Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


வான்சூழ் உலகு - Comments

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
607
Reaction score
780
Points
93
சகாப்தம் வாசகர்களுக்கு அன்பு வணக்கம் 🙏🙏🙏,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டி ஆரம்பமாகிவிட்டது.💃💃💃💃 உங்களுக்கு விருப்பமான கதைகள் பல இடம்பெறவிருக்கின்றன. அதில் இந்த கதையும் ஒன்றாக இருக்கலாம். வாசித்துப் பாருங்கள். பிடித்திருந்தால் தொடர்ந்து வாசித்து மகிழுங்கள். அப்படியே பின்னூட்டம் கொடுத்து எழுத்தாளரை ஊக்கப்படுத்துங்கள். 👍👍👍

நன்றி மக்களே...
- நித்யா கார்த்திகன்
 
Last edited:

Sanraj

New member
Messages
2
Reaction score
2
Points
3
அத்தியாயம் 3


பெங்களூருவில் ஆங்கிலப் புத்தாண்டின் கொண்டாட்டத்திற்காக நண்பர்கள் யோகேஷ் மற்றும் லாவண்யாவுடன் அஷ்வினும் சென்றிருந்தான்


"நீங்க ரெண்டு பேரும் லவ் பண்றீங்க. ஓகே. நீங்க சேந்து வர்றதுல ஒரு நியாயம் இருக்கு. என்னை ஏன்டா இழுத்துட்டு வந்தீங்க. நியூ இயர் அதுவுமா யூட்யூப்ல வீடியோ அப்லோட் பண்ணோமா... சப்ஸ்கிரைபர்ஸ் என்ன கமெண்ட் பண்றாங்கனு பாத்தோமா... நாலு கமெண்ட்க்கு ஹார்ட்டத் தட்டி விட்டுட்டு ஒரு டின் பீர அடிச்சோமா... கவுந்து படுத்தோமானு இருந்துருப்பேன். நமக்கு இந்த கூட்டம்னாலே பிடிக்குறதில்ல" என்று அஷ்வின் புலம்பியபடியே வந்தான்


"எங்க ரெண்டு பேரயும் இன்ட்ரொடியூஸ் பண்ணி வச்சதே நீதான். நாங்க கமிட் ஆயிட்டோங்கறதுக்காக உன்னை சிங்கிளா விட்டுட்டு, நாங்க மட்டும் சுத்த முடியுமா. நீயில்லாம எப்புடிடா" என்றான் லாவண்யாவின் தோளில் கையைப் போட்டபடி வந்த அஷ்வின்


"நான் இல்லாம இந்த ஊர்ல ஒரு ரூட்டும் தெரியாது. அப்படி தான" என்று கேட்டான் அஷ்வின்


"அடங்குடா... நீ இல்லைனா நாங்க கூகிள் மேப்புல பாத்துட்டே வந்து சேந்துருப்போம்" என்ற லாவண்யா அஷ்வினின் மேல் கையைப் போட்டு இழுத்துச் சென்றாள்


மூவரும் ஆளுக்கொரு ஷாட்டை முதலில் உள்ளே இறக்க, அது போதவில்லை என்று அடுத்தடுத்த ஷாட்டாகக் குடித்துக் கொண்டே இருந்தனர்


போதையேறிப் போக தனது அலைபேசியை எடுத்துப் பார்த்த அஷ்வின் "மச்சி... என் மொபைல் சாகப் போகுதுடா" என்றான்


"உங்க வழக்கப்படி எரிப்பீங்களா புதைப்பீங்களாடா" என்று யோகேஷ் கேட்க


"ம்ம்ம்... சாவுறதுக்கு முன்னாடி சார்ஜ் போட்டுக் காப்பாதுவோம்டா லூசுப்பயலே" என்றான் அஷ்வின்


"அப்பறம் என்ன இதுக்கு வெட்டியா பேசிட்டு இருக்கீரு" என்று யோகேஷ் அவன் சட்டையைப் பிடித்துக் கேட்க


"டேய் வெண்ணைகளா... டீசன்ட்டா பேசுங்க" என்றாள் லாவண்யா அடாவடியாக


"லாவ்ஸு... என் ஃபோன எப்படியாச்சும் காப்பாத்துடி. மை மதர் வில் கால் மி எனி டைம்" என்றான் அஷ்வின் குழறியபடி


