Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


வேலைக்குச்செல்லும் பெண்களின் பாதுகாப்பு

Messages
81
Reaction score
60
Points
18
வணக்கம் தோழமைகளே!!!

சட்டம் எல்லோருக்கும் சமம்.

தற்போதைய நிலையில் எங்கும் சட்டம் எதிலும் சட்டம்.

அப்படிபட்ட சட்டத்தை பற்றி நமக்கு எடுத்துரைக்க வருகிறார் வழக்கறிஞர் திருமதி சரண்யா வெங்கட்.

படித்து அனைவரும் பயன் பெருங்கள்.

நம் பெண்களின் பாதுகாப்பை பற்றி பேச வேண்டும் என்று ஆர்வமாக முன்வந்த சரண்யா அவர்களுக்கு நன்றி.
 

யாழ் மொழி

Member
Vannangal Writer
Team
Messages
93
Reaction score
14
Points
8
தொழிலாளர் இழப்பீடு சட்டம் (the workmens compensation act ):



பிரிவு 1(section 1): இச்சட்டம் இந்தியா முழுமைக்கும் பொருந்த கூடியது ஆகும், குறிப்பிட்ட சில வகை தொழில்களில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்களுக்கு விபத்தினால் ஏற்படும் மரணம் அல்லது தகுதி இழப்பிற்கு இழப்பீடு பெறுவதற்கு இச்சட்டம் வகை செய்கிறது.



பிரிவு 2:



சட்டம் பொருந்தக்கூடிய தொழில்களும் தொழிலாளர்களும்:



இச்சட்டம் பொருந்தக்கூடிய தொழில்களையும் தொழிலாளர்களின் பிரிவு 2(dd) வரையறுக்கிறது.



பிரிவு 2(dd)ன் படி தொழிலாளி என்றால்



1. ரயில்வே நிர்வாக அலுவலகங்களில் நிரந்தரமாக பணியமர்த்தப்படாத ரயில்வே தொழிலாளி,



2. a. கப்பல் மாலுமி அல்லது பிற கப்பல் பணியாளர்கள்;



b. விமான தலைவன் அல்லது விமானி அல்லது பிற விமான பணியாளர்கள்;



c. ஓட்டுநர் உதவியாளர் மெக்கானிக் கிளீனர் அல்லது மோட்டார் வாகனம் தொடர்புடைய பிற வேலைகளை செய்பவர்கள்;



d. நிறுவனத்தால் வெளிநாட்டில் வேலை செய்வதற்காக வேலைக்கு எடுக்கப்பட்டவர்கள்; அத்துடன் இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட கப்பல் விமானம் அல்லது மோட்டார் வாகனத்தில் வெளியே பணி அமர்த்தப்பட்டவர்கள்; மேலும் காயமடைந்த ஒரு தொழிலாளி இறந்துவிட்டால் தொழிலாளியை சார்ந்து இருப்பவரையும் தொழிலாளி என்ற பதம் குறிக்கும் என்று பிரிவு 2(i) (dd) இன் உட்கூறு (iii) கூறுகின்றது.



இவை தவிர (ii)வது அட்டவணையில் 70க்கு மேற்பட்ட வகையான தொழில்களில் மற்றும் அவற்றின் உப தொழில்களிலும் வேலை பார்ப்பவர்கள் அனைவரும் தொழிலாளர்களே என பட்டியலிடப்பட்டுள்ளது அவற்றில் சில:



தொழிற்சாலை சட்டங்கள் வரையறுக்கும் உற்பத்தி நடைமுறை நடைபெறும் தொழிற்சாலை வளாகத்தில் பணியமர்த்தப்பட்டவர்கள், உற்பத்தி நடைமுறை தொடர்புடைய பிற வேலைகளை அத் தொழிற்சாலை வளாகம் அல்லது வெளியில் வேலை செய்பவர்கள்;



