீரன் மாதிரி முன்வந்து 'என்ன திவ்யா உனக்கு ஒன்னும் ஆகலை இல்ல...' என அக்கறை காட்டுவது போல பேசினான்.

'ஆமா கந்தசாமி அண்ணே நீங்க யார்கிட்டயும் இப்படி பிரச்சனை பண்ண மாட்டீங்களா ஏன் இந்த பாப்பாவை பயமுறுத்தினீங்க' என சந்தேகமாக கேட்டான் கதிர்.
'தம்பி இது முனியம்மா...' என பல்லை காட்டி தலையை சொரிந்து கொண்டே சொன்னார் அந்த பைத்தியக்காரர்.

கதிர் சிரிப்பை அடக்கியவாறு சொன்னான் 'அண்ணே இது உங்க முனியம்மா இல்லை திவ்யா... திவ்யா...என சத்தமாக கூறினான். இல்ல முனியம்மா என்றார் அவர்.
' அண்ணே இவ பேரு திவ்யா பெருமாள் இருக்காரு இல்ல அவரு பொண்ணு என்னோட முறைபொண்ணுதான்' என்றான்.

நீ கட்டிக்க போற பொண்ணா மன்னிச்சிடுங்க என்றார் கந்தசாமி. கட்டிக்கப்போற பொண்ணா என கடுப்பானாள் திவ்யா.மனசுக்குள்ளே ரொம்ப சந்தோஷப்பட்டு கொண்டு அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் திவ்யாவிடம் சொன்னான் கதிர் ' ஏ... கம்முனு இரு அவர் மனைவி முனியம்மானு சொல்லாம நான் கட்டிக்கப்போற பொண்ணு என சொல்லுறாரு பரவாயில்லைன்னு சந்தோசப்படுவியா பெருசா சண்டைக்கு வர.'
'ஆமா திவ்யா இப்ப நமக்கு விவேகம் தான் முக்கியம் சீக்கிரம் நாம இந்த இடத்தை விட்டு கிளம்பலாம்' அவசரபடுத்தினான் கவின்.

' என்னால முடியல அப்பா என தலை மேல் கை வைத்தபடி அமர்ந்தான் திவ்யா. 'அம்மா இந்தாங்க தண்ணி குடிங்க அப்புறம் கொஞ்சம் தெம்பா ஆயிடுவீங்க' என தண்ணியை திவ்யாவிடம் கொடுத்தாள் ராதா.

எதையும் கண்டுகொள்ளாமல் தேங்காய், இரண்டு வாழைப்பழம், பிரசாதம் கொஞ்சம் எடுத்து கந்தசாமி கிட்ட கொடுத்தான் கதிர். எனக்கு எதுக்கு தம்பி இதெல்லாம் என வாங்க மறுத்தார்.' பரவால்ல வாங்கிக்கங்க நீங்க ஒன்னும் சாப்பிட்டு இருக்க மாட்டீங்க' என பரிதாபத்துடன் சொன்னான் கதிர்.

'கல்லுக்குள்ளும் ஈரம் இருக்கும் போல' எனஅவனை பார்த்து ரசித்தபடியே சொன்னாள் திவ்யா.' என்னமா இந்த ட்ரெஸ் ஈரம் ஆயிருச்சா' என கேட்டாள் ராதா. 'ஒன்னும் இல்லை கதிரும் கொஞ்சம் நல்லவன் தான் போல என புன்னகையுடன் சொன்னாள் திவ்யா. இது இப்போ தான் உங்களுக்கு தெரியுதா சரி இன்னும் நம்பலை காணோம்னு ஐயா கவலை பட்டுட்டு இருப்பாரு வாங்க போலாம்' என்றாள் ராதா.
ராதா,கவின் இருவரும் கிளம்ப தயாரானார்கள். திவ்யாவால் முடியவில்லை சோர்வாக இருந்தாள் அதனால் நீங்க ரெண்டு பேரும் முன்னாடி போங்க நான் கொஞ்ச நேரம் கழித்து திவ்யாவைப் பார்த்து கூட்டிட்டு வரேன் என்றான் கதிர். 'சரி பார்த்து வாங்க எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு இல்லைனா நானும் உங்க கூடவே துணைக்கு இருந்து இருப்பேன்' என சொல்லிவிட்டு ராதா கவின் இருவரும் கிளம்பிவிட்டனர். கந்தசாமி பிரசாதம் சாப்பிட்டு விட்டு படுத்துக் கொண்டார்.

