Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


காதலா?? இது காதலா ??

Nila Subramanian

Saha Writer
Team
Messages
25
Reaction score
23
Points
6
அத்தியாயம் :1

"விநாயகனே வினை தீர்ப்பவனே"
என்று விநாயகர் கோவிலில் பாடல் ஒளித்து கொண்டிருக்க அதற்கு போட்டியாக அருகில் இருந்த திருமண மண்டபத்தில்
"அதிகாலை சுபவேளை உன் ஓலை வந்தது"
என்று பாடி கொண்டிருந்தது.
வெளிச்ச புள்ளிகள் தோன்றி காரிருளை ஒளி வெள்ளமாக்கும் முயற்சியில், சூரியன் தன் பொற்கிரகணங்களை பூமி மீது மெதுவாக பாய்ச்சி கொண்டிருந்தான்.
அந்த திருமண மண்டபம் ஜெகஜோதியாய் மின்னியது .மாவிலை தோரணங்களும்,
வாழைமரங்களும், வாசலில் வரவேற்பாய் நிற்க. மண்டபத்திற்கே உள்ள கலகலப்பும், குழந்தைகளின் விளையாட்டும், பெண்களின் பட்டுப்புடவை சரசரப்பும், ஆண்களின் கிண்டல், கேலி பேச்சுகளும். இருபாலரின் அரட்டையும் என்று திருவிழா கோலம் பூண்டிருந்தது.
மணமகள் அறையில், நம் கதையின் நாயகி ஜானகி தயாராகிக்கொண்டிருந்தாள்.உறவினர்களுக்கு ஜானகி ,பெற்றவர்களுக்கு ஜானு, தோழிகளுக்கு கி (key ),Jk இப்படி விதவிதமாக அழைக்கப்படுபவள் .
பியூட்டி பார்லர் பெண் அவளை அலங்கரித்துக் கொண்டிருந்தாள். அருகில் அவள் தோழிகள் சிலர் நின்று கொண்டிருந்தார்கள்.
ஜானகி ,அலமேலு ,வாசுதேவனின் ஏக சீமந்த புத்திரி. 21 வயது சிலை. மிகவும் உயரம் என்றும், மிகவும் குள்ளம் என்றும் சொல்ல முடியாத உயரம்.சிகப்பிற்கும் மாநிறத்திற்கும் இடைப்பட்ட நிறம். பெரிதும் அல்லாது சிறிதும் இல்லாத துறுதுறு கண்கள். குட்டி மூக்கு, அளவான உதடு என்று பிரம்மன் செதுக்கிய சிலை.
அவளை ஜாலி type , மூடி type என்று எந்த வரையறைக்குள்ளும் அடக்கி விட முடியாது. எப்போ கோவப்படுவா, எப்போ பம்முவானு, அவளுக்கே தெரியாது. அவ அம்மாட்ட அவளை பத்தி கேட்டா, ஒரே வார்த்தையில் சிம்பிளா, தனிப்பிறவினு சொல்லிட்டு போய்டுவாங்க. அவளை பத்தி போதும் .ரெம்ப சொன்னா ஹீரோ கோச்சுப்பார்.
மணமகள் அறைக்குள் நுழைந்த அவள் அன்னை அலமேலு,
"என்ன தயாராகியாச்சா ,சீக்கிரம் சீக்கிரம் ஐயர் கூப்டுடுவார். முகூர்த்தத்துக்கு கொஞ்ச நேரம் தான் இருக்கு"என்று அவசரப்படுத்தினார் .
"முடிஞ்சுது mam"
என்று பியூட்டி பார்லர் பெண் கூறிக்கொண்டிருக்கும் போது ஜானகியின் ஒன்று விட்ட அத்தை அங்கு வந்தார்.
"ஏண்டி அலமு நான் கேள்விப்பட்டது உண்மையா??இது லவ் marriage ஆமே???.ஹ்ம்ம்..எங்கக்காலத்துலேல்லாம் மாப்பிள்ளை முகத்தையே சரியாய் பாக்க 1 வருஷம் ஆச்சு. இப்போ அப்படியா?? பிள்ளைங்க, அதுங்களே மாப்பிள்ளை பாத்துக்குதுங்க..கலிகாலம்!!" என்று அங்கலாய்த்தார்.
அலமேலு சங்கடமாய் அவரை பார்த்து முறுவலித்து விட்டு திரும்பி தன் மகளை முறைத்தார்.

அதுவரை இவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்த ஜானு, அன்னை தன்னை முறைக்கவும் சட்டென திரும்பி தன் அருகில் இருந்த ஆருயிர் தோழி ப்ரியாவை முறைத்தாள். இவள் பார்வையை கண்ட பிரியா, அருகில் இருந்த பெட்டியில் ஏதோ தேடுவது போல் குனிந்து கொண்டாள் .அவளிடம் இருந்து தன் பார்வையை திருப்பிய ஜானு,
"அப்படி தான் அத்தை, மாமாவும் சொன்னார். நீ கொடுத்து வச்சவ ஜானு, உன் கணவரை நீயே தேர்ந்தெடுக்க முடியுது, எங்க காலத்துலயெல்லாம் கழுதையை கட்டிவச்சா கூட எதுவும் சொல்லமுடியாதுனு ,நீங்களும் அதையே சொல்லுறிங்களே!! நீங்களும் மாமாவும் செம்ம ஜோடி அத்தை "
எனவும் அவர் தோள்பட்டையில் முகவாயை இடித்துக் கொண்டு அங்கிருந்து சென்றார்.
அவர் சென்றதும், அவள் அன்னை
"உன்னை என்னடி சொல்லி இருக்கேன் ,வாயை அடக்கு, அடக்கஒடுக்கமா இருன்னு சொன்னேனா இல்லியா? ?"என்று கடிந்தார்.
இதை நீ அந்த அத்தை கிட்ட தான்மா முதல்ல சொல்லணும்" என்றதும்,
"உன்னை திருத்த முடியாது. தயவு செஞ்சு இன்னிக்கு மட்டுமாவது அடங்கி இரு,இவங்க ஒருத்தங்க கிட்ட பேசிட்டா போதுமா ??மண்டபம் முழுசும் தான் பேசுது" என்று கூறி விட்டு சென்றார்.
அவர் சென்றதும் திரும்பி ப்ரியாவை முறைக்க ஆரம்பித்தாள்.அந்த பார்வை கேட்டது
"இது லவ் marriage ஆஹ் டி ??"என்று.
அதை கண்ட பிரியா, என் yellow clip அண்ணா ரூம் ல விட்டுட்டேன் போல, போய் எடுத்துட்டு வந்துடுறேன் என்று பொதுவாக சொல்லிவிட்டு, விட்டால் போதும் என்று நடையா?? ஓட்டமா?? என்று தெரியாத அளவுக்கு சென்றாள். ஜானகியின் தோழியும், நம்ம ஹீரோ மணமகன் அர்ஜுனின் தங்கையுமான பிரியா. கிரேட் எஸ்கேப்.:)
............தொடரும்
 

Nila Subramanian

Saha Writer
Team
Messages
25
Reaction score
23
Points
6
அத்தியாயம்-2

மணமகன் அறைக்குள் நுழைந்த ப்ரியாவை, பார்த்த அர்ஜுன் கனிவுடன்

"என்னமா"என்றான்.
இந்த கனிவு முகம் அவனிடம் அரிது.பெரும்பாலும் உணர்ச்சிகளை வெளிப்படுத்தாதா முகம், அல்லது கடுமையை காட்டும் முகம்.
அர்ஜுன் ஐந்தேமுக்கால் அடி உயரம்,மாநிறம்,தீர்க்கமாக, எதிராளியை எடை போடும் கண்கள்,செதுக்கிய மூக்கு ,.அழுத்தமான உதடுகள் என்று யாரையும் ஒரு முறை திரும்பி பார்க்க வைக்கும் அழகன்.ஆனால் அவனின் பார்வை அனைவரையும் எட்டியே நில் என்று எச்சரிக்கும்.

அவனின் முகத்தை பார்த்து தோன்றிய மென் நகையோடு
"நீ ரெடி அயிட்டியானு, Jk பாக்க சொன்னா அண்ணா"

என்று இவள் சொன்ன மறு நிமிடம் இவனின் முகத்தில் ஒரு மாறுதல்.

"கிளம்பலைன்னா, என்ன ரெடி பண்ண போராளமா?"என்று கேட்டுக் கொண்டிருக்கும் போது,அவர்களின் சொந்தக்காரர் ஒருவர் அறை கதவை தட்டி,

"அய்யர் மாப்பிள்ளையை கூப்புடுறார் ,வாங்க" என்றார்.
அர்ஜுன் அறையை விட்டு வெளியே சென்றதும்,

"ஹப்பா!! இப்போவே கண்ணை கட்டுதே!!இவங்க ரெண்டு பேர்ட்டயும் மாட்டிகிட்டு"என்று ஒரு நிமிடம் கண்ணை முடி திறந்தாள்.

அவள் நினைவுகள் பின்னோக்கி சென்றது. கடந்த காலத்தை நினைத்தாள். அவள் இளமை பருவம், பெற்றவர்களோடு கழித்த மகிழ்ச்சியான நாட்கள். பின் பெற்றோரை ஒரு விபத்தில் இழந்துவிட்டு, கண்ணீர் விட்டு கதறிய நாட்கள். ஒன்றன்பின் ஒன்றாக நினைவடுக்குகளில் தோன்றியது.

அவளுக்கும் அவள் அண்ணனுக்கும் 8 வருட இடைவெளி. அவள் 6 ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது தான், அவள் பெற்றோருக்கு அந்த விபத்து நடந்தது. ஒரு உறவினரின் திருமணம் முடித்து வருகையில் சாலை விபத்தில் பலியானார்கள். அப்பொழுது அவள் அண்ணன் இன்ஜினியரிங் 2 ம் ஆண்டு மாணவன்.

பிள்ளைகள் இருவரும் தவித்துப் போனார்கள். அவர்கள் குடும்பம் ஓரளவுக்கு வசதி படைத்த குடும்பம். பிள்ளைகள் பெயரில் சேமிப்பு, சில இடங்கள், இதர சொத்துக்கள் என்று வைத்து விட்டு சென்றதால், பண விஷயத்தில் அவர்கள் சிரமப்பட நேரவில்லை.

அவர்கள் தந்தையின் நண்பர் ,அவர்கள் பெயரில் இருந்த இன்சூரன்ஸ் பணம் கிடைக்க உதவினார். சில சொத்துக்களை விற்று, இவர்கள் செலவுகளுக்கு மாதாமாதம் வரும்படி உதவினார்.

அன்னை வழியில் இவர்களுக்கு நெருங்கிய உறவினர் யாரும் இல்லை.

தந்தையின் ஒரே தங்கையும், பெண் பிள்ளையின் பொறுப்பை ஏற்க யோசித்து, ஏதேதோ காரணம் கூறி ,அவர் கணவனின் அரசாங்க உத்தியோக மாற்றல் காரணத்தை கூறி இவர்கள் பொறுப்பை மறுத்துவிட்டார்.

இவள் அண்ணனும் ,யாரிடமும் உதவி கேட்காமல், இவளுக்கு தாயுமானவனாய் இருந்து இவளை பார்த்துக் கொண்டான். இவளுக்காக அந்த வருட செமஸ்டர் தேர்வுகளை புறக்கணித்து,இவளை பார்த்துக் கொண்டான். மறு வருடம் இவளை நல்ல போர்டிங் ஸ்கூலில் சேர்த்து விட்டு, அந்த செமெஸ்டரில் தான் அனைத்து பேப்பர்களையும் சேர்த்து எழுதினான்.

ஜானகியின் தோழியான பின்பு தான் ,உண்மையான சந்தோசம் என்னவென தன் வாழ்க்கையில் தெரிந்து கொண்டாள் .

இவளுக்கு எப்பொழுதும், இவள் அண்ணனிடம், ஒரு பயம் கலந்த மரியாதை ,ஒரு பக்தி என்றே சொல்லலாம்.

தன் வாழ்வில் மகிழ்ச்சி ஏற்படுத்திய ஜானகி, அண்ணன் வாழ்விலும் மகிழ்ச்சியை ஏற்படுத்துவாள் என்றே ,அவளை அண்ணனுக்கு மணமுடிக்கும் முடிவை எடுத்தாள் .

அண்ணனின் அழுத்தமான குணத்திற்கும், இவளின் வரையறைக்குள் அடங்கா குணத்திற்கும் வெகு பொருத்தம் என்று நினைத்தாள் .

இவள் சிந்தனைகளை கலைப்பது போல் அறையின் வெளியே
"மாப்பிள்ளையோட தங்கச்சியை கூப்புடுங்க, முகூர்த்தத்துக்கு நேரமாச்சு ."என்ற குரல் செவியை தீண்டியதும், அறையை விட்டு வெளியேறி மணமேடை நோக்கிச் சென்றாள் .

மணமேடையில் அமர்ந்திருந்த அண்ணன் மற்றும் ஜானகியின் முகத்தை பார்த்ததும் மனம் திக் என்று ஆனது .அண்ணனின் முகத்தில் கடுகை போட்டால் வெடித்து விடும் கடுகடுப்பு தெரிந்தது என்றால் ,ஜானகியின் முகத்தில், பயத்தில் வேர்த்து வழிந்து, விட்டால் மயங்கி விழுந்து விடுபவள் போல் இருந்தாள் .

"இவர்களை பார்த்தால் யாராவது லவ் marriage என்று நம்புவார்களா??"என்று தோன்றியது.

மணமேடையின் அருகில் சென்று ஜானகியின் கையில் அழுத்தம் கொடுத்தாள் ஆறுதலாக.

