Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Comment thread for Shivani's novels

Messages
74
Reaction score
72
Points
18

அத்தியாயம் 1



வருடம் 2010


உதயனின் உக்கிரத்தில் உயிர்களெல்லாம் அடுப்பில்லாமல் வெந்து கொண்டிருந்த சமயத்தில் அந்தப் பொட்டக்காட்டில் காலில் குத்திய முள்ளை உருவி வீசிவிட்டு மீண்டும் தன் அசுர ஓட்டத்தைத் தொடர்ந்தான் வேதானந்த்.

அவன் ஊருக்குள் நுழைந்தவுடன் பெருசு ஒன்று, "ஏலேய் எதுக்குவேய் இப்படி ஓடுறவன்?.. தின்னவேலிக்குள்ள திமிங்கலம் எதுவும் புகுந்திட்டா என்ன?" என்று கேட்டது தான் தாமதம்,

"ஆங் திமிங்கலம் புகுறல.. தாமிரபரணி ஆத்துல தான் தங்கமா ஓடுதாம்.. போய் புடுச்சி வச்சிக்கிரும்.." என்றபடியே பின்னங்கால் பிடரியில் பட வேகமாய் ஓடினான் அந்த பதினைந்து வயது சூறாவளி.

குறுக்குசந்தில் தண்ணிக்குடம் தூக்கிக்கொண்டு வந்த தடித்தப் பெண்ணொருத்தி, "ஏலேய் கட்டயா! நின்னு போலேய்.. எதுக்குலேய் இவ்ளோ வேகம்?" என்று நிறுத்தப் பார்க்க, அவள் கூறியது தன் காதில் விழுந்தும் அதற்கு பதில் கூற தான் பொறுப்பாளி அல்ல என்று தன் உசேன் போல்ட் ஓட்டத்தைத் தொடர்ந்தான் அந்த ஓட்டக்காரன்.

"ஏய் பாட்டியோய்!.." தெருமுக்கிலேயே தனக்கு மூச்சு வாங்கியதையும் பொருட்படுத்தாமல் தொண்டை விரியக் கத்தினான் வேதானந்த்.

மூச்சு வாங்க ஓடி வந்தப் பேரனைப் பார்த்தும், பார்க்காதவர் போல் உரலில் கொட்டைப் பாக்கை போட்டுத் தட்டிக் கொண்டிருந்தார் தங்கப்பழம்.

அவன் தன்னருகில் வந்து நிற்கவும் தான் வாயைத் திறந்தார். "ஏலேய் கட்டயா, எதுக்குலேய் இப்படி ஓடி வருதா?"

அருகில் வந்தவன் அந்தக் குட்டி உரலுக்குள் கிடந்த உலக்கையை கையில் எடுத்து வைத்துக்கொண்டு, "பாட்டி, உண்மையைச் சொல்லு! யாரு எங்கம்மைக்கு விஷம் கொடுத்தா?.. நீதானே?.." என்றான் மிரட்டலாக.

"ஏய் யாத்தே! யப்பே! இந்த கட்டயன் பண்ணுத வேலையைப் பாருங்கலேய்!" என்று அலறினார் தங்கப்பழம்.

"ஒழுங்கா பதில் சொல்லுப் பாட்டி.. இல்ல உன் வாய் மாதிரியே உன் நெத்தியும் இன்னைக்கு வெத்தலைப் போட்டுக்கும்.."

தன் அன்னையின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த சத்யமூர்த்தி, கோபமாய் சத்தம் போட்டார் மகனை. "டேய் வேதா, என்னடாப் பண்ற?.. பாட்டியைப் போய் பயமுறுத்திக்கிட்டு இருக்க.."

நீண்ட காலமாகவே சத்யமூர்த்தி திருநெல்வேலியில் இல்லை என்பதை அவரது பேச்சுவழக்கே கூறியது.

"அப்பா கிட்டவராதீய! பாட்டியை அடிச்சிருவேன்.. எனக்குத் தெரியும்.. பாட்டி தான் அம்மைக்கு விஷம் கொடுத்தது.. அம்மைய திட்டலைன்னா இதுக்குத் தான் தூக்கமே வராதே.. எதுக்கு நம்ம அம்மைக்கு விஷம் கொடுத்ததுன்னு கேளுங்கப்பா இதுக்கிட்ட.."

"டேய்! யாருடா உன் அம்மாவுக்கு விஷம் கொடுத்தது பாட்டின்னு சொன்னது?.. இப்போ நீ உலக்கையை கீழப்போடல, செமத்தியா அடி வாங்குவ பாத்துக்க.." என்றவர் கடுமையாக எச்சரிக்கவும்,

'அப்போ விஷம் கொடுத்தது பாட்டி இல்லையா?' என்றவன் யோசித்துக்கொண்டே மறுபுறம் திரும்ப, அவன் தாத்தா கணக்குப்பிள்ளை குடைபிடிக்க வந்து கொண்டிருப்பதுத் தெரிந்தது.

சட்டென்று வந்த யோசனையில் அவரையும் மிரட்டினான் வேதானந்த். "தாத்தா அங்கேயே நில்லுங்க.. கிட்டக்க வந்தா உங்க தலைலயும் எறிஞ்சிடுவேன்.." என்று யார் கைக்கும் அகப்படாமல் திண்ணை மேல் ஏறி நின்றுகொண்டான்.

நடப்பது ஒன்றும் புரியாமல் பீதியுடனே வினவினார் சிதம்பரம். "ஏலேய் கிறுக்குப் பயபுள்ள! ஏம்லேய் இப்புடிச் செய்யுதா?.."

"சொல்லுத் தாத்தா! எதுக்கு எங்கம்மைக்கு விஷம் கொடுத்தா?.."

"ஏலேய், நா எங்கலேய் விஷம் கொடுத்தேன்?"

"நீயும் கொடுக்கலையா?.. அப்போ யார் தாத்தா கொடுத்தது?" அழுவது போல் கேட்டான் அவன்.

"ஏலேய் வேதா! ஏம்லேய் இப்படி நிலையழிஞ்சு நிக்குதா?.."

"ச்சீ! சும்மாக்கெடப் பாட்டி! அப்பா நான் பாத்தேன்.. அந்தம்மாவுக்கு விஷம் கொடுத்து தான் அவரு அப்படியானாரு.. டேய் சித்து! நீயும் பாத்தல்லடா? சொல்லுடா.." எனவும், அப்போது தான் மூச்சு வாங்க ஓடி வந்திருந்த அவன் இரட்டையன் சித்தானந்த்,

"ஆமாப்பா, அந்தம்மா வேணாம் வேணாம் சொல்ல சொல்ல கெட்டவங்க அவங்க வாயில விஷத்தை ஊத்திட்டாங்க.. ஒரு கமலஹாசனும் நம்ம வேதா மாதிரி ஆகிட்டாரு.." எனத் தன் உடன் பிறந்தவனுக்கு இசைவாகப் பேசினான்.

சத்யமூர்த்திக்கு ஒன்றுமே விளங்கவில்லை. ஒருசேர இருவரையுமே அதட்டினார். "டேய்! ரெண்டு பேரும் என்னடா சொல்றீங்க?.. எனக்கு ஒண்ணுமே புரியல.."

தன் பேரன்களுக்கு தப்பாத தாத்தாவாய் உடனே அவர்களை புரிந்து கொண்ட சிதம்பரம், "எனக்குப் புரிஞ்சு போச்சுப்பா.." என்றபடியே தன் தடியை ஊன்றி சற்று முன்னால் வந்து நின்றார்.

பின் விளக்கும் விதமாக, "இந்தப் பயலுக இன்னைக்கு என்கிட்ட தாம்பா அபூர்வ சகோதரர்கள் படத்துக்குப் போறதா காசு வாங்கிட்டுப் போனானுவ.. அந்தப் படத்துல ஸ்ரீவித்யாவுக்கு விஷம் கொடுத்து ஒரு கமல் குட்டையாவும் ஒரு கமல் நெட்டையாவும் இருப்பாவ இல்ல.. அதைப் பாத்துப்போட்டு தான் உன் மக்க தன் அம்மைக்கும் யாரோ விஷம் கொடுத்து தான் தங்களுக்கு இப்படி ஆகிப்போச்சுன்னு கேக்காணுவ" எனவும், சுற்றி குழம்பி நின்றவர்கள் அனைவரும் 'த்தூ இவ்வளவு தானா?' என்று உண்மை விளங்கி பெருமூச்சு விட்டனர்.

சுற்றி வேடிக்கைப் பார்த்த வேலையாட்கள் சிலர் சிரித்துக்கொண்டே விட்டத் தங்கள் வேலைகளை கவனிக்கச் சென்றுவிட, உண்மையை கண்டுபிடித்த சிதம்பரம் மட்டும் பெருமையாக தன் மீசையை நீவிவிட்டுக் கொண்டார்.

அதில் "ம்க்கும்" என்று சலித்துக்கொண்ட தங்கப்பழம், தன் பேரன் புறம் திரும்பி, "ஏலேய் கட்டயா! உன் அம்மைக்கு யாரும் விஷம் கொடுக்கலலேய்.. ரெண்டு பேருல நீ மட்டும் இப்படி இருக்கியேன்னு உனக்கு தாம்லேய் நான் ரெண்டு தடவை விஷம் கொடுத்துக் கொல்லப் பாத்தேன்.. உன் அப்பங்காரன் வந்து தடுத்துட்டான்.. ஒழுங்கு மருவாதைய்யா என் உலக்கையை கொடுலேய்" என்று அருகில் வந்து பிடிங்கிக்கொள்ள, தொங்கிப்போன முகத்துடன் வீட்டிற்குள் ஓடினான் வேதானந்த்.

தனித்து நின்றிருந்த சித்தானந்தின் அருகில் வந்த சத்யமூர்த்தி முக்கியமான அறிவிப்பை வெளியிட்டார். "சித்து, நானும் சின்னப் பசங்க எடுத்து சொன்னாப் புரிஞ்சுக்குவீங்கன்னு பொறுமையா எடுத்து சொல்லிப் பார்த்துட்டேன்.. ஆனா நீயும் அவனும் கேட்குற மாதிரி தெரியல.. பெங்களூர்ல எனக்கு வேலை அதிகம், வீட்டுல உங்களைப் பொறுப்பா பார்த்துக்க ஆள் இல்லைன்னு தான் இங்க தாத்தா பாட்டி வீட்டுல விட்டுட்டுப் போனேன்.. நீங்க என்னடான்னா அவங்களையே எதிர்த்துப் பேசிக்கிட்டு, ஒவ்வொரு தடவையும் இது மாதிரி ஒவ்வொரு பிரச்சனையை உருவாக்கிக்கிட்டு இருக்கீங்க.. இனிமேலும் உங்களை இங்க விட்டு வைக்கிறது நல்லது இல்லைன்னு நான் ஒரு முடிவுக்கு வந்துட்டேன்.. இந்தமுறை என்கூடவே உங்களையும் ஜப்பான் கூட்டிட்டுப் போறதா நான் முடிவு செஞ்சிட்டேன்.. எனக்கு ஜப்பான்லயிருந்து நியூட்ரினோ ஆராய்ச்சிக்கு அழைப்பு விடுத்திருக்காங்க.. இனி நீயும் வேதாவும் என்கூட ஜப்பான்ல தான் இருக்கப்போறீங்க.. இதை வேதாக் கிட்டயும் சொல்லிரு.."

தன் தந்தையிடம் இது போன்றொரு நடவடிக்கையை எதிர்பார்த்திராத சித்தானந்த் வேகமாய் வேதானந்தைத் தேடி ஓடினான்.

வீட்டில் எங்கு தேடியும் அவன் கிடைக்காமல் போகவும் நேரே கொல்லைபுறத்தில் இருந்த வைக்கப்படப்பின் மீது ஏறிப் பார்த்தான். அவன் எதிர்பார்த்தது போலவே அங்கு தான் வெட்டவெளி வானத்தை வெறித்துப் பார்த்துக்கொண்டு கிடந்தான் வேதானந்த்.

அதைப் பார்த்து தானும் அவனருகில் போய் படுத்துக் கொண்டவன், "லேய் வேதா! முன்னாடியே நான் சொன்னேன் இல்ல.. இப்பப்பாரு அப்பா நம்மளையும் அவர் கூடவே கூட்டிட்டுப் போறேன்னு சொல்லுதாரு.. இனி நம்ம இஷ்டத்துக்கு இருக்க முடியாதுலேய்.. ஸ்கூலை கட் அடிச்சிட்டு சினிமாக்கும் போக முடியாது.. எல்லாம் உன்னால தான்.." என்று திரும்பி வேதானந்தை முறைத்தான்.

அதற்கு நிதானமாய் எதிர்கேள்வி கேட்டான் வேதானந்த். "இப்போ என்ன அப்பாக் கூட இருக்கப்போறோம் அவ்வளவு தான?.."

சித்தானந்த் குழப்பத்துடனே, "என்ன இவ்வளவு ஈஸியா சொல்ற நீ?.." என்று கேட்கவும், வேதானந்தின் பதில் விவகாரமாயிருந்தது.

"பெத்தாரு இல்ல.. நம்மளை கவனிச்சிக்கிறது எவ்வளவு கஷ்டம்ன்னு அவரும் தான் தெரிஞ்சிக்கட்டுமே.."

அவனின் புன்னகையில் விஷமம் இழையோடியது.

அவனின் திட்டம் புரிந்த சித்தானந்தும், "ஓஹ்! அப்படி சொல்றியா நீ?" என்று உடன் சேர்ந்து நகைத்தான்.

"ம்ம், நம்ம படுத்துற பாட்டுல அவரே நம்மளை திரும்ப இங்க கொண்டு வந்து விடணும்.. என்ன சொல்ற?" என்று படுத்திருந்தபடியே தன் சுண்டுவிரலை கொக்கியாக்கி காட்டினான்.

அதற்கு, 'டன்' என்று ஒப்புதல் தெரிவித்த சித்தானந்தும் தன் சுண்டுவிரலை அதேபோல் கொக்கியாக்கி அவனது சுண்டுவிரலுடன் இணைத்துக் கொண்டான்.

BlQmvlrWH4ba7JD6TUPzj5w23q4iyLhaMTfGLnwP6GVcMK556Fztx2PQ1cD4SGmHyZDQ5YNLrqlQUSgsmstBt77GZMnv3JGdOAQ_ccCbnaPI6LMeXOnwLZroCbRt09uIlGyyw4RW


***********************


வருடம் 2025


பரபரப்பும் வெப்பமும் மிகுந்த அந்த சென்னை மாநகரிலே தலையாட்டும் கதிர்களையும் பாய்ந்து வரும் ஓடை நீரையும் பார்க்கும் கொடுப்பினை நமக்கு இல்லை என்றாலும் எட்டுமாடி கட்டிடங்களுக்கு இடையே கண்ணாமூச்சி விளையாடும் கதிரவனை மட்டும் பார்க்கும் பாக்கியம் கிடைத்திருந்தது.

சென்னையின் மக்கள் வெள்ளம் கரைபுரண்டோடும் தி.நகரையடுத்த கோவிந்து சாலையில் தான் கதிரவனின் கண்ணொளிப்பட்டு பிரகாசித்துக் கொண்டிருந்தது அந்த அன்புவிலாஸ் கட்டிடம்.

உடைந்த கண்ணாடித் துண்டுகளை கிரீடமாக கொண்ட காம்பவுண்ட் சுவருடன் அடக்கமாகவும் அழகாகவும் காட்சியளிக்கும் அந்த நவீன பங்களாவிற்கு எக்ஸ் லெவல் செக்யூரிட்டி வழங்கப்பட்டிருப்பதற்கு காரணம், உத்தர பிரதேசத்தின் முன்னாள் ஆளுனரும் இந்தியாவின் புகழ்பெற்ற அறிவியல் விஞ்ஞானிகளில் ஒருவருமான பத்மஸ்ரீ.வேதாச்சலம் அம்மாளிகையில் வசிப்பது தான்.

பத்மஸ்ரீ. வேதாச்சலத்திற்கு வயது தொண்ணூறு. இக்கதையினுடைய நாயகி.. அல்ட்ரா மாடர்ன் மங்கை.. மிஸ்.சஞ்சனாவின் தாத்தா தான் இவர். ஒரு முக்கியத் தகவல் திருமதி.கிருஷ்ணவேணியின் கண்கண்ட தெய்வமும் ஆகச்சிறந்த எதிரியும் இவரே.

இந்த ஆதர்ச தம்பதிகளுக்கு மொத்தம் மூன்று பிள்ளைகள். மூத்தவர் நம் நாயகியின் தந்தை
ரகுநந்தன். எம்எஸ்சி பயோ கெமிஸ்ட்டான இவர் தற்போது ஒரு மத்திய அங்கீகாரம் பெற்ற மருந்து கம்பெனியை நிர்வகித்து வருகிறார்.

இவருக்கு இளையவர் கோகுலநந்தன், தன் அண்ணனுடன் சேர்ந்து உயிரியல் ஆராய்ச்சி கூடத்தை நிர்வகித்து வரும் இவருக்கு இவரது அண்ணனுடைய சொல் தான் வேதவாக்கு. அவர் நில்லென்றால் நிற்பார். உட்காரென்றால் உட்காருவார்.

இந்த ராமன் லக்ஷ்மண சகோதரர்களைத் தொடர்ந்து பத்து ஆண்டுகளுக்குப் பின் பிறந்தவர் தான் ஷாந்தினி. தற்போது அவரும் தன் அண்ணனின் மருந்துக் கம்பெனியில் தான் தானும் ஒரு ஆராய்ச்சியாளராக பணிபுரிந்து வருகிறார்.

தற்போது அன்புவிலாஸ் சாம்ராஜ்யத்தின் பெரிய இரும்புக் கதவை கடந்து கட்டிடத்தின் கூடம் தாண்டினால், வலப்புற குளிரூட்டப்பட்ட அறையில் தன் கால்களை வெந்நீர் நிரம்பிய வாளிக்குள் விட்டுவிட்டு முகத்தில் பழக்கலவையுடன் அமர்ந்திருக்கும் சஞ்சனாவை காணலாம் நாம்.

பிரம்மனின் படைப்பிலேயே அவனை கொடை வள்ளலென கூறத் தகுதியுடைய பெண்ணாய் விளங்கும் சஞ்சனா இன்று தன்னை மிகையாக அழகுபடுத்திக் கொண்டிருப்பதற்கு காரணம், அவள் ஒருவனை இன்று ரிஜெக்ட் செய்யப் போகிறாள் என்பது தான்.

ஆமாம், நிராகரிக்கத்தான் போகிறாள். அது ஒரு மேட்ரிமோனியல் ப்ரொபோசல். அவள் அத்தை ஷாந்தினி வாட்ஸாப்பில் அனுப்பிய மாப்பிள்ளை போட்டோவை எல்லாம் அவள் பார்க்கவில்லை.

'அவன் அரெஞ் மேரேஜ்க்கு ஒத்துக்கொண்டு இப்படி மேட்ரிமோனியலில் பதிவு செஞ்சிருந்தாலே எவ்வளவு பெரிய பழமாக இருப்பான்?' என்பது தான் தற்போது அவளுடைய எண்ணம்.

"மாப்பிள்ளை பேரு வருண்.. டீடோட்லர்.. நெக்ஸ்ட் மந்த் யூஎஸ் போகப்போறான்.. ரொம்ப ஆச்சாரமான குடும்பம் அவங்களது.. மாப்பிள்ளையோட அப்பாவும் உன் அப்பாவும் ஸ்கூல்மேட்ஸ்.. ஃபைவ் ஸ்டார் காஃபி ஷாப்ல, ஷார்ப்பா ஃபைவோ கிளாக், கார்னர் டேபிள்ல உனக்காக வெயிட் பண்ணிட்டிருப்பான்.. நீ போய் பாரு சஞ்சு" என்பது தான் ஃபில்டர் காபி தரும் சாக்கில் அவளது அத்தை ஷாந்தினியால் அவளுக்கு சொல்லப்பட்ட தகவல்.

யாரையும் சர்வ சாதாரணமாக தூக்கியெறிந்து பேசிவிடும் சஞ்சனாவிற்கு அவளது அத்தையிடம் மட்டும் எதிர்த்து பேசப்போனால் நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக்கொள்ளும். அதற்கு காரணம் சிறுவயதிலிருந்தே அவரை அவள் தனது குருவாக மனதில் வரித்துக் கொண்டது தான். ஆகவே தான் தற்போது கடனே என்று காபி ஷாப்பிற்கும் கிளம்பிக் கொண்டிருக்கிறாள்.

ஷாந்தினியின் மேல் அவரின் அண்ணன்களுக்குமே பயம் கலந்த மரியாதை உண்டு. காரணம், ஷாந்தினியின் கடந்த கால வாழ்க்கையில் அவர்கள் எடுத்துவிட்ட சில பல தவறான முடிவுகள் தான்.

ஏன் வேதாச்சலமும் கிருஷ்ணவேணி அம்மாளுமே வீட்டில் ஷாந்தினி எடுக்கும் முடிவுகளில் தலையிடுவதில்லை.

அவ்வீட்டில் உள்ள அனைவருக்குமே அவர் ஒரு தெய்வப்பெண் போல் தான்.

ஆனால், உண்மையில் அவர் ஒரு இரும்புப்பெண். இயற்கையின் படைப்பில் இரும்பாக இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் உருகித்தானே ஆக வேண்டும்?

அட! வெகு சீக்கிரமே சஞ்சனா ரிஜெக்ட் செய்ய கிளம்பி விட்டாளே. வாருங்கள் நாமும் அவளது காரைப் பின் தொடருவோம்.

பைவ் ஸ்டார் எனும் எழுத்துகள் பிரம்மாண்டமாய் பொறிக்கப்பட்ட அந்த பெரிய பெயர்ப் பலகையினை நாம் வியந்து பார்க்கக் கூட ஒருமுறை சந்தர்ப்பம் அளிக்காமல் கண்ணாடிக் கதவுகளை தள்ளி உள்ளே சென்றுவிட்டாள் சஞ்சனா.

அதோ கண்டுபிடித்துவிட்டாள் அந்த கார்னர் டேபிள்க்காரனை. அவனை அழைக்க அருகிலும் நெருங்கிவிட்டாள். அவனும் தன் போனில் இருந்த கண்ணைத் தூக்கி அவள் முகத்தில் வைத்துவிட்டான்.

இருந்தாலும் ரொம்பத் துணிச்சல் தான் சஞ்சனாவுக்கு. எவ்வளவு இயல்பாகப்போய் அவனுக்கு எதிரில் இருக்கிற சோபாவில் போய் அமருகிறாள்.

ஏதோ முணுமுணுக்கிறான் அவன். சஞ்சனாவிற்குக் கேட்கவில்லை.

ஆனால், நமக்குக் கேட்டது.

அவன் முணுமுணுத்ததாவது,

"வன தேவதையா?
வான தேவதையா?
யார் நீ?.."



வாங்கலும் கொடுக்கலும் தொடரும்❣️
Hi akka..ippathan read panna start panni iruken..starting romba nalla iruku..ithula rendu twins heroes pola😍😍😍..heroin entry semma😍😍
 
Messages
74
Reaction score
72
Points
18

அத்தியாயம் 2




தனக்கு எதிரிலிருந்தவனின் உயிர் உருக்கும் பார்வையில், "பார்க்குறதைப் பாரு.. பட்டிக்காட்டான் மிட்டாய் கடையைப் பார்க்குற மாதிரி.." என்று முணுமுணுத்துக் கொண்ட சஞ்சனா, தானே முதலில் தொண்டையைச் செருமிக்கொண்டு பேசத் துவங்கினாள்.

"ஹாய் வருண்?.. ஐ அம் சஞ்சனா.." என்றபடியே அவனுக்கு கைநீட்டினாள்.

பிரமிப்பு நீங்காமல் அவளையேப் பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.

"ஒரு ஃபார்மாலிட்டிக்கு கூட ஸ்மைல் இல்ல.." என்று தனக்குள்ளேயே முணுமுணுத்துக் கொண்ட சஞ்சனா, ஹலோ என்று அவன் முகத்தின் முன் சொடுக்கிட்டாள்.

அவன் சுயநினைவடைந்து, "என்னங்க ப்ளீஸ் என் கைய கிள்ளுங்களேன்" என்றான்.

அவள், "வாட்?.. எதுக்கு?" என்று கண்களை அகல விரித்தபடியே கேட்டாள்.

அவன், "ப்ளீஸ்.. ப்ளீஸ்.. சொன்னதை செய்யுங்களேன்" என்று அடம் பிடித்தான்.

அவளும் வேண்டுமென்றே அழுத்தமாய் கிள்ளவும் துள்ளலுடன் சொன்னான். "ஓஹ் காட் வலிக்குது.. அப்போ நிஜந்தான்.. தேவலோகத்தில் உலாவ வேண்டிய கன்னிகையை இப்படி நேர்ல பார்த்தா எப்படிங்க நம்ப முடியும்?.. அதான் கனவா நனவான்னு செக் பண்ண கிள்ளச் சொன்னேன்" என்றவுடன், சஞ்சனாவிற்கு கன்னங்களில் ரோஜாக்கள் பூத்தாலும் 'க்கும்.. க்கும்' என்று இருமி சமாளித்துவிட்டு,

"இங்கப் பாருங்க வருண்! எனக்கு இந்த அரென்ஞ் மேரேஜ் ஸ்டஃப் எல்லாம் சுத்தமா பிடிக்காது.. சாரி ட்டூ சே திஸ் நான் உங்களை ரிஜெக்ட் பண்ண தான் இங்க வந்தேன்" என்று படபடவென பொரிந்து தள்ளினாள்.

