அத்தியாயம்-26
கௌசியின் இந்தக் கோபத்தை
விக்னேஷ் சத்தியமாக எதிர்
பார்க்கவில்லை. அவள் போன பின் கீழே
கிடந்ததை எல்லாம் பார்வையிட்ட
ஆரம்பித்தான் விக்னேஷ். எல்லாம் சார்ட்
பேப்பர்ஸ்.. அவனைத் தன் கையாலேயே
அவள் ஒவ்வொன்றாக நினைத்து
நினைத்து வரைந்தது. சிறு வயது முதல்
இருந்த அனைத்தையும் வரைந்திருந்தாள். ஒரு சுருண்டிருந்த சார்ட் பேப்பரை விரித்த விக்னேஷின் கண்கள் அகல விரிந்தன.. அதில் அவனும் கௌசியும் மணக்கோலத்தில் இருப்பது போல ஒரு படம் கௌசி வரைந்தது இருந்தது. அவனால் அதில் இருந்து கண்களை எடுக்க முடியவில்லை. அந்த படத்தின் கீழே இருந்த கௌசியின் கையெழுத்தின்
கீழ் இருந்த தேதியைப் பார்த்தவனின்
கண்களுக்கு ஆச்சிரியம் தான்..
13.03.2013 என்று இருந்தது.. அவனுக்கு
22 இரண்டாவது பிறந்தநாள் அவளுடைய 18வது வயதில் வரைந்திருக்கறாள். அவனின் பிறந்தநாள் அன்று வரைந்திருந்தவள் அவனிடம் தரவில்லை. பின் இன்னொரு பேப்பரில் ஐ லவ் யூ விக்கா.. ஐ மிஸ் யூ விக்கா என்று ஸ்ரீ ராம ஜெயம் போல விக்கா விக்கா என்று இருந்தது கண்ணீர் கரைகளுடன். எல்லாவற்றையும் பார்த்து அவனுக்கு
எல்லையில்லா சந்தோஷம். பின்
டைரியில் ஒவ்வொரு கவிதையாய்
படிக்க ஆரம்பித்தான்.
படிக்க படிக்க அவன் நெஞ்சில் நிறைந்த
நிறைவை அவனுக்குச் சொல்ல
வார்த்தைகள் இல்லை. நான்சியை அவன் காதலிப்பதாகச் சொன்ன பிறகு அவள் எழுதியது அடுத்து குரு பண்ணிய
கொடுமையில் எழுதியது என எல்லாம்
அவனைக் கலங்கச் செய்தது. ஏனோ
தன்னையும் அறியாமல் அவன்
கண்களில் கண்ணீர் ரேகை வந்தது. தான் பேசத் தெரியாமல் தப்பாகப்
பேசிவிட்டோம் என்பதை உணர்ந்தவன்
எல்லாவற்றையும் வைத்து விட்டு
கௌசியைத் தேடி வெளியே வந்து..
அவள் சமையல் அறையில் இருப்பதை
உணர்ந்து அங்கு சென்றான்.
பாத்திரத்தை கழுவிக் கொண்டு
இருந்தாள் கௌசி.. விக்னேஷ் சென்று
அவள் தோளைத் தொடப் போக
"தொடாதே.. தொட்டீனா கைய
உடச்சிருவேன்" என்று கோபத்தில்
சொல்ல அவன் வந்த சிரிப்பை
அடக்கினான்.
"நான் உன்னை தொடக்கூடாதா டி.. பேபி
லவ்லாம் பண்ணியிருக்க என்னை..
ஆனா எனக்கு அந்த உரிமை இல்லையா" என்று கேட்டான்.
"இந்த டையலாக் எல்லாம் அடிச்ச இந்த
பாத்திரத்திலேயே அடிச்சிருவேன்" என்று கழுவிக் கொண்டிருந்த பாத்திரத்தை நீட்டி எச்சரித்தாள்.
"பாத்திரத்துல அடிக்க வேண்டாம் டி..
நேத்து அடிப்பன்னு சொல்லி அடிச்சீல
அதையே பண்ணு" என்றான் அவள் அருகில் குனிந்து.
கோபம் வந்தவள் கையில் இருந்த சோப்பு நுரையை முகத்தில் அப்பிவிட்டாள். ஆனால் அவனுக்கு கோபமே வந்தால்தானே. மாறாக சிரித்தவன் அவள் இடுப்பில் சொறுகி இருந்த முந்தானையை
வேண்டுமென்றே இடுப்பில் விரல்
பட்டவாறு எடுத்து முகத்தைத் துடைத்தான். அவன் செய்கையில் விதிர்விதிர்த்துப் போனாலும் அவள் வெளியே காட்டவில்லை.
"ஸாரி டி" - விக்னேஷ். பதிலே இல்லை
கௌசியிடம். "ப்ளீஸ் டி" என்று அருகில்
வந்தவனைத் தள்ளி விட்டாள்.
