Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


வழி மாறிய பாதை- மீனாக்ஷி சிவக்குமார்

Meenakshi sivakumar

Saha Writer
Team
Messages
21
Reaction score
4
Points
3
வழி மாறிய பாதை


கதிரவனுக்கு தான் எத்தனை காதலிகள், கடலோடு காதல் கொண்டு, மலைகளோடு முத்தமிட்டு, தெருக்கள் எங்கும் உறவு கொண்டு, கோபியர்கள் கொண்டாடும் கண்ணணாய், தேடும் முன்பே கதிரவன் அஸ்தமிக்கும் காட்சியை காண்கையில்,

ஒரு நாள் மலர்ந்து, மறைந்ததற்கான நிகழ்வு என்று பார்ப்பதை விட,

நம் வாழ்நாளில் ஒரு நாள் வெறுமையாகவோ, கசப்பாகவோ கழிந்தது என்பதை நிலை நிறுத்தினோமானால்,

வாழ்க்கையின் உத்வேகம் உதிக்கும், வாழ்க்கையின் தேடல் வாழ்க்கைக்குரியது,

நாம் வாழும் வாழ்க்கை நம்முடையது அல்ல, என்று நம்பும் போதே தேடலின் தேஜம் கூடுகிறது.

நல் வழி சென்று, நற் பெயர் பெற்று வெற்றி பெற்றவர்களை தூக்கி தலையில் வைத்து கொண்டாடுகிறோமே தவிர,

தோற்றவர்களை தேற்றவும், அவர்களின் வாழ்க்கையை போற்றவும், நாம் முனைவது அல்ல, அதற்கு நாம் தரும் விளக்கம் அவர்கள் தோற்றவர்கள்.

தோற்றவர்களின் வாழ்க்கையில் அவர்களோடு பயணம் செய்யும் வாய்ப்பு உங்களுக்கு கிடைக்குமானால் நீங்கள் பயண செய்ய விரும்புகிறீர்களா?

அப்படி உங்களுக்கு விரும்பமாயின், என்னோடு வாருங்கள் தொடுதிரையை மேல் உயர்த்தி,

தோற்றவர்களின் வாழ்க்கையில் ஒரு சில மணி நேரங்கள் தொடரடும் நம் பொன்னான நேரத்தை மட்டும் கட்டணமாக செலுத்திய பயணம்,

சென்னை, காலை பொழுது சற்று மேகமூட்டத்தோடு இருந்ததை காண்கையில்,

நகரவாசிகள் நேர ஒட்டத்தை நயவஞ்சமாக நகர்த்துவிட்டது இந்த மேகமூட்டம் என்பதை உணர்ந்து தான் ஆக வேண்டும்.

சென்னையின் வடபழனி சாலையில், ஒரு இரண்டு அடுக்கு மாடி வீட்டையை பார்க்கையிலே பணக்காரர்கள் வாழும் வீடு என்ற சொல்லும் அளவிற்கான மிடுக்கு.
அரண் போல அமைந்த வாயிலை கடந்து செல்கையில்,

அல்சிசன் நாய் அடைத்து வைத்திற்கும் இடத்தை பார்க்கையில்,

ஒரு கணம் Hunchback in the park என்ற ஆங்கில கவிதையில் வரும் இடம் ஒரு கணம் கண்முன்னே வந்துவிட்டு செல்கிறது,
கோர பற்களை பார்க்கையில் விருத்தினரின் வயிற்றில் புளியை கரைத்த ஒரு பீதி.

அதை அப்படியே கண்களை முடிக்கொண்டு கடந்து வீட்டினுள் நுழைந்த நமக்கு வீட்டில் யாரும் எழவில்லை, என்பதை நாம் கவனிக்காமல் இல்லை.
அப்படியே நாம் தேடி வந்தவரை தேடுவோம்,
மிதுன், 27 வயது இருக்கும், பொதுமான உயரம், இரு புருவங்களுக்கு மட்டும் பிரம்மன் உலகில் உள்ள மொத்த கரும்மையை கொட்டி தீட்டி விட்டானோ என்று வியக்க வைக்கும் புருவங்கள்,
வசீகர முகம், அடர்ந்த கேசம், தாடி, மீசையிலும் கூட பிரம்மனின் கை வண்ணம் சற்று அழகை கூடுதலாக கூட்டியது,
திடமான உடல் வாகை காண்கையில், மிதுன் ஒரு அழகன் தான்,என்று மனதில் குரல் கேட்பதை, மனம் ஏற்க தொடங்கிவிட்டது.
படுக்கை அறையில், மிதுன் உறங்கி கொண்ட இருக்கிறான், அந்த அறை முழுவதும் இருளும், வெளிச்சமும் சேர்ந்த ஒரு பிரதிபலிப்பு,
அங்கு புல்லாங்குழலும், அதனை வாசிக்கும் தாள குறிப்பும் இருக்கிறது, அவன் படித்த புத்தக்கத்தில் காணபோமேயானால்,
மார்ச்சிக கொள்கையின் மாண்பும், காந்திய கொள்கையின் பற்றும் காண முடிந்தது, ஆங்காங்கே பல இலக்கிய நூல்களுள் இடையே கள்வனின் காதலியை காண்கிறோம்,​
படுக்கையில், மோகனகாந்தா என்ற நாவலின் 37 வது அத்தியாயம் படிப்பதற்காக அவன் வைத்து இருக்க வேண்டும், அல்லது படித்து கொண்டே தூங்கி இருக்க வேண்டும்,

