Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


வைதேகியின் விடியல்.

dharshini chimba

Saha Writer
Team
Messages
271
Reaction score
167
Points
43
கண்ணீர் வழிந்தாலும் அதை துடைக்க தோன்றாமல் கையிலிருந்த கடிதத்தை வெறித்து பார்த்து கொண்டிருந்தாள் வைதேகி.

"என்னடி பண்ணிட்டு இருக்க இன்னும்? மாப்பிள்ளை வர போறார் அக்காவை கூட்டிட்டு வான்னு அனுப்பினா என்ன பண்றிங்க ரெண்டு பேரும்?" என்று கேள்வி கேட்டபடியே உள்ளே நுழைந்த பர்வதம் பெரிய மகளை தேட, அவள் இல்லாமல் அவள் அணிந்திருக்க வேண்டிய புடவை நகைகள் எல்லாம் மெத்தையின் மேல் இருக்க மனம் எதுவோ சரி இல்லை என்று கூற பதட்டமாக திரும்பினார்.

"என்னடி இது லெட்டர்? எங்க அவ?" என்றார் உள்ளே சென்ற குரலில்.

'பொண்ணை கூட்டிட்டு வர சொன்னா இங்க அம்மாவும் பொண்ணும் என்ன பண்ணிட்டு இருக்கீங்க? எங்க மானசா?" என்று உள்ளே வந்த சுந்தரம் மகளை காணாது போக வைதேகி கையில் கடிதம் இருப்பதை பார்த்து அவளிடம் இருந்த கடிதத்தை பிடுங்கி படித்த மறுநொடி பொதென்று அங்கிருந்த மெத்தையில் அமர்ந்தார்.

"என்னங்க" என்று மனைவி பதறி ஓடினார் அவரிடம்.

"அப்பா" என்ற மனம் பதற தந்தையிடம் ஓடினாள் வைதேகி.

சில நொடிகள் மகளையும் மனைவியையும் பார்த்தவர்.

"உங்க அக்கா எங்க போனா?" என்றார் வைதேகியை பார்த்து கடுமையான குரலில் மிகவும் கோபத்தோடு.

ஏற்கனவே அதிர்ச்சியில் இருந்தவள் தந்தையின் கேள்வியில் இன்னும் உறைந்து போனாள்.

"அப்பா" என்றாள் மெதுவாய் நம்பாமல்.

"என்னடி பார்க்கிற? நீயும் உங்க அக்காவும் எப்பவும் நகமும் சதையுமா தானே சுத்திக்கிட்டு இருப்பிங்க? அவ இங்க இருந்து ஒட்றதுக்கு நீ தான் உதவி பண்ணியா?" என்றார் தீவிர கர்ஜனையில்.

"இல்லப்பா.. எனக்கு சத்தியமா தெரியாதுப்பா" என்று முடிக்கும் முன் வைதேகியின் கண்ணத்தில் பளாரென அரை விழுந்தது.

தனக்கும் இதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று உறுதியாய் கூறும் முன் மீண்டும் ஒரு அரை விழ, நிலை குலைந்து கீழே விழுந்தாள் வைதேகி.

இப்பொழுது என்ன நடக்க போகிறது? என்ன செய்வது என்று தெரியாமல் சுந்தரமும் அவரது மனைவியும் கலங்கி நிற்க, உள்ளே வந்து நெடுநேரம் ஆகியும் வெளியே வராமல் இருந்ததால் மூவரும் என்ன செய்கின்றனர் என்று பாரப்பதற்காக உள்ளே வந்த அவளின் தம்பி பரமன் ஸ்தம்பித்து நின்றான்.

"இதெல்லாத்துக்கும் நீ தான்டி காரணம். பொண்ணுங்களை அடக்க ஒடுக்கமா வளர்க்க தெரியலை? பொண்ணு வீட்ல என்ன பண்றா? யார்கூட பேசுறா? எங்க போறான்னு கவனிக்கிறதில்லையா நீ?" என்று அவளின் அம்மாவை அடிக்க போக, அவரின் கரத்தை தடுத்தாள் வைதேகி.

"அப்பா! இதுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல. என்னை அடிச்சிங்க சரி. அம்மாவை கை நீட்டாதிங்க." என்றாள் கோபமும் வருத்தமும் கலந்து.

"இந்த பேச்சுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை. எல்லாரும் சேர்ந்து என் கழுத்தை அறுத்துட்டிங்களே?" என்று அவளை அறைய கை ஒங்க, அதனை தடுத்தான் பரமன்.