அதற்குள் சுமதி வர அன்னையின்
முன்னால் எதையும் காட்டிக் கொள்ளாமல் விக்னேஷ் சமையல் அறையில் இருந்து வெளியே வந்தான். வந்தவன் பேசாமல் உட்கார சமையல் அறையில் இருந்து வெளிய வந்த கௌசி "தங்" என்று டீயை டேபிளில் வைத்து விட்டுப் போனாள்.
பின் மதிய சாப்பாட்டை முடித்துக்
கொண்டு இருவரும் ஸ்டியோவிற்குக்
கிளம்பினர். இருவரும் உள்ளே நுழையும்
போதே வெளியே வந்த விக்ரம் "ஆடி
அசஞ்சு வராங்க பாரு இரண்டும்.." என்று
நினைத்தவன் "வாங்க... எங்க
ஸ்டியோவிற்கு என்ன விஷயமா
வந்திருக்கீங்க" என்று நக்கலடிக்க
"தள்ளு" என்று கௌசி சொல்லிவிட்டு
உள்ளே போனாள்.
"என்னடா உன் பொண்டாட்டி.. அடுப்பில்
இருந்து இறக்கி வச்ச மாதிரி போறா.."
என்று வினவியவன் விக்னேஷின்
முகத்தில் பல்ப் எரிவதை கவனித்தான்.
"என்னடா ஒரே ஒளி வட்டமா இருக்கு"
என்று விக்ரம் சிரித்தபடியே வினவ
அவனைக் கட்டிப்பிடித்தான் விக்னேஷ்.
"டேய் டேய்.. என்னடா பண்ற.. ரோட்ல
போறவன் எல்லாம் பாக்கறான் பாரு" என்று அவனை விலக்கினான்.
"ஒரு மார்க்கமா தான் திரியற டா நீ..
உள்ள போ.. நான் வெளில போயிட்டு
வரேன்" என்று விக்ரம் கிளம்பி விட்டான்.
உள்ளே நுழைந்தவனை அங்கே வேலை
செய்யும் அனைவரும் வித்தியாசமாகப்
பார்த்தனர். தன் முதலாளியின் முகத்தில் உள்ள ஒளி வட்டத்தைப் பார்த்து.
தன் அறைக்குள் நுழைய எத்தனித்தவன்
அறையின் முன்னே இருந்த கேபினிள்
கௌசி உட்கார்ந்திருந்ததைப் பார்த்தவன் அவள் முன் சென்று நின்றான். அவன் நின்றதை உணர்ந்தவள் நிமிற அவளைத் தான் குறுகுறுவெனப் பார்த்துக்
கொண்டிருந்தான். ஒரு சிலர் இவர்களை
கவனிக்க "எல்லோரும் பாக்கறாங்க"
என்றாள் பல்லைக் கடித்தபடி. விக்னேஷ்
திரும்ப அனைவரும் பயத்தில்
தலையைக் குனிந்து அவரவர்
வேலையைப் பார்க்க ஆரம்பித்து
விட்டனர்.
"மிஸஸ்.கௌசிகா கொஞ்சம் உள்ள வர
முடியுமா?" என்றான் விக்னேஷ்.
அவள் முறைக்க "வேலை விசயமாகத்
தான்" என்றான் வந்த சிரிப்பை அடக்கிக்
கொண்டு. அவன் முன் நடக்க பின்னே
சென்றவள் பேசாமல் சென்று அவனிற்கு எதிரில் அமர்ந்தாள்.
"நல்லா இந்த தொழிலைக் கத்துக்கங்க
கௌசிகா.. நான் இந்தத் தொழிலை
கொஞ்ச நாளில் என் மனைவியின்
கையில் ஒப்படைத்து விட்டு இயற்கை
விவசாயத்தில் முழுதாக இறங்கப்
போகிறேன்" என்றான். கௌசிக்கு அவன் சொன்னதில் திகைத்தாலும் வெளியே காட்டவில்லை.
ஏதோ கௌசி சொல்ல வர "இரு நான்
முடித்துவிடுகிறேன். என்ன கேட்க
வரப்போறேன்னு தெரியும்.. இது
இன்னிக்கு எடுத்த முடிவு இல்ல.. எப்பவோ எடுத்தது.. டைம் வரும்போது
சொல்லலாம்னு விட்டுட்டேன். பசிங்கற
கொடுமை இன்னும் நம்ம நாட்டுல
போகாம தான் இருக்கு.. என்னால நாடு
முழுவதும் தீர்க்க முடியலனாலும்.. நம்ம
ஊருக்குள்ள பண்ண முடியும். அதான்
இதைப் பண்ணப் போறேன்" என்றான்.
"என் கூட ஒரு தைரியமா.. ஒரு துணையா என் பொண்டாட்டி இருந்தா நான் இந்த ஸ்டியோவை அவள் கையில் விட்டுவிட்டு அதைப் பார்ப்பேன்" என்றான் விக்னேஷ்.