2. முதலாளியின் வணிகம் அல்லது வியாபாரம் தொடர்பான வெடி பொருட்களை உற்பத்தி செய்யும் அல்லது கையாளும் வேலைக்கு அமர்த்தப்பட்டவர்கள்;



3. சுரங்க வேலைகளில் அமர்த்தப்பட்டவர்கள்;



4. கட்டிடங்கள், அணைக்கட்டுகள், பாலங்கள், கால்வாய்கள், சாலை அமைத்தல், பராமரித்தல், பழுதுபார்த்தல் அல்லது இடித்தல் போன்ற வேலைகளில் ஈடுபடுபவர்கள்;



5. இணைப்பு படையில் வேலைக்கு அமர்த்தப்பட்டவர்கள்;



6. சர்க்கஸில் பணியமர்த்தப்பட்டவர்கள்;



7. தரைமட்டத்திலிருந்து 3.66 உயரம் அல்லது அதற்கு மேற்பட்ட உயரத்தில் உள்ள விளம்பரப் பலகையில் படம் வரையும் ஓவியராக பணியமர்த்தப்பட்டவர்;



8. கோவில் விமானங்களில் வேலை பார்ப்பதற்காக சிற்பிகளாக பணியமர்த்தப்பட்டவர்கள்;



9. உள்ளாட்சி நிர்வாகத்தின் கீழ் துப்புரவு பணியாளர்கள் கழிவு அகற்றும் பணியில் அமர்த்தப்பட்டவர்கள்;



10. உயரமான மரங்களில் ஏறுவதற்கு பணி அமர்த்தப்பட்டவர்கள்;



11. கரும்பு பிழியும் வேலைக்கு அமர்த்தப்பட்டவர்கள்;



12. வெடி வைத்து வெடிக்கும் வேலை தொடர்பான பணியில் ஈடுபடுபவர்கள்;



13. அதில் பயிரிடுதல் அல்லது கால்நடைகளை வளர்த்தல் மற்றும் பராமரித்தல் அல்லது காடு வளர்ப்பு நடவடிக்கைகள் அல்லது மீன்பிடித்தலில் பணியமர்த்தப்பட்டவர்கள்;



14. திறந்த கிணறு அல்லது வெட்டு கிணறு, ஆழ்துளை - வெட்டு கிணறு, கிணறு நீர் வடிகட்டும் தளம் மற்றும் இது தொடர்பான வேலைகளை செய்தல், துளையிடுதல் அல்லது ஆழப்படுத்துதலில் ஈடுபடுபவர்கள்;



இவற்றில் 7 முதல் 11 வரை உள்ள தொழில்களில் பணிபுரிபவர்கள் தமிழ்நாடு மாநில அரசால் II அட்டவணையில் சேர்க்கப்பட்டவர்கள்.



தொழிலாளர் இழப்பீடு சட்டத்தின் கீழ் ஒருவர் இழப்பீடு பெற வேண்டுமெனில் அத்தொழிலாளி IIவது அட்டவணையில் வரிசைப்படுத்தப்பட்ட தொழில் பிரிவுகளில் ஏதேனும் ஒன்றினுள் வருபவராக கட்டாயம் இருக்க வேண்டும், இரண்டாவது அட்டவணையில் இல்லாத தொழில்களில் பணியமர்த்தப்பட்டவர்கள் இச்சட்டத்தின் கீழ் இழப்பீடு பெற முடியாது, பிரிவு 2ன் கீழ் தொழிலாளி என்ற பதம் இவர்களுக்கு பொருந்தாது.



மீதம் உள்ள சட்டபிரிவுகளை நாளை காணலாம்...
 

யாழ் மொழி

Member
Vannangal Writer
Team
Messages
93
Reaction score
14
Points
8
தொழிலாளர் இழப்பீடு சட்டம்.



