Breaking News

உங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

Forum

யாரென்று தெரிகிறதா.....? - 2  

Page 1 / 2

Megala Appadurai
Posts: 27
Contributor
(@megala-appadurai)
Eminent Member
Joined: 1 year ago

1561993360-35608a6212123390a408fe8462f871fb.jpg

வணக்கம் நட்புக்களே..... எப்படி இருக்கீங்க.... சென்ற வாரம் கொடுத்த கதைச்சுருக்கத்தை உடனே நிறைய பேர் சரியா சொல்லி இருந்தீங்க ... அதில் முதலாவதாக சொன்ன ப்ரியாசக்தி அவர்கள் வெற்றியாளரா தேர்ந்தெடுக்கப் படுகிறார். அவருக்கு வெற்றி பரிசாக இந்த கீரீடமும்👑👑👑👑👑, வாசகப்பேரிகை என்ற பட்டமும் வழங்கப் படுகிறது. வாழ்த்துகளும், பேரன்பும் ப்ரியா சக்தி.

 

பிதாமகன்ல்ல வர்ற சூர்யா மாதிரி கம்பெனிக்கு கட்டுபிடியாகததாலேன்னல்லாம் சொல்லமாட்டேன். இந்த கீரிடத்தை உங்கள் தலையில் சூட்டி வாசகப்பேரிகைப் பட்டம் கொடுப்பதைவிட சிறந்த பரிசு எதுவும் இல்லைன்னு நான் நினைக்கிறேன். மேலும் ஆர்வமாக கலந்துக்கொண்டு சரியான விடையை கண்டுபிடித்த எல்லா வாசகர்களுக்கும் என் வாழ்த்துகளும், நன்றிகளும்.

 

இந்த வாரம் யாரென்று தெரிகிறதா .... ? எதுவென்று பார்க்கலாமா....?

 

இது என் வாசிப்பில் நான் படித்து என் நினைவில் ஆழமாய் பதிந்து போன கதை. நீண்ட ஆண்டுகளுக்கு முன் படித்தது. ஆனால் அதன் ஆசிரியர் யாரென்று கூட மறந்துவிட்டேன் அந்த கதையை என்னால் மறக்க முடியவில்லை. மீண்டும் சமீபத்தில் அதை வாசிக்க நேர்ந்த போது அந்த எழுத்துகளும், அதன் எளிய அழகான தமிழும் என்னை ஈரத்தது.

 

எல்லா சமுத்திரங்களும் ஒரு துளியிலிருந்து தான் உருவாகிறது என்ற வார்த்தை என்னை வசீகரித்தது. இந்த கதையின் நாயகனே தங்களைப் பற்றி உங்களுக்கு விவரிக்கிறான்.

 

அவளைப் பற்றி ஊரார் சொன்னபோது நான் நம்பவில்லை. அவளைப் பார்த்த முதல் பார்வையில் அவர்கள் சொன்னது அத்தனையும் பொய்யென்று உணர்ந்தேன். ஆம் அவளை அவர்கள் சரியாய் பார்த்திருக்கவில்லை. நான் ஜமீனின் ஒற்றை வாரிசு. ஊரின் ஜமீன்களும், மிட்டாமிராசுகளும் வெள்ளையனை மறந்தாலும் என்னவளின் தாயை மறந்திருக்க மாட்டார்கள். கூத்தாட்டத்தில் பேர் பெற்றவள். சுத்துபட்டு அத்தனை ஆண்களும் அவளின் அடிமைகள். இப்பொழுது மகளை அரங்கேற்ற வந்தாள். அத்திருவிழாவிற்க்கு கூத்துகட்ட வந்த அவள் மகள் என் இதயத்தைத் திருடிச் சென்றாள்.

 

ஊரே ஜமீனைப் பயம் கலந்த மரியாதையுடன் பார்க்க முதன்முதலாய் எதிர்த்து கேள்வி கேட்டவள் நீ.... உன் தையரியமும், உன் அறிவும், ஆற்றலும், அழகும் வயதில் இளைஞனாய் புத்தியில் குழந்தையாய் இருந்த என்னை வெகுவாய் புரட்டிப் போட்டது. கூத்தில் வேடிக்கையாய் உன்னை முத்தமிட்டு உன்னை தொட்ட முதல் ஆண் நானென்று பறை சாற்றிக் கொண்டேன். ஆனால் என்னைத் தவிர வேறெந்த ஆண்மகனும் உன்னைத் நெருங்கக் கூட முடியாதென்று ஒவ்வொரு தருணத்திலும் நிரூபித்தாய்.

