Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


விடியலை நோக்கி - Comments

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
517
Reaction score
555
Points
93
சகாப்தம் வாசகர்களுக்கு அன்பு வணக்கம் 🙏🙏🙏,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டி ஆரம்பமாகிவிட்டது.💃💃💃💃 உங்களுக்கு விருப்பமான கதைகள் பல இடம்பெறவிருக்கின்றன. அதில் இந்த கதையும் ஒன்றாக இருக்கலாம். வாசித்துப் பாருங்கள். பிடித்திருந்தால் தொடர்ந்து வாசித்து மகிழுங்கள். அப்படியே பின்னூட்டம் கொடுத்து எழுத்தாளரை ஊக்கப்படுத்துங்கள். 👍👍👍

நன்றி மக்களே...
- நித்யா கார்த்திகன்
 
Last edited:

Arungtkp

New member
Messages
1
Reaction score
2
Points
3
டீசர் 1

"ஏலே எடுப்பட்ட பயலே!! உனக்கு கொஞ்சமாவது இங்கிதம் இருக்கா .. எப்ப பார்த்தாலும் பொட்டச்சியோட ஓரண்ட இழுத்துட்டு!! போய் வயல்ல களையெடுக்கிற சனத்துக்கு காபி பொட்டலம் வாங்கியாருவியா .. இங்கன நின்னுட்ட கத பேசிட்டு இருக்கான்!!கிருக்குபய" வெத்தலை பாக்கை இடித்தப்படியே வசைப்பாட்டை பாடிய சங்கிலியாத்தாவை எரிச்சலாய் பார்த்தவன்

" இங்கரு அப்பத்தா.. என்ன மட்டும் திட்டு.. உன் தகரடப்பா பேத்திய நல்லா மெச்சிக்கோ.. அவ ஊருக்குள்ள பண்ற அட்டூழியத்தை எவரும் கேக்கமாட்ரிய... என் சேக்காளி பயலுவ இவளால என் மானமே போது" என வீரவசனமாய் மூச்சு வாங்கி பேசி முடித்த இசையமுதனின் பேச்சை அப்பத்தா கண்டுக்கொள்ளாமல் தன் ஆசை பேத்தியை கொஞ்சிக் கொண்டிருந்தாள் சங்கிலியாத்தா

இதை கண்டவன் மனதில் கோபத்தீ கொழுந்துவிட்டு எரிய தன் தமக்கை என்ன சொன்னாள் கடுப்பாவாள் என்று அறிந்தவன் "என்ன பண்றது இந்த வூட்டுல தவுட்டுக்கு வாங்குன புள்ளைக்கு தான் மவுசு ஜாஸ்தி போல !! " என்ற இசையமுதன் கூற்றை கேட்டதும் காளியாக ஆவதாரமெடுத்தாள் நம் இளமதி ..

டேய் என்று விரட்ட ஆரம்பிக்க அவனும் ஓட என்று ஆரம்பித்து கடைசியில் கைகலப்பில் முடிய அவர்கள் அம்மா கரண்டியோடு அடிக்க வர என அவர்களின் வழமையான சம்பவம் அரங்கேறியது

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

"ஹே மிஸ்டர் வேந்தன் .. நான் உங்களிடம் பேசுனுமே!! கம் டூ மை ரூம் மேன்" என்று கட்டளையிட்டவன் விறுவிறுவென உள்ளே செல்ல அவன் கிடக்குறான் என்ற தோரணையில் காத்து வாங்கி கொண்டிருந்தான் கவிவேந்தன்

"டேய் வேந்தா .. தல கூப்பிட்டு போகாம என்னடா பண்ணிட்டு இருக்க!! காலையிலே வாங்கி கட்டிக்காத" என்ற நண்பனின் கூற்றை கேட்டதும்

" இவன் ஒருத்தன். ..இதெல்லாம் ஊராடா .. செய்.. வேர்க்க விருவிருக்க வந்து உட்கார்ந்தா அதுக்குள்ள இந்த மங்கூஸ் மண்டையன் உசுர வாங்குறான். கொஞ்ச நேரம் உட்கார விடமாட்டாங்க " என்று அழுத்துக்கொண்டே அடுத்த நிமிடம் மங்கூஸ் மண்டையன் இல்ல இல்ல அவனின் மகத்தான பாஸ் முன்னாடி நின்றான்

" மிஸ்டர் வேந்தன் உங்களிடம் ஒரு விசயம் பேசனும்" என்றதும்

"சொல்லுங்க சார்" என்க

"மார்னிங் சாப்பிட்டிங்களா"

தான் கேட்டது சரியா என்று யோசித்தவன் " சார் என்ன
கேட்டிங்க "

மார்னிங் சாப்பிட்டிங்களானு கேட்டேன் என்றதும் அடப்பாவி இதுக்காடா உடனே வரசொன்ன என்று யோசித்தவண்ணம் தலையை ஆட்டினான்

