- Messages
- 66
- Reaction score
- 66
- Points
- 18
வேரின் தாகம்
அத்தியாயம் - 1
அதிகாலையிலேயே அவளுக்கு விழிப்பு வந்துவிட்டது. இரவு உறங்கினால் அல்லவா விழிப்பதற்கு. எப்பொழுது இந்த நெடிய இரவு தொலையுமென காத்திருந்தவளுக்கு பட்சிகளின் குரல் விடியலின் துவக்கமாய் எப்பொழுது கேட்குமென காத்திருந்தாள். இயற்கை அலாரமாய் பறவைகளின் குரல் ஒலிக்கத் துவங்கியதுமே இவளிடம் பரபரப்புத் தொற்றிக் கொண்டது.
இன்று அவன் வருகிறான். தன்னைக் காண அவன் வருகிறான். அவளின் ஒவ்வொரு செல்களுக்குள்ளும் உற்சாகம் பீறிடுவதை அவளால் உணர முடிந்தது. மளமளவென சமையல் வேலைகளை முடித்துவிட்டு, குளித்து முடித்து அங்கங்கே சின்னசின்னதாய் ரோஜாப்பூக்கள் எம்ராய்டரி செய்யப்பட்ட தனக்குப் பிடித்த மயில் வண்ண சாட்டின்சில்க் புடவையை தேர்ந்தெடுத்து அணிந்தாள். மாநிறமான தன் நிறத்துக்கு இது பொறுத்தமாவென மீண்டும் நிலைகண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொண்டாள்.
ஈரமாயிருந்த கூந்தலை வாரி இருபுறமும் சிறிது முடிகற்றைகளை மட்டும் ஒரு சிறிய கிளிப்பில் அடக்கிவிட்டு கூந்தலை படர விட்டாள். ஓர் சிறிய பொட்டை எடுத்து ஒட்டியவள். அதன் மேல் ஓர் சிறிய சந்தனக்கீற்றை இட்டுக் கொண்டு நிமிர்ந்தாள் கயல்.
அவன் இன்னும் ஏதும் சொல்லவில்லை. எங்கே சந்திப்பதென்று நகத்தைக் கடித்தவாறே அமர்ந்திருந்தவளை தொலைப்பேசி இசைத்து அசைத்தது. சட்டென உயிர் கொடுத்து அலைபேசியை காதுக்கு கொடுக்க அவன் குரல் அமுதமாய் இசைத்து.
“என்ன கெளம்பிட்டயா..”
“ம்ம்ம்ம்...”
“நான் சரியா பத்து மணிக்கு பஸ்ஸ்டாண்ட் வந்துடுவேன். நீ வந்துடு சரியா..?”
“பஸ்ஸ்டாண்டாஆஆ...” இவள் ஆச்சர்யமாய் கேட்க
“ஆமா.. பஸ் பஸ்ஸாண்ட் தானே வரும்.” என்றான் வளவன்.
“நீங்க பஸ்லயா வர்றீங்க...” என்றாள் மீண்டும் ஆச்சர்யமாய்.
“ம் ஆமா.. ஏன் வரக்கூடாதா.. நேர்ல பேசிக்கிலாம் வா..” என்று அதற்கு மேல் அவளை பேசவிடாமல் அலைபேசியை வைத்துவிட, அலைபேசியிலேயே நேரத்தை பார்த்தவள் நேரம் 9:45 காட்டியது. பரபரப்பாய் கிளம்பினாள்.
தன் ஹேண்ட்பேகில், பர்ஸ், கார்ட் எல்லாம் சரியாக இருக்கிறதாவென சரிபார்த்தவள் பணம் குறைந்திருப்பதை கண்டாள். மொத்தமே ஐநூறு ரூபாய் மட்டும் இருக்க இதை மட்டும் வைத்துக்கொண்டு எப்படி என யோசித்துக்கொண்டு நிற்க நேரமில்லை.
வழக்கம் போல அப்பாவிடம் சொல்லிக் கொண்டு வந்து தன் ஸ்கூட்டியை உயிர்பித்தவளை மேலே இருந்து ஓர் அதிகாரக்குரல் தடுத்தது.
“என்னடீ... என்ன எங்கயோ கெளம்பிட்ட மாதிரி இருக்கு...” என்றது அவளது அண்ணி கோமதி.
“பர்சேஸ்க்கு அண்ணி.” என்றவள் அருகில் இருந்த அண்ணனின் சைகையை கண்டு தன் ஹேண்ட்பேகிலிருந்த டிராவலிங் கூலர்ஸ்ஸை அணிந்தபடியே “வர்றேண்ணா..” என்று தன் ஸகூட்டியை முறுக்கி சாலையில் கலந்தாள். இதற்கு நிச்சயம் மாலை மண்டகப்படி இருக்குமென்பதை அவள் அறிவாள். ஆனால் இப்பொழுது கயலுக்கு அது முக்கியமாய் படவில்லை.