அவளை கண்டதும் தான் ஜானகிக்கு உயிரே வந்தது.

"எங்கடி போன? என் கூடவே நில்லு" என்றாள் மெதுவாக.

ப்ரியாவுக்கு இப்போது தான் சிறிது பயம் எட்டி பார்த்தது.

"இவர்களின் மணவாழ்வு நன்றாக அமைய வேண்டுமே" என்று.

இது அனைத்திற்கும் காரணகர்த்தா அவள்.அவர்கள் மணவாழ்வில் பிரச்சனை என்றால் அதை அவளால் தாங்கிக்கொள்ளவே முடியாது.

தன் முடிவு தவறோ! ! என்ற குற்றவுணர்வில் அவள் தவித்து ,நிமிர்ந்து பார்க்கும் போது அவள் எதிரில் மணமேடையின் நேரெதிரே முதல் வரிசையில் விஜய், அவளை பார்த்து கண்களை மூடி திறந்து" நான் இருக்கிறேன்" என்று விழியால் ஆறுதல் கூறினான்.

அவள் சஞ்சலம் எல்லாம் நொடி பொழுதில் விலகியது. மனதில் நிம்மதி பிறந்தது.

....தொடரும்.
 

Nila Subramanian

Saha Writer
Team
Messages
25
Reaction score
23
Points
6
அத்தியாயம்-3
"கெட்டிமேளம், கெட்டிமேளம்"
என்று ஐயரின் குரலோடு, மந்திரமும் கேட்க, அர்ஜுன் மஞ்சள் கயிற்றில் கோர்த்த தாலியை ஜானகியின் கழுத்தில் கட்டி தன்னில் சரிபாதி ஆக்கிக் கொண்டான். இரண்டு முடிச்சை அவன் போட, மூன்றாம் முடிச்சை பிரியா போட்டாள்.இவர்கள் வாழ்க்கை சிறக்க வேண்டும் என்ற வேண்டுதலோடு.
பின் மணமக்கள் இருவரும் திருமண சடங்குகள் முடித்து ,ஜானகியின் பெற்றோரிடம் ஆசிர்வாதம் வாங்க வந்தார்கள். இருவரையும் ஆசிர்வதித்த பெற்றோரின் கண்ணில் ஆனந்த கண்ணீர்.
ஜானகியின் அம்மா அலமேலு ஜானகியிடம்,
"இனிமேலாவது பொறுப்போட நடந்துக்க"என்றதும், அது வரை சற்று பதட்டத்தில் இருந்த ஜானகி, அலமேலுவை முறைத்து
" ஏற்கனவே இந்த cm (சிடுமூஞ்சி) முறைச்சுட்டு இருக்கு. இதுல எரியுற நெருப்புல எண்ணெய், இல்ல இல்ல, பெட்ரோலை ஊத்துது இந்த அலமு "என்று மனதிற்குள் புலம்பிக்கொண்டாள்.
அன்றைய பொழுது முழுவதும் மணமக்களுக்கு சடங்குகளிலும், போட்டோவுக்கு போஸ் கொடுப்பதிலும், விருந்தினரின் அறிமுகத்திலும் கழிந்தது. சற்று இடைவேளை கிடைத்த பொழுது ஜானகி, மணமகள் அறையில் ஓய்வெடுக்க சென்றாள். அறையில் தோழிகளோடு அளவளாவி கொண்டிருந்த போது அவளின் தூரத்து உறவினரும், ப்ரியாவின் வருங்கால மாமியாருமான கோமதி வந்தார். உடன் அவள் அன்னை அலமேலுவும்,மற்றும் சில உறவினர்களும் வந்தனர்.
"பிரியா,வாம்மா!! எங்க சொந்தக்காரங்களெல்லாம் உன்னை பார்கணுங்குறாங்க."என்று அவர்களிடம் இவளை அறிமுகப்படுத்தினார்.
"இதான் நான் விஜய்க்கு பார்த்துருக்க பொண்ணு. பேரு பிரியா. கல்யாண மாப்பிள்ளைக்கு தங்கச்சி.அலமு வீட்டுக்கு போகையில தான் பாத்தேன், பாத்ததும் பிடிச்சுருச்சு. அப்போவே முடிவு பண்ணிட்டேன், இவ தான் என் வீட்டு மருமகனு" என்றார் பெருமை பொங்க .
அந்த உறவின பெண்களில் ஒருத்தி,
" நீங்க முடிவு பண்ணா போதுமா சித்தி?, உங்க பையன்ல முடிவு பண்ணனும். இந்த காலத்துல எத்தனைபேர் ,பெத்தவங்க பாக்குற பிள்ளைகளை மறுப்பு சொல்லாம கட்டிக்குறாங்க, விஜய்ட்ட கேட்டுட்டு தானே முடிவு பண்ணுனீங்க??"என்றாள். வம்புக்கென்றே சிலர் இப்படி தான் காத்திருப்பதுண்டு.
"என் பையன என்ன நெனச்ச? நான் கிழிச்ச கோட்டை தாண்ட மாட்டான். பொண்ணு பார்த்துருக்கேன்னு சொன்னதும், யாரு பொண்ணுன்னு கூட கேக்காம,
"நீங்க சொன்னா சரிம்மா," அப்டினுட்டு போய்ட்டான், பொண்ணு போட்டோ கூட பாக்கல" என்றார்.
"ஹ்ம்ம், நீங்க குடுத்துவச்சவங்க அண்ணி, அண்ணனும் உங்க பேச்சை கேக்குறார், பசங்களும் உங்க பேச்சை கேக்குறாங்க" என்றால் இன்னோரு பெண்மணி.
அவர்களை பெருமை பொங்க பார்த்துவிட்டு ,மகாராணியின் தோரணையோடு, அவ்விடத்தை விட்டு சென்றார் கோமதி, தன் பரிவாரங்கள் புடை சூழ.
அவர்கள் சென்றதும், ப்ரியாவின் நினைவுகள் மீண்டும் கடந்த காலம் நோக்கி சென்றது. விஜய் , அந்த பெயரை சொல்லும்போதே அவள் மனம் தித்தித்தது. இயந்திரகதியில் சென்றுகொண்டிருந்த அவள் வாழ்வில் வசந்தத்தை கொண்டு வந்தவன்.
அவளை விட 3 வருடம் பெரியவன். அவளும் அவனும் ஒரே பள்ளி. அர்ஜுன் அவளை சேர்த்த போர்டிங் பள்ளியில் தான், அவனும் படித்தான் .பள்ளியில் சேர்ந்த புதிதில் யாருடனும் பேசாமல், சதா சர்வகாலமும், பெற்றோரின் நினைவிலும், அண்ணனை பிரிந்த துக்கத்திலும் அழுது கொண்டிருந்தவளை தேற்றுவார் யாரும் இல்லை. அவர்கள் பள்ளி வளாகம் மிக பெரிது. இவள் சேர்ந்த புதிதில் விடுதிக்கும் ,வகுப்பறைக்கு செல்வதற்குள், பல முறை திணறி இருக்கிறாள்.
அப்படி ஒரு முறை தனிமையில் அவள் எண்ணங்களோடு உளன்று விட்டு சுற்றுப்புறத்தை கவனிக்கையில், இருள் சூழ்ந்து காட்சி அளித்தது. வெகுநேரம் அவ்விடத்தில் இருந்துவிட்டதை ,அப்போது தான் உணர்ந்தாள். விடுதிக்காப்பாளர் இவ்வளவு நேரம் இவள் இல்லாததை கண்டு கோபிப்பார் என்ற பயம் ஒரு பக்கம், வழி புலப்படாத நிலை ஒரு பக்கம், என்று பயத்தோடு நின்றவளை., கண்டு அவள் நிலை புரிந்து, அவளை பத்திரமாய் விடுதியில் சேர்ந்தபோது ஆரம்பித்தது ,அவர்கள் நட்பு.
அதன் பிறகு, அவள் ஒவ்வொரு அசைவும், அவன் இல்லாமல் இல்லை என்று ஆகியது. அவன் பள்ளி கல்வி முடித்து அப்பள்ளியை விட்டு செல்லும்வரை ,அவளை கண்ணுக்குள் வைத்து பார்த்துக்கொண்டான். அவன் 12 ம் வகுப்பு முடித்து செல்கையில் அவள் விட்ட கண்ணீர், அணைகளை எல்லாம் நிரப்பும்.
அவளை ஆறுதல் படுத்திவிட்டு சென்றவன் பிறகு ,கடிதம் மூலம் அவள் நலனை கவனித்து கொண்டான். இருவரின் நட்பு எப்போது காதலாக மாறியது என்று இருவருக்கும் தெரியாது. அவர்கள் இருவருக்கும் இடையில் மெல்லிய ஈர்ப்பு மட்டும், எப்போதும் இருந்ததை அவள் உணர்ந்திருக்கிறாள்.
கல்லூரியில் சேர்ந்த பின்பு அவர்கள் சந்திப்பு தொடர்ந்து, இன்று கல்யாணத்தில் முடிந்திருக்கிறது.
அடுத்த வாரம் அவளுக்கும், விஜய்க்கும் திருமணம். அவள் திருமணம் முடிந்த பின்பு தான், தன் திருமணம் என்று பிடிவாதம் பிடித்த அண்ணனை
"நீயும், அண்ணியும் சேர்ந்து தான் என்னை தாரை வார்த்து கொடுக்கவேண்டும் "என்று கூறி ஒரு வழியாக சம்மதிக்க வைத்து, இன்று திருமணம் நல்லபடியாக முடிந்தது.
கடந்த காலத்தில் இருந்து நிகழ்காலத்திற்கு வந்த போது, அவ்வறையில் அவள், ஜானகி, அலமேலு மட்டுமே இருந்தனர். மற்ற தோழிகள் சாப்பிட சென்றிந்தனர்.
"உன் தோழி தானே பிரியா? எவ்ளோ பொறுப்பா இருக்கா.அவங்க அண்ணன் சொன்னாங்கனு ஒரே காரணத்துக்காக மாப்பிள்ளையை பாக்காம கூட சரின்னுட்டா. நீயும் இருக்கியே. ஆளாளுக்கு என்னை கேள்விகேக்கும்படி வச்சுட்ட."என்று அலமேலு கூறினார்.
அதை கேட்ட பிரியா சிரித்து சமாளித்தாள் என்றாள், ஜானகி கொலைவெறியாகி போனாள். "இவ arranged marriage பண்ணுறா, நான் லவ் marriage பண்ணுறனா ?என்ன கொடுமை சரவணன், இது.??"..என்று தலையில் கைவைத்துக் கொண்டாள் .
....தொடரும்.
 

Nila Subramanian

Saha Writer
Team
Messages
25
Reaction score
23
Points
6
அத்தியாயம்-4

மணமக்களை அலமேலுவும், இன்னொரு உறவுக்கார பெண்மணியும் ஆரத்தி எடுத்து வீட்டுக்குள் வரவேற்றனர்.

உள்ளே சென்றதும் ,அர்ஜுனை மாடியில் இருக்கும் அறைக்கு ஓய்வெடுக்க அனுப்பிவிட்டு ,ஜானகியை கீழ் அறையில் சிறிது நேரம் இருக்கும்படி கூறிவிட்டு, அலமேலு பிறவேலைகளை பார்க்க சென்றார்.

அவர் திரும்பி வந்து பார்த்த பொழுது ஜானகி நல்ல உறக்கத்தில் இருந்தாள். பிரியா அருகில் அமர்ந்திருந்தாள்.
அவளை பார்த்து

"நீயும் கொஞ்ச நேரம் தூங்குமா"என்று கூறிச்சென்றார்.

மாலையில் வந்து ஜானகியை எழுப்பினார்.

"ஜானு,எழுந்திரு.."
எழுப்பிய உடன் எழுந்துவிடும் ரகம் இல்லை ஜானகி.பள்ளி,கல்லூரி நாட்களிலேயே அலமேலுவின் ரத்த அழுத்தத்தை எகிற வைப்பவள். இன்று மட்டும் சீக்கிரம் எழுந்து விடுவாளா என்ன!!!

"ஏய்,எழுந்துருடி..இன்னிக்கு தான் கல்யாணம் முடிஞ்சுருக்குன்னு நினைப்பு இருக்கா?எழுந்துக்கோன்னு சொல்லுறேன்ல"

இவ்ளோ நேர சத்தத்திற்கும் இப்பொழுது தான் சிறிது அசைவு தெரிந்தது ஜானாகியிடம்.

"அம்மா,இன்னும் 5 நிமிஷம் மா, ப்ளீஸ்"

என்று கூறிவிட்டு தன் தூக்கத்தை தொடர்ந்தாள்.
பல நாள் பழக்கம்,சீக்கிரம் போகுமா??
அலமேலுவின் bp ஏறுவதை கண்ட பிரியா,

"நான் எழுப்புறேன் மா, நீங்க போங்க"என்றாள்.

"சீக்கிரம் எழுப்பி குளிக்க அனுப்புமா,குளிச்சுட்டு வந்ததும்,இந்த புடவை,நகை எல்லாம் போட்டு அவளை ready பண்ணுமா"என்று கூறிசென்றார்.

அவர் சென்றதும் ஒரு வழியாக அவளை கிளப்பி,
அவள் குளித்து வருகையில் இன்னும் சில தோழிகளும் அறையினுள் இருந்தனர்.

அதில் ஒருத்தி,

"Jk, இன்னிக்கு நம்ம கற்புக்கரசன், வந்தானே, பார்த்தியா??"என்றாள்.

"இல்லியே,எப்போ டி,??,மேடைக்கே வரலியே அவன்"என்றாள் ஜானகி.