பொருள் விளக்கங்கள்:



சார்ந்திருப்பவர்கள்(dependant):

பிரிவு 2(1):

i). இறந்தவரின் விதவை மனைவி, 18 வயது பூர்த்தியடையாத மகன் அல்லது மகள், தத்தெடுக்கப்பட்ட மகன் அல்லது மகள் அல்லது விதவைத் தாயார்;



ii). தொழிலாளி இறக்கும்போது அவரது வருமானத்தை முழுமையாக சார்ந்து இருக்கும் 18 வயது பூர்த்தியடையாத உடல் அல்லது மன வலிமை குன்றிய மகன் அல்லது மகள்;



iii). தொழிலாளி இருக்கும்போது அவரது வருமானத்தை முழுமையாக அல்லது பகுதி அளவு சார்ந்து இருக்கும்



a.மனைவியை இழந்தவர்



b. விதவைத் தாயார் தவிர்த்து இறந்தவரின் பெற்றோர்



c. இளவர் ஆக இருக்கும் சகோதரர் அல்லது மணமாகாத சகோதரி அல்லது இளவராக இருக்கும் விதவை சகோதரி;



d. விதவை மருமகள்;



e.முன்னதாக இறந்து விட்ட மகனின் இளவர் குழந்தை;



f. முன்னதாக இறந்து விட்ட மகனின் இலவர் குழந்தைக்குப் பெற்றோர் எவரும் உயிருடன் இல்லாதிருந்தால் அக்குழந்தை;



g. தொழிலாளியின் பெற்றோர் எவரும் உயிருடன் இல்லை எனில் அவரது தந்தை வழி தாத்தா பாட்டி;



பிரிவு 2(i) (e):



முதலாளி:



i. கூட்டு உருவாக்கப்பட்ட அல்லது கூட்டு உருவாக்கப்படாத நபர்களின் குழு



ii. முதலாளியின் நிர்வாக முகவர்



iii. இறந்துவிட்ட முதலாளியின் சட்ட பிரதிநிதிகள்



iv.தொழிலாளியாக அல்லது வேலை பழகுனர் ஆக பணி ஒப்பந்தம் செய்து கொண்டவர் தனது தொழிலாளியை மற்றொருவருக்கு தற்காலிகமாக இரவல் கொடுத்து இருக்குமிடத்தில் இரவல் பணியை செய்யும் போது அம்மற்றொரு தொழிலாளியின் முதலாளி ஆவார்.





தகுதி இழப்பு(Disablement):





இச்சட்டத்தின் கீழ் முதலாளியிடம் இருந்து இழப்பீடு பெற வேண்டுமெனில் பணியின் மூலம் அல்லது பணியின் போது ஏற்பட்ட விபத்தினால் உடல் தீங்கு ஏற்பட்டு இருக்க வேண்டும். அவ்வுடல் தீங்கினால் தொழிலாளிக்கு மரணம் அல்லது தகுதியிழப்பு ஏதேனும் ஏற்பட்டிருக்க வேண்டும். தகுதியிழப்பு தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ கூட இருக்கலாம்.



பகுதி தகுதி இழப்பு: (partial disablement)பிரிவு 2(1)(g):

விபத்தின் காரணமாக ஏற்பட்ட தீங்கினால் ஒருவரது சம்பாதிக்கும் திறனில் ஏற்படும் இழப்பு தகுதியிழப்பு எனப்படும். பிரிவு 2(1)(g) பகுதி தகுதி இழப்பினை இரண்டு வகையாக பிரிக்கிறது. அவை



i. தற்காலிக பகுதி தகுதி இழப்பு:



விபத்தினால் ஏற்பட்ட தகுதி இழப்பின் காரணமாக ஒருவர் அவர் விபத்தின்போது செய்துவந்த குறிப்பிட்ட வேலையை பொறுத்து மட்டும் அவரது சம்பாதிக்கும் திறன் குறைந்து போனால் அது தற்காலிக பகுதி தகுதி இழப்பாகும்.







ii. நிரந்தர பகுதி தகுதி இழப்பு:



விபத்தினால் ஏற்பட்ட தகுதி இழப்பின் காரணமாக ஒருவர் விபத்துக்கு முன்னர் தான் ஏற்று செய்யக்கூடிய அனைத்து வேலைகளையும் பொருத்து அவரது சம்பாதிக்கும் திறன் குறைந்து போனால் அவருக்கு ஏற்பட்டுள்ள இழப்பு நிரந்தர பகுதி தகுதி இழப்பாகும்.