"காம் டவுன் அஷ்வின். ஸ்ட்ரையிட்டா போய் லெஃப்ட் எடுத்து ரைட்ல பாத்தினா ஒரு ரூம் இருக்கும். அங்க கண்டிப்பா சார்ஜர் இருக்கும்" என்றாள் லாவண்யா கையைத் தாறுமாறாக ஆட்டி


அஷ்வினும் அவள் காட்டிய திசையில் நிதானமாகச் சென்று கதவைத் தட்டி "மே ஐ கம் இன்" என்று கேட்க


உள்ளேயிருந்த பெண் குரல் "ஹூ இஸ் தட்" என்று கேட்கும்போதே கதவு தானாகத் திறந்து கொண்டது


உள்ளே சென்ற அஷ்வின் "எக்ஸ்க்யூஸ் மீ... லெட் மீ சார்ஜ் மை மொபைல் ஹியர். தேங்க் யூ" என்றபடி ஏற்கனவே ப்ளக்கில் சொருகியிருந்த சார்ஜரில் அலைபேசியைச் சேர்த்துச் சொருகினான்


அவன் அலைபேசியை வைத்து விட்டுத் திரும்பி பார்க்க, எதிரில் அப்பெண் கீழே கருநிற லெதர் ஸ்கர்ட்டுடன் மேலே வெறும் உள்ளாடையுடன் நின்றிருந்தாள்


அஷ்வின் பதறிப் போய் கண்களை மூடிக் கொள்ள "கெட் அவுட்" என்று கத்தினாள் அப்பெண்


அவசரமாக வெளியே வந்து கதவைச் சாத்திய அஷ்வினுக்கு ஏறிய கொஞ்ச நஞ்ச போதையும் இறங்கி இருந்தது


சிகையைக் கலைத்து மீண்டும் சரிசெய்தபடி அஷ்வின் நண்பர்களிடம் திரும்ப "சார்ஜ் போட்டியா" என்று கேட்டாள் லாவண்யா


"குட்டிச் சாத்தானே எல்லாம் உன்னால வந்ததுடி" என்ற அஷ்வின் அவள் தலையிலேயே மாங்கு மாங்கெனக் கொட்டி வைத்தான்


"வலிக்குதுடா" என்று லாவண்யா பாவமாய் முகத்தை வைத்துக் கொண்டு தலையில் தேய்க்க


"என்னடா ஆச்சு" என்று கேட்டான் யோகேஷ்


"நாசமா போச்சு" என்ற அஷ்வின் ஒரு பெக்கால் தொண்டையை நனைத்தான்


"அதிகமா குடிச்சு, உங்கம்மா கிட்ட என்ன செருப்படி வாங்க வச்சிடாதடா. பிரச்சனை என்னனு மட்டும் சொல்லு மாமா... அய்யா கில்லி மாதிரி தீத்து வைக்கிறேன்" என்றான் யோகேஷ் பந்தாவாக


"இவ சொன்னானு நான் போனேனா. அங்க ஒரு ரூம் இருந்துச்சா. தட்டுனேனா... திறந்துச்சா. போய் சார்ஜ் போட்டுட்டுத் திரும்பிப் பாத்தா... ஒரு பொண்ண பாக்கக் கூடாத நிலைமைல பாத்துட்டேன் மச்சி" என்று அஷ்வின் வருத்தப்பட


"அடிங்க... இதெல்லாம் ஒரு விஷயம்னு பேசிட்டு. இதென்ன தமிழ்நாடா... ஊரே சேந்து கட்டப்பஞ்சாயத்து வைக்க. இது பெங்களூரு மச்சான்" என்றான் யோகேஷ் கூலாக


"போடா... இருக்கறது பெங்களூர்னாலும் தமிழ்நாட்டுப் பையன் தான. அந்த கல்ச்சர் தான வரும்" என்றான் அஷ்வின்


"டேய் கோயம்புத்தூர் மாப்பிள்ளை... விட்டுத் தள்ளு. அந்தப் பொண்ணே பெருசா எடுத்துருக்காது. கவுண்ட் டவுன் ஸ்டார்ட் ஆய்டுச்சு. கமான் பட்டி" என்று அவனைத் தேற்றினாள் லாவண்யா


