Breaking News

உங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

Forum

அவளும் முல்லையும் -...
 

அவளும் முல்லையும் - வதனி  

  RSS

வதனி பிரபு
(@nesika)
Active Member Writer
Joined: 8 months ago
Posts: 7
29/06/2019 6:38 am  

அவளும்.. முல்லையும்.. 

 

அவசரமாய் காரை விரட்டிக் கொண்டிருந்தாள் அவள். இன்னும் சற்று நேரத்தில் வீட்டில் இருக்க வேண்டும். எங்கும் நிற்காமல் சென்றால் தான் வீடு போக முடியும். குழந்தையும் பள்ளியில் இருந்து வந்துவிடுவாள், வீடு பூட்டியிருப்பதைப் பார்த்தால், மனம் சுனங்கிவிடுவாள். சீக்கிரம் போகவேண்டும், காரை ஓட்டிக்கொண்டே சிந்தனையில் இருந்தவளை நிறுத்தியது சிக்னலில் எரிந்த சிவப்பு விளக்கு.

 

அறுபது நொடிகள்.. ஒவ்வொரு நொடியாக குறைந்து கொண்டே வர, அவளது கார் கண்ணாடியை ஒரு சிருபெண் தட்டுகிறாள். தமிழ்னாட்டில் எப்போதுதான் இந்தப் பிச்சையெடுப்பவர்கலின் எண்ணிக்கைக் குறையுமோ..? என்ற எண்ண சலிப்பில் கண்ணாடியைக் கீழிறக்க, பத்திலிருந்து பண்ணிரெண்டு வயது சிறுமி பள்ளிச்சீருடையில், கையில் பூக்குடையுடனும், பளிச்சென்ற புன்னைகையுடனும் நின்றிருந்தாள்.

 

அவளது புன்னகையைக் கண்டு, தானும் புன்னகைத்தவள் தான் தவறாக எண்ணியதை மனதுக்குளளேத் தள்ளிவிட்டு, “என்ன பாப்பா..” என்றாள்.

 

ஆன்டிபூ வாங்கிகோங்க ஆன்டி, முல்லைப்பூ மொட்டாவே இருக்கு..” புன்னகை கொஞ்சமும் குறையாமலந்த சிறுமி கூற, அப்போது தான் அவளும் கூடையைப் பார்க்கிறாள். மொட்டு மொட்டாய் நெருக்கக் கட்டிய முல்லைப்பூ.. கண்களில் ஒரு மின்னல், ஆச்சரியமாய் சிறுமியைப் பார்த்தவள், சிக்னலைக் காண, அது மீதம் ஐந்து நொடிகளைக் காட்டியது.

 

சட்டென்று முடிவெடுத்தவள் சிறுமியிடம் திரும்பி, “பாப்பா சிக்னல் தாண்டி ஓரமா நிறுத்துறேன். அங்க வர்ரியா..” என ஆர்வமாய் கேட்க, “மறுத்தேதும் கூறாமல்சரி ஆன்டி..” என வேகமாய் தலையாட்டினாள் சிறுமி.

 

பச்சை விலக்கு எரிய, காரை எடுத்தவள் சிக்னலைத் தாண்டி ஓரமாய் நிறுத்தி, சிறுமிக்காக காத்திருந்தாள் அவள். சிறுமியும் ஓடிவந்து அவளிடம் மோஓச்சு வாங்க நின்றபடியே புன்னகைத்தாள்.

 

கூடையில் இருந்த முல்லையை கையில் எடுத்தவள், “பாப்பா ரொம்ப அழகு.. அதைவிட அழகு உன்னோட இந்த சிரிப்பு.. உங்க பேர் என்ன..” என்றதும்,

 

வெட்கமாய் நெளிந்தபடி, “தேங்க்ஸ் ஆன்டி, என் பேர் சத்யா..” எனவும், சத்யா என ஒருமுறை சொல்லிப் பார்த்தவள், “நைஸ் நேம்பட் நான் உன்னை அழகின்னு கூபிடுறேன், அதுதான் உனக்கு சூட் ஆகுது..” முல்லையின் வாசத்தை நுகர்ந்தாள் அவள்.