அவன் அதில் கலவரமடைந்து, "என்னங்க இப்போ தான் பார்த்தோம்.. இன்னும் நான் என் மனசுல இருக்குறதை உங்கக் கிட்ட சொல்லக் கூட இல்ல.. அதுக்குள்ள ரிஜெக்சன்னு சொன்னா எப்படிங்க?.." எனவும்,

"இங்கப் பாருங்க வருண்! பழைய டயலாக் தான் ஆனாலும் சொல்றேன்.. இந்தக் காதல், கல்யாணம், கத்தரிக்காயெல்லாம் சுத்த டைம் வேஸ்ட் மேட்டர்ஸ்.. பொண்ணுங்களோட ஹேண்ட்பேக்ல நாப்பது கிலோ இரும்புக்குண்டைத் தூக்கிப்போட்டு எங்கேப்போனாலும் தூக்கிட்டு போன்னு சொல்ற மாதிரி.." என்றவள் முகத்தைச் சுளிக்கவும்,

"மேரேஜ் பத்தின உங்க ஒபினியன் ரொம்பத் தப்புங்க. கல்யாணங்கிறது ஆயிரம் காலத்து.." என்று ஆரம்பித்தவனை கையுயர்த்தித் தடுத்தபடியே மறுத்துப் பேசினாள் சஞ்சனா.

"ஓஹ்! ப்ளீஸ் ஸ்டாப் யுவர் லெக்சர்.. சீ! உங்க ப்ரொஃபைல் பத்தி அத்தை சொன்னதை கேட்டவுடனேயே.. தப்பா எடுத்துக்காதீங்க.. உங்கப் போட்டோ பார்க்கக் கூட எனக்குப் பிடிக்கல.. பிகாஸ் அப்போவே நீங்க என் டைப் இல்லன்னு எனக்கு புரிஞ்சுப் போச்சு.. ஃபார் எக்ஸாம்பிள் எனக்கு இடிஎம் பிடிக்கும்.. பட் உங்களுக்கு மெலோடி தான்.." என்று மேலும் ஏதோ சொல்ல வந்தவளை கலைக்கும் விதமாக மேடம் என்று வந்து நின்றார் பேரர்.

அவள் அவரிடம் ஒன் காபசீனோ என்று விட்டு எதிரில் இருந்தவனைப் பார்க்க, அவன் பேரரிடம் டூ காபசீனோ என்றான்.

பின், தன் கையிலிருந்த தட்டோடு பேரர் சென்றவுடன் அவள்புறம் குனிந்து, "யூ நோ?.. ஐ டோன்ட் லைக் காஃபி.. பட் உங்களுக்காகத் தான் ஆர்டர் பண்ணியிருக்கேன்.." எனவும்,

"இங்கப் பாருங்க நீங்க நான் சொல்ல வந்த விஷயத்துல இருந்து என்ன டைவர்ட் பண்ணிக்கிட்டு இருக்கீங்க.." என்று கோபமாக கூறியவள்,

பிறகு தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு, "ஊப்ப் இப்போ நம்ம முக்கியமான விஷயத்தைப் பத்தி பேசலாமா?" என்று கடுமையாகவேக் கேட்டாள்.

"ம்ம் தாராளமா.." என்றவன், தன் முழங்கையை டேபிளில் ஊன்றி முகத்திற்கு முட்டுக் கொடுத்து அவள் முகத்தையே தான் வெறித்து வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான்.

அவளுக்கு கடுகடுவென்று இருந்தது.

"இங்கப் பாருங்க வருண்! நான் என் அத்தைக்காகத் தான் இங்க வந்தேன்.."

"மூணு"

"என்ன மூணு?"

"இல்ல, இதோட நீங்க மூணு இங்கப் பாருங்க வருண் சொல்லிட்டீங்க.."

"யூவ்.."

"வெயிட் வெயிட்" என்றவன்,

"நீங்க என் போட்டோவையேப் பார்க்கலைல்ல?.. ரொம்ப நல்லதாப் போச்சு.. இப்போ தான் நேர்ல பார்த்துட்டீங்களே.. இப்போ சொல்லுங்க! என்னை உங்களுக்கு பிடிச்சிருக்கா இல்லையான்னு" என்று கண்ணடிக்கவும்,

"ஹெலோ எஸ்கியூஸ் மீ.." என்று கண்டிப்பு காட்டியவளிடம் மீண்டும் பிடிவாதமாய்,

"ம்ம்! சொல்லுங்க என்னை உங்களுக்கு பிடிச்சிருக்கா?.. இந்த அம்மா அத்தை மெலடி ஈடிஎம் பொடலங்கா கதையெல்லாம் விடுங்க.. என்னைப் பாருங்க!.. சொல்லுங்க என்னை உங்களுக்கு பிடிச்சிருக்கா?" என்று வலப்புற புருவத்தை ஏற்றி இறக்கியவன் மேல் அவள் பார்வை ஒரு நிமிடம் நிலை குத்தி நின்றது.

பின்பு அவள், 'நோ' என்றுவிட்டு வலப்புறம் திரும்ப, சரியாக பேரர் காபி கோப்பைகளுடன் வந்து கொண்டிருப்பது தெரிந்தது.

பேரர் காபசீனோவை டேபிளில் வந்து வைக்கவும், "ம்ம் சொல்லுங்க நீங்க இங்க வரும் போது போட்ட பிளான் பத்தி.." என்று சொல்லிவிட்டு காபசீனோவை அவன் சின்னதாய் 'சிப்'ப...

"யூ சி ஐ அம் அன் எமோஷனல் இடியட்.. என் ஃபேமிலிய என்னால ஹர்ட் பண்ண முடியாது.. முக்கியமா என் அத்தைய.. ஸோ, நீங்களே உங்க வீட்டுல இந்த மேரேஜ் வேணாம்னு சொல்லிருங்க ப்ளீஸ்" என்று அவன் முகத்தை பாவமாகப் பார்த்தாள் சஞ்சனா.

"சரி என்னை ரிஜெக்ட் பண்றதுன்னு முடிவாகிடுச்சி, உங்கக்கிட்ட ஒரு கொஸ்ட்டின்.. ஒருவேளை நீங்க ஃபியூச்சர்ல யாரையாவது லவ் பண்ணனும்னு விரும்பினா அவனுக்கு என்ன மாதிரி குவாலிஃபிகேசன் எல்லாம் இருக்கணும்னு எதிர்பார்க்குறீங்க?"

"யூஷுவலா நான் யாருக்கிட்டயும் என் பெர்சனல் விஷயங்களை ஷேர் பண்றது கிடையாது.."

"சொல்ல முடியாது போடான்னு டீசெண்டா சொல்றீங்க.."

சஞ்சனா உடனே மறுத்தாள்.

"ச்ச.. ச்ச.. அப்படியெல்லாம் இல்ல" என்று காபி கப்பிற்கு தன் லிப்ஸ்டிக்கை இடம் மாற்றிக்கொண்டே.

"அப்போ சொல்லுங்களேன்…"

"ம்ம் என்ன சொல்ல?.. பெருசா எக்ஸ்பக்டேஷன்னு எதுவும் இல்ல.. அவர் எனக்காக பொறந்திருக்கணும்.. என்கிட்ட மட்டுமே அவர் உண்மையா இருக்கணும் அவ்ளோ தான்."

"அவ்ளோ தானா?" என்றவன் மனதுக்குள் 'உண்மையா இருக்கணுமா?.. ரொம்பக் கஷ்டமாச்சே' என்று முணுமுணுத்துக் கொண்டான்.

"அ..வ்ளோ..தான்" என்றவள் அக்கு அக்காய் வார்த்தையைப் பிய்த்து சிரிக்க,

அவன், "நீங்க ரொம்ப ரொம்ப அழகா சிரிக்கிறீங்க" என்றான்.

அதில் அவளின் புன்னகை இன்னும் கொஞ்சம் விரிவடைந்தது.

"பெர்ஃபெக்ட் மௌத்.. நீங்க என்னை ட்ரை பண்றது புரியுது.. பட் எனக்கு இன்டெரஸ்ட் இல்ல.. சரி சொல்லுங்க! நீங்க எந்த மாதிரி பொண்ணை எதிர்பார்க்குறீங்க?.."

"நமக்கென்னங்க ஸ்கை ப்ளூ கலர் ஸ்கர்ட் போட்டுக்கிட்டு வலது கையில ரேபாக் வாட்ச் கட்டிக்கிட்டு முன்னம் பல் வரிசைல ஒன்னு மட்டும் வரிசை விலகி முறைக்கும் போது அழகியாவும், சிரிக்கும் போது பேரழகியாவும் பரிமாணம் எடுக்கிற பொண்ணா இருந்தா மட்டும் போதும்ங்க.. "

"ஹேய்! ஹேய்! பார்த்தீங்களா!.. என்னையே மறுபடியும் டீஸ் பண்றீங்க.. அப்புறம் நான் எழுந்து போயிடுவேன்.."

"ம்ம், இப்படித் தாங்க அவ அடிக்கடி என்கிட்ட கோவிச்சுக்கணும்.."

"அது ஏனாம்?"

"அப்போ தானேங்க ஒவ்வொரு பில்லோவ் ஃபைட்டுக்கு பின்னாடியும் ஒரு ரொமாண்டிக் எபி எழுத முடியும் நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து.." என்று கேப்பிலும் கோல் அடித்தான் அவன்.

"ஹாஹாஹா.."

"ஹான் சொல்ல மறந்துட்டேன் பாருங்க.. இடது உள்ளங்கைல மட்டும் அந்த அழகிக்கு அழகா அம்சமா ஒரு மச்சம் இருந்ததுனா யார் தடுத்தாலும் குதிரை ஏறி வந்து.. இல்ல இல்ல ஹெலிகாப்டர் ஏறிவந்து தூக்கிட்டு போயிடுவேங்க.."

வேகமாக தன் இடப்புற காதோர முடியை ஒதுக்குவது போல் இடக்கையை கொண்டு வந்தவள், தன் கோழிக்குண்டு கண்மணியை விளிம்புக்கு உருட்டினாள், புதிதாய் மச்சம் ஏதும் தன் கையில் முளைத்திருக்கிறதோ என்று சந்தேகித்து.

பெரிய ஏமாற்றம். உள்ளங்கையில் மச்சம் இல்லை.

அவள் செயலில் வாயில் காபியுடனேயே சிரிப்பையும் விழுங்கினான் அவன்.

"அது ஏன் அப்படி?.. ஜோசியக்காரர் அப்படி பொண்ணாப் பார்த்து கட்டிக்கிட்டா பெரிய ஸ்டார் ஆகிடுவீங்கன்னு சொன்னாங்களோ?" ஏமாற்றமும் எகத்தாளமும் போட்டிப்போட்டுக் கொண்டு வந்து விழுந்தது அவள் வார்த்தைகளில்.

ரசித்துச் சொன்னான் அவன். "ச்ச.. ச்ச.. அப்படியெல்லாம் இல்லைங்க.. அதெல்லாம் ஒரு ஃபீல்.."

"ஓகேங்க, எனக்கு டைம் ஆகிடுச்சு.. ஐ ஹேவ் டூ கோ.. நைஸ் டூ மீட் யூ.. அப்புறம் வருண், அம்மா வீட்டுல கேட்டா நோ சொல்லிடுவீங்கல்ல?" என்றவள் மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்திக் கொள்ள கேட்கவும்,

"ம்ம் கேட்டா நோ சொல்லிடுவேன்.. ஆனா, வருண் அம்மா எப்படி என் வீட்டுல வந்து கேட்பாங்க?.."

நக்கல் ஏகத்திற்கும் பொங்கி வழிந்தது அவன் குரலில். அவளுக்கு ஏதோ புரிவது போல் இருந்தது.

"ஹேய் யூ மீன்?.."

"யெஸ் ஐ மீன் ஐ அம் நாட் வருண்.. ஐ அம்.. வேதா.. வேதானந்த்"

இப்போதும் அவளிடம் தன் பெயரை மாற்றியே கூறினான் அவன்.

"மை காட்.. நீங்க மேட்ரிமோனியல் வருண் இல்லைன்னா இவ்ளோ நேரம் என்னை வச்சு டைம் பாஸ் பண்ணுனீங்களா?.. ஹவ் டேர் யூ?.. வந்த உடனேயே நீங்க வருண் இல்லைன்னு சொல்றதுக்கென்ன?"

"எங்கங்க நீங்க சொல்ல விட்டீங்க?.. நீங்க பாட்டுக்க தான் பேசிக்கிட்டேப் போனீங்க.."

"ஷிட்.. இனி நான் வருண் கிட்ட வேற பேசனும்.." என்றபடியே வருணிற்கு போன் போட்டு கத்தினாள் சஞ்சனா.

எதிர்புறம் அவனை ஹெலோ சொல்லக்கூட அவள் அனுமதிக்கவில்லை.

"பேசாத! பேசாத! ஷட்டப்!.. எல்லாம் உன்னால தான்.. சொன்னா சொன்ன டைம்க்கு வரத்தெரியாதா?.. நாளைக்கே நமக்கு கல்யாணமாகி நான் டெலிவரி வார்ட்ல உயிர் போகுற நிலைமைல கிடந்தாலும் நீ இப்படி தான் கேஷுவலா வருவியா?"

அவன் பயத்தில், "நான்.. நான்.. உங்க அத்தைக்கு போன் போட்டு சொன்னேனேங்க.. அவங்க உங்கக்கிட்ட சொல்லல போலங்க.. சாரிங்க" என்றான்.

"என்ன சாரி? சீக்கிரம் வாங்க.." என்று சொல்லிவிட்டு வேக வேகமாய் மூச்சுவாங்கியபடியே, 'இவ்ளோநேரம் யாருன்னே தெரியாதவன் ஒருத்தன் கூட உட்கார்ந்து காபி குடிச்சிருக்கேன்.. வந்த உடனேயே நீங்க வருணான்னு கேட்டு கன்பார்ம் பண்ணாம.. ச்சே! சரியான இடியட் நான்..' என்று சஞ்சனா தனக்குத்தானே பேசிக்கொண்டும் திட்டிக்கொண்டும் இருக்க..

என்னங்க என்றழைத்தவன் அவள் நிமிர்ந்துப் பார்க்கவும், 'கூல் கூல்' என்றான் சிரிப்பை முயன்று அடக்கிக்கொண்டே.

"என்ன கூல் கூல்?" என்று எகிறினாள் அவள்.

"இப்போ என்ன அந்த வருண் கிட்ட பேசனும், அவ்ளோ தானே? நான் பேசுறேன்.. பட் அவன் இங்க வந்துட்டுப் போற வரைக்கும் நீங்க உங்க வாயவே திறக்கக்கூடாது, ஓகேவா?" எனவும், வேறுவழியின்றி அவனுக்கு சரியென்று தலையாட்டினாள் சஞ்சனா.

டேபிளில் தாளமிட்டுக் கொண்டிருந்தவன் திடீரென, "உங்கக்கிட்ட மேக்கப் கிட் ஏதாவது இருக்கு?.." என்றான்.

அவளும் எதுக்கு என்று கேட்டுக் கொண்டே தன் கைப்பையிலிருந்ததை எடுத்து நீட்டினாள்.

அதில் பவுண்டேசன் பாட்டிலை மட்டும் தேடி எடுத்தவன், அதிலிருந்த வெளிர் மேனி வர்ண திரவக் கலவையை ஆட்காட்டி விரலால் தொட்டு, அவள் முகத்தில் ஊன்றிப் பார்த்தால் மட்டும் தெரியும்படி அங்கங்கு ஓரமாக பொட்டு போல் வைத்து விட்டான்.

மேலும் கழுத்திலும் கையிலும் கூட அதுபோலவே திட்டுத் திட்டாக வைத்துவிட்டான்.

சஞ்சனாவிற்கு ஒன்றுமே விளங்கவில்லை. சில நிமிடங்கள் முயன்று தன் ஆவலை அடக்கியவள், பின் அவனிடமே, "ஆமா எதுக்கு இப்படியெல்லாம் வச்சு விட்டீங்க?" என்றாள்.

அப்போது அவளுக்கு பதில் கூற எத்தனித்தவனை கலைக்கும் விதமாக அவர்களருகில் 'எஸ் கியூஸ் மீ' என்றொரு குரல் கேட்டது. இருவரும் திரும்பிப் பார்த்தனர்.

தலையை வழித்து சீவி, கண்ணில் சோடாபுட்டி கண்ணாடி மற்றும் நெற்றியில் திருநீறென ஒரு அக்மார்க் பழமாய் அவர்கள் முன் பிரசன்னமாகியிருந்தான் வருண் வாசுதேவன்.

வந்தவனை 'ஹெலோ மிஸ்டர் வருண்' என்று ஏதோ பத்துவருட பழக்கம் போல் கைக் குலுக்கி அணைத்து வரவேற்றான் வேதானந்த்.

'நீங்க?' என்று வருண் அவனை கேள்வியாய் பார்க்கவும்,

"நான் வேதானந்த்.. வாங்க உட்கார்ந்து பேசலாம்" என்று மழுப்பினான் அவன்.

'ம்ம்' என்றுவிட்டு உட்கார்ந்த வருணின் அருகில் மீண்டும் மெனு கார்டுடன் படையெடுத்து வந்தார் பேரர்.

வருண் எனக்கு எதுவும் வேண்டாம் என்று சொல்லிவிட, வேதானந்த், "மேடமுக்கு மட்டும் ஒரு ஆப்பிள் ஜூஸ்.." என்று பேரரை அனுப்பி வைத்தான்.

பேச்சைத் துவக்கும் விதமாக அக்கறையாக விசாரிக்கத் துவங்கினான் வேதானந்த். "என்ன வருண் என்ன பண்றீங்க?"

"நெக்ஸ்ட் மந்த் யூஎஸ் போகப்போறேங்க.. ஆமா சஞ்சனாவுக்கு நீங்க யாரு?"

ஐஸ் வாட்டரைப் பருகினாள் சஞ்சனா.

"எனக்கு எப்படி சொல்றதுன்னே தெரியல வருண்.. பட் சொல்லாம விட்டா அது உங்களுக்கு துரோகம் பண்ற மாதிரி இருக்கும்னு தான் நானே நேர்ல பார்த்து சொல்ல வந்தேன்.." என்று வேதானந்த் நிறுத்தவும்,

எதுவோ புரிந்து, "மிஸ்டர் வேதானந்த் நீங்களும் சஞ்சனாவும் லவ் அந்த மாதிரி?" என்று வருண் கேள்வியாக இழுக்கவும் வாயில் வைத்த ஐஸ்வாட்டர் புரையேறியது சஞ்சனாவிற்கு.

வருண் எடுத்துக் கொடுத்ததை தொடர முயன்றான் வேதானந்த்.

"மெதுவா ஹனி.. பாப்பா பயந்திடப் போகுது.. ஒண்ணுமில்ல வருண்.. சஞ்சுவுக்கு இப்போ த்ரீ மந்த்ஸ்.. நைன்ட்டி நைன் பெர்சென்டேஜ் சேப்டியாத் தான் இருந்தோம்.. பட், எப்படின்னு தான் எங்களுக்கேத் தெரியல. ஐ திங் அந்த ஒன் பெர்சென்டேஜ் சான்ஸ் தான் இப்படி சொதப்பிடுச்சின்னு நினைக்கிறேன்.."

"ஹெலோ சஞ்சனா! என்னங்க என்னை கூப்ட்டு வச்சு விளையாடுறீங்களா?"

சஞ்சனாவின் மேல் பாய்ந்த வருணை தன்புறம் திருப்பினான் வேதானந்த். "அய்யோ! உங்க மேல சத்தியமா இல்ல வருண்.. சிக்ஸ் மந்த்ஸா நானும் சஞ்சுவும் லிவிங் டூகெதர்ல இருக்கோம்.."

தற்போது சத்தமாய் வேதானந்த் என்று அதட்டிய சஞ்சனாவின் குரலில் அவன் அவிழ்த்தப் பொய் மூட்டையை கட்டச் சொல்லும் த்வனி இருந்தது.

"இரு சஞ்சு பேசிக்கிட்டு இருக்கேன்ல.. அவர் புரிஞ்சிக்குவாரும்மா.." என்று அசராமலிருந்தான் வேதானந்த்.

"இதுக்கு நான் உங்களை சும்மா விட மாட்டேன்.. இப்பவே உங்க வீட்டுக்கு கால் பண்றேன் மிஸ்.சஞ்சனா.." என்று தன் பேண்ட் பாக்கெட்டிலிருந்து கைப்பேசியை வெளியில் எடுத்தான் வருண்.

பதறிப்போன சஞ்சனா, "அய்யோ! வேண்டாம் வருண்!.. ப்ளீஸ்! வீட்ல யாருக்கிட்டயும் சொல்லிடாதீங்க.. மதர் ப்ராமிஸா நான் இப்போ ப்ரெக்னன்ட் இல்ல.." என்றாள் வேதானந்தை முறைத்துப் பார்த்துக் கொண்டே.

இது ஏற்கனவே வேதானந்த் எதிர்பார்த்தது தான். ஆகையால் தனது இன்னொரு திட்டத்தை செயல்படுத்தத் தொடங்கினான் அவன்.

"சாரி வருண்.. உங்கக்கிட்ட சஞ்சனா ப்ரெக்னன்ட்னு சொன்னது பொய் தான்.. ஆனா, உங்கக்கிட்ட இப்போ எப்படி உண்மைய சொல்றதுன்னு தான் எங்களுக்குத் தெரியல வருண்.. சஞ்சு கொஞ்சம் அந்த முடியை ஒதுக்கி உன் முகத்தைக்காட்டு.. ஸ்கார்ப்பை எடுத்து கழுத்தைக் காட்டு.. என்ன வருண் ஷாக் ஆகிட்டீங்களா?"

வேதானந்த் கேட்டது போலவே அதிர்ந்து போயிருந்த வருண் அகன்ற கண்களுடன், "இது என்ன இப்படியிருக்கு?.. ஸ்கின் ஸ்பெஷலிஸ்ட் கிட்ட போனீங்களா மிஸ்.சஞ்சனா.." என்று தன் அதிர்ச்சி விலகாமல் கேட்டான்.

"ஒன் வீக் முன்னாடியேப் போயிட்டோம் வருண்.. டாக்டர் ஸ்கின் பயாப்சி டெஸ்ட் எடுக்கச் சொன்னாரு.. எடுத்துப் பார்த்ததுல.."

"ம்ம்! சொல்லுங்க வேதானந்த்!.. என்னாச்சு?.."

"எடுத்துப் பார்த்ததுல சஞ்சனாவுக்கு இருக்குறது ஏர்லி ஸ்டேஜ் ஆஃப் லூகோடெர்மான்னு சொல்லிட்டாங்க வருண்.. இன்னும் கொஞ்ச நாள்ல சஞ்சனாவோட உடம்பு ஃபுல்லா இது வந்திரும்னும் சொல்றாங்க.. அதான் உங்கக்கிட்ட இதை எப்படி சொல்றதுன்னு இப்படி லவ் ப்ரெக்னன்ட்னு பொய் சொல்லி கல்யாணத்தை நிறுத்தப் பார்த்தோம். இன்னும் சஞ்சனாவோட வீட்ல இருக்க யாருக்கும் இது தெரியாது வருண்.. ப்ளீஸ் நீங்களும் சொல்லிடாதீங்க.. ஆயுர்வேதத்துல சித்தாவுலன்னு எதுல பெஸ்ட் ட்ரீட்மெண்ட் இருக்குன்னு இன்னும் விசாரிச்சிட்டு இருக்கோம் வருண்.. சஞ்சு எப்படியிருந்தாலும் அவ எனக்கு தான் சொந்தம் வருண்.." என்று தன் கண்களை துடைப்பது போல் பாவனை செய்தான் வேதானந்த்.

ஆறுதலுக்காய் டேபிளில் இருந்த அவனது கை மீது தனது கையை வைத்த வருண், "யூ ஆர் க்ரேட் மிஸ்டர் வேதானந்த்!.. அப்புறம் உங்க லவ் க்ரேட்டோ க்ரேட்!.. உங்க லவ் சக்ஸஸ் ஆக என் வாழ்த்துகள்.." என்றதோடு, வேதானந்தின் சாமர்த்தியத்தை மனதிற்குள் மெச்சியபடி உட்கார்ந்திருந்த சஞ்சனாவிடம் ஆறுதல் கூறிவிட்டு கிளம்பிவிட்டான்.

காபிஷாப்பை விட்டு வெளியே வந்த வருணிற்கு அவன் அன்னையிடமிருந்து அழைப்பு வந்தது.