"உன் கிட்ட மாட்டுன பாவப்பட்ட ஜீவன் யாருன்னு பாக்க வந்துருப்பான்"என்று இன்னொருத்தி கூறியதும் அனைவரும் சிரித்தனர்.
அனைவரும் கல்லூரி நாட்களை அசை போட்டனர்.

பிரியாவும்,ஜானகியும் ஒரே department கல்லூரியில்,முதல் வருடத்தில் வெறும்,ஹாய்,ஹாய்,தோழிகள் தான், பார்த்தால் ஒரு சிரிப்பு,கேட்ட கேள்விக்கு பதில் .

இப்படி போய்
கொண்டிருந்த நேரத்தில் தான்,ஒரு நாள் கேன்டீனில் ஜானகி தன் தோழிகள் புடைசூழ சாப்பிட்டு கொண்டிருந்தாள்.அவள் இருக்கும் இடம் எப்பொழுதும் கலகலப்பாக இருக்கும்.

இதை பிரியாவும் கவனித்திருக்கிறாள்.அவளுக்கு பக்கத்துக்கு மேசையில் தான் பிரியாவும் அமர்ந்திருந்தாள்.அவர்கள் பேசுவது கேன்டீன் முழுதும் கேட்டது.

"ஏண்டி Jk,காலையில் சாப்பிடலியா?"

"வழக்கம் போல அவங்க அம்மா கிட்ட வம்பு வளதுருப்பா,அடிச்சு தொரத்தி இருப்பாங்க,அப்டித்தானேடி"

"நான் ஒண்ணுமே பண்ணலடி"

என்று அப்பாவியாய் முகத்தை வைத்துக்கொண்டு கூறினாள்.

"நம்ப முடியலையே"

"நம்புங்கடி,நம்பிக்கை,அதானே எல்லாம்"

"இந்த விளம்பர வசனம் எல்லாம் விடாம, நடந்ததை சொல்லு"

"இந்த பக்கத்துக்கு வீட்டு அம்புஜம் இல்ல,காலையிலேயே சீரியல் கதை பேச எங்க வீட்டுக்கு வந்துருச்சு டி, நானும் இப்போ முடிப்பாங்க அப்போ முடிப்பாங்கன்னு பாத்தா, தொடருமே போடாம பேசுறாங்க"

காலையில்….
"அம்மா,அம்மா,சீக்கிரம் வா"

"ஏண்டி கத்துற?"

"என் pink சுடி எங்க,எடுத்து தா"

"ஏழு கழுத்தை வயசாகுது இன்னும் எல்லாத்துக்கும் நான் வேணும்,உன் பீரோ ல தான் இருக்கும்..போய் பாரு"

என்று கூறி விட்டு தன் பேச்சை தொடர்ந்தார்.

அதில் கடுப்பான ஜானகி அவர் உள்ளே வரும் வரை ஹாலில் அமர்ந்திருந்தாள்.

அவர் பங்கஜத்தோடு அளவளாவி அவரை அனுப்பி விட்டு உள்ளே வந்ததும்.தன் அருகில் அமர்ந்திருந்த தந்தையிடம்,

"அப்பா,நாம வேற அம்மா பாக்கலாம் பா, நான் காலேஜ் போனும்,நீங்க வேலைக்கு போனும் இப்டி பொறுப்பில்லாம இருகாங்க.நானே உங்களுக்கு நல்ல பொண்ணா பாக்குறேன்."

"ஆமா,பல்லு போற வயசுல உங்க அப்பாகு பொண்ணுங்க கியூல நிக்குறாங்க"

"வேற யாராவது பொண்ணுக்கு என்னை பிடிச்சுடுமோன்னு,உன் அம்மாக்கு பயம்"என்றார் வாசுதேவன்.

"ஆமா,உங்க சம்பாதியத்துக்கு என்னை தவிர எவளும் குப்பை கொட்ட முடியாது,இதுல இன்னொருதிக்கு வேற நான் பயபுடுறனோ"

அதற்கு அப்புறம் வாசுதேவன் வாயை திறப்பார்??
இதன் பிறகு அப்பா சப்போர்ட் கிடைக்காது என்று தெரிந்த ஜானகி.

"ஒரு சர்வே ரிப்போர்ட் சொல்லுதாம்,வீட்டுல அன்பு கிடைக்காதா பிள்ளைங்க வெளியில அந்த அன்பை தேடுவாங்களாம்,நீ இப்படியே என்னை கண்டுக்காம இரு,நான் யாரையாவது லவ் பண்ண போறேன்"

"யாரு,நீ??முச புடிக்குற நாயை மூஞ்சியை பார்த்தா தெரியுமாம்,லவ் பண்ணுறவ சொல்லிட்டா செய்வா, நீ அதுக்கெல்லாம் சரி பட்டு வர மாட்ட போடி"என்று கூறிவிட்டு கிச்சேனுள் சென்றார்.

ஜானகி,கோப மூச்சு விட்டு கொண்டு,

"இப்படியே சொல்லிட்டு இரு ,ஒரு நாள் எவனையாவது இழுத்துட்டு ஓடுறனா, இல்லியானு பாரு"என்றது தான் தாமதம்…

அவள் அம்மா கிச்சேனில் இருந்து கரண்டியுடன் வெளியே வந்து

"அடிங்,அப்படி மட்டும் செய்,உன் காலை ஒடைச்சு அடுப்புல வைக்குறேன்"என்றார்.

அதை முழுவதும் எங்கு கேட்டாள் ஜானகி,அவர் கரண்டியுடன் ப்ரஷணமானதும் விடு ஜூட் தான்…

தன் கதையை ஜானகி கூறி முடித்ததும்..அதுவரை அவள் கூறியதை கேட்ட பிரியா அடக்க மாட்டாமல் சிரித்தாள்.

அவள் சிரிப்பில் அவளை பார்த்த ஜானகி

"நீ மட்டும் ஏன் தனியா உக்காந்துஇருக்க,எங்க ஜோதில ஐக்கியமாகு"என்றாள்.

அப்படி ஆரம்பித்த அவர்கள் நட்பு இன்று உறவாக மலர்ந்திருந்தது.
 

Nila Subramanian

Saha Writer
Team
Messages
25
Reaction score
23
Points
6
அத்தியாயம்:5

ஜானகி மற்றும் ப்ரியாவின் நட்பு, நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து கொண்டிருந்தது.ஜானகி வீட்டிலிருந்து கல்லூரி வருபவள்,பிரியா ஹாஸ்டல்லில் இருப்பவள்.சனி,ஞாயிறுகளில் ஜானகி தன் வீட்டிற்கு, ப்ரியாவை அழைத்து சென்று விடுவாள்.ஆரம்பத்தில் தயங்கிய பிரியா ,ஜானகியின் வற்புறுத்தளிலும்,அலமேலுவின் அன்பிலும் அவள் வீட்டிற்கு விரும்பியே சென்றாள்.

அவள் விஜயை சந்திப்பது சனி,ஞாயிறுகளில் தான், ஜானகியின் வீட்டிற்கு சென்ற பின், அவர்கள் சந்திப்பு சிறிது குறைந்தது.அது தான் கொஞ்சம் வருத்தம் ப்ரியாவிற்கு.
சில நாட்களில் வேறு காரணம் கூறி ,ஜானகியின் வீட்டிற்கு செல்லாமல் விஜயை சந்திக்க சென்றுவிடுவாள்.
ப்ரியாவின் காதல், ஜானகிக்கு ஆரம்ப நாட்களில் தெரியாமல் இருந்தது.அதனால் அவள் சொல்லும் காரணத்தை நம்பிவிடுவாள்.
ஜானகி கல்லூரி பேருந்தில் வருபவள்.
முதல் முதலாக ப்ரியாவை வீட்டிற்கு கூட்டி செல்வதற்காக கல்லூரி பேருந்தை நோக்கி தோழிகள் வந்துகொண்டிருந்தனர்.

"ஆனாலும், நீ லவ் பண்ணுறேனு சொன்னா நானே நம்ப மாட்டேன், உங்க அம்மா நம்புவங்களா??சீனியர்ல இருந்து புதுசா பாக்குற ஆள் வரை அண்ணனு கூப்பிட்டு பேசுற ஆள் நீ,கேட்டா, அப்டி தான் கூப்பிட தோணுத்தும்ப,இதுல நீ லவ் பண்ணி marriage பண்ணி நடக்குற கதையா இது?"என்று ஒருத்தி கூற

"நான் லவ் marriage பண்ணிக்குவேணு எப்போ சொன்னேன்,அது சும்மா அலமேலுவ கடுப்பேத்த சொன்னது,யாரு ,??ஒருத்தனை பார்த்து,பேசி,பிடிச்சு,அவன் நல்லவனா?கெட்டவனானு?யோசிச்சு,வீட்டுல போராடி,பட்டினி இருந்து..ஹப்பா எவ்ளோ கஷ்டம்.

அப்பா ,அம்மா,கஷ்டப்பட்டு அலைஞ்சு,விசாரிச்சு கண்டுபிடிக்குற பையன கல்யாணம் பண்ணிட்டு easy அஹ் செட்டில் ஆகுறது விட்டு,லவ் marriage ஆம் போங்கடி"

என்று பேசிக்கொண்டு வருகையில் அவர்கள் பேருந்தை நெருங்கி இருந்தார்கள்.

அப்பொழுது பேருந்தில் ஏறும் படிகளின் அருகில் நின்று கொண்டு ஒரு மாணவன் ஏறுபவர்களை எல்லாம்,நீ அந்த கடைசில உக்காரு, நீ வலது பக்கம் நாலாவது சீட்ல, ஜன்னல் கிட்ட உக்காரு, என்று ஆணையிட்டு கொண்டிருந்தான்.அவனை பார்த்த பிரியா,

"யாருடி இவன், ஓவரா சீன் போட்டுட்டு இருக்கான்,இவன் சொல்லுற இடத்துல தான் உக்காரணுமா??" என்றாள்.

"இவனை தெரியாதா இவன் தான் கற்புக்கரசன்."

"என்னது கற்புகரசனா??"

"ஆமாடி,நம்ம காலேஜ் பொண்ணு கற்புக்கெல்லாம் இவன் தான் full ஆத்தோரிட்டி.ப்ரீதிக்கு நான் கியாரண்டி மாறி, பொண்ணுங்களுக்கு இவன் கியாரண்டி,அப்டி நெனச்சுட்டு தான் சுத்துறான்"என்றாள்.

பேருந்தில் ஏறும் போது
"கற்புக்கரசன் கொஞ்சம் வழிவிடுங்க" என்றாள்.

அவன் இவளை முறைத்து கொண்டே வழிவிட்டான்.

பேருந்தில் ஏறியதும்
"என்னடி,அவன் பேரே அதானா??, நீ சொன்னதுக்கு அவன் ஒண்ணுமே சொல்லல"என்றாள்.

"அவன் பேரு கலையரசன்,என்கிட்ட வம்பு பண்ணமாட்டான்"என்றாள்.

"அதென்ன ,உன்கிட்ட மட்டும்?"என்று பிரியா கேட்டாள், அதே நேரத்தில் கலையரசன் நண்பனும் அதையே அவனிடம் கேட்டான்,

"ஏன்டா,அந்த பொண்ணு உன்னை இப்டி கூப்பிட்டு போகுது,நீயும் பேசாம இருக்க"என்றான்.

"அவ ஒரு ராங்கி டா மச்சான்,நானும்,அவளும் ஒரே allied, நம்ம ஸ்ட்ரிக்ட் ப்ரொபசோர் பாண்டியராஜ் சார் class எடுத்துட்டு இருந்தார்.அன்னைக்கு காலையில் தான் பஸ்ல இவளுக்கும் எனக்கும் கொஞ்சம் தகராறு,அதை மனசுல வச்சுட்டு என்னை ஒருவழி பண்ணிட்டாடா"

அன்று…
"ஜானகி,getup .இப்போ நான் என்ன நடத்தினேன் சொல்லு"

நம்ம ஜானகி அதை கவனிச்சுருந்தா தானே தெரிய,திரு திரு என்று முழித்தாள்்.

அதை கண்ட கலையரசன் நமட்டு சிரிப்பு சிரித்தான்.அதை பார்த்த ஜானகி கடுப்பில் நின்று கொண்டிருந்தாள்.

"என்ன நான் கேட்டுட்டு இருக்கேன், இப்டி முழிக்குற?பாடத்துல கவனம் இருந்தா தானே,??அப்படி என்ன பேச்சு பக்கத்துல"என்று படப்பட என்று பொரிய ஆரம்பித்தார்.

"உங்கள பத்தி தான் சார் பேசிட்டு இருந்தோம்"

"என்ன??என்னை பத்தியா??"

"ஆமா சார்"

"என்னை பத்தி என்ன பேசுன??"

"காலையில்,பஸ்ல வரையிலே கலையரசன்,நம்ம பாண்டி சார்,காஞ்சமிளகாய்க்கு கை,கால் முளச்ச மாறி இருக்காரே,அவங்க wife மல்லிகா mam, fridgeல இருந்து எடுத்த பெங்களூர் தக்காளி மாறி இருக்காங்களே, இவங்க ரெண்டு பேருக்கும் எப்படி love marriage ஆச்சுனு கேட்டான் சார்,அதான் எப்படின்னு பேசிட்டு இருக்கேன்"என்றாள்.

கலையரசன் அடிப்பாவி என்று தலையில் கை வைத்து கொண்டான்.

பண்டியராஜனும்,அவர் மனைவியும் இந்த கல்லூரியில் தான் பேராசிரியர்களாக பணி புரிகிறார்கள்.காதல் மணம்.

