Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Unarvugal thodarkadhai

Messages
44
Reaction score
18
Points
8
அத்தியாயம் -1

சுபாஷினியின் ஒரே செல்ல மகளுக்கு இன்று திருமணம்...ஆம் ஆடம்பரமான திருமணம். சுபாஷினியும் அவளது கணவர் குருமூர்த்தியும் தனது ஒரே செல்ல மகளான "நந்தினி"க்கு அதே ஊரில் செல்வந்தராக இருக்கும் ஞானசேகரின் மகன் "பிரஹலாத்"டன் சம்மந்தம் பேசி இன்று கோலாகலமாக சென்னையில் உள்ள பிரபலமான மண்டபத்தில் திருமணம் நடத்த உள்ளனர்...

கல்யாண மண்டபத்திற்கு கார் புரப்பட இருந்த சில நொடிகளில் தன் தாய் சுபாஷினியின் தோளில் சாய்ந்து "மா....நான்.... என்று ஏதோ சொல்ல துவங்கி நிறுத்திவிட

தாயின் ஏக்க பார்வையில் மீண்டும் பேச்சை துவங்கினாள் "மா....நான் இன்னைக்கு தான் இந்த வீட்டு வாசலில் நிற்கும் கடைசி நாள் இல்ல??...நாளைல இருந்து பிரஹலாத் வீட்டில் தானே இருக்க போறேன்....மா..உங்களையும் அப்பாவையும் விட்டு எப்படி இருக்க போறேனு தெரியல...மனசு வலிக்குது..

"ந...நந்தினி.... பிரஹலாத் எங்களை விட உன்னை நல்லா பாத்துப்பான் டா தங்கம், அவன் ரொம்ப நல்ல பையன் என்று ஆறுதல் கூறினாலும் மகளை விட்டு பிரியும் சோகம் கண்ணில் தெரிந்தது."

நந்தினி குட்டிமா எதுக்கும் கவலை படாத எதுவாக இருந்தாலும் அப்பாவுக்கு போன் பன்னு உடனே வருவேன் என்று குருமூர்த்தியும் ஆறுதல் கூற....ஒருமுறை அவள் இவ்வளவு நாள் பிறந்து தவழ்ந்து ஆடிப்பாடி சுற்றி சுற்றி ஓடிக்கொண்டு வலம் வந்த அந்த அழகான இல்லத்தை பார்த்தபடி...காரில் ஏறினாள் நந்தினி.

காரில் பயணம் செய்யும் நேரத்தில் அவளது தாயின் மடியில் தலைவைத்து வந்தாள்..."மா....நீங்க வாழ்க்கை ல பல கஷ்டங்கள் பார்த்துட்டு தான் வந்துருக்கீங்க ....நான் உங்க வாழ்க்கை க்கு வந்த பிறகு தான் சந்தோஷமே வந்துச்சு னு சொல்லுவீங்களே...இன்னைக்கு அந்த சந்தோஷம் எல்லாம்.........

செல்லம்...நீ எங்க இருந்தாலும் அம்மாவுக்கு நீ குழந்தை தான் டா.....பீல் பன்னாத குட்டிமா...கல்யாண பொன்னு இப்படி அழழாமா ????அப்புறம் மாப்பிள்ளை உன்னை அழுமூஞ்சி னு சொல்லுவாரு செல்லம்

ஹாஹா போங்க மா....என்று சினுங்கியவள் மண்டபம் நெருங்கியது என்று கண்ட அடுத்த நொடி தைரியத்தை வரவழைத்து கொண்டு உள்ளே நுழைந்தாள்....

சுற்றி இருந்த உறவினர்கள் "பொன்னு வந்தாச்சு ....நல்ல அழகா இருக்கா என்று அவளை பற்றின பேச்சுக்கள் சலசலத்து.... அதை காதில் வாங்கியபடி மணப்பெண் அறைக்கு சென்றாள்.

மணப்பெண் அறையில் அவளை அமர செய்து விட்டு சுபாஷினி சொந்தங்களை வரவேற்க வெளியே செல்ல.... சற்றும் எதிர்பாராமல் பிரஹலாதிடம் இருந்து கைப்பேசி அழைப்பு நந்தினி க்கு வர அவள் அதை எடுத்து பேசினாள்.

"நான் பிரஹலாத் பேசுறேன்.....ம்ம்ம் என்று அவன் ஆரம்பிக்க முதன் முதலில் அவனது குரலை போனில் கேட்க மெய்யசந்து போனாள்....இவ்வளவு நாள் அவனது அழைப்பிற்கு காத்திருந்தவள்...