சிறிது நேரம் கழித்து சரி ரொம்ப நேரம் ஆகுது போலாம் என்றான் கவின்.சரி என மெதுவாக எழுந்த திவ்யா திடீரென்று ஏதோ உணர்ந்தவளாய் அப்படியே மீண்டும் அமர்ந்துவிட்டாள். வா போலாம் லேட் ஆகுது என்றான் கதிர்.

' அது வந்து அந்த பைத்தியத்தை பார்த்து அப்படியே பின்னாடி பயந்து போகும் போது முள் செடியில் எனது டிரஸ் மாட்டி லைட்டா கொஞ்சம் கிளிஞ்சிடுச்சு போல' என தயங்கியபடியே கூறினாள்.

' சரி இந்தா என் சட்டையை போட்டுகோ' என தன் சட்டையை வேகமாக கழற்றி கொடுத்தான் கதிர்.' என்ன செய்யற எனக்கு வேணாம் என அவனை பார்க்காமல் வேறு பக்கம் திரும்பிக் கொண்டாள்.

' ஏன் வெட்கப்படுற நான் உள்ள பனியன் போட்டு இருக்கேன் வேட்டியும் கட்டி இருக்கேன் ஒன்னும் பிரச்சனை இல்ல இந்த போட்டுக்கோ என்றான்.
வேணாம்னா விட்டுறேன் என கோவபட்டாள். 'கிழிந்த உடையை போட்டு கொண்டு எப்படி வீட்டுக்கு வருவ? நீ சரிப்பட்டு வர மாட்ட இப்ப எப்படி உன்ன சட்டை போட வைக்கிறேன் பாரேன்' என்றவன் 'அண்ணா கந்தசாமி அண்ணே உங்க முனியம்மா வந்துருக்காங்க பாருங்க' என்றான்.முனியம்மா எங்கே என அவர் எழுந்து சுற்றியும் பார்த்தார்.'தயவுசெஞ்சி அந்த பைத்தியத்தை மட்டும் கூப்பிடாதே நான் உன் சட்டையை போட்டு கொள்கிறேன்' என வேகமாக அணிந்து கொண்டாள். 'அண்ணே அது முனியம்மா இல்ல வேற யாரோ மன்னிச்சுக்கங்க நீங்க தூங்குங்க' என சிரித்தபடி சொன்னான். அவர் மறுபடியும் படுத்து தூங்க ஆரம்பித்தார்.அவன் சட்டையை அணிந்து கொள்வது அவளுக்கு கூச்சமாகவும் ஒரு மாதிரியாக இருந்தது. இருவரும் ஒரு வழியாக கோவிலை விட்டு கிளம்ப ஆரம்பித்தனர்.

சிறிது தூரம் சென்றவுடன் 'எனக்கு பசிக்குது காலைல பயிறு நடவு செய்யணும் சீக்கிரமாவானு சொன்னதுல சாப்பிடவே இல்ல மதியமும் கோவிலுக்கு போற அவசரத்துல சரியா சாப்பிடலை இருக்குற பிரசாதத்தையும் அந்த பைத்தியக்காரருக்கு எடுத்து குடுத்துட்டுட இப்ப எனக்கு ரொம்ப பசிக்குது'என சிணுங்கிய படி சொன்னாள்.

சரி காட்டுல ஏதாவது பழம் கிடைக்குமானு பாக்குறேன் இரு என சுற்றியும் தேட ஆரம்பித்தான் கதிர். ஒரு கொய்யா மரம் கண்ணில் தென்பட்டது. 'காட்டுக்குள்ள யாரு கொய்யா மரம் வச்சிருப்பாங்க... பாரு எவ்வளவு பல நல்ல செழிப்பா இருக்கு' என்றாள்.

'காட்டுக்குள்ள உங்க தாத்தாவா மரம் வைத்திருப்பார் பறவை மிருகம் ஏதாவது கொய்யாப்பழம் சாப்பிட்டு மீதி போட்டிருக்கும் அது இயற்கையாக செடி முளைத்து மரமாகி இருக்கும்' என்றான் .'ஆனால் பாரேன் நாம விலைக்கு வாங்கி வைத்து உரம் போட்டு மருந்து அடிச்சு கூட இவ்வளவு செழிப்பா வராது ஆனால் இயற்கையாக முளைச்சு இலை, தழை, விலங்கு கழிவு எல்லாம் எல்லாம் செடிக்கு உரமா மாறி அப்போப்போ பெய்த மழையில செடி வளர்ந்து எவ்வளவு செழிப்பா இருக்கு பாரேன் அதுதான் இயற்கை' என வியந்து கூறினான் கதிர்.