"ம்ம்" என்று மட்டுமே பதில் வந்தது
அவளிடம் இருந்து. வேறு ஏதாவது கௌசி பேசுவாள் என்று
நினைத்தவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
எதுவும் சொல்லாமல் வெளியே செல்ல
எத்தனித்தவளின் கரத்தைப் பற்றியது
விக்னேஷின் கரங்கள். திரும்பி அவனை
முறைத்தவள் "கையை விடுடா" என்றாள். "ஸாரி டி" என்றவனை வெட்டும் பார்வை அவள் பார்க்க அவன் சலனமே
இல்லாமல் நின்றான்.
"நான் தான் ஏமாத்துனவ.. எல்லார்
கிட்டையும் மறச்சவ.. நீங்க ஏன் சார் சாரி
கேக்கறீங்க.. உங்க மேல எப்போதுமே
தப்பு இருந்தது இல்லையே.. அதனால் தானே கம்பத்திலும் என்ன திட்டுனீங்க..
அப்புறம் இன்று காலையிலும் அப்படிப்
பேசுனீங்க" என்று கேட்டவள் அவன்
கையை உதறிவிட்டு வெளியே
சென்றுவிட்டாள். விக்னேஷ் தான்
அப்படியே நின்று விட்டான். ஒவ்வொரு
முறையும் அவளின் நிலை அறியாமல்
தான் பேசிய பேச்சில் அவள் எவ்வளவு
காயப்பட்டிருப்பாள் என்று
உணர்ந்தவனுக்கு தன் மேலேயே கோபம் வந்தது.
மாலை வீடு வரும் வரையும் இருவரும்
பேசவில்லை. வந்து சேர்ந்தும்
பேசவில்லை. இரவு சாப்பிடும் போது ஏதோ போன் வர எழுந்து சென்று எடுத்தக் கௌசி பத்து நிமிடம் கழித்தே வந்தாள். வந்தவளிடம் "என்ன கௌசி.. யாரு?" என்று கேட்டார் சுமதி.
"கவிதா தான் அத்தை" என்றவள் "அடுத்த வாரம் அவள் கல்யாணமாம்.. அதற்குக் கூப்பிடத்தான்" என்றான் தோசையை பிய்த்து வாயில் போட்டபடியே.
"இன்னும் ஒரு மாசம் இருக்குன்னு
சொன்னீல?" - சுமதி.
"அது ஏதோ சுரேஷ் பாட்டிக்கு உடம்பு சரி
இல்லையாம்.. அதான் சீக்கிரமே பண்றாங்களாம் அத்தை" என்றவள்
"நாங்க அடுத்த வாரம் கம்பம் போயிட்டு
வந்திடறேன் அத்தை" என்றாள்
பொதுவாக அனைவருக்கும்.
"உன் அத்தையிடம் ஏன்மா சொல்ற..
விக்னேஷ் கிட்ட சொல்லு" என்று
வரதராஜன் சரியான நேரத்தில்
கௌசியின் காலை தெரியாமல்
வாரினார். கௌசி நாங்க என்று
சொன்னதை அவர் கவனிக்கவில்லை
போல.
"அவனும் தான் என் கூட வருவான்" என்று அவனைக் கேட்காமலே முடிவெடுத்துச் சொன்னவள் சாப்பிட்ட முடித்த தட்டோடு எழுந்து சமையல் அறைக்குள் சென்றாள்.
படுக்கை அறைக்குள் நுழைந்தவள்
விக்னேஷ் இல்லாததைக் கண்டு
தேடினாள். அதற்குள் அவன் பாத்ரூமில்
இருந்து வர "அதானே பார்த்தேன் நீ எங்க போகப் போற" என்று மனதில்
நினைத்தவள் அமைதியாகச் சென்று
படுத்தாள். அவள் அருகில் வந்து
இன்னொரு பக்கம் விக்னேஷ் படுக்க
இருவருக்குமே நேற்றைய இரவு
நியாபகம் வந்து இம்சித்தது. கௌசி
அதை எளிதில் கட்டி வைக்க விக்னேஷால் தான் முடியவில்லை.
லேசாக நகர்ந்த அவன் அருகில் வந்து திரும்பி முதுகைக் காட்டிப் படுத்திருந்த
கௌசி அருகில் படுத்தான். அவனின்
செயலில் கண்களை மூடிக்
கொண்டிருந்தவள் விழித்தாள். எழுந்து
அவனைப் பார்த்து உட்கார்ந்தவள் "தள்ளி படுடா" என்றாள். இல்லை கத்தினாள்.
"முடியாது போடி" என்றவன் கண்ணை
மூடிக் கொண்டான்.