சொல்லுங்க ....என்று ஆவலுடன் கேட்க....அவனோ பட்டென்று தனது கடந்த கால நிகழ்வை பேச துவங்கினான்...

"நந்தினி.... அது வந்து.... எனக்கு பாஸ்ட் லவ் ஒன்னு இருந்துது...நானும் அவளும் உயிருக்கு உயிரா காதலிச்சோம் ...அவளுக்கு வசதி கம்மி என்ற காரணத்தால் பிரிந்து விட்டோம் அதன் விளைவு அவள் உயிரை மாய்த்து விட்டாள். அன்று என் காதலியை இழக்க காரணம் என்னுடைய ஆடம்பர வாழ்க்கை.... ஆனால் இப்ப அவ எனக்கு திரும்ப கிடைச்ச மாதிரி ஒரு உணர்வு ...ஆமா அவ பேரும் நந்தினி தான்.... அந்த ஒரே காரணம் தான் உன்னை கல்யாணம் பன்னிக்க காரணம். ஸோ....

ம்ம்ம் எனக்கு புரியுதுங்க....நான்.. நான் உங்களை மனைவிங்கற பேருல தொந்தரவு பன்னமாட்டேன் ...

ஹலோ ஹலோ .....நீங்க எனக்கு தொந்தரவு னு சொல்ல வரல...அது வந்து உடனே உங்களை உடல்ரீதியாவோ மனரீதியாவோ மனைவியா ஏத்துக்க முடியாது னு சொல்ல வந்தேன் மத்தபடி நீங்களும் நானும் ப்ரண்டுஸ் ஓகே

ஓகே...டன்...நான் கூட ரொம்ப பயந்துட்டே இருந்தன் புது வாழ்க்கை புது குடும்பம் எப்படி வாழ போறோம்..னு இப்ப தாங்க எனக்கு கம்பர்ட் டா இருக்கு

ஹாஹா.... சரிங்க நந்தினி போன் வைக்கிறேன் மேக்கப் மேன் வந்தாச்சு .

ஹாய் ப்ரண்டுஸ்.... நந்தினி யை பிரஹலாத் முழுசா ஏத்துப்பானா மாட்டானா????

ஏத்துக்குறதுக்கு முன்னாடி என்ன என்ன ப்ராப்லம்ஸ் வருது....

அப்புறம் சுபாஷினி குருமூர்த்தி சந்திச்ச கஷ்டங்கள் என்ன??

நந்தினி வீட்டில் மாமியார் மாமனார் எப்படி?ம்ம்ம்...... இதெல்லாம் தான் ஒரு ஸ்டோரி யா எழுத போறேன்....

பார்க்கலாம்.....(தொடரும்)
 