'சரி கருத்து சொன்னதெல்லாம் போதும் மரத்துல ஏறி நாலு கொய்யாக்கா பறிச்சி போடு' என்றாள். மரம் ஏறி பழங்களைப் பறித்தான். தூரமாக இருந்து ஏதோ புகை வந்து கொண்டிருந்தது. என்னவா இருக்கும் என சுற்றி உற்றுப் பார்த்தான் நான்கைந்து பேர் ஒரு பெரிய புதருக்கு அருகில் சுத்தம் செய்து கள்ள சாராயம் காய்ச்சி கொண்டிருந்தனர்;அருகில் பெரிய பெரிய பீப்பாய்களை அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

'பழம் பறிக்க சொன்னா என்ன வேடிக்கை பார்த்துட்டு இருக்க சீக்கிரம் வா' என்றாள் திவ்யா. சத்தம் போடாதே என பழங்களை பறித்துக் கொண்டே கீழே இறங்கினான்.

'பழம் எவ்வளவு டேஸ்டா இருக்கு பாரேன் இந்த மாதிரி பழத்தை நான் சாப்பிட்டதே இல்லை' என அதை சுவைத்துக் கொண்டே சொன்னாள் திவ்யா. யோசித்துக்கொண்டிருந்த கதிர் போன் இருந்தா கொடு என்றான். எதுக்கு கேக்குற என்றபடி போனை நீட்டினாள்.போனை வாங்கிய கவின்' ஹலோ மணக்காடு போலீஸ் ஸ்டேஷன் இங்க இருக்க காட்டு பகுதியில் காளியம்மன் கோவிலுக்கு பக்கத்துல ரகசியமா கள்ளசாராயம் காய்ச்சுறாங்க சீக்கிரம் வாங்க' என புகார் செய்தான்.
'கதிர் என்ன கள்ளசாராயமா... இந்த காலத்துலயா...' என வியப்பாக கேட்டாள்.

'எப்பவும் எல்லாம் சாராயம் காய்ச்ச மாட்டாங்க லாக்டோன் போட்டதால டாஸ்மாக் எல்லாம் இருக்காது இல்ல நம்ம நாட்டு குடிமகன்கள் எல்லாம் சரக்கு கிடைக்காமல் தவிப்பாங்க இந்த டைம்ல கள்ளசாராயத்தின் டிமாண்ட் அதிகமாயிருக்கும் என கதிர் தெளிவு படுத்தினான்.

'அதான் போலீஸ் கிட்ட சொல்லியாச்சி இல்ல அவங்க வந்து பாத்துப்பாங்க நாம
சீக்கிரமா இந்த இடத்தை விட்டு போய்விடலாம்' என்றாள். சாராய கும்பலில் இருந்த ஒருவன் இவர்களை பார்த்துவிட்டு இங்க ரெண்டு பேர் இருக்காங்க என கத்தினான்.

'இவன் யாரு இவனும் இந்த கூட்டத்தில் ஒருத்தனா இருப்பானோ' என்றாள். ஆமா இந்த கும்பலுக்கு இன்பாமரா இருப்பான் போல போலீஸ் இல்ல வெளியாளுங்க வந்தா கள்ளசாராய கும்பலுக்கு தெரிவிப்பான் போல அப்புறம் அவங்க எல்லாத்தையும் பதுக்கி வச்சிட்டு எஸ்கேப் ஆகணும் இல்ல என்றான்.

கள்ளச்சாராய கும்பலில் இருந்து வந்த ஒரு தடியன் 'காட்டுக்குள்ள என்ன செய்றீங்க அதும் பார்க்க ஏதோ "இளம் காதல்ஜோடி" மாதிரி இருக்கீங்க வீட்டிலிருந்து ஓடி வந்துட்டீங்களா என்றான். என்ன சொன்னீங்க அண்ணே என கேட்டான் கதிர். "இளம் காதல்ஜோடி" 'இன்னொரு முறை சொல்லுங்க' என திவ்யாவை பார்த்து சிரித்தபடியே கேட்டான் கதிர். இளம் காதல்ஜோடியானு கேட்டேன் என்றான் அவன்.