கவுண்ட் டவுன் முடிந்து புதுவருடம் பிறக்க, அங்கிருந்த அரங்கம் பிரகாசிக்கத் தொடங்கியிருந்தது


நீலம் மற்றும் சிவப்பு வண்ண விளக்குகள் பிரகாசிக்க, அதனிடையில் தோன்றிய சிவப்பு நிற ஃபுல் ஹேண்ட் ஸ்லீவ் அணிந்திருந்த பெண் பாடத் துவங்கி இருந்தாள்


உன் கண்ணில் என் தேகமும் சிக்கியதென்ன
முதல் பார்வையில் இரு மனமும் தொக்கியதென்ன



என்று மயக்கும் குரலில் அந்தப் பெண் பாடத் துவங்க


"ஹே லிரிக்ஸ கவனிச்சியா... அஷ்வினுக்காகவே எழுதுன மாதிரி இல்ல" என்றாள் லாவண்யா யோகேஷிடம்


"ஹே ஆமா... செம கோ இன்சிடன்ட்" என்று யோகேஷ் வியந்து கூறினான்


அவ்வளவு நேரம் தலையில் கை வைத்து அமர்ந்திருந்த அஷ்வின் மேடையை நோக்கிப் பார்த்து விட்டு "அந்தப் பொண்ணு தான்டி இந்தப் பொண்ணு" என்றான் லாவண்யாவிடம்


"அப்போ இவளும் தமிழா... ம்ம்ம்ம்ம் நடத்து நடத்து" என்று லாவண்யா கூற


"பாத்தியா மாமா... விதி உன்னை எங்க வந்து எப்படிச் சேத்துருக்குனு" என்ற யோகேஷ் அவன் தோளைப் பற்றிக் கூற


"ஆக மொத்தத்துல இன்னைக்கு அவக் கிட்டருந்து எனக்கு செருப்படி கன்ஃபார்ம்" என்ற அஷ்வின் நொந்து கொண்டான்


காதலால் மனதினை நிறைத்திட மாட்டேன்
உன்னுருவை மூளைக்குக் கடத்திட மாட்டேன்
காமனின் பானத்தில் கரைந்திட மாட்டேன்
இந்நினைவை நெஞ்சினில் சுமந்திட மாட்டேன்



என்று அவள் பாடுகையில் மேடையிலிருந்தபடி அஷ்வினை நோக்க, அதற்கு பின் அவள் பாடியது எதுவும் அவன் காதில் விழவேயில்லை


நிகழ்ச்சி முடிந்ததும் அலைபேசியை எடுத்து வரலாம் என்றெண்ணி அஷ்வின் மீண்டும் அவ்வறையை நோக்கித் தயக்கத்துடன் சென்றான்


அங்கு சில நபர்கள் நின்று கொண்டு "ஹலோ மேடம்... நிம்ம ஹெசரு ஏனு. இந்து ராத்ரி ஃப்ரீயாகிதீரா" என்று சலசலத்துக் கொண்டிருந்தனர்


"கெட் லாஸ்ட் ஃப்ரம் ஹியர். அதர்வைஸ் ஐ அம் கோயிங் டு கம்ப்ளெய்ண்ட்..." என்று அப்பெண் கத்த


"ப்ரதர்... ப்ரதர்... நிம்ம சமஸ்யே ஏனு" என்றான் இடைப்புகுந்த அஷ்வின்


"சாரு யாரு" என்று அவர்கள் ஒருசேரக் கேட்க


"பாய் ஃப்ரெண்டு" என்றான் அஷ்வின் நெளிந்து கொண்டே


"யாரிகே தம்மா யாரிகே" என்று அவர்கள் மீண்டும் கேட்க


"அவளு" என்றான் அஷ்வின் பொய்யாக வெட்கித்த படி


"ஹௌடா... துக்காளி கல்ச்சுக்கோ" என்று அவர்கள் கூற


"பஹல தேங்க்ஸ் அண்ணா" என்ற அஷ்வின் அவள் கையைப் பிடித்துக் கொண்டு விரைந்து வெளியே அழைத்துச் சென்று விட்டான்