 

மொட்டு வாசம் பிடிக்குமா ஆன்டி, எனக்கும் தான் ரொம்ப பிடிக்கும்…” என்ற அழகிக்குப் புன்னகையை கொடுத்தவள், “ஒரு முலம் எவ்வளவு அழகி.. இங்கே வர்ரேன்னு உன்னோட பேரன்ட்ஸ்கிட்ட சொன்னியா..?

 

எஸ் ஆன்டி, அவங்க என்னை வாட்ச் பண்ணிட்டுத்தான் இருப்பாங்க, நோ ப்ராப்ளம்.. ஒரு முலம் பூ ஐம்பது ரூபா.. உங்களுக்கு நான் நாற்பது ரூபாய்க்குத் தரேன்…”

 

அழகியின் பதிலில் சிரித்தவள், “பூ விலையெல்லாம் ஏறிடுச்சு இல்லையா, தண்ணீ இல்லாம விவசாயம் நலிஞ்சு போச்சு…” என பெருமூச்சு விட்டவள், “ஐம்பது ரூபாய்க்கு தரதா இருந்தா மூனு முலம் முல்லைப்பூ, அஞ்சு முலம் அரளிப்பூ கொடு..” எனவும்..

 

அவளின் பதிலில்சரி ஆன்டிம்ம் சொல்லிட்டுத்தான் வந்தேன்உங்களுக்கு முடி கீழ வர இருக்கே, இந்தப் பூ போதுமா…” என்றாள் அழகி ஆச்சர்யமாக.

 

முடிக்கு நீளமா பூ வைப்பாங்களாமா உங்க ஊர்ல…” சிரித்தபடியே பணத்தைக் கொடுத்தாள் அவள்.

 

நான் பார்த்துருக்கேன் ஆன்டி, உங்களுக்குப் பிடிக்குமா தெரியல, ஆனா அழகா இருக்கும்..” வெள்ளையாய் பேசியவளின் கன்னத்தைத் தட்டியவள் 
எந்த ஸ்கூல்ல படிக்கிறாங்க அழகி..” வாழையில் கொடுத்தப் பூவை வாங்கியபடியேக் கேட்க..

 

சாலையின் எதிர்புறத்திலிருந்தக் கட்டிடத்தைக் காட்டிகவர்ன்மென்ட் கேர்ள்ஸ் ஸ்கூல் தான் ஆன்டி..” எனவும், இங்லீஸ் நல்லா பேசுறீங்களே, அதனால கேட்டேன்..” என்பதற்குள்ளாகவே, “இப்போதான் இங்கேயும் இங்லீஷ் வந்துட்டே ஆன்டி..” என பட்டென உறைக்க, அதில் அவள் முட்டாள் தனமும் உறைக்க, அழகியிடம்வருகிறேன்.. பார்த்துப் போ..’ என்றதோடு ஒரு அசடு வழிதலையும் கொடுத்துவிட்டு கிளம்பினாள்.

 

இப்போது மணி இருபது நிமிடங்களைக் கடந்திருந்தது. ஆனால் அதற்கு முனிருந்த பரபரப்பில்லாமல் அமைதியைத் தத்தெடுத்தது மனது. ஒரு வித பாரமும் இதமும் சரிசமமாய் வந்தமர்ந்து கொண்டது நெஞ்சாங்கூட்டில். அருகில் இருந்த முல்லைப் பூவைப் பார்த்தாள். அது அவளுக்கு பல நினைவுகளைத் தூண்டி விட்டது. காலங்கள் கடந்துப் போயிருந்தாலும், நினைவுகள் மட்டும் பசுமரத்தாணி போல் மனதின் ஒரு மூலையில் ஒட்டிக் கொண்டிருக்கும்.