'என்ன லூசா டா நீ... நாம நல்லா வசமாய் மாட்டிகிட்டோம் ஆனா நீ என்ன இப்ப ரொமான்ஸ் பண்ணிட்டு இருக்க' என கதிரின் தோளில் லேசாக தட்டினாள் திவ்யா.

இவங்க ரெண்டு பேரையும் இழுத்துட்டு வாடா என்றான் தடியன். 'அண்ணே வேணாம் நாங்களே வரோம் என கள்ளசாராயம் காய்ச்சுகின்ற இடத்துக்கு சென்றனர்.

அந்த கும்பலில் இருந்த ஒருவனிடம் போய் காதோரம் ஏதோ சொன்னான் அந்த தடியன். அவனை பார்ப்பதற்கு கொஞ்சம் பயமாக இருந்தது பெரிய உருவம், கருமை நிறம், சுருட்டை முடி, முறுக்கு மீசையுடன் இருந்தான். அவன்தான் இந்த கூட்டத்திற்கு தலைவனாய் இருப்பான் போலும். சரி இரண்டு பேரும் இப்படி வாங்க என்றான். 'மணி பாட்டை போடுடா ரெண்டு பேரும் டான்ஸ் ஆடட்டும் நமக்கும் கொஞ்சம் டைம் பாஸ் ஆகும் இல்ல' என மீசையை முறுக்கியபடி சிரித்துக்கொண்டே கூறினான். போனில் பாட்டு போட்டார்கள். "செல்லக்குட்டி ராசாத்தி போகாத சூடேத்தி கண்ணே உன் காதல் கதவை வைக்காதே சாத்தி வெள்ளை கட்டி நீ ஆத்திவெக்கமென்னு ஏமாத்தி எட்டி எட்டி போகாதடி என்னை மல்லாத்தி உன்னை நான் நெஞ்சுக்குள்ள தொட்டில் கட்டி வச்சேன் காப்பாத்தி என பாட்டு ஒலிக்க கதிர் திவ்யாவுடன் சந்தோசமாக உற்சாகத்துடன் பாட்டுக்கு வாய் அசைத்துக் கொண்டே அவள் அழகை ரசித்தபடியே அவளுடன் ஆடினான்.

'இப்படி ஜாலியா டான்ஸ் ஆடிட்டு இருக்க அவங்க எல்லாத்தையும் அடிச்சு போட்டுட்டு என்ன காப்பாற்றுவனு பாத்த இவங்களோட சேர்ந்து நீயும் கூத்தடிச்சுட்டு இருக்க என முறைத்தாள். 'ஏய்... சும்மா இரு இன்னும் கொஞ்ச நேரம் தான் அப்புறம் போலீஸ் வந்து இவங்களை பிடிச்சிட்டு போயிடும் அதுவரைக்கும் சமாளி' என மெதுவாக கூறினான் கதிர்.

'செம... செம... சூப்பர்டா பாப்பா ரொம்ப அழகா இருக்கே இப்ப நான் பாப்பா கூட ஜோடி சேர்ந்து ஆட போறேன். என்ன பாப்பா ரெடியா' என திவ்யாவை நெருங்கினான் அந்த சுருட்டை முடி தடியன்.

அண்ணே வேணாம்னு கதிர் தடுத்தான். போடா என அவனைக் கீழே தள்ளி விட்டு திவ்யா மேல் கை வைக்க முயன்றான். கதிர் அவனை ஓங்கி ஒரு உதை விட்டான். ஆ... என கத்திக் கொண்டே வேகமாக கீழே விழுந்தான் தடியன்.

வேணாம் வேணாம்னு சொன்னா கேக்க மாட்டீங்களா தடிபயலுகளே என தன் கையிலிருந்த காப்பை சரிசெய்துகொண்டு வேட்டியை மடித்துக் கட்டி சண்டைக்கு தயார் ஆனான் கதிர். என் தலைவனையா அடிக்கற என மற்றொருவன் கதிரை தாக்க முயன்றான்.கதிரின் ஒரு குத்துதான் மல்லாக்க விழுந்தான்.