எடுத்த எடுப்பிலே, "என்னப்பா பொண்ணு புடிச்சிருக்கா?" என்றவர் வினவவும்,

உள்ளே நடந்ததை நினைத்துப் பார்த்தவன், பொண்ணு பிடிக்கலைம்மா என்றான்.

"என்னடா நெனச்சிக்கிட்டு இருக்க?.. ஊரு பூரா தேடியாச்சி.. இனி வேற கிரகத்துல இருந்து தான் உனக்குப் பொண்ணுப் பார்க்கணும்.. உண்மையைச் சொல்லுடா? வேற யாரையாவது லவ் பண்றியா?" என்றவர் ஆவேசமாகவும் விரக்தியாகச் சிரித்த வருண்,

"அன்பு மட்டும் தான்மா அனாதை" என்றதோடு அழைப்பைத் துண்டித்து விட்டான்.

வருணின் போறாத காலம் அவனது தாய், "ஏங்க! இவனைப் பார்த்தீங்களா?.. யாரோ அன்பாம்.. அனாதை பொண்ணாம்.. நம்மளை மோசம் பண்ணிட்டான்ங்க இவன்.." என்று கத்தித் தீர்த்துக் கொண்டிருந்தார்.

தன் காரினுள் ஏறப்போன வருண் எதற்கும் இருக்கட்டும் என்று, கண்ணாடி சுவரின் வழியே தெரிந்த வேதானந்தையும் சஞ்சனாவையும் தனது கைப்பேசியில் படம் பிடித்துக் கொண்டான். ஆம், பின்னால் பல பிரச்சனைகளுக்கு அதுவே அஸ்திவாரமாய் மாறப் போகிறது என்பதை அறியாமல்.

வருண் கிளம்பிய பின் பொதுவாக பேசிக் கொண்டிருந்த சஞ்சனா, தான் கிளம்பும் போது மனமே இல்லாமல் அடிக்கடி வேதானந்தை திரும்பிப் பார்த்துக் கொண்டே சென்றாள்.

அவள் காபி ஷாப்பை விட்டு வெளியேறியதும் தனது கைப்பேசியிலிருந்து தன் இரட்டையனுக்கு அழைப்பு விடுத்தவன், மறுபுறம் ஏற்கப்பட்டதும் உற்சாகமாய் பதிலளித்தான். "ம்ம் ஃபைன் டா.. நீ எப்படியிருக்க?.. தாத்தாவுக்கு இப்போ பரவாயில்லடா.. அப்பலோ டாக்டர்ஸ் தான் முன்னாடியே நீங்க சென்னைக்கு அவரை கொண்டு வந்திருந்தா நிலைமை இவ்ளோ சீரியஸ் ஆகிருக்காதுன்னு அப்பாவைப் போட்டு திட்டிக்கிட்டு இருக்காங்க.. டேய் வேதா! நீ எப்போ சென்னை வர்ற?.. யூ நோ வாட்?.. இங்க பொண்ணுங்க எல்லாம் ரொம்ப பப்ளியா அழகா இருக்காங்கடா?.. உனக்கேத் தெரியாம உன் பேர்ல ஒரு கேர்ள் ஃப்ரெண்ட்டை வேற நான் சம்பாரிச்சு வச்சிருக்கேன்.. யூ மஸ்ட் தேங்க் மீ.. அவ போன் நம்பர் கூட.. ஓகே! ஓகே சாமியாரே! திட்டாதடா!.. சீக்கிரம் இந்தியா வா.." என்றதோடு கைப்பேசியை அணைத்தவன், பேசிக் கொண்டிருக்கும் போதே மேசையில் மெஜஸ்டிக் எழுத்துருவில் தான் எழுதிய 'சித்தானந்த்' என்னும் தன் பெயரை ரசித்துப் பார்த்தான்.

0Ge6iN1H3yeaVjQXabeDyr23iO2K1y6N85artotq1mDZ5aT8y1mth7pS-MjXVhGVq3tZs7eI0eemFhCgoUFkXyjDrbJ6_Ju5lp-o7jWrzilj93UqfUGSnE6XYpaG8EJCinHTQuRg




வாங்கலும் கொடுக்கலும் தொடரும்❣️
Ada ennapa sidhu ipadi game play pannura..pavam sanjana.. ithula vedha name vera involve agitu..varun nala enna confusion vara pogutho.😂😂😂. interesting akka😍😍😍
 
Messages
74
Reaction score
72
Points
18

அத்தியாயம் 3




தொடர்ந்து மடிக்கணினியில் வேலைப் பார்த்துக் கொண்டிருந்த வேதானந்த், தனது கைப்பேசியின் அதிர்வில் கவனம் சிதறினான். இந்தியாவிற்கு கிளம்ப வேண்டிய நேரத்தை தனக்கு நினைவுபடுத்த போனில் அவன் பதிந்திருந்த இசைதான் மெல்ல அவனை எழுப்பிக் கொண்டிருந்தது.

நிமிர்ந்தவன் மணியைப் பார்த்தான். அது இரவு பனிரெண்டு முப்பதெனக் காட்டி ஓடிக் கொண்டிருந்தது.

இந்தியாவிற்கு கிளம்ப வேண்டும் எனும் நினைப்பே அவனுக்கு சோம்பலைத் தந்தது. மெல்ல தனது டையைத் தளர்த்தி அந்த சாய்வு நாற்காலியின் பின்புறம் தலையை சாய்த்தான்.

விட்டத்து விளக்குகளை வெகுநேரத்திற்கு காண விரும்பாமல் விழிகளை மலர்த்தியவனுக்கு தலை லேசாக வலிப்பது போல் இருந்தது.

நள்ளிரவு தாண்டியும் வேலை பார்ப்பது என்பது அவனுக்கு வழமை தான். ஆனால், இன்று ஏனோ அயர்வோடு கலந்த ஒரு மனச்சுமை.

ஒரு வாரத்திற்கு முன்பே உறுதி செய்யப்பட்டது தான் இந்த இந்தியப்பயணம்.

பத்து நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் அந்த போன்கால் மட்டும் வராமல் போயிருந்தால் இப்போதைக்கு இந்தியா செல்லும் எண்ணமே அவன் குடும்பத்திற்கு வந்திருக்காது.

அன்று நடந்தது இன்னும் நினைவிருக்கிறது அவனுக்கு. அன்று பார்த்து அவன் நேரமே வீட்டிற்கு வந்திருந்தான். சோர்வாக வீட்டிற்கு வந்தபோது தான் அவன் அப்பா டைனிங்டேபிளிலேயே மறந்துவிட்டு போயிருந்த கைப்பேசி இசைப்பதைக் கவனித்தான்.

திரையில் ஒளிர்ந்தப் பெயரைப் பார்த்து புருவ முடிச்சோடு அதை அவன் எடுத்த போது தான், அவனது தாத்தாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டு வீட்டு முற்றத்திலேயே நெஞ்சைப் பிடித்து விழுந்து விட்டது அவனது பாட்டி தங்கப்பழம் மூலமாக தெரியவந்தது அவனுக்கு.

சிறுவயதில் எத்தனையோ முறை தங்கப்பழம் அவனை கட்டயன் என்றழைத்து வம்புக்கிழுத்திருக்கிறார். அப்போதெல்லாம் அவர் மீதான கோபமும் வெறுப்பும் எல்லையைக் கடந்து, விபரீதமாய் அவரைப் பழிவாங்க சித்தானந்துடன் திட்டம் தீட்டியதுண்டு.

ஆனால், தற்போது அவர் அழும் போது, அவரை தேற்ற தான் உடன் இல்லையே எனும் ஆற்றாமை தான் உண்டானது அவனுக்கு.

"நீங்க அழாதீங்க பாட்டி.. கணக்குப்பிள்ளைக் கிட்ட போனை கொடுங்க.." என்று, உடனே போன் கணக்குப்பிள்ளைக்கு கைமாறியதும் அடுத்து அவர் என்ன செய்ய வேண்டும் என்று சில உத்தரவுகளைப் பிறப்பித்தான்.

ஊரில் பாதி நிலம் அவர்களுடையது போல் வெள்ளாமை பார்த்து வந்த தாத்தா, திடீரென படுக்கையில் விழுந்தால் தொழில் நலிவடைந்து விடாதா என்ன?

இப்போதைக்கு ஏதாவது செய்து சமாளிப்பது தான் முக்கியம் என்பது போல் கட்டளைகளை அவருக்குப் பிறப்பித்தான்.

பிறகு, தனது பாட்டிக்கும் ஆறுதல் சொல்லி விட்டு படுக்கையறைக்குச் சென்றவன், கட்டிலில் குப்புற படுத்திருந்த தன் தந்தையின் முதுகில் தலை வைத்து படுத்திருந்த சித்தானந்தை கண்டதும், தலையாட்டியபடியே படுக்கையில் அவனைப் புரட்டிப்போட்டான்.

புரட்டிவிட்டு நிமிர்ந்தவனுக்கு மேசையில் இரண்டு மதுக் கிண்ணங்களும் அதில் மிச்சமாய் தங்கியிருந்த தேறல் துளிகளும் தெரிய, தற்போது போதை தலைக்கேறி கிடப்பவர்களை எழுப்பி விஷயத்தை புரிய வைப்பது என்பது உசிதமல்ல என தெளிந்து, காலையில் சொல்லிக் கொள்ளலாம் என விளக்கை அணைத்து விட்டு, தானும் அந்த நீள நீர் மெத்தையில் போய் ஓரமாய் விழுந்தான்.

ஜப்பான் வந்த நாளிலிருந்தே அவர்கள் மூவரும் இப்படி ஒரே அறையில் தூங்குவது தான் வழக்கம். அதேபோல் காலை உணவும் ஒன்றாக அமர்ந்து தான் உண்ணவேண்டும் என்பது அவ்வீட்டில் எழுதப்படாதச் சட்டம்.

மறுநாள் காலையில் வெள்ளை நிற குர்தாவில் யோகா முடித்து வந்த சத்யமூர்த்தியிடம் வேதானந்த் மருத்துவமனையில் இருக்கும் தன் தாத்தாவைப் பற்றித் தெரிவிக்க, பதறிப் போனவர் இரவில் தான் கிடந்த நிலை உணராமல், "இதை ஏன் நைட்டே என்கிட்ட சொல்லல" என்று கடிந்து கொண்டார்.

பின், உடனே தனது போனில் பிளைட்டிற்கும் டிக்கெட் புக் செய்தார். உடற்பயிற்சி கூடத்தில் இருந்து அப்போது தான் வியர்வை சொட்ட வெளிவந்திருந்த சித்தானந்தும் இந்தியா வருவதாகக் கூற, அவர் வேதானந்தைப் பார்த்தார்.

அவன், "இல்லப்பா முக்கியமான ப்ராஜெக்ட் ஒண்ணுப் போய்க்கிட்டு இருக்கு.. இப்போதைக்கு என்னால எங்கேயும் வர முடியாது.. நீங்களும் சித்துவும் போங்க.. நான் ப்ராஜெக்ட் முடிஞ்சதும் நேரா தாத்தாவைப் பார்க்க வந்திடுறேன்.." என்று கூறி நழுவிவிட்டான்.

அதற்கு மேல் அவனிடம் என்ன சொல்வதென உடனே இந்தியா கிளம்பிவிட்டார் சத்யமூர்த்தி.

அவர்கள் இந்தியா கிளம்பிச்சென்ற இந்த ஒரு வார காலமாக, அவ்வப்போது தாத்தாவின் உடல் நிலையில் என்ன மாதிரியான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதனை சித்தானந்திடம் போனில் மட்டுமே கேட்டுத் தெரிந்து கொண்டிருந்த வேதானந்த், தன் வேலை முடியும் நாளைக் கணக்கிட்டு இன்று தான் பயணத்திற்கு ஏற்பாடு செய்திருந்தான்.

சோர்வாக அலுவலகத்தில் இருந்து கிளம்பி அவன் வீட்டிற்கு வந்த போது, எப்போதும் போல் இவனின் கார் சத்தம் கேட்டு வந்து கதவைத் திறந்தார் காவலாளி.

கோர்ட்டை தோளில் தொங்கப் போட்டுக் கொண்டு படி ஏறியவனின் பார்வை, போன மாதம் தங்களது முப்பதாவது பிறந்த நாளன்று நடந்த பார்ட்டியின் போது எடுக்கப்பட்ட போட்டோவின் மீது படிந்தது.

வலப்புறம் இவனும், இடப்புறம் சித்தானந்தும் நிற்க, நடுவில் சாம்பைன் பாட்டிலை பீச்சியடிக்க விட்டுக்கொண்டு இளமையாக நின்றிருந்தார் சத்ய மூர்த்தி.

மகிழ்ச்சியான தருணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் அது. ஆனால், தற்போது காணும் போது தான் மட்டும் ஏதோ அந்நியமாக்கப்பட்டதாய் உணர்ந்தான் வேதானந்த்.

தனக்கும் சித்தானந்திற்கும் உருவ ஒற்றுமை ஒரே போல் இருந்தாலும் எப்போதும் பேசி சிரித்துக்கொண்டு கலகலவென்றிருக்கும் சித்தானந்தைக் காணும் போது ஒருவித ஏக்கம் உண்டானது அவனுக்குள்.

சத்யமூர்த்தியும் தன்னை தவிர்த்து சித்துவிடம் மட்டும் இணக்கத்தோடு இருப்பது, தான் மட்டும் ஏதோ வேற்று கிரகத்தில் இருந்து வந்தவன் போன்ற ஓர் உணர்வை உண்டாக்கியது அவனுக்கு.

இன்று மட்டுமல்ல, ஆட்டிவிட்ட ஊஞ்சல் போல் அவனுள்ளான இந்த எண்ணம் அவனை அடிக்கடி சீண்டி காயப்படுத்திக் கொண்டிருந்தது.

தற்போது இந்தியா சென்றால் மொத்தக் குடும்பத்தாலும் தான் அந்நியமாக்கப்பட்டு விடுவோமோ என்று ரொம்பவே பயந்தான் அவன். ஏனென்றால் பாட்டி தங்கப்பழத்தின் குணத்தைப் பற்றி தான் முன்பே தெரியுமே அவனுக்கு.

ஜப்பான் வந்ததிலிருந்து எவ்வளவோ துயரங்களையும் வலிகளையும் சந்தித்து விட்டவனுக்கு, ஒருநாள் திடீரென தன் தந்தை ஆய்வகத்திற்கு அழைத்துச் சென்று, கண் கூசச் செய்யும் ஒளியின் முன்பு நிறுத்திய போது தான் உண்டானது அந்த திடீர் வளர்ச்சி.

கட்டயன் என்றழைத்து கேலி செய்தவர்களின் வாயை அடைக்கும் விதமாக வயதிற்குண்டான வளர்ச்சியைப் பெற்று, கட்டழகனாய் இன்று அவன் மாறிவிட்டான் தான். ஆனாலும் கடந்த காலத்தின் காயங்கள் இன்னும் ஆறவில்லை அவனுக்குள்.

அதிநவீன தொழிற்நுட்பத்தின் மூலம் இந்த மாற்றத்தை உண்டாக்கத்தான் தன்னை தன் தந்தை ஜப்பானுக்கு அழைத்து வந்தார் என்பதும் பிறகு தான் புரிந்தது அவனுக்கு.

சிறுவயதிலிருந்தே உயர கேலிக்குப் பயந்து தன்னை தனிமைப்படுத்தியே பழகியவனுக்கு, திருப்திகரமான உயரத்தை எட்டிவிட்ட பிறகும் திடீரென்று யாருடனும் ஒட்டப் பிடிக்கவில்லை. ஆகையால் அவனுக்கு நண்பர்களும் அதிகமில்லை.

சித்தானந்தை போல் பெண் தோழிகளை பேச்சால் வசியப்படுத்தும் திறமையும் அவனுக்குக் கிடையாது. அவனுக்குள்ளான ஒரு உறுத்தல் அவனை யாரையும் தன்னை நெருங்க அனுமதிக்க விடவேயில்லை.

தற்போது தன் பேண்ட் பாக்கெட்டில் இருந்த வேலட்டை எடுத்து பிரித்துப் பார்த்தான் வேதானந்த். சாத்வீக சிரிப்பில் இருந்தாள் அவனது தாய்.

"நீங்க இப்போ இருந்திருந்தா இந்த நரகத்தில் இருந்து எனக்கு விடுதலை கிடைச்சிருக்குமேம்மா.. மிஷின் மாதிரியான இந்த வாழ்க்கை எனக்கு பிடிக்கலைம்மா.. ஐ பேட்லி நீட் யூ.. இந்தியா போனா இன்னும் என்னென்ன நடக்குமோ?. இங்க அனுபவிச்சதே அதிகம்.. உங்கக் கிட்ட சொல்லி என்னாகப் போகுது.. எப்பவும் போல நீங்க சிரிச்சுக்கிட்டே தான் இருப்பீங்க.. நான் கிளம்புறேன்.." என்று அவன் தான் முன்பே தயார் செய்து வைத்திருந்த பேக்கை கட்டிலின் மேல் தூக்கி வைத்தான்.

பின்பு, காக்கி பேண்ட்டும், ஸ்கை ப்ளூ கலர் டீசர்ட்டுமாக கண்ணில் கிளாஸ் உடன் விமான நிலையத்திற்கு கிளம்பினான்.

கவுண்டரில் நின்ற மெழுகுப் பெண் கணிப்பொறியிலிருந்து நிமிர, எதேச்சையாய் கிளாஸை கழற்றியவனது பொன் விழிகள் காந்தமாய் கவர்ந்திழுத்தது அவளை.

ஒரு சிறு தடுமாற்றத்துடனேயே அவன் பாஸ்போர்ட்டை திருப்பித் தந்தாள்.

டிக்கெட்டை சரிபார்த்து விமானத்தில் ஏற அனுமதிக்கும் கவுண்டர், கஸ்டம்ஸ், இமிக்ரேஷன் என அனைத்தையும் கடந்து விமானத்தில் அமர்ந்தபோது பெருமூச்சொன்று வெளிப்பட்டது அவனிடம்.

விமானம் புறப்பட்ட போதே உறங்க ஆரம்பித்துவிட்டான்.

சென்று கொண்டிருந்த விமானம் திடீரென ஆகாயத்தில் பாதி வழியில் எம்பி எம்பி குதித்தது.

உடன் மதுபானம் பரிமாறிக் கொண்டிருந்த பெண்ணும் குதிக்க நேரிட்டதில் மதுவெல்லாம் பயணிகள் மேல் சிந்தி சீரழிந்தது.

TID_h4g3ZUNKRpOowLwdyMBzi38L7PynieBJuHaDwqGvd0CrG_eqv_kToW72Y5IrxEpNVS7D7mPYNOwl0IRwoNwfO0-uqeA3L3T5rZiqUoV55EpzN9XjelV_9NMRdTlbtj8G78xa


'ஏர் பாக்கெட்' எனும் வெற்று காற்றழுத்த பகுதிகளில் செல்லும் போது விமானம் இது போல் எம்புதல் சகஜம் தான். ஆனால், இன்று விமானம் அதனால் ஆடவில்லை.

வேதானந்த் அருகில் அமர்ந்திருந்த நாற்பத்தைந்து வயது பெண்மணியும் 'ஏர் பாக்கெட் ஸோன்' என்று தான் அவனுக்கு சொல்வது போல் தனக்குத் தானே தைரியம் சொல்லிக்கொண்டார்.

ஆனால், குறிப்பிட்ட அந்தப் பகுதியில் மட்டும் அப்படி ஆனதிற்கு காரணம் தன்னுடன் அமர்ந்திருப்பவனின் உடலிலிருந்து வெளிப்பட்ட காந்த சக்தி தான் என்பது அவருக்கு மட்டுமல்ல, அதன் காரண கர்த்தாவாகிய வேதானத்திற்கேத் தெரியவில்லை.

முன்பே இது போன்ற அனுபவங்கள் அவனுக்கு உண்டு என்பதால் அவன் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

எம்புதல் நின்றவுடன், "என்னப்பா வயித்தை பிறட்டுதா?" என்று கனிவாக விசாரித்தார் அவர்.

அவன் இல்லையென்று தலையசைத்த கணமே முன்சீட்டில் வாந்தியெடுத்துக் கொண்டிருந்தாள் ஒரு பத்து வயது சிறுமி.

அதைப் பார்த்து இருவரும் புன்னகையை பரிமாற்றிக்கொள்ள, மீண்டும் தூங்க முற்பட்டவனுக்கு முதன்முதலில் தான் இந்தியாவிலிருந்து ஜப்பான் புறப்படும் போது சித்தானந்துடன் போட்ட திட்டம் ஞாபகத்திற்கு வந்தது. உடன் ஜப்பான் வந்த ஒரு வாரத்திலேயே தாங்கள் செய்யும் ஒவ்வொரு விஷமத்திற்கும் கடுமையாக தண்டனை விதித்து தங்களை 'கப்சிப்'பாக்கிய தந்தையின் அதிகாரமும் நினைவுக்கு வந்தது.

அது மட்டுமா? மீண்டும் தமிழ் சினிமா எங்கு பார்க்க முடியும் என்று டோக்கியோவின் பெருநகர வீதிகளில் அலைந்ததும், கேசட் விற்கும் கடையைக் கண்டறிந்து, அதன் முதலாளி ஜக்குபாயுடன் தாங்கள் நண்பர்கள் ஆகியதும் அவனுக்கு நினைவில் வந்துபோனது.

ஜக்குபாய்க்கு வயது ஐம்பத்திரண்டு. தமிழ் ஆட்கள் என்றவுடன் விழுந்து விழுந்து கவனித்தார் அவர்களை. அவரது பண்பு சத்ய மூர்த்தியையுமே கவர்ந்து விட்டது. பழகிய ஒரு வாரத்திலேயே அவர்களை வீட்டிற்கு விருந்திற்கும் அழைத்திருந்தார் ஜக்குபாய்.

சத்யமூர்த்தி காரிலிருந்து இறங்கும் முன்பே சித்தானந்தும் வேதானந்தும் பரபரவென்று காரிலிருந்து இறங்கி உள்ளே ஓடினார்கள்.

உள்ளிருந்து பூப்போட்ட பாவாடை அணிந்து வெளியே வந்த பெண்ணொருத்தி புன்னகையோடு அவர்களை வரவேற்க, அவளுக்குப் பின்னே வந்த ஜக்குபாய், சத்யாபாய் வாங்க என்று வரவேற்றார்.

தன் மகன்களுடன் பேசி சிரித்துக் கொண்டிருந்த அந்தப் பெண்ணை பார்த்து சத்யமூர்த்தி, "இவங்க யாரு?" என்று கேட்கவும்,

"என் மகள் மதீனா" என்று அந்தப் பெண்ணை அறிமுகப்படுத்தி வைத்தார் ஜக்குபாய்.

அவளை அவளுக்கேத் தெரியாமல் உறுத்து கவனித்ததில் அவளுக்கு வயது இருபதுகளில் இருக்கலாம் என்ற முடிவுக்கு வந்தார் சத்யமூர்த்தி.

சத்தியமூர்த்தியை பார்த்து சிநேகமாய் புன்னகைத்தாள் மதீனா.

அவளுக்கு சத்யாவை பார்த்த கணமே கண்களில் ஒரு மின்னல். நெஞ்சில் ஒரு இடி. ஏதோ அவருடன் பூர்வ ஜென்ம பந்தம் கொண்டவள் போல் மயிர்க்கால்கள் எல்லாம் கூச்செறிந்து கூடப் போனாள்.

வேதாவும் சித்துவும் வயதுக்கோளாறிலும், ஆர்வக்கோளாறிலும் அவள் தங்கள் தந்தையை விழியால் உண்பதை தான் கவனித்துக் கொண்டிருந்தனர்.

முதலில் உணவிலும் பேச்சிலுமாக கழிந்த மணித்துளிகள் பின், ஜக்குபாயின் வற்புறுத்தலால் மதுவுடன் கழிந்தது.

முதலில் சிறியவர்களை நண்பர்களாக்கிக் கொள்ள நினைத்த மதீனா, அவர்களை தனதறைக்கு அழைத்துச் சென்றாள்.

அங்கு அலமாரியிலிருந்த புத்தகங்களில் அவர்கள் கேட்டதையெல்லாம் தயங்காமல் எடுத்துக் கொடுத்தாள். பின், அப்புத்தகங்களை வாங்கும் சாக்கில் அவர்கள் வீட்டிற்கும் சென்று வந்தாள்.

முதல்முறை தயங்கி தயங்கியே சத்யாவுடன் பேசிய மதீனா, பிறகு, தானே பசங்களுக்கு பாடங்கள் சொல்லித் தருவதாகப் பொறுப்பேற்ற பின், மிகவும் நெருக்கமானவளாக மாறிவிட்டாள்.

தங்கள் தந்தையை அவள் பார்க்கும் பார்வையிலேயே அவளுக்கு தங்கள் தந்தை மீது ஒரு ஈர்ப்பு உள்ளது என்பதை புரிந்து கொண்ட இருவரும், அவளை எப்படியாவது தங்கள் வீட்டிற்கு அம்மாவாக கொண்டு வர வேண்டும் என்று விரும்பினர்.