சரியாக பத்துமணிக்கு பேருந்துநிலையத்தை அடைந்தவள் கண்கள் அவனைத் தேடத்துவங்கியது. 'எங்கே நிற்பதென்று கேட்காமல் போனோமே...' என்றெண்ணியவாறே தன் அலைபேசியை எடுத்து அவன் எண்ணுக்கு அழைக்க, அழைப்புகள் எடுக்கப்படவில்லை.
படபடப்போடு மீண்டும் முயற்சிக்க நீண்ட நிமிடங்களுக்கு பிறகு எடுக்கபட்டது.
“வந்துட்டயா....”
“ம்.. நீங்க எங்கே இருக்கீங்க..”
“நீ எங்க இருக்க..”
“பஸ் உள்ள என்டர் ஆகுற இடத்துக்கு பக்கத்தில் இருக்குக்ற பர்ஸ்ட் ரேக்ல..”என்றபடியே கண்கள் அவனைத் தேடியது.
“அங்கேயே இரு வர்றேன்..” என்று அவன் கைபேசியை அணைத்துவிட்டான்.
‘எங்கே இருக்கிறான் இவன். தன்னை பார்த்துவிட்டானா... ஆனால் எங்கே என் கண்களுக்கு தென்படவில்லையே..' நகத்தைக் கடித்தபடி அவள் கண்கள் அலைபாய
“என்னத்த அங்க தேடிட்டு இருக்க..” என்று அவள் தோள்களை தட்டியது அவன் கரங்கள்.
சட்டென விதிர்த்து திரும்பிவளுக்கு படபடப்பும், பரபரப்புமாய் வியர்த்து கொட்டியது.
“ஹாய்...” என்று அவன் கைகளை நீட்ட தன்னிச்சையாய் அவள் கரம் அவன் கரத்தைப் பற்றியது. அவளது வலது கரத்தினைப் தன் வலது கரம் கொண்டு பற்றியவன், தன் மற்றொரு கரத்தினைக்கொண்டு அவளது கையை தன் இரு உள்ளங்கைக்குள் கொண்டு வந்தான்.
"என்ன பத்துரூவா கண்ணாடியா..." என்று கேட்டபின் தான் இத்தனை நேரம் கண்ணாடியைக் கூட கழற்றாமலே அவனைத் தேடியது அவளுக்குள் உறைத்தது.
சட்டென அவன் கேட்டது விளங்க " இது பிராண்டட் கூலர்ஸ்தான்.." என்றவளுக்கு அவனது நமட்டுச் சிரிப்பு தெளிவாய் உணர்த்தியது அவனது கிண்டலை.
"சரி போவோமா..." என்றவனிடம் எங்கேயென கேட்கத் தோன்றவில்லை அவளுக்கு. அவள் ஸ்கூட்டியை கிளப்ப அவன் பின்னால் ஏறிக்கொண்டான்.
அவன் கூறிய சாலையில் தன்னியல்பாய் வண்டியை இயக்கினாலும் அவளது மனமும், உடலும் அவன் மூச்சுக்காற்றை அவளது நுரையீரலுக்குள் நிரப்பிக் கொண்டிருந்தது.
சிறிது தூரம் எந்த பேச்சுமின்றி செல்ல
"என்ன ஒன்னும் பேசாம வர்ற.."
"ம்... ஏதாவது சாப்டறீங்களா எங்கயாவது ஹோட்டல்ல நிறுத்தவா..." என்றாள் கயல்.
"நான் சாப்பிட்டு தான் வந்தேன்... நீ சாப்பிடலையா... நீ சாப்பிடலேன்னா போகலாம்.." என்றவனிடம்
"இல்ல நானும் சாப்பிட்டேன்.. " என்றாள்.
'எப்படியும் இரண்டு மணிநேர பிரயாண தூரம் அவன் ஊர். வழியில் எதுவும் சாப்பிட்டு இருக்கமாட்டான்..' என எண்ணியபடியே வழிநெடுகிலும் தேடியபடியே வந்தாள்.
"இங்க எங்களோட தோட்டம் ஒன்னு இருக்கு. அங்கே தான் போறோம்..."என்ற வளவனின் வார்த்தைகள் அவளுக்கு ஆச்சர்யமாய் இருந்தது.
"இங்க உங்களுக்கு தோட்டமா...?"
"ஏன் இருக்க கூடாதா..?"
"அப்படி இல்ல உங்க ஊர்லேர்ந்து இவ்வளவு தள்ளி தோட்டமான்னு கேட்டேன்."