"அப்பா! நம்ம எல்லாருக்குமே இப்போ ரொம்ப முக்கியமான நேரம் இன்னும் அரைமணி நேரத்துல அக்காவை கூப்பிட்ருவாங்க. அதுக்கு என்ன செயலாம்னு யோசிங்க. உங்க கோபத்தை எதுக்கு இவங்க மேல காட்டுறிங்க? ஓடி போனது உங்க செல்ல பொண்ணு தான்."என்றான் அழுத்தமாக.

அவனின் சொற்கள் அவரின் காயத்தை மேலும் கீற, அறையில் பெரும் அமைதி நிலவியது.

இவர்களை காணாது உள்ளே நுழைந்தார் சுந்தரத்தின் தங்கை வேலாம்பாள்.

"என்ன அண்ணா பண்றிங்க? மாப்பிள்ளை வந்துட்டார். இன்னும் கொஞ்ச நேரத்துல பொண்ணை கூப்பிட்டுடுவாங்க. எங்க மானசா?" என்று சுற்றி முற்றி பார்க்க, எல்லோரின் முகத்தையும் கவனித்து கதைவை தாழிட்டு வந்தவர்.

"என்ன ஆச்சு?" என்றார்.

"நம்மளை தலைகுனிய வச்சிட்டு போயிட்டா அந்த பாவி. நான் இப்போ என்ன பண்ணுவேன்?" என்று தலையில் அடித்து கொண்டு கதறி அழும் மனைவியை காண அவருக்கே தான் செய்தது தவறு என்று உணர்ந்தார்.

"ஏய்! அழாதடி. பார்ப்போம் கடவுள் இதுக்கும் ஒரு வழி காட்டுவான்" என்று மனைவியின் தலையை கோதிவிட்டார்.

ஒன்றும் புரியாமல் இவர்களை பார்த்துக்கொண்டிருந்த வேலாம்பாள்.

"என்ன தான் நடந்தது?" என்றார் மீண்டும்.

நடந்தவற்றை வைதேகியின் தாய் அழுது கொண்டே கூற, அறையில் சிறிது நேரம் அமைதி நிலவியது.

பின், "அண்ணா! இதுக்கு ஒரே ஒரு வழிதான் இருக்கு. என்கூட நீங்க ரெண்டு பேரும் கொஞ்சம் சீக்கிரம் வாங்க" என்று வெளியேறினார்.

அவரை பின் தொட்ரந்து சென்ற இருவரும் மாப்பிள்ளையின் பெற்றோரை தனியாக வேறொரு அறைக்கு அழைத்து வருவதை கண்டு அவர்களிடம் சென்றனர்.

தன் தோழனின் மகனை தான் சம்பந்தம் பேசி இருந்தார் சுந்தரம்.

"என்ன ஆச்சு டா சுந்தரம்?" என்று மாப்பிள்ளை பாரியின் தந்தை கேட்டார்.

சற்று தயங்கி பின் நடந்தவற்றை கூறவும் அவர்களும் அதிர்ச்சியாய் நின்றனர்.

"டேய்! கணேசா சத்தியமா இதுமாதிரி எல்லாம் நடக்கும்னு எனக்கு தெரியாது டா. என்னை மன்னிச்சிடு டா. உன் கால்ல வேணாலும் விழறேன்" என்று சுந்தரம் கூற, "டேய்! சுந்தர். என்னடா பேசுற? வேணும்னே யாராவது கல்யாண ஏற்பாடு பண்ணி நிறுத்துவாங்களா? நடந்ததை விடு. இன்னும் பத்து நிமிஷத்துல பொண்ணை கூட்டிட்டு வர சொல்வார் ஐயர். நாமே அதுக்கு முன்னாடி கல்யாணத்தை நிறுத்திடலாம்" என்றார் கணேசன் வருத்தமாய்.

"இப்படி பொண்ணை தரேன்னு சொல்லி எங்களை தலை குனிய வச்சுட்டீங்களே?" என்றார் கணேசனின் மனைவி.

"வாசு! என்ன பேசுற? அவங்களே என்ன செய்றதுன்னு தெரியாம நிக்குறாங்க. நீ வேற? நமக்கு மட்டும் தானா அசிங்கம்? அவங்களுக்கும் தானே?" என்றார் கோபமாய் மனைவியிடம்.

"பொண்ண பெத்ததுக்கு அவங்க தான் தலை குனியனும்? என் புள்ள என்ன தப்பு பண்ணான்? அவனுக்கு ஏன் இந்த அவமானம். அவனுக்கென்ன குறை? எவ்ளோ பெரிய படிப்பு படிச்சிட்டு எவ்ளோ பெரிய உத்யோகத்துல இருக்கான்? இதோட என் புள்ளையை எவ்ளோ அசிங்க படுத்துவாங்க? யாரு கட்டிப்பாங்க அவனை?" என்று கோபத்தின் உச்சியில் ருத்ரதாண்டவம் ஆடி கொண்டிருந்தார் வாசுகி.