 

கூத்து முடிந்து நீ கிளம்பியபின்
பெற்றோரும், பெரும் பணமும் பெரிதாய் படவில்லை எனக்கு நீயே என் உற்றத் துணையாய் தோன்றினாய். உன் மாமனின் வஞ்சப் பேச்சை நம்பி உன்வீட்டிற்க்காய் அத்தனை ஊழியமும் செய்தேன். உன்னைப் பார்த்துக் கொண்டு உன்னருகில் இருந்தாலே போதுமென்ற நினைப்பு. இந்த வீட்டில் உள்ள இன்னொரு ஆண்மகன் யாரென்ற ஒருவனின் கேள்விக்கு அவரே என்னை ஆளப்பிறந்தவர் நான் அவளுக்குரியவள் என்றாயே அந்த ஒற்றை வார்த்தை போதாதா உன்மீதான பெருங்காதலுக்கு.

 

உன் மாமனும், தாயும் செய்த சதி ஒரு புறம், கௌரவம் பார்க்கும் என் தகப்பன் ஒரு புறம், உன் இளைமையை வேட்டையாடத்துடிக்கும் வேட்டை நாய்களொருபுறமும் இருக்க வெள்ளந்தியாய் இந்த சூதை அறியாமல் போனேனே..... நான் யாரென்று தெரிகிறதா.....?

34 Replies
Posts: 24
Registered
(@kurinji)
Eminent Member
Joined: 1 year ago
  1. விமர்சனத்திலேயே நிறைய சோகம்.நான் இந்த கதை படித்ததில்லை மேகி . அழுத்தமான நாயகி பாத்திரமோ .
Reply
2 Replies
Megala Appadurai
Contributor
(@megala-appadurai)
Joined: 1 year ago

Eminent Member
Posts: 27

நாயகன் நாயகியை விட அதை எழுத்தாளர் கையாண்ட விதம்தான் அழுத்தம். 

Reply
Indira selvam
Writer
(@indra-selvam)
Joined: 1 year ago

Trusted Member
Posts: 51

Kealunga kealunga ..... edhavathu clue kadaicha .... apadiyea pudichi kandupidika muyarchi seiyalam ....

 

maggi ma ....  clue kudunga ma .... pls ....

Reply
Posts: 60
(@prasha)
Trusted Member
Joined: 1 month ago

Nega solum pothu padikenumnu assaya iruku but story kandu pidikala mudiyala .. theriyalaya

Reply
6 Replies
Nithya Karthigan
(@nithya-karthigan)
Joined: 1 year ago

Reputable Member
Posts: 256

கவலைப்படாதடா பிரஷா. யாராவது ஸ்டோரி நேம் சொல்லுவாங்க... பார்த்துக்கலாம்... 😀

Reply
(@prasha)
Joined: 1 month ago

Trusted Member
Posts: 60

Sri lakshmi story kaanal neluma kaatchiyai maruma...

Pillanu nenaikiren irunthalum ethum athu mathiri iruku athan 

Reply
Nithya Karthigan
(@nithya-karthigan)
Joined: 1 year ago

Reputable Member
Posts: 256

Megala Appadurai மேகி... ப்ரஷா ஒரு ஆன்சர் சொல்லியிருக்காங்க. ஓடி வந்து சரியான்னு சொல்லுங்க...

Reply
Indira selvam
Writer
(@indra-selvam)
Joined: 1 year ago

Trusted Member
Posts: 51

Pulla eapadi potalum adikidhea...... 🤔🤔🤔🤔🤔....... good prasha ma....,

Reply
(@prasha)
Joined: 1 month ago

Trusted Member
Posts: 60
Posted by: Indira selvam

Pulla eapadi potalum adikidhea...... 🤔🤔🤔🤔🤔....... good prasha ma....,

Hahaha analaum answer sothapiricha ... na vaira muthu 3 or 4 than padichi iruken... namaku aaruthal parisathu varumnu patha athum illa pola akka

Reply
Megala Appadurai
Contributor
(@megala-appadurai)
Joined: 1 year ago

Eminent Member
Posts: 27

கண்டிப்பா சொல்றேன்டா படி

Reply
Nithya Karthigan
Posts: 256
(@nithya-karthigan)
Reputable Member
Joined: 1 year ago

பொன்ஸ் அக்கா, லாஸ்ட் டைம் உஃப் ன்னு ஊதி தள்ளுனீங்க... இப்ப வாங்க... வந்துப்பாருங்க... 

 

Reply
15 Replies
Pon Mariammal Chelladurai
(@pons)
Joined: 1 year ago

Active Member
Posts: 5

ரமணிம்மான்னா மனப்பாடம்...ஈஈஈஈ

சோக கதை படிப்பதில்லையே..ஏதோ தில்லானம்மாள் தான் நமக்கு தெரிஞ்ச நடனக்கதை....