Messages
44
Reaction score
18
Points
8
2

மணவரையில் தன் ஒரே மகள் நந்தினி யின் அருகே மாப்பிள்ளை அமர்ந்து இருப்பதை ஏதோ அரசன் சிம்மாசனத்தில் அரசியுடன் அமர்ந்திருப்பது போல கண்களில் காட்சியை ஓட்டிக்கொண்டு இருந்தாள் சுபாஷினி
குருமூர்த்தி தன் கடந்தகால நிகழ்வை மனதில் ஓட்டிக்கொண்டு இருந்தார் மணவரையில் அவர் சுபாஷினி யுடன் உக்கார்ந்த காட்சி நினைவுக்கு வந்தது....தான் ஒரு மருத்துவனாக இருக்கையில் தன்னிடம் கூந்தல் உதிர்வதை தடுக்க மருத்துவம் செய்து கொள்ள வந்த கூந்தல் அழகி சுபாஷினி யை காதல் செய்து மணவரை வரை காதலை வாழ வைத்த காட்சி மனதில் கவிதை போல் வந்து சென்றது.ஹாஹா இன்று தன் ஒரே செல்ல மகள் நந்தினி ...பிரஹலாத் பக்கத்தில் அமர்ந்து இருப்பது எல்லை இல்லாத மகிழ்ச்சி அளித்தது...
கெட்டிமேலம் கெட்டிமேலம்....கல்யாணம் இனிதே அரங்கேரியது....கல்யாணம் முடிந்து மாப்பிள்ளை பெண்ணுக்கு பால் பழம் அளிக்க ..."போதும் நந்து மா...பால் ல கலோரிஸ் அதிகம் ரொம்ப சாப்பிடாத என்று பிரஹலாத் கூற அவளுக்கு சிரிப்பு வந்தது...
ஏன் நந்து சிரிக்கிற ????என்று வெகுளியாய் கேட்க... அவள்"என்னங்க எங்க வீட்டில் எங்க அப்பா இதே புராணம் பாடுவது வழக்கம்.... நீங்களும் இதே புராணம் பாடுறீங்க ப்பா... இப்ப தான் எங்க அம்மா கஷ்டம் புரியுது ஒரு டாக்டர் ரை கல்யாணம் பன்றது எவ்வளவு டார்ச்சர் னு "
ஹாஹா.... நல்லது சொன்னா எங்க கேக்குறீங்க.... பேஷண்ட் கிட்ட பீஸ் வாங்கிட்டு சொல்றோம் அதுங்களும் அப்படியே பாலோ பன்னுதுங்க...ஆனால் குடும்பத்தில் அக்கறை யா சொல்றோம் கேக்க மாட்டேங்குறீங்க....
சரி....உங்க காதலி நந்து பற்றி முழுசா சொல்லுங்களேன் ப்ளீஸ்...
சொல்றேன் நைட் கண்டிப்பாக ...ஏன்னா நைட் தான் யாரும் இல்லாம இரண்டு பேர் மட்டுமே தனியா இருப்போம் ரூம்ல.....
ம்ம்ம் சரிஅதுக்குள்ள பிரஹலாத் தம்பி வந்தான் "அண்ணி இனிமே ஸ்கூலுக்கு நீங்க தான் டிபன் பாக்ஸ் கட்டனும் ஓகேவா??????
ஹாஹா என்ன??ஸ்கூலா எந்த வகுப்பு ??
பத்தாவது...அண்ணி என்று கூறிவிட்டு அவன் செல்ல..."என்னங்க உங்களுக்கு இவ்வளவு சின்ன தம்பியா??? "அட ஆமாம் நந்து எல்லாம் எங்க அப்பாவை சொல்லனும்....பிஸினஸ் பிஸினஸ் னு இரண்டாவது புள்ளைய பெத்துக்குறது கொஞ்சம் தள்ளி போட்டாரு