அவள் மட்டும் தங்கள் வீட்டிற்கு வந்து விட்டால், தந்தையின் கவனம் முழுவதும் அவள் மீது தான் இருக்கும் என்றும், தங்களை அவர் தன் கட்டுப்பாட்டிற்கு கீழ் கொண்டு வர முடியாது என்றும் விவரமாய் திட்டம் தீட்டினர் அந்த இரட்டையர்கள்.

எனவே, எப்படியாவது மதீனாவின் காதலை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று, நேரே மதீனாவிடமே சென்று தங்கள் விருப்பத்தையும் தெரிவித்தனர். தங்களின் பிறந்தநாள் விழாவன்று தந்தையிடம் திருமணத்தைப் பற்றி பேசுமாறு யோசனை கூட வழங்கினர்.

மதீனாவும் அவர்கள் தனக்கு ஆதரவு தெரிவித்த மகிழ்ச்சியோடு இரட்டையர்களின் பிறந்த நாள் விழாவானது தனக்கு ஒரு நல்வாய்ப்பாக அமையப்போகிறது என்று கனவு காணத் துவங்கினாள்.

அந்த பிறந்தநாள் விழாவின் போது அனைத்து விருந்தினர்களும் சென்ற பின், சத்யமூர்த்தியை தனியே அழைத்து தன் மனதில் இருப்பதை தெரிவித்தாள் மதீனா.

அதனை ஸ்விம்மிங் பூலிற்கு பக்கத்திலிருந்த பூச்செடிகளுக்கு பின்னால் நின்று மறைவாய் கவனித்துக் கொண்டிருந்தனர் வேதானந்தும் சித்தானந்தும்.

மதீனா திடீரென்று தன்னிடம் இது போல் கூறுவாள் என்று எதிர்பார்த்திராத சத்யமூர்த்தி, தன் கையில் இருந்த மதுவை போல் கொஞ்சம் உணர்வலைகளால் தள்ளாடினார்.

அவருக்கு இது போன்ற காதல் ப்ரொபோசல்கள் ஒன்றும் புதிதல்ல. ஆனால், மற்றவர்களை நிராகரித்தது போல் படாரென மூஞ்சில் அடித்தது போல் பேசி விட முடியவில்லை சத்யமூர்த்தியால்.

ஜப்பான் வந்த இந்த ஆறு மாத காலத்தில் அவளும் அவள் அப்பாவும் இல்லை எனில் திக்குமுக்காடிப் போயிருப்பார்.

எத்தனையோ முறை தன்னால் முடியாத போதெல்லாம் காய்ச்சலில் துவண்டு போன தன் பிள்ளைகளை மருத்துவமனை அழைத்துச் சென்றிருக்கிறார் ஜக்குபாய்.

ஆகையால், அந்த நன்றி உணர்வால் மதீனாவின் மனம் கோணாமல் பேசவேண்டும் என்று, 'நான் இன்னும் என் மனைவியை காதலிக்கிறேன் மதீனா' என்று மட்டும் கூறிவிட்டு வீட்டிற்குள் சென்றுவிட்டார்.

அதனைக் கேட்டு மதீனாவிற்கு எப்படியிருந்ததோ தெரியாது. ஆனால், வேதானந்தையும் சித்தானந்தையும் ரொம்பவே பாதித்தது அந்தப் பதில்.


வாங்கலும் கொடுக்கலும் தொடரும்❣️
Vedha romba pavam..avanuku etho special power irukum polaye...sathya character nice..madheena enna ananga.. nice epi akka🥰🥰🥰
 
Messages
74
Reaction score
72
Points
18

அத்தியாயம் 4



வருடம் 1994


புணர்தலும் புணர்தல் நிமித்தமுமான கூதிர்கால யாமப் பொழுதில் அவன் முரட்டு கைகளுக்குள் நெளிந்தபடியே கிசுகிசுத்துச் சிணுங்கினாள் ஷாந்தினி. "ம்ம் என்னைக்கும் இல்லாத திருநாளா இன்னைக்கென்ன ரொம்ப இறுக்குறீங்க சத்யா?"

"ம்ம்? இன்னைக்கு நீ புதுசா தெரியுற?"

"ஆஹான்.. கழுகுப்பார்வை தான்.." என்று தன் கைச்சிறைக்குள்ளாகவே புரண்டு திரும்பியவளை கால தாமதம் செய்யாமல் வம்படியாய் அவள் இதழ்களை சிறையிட்டான் சத்யமூர்த்தி.

மிக வன்மையான ஆக்ரமிப்பு அது. இதற்கு முன்பு சத்யமூர்த்தி ஒரு மாதம் அவளைப் பிரிந்து வெளியூர் செல்ல நேர்ந்தது. பயணம் முடிந்து திரும்பி வந்தபோது கூட அவன் அவளிடம் இவ்வளவு அவசரமும் இறுக்கமும் காண்பிக்கவில்லை. எப்போதுமே அவன் செயல்களில் ஒரு நிதானம் இருக்கும்.

இன்றானால் இப்படி அத்துமீறி ஆர்ப்பரிக்கிறான். இதற்குக் காரணம் மட்டற்ற மகிழ்ச்சியே என்று நம்பினாள் ஷாந்தினி.

ஆனால், இன்று காலையில் தான் அவளுக்கே அந்த விஷயம் தெரியும். அதற்குள் எப்படி அது சத்யமூர்த்திக்கு தெரிந்திருக்கும் என்றவள் யோசிக்கவே இல்லை.

யார் மூலமாகவாவது தெரிந்திருக்கும் என்றாலும் அவள் யாரிடமும் இது பற்றிக் கூறவில்லை. தனக்குள்ளாகவே போட்டு தான் நினைத்து நினைத்து மகிழ்ந்தாள்.

சத்யமூர்த்தியின் கைச்சிறைக்குள் நெகிழ்ந்து கிடந்த ஷாந்தினியின் யோசனை திடீரென அவளது அண்ணன்மார்களை நோக்கிச் சென்றது. 'இதைக்கேட்டால் அவர்கள் எவ்வளவு சந்தோசப்படுவார்கள். இரு அண்ணிகளும் கருத்தரிக்க வேண்டும் என்று அவர்கள் எவ்வளவு கோவில் குளங்கள் ஏறி இறங்கியிருப்பார்கள்' என்று எண்ணிக்கொண்டவளுக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை. பழிவாங்க வந்தவனிடமே இப்படி வயிற்றில் வாங்கிக்கொண்டால் அது அவர்களுக்கு அவமானமே தவிர வெகுமானம் இல்லையென்று.

அத்தனையும் யோசித்துப் பார்த்தவள் சத்யமூர்த்தியின் வன்மையான இதழணைப்பில், 'வலிக்குது சத்யா' என்று தன் கீழுதட்டை இழுத்துப் பார்த்துக் கொண்டே கூற, அக்காரிருளில் முகம் பார்க்க முடியவில்லையானாலும், 'ரொம்ப வலிக்குதா?' என்று மட்டும் கேட்டவன் இன்னும் எப்படி அவளுக்கு வலியை உண்டாக்கலாம் என்றே யோசித்தான்.

அதை அறியாதவள், "ஆமா கடிக்கிறதும் கடிச்சு வச்சிட்டு கேட்குறதைப் பாரு.. ஆமா சத்யா எப்படி கண்டுபிடிச்சீங்க?.. இன்னும் நான் இதை அம்மாக்கிட்டக் கூட சொல்லல தெரியுமா?.. நாலு மாசமாம்.. எனக்கே ஒண்ணும் தெரியல.. மயக்கம் வாந்தின்னு கூட எதுவும் வரல.. சமத்துக்குட்டிக உங்கப்பசங்க.." என்று தன் வயிற்றைத் தடவி விட்டுக்கொண்டாள்.

சத்யமூர்த்திக்கு ஒரு நிமிடம் திக்கென்றானது.

"நீ.. நீ.. என்ன சொல்ற ஷானு..?" என்றான் குழப்பமாய்.

"ஆமா சத்யா, ட்வின்ஸாம்.. மார்னிங் போரடிக்குதுன்னு பாப்புக்குட்டியோட மார்க்கெட் போனப்போ தான் அவங்க இந்த நாள் கணக்குப் பத்தியெல்லாம் கேட்டாங்க.. எனக்கு எதுவுமே ஞாபகம் இல்ல சத்யா.. நான் யோசிக்கவும், உடனே என்னை நிர்மலா ஆன்ட்டிக்கிட்டயும் கூட்டிட்டுப் போயிட்டாங்க.. அவங்க தான் செக் பண்ணிட்டு செவன்டீன் வீக்ஸ்ன்னு கன்ஃபார்ம் பண்ணினாங்க.. ஆமா உங்களுக்கு யாரு சத்யா சொன்னா? வந்ததும் வராததுமா லைட் ஆஃப் பண்ணிட்டு இப்படி அவசரப்படுறீங்க?.." என்று வினவியவளை முதல்முறை போல் வஞ்சத்தில் அல்லாமல் தற்போது உண்மையான மகிழ்ச்சியுடனேயே இறுக்கியணைத்தான் சத்யமூர்த்தி.

"சத்யா, ரெண்டுமே பசங்களா இருந்தா எங்கப்பா பேரோட ஃபர்ஸ்ட் லெட்டரையும் உங்கப்பா பேரோட ஃபர்ஸ்ட் லெட்டரையும் எடுத்து வேதானந்த் சித்தானந்த்னு பேர் வைக்கணும்.. பொண்ணுங்களா இருந்தா வேதிதா, சிவதா.. பொண்ணும் பையனுமா இருந்தா?.. ம்ம்? சத்யா நான் பேசுறதைக் கேட்குறீங்களா?.. சத்யா?"

"ம்ம்.." விழித்துக் கொண்டவன் போல் வந்தது அவனது குரல்.

உங்கக் கையைக் கொடுங்க என்றவள் மெதுவாய் தன் புடவைத் தலைப்பை விலக்கி வயிற்றில் அவன் கைகளை வைக்க, மிதச்சூட்டில் இருந்த உந்தி அவனுக்குள் பல உணர்வலைகளை உண்டாக்கியது.

ஆதி காலத்திலிருந்தே அனைத்து ஆண்மகன்களும் உணரத் துடிக்கும் சுகத்தினை தன் சத்யாவும் உணர்ந்தானா என்பதையறிய ஆவல் கொண்டாள் ஷாந்தினி.

ஆனால், இருளில் ஒன்றுமே தெரியவில்லை அவளுக்கு. அவன் சிரிக்கிறானா என்ன செய்கிறான் என்று தெரிந்துகொள்ள வேண்டும் போல் இருந்தது.

எட்டி மின்விளக்கைப் போட முயன்றவளின் கைகளை தடுத்துப் பிடித்துக் கொண்டவன், 'நோ ஷானு' என்று மறுத்தான்.

"ப்ளீஸ் சத்யா எனக்கு இப்போ உங்க முகம் பார்க்கணும்.." என சிணுங்கியவளின் கைகளை எடுத்து தன் முகத்தில் வைத்தான். ஏதோ ஒரு அத்தியாயத்திற்கு துவக்கமாய்.

அவள் கைகள் அவனை உணர முற்பட்ட போது, கச்சாமுச்சா முள்காடாய் இருந்த கெட்டி மீசைக்கிடையில் அவன் தழும்பு ஒன்று தென்பட்டது. அது எப்போது எதனால் உண்டானது என்பதை அறிந்திருந்த ஷாந்தினியின் கைவிரல்கள் இப்போது நடுங்கியது.

அதை உணர முடிந்த சத்யமூர்த்தி, ஷானு என்றான்.

அவள் இன்னும் நடுக்கம் குறையாத தன் வெண்பஞ்சுக் கைகளால் அவன் முகத்தை ஏந்தி, குத்து மதிப்பாய் அவன் இதழில் முத்தமிட்டாள்.

சுமார் ஒரு நிமிட முத்தமது. முத்தத்தின் மென்கார சுவையை உணர்ந்த பின்னும் அவன் முகத்தைத் தாங்கியிருந்த தன் கைகளை விலக்கவில்லை அவள்.

அவளின் லேசான விசும்பல் சத்தத்திலேயே சுதாரித்துக்கொண்ட சத்யமூர்த்தி "ஷானு நீ அழறியா?" என்று எட்டி விளக்கைப் போட முயல, அவனின் கைகளை தடுத்துப் பிடிப்பது இப்போது அவளது முறையானது.

"வேணாம் சத்யா.. இப்படியே இருப்போம்.. சத்யா நீ.. நீங்க.. என்னை வெறுப்பீங்களா?"

திடுக்கிட்டுப் போன சத்யமூர்த்தி, நமக்கு உண்மை தெரிந்துவிட்டது இவளுக்கு தெரிந்துவிட்டதோ எனும் குழப்பத்துடன், "ஏன்? நான் ஏன் உன்னை வெறுக்கணும்?" என்றான்.

"அது நான் நீங்க என்னை வெறுக்குற மாதிரி ஏதாவது பண்ணினா?"

"நீ ஏன் அப்படியெல்லாம் பண்ணப்போற?"

"சத்தியமா நீங்க என்னை வெறுத்திட மாட்டீங்கல்ல சத்யா?.."

அவனுக்கு இருந்த சந்தேகம் உறுதியாகிவிட்டது.

"ஷானு என்னாச்சு உனக்கு?.. ஏன் இப்படியெல்லாம் பேசுற?"

"இல்ல சும்மா தான்.." என்றபடியே அவனைத் தன் நெஞ்சோடு அணைத்துக்கொண்டாள் ஷாந்தினி.

அவள் இதயத்துடிப்பின் ஓசை கேட்டது அவனுக்கு. நெஞ்சணைப்பிலிருந்து மெதுவாய் கீழிறங்கியவன் அவள் வயிற்றுப் பகுதியில் முகம் புதைத்தான்.

அவளின் ஒவ்வொரு மூச்சுக்கும் ஏறி இறங்கிய வயிறு அவனை சுகமாய் தாலாட்டியது. அதில் அவன் யோசனைகளும் எங்கெங்கோ சென்றது.

'எவ்வளவு ஈஸியா ஏமாத்தியிருக்கா என்னை?.. இப்போக் கூட மூச்சுக்கு முந்நூறு சத்யா.. உண்மை தெரிஞ்சப்போ என்கிட்ட எவ்வளவு கோபம் இருந்தது?.. ஆனா, இப்போ?.. ஒருவேளை எனக்கு உண்மை தெரிஞ்சதனால தான் இப்படி குழந்தை, ட்வின்ஸ்னு நாடகமாடுறாளோ?..

சந்தேகமே இல்ல.. என் குழந்தை இவ வயித்துல வந்திருந்தா, இதுவரை இவ அண்ணன்மார்க இவளை விட்டு வச்சிருப்பாங்களா என்ன?.. இல்ல இவ தான் எப்படி சொல்லுவா அவங்கக்கிட்ட?.. காரித்துப்ப மாட்டாங்க?.. உன்னை என்ன சொன்னோம், நீ என்ன செஞ்சிருக்கன்னு அறைஞ்சுத் தள்ளமாட்டாங்க?..

பொய்.. அவ்வளவும் பொய்.. ஒரு பொய்யை மறைக்க இன்னொருப் பொய்.. குழந்தைன்ன உடனே குழைஞ்சு நாய் மாதிரி அவ காலடியில அடங்குவேன்னு நெனச்சா போல.. ச்சே, நானும் தான் இப்போ என்ன பண்ணிக்கிட்டு இருக்கேன்?'

திடீரென அவள் மீதான வெறுப்பு உச்சம் தொட, விலகப் போனவனின் தலையை மீண்டும் தன் வயிற்றோடு சேர்த்து அழுத்தினாள் ஷாந்தினி. அந்த மென்மையான குழைந்த தேசம் அவனை விலகவிடவில்லை.

விலக முடியாத தனது பலவீனத்தையும் அவள் மீதே காட்டவிழைந்தான் சத்யமூர்த்தி.

கன்னங்களில் பட்ட அவன் உஷ்ணமூச்சு அவளை மூச்சடைக்கச் செய்த நேரம், அவன் வேகம் அவளை மிரட்டியது.

இதுவரையில் சத்யமூர்த்தியிடம் இதுபோலொரு அணுகுமுறையை கண்டிராத ஷாந்தினிக்கு பேரதிர்ச்சியை கொடுத்தது இக்கூடல்.

இறுதியில் தன் காரியம் சாதித்தே விலகியவனை, "சத்யா நீங்க என்னை இப்போ ரேப் பண்ணின மாதிரி எனக்கு ஃபீல் ஆகுது" என்றவள் கூற, அவளின் அக்குரல் ஒரு உலுக்கு உலுக்கியது அவனை.

அவன் எட்டி மின்விளக்கைப் போட, தன் மேனியை மறைக்க உடை தேடினாள் ஷாந்தினி.

அப்போது நிர்வாணம் பழகுதலும் அந்நியோன்யத்தில் சேர்த்தி என்று எங்கோ பார்த்த வரிகள், சத்யமூர்த்தியின் மூளையில் வந்து குளவியைப் போல் கொட்டியது.

கேவியவளை கேள்வியாய் பார்த்தவனிடம் விசும்பியபடியே சொன்னாள் ஷாந்தினி. "குழந்தைங்க எல்லாம் அந்தக் கடவுளோட சர்ப்ரைஸ் கிப்ட் சத்யா.. நாம எதிர்பார்க்கிற நேரத்துல எல்லாம் அந்த கிப்ட் நமக்கு கிடைக்காது.."

"போதும் நிறுத்து ஷாந்தினி!.." என்று கத்தியவனுக்கு, எரிச்சல் உச்சத்தைத் தொட்டிருந்தது. நேரே தன் பெட்டியைப் போய் திறந்தவன், மதுப்பாட்டிலை எடுத்து ஒரே மூச்சில் முழுதும் உள்ளே இறக்கினான்.

சத்யமூர்த்தி முதன்முதலாக மது அருந்துவதை பார்க்கிறாள் ஷாந்தினி.

முழுதும் குடித்துவிட்டு அவள் கட்டிலை நெருங்கியவன், "ஷாந்தினி நீ ப்ரெக்னன்ட்னு சொல்றதை நான் நம்புறேன்.. ஆனா, அது என்னோட குழந்தைன்னு நீ சொல்லறதைத் தான் என்னால நம்ப முடியல.." என்றான் அவளை உசுப்பேற்றும் வகையில்.

"ஏன் சத்யா? ஏன் இப்படியெல்லாம் பேசுறீங்க?.. நீங்க கேட்குற கேள்வியோட அர்த்தம் புரியுதா உங்களுக்கு.. நான் சுமக்குறது உங்க குழந்தை இல்லைன்னா வேற யாரோட குழந்தை சத்யா?.." என்று முடிந்தவரை நிதானமாகவே பேச முயற்சி செய்தாள் அவள்.

களைப்பில் தற்போது அவளால் தன் சத்தத்தைக் கூட உயர்த்த முடியவில்லை என்பது தான் உண்மை.

"டோன்ட் ஆக்ட் லைக் ஸ்மார்ட் ஷாந்தினி.. நீயும் அந்த அரவிந்தும் லவ் பண்ணி ஊர் சுத்தினது இந்த ஊருக்கேத் தெரியும்.. எவ்வளவு தெளிவா என்னையும் ஏமாத்தி அவனையும் ஏமாத்தி.."

"ஸ்டாப் இட் சத்யா.. என்ன நான் அவனை ஏமாத்தினேன்? ஹான்?.. மத்தப் பொண்ணுங்களுக்கு அவன் செஞ்சதை நான் அவனுக்கு செஞ்சேன்.. அவ்வளவு தான்.."

"அப்போ இந்தக் குழந்தையும் அவனோடது தான்னு ஒத்துக்குற?"

தனது இக்கேள்விக்கு தனக்குள்ளேயே சபாஷ் போட்டுக்கொண்டான் சத்யமூர்த்தி. இப்போது அவள் தான் கர்ப்பமாக இல்லையென்று தன்னிடம் கூறித்தானே ஆகவேண்டும் என்கிற மெத்தனம் அவனிடம்.

ஆனால், சந்தேக வார்த்தைகள் கொலைக்கு சமமானவை என்பதை அப்போது உணரவில்லை அவன்.

அவனது அக்கேள்வியில் விதிர்த்துப் போய் நின்றிருந்த ஷாந்தினிக்கு கண்ணை சுழற்றிக் கொண்டுவர, நிற்க முடியாமல் கட்டிலிலேயே விழுந்தாள் அவள்.

அருகில் தன்னை பிடிக்க வந்தவனை அந்நிலையிலும் கையுயர்த்தித் தடுத்தவள், "நான் நம்ம கல்யாணத்துக்கப்புறம் அரவிந்தைப் பார்க்கவே இல்லையே.." என்று விரக்தியாக சிரித்தாள் அவனை நோக்கி.

உண்மையைக் கூறுவாள் என்று எதிர்பார்த்திருந்த சத்யமூர்த்திக்கு இதுவும் நாடகமாய் தெரிய, "நம்ம கல்யாணத்துக்கப்புறம் பார்க்கல.. பட், நம்ம கல்யாணத்துக்கு முந்தைய நாள் பார்த்த இல்லையா?" என்றான் எரிச்சலோடு.

சத்யமூர்த்திக்கு அவள் கர்ப்பம் இல்லையென்று அவள் வாயாலேயே சொல்ல வைக்க வேண்டுமென்கிற ஆதங்கம். நீதிமன்றத்தில் வாதாடுபவன் போல் கேள்விக் கணைகளைத் தொடுத்துக் கொண்டே இருந்தான்.

"சொல்லு?.. அவனைப் பார்த்த தானே?"

"முதல் முறையா நீங்க என்னைத் தொட்டப்போ தெரியலையா சத்யா நான் எப்படின்னு.."

இதற்கு மேல் சத்யமூர்த்திக்கு வாதாட வார்த்தைகள் இல்லை. தனது முதலிரவில் தானே அனைத்திற்கும் அஸ்திவாரம் போட்டது ஞாபகம் வந்தது அவனுக்கு.

இனி நேரடியாகவே அவளிடம் கேட்டுவிடுவோம் என்று, "அடேங்கப்பா உனக்கு குட்டி நடிகையர் திலகம்னு பட்டம் தான் கொடுக்கணும் ஷாந்தினி.. என்னமா நடிக்கிற?.. இப்படி நடிச்சு நடிச்சு தானே என் வாழ்க்கையையே நாசம் பண்ணின.. என் காதல், கனவுன்னு எல்லாம் தான் முடிஞ்சுப் போச்சே.. இன்னும் எதுக்கு குழந்தைன்னு இன்னொரு நாடகத்தைப் போடுற?.. உன் நடிப்பை நம்பி ஏமாந்துப்போன சத்யா காலையிலேயே செத்துப் போயிட்டான்.. இன்னும் யாரை சாகடிக்க இப்படி நாடகமாடுற?.." என்று கட்டிலில் அமர்ந்திருந்தவளின் தோளைப் பிடித்து உலுக்கினான்.

"சத்யா.."

"ஷட்டப்.. நான் உன் நடிப்பை நிறுத்தச் சொன்னேன் ஷாந்தினி.. நீயும் உன் அண்ணன்களும் போட்டத் திட்டம் எனக்கு தெரிஞ்சுப்போயிடுச்சி.."

"நான் நடிக்கல சத்யா.. உண்மையாவே நான் இப்போ உங்க குழந்தைகளை சுமக்குறேன்.."

"ஓஹோ.. சரி வா!.."

"எங்க சத்யா..?"

"ப்ச் எழுந்திரு.."

அவள் போர்வையினால் தன்னைச் சுற்றிக்கொண்டு எழுந்து நின்றாள்.

ஹாலுக்கு அவளை அழைத்துச் சென்றவன் அங்கிருந்த சோபாவில் அமர்ந்து, "உன் அண்ணன்களுக்கு தான் போன் போடப் போறேன்.. ஒவ்வொருத்தர் கிட்டயும் நீ கர்ப்பமா இருக்கேன்னு சொல்ற!.." என்று உத்தரவிடும் தொனியில் சொல்லிவிட்டு ரிசீவரை எடுத்துக்கொண்டு எண்களைச் சுற்றினான்.

"இப்பவா?.. மணி இப்போ ஒன்னு சத்யா.."

"ஸோ வாட்?"

'நோ சத்யா' என்று எழுந்தவளின் மணிக்கட்டை அழுத்திப் பிடித்தவனுக்கு அவளது அதிகரித்த நாடித்துடிப்பே சொல்லியது அவள் கர்ப்பம் தானென்று.

ஆனால், சத்யமூர்த்தி தான் அதனை உணரும் நிலையிலும் நிதானத்திலும் இல்லை.

"இப்போ உன் அண்ணனுகக்கிட்ட பேசப்போறியா இல்லையா?" என்று அதட்டிக்கேட்க, அடுத்த கணமே சுயநினைவின்றி பொத்தென்று மயங்கி விழுந்தாள் ஷாந்தினி.