"லீவ் மை ஹேண்ட். யு ஆர் சச் எ கவார்ட்" என்றாள் அப்பெண் கோபத்துடன்


"ஹே ரிலாக்ஸ்" என்ற அஷ்வின் அவள் கையை விடுவிக்க


அவனுக்குத் தமிழ் தெரியாதென நினைத்து "எப்படி தான் கொஞ்சம் கூட தைரியம் இல்லாம இருக்கானோ. பல்லியப் பாத்தா கூடப் பயந்துட்டு ஓடிடுவான் போல. பயந்தாங்கொள்ளி" என்று அவள் முணுமுணுக்க


"ஏ பொண்ணே... எனக்கு நல்லா தமிழ் தெரியும். திட்டணும்னா நேரடியாவே திட்டு" என்றான் அஷ்வின் அவள் முன் சொடுக்கிட்டு


"ஓ தமிழா..." என்றவள் அதற்கு மேல் பேசத் தயங்க


"இங்க இருக்கறது சேஃப் இல்ல. போலாம்" என்றான் அஷ்வின் அவசரப்படுத்தி


"நான் இன்னும் ட்ரெஸ் கூட சேஞ்ச் பண்ணல... இப்படியே எப்படி" என்றாள் அவள் சங்கடத்துடன்


"இத மாட்டிக்கோ. அவங்க மறுபடியும் வந்துடப் போறாங்க" என்றவன் தனது ப்ரான்ஸ் நிற லெதர் ஜாக்கெட்டை அவளிடம் நீட்டினான்


அதை வாங்கி அணிந்து கொண்டே "எப்பவும் இப்படித் தானா... பிரச்சனைனா ஓடி ஒளிஞ்சுப்பியா" என்று அவள் கேட்க


"நான் ஓடணும்னு நினைச்சா... உன்னை அங்கயே விட்டுட்டு வந்துருப்பேன்" என்றான் அஷ்வின் முன்னே நடந்தபடி


அவன் அணிந்திருந்த வொயிட் டீஷர்ட்டயும் வெளிர் நீலநிற பேண்ட்டையும் கவனித்தவள் "ஜாக்கெட் போட்ருந்த வரைக்கும் ஒன்னும் தெரியல. இப்போ அயர்ன் பாக்ஸ் வச்சுத் தேச்ச மாதிரி இருக்க" என்று கூறிவிட்டுச் சிரிக்க


"நீங்க கூட ஜீரால போட்டு எடுத்த குலாப் ஜாமுன் மாதிரி இருக்கீங்க. அப்படினு நான் சொன்னா என்ன பண்ணுவீங்க.... அய்யோ என்ன பாத்து கமெண்ட் அடிச்சுட்டான். என் மானம் போச்சு மருவாதைப் போச்சுனு ஊரக் கூட்டிருப்பீங்கள்ல... கைய்ஸ் ஹேவ் ஃபீலிங்க்ஸ் டூ" என்று அஷ்வின் கூறிக் கொண்டிருக்க


அவன் பேச்சில் கவனத்தைச் சிதறவிட்டவள் கீழே இருந்த ட்ரெய்னேஜ் கவரில் ஹீல்ஸை விட்டுக் காலை பிசக்கிக் கொண்டாள்


வலியில் "ஆஹ்ஹ்... அப்பா" என்று அவள் கத்த


"ஓ ஷிட்... நான் தான் அதிகமா பேசி உங்கள அனாய் பண்ணிட்டேனோ" என்றவன் அவள் ஹீல்ஸைக் கைகளில் எடுத்துக் கொண்டு அவளுக்குத் தோள் கொடுத்தான்


அவனை இறுகப் பற்றிக் கொண்டவள் "இட்'ஸ் ஓகே. விடுங்க நான் எடுத்துக்குறேன்" என்று ஹீல்ஸை வாங்கக் கை நீட்டினாள்


"எவ்ரிதிங் இஸ் ஃபைன். கம் ஐ வில் ட்ராப் யூ" என்றவன் அவ்வழியே வந்த கேப்பை நிறுத்தி அவளை உள்ளே அமர வைத்தான்


"இதெல்லாம் செய்யணும்னு உங்களுக்கு எந்த அவசியமும் இல்ல" என்று அவள் சிரமப்பட்டு அமர்ந்தபடி கூற