"இந்த சிடுமூஞ்சிக்கு,எப்படி டி இப்டி சூப்பர் wife"என்று பலமுறை தோழிகளிடம் கலாய்த்துள்ளாள் ஜானகி.அதை இப்பொது கலையரசன் பக்கம் திருப்பிவிட்டாள்.

ஏற்கனவே கடுப்பில் இருந்த பாண்டியராஜன்,இன்னும் கடுப்பாகி
"Both of you getout"என்று கத்தினார்.

கலையரசன் கூற வந்த எதையும் அவர் கேட்கவில்லை.
இருவரும் வகுப்பறையை விட்டு வெளியேறியதும்,கலையரசன்

"என்ன, திமிராடி??, உன்னை என்ன பண்ணுறேன் பாரு"என்றான்.

"வாடி,போடின பல்லை தட்டிடுவேன்"என்ற ஜானகி திரும்பி வகுப்பறைக்குள் செல்ல போனாள்.

"ஏய்!எங்க போற?"

"உள்ள போய், சார் கிட்ட "சார் நீங்க தான், நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லல,அதுனால உங்க wife கிட்டேயே இத கேக்கலாம்னு கலையரசன் சொல்லுறான்னு,போய் சொல்ல போறேன்"என்றாள்.

"அம்மா,தாயே ஆளை விடு" என்று கும்பிடு போட்டு ஓடியவன் தான்.

இன்று வரை ஜானகியின் பக்கம் தலை வைத்து படுபதில்லை.
அவள் கூறியதை கேட்ட பிரியா சிரிப்பதை நிறுத்த சில நிமிடமானது.

"இன்னா செய்தாரை ஒருத்தல் அவர்நாண
வைத்து செய்து விடல்..
இதான் ஜானகி பாலிசி." என்றாள்.

கல்லூரி நினைவுகளில் இருந்து வெளிவந்த பிரியா ,ஜானகியின் ஒப்பனைக்கு உதவினாள்.

"அந்த கலையரசனே தப்பிச்சோம்,பொலச்சோம்னு ஓடிருப்பான்,அவன் மேடைக்கு வந்து gift கொடுக்கலைன்னு வருத்த படுறா பாரு"என்று இவளை ஓட்டி கொண்டிருந்தார்கள்.

அப்பொழுது உள்ளே நுழைந்த அலமேலு,

"என்ன கிளம்பியாச்சா??"என்று ஜானகியிடம் கேட்டவர்.

"நீங்கல்லாம் சாப்பிட போங்க"என்று அவள் தோழிகளை அனுப்பி விட்டு,கொண்டுவந்திருந்த உணவை அவளிடம் கொடுத்து

"இதை சீக்கிரம் சாப்பிடு,பெரியம்மாவை வர சொல்லுறேன், அவங்க உன்னை கூட்டிட்டு போய் மாடியறையில விடுவாங்க,வாலை சுருட்டி வச்சுட்டு மாப்பிள்ளை சொல்லுறதை கேட்டு நடந்துக்க"என்று கூறிச்சென்றார்.

அவ்வளவு நேரம் கல்லூரி நாட்களின் சந்தோஷத்தில் இருந்த ஜானகிக்கு நிகழ்காலம் கிலியை ஏற்படுத்தியது.

அன்னை கொடுத்த உணவு உள் இறங்க மறுத்தது.

'இந்த பிரியாவும் இவளுங்க கூட போய்ட்டாளே'என்று மனம் புலம்ப

'அவளையும் கூட்டிட்டு மாடிக்கு போ போறியா?உன் மூளையை மியூசியம்ல தான் வைக்கணும்'

என்று இன்னொரு மனம் கலாய்த்தது.

சிறிது நேரத்தில் அவள் பெரியம்மா வந்து அழைத்து செல்ல, புலிக்குகைக்குள் செல்லும் பலியாடு போல ஒருவித திகிலுடன் மாடியறைக்கு சென்றாள்.
 

Nila Subramanian

Saha Writer
Team
Messages
25
Reaction score
23
Points
6
அத்தியாயம்:6
அறைக்குள் நுழைந்த ஜானகி,மெதுவாக நிமிர்ந்து கண்களை சுழட்டி பார்த்தாள்.அறையில் யாருமில்லை.

'எங்க பயபிள்ளையை காணும்,நம்ம பெருமை தெரிஞ்சு ஓடிடுச்சோ??'என்று மனதிற்குள் பேசிக்கொண்டிருந்த போது,குளியலறை கதவை திறந்து கொண்டு அர்ஜுன் வந்தான்.

'ஆத்தாடி இங்க தான் இருக்கானா?'

என்று நினைத்து வெளியில் அத்தனை பற்களையும் காட்டி ஒரு அசட்டு சிரிப்பு, சிரித்து வைத்தாள்.
அவளை பார்த்துவிட்டு ஒன்றும் கூறாமல் கட்டிலில் போய் அமர்ந்தான்.

இப்போ என்ன பண்ணுறது??என்று தெரியாமல் அங்கேயே நின்றவளை,

"ஏன் ,அங்கேயே நிக்குற?? வந்து தூங்கு,இன்னிக்கு முழுதும் நெறய சடங்கு,சம்பரதாயம்னு களைப்பா இருக்கும்,"என்றான்.

'என்ன ஒரு அதிசயம்,இப்போ நம்ம கிட்ட தான் இவ்ளோ பொறுமையா பேசுனாரா??'

என்று சிந்தித்தவள்

'அச்சச்சோ,நான் எப்போவும் தெற்க படுத்தா, மத்த மூணு திசையில எதுல எழுந்துபேன்னு எனக்கே தெரியாது.

அலமு கூட

"கழுத்தை மாறி புறலாதடினு திட்டும்.".

இன்னிக்கு இந்த பயபுள்ள சட்னியா, இல்ல விடிஞ்சதும் நான் சட்னியானு தெரியலையே.'என்று நினைத்துக்கொண்டு அந்த இடத்தை விட்டு அசையாது நின்றாள்.

"சொல்லிட்டே இருக்கேன்,அங்க நின்னு என்ன கனவு கண்டுட்டு இருக்க??காது கேக்குமா?? இல்ல அதுவும் போச்சா??"

'அதானே பார்த்தேன்,இந்த சிடுமூஞ்சி சாதாரணமா பேசிடுச்சேனு',He is back'ஆமா,காதும் போச்சானு கேக்குறாரே வேற என்ன போச்சுங்குறார்??உன்னை total அஹ் fuse போன bulb னு நெனச்சுட்டார் போலயே,எப்படி இருந்த நீ இப்டி அயிட்ட'

என்று தனக்கே counter குடுத்துக் கொண்டு கட்டிலில் சென்று படுத்தாள்.

'ஜானு,be alert. control அஹ் தூங்கு,இங்க,அங்க அசையக்கூடாது.Behave yourself'என்று பல கட்டளைகளை தனக்கே இட்டுக்கொண்டு படுத்தவள்,சிறிது நேரத்தில் உறங்கி போனாள்.

அவள் தூங்கும் வரை அமர்ந்திருந்தவன்,அவள் தூங்கியதும் ,அவள் அருகில் நெருங்கி நெற்றியில் முத்தமிட்டு,

"இன்னும் என்னை வெகு தூரம் கூட்டிச்செல்லடி..
பண்ணிசையில் பாடங்கள் மாற்றிச்சொல்லடி..
கன்னி உந்தன் மனக்கூண்டில் என்னை தள்ளாடி..
கண்ணசைத்து அங்கேயே வைத்துக்கொள்ளடி…"
என்று மெல்லிய குரலில் பாடினான்.

அவன் முகத்தில் மெல்லிய புன்னகை அரும்பியது.
சத்தமாய் பாடி இருந்தாலும் நம்ம ஜானு எழுதிரிக்க மாட்டாங்குறது வேற விஷயம்.

சிறிது நேரத்திலேயே அவன் மீது கை,கால் எல்லாம் தூக்கி போட்டு தூங்க ஆரம்பித்து விட்டாள்.
முகத்தில் தோன்றிய நகையோடு அவனும் உறங்கிப் போனான்.
மறுநாள் கண் விழித்த ஜானு,தான் படுத்திருக்கும் நிலை பார்த்து பதறி எழுந்தாள்.

அருகில் படுத்திருந்த அர்ஜுனை பார்த்தாள், அவன் உறங்கிக்கொண்டிருந்தான்.
'நல்லவேளை இன்னும் எழுந்துக்களை'என்று நினைத்துக்கொண்டு வேகமாய் குளியலறையில் புகுந்து கொண்டாள்.

அவள் குளியலறையில் நுழைந்ததும் எழுந்து கொண்ட அர்ஜுன்,அவளின் செய்கையை நினைத்து சிரித்துக் கொண்டு,திரும்பவும் தூங்குவது போல் படுத்துக்கொண்டான்.
அம்மா சொன்னது போல, தலைக்கு குளித்து வந்த ஜானகி,அவன் இன்னும் தூங்குவதை பார்த்துவிட்டு,கீழே சென்றாள். அவள் சென்றதும் எழுந்த அர்ஜுன்,குளியலறையுள் நுழைந்தான்.

அவள் வருவதை பார்த்த அலமேலு,அவள் கையை பிடித்து அறையினுள் இழுத்துச்சென்றார்.

"ஏம்மா, இப்டி இழுக்குற"என்று கடுகடுத்தவளை கண்டுகொள்ளாமல்,

"நேத்து ,மாப்பிள்ளை எப்படி நடந்துகிட்டார்??,நீ ஒழுங்கா நடந்தியா??சந்தோசமா இருந்திங்களா??"

என்று அடுக்கடுக்காக கேள்வி அடுக்கியவரை எரிச்சலுடன் பார்த்த ஜானு

"ஹ்ம்ம்..அவர்,புருஷன் மாறி நடந்துகிட்டார்,நான் பொண்டாட்டி மாறி நடந்துகிட்டேன்,போதுமா??"

என்றாள்.
அவளின் பதிலால் கோவமான அலமேலு மேலும் கேட்பதற்குள்,பிரியா அங்கே வந்தாள்.

மேற்கொண்டு எதுவும் கேட்க முடியாத கடுப்பில் அலமேலு அவளை முறைத்து விட்டு அவ்விடம் விட்டு சென்றார்.
அவர் சென்றதும் ,அவள் முகத்தையே பார்த்த ப்ரியாவை கண்டு

"என்னடி,இன்னிக்கு தான் புதுசா பாக்குற மாறி பாக்குற??ஒளிவட்டம் ஏதும் தெரியுதா??"

என்று திரும்பி பார்த்துக் கொண்டு கேட்டாள்.

"விளையடாத கி,ஒன்னும் பிரச்சனை இல்லில"என்று முகத்தில் கவலை பொங்க கேட்டாள்.

"பிரச்சனை இருந்தா விளையாட முடியுமாடி??என்னை பத்தி கவலை படாத.கல்யாணப்பொண்ணு அதை பத்தி மட்டும் தான் யோசிக்கணும். சந்தோசமா இரு.எங்க அண்ணனை எப்படி பார்த்துக்குறதுன்னு யோசி.போ"

என்றாள்.

இன்னும் தயங்கி நின்ற ப்ரியாவை

"என் வாழ்கைடி இது.அவ்ளோ சீக்கிரம் சிக்குன ஆட்டை விட்டுடுவனா, பிரியாணி போடாம"என்றாள்.

"ஏய்!!என்அண்ணனை ஆடுங்குறியா??உன்னை" என்று அடிக்க துரத்திய ப்ரியாவிடம் இருந்து தப்பித்து ஓடியவள், மாடியில் இருந்து இறங்கி கொண்டிருந்த அர்ஜுன் மேல் முட்டி நின்றாள்.

"ஆத்தாடி!!''என்று முழித்து நின்றவளை கண்டுகொள்ளாமல் ஹாலில் சென்று அமர்ந்தான்.
அவன் அருகில் சென்று பிரியா அமர்ந்து கொண்டாள்.கையில் காப்பியுடன் வந்த அலமேலு,ஜானுவின் அருகில் சென்று

"மரம் மாறி நிக்காம, இதை கொண்டு போய் மாப்பிளைட்ட கொடு"என்று முணுமுணுத்தார்.

'நான் வந்து அரைமணி நேரமாச்சு எனக்கு தண்ணி கூட இல்ல,நேத்து வந்த மாப்பிள்ளைக்கு உடனே காபி.பொறந்தா மாப்பிள்ளையா பிறக்கணும் பா'

என்று மனதில் நினைத்து, வெளியில் அலமேலுவை முறைத்து விட்டு அர்ஜுனிடன் காப்பியை நீட்டினாள்.

சிறிது நேரத்தில் காலை உணவு தயார் என்று கூறி ஜானுவிடம் ,
மாப்பிள்ளையை அழைத்து உணவு பரிமாற சொன்னார்.
சாப்பாட்டு மேஜையில் அர்ஜுனுக்கு பரிமாறிய ஜானு அருகில் நின்று கொண்டு வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்.அவன் தட்டில் எது தீர்ந்தது, எது வேண்டும்,எதுவும் கேட்காமல்,வேணும்னா கேப்பாரு, அப்போ வைக்கலாம்,என்று அந்த வீட்டை புதிதாய் பார்ப்பது போல சுற்றிப்பார்த்து கொண்டிருந்தாள்.
உணவு தீர்ந்ததும் நிமிர்ந்து பார்த்த அர்ஜுன்,

"இங்க எதுக்கு நிக்குற"என்றான்.

"உங்களுக்கு சாப்பாடு,வைக்க"

'நீ வைக்குற லட்சணம் தான் தெரியுதே'என்று நினைத்தவன்.

"அந்த ஜன்னல் கிட்ட போய் நின்னா, இன்னும் நல்லா வேடிக்கை பாக்கலாம்.போ"என்றான்.