கொஞ்சம் இல்லைங்க நிறையாவே
ஹாஹா.... சிரித்து முடிப்பதற்குள் அவன் ஜாடையில் இன்னொருவன் ஹாய் அண்ணி னு சொல்ல நந்தினி குழம்பினாள்..."என்னங்க இவன்????
ம்ம்ம் இப்பவந்துட்டு போனானே அவனோட ஜெராக்ஸ் பாத்தா தெரியல ட்வின்ஸ்....
அடகடவுளே....பேரு??
பிரசாத் பிரதீப்....
ஓ....பிரஹலாத் பிரசாத் பிரதீப்... ம்ம்ம் எல்லாம் பியா இருக்கு
ஓய் என்ன நக்கலா??
ஐயோ இல்லைங்க நிஜமாகவே சொல்றேன்...பி எழுத்துல வருதேனு.
ம்ம்ம்.... ஓகே ....வா...எல்லார் காலிலும் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவோம்.
சிறிது நேரத்தில் இருவரும் தங்களது திருமணத்தை பதிவு செய்ய ரெஜிஸ்டர் ஆபிஸுக்கு அழைத்து செல்ல பட்டனர்...காரில் தன் தந்தை குருமூர்த்தி தோளில் சாய்ந்தபடி வந்தாள் ",அப்பா ...ரொம்ப டையர்டா இருக்கு...."
என்னடா செல்லம் எதாவது சாப்பிடுறுயா?? ட்ரைவர் கார் நிறுத்து ....
இறங்கி தன் மகளுக்கு இளநீர் வாங்குவதை கவனித்தான்...பிரஹலாத் "இவ்வளவு பாசமான அப்பா மகளை திருமணம் பிரித்து விட்டதே என்று"
மாப்பிள்ளை இளநீர் சாப்பிடுங்க என்று அவனுக்கு ஒரு இளநீர் தந்தவுடன் ஏதோ ஒரு பாச உணர்வை உணர்ந்தான் பிரஹலாத்...
கார் ரெஜிஸ்டர் ஆபிஸுக்கு வந்தடைந்தது. அவர்களின் பத்திரம் ரெடி ஆக சிறிது நேரமாக அங்கே மணகோலத்தில் காத்துக்கொண்டிருக்க....பிரஹலாத்... நந்தினி இருவரும் ஒரு நாற்காலியில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர்...
"என்னங்க இதெல்லாம் கனவு மாதிரி இருக்கு....என்னோட படிப்பு அப்பா...அம்மா இது மட்டும் தான் வாழ்க்கை னு வாழ்ந்துட்டு இருந்தேன் திடிருனு கல்யாணம் அது இதுனு ஏற்பாடு பன்னிட்டாங்க....ஆனால் கண்டிப்பா நீங்க என்னை நல்லா பாத்துப்பிங்க னு தெரியும் .
அது எப்படி சொல்ற???
ஹாஹா எங்க அம்மா அப்பா கொடுத்த நம்பிக்கை.
ஓ......க்ரேட்
ரெஜிஸ்ட்ரார் முன்னிலையில் இருவரும் கையெழுத்து இட்டனர்....சட்டபூர்வமான கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி கையெழுத்து இட்டு அவ்விடத்தை விட்டு நகர...சாட்சி கையெழுத்து இருவரின் பெற்றோரும் போட்டனர்.
தொடரும்.
 