"தயவு செஞ்சு எங்களை மன்னிச்சிடுங்க. எங்க தப்பு தான்"என்று கையெடுத்து கும்பிட்டார் சுந்தரம்.

"டேய் டேய் போதும் நிறுத்துடா. வா " என்று வெளியே போக எத்தனிக்க, வேலாம்பாளின் குரல் எல்லோரையும் தடுத்தது.

"ஒரு நிமிஷம் அண்ணா. ரெண்டு குடும்பத்துக்கும் இது ரொம்ப பெரிய தலை குனிவை ஏற்படுத்தும். அதனால நான் சொல்றதை கொஞ்சம் கோபப்படாம கேளுங்க." என்று நிறுத்தி எல்லோரையும் பார்க்க.

"என்ன?" என்று எல்லோரும் ஒரே குரலில் கேட்க, "அது நம்ம வைதேகியை மனப்பெண்ணா மாத்திடலாம்னு" என்று இழுத்தார்.

இரு குடும்பமும் சில நொடிகள் யோசிக்க,

"முடியாது. ஓடிபோனவ தங்கச்கி எப்படி இருப்பாளோ?" என்று வாசுகி வெறுப்பாய் கூறினார்.

"ஏய் கொஞ்ச நேரம் அமைதியாய் இருக்கியா?" என்று நண்பனிடம் திரும்பி, "டேய்! உன் தங்கச்சி சொல்றது எனக்கென்னவோ சரின்னு படுதுடா. நீ என்ன சொல்ற?" என்று கேட்டார் கணேசன்.

சுந்தரும் அவரின் மனைவியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு பின், "சரிண்ணா! அப்படியே செஞ்சுடலாம்" என்றார் சுந்தரத்தின் மனைவி.

எல்லோரின் முகமும் மலர, வாசுகி மட்டும் எள்ளும் கொள்ளுமாய் வெடித்தார்.

"சரி. உடனே பொண்ணை ரெடி பண்ணனும் வாங்க அண்ணி" என்று வேகமாய் வெளியேறினார் வேலாம்பாள்.

"டேய்! எதுக்கும் மாப்பிள்ளைக்கிட்ட ஒரு வார்த்தை சொல்லணும் டா" என்ற சுந்தரத்தை "அதெல்லாம் நான் பார்த்துக்குறேன். நீ போய் உன் பொண்ணுகிட்ட பேசி புரியவை" என்றார் கணேசன்.

எல்லோரும் வெளியேற, மணமகளின் அறைக்குள் எல்லோரும் நுழைய, "என்ன சொன்னாங்க பா. அக்கா கிடைச்சுட்டாளா?" என்று வைதேகி கேள்வி மேல் கேள்வி கேட்க,

"இல்ல! அதெல்லாம் இப்போ பேச நேரம் இல்ல. சீக்கிரம் இந்த புடவையை கட்டிக்கிட்டு ரெடியாகு." என்றார் சுந்தரம்.

"என்ன?" என்றாள் வைதேகி ஒன்றும் புரியாமல்.

"என்னத்துக்கு இப்படி இப்போ சிலை மாதிரி நிக்குற? இதோ ஐயர் பொண்ணை இன்னும் அஞ்சு நிமிசத்துல கூப்பிட போறார். ஊரே கூடி இருக்கு. அங்க போய் எல்லாத்தையும் சொல்லி கல்யாணத்தை நிறுத்த போறியா? உங்க அக்கா தான் என் கழுத்தை கடைசி நேரத்துல அறுத்துட்டு போயிட்டா. இப்போ நீயாவது என் மானத்தை காப்பாத்த போறியா இல்லையா?" என்றார் கோபமாய் சுந்தரம்.

"இல்ல.. இல்ல.." என்று அழக்கூட தெம்பில்லாமல் நடப்பதை கிரகிக்க முடியாமல் திணறினாள் வைதேகி.

"வைதும்மா அத்தை சொல்றதை கேளுடா. ரெடி ஆகிடு கண்ணா" என்று வேலாம்பாள் அவளின் தலை கோதி எழுப்பிவிட்டார்.

"அப்பா நான் எப்படி? என்னால முடியாதுப்பா" என்றாள் வைதேகி மீண்டும்.

"இங்க பாரு பேசுறதுக்கு நேரம் இல்லை. சொல்றதை செய்" என்றார் மிகவும் கோபத்தோடு.

'அப்போ என் கனவு? எனக்கு கல்யாணம் வேணாம். நான் கலக்டர்க்கு படிக்கணும். ' என்று தனக்குள் குமிறியவள்.

"என்னால முடியாதுப்பா" என்று முடிப்பதற்குள்.