அவன் சற்றும் எதிர்பாரா வண்ணம்
கௌசி அதைச் செய்தாள். ஒரு உதை
அவள் உதைக்க அவன் சுதாரிப்பதற்குள்
இரண்டாவது உதை உதைத்தாள். அவள்
உதைத்ததில் கீழே சென்று விழுந்தவன்
தன் இடுப்பைப் பிடுத்துக் கொண்டு
எழுந்தான். "ஏய் என்னடி.. உதைக்கற..
ஏதாவது படக் கூடாத எடத்துல பட்டா
என்ன ஆகறது" என்றான் இடுப்பைத்
தேய்த்தபடியே.
"இனி பக்கத்தில வந்த படாக் கூடாத
எடத்துல தான் கண்டிப்பா உதைப்பேன்"
என்று படுத்துவிட்டாள். "ராட்சசி" என்று
முணுமுணுத்தவன் பெட்டின் நுனியில்
படுத்துவிட்டான். அடுத்த வந்த ஏழு
நாட்களில் விக்னேஷின் லட்சம்
மன்னிப்பும் ஆயிரம் கெஞ்சல்களும்
கௌசியிடம் செல்லுபடி ஆகவில்லை.
அவள் காது கூடக் குடுக்கவில்லை அவன் வார்த்தைகளுக்கு.
கவிதா சுரேஷின் கல்யாண நாள்
நெருங்க இருவரும் கம்பம் கிளம்பினர்.
இந்த ஒரு வாரத்தில் விக்னேஷ்
சிகரெட்டை விட்டிருந்தான். கௌசியும்
கவனித்துக் கொண்டு தான் இருந்தாள்.
ஆனால் அவனிடம் வாய்விட்டுக்
கேட்கவில்லை. செல்லும் வழியில்
அவனைத் திரும்பி ஒரு நிமிடம்
பார்த்தவள் "ஏன்டா.. அப்படிப் பேசுனே?"
என்று மனதிற்குள் கேட்டாள்.
பின் கம்பம் வர நேராக சங்கரலிங்கம்
அய்யா வீட்டிற்குச் சென்றனர்.
இருவரையும் பார்த்து இருவருக்கும்
கல்யாணம் ஆன செய்தியை அறிந்தவர்
இருவரையும் ஆசிர்வதித்து தன்
வாழ்த்துக்களைத் தெரிவித்தார். அந்த
நேரம் பார்த்து அங்கு வந்த பிரபு தன்
தந்தை சொன்ன செய்தியைக் கேட்டு
இருவருக்கும் தன் வாழ்த்துக்களைத்
தெரிவித்தான். உண்மையாகவே
அவனுக்குப் பொறாமையோ அல்லது
வேதனையோ எதுவுமே இல்லை. மாறாக கௌசியின் வாழ்க்கை சீர் ஆனதை நினைத்து அவனுக்கு சந்தோஷமே.
"எங்க தங்கப் போறீங்க" - பிரபு
இருவரையும் பார்த்து.
இருவரும் யோசிக்க "பேசாமல் நீங்களும்
கவிதாவும் இருந்த வீட்டிலேயே
தங்கிக்கோங்க" என்ற பிரபு அவர்களிடம்
பதிலை எதிர்பாராது சென்று சாவியை
எடுத்து வந்து விக்னேஷிடம் தந்தான்.
சாவியை வாங்கிவிட்டு விக்னேஷ் செல்ல கௌசி பிரபுவிடம் திரும்பினாள்
"தேங்க்ஸ் பிரபு.. ஆனால் நீங்களும்
சீக்கிரம் உங்க கல்யாண செய்தியைச்
சொல்லுங்க" என்று சொல்ல பிரபு
"கண்டிப்பா சொல்றேன் கௌசி" என்று
இருவரையும் மனம் நோகாமல் அனுப்பி
வைத்தான் பிரபு.
வீட்டை அடைந்து கௌசி உள்ளே செல்ல
அவள் முதல் சென்ற இடம் வீட்டின் பின்
பக்கம் தான். அது அவளுக்குப் பிடித்த
இடம் கூட.
கொஞ்சம் நேரம் கழித்து உள்ளே வர
விக்னேஷ் படுக்கை அறையில்
கௌசியின் பெட்டில் தூங்கிக் கொண்டு
இருந்தான். காரை ஓட்டி வந்த அலுப்பு
என்று நினைத்தவள் அவனை எழுப்ப
மனமில்லாமல் அவளும் சிறிது நேரம்
தூங்கலாம் என்று நினைத்து அலாரம்
வைத்துவிட்டுக் கவிதா பெட்டில்
படுத்தாள். இருவருமே மாலை ஐந்து மணிக்கே எழுந்தனர். "தண்ணி காய
வைக்கிறேன்.. சுடு தண்ணீல குளி..
இல்லைனா சளி புடிச்சிக்கும்" என்றவள்
அவன் பதிலை எதிர்பார்க்காமல்
வெளியே சென்றாள் . கிட்டத்தட்ட ஒரு
வாரம் கழித்து அவள் பேசியது அவனிடம் இப்போது தான்.
