வணக்கம் ஃப்ரெண்ட்ஸ்......
யாரென்று தெரிகிறதா உங்க வரவேற்பும், பங்களிப்பும் பார்த்து மெர்சலாய்ட்டேன் செல்லங்களா..... சென்ற வாரம் சரியாக "ஒரு போர்களமும், இரண்டு பூக்களும். எழுத்தாளர் வைரமுத்து என்ற விடைச் சொல்லி கீரீடத்தையும், வாசகப்பேரிகைப் பட்டத்தையும் வெல்பவர் Siva Punniya அவர்கள். வாழ்த்துகள் Siva Punniya. எட்டு மாதங்களாக சைலண்ட் ரீடரா இருந்த உங்களை பேச வைத்ததே எனக்கு கிடைத்த வெற்றி என் ப்ரியங்களும், பேரன்பும்.
இனி இந்த வார கதைச் சுருக்கத்தை பார்ப்போமா.....?
இன்று நாயகியின் பார்வையில் பார்ப்போமா...?
ஒரு பெண் இரண்டாம் மணம் புரிவதென்ன அவ்வளவு பெரிய குற்றமா...? என் தந்தை இறந்தபின் தனி பெண்ணாய் என்னை வளர்த்த என் தாயாரை மிகவும் பிடித்து மணந்து கொண்டார் ஜமீன்தார். அவருக்கு குழந்தைப் பேரில்லாக் காரணத்தால் அவரின் சகோதரி மகனை தன் வாரிசாக்கியிருந்தார். என் தாயை மட்டும் மனைவியாய் ஏற்காமல், என்னையும் தன் சொந்த மகளாய் ஏற்றுக்கொண்டார். சிறுமியாய் அவ்வீட்டினுள் என்னை முதன்முதலாய் அழைத்துச் சென்றவன் அவனே..... அவனே அந்த ஜமீனின் வாரிசு.
ஜமீனில் நுழைந்த நாள் முதலாய் என் பிறப்பையும்,இறந்த என் தந்தையையும் கேவலமாய் பேசுவதே அந்த வீட்டின் இளையராணி என் சின்ன அத்தையின் வழக்கமாயிற்று. அவரை அத்தை என்று அழைப்பது அவருக்கு பிடிக்காது.
சொத்தின் வாரிசாய் நானும், அதிகாரம் செலுத்த என் அன்னை வந்ததையும் ஏற்கமுடியாமல் அவர் செய்த செயல்கள் என் மனதை ஆழமாய் பாதித்துவிட்டது. கடைசியாய் அவர் கட்டிய திருட்டுப் பட்டத்தை பொறுக்கமாட்டாமல் வீட்டை விட்டு வெளியேறி படித்து என் தந்தையைப் போலவே நாடகத்தையும், நாட்டியத்தையும் என் லட்சியமாய் கொண்டு வெற்றிபெற்றேன். எனக்கென்று ஒரு வழி எனக்கென்று ஓர் உலகம் என்று இருக்கையில் திரும்பவும் அவன் என் வாழ்வினுள் வந்தான் என் தாயின் உடல்நிலை சரியில்லையென்று.
மீண்டும் நாடகங்கள் அரங்கேரியது. முகமுடி அணிந்த முகம் என்னைக் கண்காணிக்கிறது. என் தாயாருக்காய் அவன் ஒவ்வொன்றும் பார்த்து பார்த்து செய்வது எனக்கு ஆச்சரியம் இல்லை. அவன் நல்லவனென்று எனக்குத் தெரியும். ஆனால் அவன் பார்வையில் உள்ள மாற்றம் நான் அறியாதது. அவனை நான் விரும்புகிறேனோ.....
அவனுக்குத் திருமணமாம் அத்தைகாரி முடிவு செய்துவிட்டாள். அதற்கேன் என் மனம் இவ்வளவு பாடுபடுகிறது. தவியாய் தவித்துப் போகிறேனே... என் தாயாருடன் இருக்கவும் முடியாமல், அவனை விட்டு விலகவும் முடியாமல், இந்த ஜமீனில் இருக்கவும் இயலாமல் இதென்ன நரகவாழ்க்கை......
நான் யாரென்று தெரிகிறதா.....?
அவன் யாரென்று தெரிகிறதா.....?
- முல்லை பந்தல் _காஞ்சனா ஜெய திலகர் கதை
நான் யாரென்று சொல்லவில்லையே! ஐ மீன்... அவள் யாரென்று???
முதல் பால்லயே சிக்சர் அடிச்சிட்டீங்க போங்க .... செம... செம....👏👏👏👏👏👏👏இந்த வார கீரிடம் உங்களுக்குத்தான்.
அவள் பெயரா...ஏதோ நிரு நினைவிருக்கு்..
காஞ்சனாம்மா கதை...முல்லை பந்தல்.
ஜஸ்டு மிஸ்ஸுல கீரிடம் போச்சு பொன்ஸ் அக்கா ஹாரி சரியான விடை சொன்னதால் உங்களுக்கு ஆறுதல் பரிசா 🍭🍭🍭🍭🍡🍡🍡🍡🍬🍬🍬🍬🍬 குச்சிமுட்டாய் தான்க்கா இருக்கு குருவி ரொட்டியைக் காணோம் 🏃🏃🏃🏃🏃🏃🏃
மேகி...நான் ஒத்துக்க மாட்டேன்... உங்க ரிவ்யூல ஒரு பொண்ணுதானே பேசுறா? அப்போ அவ யாருன்னு சொல்லணும்ல? கதை பேரு மட்டும் சொன்னா எப்படி??? 😛 சரண்யா... சீக்கிரம் ஓடி வாங்க...
அட ஆமால்ல சரண்யா வாங்க சீக்கிரம் அவ யாரு அவன் யாரு ஜொல்லுங்கோ
- நீல நயனா ,நித்தியன்
வாவ் சூப்பரு .... உங்களுக்கே கீரீடம் ..... வாசகப்பேரிகை சரண்யா அவர்களே வாழ்த்துக்களும் பேரன்பும்😘😘😘😘😘😘😘😘😘😘😘
- அப்போ கிரீடம் எனக்கே எனக்கா
காஞ்சனா ஜெயதிலகர் மேம் கதை.முல்லை பந்தல்.நித்யன்,நீலநயனா
அருமை... பங்களிப்பிற்கு நன்றி... 🙂
- இந்த வார விமர்சனம் தயாரா மேகி????
வந்துடறேன் டியர் 😘😘 கொஞ்சம் வெய்ட்