Messages
44
Reaction score
18
Points
8
3

சுபாஷினி தன் கணவருடன் பேசுகையில் "ஏங்க....அந்த பிரசாத் பிரதீப். பார்த்தா எனக்கு என் இரட்டை பிறவி குழந்தைங்க ஞாபகம் தான் வருது...
விடு சுபாஷினி அதான் எல்லாவுமா இன்னைக்கு நந்தினி இருக்கா ல...அது நினைச்சு சந்தோஷபடு
ஆனாலும் என்னால அதை மறக்க... முடியலங்க...
சரி சரி உன்னோட பீலிங்ஸ் அப்புறம் சொல்லு ...முதல்ல நம்ப பொண்ணு மாப்பிள்ளை க்கு முதல் இரவு ஏற்பாடு பன்னு மச மசனு நிக்காத....
சரிங்க....
ஏய் குண்டச்சி
என்னங்க???
பர்ஸ்ட் நைட் ஏற்பாடு நடக்கபோது ..அப்போ அந்த நினைப்பு மட்டும் வருது னு பீல் பன்ன மாட்ற
ஏங்க நானே வருத்தத்துல இருக்கேன் உங்களுக்கு கொழுப்பா...மீசை நரைத்த வயசுல ஆசையை பாரு ...
ஏன் எங்களுக்கு ஆசை இருக்காதா...??
எனக்கு இல்லை யே
ம்ம்ம்.... சபாஷ் மாமா என்று சிரித்தபடி பிரஹலாத் அங்கு நிற்பதை சற்றும் எதிர்பார்க்கவில்லை...
"மாமா நீங்க கவலையே படாதிங்க அத்தை யை கழட்டி விட்டுறுங்க...எங்க ஆஸ்பிட்டல்ல ஒரு லேடி டாக்டர் இருக்கு 40 வயசுல ...அதை உங்களுக்கு ஓகே பன்னிடலாம்...
அதுக்கென்ன மாப்பிள்ளை எங்க ஆஸ்பிட்டல்ல கூட ஒரு ஆண்டி நர்ஸ் இருக்கு நானே ஓகே பன்னிக்கிறன்.
இதை பார்த்து கொண்டிருந்த நந்தினி க்கு சிரிப்பு அடக்க இயலவில்லை வாயை பொத்தி சிரித்து கொண்டே தன் அறைக்கு தயாராக சென்றாள்.பின்னாடியே சுபாஷினி சென்றாள்....
தன் மகளை சீவி சிங்காரித்து முதல் இரவுக்கு தயார் படுத்தினாள்... என்ன தான் தாய் என்றாலும் மகளை ஒரு தாய் முதலிரவு அறைக்கு கூட்டி செல்ல முடியாது எனவே பக்கத்து வீட்டு பங்கஜத்தை அழைத்தாள்.."அக்கா...நந்தினி யை அறை வரைக்கும் ...என்று பேச்சை இழுக்க.. பங்கஜம் அதை புரிந்து கொண்டு அவள் கையை பிடித்து கூட்டு போக....அறையில் பிரஹலாத் காத்துக்கொண்டிருந்தான்.
அவள் வந்தவுடனே கதவை தாழ் இட்டான்..அவளிடம் இருந்த பால் சொம்பை வாங்கி மேஜையில் வைத்துவிட்டு அவளை அமற சொன்னான்....
அவளும் பவ்வியமாக....அமற "ம்ம்ம் க்கும் என்னமோ பெருமாள் கோவிலுக்கு வந்தவளாட்டும் எப்படி...உக்காந்துருக்கா பாரு பக்கி...என்று அவளை மனதுக்குள் திட்ட...அவள் மெல்லிய குரலில் பேச்சை துவங்கினாள்"என்னங்க ...உங்க நந்து பத்தி ஏதோ சொல்றன் சொன்னிங்க...
"ம்ம்ம் அதானே பார்த்தேன் பாஸ்ட் லவ் பத்தி கேட்டு தெரிஞ்சிக்க பொண்டாட்டி களுக்கு என்ன ஒரு ஆர்வம் டா சாமி.
சொல்றன் தாயே...
அதுக்கு... முன்னாடி உன்னை பத்தி சொல்லு.
என்னை பற்றி சொல்ல என்ன இருக்கிறது ......ம்ம்ம்... அப்பா அம்மாவுக்கு ஒரே பொண்ணு... எப்படியோ முட்டி மோதி பி.காம் முடிச்சன்..ஹாஹா... அப்பா அம்மா தான் உலகம். வீடு கடல் மாதிரி இருக்கும். ஆனால் கொஞ்சி விளையாட தம்பி தங்கை கிடையாது...
அப்புறம் கல்யாணம் முன்னாடி ப்ரொபஸல் வந்தது ஆனால் எனக்கு பிடிக்கல....ஸோ....
ஸோ......????
அவாய்ட் பன்னிட்டேன்
சரி என் கதைக்கு வரேன்....என் நந்தினி யும் நானும் மெடிக்கல் காலேஜ்ல ஒன்னா படிச்சோம்...அவங்க அப்பா ஒரு விவசாயி கஷ்ட பட்டு படிக்க வைச்சாரு.....அவ பன்ன ஒரே தப்பு என்னை லவ் பன்னது...கல்யாணம் பத்தி என் வீட்டில் பேசுறப்ப தகுதி காரணம் காட்டி எங்க அம்மா வேண்டாம் னு சொல்ல...மனசு உடைஞ்சிருச்சு தற்கொலை பன்னிட்டா..அவ இல்லாமல் வாழ முடியல ஆனால் என்னை நம்பி ஒரு மருத்துவமணை இருக்கு , ஒரு குடும்பம் இருக்கு இதுக்காக நான் வாழனும் முடிவு பன்னேன்...இதுக்கு இடையே நீ...வந்துருக்க....உன்னை மனைவியா இல்லை னாலும் ஒரு தோழியா உனக்கு எல்லா உரிமை யும் இருக்கு..
என் மனசு எப்ப ஏத்துக்குதோ அப்ப நம்ப சேர்ந்து வாழலாம்.... ஓகே..எனக்காக காத்திருப்பியா???
ம்ம்ம்....
தேங்க்ஸ் மை டியர்..குட் நைட்.... கேஷுவலா இரு...இப்படி தயங்கி தயங்கி எல்லாம் இருக்காதே.....நீ கட்டிலின் அந்த பக்கம் படு நான் இந்த பக்கம் படுக்கிறேன்....
சரிங்க.... குட்நைட்.
தொடரும்
 