"என்னடி முடியாது முடியாது. உங்க அக்கா பண்ணிட்டு போன அசிங்கம் பத்தாதுன்னு இன்னும் அசிங்க படுத்த போறியா? சீக்கிரம் புடவை மாத்திட்டு வா." என்று வெளியேறினார்.

இதற்கு மேல் தனனால் எதுவும் செய்ய முடியாது என்று தோன்ற மனதை கல்லாக்கி கொண்டு மணமகளாய் தயாரானாள்.

மண்டபத்தில் ஏற்படும் சலசலப்பை கண்டுகொள்ளாது உள்ளே இருந்து மினுமினுக்கும் எழில் கொஞ்சும் மெழுகு சிலையென தேவதையாய் நடந்து வந்தாள் வைதேகி.

மணமகனின் அருகில் அமர, அவளை முதலில் பார்த்தவுடன் அதிர்ந்து தன் தாயை நோக்க, அவனருகில் குனிந்த தந்தை, "எதுவும் பேச வேண்டாம். அப்பா உன் நல்லதுக்கு தான் எல்லாம் பண்ணுவேன்." என்று தள்ளி நின்றார்.

மீண்டும் ஓரக்கண்ணால் அவளை பார்த்தாலும் எதுவும் பேசாமல் அமைதியாய் அமர்ந்திருந்தான் பாரி.

அனைவரும் வாழ்த்த, என்ன நடந்தது என்று தெரியாமல் குழம்பியபடி பாரி மாங்கல்யத்தை வைதேகியின் கழுத்தில் மூன்று முடிச்சிட, எதிர்பார்க்காத நேரத்தில் தன் வாழ்க்கையின் லட்சிய பாதை மாறி போனதில் இருந்து மீளாத அதிர்ச்சியில் ஜடமாய் அதை ஏற்று கொண்டாள் வைதேகி.

இருமனங்களின் சம்மதம் இல்லாம்ல் இருவரும் தம்பதியாயினர்.

என்ன எதுவென்று எல்லோரும் பேசி பேசிக்கொண்டிருக்க எதுவுமே உணராமல் இருவரும் வேறு உலகத்தில் இருந்தனர்.

வீட்டிற்கு வந்த பின், ஆரத்தி சுற்றும் வரை அமைதியாய் இருந்தவன். விருட்டென்று யார் கூப்பிடுவதையும் கேளாமல் தன்னறைக்குள் சென்று கதை படாரென்று சாத்திக்கொண்டான்.

வெறுமையாய் சிலையென அவர்கள் சொல்வதை செய்து கொண்டிருந்தாள் வைதேகி.

அவளுக்கு எதை பற்றியுமே கவலை இல்லை. வாழ்வு சூனியம் ஆனது போல் தோன்றியது. இதில் இவன் எப்படி இருந்தால் அவளுக்கென்ன?

ஒருவர் பின் ஒருவராக கிளம்பிவிட, சுந்தரம் தன் மகளிடம் வந்தார்.

"வைதேகி உங்க அக்கா தான் என் பேரை நாறடிச்சிட்டா. ஆனா, நீ இந்த வீட்ல நல்ல மருமகளாய் இருந்து என் பேரை காப்பாத்துவன்னு நினைக்குறேன். பார்த்து இருந்துக்கோ" என்று சென்றார்.

எதுவுமே கூறாமல் தலையை மட்டும் அசைத்தாள் வைதேகி.

அவளின் அம்மாவும் தம்பியும் ஆறுதல் கூறிவிட்டு கிளம்பினர்.

வாசுகி இதுவரை எதுவும் பேசவும் இல்லை செய்யவும் இல்லை.

கணேசன் தான் அவளின் அருகில் வந்தவர், "வைதேகிமா! உனக்கு இது ரொம்ப சொல்லமுடியாத வலியா தான் இருக்கும். ஆனா, உனக்கு ரொம்ப நன்றிம்மா. சரியான நேரத்துல நீ வந்து மனப்பொண்ணா உட்காரலைன்னா அவ்ளோ தான் எங்க நிலைமை." என்றார்.

"அய்யோ மாமா! நீங்க பெரியவங்க என்கிட்ட போய் மன்னிப்பெல்லாம் எதுக்கு?" என்று சென்றுவிட்டாள்.

உணவேதும் வேண்டாம் என்று மறுத்துவிட, பாரியின் அறையினுள் எந்த வித உணர்வை வெளிபடுத்துவது என்று தெரியாமல் உள்ளே நுழைந்தாள்.

'அவர்கிட்ட அவ்வளவா கூட பேசியது இல்ல. முதல்ல பார்த்ததே இல்ல.' என்று நினைத்தவள் அறையை சுற்றி முற்றி பார்த்தாள்.