இந்த அறையை பார்க்கும் போது அவன் ஒரு படைப்பாளி என்று எளிதாக புரிந்து கொள்ளலாம்,
யாரும் எதிர்பார்க்கதவைக்கையில், அவனது செல்போனில் புல்லாங்குழலில் இசை அமைத்த, "தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல" என்ற அவதாரம் படத்தின் பாடல் புல்லாங்குழல் இசையில் கேட்க,
தன் காலிலிருந்து, தலை வரைக்கும் முடிய, போர்வையிலிருந்து தன் கையினால் போனை தூழாவிய மிதுனின் தேடல் வீண் போகவில்லை, அவன் போனை எடுத்து "ஹலோ" என்ற மிதுன்,
சிறிது நேரம், காதிலே போனை வைத்து பின்பு, "ஒ, கே" என்று சொல்லிய பின் வைத்து விட்டு எழ எத்தனித்தான்.
பின்பு, அவன் குளித்து முடித்து, தியானம் செய்த பின், வெளியில் கிளம்பினான்,
வெளியில் அவனை காண கூட்டமாக மக்கள் நின்றனர்,​
எதையும் கவனிக்க அவனுக்கு நேரமில்லை, அதனால் அவன் யாரையும் கண்டு கொள்ளவில்லை,

தன் காரை எடுத்துக்கொண்டு வேகமாக வெளியே கிளம்பும் வேகத்தை பார்க்கையில்,
வேகமாக கப்பல், கடலை இரண்டாக பிரித்துக்கொண்டு செல்வது போல, அவன் வேகம் காட்டுகிறான், இந்த மக்கள் வெள்ளத்தில்,
வேகமாக பறந்து, சிறிது நேரத்தில் மாயமானான்,
அவனை பார்க்க வந்து ஏமாற்றம் அடைந்த ஒருவர் கூட்டத்திலிருந்து,
"ஒரே ஒரு படம், எடுத்தாரு இப்போ உலகமே திரும்பி பாக்குது, இதுக்கு எல்லாம் மச்சம் வேணும்," என்று பெருமூச்சு விட்டு இடத்தை காலி செய்தான் அவன்.
இதற்கிடையில், மிதுன் வேகமாக சென்று ஒரு டிபார்ட்மென்டல் ஸ்டார் வெளியில் வைத்து இருந்த "பெடோன்னியரே " என்று அழைக்கப்படும் ரோஜாகள் நிரம்பிய ஒரு பூங்கொத்தை வாங்கி கொண்டு சுமனின் நோக்கி சென்று கொண்டு இருந்தான்.
பயணத்தில் இருப்பவரை தொந்தரவும் செய்யாமல், நம் மனத்திரையில் அவன் இயக்கிய திரைப்படத்தை காணப்போம்,
திருவண்ணாமலை, நல்லான்பிள்ளை பெற்றான் என்ற கிராமத்தில் காந்திமதி என்ற 22 வயது பெண் தன் இரண்டு வயது குழந்தையோடு வயல்வெளியில் வேலை பாா்த்துக்கொண்டு இருந்தாள்,
குழந்தை அயர்ந்து தூங்கிக்கொண்டு இருக்கிறது, அவள் மும்மரமாக வேலை முடித்து, தன் தினக்கூலிக்காக கணேசனிடம் கையை பவ்யமாக கட்டிக்கொண்டு நின்றாள்,
" ஏம்மா, உன் புருஷன் உன் நாத்தனார் பேச்சை கேட்டுகிட்டு, இப்படி நீ கைக்குழந்தையோட நிக்கையிலே விட்டு போயிட்டேனே மா" - கணேசன்.
"அந்த கதையைப்பத்தி பேசாதீங்க , விட்டுங்க" என்ற காந்திமதியின் பார்வை தொட்டிலில் படுத்திருந்த தன் மகளாகிய ரூபினியின் மீது பதிந்தது,
இதை கவனித்த கணேசன் காசை கொடுத்து, அவளை அனுப்பி வைத்தான்,
"கைக்குழந்தையோடு நீ கஷ்டப்படுற, ஒரு வேளை நீ உன் குடும்பத்தை விட்டு ஒடி வந்து, கல்யாணம் பண்ணிக்காம இருந்தா, இன்னிக்கு இந்த நிலை வந்துருக்காது, உங்க அப்பா ஒரு போதும் உன்னை ஏத்துக்க மாட்டாரு காந்திமதி" - என்ற காந்திமதியின் உயிர்தோழி அபிராமியின் அன்பு நிறைந்த வார்த்தையில் அன்பு மட்டும்ஆர்பரித்து நிற்கிறது.
அவன் கணவன் கவி பிரியன் பிரிந்த சென்ற நாளிலிருந்து அபிராமி தான் காந்திமதி வாழ்வில் நம்பிக்கை தீபத்தை ஏற்றி கொண்டு இருக்கிறாள்.
காந்திமதி தனியாக தான் வாழ்ந்து வந்தாள்,

தன் குடிசையை சுற்றி நிற்கும் ஆண்கள், அவள் குடிசையில் கம்பை விட்டு அவளை தொந்தரவு செய்து கொண்டு இருந்த காமுகர்களுக்கு,
இரையாகமல் தன் கற்பை காப்பாற்றுவதே பெரும் போராட்டமாக காந்தியின் வாழ்க்கையில் இருந்தது,

இந்த நிலை வர, வர அதிகமானது தவிர குறைந்த பாடில்லை,
ஒரு நாள், காந்திமதி வேலை முடித்து வந்தவளிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சித்தவர்களிடம் இருந்து,
பண்ணையார் பெரிய கண்ணு தான், காப்பாற்றினார். அதிலிருந்து காந்திமதிக்கு பாதுகாப்பாக இருந்தார்.
பொிய கண்ணு, முகத்தில் சாந்தமும், பேச்சில் யதார்தமும் பொருந்திய 45 வயது என்று ஊகிக்கும் அளவிலான தோற்றம்,
காந்திமதியின் மீது பெரிய கண்ணின் பாதுகாப்பு, பாசமாக மாறியது,
காந்திமதி கணவன் வேறொருத்தியை திருமணம் செய்து கொண்டான்,
பெரிய கண்ணும் காந்திமதியின் அழகில் மயங்கிதான் இருந்திருக்க வேண்டும்.