சட்டத்தில் வரும் மற்ற பிரிவுகளை வரும் பதிவுகளில் காணலாம்.
 

யாழ் மொழி

Member
Vannangal Writer
Team
Messages
93
Reaction score
14
Points
8
தொழிலாளர் இழப்பீடு சட்டம்.

பொருள் விளக்கங்கள்:

சார்ந்திருப்பவர்கள்(dependant):
பிரிவு 2(1):
i). இறந்தவரின் விதவை மனைவி, 18 வயது பூர்த்தியடையாத மகன் அல்லது மகள், தத்தெடுக்கப்பட்ட மகன் அல்லது மகள் அல்லது விதவைத் தாயார்;

ii). தொழிலாளி இறக்கும்போது அவரது வருமானத்தை முழுமையாக சார்ந்து இருக்கும் 18 வயது பூர்த்தியடையாத உடல் அல்லது மன வலிமை குன்றிய மகன் அல்லது மகள்;

iii). தொழிலாளி இருக்கும்போது அவரது வருமானத்தை முழுமையாக அல்லது பகுதி அளவு சார்ந்து இருக்கும்

a.மனைவியை இழந்தவர்

b. விதவைத் தாயார் தவிர்த்து இறந்தவரின் பெற்றோர்

c. இளவர் ஆக இருக்கும் சகோதரர் அல்லது மணமாகாத சகோதரி அல்லது இளவராக இருக்கும் விதவை சகோதரி;

d. விதவை மருமகள்;

e.முன்னதாக இறந்து விட்ட மகனின் இளவர் குழந்தை;

f. முன்னதாக இறந்து விட்ட மகனின் இலவர் குழந்தைக்குப் பெற்றோர் எவரும் உயிருடன் இல்லாதிருந்தால் அக்குழந்தை;

g. தொழிலாளியின் பெற்றோர் எவரும் உயிருடன் இல்லை எனில் அவரது தந்தை வழி தாத்தா பாட்டி;

பிரிவு 2(i) (e):

முதலாளி:

i. கூட்டு உருவாக்கப்பட்ட அல்லது கூட்டு உருவாக்கப்படாத நபர்களின் குழு

ii. முதலாளியின் நிர்வாக முகவர்

iii. இறந்துவிட்ட முதலாளியின் சட்ட பிரதிநிதிகள்

iv.தொழிலாளியாக அல்லது வேலை பழகுனர் ஆக பணி ஒப்பந்தம் செய்து கொண்டவர் தனது தொழிலாளியை மற்றொருவருக்கு தற்காலிகமாக இரவல் கொடுத்து இருக்குமிடத்தில் இரவல் பணியை செய்யும் போது அம்மற்றொரு தொழிலாளியின் முதலாளி ஆவார்.


தகுதி இழப்பு(Disablement):


இச்சட்டத்தின் கீழ் முதலாளியிடம் இருந்து இழப்பீடு பெற வேண்டுமெனில் பணியின் மூலம் அல்லது பணியின் போது ஏற்பட்ட விபத்தினால் உடல் தீங்கு ஏற்பட்டு இருக்க வேண்டும். அவ்வுடல் தீங்கினால் தொழிலாளிக்கு மரணம் அல்லது தகுதியிழப்பு ஏதேனும் ஏற்பட்டிருக்க வேண்டும். தகுதியிழப்பு தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ கூட இருக்கலாம்.