இருவரும் கிளம்பி ரிசப்ஷனிற்குச் செல்ல அங்கே இருவருக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. பிறகு மேலே சென்ற கௌசியும் விக்னேஷும்
வாழ்த்துக்களைத் தெரிவிக்க கவிதா
கௌசியின் மாற்றத்தையும் முகப்
பொலிவையும் கண்டு அவளைக் கட்டி
அணைத்தாள். "ரொம்ப சந்தோஷமா
இருக்கு கௌசி.." என்றவள் "நாளைக்கு
கல்யாணம் முடிஞ்சு கிளம்பீறாதே..
என்கூட கொஞ்ச நேரம் இருந்துட்டு போ"
என்று சொன்னாள். பின் போட்டோவை
எடுத்துக் கொண்டு கீழே வர பழைய
ஸ்கூல் ஆசிரியர்கள் சிலர் வர கௌசி
அவர்களுடன் பேசிக் கொண்டு நின்றாள். பின் விக்னேஷையும் அறிமுகம் செய்து வைத்தாள். பதினைந்து நிமிடம் அவர்களுடன் பேசிவிட்டுத் திரும்ப விக்னேஷைக் காணாமல் தேடினாள் கௌசி. அவனும் பிரபுவும் பேசிக் கொண்டு நிற்க அவர்கள் அருகில் சென்றவள் "சொல்லிட்டு வந்திருக்கலாம்ல டா.. நான் உன்னைத் தேடிட்டு இருக்கேன்" என்று விக்னேஷிடம் கேட்க "இல்லை பாத்தோம்.. அப்படியே பேசிட்டு இருந்தோம்" என்றான் விக்னேஷ்.
பின் பிரபு.. விக்னேஷ்.. கௌசி மூவரும்
ஒன்றாகவே சாப்பிடச் சென்று சாப்பிட்டு
முடித்து அவரவர் வீட்டிற்குத் திரும்பினர்.
வந்த இருவருக்கும் தூக்கமே இல்லை
வீட்டில்.. பின் நேரம் தாழ்ந்தே கண்களை
அசந்தவர்கள் காலை நான்கு மணிக்கே
விழித்து விட்டனர். பின் ஐந்து மணிக்கு
கோயிலை அடைந்தவர்கள் சரியாக
முகூர்த்திற்கு முன் அங்கு இருந்தனர்.
அந்த அதிகாலை வேளையில் ஒரு சிலர் தூங்கி வழிய ஒரு சிலர் பரபரப்பாக
இருக்க சுரேஷ் கவிதா முகத்தில் மட்டும்
அப்படி ஒரு பெருமிதம்..
காதலித்தவர்களையே கை பிடிக்கப்
போவதில் அப்படி ஒரு பூரிப்பு. ஒரு
பெருமூச்சுடன் கௌசி திரும்ப
விக்னேஷின் பார்வை தன் மேல்
இருப்பதை கவனித்தாள் கௌசி. ஏனோ
அவன் கண்களைச் சந்திக்க முடியாமல்
திரும்பிக் கொண்டாள்.
பின் முகூர்த்தம் முடிய கௌசியைத்
தன்னுடனே வைத்துக் கொண்டாள்
கவிதா. விக்னேஷும் பிரபுவிடனும்
சுரேஷுடனும் இருந்தான். மதியம் கிளம்ப இருந்தவர்களை வற்புறுத்தி இரவு சாப்பாட்டை சாப்பிட வைத்தே அனுப்பினர் அனைவரும். "நாளை காலை கிளம்பலாம் கௌசி" என்று விக்னேஷ் சொல்ல தலையை ஆட்டினாள் கௌசி.
வீட்டிற்குள் நுழைய விக்னேஷ்
செல்போனை எடுத்துக் கொண்டு
விக்ரமிடம் பேசச் சென்று விட்டான்.
அன்று முழுவதும் இருவரின் பார்வையும் இருவரின் மேல் தான் இருந்தது. கௌசி விக்னேஷ் முதல் முறையாக மதி ஜீவா நிச்சயதார்த்தம் அடுத்து எடுத்துத் தந்த ஆரஞ்ச் மஞ்சள் நிற டிசைனர் சில்க் சேரியை கட்டி இருந்தாள். விக்னேஷும் அன்று பட்டு வேஷ்டியும் மஞ்சள் நிற சட்டையை அணிந்திருந்தான்.
அவன் விக்ரமிடம் பேசிவிட்டு வர கௌசி
வீட்டின் பின் இருந்த தண்ணீர்
தொட்டியில் உட்கார்ந்திருப்பதைக் கண்டு அங்கு சென்று அமர்ந்தான். கௌசியோ அவன் வந்தது உணர்ந்தும் திராட்சைத் தோட்டத்தை வெறித்துக் கொண்டு இருந்தாள். அவனும் ஒன்றும் அதை பெரிதாக எடுத்தக் கொள்ளவில்லை.