ஹாஸ்டலில் தங்கி படித்து கொண்டிருந்தவள் இரண்டு நாள் முன்னர் தான் அவளின் படிப்பை முடித்து விட்டு வந்திருந்தாள்.

"உங்க அக்கா எப்போ போவா? நீ எப்போ என்னை கல்யாணம் பண்ணிக்கலாம்னு காத்திட்டு இருந்தியோ?" என்ற ஏளனமாக மட்டம் தட்டும் குரலில் திடுக்கிட்டு திரும்பினாள்.

"இல்ல.." என்று அவளை முடிக்க விடாமல், மேலும் அவனே தொடர்ந்தான்.

"என்ன எனக்கு எதுவும் தெரியாதுன்னு சொல்ல போற அதானே? உங்க அக்கா என்னை பிடிக்கலைன்னா என்கிட்டயே சொல்லிருக்கலாம்ல? தேவையில்லாம உன்னை என் தலைல கட்டி வச்சு. என் ப்ரெண்ட்ஸ் என்ன சொல்றாங்க தெரியுமா? என்னடா பிடிக்காத டிரஸ்சை தான் மாத்துவாங்க. நீ பொண்ணையே மாத்திட்டன்னு என்னை கிண்டலா பார்க்கிறாங்க" என்று அவளை ஒரு புழுவை போல் பார்த்தான்.

அவனின் சொற்கள் தனக்குள் மிக பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தினாலும் எதுவுமே பேசாமல் தரையில் சென்று படுத்து கொண்டாள்.

'ஏங்க்கா இப்படி பண்ண? உனக்கு பிடிக்கலைன்னு என்கிட்ட சொல்லிருக்கலாம்ல? எதுவுமே நடக்காம ஏதாவது செஞ்சுருக்கலாம்ல? என்னை இப்படி என் கனவுகளை சேர்த்து அழிச்சிட்டியே கா' என்று தனக்குள் குமுற கண்ணீர் தானாக வழிந்தது.

எவ்வளவு அழுதாலும் மனபாரம் குறைந்தபாடில்லை. எப்பொழுது உறங்கினாள் என்று அவளுக்கே தெரியாது.

அவள் இருக்கும் இடத்தில் அவன் இருக்க மாட்டான்.

அவன் இருக்கும் இடத்திற்கு அருகில்கூட அவள் செல்ல மாட்டாள்.

கணவனுக்கு மனைவியாய் தன்னை தருவதை தவிர்த்து அவனுக்கு தேவையான எல்லாவற்றையும் அவன் எதிரில் வராமல் செய்தாள்.

அவள் தான் செய்கிறாள் என்று தெரியும் இருந்தும் அவளை கண்டு கொள்ளாமல் தன் வேலையில் மட்டும் மும்முரமாய் இருந்தான் பாரி.

நேரம் கிடைக்கும் பொழுதெலாம் அவளை கேலி கிண்டல் மட்டம் தட்டுவதை மட்டும் விடாமல் செய்தான்.

மனசுன்னு ஒன்னு இருந்தா தானே நீ பண்றதுக்கெல்லாம் வலிக்கும்? எனக்கு எதுவுமே உரைக்காது. நீ என்ன பண்றியோ பண்ணிக்க" என்று அவளும் எதுவும் கண்டு கொள்ளாமல் இருந்தாள்.

இப்படியே ஒரு மாதம் கழிய எந்த மாற்றமும் இல்லாமல் இருவரின் வாழ்க்கையும் சென்று கொண்டிருந்தது.

அவளின் கனவுக்கு ஒரு வழியாய் வந்தது அந்த தகவல்.

அவள் ஐ.ஏ.எஸ் தேர்வு எழுதுவதற்கான விண்ணப்பம்.

அதை கண்டதும் ஆனந்தம் பொங்கினாலும் ஒரு புறம் இது நிறைவேறாத கனவாக தான் போக போகிறது என்று தெரிய மனம் கரையும் வரை அழுதாள்.

எதையோ எடுக்க உள்ளே வந்த பாரி அவள் அழுவதை பார்த்து ஒரு நொடி திடுக்கிட்டான்.

'எதுக்கு அழுகுறா? நாம தான் இப்போ எல்லாம் அவளை எதுவும் சொல்றதில்லையே? காலம் செல்ல செல்ல தான் அவனுக்கும் புரிந்தது. அவனின் நிலையில் தான் அவளும் இருக்கிறாள் என்று. அதனால் அவள் மனதை காயப்படுத்துவதை நிறுத்திவிட்டான்.

இப்பொழுது இவள் அழவே எதற்காக அழுகிறாள் என்று கேட்க மனம் துடித்தாலும் எதுவும் பேசாமல் தான் எடுக்க வந்ததை தேடி கிடைக்காமல் போக, "இங்க என் ஆபீஸ் பைல் வச்சிருந்தேன் பார்த்தியா?" என்றான் மெதுவாய்.