பெரிய கண்ணுக்கு, திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன, மனைவியோ உலகம் தெரியாமல் இருந்தாள்,
பெரிய கண்ணு, மனைவி என்ற புனைப்பெயரில் காந்திமதியோடு வாழ்ந்து வந்தார்,
ரூபினியை தன் மகள் போல வளர்த்தார், 11 வயதிலே அவளுக்கு 16 வயதுக்குரிய தோற்றம்,
ரூபினி வயதுக்கு வந்த நிலையில்,

அவளின் எதிர்காலத்தை கருதி, காந்திமதி ரூபினியை விடுதியில் விட்டுவிட்டு,
வெளிநாடு சென்று சிறிது காலம் இருந்து விட்டு, திரும்பி வந்து ரூபினிக்கு திருமணம் செய்து வைத்து விடலாம் என்ற முடிவு வந்தவளாய், அதற்கான முழு ஏற்பாடில் இறங்கினாள்.

பெரிய கண்ணு எவ்வளவோ சொல்லியும் கேட்கவில்லை காந்திமதி,
அன்று மாலை ரூபினி, பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்தவள், காந்திமதியை தேடினாள்,
சிறிது நேரத்திற்கு பிறகு,
இராசாத்தியின் வளைய காப்பிற்கு செல்லவதாக, காலையில் அவள் தாய் சொன்னது நியாபகம் வந்ததும், தேடுவதை நிறுத்தி விட்டு, படிக்க ஆரம்பித்தாள்.

பொழுது மங்கலாக ஆரம்பித்தது,
கதவை தட்டும் சத்தம் கேட்டு, கதவை திறந்த ரூபினிக்கு அதிர்ச்சி,
வாசலில் பெரிய கண்ணு அதீத குடிப்போதையில், நின்று கொண்டு இருந்ததை பார்த்த ரூபினியின் முகத்தில் சுளிப்பு.
அவள் இன்னது என்று அறியும் முன்பே, பெரிய கண்ணு தவறாக நடந்து கொள்ள முயற்சிக்க, "வீல்" என்ற கத்திய ரூபினியின் குரல் எட்டுத்திக்கும் கேட்டது,
அனைவரும் ஒடி வந்து, பெரிய கண்ணை அடித்து துவைத்து விட்டனர், அது பெரிய கண்ணு கெட்டவன் என்பதற்காக அல்ல,
ரூபினியின் நன் நடத்தைக்காக, மக்கள் அவள் மீது வைத்து இருந்த மரியாதை,
சிறிது நேரத்திற்கு பின்பு,
வந்த காந்திமதிக்கு ஊர் மக்களின் வசவுகளையும், குசலத்தையும் தான் செவிகளுக்கு சகிக்க வில்லை,

"பசு மாடு தான், கூடிட்டு வந்தானு பாத்தா, கன்றுக்குட்டிக்கு குறி வச்சிட்டானே" - ஊர் மக்கள்.
"இவ விருப்பம் இல்லாமையா, அவன் வந்துருப்பான், " - வேறோருவன் பேச சகித்துக் கொள்ள முடியவில்லை காந்திக்கு.
ஏற்கனவே ஹார்ட் அட்டாக் 2 முறை வந்த காந்திமதிக்கு.

ரூபினியின் நிலை குதித்திய பார்வை, காந்திமதியின் இதயத்தையை குத்தி கிழித்தது.
நெஞ்சை கசக்கி பிடித்தப்படி, கீழே விழுந்தவளின் உடல் துடிதுடித்து பின்பு சலனமற்ற சடலமாக மாறியது.
"அம்மா" என்று வெறி பிடித்தவளாய் கத்தி மயங்கியவள், விழிக்கையில் அவளின் தாயாரின் சாம்பல் மட்டுமே இருந்தது,
அவள் அதிர்ச்சியிலே மூன்று நாளாக மயக்கமாக தான், இருந்துருக்கிறாள்,
இந்த நிகழ்வு நடந்து சில நாட்கள் கடந்த நிலையில்,

அம்மா ஏற்பாடு செய்த வேலைக்கு ரூபினி செல்ல முடிவு செய்தாள்​
துபாய்க்கு அழைத்து செல்ல ஆட்கள் வரவும், ரூபினியும் அவர்களோடு பிரயாணம் பட ஆரம்பித்தாள்.

சென்னைக்கு வந்து, பின்பு மும்பைக்கு செல்ல, விமானத்தில் அமர்கின்ற, ரூபினிக்கு தன் தாயின் இறப்பு ஒரு கணம் மனத்திரையில் வந்துவிட்டு செல்கிறது,
"எனக்கு துணை உன்னையின்றி யாரு, நான் எங்கு சென்றாலும் என்னோடு நீ வர வேண்டும்", என்று உதடுகள் முணுமுணுத்தன,
பணிப்பெண் வந்து, சீட் பெல்ட் போட்டுக்கோங்க, என்று அவளுக்கு போட்டு விட்டு செல்கிறாள்.
துபாய்க்கு அழைத்து செல்லும் ஏஜெண்ட் அனைவரிடமும் பணிவாக பேசிக்கொண்டு இருக்கிறார்.
இவர் யாரிடமும் துபாய் செல்ல, பணம் வாங்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
"நம்ம நல்லா இருக்கணும், இவர் நினைக்கிறத பாக்கும் போது,என்னால தாங்கிக்க முடிய" - என்ற கூட்டத்தில் உள்ள ஒருத்தி சொல்ல, மற்றவர்களின் மனதிலும் அதே நெகிழ்ச்சி.
மும்பையில் தரை இறங்குகிறது, விமானம்.
வந்தவர்களின் கண்ணில் வியப்பு மட்டும் இருக்கிறது,
பிரபல பை ஸ்டார் ஹோட்டலில்,
அவர்கள் அனைவரையும் தங்க வைத்து, நல்ல உணவு கொடுத்து, செம்பூர் முருகன் கோவிலுக்கு அழைத்து சென்று காண்பிக்கிறார் அந்த ஏஜென்ட்.