பகுதி தகுதி இழப்பு: (partial disablement)பிரிவு 2(1)(g):
விபத்தின் காரணமாக ஏற்பட்ட தீங்கினால் ஒருவரது சம்பாதிக்கும் திறனில் ஏற்படும் இழப்பு தகுதியிழப்பு எனப்படும். பிரிவு 2(1)(g) பகுதி தகுதி இழப்பினை இரண்டு வகையாக பிரிக்கிறது. அவை

i. தற்காலிக பகுதி தகுதி இழப்பு:

விபத்தினால் ஏற்பட்ட தகுதி இழப்பின் காரணமாக ஒருவர் அவர் விபத்தின்போது செய்துவந்த குறிப்பிட்ட வேலையை பொறுத்து மட்டும் அவரது சம்பாதிக்கும் திறன் குறைந்து போனால் அது தற்காலிக பகுதி தகுதி இழப்பாகும்.



ii. நிரந்தர பகுதி தகுதி இழப்பு:

விபத்தினால் ஏற்பட்ட தகுதி இழப்பின் காரணமாக ஒருவர் விபத்துக்கு முன்னர் தான் ஏற்று செய்யக்கூடிய அனைத்து வேலைகளையும் பொருத்து அவரது சம்பாதிக்கும் திறன் குறைந்து போனால் அவருக்கு ஏற்பட்டுள்ள இழப்பு நிரந்தர பகுதி தகுதி இழப்பாகும்.

சட்டத்தில் வரும் மற்ற பிரிவுகளை வரும் பதிவுகளில் காணலாம்.
நன்றி நட்புகளே
சரண்யா வெங்கட்

ReplyQuoteLikeReportUnapproveEditDelete


யாழ் மொழி

யாழ் மொழி
(@Saranya-venkatesh)
Estimable MemberWriter
Joined: 2 years ago
Posts: 121


26/10/2020 2:41 pm


பேறு கால பயன்கள் சட்டம் 1961 (the Maternity Benefits Act 1961)

கர்ப்ப காலத்தில் மற்றும் பிரசவத்திற்குப் பிறகு பெண் ஊழியர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக, பெரும்பாலான சட்டங்கள் மகளிர் ஊழியர்களுக்கு மகப்பேறு சலுகைகளை வழங்குவதை இந்த சட்டம் கட்டாயமாக்குகிறது. இது பத்து அல்லது அதற்கு மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட அனைத்து கடைகளுக்கும் நிறுவனங்களுக்கும் பொருந்தும்.

இச்சட்டம் செயல்வடிவம் பெறுவதற்கு முன்பு தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களுக்கு 1948 ஆம் ஆண்டு ஊழியர்களின் மாநில காப்பீட்டுச் சட்டத்தின் கீழ் மகப்பேறு சலுகைகள் வழங்கப்பட்டன

பிரிவு 1: இச்சட்டம் இந்தியா முழுமைக்கும் பொருந்தும்.

பிரிவு2:

A. அரசாங்கத்திற்கு சொந்தமான
தொழிற்சாலை மற்றும் சுரங்கம் உட்பட அனைத்து தொழிற்சாலை மற்றும் சுரங்கம் அல்லது நிறுவனங்களுக்கும்,

2.பத்து அல்லது பத்துக்கு மேற்பட்ட நபர்கள் வேலை பார்க்கும் கடைகள் மற்றும் நிறுவனங்களுக்கு இச்சட்டம் பொருந்தும்

3. அரசு காப்பீட்டு சட்டம் பொருந்தக்கூடிய தொழிற்சாலையில் பணிபுரியும் பெண்கள் அந்த சட்டத்தின் கீழ் பேறுகால உதவி வகை பெற தகுதியற்றவர்களாக இருந்து இச்சட்டத்தின் முக்கிய பேறுகால பயன்களை பெற தகுதியுடையவர்களாக இருந்தால் அவர்களுக்கு இச்சட்டம் பொருந்தும்.

4. மாநில அரசாங்கம் மத்திய அரசின் ஏதேனும் ஒரு பகுதியை மட்டும் வேறு நிறுவனங்கள் அல்லது தொழிற்சாலைகளுக்கு பொருந்தும் வகையில் நீட்டிக்கலாம்.