"இது அப்பா இருக்கும் போது வாங்கி போட்டது. அவர் நினைவா எங்கிட்ட இதான் இருக்கு. அதான் தூரமா இருந்தாலும் இருக்கட்டும்னு குத்தகைக்கு விட்டுட்டு அடிக்கடி வந்து பார்த்துட்டு போவேன்." என்றவன் குரல் தழுதழுத்ததோ என தோன்றியது கயலுக்கு. ஊரின் பரபரப்பான சனநெருக்கடியைத் தாண்டி ஒரு பழச்சாறு கடையைக் கண்டவள்,
"ஃப்ரெஷ் ஜூஸ் குடிக்கலாமா என்றபடியே தனது ஸ்கூட்டியை ஓரங்கட்டினாள். அவன் இறங்கிக்கொள்ள அவள் ஸ்டான்ட் இட்டு நிறுத்திவிட்டு அணிந்திருந்த கண்ணாடியைக் கழட்டியவாறே தன் ஹாண்ட்பேகை எடுத்துக்கொண்டு அவனை நோக்கி "வாங்க..." என கூற
"அழகா இருக்க...." என்றான்.
அவள் முகம் குங்குமமாய் சிவக்கத் தடுமாறினாள்.
"சரிவா..." என்றபடியே அவன் கடைக்குள் நுழைந்தான். ணஅவனைத் தொடர்ந்தாள் கயல்.
"என்ன ஜூஸ்.." குடிக்கிற என்று அவன் சாதாரணமாய் கேட்க
"எதுவா இருந்தாலும்..." என்றபடியே இவள் தடுமாறிக் கொண்டிருந்தாள்.
"ப்ரோ என்ன இருக்கு" என்று கேட்டு, "ரெண்டு ஆரஞ்ச்ஜூஸ்..." என்று அவன் ஆர்டர் கொடுக்க, இவளோ அவனை ஆராய்ந்து கொண்டிருந்தாள்.
"என்ன தேறுவேணா..." என்றபடியே மெலிதாய் சிரிக்க அவன் கன்னக்குழிக்குள் இவள் கரைந்தே போனாள்.
ஆர்டர் செய்த ஆரஞ்சு பழச்சாறு வந்துவிட குடித்தபடியே "இங்கே எங்க இருக்கு உங்க தோட்டம் ஏற்கனவே பதினைஞ்சு கிலோமீட்டர் வந்தாச்சே..." என்று அவள் அவளது படபடப்பை சரி செய்ய முயல, அதை அதிகமாக்கும் விதமாய் சகஜமாய் பதில் கூறியபடியே அவளது பாதி குடித்த பழச்சாறு டம்ளரை அவன் எடுத்துக் குடிக்க, இவளுக்கோ என்னவென்று இனம் புரியாத ஓர் உணர்வு சூழ்ந்தது.
'என்ன' என்னும் விதமாய் அவன் புருவமுயர்த்தி சிரிக்க, ஒன்றுமில்லையென்பதாய் மறுப்பாய் தலையசைத்தாவாறே அவன் மீதம் வைத்திருந்த டம்ளரை கைகள் நடுங்க பற்றினாள்.
அவளை பார்வையால் பருகிய படியே அவன் பழச்சாறை பருகி முடிக்க, அவன் விழிகளின் வீச்சை தாங்க முடியாமல் இமைத் தாழ்த்தியவாறு அவள் பருக முடியாமல் திணறிக் கொண்டிருந்தாள்.
அவளின் மன உணர்வுகள் அத்தனையும் அவளுக்கு புதுவித இன்ப அவஸ்த்தையாய் இருந்தது. இதுவரை அவள் கண்டிராத உணர்வுகளை அவளுக்குள் உணரத் தொடங்கியிருந்தாள். சுற்றிலும் ஏதோ ஆராய்பவள் போல் அவள் வெளியே வேடிக்கையாய் திரும்ப ஆளில்லாத அந்த கடையில் இவர்களுக்கு பழச்சாற்றைக் கொடுத்துவிட்டு கடைக்காரர் கைபேசில் பேசியபடி கடையில் இருந்து வாசலுக்கு சென்று பேச அவளது கன்னத்தை ஆதுரமாய் தாங்கியது வளவனின் கரம்.