இறுதியில், இன்று இரவு ஒய்வு எடுத்து கொள்ளுங்கள், நான் நாளை வந்து பார்க்கிறேன்,
மறு நாள் காலையில், அனைவரும் கிளம்புகையில், சில ஆட்கள் அவர்களை வந்து கூட்டிக்கொண்டு செல்கிறார்கள்.
ரூபினி மட்டும், அருகில் உள்ள கணபதி மந்தீர் க்கு சென்று விட்டு வருகிறேன், என்று சொல்லி செல்கிறாள்.
ஹோட்டலின் முக்கத்தில் தான் கோவில் என்பதால் பெரிய குழப்பம் ஒன்று மில்லை,
கோவிலில் பூஜையை முடித்து விட்டது வந்த ரூபினி. வேகமாக நிறுத்துங்கள் என்று ஒடிவந்தாள்.
ஒவ்வொருவரும் வெவ்வேறு ஊரை சேர்ந்தவர்கள் என்பதால் ஒருவரையொருவர் தேடுவது தேவையில்லாத விசியமாகவே தோன்றியது அவர்களுக்கு.
வேகமாக ஒடிவந்த ரூபினியை அவன் பிடித்து இழுத்த வேகத்தில் வாய் பொத்தினான்,
திமிரிய ரூபினியால், அவனின் பிடியில் இருந்து விடுபட முடியவில்லை,

அவளின் போராட்டத்திற்கு பலனில்லை, அவன் இவளை விடுவதாய் இல்லை,
சிறிது நேரத்திற்கு பின், கையை விட்ட அவன் "சலோ" என்று சொல்லிய வேகத்தில் நகர்ந்தான்.

எதுவும் புரியாமல் குழப்பிய மனநிலையில் இருந்த அவள், சிலை போலவே நின்றாள்,
பின் உடல் சிலிர்த்து, சுய நினைவுக்கு வந்து வண்டியை தேடுவதற்கு முன் வண்டி மாயமாய் மறைந்தது.

திக்கு தெரியாத காட்டில் நுழைத்தவள் போல திரிந்தாள் மும்பையின் சாலையில்,
தட்டு தடுமாறி ரயில் நிலையத்தை வந்து அடைந்த ரூபினிக்கு பசியும், அசதியும் சேர்ந்து மயக்கம் ஏற்படும் நிலையில் வந்து அமர்ந்தவள் சற்று கண் அயர்ந்து விட்டாள்.

மணி இரவு 10 இருக்கும்,
கண் விழித்த ரூபினியின் மனக்குரல் "காலுல பட்ட காயத்துக்கு மருந்து போடுறதுக்குள்ள, கண்ணுல பட்ட மாதிரி ஆயிடுச்சே" என்று கலங்கியது.

தன்னக்குள்ளே புலம்பிக்கொண்டு இருந்த,
ரூபினியின் கண்ணிற்கு புதுக்கோட்டை ஆதி காலத்து அலங்கார மாளிகை என்று பெயர் பொறித்த துணிப்பை ஒன்று கண்ணில் பட்டது, துரத்தி ஒடியவளுக்கு ஏமாற்றம் மட்டுமே மிச்சம்,

மக்கள் மத்தியில் எங்கே மறைந்தது அந்த ஊரின் பெயர்,
நாம் கண்டது கனவா, நினைவா போன்ற கேள்விக்கு விடை தெரியாமல், மொழியும் புரியாமல் கழிந்தது அந்த நாழிகை அவளுக்கு.

அதிகாலை 5 மணியை நெருங்கிக்கொண்டிருந்தது,​
" சீக்கிரம் சுத்தம் பண்ணு இல்ல, நம்ம காண்டாக்ட் கிளோஸ் ஆயிடும், சீக்கிரம்" என்று மராத்தியில் கட்டளையிட்ட படியே வந்துக்கொண்டு இருந்தார் அண்ணாச்சி என்ற அடைமொழி கொண்ட இராஜேந்திரன்.

ரூபினிக்கு பசி வயிறை கிள்ளியது,

அருகில் அயர்ந்து தூங்கிக்கொண்டு இருந்த,
சிங் குடும்பம் வைத்திருந்த பிஸ்கட் யை எடுக்க முயன்ற ரூபினியை, பார்த்த அந்த குடும்பத்தை சேர்ந்த முதியவர் அவளை திருடி என்று முடிவு செய்து " திருடி, திருடி" என்று அவரது மொழியில் கத்தி, அவளை துரத்த முயன்றார்.

இதை பார்த்த அனைவரும் அவளை துரத்த, ஒடிவந்த ரூபினியை அண்ணாச்சி பிடித்தார்.
"அண்ணா காப்பாத்துக்க, நான் திருடல" என்று மூச்சிரைக்க,எளிதில் அறிய கூடிய தமிழகத்தின் சாயலோடு, நடந்ததை சொன்னவளை காப்பாற்றினார் அண்ணாச்சி.
ஒடிவந்தவரிடம் அவள் திருடி அல்ல,
பசிக்காக உணவு எடுக்க வந்தாக ஹிந்தியில் சொன்ன பின்பே கூட்டம் கலைந்தது.