"ஃபீல் ஃப்ரீ. யு ஆர் நாட் பாதரிங் மீ அட் ஆல்" என்றான் அஷ்வின் அவளருகில் அமர்ந்து கொண்டு


கேப் நகரத் தொடங்க "உங்க ஃப்ரெண்ட்ஸ கழட்டி விட்டுட்டீங்க போல" என்று அவள் கேட்டாள்


"அவங்களுக்கு என்ன ஜோடியா சுத்தித் திரிஞ்சுட்டு விடியல்ல ரூம்க்குப் போய் சேந்துருவாங்க. மே பி தே வில் ஸ்டே டுகெதர் டுனைட்" என்றான் அஷ்வின்


"உங்க கேர்ள் ஃப்ரெண்ட பார்ட்டிக்குக் கூட்டிட்டு வர்லையா" என்று அவள் அடுத்ததாய்க் கேட்க


"இருந்தா தான கூட்டிட்டு வர்றதுக்கு. ஐ அம் அஷ்வின், கிவ்வன் பர்த் பை பாக்கியம். பை த வே உங்க பேரென்ன" என்றான் அஷ்வின்


"எதுக்குத் தெரிஞ்சுக்கணும்" என்று அவள் எதிர்க் கேள்வி கேட்க


"அன்ட் சாரி. நீங்க ட்ரெஸ் மாத்தும் போது தெரியாம நுழைஞ்சிட்டேன். ஐ நோ தட் இஸ் சோ ஆக்வார்ட்" என்றான் அஷ்வின் அவள் முகத்தைப் பாராமல்


"சான்ட்ரா என் பேரு. க்ரோவ்ன் அப் பை மகிமை ராஜா" என்றாள் அவள் பதிலுக்குப் புன்னகைத்தபடி


திடீரென்ற தருணத்திலே
கண்ட காட்சியின்
லட்சணத்தில் லயித்திருந்தேன் !
மீண்டும் முன்னால்
தோன்றி தோற்றத்தினால்
இன்னும் இழுத்தாய் !
பேச்சினால் பெரிதும்
களவாடிக் கண்ணாமூட்சி
ஆடிய அனார்க்களியே !
உனக்கு உண்மையில்
தகுந்தவன் தானோ
இந்த இளையவன் ?
Super
 

Ziya😍😍

Member
Messages
44
Reaction score
27
Points
18
Supera irku sagi story.valakkam pola unga speciality more characters..ella characterum bangalore vandhu sera pogudhunnu ninaikiren...heroes ellarume super ashwin jeeva maaran arumai...banu ninaichadhu pola house wife aana indhu sariyillaye paarpom.. super sagi all the best sagi.keep rocking😎😎😎💐💐💐♥️♥️
 

Ezhilmathi GS

Active member
Vannangal Writer
Messages
130
Reaction score
162
Points
43
Supera irku sagi story.valakkam pola unga speciality more characters..ella characterum bangalore vandhu sera pogudhunnu ninaikiren...heroes ellarume super ashwin jeeva maaran arumai...banu ninaichadhu pola house wife aana indhu sariyillaye paarpom.. super sagi all the best sagi.keep rocking😎😎😎💐💐💐♥️♥️
Semma guessing 😘
 

Ziya😍😍

Member
Messages
44
Reaction score
27
Points
18
Super sagi bagya magimai raja va paartha piragu avangaluku edhum thonala aana avaruku edho thonudhe 🤔🤔🤔🤔edho vittakurai thotta kurai irkumo..poruthurundhu paarpom..ashwin so sweet frst biryani apramthaan sandai lam😜😜😉😉police kaara maamanar joreeee.. nice move sagi ..waiting for nxt ud
 

Ezhilmathi GS

Active member
Vannangal Writer
Messages
130
Reaction score
162
Points
43
Super sagi bagya magimai raja va paartha piragu avangaluku edhum thonala aana avaruku edho thonudhe 🤔🤔🤔🤔edho vittakurai thotta kurai irkumo..poruthurundhu paarpom..ashwin so sweet frst biryani apramthaan sandai lam😜😜😉😉police kaara maamanar joreeee.. nice move sagi ..waiting for nxt ud
Biriyani for life😉
 
Top Bottom