காலையில் எழுந்தவள், தெரியாத ஏதோ ஒரு மருத்துவனை அறையில் தான் மட்டும் தனித்துப் படுத்திருப்பதைக் கண்டு சத்யமூர்த்தியைத் தேட, அந்நேரம் பார்த்து உள்ளே வந்த செவிலியர், "உங்க ஹஸ்பண்ட் நீங்க முழிச்சதும் இந்த லெட்டரை உங்கக்கிட்ட கொடுக்கச் சொன்னாரும்மா" என்று வந்து கொடுத்துச் சென்றார்.

வாங்கி வாசித்தவள் அதிர்ச்சியில் உறைந்து போனாள்.

அதன் பின், அவளுக்கு குழந்தை பிறந்த சமயம் பார்த்து வந்து அவளுக்கேத் தெரியாமல் குழந்தைகளை தூக்கிச் சென்றுவிட்டான் சத்யமூர்த்தி.

எப்படியும் நீதிமன்றம் சென்று குழந்தைகளில் ஒன்றை தன்னுடன் எடுத்துச் செல்ல வருவாள் என்றே எதிர்பார்த்திருந்தான்.

அந்த எதிர்பார்ப்பில் தான் அவள் ஆசைப்படி அவளது தந்தையின் பெயரில் முதலெழுத்தைக் கொண்டு வேதானந்த் என்று அழைக்கப்பட்ட குழந்தையையும் சில சோதனைகளுக்கு உட்படுத்தினான்.

ஆனால், அதன்பின் உண்டான அசௌரியங்கள் அனைத்தையும் அவனே அனுபவிக்க வேண்டி நேர்ந்தது.

தன் மனைவி மீண்டும் தன்னிடம் குழந்தை கேட்டு வந்துவிடுவாளோ என்று வன்மமாக பெற்ற மகனையே சோதனைக்கு உள்ளாக்கிய சத்யமூர்த்தி, 'நான் இன்னும் என் மனைவியை காதலிக்கிறேன் மதீனா' என்று தன்னிடம் காதலைத் தெரிவித்தவளிடம் கூறியது, அவருக்கே அபத்தமாகப்பட்டது.


வாங்கலும் கொடுக்கலும் தொடரும்❣️
Acho intha sathya va romba nallavarunu nenaichen..but yen ippadi panniuraru.apo shanthini da sons than vedha and sidhu...apo namma heroin ku athai payan..interesting epi akka..😍😍😍
 
Messages
74
Reaction score
72
Points
18

அத்தியாயம் 5



வருடம் 1977


மழைப்பொழிவை மக்கள் எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாந்திருந்த சமயத்தில் ஊரில் பஞ்சம் தலை விரித்தாடியது. உணவுக்கு வழியில்லாமல் மக்கள் எலியைப் பிடித்து சுட்டு தின்னும் அளவிற்கு மெலிந்து கிடந்தனர். அச்சமயம் உணவுப் பிரச்சனைக்கு தீர்வு வேண்டி மக்கள் அனைவரும் பஞ்சாயத்து தலைவர் வீட்டு வாசலை முற்றுகையிட்டனர்.

"என்னலேய்! இந்நேரத்துல என் தாலிய வந்து அறுக்குதிய?.." என்று சலித்துக்கொண்டார் பஞ்சாயத்துத் தலைவர்.

பின், திரும்பிச் செல்லக்கூட முடியாமல் சோர்ந்து கிடந்தவர்களை, "இன்னும் ரெண்டு நாள் பொறுங்கடே.. என்னன்னு சர்க்கார் கிட்ட கேட்டு சொல்லுதேன்.. எல்லாரும் நிலத்தை விக்க தயாரா இருக்கிய இல்ல?.. பின்னாடி எல்லாம் தயாரா இருக்கும் போது தகராறு பண்ணுனீயன்னா சரியா இருக்காது சொல்லிப்புட்டேன் ஆமா?.. ம்ம்! ம்ம்! கிளம்புங்கடே!.. மூணாம் நாள் உங்களுக்கு கறிசோறு தான்.." என்று புணத்தின் மீது கிடக்கும் வாய்க்கரிசிக்கு ஆசைப்பட்டார் பஞ்சாயத்துத் தலைவர்.

அனைவரும் அந்த மகிழ்ச்சியான செய்தியுடன் வீடு போய் சேர, சிதம்பரம் மட்டும் தன் வயலுக்குச் சென்றார்.

இவ்வளவு நாள் பொன் முட்டையிடும் வாத்து போல் வயிறு நிரப்பிக் கொண்டிருந்த வயலை ஒரேடியாக அறுத்து பஞ்சாயத்தாருக்கு விருந்து வைப்பதில் உடன்பாடில்லை அவருக்கு.

"ஏ நிலமே! நீ இல்லாம நா இருப்பேன். நா இல்லாம நீ இருப்பியா?" - புத்தி பேதலித்தது போல் நள்ளிரவில் இருட்டில் பழகிய கண்களுடன் நிலத்தை தடவி தடவிப் பேசிக் கொண்டிருந்தார் சிதம்பரம்.

அப்போது வானில் திடீரென தூரத்தில் ஒரு வெளிச்சம் போல் தெரிய தன் முட்டை கண்களை கூர்மையாக்கினார்.

அதேநேரம் அமெரிக்காவின் கொலம்பஸ் மாநகரில் உள்ள பிக் இயர் ரேடியோ டெலஸ்கோப்பிலும் வேற்றுக்கிரக வாசிகள் அனுப்பியதாய் சொல்லப்பட்ட சிக்னல் தொடர்ந்து எழுபத்திரண்டு வினாடிகள் பதிவாகியிருந்தது.

அதை டீகோடிங் செய்த போது '6EQUJ5' என்ற குறியீடும் கிடைக்கப்பெற்றது. வானியல் விஞ்ஞானிகள் அந்த சிக்னலுக்கு 'வாவ் சிக்னல்' என்று பெயரிட்டனர்.

ஆனால், அந்த சிக்னலின் பொருள் மட்டும் புரியவில்லை அவர்களுக்கு.

போகப் போக அந்த வெளிச்சம் தன்னை நோக்கி வருவது போல் தோன்ற, கண்களை தேய்த்துவிட்டுக் கொண்ட சிதம்பரம், ஓடிப்போய் அங்கிருந்த மரத்திற்குப் பின்னால் சென்று ஒளிந்து கொண்டார்.

அந்தப் புள்ளி வெளிச்சம் பெரிதாய் மாறிக்கொண்டே வந்து, சற்று முன் அவர் விழுந்து கிடந்த இடத்தில் வந்து லேண்டாகியது.

v1eGC1rtatvFOAJ_eZoUyVKLEPbq0qJ6pm2p5Gd2P5sVKESui2k3j4Rf3RAk0fipMiuKjZb2M6eYxrKdczeCMKV7jAaLQaUOuj6IJPMqwp0qAmy_ElT6lUYBWfucOvs2o9cvQok_


ஏதோ முட்டை போல் குடுவை வடிவில் இருந்த ஒன்று பிரகாசமாய் மின்னியதைக் கண்டு ஒரே ஆச்சரியம் சிதம்பரத்திற்கு.

திடீரென அந்த முட்டைக் குடுவை பிளவுபட்டு, ஏணி போல் ஒன்று இறங்க, அதிலிருந்து திடகாத்திரமாய் பதினைந்து வயது சிறுவன் ஒருவன் இறங்கி நின்றான்.

அவன் முழுவதும் ஸ்பேஸ் சூட்டால் கவராகி இருந்தது கண்டு, பயத்தில் தன் நெஞ்சில் கை வைத்தார் சிதம்பரம்.

இறங்கி நின்றவன் அங்குமிங்குமென நடை பழகிவிட்டு, தன் உடைகள் ஒவ்வொன்றாய் கழற்ற ஆரம்பித்தான்.

ஒரு கட்டத்தில் தன் உடைகள் முழுவதுமே களைந்துவிட்டு நிர்வாணமாய் நின்றான். அவன் தலையிலும் முடி இல்லை. ஆனால், கண்கள் மட்டும் பொன் நிறத்தில் மின்னியது.

அது ஏதோ பேயோ என்று பயந்து பார்த்திருந்த சிதம்பரம், தான் காண்பது கனவோ நிஜமோ எனும் குழப்பத்தில் தன்னை கிள்ளிப் பார்த்தார். ரொம்பவே வலித்தது அது.

'அப்போ உண்மை தான்!' என்ற உறுதியில் ஒவ்வொரு கணமும் பகீர் பகீரென்று அவனைப் பார்த்திருக்க, மின்னும் கலத்திலிருந்து இறங்கி நின்றவன் திடீரென தன் காலைப் பிடித்துக் கொண்டான்.

கலத்திலிருந்து வந்த வெளிச்சத்தில் எட்டி என்னவெனப் பார்த்தவருக்கு அழகாய் அவன்முன் படமெடுத்து நின்று கொண்டிருந்த ராஜநாகம் தெரிந்தது.

இவ்வளவு நேரம் அங்கு தான் படுத்துக் கிடந்தார் சிதம்பரம். அப்போதெல்லாம் இந்த ராஜா எங்கு கிடந்தானோ தெரியாது. ஒருவேளை அவன் சிதம்பரத்தை தன் 'நண்பன்' என்று கூட நினைத்திருக்கலாம்.

வேற்று மனிதனைக் கண்டாலே சீறுபவன் வேற்றுக் கிரகவாசியைக் கண்டால் சும்மா இருப்பானா என்ன? அதான் பொட்டென்று ஒரு போடு போட்டுவிட்டான்.

எப்போது பாம்பு கொத்தி வலியில் அவன் காலைப் பிடித்தானோ அப்போதே அவன் மனிதன் என்ற நம்பிக்கை வந்துவிட்டது சிதம்பரத்திற்கு.

ஒரு மனிதனுக்கு சக மனிதன் உதவவில்லை என்றால் என்ன பெரிய மனிதன்?

உடனே ஓடிப்போனார் சிதம்பரம். அவர் ஓடிவந்த அதிர்விலோ என்னமோ சட்டென்று மயக்கம் போட்டு விழுந்தது ராஜநாகம்.

ஓடிப்போன சிதம்பரத்திற்கு திடீரென ஒரு குழப்பம்.

இப்போது பாம்பு கொத்திய அவனை காப்பாற்றுவதா? இல்லை அவனை கொத்தியதால் செத்தது போல் விழுந்து கிடக்கும் ராஜநாகத்தை காப்பாற்றுவதா? இல்லை பாம்பே மயக்கம் போட்டு விழும் அளவிற்கு விஷம் பொருந்தியவன் முன் அவசரப்பட்டு வெளிப்பட்டு விட்டோமே நம்மைக் காப்பாற்றுவதா? என ஏகப்பட்ட சந்தேகம்.

துணிந்து வந்துவிட்டதால் முதலில் தன் தோளில் கிடந்த துண்டை எடுத்து அந்த வேற்று கிரகவாசியின் அரையில் கட்டுவது போலவே ஓடிவந்தார் சிதம்பரம். வந்து கட்டவும் செய்தார். பெரிதாக எதிர்ப்பு ஒன்றும் தெரிவிக்கவில்லை அந்த வேற்றுகிரகவாசி.

"என்னாயிட்டு தம்பி, பாம்பு கடிச்சிட்டோ?.. இருங்க இங்க பக்கத்துல தான் சிறியாநங்கை செடி இருக்கு.. இலைய பறிச்சிட்டு வாரேன்.."

மறுப்பு எதுவும் சொல்லவில்லை அவன். அவர் பேசியது புரிந்தால் தானே மறுப்பு தெரிவிக்க?

கைகளை விரித்துக்கொண்டு காற்றின் அதிர்வலைகளை உணர முயன்றான்.

சிதம்பரத்திற்கு புரிவது போல் சொல்லவேண்டுமானால் அந்த வட்டார மொழியை புரிய முயற்சி செய்தான் அவன்.

காற்றில் கரைந்த வார்த்தைகள் பல அவன் சக்தி எல்லைக்குள் வந்துபோனது.

சிறியாநங்கை பறிக்கச் சென்றவர் வரும் நேரத்திற்குள்ளாகவே மொழியை, அதாவது காற்றில் துகள்கள் அசைவிற்கும் மக்கள் சொல்ல விரும்புவதற்கும் உள்ள தொடர்பை உணரும் திறனை பெற்றான்.

தன் சக்தியின் மூலம் அந்த வட்டாரத்தில் காற்றில் மீயொலியாய் மிதந்து வந்த வார்த்தைகளை கேட்டான் சரி. பொருளை எப்படி அறிந்தான்?

காற்றின் அலைவரிசையை கேட்டுக்கொண்டே தலையாட்டி பதிலளித்துக் கொண்டிருக்கும் மரங்களின் மூலம் தான் பொருள் அறிந்தான் அந்த வேற்றுகிரகவாசி.

இதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை. மரங்களுக்கு பேசத்தெரியுமா? என்று கேட்டால் அது பேசுவதை நாம் கவனிக்கவில்லை என்று சொல்வதே நியாயமாக இருக்கும்.

ஒரு செடியிடம் அன்பாக ஆறுதலாக தினமும் பேச்சுக்கொடுத்தால், அது ஒரு செடியின் சாதாரண வளர்ச்சியைக் காட்டிலும் அதிக வளர்ச்சியுடன் காணப்படுமாம்.

இந்திய விஞ்ஞானி சந்திரபோஸ் அவர்கள் மயக்க மருந்தை தாவரங்களின் மேல் தெளித்து அவை தொய்ந்து மயங்கி விழுவதைக் காட்டி, தாவரங்களுக்கும் உயிருண்டு என்று நிரூபித்து நோபல் பரிசை தட்டிச் சென்றது போல், தாவரங்களும் பேசும், அந்த அந்த நிலத்தின் வட்டார வழக்கையும் புரிந்து கொள்ளும், மேலுக்கு பதிலும் அளிக்கும் என்பதை நிரூபிக்க நமக்கு இன்னும் இருபது ஆண்டுகாலம் ஆகலாம்.

ஆனால், அறிவியல் துறையில் பெருவளர்ச்சி பெற்றிருந்த அந்த வேற்றுக்கிரக வாசிக்கு தாவரங்களின் மூலம் மொழியறிதல் ஒன்றும் சிரமமாக இருக்கவில்லை.

சிறியா நங்கையுடன் ஓடிவந்த சிதம்பரம் தனக்கு கட்டுப்போடுவதைப் பார்த்து, "சிதம்பரம் எனக்கு எதுவும் ஆகாது.. அது எனக்குத் தேவையில்லை" என்று மறுத்தான் அவன்.

"சிதம்பரமா? என் பேர் உனக்கெப்படி தம்பி தெரியும்?"

'இதோ இப்போ தான் இந்த மரம் சொன்னது' என்று எதிரிலிருந்த புளியமரத்தை காண்பித்தான் அவன்.

சிலநேரம் அசதியில் அங்கு தான் துண்டை விரித்துப் படுப்பார் சிதம்பரம். தங்கப்பழம் கஞ்சி ஏதேனும் கொண்டு வந்தாலும் அங்கு அமர்ந்து தான் கதை பேசிக்கொண்டே குடிப்பார்.

"இந்த மரமா சொல்லுச்சி என் பேரை?"

"ம்ம்.. உங்களைப் பத்தியும் சொல்லுச்சி.."

"அது சரி.. புளியமரத்துக்கும் பூதத்துக்கும் சும்மாவா முடிச்சுப் போட்டாங்க.. ஆமா தம்பிக்கு எந்த ஊரு?.. வண்டியப்பாத்தா பட்டணம் மாதிரி தெரியுது.. மெட்ராசுல இருந்தா தம்பி வர்றீய?.. செத்த நேரத்துக்கு முன்னாடி நீங்க கழட்டிப் போட்டியளே அது என்ன உடுப்பு தம்பி?.. ஆமா, என்ன தம்பி இது? குட்டி விமானமா?" என்று பரபரத்தார் சிதம்பரம். அவருக்கு அந்த வண்டி என்னவென்று தெரிந்து கொள்ள ஆவல்.

அந்த குடுவையின் மேல் சிவப்பு வண்ணத்தில் ஏதேதோ குறியீடுகளும் மின்னி அவரது ஆர்வத்தை தூண்டிவிட்டன.

பாவம் சிதம்பரத்திற்கு எங்கே தெரியப்போகிறது? அந்த குடுவையில் எழுதியிருக்கும் குறியீடு '6EQUJ5' க்கு தான் வானியல் ஆய்வாளர்கள் அர்த்தம் தெரியாமல் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள் என்று.

"என் பேரு ப்ரோடோஸ்.. நான் ஆல்பா கிரகத்துல இருந்து வரேன்.."

"அது சரி, அந்த கிராமம் எந்தப் பக்கட்டு தம்பி இருக்கு? வடக்கையா? தெக்கையா?"

"அது கிராமம் இல்ல.. கிரகம்.. சூரிய குடும்பத்துக்கு வடக்குல இருக்கு.. உங்க கிரகத்தை விட ரொம்ப ரொம்ப பழமையானது எங்க கிரகம்.. பெருசும் கூட.. நான் இப்போ எங்க அப்பாவைத் தேடி இங்க வந்திருக்கேன்.."

"தம்பி, நீங்க என்ன சொல்லுதியன்னு எனக்கு ஒண்ணுமே புரியல.. எதுவாயிருந்தாலும் நாளைக்கு காலைல பஞ்சாயத்து தலைவர்கிட்ட பேசிக்கிடலாம்.."

"ம்ஹீம், அந்த ஆள் கெட்டவன்னு இப்போ தான் புளியமரம் சொன்னது.. நான் இந்த பூமி கிரகத்துக்கு தலைமை யாரோ அவர்கிட்ட பேசணும்.. எங்கப்பா எங்க இருக்கார்னு அவர்கிட்ட கேட்கணும்"

"என்ன தம்பி யாரோ பெரிய பெரிய ஆளுங்களை எல்லாம் பார்க்கணும்னு அடம்பிடிக்கிய?.."

"கொஞ்ச நாளைக்கு முன்னாடி உங்க கிரகத்தோட தொடர்பு வச்சிக்கிறதுக்காக எங்கப்பாவை ஆல்பா கிரகத்துலயிருந்து இங்க அனுப்பி வச்சாங்க.. ஆனா, அதுக்கப்புறம் அவரைப் பத்தி எந்தத் தகவலும் எங்களுக்கு கிடைக்கல.. அதான் அவரைத் தேடி நான் இங்க வந்திருக்கேன்.. அதுவும் எங்க கிரகத்துல இருக்கிறவங்க யாருக்கும் தெரியாம இங்க வந்திருக்கேன்.."

"ஏன் தம்பி தனியாவா வந்திருக்கிய?"

"இல்ல இம்வாலா என் கூட இருக்கான்.."

"யாரது காமீங்க?.."

"இல்ல உள்ள இருக்கான்?" என்று தான் வந்த அந்தக் குடுவையை கை நீட்டி காண்பித்தான் ப்ரோடோஸ்.

தன் தந்தை டெத்தீஸ் செய்த அதே தவறை தானும் செய்தான் ப்ரோடோஸ்.

ஒரு வருடத்திற்கு முன்பு பூமி வந்த அவனது தந்தை மட்டும் பத்திரமாக கிரகம் திரும்பியிருந்தால் அவர் சொல்லும் முதல் தகவலே, பூமிவாழ் மனிதர்களுக்கு இன்னும் இம்வாலாவைப் பற்றிய புரிதல் இல்லை என்பது தான்.

இம்வாலா கடலின் அடி ஆழத்தில் வாழும் ஒரு மூன்றறிவு உயிரினம். பார்ப்பதற்கு பச்சையும் நீளமும் கலந்து அசல் பாறை போலவே இறுகி காட்சியளிக்கும்.

ஆனால், மனித ஸ்பரிசம் பட்டால் அவர்களின் உடல் வெப்பத்திற்கு மயங்கி செல்லப் பிராணியாக மாறிவிடும்.

இந்த அதிசய உயிரினத்திற்கு ஒரு குணம் உண்டு. கடலின் அடியில் இருக்கும் போது மட்டும் இருக்கிற இடம் தெரியாமல் இருக்கும் இம்வாலா குட்டி, வெளியே எடுத்து வளர்க்கப்படும் போது பௌர்ணமி நாளில் மட்டும் துளிர்த்தெழுந்துவிடும்.

ஏனெனில் பௌர்ணமி ஒளியே அதன் பிடித்தமான உணவு.

எவ்வளவு ஒளியை சேமிக்கிறதோ அதை நான்மடங்காக்கும் சக்தி உள்ளது இம்வாலாவுக்கு. பின், செரிமானம் அடைந்தது போல் வேறொரு அலைநீளத்தில் கதிர்களை வெளியிடும். அக்கதிரைக் கொண்டு பல சாதனைகளை நிகழ்த்தியிருந்தனர் ஆல்பா கிரகத்து மக்கள்.

இம்வாலாவை சிறிது நேரம் நீரில் போட்டு, பின் அந்தக் கழிவுநீரை குடிக்கும் போது, அவர்களுக்கும் இம்வாலாவின் சக்தி உடலில் வந்துவிடும் என்பது கூடுதல் தகவல்.

இம்வாலாவை ஒரு ஆபத்தாண்டவனாகவே கருதினர் ஆல்பா கிரகத்து மக்கள். அதனால் எங்கு சென்றாலும் அதனை உடன் எடுத்துச் சென்றனர்.

ஒரு வருடத்திற்கு முன்பு ப்ரோடோஸின் தந்தை பூமி வந்தபோதும் இப்படி தான் இம்வாலாவை தூக்கிக்கொண்டு வந்திருந்தார்.

அவர் வந்திறங்கிய இடம், தென் அமெரிக்காவில் உள்ள, அந்தீசு மலைத்தொடர். அங்கு பண்டை நாகரிகத்தினரான இன்கா நாகரிகத்தினர் தான் பெரிதும் வாழ்ந்து வந்தனர்.

சூரியனுக்கு கோவில் கட்டி, கடவுளாக வழிபடும் கலாச்சாரம் உடையவர்கள் அம்மக்கள்.

அவர்களைப் பொறுத்தவரை மன்னரே சூரியனின் பிரதிநிதி. அவர் இறந்து விட்டால் அவர் உடல் பதப்படுத்தப்பட்டு, அந்த கோவிலிலேயே புதைக்கப்பட்டுவிடும். அவர் உடைமைகள், அவர் பயன்படுத்திய பொருட்கள் போன்றவற்றையும் அவருடன் சேர்த்து புதைத்து விடுவர்.

இதில் அதிர்ச்சி என்னவென்றால், அரசர் இறந்தவுடன் அவரின் பணியாட்களும் கொல்லப்பட்டு அரசருடன் அடக்கம் செய்யப்படுவது தான்.

இதற்கு காரணம் இன்கா மக்கள் மறுபிறவியில் நம்பிக்கை கொண்டிருந்ததே.

இறப்பு என்பது பல சிக்கல்களை கொண்ட அடுத்த உலகத்திற்கு ஒரு பாதை என்றே நம்பினர் இன்கா மக்கள். நரபலியிடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர் அவர்கள்.

வருடத்திற்கு ஒருமுறை சூரிய பகவானிற்காக விழாக்கள் எல்லாம் எடுக்கப்படும் அங்கு. கூட்டத்தில் முன்னோர்களில் ஒருவர் சூரியபகவானிடம் பேசுவார். சூரியனாரை பூமி வரச்சொல்வதே அவர்களின் முக்கிய வேண்டுகோளாக இருக்கும்.

யாரேனும் 'சூரியன் கடவுள் இல்லை' என்று கூறி அவரை ஏற்க மறுத்தால், உடனே மரணம் தான்.

இப்படிப்பட்ட ஒரு கூட்டத்திடம் சென்று தான் மாட்டிக்கொண்டார் டெத்தீஸ்.

இதில் ஒரு ஆச்சரியம் என்னவெனில் அவரை அவர்கள் சூரியபகவானின் சேவகனாக நினைத்தது தான்.

ஆம், உடல் முழுவதும் காயத்தால் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ஒருவனுக்கு இம்வாலாவை குளிப்பாட்டிய நீரை கொடுத்து காப்பாற்றினார் டெத்தீஸ். அதுவே அனைத்துப் பிரச்னைகளுக்கும் காரணமாகியது.

அவர் அங்கு இறங்கிய இரண்டாம் நாளே அவரிடமிருந்து இம்வாலாவை கைப்பற்றியவர்கள், அவரை கூட்டாக சேர்ந்து திட்டமிட்டு கொலையும் செய்துவிட்டனர். அது அவர்களுக்கு தவறாக தெரியவில்லை. தங்களின் அச்செயலால் கடவுளை தங்களுடனேயே இருத்தி வைத்து விட்டதாகவே, மகிழ்ச்சியில் திளைத்தனர்.

டெத்தீஸ் வந்த வாகனத்தை குழிதோண்டி புதைத்தவர்கள், பொழிவுடன் தோன்றிய இம்வாலாவை மட்டும் தங்களின் கோவிலுக்கு எடுத்துச்சென்று வழிபாடு நடத்தத் தொடங்கினர்.