அவளுக்கு உணவு கொடுத்து, ரயில் நிலையத்தில் அவரது கான்ட்ராக்ட் கீழ் வேலையும் கொடுத்து தனக்கு தெரிந்த தமிழ் பெண்களிடம் தங்க உதவி செய்தார் அண்ணாச்சி.
ரூபினியும், தனக்கு ஒரு இடம் கிடைத்தால் போதும் என்று ஒத்துக்கொண்டாள்.
6 மாதம் கழிந்த நிலையில்.
ரூபினியின் உயிர்தோழி என்று பிறர் அடையாளம் காட்டும் அளவிற்கு நெருங்கிய நண்பர்களாய் இருந்தனர். ஷோபனாவும் , ரூபினியும்.
ஷோபனா பாரில் நடன மங்கையாக வேலை செய்பவள்,

ஷோபனா தினமும் கட்டு கட்டாக பணத்தை கொண்டு வந்து ரூபினியிடம் காட்டும் போது ரூபினியின் கேள்வி ஒன்றாக தான் இருக்கும், " எப்படி உனக்கு இவ்வளவு கிடைக்குது".​
இவள் தனது குடும்பம் வாரம் ஒரு முறை மணிஆர்டர் செய்து கொண்டே இருப்பாள், அதற்கு காரணம் அவளது அம்மாவும், அவளுடைய காதலனும் தான்,

ஷோபனாவுக்கு பணம் தான் பிரதான குறிக்கோள் என்றாலும்,
கண்ணியத்தை விட வில்லை, என்பது ஆச்சரியமான விஷயம்.

நாட்கள் செல்ல இவர்களின் நட்பு வளர்ந்து கொண்டே இருந்தது,
ஷோபனா தனது காதலனை பற்றியும் அவன் மீது தான் கொண்ட காதலை பற்றியும் சொல்லி சொல்லி தனது காதலில் கரைந்துக்கொண்டு இருப்பாள்.

ரூபினிக்கு காதல் மீது காதல் வர காரணமே ஷோபனா தான்.
இதற்கிடையில்,
அண்ணாச்சி இரயில் தண்டவாளங்களையும், மற்ற இரயில் தயாரிக்கும் பொருட்களையும் முறைகேடான வகையில் விற்றத்தாக சொல்லி, அவனது காண்டாக்ட் ரத்து செய்து, அவனை கைது செய்து கொண்டு சென்றனர்.

இது நடந்து ஒரு வாரம் கடந்த நிலையில் ரூபினி வீட்டிலே இருந்தாள், அந்த நேரம் ஷோபனாவுக்கு ஒரு தந்தி வந்தது,
தந்தி வந்ததும், பதறிய ரூபினி ஷோபனா வேலை செய்யும், பாரிற்கு கிளம்பி சென்றாள்,
வாழ்க்கையின் வழிகாட்டுதலின் படிதானே வாழ்ந்தாக வேண்டி இருக்கிறது, அவன் இயற்றிய நாடகத்தில் நாம் நடித்துக்கொண்டு இருக்கிறோம்,
அடிக்கடி ரூபினி நினைத்து நினைத்து பார்க்கும் ஒரே வினா, யார் அவன், எதற்காக என்னை போகவிடாமல் தடுத்தான் என்பது தான்.
அதற்கான விடை மட்டுமின்றி இவள் வாழ்க்கைகான விடையும் இங்கு தான் இருக்கிறது என்பது இவளுக்கு எப்படி தெரியும்.
பாரில் வந்து நின்ற அவளின் மனம் நடுங்கியது, இது தான் முதல் தடவை மும்பை மாநகரத்தின் மையத்தில் இருக்கும் ஒரு இடத்திற்கு ரூபினி வருவது.
வாசலில் வந்து தயங்கி நின்றவளை தூரத்தில் இருந்த, ஷோபனா பார்த்தும் இவளை தேடி வந்து விட்டாள்.
"வா டீ, என்ன இந்த பக்கம்" என்று கிண்டல் அடித்த ஷோபனாவிடம் தந்தியை கொடுத்தாள் ரூபினி.
தந்தியை படித்த ஷோபானாவிற்கு அழுகையை அடக்க முடியவில்லை. அதற்கான காரணம் அவள் சொல்லும் நிலையிலும் இல்லை.
முதலாளியிடம் தனக்கு விடுப்பு கொடுக்குமாறு கேட்டுக்கொண்டிருந்தாள் அதுவும் ஒரு மாதம்.
விடுப்பு கொடுக்க தயங்கிய முதலாளி பின் ஒரு நிபர்ந்தனை விதித்தார்.
"ஷோபனா உனக்கு நல்ல மார்க்கெட் இருக்கு, நீ போயிட்டா எங்களுக்கு ஒரு ஆள் குறையும் அதுக்கு ஒரு ஆள் சேர்த்து விட்டு போ, நான் எதுவும் சொல்லல " என்று முதலாளி தோரணையில் பேசினார்.
அவளை விடுவிக்க கிடைத்த ஒரே துருப்பு சீட்டு ரூபினி தான். ரூபினியை சம்மதிக்க வைக்க வேண்டும் என்பது மட்டுமே ஷோபனாவின் நினைவில் ஒடிக்கொண்டு இருந்தது.
"ரூபினி எனக்காக ஒரே உதவி மட்டும் செய்றீயா, " நான் வர வரைக்கும் இங்க நீ வேளை மட்டும் பாத்தா போதும்," என்று கையை பிடித்து கெஞ்சினாள்.