அவளது கன்னத்தில் அவனது உள்ளங்கை பட்டதும் அவள் முகம் முழுக்க செந்நிரத்தைப் பூசிக் கொள்ள, உள்ளமும் உடலும் சில்லிட்டுப் போனது அவளுக்கு. மெல்ல அவர் நிமிர்ந்து நோக்க அவனின் இதழ் உதிர்க்காத வார்த்தைகள் அனைத்தையும் அவன் விழிகள் அவளுக்கு உணர்த்திக் கொண்டிருந்தது இனி என்றும் உன்னவனாய் நானிருப்பேன் என... எத்தனை நேரம் நீடித்ததோ சில நொடியா மணிக்கணக்கா என நீண்ட தருணத்தில்
தன்னிச்சையாய் அவன் கன்னத்தை தாங்கியிருந்த கரத்தினை பற்றியவள் கண்ணில் நீர் துளிர்க்க அவனது உள்ளங்கையில் தன் இதழால் முத்திரைப் பதித்து அவனிடத்தில் தன் பெருங்காதலை அறிவித்து அவன் கரத்தினில் கன்னத்தை சாய்த்து அவனிடத்தில் சரணடைந்தாள்.
இது பொதுவிடம் என அவன் கண்களால் உணர்த்த விழி நீரை விழுங்கிய படி அவள் நாணத்தில் சிவந்து அவன் கரத்தினை விலக்க முயல, விரல்களால் வருடியபடியே அவன் விலக்கினான்.
அவன் எழுந்து பழச்சாற்றிற்கான பணத்தை கொடுக்கும் நேரத்தில் இவள் தன்னை நிலைக்கு கொண்டு வந்து வெட்கப் புன்னகையுடன் மீதமிருந்த பழச்சாற்றினை ரசித்து அருந்தி முடித்து எழுந்தாள். அதன் ருசி அவள் உள்ளம் முழுமைக்குமாய் இனித்துக் கிடந்தது.
அவனுடனான இந்த பயணம் அவள் வாழ்நாளுக்குமாய் மறக்கவியலாததாய் அவன் மாற்றப் போகிறான் என்பதை அவள் உணரத் தொடங்கினாள்.
மீண்டும் கிளம்ப "நீங்க ஓட்டறீங்களா" என அவனிடத்தில் அவள் சாவியை நீட்டினாள்.
"இல்ல நீயே ஓட்டு நா ஜாலியா பின்னாடி உக்கார்ந்து வர்றேன். இதுவும் நல்லாத்தான் இருக்கு.." என குறும்பாய் கூறிப் புன்னகைத்தான்.
அவன் கூறிய வார்த்தைகளுக்கான அர்த்தம் அங்கிருந்து கிளம்பிய சற்று நேரத்திலேயே தெரிந்து போனது அவளுக்கு.
வழியெங்கும் பசுமை விரிய, அவள் மனம் முழுக்க மகிழ்ச்சியோடு அவன் தன்னுடன் இருக்கிறான் என்பதை எண்ணியபடியே அவள் வாகனத்தை இயக்கிக் கொண்டிருந்தாள்.
அவனோ காற்றில் அலைந்த அவள் கூந்தலை ரசித்தபடி அதனை முகர்ந்து அதன் வாசனையில் கிறங்கி
அவளின் இடைப் பற்றி அவள் தோள்களில் அவன் நாடியைப் பதிக்க விதிர்விதிர்த்து போய் தடுமாறிப் போனாள் கயல்.
"ஏய்..... பார்த்து... எங்கயாவது கொண்டு போய் விட்றாத..." என்றபடியே விலகினான் அவன்.
சட்டென அவன் இடைப்பற்றியதும் அவள் அதிர்ச்சியில் பிடி விலக அவன் விலகியதும் சட்டென நிதானித்து ஓரமாய் நிறுத்தி மூச்சை இழுத்துவிட்டுக்கொண்டாள். நல்லவேளையாய் நகரம் தாண்டி வந்துவிட்டதால் சாலையில் தூரத்தில் வரும் ஓர் வாகனம் தவிற வேறு எதுவும் இல்லை.
"ஏய் என்னாச்சு சாரி.. இனி தொடல தள்ளி உட்கார்ந்துக்கறேன் வண்டிய எடு..." என்ற அவனது குரலில் தான் அவள் தன் வாகனத்தை நிறுத்தியதையே உணர்ந்தாள்.
ஒன்றும் பேசாமல் அவள் மீண்டும் வாகனத்தை இயக்க அவனோ பதுவிசாய் அவளின் கூந்தலை ரசித்தபடியே "எனக்கு பிடிச்ச மாதிரியே இருக்க அதான் என்னோடவன்ற உரிமை தானா வந்துடுச்சு தப்பா..?" என்றான் சற்றே மட்டுபட்ட குரலில்.
என்னவென்று உரைப்பாள் அவள். அவளின் அத்தனை அணுவிலும் அதிவேகமாய் அவன் நுழைந்து தன்னிடத்தை நிரப்பிக் கொண்டிருக்கிறான் என்பதை.
துளிர்க்கும்...