மாறி மாறி அவர்களை அடித்து துவைப்பதை பார்த்த திவ்யா 'இவனுக்கு நல்லா சண்டை போட தெரியுமா' என அவனை பார்த்து சிறு புன்னகையுடன் சொன்னாள். அந்த சுருட்டை முடி தடியனை விடாதே விட்டுவிடாதே தடியா... தடியா... என் கூடவா ஜோடி போட
நினைக்கிற என பல்லை கடித்தாள் திவ்யா.அனைவரும் அடிபட்டு கீழே விழுந்தனர். பின்னாடி பாரு என திவ்யா சொல்லி முடிப்பதற்குள் கதிர் பின் இருந்த ஒருவன் கத்தியால் தாக்க முயன்றான் லேசாக கதிர் முதுகில் காயம்பட்டது சுதாரித்த கதிர் திரும்பி அவன் கையை மடக்கி ஓடித்தான் 'அண்ணே இப்ப சொல்லுங்க' என கதிர் கேட்டான்.

'இனிமே சாராயம் காய்ச்ச மாட்டோம் எந்த பெண்களையும் தொந்தரவு செய்ய மாட்டோம் எங்களை மன்னிச்சிடுங்க தம்பி' என கெஞ்சினான் அந்த தடியன். 'அதில்ல முதல்ல ஒன்னு சொன்னிங்களே இளம் காதல்ஜோடி அது சொல்லுங்க' என்றான். 'உங்கள பார்த்தா அப்படியே இளம் காதல்ஜோடி மாதிரி இருக்கீங்க தம்பி' என்றான். 'இன்னொரு முறை சொல்லுங்க என்றான் கதிர். "இளம் காதல்ஜோடி". இன்னொரு முறை
சொல்லுங்க என வாயில் விரல் வைத்து கடித்துக்கொண்டு வெட்கப்படுவது போல கேட்டான் கதிர். 'உங்களை பார்க்க அப்படியே இளம் காதல் ஜோடி மாதிரி இருக்கு தம்பி' என அழுதுகொண்டே சொன்னான்.
' ஏய் என்ன பண்ற இந்த ரணகளத்திலும் உனக்கு கிளுகிளுப்பு கேட்குதா' என கடுப்பானாள் திவ்யா. 'தம்பி ரெண்டு அடி வேணுமா அடிச்சுக்கோங்க ஆனால் திரும்ப திரும்ப அதைசொல்லி வாய் எல்லாம் வலிக்குது முடியல' என நொந்தபடி சொன்னான்' அந்த
தடியன்.

போலீஸ் வண்டி வேகமாக வந்து நின்றது. கள்ள சாராய கும்பல் அனைவரையும் கைது செய்தனர். 'ஆமா... நீங்க ரெண்டு பேரும் இந்த காட்டுல தனியா என்ன செய்றீங்க என சந்தேகமாக கேட்டார் போலீஸ்காரர். 'நல்லா இருக்கு சார் நான்தான் உங்களுக்கு போன் செய்து தகவல் கொடுத்தேன் ஆனா என்னைய சந்தேகப்பட்டு கேக்குறீங்க பாரு' என்றான் கதிர்.

'அதெல்லாம் இருக்கட்டும் இந்த நேரத்தில் அதுவும் ஊரடங்கு சமயத்துல உங்களுக்கு காட்டுக்குள்ள என்ன வேலை' என்றார் போலீஸ்காரர்.' அது... சார் இவ என் மனைவி ஒரு வேண்டுதலுக்காக காளியம்மன் கோவிலுக்கு வந்தோம் வேண்டுதலை முடிச்சுட்டு
வீட்டுக்கு போகும்போது தான் இந்த கள்ள சாராய கும்பல் கிட்ட மாட்டிகிட்டோம்' என கதிர் சொல்லி முடிப்பதற்குள் திவ்யா அவன் காலை வேகமாக மிதித்தபடி முறைத்தாள்.' 'நான் பொய் சொல்லல நம்மளையும் அப்புறம் விசாரணைக்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போவாங்க பரவா இல்லையா' என அவள் காதில் கிசுகிசுத்தான் கதிர்.
'இங்க எல்லாம் நிறைய நேரம் இருக்கக் கூடாது மொதல்ல கிளம்புங்க' என அவர்கள் இருவரையும் அனுப்பி விட்டு கள்ளசாராய கும்பலுடன் போலீஸ் வண்டியில் விரைந்தனர்.