Reply
Nithya Karthigan
(@nithya-karthigan)
Joined: 1 year ago

Reputable Member
Posts: 256

🤣 🤣  🤣 

Reply
Pon Mariammal Chelladurai
(@pons)
Joined: 1 year ago

Active Member
Posts: 5
Megala Appadurai
Contributor
(@megala-appadurai)
Joined: 1 year ago

Eminent Member
Posts: 27

ஏனிந்த கோபம்.... ஏனிந்த மௌனம்....

 

பாட்டுக்கா

Reply
Nithya Karthigan
(@nithya-karthigan)
Joined: 1 year ago

Reputable Member
Posts: 256

அக்கா, அவங்க உங்கள கிண்டல் பண்ணலையாம்... 😀

Reply
Megala Appadurai
Contributor
(@megala-appadurai)
Joined: 1 year ago

Eminent Member
Posts: 27

இல்லை பொன்ஸ் அக்கா இவரோட கதையை நீங்க நிச்சயம் படிச்சிருப்பீங்க

Reply
Nithya Karthigan
(@nithya-karthigan)
Joined: 1 year ago

Reputable Member
Posts: 256

நானும் அப்படித்தான் எதிர்பார்த்தேன். பொன்ஸ் அக்காவே சொல்லலைன்னா ரொம்ப கஷ்ட்டம் போலவே மேகி... வண்டி ஒன்னு இந்த பக்கம் சாயிது... இல்ல அந்த பக்கம் சாயிது. பேலன்ஸ் பண்ணுங்கோ மாமி... 😛

Reply
Megala Appadurai
Contributor
(@megala-appadurai)
Joined: 1 year ago

Eminent Member
Posts: 27

மக்கள் யாரையும் காணேமே வரட்டும் நாளை மாலை வரை நேரமிருக்கே .... எங்கே ப்ரியா சக்தி காணோம்....இந்திரா ஜி எங்க வரசொல்லுங்க

Reply
Nithya Karthigan
(@nithya-karthigan)
Joined: 1 year ago

Reputable Member
Posts: 256

அந்த பாக்கெட் எல்லாம் காலி... ரெண்டு பேரும் பிரைவெட்டா வந்து மேட்டரை சொல்லிட்டாங்க.

Reply
Megala Appadurai
Contributor
(@megala-appadurai)
Joined: 1 year ago

Eminent Member
Posts: 27

சோ சேட் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣ரொம்ப 

ஹெவியா குடுத்திட்டேனோ....

Reply
Nithya Karthigan
(@nithya-karthigan)
Joined: 1 year ago

Reputable Member
Posts: 256

நோ பிரபலம் பேபி. பார்க்கலாம்... உங்க கைல இருக்க கிரௌனை கேட்ச் பண்ண இங்க ஒரு காரிகை இல்லாமலா போயிடுவாங்க... ஐம் வெயிடிங்....  😎  😎  😎  😎  😎 

Reply
Indira selvam
Writer
(@indra-selvam)
Joined: 1 year ago

Trusted Member
Posts: 51

Nithya ..... publica ippadi ellam manathai vangakudathu.... intha question paper romba tough.... me pavam..... Maggi.... what is the procedure to change the question paper ? ......🧐🧐🧐🧐🧐

Reply
Nithya Karthigan
(@nithya-karthigan)
Joined: 1 year ago

Reputable Member
Posts: 256

ஹா ஹா... எல்லாம் நம்ம மக்கள் தானே... விடுங்க... விடுங்க...

Reply
Indira selvam
Writer
(@indra-selvam)
Joined: 1 year ago

Trusted Member
Posts: 51

 pons akkake theriyalaya???... appadi appo NaN onnum avlo makku illa ma..... nijamave question paper tough than polaruku.... maggi.... LKG padichimudicha UKG la than poduvanga..... nenga Ennadana... 12th la podarenga..... 😡😡😡😡😡😡😡

Reply
Megala Appadurai
Contributor
(@megala-appadurai)
Joined: 1 year ago

Eminent Member
Posts: 27

கேள்விக்கு பதில் தெரியலேன்னா கொஸ்டீன் பேப்பர் டஃபா .... படிக்கலேன்னாலும் டஃபா தான் இருக்கும்.

Reply
Posts: 5
Registered
(@sivapunniya)
Active Member
Joined: 9 months ago

கவிஞர் வைரமுத்துவின் ஒரு போர்களமும் இரண்டு பூக்களும்.

Reply
2 Replies
Megala Appadurai
Contributor
(@megala-appadurai)
Joined: 1 year ago

Eminent Member
Posts: 27

இந்த வாரத்திற்க்கான கீரடம் உங்களுக்கு வாழ்த்துக்கள் டியர்

Reply
Registered
(@sivapunniya)
Joined: 9 months ago

Active Member
Posts: 5

 நன்றி நன்றி😊

Reply
Page 1 / 2
Share:

error: Content is protected !!
Don`t copy text!
  
Working

Please Login or Register