 

அவளுக்கும் அப்படித்தான். தன் வீடு திருமணத்திற்குப் பிறகு தாய் வீடான அவலம் பெண்களுக்கு மட்டுமே நேரும். அம்மா வீட்டின் கொல்லையில் பரந்து பெரிதாய் இருக்கும் முல்லைப் பந்தல். தினமும் சரம் சரமாய் தொடுக்கலாம் அத்தனை அத்தனை முல்லை மொட்டுக்கள். விவரம் தெரிந்தபிறகு அதிமகமாய் அவள் ஆசைப்பட்டது இந்தமுல்லைப் பூக்களுக்குத் தான்.

 

தன் நீண்ட கூந்தலில் சரம்சரமாய் சூடிக்கொண்ட நினைவு. கூந்தலின் நீளத்தில் சிறிது குறைந்தாலும் தமைக்கையோடு நடத்தும் வம்பளப்பு. இதற்காகவே அம்மா கட்டிய மொட்டுக்களை, சரி சமமாக இருவருக்கும் பிரித்துக் கொடுப்பார். அப்போதும் அவளது மனம் சமதானமடையாது.

 

இவளால் நடக்கும் சண்டைகள் அனைத்திற்கும் காரணம் இவள்தான் என யூகித்து, அம்மாவின் கோபம் இவள் மேல் திரும்பும் போது, ஆளுக்கு முன்னே கோபித்துக் கொண்டு அதே முல்லை பந்தலில் தஞ்சமடையும் நிமிட நேரங்கள். அதற்கு பிறகு குடும்பத்தினர் நடத்தும் சமாதானப் பேச்சுவார்த்தையில், தன்னை இளவரசியாய் உணரும் தருணங்கள்.

 

திருமணம்- கணவனோடு டெல்லி பயனம். புரியாத மொழி.. தெரியாத ஊர், அவன் அன்பில், அவன் அருகில், அவன் அணைப்பில் அனைத்தும் சாத்தியம் என்றேத் தோன்றியது.

 

அவர்களது சண்டைகளின் சமாதானங்களில் முல்லை இடம்பெறாமல் இருந்ததில்லை. ஒவ்வொரு மகிழ்விலும், நெகிழ்விலும் தன் இருப்பைக் காட்டாமல் இருந்ததுமில்லை அம்முல்லை. தெளிந்த் நீரோடையான அவர்களது இல்வாழ்க்கையின் நான்காம் வருடத்தில் தான், அப்போதுதான்…. “ம்ப்ச்…” என்றுத் தலையை உலுக்கியவள், அதன் பிறகு எத்தனை மாற்றங்கள்..

 

அவளது எண்ணப் பயனங்கள் முடிவடையவில்லை என்றாலும், கார் பயனம் முடிந்து வீடும் வந்திருந்தது. பூக்களோடு இறங்கியவள், குழந்தை இன்னும் வரவில்லை என்று ஆசுவாசமாகி, அவசரமாக உள்ளெ புகுந்து, தலையோடு நீரை ஊற்றிவிட்டு, பூஜையறையில் விளக்கேற்றி விழுந்து எழுந்தவள், கையில் முல்லை மொட்டுக்களை தனியே எடுத்து வெளியே வந்தாள்.

 

கை, காலெல்லாம் வெடவெடக்க, உடல் நடுங்க நடந்தவள் ஹாலின் ஒரு மூலையை நோக்கி நகர, ‘பூவோட வாசமாஇல்ல உன்னோட வாசமா.. கண்டுபிக்கவே முடியல..’ பின் கழுத்தில் முகம் புதைத்து மூச்சை இழுத்து அவன் கூறும் வார்த்தைகள், கண்களை குளமாக்க

 

இனி எப்போதும் உன்னை சூடிக்கொள்ள முடியாது. அதனால் என் மன்னவனை அலங்கரி..’ என்று மனதால் முல்லையிடம் மன்னிப்பு வேண்டி, டேபிளின் மேல் இருந்த போட்டோவிற்கு முல்லையை மாலையாய் சூடிவிட்டு முகத்தை மூடிக் கதற ஆரம்பித்தாள் சத்யா..

 

 

முற்றும்..

 

This topic was modified 3 months ago by வதனி பிரபு
This topic was modified 3 months ago by Nithya Karthigan

பிரியங்களுடன்
வதனி..


Quote
Share:

error: Content is protected !!

Please Login or Register