இப்போதும் புதிதாக இன்கா மக்களையும் அவர்களது கலாச்சாரத்தையும் காண யாரேனும் சென்றால், இம்வாலாவையும் அவர்களின் வழிபாட்டையும் கண்டு, கல்லை வழிபடும் முட்டாள்கள் என்றே கருதக்கூடும்.

ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் இம்வாலா உக்கிரமாகக் காணப்படும் என்று யாரும் தங்கள் குடிலைவிட்டு வெளியே வரமாட்டார்கள். ஆனால், அந்த உக்கிரத்தின் முடிவில் கண்டிப்பாய் மழைவரும் என்று மட்டும் அவர்களுக்குத் தெரியும்.

இம்வாலாவால் மாதம் தவறாமல் மழை பெய்து அப்பகுதியே செழித்துக் காணப்பட்டது. கூடவே நன்னீர் உப்பாக மாறும் அதிசயமும் நிகழ்ந்தது.

ஒரு உயிரின் ரத்தத்தில் ஒரு நாகரீகமே வளத்தில் செழித்துக் கொழித்தது.

இவ்வாறு இன்கா இன மக்களால் தன் தந்தை கொல்லப்பட்டார் என்பதை அறியாத ப்ரோடோஸ், ஒரு பூமி மனிதனை நம்பி தன்னைப் பற்றிய விபரங்களை எல்லாம் கூறிக் கொண்டிருந்தான்.

சிதம்பரம் அவனிடம், "சரி தம்பி, நீங்க யாரையோ தேடி வந்திருக்கிய.. நிச்சயம் போலீஸ்கிட்ட சொல்லி காலைல கண்டுபிடிச்சிரலாம்.." எனும்போதே சரியென்று விட்டு குடுவைக்குள் சென்று வந்தான் அவன்.

அவன் வரும்போது அவன் கைகளில் பச்சையும் மஞ்சளுமாய் மின்னிய பாறை ஒன்றையும் எடுத்து வந்தான்.

அந்த அத்துவானக் காட்டிற்குள் யாரும் திருடி விடுவார்களோ எனப்பயந்து அவன் வந்த வாகனத்தை அங்கு கிடந்த காய்ந்த செடிகொடிகளை கொண்டு மறைத்து வைத்தார் சிதம்பரம்.

பின், அவன் கைகளில் பூப்பந்தைப் பிடித்திருப்பது போல் இம்வாலாவை தூக்கிக்கொண்டு அவருடன் நடக்க, தன் ஊரின் அருமை பெருமைகளை எல்லாம் சொல்லிக் கொண்டே உல்லாசமாய் நடந்துவந்தார் சிதம்பரம்.

வழியில் அவர்கள் சென்று கொண்டிருக்கும் போதே கரடுமுரடான பாதையில் நடக்க முடியாமல் கால்தட்டி கீழே விழுந்தான் ப்ரோடோஸ்.

அவன் கையிலிருந்த இம்வாலாவும் பொத்தென்று கீழே விழுந்தது.

அவனின் கைகளின் உஷ்ணத்தில் அடங்கி ஒடுங்கி இருந்த இம்வாலா, தரையை நோக்கி விழுந்ததும் தன் உடலில் இருந்த நுண்துளை கண்களால் வானைப் பார்த்தது.

ஒவ்வொரு நட்சத்திரமும் அதனை பார்த்து கண்ணடித்தது அதற்கு சந்தோசத்தைக் கொடுத்தது.

மகிழ்ச்சியுடன் அவற்றிற்கு அருகிலிருந்த நிலவின் ஒளியை தன் நுண் துளை கண்களால் உறிஞ்சி உறிஞ்சி அடங்கியது இம்வாலா.

இடைப்பட்ட இந்த நிகழ்வில் மேகக் கூட்டங்களும் அவ்விடம் நோக்கி விரைந்து வந்து மழைப்பொழிவை உண்டாக்கியது.

இம்வாலாவும் ப்ரோடோஸும் விழுந்த போதே பதறிப்போய் இருவரையும் தூக்கப்போன சிதம்பரம், இம்வாலா செய்த அற்புதத்தில் வாயைப் பிளந்து நின்றார்.

இவ்வளவு நாள் இந்த வறண்ட கானகத்தில் எதற்காக தவமாய் தவமிருந்தாரோ, அதை ஒரே நிமிடத்தில் நிகழ்த்தி விட்டது இம்வாலா.

வாங்கலும் கொடுக்கலும் தொடரும்❣️
Wow aliens ellam varanga.. imla pathi sonnathu interesting a iruku..athala than rain kedaichitu..interesting epi akka..😍😍😍
 
Messages
74
Reaction score
72
Points
18
அத்தியாயம் 6


சித்தானந்த் எதிர்பார்க்கவேயில்லை. தான் ஒரு வாரத்திற்கு முன்பு காபிஷாப்பில் பார்த்தவளை மீண்டும் பப்பில் பார்த்தது அவனுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது.

தனித்து ஓரமாக அமர்ந்திருந்தவளை அவனால் கடந்து செல்ல முடியவில்லை.

கையில் காக்டெயிலுடன் அமர்ந்திருந்தவளை நெருங்கி, "ஹே! சஞ்சனா.. வாட் அ பிளசண்ட் சர்ப்ரைஸ்!.." என்று அவள் முன்னே போய் அமர்ந்தான்.

அவனிடமிருந்த குதூகலம் எதுவும் அவளிடம் இல்லை.

பதிலுக்கு ஹாய் மேன் என்று மட்டும் சொன்னாள்.

ஸ்னாக்ஸ் காலியான தட்டுகள் அவனுக்கு அவள் முழு போதையில் இருப்பதை உணர்த்தியது.

"சத்தியமா சகிக்கல சஞ்சனா உன்னை இப்படி பார்க்குறது?.. வாட் ஹாப்பண்ட்?.. ஏன் இப்படி இருக்க?.. மறுபடியும் உன் வீட்டுல மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சுட்டாங்களா?.. இந்த தடவை எந்த நாடு? ஆப்ரிக்காவா?.." என்றவனுக்கு தனது கைப்பையிலிருந்து ஒரு பத்திரிக்கையை எடுத்து நீட்டினாள் சஞ்சனா.

"கல்யாணமா? உனக்கா?"

"அங்க அப்படித்தானே போட்டிருக்கு ஸ்ரீகாந்த் வெட்ஸ் சஞ்சனான்னு.."

"ஒன் வீக்ல மேரேஜ்னா ரிடிகுலஸ்.. உனக்கு அவனை முன்னாடியே தெரியுமா?"

"ம்ஹீம்"

"அப்போ எதுக்கு ஓகே சொன்ன?.. ஷிட் ஸ்டாப் ட்ரிங்கிங் யா.."

"ப்ளீஸ் வேதா, எனக்கு இப்போ எல்லாத்தையும் மறக்கணும்.. இதோ இது இன்விடேஷன், இது என் எங்கேஜ்மெண்ட் ரிங்னு எல்லாத்தையும் மறக்கணும்.."

"இதுக்கும் உன் அந்த பெரி..ய அத்தை தான் காரணம், ரைட்?"

குடிப்பதை நிறுத்தினாள் சஞ்சனா.

திடீரென சித்தானந்தின் கைகளை பிடித்துக்கொண்டு, "ப்ளீஸ் வேதா, எனக்கு இப்போ என்ன செய்யுறதுனே தெரியல.. எனக்கு இப்போ இந்த உலகத்தை விட்டே ஓடிப்போயிடலாம் போல இருக்கு.. கேன் யூ ஹெல்ப் மீ?.."

"எது இந்த உலகத்தை விட்டு ஓடிப்போறதுக்கா?.. சாரி, எனக்கு கொலை செஞ்செல்லாம் பழக்கம் இல்ல.."

"தெரியும், யாராலயுமே எனக்கு இப்போ ஹெல்ப் பண்ண முடியாது.." என்று புலம்பியவாறே டேபிளின் மீதே கவிழ்ந்தாள் சஞ்சனா.

அப்போது, டேய் என்று குரல் எழுப்பியவாறே சித்தானந்தின் அருகில் வந்தான் வேதானந்த்.

இன்று தான் பிளைட்டில் வந்து இறங்கியிருந்தவன், ப்ளு ஜீன்ஸ், டிசைனர் லினன் அரைக்கை சட்டை, கூலிங் கிளாஸ் என படு ஸ்டைலாக இருந்தான்.

வந்தவன் டேபிளில் கவிழ்ந்து கிடந்த சஞ்சனாவை பார்த்துக்கொண்டே "டேய் யாரிவ?.. உள்ள நுழைஞ்ச உடனேயே கேர்ள் ப்ரெண்ட் பிடிச்சிட்டியா?.. சென்னையை சுத்தி காட்டுன்னு சொன்னா, அதுக்குள்ள பப்புக்கு கூட்டிட்டு வந்துட்டியேடா!.."

"வேதா எனக்கு சென்னைல கிடைச்ச ஃபர்ஸ்ட் பிரெண்ட் இவ தான்.. பேரு சஞ்சனா.. அன்னைக்கு சொல்லல?.. இப்போ இவ ஒரு ப்ராபளத்துல மாட்டியிருக்காடா.. இவ கதை என்னன்னா.."

"ம்ம் ஸ்டாப் இட்.. என் கதையை நான் தான் சொல்லுவேன்.." என்று நிமிர்ந்தவள், இருவரையும் மாறி மாறி பார்த்தாள்.

"ஒரிஜினல் சரக்குன்னா ரெண்டு ரெண்டா தானே தெரியணும்.. எனக்கென்ன நாலு நாலா தெரியுது.. இப்போ நான் யாருக்கிட்ட என் கதையை சொல்லனும்?" என்று கேட்டுவிட்டு, குழம்பி மீண்டும் டேபிளில் தலை சாய்த்துவிட்டாள்.

"டேய் செம மட்ட.." என்றான் வேதானந்த்.

பதிலுக்கு சித்து, "ம்ம், இப்போ என்ன பண்றது?" என்று கேட்டுக் கொண்டிருக்கும் போதே, அவளது போன் அடித்தது.

ட்ரைவர் என்று போட்டிருப்பதைக் கண்டு எடுத்து பேசினான் வேதானந்த்.

நேரமாகிவிட்டதால் அவளை கார்பார்க்கிங் வரை அழைத்து வரும்படி டிரைவர் கெஞ்சவும், சரியென்று ஒத்துக்கொண்டவன், சித்தானந்தை அவளை கீழே கொண்டுபோய் விட்டு வரவும் சொன்னான்.

அவன், "சாரிடா, சரக்கைப் பார்த்ததும் கை உதறுது.. நீயேப்போய் விட்டுட்டு வா" என்று அவனை கெஞ்சிக் கூத்தாடி அவளுடன் அனுப்பி வைத்தான்.

தனது தோளில் அவளது இடக்கையைப் போட்டு, அவள் இடுப்பை பிடித்தபடியே லிப்ட் வரை அழைத்து வந்தவனுக்கு பிரதி உபகாரமாய் அவன் மீதே வாந்தி எடுத்து வைத்தாள் சஞ்சனா.

பெரிய ரோதனையாய் போய்விட்டது வேதானந்திற்கு.

அலேக்காய் அவளை ரெஸ்ட்ரூம் தூக்கிக்கொண்டு போய் அனைத்தையும் கழுவி துடைத்து விட்டு, மீண்டும் லிப்ட் வருவதற்குள் போதும் போதும் என்று ஆகிவிட்டது.

லிப்ட் வந்தவுடனாவது சும்மா இருந்தாளா? லிப் சர்வீஸை துவங்கிவிட்டாள். பட்டென்று எக்கி வேதானந்தின் இதழில் முத்தமிட்டு விட்டாள்.

ஷாக்கடித்தது போல் நின்றிருந்தவனின் தோளில் தொங்கியபடியே, 'லெட்ஸ் ஹாவ் செக்ஸ்?' என்றாள்.

மிரண்டு பார்த்தவனிடம், "என்ன பாக்குற?.. எல்போர்டா?.. சரி விடு.. ரெண்டு நாள்ல எனக்கு மேரேஜ் தெரியுமில்ல?.. வந்திடு.." என்றபடியே அந்தப் போதையிலும் தன் தோளில் தொங்கிய கைப்பையிலிருந்து திருமண அழைப்பிதழை எடுத்து அவன் கையில் திணித்தாள்.

இந்நேரத்திற்குள் இரண்டு ஷாட் அடித்துவிட்டான் சித்து. இரண்டிற்கும் இடையில் நடனம் வேறு ஆடிவிட்டு வந்துவிட்டான்.

அவளை கீழே இழுத்து வந்த வேதானந்த், டிரைவர் காரின் கதவைத் திறக்கவும், அவள் தோளைப்பிடித்து உள்ளே தள்ளினான்.

அவனுக்கு 'பை' சொல்லும் விதமாய் அவனது சட்டைக் காலரைப் பிடித்திழுத்து கன்னத்தில் முத்தமிட்டாள் சஞ்சனா.

பின், "முதல் காதலையும் முதல் முத்தத்தையும் மறக்கவே முடியாதாமே.." என்று புலம்பியபடியே காரின் பின்சீட்டில் படுத்துவிட்டாள்.

டிரைவர் அவனுக்கு தயக்கமாய் தலையசைத்துக் கொண்டே காரை கிளப்பியதும், பெரு மூச்சு விட்டவன் தன் கையிலிருந்த அழைப்பிதழைப் பிரித்துப் பார்த்தான். கார் தூரமாய் போய்விட்டிருந்தது.

இரண்டு நாட்கள் கழித்து…

அந்த மண்டபத்தில் இருந்த கூட்டமும் நுழைவில் வரவேற்கும் இடத்தில் இருந்த சண்டைமேளச் சத்தமுமே சொல்லியது அது ஏதோ ஒரு பெரிய வீட்டுத் திருமணம் என்று.

மணமகள் அறையில் சுற்றி நின்ற அனைவரும் தீவிரமாக தன்னை அலங்கரித்துக் கொண்டிருக்க, தேமேயென்று அமர்ந்திருந்தாள் சஞ்சனா.

திடீரென உள்ளே வந்த ஷாந்தினி, சுற்றி நின்றவர்கள் யாரையும் கருத்தில் கொள்ளாமல், "சஞ்சு, யாரந்த வேதானந்த்?" என்று வினவவும்,

முதலில் தானும் தடுமாறியபடியே யாரென்று யோசித்தவள், காபிஷாப்பின் நினைவு வரவும், தைரியமாய் "என் ப்ரெண்ட் அத்த" என்றாள்.

அவளுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு அவனை தான் பப்பில் சந்தித்ததெல்லாம் ஞாபகம் இல்லை. மது நினைவை மழுங்கடித்திருந்தது.

"இந்தப் போட்டோ எப்போ எடுத்தது சஞ்சு?" என்று தன் கையிலிருந்த போனை நீட்டி வினவினார் அவர்.

தானும் சித்தானந்தும் பேசி சிரித்துக் கொண்டிருப்பது போன்று இருந்த அப்புகைப்படத்தைக் கண்டதும், "அடப்பாவி வருண்.. அன்னைக்கு போட்டோ வேற எடுத்தியா?" என்று மானசீகமாக கேட்டுக்கொண்டாள்.

"இந்தப் போட்டோல இருக்கிற பையனும் நீயும் லவ் பண்றீங்களா சஞ்சு?"

கேள்வி காட்டமாய் இருக்கவும் பட்டென்று பதில் சொல்ல முடியவில்லை சஞ்சுவால்.

"அத்த அது வந்து.."

"ம்ம் தைரியமா சொல்லு?.. உனக்காக கல்யாணத்தை நிறுத்தவும் நான் தயங்க மாட்டேன்.. நீ இந்தப் பையனை லவ் பண்றியா?"

அப்போது தான் சஞ்சனாவிற்கு அந்த யோசனை வந்தது. இப்போது ஆம் என்றால் தான் என்ன?

தைரியமாய் சொல்லிவிட்டாள். "ம்ம் ஆமா அத்த.." என்று.

"இவன் யாருன்னு தெரியுமா சஞ்சு?" என்றவர் வினவிக் கொண்டிருந்த போதே,

"இவ என்ன சொல்றா ஷாந்தினி?" என்று கேட்டபடியே, ஷாந்தினியின் இரு அண்ணன்மார்களும் வந்து விட்டனர்.

ஷாந்தினி உஷ்ண குரலில், "உன் பொண்ணு அவனை லவ் பண்றாளாம் அண்ணா.." என்றார்.

"இந்தக் கழுதைக்கு எவ்ளோ தைரியம்?.." என்று அறையப் போன ரகுநந்தனை, தடுத்து நிறுத்திய ஷாந்தினி,

"இப்போ வீரம் முக்கியமில்ல அண்ணா.. விவேகம் தான் முக்கியம்.. முப்பது வருஷத்துக்கு முன்னாடி பாதியில விட்ட பழியை மறுபடியும் தொடர நமக்கு ஒரு வாய்ப்பு கிடைச்சிருக்கு.. உன் பொண்ணை அந்த வேதானந்துக்கு கட்டிவை.."

அவர்கள் கூறுவதையெல்லாம் ஏற்கனவே அதிர்ச்சியோடு கேட்டுக் கொண்டிருந்த சஞ்சனா, இப்போது பழி அது இதுவெனவும் மேலும் அதிர்ச்சிக்குள்ளாகினாள்.

அங்கு நின்றிருந்த பெண்களை எல்லாம் வெளியே போகச் சொன்னார் கோகுலநந்தன்.

அவர்கள் சென்றதும் கதவை பூட்டியவர், "ஷாந்தினி, நீ புரிஞ்சு தான் பேசுறியா?.. நம்ம பொண்ணைப் போய் அந்தக் குடும்பத்துக்கு கல்யாணம் பண்ணி அனுப்பி வைக்க சொல்ற?" எனவும்,

"ஏன் முப்பது வருஷத்துக்கு முன்னாடி நான் அந்தக் குடும்பத்துக்கு கல்யாணம் பண்ணி போகல?" என்று தன் அண்ணனையே திருப்பி மடக்கினார் ஷாந்தினி.

மேலும், "பாருங்கண்ணா, நம்ம இப்போ பார்த்திருக்க மாப்பிள்ளை ஸ்ரீகாந்தோட பிரெண்ட் தான் அந்த வருண்.. அவன் இப்போ இந்தப் போட்டோவை வச்சு பெரிய பிரச்சினை பண்ணிக்கிட்டு இருக்கான்.. இவளும் என்னன்னு கேட்டா ஆமான்னு சொல்றா.." என்று நிலைமையின் தீவிரத்தை விளக்கினார்.

மனம் ஒப்பாத ரகுநந்தன், "நீயென்ன ஷாந்தினி இப்படி சொல்ற?.. அந்த வேதானந்தே தான் இவளை எனக்கு தெரியவே தெரியாதுன்னு சொல்றானே?" எனவும்,

"ஆனா, வருண் அவளை தெரியாதுன்னு அக்னில சத்தியம் பண்ணுன்னு கேட்டதுக்கு பண்ணலையே!" என்று ஞாபகப்படுத்தினார் ஷாந்தினி.

சஞ்சனா மனதிற்குள் 'அதானே காபிஷாப்புல அப்படி கடலை வறுத்துட்டு தெரியாதுன்னு சொல்ல முடியுமா?' என்று கேட்டுக் கொண்டாள்.

"ஏய் சஞ்சு! நீ அவன் கூட சேர்ந்து என்ன திட்டம் போட்ட?" என்று ரகுநந்தன் அதட்டவும், இல்லையென்றபடியே தலையாட்டி பின் வாங்கினாள் அவள்.

"அண்ணா, கல்யாணத்தை நிறுத்தி நம்மளை அவமானப்பட வைக்கிறது தான் அவங்க திட்டம்.." என்று சரியாய் கணித்தார் ஷாந்தினி.

ஆம், இதே காரணத்திற்காகத்தான் அந்தப் போட்டோவில் அவளுடன் இருப்பது சித்தானந்த் என்று கூற வந்த வேதானந்தை தடுத்து நிறுத்தினார் சத்யமூர்த்தி. மேலும் உண்மையை கூறவேண்டாம் எனவும் தலையசைத்தார்.

இரண்டு நாட்களுக்கு முன், வீட்டிற்கு போதையில் வந்த மகன்களின் கையிலிருந்த திருமண அழைப்பிதழை முழுதும் வாசித்துப் பார்த்த சத்யமூர்த்தி, மறுநாள் காலையில் வேதானந்திடம் அது பற்றி விசாரித்தார்.

திருமணம் நேற்று தான் பப்பில் சந்தித்த தோழி ஒருவளுக்கு என்றும், அவளே தனக்கு பத்திரிகை கொடுத்து அழைப்பு விடுத்தாள் என்றும் அவன் கூறவும், "இதே மேரேஜ்க்கு மாப்பிள்ளை வீட்டு தரப்புல இருந்து எனக்கும் ஒரு அழைப்பு வந்திருக்கு.. மாப்பிள்ளையோட அப்பா என் பழைய பிரெண்ட் ஸ்ரீநிவாசன்.. ஸோ ஒரே கல்யாணத்துக்கு நமக்கு ரெண்டு வீட்டு அழைப்பு.. பேசாம நாம ரெண்டுபேருமே போய் கலந்துக்கிட்டா என்ன?.." என்றார் சத்யமூர்த்தி.

"நாங்க ஒண்ணும் அவ்ளோ க்ளோஸ் கிடையாது.. மேரேஜ் நாளை மறுநாள்.. தாத்தாவுக்கு ஆபரேஷன் இருக்கிறதை மறந்துட்டீங்களா?"

"யா யா சின்ன ஆபரேஷன் தானே?.. நம்ம சித்துவை ஹாஸ்பிடல்ல விட்டுட்டு போகலாம்" எனவும், தாத்தாவை விட இது என்ன அவ்வளவு முக்கியமானதா என்ற யோசனையுடனே சரியென்று தலையசைத்தான் வேதானந்த்.

அவனுக்கு மண்டபத்திற்கு வந்த சேர்ந்த ஐந்தாவது நிமிடமே இப்படியொரு அசம்பாவிதம் நடக்கும் என்று தெரியாது.

திடீரென தன்னிடம் ஓடிவந்த ஒருவன், "ஹலோ! மிஸ்டர் வேதா, என்னை உங்களுக்கு ஞாபகம் இருக்கா? நான் தான் வருண்.. மாப்பிள்ளை ஸ்ரீகாந்த் என் பிரெண்ட் தான்.. இப்போ தான் மேரேஜ் சஞ்சனாவுக்குன்னு தெரிஞ்சு காபிஷாப்புல நடந்ததெல்லாம் அவன் கிட்ட சொன்னேன்.. அவனுக்கு நீங்களும் சஞ்சுவும் கல்யாணம் பண்ணிக்கிறதுல எந்த பிராபளமும் இல்ல.." எனவும்,

"ஹெலோ மிஸ்டர், நீங்க யாருன்னே எனக்குத் தெரியாது.. என்கிட்ட வந்து என்னென்னவோ பேசிக்கிட்டு இருக்கீங்க?.." என்று எழுந்து நின்றான் வேதானந்த்.

இருவரும் மாறி மாறி பேசவும், கூட்டம் கூடியது.

அனைவரிடமும் தன் தரப்பு நியாயத்தை கூறினான் வருண். மேலும் தனது போனிலிருந்த போட்டாவையும் காட்டினான்.

சஞ்சனாவுக்கு ஏற்கனவே தோல் சம்பந்தப்பட்ட நோய் இருப்பதாய் வருண் மூலம் கேள்விபட்ட ஸ்ரீகாந்த், எப்படியாவது அவளை வேதாவிடம் தள்ளிவிடவேண்டும் என்று, உடன் இணைந்து பிரச்சனையை பெரிதாக்கினான்.

மறுத்து அது நான் அல்ல என்று பேச வந்த வேதாவை கை பிடித்து தடுத்து, வேண்டாம் என்று தலையசைத்தார் சத்யமூர்த்தி.

தோளுக்கு மேல் வளர்ந்திருக்கும் தன் மகனை காண்பிக்கவே, குறிப்பாக அவர் வேதாவை காண்பிக்கவே இந்த திருமணத்தில் அவனுடன் கலந்திருந்தார்.

முக்கியமாக ஷாந்தினியின் இழப்பை நினைவு கூறுவதே அவரின் குறிக்கோளாக இருந்தது.

ஆனால், இப்போது கல்யாணம் நிற்பது போன்ற நிலை ஏற்படவும் கொண்டாட்டமாக உணர்ந்தார்.

சஞ்சனாவின் அறையில் இருந்தவர்களை அதுஇதுவென்று கூறி எப்படியோ திருமணத்திற்கு சம்மதிக்க வைத்து விட்டார் ஷாந்தினி.

வெளியே சஞ்சனாவுடன் வந்தவர், "சஞ்சுக்கிட்ட கேட்டப்போ அவளும் இந்தப் பையனை காதலிக்கிறதா தான் சொல்றா.. அடுத்து நாங்க என்ன செய்யணும்னு நீங்களே சொல்லிருங்க ஸ்ரீகாந்த் தம்பி" எனவும்,

இடைபுகுந்து, "வேறென்ன கல்யாணம் தான்" என்றான் வருண்.