இவளும் சாி என்று ஒப்புக்கொண்டாள், இவளை அங்கு அமர்த்தி விட்டு, ஷோபனா அவள் ஊருக்கு சென்றாள்.
முதலாளி, ரூபினியை அங்குள்ள பணிப்பெண்களிடம் அறிமுகப்படுத்தி, அவளை கவனித்துக்கொள்ளுமாறு சொல்லியப்பின் சென்றார்.
அங்குள்ள பெண்களில் ஒருத்தி இவளுக்கு விளக்கலானாள்,
"ரூபினி இது ஒரு பார்ட்டி நடக்குற இடம், இதுல பணக்காரங்க பிசினஸ் பார்ட்டி குடுப்பாங்க, இதுல நம்ம மது பானங்களை பரிமாறனும், நல்ல சாப்பாடும் கிடைக்கும், இங்குள்ள பெண்கள் கிட்ட யாரும் தப்பா நடக்கமாட்டாங்க, இத வச்சி நடத்துற ஆளுங்க நம்மக்கு பாதுகாப்பா இருப்பாங்க, இந்த மாதிரி பார்டில தான் சோப்னா டான்ஸ் ஆடுவா, நீ பயப்படாத ரூபினி நாங்க இருக்கோம்" என்று தேற்றினாள்.
எது நமக்கு கிடைக்கும் என்று இருக்கிறதோ, அது கிடைக்காம போகுமா என்று யோசித்து அரைக்குரையான மனதோடு எற்றுக்கொண்டாள்.
நாட்கள் சென்றன, ஷோபனா வருவதற்கான அறிகுறியே தெரியவில்லை.
ஒரு நாள் காலையில் வழக்கம் போல வேலைக்கு சென்ற ரூபினியின் வாழ்க்கையில் திருப்பம் ஏற்பட்டது.
இவள் உள்ளே நுழையும் போது, மணி 8 இருக்கும்,
அங்கு ஒருவர் இவளுக்கு முன்பாகவே வந்து முதலாளியிடம் பேசிகொண்டுயிருந்தார், அவன் 30 வயது உடைய இளைஞன், நல்ல நிறம், சிவந்த இதழ், கருத்த கேசம், தாடியில்லாமல், மீசையும் அதிகமில்லாமல் ஒரு முகம், கூர்ந்த பார்வை, கூரான முக்கு, டீ சர்ட் மற்றும் ஜீன்ஸ் அணிந்து, வாசனை திரவியத்தின் வாசனை அந்த அறையை ஒரு தூக்கு தூக்கியது.

இவள் உணர்ந்த, அந்த வாசனை அவனாக தான் இருக்கக்கூடும் என்று நினைத்து வந்தவள், அவனை நெருங்குவதுக்குள்ளே வேறு வழியில் அவன் சென்று விட்டான்.
இப்போதும் அவன் முகத்தை பார்க்க முடியாமல் போயிவிட்டது. ஏமாற்றத்தின் வழியும், கோபத்தின் உச்சியில் இருந்தாள் ரூபினி.
மறந்தே போயி விட்டேன், ரூபினி எப்படி இருப்பாள் என்று சொல்லவே இல்லையே,
நல்ல நிறம், அகன்ற விழிகள், குறைந்த உயரம், நேர்த்தியான உடை, அளந்து பேசும் வார்த்தை, நல்ல பெண் குணத்திலும், நடத்தையிலும், பொறுமை, என்று வாழ்பவள்.
சில தினங்கள் கடந்த நிலையில்,
ஒரு பணக்காரர் விட்டில் விருந்து நடப்பாதாகவும், அதில் மதுபானங்களும் வழங்க இருப்பாதாகவும் சொல்லி, இங்கு வேலை பார்க்கும் பெண்களை அழைத்து சென்றனர், அதில் ரூபினியும் சென்றாள்.

அந்த பணக்காரரின் வீடு நம் கதாநாயகன் வீடு, சுமன். அவன் தான் அன்று அவளை தடுத்தது, என்று கண்டுபிடித்த ரூபினி.
பார்ட்டி நடக்கும் இடத்திலே சென்று சட்டையை பிடித்து, " என்டா என் வாழ்க்கை கெடுத்த" என்று கதறினாள்.
இதை சற்றும் எதிர்ப்பார்காத சுமனால் எற்றுக்கொள்ளவே முடியவில்லை.
கோபத்தில் அவளை நிறுத்தாமல் பல தடவை கன்னத்தில் அறைந்து விட்டான்.
இது சுமனின் தொழில் ரீதியான பார்ட்டி, தன் தாயும், தந்தையும் இறந்தப்போது நஷ்டத்தில் இருந்த, தொழிலை முதல் நிலைக்கு கொண்டு வந்ததால், அவனது கம்பெனியில் அவனை கெளரவிக்க கொடுக்கும் பார்ட்டி, இதில் தான் இவனுக்கு ஒரு பெரிய வெளி நாட்டு கம்பெனியோடு ஒப்பந்தம் செய்து கொள்ள போகிறான்.