'அப்பப்பா... என்னமா பொய் சொல்ற' என்றாள் திவ்யா சிறிது நேரம் தான் சென்றிருப்பார்கள் திடீரென்று மழை பெய்ய ஆரம்பித்தது.ஒரு மரத்து அடியில் இருவரும் ஒதுங்கினர் 'இது வேலைக்காகாது உன் கையில் இருக்கு அந்த கவரை கொடு' என்றான். அந்த பிளாஸ்டிக் கவரில் குச்சி வெச்சு ஒரு ஓட்டை போட்டு கீழிருந்த ஒரு நாரை எடுத்துக் கோத்து 'இங்க பக்கத்துல வா' என்றான் 'என்ன செய்யப் போறடா'

அந்த கவரை திவ்யா தலையில் மாட்டிவிட்டு நாரை வைத்து கோர்த்து கழுத்தருகே ஒரு முடிச்சு போட்டான் 'உனக்கு .ரெயின் கோட் ரெடி ஆகிடுச்சு பாரு இனி நீ அவ்ளோவா நினைய மாட்ட வா போலாம் என்றான். மழையும் விடுவதாகத் தெரியவில்லை வேறு வழியின்றி மலையிலேயே இருவரும் கிளம்பினர்.

பிளாஸ்டிக் கவர் போட்டதால் திவ்யாவிற்கு கீழே கால் பகுதியில் மட்டும்தான் நினைந்தது ஆனால் கதிர் முழுவதுமாக நினைந்து கொண்டு வந்தான் திவ்யா அவனை பார்த்தபடி நடந்து வந்து கொண்டிருந்தாள். என்ன சீக்கிரம் வா என வேகமாக நடந்தான். 'கல்லுக்குள் ஈரம் இருக்குன்னு நினைச்சேன் இப்ப முழுசா ஈரம் ஆகிடுச்சு' என தனக்குள்
சிரித்துக் கொண்டாள் திவ்யா.' நான் தான் நினைக்கிறேன் நீ ஏன் கரையிற என்ன சைட் அடிக்கிறியா' என்றான். 'மனசுக்குள்ள பெரிய ஹீரோன்னு நினப்பு போடா..' என்றாள் திவ்யா. ஆனால் அவளுக்கு தெரியாமலேயே அவள் மனதில் கதிர் மேல் காதல் மலர்ந்து விட்டது. 'கொஞ்சம் பாவம் பார்க்கக்கூடாது உடனே தலை மேல ஏறிடுவியே என வாயை சுவைத்தாள்.

ஆமா நீ என்ன படிச்சிருக்க என்றாள். 'நான் இளங்கலை வேளாண்மை படிச்சிருக்கேன்' என்றான்.' ஓ...அதுனால தான் விவசாயத்து மேல ஆர்வம் இருக்கியா' 'அப்படி எல்லாம் இல்ல எனக்கு சின்ன வயசுல இருந்தே விவசாயம்பிடிக்கும் ஆர்வம் அதிகம் பெரும்பாலும் விவசாயம் படிச்சவங்க விவசாயம் பண்ண மாட்டாங்க; அரசு வேலை, பேங்க் வேலை ஏன் காலெக்ட்டரா கூட ஆவாங்க ஆனா உன்ன மாதிரி கம்ப்யூட்டர் படிச்சவங்க விவசாயம் பண்ணனும்னு ஆசை படுவாங்க அப்படியே உல்டாவா இருக்கு இல்ல' என சொல்லி சிரித்தான்.

மழை நின்று சிறிது தூறல் மட்டும் தூறிக்கொண்டிருந்தது இருவரும் பேசிக் கொண்டே வந்ததில் கதிரை பற்றி தெரிந்துகொள்ள திவ்யாவிற்கு ஒரு நல்ல வாய்ப்பாக இருந்தது. ஏதோ ஒரு வேகத்தில் சவாலை ஏற்றுக் கொண்டாலும் சிறிது சிறிதாக அவளுக்கு விவசாயம் மேல் ஆர்வமும் வர ஆரம்பித்தது.' நாளைக்கு என்ன வேலை' என கேட்டாள். அதான் மழை பெஞ்சிருக்கு இல்ல குறைய கிடக்குற வயலை ஓட்டி எதாவது விதைக்கலாம்' என்றான். 'ஓ... நாளைக்கு வயல் ஓட்ட போறியா அப்போ எனக்கு வேலை இல்ல ஓகே' என்றாள். 'நாளைக்கு வயலை ஓட்ட போறதே நீ தான்' என சொல்லி சிரித்தான். நானா.... வயல் ஓட்டணுமா... என ஆச்சரியமாகக் கேட்டாள் திவ்யா

தேவதை வருவாள்.....
 
Top Bottom