5. மத்திய அல்லது மாநில அரசின் அலுவலகத்தில் பணிபுரியும் பெண்களுக்கு இச்சட்டம் பொருத்தும்.

பெண் தொழிலாளர்கள் சில காலங்களில் வேலை செய்ய தடை:பிரிவு (4)(1):

எந்த ஒரு முதலாளியும் நன்கு தெரிந்துகொண்டு ஒரு பெண் தொழிலாளி அவருக்கு குழந்தை பிறந்த நாளிலிருந்து அல்லது கருச்சிதைவு நிகழ்ந்த நாளிலிருந்து அல்லது கருக்கலைப்பு செய்த நாளிலிருந்து ஆறு வாரங்களுக்குள் தொழில் நிறுவனங்களில் வேலை செய்ய அனுமதிக்க கூடாது என பிரிவு 4 கூறுகிறது.

கடினமான வேலைகள் எப்பொழுது தரக்கூடாது(பிரிவு 4(3):

பெண் தொழிலாளி எதிர்நோக்கும் பிரசவ நாளிலிருந்து முந்தய 6 வாரங்களுக்கு முன்னால் நல்ல ஒரு மாத காலத்தினுள் அல்லது பிரசவ நாளில் இருந்து முந்தைய ஆறு வாரங்களில் அப்பெண் பெண் தொழிலாளியை

1. கடினமான வேலை

2. நீண்ட நேரம் நின்று கொண்டே செய்ய கூடிய வேலை

3. ஏதேனும் ஒரு வகையில் கருவை யோ அல்லது கரு வளர்ச்சியை பாதிக்கும் வேலைகள் கருச்சிதைவிற்கு வழிவகுக்கும் வேலைகள் அல்லது தொழிலாளியின் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் வேலைகளை செய்யுமாறு கூறுவதோ செய்வதற்கு அனுமதிப்பது கூடாது என இப்பிரிவு கூறுகிறது.

பேறுகால பயன்கள்:

பேறுகால பயன்கள் சட்டத்தின்கீழ் பெண் தொழிலாளி ஒருவர் தன் பேறுக்காலத்தில் பிரசவத்திற்கு முன் ஆறு வாரம் பிரசவத்திற்குப் பின்னர் ஆறு வாரம் மொத்தம் 12 வாரங்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு மருத்துவ செலவுத் தொகையும் அதனுடன் தொடர்புடைய அனைத்து சலுகைகளையும் பேறுகால பயன்களாக பெறமுடியும்.

பிரிவு 5 (1)ன் படி ஒவ்வொரு பெண் தொழிலாளிக்கும் பேருகால பயன்களை கோரி பெரும் உரிமையும் நிர்வாகத்திற்கு அதனை தர வேண்டிய கடமையும் உண்டு.

அவை

1. பேருகால பயன் தொகை,

2. மருத்துவ மீதூதியம்,

3.கருச்சிதைவிற்கான விடுப்பு

4. பேறுகால விடுப்பு

5. கூடுதல் இடைவேளை

6. வேலை நீக்கம் செய்ய தடை

7. கூலியை குறைக்க தடை



1. பேறுகால பயன் தொகை: செக்ஷன் 5(1):

ஒரு பெண் தொழிலாளி பேறுகால விடுப்பில் செல்லும் போது அவரது பிரசவ நாளில் உள்ளடக்கி பிரசவத்திற்கு முன்பு ஆறு வாரங்களும் அதன்பின்பு சராசரியாக 6 வாரங்கள் விடுப்பில் இருக்கும் ஒவ்வொரு நாளும் உரிய சம்பள தொகையானது பேறு கால பயன் தொகையாக வழங்கப்படும்.

பேறு கால பயன் தொகையை பெறுவதற்கு அப்பெண் தொழிலாளி 80 நாட்கள் குறிப்பிட்ட தொழில் சாலையில் வேலை செய்திருக்கவேண்டும்.