இவ்வளவு நேரமும் மறுத்துப் பேசிக் கொண்டிருந்த வேதானந்தின் எண்ணவோட்டமும், மணக்கோலத்தில் இருந்த சஞ்சனாவைப் பார்த்ததும், புதுப்பேட்டை தனுஷை போல் தடம் மாறியது. நேரே சென்று மணவறையில் அமர்ந்தான்.

சத்யமூர்த்திக்கு துளியும் இந்தக் கல்யாணத்தில் விருப்பமில்லை. பிள்ளையார் பிடிக்க குரங்காகிப் போன கதையாய் தன்னையே நொந்து கொண்டார்.

இப்போது தான் சித்தானந்தைப் பற்றி பேசினாலும் வேதானந்த் மணவறையிலிருந்து எழ மாட்டான் என்பது தீர்க்கமாய் புரிந்து போக, வெளியே கிளம்பிவிட்டார்.

சஞ்சனாவிற்கோ ஒரு பிரச்சனையிலிருந்து தப்பித்து இன்னொரு பிரச்சனையில் மாட்டிக் கொண்டது போலாகிவிட்டது. உடன் ஸ்ரீகாந்திற்கு வேதானந்த் எவ்வளவோ மேல் என்றும் தோன்றியது.

தற்போது என்ன சொன்னாலும் அவள் திருமணம் நடக்கப்போவது உறுதி. அதற்கு ஏன் வீணாக மறுத்துப் பேசி வாதாடுவானேன் என்று வேதாவின் அருகில் போய் அமர்ந்துவிட்டாள்.

ஐயர் மந்திரங்களை கூறி தாலியைக் கொடுக்க, அதை அவள் கழுத்தில் கட்டி விட்டு, அழுந்த கன்னத்திலொரு முத்தம் பதித்தான் வேதானந்த்.

அதிர்ந்து பார்த்த சஞ்சனாவிடம், "நீதானே சொன்ன, முதல் காதலையும் முதல் முத்தத்தையும் மறக்க முடியாதுனு.. நான் தான் உனக்கு பர்ஸ்ட் முத்தம் கொடுக்கிறேனான்னா தெரியாது.. ஆனா நான் உனக்கு கொடுக்கிற பர்ஸ்ட் முத்தம் இது தான்.. மறக்க மாட்டேல்ல?.. அப்புறம் எனக்கு எதையும் சும்மா வாங்கி பழக்கம் இல்ல.." என்றான்.

'நான் எப்போ இவன்கிட்ட என்ன சொன்னேன்?' என்று குழம்பி போய் அமர்ந்திருந்தாள் சஞ்சனா.

சுற்றி நின்றவர்கள் அனைவரும் அதிர்ந்துப் பார்த்திருக்க, எழுந்து நின்று அவள் கரம் பற்றியவன் யாரையும் கவனியாமல் சஞ்சனாவை இழுத்துக்கொண்டு அந்த மண்டபத்தைவிட்டே வெளியேறி விட்டான்.

4ddTNG2r07_6VGi_CnwNFHpKgqaA5PZUSLHkXVF_UGAd1FkL0jmfDs8jiGxZ1AbqPfrNmFHP6zzH8BvAIWADSRCfv1H5XA8vqd0pfJWyr9By-0J04utw3DyAp5pPTMNdYxpuvh6M



கொடுக்கலும் வாங்கலும் தொடரும்❣️
Enna akka ippadi takkunu marriage mudinjitu..intha sidhu vedha name nala ethavathu confusion varum polaye😂😂😂 intha sathya ku enna than venum.shanthini ku theriyalaya vedha avangada son thanu...semma interesting a iruku akka😊😍😍😍
 
Last edited:
Messages
74
Reaction score
72
Points
18

அத்தியாயம் 7​


அன்று காலையில் உற்சாகமாய் கிளம்பிக் கொண்டிருந்தனர் வேதானந்தும் சித்தானந்தும்.

ஆனால், அவர்களிடமிருந்த உற்சாகம் எதுவும் சத்யமூர்த்தியிடம் இல்லை.

ஒரு வாரத்திற்கு முன்பு மதீனாவை அவர் நிராகரித்தப் பின், இன்று தான் அவளை சந்திக்க இருக்கிறார். அவரும் எவ்வளவோ முறை 'இல்ல ஜக்குபாய் நீங்களும் பசங்களும் மட்டும் போயிட்டு வாங்க. நான் எதுக்கு?' என்று கேட்டுப்பார்த்து விட்டார். ஆனால், ஜக்குபாய் தான் என் முடிவில் எந்தவொரு மாற்றமுமில்லை என்று பிடிவாதமாய் நின்றுவிட்டார்.

வேறுவழியில்லாமல் சத்யமூர்த்தியும் அவர்களுடன் இணைந்து கொண்டார்.

மதீனா அவர்புறம் திரும்பவே இல்லை. ஆனால், சத்யமூர்த்தி மட்டும் அவள் ஜப்பானிய உடையான கிமோனோவை அணிந்து அழகாய் நடைபழகுவதை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டிருந்தார்.

என்றுமே பரபரப்புடன் காணப்படும் டோக்கியோ இன்று நிதானமாய் தன்னை சீவி சிங்காரித்திருந்தது. அதற்கு காரணமில்லாமலும் இல்லை. ஒவ்வொரு வருடம் நவம்பர் மாதமும் சீன காலண்டரில் குறிக்கப்பட்டிருக்கும் ரூஸ்டர் நாட்களில் மட்டும் டொரினோ இச்சி என்னும் திருவிழா அங்குள்ள ஓடோரி கோவில்களில் மிகப்பிரம்மாண்டமாய் கொண்டாடப்படும்.

அந்த விமர்சையாக கொண்டாடப்படும் விழாவை காண்பிக்கவே அவர்களை வற்புறுத்தி டவுனுக்குள் அழைத்து வந்திருந்தார் ஜக்குபாய்.

அது இலையுதிர் காலமாதலின் மேப்பிள் மரங்கள் கட்சி மாறி பச்சைக் கொடியை விட்டு சிவப்புக் கொடியை கையிலேந்தியிருந்தன.

அதை ரசித்துக்கொண்டே நீண்டதூரம் நடந்துவிட்டதால் பசியால் ஒரு உணவுவிடுதியை காண்பித்து சாப்பிட அழைத்தார் ஜக்குபாய்.

உள்ளே நுழைந்த போது முதலில் ஜக்குபாய்க்கே பானத்தையும் உணவையும் வழங்கினர் அங்கிருந்த கிமோனோ உடை பெண்கள். பிறகு தான் மற்றவருக்கு பரிமாறப்பட்டது.

முதலில் முதியவர்களுக்கு மரியாதை செலுத்தும் அவர்களின் பண்பாட்டைக் கண்டு வியந்துபோனார் சத்யமூர்த்தி.

அதேபோல் உணவு விடுதியினுள்ளே நுழைந்தபோது தங்கள் உயரத்திற்கு பாதியாக குனிந்து வரவேற்ற பெண்களை காணும் போதும் புருவம் உயர்த்தினார்.

உள்ளே டேபிளில் அமர்ந்த கணமே ஜக்குபாய் மெனுக்கார்ட் பார்த்து அனைவருக்கும் ஆர்டர் செய்துவிட்டதால் சத்யமூர்த்தி திணறத் தேவையில்லாமல் போனது.

ஜப்பானியர்களின் சமைக்கும் முறையே சற்று வித்தியாசமானது. அந்த உணவுமுறைக்கு மாற வெகுகாலம் பிடித்தது சத்யமூர்த்திக்கும் அவரின் மகன்களுக்கும்.

சமைக்கும் முறை மட்டுமின்றி ருசிக்கும் முறையுமே அவர்களிடம் வித்தியாசமாய் இருந்தது. அவர்கள் உணவை உண்பதற்கு குச்சி போன்ற சாப்ஸ்டிக்கை பயன்படுத்தினார்கள். அதற்கு காரணம், குச்சிகளைக் கொண்டு சாப்பிடும் போது நம்மால் குறைந்த அளவு மட்டுமே உணவை எடுத்து விழுங்க முடியும் என்றார்கள்.

கேட்பதற்கு வேடிக்கையாக இருந்தாலும், உணவை மெதுவாக மென்று விழுங்க வேண்டும் என்கிற அவர்களது குறிக்கோள் முக்கியத்துவம் வாய்ந்தது.

அவர்களின் உணவுப் பட்டியலில் கண்டிப்பாக இடம் பிடித்திருப்பவை என்று பார்த்தால் காய்கறிகள், மீன், முட்டை, கடற்பாசி, சோயா, அரிசி மற்றும் கிரீன் டீ. இவை அனைத்துமே முதுமையைத் தள்ளிப்போடும் ஆற்றல் கொண்டவை.

இப்படியான ஜப்பானிய உணவு வகைகளை பின்பற்றி, இன்னும் தன்னை இளமையாக வைத்துக்கொண்ட ஜக்குபாய், குச்சியால் யாகிசோபாவை (நூடுல்ஸின் ஒருவகை) உள்ளேத் தள்ளிக்கொண்டே சுவையாகவும் பேசினார். "என்ன சித்து இங்கேயிருக்கிற பொண்ணுங்களையே பார்த்துக்கிட்டிருக்க?.. இந்த நாட்டு முறைப்படி உனக்கு எப்போ இருபது வயசாகி ஜென்பாகு விழாவுல கலந்துக்கிறியோ அப்போ தான் நீ முழு வாலிபன் ஆகுற.."

"அய்யோ அவங்க எங்க வேலைக்கார அக்கா மாதிரி இருந்தாங்க அன்க்கிள்.. அதான் பார்த்தேன்.."

"அக்காவா? ஹாஹாஹா.. அந்த லேடிக்கு வயசு என்னயிருக்கும் தெரியுமா?.."

"என்ன இருக்கும்?"

"அம்பது"

சித்துவிற்கு பதில் மீசோ சூப்பை அருந்திக் கொண்டிருந்த சத்யமூர்த்தி தான் அதிகளவில் அதிர்ந்து போனார். உடன் உண்மையாகவா? என்றும் வினவினார்.

"உண்மை சத்யாபாய்.. உங்களுக்கு பால்நியோ தெரப்பி பத்தி தெரியுமா?.. இங்க இருக்கிற பெண்கள் இளமையா இருக்கிறதுக்கான சீக்ரெட்ல அதுவும் ஒன்னு. தென் சூடான நீரூற்றுல குளிக்கிறது அவங்க வழக்கம். அதுக்குன்னே டிப்பரெண்ட் கைண்டாப் நீரூற்றுகள் கூட இங்க இருக்கு. மதீனா கூட வாரத்துக்கு ஒரு தடவைப் போய் குளிச்சிட்டு வருவா.."

மதீனாவுக்கு கூச்சத்தோடு கோபமும் வந்தது. கடித்துக் கொண்டிருந்த டான்கட்சு கட்லெட்டை தட்டில் போட்டவள், "அத்தா! ப்ளீஸ்.." என்றாள்.

"சரி சரி சொல்லல.. பெண்களுக்கு மட்டும்னு இல்ல.. நமக்குமே அப்படியான இடங்கள் உண்டு சத்யாபாய்.. ஹகோனே வேக்னு ஒரு ஏரியா.. அங்க எல்லா ஹோட்டல்லயும் மசாஜ் பிரபலம்.. காமன் பாத்னு ஒன்னு இருக்கு.. ஆண் பெண் வித்தியாசம் இல்லாம எல்லாரும் நிர்வாணமா குளிப்பாங்க.."

"உண்மையாவா அன்க்கிள்?"

"ம்ம்.."

"அது எங்கயிருக்கு அன்க்கிள்?.. இங்கயிருந்து பக்கமா? இல்ல தூரமா?"

ஆர்வத்தில் கேட்டவனை 'சித்து!' என்று அதட்டினார் சத்யமூர்த்தி.

"இல்லப்பா சும்மா தெரிஞ்சிக்கலாமேன்னு கேட்டேன்.."

ஆர்வத்தை அடக்கி தலைகுனிந்தான் அவன்.

"ஹாஹாஹா இங்க பக்கம் தான் சித்து.. இதைவிட இன்னொரு கூத்து ஒன்னு இங்க நடக்கும். அதுக்குப் பேர் ஹடாகா மட்சூரி. அந்த விழாவோட ஒரு நிகழ்ச்சியா ஆண்கள் எல்லாரும் பொது இடத்துல நிர்வாணமா நிற்பாங்க. இப்படிச் செய்வதினால அவங்கக்கிட்ட உள்ள கெட்ட சக்திகள் எல்லாம் வெளியேறி நல்ல சக்தி கிடைக்கும்னு ஒரு ஐதீகம்.."

வேதாவும் சித்துவும் ஒருசேர 'ச்சீ' என்றனர்.

"அத்தா, பேச்சை மாத்தலாமா? காமன்பாத் அது இதுன்னுட்டு.." என்று முகம் சுளித்தாள் மதீனா.

"மதீனா, காமன்பாத் மனசையும் உடலையும் தளர்த்தி ஆழ்ந்த தூக்கத்துக்கு வழி வகுக்குது.."

"ஸோ?.. அவங்க சின்னப்பசங்க அத்தா.." என்று எச்சரித்தாள் அவள்.

அவளின் மூக்கிற்கு மேல் நின்ற கோபத்தைக் கண்டு, சத்யமூர்த்தி பேச்சை திசைதிருப்பும் விதமாக, தட்டில் ஒரு காயை காண்பித்து இதென்னது என்றார்.

ஜக்குபாயும் பேச்சை பச்சையில் செலுத்தினார்.

"அதுப்பேரு வசாபி சத்யாபாய். இதை நம்ம ஊர்ல குதிரை முள்ளங்கின்னு சொல்லுவாங்க. ஜப்பானியர்கள் உணவு பட்டியல்ல கட்டாய சத்துணவு இது.. வேதாவுக்கு யாகிடோரி ரொம்ப பிடிச்சிருக்கு போலயே.. இன்னும் கொண்டு வர சொல்லவா வேதா?"

ASpQsDmW6qMvgZ995ta60o7UkbDY1lXEwZM5puGg7QdcKwhMxDH2eJrRTHG3f4SfmocMsgRHppAyKPjC748VvcfuVOSt4dDMvKGOkAvO87kvm_af9igZeF0XEz6ymiFGasN2rbS-


கிரில் சிக்கனை சுவைத்துக் கொண்டிருந்த வேதா திடுக்கிட்டவன் போல் 'நோ அன்க்கிள்' என்றான்.

தட்டில் ஓரத்திலிருந்த மீனைப் பார்த்ததும் கிட்டத்தட்ட மீனையே வெறுத்தவராய் முகத்தை சுளித்து, தன் முக்கிய சந்தேகத்தைக் கேட்டார் சத்யமூர்த்தி. "மத்த டிஸ்ஸைக் காட்டிலும் இங்க ஏன் மீன் மட்டும் அவ்வளவு முக்கியமா பார்க்கப்படுது?.."

அக்கேள்விக்கு பதிலாய் தனது நீண்ட சொற்பொழிவை துவங்கினார் ஜக்குபாய். "வரலாற்று ரீதியா ஜப்பானியர்கள் இறைச்சியையே தவிர்த்து வந்தாங்க சத்யாபாய். ஆனா, எம்பதுகள்ல தான் நவீனமயமாக்கலோட சேர்த்து டோன்காட்சு, யாகினிகு மாதிரியான இறைச்சி சார்ந்த உணவுகளும் பரவலாச்சு. நாட்டோட மொத்த மக்களுமே மீன் விரும்பிகளா போயிட்டதால அதிக அளவுல இங்க மீன்களைப் பிடிக்கிறதும் அவசியமாகுது. ஒரு வருஷத்துக்கு ஜப்பானோட கடலோரப் பகுதிகள்ல பிடிக்கப்படுற மீன்களோட எடை பனிரெண்டு மில்லியன் மெட்ரிக் டன்னா பார்த்துக்கோங்க.."

"ஓஹ் மை காட்!"

"ம்ம், சரியா காலைல மூணு மணிக்கெல்லாம் எழுந்தீங்கன்னா உலகிலேயே மிகப் பெரியதும், மிக சுறுசுறுப்பானதுமான ‘சுகிஜி’ மீன் அங்காடிக்கு உங்களை கூட்டிட்டுப் போறேன் சத்யாபாய்.."

"அன்க்கிள் நாங்க?"

"உங்களையும் தான் வேதா.."

"நோ வேதா எங்க அத்தாக்கூட போகாதீங்க.. அங்க ஒரே சத்தமா இருக்கும்.."

pFOzpo9XG8hUzYy4fOTngmMs2NReaSVsaggvwgIsyEwEnw3XkJOKctPsXSrkoNxTtUxOCOtbgIV-Zo9cqXPwA6FXjPQrcVeFHPLJQqEjZtvV_U41QserhibdNVC5VtTZe-ch6tnI


இப்போது தான் தனது முதல் வார்த்தைப் பந்தை மதீனாவை நோக்கி எறிந்தார் சத்யமூர்த்தி. "மதீனாவுக்கு எல்லா இடத்தையும் அமைதியாக்கிடனும்?.."

"சரியா சொன்னீங்க சத்யா.. என்னை வீட்ல கூட பேசவிட மாட்டா.. வேதா, சித்து இதோ இந்த மதீனா சொல்றதையெல்லாம் கேட்காதீங்க.. அங்க நீங்க டியுனா மீன்களை ஏலம் விடுறதைப் பார்க்கலாம். அம்பத்தாறு ஏக்கர் பரப்பளவுல இருக்கிற சுகிஜியில தினமும் நானூத்தியெம்பது வகையான கடல்வாழ் உயிரினங்கள் விற்பனையாகுது. திமிங்கலம் கூட கிடைக்கும்னா பாருங்க. இங்க கடல் பகுதியில இருந்து பிடிக்கப்பட்ட மீன்கள் மட்டும் இல்லாம, பிளைட் மூலமா வெளிநாடுகள்ல இருந்து இறக்குமதியாகுற மீன்களையும் கொண்டு வந்து குவிப்பாங்க. அலஸ்காலயிருந்து நண்டுகள், கொரேசியா, ஸ்பெயின்லயிருந்து டியுனா மீன்கள்னு பட்டியல் நீளும்.."

உணவு விருந்தும் ஜக்குபாயின் செவி விருந்தும் முடித்து அவர்கள் வெளியே வந்தபோது டோக்கியோவின் கிரானைட் நடைப்பாதைகள் இதமாய் இலைகளை போர்த்தி குளிர்காய்ந்திருந்தது.

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதத்தில் அந்த ஆண்டில் அவர்கள் பெற்ற மகிழ்ச்சியை கொண்டாடவும், வரும் ஆண்டை வரவேற்கவுமே இந்த டொரினோ இச்சி கொண்டாடப்படுகிறது.

சாதாரண நேரங்களில் காணப்படும் கூட்டத்தைக் காட்டிலும் இன்று கூடுதலாகவே தெருக்களில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

kQAbMFYJ6ApwsZ4lpDoL0exe-LsZq4fB0Pv2UUwFuNPmpzlweodxrlDO4PT8olzJkfRSRbZrO5lcVUrt34eomoc-rQ-qt6UMsnUSENxf1WGcNp5j8IEL5u-aufqvkQg0TJtpxrqu


மக்கள் கைகளிலிருந்த பரிசுப்பைகளில் தவறாத இரண்டாக குமாடேவும் திராட்சையும் இருந்தது.

அதற்கு காரணம் கேட்ட சத்யமூர்த்தியை மெச்சுதலாய் பார்த்த ஜக்குபாய் விளக்கம் கொடுக்கத் துவங்கினார். "குமாடே (kumade) டொரினோ இச்சியோட சிறப்புப் பரிசுப்பொருள் சத்யாபாய். அப்புறம் அந்தத் திராட்சை ரகத்தோட பேர் ரூபி ரோமன். இஷிகாவா தீவுல பயிரிடப்படுற இந்த ரூபி ரோமன் திராட்சை, மக்களை வசீகரிக்கும் பழங்கள்ல நம்பர் ஒன். பிரகாசமான சிவப்பு நிறம், பெரிய அளவு, அதீத சுவைனு சும்மா அள்ளும். ஜப்பானியர்களைப் பொறுத்தவரை ரூபி ரோமன் திராட்சை ஒரு அந்தஸ்தின் அடையாளம். நாட்டோட பெருமை. அதனால தான் ரூபி ரோமன் இங்க அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுது.."

"அன்க்கிள், ஜப்பான் எப்படி இவ்வளவு அழகா இருக்கு?"

"வேறென்ன உழைப்பு தான் வேதா. ஜப்பான் மக்கள் இயற்கையை தன் சுய லாபத்திற்காக அழிக்கிறதில்ல.."

அனைவரும் நியான் விளக்குகள் கால்கடுக்க நின்றிருந்த பின்னல் சாலைகளின் வழியே ஓடோரி கோவிலை நோக்கி நடக்கும்போது, ஜக்குபாய் சோனி பில்டிங்கிற்கு எதிரில் இருந்த ஒரு ஐஸ்கிரீம் பார்லரை காண்பித்து, "இங்க மிஸ் பேரட்ங்கிற ஐஸ்கிரீம் ரொம்ப பிரபலம்.. திருமணமாகாத ஜோடிகள் மெனக்கெட்டு அதை சாப்பிடுறதுக்கே இங்க வருவாங்களாம்.." என்றார்.

"திருமணமாகாதவங்களா? ஏன் அன்க்கிள் அதை சாப்பிட்டா மேரேஜ் நடக்குமா?"

அனைத்திலும் கேசிவ்நட்டாக இருந்தான் சித்து.

"தெரியலையே. அதை அவங்ககிட்ட தான் கேட்கணும் சித்து.."

"அன்க்கிள் எங்களுக்கும் அந்த ஐஸ்கிரீம் வேணும்.."

"சித்து சும்மாயிருக்கமாட்ட?.. இப்போ தானே சாப்பிட்ட?"

சத்யமூர்த்தி அவனை அதட்டினாலும் ஜக்குபாய் அவனுக்கு பரிந்துவந்தார்.

"இருக்கட்டும் சத்யாபாய்.. நீங்க மதீனாவோட அதோ லெப்ட் சைடு தெரியுது பாருங்க பார்க். அங்கப்போய் வெயிட் பண்ணுங்க. நான் இவங்களுக்கு ஐஸ்கிரீம் வாங்கிக்கொடுத்து அழைச்சிட்டு வர்றேன்.." எனவும் சத்யமூர்த்தியும் சரியென்று அவர்களை விட்டுட்டு மதீனாவுடன் பூங்கா நோக்கி சென்றார்.

வழியில் நடைபாதை கடையில் மெனக்கெட்டு மதீனாவுக்கு இரண்டு பிஸ்கட்டுகளும், ஒரு குவளை ஹாட் சாக்லேட் பானமும் வாங்கிக் கொடுத்தார்.

மதீனா அதனை மறுக்கவில்லை. வாங்கிக்கொண்டாள்.

பூங்காவில் குட்டையாக வெட்டப்பட்ட செடிகளுக்கு மத்தியில் ஒரு பெஞ்சில் அமர்ந்தவர், தன்னருகே அமர்ந்த மதீனாவிடம், "நீ இன்னும் அதை மறக்கலையா மதீனா?" எனவும் நிமிர்ந்து அவர் முகம் பார்த்தவள், கண்களில் நீர் நிரப்பினாள்.

"உண்மையை சொல்லவா சத்யா சார், நான் உங்களை அதிகமா நேசிச்சிட்டேன். கனவுல கூட அப்படி இப்படின்னு. ஒரு வாரம் உங்களோட பேசாம இருக்க முயற்சி செஞ்சேன். நா இல்லாத நாட்கள் உங்களுக்கு எப்படி கழியுதுன்னு வேடிக்கைப் பார்த்தேன். முந்தைய நாட்களை விட அந்த நாட்கள்ல தான் உங்களைப் பத்தின ஞாபகங்கள் முழுசா என்னை ஆக்ரமிச்சது. ஆனா, உங்களுக்கு என்னைப் பத்தின நினைப்பு கடுகளவு கூட இல்ல.."

"ஜப்பானுக்கு சூரியன் உதிக்கும் நாடுன்னு பேரு. ஆனா, என் லைப் மட்டும் இருளடைஞ்சு போன மாதிரி இருக்கு சத்யா சார். உங்களை இப்போவே ஹொக்கைடோ, ஹொன்ஷூ, கியூஷூன்னு எங்கேயாவது ஒரு தீவுக்கு கடத்திட்டுப் போகலாம் போல இருக்கு.."

திடுக்கிட்டுப் போன சத்யமூர்த்தி பெஞ்சிலிருந்து எழுந்து நின்றார்.