"ஏன் விக்கா.. உனக்கு என்னோட லவ்
புரியவே இல்லையா?.. எப்படி டா நாம
ஈருடல் ஓருயிராக வாழந்த அப்புறம்
உன்னால் என்னைப் பார்த்து அப்படிக்
கேட்க முடிந்தது" என்று வந்த அழுகையை அடக்கியபடிக் கேட்டாள் கௌசி.
அவளின் திடீர் கேள்வியில்
தடுமாறியவன் பின் "நீ என்கிட்ட
சொல்லவே இல்லையே கௌசி என்ன
லவ் பண்றன்னு" என்றவன் அவளின்
அடுத்த கேள்விக்கு "ஸாரி" கேட்டான்.
"சொல்லவே இல்லைன்னு சொல்ற..
ஆனா அந்த குரு சொன்னான்.. உன்
மூஞ்சிய பாத்தே தெரிஞ்சது.. நீ உன்
அத்தை மகனை லவ் பண்றன்னு..
நான்சிக்கும் தெரியாதுனு
நினைக்கிறையா? ஆனா உன்னால
கண்டு பிடிக்க முடியலை ல" - கௌசிகா.
"நான் சொல்லவில்லை தான்.. ஆனால்
எனக்கு இருக்க மாதிரி தான் உனக்கு
இருக்கும்ன்னு நினைச்சேன் டா.. நீ நம்ம
கல்யாணத்தைப் பத்தி பேசணும்ன்னு
கூப்பிட்டேல.. அப்போ கூட நான் நீ
என்கிட்ட லவ்வ சொல்லக்
கூப்பிடறயோன்னு தான் நினைச்சேன்டா.. உனக்கு அப்படித் தோணவே இல்லேயா டா" என்று ஆதங்கத்தோடு கேட்டாள்.
அதுவரை உள்ளே வைத்திருந்த
அனைத்தையும் கொட்டினான் விக்னேஷ். "நான் உன்ன எப்போ லவ் பண்ண ஸ்டார்ட் பண்ணேன் தெரியுமா கௌசி.. நான் கனடா ப்ளைட் ஏறும்போது".
"லவ் பண்ண ஆரம்பித்தேன்னு சொல்றத விட.. அப்போ தான்டி உணர்ந்தேன்.. அந்த நான்சியைத் திட்டிட்டு வந்தனே தவிர எனக்கு அதுல துளியும் வருத்தம் இல்லை.. மாறாக உன் நினைப்பு தான் டி.. ஒத்துக்கறேன் நான் அவள லவ் பண்ணேன்னு நினைச்சு அவ அழகுல மயங்கி இருந்தேன் தான். அதுவும் தப்புன்னு அந்த ஆண்டவன் புரிய வச்சான்" என்ற விக்னேஷ் தொட்டியில் இருந்து இறங்க கௌசியும் இறங்கினாள்.
"உன் கூடவே சின்ன வயசுல இருந்து
இருந்தாலோ என்னவோ எனக்குப்
புரியல டி. ஆனா உன்ன விட்டு வந்த
அப்புறம் தான் எனக்கு எல்லாம் புரிஞ்சுது டி. அப்புறம் நீ கஷ்டத்துல இருந்தப்ப என்னால வர முடியல.. மாமா நீ எல்லோரும் வேண்டாம்ன்னு
சொல்லிட்டீங்க.. நான் உனக்கு போன்
மெசேஜ் பண்ணேன் நீ எதுக்கும் ஆன்சர்
பண்ணல.. நான் வந்து உன்னைக்
கல்யாணம் பண்ண இருந்தப்போ தான் நீயும் போயிட்ட.. அப்பாவும் போயிட்டாரு..
என்னால எதையும் தாங்கிக்கவே முடியல டி" என்றவனின் குரல் கரகரத்தது. கௌசிக்கு ரொம்ப நாளாகத் தேடிட்டு இருந்த கேள்விக்கு விடை கிடைத்து விட்டது.. அவனுக்கு எப்போதில் இருந்து காதல் என்று.
அவன் குரலில் இருந்த வேதனையைப்
புரிந்து கொண்ட கௌசி அவனின்
கையைப் பிடித்து அவன் தோளில்
சாய்ந்தாள் "ஸாரி டா.. ஸாரி.. நீ
நான்சியை லவ் பண்ணிட்டு இருப்பே..
அதனால எதுக்கு நடுவுல நான்
வரணும்ன்னு நினைச்சு தான்.. நான்
கிளம்பிட்டேன். ஆனா இங்க வந்தும்
என்னால உன்ன மறக்க முடியல டா"
என்றவளின் குரலும் கரகரத்தது.
"என் வாழ்க்கையைத் திரும்பிப் பார்த்தா
நீதான்டா விக்கா ஃபுல்லா இருக்கே..