இதில் ரூபினி வந்து பிரச்சனை பண்ணப்போக கோபம் அடைந்த சுமனின் கோபம் தலைக்கு ஏறியது.
இந்த பிரச்சனை அவனது தொழிலை பாதிக்கவில்லை, என்றாலும் அவனது மனதை பாதித்து தான் இருக்கும்.
வேலையில் மும்மரமாக இருந்த சுமனுக்கு இவளின் நியாபகம் வந்ததே இல்லை, அன்று அவன் அந்த வீடியோவை பார்க்கும் வரைக்கும்,
" நீ இந்த மாதிரி பண்ணிருக்க கூடாது" என்று கேப்ஷனோடு வந்த வீடியோவை பார்த்த சுமனின் இது வரை ஏற்படாத ஒரு வலி ஏற்பட்டது.
பல பெண்களோடு படுக்கையை பகிர்ந்த சுமனுக்கு, மனதை பகிர்ந்துக்கொள்ள ஒரு துணை இல்லை என்பது தான் உண்மை.
அன்று அவன் மனம் ஒரு பெண்ணிண் மனதை பகிர்ந்துக்கொள்ள முற்பட்டது. இது வரை ஏற்படாத சலனமும், கவலையும் அவனது மனதை குடிக்கொண்டது.
இது வரை நீங்கள் இந்த கதையை தொடர்ந்து படித்துக்கொண்டு இருக்கிறீர்கள் என்றால், உங்களுக்கு விளம்பர இடைவெளியின்றி விழிகளை ஒரு நிமிடம் முடிய இடைவேளை..........!
நேராக காரை எடுத்துக்கொண்டு, அந்த பாரில் அவளை தேடினான், அவள் அந்த நிகழ்வு நடந்ததிலிருந்து வரவில்லை என்றும் விவரம் தெரியவில்லை என்றும் சொல்லி, அவளது வீட்டின் விலாசம் கொடுத்தனர்.
அவளை அவளது விட்டில் சந்திக்க சென்றான், பல முறை கதவை தட்டியும் பதில் இல்லை,
கதவை உடைத்து உள்ளே சென்று, மயங்கிடந்த ரூபினியை தூக்கிக்கொண்டு மருத்துவ உதவிகள் செய்தான், முதல் முறையாக ஒரு பெண்ணை தவறான எண்ணத்தில் தொடாமல்.

பல மணி நேரத்திற்கு, பின் கண்களை திறந்த ரூபினிக்கு, சுமனின் முகம் பளிச்சென்று தெரிந்தது.
பயத்தில் தன் காலையும், கண்ணையும் இழூத்துக்கொண்டாள்,
"சாரி, நான் உங்கள அடிச்சிட்டேன், நான் உங்கள ஏதும் பண்ணலையே, ஏன் அப்படி நடந்துக்கிட்டீங்க" என்றான் சுமன் கனிவோடு.
அன்று வரை நடந்ததை விவரித்தாள்,
சுமன், " நான் உங்கள காப்பாத்தி இருக்கேன், அவங்க பொண்ணூங்கள கடத்திட்டு போயி, அவங்களை வச்சி போதை பொருள் கடத்துவாங்க, உங்களுக்கு விவரம் தெரியாம வந்துட்டீங்கனு தெரிச்சி தான் காப்பாத்துன," என்ற சுமனின் பேச்சி, அவளது கன்னத்தில் நிலை குத்தி நின்றது.
எனக்கும் யாரும் இல்ல, உங்களுக்கும் யாரும் இல்ல,
நீங்க என் வீட்டுல வந்து தங்கி தோட்ட வேலை, சமையல் வேலை பாருங்க என்றான், மரியாதையோடு அவன் கண்ணில் இரக்கம் மட்டும் இருந்தது.
நாட்கள் சென்றன, அன்பு அடுத்து கட்டத்தை கடந்தது, காதல் இருவரின் மனதில் மலர்ந்தது.
முதல் காதல் இருவரின் மனதிலும், திருமணம் செய்துக்கொள்ள முடிவு செய்து,
மகாலெக்ஷமி மந்திரில் திருமணம் செய்து கொண்டனர், இவன் வாழ்க்கையில் இவன் பழகிய பெண்கள் தகாத பழக்கம், எல்லாம் முடிவுக்கு வந்தது.
மும்பையை விட்டு, சென்னைக்கே வந்துவிட்டனர்.
இவன் புது மனிதனாக பிறந்து வாழ ஆரம்பித்தான், திருமணம் முடிந்து முன்று மாத நிலையில்,

சுமனின் உடல் நிலை பாதிக்கப்பட்டது, அடிக்கடி ரத்தமாக வாந்தி எடுப்பது, தீடீரென உடல் எடை குறைப்பு அவனால் தனது உடல் நிலையில் மாற்றம் எற்படுவதை உணர முடிந்தது,
மருந்துவர் சுமனுக்கு H.I.V இருப்பதாகவும், அது மட்டுமின்றி ரூபினிக்கும் H.I.V இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