**************************

ஜக்குபாய் இரட்டையர்களுடன் ஐஸ்கிரீம் பார்லரை நோக்கிச் சென்று கொண்டிருந்த போதே, நடைமேடையில் இருபுறமும் கூட்டமாய் நடந்து கொண்டிருந்தவர்களைக் கண்டு வேதானந்த், "எப்படி அன்க்கிள் இவங்கல்லாம் நடந்துக்கிட்டே இருக்காங்க?" என்று வியப்புடன் கேட்டான்

இங்கு தான் தப்பு செய்தார் ஜக்குபாய். தன்போக்கில் பேசிக்கொண்டே முன்னே நடந்தார். "இவங்களை பொறுத்தவரை நடைப்பயிற்சி தான் தியானம் வேதா. தொண்ணூறு சதவிகித ஜப்பானிய மக்கள் புத்த மதத்தைச் சேர்ந்தவங்க. நடப்பது ஒரு வகையான தியானம்னு அவங்க மதத்துல குறிப்பிட்டிருக்கதால பெரும்பாலான இடங்களுக்கு அவங்க நடந்து போறதையே விரும்புறாங்க. நடக்கும் போது அவங்க கவனம் கைகால் அசைவுலயும் சுவாசத்துலயும் தான் இருக்கும்.." என்றவர் திரும்பிப் பார்க்க, வேதாவையும் சித்துவையும் காணவில்லை.

கூட்டத்தில் மறைந்து போயிருந்தார்கள் இருவரும்.


வாங்கலும் கொடுக்கலும் தொடரும்❣️
Japan country pathi share panna details ellam superb a iruku akka..madheena pavam..sidhu vedha ku ennachu.. interesting epi akka😍😍😍
 
Messages
74
Reaction score
72
Points
18

அத்தியாயம் 8



பம்பரமாய் சுற்றித்திரியும் ஜப்பான் மக்களை பார்த்தபடியே இயற்கையை ரசித்துக் கொண்டிருந்த சத்யமூர்த்தி அப்படியே இருந்திருக்கலாம். தானாக பேச்சைக் கொடுத்து மதீனாவிடம் மாட்டிக்கொண்டார்.

திடுக்கிட்டு எழுந்து நின்றவரிடம் மெதுவாக சொன்னாள் மதீனா. "உங்க வைஃப் ரொம்ப அழகா இருக்காங்க சத்யா சார்.."

"மதீனா உனக்கெப்படி.."

"எனக்கெப்படி தெரியும்னு கேட்குறீங்களா?.."

"வேதா காமிச்சான்.. அவனுக்கு தான் குள்ளமா இருக்கோமேன்னு ரொம்பவே இன்பீரியாரிட்டி காம்ப்ளெக்ஸ்.. தினம் அம்மா போட்டோ பார்த்து அழறான்.. உங்க வைஃப் அழகா இருக்கிறதால தானே சத்யா சார் நீங்க அவங்களை இவ்ளோ லவ் பண்றீங்க?.. முடி நீளமா, ஐஸ் அட்ராக்டிவா, ஸ்மைல் பியூட்டிபுல்லா, சுண்டினா ரத்தம் வர்ற கலர்ல, பெரிய பெரிய ஜிம்க்கியெல்லாம் போட்டுக்கிட்டு.. பொறாமையா இருக்கு அவங்களைப் பார்க்க.."

கசப்பான புன்னகையுடன் "நீயும் அழகு தான் மதீனா" என்றார் சத்யமூர்த்தி.

"பொய் சொல்லாதீங்க சத்யா சார்.."

"உண்மையாவே.."

"வேணாம்.. அப்புறம் ஏன் நீங்க என்னை லவ் பண்ணலைன்னு கேட்பேன் நான்.."

"உண்மைய சொல்லணும்னா எனக்கு உன் மேல ஈர்ப்பு இல்லாம இல்ல மதீனா.. நான் விலகி ஓடுறதுக்கான ஒட்டுமொத்த காரணமே நீ என் மேலயும் என் பசங்க மேலயும் காட்டுற இந்த அக்கறை தான்.. ஏதோவொரு உயிர் என் மேல பாசம் வைக்க தொடங்கிட்டாலே கூட ஒரு அசரீரியும் ஒலிக்க ஆரம்பிச்சிடுது. என்னை துரத்தியும் விட்டுடுது."

"எவ்வளவு வருசமா? இல்ல உங்களுக்கு எப்போயிருந்து அவங்களைப் பிடிக்கும் சத்யா சார்?.."

"ப்ளீஸ் மதீனா எதுவும் கேட்காத"

"நீங்க ரொம்ப நல்லவர் சத்யா சார்.."

"ஒருத்தனால எல்லா நேரமும் நல்லவனா இருக்க முடியாது மதீனா.. நானும் என் வாழ்க்கைல பாவமெல்லாம் பண்ணியிருக்கேன்.. அதுக்கான தண்டனையையும் அனுபவிச்சுக்கிட்டு இருக்கேன்.. கொல்லிக்கட்டையால நம்மளை நாமே சுட்டுக்கிட்டா வலியும் வேதனையும் நமக்குத்தான்னு தெரியாமலேயே என்னை நானே சுட்டுக்கிட்டேன் மதீனா.. வருஷம் போன பின்னாடியும் இப்போ சுட்ட தழும்பு இருந்துக்கிட்டு என்ன வதைக்கிது.."

"நீங்க என்ன சொல்றீங்கன்னே எனக்குப் புரியல சத்யா சார்"

"இல்ல மதீனா வேண்டாம்.. நீ அதை தெரிஞ்சுக்க வேண்டாம்.. தெரிஞ்சிக்க வேண்டிய அந்த இடத்துக்கு உன்னை கொண்டு வரவும் எனக்கு மனசில்ல.."

"நீங்க உங்க வைஃபை ரொம்ப லவ் பண்ணிட்டீங்களா சத்யா சார்?.."

"தெரில.. பட் அப்படித்தான்னு நினைக்கிறேன்.."

"சித்து, வேதா ரெண்டு பேருல யாரு அவங்க அம்மா மாதிரி.."

"சித்து.."

"சித்துவா?.. ரொம்ப துருதுருன்னு இருப்பாங்களா அவங்க?"

"ம்ம் ரொம்ப.."

"அது உங்களுக்குப் பிடிக்குமா?"

"ரொம்ப ரொம்ப"

"அப்புறம் ஏன் அவங்களை உங்களுக்கு பிடிக்காம போச்சு சத்யா சார்?"

"...."

"சொல்லுங்க சத்யா சார்? எல்லார் கிட்டயும் சொன்னக்கதையவே என்கிட்டயும் சொல்லாதீங்க.. உங்க வைஃப் சாகலைன்னு எனக்குத்தெரியும்?"

"மதீனா உனக்கெப்படி?.. ப்ச் வேதா சித்து யாராச்சும் சொன்னாங்களா?.. ஆனா, அவங்களுக்கு எப்படி தெரியும்?"

"ம்ஹீம் அவங்க இல்ல.. உங்க வைப்பே சொன்னாங்க.."

"குழப்பறே மதீனா"

"சொன்னாங்கங்கிறதை விட மிரட்டினாங்கன்னு சொல்லலாம்.. ஹப்பா என்ன வாய்ஸ்!.. ஏய் சூர்ப்பனக! உனக்கென்ன என் புருஷன் மேல அப்படியொரு கண்ணு.. அவருக்கு இன்னும் டிவோர்ஸ் ஆகலைத் தெரியுமா?.. என் புருஷன் கூட கல்யாணம் கில்யாணம்னு ஏதாவது தகவல் வந்துச்சு ஜெயில்ல கம்பி எண்ணுவ பார்த்துக்கோன்னு சொன்னாங்க.. நான் அதுக்குப் பயப்படல.. பட், அதுல புல் அண்ட் புல் அவங்க பொறாமை தெரிஞ்சது.. உங்களை நான் எடுத்துக்குவேனோங்கிற பயம் தெரிஞ்சது.."

"நான் சொன்னேன்னு அத்தாக்கிட்ட சொல்லாதீங்க.. நெக்ஸ்ட் மந்த் எனக்கு மேரேஜ்.. அத்தா சர்ப்ரைஸா உங்கக்கிட்ட சொல்லலாம்னு சொன்னாங்க.. உங்களை மறக்குறது கஷ்டம் தான்.. பட் மறந்திடுவேனு நினைக்கிறேன்.. இங்க ஹோன்ஷு தீவுல ரயோகங்கிற ஹோட்டல்ல தான் அவரு மேனேஜரா வொர்க் பண்றாரு.. நான் இல்லாதப்போ நீங்க தான் சத்யாசார் எங்க அத்தாவைப் பார்த்துக்கணும்.."

"எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல மதீனா.. முதல்ல உனக்கு என் வாழ்த்துகள்.. ஏதோ ரொம்ப குற்ற உணர்ச்சியா இருந்தது.. அதுவும் உனக்கும் எனக்கும் வயசு வித்தியாசமே பதினஞ்சு.. எப்படி உன்னை சரி பண்றதுனே குழம்பி போயிட்டேன்.. இப்போ தான் மனசு நிறைவா நிம்மதியா இருக்கு.. அப்புறம் மதீனா நீ ஷாந்தினிக்கிட்ட பேசினது வேதாவுக்கும் சித்துவுக்கும் தெரிய வேண்டாம்.."

"தப்பு சத்யா சார். அம்மா இருந்தும் இறந்துட்டாங்கன்னு சொல்றது ரொம்பத் தப்பு.."

"என் நிலைமை உனக்குத் தெரியாது மதீனா.."

"இங்க ஜப்பானியக் குழந்தைகளுக்கு சின்ன வயசுலயிருந்தே சொல்லித் தரப்படுற ஒரு பிலாசபி தெரியுமா சத்யா சார்.. இக்கிகாய், இக்கினா வாழ்வு, காய்ன்னா மதிப்பு.. மனநிறைவும் சந்தோஷமும் தான் வாழ்வின் மதிப்பை அதிகரிக்கும்னு இங்கயிருக்கிறவங்க முழுசா நம்புறாங்க.. நாம செய்யுற வேலை, உறவுகள், வாழ்க்கைத் துணைனு எல்லா பகுதிகள்லயும் மனநிறைவும் சந்தோஷமும் இருக்கணும் சத்யா சார். இக்கிகாய் இல்லைன்னா எதையும் செய்யாத, அது உனக்கு பயன்படாதுனு இங்க இருக்கவங்க சொல்லுவாங்க. உங்களுக்கு பிடிச்சதை உங்க ஈகோவால விட்ராதீங்க சத்யா சார்.. உங்க வைப் உங்களுக்கு தேவையில்லாம இருக்கலாம்.. பட், உங்கப் பசங்களுக்கு அவங்க அம்மா தேவை சத்யா சார்.."

"பெரிய மனுஷியாட்டம் பேசுற.."

"கேட்கலாமா தெரியல.. பட் கேட்காம இருக்கவும் முடியல.. உங்களுக்குள்ள என்னப் பிரச்சனை சத்யா சார்?.."

"சொல்ல வேணாம்னு நினைச்சேன். நீ தூண்டித் துருவுற மதீனா.. அவ எனக்கு செஞ்சது நம்பிக்கை துரோகம்.. பெரிய நம்பிக்கை துரோகம்.. புரியலைல?. உனக்கு போன் பண்ணி மிரட்டினாங்களே மேடம், அவங்கப் பேரு ஷாந்தினி.. என் ப்ரொபசர் ரிக்குவஸ்ட் பண்ணி கேட்டதால தான் நான் அவ காலேஜ்க்கு முதல்முதலா கெஸ்ட் லெக்சரரா போனேன்.. ஏனோ முதல் நாளே அவளுக்கு என்னைப் பிடிக்கல.. கிளாஸ்ல எனக்கு தேவையில்லாம பேசினா பிடிக்காது. ஆனா அவ வேணும்னே அடிக்கடி பேசி என்னை கோபப்படுத்துனா, பேக் பெஞ்சுல உட்கார்ந்து கிளாஸ் டைம்லயே லஞ்ச் ஓபன் பண்ணி சாப்பிட்டா, தைரியமா பிட் அடிச்சா, கிளாஸ்க்கு டெய்லியும் லேட்டா வந்தா, கிட்டத்தட்ட எல்லா ஒழுங்கீனமும் அவக்கிட்ட இருந்தது.. நானும் சும்மா விடல.. உடனுக்குடனே பனிஷ் பண்ணிட்டேன்.."

"ஒருநாள் எங்க டிபார்ட்மெண்ட் சார்புல வேற்றுகிரகம் பத்தியும் வேற்றுகிரகவாசி பத்தியும் ஒரு செமினார் நடந்தது. போட்டியில அவளும் கலந்திருந்தா.. எப்போ நான் தான் அதுக்கு கோஆர்டினேட்டர்ன்னு தெரிஞ்சதோ அப்போவே போட்டிலயிருந்து விலகிட்டா.. அந்த செமினாருக்கு பிரபல விஞ்ஞானி ஒருத்தரை கெஸ்ட்டா கூப்பிட்டிருந்தாங்க. அவர் நியூட்ரினோ பத்தி நிறைய பேசினாரு.. நான் கொஸ்டீன் செசன் அப்போ அவரை எதிர்த்து தாறுமாறா கேள்விக்கேட்டேன். ப்ரின்சிபால், ஸ்டாப்ஸ்னு எல்லாருக்கும் என் மேல கோபம். ஆனா, அவ மட்டும் என்கிட்ட வந்து, அந்த செமினார்ல நான் கேட்ட கேள்விகள் தான் சரின்னு சொன்னா.. எனக்கு அவ என்கிட்ட அப்படி பேசினதே ஆச்சரியமா இருந்தது."

"அதுக்கப்புறம் அவளோட நடவடிக்கைகள்லயும் நிறைய மாற்றம் தெரிஞ்சது. கிளாஸ்ல பாடம் எடுக்கும் போது என்னையே கண்ணெடுக்காம பார்த்தா.. அவ பார்வையை என்னால புறந்தள்ள முடியல.. உள்ள ஏதோ செஞ்சது.. பாடத்துல டவுட் கேட்கிறேன்னு விலகி விலகிப்போன என்னை நெருங்கி நெருங்கி வந்தா. எனக்குள்ள ஒரு பக்கம் பயம் இருந்தாலும் இன்னொரு பக்கம் பிடிச்சிருந்தது. என் மனசும் மெதுமெதுவா அவப்பக்கம் சாயுறதை என்னால உணர முடிஞ்சது."

"ஒரு நாள் என்னாச்சுத் தெரியுமா? நேரா என்கிட்ட வந்தவ, சட்டுன்னு ஐ லவ் யூனு சொல்லிட்டா.. தொடர்ந்து அவளேவும் பேசினா.. எனக்கு ஒரே அதிர்ச்சி, கூடவே நடுக்கமும்.. ஒரு நிமிஷம் தான் பேசினா.. என்ன பேசினான்னு நான் உணருறதுக்குள்ளயே காலேஜ் வாசல் தாண்டி ஓடிட்டா.."

"நீங்க ஷாக்காகுற அளவுக்கு என்ன சொன்னாங்க சத்யா சார்?.."

"இப்படி ஏதோ ஒரு கணக்கெடுப்புல ஆரம்பிச்சா.. மெஜாரிட்டி பெண்களோட அதிகபட்ச கோபம் அழுது தீர்க்குறது.. ஆண்களோட கோபம் பொருட்களை போட்டு உடைக்கிறது.. நான் நம்ம வீட்டுல நிறைய பொருள் உடையாம பார்த்துக்குவேன்.. நீங்க நான் அழாம பார்த்துக்குவீங்களான்னு கேட்டா.. பக்கா லூசுத்தனமான பேச்சா தெரிஞ்சது எனக்கு.. ஆனாலும் பிடிச்சிருந்தது"

"அவளுக்கு முன்னாடி நிறைய பேர் எனக்கு ப்ரொபோஸ் பண்ணியிருந்தாங்க.. அப்போலாம் அவங்களுக்கு குருங்கிற ஸ்தானத்துல இருந்து எடுத்துச்சொல்லி புரிய வச்சிருக்கேன்.. பட் அவகிட்ட என்னால நோ சொல்ல முடியல.. அதுக்கப்புறம் சில நாள் கண்ஜாடைலயும் லெட்டர்லயுமே தொடர்ந்துச்சி எங்க காதல். என்னை நானே புதுசா உணர ஆரம்பிச்சேன். காதலின் அடுத்தக்கட்டமா ஒருத்தர் ஸ்பரிசம் இன்னொருத்தர் உணர ஆரம்பிச்சோம். எல்லாம் நல்லா தான் போய்க்கிட்டு இருந்தது, அந்த ஒருத்தன் வர்ற வரை.."

"யாரது சத்யாசார்?"

"அவளோட முன்னாள் காதலன். பேரு அரவிந்த். அவனை நான் சந்திக்க நேர்ந்தது. இது மாதிரி பசங்களை லவ் பண்ணி ஏமாத்துறது எல்லாம் அவளோட ஹாப்பினு சொன்னான். எனக்கு இதயமே வெடிக்கிறாப் போல இருந்தது. எனக்கு அவளோட முன்னாள் காதலையும் காதலனையும் ஏத்துக்க முடியல. மெதுமெதுவா அவளை நான் தவிர்க்க ஆரம்பிச்சேன்."

"ஒரு நாள் லேசர் லைட் எக்ஸ்பிரிமெண்ட்க்காக நான் டார்க்ரூம் போனப்போ யாருக்கும் தெரியாம உள்ள வந்தவ என் சட்டையைப் பிடிச்சி ஏன் என்னைவிட்டு விலகி விலகிப்போறீங்கன்னு கேட்டா. என்னால அவளை நிமிர்ந்துப் பார்க்க முடியல. அரவிந்த் தானே காரணம்னு அவளேவும் கேட்டா. நான் இல்லைன்னு பொய்யா மறுத்திட்டேன். கடைசியா வெளியபோறப்போ டக்குன்னு திரும்பி முத்தம் கொடுத்திட்டா. அன்னைக்கு நைட் புல்லா நான் தூங்கவே இல்ல மதீனா. மறுநாள்ல இருந்து அவ காலேஜ் வர்றதையே நிறுத்திட்டா. எக்ஸாமும் எழுத வரல. எனக்கு யார்கிட்ட என்ன கேட்குறதுன்னே தெரியல. மே மந்த் சம்மர் ஹாலிடேஸ்ல திருநெல்வேலில இருக்க என் வீட்டுக்கு வந்தப்போ தான் அதிர்ச்சியான சம்பவம் ஒன்னு நடந்தது. அவளோட அப்பா வந்து நிச்சயம் பேசினார். அவ அப்பா யார் தெரியுமா? எந்த விஞ்ஞானியை நான் செமினார் அப்போ எதிர்த்து பேசினேனோ அவர் தான் அவளோட அப்பா. ம்ம், திரு. வேதாச்சலம். நம்ம நாட்டுல வேற்றுகிரகத்தை பத்தியும் வேற்றுகிரகவாசியை பத்தியும் தீவிரமா ஆராய்ச்சி பண்றவரு. அவர் எங்க வீட்டுக்கு வந்ததை என்னால நம்பவே முடியல."

"கிட்டத்தட்ட ரெண்டுமாசம் அவளை பார்க்காம இருந்தது, எவனோ ஒருத்தன் சொன்னதுக்காக அவளை சந்தேகப்பட்டதுனு எனக்குள்ள ஒரே தவிப்பாவும் குற்ற உணர்ச்சியாவும் இருந்தது. உடனே கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட்டேன். ரொம்ப விமர்சையா நடந்தது எங்கக் கல்யாணம். அவ அழகைப் பார்த்து எங்க ஊரே மூக்கு மேல விரல் வச்சது. என்னைக் கொடுத்து வச்சவன்னும் கொண்டாடினது. நானும் அந்த மயக்கத்துலயே திரிஞ்சேன். அவளை ஒரு பூ மாதிரி பார்த்துக்கிட்டேன். என் அம்மா அப்பா ஒரு படி மேலப் போய் அவளை ஒரு தேவதையாவே பார்க்க ஆரம்பிச்சாங்க. கல்யாணம் முடிஞ்ச மறுமாசம் காலேஜ் திறந்துட்டதால நான் அவளைக் கூட்டிக்கிட்டு சென்னை வந்தேன். லைப் ரொம்ப சந்தோஷமா போய்க்கிட்டு இருந்தது"

"ஒரு நிமிஷம் சத்யா சார். நீங்க அப்போ செல்லச் சண்டைனு ஏதாவது போட்டது உண்டா?"

"ம்ம் நிறைய.. பட், அந்தப் பிரிவுக்குப் பின்னாடி பழைய உரிமை எடுக்க முடியாம நான் தள்ளி நிற்கும் போது அவளே என் சட்டையைப் பிடிச்சிழுத்து அணைச்சிக்குவா.. முதுகு பக்கம் போறக்கை என்னை விலகவிடாம அப்படி இறுக்கிக்கும்.. சின்னச் சண்டை, செல்லக் கொஞ்சல்னு வாழ்க்கை ரொம்ப தித்திப்பா இருந்தது. நூறு சதவீதம் ஒரு விஷயத்தை நான் செஞ்சிருக்க மாட்டேன்னு அவளுக்குத் தெரியும்.. ஆனா ஒரு சதவீதம் கூட என்னை அவ நம்ப மாட்டா.. காலேஜ்லயிருந்து நிறைய எனக்கு லவ்லெட்டர்ஸ் வரும்.. அவ்வளவையும் வாசிச்சுப் பார்க்குறவ.. இவ்வளவு பேரு லவ் லெட்டர் கொடுக்குற அளவுக்கு சார் என்ன ஹீரோயிசம் பண்ணுனீங்கன்னு என்னையே சந்தேகப் பார்வை பார்ப்பா.."

"கல்யாணமானப் பின்னாடியும் ஷாப்பிங் போறப்போ தப்பித்தவறி எங்கயாவது அழகான பொண்ணைப் கூடுதலா ஒரு அரை நிமிஷம் உத்துப் பார்த்துட்டா போதும்.. என்னைவிட அவ தான் ரொம்ப அழகுல்ல? போங்க அவப்பின்னாடியேன்னு எடுத்தப் புடவையைக் கூட அங்கேயே தூக்கி எறிஞ்சிட்டு ஓடிருவா.. சரியான கிராக்கு"

"ம்ஹீம் ஓவர் பொஸசிவ்.. இப்பவும் அப்படி தான் இருக்காங்க சத்யா சார்.."

"எல்லாம் நடிப்பு மதீனா.. அட்டகாசமான நடிப்பு.. அவ என்னை காதலிச்சது கல்யாணம் பண்ணிக்கிட்டதெல்லாம் எதுக்குத் தெரியுமா?"

ஆர்வமும் அதிர்ச்சியுமாய் பார்த்த மதீனா வேகமாய் கேட்டாள். "எதுக்கு சத்யா சார்?"


**********************

ஜக்குபாயை தவிக்கவிட்டு ஓடிய சகோதரர்கள் இருவரும் உடனே அங்கிருந்த பஸ் ஒன்றில் ஏறி, ஹகோனே வேக்கிற்குப் போய் சேர்ந்தனர்.

ஜக்குபாய் அவர்களிடம் காமன்பாத்தை பற்றிக் கூறாமல் இருந்திருக்கலாம்.

கையிலிருந்த பணத்தை எண்ணிப் பார்த்தவர்கள் நேரே பெரிதாய் இருந்த ஒரு ஹோட்டலுக்குள் நுழைந்தனர்.

சித்துவை ஏதும் கூறாமல் மசாஜ் அறைக்கு அழைத்துச்சென்ற பெண்கள், வேதாவை மட்டும் வெளியிலேயே நிப்பாட்டினர். அதற்கு காரணமாக அவனது உயரக் குறையை சுட்டிக் காட்டினர்.

வேதாவைப் பார்த்து வெளியே வர முயற்சி செய்த சித்துவையும் பணம் கட்டாமல் வெளியே செல்ல அனுமதிக்க மறுத்தனர்.

முடியாது என்று மறுத்தவனை கூட்டமாக சேர்ந்து தாக்கி பணத்தையும் பிடிங்கிவிட்டு வெளியே அனுப்பினர்.

அடிவாங்கிய வலியோடு வெளியே வந்தவன் பார்த்தபோது வேதா அங்கு இல்லை.

ஃபீனிக்ஸ் பறவையாக மீண்டும் உயிர்த்தெழுந்திருந்த அழகு ஜப்பான், தன் உடன் பிறந்தோன் இல்லையெனவும் சுறுசுறுப்பான தேனீ மக்கள், பூதாகரமான வானுயர்ந்த கட்டிடங்கள், பூனைப் பாதமாய் சத்தமின்றி செல்லும் மோனோ, புல்லட் ட்ரெயின்கள் என அவனை அச்சுறுத்தியது.


கொடுக்கலும் வாங்கலும் தொடரும்❣️
Shanthini sathya love nalla thane irunthuchi apram yen sathya ippadi pannitaru..intha sidhu um vedha vum ippadi problem la matikitangale..interesting epi akka🥰🥰😍😍
 

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
676
Reaction score
1,079
Points
93
Shanthini sathya love nalla thane irunthuchi apram yen sathya ippadi pannitaru..intha sidhu um vedha vum ippadi problem la matikitangale..interesting epi akka🥰🥰😍😍
Hi pratha dr. Happy to see all your comments. Thanks so much dr❣️
 

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
676
Reaction score
1,079
Points
93
வாசகர்கள் எனது நாவலுக்கான கருத்துகளை இங்கு தெரிவிக்கலாம்❣️
 
Top Bottom