நான் பொறந்து பர்ஸ்ட் பேர் சொன்னது
உன் பேர் நான். நான் பெரிய பொண்ணு
ஆகி பர்ஸ்ட் சொன்னதும் உன்கிட்ட தான்.. என் லவ்வ தவிர எல்லாம் உன்கிட்ட தான்டா சொன்னேன் டா" என்றாள் கௌசி ஒரு வித தவிப்புடன்.
"எனக்குப் புரியல டி.. நீ ஜீயைக் கூட ஜீ
மாமான்னு சொல்லுவ.. என்னை அப்படி
எல்லாம் சொன்னதே இல்ல.. கல்யாணம் ஆன அப்புறம் ஆவது சொல்லி இருக்கலாம்ல என்னை லவ் பண்ணத" என்றான் ஆதங்கமாக.
"எனக்கு சொல்லவே தோணலை டா.. நீ
என் கூடையே இருப்ப அப்படின்னு சின்ன வயசுல இருந்து சொல்லவே தோணலை" என்றாள் கௌசி. "நான் கம்பத்தில் இருந்தது உனக்கு எப்படித் தெரியும்" என்று துடித்த உதடுடன் கேட்டாள்.
"அப்பா கடைசியா ஐசியூ வில் இருந்து
என்கிட்ட என்ன சொன்னார் தெரியுமா டி..'கௌசி கம்பத்தில் இருக்கிறாள்.. கௌசி பத்திரம் விக்னேஷ்' என்றுதான்
சொன்னார்.. அதுக்கு அப்புறம் விசாரித்து நீ பத்திரமாக இருக்கிறாய் என்று
தெரிந்து கொண்டேன். அவ்வப்போது
கண்காணித்து கொண்டு தான்
இருந்தேன். ஆனால் அவருக்கு எப்படித்
தெரியும்.. என்று எல்லாம் எனக்குத்
தெரியவில்லை" என்றவனின் கண்களில் தந்தை நினைவில் கண்ணீர் வர அவனை அணைத்துக் கொண்டாள் கௌசி.
"ப்ளீஸ் டா.. ஃபீல் பண்ணாதே... ப்ளீஸ்..
உனக்கு நான் இருக்கேன் விக்கா..
எப்போதுமே.. உன்கூடையே" என்றவள்
அவனின் கண்ணீர் பொருக்காமல் கதற
ஆரம்பிக்க... அவளின் அழுகையை
உணர்ந்தவன் அவளின் கன்னம் பற்றி
"அழாதே டி.. ஆனா ஒண்ணு மட்டும்
புரியது டி.. நான் உன்கூட நீ என்கூட
இருக்கிற வரைக்கும் நம்ம நம்மலாகத்
தான் இருப்போம்.. நடுவில நடந்த
எல்லாம் சூழ்நிலையால நடந்ததே தவிர
நாம அதுக்கு காரணம் இல்லை..
சூழ்நிலை நம்ம லவ்வ இன்னும் ஸ்டாரங்
ஆக்கிருச்சு டி.." என்றவன் அவளை
அணைத்து ஆறுதல் படுத்தினான். மனம் விட்டுப் பேசிய இருவருக்கும் மனம் லேசாகியது. மன பாரம்.. குழப்பங்கள் எல்லாம் நீங்கி தெளிவடைந்தனர்.
அவனின் அணைப்பில் இருந்தவள் "ஐ
லவ் யூ டா விக்கா" என்றாள்.
"இன்னொரு தடவை" - விக்னேஷ்.
"ஐ லவ் யூ டா விக்கா" - கௌசி சிரித்த
படியே.
"இன்னும் ஒரு தடவை" - விக்னேஷ்
அவளை இறுக்கியபடி.
"ஐ லவ் யூ டா விக்கா மாமா" என்று
கௌசி அவனை தன்னுடன் இறுக்கி
காதலை சத்தமாகச் சொன்னாள். "நீ
ஏன்டா என்னை சின்ன வயசுல
தூக்கியதே இல்லை.. ஜீ தான்
தூக்குவானாம்.. உன்னைக் கேட்டா நீ
வேணாம்னு சொல்லிருவயாம்.. ஏன்?"
என்று கேட்டாள். "அது எங்காவது
உன்னை கீழே விட்டிடுவேன்னு பயம் டி..
ஆனா உன்ன பாத்துட்டே தான்
இருப்பேன்" என்றான் அவள்
உச்சந்தலையில் முத்தமிட்டபடி. ஏனோ
இந்தக் காமம் இல்லா அணைப்பு
இருவரையும் அப்படியே அணைப்பில்
இருக்க வைத்தது.
எல்லாம் கொஞ்ச நேரம் தான்..
கௌசியைக் கைகளில் ஏந்தியவன்
"சின்ன வயசுல தூக்காததுக்கு இப்போ
சேத்தி தூக்கறேன்" என்றவன் அவளை
உள்ளே கொண்டு சென்றான்.