'என் வீட்டுல,எங்க இருந்து பாத்தா எது தெரியும்னு எனக்கு தெரியாதா??இவர் பெரிய கூகிள் மேப்'என்று மனதினுள் நொடித்துக் கொண்டு அவ்விடம் விட்டு சென்றாள்.

அவள் ஹாலில் இருப்பதை கண்ட அலமேலு,

"ஏண்டி!!மாப்பிள்ளைக்கு பரிமாற சொன்னா, இங்க நின்னுட்டு என்ன பண்ணுற??"என்றார்.

"அவர் சாப்பிட்டார் மா, அதான் வந்துட்டேன்".

"அவர் எழுந்திரிக்குற வரை ,கூட நிக்காம ,இங்க வந்து என்ன வேடிக்கை??".

அன்னையும் வேடிக்கை பார்ப்பதாய் கூறியதும் கடுப்பான ஜானகி,

"ஆமா,அவரு பெரிய நாட்டாமை,நான் நாட்டாமை சம்சாரம், அவர் சாப்பிட்டதும் வெத்தலை மடிச்சு கொடுத்து,அவரு புளிச்சு,புளிச்சுன்னு எச்சிய துப்புறதுக்கு vessel பிடிச்சிட்டு நிக்கணுமக்கும்"

அலமேலு பேச வாய் திறப்பதற்குள்,அர்ஜுன் அங்கு வந்துவிட,

,"நீங்க கொஞ்ச நேரம் ஓய்வெடுங்க மாப்பிள்ளை,இன்னிக்கு கல்யாணம் விசாரிக்க சொந்தகாரங்கல்லாம் வருவாங்க,சாயந்தரம் கோயிலுக்கு போகணும்"

என்று கூறி விட்டு மகளை முறைத்து விட்டு அவ்விடம் விட்டு சென்றார்.
அதன் பின் வந்த ஒரு வாரமும் அலமேலுவின் கண்ணில் தனியாக மாட்டாமல்,கண்ணாமூச்சி ஆடி கொண்டிருந்தாள் ஜானகி.அவர் கேள்விக்கும்,கோபத்திற்கும் பயந்து.
ப்ரியாவின் திருமணமும் அதற்கு உதவி புரிந்தது.ப்ரியாவுடன் ஷாப்பிங்,பியூட்டி பார்லர் என்று பொழுது நன்றாகவே கழிந்தது.
ப்ரியாவின் திருமணமும் இனிதாய் முடிந்தது.
திருமணத்திற்கு மறுநாள் அர்ஜுன்,ஜானகியின் பயணம் சென்னையை நோக்கி தொடங்கியது
 

Nila Subramanian

Saha Writer
Team
Messages
25
Reaction score
23
Points
6
அத்தியாயம்:7

ரயிலில், முதல் வகுப்பு குளிர்சாதன பெட்டியில், டிக்கெட் புக் செய்திருந்தான் அர்ஜுன்.கண் கலங்க ,அனைவரிடமும் விடை பெற்று, ரயிலில் ஏறினாள் ஜானகி.என்ன தான் திட்டினாலும், அலமேலுவுக்கும் ஒரே மகளை பிரியும் வருத்தத்தில் கண்ணில் நீர் வழிந்தது.வாசுதேவன் தான், தன்னையும் தேற்றி,மனைவிக்கும்,மகளுக்கும் ஆறுதல் கூறி தேற்றினார்.

ரயில் புறப்படும் வரை நின்று விட்டு கிளம்பினார்கள்.சிறிது நேரம் சோகத்தில் இருந்த ஜானகிக்கு AC குளிர் தெரிய ஆரம்பித்தது .

AC என்றாலே ஜானகிக்கு அலர்ஜி.

ஒத்துக்கொள்ளாது.

AC தியேட்டர்கு ஸ்வட்டெர் உடன் போகும் ஆள் ஜானு.இவ்ளோ நேரம் சோகத்தில் கவனிக்காத குளிர், இப்பொழுது தான் வேலையை காட்ட ஆரம்பித்தது.

'இந்த மனுஷன் செகண்ட் கிளாஸ்லையெல்லாம் போகமாட்டாரா??இப்படி AC பெட்டியை புக் பண்ணி இம்சை பண்ணுறாரே'

என்று வழக்கம் போல மனதுக்குள் வருத்தெடுத்தாள்.

இரண்டு போர்வை போர்்த்தியும் குளிர் விடவில்லை.வீட்டிலேயே சாப்பிட்டு வந்ததால்,சிறிது நேரத்தில் அர்ஜுன் ,தன் பெர்த்திள்் படுத்து உறங்கிவிட்டான்.
'எப்படி தூங்குது பாரு,இங்க ஒருத்தியை கட்டி கூட்டிட்டு வந்தோமே, அவளுக்கு என்ன வேணும்,தூங்குனாளா?இல்லியா?? எதுவும் கண்டுக்காம.நீ கொடுத்து வைச்சது அம்புட்டு தான் ஜானு'

என்று அவளுக்கே அவள் ஆறுதல் கூறிக்கொண்டாள்.தூக்கம் வராததால் அவள் நினைவுகள் பின் நோக்கி சென்றது...
ஒரு சனிக்கிழமை,வீட்டில் அலமேலுவின் அர்ச்சனை பொறுக்க முடியாமல் ,வெளியே சென்றுவருவோம் என்று கிளம்பி ,புகழ் வாய்ந்த ஷாப்பிங் mall ஒன்றிற்கு வந்திருந்தாள்.
அங்கே, அவளுக்கு பிடித்தமான வேடிக்கை பார்க்கும் செயலை செய்து கொண்டிருக்கும் போது தான் ,கண்ணில் பட்டார்கள்,பிரியாவும்,விஜயும்.

'நம்ம பிரியா மாறி இருக்கு,யார் கூட பேசிட்டு இருக்கா??இவரு தான் இவ அண்ணனா??ஒரு அண்ணா இருக்கதா சொன்னாளே.ஆனா இன்னிக்கு வராருன்னு சொல்லையே'

என்று ஏகப்பட்ட கேள்வியுடன் அவள் முன் சென்று நின்றாள்.
இவளை பார்த்ததும் அதிர்ச்சியுடன் பிரியா எழுந்து நின்றாள்.

'இவ ஏன் ஓவரா ஷாக் ஆகுறா??அப்போ இவரு வேற யாரோ'

என்று முடிவெடுத்த ஜானு.
"இதான், இன்னிக்கு நீ பாக்க வேண்டிய முக்கியமான வேலையா??"

என்று விஜயை சுட்டி காட்டி கேட்டாள்.

"இல்ல ஜானு,இவர் என் ஸ்கூல் friend, பேரு விஜய்,இன்னிக்கு ஏதேச்சையா பாத்துகிட்டோம்,அப்படி தானே விஜய்"

என்று அவனையும் துணைக்கழைத்தாள்.
அவள் பதட்டமும்,ஜானு என்ற விளிப்பும், இவள் சந்தேகத்தை அதிகரித்தது.

பொதுவாக கி, jk இப்படி அழைப்பவள் இன்று எதையோ மறைக்க பார்க்கிறாள் என்று யூகித்த ஜானு,அவளை கண்சிமிட்டாது பார்த்தாள். அதற்கு மேல் பொய் உரைக்க முடியாத பிரியா.

"சாரி டி,இவரும், நானும் ஒரே ஸ்கூல்.ரெம்ப வருசமா லவ் பண்ணுறோம்.இவர் சொந்த ஊர் இதுன்னு தெரிஞ்சு தான், இங்க காலேஜ்ல சேர்ந்தேன்.உங்கிட்ட மறைக்கணும்னு இல்ல.லவ் பத்தி உனக்கு, பெருசா ஏதும் நல்ல ஒப்பீனியன் இல்ல ,அதான்"

என்று தலையை குனிந்து கொண்டு சொல்லி முடித்தாள்.

பதில் ஏதும் சொல்லாமல், ஜானகி, அவ்விடம் விட்டு சென்றாள். அவள் போவதை வருத்தத்துடன் பார்த்துக்கொண்டு நின்றாள் பிரியா.

"அவங்க போறாங்க!!,நீ பாட்டுக்கு நிக்குற,போய் சமாதானப்படுத்தி கூட்டிட்டு வா"என்று கூறிய விஜயை பார்த்து,

"அவ கோவமெல்லாம் ,ஒரு மணி நேரம் கூட நிக்காது, அவளை நான் சமாதானப்படுத்திக்குறேன்.நீங்க கவலைப்படாதிங்க"என்றாள்.

ஜானுவுக்கும், ப்ரியாவிற்கு சண்டை வராமல் எல்லாம் இருக்காது.மற்ற தோழிகளை போல சின்னதிலிருந்து பெரிய சண்டை வரை போட்டிருக்கிறார்கள்.ப்ரியாவின் கோவம், கொஞ்சம் அதிக காலம் நீடிக்க கூடியது.ஜானகி, பல மொக்கைகள் போட்டு, சேட்டைகள் செய்து கெஞ்சி, கூத்தாடி அவள் கோவத்தை போக்குவாள்.

பிரியா அவ்வளவெல்லாம் கஷ்டப்படமாட்டாள்.
'வாடி ,canteen போய் சமோசா சாப்பிடுவோம்'என்றாலே ஜானுவின் கோவம்'its gone, போயிந்தி,போயேபோச்சுனு' ஓடிடும்.

'மானம் கெட்டவடி நீ'

என்று அவள் மனசாட்சி காரி துப்பினாலும் அதை துடைத்து போட்டு போய் விடுவாள்.

அந்த நம்பிக்கையில் விஜய்யிடம் கூறிவிட்டு ,அவள் ஹாஸ்டல் சென்றாள்.
அன்று இரவு முழுவதும் ஜானகியின் அலைபேசிக்கு முயன்றுவிட்டு,சோர்ந்து போனாள். அழைப்பு எடுக்க படாமலேயே நின்று போனது.அப்பொழுது தான் ப்ரியாவிற்கு சிறிது பயம் வர ஆரம்பித்தது.

மறுநாள் விடுமுறை.திங்கள் அன்று தான் மீண்டும் ஜானகியை கல்லூரியில் சந்திக்க முடிந்தது.அப்பொழுதும் இவளை கண்டுகொள்ளாமல் சுற்றினாள் ஜானகி.பிற தோழிகள் கூட

'நகமும்,சதையுமா சுத்துவிங்க.இன்னிக்கு என்ன ஆச்சு??'

என்று கேட்கும் அளவுக்கு பாராமுகமாக சுற்றினாள்.

'நான் தானே ,லவ் பண்ண மாட்டேன்னு சொன்னேன்.இவளையும் பண்ண கூடாதுன்னா?? சொன்னேன்.என் மேல இவளுக்கு இவ்ளோ தான் நம்பிக்கையா?இப்டி தான் புரிஞ்சுவச்சுறுகாளா?? இவ'

என்ற கோவம்,இல்லை வருத்தம் தான் ஜானகிக்கு.
உணவு இடைவேளையில் பிரியா,
"ஏய்!!அதான் சாரி சொல்லிட்டேன்.விளக்கமும் கொடுத்துட்டேன், அப்புறம் என்னடி. வேற என்ன பண்ணனும் சொல்லு.ரெம்ப பண்ணாதடி.வா, உனக்கு பிடிச்ச சமோசா வாங்கி தரேன்"என்றாள்.

இன்னும் அமைதியாய் இருந்த ஜானகியை பார்த்து ,இன்னும் என்ன சொல்லுவது என்று தெரியாமல் கண் கலங்க நின்றாள்,பிரியா.
அவள் கலங்கிய கண்களை பார்த்ததும் ஜானு,

"சமோசா மட்டும் போதாது,ரெண்டு பட்டெர்ஸ்கோட்ச் ஐஸ்கிரீம்மும் வேணும்,அப்போ தான் வருவேன் "என்றாள்.
அவள் பதிலில் ஒரு நிமிடம் முழித்து,பின் கண்ணில் நீர் பொங்க சிரித்த பிரியா,

"உனக்கு,substitute எஹ் இல்லடி"என்றாள்.

அவர்கள் சண்டை ஒரு வழியாக சமாதானத்திற்கு வந்தது.

மறுமுறை விஜயை சந்திகையில், ஜானகியையும் அழைத்து சென்றாள் பிரியா.
அங்கு சென்று பேசும்பொழுது தான், ஜானகியின் பூர்விக கிராமமும்,விஜயின் கிராமமும் ஒன்றே என்று தெரிய வந்தது.பின் இவள் அம்மா ,அப்பா தாத்தா,பாட்டி அனைவரின் பெயரையும் கேட்டு வரைபடம் போட்டு கண்டுபிடித்த விடை தான், ஜானகியின் அம்மா அலமேலு,விஜய்க்கு சித்தி முறை என்று.இதை கண்டுபிடித்த பெருமை விஜயயே சாரும்.அவ்வளவு நீண்ட வரைபடம்,அவ்வளவு தூரத்து உறவு இருவருடையதும்.

மறுவாரம் விஜயை தன் வீட்டிற்கு கூட்டி சென்ற ஜானு,
"அம்மா,இவங்க நம்ம கோமதி பெரியம்மா மகனாம்,எங்க காலேஜ்கு ஒரு வேலை விசயமா, வந்தப்போ, என்னை பார்த்துட்டு,நான் உங்களை மாறியே இருக்கேன்னு என்கிட்ட வந்து கேட்டாங்க."என்றாள்.

"ஓ,கோமதியக்கா மகனா நீ,வாப்பா,நல்லா இருக்கியா??அம்மா எப்படி இருக்காங்க,?? கூடப்பிறந்தவங்க எத்தனை பேரு??"என்று தன் விசாரணையை ஆரம்பித்தார்.