அவன் தன்னிடம் தான் பேசுகிறான் என்பதை உறுதி செய்து கொண்டவள்.

"இங்க வச்சிருக்கீங்க" என்று வேறு இடத்தில் இருந்து எடுத்து கொடுத்துவிட்டு வெளியேறினாள்.

அவள் வெளியே செல்வதை பார்த்தவன் வெளியே செல்ல எத்தனிக்கையில் அவள் கையில் இருந்த அந்த காகிதம் அங்கே கீழே கிடப்பதை பார்த்து குனிந்து எடுத்தான்.

அந்த விண்ணப்பத்தை பார்த்தவன் உள்ளம் வேகமாய் துடிக்க ஆரம்பித்தது. அதில் அவளின் கண்ணீர், துளிகளாய் கொட்டி கிடந்தன.

'அவளுக்கு ஐ.ஏ.எஸ் ஆகனும்னு ஆசையா? அடக்கடவுளே! இவ்ளோ ஆசையா இருந்த பொண்ணையா கட்டாயப்படுத்தி எனக்கு கல்யாணம் பண்ணி வச்சாங்க?' என்று தனக்குள் நொந்தவன்.ஒரு முடிவுக்கு வந்தவனாய் அவளுக்கு பதில் அவன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்தான்.

ஏற்கனவே இதுவரை அவளின் மீது இருந்த வெறுப்பு பார்வை அவளை மனுஷியாய் பார்க்க ஆரம்பித்தான்.

ஆனால், இன்றோ அவனின் பார்வை ஒரு படி மேல் மதிப்பை ஏற்படுத்தியிருந்தது.

அதன் பிறகு அவளின் ஒவ்வொரு செய்கைகளையும் கணவன் என்ற நோக்கில் கவனிக்க ஆர்ம்பித்திருந்தான்.

அவள் அறியாமலே அவனுக்கான எல்லா வேலைகளையும் செய்து கொண்டிருந்தாள்.

மெல்ல மெல்ல அவனும் அவளுக்கு தன்னுடைய மனைவி என்ற அங்கீகாரத்தை கொடுக்க ஆரம்பித்தான்.

"நீ சாப்பிட்டியா?" என்று அவளிடம் கேட்க, "இன்னும் இல்ல. நீங்க சாப்பிடுங்க நான் அப்புறமா சாப்பிட்டுக்கிறேன்" என்றாள். இப்பொழுதெல்லாம் இருவரும் சகஜமாக பேச ஆரம்பித்திருந்தனர்.

"எப்போ? சாப்பிட்றேன்னு சொல்லிட்டு சாப்பிடாம இருக்கிறதை நான் தான் அடிக்கடி பார்க்கிறேனே?" என்று அவளின் கரத்தை பற்றி அருகில் அமர வைத்து பரிமாறினான்.

"இன்னைலர்ந்து என்கூட தான் நீ சாப்பிடனும்" என்றதும் அவனை பார்க்காமலே இதழ்களில் மெல்லிய புன்னகை அரும்ப சரி என்று தலையாட்டினாள்.

இரவு வேலைகளை முடித்து உறங்க வந்தவளிடம், "நான் உன்கிட்ட ஒண்ணு சொல்லணும்" என்று இழுத்தான்.

"என்ன?" என்றாள்.

"இனி இங்க மெத்தைலயே படுத்துகோ. தரைல வேண்டாம்" என்றான்.

"இல்ல நான் கிழயே தூங்குறேன்" என்றவளை ஒரு முறை முறைத்து விட்டு, "சரி இனி நானும் கீழயே படுத்துக்குறேன்." என்று கீழே படுக்க போக, "இல்ல இல்ல நான் மேலயே தூங்குறேன் " என்று மெத்தையில் வேகமாய் படுத்து கொண்டவளை கண்டு புன்னகைத்தான்.

தானும் மெத்தையில் படுத்தவன், இடைவெளி விட்டு படுத்திருந்தவளை தன்னருகே இழுக்க, அதிர்ச்சியாய் அவனை பார்த்தாள்.

"என்ன அப்படி பார்க்கிற? என் பொண்டாட்டி தானே நீ? சும்மா முறைக்காம தூங்கு தினமும் இப்படிதான் இனி தூங்கணும்." என்று கூற வெட்கத்தில் அவனின் நெஞ்சத்தில் புதைந்து கொண்டாள்.

இப்படியே நாட்கள் நகர, கணவன் மனைவி என்ற பந்தத்திற்கு இப்பொழுது தான் அடிமேல் அடி வைத்து இருவரும் அர்த்தம் தர ஆரம்பித்திருந்தனர்.