அவளை படுக்கையில் கிடத்தியவன்
அவள் மேல் படர அன்றைய இரவில்
தீராத காதலையும் திகட்டாத
காமத்தையும் இருவரும் கற்று அறிந்தனர். அவனது ஒவ்வொரு செயலிலும் கௌசியின் ஊனும் உயிரும் உருகி.. அவளது காதலிலும் உணர்வுகளிலும் விக்னேஷின் ஊனும் உயிரும் பூரித்து அன்றைய இரவில் இருவரும் இருவரிடமும் சரணடைந்தனர். மனம் நிறைந்த இருவரும் விட்டத்தைப் பார்த்து
படுத்திருக்க திடீரென விக்னேஷின் உச்சி முடியைப் பிடித்தாள் கௌசி.
"இனிமேல் என்கிட்ட தேவையில்லாம
சண்டை போட்ட.. அவ்வளவு தான் நீ"
என்று உச்சியில் வைத்த கையை
எடுக்காமல் சுற்றினாள். "சரி டி.. சரி.. நீ
சொல்றதையே கேக்கறேன்" என்றவன்
அவள் இதழில் கவிதை பாட ஆரம்பித்து
அவளைத் தான் பேசிக் கொண்டிருந்ததை மறக்கடித்து அந்த இரவை விடியா இரவாக ஆக்கினான்.
இரண்டு மாதம் கடந்தது...
அன்று ஞாயிற்றுக்கிழமை.. மகாலிங்கம்
அய்யா வீட்டிற்கு சென்று வந்த விக்னேஷ் வீட்டில் சத்தமே இல்லாததை
உணர்ந்தான். தன் அன்னையும் மாமாவும் தூங்கிக் கொண்டிருப்பதை உணர்ந்தவன் டி.வி யைப் போட்டு உட்கார்ந்தான்.
அப்போது தான் கௌசி.. தங்கள்
அறையில் இருந்து வெளியே வந்து
அமைதியாக உட்கார்ந்தாள். அவனிடம்
எதுவுமே பேசவில்லை. "என்ன இவ
சைலன்டா இருக்கா?" என்று
நினைத்தவன்.. "ஏய் என்ன ஆச்சு டி?"
என்று வினவினான். அப்போது தான்
அவனிற்கு அவள் வயதிற்கு வந்த தினம்
நியாபகம் வந்தது. இதே மாதிரி அவள்
வந்து உட்கார்ந்தது என எல்லாம்.
"கௌசி...." - என்று கூப்பிட்ட அவனின்
குரலில் அவ்வளவு சந்தோஷம்.. பெருமை.
அவனை நிமிர்ந்து பார்த்தவள் "வீ ஆர்
பரக்னென்ட்ரா" என்று கௌசி பல்லைக்
காட்டி சொல்ல அவனால்
சந்தோஷத்தைத் தாங்க முடியவில்லை.
அவளைத் தூக்கிச் சற்றியவன் பின்
இறக்கிவிட்டு அவளின் நெற்றியில்
முத்தத்தைத் தர கௌசிக்கு டபுள்
மகிழ்ச்சி ஆகிவிட்டது.
பின் அனைவருக்கும் விஷயத்ததைத்
தெரிவிக்க அனைவருக்கும் இருவரின்
சந்தோஷமும் தொற்றிக் கொண்டது.
வீட்டிற்கு வந்த வியா குட்டியோ "அம்மா
கிட்ட இருந்து ஒரு பாப்பா.. சித்தி கிட்ட
இருந்து ஒரு பாப்பா" என்று துள்ள
அனைவருக்கும் மனம் மகிழ்ச்சியில்
மனம் நிறைந்தது.
அன்று இரவு தங்கள் அறையில் இருந்த
கௌசி விக்னேஷின் நெஞ்சில்
சாய்ந்தபடிக் கிடந்தாள். "விக்கா" என்ற
அழைப்பில் "சொல்லுடி" என்றான்
விக்னேஷ்.
"லவ் யூ டா" - என்றாள் கௌசிகா அவனை அணைத்தபடி.
"லவ் யூ டூ டி" - என்று தன்னை
அணைத்தவளை காதலோடும் தன்
மகவை சுமக்கும் அக்கறையோடும்
அணைத்தான் விக்னேஷ்வரன்.
இனி அவர்கள் வாழ்வில் மகிழ்ச்சி
மகிழ்ச்சி மகிழ்ச்சியே.
இவர்கள் காதல் கனவு என்றும்
மறையாது.
*முற்றும்*
@yaazhini Nover spr sister...happy ending...thank u...innum niraiya eludhunga sissy...vazhthukkal..😍💕💚💙💛
Hi Yaazhini, super story super ending... Koushi oda life happy anathula romba santhosam.. Keep writing 👍
"Marayathe en kanavae" novel semmaya irukku...akka but kowshika character konjam pavam....but avanga rejoining 😍😍😍😍 story la semmaya irunthuchu akka.
@vaniprabakaran Nanri vani.. Meendum adutha kathaiyil Kandipaga santhipom😍