விஜயின் கூட பிறந்தவர் ஒரு அண்ணன் மட்டுமே,அவருக்கும் திருமணம் ஆகி ஒரு வருடம் ஆகி இருந்தது.
பல நாள் கழித்து ,பார்த்த ஊர் சொந்தத்தை விட மனசில்லை அலமேலுக்கு.மறுவாரமே கோமதியை வீட்டிற்கு கூப்பிட்டு, விருந்து வைத்து பல நாள் கதைகளை பேசி களித்தார்கள் இருவருமே.

இவர்கள்,அவர்கள் வீட்டிற்கு போவதும்,அவர்கள் இங்கு வருவதும் வழமையானது.

'ஹப்பா, அலமேலுக்கு சந்தேகம் வராம,ரெண்டு family யும் மிங்கில் பண்ணியாச்சு.இன்னும் இந்த கோமதி அன் கோ குடும்பத்துல ப்ரியாவை கோர்க்கணுமே, எப்படி'

என்று தீவிர சிந்தனையில் இருந்த போது தான், கோமதியின் பேச்சு காதில் விழுந்தது.

"என் பிள்ளைங்க ரெண்டும்,நான் கிழிச்ச கோட்டை தாண்டாதுங்க.என் பெரிய பையனுக்கு நான் தான் பொண்ணு பாத்துட்டு வந்தேன்,அவன் பொண்ணு பாக்க கூட வரல.போட்டோ காட்டி இவளை தான் கட்டனும்னதும்,சரின்னுட்டான்.என் சின்ன பையனும் அப்டி தான்"

என்று பெருமை பேசிக்கொண்டிருந்தார்.

'கிழிஞ்சது, கோட்டை தாண்ட மாட்டானா??அவன் குதிச்சு குதிச்சு கபடியே விளையாண்டுடான். இந்தம்மா இன்னும் சின்ன பிள்ளையவே இருக்கு'

என்று mind voice இல் counter குடுத்துக்கொண்டாள்.

"பிரியா உன் நிலைமை ரெம்ப கஷ்டம்,இந்தம்மா எப்போ கோடு கிழிச்சு விளையாண்டு முடிச்சு,உங்க காதலை புரிய வச்சு,மெகா சீரியல் ஆயிடும் போலயே உன் வாழ்கை."என்று அலைபேசியில் ப்ரியாவிற்கு கிலியை உண்டாக்கினாள்.

"ஏண்டி,பயமுடுத்துற??எதாவது ஐடியா கொடுடி"

அவள் கொடுக்கும் ஐடியா அவளுக்கே ஆப்பு அடிக்கும் என்று அறியாத ஜானகி,

"பேசாம இத arranged marriage அஹ் மாத்திரலாம்,உங்க அண்ணா கிட்ட பேசி ,விஜய் வீட்டுல பேச சொல்லி கல்யாணம் முடிச்சுடலாம்,ஓகே வா"என்றாள்.

"எங்க அண்ணா கிட்டேயா??"என்று அதிர்ந்தாள் பிரியா.

"ஆமா,உன் கல்யாணத்தை பத்தி உன் அண்ணா கிட்ட தான் பேச முடியும்,இதுக்கேன் இவ்ளோ ஷாக்??,ஷாக்க குறை ஷாக்க குறை"என்றாள்.

"ஹ்ம்ம்,ஓகே."என்று அரைமனதாய் ஒத்துக்கொண்ட பிரியா.

"ஆனா ஒரு கண்டிஷன் ,நீயும் கூட இருக்கணும். என் அண்ணா கிட்ட பேசும் போது"என்றாள்.

"சரி வரேன்"என்று ஒத்துக்கொண்டு, தூண்டிலை நோக்கி சென்றது ஜானகி என்னும் மீன்
 

Nila Subramanian

Saha Writer
Team
Messages
25
Reaction score
23
Points
6
அத்தியாயம்:8

அர்ஜுனை,இரண்டு அல்லது மூன்று முறை தான் பார்திருக்கிறாள்,ஜானகி.ஒரு முறை பேசி இருக்கிறாள்.அவள் மட்டும்.

கல்லூரி தோழிகளுடன் ,வழக்கமான மரத்தடியில் அமர்ந்து ,அரட்டையில் ஈடுபட்டிருந்த போது, கல்லூரி வாயிலருக்கே வந்த அர்ஜுனை பார்த்து,

"யாருடி இவரு,செம்ம மேன்லியா, ஹண்ட்ஸோமா இருக்காரு"

என்று வியந்து கண்களை அகல விரித்து பார்த்துக்கொண்டிருந்த ஜானகியை கண்ட தோழிகள்.

எல்லாரையும்
'அண்ணா, அண்ணா' அப்டின்னு கூப்பிட்டு வெறுப்பேத்துவா, இவளே பாக்குற அளவுக்கு அப்படி யார் அது ??என்று அனைவரும் வாயிலை பார்த்தனர்.

"80'ஸ் ஹீரோ அருண்பாண்டியன் மாறி இருக்காருள்ள"என்றாள்.
அவளை எல்லோரு வினோதமாக பார்த்தார்கள்.ராணா, விஜய் தேவரக்கொண்டா இப்படி சொல்லுவாள் என்று பார்த்தாள், அருண்பாண்டியன் ,என்றவளை அப்படி தானே பார்ப்பார்கள்.

அதில் ஒருத்தி

"யாருடி அவரு??"என்றாள்.

"இணைந்த கைகள், படம் பார்ததில்லியா நீ??அந்த படம் பாத்ததிலிருந்து,அவரை மாறி ஒருத்தர தான் கல்யாணம் பண்ணனும்னு வாழ்நாள் லட்சியமாவே வச்சிருக்கேன்"

"என்னே!!உன் லட்சியம்"

"என் அம்மாட்ட கூட சொல்லிட்டேன்,அப்படி மாப்பிள்ளை பாக்க சொல்லி"
இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது,

லாபிலிருந்து வந்துகொண்டிருந்த பிரியா, அவனிடம் சென்று பேசுவதை கவனித்தார்கள்.

"என்னடி,உனக்கும், உன் close friend கும் ஒரே டேஸ்ட் போல ,அவளும் அவர்ட்ட பேசுறா"என்று ஒருத்தி கூறினாள்.

அவளை முறைத்த ஜானு,
"ஒழுங்கா பேசு,அவகிட்டயும் இப்டி பேசுன, என்னை பத்தி தெரியுமில்லை??"என்றவளை பார்த்த அந்த தோழி

"சரி விடுடி, சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்"என்று சமாளித்தாள்.

ப்ரியாவிடம் பேசிவிட்டு அந்த நெடியவன்,அங்கிருந்து சென்றதும்,இவர்களை நோக்கி வந்தாள் பிரியா.

"யாருடி அவரு??"என்று ஆவலுடன் கேட்ட ஜானகியிடம்

"என் அண்ணா டி, சொல்லி இருக்கேன்ல.இப்போ பேங்க் வேலையா வந்தவரு, என்னை பார்த்துட்டு போலாம்னு, அவசரமா வந்தாரு.trainகு நேரமாச்சுன்னு போயிட்டாரு.அடுத்ததடவை உன்னை அறிமுகப்படுத்துறேன்"என்றாள்.

அர்ஜுன் தனியார் வங்கி ஒன்றில் மேலாளராக பணிபுரிக்கிறான்.
"பிரியா,உனக்கு ஆக்டர் அருண்பாண்டியன் தெரியுமா??"என்று ஒரு தோழி ஆரம்பித்தாள்.

"தெரியாதே,ஏண்டி"

"இணைந்த கைகள் படம் கூட பாத்ததில்லியா நீ"என்றாள் இன்னொருத்தி.

"எதுக்குடி கேக்குறீங்க"??"என்று புரியாமல் கேட்டாள் பிரியா.

"இவளுங்க சரியான லூசுங்கடி ,இவளுங்களை விடு,எனக்கு பசிக்குது வா canteen போலாம்."என்று ப்ரியாவை இழுத்துக்கொண்டு,மற்ற தோழிகளுக்கு கண்களால் எச்சரிக்கை விடுத்து விட்டு சென்றாள் ஜானகி.

அவர்கள் சென்றதும் மற்ற தோழிகள்,"ஏய்,அவகிட்ட ரெம்ப விளையாடாதீங்க டி,அப்புறம் அவ என்ன பண்ணுவானு ,யூகிக்க கூட முடியாது.இதோட விட்டுடுங்க"என்று பேசிக்கொண்டு வகுப்பறை நோக்கி சென்றார்கள்.

மறுமுறையும் ப்ரியாவுடன் பேசிக்கொண்டு, கல்லூரி வாயில் வரை வந்து, விட்டு சென்ற அர்ஜுனை தூரத்தில் இருந்து தான் பார்த்தாள் ஜானு.

மூன்றாம் முறை தான், இருவரும் மட்டும் பேசிக்கொண்டிருக்கும் போது வந்த அர்ஜுனிடன்
"அண்ணா,இவ ,என் தோழி jk"என்று அறிமுகப்படுத்திவைத்தாள் பிரியா.

"ஹாய்"என்றாள் இவள்.

அதுவரை ,ஜானகி என்று ஒருத்தி இருப்பதே கண்ணுக்கு தெரியாதது போல் ,ப்ரியாவிடம் இருந்து பார்வையை திருப்பாத அர்ஜுன்,இவள் புறம் திரும்பி மெல்லிய தலையசைவை கொடுத்தான்.பிறகு திரும்பி ப்ரியாவிடம் பேச ஆரம்பித்து விட்டான்.பேசி முடித்ததும், சென்று விட்டான்.

'பெரிய மகாராஜா,கடிவாளம் கட்டுன குதிரை மாறி கழுத்து,பார்வை எல்லாம் திரும்பாது போல'

என்று அவனை வருத்தெடுத்துக்கொண்டிருந்தாள் மனதில்.

அதன் பிறகு அவனை சந்தித்தது, ப்ரியாவின் காதல் பற்றி பேச,ப்ரியாவுடன் சென்றபோது தான்.அது அவள் வாழ்க்கைப்பயணத்தையே மாற்றும் என்று சிறிது கூட யோசிக்கவில்லை.

ரயில் ஏதோ ஒரு ஸ்டேஷனில் நின்றது.தூக்கம் கலைந்த அர்ஜுன், இவள் அமர்ந்திருப்பதை பார்த்து,

"ஏன் தூங்கமா உக்காந்திருக்க??"

"ம்ம்ம்…வேண்டுதல்"

"என்ன??"

"வேடிக்கை பாத்துட்டு இருக்கேன்னு சொன்னேன்"

"எப்போ பாரு வேடிக்கை,தூங்கு"என்று கூறிவிட்டு தன் போர்வையையும் அவளுக்கு போர்த்தி தூங்க சொன்னான்.

அவன் சொன்னதில் சிறிது எரிச்சல் வந்தாலும்,அவன் அக்கறையில்

" பரவால்ல, இவரு கொஞ்சூண்டு நல்லவரு தான் போல"என்று நினைத்துக்கொண்டு உறங்க ஆரம்பித்தாள்.

குளிறினால் தான் இவள் அமர்ந்திருக்கிறாள் என்று யூகித்து தான் அர்ஜுன் அவளுக்கு போர்வை போர்த்திவிட்டான்.

Egmore வந்ததும் அவளை எழுப்பி,இருவரும் இறங்கி cab பிடித்து, இவன் இருக்கும் அபார்ட்மெண்ட்க்கு வந்தார்கள்.
இரண்டு படுக்கை அறை கொண்ட அபார்ட்மெண்ட்..அழகாக இருந்தது.பால்கனியில் சில பூச்செடிகள் வைத்திருந்தான் ,தொட்டியில்.

'ஹ்ம்ம்..கொஞ்சம் ரசனை உள்ள ஆள் தான் போல'

வீட்டை சுற்றி பார்த்துவிட்டு,கிச்சேனில் என்ன இருக்கிறது என்று உருட்டி கொண்டு இருந்த போது

"காலையில,ஹோட்டல்ல வாங்கிட்டு வரேன்,மதியமும் வரும்போது வாங்கிட்டு வரேன்,சாயங்காலம் கடைக்கு போய் வேணும்குற சாமான் வாங்கிட்டு வந்து நைட் சமச்சுக்கலாம்"என்றான்.

அதற்குள்,குளித்து வேலைக்கு கிளம்பி இருந்தான்.10 நாள் விடுப்பு மட்டுமே திருமணத்திற்கு எடுத்திருந்தான். ப்ரியாவின் திருமண வேலைகள்,திருமணம், என்று நாட்கள் சென்றுவிட்டன.

இவள் சரி என்று தலையசைத்ததும்,இவளுக்கு உணவு வாங்கி கொடுத்து விட்டு,இவன் சாப்பிட்டு விட்டு தனது பைக்ஐ எடுத்துக்கொண்டு வேலைக்கு சென்று விட்டான்.செல்லும்போது,

"வழக்கம் போல வேடிக்கை பாக்காம, வீட்டை பூட்டிக்கோ.யாரு வராணு ,இது வழியா பார்த்து திற"என்று கதவில் பொறுத்தப்பட்டிருந்ததை காட்டி விட்டு சென்றான்.

'ரெம்ப தான்'என்று அவனுக்கு அலகு காட்டி விட்டு,(அவன் முதுகை பார்த்து தான்)கதவை பூட்டிக்கொண்டாள்.

பின் அவளும், அவளது காலைக்கடன்களை முடித்துவிட்டு அமர்ந்தபோது ,மீண்டும் பழைய நினைவுகள் வந்து அவளை சூழ்ந்து கொண்டது.