அவளுக்கு வரைவது பிடிக்கும் என்று தெரிந்துகொண்டு ஆன்லைன் டராயிங் க்ளாஸ் சேர்த்துவிட்டிருந்தான்.

ஒரு நாள் மாலை, லேப்டாப்பை பார்த்து மும்முரமாக வரைந்து கொண்டிருக்க, நானும் வேலை பார்க்கிறேன் என்ற பெயரில் கையில் ஒரு பைலை வைத்து கொண்டு அவளின் அசைவுகளை ரசித்து கொண்டிருந்தான். இது எதுவும் தெரியாமல் தன் வேலையில் மும்முரமாய் இருந்த வைதேகியின் போன் அடித்தது.

யார் என்று பார்த்தவள். 'ஏதோ தெரியாத புது நம்பராக இருக்கு. யாரா இருக்கும்?' என்று யோசிக்க.

"யாரு வது?" என்றான் பாரி ஞாபகம் இல்லாமல்.

'அய்யய்யோ உளறிட்டேனே? ஒரு செல்ல பெயரை கூட மனசுக்குள்ள வச்சுக்க முடியாது. ' என்று தனக்கு தானே திட்டிக்கொண்டவன் மீண்டும்.

"யாரு?" என்றான்.

"தெரியலை" என்று "ஹெலோ" என்றாள்.

எதிர்முனை அமைதியாக இருக்க,

"ஹலோ யாரு?" என்றாள் மீண்டும்.

"ஹலோ! வதுகுட்டி" என்ற குரலை கேட்டதும் ஆடம்கண்டுவிட்டது அவளுக்கு.

வைதேகியின் கண்களில் கண்ணீர் வழிய, இவளை பார்த்துக்கொண்டிருந்த பாரிக்கு பதற்றம் தொற்றி கொண்டது.

"என்னாச்சு? ஏன் அழற?" என்றான் ஒன்றும் புரியாமல்.

"வதும்மா. நான் ஜி.ஹெச் ல இருக்கேன். வரியா ப்ளீஸ் " என்று அவளின் அக்கா கெஞ்ச, என்ன சொல்வது என்று தெரியாமல் முழித்தவள். "சரி" என்று வைத்தாள்.

"நான் கொஞ்சம் வெளியே போகணும்" என்றாள் வைதேகி.

"எங்க? யாரு போன் பேசினது?" என்றான் எழுந்து அவள் அருகில் வந்தபடி.

"பிரென்ட்கு ஆக்சிடெண்ட் ஜி.ஹெச் போகணும்" என்றாள் அவன் விழிகளை காணாமல்.

மெல்ல அவளின் தாடையில் ஒற்றை விரல் கொண்டு முகத்தை நிமிர்த்தியவன்.

"ஏன் எதுக்கு இதெல்லாம் எதுவும் தெரியாது. ஆனா கடவுள் நம்மளை இந்த கணவன் பந்தத்துல சேர்த்துருக்கார். இனி என் மூச்சு இருக்க வரைக்கும் நீ தான் என் மனைவி. என்ன நடந்தாலும் உன் அழுகைக்கும் சிரிப்புக்கும் நான் தான் காரணமா இருக்கணும்.. நானும் வரேன். வா" என்று இருவரும் மருத்துவமனை சென்றனர்.

"நீங்க இங்கயே இருங்க. நான் வரேன்" என்று அறையின் வெளியே உட்காரா வைத்துவிட்டு உள்ளே சென்றாள் வைதேகி.

நன்கு பல பலவென ஜொலிக்கும் அழகுடன் தெரியும் அவளுடைய அக்கா இன்று எலும்பும் தோலுமாக வெளிறி போய் கண்மூடி படுத்திருக்கும் அக்காவை காண அவளின் மனம் பதறியது.

"அக்கா!" என்றாள் மெதுவாக.

கண் விழித்தவள் துள்ளி குதித்து தங்கையிடம் சிறு குழந்தை போல் சரணடைந்தால்.

"ஏன் கா இப்படி பண்ண? எல்லோரும் எவ்ளோ கஷ்ட பட்டாங்க. நீ ஏன் இப்படி இருக்க?" என்றாள் அழுது கொண்டே.

துக்கம் குறையும் என்று தொண்டை அடைக்கும் வரை அழுதவள்.

"நானா ஓடி போகலை வது. என்னை எப்பவும் லவ் பண்றேன்னு என் பின்னாடியே சுத்திக்கிட்டு இருந்த அந்த ராஸ்கல் ராஜேஷ் தான் என்னை கடத்திட்டு போய்ட்டான்." என்று கதறினாள் மானசா.

"அக்கா! என்னை சொல்ற?" என்றாள் அதிர்ச்சியாக.