2. மருத்துவ மீதூதியம்: (medicial bonus) செக்ஷன் 8:

இச்சட்டத்தின் கீழ் பேறுகால பயன்கள் பெற தகுதி உடைய பெண்கள் ஒவ்வொருவரும் பிரசவத்திற்கு முன்னரும் பிரசவத்திற்கு பின்னரும் அவர்கள் நிர்வாகத்தால் இலவச மருத்துவ பராமரிப்பு செய்யப்படாத பட்சத்தில், தங்களது பேருகால தொகையுடன் கூடுதலாக மருத்துவ மீதூதியம் பெற தகுதியுடையவர்கள் ஆவர். இத்தொகையை மத்திய அரசாங்கம் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை அரசிதழில் அறிவிக்கை மூலம் 20 ஆயிரம் வரை உயர்தலாம்.

கருச்சிதைவிற்கான விடுப்பு: section 9:

ஒரு பெண் தொழிலாளி கருச்சிதைவு ஏற்பட்ட நாளிலிருந்து அல்லது கருக்கலைப்பு செய்து கொண்ட நாளிலிருந்து ஆறு வாரங்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்பட வேண்டும். விடுமுறைக்கு பின்னர் பெண் தொழிலாளி வேலைக்கு வரும்போது அவருக்கு கடினமான வேலைகளை கொடுக்கக்கூடாது. இந்த பயனைப் பெறுவதற்கு அவர் கருசிதைவு ஏற்பட்டதை சான்றுகளுடன் நிரூபிக்க வேண்டும். கருச்சிதைவுக்கான விடுப்பிற்கு வழங்கப்படும் சம்பளம் பேறுகால பயன் தொகை வழங்கப்படும் அதே சரிவிகிதத்தில் வழங்கப்பட வேண்டும்.


கருத்தடை அறுவை சிகிச்சைக்கான விடுப்பு: செக்ஷன் 9A:

கருத்தடை அறுவை சிகிச்சை (tubectomy opeartion) செய்துகொண்ட பெண் தொழிலாளி ஒருவர் அதற்கான ஆதாரங்களை சமர்ப்பித்து சிகிச்சை செய்யப்பட்ட நாளிலிருந்து இரண்டு வாரங்களுக்கு பேறுகால பயணிக்கான அதே விதத்தில் சம்பளத்துடன் கூடிய விடுப்பு பெறலாம்.

பேறுகால விடுப்பு: செக்ஷன் 10:

ஒரு பெண் தொழிலாளி பேறுகால சமயத்தில் கருவுற்றிருப்பது அல்லது
உடல்நலக்குறைவு அல்லது பிரசவம் குறை பிரசவம் கருச்சிதைவு அல்லது கருக்கலைப்பு ஆகியவற்றால் அல்லது வேறு ஏதாவது உடல் நலக் கோளாறு பாதிக்கப்படும் போது அவர் தக்க ஆதாரங்களுடன் நிரூபித்தால் 12 வாரங்களுக்கு சேர்த்து கூடுதலாக ஒரு மாத காலம் வரை சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்படும். இது பேறுகால விடுப்பு எனப்படும்.

கூடுதல் இடைவேளை: செக்ஷன் 11:

பேறுகால விடுப்பிற்கு பின் பெண் பணியில் சேர்ந்த தாய்க்கு அனைவரும் வழங்கப்படும் இடைவெளியை விட கூடுதல் இடைவேளை பட வேண்டும். இச்சலுகை குழந்தை பிறந்த 15 மாத காலம் வரை வழங்கப்பட வேண்டும். இக்கூடுதல் இடைவேளை பெண் தொழிலாளி தனது குழந்தையை பராமரிப்பதற்காக வழங்கப்படுகிறது.