அர்ஜுனை சந்திக்க ஒரு உணவகத்திற்கு அழைத்து சென்றாள் பிரியா,பின் காலை பொழுது ,அதனால் அவ்வளவாக கூட்டம் இல்லை.அங்கொன்றும்,

இங்கொன்றுமாக ஆட்கள் அமர்ந்திருந்தனர்.

"நீ எதுவும் பேசதடி. நான் பேசிக்குறேன்."என்றாள் பிரியா.

"அப்புறம் ஏன், என்னை கூட்டிட்டு வந்த,நீயே பேசியிருக்க வேண்டியது தானே??"

"ப்ளீஸ் டி, நீ விளையாட்டா ஏதாவது பேசிட்டா, அவ்ளோ தான், அண்ணா கொஞ்சம் ஸ்ட்ரிக்ட்"

"ச்சே,ச்சே உன் வாழ்கை விஷயத்துல போய் விளையாடுவனா டி"

"இருந்தாலும்…."

"சரி டி, நீ என்ன சொன்னாலும் நான் வாய திறக்க மாட்டேன்,இன்னிக்கு நான் மௌன விரதம் போதுமா"

"கோச்சுக்காதடி"

"சரி,சரி விடு"

இவர்கள் பேசிமுடித்து உணவை ஆர்டர் கொடுத்து விட்டு அமர்ந்திருந்த போது அர்ஜுன் வந்தான்.

இவர்கள் இருந்த மேஜையை பார்த்துவிட்டு, வந்து இருவருக்கும் எதிரில் அமர்ந்தான்.

"சொல்லு,எதுக்கு அவசரமா பேசனும்னு வர சொன்ன"

பிரியா சற்று தயங்கி "அண்ணா….."

"ஹ்ம்ம்..சொல்லு"

"அது வந்து…"

அர்ஜுன் எதுவும் பேசாமல், பார்வையையும் ப்ரியாவை விட்டு அகற்றாமல், கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்தான்.அந்த பார்வையே சிறிது பயம் ஏற்படுத்தியது.

'ஹ்ம்ம்..இவ சொல்லி,இவ கல்யாணம் முடிஞ்சாபுல தான், என்னையும் பேசவிடமாட்டேங்குறா.'என்று நினைத்து கொண்டு அங்கிருந்த சமோசவை எடுத்து ஒரு வாய் கடித்தாள்..

வந்த வேலைய கரெக்ட்அஹ் பாக்குறா.

எச்சில் விழுங்கி கொண்டு பிரியா

"அண்ணா,…காதல்"

"என்ன??"புருவம் தூக்கி அவளை கூர்ந்து அர்ஜுன் கேட்ட தோரணையில்…

"இவ ,உன்னை காதலிக்கிறளாம் அண்ணா.அதை சொல்ல பயந்துகிட்டு என்னை கூட்டிட்டு வந்தா"

'என்னாஆஆஆஆஆது………'
ஜானகிக்கு, வாயில் போட்ட சமோசா, உள்ளேயும் போகாது, வெளியேயும் விழாது சிக்கி நின்றது.வாய் திறந்து,கண்கள் அகல விரித்து,மூச்சு விடுவதை கூட மறந்து உச்சபட்ச அதிர்ச்சியில் அமர்ந்திருந்தாள் ஜானகி.
 

Nila Subramanian

Saha Writer
Team
Messages
25
Reaction score
23
Points
6
அத்தியாயம்:9

சில நிமிடங்கள் யாரும் பேசவில்லை.அர்ஜுனின் பார்வை இப்பொழுது ஜானுவிடம் இருந்தது.ஒரு வித அமைதி நிலவியது அங்கே.

"என்ன,கண்டதும் காதலா??"

'நான் எங்கடா காதலிச்சேன்்??'

"அண்ணா,அவகிட்ட ஏதும் கேக்காத. நான் சொல்லுறேன்"

'அதுக்குள்ள ஸ்கிரிப்ட் ரெடி பண்ணிட்டா,அடுத்த சீனுக்கு'

"என்ன சொல்லுற??அவ தான் லூசு மாறி உளறுனா,நீயும் அவ கூட புறப்பட்டு வந்துருக்க??"

'யாரு,அவ என்கூட புறப்பட்டு வந்தாளா??நான் தான் டா அவ கூட வந்தேன்'

"அண்ணா,கொஞ்சம் பொறுமையா இரு,நான் சொல்லுறதை கேளு"

'கேளு,கேளு,முழம், முழமா பூ கொண்டு வந்துருக்கா சுத்த'

"நீ இதுக்கு சம்மதிக்க மாட்டேன்னு, நாலு நாள் முன்னாடி தூக்க மாத்திரை வேற சாப்டுட்டா"

'அத்தாடி,இது எப்போ??இவ இன்னிக்கு எனக்கு ஹார்ட் அட்டாக் வர வைக்கமா விட மாட்டா போல'

"என்ன??"என்று அதிர்ந்த அர்ஜுன்.

"உனக்கு மூளை இருக்கா??இல்லியா??"

'உன் தங்கச்சி கூட friend அஹ் இருக்கேன்னு, நீ இந்த முடிவுக்கெல்லாம் வரக்கூடாது.'

"மூளை இருக்கவ பண்ணுற வேலையா இது??"

'நீ சொல்லுறதும் கரெக்ட்,மூளை இருந்தா உன் தங்கச்சி கூட வருவனா??'

"நான் பாட்டுக்கு பேசிட்டு இருக்கேன்,நீ என்ன முழிச்சுக்கிட்டு இருக்க"

"அண்ணா,ப்ளீஸ் நான் சொல்லுறதை கேளு,அவ தூக்கமாத்திரை சாப்பிட்டது ,அவங்க வீட்டுக்கு தெரியாது"

'எனக்கே தெரியாதே'

"அவங்க அம்மாவும்,அப்பாவும் ஒரு marriageகு போனபோது இப்டி பண்ணிட்டா. நான் சரியான நேரத்துக்கு போய்ட்டேன்."

'எனக்கு தான் நேரம் சரி இல்ல'

"இல்லைனா காப்பாத்தியிருக்கவே முடியாது"

'இனிமே காப்பாத்த என்ன இருக்கு.சோலி முடிஞ்சுது'

"தயவு செஞ்சு அவ காதலை புரிஞ்சுக்கோணா"

'அவன் புரிஞ்சுகிட்டானோ இல்லையோ,எனக்கு நல்லா புரிஞ்சுரிச்சு.இன்னிக்கு நான் காலி'

"அப்பா,அம்மா உங்கள இதுக்கு தான் காலேஜ்கு அனுப்புராங்களா??"

'இதுக்கெல்லாம் யாராவது அனுப்புவாங்களா??ஜெனரல் நாலெட்ஜ் இல்லாத புள்ளையா இருக்கான்'

"உங்களை நம்பி காலேஜ் அனுப்புறவங்களுக்கு இதான் நீங்க கொடுக்குற மரியாதையா??"

'இப்போ என்ன மரியாதை, குறைஞ்சு போச்சுங்குறான்??'

"இவ்ளோ நாள்,உங்கள வளத்தவங்களுக்கு உங்களுக்கான துணையை தேடி தர தெரியாதா??"

'அதை உன் தங்கச்சிட்ட சொல்லு ராசா'

"அவங்க நம்பிக்கையை கெடுக்காதிங்க"

'இவன் ரெம்ப பேசுறான்,அலமேலுவே பரவால்ல,கொஞ்சம் பிரேக் விடும்.இவன் gap இல்லாம பேசுறான்'.

இன்னும் நிறைய அறிவுரைகளை ,காதில் ரத்தம் வரும் அளவுக்கு அள்ளி வீசிவிட்டு.

"இன்னொரு தடவை,இது சம்பந்தமா, என்னை பாக்கவோ, பேசவோ வராதா"என்று ப்ரியாவிடம் சொல்லிவிட்டு

,இவளை திரும்பியும் பாராது சென்றுவிட்டான்.

அவன் சென்றதும், இவள் புறம் திரும்பிய ப்ரியாவை ,தன் பார்வையால் எரித்துக் கொண்டிருந்தாள் ஜானு.

"Jk…"

அவளை கை காட்டி தடுத்த ஜானு,

"நீ பேசாத,நீ பேசாதனு ,சொன்னப்பவே நான் யோசிச்சுருக்கணும்.இதுக்கு தான் பேசவேண்டாம்னு சொன்னியா??எவ்ளோ நாளாடி பிளான் போட்ட"??"

"அப்டில்லாம் இல்லடி,அண்ணாவை பாத்ததும் பயத்துல…"

"எனக்கு ஆப்பு சொருகிட்டே..சரியா"

"இல்லடி,எங்க அண்ணா ரெம்ப நல்லவரு"

"அதுக்கு…??"

"நீ பேசாம என் அண்ணாவையே கல்யாணம் பண்ணிக்குரியா?"

"போடி….free யா கிடைக்குதுன்னு, பேதிமாத்திரை சப்புடுற ஆள் இல்லடி நானு..உன் அண்ணா கூட கொஞ்ச நேரம் பேசுனதுக்கே.. காது பஞ்சர் ஆகி தக்காளி சட்னி வெளிய வந்துருச்சு.. நான் வாழ்நாள் முழுசா ஸ்டெபிணி காதோட சுத்த முடியுமாடி"

"சேச்சே,எங்க அண்ணா, ரெம்ப பேசமாட்டாருடி. இன்னிக்கு திடிருன்னு சொன்ன நியூஸினால ஷாக் ஆகி இப்டி பேசிட்டார்."

"ஆமா,இல்லைனா மட்டும் உங்க அண்ணன் சிரிச்ச முகமா, பொறுமையின் சிகரம்.சரியான ஹிட்லர்,சிடுமூஞ்சி,முசுடு,ரோபோ…"

இன்னும் என்னென்ன சொல்லி திட்டி இருப்பாளோ!!

"ஏய்,இரு,இரு..என்ன இவ்ளோ நாள் மனசுல இருந்ததெல்லாம் ,வெளிய வர மாறி இருக்கு..இப்டி தான் என் அண்ணாவ திட்டிட்டு இருக்கியா??"

'ஆத்தி கண்டுபிடிச்சுட்டாளே,இவளை வேற மாறி தான் சமளிக்கணும்'

"ஆமா,உன் அண்ணாவை திட்டுறாங்க,எனக்கு வேற வேலை இல்லை பாரு.நீயாச்சு, உன் அண்ணனாச்சு.நான் கிளம்புறேன்."

"ஏய்,என்னடி இப்டி பாதியிலேயே கழட்டி விட்டு போற..எனக்கு ஒரு வழி சொல்லுடி"

"உன் விஜய் கிட்ட கேக்க வேண்டியதெல்லாம், என் கிட்ட கேக்காத"

"ப்ளீஸ் டி, என் செல்லமில்ல,தங்கமில்ல"

"சரி,சரி ஓவர் அஹ் கொஞ்சாத,நானே கோமதி பெரியம்மா கிட்ட பேசி, உன்னை பொண்ணு கேக்கும்படி செய்யுறேன்.இதை முன்னவே செஞ்சுருந்தா, இப்படி உன் அண்ணா கிட்ட மாட்டி இருக்க மாட்டேன்."

"Thank u டி.நீ கவலை படாத ,உன் அம்மா கிட்ட பேசி உனக்கும்,என் அண்ணாக்கும் கல்யாணம் பண்ண வேண்டியது என் பொறுப்பு."

"என்னாது??ஏண்டி இந்த கொலைவெறி??அதான் உன் கல்யாணத்துக்கு வழி பண்ணுறேன்னுட்டேன்ல..என்னை எதுக்குடி காட்ஜில்லா கிட்ட மாட்டி விட பிளான் பண்ணுற??"

"ஏய்,எங்க அண்ணாவை அப்டில்லாம் சொல்லாத.உன்னை விட ஒரு நல்ல அண்ணி எனக்கு கிடைக்காது.என் அண்ணாக்கு கல்யாணம் ஆகாம, எனக்கு கல்யாணம் பண்ணிக்க இஷ்டம் இல்லடி."

"நீ ஒரு முடிவோட தான் ,என்னை கூட்டிட்டு வந்துருக்க"

"சேச்சே,ஸ்பாட் செலக்ஷன் மாறி, இது இப்போ வந்த ஐடியா தான் டி, ஒத்துக்கோடி ப்ளீஸ்"

"இதுக்கு உன் அண்ணா ஒத்துக்கணுமே"

இதன் மூலம் தன் சம்மதத்தை மறைமுகமாக தெரிவித்தாள் ஜானு.

"அதை நான் பாத்துக்குறேன். அண்ணாகிட்ட பேசுரவிதமா பேசி சம்மதிக்க வைக்குறேன்."

"நீ பேசுற லட்சணத்தை தான் பாத்தேனே"

"என் காதல் விஷயமனோன தான் கொஞ்சம் சொதப்பிட்டேன். உன் கல்யாணத்துல அப்படி செய்யமாட்டேன்.
Beleive me baby மா"

"க்கும்…நான் arrange marriage தான் பண்ணுவேணு கொள்கையோட இருக்கனே, என் கொள்கை என்னாகுறது"

திரும்ப முதல இருந்தா, என்று ஜெர்க்கான பிரியா
"கி, கி,செல்லம்ல"

"ஏண்டி,கி, கி னு key கொடுத்துட்டு இருக்க..ஜானகி னு அழகா அலமு பேர் வச்சுருக்கு..ஒழுங்கா கூப்பிடு.. ஜானுனு"

"அதை எங்க அண்ணா கூப்புடுவாரு.. மேரி ஜான், மேரி ஜான்னு"

"உங்க அண்ணா தானே கூப்பிட்டுட்டாலும்…"என்று நொடித்துக்கொண்டாள்.