"ஆமாம். என்னை கடத்திட்டு காரை ஓட்டும் போது நான் ஸ்டெரிங்கை ஆட்டினதுல ஆக்சிடெண்ட் ஆகி அவன் ஸ்பாட் டெட் போல நான் இந்த ரெண்டு மாசமா கோமால இருந்திருக்கேன். எனக்கு ரெண்டு நாள் முன்ன தான் நினைவு திரும்புச்சு. ரபா யோசிச்சா தலை வலிக்குது. உன் நம்பர் மட்டும் தான் நினைவுல இருந்துச்சு. அதான் உனக்கு போன் பண்ணேன். அம்மா அப்பா எல்லாரும் எப்படி இருக்காங்க. என்னை எல்லோரும் ஓடி போய்ட்டேன்னு தப்பா பேசிருப்பாங்கள்ல? பாரிக்கு ரொம்பக அவமானமா போய்ட்டிருக்கும் பாவம்." என்று அவள் கழுத்தில் இருந்த தாலியை பார்த்து.

"உனக்கு கல்யாணம் ஆகிடுச்சா?" என்றாள் அதிர்ச்சியாய்.

"ஹ்ம்" என்று அவள் திணற, இவர்களின் உரையாடலை கவனித்து கொண்டிருந்த பாரி உள்ளே நுழைந்தான்.

"பாரி! நீங்க இங்க என்ன பண்றிங்க?" என்று இருவரையும் மாறி மாறி பார்த்தவளுக்கு எல்லாம் புரிய மடங்கி தரையில் விழுந்து அழ ஆரம்பித்தாள் மானசா.

"அக்கா! ப்ளீஸ் அழாத." என்று தேற்றிய வைதேகியை தட்டிவிட்டவள்.

"அக்கா எப்போ ஓடி போவா? நீ எப்போ கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருந்தியா வைதேகி?" என்றாள் ஆத்திரமாய்.

உள்ளுக்குள் ஆறியிருந்த ரணத்தை மீண்டும் கீறுவது போல் இருக்க, அதிர்ச்சியாய் "அக்கா" என்றாள் வைதேகி.

"அக்காவா நானா?" என்று நக்கலாய் சிரித்திவள்.

"அக்கான்னு நினைச்சிருந்தா எனக்கு புருஷ்னா வரவேண்டியவர கல்யாணம் பண்ணிருப்பியா? வெக்கமா இல்ல உனக்கு?" என்று கேட்க, அவளின் பேச்சில் இதயம் வேகமாய் துடித்து தலை சுற்ற ஆரம்பித்தது.

"வது?" என்று அவளை தாங்கி பிடித்தவன் மானசாவை முறைத்தான்.

"நீயா போனியோ உன்னை கடத்திட்டு போனாங்களோ? ஆனா முகுர்த்த நேரத்துல நீ அங்க இல்ல. ரெண்டு குடும்பமும் சேர்ந்து எங்களை வற்புறுத்தி கல்யாணம் செஞ்சு வச்சாங்க. உன்னால எவ்ளோ கஷ்ட பட்டிருக்கா தெரியுமா உனக்கு? இப்போகூட அவ பிரென்ட்கு உடம்பு சரி இல்லன்னு என்கிட்ட சொல்லிட்டு வந்தா? ஆனா எல்லோருமே எதுவுமே தெரியாத இவளை கஷ்ட படுத்திருக்கோம். இதுக்கு நாம தான் வெக்க படனும். உங்க வீட்டுக்கு போய் உன் வாழ்க்கையை. என்ன ஆனாலும் இவ என் பொண்டாட்டி. இன்னொரு வார்த்தை அவளை தப்பா பேசக்கூடாது" என்று தன் போனில் "ஹலோ! மாமா உங்க பெரிய பொண்ணு இங்க ஜி.ஹெச் ல தான் இருக்காங்க. வந்து கூட்டிட்டு போங்க" என்று வதுவை தூக்கி கொண்டு வெளியேறினான்.

அவனின் வார்த்தைகள் நன்கு உரைக்க தங்கையை திட்டியதற்காக வருத்தப்பட்டாள்.

அவளின் பெற்றோரும் வந்து நடந்தவற்றை தெரிந்துகொண்டு மானசாவை கூட்டி சென்றனர்.

வைதேகியை சமாதான படுத்தியவன் அவள் ஐ.ஏ. எஸ் படிப்பதை தொடருமாறு அவளுக்கு உதவி செய்து தேர்வெழுத வைத்தான்.

அப்படியே நாட்கள் நகர நகர இவர்களின் வாழ்விலும் முன்னேற்றம் வர தொடங்கி இல்லற வாழ்வை தொடங்கியிருந்தனர்.​
 
Top Bottom