Messages
44
Reaction score
18
Points
8
4

காலையில் எழுந்து பார்க்க நடுவில் இரண்டு தலையணை இருப்பது கண்டு ஆச்சரியம் அடைந்தாள் நந்தினி...
"ஹலோ ஹலோ நான் தான் வச்சேன்...என்றான் பிரஹலாத்
ஓ.....ம்ம்ம் க்கும் இது நான் தானே ஆக்சுவலா வச்சிருக்கனும்????
நீ தான் வச்சிருக்கனும் என்ன பன்றது என் பாதுகாப்பு க்கு நான் தானே வக்கனும்..
ரொம்ப தாங்க உங்களுக்கு
சரி சரி போய் சூடா இரண்டு காபி கப்...எடுத்து வா...
ஹலோ ஹலோ இன்னும் நான் உங்களுக்கு பொண்டாட்டி ஆகல அதுக்குள்ள வேலை வாங்க ஆரம்பிச்சாச்சா??????
ஏன் ப்ரண்டுஸ் னா இதெல்லாம் செய்ய கூடாத????
அவனை முறைத்தபடி வெளியே செல்ல நேராக சுபாஷினி மீது மோதி கொள்ள"ஸ்ஸ்...மா....பாத்து வரமாட்டா???
ம்ம்ம் உன் கண்ணு என்ன பின்னாடி இருக்கோ????
சரி சரி காபி ரெடியா மா...???
போ...உனக்கும் பிரஹலாத் கும் நீயே போட்டுக்கோ....
குருமூர்த்தி - ஏய் சுபாஷினி என்ன மா..அவ கிட்ட போட்டி ???போய் நீயே காபி போட்டு தாயேன் அவ சின்ன பொண்ணு.....
"என்னங்க... சும்மா இருங்க... அப்ப...தான் அவளுக்கு பழகும்...தான் குடும்பம் அப்படிங்கிற எண்ணம் வரும்..அவளே காப்பி போட்டா தான் புருஷன் மேல அக்கறை வரும்.
ம்ம்ம் என்னமோ சொல்ற..
இதெல்லாம் உங்களுக்கு புரியாது நீங்க ஆஸ்பத்திரி கிளம்புங்க????
சரி சரி மறுவீட்டு சாப்பாட்டுக்கு சாயந்தரம் ஞானசேகர் கூப்பிடுறாரு ..நீ நானு நந்தினி மாப்பிள்ளை எல்லாரும் போகனும்... போயிட்டு பொண்ணு மாப்பிள்ளை திரும்பி நம்ப வீட்டுக்கு வந்து நாளை மூன்றாவது நாள் கிளம்புவாங்க ..
சரி சரி.....நான் போறதுக்கு ஏற்பாடு பன்னிடுறேன் ...நானு பொண்ணு மாப்பிள்ளை ட்ரைவர் வச்சிட்டு வந்துடுவோம் நீங்க ஆஸ்பத்திரியில் இருந்து அப்படியே வந்துருங்க .
ஓகே ...அதான் புது சட்டை ரெடியா போட்டு போறேன்
.......மாலை 6 மணியளவில் மறுவீடு சாப்பாட்டுக்கு அனைவரும் செல்ல புது மணதம்பதிகளான இருவருக்கும் ஆரத்தி எடுத்து உள்ளே கூட்டி வர....ஞானசேகரின் மனைவி நம் நந்தினியிடம்"அம்மாடி....இதான் நீ வாழ போற வீடு ...இனி நாளைல இருந்து இதான் உன் வீடு ...அப்புறம் இன்னொரு விஷயம் தினமும் சுத்தமா குளிச்சிட்டு தான் சமயல் அறைக்கு வரனும்.....அப்புறம்....சரியா ஏழு மணிக்கு எல்லாம் காபி தயாரா இருக்கனும். 9மணிக்கு டிபன் டைனிங் ல இருக்கனும் .வீடு கூட்டி பெறுக்க வேலைக்காரி வருவா...மத்தபடி சமையல் செய்றது பாத்திரம் கழுவுறது எல்லாம் நீ தான் செய்யனும்.
அவளுக்கு தலையே சுற்றுவது போல் இருந்தது.... பிரஹலாத் குறுக்கிட்டான் "அது வந்து அம்மா டீச்சர் வேலைக்கு போறாங்க அதான் ....மத்தபடி இதுவரைக்கும் அம்மா தான் எல்லா வேலையும் செய்தாங்க....என்று தன் அம்மாவிற்கு சப்போர்ட் செய்தபடி பேச....இவரு அம்மா பையனோ என்று யோசித்தாள் நந்தினி. சுபாஷினி க்கு துர்க்கம் தாங்க வில்லை... தன் ஒரே செல்ல மகள் மருமகளாக வந்ததும் வராததுமா அவளிடம் வீட்டுவேலைகளை பற்றி பேசுவது சங்கடமாய் இருக்க....குருமூர்த்தி அவளுக்கு ஆறுதல் கூறினான்.
மறுவீடு சாப்பாடு சூட சுட பிரியாணி கத்திக்காய் கொஞ்சி,சிக்கன் ப்ரை என்று வகைகள் இலையில் அடுக்கி இருந்தாலும் நந்தினி க்கு இறங்க வில்லை....
"அட நல்லா சாப்பிடு மா...எப்படி பக்கையா இருக்க பாரு என்று மாமியார் சொல்லும் ஏளன பேச்சு அவளுக்கு இன்னும் கடுப்பூட்டியது.
"ம்மா.....சில பேரு ஒல்லியாக இருந்தாலும் வலுவாக இருப்பார்கள் விடுங்க மா....
என்னடா இவரு நமக்கும் சப்போட்டா பேசுறாரு...தொடரும்.
 

New Threads

Top Bottom