"அதெல்லாம் கூப்பிடுவார்.இப்போ சொல்லு நான் ஆண்ட்டி கிட்ட பேசவா"

"அலமேலுவை பத்திரகாளி ஆக்கமா, பேசுனா சரி.அது உன் பாடு அலமு பாடு.. நான் arranged marriage தான் பண்ணுவேன் அத மாத்திக்கமாட்டேன்".

"சரி,சரி நீ arranged marriage எஹ் பண்ணு, பட் என் அண்ணனை பண்ணு."

ஒரு வழியாக இருவரும் ஒரு முடிவிற்கு வந்தார்கள்.
கோமதியின் கண்ணில் அடிக்கடி பிரியா படுமாறு ஜானகி பாத்துக்கொண்டாள்.கோமதி, ஜானுவின் வீட்டிற்கு வரும்போதெல்லாம் பிரியா அங்கே இருந்தாள்.
அவளை போன்ற பெண்ணை, உலகத்தில் எங்கு தேடினாலும் கிடைக்காது ,என்கிற அளவுக்கு ஜானகி அவளை பற்றி புகழ்ந்து அலமேலுவிடம் பேசுவது போல் பேசி கோமதியின் மனதில் பதிய வைத்தாள்.

"நம்ம விஜய் அண்ணா குணத்துக்கும்,பிரியா குணத்துக்கும், அவ்ளோ பொருத்தம் பெரியம்மா.நானே பல முறை பார்த்துருக்கேன்.விஜய் அண்ணா அவ்ளோ பொறுமை,பிரியா அவ்ளோ பொறுப்பு."

ஒரு வழியாய் கோமதியின் மனதில் விதை ஊன்றி,செடி வளர்த்து ,மரமாய் நிலைக்க செய்து விட்டாள் ஜானகி.

"அலமு,நம்ம பிரியா பத்தி என்ன நெனைக்குற?"

"அது தங்கமான பொண்ணு,இவளை மாறி சோம்பேறி இல்ல,பொறுப்பான பொண்ணு"

'இந்த அலமுவுக்கு என்னை டேமேஜ் பண்ணலைன்னா..தூக்கம் வராது'.

"நம்ம விஜய்க்கு அந்த பொண்ண பாக்கலாம்னு இருக்கேன்."

"நல்லா பாருங்க கா"

"அந்த பெண்ணுக்கு ,அண்ணா மட்டும் தான் போல..நீ அவங்க அண்ணன் கிட்ட பேசி, அவங்களுக்கு சம்மதம்னா,நாம பொண்ணு கேட்டு போலாம்.பேசிட்டு சொல்லுரியா??"

"அவங்க அண்ணனை நான் பார்த்ததில்லை.பிரியா கிட்டேயே அவ அண்ணன் நம்பர் வாங்கி, பேசிட்டு சொல்லுறேன் கா."

"சரி சொல்லு"

'ஹப்படா.'... என்று ஜானு சந்தோஷப்பட்டு..'

ஒரு வழியா இதுங்க கல்யாணத்துக்கு பிள்ளையார் சுழி போட்டாச்சு'என்று எண்ணி முடிக்கையில்.

'ஆத்தி, இந்த அம்மா அந்த ஹிட்லர் கிட்ட பேசும் போது, அது ஏதும் ,நான் அதை லவ் பண்ணுறேன்னு உளரிட்டா??.அலமேலு மங்கா ஆஞ்சுபுடுமே'

'ஏய்,பிரியா எங்கடி இருக்க??'என்று அவசரமாக தன் அலைபேசியை தேடி ஓடினாள்.
 

Nila Subramanian

Saha Writer
Team
Messages
25
Reaction score
23
Points
6
10

அண்ணனிடம் பேசி, ஒரு வழியாய் அவனை மலையிறக்கி விட்டிருந்தாள் பிரியா.அதிசயத்தக்க வகையில் அவனும் ரெம்ப முரண்டு பண்ணாமல் ஜானகியின் காதலுக்கு(???),சரி சொல்லி இருந்தான்.

ஆனால் ப்ரியாவின் திருமணம் முடிந்த பின் தான், தன் திருமணம் என்று உறுதியாய் சொல்லி இருந்தான்.

இங்கு ஜானகியின் வீட்டிலும் அலமேலுவிடம் ,தன் அண்ணனுக்கு, ஜானுவை பிடித்திருப்பதாகவும்,திருமணம் செய்ய ஆசை படுவதாகவும்,தன்னை விட்டு பெண் கேட்க சொன்னதாகவும், கூறி அலமேலுவிடம் சொல்லி இருந்தாள் பிரியா.

அர்ஜுனின் அலைபேசி எண் வாங்கிய அலமேலு, அவனிடம் பேசவேண்டும் என்று கூறி அவனை வீட்டிற்கு வரவழைத்தார்.

"வாங்க…உக்காருங்க..என்ன சாப்டுறீங்க??"

"அதெல்லாம் வேண்டாங்க.. பிரியா கல்யாண விஷயமா பேசனும்னு சொன்னிங்க"

"ஆமாங்க,எங்க ஊர்காரங்க தான் கோமதின்னு,எனக்கு தூரத்து சொந்தம்,அக்கா முறை அவங்க பையனுக்கு ப்ரியாவை கேக்குறாங்க."

விஜயை பற்றி,அவன் குடும்பத்தை பற்றி முழு விவரம் சொன்னவர்.அவனின் புகைப்படத்தையும்,முழுவிவரத்தையும் அர்ஜுனிடன் கொடுத்தார்.அதை வாங்கி பார்த்த அர்ஜுன்.ப்ரியாவின் பக்கம் திரும்பி ,

"நீ என்னமா சொல்லுற??"

"உங்களுக்கு சம்மதம்னா,எனக்கு ஓகே அண்ணா"

'உலக மகா நடிப்புடா சாமீ'
வழக்கம் போல ஜானகி mindvoice.

"சரி மா, நாங்க இன்னும் 2,3 நாளுல உங்களுக்கு தகவல் சொல்லுறோம்".

"அதோட இன்னொரு விஷயமும் பேசணும் தம்பி"

"சொல்லுங்க"

"ஜானகி, கல்யாண விஷயமா பிரியா சொல்லுச்சு"

"ஹ்ம்ம்..என்கிட்டேயும் சொன்னா, உங்க பொண்ணு என்ன விரும்புறதா, ரெண்டு பேரும் என்கிட்ட வந்து பேசுனாங்க. எனக்கு உங்க சம்மதம் தான் முக்கியம்.உங்களுக்கு சம்மதம்னா,என்னை பத்தின detail எல்லாம் இதுல இருக்கு.நல்லா விசாரிச்சுட்டு பொறுமையா சொல்லுங்க.உங்களுக்கு பிடிச்சுருந்தா மட்டும் தான் எங்க கல்யாணம்.எங்களுக்கு அப்பா,அம்மா இல்ல.அவங்க ஸ்தானதுல இருந்து நீங்க தான் எல்லாம் செய்யணும்.உங்களுக்கு ஓகேனா, எனக்கும் ஓகே".

அலமேலுவிற்கு ஒரு நிமிடம் என்ன சொல்லுவதென்றே தெரியவில்லை.பிரியா வேறு மாறி சொல்லி இருக்க..இங்கு இவர் வேறு மாறி சொல்லுகிறாரே.

தன் தோழியை காப்பாற்ற பிரியா அப்படி சொல்லி இருக்கலாம் என்ற முடிவிற்கு வந்த அலமேலு,அர்ஜுனின் குணத்திலும் நெகிழ்ந்திருந்தார்.

சற்று தள்ளி நின்றிருந்த ஜானுவை முறைத்தார்.

'கடங்காரன்,இவனுக்கு தியாகி பென்ஷன், அரசாங்கத்து கிட்ட இருந்து வேணா வாங்கி கொடுக்கலாம்.இவன் தியாகி ஆகுறதுக்காக என்னை போட்டு கொடுத்துட்டானே.'

ஒரு திரு,திரு முழியை அலமேலுவிற்கு கொடுத்து விட்டு ப்ரியாவின் புறம் திரும்பினாள்.அவள் பார்வையாலேயே இவளிடம் கெஞ்சிக்கொண்டிருந்தாள்.

"சரிங்க தம்பி,நான் அவருக்கிட்டேயும் கலந்து பேசிட்டு,உங்களுக்கு முடிவு சொல்லுறேன்."

"ஒன்னும் அவசரமில்லைங்க,பொறுமையா சொல்லுங்க"
என்று அவரிடம் விடை பெற்று சென்றான்.

தனியாக ஜானுவிடம் மாட்டினால், அவ்ளோ தான் என்று நினைத்து பிரியாவும் அவனுடன் சென்றாள்.
அவர்கள் சென்றதும், இவளை பிலுப்பிலுவென பிடித்து கொண்டார் அலமு.

"ஏண்டி,பிரியா அவர் உன்னை பிடிச்சுருக்குன்னு சொன்னதா, சொன்னா.இவரு நீ அவர் கிட்ட பேசுனதா சொல்லுறார்.என்னடி நடக்குது இங்க??"

"அவரு சொன்னா, அவர் கிட்ட கேக்க வேண்டியது தானே,இவ்ளோ நேரம் இங்க தானே இருந்தாரு."

"என்னடி,நக்கலா??உன் வேலையெல்லாம் என் கிட்ட காட்டாத. சொல்லு அவரு சொல்லுறது உண்மையா??"

"அவரு,சொல்லுறதை நம்புவ,நீ பெத்த பொண்ணு,நான் சொல்லுறதை நம்ப மாட்டியா??"

"உன் கண் முன்னாடி தானே,அவரு சொன்னாரு.அப்போ பேசாம தானே இருந்த.இப்போ இவ்ளோ பேசுரவ,அப்போ பேசவேண்டியது தானே.நீ அவரை பார்த்து பேசுனியா, இல்லியா??"

"பேசுனேன் மா, ஆனா…"

"என்ன ஆனா,ஆவண்ணானு.உன் மேல எவ்ளோ நம்பிக்கை வச்சுருந்தேன்.. நீ பேச மட்டும் தான் லாயக்கு.விளையாட்டுக்கு சொல்லுறேன்னு.. கடைசில இப்டி பண்ணிடியேடி".

அவள் சொல்ல,சொல்ல கேட்காமல் புலம்பும் அலமுவை பார்த்து கடுப்பாக வந்தது.அதுவரை ஒழுங்காக பதில் சொல்லிய ஜானு..எடக்கு மடக்காக பதில் சொல்ல ஆரம்பித்தாள்.

"ஆமா,நான் அவரை தான் லவ் பண்ணுறேன். அதுக்கு இப்போ என்னங்குற??"

"உனக்கு அவ்ளோ திமிர் அயிடுச்சா??"

என்று அலமேலு திட்டி கொண்டிருக்கும் போது..அடுத்தாத்து அம்புஜம் வந்தார்.

"என்னடி,ஜானு அலமு சொல்லுறதெல்லாம் உண்மையா??நீ காதலிக்குரியா??"

'..இந்த fm ரேடியோ எப்போ வந்துச்சு??போச்சு..இன்னிக்கு ஊர் முழுக்க என் பேச்சு தான் ஓடப்போது..
ஆண்டவா,என்னை ஏன், இந்த கழிசடை பசங்க கூடவெல்லாம் கூட்டு சேரவைக்குற'..

"பாரு,அம்புஜம் இவ பண்ண வேலைய"

'இனி யார் நெனச்சலும் எதையும் தடுக்க முடியாது.U carry on'.

"பெரியவா,தெரியாமையா சொல்லி இருக்கா, பெத்தமானம் பித்து,பிள்ளை மனம் கல்லுன்னு"

'இது சீரியல் பாக்குறது வீண்போகல, நல்லா டயலாக் விடுது'.

'இனி இங்க இருந்தா ரெண்டு பேரும் ஒரு வழி பண்ணிடுவாங்க.நீ எஸ்கேப் ஆகிடு ஜானு அதான் safe'

என்று கூறிக்கொண்டு அந்த இடம் விட்டு சென்றாள் ஜானு.

அதன் பிறகு வாசுதேவன் வந்த பிறகு ,ஒரு பஞ்சாயத்து கூட்டினார் அலமு.எதற்கும் ஜானு வாயே திறக்கவில்லை.

'தலைக்கு மேல வெள்ளம் போயாச்சு,இதுல ஜான் என்ன முழம் என்ன. ஆத்தி சீரியல் effect என்னையும் தாக்கிடுச்சா??'

வாசுதேவன் தான், அலமேலுவை சமாளித்து அர்ஜுன் பற்றி விசாரித்து ,நல்ல வரன் என்று முடிவெடுத்து ,தன் சம்மதத்தை தெரிவித்தார்.அதே போல அர்ஜுனும், விஜயை பற்றி விசாரித்து தன் சம்மதத்தை தெரிவித்தான்.

இரண்டு நிச்சயத்தையும் ஒரே நாளில் வைத்துக்கொள்வது என்று முடிவானது.முதலில் அர்ஜுன்,ஜானு திருமணம் என்று முடிவு செய்த போது பிடிவாதம் பிடித்த அர்ஜுனிடன்,

"நீ அண்ணியோடு சேர்ந்து என்னை தாரை வார்த்து கொடுக்கவேண்டும்"

என்று கெஞ்சி,கொஞ்சி ஒரு வழியாய் சம்மதிக்க வைத்தாள்.
அதுவரை தினமும் ஜானுவிற்கு,அலமேலுவின் சுப்ரபாதத்தோடு நிச்சயநாளும் விடிந்தது.
 
Top Bottom