வாழ்க்கையில் கிடைக்காத வரம் கிடைத்தது போல கிடைத்து, காணாமல் போய் விட்டதே என்று நினைத்து வேதனை அடைந்த சுமனின் ஆயுட்காலம் குறைந்த காலம் என்பதை எப்படி, தனது காதல் மனைவியிடம் சொல்வது, அவளுக்கு உலகமே நான் தானே நானும் இல்லை என்றால் அவளின் நிலை.
என்ற எண்ணுகையில் அவன் இதயம் வெடித்து சிதறுவது போல வலித்தது.
வெளியில் ஏதும் தெரியாமல், தனது கழுத்தில் இருக்கும் தாலியை எடுத்து பார்த்துக்கொண்டு இருந்தவளை, அவனால் விட்டு பிரிய ஒரு நிமிடம் கூட மனமில்லை.
ஒடி அவளின் மடியில் படுத்துக்கொண்டு ஒரு குழந்தையை போல அழ ஆரம்பித்தான்.
தன்னால் அவளும் H.I.V நோயாளி என்பது இந்த அழுகைக்கான ஒரு முக்கிய காரணம்.
அன்றிலிருந்து தனது அனைத்து சொத்துக்களும் தனது மனைவி ரூபினிக்கு பின், அனாதை இல்லத்துக்கு எழுதி வைத்து இருந்தான்.
இருவரும் இணை பிரியாமல் அன்போடு வாழ்ந்து வந்தனர்,
சுமனின் இறுதி காலம் நெருங்கிக்கொண்டு இருந்தது, காதலோ இறுதி இல்லாமல் சென்று கொண்டு இருந்தது.
அன்று அவன் இயற்கை எழுதும் இறுதி நாள் வந்தது,
"ரூபி, நான் உனக்கு நல்ல கணவனா இருந்து இருக்கேனா, நான் செத்துருவேனு நினைக்கிறேன், நான் இல்லாம நீ எப்படி" என்ற சுமனிற்கு இருமலில் இரத்தம் கலந்து வந்தது.
"ஏன் இப்படியெல்லாம் பேசுறீங்க, நீங்க இல்லாம நான் யாருக்காக வாழனும், சொல்லுங்க, உங்க உயிர போகுற ஒரு நிமிசத்துக்கு முன்னாடி என் உயிர் போயி இருக்கும்" - என்றாள் ரூபினி கண்ணீல் நீரோடு.
"எனக்கு என்ன நோயின் தெரியுமா உனக்கு, அது உனக்கும் இருக்கும்னு சொல்லுறாங்க" என்ற சுமனால் பேச முடியவில்லை.
"எனக்கு தெரியும்," என்ற அவளின் பார்வையை உண்மையை பரிமாறியது.
சுமனின் உயிரை கையில் பிடித்துக்கொண்டு இருந்தான்,
ரூபினி சுமனை இறுக்கி அணைத்துக்கொண்டாள், சுமனின் உயிர் கொஞ்சம் கொஞ்சமா சென்றுக்கொண்டு இருந்தது,
இறுகிய ரூபினியின் கை இளகியது, ஆம், சுமனிற்கு முன்னால் அவள் இறந்து விட்டாள்,
சுமனிற்கு அவர்களது திருமணம் நியாபகம் வந்தது,
தாலியை சுமன் கட்டிவிட்டப்பின், அவனின் காலில் விழுந்த ரூபினி,
" ஏங்க, என் காதல் மேல சத்தியமா என் உயிர் உங்களுக்கு முன்னாடி போகனும் னு ஆசிர்வாதம் பண்ணுங்க" என்று கேட்டாள்.
அவள் இறந்ததை தாங்கிக்கவும் முடியவில்லை, கதறி அழுவும் அவனிற்கு தெம்பும் இல்லை, ஏனெனில், அவள் இறந்ததை அறிந்த பின்பு இப்போ அவன் உயிர் இல்லை.
இருவரின் உயிர் இவ்வுலகத்தில் இல்லை.
வேகமாக சென்று கொண்டு இருந்த மிதுனின் காரை சடன் பிரேக் போட்டு, ரூபினி சுமன் இல்லம் என்று பெயர் இடப்பட்ட இல்லத்தின் முன்பு நின்றது.
அவர்கள் வாழ்ந்த இல்லத்தின் பின், அவர்கள் இருவரின் உடலை அடக்கம் செய்து கல்லறை வைத்து இருந்தனர்.
இவர்களது இல்லம் இப்போது,
தாய்,தந்தை இல்லாமல் இருக்கும் குழந்தைகளுக்கு கல்லூரி படிப்பு முடியும் வரை தங்கி படிக்கும் இலவச விடுதியாகவும், ஒரு பகுதி நூலகமாகவும் செயல் பட்டு கொண்டு இருக்கிறது.

அவர்களின் தொழிலில் இருந்து வரும் பணம், இந்த மாணவர்களின் படிப்பிற்கு உதவியது.
காரில் இருந்து இறங்கி, அவர்கள் கல்லறை இருக்கும் இடத்திற்கு சென்று மலர்கொத்தை வைத்து கண்களை முடி கொண்டு இருந்தான்,
சிறிது நேர கண்களை திறந்தப்பின்,
அருகில் இருந்த பூங்காவில் சென்று அமர்ந்தான்.

மிதுனின் மனக்குரல், " வாழ்க்கையின் வழி எப்படி போகுதுனு யாருக்கு தெரியும், நீங்க இரண்டு பேரும் தோற்றவங்கனு சொல்லுறதா, இல்ல அன்பால ஜெயிச்சவங்கனு சொல்லுறதா, நீங்க இன்னக்கி ஜெயிச்சிருக்கீங்க,
ஒவ்வொரு இயக்குனரும், கதா ஆசிரியரும் தேடி அலையிறது, கதையின் கரு வ தான், அப்படி தேடி அலைச்சிக்கிட்டு இருக்கும் போது ஒரு நாள் உங்க கதைய கேட்கும் வாய்ப்பு கிடைச்சிது,
உங்க கதைய நான் படம் எடுத்தேன், சிறந்த இயக்குனர் னு தேசிய விருது குடுத்துருங்காாங்க,வாங்க போறேன் நீங்களும் என்னோடு வாங்க, உங்க ஆசி எனக்கு வேணும்" என்று பெரு மூச்சி விட்டு எழுந்து நடக்கலானான்.
ஒருத்தவங்க நல்லவங்களா வாழ்றதுக்கும், கெட்டவங்களா வாழ்றதுக்கும் சந்தர்ப்ப சூழ்நிலை மட்டும் தான் காரணம்,
நீங்க நல்லவங்களா, கெட்டவங்களா னு எனக்கு சொல்ல தெரியல, ஆனா, நீங்க உண்மையானவங்க தான்,
என்று யோசித்தப்படியே ஒரு கணம் மறு படியும், கல்லறையை பார்த்த மிதுனின் கண்களில், இருவரின் கல்லறையின் மீது பல நூறு ரோஜா பூங்கொத்துகள் நிரம்பி கிடந்த காட்சி தென்பட்டது,
வாழட்டும் இரு ஜீவன்கள் என்றும் வாசத்தோடு.
- மீனாக்ஷி சிவக்குமார்.​
 
Top Bottom