வேலை நீக்கம் செய்ய தடை: செக்ஷன் 12:

பேறுகாலத்தில் பெண் தொழிலாளி எடுக்கும் விடுப்பினை காரணம் காட்டி அவரை வேலை நீக்கம் செய்யக்கூடாது. அவ்வாறு வேலை நீக்கம் செய்வது சட்டவிரோதமாகும்.

கூலியையை குறைக்க தடை செக்ஷன் 13:

1.கர்ப்பிணிப் பெண் தொழிற்சாலைக்கு கருவுற்றிருக்கும் காலங்களில் மாற்று வேலை தரும்போது அவர் ஏற்கனவே வாங்கி வந்த கூலியை விட குறைவான கூலியைத் தரக்கூடாது.

2. குழந்தையை கவனிப்பதற்காக தாய்மார்கள் எடுத்துக்கொள்ளும் கூடுதல் இடைவேளை நேரத்திற்கு சமமான தொகையை அவரது கூலியிலிருந்து கழிக்கக்கூடாது, இச்சலுகை குழந்தை பிறந்த 15 வாரங்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.
 

யாழ் மொழி

Member
Vannangal Writer
Team
Messages
93
Reaction score
14
Points
8
பேறுகால பயன்கள் சட்டம்:

ஆய்வாளர் :

பேறுகால பயன்கள் சட்டத்தின் பிரிவுகளையும் வகை முறைகளையும் அமல்படுத்தும் அமலாக்க அதிகாரி ஆய்வாளர் ஆவார்.

அய்வாளர்களின் அதிகாரங்கள் மற்றும் கடமைகளும்( செக்ஷன் 15):

1. பதிவேடுகளை பார்வையிடுதல்,

ஆய்வாளர் தன் எல்லைக்கு உட்பட்ட தொழில் சாலைகளில் பெண்கள் வேலையில் ஈடுபட்டு இருந்தால் தொழிற்சாலையின் வேலை நேரத்தில் எப்போது வேண்டுமென்றாலும் சென்று பதிவேடுகளை பார்வையிடலாம், மேலும் அவற்றைத்தான் முன்னர் சமர்ப்பிக்குமாறு கோரலாம்.

2. விசாரணை நடத்துதல் :

தொழிற்சாலை வளாகத்தில் இருக்கும் எந்த நபரிடமும் ஆய்வாளர் தனக்குத் தேவையான விவரங்கள் குறித்து கேள்வி கேட்டு விசாரணை நடத்தலாம்.

3. விவரங்களை சேகரித்தல் :

ஆய்வாளர் ஒரு தொழிற்சாலையில் வேலை பார்க்கும் பெண்களின் பெயர் விவரங்களைத் தருமாறு நிர்வாகத்திடம் கேட்டுப்பெறலாம். மேலும் பேறுகால பயன்கள் கோரி தரப்பட்ட அறிவிப்புகளையும், அதன் மேல் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் தருமாறு கோரலாம்.

4. ஆவணங்களை நகல் எடுக்கும் உரிமை :

ஆய்வாளர் தொழிற்சாலையில் தனக்கு தேவையான எந்த ஆவணத்தையும் ஆய்வாளர்கள் எடுத்துக் கொள்ளலாம்.

5. பேறுகால பயன்களை வழங்க உத்தரவிடுதல்:

ஆய்வாளர் தன் ஆய்வில் சில பெண்களுக்கு பேறுகால பயன் தொகை அல்லது பிற தொகைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக கருதினால் அப்பெண்களுக்கு பேறுகால உதவி தொகையை உடனடியாக வழங்குமாறு உத்தரவிடலாம்.

ஆய்வாளர் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 21 ஒன்றின்படி அரசு பணியாளர் ஆவார், அவரது பணியை தடுக்கும் நபர்களுக்கு சிறை தண்டனையும் அல்லது அபராதம் அல்லது இவ்விரண்டும் தண்டனையாக வழங்கப்படும்.

இதோடு பேறுகால பயன்கள் சட்டம் குறித்த பதிவு முற்று பெறுகிறது.
 
Top Bottom