அவன் பாஸோ " நீங்க சாப்பிட்டாலும்‌ நான் சாப்பிடல .. சோ வாங்க எனக்கு கம்பனி கொடுங்க அப்பறம் பேசுவோம்" என்றவன் அவனையும் இழுத்துக்கொண்டு கேபிடேரியா சென்றான்

💚💚💚💚💚💚💚💚💚💚💚

"ஏலே சண்முகம் .. நம்ம பண்ணைக்கார வூட்டு வயலில மட்டும் நல்ல வெள்ளாமையாம் .. ஒரு பூச்சி அடிக்கலயாம் அம்புட்டு ராசி வந்துச்சாம்.. அதும் நெல்லு நல்ல பவுனாட்டம் இருக்குனு அப்படியே சர்கார்ல இருக்கவன் வந்து எடுத்துக்கிட்டானாம் தெரியுமா " என்று டீக்கடை பெஞ்சில் ஓசி பேப்பரை படித்துக்கொண்டே ஆறுமுகம் சத்தமாக உரைக்க அங்கிருந்தவர் பார்வை எல்லாம் இவர் புறம் திரும்பியது

"அவருக்கென்ன.. காச தூக்கி பரண் மேல வச்சுகுர அளவுக்கு கொண்டி மிஞ்சி கெடுக்கு !! அத வச்சு என்ன வேணும்னாலும் பண்ணுவாரு.. பணத்தை தண்ணியா செலவழிச்சு‌ பட்டணத்துல இருந்து எதோ உரமருந்து கொண்டு வந்து தெளிச்சாராம் .. அதான் இம்புட்டு விளைச்சலாம்" என்று இன்னொருவர் நீட்டி முழக்க அங்கிருந்த பெரியவர்

"டேய் மடையன்களா .. மருந்து போட்டு விளைச்சலெடுக்குறதுல என்னடா பெரும இருக்கு.. அம்புட்டும் நம்ம உடம்புக்கு விசம் டா.. வெசனக்கெட்டவன்களா" என்று உண்மையை உரைக்க அதை யாரும் கேட்கும் நிலையில் இல்லை

ஹாய் மக்களே!! இது என்னோட புது முயற்சி .. படிச்சுட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க.. குறைகளும் வரவேற்க படுகிறது.. நன்றி
அருமை
 

தமிழுக்கினியாள்

Active member
Vannangal Writer
Messages
89
Reaction score
180
Points
33
டீசர்லயே மண்வாசம் வீசுது..
கதையில கிராமத்துக்கே கூட்டி போயிடுவனு நம்புறேன்💕💕
 

Narmatha senthilkumar

New member
Vannangal Writer
Messages
15
Reaction score
18
Points
3
டீசர்லயே மண்வாசம் வீசுது..
கதையில கிராமத்துக்கே கூட்டி போயிடுவனு நம்புறேன்💕💕
கண்டிப்பா .. இதே மாதிரி கடைசி வரை மண்வாச இருக்க மாதிரி கொடுக்க ட்ரை பண்றேன் .. லவ் யூ பேபி❤️
 
Messages
56
Reaction score
57
Points
18
விடியலை நோக்கி... யார் யாரோட விடியல நோக்கி போக போறாங்க்கனு தெரிஞ்சுக்க வெயிட்டிங் டியர்.

பாரி, நாதன் அருமையான தம்பதிகள். கவிவேந்தன், ரகு ரெண்டு பேர் ரோலும் சிரிப்புக்கு பஞ்சம் இல்ல. டேய் வேந்து நம்ம செத்தாலும் நம்ம நட்பும் சேந்து நமக்கு முன்ன சாகணும்னு நினைக்குறியே என்ன ஒரு நல்ல எண்ணம். உனக்கு மீடிங்க்னா நீ போகவேண்டியது தான அதென்ன எட்டி மிதிச்சு கீழ தள்ளுன ரகு பச்சபுள்ளையவும் இழுத்துட்டு போற. ரகு செல்லம் சீக்கிரம் இவே பிரண்சிப்ப கட் பண்ணு அப்போதா நீ ஒழுங்கா தூங்க முடியும்.

அய்யோ பாஸ் நீங்க ஏ வேந்துவ லவ் பண்றிங்க. ஒருவேளை நீங்க அதுவா இருப்பீங்களோ? ஹீஹீஹீ... சும்மா ஒரு டவுட் அதா கேட்டேன்.

வாழ்த்துக்கள் டியர். கதை ரொம்ப சூப்பரா மாஸா ஆரம்பிச்சுருக்கு. வெயிட்டிங்க் நெக்ஸ்ட் எபி. கடைசி வரை ஹீரோயின் காட்டலியே கோபால் ஜோகங்கள்...
 

jenitha d krish

New member
Messages
18
Reaction score
8
Points
3
அருமையான எபி... ஸ்டார்டிங் வேற லெவல்.. முக்கியமா நம்ம வேந்தன் மிஸ்டர் வேந்தன்.. அடி தூள்.. எப்பேர்பட்ட ஒரு பாஸ்
 
Top Bottom